All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்வராஹ்வின் "கண்களில் காதல் மொழிகள்" - கதை திரி

Status
Not open for further replies.

Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளே ,
தயவுசெய்து எல்லாரும் என்னை மன்னிக்கவும். இப்ப தான் ஃப்ரியா ஆகிருக்கிறேன்..... அடுத்த வாரம் பதிவுடன் கண்டிப்பா வரேன்...............

நன்றி......
 

Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிஹாவும் நிஷாவும் லேண்ட் மார்க்கில் தங்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு இருக்க….. ஈஷூ அந்த கடையை சுத்தி வந்து கொண்டு இருந்தாள்….

“ இதுக்கு மேல தாங்காது சாமி… ஈஷூ…. நீ எஸ் ஆகு இல்லனா ….. அவங்க ரெண்டு பேரையும் உண்ண தேட…..வை…… என்ன பண்ணலாம்….. என்ன பண்ணலாம்…… யோசி….. யோசி….. திங்க்……” என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

திடீரென்று அவங்க கேட்ட சத்தத்தில் நிஹா மற்றும் நிஷா வேகமாக ஓடினர்…. அங்கு நம் கதையின் நாயகி கடை சிப்பந்தியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்.அவள் பக்கத்தில் வேகமாக ஓடியவர்கள்… ஈஷூவிடம்…..

“ ஏய் எதுக்கு இப்படி சண்டை போட்டுட்டு இருக்க என்ன பிரச்சனை…….?” என்று கேட்டாள் நிஷா….

அதற்கு அந்த கடையின் சிப்பந்தி “ மேம் இவங்க உங்க கூட வந்தவங்களா…..??? ரொம்ப நேரமா நான் வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்.ஏதோ பாக்குறேன்னு சொல்லிட்டு எல்லாத்தையும் கீழே தள்ளி விட்டுட்டு இருக்காங்க….. ஃபர்ஸ்ட் டைம் சாதாரணமாக பண்றாங்க நினைச்சேன் நெக்ஸ்ட் டைம் அவங்க பன்றதை பார்க்கும்போது வேணும்னே பண்ற மாதிரி இருக்கு என்னன்னு கேளுங்க அதை தான் நானும் விசாரிச்சேன் அதுக்குத்தான் சத்தம் போட்டுட்டு இருக்காங்க இந்தப் பொண்ணு” என்றார் சிப்பந்தி…..

“ஏண்டி இப்படி பண்ண…. ஈஷூ…. என்ன பிரச்சினை உனக்கு….” என்று கேட்டாள் நிஹா……

“பின்ன என்ன நானும் உங்கள எப்படா இந்த கடையில் இருந்து வெளிய கூட்டிட்டு போகலாம்னு பார்த்துகிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா இந்த ஷாப்லையே சுத்த வச்சுக்கிட்டு இருக்கீங்க அதுக்கு தான் அக்கா இப்படி ஒரு பிளான் போட்டேன் எப்படி….” என்று தன் காலர் இல்லாத ஷர்ட்டை தூக்கி விட்டுக்கொண்டாள்….

“அடிப்பாவி….. உனக்கு வேற ஐடியா கிடைக்கலையா…. இப்படியா பண்ணுவ ஈஷூ அவங்க எவ்ளோ பாவம் கஷ்டப்படுறாங்க இல்ல…..” என்று அவளை திட்டி விட்டு அவரிடம் திரும்பி…. “ சாரி சார் ஏதோ சின்ன பொண்ணு தெரியாம பண்ணிட்டா ப்ளீஸ் அவளுக்காக நாங்க மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றனர் இருவரும்….

“பார்த்துமா உங்க கூடையே வச்சுக்கோங்க….. இந்த பொண்ண என் வேலைக்கு வேட்டு வைக்க பாத்தாங்க….. நான் புள்ள குட்டிக்காரன் அம்மா தாயே…..” என்று கெஞ்சிவிட்டு சென்றார்….

“ நிஹா… நீ போய் பில்லை பே பண்ணிட்டு வா….. நாம வீட்டுக்கு போய் பாத்து பே பண்றேன்….. இப்ப இவளோட இருக்கேன்…. சீக்கிரமா வா….” என்று விட்டு ஈஷூவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் நிஷா….

“ அக்கா…. அடுத்தது food court போவோமா இல்லனா…. Fun city போய் கேம் விளையாடலாமா..? அக்கா பிளீஸ்….” என்றாளே பார்க்கலாம்….

“அடியே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா எப்படி பிஹேவ் பண்ற கடையில வச்சு அதை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லை உனக்கு விளையாடனும் இல்லனா சாப்பிடணும் உன்ன நா அத்தை கிட்ட சொல்லி கொடுக்கிறேன் பாரு” என்றாள் நிஷா..

“அக்கா நீ ஏதாவது அம்மா கிட்ட சொன்னா அப்புறம் நான் ரோஜா அத்தை கிட்டயும் … சுந்தரம் மாமா கிட்டயும் நீ என்ன மால்ல தனியா விட்டுட்டு எங்கேயோ போயிட்ட அப்படின்னு சொல்லி கொடுத்துடுவேன் “ என்றாள் ஈஷூ..

“ போகலாமா நிஷா நெக்ஸ்ட் எங்க போகணும் என்று கேட்டுக் கொண்டே அவர்களிடம்” வந்தாள் நிஹா…

“ சரி இவ ஃபுட் கோர்ட்ல ஏதாவது சாப்பிடணும்னு சொல்றா….. அப்புறம் மேடமுக்கு fun city ல விளையாடணுமா……... உனக்கு எதுவும் வேலை இருந்தா…. நீ கிளம்பு நான் கொஞ்ச நேரம்….. இவ கூட சுத்தி பார்த்துட்டு இந்த எருமையை ஓட்டிட்டு வீட்டுக்கு போகிறேன் நாளைக்கு மீட் பண்ணலாம்…இல்ல நீ இப்போ ஃப்ரீயா எங்க கூட வரியா” அவளிடம் கேட்டாள் நிஷா கூறினாள்…

“ ஓகே நிஷா…. எனக்கு வீட்ல கொஞ்சம் வேலை இருக்கு அம்மா கூட வெளில போகணும் சோ நான் கிளம்புறேன்… பை…. நிஷா…. ஹே வாலு பை நாளைக்கு பார்க்கலாம்….” என்று நிஹா விடைபெற்று கிளம்பினாள்…

அவளிடம் விடைபெற்று இருவரும் KFC க்கு சென்றனர்…


என்ன வேணும்னு பாத்து சொல்லு ஈஷூ

“ அக்கா எனக்கு bucket chicken ஒன்னு சொல்லுங்க அப்ரம் crushers …..உங்களுக்கு என்ன வேணும்….. சொல்லுங்க அக்கா” ஈஷூ.

“ இது போதுமா இல்ல இதுக்கு மேலயும் வேணுமா சரி நான் ஆர்டர் பண்ணிட்டு வரேன் நீ போய் உட்காருவதற்கு சீட் பாரு” என்று கேட்டாள் நிஷா….

“ இப்போதைக்கு இது போதும் நெக்ஸ்ட் வேணும்னா ஆர்டர் பண்ணலாம் நான் போய் சீட் புடிச்சு வைக்கிறான் சீக்கிரம் வாங்க” என்றாள் ஈஷூ

பக்கத்தில் இடம் தேட...எங்கும் இல்லாததால் …. சற்று தள்ளி இருந்த இருவர் அமரும் சீட் நோக்கி ஓடினாள்….

ஏன் ஓடினான்னு…. பார்த்த நிஷா லூசு என்று தலையில் அடித்து கொண்டாள்…

(ஏன்னா நம்ம ஹீரோவோட ப்ரெண்ட்… அங்குள்ள சேர் எடுக்க வந்தாரு… மேடம் ஸ்பீடா… போய் இடம் போட்டுட்டாங்க…. நிஷா லூசு சொன்னது தப்பு இல்லனு தோணுதோ…? உங்களுக்கு )

அவளை ஓடி வந்து உட்கார்ந்தது பார்த்து இரு தோள்களையும் குலுக்கி “ கிரேசி. …. கேர்ள்…” என்று விட்டு சென்றான் தமிழ்…..

“எப்புடி….” என்று தன் காலர் இல்லாத டி ஷிர்ட்டை தூக்கி விட்டுக்கொண்டாள்…. ஈஷூ

பின் இன்னொரு இடத்தில் உள்ள சேரை எடுத்துக்கொண்டு… ஒரு டேபிள் தள்ளி உள்ள தன் நண்பர்களிடம் சென்று பேச ஆரம்பித்தான்….

“ டேய் மச்சி அந்த பொண்ண பாரேன்… ஊருக்கு புதுசு போலவே… கிட்டிஷா பிஹேவ் பண்றா… சேர் எடுக்க போனேன்… ஓடி வந்து உக்கார்ந்துட்டா…” என்றான் தமிழ் விக்கியிடம்..

“ பொண்ணா… எங்கடா… நல்ல ஃபிகரா”…. என்று கண்களால்… சுற்றி தேடிய .. விக்கியின்.. தலையில் தட்டி “ஒழுங்கா… உக்கரு.. இல்ல… இந்துக்கு கால் பண்ணிடுவேன்…” என்றான் கிரண்…

“ ஏண்டா இந்த கொலவெறி…. கிரணு” என்று அலறினான் விக்கி

அப்பொழுது… போன் பேசிக்கொண்டு வந்த அமர் நிஷாவின் மேல் மோதி அவள் கையில் இருந்த பிளேட் மற்றும் அவள் இரண்டும் கீழே விழுந்தது…

இதை தூரத்தில் இருந்து பார்த்த அமரின் நண்பர்கள் மற்றும் லப்ப் என்வேகமாக ஓடியவர்கள்… நிஷாவுக்கு ஹெல்ப் செய்ய போக.. அங்கு வந்த நம் ஈஷூவோ வெகுகொண்டு அமரிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டாள்…

“அறிவு இல்ல பணமரம் மாதிரி இருக்க . கண்ணு ரெண்டும் பொடதிலயா இருக்கு பாத்து வர மாட்டியா…...? நான் இவளோ ஆசை பட்டு ஆர்டர் பண்ண எங்க அக்கா கஷ்ட பட்டு வரிசையில் நின்னு வாங்கிட்டு வந்தா… இப்படி பண்ணிடீங்களே……? சச்ச…. ச்சச… சிக்கன். போச்சே…. ஐயோ …. கிருஷர்….. போச்சே…” என்றாளே பார்ப்போம் கீழே விழுந்த நிஷா அவளை முறைத்து பார்த்தாள்…

“ அடியே …. கிராதகி இங்க ஒருத்தி விழுந்தது பத்தி கொஞ்சம் கூட கவலையே இல்லாம நீ சிக்கன் போனதப்பத்தி சண்ட போடற…..” என்று கத்தினாள்……...

சத்தம் இல்லாமல் அமர் மற்றும் அவன் நண்பர்கள் சிரித்தனர்….

“நிஷா அக்கா எங்க அம்மா தான் சாப்பாட வேஸ்ட் பண்ண கூடாதுனு சொல்லிருக்கங்க நீ வேற நா உனக்கு உடம்பு வலிச்சா ஸ்ப்ரே அடிக்கிறேன்… முதுகு பிடிச்சு விட்டா... இந்த சிக்கன் கிடைக்குமா ???? எந்திச்சு வா போகலாம்… எனக்கு இன்னிக்கு சிக்கன் சிக்கல.... அப்பறம் சேர் இந்த சாப்படுக்கு 1500 ரூபாய் அப்பறம் GST அப்பறம் அக்கா லைன்ல நிண்ணு வாங்கினதுக்கு 500 மொத்தம் 2000 தாங்க….. ஃபர்ஸ்ட்….” என்றாலே பார்ப்போம்…

அமர்,கிரண், விக்கி மூவரும் காண்டாகி முழித்தார்கள் என்றால்

நிஷா இடுப்பை பிடித்துக் கொண்டு எழுந்து சுத்தி எதையோ தேடிக் கொண்டு இருக்க.

“ என்ன அக்கா டிரஸ் பேக் ஏன்ட்ட அங்க தானே குடுத்த இங்க என்ன தேடிர…” வினவினாள்….

“ உன்னைய எத கொண்டு அடிக்க பார்துட்டு இருக்கேன்…” நிஷா முடிக்கும் முன்

ஆஹா......ஈஷூஅடி ஜூட் என்று ஓடிவிட்டாள் ஈஷூ..

“ சாரி அண்ணா அவளுக்கு உங்கள தெரியாது…. நீங்க தப்பா நினைக்க வேண்டாம் சாரி…” மன்னிப்பு வேண்டினாள் நிஷா..

“ ஐய்யோ. நானும் சாரி கேக்கணும் மா ….. புட் வேஸ்ட் அகிட்டு. …. ஐ அம் சாரி.” அமர்

“ பரவாயில்லை அவ…..கொஞ்சம்…. வாய்…. ஜாஸ்தி…. நான் மன்னிப்பு கேட்கிறேன்....” தலை குனிந்தாள் நிஷா…

“ கொஞ்சம் இல்லாம வாய் மட்டும் தான் இருக்கு போல… “ என்றான் கிரண்…

ஆனால் அமர் மனதில் அவளை பற்றி ஒரு அதிருப்தி பணம் கேட்டதும் இதுதான் என்ன பெண் இவள்….. டீசென்சி இல்லாமல் இப்படி பப்ளிக்ல பிகேவ் பண்ரா…. நிஷாவினால் நீ தப்பித்தாய்…. இடியட்……. என்று கருவினான்….

இவர்கள் தங்கள் வாழ்க்கையில் இணைந்தால் டாம் ஆண்ட் செர்ரி லவ் ஸ்டோரி தான்..........
 
Last edited:

Vishwa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரெண்ட்ஸ் எனக்கு தெரிஞ்ச வரை எழுதியிருக்கிறேன்..... எனி மிஸ்டேக்...... ப்ளீஸ் ..... மன்னிச்சுசுசு......................
 
Status
Not open for further replies.
Top