All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வாழ்க்கை வாழ்வதற்கே !

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை சொல்லும் உண்மைகள்.......
வெற்றி உன்னிடம்....


வாழ்க்கை என்றாலே போராட்டம் தான். அந்த போராட்டத்தில் நாம் ஜெயிக்க விடாமுயற்சி இருந்தாலே போதுமானது. நாம் படித்த இரண்டாவது கதையில் குழிக்குள் விழுந்த கழுதையை அதன் முதலாளி புதைக்க நினைத்து மண்ணைப் போட்டு முடினாலும், கழுதை தன் விடா முயற்சியால் மண்ணை உதறி மேலே வந்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டது.

ஒரு கழுதையே தன் வாழ்வுக்காக இவ்வளவு போராடும் போது, ஆறரிவு கொண்ட நாம் நம் பிள்ளைகளுக்காக சிறிது போராடினால் தவறில்லை.

நம் பிள்ளைகளின் எண்ணங்கள் எப்படி எப்படி மாறுகிறது என்பது காலத்தின் கையிலும், அவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனை அடிபடையிலும் உள்ளது.

எத்தனை பிரச்சனைகள் வந்த போதும் அதை கண்டு கலங்காமல் எதிர் நின்று போராடினால் வெற்றி நிச்சயம் என்று சொல்லிக் கொடுங்கள். நல்ல நல்ல கதைகளை உதாரணமாக எடுத்துச் சொல்லுங்கள்.

தோல்வியே வெற்றியின் முதல் படி என்பதை உணர்த்தினோம் என்றால் எந்தத் தோல்வியிலும் அவர்கள் துவளுவதில்லை.

பின் அவர்களே அவர்கள் பிரச்சனைகளை அழகாக கையாளப் பழகுவார்கள்.

தோல்விக்காக கஷ்டப்படுபவன் வாழ்வில் அடுத்த அடி எடுத்து வைக்க அச்சப் படுகிறான். பயப்படாமல் இருக்கப் பழக்குங்கள்.

எதுவுமே நிரந்தரமில்லாத இவ்வுலகில் உங்கள் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரம் ஆகும்? கவலையை விடுங்கள். உங்கள் வாழ்க்கையை முதலில் வாழத் தொடங்குங்கள் என்ற அன்னையின் அறிவுரையை முன் நிறுத்துங்கள்.

அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஜெயித்து விட வழிகாட்டுவோம்.


 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகச் சிறந்த மருந்து.....

நாம் நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் நம்மை பாதிக்கின்றார்கள். சிலர் சிரித்துப் பேசி நட்பு பாராட்டுவார்கள். சிலர் மிக மிக அன்யோன்யமாகப் பேசி நம் மனதில் இடம் பிடிப்பார்கள்.

சிலரை பார்த்தவுடன் பிடிக்கிறது. ஒரு சிலரை ஏன் என்று தெரியாமலே விரும்புகின்றோம், சிலரை காரணமே இல்லாமல் வெறுக்கின்றோம்.

ஒருவர் பிறரால் விரும்பப் படுவதும், மதிக்கப் படுவதும் அவரது புன் சிரிப்புடன் கூடிய செயல்களால் மட்டுமே அன்றி அவர்களது ஆடம்பரத்திலோ, அணிமணியிலோ அல்ல என்பதை நாம் புரிந்து கொண்டால் நம் வாழ்வை மட்டுமல்ல, நம் பிள்ளைகளின் வாழ்வையும் உயர்த்த முடியும்.

ஒருவர் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பின் அவர்கள் எல்லோராலும் விரும்பப் படுவார்கள். உங்கள் புன்சிரிப்பு அவர்களுக்கு உங்களிடம் இலகுவாக எதையும் கேட்டு அறிந்து கொள்ள வழி காட்டும்.

நம் பிள்ளைகள் முன் கோபமுகம் காட்டாமல், கனிவு முகம் காட்டிப் பாருங்கள். அவர்கள் தானாகவே உங்கள் வழிக்கு வருவார்கள்.

தவறுகளை மன்னிக்கப் பழகுங்கள்,ஆனால் தப்புகளை கண்டித்து திருத்த வழி சொல்லுங்கள்.

உங்கள் பிள்ளைகள் ஒரு பொருளை தவறுதலாக போட்டு உடைத்து விட்டால், அதை சுட்டிக்காட்டி எங்கே தவறு என்று இன்முகத்துடன் புரியவையுங்கள். மறுதடவை அதுவே கவனமுடன் செய்ய ஆரம்பிக்கும்.

தப்பு செய்யும் போது உடனே தண்டிப்பதுடன் பின்னர் அவர்களை அழைத்து அவர்கள் செய்த தப்பின் பின் விளைவுகளை பொறுமையாக, நிதானமுடன் அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் புரிய வையுங்கள்.

எல்லோரும் தண்டிக்க தறுவதில்லை ஆனால் செய்த தப்பை உணர்த்த தவறி விடுகின்றோம். அது அவர்களை மீண்டும் அதே தப்பை செய்ய வழி கோலுகிறது. புன்னகை யுடன் அவர்கள் செய்த தப்பினால் ஏற்பட்ட நிலைமையை விளக்குவதுடன் மீண்டும் அதை செய்யாமல் இருக்கப் பழக்குங்கள்.

புன்னகை போல் ஒர் ஆயுதம் உலகில் இல்லை ஒருவரை உயர்த்துவதற்கும் திருத்துவதற்கும்.

சிரிக்கும் கண்ணனைப் பாருங்கள் உலகமே மறந்து போகும். சிரிக்கும் குழந்தை பல மொழி பேசும். அது உலகில் எந்த மொழிக்கும் ஈடில்லை.

உங்கள் பிள்ளைகள் சிரித்த முகத்துடன், எங்கும் எப்போதும் உயர்ந்த நிலையை அடைய உங்கள் பிள்ளைகளுக்கு புன்சிரிப்புடன் வாழ கற்றுக் கொடுங்கள்.


உங்கள் புன்னகை உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் பிள்ளைகளுக்கும் சிறந்த மருந்து.

 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிரினும் பெரிது.....

ஒரு காலத்தில் மானம் உயிரினும் பெரிது என்று சொன்னார்கள். மானம் என்பது என்ன தன்மானமா? நன்மதிப்பா? உயர்குடி பிறப்பா? குலப் பெருமையா? எது?


ஏனென்றால் நான் அறிந்து, மேலே சொன்னவற்றிற்காக உயிர் துறந்தவர்கள் பலர். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமானைப் பற்றிப் படித்த நாம், நம் வாழ்வில், நம் சந்ததியினருக்கு மானம் காக்க வழி சொன்னோமா?

நம் வாழ்வில் ஆசையும், ஆடம்பர மோகமும் தலை விரித்து ஆடுகிறது. நம் பிள்ளை ஆசைப் பட்டான் என்று எதையும் வாங்கிக் கொடுக்க ஆசைப்படும் பெற்றோர்களே, அது நல்லதா, கெட்டதா என்று யோசித்தோமா?

நம் பிள்ளைகள் அதை வைத்து என்ன செய்கிறார்கள் என்று அறிந்தோமா?

என்னடா இவள் எப்பொழுதும் கேள்விகளையே நம் முன் வைக்கின்றாளே, என்று நினைப்பது புரிகிறது.

ஆனால், இன்றைய சூழ் நிலையில் ஒவ்வொரு தாய், தகப்பனும் கவனிக்க வேண்டிய ஒன்று இது.

ஒரு ஆண், பெண்ணை வன் கொடுமை செய்கிறான் என்று எங்கும் எதிலும் பார்க்கிறோம், படிக்கிறோம், கேள்விப் படுகிறோம்.

ஆண் பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோம். ஒற்றைப் பிள்ளை, அதிக பாசம், அதிக செல்லம், இப்படி தாய். அளவுக்கு அதிகமான அடக்குமுறை இப்படி சில தந்தைகள்.

இப்படிப்பட்ட தாயிடம் அவன் பொய் சொல்லி சமாளிப்பது எளிது.

இப்படிப்பட்ட தந்தையிடம் அவன் மறைத்து செய்ய நினைப்பது பலது.

இவர்கள் இருவரும் தவறு செய்தவர்களே!

தாய் பாசத்துடன் கண்டிப்பும் காட்டி வளர்த்தால், அந்தப் பிள்ளை நேர் வழி செல்லும்.

தந்தை அன்புடன் கண்டிப்பும் காட்டி வளர்த்தால், அந்தப் பிள்ளை நேர் வழி செல்லும்.

எதற்கு கண்டிப்பது, எங்கே, எப்போது கண்டிப்பது?

ஒருவன் ஒழுக்கம் தவறும் போது, தனியாக அழைத்து கடுமையாக தண்டியுங்கள். அதே சமயம் அன்பின் மகத்துவத்தை புரிய வையுங்கள்.
அன்பினால் தோழன் என்று புரிய வையுங்கள். உங்கள் பிள்ளை உங்கள் காலடியில்.


ஒரு பெண் பிள்ளையை எப்படி வளர்க்கிறோம். ஒரே பெண், அழகுப் பெண், ஆசை மகள், என் உயிர் இப்படி தந்தை. அழகாக இருக்கவும், ஆடம்பரமாக வலம் வரவும் பழக்கும் தாய்.

இங்கே பெண் நினைப்பது உடனே கிடைத்து விடும்.
ஒரு சில தாய் தன் பெண்களை முதலில் இஷ்டம் போல் இரு என்று விட்டு விட்டு, பின் பெரியவள் ஆனதும் அடக்க நினைப்பது நடப்பதில்லை.

ஆண் பிள்ளைகளின் பிடிவாதத்தை மறுக்க முடிந்த நமக்கு ஒரு பெண் பிள்ளையின் பிடிவாதத்தை மறுக்க முடிவதில்லை.

இப்படிப் பட்ட பெண்ணிற்கு முழுமுதற் பக்கபலம் அவள் தந்தை.
இங்கே தாய் பின்னே தள்ளப் படுகின்றாள்.

சரி பெண்ணிற்க்காவது நல்லொழுக்கத்தை சரியான முறையில் கற்றுக் கொடுத்தோமா?

என் தோழி சொன்னால், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

என் தாய் எனக்கு எது செய்யவும் அனுமதி கொடுத்தார். ஆனால், கூட்டுக் குடும்ப வாழ்வில் கூட எங்கள் சகோதரர்களுடன் கூட இரவு 7 மணிக்கு மேல் தனியாக அமர்ந்து பேச அனுமதிப்பதில்லை என்று.

இவள் உண்மையான தாய், இவளுக்கு புரிந்து இருக்கிறது, ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆணோ, பெண்ணோ என்ன நினைப்பார்கள், எப்படி நிலை மாறுகிறார்கள் என்று.

இளம் தாய்மார்களே, உங்கள் பெண்ணிற்கு அன்பின் மகத்துவத்தையும், நல்லொழுக்கத்தின் மேன்மையையும் கற்றுக் கொடுங்கள்.


மனம் வலிக்கிறது தாய்மார்களே, பெண்கள் குடித்து விட்டு நடு ரோட்டில் விழுந்து கிடப்பதை பார்க்கும் போது.

பெண் உரிமை பேசினோம் கிடைத்தது.
ஆணுக்கு சமமென எல்லா இடத்திலும் கால் பதித்தாள், மகிழ்ந்தோம்.
பெண் ஆணுக்கு சரி நிகர் சமானம் என்று சொல்லும் இன்னாளில்,
பெண்ணின் மாண்புகளையும், உயிரினும் மேலான ஒழுக்கத்தையும் நம் பிள்ளைகள் ஆண், பெண் இருவருக்கும் கற்றுக் கொடுத்தால், நம் சமூக அவலங்கள் மெல்ல மெல்ல அழிந்து போகும்.



 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தவறவிடலாமா........?
இனிய தோழிகளே,

இன்றைய வாழ்க்கை முறை மிகவும் வேகமானது. இன்று ஒன்றைச் செய்ய நினைத்தால், அதை அன்றே அப்போதே செய்து விடவேண்டும். ஒரு நிமிடத் தாமதம் எத்தனையோ நல்ல வாய்ப்புகளைத் தவற விட ஏதுவாகிறது.

தாமதம் எதனால் தயக்கமா? தாழ்வு மனப்பான்மையா? இல்லை சோம்பேறித்தனமா? இல்லை முக்கியத்துவம் எதற்குக் கொடுக்க வேண்டும் என்று அறியாததாலா? இல்லை புரியாததாலா?

நம் வாழ்வில் வெற்றி பெற நாம் கைவிட வேண்டியதை இங்கு வரிசைப் படுத்தினால்,

  • தயக்கம்
  • தாழ்வு மனப்பான்மை
  • ஒத்திவைத்தல்
  • சோம்பேறித்தனம்
இந்த நான்கும் முதலிடம் வகிக்கும்.
இவைகளைப் பற்றி நான் படித்ததில் பிடித்ததை இங்கு பகிர்கிறேன்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு நொடி தயக்கம்

தயக்கம் ஒரு நொடி தயக்கம்
நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது.
நாம் மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான்.
நம் தயக்கம். பயம், கூச்சம் இவைகல் தான் நம்முடைய முதல் எதிரி.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தயக்கம் ஏன் இளைஞா! [படித்ததில் பிடித்தது]

ஓ இளைஞா!
எழுந்திரு!
தயக்கம் ஏன்?
தள்ளிப்போடாதே உன்
வாய்ப்புகள் தள்ளி போகும்.
துள்ளி எழு!
துணிச்சலோடு உலா வா!
அணிவகுத்து நிற்கும்
பணிகள் உன் கண்ணில்
படும்!
உயரத்தில் ஏறினால்
துயரங்களும் சிறிதாகிப் போகும்!
இதயத்தை வரைந்து
நேரத்தை வீணாக்காதே!
கனா காண்பதை விடு!
கையில் எடு தொழில்!
ஊர் சுற்றி கதை பேசாமல்
ஓர் வேலை உனக்குத் தேடு!
முயற்சி இருப்பின்
அயர்ச்சி தவிர்ப்பின்
ஆயிரம் வேலைகள் அவனியில்!
அனுபவம் பயில்!
அசதியை தவிர்!
தள்ளி எறி தயக்கத்தை!
அள்ளிக்கொள் தைரியத்தை!
அவனியில் நீயும் சாதிப்பாய்!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாழ்வு மனப்பான்மை (inferiority complex)




தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை. திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு. பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள். பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அபாயம் இவர்களில் உண்டு.
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.)

உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால் முதலில் அதை நீங்கள் ஒழிக்கவேண்டும்.
தாழ்வு மனப்பான்மைதான் உங்கள் முன்னேற்றத்திற்கான மிகப் பெரிய ததடைக் கல்லாகும்..தாழ்வு மனப்பான்மை ஒருவரது தன்னம்பிக்கையைத் தகர்த்து எறிந்து விடும். எதையும் தோல்விகரமான மனப்பான்மையிலேயே எண்ணத் தோன்றும்.சிலர் வறுமையான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள்.

பள்ளியில் படிக்கும்போதும் சரி கல்லூரியில் படிக்கும்போதும் சரி இவர்கள் வசதியான பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கும்.வசதியான பிள்ளைகள் அணிந்திருக்கும் உடைகள், செலவு செய்யும் மனப்பான்மை, உணவுப் பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மனதைப் பெரிதும் காயப்படுத்தி இவர்களுடைய தன்னம்பிக்கையை இழக்க வழி செய்கிறது. அதுவே அவர்களிடத்து தாழ்வு மனப்பான்மை உண்டாகக் காரணம் ஆகிறது.

இந்தத் தாழ்வு மனப்பான்மை காலப்போக்கில் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற ஆசையினால் நியாயத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள்.

காலப்போக்கில் உண்மை தெரிந்த உடன் மிகவும் மனம் நொடிந்து போய் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அவ நம்பிக்கையுடன் ஈடு படுகின்றனர்.

தாழ்வு மனப்பான்மை உங்கள் தோற்றத்தையே மாற்றி மற்றவர்கள் உங்களை வெறுக்கும் அளவுக்கு செய்து விடும்.

சிலருக்குப் படிக்கும் காலத்திலேயே தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிடும். அதன் விளைவாகச் சரியாகப் பாடங்களில் கவனம் செலுத்தமுடியாமல் போய் குறைவான மதிப்பெண்
எடுப்பார்கள். மனம் நொந்து போய் இனி நம்மால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற தவறான முடிவுக்கு வந்து விடுவார்கள்.

பள்ளியில் நன்றாகப் படிக்காத எத்தனையோ பேர் நாட்டில் முதல் மந்திரிகளாகவும் பிரதம மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள். இதற்க்கு சரியான உதாரணம் மறைந்த பெருந்தலைவர்
காமராஜர் ஆவார்கள்.

பள்ளிப் படிப்பு என்பது ஒருவருடைய வாழ்க்கையை ஓரளவு தான் நிர்ணயம் செய்யும். ஒருவருடைய வளமான வாழ்க்கையைத் தீர்மானம் செய்ய வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் உள்ளன.

பிறக்கும் குழந்தைக்குத் தாழ்ந்தவரா உயர்ந்தவரா என்று தெரியாது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் சுய நலம் உள்ள மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை. படைப்பில் எவரும் உயர்ந்தவர் அல்ல தாழ்ந்தவர் அல்ல. அனைவருமே சமம்.

இது போன்று தாழ்வு மனப்பான்மை உண்டாகப் பல காரணங்கள் கூறலாம். தாழ்வு மனப்பான்மையை உங்கள் மனதிலிருந்து விரட்ட வேண்டும் என்றால் முதலில் நம்பிக்கை எனும் விதையை உங்கள் மனதில் விதிக்க வேண்டும்.

நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற நம்பிக்கை விதையை மனதில் ஊட்டித் தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறியுங்கள்.

நம்பிக்கை எனும் விதையை ஊட்டுவதற்குத் தியானம் பெரிதும் உதவுகிறது. தியானம் எனும் அறிய கலையின் மூலமாக தாழ்வு மனப்பான்மையினைத் தகர்த்து எறியலாம்.

தியானம் செய்வதின் மூலமாகச் சிந்தனைத் திறன் சரியாக வேலை செய்து நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற உண்மையினை உணரச் செய்து ஒருவரது மனதில் இருந்து தாழ்வு மனப்பான்மையினை தூக்கி எறியச் செய்கிறது.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...! -அபராஜிதன்

[படித்ததில் பிடித்தது]
1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்.

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

3. உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

5. உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்.

7. அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கருமை நிறம்

கருமை நிறம் என்று நினைத்து
கருணை உள்ளத்தை மறைத்து
வேர் இல்லா மரத்தை வளர்த்து
உன்னை நீ இழந்தாயே

இரண்டு கால் இல்லா குருடனுக்கு
மூன்று சக்கரம் உதவ
வாழ்க்கை படிக்கட்டு ஜொலித்தது

தோல்வி என்று கூட தெரியாத உனக்கு
வறுமை இல்லா வாழ்வை கொண்ட உனக்கு
காரணம் அறியாமல் சிரிக்கும் உனக்கு
ஏன் இந்த தயக்கம் ?

இது தான் உலகம்
இவர்கள் தான் எம்மக்கள்
நான் கண்ட பொக்கிஷம் புதிதல்ல

ஏன் பிறந்தேன் ? நான் ஏன் பிறந்தேன்??
என்று கேட்பது மனது அல்ல
உன் அறிவின் கழிவு
அளவுக்கு மீறிய சிரிப்பின் சத்தத்தில்
கேட்பது உன் அழுகையின் வலி
வெளியே வா… உலகம் வேறு

காலையில் எழும் குருடனுக்கு
வெயிலின் நிறம் தெரியுமா
பிச்சை கேட்கும் செவிடனுக்கு

நாணயத்தின் ஓலி கேட்குமா
இல்லை
கைகள் இல்லா குழந்தைக்கு தான்
தாயின் தேகம் அறியுமா

நம்மை படைத்த கடவுளுக்கு தெரியுமா
நாம் சிவப்பா, கருப்பா, குள்ளமா, ஊனமா,
அவனிடம் பணம் இருக்குமா
இல்லை பிச்சை தான் எடுப்பானா என்னவென்று

நம் எழுத்து ஆண்டவனிடம் இல்லை
நம் உள்ளத்தில் உள்ளது
அதை கேட்டுப்பார்
நம் வெற்றியின் வழி
மோகத்தில் இல்லை தேகத்தில் இல்லை
எண்ணத்தில் உள்ளது என்று கூறும்

சிவப்பும் கருப்பும் நம் வெற்றியின் கொடி
உயரம் குள்ளம் நம் வெற்றியின் அளவு என்று நினைத்து உழை

ஊனத்தை உள்ளத்தில்வை
வாழ்க்கையை வானத்தில்வை
வெற்றி என்பது வண்ணத்தில் இல்லை

எண்ணத்தில் உள்ளது……
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தாழ்வு மனப்பான்மை[படித்ததில் மிகவும் ரசித்தது]


தோல்விகளை
தோள் மேல் சுமந்து
தோல்வியின்
தாக்கத்தால்
துவண்டு வாழ்வதால்
தாழ்வு மனப்பான்மை
வெற்றி வாகை சூடி
வேரிடுகிறது ======

பணம்
பதவி
சமுதாய அங்கீகாரம்
தாழ்வு மனப்பான்மையை
தகர்த்தாதது ======

தாழ்வு மனப்பான்மையை
தூரத்தில் வைத்தால்
மன அழுத்தம்
மனிதனை சிதைக்கும் =====

ஆய்ந்து பார்த்தால்
குழந்தை பருவத்தின்
உதாசீனங்கள்
ஆழ் மனதில்
பதிந்து
புதைந்து
அனுபவங்களின்
வலிகளால்
முத்திரை பதித்து
தாழ்வு
மனப்பான்மையை
வளர்க்கின்றன =====

தாழ்வு
மனப்பான்மையிலிருந்து
வெளி வர =======

எதிர்மறை
எண்ணங்களை
தவிர்ப்போம் ====

வலிகளை போக்க
வலிகளை
எதிர்கொள்வோம் ===

சுய மதிப்பை
சுயமாய் பெறுவோம் ====

உதாசீனத்தை
உதாசீனம் செய்வோம் ====

தாழ்வு படுத்துபவர்கள்
எல்லோரும் ஒரு வகையில்
தாழ்வாக தான் இருக்கின்றார்கள்
என்ற உண்மையை மனதில்
ஏற்றுவோம் =======

திறமைகளை வளர்த்து
தன்னம்பிக்கை எனும்
ஏணியில் ஏறி
தனித்தன்மையுடன்
தரமாய்
மனதை ஆண்டு
மனம் மகிழ
மலர்ச்சியுடன்
செயல் படுவோம் =========
 
Top