All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலையின் ”சிறுகதைகள்” கதை திரி

Status
Not open for further replies.

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

இது என் சிறுகதைகளுக்கான கதை திரி…. ஒரு சின்ன முயற்சி இது, படித்து விட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்க பிரெண்ட்ஸ்….

உங்களின் கருத்துக்கள் தான், இந்த என் புதிய முயற்சியின் ஊக்க சக்தி…

சோ நிறையோ குறையோ தட்டி குடுத்து என்னை ஊக்க படுத்துங்க!!!

நட்புடன் உங்கள்
கலை
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மன்னவனே என் மன்னவனே
1989- அன்று

ஏய்… என்னடி இப்படி ஒரு பார்வை ம்ம்..?

அதற்கும் பலமான முறைப்பு.

பாருடா முறைப்பை! நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம என்னடி முறைப்பு வேண்டி கிடக்கு???

“இங்க பாருங்க நான் அமைதியான பொண்ணு தான்…. பயந்த பொண்ணு தான்… ஆனா அதுக்காக இப்படி ’டி’ போட்டெல்லாம் பேசாதீங்க எனக்கு பிடிக்கில..!”

” ஒரு வழிய வாயில இருந்து காத்தாவது வந்துச்சே..! நா ’டி’ போடாம வேற யாருடி ’டி’ போடுவா..?

”நீங்க யாருங்க எனக்கு..? எதுக்கு என்ன ’டி’ போடறீங்க..!”

”மாட்டினியா…. ஆமா நான் யாரு இங்க சொல்லு…?”

”ம்ம்… இப்படி முழிக்க கூடாது சொல்லுடி நான் யாரு..?

”மாப்பிள்ளை!”

”ஹான் என் காதுல விழல சத்தமா சொல்லு…!”

”என்னை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை..!”

”அப்பா இப்ப தான் குரலே வருது…!”

”ம்ம் நான் உன் மாப்பிள்ளைனா நீ என் மணப்பொண்ணு அதாவது என் பொண்டாட்டிஈஈஈ புரியுதா…!”

”இங்க பாருங்க இப்படியெல்லாம் பேசாதீங்க. ப்ளீஸ், இந்த கல்யாணம் வேணாம் நிறுத்துங்க…!

”அதான்டி செல்லம் அத்தானும் கேட்கறேன் ஏன் வேணாம்? இந்த அத்தானை உனக்கு பிடிக்கலையா..?”

”பிடிக்கில..!”

”இப்படி பட்டுனு சொல்லாம என் கண்ணை பார்த்து சொல்லணும்..!”

’விடமாட்டானா???

மெதுவாக தன் பார்வையை உயர்த்தியவள் நெடு நெடுவென உயரமும், கனகம்பிரமாகா கட்டுமஸ்தான உடலும், ஒட்ட நறுக்கிய முடியும், முறுக்கு மீசையும், குறும்பு கண்களும், சிரிக்கும் உதடுகளும்….

’அய்யோ அவளாள் எப்படி முடியும்..? அவனை பிடிக்கிலைனு என்று சொல்ல.

தன் புருவத்தை உயர்த்தி,

”ம்ம் சொல்லு, என்னை பிடிக்கலையா???” குரலில் ஒரு குழைவு.

”உங்கள பிடிச்சு இருக்கு….. நீங்க பார்க்கும் வேலை பிடிக்கில….!”

”அடேய்! பரசு உன் மவளுக்கு மாப்பிள தம்பிய பிடிச்சு இருக்காம் சட்டுபுட்டுனு தேதியை குறி….!”

அவர்களுக்கு நான்கடி தொலைவில் அமர்ந்து இருந்து பாட்டிமார்கள் கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்க பக்கென சிறிது விட்டான் மாறன்! இளமாறன்!!!

”என்னடி பதிலு இது??? உங்க அப்பா பட்டாளத்துல இருக்கும் பையன் தான் வேணும்னு தரகர் கிட்ட சொல்லி விட்டு இருக்காரு! நீ இப்படி சொல்ற?? இந்த விஷயம் உன் அப்பாவுக்கு தெரியுமா??”

”ம்ஹும் அய்யயோ அப்பா கிட்டலாம் சொல்லிடாதீங்க! அவருக்கு ராணுவத்துல வேலை பார்க்கிற மாப்பிளை தான் வேணுமாம்! அவரின் சின்ன வயசு ஆசையாம் அது! ஆனா அவருக்கு இருக்கும் வலிப்பு நோயால் அவரால் ராணுவத்துல சேர முடில!!! என் வரிசாவது சேரட்டும்னு ஆசைப்பட்டார்..!

கடவுள் அதுலயும் மண்ணள்ளி போட்டுட்டாரு? நாங்க நாலு பேரும் பொண்ணுங்களா பிறந்துட்டோம்!!! என் அக்காங்க மூணும் காதல் திருமணம்!!! நானும் அந்த மாதிரி செஞ்சுட போறேனு பயந்து இந்த பதினெட்டு வயசுலே எனக்கு கல்யாணம் பண்றாரு!!! அதுல எனக்கு அவர்மேல் கோவம். அதுக்காக தான் ராணுவத்துல வேலை பார்க்கிற பையன் வேணாம் சொல்றேன்! நீங்களே வேற எதாவது காரணத்தை சொல்லி கல்யாணத்தை நிப்பாட்டிடுங்க..!”

கண்களில் மின்னும் சிரிப்புடன்,

”நீ இவ்ளோ பேசுவியா??? சரி உன் ஆசைப்படியே செஞ்சுடறேன் போதுமா..!”

அதில் அவள் மகிழ்வதற்கு பதில் சோர்ந்து போனாள்!!!
----------------------​

கெட்டிமேளம்!” ”கெட்டிமேளம்!”

”இப்படி மூக்கை சிந்தாம சிரிடி..! தாலி கட்ட போறேன்!!!

கலங்கிய கண்களோடு ஒரு முறைப்பு அவளிடம்!!!

”கட்டுவா? வேணாமா???

”நான் எழுந்து போவா உட்காருவா??”

”நீ செஞ்சாலும் செய்வடி!”

மூன்று முடிச்சு அவனே போட்டு ’கண்மணியை’ தன் கண்ணனை மணியாக்கி கொண்டான் இளமாறன்.

”இங்க பாருடி காலையில தாலி காட்டும் போது ஒரு ஒப்பாரி!! மண்டபத்துல இருந்து கிளம்பு போது ஒரு ஒப்பாரி!! இப்போ இங்க முதல் இரவு அறையிலும் ஒப்பாறியாடி மாமா பாவம்டி செல்லம்!”

”ப்ச் என்ன இது ஒப்பாரி அது இதுனு..!” என்று முகத்தை சுளித்தவள்

”பெருசா என்கிட்ட சொல்லிட்டு போனீங்க கல்யாணத்த நிறுத்தறேன்னு!! இப்போ என்ன செஞ்சு வச்சு இருக்கீங்க..!” போலி கோவம்.

”நானும் அதான்டி நினச்சேன்! ஆனா எனக்கு பிடிச்ச பொண்ணு. அவ ஆசைய நிறைவேத்தாமா போன எப்படி?? அதன் தாலி கட்டிட்டேன்..!” புருவ சுளிப்புடன் நோக்கியவளைய் பார்த்து கண்சிமிட்டி கொண்டே,

”நீ தானேடி அத்தானை பிடிச்சு இருக்கு சொன்ன!”

’அடப்பாவி!!’ அதிர்ந்தவள்,

”கூடவே நீங்க பார்க்கும் வேலை பிடிக்கில் கல்யாணத்தை நிறுத்த சொன்னேனே..?”

”நான் எப்பவும் முதல சொன்னது தான் கணக்குல எடுப்பேன்! என் செல்லம்மா என்னை பிடிச்சு இருக்கு சொல்லிய பின்பு எப்படி அவளை நான் விடுவேன்….?” என கேட்டுக்கொண்டே அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன்,

”எங்கே இப்பவும் இந்த அத்தானை பிடிக்கிலயா??”
இப்படி உதடுகளால் முகம் முழுக்க உரசி கொண்டே கேட்டால் எப்படி சொல்வதாம்??? செல்லமாக சிணுங்கி கொண்டது அவள் இதயம்.

”சொல்லடி..?” இடையை இறுக்கிய கைகள் மேலும் முன்னேறி அவள் புடவையை தளர்த்தியது.
முதல் பார்வையிலே தன்னை கவர்ந்த தன் மன்னவனை எப்படி பிடிக்கவில்லை என்று சொல்லுவாள்???

”ம்ம் பதில் சொல்லடி!” கட்டிலில் அவளோடு சரித்தவன் கைகள் எல்லை மீறியது.
மீசை முடிகள் உரசி கன்னத்தில் ஏகப்பட்ட காயம் கொண்டது! கன்னியின் மனமோ மன்னவனின் தொடுகைக்கு இன்னும் இன்னும் ஏங்கியது!!!

”பதில் சொல்லடி!!!” தன் மார்போடு புதைந்தவனை தன்னோடு இறுக்கி கொண்டவள்,

”நீங்கள் என் உயிர் அத்தான்..!” என்றாள்.

ஒரே வார்த்தை! மீதி இருந்த தடைகளையும் விலகி கொண்டு அவளோடு கலந்து கரை காண உலகில் விரும்பியே தொலைந்தான்……!
----------------------​

”ப்ச் கண்மணி இப்போ நிறுத்த போறியா இல்லயா??”

”ம்ஹ்ம்..!” அவன் மார்பில் இருந்து விலகவில்லை அவள்.

”என்னடா இது நீ இப்படி அழுதா நான் எப்படி கிளம்பறது..?”

”நான் இதுக்கு தான் வேண்டாம் சொன்னேன் அத்தான்..! என்னால் உங்களை பிரிந்து இருக்க முடியாது..!”

”என்னமா இது உனக்கே தெரியம், எனக்கு நீ எப்படியோ அது போல தான் என் வேலையும் என்று.. ரெண்டு பேருமே ரெண்டு கண்கள் போலடா..!”

”நான் எப்படி நீங்க இல்லாம தனியா இருபேன் அத்தான்!!!”

”தனியா எங்கே? அம்மா இருக்காங்க! அதுவுமில்லாமல் உன் அம்மா வீடு இங்க பக்கம் தானே!”

”யாரிருந்தாலும் நீங்க இருப்பது போல் வராதே அத்தான்!”

அவள் முகத்தை துடைத்து கண்ணோடு கண் நோக்கி

"நீ இப்படி அழுதா நான் எப்படிடா அங்கே நிம்மதியா இருக்க முடியும்? என் செல்லம்ல! ஆறு மாசத்துல லீவு போட்டு வந்துடுவேன் சரியா!”

தன் அத்தான் கலங்குவது பொறுக்காமல்

”சரிங்க அத்தான்! முடிஞ்சா தொலைபேசியில் கூப்பிடுங்க… பத்திரமா இருங்க, உங்களுக்காக என் இதயம் துடித்துக்கொண்டே இருக்கும். நியாபகம் வச்சுகோங்க!!!”

”என் இதயம் துடிப்பதும் உன்னால் தான்டி செல்லம்மா!!!” என்று அவள் உதட்டில் ஆழமான முத்தத்தை பதித்தவன் கிளம்பிவிட்டான்.
-------------------​

”ஹலோ அத்தான்!”

”என்னடா!”

”ஹ்ம்ம் அத்தான்ன்ன்!” என்று அழைத்தவள் வெடித்து கதறி விட்டாள்.

”ஹேய் செல்லம்மா! என்னடா? என்னாச்சு? எதுக்கு அழுகை? எங்கனாச்சும் வலிக்குதா? என்னமா ஏன் இப்படி அழற? ஹல்லோ கண்மணி பேசுமா!” அலைபேசியிலே துடித்து விட்டான் அவன்.

”அத்தான் இங்கே எல்லோரும் என்னை கேவலமா பேசறாங்க அத்தான்!”

”என்னடா? யாரு என்ன பேசினது?

”நேத்து செக்கப்புக்கு மாமா கூட ஆட்டோவுல போனேன், அப்போ ’புருஷன்காரன் பட்டணத்துக்கு போய்ட்டான் இவ சீவி சிங்காரிச்சிட்டு எவனையோ மயக்க சுத்த கிளம்பிட்டா பாருனு’ பேசறாங்க அத்தான்….!”

ரத்தம் கொதித்து விட்டது இளமாறனுக்கு! அவனுக்கு தெரியாத தன் கண்மணியை பற்றி, அவள் குமரி உருவில் உள்ள குழந்தை என்று! சே… என்ன ஜென்மம் இவங்க எல்லாம்??”

”கண்மணி இதோ பாருடா! அழக்கூடாது… நீ அழுதா அத்தானுக்கு கஷ்டமா இருக்காதா??? யார் என்ன சொன்னாலும் எனக்கு தெரியாத என் செல்லம்மாவை பற்றி… நீ தங்கமடா சொக்க தங்கம்!!! இதுபோல பேசறவங்களாம் கண்டுக்காத விடு! நாக்குல நரம்பு இல்லாம பேசுவாங்க!!! நீ எவ்ளோ தைரியமான பொண்ணு! அதுவும் இந்த இளமாறனின் பொண்டாட்டி அழலாமா? செல்லமில்லை…!”

”எனக்கு இப்போ தான் அழ வருது! முதல அவங்க பேசினது கேட்டப்போ அவங்க தலையில கல்ல தூக்கி போட்டுடலாம் என யோசிச்சேன்!”

”ம்ம் இப்ப தான் என் பொண்டாட்டி கண்மணி மாதிரி இருக்கு! ஆனா விடு அவங்க மண்டையை நான் வந்து உடைச்சிடறேன்..! இங்க நாங்க உயிரை குடுத்து சேவை செய்ய எங்களை போற்ற வேணாம், ஆனா எங்க குடும்பத்தை துற்றமாவது இருக்கலாமே அவங்க..!”

இப்போ அவள் அவனை சமாதானம் செய்தாள்……...

நாட்கள் மெல்ல நகர்ந்தது…..

”கண்ணா இன்னைக்கு அப்பா பேசுவாராம்… அதனால அம்மாவை தொந்தரவு செய்யாம அமைதியா இருப்பியாம்..!” நிறை மாதா தன் வயிற்றை தடவி கொண்டவள் தொலைபேசி ஒலிக்க அவசரமாக எடுத்து,

”அத்தான்..!” உயிர் உருகும் குரலில்

”செல்லம்மா எப்படி டி இருக்க? தம்பி என்ன பண்றான்..?”

”ம்ம் நான் நல்லா இருக்கேன்! குட்டி தான் வயதுக்குள்ளே ஓட்ட பந்தியம் நடத்துறாங்க… அப்படியே அப்பவை போலவே!!!”

”ஹாஹா! என் பிள்ளை டி அவன். என்னை போல தானே இருப்பான்??”

”அத்தான் எப்போ வருவீங்க??” கண்ணீர் குரலில்

”வந்துடுவேன்டா போன மாசம் வரலாம் பார்த்த முடியல? கண்டிப்பா விரைவா வர பார்க்கறேன் அழ கூடாது சரியா??”

”ம்ம்.... அத்தான் குளிர் அதிகமா இருக்கா???”

”அதிகமா தான் இருக்கு! ஆனா நீ என் இதயத்தில் இருக்கும் போது அந்த குளிர் என்னை வாட்டிவிடுமா என்ன???”

”அத்தான்!” என்று சிரித்தவள்

”தம்பி கிட்ட பேசுங்க..!” ரிஸிவரை வயிற்றில் இடம் மாற்றினாள்.

”ஹலோ குட்டி பையா, எப்படி இருக்கீங்க??? நான் வரும்வரை அம்மாவை நீங்க தான் பத்திரமா பார்த்துக்கணும்…! அம்மா பாவமில்லையா அதிகமா தொந்தரவு செய்யக்கூடாதாம் சரியா!!! உன் அம்மா ஒரு வெகுளிடா கண்ணா… அப்பா வரும் வரை அம்மாவை தனியா விடாம கூடவே இருந்து பார்த்துக்கணும் தங்கம்!!! அப்பா சீக்கிரம் குட்டியையும் அம்மாவையும் பார்க்க வந்துடுவேனாம்.. உம்மாஆஆஆ!!!”

”அத்தான் வளைகாப்பு போட்டோ அனுப்பினேன் வந்துடுச்சா..??”

”இன்னும் இல்லடா குளிர் அதிகமா இருப்பதால் போஸ்ட்மேன் இந்த பக்கம் இன்னும் வரலை… வந்தவுடனே பார்த்துட்டு அத்தான் என் செல்லத்துக்கு பேசுவேனாம் சரியா வச்சிடுட்டமா…???
---------------------​

"அத்தை, அத்தான் போன் பண்ணினாரா??? தம்பி பிறந்து பத்து நாளாகுது இன்னும் பேசலையே? ஏன் அத்தை???”

”அம்மா நீ சொல்லு அத்தான் நான் தூங்கும் போது அழைத்தாரா???”

”அய்யோ! ஐயோ! இந்த கொடுமையை எங்க போய் சொல்றது?? பாதகத்தி அழுடி அழுது தொலை??? இப்படி சித்த பிரம்ம பிடிச்சு மாதிரி இருக்காளே??? என் வீட்டு இளங்குருத்து இப்படி கருகி போய்டுச்சே….!!!” என வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு அழ, தாய் அழுவதை பார்த்து அவளின் கண்களும் கலங்க

”என்னம்மா ஆச்சு? ஏன் அழற? நீ அழுவதை பார்த்து குட்டி பயப்படறான் பாரு??? இப்படியே நீ அழுதுட்டு இருந்த நா அத்தான் கிட்ட சொல்லிடுவேன் பார்த்துக்கோ..!!!”

”ஆமா டி? ஆமா! எப்படி போய் சொல்லுவ? நீயும் செத்து சொர்கத்துக்கு போய் சொல்லுவியா??? அய்யோ என் பட்டு, உன் புருஷனை தான் அல்பாயுசுல தூக்கி கொடுத்து நாள் அஞ்சாவதுடி..!!! இன்னும் இப்படியே இருக்கியேடி??? அழுடி! அழு..!

“அவளை போட்டு பட்பட்டென அடிக்க, அதில் தெளிவு பெற்றவள்

”என்ன அத்தான் இல்லையா??? என்னை விட்டு போயிட்டாறா?? ஏன்? ஏன்? ஏன் அத்தான்???? நீங்கள் இல்லாம நான் எப்படி இருப்பேன்!!! ஐய்யோ அத்தான்ன்ன உங்க செல்லம்மாவ தவிக்கவிட்டு போயிடீங்கிளே அத்தான்??? நான் என்ன செய்வேன்??? நானும் வரேன்.. என்னையும் அழைச்சிட்டு போங்க அத்தான்ன்ன்ன்ன்!!!” என்று கேட்டவள் உரக்க கத்தி கதறி அழுதாள்.

மாதம் இரண்டு கடந்து விட்டது

அன்று தான் அவள் அதை தொடுகிறாள்!!! அதுயெல்லாம் இளமாறனின் உடைமைகள்! ராணுவத்தில் இருந்து கொடுக்கப்பட்டது! அதில் அவனின் சிவப்பு நிற டைரி ஒன்று மின்ன நடுங்கிய கரங்களுடன் அதை எடுத்தாள்

அவனுக்கு டைரி எழுதும் பழக்கம் இல்லை. ஆனால் இது என்ன? என்று புரட்டியவளுக்கு அந்தத் பக்கம் கண்ணில் விழுந்தது, தன்னுடன் பேச முடியாத நாட்களில் எழுதியிருப்பார் போல,

முத்து முத்தான கையெழுத்து! அவளின் அத்தானின் கையெழுத்து தான் அது! குழந்தை பிறக்க பத்து நாள் முன்னாடி எழுதி இருப்பான் போல,

”செல்லமா!

எப்படிடா இருக்க??? அழுதுட்டு இருக்கியா அத்தான் அழைக்கல என்று??? இங்கு நிலைமை சரியில்லாடா இப்போதைக்கு உன்னை தொடர்புகொள்ள முடியாது! எல்லாம் சரியான பின் அத்தான் உன்னை அழைக்குறேன்.. அதுவரை அழாம தம்பிய பார்த்துக்கணும்!!!

தம்பி பிறகும் போது நான் உன்கூட இல்லாம போகாமல்… நீ களங்காம தைரியமா தம்பிய பெத்து எடுக்கணும் சரியா??
அப்புறம் உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம்! அடுத்த மாதம் அத்தான் நிச்சயம் வந்துடுவேன் லீவு கிடைச்சிடுச்சு..!
தம்பிய கண்ணும் கருதும் வளர்க்கணும்டா! அவனை ராணுவத்தில் சேர்ப்பது என் விருப்பமாக இருந்தாலும் அவனுக்கு என்ன ஆசையோ அதை தான் நாம் அவனுக்கு செய்யனும்!!! அவனை நாம் இருவரும் அன்பா பாசமா வளர்க்கணும்!!!
உயிரை உறைய வைக்கும் குளிர் எனக்கு உறைக்கவில்லை!!! மனதை நடுங்க வைக்கும் குண்டு முழக்கம் என் காதில் விழவில்லை!!! பார்க்கும் இடமெல்லாம் ரத்தமும் சதை பிண்டமும் நான் அச்சம்கொள்ளவில்லை!!! ஏன் தெரியுமா??? எனக்குள் நீ….. என்னவளாக நீ! இருக்கும் போது இதற்கெல்லாம் நான் ஏன் பயப்படவேண்டும்???

என் ஆசையெல்லாம் ஒண்ணே ஒன்னு தான் கடைசிவரை உன் கையை விடாமல், அத்தான் உன்னுடனே வரனும் என்று! நான் இங்கு இருந்தாலும் என் உயிரும் மனமும் உன்னையும் தம்பியும் மட்டுமே சுற்றி கொண்டு இருக்கும்!!!
நீ அழுதாள் அத்தானுக்கும் வலிக்கும்!!! நீ சிரித்தால் அத்தான் நிம்மதியா இருப்பேன்!!! நான் எங்கு இருந்தாலும் என்
நினைவுகள் உன்னை சுற்றியே இருக்கும்டா…………

செல்லமா!!!

நமக்கு கல்யாண ஆனா புதுசுல நீ என்கிட்ட எப்பவும் ஒன்னு கேட்பியே நினைவு இருக்கா??? என்னிடம் எப்போது அத்தான் ’ஐ லவ் யு!’ சொல்லுவீங்க என்று!!

நான் கூட அதற்கு பதில் சொல்லி இருக்கேனே…. சொல்லி புரிவதா நம் காதல்… ’நீயாக நானும்! நானாக நீயும்!’ இருக்கும் போது அந்த வார்த்தையா நம் அன்பை நிர்ணயிக்கும் என்று??? ஆனாலும் நீ சிணுங்களுடன் என்னை கட்டி கொண்டே எனக்காக சொல்லுங்கள் அத்தான்!!! என கெஞ்சுவாய்

இப்போ நான் சொல்றேன்டா செல்லம்மா ”ஐ லவ் யு டா தங்கம்!!!”

”என் உயிரின் மூச்சே நீ தான்டா செல்லம்மா!
”என் வாழ்வின் வசந்தமே நீ தான்டா கண்ணம்மா!!!
”என் கண்ணின் கண்ணான என் கண்மனியுடன் இந்த ஜென்மம் இல்லை வரும் ஜென்மமெல்லாம் சந்தோஷமா வாழனும் என இறைவனை வேண்டி கொள்கிறேன் செல்லம்மா!!!”””

அத்துடன் முடிந்து இருந்தது பக்கங்கள்……

”ஐ லவ் யு அத்தான்!!! ஐ லவ் யு சோ மச் அத்தான்னன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!!”

அந்த டைரியை நெஞ்சோடு அணைத்து கொண்டு துடிப்பவளை தேற்ற அவளின் அத்தான் அங்கு இல்லையே??? அவன் தான் காற்றோடு கலந்து விட்டானே!!!!

2019- இன்று

”அம்மா! அம்மா! கண்ணை திறங்கம்மா? நான் பேசுறது கேட்குதா?? உங்கள் பையன் ஆதவன்மா!! இதோ இங்கே பாருங்க தருண் பாருங்க! உங்கள் பேரனை பாருங்க!!!

”ஆஆஆது… ஆதவா!”

”அம்மா!! என்னமா? ஏன் ம்மா இப்படி எதற்கும் ஒத்துழைக்காம இருக்கீங்க?? நீங்க மனசு வைத்தால் தானே மா எங்களால் மருத்தவம் பார்க்க முடியும்..!” கண்கலங்கி நின்றான் இளமாறன்-கண்மணியின் தவப்புதல்வன் டாக்டர்.ஆதவன்.

ஒற்றை பெண்மணியாக, வெளியுலகுக்கு விதவையாக, மனதால் தன அத்தானின் மனைவியாக திடம் பெற்று…. ஆசிரியர் படிப்புக்கு படித்து, வேலைக்கு சென்று, அவள் அத்தானின் சொல்படி மகனுக்கு பிடித்த மருத்துவ படிப்பை படிக்கவைத்து, மனம் போல் திருமணம் செய்து வம்சத்தை தழைக்கவைத்து விட்டாள் வீரப்பெண் கண்மணிஇளமாறன்!!!

”ஆஆஆது!!!” தொண்டை காய்ந்து எச்சில் கூட்டி முழுங்கினாள் கண்மணி.

”சொல்லுங்கமா??”

”நா.. நான் போறேண்டா! அப்பா கிட்ட போறேன்!! என் அத்தனிடம் போறேன்! ஆதவா தருணை பார்த்துக்கோ! எப்பவும் எல்லோருக்கும் நேர்மையா இருந்து உன் அப்பாவை போல் நீ சிறந்து விளங்கனும் சரியா???” திக்கி திணறி மூச்சு விட சிரமப்பட்டு பேசினாள்.

”அம்மா இப்படி சொல்லாதீங்கம்மா?? சாகற வயசமா இது உங்களுக்கு?? நீங்கள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன் ம்மா??”

அவன் அழுவது எதுவும் அவர் காதில் விழவில்லை.

கடைசி முறையாய் தன் மகனை ஒருமுறை பார்த்தவள் விழிகளை மூடிக்கொண்டாள்!!!

மூடிய விழிகளுக்குள் அவளின் அத்தான் கண்ணடித்து அவளை பார்த்து சிரித்தான்!!! குறும்பு புன்னகையுடன்

’என்னடி என்னுடன் வரியா…?? என தன்னை நோக்கி நீட்டிய கையை

”வரேன் அத்தான்!!!” என ஆசையோடு பற்றிக்கொண்டாள் இளமாறனின் கண்மணி!!!

மன்னவனே என் மன்னவனே
நீ போன பாத தேடி தேடி வருவேன்!
பனியிலே வெண் பனியிலே
விண்மீன் தேடி தேடி எங்க அலைவேன்!


முற்றும்……….
 
Last edited:
Status
Not open for further replies.
Top