All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

யாதுமாகி கொன்றாய் கதை திரி

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாதுமாகி கொன்றாய் :

ஜன சந்தடி மிகுந்த நெருக்கமான பகுதி ,ஒரு பார்த்து பதிணைந்து கிராமங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு குட்டி கிராமம்…

நகரம் என்றால் அதீத வளர்ச்சி உள்ள நகரம் என்ற கட்டுக்குள் வராது.ஒரு சிறிய, பெரிய குடும்பத்தின் அதீத தேவைகளை மட்டும் நிறைத்து வைத்திருக்கும் குட்டி நகரம்..

உதாரணமாக ஒரு ஜவுளி கடை.. இரண்டு மூன்று மேல்நிலைப்பள்ளிகள், ஒரு திரையரங்கம் ,ஒரு நாளைந்து உணவகங்கள், ஒரு அரவை மில், இரண்டு மூன்று பிரௌசிங் சென்டர் என்ற அடிப்படைதேவைகளை அளவிற்கு குறைவாக வைத்து இருக்கும் சின்ன ஊர்…


கிராம புறங்களில் வாழும் மக்களுக்கு தெரியும் அந்த சிறிய ஊரின் பெரிய தேவைகள். அதுவும் விசேஷ நேரங்களில் கூட்டம் நிறைந்து முண்ட முடியாமல்தான் இருக்கும்.

இன்றும் அப்படித்தான் ஏதோ விசேஷம் போல, நகர முடியாத கூட்டம், நான்கு சக்கர மகிழுந்துகள் நிரம்ப வந்த போதும் இந்த ஊரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு அதிகபட்ச போக்குவரத்து வாகனமாக இருப்பது மோட்டார் சைக்கிள்கள்தான்…

எப்பேற்ப்பட்ட பணக்காரனும் அதிகபட்சமாக வைத்து இருப்பது ,அப்பாட்சி, பல்சர் போன்ற பைக்குகள்தான்…

அந்த ஊரில் யாரேனும் அந்த மேற்கொண்ட இரண்டு பைக்குகளில் ஒன்று வைத்து இருந்தால், அவர்கள்தான் அந்த ஊரின் கன்னி பெண்களுக்கு கனவு நாயகன், காதல் நாயகன், கதாநாயகன் எல்லாம்…

அழகு கொஞ்சம் கம்மியாக இருந்ததாலும் அப்படி பிடித்து விடும் அந்த பெண்களுக்கு.. அவர்களை..

அதே போல பல்சர் 220 cc பைக்கில் இறங்கிய அந்த அசாத்திய உயரம் உள்ளவனின் விழிகள் ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றன… வயது 38 ஆக இருந்தாலும் அவன் முகம் வயது 30 காட்டுவதே அதிகம்தான் அதற்கும் குறைவாகதான் காட்டும்..

ஒல்லியான ஆனால் ஓயாத உழைப்பின் காரணமாக திடமான உடம்போடு மாநிறத்திற்கு ஒரு கூட அதிகம் உள்ள தென்னிந்திய நிறம். வெள்ளை வேஷ்டி, இள நீல நிற முழுக்கை சட்டை கிட்டபார்வையின் காரணமாக ஒரு பவர் கண்ணாடி,

கல்யாணம் ஆகி 8 வருடங்கள் ஆகிற்று ஆனால் குழந்தைகள் இல்லை … மனைவி இருக்கிறாளா என்றாள் ம்ம்ம் இருக்கிறாள்தான்… இருப்பதற்கும் இல்லாமல் இருப்பதற்கும் வித்தியாசம் இன்றி இருக்கிறாள்…

அவளின் அதிக தேவை வீட்டில் என்ன தேவை பட்டாலும் வாங்கிதரும் கணவன், மாதம் ஒருமுறை தன் பிறந்த வீட்டிற்கு சீராட்ட அனுப்பும் கணவன் ,கையில் அளவுக்கு அதிகமாக பணபுழக்கத்தை தரும் கணவன்.. எப்பொழுதாவது அவளின் தேவை அவனுக்கோ, அவனின் தேவை அவளுக்கோ தேவைப்படும் போது முகம் சுழிக்காமல் தேவையை நிறைவேற்றும் கணவன் .. இப்படி சராசரி பெண்ணின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கே கொண்டவள்…


அதற்காக கணவன் மீது பாசம் இல்லை என்ற வரையறைக்குள் கொண்டு சொல்லமுடியாது.. ஒரு கணவனாக பட்டவனுக்கு கொடுக்கும் பாசம் உயிருக்கு உயிராகவோ , அவனுக்கு ஏதோ ஒன்று என்றால் துடித்து போகும் ,உயிரை விடும் காதலாகவோ நேசமகாவோ இல்லை,

இல்லையா இல்லை அவனுக்கு அப்படி தெரியவில்லையா தெரியவில்லை..

அது பிராக்டிகள் என்ற வரையறைக்குள் பத்திரமாக இருந்தது. இவன் தான் இந்த திருமண வாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொண்டான்.. கல்யாணம் ஆன புதிதில் பெரிதாக எதுவும் தெரியவில்லை.. ஆனால் ஒரு வருடதிற்குள் ஏதோ தாங்க முடியாத அசௌகரியம்… முயன்று ஏற்றுக்கொண்டு வாழ விரும்பினாலும் ,கூடி களித்தாலும் ஏதோ ஒரு ஒட்டாத்தன்மை, சரி செய்ய முனைந்தாலும் உயிர்ப்பு இல்லா அந்த உறவை ஓட்ட வைக்கவோ,உயிர் கொண்டுவர வைக்கவோ முடியவில்லை..

கட்டி பிடித்தாலும், முத்தம் கொடுத்தாலும் கட்டில் யுத்தம் செய்தாலும், அவன் மனம் ஒரு நாளும் நிறைவை உணர்ந்தது இல்லை, வருடங்கள் கடக்க அவனும் அதனுடன் வாழ பழகிவிட்டான்..

இதோ அவனின் விழி வட்டத்திற்குள் அவனவள் காரணமே இல்லாமல் தன்னால் தூக்கி போடப்பட்டவள்..

சுயநல பட்சியான தன்னால் துடிக்க துடிக்க கொல்லப்பட்டவள்.. ”மாமா நீ இல்லனா செத்துடுவேன் என்று போனிலும் நேரிலும் கதறிய போது கூட , அவளையும் அவள் காதலையும் கிழித்து நார் நாராய் தொங்க விடப்பட்டவள்…

வழிய சென்று காதலை சொல்லி, தன் காதல் வலையில் விழவைத்து, தான்தான் அவனவளுக்கு உலகம் என்று உணரவைத்து தன்னையே அவனுக்கு புருஷனாகா ஒளி வடிவம் கொடுத்து , அவள் தும்மியதற்கு கூட அன்று துடித்து.. அவள் கழுத்தை ரத்தம் கொட்ட அறுத்த கொலைகார பாவி தான் என தவிப்போடு பார்த்தான் …


கையில் இரண்டு கட்டை பைகளுடன் யாரையோ எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறாள்… கண்டிப்பாக அவள் கணவனாகத்தான் இருக்கும் ..திருமணம் ஆகிற்று என்று கேள்வி பட்டானே ..அதுவும் நான்கு வருடங்களுக்கு முன்பு.. தனக்கு திருமணம் ஆகி நான்கு வருடங்களுக்கு பிறகு.. தன்னை விட ஆறு வயது சிறியவள்.. ஆனால் அவள் தன் மேல் அவள் கொண்ட காதல் வயதுக்கும் , ஜென்மங்களுக்கும் அப்பாற்பட்டது…


கல்யாணம் ஆகி அவனவளை பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருந்தவன்தான்.. தன் கல்யாணமாகி வாழ்க்கையில் கூட உயிர்ப்பு இல்லாமல் இருக்க என்ன காரணம் என்று தெரியாமல் தவித்தானே தவிர அவளை உணரவில்லை… எல்லாம் இருக்க என்ன குறை என்ன குறை…பித்துக்குலியாய் இருந்தவனுக்கு அவளின் திருமண செய்தி சம்மட்டியால் அடித்து சொன்னது அவன் இழந்ததை.. அவன் வாழ்க்கையில் இல்லாததை..

தாங்க முடியாத துக்கம் என்னவளுக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் யார் என்ற கோபம்… தன்னிலை மறந்து போய் அழைத்துக்கொண்டு வந்துவிடுவோமா என்பது வரை யோசித்தவன் ,

தனக்கு கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகி , தன்னாலே அவளை இன்னொருவனுடன் இணைக்க முடியவில்லை என்றால் அவள் எப்படி துடித்து இருப்பாள் தன் கல்யாண செய்தியை கேட்டு…


துக்கத்தை வெளிப்படுத்த முடியாத வெட்கம் கெட்ட சூழ்நிலை …சோகத்தை அடக்கி எத்தனை நாள் அவதிபட்டான்..இனகவர்ச்சி, அது காதல் இல்லை என்று சொன்ன தன் மூளையை எத்தனை முறை செருப்பால் அடித்து காரி துப்பி இருக்கிறான்…

இதோ அவனவள் தோற்றம் கொஞ்சம் இல்லை நிறைய மாறி இருந்தது எப்பொழுதும் ஒப்பனைகளுக்கு பெரிதாய் ஆசை படாதவள்..

இயற்கையாவே அழகி சாதரண உயரம், அசாதாரண நிறம், பெரிய விழிகள் , கூரிய நாசி, அதுவும் தான் பேண்ட் சேர்ட் அணியாமல் வேஷ்டி அணியும் போதெல்லாம் விரியும் அவள் விழிகளுக்கு ஆயிரம் முத்தம் கொடுத்து இருக்கிறான்…

எப்பொழுதும் நேர்த்தியாக உடை அணிபவள் ,தன்னை போல மிராசு குடும்பம் இல்லை என்றாலும் “ above average” என்னும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவள்..


கிராம புறங்களில் நடுத்தர வர்க்கம் என்றால் கொஞ்சம் அல்லல் படும் நிலைமைதான், வருண பகவானையும், காவேரி தாயையும் நம்பி ஜீவனம் நடத்தும் குடும்பம், ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தாலும் விவசாயம் பொய்க்காமல் இருந்தால்தான் அவர்களுக்கிய நிம்மதி வாழ்க்கை…


கையிருப்பு உள்ள நகைகள் யாவும் நடவிற்கு வைப்பதும் ,அறுவடைக்கு பின் திருப்பதுவதும்தான் வாழ்க்கை. ஆனால் அவனவளை மட்டும் அவளின் பெற்றோர்கள் வாட விட்டதில்லை செழிப்பாகவே வளர்த்தார்கள்..


அவளை பார்த்த நாள் அவனவளின் அருகில் படமாய் விரிந்தது..
இளநிலை மூன்றாம் ஆண்டு படித்து கொண்டு இருக்கும்போது தான் அவள் தெருவில் இருக்கும் தன் நண்பன் வீட்டிற்கு செல்லும்போது அவள் வீட்டின் முன்னே ஒரே கூட்டம்…


அவனவளுக்கு பூப்பெய்ததற்கான சடங்கு நடந்து கொண்டு இருந்தது… செமி வைட் நிற பாவாடையும் பச்சை நிற பார்டரும் , அதே நிறத்தில் சட்டை அணிந்து பச்சை நிற தாவணியில் இருந்த அந்த குட்டி பெண்னின் முகம் இன்னும் அவன் மனதில் நீங்காமல்…

ஒன்பதாவது படிக்கும் அந்த குட்டி பெண்ணிற்கு பாவாடை தாவணி கூட ஒரு முதிர்வை கொடுக்கவில்லை பிஞ்சி முகமாகவே இருப்பாள் பார்க்க..

அதன் பின் அங்கு அடிக்கடி வருவதும் யாரின் கருத்தையும் கவராமல் அவளை பார்ப்பதும் சிரிப்பதுமாக செல்வான்.. அவளும் தன் பங்காளி வீட்டு அண்ணனின் நண்பன் என்ற முறையில் சிரிப்பாள்…


அதைவிட யமஹா RX100 பைக்கின் உரிமையாளன் என்ற முறையில் நிரம்ப பிடிக்கும்…90 களில் எல்லாம் எந்த பைக்கின் மோகம் நாம் அறிந்ததே…

அவனுக்கு இனகவர்ச்சி என்றால் அவளுக்கு காரணமே இல்லாமல் அவனை பிடிக்கும்…

அப்பொழுதெல்லாம் ஆண் பெண் பிடித்தம் எல்லாம் காதலாகவே பார்க்கப்படும் , நினைக்கப்படும்… அவனும் அப்படியே வரித்துகொண்டான்..

அவள் பள்ளி படிக்கும் போது பதினோரு மணி கல்லூரிக்கு எட்டு மணிக்கே பேருந்து நிறுத்தம் சென்று விடுவான்… வார்த்தையால் பேச முடியாவிட்டாலும் கண்களால் முழுதாய் அவளை ஆய்ந்து மேய்ந்துவிடுவான்… பத்தாவது படிக்கும் சிறு பெண் என்றெல்லாம் அவன் எண்ணம் இருக்காது..

ஒரு நாள் காதலும் சொன்னான் அவள் கோவில் செல்லும் வழியில் ஒரு காகிதத்தில் எழுதி போட்டு…

அப்பொழுதெல்லாம் வீட்டுக்கு ஒரு தொலைபேசி இருப்பதே அரிது.. அதை இதை சொல்லி அவளை காதலையும் ஒத்துக்கொள்ள செய்தான்…

ஆரம்பத்தில் சாதரணமாக ஆரம்பித்த காதல் நாட்கள் வாரங்கள் ஆக, வாரங்கள் மாதங்களாக, மாதங்கள் வருடங்களாக இமாலயமாய் உருவெடுத்து உலகையே மறக்க செய்தது.


காதலை இவனே சொன்னாலும் அவள் உருகுவதை போல அவன் அவளிடம் காதலை காட்டியதில்லை… ஆனால் அவன் தனிமை சந்திப்பில் எல்லாம் அவனிடம் மாட்டிக்கொண்டு அவள் உதடு படும் பாடு சொல்லும் அவன் காதலை… பாவம் அன்று அவனே உணர்ந்தான் இல்லை…


தன் மனைவியின் உதடை லேசாக உரசும் போதுதான் அதையே உணர்ந்தான்.. தன் காதல் மனைவியின் மேல் இல்லை அவனவளின் மேலே என்று
அன்று கானல் நீரானது எல்லாம்.

ஆனால் என்ன.. இல்லாததை இருப்பதை போல காட்டாமல் இருப்பதை இல்லாததுபோல் காட்டி தொலைந்தது…

அவனவளின் ஆடை மூடிய இடங்கள் தவிர அவன் விரலும் ,இதழும் தீண்டாத இடம் அவள் உடலில்.. எத்தனை முத்தங்கள் அவள் விழியிலும், இதழிலும், எத்தனை காயங்கள் அவள் கன்னத்திலும் கழுத்து பகுதியிலும்… உடலும் உடலும் ஒட்டிக்கொள்ள ,எலும்பு நொறுங்க ,ஆக்ட்டபோஸ் போல எத்தனை முறை கட்டி பிடித்து இருக்கிறான்..

பாதங்களில் கோடி முத்தம், கால் கொலுசில் கோடி முத்தம்… அம்மம்மா கணக்கில் அடங்குமா அதெல்லாம் ..
பாவி கொஞ்சம் கூட மனதும் உடலும் கூசியது இல்லை அவனுக்கு .. என் மனைவி என்ற ஆழமான எண்ணமோ…


இதையே இன்று சில காலமாக தான் உணர்ந்தான்… ஒரு முறை கூட தன்னை தள்ளியோ, வேண்டாம் என்றோ அவள் மறுப்பையோ, வெறுப்பையோ காட்டியதில்லை..

அந்த ஆந்தங்கரை, முருகன் கோவில், கரும்பு காடு, களத்து மேடு, மாமரத்து மறைவு, ஆளில்லாத போது அவள் வீட்டின் பின்புறம் என என இருட்டுக்குலே ஆரம்பித்து இருட்டுக்குள்ளே முடித்தும்விட்டான்… அவளையும் அவள் காதலையும்..,

அடைமழை என்றாலும் குடை பிடித்து காத்து இருப்பாள்.எத்தனை இரவு காத்திருப்பின் போது தெரு நாய்களுடன் மல்லுக்கு நின்று இருக்கிறாள்..

வீட்டில் கொடுக்கும் ஐந்து, பத்து சேமித்து வருடம் ஒரு சட்டை எடுத்துதருவாள்.. பார்க்கும் தருணங்களில் எல்லாம் பச்செக்கென்று நெஞ்சில் ஒட்டிக்கொண்டு சட்டையின் முதல் பட்டனை திருகியே பிய்த்துவிடுவாள்.

ஏழு வருட அவள் காதலில் ஒரு சட்டையின் முதல் பட்டன் கூட உருப்படியாய் இருந்ததில்லை… இருக்கும் போது அது தெரியவில்லை இப்பொழுது இமாலய இழப்பு..

எண்ண ஓட்டங்கள் மீண்டும் நிகழ்காலத்திற்கு வந்து மீண்டும் அவளை வர்ணித்தது..
சாதரண பூணம் புடவைத்தான் அவ்வளவு நாசுக்காக கட்டி இருந்தாள்.

ஒரு இன்ஜ் கூட விலகாமல் அடுத்தவர் கண்களுக்கு விரசம் இல்லாமல் அவ்வளவு அழகாக அவள் உடலை தழுவல் செய்து இருந்தது அந்த புடவை…


கண்களில் ஒளியில்லை, முகம் வறண்டு, உடல் நிறம் மங்கி பொலிவிழந்து கிடந்தது அந்த குத்து விளக்கு..

எப்படி கிடந்தாலும் குத்து விளக்கு குத்துவிளக்குதானே.. தான் இன்னொருவரின் கணவன்… அவள் இன்னொருத்தனின் மனைவி என்ற நினைப்பு ஏதும் இல்லாமல் அவளை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தான்.

எந்த சாத்தான் ஆக்ரமித்தது பணம் என்னும் மாயையா…. அண்ணனுக்கு பணக்கார வீட்டு பெண் , உனக்கு பிச்சைக்காரன் மகளுக்கு கொடுக்க மாட்டேன் என்ற அப்பாவின் கோபமா..

மச்சான் இல்லாத வீட்டில் பெண் எடுக்க மாட்டேன் என்று இரண்டும் ஆண்பிள்ளையாய் பெற்ற அம்மாவின் கொக்கரிப்பா…சொத்தில் ஒரு பைசா கூட கிடையாது என்ற அண்ணன் மிரட்டலா… ஓடி போய் கல்யாணம் பண்ணி சொந்தக்காலில் நிற்க துப்பில்லாத சுயநல பஞ்சோந்திக்கு பலியானது அந்த பச்சைக்கிளியின் காதல்..


தான்தோன்றி தனமாக முடிவெடுத்து தன் காதலின் ஆழத்தையே உணராமல் சொர்க்கத்தை இழந்த பாவி ஆனேன்.. இந்த உயிர்ப்பு இல்லாத உப்பு சப்பு இல்லாத இந்த வாழ்க்கையை வாழ்வதற்கா..?

தாயின் தற்கொலை மிரட்டலுக்கு பின் சுத்தமாக பேசுவதை தவிர்த்தேனே..
எத்தனை போன் நம்பர் மாற்றினாலும் ஒரு வாரத்தில் வாங்கிவிடுவாள் யாரிடமாவது… அவளது அழும் குரலை கேட்கும் போதெல்லாம் அந்த சொல்ல முடியாத உணர்வை எரிச்சல் என்றேனே.. இப்பொழுது கொஞ்ச கலமாகத்தானே தெரிகிறது அந்த குரல் அழும் வேதனை தாங்காமல் வரும் வேதனை கலந்த கோபம் அது என்று..


இந்த ஆழமான காதலை வெறும் அட்ராக்சன் தான் என்று அழகாய் மூளை சலவை செய்ததே..அய்யோ என்று சத்தமாக கதறியது மனம்..


இப்பொழுதுதான் அவளின் பார்வை அவனின் புறம் திரும்பியது.. அப்பப்பா முடியவில்லை பார்த்த ஒரு நொடியில் தாரை தரையாய் தண்ணீர்.. தன் கணவன் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்ற மூளையின் கட்டளையை அவள் கண்கள் கேட்டதாகவே தெரியவில்லை…


நீண்ட நெடிய எட்டு வருடங்கள் ஒரு பார்வை கூட இல்லை.. அவளவன் பக்கத்தில் பார்த்தாலே ஓடி சென்று உரசாமல் அவள் நாட்கள் நகர்ந்ததில்லை.. பனியோ ,மழையோ ,புயலோ அவன் வரும் அந்த பின் இரவிற்காக தன் வீட்டின் கொள்ளைப்புறம் தன் தாய் தந்தையை ஏமாற்றி காத்து இருந்த இரவுகள்தான் எத்தனை…


அவனோட இருந்த அந்த வருடங்கள் எல்லாம் மறந்து அவன் மயம்தானே அவளுக்கு.. அவன் மேல் தான் கொண்ட காதல் அளவு இன்றேனும் தன் கணவன் மீது காதலை கொண்டாளா…? நூறு சதவிகிதம் சத்தியமாக இல்லை…அன்பை வைக்க முடிந்த கணவன் மேல் காதலை வைக்க முடியவில்லை..


கூடல் கூட விரைத்த உடம்போடுதான் ..பொழுதுக்கும் 24 மணிநேரம் பணத்தின் பின்னே ஓடும் அவள் கணவனுக்கு அவன் உடல் தளரும் வரை கூடும் அந்த இரண்டு நிமிடங்களில் அவளின் மேனி விரைப்பு தெரிய வாய்ப்பில்லை..

பிள்ளை பேரு பாவம் இவளுக்கும் கொடுத்து வைக்கவில்லை.. மனங்கள் ரெண்டும் கூடாமல் உடல்கள் ரெண்டும் கூடுவதில் எந்த இனவிரக்தியும் நடக்கப்போவது இல்லை… எப்போதும்….


கண்களில் நீர் நிறைந்து காட்சிகள் எல்லாம் மங்கலாக தெரிய சிலையாகி போனாள்… எத்தனை பட்டும் பாழாய் போன கோபம் மட்டும் இன்றும் மட்டும் இல்லை என்றுமே வருவேனா என்றது அவளவன் மேலே…

கண் மூடித்தனமான முதல் காதல் எதையும் எதிர் பார்க்காது.. என்ன நடந்தாலும் கோபம் கொள்ளாது.. காதலிக்க மட்டும் நீ இரு அது போதும்… வானத்தை வில்லாய் வைகையை கடலாய் , விதையை விரிட்சமாய், நொடியை யுகமாய், கோபத்தை கொஞ்சலாய் வடித்துக்கொள்ளும்,
நாளைக்கு ஒரு வேளை உணவு கொடுத்தாலும் உண்டுவிட்டு உறங்காமல் தன் இணையை பற்றியே நினைக்கும் அந்த பொல்லாத முதல் காதல்..


வசதி இருக்கா,வச்சி காப்பாத்துவானா..அழகா இருக்காளா,என இரண்டாம் நிலை மூன்றாம் நிலை போன்ற முதிர்வான காதலை போல இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் அந்த முதல் காதல்…


அவனவளும் அப்படித்தான்…நோட்டு புத்தகம் முழுவதும் அவன் பெயர்தான் ஸ்ரீ ராம ஜெயம் வித விதமாய் ,அவன் போடும் சட்டை கலரில் ஆரம்பித்து அவன் பேசும் அத்தனை வார்த்தைகளும் அவளுக்கு அத்துபடி மனப்பாடம் தூக்கத்தில் கூட ஒப்பிப்பாள்..


அவனுக்கு என்றால் அத்தனையும் சித்தம்தான்.. மறுப்போ வெறுப்போ கிடையாது பேனா எடுத்தால் அவன் பெயர் எழுதாமல் போனா மூடியதில்லை நோட்டு, புத்தகம் என அத்தனையிலும் அவன் பெயர் அழகாய் வீற்று இருக்கும்..


எத்தனை சூடு சொற்கள் பெற்றவர்களிடமிருந்து, எத்தனை சாடை பேச்சிகள் சுற்றத்தாரிடமிருந்து..


கிராமங்களில் எல்லாம் எல்லா விஷயங்களும் காட்டுத்தீ போல பரவிவிடும் அவள் காதலும் அப்படித்தான்.. பெற்றவர்களை தவிர அனைவருக்கும் தெரியும் .. அதற்காக வருந்தியது இல்லை அவளவன் வருந்தவிட்டதும் இல்லை..பொத்தி பொத்தி வைத்து புழுதியில் தள்ளிவிட்டான்…


அவள் கணவனும் அவனை விட எல்லாவற்றிலும் சிறந்தவன்தான்..ஆனால அது அவளவன் இல்லையே. எதும் இல்லை என்றாலும் அவளுக்கு எல்லாமே அவன்தான் இன்றுமா என்று கேட்டால் கூட கொஞ்சம் அவமானத்தோடு தலை குனிந்து ஆமாம் என்பதே அவள் பதில் ஆகும்..


வாழ்க்கையில் குறை ஒன்றும் இல்லைதான்.. ஆனால் நிறை என்று சொல்வதற்கும் ஏதும் இல்லை…


பாலைவனாத்தில் வளர்ந்து நிற்கும் நெடு மரம்தான் இவள் வாழ்க்கையும் ,பூ உண்டு, காய் உண்டு, கனி உண்டு ஆனால் வறண்டு போய் நிற்கிறது.


காரணமே சொல்லாமல் உயிர் அறுத்து சென்ற போது கூட வருவான் ரட்சிப்பான் என காத்து கிடந்து இருக்கிறாள்.. ஊரே அவனுக்கு கல்யாணம் என்ற போது கூட வருவான் என உறங்காமல் வீட்டின் கொள்ளைப்புறம் காத்து இருக்கிறாள்..

உன் காதலின் ஆழத்தை சோதிக்கவே நான் இப்படி செய்தேன் என அவன் சொல்வான் என ஏங்கி கிடந்து இருக்கிறாள்..


அவனுக்கு கல்யாணம் என்று உறுதியாய் தெரிந்த நாளாய் அவள் அழுத அழுகை அய்யோ… கல்லுக்கும் கண்ணீர் வரும்.. சுகம் எல்லாம் மரண ஓலமிடும்.. சிரிப்பிற்கும் கண்ணீர் வரும் எத்தனை தற்கொலை முயற்சிகள் .. எத்தனை மரண போராட்டம்..


எல்லாம் மறந்து அவளே அவனாகி போனாள்.. வீடே அசோகவனம் வீதிக்கு சென்றால் எங்கே அவனை கண்டுவிடுவோனோ என்று வீட்டுக்குள்ளே விரதம் இருந்தாள்..


அவன் தொட்ட இடம், அவன் முத்தம் இட்ட இதழ் ,அவன் புதைந்த கழுத்து வளைவு எல்லாம் அவளையே உருக்கி , அவளுக்கே உணவாகி போனது…


காலத்திடம் தோற்பது மனித சாபம்.. நாம் வெல்வது போல தெரிந்தாலும் வெற்றி என்னவோ காலத்திற்குத்தான்..


இவளிடமும் வெற்றியை இரண்டாம் முறை பதிவு செய்தது காதலில் தோல்வியை கொடுத்து கல்யாணத்தில் வெற்றியை கொடுத்து..

எத்தனை எத்தனை கேள்விகள் அவள் கண்கள் அவனை நோக்கி ,அத்தனையும் வெறுப்பாகவோ ,கோபமாகவோ இல்லை , கண்ணீரும் காதலாமாக , விரக்தியும் வெறுமையாகவும்…

இப்படி நெருப்பில் நீள் தவம் செய்ய ஏன் அனுப்பினாய்…


உன் அணைப்பில் உருகி நின்ற என்னை அவன் அணைப்பில் விறைத்து நிற்க ஏன் அனுப்பினாய்…

கொஞ்சம் கூட கூசாமல் மனதில் உன்னையும் மடியில் அவனையும் சுமக்க வைத்து என்னை வேசியாக்க ஏன் அனுப்பினாய்…..

கல்யாணத்துக்கு பின் கூட நீ தொட்ட இடங்கள் காந்தமல் அவன் தொட்ட இடம் காந்த… சராசரி பெண்ணின் இயல்பை தொலைக்க வைத்துவிட்டாயே…


இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவனை நோக்கி விழியாலே..

அத்தனை கேள்விகளும் அவனுக்கு புரிந்தாலும் கண் கெட்ட பெண் சூரிய நமஸ்காரம் என்னும் அவன் நிலையை அவளுக்கு எப்படி புரியவைப்பான்..

இருவரும் பார்த்துக்கொள்ளும் வரை தெரியாத ஒரு உறுத்தல் பூதாகரமாய் மாறி மனதை கொன்று கடமைக்காக வாழ்ந்த வாழ்க்கை சூறாவளியாய் சுழற்றி அடித்தது .. இன்னும் அவனை கொஞ்சம் அதிகமாகவே குற்ற உணர்ச்சியும் சேர்ந்து…

நான்கு கண்களும் ராட்ச வேகத்தில் மோதிக்கொள்ள சோகமும் ,கண்ணீரும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டுக்கொண்டது எல்லாரும் வித்யாசமாக பார்த்தாலும் எதுவும் பாதிக்காமல்…


கொண்ட கோலம் மறந்து, காட்சி எல்லாம் பிழையாகி போக தூரமாக இருந்தாலும் விழிகளால் இறுக்கி பிடுத்துக்கொண்டு..

பார்வையாலே கொன்று விடு பாவி நான் என அவன் கதற …ஒரே ஒரு அணைப்பு கொடேன். போதும் பூமியில் நான் வாழ்ந்து போய் விடுகிறேன் என்று அவளும் வேண்டி நிற்க …

எதையும் ஏற்கவோ பார்க்கவோ முடியாமல் தூரமாய் நிற்கவும் முடியாமல் ,அருகில் சென்று அணைக்கவும் முடியாமல்..

அவமானம் புடுங்கி தள்ள ,இதற்கு மேல் தொடரும் இந்த காதலுக்கு உலகம் இடும் பெயர் நினைத்து உள்ளே புழுங்கி ..வென்ற காலத்தை கொன்று புதைக்கும் வெறி எழ இயலாமல் வார்த்தை இன்றி பார்த்து நின்றனர்..


கள்ளக்காதலின் நியாயங்கள் எல்லாம் இது போன்ற ஏதாவது ஒரு ஆழமான பின் புலம் இருக்குமோ..

இனிமேல் இந்த போலி வாழ்க்கையை தொடரமுடியவில்லை பார்வை பரிமாற்றங்கள் எப்போது முடிந்தது அவள் கணவன் எப்போது அவளை அழைத்து சென்றான்..

இவன் எப்பொழுது அந்த இடத்தை விட்டு கிளம்பினான் என எந்த பதிவும் அவர்கள் கருத்தில் கவனத்தில் பதியவில்லை….

இரண்டு நாட்களுக்கு பிறகு…
அவளவனும் ,அவளவனும் கை கோர்த்து நின்றனர் முதல் முதலாக பகலில் பக்கத்தில் பக்கத்தில் , அவர்கள் இருவரின் கண்ணீர் அஞ்சலு போஸ்டரை பார்த்துக்கொண்டு வெறும் ஆன்மாக்களாக…

அவள் விஷம் குடித்து..அவன் வேண்டும் என்றே விபத்தில் சிக்கி இறந்தனர்…

முற்றும்…
 
Top