All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணிஶ்ரீயின் 'காதலன்' - கதை திரி

Status
Not open for further replies.

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 29:


அவள் உடல் ஒருமுறை அதிரவே அவளை இறுக்கி தன்னோடு புதைத்து கொண்டான் விஷ்வா.தான் அவளுக்கு செய்த மடத்தனத்தை எண்ணி தன்னை தானே நொந்து கொண்டவன் “ குட்டிமா” என்று அவன் ஆரம்பிக்கும் முன்னே

அகலி “ மாமா கல்யாணம் வேண்டாம் கொன்னுடுவாங்க மாமா உன்னை,என கருவிழிகள் அங்கும் இங்கு அலைய உதடு துடிக்க அவன் அணைப்பிலையே அவள் உளற அவளை இன்னும் இறுக்கிக்கொண்டான்.
அவள் மயங்கி விழாததும் அவன் அணைப்பிலிடுத்து விலகாமல் ,திமிராமல் இருப்பதே அவனுக்கு அவளின் சிறு முன்னேற்றத்தை உணர்த்தியது..

மேலும் அகலி “ ஏன் மாமா அன்னைக்கு என்னை விட்டுட்டு போன அன்னைக்கு... அன்னைக்கு....நீயும் இல்லை கருவாயனும் இல்லை நான் எவளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா” . என்றாள்

இந்த விஷயத்தை பற்றி யோசிக்கும் போதே சுயம் தொலைப்பவள், மயங்கி விழுபவள் இன்று அதை விளக்க முயற்சிப்பது அவளுக்கே ஆச்சரியம்தான்.

சந்தோஷை கூட கதறி அழ, பயந்து ஒதுங்கி கொள்ள ஒரு பற்றுக்கோலாக தானே மனம் தேடியது... ஆனால் இப்பொழுது அதை கடக்க விரும்புகிறதே அதை குறைக்க விரும்புகிறதே ஏன்.

எப்பொழுதும் சுழற்றி அடித்து தூக்கி எறியும் சூறாவளியாய் பயத்தை கொடுக்கும் அந்த சம்பவம் இன்று கொஞ்சம் வேகமாக அடிக்கும் காற்றை போல பயத்தை குறைகிறதே எப்படி..

என தன் குட்டி மூளையை குடைந்து வெகு நேரம் யோசித்தவள் தலையை நிமிர்த்தி பார்த்தாள் அங்கே அவளின் மாமனின் இறுகிய அணைப்பும் அவன் கண்களிலிந்து வரும் கண்ணீரும் பதிலாகி போனது அவளின் ஒட்டு மொத்த கேள்விக்கும்.

இப்பொழுது தான் தன்னை எப்பொழுதும் துரத்தும் தன் மாமன் தன்னை மறுபடி பார்த்தலிருந்து தன்னை பொத்தி வைத்துக்கொள்வது தனக்காக கண்ணீர் விடுவது என அனைத்தையும் உணர்ந்தாள் அதுவே அவளை இன்னும் கொஞ்சம் சகஜமாக்கியது.இதற்காக அவள் செய்த சாகசங்களும் குரங்கு சேட்டைகளும் ஒன்றா ரெண்டா

இது போதுமே அவளுக்கு இனி அவனுடன் உரசிக்கொண்டே அவள் காலத்தை அந்த கசப்பை கடந்துவிடுவாளே இத்தனை நாள் பயத்தில் அவன் நெருக்கத்தை அனுபவித்த மனம் இன்றே அவள் மூளைக்கு செய்தி அனுப்பி அவளை சந்தோஷப்படுத்தியது.

அதுதானே காதலின் மகத்துவம் தான் பிறந்தது முதல் தன்னுடன் இருப்பவர்கள் தன்னை பொத்தி பொத்தி வளர்த்தவர்கள் என யாரையும் விட ஏன் தன்னையும் ,தன் உயிரையும் விட அதிகமாக நேசிக்கும் வேர்விட்டு விருட்சம் ஆக்கும் ஆலமரம் அல்லவா.

அதீத அன்பு,ஆழ் கடலின் அமைதி,மொட்டை மாடி முழு நிலவு..,ஜன்னல் ஓர மழைச்சாரல் , பனிக்கால கம்பளி போர்வை,இளையராஜா இசை,மல்லிப்பூ வாசம்,மயில் தோகை ஸ்பரிசம் என் எந்த அதி அற்புதமான வருணனைகளாலும் அடக்க முடியாத அந்த பொல்லாத ஹார்மோன் செய்யும் புரட்சிகரமான சூழ்ச்சி அல்லவா காதல்.

அது உயிர் கொடுக்கும் ,உயிர் வாங்கும்,உயிர் கேட்கும்,காயப்படுத்தும்,காயத்திற்கு மருந்தாகும்,கலவரப்படுத்தும்,கவிதை படைக்கும்,பைத்தியமாக்கும், இதம் தரும், இதயம் அறுக்கும்,என முரண்பாடுகளின் முழு உருவம் அல்லவா காதல்.எல்லாவற்றையும் நிகழ்த்தும் அற்புதம் அன்றோ..



(அப்பறம் அடிக்கும் கடிக்கும் கிள்ளி வைக்கும் இதை எல்லாம் விட்டுட ஆள பாரு எப்ப பாரு புரியாத மாதிரி பேசிகிட்டு)

அது கொடுத்த தைரியம் அகலியும் வாயை திறந்து அன்று நடந்ததை கூற சொல்லியது. “மாமா நான் அன்னைக்கு” என்று ஆரம்பித்திகவளின் வாயின் கையை வைத்து மறுப்பாக தலையை அசைத்தவன் தன் அணைப்பிலிருந்து அவளை விலக்கி நடத்தி வந்து கட்டிலில் அமர வைத்தான்.

அவளின் காலடியில் அமர்ந்து அவளின் இரு கைகளையும் எடுத்து தன் கன்னகளில் அழுத்தி புதைத்து கொண்டவன் “ நீ எதும் சொல்ல வேண்டாம் குட்டிமா” என்ற கனத்த குரலில் கூறினான் .

அவளின் வலி நிரம்பிய குரலில் அவள் பட்ட துன்பங்களை கூறுவதை அவனால் கேட்கவும் முடியுமோ.விஷ்வா இதுவரை அடைந்த வெற்றிகள் எல்லாவற்றையும் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுமே அந்த துயரம் அப்பிய குரல்.தான அவளை கடலளவு நேசித்து அவளை துன்பத்தில் தள்ளியது என அவனை குற்ற உணர்ச்சியில் குறுகுருக்க செய்யுமே அந்த பேதை குரல்... அதனால் தடுத்துவிட்டான்.

அவனுக்குதான் தெரியுமே அந்த நாட்களில் அவனின் மல்லிப்பூ பட்ட துயரங்கள்..

அதுவும் செய்ய சொல்லியவள் வாயாலேயே உணர்ச்சி துடைத்து குரலில் கேட்கும் போதே கை முஷ்டி இறுக ரத்தம் உயர் நிலையில் கொதிக்க கோபத்தை அடக்கியதால் அவன் மூக்கிலிருந்தும் நாக்கை கடித்ததால் வாயிலிருந்து கூட இரத்தம் கூட வந்தது.

அந்த கோபத்தில் ரீனாவை ஒரு அடி ஒரே அடி அவன் அடித்தாலே அந்த இடத்திலையே உயிர் விட்டிருப்பாள்.

ஆனால் செத்த பாம்பை எத்தனை முறை சாவடிப்பது. மரணம் என்பதுவே சிறு வலி என்பது போல கடவுள் அவனின் மல்லிப்பூ க்கு செய்ததற்கு பலி தீர்த்து விட்டார் ரீனாவை .

அவனின் முடி நிறைந்த கன்னத்தில் அழுந்தி முத்தம் கொடுத்தவள் மீண்டும் அவன் கன்னங்களில் கை வைத்துக்கொண்டு அவனையும் அவன் செய்கையையும் ஆர்வமாக பார்த்தாள்.
இது எல்லாம் அவள் மாமனிடமிருந்து புதிது அல்லவா அவளுக்கு..

லேசான சிரிப்புடன் அவள் உள்ளங்கையில் ஒரு முத்தம் வைத்தவன் “ கண்ணை மூடு அம்மு” என்றான்

“ம்ம்ம்” என்றவள் கண்களை மூடினாள்.

“ குட்டி இதுவரைக்கும் நம்ம வாழ்க்கையில என்ன நடந்து இருந்தாலும் அதை பற்றி இனி நாம எப்போதும் பேச வேண்டாம் ,உன் வாழ்க்கையில் நடந்த எல்லா கெட்டதுக்கும் நாம் ஒரு முக்கியமான காரணம் ஆகிவிட்டேன்,

“அப்படில்லாம் இல்லை “என்று சொல்ல வந்தவளின் வாயை மூடியவன் “ மூச் நான் பேசி முடிக்கிற வரை நீ எதும் பேச கூடாது இல்லை உங்க அத்தம்மாட்ட சொன்ன டீல்லாம் காத்துல விட்டுட்டு பேட்டச் தான்” என்றான் நமட்டு சிரிப்புடன்.

( பாவி குழந்தைய எப்படி மிரட்டுறான் பாருங்க.. கட்டுன பொண்டாட்டிய பேட் டச் பண்ணலனாதான் டா தப்பு)

அவள் எங்கே இனி பேச போகிறாள் அமைதியாகிவிட்டாள்.

விஷ்வா “ நீயாவது அள்ள அள்ள குறையாத உன் நினைவுகளை எனக்கு துணையா கொடுத்துட்டு போனாய் ஆனால் நான்...நான் உனக்கு...என்றவனின் கண்களிலிருந்து வந்த கண்ணீர் அவள் கைகளை நனைந்தது....”ஆனால் வேணுன்னு பண்ணலடா...

,என்னைக்கு உன்னை நான் முதல் முதலாக பார்த்தேனோ அன்னையிலிருந்து நீ தான் டா என் உயிர்மூச்சு நீ எதுமே செய்யாமலே மாமா உன்னிடம் டோட்டல் சரண்டர் அதுக்கு அப்பறம் நீ பண்ணுனது எல்லாம் உன்மேலான உள்ள காதலை அதிகரிக்க தான் செய்தது....உன் ஒவ்வொரு தீண்டலும் என்னை பற்றி எரிய வச்சதுன்னு சொன்ன நீ நம்ப மாட்ட....என் வாய் மட்டும் தான் நீ சொல்றத தடுக்கும் மத்த படி என் எல்லாமே உன்னை.. உன் சேட்டைய ரசிக்கும் நேசிக்கும்...பூஜிக்கும் ஆராதிக்கும்..

“இப்ப. இப்ப கூட. உன் கை குள்ள என் உலகம் அழியுதுன்னு சொன்ன நான் சந்தோசமா அழிந்து போவேன்” என்று கூறும் போது தன் கன்னத்தை பிடித்திருந்த கைகளில் தன் கைகளால் அழுத்தி பிடித்து கொண்டான்.

மேலும் இது வரை நடந்தது அவன் விலகிய காரணம் என அனைத்தும் கூறியவன் மறந்தும் அவளிடம் அன்று நடந்தவற்றை கேட்கவோ அவளை சொல்லவோ விடவில்லை.கண்களை திறக்கவும் அனுமதிக்கவில்லை...

அவள் புருவங்களை லேசாக வருடியபடி“ குட்டிமா உன் அழ் மனசுக்கிட்ட சொல்லு என் மாமா இருக்கும் போது யாரும் என்னை ஒன்னும் பண்ண முடியாது நீ என்ன சொன்னாலும் நீ எந்த விஷயத்தை என்னிடம் திரும்ப திரும்ப நியாபக படுத்துனாலும் மாமாவை என்னிடமிருந்து பிரிக்க முடியாது.. நீ கூறும் அனைத்தும் என் வாழ்வில் நடந்த ஒரு நிழல்படம் அது எப்பொழுதும் என்னையும் என் எதிர்காலத்தையும் எந்த விதத்திலும் பாதிக்காது அப்படின்னு சொல்லுடா” என்றான்

அவளும் அவன் சொல்வதை அந்த ஏகாந்த அமைதியில் அவளின் மனதிடம் பதியும் படி திரும்ப திரும்ப கூறினாள்.

ஏற்கனவே ஒரு வித தெளிவில் இருந்தவள் இன்னும் அவன் செயலில் தெளிவானாள்.

ஆமாம் உண்மைதானே ஆழ் மனம் நம்பும் விசயங்கள் தானே நம் வாழ்வை நெறிப்படுத்துகிறது அது காதாலகட்டும் ஒருவர் மீதான சந்தேகம் ஆகட்டும் அதே தானே தீர்மானிக்கும்

அதனால் தான் மனோதத்துவ மருத்தவர்கள் ஆழ் மனம் சென்று ஹிப்நோட்டிசம் செய்வதும்..ஆழ்மனதை நேர்மறையான சிந்தனைகளால் நிரப்புங்கள் என்று கூறுவார்கள் போல....

“ குட்டிமா இப்ப சொல்லு நம்ப கருவாயனுக்கும் ஜனனிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாமா “ என்றான்.

இப்பொழுதும் அவள் கைகளில் சிறு நடுக்கம் மிக சிறிய அளவில் ஒரு நடுக்கம் .

அவன் கன்னத்திலிருந்து இறங்கிய கை அவனின் சட்டை காலரை இறுக்க பிடித்துக்கொண்டு “ ம்ம்ம் நீங்க என் கூடவே இருக்கணும் அப்பதான்” என்றாள் கண்களை திறவாமலே...

அவன் பார்த்த முதல் நாளே உன்னை நேசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்பதே அவளுக்கு எல்லாவற்றையும் மறக்க செய்துவிட்டு..இது போதுமே அவளுக்கு எல்லாம் இயல்பு நிலைக்கு வர .

விஷ்வா “ என் வாலு குண்டானோட நான் இருக்காம வேற யாரு இருப்பா,உன் இம்சை எல்லாம் தாங்கதான் எனக்கு ஒரு வருஷம் ட்ரைனிங் கொடுத்தியே” என்று கூறும்போது அகலியின் இதழுக்கு அடியில் ஒரு குறுஞ்சிரிப்பு...

அவள் கைகளை எடுத்து அவளின் மார்பிற்கு நேராக இரு கைகளையும் ஒன்றாக்கி வாங்குவது போல உள்ளங்கையை விரித்து வைத்தவன்

( இந்தா டா அந்த புள்ளை இன்னும் எவளோ நேரம் கண்ணை மூடிக்கிட்டு இருக்கும் சொல்ல வந்தத சொல்லி தொலை நீயும் இந்த ரைட்டர் மாறி புள்ளி சதுரம் வட்டம் செவ்வகம்ன்ட்டு...)

குட்டிமா நீ முன்னெல்லாம் அடிக்கடி கேட்பல்ல “wil u marry me”, என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றனு, அதுக்கு இப்ப பதில் சொல்லவா “ என்றவனின் கை அவளின் கழுத்திற்கு சென்று இருந்தது.


(அட.. ஆத்தி.. அதையா சொல்ல போறா...)

கழுத்தில் எதோ குருகுருக்க அதை ஒதுக்கிய படி விஷ்வாவின் கேள்விக்கு அகலியின் தலை சம்மதமாக ஆடியது.

அவளின் ஜெயினை வெளியே எடுத்து அதில் இதயவடிவில் உள்ள லாக்கெட்டை மட்டும் தனியாக எடுத்துவிட்டு தாலி தாங்கிய அந்த ஜெயினை அவளின் உள்ளங்கையில் வைத்தான்.

“ நீ அகலிகை விஷவேந்திரன் ஆகி ஒரு வாரம் 21 மணி நேரம் ஆகிடிச்சி உன் மாமன்,அவனை சுத்தி உள்ளவங்க, உன்னை சுத்தி உள்ளவங்க யாருக்கும் எதும் ஆகலை இதுதான் இதை மட்டும் உன் மனசுக்கிட்ட 1000 தட சொல்லிடு... இப்ப கண்ணை திற டா” என்றான்.
“மிஸ்ஸஸ் அகலிகை என்று சொல்லும் போதே கண்களில் தாரை தாரையாக கண்ணீர். இப்பொழுது கண்களை திறந்தவளின் எதிரில் மங்கலான அவளின் மாமாவின் உருவம் அப்படியே கண்களை இறக்கி அவள் உள்ளங்கையை பார்த்தாள் தாலியுடன் அவள் கழுத்து செயின் இப்பொழுது அவளின் பயம் எல்லாம் காணாமல் போனது தன் எத்தனை வருட தவ வாழ்க்கை ,இப்படி ஒரு சம்பவம் நடக்கவே கூடாது என்று விரும்பியவளை முழு விருப்பத்தோடு ஏற்று கொள்ள வைத்துவிட்டான் தன் தலைவன்.தாலியை நெஞ்சோடு அழுத்திக்கொண்டவள் இப்பொழுது ஒரே அழுகை இது பயத்தால் அல்ல ஆனந்தத்தால் .

ரீனாவோ இல்லை சுந்தரியின் இடையூரோ இல்லாமல் இருந்திருந்தால் அகலி விஷ்வாவின் காதல் எல்லாவற்றையும் போல சாதரணமான காதலாகியிருக்கும் ஆனால் இப்பொழுது துன்பம் துயரம் கஷ்டம் எல்லாம் நிரம்பிய கல்வெட்டில் பதிய கூடிய சரித்திர காதல் ஆனது.

ஊழ்வினை, தந்திரம் ,மாங்கொடுஞ்செயல் அதர்மங்கள் இவை யாவுமேதான் பல மறக்க முடியாத சரித்திரங்களையும் புராணங்களையும் தந்திருக்கிறது.அது போல தான் இதுவும்

( இது என்னப்பா இந்த பொண்ணு எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லிடுது..போய் தொல கொஞ்சம் ஏத்துகிற மாறி இருக்குறதால மன்னிச்சி விட்டோம்)

வெகு நேரம் அழுதவள் தன் காலுக்கு அடியில் முட்டி போட்டு தன்னையே பார்க்கும் தன் மாமனை தாவி அணைக்க அவன் பேலன்ஸ் இல்லாமல் பின் சாய அகலியும் அவன் மேலேயே சாய இச்சு இச்சு என்று அவன் முகம் முழுக்க முத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டாள்.

விஷ்வாவோ சுகமாய் அவள் முத்தங்களை தாங்கி கொண்டான்.
அப்படியே அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்.ஒரு 5 நிமிடம் அப்படியே கடக்க தலையை லேசாக தூக்கி பார்க்க அவனின் மல்லிப்பூ அவன் மார்பிலேயே தூங்கிவிட்டாள்.

“வாலு “ என கொஞ்சியவன் அவளை தூக்க முயற்சிக்க அவளின் ஒரு கை அவளின் தாலியையும் இன்னொரு கை அவனின் இறுக்கி பிடித்து இருந்தாள் அதுவே அவள் அவை இரண்டிற்கும் பட்ட துன்பத்தை அவனுக்கு காட்டியது.இனி எப்பொழுதும் அவளை கலங்க வைக்க கூடாது என்று உறுதி எடுத்து கொண்டான்

அவளை மெதுவாக தூக்கி கட்டிலில் படுக்க வைத்தவன் அவளை அணைத்த படி தூங்கி போனான்.

இருவருக்கும் வெகுவருடம் கழித்து நிம்மதியான நித்திரை.

காலை 6 மணிக்கு விஷ்வாவின் அலாரம் அடிக்க அதை அணைத்து வைத்த படி எழுந்தவன் தன் மனையாளுக்கு நெத்தியில் முத்தம் கொடுத்துவிட்டு குளிக்க போனான்.

குளித்து திரும்பி வரும் வரை அவள் எழுந்த பாடாக இல்லை .அவளை எழுப்பி குளிக்க அனுப்பிட்டு வெளியில் வர அங்கே ஹாலில் சந்தோஷ், கண்ணன், முருகன், ராஜா என அனைவரும் அமர்ந்து இருக்க ரீனா மட்டும் எப்பொழுதும் போல வெறித்த பார்வையோடும் உணர்ச்சி துடைத்த முகத்தோடும் வாசலில் அமர்ந்து இருந்தாள்.

ஜனனியும்,சுந்தரியும் சமையல் அறையில் இருந்தனர்.எல்லோரையும் ஹாலுக்கு அழைத்தவன் தன் மனைவியை உரக்க அழைத்தான் “ குட்டிமா குட்டிமா இங்க வா” எங்க

“ம்ம்ம் இதோ வரேன் மாமா” என்றவள் விஷ்வாவின் அருகே வர அவளின் தோள் மேல் கை போட்டு தன்னோடு அணைத்து “ பூக்குட்டி நான் சந்தோஷுக்கும் ஜனனிக்கும் கல்யாணம் பண்ணி வைக்காலம்ன்னு இருக்கேன் , நீ என்ன நினைக்குற” என்க

( ஸ்ஸ்ஸ்ஸ் எத்துனை பேரு மல்லிப்பூ வோட சார்ட் நேமா...முடியல)

எல்லோரும் மனதில் கலவரத்துடன் அகலியை பார்க்க சந்தோஷிர்க்கோ வெளிப்படியாக கைகள் நடுங்க கண்களில் கண்ணீர் வந்தது.

விஷ்வா ஏன் இப்படி கேட்குறான்னு அகலியோட குட்டி மூளைக்கு புரிந்ததோ என்னவோ அவளும் “புருஷன் எவ்வழியோ பொண்டாட்டயும் அவ்வழியே , உங்களுக்கு எது சரிபடுதோ அதே பண்ணுங்க மாமா எங்க கருவாயனும் கொஞ்சம் கொஞ்சமே கொஞ்சம் நல்லவன் தான்” என்று கூறி எல்லோர் வயிற்றிலையும் லிட்டர் கணக்கில் பால் வார்த்தாள் அகலி

வருவாள்

மிளாணி..
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#காதலன்
ஹாய் டியர்ஸ்
காதலன் அடுத்த அத்தியாயம் போஸ்ட் பண்ணிட்டேன் படிச்சு பார்த்துட்டு கமெண்ட்ஸ் ஒரு choo சொல்லுங்க ..
 

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
#காதலன்அறிவிப்பு...
என்ன சொல்லி என்ன எழுதுறது எனக்கு தெரியல எங்க வீட்டோட ஆலமரம் சாய்ந்தது.?

அப்பா இறந்துட்டாங்க லாஸ்ட் jan 8 எதிர்பாராத இறப்பு...நல்ல ஆரோக்கியமா இருந்தவங்க முதல் நாள் வரை என்கூட போன் ல பேசிட்டு இருந்தவங்க மறு நாள். இல்லை.?

எங்க உலகம் 8 ம் தேதியோட நின்னது போல இருக்கு...Sep ல சின்ன பெரியப்பா,அக்டோபர்ல பெரிய பெரியப்பா அப்பறம் காஜா புயல் அப்பறம் என் அப்பானு தொடர்ந்து மோசமான விஷயங்கள் எங்கள் வாழ்க்கையில் நடந்துட்டு.. பெரியப்பா 2 பேரும் கூட எதிர்பாராத இறப்புதான்...

காதலன் கதை எழுதுறத மன நிலைமை எனக்கு இப்ப இருக்கா இல்லையா தெரியல

ஆன காரணத்தை சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு...கூடிய சீக்கிரம் திரும்ப நான் எழுதணும்னு நானே விரும்புறேன்...

ஆலமரம் சாய்ந்தது...
சுழற்றி வீசிய புயலால் அல்ல..
மிதமாக வீசிய தென்றல் காற்றில்....

கப்பல் கவிழ்ந்தது....
ராட்சச சுனாமியால் அல்ல...
தொட்டு விழுந்த மழைத்துளியால்...

மிளாணி
 
Status
Not open for further replies.
Top