All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானுவின் - வானவில்லாய் நீ ... வர்ணங்களாய் நான் ..

Status
Not open for further replies.

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே ..,

நீங்கள் என்னை யோசிக்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது.. இன்றுதான் முதல் கதையின் பதிவுகளை பதிவு செய்துஉள்ளார், அதற்குள் அடுத்த கதையின் டீஸர் உடன் வந்துஉள்ளார்.. அப்போ இந்த இந்த கதை என்ன ஆகும் ? என்று பலகேள்விகள் இருக்கலாம்.

ரிஷி - சக்தி யின் மௌனம் ஏனடி கண்மணியே வாரத்தில் இரண்டு பதிவுகள் போடப்படும்.
இப்போ இந்த புதிய கதை , அறிமுகம் மட்டும் தான் .. டீஸர் வரும் ஞாயிறு அன்று பதிவிடப்படும்
மீதி எனக்கு எப்போவெல்லாம் நேரம் கிடைக்குதோ அப்போ நான் பதிவிடுகிறேன்.

***********************************************************
கதை பெயர் : வானவில்லாய் நீ ... வர்ணங்களாய் நான்
நாயகன் : அஜித்
நாயகி : இதழிசை

நாயகன் குடும்பம் :
அப்பா : செல்வம்
அம்மா : தேவி
அண்ணன் : சூர்யா
அண்ணி : மலர்விழி
தங்கை : நித்யா

நாயகி குடும்பம் :
அப்பா : சேகர்
அம்மா : மகாலட்சமி
அண்ணன் : வினோத்


கதையில் முக்கியமான இருவர்:

செல்வத்தின் அம்மா : வைதேகி
சேகரின் அம்மா : காமாட்சி
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி டீஸர் -1

"டேய் .. இந்த ஒரு வாய் சாப்பிட விடுடா .. ப்ளீஸ் டா.. இதுக்குமேல முடியல.."

"ஹ்ம்ம்ம்... என்க்கு அம்மா வேணும்.."

"அம்மாவை என்ன கடைல செஞ்ச வச்சுஇருக்காங்க , வேணும்னு சொன்னதும் போய் தூக்கிட்டு வர்றதுக்கு .."

"என்க்கு அம்மா வேணும்.."என்க்கு அம்மா வேணும்.." என்று மழலை மொழி மாற குழந்தை அழுக அவனை சமாதானப்படுத்தினான் அஜித்..
**********************************************
"டேய் மகனே .."

"டேய் அப்பா " ..

"என்னடா அப்பாவை மரியாதையில்லாம டேய்னு சொல்ற.."

"நீ மட்டும் என்ன மர்..ரி ....நீ மட்டும் என்ன டேய் சொன்ன "

"நான் உன் அப்பன்டா"

"நான் பேபிடா "

"உன்னை பெத்ததுக்கு ஒரு குரங்கை பெத்துஇருக்கலாம் .."

"உன்னை பெத்ததுக்கு ஒரு " என்று குழந்தை யோசிக்க ,

"என்னடா யோசனை பலமா இருக்கு."

"வெயிட் பா .. ஹ்ம்ம் .. உன்னை பெத்த..ததுக்கு ஐஸ்கிரீம் , சாக்லேட் பெத்து இருக்கலாம் "

***************************************
"டேய்ய்ய் ........."

"ஹிஹிஹி,..."

"என்ன கோலாம்டா இது..."

"சும்மா ப்பா ..,வா ப்பா.. குளிக்கலாம் ..." என்று அவனை பிடித்துஇழுக்க ,

"எதுல இந்த மாவு கூளத்துல நானும் குளிக்கணுமா.. "

"அட வாப்பா "
******************************************************************
"ப்ப்பா..."

"என்னடா "

"அம்மா எப்படி இருப்பாங்க .."

"அழகா இருப்பாங்க "

"ஹ்ம்ம் .. என்னை மாறி இருப்பாங்களா "

"உன்னமாறியே இருப்பாங்க .."

"டேய் என்ன அம்மாக்கு மட்டும் மரியாதை தர.."

"அவங்க மம்மி ப்பா,, "நீ டம்மி ப்ப்பா " "

"நான் உன்னோட அப்பன்டா "

" அட என்னப்பபா நீ சும்மா இதுவே சொல்லுறே"

********************************************
"ப்ப்பா ........ப்ப்பாஆஆஅ ....."

"ஏன்டா இந்த கத்து கத்துற .."

"நான் இன்னைக்கு அம்மாவை பார்த்தேன்பா .."

"என்னடா சொல்லுறே"
******************************************
"இதழ் .இதழிசை..."

"என்ன .."

"தூங்கிட்டியா "

"தூங்கறவளை எழுப்பி தூங்கிட்டியானு கேக்குற.."

"சரி சரி நீ தூங்கு இதழ் .."

"என்ன விஷயம் "

"எனக்கு தூக்கம் வரல .. சும்மா பேசிகிட்டு இருக்கலாமேன்னு எழுப்புனேன்.."

"யோவ் .. தூங்குறவளை எழுப்பி , ச்சும்மான்னு சொல்லுறே .. உனக்கு அறிவில்லை ..ஹையையோ .. எனக்கு தூக்கம் போச்சே ... இனி எப்ப வரும் எப்புடிவரும்னு தெரியாதே .."

"ஹேய்ய்..நீயும் அதே கேஸ் தானா.. நானும் அதே தான் ..." என்று ஹை-பை அடிக்க , இதழ் முறைத்துக்கொண்டு இருந்தாள்.

"யோவ் .. நான் கொலை காண்டுல இருக்கேன் .. ஒழுங்கா மரியாதையா என்ன தூங்கவிடு.. "

"அப்போ உங்களுக்கு தூக்கம் போகலையா ..?"

"டேய் .. என்னோட தல பெயரை வச்சுஇருக்க .. அதுனால உன்ன சும்மா விடுறேன்.. இல்லைனா வை.. உன்ன இன்னைக்கே கொன்னுயிருப்பேன் .."

'அப்பா, அம்மா.. ரொம்ப நன்றி.. தல பெயரை வச்சு இன்னைக்கு என்னோட உசிரை காப்பாத்திடீங்க..' என்று அஜித் மனதிற்குள் நன்றி கூற ,

இதழ் அவனை முறைத்தபடி படுத்துஇருந்தாள்..
*****************************

கருத்துக்களை பகிர

பானுவின் - "வானவில்லாய் நீ .. வர்ணங்களாய் நான்.." - கருத்துத்திரி
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -1

"இதழு.. அடியேய்..இதழு .. எழுந்திரிடி.. காலேஜ்க்கு நேரம் ஆச்சு..அப்புறம் காலேஜ் பஸ் கெளம்பிடுச்சு, தனியா பஸ்ல போறேன்னு சொன்ன, மவளே நீ காலேஜே போகவேண்டாம்னு நிறுத்திப்புடுவேன்.." என்று வழக்கமாக பாடும் பல்லவியை மகாலட்சமி பாட, தனது கைகளால் மொபைலை தேடி எடுத்தவள் , மெதுவாக அரைக்கண்ணை மட்டும் திறந்து மணி பார்த்தாள்.

காலேஜ் பஸ் வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்க, மீண்டும் நன்றாக இழுத்துபோட்டுக்கொண்டு தூங்கினாள். அவள் இன்னும் எழுந்திருக்கவில்லை என்பதை அறிந்த மகாலட்சமி , கையில் கரண்டியுடன் அவளது அறை நோக்கி வர , அதற்குள் வினோத் சிக்னல் தந்து அவளை எழுப்பினான்.

எழுந்தவள் , அரக்கப்பரக்க துணிகளை எடுத்துக்கொண்டு குளியலறையில் உள்ளே புகுந்தாள்.

"இதே பொழப்பா போச்சு .. டேய் எல்லாம் நீ குடுக்கற செல்லம் தான்டா .. அவ இப்படி சோம்பேறியை இருக்கா." என்று வினோத்தையும் திட்டிவிட்டு வெளியே பாக்க,

ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துகொண்டுஇருந்த சேகர் மீது மகாலட்சமியின் பார்வை படிந்தது..

"ஒரு மனுஷி காலைல இருந்து கத்திக்கிட்டு இருக்கேனு கொஞ்சமாவது அக்கறை இருக்கா? ...." என்று அவரிடம் அடுத்த புலம்பலை ஆரம்பித்துவிட்டார்.

குளித்து முடித்து வெளியே வந்த இதழ் ," என்ன வினோ .. இன்னைக்கு கொஞ்சம் டோஸ் ஓவரா இருக்கே என்ன விஷயம் ...?" என்று குறும்பு மின்ன கேட்டவள், "உனக்கு வரவர குறும்பு ஜாஸ்தியாகிடுச்சு.. ஒரு நாளாவது கொஞ்சம் சீக்கிரம் எழுந்திரிக்கலாம்ல அம்மு.."

"வினோ, நான் நைட் முழுக்க உட்கார்ந்து ப்ராஜெக்ட் பண்ணுறேன். காலைல நான் கொஞ்சம் அசந்து தூங்கிடுறேன்.."

"சரி சரி அம்மு . ரொம்ப நேரம் முழிச்சுஇருக்காத .."

"அம்மாகிட்ட திட்டுவாங்காம அன்னைக்கு பொழுதே போகமாட்டேங்குதுடா.. அதுனாலதான் நான் தினமும் வாங்கிட்டு இருக்கேன்.."

"ஹ்ம்ம் .. உன்னையெல்லாம் திருத்தவே முடியாது..சரி சரி கெளம்பு.. நேரமாச்சு.."

"இதோ நான் ரெடி .." என்று திரும்பியவளை பார்த்து வினோத் மனம் மகிழ்ந்தது.

அளவான உயரம் , அளவான சதை , சாதாரண சுடிதாரில் பேரழகியாய் மின்னிய தன் தங்கையை நினைத்து அவனது பாட்டி கண்முன்னே வந்துசென்றார். இவளுக்கு ஏற்றமாறி நல்லவனா, அழகானவனா பார்த்து நல்லபடியா கல்யாணம் பண்ணிகுடுக்கணும்..என்று மனதில் நினைத்துக்கொண்டான்.

கோவை-இல் உள்ள பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி.. காலேஜ்ல அவளை பற்றி தெரியாதவங்க இருக்கவே முடியாது. அமைதியான பொண்ணு( வெளில மட்டுந்தான்) .. படிப்பு சூப்பர்.. காலேஜ்ல நடக்குற எல்லா போட்டிகளிலும் ( டான்ஸ் தவிர ) அவள்தான் முதல் இடம் பெறுவாள்.

காலேஜ்க்கு பெருமைசேர்ப்பது போல , மிகப்பிரபலமான ஒரு தனியார் நிறுவனம் வைத்த தேர்வில் வெற்றிபெற ,சென்னையில் வேலை கிடைத்துவிட்டது. ஜனவரி மாதம் வந்து சேர சொல்லி அவளுக்கு ஆர்டரும் வந்துவிட்டது. அதற்குள் அந்த செமஸ்டர்க்கு தேவையான ப்ரொஜெக்ட்டை முடிக்கவேண்டும் என்று அதிகமாக சிரமம் எடுத்து பண்ணுகிறாள்.

வினோத் , அவனும் இன்ஜினியரிங் முடித்து விட்டு ,சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு இருக்கிறான். திருமண ஏற்பாடுகள் நடக்க , முதலில் அம்முவிற்கு என்று தனது திருமணத்தை தள்ளிவைத்தான்.

அம்மு எத்தனைமுறை கூறியும் , இரண்டுவருடம் கழித்து உனக்கு திருமணம் செய்த ஆறே மாதத்தில் எனக்கு திருமணம் என்று அவள் வாயையும் அடைத்துவிட்டான்.

சேகர் - கோவை அருகே உள்ள பொள்ளாச்சியில் டிபார்ட்மென்டல் ஸ்டார் வைத்து வாழும் நடுத்தர குடும்பங்களுள் அவரும் ஒருவர்.

மகாலட்சமி - காலைல எழுந்து அனைவரையும் திட்டவில்லை என்றால் அவருக்கு பொழுதே விடியாது. வீட்டில் உள்ளே வேலைகளை மட்டும் பார்ப்பவர் , தனது குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் உள்ளவர். இதழிற்கு அனைவரும் செல்லம் கொடுப்பதால் , இவர் மட்டும் அவளை திட்டுவதுபோல நடித்துக்கொண்டு இருக்கிறார். உண்மையிலேயே இதழிற்கு அதிகம் செல்லம் கொடுப்பவர் இவர்தான்..

கல்லூரியில் இதழ் முழுமூச்சுடன் ப்ரொஜெக்ட்க்கு தேவையானவற்றை விளக்கிக்கொண்டு இருந்தாள். இன்னும் 2 நாட்கள் மட்டுமே கல்லூரியில் இருப்பவள், திரும்பி தேர்வுகள் நடக்கும் அன்றுமட்டுமே வருவாள். தனது வேலைகளை கட்சிதமாக முடித்தவள், தோழிகளுடன் சேர்ந்து அரட்டையில் இறங்கினாள்.

4 வருடம் ஒன்றாக பழகிய தோழிகளை பிரிவதென்றால் , அவள் மனதிற்கும் வருத்தமாக இருந்தது.. இருந்தாலும் தன் மனதினை கட்டுப்படுத்தி , இதெல்லாம் சகஜம் என்று எண்ணி தோழிகளை மகிழ்வாக வைத்துக்கொண்டாள். இது இதழிற்கு உள்ள பழக்கம் , சில நார்மலான விஷயங்களை மனம் வருத்தப்படுவதால் பெரிதுபடுத்தும் பழக்கம் கிடையாது.

அதேபோல இதழிடம் சென்று , நீ இப்படி இருக்க கூடாது என்று கூறினால் ,'நான் இப்படித்தான்.. என்னால் நடிக்க முடியாது ' என்று பட்டென்று கூறிவிடுவாள். அவளது குணம் பற்றி ஆவலுடன் நெருங்கி பழகும் நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.

சேகர், மகாலட்சமி , வினோத் இவங்க மூனுபேருக்கும் ஒரே ஆசை .. அதுதாங்க இதழோட கல்யாணம். அவளுக்கு ஏத்தமாறி ஒரு பையன பார்த்து கல்யாணம் பண்ணனும். அவளுக்கு பிடிச்ச மாறி இருக்கணும்னு அவங்கஎல்லாம் கனவு கண்டுட்டு இருக்காங்க..

**************************************************************************************

'தாம்பரம் ,கிண்டி, அசோக் பில்லர் வடபழனி .. எல்லாம் இங்கயே இறங்கிக்கோங்க ... வண்டி நேர கோயம்பேடுதான் போகும்..தாம்பரம் வழியாக போகாது.. " என்று நடத்துனர் கத்திக்கொண்டு இருக்க, மெதுவாக கண்விழித்தாள் இதழ்.

வினோத் இங்கேயே இறங்கிவிடலாம் என்று கூற, பேருந்தில் இருந்து இறங்கினாள் இதழிசை.

இரு நாட்களாக எல்லாவற்றையும் பேக் செய்து , தனது அண்ணன் வினோத்துடன் சென்னை வந்துவிட்டாள். சென்னை மண்ணின் மீது கால் வைத்ததும் அவளையும் அறியாமல் ஒரு சிலிர்ப்பு அவள் உடல் உழுவதும் பரவியது. புதிய மனிதர்கள், புதிய ஊர், இனி அவள் குழந்தை அல்ல ,சுயமாக சம்பாதிக்கும் ஒரு இளம் பெண் என்ற பலவகையான எண்ணங்கள் அவள் மனதை ஆட்டுவித்தாலும் , வினோத் இருக்கிறான் .. நானும் தனியாக எல்லாவற்றையும் கத்துக்கொள்ள வேண்டும் என்ற நிதானமும் அவளை சற்று சாந்தப்படுத்தியது.

பிறகு பேருந்தில் ஏறி , OMR சாலையில் உள்ள கந்தஞ்சாவடியில் இறங்கி அவளை விடுதியில் தங்கவைத்துவிட்டு அவனது இருப்பிடம் நோக்கி சென்றான்.

இதழ் , ரூமை பார்த்துவிட்டு , குளித்துவிட்டு தயாராகி வெளியே வந்து , அண்ணன் காண்பித்த அந்த கண்ணாடியினால் ஆன 12 - அடுக்குமாடி கட்டிடத்திற்குள் நுழைந்தாள்.


அங்கே செல்லும் மக்களும் அவர்களின் வேக நடைகளும் அவளுக்கு பயத்தை தோற்றுவிக்க , தயங்கியபடியே விசாரித்து அவளது அலுவலகம் உள்ள தளத்தை அடைந்தாள். பின் அங்கு உள்ளவர்களிடம் பேசிவிட்டு , நாளையிலிருந்து நேரடியாக இங்கே வந்துவிடும்படி கூற, திரும்பவும் அவளது இருப்பிடத்திற்கு திரும்பிவிட்டாள்.

வினோத்திற்கு கால் செய்து பேசிவிட்டு , வீட்டிற்கும் கால் செய்து பேசினாள்.

மாலை ஆனதும் குளித்துவிட்டு கோவிலுக்கு சென்றாள்.

அங்கே செல்லாமல் இருந்துஇருந்தால் , ஒருவேளை நடக்கவிருக்கும் சம்பவங்களுக்கு அவள் காரணமாக இல்லாமல் இருந்துஇருப்பாளோ....


*******************************************************************************************************
"அப்ப்பாஆஆஆ ... எழுந்திரிப்பா.."

"ஹ்ம்ம் ..ம்ம்ம்.."

"அப்பாஆஆஅ ...." என்று மீண்டும் குழந்தை , அஜித்தை எழுப்ப , அவன் அசராமல் படுத்துக்கொண்டு இருந்தான்..

தீடிரென்று அவன் ," அம்மாஆஆ " என்று எழ, தன் மீது விழுந்த நீர்துளிகளை கண்டு இது மகன் அம்ருத்யன் வேலை என்பதை புரிந்துகொண்டான்..

"டேய் .. நானே நைட் ஷிப்ட்ல வேலைபார்க்குறேன்.. காலைல 10 மணிக்கு தான் வருகிறேன்.. வந்ததும் நீ சேட்டை பண்ணிவச்சுஇருக்க இடத்தையெல்லாம் சுத்தம் பண்ணிட்டு இப்போதான் படுத்தேன் .."

"அப்பா . நீ தூங்கி எழுறதுக்குள்ள நான் ஒரு படமே பாத்துட்டேன்.."

"டேய் நான் தூங்கணும்டா .."

"அப்பா.. நீ போய் குளிச்சுட்டு வா .. நாம கோவிலுக்கு போகலாம்.."

"எதுக்குடா என்னை இந்த அர்த்தராத்திரில கோவிலுக்கு கூப்பிடுற?"

"ஹையோ .. இது ஈவினிங்..வாப்பா போலாம் " என்றபடி அஜித்தை கிளப்பி , இதழ் சென்ற அதே கோவிலுக்கு அழைத்துச்சென்றான் அம்ருத்யன் ...........


நாளை விதியினை யாரறிவாரோ.....................

**************************************
மாலை வணக்கம் நண்பர்களே...


பானுவின் - "வானவில்லாய் நீ .. வர்ணங்களாய் நான்.." - முதல் அத்தியாயம் பதிந்துவிட்டேன் .. படித்துவிட்டு உங்களது கமெண்ட்ஸ்களை கீழே உள்ள திரியில் பகிரவும்



பானுவின் - "வானவில்லாய் நீ .. வர்ணங்களாய் நான்.." - கருத்துத்திரி
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -2

உ ன்திரு வடியை உ ருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உ யிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க

பொடிபுனை நெற்றியைப் புனிதவேல்காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல்காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல்காக்க




- என்ற கந்தசஷ்டி கவசம் வீடு முழுக்க எதிரொலிக்க , பூஜையை முடித்துக்கொண்டு வெளியே செல்ல தயாராக இருந்த தனது மகன் செல்வத்திற்கும் , தனது பேரன் சூர்யாவிற்கும் தீபாராதனை காட்டினார் வைதேகி.

தேவி , மலர்விழி இருவரும் சமையல் பணிகளை புரிய, வீட்டின் இளவரசி நித்யா சுகமாக தூங்கிக்கொண்டு இருந்தாள்.

செல்வம் , கோவையில் மிகப்பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைத்து உள்ளார். நடுத்தரத்திற்கு சற்று வசதியான குடும்பம்.

மூத்தவன் - சூர்யா , MBA முடித்துவிட்டு தனது கடையிலேயே பணிபுரிய , அவனது மனைவி மலர்விழி ,தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

நித்யா - மூன்றாம் ஆண்டு பொறியியல் மனைவி. இதழ் படிக்கும் அதே கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கிறாள்.

தேவி - ஒரு வாயில்லா பூச்சி . தனது கணவன் , மாமியாரை எதிர்த்து ஒருவார்த்தை கூட பேசமாட்டார்.

இவர்களின் இரண்டாவது புதல்வன் தான் நமது கதையின் நாயகன் அஜித்.
சென்னையில் உள்ள பிரபலமான தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு இருக்கிறான்.


*********************************************************************************************************************************************

"மேகம் கருக்குது ... தகச்சிக்கு..தகச்சிக்கு ..
மின்னல் சிரிக்குது...... தகச்சிக்கு..தகச்சிக்கு ..
சாரல் அடிக்குது...... தகச்சிக்கு..தகச்சிக்கு ..
இதயம் பறக்குது...... தகச்சிக்கு..தகச்சிக்கு .."


- என்று குளியலறையிலேயே பாடிக்கொண்டு சந்தோசமாக குளித்துக்கொண்டு இருந்தவன் பின்னால் இருந்து , "குளிச்சுட்டியா ப்பா " என்று அம்ரு கேட்க , அஜித்தின் சப்த நாடியும் ஒடுங்கியது.

"டேய்.. என்னடா, குளிக்கறப்போ உள்ளவரே.." என்று அருகில் இருந்த டவலை எடுத்து தன்னை மறைத்துக்கொண்டு கேட்டான்..

"ஹையோ .. சீச்சீ .. பப்பி சேம்.."

"டேய்.. நீயா உள்ளவந்துட்டு பேசறப்பேச்சை பாரு .."

"ஏன்ப்பா... உங்க அம்மா உனக்கு எப்படி குளிக்கணும்னு கூட சொல்லித்தரலையா ..இப்படியா குளிப்பாங்க .."

"டேய் விடுறா .. நீ இப்படி டக்குன்னு உள்ளேவருவேன்னு எங்கஅம்மாக்கு எப்படி தெரியும் .."

"கடவுளே.. என்னை இவர்களுக்கு பொறக்கவச்சு இப்படி பண்ணிட்டியே .." என்று அம்ரு முணுமுணுக்க ,

"கடவுள்கிட்ட அந்த கோரிக்கையை நான் வைக்கணும்..நீ போ..அப்போதான் நான் குளிச்சுட்டு வருவேன் .."

"சீக்கிரமா வாப்பா."

"டேய் குளிக்கறதுலேயும் அவசரமா ..பொறுடா " என்று பொறுமையாக குளித்துவிட்டு வந்தான் அஜித்.
ஒருவழியாக அஜித் கோவிலுக்கு செல்ல தயாராக வந்தான்..

"எந்த கோவிலுக்கு டா "

"பக்கத்துலயே இருக்கே அந்த கோவிலுக்குத்தான் "

'இன்னைக்கு என்ன அதிசயமா வெளில அதுவும் கோவிலுக்கு கூப்பிடுற .."

"ப்ப்பாஆ ...அம்மா வருவாங்க அங்க .." என்று அஜித்தை பார்த்தபடி கூற, அவனுக்கு மனதில் திக்கென்றது ..'அம்மாவா..ஹையோ..இன்னைக்கு எத்தனை பேர்கிட்ட அடிவாங்க வைக்கபோறாணு தெரியலையே..'

"அதெப்புடி உனக்கு தெரியும் .. நான் வரலை .." என்று பின்வாங்க , அம்ரு அஜித்தை கூர்மையாக பார்த்தான் ..அதன் பொருள் , நீ வர்ற .. வந்துதான் ஆகணும் என்று கூறுவதாய் இருக்க, அஜித் யோசனையுடன் நின்றான் ..

'சரி போவோம்..பிரச்சனைன்னு வந்த சிஸ்டர்ன்னு சொல்லி சமாளிச்சுடுவோம் ' என்று நினைத்துவிட்டு , "சரி டா..ஏற்கனவே கல்யாணம் ஆகியிருந்தா, பொண்ணு மொக்கையா இருந்த என்ன பண்றது .."
அம்ரு அஜித்தை முறைக்க , அவன் அமைதியாக , 'நான் கிளம்பிட்டேன் ..நீ என்னடா பண்ற .." என்று கேட்க, அம்ரு சிரித்துவிட்டு வாயில் நோக்கி சென்றான்

"நான் வரலை ப்பா.. நீ தனியாத்தான் போகணும் .."

"என்..ன.. து .. நான் தனியா போகணுமா ..அதெல்லாம் முடியாது .."

"ப்பா .. ப்ளீஸ் ப்ப்பா.. எனக்காக .." என்று அம்ரு கெஞ்ச, அஜித்தின் மனம் இளகியது ..இயற்கையிலேயே கருணை உள்ளம் கொண்ட அஜித்திற்கு , அம்ருவின் பால் வடியும் முகம் , அதில் உள்ள வேதனை அவனை சம்மதிக்க வைத்தது.

"சரிடா .. நான் எப்படி அந்த பொண்ணை அடையாளம் கண்டுபிடிக்கிறது .."

"நீ அங்க போப்பா .. எல்லாம் தன்னால நடக்கும் ..ப்ளூடூத் காதுல மாட்டிகோ ப்பா . வீடு நம்பருக்கு கால் பண்ணு நான் பேசுறேன் உங்கிட்ட ..."

"சரிடா.." என்று அவன் கூறியபடியே செய்துவிட்டு , கோவிலுக்கு சென்றான் ..

"அம்ரு .. ஒரே கூட்டமா இருக்குடா .."

"அப்புடிதான் இருக்கும் ப்பா ..நீங்க அம்மாவை தேடுங்க .." என்று கூறி அஜித்தின் மனதில் புளியை கரைத்தான் ..

'அம்மாவை தேடுன்னு சொல்றான் .. நான் அவங்களை முன்ன பின்ன பார்த்ததுகூட இல்லை .. எங்கேன்னு போய், யாரைப்போய் தேடுவேனோ ...' என்று மனதிற்குள் புலம்பியபடியே கோவிலுக்குள் சுற்றி கொண்டு இருந்தான்.

***********************************************************************************************************************************
வினோத் மற்றும் வீட்டினரிடம் பேசியவள், குளித்துவிட்டு மஞ்சள் நிற சுடிதார் அணிந்துகொண்டு கோவிலிக்கு சென்றாள்.

இன்று அவளுக்கு காலைமுதல் , சென்னையில் காலடி வைத்ததிலிருந்து ஒரே படபடப்பாக இருந்தது .. மாலை நேரம் நெருங்க , இன்னும் அவளது படபடப்பு அதிகம் ஆகியது ..
முதலில் புதிய வேலை என்று இருக்கும் என்று நம்பினாள்.. பின் புதிய ஊர் , வீட்டினரை விட்டு வெகு தொலைவில் உள்ளோம் அதனால் இந்த படபடப்பு என்று அமைதியாக கோவிலுக்கு செல்லலாம் என்று கிளம்பினாள்.

கோவிலுக்கு சென்றவள் ,சாமி கும்பிட்டுவிட்டு அங்கே உள்ள சன்னிதானத்தில் அமர, அவளது படபடப்பு இன்னும் அடங்கவில்லை..

சிறிதுநேரம் அமர்ந்தவள் , அங்கே இருந்த துணியில் தனது தலையை சாய்வாக வைத்து தனது கண்களால் யாரையோ தேடியபடி இருக்கும் அஜித்தை கண்டாள். அவனது கோபமான முகத்தை பார்த்து, அவனுக்கு அமைதி தரவேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டு இருந்தாள். அவள் ஏன் வேண்டினாள் என்பது அவளுக்கே தெரியாது .. பின் திரும்பி அங்கே உள்ள சூழ்நிலைகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.சில சமயங்களில் , நமது மனம் அழுபவர்களை பார்த்து, இரக்கப்படுமே அதேபோல் இவளும் வேண்டிக்கொண்டாள்..

அஜித்தும் ,அங்கே உள்ள பெண்கள் அனைவரையும் நோட்டம் விட, சில பேர் பொருக்கி என்று கூற, சில பேர் சலித்துக்கொண்டு செல்ல, அவனது கோவம் ஏகிரியது.

அம்ருவை திட்ட சென்றவன் , மஞ்சள் நிற சுடிதாரில் , உடையும் உடலும் ஒரே நிறத்தில் கொண்டு அழகுக்கே அழகாய் பிறந்தவளை பார்த்தான். அவள் தன்னை பார்ப்பதும் ஏதோ வேண்டுவதும் தெரிந்து ,அமைதியாக இருந்தான். அந்த ஒரு நிமிடம் அவனது மனது அமைதியானது .

'ப்பா..கண்டுபிடிச்சுட்டியா ப்பா." என்ற அம்ருவின் குரல் அவனை நிஜ உலகத்திற்கு அழைத்துவந்தது. அவளை மீண்டும் அதே இடத்தில பார்க்க , காணவில்லை .. அஜித் ,'இல்லை ' என்று அம்ருவிடம் கூறிவிட்டு , மீண்டும் சந்தன நிற சுடிதார் அணிந்த பெண்ணை தேடினான்.

தீடிரென்று கல் போன்று ஏதோ தடுக்கி விழ, இதழின் கரங்கள் அவனை தங்கி பிடித்தது.
அவன் மன்னிப்பு கேட்க, அவளோ தலையசைத்துவிட்டு வெளியே சென்றாள். அவனது மனதில் தென்றல் வீசியது ..

"ப்பா... அதுதான் அம்மா " என்று அம்ரு கூற ,

"அம்ரு .. " என்று அதிர்ச்சியில் கத்தினான் அஜித்.

************************************************************************************************************************************************
ஹாய் பிரண்ட்ஸ்,

மாலை வணக்கம் ...

"வானவில்லாய் நீ .. வர்ணங்களாய் நான்.." - இரண்டாம் அத்தியாயம் பதிந்துவிட்டேன் ..
படித்துவிட்டு உங்களது கமெண்ட்ஸ்களை பகிரவும்



பானுவின் - "வானவில்லாய் நீ .. வர்ணங்களாய் நான்.." - கருத்துத்திரி
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -3

"ப்பா... அதுதான் அம்மா " என்று கூற, அதிர்ச்சியில் "அம்ரு" என்று கத்தினான் அஜித்.

அஜித் கத்துவதை திரும்பி பார்த்தவள் , கோவிலின் வாயில் நோக்கி நகர ,
"ப்பா .. அம்மாகிட்ட போய் எதாவது பேசுப்பா .." என்று அவனுக்கு கூற, அவனோ திரு திருவென்று முழித்தான்.

வாயில் நோக்கி சென்றவளை, ஒருவன் அதே மாறி இடிக்க, அவனது கன்னம் பழுத்தது.அதைப்பார்த்து அஜித் தனது கன்னத்தில் கை வைக்க , 'அம்மாடி ... அடி ஒன்னும் இடி மாறியிருக்கே..இவகிட்ட போய் என்னை கோர்த்துவிடுறான் பாரு ..அம்ரு ..உனக்கு இருக்கு இன்னைக்கு இருக்கு...' என்று மனதில் அம்ருவை திட்டியபடி இருக்க , கால்கள் இதழின் இருப்பிடத்திற்கு சென்றது.

புதியவனும் , இதழும் வாக்குவாதத்தில் ஈடுபட, புதியவன் ,"இந்தம்மா .. நான் வேணும்னு மோதிட்டேனு வச்சுக்குவோம்.. கொஞ்ச நேரம் முன்னாடி அவன் மோதுனானே , அவனை ஏன் சும்மா விட்ட " என்று கேட்க, அஜித்திக்கோ பயம் வந்து தொற்றிக்கொண்டது ,'நம்மளையும் அடிச்சுடுவாளோ ' என்று பயந்தபடி பார்க்க ,இதழ் ," அது உனக்கு தேவைல்லாத விஷயம் "
புதியவன் ," ஏன் அது உன்னோட புருஷனா?" என்று நக்கல் தொனியில் கேட்க, அஜித் மனதிற்குள் , 'ஏண்டா .. நான் உனக்கு என்ன பாவம் பண்ணுனேன்.. அவகிட்ட கோர்த்துவிடுற..ஒருத்தன் போன் பண்ணி கோர்த்துவிட்டுட்டான்.. நீ இப்போ .. நடத்துங்கடா நடத்துங்கடா.. கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்குற...' என்று புலம்பியவனின் காதில் , தேனாக(அது நமக்கும் நம்ம அம்ருவுக்கும் மட்டும் தான் .. அஜித்திற்கு அடுத்துவரும் புயலின் வார்த்தையாகவே ) அவளின் வார்த்தைகள் வந்து விழுந்தது.

அப்படி இதழ் என்ன சொன்னான்னு பாக்குறீங்களா ? ,

இதழ் ," ஆமா அவரு என்னோட வீட்டுக்காரர்தான்.. இப்போ என்னங்குறா ?" என்று அஜித்தை பார்த்து முறைக்க, புதியவன் சாரி கேட்டுவிட்டு வெளியே சென்றான்.அஜித் மீண்டும் திருதிருவென்று முழிக்க, இதழ் வெளியே சென்றாள்.

அவன் பின்னாடியே சென்று , "மேடம் .."இதழ் திரும்பி கண்களால் அவனிடம் என்ன என்று கேள்வி கேட்க ," உங்க பேர் என்னனு சொன்னீங்கன்னா , நல்ல இருக்கும் .."அவளோ எதோ பைத்தியத்தை பார்ப்பதுபோல அவனை பார்த்தாள்.

"ப்ளீஸ் மேடம் .. உங்க பேர் .."
"சாரி சார்.. நீங்க யாருன்னே தெரியாது .. முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட நான் பேசிகிட்டு இருக்கணும்னு அவசியமில்லை. உங்ககிட்ட என்னோட பேரை சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை .." என்று வெடுக்கென்று கூறிவிட்டு அவனை தாண்டி முன்னால் செல்ல ,அவளது இடையை பற்றியவாறே, அவளை பின்னுக்கு இழுக்க, புதிய அறிமுகமில்லாத ஆடவனின் கரம் தன இடையின் மேல் விழுந்ததில் அவளது உடல் கூசி , நடுங்கியது. அவளது நடுக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒரு வாகனம் அவளை உரசி செல்ல, அவள் மேனி மீண்டும் நடுங்கியது.

"சாரி சாரி .. " என்று மன்னிப்பு கேட்டவன் அவள் தன்னிலை அடையும்வரை பொறுமையுடன் இருந்தான்.

"இப்போ உங்க பேரை சொல்லலாமே மிஸ் .. " என்று கேட்க , அவ்ளோ ,"முடியாது .." என்று கூறி விடைபெற,
அம்ரு போனில் ," அப்பா அம்மா போறாங்க.. பேசுங்க .." என்று கூற ,

"மிஸ்.. மேடம் .. " என்று கத்திகொண்டே வர, இதழ் வேகமாக நடக்கத்தொடங்கினாள்.
அவனது அழைப்புகள் காதில் விழுந்தாலும் , அதை எல்லா கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டு இருந்தாள்.

"ஹே பொண்டாட்டி .. நில்லுடி .." என்று அவன் உரக்க கத்த, அங்கே இருந்த அனைவரும் திரும்பி பார்த்தனர். இதழ் பல்லை கடித்தபடி திரும்பி பார்த்துவிட்டு , வேகமாக நடக்கத்தொடங்கினாள். அதைப்பார்த்த அருகில் இருந்த வயதான பெண்மணி , "ஏம்மா.. உன்னோட புருஷன்காரன் கூப்பிடறான்ல.. என்னான்னு கேக்குறது .. " என்று கூறினார்.

இதழோ, "அவன் என்னோட ..." என்று கூறி முடிப்பதற்குள் , "அப்பாடா .. ஒருவழியா நின்னுட்டியா.. என்மேல கோவம் இருந்த வீட்டுலபோய் வச்சுக்கலாம் ..வரேன் ஆண்ட்டி .." என்று கூறி அவளது கையை பிடித்து அருகில் இருந்த பானிபூரி கடைக்கு அழைத்துச்சென்றான்.

அம்ரு ,"ப்பா... அம்மாக்கு பானிபூரி விட , காளான் பிடிக்கும் .." என்று கூற,

அஜித் , "அண்ணா ஒரு காளான் , ஒரு பேல்பூரி " என்று ஆர்டர் செய்துவிட்டு , இதழை பார்த்தான்.

அம்ரு , "அப்பா.. சூப்பர் ப்பா... லவ் யு ப்பா." என்று கூற,

அஜித் ," லவ் யு டா " என்று கூற , எதிரில் இருந்த இதழோ அவன் தனக்குத்தான் கூறுகிறான் என்று ,
அஜித்தை முறைத்தபடி நின்றுகொண்டு இருந்தாள்.

இதழ் ,"யோவ் .. என்னடா .. லவ் னு சொல்ற ..உரிமையா பொண்டாட்டின்னு சொல்ற "

அம்ரு ," ஹாஹ்ஹாஹ்ஹா ..."

அஜித் , "சிரிக்காத டா .."

இதழ் ," டேய் .. நான் பேசுறது உனக்கு சிரிப்பா இருக்கா .." என்று கோவத்தில் கத்த ..

அஜித் ," உன்னை இல்லைம்மா.. டேய் சிரிக்காத டா ..." என்று திரும்பி நின்று கத்த ,
இதழும் அங்கியிருந்த அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர் ..

அம்ரு ," ப்பா .. நீ போன்ல பதில் பேசாத .. ம்ம் மட்டும் சொல்லு .. அப்புறம் எல்லாரும் ...ஹஹ்ஹஹ்ஹா உன்னைய ஹஹ்ஹா .. பைத்தியம்னு நெனச்சுடுவாங்க ...ஹாஹாஹா .."

அஜித் ," அடப்பாவி .." என்று திரும்பி அவன் அனைவரையும் பார்த்து ஹிஹிஹிஹி . என்று இளித்துவைக்க , அவளோ அவனை பரிதாபமாக பார்த்தாள்..

அம்ரு ,"ப்பா. இப்போவது பேர் என்னனு கேளு ப்பா .."

அஜித் ," ஏங்க.. உங்க பேரு என்னான்னு சொன்னீங்கன்னா .."

இதழ் ,"எதுக்கு.. உனக்கு ... நீ பாட்டுக்கு பொண்டாட்டி னு கத்துற .. லவ் யு னு சொல்லுற .. இதுக்கு முன்னாடி என்னை பார்த்துஇருக்கியா ..எந்த தைரியத்துல நீ என்கிட்ட பேசிட்டுஇருக்க" என்று பொரிய ஆரம்பித்தாள்.

அம்ரு , "ப்பா.. பதில் சொல்லுப்பா ."

அஜித் ," நான் என்னான்னு பதில் சொல்லுவேன் .. ஏதுன்னு சொல்லுவேன் .." என்று முனங்க ..

இதழ் , "அங்க என்ன வாய்க்குள்ள முனகிட்டு இருக்க " என்று கேட்க, அதற்குள் ஆர்டர் செய்த தட்டுகள் வர, அவளிடம் ஒன்றை குடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டான்.

"எனக்கு எதுக்கு இது .. "

"மிஸ்.. நீங்க என்னை கோவில்ல வச்சு உங்க புருஷன்ன்னு சொல்லியிருக்கீங்க . அதுக்கு நான் எதாவது சொன்னேனா .. நான் பாட்டுக்கு அமைதியா இருந்தேன்ல ..உங்க பேர் என்னானு தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு அதான் கேட்டேன்.. எங்கேயோ பார்த்தமாறி இருக்கேனு கேட்டேன் ..
அது ஒரு குத்தமா ...சொல்லுங்க .. "

"நான் உன்னை புருஷன்னு சொல்லலை .. வீட்டுக்காரர்தான் சொன்னேன்.. . பொண்டாட்டி னு கத்துவது ,லவ் யு சொல்லுவது .. இதெல்லம் என்ன... தெரியாம நான் உன்னை வீட்டுக்காரர்ன்னு அவன் அந்த லூசு கேட்டதுக்கு சொல்லிப்புட்டேன் .. இப்போ அவஸ்தை படுறேன் ..நான் சொன்னது உன்னை காப்பாத்துறதுக்கு தான்.. நீ தெரியாம தான் என்மேல மோதின , நான் பார்த்தேன் அங்கே இருந்த படி தடுக்கிவிட்டு மோதிட்டே,.அவன் என்னை வேணும்னே மோதினான் ..அவனுக்கு குடுத்த அடிய உனக்கு குடுத்துஇருக்கணும் " என்று மூச்சு வாங்க கோவத்தில் பேசியவள், வாயில் சூடான காளானை வைத்தபடி .."ஸ்ஸ் ஆஅ ..... நான் எதுக்குடா உங்கிட்ட பேரை சொல்லணும்.. யாரு டா நீ.." என்று மீதி காளானை வைத்தபடி கேட்டுக்கொண்டு இருந்தாள்.

"எங்கவூர்ல , புருஷனை வீட்டுக்காரர்ன்னு கூப்பிடுவாங்க அதான்.. சாரி .. மன்னிச்சுக்கோங்க .." என்று தன்மையாக சொல்ல, "சரி சரி.. விடு .. " என்று அவள் நகர,

"இப்போவது பேரை சொல்லுங்களே.. என்னை ஒரு நண்பனாக நினைத்தால் .." என்று ரொம்ப பணிவுடன் கேட்க, அவனை மேலும் கீழும் பார்த்தவள் ," சரி .. என்னோட பேரு இதழிசை.."

" வாவ் .. சூப்பர் பேர் .." என்று பாராட்ட, அம்ரு .." சூப்பர் ப்பா... " என்று போனில் அஜித்திற்கு முத்தம் தர , அவன் சிரித்துக்கொண்டே , "ம்ம் .." என்று கூறினான் ..

"என்ன ம்ம்ம்..உங்க பேரு .."

"என்னோட பேரு அஜித் .." என்று கூற , அவளோ விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினாள்..

அம்ரு ,"ஹ்ஹஹாஹாஹா ...' என்று சிரிக்க ," சிரிக்காதீங்க .." என்று அஜித் கூற,

"சாரிங்க.. அஜித்னு சொன்னீங்க .. நம்ம தலகிட்டே இருக்க கலர் இல்லை, அவர் அளவுக்கு அறிவும் இல்லை .. அதான் சிரிச்சுட்டேன் .."

"பரவலா விடுங்க.. எல்லாரும் சிரிக்கத்தான் செய்றாங்க . நான் எனக்கு , என்னை சுத்தியிருக்கறவங்களுக்கு நல்லவனாய் இருக்கேன் .. அதுபோதும் .." என்று கூற, அவனது இந்த பேச்சு அவளுக்கு பிடித்துஇருந்தது ..

அம்ரு .." ப்பா .. நம்பர் கேளுப்பா .."

அஜித் ,." கேட்ட, என்னை இங்கேயே கொன்னுடுவா .." என்று இளித்தபடியே முனகினான் ..

அம்ரு ," அடப்போப்பா .. உனக்கு பொண்ணுகளை கரெக்ட் பண்ணவே தெரியலை .."

அஜித் ," ஆமாடா .. நீ அதுல டாக்டர் பட்டம் வாங்கிட்ட, எனக்கு அட்வைஸ் பண்ற ..நீ அங்க வாயை மூடுன , நான் இங்கே பேசுவேன் .." என்று மீண்டும் இளித்தபடியே இதழை பார்த்து முனங்கினான்.

"சரிங்க, நான் கிளம்புறேன் .." என்று நகர , அஜித் ,"ஒரு நிமிடம் " என்று அவளை இழுத்துக்கொண்டு அருகில் உள்ள தெருவில் சென்று , " இங்கேயே இருந்து 5 வது வீடு .. அதுல தான் நான் தங்கியிருக்கேன் .. எதாவது ஹெல்ப் வேனும்னுன கேளுங்க .. பகல் முழுக்க இன்னும் ஒரு மாசத்துக்கு வெட்டிதான்..."

"ஏன் .."

"நான் நைட் ஷிப்ட்.. பின்னாடி தெரியுற , பெரிய ஆபீஸ்ல , 'ஸ்ய்ஸ்' கம்பெனில ஒர்க் பண்றேன்."
என்று இதழ் வேலை செய்யப்போகும் நிறுவனத்தின் இடத்தை சுட்டிக்காட்ட ,
அவளும் பார்த்துவிட்டு ," தேங்க்ஸ் .. ஹெல்ப் தேவைப்பட்டால் உங்களை எப்படி காண்டாக்ட் செய்வது.. உங்க நம்பரை தாங்க.. " என்று அவள் சர்வ சாதாரணமாக கேட்க,

அம்ரு .." அப்பாடா.. அம்மாவது கேட்டாங்களே .. நம்பரை உளறிக்கிட்டே கொடுப்பா" என்று பின்னல் இருந்து உசுப்ப , அவனோ சரியான நம்பரை தெளிவாக குடுத்தான்.

அம்ரு .., "உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாதுப்பா..கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்குற " என்று புலம்பினான்.

இதழை வழியனுப்பி வைத்தவன் , அம்ருவிடம்,"பார்த்தியா .. நான் நம்பர் கொடுத்துட்டேன் .." என்று கூற அம்ருவோ ," ********* " திட்டிக்கொண்டு இருந்தான்

அஜித் ,"டேய் நான் உன்னோட அப்பன் டா "

அம்ரு ," அது தெரியுது .. அதுனாலதான் அளவ திட்டியிருக்கேன் .. அம்மாகிட்ட நம்பர் வாங்க தெரியலை .."

அஜித் ," விடுறா விடுறா .. இந்த அளவுக்கு பேசியிருக்கா, தேவைன்னா நம்மளை கூப்பிடுவா .." என்று கூறிக்கொண்டே வீட்டிற்கு சென்றான் ..
வீட்டிற்கு வந்தவனை , அழைத்து ,

"ப்ப்பா..."

"என்னடா "

"அம்மா எப்படி இருந்தாங்க .."

"அழகா இருந்தாங்க "

"ஹ்ம்ம் .. என்னை மாறி இருந்தாங்களா "

"உன்னமாறியே இருந்தாங்க .."

"டேய் என்ன அம்மாக்கு மட்டும் மரியாதை தர.."

"அவங்க மம்மி ப்பா ..நீ டம்மி ப்ப்பா "

"நான் உன்னோட அப்பன்டா "

"அட என்னப்பபா நீ சும்மா இதுவே சொல்லுறே"

"எல்லாம் என் நேரம் .. டேய் எனக்கு ஒரு டவுட்.. அம்மா அழகா இருக்கா.. உங்க அம்மாவோட சாயல் உங்கிட்ட கொஞ்சம் தெரியுது .. உங்க அப்பா என்னைமாறி இருப்பாருன்னு சொன்ன, ஆனால் என்னோட சாயல் ,கலர் கொஞ்சம் கூட உங்கிட்ட இல்லையே .. .."

"ம்ம்ம்ம்...அறிவுக்கொழுந்து ...." என்று தலையில் அடித்தபடி வேற ரூமிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான் அம்ரு..

நீங்களே சொல்லுங்க.. அதான் அம்ரு அவங்க அம்மா சாயல்ல இருக்கான்ல .. இருந்தாலும் அஜித்துக்கு கொஞ்சம் வாய்க்கொழுப்பு அதிகம்தான் .. இதனாலயே , இந்த வாயாலையே இதழ் - அம்ருகிட்ட மாட்டிகிட்டு முழிக்க போறான் அஜித் ..

தனது அறைக்கு வந்த இதழ் , சந்தோசமாக பாட்டை முணுமுணுத்தபடி , நாளைக்கு தேவையானவற்றை எடுத்துவைத்துக்கொண்டு இருந்தாள். அவளது மனம் சந்தோசமாக இருந்தது .. வீட்டினரிடம் பேசிவிட்டு , சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டாள் ..

அஜித்தும் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்கு செல்ல , அவனது முகத்திலும் இளநகை இருந்தது ..
வழக்கம் போல நாட்கள் செல்ல, இதழ் ட்ரைனிங் பணிகளில் கவனம் செலுத்த ,அஜித் , அவனது பணிகளில் கவனம் செலுத்தினான் ..

விதியும் , அம்ருவும் ... எப்படி இவங்களை சேர்த்து வைக்கிறது என்று தீவிரமாக யோசித்துக்கொண்டு இருந்தார்கள் ...



************************************************************************************************************************************************
ஹாய் பிரண்ட்ஸ்,


"வானவில்லாய் நீ .. வர்ணங்களாய் நான்.." - மூன்றாம் அத்தியாயம் பதிந்துவிட்டேன் ..
படித்துவிட்டு உங்களது கமெண்ட்ஸ்களை பகிரவும்



பானுவின் - "வானவில்லாய் நீ .. வர்ணங்களாய் நான்.." - கருத்துத்திரி
 

Banusahi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரோபோசல் டே ஸ்பெஷல்:

"ஏங்க.. ஏங்க.."
"என்னடி .. ஏங்க , நோங்கன்னு இழுக்கற, என்ன விஷயம் " என்று மனதில் இருந்த பயத்தை மறைத்தபடியே அஜித் கூற, இதழோ , அவனை முறைத்தபடி மனதிற்குள் ,' வெளக்கெண்ணை.. ஆசையா கூப்பிடுறாளே.. என்னான்னு கேட்போம்னு தோணுதா.. இந்த மடசாம்பிராணியை கொண்டு வந்து என்னோட தலையில கட்டி வச்சுருக்காங்களே.. இவங்களை சொல்லணும்' என்று திட்டிவிட்டு,
" என்னோட பாவாடை நாடாவை போட்டு குடுங்க அப்படியே சுடிதார் பாண்ட்க்கும்.." என்று தன்னிடம் இருந்த அனைத்து துணிகளையும் எடுத்து போட , அந்த குவியலில் மேல் ஏறி, இதழை பாவமாக பார்த்தான்.
இதழோ எதையும் கண்டுகொள்ளாமல், அடுத்த வேலைகளை பார்க்க, அஜித் மும்ரமாக இதழ் கூறிய பணிகளை செய்து கொண்டு இருந்தான்.

"ப்பா .. " என்று அம்ரு அழைக்க

"சொல்லுடா மவனே .."

"அம்மா உங்கமேல கோவமா இருக்காங்க"

"நான் எதுவுமே பண்ணலையே..போன அடிச்சே கொன்னுடுவா" என்று மீண்டும் வேகமாக வேலை செய்ய,

"ஹையோ ப்பா... இன்னைக்கு பிரோபோசல் டே .. நீங்க இன்னும் அம்மாகிட்டப்ரோபோஸ் பண்ணவே இல்லை.. அதுனாலதான் அம்மா கோவமா இருக்காங்க.."

"ப்ரோபோசல் பண்ணனுமா..? அதுவும் உங்க அம்மாவ பார்த்து நானு .. ஏண்டா.. எனக்கு மட்டும் எங்கே இருந்து வர்ரீங்க எல்லாம் .. அதெல்லாம் முடியாது ..போ போ.." என்று அஜித் அம்ருவுடன் பேசிக்கொண்டு இருப்பதை கேட்ட இதழ், பூரிக்கட்டையை எடுத்து அஜித்தை அடிக்க தொடங்க, அடிதாங்க முடியாமல் , இதழை இடையோடுபிடித்து, அவளது உதடுகளை சிறை செய்தான்.

நீண்ட நெடிய இதழ்ஒற்றலுக்கு பின் , அவளது முகத்தை கையில் ஏந்தி , " ப்ரோபோசல் டே , காதலர் தினம் இப்படி நாள் கணக்கு வச்சு எனக்கு என்னோட காதலை உன்கிட்ட சொல்லணும்னு இல்லை.. தினமும் எனக்கு ப்ரோபோசல் டே தான் காதலர் தினம் தான் .. எனக்கு எப்போ சொல்லணும்னு தோணுச்சுனா, உடனே , இப்படி பண்ணுவேன்" என்று மீண்டும் அவளது உதடுகளை சிறை செய்தான் ..

"என்னடி .. எதுவும் பேசாம இருக்க .."

"மாமா ..." என்று அழுக, " என்னடி எதுக்கு அழுகற பேபி, இப்போ என்ன உனக்கு ப்ரபோஸ் பண்ணனுமா " என்று மென்மையாக கூற,
" நான் ஒண்ணும் அழுகல.. கண்ணு வேர்க்குது.. நீ சொன்னதே எனக்கு போதும்" என்று அஜித்தைஇறுகஅணைத்துக்கொண்டாள்.


"லவ் யு டி இதழ் செல்லம் .. மாமன் உன்னை ரொம்ப லவ் பண்ணுறேன்டி.." என்று அவளை இறுக அணைக்க , அதாவது தலையணையை அணைத்தபடி புலம்பிக்கொண்டு இருந்த அஜித் மீது அம்ரு , தண்ணீரை எடுத்து ஊற்ற , அலறியடித்துக்கொண்டு எழுந்தான் அஜித்..

'கனவா.. நல்லவேளை நிஜம்னு நெனச்சுட்டேன்..' என்று அம்ருவை பார்க்க , அம்ருவோ அவனை முறைத்துக்கொண்டு இருந்தான்..

'எதுக்கு இவன் இந்த முறை முறைக்குறான் ..' என்று எழுந்தவன், அப்பொழுதுதான் தன் கண் முன்னால் இருக்கும் இதழை பார்த்து அதிர்ச்சியில் மயக்க மடைந்து கீழே விழுந்தான் .
------------------
உங்களது கருத்துகளை பதிவிட ,

VN-VN கருத்துத்திரி
 
Status
Not open for further replies.
Top