All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பொம்முவின் - முன்னோட்ட திரி

Status
Not open for further replies.

aishu

Bronze Winner
ஹாய் நண்பர்களே ,

கலியுக காதலுக்கு உங்கள் ஆதரவை பார்த்து பிரமிச்சு போய்விட்டேன். ஆத்ரேயனின் மகன் இஷானை வைத்து கலியுக காதல் 2 கதையை "என்னை அறியா என்னுயிரே" என்ற பெயரில் எழுத முடிவெடுத்துள்ளேன். இதற்கும் உங்கள் ஆதரவை தரும் படி கேட்டு கொள்கிறேன்.

ஐஸ்வர்யா (பொம்மு)
 

aishu

Bronze Winner
இஷான், நேத்ரா - என்னை அறியா என்னுயிரே


"என்னை அறியா என்னுயிரே " இலிருந்து ஒரு குட்டி டீஸர்

Teaser..
" நேத்ரா கான்ஸ்டருக்ஷன்ஸ் இன் financial value ***பில்லியன் ** மில்லியன் *** டாலர் " என்று கூற அது ஆத்ரேயன் கான்ஸ்டருக்ஷன் ஐ விட ஒரு டாலர் குறைவாக இருந்தது.


இஷானை பார்த்து கேலியாக புன்னகைத்தவள் எழுந்து sign பண்ண செல்ல " வெயிட் நேத்ரா இன்னொரு புது கம்பெனி quote பண்ணி இருகாங்க " என்றதும் யோசனையுடன் அமர்ந்தாள்.

" அடுத்து இஷான் கான்ஸ்டருக்ஷன் இன் financial value **** பில்லியன் ** மில்லியன் ** டாலர் " என்று கூற அது நேத்ரா கான்ஸ்டருக்ஷனை விட ஒரு டாலர் குறைவாக இருந்தது.

" தெ டெண்டர் கோஸ் டு இஷான் கான்ஸ்டருக்ஷன் " என்றதும்
அவ்வளவு நேரமும் உணர்ச்சி துடைத்த முகத்துடன் இருந்த இஷான் சூழல் நாற்காலியை பின்னால் தள்ளி எழுந்தவன் நேத்ராவை நோக்கி கையை தலை கீழாக காட்டி விட்டு எழுந்து சென்று sign பண்ண சென்றான்.


அதிர்ச்சியடைந்த நேத்ரா கோபத்துடன் அவனை முறைத்தபடியே அங்கிருந்து வெளி நடப்பு செய்தாள்.

கீழே வந்தவள் கார் டிரைவர்க்கு சொல்லி விட்டு தனது காரிய தரிசியுடன் காத்திருக்க எல்லார் வாழ்த்தையும் பெற்ற இஷான் கீழே வந்து அவளை தாண்டி போக வெளிக்கிட்டவன் அப்படியே பின்னால் வந்து sunglass ஐ இறக்கி அவளை பார்த்தான்.

அவளோ அவனை முறைத்து பார்க்க சிரித்தவன் காய் ரெண்டையும் பாக்கெட்டில் விட்டு " பேபி.. போன டெண்டர்ல அடிபட்ட இஷான் என்று நினைச்சியா??? இப்போ அடிபட்ட புலி நான். உன் துரோகத்துக்கு உன்னை பழி வாங்காம விடப்போறதுல. " என்றவனிடம் தோல்வியை ஒப்பு கொள்ள மனமில்லாமல் " i dont care this silly ப்ராஜெக்ட்" என்று திமிராக கூறினாள். " ஓஹ் இஸ் இட் ?? **** பில்லியன் ப்ராஜெக்ட் உனக்கு சில்லி ப்ராஜெக்ட். தட்ஸ் கிரேட் " என்றவன் மேலும் " இது உனக்கு நான் தர்ற முதல் அடி. இனி ஒவ்வொரு அடியும் இத விட ஸ்ட்ரோங் ஆஹ் இருக்கும் .. கெட் ரெடி டு face it " என்றவன். " உனக்கு மட்டும் தான் ஸ்பை வைக்கவும் ஏமாற்றவும் தெரியுமா??? முதுகுல நீ குத்துனா அத விட டபுள் போர்ஸ் ல நான் குத்துவேன்டி " என்றவன் " வரட்டா " என்று அவள் கன்னத்தில் தட்டிவிட்டு சென்றான்.

அவன் தோட்ட கன்னத்தை துடைத்தவள் பக்கத்தில் இருந்த காரியதரிசியை அறைந்திருந்தாள். " where is the கார் ? " என்று கத்தியவளை திரும்பி பார்த்து சிரித்தபடி தன் வண்டியில் ஏறியவன் கண்ணாடியை இறக்கி " லூசெர் " என்று அவளை சுட்டி காட்டி விட்டு புறப்பட்டான். போன டெண்டரில் அவள் கூறிய அதே வார்த்தை.


https://www.srikalatamilnovel.com/community/threads/பொம்முவின்-என்னை-அறியா-என்னுயிரே-கருத்து-திரி.475/
 
Last edited:

aishu

Bronze Winner
பிரவீன், வருணிகா - விழிகள் தேடும் மொழிகள்

"முதலாவது பொண்ணு சுண்டினா ரத்தம் வாற போல இருக்கனும் "என்றவனிடம் "அப்போ உடம்பெல்லாம் சிரங்கா தான் இருக்கனும் " என்றான் ராகேஷ்.அதை கேட்ட பிரவீன் அவனை முறைக்க "டேய் கொஞ்சம் சும்மா இருடா " என்ற பிரேமன் "நீ சொல்லு மச்சி"என்றான் நண்பனிடம்.

"கன்னம் இருக்கே கன்னம் மாம்பழம் போல இருக்கனும் "என்று சொன்னவனிடம் மீண்டும் ராகேஷ் "அப்படி shape இல்லாம இருந்தா அசிங்கமா இருகாதாடா ?" என்று கேட்டான். "டேய் உன்ன கொலை பண்ணுவேன் பாரு " என்ற பிரவீனிடம் "அப்புறமென்னடா மாம்பழம் பலாப்பழம் என்று அலுப்படிக்காம யாரை போல இருக்கணும் என்று மட்டும் சொல்லு " என்றான்.

சிறிது யோசித்தவன் "பெரிசா ஒண்ணும் இல்லடா, ஐஸ்வர்யா ராயை விட கொஞ்சம் அழகா இருந்தா போதும். முக்கியமா இடுப்பு உடுக்கை போல இருக்கணும் " என்றான். அதில் வந்த சிரிப்பை அடக்கியவர்கள் "நீ நடத்து மச்சி " என்றனர். பிறகு "வாயில இங்கிலிஷ் அருவியா கொட்டணும் " என்றான். "ஆ அப்புறம்" என்ற ராகேஷிடம் "நான் PHD அதனால at least அவ Msc Mphil முடிச்சிருக்கணும். Bsc நம்ம கணக்குல சேராது." என்றான். "இதெல்லாம் ஓவர் டா " என்றான் பிரேமன். "அப்புறம் அவ பேசினா சத்தம் வெளிய வரவே கூடாது. "என்றான். "அப்போ ஊமையா ?" என்று மீண்டும் ராகேஷ் காலை வாரி விட "இல்லடா மென்மையா பேசணும் என்று சொல்ல வந்தேன் " என்றான். "வேற " என்றனர் இரு நண்பர்களும் ஒருங்கே. "பிறகு இந்த சுடிதார் சாரி எல்லாம் நமக்கு செட் ஆகாது. ஒன்லி மாடர்ன் டிரஸ். அதாவது ஜீன்ஸ் ட்ஷிர்ட் ஷார்ட்ஸ் " என்றவனிடம் "கொஞ்சம் நிறுத்து ஷார்ட்ஸ் ஆஹ?" என்று கேட்க "யெஸ் தேவ பட்டா ஸ்விம்மிங் டிரஸ் கூட போடணும்." என்றான்.

"அது சரி இன்னும் இருக்கா?" என்று நண்பர்கள் கேட்க "என்னை போல பாடல் கேட்கணும் நல்லா பாடணும் நல்லா ஆடணும் என் drawings ஐ ரசிக்கணும் அப்புறம் எனக்கு மரியாதையை அள்ளி வழங்கணும் " என்றான். "இதுக்கெல்லாம் நீ ஒரு பொண்ணை செய்து தான் எடுக்கணும்" என்றான் ராகேஷ்.

"அப்புறம் மறந்துட்டேன் வெஸ்டர்ன் சாப்பாட்டு டிஷேஸ் பண்ண தெரிஞ்சிருக்கணும்..pizza burger .போல" என்றவனை முறைத்த ராகேஷ் மனதுக்குள் "அதுக்கு நீ சமையல்காரிய முடிக்கலாம் " என்று நினைத்தவன் அதை வெளியே சொல்லவில்லை.

"அவ வருவாடா பாருடா" என்றவனிடம் "இருந்து பாரு மச்சி மணல் கயிறு சேகருக்கு கிடைச்ச பொண்ணு போல ஒன்னு கிடைப்பா " என்றான் ராகேஷ் எதிர்காலத்தை சரியாக கணித்த வாறே .
 
Status
Not open for further replies.
Top