All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "யாரது? சொல்லாமல் நெஞ்சள்ளி போவது" சிறுகதை திரி

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

நான் பிரதிலிபி போட்டிக்காக மூன்று மாதம் முன்பு எழுதிய சிறுகதை இது. கணவன் மனைவிக்குள் வரும் ஊடலும் காதலும் தான் கதை.. முழுக்க முழுக்க காதல் மட்டுமே நிறைந்திருக்கும் கதை... படித்துவிட்டு கருத்தை பகிர்ந்துக் கொள்ளுங்கள் மக்களே.

அன்புடன்,

நர்மதா சுப்ரமணியம்
 

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரது?சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது

விடியற்காலைப் பொழுதில் தன் கணவனின் கைவளைக்குள் உறங்கிக் கொண்டிருந்தாள் செல்வி.சேவலின் கூவலாய் விழிப்பூட்டி(அலாரம்) அடித்து அவளின் தூக்கத்தைக் கலைக்க, தன் கணவனின் தூக்கம் கலையாவண்ணம் அலாரத்தை நிறுத்திவிட்டுத் தன் அன்றாடப் பணியை தொடங்குவதற்காக தன் கணவனின் நெற்றியில் முத்திரையிட்டு எழுந்துக் கொண்டாளவள்.

அவள் தன் சமையல் பணியினை செவ்வனே செய்துக் கொண்டிருக்க, ஒரு மணி நேரம் கழித்தெழுந்த அவளின் கணவன் மணிமாறனும் ஆறு வயது மகன் கார்த்திக்கும் காபி வேண்டுமென அவளின் முன்னே வந்து நின்றனர்.

தன் தாய் காபி கலக்கும் இடைப்பட்ட நேரத்தில் கார்டூன் பார்க்கவென அவர்களின் மகன் முகப்பறைக்குச் செல்ல, சமையலறையின் மேடையில் அமர்ந்திருந்த மணிமாறன் விழி மூடாது தன்னவளையே விழியால் விழுங்கிக் கொண்டிருந்தான்.

ஓரப் பார்வையில் அவனை கண்டுக்கொண்டவளுக்கு அவனின் பார்வை வெட்கம் கொள்ளச் செய்ய,

"ம்ப்ச், எதுக்கு இப்ப கண் கொட்டாம என்னை பார்த்துட்டு இருக்கீங்க" வெட்கத்தால் விளைந்த தன் கன்னச் சிவப்பை மறைத்து முறைப்பாய் அவனை நோக்கி அவள் வினவ,

"உன்னை கல்யாணம் செஞ்சி எட்டு வருஷம் ஆகுதுடி என் செல்லப் பொண்டாட்டி... இன்னும் உன் அழகு என்னை கொல்லுதே சிவிம்மா.. உன்னை பார்த்துட்டே இருக்க வைக்குதேடி"

என்று கண் சிமிட்டி அவனுரைக்க,
மென்னகை புரிந்தவள், எப்பொழுதும் தானுரைக்கும் அதே வார்த்தையை கூறினாள்,


"என்னை எத்தனை பேர் மேரேஜ் பிரபொசல்ல ரிஜக்ட் செய்தாங்க தெரியுமா.. உங்க கண்ணுக்கு மட்டும் நான் எப்படி எப்பவும் அழகா தெரியுறேன்ப்பா???"

"அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே"


எப்பொழுதும் போல் அழகாய் பாடி பதிலுரைத்தானவன்.

"என் செல்லப் பொண்டாட்டியோட அழகான மனசுக்கும் அவ மேலே நான் வச்சிருக்குற அளவில்லாக் காதலுக்கும் அவ நூத்துக் கிழவியானாலும் எனக்கு பேரழகி தான்டி" என்றுரைத்தவன் அவளின் கன்னத்தில் அழுத்தமாய் இதழொற்றி தன் காபியினை எடுத்துக் கொண்டு முகப்பறைச் சென்று அன்றைய நாளிதழைப் புரட்டலானான்.

இருவருக்கும் காலை உணவை உண்ண அளித்து, மதிய உணவை அவரவர் பாக்ஸில் கட்டி வைத்து மகனை பள்ளிச் சீருடையில் தயார் செய்து என பரப்பரப்பாய் ஓடிக் கொண்டிருந்தது அவளின் காலை பொழுது...

இருவரும் கிளம்பிச் சென்றப்பின் சமையலறையை சுத்தம் செய்து முடித்து, தன் காலை உணவை உண்ணுவதற்காய் ஆசுவாசமாய் உட்கார்ந்தாளவள்.

காலை உணவை உண்டப்பின் தங்களின் அறையை சுத்தம் செய்வதற்காய் அவளறைக்குள் நுழைந்த நேரம், ஒலித்தது அவளின் கைப்பேசி…

முகப்புத்தகத்தில் அறிவிப்பு(Notification) வந்ததற்கான ஒலியது....

தன் மெத்தையிலமர்ந்து கைப்பேசியை எடுத்துப் பார்க்க, மெசஞ்சரில் ஒரு மெசேஜ் வந்ததாய் காண்பித்தது அவளின் கைப்பேசி...

தன் முகப்புத்தகத்தில் ப்ரண்ட் லிஸ்ட்டில் இல்லாத ஒருவர் செல்விக்கு மெசேஜ் அனுப்பியிருக்க, யாரென்று யோசித்துக் கொண்டே திறந்துப் பார்த்தாளவள்....

"ஹாய் செல்வி"

"ஹாய்,மே ஐ நொ ஹு இஸ் திஸ்"

"ஹேய் என்னை தெரியலையா செல்வி"

"நீங்க வச்சிருக்க பூ ப்ரொபைல் பிக்சர்ல உங்க முகம்லாம் தெரியலைங்க"

"என்ன நக்கலா செல்வி???"

"இப்ப நீங்க யாருனு சொல்லலைனா ப்ளாக் செஞ்சிட்டு போய்ட்டே இருப்பேன்… பொண்ணு பேரா இருக்கே.. தெரிஞ்ச பொண்ணா இருக்குமோனு தான் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன்" எனப் பல ஆங்கிரி ஸ்மைலிக்களுடன் கடுகடுத்தாள் தன் வரிகளில்.

"சரி சரி நோ டென்ஷன் பேபி... என் பெயர் சிவரஞ்சனி...நான் SJC காலேஜ்ல MCA படிச்சேங்க...அப்ப செல்வினு ஒரு பொண்ணு எங்க க்ளாஸ்ல படிச்சாங்க…அப்ப அப்பிராணியா அமைதியா இருந்துச்சுங்க அந்த பொண்ணு…இப்ப என்னடானா டெரரா நானும் ரௌடி தானு பேசுதுங்க... என்னனு நீங்க கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்"
என ரஞ்சனி பல கண்ணடிக்கும் மற்றும் நாக்கு துறுத்தும் ஸ்மைலிக்களுடன் நக்கலாய் பதிலுரை அனுப்புவிக்க,


இந்த வரிகளைப் பார்த்த நொடி கடுகடு முகம் இன்ப அதிர்ச்சியடைந்து பின் இதழ் விரிந்தச் சிரிப்பாய் மாறி, செல்வியின் வாய் தானாய் ரஞ்சி என்றுரைத்தது.

"ஹேய் ரஞ்சி எப்படி இருக்கடி?? உன் மேரேஜ்ல பார்த்தது…அதுக்கப்புறம் டச்லயே இல்லாம போய்டோம்…எத்தனை குழந்தைங்கடி உனக்கு??"
என நெடுநாள் கழித்து தன் தோழியிடம் பேசும் மகிழ்ச்சியில் கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டிருந்தாள் செல்வி.


"நான் ரொம்ப நல்லாயிருக்கேன்…ஒரு பொண்ணுடி…உன் குட்டிப்பையன் எப்படி இருக்கான்…என் மேரேஜ்ல பார்த்தது... போட்டோஸ் அனுப்புடி செல்வி" அவளும் ஆர்வமாய் பதிலுரைத்தாள் செல்வியின் கேள்விகளுக்கு.

"ஹ்ம்ம் பையன் சூப்பரா இருக்கான்…நீ போட்டோஸ் அனுப்புடி முதல்ல…" - செல்வி

"என்னடி செல்வி,இன்னுமா என் மேல நம்பிக்கை வரலை.. போட்டோஸ் அனுப்ப யோசிக்குற??" - ரஞ்சி

"நம்பிக்கையில்லனு இல்ல…ஆனாலும் ஃபேஸ்புக்ல யாரையும் சட்டுனு நம்பிடக் கூடாதுல…பொண்ணு பேர்லயே பசங்க கடலைப் போடுற காலமாய்டுச்சே...நம்ம பாதுக்காப்பா இருத்துக்கணும்ல…ஆமா என்னை எப்படி கண்டுபிடிச்ச ரஞ்சி?? என்னோட ப்ரொபைல் பிக்சர் கூட சாமி படம் தானே வச்சிருக்கேன்??" - செல்வி

"அப்ப உனக்கு நான் பையனா பொண்ணானு சந்தேகம்…இரு முதல்ல போட்டோஸ் அனுப்பி உன் சந்தேகத்தைத் தெளிய வைக்கிறேன்.. அப்புறம் நம்ம மத்தக் கதையை பேசுவோம்" என்றுரைத்து ரஞ்சி தன் புகைப்படங்களை அனுப்ப, சற்றுத் தெளிந்தாள் செல்வி.

"இப்ப நம்பிக்கை வந்துடுச்சா செல்வி?? சரி உன்னை எப்படி கண்டுபிடிச்சேனு தெரியுமா?? உன்னோட தமிழால தான் செல்வி"

"என்னது என்னோட தமிழா???"
எனத் திருதிருவென முழிக்கும் ஸ்மைலிக்களைப் பறக்கவிட்டாள் செல்வி.


"ஆமா செல்வி உன்னோட ஆதர்ஸ மனங்கவர்ந்த எழுத்தாளரோட வலைத்தளத்துல அவங்க கதைக்கு நீ போட்ட ரிவ்யூவ படிச்சேன்... காலேஜ்ல கவிதை,கட்டுரைப் போட்டிகள்ல நான் படிச்சு வியந்த தமிழது…இது நம்ம காலேஜ் ப்ரண்ட் செல்வியோட தமிழ் தான்னு என் மனசு அடிச்சு சொல்லுச்சு....உன்னோட தமிழ் வார்த்தைகள்லாம் ப்ரத்யேகமானது செல்வி...அதெப்படி மறக்க முடியும்...
நீ இப்பல்லாம் எதுவும் எழுதுறது இல்லையா?? எவ்ளோ பெரிய திறமையது...காலேஜ்ல எவ்ளோ பரிசுகள் வாங்கிருக்க உன்னோட கவிதைகளுக்காக...ஏன் அதை வளர்த்துக்காம அப்படியே விட்டுட்ட செல்வி" எனத் தன் ஆதகங்களை வரிகளில் கொட்டித் தீர்த்தாள் ரஞ்சனி.


"காலேஜ் முடிச்சதும் மேரேஜ் ஆயிட்டுல...அப்ப ஸ்கூல்ல வேலை பார்த்துட்டு இருந்தேன்...பையன் பிறந்தப்புறம் இரண்டு வருஷம் வேலைப் பார்த்தேன் ரஞ்சி..ஆனா வீட்டயும் வேலையுமே ஒண்ணா கவனிக்க முடியலை..இப்ப மூனு வருஷமா வீட்டை கவனிக்குற பொறுப்பை மட்டும் பொறுப்பா செஞ்சிட்டு இருக்கேன்.." - செல்வி

"அது சரிடி... இப்பலாம் ஆன்லைன்ல எவ்ளோ தளங்கள் வந்துடுச்சு… அதுலலாம் எழுதலாமே செல்வி.. காலேஜ்லலாம் உன்கூட கவிதை கட்டுரை போட்டில கலந்துக்கிட்டு போட்டில தோத்துட்டு இருந்துவ நான்..நானே இப்ப இரண்டு மூனு தளங்கள்ல எழுதுறேன்..அந்த போட்டிகள்ல முதல் பரிசு வாங்கனவ நீ.. கண்டிப்பா உன் திறமையை வளர்த்தீனா,என்னை விட பெரிசா ரீச் ஆவடி..நான் ப்ளான் பண்றேன் அதுக்கு"

இவ்வாறாக இருவரின் உரையாடல்கள் தொடர்ந்துக் கொண்டிருக்க,தங்களின் தொலைப்பேசி எண்ணை பகிர்ந்துக் கொண்டவர்கள் தினமும் கைப்பேசியில் பேசி நெருங்கிய தோழிகளாய் உருமாறினர்.

இரு மாதங்கள் கழிந்த நிலையில் ஓர் நாள் விடியற்காலைப் பொழுதில் தன் கணவனின் அணைப்பில் உறங்கிக் கொண்டிருந்தவளுக்கு அலாரம் அடித்தும் உடல் சோர்வால் எழுந்துக் கொள்ள முடியாமல் தன்னவனை இன்னும் நெருங்கிப் படுத்துறங்க, அலாரச் சத்தத்தில் முழித்த மணிமாறன், தன் மனைவி இச்சத்தத்தை தாண்டியும் உறங்குவதைக் கண்டு ஆச்சரியமாய் பார்த்தவன், அவளின் கழுத்தை தொட்டுப்பார்க்க ஜூரத்தில் செந்தணலாய் தகித்துக் கொண்டிருந்தது அவளின் உடல்.

பதறி எழுந்தவன்,அவளின் நெத்தியில் முத்தமிட்டு அமைதியாய் அவளை விட்டு அகன்று அவளின் அன்றாடப் பணியை தானே செய்யலானான்.

காலை மற்றும் மதிய உணவை தயார் செய்தவன்,தன் மகனுக்கு உணவை பாக்ஸில் கட்டிவிட்டு, மகனை பள்ளிக்குத் தயார் செய்துவிட்டுத் தன்னவளை வந்துப் பார்க்க, அவள் சற்றும் நித்திரைக் களையாது படுத்திருக்க, தன் மகனைப் பள்ளியில் விட்டு வந்தவன், தன் அலுவலகத்திற்கு விடுமுறை கூறினான் தன் மனைவியை கவனித்துக்கொள்ளும் பொருட்டு.

சமையல் வேலையை முடித்துவிட்டு அவளை எழுப்பியவன் மருத்துவமனைச் செல்லக் கிளம்புமாறு உரைத்தான் அவளிடம்.

அவளுக்கும் தனக்குமாய் காலை உணவை எடுத்து வைத்தவன், அவள் தயாராகி வந்ததும் அவளுக்கும் ஊட்டிவிட்டு தானும் உண்டு முடித்தான் தான் செய்த காலை உணவை.

தங்கள் காரில் ஏறியதும் மருத்துவமனைக்கு காரினை அவன் செலுத்த, "என் மேல கோவமா இருக்கீங்களாப்பா? காலைல இருந்து மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்கீங்க. ஒரு குட்டி ஸ்மைல் கூட பண்ணலை நீங்க" என்று தன் கணவனின் மன வருத்தத்தை அறியயெண்ணி தன்னவனை கேள்வியால் துளைத்துக் கொண்டிருந்தாள் செல்வி.

"என்னப் பிரச்சனை உனக்கு?? ஜூரம் வர அளவுக்கு அப்படி என்ன செஞ்ச செல்வி.. நீ ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணா தான் உனக்கு இப்படி ஆகும்னு எனக்கு நல்லா தெரியும்... உடம்பு கெடுத்துக்கிடுற அளவுக்கு அப்படி என்ன செஞ்ச" என முறைப்பாய் உரைத்து அவனவளை நோக்க,

"அதான் சொன்னேனேப்பா…கதை எழுத ப்ளான் செஞ்சிருக்கேனு… ரஞ்சிக்கிட்ட பேசினதை சொன்னேன்ல இளா… அவ எழுதுற தளத்துல என்னை எழுத்தாளரா இணைத்து விட்டுறுக்கா... அதுக்காக மூனு எப்பி தொடர்ச்சியா எழுதினேனா… அதான் உடம்பு முடியாம போய்ட்டு போல" செல்வி தன் பதிலையுரைக்க,

"உன்னோட ஹெல்த் விஷயத்துல என்னால என்னிக்கும் காம்ப்ரமைஸ் செய்ய முடியாது செல்வி… அதனால தான் நமக்கு இன்னொரு குழந்தை வேண்டாம்னு நான் உன்னை வற்புறுத்தி ஒத்துக்க வச்சேன்…உடம்பு வீக்காகி இப்படி அடிக்கடி உனக்கு உடம்பு சரியில்லாம் போனதால தான் உன்னை வேலைக்கும் போக வேண்டாம்னு சொன்னேன்… இதெல்லாம் மறந்துட்டியா செல்வி… எப்பவும் எனக்கு உன் உடல்நலன் தான் முக்கியம்… இனி கதை அது இதுனு எழுதுறேனு உடம்பை கெடுத்துக்கிட்ட அவ்ளோ தான் சொல்லிட்டேன்" என்றவன் கோபத்தில் பற்களைக் கடிக்க,

அவனின் செல்வியென்ற விளிப்பிலேயே அவனின் கோபத்தை உணர்ந்தவள், அதற்கு மேல் அவனிடம் வாய் கொடுக்காமல் அமைதியாய் இருந்துவிட்டாள்.

மருத்துவரைப் பார்த்து அடம்பிடித்து அவளுக்கு ஊசிப் போட வைத்து அன்று முழுதும் அவளைக் கண்ணுக்குள் வைத்து கவனித்துக் கொண்டவன் அன்றிரவு அவளின் ஜுரம் குறைந்ததும் தான் ஆசுவாசமானான்.

அன்றிரவு அவளருகில் மெத்தையில் சாய்ந்தவன், மருந்தின் வீரியத்தில் உறங்கும் மனைவியை தன் அணைப்பில் கொண்டு வந்தானவன்.

"இன்னிக்கு உனை ரொம்ப திட்டிட்டேனோ சிவிம்மா… சேர்த்து வச்சி நாளைக்கு கவனிச்சிக்கிறேன்டா செல்லம்" என்று அவளின் கன்னத்தை வருடிச்சொன்னவன் அழுத்தமாய் இதழ் பதிக்க, அவனின் ஸ்பரிசத்தில் புரண்டவள் அவனுள் மேலும் புதைந்து சுகமாய் உறங்கினாள்.

பின் வந்த நாட்களில் தன்னுடைய அலுவலக வேலைகளில் மூழ்கிப் போனவன் வீட்டிற்கு வரவே தாமதமான நிலையில் அவள் கதை எழுத தான் விதித்திருந்த தடையை மறந்தே விட்டிருந்தானவன்.

கணவரை எதிர்த்து எக்காரியம் செய்யவும் மனமற்ற செல்வி, தான் இனி எழுதவில்லையென உரைத்து விட்டாள் தன் தோழி ரஞ்சினியிடம்.

"என்னடி செல்வி, இப்படி சொல்ற…போன மாசம் நீ எழுதின சிறுகதைக்கு முதல் பரிசு வந்துதேடி…அதனால தானடி உனக்கு இந்த பெரிய கதை எழுத வாய்ப்பு கொடுத்தாங்க... அதெல்லாம் உன் ஹஸ்பண்ட் கிட்ட சொன்னியாடி??" என்று ஆற்றாமையால் ரஞ்சி கைப்பேசியில் வினவ,

"எல்லாம் அவருக்கு தெரியும்டி… அவர் சொல்லை எதிர்த்து அவர் மனசு வருந்துற மாதிரி நான் எதுவும் செய்ய மாட்டேன்டி… இப்ப தற்காலிகமா நிறுத்தி வைக்கிறேன் ரஞ்சி…அவ்ளோ தான்" என இப்பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் செல்வி.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, ஒரு மாதம் முடிவடைந்த நிலையில்...

அன்று அவள் பிறந்தநாள்... அன்று ஞாயிற்றுக்கிழமையும் கூட...

வழமைப் போல் காலை எழுந்து சமையலறையில் வேலை செய்துக் கொண்டிருந்தாள் செல்வி.

நீண்ட வலியக்கரம் பின்னிருந்து அவளின் இடையை வளைக்க கன்னத்தில் மென்மையாய் இதழ்ப் பதித்து குனிந்து அவளின் காதுக்குள் கூறியது வாழ்த்து...

"பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்லப் பொண்டாட்டி"

மென்மையாய் புன்னகைத்து தழுவிக்கொண்டாள் தன்னவனை.

கணவனின் வாழ்த்தில் படு உற்சாகமாய் அவள் சமையல் செய்துக்கொண்டிருக்க, மெல்லிய கரம் அவளின் இடையை பின்னிருந்து வளைக்க மெல்லியதாய் பாசப் புன்னகை அவளிதழில்.

"ஹாப்பி பர்த்டே அம்மா"

தன் தாயை குனியச் சொல்லி அவள் கன்னத்தில் முத்தமிட்டு உரைத்தானவன் அவளின் மகன் கார்த்திக்.

சப்ரைஸ் பரிசு கொடுப்பதில் எல்லாம் விருப்பம் இருந்ததில்லை மணிமாறனிற்கு… பரிசுகள் வழங்கித்தான் தன் அன்பினை நிரூபிக்க வேண்டுமென்ற அவசியமில்லையென கூறுபவனவன்… செல்வியும் அவனின் இக்கருத்தில் ஏதும் கூறமாட்டாள் ஆனால் அவனின் பிறந்த நாளிற்கு தவறாமல் பரிசு வழங்கி அவனிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொள்வாள்.

பிறந்தநாள் நிமித்தமாய் கோவிலுக்குச் சென்று பூஜை செய்து வீடு வந்து சேர்ந்தனர் அவர்கள்.

மதியம் உணவுண்டப்பின் சிறுவனுறங்க வாசலில் ஒலித்தது அழைப்பாளர் மணி… யாரென்று இவள் சென்றுப்பார்க்க தூதஞ்சல் வழியாய் வந்தது இவளுக்கொரு அஞ்சல்.

இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வழக்கமில்லாத அவளின் கணவர் நிச்சயமாய் இதை செய்ய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தவள் யாராகயிருக்குமென அஞ்சலை பிரித்துக்கொண்டே யோசிக்கலானாள்.

பிரித்ததும் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தாளவள்.

அதிலிருந்தது பூங்கொத்துடன் அவள் ரசித்தப்புத்தகங்கள் அவளின் மனங்கவர்ந்த எழுத்தாளரின் கையெழுத்துடன்.

கண்டிப்பாக இது தன் தோழி ரஞ்சியின் பரிசாக இருக்குமென தன் கணவரிடத்தில் குதூகலமாய் உரைத்தாளவள்... சிறிது நேரத்தில் அவளின் தாய் கைப்பேசியில் அழைத்துக் கூறிய விஷயத்தில் அவளின் மனம் சிறகில்லாமல் பறந்தது.

இன்று மதிய ஓய்வு நேரத்தில் அவளின் தாய் தினந்தந்தி தினசரி நாளிதழை புரட்டிப் பார்க்க, அதில் அவளின் கவிதை பிரசுரிக்கப்பட்டிருக்க, அக்கவிதையின் கீழ் செல்வி பெயரைக் கண்டவர் அவளின் கைப்பேசியில் அழைத்து உடனே நாளிதழைப் பார்க்கச் சொல்லிக் கூற, பார்த்து உறுதிச் செய்தாளவள் இது தன் கவிதை தானென...

அவர்கள் வீட்டில் வாங்கும் நாளிதழ் தினந்தந்தி தான்... காலை முதல் வரிசைக் கட்டி நின்ற வேலையால் அதை படிக்காமல் இருந்தாளவள்... அக்கவிதையையும் அதற்கான பரிசுத்தொகையும் அவளின் கணவரிடத்தில் நாளிதழைக் காண்பித்துக் கூறியவள், இதுவும் தன் தோழி ரஞ்சியின் வேலையாகத் தானிருக்குமென உரைத்தவள், சென்று முகநூல் பார்க்க, இன்று அவளுக்கு வாழ்த்துக்கள் கூடக் கூறாமல் ஆஃப்லைனில் இருந்தாள் அவளின் தோழி.

அந்நேரம் செல்விக் கைப்பேசியில் வந்தது பிறந்தநாள் வாழ்த்து அவளின் தோழியிடமிருந்து...

ரஞ்சனிக்கு சந்தோஷமாய் நன்றியுரைத்து அவளின் மற்றைய பரிசுக்கு செல்வி நன்றி நவிழ்ந்த நேரம், அதை தான் அனுப்பவில்லையென உரைத்தாளவளின் தோழி.

இப்பொழுது இருவருமே யாரதை அனுப்பியதென குழம்பித்தான் போனார்கள்.

இரவுணவு முடிந்து மகன் உறங்கச் செல்ல, ஏதோ யோசனையுடனேயே படுக்கையில் வந்தமர்ந்தாள் செல்வி... என்ன யோசனையாய் இருக்கிறாயென மணிமாறன் கேட்க, ரஞ்சி கூறியதை உரைத்தவள், அப்பரிசளித்தது யாராகயிருக்குமென சிந்திப்பதாய் உரைத்தாள்.

"உன்னோட வாழ்க்கைல இப்பொ இந்த நிமிஷம் உனக்கு ரொம்ப பிடிச்ச முதல் நபர் யார் சிவிம்மா" தீடிரென்று கேட்டான் மணிமாறன்.

முதலில் திகைத்து விழித்து பின் ஏனிந்த கேள்வியென முறைத்து பதில் தெரியாதா உங்களுக்கென அவனருகில் நெருங்கி அமர்ந்து பூடகமாக செல்வியுரைக்க,

அவளை விட்டு விலகி அமர்ந்தவன் நேரடி பதிலில்லாது நெருங்கிவர மாட்டேனென முகத்தை திருப்பிக் கொண்டானவன்.

"முதல் நபர் இரண்டாம் நபர்னு நம்பர்லாம் சொல்லத் தெரியாதுங்க…என் உயிர் என்கிட்ட வந்து என்னை உனக்கு பிடிக்குமானு கேட்குற மாதிரி இருக்குங்க நீங்க கேட்குறது"
என்று வருத்தத் தொணியில் அவளுரைக்க,


இப்பொழுதும் நீ நேரடியாய் பதிலுரைக்கவில்லையென அவன் முகத்தை திருப்பிக் கொள்ள,

அவனை தன் பக்கம் திருப்பி இழுத்தணைத்தவள்,

"நீங்க தான்ப்பா என் வாழ்க்கை… என் உயிர்... என் சுவாசம்.. எல்லாம்…போதுமா.."

இப்ப சொல்லுங்க எதுக்காக இப்படி கேட்குறீங்க என அவனின் தாடையைப் பற்றி முகத்தை நோக்கி அவள் கேட்க,

"நான் அந்த அளவுக்கு உன் மனசுக்கு நெருக்கமானவனா இருந்தா… நான் ஏன் கேட்கிறேனும் உனக்கு புரியும்"
எனக் கூறி விலகி அமர்ந்துக் கொண்டான் மணிமாறன்.


அவன் விலகலில் மனதில் சிறு கலக்கம் தோன்றிட, கண்களில் நீர் கசிய அவன் மடியில் தலை சாய்த்தவள்,

"எனக்கு தெரியாதுனு நீங்க நினைக்கிறீங்களாங்க"

"நான் என்ன யோசிட்டு இருக்கேனு சொன்னதும் உங்க முகம் போன போக்கை வச்சே கண்டுபிடிச்சிட்டேன்... உங்க வாயால சொல்ல வைக்கலாம்னு பார்த்தா என் வாய கிளர்றீங்கல… உங்களுக்கு தான் என்னை பத்தி என் மனசை பத்தி தெரியலை" எனக் கூறி அவனின் இடையைக் கட்டிக்கொண்டு வருத்தத்தில் இவளுரைக்க,

"உனக்கும் தான்டி என் மனசு புரியல" கோபமாய் அவனுரைக்க,

இத்தனை நேரம் வருத்தத்தில் முகம் சுணங்கியவள் தற்போது கோபத்தில் முகம் சிவந்தாள்.

"எனக்கா உங்க மனசு புரியாது…எனக்கு தெரியும் என் கவிதையை நியூஸ்பேப்பர்ல வரவச்சது நீங்க தானு தெரியும்… உங்கள வெறுப்பேத்துறதுக்காக ரஞ்சி செஞ்சிருப்பானு சொன்னேன்…ஆனா புக் கண்டிப்பா உங்க பரிசுனு நினைக்கல… உங்களுக்கு தான் பரிசு கொடுக்குறது பிடிக்காதுல…அதுனால அப்படி நினைச்சேன்…அதுக்குனு உங்களை உங்க மனசை எனக்கு புரியாம போய்டுமா??" என வருத்தமும் கோபமும் அவளின் முகப்பாவனையில் போட்டிப்போட விழிகளில் நீருடன் அவளுரைக்க,

இதற்குமேல் அவளை வருந்தவைக்க விரும்பாதவன் அவளை தன் தோள் வளைவில் சாய்த்துக் கொண்டு,

"அப்புறம் ஏன் சிவிம்மா உன்னோட பேஷனை(Passion) பத்தி என் கிட்ட பேசலை… நானும் மனைவினா வீட்டு வேலை மட்டும் செஞ்சிட்டு இருந்தா போதும்னு நினைக்குற ஆள்னு நினைச்சுட்டியா?? அன்னிக்கு ஏதோ கோபத்துல பேசிட்டேன்… திரும்ப என் கிட்ட உன்னோட எழுத்தாளர் பேஷன் பத்தி பேசிருக்கலாம்ல.... உன் உடல் கெடாத அளவுக்கு அதுக்கு மாத்து வழி யோசிச்சிருப்பேன்ல… சமையல் தவிர மத்த வீட்டு வேலைகளுக்கு ஆள் வச்சிட்டு உன்னை கதை எழுத அனுமதிச்சிருப்பேனே... உன்னோட ஹெல்த் இஸ்யூஸ் வராம மேனேஜ் செய்திருக்கலாமே... உனக்கும் இதுல அவ்வளவா விருப்பம் இல்லாதனால தான் இதை பத்தி நீ என் கிட்ட திரும்பவும் பேசலைனு நினைச்சேன்… ஆனா இரண்டு நாள் முன்னாடி உன் டைரிய படிச்சதுல எனக்காக வேண்டாம்னு நீ ஒதுங்கிட்டனு எழுதி இருந்ததை படிக்க எவ்ளோ கஷ்டமா இருந்துச்சு தெரியுமாடா.... எனக்காகனு உன் பேஷனை என்னிக்கும் நீ விட வேண்டாம் சிவிம்மா... நீ அதை கண்டினியூ செய்றதுதான் என் ஆசையும் கூட… உன் உடலை பாதிக்காத அளவுக்கு செய்."

கணவனின் கூற்றில் மனம் நெகிழ்ந்தவள், "உங்களுக்கு எது பிடிக்குதோ அதை செய்றேனப்பா.. என் பேஷனாவே இருந்தாலும் உங்க விருப்பத்தோட செய்றது மட்டும் தான் எனக்கு சந்தோஷம்… நான் எழுதுறது உங்களுக்கு பிடிக்கலைனு தப்பா நினைச்சு உங்களை காயப்படுத்திட்டேன்… சாரிங்க" என்று அவன் முகம் நோக்கி அவளுரைக்க,

அவளை கையில் அள்ளி எடுத்தவன் தன்னோடு அணைத்து

"சரி சரி சோக சீன் லாம் போதும்…என் பொண்டாட்டிக்கு ஸ்பெஷல் பர்த்டே பரிசு வேண்டாமா??" அவள் காதோடு உரைத்தவன் தனக்கே உரிய பாணியில் பரிசுகள் வழங்கி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கினான் அவளின் கணவன்.

அவர்களின் பிரத்யேக கொண்டாடத்திற்கு இடையூராய் நில்லாமல் நலமுடன் வாழ்கவென வாழ்த்தி விடைப்பெறுவோம் நாமும்...


அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:
Top