All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் கள்வனே காதலனாக! கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாம் நேசிப்பவர்கள் நம்மை வெறுத்தால் எந்தளவுக்கு வலிக்குமோ அந்த வலியை இப்போது அனுபவித்துக் கொண்டிருந்தாள் மலர்.



சிகரெட் புகையை விலக்கியவாறு முன்னேறியவள் அங்கு கண்ட காட்சியில் உறைந்து போய் நின்று விட்டிருந்தாள்.



இரண்டு மூன்று சிகரெட் கவர்கள் காலியாக கீழே குவிந்து கிடக்க புகை மூட்டத்தின் நடுவில் அமர்ந்திருந்தான் அவன்.



அவன் அமர்ந்திருந்த கோலத்தை கண்டு பதறியவள் ஏதோ ஒரு உந்துதலில் வேகமாக அவனருகில் சென்று அவன் கையில் வைத்திருந்த சிகரெட்டை தட்டி விட்ட மறு நொடி தரையில் விழுந்து கிடந்தாள் அவள்.



காதில் கிங்ங்ங்ங்ங்ங்ங்...... என்ற சத்தத்தை தவிர எதுவும் கேட்கவில்லை. அப்போது தான் அவளுக்கே புரிந்தது அவன் தன்னை அறைந்திருக்கின்றான் என்று. அவனது ஐந்து விரல்களும் அவளது இடது கன்னத்தில் அழுத்தமாய் பதிந்திருந்தது.



கன்னத்தை பிடித்துக் கொண்டு அதிர்ந்து அவனை நோக்கியவள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உலர்ந்து போன உதட்டை நாவினால் ஈரப்படுத்தியவள் அவனை நிமிர்ந்து பார்க்கும் திராணியின்றி...



“ஏன் மேல உள்ள கோபத்துல தான் நீங்க இப்டி சிகரெட் பிடிச்சீங்கலா? உங்களுக்கு என்மேல கோபம்னா அத என்கிட்டேயே காட்டுங்க.... அதுக்காக நீங்க குடிச்சி உடம்ப கெடுத்துக்காதீங்க...” என மெல்லிய குரலில் கெஞ்ச....



அவள் பேசியதை கேட்டு பலமாக கைதட்டியவன் “ஓஹ்.... நான் தாலி காட்டினதும் எனக்கு நீ பொண்டாட்டி வேல பார்க்க ஆரம்பிச்சிட்டியா?” என கேலியாய் வினவியவன் மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தவாறு எழுந்து நின்றவன் புகையை உள்ளிழுத்து அவள் முகத்தில் ஊதினான்.



“எஹ்ஹ்ஹ்” என இருமியவள் அவனை தவிப்புடன் பார்க்க....



அவளது பார்வையை கண்டு கொண்டவன் “என்ன நான் ஸ்மோக் பண்றத பார்த்தா உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கா?” என தீவிரமான குரலில் கேட்க....



அவளோ என்ன சொல்வது எனப் புரியாமல் விழித்தவள் எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைக்க...



“இப்டி எல்லா பக்கமும் ஆட்டினா நான் என்னன்னு நினைக்கிறது” என தாடையை தடவியவன் “ஒரு வேல எனக்கு என்ன ஆனாலும் உனக்கு கவலை இல்லைன்னு அர்த்தமோ” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு வினவ...



அவளோ பதறிப் போய் “அப்படியெல்லாம் இல்ல... நீங்க இனிமே சிகரெட் பிடிக்காதீங்க... மேலுக்கு ஏதாவது ஆகிடும்” என பயத்துடன் முனுமுனுக்க...



“ஓஹ் அப்போ எனக்கு ஏதாவது ஆயிடிச்சின்னா நீ பீல் பண்ணுவ... அப்படித்தானே...” சாதாரணக் குரலில் ஆரம்பித்தவன் உடல் இறுக கண்கள் தீக்கங்குகளாய் ஜொலிஜொலிக்க அவளை வெறுப்புடன் பார்த்தவன் அவளருகில் நெருங்கினான்.



அவனது ரௌத்ர முகத்தைக் கண்டவள் பயத்தில் பின்னால் நகர அதற்கு மேல் நகர முடியாமல் சுவர் தடுக்க அதில் ஒன்டியவள் அவனையே பயத்துடனும் தவிப்புடனும் பார்த்து கொண்டிருந்தாள்.



அவளை நெருங்கியவனின் கண்களில் அவள் முகம் மறைந்து தன்னவளின் முகம் தோன்ற அதை ஆசையுடன் பார்த்தவன் ஒற்றை விரலால் அவளது பிறை நுதலில் ஆரம்பித்து கன்னம் வரை மென்மையாய் தீண்டியவன் அவளது கன்னத்தை நிமிண்டியவாறு அவளது இதழில் வந்து இளைப்பாறினான்.



அதற்கு மேல் தாங்க முடியாமல் தாபமும் மோகமும் போட்டி போட்டுக் கொண்டு காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்து உடல் முழுவதும் தன்னவள் வேண்டும் என ஏங்க துவங்க அதற்கு மேல் மனதை அடக்க முடியாமல் தவித்தவன் “மைலு” என்று கிறக்கமான குரலில் அழைத்தவாறு அவளை இன்னமும் நெருங்கி அவளது மெல்லிதழை வன்மையாய் சிறை செய்தான்.



மலரோ அவனது தொடுகையில் தேகம் சிலிர்க்க தன்னவனின் முதல் முத்தம் பேதை மனதை எங்கோ இழுத்துச் செல்ல அவளும் அவனுக்கு இழைந்து கொடுத்தாள்.



எத்தனை நேரம் நீடித்ததோ அதற்கு மேல் தாங்க முடியாமல் மூச்சுக்காற்றிற்கு தவித்தவள் அவனை விலக்க அவனோ இன்னும் இன்னும் அவளில் மூழ்க துவங்கினான்.



அவள் மீண்டும் அவனை விலக்க முயற்சிக்க “மைலு ப்ளீஸ்” என்று தாபம் வழிந்தோடிய குரலில் அவளை இழுத்து அணைத்தான்.



‘மைலு’ என்ற பெயர் அவள் காதில் விழுந்த மறுநொடி உடல் இருகியவள் அதற்கு மேல் தாங்க முடியாமல் அவள் காதல் மனம் விழித்துக் கொள்ள சட்டென்று அவன் நெஞ்சில் கை வைத்து பலம் கொண்ட மட்டும் அவனை தள்ளினாள்.



மோகத்தில் மூழ்கி திளைத்திருந்தவனோ அவளது திடீர் தாக்குதலில் அவளை விட்டு விலகியவன் அவளை தாபத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அங்கு அவனவளின் முகம் மறைந்து மலரின் கலங்கிச் சிவந்திருந்த முகம் தோன்ற அதை பார்த்து “சை” என்று அவளை தள்ளிவிட்டவாறு விலகினான் அவன்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் தள்ளியதில் அங்கிருந்த கட்டிலில் விழுந்தவளின் நெற்றியை கட்டிலின் முனை பதம்பார்க்க அதிலிருந்து ரத்தம் கசிந்து வலியை கூட்ட “ஸ்ஸ்” என்று முனகியவள் நெற்றியை பற்றியவாறு பயத்துடன் எழுந்து நின்றாள்.



அவளை பார்க்க பார்க்க மனதில் கோபமும் எரிச்சலும் ஒருங்கே எழுந்தது. தன் காதல் நிறைவேறாத கோபம், தனக்கு சற்றும் பொருத்தமில்லாதவள் மனைவியாய் வந்த ஆத்திரம் எல்லாம் ஒரு சேர அவனை தாக்க அதையெல்லாம் அவளிடம் காட்ட துவங்கினான்.



அவள் நெற்றியில் கசிந்து கொண்டிருந்த இரத்தைத்தை சிறிது கண்டு கொள்ளாமல் அவளருகில் வந்து அவள் தலை முடியை கொத்தாக பற்றி அவள் முகத்தை நிமிர்த்தியவன் “நீ எல்லாம் என்ன பொண்ணுடி... உனக்கு கொஞ்சம் கூட வெட்கமா இல்லை... சீ...” என்று முகம் சுளித்தவன்.....



“அதுயெப்டிடி முன்னபின்னே தெரியாதவன் தொட்ட உடனே இப்படி வெக்கமே இல்லாம உருகி குழைற” என்று வெறுப்புடன் கூறியவனின் பேச்சில் அடிபட்ட பார்வையுடன் அவனை நோக்கினாள் மலர்.



‘என்ன வார்த்தை சொல்லிவிட்டார்... அதுவும் என்னை பார்த்து...நான் வேசியா... கடவுளே... இந்த வார்த்தை கேட்பதற்காகவா இத்தனை நாளாய் என்னை உயிருடன் வைத்திருந்தாய்.... அன்றே நான் ஒரேயடியாய் செத்து போயிருக்கலாமே... அன்று பிழைக்க வைத்து இன்று உயிருடன் கொன்றுவிட்டாயே....இதுவே இவரிடத்தில் வேறுயாராவது இருந்திருந்தால் அவனையும் கொன்று என்னையும் அழித்திருப்பேனே... இது ஏன் இவருக்கு புரியவில்லை... நான் இவர் மேல் வைத்திருக்கும் காதலை எப்போது இவர் உணர்ந்து கொள்வார்...’ உள்ளுக்குள் கதறினால் அந்த அப்பாவி பேதை பெண்.



இத்தனை நாளாய் தன்னுடன் கனவில் வாழ்ந்து கொண்டிருந்தவன் இன்று நிஜத்தில் தன்னை தொடவும் அதிர்ச்சியில் உறைந்தவள் அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டதென்னவோ உண்மை தான்.



ஆனால் அதற்கு இவன் இப்படி அர்த்தம் கற்பித்து கொள்வான் என்பதை தான் அவள் சற்றும் அறிந்திருக்கவில்லை.



அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதில் ஆழப்பதிந்து போனது.



கை தவறினால் பொருள் உடையும் என யோசிப்பவர்கள் வாய் தவறினால் மனம் உடையும் என யோசிப்பதில்லை. அந்த நிலையில் தான் அவனும் இருந்தான். அவன் பேசிய பேச்சு அவள் வாழ்நாள் முழுமைக்கும் அவளுடன் பயணிக்க போகின்றது என்பதையும் அவன் அறியவில்லை அதே பேச்சு பின்னாளில் தன்னை கொஞ்சம் கொஞ்சமாய் அழிக்கப் போகின்றது என்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை.



“நீ என் கால் செருப்புக்கு கூட லாயக்கிலாதவள் உன்ன எப்பிடி நான் என்னோட பொண்டாட்டியா அதுவும் தி கிரேட் அஹ்லுவாலியாவோட பொண்டாட்டியா ஏத்துப்பேன்...” என்று கர்சித்தவன்.....



“இனிமே என்னோட பெட்ரூம் பக்கமே நான் உன்ன பார்க்கக் கூடாது கெட் அவுட்...” என அடிபட்ட பாம்பு போல் சீற அவனை மரத்து போன மனதுடன் நிமிர்ந்து பார்த்தவள் ஒன்றும் பேசாது அங்கிருந்த உடைமாற்றும் அறைக்குள் நுழைந்து கதவை தாள் போட்டு கொண்டாள்.



அதற்கும் ஏதேதோ சொல்லி அவளை வார்த்தையால் கொன்றவன் அதற்கு மேல் ஒன்று பேசாது தூங்கி விட்டிருந்தான்.



அன்றைய இரவை தூங்காமலே கழித்தாள் அவள்.



இவளது நிலையறிந்து கவலை கொண்ட விதி கூட ‘இன்னும் நீ படவேண்டியது நிறைய இருக்கின்றது’ என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்து வைத்தது.


கள்வன் வருவான்...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 06





“தேவிம்மா.... நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்....” என இழுக்க....



“சரி சொல்லு மலர் என்ன விஷயம்...”



“அது வந்து....வந்து.... அது என்னன்னா.....”



“அதான் இவ்ளோ தூரம் வந்திட்டியே சொல்லு என்ன விஷயம்...எதுக்கு இப்படி தயங்கிற....”



“நான் சொல்லுவேன் ஆனா நீங்க என்ன திட்டக்கூடாது.... சரியா.....”



“ஜவ்வு மாதிரி இழுத்திட்டு இருக்காம பட்டுன்னு சொல்லுடி” என்று அவளை செல்லமாய் வைய....



“அடி ஆத்தி.... என்ன நீங்க என்ன மாதிரியே பேசுறீங்க....” என்று அதிசயித்தவள் மறுநொடி “ப்ச் தேவிம்மா இப்போ எதுக்கு நீங்க இடையில பேசுறீங்க... நான் சொல்லி முடிஞ்சப்புறம் நீங்க பேசுங்க....” என்று கட்டளை இட்டாள்...



“அது வந்து.... அது என்னன்னா... நான் இங்க வந்தப்புறம் உங்க கிட்ட ஒன்னு சொன்னேனே ஞாபகம் இருக்கா...”



“தேவிம்மா உங்களத் தான் கேக்குறேன் பதில் சொல்லுங்க....”



“அடியே மலருருருருருரு... நீ தானேடி நான் பேசும் போது இடையில பேசாதீங்கன்னு சொன்ன...” என்று அவள் வாயில் வைத்திருந்த விரலை எடுத்து விட்டு கடுப்புடன் கூற...



அதைக் கேட்டு அசடு வழிந்தவள் “ஆ..ஆ அது நா... நான் நான் என்ன சொன்னேன்... நான் பேசும் போது இடையில பேசாதீங்கன்னு தான் சொன்னேன்... கேள்வி கேட்கும் போது பதில் சொல்லவேனாம்னா சொன்னேன்...” என்று சமாளிக்க....



“நல்லா சமாளிக்கிறடி....”



“தேவிம்மா.... இப்போ நான் உங்க கிட்ட என்ன கேக்கிறேன்... நீங்க என்ன சொல்றீங்க” என சிணுங்க....



“தேவிம்மா.... தேவிம்மா.... நான் உங்கள விட்டு இனி எங்கயும் போக மாட்டேன்.... நான் எப்பவும் உங்க கூடத்தான் இருப்பேன்....நீங்களே என்ன போக சொன்னா கூட போக மாட்டேன்.....” என்று அவளை போலவே செய்து காட்ட....



“ஆ... அதே தான்.... நீங்க ரொம்ப புத்திசாலி தேவிம்மா... எப்படி ஞாபகம் வச்சிருக்கீங்க...” என்று அவளை புகழ....



“சரி... சரி... என்ன புகழ்ந்தது போதும் நீ சொல்ல வந்தத முதல்ல சொல்லு...”



“ஆ... அது என்னன்னா... நான் உங்க கிட்ட என்ன சொன்னேன்... எப்பவும் உங்க கூடவே இருக்கணும்னு சொன்னேன்ல... ஆனா எனக்கு கல்யாணம் ஆயிடிச்சினா நான் உங்கள விட்டிட்டு போய்டுவேனே... அப்றோம் எப்டி நான் உங்க கூடவே இருக்கிறது....



“அதனால நான் ராத்திரி முழுக்க தூங்காம என்ன யோசிச்சேன்னா?”



“ம்ம்... என்ன யோசிச்ச....”



“அது என்னன்னா....”



“என்ன?”



“அத எப்படி சொல்றதுன்னு தான் தெரியல....”



“அப்போ சொல்லாத...”



“தேவிம்மா”



“இதோ பாரு மலர்... நீ என்ன வச்சு செய்ற... ஒழுங்கு மரியாதையா என்னன்னு சொல்லு....”



“நான் என்ன யோசிச்சேன்னா... பேசாம நாம இப்டி பண்ணா என்ன?....”



“எப்படி?....”



“அது.... அது... நாம ரெண்டு பேரும் ஒருத்தரையே கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன...? அப்றோம் நாம ரெண்டு பேரும் எப்பவும் ஒன்னாவே இருக்கலாம்... என்ன நான் சொல்றது?” என்று குறும்பு புன்னகையுடன் வினவ...



“அடிங்....” என சன்ன சிரிப்புடன் அவளை துரத்த....



“ஐயையோ தேவிம்மா... நான் பாவம்...நான் சின்ன பொண்ணில்ல... உங்க செல்ல மலரு குட்டில்ல ப்ளீஸ்... ப்ளீஸ்... என்ன விட்டுடிங்க” என்று கத்தி கொண்டு ஓடியவள் அங்கிருந்த கட்டிலில் குப்பற விழுந்தாள்.



அங்கிருந்த ஏதோவொன்று அவள் நெற்றியை பதம் பார்க்க “ஆஆ..” என்று முனகியவள் தேவி வருகின்றாளா என பின்னால் திரும்பி பார்க்க அவள் வரும் அரவம் கேட்கவும் சட்டென்று அங்கிருந்த தலையணையில் முகம் புதைத்தாள்.



அதுவோ ஒரு மாதிரி வித்தியாசமாய் இருக்க “வர வர இந்த தலைகாணி கூட ரொம்ப மோசமாகிட்டே போகுது....” என்று முனுமுனுத்தவாறு அதில் சாய்ந்து உறங்க துவங்கினாள்.



அரைகுறை தூக்கத்தில் இருந்தவள் மேல் ஏதோ ஊர்வது போலிருக்க “ப்ச்” என்றவாறு கண்கள் சொருக இதழ்கள் புன்னகையில் மலர தூக்கத்தை தொடர்ந்தாள்.



மீண்டும் ஏதோ ஊர்வது போலிருக்க அரைக்கண்ணை திறந்தவள் அங்கு கண்ட காட்சியில் உறைந்து போனாள்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதில் பயம் அப்பிக்கொள்ள என்ன செய்வது என புரியாது விழித்தவள் மெதுவாக எழ முயற்சிக்க அவளால் சற்றும் அசையக்கூட முடியவில்லை.



அவளது வயிற்றில் கை போட்டு உறங்கி கொண்டிருந்தான் யுத்கார்ஷ்.



அவனுக்கு விழிப்பு வராமல் அவனது கையை தூக்க முயற்சிக்க அவனது பாறாங்கல் போன்றிருந்த கையை அவளால் ஒரு இன்ச் கூட நகர்த்த முடியவில்லை.



‘இவரு பெட்ரூம் பக்கமே வரக்கூடாதுன்னு சொன்னாரே... அப்றோம் நான் எப்படி வந்தேன்...’ என்று மூளையை கசக்கியவளுக்கு அப்போது தான் நினைவு வந்தது சற்று நேரத்தின் முன்பு தான் கண்ட கனவு.



‘அச்சச்சோ.... இப்போ என்ன பண்றது.... கனவுல தானே ஓடி வந்து கட்டில்ல விழுந்தோம்.. அப்றோம் எப்படி’ என்று மீண்டும் மண்டையை தட்டி யோசித்தவள் கிடைத்த விடையில் விதிர்விதிர்த்து போனாள்.



‘அடியே மலரு கனவுல ஓடி வாறதா நெனச்சு நெஜத்தில ஓடி வந்திட்டியேடி... அப்போ தலகாணின்னு நினச்சது இவரோட நெஞ்சையா... அதான் ஏதோ ஊர்ர மாதிரி இருந்திருக்கு.....’



‘இப்போ மட்டும் இவரு இங்க என்ன பார்த்தாரு கொன்னே போட்டுடுவார்...’ நகத்தை கடித்து துப்பியவள் அவன் கையை லேசாக நகர்த்தவும் கடவுளுக்கு கோடானகோடி நன்றிகளை வாரி வழங்கியவள் மெதுவாக நகர்ந்து கட்டிலுக்கு வெளியே காலை வைத்த மறுநொடி அவனது நெஞ்சில் பூமாலையாக விழுந்து கிடந்தாள்.



பயத்தில் நா உலர எச்சிலை விழுங்கியவள் மீண்டும் மெதுவாக எழ முயற்சிக்க அவனோ அவளை கட்டிலில் கிடத்தி அவள் நெஞ்சில் முகம் புதைத்து அவளை இறுக அணைத்து கொண்டு தூங்க தொடங்கினான்.



அவன் முகம் புதைத்திருந்த இடத்தை பார்த்து வெட்கம் பிடுங்கி தின்ன கூச்சத்தில் நெளிந்தவளை இன்னமும் இறுக அணைத்தவன் அவள் நெஞ்சில் ஆழ புதைந்தான்.



அவளோ ஒரு பக்கம் வெட்கமும் மறு பக்கமும் பயமும் ஒரு சேர ஆட்கொள்ள என்ன செய்வது என புரியாமல் தவித்து போனாள்.



அவளால் அவனின் பிடியை தளர்த்தி அவ்வளவு சுலபத்தில் எழுந்து கொள்ளவும் முடியவில்லை.



‘கடவுளே என்ன எப்படியாவது காப்பாத்துங்க.... இப்போ இவர் எழுந்தாருன்ன என்னை என்ன பண்ணுவாருன்னு தெரியல...இவர் ஏதாவது பண்ணினா கூட நான் தாங்கிப்பேன்... ஆனா வார்த்தையால கொல்றதை தான் என்ன தாங்க முடியல...’



‘இவர் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் என்னை கொல்லாம கொல்லுது... அதை தாங்கிற சக்தி கூட என்கிட்ட இல்ல.... தேவிம்மா நான் உங்களுக்காக எதை வேணா தாங்கிப்பேன்... ஆனா என்னோட பாழாப்போன காதல் மனசு தான் அவர் சொல்ற வார்த்தைகளால கொஞ்சம் கொஞ்சமா செத்துக்கிட்டு இருக்கு.... ஒரு நாள் இந்த காதலும் செத்து போய்டுமோன்னு பயமா இருக்கு தேவிம்மா’ என்று சப்தமில்லாமல் உள்ளுக்குள் கதறியவளின் கண்களிலிருந்து கண்ணீர் கரை உடைந்து ஓடி அவனின் நெஞ்சில் விழுந்து அவனது கல் நெஞ்சை சிறிது கரைத்ததோ என்னவோ அவன் அவளிடமிருந்து விலகி படுத்தான்.



அவன் அருகில் நெருங்கினால் தேவியின் நினைவில் தன்னை நெருங்குகின்றானோ என தவிப்பவள் அவன் விலகினால் தன் காதல் புரியாமல் விலகிப்போகின்றாரே என தவிக்க துவங்கினாள்.



அவன் தன்னை விட்டு விலகியதும் நெஞ்சம் பாரமாய் கனக்க அவன் முகத்தை ஏக்கத்துடன் பார்த்து கொண்டு அவனது அறையை விட்டு வெளியேறினாள்.



அவள் அறையை விட்டு வெளியேறியதும் கண்களை திறந்த யுத்கார்ஷின் நெஞ்சமும் கனத்துத் தான் போனது.



ஒரு புறம் அவள் மேல் அளவு கடந்த வெறுப்பிலும் கோபத்திலும் வார்த்தைகளை அமிலமாய் அவள் மேல் கொட்டுபவன் மறுபுறம் அவளது அடிபட்ட பார்வையிலும் ஏக்கப் பார்வையிலும் தன்னை அறியாமலே உள்ளுக்குள் தவிக்க தொடங்கினான்.



அவனால் அவனது மைலுவையும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியவில்லை. அவளை ஏமாற்றி தான் காதல் செய்தான். அவள் தன்னை சீண்டியதற்கு பதிலடி கொடுப்பதற்காக தான் அவளை விரும்புவதை போல நடிக்க ஆரம்பித்தான், ஆனால் அது அவர்களை அறியாமலே நாளடைவில் ஆழமான காதலாய் உருமாறியிருந்தது.



இதோ இந்த நொடி கூட அவனால் தன்னவளை மறக்க முடியவில்லை. மறக்கவும் முயற்சிக்கவில்லை. ஆனால் அவனறியாமல் மலரை நெருங்கும் வேளையில் அவனவளின் முகம் தோன்றி அவனை தன் வசம் இழக்க செய்து இறுதில் என்னன்னெவோ நடந்துவிட்டிருந்தது.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இறுதியில் தன் மேல் பிழையென்று தெரிந்தும் இவள் தன்னை தன் வசம் இழக்க செய்து விட்டாலே என்ற வெறி வந்து அவளை வார்த்தையால் கொல்ல தொடங்கி விடுவான்.



மலரின் மேல் கோபத்தை காட்டும் அதே மனம் தான் அவள் தன் அருகில் வரும் போது அவளறியாமல் அவளை ரசிக்கவும் தூண்டுகின்றது அதே போல் அவள் விலகிச் செல்லும் போது தன்னை விட்டு விலகி போகின்றாளே என தவித்து அவளை வெறுக்கவும் செய்கின்றது.



இரண்டு விசித்திர உணர்வுகளுக்கிடையில் மாட்டி தவித்து கொண்டிருந்தான் யுத்கார்ஷ்.



விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையிலுள்ள நூலளவு இடைவெளியை தாண்ட முடியாமல் தவித்தான் அவன்.



சற்று நேரத்தின் முன்பு கூட தூக்கம் வராமல் தன்னவளின் நினைவில் ஆழ்ந்திருந்தவன் மேல் பூமாலையாய் விழுந்தவளை ஒரு நொடியில் அவன் விலக்கி தள்ளியிருக்கலாம்.



ஆனால் அவனால் அது ஏனோ முடியாமல் போய்விட்டிருந்து. அவனை அறியாமல் அவன் மனதில் நுழைந்திருந்த மலர் அவனது உணர்வுகளை லேசாய் தட்டி விட அவளை சீண்டும் ஆசையில் தான் அவன் பெண்ணவளின் இடுப்பில் கை போட்டுக் கொண்டு அவள் மார்பில் முகம் புதைத்தான்....



உடனேயே விலகியும் விடும் எண்ணத்தில் தான் இருந்தான் ஆனால் எங்கே.... பெண்ணவளின் தளிர் மேனியின் மென்மையில் தன் வசம் இழந்து அவளை இறுக அணைத்து கொண்டான்.



ஆனால் அவள் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரில் தன்னிலை அடைந்தவன் உள்ளுக்குள் இறுகி அவளிடமிருந்து விலகி விட்டான்.



அப்போதும் அவனிடமிருந்து தள்ளி போகாமல் சிறிது நேரம் அவள் இருந்த நிலையிலே இருக்க என்ன செய்கிறாளோ என குழம்பியவன் எழும்ப முயற்சிக்கும் முன் அவனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு வெளியே சென்றவளை நினைத்து அவனும் வேதனை கொண்டான்.



அவனால் அவளை ஏற்கவும் முடியவில்லை, அவளை விட்டு விலகவும் முடியவில்லை. அவளை வெறுக்கவும் முடியவில்லை விரும்பவும் முடியவில்லை. அவளை ரசிக்காமலும் இருக்க முடியவில்லை அவள் மேல் அவள் மனதை கொல்லும் வார்த்தைகளை கொட்டாமலும் இருக்க முடியவில்லை.



விதியோ இவர்களது உணர்வுகளை விசித்திர புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தது.



கள்வன் வருவான்...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ௦7





விடிந்தும் விடியாததுமாக இருந்த அந்த பனிவிழும் அதிகாலை பொழுதில் எப்போதும் போல அப்போதும் கம்பீரமாய் காட்சியளித்தது அந்த வெள்ளை மாளிகை.



அந்த மாளிகையிலுள்ள அறையொன்றில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன..



அந்த அறையின் மூளையில் தன் தேவிம்மாவின் புகைப்படத்தை தன் நெஞ்சில் புதைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு கொண்டிருந்தாள் மலர்.



இன்றுடன் தேவி இறந்து ஒரு வருடம் ஆகின்றது. பெப்ரவரி 14....



ஐந்து வருடங்களுக்கு முன்பு அதே பெப்ரவரி 14ம் தேதியன்று தான் அவள் தேவியை முதன்முதலில் சந்தித்தது.



அதே போல் இரண்டு வருடத்திற்கு முன்பு அதே திகதியில் தான் அவள் தன்னவனையும் முதன்முதலில் பார்த்தது.



அதே போல் 23 வருடங்களுக்கு முன் அவள் பிறந்ததும் அதே திகதியில் தான்.



மனம் முழுக்க காதல் இருந்தும் அதை கோபம் எனும் திரை மறைக்க தன் மனதை மறைத்து வார்த்தைகளால் தன்னவளை கொன்று அவள் உயிரை காவு வாங்கியதும் அதே நாளில் தான்.



தன்னவனின் கொடிய வார்த்தைகளை தாங்க முடியாமல் தேவியின் உயிர் பிரிந்ததும் அதே நாளில் தான்.



ஒரு வருடத்திற்கு முன்பு வந்த அந்த காதலர் தினம் ஒவ்வொருவரினது வாழ்க்கையிலும் ஒவ்வொரு விதமாய் விளையாடி விட்டிருந்தது.



“தேவிம்மா இந்த ட்ரெஸ்ல நீங்க தேவதை மாதிரி இருக்கீங்க...” என்று மலர் அவளை புகழ்ந்து தள்ளினால்....



சிகப்பு நிற டிசைனர் சாரி அவளது கோதுமை நிற மேனியின் அழகை மேலும் கூட்டியிருக்க அன்று பூத்த ரோஜா மலர் போல் அழகு பதுமையாய் தன் தோழியின் பிறந்த நாள் விழாவுக்காக தயாராகி கொண்டிருந்த தேவியை வர்ணித்துகொண்டிருந்தாள் மலர்.



அவளை பார்த்து முறைத்த தேவி “நீ கிட்டத்தட்ட அரைமணி நேரமா இதத்தானேடி சொல்லிட்டு இருந்த.... இப்போ எதுக்கு மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிற?.... ம்ம்... உன்னோட இந்த முழியே சரியில்லயே.... சொல்லு என்ன விஷயம்? நீ என்கிட்ட என்ன சொல்ல நினைக்கிற? என்று அவளை சரியாக கணித்து கேட்க...



“ஹி.. ஹி...”என்று அவள் அசடு வழிய....



“ரொம்ப வழியிது தொடச்சிக்கோ” என்று தேவி அவளை கிண்டல் செய்யவும் அவளை செல்லமாய் முறைத்த மலர்....



“அது வந்து தேவிம்மா நானும் உங்ககூட வரட்டுமா? காலைல இருந்து மனசு படபடன்னு அடிச்சுக்குது... என்னமோ நடக்க போகுதுன்னு உள்மனசுல தோணுது.... அதான் ஒரு மாதிரி பயமாயிருக்கு.... அதனால நானும் உங்ககூட வாறேன்” என்று அவள் படபடக்க...



அவளருகில் வந்து அவளது கையை அழுத்தி பிடித்த அவளது முகத்தை நிமிர்த்தியவள் “இப்போ தான் உனக்கு பீவர் வந்து கொஞ்சமே கொஞ்சம் சரியாகிட்டு வர அதுக்குள்ளே இப்படி அங்கயும் இங்கயும் சுத்திட்டு இருந்தா உடம்புக்கு என்ன ஆகும்?....”



“சோ நீ வீட்ல இருந்து ரெஸ்ட் எடு நான் மட்டும் போய்ட்டு சீக்கிரமே வரேன் சரியா” என்று ஆறுதலாய் கூறியவள் அவளை தன் அறையிலேயே தூங்க வைத்து விட்டு தன் தோழியின் வீட்டிற்கு சென்று விட்டிருந்தாள்.



எப்போதும் யாருடனும் அதிகம் பேசாமல் பழகாமல் அமைதியாய் வலம் வரும் தேவி தன் கூட்டிலிருந்து வெளி வந்ததே மலரினால் தான்.



எப்போதும் அமைதியாய் இருக்கும் தேவியை கலகலப்பாக மாற்றியது மலர் தான். எந்த நேரமும் வாயோயாமல் பேசிக்கொண்டிருக்கும் மலர் தன்னை சுற்றி உள்ளவர்களும் தன்னை போலவே இருக்க வேண்டும் என ஆசைப்படும் விசித்திர பிறவி.



கடந்த காலத்தை அசைபோடாமல் எதிர்காலத்தை நினைத்து பயப்படாமல் இந்த நாள் இந்த நொடியை மறக்கமுடியாததாக மாற்றி வாழும் ஒரு அற்புத பிறவி தான் மலர்.



வாயோயாமல் பேசிகொண்டிருக்கும் அமைதிப்புறா; அசட்டு தைரியம் கொண்ட பயந்த சுபாவக்காரி; குறும்புக்கார மென்மையான மனம் கொண்ட அருந்தவாலு; மொத்தத்தில் குழந்தை மனம் மாறாத குமரிபெண்.



மலருடன் ஒரு நிமிடம் பழகினால் போதும், பேச்சு அறியாத பச்சிளம் குழந்தையை கூட வாயோயாமல் பேசத்தொடங்கி விடும்.



அப்படிப்பட்ட மலரால் தேவியையா மாற்றமுடியாது. ஒரே வாரத்தில் தேவியை ‘அந்த பொண்ணா இது’ என்ற அளவிற்கு மாற்றியிருந்தாள்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதனாலேயே தேவியின் வீட்டினருக்கு அவர்கள் அறியாமலே செல்லப்பிள்ளையாய் மாறியிருந்தாள்.



யாருடனும் தகுதி தராதரம் பார்த்து பேசும் அகிலாண்டேஸ்வரி தேவி கூட தன் செல்ல பேத்திக்காக மலரிடம் பாசமாகவே பழகினார்.



அன்று மலர் எவ்வளவு தடுத்தும் அவளது பேச்சை கேட்காது புறப்பட்டு சென்ற தேவி மறுநாள் காலையில் புகழ் பெற்ற மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.



“எல்லாம் என்னாலதான் தேவிம்மா.... நான் அன்னைக்கு உங்ககூட வந்திருக்கணும்....நீங்க சொன்னத கேட்டிருக்க கூடாது..... நான் மட்டும் அன்னிக்கி வந்திருந்தேன்னா உங்களுக்கு இப்படி ஆகவிட்டிருப்பேனா?.... நான் வராம போனதனால தானே உங்களுக்கு அப்படியெல்லாம் நடந்திச்சு...” என்று தன் தலையில் அடித்துக்கொண்டு அழுதவளை மடிசாய்க்கத்தான் யாருமில்லாமல் போயிருந்தனர்.



தன்னை ஆறுதலாய் மடிசாய்க்க கூட யாருமில்லையே என்ற எண்ணம் அவளது கண்ணீர் சுரப்பியை அணையுடைக்க செய்ய கதறி கதறி அழுதாள் அந்த மென்மையான மனம் கொண்ட பேதைப்பெண்.



நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருந்ததும் இப்பொது கிட்டத்தட்ட பலமணிநேரமாக அழுதுகரைந்து கொண்டிருந்ததும் சேர்த்து அவளை கொஞ்சம் கொஞ்சமாய் மயக்கத்தில் ஆழ்த்த இருந்தவாக்கிலே மயங்கிச்சரிந்தால் அவள்....



அதிகாலையில் நேரத்துடனே முழிப்பு வந்துவிட தன்னவளை நினைத்து வேதனையில் ஆழ்திருந்தான் யுத்கார்ஷ்.



உடம்பிலுள்ள அனைத்து செல்லிலும் அவனது மைலுவின் ஞாபக அலைகள் வீரிட்டு எழுந்து அவனை நிலைகுலைய செய்ய நிமிடத்திற்கு நிமிடம் உடல் விறைப்பாகி கொண்டு செல்ல தலையை கைகளால் தாங்கிக்கொண்டு விறைத்து போய் அமர்ந்திருந்தான் யுத்கார்ஷ்....



அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட வீட்டில் இருக்கமுடியாமல் தன்னவளின் நினைவில் மனம் பாரமாய் கனக்க குளித்துமுடித்து தன்னவளுக்கு பிடித்த க்ரே கலர் பேண்டும் நீல நிற டிஷேர்ட்டும் அணிந்தவன் வேதனையில் கசங்கிய முகத்துடன் தன் அறையை லாக் செய்து விட்டு வெளியில் வந்தான்....



சிறிது தூரம் நடந்தவன் அதற்கு மேல் நடக்க முடியாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தன்னை சமன் படுத்திக்கொண்டு எழுந்து செல்ல எத்தனித்தவன்......



ரெஸ்ட் ரூம் கதவு திறந்திருக்கவும் அதற்குள் சென்றான். அங்கு எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டிருக்க அதை அணைத்தவன் அந்த அறைக்கதவை மூடிக்கொண்டு தன் ரோல்ரொய்ஸ் காரில் ஏறி தன்னவளின் கல்லறை நோக்கி சென்றான்.



அவனது ரெஸ்ட் ரூமில் கட்டிலின் மறுபக்கம் மயங்கிச்சரிந்திருந்த அவனின் சரிபாதி அவனது கண்களுக்கு புலப்படாமல் போனது யார் செய்த சதியோ....



அந்த அதிகாலை பொழுதில் தன்னவனுடன் கனவில் டூயட் பாடிக்கொண்டிருந்த பின்டோவை கலைத்தது காலிங் பெல் சத்தம்.



கனவில் சுகமாய் மூழ்கி திளைத்திருந்தவளோ “வின்னி கதவ தொந்து யான்னு பார்ர்ர்ரு...” என தூக்க கலக்கத்தில் உளற....



வின்னியோ சற்றும் அசையாது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.



“வினி யான்னு ப்ப்பார்று...” என்று அரைத்தூக்கத்தில் உளறியவள் மீண்டும் விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.



சிறிது நேரத்தின் பின் மீண்டும் அழைப்பு மணி விடாமல் ஒலித்து கொண்டிருக்க பில்லோவை எடுத்து காதிரண்டையும் மூடி கொண்டு குப்புற படுத்து தூங்க முயற்சித்தாள்.



ஆனால் அவளை தூங்க கூட விடாமல் அழைப்பு மணி ஒலித்துகொண்டே இருக்கவும் அதற்கு மேல் தாங்க முடியாமல் ‘தன்னவனுடன் கனவில் கூட டூயட் பாட விடமாட்டேங்கிறாங்களே’ என்று அலுத்துக் கொண்டு தூக்க கலக்கத்தில் அங்கிருந்த பாத்ரூம் கதவை திறந்து கொண்டு “யார்ர்ர்ர்ரு” என தள்ளாடிய படி கேட்க.....



அங்கிருந்து எந்த சத்தமும் வராது போகவே “ப்ச்” என அலுத்துக்கொண்டு கதவை படாரென்று மூடியவள் மீண்டு அறைக்குள் நுழைய தொடங்க மீண்டும் விடாமல் அழைப்பு மணியின் ஓசை அவள் காதில் நுழைந்து கடுப்பை எக்ஸ்பிரஸ் வேகத்தில் அதிகரிக்க செய்ய இடுப்பில் கையை வைத்துக் கொண்டு பல்லை கடித்தவள் மீண்டும் பாத்ரூம் கதவை திறக்க போக....



“தயவு செஞ்சு இப்போ ஒழுங்கா கதவ திறக்க போறியா இல்லையா.... இல்லன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது” என்று அரைகுறை தூக்கத்தில் எழுந்து வின்னி அலற....



அவளது காட்டுக்கத்தலில் காதை குடைந்து காதை சரி செய்தவள் “அதுக்கேண்டி இந்த கத்து கத்துற... மெதுவா சொன்னா எனக்கு கேக்காத என்ன...” அவளை திட்ட துவங்க....



“என் காது கேக்காது” உள்ளிருந்து குரல் கொடுத்தவள் விட்ட தூக்கத்தை தொடர ஆரம்பித்தாள்.



“அப்போ இது மட்டும் எப்படி கேட்டுச்சாம்” என்று வாய்க்குள் முனுமுனுத்தவளின் தூக்கம் சுத்தமாய் கலைந்து போயிருந்தது.



இரவுடையில் கண்களை தேய்த்துக் கொண்டு கொட்டாவி விட்டவாறு அவள் கதவை திறக்க வெளியில் நின்றிருந்தவன் “திஸ் இஸ் போர் யு மேடம்” என்று விரிந்த புன்னகையுடன் அவளது கையில் ஒரு மலர்கொத்தை கொடுக்க அதை புரியாமல் பார்த்தவள் “யார் கொடுத்தா” என்று கேட்பதற்கு முன்பே அவன் அந்த இடத்தை காலி செய்திருந்தான்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஹேய்.... ஹெல்லோ” என்ற அவளது கத்தல் அங்கிருந்த சுவற்றில் மோதி மீண்டும் அவள் காதையே வந்தடையே ‘என் வாய்ஸ் இவ்ளோ கேவலமாவா இருக்கு’ என்று முனுமுனுத்தவாறு கதவை தாளிட்டு கொண்டு உள்ளே நுழைந்தவள் அந்த மலர்கொத்தை அங்கிருந்த டேபிளில் வைத்துவிட்டு பாத்ரூமினுள் நுழைந்து பிரெஷ்ஷாகி வெளியே வந்து காபி தயாரித்து அதை அருந்த தொடங்கினாள்....



காபியை சொட்டு சொட்டாக ருசித்து அருந்தி கொண்டிருந்தவளை கலைத்தது அழைப்பு மணியோசை.



“என்னடா இது காலங்கார்த்தாலேயே எனக்கு வந்த சோதனை’ என்று சலித்தவாறு காபியை டீப்பாய் மீது வைத்தவள் எழுந்து சென்று கதவை திறக்க வெளியில் நின்றிருந்தவன் “திஸ் இஸ் போர் யு மேடம்” என சிகப்பு நிற ரோஜா பூங்கொத்தொன்றை நீட்டினான்.....



அதை திகைப்புடன் பார்த்து கொண்டிருந்தவளின் கைகளில் அதை வலுகட்டாயமாக திணித்தவன் அவளை பார்த்து சிரித்து கொண்டு அங்கிருந்து அகன்றான்.



“ஹெல்லோஓஒ” என்ற அவளது அலறல் அவனது காதை சென்றடைய அவளை பார்த்து புன்னகைத்தவன் அவசரமாய் அங்கிருந்து அகன்று விட்டிருந்தான்.



அப்பிடியே தொடர்ந்து இரண்டு மணி நேரங்கள் அவளது வீடு பூங்கொத்துகளாலும் பரிசு பொருட்களாலும் நிரம்பி வழிய அதற்கு மேல் தாங்க முடியாமல் கதவை திறப்பதையே நிறுத்திவிட்டிருந்தாள் பின்டோ.



‘இது யாரோட வேலை.... ஒரு வேல இந்த வின்னி ஏதாவது ப்ளான் பண்ணியிருக்காலோ’ என குழம்பி தவித்தவளை மேலும் தவிக்க விடாமல் வந்து சேர்ந்தான் அவன்.



“ப்ளீஸ் பினு.... இவ்வளவு நேரமா என்னை தூங்க விடாம பண்ணிட்ட இப்போவாவது என்ன தூங்கவிடு ப்ளீஸ்....” என்ற வின்னியின் திடீர் கத்தலில் தன்னிலை அடைந்தவள் திடுக்கிட்டு எழுந்து நின்றாள்.



‘எதுக்கு இப்போ இவ லூஸு மாதிரி கத்துறா’ என குழம்பியவளை மீண்டும் கலைத்தது அழைப்பு மணியோசை...



‘அடச்சே... இதுவேற.... இந்த தடவ இது யாரோட வேலைன்னு தெரிஞ்சிக்காம விடமாட்டேன்’ என தனக்குள் சபதமெடுத்துக் கொண்டு கோபத்துடன் கதவை திறந்து “யாரு நீங்க... எதுக்கு இப்படி என்ன டிஸ்டேர்ப் பண்றீங்க....உங்களுக்கு என்னதான் வேணும்... ஹெல்லோ உங்க கிட்ட தானே கேக்கிறேன் காது கேக்காது...” என்று கடுப்பில் அவள் கத்த துவங்க....



“என்ன வேணும்னு சொன்னா தரவா போறீங்க?” என்ற குரலில் தன் கத்தலை நிறுத்தியவள் திகைத்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.



கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் முன்பு கேட்ட குரல்.... அதிர்ச்சியுடன் வாயடைக்க நின்றிருந்தவளை பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டு தன் தலையில் மாட்டியிருந்த ஹெல்மெட்டை கழட்டினான் ஒமி சிங் ஜொகிந்தர்.



தன்னவனை முழுதாக ஒரு வருடத்தின் பின்பு பார்த்த பின்டோவின் கண்கள் அவளை அறியாமலே கலங்கியது.



தன்னவனை எதிர்பாராமல் கண்ட பரவசம், என் காதலை உணர்ந்து என்னை தேடி வந்துவிட்டானா என்ற பரபரப்பு, என் காதலை புரிந்து கொள்ளாமல் என்னை விட்டு போய்விட்டாயே என்ற ஏக்கம், இவன் எதற்கு மீண்டும் என் கண் முன்னால் வந்தான் என்ற எரிச்சல், என்னை தவிக்க விட்ட நீ எனக்கு வேண்டாம் என்ற பிடிவாதம் என பல்வேறு உணர்வுகளின் கலவையுடனான பார்வையுடன் தன்னவனையே கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெனி பின்டோ....



அவளது கண்களில் தோன்றிய வர்ணஜாலங்களை காதலுடன் ரசித்து கொண்டிருந்தவன் அதே காதல் பார்வையுடன் “எனக்கு நீ வேணும்.... உன்னோட காதல் வேணும்... உன்னால அதை எனக்கு கொடுக்க முடியுமா?” என்ற அவனது கேள்வியில் திடுக்கிட்டு அவனை பார்த்தவளின் பார்வை இப்போது ஏக்கமாக உருமாறியிருந்தது.



அவனை தலை முதல் கால் வரை பார்வையால் வருடியவள் அவனை பார்த்து சிரித்தவாறு “ஒரு வருசத்துக்கு முன்னாடி இதே கேள்விய கேட்டிருந்தீங்கன்னா என்னோட உயிரை கூட கொடுத்திருப்பேன்... இப்போ அந்த காதல் என்னை விட்டு ரொம்ப தூரம் போய்டிச்சு...” என்று விரக்தியாக கூறியவள் ஒன்றும் பேசாது உள்ளே சென்று விட்டிருந்தாள்.



ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில் தன்னவனிடம் தன் காதலை சொல்ல எவ்வளவு ஆசை ஆசையாக சென்றிருந்தாள். ஆனால் சென்ற சில மணி நேரங்களிலேயே அவளது காதலை சுக்குநூறாக உடைத்து விட்டிருந்தான் அவன்.



அன்று அவள் அவனை தேடி சென்றாள் இன்று அவன் அவளை தேடி வந்திருக்கின்றான்.



அன்று அவளது காதலை அவன் நிராகரித்து விட்டிருந்தான் அவன். இன்று அவனது காதலை ஏற்க முடியாமல் தவித்து கொண்டிருந்தாள் அவள்.



அவளது பதிலில் திகைத்து போய் நின்றிருந்தவனின் அருகில் வந்த வின்னி அவனது கரத்தை ஆறுதலாய் பற்றி “நோ பீலிங்க்ஸ் ப்ரோ.... இதுகெல்லாம் இவ்ளோ பீலிங்க்ஸ் ஆகாதுப்பா...” என்று அவனது தோளை தட்டி சிரித்தவள் “உங்ககிட்ட ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என அவனிடம் கேட்க....



சரி எனும் விதமாக அவன் தலையசைக்கவும் “அவளுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் சோ யு டோன்ட் வொர்ரி.... நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் ஓகே வா?” என்று அவனிடம் மெல்லிய குரலில் முனுமுனுக்க....



அதை கேட்டு தலையசைத்தவன் “ஆமா நீ எதுக்கு எங்க லவ்வ சேர்த்து வைக்கனும்னு நிறைக்கிற?” என்று கேள்வியை வினவ....



அதைக்கேட்டு அசடு வழிந்தவள் “ப்ரோ.... தெரிஞ்சவங்க லவ்க்கு ஹெல்ப் பண்ணோம்னா நம்ம லவ்க்கு ஹேண்ட்சம்மான பையன் கிடைப்பான்னு...” என்று அவள் முழுதாக முடிக்கும் முன்பு...



“யார் சொன்னா?” என அவன் கேலியாய் கேட்கவும்...



“அதுவா.... அது... எனக்கு யாருன்னே தெரியாத ஒருத்தரு சின்ன வயசில யாருக்கிட்டயோ சொன்னத ஒட்டு கேட்டிட்டேன்....” என சொல்லி சிரிக்க அவளது வலிக்காமல் பிடித்து திருக......



“ஹா ஹா....” என சிரித்தவள் அவனது கையை விலக்கி விட்டவாறு உள்ளே நுழைய.... அவளை எண்ணி சிரித்துக்கொண்டே திரும்பியவன் அங்கு தன்னை முறைத்து கொண்டிருந்த பின்டோவை பார்த்து ஒன்றும் புரியாது விழித்தான்.



அவனது அப்பாவி பார்வையை கண்டவள் அவனை மேலும் முறைக்க தொடங்க “வை பேபி...வை ஆர் யு முறைச்சிங்” என்று அவள் அருகில் சென்று செல்லம் கொஞ்ச தொடங்க....



அவன் அருகில் வரவும் பின்னால் நகர்ந்தவள் கோபத்தில் வாய்க்குள் அவனை திட்டிக்கொண்டு அங்கிருந்த பிலோவை எடுத்து அவனை நோக்கி வீசினாள்.



அதை அழகாக கேட்ச் பிடித்தவன் அதை அங்கிருந்த சோபாவில் வைத்து விட்டு மீண்டும் அவளருகில் நெருங்கினான்.



அவன் அருகில் வரவும் தன்னை அறியாமல் பின்னால் நகர்ந்தவள் அங்கிருந்த சுவற்றில் மோதி அதில் சாய்ந்து நிற்க அவளுக்கு இரண்டு பக்கமும் கைகளை ஊன்றி அவளையே வைத்த கண் வாங்காமல் ரசித்துக் கொண்டிருந்தான் ஒமி.



எல்லோருக்கும் ஜொகியாய் இருப்பவன் தன்னவளுக்கு மட்டும் ஒமியாய் மாறியிருந்தான்.



அவன் இதுவரைக்கும் யாரையும் அப்படி அழைக்க விட்டதில்லை. அப்படி யாராவது அவனை அழைத்து விட்டால் அவர்களை தொலைத்து எடுத்து விடுவான். ஆனால் முதன்முறையாய் அவனவள் அந்த பெயரை சொல்லி அழைத்த நொடி இன்றும் அவன் நெஞ்சில் பசுமையாய் நினைவிருந்தது.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று முழுவது அவளது குரலே காதில் நுழைந்து அவனை இம்சிக்க அன்றைய இரவை தூங்கா இரவாகவே களித்திருந்தான் அவன்.



அதை நினைத்து பார்த்தவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை ஒன்று மலர அந்த சன்ன சிரிப்புடனே தன்னவளின் பிறை நுதலில் தன் முதல் முத்தத்தை பதித்தான்.



ஒரு ஆண்மகனின் முதல் ஸ்பரிசம் அவளை வேறொரு உலகத்திற்கு இழுத்து செல்ல கண்களை மூடி அந்த அனுபவத்தை ரசித்துக் கொண்டிருந்தாள் பின்டோ.



அவள் கண்களை மூடி நின்றிருந்த அழகை ரசித்தவன் அவள் கன்னத்தில் தட்டி “பாய் மை டியர் ஜெனி பேபி” என்றவாறு வெளியேறினான்.



தன்னவன் தன்னை விட்டு செல்வதையே ஒரு வித ஏக்கத்துடன் பார்த்துகொண்டிருந்த ஜெனி பின்டோ தன்னை சமன் படுத்திக் கொண்டு திரும்ப அங்கே அவளை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் வின்னி.



‘அச்சச்சோ பார்த்துவிட்டாளோ’ என சிறு நாணத்துடன் அவளை பார்க்க அவளோ இவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் “இங்க ஒரு சின்ன பொண்ணு இருக்கிறது கூட இவங்களுக்கு தெரியலையே கடவுளே” என சத்தமாக முணுமுணுத்துக் கொண்டு பாத்ரூமினுள் நுழைந்தாள்.



அதை கேட்டு அசடு வழிந்தாலும் அதை காட்டிகொள்ளாமல் மறைத்தவள் தன் வேலைகளை கவனிக்க சென்றாள்.



அப்படி அவர்களுக்கு பெரிதாக எந்த வேலைகளும் இருப்பதில்லை என்பது தான் உண்மை.



காலையில் எழுந்து குளித்து முடித்து உணவருந்தினால் ஜில்மில்லின் வீட்டிற்கு சென்று விடுவர்.



அங்கு தன் மகளை இழந்து தவிக்கும் அவர்களுக்கு ஆறுதலாய் சிறிது நேரம் இருந்து விட்டு ஜியாவுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்துவிடுவார்.



ஆனால் இன்று அதையெல்லாம் செய்ய விடாமல் மீண்டும் அவளை காதல் வலையில் சிக்க வைத்து அவளது காதல் உணர்வுகளை தூண்டி விட்டு சென்றிருந்தான் ஒமி.



தன்னவனை நினைத்து கண்களில் கனவு மின்ன வானில் மிதப்பது போல உலாவித்திரிந்தால் அவள்.



தன் காரில் இருந்து இறங்கிய யுத்கார்ஷ் அங்கிருந்த கல்லறை நோக்கி சென்றான்.



அவனுக்கு முன்பே சிலர் வந்திருப்பதற்கான அடையாளமாக அவளது கல்லறையில் மலர் கொத்துகளும் மலரிதழ்களும் இருக்க அதை கனத்த மனதுடன் பார்த்தவனின் மனம் வேதனையில் கலங்கி துடித்தது.



தன்னவளின் கல்லறை அருகில் அமர்ந்தவன் தன் கையில் வைத்திருந்த மலர் கொத்தை அதன் மேல் வைத்தான்.



‘ஜியா மைலா அட்ரின் டெஸா தேவி’ என பொறிக்கப்பட்டிருந்த பெயரை தன் கைகளால் வருடியவனின் மனதில் மைலுவின் நினைவுகள் ஒவ்வொன்றாய் படையெடுக்க அதை தடுக்க முடியாமல் தன்னவளின் நினைவில் சுகமாய் மூழ்கினான் அவன்.



ராஜா மார்த்தாண்ட பூபதி - ராணி அகிலாண்டேஸ்வரி தம்பதியினருக்கு ஆஸ்திக்கு ஒன்று ஆசைக்கொன்று என்று இரண்டு பிள்ளைகள். மூத்தது சிவனேந்தர பூபதி. வெளிநாட்டிற்கு மேற்படிப்பு படிக்க சென்ற அவர் அங்கேயே பிறந்து வளர்ந்த வெள்ளைக்காரியின் மீது காதல் கொண்டு பலத்த எதிர்ப்பின் பின் அவளையே கைபிடித்தார்.



சிவனேந்திர பூபதி- செலினா டெஸா தம்பதியினருக்கும் விரேன் விஸ்வாஸ் பூபதியும் ஜியா மைலா அட்ரின் டெஸா தேவியும் பிறந்தனர்.



பல வருடங்கள் கழித்து அந்த குடும்பத்தில் பிறந்த தேவியின் மேல் அனைவருக்கும் மிகுந்த பாசம்.



அதனாலேயே பெரியவர்களிலிருந்து சிறியவர்கள் வரை அவளை ‘தேவிம்மா’ என்று மரியாதையாக தான் அழைப்பர்.



அவளது நெருங்கிய தோழிகளுக்கு செல்லமாய் ‘ஜில்மில்’. அவளது ஆருயிர் காதலனுக்கு மட்டும் காதலாய் ‘மைலு’.



தன்னவளின் நினைவில் மூழ்கியிருந்தவனை கலைத்தது எங்கோ தொலைவில் தன் இணையுடன் கொஞ்சிக்குலாவிய குயிலின் இனிய கானம்.



பெருமூச்சொன்றை வெளியிட்டவன் அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் தன் காரை கிளப்பி கொண்டு தன் கெஸ்ட்ஹவுஸ் நோக்கி சென்றான்.



சென்னை வந்த இந்த இரு வருடத்தில் மனது சரியில்லாத நேரங்களில் தன் பொழுதுகளை அவன் இங்கு தான் களிப்பான்.



விரைவிலேயே அங்கு வந்து சேர்ந்தவன் மதுவின் உதவியுடன் தன்னவளை மறக்க முயற்சிக்க அவளோ ஆழிப்பேரலையாய் மாறி அவனுள் தன் நினைவுகளை கிளறி விட்டுக்கொண்டிருந்தாள்.



மதுவின் ஆதிக்கத்திலும் தன்னவளின் நினைவுகளிலும் மூழ்கிப் போனவன் சோபாவில் சாய்ந்தவாறே உறங்கத்துவங்கினான்.



ஒரு மாதத்திற்கு முன்பு வேலை விசயமாக வெளிநாடு சென்றிருந்தவன் நேற்று தான் சென்னை வந்து சேர்ந்திருந்தான்.



அவன் வந்து சிறிது நேரத்திலேயே ருத்ர தான்யாவும் சித்தார்த் ராவ் அஹ்லுவாலியாவும் நெருங்கிய நண்பனின் மகளின் திருமணத்திற்காக அமெரிக்கா சென்றிருந்தனர்.



மலரின் துணைக்காக வீட்டிலிருந்த பெண்மணியும் மகளுக்கு உடம்பு சரியில்லை இன்றொரு நாள் மட்டும் விடுமுறை வேண்டும் என கெஞ்சி கேட்கவும் மலரும் அவளை அனுப்பி விட்டிருந்தாள்.



இப்போது துணைக்கு யாருமின்றி தனியாக அந்த இருள் சூழ்ந்த மாளிகையில் பூட்டப்பட்ட அறையில் மயக்க நிலையில் இருந்தாள் மலர்.

கள்வன் வருவான்...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ௦8





மழை ஆக்ரோசமாய் சுழன்றடித்துக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும அதற்கு போட்டியாய் வெளிச்சத்தையும் பெரும் சத்தத்தையும் வாரியிறைத்துக் கொண்டிருக்க காற்றின் வேகம் தாள முடியாமல் திறந்திருந்த ஜன்னல்கள் காற்றில் படபடவென்று அடிக்கத்துவங்கியது.....



திறந்திருந்த ஜன்னலின் வழியாய் மழைத்தூறல்கள் அந்த அறையோரத்தில் சுருண்டு கிடந்த மலரின் மேனியின் விழுந்து அவளின் மயக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கலைக்கத் துவங்கியது....



அவள் தளிர் மேனியில் பட்டுத்தெறித்த மழைத்துளிகளால் பல மணி நேரத்தின் பின் மெது மெதுவாய் கண்களை திறந்த மலர் இருள் சூழ்ந்திருந்த அந்த இடத்தைப் பார்த்து வீரிட்டு அழுதாள்.



அவளுக்கு சிறு வயதிலிருந்தே இருள் என்றாலே மிகுந்த பயம். அதனாலேயே இருள் வேளையில் யாரும் அவளை தனியாக விட்டதில்லை.



இன்று யாருமின்றி அந்த இருண்ட மாளிகையில் தவித்துக் கொண்டிருந்தாள் அவள்.



பயத்தில் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு எழுந்தமர்ந்தவளின் நெஞ்சுக்கூடு பயத்தில் ஏறி இறங்க தட்டு தடுமாறி எழுந்தவள் அப்போது திடீரென்று கேட்ட இடி முழங்கல் சத்தத்தில் “ஆஆஆஆஆ” என கதறியவள் எதிலோ இடறி தரையில் விழுந்தாள்.



வியர்வை ஆறாய் ஓடி உடலை நனைக்க ஜன்னல் வழியாய் வீசிக்கொண்டிருந்த குளிர் காற்றால் கூட அவளது வியர்வையை போக்க முடியவில்லை.



பயத்திலும் கீழே விழுந்ததிலும் தலை விண்விண்ணென்று தெறித்து மண்டையை பிளக்க தலையை அழுந்த பிடித்து கொண்டு அங்கிருந்த பொருட்களை தடவி தடவி சென்று அங்கிருந்த சுவிட்ச் ஒவ்வொன்றாக போட துவங்க அந்தோ பரிதாபம் மழை காரணமாக எல்லா இடங்களிலும் பவர் கட்டாகி இருந்தது.



நேற்று இரவில் இருந்து உணவையே கண்ணில் காணாது இருந்தவளுக்கு பசி அதிகரிக்க ஒரு கையால் தலையையும் மறு கையால் வயிற்றையும் பிடித்துக் கொண்டு தட்டு தடுமாறி கதவு இருந்த இடத்தை அடைந்தவள் கதவை திறக்க அதுவோ வெளியில் பூட்டப்பட்டு இருந்தது.



கொஞ்சமே கொஞ்சமாய் இருந்த நம்பிக்கையும் அந்த நொடி மொத்தமாய் அகல செய்வதறியாது தவித்துக் கொண்டிருந்தாள் அவள்.



அங்கு கெஸ்ட்ஹவுஸில் இருந்த யுத்கார்ஷிற்கு திடீரென்று முழிப்பு தட்ட கண்விழித்தவனுக்கு பசி வயிற்றை கில்லியது.



சமையல் அறைக்குள் சென்றவன் அங்கு சமையல்கார பெண் சமைத்து வைத்திருந்த உணவை ஒரு பிடி பிடித்தான்.



இன்று காலையில் இருந்து ஒன்று சாப்பிடாமல் இருந்தது அவனது பசியை அதிகரிக்க வழமைக்கு மாறாக அதிகமாக உண்டவனை கலைத்தது செல்போனில் வந்த அழைப்பு.



“அம்மா” என்று கத்தி கொண்டு எழுந்தமர்ந்தால் ஜியா மைறா.



அவளது சத்தத்தில் கண்விழித்த அனைவரும் அவளது அறைக்குள் சூழ்ந்து அவளது அழுகையை குறைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லாமல் போகவே மலருக்கு அழைத்தனர்.



அழைப்பு போய் கொண்டே இருந்தது. ஆனால் அதை எடுப்பதற்கு தான் அங்கு ஆளில்லாமல் போயிருந்தனர்.



பல முறை முயற்சி செய்த செலின் யாரும் அழைப்பை எடுக்காததால் “அத்தை லைன் போய் கட்டாகுது... என்ன பண்றதுன்னு தெரியல... நீங்க வேணும்னா மாப்பிள்ளைக்கு போன் பண்ணி பாருங்க...” என்று அகிலாண்டேஸ்வரியின் கைகளில் போனை திணிக்க....



‘சரி’ என தலையசைத்தவாறு யுத்கார்ஷிற்கு அழைத்தார். அவனோ அந்த போனை வீட்டிலேயே வைத்து விட்டு சென்றிருந்தான்.



சோர்ந்து போய் அமர்ந்திருந்த மலரின் செவிகளில் செல்போனின் அழைப்பொலி கேட்க பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டு எழுந்தவள் கதவருகில் சென்று மூச்சு வாங்க நின்று கொண்டு “யாராவது இருக்கீங்களா? தயவு செஞ்சு கதவ தொறங்க....” என்று கத்தி அழுதவளின் தொண்டை வறண்டு போனது.



“ப்ளீஸ் யாராவது கதவ தொறங்ங்ங்ங்க... எனக்கு பயமாஅஅஅ இருக்க்க்க்குகுகு” என்று கதறியவளின் அழுகை சத்தம் அந்த அறைக்குள்ளேயே எதிரொலிக்க பயத்தில் நடுநடுங்கி போனால் அவள்.



சுவரின் ஓரத்தில் பல்லியை போல் ஒன்றியவள் முழங்காலில் தலையை புதைத்து கொண்டு அழத் தொடங்கினாள்.



அப்போதைக்கு அந்த கண்ணீர் மட்டுமே அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.



யுத்கார்ஷிற்கு பல தடவை அழைத்து தோற்று போன அகிலாண்டேஸ்வரி தேவி அலுப்புடன் ஜியாவின் அருகில் அமர...
 
Status
Not open for further replies.
Top