All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஃபாத்திமா SJவின் "உயிர் உருகும் காதல்" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நண்பர்களே.....

இத்தளத்தில் எழுதும் அனைவரினது கதைகளையும் வாசித்து என்னை மெருகேற்றி இப்போது நானும் எழுத தயாராகி வந்திருக்கிறேன்.......

எந்தளவுக்கு எழுதுவேன் என்று சொல்ல தெரியவில்லை ஆனால் என்னால் முடிந்தளவு எழுத முயற்சிக்கிறேன்.....
முதல் கதை என்பதால் எழுத்துப்பிழை இலக்கணப்பிழை ஏதும் இருந்தாலும் மன்னித்து உங்களில் ஒருத்தியாய் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.......

வாரத்தில் இரண்டு நாட்கள் அத்தியாயத்தை பதிவு செய்கிறேன்.........


Dulquer Salmaan and Amal Sufiya picture.jpg


'உயிர் உருகும் காதல்' என் முதல் முயற்சியின் தலைப்பு..........
உயிரை உருக வைக்குமா என தெரியவில்லை ஆனால் அதற்கு கண்டிப்பாய் முயற்சிப்பேன்........
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் 01



‘அன்பு குறைந்து இருக்கும் போது சின்ன தும்மல் கூட பெரிய குற்றம் போல் தோன்றும்’

எப்போதோ எங்கேயோ படித்த தத்துவம் தான் இப்போது அவள் மனதினில். நினைவு வந்ததுமே இதழ்களில் கசந்த முறுவல். உண்மை தான் போல!!! இப்போதெல்லாம் அப்படித்தான் எண்ணத் தோன்றியது.

இப்போதென்றால் கிட்டத்தட்ட ஏழு மாதங்களாக…. அது என்னவோ ஏழு மாதங்களாகத்தான் இருந்தது……. அவளுக்கோ நீண்ட நெடிய எழுபது வருடங்கள் போல் அல்லவா தோன்றிற்று. நினைவே கன்னத்தில் கோடாய் கண்ணீரை தடம்பதியச் செய்தது.

இன்னம் வாழ்க்கை எதை வைத்துக் காத்திருக்கிறதோ என்று கணிக்க முடியாது போனதில் கண்ணீரே துணையாகிற்று. வற்றாத ஜீவநதியாக இறங்கிக் கொண்டிருந்த கண்ணீரினை துடைக்கக் கூட முடியாமல் உடலெல்லாம் மரத்துப் போனது போன்ற உணர்வு.

அதையும் மீறி முகத்தை மூடிக் கொண்டு குலுங்கினாள். முகத்தை மூடும்போது கன்னத்தில் கைவிரல்கள் பட்டு காந்தியது. கண்ணை மூடி வலியை பொருத்துக் கொண்டாள். பழக்கமான ஒன்று தான், இருந்தும் உடலெல்லாம் அவமானத்தில் கூசியது; வெறுப்பில் வெம்பியது. இன்னமும் எத்தனை நாளைக்கு!!! கழிவிரக்கத்தில் உள்ளமும் சேர்ந்து கண்ணீர் வடித்தது.

உப்பிப்போன கன்னத்தை தடவிக் கொடுத்தாள்,, கன்னத்தில் ஐவிரல்களின் வடுக்கள் தடுத்து எழும்பியிருந்தது.. அடி விழுந்தது கன்னங்களில் மட்டுமல்ல அவன் கரங்கள் எங்கெல்லாம் பாய்ந்து மீண்டதோ அங்கெல்லாம் அழுத்தமாய் தன் தடத்தை பதித்தே மீண்டிருந்தது.

விழுந்த ஒவ்வொரு அடியிலும் மூச்சே சில வினாடிகள் நிற்பது போல் அல்லவா உணர்ந்தாள்… ஒவ்வொரு அடியும் இடி போன்று தான் விழுந்தது… கண்களை மூடி ஜீரணிக்க முயன்றாள்… முடியவில்லை!!! இனியும் இதை தாங்கும் சக்தி தனக்கு இல்லை என்றே எண்ணினாள்…

இன்னம் மிச்சம் இருந்தது போல் கண்ணீர் மறுபடியும் மாலை தொடுத்தது.

அடித்தது வேறு யாருமில்லை…… அவளை தொட்டு தாலி கட்டி மனைவி எனும் பெயரில் சம்பளமில்லாத வேலைக்காரியாய் வைத்திருக்கும் அவள் கணவன்!!!

இப்போதென்றல்ல, அவள் எப்போது அவன் வீட்டில் காலடி வைத்தாளோ அப்போதிருந்து அவன் இப்படித்தான் இருக்கிறான். முன்பாவது வார்த்தை எனும் குத்தீட்டி கொண்டு இதயத்தை கொய்தான்; இப்போதெல்லாம் எதற்கும் கை தான், கணநேரத்தில் குறிபார்த்து விசுக்கி விடுவான்.

இத்தனை நாட்களாய் தாங்கிக் கொண்டவளுக்கு இனிமேல் தாக்குபிடிக்க முடியுமென தோன்றவில்லை. வந்துவிட்டாள், மொத்தமாய்……. இனியொரு முறை அந்த வீட்டினுள் செல்வதை விட தூக்கில் தொங்குவது மேலாய் தோன்றியது.

அப்படி உயிரை மாய்த்துக் கொள்ள பயந்து தான் அந்த நரகத்தில் இருந்து தப்பி வந்திருக்கிறாள். இல்லையென்றால் அவர்கள் செய்த கொடுமைகளுக்கு எப்போதோ இந்த கட்டை தீயில் வெந்து போயிருக்கும், மனதில் அந்த எண்ணம் தான் ஓடியது.

என்ன மனிதர்கள் இவர்கள் கொஞ்சங்கூட ஈவு இரக்கம் இல்லாமல் இருக்கிறார்கள்!!!

மனசாட்சி இல்லாதவர்கள்!.... அரக்கர்கூட்டம்!.... பணப்பேய்கள்!.... நரம்பில்லாத நாக்கால் எப்படியெல்லாம் பேசிவிட்டார்கள்!.....

நினைக்கவே உடல் கூசியது, அவன் பார்வை பாய்ந்து மீண்ட இடமெல்லாம் கம்பளிப்பூச்சி ஊர்ந்தது போல் எரிந்தது. தீயிட்டு கொளுத்தும் ஆவேஷம்!!! ஒவ்வொரு அணுவிலும்…….

இதற்காகவா அத்தனை கஷ்டப்பட்டு அனுதினமும் பாடுபட்டேன்! நினைக்க நினைக்க உள்ளம் வெதும்பியது..

அவள் ஒன்றும் பணம் படைத்தவளில்லை, மிகவும் ஏழ்மையான குடும்பம். அம்மாவும் மூன்று தங்கைகளும் தான் அவள் உலகம். பரசு அவளின் தந்தை; கூலி வேலை தான்… அதில் வரும் வருவாயில் குடித்து குடித்து குடல் வெந்தே இறந்துவிட்டார்.

அதற்காக வருந்தக்கூட நேரமில்லாமல் சுயநினைவை இழந்து கிடக்கும் தாயையும் கவனித்து பசியில் அழும் தங்கைகளையும் பார்த்துக்கொண்டு அந்த பத்து வயதிலே பொறுப்புகளை தன் தலையில் போட்டுக்கொண்டவள் தான் மதுரா.

தங்களின் பசி தீர ஏதாவது செய்ய வேண்டும்…… என்ன செய்வது என்று தெரியாத அறியாமை, நிலைகுலைந்து போன கணங்கள் அவை!!.. யாராவது தங்களின் துன்பம் போக்க வருவார்களா என ஏங்கித்தவித்த நாட்கள் அவை!!..

விதியின் சதியோ என்னவோ; அவர்களின் துன்பத்தை போக்க யாருமே வரவில்லை, பதிலாக மேலும் மேலும் துன்பம் தான் வந்து சேர்ந்தது.


எத்தனையைத் தான் தாங்குவது… பசியில் வாடித் தவிக்கும் தங்கைகள்……. அரை மயக்கத்தில் மூலையில் சுருண்டு கிடக்கும் தாய்…… ஒருவேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று புரியாத தடுமாற்றம்…… இத்தனைக்கும் மேல் தந்தை என்ற பெயரில் இருந்தவரின் சில்லறை கடன்கள்……

யோசிக்கும் திறனில் இருக்கும் நம்மாலே இதையெல்லாம் எளிதில் தீர்த்துவிட முடியாது எனும் போதினில் பத்து வயது நிரம்பிய சிறுமி அவளால் என்ன செய்யதிட முடியும்..

ஆனாலும் செய்தாள்; தன் சக்தியையும் மீறி அவள் செய்த காரியங்கள் தான் எத்தனை எத்தனை……..

‘ஈசனே தானாக உணர்ந்த போதும்
எழும் பசியை உணவால்தான் போக்க வேண்டும்’

அதை தான் அவளும் செய்தாள். தங்கள் ஐவரினதும் பசிபோக்க தன் உடல் உழைப்பை கொடுத்தாள்.

பக்கத்து வீடுகளில் பத்து பாத்திரம் தேய்ப்பது; துணிமணிகளை துவைத்து கொடுப்பது; காய்கறிகள் வாங்கி வருவது முதல் சமையல் வேலை செய்வது என அனைத்து வேலைகளையும் சிறு முகச்சுணுக்கம் கூட இன்றி அவர்களுக்கு இரவு பகல் பாராது செய்து கொடுத்தாள்.

அதில் வரும் வருவாய் என்னவோ அன்றைய உணவுக்கே போதுமானதாய் அமைந்து விடும், இருந்தும் விடாமல் ஓடினாள்……

இரவு பகல் பாராத ஓட்டம், தூக்கம் என்ற ஒன்றே இல்லாது போனது. பத்து வயதில் ஆரம்பித்த ஓட்டம் இருபத்தி நான்கு வயதில் தான் நிறைவுக்கு வந்தது. பதினான்கு வருட உழைப்பு!! அதற்காக அவள் எப்படியெல்லாம் பாடுபட்டால் என்பதை அவளையன்றி வேறு யாராலும் உணரக்கூட முடியாது.

மூன்று தங்கைகளுக்கும் படிப்பை கொடுத்திருந்தாள், அவர்களின் திருமணத்திற்கு சிறுக சிறுக சேர்த்து வைத்தாள், குடிசை வீட்டிலிருந்து ஓட்டு வீட்டுக்கு மாறினாள். அத்தனையும் அவள் மாடாய் தேய்ந்து உழைத்த உழைப்பின் சன்மானம்.

தன் தலையில் சுமந்த பாரத்தை இறக்கி வைத்து ஆசுவாசத்தோடு இளைப்பாறிய தருணம் அது…… அப்போதாவது கடவுள் நிம்மதி என்ற ஒன்றை கொடுத்திருக்கலாம்.

இப்போது அப்படித்தான் எண்ணத் தோன்றியது!!!!

எங்கோ சென்று எங்கோ முடிந்த எண்ணங்களின் ஊடே தொலைதூரத்தை வெறித்தாள்……… வெளிச்சத்தினில் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சியாய் அவள் மனம் ஏங்கித் தவித்தது………

தன்னை சூழ்ந்திருக்கும் இருளில் இருந்து தப்பிக்கும் மார்க்கம் அறியாது, எங்காவது வெளிச்சக்கீற்று தென்படுகின்றதா என்று தொலைதூரத்தை விழிகளால் அலசினாள்……

மனிதனுக்கு தன் இறுதி நாள் வரை தன் மீது அன்பு காட்டுவதற்கும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வதற்கும் எதிர்பாலினத் துணை வேண்டும்……

அதற்காகத்தான் திருமணம் என்ற ஒன்றே வேண்டாம் என்று இருந்தவளை வற்புறுத்தி திருமண பந்தத்தில் சிக்க வைத்தார் அவளின் தாயார் ஜானகி! மகளின் வாழ்க்கை இனிமேலாவது சிறப்பிக்க வேண்டும் எனும் வேண்டுதலுடன்......

அவர் அறிந்திருக்கவில்லை, இந்த திருமணத்தால் மகளின் வாழ்வு சூன்யமாய் போவதை.

எளிமையான திருமணம், கோயிலில் நடந்தேறியது. மணமகன் ராஜேஷ். சாப்ட்வேர் கம்பனியில் வேலை. கை நிறைய சம்பளம்... தந்தை சிறு வயதிலே தவறிவிட்டார். அம்மாவும் தம்பி தங்கையும் தான்.

ஆடம்பரமாக இல்லாவிடினும் சேர்த்து வைத்த பணத்தில் சற்று வசதியாக திருமணத்தை நடத்த எண்ணினார் ஜானகி. குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம் அல்லாவா...... சந்தோஷத்திற்கு அளவேயில்லை......

மதுராவின் மூத்த தங்கை காவேரி.... அவளுக்கு அடுத்து சிந்து... கடைக்குட்டி யாழினி...... மூவருக்கும் பெரும் கொண்டாட்டம். அக்காளின் திருமணத்தை கலகலப்பாக்க திட்டமிட்டிருந்தனர்.

ராஜேஷின் அன்னை பார்வதி; அவரின் தேனொழுகும் பேச்சிலே மதுராவின் மொத்த குடும்பமும் ப்ளாட் ஆகிவிட்டார்கள்.

மாப்பிள்ளையின் தம்பி கமலேஷ், படித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தான். அவர்களின் கடைசி மகள் ரஞ்சனி கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருந்தாள். மொத்த குடும்பத்தையும் தாங்குவது ராஜேஷின் சம்பளப் பணம் தான்.

மாப்பிள்ளை வீட்டாருக்கு மதுராவை பிடித்துப்போக மதுராவின் வீட்டினருக்கும் ராஜேஷை பிடித்து விட்டது. வெளித்தோற்றத்தை பார்த்து வெளுத்தது எல்லாம் பால் என நம்பும் ஜானகியும் ஏமாந்து போய்விட்டார்.

மாப்பிள்ளை வீட்டாரின் குடும்பத்தை பத்தி விசாரிக்க முன்வரவில்லை......... அப்படி விசாரிக்கும் அளவுக்கு ஜானகிக்கும் யாரையும் தெரியாது. மதுராவுக்கு ஏனோ திருமணத்தில் அவ்வளவாக ஆர்வம் இல்லாது போனாலும்; உணர்வுகளை மறந்து இருந்தவளுக்கு திருமணம்......... மணமகன் என்று வரும்போது அவளுக்குமே உள்ளுக்குள் சில்லிப்பு

திருமணத்தை வெகுவாய் எதிர்பார்த்தாள் என்றே சொல்லலாம்……

ஆக அனைத்தும் பிரமாதமாக இருக்க ஒரு சுபயோக சுப தினத்தில் அம்மன் சந்நிதானத்தில் அவர்களின் திருமணம் எந்த தடையுமின்றி நடந்தேறியது..

மதுரா ராஜேஷின் திருமணம் கோயில் சந்நிதானத்தில் இனிதே நடைபெற வந்தவர்களை வரவேற்று சிறு விருந்துக்கு ஏற்பாடு செய்து அனைத்தும் சிறப்பாய் முடிந்திட பார்வதி கையோடு மருமகளை வீட்டிற்கு அழைத்து செல்வதாய் கூறிவிட்டார்..

அவரின் பேச்சை கேட்டு திகைப்பாய் அன்னையை பார்த்தாள் மதுரா.

‘அம்மா தங்கைகளை விட்டு எப்படி செல்வது….. பத்திரமாக இருந்து கொள்வார்களா….. தான் இல்லாத நேரத்தில் ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் என்னாவது…..’

அவள் எண்ணங்கள் அப்படித்தான் ஓடியது. தன் பிறந்து வளர்ந்த சூழ்நிலையை விட்டு இன்னொரு இடத்திற்கு சுலபமாய் அவளால் செல்ல முடியவில்லை, பெண்களுக்கு மட்டுமே இருக்கும் சாபக்கேடு…

திருமணம் ஆகினும் ஆண்களுக்கு எவ்வித மாறுதலுமில்லை, அவர்களின் வாழ்க்கை என்னவோ சீராய் சென்றுவிடும், பாடுபடுவது பெண்கள் தானே..

பிறந்த வீட்டை விட்டு செல்வது பெரும் துன்பம் என்றால் கணவனது குடும்பத்தினருக்காக அட்ஜஸ்ட் செய்வது அதையும் விட பெரும் துன்பம்.

இருந்தும் முகத்தினில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை, தாய் தங்கையை வருத்த மனம் வரவில்லை.. முகத்தை சீராக்கி சிரித்த முகமாகவே இருந்தாள்.

அப்படி இருந்தும் விடைபெறும் நேரத்தில் முணுக்கென கண்ணில் நீர் நிறைந்தது.

“வரேன்மா” பிரிவுத்துயரில் தேன் குரல் நமநமத்தது.

“நல்லபடியா நடந்துக்கோ கண்ணு…” காலா காலமாய் புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்களுக்கு வழங்கும் அறிவுரைகளை ஜானகி அவிழ்த்துவிட பொறுமையாய் கேட்டுக் கொண்டாள்.

அவளின் சிறப்பம்சமே அது தான். அவசரம் சிப்பிகளை தரும், பொறுமையே முத்துகளை தரும்.. இவளுக்கு இது பொருத்தமானதும் கூட.

பொறுமை… மென்மை… அடக்கம்… அமைதி… எல்லாமே அளவுக்கு மீறித்தான் அவளிடம் இருந்தது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு…. அதை அவள் உணரும் நாள் வெகு தொலைவினில் இல்லை…..

தங்கைகளை பார்த்தாள், இப்போதோ அப்போதே என கண்களில் நீர் தளும்ப அவளையே பார்த்திருந்தனர். அவர்கள் பிறந்ததில் இருந்தும் பெற்ற தாயை விட அதிகம் அன்பு செலுத்தி அவர்களை அரவணைத்துக் கொண்டவள் அவள் தான்.

இப்போது அவளை பிரியப்போகின்றோமே எனும் வேதனையில் அன்னையை பிரியும் சேயாட்டம் விம்மினர். ஓடி வந்து மூவரையும் தாங்கிக் கொண்டாள். கைகள் அவர்களின் தலையை வருடிக் கொடுத்தது.

“நல்லா படிச்சு நல்ல மார்க் எடுக்கனும்” ,மூவருக்கும் பொதுவாய் அறிவுரை கூறியவள் “அம்மாவ நல்ல படியா பார்த்துக்கோங்க… ஏதும் வேணும்னா என்னை கூப்பிடனும் சரியா…”

தன் துயரை விழுங்கி தாய் தங்கைகளினது துயர் துடைத்தவள் மற்றவர்களை கூட ஓரளவு சமாதானப்படுத்தி விட்டாள்,, கடைசி தங்கை யாழினியைத்தான் அவ்வளவு எளிதில் சமாளிக்க முடியவில்லை…. அழுகையென்றால் அப்படியொரு அழுகை.

மூத்தவள் காவேரி தான் அவளை அதட்டி மிரட்டி சமாதானப்படுத்தி வைத்திருந்தாள்.

அதற்குள் வாடகை கார் வந்திருந்தது,,

“மதுரா வாம்மா… கார் வந்திடிச்சு நல்ல நேரம் முடியும்முன்னே வீடு போய் சேரணும்….” தேனொழுகியது பேச்சில்,

மாமியாரின் குரலில் சரி என தலையசைத்தவள் குடும்பத்தினரிடம் விடைபெற்று காரில் அமர்ந்து கொண்டாள். காரை எல்லாம் தள்ளி நின்று பார்த்ததோடு சரி, ஏறிச்செல்லும் அளவுக்கு அவர்களுக்கு வசதியில்லை.

முதல் கார் பயணம்…. அதுவும் கணவனுடன்…. எல்லாப் பெண்களையும் போல் தித்திப்பாய் உணர்ந்தாள்.

இடவசதி பத்தாமல் நெருக்கிக் கொண்டு அமர்ந்ததில் ராஜேஷின் உடல் மொத்தமும் இவள் மேல் தான், உணரும் முதல் ஆண் தொடுகை… அதுவும் தாலி கட்டிய கணவனின் தொடுகை…. மெய்மறக்கவில்லை என்றாலும் உணர்வு கொடுத்த தாக்கத்தில் மேனி செங்கொழுந்தாய் சிவந்து போனது.

அப்படித்தான் அவளின் புகுந்த வீட்டு பயணம் ஆரம்பித்தது….

ராஜேஸின் வீடும் பொன்னேரியில் தான், என்ன மதுராவின் வீட்டினில் இருந்து தொலைவில் இருந்தது, முக்கால்மணி நேர கார் பயணம்.

முதலில் பயணத்தை ரசிக்க ஆரம்பித்தவள் பின் எப்போதடா வீடு போய் சேருவோம் என்று எண்ணத்தொடங்கி விட்டாள். வேருத்து விறுவிறுத்து போய்விட்டது, இப்படியொரு பயணத்தை இனி கற்பனையில் கூட எண்ணிபார்க்கக் கூடாது எனும் அளவில் நொந்து நூலாகி விட்டாள்.

ஒருவழியாய் அவளின் அவஸ்தை புரிந்தோ என்னவோ கார் ராஜேஸின் வீட்டின் முன் நிற்க….. நின்றது தான் தாமதம் ஒவ்வொருத்தராய் இறங்கி வீட்டினுள் சென்று மறைந்தனர். தங்களது கடமை முடிந்தது என்பது போல்.

அவர்களின் செய்கையில் திகைத்துத் தான் போனாள்….. என்ன செய்வது என புரியாத தடுமாற்றம்….. மொழி புரியா நாட்டில் வழித் தடம் மாறிய நிலை…..

வந்த காரும் முடிந்தது கடமை என்று விருட்டென கிளம்பிவிட தனித்து நின்றாள் புகுந்த வீட்டு வாசலில்…. இயல்பையும் மீறி மனம் சுருங்கிப் போனது…. இரண்டாவது முறை முணுக்கென கண்ணில் நீர் துளிர்த்தது.

உள்ளிழுத்துக் கொண்டு அசைய மறுத்த கால்களை சிரமப்பட்டு நகர்த்தி தயக்கத்துடன் வீட்டினுள் கால் பதித்தாள்.

அவ்வளவு பெரிய வீடும் அல்ல…. சிறிய வீடென சொல்வதற்குமில்லை ஓரளவான வீடு…. வெளித்தோற்றம் பார்க்க அழகாகத்தான் இருந்தது…. ஆனால் உள்ளே? திகைத்துத் தான் போனாள்.

இப்பிடியுமொரு வீடு இருக்குமா? அவர்களின் வீட்டை பார்த்ததும் முதலில் தோன்றியதென்னவோ இது தான்.

அவளின் வீடு இந்த வீட்டை காட்டிலும் மிகச் சிறிது…. ஆனால் எந்நேரமும் பளபளவென மினுமினுக்கும்…. நொடிக்கொரு தடவை சுத்தம் செய்து விடுவாள், அவளை பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ அவளின் தங்கைகள் கூட அவளை போல் தான்…. எல்லாவற்றிலும் பெரும் துப்பரவு.

அடிக்கடி அலங்காரப் பொருட்கள் செய்து சுவரில் தொங்க விடுவார்கள்…. வசதி இல்லாவிட்டாலும் தகுதிக்கேற்ற நாகரீகத்துடன் தான் இருந்தனர்.

ஆனால் இவர்கள்? வெளியில் தான் அதிநவீன தோற்றமோ…. அவளையும் அறியாமல் முகத்தை சுழித்தாள். அன்று ஆரம்பித்தது அவளுக்கான கொடுமைகள்…. அதன் பின்பு நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கக்கூட முடியாத கருப்பான நாட்கள்.

‘அறியாததும் தெரியாததும் புரியாததும் நடப்பது தான் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு வழிவகுக்கும்’

பெரும் அறிஞர்களாலும் கூட புரிந்துகொள்ள முடியாத வாழ்க்கையின் நியதியை சாமான்யர்களால் எப்படி புரிந்திட முடியும்.

குரங்கின் கையில் பூமாலையை கொடுத்த கதையாய் ஆயிற்று அவளது வாழ்க்கை…

துக்கம் தொண்டையை அடைத்தது. இன்னமும் நான் உயிரோடு வாழ்ந்தாக வேண்டுமா!! யாருக்காக வாழ வேண்டும்!! எனக்காக யார் இருக்கிறார்கள்!! எனக்குத்தான் யாரும் இல்லையே!! கேள்வியுமே நானே பதிலும் நானே அந்த நிலையில் தான் அவளும்.

மனப்போக்கின் ஊடே கன்னத்தில் கசிந்த நீரை சுண்டி விட்டு நடையை எட்டிப் போட்டாள்.

இருளை பார்த்து அச்சப்பட்டாலும் மனம் அந்த நரகத்திலிருந்து தப்பிப்பதிலே முனைப்பாய் இருக்க பயத்தையும் மீறி துணிந்து வந்துவிட்டாள்.

நேரம் நடுநிசியை தொட்டிருந்தது.

வேகமாய் வளர்ந்து வரும் பொன்னேரி நகராட்சி தான் அவளின் பிறப்பிடம். சென்னையில் இருந்து முப்பத்தியேழு கிலோ மீட்டர் தொலைவினில் இருந்தது. அதன் வேகமான வளர்ச்சியில் பசுமையின் செழுமை மறைந்து ஸ்மார்ட் சிட்டியாக மாறிக் கொண்டிருந்தது.

சென்னை செல்லும் வழி நெடுகிலும் பெரிய பெரிய பள்ளிகளும் கல்லூரிகளும் தொழிற்சாலைகளும் என்று இருந்தது. வெளிச்சத்திற்கு பஞ்சமில்லாமல் LED பல்ப்களும் சீரியல் விளக்குகளும் பிரகாசமாய் எரிந்து கொண்டிருந்தது.

சேலை முந்தானை கொண்டு முகத்தினை மூடிக்கொண்டாள். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம்; அவர்கள் வந்துவிடுவார்களோ என்ற நடுக்கம்; மீண்டும் அந்த நரகத்திற்கே அழைத்து சென்று விடுவார்களோ என்ற கழிவிரக்கம்… நடையின் வேகத்தை கூட்டினாள்.

எவ்வளவு வேகமாய் நடந்த போதும் நினைவுகள் பின்னோக்கி செல்வதை தடுக்க முடியாமல் தடுமாறிப் போனவள் சுதாரிக்கும் முன்னமே எங்கிருந்தோ அதீத வேகத்தில் வந்த கார் அவளை இடித்துத் தள்ளி விட்டு நில்லாது சென்று விட்டது. எதிர்பாராத விபத்து.

சுயநினைவிழந்த நொடியிலும் கூட, ‘கணவன் எனும் பெயரில் நித்தம் தன்னை தீக்குளிக்கச் செய்யும் அவனின் முகத்தை இனி தன் வாழ்நாளிலே காணக்கூடாது எனும் வேண்டுதல் ஒன்றே அவள் மனதினில் உதிக்க’ கண் இமைகள் மெதுவாய் மூடிக் கொண்டது.


வாழ விரும்பாமல் தொலைதூரம் செல்ல விரும்பினேன்,
முடிவு மரணத்தின் வாயிலில் நான்!



உருகும்.........


[ ஒரு ஆர்வத்தில் முதல் பகுதியை பதிவு பண்ணிட்டேன்........ எப்பிடி இருக்குன்னு பார்த்திட்டு சொல்லுங்க...... நிறைகள் குறைகள் இருந்தால் தயங்காமல் சொல்லுங்கள்......... எழுத்துப்பிழைகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்......... உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.........]


ஃபாத்திமா SJவின் "உயிர் உருகும் காதல்" - கருத்துத் திரி

பாத்திமா SJ...
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் 02


நடுநிசி பொழுதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்று கொண்டிருந்தவர்கள் யாரும், இதை எதிர்பார்க்கவில்லை என்பதை அவர்களின் முகங்களே காட்டிக்கொடுத்தது.

பதட்டம்....... பதட்டம்........ பதட்டம்......... யாவரின் முகத்தினிலும் அதிர்ச்சியுடன் கூடிய அதே உணர்வு...........

நொடிப்பொழுதினில் கண்முன்னே நடந்த கோர விபத்து.........

அனைத்தும் ஒரு சில வினாடிப் பொழுதினிலே.........

நான்கு பக்கமும் பிரிந்த நாற்சந்து...... இரவு நேரம் என்பதால் வாகன ஓட்டுனர்கள் தங்கள் இஷ்டத்துக்கு வருவதும் போவதுமாய் ஹைவேயில் பறந்து கொண்டிருந்தனர்......... கவனிப்பார் யாருமில்லை என்பதால் வந்த அலட்சியபாவம்..........

ஒரு சிலரின் அலட்சியம் நொடிகளில் சூழ்நிலையை கூட மாற்றியமைத்துவிடும் என்பதை யார் அறிவர்........

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஓட்டம்......

அப்படியொரு ஓட்டத்தில் தான் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமில்லாத ஒருசிலர் இன்று வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டனர்........

வாழ்வில் நடக்கும் பல சம்பவங்களில் சில எதிர்பாரா நிகழ்வுகள் மாத்திரம் ஒருசிலரின் வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்துவிடுகிறது...........

பொன்னேரியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையை பிடிக்க அதிவேகமாய் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தான் சுந்தரம்...... லாரி டிரைவர்..... நைட் ஷிப்ட்..... சரக்குகளை சென்னைக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.....

நாளை தான் அவன் முறை..... இன்று வரவேண்டியவன் உடம்பு சரியில்லாமல் வராமல் போக சரக்கடித்துக் கொண்டு வீட்டில் இருந்த சுந்தரத்தை கூப்பிட்டு அனுப்பியிருந்தார் அவன் முதலாளி......

அவசரத்துக்கு வேறு யாரும் இல்லை என்ற சூழ்நிலையில் வரவேண்டிய கட்டாயம்....... சுந்தரம் குடித்திருக்கிறான் என்று தெரிந்தும் வேறுவழியில்லாமல் அவனை அனுப்பியிருந்தார்..... அவனாலும் அவரின் பேச்சை மறுக்கமுடியவில்லை...... ஒன்றரை மணி நேர பயணம் தானே போன வேகத்தில் வந்துவிடலாம் என்ற எண்ணம்.....

ஆளில்லா சாலை.... ஏறிய மப்பு.... இரவுநேர குளிர் காற்று.... சுகானுபாவத்தை கொடுக்க அவன் கைகளில் லாரி தாறுமாறாய் பறந்தது.

அதேவேளையில் நாற்சந்தின் இடது புறத்திலிருந்து அதீத வேகத்தில் வெளிநாட்டுக் கார் சாலையில் வழுக்கிக்கொண்டு விரைந்து வந்தது.

நண்பர்களுடன் பேச்சிலர் பார்ட்டி..... ஆண்கள் பெண்கள் என இருபாலரும் கலந்துகொண்டனர்....... கெட்டுச் சீரழிந்து கொண்டிருக்கும் கலாச்சாரக்கேடு..... அது பற்றிய கவலையில்லாமல் உள்ளே தள்ளிய வெளிநாட்டு சரக்கு..... ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் தான்..... ஏறிய போதை அதன் வேலையை காட்ட உடல் பரபரத்தது பெண் சுகம் தேடி..... பார்ட்டி கொடுத்த நண்பனை பார்த்து கண்சிமிட்ட இவனின் தேவையை புரிந்து கொண்ட நல்ல நண்பனுக்கு இவன் தேவையை தீர்க்கத்தான் வழியில்லாது போய்விட்டது..... அவனுக்கேத்த எந்த பெண்ணும் இல்லாது போக பரிதாபமாக விழித்தான்.....

சுரேனுக்கு அதற்குமேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை.... யாரென்றாலும் பரவாயில்லை என்ற நிலைமை..... நண்பனின் முகம் பார்த்தவன் பல்லைக் கடித்துக் கொண்டு காரில் ஏறி புறப்பட்டான்.

நேரம் செல்லச்செல்ல போதை தலைக்கேற அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை..... இருளில் மூழ்கியிருந்த சாலையோரம் வண்டியை நிறுத்தியவன் தலையை பிடித்துக்கொண்டு இறங்கினான்.

அவனின் அதிர்ஷ்டம் சிறுபாவையின் துரதிஷ்டம்..... அவன் கண்ணில் பட்டுத்தொலைத்தாள் பள்ளி செல்லும் சிறுமி ஒருத்தி.

நாளை காலை பரீட்சை.... படிக்கவேண்டும்.... தாய் இல்லை.... தந்தை மட்டுமே.... அவரும் வெளியே போய் வருகிறேன் என்றவர் இன்னும் வரவில்லை என்பதால் வாசலில் அமர்ந்து தந்தைக்காய் காத்திருந்தாள். ஓட்டு வீடு..... சாலையோரம் அமைந்திருந்தது.... கண்ணுக்கெட்டும் தூரம் வரை யாருமில்லை.......

பரபரக்கும் உடலையும் மனதையும் அடக்கும் வழி தெரியாது திமிறித் தவித்தவனின் காமப்பார்வையில் தட்டுப்பட்டாள் அச்சிறுமி.... சிறு பெண் என்ற பரிதாபம் கூட அவனுக்கு வரவில்லை.... வெறியில் இருந்தவனின் கண்கள் அவளை பார்த்ததும் பளபளத்தது. அதற்கு மேல் நொடியும் தாமதிக்கவில்லை.....

வெளி வாசலில் அமர்ந்து புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த சுகுணா கம்பத்தில் ஒளிர்ந்த மின்விளக்கின் ஒளியில் தன் முன் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்....

யார் என்றறியா ஆடவன்.... அறியாமையுடன் அவனை பார்த்தவள் கேள்வியாய் அவனை நோக்கினாள்.

“என்ன வேண்டும் அண்ணா.....”

அவளையே விரசமாய் பார்த்திருந்தவன் அதற்குமேல் பொறுக்க முடியாமல், “தண்ணீர் வேணும்....” என்க,

அதை உண்மையென்று நம்பியவள், “இருங்கண்ணா கொண்டாறன்.....” என்று வீட்டுக்குள் நுழைந்தாள். அவள் உள்ளே செல்வதை பார்த்து பின்னோடு தானும் நுழைந்தவன் கதவை தாள் போட்டான்.

மண்முட்டியில் தண்ணீர் எடுக்க வந்தவள் கதவு தாளிடும் ஓசையில் அதற்குள் தந்தை வந்துவிட்டாரோ என்று எட்டிப்பார்க்க அங்கு சிரிப்புடன் நின்றிருந்தான் அவன்....... அந்த ஆடவன்....

கையில் இருந்த தண்ணீர் கோப்பை ஆட்டம் கண்டது........ அவன் பார்வை புரியாவிட்டாலும் படித்தது....... பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்கள் புரியத்துவங்க ஏதோ விபரீதம் நடக்கபோகின்றது என்று மட்டுமே உணர்ந்து கொண்டாள்.

“எ....எதுக்...கு உள்...ளே வந்தீ....கண்ணா....” கண்ணில் நீர் சொரிந்தது...... பயப்பந்து உள்ளத்தை பந்தாடியது.......

குடி போதையில் புத்தி தடுமாறி உணர்வுக் குவியலில் சிக்கித்தவித்து மழுங்கிக் கொண்டிருந்தவனுக்கு அவளின் கலக்கம் புரியவேயில்லை போலும்......... பாய்ந்து விட்டான்....... இளங்குருத்தால் ஜீரணிக்க முடியவில்லை....... வலி...... வலி....... வலி.......... உயிர் போகும் வலி மட்டுமே........

வெறி பிடித்தவனின் நகக்கீறல்கள் மேனியை புண்ணாக்க அவன் பாய்ந்த இடங்கள் உயிர்வாதையை உண்டாக்க சில நிமிடங்கள் தாங்கிக் கொண்டவளின் மனமும் உடலும் அதற்குமேலும் தாக்குபிடிக்க முடியாமல் போனது தான் அந்தோ பரிதாபம்.............. மூர்ச்சையாகிப் போனவளின் மூச்சும் ஒரேடியாய் நின்று விட்டது......

சில மணித்துளிகளின் பின்னர் தான் சுரேனும் அதை உணர்ந்தான்..... உணர்ந்தது தான் உவப்பாய் இல்லை...... அவள் பேச்சு மூச்சற்று கிடக்க....... ஏறிய போதை சர்ரென இறங்க....... தலையை உலுக்கியவன் தான் செய்த காரியத்தை உணர்ந்து தலையில் தட்டிக்கொண்டு அவள் நாடித்துடிப்பை பரிசோதித்தான்...... அவள் உயிர்தான் எப்போதோ அவளிடமிருந்து பிரிந்து விட்டதே.....

அதற்குமேல் ஒரு நொடியும் தாமதிக்காமல் காரை கிளப்பி விட்டான்...........

ஒருமுறை தவறு செய்தால் அதை எண்ணி வெட்கப்படலாம்......... ஆனால் தவறு என்று தெரிந்தும் செய்பவன் அதனை பல முறை ருசி கண்டவன்........ தவறு செய்பவன் மனிதன்........ திரும்ப செய்பவன் மிருகம்...... அவனும் ஒரு மனித மிருகம் தான்......

இந்த கொடூர மிருகத்திற்கு கடவுள் என்ன தண்டனையை கொடுக்கப் போகின்றானோ........

அதே சமயம் மிதமான வேகத்தில் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது BMW கார்.

டிரைவர் காரை ஓட்ட, அதன் உள்ளே நடுத்தர வயது தம்பதியினர்..... இருவரின் முகமும் சோகத்தில் மூழ்கியிருந்தது..... ஜீரணிக்க முடியாத இழப்பு அவர்களை வாட்டி வதைத்தது.

கணவனின் தோள் சாய்ந்த பானுமதியின் கண்களில் கண்ணீர் கரை. நடந்து முடிந்ததை இப்போதும் அவரால் மறக்க முடியவில்லை... நெஞ்சுக்குள் அடைப்பது போன்ற உணர்வு...... அவர் விழுங்கிக் கொண்ட துக்கத்தின் தாக்கமோ என்னவோ.....

அவரின் கணவர் வெங்கடேஷும் மனைவியின் அளவுக்கு வலியை அனுபவித்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தார்....

பெண் துக்கத்தை கண்ணீரில் வெளிப்படுத்துகிறாள்..... அதை அவ்வளவு சுலபத்தில் ஆண்களால் செய்துவிட முடியாது............ ஆண்களுக்கான சாபக்கேடு அது..............

(அழுகை என்பது நல்ல உரையாடலை விட பலமடங்கு சிறந்தது’ – அது இருபாலினருக்கும் பொதுவானது)

வேங்கடேஷால் மனைவியை சமாதானபடுத்த முடியவில்லை.... கொஞ்ச நாளாகத் தான் சற்று தேறி வந்திருந்தார், அது கடவுளுக்கு பொறுக்கவில்லை போலும்........ மறக்க நினைப்பவற்றை நினைவுறுத்தி பேதலிக்கச் செய்துவிட்டார்.

“பானு அழாத..... எல்லாம் விதிப்படி நடக்கும்போது நம்மால் என்ன செய்ய முடியும்.... இதான் வாழ்க்கை அததான் நாம வாழ்ந்தாகனும்.....”

“whatever happened, it happened well.... whatever is happening, it is happening well.... whatever will happen, it will also happen well..... இது நீ அடிக்கடி சொல்றது...... அதே தான் இப்போ நானும் சொல்றேன் மனச போட்டு குழப்பிக்காம கொஞ்ச நேரம் தூங்கு.....”

தோளை தட்டிக்கொடுக்க; கணவரின் வார்த்தையில் ஆறுதல்பட்ட உள்ளம் துக்கம் குறைந்து துயில் கொண்டது.

தூங்கும் மனைவியை வாஞ்சையுடன் பார்த்தவரின் நெஞ்சில் பாரம் ஏறிக் கொண்டது.

மருமகனுக்கு அழைத்தார். தங்களுக்காக காத்திருப்பான் என்ற நினைவில்......

இவர் அழைப்பதற்காகவே காத்திருந்தவனும் முதல் ரிங்கிலே ஏற்றுவிட்டான்...

“மாமா ஒன்னும் பிரச்சினையில்லையே.... அத்த.... அத்தைக்கு ஒன்னுயில்லையே..... என்ன பண்றாங்க....” பதட்டத்துடன் அபி கேட்க,

“நீ எதுக்கு டென்ஷன் ஆகுற அபி..... இத்தன நேரம் அழுதிட்டு இருந்தா இப்பத்தான் சமாதானப்படுத்தி தூங்க வச்சேன்.... இன்னும் ஒன் ஹவர்ல வந்திடுவோம்.... நீ வேணா வீட்டுக்கு போய்க்கோ நான் பார்த்துக்கிறேன்...”

“மாமா எனக்கு எந்த கஷ்டமும் இல்ல.....” அவசரமாய் இடைமறித்தவன்,, “நீங்க வர வரைக்கும் நா.....ன் அம்மு ரூம்ல கொஞ்ச நேரம்.....” முழுதாய் வார்த்தைகளை முடிக்காமல் தடுமாறினான்.

“சரிப்பா.....” என்று அழைப்பை துண்டித்து சீட்டில் தலை சாய்த்துக் கொண்ட வெங்கடேஷுக்கு மருமகனின் பேச்சில் கண்கள் கலங்கிப் போனது.

‘இனியும் இதை தொடர விடக்கூடாது’ என்று மனதில் எண்ணிக் கொண்டார்.

இன்பமும் துன்பமும் வருவது தானே வாழ்க்கை........... முதற்படி இன்பம் என்றால் அடுத்து துன்பம்....... முதற்கட்டம் துன்பம் என்றால் அடுத்து இன்பம்....... வாழ்க்கையின் நியதியே அது தான்....

மூடிய விழிகளுக்குள் பல பிம்பங்கள் நிழற்படமாய் ஓடி மறைய விரக்தி நெஞ்சத்தை பலமாய் தாக்கியது..... சந்தோஷத்தில் உயரப் பறந்த பறவையின் சிறகை பிய்த்திழுத்து கீழே வீழ்த்திய கதையாகிவிட்டது அவர்களின் வாழ்க்கை.

அதே சமயம் கண்கள் கலங்க தன் வாழ்க்கையை எண்ணி வாடிப்போய் தளர்ந்த கொடியாய் உணவுண்ணாமல் போனதில் வாட்டமுற்று தட்டுத்தடுமாறி வந்து கொண்டிருந்தாள் மதுரா...

நினைவுகளின் தாக்கம் மறக்க நினைத்தும் முடியாமல் சுழல் போன்று பின்னோக்கி ஓடியது.

இழுத்துப் பிடித்து அணைபோட்டுக் கொண்டாள்... ஒடிந்து விழும் போன்ற தேகம் மெலிதாய் நடுங்கியது.... கைகால்கள் ஆட்டங்காண தலை சுழன்றது. வயிற்றுப் பசியின் ஓலமும் நள்ளிரவு நேர குளிர்ந்த காற்றும் அவளை இம்சித்தது......

அசையக்கூட முடியவில்லை அவளால்...... எங்கே நின்றால் அவர்கள் தேடி வந்துவிடுவார்களோ என்ற பயம் உந்தித்தள்ள தட்டுத்தடுமாறி நடையை எட்டிப் போட்டாள்....

குடி போதையில் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த சுந்தரம் ஒருபுறம்........... சிறுபெண்ணை கற்பழித்து கொன்ற சுரேன் இன்னொருபுறம்............ நெருங்கிய உறவை பறிகொடுத்த வெங்கடேஷ் பானுமதி தம்பதியினர் ஒருபுறம்............. வாழ்வை துறந்து நிம்மதியை நாடிச்செல்லும் மதுரா இன்னொருபுறம்...........

வெவ்வேறு மனநிலையில் இருந்த இவர்கள் நால்வரும் ஒருபுள்ளியில் சந்தித்துக் கொண்டனர்...... நாற்சந்தின் நான்கு புறமும் பிரிந்து சென்ற சாலையின் மையப்புள்ளியான சாலை வட்டத்தில்.(roundabout)

நாற்சந்தின் வலதுபுறமிருந்து லாரி வேகமாய் வந்து கொண்டிருக்க........ இடதுபுறத்திலிருந்து வெளிநாட்டுக் கார் அசுர வேகத்தில் வந்துகொண்டிருந்தது.........

அசுர வேகத்தில் வந்த இரண்டு வாகனங்களும் கட்டுப்பாடின்றி சென்னை செல்லும் பாதையை ஒருமித்த நேரத்தில் தொட முயல........... எதிர்திசையில் கார் வருவதை அறியாத லாரிக்காரனும்....... லாரி வருவதை அறியாத கார்க்காரனும் பிரேக்கை அழுத்த முயன்றும் வந்த வேகத்தில் வாகனத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போராடின.........

இருவாகனங்களும் அதன் வேகத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியாது போனதில் ஒன்றை ஒன்று அதி வேகத்தில் மோத தீப்பொறிகள் மேலெழ லாரி வந்த வேகத்தில் காரை தூக்கியெறிய காரும் அதன் கட்டுப்பாட்டை இழந்து தரையில் உரசிக்கொண்டே சென்று எதிலோ மோதி நின்ற............. சில வினாடிகளில் டமார் என்ற பெரும் சத்தத்துடன் கார் வெடித்துச் சிதறியது........ தீக்குழம்பு மேலெழும்பியது......

எதிர்பாராத இந்த கோர விபத்தில் அநியாயமாய் சிக்கிக்கொண்ட அப்பாவிப் பெண்ணின் உயிர் கொஞ்சம் கொஞ்சமாய் காலனிடம் அடைக்கலமாகிக் கொண்டிருந்தது.................

........................................... பழைய நினைவுகளின் தாக்கத்திலும் அகோரப் பசியின் மயக்கத்திலும் உள்ளம் நடுங்க......... கால்கள் தடுமாற......... கண்ணில் நிறைந்த நீர்த்துளிகளால் பாதை மங்கலாய் தெரிய புடவை சிக்கி தடுமாறி விழப்போனவளின் மீது............ லாரி தன் இயக்கத்தை நிறுத்த முடியாமல் தடுமாறியதிலும் மோதிய வேகத்திலும் காரை மிகையான வேகத்தில் முன்னோக்கி தள்ளிக்கொண்டு வந்து குலுங்கி நிற்க........ கார் வந்த வேகத்தில் சாலையின் ஓரமாய் நின்ற அவளின் மீது மோதி சடுதியில் தூக்கி வீசியிருந்தது...............

அவளை வீசியெறிந்த கார் தடம்புரண்டு தரையில் உரசிக்கொண்டே மின்கம்பத்தில் மோதிக்கொள்ள......... மயான அமைதியில் இருந்த சாலையில் பெரும் சத்தத்துடன் கார் வெடித்துச் சிதறியது.

காலத்தின் கோலங்கள் செய்யும் ஜாலங்கள் மிக அதிகம் தான்........

அது எப்படியெல்லாம் மனித வாழ்க்கையில் விளையாடுகின்றது.............

சென்னையில் இருந்த சுரேன் நண்பனிற்காக பொன்னேரி வந்து அங்கு சரக்கடித்ததில் பெண் சுகம் தேடி தடுமாறி இருந்த வேளையில் சிறு பெண் கண்ணில் தட்டுப்பட அவளை விட மனமில்லாமல் ஈவு இரக்கமின்றி சூறையாடியவன் அவள் உயிர் பிரிந்ததை அறிந்து காரை வேகமாய் பறக்கவிட.................. அந்த இடத்தில் தான் கடவுள் தன் விளையாட்டை நிகழ்த்தி இருந்தான்.

லாரி டிரைவர் சுந்தரத்தின் மூலமாய்....... சுந்தரம் வேறு யாருமில்லை சற்று முன் சுரேன் சூறையாடிக் கொன்ற சுகுணாவின் தந்தை..........

மகளை அவன் கொன்றுவிட்டான் என்று அறியாமலே அவனை தன் கரத்தால் கொன்றுவிட்டான் சுந்தரம்......... இதுவும் விதியின் திருவிளையாடல்களில் ஒன்றுதான்.

மனைவியின் தலையை வருடி பின்னால் தலைசாய்த்து அமர்ந்திருந்த வெங்கடேஷ் கார் குலுங்கி நின்றதில் பதறி கண்விழிக்க; வியர்வையில் உடல் தொப்பலாய் நனைந்திருக்க நெஞ்சுக்கூடு அச்சத்தில் வேகமாய் ஏறியிறங்க மேனியில் நடுக்கம் பரவி முகம் வெளுக்க செயலிழந்து போய் அமர்ந்திருந்தான் அவர்களின் டிரைவர்.

அவனின் கலங்கிய தோற்றத்தை கண்டு தோளை பிடித்து உலுக்கிய வெங்கடேஷ்; அவனிடம் அசைவின்றிப் போகவும் “மோகன்” சப்தமாய் அழைத்தார்.

அதில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவனின் பார்வை அவரின் முகத்தினில் ஒருகணம் பதிந்து மறுகணம் முன்னோக்கி மீண்டது.

அவன் பார்வை சென்ற இடத்தை புரியாமல் ஏறிட்டவர்; முன் கண்ணாடியில் படிந்திருந்த ரத்தத்தை கண்டு அதிர்ந்து விழித்தார்.

அதற்கும்மேல் கண நேரமும் தாமதிக்காமல் மனைவியை பிடித்து உலுக்கி, காரிலிருந்து இறங்க பாதியில் வந்த உறக்கம் பாதியிலே முடிவுக்கு வர பதறியடித்து கண் விழித்த பானுமதியின் கண்களில் பட்டதென்னவோ முழுதாய் ரத்தம் தோய்ந்த முன் கண்ணாடி தான்.

அதிர்ச்சியில் பிரம்மை பிடித்தாற் போன்று அமர்ந்திருந்தவரின் மனக்கண்ணில் இரத்தம் தோய்ந்த பிம்பம் தோன்றி மறைந்த்து.

“ஒருநிமிஷம் முன்னாடி வந்திருந்திருந்தாலும் காப்பாத்தி இருக்கலாம்” என்ற வார்த்தைகள் தொடர்ச்சியாய் செவியினில் ஒலித்து நெஞ்சை பதறச்செய்ய நடுங்கும் கரம் கொண்டு கார் கதவை திறந்தவர் மனம் முழுதும் ‘எதுவும் ஆகியிருக்க கூடாது’ என்ற எண்ணம் தான் ஓங்கியிருந்தது.

வலுவிழந்த கால்கள் வேரறுந்த மரமாய் நிலைப்பாடில்லாமல் சரிய கார் கதவை கொண்டு தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

நொடியில் அவ்விடம் பரபரப்பாய் உருமாற...... சாலையில் வந்த ஒன்றிரண்டு வாகனங்களும் ஆங்காங்கே நின்றிருந்த ஒருசிலரும் பதறிப்போய் ஒன்று சேர்ந்ததில் கூட்டம் கூடியது......... ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீசுக்கும் தகவல் பறக்க ஒன்றிரண்டு நல்ல உள்ளங்கள் ஆம்புலன்சுக்கு அழைத்து விபரம் கூற......... அனைத்துமே சடுதியில் நிகழ்ந்தது.

ஒருவழியாய் மனதை கட்டுக்குள் கொண்டு வந்த பானுமதி கூட்டத்தை ஒதுக்கி முன்னேற; அங்கு ரத்த வெள்ளத்தில் சுயநினைவிழந்து கிடந்தாள் பெண்ணொருத்தி. பார்த்த கண்கள் பார்த்தபடியே நிலைகுத்தி நின்றது.

வியர்வை துளிகள் தொப்பலாய் உடலை நனைத்தது. வதனம் வெளிப்படையாகவே நடுக்கமுற........ அடிபட்டுக் கிடந்த பெண்ணின் அருகில் மண்டியிட்டு அமர்ந்திருந்த கணவனின் முதுகை பயத்துடன் வெறித்துப் பார்த்தவரின் மனம் கலங்கித்தான் போயிற்று.

ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் முகத்தை தன் புறமாய் திருப்பிய வெங்கடேஷ்........... ரத்தம் தோய்ந்த பாவையின் முகம் பார்த்து செயலிழந்து போனார். மார்புக்குள் போர் முரசு கொட்டியது.......... அதற்கு எதிர்மாறாய் முகம் ஆனந்தத்தில் விம்மியது........... எப்படி........ எப்படி சாத்தியமாயிற்று......... விடையறியா வினா நெஞ்சத்தில் எழுந்தது.

அதீதமான உணர்ச்சிப்பெருக்கிலும் கண் பார்த்ததை உள்வாங்கிக்கொள்ள முடியாது போனதிலும் உடல் தன்வசமின்றி தள்ளாடியது......

கணவனின் முதுகையே வெறித்திருந்த பானுமதி, வெளிப்படையான அதன் நடுக்கத்தை கண்டு அதிர்ந்து போனார்.

‘என்னவானது... ஒருவேளை உயிருக்கு ஏதாவது......’ அந்த வகையில் எண்ணக்கூட பிடிக்காதவராய் இருந்தபோதிலும்........... ‘எதுவும் ஆகியிருக்கக்கூடாது’ மனம் வேண்டியது..... கூடவே கரங்கள் அவர் தோள் தொட்டன.

மனைவியின் தொடுகையை உணர்ந்து திரும்பியவரின் கண்களில் கண்ணீர் அணையுடைத்து தரை தொட................ அதற்கு நேர்மாறாய் கரைபடிந்த கண்கள் ரெண்டும் உவகையில் பிரகாசமாய் ஜொலித்தன.

கம்பீரத்தின் மருவுருவமாய் திகழும் கணவனின் விழிகளில் நீரை கண்டது சில மாதங்களுக்கு முன்பு தான்...... ஜீரணிக்கவே முடியாத இழப்பின் வலியில் கண்ணீர் விட்டவர் அதன் பின்பு அழுது அவர் பார்க்கவே இல்லை.... இப்போது அழுகிறார் எனில் என்னவானது....

தான் ஒரு மருத்துவர் என்பதை மறந்து.............. கணவர் விடும் கண்ணீரின் கதை என்னவோவென சமைந்து நின்றார்.

உள்ளத்தில் எழுந்த ஆயிரம் ஓலங்களின் ஒலி அவரை தட்டுத்தடுமாற செய்தது.

இன்பத்தால் வாழ்வை வண்ணமயமாக்கிட எண்ணினேன்,
முடிவு துன்பமே வாழ்க்கையாகிப் போனது!



உருகும்...................


[இரண்டாம் அத்தியாயத்தை பதிவு பண்ணிட்டேன்....... எப்பிடி இருக்கின்னு பார்த்திட்டு சொல்லுங்கப்பா.... முதல் பகுதிக்கு நீங்கெல்லாம் கொடுத்த ஆதரவையும் கருத்தையும் பார்த்து மனம் மகிழ்ந்து விட்டேன்...... ரொம்ப சந்தோஷமா இருக்கு....... இதுக்கும் உங்களோட விமர்சனங்கள், கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.......]

"உயிர் உருகும் காதல்" கருத்து திரி
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் 03



உள்ளத்தில் எழுந்த ஆயிரம் ஓலங்களும் சரீரத்தை பந்தாடி நிலைகுலையச் செய்ய, தறிகெட்டு ஓடும் மனம் எதையெல்லாமோ நினைத்து கலங்க, துவண்டு விழும் வாடிய கொடிபோல் கணவனை பார்த்திருந்தவரின் பார்வை எங்கனம் அப்பெண்ணை நோக்கி நகர்ந்ததோ,, ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் ஒரேடியாய் தாக்கியது போல் உறை நிலைக்குச் சென்றார்......

மனதில் எழுந்த பல்வேறு எண்ணங்களின் தாக்கம் தொடர் சங்கிலியாய் நீண்டுகொண்டே செல்ல கண்ணீர் மாலை தொடுத்தது,,, கட்டுக்கோப்பான மேனி கண்ணால் கண்டதை நம்ப முடியாமல் வெலவெலத்து நடுங்கியது.

‘உண்மையா......... எப்படி சாத்தியம்....... நடந்தது அனைத்தும் உண்மை என்றால்........ இது எப்படி முடியும்....... இல்லை என் மனதின் கனவா......... ‘கடவுளே இது கனவாக இருக்கக்கூடாதே........’ மனதின் பல்லாயிரம் எண்ணங்களினூடே,, துக்கப்பட்டு துயரில் மூழ்கிப் போனதில் காய்ந்துபோன சருகாய் ஓர் மூலையில் அடிபட்டு மக்கி மழுங்கிப்போய் கிடந்த பாசம், கண்ணால் கண்டதை நம்ப முடியாமலும், அது உண்மையாக இருக்க வேண்டும் எனும் வேண்டுதலுடன் கடவுளிடம் இறைஞ்சியது.

மனைவியின் முகம் பார்த்த வெங்கடேஷ், அதில் நம்பிக்கையும் நிராசையும் போட்டி போட்டுக்கொண்டு மிளிரவும் அவளும் கண்முன்னே இருக்கும் உருவத்தை கண்டுவிட்டாள் என்பது புத்தியில் உறைக்க,, பரவசத்துடன் அவளை பார்த்தார்.

முகத்தை ஊசியாய் துளைத்த கணவனின் பரவசம் மிகுந்த பார்வையில்,, உதடுகள் பிதுங்க...... ‘உண்மையா’ எனும் பாவனையில் ஆசையுடன் தலையசைத்தவளை,, காண உள்ளம் மெழுகாய் உருகித்தான் போனது.

மௌனமாய் கண்களை மூடித்திறந்தார். பல நேரங்களில் மௌனம் சிறந்த மொழியாகத்தான் மாறிவிடுகிறது.............. இங்கும் அதுவே நிகழ ஒட்டுமொத்த சக்தியும் வடிய தரையில் மண்டியிட்டு அமர்ந்தவர்,,, நடுவீதி என்றும் பாராமல் கணவனின் மார்பில் முகம் புதைத்து அழுது கரைந்தார்.

வெங்கடேஷின் கரங்கள் மனைவியை ஆதரவாய் வருடிக்கொடுக்க,,, அவருக்குமே அழவேண்டும் போல்............... வாய்விட்டு துன்பம் தீருமட்டும் அழவேண்டும் போல் தோன்றியது.

அதற்குள் ஆம்புலன்சும் போலீஸ் ஜீப்புகளும் வந்திருக்க................... குடிபோதையில் அரை உயிரில் இருந்த சுந்தரத்தை அள்ளிபோட்டுக் கொண்டு ஒருவாகனம் பறக்க,, இன்னொன்று மதுராவை ஏற்ற காத்திருந்தது.................

மனைவியின் அழுகை குறையும் வழியை காணாது போனதில்..................... இதற்குமேலும் தாமதிக்க கூடாதென புலன்கள் விழித்துக்கொள்ள............... மனைவியை விலக்கி நிறுத்தினார்.

வந்திருக்கும் ஆம்புலன்ஸ் ஜிஹெச்iற்கு சொந்தமானது என்பதால் அதை புறக்கணித்தவர்.................... இப்போதைக்கு சென்னைக்கு அழைத்துச் செல்ல நேரம் போதாது, ப்ளீடிங் அதிகமாகுவது கண்டு,,, மனைவியை தன்னிலைக்கு இட்டுவந்தவர் நிலையின் தீவிரத்தை அவருக்கு புரியவைக்க,,,, அங்கு பாசம் மறந்து கடமை குடிகொண்டது........................

எப்போதும் காரினுள் முதலுதவி பெட்டி இருப்பதால் தன் வயதையும் மறந்து ஓடிச்சென்று பெட்டியை எடுத்து வந்தவர்..................... கையை எக்ஸ் வடிவத்தில் ஒன்றன் மீது ஒன்று வைத்து இதயப்பகுதியை அழுத்திக் கொடுத்தார்....... மூச்சுகாற்று அவசியம் என்பதால் அவசர நேரத்தில் வழங்கும் முதலுதவியை வழங்கி தலையில் ஒரு கட்டுப்போட்டார்.............

வெள்ளை துணிக்கட்டையும் மீறி ரத்தம் குபுக்கென வெளியேறுவது கண்டு.......................மருத்துவரின் கடமை மறந்து பாசம் பொங்கிவழிய உள்ளம் அடித்துக்கொண்டது......

அத்தனை இக்கட்டிலும் நிதானம் குறையாமல் பொன்னேரியில் இருக்கும் பிரபல்யமான மருத்துவமனைக்கு அழைத்து விபரத்தை கூறிய வெங்கடேஷ்.................... ரோந்தில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகளிடம் சுருக்கமாய் தங்கள் நிலையை விளக்கி.......................... ‘கமிஷனரிடம் நான் சொல்கிறேன்’ அறுதியாய் கூறியவர்................ நொடி நிமிடங்களும் தாமதிக்கவில்லை..........

நேரம் குறையக்குறைய என்ன நடக்கும் என்பது அவர்கள் இருவரும் அறிந்த ஒன்றே என்பதால்.............. திக்பிரம்மை பிடித்தாற்போன்றிருந்த டிரைவரை பஸ்ஸில் ஊருக்கு போகுமாறு பணித்துவிட்டு தானே காரை அதிவேகத்தில் செலுத்தினார்...........

வேகம்............. வேகம்.............. அந்தவயதிலும் தடுமாற்றமே இல்லாமல் வண்டியை அவர் ஓட்டிய விதத்திலே தெரிந்தது................. கடந்து செல்லும் ஒவ்வொரு நொடிகளிலும் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்று.

வெங்கடேஷ் புறப்பட்டு சென்றதும் மேலிடத்தில் தகவல் தெரிவித்த போலீஸ் அதிகாரி,, விபத்து நடந்த ஸ்போட்டில் எரிந்து சாம்பலான வாகனம் யாருடையது என கண்டறியும் பணியில்............ கன்ட்ரோல் ரூமில் இருக்கும் cctv புட்டேஜை சரிபார்த்து......... காரின் எண்ணைக்கொண்டு வண்டி யாருடையது என தகவல் அறிந்து........ அவர்களுக்கு அழைத்து நடந்ததை கூறி......... அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் லாரி டிரைவரின் முதலாளியை தொடர்பு கொண்டு அவருக்கு விஷயத்தை தெரியப்படுத்தி என தங்களது கடமைகளை சரிவர செய்து முடித்தவர்கள்................ கூட்டத்தை கலைத்து பாதுகாப்பிற்கு ரெண்டு கான்ஸ்டபிளை பணியில் அமர்த்திவிட்டு இடத்தை காலி செய்துவிட்டனர்............

எத்தனை பெரிய விபத்து நடந்த போதிலும் ஒருகால இடைவெளி வரை தான் அவை பார்க்கப்படும்............. பேசப்படும்............. அதன் பின் அவரவர் கவனிக்க வேண்டிய எத்தனையோ வேலைகளில் இவையனைத்தும் பின்சென்று ஆயிரத்தில் ஒன்றாய் மறைந்து போய்விடும்.........

பானுமதி வெங்கடேஷ் தம்பதியினருக்கு இது ஆயிரத்தில் ஒன்றல்ல....... அவர்கள் வாழ்க்கையே இதில் தான் அடங்கியிருக்கிறது............. அப்படித்தான் நினைத்தார்கள். சில காலங்களாக ஏனோதானோவென வாழ்ந்த அவர்களின் வாழ்க்கைக்கு வரப்பிரசாதமாய் வந்து சேர்ந்துள்ளது இன்றைய சம்பவம்........

மருத்துவமனை அருகில் தான் இருப்பதால் அரைமணிநேர காலதாமதிப்பை கால்மணிநேரத்தில் கடந்து இருந்தார் வெங்கடேஷ்...
பொன்னேரியின் பிரபல்யமான மருத்துவமனையின் முன்பு BMW வந்த வேகத்தில் தரையில் சீறிக்கொண்டு ‘கிரீச்’சிடும் ஓசையுடன் குலுங்கி நிற்க, ஸ்ட்ரெச்சர் இவர்களுக்காக காத்திருந்தது.....


பின் இருக்கையில் மதுராவின் தலையை மடியினில் தாங்கி கண்ணீர் கறைபடிந்த முகத்துடன் இருந்த பானுமதி காரிலிருந்து வேகத்துடன் இறங்க.......... மதுராவை ஸ்ட்ரெச்சரில் அள்ளிபோட்டுக்கொண்டு ICU நோக்கி விரைந்தனர்.

இந்த நேரத்தில் வேறு எந்த கேஸும் இல்லாததால் இரவு நேர பணியில் இருந்த மருத்துவர்களும் வெங்கடேஷின் அழைப்பிற்காக வேண்டி தூக்கத்தை தொலைத்து கடமைக்காக விரைந்து வந்திருந்த மருத்துவமனையின் டீனும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் நுழைய சிகிச்சை ஆரம்பித்தது.

நடுநடுவே செவிலியர்கள் வெளிவருவதும் போவதுமாய் இருந்தனர்....... தலையில் பலமாய் அடிபட்டதில் கூடுதல் இரத்தம் வெளியேறியிருக்க குருதி ஒருபக்கம் ஏறிக்கொண்டிருந்தது. இதயம் பலவீனமாகயிருக்க அதை பரிசோதித்தவர்கள் ECG [இதயத்துடிப்பின் பதிவு] , EEG [எலக்ட்ரோஎன்செஃபலோகிராஃபி] , MRI scan [காந்த அதிர்வு அலை வரைபு] , CT scan [வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி] அனைத்தையும் எடுத்தனர்.

வெங்கடேஷையும் உடன் அழைத்திருந்தார்கள்....... பெயர் பெற்ற நரம்பியல் நிபுணர்........... தற்போது அவரிருந்த நிலையில் கத்தியை கூட அவரால் சரிவர பற்ற முடியவில்லை........... அவர் வந்த வேகத்துக்கும் இப்போதைய ஓய்ந்த தோற்றத்திற்கும் சற்றும் சம்பந்தம் இல்லை...... இத்தனைநேரமாய் இருந்த பொறுமை..... வேகம்..... விவேகம்....... இப்போது அவரிடமிருந்து விடைபெற்றிருந்தது.

‘அவளுக்கு ஒன்றுமாகிவிடக்கூடாது’ மனதுக்குள்ளேயே பல போராட்டங்கள் நிகழ்ந்தது.

ரிசப்சனில் பணம் கட்ட வேண்டும் என்பதால் எழுந்து சென்றவர் அவர்கள் கொடுத்த பாfர்மை கையில் வாங்கினார்.

அவளின் பெயர்.... ஊர்.... பெற்றோர் யார் என எதுவும் தெரியாது...... இருந்தும் கண்டெடுத்த பொக்கிஷத்தை கைவிட முடியாமல் பெயர் என அச்சிடப்பட்ட இடத்தில் கைகள் நடுங்க..... இதயம் ஏகத்துக்கும் தாறுமாறாய் துடிக்க.... தலைவழியே ஒற்றை கோடாய் வியர்வைத்துளி முகம் நனைக்க..... மனசாட்சியின் கூற்றை புறக்கணித்து ‘ஆகர்ஷா’ என எழுதினார். மனசாட்சி குத்திக்கிழித்த போதும் பின்வாங்க முயற்சிக்கவில்லை.

முழுவதுமாக இட்டு நிரப்பி தந்தை எனும் இடத்தில் தன் கையெழுத்தை அழுத்தமாய் பதிந்து பணத்தை கட்டியவர் கனத்த மனதுடன் மனைவியின் அருகில் அமர்ந்துகொண்டார்.

கணவனை நிமிர்ந்து பார்த்த பானுமதி சொல்லவே தேவையில்லை....... முன்பே கலங்கிப்போய் ஒடுங்கியவர் இப்போது இன்னும் அதிகமாய் ஒடுங்கிப்போய்விட்டார்.

‘ஒருநிமிஷம் முன்னாடி வந்திருந்திருந்தாலும் காப்பாத்தி இருக்கலாம்’ திரும்பத் திரும்ப அவர் மண்டைக்குள் ஒலித்த வார்த்தைகள் மூளையை மழுங்கிடச் செய்தது….. ‘பாரதூரமாய் ஏதும் ஆகிடக்கூடாது’ நெஞ்சம் கலவையான மனநிலையில் விம்மியது……
இருவரும் பேர்பெற்ற மருத்துவர்களாக இருந்தபோதிலும் காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்து அறைவாசலை பார்த்திருந்த ஒவ்வொரு கணமும் இதயம் அதிகவேகமாய் துடித்து, படபடப்பை கிளப்பிக்கொண்டிருந்தது… இதயம் வாய்வழியாக வெளிவந்துவிடுமோ என அஞ்சி நடுங்கும்படியாக இருந்தது அக்கணங்கள்…


இருவரும் பெரும் படபடப்புடனும் உள்ளுக்குள் நடக்கும் போராட்டத்துடனும் மருத்துவருக்காக காத்திருக்க...... இவர்களுக்காக காத்திருந்த அபி அதாவது பானுமதியின் தமையனின் புதல்வன், வெங்கடேஷிற்கு அழைத்திருந்தான்.

அம்முவின் அறையில் அவளின் நிழலுருவத்தை கண்டு வேதனையில் துவண்டுபோய் மானசீகமாய் மனதுக்குள் மன்றாடியவன் கண்களில் நீர் தளும்பியது. மறக்க முயன்றாலும் இன்னமும் அவனால் முழுமையாக மறக்கமுடியவில்லை என்பது தான் உண்மை.

அறை முழுசும் இருந்த ஆளுயர புகைப்படங்களை கண்களால் பருகியவன் தொண்டையில் அடைத்துக்கொண்ட துக்கத்தை கண்ணீருடன் சேர்த்து விழுங்கிக் கொண்டு, புகைபடத்தில் கன்னம் குழிய சிரித்துக் கொண்டிருந்தவளின் கன்னத்தை வலிக்குமோவென இதமாய் வருடி இதழ் கொண்டு ஒற்றியெடுத்தான்.

‘அடுத்துவொரு ஜென்மம்னு இருந்தா நீயும் நானும் சந்தோஷமா வாழனும் அம்மு.. உனக்காக இந்த அபி எப்போவும் காத்திட்டு இருப்பான்……’ மனம் துயரத்துடன் முணுமுணுத்துக் கொண்டது.

அம்முவின் நினைவுகளில் சுகமாய் மூழ்கி தன்னை மறந்திருந்தவன் அப்போது தான் தன் மாமா அத்தையின் நினைவு எழ மாமாவுக்கு அழைத்தான்.

மனவுளைச்சலில் தனக்குள் உழன்று கொண்டிருந்த வெங்கடேஷ் மருமகனின் அழைப்பில் யோசனைகளை புறந்தள்ளி அழைப்பை ஏற்றார்.

“மாமா, என்னாச்சு ஒன் ஹவர்ல வந்திடுவோம்னிங்க இன்னும் காணோம் ஒன்னும் ப்ரோப்லம் இல்லையே…………. எவ்ரிiதிங் இஸ் ஆல்ரைட்…… முதல்ல இப்போ நீங்க எங்க இருக்கீங்க………” என்றான் படபடப்புடன்,

“பொன்னேரி ஹாஸ்பிடல்ல இருக்கோம்……”

“வாhட்!!!!!! ஏன்…….. என்னாச்சு………. அத்தைக்கு ஒன்னுயில்லையே………. மாமா, வைh ஆர் யு குவைiட்?... சேi சம்திங்…..”

மருத்துவமனையில் என்றதும் அவனின் பதட்டம் அதிகரித்திருந்தது.

அதற்குள் தீவிர சிகிச்சை அறையினுள் இருந்து மருத்துவர் வெளியில் வர,

“அபி ஐiல் கால் யு லேட்டர்……” என்று அழைப்பை துண்டிக்க முயலவும் மருத்துவர் இவர்களை நெருங்கவும் சரியாய் இருக்க,

அழைப்பை துண்டிக்க மறந்து பரபரப்புடன் அவரை பார்க்க, அவருக்கு குறையாத பரபரப்புடன் பானுமதியும் நின்றிருந்தார்..

இருவரையும் தன் அறைக்கு அழைத்துச் சென்றவர்,

“ஹெவி ப்ளட் லாஸ்…… ஹார்ட் ரொம்பவே வீக்கா இருக்கு அண்ட் ஷி ரிfபிuசிஸ் டு கோ ஆப்ரேeட்…… பின்தலையில் பலமாக அடிபட்டதில் ஷி இஸ் இன் கோமா……… eஅன்போர்ச்சினேட்லி ப்ரைன் டெத் ஆகவும் சான்செஸ் இருக்கு…….. ‘வீ ’வ் ட்ரீடேdட் அaஸ் மச் அaஸ் வீ கேன்’ எங்களால் முடிந்தளவு சிகிச்சை அளித்திருக்கிறோம்…….”

ஏற்கனவே ஒன்றை இழந்து தவிப்பது போதாதென,,, கடவுள் இதையும் கண்ணில் காட்டி பறிக்க முயற்சிப்பது கண்டு,, ஒரேசமயத்தில் ஆயிரம் குத்தீட்டிகளை மார்பினுள் சொருகி, குடைந்தது போல் நெஞ்சுக்குள் சுருக்கென வலியூடுருவி ஊசியாய் தைத்தது.

மறுபக்கத்தில் இருந்த அபிக்கு இவர்களின் பேச்சு தெள்ளத்தெளிவாய் கேட்க, செயழிழந்து போனவனின் உடல் தளர்ந்துபோனது......... அந்தரத்தில் மிதக்கும் உணர்வு....

‘அத்தைக்கா!!! நிச்சயம் என் அத்தைக்கு எதுவும் ஆகியிருக்காது.... ஆகவும் நான் விடமாட்டேன்……… நிச்சயம் விடமாட்டேன்’ கலங்கிப் போனவன் இறுகிப் போய் உறுதிமொழியெடுத்துக் கொண்டான்.

இப்போது தான் பேரிழப்பிலிருந்து தேறி வந்திருந்தனர்……. அதற்குள் இன்னமும் ஒன்றா? எப்படி தாங்க முடியும்…… முக்கியமாய் மாமாவால் எப்படி தாங்கிக்கொள்ள முடியும்…. அவர் ஒன்றை இழந்தது போதாதா… அத்தையையும் அவரிடமிருந்து பறிக்க முயல்கிறாயா…….

‘இந்த அபி இருக்கும் வரைக்கும் என் அத்தையின் உயிரை எமனால் கூட கொண்டு செல்ல முடியாது….’

அதன்பின்னர் தாமதிக்கவில்லை………. தன் நண்பன் ஒருவனுக்கு அழைத்து மாமாவின் செல்போன் காட்டும் சிக்னலை கண்டறிந்து………. அவர் எந்த மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை கண்டுகொண்டவன் தன் வெள்ளை கலர் BMW வில் கிளப்பினான்.

ஏ.கே.ஆர் ஹாஸ்பிடல்............. வெங்கடேஷ் பானுமதியின் மருத்துவமனை.......... சென்னையில் இருக்கும் அதிமுக்கியமான மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று......... பணக்காரர்களுக்கு மட்டுமல்லாது ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கும் தரமான....... பாதுகாப்பான........... நம்பிக்கையான மருத்துவமனை.

அபியும் சிலசமயங்களில் அங்கு சென்று மேற்பார்வை பார்ப்பதுண்டு....... மருத்துவமனையின் அபிவிருத்தி தொடர்பாய் பெரும்பாலும் அபியிடம் தான் வெங்கடேஷ் ஆலோசனை கேட்பதும் வழங்குவதும் ஆதலால் அபியும் பங்குதார்களில் ஒருத்தன்தான்.

மருத்துவமனைக்கு அழைத்து சகல வசதியுடனும் ஆம்புலன்சை தயாராக்கும்படி உரைத்தவன் தன்னை பின்தொடரும் படி கூற,, இதோ அவனின் BMW முன்னால் செல்ல பின்னாலே ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருந்தது.

ஒன்றரை மணிநேர பயணம் என்றாலும் அத்தைக்கு ஒன்றுமாகிடக்கூடாது என்ற நினைவில் வண்டியை வேகமெடுத்தான்……

உண்மையில் நடந்தது எதுவும் அவனுக்கு முழுமையாக தெரியவில்லை…….. மாமாவிடம் கேட்டால் அவர் எதுவும் சொல்லாமல் பிறகு அழைக்கிறேன் என்றவர் அழைப்பை துண்டிக்காமல் போக என்னவோ என்று குழம்பியவன், அழைப்பை துண்டிக்க முயலும்போது தான் மருத்துவர் பேசியது………

கோமா…. அது இதுவென அவன் காதில் விழுந்தவற்றை எல்லாம் அத்தையுடன் தான் ஒப்பிட்டு பார்த்தான்……… அவருக்கு எப்படி அடிபட்டிருக்கும்……… உடனிருந்த மாமாவுக்கு ஒன்றுமாகவில்லையா என்றெல்லாம் யோசிக்க முயலவில்லை………….. கிளம்பிவிட்டான்.

மருத்துவமனையின் முன் வண்டியை நிறுத்தியவன் விரைந்து உள்ளே நுழைந்து ரிசப்சனில்,

“ஆக்ஸிடென்ட் கேஸ் ஏதாச்சும்……..” முடிக்கும் முன்பே,

“யாh… ஆகர்ஷான்னு ஒரு பேசண்ட் அட்மிட்aaருக்காங்க….”

காதில் விழுந்த பேரை நம்பமுடியாமல் விலுக்கென தலையுயர்த்தியவன் அதிர்ச்சியில் திகைத்துபோனான்,

“சூரா தெரியுமா….”, குரல் நடுங்கி கரகரப்பாய் ஒலித்தது.

“யெஸ் அப்fகோர்ஸ்…”

அவளின் உறுதியான குரலில் நொறுங்கும் நிலையில் இருந்த நெஞ்சம் வரைமுறையின்றி தாறுமாறாக துடிக்க,

“ரூம் நம்பர்” உதடுகள் தன்னியல்பாய் கேள்வியெழுப்பியது.

“எமர்ஜென்சி வார்டு”, அதன் பக்கம் கைகாட்ட,

வரும்போதிருந்த மனநிலை முற்றிலும் மாறிப்போய் நடைபிணமாய் அந்தப்பக்கம் நகர்ந்தவனின் எண்ணம் ஒருநிலையில் நில்லாமல் அலைபாய்ந்தது.

‘ஆகர்ஷானு ஒருபேர் தான் இருக்குமா வேறு யாருகாச்சும் அதேமாதிரி பேர் இருந்திருக்கலாம்……’ மனம் விதண்டாவாதமாய் விவாதம் செய்ய, அப்போதும் நடையை நிறுத்தினான் இல்லை……….. அவனுக்கு சந்தேகத்தை தீர்க்கவேண்டும்………. யார் அந்த ஆகர்ஷா………. மாமாவும் அத்தையும் எங்க இருக்காங்க………. ஒருவேளை இந்த ஆகர்ஷாவுக்காகத்தான் அவங்க இங்கு இருக்காங்களோ?....

அவன் அறையை நெருங்கும்போது மருத்துவரின் அறையில் இருந்து வெளியில் வந்தனர் வெங்கடேஷும் பானுமதியும்.

அவர்களிருவரும் இவனை எதிர்பாராததில் ஆச்சரியத்துடன் “அபி” , என்று தங்கள் கவலையைக் கூட ஒருநொடி மறந்து, அவன் தங்கள்மீது கொண்டுள்ள பாசத்தில் நெஞ்சம் நெகிழ, ஆதுரத்துடன் பார்த்தனர்.

நேர்மாறாய் அவன் பதட்டத்துடன் அவர்களை பார்த்திருந்தான்.

“அத்த என்னாச்சு………. எப்பிடி சாரில ரத்தம் பட்டிச்சு……. ஏன் எதுவும் பேசாம இருக்கீங்க……… என்னதான் ஆச்சு”,

மதுராவை மடியில் கிடத்தியபோது சாரியில் பட்டிருந்த ரத்தத்தை பார்த்து என்னானதோவென பயந்தவனுக்கு அந்நொடி ஆகர்ஷாவின் நினைவு பின்னோக்கி சென்றுவிட்டது. அவன் கருத்திலிருந்தது எல்லாமே அத்தையும் மாமாவும் தான். இப்போதைக்கு அவர்கள் மட்டுமே அவனுக்கு அதிமுக்கியம்.

அத்தை மாமாவிடம் கேள்வியெழுப்பியும் அதற்கான பதில் வாராது போகவும், என்னமோ ஏதொவேவென தான் பதறியடித்துக் கொண்டு வந்தால் அவர்கள் தன்னை மௌனமாய் பார்ப்பது கடுப்பை கிளப்பியது.

கடுப்புடன் அவர்களை பார்த்துவைத்தான்….. ஏதும் சொன்னால்தானே அவனுக்கு புரியும்….

ஆனால் அதற்கும் அவர்களை வாயை திறந்தார்கள் இல்லை…………. மௌனமாய் இருக்கையில் அமர்ந்துகொள்ள, செய்வதறியாது இவனும் அமர்ந்துகொண்டான்………….. சில நாட்களாக சரிவர தூங்காதது….. மூளைக்குள் ஓடிக்கொண்டிருக்கும் கேள்விகள்…… இத்தனைநேரம் கழித்து நினைவடிக்கில் இருந்து மேலெழுந்த ‘ஆகர்ஷா’ என்ற பெயர்….. அது யார் என்றறிய வேண்டிய ஆவல்…… எல்லாமே ஒன்றாய் சேர்த்து அவனை குழப்பிக்கொள்ள அசதியில் சேரில் சாய்ந்தமர்ந்து கண்களை மூடிக் கொண்டான்.

மூடிய அவன் விழிகளுக்குள் அம்முவின் வரைபடம்….

குண்டுக்கன்னங்களும் கொளுக்மொளுக்கென பப்ளியாய் இருந்தவள் மீது அவனுக்கு அவ்வளவு பிடித்தம்…… முதல்முதலாய் அவளை கைகளில் ஏந்தியதும் அவனே…. வளர வளர அத்தை மகளென்ற பாசத்தில் நிரம்ப பிடிக்க, அந்த பிடித்தம் எப்போது காதலாய் மாறி மணம் பரப்பியது என்பதை தான் அவன் அறியான்…..

நினைவுகள் ஒவ்வொன்றும் அடியாழத்திலிருந்து கிளர்ந்தெழ….. அவள் பிறந்தது முதற்கொண்டு, நடைபயின்றது, பேச ஆரம்பித்தது, பள்ளி செல்ல துவங்கியது, முதல் மதிப்பெண் பெற்றதென படிப்படியாய் வளர்ந்து அவள் பருவ வயதை எட்டியது, கல்லூரி சென்றது, முதல்நாள் மருத்துவமனை அனுபவம் என மொத்தத்தையும் வாரிச்சுருட்டி சுழன்றடித்து இறுதியில் வந்து நின்ற இடம்…….

காதுமடல் வழியே செங்குருதி பீச்சிக் கொண்டுவர, நாசித்துவாரம் இரத்தத்தால் அடைபட்டு சொட்டு சொட்டாய் ஒழுகிக்கொண்டிருக்க, கருநிற கூந்தலுடைய தலைப்பகுதி செந்நிற ரத்தத்தால் பிசுபிசுத்துக்கொண்டு வழிந்தோடியது……

மூச்சுக்கு ஏங்கித் தவித்தவளின் மார்புக்கூடு ஆழமூச்சிழுப்பது போல் இயலாமையில் கடினப்பட்டு ஏறியிறங்கிய கணநொடியில் உடல் தூக்கிபோட மொத்தமாய் பிரிந்துவிட்டாள்..

கண்களுக்கு புகைமூட்டமாய் ஓடிமறைந்த நினைவுகள் இறுதியில் வந்துநின்ற இடம் விழிகளுக்குள் உருப்பெற, பதறியடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தான்.. கண்கள் சுற்றும்முற்றும் பார்க்க… வியர்வையில் தொப்பலான உடலோடு உடையொட்டி உறவாடிக்கொண்டிருந்தது… எம்பிக்குதித்த இதயத்தை வலது கரத்தால் அடக்கிக்கொண்டு, இடது கரத்தால் முகத்தில் பூத்திருந்த வியர்வையை வழித்தெடுத்தான்… கணுக்கால் முதல் தலைமுடி வரை சர்ரென நடுக்கம் ஓடி மறைய தலையயுளுக்கி, வலுவிழந்த உடலை மூச்சை இழுத்து விட்டு சமன்படுத்திக்கொண்டான்.

இடது கரத்திலிருந்த ரோலக்ஸ் வாட்சில் நேரம் பார்க்க, அவன் வரும்போது நேரம் ரெண்டை தொட்டிருந்தது, இப்போதோ விடியற்காலை ஐந்தை நெருங்கியிருந்தது………

நேரத்தை பார்த்துமே இதழ்களில் ஆச்சரிய புன்னகை, ஆக தான் மூன்று மணிநேரங்கள் தூங்கியிருக்கிறோம், அதிசயம்தான்…. பலநாள் தூக்கத்தை தொலைத்தவனுக்கு மூன்றுமணிநேர தூக்கம்; அதிசயம் என்பதில் ஆச்சர்யமில்லை.

பொழுது சரிவர புலராத தருணம்... புள்ளினங்கள் பூபாளத்தை தொடங்கியிருக்க…. மெல்லிய இருள் போர்வையும் மஞ்சளும் செந்நிறத் தூவலுமாய் ஆதவன் உதயமாகிக்கொண்டிருக்க காலைப்பொழுது ரம்மியமாக புலர துவங்கியது.

அத்தை மாமாவை தலைதிருப்பி பார்த்தான், கவலைதோய்ந்த முகத்துடன் கண்மூடி மோன நிலையில் அமர்ந்திருக்க, என்ன நினைத்தானோ இருக்கையிலிருந்து எழுந்து தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன் அவர்களின் கையை தன் கைக்குள் வைத்து அழுந்தப் பற்றிக்கொண்டான். நான் இருக்கிறேன் எனும் விதமாக…………….

உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்த அச்சம் காரணமாகவோ என்னவோ சிறுதொடுகையிலும் பதறியடித்துக்கொண்டு அவர்கள் கண்விழிப்பதற்கும், தீவிர சிகிச்சை பிரிவின் அறைக்கதவு திறக்கவும் சரியாய் இருந்தது…………..

ஸ்ட்ரெச்சரில் ஆகர்ஷாவாக மாறிய மதுராவை தள்ளிக்கொண்டு வந்தனர்…… ஆழ்ந்த மயக்கத்தில் கண்மூடிக்கிடந்தாள்.

அறைக்கதவு திறக்கவும் பதறியடித்து எழுந்து நின்றவர்களுடன் தானும் எழுந்தவன், ஸ்ட்ரெச்சரில் தலை ஒருபக்கம் சாய்ந்து சீரான சுவாசத்துடன் விழிமூடி படுத்திருந்தவளை நெஞ்சம் நடுங்க திறந்த விழிமூடாமல் பார்த்திருந்தான். அதிர்ச்சியில் விழிகள் தெறித்துவிடும் போல் விரிந்தது.

என்னமாதிரி உணருகிறோம் என்பதை அவனால் கணிக்க முடியவில்லை………… நொடியில் அனைத்தும் தலைகீழாய் மாறிய உணர்வு……….. இதயத்துக்குள் புதுவித மெல்லிசைகள் தாளலயத்துடன் இசைமீட்டியது………. சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சியின் உற்சாகம்……….. துக்கமும் மகிழ்ச்சியும் ஒன்றாய் உருவெடுக்க, ஆனந்தத்தில் கண்கள் கலங்கிச்சிவக்க…….. ஒன்றன் பின் ஒன்றாய் ஒருசேர தாக்கிய உணர்வுகளின் தாக்கத்தை தாங்கமுடியாமல் உடல் கனக்க தொப்பென சேரில் அமர்ந்தான்……

காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்திட விரும்பினேன்,
முடிவு காதல் கைகூடாது போயினும் வரமாய் வந்தது!



உருகும்...............


[மூன்றாம் அத்தியாயத்தை பதிவு பண்ணிட்டேன்........போன அத்தியாயத்துக்கு ஆதரவளித்த எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிப்பா....... நான் ரொம்பவும் சந்தோஷமா இருக்கேன்....... இதுக்கும் உங்க ஆதரவ கொடுங்க....... பிழைகள் ஏதும் இருந்தால் சுட்டிக்காட்டுன்கப்பா..... திருத்திக்க முயற்சி செய்றேன்........ உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை பகிர்ந்துக்கோங்க டியர்ஸ்.......]

"உயிர் உருகும் காதல்" - கருத்து திரி
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் 04


நிழலில் பார்த்த உருவத்தை எதிர்பாராமல் நிஜத்தில் பார்த்ததும் தன் கண்களையே நம்பமுடியாமல் மேனியில் ஊடுருவிப்பாயும் உணர்ச்சிகளை எளிதில் ஏற்கமுடியாமல் தடம்புரண்டவன் பொத்தென சேரில் அமர்ந்து கையால் தலையை தாங்கிக் கொண்டான்.

மெல்லிசை மீட்டிய இதயத்திற்குள் இப்போது அபாய சங்கூதியது...

‘தன் கற்பனையோ இவை’ அழுத்தம் தாளாமல் இதயம் ஓலமிட்டது....

மறைந்து விடுவாளோ என பயந்து கண்சிமிட்ட மறந்து பார்த்தவன், சந்தேகத்தை தீர்க்கவேண்டி கண்மூடித்திறந்து மறையாதிருந்த உருவத்தை வெறித்துப் பார்த்தான்.

வாய்ப்பில்லையே…… எப்படி சாத்தியமானது…… ஒருமனம் முரண்டுபிடிக்க… இன்னொரு மனமோ இல்லை இது நிஜம் தானென அடித்துக்கூறியது… கண்முன்னே நிற்கும் அத்தை மாமா நிஜம் என்றால் பதறியடித்துக் கொண்டு தான் வந்ததும் நிஜம் அல்லவா… தான் வந்தது உண்மையென்றால் கசங்கிய மலராய் துயிலில் இருக்கும் ஆகர்ஷாவும் உண்மைதானே…

பார்வையை தாழ்த்தி தலைகுனிந்து கொண்டவனுக்கு அதை முழுமையாக நம்பத்தான் முடியவில்லை……. பயமாக இருந்தது…… அவளை பார்த்தல்ல, எங்கே மீண்டும் தவிக்கவிட்டு சென்றுவிடுவாளோ என்று…….., பயந்துபோய் இருந்தவாக்கிலே தலையுயர்த்தி அவள் உருவத்தை கண்களால் சிறையெடுத்துக் கொண்டான்.

தலையில் பெரியகட்டு போடப்பட்டிருக்க, கைகால்களில் சிறு கட்டுக்கள், இதயக்கூடு சீராய் ஏறியிறங்கிக் கொண்டிருந்தது, மற்றப்படி உடலில் எந்த அசைவுமில்லை….. ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவள் போன்று அசைவின்றி படுத்துக்கிடந்தாள்.

‘எப்பவும் உன்கூட இருக்கணும்னு தான் ஆசைப்படுவேன் அம்மு…… இப்பவும் அதே ஆசை என் மனசில இருக்கு…… நீ எந்தநிலையில் இருந்தாலும் நான் உன்கூடவே தான் இருப்பேன்……. நீ பழையபடி என்கிட்ட திரும்பி வந்தா மட்டும் போதும்……. அதத்தவிர இந்த உலகத்தில் நான் ஆசைபடுவது எதுவும் இருக்காது…..’

அசைவின்றி படுத்துக்கிடந்தவளை பார்த்தவண்ணம் எப்போதும்போல மனதோடு அம்முவுடன் பேசிக்கொண்டவனுக்கு ஒரேயொரு கேள்வி மட்டும் உள்ளுக்குள் வண்டாய் குடைந்து கொண்டிருந்தது.

‘தன் கண்முன்னே காற்றில் கலந்த உருவம் எப்படி மீண்டும் வந்தது’ மண்டையை குடைந்த இந்த கேள்விக்கான விடை தெரிந்தே ஆகவேண்டும்போல் உளம் பரபரக்க தலையுயர்த்தி அத்தை மாமாவை உறுத்துப்பார்த்தான்.

அவ்வளவு சுலபத்தில் யாரிடமும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தமாட்டான். அவன் தாய் ஜெகதா சொல்வது போல் அவன் எந்தளவுக்கு பாசக்காரனோ அதேயளவுக்கு அழுத்தக்காரனும் தான். ஆனால் வேண்டிய இடத்தில் தன் நிலைப்பாட்டை உறுதியாய் வெளிப்படுத்திவிடுவான்.

அவர்களை உறுத்துப்பார்த்தவன் ‘எனக்கு பதில் வந்தே ஆகவேண்டும்’ என்பதாய் சட்டமாய் அமர்ந்திருக்க, மருமகனின் உடல்மொழியில் மற்றும் பார்வையில் தெறித்த உறுதியில் தொண்டையை செருமிக்கொண்டு நடந்ததை விவரிக்க, அதற்குள்ளாக தீவிர சிகிச்சை பிரிவுக்குள் இருந்தவளை ICUன் விஷேட பிரிவுக்குள் வெங்கடேஷின் வேண்டுகோளிற்கிணங்க மாற்றியிருந்தனர்.

மாமா கூறிய அனைத்தையும் ஒன்றும்பேசாது மௌனமாய் கேட்டவன் கண்களை இறுக மூடி தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு அவரை அழுத்தமாய் ஏறிட்டான்.

அவன் பார்வையும் அதன் அர்த்தமும் தெள்ளத்தெளிவாய் புரிய ஒருநொடி தலைகுனிந்தவர் பின் இயலாமையுடன் அவனை பார்த்தார்.

ஒருகண நேரம் அவர்களை வெறித்துப்பார்த்தவன் முரண்டுபிடித்த நெஞ்சத்தை அடக்கிக்கொண்டு,

“இந்த பொண்ணோட டிடைல்ஸ் கொடுங்க, அவங்க வீட்டுக்கு இன்போfர்ம் பண்ணிடலாம்….” என்றான் அழுத்தம் திருத்தமாய்.

அவன் என்ன சொல்லப்போகிறானோவென பதறியபடி கைகளை பிசைந்துகொண்டிருந்த பானுமதி, அவன் பேச்சில் விலுக்கென தலையுயர்த்தி அடிபட்ட பார்வை பார்க்க, அதனோடு விரக்தியுடன் கூடிய கோபம் பிரதிபலித்தது.

“அபி என்ன பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசிறியா…… அது…. அது எப்பிடி முடியும் அபி…… கடவுளா பார்த்து இவள எங்க கண்ணுல காட்டியிருக்காரு…….. நான் அவளை எங்கயும் விடமாட்டேன்…….. அவ என்னோட பொண்ணு…… அவளை என்கிட்டயிருந்து பிரிச்சிடாத…..”

கல்லுக்குள் ஈரம் போலவே பெண்ணுக்குள் இருக்கும் தாய்மை தன் மகளை ஒத்தவளை பிரிய முடியாமல் ஆர்ப்பாட்டம் செய்தது.

“அத்த புரியாம பேசாதீங்க… உங்கள மாதிரி தானே அந்த பொண்ணோட பேரன்ட்ஸும் மகளை காணோம்னு தவிச்சுப்போவாங்க… அத்த ப்ளீஸ், உங்க தவிப்பு எனக்கு புரியாமயில்ல ஏன்னா நானும் அதேயளவுக்கு தவிச்சிட்டு தான் இருக்கேன்… ஆனா அதுக்காக, இது தப்பு அத்த… இந்த தப்ப நீங்க செய்ய நான் விடமாட்டேன்…”

“அபி ஷி இஸ் இன் கோமா….”

“ஸோ வட்?”

“நான் சொல்றது உனக்கு புரியுது அபி பட் புரியாத மாதிரி நடிக்கிற…… அவளை பத்தி எதுவும் தெரியாம எப்பிடி அவளோட பேரன்ட்ஸை கண்டுபிடிக்க முடியும்…… வீ டான்ட் நோ ஹூ இஸ் ஷி….”, கடைசி வரியை அழுத்தமாய் உச்சரித்து உனக்கு சளைத்தவள் இல்லை நான் என்பதை நிரூபித்தார்.

அது புரியாமல் போவதற்கு அவனொன்றும் குழந்தை இல்லையே… அத்தையின் பேச்சு தெளிவாய் புரிந்தபோதும் அசையாமல் சில கணங்கள் அவரை வெறித்துப் பார்த்தவன் ஒன்றும் பேசாமல் சேரில் அமர்ந்து கொண்டான்.

அவன் மனதுக்குள் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தை யாரிடமும் வெளிப்படையாய் சொல்ல முடியவில்லை….. அவனுக்கு மட்டும் அவளை அனுப்பவதில் இஸ்டமா என்ன? ஆனால் உள்ளுக்குள் எதுவோ ஒன்று தடுக்கிறதே… அவளை அனுப்பவும் முடியாமல் கூட்டிச்செல்லவும் முடியாமல் உள்ளுக்குள் தவித்துக் கொண்டிருந்தான்……………

காற்றில் கலந்து மறைந்து போனவளை அச்சிட்டு தன் முன் இருப்பவள் கண்விழித்து தன்னை அந்நியமாய் பார்த்துவிட்டால்! அதை ஜென்மத்துக்கும் அவனால் தாங்கிக்கொள்ள முடியாது… அதற்காகவே அவன் நிர்தட்சனமாய் மறுப்பது…………

அவள் கோமாவில் இருக்கிறாள் என்பது புரியாமல் இல்லை…. ஆனால் எப்பிடியும் ஒரு நாள் நினைவு திரும்பத்தானே போகிறது, அப்போது அவள் தன்னை பார்த்து ‘நீ யார்’ என்று கேட்டு விட்டால்!!!……… அம்முவின் ரூபத்தில் இருப்பவள் தன்னை ‘நீ யார்’ என்று ஒரு கேள்வி கேட்டாலும் அவன் மொத்தமாய் மரித்துவிடுவான்…… அவன் உடலில் உயிர் இருந்தாலும் நடைப்பிணமாய் மாறிவிடுவான்…….

அந்த எண்ணத்தையே ஜீரணிக்க முடியாமல் தவிப்பவனால், எப்படி அவளை கண்முன்னே கண்டும்; காணாதது விலகியிருக்க முடியும். ஒரு சதவீதம் கூட அவனால் அப்படி விலகியிருக்க முடியாது.

அவன் தனக்காக மட்டும் இல்லாமல் அத்தை மாமாவையும் கருத்தில்கொண்டு தான் இம்முடிவை எடுத்திருந்தான். அவளுக்கு நினைவு திரும்பினால் எப்படியும் அவள் தங்களை விட்டு பிரிந்து விடுவாள்…… அந்த வேதனைக்கு இது தேவலாம் என்று தான் இதில் உறுதியாய் இருந்தான். இது அவனுக்கு புரிந்தபோதும் அவர்களுக்கு புரியவில்லை…… பாசம் கண்ணை மறைத்திருந்தது.

அவர்களின் பாசத்தின் முன் அபியின் முடிவு துகள் துகளாய் சிதறிப்போனது. இனி நடக்கப்போவதை தாங்கிகொள்ளத்தான் வேண்டும், என பெருமூச்சை வெளிவிட்டவன் உங்கள் இஸ்டம் என்பதுபோல் இருக்கையில் சாய்ந்தமர்ந்து கொண்டான்……. அவர்களுக்காக தன் முடிவை மாற்றியபோதும் மனதின் ஓரத்தில் சில்லென்று இதமாய் இருந்தது…….

அவன் தோரணையிலே மறைமுகமாக சம்மதத்தை வழங்கி விட்டான் எனவும் அவன் மனம் மாறுவதற்குள் ஆகர்ஷாவை சென்னைக்கு அழைத்து செல்வதற்கு ஏற்பாடு செய்ய, அதுவும் துரித கதியில் நடந்தேறியது.

அமைதியாய் அமர்ந்து, துக்கம் மறைந்து இலகுவாக இருந்த சிரிப்புடன் கூடிய அவர்களின் முகத்தை பார்த்தவன் தான் எடுத்த முடிவு சரிதான் என எண்ணிக்கொண்டான்.

இவனின் யோசனைகள் ஓடிக்கொண்டிருந்த இடைவெளியில் போலீஸ் அதிகாரியும் கான்ஸ்டபிலும் வருகை தர, அவர்களை கேள்வியாய் பார்த்தவன்….. திரும்பி மாமாவின் முகத்தை பார்க்க….. அவரும் அவர்களை கேள்வியாய் பார்த்தவண்ணமே நின்றிருந்தார்.

நேற்று எல்லாம் பேசியாகிவிட்டதே இப்போதென்ன என்ற அவரின் பார்வைக்கான பொருள் போலீசுக்கு புரியாமல் இல்லை…… அவரை பார்த்து மென்சிரிப்பை உதிர்த்தவன் “ஒரு சின்ன பாfர்மாலிட்டி”, என FIR காப்பியை காட்டி கையெழுத்து போடுமாறு கூற, கையெழுத்திட்டதும் ஒருமுறை கூர்ந்து பார்த்தவன் சன்ன சிரிப்புடன் கிளம்பிவிட்டான்.

அவர்கள் இருவரும் நேரே சென்றது ஜிஹெச்iற்குத்தான்…. இப்போதுதான் தகவல் வந்திருந்தது, சிகிச்சையின் போதே சுந்தரம் இறந்து விட்டதாக….. மனைவியை இழந்தபோது மகளுக்காக உயிர்வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த சுந்தரம், இப்போது மகளும் இறந்து விட்டதை அறியாமல் உயிருக்காக போராடிக்கொண்டிருக்க அவன்பால் இரக்கப்பட்ட கடவுள், மகளுடனே அவனையும் அழைத்துக்கொண்டார்……..

இவர்கள் மருத்துவமனையை அடையும்போது சுந்தரத்தின் முதலாளி பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்…. கூடவே சில லாரி டிரைவர்களும் நின்றிருந்தனர்.

மார்ச்சுவரியில் இருந்து சுந்தரத்தின் உடலை எடுத்துவர பார்மாலிட்டியை முடித்தவர்கள் உடலை எடுத்துக்கொண்டு புறப்பட போலீஸ்காரர்களும் கடமை முடிந்ததென புறப்பட்டனர்…… சுந்தரத்தின் மகளை எதிர்கொள்ள வேண்டி பரிதாபத்துடன் போனவர்கள் அங்கு அவள் இருந்த நிலைகண்டு நெஞ்சம் பதறித்தான் போனார்கள்………

இங்கு காமவெறிபிடித்தவர்களும் இருக்கிறார்கள்…… தந்தையின் முத்தம் காமத்தில் சேர்ந்ததல்ல எனும் அளவிலான நல்ல உள்ளங்களும் இருக்கிறார்கள்………

(இன்றைய காலகட்டத்தில் அதை பிரித்தறியும் அறிவை சிறுவர்கள் கற்றுக்கொள்ளத் தான் வேண்டும்)

விஷயத்தை ஊர்முழுக்க பரப்பாமல் பூசிமெழுகப்பட்டு இருவரின் உடலையும் பிராத்தனையுடன் தகனம் செய்தனர்.

இவர்கள் உடல் தீயில் எரிந்துகொண்டிருக்க……… தீயில் கருகிச்சாம்பலான சுரேனின் உடலை கதறலுடன் பார்த்திருந்தனர் அவன் பெற்றோர்கள்……… அளவுக்கதிகமான பணமும் சுதந்திரமும் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது……

இவையெல்லாம் நடந்துமுடிந்த சிலமணிநேரங்களின் பின்னர் பார்மாலிட்டிஸ் அனைத்தும் முடித்து மருத்துவ கோப்பையும் வாங்கிக் கொண்டு நவீனத்துவமாய் இருந்த அவர்களின் மருத்துவமனைக்குரிய ஆம்புலன்ஸில் ஆகர்ஷாவை ஏற்றி சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தனர், பானுமதி வெங்கடேஷ் மற்றும் அபிநந்தன் மூவரும்…………..

(மதுரா இனிமேல் ஆகர்ஷா என்றே அழைப்படுவாள்….)

பொன்னேரியிலிருந்து சென்னை செல்லும் பயணம் விரைவிலே முடிவுக்குவர…….. ஏகேஆர் மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடலின் பிரமாண்டமான நுழைவுவாயில் வழியே உள்ளே நுழைந்த இரண்டு BMW கார்களும் ஆம்புலன்ஸும் வேகத்தை குறைத்து ஓய்வாய் தங்கள் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.

இவர்களின் வருகைக்காகவே காத்திருந்த மருத்துவக்குழுவினர் அனைவரும் வாயிலில் ஒன்றுகூட, ஸ்ட்ரெச்சரில் இருந்த ஆகர்ஷாவை விஷேட பிரிவுக்குள் அழைத்துச் சென்றனர்……. கூடவே சென்று கொண்டிருந்த நர்ஸின் கைகளில் ட்ரிப்ஸ் பாட்டில்……. இருபத்துநான்கு மணிநேரமும் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டே இருந்தது……….

தங்கள் மருத்துவமனைக்கு வந்ததும் தாய்மடி சேர்ந்த உணர்வு உள்ளத்தில் துளிர்க்க…… மீண்டுமொருமுறை அனைத்து டெஸ்டுகளையும் எடுக்க வேண்டும் என எண்ணிக்கொண்டனர் மூவரும் ஒருசேர…..

இருபத்துநான்கு மணிநேரம் கழித்துத்தான் மீண்டும் டெஸ்ட் எடுக்கலாம் என்பதால் ஆசுவாசத்துடன் சோர்ந்துபோய் அமர்ந்த மூவருக்கும் காரியரில் உணவு கொண்டு வந்தார் ஜெகதா…. அபியின் தாய்.. பானுமதியின் பாசமான அண்ணி.. வெங்கடேஷிற்கு தங்கை..

அபி ராத்திரி வீட்டுக்கு வராமல் போகவே, மகனின் பாதுக்காப்பிற்காக ஏற்பாடு செய்திருந்த பாதுகாவலரிடம் விசாரிக்க… அவன் பொன்னேரி செல்வது தெரியவந்தது குர்மூர்த்திக்கு; அபியின் ரோல்மாடல் தந்தை……

பாசத்தை காட்டவும் தெரியும் தேவையான நேரத்தில் நாசுக்காய் கண்டிப்பை வெளிப்படுத்தவும் தெரியும்….. கைதேர்ந்த பிசினஸ்மேன்….. வியாபார நுணுக்கங்களை விரல்நுனியில் வைத்திருப்பார்…… குடும்பத்தொழிலான வாகன உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் கம்பனியை தந்தைக்கு பின் தன் கையில் எடுத்தவருக்கு வெற்றி மேல் வெற்றி கைகூடியது……

படிப்படியாக வளர்ந்து இப்போது பெரும் பணக்காரர் பட்டியலிலும் இடம்பிடித்து விட்டார். உயரப்பறந்து உச்சானிக்கொம்பை எட்டியபோதும் ஏறிவந்த பாதையை மறக்கவில்லை……... அதுதான் அவரின் வெற்றியின் ரகசியம்..

அதன்பின் அவரின் உழைப்பில் உருவானவை ஏராளம்.... கால்பதிக்காத துறைகளே இல்லை எனலாம்…. அப்படிப்பட்ட பரந்துவிரிந்த குரு இண்டஸ்ட்ரியின் சேர்மன் தான் குருமூர்த்தி……. அவருக்கு சற்றும் சளைத்தவனல்ல அபி….. தந்தை வழியே தனயனும்……

மகன் பொன்னேரி செல்வதை அறிந்து அடுத்த சில நொடிகளில் முழுத்தகவல்களையும் விரலிடுக்கில் வைத்திருந்தார்.

கிடைக்கப்பெற்ற தகவல் மனதில் பாரத்தை கூட்ட விரக்தியில் சிலகணம் அசையாது அமர்ந்திருந்தவர் முயன்று வேலைகளில் கவனத்தை செலுத்தினார்.

அப்படித்தான் அவர்கள் மூவரும் ஊருக்கு வந்த விஷயமும் அவரின் காதுக்கு வர மனைவியை உணவு எடுத்துச் செல்லுமாறு பணித்தவரும் உள்ளத்து ஆர்வத்தில் கிளம்புவதாகத்தான் இருந்தது, ஆனால் அசையக்கூட முடியாமல் வேலைகள் ஆக்கிரமித்துக் கொண்டன.

மருத்துவமனையில் குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்ட பிரத்தியேக நுழைவாயில் வழியே உள்ளே சென்ற ஜெகதா, அவர்கள் இருந்த அறையை கேட்டறிந்து உள்ளே நுழைய; வெவ்வேறு விதமான மனநிலையில் மூவரும் அமர்ந்திருந்தனர்…….

அறைக்கதவு திறக்கும் ஓசையில் ஒருசேர திரும்பியவர்கள் அங்கு ஜெகதாவை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதை, அவர்களின் ஆச்சர்யம் கொப்பளிக்கும் முகங்கள் அப்படியே பிரதிபலித்தது.

அன்னையை பார்த்ததும் சற்று திடுக்கிட்ட அபி, சடுதியில் முகபாவத்தை மாற்றிக்கொண்டு “ம்மா….. டாட் சொன்னாரா?…..” கேள்வியாய் இழுத்தான்… தந்தையை பற்றி தெரியும் ஆதலால்…..

“உங்க அப்பா சொல்லாம வேற யாரு சொல்லப் போறா….. நீயாவது ஒருவார்த்தை சொல்லியிருக்கலாமேடா….. எனக்கு மட்டும் என் மருமகளை பார்க்க ஆசையிருக்காதா….”, சிறு முறைப்புடன் மகனை பிடிபிடியென பிடித்துக்கொள்ள…..

தாயின் ‘என் மருமகளை’ என்ற வார்த்தை அவனது அத்தனைநேர சஞ்சலத்தை போக்கி இருந்தது.

ஏனெனில் ஜெகதா அவ்வளவு சுலபத்தில் இதையெல்லாம் ஏற்கமாட்டார் என்பது அவனுக்கு நன்கு தெரியும்…. இப்போது அவரே உறவாய் அழைக்கவும், அவனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

இப்போதும் அவர் சிறுமுறைப்புடனே இருக்கவும், கண்களை சுருக்கி இரு கைகளாலும் காதிரெண்டையும் பிடித்துக்கொண்டவன் ‘சாரி’ என்று இதழசைக்க; ஜெகதாவின் மனதில் இருந்த கொஞ்சநஞ்ச மனவருத்தமும் மகனின் செயலில் பறந்தோடி இருந்தது.

பலநாட்கள் சவரம் செய்யப்படாத மீசையும் புதர்போல் மண்டிக்கிடந்த தாடியுடனும் இறுகிப்போய் இருந்தவனின் அழுந்த மூடியிருந்த இதழ்கள் தாயின் வரவில் இறுக்கம் தளர்ந்து மெல்லமாய் விரிந்ததில் கவர்ச்சியாய் காட்சியளித்தது ஆண்மை நிறைந்த அவன் முகம்.

பல நாட்களின்பின்னான மென்னகை பூசிய அவன் முகத்தை ஆசையுடன் தழுவியவர் ஆண்மையின் முழுப்பரிமாண வளர்ச்சியுடனும் உடற்பயிட்சியின் மூலம் கட்டுக்கோப்பாய் மெருகேறியிருந்த உடல்கட்டுடனும் முழு ஆண்மகனாய் நின்ற மகனை உள்ளம் பூரிக்க பார்த்திருந்தார்.

இத்தனை நாட்களாய் குறையென நினைத்திருந்த…. நீண்டு வளர்ந்து தொங்கிய தாடியும் மீசையும் அவர் எண்ணத்தை பொடிப்பொடியாய் சிதறடித்திருந்தது. அவை கூட அவனுக்கு கவர்ச்சியாய் தான் இருந்தது…..

பசிமறந்து அமர்ந்திருந்த மூவரையும் அதட்டியுருட்டி உணவுண்ண வைத்தவர், ஆகர்ஷாவை அப்செர்வேனில் வைத்திருந்த அறைக்குச்சென்று பார்த்துவிட்டே கிளம்பிப்போனார்…. இடையில் குருமூர்த்தியும் தன் வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஆகர்ஷாவை பார்க்கவர கூடவே அபியின் தங்கை மேகனாவும் வந்து சென்றாள்.

சொந்தங்கள் யாரிடத்திலும் விஷயம் பகிரப்படாததால் அவர்களை தவிர யாருக்கும்தெரியாது போய்விட்டது…… அதுவும் நல்லதிற்கு தான் என எண்ணிக்கொண்டனர்.

கால நேரம் யாருக்கும் காத்திருக்கவில்லை…. சிறகு முளைத்த பறவைபோல் நில்லாமல் பறந்தோட இதோ முழுதாக ஆறுமாதங்கள் ஓடியிருந்தது.

அதிகாலைப்பொழுது புலரத்தொடங்கியிருந்தது…… திரைச்சீலைகள் காற்றில் அசைந்தாட…. திறந்திருந்த சாளரத்தின் வழியாக இளங்காலை நேர தென்றல்காற்றும் ஆதவனின் ஒளிக்கதிர்களும் அறைக்குள் புகுந்து விளையாடிக்கொண்டிருந்தது.

மலர்ந்திருந்த மல்லிகை, முல்லை மலர்களின் நறுமணத்தை தென்றல்காற்று வாரிக்கொண்டு வர புத்துணர்ச்சியுடன் கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்தவன் வாயால் காற்றை வெளியேற்ற மெல்லிய புகைமூட்டம் வெளியேறியது.

மனதிலுள்ள பாரங்கள் குறைவது போன்றிருக்க முன்நெற்றியில் புரண்டுகொண்டிருந்த முடிக்கற்றையை வலது கரத்தால் கோதிக்கொண்டே லேசாய் சிவந்திருந்த விழிகளை மலர்த்தியவனின் முன்னே, நலிந்த தோற்றத்திலும் புத்தம்புதிய மலராய் விகசித்து ஆழ் துயிலில் இருந்தாள் ஆகர்ஷா.

சற்றுநேரம் ஆழ்ந்து பார்த்தவன் கட்டிலின் அருகிருந்த சேரில் அமர்ந்துகொண்டான்.

அதிகாலை நேரத்து தென்றல் உடலை தாக்கிச்சென்று குளிரூட்ட…… அந்த இதமான குளிரில் பளிங்கு நிலவென ஜொலித்தவளின் செவ்விதழ்கள் வெளிறிப்போயிருக்க முகத்திலோ பனிபடர்ந்த ரோஜாவை போல் வியர்வைத்துளிகள் பூத்திருக்க கண்மூடிக் கிடந்தவளின் முகத்தையே இமைக்க மறந்து பார்த்தவன்,…… கைகுட்டையால் முகத்தில் படர்ந்திருந்த வியர்வைத்துளிகளை மிருதுவாய் ஒற்றியெடுத்தான்.

இதழ்களில் மின்னல் கீற்றென புன்னகை தோன்ற கண்ணெடுக்காமல் அவளையே பார்த்திருந்தவனது விழிகள் வலதுபக்க இதழ்க்கடையோரத்தில் சிறுபுள்ளியாய் வீற்றிருந்த நட்சத்திர மச்சத்தில் நிலைகுத்த…… பார்வையாலே வருடிக்கொடுத்தான்.

அவனின் அம்முவுக்கும் அதேபோன்று மச்சமிருந்தது….. ஆனால் இடதுபுறத்தில்….. இருவருக்குமிடையில் பல ஒற்றுமைகள் இருப்பதாய் தான் தோன்றியது….. ‘எப்படி அச்சு அசல் ஒன்றுபோலவே இருக்கிறார்கள்’ கேள்வி எழுந்த போதும் அதற்கான விடைதான் கிட்டவில்லை.

அவளைபார்த்தவாறே மொபைலில் ஏற்றியிருந்த இளையராஜாவின் மெல்லிசை பாடல்களை ஒலிக்கவிட்டவன், அவளின் வலது கரத்தை தன் உள்ளங்கைக்குள் புதைத்துக்கொண்டான்….

‘உன்னை என்றும் விடமாட்டேன்’ என்பதை சொல்லாமல் சொல்லியது அவனின் உறுதியுடன் கூடிய மிருதுவான தொடுகை…..

இப்போதென்றல்ல எப்போது அவளை மருத்துவமனையில் அட்மிட் செய்தார்களோ அன்றிருந்து தினமும் காலையில் அவளை பார்ப்பதுதான் அவனது முதற்கடமை….. ஆபீஸ் கிளம்பி செல்வதற்கு முன் ஒருமுறையேனும் அவளை கண்ணில் பார்த்துவிட்டுத்தான் கிளம்பியே செல்வான்…. அதுபோல்தான் மதியவேளையிலும், அவன் உணவு உண்கிறானோ இல்லையோ அவளைப் பார்க்க தங்களது மருத்துவமனைக்கு வந்துவிடுவான்……

முன்பெல்லாம் மாதத்திற்கொரு முறை வருகை தருபவன், இப்போதெல்லாம் அடிக்கடி வந்து செல்வதை அனைவரும் ஆவேன வாய்பிளந்து வேடிக்கைபார்க்க,… அதையெல்லாம் சட்டையே செய்யாமல் தூசியை போன்று ஊதித்தள்பவன், கடமையே கண்ணாய் அவளை நாடிவந்து விடுவான்.

பாசத்துடனும் அவளை விட்டு பிரியமுடியாத துக்கத்திலும் அவளை கையோடு அழைத்துவந்த பானுமதி வெங்கடேஷ் கூட அவளை இந்தளவுக்கு கவனித்துப் பார்த்திருக்க மாட்டார்கள் என்பது தான் முற்றிலும் உண்மை….


தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசில
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில


வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணே

இசைஞானின் மதுர கானத்தில் நெஞ்சை தீண்டி குழைந்து சென்ற பாடல், யோசனைகளினூடே இருந்தவனை தீண்டிச்செல்ல மௌனமாய் அதை ஆழ்ந்து ரசித்தான்....

இசை மீது அலாதியானதொரு ஆசையிருந்தபோதிலும் சில நாட்களாக அதை கேட்க முடியாமல் தடுமாறியவன், இப்போதெல்லாம் இசையுடனே பொழுதை துவங்கினான், அதனோடே பொழுதை முடிவுக்கும் கொண்டு வந்தான்……

ஒருவர் உடல் அல்லது மன அதிர்ச்சியை அனுபவித்திருக்கும்போது, அவர் அதிர்ச்சி நிலையில் இருக்கலாம், பேச இயலாமல் திகைக்கலாம், அவர்களுக்குள் உள்ள ஆழமான உணர்வுகளை அவர்களால் சொல்ல இயலாமல் போகலாம். இசைச் சிகிச்சை இந்தத் தடையை உடைக்கிறது. அவர்கள் தங்களுடைய உள் முரண்களையும் வெளிப்படுத்தாத உணர்வுகளையும் வெளிப்படுத்த உதவுகிறது.

மனத்தைத் தளர்த்தும் மற்ற உத்திகளைப்போலவே இதமான இசையை இசைப்பது அல்லது கேட்பது மூளையைத் தூண்டுகிறது, அறிவாற்றல், உணர்வுநிலை மற்றும் உடல்சார்ந்த செயல்பாடுகளில் ஒரு நேர்விதமான தாக்கத்தை உண்டாக்குகிறது.

புகழ்பெற்ற மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து ஆகர்ஷாவிற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான் அபி…….

அத்தை மாமாவை கட்டுக்குள் கொண்டுவர முயன்றவன் இப்போது கட்டவிழ்ந்து முற்றிலும் மாறிப்போனான்……..

அவள் யாரென தெரியாது….. அவள் பேர் தெரியாது….. அவளின் சொந்தங்கள் எங்கிருக்கிறார்கள் என்பதும் தெரியாது….. இன்னபிற எதுவும் தெரியாது… அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று தான்…

‘அவள், காற்றில் கலந்த மறைந்து போன அம்முவை போன்றிருக்கிறாள்!’ அது மட்டுமே அவளுக்கும் அவர்களுக்குமிடையில் பாலமாய் இருந்தது……… பாசத்தை வார்த்தது……….

இதைத்தவிர அவளுக்கும் அவர்களுக்குமிடையில் எவ்வித உறவுமே இல்லை…….. அம்மு என்ற உறவினால் மட்டுமே ‘மதுரா’ இங்கு ‘ஆகர்ஷாவாக’ மாறியிருக்கிறாள்.

நேற்றிலிருந்து மனதுக்குள் எதுவோ ஓடிக்கொண்டே இருந்தது……. என்னவோ நடக்கப்போகின்றது! உள்ளுணர்வு அடித்துக்கூற புரியாமல் குழம்பிப்போனான்……. நேற்றிரவிலிருந்து பொட்டுத்தூக்கம் கூடயின்றி கொட்டக்கொட்ட முழித்திருந்தான்……….

ஆகர்ஷாவை தனித்து விட்டுச்செல்ல மனம் ஒப்பவில்லை…. அவளை பார்த்துக்கொண்டே சோபாவில் அமர்ந்தவன், எப்போது தூங்கினான் என்று கூட அவனுக்கு தெரிந்திருக்காது… அசதியில் அவளைப்பார்த்தவாறே கண்ணயர்ந்து விட்டான்……

நேற்று உணர்ந்த படபடப்பை இன்றும் உணர்ந்ததுபோல் உள்ளுணர்வு எதையோ உறுத்திக்கொண்டே இருக்க ஆகர்ஷாவின் கைகளை முன்பை விட அழுத்தமாய் பற்றியவன், ட்ரிப்ஸ் ஏறுவதற்காக ஊசியால் துளைத்தெடுத்திருந்த புறங்கையை ஆதுரத்துடன் வருடிக்கொடுத்தான்……

ஏதேதோ யோசனைகளை மூளையை ஆக்கிரமிக்க, புருவ சுழிப்புடன் கண்மூடி அமர்ந்தவனின் கைகளில் மிருதுவான ஸ்பரிசம்…………. உயிர்வரை தீண்டிச்சென்றது……………

வாழும் ஒவ்வொரு நொடியும் உனக்காக காத்திருந்தேன்,
முடிவு காத்திருப்பு நிறைவேறி தொலைந்தது கைசேர்ந்தது!



உருகும்................


[அடுத்த அத்தியாயத்தை பதிவு பண்ணிட்டேன்....... போன அத்தியாயத்துக்கு ஆதரவளித்த எல்லாருக்கும் ரொம்ப நன்றி நண்பர்களே....... தொடர்ந்து இதே ஆதரவை கொடுங்க...... இந்த பகுதிக்கும் உங்கள் அனைவரது கருத்துக்களையும் விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்...... கதை எப்பிடி போகுதுன்னு சொல்லுங்க டியர்ஸ்......]

"உயிர் உருகும் காதல்" - கருத்து திரி
 
Last edited:

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் 05


ஆகர்ஷாவின் கரத்தை தன் கைக்குள் புதைத்துக்கொண்டு, சேரில் சாய்ந்தமர்ந்து கண்மூடிக்கொண்டவனின் உள்ளங்கையில் ஏதோ அசைவு………. உயிர்வரை தீண்டிச்சென்ற உணர்வு…….

அவளிடம் வன்மையை அழுத்தமாய் காட்டி மென்மையை மிருதுவாய் காட்டி இருவேறு பரிணாமங்களில் அவளை தாங்கியவனின் மனது அவளுக்கு நினைவுகள் திரும்ப வேண்டும் என்றும் ஆசைகொண்டது, எங்கே நினைவு திரும்பினால் தன்னை நீங்கி சென்றிடுவாளோவென அஞ்சி நினைவு வரவே வேண்டாம் எனவும் ஏக்கம் கொண்டது.

குரங்கையொத்த மனதோ ஓரிடத்தில் நிலையாய் நில்லாது நாலாபுறமும் வழுக்கிக்கொண்டு சென்று தட்டுத்தடுமாற செய்ய நெஞ்சம் பதைபதைத்துப்போனது.

ஏற்கனவே ஒருமுறை நொறுங்கிப்போய் மீண்டு வந்துகொண்டிருந்த அவனிதயம் வரையறுக்க முடியாத உணர்வுகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்க, உடலும் உள்ளமும் நடுங்க மெதுவாய் விழிகளை மலர்த்தியவனின் பயம் சரியே என்பது போல்………………………. ஆழ் உறக்கத்திலிருந்த ஆகர்ஷாவின் மூடிய விழிகளுக்குள் கருமணிகள் அசைந்தாடின……. மரத்துப்போன நிலைதாண்டி விரல்கள் அசையமுற்பட்டது.

சுருக்கென வலி நெஞ்சத்தை பதம்பார்க்க, சம்மட்டியால் அடித்ததுபோன்று நிதர்சனம் புத்தியிலுறைக்க பதறிப்போய் அவளிடமிருந்து விலகி கைகளை பிரிக்க முயன்றான்….. முயன்றானே தவிர முடியவில்லை….. அவன் கரத்துக்குள் பத்திரமாய் இருந்த அவளின் கரங்கள் அரைகுறை அசைவுடன் அவன் விரல் பற்றியிருந்தது……

வழமைக்கு மாறாய் இதயம் தாளம்தப்பி துடிக்க நிற்க முடியாமல் தள்ளாடியவனின் நெஞ்சத்தின் ஓலமோ என்னவோ அவள் விரல்கள் மீண்டும் அசைய தன் கைகளை பிரித்தெடுத்துக் கொண்டவன் அவளிடமிருந்து சடுதியில் விலகி நின்றுகொண்டான்.

அடுத்து என்னசெய்வது என்பதைகூட உணரமுடியாமல் உணர்வுகள் மழுங்கிய நிலையில், பரிதவித்துபோய் உறைந்து நின்றவன்….. அவளின் முகபாவனை காட்டிய ஜாலத்தை பார்த்து ‘ஏதோ பயங்கர கனவொன்று காண்கிறாள்’ என்பதை ஊகித்துக்கொண்டவன் வெளியில் விரைந்தான்.

கண்மூடிக்கிடந்த ஆகர்ஷாவின் விழிகளுக்குள் ஏதேதோவெல்லாம் மின்னலொளிபோல் ஓடி மறைந்தது…..

சற்று நேரம் எவ்வித சத்தமும் இல்லை….. சுற்றிலும் அமைதி….. மூடியிருந்த கண்களை சிரமப்பட்டு பிரித்தெடுத்தாள்…….. கண்முன்னே வெளிச்சக்கீற்று… கண்கள் கூசியது… கசக்கிக்கொண்டு அரைக்கண்ணால் உற்றுப் பார்த்தாள்….

காரிருள் மேகம் போல் இதுவரை கற்பனையிலும் கண்டிராத இரு கருவுருவங்கள் அவள் முன்; கொடூரமாய் பற்களை காட்டியது. நிச்சயம் பயந்து தான் போனாள். இதயக்கூட்டின் வேகம் பல்கிப்பெருகின.

அவள் சுதாரிக்கும் முன்னமே அவர்கள் இருவரும் ஆளுக்கொரு கையை பற்றி அவளை இழுக்க, விறுவிறுத்துப் போனவளுக்கு கண்களை இருட்டிக் கொண்டுவந்தது.

அஞ்சி நடுங்கும் கோழிக்குஞ்சுபோல் பயத்தில் வெடவெடத்துக் கொண்டிருந்த உடலையும் மனதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாமல், பயம் கண்ணை மறைக்க… முன்னே நிற்பவர்களின் கொடூர தோற்றத்தை கண்கொண்டு பார்க்க முடியாமல் நடுக்கத்துடன் கண்களை இறுகமூடிக்கொண்டாள்….

“ய்யியா... ர்… ந்த்நீ… ங்ங்க்க…. ய்ய்யா… ர்ர்ர்… ந்தீநீங்… க்க்க்க… எ… ன்னை… வித்ட்… டிடு… ங்க…. ஏஏஏஎ… ஞ்ன்… னாஆஆ… வித்… டி… டுங்ங்… ங்க்க்க்கா…” இதழ்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து வார்த்தைளை வெளித்தள்ள முயல, நாகுழறி வார்த்தைகள் தாறுமாறாய் குழப்பியடித்துக்கொண்டு வெளிவந்தது…..

அவளை இழுத்துச்செல்வதிலே குறியாய் இருந்தவர்களுக்கு பாவப்பட்ட ஜீவனின் கதறல் கேட்கவேயில்லை…. மேலும்மேலும் முன்னேறியவர்கள் ஒருகட்டத்தில், ஒருகையால் அவள் கையை இறுகப்பற்றி மறுகையை அகலவிரிக்க வானில் பறக்க ஆரம்பித்தார்கள்…..

மேல்நோக்கிச் செல்லசெல்ல சுவாசக்காற்று தடைப்பட்டு மூச்சுக்கு ஏங்கித் தவித்தவள், வாய்வழியாக சுவாசத்தை உள்ளிழுக்க முயன்றாள்… அவர்கள் பிடித்திருந்த கைகள் ரெண்டினதும் கைச்சந்துகள் பேர்ந்திடும் போல் வலியை உண்டாக்க, ‘இப்படியே மரணத்தை தழுவிடமட்டோமா’ என வலியை தாளமாட்டா தவித்துத் திணறினாள்…

இரக்கமற்ற அரக்கர்கள் பரிதாபப்படவேயில்லை…. உயரப்பறந்தவர்கள் வானைமுட்டும் உயரத்தில் நின்றுகொண்டு, அவளை பார்த்து கோரமாய் சிரிக்க… விழிகளிரண்டும் பயத்தில் மூடியிருந்தபோதும் காதுமடல் வழியே உள்ளே நுழைந்த அகோரக்குரலின் ஆக்ரோஷத்தில் மிரண்டு, எச்சில் விழுங்கியவள் பயத்துடனே இமைசிமிட்டி கண்களை திறந்தாள்…..

அதற்காகத்தான் காத்திருந்தார்கள் போலும் இடியென இடியென அவர்கள் சிரித்த சிரிப்பில் அண்டமே ஓர்முறை ஆட்டம் கண்டதோவென பயந்துநடுங்கி ஒடுங்கிப்போனவளை கருணையேயின்றி ஒரே உதறலில் விசுக்கி தூரயெறிந்தனர்.

குடல் வாய் வாழியாகவே வரும்போல் உள்ளிருந்து எதுவோ புரட்ட… உச்சத்திலிருந்து தலைகீழாய் கீழ்நோக்கி விழுந்தவளின் உயிரும் உள்ளமும் நொடிக்கொருமுறை மரணவேதனையை அனுபவிக்க… உயிர் பிரியும் போன்ற வலியை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் கண்ணோரம் கண்ணீர் வழிந்து சிதறி விழ… மலையுச்சியிலிருந்து விழும் நீரருவி போல் உச்சியிலிருந்து வந்த வேகத்தில் பாறாங்கல்லில் மோதி விழுந்தவளின் தலை வெடித்துச் சிதறுவதுபோல் நொறுங்க… உடலோ அடியாழத்திலிருந்து வாரிச்சுருட்டிக் கொண்டு கிழம்பும் சுனாமிப்பேரலை போல் வேகமாய் தூக்கிபோட… மார்புக்கூடு உச்சபட்ச வேகத்தில் எம்பிக்குதித்தது… மூச்சுவிடக்கூட சிரமப்பட்டவளின் வாய் வானைப்போல் பிளக்க, வாயாலே மூச்சை உள்ளிழுத்து உடலுக்குள் அனுப்ப முயன்றாள்…

அபி வந்து அழைத்துமே வேலைகளை எல்லாம் கிடப்பில் போட்டவாறு அறையை நோக்கி அதிவேகத்தில் விரைந்து வந்தவர்கள், உள்ளே நுழைய அவர்கள் கண்ட காட்சி உயிரையே ஒருநொடி உறையச்செய்தது!....

உடல் தூக்கித்தூக்கிப்போட வாயை பிளந்து சுவாசித்துக் கொண்டிருந்தவளை அசைவற்று பார்த்ததென்னவோ சில கணங்கள்தான்……..

பானுமதியும் வெங்கடேஷும் நெஞ்சம் நெக்குருகிப்போக அவளருகில் விரைந்து இடதுபக்க தோள்சந்தை அழுத்திப்பிடிக்க, அவர்களுக்கு முன்னாக அவளருகில் பாய்ந்த அபி வலதுபக்க தோள்சந்தை அசையவிடாமல் அழுத்திக்கொண்டிருந்தான்……

மருத்துவர்கள் துரிதகதியில் ஆக்ஸிஜன் மாஸ்க்கை மூக்கில் பொருத்தி அவளை ஆசுவாசப்படுத்தி, பல்ஸ் அளவை பரிசோதித்து, இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பை பரிசோதித்தவர்களால் அவளை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை….

இரண்டும் ஏறுக்குமாறாய் கூடுவதும் குறைவதுமாக இருக்க அனைவரும் பெரும் பதட்டத்தில் இருந்தனர்…

பானுமதியும் வெங்கடேஷும் கடக்கும் ஒவ்வொரு நொடியையும் பயத்துடனும் படபடப்புடனும் கடக்க, அபி முற்றிலும் நிலைகுலைந்திருந்தான்….. மீண்டும் ஒரு இழப்பை சத்தியாமாக அவனால் ஜீரணிக்கவே முடியாது……

‘இதுவரைக்கும் நான் உன்கிட்ட என்ன கேட்டிருக்கேன்னு எனக்கு தெரியாது…. கேட்டு வாங்கனும்ன தேவை இதுவரைக்கும் எனக்கு வந்ததில்ல…. அம்மு போவான்னு தெரிஞ்சிருந்தா நான் உன்கிட்ட அப்போவே கேட்டிருப்பன் அவளை என்கிட்டருந்து பிரிச்சிடாதன்னு., ஆனா எதிர்பாராம நடந்த நிகழ்வுல இருந்து நான் மீண்டு வரதுக்கே ரொம்ப நாளாயிடிச்சு அப்பறம் எப்பிடி கேட்க முடியும்…. ஆனா இப்போ உன்கிட்ட கேக்கிறன்…. இவ அம்மு இல்லதான் ஆனா இப்போ இவளை நான் என்னோட அம்முவாதான் பார்க்கிறேன்…. இப்போ நான் உன்கிட்ட கேக்கறது ஒன்னே ஒன்னுதான்…. என் அம்முவை என்கிட்டிருந்து பிரிச்ச மாதிரி இவளையும் என்கிட்டிருந்து பிரிச்சிடாத…. I want… I want her… I won’t give her anyone else’.

வார்த்தையில் தெறித்த உறுதியை காட்டிலும் மனதில் தெறித்த உறுதியை அசைக்கமுடியாது போய்விட்டது… எஃகாய் இறுகிப்போனவனின் விழிகளில் எதேர்ச்சியாய் பெண்ணவளின் கன்றிப்போன கைச்சந்தும் விழியோரத்தில் வழிந்த கண்ணீரும் தென்பட பதறிப்போனவன், பரிதவிப்புடன் தடவிகொடுத்தான்….

“ஒன்னுயில்ல அம்மு… எதுக்கு அழற… ஜஸ்ட்… ஜஸ்ட் நத்திங்மா… நீ அழுவாத… நா..நான் உன்கூட இருக்கேன்ல… சோ டான்ட் வர்ரி… ஒக்கே… ஒன்னுயில்லம்மா… நீ ஸ்ட்ரைன் பண்ணிக்காத… கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுடா…”

அவள் கண்ணீரை துடைத்து…. கைச்சந்தை வருடி… பச்சை துணியால் மூடியிருந்த தலையை மிருதுவாய் தடவி…. நெஞ்சை நீவி… சுருங்கிய புருவங்களை பெருவிரலால் நீவி…. வேதனை படிந்த முகத்தை ஒற்றை விரலால் வருடி………. என தன்னை மறந்து செய்தவனின் செயல்கள் எல்லாம் அவள்மீது அவன்கொண்டே அன்பை அப்பட்டமாய் பிரதிபலித்தது….

அவளுக்கு வலித்திருக்குமோ என எண்ணியவனுக்கு அவளை விட அதிகமாய் வலிக்க, ஆறடி ஆண்மகன் வாழ்வில் இரண்டாம் முறையாய் துடித்துப்போனான்….

கலங்கிச்சிவந்த கண்களின் ஊடே அவள் முகம் பார்த்தவன், உள்ளம் துடிக்க ‘என்கிட்ட வந்திடு அம்மு…. உன் அபி உனக்காக காத்திருக்கேன்’ அழுத்தமாய் மனதோடு பேசியபடியே…. அவள் முன்நெற்றியில் முகம் புதைத்தான்.

பானுமதியும் வெங்கடேஷும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை….. பார்வை நிலைகுத்த ஒருவரையொருவர் பார்த்தவர்கள் அதிர்ந்து விழித்தனர்….

அவர்கள் மட்டுமில்லை அபியும் கூட அதிர்ந்துதான் போனான்… ‘தான் எப்படி இப்பிடியொரு காரியத்தை செய்தோம்….. என்னதான் அவள் அம்முவை போலிருந்தாலும் அவள் என் அம்மு இல்லையே….. நானா இப்படி செய்தேன் நினைவு திரும்பினால் விட்டுச்செல்பவள் மீதா நான்….. என்ன காரியம் செய்துவிட்டேன்…….’

தன் நிலையில் இன்றி அவள் முகத்தில் முகம் கவிழ்த்தவன், முன்நெற்றியில் அழுத்தமாய் தன் இதழ்களை ஒற்றியெடுத்த சிலநொடியிலே………. சரேலென்று தான் செய்துக்கொண்டிருக்கும் காரியம் நினைவுக்கு பதறிக்கொண்டு விலகியவன் விறுவிறுவென அறையை விட்டு வெளியேறியிருந்தான்…..

தான் செய்த காரியமே கண்முன் தோன்றி அலைகழிக்க நெற்றியில் அறைந்து கொண்டவன், தலையை உலுக்கிக்கொண்டே பின்தலையை அழுத்தமாய் கோதிக்கொடுத்தான்….

தவறு செய்தது போன்று தவித்தவனின் ஒருமனது ‘புல்ஷிட்’ தன்னையே நிந்திக்க…….. மறுமணமோ அவளில் உணர்ந்த மென்மையை மறுபடியும் உணர வேண்டும்போல் ஏக்கம் கொண்டது…… இருவிசித்திர உணர்வுகள் ஆட்டிப்படைக்க இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தான்.

வெளியில் இவன் திண்டாட…. உள்ளே இருந்தவள் அபியின் தொடுகையிலோ அல்லது அவனின் வேண்டுதலின் பேரிலோ, பல்ஸ் கட்டுக்குள் வர, ஹார்ட்பீட்டும் சராசரி அளவிற்கு வர…. தரையில் விழுந்த மீன் போல் அடர்த்தியான கண்ணிமைகள் ஒன்றையொன்று முத்தமிட்டுக்கொள்ள…. கருமணிகள் அசைந்தாட மிகுந்த சிரமத்துடன் மெதுமெதுவாக கண்களை திறந்தாள்.

மிக அருகில் மங்கலாய் சில உருவங்கள்…. தெளிவாய் பார்க்க முயற்சித்தும் முடியாமல் போக, சோர்ந்துபோய் அரைமயக்கத்தில் கண்களை சுழற்றியவளின் நோக்கம் புரிந்து,

“அம்மு… அம்மும்மா… ஸ்ட்ரைன் பண்ணிக்காதடா கொஞ்ச நேரம் தூங்கும்மா”, பானுமதி பரிவுடன் நெற்றியை வருடிக்கொடுக்க….. அவர் சொன்னது தெளிவாய் காதில் விழவில்லையோ என்னவோ, மீண்டும் கண்களை சுழற்றி தானிருக்கும் இடத்தை பார்க்க முயற்சித்தாள்….

“அம்மு ரிலாக்ஸ்டா….. கொஞ்ச நேரத்துக்கு கண்ணை மூடி தூங்க முயற்சி பண்ணு……” வெங்கடேஷ் பாசத்துடன் கூற, சில கணங்கள் அங்குமிங்கும் சுழன்ற கருமணிகள் ‘அம்முவா..’ முணுமுணுப்புடன் அசதியில் சொக்கிக்கொண்டது.

சிலமணிநேரங்களின் பின்…………………………….

மயக்கநிலை முற்றிலும் தெளியாவிட்டாலும் உடல் அசதியுடன் விழிகளால் சுற்றிலும் துழாவிக்கொண்டிருந்தவளுக்கு, அருகில் அரவம் கேட்க, தலைதிருப்பினாள்….. வலியில் முகம் கசங்கிப்போனது…..

“ஆர் யு ஓக்கே….”,

பார்வையை உயர்த்தி குரலுக்கு சொந்தக்காரரை பார்த்தவள், வெள்ளை கோர்ட்டும் கழுத்தில் தொங்கிய ஸ்டெதாஸ்கோப்பையும் கண்டு ‘மருத்துவரா’ என சந்தேகத்துடன் பார்த்தவள், அவர் புரியா பாஷையில் பேசியதுபோல் மலங்கமலங்க விழித்தாள்.

மகேஸ்வரனை இடைமறித்த வெங்கடேஷ் ஒருகணம் அவளை கூர்ந்துபார்த்தவர், “இப்போ உடம்புக்கு எப்பிடி இருக்கும்மா….” என்க,

குரலின் பரிட்சயமா என்னவோ ‘பரவாயில்லை’ எனும் விதமாய் மெதுவாக தலையை அசைத்தாள்.

வெங்கடேஷ் மகேஸ்வரனை பார்த்து தலையசைக்க அதை புரிந்துகொண்டவர், “உங்க பேர் என்ன…” அடுத்த கேள்வியை கேட்க,

அவளுக்கு விடைதெரியவில்லை போலும், செவ்விதழ்களை பிதுக்கிக் காட்டியவள்… சற்று நேரம் கண்களை மூடித்திறந்து புருவம் சுருங்க, “அ..அம்..மூ..” என்றாள்.

அதுவரை நேரம் அவளை பார்த்தபடியே சற்று தள்ளி நின்றிருந்த பானுமதி, அவள் ‘அம்மு’ என்றதும் கண்ணில் கண்ணீர்த்துளி வைரமாய் பளபளக்க… உள்ளம் பூரிக்க கண்ணீரை நாசுக்காய் துடைத்துக்கொண்டார்….

“உங்க பேர் அம்முன்னு யார் சொன்னாங்க….”

யார் சொன்னார்கள்…. யாரோ சொன்னதுபோல் இருந்ததே…. ஞாபகம்தான் வரவில்லை…. கண்களை சுருக்கி யோசிக்க முயன்றவள், எதுவும் நினைவுக்கு வராது பரிதாபமாய் உதடு பிதுக்கினாள்.

“இட்ஸ் ஓக்கே…. இட்ஸ் ஓக்கே…. டான்ட் தின்க் டூ லாங்…” அவளின் யோசனையை கண்டு அதை தடை செய்தவர், மீண்டும் அவள் திருதிருக்கவும் தான் ஆங்கிலத்தில் பேசியது நினைவு வர, மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டு;

“ரொம்ப நேரம் யோசிக்க வேணாம்மா… ப்ரீயா விடு… எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் வரும்…” என்க,

மெதுவாய் கண்களை மூடித்திறந்தாள்…..

“உங்க அப்பாம்மா யாரு…. எங்கயிருக்காங்கன்னு ஏதாவது தெரியுமா….”

மல்லாக்கப்படுத்து அரைக்கண்ணை திறந்திருந்தவளுக்கு அவரின் கேள்விக்கான பதில் தெரியவில்லை….. மிக முக்கியமாய் தான் யார் என்பதும் கூட அவள் நினைவுகளில் இருந்து அழிந்திருந்தது….. எங்கிருக்கிறோம்…. தன்னை சுற்றி யாரெல்லாம் இருக்கிறார்கள்….. எதுவும் அவளுக்கு தெரியவில்லை…. கண்ணை கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது….

முயன்று தான் யார் என்பதை கண்டுபிடிக்க நினைத்தவளுக்கு, மண்டைக்குள் சுர்ரென வலி ஊடுருவிப் பாய….. உணர்வற்றுக்கிடந்த வலது கரத்தை இயன்றமட்டும் முனைந்து தூக்கினாள்….. பலமிழந்த கைகளால் அவளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமுடியவில்லை….. தோய்ந்து சரிந்தது…..

அவளின் முயற்சியை கண்டு அவளை நெருங்கிய பானுமதி, “என்னடா அம்மு….. என்னாச்சு…. தலைவலிக்குதா…. நான் வேணா பிடிச்சு விடட்டுமா…..”, கேள்வியெழுப்பபடியே தலையை சுற்றியிருந்த பச்சை கவரை வலிக்காமல் அகற்றியவர், இதமாய் தலையை பிடித்துவிட துவங்கினார்.

அதை பார்த்தவளுக்கு ஏனென்றே அறியாமல் கண்கள் கரித்துக்கொண்டு வந்தது….

இதழ்கள் மெதுவாய் நடுங்க, “ந்த்நீ…ங்க்க... த்தான் ஏஎ…ன்ன் ஆஅம்…மாஅவ்வா?”

பல மாதங்கள் படுத்த படுக்கையாய் உணர்வற்றுக் கிடந்தவளுக்கு, உடலின் பாகங்கள் அனைத்தும் மரத்துப்போனது போன்றிருக்க… அவளால் வார்த்தைகளை கூட சரிவர உச்சரிக்க முடியவில்லை…. மிகுந்த சிரமமாக இருந்தது.

மகளைப் போன்றவளின் ஏக்கம் குழைந்த கேள்வியில் அடக்க முயன்றும் முடியாமல் மூக்கு விடைக்க, இமைசிமிட்டி சரிசெய்தவர் கண்களால் கணவனை அருகில் அழைத்தார்.

மனைவியின் செய்கையில் மென்னகையுடன் அவளருகில் வந்தவரை ஒருபார்வை பார்த்தவர், “ஆமாண்டா அம்மு…. நான்தான் உன் அம்மா…. இதோ இவர் தான் உங்கப்பா….”

‘அம்மா, அப்பா’ என்றதும் இனம்புரியா உணர்வில் பலநாள் ஏக்கம் தீர்வது போன்றிருந்தது…. அது ஏன் என்பது தான் அவளுக்கு புரியவில்லை.

முழுவதையும் மறந்து போனவளுக்கு அதுமட்டும் எப்படி நினைவில் இருக்கும்….. சிறுவயதிலே குடும்பப்பொறுப்பை தன் தலையில் சுமந்து அம்மா தங்கைகளுக்கு பார்த்து பார்த்து செய்ததில் அவள் தான் அவர்களுக்கு பாசத்தை கொடுக்கும்படி ஆயிற்று….. அவள் எதிர்பார்த்த தருணத்தில் அவர்களால் பாசத்தை காட்டமுடியாமல் போய்விட்டது.

அவர்களிருவரையும் ஆசையுடன் விழியுயர்த்தி பார்த்தவள் அவர்களை தொடுவதற்கு கைகளை உயர்த்த…. மகளின் செயலில் புன்னகை பூத்தவர்கள் அதை தனதாக்கிக் கொண்டனர்.

ஆம்….. தங்களை தொட்டுப்பார்க்க ஆவல் கொண்ட மகளின் கையை, அவர்கள் இருவரும் தங்கள் கைக்குள் புதைத்து பத்திரப்படுத்திக் கொண்டனர்.

அதில் வெளுத்துப்போன இதழ்கள் லேசாய் விரிய மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.

அவளுக்கு ஓய்வு தேவை என்பதால் தொந்தரவு செய்யாமல் வெங்கடேஷ் மகேஸ்வரனின் அறைக்குச் செல்ல, பானுமதி மகளை தனித்துவிட பயந்து அவளுக்கு துணையாக உள்ளே இருந்தார்.

மகேஸ்வரனின் அறைக்குள் நுழைந்த வெங்கடேஷ், “என்னாச்சு மகி…. நத்திங் சீரியஸ்?”

“இல்ல டாக்டர்…. இப்போதைக்கு ரிப்போர்ட்ஸ் எல்லாமே நார்மலா தான் இருக்கு அன்ட் நீங்களே பார்த்தீங்களே She doesn’t remember any old memories (பழைய நினைவுகள் அவள் நினைவில் இல்லை)”

அது அவருக்கும் புரிந்திருந்ததால் மௌனமாய் தலையசைத்து ஆமோதித்தவருக்கு, மனதுக்குள் ஆசுவாசமாய் இருந்தது… இனி அவள் அவர்களின் மகள்… அதை யாராலும் மாற்ற முடியாது… அவளின் பெற்றோரை பற்றி விசாரிக்க ஏற்பாடு செய்திருந்தவர், அவளுக்கு பழையவை நினைவில் இல்லை என்றதும் உடனே தன் நண்பனுக்கு அழைத்து இப்போதைக்கு விசாரிக்க தேவையில்லை என்றிருந்தார்…..

இத்தனைநாள் துன்பம் பனித்துளியாய் கரைந்ததுபோல் மனம் இலகுவாக முகத்தில் சந்தோஷப் புன்னகை பூக்க மகியின் அறையை விட்டு வெளியேறியவருக்கு அப்போதுதான் அபியின் நினைவு வர தலையை பிடித்துக்கொண்டவர், அவன் இப்போது எங்கிருப்பான் என்பதை கணித்தவராய் பானுமதியிடம் கூறிவிட்டு அவசரமாய் விரைந்தார்….

அவர் நினைத்ததுபோல் அவன் அங்கு தான் அமர்ந்திருந்தான்.

துன்பம் மொத்தத்தையும் குத்தகைக்கு எடுத்ததுபோல் முகம் வேதனையில் கசங்கி கலங்கிப்போய் இருந்தது.

அமைதியாய் சிலகணங்கள் நின்றவர் அவனருகில் சென்று தோள் தொட்டார்.

திடுக்கிட்டு திரும்பியவன் மாமா நின்றுகொண்டிருக்கவும், அவசரமாய் கண்ணோரத்தில் துளிர்த்திருந்த கண்ணீரை சுண்டிவிட்டவன் ‘ஆகர்ஷா’ என பெயரிடப்பட்டிருந்த தன் அம்முவின் கல்லறையை மனம் கனக்க பார்த்தவாறே எழுந்து கொண்டான்.

மருத்துவமனையில் ஆகர்ஷாவுக்கு நினைவு திரும்பிக்கொண்டிருப்பதையும் தன் கண்முன்னே அவள் வலியில் போராடுவதையும் தாங்கமுடியாமல் தவியாய் தவித்தவன், அவளை ஆறுதல்படுத்துவதற்காக முத்தம் கொடுத்தான்.

அதன்பின்னர் அவனுக்குமே புரிந்தது தான் என்ன மனநிலையில் இருக்கிறோம் என்பது… அம்முவுக்காக ஏங்கி தவித்தவனுக்கு அவளைப்போன்றே உருவ ஒத்துமை கொண்ட பெண்ணை கண்டதும் தன் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை… அவள்மேல் கொண்ட காதல் பாதியிலே சருகாய் கருகிப்போக, அவளைப்போலவே இருந்த இவள் மீதும் தனக்கு எதுவோ ஒரு உணர்வு தோன்றுகிறது….

இது நல்லதிற்கில்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவாய் புரிந்தபோதும் அதை கட்டுப்படுத்தத்தான் முடியவில்லை…… நினையாதே என்ற மனமோ அவள் நினைவிலே சுழன்று கொண்டிருக்க, அதற்குமேல் அவளைபார்த்தால் எங்கே தன்னையும் அறியாமல் தான் ஏதும் செய்திடுவோமோ என்று பயந்து தான் தன் மனதை ஒருநிலைப்படுத்த அம்முவின் கல்லறைக்கு வந்திருந்தான்.

“எதுக்கு இங்க வந்திருக்கன்னு நான் கேட்க மாட்டேன் அபி…. Because, I can understand your feelings (ஏனெனில், உன் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது)…..” தோளை தட்டிக்கொடுத்தார்.

அதில் விரக்தியாக புன்னகைத்தவன்…. ‘புரிஞ்சிக்க மட்டும்தான் மாமா முடியும்…. புரிஞ்சிக்கறது வேற அதை உணர்வது வேற…. ரெண்டுக்கும் இடையில் பெரும் இடைவெளியே இருக்கு…. வலியையும் வேதனையையும் அனுபவிக்கும் போதுதான் அதோட கஷ்டம் புரியும்…..’

அவர்களும் அதே துன்பத்தை அனுபவிக்கிறார்கள் என்பது புரிந்தாலும் காதல் வேறு பாசம் வேறல்லவா…. பெற்ற மகளை இழப்பது மிகப்பெரும் துன்பம் என்றால்…. உயிருக்குயிரான காதலியை இழப்பது அதுவும் ஒருவகையில் பெரும் துன்பம்தான்….

காதல் வலி உச்சம் தொட கதறியழும் மனதை அடக்க முடியாமல் தவிப்புடன் மனதில் எண்ணிக்கொண்டவன் அவரைப்பார்த்து சிறு சிரிப்பை உதிர்த்துவிட்டு,

“அம்…அம்முக்கு நினைவு திரும்பிடிச்சா…”

குரல் என்னவோ மிகச் சாதரணமாகத்தான் வெளிவந்தது….. ஆனால் உள்ளுக்குள் கீறிக்கீறிக் கிழிக்கும் கத்தியோ, அவர் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும் இதயத்தை ரணப்படுத்திக் கொண்டிருந்தது….. தாங்க முடியா தவிப்பு…. என்னவானதோ என்ற எண்ணத்தில் கைமுஷ்டிகள் இறுகின…. படபடப்பாக காத்திருந்தான்……

சந்தோஷ முறுவல் தானாக மலர…. முகங்கொள்ளா புன்னகையுடன் ‘ஆம்’ என தலையசைத்தவர்... சிறு சங்கடத்துடன், “பழசு எதுவும் ஞாபகத்தில் இல்லை….” என்றார்.

அந்நொடி என்னமாதிரியான உணர்வு தன்னை தாக்கிச்சென்றது என்பதை கூட அறிய முடியாதவனாய் இடது கையை மடக்கி வாயில் குத்தியவனின் உள்ளம் களிப்பில் விம்ம…. அக்கணம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவற்கு வார்த்தைகள் வராமல் திண்டாடித்தான் போனான்…. வானத்தை வசப்படுத்திய உணர்வு உள்ளெழ நெஞ்சுக்குள்ளோ தாளம்போல் மத்தாப்பு மலர அழுத்தமாய் இதயப்பகுதியை தடவிக்கொடுத்து, அண்ணார்ந்து வானத்தைப் பார்த்தவனின் இதழ்களில் சன்னப்புன்னகை பூத்து சடுதியில் மறைந்தும் போனது.

இருந்தும் உள்ளுக்குள் நமநமப்பு…..

“அவளோட பேரன்ட்ஸ் பத்தி ஏதாவது விசாரிச்சிங்களா மாமா…..”

அவனின் எதிர்பாராத கேள்வியில் அதிர்ந்தாலும் என்ன சொல்வதென தடுமாறிக் கொண்டே, “இப்போதைக்கு வேணாம் அபி….” என்றவர்,

அவன் ஏதோ சொல்லவரவும், “அவளுக்கு நினைவு திரும்பற வரைக்குமாவது எங்ககூட இருக்கட்டும் அபி…. அப்பறம் நானே அவளை பத்திரமா அவளோட வீட்டில சேர்த்திடுவேன்” என்க,

அதற்குமேல் எதுவும்சொல்லாமல் சிறு தலையசைப்பை பதிலாய் கொடுத்தவன், அம்முவின் கல்லறையை சிலகணங்கள் ஆழ்ந்து பார்த்துவிட்டு அவருடன் வெளியேறினான்….

“வீட்டுக்கா? ஹாஸ்பிடலுக்கா?” என்றார் அவனை கூர்ந்து பார்த்துக்கொண்டே,

இப்போதைக்கு மருத்துவமனை சென்று ஆகர்ஷாவை பார்க்கும் திராணி தனக்கு இல்லைவே இல்லையென்று நினைத்தாலும், ஒரேஒருமுறை அவளை கண்ணால் காண வேண்டும்போலும் தோன்ற…. மனதை கட்டுப்படுத்தி தொண்டையை செருமிக்கொண்டவன்,

“ஆபீஸ் போகணும் மாமா…. வொர்க்ஸ் எல்லாம் பென்டிங்ல இருக்கு….” என இடதுபக்க புருவத்தை கட்டைவிரலால் வருடிகொண்டே கூறியவன், அவரிடம் விடைபெற்று கிளம்பிவிட்டான்.

கம்பீரமாக சென்றுகொண்டிருக்கும் மருமகனையே சற்று நேரம் பார்த்திருந்த வெங்கடேஷ், ஒருபெருமூச்சுடன் தானும் மருத்துவமனை நோக்கி காரை செலுத்தினார்…..

காதல் கொண்டு உன்னிடம் நெருங்கிட ஆசைகொண்டேன்,
முடிவு நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாது தவிக்கிறேன்!


உருகும்..................

[அடுத்த அத்தியாயத்தை போட்டுட்டேன்....... போன அத்தியாயத்துக்கு ஆதரவு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...... தொடர்ந்து இதே ஆதரவை கொடுங்க..... ஏதும் பிழைகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்....... உங்களின் கருத்துகள் விமர்சனங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.............]

"உயிர் உருகும் காதல்" - கருத்து திரி
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் 06


கம்பீரமாக சென்றுகொண்டிருக்கும் மருமகனையே சற்று நேரம் பார்த்திருந்த வெங்கடேஷ், ஒருபெருமூச்சுடன் தானும் மருத்துவமனை நோக்கி காரை செலுத்தினார்…..

மருத்துவமனைக்கு சென்றவர் தெரபிஸ்டை அழைத்து மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளை கூறி அதற்கான ஏற்பாட்டை செய்வதாகவும் கூற அன்று முதல் ஆகர்ஷாவுக்கான பயிற்சிகள் ஆரம்பமாகின…

நாட்கள் அதன் போக்கிலே நில்லாமல் நகர முழுதாக இரண்டு வாரங்கள் ஓடியிருந்தது…. இன்றுடன் ஆகர்ஷாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வதாக இருக்க, பானுமதியும் வெங்கடேஷும் ஓரிடத்தில் நில்லாமல் பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தனர்…

அவர்களின் செயல்கள் வேடிக்கையாய் இருந்ததுபோலும்…. குதூகல புன்னகையுடன் பெட்டில் சாய்ந்தமர்ந்து குடும்பப்புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை கையில் வைத்து அவர்களின் அட்டகாசங்களையே கண்கொட்டாமல் பார்த்திருந்தாள் ஆகர்ஷா…..

இன்னமும் உடல் வாதைகள் இருந்துகொண்டேயிருக்க, முழுவதுமாக குணமாகவில்லை என்றாலும்கூட முன்பிருந்ததை காட்டிலும் சற்று முன்னேறியிருந்தாள்… உடலினுள் ஏற்பட்ட மரத்துப்போன தன்மை மாத்திரம் அவ்வப்போது தன் வேலையை காட்ட, சில சமயங்களில் இலகுவாக எதையும் செய்ய முடியாது தட்டுத்தடுமாறினாள்…..

ஒருநாளில் பாதி நேரம்தான் முழித்திருப்பாள்…. மீதியை அசதியில் தூங்கியே கழித்திடுவாள்.

முழித்திருக்கும் அந்த சில நொடிகளில் அவளின் அருகாமைக்கு ஏங்கி பானுமதியோ வெங்கடேஷோ அவளருகில் அமர்ந்துகொண்டு வாயோயாமல் எதையாவது பேசிக்கொண்டு இருப்பர்….

சில நேரங்களில் மனதுக்கு இதமான பாடல்கள் கேட்பது, கொஞ்ச நேரம் நடை பழகுவது, சிற்சில பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அதை செய்வதென பொழுது கரைய, இடையிடையே பானுமதி சத்தான ஆகாரங்களை அவளுக்கு கொடுப்பதற்கும் மறக்கவில்லை….

முழுமையாக அவர்களுடன் நெருங்காவிட்டாலும் அவர்களின் அருகாமை மனதுக்குள் மிகவும் ரசித்தாள்…. கிட்டாத எதுவோ கிட்டிய உணர்வு….

கண்முழிக்கும் போதெல்லாம் அவர்கள் இருக்கிறார்களா என விழிகளின் தேடலினூடே கண்விழிப்பாள்…. தூங்கும்போதும் அதே கதைதான்…. பானுமதியின் கைகளுக்குள் தன் கைகளை புதைத்துக்கொண்டு தான் துயில் கொள்வாள்….

பெறாத மகள் மீது….. பெற்ற மகளை காட்டிலும் பல மடங்கு அதிகமாய் பாசத்தை பொழிந்தவர்கள் கண்ணின் கருமணி போல் அவளை அரவணைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

“என்னங்க நீங்க…. நான்தான் திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இருக்கேன்ல…. நீங்க எதுக்கு இதெல்லாம் பண்றீங்க…. போங்க… போய் அம்முக்கு ஜூஸ் குடுங்க…. பாவம் என்பொண்ணு ரொம்ப நேரமா காஞ்சுபோய் உக்கார்ந்திருக்கா…..”

வீட்டுக்கு செல்வதால் பொருட்களை ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்த பானுமதி கணவனிடம் முறுக்கிக்கொள்ள, அதை கேட்டிருந்தவளுக்கு அன்னையின் செயலில் கட்டுப்படுத்தியும் முடியாமல் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது….

சற்றுநேரத்தின் முன்புதான் வேண்டாமென அவள் மன்றாடியும் மறுக்க மறுக்க ஜுஸை புகட்டியிருந்தார்…. இப்போது மறுபடியுமா? என மனதுக்குள் அலறியபோதும் அவர் தன்மேல் கொண்டுள்ள பாசத்தை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போனாள்….

அதரங்கள் சிரிப்பில் மலர கன்னம் குழிய சிரித்தவளின் தலை வருடினார் வெங்கடேஷ்.

“அம்மு சீக்கிரம் ஜூஸை குடிடா…. இல்ல உன் அம்மா என்னை அடிபின்னாலும் பின்னிடுவா” மெல்லிய குரலில் ரகசியம் பேச ‘க்ளுக்’ என சலங்கையாய் சிரித்தவளின் சிரிப்பொலி அவர்கள் இதயத்தை இதமாய் தீண்டிச்சென்றது.

தாங்கள் மருத்துவர்கள் என்பதை கூட மறந்து மழலைகளாய் மாறிப்போயினர்.

“நீ எப்பவும் இப்பிடி சிரிச்சிக்கிட்டே இருக்கனும் அம்மு…” வேண்டாமென மறுத்துவளை கொஞ்சிக்கெஞ்சி ஜூஸை புகட்டியவர் உதட்டில் படிந்த ஈரத்தை துணியால் துடைத்த படி கூறினார்.

தகப்பனின் நெகிழ்வான குரலில் இயல்பான தாய்மை உணர்வு பல்கிப்பெருக, வாத்சல்யத்துடன் தலையுயர்த்தி அவர் முகம் பார்த்தாள்.

“நீங்க… இர்ருக்கும்… ப்போது என்னக்கு எந்த்த… க்கஷ்ட்டமும்… வ்வராதுப்பா”

இப்போதுதான் பேசப்பழகிக் கொண்டிருந்ததால் வார்த்தைகள் இடறினாலும் முயற்சித்து தன் மனதிலுள்ளதை பேசியவளுக்கு, நீண்ட நேரம் பேசியதில் தலைவலிப்பது போன்றிருக்க அவர் தோள் சாய்ந்துகொண்டாள்.

“ரொம்ப பேசுறது கஷ்டமாத்தான் இருக்கும் அம்மு…. போக போக சரியாகிடும்…. அதுக்காக பேசாமலே இருக்கக்கூடாது புரியுதா…. பேச பேசத்தான் அது குணமாகும்….” மருத்துவராய் ஆலோசனை கூற, மலர்ந்த புன்சிரிப்பு பதிலாய் வந்தது…..

மகளின் மலர் முகத்தை வாஞ்சையுடன் பார்த்தவர், “வேற ஆல்பம் எடுத்து வரட்டுமா அம்மு” என்க ஆசையுடன் தலையாட்டினாள்…

தற்போதைய பொழுதுபோக்குகளில் இதுவும் ஒன்று…. ஒவ்வொரு புகைப்படங்களையும் பார்க்கும்போது அவளுள் சந்தோஷம் குமிழுடும்… இதுதான் தானா? ஆச்சர்யமும் அடிக்கடி வருவதுண்டு…. சிலசமயங்களில் உள்ளத்து உணர்வுகளின் வெளிப்பாடு நெருடும்போது முகம் சுருங்கி மீளும்…

அப்போதெல்லாம் பானுமதி வெங்கடேஷுக்கு இதயத்துக்குள் ஆயிரம் கலவையொலி இசைத்து பீதியை உண்டாக்க படபடப்புடன் அவள் முகம் பார்ப்பவர்கள் அது இயல்புக்கு திரும்பும்போது தான் ஆசுவாசமாய் மூச்சு விடுவார்கள்….

உள்ளுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது…. எப்போது நினைவுகள் முழுவதும் திரும்புமோ…. எப்போது தங்களை விட்டு செல்வாளோ என்ற பயம் நாளுக்குநாள் அதிகமாக இன்னம் இன்னம் பாசத்தை கொட்டிக்கவிழ்த்தனர்…. அவள் தங்களை விட்டுச்செல்லக் கூடாதே என்ற உள்ளத்து தவிப்பின் பீதியில்…

மகளின் தலையாட்டலை வெகுவாய் ரசித்த பானுமதி பையில் இருந்த ஆல்பத்தை கணவனிடம் நீட்ட, அதை மகளிடம் கொடுத்தவர் ஆர்வத்துடன் அவள் பார்ப்பதை ஆசையுடன் அவர்கள் பார்த்திருந்தனர்…

சின்ன சின்ன கலாட்டாவினூடே அனைத்தையும் முடித்த பானுமதி, “அம்மு அதை எடுத்து வைடா வீட்டுக்கு போய் மீதியை பார்த்துக்கலாம்” அவள் முடியை கோதியபடி கூறியவர், அதை வாங்கி பையினுள் வைத்து கணவரிடம் நீட்டி, “காரில் வைங்க நான் அம்முவை கூட்டிட்டு வறேன்” என்க,

“நான் மகியை பார்த்திட்டு வறேன்…. நீங்க கார்ல வெயிட் பண்ணுங்க…” என்றவர் மகேஸ்வரனின் அறைக்கு சென்றார்.

அவர்களின் டிரைவரிடம் சிலவற்றை ஏற்கனவே கொடுத்தனுப்பி விட்டதால் எஞ்சிய ஒன்றிரண்டு பையை கையிலெடுத்துக்கொண்டவர், “அம்மு பார்த்து இறங்கும்மா…” அவளின் கைகளை கெட்டியாய் பிடித்துக்கொண்டார்.

அன்னையின் கையை பிடித்து மெல்லமாய் கட்டிலிலிருந்து இறங்கியவள் அருகிலிருந்த ஸ்டிக்கை பற்றிக்கொண்டு நடக்க இருவரும் ஒருவழியாய் மருத்துவமனை வாசம் முடிந்து வெளியேறினர்.

“என்னாச்சு மகி எதுக்கு அவசரமா வரச்சொன்ன….” கேள்வியெழுப்பியபடியே வெங்கடேஷ் அறைக்குள் நுழைய, அவரின் படபடப்பில் தவறு புரிந்தவன் போல் முழித்தவன் “நத்திங் டு வர்ரீ அபௌட் (nothing to worry about)…. நீங்க டென்ஷன் ஆகாதீங்க” தாடையை தடவிக்கொண்டான்

“டெஸ்ட் ரிப்போர்ட்ஸ் எல்லாம் இப்போதான் வந்தது…. எதுவும் ப்ரோப்லம் இல்லை பட் அவங்களுக்கு என்னாச்சுன்னு அவங்களா ரிமெம்பர் பண்ற வரைக்கும், நீங்களா எதுவும் அவங்கிட்ட சொல்லி டென்சன் ஆக்கிடாதீங்க….. அது அவங்களோட உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிடும் அண்ட் ஒன் மோர் தின்க் அவங்களை ஸ்ட்ரைன் பண்ணிக்க விடாதீங்க…”

“வேற ஏதாச்சும் இருக்க மகி…” சந்தேகமாய் பார்க்க அவசரமாய் தலையாட்டி மறுத்துவன் “இப்போதைக்கு எதுவும் இல்ல டாக்டர்…” என்க அதன் பின்னரே அங்கிருந்து வெளியேறினார்.

ஹோட்டல் லீலா பாலஸில் அமர்ந்திருந்த அபிக்கு எப்போதடா கிளம்புவோம் என சலிப்புடன் பெரும்பாடுபட்டு முகத்தில் அதை கட்டாமல் கடமைக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தவனுக்கு நேரம் செல்லச்செல்ல பொறுமை காற்றில் கரைந்துவிடும் போலிருந்தது.

இன்றைய முக்கியமான மீட்டிங்கை குருமூர்த்தி தான் அட்டென்ட் செய்வதாக இருந்தது… ஆனால் எதிர்பாராத விதமாக குருமூர்த்திக்கு டெல்லி செல்ல வேண்டிய சூழ்நிலை வரவும் மகனிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு அவர் பறந்துவிட்டார்.

அவனுக்கு வரவே விருப்பமில்லை… காரணம் இன்று ஆகர்ஷாவை வீட்டிக்கு அழைத்து செல்கிறார்கள். அன்று மருத்துவமனையில் பார்த்ததுதான்…. இந்த இரண்டு வாரத்தில் அவனால் அவளை பார்க்கவே முடியவில்லை… வேலைகள் ஒருபக்கம் ஆக்கிரமித்துக் கொண்டதென்றால் இவனுக்கு அவள் முகம் பார்க்கவே பெரும் தயக்கமாய் இருந்தது.

முத்தம் கொடுத்ததென்னவோ அவள் சுய நினைவை இழந்து கொண்டிருந்த வேளையில் தான்… இருந்தும் சங்கடமாக இருக்க அவளை பார்ப்பதை தவிர்த்து வந்தவன், இன்று அவள் வீட்டுக்கு கிளம்புவதால் அவளை பார்க்க தயாராகிக்கொண்டிருந்தான்.

அதற்குள் அவன் தந்தை மீட்டிங்கை அட்டென்ட் செய்யும்படி கூறிவிட்டு கிளம்ப, மறுக்கமுடியாமல் அவர்களை வரவேற்று உபசரித்து பேசத்தொடங்கியதென்னவோ இவன்தான்… ஆனால் முடிக்கும் எண்ணமேயின்றி அவர்கள் வளவளத்துக் கொண்டிருக்க இப்போது ‘ஏன்டா வந்தோம்’ என்ற நிலைக்கு ஆளாகியிருந்தான்.

அவ்வளவு சுலபத்தில் அவர்களிடம் முகம் முறிக்கவும் இயலாது என்பதால்தான் அவன் அமைதியாக இருப்பது….. வெளிநாட்டு ஒப்பந்தம்… அதை செய்து கொடுத்தால் தங்கள் நிறுவனத்தின் தரம் மென்மேலும் பெருகும் என்ற காரணத்திற்காகவும் இல்லாத பொறுமையை இழுத்துப்பிடித்துக் கொண்டிருந்தான்.

ஒருவழியாய் அவர்கள் போனால் போகட்டுமென்று பேச்சை நிறுத்தி கிளம்பத் தயாராக, ஆசுவாசப்பட்டவன் ஏசியின் சில்லென்று வீசிய காற்றில் முன்நெற்றியில் சிலுப்பிக்கொண்டிருந்த முடியை ஸ்டைலாக கோதிக் கொடுத்தான்.

வெளிநாட்டு நிறுவனத்துடன் வந்திருந்த வெள்ளைக்கார பெண்ணொருத்தி, தமிழ் மகனின் அழகில் பெரிதும் கவரப்பட்டு அவனை நோக்கி மையல் பார்வை வீச…. அது கவனத்தில் பட்டாலும் கருத்தில் கொள்ளவில்லை.

அவனின் கடைக்கண் பார்வைக்காக தவமிருந்தவள், அவன் திரும்பியும் பார்க்காததில் வெள்ளை நிறத்தினளின் முகம் கோபத்தில் சுறுசுறுவென சிவந்துதான் போனது… அதையும் கண்டும் காணமல் அவர்களுக்கு விடைகொடுத்து அனுப்ப முயன்றவனின் அருகில் வந்தவள், உடல் உரசும் நெருக்கத்தில்,

“ஹே ஹேண்ட்சம்…. யு லுக் சோ செக்ஸி” என மயக்கத்துடன் கூறினாள்.

அவளை ஓர் பார்வை பார்த்தவன் சிறு மென்னகையுடன் அங்கிருந்து அகன்றான்… அவன் செயலில் எள்ளும் கொள்ளும் வெடிக்க பல்லை கடித்தவளுக்கு அவனின் மனவுறுதியை கண்டு ஆச்சரியமாகவும் இருந்தது. தன்னைப்போன்ற அழகியின் கடைக்கண் பார்வைக்காக பலர் தவமிருக்க, இவன் தன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்காததை எண்ணி உள்ளம் வெதும்பினாலும் அவனைப்போன்ற ஆண்மகனை தான் இனி வாழ்வில் சந்திப்போமாவென ஏக்கமும் கொண்டாள்….

அனைவரும் கிளம்பவே அவனை ஏக்கமாய் பார்த்தவாறே கிளம்பி சென்றாள் அந்த வெள்ளைகாரி……..

அவர்கள் கிளம்பியதுதான் தாமதம் தன் BMW வை உயிர்ப்பித்தவன் சென்னை ட்ராபிக்கிலும் மின்னலென சாலையில் செலுத்த அடுத்த அரைமணி நேரத்திலே மருத்துவமனையை அடைந்திருந்தான்.

பானுமதியின் உதவியுடன் எட்டிஇடறி வந்துகொண்டிருந்த ஆகர்ஷாவின் முகத்தில் எப்போதும் போல் வாடாபுன்னகை குடிகொள்ள பார்க்கவே அத்தனை அம்சமாய் இருந்தது. ஒருவழியாய் வெளிவாயிலை அவர்கள் அடைவதற்கும் நர்ஸ் பானுமதியை அழைப்பதற்கும் சரியாய் இருக்க, அனுமதிக்கு வேண்டி மகளின் திருமுகத்தை பார்த்தார்.

“அம்மு முக்கியமான கேஸ் விஷயமா பேசணும் போல அவசரமா வரச்சொல்றாங்க… நான் வரவரைக்கும் கார்ல வெயிட் பண்றியாடா இல்ல என்கூடவே உள்ள வருகிறாயாடா….”

இத்தனைநாள் மருந்துநெடிக்குள் இருந்ததாலோ என்னவோ மீண்டும் அங்கு செல்ல விருப்பமில்லாமல் அதை முகத்தில் அப்பிடியே காட்டியவள்… ‘நான் வெளியில் காற்றாட நிற்கிறேன்’ என சைகை செய்தாள்.

தலையாட்டி ஆமோதித்தவர், ‘ஜாக்கிரதை’ என்றவாறே உள்ளே விரைய… துணைக்கு வரமுயன்ற நர்ஸை தலையசைத்து மறுத்தவள் கால்களை ஊன்றி கார் பார்கிங் நோக்கி நடையிட்டாள்.

பல வண்ண கார்கள் வரிசையாய் நிற்க காணாததை கண்டதுபோல் வதனம் குதூகலிக்க… ஓங்கி வளர்ந்த மரங்களினூடே ஒளியைவாரியிறைத்த ஆதவனின் கதிர்வீச்சுகள் வெள்ளை நிற சுடியில் வெண்தாமரையென நின்றவளின் மேனியின் பட்டுத்தெறித்து பொன்னிறமாய் மின்னியது….

வெண் நிலா முகயழகியின் மீது கசிந்து படர்ந்த பொற்கிரணங்கள் அஞ்சனம் பூசிய வேல்விழியில் பட்டுத்தெறித்ததில் விழிகள் நர்த்தனமடிக்க முகத்தை திருப்பிக்கொண்டவளின் கால்கள் இடறி தடம்புரள சடுதியில் நெஞ்சத்தை மஞ்சமாக்கி வலிமையான கரங்களால் பேதையாளின் மெல்லிடையில் அழுத்தம் கொடுத்து தாங்கிக்கொண்டான் அபிநந்தன்

அம்முவின் நந்து…
ஆகர்ஷாவாகிய மதுராவுக்கு யாரோ???


பயம் மேலேழுந்ததில் வதனம் நடுங்க…. நெஞ்சம் கிடுகிடுத்தது….

காதல் பேசும் புருவங்கள் படபடப்பில் நெளிந்திருக்க… கவிதை பேசும் விழிகளோ பயத்தில் ஒன்றையொன்றை கவ்விக்கொள்ள…. எதுவும் பேசா அதரங்கள் வெடவெடப்பில் நடுங்கியது….

எழிலோவியமிக்க மனங்கவர்ந்தவளின் முகவனப்பை கண்களால் அலசி ஆராய்ந்துகொண்டிருந்த அபி தன்னை மறந்து அழகுப்பதுமையின் மலர் மேனியின் மென்மை உணர்ந்து அவள் முகம் நோக்கி குனிய, உள்ளுணர்வு உணர்த்தியதோ என்னவோ சடாரென விழி மலர்த்தினாள் ஆகர்ஷா….

விழுந்துவிடுவோம் என்ற பயத்தில் உடல் நடுங்க சரிந்தவள் நீண்ட நேரமாகியும் ஏதும் நிகழாது போனதில் விழிகளை மலர்த்த, அவள் முன் மாயக்கண்ணனின் மனதை வருடும் சிரிப்புடன் நின்றிருந்தவனை அதுவும் இத்தனை நாட்களாய் புகைப்படத்தில் பார்த்தவனை நேரில் பார்த்ததும் அரும்புபோல் அதரங்கள் நெகிழ்ந்ததில் முத்துமூரல்கள் பளீரிட புன்னகைத்தவளின், கன்னக்குழியில் நிலைதடுமாறி தடுக்கி விழுந்தான் அவளுக்காய் உருகி காத்திருக்கும் ஆறடி ஆண்மகன்….

அந்தநேரம் தான் எடுத்திருந்த முடிவு அவன் நினைவடுக்கிலிருந்து மறைந்தே போனது…. இரண்டு வாரங்களாக அவளை பார்க்கமுடியாமல் திண்டாடியவனின் மனம் பல நாட்களின்பின் கண்டவளின் அழகை சொட்டு சொட்டாய் ரசிக்க அதில் விரும்பியே தொலைந்துபோனான்…

சில நாட்களாக வேலை வேலையென்று அதிலே மூழ்கிப்போய் அசதியில் களைத்துப் போயிருந்தவன் பாவையின் முகம் பார்த்ததில் களைப்பெல்லாம் காற்றில் பறக்க உல்லாசம் ஊற்றெடுக்க அவன் முகமுமே புன்சிரிப்பில் மலர்ந்து விகசித்தது.

அவனில் பார்வை நிலைக்க ‘நந்து அத்தான்’ ஐந்தரையடி பட்டாம்பூச்சியின் செப்பு இதழ்கள் ‘பச்சக்’ ‘பச்சக்’ என முத்தமிட்டு முணுமுணுத்தது….

அவளிதழ்கள் பிரிந்து வந்த வார்த்தைகளில் நெஞ்சம் உருகிக்கரைய அவனிதயம் அவள் காலடியில் வீழ்ந்தது.

“நண்டத்தாஆஆஆன் இப்போ வருவியா மாட்டியா…..” தொண்டை தண்ணி வத்த கத்தும் அழகுப்பதுமையின் குரலில் தெறிக்கும் சிடுசிடுப்புக்கு முற்றிலும் மாறாய் அவளிதழ்களும் அடர்ந்த கண்ணிமைகளும் குறும்பில் துடித்துக்கொண்டிருக்கும்…..

“அம்மு… ப்ளீஸ்டா… ப்ளீஸ் ப்ளீஸ்ஸ்ஸ் நம்ம வேணா நாளைக்கு போலாமா…..” அவளை கடிந்து பேச முடியாமல் காதல் மனம் துவள கொஞ்சும் குரலில் காதை பிடிப்பதும், அதில் செல்லக்கோபம் கொண்டு அவனவள் அவனிடம் முறுக்கிகொள்வதும் கண்ணோரத்தில் படமாய் உருவெடுக்க தன்னில் சாய்ந்திருந்தவளின் மெல்லிடையை வெகுவாய் இறுக்கிக்கொண்டான்

ஆடவனின் கரங்கள் தன் மெல்லிடையில் தவழ்வதில் கூச்சம் கொண்டவள் நெளிந்து அவனிடமிருந்து விலகிக்கொள்ள அவன் முகம் சுருங்கிப்போனது…. சடுதியில் அவள் நிலை புத்தியில் உறைக்க முகச்சுணுக்கத்தை மறைத்து மென்னகையை படரவிட்டான்.

அதற்குள் பானுமதியும் வெங்கடேஷும் அங்கு வந்தவர்கள், சில தினங்களாய் கண்ணில் தென்படாத மருமகனை திடீரென கண்டதும் முகம் மலர “எப்போ வந்த அபி….” என்றனர் ஒருமித்த குரலில்.

அதில் கவனம் கலைய, “இ…இப்போத்தான் வந்தேன்…. வீட்டுக்கு கிளம்பலாமா….” என்றான் குரல் தடுமாறாமல்.

சரியென தலையசைத்தவர்கள் காரை கிளப்ப… ஒருநொடி தயங்கிய அபி, “மாமா… அம்மு என்கூட… அதுவந்து என்னோட கார்ல வரட்டுமா….” என்றான்.

வெகுசில சமயங்களில் மட்டுமே அவனிடம் எட்டிப்பார்க்கும் தயக்கம் வெளிப்படையாக தென்பட்டது. ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டவர்கள், மகளின் முகம் நோக்க அவளுக்கும் என்ன தோன்றியதோ… அவன் முகம் பார்த்தவள் சம்மதமாய் தலையசைத்தாள்.

அதில் முகமெல்லாம் ஹன்ரட் வாட்ஸ் பல்பு போல் பிரகாசமாய் ஜொலிக்க, அத்தை மாமாவுக்கு தலையாட்டி விடைகொடுத்தவன்… வரம் பெற்ற பக்தனாய் பரவசத்துடன் “வா அம்மு…” என்று அவள் ஏறுவதற்காய் காரின் கதவை திறந்துவிட்டான்….

புன்முறுவலுடன் தெத்தி தெத்தி நடைபயின்றவள் அமர்வதற்கு சிரமப்பட சில கணங்கள் தயங்கி அவள் எதிர்பாராதவிதமாக கைகளில் ‘விசுக்கென’ ஏந்தியவன் மலர்ப்பொதிகையாய் இருக்கையில் சாய்த்தான்.

அவனின் செயலில் பெண்ணவள் விக்கித்து விதிர்விதிர்த்துப் போய் அவன்முகம் காண…. முகத்தில் எதையும் காட்டாமல் தன்பக்கமிருந்த கதவை திறந்து ஏறியமர்ந்தவன் அவளுடனான தனிமையை ரசித்து தன்னுள் சேமிக்கவேண்டி மிதமான வேகத்தில் காரை செலுத்தினான்.

இருவருக்குமிடையில் பேச்சில்லா அமைதி நிலவ…. அதை மனதார சபித்துக்கொண்டே ஓரக்கண்ணால் அவள் முகம் பார்த்தவன், மௌனம் கலைக்க வேண்டி ரேடியோவில் பாடலை ஒலிக்கச்செய்தான்….


“தீராத தாகம் தீயாகும் போது
காதல்தான் காப்பாற்றுமா….
நீயாக தானே நானாகிப் போனேன்
காதல்தான் ஏமாற்றுமா….
தோளோடு தோள் சாயும் நேரத்தில்
நம் காதல் இரவும்பகலும் உறங்கிடுமா….
நீ இல்லா தூரத்தை எப்போதும் என் பாதம்
தனியாய் தனியாய் கடந்திடுமா…..
ஆதாமும் ஏவாளும் பேசாத வார்த்தை
காதோடு நாம் பேசலாம்….
பூவோடு தேனாய் நீரோடு மீனாய்

ஒன்றாக நாம் வாழலாம்……”


உயிரை ஊனுருக வைத்து செவியோடு நெஞ்சுக்குள்ளே தீண்டிச்சென்ற பாடலில் கரைந்து…. தாய் வழியாக அத்தான் என அடையாளப்படுத்தபட்ட நந்து அத்தானின் முகத்தை நன்றியுடன் ஏறிட்டவள், அதில் பொங்கி வழிந்த ஒருவிதமான பாவத்தில்…… நெஞ்சுக்குள் அதிர்வு உண்டாக பார்வை திருப்பி வேடிக்கை பார்க்கும் சாக்கில் தன் உள்ளத்து உணர்வுகளை வகையறாக்க முயன்றாள்.

வதனத்தில் முத்து முத்தாய் வேர்வை துளிகள் அரும்ப…. இதயத்துக்குள் தடதடக்கும் ஓசைக்கு தடைவிதிக்கும் திராணியின்றி அலைக்கழிப்புடன் இருக்கையில் நன்கு சாய்ந்தவளுக்கு மனதின் உளைச்சல் காரணமாய் கண்கள் சொக்க தூங்கிப்போனாள்…

துயிலில் ஆழ்ந்த தன் மலர்ப்பொதுகையின் மதிமலர் வதனத்தை விழிகளால் வருடி…. ஒற்றைகையால் அவளின் தளிர் விரல்களை தன்னுள் அடக்கிக்கொண்டவனுக்குள் உற்சாகம் கரைபுரண்டோட தன்னையும் மீறி சீழ்க்கை அடித்தவன் அவளில் அசைவு தென்படவும் பதறிப்போய் தனக்குள் இருந்த அவளின் விரல்களை அழுத்தமாய் வருடிக்கொடுத்தான்….. அசைவு விடைபெற்று தூக்கம் ஆட்கொண்டது அவனின் அழகு சுந்தரிப்பெண்ணை.

பெண்பாவையே உந்தன்வசம் மயங்கி நின்றேன்!
உந்தன் தடுமாற்றத்திலோ மனமுடைந்து நின்றேன்..



உருகும்......

[அடுத்த அத்தியாயத்தை பதிவு பண்ணிட்டேன்.... போன பகுதிக்கு ஆதரவளித்த எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி..... கதை எப்பிடி போகுதுன்னு சொல்லுங்க பிரெண்ட்ஸ்..... எப்பிடியிருந்தாலும் சொல்லுங்க பிழைகள் திருத்திக்க முயற்சி செய்கிறேன்.... உப்புசப்பில்லாமல் ஏனோதானோன்னு போயிட்டு இருக்கின்னு நினைக்க வேணாம்.... திடீர்னு ஏதாவது திருப்பம் வரலாம்.... இந்த பகுதிக்கு உங்கள் கருத்துகள் விமர்சங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.....]


"உயிர் உருகும் காதல்" - கருத்து திரி
 
Last edited:

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உயிர் 07


கடல்காற்றுடன் மிதவெயிலும் சேர்ந்து இதமாய் வீச BMWவில் மன்னவனையும் அவன் மனங்கவர்ந்தவளையும் சுமந்துவந்த கார் கடற்கரை சாலையில் பல ஏக்கர் நிலப்பரப்பில் நடுநாயகமாய் அமைந்திருந்த மாளிகையின் முன்பு சற்று தயங்க…. இவர்களுக்காகவே காத்திருந்ததுபோல் கேட்டினருகில் நின்ற வாட்ச்மேன் கதவை அகல திறந்துவிட்டான்.

அண்ணார்ந்து பார்க்க முடியாதளவு எழுப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவர் அரணாய் நிற்க… விரிய திறந்துவிடப்பட்டிருந்த கேட்டின் வழிய ஒரே சமயத்தில் நான்கு கார்கள் நுழையலாம் போன்று அமைந்திருந்தது விசாலமான நுழைவுவாயில்…

கேட்டிலிருந்து ஆரம்பித்த நடைபாதை முழுவதும் உயர்தர சலவைக்கற்கள் பதிக்கப்பட்டிருக்க, அதன் இருபுறமும் உயர் மரங்களும் உயர்சாதி தாவரங்களும் செழித்து வளர்ந்து பூத்துக்குலுங்கி மனம் வருடும் கானகமாய் காட்சியளித்தது.

அதற்கிடையில் மாயக்கண்ணனின் பொற்சிலை வடித்து நீரில் முக்குளித்து இருப்பதுபோல் தடாகம் கண்களைக் கொள்ளைகொள்ள… அதனுள்ளே சுதந்திரமாய் நீந்தி விளையாடிக்கொண்டிருந்தன அன்னப்பறவைகள். கானகத்தினிடையே பலவர்ண பறவைகள் உல்லாசமாய் சுற்றித்திரிய, அவற்றுடன் போட்டி போட்டு புற்தரையில் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்தது பஞ்சுப்பொதிகையாய் முயல் குட்டிகள்.

நுழைவுவாயில் வழியே உயர்தர சலவைக்கற்கள் பதித்த நடைபடையில் கார் வழுக்கிக்கொண்டு சென்று போர்டிகோவில் ஓய்வாய் நிற்க, தன்னருகில் அழகுப்பெட்டகமாய் துயில் கொண்டிருந்தவளை ரசனையுடன் பார்த்தவன், தலை ஒருபக்கம் சரிந்திருந்ததில் அவிழ்த்து விட்டிருந்த கார்மேக கூந்தல் முகம் மறைக்க ஓவியமாய் அவளிருந்த தோற்றம் நெஞ்சில் தடம்பதிய, சற்று தயக்கத்துடனே அவளருகில் நெருங்கி ஒற்றைவிரலால் பட்டும்படாமலும் முகம் போர்த்திய கூந்தலை நூதனமாய் காதின் புறம் சொருகிவிட்டான்.

ஆடவனின் விரல் வளைந்து நெளிந்து ஊர்ந்து பட்டும்படாமலும் தன்னை தீண்டியதில் கன்னக்கதுப்பு குறுகுறுக்க உள்ளுக்குள் எதுவோ சர்ரென ஓடிமறைய மெல்லமாய் உடலில் பரவிய நடுக்கத்துடன் விழி மலர்த்தியவள்!, முகமிரண்டும் உரசிக்கொள்ளும் தூரத்தில் கண்களில் எதையோ தேக்கி உயிர் உருஞ்சும் பார்வையுடன் தன்னருகில் இருந்த ‘நந்து அத்தானை’ ஒருவித திடுக்கிடலுடன் பார்த்தவாறே தலையை பின்னிழுத்துக் கொண்டாள்.

சற்றுமுன் உணர்ந்த அலைக்கழிப்பு மீண்டும் நெஞ்சத்துக்குள்…. அவன் பார்வையின் பொருள் அறியமுடியா தடுமாற்றம் வீறெழ பார்வையை தாழ்த்திக்கொண்டாள்…..

அவளின் உணர்வுகள், தடுமாற்றங்கள் புரிந்ததில் ஆழ மூச்சுவிட்டு முடியை அழுந்தக்கோதிக் கொண்டே அவள் புறமாய் நீண்டிருந்த கரத்தை பிரயத்தனப்பட்டு இழுத்தெடுத்தவன், மானசீகமாய் நெற்றியில் அறைந்துகொண்டான்.

‘அபி, வட் ஆர் யு டுயின்க்…. கன்ட்ரோல் யுவர்செல்ப்…. டேமிட்…’

தன்னைத்தானே நிந்தித்தாலும் வெட்கம்கெட்டு அவள் புறம் சாயும் பார்வையை பிரித்தெடுக்க முடியாமல் அவஸ்தை கொண்டவன் இதற்குமேலும் இருப்பது நன்றல்ல என்றுணர்ந்து ‘அம்மு’ என மென்மையாய் அழைத்தான்.

அவன் குரலில் தயக்கத்துடன் பார்வையை உயர்த்தி கேள்வியாய் நோக்க, அவள் விழியின் பாவத்தில் எம்பிக்குதிக்க முயன்ற இதயத்தை அடக்கியாண்டு, “வீடு வந்திடிச்சு… இறங்கு..”, என்றவன் தாமதிக்காமல் காரிலிருந்து இறங்கி சுற்றிவளைத்து மறுப்பக்க கதவை அவளுக்காய் திறந்துவிட்டான்.

அதில் படபடப்பு மறைந்து அங்கு புன்னகை குடிகொள்ள சிரித்த முகமாகவே காரிலிருந்து இறங்கியவள் தன் முன் பரந்துபட்ட நிலப்பரப்பில் வெகு பிரம்மாண்டமாய் எழுப்பட்டிருந்த மாளிகையை கண்கள் வெளித்தெறித்து விடும் போல் ‘ஆவேன’ வாய்பிளந்து பார்த்தாள்.

இம்மாம்பெரிய மாளிகையா அவள் பிறப்பிடம் என்ற கேள்வி உள்ளுக்குள் கரையானாய் அரிக்க, மூளையில் பதிந்திருந்த அத்தனையும் ஒன்றுவிடாமல் ஒட்டுமொத்தமாய் அழிந்ததில் சரிவர எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் திணறியவளுக்கு அந்த வீட்டினுள் செல்ல பெரும் தயக்கமாய் இருக்க கூடவே கலக்கமும் சூழ்ந்து கொண்டது.

இந்த வீட்டுக்குள் தனக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஆழ்மனம் கூக்குரலிடுவது போன்றிருக்க இவ்வீட்டில் தான் வாழ்ந்த சுவடுகள் ஏதும் நினைவடுக்கில் தென்படுகிறதாவென மூளையை சோதித்தவள் பரிட்சயம் தேடி பார்வையை சுற்றிலும் படரவிட்டாள்.

மருத்துவமனை வாசம் முடிவுக்கு வர முதல்தடவையாய் வீட்டுக்கு வரும் மருமகளை காண ஆரத்தி தட்டுடன் ஜெகதா வெளியேவர, சற்றுநேரத்தின் முன்னமே வீடு வந்து சேர்ந்த பானுமதியும் வெங்கடேஷும் முகத்தில் மத்தாப்பு ஒளிர பரவசத்துடனும் நிற்க, அவர்களுக்கருகில் சினேகப்பார்வையுடன் முகங்கொள்ள சிரிப்பில் உற்சாகம் கரைபுரண்டோட நவநாகரீக மங்கையாய் நின்றிருந்தாள் அபியின் தங்கை மேகனா. குருமூர்த்தி டெல்லிக்கு சென்றிருந்ததில் அவரால் மருமகளை காண வரமுடியவில்லை.

சுற்றுப்புறத்தில் சுழன்ற பார்வையுடனும் பின்னிப்பிணைந்த கால்கள் நகர மறுக்க தடுமாற்றத்துடன் நின்றவள் அவள்முன் ஒரேசேர வந்து நின்றவர்களை கண்டு திகைத்து பின் பார்வையால் அலசினாள்.

ஜெகதாவும் மேகனாவும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்துபோவதால் பார்த்ததும் சன்ன புன்னகை முகத்தில் பூத்தது. பெற்றோரை பார்த்ததில் அது இன்னமும் அகலமாக தயக்கம் குறைந்தாலும் அந்த வீட்டை பார்க்கும்போது ஏனோ ஒருவித அச்சமும் அந்நியத்தன்மையும் அவளையறியாமலே உள்ளுக்குள் படர்ந்தது.

பார்வையை திருப்ப முடியாமல் ஓரக்கண்ணால் அவள் முகம் பார்த்திருந்த அபி, கண்களில் படர்ந்த அச்சத்தையும் அந்நியத்தன்மையையும் சடுதியில் கண்டுகொண்டு ‘அம்மு’ என மிருதுவாய் அழைத்தான்.

தன்னுள் உழன்றிருந்தவள் அவன் குரலில் படக்கென பார்வையை உயர்த்த; கண் மூடித்திறந்து ‘நானிருக்கேன்’ எனும் ரீதியில் ஆறுதல் பார்வை பார்த்தபடியே நடுங்கிய அவளின் கைவிரல்களை இதமாய் பற்றிக்கொண்டான்.

அவனின் தொடுகையில் முன்பிருந்த கூச்சம் நடுக்கம் மறைந்து பாதுகாப்புணர்வு குடிகொள்ள நிம்மதியில் இதழ்கள் தானாய் விரிந்தன.

அதை பார்த்தவர்களுக்கு அபியின் செயலில் முகம் மலர ஜெகதாவின் முகம் மட்டும் நொடியில் சுருங்கி மீண்டது.

தன் மனவோட்டத்தை முகத்தில் காட்டாமல் ஆதூரமாய் சிரித்தவர், “நல்லாருக்கியா அம்மு…” என்றவாறே ஆலம் சுற்ற முன்வர, அபி ஒதுங்கிட முயன்றான்….

அதை பார்த்த பானுமதி, “அபி நீயும் சேர்ந்து நில்லு…” என எதார்த்தமாய் கூற, அத்தையை நன்றியுடன் பார்த்தவன் முகமலர்ச்சியுடன் நெருங்கி நின்று கொண்டான்.

அதில் முகம்மாற கூர்மையான விழிகளால் மகனின் மனதை படிக்க முயன்று ஆராச்சியாய் பார்த்தபடியே, மருமகளுக்கும் மகனுக்கும் ஆர்த்தி சுற்றி நெற்றியில் குங்குமம் வைத்தவர், சமையல்கார பெண்ணிடம் தட்டை நீட்டினார்.

போன மகள் கடவுளின் கருணையால் மீண்டும் திரும்பி வந்ததில், உள்ளம் பூரிக்க கண்கள் குளமாக உச்சிமுகர்ந்து “வாடா அம்மு…” என கையோடு அழைத்துவந்து நீள்விரிக்கையில் தன்னருகில் அமர்த்திக்கொண்டார். ஒடுங்கிப்போய் அமர்ந்தவள் மறுபக்கத்தில் வெங்கடேஷ் அமரவும், இதமாய் புன்னகைத்தாலும் உள்ளில் பரவிய ஒருவிதமான படபடப்பும் ஒதுக்கமும் குறைந்தபாடாயில்லை.

மற்ற மூவரும் எதிர் இருக்கையில் அமர்ந்துகொள்ள, இண்டர்காமில் கிச்சனுக்கு அழைத்த பானுமதி, சூடாய் டீ கொண்டுவரும்படி பணிக்க, சில நிமிடங்களில் சுடசுட டீ பரிமாறப்பட்டது.

ஆளுகொரு கப்பை எடுத்துக்கொள்ள, தயங்கி வாங்கிக்கொண்ட ஆகர்ஷாவுக்கு குடிக்கத்தான் மனம்வரவில்லை.

“நா…ன் க்காப்பி தான்ன் குடிப்ப்பேன்…”

குடிக்க முடியாமல் கஷ்டப்பட்டவளின் இதழ்கள் ஏதோ நினைவில் வார்த்தையை விட, தொண்டைக்குள் சரிந்த டீ புரையேறியதில் மொத்தமும் சிதற கலங்கிய கண்களுடன் அவளையே அதிர்ந்துபோய் பார்த்தான் அபி.

அவனுக்குமட்டும்மல்ல ஆகர்ஷா உட்பட அனைவருக்கும் பேரதிர்ச்சி தான். மற்ற நால்வருக்கும் நினைவு வந்துவிடுமோ என்ற பயம் நெஞ்சத்தை கவ்வ இதயத்துக்குள் ‘டமார்’ ‘டமார்’ என சத்தமிசைக்க கையிலிருந்த டீ கப் ஆட்டம் கண்டது.

ஜெகதாவுக்கு சற்றுமுன்னிருந்த சுணுக்கம் மறைந்து கவலை அரிக்க ஆரம்பித்தது. அண்ணனும் நாத்தனாரும் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்லவே… ‘மீண்டுமொரு துன்பத்தை தாங்கிக்கொள்ளும் திராணி அவர்களுக்கில்லை இனியும் எந்த துன்பத்தையும் அவர்களுக்கு கொடுத்துவிடாதே’ கடவுளிடம் மனதார வேண்டிக்கொண்டார்.

தொண்டைக்குள்ளிருந்த டீயை விழுங்கவும் முடியாமல் கக்கவும் முடியாமல் அவஸ்தையுடன் தவிப்பும் ஒருசேர அத்தை மாமாவை பார்த்தாள் மேகனா.

‘நினைவு வந்துவிடுமா? என் மகள் மீண்டும் என்னை அநாதையாக்கி சென்றிடுவாளா?’ பயம் உள்ளத்தை கவ்வ கணவனை பார்த்த பானுமதியின் முகம் காழ்ப்புணர்ச்சியிலும் இயலாமையிலும் கலங்கிப்போது. வெங்கடேஷ் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் சமைந்துபோய் வெறித்துப்பார்த்திருந்தார் வெங்கடேஷ்.

ரப்பர் வைத்து அழித்தது போல் யோசிக்க முடியாமல் திணறும் எதுவும் நினைவிலில்லாத தனக்கு…. இது மட்டும் எப்படி நினைவுக்கு வந்தது? ஜெட் வேகத்தில் மூளையை ஆக்கிரமித்த கேள்விக்கு பதிலறிய முடியாமல் பரிதவித்தவளுக்கு……………… தனக்கு என்னாயிற்று என்றும் தெரியவில்லை…. ஏன் எதுவுமே நினைவுக்கு வரவில்லை என்பதும் புரியவில்லை…. அம்மாப்பாவிடம் கேட்டாலும் மழுப்புகிறார்கள்….’

கண்விழித்த நாள்தொட்டு மூளையை ஆக்கிரமித்த கேள்விக்கு இன்றுவரையிலும் பதிலறிய முடியாமல் தவியாய் தவித்தவள்…………….. அவள்முன்னே அதிர்ச்சியும் பீதியும் ஒன்றென கலந்து திகைத்துப்போய் அமர்திருந்தவர்களை கண்டு சித்தம் சிதற, ஒன்றாவது நினைவடுக்கில் தென்படுகிறதா என சிந்தித்தவளுக்கு மண்டைக்குள் சுர்ரென வலி பாய்ந்ததில் மலர்முகம் வேதனையில் சுருங்க வலிதாங்காமல் பானுமதியின் தோள் சாய்ந்தாள்.

அம்மா, தங்கைகளை நன்றாக பார்க்கவேண்டும் என்ற ஆசையில் தன் வயதையும் மறந்து அவர்களுக்காக ஓடியோடி உழைத்ததில் சரியான நேரத்தில் உணவுண்ண முடியாமலும் போவதுண்டு…. வேலைகள் ஆக்கிரமிப்பதுமுண்டு… அதனால் வந்த பழக்கம்தான் காப்பி அருந்துவது.

இருபத்துநான்கு மணிநேரமும் அதைகுடித்தே குடலை வளர்த்துவிடுவாள். இயல்பான அவளின் பழக்கவழக்கம் புதிதாய் ஒன்றை பார்த்ததும் தன்னாலே நினைவில் எழவே தொண்டையில் குடிகொண்ட வார்த்தையை வாய் கக்கியிருந்தது…

நடுங்கிய விரல்கொண்டு தோள் சாய்ந்த மகளின் தலைவருடியவர், உள்ளத்தை முகத்தில் காட்டாதிருக்க பெரும்பாடுபட நாத்தனாரின் நிலைபுரிந்த ஜெகதா, “மேகா… நீ அம்முவை அவளோட ரூமுக்கு கூட்டிப்போ…. முகெல்லாம் வாடிப்போச்சு…. கொஞ்ச நேரம் தூங்கியெழட்டும்…” என்றார்.

தாயின் கண்ஜாடையை கண்டவள் ஆகர்ஷாவை அழைத்துக்கொண்டு அவளறைக்கு சென்றாள்.

மேல்தளத்தில் வீட்டின் பாதிபோல் விசாலமாக இருந்த அறையை பிரம்மிப்புடன் பார்த்தவளின் நடை தயங்க உள்ளே நுழைந்தாள்.

அறை முழுசும் ஆகர்ஷாவின் புகைப்படத்தால் நிறைந்திருக்க ஒவ்வொன்றையும் விழிவிரித்து பார்த்தவளின் பார்வையில் எதிரில் முழு உயரத்திலிருந்த நிலைக்கண்ணாடி பட, நிஜத்துக்கும் நிழலுக்கும் பல வித்தியாசங்கள் இருப்பதாக தோன்றவே மீண்டும் குழப்ப மேகம் சூழ்ந்து கொண்டது.

புருவம் சுருங்க யோசனை செய்தவள் பிரேமிட்ட புகைப்படங்களை தளிர் விரல்களால் வருடிக்கொடுத்தாள்.

கரையேற வழியின்றி துடிக்கும் மனவுணர்வுகளை வெளிப்படையாய் காட்டவியலாமல் ஸ்டிக்கை பற்றி நடந்தவள், நுரைபோன்று அமிழும் மெத்தையில் அமர்ந்துகொண்டாள்.

தவிப்புடன் அவளிருந்த தோற்றம் மனதை பிசைய அவளருகில் அமர்ந்து தோள் தொட்டாள் மேகனா.

தூக்கிவாரிப்போட திரும்பிவள் அவளை கண்டதும் இதழ் பிரிக்க “ஏன் ஒருமாதிரி இருக்க அம்மு…” எனவும், பதில் கூறவியலாது முழித்தவளுக்கு தன் மனவோட்டத்தை வரிக்க வரிகள்தான் வரவில்லை…….

“நான்ன் க்கொஞ்ச நேர்ரம் தூங்கட்ட்டுமா….” அவளின் கேள்விக்கணைகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டு.

சரியென்று தலையசைத்து ஏஸியை போட்டவள் கதவை மூடி கீழிறங்கிச்சென்றாள்….. ஏனெனில் மேகனாவுக்குமே அவளிடத்தில் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

“பானு இப்போ என்னாச்சுன்னு அழுதுவடிஞ்சு உக்கார்ந்திருக்க….. நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ…. அம்மு எப்போவும் உன்னைய விட்டு எங்கயும் போகமாட்டா உன்கூடவே தான் இருக்கப்போறா….. புரியுதா…..” முதுவை தட்டிக்கொடுத்தும் சரம்தொடுத்த அழுகையை அடக்கமுடியவில்லை

“ரூமுக்கு போய் கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுத்துக்கோ….. அண்ணா நீங்களும் போங்க…..” அதட்டி உருட்டி அனுப்பி வைத்தவர், “அபி நீயும் ஆபீஸ் கிளம்பு” என்க,

அம்மா என தயக்கமாய் ஏறிட்டவனுக்கு அன்னையின் பேச்சை மீறமுடியாமல் அலுவலகம் கிளம்பிவிட்டான்.

“செமெஸ்டர் வருது படிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்த பொண்ணு படிக்காம என்ன பண்ற?…” சும்மா இருந்த மேகாவுக்கும் ஒரு அதட்டல் போட, அங்கிருந்த அறைக்குள் புகுந்து கொண்டாள்.

மகளின் ஓட்டத்தில் சிரித்துக்கொண்டே கிச்சனுக்குள் பணிபுரியும் வேலையாட்களிடம் மதிய உணவுக்கான மெனுவை பட்டியலிட்டவர், செல்பில் இருந்த புத்தகத்துடன் சோபாவில் அமர்ந்துகொண்டார்.

கண்கள்தான் அதில் பதிந்திருந்ததே ஒழிய மனமோ மகனிடத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தது. இந்த பெண்ணை அபி விரும்புகிறானா? கேள்விக்கு விடைதெரியாமல் புருவம் சுருங்க யோசனை செய்தவர், மகனின் அதிக்கபடியான அக்கறையை கவனத்தில் கொள்ளவும் மறக்கவில்லை.

பணத்தை தண்ணீர் போல் வாரியிறைத்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தின் உட்புற வெளிப்புற அலங்காரங்கள் கண்ணை கவரும் வகையில் அமைந்திருந்த குரு இண்டஸ்ட்ரீயின் தலைமை அலுவலகத்தை அடைந்தவன் ‘Managing Director Abinanthan’ தங்கமுலாமிட்ட பேர்பலகை கொண்ட அறைக்குள் நுழைந்தான்.

இவனுக்காக காத்திருந்த அவனின் பி.ஏ ஜெகன் முக்கியமான கோப்புகளில் கையெழுத்து இட வேண்டி அவனிடம் நீட்ட, கையில் வாங்கிக்கொண்டவனுக்கோ அதில் கவனம் செலுத்தத்தான் முடியவில்லை…….

ஆகர்ஷாவின் நினைவு வாட்டி வதைத்தது. எதையாவது எண்ணி தன்னையே குழப்பிக்கொள்வாளோ…. தனியாக விட்டு வந்திருக்ககூடாதோ…. அலைவரிசை என்னவோ பெண்ணவளை சுற்றியே வலம் வந்தது.

கோப்புகளை மேசையில் விட்டெறிந்தவன் அதிர்ந்து நோக்கிய ஜெகனை புருவம் சுருக்கி ‘இன்னமும் இங்குதான் இருக்கிறாயா’ எனும் பார்வை பார்க்க, அதன் அர்த்தம் புரிய வெளியில் விரைந்து சென்றான்.

டையை தளர்த்தி முழுக்கைச் சட்டையின் முதலிரண்டு பட்டனை திறந்து சட்டைக்கையை முழங்கை வரை ஏற்றிவிட்டவன் தளர்வுடன் இருக்கையில் சாய்ந்தமர்ந்தான்.


எத்தனையோ கனவுகள் எனக்குள்…
அத்தனையும் சுக்கு நூறாகி…
பித்தாக என்னை அலைய வைத்து…
ஏன் பிரிந்து சென்றாய் என்னை விட்டு…???
துக்கத்தை பகிர்ந்துகொள்ள நீயில்லா தனிமையில்…
ஆறுதல் சொல்ல ஆளின்றி…
நானிங்கே தவிக்கிறேன்…
ஆழமான என் காதலையும்…
உன்னடிமையாகிப் போன என்னையும்…

உன்னால் எப்பிடித்தான் விட்டு செல்ல முடிந்ததோ...???



பிரிந்து போனவளால் வலித்த நெஞ்சம், பிரிந்து போய்விடுவாளோ என்ற பயத்தில் இன்னம் ரணமாய் வலித்தது……


தூங்கப்போகிறேன் என்றவளுக்கு சுத்தமாய் தூக்கம் வரவில்லை….. தனிமை கொஞ்சம் வித்தியாசமானது…. நாமே அதை எடுத்துக்கொண்டால் இனிக்கும்! மற்றவர்கள் நமக்கு அதை கொடுத்தால் கசக்கும்! அவளாகவே எடுத்துக்கொண்டபோதும் கசந்து வழிந்தது அத்தனிமை…..

அழுந்த மூடியிருந்த சாளரத்தை பலம்கொண்டு திறந்தவளின் மீது மோதி விளையாடிய கடல்காற்று சங்கேதமொழி பேசியது…… தொலைவில் தெரிந்த வானை முட்டும் கடலை வெறித்துப்பார்த்தாள்….. கடல் கடந்து தன்னை களவாட வரும் மன்னவன் அவள் கண்ணில் தென்படுகிறானோ என்னவோ…… விழியகற்ற மறந்தவளின் பார்வை அங்கே நிலைகுத்தி நின்றது…..



*****************


நேரம் அதிகாலை நான்கை தொட்டிருக்க… கும்மிருட்டில் செல்போனின் பிளாஷ்லைட் மின்னிக்கொண்டும் வண்ண அலங்கார மின்விளக்குகள் ஆங்காங்கே மங்கலான ஒளியை பரப்பிக்கொண்டுமிருந்தன…

DJயின் பாடல் உச்சஸ்தாயியில் செவியை செவிடாக்க… ஆண்பெண் பேதமின்றி கையில் நிறைந்த மதுக்குப்பியுடன் தங்களை மறந்து ஆடிக்கொண்டு ஒருசிலரும், தங்கள் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுகாட்டிக்கொண்டு ஒருசிலரும் உல்லாசமாய் வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தனர்…

“கமான் டுயூட்…. ஒஹ் யெஹ்…. கமான்…. ஹுர்ரே…. ஹோஓஓஓஓ…..”

அத்தனை ஆர்ப்பாட்டத்தையும் மீறி ஒருகூட்டம் உச்சஸ்தானியில் கத்திக்கூச்சலிட்டு சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாய் பியரை தொண்டைக்குள் சரித்து அங்கிருந்தவனை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க, கண்களில் படர்ந்த கள்ளத்தனமும் உதடுகளில் நெளிந்த விஷமத்தனமுமாய் நொடியில் சிலபல வோட்காவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான் அவன்.


‘ஆத்’ என அனைவராலும் அழைக்கபடும் ஆதித் நரேன்.


உருகும்.............


[அடுத்த பகுதியை பதிந்துவிட்டேன்........ போன அத்தியாயத்துக்கு ஆதரவு நல்கிய அனைவருக்கும் என் நன்றிகள்...... தொடர்ந்து இதே ஆதரவை கொடுங்கள்...... அதுதான் என் ஊக்கமும் கூட...... இந்த பகுதிக்கும் உங்கள் கருத்துகள் விமர்சங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்............]

"உயிர் உருகும் காதல்" - கருத்து திரி
 
Last edited:
Status
Not open for further replies.
Top