All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீங்க முடியுமா கதை திரி

Status
Not open for further replies.

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்..

இன்னொரு முக்கியமான அறிவிப்பு..எல்லோரும் காதலன் கதையை மறந்து இருக்கமாட்டீங்க..அகலி அண்ட் விஷ்வா..ஜனனி சந்தோஷ் ..

கதை முடியும் போது சொன்னேன் அவங்க பசங்களை வச்சி நெஸ்ட் பார்ட் எழுதுவேன்னு அதுவும் எழுதிட்டு இருக்கேன்..

அது என் ரைட்டிங் ஸ்டைலேந்து கொஞ்சம் டிப்ரெண்டா இருக்கும்.காதலன் கதைக்கும் இதுக்கும் கேரக்டர்ஷ் தவிர வேற எந்த ஒற்றுமையும் இருக்காது..

லவ் ஸ்டாரிதான் கொஞ்சம் வேற மாறி இருக்கும்..

.ஒரே ஒரு டீசர் போடுறேன் பிடிச்சி இருந்தா சொல்லுங்க அடுத்த வாரத்துலேந்து அதையும் வாரம் ஒரு எபி போஸ்ட் பண்ண பாக்குறேன்..

கதையின் பெயர் : நீங்க முடியுமா

நாயகி பெயர் : செல்லம்மா
நாயகன் : ஜித்து..

செகண்ட் ஹீரோ : வெற்றி
செகண்ட் ஹீரோயின் : துகிரா

பின்குறிப்பு :

காதலன் கதை படிச்சாதான் இதுல உள்ள கேரக்டர் எல்லாம் புரியும் யாரும் படிக்காதவங்க இருந்தா கிண்டிலே ல இருக்கு படிங்க..நிறைய பேர் இருந்தீங்கனா சொல்லுங்க நான் ஒரு 2 டேஷ் பிரீ டவுன்லோட் தாறேன்
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கமுடியுமாமுன்னோட்டம்1


மணி 11 தாண்டி இருக்க, அந்த பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஜித்து, வழக்கம் போல யாரும் தூங்க வில்லை, விஸ்வா அவனை முறைத்து பார்த்துக்கொண்டு நிற்க அகலியோ கண்களால் தன் கணவனை கெஞ்சி நின்றாள், அந்த பார்வை விஸ்வாவை அமைதிகாக்க வைத்தது இருந்தும் அந்த பெண்ணின் கையை பிடித்து இருக்கும் ஜித்துவின் கையை உக்கிரமாக முறைக்க ஜித்துவுன் கை தானாகவே அந்த பெண்ணன் கையை விட்டது…


இன்னொரு புறம் கண்ணன் ,ரீனா செய்வறியாது நிற்க , சந்தோஷின் பார்வையோ எங்கயோ நிலைக்குத்தி போய் இருந்தது ,யாரும் எதும் செய்யமுடியாமல் அமைதி காக்கா, ஜித்து அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான்..கோபம் குறையாமல் மூச்சி வாங்க நின்று கொண்டிருந்த விஷ்வாவை அகலியின் அழுகை கலைக்க , வேகமாக அகலியை நெஞ்சோடு அனைத்து கொண்டான் விஷ்வா, ஏற்கனவே தான் உள்ள பாடும் படுத்தி இருக்க ,இப்பொழுது மீண்டும் தன் பையன் ஆரம்பிக்கிறானே என்று வேதனை பொங்க ஆறுதல் சொல்ல முடியாமல் அனைத்து நின்றான்…


***************


அவனின் மிக பெரிய பொழுது போக்கே அவனின் அத்தை மகள் செல்லம்மாவை கதற கதற காலாய்ப்பது,அழுகவிடுவது , வலிக்க அடிப்பது என எல்லாம்..அவனுக்கும் அவளுக்கும் தான் கல்யாணம் என்று வீட்டு பெரியவர்கள் சொன்னாலும் பெரிதாக ஈடுபாடு காட்டமாட்டான்…நீங்க எதையாவது பேசிக்கொள்ளுங்கள் என இருந்துவிடுவான்..



ஆனால் செல்லம்மா அப்படி இல்லை அறியாத வயது முதல் ஜித்துவை தன் காதலனாக கணவனாக வரித்து கொண்டவள் குட்டி அத்தான்,குட்டி அத்தான் என அவனை கொண்டாடி தீர்ப்பவள், அவன் ஒரு நிமிடம் அவள் முன் நின்றாள் கண்களாலே கபளீகரம் செய்துவிடுவாள்…
எத்தனை தொலைவில் இருந்தாலும் அந்த விழுங்கும் பார்வையை ஜித்து எளிதாக கண்டுபிடித்துவிடுவான்..அவளை நோக்கி திரும்பாமலே “குட்டச்சி வந்தன்னு வச்சிக்கடி காத திருகி கையில கொடுத்துடுவேன் ,ஒழுங்கா ஓடிப்போ என்பான்,


****************
துகிரா தன் ரூமிலிருந்து கீழே வந்தாள்… குளித்தாலும் மலர்ச்சியாய் இருக்க காட்டிக்கொண்டாலும் அந்த அடையாளங்கள் ஏதும் இல்லை அவளிடம்..வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிடலாமா சொல்லி என்ன புண்ணியம், ஏதும் புண்ணியம் இல்லாமல் இப்பட்டிவிட்டு சென்றுவிட்டானே அப்படி அவனுக்கு நான் என்ன பாவம் செய்தேன் என உள்ளே கதறிக்கொண்டு படியில் இறங்கி வந்து கொண்டு இருந்தாள்..


*********


இரவு ஒன்பது மணி இருக்கும் துகிரா அறையின் அருகில் சென்று வெற்றி கதவை தட்ட போக ,அதற்கு அவசியம் இன்றி கதவு தானாக திறந்தது..கதவு திறக்கும் சத்தத்தில் கண்களை வேகமாக துடைத்து கொண்டு கட்டிலில் எழுந்து அமர்ந்தாள்.



என்னதான் கண்களை துடைத்து இருந்தாலும் ,கண்கள் வீங்கி சிவந்து இருப்பது அவள் நெடுநேரமாக அழுததை அவனுக்கு காட்டிக்கொடுத்தது..வா என்றும் சொல்லவில்லை நிமிர்ந்து அவனை பார்க்கவும் இல்லை தவறு செய்த குழந்தை போல தலை கவிழ்ந்து அமர்ந்து இருந்தாள்.. கட்டிலின் அருகே வந்து எதிரில் உள்ள டீப்பாயில் அமர்ந்து கவிழ்ந்து இருக்கும் அவள் தலையையே பார்த்துக்கொண்டு இருந்தான்..ரூமின் உள்ளே என்பதால் ஒரு ஸ்லீவ்லெஸ் டாப், போட்டு இருந்தால் அதை ரசித்து பார்க்க அவ்வளவு ஆசை இருந்தாலும்.. தன்னை நம்பி ரூமில் அனுமதித்திற்கும் அவளுக்கு பார்வையால் கூட பங்கம் ஏற்பட விரும்பவில்லை..
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#நீங்க முடியுமா

#முன்னூட்டம்2

செல்லாவிற்கே கொஞ்சம் சந்தேகம்தான் இந்த அத்தானுக்கு நம்மல பிடிக்குமா பிடிக்காத என, பின் அசட்டையாக பின் தள்ளியும் விடுவாள், பிடிச்சா பிடிக்குது இல்லானா இருக்கட்டும் நம்மதான் அத்தையும் மாமவையும் கரெக்ட் பண்ணி வச்சி இருக்கோமே..

அத்தான் மாமா பேச்சை மீறமாட்டான் என புறம் தள்ளிவிடுவாள் …இவள் முறைத்து கொண்டு நிற்பதை பொருட்படுத்தாமல் ஜித்து வெற்றி இருவரும் கதை அளந்து கொண்டு இருந்தனர்..சிறிது நேரம் கழித்து வெற்றி “ மாப்பிள்ளை , ஒரு சிலருக்கு ஆசை இருக்கான் அம்பாரி ஏற ,யோகம் இருக்காம் கழுதை மேய்க்க”என செல்லம்மாவை கலாய்க்க “போ டா சளி டப்பா “ என அவனை தள்ளிவிட்டவள்


ஜீத்துவையும் ட்ராலியையும் தள்ளிக்கொண்டு ஜித்து வந்தாள் அங்கே தங்கும் ரூமிற்கு அழைத்து சென்றாள்..

செல்லும் போதே “டேய் வெட்டி அம்மாட அத்தான் வந்து இருக்குன்னு , சைவம் சமைக்க சொல்லு என அறையில் மறைந்தாள்..


உள்ளே சென்றவள் அவனை கட்டிலில் அமரவைத்து அவளின் போனை எடுத்து “ அத்தான் உன் பேஷ்புக் அக்கவுண்டல போன மாசத்துக்கு இந்த மாசத்துக்கும் 200 பேரு அதிகமா இருக்காங்க , அதுல 180 பேர் பொண்ணுங்க அது என்ன கதை சொல்லு,அதும் அந்த ரெஜினா பெர்னாண்டஸ் தஸ் புஷ் எப்ப பார்த்தாலும் உன் போட்டோ எல்லாத்துக்கும் “ சோ ஹாட்”,”க்கூயிட்” ஒரே கிஷிங் ஸ்மைலி யா கமெண்ட் போடுறா அது என்னை கதைன்னு சொல்லு,

என அவன் பிரண்ட் லிஸ்ட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும் விளக்கம் கேட்டு கொண்டு இருக்க…
பொறுத்து பொறுத்து பார்த்த ஜித்து ஏற்கனவே இரவு முழுவதும் கார் ஒட்டிக்கொண்டு வந்தது அலுப்பாக இருக்க “தள்ளு டி, பணம்கொட்டை மண்டை, நய் நய்ன்னு கேள்வி கேட்டுகிட்டு ,உன் கேள்வி கேர்க்கெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது என அவளை கட்டிலில் தள்ளிவிட்டவன் துண்டை எடுத்துக்க்கொண்டு குளிக்க சென்றான்..


“அது எப்படி நீ பதில் சொல்லாம நான் வெளிய போவேன்னு நினைக்குற”என ஒய்யறமாய் படுத்துக்கொண்டு இவளும் கத்த..பதிலுக்கு ஜித்து “ இரு இரு எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை , மாற்ற டிரஸ் எடுத்துட்டு வரலை, பிரீ சோ பார்த்துட்டு போ” என்றான்..


“ அடச்ச்சீ கருமம்… நீ வந்தாலும் வருவ” , என ஒரே ஒட்டமாய் ஓடி போனாள் செல்லம்மா “ உள்ளே குளித்துக்கொண்டு இருக்கும் ஜித்துவிற்கும் வாய் கொள்ள சிரிப்பு
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
13814


13815

13816

நீங்க முடியுமா : 1


.
சென்னையின் அவுட்டர் ,கடற்கரை சாலை ,ஹை வேஷ், மனதையும் , அறிவையும் அப்படி சாந்த படுத்தும் அவ்வளவு அழகான சாலை , சந்தோஷமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் சென்னை மக்கள் தேர்ந்தெடுக்கும் லாங் டிரைவ்காண சாலை, வெண்ணெய் என வழுக்கி செல்லும் அந்த காரில் அரக்கனை ஒத்த உருவத்தோடு ஒருவன்..முகம் முழுவதும் தாடி மண்டி இருக்க, வெள்ளை நிற முழுக்கை சட்டை வெளிர் நீல நிற ஜீன்ஸில், வாயின் ஒருபக்கம் சிகிரேட் இருக்க, தன் கருப்பு நிற ஸ்விப்ட் டிசையர் காரில் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் தன் வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தான்.
வயது 27 தான் என்றாலும் அவன் உடையில் அவ்வளவு சிரத்தை இல்லாததாலும் அவனின் சாராசரியை விட அதிக உயரமும் ,அவனின் ஆஜானுபாகுவான தோற்றமும் முகம் முழுவதும் மண்டி இருக்கும் தாடியும் அவனை சற்றே வயது அதிகம் உள்ளவனாகவே காட்டியது.. அவன்தான் ஜித்து,ஜித்து விஷ்வேந்திரன்,

விஷ்வேந்திரன் அகலியின் மூன்றாவது மகன்..பெயர் சொல்லும் ஓவியன் ,படிப்பில் பெரிய ஆர்வம் இல்லாமல் முழு நேரமும் ஓவியம் ஓவியம் என்றே இருப்பவன் ,விடாமல் 24 மணி நேரம் கூட ஊன் உறக்கம் இல்லாமல் வரைப்பவன் ,அதுவும் இந்த 6 மாத காலமாக இன்னும் அரக்கத்தனமாக அதில் புகுத்தி கொண்டவன்..
பக்கத்தில் உள்ள பெண்ணிற்கு 40 வயது இருக்கும், அந்த பெண் மிரட்சியுடன் அவனை பார்த்து கொண்டு இருந்தது…புயல் வேகத்தில் காரை தன் வீட்டின் முன் காரை நிறுத்தினான்..
மறுபுறமாக வந்து அந்த பெண்ணை இழுத்துக்கொண்டு தன் வீட்டை அண்ணாந்து பார்த்தான்..தன் அப்பா, பெரியப்பா , தன் ஒட்டி பிறந்த சகோதரர்களின் அசாத்திய உழைப்பு இந்த வெள்ளை மாளிகை, அதை பார்க்க ஒரு தெய்வீக சாந்தம் கண்களில் வந்து ஒட்டிக்கொள்ளும், வடபுறமாக ஒரு சின்ன பிள்ளையார் கோவில் அதை தான்டி சிட்டவுட்
இடதுபுறம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட அழகு செடிகள் இருக்கும், வீட்டின் பின்புறம் அப்படியே உல்டாவாக கிராமத்து வாசனையை கொண்டு இருக்கும் , வாலி கயிற்றுடன் கிணறு இருக்க அனைத்து வகையான மரங்களும் இருக்க ,ஒரு பக்கம் முழுவதும் மல்லி, முல்லை என பந்தல் போட்டு பூக்கள் பூத்து குலுங்கும்…

மணி 11 தாண்டி இருக்க, அந்த பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஜித்து, வழக்கம் போல யாரும் தூங்க வில்லை, விஸ்வா அவனை முறைத்து பார்த்துக்கொண்டு நிற்க அகலியோ கண்களால் தன் கணவனை கெஞ்சி நின்றாள், அந்த பார்வை விஸ்வாவை அமைதிகாக்க வைத்தது இருந்தும் அந்த பெண்ணின் கையை பிடித்து இருக்கும் ஜித்துவின் கையை உக்கிரமாக முறைக்க ஜித்துவுன் கை தானாகவே அந்த பெண்ணன் கையை விட்டது…இன்னொரு புறம் கண்ணன் ,ரீனா செய்வறியாது நிற்க , சந்தோஷின் பார்வையோ எங்கயோ நிலைக்குத்தி போய் இருந்தது ,யாரும் எதும் செய்யமுடியாமல் அமைதி காக்கா, ஜித்து அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான்..கோபம் குறையாமல் மூச்சி வாங்க நின்று கொண்டிருந்த விஷ்வாவை அகலியின் அழுகை கலைக்க , வேகமாக அகலியை நெஞ்சோடு அனைத்து கொண்டான் விஷ்வா, ஏற்கனவே தான் உள்ள பாடும் படுத்தி இருக்க ,இப்பொழுது மீண்டும் தன் பையன் ஆரம்பிக்கிறானே என்று வேதனை பொங்க ஆறுதல் சொல்ல முடியாமல் அனைத்து நின்றான்…
அழுது, ஓய்ந்து கண்ணீர் வற்றியவுடன் நிதானத்திற்கு வந்த அகலியின் கண்ணில்,இத்தனை பெரிய வயதிலும் ஆதரவு இல்லாமல் தவிக்கும் குழந்தையாய் நிற்கும் தன் நண்பன் கருவாயன் கண்ணில் பட அவனை நோக்கி விரைந்தாள், அதே பார்வையை விலக்காமல் எங்கயோ பார்த்து அமர்ந்து கொண்டு இருந்த சந்தோஷின் அருகில் அமர்ந்து அவன் தோளை தொட குளம் கட்டி கலங்கிய கண்களுடன் அகலியை நோக்கி திரும்பிய சந்தோஷ் “ தேனு குட்டி ,செல்லம்மா கிடைச்சிடுவாள்ள ,
எங்கயாவது நல்லா இருப்பால ,என்க நின்று இருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க இருவரும் அழுக விஷ்வா , ரீனா ,கண்ணன் என யாராலும் ஆறுதல் படுத்த முடியவில்லை..
ஆம் சந்தோஷ் ,ஜனனியின் ஒற்றை பெண்ணான செல்லம்மா காணவில்லை ஆறு மாதமாக , எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை..
ஏனோ செல்லமாவிற்கு பிறகு ஜனனி கருத்தரிக்கவில்லை அதை பற்றி பெரிதாக அவர்கள் கவலைப்பட்டதும் இல்லை,தன் ஒற்றை பெண்ணை இளவரசியென அத்துணை சிறப்பாக வளர்த்தனர்..24 வயதான சின்ன சிட்டு எங்கு போனது என்ன ஆனது தெரியவில்லை..
செல்லம்மா தொலைந்த நாளாய் அவர்கள் குடும்பத்தின் எல்லாம் தொலைந்துவிட்டது..ஜனனி சாப்பிடுவதில்லை,ஒழுங்காக தூங்குவது இல்லை , மருத்துவமனை செல்வது இல்லை,எந்நேரமும் ஒரே அழுகை அழுகை மட்டுமே…
விதி தன் அடுத்த இன்னிங்க்ஸை அவர்கள் குடும்பத்திலையே தொடங்கிவிட்டது..
விஷ்வா,சந்தோஷ் ஒழுங்காக தொழிலை கவனிக்க செல்வதில்லை
ஏதோ தொழில் விஷ்வா ,அகலியின் மற்ற இரு புதல்வர்கள் விபீன், துருவ், மற்றும் கண்ணனின் கவனிப்பால் இன்னும் சரிவை சந்திக்காமல் உச்சத்தில் இருந்தது..
ரீனா வீட்டு பொறுப்பை பார்த்துக்கொள்ள ஏதோ வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது…
தன் முழு பண பலத்தையும் ,படை பலத்தையும் பயன்படுத்தி விஷ்வா செல்லம்மாவை தேட பலன் என்னவோ புஜ்ஜியம் தான்…பொறுப்பெடுத்து தேட வேண்டிய ஜித்துவே இப்படி மது மாது என்று இருக்க விஸ்வாவிற்கு ஏதும் புரியவில்லை..
விபீன், துருவ் ,ஜித்து மூவரும் ஒரே பிரசவத்தில் பிறந்து இருந்தாலும் விபீன் துருவ் இருவரும் ஐடென்டிகல் ட்வின்ஸ், பார்க்க ஒரு மாதிரி உருவ அமைப்பு கொண்டவர்கள் குணமும் அப்படியே அப்பா மாதிரி சாந்தம், புத்தி கூர்மை எந்தன் பெண்ணையும் ஏர் எடுத்தும் பார்க்காதது என அத்தனையும் , ஜித்து கடைசி, பெரிதாக எதற்கும் அசைட்டை செய்து கொள்ள மாட்டான் , அவனுக்கு வேண்டும் என்றால் அதை எப்டியாவது சாதித்து கொள்வான்,இருப்பது ஒரு வாழ்க்கை அதை நாம் விரும்பியபடி வாழ வேண்டும் என்று நினைப்பவன்..பெண்களை இப்படி என்பதற்குள் வலையில் சிக்க வைத்து விடுவான்..கண்டிப்பாக முறை தவறுபவன் கிடையாது, கொஞ்சம் பிரிகுவண்டா தண்ணி ,தம் அடிப்பவன் அதுவும் ஒரு எல்லைகுள்ளே இருக்கும், தன் சந்தோஷ திற்க்காக அடுத்தவர்கள் பாதிக்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவன்..
அவனின் மிக பெரிய பொழுது போக்கே அவனின் அத்தை மகள் செல்லம்மாவை கதற கதற காலாய்ப்பது,அழுகவிடுவது , வலிக்க அடிப்பது என எல்லாம்..அவனுக்கும் அவளுக்கும் தான் கல்யாணம் என்று வீட்டு பெரியவர்கள் சொன்னாலும் பெரிதாக ஈடுபாடு காட்டமாட்டான்…நீங்க எதையாவது பேசிக்கொள்ளுங்கள் என இருந்துவிடுவான்..
ஆனால் செல்லம்மா அப்படி இல்லை அறியாத வயது முதல் ஜித்துவை தன் காதலனாக கணவனாக வரித்து கொண்டவள் குட்டி அத்தான்,குட்டி அத்தான் என அவனை கொண்டாடி தீர்ப்பவள், அவன் ஒரு நிமிடம் அவள் முன் நின்றாள் கண்களாலே கபளீகரம் செய்துவிடுவாள்…
எத்தனை தொலைவில் இருந்தாலும் அந்த விழுங்கும் பார்வையை ஜித்து எளிதாக கண்டுபிடித்துவிடுவான்..அவளை நோக்கி திரும்பாமலே “குட்டச்சி வந்தன்னு வச்சிக்கடி காத திருகி கையில கொடுத்துடுவேன் ,ஒழுங்கா ஓடிப்போ என்பான்,
செல்லம்மாவும் பழிப்பு காட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் அவனை ரூட் விடுவாள்..
செல்லம்மா , பேரை போலவே பார்த்தாலே செல்லம் கொஞ்சம் தோணும் கொலு கொலு முக அமைப்பு.. எப்பொழுதும் முட்டி வரை ஒரு பாவாடை ,ஒரு டீஷிர்ட் , சங்கி மங்கி கொண்டை என அரை லூசு மாறியே சுற்றுபவள் , அமைதியோ அமைதி , அருந்த வாலு என எந்த கட்டுக்குள்ளும் வைக்க முடியாது..அவளின் அத்தை அகலியின் தீவிர விசிறி என்பதால் ,அகலி அளவு இல்லை என்றாலும் ஓரளவு அதை விட பயங்கர சேட்டை காரி..
தன் குட்டி அத்தான் அவளுக்கு தினசரி கொடுக்கும் மொக்கைகளின் அடிப்படையில் அவளின் அன்றைக்கான சேட்டைகள் இருக்கும்…

ரீனா ,கண்ணன் தம்பதியருக்கு ஒரே மகள் மேகா, பெங்களூரில் தங்கி CA படிக்கிறாள், விடுமுறைக்கு தான் வீட்டிற்கு வருவாள்..
ரீனாவிற்கு ஜித்து என்றால் அப்படி ஒரு செல்லம் ,அகலியின் மற்ற பிள்ளைகள் தன்னை பெரியம்மா என்று அழைக்க ஜித்து மட்டும் அம்மா என்று அழைத்து பழகி இருந்தான்,அதனால் தனி பிரியம் ,சின்ன வயதில் சாப்பிடுவது தூங்குவது என அத்தனையும் தன்னோடு தான்…ஒரு வகையில் பெருமை என்றாலும் இப்பொழுதான அவனின் நடவடிக்கைகளை பார்க்கும் போது தன்னிடம் வளர்ந்ததால் இப்படி இருக்கிறானோ என ரீனா கவலை படுவதும் உண்டு…
விஷ்வா,அகலியின் கடைசி பிள்ளை ,துகிரா ,தன் மாமன்னுக்காக, அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக பெற்று எடுத்த ஒற்றை பெண் பிள்ளை செல்லம்மாவை விட 7 மாதம் இளையவள்..
வீட்டில் நடக்கும் இவ்வளவு பணி போரிலும் தன் அறையைவிட்டு வெளியேறாமல் உள்ளே அடைத்து கிடந்தாள்..அவள் வாழ்வில் அப்படி எண்ணப்பதான் கருப்பான பக்ககங்களோ.. அவளும் கொஞ்சம் சோபையாக தா திருகிறாள் ஒரு மாத காலமாக…..

அவள் வாழ்க்கையிலும் இடர்கள் அதிகம் காயங்கள் அதிகம் ,அதைவிட காதல் அதிகம் ஆனால் இப்பொழுது எதற்கும் அர்த்தம் இல்லை...
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க முடியுமா :

13882

13883


13884



குடும்பமே இரவு தூக்கம் தூங்கியே வெகுநாட்கள் ஆனது அந்த வெள்ளை மாளிகைக்கு 5 மணிக்கே விடிந்துவிட்டது…

எல்லாம் அவர்கள் அவர்கள் அறையிலையே இருக்க ஜித்துமட்டும் அந்த பெண்ணை அழைத்து கொண்டு வேக வேகமாக அறையவிட்டு வெளியே வந்து கொண்டு இருந்தான்…

வெளியே வரும்போது வலப்புறமாக இருக்கும் வீட்டின் சாமி அறையை உக்கிரமாக பார்த்தான்…அவன் விழிகளில் அப்படி ஒரு கொலை வெறி…ஏற்கனவே தூங்கி பல மாதங்கள் ஆக இப்பொழுதும் கோபமும் சேர்ந்து கொள்ள கண்கள் நெருப்பு கங்குகளை கொட்டி கொண்டிருந்தது..

ஜித்து தீவிர சிவா பக்தன் முழு சைவ பிரியன் ..சிவ பக்தன் என்பதை விட சிவன் அடியார் என சொல்லலாம் அப்படி முழு மூச்சாக சிவ பெருமானை வழி படுபவன்.. உலகில் தன் கண்ணிற்கு கருத்திற்கும் பட்ட அத்தனை சிவனாலயங்களையும் தரிசித்து வந்துவிடுவான்…

அதுவும்கோவில்களுக்கு செல்லும் போதெல்லாம் எந்த முன்னேற்பாடும் இன்றி கையில் காசு இல்லாமல்,கழுத்தில் கனமான ருத்திராட்ச மாலையோடு போட்ட உடையோடு கிடைப்பதை சாப்பிட்டு கொண்டு .கிடைக்கும் இடத்தில் தூங்கிக் கொண்டு செல்வான்..


சில நேரங்களில் அவன் பயணம் மாத கணக்காக கூட ஆகிவிடும் ,வீட்டில் எல்லாம் துடித்துவிடுவார்கள் அவனை திருப்பி காணும் வரையிலும் அந்த அளவு காணாமல் போய் விடுவான்…அப்படி ஒரு சிவ வெறி அவனுக்கு..அந்த நேரங்களில் அவனுக்கு சித்தம் எல்லாம் சிவமயம்தான்..மற்றவை எல்லாம் மாயைதான்

அப்படி இருக்கும் எனக்கு இந்த மாதிரி உயிர் உறையும் சூழ்நிலையில் கூட நீ உதவவில்லையே என்பதாக தான் அந்த பார்வையின் அர்த்தமாக இருந்தது..


அப்படியே அந்த சாமி அறையையே துவம்சம் ஆக்கும் வெறி அவனுக்கு ஏற்கனவே அதை லட்சம் முறை செய்து அவர்கள் வீட்டினார்கள் அதை கோடி முறை சரி செய்தும் விட்டார்கள்..

வேகமாக அந்த பெண்ணை அழைத்துக்குக்கொண்டு வெளியேறிவிட்டான்…
மணி 10 ஐ கடக்க விபீன், துருவ்,கண்ணன் எல்லாம் பேக்ட்ரி கிளம்ப துகிரா தன் ரூமிலிருந்து கீழே வந்தாள்… குளித்தாலும் மலர்ச்சியாய் இருக்க காட்டிக்கொண்டாலும் அந்த அடையாளங்கள் ஏதும் இல்லை அவளிடம்..வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிடலாமா சொல்லி என்ன புண்ணியம், ஏதும் புண்ணியம் இல்லாமல் இப்பட்டிவிட்டு சென்றுவிட்டானே அப்படி அவனுக்கு நான் என்ன பாவம் செய்தேன் என உள்ளே கதறிக்கொண்டு படியில் இறங்கி வந்து கொண்டு இருந்தாள்..

ரீனா சமையல் செய்பவர்களுக்கு உத்தரவு கொடுத்துக்கொண்டு இருக்க ஹாலில் உள்ள சோபாவில் சந்தோஷ் அமர்ந்து இருக்க மடியில் ஜனனி படுத்துக்கொண்டு கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்க , விஷ்வா அகலியை ஆறுதலாக பிடித்து தன் காவல் துறை நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டு இருந்தான்..


அதை பார்த்த துகிராவின் கண்கள் கரித்தது இந்த வயதிலும் தன் பெற்றோர்களும் ,தன் அத்தை மாமாவும் ஒருவரை ஒருவர் தாங்கி கொள்ளும் விதம் அந்த காதல் அதற்காகத்தானே தானும் ஆசைபட்டோம் இப்படி மண் அள்ளி போட்டுவிட்டானே பாவி என துடித்தாள்..


தன் இழந்து பெரிதாக இருந்தாலும் அதை தாண்டி தன் குடும்பம் இருக்கும் நிலை கருத்தில் வந்தது தன் அண்ணனும் , தன் உற்ற தோழியான செல்லம்மாவும் இப்படி சிதைந்தது போய் கிடக்கிறார்களே என்ன செய்ய..


வேகமாக படி இறங்கி வந்தவள் “ அப்பா போலீஸ் என்ன சொல்றாங்க..செல்லம்மா பத்தி எதும் தெரிஞ்சதா என்க இட வலமாக தலையை ஆட்டிய விஷ்வா அப்படியே அகலியை பிடித்துக்கொண்டு சோபாவில் அமர “ என்ன ஆச்சி அப்பா “ என விஷ்வாவின் கால் அருகே அமர்ந்து கேட்க

“ இல்ல துகி செல்லம்மா பத்தி கேஸ் 6 மாசம் ஆகியும் ஒரு சின்ன விஷயம் கூட போலீசால கண்டு பிடிக்க முடியலையாம், யாரும் கடத்துன மாறி அடையாளம் கூட ஏதும் இல்லை , செல்லா டூர் போன இடத்துல அடிக்கு ஒரு கேமரா இருக்கு ,அதில் எதும் அப்படி இல்லை ,இன்னும் சொல்ல போன செல்லா கடைசியா அந்த காட்டுபக்கம் தான் போய் இருக்கா, ஆனால் அந்த காட்டுல ஆள் நடமாட்டம், விலங்குகள் நடமாட்டம் ஏதும் இல்லை , பகல் 12 மணிக்கு கூட கும்மிருட்டா இருக்கும் அடர்ந்த காடு அது…


நான் தனியா 100 பேர வச்சி அந்த காட்டையே சல்லடை சல்லடையா தேடிட்டேன் ஆனால் எந்த பலனும் இல்லை,இது எல்லாமே செல்லா காணாமல் போன அடுத்த ஒரு வாரத்துக்கான தகவல் ,அதுக்கு அப்புறம் எந்த தகவலும் இல்லை, கேஸ் எந்த பக்கம் கொண்டு போறதுன்னு தெரியல ..

நாளுக்கு நாள் நம்ம செல்லா உயிரோட”என ஏதோ சொல்ல ஆரம்பிக்க சந்தோஷின் மடியில் இருந்து வேகமாக எழுந்த ஜனனி” அண்ணா உன் வாயால அதை மட்டும் சொல்லாத அண்ணா, உன் மருமகள் எங்கு இருந்தாலும் நல்லா இருப்பா , வீட்டுல இத்தனை ஆம்பளைங்க இருக்கீங்களோ என் பொண்ண இப்படி தொலைச்சிட்டு நிக்கிறீங்களோ அய்யோ அய்யோ” என தலையில் அடித்துக்கொண்டு அழ ஏற்கனவே கனமாக இருந்த சூழ்நிலை இன்னும் கனமாகி மோசமாகி போனது..


நாளைக்கு ஒரு வேளை உணவுதான் வீட்டில் உள்ளவருக்கு அதுவும் ரீனா அதட்டி, உருட்டி அதுவும் இன்று இல்லை என்று திண்ணம் ஆனது ..


எல்லாம் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து இருக்க ,அத்தை மாமா, பெரியப்பா, பெரியம்மா என்ற சத்தம் அந்த வீட்டை நிறைத்தது.

சந்தோஷின் தம்பி ராஜாவின் மகன் வெற்றி மாறன் கிராமத்து வாசனையோடு உள்ளே நுழைந்தான் தும்பை பூ நிறத்தில் வேஷ்டியும் வெளிர் பச்சை நிற சட்டையுமாய் முகத்தில் முழு புன்னைகையுமாய் உள்ளே வர,உள்ளே உள்ள அசௌகர்யமான நிலை எதும் அவனை கலைக்கவில்லை..

நேராக ஜனனியிடன் சென்றவன் பெரியம்மா “என் தங்கச்சி சமத்து சக்கரகட்டி உன் அண்ணன் பொண்ணு மாறி மக்கு மசால் வடை கிடையாது” என்று துகிராவை வாரியவன்
அவள் எங்கு இருந்தாலும் அப்படி பொருந்தி போய் இருப்பா,வர கூடிய ஸ் சூழ்நிலையில இருந்தா கண்டிப்பா வந்து இருப்பா, அவள் நல்ல படியா இருப்பா ,நம்ம செஞ்ச புண்ணியம் அவளை காப்பாத்தும் என்க

அங்கு உள்ள பெண்கள் அனைவர் கண்களிலும் ஒரு ஒளி, ஜனனி நிஜமாவா என்பது போல் ஒரு கேள்வி“நீ கவலை படாம வந்து சாப்பிடு” என்று விறுவிறுவென டைனிங் டேபிளில் இருந்து சாப்பாடு எடுத்து வந்து அகலிக்கும், ஜனனிக்கும் வாயில் வைத்து மறுக்க மறுக்க ஊட்டிவிட்டான்..


பிரச்சனையில் உள்ளே இருக்கும் சந்தோஷிற்கும் ,விஷ்வாவிற்கும் சூழ்நிலையை எப்படி கையாளுவது என்று தெரியாமல் இருக்க கண்ணன், விபீன், துருவ் பெரிய அளவில் ஆறுதல் என்றாலும் இந்த அளவு சுறு சுருப்பாய் கையாண்டது இல்லை..

ஏதோ அந்த வீட்டிற்கே புது தெம்பு வந்தது போல இருந்தது, சாப்பாடு ஊட்டி கொண்டி இருக்கும் வெற்றியையே துகிராவின் கண்கள் துளைத்தது..அதை கவனித்த வெற்றி “ ந்தா டி உனக்கெல்லாம் ஊட்டி விட முடியாது ஏற்கனவே பால் டின் மாறிதான இருக்க, நீ சாப்பிடாம இருந்தாலும் தப்பு இல்ல,என் அத்தையும் பெரியம்மாவும் சாப்டறதா கண்ணு வைக்காத ஓடி போ" என்க ,எல்லார் கண்களிலும் ஒரு இதமான சிரிப்பு ,

வெற்றி அப்படியே அவன் தாத்தாவின் வார்ப்பு, இருக்கும் இடம் கலகலவென்று இருக்கும் .விவாசயத்தில் உயர்கல்வி முடித்து ஊரிலையே விவசாயம் பார்ப்பவன்..வேஷ்டி சட்டையை தவிர வேறு உடையயை பெரிதாக விரும்பாதவன்..எளிமை விரும்பி அதுவும் வேஷ்டியை மடித்து கொண்டு தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு நாத்து வீசும் அழகில் கிராமத்தில் உள்ள அத்தனை பெண்களையும் மயக்கிவிடுவான்..


எத்தனை கண்கள் அவனை சுற்றினாலும் அவன் விருப்பம் எல்லாம் இந்த பட்டணத்து பால்கோவா மீதுதான்..பாவம் அவனுக்கு தெரியவில்லை அவன் பால்கோவா ஏற்கனவே ருசி பார்க்கப்பட்டு சுகிக்க பட்டதை..

எல்லாரும் சிரிக்க,சிரிக்க வேண்டிய துகிராவோ முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள்…

எப்பொழுதும் இப்படியாக இருப்பவள் கிடையாது இந்நேரம் வெற்றி கொடுத்த கவுண்டர்க்கு எல்லாம் பதில் கவுண்டர் சென்னை பாஷையில் கொடுத்து வெற்றி மூக்கு உடைந்து கீழே தேடி கொண்டிருக்கும் போதுதான் அவ்விடம் விட்டே அகல்வாள்..
ஏதோ சரி இல்லை என்று வெற்றிக்கு பொறிதட்டியது.

.அதன் பின் அகலியை சந்தோஷ் விஷ்வா என அனைவரையும் ஓரளவு இயல்பாக்கிவிட்டு ஜனனியை வலுக்கட்டாயமாக மருத்துவமனை அழைத்து சென்றான்..மீண்டும் மருத்துவனை சென்றுவந்தாள் கொஞ்சம் இயல்பாகும் என..இருந்தும் பெற்ற வயிறு படும் பாடு பெரும்பாலான ஆண்களுக்கு புரிவதே இல்லை.

மாலை மங்கி இரவை எதிர்பார்த்து எல்லா ஜீவ ராசிகளும் காத்திருக்க ஜித்து ஒரு பதின் வயது பெண்ணை அந்த பெண் மறுக்க மறுக்க வலுக்கட்டாயமாக தன் காரில் ஏற்றி கொண்டு இருந்தான்…


இயலப்பை தொலைத்து வெறிப்பிடித்தவன் போல மாறி இருந்தான்..பிரச்சனை புரிந்தும் அதை தீர்க்கும் மார்க்கம் அவனுக்கு விளங்கவில்லை..எல்லாம் மறந்து சிவனே என்று அவன் காலில் விழு என்று அவன் ஆழ்மனம் சொன்னாலும் ,


இவ்வளவு பெரிய பிழையை தனக்கு இழைத்த கடவுளிடம் அவன் மண்டியுடுவதாக இல்லை..
விரட்டி விரட்டி அடித்தாலும் விலகுவேணா என சண்டித்தனம் செய்தது அவனவளின் நினைவுகள் ,சுகமென இருந்த நினைவுகள் எல்லாம் சூடு மணலில் பதிந்த பாதமென கொப்பளித்து வெடித்து கிடக்க ராட்ச வேகத்தில் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்…

வீட்டில் கேட்கும் கேட்டு கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஏதும் இல்லை அவனிடம்.. அதுவும் அவனின் அம்மா அகலி பூ மனது காரி,அவளை தினம் தினம் பிய்த்து எடுக்கிறான்…ஆனாலவனுக்கு வேறு மார்க்கமும் தெரியவில்லை..



இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரிந்தது இப்போது..
இது தெய்வங்கள் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது…
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க முடியுமா 3 :

13933

13934

13935


இரவு ஒன்பது மணி இருக்கும் துகிரா அறையின் அருகில் சென்று வெற்றி கதவை தட்ட போக ,அதற்கு அவசியம் இன்றி கதவு தானாக திறந்தது..கதவு திறக்கும் சத்தத்தில் கண்களை வேகமாக துடைத்து கொண்டு கட்டிலில் எழுந்து அமர்ந்தாள்.

என்னதான் கண்களை துடைத்து இருந்தாலும் ,கண்கள் வீங்கி சிவந்து இருப்பது அவள் நெடுநேரமாக அழுததை அவனுக்கு காட்டிக்கொடுத்தது..வா என்றும் சொல்லவில்லை நிமிர்ந்து அவனை பார்க்கவும் இல்லை தவறு செய்த குழந்தை போல தலை கவிழ்ந்து அமர்ந்து இருந்தாள்..


கட்டிலின் அருகே வந்து எதிரில் உள்ள டீப்பாயில் அமர்ந்து கவிழ்ந்து இருக்கும் அவள் தலையையே பார்த்துக்கொண்டு இருந்தான்..ரூமின் உள்ளே என்பதால் ஒரு ஸ்லீவ்லெஸ் டாப், போட்டு இருந்தால் அதை ரசித்து பார்க்க அவ்வளவு ஆசை இருந்தாலும்.. தன்னை நம்பி ரூமில் அனுமதித்திற்கும் அவளுக்கு பார்வையால் கூட பங்கம் ஏற்பட விரும்பவில்லை..


அவள் தலை நிமிர்வதாக தெரியவில்லை “ துகி என்ன பிரச்சனை”என நேரடியாக அவன் விஷயத்திற்கு வர ,தூக்கி வாரி போட நிமிர்ந்து அவனை பார்த்தாள் “ஏதும் ஏதும் இல்லை வெற்றி” என தந்தியடிக்க உடல் வேர்த்து விட்டது அவளுக்கு


வீட்டில் உள்ளவர்களுக்கு செல்லா , ஜித்து பிரச்னையால் யாரின் கருத்தையும் இவளின் வதங்கிய முகம் கவரமால் இருக்க உற்றவனக்கு வந்த முதல் நாளே தெரிந்துவிட்டது…


“பாரு துகி எந்த பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்லு ,வீட்டில் சொல்லமா சரி பண்ணிடலாம்” என்றான்..


வெற்றிக்கு தெரியும் பிரச்சனை ஏதோ பெரிது என்று சின்ன விஷயங்களுக்கு இப்படி சுனங்கி போகுபவள் இல்லை, நல்ல தைரியசாலி ,சூழ்நிலையை அழகாக கையாள்பவள் என்று உணர்ந்தே இருந்தான் ,


அவன் கேட்கும் கேள்விகளுக்கு எதுக்கும் பதில் இல்லை “ பிரச்சனை கை மீறி போவதற்குள் சரி பண்ணிடலாம் துகி மா” என்றான் வார்த்தையில் அன்பு கொட்ட ,


ஏற்கனவே எல்லாம் கை மீறி விட்டதே இனி நான் என்ன செய்ய வெற்றி என மனதுக்குள் வேதனையாக நினைத்தவள் “ ஒன்னும் இல்லன்னு சொன்னா விடமாட்டியா ,எனக்கு கொஞ்சம் தலைவலி நீ போ முதல சும்மா நொய் நொய்ன்னு பேசி இன்னும் அதை அதிகப்படுத்தாம “ என அவன் கையை பிடித்து இழுத்து வெளியில் கொண்டுவிட போக ,

வெற்றி அசையவே இல்லை அலைபாயும், ஆறுதல் தேடும் அவள் கண்ணையே உற்று பார்த்தான்…

அவனை இழுத்து இழுத்து பார்த்து முடியாமல் போக யாசகமாக வெற்றியை ஒரு பாவ பார்வை பார்க்க அந்த பார்வை அவனை சற்று தனிய செய்தது ,வந்த முதல் நாளே இவ்வளவு அவசரம் வேண்டாம் என யோசித்து


“ எதுவா இருந்தாலும் இந்த வெற்றி ஒரு நண்பனா உனக்கு எப்போதும் கூட நிற்பேன்,அது உன் மேல தப்பு இருந்தாலும், நீ தப்பனவளா இருந்தாலும் துகி மா என பாசம் கொட்ட சொன்னவன் ,கடைசியில் அதுக்குன்னு என்ன கரெக்ட் பண்ணி கல்யாணம் கட்டிக்கலாம் ஆசை படாத அய்யா ரேஞ்சே வேற,அதனால உன் உப்பு சப்பு இல்லாத பிரச்சனையை நாளைக்கு சொல்லணும் சரியா “ என கிண்டல் செய்தான்..


இது வழக்கமான ஒன்று துகிராவிற்க்கு ஏதாவது உதவி செய்துவிட்டு சின்னதில் இருந்து இது மாதிரி கிண்டல் செய்யவான்..அதற்கு பதிலாக துகி “ என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் கோபால் , நீங்கள் இல்லயேல் என் வாழ்க்கை பாலைவனம் கோபால்,பாலைவனம் “என நாடக பாணியில் பதில் சொல்வாள்..


இது விளையாட்டு போலத்தான் என்றாலும் வெற்றி இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்று துகிராவை உயிராய் நேசிக்க தொடங்கிவிட்டான்..ஆனால் துகிராவிற்கு வெற்றி ,அனைவரிடமும் பண்பு பாராட்டக்கூடிய நல்ல மனிதன், பீரியட்ஸ் ஆரம்பித்து , காலேஜில் சைட் அடிப்பது என தன் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நல்ல நண்பன் அவ்வளவுதான்



அவளின் இயல்பான பதிலை எதிர்பார்த்து வெற்றி நிற்க, கல்யாணமா எனக்கா, என உள்ளே கண்ணீர்வடித்தவள் சிரிக்க முயன்று தோற்றாள்.. இதையும் கவனத்தில் கொண்டு வெற்றி யோசனையாக வெளியில் செல்ல போக..துகிரா ஓக்காளித்து கொண்டு பாத்ரூமை நோக்கி ஓட வெற்றியும் அவள் பின்னே ஓடி தலையை தாங்கி பிடித்து கொண்டான்..


அடிவயிறு வரை குமட்டியாதால் மயக்கம் வருவது போல இருக்க அப்படியே வெற்றியின் தோளில் சாய்ந்து நிற்க,அவளை தாங்கி பிடித்தபடியே அவள் முகத்தை கழுவி வெளியில் அழைத்து வந்து கட்டிலில் படுக்க வைத்தவன் , அவள் தலையை வருடியபடி சாப்பிட்டது எதும் ஒத்துக்காம இருக்கும், நான் போய் ஜீஸ் (juice) எதும் எடுத்துட்டு வாரேன் என்று செல்ல ,அவன் கையை பிடித்து தடுத்தவள் “ நீ வராத பிளீஸ் ,வேலைக்கார அக்காவை அனுப்பு”என வெற்றியும் சிரித்தபடி சரி என்று தலையை ஆட்டிவிட்டு கீழே சென்று வேலைக்கார அக்காவிடம் கொடுத்து அனுப்பினான்..



துகிரா எங்கே இவனை மறுபடி பார்த்தால் இதுதான் என் பிரச்சனை எனக்கு எப்டியாவது உதவி செய்யேன் என்று அவனிடம் கதறிவிடுவோமோ என்ற பயம் அவனை பார்ப்பதை தவிர்த்தால்..


கணவன், மனைவி,காதலி என எத்தனையோ உறவுகள் இருந்தாலும் அதை தாண்டி ஒரு உறவு ரத்த பந்தம் இல்லாத ஒரு உறவு, அவர்களிடம் சொன்னால் தன் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என நம்பிக்கையான ஒரு உணர்வு தோன்றும்,இவர்களிடம் பேசினால் நம் மனப்பாரம் குறையும் என தோன்றும் அப்படியாக தான் வெற்றி துகிரா கண்களுக்கு தோன்றினான்..


மணி பத்தரை இருக்க இன்று என்ன கூத்து நடக்க போகிறதோ என மொத்த குடும்பமும் வாசலை பார்த்த படி ஜித்துவை எதிர்பார்த்து இருக்க துகிரா உடை மாற்றிக்கொண்டு கீழே வந்தாள், வெற்றியின் புருவம் சுருங்க அவளை பார்த்தான்..


“ அம்மா ஹாஸ்டல தங்கி இருக்க என் பிரண்ட் க்கு உடம்பு முடியலையாம்,நான் ஹாஸ்பிடல் அவளை கூப்பிட்டு போய்ட்டு வந்துறேன் என விரைய,
அண்ணன் யாரையாவது துணைக்கு கூப்பிட்டு போ” என அகலி கத்த “ இல்லை மா, என் இன்னொரு பிரண்ட் வெளியே நிற்கிறான் என தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியில் ஓட வெற்றி அவள் பின்னே வந்து பார்க்க அப்படி எந்த பிரண்டும் இல்லை இவள்தான் இவள் பைக்கில் வேகமாக சென்று கொண்டு இருந்தாள்..


வெற்றியின் மனம் ஏனோ மிகவும் பட பட வென்று அடித்து கொண்டது ஏதோ சரி இல்லை என அவன் மனம் சொல்ல, யோசித்த படியே வாசலில் நின்றான்..


பின்னே மனம் கேட்காமல் தன் பைக்கில் அவளை பாலே செய்ய, ஒரு மெடிக்கல் ஷாப் முன்னே நின்று ,அங்கே சென்று ஏதோ வாங்கி கொண்டு இருந்தாள்..


வெற்றியும், துகிராவும் வெளியில் சென்ற அடுத்த பத்து நிமிடங்களில் ஜித்து உள்ளே வர அவனின் பக்கத்தில் ஒரு 18 வயது இளம்பெண்..

நான் வர மாட்டேன் வரமாட்டேன் என்க, ஜித்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக வீட்டினுள் அழைத்து வந்தான்..அந்த பெண் கதறிய எதும் அவன் காதில் விழ வில்லை, நடையை தளர்த்தாமல் அங்கு உள்ள யாரையும் பொருட்படுத்தாமல் சென்று கொண்டு இருந்தான்,தன் பெரியம்மா,அம்மா என அத்தனை பேரின் பார்வை புரிந்தாலும் சட்டை செய்யவில்லை அவன்..ஏனோ ரீனாவிற்கு தேவை இல்லாத தன் கடந்த காலம் நியாபகம் வந்து நெருப்பின் மீது நிற்க வைத்தது..



அண்ணன்கள்,பெரியப்பா ,என யார் கேள்விக்கும் பதிலும் இல்லை, வேகமும் குறையவில்லை, சந்தோஷ் வெறுப்பின் உச்சத்திற்கே சென்றான், இவனுக்கா தன் தேவதை பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்க முடிவு செய்தேன்..என் பெண்ணே எங்கே கஷ்டப்படுகிறாளோ ,இருக்கிறாளா இல்லையா என எந்த கவலையும் இல்லாமல் இப்படி மது மாது என சுற்றுகிறானே என்று..ஜனனியோ அவனை பற்றி அப்படி சந்தேகம் எல்லாம் படவில்லை தன் அண்ணனின் ரத்தம் அப்படி கீழ் தனமாக இருக்காது என நம்பினாள்.. ஆனால் ஒற்றை பெண் பிள்ளையை இழந்த தாய்மனம் அதை தாண்டி யோசிக்கவில்லை..


ஜித்துவை அப்படி யோசிக்கவும் விடாமல் ,அவன் நடந்து கொள்வதற்கு அர்த்தமும் தெரியாமல் மொத்த குடும்பமும் கொலை நடுங்கி நிற்க, விஷ்வா ஜித்துவை நோக்கி “ ஜித்து ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாமல் ,அந்த பெண் ஒரு விபச்சாரியா இருந்தா கூட கட்டாய படுத்த கூடாது “என்க..


நிதானமாக அந்த பெண்ணின் கையை விட்ட ஜித்து அந்த பெண்ணை நோக்கி “ உன் விருப்பம் இல்லாமல்தான் என் கூட வரியா ,அவர்கிட்ட சொல்லு என கர்ஜிக்க ,

அந்த பெண்ணோ “இல்லை மா.. எதோ சொல்லவந்தவள் ,என் விருப்பத்தோடதான் வரேன்” என பொதுவாக சொன்னவள் வேகமாக சென்று ஜித்துவின் ரூமில் மறைந்தாள்..


மொத்த குடும்பமும் இருக்கும் குழப்பத்தில் அந்த பெண்ணின் நடவடிக்கைகளை யாரும் கவனிக்கவில்லை, வெற்றி இருந்து இருந்தால் கண்டிப்பாக அவனுக்கு எதும் புரிந்து இருக்கும், அவனையும் காட்சியில் இருந்து அழகாக அப்புறப்படுத்தியது விதி..


அதே நேரம் வீட்டின் வெளியே முகம் முழுவதும் திருநீறு பூசி ஜடாமுடியுடன் ஒரு பரதேசி.. கையில் ஒரு பெரிய உடுக்கையை வைத்து அந்த இடமே அதிரும் படி அடித்து கொண்டு..
தன் கணீர் குரலில் “ நான் என்ன சொல்வது..


விட்டுவிட போகுது உயிர்…
உடனே உடலை சுட்டுவிட போகிறார்கள் சுற்றத்தார்
பட்டதெல்லாம் போதும் இனி எந்நேரமும் சிவனை ஏற்றுங்கள்..போற்றுங்கள்…
சொன்னேன் அதுவே சுகம்..
வீடு,வாசல்,மனைவி இவைகளை எல்லாம் மறந்து..
சித்தத்தை சிவனிடம் செலுத்துங்கள்..
பாவம் குறைய வேண்டும் என்றால், சாபம் மாற வேண்டும் என்றால் எல்லாம் நீயே என்று அவனிடம் அடிபணியுங்கள்


என்ற சொல்லி சென்றார்..
அதை கவனிக்கவும் இல்லை,அதன் அர்த்தம் உணரவும் யாரும் இல்லை..துகிரா மெடிக்கல் ஷாப்பைவிட்டு சென்றவுடன் அந்த கடை சென்று என்ன வாங்கினால் என வெற்றி விசாரிக்க அந்த கடைக்காரன் சொன்ன பதில் பூமியே இரண்டாக பிளப்பது போல இருந்தது வெற்றிக்கு..

எங்கே வாழ்க்கை தொடங்கும்.
அது எங்கே எவ்விதம் முடியும்..
இதுதான் பாதை.
இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது…


 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க முடியுமா 4 :


14094

14095


14096

ஜித்துவை விட்டு வேகமாக வந்ததால் அவனுக்கு முன்னே அவனின் அறையை அடைந்து இருந்தாள் அந்த சிறு பெண்..

சின்னதா ஒரு கால் அதை ஒட்டி வலப்புறமாக ஒரு குட்டி அறை ,இடப்புறமாக பெட் ரூம் என இருந்தது..எப்பொழுதும் அந்த குட்டி ரூமை அவன் வரைவதற்கு பயன்படுத்துவான் என அனைவரும் அறிவர்..அந்த அறைக்கு அவ்வளவாக யாரையும் அனுமதிக்க மாட்டான், அந்த பெண் தைரியத்தை வரவழைத்து கொண்டு அங்கே செல்ல அரை முழுவதும் ஒரே சிகிரேட் , சரக்கு ஸ்மெல் அடிக்க வாயை பொத்திக்கொண்டு உள்ளே சென்றவளின் கண்கள் சாசர் போல விரிந்தது


அத்தனையும் செல்லம்மாவின் உயிரோட்டமான ஓவியங்கள் அப்படியே அவள் ஒன்றாக பத்தாக நூறாக நிற்பது போலவே பிரம்பை அந்த ஓவியங்ளை பார்த்து மலைத்து போய் நின்றாள்…


அதிலும் ஒரு ஓவியம் அப்பப்பா என்ன ஒரு தத்ரூபம் என்பதாகவே இருந்தது…அந்த ஓவியம் ஒரு முறை செல்லம்மாவின் அறையில் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று துகிராவின் அறைக்கு வந்து குளித்து முடித்தவள் உடை மாற்ற வெளியில் வர

ஜித்து துகிராவின் பெட்டில் அமர்ந்து இருக்க வெக்கத்தின் உச்ச நிலையில் தன்னிலை மறந்து ,தான் இப்போது ஓடி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் ஏதும் இல்லாமல் கண்ணனுக்காக காத்திருந்த மீரா போல “அய்யோ குட்டி அத்தான் “ என முனகியவள் அப்படியே உறைந்து நிற்க,

துகிராவிடம் எதையோ கேட்க வந்த ஜித்துவிற்கும் எல்லாம் மறந்து மயக்க நிலையை தாண்டி கிறக்க நிலைக்கு போனான், முதல் முறை இவளை இப்படியாக பார்க்கும் ஜித்துவிற்கும் அவனின் இளமை உணர்வுகள் எழுந்து பேயாட்டம் போட, பெண்களை எப்பொழுதும் ரசனை என்ற உணர்வுக்குள்ளே பார்த்தவனுக்கு இது என்ன சுரீர் அவஸ்தை என புரியவில்லை..ஆனால் அந்த அடி வயிற்று அவஸ்தை அவ்வளவு சுகமானதாக இருந்தது..


நெஞ்சிலிருந்து முட்டி வரை தூக்கி கட்டிய சந்தன நிற பாவாடை, அந்த பாவடை நிறத்திற்கும், அவளின் பயித்த மாவு நிறத்திற்கும் அப்படி ஒரு போட்டி,


பாவாடையின் முடிச்சை இறுக்கி பிணைத்து நடுங்கி கொண்டு இருக்கும் வெண்டை விரல்கள் , மூச்சை இழுத்து பிடித்து இருப்பதால் தெரியும் கழுத்து எலும்பு, அவள் நிறத்தோடு போட்டி போடும் ஒரு தங்க சங்கிலி,j என்ற எழுத்தில் ஒரு டாலருடன், அது யார் என்று கேட்டால் என் அம்மா ஜனனி என்று புருடா விடுவாள்..ஆனால் அவள் விடும் புருடாவை அவள் குடும்பத்தில் யாரும் நம்ப தயாராக இல்லை,அது ஜித்து என்பது எல்லோருக்கும் திண்ணம்,

தலை குளித்து இருப்பதால் தலையில் துண்டு கட்டி இருக்க நெற்றியின் இருபுறங்களிலும் கத்தையாக முடி வெளியே வந்து விழுந்து அதில் இருந்து சொட்டு சொட்டாக தண்ணீர் வர அது ஜித்துவை இங்கே கரைத்து கொண்டு இருந்தது ,


உவமைக்குள் அடக்க முடியாத அந்த வெங்கள சிலை அவனுக்கு வா வா என்று அழைப்புவிடுக்க,மெதுவாக அவள் அருகில் சென்று..இடுப்பை இரு கைகளால் இறுக்கி பிடிக்க “ அத்து”என முனகியவள் அவள் கால்களால் எம்பி அவன் ஏதோ முத்தம் கொடுக்க வந்தது போல அவனுக்கு வாகாக நின்றாள்..

அவன் மூச்சி காற்று அவள் நெற்றியை குறு குறுக்க செய்ய ,அணைத்து கொளுத்தி விடு என்ற முரனின் மூல ஆதரமாய் அவள் நிற்க,


ஜித்து நமட்டு சிரிப்புடன் அவள் முகத்து அருகே சென்றவன் “ இப்படி அறை குறையா வந்தா என்னை அபேஸ் பண்ணலாம்னு உனக்கு எந்த லூசு ஐடியா கொடுத்தது” என அவள் காதில் கிசு கிசுக்க,


அதில் கோபமாக கண்ணை திறந்தவள் ,அவள் கண்களுக்கு நேராக இருந்த அவன் கழுத்தை நன்றாக பல் படியும் படி கடிக்க அந்த சுக வேதனை அவனுக்கு வேணும் போலும் கழுத்தை கொடுத்து அப்படியே நின்றான்..


கடிப்பது கூட காதலின்,மோகத்தின் ஒரு பகுதி போலும் அவளை அணைத்து முத்தம் கொடுத்தால் எப்படி ஒரு சுகம் கிடைக்குமோ அது கிடைக்க அந்த ரத்த காட்டடேறியிடம் விரும்பியே உடல் தளர்ந்து நின்றது இந்த மாமிச மலை..



கோபம் குறைய அவனை விடுத்தவள் விசும்பி கொண்டே ஓடிவிட்டாள்.. ஓரு பெண் நானே இப்படி சுயம் தொலைத்து நிற்க ,அவனுக்கு என்மேல் எந்த பாதிப்பும் இல்லையா என்ற கவலையில் ஓடிவிட்டாள்..


அன்று அவள் உறைந்து நிற்கும் அந்த காட்சியை தான் வரைந்து இருந்தான் அவள் கன்னத்தில் இருக்கும் மச்சம் ,அவள் கழுத்தில் சொட்டி இருக்கும் நீர்,கழுத்து நரம்பு என அத்தனையும் அப்படியே..அந்த ஓவியத்தையே அந்த பெண் அசந்து பார்த்து கொண்டு இருக்க


ஜித்து உள்ளே வந்தவன் “உனக்கு இங்க என்ன வேலை வெளியில் போ “என அடக்கப்பட்ட கோபத்துடன் சொல்ல,அந்த பெண் அதற்கெல்லாம் சட்டை செய்யாமல் “உங்க அவள் ரொம்ப கொடுத்து வச்சவ , இப்படி உருகி உருகி காதலிக்கிறீங்க ,என பெருமையாக சொல்ல


ஒரு விரக்தி சிரிப்பு சிரித்த ஜித்து “ ஆனால் நான் ரொம்ப பாவம் செஞ்சவன் அவளை இப்படி தொலைச்சிட்டு, கண்டு பிடிக்க முடியாம ,அவளோட நிழல் கூடவும், நினைவு கூடவும் , உருவமே இல்லாம அருவம் கூட வாழ்ந்துட்டு இருக்கேன்” என சொல்ல கண்களில் கண்ணீர் கன்னத்தை நிறைக்க அந்த பெண் பதறி போய் அவன் கண்ணீரை துடைக்க போவ அவளை தடுத்தவன் “ என்னை தொடாத விலகி போ,விலகி போ என கத்தியவன் , தான் ஓவியம் வரையும் அறையில் சென்று கதவை சாத்திக்கொண்டான்..



அந்த பெண்ணும் வேதனையோடு சென்று அவன் கட்டிலில் படுத்து கொண்டாள்..
அவள் அருகில் இருக்கும் போது தெரியவில்லை ஆனால் இப்பொழுது அவளை தொடவேண்டும் தொட்டு ஆள வேண்டும் ,ராட்சசனாய் மாறி,அவளை சுருட்டி வாயில் போட்டு கொள்ளவேண்டும் என மனம் ஆளாய் பறக்கிறது


ஒவ்வொரு முறையும் அவளுடன் ஆன முத்த அனுபவத்தை நினைக்கும் போது அவன் உறைந்து நிற்பது அவனால் முடியவில்லை,…கோபம் கோபம் கோபம் மட்டுமே அவனுக்கு



வீட்டிற்கு வந்த வெற்றியால் எப்படி தான் சரியாக பைக்கை ஒட்டிக்கொண்டு வந்தோம் என நம்பவே முடியாவில்லை அந்த அளவு மூளை மரத்து போய் இருந்தது..


அந்த மெடிக்கல் சாப் பையன் சொன்ன விஷயம் உண்மை தானா ,அவனால் ஜீரணிக்கவே முடியவில்லை ,தன் காதலுக்கும், காதலிக்கும் மூடு விழா செய்ய வேண்டுமா , விவரம் தெரிந்த நாள் முதல் மனைவியாக நினைத்த ஒருத்தியை வேரோடு பிடிங்கி எரிய வேண்டுமா, வீட்டில் உள்ள பெரியவர்கள் ஆசி வழங்கும் போது சொல்லும் “ நல்ல பொண்டாட்டிய கிடைப்பா” என்ற வார்த்தையின் போது வரும் என் துகியை என் தேவதையை,என் கன்னுக்குட்டியை, நான் மறக்க வேண்டுமா ,


என் இயல்பாகி, என் வாழ்க்கையின் ஒரு அங்கமாகி போன என் காதலை விடுத்து என்னால் உயிர்வாழ முடியுமா...,
வேண்டும் அப்படித்தான் ஆக வேண்டும் அவள் வேறு ஒருவனை விரும்பும் போது அவள் நலமே என் காதலின் வெற்றி, என சரி செய்து கொண்டவன் ,சரி செய்து கொண்டது போல தன்னை ஏமாற்றியவன் இயல்பாக காட்டிக்கொள்ள, இருந்தும் துகிராவை பிரக்னென்சி கிட்டுடன் (pregnancy kit) யோசிக்க முடியவில்லை , தன்னையை அவனிடம் கொடுக்கும் அளவிற்கா அவள் மனதை ஒருவன் கவர்ந்துவிட்டான், அப்படியா அவளை கணவனாக வரித்து வைத்து இருக்கிறாள், ஆம் துகிராவை உடல் சுகத்திற்காக சென்று இருப்பாள் என்று 1 % கூட அவன் நினைக்கவில்லை, விஷ்வா மாமாவின் வளர்ப்பு அப்படி சோடை போகாது என்பதில் திண்ணமாக இருந்தான்…



அப்போ நான் எந்த பாதிப்பும் அவளிடம் ஏற்படுத்தவில்லையா என நினைக்கும் போதே தாங்கி கொள்ள முடியாத வலி.. இருந்தும் தங்கள் வீட்டில் காதலுக்கு யாரும் எதிரி இல்லையே பின் எதற்கு கத்தையாக அந்த தூக்க மாத்திரைகள் ,


ஆம் அவள் கடையில் வாங்கியது , பிரக்னேன்சி கிட்டும் , அவள் தாத்தா பாட்டியின் பிரிஸ்கிரிப்சனை காட்டி தூக்க மாத்திரைகளும்தான்..


யோசிக்க யோசிக்க மண்டையே வெடிக்கும் உணர்வு ஒரு வேளை துகிராவை யாரும் பலாத்காரம்” அதற்கு மேல் அவன் யோசிக்கவில்லை ..துகிராவின் அறை கதவை வேகமாக தட்ட கையில் தூக்க மாத்திரைகளை வைத்து கொண்டு அழுது கொண்டிருந்த துகிரா திடீர் சத்தத்தில் கையில் உள்ள மாத்திரைகள் எல்லாம் சிதற வேகமாக அதை அப்புறப்படுத்தியவள்,


கண்களை துடைத்தவள் வேகமாக வந்து கதவை துறக்க வெற்றியை அவள் எதிரிபார்க்கவில்லை திரு திருவென்று முழிக்க அவளை சட்டை செய்யாமல் உள்ளே சென்றவனின் கண்களில் சிதறிய மாத்திரைகளில் ஒன்று அவன் கையில் பட்டது ,அதை கையில் எடுத்துக்கொண்டு “ என்ன இது “ என்று கேட்டு விட்டான் ஒரு ஒரே அறை கன்னம் தீ பற்ற பொத்தென்று மெத்தையில் விழுந்தாள்..


காலையில் கேட்டுக்கொள்ளலாம் என்று கொஞ்சம் அலட்சியமாக இருந்து இருந்தாள் பாவி இந்நேரம் முழுங்கி செத்தே போய் இருப்பாளே.. என்ற நினைவே அவனை கொன்றது..


“ 5 நிமிஷம் தான் உனக்கு டைம் என்ன நடந்ததுன்னு இப்ப சொல்ற,இல்ல இந்த மாத்திரையை எடுத்துகிட்டு, உன்னையும் இழுத்துகிட்டு நேரா மாமாட போயிடுவேன் என்க..


“வெற்றி பிளீஸ்,என்னை நிம்மதியா சாக கூட விட மாட்டியா” என அழ ,அவனிடம் எந்த இளக்கமும் இல்லாமால் போக , யாரிடமும் சொல்லாமல் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கும் அவஸ்தை அவளை உயிர் அறுக்க ,தன் மன கஷ்டத்தை யாராவது ஒரிவரிடமாவது பகிர்ந்து கொள்ளலாம் என தன் வாழ்வின் பெரும் துயரத்தை துகிரா வெற்றியிடம் சொல்ல சொல்ல வெற்றி கொஞ்சம் கொஞ்சமாக உடல் தளர்ந்து அப்படியே கட்டிலில் அமர்ந்தான்..அவளை நெஞ்சோடு அனைத்து கொள்ள கைகள் பர பரத்தாலும் இதமாக அவள் தலையை ஆறுதலாக தடவிவிட்டான்..



மணி 2 என பொருட்படுத்தாமல் துசர்க்கு கால் செய்ய தூங்கினால் தானே முதல் ரிங்கிலே எடுத்துவிட்டான், அவனிடம் சில விஷயங்களை பேசிவிட்டு தன் அப்பாவிற்கு போன் செய்து சில விஷயங்களை சொல்லி வைத்துவிட்டு,துகிராவிடமும் அவள் மறுக்க மறுக்க சில கட்டளைகளை கொடுத்துவிட்டு, இனி சாக முயற்சி செய்ய மாட்டேன் என அவளிடம் சத்யம் வாங்கி கொண்டி, அந்த மாத்திரைகளை அப்புறபடுத்துவிட்டு வெளியே வந்தவனின் மனதில் ஒரு பொட்டு அளவு சந்தோஷம் என்றால் மிகை இல்லை..


நாளை காலை நடக்க போகும் விஷயங்களை நினைத்தாலே தலையை சுற்றியது

..செல்லம்மாவை நினைத்து குடும்பமே தவித்து கொண்டு இருக்கும் போது அடுத்த இடியை இந்த குடும்பம் எப்படி தாங்கும் ஆண்டவா நீதான் காப்பாத்தனும் சீக்கிரம் , என் தங்கச்சியை என் குடும்பத்தோட சேர்த்துடு என வேண்டுதல் வைத்தான் ,நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால்,கடவுளுக்கு வேலை ஏது…


ஆடாத மேடை இல்லை,
போடாத வேஷம் இல்லை,

சிந்தாத கண்ணீர் இல்லை,
சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை,

கால் கொண்டு ஆடும் பிள்ளை,
நூல் கொண்டு ஆடும் பொம்மை

உன் கையில் அந்த நூலா
நீ சொல்லு நந்தலாலா,
 
Status
Not open for further replies.
Top