All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...

தகிக்கும் தீயே குளிர்காயவா...

இது காதலும் ஆக்ஷனும் நிறைந்த ஒரு கதை. உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். மறக்காமல் உங்கள் கருத்தை கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே.

நாயகன்: அநபாயதீரன்
நாயகி : சிவார்ப்பணா

View attachment 2315View attachment 2316
சிறிய முன்னோட்டம்

“உனக்கு விளையாட்டாக இருக்கிறதா? யாரோ துப்பாக்கியால் காயப்படுத்தியிருக்கிறார்கள். நீ என்னவென்றால்... சமாதானம் சொல்கிறாயே...” என்று அவன் சிடு சிடுக்க அதே நேரம் இன்னும் பல தோட்டாக்கள் அவர்கள் இருந்த திசையிலும் சீறிப் பாய்ந்து வந்தது. பாலேந்திரன் சகோதரியின் அருகே குப்பிறப் படுத்துக்கொண்டான்.

“பாலு... நீ... எப்படியாவது தப்பிப் போ... என்னைப் பற்றி யோசிக்காதே...” என்று பதட்டத்துடன் சொன்ன சகோதரியை முறைத்தான் பாலேந்திரன்.

“உன்னை இப்படியே விட்டுவிட்டு என்னைப் போகச் சொல்கிறாயா? உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?”என்று சீறிய தம்பியை கையாலாகாத தனத்துடன் பார்த்தாள் அவள்.

“பாலு... நாம் இருக்கும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்துத்தான்... நான் சொல்வதைக் கேள்... என்னுடன் இழுபட்டால் நீயும் உன் உயிரைப் போக்க வேண்டியதுதான்... தயவு செய்து சொல்வதைக் கேள்... இங்கிருந்து தப்பிக் கொள்...” என்று அவசரமாகச் சொல்ல மிண்டும் துப்பாக்கிக் குண்டுகளின் சத்தம்.

“டாமிட்... யார் சுடுகிறார்கள் எங்கிருந்து சுடுகிறார்கள் என்று எதுவுமே புரியவில்லையே...” என்று பதறிய தம்பி சகோதரியின் பேச்சை எள் அளவும் மதிப்பதாக இல்லை.

“பாலு... நான் சொல்வதை நீ கேட்கப் போகிறாயா இல்லையா? எப்போதும் போல என்னுடன் விவாதம் செய்யாதே... இங்கிருந்து வெளியே போ...”

“நோ சான்ஸ்...” என்றவன் தன் பான்ட் பக்கட்டிலிருந்த செல்லை எடுப்பதற்காகப் பாக்கட்டில் கையை விட்டான். “சிட்...” அவர்கள் ஓடி வரும் பொது எங்கோ தவறி விழுந்திருக்க வேண்டும். இப்போது போலிசிற்கும் தகவல் கொடுக் முடியாது. என்ன செய்வது. ஒன்றும் புரியவில்லை. சகோதரியின் செல்லும் அவள் கைப்பையில் பத்திரமாக அந்தக் கட்டடத்டதிற்குள் சிக்கியிருக்கிறது. என்ன செய்வது?

அதே நேரம் எங்கிருந்தோ யாரோ அவர்களை நோக்கி வேகமாக வருவது புரிய, அவளும், பாலேந்திரனும் அதிர்ச்சியுடன் உயிரைக் கையில் பிடித்தவாறு அந்த மூலையில் ஒதுங்கிக் கொண்டனர்.

இது காதலும் ஆக்ஷனும் நிறைந்த ஒரு கதை. உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். மறக்காமல் உங்கள் கருத்தை கருத்துத் திரியில் பதிவிடுங்கள் நண்பர்களே. உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்.

சிலர் இந்த பெயர்களுக்கான அர்த்தம் கேட்டிருந்தார்கள். அதனால் அதையும் சேர்த்து பதிவிடுகிறேன்.

அநபாயதீரன்.
அநபாயன் - அழிவில்லாதவன், பயமில்லாதவன், பிறரால் வெல்லப்படாமுடியாதவன் என்று பொருள்
தீரன் என்றால் - சிறந்த செயல்திறன் கொண்டவன்
அநபாயதீரன் என்பது அழிவில்லாத செயல்திறன் கொண்டவன், பயமில்லாது எந்த அபாயத்தையும் சமாளிக்கக் கூடியவன், அழிவில்லாத புத்திகூர்மை கொண்டவன், பிறரால் வெல்லமுடியாத வீரம் கொண்டவன் என்று பொருள் படும்.
சிவார்ப்பணா என்றால் - சிவனுக்கு அர்ப்பணித்தவள், சிவனுக்கு அர்ப்பணமாகியவள், கொடுத்தவள், உரிமையானவள் என்று பொருள்.
 
Last edited:

Samrithi

Well-known member
Hey sis second story oda vanthutingala superb sis:love: 👏💐 teaser interesting... Ud Kaka eagerly waiting... Keep rocking 👍
 
Status
Not open for further replies.
Top