All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதையின் முன்னோட்டம்

எது நம் அடுத்த கதைக்கு பொருந்தும்னு நீங்களே முடிவு பண்ணுங்கள்...

  • எ(உ)ந்தன் நெஞ்சில் சாய(வா)

    Votes: 33 78.6%
  • தீராத தித்திப்புகள்

    Votes: 7 16.7%
  • சாலையோர பனித்துளிகள்

    Votes: 2 4.8%

  • Total voters
    42
Status
Not open for further replies.

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சிஸ்டர்ஸ் அண்ட் லவ்லி டியர்ஸ்,

என்னோட முதல் கதையே இன்னும் முடியவில்லை என்றாலும் இந்த தமிழ் புத்தாண்டில் என்னோட அடுத்த கதையை துவங்க செய்துள்ளேன் (முதல் கதையே இன்னும் முடியல அதுக்குள்ள அடுத்தானு நீங்க திட்றது கேட்குது) இது எந்த அளவுக்கு வரும்னு எனக்கு தெரியல. ஆனாலும் உங்களோட ஆசிர்வாதமும், ஊக்கமும் என்னை விழாமல் நடத்தி செல்லும் என்ற நம்பிக்கையிலும், எழுத்தின் மேல் உள்ள ஆர்வத்திலும் எழுத தொடங்கிட்டேன். கதையின் முன்னோட்டம் கீழே பதிவு செய்கிறேன். படித்துவிட்டு ஓரிரு வார்த்தை என்றாலும் கருத்துகளை சொல்லுங்கள்.

இப்படிக்கு

உங்கள் அன்பு தங்கை ரேவதி😍😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“இங்க பாருடா கடைசியா சொல்றேன், இந்த பொண்ணு உனக்கு வேண்டாம், அப்படி என்னடா வெறும் அழக பார்த்து மட்டும் கல்யாணம் பண்ணுறதுக்கு சம்மதிப்ப” என்று மணமேடையில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளையின் தாய் ஏகத்துக்கும் கத்தினார்.

“இந்த பொண்ண தான் நீ கல்யாணம் பண்ணனும்னு நினைச்சா எங்கள எல்லாம் மறந்துடு, எங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு மட்டும் தானு உன்னைய நாங்க இங்கயே தலை மூழ்கிடுறோம், ஒன்னும் இல்லாதவள கல்யாணம் பண்ணி எங்க வீட்டுக்கு மருமகளாக்க நாங்க ஒன்னும் கேனை இல்ல, உன்னால எங்க கௌரவம் தான் போக போகுது” என்று அவனின் தந்தையும் திட்டி தீர்த்தார்.

“இங்க பாருங்க எனக்கு யாரை கல்யாணம் பண்ணனும்னு எனக்கு தோணுதோ அவள தான் நான் கல்யாணம் பண்ணுவேன், அதுக்காக இவள உங்களுக்கு பிடிக்கலை, கௌரவம், அது இதுனு சொன்னா உடனே நான் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேனோ இல்லை உங்க சொத்துல பங்கு கேட்க மாட்டேனோ,வீட்டுக்கோ வரமாட்டேனு மட்டும் தப்பு கணக்கு போட்டா ஐ ஆம் வெரி ஸாரி” என்று கூலாக தன் பெற்றோரை பார்த்து பதில் பேசியவன் மிரண்டு விழிக்கும் ஐயரை தன் முன் எரியும் ஹோமகுண்டகத்திற்கு இணையாக கண்கள் சிவக்க அக்னிக்கு ஒத்த தன் பார்வையால் பார்த்தான். அவனின் பார்வையில் கைகளும் மந்திரம் சொல்ல முயற்சி செய்யும் வாயும் நடுங்கினாலும் அவனின் தீப் பார்வையில் தானாக “கெட்டிமேளம் கெட்டிமேளம்”என்றார்.


ஐயரின் குரலிற்கு இணங்க தன் கையில் உள்ள தாலியை ஒரு முறை பார்த்து தயங்கியவன் மறுநிமிடம் தன் முக மாறுதல்களை மாற்றிக் கொண்டு தன் அருகில் அமர்ந்து தன்னை அன்னியப் பார்வையோடு பார்க்கும் அந்த மணபெண்ணின் கழுத்தில் கலக்கத்துடனும் இறுக்கத்துடனும் தாலியை இரண்டு முடிச்சினை போட்டவன் தன் பின் பெற்றோருக்கு பயந்து நிற்கும் தன் தங்கையை ஆழ்ந்து பார்த்தான். தன் உடன்பிறந்தவனின் பார்வையில் மருட்சியுடன் ஒரு முறை பெற்றோரை பார்த்தவள் குனிந்து மூன்றாவது முடிச்சிட்டாள் தன் உயிரான அண்ணனின் மனைவிற்கு. அதில் ஒரு நிமிடம் அவனின் மனது அமைதி அடைந்தது.

அந்த மிக பெரிய திருமணம் மண்டபம் முழுவதும் அமர்ந்திருந்தவர்கள் ஆனாலும் இவனுக்கு இவ்வளவு ஆகாது அழுத்தக்காரன், கல்நெஞ்சுக்காரன், பணம் இருக்குன்னு அவ்ளோ திமிரு அதான் அவன் நினைச்சதை சாதிச்சுட்டானே, இந்த பிள்ளை எந்த ஜென்மத்துல பண்ணுன பாவமோ இவன கல்யாணம் பண்ற நிலைமை வந்துருச்சே, இந்த பிள்ளைக்கு இவன பத்தி தெரிஞ்சா கல்யாணம் பண்ணிருக்காதோ என்னவோ” என்று ஏகத்துக்கும் மணமேடையில் மணக்கோலத்தில் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளையை ஆளாளுக்கு வசை பாடிக்கொண்டிருந்தனர்.


ஆனால் அவனின் முக பாவனை திமிரினாலோ பணசெருகினாலோ கர்வதாலோ வந்தது இல்லை வெளியில் முக இறுக்கத்துடன் அமர்ந்திருந்தவன் உள்ளுக்குள் எவ்வளவு வேதனையை வலியை தாங்கி கொண்டு அமர்ந்திருக்கிறான் என்பதை அறிந்தவர்கள் மூன்று பேர் மட்டுமே ஒன்று தாலி கட்டிய, மாப்பிள்ளை,இரண்டாவது மாப்பிள்ளையின் தங்கை, இன்னொரு நபர் மாப்பிள்ளையின் உயிர் நண்பனும் மாமன் மகனுமாகிய மற்றொருவன்.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.. Nice teaser... All the best for your second story....seri ithula ரெண்டு title Iruku... Eppo pootu irukara teaser oda title enna...
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.. Nice teaser... All the best for your second story....seri ithula ரெண்டு title Iruku... Eppo pootu irukara teaser oda title enna...
Ama sis...select panunga....one week vachruken.... Votes pathutu aduthu story start paniruvom sis 👍👍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் லவ்லி டியர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்,

தர்ஷன் ஷாலினி ஆதி தீக்ஷா எழுதலாம்னு போனா இந்த பையன் எங்கூட ஒட்டிட்டே இருக்கான் ...சோ இதோ அடுத்த டீசர்...

படிச்சிட்டு கமெண்ட்ஸ் ப்ளீஸ்

இப்படிக்கு

உங்கள் அன்பு தங்கை ரேவதி 😍😍
 

revathyrey04

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முன்னோட்டம் 2 :

புயலின் வேகத்திற்கு இணையாக தங்களின் வீட்டின் பெரிய நுழைவாயிலில் காரின் வேகத்தினை ஒரு நொடி குறைத்தவன் மறுநொடி தனக்கே உரித்தான ஸ்டைலில் காரை சடாரென வீட்டின் முன் போர்டிக்கோவில் நிறுத்தி வீட்டின் வாயிலை பார்த்தவனிற்கு கோபம் கொப்பளிக்க, விடாது கார் ஹாரனை ஒலிக்க விட்டான்.

அப்படி இருந்தும் உள் இருந்து வெளியில் ஒருவரும் வரும் அரவம் இல்லாது போக மீண்டும் ஹார்னை விடாது அழுத்தினான். சில வினாடிகளில் வீட்டில் வேலை செய்யும் ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு பெண்மணி கைகளில் ஆரத்தி தட்டுடன் வாயிலின் முன் அப்பட்டமாக பயத்தில் குளிரெடுக்க பிரவேசித்தார். இப்படி ஒரு செய்கையினை பார்த்தவனிற்கு கோபம் ஆத்திரம் பன்மடங்காக அதிகரிக்க தன் வேலையை விடாது செய்தான். அதாவது கார் ஹார்னை ஒலிக்க விடுவது.


அவனின் எண்ணம் புரிந்து போக அவனின் தாய் மற்றும் தங்கை வெளியில் வந்தார்கள். தன் தாயின் கோப முகத்தை ரசனையோடு பார்த்து கொண்டே காரில் இருந்து நக்கல் சிரிப்புடன் இறங்கி மறுபுறம் வந்து காரின் கதவை திறந்தவன் தன்னை பயத்துடன் நோக்கும் தன் புது மனைவியை கீழ் இறங்க தன் நீண்ட வலிய கரங்களை நீட்டினான்.


அவன் மேல் உள்ள பயத்தில் அவளும் அவனின் கரம் பற்றி இறங்கியவள் மறந்தும் அவன் கைகளை அகற்றவில்லை. அந்த சிறு செயல் அவன் மனதிற்கு அளித்த ஆறுதல் நிம்மதியை வார்த்தைகளால் வடிக்க இயலாது. (கதை அப்போ டீடெய்லா சொல்லிறேன் ஹீ ஹீ… )

தன் முன் தங்களுக்கு ஆரத்தி சுற்ற வந்த பெண்மணியை ஆத்திரத்துடன் உறுத்து விழிக்க தானாக தள்ளி நின்றார். “என்ன மாம், உங்க மருமகளுக்கு நீங்க வந்து ஆரத்தி சுற்றி உள்ள கை பிடிச்சி கூட்டிட்டு போய் விளக்கு ஏற்ற வைக்கனும், அது தான முறை, இந்நேரம்

மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குல மகளே வா வா
தமிழ் கோவில் வாசல் திறந்து வைத்தோம் வா வா


அப்படினு பாட்டுலாம் போட்டு எங்களை தடபுடலான வரவேற்பு குடுக்க தான் வீட்டுக்கு வேகமா வந்தீங்கனு பார்த்தேன்…”

என்று தன் அன்னையின் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்தவன், “சரி டையர்டா இருப்பீங்க, நீ வந்து ஆரத்தி எடு டா” என்று பயத்துடன் நின்றிருந்த தங்கையை அழைத்தான்.


“இங்க பாரு இருக்குற கடுப்புல எதும் என்னைய பேச வைக்காத, ஒன்னும் இல்லாதவள இந்த வீட்டு கேட்-குள்ள விட்டதே பெரிசு, இதுல இவளுக்கு நா ஈஈ னு இளிச்சுட்டு ஆரத்தி சுத்தனுமோ, அதுக்கு தகுதி இருக்கா இவளுக்கு” என்று வெறுப்புடன் உள்ளே சென்று விட்டார்.


அதன் பின் அவனின் தங்கை ஆரத்தி எடுத்தவுடன் மனைவியின் கரத்தினை இறுக பற்றி முக இறுக்கத்துடன் வீட்டினுள் நுழைந்தான். தன் கல்யாணம் எப்படி எல்லாம் நடக்க வேண்டும் என தான் கண்ட கனவில் ஒன்று கூட நடக்காது போனதில்,அதன் காரணமாகியவர்களை எண்ணி ஆத்திரம் பொங்க ஹாலின் நடுநாயகமாக இருந்த ஸோபாவில் அமர்ந்து தன் மனைவியையும் தன் அருகில் அமர்த்திக் கொண்டான்..
 
Last edited:
Status
Not open for further replies.
Top