All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் கள்வனே காதலனாக! கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 11





தன் கையிலிருந்த சிறு கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தையே பலமணி நேரங்களாக பார்த்து கொண்டிருந்தாள் மலர்.



‘தனக்கும் அவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது போல’ என தன்னை நினைத்து மருகியவளின் மனம் முழுவதும் அவளது கள்வனே நினைத்திருந்தான்.



தன்னவனை நினைத்த மாத்திரத்தில் உடல் முழுவதும் புது ரத்தம் பாய்ந்து முகம் புதிதாய் தோன்றிய வெட்கத்தால் சிவந்து போய் அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது.



தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் ஸ்ரேயா.



இன்று காலையில் தான் தேவியும் அவளும் மும்பையிலிரிந்து சென்னை வந்திருந்தனர். தேவி வருவதற்கு ஒரு மணி நேரத்தின் முன்பே தன் பெற்றோர்களை ஊருக்கு வழி அனுப்பிவிட்டு தேவியின் வீட்டிக்கு அரக்க பறக்க ஓடி வந்திருந்தாள் மலர்.



தன் கையிலிருந்த கண்ணாடியை அவசரமாய் கீழே வைத்து விட்டு தேவியின் அறைக்குள் ஓடியவள் அவள் குளித்து வெளியே வந்திருக்கவும் அவளது பட்டு போன்ற கருங்கூந்தலை துவட்ட துவங்கினாள்.



தனக்கு முன்னிருந்த ஆளுயர கண்ணாடி வழியால் மலரையே பார்த்து கொண்டிருந்த தேவி “என்ன மலர் முகமெல்லாம் சும்மா பளபளக்குது என்ன விஷயம் வீட்டில மாப்பிள்ளை ஏதாவது பார்த்திட்டாங்களா”



“இ..இல்லையே... அப்படியொன்னும் இல்லை தேவிம்மா...”



“அப்படியா....சரி நான் நம்பிட்டேன் போ...”



“ஐயோ சத்தியமா தேவிம்மா.... நீங்க சரியா கவனிக்கல போல நல்லா என் முகத்த உத்து பாருங்க.... நான் நேத்து மழைல நலைஞ்சிட்டேன் அதான் முகம் ஒரு மாதிரி சிவந்து கிடக்குது... பேச்சை பார்த்தீங்கல்ல ஒரு மாதிரி கரகரங்குது....” என்றவாறே இருமியவள் அவளது தலையை மீண்டும் துவட்ட துடங்க....



அவளது கையை பிடித்து தடுத்த தேவி அவளது நெற்றியை தொட்டு பார்க்க அது நெருப்பாய் கொத்தித்தது.



அவளை முறைத்து பார்த்தவள் “அறிவில்ல லூஸு... என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு போய் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே...” என அவளை திட்டி கொண்டு தங்கள் குடும்ப டாக்டரிற்கு அழைத்து உடனடியாய் வீட்டிற்கு வரும்படி கூறி போனை அணைத்தவள் அவளை தன் கட்டிலில் தூங்க வைத்தாள்.



மலர் தேவியின் அறைக்குள் வந்தாலும் இதுவரையிலும் அவளது அறையை எதற்கும் பயன்படுத்தியது கிடையாது. அதற்கு அவளது பாட்டி அகிலாண்டேஸ்வரி தேவியும் அனுமதித்தது கிடையாது.



அதனாலேயே அவளுடன் எவ்வளவு பழகினாலும் தன் எல்லை அறிந்து தான் பழகுவாள். அவளை பார்த்த முதல் நாள் எப்படி பழகினாலோ அது அவளுக்கு தெரியாது ஆனால் அவளது உயரம் அறிந்து கொண்ட பின் அவளிடம் மரியாதையுடன் தான் பழகதொடங்கினாள்.... அதை இன்று வரையும் கடைப்பிடித்து கொண்டு தான் இருக்கின்றாள் இதன் பிறகும் அப்படியே தான் இருப்பாள்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலர் எவ்வளவோ மறுத்தும் அதையெல்லாம் காதில் வாங்காது அவளை தன் அறையில் தூங்க வைத்த வைத்து விட்டு நிமிர்ந்தவளை முறைத்து கொண்டிருந்தார் அகிலாண்டேஸ்வரி தேவி.



ஹாலில் அமர்ந்து தன் மகனுடன் பிசினஸ் விசயமாக பேசி கொண்டிருந்தவர் திடீரென வீட்டிக்கு வந்த அவர்களது குடும்ப மருத்துவரான ராஜ்சேகரை வியப்புடன் பார்க்க அவரோ தான் வந்த காரணத்தை கூறவும் அகிலாண்டேஸ்வரி தேவி பதறி போய் விட்டார்.



தன் பேத்தி தான் வரசொல்லியிருக்கிறாள் என்றால் அவளுக்கு உடம்பு ஏதாவது சரியில்லையோ என பதறி போனவர் டாக்டரையும் அழைத்து கொண்டு தன் பேத்தியின் அறைக்குள் நுழைய அங்கு அவளோ மலரை சீராட்டி கொண்டிருந்தாள்.



அதை பார்த்து முறைத்தவர் அங்கிருந்து அவசரமாய் வெளியேற அதை கண்டுகொள்ளாமல் மருத்துவரை உள்ளே அழைத்தவள் மலரை காட்ட....



“அங்கிள் இவளுக்கு பிவேர் இருக்கும் போல எதுக்கும் ஒருதடவ செக் பண்ணி பாருங்க”



அவளை பரிசோதித்தவர் இரண்டு நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என கூறி சில மாத்திரைகளை கொடுத்துவிட்டு செல்ல அதை விழுங்க வைத்தவள் ஒரு தாயின் பரிவுடன் அவளருகில் அவளை பார்த்தவாறே ஒரு கதை புத்தகத்துடன் அமர்ந்துவிட்டாள்.



இதுவும் மலரிடமிருந்து பழகிய பழக்கம் தான். மலர் எப்போதும் ஓய்வு நேரங்களில் கதை புத்தகத்துடன் அமர்ந்து அதில் மூழ்கி விடுவாள்.



அவளுக்கு அந்தளவு ஓய்வு நேரங்கள் கிடைப்பதுமில்லை; அதைவிட அவளுக்கு ஓய்வாய் இருப்பது பிடிப்பதுமில்லை. எப்போதும் ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் அவளுக்கு பொழுதே போகாது.



அப்படிப்பட்டவள் இன்று வெட்டியாக தூங்குவதை நினைத்து உள்ளுக்குள் அலுத்தவாறே ஒரு வழியாய் அசதியில் தூங்கி போனாள்.



தனக்கான அறையில் தன் திட்டம் வெற்றி அடைவதற்கான வேளைகளில் ஈடுபட்டிருந்தாள் ஸ்ரேயா.



சிலபல அழைப்புகள் வந்தவண்ணம் இருக்க அதில் தன் கட்டளைகளை பிறப்பித்து கொண்டிருந்தாள்.



‘இப்போ உனக்கு நடக்க போறத அந்த கடவுளால கூட மாத்தமுடியாது ஜில்மில்... உன்னால எனக்கு ரொம்ப கஷ்டம்... அதான் உன்னை ஒரேயடியா அனுப்பலாம்னு முடிவு பண்ணிட்டேன்’ என வன்மமாய் தனக்குள் கருவியவள் வெளியில் அப்பாவி சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள்......



மாலை ஏழுமணியளவில்......



“தேவிம்மாஆஆஆஆ” என மூச்சு வாங்க அலறிக்கொண்டு எழுந்தமர்ந்தாள் மலர்.



“மலர்.... மலர்ர்ர்ர்...” என்று அவளை உலுக்க அவளோ அப்போதும் தன்னிலையின்றி “தேவிம்மா... தேவிம்மா...” என வாய்க்குள் முணுமுணுத்து கொண்டு அமர்ந்திருந்தாள்.



“மலர்ர்ர்.... நான் இங்க தான் இருக்கேன்...இங்க பாரும்மா..” என அவளின் தோளை அவளோ தன் கண் முன் நின்றிருந்த தேவியை ஊன்றி பார்த்து கொண்டிருந்தவள் அப்போது தான் மெல்ல மெல்ல தன்னிலைக்கு வந்தாள்.



தண்ணீரை பருக வைத்து அவளது நெஞ்சை நீவி விட்டவாறு அவளருகில் அமர்ந்த தேவி, ”என்னாச்சுடா... என்ன ஏதாவது கெட்ட கனவு கண்டியா”



‘ஆம்’ என்பது போல் அவள் தலையையசைக்க....



“அதெல்லாம் ஒன்னுயில்ல... நீ டென்ஷன் ஆகாம கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா ரெஸ்ட் எடு... நான் என்னோட பிரெண்ட் பர்த்டே பார்டிக்கு போய்ட்டு ஓடி வாறேன் ஒகே வா... இல்லன்னா நான் உன்கூடவே இருக்கவா...”



“இல்லயில்ல.... நீங்க போங்க தேவிம்மா.... ஆனா நானும் உங்க கூட வாறேன்....”



“ஏய்... லூஸு... அங்கிள் என்ன சொன்னாருன்னு ஞாபகம் இருக்கில்ல... நல்லா ரெஸ்ட் எடுக்க சொன்னாரு.... அதனால நீ என்ன பண்றேன்னா பேசாம ரெஸ்ட் எடுக்கிற... நான் அங்க போய்ட்டு சீக்கிரம் ஓடிவாரேன்....அதுவுயில்லாம இன்னிக்கி நைட் நாம ரெண்டு பெரும் உனக்கு பிடிச்ச படத்தையும் பார்க்கலாம்... சோ இப்போ நல்லா தூங்கி ரெஸ்ட் எடு....” என்றவள் டிரெஸ்ஸிங் ரூம் சென்று தான் புதிதாய் எடுத்த டிசைனர் சாரியை அணிந்து கொண்டு வந்தாள்.



அவள் வெளியில் வரவும் அவளை ‘ஆ’ வாயை பிளந்தவாறு கண்சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள் மலர்.



“தேவிம்மா இந்த ட்ரெஸ்ல நீங்க தேவதை மாதிரி இருக்கீங்க...” என புகழ...



கண்ணாடியில் தன்னை திருப்பி திருப்பி பார்த்தவள் “அப்பிடியொன்னும் அழகா இருக்கிற மாதிரி தெரியலையே...ஆமா... இப்போ எதுக்கு இப்படி ஐஸ் வைக்கிற...” என்க அவளோ அவளை பார்த்து அசடு வழிந்தவாறு இருந்தாள்.



ஆனால் உண்மையிலேயே மலர் சொன்னது போல அந்த சிகப்பு நிற டிசைனர் சாரி அவளது கோதுமை நிற மேனியின் அழகை மேலும் கூட்டியிருக்க அன்று பூத்த ரோஜா மலர் போல் அழகு பதுமையாய் இருந்தாள் அவள்.



“இல்ல தேவிம்மா....நீங்க உண்மையிலே அந்த தேவதை மாதிரி சும்மா அசத்திறீங்க...சப்பா... நான் மட்டும் ஒரு பையனா பொறந்திருந்தேன்.... உங்கள தான் காதலிச்சி கல்யாணம் பண்ணியிருப்பேன்...”
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளை முறைத்த தேவி “நீ கிட்டத்தட்ட அரைமணி நேரமா இதத்தானேடி சொல்லிட்டு இருக்க.... இப்போ எதுக்கு மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிற?.... ம்ம்... உன்னோட இந்த கள்ள முழியே சரியில்லயே.... சொல்லு என்ன விஷயம்? நீ என்கிட்ட என்ன சொல்ல நினைக்கிற? என்று அவளை சரியாக கணித்து கேட்க...



“ஹி.. ஹி...”என்று அவள் அசடு வழிய....



“ரொம்ப வழியிது தொடச்சிக்கோ” என அவளை கிண்டல் செய்யவும் அவளை செல்லமாய் முறைத்த மலர்....



“அது வந்து தேவிம்மா நானும் உங்ககூட வரட்டுமா? அந்த கனவு கண்டதில இருந்து மனசு படபடன்னு அடிச்சுக்குது... என்னமோ நடக்க போகுதுன்னு உள்மனசுல தோணுது.... அதான் ஒரு மாதிரி பயமாயிருக்கு.... அதனால நானும் உங்ககூட வாறேன்” என்று அவள் படபடக்க...



அவளருகில் வந்து அவளது கையை அழுத்தி பிடித்து அவளது முகத்தை நிமிர்த்தி “இப்போ தான் உனக்கு பீவர் வந்து கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிட்டு வருது... அங்கிள் என்ன சொன்னாரு கம்ப்லீட் ரெஸ்ட் எடுக்க சொன்னாரு... அதுக்குள்ளே இப்படி அங்கயும் இங்கயும் சுத்திட்டு இருந்தா உடம்புக்கு என்ன ஆகும்?....”



“சோ நீ வீட்ல இருந்து ரெஸ்ட் எடு நான் மட்டும் போய்ட்டு சீக்கிரமே வரேன் சரியா” என அவளை சமாதானபடுத்தி கொண்டிருக்கும் போது கதவை தட்டி கொண்டு உள்ளே நுழைந்த ஸ்ரேயா....



“இன்னும் கிளம்பலையா ஜில்மில்.... சீக்கிரம் எடு... டைம் ஆகுதில்ல...” என அவளை அவசரப்படுத்தி மலரிடம் ஆறுதலாய் பேசி அவளை வரவிடாமல் தடுத்து விட்டு ஜில்மில்லை அழைத்து கொண்டு சென்றுவிட்டாள்.



ஸ்ரேயா துணைக்கு சென்றும் மனம் சமாதானமடையாமல் உள்ளுக்குள் தவித்தவள் ஸ்ரேயாவின் நம்பிக்கை கொண்டு சற்று ஆசுவாசமடைந்தாள்.



-----------------------------------------





தன் தோழியின் பிறந்த நாள் விழாவுடன் சேர்த்து அவளது திருமணத்தையும் அங்கு அறிவிக்க அதில் மகிழ்ந்தாலும் தன் மலரை நினைத்து கவலையில் ஆழ்ந்திருந்தாள் தேவி.



மலர் எந்த விசயத்திற்கும் பெரிதும் அலட்டி கொள்ளாமல் சாதாரணமாக இருப்பவள் தான். ஆனால் ஒரு சில விடயங்களில் அவளை யாராலும் மாற்ற முடியாது.



அதில் அவளது உள்ளுணர்வும் ஒன்று. தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடக்க போகின்றதேன்றால் ஏதோவொரு வகையில் அவளது உள்ளுணர்வு அவளுக்கு அதை உணர்த்திவிடும்.



அன்று அவளது உயிர்தோழி மகாவிற்கு ஏதோ ஆகபோகின்றது என உள்ளுணர்வு தோன்றி தான் அன்று அவளை சுற்றுலா போகவிடாமல் தடுத்தாள். ஆனால் அவள் பேச்சை மீறி சென்றவள் மறு நாள் உயிரை விட்டிருந்தாள்.



இன்று அதே போல் ஏதோ நடக்கபோகின்றதேன்று தான் அவள் தேவியையும் தடுத்தாள் அதே கேளாமல் சென்ற தேவி என்ன ஆகபோகின்றாளோ?



தேவிம்மாவின் அறையில் முகம் ஆழ்ந்த யோசனையில் இருக்க குறுக்கும் நெடுக்குமாக நடந்து நடந்து களைத்து போன மலர் கட்டிலின் கீழ் தரையில் அமர்ந்து கொண்டாள்.



மீண்டும் மீண்டும் அவளது மனம் படபடவென்று அடித்து கொண்டு தான் இருந்தது. ஸ்ரேயாவும் அவளது துணைக்கு செல்கின்றாள் என புரிந்தும் அதற்கும் அவளது மனம் சமாதானமடையவில்லை.



நேரம் யாருக்கும் காத்திராமல் பன்னிரெண்டை நெருங்க அதற்குமேல் அங்கிருக்க முடியாமல் ஸ்ரேயாவின் அருகில் சென்றவள் “போகலாமா ஸ்ரே... ரொம்ப லேட் ஆகிடிச்சு” தன் கைகடிகாரத்தை பார்த்து கொண்டு கூற....



‘ம்ஹ்.... இப்போ தான் சரியான நேரம் வந்திருக்கு ஜில்... உன்ன அனுப்புறதுக்கு இது தான் நான் குறிச்ச நேரம்...’ என வன்மத்துடன் நினைத்தவள் கண்களில் பழிவெறி மின்ன முகம் புன்னகையில் மலர...



“ஒஹ்... டைம் ஆகிடிச்சா... நான் இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்னு பிளான் பண்ணேன்... பிகாஸ் ரொம்ப நாள் கழித்து இப்போதானே நம்ம பிரெண்ட்ஸ் எல்லாரையும் ஒன்னா மீட் பண்றேன்.. இப்போ என்ன பண்றது” என்று யோசிப்பது போல் பாவ்லா செய்ய.... அதை உண்மையென்று நம்பியவள்....



“ஓஹ்... அப்போ இப்படி பண்ணலாம்... நான்வேனா இப்போவே வீட்டுக்கு போறேன்... நீ கொஞ்சம் லேட்டா வாயேன்.... என்ன ஓகேவா?”



“ஹே... தேங்க்ஸ் ஜில்.... நீ பத்திரமா போய்டுவேல்ல....”



“யா...நான் பார்த்து பத்திரமா போறேன்... நீ பத்திரமா வந்திடு...” என்றவாறு தன் தோழிகள் நின்றிருந்த இடத்திற்கு சென்றவள் அவர்களிடம் விடைபெற்று மீண்டும் ஒருதடவை ஸ்ரேயிடம் பத்திரமாக வருமாறு கூறியவள் தன் காரை எடுத்துகொண்டு தன் வீட்டை நோக்கி சென்றாள்.



அவள் போவதை உறுதிபடுத்தியவள் ஒரு எண்ணிற்கு அழைத்து “அவ வந்திட்டு இருக்கா... நான் என்ன சொன்னேன்னு ஞாபகம் இருக்கில்ல... ஓகே... வேல முடிஞ்சதும் பணம் உங்க கைக்கு வந்து சேரும்... முடிஞ்சதும் போன் பண்ணுங்க..” என்று அழைப்பை துண்டித்தவள் தன் தோழிகளுடன் இணைந்து கொண்டாள்.



ஹோட்டல் சவேராவில் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்த யுத்கார்ஷின் மனம் என்றும் இல்லாத வகையில் அமைதியின்றி தவிக்க அதற்கு மேல் அதை மீட்டிங்கை தொடரமுடியாமல் போக அதை கான்செல் செய்தவன் தன் காரை எடுத்து கொண்டு வெளியேறினான்.



அப்போதும் அமைதியில்லாமல் மனம் படபடவென்று அடித்துக்கொள்ள காரை ஓரத்தில் நிறுத்தியவன் தன் வீட்டிற்கு அழைத்து தாயிடமும் தந்தையிடமும் அவர்களது உடல் நலத்தை விசாரித்தவன் அவர்கள் இருவருக்கும் எதுவுமில்லை என தெரிந்ததும் சற்று நிதானமவனின் மனம் மீண்டும் நிலையில்லாமல் படபடக்க அதற்கு மேல் அங்கியிருக்க முடியாமல் தன் வீட்டிற்கு கிளம்பினான்.



தன்தோழியின் வீட்டிலிருந்து கிளம்பிய தேவியின் நினைவு முழுவதும் மலரே... அவள் என்ன செய்து கொண்டிருக்கின்றாலோ உடம்பும் சரியில்லை... இந்த நேரம் எந்த யோசனையில் இருக்கின்றாளோ என அவள் நினைவிலே வந்து கொண்டிருந்தவளின் கார் இடையில் நின்றது....



நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் நடுவழியில் யாருமில்லா இடத்தில் கார் நின்றதும் அவளது இயல்பான பயம் தலை தூக்கி அவளை மிரள செய்தது.



பயத்துடன் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டு இறங்கியவள் அப்போது தான் கவனித்தால் டயர் பஞ்சராகி இருப்பதை.



“சே... டயர் பஞ்சராகிடிச்சு... இப்போ என்ன பண்றது....” என தனக்குள் முணுமுணுத்து கொண்டிருந்தவள் “அம்மாஆஆஆஆஆஆ” என தலையை பிடித்து கொண்டு அலறியவளின் தலையிலிருந்து ரத்தம் வடிய கண்கள் சொருக திரும்பியவளின் முன்னால் இரும்பு தடியுடன் ஒருவனும் அவனுடன் இன்னும் சிலரும் நின்றுகொண்டு அவளை வேட்கையுடன் பார்த்தவண்ணம் இருந்தனர்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர்களை பார்த்தவள் வறண்ட தொண்டையுடன் “யா....யார்... நீஈங்கலாம்” என்றவாறே கீழே விழுந்தாள்.



அவள் கீழே விழுந்ததில் அவள் அணிந்திருந்த சேலை விலகி அவளது இளமையை அப்பட்டமாய் அவர்களது கண்களுக்கு விருந்தளிக்க... ஏற்கனவே குடிபோதையில் இருந்தவர்கள் இப்போதும் காமவெறியில் தங்கள் முன்னால் விழுந்து கிடந்தவளின் இருகைகளையும் இழுத்தவாறு அவளை சற்று ஒதுக்குபுறமாய் இழுத்து சென்றனர்.



இத்தனை நேரமாய் சாதரணமாக இருந்த மலரின் உடல் தூக்கி போட பயத்தில் வீரிட்டு அலறி கொண்டு எழுந்தாள். உடலிலிருந்து வியர்வை ஆறாய் பெருகி வழிந்து அவளை குளிப்பாட்ட நடை தள்ளாட உடல் வெடவெடக்க அலறி கொண்டு படிகளிலிருந்து கீழே இறங்கியவள் கால் இடறி படிகளில் சரிந்தவள் “அம்ம்ம்மாஆஆஆ” அலற...

அவளது சத்தம் கேட்டு கீழிறங்கிய அனைவரும் அவளது நிலைமை கண்டு முழித்து கொண்டிருக்க... அங்கு வந்த அகிலாண்டேஸ்வரி தேவி அவளது நிலை கண்டு அவசரமாய் அவளை காரிலேற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவருடன் அவர்களது பாதுக்கவலர்களும் உடன் சென்றனர்.



காரில் வந்து கொண்டிருந்த யுத்கார்ஷின் கைகள் தளர எதிரில் வந்த வாகனத்தில் மோத பார்த்தவன் நொடியில் சுதாகரித்து விலகி கொண்டான்.



‘இந்நேரம் நீ போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்திருப்ப ஜில்’ என தனக்குள் முணுமுணுத்து கொண்டாள் ஸ்ரே...



அவளுக்கு ஆரம்பத்தில் தேவியை நன்கு பிடிக்கும். அவளது உயிர் தோழியே அவள் தான். ஆனால் நாட்கள் போக போக அவளுக்கு நிதர்சனம் புரிய தொடங்கிய பொழுது அவள் மேல் நட்பு அதிகரித்ததை விட கோபம் தான் அதிகரித்தது.



ஸ்ரேயும் பணக்காரிதான், ஆனால் தனக்கு கிடைக்கும் மாரியதையை விட தேவிக்கு எல்லா இடங்களிலும் பேரும் புகழும் அதிகம் கிடைப்பதை நினைத்து உள்ளுக்குள் புழுங்கியவளின் வெறியை அதிகரிப்பது போல் வந்து சேர்ந்தார் அவளது தந்தை வழி பாட்டி.



ஆரம்பத்தில் அவருக்கு தான் ராஜா மார்த்தாண்ட பூபதியை திருமணம் செய்ய உறுதி எடுத்திருந்தனர். ஆனால் அவரோ அகிலாண்டேஸ்வரி தேவியை விரும்ப தங்களுக்கு ஒரே ஒரு வாரிசு அவனின் ஆசையை நிறைவேற்றவென அவருக்கு அகிலாண்டேஸ்வரி தேவியை மணம்முடித்து வைத்தனர்.



அன்று அவரது மனதில் தோன்றிய வெறியை இன்று தன் மகன் வழி பேத்தி மூலம் தீர்க்கவென அவளிடம் தேவியை பற்றி இல்லாததும் பொல்லாததுமாய் கூறி அவளை தேவிக்கு எதிராய் திருப்பி விட்டிருந்தார்.



அந்த சிறுவயதில் அவர் கூறியது எல்லாம் இன்று அவள் மனதில் வஞ்சகமாய் மாறி தன்னுடன் பாசத்துடன் பழகிய தோழியையே காவு வாங்கும் அளவிற்கு மாற்றி இருந்தது.



“மாப்பிள்ள குட்டி சும்மா சூப்பரா இருக்கிதிடா... செம்ம பிகரு...” என்று அவர்கள் நால்வரும் தங்களுக்குள் கலந்துறையாடியவாறு அவளை கொஞ்சம் கொஞ்சமாய் சிதைக்க தொடங்கினர்.



அரைமயக்க நிலையில் இருந்தவளோ “எஎன்ன்னிணினா..வ்வ்வீஈஈட்ட்டிட்டுங்கா.. ப்லேஏஎஸ்ஸ....” என முணுமுணுத்த முணுமுணுப்பெல்லாம் அந்த வெறியர்களின் காதில் விழாமல் அவளின் பெண்மையை வேட்டையாடி தங்களின் வெறியை தணிக்க துவங்கினர்.



“டேய்...எவ்ளோ நேரம் டா வாஆஆ..நான் பார்க்க வேணாமா” என்றவாறு மற்றவனை விலக்கிதள்ளி விட்டு அவளை நெருங்கிய வேலை ஒரு வாகனத்தில் ஹோர்ன் ஒலி கேட்டு அவசரமாய் எழும்பியவன் “மாப்பு யாரோ வாரங்க போல நம்ம போய்டலாம்...” என்றவன் கடைசியாய் அவளை ஒரு தடவை நெருங்கி அவளது அழகாய் ருசித்தவன் அவளது தொண்டை குழி மூச்சு காற்றுக்காக ஏறிஇறங்கவும் “டேய் இவளுக்கு இன்னும் உசிரு இருக்குடா... இவள போட்டுடதானே சொன்னாங்க” என்க...



“ஆமாண்டா... இவளு அழக பாத்தியில்ல... போறதுக்கே மனசு வர மாட்டேங்குது... நாம குட்டிய தூக்கிட்டு போகலாமா” என போதை வெறியுடன் கேட்க...



“டேய்...அறிவில்ல கஸ்மாலம்... அப்றோம் நாம மாத்திடுவோம்... நாம போலாம்” என்று அவளை பார்த்து வேட்கையுடன் பார்த்தவாறு தன் சகாக்களை இழுத்து கொண்டு நகர்ந்தவன் என்ன நினைத்தானோ மீண்டும் திரும்பி அவளருகில் வந்தவன் மீண்டும் ஒரு தடவை அவளை சுவைக்க தொடங்கினான்.



“விடூஊஊ...என்ன்னன்ன்ன்ன.....” என்றாவறே அவள் சுயநினைவை இழக்க தொடங்க அவளது கன்னத்தில் பளாரென்று அறைந்தவன் அருகில் இருந்த கல்லை தூக்கி அவளது பிஞ்சு நெஞ்சில் கருணையே இன்றி தூக்கி போட்டான்..



“ஆஆஆஆ” என மூச்சை விட சிரமப்பட்டவள் நெஞ்சில் விழுந்த கணம் தாங்க முடியாமலும் அந்த காமவெறியர்களின் வேகத்தை தாள முடியாமலும் புண்ணாகி போன உடலுடனும் உயிருக்கு போராட துவங்கினாள்.


கள்வன் வருவான்...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 12





உடல் முழுவதும் நனைந்திருக்க ஏதோவொரு அவஸ்தையுடன் தலை பாரமாய் கணக்க கண்கள் நெருப்பாய் தகிக்க உடலெல்லாம் வழியால் நோவ கடினப்பட்டு எழுந்தமர்ந்தவளின் முன் கோவை பழமென சிவந்த கண்களும் தீயாய் உறுத்து விழித்த பார்வையும் இறுகிய உடலும் என ரௌத்திரமான தோற்றத்துடன் நின்றிருந்தான் யுத்கார்ஷ்.



‘தான் அவ்வளவு சொல்லியும் இன்று தன்னறையிலேயே தூங்கி இருக்கிறாள் என்றால் இவளுக்கு எந்தளவு திமிர் இருக்க வேண்டும்... உன்ன இத்தன நாளா சும்மா விட்டது தப்பா போச்சுடி...’ என மனதுக்குள் குரூரமாய் எண்ணி கொண்டான் அவன்.



நேற்றைய நாளின் தாக்கம் அவனுள் மறைந்து இன்று நிதர்சனம் புரிந்திருந்தது. அதனாலேயே அவசர அவசரமாய் வீடு வந்திருந்தான். எங்கோ ஓர் ஓரத்தில் அவன் அறியாமல் அவனுள் தோன்றிய சிறு இணக்கம் கூட காரணமாய் இருக்கலாம்.



அந்த சிறு இணக்கம் கூட அவள் தன்னறையில் உறங்கியிருப்பதை பார்த்ததும் மறைந்து மாயமாகி விட்டிருந்தது.



தன்னுடன் படுக்கை அறையை பகிர்ந்து கொள்வதற்கு கூட ஒரு தகுதி தராதரம் இருக்க வேண்டுமென நினைப்பவன் அவன். அப்படிப்பட்டவனின் அறையில் அவனது அனுமதியே இன்றி இவள் துயிலில் ஆழ்ந்திருக்கின்றால் என்றால் அவனுக்கு கோபம் வருமா? வராதா?



அதனாலேயே அவளை கோபத்துடனும் தன் தகுதிக்கு சிறிதும் பொருத்தமற்றவள் எனும் வெறுப்புடனும் தூங்கும் அவளையே வெறித்து பார்த்து கொண்டிருந்தவனின் பார்வை சிறிது சிறிதாய் மென்மையாய் மாறி அவளை அவனறியாமல் வருட ஆரம்பித்தது.....



தன் மனதின் நிலைப்பாட்டை அறிந்து தன்னையே வெறுத்தவனுக்கு அவளது உடல் கவர்ச்சி தான் தன்னை தன்னிலை மறக்க வைக்க தூண்டுகின்றது என்பது அறிந்தவனுக்கு அவள் மேல் மேலும் வெறுப்பு அதிகரிக்க ஆத்திரத்தில் அங்கிருந்த தண்ணீர் ஜக்கிலிருந்த தண்ணீரை துயில் ஆழ்ந்திருந்தவளின் மேல் ஊற்றினான்.



ஆனால் அதுவோ அதற்கும் மேலாய் அவளது அழகை அவனது கண்களுக்கு விருந்தளிக்க அவளை கொலைவெறியுடன் பார்த்து கொண்டிருந்தான்.



தன் முன் ஆத்திர பார்வையுடன் தன்னையே வெறித்து பார்த்து கொண்டிருந்த தன் மாய கள்வனையையே அவனறியாமல் ஆசை தீர பார்த்து மனதில் ஓரத்தில் சேகரித்து கொண்டாள் அவனின் வேண்டாத மனைவி.



தான் தன் அறையிலே நின்று கொண்டிருக்க எவளோ ஒரு அனாத கழுதை தன் அறையில் அதுவும் தன் படுக்கையில் ஒய்யாரமாக அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்தவனின் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் தீயாய் தகிக்க விரலை சொடுகிட்டவன் அவளை எழும்புமாறு விரலால் சைகை செய்தான்.



சொடக்கு சத்தத்தில் தன்னிலை வந்தவள் அப்போதுதான் அவன் முகத்தில் நிலவிய அதிகபட்ச வெறுப்பை கண்டு மனதுக்குள் அடிபட்டு போனாள்.



‘ஏன் இவ்வளவு கோபத்தில் இருக்கிறார்.... நான் என்ன செய்தேன்... ஒன்றும் புரியவில்லையே... கடவுளே ஏன் இவர் என்னை இப்படி வெறுப்பாய் பார்க்கிறார்.... ஒரே ஒரு தடவையாவது என்னை ஆசையாய் பார்க்க மாட்டாரா.... இந்த மூன்று வருடமாக இவரை தானே நினைத்து கொண்டு வாழ்கிறேன்... அது இவருக்கு எப்போது புரியும்.... ஒரு வேலை புரியாமலே போய்விட்டாள்...’



‘புரியாமலே போய்விட்டாலும் பரவாயில்லை கடவுளே... நான் பாசம் வைப்பவர்கள் எல்லோரும் என்னைவிட்டு ரொம்ப தூரம் போய்விடுகின்றார்கள்... அப்படி இவரும் போய் விட்டால்.... ஐயோஓஓ... அது மட்டும் கூ..கூடாது கடவுளே... அப்படியொன்று பண்ணிவிடாதே... இவர் நூறாண்டு சந்தோசமாய் இருக்க வேண்டும்... நான்... நான்.... இல்லை நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்... இவரை எதாவது செய்தாயானால் நா...நான்...மறுகணம் என் உடலை தீயிட்டு கொளுத்தி கொள்வேன்’ என அவசரமாய் தனக்குள் ஒரு சபதத்தை எடுத்தவள் அப்போதே.....



‘இனி ஒரு போதும் என் காதலை இவர் அறிய கூடாது.. கடவுளே.... இத்தனை நாள் நான் கேட்டவைகளை நிறைவேற்றினாயா இல்லையா என எனக்கு தெரியவில்லை... ஆனால் இதை மட்டுமாவது நிறைவேற்றி விடு’ என ஒரு நொடிக்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்து அவளை திடுக்கிட வைத்து தன்னிலை மறக்க வைத்திருந்தது.



‘தான் எழ சொல்லியும் சற்றும் அசையாது அமர்ந்திருந்தவளை வேட்டையாடும் புலியின் வேட்கையுடன் கண்கள் பளபளக்க அவளருகில் சென்றவன் அவளது தாடையை இறுக பிடித்து தூக்கி நிறுத்தினான்.



அவனது உடும்பு பிடியில் தளிர் மேனியவளின் தேகம் நடுங்க தாடையில் உயிர் போகுமளவு வலியெடுக்க கண்களில் பரிதவிப்புடன் தன் கணவனையே பார்த்து கொண்டிருந்தாள் மலர்.



மலரவளின் தேகத்தின் மேன்மை உணராது தன் மனதின் வெறுப்பை தன் கரங்களில் காட்டி அவளது இடது கரத்தை பின்னால் மடக்கி அவளை தன்னருகில் இழுத்தவன் அவளுக்கு முத்தமிடுவது போல் அவளருகில் மேலும் நெருங்கினான்.



அவளின் காதல் கள்வன், இத்தனை நாளாய் அவனுடன் கனவில் வாழ்ந்து கொண்டிருந்தவளின் அருகில் ஒட்டி உரசி நிற்கவும் பேதையவளின் காதல் மனம் பாகாய் உருகி போனது.



ஆண்களே பார்த்து பொறாமை கொள்ளும் அளவு கம்பீரமும் கவர்ச்சியும் அவனுக்கே உரித்தான மனதை மணக்கும் வாசனையும் நான் சிரிக்கவே மாட்டேன் என்பது போல் இறுகி போன சிவந்த உதடுகளும் முன் உச்சியில் புரண்டு விளையாடிய கலைந்த தலைமுடியுமென கம்பீரமான அழகுடன் தன் முன் நின்றிருந்த தன் மாய கள்வன் அதுவும் உரிமையுள்ள கணவன் எனும் முறையில் தன்னருகில் உரசியபடி நின்றிருந்தவனை பார்த்து மனம் மயங்கி காதலுடன் கண்களை மூடி நின்று கொண்டிருந்தாள் அவள்.



அவளருகில் நெருங்கி நின்றவனோ அவளது மயக்க நிலை கண்டு உதட்டை ஏளனமாய் சுழித்தான்.



அவன் பெண்களுடன் பழகாதவனில்லை. அவனது பழக்கமெல்லாம் ஒரு இரவுடன் முடிந்து விடும். அன்றைய இரவுக்கான பணத்தை கொடுத்து அனுப்புபவன் மீண்டும் அவர்களை நாட மாட்டான். அவனது பழக்கமே அது தான்.



ஒரு பெண்ணுடனே வாழ்க்கை முழுவதையும் களிக்க வேண்டுமென்பதெல்லாம் அவனது அகராதியிலே இல்லை. அப்படிபட்டவன் வாழ்க்கை முழுவதும் இவளுடனே ஒன்றாய் வாழ வேண்டும் என காமமன்றி காதலுடன் பார்த்தது அவனது மைலுவை மட்டும் தான்.



ஆனால் இன்று அவள் அவனை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டிருந்தாள். அதையும் கூட ஜீரணித்தவனால் மலரை தான் சிறிதும் ஏற்று கொள்ள முடியவில்லை. அவளை பார்த்தால் அவனுக்கு சிறிது கூட காதல் உணர்வு வரவில்லை; மாறாக அளவுக்கு மீறிய கோபமும் வெறியும் தான் வந்து தொலைக்கின்றது.



அவனும் என்னதான் செய்வான்... மனைவியென்று அவளை நெருங்கினால் அவள் மீது எதற்கென்றே தெரியாமல் கோபம் எழுந்து தொலைத்து அவனது மனதையே அடியோடு மாற்றிவிடுகின்றது. அதன் பின் அவன் என்ன பேசுகிறான் என்ன செய்கிறான் என்பதெல்லாம் அவன் நினைவில் நிற்பதில்லை.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த கோபம் கூட தன்னால் தன் மனைவியவளை நேசிக்க முடியவில்லையே எனும் ஆதங்கத்தால் தான் உருவாகின்றது என புரியாமல் போனான் அந்த மூடன்.



இப்போது தனக்கு மிக அருகில் உடலும் உடலும் உரச கிறக்கத்துடன் விழிகளை மூடி இதழ்கள் துடிக்க நின்று கொண்டிருந்தவளை பார்த்தவன் அதே சுழித்த இதழுடன் அவள் காதருகில் தன் இதழ்கள் உரச “பணத்துக்காக என்ன வேணாலும் பண்ணுவியாடி” என ஏளனத்துடன் கேட்கவும் அதிர்ந்து விலகினால் அவள்.



தன்னவன் தன் அருகில் நெருங்கியதும் மனம் ஆயிரமாயிரம் கனவு கோட்டைகளை கட்ட துவங்க அவனது இதழ்கள் காதில் உரசி அவளது உடலை சிலிர்க்க வைக்க தீராத காதலுடன் நின்றிருந்தவளின் காதுகளில் மெல்லாமல் முழுங்காமல் அமிலத்தை ஊற்றினான் அவன்.



அவனது அந்த கேவலமான வார்த்தையில் உடல் தீயாய் தகிக்க அருவருப்புடன் அவனிடமிருந்து அவசரமாய் விலகியவள் கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டாள்.



விடியற்காலையில் சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டிருந்தது அந்த புகழ்பெற்ற மனநல மருத்துவமனை.



அங்கிருந்த அறைகளில் ஒன்றில் தன்னிலை இல்லாது விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.



அவளையே காதலுடனும் தவிப்புடனும் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அவன். தன்னவளின் இந்த நிலைக்கு காரணமானவர்களை நினைத்தவனின் மனது உலைக்கலமாய் கொதித்தது.



அவன், “பேபி..” என்றவாறு அவளது கையை பற்ற அவளோ தலையை கோணலாய் சாய்த்து ஒரு கையால் தலையை சொறிந்தவாறு அவனை புரியாத பார்வை பார்த்து வைத்தாள். அப்போது லேசாய் விரிந்திருந்த இதழ்களில் இருந்து எச்சில் வடிய அமர்ந்திருந்தவளின் நிலை கண்டு அருவருக்காமல் ஒரு தாயின் பரிவுடன் துணி கொண்டு அதை துடைத்து விட்டவன் அவளுக்கு உணவை புகட்ட துவங்கினான்.



தன் முன் கண்கலங்க நின்றிருந்தவளை பார்த்து இகழ்ச்சியாய் சிரித்தவன் “உண்மைய சொன்னதுக்கு எதுக்கு இப்படி பத்தினி மாதிரி ரியாக்ட் பண்ற” கோபத்துடன் கேட்க...



அவளோ அப்போதும் அசையாமல் வெறித்த பார்வையுடன் நின்று கொண்டிருந்தாள்.



“உன்னத்தான் சொல்றேன்... காதில விழல... ஓஹ்... ஒருவேல என்கிட்டயிருக்கிற பணத்த கண்டு மயங்கிட்டியோ?”



அப்போதும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தவளை வெறுப்புடன் ஏறிட்டவன் அவளை மேலும் கீழுமாக அளவிட்டவாறு “என் பக்கத்தில நிற்கிறத்து கூட உனக்கு தகுதியில்லடி.... ஆனா நீ என் பெட்ரூம்லேயே.... அதுவும் நான் அவ்ளோ சொல்லியும் சொகுசா படுத்திருக்கேன்னா நீ எல்லாம் என்ன பொண்ணுடி...”



“உன்ன அப்படியே ஓங்கி கன்னம் கன்னமா அறையனும் மாதிரி இருக்கு... ஆனா அதுக்கு கூட உன்ன தொடுறதுக்கு எனக்கு அசிங்கமா இருக்கு...” என சிறு இடைவெளியிட்டவன்...



“அப்றோம் ஏன் இப்போ தொட்டேன்னு யோசிக்கிறியா... ஏன்னா நீ எந்தளுவுக்கு என்மேல மயங்கி இருக்கேன்னு டெஸ்ட் பண்றதுக்கு தான்” என அருவருப்புடன் கூறியவன் அவளை தொட்ட தன் கைகளை அங்கிருந்த சேர்வியட்டால் துடைத்து அதை கசக்கி தன் கால் ஷூவால் மிதித்தான்.



“இதே மாதிரி உன்னையும் ஒரு நாள் இந்த வீட்டிலிருந்து தூக்கி வீச போறேன்... அதுவும் கூடிய சீக்கிரம்...” என உதட்டை பிதுக்கியவன் அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை கண்டும் சிறுதும் இறங்காமல்...



“பரவாயில்ல பிராமாதம்... பர்ஸ்ட் க்ளாஸ் டிராமா...” என்று கைகளை தட்டியவன்... அவளது கழுத்தில் தான் கட்டிய தாலி தொங்கி கொண்டிருக்கவும் அவள் கழுத்தில் தன் கைகள் படாது அதை மெல்ல உயர்த்தியவன் “இதையும் என்கையாலே அறுத்தெறிஞ்சி உன்ன இந்த வீட்டே விட்டே அனுப்பிறன்...” என்றவன் அவளிடமிருந்து விலகி செல்ல துவங்க....



எங்கிருந்தான் அவளுக்கு அவ்வளவு தைரியம் வந்ததோ “நான் இந்த வீட்ட விட்டு அவ்ளோ சீக்கிரம் போக மாட்டேன்... அப்படியே போனாலும் அது தான் என்னோட கடைசி நாளாவும் இருக்கும்ங்கிறத மறந்திடாதீங்க” என்று நடுங்கிய குரலை வரவழைத்த உறுதியுடன் கூறியவள் அவனை ஒரு புரியாத பார்வையுடன் பார்த்து கொண்டு அங்கிருந்து அகன்றவள் தனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள்.



அதுவரைக்கும் தன்னவன் கூறிய வார்த்தைகளின் தாக்கத்திலே நிலைத்திருந்தவளின் மனதில் திடீரென முன்தின இரவு நடந்த நிகழ்வுகள் படமாய் விரிய விக்கித்து போய் நின்றாள்.



“நா...நான்... எப்படி.... அவர்...அவரின் அறைக்கு போனேன்... நான் இங்கு....” என்றவள் கடகடவென படிகளில் இறங்கி கீழேயிருந்த அறை நோக்கி ஓடினாள்..



“இங்கு...இங்கு தானே மயங்கி விழுந்தேன்.... அப்றோம் எப்டி....” என மூளையை கசக்கியது தான் மிச்சம்.... ஆனால் ஒன்றுமே அவள் ஞாபகத்திற்கு வந்தபாடாய் தான் இல்லை...



“எப்படி.... எப்படி....” என்ற கேள்விகளே விஸ்வரூபம் எடுத்து அவளை அலைகழிக்க எதுவும் புரியாது திகைத்து நின்றாள் அவள்.



ஞாபகம் வரவில்லை என்றாலும் மறுபடியும் மறுபடியும் அந்த நினைவே மூளையை நிறைக்க ‘இல்லை நேற்றிரவு ஏதோ நடந்தது.... ஆம்... நா...நான்...’ என திணறியவள் தன் கணவனின் அறை நோக்கி ஓடினாள்.



‘இங்கு...இங்குதானே அந்த பூஞ்சாடி உடைந்து என்...என் கை...கையில் அந்த பூஞ்சாடி விழுந்து ரத்தம் கொட்டியது....’



மனதில் பயம் அப்பிக்கொள்ள தன் கைகளை பார்த்தவளின் இதயம் சில்லிட்டது... அவளது கைகளில் மஞ்சள் தடவபட்டிருந்தது.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
‘எ...என் கையில் எப்படி... நான் பூசவிலையே... அப்போ யார் இதை என் கைகளில் பூசியது....’



‘அப்போ நான் கண்டது கனவா? இல்லை நனவா? என்னை சுற்றி என்ன நடக்குது... ஆனால் அது எப்படி கனவாகும்.... நான் உண்மையில் இந்த மாடிப்படிகளில் விழுந்தேனே...அது பொய் இல்லையே... காலில் அந்த தண்ணீர் ஜக் விழுந்து அதிலிருந்தும் ரத்தம் வந்ததே....’ என எண்ணிக்கொண்டு மனதில் சூழ்ந்த பயத்துடன் சேலையை தூக்கி காலை பார்த்தவள் திகைத்தாள்.



கால்களில் தடவப்பட்டிருந்த மஞ்சளை திகைப்புடன் பார்த்தவள் தன் கணவனின் அறை நோக்கி ஓடினாள்.



இப்போது தான் அவன் தன்னை கேவலமாய் பேசி அனுப்பினான் என்பதை மறந்தவளாய் அவன் அறைக்குள் ஓடியவள் அவனது கதவை திறந்த மறுநொடி கீழே விழுந்தாள்.



மீண்டும் மனதில் இனம் புரியா பயம் சூழ்ந்து கொள்ள கதவை திறந்து கொண்டு வந்தவனை பார்த்தவள் அதிர்ந்து விழித்தாள்.



“நான் இப்போதானே சொன்னேன்... நீ என் ரூம் பக்கமே வர கூடாதுன்னு... அப்றோம் எதுக்கு மறுபடியும் வந்த...” என அதட்டலுடன் யுத்கார்ஷ் கேட்க..



அவளோ அவனை பயத்துடன் பார்த்து கொண்டு பேந்த பேந்த விழித்தாள்.



‘இவரா...இவரா நேற்று என்னை பயமுறுத்தியது... ஆனால்.... இவரில்லையே அது.... இவரது ஒவ்வொரு அசைவும் எனக்கு நனறாக தெரியுமே... பின்ன நேற்று வந்தது யார்... அந்த நடையை நான் எங்கோ பார்த்திருக்கின்றேனே... எங்கே... எங்கே பார்த்தேன்’ என மண்டையை உடைத்து கொண்டிருந்தவளை முறைத்தான் யுத்கார்ஷ்.



“உன்னத்தான் கேட்டேன்... வர வர உனக்கு காது கேக்காம போய்டிச்சா என்ன...” என்று அவளை பார்த்து சன்ன சிரிப்பும் சற்று கோபமும் கலந்த கலவையுடனான குரலில் கேட்க...



தன்னிலையில் உழன்று கொண்டிருந்தவளோ அவனது பேச்சை செவிமடுக்க மறந்திருந்தாள்.



அவள் அப்போதும் பிடித்து வைத்த பிளையார் போல் சிறிதும் அசையாது அமர்ந்திருக்க எரிச்சலுடன் அவளை நோக்கி சொடக்கிட... அதில் தன்னிலை அடைந்தவளை முறைத்து பார்த்தவன் எழும்புமாறு சைகை செய்தான்..



அதில் எதுவும் புரியாது குழப்பத்துடன் அவள் எழுந்து நிற்கவும் “என்ன விஷயம்..” என காட்டத்துடன் கேட்க...



‘என்ன சொல்ல வந்தோம்... ஏதோ சொல்ல வந்தேனே... என்ன... என்ன...’ என கண்களை மூடி யோசித்தவள் சட்டென்று நினைவு வரவும் “வ்.. வா வந்து இங்கே இருந்ததே... இப்போ எங்... எங்கே அத... அந்த....பூ..பூஞ்சாடி எ..எங்க காணோம்...” என திணறலாய் கேட்க



அவளை மேலும் கீழும் ஒரு மாதிரியாய் பார்த்தவன் “ஏன்... ஏதாவத சுருட்டிகிட்டு ஓடி போகலாம்னு பிளான் பண்றியா?” என தேளாய் கொட்டினான்...



அவனது பேச்சை கேட்டு மானசீகமாய் தலையில் அடித்து கொண்டவள் “எடுத்துகிட்டு ஓடிட்டாலும்... இந்த மனிஷன் என்னதான் நினைச்சிட்டு இருக்கார்... என்ன பார்த்த திருட்டு பொண்ணு மாதிரியா இருக்கு... கொஞ்சம் கூட அறிவே இல்ல போல... லூசுத்தனமா பேசிகிட்டு இருக்காரு... எப்போ பார்த்தாலும் சிடு சிடுன்னுகிட்டு... சரியான சிடுமூஞ்சி...” என மனதுக்குள் திட்டுவாதாய் நினைத்து சத்தமாய் முணுமுணுக்க....



அதை கேட்டு சற்று குறைந்திருந்த கோபம் சட்டென்று தலைக்கேற, “ஏய்...யார பார்த்து சிடுமூஞ்சிங்கிற... என்ன பார்த்தா உனக்கு சிடுமூஞ்சி மாதிரியா தெரியிது... உன்ன கொன்னுடுவேன்...”



“ஆமா... இவரு எங்கள கொல்லும் வரைக்கும் நாங்க பூப்பறிச்சிக்கிட்டு இருப்போம் பாருங்க...” என அவள் உதட்டை சுழிக்க....



சுழிக்கும் அவளது உதட்டையே ஒரு மார்க்கமாய் பார்த்தவன் அவளருகில் மெதுவாய் நெருங்கினான்...



எப்போதுமில்லா திருநாளாய் இன்று அவள் தன்னிடம் பயமின்றி சன்னமாய் பேசிய பேச்சுக்கள் அவனது மனதில் சிறு நிறைவை அவனறியாமல் ஏற்படுத்தியிருந்தது.



அவன் தன்னை நெருங்குவதை ஒருவித படபடப்புடன் பார்த்தவள் இத்தனை நேரமாய் இருந்த சிறு தைரியமும் விடுபட இதழ்கள் பயத்தில் துடிக்க விழிகள் அச்சத்தில் படபக்க அவனையே தவிப்புடன் பார்த்து கொண்டு பின்னால் நகர்ந்தவள் அங்கிருந்த கபோர்டில் மோதி செய்வதறியாது முழித்து கொண்டு நிற்க....



அவளது அந்த கோலம் அவனது நெஞ்சில் சிறு தீயை ஊற்ற அவள் மேலிருந்த கோபம் வெறுப்பு எல்லாம் மறைந்து அவளையே ரசனையுடன் பார்த்தவாறு அவளருகில் நெருங்கியவன் கைகள் இரண்டையும் அங்கிருந்த கபோர்டில் ஊன்றி அவளையே என்றும் இல்லா வகையில் ஒருவித ரசனை பார்வையுடன் அவளது உடலை ஊடுருவினான்.



அவனது மேய்ச்சல் பார்வையில் முள்ளந்தண்டு சில்லிட எங்கே மீண்டும் தன்னை வார்த்தையால் கொன்று விடுவானோ என்ற பயம் மேலெழ பரிதவிப்புடன் நின்றவளை பார்த்து அவளருகில் உடல்கள் இரண்டும் ஒன்றோடொன்று உரச அவளருகில் நெருங்கினான் அவளது மாய கள்வன்....



அதே நேரம் திறந்திருந்த அந்த பெரிய ஜன்னல் வழியால் காற்று வேகமாய் வீசி அவர்களை தழுவி அந்த சூழலை ரம்யமாக்கியது.. மூச்சை ஆழ இழுத்து விட்டவன் வீசிய காற்றில் விலகியிருந்த சேலை வழியால் மின்னி மறைந்த அவளது பளீர் நிற மெல்லிய இடையை ஒரு கையால் தழுவினான்.



தான் விரும்புபவனின் முதல் ஸ்பரிசம்... இத்தனை நாள் அவன் அவளருகில் நெருங்கினாலும் இதுவரை அவளை இதுபோல் தொட்டதில்லை. இன்று தான் அவளை முதன்முதலில் தொடுகின்றான்.



தன் கள்வனின் முதல் ஸ்பரிசம் பேதையவளின் தளிர் மேனியை நடுங்க செய்ய ஒரு வித அவஸ்தையுடன் நெளிந்தவளின் உடல் அவன் உடலில் மோதி அவனுள் தோன்றிய சிறு தீயை அணையுடைக்க செய்ய தவிப்புடன் துடித்த அவள் இதழ்களை நோக்கி முன்னேறினான் அவன்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதேநேரம் அந்த மனநல மருத்துவமனையில் இருந்த அறையில் இருந்தவனின் செல்போன் தானும் இருக்கிறேன் எனும் விதமாய் இசைத்து அவனை கலைத்தது.



சலிப்புடன் அதை எடுத்தவன் “ஜொகி காலிங்” என திரையில் விழவும் அவசரமாய் அட்டென்ட் செய்து காதில் வைத்து “சொல்லு மாப்பிள... என்ன விஷயம்...”



“முக்கியமான மேட்டர் ஒன்னுயில்ல... ஆமா நீ எங்க இருக்க... எதாவது அர்ஜென்ட் வொர்க்கா...”





“ஆ..ஆமா..மாப்..மாப்பிள... ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது.. அதான் வெளியில இருக்கிறேன்... ஆமா நீ என்ன பண்ற...” என திக்கி திணறி ஒரு வழியாய் அவனை சமாளித்து அழைப்பை துண்டித்தான் யக்ஷித்.



அவன் முன்னால் உதட்டில் லேசாய் சிரிப்பு மின்ன தலையை சொரிந்து கொண்டு பச்சை நிற உடையில் கட்டிலில் அமர்ந்து அவனையே பார்த்து கொண்டிருந்தாள் அவனால் காதலிக்கப்படும் அவனின் காதலி...



இப்போது தன்னிலை அறியாது; தான் யாரென புரியாது மனநிலை பாதிக்கப்பட்டு இங்கு சேர்க்கபட்டிருக்கும் ஸ்ரேயா....



சிறிது நேரம் தன்னவளையே ஒரு தாயின் பரிவுடன் பார்த்து கொண்டவன் அவள் அசதியில் தூங்கியதும் அவளை கவனித்து கொள்ளும் நேர்ஸ்ஸிடம் சில ஆயிரம் கத்தைகளை கொடுத்தவன் அவளை நன்றாக பார்த்து கொள்ளுமாறு கூறி விட்டு அவளருகில் சென்று அவள் பிறை நெற்றியில் முத்தமிட்டான்.



அதற்குள் மேல் அங்கு நின்றாள் தன்னால் தன்னையே கட்டுபடுத்த முடியாது என்பதை அறிந்தவன் அவளை விழிகளால் நிரப்பியாவாறு அங்கிருந்து வெளியேறினான்.



தன் அருகில் நெருங்கி நின்ற மனைவியவளின் வாசம் அவனை கிறங்கடிக்க இடையில் வைத்திருந்த கைக்கு மேலும் அழுத்தம் கொடுத்தவன் மறு கையை அவள மேனியில் சுகமாய் படரவிட்டான்.



‘ஹோ’ என அலையடித்து கொண்டிருக்க உணர்ச்சியின் பிடியில் சிக்கி கொண்டிருந்த மலரவளின் மேனி நடுங்க உடல் சில்லிட கால்கள் தொய்ய பிடிமானமின்றி ஒரு கையால் அவனது சட்டை காலரை இறுக பற்றியவள் மறுகையால் அவனது பின்னங்கழுத்தை இறுக பிடித்தாள்.



பெண்ணவளின் மென்மையில் சிறிது சிறிதாய் தன் வசம் இழந்தவன் அவளது கயல் விழிகளில் தன் முதல் முத்தத்தை பதித்தான்.



தன்னவனின் முதல் தொடுகையையே தாங்க முடியாமல் கொடி போல் துவண்டவள் அவனின் முதல் முத்தத்தில் மயக்க நிலைக்கே சென்றுவிட்டாள்.



‘எப்படி இது சாத்தியம்... அவனுக்கு தான் தன்னை கண்டாலே மூக்கிற்கு மேல் கோபம் வருமே... பின்னே இது எப்படி நடந்தது...’ என புரியாமல் தவித்தாள் அந்த பேதை பெண்.



ஆனால் மறுநிமிடமே ‘தன் காதலால் இவனுக்கு எதாவது ஆகிவிட்டால்... ஐயோ... கடவுளே...’ என்ற தோன்ற திடுகிட்டவள் அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.



ஆனால் அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை. உடும்பு பிடியாய் அவளை எப்போதோ ஆறத்தழுவி விட்டிருந்தான்.



அவனின் உடலின் சூடு இவளின் தேகத்தில் நுழைந்து அவளை தன்னிலை இழக்க வைக்க அதை கடினப்பட்டு கட்டுபடுத்திவள் மீண்டும் அவனிடமிருந்து விலக முயற்சிக்க.....



“அழகி... ப்ளீஸ்... கொஞ்ச நேரம்” என அவளது காதில் தாபத்துடன் முணுமுனுத்தவன் அவளது கழுத்தி வளைவில் முகம் புதைத்து அழுந்த முத்தமிட்டான்.



இத்தனை நேரமாய் அவனிடமிருந்து விலக முற்பட்டவள் இப்போது அவனது ஒற்றை அழைப்பில் தன் முயற்சியை கைவிட்டு விட்டாள்... அந்த அழைப்பு... அவள் தினம் தினம் கனவில் தன்னவனின் நினைவில் மூழ்கும் போது அவன் அவளை ஆசையாய் அழைப்பதாக நினைத்து கற்பனை மூழ்கி மகிழும் அழைப்பு.... இத்தனை நாளாய் அவன் கனவில் அழைத்த அழைப்பை இன்று நிஜத்தில் தாபத்துடன் அவளின் காதில் இதழ்களால் கோலமிட்டாவாறு அழைக்கவும் தன்னிலை மறந்தவள் அவனின் மார்பில் அழுந்த சாய்ந்து கொண்டாள்.



அவன் மனதின் ஆழத்தில் புதைந்திருந்த அவனது மனைவியவள் தன் நினைவுகளை லேசாய் அசைத்துவிட அதனால் வந்த அழைப்பு தான் அந்த அழைப்பு என்பதை புரிந்து கொள்ளாமல் போனால் மலர்.



தன் மேல் சாய்ந்து நின்றவளின் முகத்தை நிமிர்த்தி அவளது செப்பு இதழ்களில் தன் இதழ்களை பொருத்தி தேனருந்த தொடங்கியவளின் அவள் இதழின் ருசியில் கள் குடித்த வண்டாய் மீண்டும் மீண்டும் அவள் இதழை சிறை செய்து தன் தேவையை தீர்த்து கொண்டான்.



சற்று நேரத்தின் முன் இவனா இவளை குப்பையாய் கசக்கி வெளியே வீசுவேன் என்றவன் என்றால் யாரும் அதை நம்ப மாட்டார்கள் அந்தளவு அவன் அவளை தன்னுள் அடக்கி கொண்டு நின்றிருந்தான்.



எத்தனை மணி நேரம் நீடித்ததோ அந்த இதழ் ஒற்றல் அதற்கு மேல் தாங்க முடியாமல் மூச்சு காற்றிற்கு தவித்தவள் அவனது மார்பில் கைவைத்து தள்ள... அதை அலட்சியபடுத்தியவன் மீண்டும் மீண்டும் அவளை நாடி கொண்டிருந்தான்.



ஒரு வழியாய் மனையாட்டியின் தேவை புரிந்து சற்று விலகியவன் அந்த சிறு நேரம் கூட தாங்க முடியாமல் அவளை கைகளில் அள்ளிக்கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான்.



அவன் இப்படி சட்டென்று தன்னை தூக்குவான் என்பதை அறியாதவள் பயத்தில் அவன் மார்பில் புதைந்து கொண்டாள்.



தன் மார்பில் புதைந்திருந்த தன் மனைவியை இறுக அணைத்து கொண்டு கட்டிலில் சரிந்தவன் மெல்ல மெல்ல அவளை தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்து அவள் மேல் படர தொடங்கியிருந்தான்.



அதன் பின் நடந்த அனைத்திற்கு சம்பவத்திற்கு இருவருமே பொறுப்பு......



அவள் இத்தனை நாள் அவன் மேல் இருந்த தீராத காதலால் காதலுடன் அவனுடன் கூட அவனோ ஒரு வித ஈர்ப்பில் அவளுடன் இழைந்தான்.



இங்கு காதலுமில்லாமல் காமமுமில்லாமல் அவன் தன்னிலை இழந்து கூடிய கூடல் இன்னும் எத்தனை நாள் நிலைக்க போகின்றது என்பதை நம்மை படைத்த கடவுலன்ரி வேறு யாரறிவார்......


-------------------------------------------------------


நாட்கள் வேகமாய் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. அன்றைய கூடலின் பின் மலர் தன் கணவனை நிமிர்ந்து பார்ப்பதற்கே தயங்கி வெட்கப்பட்டு நின்று கொண்டிருக்க எந்தவித சலனமுமின்றி அவளது வெட்கத்தை புரியாது பார்த்து கொண்டு நின்றான் யுத்கார்ஷ்.



‘என்ன நடந்திடிச்சின்னு இப்போ இவ இப்படி வெட்கப்பட்டிட்டு இருக்கா’ என புரியாது ஒரு நொடி யோசித்தவன் பின் அது தனக்கு வேண்டாத வேலை என எண்ணி கொண்டானோ என்னவோ அதன் பின் அதை பற்றி சிறிது நினையாமல் தன் அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான்.



அன்றைய கூடலின் பின் அதற்கு முன் நடந்த அசம்பாவிதம் கூட பின் தள்ளப்பட்டு அவனது நினைவுகள் மட்டுமே அவளை சூழ்ந்திருக்க மகிழிச்சியுடன் இருந்தாள் அவள்.



வாழ்க்கையில் பல நாட்களின் பின் கிடைக்கும் மகிழ்ச்சி... ஆனால் அவள் எங்க அறிய போகிறாள் இது இன்னும் சில நாட்களிலோ இல்லை இன்னும் சில மணி நேரங்களிலோ மொத்தமாய் அகல போகின்றது என்பதை.



தன்னவன் கிளம்பியதும் வாயிறு நானும் இருக்கிறேன் எனும் விதமாய் பசியில் கபகபக்க காலையுணவை உண்டவள் தோட்டத்திற்குள் நுழைந்தாள்.



இங்கு வந்த பின் அவளது பொழுதுபோக்கே அது தான். அவளது அத்தை, மாமா இருந்தவரை அவர்களுடன் தான் அவள் பொழுது கழியும் ஆனால் அமெரிக்காவில் இருந்து இன்று தான் வீடு வந்து சேர்ந்திருந்ததால் அவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை அவள்.



அதுமட்டுமன்றி என்றுமே தனிமையில் இருக்க விரும்பாதவள் என்பதால் தோட்டத்திற்குள் நுழைந்து அங்கிருக்கும் செடிகொடிகளுடன் தன் பொழுதுகளை களிக்க தொடங்கி விடுவாள்.



இன்றும் அங்கு சென்றவள் தோட்டகாரரிடம் சொல்லி வாங்கி வைத்திருந்த ரோஜா செடிகளை தன் கையாலேயே முன்புறம் அழகுகாய் பார்த்து பார்த்து நட்டுவைத்தாள்.



அதுவும் அவளுக்கு பிடித்த சிகப்பு நிறம் மற்றும் வெல்வெட் நிறமும் இணைந்த பூக்கள். அதையே சிறிது நேரம் ரசனையுடன் பார்த்து கொண்டிருந்தவள் களைப்பில் மீண்டும் வீட்டினுள் நுழைந்தாள்.



‘அஹ்லுவாலியா இண்டஸ்ட்ரீஸ்’ என நியோன் எழுத்தகளால் மின்னியது அந்த எட்டுமாடி கட்டிடம்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தன் ரோல் ரொய்ஸ் காரிலிருந்து பாடிகார்ட்ஸ் பின்தொடர கம்பீரமாக தன் கம்பெனியினுள் நுழைந்தான் யுத்கார்ஷ்.



எல்லோருடைய காலைவணக்கத்தையும் சிறு தலையசைப்புடன் ஏற்று கொண்டு உள்ளே நுழைந்தவனையே விழியெடுக்காமல் பார்த்து கொண்டிருந்தனர் அங்கு வேலை பார்க்கும் பெண்கள்.



தன் அறைக்குள் நுழைந்தவன் தன் பிஏவை உள்ளே வரவழைத்தான்.



அவன் அழைப்பதற்காகவே காத்திருந்தது போல் தொடையின் மேல் அணிந்த குட்டை பாவாடையும் உடலை ஒட்டிய இறுக்கமான பெண்கள் அணியும் ஷேர்ட்டும் அணிந்து ஹைஹீல்ஸ் கடகடக்க அவனறைக்குள் நுழைந்தாள் அவள்... நீனா... நவநாகரீக இளம் நங்கை.



தன்னையே விழி அகற்றாமல் பார்த்து கொண்டிருந்தவளை கல்லையும் மண்ணையும் பார்ப்பதை போல் பார்த்து வைத்தவன் முக்கியமான வேலைகளை முடித்து கொண்டு தன்வீட்டிற்கு புறபட்டான்.



அவன் தன்னை அலட்சியபடுத்தவள் உள்ளே கடுகடுத்தவள் மீண்டும் வெட்கமேயில்லாமல் அவனை பார்த்து சிரித்து வைக்க அந்த நொடி அவனது மனைவியின் வெட்க சிரிப்பு அவன் கண்களில் தோன்றி மறைந்தது.



தான் சிரித்தும் தன்னை கண்டுகொள்ளதவனை ஏதாவது செய்து தன் வழிக்கு கொண்டு வரவேண்டுமென மனதுக்குள் கறுவியவளுக்கு எங்க தெரிய போகின்றது அவனை பற்றி.



இத்தனை நாளாய் வெளிநாடுகளிலே சுற்றி கொண்டிருந்தவன் இப்போது தான் சென்னையே வந்திருக்கின்றான் என்பதால் யாருக்கும் அவனை பற்றி பெரிதும் தெரியாது.



தெரிந்தவர்கள் அவனை பற்றி சொல்வதற்கு அஞ்சுவார்கள். அப்படிப்பட்டவனை தன் வழிக்கு கொண்டுவருவதற்காக திட்டமிடுகிறாள் அந்த நவநாகரீக நங்கை. ஆனால் அவள் அறியாமல் போனதும் ஒன்று உண்டு.



இளம்வயதிலேயே தன் தந்தையின் அனைத்து சொத்துகளையும் ஆயிரம் மடங்கு விரிவாக்கி அதற்குள் மேலும் தன் உழைப்பில் பல நிறுவனங்களை உலகம் முழுவதும் நிறுவி அனைவரது வாயாலும் பிசினஸ் டைகூன் என மரியாதையாய் அழைக்கப்படும் அவனுக்கா தெரியாது ஒருவரின் முகத்தை பார்த்தே அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது...



அதே போல் அவளது மனக்கணிப்பை அவளை விட வேகமாய் அறிந்தவன் தன் சீப் செக்யூரிட்டி நோக்கி கண் அசைக்க என்றும் போல் அன்றும் அதை தெளிவாய் புரிந்து கொண்டான் அந்த விசுவாசமான வேலைக்காரன்.



அதன் பின் நொடியும் அங்கு தாமதிக்காமல் தன் வீடு வந்து சேர்ந்தவன் வாசலில் வைக்க பட்டிருந்த ரோஜா செடிகளை கோபத்துடன் பார்த்தான்.



அவனுக்கு என்றுமே ரோஜா செடிகள் என்றல்ல எந்த பூக்களையுமே பிடிப்பதில்லை. அதிலும் முக்கியமாய் ரோஜா... அப்படிபட்டவனின் வீட்டில் ரோஜா செடியை வைத்திருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு திண்ணக்கம் வேண்டும்..



அதை வெறுப்புடன் பார்த்தவன் அங்கிருந்தவர்களை அழைத்து “யார் இத இங்க வச்சது?” கர்ஜிக்க....



அவனது கர்ஜனையில் வெடவெடத்து போனவர்களுக்கு தங்கள் சின்ன எஜமானியை காட்டி கொடுக்கவும் முடியவில்லை. வேலைகாரர்கள் என தங்களை ஒதுக்காமல் பாசத்துடன் பழகும் அவளை காட்டி கொடுக்க மனமில்லாமல் தோட்ட வேலை முன்னால் வருவதற்கு முன் “நான் தாங்க வச்சேன்” என்ற குரலில் திரும்பியவன் அங்கு லேசான சிரிப்புடன் நின்றுகொண்டிருந்த மனைவியை கோபத்துடன் பார்த்தவன் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை எல்லாம் வெளியில் அனுப்பினான்.



அவர்கள் எல்லோரும் ஒரு வித தயக்கத்துடனும் பயத்துடனும் மலரை பார்த்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல அவர்களின் பார்வையை புரியாமல் பார்த்தவளுக்கு ஒரு சில நொடிகளிலே புரிந்து போனது அவர்களின் பார்வைக்கான காரணம்....



“ஓஹ்... நீ தான் இதயெல்லாம் இங்க வச்சியா..”



தயக்கமும் பல நாட்களின் பின் கணவனுடன் பேசுகிறோம் என்ற சந்தோசமும் போட்டிபோட “ஆமாங்க.. நான் தான் இதயெல்லாம் இங்க வச்சேன்... நல்லா இருக்கில்ல...” சன்ன குரலில் கூற...



அவள் கூறிய மறுநொடி அதையெல்லாம் காலால் நசுக்கி பிடுங்கி தூர எறிந்தவன் அவளின் கையை பிடித்து இழுத்து கொண்டு தன் அறை நோக்கி சென்றான்.



கணவனின் இந்த திடீர் செய்கையில் ஒன்றும் புரியாமல் குழம்பி கொண்டு அவன் இழுத்த இழுப்பிற்கு அவனுடன் சென்றவளை தன் அறைவாசலில் பிடித்து நிறுத்தியவன் அவளது கன்னத்தில் பளாரென அறைந்தான்.



கிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங் என்ற சத்தம் காதில் கேட்க ஐந்து விரல்களும் அவளது கன்னத்தில் பதிந்திருக்க அறைந்த வேகத்தில் அவளின் உதடு பீய்ந்து ரத்தம் கசிய நின்றிருந்தவளை சற்றும் இரக்கமற்று பார்த்து கொண்டிருந்தான்.



“என்னடி நினச்சிட்டு இருக்க... ஏதோ இந்த வீட்டுக்காரி மாதிரி தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்கிற... கொன்னு புதைச்சிடுவேன்....”



அவனது அறையிலேயே தன்னிலையின்றி அவனை வெறித்து பார்த்தவள்... அவன் எதற்கு எப்படியெல்லாம் பேசுகிறான் என புரியாமல் மேலும் அவனை வெறித்தாள்.



அவளது பார்வையை கண்டவனின் கோபம் மேலும் அதிகரிக்க அவளது தலைமுடியை பிடித்திழுத்து அவளை தன் முன் நிறுத்தியவன் “ஒரு நாள் உன்கூட படுத்ததும் பொண்டாட்டி ஆகிட்டோம்னு கனவு கண்டிட்டியா... ஆஹ்.. உன்னதான்.. சொல்லு... அப்படித்தான் நினைச்சியா...” என ஏதோ பெரிய நகைச்சுவையை கேட்டது போல் உடல் குலுங்க வெடிச்சிரிப்பு சிரித்தவன்....



“உனக்கொன்னு தெரியுமாடி.... என்கூட படுக்கவாறவங்களுக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை...” என அவன் சிரிக்க...



அவனது வார்த்தையில் சகலவும் ஒடுங்க விக்கித்து போய் அவனை பார்த்தாள் அவள்.

“என்ன சம்பந்தம்னு கேட்க மாட்டியா...சரி பரவாயில்ல விடு... நானே சொல்றேன்... அவங்க பணத்துக்காக உடம்ப விக்கிறவங்க... நீ அதேமாதிரி தான்... ஏன்னு தெரியனுமா... ம்ம்ம்... நான் அவங்களுக்கு பணம் கொடுப்பேன்... ஒரு வகைல உனக்கும் செலவச்சிருக்கேன்... எப்படின்னு யோசிக்கிறியா??”



“உனக்கும் எனக்கும் நடந்த கல்யாணம் அதுல நான் வேஸ்ட் ஆக்கின பணத்துக்காக உன்ன யூஸ் பண்ணிக்கிட்டேன்... சிம்பிள்.... இந்த யுத்கார்ஷ் எதையும் சும்மா பண்ண மாட்டான்... எனக்கு எல்லாமே ஒரு டீலிங் தான்... அன்னைக்கு உனக்கும் எனக்கும் நடந்த செக்ஸ் கூட அப்படித்தான் நான் பணம் செலவு பண்ணேன்... நீ எனக்கு உன்னோட உடம்ப கொடுத்த தட்ஸ் இட்...” என சர்வசாதரணமாய் கூற.....



அவனது ஒவ்வொரு வார்த்தையும் அவளது காதல் நெஞ்சை வலிக்க வலிக்க குத்தி கிழிக்க தாங்க முடியாத வலியில் தன் நெஞ்சை அழுத்தி பிடித்தவளின் கண்ணீர் கூட அவனது ஈரமில்லா பேச்சில் வற்றி விட்டிருந்தது.



தன் முன் நெஞ்சை பிடித்து கொண்டிருந்தவளின் அருகில் நெருங்கியவன் “உன்ன எனக்கு சுத்தமா பிடிக்காதுடி.... நீயே ஒரு அநாதை உனக்கு நான் அதுவும் தி கிரேட் அஹ்லுவாலியா கேக்குதா... இனி நீ என்ன கனவுல கூட நினச்சி பார்க்க கூடாது.. என்ன புரியுதா?.... அண்ட் இன்னுமொரு விஷயம் என் மனசில இப்போவும் எப்பவும் என்னோட மைலு மட்டும் தான் இருப்பா... உனக்கு புரியும்னு நினைக்கிறேன்... சோ இப்போ நீ என்ன பண்றேன்னா மரியாதையா இந்த வீட்ட விட்டு வெளிய போய்டு... ஒகே” எகத்தாளமாய் பேசியவன் அவளை பிடித்து தள்ள அங்கிருந்த சோபாவில் போய் விழுந்தால் அவள்.



அவளை அலட்சியமாய் பார்த்து கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினான் அவன். அவனின் மனக்கதவை போல்......



தரையிலிருந்து கஷ்டப்பட்டு எழுந்தவள் தான் இருக்கும் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டு கொண்டாள்.



உடலிலுள்ள சக்தி அனைத்தும் வடிய வெடித்து அழுதவளின் காதில் அவன் பேசிய பேச்சுக்களே மீண்டும் மீண்டும் ஒலிக்க கைகளிரன்டாலும் காதை இறுக மூடியவள்...



“நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல.... இல்ல... இல்ல....... நான் அப்படி...பட..பட்ட பொண்ணு இல்லங்க... ஏங்க... உங்களுக்கு என்ன பிடிக்க மாட்டேங்குது... நான் என்னங்க தப்பு பண்ணேன்... என்ன தப்பு பண்ணேன்னு தெரிஞ்சாலாவது தண்டனை கிடைக்குதேன்னு சந்தோசப்படுவேன்... ஆனா நீங்க ஒண்ணுமே சொல்லாமலே தண்டனை கொடுகிறீங்களே.... ஐயோ... என் உடம்பெல்லாம் எரியுதுங்க... எனக்கு அருவருப்பா இருக்குங்க... ஆஆஆஆ.....” என கதறியவளின் கதறல் அந்த அறைக்குள்ளேயே எதிரொலித்தது....



“இந்த உடம்பு எனக்கு வேண்டாங்க... நானும் கூட யாருக்கும் வேணாம்... என்னால எல்லோருக்கும் கஷ்டம்... நான் ஒரேயடியாய் போய்ட்டா யாருக்கும் கஷ்டம் இருக்காதில்லையாங்க.... அப்போ நான் ஒரேயடியாய் போய்றேங்க...”



“நான் தான் உங்க கிட்ட அப்போவே சொன்னேனே... இந்த வீட்ட விட்டு போற நாள் தான் என்னோட கடைசி நாள்ன்னு... அது இன்னைக்கு வந்துடிச்சீங்க.... நீங்க சொன்னா நான் எதையும் செய்வேங்க... ஏன்னா... ஏன்னா... நா..நான் அந்தளவுக்கு உங்கள காதலிக்கிறேங்க.... அப்போ இப்பவும் நீங்க சொல்றத செஞ்சுதானே ஆகணும்... அதனால தான்.... அதுவும் உங்ககிட்ட நான் சொன்ன வாக்கையும் காப்பத்தனுங்க... அதனால தான் ஒரேயடியாய் போய்டலாம்னு முடிவு பண்ணிட்டேன்...”



“இந்த ஜென்மத்துல தான் உங்க கூட நீங்க சொல்ற மாதிரி வேசியா வாழ்ந்திட்டேன்.... அடுத்த ஜென்மத்திலாவது உங்க கூட உங்க பொண்டாட்டியா வாழ ஆசைப்படுறேங்க... அந்த பாக்கியமாவது எனக்கு கிடைக்குமான்னு தெரியல... இல்லனா... அதுகூட வேணாங்க... நான்... நான்.. உங்க வீட்டு வேலைகாரியானா கூட எனக்கு போதுங்க... அதுவே எனக்கு பெரிய பாக்கியம்” உள்ளுக்குள் தன்னவுடன் கடைசியாய் உரையாடிவள் மெதுவாய் கண்களை மூடினாள்....



கள்வன் வருவான்...



 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 13





காலம் தன் வேலையை செவ்வனே செய்து கொண்டிருந்தது. நாட்களும் நில்லாமல் அதன் போக்கில் வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு மாதம்... இந்த ஒரு மாதமாய் வேதனையின் நிழல் படாமல் சிறிது நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருந்தாள் மலர்.



பல நாட்களின் பின் கிடைத்த நிம்மதி. இது எப்போது பறிபோகும் என்ற கலக்கம் அவளுக்கு சற்றும் இல்லை. இது எப்போது முடிவுக்கு வருகின்றதோ அன்றே தன் கடைசி நாள் எனும் முடிவை எடுத்து பல நாட்கள் ஆகியிருந்தது.



அதனாலேயே தன் கவலை, துக்கம் எல்லாவற்றையும் மறந்து இந்த குட்டி வாண்டுகளின் சிரிப்பில் தன் மனதை ஆறுதல் படுத்தி கொண்டிருக்கின்றாள்.



சிதம்பரத்திலுள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் இந்த ஒரு மாத காலமாய் வேலை செய்கிறாள் செய்கின்றாள். வேலை செய்கிறாள் என்பதை விட அந்த சிறு குழந்தைகளை பார்த்து கொண்டிருக்கின்றாள் என்பதே சாலசிறந்தது.

இயல்பிலேயே கருணையும் இரக்கமும் பாசமும் கொண்டவள் என்பதனாலேயே இந்த வேலை ஒன்று அவளுக்கு உவப்பாக இருக்கவில்லை; மாறாக தன் துக்கம் மறந்து இருப்பதற்கு சிறந்த இடமாகவே தோன்றியது.



எப்போதும் போல் அன்றும் தோட்டத்தில் தோட்டத்திலிருந்த கல் பெஞ்சில் அமர்ந்து கொண்டு அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை பார்த்து கொண்டிருந்தாள் மலர்.



இந்த ஒரு மாத காலத்தில் அவள் தன் ஓய்வு நேரங்களை இந்த வாண்டுகளுடன் தான் களிப்பால். சில நேரங்களில் தோட்டவேலை செய்வாள் இல்லையெனில் வெளிவேலையாக போய் வருவாள். எப்படியும் ஏதாவது ஒன்று செய்து கொண்டே இருப்பாள்.



கல் பெஞ்சில் அமர்ந்திருந்தவளின் பார்வை அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை சந்தோசத்துடன் வட்டமிட்டு கொண்டு இறுதியாய் மனம் கணக்க வந்து இளைப்பாறியது அங்கிருந்த ரோஜா செடிகளில்.



அதை பார்க்கும் போதெல்லாம் கணவனின் வார்த்தைகள் காதில் கேட்டு அவளை உயிருடன் கொன்று விடும். ஆனாலும் அவளின் பாழாய்ப்போன காதல் மனமோ வெட்கரோஷமின்ரி மீண்டும் மீண்டும் அதிலேயே நிலைத்து பழைய நினைவுகளை கிளறிவிட்டு அவளை காயப்படுத்த தொடங்கிவிடும்.



சிலநாட்கள் இந்த நினைவில் தோட்டத்து பக்கமே வரமாட்டாள். ஆனால் எத்தனை நாட்கள் தான் பழையதை நினைத்து வேதனை பட்டு தன்னையே அழித்து கொள்ளவது எனும் எண்ணம் தோன்றி மீண்டும் சிறுவர்களுடன் உற்சாகமாய் அங்கு வலம் வருவாள். ஆனால் மீண்டும் ஒரு சில நாட்களில் பழைய நினைவுகள் குப்பையாய் கிளறப்பட்டு அவளது மனக்காயத்தை அதிகமாக்கிவிடும்.



இப்போதும் அந்த ரோஜா செடியை பார்த்தவளின் கண்களில் கண்ணீர் கசிய தொடங்கியது. அதை பிறர் அறியாமல் துடைத்து விட்டவள் அங்கிருந்த வயதில் மூத்த பெண்ணிடம் குழைந்தைகளை பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து கொண்டாள்.



பழைய நினைவுகளின் தாக்கம் குறைய வேண்டுமெனில் அவளுக்கு ஓய்வு அவசியம். இல்லையெனில் அது விஸ்வரூபமாய் அவளை சுழன்றடித்து விடும். அதன்பின் அதை தாங்க முடியாமல் பசி தூக்கமின்றி பைத்தியம் போல் இருக்க தொடங்கிவிடுவாள்.



ஒரு மாதம் ஆகியும் அவனின் வார்த்தைகளின் தாக்கம் சிறிதும் அவளை விட்டு குறையவில்லை. அன்று அவன் பேசும் போது எப்படி வலித்ததோ அதை விட ஆயிரம் மடங்கு இப்போது வலிக்கிறது அவளுக்கு.



ஆனால் அதை கூறி ஆறுதல் பெறத்தான் அவளுக்கென யாருமில்லை. இன்றும் அதுபோல் பழைய நினைவுகள் ஆழிப்பேரலையாய் அவளை சுற்றிவளைக்க துவங்க யாரோ நெஞ்சினுள் கத்தியை விட்டு வலிக்க வலிக்க திருகுவது போல் மனம் முழுவது வலி பரவ சுவரில் ஒன்றியவளின் கண்களில் இருந்து தாரைதாரையாய் கண்ணீர் வழிந்தது.



அன்று அவன் பேசிய பேச்சின் தாக்கம் சற்றும் குறையாமல் இருக்க மாறாய் அன்று அவன் மேல் கலடளவு இருந்த காதல் இன்று இல்லாமல் மடிந்துவிட்டிருந்தது.



விதியின் சதியில் பாவையவளின் காதல் கொஞ்சம் கொஞ்சமாய் கறுகி இன்று இல்லாமலே ஆகிவிட்டிருந்தது. ஆனால் இடையிடையே அவன் ஞாபகம் வராமலும் இல்லை. ஆனால் அதனுடன் சேர்த்து அவன் பேச்சும் அல்லவா ஞாபகம் வந்துவிடும். அதன் பின் அவனை நினைக்கவே அவள் மென்மையான மனம் கூசிப்போய்விடும்.



இப்போதெல்லாம் காதல் என்ற வார்த்தையை கேட்டாலே உடம்பெல்லாம் தீக்குளிப்பது போல் அருவருக்க தொடங்கியிருந்தது அவளுக்கு. அன்று சுகமாய் இருந்தது இன்று பேதையின் நெஞ்சில் சுமையாய் மாறிப்போய் இருந்தது. அன்று தேனாய் இனித்தது இன்று வெறுக்கும் பொருளாய் மாறி கசந்தது.



அதேநேரம் தேவியின் மொத்த குடும்பமும் யுத்கார்ஷின் வீட்டில் கூடியிருந்தார்கள். அவர்கள் யாரையும் கண்டு கொண்டதாய் காட்டிகொள்ளாமல் கால்மேல் கால் போட்டு அலட்சியமாய் அமர்ந்திருந்தான்.



அவனது அலட்சியத்தை பார்த்து பல்லை கடித்து கொண்டார் சித்தார்த். தன் மகனின் போக்கு அவருக்கும் சுத்தமாய் பிடிக்கவில்லை. ஆனாலும் அவரால் தன் மகனிடம் குரல் உயர்த்தி பேசமுடியாது. எப்போதுமே சுதந்திரமாய் இருக்க பழகியதலோ என்னவோ அவனிடம் யாராவது கேள்வி கேட்டாலோ எதிர்த்து பேசினாலோ அவர்களை உண்டில்லை என ஆக்கிவிடுவான்.



அதனாலே பல்லை கடித்து கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தார் அவர். அவரது தர்மபத்தினியோ அதற்கும் மேலே போய் மகனை மனதுக்குள் திட்டோ திட்டென்று திட்டி தீர்த்து கொண்டிருந்தார்.



மலர் வீட்டை விட்டு போனதிலிருந்து அவர்களும் அவனிடம் எவ்வளவோ விதமாய் கேட்டு பார்த்து விட்டனர். அவன் வாயை திறந்தால் தானே... வாயை இறுக மூடி கொண்டு கல்லுளிமங்கனாய் அமர்ந்திருக்கும் மகனை பெற்ற பாவத்திற்கு மற்றவர்களிடம் பேச்சு வாங்கித்தானே ஆகவேண்டும்.



தங்கள் தலைவிதியை எண்ணி நொந்து போயிருந்தனர் இருவரும்.
 
Status
Not open for further replies.
Top