All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் கள்வனே காதலனாக! கதை திரி....

Status
Not open for further replies.

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொருவரது முகத்தையும் அதில் ஓடிக்கொண்டிருக்கும் யோசனையையும் உன்னிப்பாய் கவனித்து கொண்டிருந்த அகிலாண்டேஸ்வரி அதற்கு மேல் அமைதியாய் இருக்க முடியாமல் தொண்டையை செருமி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.



அவரது செருமலை யுத்கார்ஷ் அலட்சியமாய் பார்த்து வைக்க அதற்கு மேல் பொறுமை காக்க முடியாமல் “மலர் எங்க இருக்கான்னு தெரிஞ்சாகனும் த்ருவா... இப்போதான் ஒருத்திய பறிகொடுத்திட்டு மனச தேத்திக்கிட்டு வாரோம்... இப்போ திடீர்னு பொண்ணை காணோம்னா நாங்க என்ன பண்றது...” என அவர் பேசி கொண்டிருக்க அவரது பேச்சை சட்டை செய்யாமல் எழுந்து நின்றவன்...



“இன்னொரு தடவ அவளை பத்தி பேசுறதுன்னா தயவு செஞ்சு இங்க யாரும் வாராதீங்க... நான் இந்த கல்யாணம் அரேஞ் பண்ணும் போதே உங்க எல்லார்கிட்டயும் தெளிவா சொல்லியிருந்தேன்... எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு... ஆனா நீங்க யாரும் அத கேக்காம அந்த வேலைக்காரியை என்தலையில் கட்டி வச்சிட்டீங்க... இப்போ பார்த்தீங்கல்ல என்ன ஆச்சுன்னு... இருக்கிற பணத்தையெல்லாம் சுருக்கிட்டு எவன் கூடவோ வீட்ட விட்ட ஓடிப் போய்ட்டா... இது எனக்கு எவ்ளோ பெரிய அவமானம்.... ஆனா இதையெல்லாம் நான் போனா போகுதுன்னு விட்டிறேன்... அதனால இனி யாரும் அவள பத்தி நான் இருக்கிற இடத்துல பேசக்கூடாது...” என அதிகார குரலில் கூறியவன் தன் முடியை படு ஸ்டைலாக கோதி கொண்டு அங்கிருந்து அகன்று சென்றிருந்தான்.



அவன் பேச்சை கேட்டு அதிர்ச்சியில் நின்றிருந்தவர்களை ஆழ்ந்த பார்வை பார்த்த ஜியா அங்கிருந்து அகன்று யுத்கார்ஷை நோக்கி சென்றாள்.



தன் பின்னால் அரவம் கேட்கவும் யாரென்று பார்ப்பதற்காக திரும்பியவன் அங்கு ஜியா நிற்கவும் அவளருகில் குனித்து அவளை கைகளில் அள்ளிக் கொண்டான்.



“என்னோட பேபி.. எப்பிடி இருக்கா... டாடியை பார்க்க வரவேயில்லையே.... என் பேபிக்கு டாடி மேல் கோபமா..” என அவளை கொஞ்ச....



அவனது பேச்சை அமைதியாய் கேட்டு கொண்டிருந்தவள் அவன் முடித்ததும் “நீங்க ஏன் டாடி மம்மிய வீட்ட விட்டு போக சொன்னீங்க... மம்மி பாவம் டாடி...” என தன்னை பெறாத தாய்க்காக வருந்திய அந்த இளம் மொட்டு அவனை அர்த்த பார்வை பார்த்து கொண்டு அவன் கைகளிலிருந்து இறங்கி உள்ளே ஓடினாள்.



அவளது பேச்சை கேட்டு அதிர்ந்து போனவன் மறுநொடி யாரவது பேசுவதை கேட்டு கொண்டு வந்திருக்கிறாள் என எண்ணி தலையை உலுக்கி கொண்டு சிதம்பரம் நோக்கி தன் காரை செலுத்தினான்.



அவனது செயல்களை எல்லாம் பரிதவிப்புடன் பார்த்து கொண்டிருந்தது ஒரு உருவமில்லா உருவம்.



அவனது பல சிறுவர் காப்பகங்களில் ஒன்று அங்கேயும் உள்ளது. எல்லாமே சகல வசதிகள் கொண்ட அதிநவீனமயமான கட்டங்கள். சிறுவர்களுக்கு தேவையான அனைத்து வசதியும் அங்குள்ளது. இன்று அங்கு ஒரு சிறு வேலை உள்ளதென்பதால் அங்கு சென்று கொண்டிந்தான் அவன்.



ஒரு மாதத்திற்கு முன் நடந்த எந்த நிகழ்வும் அவன் மனதில் இல்லை. அதை நினைத்து பார்பதற்கு கூட அவனுக்கு சிறிதும் நேரம் இல்லை. அந்தளவு வேலை அவனை சூழ்ந்து கொண்டது.



அதையும் விட இத்தனை நாளாய் மனைவி என்ற பெயரில் தன் வீட்டில் இருந்தவள் இன்று தன் வீட்டை விட்டு வெளியே போய்விட்டாள் எங்கு சென்றாலோ என்ன ஆனாலோ என சிறிது கண்டுகொள்ளாமல் நெஞ்சில் சிறிது ஈரமும் இல்லாமல் அதற்கு முழு காரணமும் தான் தான் என தெரிந்தும் பழி முழுவதையும் அவள் தலையில் கட்டி அவளை அசிங்கபடுத்தியிருக்கிறோம் என்ற நினைவு சிறிதும் இன்றி எப்.எம்மில் பாடல் கேட்டு கொண்டு உல்லாசமாய் சென்று கொண்டிருந்தான் அவன்.



என்று விதி அவனுக்கான தண்டனையை வழங்க போகின்றதோ? அதையும் விதியே அறியும்.



அதேநேரம் காபி ஷோப்பில் அமர்ந்து காபியை அருந்தி கொண்டு ஜோடி ஜோடியாய் அமர்ந்திருந்தவர்களை கொலைவெறியுடன் பார்த்து கொண்டிருந்தாள் வின்னி.



அவளும் எத்தனை நாள் தான் யாரவது தன்னையும் மதித்து காதலிப்பார்கள் என்ற பொய்யான நம்பிக்கையுடன் சுற்றி கொண்டிருப்பது. அதற்கு மேல் முடியாமல் நாம் தான் இனி களத்தில் இறங்க வேண்டும் என எண்ணி கொண்டு எவனாவது சிங்கிள்ளாக சுற்றுகின்றானா என பார்வையை அலைய விட்டு கொண்டிருந்தது தான் மிச்சம். அந்தோபரிதாபம் அவளது எண்ணியது போல் யாரும் தனியாய் சுற்றவில்லை.



பார்த்து பார்த்து அலுத்து போனவள் பக்கத்து மேசையை திரும்பி பார்க்க அங்கு பின்டோவும் ஜொகியும் காதல் கடலில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தனர்.



எவ்வளவு நேரம் தான் அங்குமிங்கு சும்மா வெடிக்கை பார்த்து கொண்டிருப்பது. அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் அலுப்படைந்தவள் பின்டோவிற்கு வெளியே செல்வதாக மெசேஜ் ஒன்றை தட்டி விட்டவள் அங்கிருந்த சாலையை கடந்து செல்ல எத்தனிக்க அவளை மோதுவது போல் அருகில் வந்து நின்றது ஒரு பைக்..
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதிலிருந்து இறங்கி பயத்துடன் அங்கு நின்று கொண்டிருந்தவளை பார்த்தான் நண்பர்களால் பழம் என அழைக்கப்படும் பயந்தாங்கோலி பழராமன். ஐடி கம்பனியில் கைநிறைய சம்பளம் வாங்கும் ஒரு இளம் வாலிபன்.



கிராமத்தில் இருந்து வந்ததாலோ என்னவோ அவனுக்கு சிறு விடயத்திற்கும் பயந்து போய் விடுவான்.



ஒரு வேலை விஷயமாக வெளியில் வந்தவனை அழைத்திருந்தான் அவனின் நண்பன் வெற்றி. அவனுடன் பேசி கொண்டு வந்தவன் தனக்குள் முன்னால் திடீரென ஒரு பெண் வந்து நிற்கவும் உண்மையிலேயே பயந்து போய் பைக்கில் இருந்து இறங்கி விட்டிருந்தான்.



தன் முன் பயத்துடன் நின்று கொண்டிருந்தவனை விசித்திரமாக பார்த்தவள் அவனது பயந்த முகத்தை கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் “டைம் பாஸ் பண்றதுக்கு எலி சிக்கிடிச்சு...” என துள்ளி குதித்தவள் அவனை நோக்கி “ஏய்... பைக்கை ஓரமாய் நிறுத்திட்டு வா..” என்றவள் அங்கு போய் கையை கட்டி கொண்டு அலட்சியமாய் நிற்க....



அவளது தோரணையில் உள்ளுக்குள் உதறல் எடுக்க நண்பனின் அழைப்பை அவசரமாய் துண்டித்தவன் பைக்கை ஓரமாய் நிறுத்தி விட்டு அவளருகில் வந்தான்.



அவனை ஏற இறங்க பார்த்தவள் “டேய் தம்பி உன் பெயர் என்ன?”



குரலில் நடுக்கத்துடன் “பழ...பழராமன்.”



“ஓ...பழமா..” என்று அவள் ஒருதினுசாய் வினவி வைக்க...



“பழம் இல்லங்க... பழ..பழராமன்...”



“ஓஓ... பழ பழராமன்... பரவாயில்ல நல்ல வித்தியாசமான பெயரு தான்.. ஆனா எனக்கு எப்பிடி பிடிக்குதோ நான் அப்பிடித்தான் கூப்பிடுவன்” என அவள் அதட்ட...



“ஆ.. சரிங்க... ஆனா என்பெயரு பழ.. பழராமன் இல்ல... வெறும் பழராமன் தான்” என ஒரு வழியாய் திக்கி திணறி அவன் கூறிமுடிக்க...



“சரிசரி... என்னவோ ஒரு பழம் தானே... விடு... உன்ன பார்த்தா பழுத்த பழம் மாதிரி தான் இருக்க அதனால நான் பழம்னே கூப்பிடுறன்... சரி அதவிடு உனக்கு யார் பைக் லைசென்ஸ் கொடுத்தா... இப்படித்தான் போன் பேசிக்கிட்டே பைக் ஓட்டுவியா... நான் யாருன்னு தெரியுமா? ம்ம்ம்?”



“எனக்கு தெரியாதுங்க... நான் ஊருக்கு புதுசு... ஆமா நீங்க யாரு”



“ஏய்...என்ன பார்த்தா யாருன்னு கேக்கிற... நான் மப்டி போலீஸ்... என்ன பார்த்தா எப்பிடி தெரியுது” அவள் அதிகார குரலில் மிரட்ட...



“ஐயோ நீங்க போலீஸ்ஸா? சாரி மேடம்... நான் இனிமே போன் பேசிக்கிட்டு வண்டி ஓட்ட மாட்டேன் மேடம்... என்ன விட்டிடுங்க மேடம்... இல்ல உங்களுக்கு எவ்வளவு பணம் வேணும்னு சொன்னீங்கன்னா நான் கொடுத்துறன் மேடம்...” என்று அவன் வார்த்தைக்கு வார்த்தை மேடம் போட்டு மரியாதையாய் அழைத்து வைக்க...



தன்னையும் ஒருவன் மரியாதையை அழைக்கிறான் என்ற நினைவில் உச்சி குளிர்ந்தவள் கெத்தான பார்வையுடன் “ஏய்.. என்ன லந்தா... போலீஸ்காரிகிட்டாயே லஞ்சம் கொடுக்கிற... உன்ன உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டல என் பேரு வின்னி இல்லடா...” என அவள் சவுண்ட் விட அதை பார்த்து பதறியவன் சட்டென்று யோசியாமல் அவளின் கையை பிடித்திருந்தான்.



“மன்னிச்சிடுங்க மேடம்... எங்க வீட்டில யாரும் போலீஸ் கோர்ட்ன்னு அலைஞ்சதில்ல மேடம்... அதான் சட்டுன்னு பணம்னு பேசிட்டன்... எங்க வீட்டில மட்டும் இது தெரிஞ்சது என்ன உரிச்சு புடுவாங்க மேடம்...” என்று அவள் கையை பற்றி கொண்டு கெஞ்ச துவங்க அவளோ செயலற்று போய் உடல் விதிர்விதிர்க்க அவனை கலக்கத்துடன் பார்த்தவளை காப்பாற்றவென அங்கு வந்து சேர்ந்தனர் பின்டோவும் ஜொகியும்.



காபி ஷோப்பிலிருந்து வெளியே வந்தவர்களோ அங்கு வின்னியின் கையை பற்றி கொண்டிருப்பதை பார்த்து அவர்களை நெருங்கியவர்கள் அவசராமாய் அவனிடமிருந்து வின்னியின் கையை பிரித்தெடுத்து அவனை ஒரு கண்டன பார்வை பார்த்தவாறு அங்கிருந்து அகன்றனர்.



அவளை இழுத்து செல்பவர்களை புரியாமல் பார்த்தவன் எப்படியோ நாம் தப்பித்தோம் என எண்ணி கொண்டு தன் வேலையை பார்க்க சென்று விட்டிருந்தான் அவள் மனதில் தன்னால் சலனம் ஏற்பட்டிருக்கின்றது என்பதை அறியாமல்.



அதேநேரம் தன் ரோல் ராய்ஸ் காரில் சென்று கொண்டிருந்த யுத்கார்ஷை அங்கு போக விடாமல் தடுத்து நிறுத்தி மலரின் நிம்மதியின் ஆயுளை நீடித்திருந்தது விதி.



முக்கியமான அழைப்பினால் அவனின் பயணம் தடைப்பட அன்று அவனால் சிதம்பரம் செல்ல முடியாமல் போய்விட்டிருந்தது. அதனால் சென்னை நோக்கி அதிவேகத்தில் சென்றவன் தன் ஆபீசை அடைந்து அங்கிருந்த முக்கியாமான வேலைகளை செய்து முடித்தவன் முக்கியாமான வேலை விஷயமாக மறுநாளே அமெரிக்கா சென்றிருந்தான்.



ருத்ராவும் சித்தார்த்தும் எவ்வளவோ கேட்டு பார்த்தும் மலரை பற்றி அவன் ஒன்றுமே கூறாதிருக்க அவரோ கோபத்தில் தாங்களே கண்டுபிடிப்பதாக சொல்லவும் அவர்களை பார்த்து முறைத்தவன் மலரின் கைப்பட எழுதிய கடிதத்தை கொடுத்தான்.



அதை படித்து பார்த்த அவர்கள் உண்மையிலேயே அதிர்ந்து போயினர். யாரும் தன்னை தேடி வரக்கூடாது மீறி வந்தால் நான் உயிருடன் இருக்க மாட்டேன் என எழுதியிருந்த கடிதத்தை திரும்ப திரும்ப படித்து பார்த்த ருத்ராவிற்கு அதில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாவிட்டாலும் உண்மையிலேயே ஏதாவது செய்து விடுவாளோ ஏற்கனவே ஒரு முறை தற்கொலை செய்ய துணிந்தவள் இப்போதும் எதையாவது செய்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை என எண்ணிக்கொண்டு எதுவும் செய்யாது அமைதிகாத்தார்.



அவருக்கு மலரை பற்றி நன்கு தெரியும் இப்படியெல்லாம் அவள் வீட்டை விட்டு போக கூடியவளில்லை என்று. அதுவுமின்றி தன் மகன் கூறியது போல் எவனுடனாவது ஓடி போய் இருப்பாள் என்ற வார்த்தை மகன் மீதிருந்த நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாய் உடைத்தும் இருந்தது.



அவருக்கு யுத்கார்ஷின் கோபம் பற்றி நன்கு தெரியும். அவனுக்கு ஒன்று பிடிக்கவில்லை என்றால் அதை கடைசிவரை திரும்பி பார்க்கமாட்டான். மற்றவர்கள் யாரும் அவனின் விசயத்தில் மூக்கை நுழைப்பதும் அவனுக்கு பிடிக்காது. தான் நினைப்பது மட்டும் தான் நடக்க வேண்டும் என எண்ணும் அகம்பாவக்காரன்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“பார்ன் வித் கோல்டன் ஸ்பூன்” என்பது போல் பிறந்ததிலிருந்து பணத்திலேயே வாழ்ந்து வந்தவன். அதனாலேயே தான் என்கிற பிடிவாதமும் அதிகம் தலைகனமும் அதிகம். அது அவன் ரத்தத்திலேயே ஊறிப்போயிருப்பதால் அவனது குணஇயல்பை மாற்றுவது என்பது மிக கடினமான ஒன்று.



தன் மகனின் குணஇயல்பை நினைத்து மனம் வருந்தியவர் நடப்பது நடக்கட்டும் என தன் மனக்கவலையை விதியின் கைகளிலேயே விட்டு விட்டார்.



இத்தனை நாளாய் நானும் அதற்காய் தான் காத்திருந்தேன் என்பது போல் இருந்த விதியும் அந்த வாய்ப்பை கைப்பற்றி கொண்டு இவர்களின் வாழ்க்கையை தன் தீர்மானபடி நடத்த ஆரம்பித்தது.



அன்று அதிகாலையில் எப்போதும் போல் நேரத்துடனே கண்விழித்த மலர் எழ முடியாமல் படுத்தபடியே தரையில் கிடந்தாள்.



உடம்பெல்லாம் பாரமாய் கணக்க தலை சுற்ற தொடங்க ஏதோ குடலெல்லாம் புரட்டி கொண்டு வருவது போல் இருக்க அவசரமாய் எழுந்தவள் வெளிப்பக்கம் சென்று குடலே வெளிவருபோல் வாந்தி எடுத்து கொண்டிருந்தாள்.



அந்த வழியாய் வந்த அந்த காப்பகத்தில் வேலை புரியும் பெண்மணி இவள் வந்தி எடுத்து கொண்டிருக்கவும் அவசரமாய் அவளருகில் சென்றவள் அவளது முதுகை நீவி விட்டு தலையை தடவி ஆறுதல் அளித்தவள் தண்ணீர் அருந்த வைத்து அவளை அவளின் அறைக்குள் அழைத்து வந்தார்.



அவரின் கையை பற்றி நடந்து வந்து தன் அறையிலிருந்த கதிரையில் அமர்ந்தவள் தலையை பிடித்து கொண்டு பின்னால் சாய்ந்து அமர்ந்தாள்.



அவளின் முகத்தை பார்த்தே ஏதோ சரியில்லை என புரிந்து கொண்டவர் “என்னாச்சு கண்ணு... உடம்புகிடம்பு சரியில்லையா... வைத்தியர வரசொல்லட்டுமா...” என பாசமாய் கேட்க...



அவரது பாசமான குரலில் கண்கள் கரிக்க அவரை நிமிர்ந்து பார்த்தவள் “ஒன்னுயில்ல... லேசா தலை சுத்துற மாதிரி இருக்கு... வயித்த புரட்டுற மாதிரி இருக்கு...” என திணறலாய் கூற...



ஏற்கனவே அவள் திருமணமானவள் என்பது தெரிந்து வைத்திருந்தவர் கண்களில் வெளிச்சத்துடன் அவளது கையை பிடித்து பார்த்து அதை உறுதி செய்தவர் அவளை திருஷ்டி கழித்தார்.



“கண்ணு... சந்தோசமான செய்தி தான்... நீ முழுகாம இருக்கம்மா... இனிமேலாவது உனக்கு நல்ல காலம் பொறக்கட்டும்” என அவளை பார்த்து சந்தோசமாய் கூறியவர் “இரு கண்ணு எல்லாருகிட்டயும் சொல்லிட்டுஇனிப்பு எடுத்திட்டு வாறேன்...” என்றவாறு வெளியே செல்ல அதுவரை இறுக்கமான முகத்துடன் கற்சிலையாய் அமர்ந்திந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் கரையுடைக்க தொடங்கியிருந்தது.



தன் இருகைகளாலும் வயிற்றை தடவி பார்த்தவளின் கண்கள் சந்தோசத்தில் மின்னியது. யாருமின்றி அனாதையாய் தவித்தவளின் வாழ்க்கையில் ஒளியேற்ற தன் குழந்தை வந்து விட்டது என்பதை நினைத்ததுமே அவளது முகம் பளிங்காய் மின்னியது.



இந்த சந்தோசத்தை தன்னவனிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமே... அவரு சந்தோசப்படுவாறே என தனக்குள் எண்ணி மகிழ்ந்து முகம் விகசித்தவளின் புன்னகை கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து வேதனை குடி கொண்டது.

‘அவருக்கு தான் நான் வேண்டாத மனைவி ஆயிற்றே.. பின்னே எப்படி என் குழந்தையை அவர் உரிமை கொண்டாடுவார். நான் தான் அவருக்கு வேசி ஆயிற்றே... இந்த வேசியின் வயிற்றில் உயிர்த்திருக்கும் குழந்தையை அவர் சொந்தம் கொண்டாட மாட்டாரே... அப்போ என் குழந்தையை எல்லாரும் அப்பன் பெயர் தெரியாதவர்கள் என்பார்களா... ஐயோ கடவுளே... என் குழந்தையை யாரும் அப்படி சொல்லகூடாது கடவுளே... என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்... ஆனால் என் குழந்தையை யாரும் எதுவும் சொல்ல கூடாது....’ என தன் வயிற்றை பிடித்து கொண்டு கண்ணீர் விட்டு கதறினாள் அவள்...



இன்னமும் பிறக்காத தன் மகவிற்காய் கண்ணீர் விட்டு கதறி கொண்டிருந்தவளை ஆறுதலுடன் அரவணைக்க முடியாத தன் நிலையை எண்ணி அழக்கூட முடியாமல் பரிதவிப்புடன் அவள் அருகில் நின்று பார்த்து கொண்டிருந்தது அவளது தேவிம்மாவின் ஆன்மா...



கண்ணீர் வற்றாமல் பீரிட்டு வழிந்து கொண்டிருக்க அதை துடைக்க கூட முடியாமல் தன்னவனின் வார்த்தை காதில் நாராசமாய் ஒலிக்க.... “ஐயோஓஓ... நான் அப்பிடிப்பட்ட பொண்ணு இல்ல.... இல்ல.... நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல..... கடவுளே... அவருக்கு நான் அந்த மாதிரி பொண்ணு இல்லைங்கிறத ஏதாவது ஒரு வகையில புரியவச்சுடு....” என வீறிட்டவளை கலைத்தது வெளியில் நின்று கொண்டிருந்த குழந்தைகளின் சந்தோஷ கூவல்கள்.



அவர்களை பார்த்து தன் கண்களை அழுந்த துடைத்து கொண்டவள் சிரிப்புடன் உள்ளே வருமாறு சைகை செய்ய வெளியில் நின்றிருந்தவர்கள் ஒவ்வொருவராய் உள்ளே வந்து அவளுக்கு இனிப்பூட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.



அவர்களது முகத்தில் தெரிந்த உண்மையான மகிழ்ச்சியில் ‘தான் யாருமற்ற நாதியில்லை எனக்கும் துணை இருக்கிறார்கள்’ என்ற தெம்பு அவளின் காயம்பட்ட மனதுக்கு சிறு இதமளிக்க அவர்களை வாஞ்சையுடன் பார்த்தவள் தான் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு வருவதாக கூறி அவர்களை அனுப்பியவள் தன் தேவிம்மாவின் புகைப்படத்தின் அருகில் சென்று கையெடுத்து கும்பிட்டாள்.



‘தேவிம்மா.... உங்களுக்கொன்னு தெரியுமா... நா...நான்.. அம்மாவாக போறேன்... எனக்குன்னு ஒரு குழந்தை வர போகுது... குட்டி குட்டி கை, காலெல்லாம் இருக்கும்ல... எவ்ளோ அழகா இருக்கும்... எனக்கு ரொம்ப... எவ்ளோன்னு சொல்ல முடியாத அளவுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.... அதுவும் என் கொழந்த உங்கள மாதிரி அழகா பொறந்த நான் இன்னமும் சந்தோஷபடுவேன் தேவிம்மா... நீங்களே எனக்கு மகளா வந்து பொறக்கனும்னு ஆசைபடுறேன் தேவிம்மா... என்னோட இந்த ஆசையை நிறைவேத்துங்க தேவிம்மா...” என்று தன் தேவிம்மாவுடன் மனதுக்குள் உரையாடியவளுக்கு சட்டென ஜியாவின் நினைவு வர...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதில் இத்தனை நேரமாய் இருந்த மகிழ்ச்சி அடியோடு வற்றி போய் இருந்தது..



‘நான் எப்படி என் தேவிம்மாவின் இதயத்தை சுமந்து கொண்டிருக்கும் ஜியாவை மறந்தேன்... இந்த பாழாய் போன காதல் என் தேவிம்மாவின் நினைவுகளையும் என்னிலிருந்து அகற்றி விட்டதா... நான் அவர் மேல் வைத்த காதல் தேவிம்மாவின் நினைவை மட்டுமல்ல... என் தன்மானம், சுயகௌரவம் எல்லாவற்றையும் அல்லவா ஒரேயடியாய் அழித்து விட்டிருக்கிறது...’



‘இந்த பாழாப்போன காதல் எனக்கு வாராமலே போயிருக்கலாம் தேவிம்மா... நீங்களும் அன்னைக்கு அந்த பொறந்த நாள் விழாவுக்கு போகாமலே இருந்திருக்கலாம்... இப்போ நீங்க இறந்து போகாமலே இருந்திருக்கலாம்... இப்பிடியெல்லாம் நடக்காமலே இருந்திருந்தா நீங்களும் அவரும் சந்தோசமா வாழ்ந்திருப்பீங்க... இப்போ என் வயித்தில இருக்கிற குழந்தை கூட உங்க வயித்தில பொறந்திருக்கும்.... அப்றோம் நீங்களும் அவரும் வாழ்க்க முழுக்க சந்தோசமா இருந்திருக்கலாம்... உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் தான் தேவையில்லாமா வந்துட்டேன்ல தேவிம்மா... உங்களுக்கொன்னு தெரியுமா தேவிம்மா... அவருக்கு உங்க மேல அம்புட்டு காதல்... வார்த்தையால சொல்ல முடியாதளவுக்கு....’ என மனதுக்குள் கூறியவளின் கண்களில் தன் காதல் தோற்று போன வேதனை அப்பட்டமாய் தெரிந்தது...



ஆனால் அதை நொடியில் மறைத்தவள் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு ‘தேவிம்மா நீங்களே எனக்கு குழந்தையா பொறந்தா ஒரு வேல அவரு என்ன மன்னிச்சாலும் மன்னிக்கலாம்... ஏன்னா அவருக்குத்தான் உங்கள ரொம்ப பிடிக்குமே... அப்போ நீங்களே என் வயித்தில மறு படியும் பொறந்து வந்தீங்கன்னா... ஒருவேள... ஒருவேள அவரென்ன... இல்லல்ல... நான்... வே...வேசி இல்லன்னு புரி...புரிஞ்சிடுவாரில்ல... அதுக்காவது நீங்க எனக்கு மகளா பொறக்கணும் தேவிம்மா...’ என்று திக்கி திணறி தன் மனதிலுள்ள பாரமெல்லாம் குறையுமளவு ஒரு மூச்சு அழு தீர்த்தும் அந்த பாரம் குறையாமல் கணவனின் வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் அவளது இதயத்தை குத்தி கிழித்தது.



நினைக்க கூடாது என்று தான் அவளும் நினைக்கிறாள் ஆனால் மனம் ஒரு குரங்கல்லவா... அதனால் தான் நினையாதே... நினையாதே... என அவள் கதறுவது புரியாமல் மீண்டும் மீண்டும் அதையே நினைத்து சூடு பட்டு கொள்கிறது.



‘வெட்கம் கேட்ட மனம்... எவ்வளவோ பட்டும் திருந்தாதிருக்கின்றது. அவன் எப்படியெல்லாம் வலிக்க வலிக்க கொட்டினான்... எல்லாவற்றையும் மறந்து விட்டாயா... ஓஹோ... அவனின் வாரிசை உன் வயிற்றில் சுமக்க தொடங்கியதும்... கணவன் மேல் பாசம் பொத்து கொண்டு வந்து விட்டதோ...’ என அவள் தவிப்பை உணர்ந்து கொண்டு அவளது மனசாட்சியே இரண்டாய் பிரிந்து வாதம் புரிய தொடங்கியது...



ஒரு நூலிழையில் தொங்கி கொண்டிருந்த அவளின் காதல் மனமோ ‘மறக்க தான் முடியவில்லை மன்னிக்க முடியுமல்லவா...’



‘சீ... வெட்கம் கேட்டதனம்.... அவன் பேசியதையெல்லாம் மறந்து விட்டு என்ன செய்ய போகிறாய்... அவன் காலில் விழுந்து வாழ்க்கை பிச்சை கேட்க போகிறாயா’



‘அப்படி கேட்டாலும் தப்பொன்றுமில்லையே... தாலி கட்டி குடும்பம் நடத்தியவரிடம் தானே கேட்க போகிறேன்...’



‘அதுவொன்றும் அவன் விருப்பபட்டு கட்டிய தாலி இல்லையே... ம்ஹ்... அப்பிறம் இன்னுமொன்று சொன்னாயே... குடும்பம் நடத்தியவனா... உன்னை உடம்பை விற்பவளாக நினைத்து குடும்பம் நடத்தியவனுடனா இன்னும் வாழ நினைக்கிறாய்...’ என அலட்சியமாய் உதட்டை சுழிக்க...



‘குழந்தை பிறந்தால் அவரே என்னை தேடி வருவார்...’ என சவால் விட...



‘ஆமா ஆமா.... வந்து இது என் குழந்தை என தூக்கி கொண்டு போவான் என்றா நீ இன்னமும் நினைக்கிறாய்... சுத்த பைத்தியகார தனம்... இது எவனுக்கு பொறந்த குழந்தை என்று தான் முதலில் கேட்பான்....’ என அவனை நினைத்து அருவருப்புடன் கூற...



இத்தனை நேரமாய் மனதின் வாக்கு வாதத்தை நிறுத்த விருப்பமின்றி அசுவாரஸ்யமாய் இருந்தவள் அதன் கடைசி வார்த்தையில் உடல் நடுங்க தன்னையும் மீறி “போதும்... ரெண்டு பெரும் நிறுத்துங்க... நான் அவர மன்னிக்க போவதும் இல்ல... இந்த குழந்தையை காட்டி அவர என்னோட பக்கம் இழுக்க போறது இல்ல... கடவுள் என்ன நினைச்சிருக்கனோ அதுபடியே நடக்கட்டும்”... என அந்த பேச்சுக்கும் தன் கணவனின் நினைவுக்கும் ஒரேயடியாய் முற்று புள்ளி வைத்தவள் தன் வேலைகளை கவனிக்க தொடங்கி விட்டாள்.



இவள் கருவுற்றிருப்பதை கேள்விபட்ட அங்கிருந்த தலைமை பொறுப்பாளினி எதற்கும் ஒரு முறை மருத்துவரிடம் போய் உறுதி செய்யுமாறு மாறு கூற அதன்படி மறுநாளே அருகிலிருந்த மருத்துவமனைக்கு மனைக்கு சென்று பரிசோதித்து குழந்தையை உறுதி செய்த பின் தான் அவளால் நிம்மதியாய் இருக்க முடிந்தது...



பாவம் அவள் எங்கே அறிய போகிறாள் அவளின் நிம்மதியின் ஆயுளிற்கு நாட்கள் குறைவென்று...



அமெரிக்கா சென்றவனோ சென்னை வரவே விருப்பமில்லாமல் அங்கேயே இருக்க துவங்கி இருந்தான்.



அங்கேயே அவனுக்கு பல நிறுவனங்கள் இருந்தன... அதையெல்லாம் நம்பிக்கையான ஆட்களின் பொறுப்பில் விட்டு விட்டு சென்னை வந்திருந்தவன் இப்போது முழுவதுமாக அனைத்து நிறுவனங்களிலும் மேற்பார்வை பார்த்து மேலும் சில தொழில் ஒப்பந்தங்களை முடித்து கொண்டு சென்னை வர விருப்பமின்றி தான் அங்கேயே சில நாட்களை கழித்தான்.



ஆனால் அவனை அங்கேயே இருக்க விடாமல் அவனை ஊரிற்கு அழைத்து வருவதற்காய் முயற்சித்த தேவி அவனின் தாயின் மூலம் அதை நிறைவேற்றினாள்.



தன் மருமகள் வீட்டை விட்டு போனதால், தன் அண்ணனுக்கு என்ன பதில் சொல்வது... என்ற தவிப்பில் இருந்தவர் படியில் நடந்து வரும் போது கால் இடறி படிகளில் உருண்டதில் ஒரு காலும் கையும் செயலிழந்து விட்டிருந்தது..
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதில் இத்தனை நேரமாய் இருந்த மகிழ்ச்சி அடியோடு வற்றி போய் இருந்தது..



‘நான் எப்படி என் தேவிம்மாவின் இதயத்தை சுமந்து கொண்டிருக்கும் ஜியாவை மறந்தேன்... இந்த பாழாய் போன காதல் என் தேவிம்மாவின் நினைவுகளையும் என்னிலிருந்து அகற்றி விட்டதா... நான் அவர் மேல் வைத்த காதல் தேவிம்மாவின் நினைவை மட்டுமல்ல... என் தன்மானம், சுயகௌரவம் எல்லாவற்றையும் அல்லவா ஒரேயடியாய் அழித்து விட்டிருக்கிறது...’



‘இந்த பாழாப்போன காதல் எனக்கு வாராமலே போயிருக்கலாம் தேவிம்மா... நீங்களும் அன்னைக்கு அந்த பொறந்த நாள் விழாவுக்கு போகாமலே இருந்திருக்கலாம்... இப்போ நீங்க இறந்து போகாமலே இருந்திருக்கலாம்... இப்பிடியெல்லாம் நடக்காமலே இருந்திருந்தா நீங்களும் அவரும் சந்தோசமா வாழ்ந்திருப்பீங்க... இப்போ என் வயித்தில இருக்கிற குழந்தை கூட உங்க வயித்தில பொறந்திருக்கும்.... அப்றோம் நீங்களும் அவரும் வாழ்க்க முழுக்க சந்தோசமா இருந்திருக்கலாம்... உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நான் தான் தேவையில்லாமா வந்துட்டேன்ல தேவிம்மா... உங்களுக்கொன்னு தெரியுமா தேவிம்மா... அவருக்கு உங்க மேல அம்புட்டு காதல்... வார்த்தையால சொல்ல முடியாதளவுக்கு....’ என மனதுக்குள் கூறியவளின் கண்களில் தன் காதல் தோற்று போன வேதனை அப்பட்டமாய் தெரிந்தது...



ஆனால் அதை நொடியில் மறைத்தவள் முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு ‘தேவிம்மா நீங்களே எனக்கு குழந்தையா பொறந்தா ஒரு வேல அவரு என்ன மன்னிச்சாலும் மன்னிக்கலாம்... ஏன்னா அவருக்குத்தான் உங்கள ரொம்ப பிடிக்குமே... அப்போ நீங்களே என் வயித்தில மறு படியும் பொறந்து வந்தீங்கன்னா... ஒருவேள... ஒருவேள அவரென்ன... இல்லல்ல... நான்... வே...வேசி இல்லன்னு புரி...புரிஞ்சிடுவாரில்ல... அதுக்காவது நீங்க எனக்கு மகளா பொறக்கணும் தேவிம்மா...’ என்று திக்கி திணறி தன் மனதிலுள்ள பாரமெல்லாம் குறையுமளவு ஒரு மூச்சு அழு தீர்த்தும் அந்த பாரம் குறையாமல் கணவனின் வார்த்தைகள் தான் மீண்டும் மீண்டும் அவளது இதயத்தை குத்தி கிழித்தது.



நினைக்க கூடாது என்று தான் அவளும் நினைக்கிறாள் ஆனால் மனம் ஒரு குரங்கல்லவா... அதனால் தான் நினையாதே... நினையாதே... என அவள் கதறுவது புரியாமல் மீண்டும் மீண்டும் அதையே நினைத்து சூடு பட்டு கொள்கிறது.



‘வெட்கம் கேட்ட மனம்... எவ்வளவோ பட்டும் திருந்தாதிருக்கின்றது. அவன் எப்படியெல்லாம் வலிக்க வலிக்க கொட்டினான்... எல்லாவற்றையும் மறந்து விட்டாயா... ஓஹோ... அவனின் வாரிசை உன் வயிற்றில் சுமக்க தொடங்கியதும்... கணவன் மேல் பாசம் பொத்து கொண்டு வந்து விட்டதோ...’ என அவள் தவிப்பை உணர்ந்து கொண்டு அவளது மனசாட்சியே இரண்டாய் பிரிந்து வாதம் புரிய தொடங்கியது...



ஒரு நூலிழையில் தொங்கி கொண்டிருந்த அவளின் காதல் மனமோ ‘மறக்க தான் முடியவில்லை மன்னிக்க முடியுமல்லவா...’



‘சீ... வெட்கம் கேட்டதனம்.... அவன் பேசியதையெல்லாம் மறந்து விட்டு என்ன செய்ய போகிறாய்... அவன் காலில் விழுந்து வாழ்க்கை பிச்சை கேட்க போகிறாயா’



‘அப்படி கேட்டாலும் தப்பொன்றுமில்லையே... தாலி கட்டி குடும்பம் நடத்தியவரிடம் தானே கேட்க போகிறேன்...’



‘அதுவொன்றும் அவன் விருப்பபட்டு கட்டிய தாலி இல்லையே... ம்ஹ்... அப்பிறம் இன்னுமொன்று சொன்னாயே... குடும்பம் நடத்தியவனா... உன்னை உடம்பை விற்பவளாக நினைத்து குடும்பம் நடத்தியவனுடனா இன்னும் வாழ நினைக்கிறாய்...’ என அலட்சியமாய் உதட்டை சுழிக்க...



‘குழந்தை பிறந்தால் அவரே என்னை தேடி வருவார்...’ என சவால் விட...



‘ஆமா ஆமா.... வந்து இது என் குழந்தை என தூக்கி கொண்டு போவான் என்றா நீ இன்னமும் நினைக்கிறாய்... சுத்த பைத்தியகார தனம்... இது எவனுக்கு பொறந்த குழந்தை என்று தான் முதலில் கேட்பான்....’ என அவனை நினைத்து அருவருப்புடன் கூற...



இத்தனை நேரமாய் மனதின் வாக்கு வாதத்தை நிறுத்த விருப்பமின்றி அசுவாரஸ்யமாய் இருந்தவள் அதன் கடைசி வார்த்தையில் உடல் நடுங்க தன்னையும் மீறி “போதும்... ரெண்டு பெரும் நிறுத்துங்க... நான் அவர மன்னிக்க போவதும் இல்ல... இந்த குழந்தையை காட்டி அவர என்னோட பக்கம் இழுக்க போறது இல்ல... கடவுள் என்ன நினைச்சிருக்கனோ அதுபடியே நடக்கட்டும்”... என அந்த பேச்சுக்கும் தன் கணவனின் நினைவுக்கும் ஒரேயடியாய் முற்று புள்ளி வைத்தவள் தன் வேலைகளை கவனிக்க தொடங்கி விட்டாள்.



இவள் கருவுற்றிருப்பதை கேள்விபட்ட அங்கிருந்த தலைமை பொறுப்பாளினி எதற்கும் ஒரு முறை மருத்துவரிடம் போய் உறுதி செய்யுமாறு மாறு கூற அதன்படி மறுநாளே அருகிலிருந்த மருத்துவமனைக்கு மனைக்கு சென்று பரிசோதித்து குழந்தையை உறுதி செய்த பின் தான் அவளால் நிம்மதியாய் இருக்க முடிந்தது...



பாவம் அவள் எங்கே அறிய போகிறாள் அவளின் நிம்மதியின் ஆயுளிற்கு நாட்கள் குறைவென்று...



அமெரிக்கா சென்றவனோ சென்னை வரவே விருப்பமில்லாமல் அங்கேயே இருக்க துவங்கி இருந்தான்.



அங்கேயே அவனுக்கு பல நிறுவனங்கள் இருந்தன... அதையெல்லாம் நம்பிக்கையான ஆட்களின் பொறுப்பில் விட்டு விட்டு சென்னை வந்திருந்தவன் இப்போது முழுவதுமாக அனைத்து நிறுவனங்களிலும் மேற்பார்வை பார்த்து மேலும் சில தொழில் ஒப்பந்தங்களை முடித்து கொண்டு சென்னை வர விருப்பமின்றி தான் அங்கேயே சில நாட்களை கழித்தான்.



ஆனால் அவனை அங்கேயே இருக்க விடாமல் அவனை ஊரிற்கு அழைத்து வருவதற்காய் முயற்சித்த தேவி அவனின் தாயின் மூலம் அதை நிறைவேற்றினாள்.



தன் மருமகள் வீட்டை விட்டு போனதால், தன் அண்ணனுக்கு என்ன பதில் சொல்வது... என்ற தவிப்பில் இருந்தவர் படியில் நடந்து வரும் போது கால் இடறி படிகளில் உருண்டதில் ஒரு காலும் கையும் செயலிழந்து விட்டிருந்தது..
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் இருந்த மனைவி இன்று மொத்தமாய் படுக்கையில் விழவும் சித்தார்த்தால் தாங்க முடியவில்லை. காதலித்து கைபிடித்த மனைவி.... அவளுக்கொன்றென்றால் அதை அந்த காதல் கணவனால் தாங்க முடியாது.



அதனாலேயே தோளுக்கு மேல் வளர்ந்த மகன் தோழன் என்பது போல் அவனுடன் அதிகம் ஒட்டியும் ஒட்டாமலும் அவன் விசயத்தில் தலையிடாமலும் இருந்த சித்தார்த் மனைவியின் நிலை கண்டு பொங்கி எழுந்து விட்டார்.



உடனே தன் மகனுக்கு அழைத்து ‘ஊருக்கு வருவதென்றால் அவசரமாய் வா... இல்லையென்றால் உன் அப்பாவும் அம்மாவும் இறந்துவிட்டதாக நினைத்து கொள்’ என கண்டிப்புடன் கூறி மகனின் வருகைக்காக காத்திருக்க...



இதைகேட்டு பதறி அடித்து கொண்டு வந்தால் அவன் யுத்கார்ஷ் இல்லையே..



அதனாலேயே இரண்டு மூன்று நாட்கள் கழித்து சாவதானமாய் வந்திறங்கினான். அவனது வருகை அறிந்து புயலாய் சீற்றத்துடன் வந்த சித்தார்த் மனைவியின் மனம் அறிந்து ஒன்று பேசாமல் உள்ளே சென்றுவிட்டிருந்தார்.



புதிதாய் தன் தந்தைக்கு முளைத்த கோபத்தை எண்ணி விசித்திர புன்னகையுடன் தாயை தேடி சென்றவன் தாயின் நிலை கண்டு பதறிப் போனான்.



சிறு வயதிலிருந்தே தாய் தந்தையுடன் ஒட்டாமல் தான் வளர்ந்தான். அப்படி வளர்ந்தவனை தட்டி கொடுத்து விட்டு தந்தை செல்ல.... அவனை அப்படியே விடாமல் சிறு கண்டிப்புடன் வளர்த்த தாயின் மேல் அவனுக்கு சற்று பாசம் அதிகமே.



அதனாலேயே தன் தாயின் நிலை எண்ணி கலங்கினாலும் அதை மறைத்து அவரருகில் சென்று அமர்ந்தான் அவன்.



கண்மூடி தூங்க முயற்சித்த ருத்ராவோ அருகில் அசைவுணர்ந்து மெதுவாய் கண்களை திறந்தவர் தன் மகனை கண்டு மெதுவாய் தன் கைகளை நீட்டினார்.



எப்போதும் சுறுசுறுப்புடன் ஓடியாடி திரியும் தன் தாய் இந்த நிலை அவனின் இரும்பு மனதை சற்று இளக வைக்க “மாம்...” என கரகரத்த குரலில் அழைத்தான் அவன்.



அவனது தவிப்பை புரிந்து கொண்டவர் “ஒன்னும் இல்ல கண்ணா... நீ எப்பிடி இருக்க...” என மூச்சு வாங்க கூற...



அதை கேட்டு அவரை ஆசுவாசபடுத்தியவன் “என்ன நடந்தது மாம்... உங்களுக்கு...” என பாதியில் நிறுத்த..



“எல்லாம் உன்ன பெத்த பாவத்தால தான்... இப்போ உன் அம்மா இந்த நிலைமையில இருக்க” என்று அப்போது தான் அந்த தங்கள் படுக்கை அறைக்குள் நுழைந்த சித்தார்த் குதர்க்கமாய் கூற..



அவனோ அவரை அலட்சியமாய் பார்த்து “நான் என்ன பண்ணேன்...” என்க..



“நீ என்ன பண்ணலன்னு கேளுப்பா... வீட்டுக்கு வாழ வந்த பொண்ண கழுத்த பிடிச்சு தள்ளாத குறையா வீட்டை விட்டே வெளிய அனுப்பிட்ட... இப்போ அந்த பொண்ணு எங்க இருந்து என்ன கஷ்டபடுதோ.... நீ அந்த பொண்ணுக்கு பண்ண பாவம் தான் இப்போ உங்க அம்மாவோட தலையில வந்து விழுந்திருக்கு..” என அவனை முறைத்து கொண்டு கூற...



“வாட்... ஸ்டுபிட் மாதிரி பேசாதீங்க டாடி... அவ இப்போ எந்த கஷ்டமும் படாம சந்தோசமாத்தான் இருப்பா... அவளுக்கென்ன... நல்ல ஜாலியா வீட்ட விட்டு ஓடிப்போய்ட்டா... இப்போ எனக்குத்தானே கஷ்டம்... ஏதோ நான் தான் அவள வீட்ட விட்டே அனுப்பின மாதிரியே பேசுறீங்க...” என அவன் எகிற...



“நீ அனுப்பாம அந்த பொண்ணு எதுக்குடா போக போகுது... நீ தான் ஏதோ தில்லுமுல்லு பண்ணியிருக்கேன்னு உன் பேச்சிலே தெரியுதே...” என அவர் பதிலுக்கு சத்தம் போட...



தந்தையினதும் மகனினதும் வாய்த்தகராரை பார்த்து பயந்து போன ருத்ரா “என்னங்க... அவனே இப்போ தான் ஊர்ல இருந்து வந்திருக்கான்... நீங்க கொஞ்சம் சும்மா இருங்க... அப்றோம் பேசலாம்...” என மன்றாடும் குரலில் கூறியவர்... மகனை நோக்கி “த்ருவா... இப்போ தானே வந்திருக்க.. போப்பா... போய் கொஞ்ச நேரம் நல்லா ரெஸ்ட் எடு கொஞ்ச நாள் கழித்து இத பத்தி பேசலாம்” என கூறி அவனை அனுப்பி வைத்தவர் மீண்டும் கணவனை நோக்கி “நீங்க இன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க... போங்க போய் சாப்பிட்டிட்டு வாங்க” அவரையும் அனுப்பி வைத்தவர் ஓய்வை கண்களை மூடினார்.



தன் தாயையே சிறிது நேரம் பார்த்திருந்தவன் தன் அறை நோக்கி சென்றான்.



தன் பெட்ரூம் நோக்கி செல்ல துவங்கியவனின் கால்கள் அவனை அறியாமலே அவனது ரெஸ்ட் ரூம் நோக்கி சென்றது..



அவன் இந்த அறைக்கு வந்தே பல நாட்கள் ஆகிவிட்டிருந்தன.... பல நாட்கள் என்பதை விட பல மாதங்கள்... அவளுக்கு இந்த அறையை கொடுத்ததிலிருந்து அவன் இந்த அறைபக்கமே வருவதில்லை... பின் அவள் இந்த வீட்டை விட்டு சென்றதிலிருந்து அவன் இந்த பக்கம் எட்டி கூட பார்ப்பதில்லை.



இந்த அறையை பார்க்கும் போதெல்லாம் ஏனென்றே அறியாமல் அவனுள் சிறு தடுமாற்றம் வந்து கொண்டே இருக்கின்றது. அது ஏனென்று அவனுக்கு சத்தியமாய் புரியவில்லை...



இந்த உணர்வு அவனுக்கு புதிது... முதன்முறை ஒன்றை பார்த்து தடுமாறுகிறான் என்றால் அவனுக்கே அது சற்று விசித்திரமாய் தான் இருந்தது. தன்னை நினைத்தே சிரித்தவன் தலையை கோதிக்கொண்டு இனம்புரியா படபடப்புடன் அந்த அறை கதவை திறந்தான்.



கதவை திறந்ததுமே ஒரு வித்தியாசமான வாசனை அவனின் நாசியில் நுழைந்து மனதை கிறங்கடிக்க அதை ஆழ மூச்சிழுத்து ரசித்தவனின் மனதில் முதன் முறையாய் மனைவியின் மென்மையான நினைவலைகள்....


கள்வன் வருவான்...
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் 14


மனைவியின் நினைவு என்றும் இல்லா வகையில் இன்று தோன்ற தன் உணர்வுகள் புரியாமல் தடுமாறியவன் மறுநொடியே அந்த அறையை விட்டு வெளியே வந்திருந்தான்.

“இன்னைக்கு எனக்கு என்ன ஆச்சு... எனக்கெதுக்கு அவளோட நினைவு வருது...” என தனக்குள் முனுமுனுத்தவன் முனுமுனுத்தவன் தலையை ஸ்டைலாக கோதிக்கொண்டு “வேஸ்ட் ஒப் டைம்” என்றவாறு அவளது நினைவுகளை ஒதுக்கி தள்ளினான்.

ஆனால் அவளின் நினைவுகளோ விடாது கருப்பாய் அவனை தொடர துவங்கியிருந்தது... பாவம் அதை அவன் அறிந்திருக்கவில்லை.

குளியலறைக்குள் நுழைந்து குளித்து பிரெஷ்ஷானவன் கட்டிலில் விழுந்து தூங்க துவங்கினான். பல நாட்களின் பின் நிம்மதியாய் தூங்கும் தூக்கம்... அவனின் மனைவியின் நினைவுகள் அவனை அறியாமல் இன்று வெளிப்பட்டதில் அவனுக்கும் சிறிது சுகம் கிடைத்ததோ என்னவோ முகம் புன்னகையில் விரிய ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான்.

அதே நேரம் தன் முன் நின்றவர்களிடம் தன் திட்டங்களை கூறி அவர்களை ஆயத்தம் ஆகும் படி கூறிக்கொண்டிருந்தான் அவன்.

பல நாட்கள் கழித்து இன்று தான் அவன் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. ஏதோ நியாயம் செய்துவிட்ட உணர்வு... இனி தன் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே... என எண்ணியவன் அவர்களுக்கான பணத்தை கொடுத்து விட்டு வெளியேறினான்.

வெகு நாட்களின் பின் அன்று பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர் ஒமி மற்றும் பின்டோ.. இன்று அவளின் பிறந்த நாள். வாழ்க்கையில் அவள் முதன் முதலாய் ஆசைபட்டவனுடன் கொண்டாடும் முதல் பிறந்த நாள்.

ஏதோ சிறகு முளைத்த பறவையாய் சுற்றி திரிந்து கொண்டிருந்தாள் அவள். இந்த நாளை அவள் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது.

சில மாதங்களுக்கு முன்பு வரை அவன் மேல் தீராத கோபத்துடன் இருந்தவள் இன்று அவன் அருகில் அதுவும் அவன் தோள் வளைவில் முகம் புதைத்து கொண்டிருக்கின்றாள் என்றால் அவளால் அதை சிறிதும் நம்ப முடியவில்லை.

அவனது முகத்தை அண்ணார்ந்து பார்த்தவள் ‘வித்தைக்காரன்... என்ன வித்தைடா செய்தாய்.... இப்படி உன் பின்னாலே நாய்க்குட்டி மாதிரி சுத்த வைத்து விட்டாயே...’ என கள்ள சிரிப்புடன் அவனை பார்த்து கொண்டிருக்க...

இவளது பார்வையை கண்டு கொண்டவன் அவளது நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு “இந்த குட்டி தலைக்குள்ள அப்பிடி என்ன யோசனை ஓடிக்கிட்டு இருக்காம்” என அவளின் தலையை பிடித்து ஆட்டி கொண்டு கேட்க...

அவனது கையில் பட்டென்று ஒரு அடி போட்டவள் “ஹேர் ஸ்டைல் கலைஞ்சு போய்டும் சும்மா இருடா” என அவள் செல்லம் கொஞ்ச...

“ஏய்... என்னடி... டா போட்டு பேசுற... இதெல்லாம் தப்பு சொல்லிட்டேன்”

“ப்ச்... நான் இப்பிடித்தான் ‘டா’ போட்டு பேசுவான் உனக்கென்னடா...” என்று அவள் மீண்டும் கள்ள சிரிப்புடன் அவனை கடுப்படிக்க...

“சொன்னா கேளு... இப்படியெல்லாம் டா போட்டு பேசின... பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும் சொல்லிட்டேன்...”

“அப்பிடியாடா... அப்பிடி என்னடா பயங்கர பின் விளைவு... சொல்லுடா.... உன்னத்தான்டா...” என வார்த்தைக்கு வார்த்தை ‘டா’ போட அவளை விசமத்துடன் பார்த்தவன் தன் தோளில் சாய்ந்திருந்தவளை நிமிர்த்தி கணநேரம் கூட தாமதிக்காமல் அவள் இதழை ருசிக்க துவங்கியிருந்தான்.

எத்தனை மணி நேரங்கள் நீடித்ததோ முதல் முத்தம்... தன் காதலின் முதல் இதழ் முத்தம்... பேதையவளின் கண்கள் மயக்கத்தில் சொருக கால்கள் தொய்ய அவன் மேல் சாய்ந்தால் அவனை இறுக அணைத்துகொண்டு...

தன் மேல் படர்ந்திருந்தவளை பார்த்தவனின் கைகள் வேட்கையுடன் அவள் மேல் படர துவங்கியது...

மையலில் இருந்தவளோ தன்னவனின் அத்துமீறிய செயலில் சட்டென அவனிடமிருந்து விலகினாள். அதை பார்த்தவனின் கண்கள் கோபத்தில் சிவக்க... அவனையே தவிப்புடன் பார்த்து கொண்டிருந்தவள் அவனருகில் சென்று தன் கைகளை அவன் கன்னத்தில் வைத்து தாங்கியவள் வனை ஏக்கத்துடன் பார்த்தாள்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ஐயம் சாரி ஒமி... நான்.... என்மேல தான் தப்பு... ப்ளீஸ்... என்ன திட்டுங்க... அடிங்க... ஆனா பேசாம மட்டும் இருக்காதீங்க... நான்...நான் தான் உங்ககிட்ட சொல்லியிருக்கேனே கல்யாணத்துக்கு அப்றமா தான் இதெல்லாம்னு... நான்.. என்ன சொல்றதுன்னு தெரியல பட்...” என எப்படி சொல்வது என புரியாமல் தடுமாறியவள் தன்னை சமன் படுத்தி கொண்டு...

“நீங்க நினைக்கலாம்... என்னடா வெளிநாட்டில பொறந்து வளர்ந்தவ... இவளுக்கு இதெல்லாம் சாதாரணம் தான்னு பட்... மத்த பொண்ணுங்க மாதிரி நான் இல்லை ஒமி...”

“அங்கேயே இருந்திருந்தாலும்...நான்... எனக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்காது... நான் உங்ககிட்ட ஆல்ரெடி சொல்லியிருக்கேனே... என்னோட மாம் அண்ட் டாட்... நான் சின்ன வயசா இருக்கும் போதே பிரிஞ்சிட்டாங்க... நான் கொஞ்ச நாள் மாம் கூடவும் டாட் கூடவும் தான் இருப்பேன்.... அப்போ அவங்க... வேற... யார் கூடவோ என்முன்னாலேயே மிஸ்பிஹேவ் பண்ணும் போது..... அப்போவே என்னால அத பார்க்க முடியாம எத்தனையோ நாள் ரொம்ப பீல் பண்ணியிருக்கேன்...” என கண்கலங்கியவள்....

“அதனால தான்... என்ன கல்யாணம் பண்ணிக்க போற என்னோட லைப் பாட்னர்ர லைப் லாங் லவ் பண்ணனும்னு டிசைட் பண்ணேன்... பட் உங்கள முதல் தடவ பார்த்த போதே நான் என்னையும் அறியாம உங்கள லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டேன்... அதுக்கப்றம் என்ன ஆச்சுன்னு தான் உங்களுக்கே தெரியுமே... அதனால தான் சொல்றேன்... நம்ம கல்யாணம் முடிஞ்சதும் நமக்குள்ள இதெல்லாம் நடக்கட்டும்... அதுவரைக்கும் நாம ஜஸ்ட் பிரெண்ட்ஸ்ஸாவே இருப்போம்... நீங்க என்ன சொல்றீங்க ஒமி...” என தன் நீண்ட உரையை முடித்து கொண்டு அவள் தவிப்புடன் கேட்க....

அத்தனை நேரம் இறுக்கமாய் இருந்தவன் அவளது கைகளை பற்றி தன் கைகளுக்குள் அடக்கி கொண்டு “எனக்கு உன்ன பத்தி தெரியாதுன்னு நினைச்சியா ஜெனி.. உன்ன பத்தி நீ சொல்லாதது கூட எனக்கு தெரியும் பிகாஸ் நான் உன்ன அந்தளவுக்கு லவ் பண்றேன்டி... நீ என்ன புரிஞ்சிக்கிட்டது இவ்ளோ தானா பேபி” என காதலாய் உருகியவன் அவளது கண்களில் வழிந்த கண்ணீரை மென்மையாய் துடைத்து விட்டான்...

அவனை பாய்ந்து அணைத்து கொண்டவள் “உன்ன மாதிரி ஒருத்தன் என் லைப் பார்ட்னரா கிடைச்சதுல ஐயம் சோ...சோ... ஹாப்பி ஒமி... ஐ லவ் யு சோ மச்...”

“ஐ லவ் யு டு பேபி..” என்றவனும் அவளை மென்மையாய் அணைத்து கொண்டான்.

சிறிது நேரம் அப்படியே மோன நிலையில் நின்றவர்கள் செல்போன் அழைப்பில் சட்டென விலகி அதை ஸ்பீக்கரில் போட...

“பின்டோ... இதுக்கு மேலயும் என்னால வெயிட் பண்ண முடியாதுடி... நீ கொடுத்த த்ரீ மன்த்ஸ் இன்னையோட முடிஞ்சது... என்னால இதுக்கு மேலயும் கன்ட்ரோல் பண்ணிக்க முடியும்னு தோணல... அதனால அந்த சாமியார பார்க்க போறேன்... அத சொல்றதுக்கு தான் போன் பண்ணேன்... அண்ட் இன்னொரு இம்போர்டன்ட் மேட்டர்...இத உன் ஆளுகிட்ட சொல்லிறாதடி... என்ன ஓட்டியே தள்ளிடுவாரு... சரி..சரி... நேரம் ஆச்சு சீக்கிரம் சொல்லு....”

ஒமியோ வாயை மூடி சிரிப்பை அடக்கியவன் அப்படியும் முடியாமல் “ஹா ஹா ஹா...” என உரக்க சிரிக்க...

“அடியே... லூஸு.. போனே ஸ்பீக்கர் போட்டிருக்கியா.....” என கத்த...

அவளோ அதை கவனியாமல் “எதுக்கு ஒமி இப்பிடி சிரிக்கிறீங்க.. என்கிட்டயும் சொல்லுங்க...” என சிணுங்க..

‘இதுங்க தொல்ல தாங்கலடா சாமி..’ என அலுத்து கொண்டவள் “இப்போ எதுக்கு ப்ரோ... முப்பத்தியாறு பல்லும் கொட்டுற மாதிரி இப்பிடி சிரிக்கிறீங்க” என காண்டுடன் கூற...

அதைகேட்டு மீண்டும் சிரித்தவன் “மனிஷங்களுக்கு முப்பத்திரண்டு பல்லு இருக்கிறதா தான் நான் கேள்வி பட்டிருக்கேன்... அதென்ன புதுசா முப்பத்தாறு பல்லு”

“ஆஹ்... உங்க லூசுத்தனமா பேச்ச கேட்டா எனக்கென்னவோ உங்களுக்கு முப்பத்தாறு பல்லு இருக்குன்னு தோனிச்சு அதனால தான் சொன்னேன்...” என அந்த நேரம் எதுவும் சிக்கி தொலையாததால் லூசுத்தனமாய் உளறியவள் “சரிப்பா... அத விட்டிட்டு நீங்க எதுக்கு சிரிச்சீங்கன்னு சொல்லி தொலைங்க” என எரிச்சலுடன் மொழிய...

“அதுயொன்னுயில்ல வின்னி... கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பொண்ணு ஏதோ தெரிஞ்சவங்க லவ்க்கு ஹெல்ப் பண்ண அவங்க லவ்க்கு ஹேண்ட்சமான பையன் கிடைப்பாங்கன்னு சொன்னாங்க... ஆனா இப்போ திடீர்னு அவங்களுக்கு சுத்தமா செட்டாகத பையன லவ் பண்றாங்களா அதான் சட்டுன்னு சிரிப்பு வந்துடிச்சு...” என கிண்டலுடன் தன் மனதிலுள்ள கேள்வியையும் சேர்த்து கூற..

அதை கேட்டதும் சட்டென கலங்கி விட்டிருந்தது அவளின் கண்கள்...

அவளுக்கும் அது புரிகின்றது தான்... ஆனால் அவளின் காதல் கொண்ட மனம் அதை ஏற்கமுடியாமல் அல்லவா தவிக்கின்றது...

பின்டோவும் அவளிடம் இதைத் தான் கூறி மூன்று மாதம் அவகாசம் கொடுத்திருந்தாள். இந்த மூன்று மாதங்களில் அவன் மேல் கொண்டது ஈர்ப்பு என்றால் அதை மறைந்து விடும் என்றிருந்தாள்.... கண்ணில் பாடதது கருத்தில் பதியாது என்றால்... இவளும் அதையெல்லாம் கேட்டு தலையாட்டி கொண்டு அவனை பார்க்காது இருந்தாள் தான்... ஆனால் அவனின் நினைவு அவளிடமிருந்து சற்றும் அகன்ற பாடாய் தான் தெரியவில்லை... மாறாக அவனின் நினைவுகளே அதிகமாய் அவளை இம்சிக்க துவங்கி இன்று அதில் காதலாய் வேர்விட்டு வளரதுவங்கியிருந்தது.

இப்போது போய் அவன் உனக்கு ஒத்து வரமாட்டான் என்றால் அவளும் என்ன தான் செய்வாள்...

இவள் திடீரென அமைதியாகி விடவும் பயந்து போன பின்டோ “வின்னி...வின்னி... ஹலோ... லைன்ல இருக்கியா....” என்ற எதற்கும் பதில் கூறாமல் இருந்தவள் செல்போனை அணைத்து தூர வீசியிருந்தாள்.

அவளுக்கு அவ்வளவு சுலபத்தில் கோபம் வராது... ஆனால் வந்து விட்டால் அது அவ்வளவு சுலபத்திலும் போகாது. கோபத்தில் கைக்கு கிட்டும் எதையாவது போட்டு உடைத்து விடுவாள்.

இப்போதும் கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாய் சில கணங்கள் நடந்தவள் தன்னவனை பார்க்க சென்று விட்டாள்.

இந்த மூன்று மாதத்தில் ஒரு டிடெக்டிவ் மூலம் அவனது ஒவ்வொரு அசைவுகளையும் தெரிந்து கொண்டிருந்தாள். அதானாலேயே அவன் இந்த நேரத்தில் ஓய்வை அமர்ந்திருக்கும் காபி ஷாப் நோக்கி சென்றாள். தன் ராமை பார்க்க... பழராமன் அவளுக்கு மட்டும் ராம்...

-------------------------------------------------

நாட்கள் செல்ல செல்ல அந்த நாட்களின் வேகத்திற்கு ஈடுகொடுப்பது போல் மலரின் வயிற்றில் இருந்த சிசுவும் வளர்ந்து கொண்டே போனது... இப்போதெல்லாம் அவள் அங்கே அதிகவேலைகள் செய்யா விடிலும் வேலை செய்யாமல் வெறுமனே அமர்ந்திர்க்க பிடிக்காமல் ஏதாவதொன்றை இழுத்து போட்டுக்கொண்டு செய்து கொண்டுதான் இருப்பாள்... யாரவது வந்து தடுக்கும் வரை...

இப்போது செய்வதற்கு எந்த வேலையுமில்லாமல் தன் அறையில் முடங்கியவள் தன் குழந்தையுடன் உரையாட துவங்கியிருந்தாள்...

அவள் மதாமாதம் செக்கப்பிற்கு செல்லும் போது தான் அங்கிருந்த செவிலி பெண் தான் குழந்தையுடன் தினமும் எதையாவது நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று கூறி இருந்ததால் அவளும் தன் குழந்தையுடன் உற்சாகமாகவே உரையாட துவங்கியிருந்தாள்.

இப்போது குழந்தையிடம் சின்ன சின்ன அசைவு தெரிவதால் இப்போதெல்லாம் அவளின் பொழுது போக்கே அது தான்.. அதனுடன் பேசுவதும் அது அசையும் போது மகிழ்வதும் என உப்புசப்பில்லாமல் சென்று கொண்டிருந்தது அவளின் வாழ்க்கை.

இந்த மாதிரி நேரத்தில் எல்லாம் தலைசுற்றல் வாந்தி வரும் போதெல்லாம் அவளாய் ஆறுதலாய் மடி சாய்க்க தன் கணவனின் தோள் தேடுவாள். ஆனால் அவன் தான் அவளருகில் இல்லையே... மாறாய் அவளை மடிசாய்ப்பது அந்த கனமான சுவரில் தான்.

எத்தனை நாளுக்கு தான் அவளும் வேதைனையை மறைத்து கொண்டிருப்பது போல் நடிப்பது. அவர் என்னை புரிந்து கொள்ளவே மாட்டாரா என்ற எண்ணம் தோன்றத்தான் செய்யும்.

ஆனால் அதனுடனே ஒட்டுப்புல் போல அவன் பேசிய பேச்சும் அல்லவா நினைவில் வந்து அவளை பாடாய் படுத்துகிறது.

அதனாலேயே இப்போதெல்லாம் அவள் கணவன் என்ற ஒருவன் இருப்பதையே மறந்து தன் குழந்தையுடனான உலகில அவளும் அவளின் மகவுமாய் நிம்மதியாய் வாழ துவங்கியிருந்தனர்.

ஆனால் அந்த நிம்மதியும் ஒரு நாள் பறிபோக போகின்றது என்பதை அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.

அன்று காலையிலிருந்து அந்த சிறுவர் காப்பகம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.

குழந்தைகளின் அறையில் இருந்த மலர் அவர்களுக்கு ஆடையை அணிவித்து கொண்டிருந்தாள்.

“பாலா அசையாம நில்லு கண்ணா..”

“அம்மா இவன் என்ன கிள்ளுறான்...”

“எனக்கு இந்த சட்ட பிடிக்கவே இல்ல...”

“யாரும் சத்தம் போடாதீங்க... எல்லாரும் அமைதியா இருந்தா தான் நான் இன்னைக்கு அழகான கதையொன்னு சொல்லுவேன்...” என பல கலவையான குரல்கள் அந்த அறைக்குள் ஒலித்து கொண்டிருந்தது.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த சத்தங்கள் காயம்பட்ட அவளின் மனதை ஏதோவொரு வகையில் ஆறுதல் படுத்தி கொண்டிருந்தது. அதில் சுகமாய் நனைந்தவாறு இருந்தவளை அழைத்தார் அங்கிருக்கும் பொறுப்பாளினி...

“மலர்... நம்ம கண்ணனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாத மாதிரி இருக்கு... டாக்டர் வாறதுக்கும் லேட் ஆகும் போல.... நீ கொஞ்சம் பக்கத்தில இருக்கிற ஹோஸ்பிடலுக்கு கூட்டி போய் வாறியாமா... சார் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவாரு.... இத மட்டும் கேள்விப்பாடறுன்னா அவ்வளவு தான்...கொஞ்சம் போய்ட்டு வாறியாமா..” என்க அவளும் சிறிது யோசித்தவள் “ம்ம்... சரிம்மா நானே கூட்டிட்டு போயிட்டு வாறேன்மா” என்றவாறு கண்ணனை அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றாள்.

காலையில் எழுந்ததும் தாயுடன் சிறிது நேரம் உரையாடும் யுத்கார்ஷ் பின் தன் வேலைகளை கவனிக்க சென்றால் நள்ளிரவு வேளைகளில் தான் வீடு திரும்புவான்.

இப்போது புதிதாக சில ப்ராஜெக்ட் கிடைத்திருப்பதால் நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கொண்டிருக்கின்றான். அதனாலேயே தாயுடன் சில மணி நேரங்களை கழிப்பதற்கோ இல்லை தன்னை நிலைபடுத்தி கொள்வதற்கோ நேரமில்லாமல் ஓடி களைத்து போனவன் இன்று தான் பல நாட்களின் பின் ஓய்வாக இருந்தான்.

ஆனால் அப்படியும் தன் தாயுடன் நேரம் செலவளிக்க முடியாமல் முக்கிய வேலையாக சிதம்பரத்திலுள்ள தன் சிறுவர் காப்பகம் நோக்கி பறந்து கொண்டிருந்தான் அவன்.

அந்த மருத்துவமனையில் காத்திருப்போர் இருக்கையில் அமர்ந்திருந்தனர் மலரும் ஐந்து வயது சிறுவன் கண்ணனும்.

“மலர்ம்மா எப்போ உள்ளே விடுவாங்க... சீக்கிரம் விட சொல்லுங்க... எங்க அங்கிள் வந்துடுவாரு... அவரு நிறைய சாக்லேட் எல்லாம் வாங்கிட்டு வருவாரு... புது ட்ரெஸ் எல்லாம் கொண்டுவருவாறு... அவரு ரொம்ப நல்லவரு... தெரியுமா” என அவளிடம் கதையளக்க தொடங்க...

“அப்பிடியா கண்ணா... சரி உங்க அங்கிள் வந்தா எனக்கும் அவர அறிமுகப்படுத்தனும் சரியா...” என மலர் கூறவும்...

“ம்ம்...சரி சரி...” என பலமாக தலையாட்டி மகிழ்ந்து போனான் சிறுவன்.

அவனது மகிழ்ச்சியை கண்டவளுக்கு அந்த சிறுவர் காப்பகத்தின் உரிமையாளரின் மேல் அளவுகடந்த மரியாதை உண்டானது. ‘கண்டிப்பாக அவரை பார்த்து இப்படி ஒரு நல்ல விஷயம் செய்வதற்காக நன்றி சொல்ல வேண்டும்’ என மனதுக்குள் எண்ணியவள் செவிலிப்பெண் அழைக்கவும் மருத்துவரின் அறைக்குள் சென்று கண்ணனை காட்டி பெரிதாக ஒன்றுமில்லை என அவர் கூறவும் தான் சிறிது ஆசுவாசப்பட்டவள் அவர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை வாங்கி கொண்டு ஆசிரமத்திற்கு திரும்பினாள்.
காப்பகத்தின் வாயிலில் இருந்த வாட்ச்மேனிடம் கண்ணனை உள்ளே விடுமாறு கூறியவள் மருந்து சீட்டை எடுத்து கொண்டு மேடிட்ட வயிருடனும் அழகிய தேர் போல் அசைந்தாடி கொண்டு மருந்து கடை நோக்கி சென்றாள்.

சாலையின் மறு பக்கம் தான் பார்மெசி இருப்பதால் வாகனங்கள் வருகின்றதா என நோட்டம் விட்டவள் தூரத்தில் ஒன்றிரெண்டு வாகனங்கள் வந்த வண்ணம் இருக்க அவசரமாய் சாலையை கடந்து சாலையின் மைய பகுதியில் வந்த நொடி “அம்மாஆஆஆஆக்க்க்க் ப்ப்ப்ப்ஹாஆஆஆ” என்ற அலறலுடன் வீசி எறியபட்டாள்.

எல்லாம் ஒரு நொடி... ஒரேயொரு நொடியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருந்தது..

வயிற்றில் குழந்தையுடன் சாலையை கடந்த பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் ரத்த வெள்ளத்தில் மூழ்கி இருக்கவும் அங்கிமிங்கும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் அவளை சூழ்ந்து கொண்டனர்.

“ஐயோ... பிள்ளைத்தாச்சி பொண்ணு போல.. ரத்தம் வந்துக்கிட்டே இருக்கு சீக்கிரம் யாராவது ஆம்புலன்ஸ் வரவைங்கப்பா...”

“மூச்சு இருக்கும் போல... ஆம்புலன்ஸ் வரவரைக்கும் உசுரு தாங்குமான்னு தெரியல சீக்கிரம் எதாவது வாகனத்த நிறுத்தி ஆஸ்பத்திரி அழைச்சிட்டு போங்கபா...” என எல்லோரும் கூடி கூடி பேசிக் கொண்டிருந்தார்களே தவிர அவளை அழைத்து செல்ல யாருக்கும் மனம் வரவில்லை.

குப்புற விழுந்து கிடந்தவளோ குழந்தையை காக்க எண்ணி நிமிர்ந்து அமர முயற்சிக்க அவளால் சிறிதும் அசைய முடியவில்லை.

சாலையிலிருந்து தூக்கி எரியபட்டவளின் தலை மின்கம்பத்தில் மோதி மீண்டும் தரையில் விழுந்ததால் தலையிலிருந்து ரத்தம் ஆறாய் பெருக்கெடுத்து சாலையெங்கிலும் பரவி கொண்டிருந்தது.

கையில் தோல் பிய்ந்து அதிலிருந்து ரத்தம் குபுக்குபுக்கென பீரிட்டு கொண்டிருந்தது. எத்தனை நேரம் தான் அவளும் உயிருக்கு போராடுவது அவளுக்கு உதவுவதாக நினைத்து கொண்டு அவளருகில் கூடி நின்று வெட்டி நியாயம் பேசி கொண்டிருந்த்வர்களோ அவளுக்கு உதவும் எண்ணம் சிறிதுமில்லாமல் நின்று கொண்டிருந்தனர்.

மூச்சு காற்று கொஞ்சம் கொஞ்சமாய் குறைய துவங்க மூளை செயலிழக்க ஆரம்பிக்க “என் குழந்தைக்கு ஒன்னும் ஆகக்கூடாது கடவுளே... என் குழந்தை தான் என்னோட உலகம்...” என்ற எண்ணம் மனதில் ஓட மெதுவாய் கண்களை மூடினாள் அவள்.

திடீரென நடைபெற்ற விபத்தில் உணர்வு மழுங்க செயலற்று நின்று கொண்டிருந்த யுத்கார்ஷ் மறுநொடி தலையை உலுக்கி சுயநினைவுக்கு வந்தவன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணை நோக்கி ஓடினான்.

அங்கு கூடி நின்றவர்களை பார்த்தவன் யாரும் எதுவும் செய்யும் நிலையில் இல்லை என்பதை அறிந்து குனிந்து அந்த பெண்ணை கைகளில் அள்ளி கொண்டு தன் காரை நோக்கி விரைய அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவர் அவசரமாய் அவனின் கார் கதவை திறந்து விட்டார்.

அவருக்கு நன்றி உரைக்க கூட நேரமின்றி அவளை பின்னால் கிடத்தியவன் காரை கிளப்பி கொண்டு அவசரமாய் புகழ் பெற்ற மருத்துவமனை நோக்கி விரைந்தான்.

இத்தனைக்கும் அந்த பெண்ணை காக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருக்க அவளின் முகம் கண்ணில் பட்டாலும் மனதில் பதியாமல் போயிருந்தது.

அந்த புகழ் பெற்ற மருத்துவமனை வாயிலில் யுத்கார்ஷின் ரோல் ராய்ஸ் கார் கீரிச்சிட்டு நின்றது.

அதிலிருந்து அவசரகதியில் இறங்கியவன் பின் இருக்கையில் ரத்தவெள்ளத்தில் இருந்தவளை கைகளில் அள்ளி கொண்டு உள்ளே நுழையும் போதே மருத்துவர்கள் புடை சூழ ஸ்ட்ரேச்சர் கொண்டுவரப்பட அவளை அதில் கிடத்தியவன் ஐசியு வரை அழைத்து வந்தவனை மருத்துவர்கள் வெளியே காத்திருக்குமாறு கூற தலையை அழுந்த கோதியவன் அங்கிருந்த இருக்கையில் பொத்தென அமர்ந்தான்.
 

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தனை அவசரத்திலும் அவசியம் உணர்ந்து நிதானமாய் அந்த மருத்துவனைக்கு அழைத்து அனைத்தையும் தயார் செய்து வைக்கும் படி கூறியிருந்தவன் ஒரேயொரு தடவை அந்த பெண்ணின் முகத்தையும் பார்த்திருக்கலாமோ?....s

தலையை பின்னால் சரித்தவனின் கண்களில் சற்று நேரத்தின் முன் ஓடிய நிகழ்வு படமாய் விரிந்தது.

கிட்டத்தட்ட ஐந்து மணிநேர பயணத்தை மூன்று மணி நேரத்திலே கடந்து சிதம்பரம் வந்து சேர்ந்திருந்தான் யுத்கார்ஷ்.

அங்கிருந்து அவனது ஆசிரமத்திற்கு இன்னும் உள்ளே செல்ல வேண்டும் என்பதால் சற்று வேகமாகவே வந்தவனுக்கு ஏனென்றே அறியாமல் மனைவியின் நினைவு வந்து தொலைத்தது.
அத்துடன் தான் அவளை சாடிய கொடிய வார்த்தைகளும்... மனைவியின் நினைவு என்றுமில்லா வகையில் இன்று தோன்றவும் குழம்பி கொண்டு தலையை உலுக்கின் தன்னை நிலை படுத்தியவன் காரின் வேகத்தை சிறிது மட்டுப்படுத்தினான்.


அதேநேரம் அவனுக்கு மறுபக்கத்திலிருந்து வேகமாய் வந்த லாரி அவனை இடித்து தள்ளும் வெறியில் இருக்க எதேர்ச்சியாய் திரும்பியவன் அந்த லாரிகாரனின் எண்ணத்தை யூகித்து சடுதியில் காரின் வேகத்தை அதிகரித்தவன் எதிரில் வந்த பெண்ணின் மீது எதிர்பாராது மோதி விட்டிருந்தான்.

வேகமாய் வந்த கார் அவளின் மேல் மோதிய மறுநொடி வீசியெரியப்பட்டவளின் தலை அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி அதேவேகத்தில் சாலையில் குவிக்கபட்டிருந்த மண்குவியலின் மேல் விழுந்தாள்.

கண்ணிமைக்கும் நேரம்... கண்ணிமைக்கும் நேரத்திற்குள் யாருமே எதிராராமல் நடந்த விபத்து. இத்தனைக்கும் சாலையை கவனமாய் கடந்தவளின் மேல் எப்படி இந்த கார் மோதியதேன்று யாருக்கும் புரியவில்லை. எல்லாமே விதியின் சதியோ...

கண்களை மீண்டும் ஒருமுறை அழுந்த மூடி திறந்தவனின் காதில் விழுந்த வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து போய் எழுந்து நின்றான்.

வாட்... ஒஹ்...கோட்... சே...” என தன் மேலேயே வந்த ஆத்திரத்தில் சுவரில் ஓங்கி குத்தியவனின் கண்களில்
கண்ணீரின் பளபளப்பு.


“என்ன காரியம் பண்ணிட்ட யுத்கார்ஷ்... ஒரு ப்ரெக்னன்ட் லேடி....” என தன்னையே சாடியவன் அந்த லாரிகாரனை நினைத்து பல்லை கடித்தவாறு தன் சீப் செக்யூரிட்டிக்கு அழைத்து அந்த லாரியின் நம்பரை கூறியவன் “இன்னும் பைவ் மினிட்ஸ்ல அவனோட மொத்த ஹிஸ்ட்ரியையும் எனக்கு மெயில் பண்ணனும்... அன்டெர்ஸ்டான்ட்... குய்க்” என்று கடினகுரலில் கூறியவன் ஐசியுவிலிருந்து தலைமை மருத்துவர் வரவும் அவரை நோக்கி விரைந்தான்...style='mso-special-character:line-break'>


என்னாச்சு அங்கிள்... எல்லாம் ஓகே தானே... ஷி இஸ் ஓகே..”

“இப்போ என்னால எதுவும் சொல்ல முடியாது த்ருவா... அதுவுயில்லாம ஷி இஸ் ப்ரெக்னன்ட்... இந்த டைம்ல என்னால எந்த ரிஸ்க்கும் எடுக்கமுடியாது. ஒன்னு அந்த பொண்ண காப்பாத்தலாம் இல்லனா அந்த குழந்தை... பட் இப்போ ரெண்டு பேருமே உயிருக்கு போராடிட்டு இருக்காங்க.. அந்த பொண்ண எப்பிடியாவது காப்பாத்திடலாம் பட் அந்த குழந்தை இன்னும் ஒன் ஓர் டூ அவர் (one or two hour) தான்... இப்போதைக்கு என்ன பண்றதுன்னாலும் அந்த பொண்ணோட பாமிலியிலிருந்து யாரவது வந்து சைன் பண்ணா தான் என்னவேணாலும் பண்ண முடியும்”.

“அங்கிள் நான்... நான் அந்த பொண்ண ஒரு தடவ பார்த்திட்டு வரட்டுமா...”

“த்ருவா... இப்போ பார்க்கிறது இம்போஸ்ஸிபில்...”

“அங்கிள் ப்ளீஸ்... என்னால ஒரு உயிர் போறத என்னால கையகட்டிட்டு வேடிக்கை பார்க்க முடியாது... நான் ஒரே ஒரு தடவ அந்த பொண்ண பார்த்திட்டு வாறேன் ப்ளீஸ்...”

“ஓகே... பட் அந்த பொண்ண டிஸ்டேர்ப் பண்ணாத”

அந்த அறை வாசலை அடைந்தவனின் கால்கள் அவனை அறியாமலே தடுமாறி நின்றது. இத்தனை நேரம் தோன்றாத படபடப்பு, பதற்றம் அவனை சூழ்ந்து கொள்ள தலையை அழுந்த கோதியவன் அந்த அறையின் கைபிடியை பற்றிய நேரம் அவனது செல்போன் அழைக்க அதை எடுத்தவன் காப்பகத்திலிருந்து அழைப்பு வரவும் ‘பேசுவதா... இல்லை வேண்டாமா... என்ன பண்றது...’ என மனதுக்குள் குழம்பியவன் அதை எடுத்து காதில் வைத்தான்.

அவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது. ‘தான் இப்போது இருக்கும் இந்த நிலையில் அந்த பெண்ணை பார்ப்பது சாத்தியமல்ல... கொஞ்சம் மைன்டை ரிலாக்ஸ் செய்ய வேண்டும்.. அதனால் காப்பகம் சென்று தன்னை நிலைப்படுத்தி கொண்டு வரலாம்’ என எண்ணியவன் மருத்துவரை அழைத்து...

“அங்கிள்... ஐயம் ரியல்லி சாரி... என்னால இப்போ அந்த பொண்ண பார்க்க முடியுமான்னு தெரியல... நான் கொஞ்சம் வெளியில போய்ட்டு வாறேன்... நீங்க கொஞ்சம் நல்ல பார்த்துகோங்க... அங்கிள் நான் வேணா போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணட்டுமா... இந்த பொண்ணுக்கு தெரிஞ்சவங்க யாரவது வாறதுக்கு சான்ஸ் இருக்கு” என்க..

“அது சரி தான்... நீ எதுக்கும் ஒரு கம்பளைன்ட் பண்ணிட்டே போ...”

‘சரி’ என தலை அசைத்தவன் அவசரமாக கமிஷ்னருக்கு அழைத்து விபரத்தை கூற அவரோ தானே அனைத்தையும் பார்த்து கொள்வதாக கூறவும் அவருக்கு நன்றி உரைத்தவன் தன் காப்பகம் நோக்கி சென்றான்.

அந்த சிறுவர் காப்பகத்திலுள்ள அணைத்து சிறுவர்களும் இவனது வரவுக்காய் ஆவலுடன் வாயில் காத்திருந்தவர்கள் அவனது கார் உள்ளே நுழையவும் துள்ளி குதித்து கொண்டு அவனிடம் ஓடினர்..
 
Status
Not open for further replies.
Top