All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கதை திரி

Status
Not open for further replies.

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் நட்புகளே :)

எல்லாரும் எப்படி இருக்கிங்க... பெரிய இடைவெளி... இன்னும் என்னோட தனிப்பட்ட வேலைகள் முடியல. ஆனால் நட்புகள் தொடர்ந்து கேட்டுக்கிட்டதால நான் மறுபடியும் முதல் அத்தியாத்திலிருந்து பதிவிடப் போறேன். கதைய முடிச்சிட்டியான்னு கேட்டா! இல்லை இன்னும் முடியல ... எங்க விட்டேனோ அங்கயே தான் இருக்கு. இனிமே தான் எழுதனும். வாரத்துக்கு ரெண்டு எப்பி பிளான் பண்ணியிருக்கேன். ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் அப்டேட்ஸ் வரும்.

இவ்வளவு நாள் பொறுமையா காத்திருந்தமைக்கு என்னோட மனமார்ந்த நன்றிகள் பல... நிறைய பேர் கமெண்ட் பண்ணியிருந்திங்க. ரொம்ப சந்தோசம்.. எனக்கு சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

உங்க மனசுல நீங்கா இடம் பிடிச்ச் ஷிவ் & புகழ் வரப் போறாங்க.. நாளையிலிருந்து!!! காத்திருங்கள் :)
 

Attachments

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே :smiley6:

'என் கருப்பழகி'- 1 அத்தியாயம் இதோ...

புதிதாகப் படிப்பவர்களுக்கும், பழைய வாசகர்களுக்கும் உதவுமென்று பேமிலி டிரீ அட்டாச் பண்ணியிருக்கேன். :)
 

Attachments

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் – 1


“ஏ புள்ள கருப்பாயி

உள்ள வந்து படு தாயி

ஆடி மாசம் கொல்லுதடி

அம்மிக் கல்லும் ஆடுதடி”


எங்கோ ஒலித்தது அந்தச் சோக கீதம். ஊரே ஓய்ந்து உறங்கும் வேளையில், ஒருத்தி மட்டும் ஓய்வின்றி விழித்துக் கிடந்தாள், பாண்டிவனத்தில் கீழ்த் தளத்திலுள்ள 1x1 ஜன்னல் பொருத்தப்பட்ட அறையில், சடப் பொருட்களோடுப் பொருளாக.. உயிருள்ள பொருளாக! நள்ளிரவிலும் அந்த அறையின் புழுக்கத்தில் அவளுக்கு இடப்பட்டக் கட்டளையை செய்து கொண்டிருந்தாள். ஓட்டை மின்விசிறி “க்க்க்க்ர்ர்ர்ர் க்க்க்ர்ர்ர்ர் க்க்ர்ர்ர்ர்ர்ர்” எனச் சத்தமிட்டு தனது ஓட்டத்தை சிரமப்பட்டுத் தொடர்ந்தது.


தேனி மாவட்டத்தில் “குழந்தை மாநகரமாம்” பெரியகுளம் தாலுகாவிலுள்ள தாமரைக்குளம் என்கிற கிராமத்தில் அமைந்திருக்கிறது "பாண்டிவனம்" எனும் வெள்ளை மாளிகை. தாமரைக்குளத்துப் பெரிய வீடு என்றால் சிறு குழந்தை கூட அடையாளம் காட்டிவிடும் பாண்டிவனத்தை. அந்த வெள்ளை மாளிகையின் ஏகபோக உரிமையாளர்கள் தான் சற்குணபாண்டியன் சுந்தரவல்லி அம்மையார் தம்பதியினர். பாரம்பரியமான குடும்ப பின்னணியும் கங்குக் கரைகாணா சொத்துக்களையும் உடையவர்கள். வயல்வரப்பு, தென்னந்தோப்பு, அரிசி மில், சர்க்கரை ஆலை, இரும்பு ஆலை, டெக்ஸ்டைல் மில், சூப்பர்மார்கெட், திரையரங்கம், கல்யாணமண்டபம் என்று இல்லாத சொத்துக்கள் இல்லை! செய்யாத தொழில்கள் இல்லை! சொத்து சுகம் மட்டுமல்ல பழமைத்தனமும், மூடநம்பிக்கையும், ஆடம்பரமும், அகங்காரமும் அவர்களுடன் பிறந்தவை, அவர்களுக்குப் பிறந்த செல்வங்களும் அவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்லர்.


சற்குணபாண்டியன் சுந்தரவல்லி தம்பதியினருக்கு நான்கு பிள்ளை மக்கள். மூத்தவர் சுந்தரபாண்டியன் அவரது மனைவி நிலவழகி(நம் கதையின் நாயகி கருப்பழகயின் பெற்றோர்கள்). அடுத்தவர் செந்தூரபாண்டியன் அவரது மனைவி அங்கயற்கண்ணி. அடுத்து மகள் செண்பகம் அவருடைய கணவர் ராஜவேலு. வீட்டின் கடைசி பிள்ளை சௌந்தரம் அவருடைய கணவர் வீரவேல். இவர்கள் யாவரும் முறையாய் தன்னுடைய முறைப் பெண்ணையும் மாப்பிளையையும் மணந்து கொண்டனர். சொத்தும் சொந்தமும் விட்டுப்போகாமல் இருக்க!!! (ம்கூம், பெரியயய்ய குடும்பம்ம்ம்ம் இப்பவே கண்ணக் கட்டுதா, கொஞ்சம் பொறுத்துக்குங்க!)


சுந்தரபாண்டியன் நிலவழகி தம்பதிகளுக்கு ஐந்து செல்வங்கள். இதில் நான்காவது செல்வம் கேட்பாரின்றி நாதியற்றுக் கிடக்கிறது. மூத்த மகன் முத்துபாண்டியன் மருமகள் இளையராணி. முத்துப்பாண்டியன் பல நூறு ஏக்கர் நிலங்களை விவசாயம் செய்து வருகிறான். இவனுடைய தாய் மாமன் மகளை மணந்து கொண்டான். இளைய மகன் தங்கபாண்டியன் இவனுடைய மூத்த அத்தை மகள் சௌந்தர்யாவை அவனுக்கு நிச்சயித்திருக்கின்றனர். இவன் அரிசி மில், சர்க்கரை ஆலை முதலியவற்றை நிர்வகிக்கிறான். அடுத்து மகள் லீலாவதி, தன் மூத்த அத்தை செண்பகத்தின் மகன் சத்யவேலை மணந்தாள். சத்தியவேலு சொந்தமாக பொறியியல் கல்லூரி வைத்திருக்கிறான் நான்காவது பிள்ளை, எடுப்பார் கைப்பிள்ளை. கடைக்குட்டி பிரபாவதி, இவர்களின் செல்ல மகள் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டு இருக்கிறாள்.


செந்தூரபாண்டியன் அங்கயற்கண்ணி தம்பதியருக்கு மூன்று செல்வங்கள். மூத்தவன் சந்தணபாண்டியன் அவன் மாமன் மகள் தேன்மொழியை தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான். சூப்பர்மார்கெட்டும், திரையரங்கும் இவன் கண்பார்வையில் இருக்கின்றன. இரண்டாவது மகன் வீரபாண்டியன் இவன் ஹோட்டல்களையும், காம்ப்லேஸ்களையும் கவனித்துக் கொள்கிறான். இவனுக்கும் கடைசி அத்தை சௌந்தரத்தின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் வரும் மாதம் நிச்சயம் தாம்பூலம் மாற்றவுள்ளனர். ரதிமீனா இவர்குளுடைய அழகு மகள், பேஷன் டிசைனிங் கடைசி வருடம் படித்துக்கொண்டு இருக்கிறாள்.


செண்பகமும் அவரது தங்கை சௌந்தரமும் முறையேத் தன் தாய் மாமன் மகன்களான ராஜவேலுவையும், வீரவேலைவியும் மணந்து, தம்பதியருக்கு இரண்டு பிள்ளை செல்வங்களென பெற்றுப் பேணி வளர்க்கின்றனர். செண்பகம் ராஜவேலுவின் மகன் சத்யவேலு, மகள் சௌந்தர்யா கணிதத்தில் முதுகலைப்பட்டம் படிக்கின்றாள். சௌந்தரம் வீரவேலுவின் மகன் ரத்னவேலு பெட்ரோல் பங்க் உரிமையாளன். மாமன் மகள் பிரபாவதியின் மேல் கட்டுக்கடங்காத காதல். இவர்கள் திருமண பேச்சுக்கு இன்னும் பிள்ளையார் சுழிப் போடவில்லை. ஐஸ்வர்யா இவர்கள் வீட்டின் செல்வ சீமாட்டி, பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கின்றாள்.


இப்படிப் பட்ட வளமான, பலமானக் குடும்ப பின்னணியைக் கொண்ட அவள், ஆறாம் ஆம் வகுப்பைக் கூடத் தாண்டவில்லை! ஏன்?


இருபத்திமூன்று வருடங்களுக்கு முன் சற்குணபாண்டியரின் குடும்பம் அரசர்களைப் போல் வாழ்ந்து வந்தனர். சட்டம் அவர்கள் முன் மண்டியிட்டது, ஊரும் உறவும் அவர்கள் உயரத்தை அண்ணாந்து பார்த்துப் பயந்து விலகி மரியாதை செய்தது. அசைக்கமுடியாத ஆளுமையுடன் வலம் வந்தனர் சற்குணபாண்டியரின் குடும்பத்தினர்.



“யானைக்கும் அடி சருக்கும்” என்றொரு பழமொழி உண்டு. சற்குணபாண்டியன் குடும்பத்தினர் தங்களுடைய விவசாயத்தில் முதல் சருக்கலை சந்தித்தனர். போதிய தண்ணீர் வசதி இல்லாதமையால் பயிர் சாகுபடி வெகுவாக குறைந்து நஷ்டம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக இயற்கை சீற்றத்தின் அகோரத் தாண்டவத்தால் பயிர்கள் நாசமாகின நஷ்டக் கணக்கு அதிகரித்தது.


“பட்டக் காலிலேப் படும்

கெட்டக் குடியேக் கெடும்”


என்கிற நம் முன்னோரின் வாக்குக்கு இணங்க, புதிதாய் முளைத்தப் போட்டியாளர்களின் புதுமையான யுக்திகளாலும், அணுகு முறைகளாலும் தொழில்களிலும் நிலைத்து நிற்க வெகுவாக சிரமப்பட்டனர். பற்றாக் குறைக்குப் போட்டியும் பொறாமையும் அவர்களின் சரிவுக்கு மேன்மேலும் வித்திட்டது. ‘நஷ்டம்’ என்கிற வார்த்தை அவர்களுக்குப் பிராதாரனம் ஆனது. அரசாண்ட மன்னர் பரம்பரைகள் எல்லாம் காலப் போக்கில் காற்றோடு காற்றாக கரைந்து காணாமல் போகும்பொழுது சற்குணபாண்டியரின் குடும்பம் எம்மத்திரம்!!!


“முப்பது வருடங்கள் வாழ்ந்தவனும் இல்லை

முப்பது வருடங்கள் வீழ்ந்தவனும் இல்லை”


வாழ்க்கையின் நியதியும் நிதர்சனமும் அவர்களுக்குப் புரியவில்லையோ அல்லது புரிந்துகொள்ள விரும்பமில்லையோ! புதிதாய் வயிற்றில் உதித்த உயிர், அவர்களின் ஆற்றாமைக்கும் இயலாமைக்கும் பலகிடா ஆனது. பாவம் ஓரிடம் பழி ஓரிடம்!



நிலவழகி அப்பொழுது நான்காவது முறையாகக் கருவுற்றிருந்தார் அதனால் வீடு கொஞ்சம் அசுவாசப்பட்டது. பின்னே அஷ்ட லஷ்மியேப் பிறந்துத் துயர் துடைப்பாள் என்று சற்குணபாண்டியரின் குடும்பம் முழுமையாக நம்பிற்று. ஆனால் விதியின் திருவிளையாட்டை என்னவென்று சொல்ல!


சற்குணபாண்டியர் சோசியத்தில் அபார நம்பிக்கை உடையவர். சரிவுக்கானக் காரணத்தை வினவியபோது, குடும்ப சோசியர் குமரசாமி “புதிதாய் உதித்த உயிர் ராசி இல்லாத பிறவி, உருவான கணம் சரியில்லை, தன் வீட்டைச் சூறையாட பார்க்கிறது” என்று பேரிடியை மெல்லாமல் விழுங்காமல் சற்குணபாண்டியரின் தலையில் இறக்கினார். சற்குணபாண்டியர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டார். விஷயம் வீட்டினருக்குச் சொல்லப்படவும், சிறு தயக்கமும் உறுத்தலுமின்றி கருக்கலைப்பு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. உயிர்ப் பலிக்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. பெரியகுளத்திலுள்ள பொற்றாமரைக் குளத்தில் வீற்றிருக்கும் பெரியக்காள் அம்மையார் அவர்களைப் பார்த்து அர்த்தப் புன்னகை சிந்தினார்.


"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை

நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை."


சற்குணபாண்டியர் குடும்பத்தின் சந்தோஷத்தையும், நிம்மதியையும் அந்தக் குட்டிச்சாத்தான்(குழந்தை) வாரிச் சுருட்டிக்கொண்டுவிட்டது என்று ஆத்திரப்பட்டனர். நிலவழகிக்கு நான்கு மாதம் கடந்துவிட்டது இனி ஒன்றும் செய்வதற்கில்லை என மருத்துவர் கை விரித்திவிட்டார். மீறிக் கருக்கலைப்பு செய்தால் தாயின் உயிர்ப்பலி நிச்சயம் என்ற பெருங்குண்டை வேறு தூக்கிப்போட்டார். நிலவழகியின் உயிரின் பொருட்டு அந்தச் சின்ன உயிர்க்கு அவள் வயிற்றில் வளர இடமளிக்கப்பட்டது.


இருட்டுச் சிறை! ஆம்! தாயின் கருவறையில் அந்த இருட்டுச் சிறையில் ஓய்வின்றி வாய்ச்சாப்புகளை தன்னுள் உள்வாங்கிக் கொண்டே வளர்ந்தது அந்த நல்முத்து. போதிய உணவில்லை, தாயின் அனுசரணையில்லை, தந்தையின் அரவணைப்பில்லை, குடும்பத்தினரின் அன்புமில்லை.. வேண்டாத பிள்ளை கருவறைச் சிறையிலிருந்து சிறகடித்து கல்லறைச் சிறையில் நிரந்தரமாக ஓய்வெடுக்க வேண்டும் என்பதே அதன் குடும்பத்தினரின் அவா என்பதை அறியாது வளர்ந்தது சின்னஞ்சிறு சிசு…


நிலவழகியின் மனது ஆறவில்லை "குடும்பத்தைக் குலைக்க வந்த கொடும்பேயே என் வயிற்றிலிருந்து நீ வெளியே வரும் நாள் தான் உனது கடைசி வாழ்நாள், அதுவரை வாழ்ந்துகொள்" என ஆக்ரோஷமாய் எக்காளமிட்டது.


நிலவழகிக்கு எட்டாம் மாதம் ஆரம்பமானது, வளர்பிறை போல் வயிறு வளர்ந்தது. நெஞ்சில் வஞ்சத்தையும் வயிற்றில் பிள்ளையையும் சுமந்தாள். “இந்தச் சனியன எப்போ என் வவுத்துலருந்து எறக்கி வைக்கப் போறேனோத் தெரியலையே. ஹம்ம்ம்ம்ம்ம் மேமூச்சிக் கீமூச்சி வாங்குது. ரவையிலே அக்காடனு செத்தக் கண் அசரமுடியுதா… நண்ட ஓட்டைப் பானைய்க்குள்ள விட்டக் கணக்கா வவுத்துக்குள்ள உருண்டுகிட்டேக் கிடக்கு.. சேய்ய்ய்ய்ய்ய்... இப்பயே இந்த கருமத்த இறக்கி வச்சா எம்புட்டு நல்லாருக்கும் ஹம்ம்ம்ம்ம்ம் இன்னும் ரெண்டு திங்க(ள்) இந்த தரித்திரத்த செமக்கனு(ம்)” என்று அனத்தினாள் நிலவழகி. முப்பது கோடி தேவர்களும் ஆசிர்வதித்தனரோ உன் எண்ணம் ஈடேறட்டும் என்று!!!


மதிய உணவுண்ண நிலவழகி படிக்கட்டுகளில் விரைவாக இறங்கி வந்தாள், எதிர்பாராத விதமாகப் படிகளில் கால் இடறி “ஆத்த்தாஆஆஆஅ” என்ற அலறலோடு படிகளில் பெரும் சப்தத்தோடு விழுந்து உருண்டாள். அடுக்களையின் வாசலில் வேலையாட்களை ஏவிக் கொண்டிருந்த சுந்தரவல்லி “ஆத்த்தாஆஆஆ” என்ற அலறலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினார், தன் மருமகளின் நிலைக் கண்டு “ஆத்த்தாஆஆஆஅ அழகிய்ய்ய்” எனப் பெருங்குரலெடுத்துக் கத்தியவர் தனது கனத்த சரீரத்தைத் தூக்கிக்கொண்டு சுந்தரவல்லி தன் மருமகளை நோக்கி வாயிலும் வயிற்றிலும் அடித்தவாறு ஓடினார். நிலவழகி பின்னந்தலையில் பலமாக அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்தாள். படிகளில் உருண்டுதால் உடலெல்லாம் சிராய்ந்து அலங்கோலமாய் தரையில் கிடந்தாள்.


சுந்தரவல்லியின் அலறலில் வீட்டிலுள்ள அனைவரும் அங்குக் கூடியவர்கள், நிலவழகியின் அனைவரும் ஒரு கணம் அதிர்ந்து நின்றுவிட்டனர். முதலில் சுதாரித்தது அங்கயற்கண்ணி தான் “ஏங்க மொத வண்டியக் கெளப்புங்க, அக்காள ஆசுபுத்திரிக்குத் தூக்கட்டுப் போவனும் வெரசாப் போங்க” என்றார். செந்தூரபாண்டியன் மனையாளின் சொல்லுக்குக் கிணங்க வாசலை நோக்கி ஓடினார். “ஏலே மருதா ஆசுபுத்திரி போவனும் வெரசா வண்டிய எட்ரா, டேய் சொக்கா மதனி வீட்ல தகவல் சொல்லிட்டு வா, ஒட்ரா ஓடு” எனக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்.



“ஆஆஆ அ அ அ அழகி அழகி என்னையப் பாருப் புள்ள” எனத் தன் மனையாளை அணைத்துக் கொண்டு அழுதார் சுந்தரபாண்டியன். ஆசை மனைவியின் ரத்த கோலம் கண்டு அவர் திகில் அடைந்திருந்தார். சற்குணபாண்டியன் தொலைப்பேசியில் மருத்துவமனைக்கு அழைத்து தகவல்களை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது மற்றுமொரு அணுகுண்டு அவர்களை நோக்கி வீசப்பட்டது.



வேலைக்காரி செங்கமலம் “அய்ய்யயோ எஞ்ஞாமி பெரியாத்தாஆஆஆ சின்னம்மாவுக்குப் பனிக் கொட(ம்) ஒடஞ்சு நீர் வெளியாவுதே” என்று தன்னையும் மீறிக் கத்திவிட்டாள்.


சற்குணபாண்டியன் தொலைப்பேசியைக் கீழே நழுவவிட்டு விட்டு, நாற்காலியில் தொப்பென்றுத் தொய்ந்து அமர்ந்தார். குடும்ப சோசியர் குமரசாமியின் குரல் அவர் காதுகளில் ரீங்காரமிட்டது. “பெரிய ஐயா ஊருக்கேப் படியளுக்குற கொலசாமி நீங்க, உங்களுக்கு இம்புட்டு சோதனய அந்த ஆத்தாக் குடுத்திருக்க கூடாது. உங்க உப்பத் திண்ணு வளந்தவென் நான், பொய் சொல்ல மனசில்ல. என்னைய மன்னிச்சிபுடுங்க சாமி, இம்புட்டு நாளா அந்த சீதேவி உங்க மாளிகையில வாசம் செஞ்சா ஆனா இ இ இப் இப்போ மூதேவி அடியெடுத்து வச்சிட்டா” என்றார் பயத்தை மென்று விழுங்கிக் கொண்டே.



“என்னடா சொன்ன” உறுமினார் சற்குணபாண்டியன். “ஐயா சாமி நான் சொல்றது சத்தியவாக்கு, சுந்தரபாண்டி ஐயா சம்சாரம் கருத் தரிச்ச நேரம் சரியில்ல ஐயா. உங்க தொழில் சரிவுக்குக் காரணமே இந்தச் சிசு தானுங்க. பொட்டப் புள்ளதே(ன்) பொற்க்கு(ம்), அது பொறந்தா உங்க வம்ச கவுரவத்தை, சொத்து சொகத்தை எல்லாத்தையும் அழிச்சிப்புடும் ஐயா, உயிர்ப்பலி வாங்கவும் தயங்காது இந்த சிசு” என்றார் குமரசாமி. குமரசாமியின் வாக்கு சற்குணபாண்டியனின் நடு மண்டையில் உளியைக் கொண்டு அடித்தார் போன்ற வலியை உணர வைத்தது. கவுரவம்! சொத்து! உயிர்ப்பலி!!! உயிர்ப்பலி!!! உயிர்ப்பலி!!! இவையாவும் அவர் மனதில் வட்டமிட்டன.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“பெரிய மாமா மொத அழுவறத நிப்பாட்டிட்டு, அக்காளத் தூக்குங்க காருக்கு” என்றாள் அங்கயற்கண்ணி. சுந்தரபாண்டியன் வேகமாக கண்களைத் துடைத்துக்கொண்டு தனது மனையாளை கைகளில் அள்ளிக் கொண்டு வேகமாக நடந்தார் கன்னங்களில் கண்ணீர் வழிய சிறுக் கேவலுடன் “ அ அ அழ்ழ ழ்ழ் கிஈஈ” வாசலை நோக்கி. வேலையாட்கள் கைகளும் மனதும் பிசைய வேடிக்கை பார்த்தனர்.


“ஐயோ நா(ன்) பெத்த தங்க மவளே” எனத் தலைவிரி கோலமாக கதறிக்கொண்டு ஓடோடி வந்தார் நிலவழகியின் தாயாரும், சற்குணபாண்டியனின் தங்கையுமான வடிவாம்பாள். அவரின் பின்னே அவரது கணவர் சிங்கவேலு மூச்சிறைக்க ஓடி வந்து “ஆத்தா அழகி, ஐயன் வந்துருக்கேன் ஆத்தா, மாப்புள ஏம்புள்ளைக்கி என்னாச்சு, கண்ணத் தெற என் ராசாத்தி” என்று கத்தினார். “மாமா பதறாதிய, மதனிய எங்க அம்புட்டுப் பேரு உசிரக் குடுத்தாவது காவந்து பண்ணிப்புடுவோ(ம்) மாமா தெடமா இருங்க ” என சமாதானப் படுத்தினார் செந்தூரபாண்டியன்.


“மதனி எம்மருமவ வவுத்துல வளர்ர மூதேவிதேன் எமனா வந்து அவள அள்ளிப் போட்டு முழுங்கப் பாக்குது” என்று தமையனின் மனைவி வடிவாம்பாளைக் கட்டிக்கொண்டு அழுதார் சுந்தரவல்லி. “ம் ம் ம்ம ம்ம்மதனி ம்ம்மதனி எ எ எம்மவ எஎ எம்எம்மவ” எனக் கேவினார் வடிவாம்பாள்.



ஊரே ஒன்று கூடிவிட்டது பாண்டிவனத்து மாளிகை வாசலிலே, தங்களுக்குள் கிசுகிசுத்தனர். கூட்டத்தில் ஒருத்தி “எண்டி மலரு, இந்தச் சிங்காரி நிலவழகி, அவளே தடுக்கி விழுந்தாளா இல்லே அந்த ராங்கி சுந்தரவல்லி உருட்டி விட்டாளா? ஆருக் கண்டா குடும்பத்துக்கு அவாதப் புள்ளெனு டாக்குட்டருக் கிட்டப் போயிக் கருவைக் கலைக்கப் பாத்தாய்ங்கே முடியலே, சரிதே(ன்) வித்து பலமானதுனுப் பாத்தா, அந்த சீமெ சித்திராங்கி அழகி படியிலே உருண்டுடோடி விழுந்துக் கிடக்காறா! புள்ளைப் பொழைக்கிறது அவ்வளவு சுலுவு இல்லைடி மலரு. கடைசியா சுந்தரவல்லி சொன்னத செஞ்சுப் புட்டாளே, புள்ளைய வவுத்துலயே சிதச்சிப்புட்டாளே… ஹம்ம்ம்ம் பாவ(ம்) அந்த அழகி அவளையு(ம்) சாச்சிப்புட்டா, அவக் குடும்ப(ம்) கவுரவத்தேயு(ம்), செல்வத்தக் காவந்துப் பண்ண.. ஹம்ம்ம்ம் நமெக்கெதக்கு அடுத்த வூட்டு சங்கதி, நாம வேடிக்கப் பாப்போ(ம்)டி ” எனத் நைச்சியமாக வம்புத் திரியைப் பற்ற வைத்தாள். “ஆமா மதனி ஆமா” என ஆமாம் சாமி போட்டாள் மற்றொத்தி.


நிலவழகி காரில் ஏற்றப்பட்டார். நிலவழகியின் தலை கணவனின் மடியிலும், கால்கள் அங்கயற்கண்ணியின் மடியிலும் வைக்கப்பட்டது. ஒரு வெள்ளைத் துணியை அவரது காயம்பட்ட இடத்தில் சுற்றி இறுக்கினர், ரத்தப் பெருக்கு நிற்கவில்லை. சுந்தரபாண்டியனின் வெள்ளைச் சட்டையும் வேட்டியும் முழுவதும் ரத்தக்கரையானது. காரின் முன்னிருக்கையில் செந்தூரபாண்டியன் அமரப்போகும் முன் “மாமா நாங்க முன்னெப் போறோம் நீங்க வெரசா எல்லாரையும் அழச்சிட்டு பின்னே வாங்க தேனிப் பெரிய ஆசுபுத்திரிக்கு. ஏலேய் மருதா எட்ரா வண்டிய” என்றுவிட்டு காரில் ஏறி அமர்ந்தான். வண்டி சீறிப் பாய்ந்தது.


வண்டியின் ஹாரன் ஒலியில் திடுக்கிட்டு எழுந்த சற்குணபாண்டியன், வாசலுக்கு விரைந்து வந்தார். கோயிலுக்குச் சென்ற ராசவேலு செண்பகம் மற்றும் வீரவேலு சௌந்தரம் தம்பதியினர் செய்திக் கேட்டு தனது பிள்ளை குட்டிகளுடன் காரில் வந்திறிங்கி விட்டனர். “ஐய்ய்யா தங்கச்சிக்கு என்னய்யா” மனம் படபடக்க கேட்டனர் ராசவேலுவும் வீரவேலுவும்.



“பச்சைக் கிளி ய வளத்தோ(ம்)

பறக்கையிலே தப்பவிட்டோ(ம்)”

என ஒப்பாரி வைத்தார் சுந்தரவல்லி. “வல்லிஈஈஈ” ஒரு அதட்டல் போட்டார் சற்குணபாண்டியன், அண்டச் சராசரத்தையும் அடக்கி ஆளும் குரல். அந்த சிம்மக் குரலுக்கு அடிபணியாதவர் உண்டோ! அனைவரும் கட்டுப்பட்டு அசைவற்று நின்றனர் ஒரு சில வினாடிகள்! மெல்லிய விசும்பல் ஒலி மட்டுமே கேட்டது. பாண்டிவனத்து மாளிகை வாசலிலே கூடியக் கூட்டத்தில் முக்கால் பங்குக் காணாமல் போனது, அதில் புறணி பேசியக் கூட்டமும் அடக்கம்.


“இப்பெதுக்கு ஒப்பாரி வைக்கிறே, மருமவளதே(ன்) பெரிய ஆசுபுத்திரிக்குத் தூக்கிட்டுப் போயிருக்காய்ங்கல்ல, நீ செத்த சலம்பாம இருத்தா, ஏலேய்ய் சொக்கா வண்டிய எடுரா. ஏத்தா செம்பவ(ம்) நீயும் சௌந்தரமும் புள்ளக்குட்டியள பாத்துட்டு வீட்டோட பத்திரமா இருங்கத்தா. மாப்புளைளா நீங்க ரெண்டு பேரும் மாடன அழைச்சிட்டு ஆசுபுத்திரிக்கு உங்க வண்டியில போங்க, நான் மத்தவய்ங்கள அழைச்சிட்டு வெரசா பின்னோடு வாரேன்” என்று அடுக்காக அவரவருக்குரியக் கட்டளைகளைப் பிறப்பித்தார் திடத்துடனும் நிதானுத்துடனும். அவர் வேகமும் விவேகமும் அனைவரும் அறிந்ததே, அதனால் அவரது கட்டளைகள் சிரமேற்க்கொண்டு நிறைவேற்றினர்.

“சரிங்க மாமா, ஏ மாடா வாடா போவோ(ம்), வீரா நீ வண்டிய எடு” என்று வேகமாக நடந்தவாறு ராசவேலு தங்கையைக் காணத் தன் தமயனுடன் காரை நோக்கி விரைந்தார் .


தரையில் சிந்தியிருந்த ரத்தத்தைப் பார்த்து “ஐயோ எம்புட்டு ரத்தம்ம்ம்ம்!! அண்ணே அண்ணே என் பெத்த வவுரு பத்தி எரியுதுண்ணே, எந்த எடுபட்ட சிறுக்கிக் கொள்ளிக் கண்ணுப் பட்டுக்சோ என் தங்க மவ பேச்சு மூச்சில்லாமக் மரக்கட்டையாப் போராளே.. எஞ்சாமி ஐயனாரே என் புள்ளய காவந்து பண்ணுயா. உனக்குக் கெடா வெட்டிப் பொங்க வச்சிப் படையல் போடரேன், என் முடியிறக்கி உனக்குக் காணிக்க ஆக்குரே(ன்) என் கொலசாமியே” எனத் தரையில் மண்டியிட்டு கைகளைத் தலைக்கு மேல் உயர்த்தி அவரின் குலசாமியான ஐயன்னார் கோயில் இருக்கும் திசையை நோக்கிக் கும்பிட்டார்.



“அத்தே எத்தேய்ய் மதனிக்கு ஒண்ணும் ஆவாது, தாயும் புள்ளயுமா பொழச்சி தழச்சி வருவாய்ங்க நீங்ங….. ஆ ஆஆஆஆ ஆத்தா ஆத்தா” என்ற சௌந்தரத்தின் தலைமுடி அவளது அன்னை சுந்தரவல்லியின் கைகளில் சிக்குண்டது.


“என்னடி சொன்ன சின்ன சிறுக்கி? அந்த கொலம் கெடுக்க வந்த மூதேவி பொழச்சி தழச்சி வரனுமே? ஏன்? ஒன் பொறந்த வீடு நாசமா போவனும்னு நெனப்பிருக்கா ஒனக்கு” என்று சௌந்தரத்தின் தலைமுடியைப் பிடித்து உலுக்கிக்கொண்டே அகங்காரமாய் கத்தினார் சுந்தரவல்லி.


“ஐயோ இ இ இ இல் இல்ல்ல் இல்ல ஆ ஆ ஆத் ஆத்தா” அதற்குமேல் சௌந்தரத்துக்கு அதிர்ச்சியில் பேச வரவில்லை.


“ஆத்தா ஆத்தா அவ கூரில்லாம சொல்லிப்புட்டா நீ அத மனசுல வச்சிக்காத. விடுத்தா அவ தலமயித்த, விடுங்குரேன்ல. ஆத்தா என்னையைப் பாரு பாரு.. நம்ம கொலசாமி நம்மளக் கைவிடாது. மதனி படில உருண்டு விழந்து பனிக் கொட(ம்) ஒடைஞ்சு பெய்த்து, அந்த மூதேவியோட உசுரு தங்காது ஆத்தா. ஏன், இம்புட்டு நேரத்துக்கு அது மதனி வவுத்துல செத்துக் கெடக்கும் நீ வெசனப்படாத ஆத்தா. மதனி ராசாத்தி மாதிரி இந்த அரண்மனையிலெ எப்பவு(ம்) போல நடமாடும்” எனத் தனது தாயைச் சமாதானம் செய்தாள் செண்பகம்.


சௌந்தரம் இந்த அரண்மனையில் சற்று மாறுபட்டப் பிறவி. கொஞ்சம் கருணையும் தாராள குணமும் கொண்டவர். மதினியின் வயிற்றில் இருக்கும் குழந்தையை ஒருநாளும் மனதார வைததுக் கிடையாது. அன்னையின் கூற்றைக் கேட்டு அவர் மனம் நைந்து விசும்பினார் சற்று தள்ளி நின்றுகொண்டு! அவரது பிள்ளைகள் அன்னையின் இடுப்பைக் கட்டிக்கொண்டனர். தாயை அம்மத்தா திட்டவும் குழந்தைகள் பயந்து நடுங்கி ஒடிங்கிவிட்டனர்.

நிலவழகி கண்விழிப்பாளா? அவள் வயிற்றிலிருக்கும் பச்சை மண் உயிர்ப்புடன் இருக்குமா?



கருப்பு அழகி வருவாள்
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“என் கருப்பழகி”

அத்தியாயம் – 2

“ஓ மை காட், எருமை மாடுங்க!! இதுங்க எப்போ நகர்ந்து நான் எப்போப் போறது, எமெர்ஜென்சி கேசுன்னு வேற சொன்னாங்களே!!! ரிவர்ஸ் எடுத்தா 20 கி.மீ சுத்தாச்சே” என வாய்விட்டுப் புலம்பியபடி தன் தலையைப் பிடித்துக் கொண்டார், வெள்ளை நிற மாருதி-800 காரின் உள்ளே அமர்ந்திருந்த மகப்பேறு மருத்துவர் புவனேஸ்வரி. அவருக்கு 42 வயது, மெட்ராஸ்(இப்போ சிங்காரச் சென்னை) மாநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆனால் பார்க்க 30 வயது பெண் போல் இன்னும் இளமையுடனும் அதீத அழகுடனும் இருந்தார். கருணை, கண்ணியம், கடமை இதுதான் மருத்துவர் புவனேஸ்வரி. பெண்களுக்கு எதிரானக் குற்றங்களைத் தடுத்து அப்பெண்களுக்கு நல்ல வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் சிறந்த சமூக சேவகி.



ஓஒன் மார்பிலே சாயாமேத்

தூங்காது கண்ணு

என்னத் தேன் புடிச்சி

மெல்லெத் தேன் அனைச்சி

முத்தம் தேன் நித்தம் தேன்

வச்சித் தேன் கொஞ்செனும் கொஞ்செனும்

கருத்தெ மச்சேன்

கஞ்சத் தனெம் எதுக்கு வெச்சாய்ன்



என 40 அடி அகல மண் சாலையில் மொட்டை வெயிலில் அனுபவித்துப் பாடிக் கொண்டிருந்தாள் எருமை மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தப் பெண். அவள் பாட்டுத் தடைப்பட்டது! காரணம்?





“பேம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பேபம்ம்ம்ம்ம்ம் பேபம்ம்ம்ம்ம்ம் பேபம்ம்ம்ம்ம்ம் பேபம்ம்ம்ம்ம்ம்” எனச் சத்தமிட்டு தனக்கு வழிவிடுமாறு கார் ஹாரனை தொடர்ந்து அழுத்தியபடி இருந்தார் மருத்துவர் புவனேஸ்வரி.



லேசாகத் திரும்பி காரையும், காருக்குள் அமர்ந்திருந்த புவனேஸ்வரியையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டாள். அவளுக்கு தன் ஆசைக் கணவனை நினைத்து தன் விருப்புகளை சொல்கிறப் பாடல் தடைப்பட்டு விட்டதில் ஏகக்கடுப்பு.



“இது வேலைக்கு ஆகாது, ஹம்ம்ம்” என்றபடி தனதுக் காரைவிட்டு இறங்கினார். சற்று தூரம் நடந்து சென்று “இந்தம்மாப் பொண்ணு கொஞ்சம் உன் எருமை மாடுங்கள ஒதுங்கிப் போகச் சொல்லேன்” என்றார். “ஏ எருமைங்களாஆஅ காருக்காரம்மா உங்களத்தே(ன்) ஒதுங்கச் சொல்றாய்ங்கே! நீங்க ஒதுங்கிப்புடுங்கே எருமைங்களா.” என ஒரு விதக் கோணல் சிரிப்புடன் சத்தமிட்டுச் சொன்னாள் அந்தக் குறும்புக்கார மாடு மேய்க்கும் பெண்”.



புவனேஸ்வரி ஒரே ஒரு கணம் தான் அசைவற்று நின்றார், பிறகு அந்தப் பெண்ணை அளவிட்டார். முன் இருபதுகளில் இருந்தாள் அவள். “இவளைப் பத்தின ஆராய்ச்சிக்கு இப்போ நேரமில்ல” என மனதிற்குள் சொல்லிக் கொண்டு “உன் கிட்டப் பகடிப் பேச எனக்கு நேரமில்லைம்மா, உன் மாடுகளக் கொஞ்சம் நகரச் செய், நான் அவசர வேலையாப் போகனும்” என்றார் தெளிவாக.

“காருக்காரம்மா நீங்க சொன்னதத்தே(ன்) நா(ன்) செஞ்சே(ன்), நீங்க என்னடானாப் பகடிப் பேசறேனு சொல்லிப்புட்டிங்களே” என்று தன் கன்னத்தில் கை வைத்து கண்களை அகல விரித்து அதிசயித்தபடி வினவினாள்.



புவனேஸ்வரி அவள் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தார், மொட்டை வெயிலில் மாடு மேய்க்கும் களைப்பு அந்தக் கிராமத்து கிளியின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டார். “அவள் கால் வலிக்க வெயிலில் வேக தான் மட்டும் சொகுசாகக் காரில் பளிச்சென்றத் தோற்றத்துடன் ஒய்யாரமாகப் போவது அந்தப் பொண்ணுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கும். பாவம் சின்ன பெண்” எனப் பரிதாபப்பட்டார்.

மெல்லச் சென்று தன் கார் பேனட்டில் சற்று சாய்வாக அமர்ந்து கொண்டு “ சரி சரி உன் மாடுங்க நகர்ந்து போற வரைக்கும் நான் இங்கயே இருக்கேன். ஆமா உன் பேரு என்ன?” என வினவினார்.



“தெரிஞ்சிக்கிட்டுத்தே(ன்) போவிங்கலோ?” என்று எதிர்க் கேள்வி கேட்டாள்.



“இல்ல, தாமரைக்குளம் சற்குணபாண்டியன் சாரை தெரியுமா? அவரோட மருமகளுக்கு அடிப்பட்டு ஹாஸ்பிட்டலுக்குக் கொண்டுவராங்க, நான் தான் அவங்களுக்கு சிகிச்சைக் குடுக்கப்போற டாக்டர். நான் லேட்டா போய் எதாவது ஆச்சின்னா நான் பதில் சொல்லனும்ல. எல்லாரும் எனக்காக அங்கக் காத்துக்கிட்டு இருப்பாங்க. சரி அதெல்லாம் எதுக்கு நீ உன் பேரச் சொல்லும்மா” என ஒரு போடுப் போட்டார். அரண்டுவிட்டாள் மாடு மேய்க்கும் பெண். பின்னே தாமரைக்குளம் சற்குணபாண்டியனை பகைத்துக் கொண்டு இவ்வூரில் வாழ்ந்துவிட முடியுமா.



“அத்திப் பெரிய ஐயாவா” என வாய்விட்டேத் தன் அதிர்ச்சியைக் காட்டினாள். “டாக்குட்டரம்மா அரை நாழியிலே இதுங்கள ஒதுங்க வச்சிப்புடுறே(ன்)” என சொல்லிக் கொண்டே மாடுகளை நோக்கி ஓடினாள். “ஹே ஹே ஹேய்ய் க்ல்க்ல்க்ல்க்ல்க்ல் ஹே ஹேய்ய்” என அதட்டியும், மாடுகளின் மேலேத் தட்டியும் அவைகளை ஒதுங்கச் செய்தாள்.



புவனேஸ்வரி தன் காரை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்ணின் பக்கத்தில் நிறுத்திப் புன்னகைத்தார். “இப்போ உன்கிட்டப் பேச எனக்கு நேரமில்ல, இன்னொரு நாள் சாவகாசமப் பாக்கலாம். கவலப் படாத உன்னப் பத்தி உங்க அய்யாக்கிட்ட் சொல்ல மாட்டேன்” என்றார் அவளின் கலங்கிய முகம் கண்டு. அவளிடம் தலையசைத்து விடைபெற்றார்.



“ஆத்தாடி எஞ்சோலிய இன்னக்கி முடிச்சிருப்பாய்ங்க, இந்தப் புண்ணியவதியாலே தப்பிச்சே(ன்). வேறே யாரும்னா பெரிய ஐயாக்கிட்டக் கோளாறு சொல்லிருப்பாய்ங்கே. என் நேரம் நல்லாத்தே(ன்) இருக்குது போல!!! இன்னைக்கு யாரு மொகத்துல நா முழிச்சே(ன்)? ஏன் மாமியா அந்த ஆந்த கண்ணுக்காரி மொகத்துலக் கண்டிப்பா முழிச்சிருக்க மாட்டே(ன்).” எனத் தனக்குள் பேசியபடி மாடுகளை மேய்த்தாள்.



தேனி அரசு மருத்துவமனை வாயிலைத் தாண்டிச் சென்று, போர்ட்டிக்கோவில் கார் நின்றது. காரிலிருந்து வேகமாக இறங்கிய புவனேஸ்வரி அவருக்காக காத்துக் கொண்டிருந்த மருத்துவக் குழுவை கையில் ஸ்டெத்தஸ்க்கோப், வெள்ளை அங்கி சகிதாம் வேகமாக நெருங்கினார்.



“டாக்டர் குணா, அப்ரேஷன் தியேட்டர்ல எல்லாம் ரெடியா இருக்கா, போதிய ப்லட் இருக்கில்ல, பேஷன்ட் வந்தாச்சா?” என வரிசையாகக் கேள்விக் கணைகளைத் தொடுத்துக்கொண்டு அப்ரேஷன் தியேட்டர் நோக்கிச் சென்றார்.



“எல்லாம் ரெடி மேடம், பேஷன்ட் ஆன் தி வே இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவாங்க மேடம்” பதில் கூறினார் டாக்டர் குணா.



“இன்பவதி சிஸ்டர், பேஷண்ட் பிரெக்ணண்ட் லேடிலங்கிறதால டெலிவெரிக்கும் நாம ரெடியா இருக்கனும். அப்ரேஷன் தியேட்டர்ல நீங்கப் போய்க் கடைசியா ஒரு தடவ எல்லாம் சரியா இருக்கானு செக் பண்ணிடுங்க” என்றார் புவனேஸ்வரி. “சரிங்க மேடம்” எனக் கூறி நகர்ந்தார் இன்பவதி. தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளச் சென்றார் புவனேஸ்வரி.



மின்னலென வெள்ளை நிற புதிய டாடா சுமோ ஒன்று மருத்துவமனை போர்ட்டிக்கோவில் க்கீரீச்சிட்டு குலுங்கி நின்றது.செந்தூரபாண்டியன் “அண்ணே நீ மொத எறங்கு அப்பத்தே(ன்) மதனிய எறக்க முடியு(ம்), ஏலெய் பாத்து மெதுவா எறக்குங்கய்யா,” எனக் கூறியபடி நிலவழகியை ஸ்டிரெட்ச்சரில் மல்லாக்கப் படுக்க வைத்துத் தள்ளிக் கொண்டு சென்றனர். அங்கயற்கண்ணி அவர்கள் பின்னே ஓடினாள்.



“டாக்டரம்மா பேசன்டு வந்துட்டாய்ங்கெம்மா” என்று அறிவித்தார் வார்டுபாய் கண்ணப்பன்.



“ஓகே டீம் எவ்ரதிங் செட் ரைட், வாங்கப் போகலாம். டாக்டர் சுகந்தி பல்ஸ், டெம்ப்ரேச்சர், ப்ரெசர் எல்லாம் நார்மால இருக்கானு ஃபர்ஸ்ட் செக் பண்ணிடுங்க, டாக்டர் குணா நீங்க அனெஸ்தியா குடுத்துடுங்க” என செய்ய வேண்டியவற்றைப் பேசிக்கொண்டே அப்ரேஷன் தியேட்டர் வாயிலை அடைந்துவிட்டனர்.



முதலில் புவனேஸ்வரி சுந்தரபாண்டியனைத் தான் கவனித்தார், சட்டை வேட்டி முழுவதும் ரத்தக் கரை. “கண்ணப்பன் மொதல இவர சுத்திப்படுத்திக்கிட்டு வேரே ட்ரெஸ் போட சொல்லுங்க, மத்தப் பேஷன்ட்ஸ்க்கு இன்ஃபெக்‌ஷ்ன் ஆகும்.” எனக் கண்டிப்புடன் கூறிக்கொண்டு தனதுக் குழுவுடன் அப்ரேஷன் தியேட்டருக்குள் சென்றுவிட்டார்.



“ஐயா வாங்கய்யா, சுத்திப்படுத்திக்கிட்டு வேறே உடுப்புப் போட்டுக்கிட்டு இங்கிட்டு வரலாமுங்கய்யா” எனப் பணிவுடன் சொன்னான் கண்ணப்பன்.


“ஏங்க மாமாவுக்கு மொத மாத்துத் துணிக்கு ஏற்பாடுப் பண்ணுங்கெ, நம்ம சனம் வெரசா வந்துப் புடுவாய்ங்க. அத்தெயு(ம்), ஆத்தாவு(ம்) பாத்தா அம்புட்டுதேன், ஓனு ஒப்பாரி வச்சிட்டுதே(ன்) மருவேலப் பாப்பாய்ங்கே”. என்றார் அங்கயற்கண்ணி.



“நீ சொல்றது சரிதேன் புள்ள, ஏ கண்ணப்பா இந்தா இதுலே 1000 ரூவா இருக்கு, வெரசா போயி ஒரு வெள்ளெ வேட்டிச் சட்ட வாங்கிட்டு வா. அண்ணே நீ போய்ச் சுத்திப்படுத்திக்கிட்டு வாணே. நானும் இவளும் இங்கினத்தே(ன்) இருப்போ(ம்)” என அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான் செந்தூரபாண்டியன்.



தொய்ந்த நடையுடன் செல்லும் தமயனைக் கண்டு மனதினுள் அங்காய்ளித்தான் “எங்கண்ணே இம்புட்டூ சோர்ந்து நா(ன்) கண்டதில்லையே, மதனிக்கு எதாவதுனா மனுசன் உசுர விட்டுப்புடுவாரே.”



செந்தூரபாண்டியனும் அங்கயற்கண்ணியும் அங்கிருந்த பெஞ்சில் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்தனர். “யாத்தா அழகிஈஈ” என்ற அலறலைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினர் இருவரும். சற்குணபாண்டியனும் அவரது தங்கைக் குடும்பத்தினர் யாவரும் அப்ரேஷன் தியேட்டரை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தனர். இருவரும் விறுட்டென்று எழுந்து குடும்பற்றவரை நோக்கி ஓடினர்.



“யாத்தா அங்கயறு ந…ந… நம் நம்மெ அழகிப் புள்ளெப் பொழைச்சிப்புடுவாள்ளே??” எனத் தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கேட்டார் வடிவாம்பாள் தன்னுடைய இரண்டாவது மகள் அங்கயற்கண்ணியிடம். உடன்பிறந்தவள் ஆயிற்றே! என்னதான் திடமாகக் காட்டிக் கொண்டாலும் தன் தமக்கையின் உடல்நிலையைக் கண்டு உள்ளுக்குள் பயம் பிடித்துக் கொண்டது அங்கயற்கண்ணிக்கு. பின்னே! 1 மணி நேரக் கார் பயணத்தில் சிறு அசைவின்றிக் கிடந்தாளே. மன அழுத்தத்தைத் தாங்க இயலாது வெடித்து அழுதாள்.



“அ ஆஆஆஅ ஆஆத்தா அ அ அக் அக்கா அக்கா அக்கா” எனத் விக்கி விக்கி அழுதார். “ தே அங்கயறு” என அதட்டினான் செந்தூரபாண்டியன். அழுகை அடங்கி விசும்பலானது. “யெய்யா செந்தூரா எம்மருமவளுக்கு என்னதேன் ஆச்சி, அங்கயறு அழுதுக் கரையுராளேய்யா??” வினவினார் சுந்தரவல்லி. “நெசத்த சொல்லிப்புடு யா” எனக் கெஞ்சுலடன் வினவினார் வடிவாம்பாள்.



“அத்தே மதனிய நாலஞ்சிக் டாக்டருங்க உள்ளப் பாத்திட்டு இருக்காய்ங்கே, எப்புடியு(ம்) காவந்துப் பண்ணிப் புடுவாய்ங்க, நீங்கச் செத்த அந்தப் பெஞ்சிலெ உக்காருங்கெ. ஆத்தா உன்னயுந்தேன் சொல்லுறேன். அங்கயறு கொஞ்ச(ம்) தண்ணிக் கொண்டா எல்லாருக்கு(ம்)” என்றுக் கூறிப் பெண்டிரை சமாதானப் படுத்தினான் செந்தூரபாண்டியன். சற்குணபாண்டியன். சிங்கவேலு, ராசவேலு மற்றும் வீரவேலுக் கவலையுடனும், சிந்தனையுடனும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் அங்கயற்கண்ணியின் அழுகையையும் செந்தூரபாண்டியனின் அதட்டலையும் சமாதான வார்த்தைகளையும் கவனித்துக் கொண்டு தான். இருந்தனர்.



சிந்தனையில் இருந்து விடுபட்டவராக “யெய்யா செந்தூரா, சுந்தரம் எங்கெய்யா” வினவினார் சற்குணபாண்டியன். “அண்ணே இங்கிட்டுத்தேன் பக்கத்திலேப் போனாரு, அந்தா அண்ணே வந்துட்டாரு..” எனக் கூவினான் செந்தூரபாண்டியன். “இங்கெருங்க வ்டிவு, வல்லி பயெ சோந்துப் போயிருக்கேன் வீணா அழுதுக் கரையாதிங்கெ. அங்கயறு உனக்குந்தேன் ஆத்தா சொல்லுறேன்” என்றுக் கண்டிப்புடன் வீட்டுப் பெண்களைக் கட்டுப்படுத்தினார் சற்குணபாண்டியன்.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“மச்சான் வாங்க இங்கென வந்து உக்காருங்கெ” எனத் தங்களது தாய் மாமனின் மகனும், தங்கையின் கணவனுமாகிய சுந்தரபாண்டியனை இருபுறமும் அவரதுக் கைகளைப் பிடித்து சென்று பெஞ்சில் அமர வைத்தனர் சிங்கவேலுவும், ராசவேலுவும். அங்கயற்கண்ணி அனைவருக்கும் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். “மாமா, அய்யா! நீங்களும் வந்ததிலிருந்து எம்புட்டு நேரந்தேன் நிப்பியெ உக்காருங்கெ” என்றார் அங்கயற்கண்ணி. உடலும் மனமும் சோர்ந்தினால் ஓய்ந்து உட்கார்ந்தனர் சற்குணபாண்டியனும் அவரது தங்கை வடிவாம்பாளின் கணவரும், நிலவழிகியின் தந்தையுமான சிங்கவேலு.



இரண்டு மணிநேரம் கடந்து டாக்டர் புவனேஸ்வரியும் டாக்டர் குணாவும் பேசியபடி வெளியே வந்தனர். எல்லோரும் முகத்தில் பதட்டத்துடனும், கண்களில் எதிர்பார்ப்புடனும் எழுந்து நின்றனர்.



புவனேஸ்வரி அவர்களைத் தன் கூரியக் கண்களால் அளந்தவர், பின் தொண்டையை செருமிக் கொண்டு “பேஷண்டுக்கு பின்னந்தலையிலே பலத்தக் காயம், நிறைய ரத்தம் போயிடுச்சி. ரத்தப் போக்கக் கண்ட்ரோல் பண்ணிட்டோம். பேஷண்ட் ரொம்ப வீக்கா இருக்காங்க. இந்த நிலையில சுகப் பிரசவம் சாத்தியம் இல்லை. ஆனா ஏன்? நீங்க வசதியானவங்க, எல்லாரும் நல்ல ஆரோக்கியமா தான் தெரியுரிங்க. கர்ப்பமா இருக்கப் பொண்ணுக்கு சத்தான ஆகாரம் குடுக்க வேணாமா? இது இவங்களுக்கு தலைப் பிரசவம் இல்லை.. பாருங்க இந்த பலவீனம் குழந்தயையும் சேத்து பாதிக்கும். வேற வழியில்லை, சிசேரியன் பண்ணித் தான் குழந்தைய வெளிய எடுக்கனும். அப்பத்தான் தாயையும் சேயையும் காப்பத்த முடியும்” என புவனேஸ்வரி முடிக்கவில்லை, எதிர்ப்புக் குரல் எழுந்தது.



“என்னது அந்த மூதேவி இன்னும் எம்மருமவ வவுத்துக்குள்ள உசுரோட இருக்கா??? இங்கெருங்க டாக்குடரம்மா எம் மருமவள மட்டும் காப்பாத்தினாப் போதும் கூட இருக்கிறெ அந்தக் கெரகம் பிடிச்ச ஒட்டுப்புல்லக் காப்பாத்த வேணாம்ம்ம், அது செத்து ஒழியட்டும்..” என்று ஆணையிடும் தோணியில் கூறினார் சுந்தரவல்லி.



“ஏம்மா அவங்க வயித்துல இருக்கிறது பெண்பிள்ளாங்கிறதாலன வேணாம்னு சொல்ரீங்களா?” எனத் தனது ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு கேட்டார் புவனேஸ்வரி. அவர் காரணங்களை அறிய முற்பட்டார், அவர்கள் ஸ்கேன் செய்துப் பார்த்தில் பெண் மகவு எனத் தெரியவந்தது, அத்தோடல்லாமல் இன்னும் சில விசயங்களும் தெரிய வந்தது. ஆனால் அதனை யாரிடமும் பகிரவில்லை.



“இந்தாம்மா டாக்குட்டரு எங்கெளுக்கு எல்லாச் சங்கதியும் தெரியும் நாங்க சொல்லுறதத்தேன் நீ செய்யெனும் வெளுங்குதா? கேள்விக் கேக்குறதை நிப்பாட்டிக்க, அதேன் ஒனக்கு நல்லது. போயி எம்மருமவளக் காவந்துப் பண்ணுறெ வழியப் பாரு” என இடுப்பில் இடது கையை வைத்துக்கொண்டு, வலது கை ஆள்காட்டி விரலை புவனேஸ்வரி முகத்தை முன் நீட்டித் தெனாவெட்டாகப் பேசினார் சுந்தரவல்லி.



“ஓ!” என்றார் புவனேஸ்வரி அமைதியானக் குரலில். அது புயலை உள்ளடக்கிய குரல் என்று டாக்டர் குணா நன்கு அறிவார். புவனேஸ்வரி மெதுவாக டாக்டர் குணாவை ஒரு அர்த்த்ப் பார்வைப் பார்த்தார். அந்தப் பார்வையில் டாக்டர் குணாவுக்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. சற்குணபாண்டியனின் செல்வாக்கு ஊரிந்த விசயம். ஆனால் புவனேஸ்வரியின் பின்னணி! வெகு சிலரே அறிந்து இருந்தனர். அதோடு பணியில் அவரின் ஈடுபாடும், நேர்மையும், அதிகாரத்திற்கும், செல்வாக்கிற்கும் அடிபணியாத தன்மைகள் யாவும் மருத்துவ உலகத்தைச் சேந்த்துவர்கள் அனைவரும் அறிந்ததே. டாக்டர் புவனேஸ்வரி அந்தத் தேனி அரசு பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவர்.



“அவங்களுக்குத் தான் எல்லாம் தெரியுதே டாக்டர் குணா! அப்ப நாம எதுக்கு வீணா டைம் வேஸ்ட்ப் பண்ணனும்? அவங்களேப் பிரசவம் பாத்துக்குவாங்க. இவங்கப் பேசின டீட்டெய்ல் எல்லாத்தையும் ரிப்போட்ல எழுதி இவங்கக்கிட்ட கையெழுத்து வாங்கிடுங்க. நாளைப் பின்ன நமக்குப் பிரச்சனை வரக் கூடாது பாருங்க? இன்னும் அரை மணி நேரத்தில எல்லா ஃபார்மாலிட்டிசும் முடுஞ்சு, டிஸ்சார்ஜ் ரிப்போட் என் டேபிளுக்கு வரனும். நான் அதைப் பாத்துட்டு சைன் பண்ணிட்றேன், அப்புறம் பேஷண்ட்ட டிஸ்சார்ஜ்ப் பண்ணிடுங்க ஒகே. கமான் குயிக். ஸ்டார்ட் தி ப்ரொஸிடங்க்ஸ்.”



உனக்கு நான் அடிபணியமாட்டேன் என வெகு அமைதியாக ஆனால் அழுத்தமானக் குரலில் சொல்லிவிட்டார் டாக்டர் புவனேஸ்வரி. நொடிப் பொழுதும் தாமதிக்காமல், யாரையும் திரும்பியும் பாராமல் தனது அறைக்குச் சென்றுவிட்டார்



நிலவழகியின் குடும்பற்றவர் யாவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். என்ன தான் தொழிலில் சருக்கல் ஏற்பட்டாலும் இன்றளவும் எவரும் அவர்களது ஆளுமையையும் அதிகாரத்தையும் எதிர்த்து நின்றதில்லை. “எதற்கும் முதல் முறை என்று ஒன்றுண்டு” அந்த ஒன்றைத்தான் அவர்கள் யாவரும் சகிக்க முடியாமல் சகித்தனர்.



செந்தூரபாண்டியன் பொங்கி எழுந்துவிட்டான். அவர்களின் அதிகாரத்தை ஒருவர் கேள்விக் குறியாக்குவதா? அவர்களின் வீட்டுப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுப்பதா? அதுவும் கேவலம் ஒரு பெண் அதனைச் செய்வதா? அதைப் கண்டுவிட்டு அவர்கள் சும்மா இருப்பதா? அவர்களின் வீரத்துக்கும், வைத்திருக்கும் அறுவா மீசைக்கும் அர்த்தம் தான் என்ன? அவர்கள் கவுரவமும், செல்வாக்கும், மானமும், மரியாதையும் என்னாவது?



“என்னய்யா டாக்டரே? அந்த டாக்டரம்மா அது பாட்டுக்குப் பேசிப்புட்டுப் போவுது, நீயும் வாயிலேப் பசப் போட்டக் கணக்கா முண்டாம நிக்கிறெ? நாங்க யாரு என்னன்னுத் தெரியுமில்லெ?” எனத் தனது வீச்சரிவாள் மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டே கர்ஜித்தான்.



சற்குணபாண்டியன் யோசனையில் ஆழ்ந்தார். அவரைத் தவிர அங்கிருந்த அனைவரின் முகத்திலும் ரௌத்திரம் பரவியது. ராஜவேலு, வீரவேலு தங்களுது வேட்டியை மடித்துக் கட்டிவிட்டனர். சிங்கவேலுவின் கண்கள் சிவந்து மீசைத் துடித்தது. சுந்தரபாண்டியன் தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான் கண்களில் கூர்மையுடன். அந்தக் கண்கள் சொன்ன செய்தியைக் கண்டு டாக்டர் குணாவின் ஈரக்குலை நடுங்கியது.



ஒரு பக்கம் இவ்வூரின் பெரிய தலைகள் இன்னொரு பக்கம் பலமானப் பின்னணியைக் கொண்ட தலைமை மருத்துவர். யார் சொல்லைக் கேட்பது?



“ஈஸ்வரா, இந்த ஊர்லப் பொழப்பு நடத்துறத்துக்குள்ள உயிர் போய் உயிர் வருது. தினமும் எவனாவது அறிவாளத் தூக்கிட்டு வந்துடரானுங்க. முறுக்குப் பிழியற மாதிரி அறுவா மீசைய வேற அந்த முறுக்கு முறுக்குறானுங்க! டாக்டருக்குப் படிச்சி, கோல்ட் மெடல்லெல்லாம் வாங்கி என்னப் பிரயோஜனம், உயிர் பயத்துலயே எனக்கு பாதி ஆயுசுக் குறைஞ்சிடும் போல இருக்கே! இதுக்கு நிம்மதியா நான் மாடு மேய்க்கப் போயிருக்கலாம்! ஹம்ம்ம்ம் எங்க? எங்கப்பன் விட்டாதானே” என மனதிற்குள் மறுகினான் அந்த இளம் வயது மருத்துவன்.



வார்டு பாய் கண்ணப்பன் அவனைப் பரிதாரபப் பார்வையொன்றைப் பார்த்து வைத்தான். அந்தப் பார்வையில் நொந்து நூலாகிவிட்டான் டாக்டர் குணா.



இந்தப் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்று தன் தலையைப் பிய்த்துக் கொண்டான். “ஈஸ்வரா என்ன இந்தச் சண்டியர் கூட்டத்துக்கிட்ட இருந்து காப்பாத்துப்பா” என மனதிற்குள் கடவுளிடம் இறைஞ்சினான். அவன் வேண்டுதல் பொய்க்கவில்லை, இறைவன் சற்குணபாண்டினின் ரூபத்தில் வந்து அவனைக் காப்பாற்றினார்.



“செந்தூரா! பேயாம இருப்பா, டாக்டுரே அந்த டாக்டரம்மா ரூம்புக்கு என்னெய அழச்சிட்டுப் போய்யா, நான் அவய்ங்கள சமாதானாப் படுத்திறேன். எம்மருமவ உசிருக்கு முன்னெ எங்களுக்கு எதவும் பெரிசில்லிய்யா” என அமைதியானக் குரலில் அழுத்தமானப் பார்வை ஒன்றைக் குடும்பற்றவரின் மீது படர விட்டவாறுக் கூறினார் சற்குணபாண்டியன். அந்தப் பார்வைக்கான அர்த்தம் பிடிபட எல்லோரும் அமைதியாக ஒதுங்கி நின்றனர்.



“அப்பா சொக்கா உனக்குக் கோடி நன்றிப்பா, வர அமாவாசைக்கு உனக்கு நான் பாலாபிஷேகம் செய்ரேன்பா” என முதலில் தன்னைக் காத்த இறைவனுக்கு மனதிற்குள் நன்றி கூறினான் டாக்டர் குணா.



வார்டு பாய் கண்ணப்பன் “இம்புட்டு சுலுவா இந்தெப் பெரச்சனையெ முடிச்சிப் புட்டாய்ங்களே பெரிய அய்யாக் குடும்பம் டாக்டுர உண்டு இல்லென்னுப் பண்ணுவாய்ங்கனுப் பாத்தா இப்புடி சப்புனுப் ஆயிடுச்செ, ச்ச்ச்சுசுசுசுசு” என மனதிற்குள் சூள்க் கொட்டினார்.



டாக்டர் குணா கண்ணப்பன் பக்கம் திரும்பி “உன்னை நான் அறிவேன்” என்றப் பார்வையைப் பார்த்து வைத்தான். கண்ணப்பன் அந்தப் பார்வையைக் கண்டு “ஆத்தி ஏன் பொழப்புக்கி நானே ஒள வச்சிப்புட்டேன் போலயே” எனப் பயம் படர்ந்த முகத்துடன் மனதினுள் புலம்பினான். கண்ணப்பனின் முகத்தில் பயம் படர்வதைக் கண்டுத் திருப்தியுற்று “அஃது அந்தப் பயம் இருக்குட்டும்” எனப் பார்வையால் மிரட்டினான் கண்ணப்பனை, அதற்குக் கட்டுப்பட்டவனாக கண்ணப்பனும் தலை குனிந்து நின்றான்.



இதற்கிடையில் சற்குணபாண்டியன் தன் குடும்பற்றவரிடம் தாழ்ந்தக் குரலில் தீவிரமான முகபாவனையுடன் பேசிக் கொண்டிருந்தார். கண்ணப்பனிடம் இருந்து தனதுப் பார்வையை சற்குணபாண்டியனிடம் திருப்பினான் டாக்டர் குணா. அவரிடம் நெருங்கி சற்றுத் தயக்கம் மேலிட “அய்யாப் போலாங்கலா?” எனப் பவ்யமாக வினவினான்.



“ஆகட்டும் டாக்டரே” என சற்குணபாண்டியன் தனது மைத்துனன் சிம்ம வேலுடன் டாக்டர் குணாவைத் தொடர்ந்தார். மைத்துனன் பெண்ணைப் பெற்றவர் ஆயிற்றே அதனால் அவரின் முன் பேசி விடுவது சாலச் சிறந்தது என எண்ணினார். மறந்தும் டாக்டர் குணா சற்குணபாண்டியனின் குடும்பற்றவரின் பார்வையைச் சந்திக்கவில்லை.



“டொக் டொக் … டொக் டொக்..” என மெல்லமாக டாக்டர் புவனேஸ்வரியின் வாயிற்கதவைத் தட்டினான் டாக்டர் குணா. “எஸ் கமின்” என்ற பதிலைத் தொடர்ந்து, குணா சற்குணபாண்டியன் சிம்மவேலு சகிதாம் அறையினுள்ளே நுழைந்தான்.



தலைகுனிந்துபடி தன்னுடைய லெட்டர் பேடில் ஏதோ எழுதிக் கொண்டிருந்த புவனேஸ்வரி, “மேடம்” என்ற டாக்டர் குணாவின் அழைப்பில் “ஸ்” என நிமிர்ந்தார். மற்ற இருவரையும் ஒருப் பார்வைப் பார்த்துவிட்டு, “எல்லாரும் உக்காருங்க. சொல்லுங்க குணா.. நிலவழகி ரிப்போர்ட் ரெடியா? எங்கக் குடுங்க நான் படிச்சிப் பார்த்துட்டு சைன் பண்றேன். மத்த ஃபார்மாலிட்டிஸ்லாம் முடிஞ்சிடுச்சா?” சற்றும் அலட்டாதுக் கேள்விகளைக் கேட்டார்.



சற்குணபாண்டியன் புவனேஸ்வரியின் நிதானத்தைக் குறித்துக் கொண்டார், சிம்மவேலு புவனேஸ்வரித் தங்களை உதாசினப் படுத்துவதாக எண்ணினார். தன் மைத்துனனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு முகம் இறுகி அமர்ந்திருந்தார். “மேடம் இவங்க அதைப் பத்தி தான் உங்கக்கிட்டப் பேச வந்துருக்காங்க” என்றான் டாக்ட்ர் குணா மெதுவாக.



“சொல்லுங்க சார், என்னப் பேசனும்?” என நேரடியாகக் கேட்டார் புவனேஸ்வரி. சற்குணபாண்டியன் தன் தொண்டையை செறுமிக் கொண்டு “என் பொஞ்சாதி படிக்காதவெ, ஊரும் ஒலகமும் அறியாதவெ! ஏதோ மருமவ மேல இருக்கிறப் பாசத்திலெ அப்புடிச் பேசிப்புட்டா கிறுக்கி. அவெச் சொன்னதெ எல்லா(ம்) மனசிலெ வச்சிக்காதம்மா, அம்புட்டையும் மறந்துபுடுத் தாயி. என் மயென் பேசினதும் தப்புத்தேன். அதுக்குத் தேன் பெரியவய்ங்க இருக்கும் போது சிறுசிங்கப் பேசிக் கூடாதுன்னு சொல்றது. என்ன மச்சென் நா(ன்) சொல்றது.” என நைச்சியமாக புவனேஸ்வரிக்கும் நடுவில் ஒரு குட்டு வைத்தார்.



“ஆமா மச்சென் நீங்க சொல்றதுதேன் சரி” என இறுகியக் குரலில் பதிலளித்தார் சிங்கவேலு. புவனேஸ்வரி, சற்குணபாண்டியனின் கண்களைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். சற்குணபாண்டியனுக்குப் நன்றாகப் புரிந்தது தனது செல்வாக்கு இவளிடம் செல்லுபடி ஆகாது என்று. முடிவெடுத்தார் வாழ்க்கையில் முதல் முறையாக அடி பணிய அதுவும் ஒரு பெண்ணிடம்! அவரது உள்ளம் உளைக் களமாகக் கொதித்தது.



“எல்லா(ம்) அந்தெக் கிரெகம் புடிச்ச மூதேவியாலெதேன் இம்புட்டு அவமானம் எனக்கெம் ஏன் குடும்பத்தெக்கும். வெளிலெ வரட்டும் பாத்துக்கிறேன்” என அந்தச் சிசுவை மனதினில் வைதார். ஆனால் காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என்று பார்க்கையில் ஒரு தொழிலதிபராக அவர் காரியத்தில் கண்ணானார். முகத்தில் சாந்தத்தை வரவழைத்துக் கொண்டு,



“தாயி எங்கக் கொலக் கொழுந்த நாங்களெ அழிக்கெ நினைப்போமாத் தாயி, எப்பாடுப் பட்டாவது எம்மருமவளையும் எம் பேத்தியையும் (பல்லைக் கடித்துக் கொண்டு சொன்னார்.) காவந்துப் பண்ணிக் கொடுத்துப்புடுத் தாயி, ஓனக்குப் புண்ணியமாப் போகும்” என வராதக் கண்ணீரைத் தனது பட்டு அங்கவஸ்திரத்தில் துடைத்துக் கொண்டு பாவமானக் குரலில் சொன்னார் சற்குணபாண்டியனின்.

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“உங்க மருமகளுக்கு 4 மாச முடிவுல இந்தக் குழந்தையைக் கலைக்கத் தானே இங்க வந்திங்க? 4 மாச முடிஞ்தினாலக் கலைக்க முடியல இல்லையா? அப்படித்தான் இங்க இருக்கிற ரிப்போர்ட் சொல்லுது. ஏன் சார் 31/2 மாசத்துக்கு முந்தி அந்தக் குழந்தை உங்கக் குலக் கொழுந்து இல்லையா?” எனத் தனது சுழல் நாற்காலியில் லேசாக சுழன்று கொண்டு நெற்றியடியாக வினவினார் புவனேஸ்வரி. அவர் சொன்ன செய்தி “உன்னை நான் நம்பல, உன்னைப் போல எத்தனப் பேர என் சர்வீஸ்ல நான் பாத்திருப்பேன்! நீயெல்லாம் எனக்கு தூசி, ஃஊனு உன்ன ஊதித் தள்ளிடுவேன்” என்பது தான். அதைப் புரிந்து கொண்ட சற்குணபாண்டியனின் சிவந்த முகம் கருத்து சுருங்கிவிட்டது.



“தென்னை மரத்தில தேள் கொட்டினா,

பனை மரத்தில நெறி கட்டுமாம்“



என்ற வாக்கியத்துக் இணங்க சற்குணபாண்டியனுக்கும் அவரது குடும்பத்தவருக்கும் விழுகிற அடிகள் ஒவ்வொன்றும் இடிகளாகப் பிற்காலத்தில் அந்த சின்னஞ்சிறு குருவியின் தலையில் விழப் போகிறது என்பதை டாக்டர் புவனேஸ்வரி அறிந்திருக்க வாய்ப்பில்லை. அறிந்திருந்தால்! கருவிலே மடிந்துப் போகட்டும் என்றிருப்பாரோ?



அந்த அறையில் மின்விசிறி சுழலும் சத்தம் தான் கேட்டது. புவனேஸ்வரி அந்த பேரமைதியைக் கலைத்தார். “டாக்டர் குணா! சிசேரியனுக்கு தியெட்டர இம்மிடியட்டா ரெடிப் பண்ணச் சொல்லுங்க. அதுக்கு முன்னாடி பேஷண்ட்டோட வீட்டுக்காரர் கிட்ட சைன் வாங்கிடுங்க. இப்போ நம்மப் பேஷண்ட்டோடக் கண்டிஷனச் செக் பண்ணனும். மேக் இட் பாஸ்ட் குணா” எனக் கட்டளைகளைப் பிறப்பித்தபடி தனது வெள்ளை அங்கியையும், ஸ்டெத்தஸ்க்கோப்பையும் எடுத்துக் கொண்டு தனது அறையை விட்டு வெளியேறினார்.



“சார் இதுல சைன் பண்ணுங்க. என்ன பாக்குறிங்க? இந்த ஹாஸ்பிட்டல் வாயிலைத் தாண்டினதுக்கு அப்பறம் அந்தக் குழந்தயோட உயிருக்கு உத்திரவாதம் இல்லைனு எனக்கு, ஏன் எல்லாருக்கும் நல்லாவேத் தெரியும். கண்டிப்பாக் கள்ளிப் பால் ஊத்தியோ, விதை நெல்லக் குடுத்தோ பிள்ளையைச் சாகடிச்சிடுவிங்க. அதனால அந்தக் குழந்தையோட உயிருக்கு எதாவது ஆபத்துன்னா, உங்க ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் ஜெயிலுக்குள்ளத் தள்ளுரதுக்கான அத்தாட்ச்சி இந்தப் பேப்பர். இது வெறும் காப்பி தான். ஆல்ரெடி நான் கம்ப்ளைண்ட்ட மேலிடத்திக்கு ஃபாக்ஸ் பண்ணிட்டேன். இது உங்க ஒப்புதல் வாக்கு மூலம். ம்ம்ம் நீங்க முதல்ல சைன் பண்ணிட்டு, உங்க குடும்பவத்தவர் எல்லார்கிட்டேயும் மறக்காம சைன் வாங்குங்க சரியா? டாக்டர் குணா கமான் லெட்ஸ் மூவ்” சத்தமில்லாமல் அணுகுண்டைத் தூக்கி வீசிவிட்டு அமர்த்தலாக நடந்து சென்றார் டாக்டர் புவனேஸ்வரி.



“என்னதூ…” என எகிறிய சிங்கவேலுவை சற்குணபாண்டியன் தடுத்து நிறுத்தினார். பின்னர் டாக்டர் குணாவை ஒரு மௌனப் பார்த்துவிட்டுச் சென்றார். சிங்கவேலு “உனக்கு இருக்குடாக் கச்சேரி” எனக் கோபப் பார்வையொன்றை வீசிவிட்டு தன் மைத்துனரைப் பின் தொடர்ந்தார்.



“அப்பா சொக்கா எனக்கு இன்னைக்கு அறுவா வெட்டு கண்பார்ம்” என்றுத் தனக்குள் பயந்து புலம்பிக் கொண்டு டாக்டர் புவனேஸ்வரியின் அறை வாயிலில் பேய் அறைந்தது போல் நின்றிருந்தான்.



“சார் சார் சாஆஆஅர்” என உலுக்கப்படவும், “அய்யோ நான் இல்ல, நான் இல்ல என்ன வெட்டிடாதிங்க” எனப் பயந்து அலறினான் குணா. “சார்ர் சார்ர்ர்ர்ர் நாந்தேன் சார்ர் கண்ணப்பன்” என குணாவைத் தெளியவைக்கும் நோக்கோடுக் கூறினான் வார்ட் பாய் கண்ணப்பன்.



“நீயாப்பா” எனச் சற்று அசுவாசப்பட்டான். “சார் ஒங்களெத்தேன் செந்தூரபாண்டியன் ஐய்யாவும் அவிய்ங்க மச்சாய்ங்களும் தேடிக்கிட்டு இருக்காய்ங்கெ” எனக் கூறி முடிக்கவில்லை.



“என்னது என்னத் தேடறாங்களா, எதுக்குத் தேடறாங்களாம்?” எனப் பதட்டத்துடன் வினவினான் குணா.



“தெரியலெ சார்ர், ஒங்களெ எங்கப் பாத்தாலும் உடனே அழைச்சிட்டு வரச் சொன்னாய்ங்கெ” என்று கூறி அவருக்கு நெஞ்சு வலியை வரவழைத்தான் கண்ணப்பன்.



“ஈஸ்வரா” என தீனமானக் குரலில் கூறி வெளிப்படையாகத் தனது நெஞ்சைப் பிடித்துக் கொண்டான் டாக்டர் குணா.



எல்லாம்வல்ல எம்பெருமான் ஈஸ்வரன் தனது பக்தனை சோதனைக்கு ஆளாக்கினாலும், அதற்கு விம்மோச்சனம் கொடுக்கவும் தவறுவதில்லை. நர்ஸ் இன்பவதி ரூபத்தில் அந்தச் சோதனைக்கு விம்மோச்சனமாக வந்தார்.



“டாக்டர் சார் உங்களேத்தேன் இம்புட்டு நேரமாத் தேடிட்டு இருந்தேன், நீங்க இங்கத்தேன் இருக்கிங்களா?” என வினவினாள் நர்ஸ் இன்பவதி.



“என்னது, நீயும் என்னத் தேடுனியா, யாரும்மா உன்ன என்னையத் தேடச் சொன்னது?” என மனதில் கிலிப் பிடிக்கக் கேட்டான் குணா.



அவனை வித்தியாசமாகப் பார்த்துவிட்டு “டாக்டர் மேடம் தான் சார் கூப்பிட்டாய்ங்க” எனப் பதிலளித்தாள் நர்ஸ் இன்பவதி.



“உஸ்ஸ்ஸ்ஸ் ரொம்ப நன்றிம்மா இன்பவதி நான் கும்பிடுற சொக்கன் தான் உன்னை அனுப்பி வச்சிருக்கான்” என அவளுக்கு மனமார நன்றி கூறினார் குணா. நர்ஸ் இன்பவதிக்கு ஒன்றும் புரியவில்லை இருந்தாலும் தலையை ஆட்டி வைத்தாள்.



“மேடம் அப்ரேஷன் தியெட்டர்ல தானே இருக்காங்க வாம்மாப் போகலாம்” என ஒரு எட்டு எடுத்து வைத்தார். “சார்” என அவரை விளித்தான் கண்ணப்பன். என்ன என்பது போல் திரும்பிப் பார்த்த குணாவிடம் “அவிய்ங்க கூப்பிட்டாய்ங்களே சார் மறந்துட்டிங்களெ? என வினவி டாக்டர் குணாவை வெறுப்பேற்றினான்.



டாக்டர் குணா “அதுக்கென்ன கண்ணப்பாப் பாத்துட்டாப் போச்சு, நான் அவங்கிட்டப் போய் பேசிறேன், நீ அப்ரேஷன் தியெட்டருக்குப் போய் மேடமோட சேந்து அப்ரேஷன் பண்ணு, சரியா? மா இன்பவதி, கண்ணப்பனக் கூட்டிட்டுப் போமா” எனக் கேலியுடனும் முகத்தில் கடுப்புடனும் கூறினான்.



கண்ணப்பன் கப்பென்றுத் தன் வாயை மூடிக்கொண்டான். மேலும் ஒரு நர்ஸ் வந்து குணாவை அழைக்கவும் கண்ணப்பனை முறைத்துவிட்டு நர்ஸ்களுடன் சென்றான் டாக்டர் குணா. கண்ணப்பன் “என்னங்கடா இது ஆளாளுக்கு மொறச்சிட்டுப் போராய்ங்க, ஹம்ம்ம். இவரு இப்பத் திட்டிப்புட்டாரு அவய்ங்க என்னெப் பண்ணெப் போறாய்ங்களோ?” எனப் பெரு மூச்சு விரட்டவாரு சற்குணபாண்டியன் குடும்பத்தினரை நோக்கிச் சென்றான்.



“எம்புட்டுத் தெகிரியம் இருந்தா அந்த டாக்டரு சிறுக்கி அப்புடிப் சொல்லியிருப்பா? எங்கெ அவ? அவ நாக்க இழுத்து வச்சி அறுத்துப்புடறேன் அறுத்து” எனக் கோபாவேசமாக தன் விரிந்தத் தலை மயிரை தூக்கிக் கொண்டையிட்டுக் கொண்டே நாசி விடைக்க எகிறினார் சுந்தரவல்லி.



இவ்வளவு நேரம் மகளை நினைத்து விசிம்பிக் கொண்டிருந்த வடிவாம்பாள் கூடத், தனது தமையனுக்கும் கணவனுக்கும் ஒரு அவமானம் என்றதும் கொதித்து விட்டார். “அந்தக் கூலிக்கு மாரடிக்கிற நாய்க்கி அம்புட்டுத் திமரிருந்தா எட்டூரக் கட்டியாளுற எம் மக்களுக்கு எம்புட்டுத் திமிரு இருக்கெனும். எலேய் நான் பெத்தெ மக்கா என்னடா வேடிக்கெப் பாக்குறியெ? போய் அந்தப் பட்டணத்துக்காரி தலை மயித்தெப் புடிச்சி இழுத்துட்டு வாங்கடா இங்கெ” எனத் தன் ஆண் மக்களுக்குக் கட்டளையிட்டார் தன் மகளின் நிலையை மறந்து.



“ஆத்தா! மாமாவையும் ஐயனையும் அந்த சிலுப்பி அவமானப் படுத்திப்புட்டா அவளெயும் அவக் குடும்பத்தெயும் கருவருக்கனும்” எனக் கொடூரமாகக் கத்தினாள் அங்கயற்கண்ணி.



“எவ்வெளவு நெஞ்சழுத்தெமிருந்தா அந்தெ அசலூருக் குட்டி செயிலுக்குள்ளேத் தள்ளுவேனுச் சொல்லுவா, விடக் கூடாதெய்யா அவளக் கண்டந்துண்டமா வெட்டி வீசிப் புடுறேன்” என்றுக் கொக்கரித்தார் சுந்தரபாண்டியன்.



குணாவைப் பற்றிக் கூற வந்த வார்ட் பாய் கண்ணப்பன் அப்படியே சத்தமில்லாமல் பின் வாங்கினான் “ஆத்திக் கொலகாரப் பயெக் கூட்டமால இருக்கு அதேன் குணா சாரு அம்புட்டு பயந்தாரா?” எனத் தனக்குள் பேசிக் கொண்டு ஒடிவிட்டான்.



திடீரென்று சைரன் ஒலியும், பூட்ஸ் காலடி ஓசைகளும் கேட்டன. அஜானுபாகுவான தோற்றத்துடன் சஃபாரி சூட்டில் மெஷின் கன்னை கைகளில் ஏந்தியிருந்த ஸ்பெஷல் ஸ்குவாட் அபிசர்கள் புடைசூழ வந்தார் மத்திய மந்திரி கரிகாலனின் இரண்டாவது பி.எ சங்கர்.



மருத்துவமனையே எதோ ஹாலிவுட் படம் பார்ப்பது போல் அவர்களை வாய்பிளந்துப் பார்த்துக் கொண்டிருந்தது. சற்குணபாண்டியன் குடும்பத்தினர் கையெழுத்திட்ட ஒப்புதல் வாக்கு மூலத்தையும், நிலவழகியின் அப்ரேஷனுக்காக சுந்தரபாண்டியனிடம் கையெழுத்தையும் வாங்கி வரச் சொன்னார் டாக்டர் புவனேஸ்வரி. தன் தலையெழுத்தை நொந்தவாரே டாக்டர் குணா பயந்து கொண்டே அப்ரேஷன் தியெட்டர்ல் இருந்து வெளியே வந்தான். அவனுக்கு இன்ப அதிர்ச்சிக் காத்திருந்தது.



“எப்பா சொக்கா” எனத் தன் இருக் கன்னத்திலும் போட்டுக் கொண்டான்.



“ஹலோ டாக்டர் குணா” என்றார் மந்திரியின் பி.எ சங்கர்.



“ஹலோ ஷங்கர் சார் எப்பிடி இருக்கிங்க?” குணா.



“ஃபைன் டாக்டர் குணா, அப்புறம் உங்க மேடம் இருக்காங்களா?” கண்களால் எதோக் சாடையாகக் கேட்டார்.



“டாக்டர் மேடம் ஒரு எமெர்ஜன்சிக் கேஸ் அட்டென்ட் பண்றாங்க” என குணா புரிந்து கொண்ட பாவத்துடன்.



“சற்குணபாண்டியன் அய்யா, மேடம் உங்கக்கிட்டக் குடுத்தப் பேப்பரக் கேக்குறாங்க. எல்லாரும் சைன் பண்ணிட்டிங்களா? சுந்தரபாண்டியன் சார், உங்க மனைவியோட அப்ரேஷனுக்கான சம்மதத்த இதுலக் கையெழுத்துப் போட்டு உறுதிப் பண்ணுங்க” என மூச்சு விடாமல் பேசினான்.



சற்குணபாண்டியன் குடும்பத்தினரால் துப்பாக்கிய மனிதர்கள் முன் ஒன்றும் செய்ய இயலவில்லை.



“டாக்டர் குணா இவர எங்கயோப் பாத்த மாதிரி இருக்கெ” தாடையை தடவியபடி யோசனையாக வினவினார் சங்கர். குணாவிற்கு புரிந்துவிட்டது.. நாடகம் தொடங்கியாயிற்று இனி நடப்பது ஈசன் இல்லை இல்லை சங்கர் கரங்களில். லேசாக சிரித்துக் கொண்டவன் அசுவாசமாக,



“சங்கர் சார், பெரியகுளம் பாண்டியன் குரூப் கேள்விப்பட்டு இருப்பிங்களே?” என்று ஆரம்பித்தான் குணா.



“ம்ம் யு மீன் பாண்டியன் குரூப் ஒஃப் தேனீ? ரீசண்ட்டா அவங்க எல்லாத் தொழிலும் டவுன் அயிடுச்சே! மினிஸ்ட்ரிலயும் அவங்க ஃபாக்ட்ரிஸ் எதிரா கம்ப்லைண்ட்ஸ் ரெஜிஸ்ட்ர் ஆகிருக்கு எனி டைம் ஆக்ஷன் எடுக்கலாம். இன்கம் டாக்ஸ் டிபார்ட்மெண்டும் அவங்க மேலேக் கண்ணு வச்சிட்டாங்க. சிக்கினா சிதைச்சிடுவாங்க! சரி அவங்கள விடுங்க இவங்க யாருனு சொல்லுங்க?” என்றார் சங்கர் கண்களில் சிறு சிரிப்புடன்.



“இவங்க தான் பெரியகுளம் பாண்டியன் குரூப்போட ஓனெர்ஸ்” என்றார் குணா.



“ஓ” என ஒற்றை வார்த்தையில் தன்னுடைய பதிலைக் கொடுத்துவிட்டு அவர்களைக் கண்களால் அளந்தார்.



“சரி என்ன சைன்? என்ன விஷயம்?” என யோசனையோடு வினவினார் சங்கர். டாக்டர் குணா சுருக்கமாக நடந்தவற்றை எடுத்துரைத்தான்.



சங்கர் தன் 6 அடி உயரத்துக்கும் நிமிர்ந்து நின்றவர், “கொஞ்சம் அந்தப் பேப்பரக் குடுக்கிறிங்களா?” என சற்குணபாண்டியனிடம் தன் வலது கையை நீட்டினார்.



பட்டென்று அந்தப் பேப்பரைப் பரித்துக் கொண்ட ராசவேலு “டாக்டுரே என்னதென் நடக்குது இங்கெ, எங்கக் கிட்டெயெ பம்பாத்து வேலக் காட்டுரியா, யாருய்யா இவென் எங்கூர்லெ எங்களெ நாட்டாமப் பண்றவன்” எனச் சீறினான்.



“சார், கொஞ்சம் மரியாதையாப் பேசுங்க! நீங்க யாருக்கிட்டப் பேசுறிங்க தெரியுமா? இவர் மிஸ்டர் சங்கர், டாக்டர் புவனேஸ்வரி மேடத்தோட மாமனார் மத்திய மந்திரி கரிகாலனின் பி.எ. இவரோட அக்கா மகன் தான் நம்ம நிதித் துறை அமைச்சர் ராஜராஜன், புவனேஸ்வரி மேடத்தோட வீட்டுக்காரர்.” அறிமுகப்படுத்தினான் சங்கரை. சாதுர்யமாக நீ யாருடன் மோதுகிறாய் என்றுத் தெரிந்துகொள் மறைமுகமாக அறிவுறித்தினான் குணா.



ஒரு நர்ஸ் அவர்களை நோக்கி ஒடி வந்தவள் “டாக்டர் சார் மேடம் உங்கள சீக்கிரம் வரச் சொன்னாங்க, அப்புறம் சைன் பண்ண ஃபார்ம்ஸ் கேட்டாங்க சார்” என்றாள்.



“குணா நீங்க அப்ரேஷனுக்கான ஃபார்ம்ல மட்டும் சைன் வாங்கிங்க மத்த ஃபார்ம்ஸ நான் பாத்துக்குறேன்.” என்றார் சங்கர். “தாங்க்ஸ் அ லாட் சங்கர் சார்” அவருக்கு நன்றித் தெரிவித்துவிட்டு விடைபெற்றார் சுந்தரபாண்டியனின் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு.



சங்கர் தன் சகாக்களைப் பார்த்தார், மறு நிமிடம் ஒரு நாற்காலிப் போடப்பட்டது, அதில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவர்,



“அந்தப் பேப்பர்” என வினவினார். மறு நிமிடம் அது அவரதுக் கைகளில். “மிஸ்டர் சற்குணபாண்டியன் உங்களோட இப்போதய நிலைமை உங்களுக்குத் தெளிவாப் புரிஞ்சிருக்கும் இல்லையா? வந்து சைன் பண்ணுங்க” என்றார் அமர்த்தலாக.



சற்குணபாண்டியன் சங்கரை வெறித்தார், அந்தப் பார்வையை சங்கர் சட்டை செய்யவில்லை. சற்குணபாண்டியனுக்கு ஒன்று மிகத் தெளிவாக விளங்கியது குழந்தையின் உயிர் இவர்களால் பாதுகாக்கப் படும், மீறினால் அதன் பின் விளைவுகளை அவரும் அவரதுக் குடும்பத்துவரும் சந்திக்க வேண்டி வரும்.



“பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கானது”



இந்த வாக்கியத்தை சற்குணபாண்டியன் குடும்பத்திவர் யாவரும் மனதினில் நினைத்துக் கொண்டனர். சற்குணபாண்டியன் மெல்ல நடந்து சென்று ஒப்புதல் வாக்கு மூலத்தில் முதல் ஆளாகக் கையெழுத்திட்டார். குடும்பத்தினர் யாவரும் அவரைப் பின்பற்றினர்.



சுமார் இரண்டு மணி நேரம் கழித்துக் குழந்தையின் அழுகை ஒலிக் கேட்டது. அன்று வியாழக்கிழமை, பௌர்ணமி தை மாதம் 14 ஆம் தேதி 1994 ஆம் வருடம் (27th January 1994). அடுத்து அரை மணி நேரத்தில் டாக்டர் புவனேஸ்வரியும், டாக்டர் குணாவும் வெளியே வந்தனர்.



“ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சிது. பெண் குழுந்தை ஆனா ரொம்ப வீக்கா இருக்கா. எடை ரொம்பக் கம்மி அதனால் இன்குபேட்டர்ல வச்சிருக்கொம் இன்னும் 3 மணி நேரம் கழிச்சி துக்கிட்டு வருவாங்க, அப்ப பாக்கலாம்” எனக் கூறினார் புவனேஸ்வரி.



அப்பொழுது தான் சங்கரைப் பார்த்தவர் “வாங்க சித்தப்பா எப்படி இருக்கிங்க? என்ன திடீர்னு இந்தப் பக்கம்?” என வினவியபடி அவரோடு தன்னுடைய அறைக்குச் சென்றார்.



சற்குணபாண்டியன் குடும்பத்தினர் இறுகியிருந்தனர். எவரும் பேசும் நிலையில் இல்லை. அவர்கள் எண்ணத்தில் வியாபித்து எல்லாம் “பிறந்துவிட்டது மூதேவி பிறந்துவிட்ட்து” என்ற வாக்கியம் தான்.



மூன்று மணி நேரம் கழித்து அனைவரும் நிலவழகி அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுக்கு சென்றனர். அங்கு டாக்டர் புவனேஸ்வரி, டாக்டர் குணா, மந்திரி கரிகாலனின் பி.எ சங்கர் காத்திருந்தனர். டாக்டர் புவனேஸ்வரி சிஸ்டர் இன்பவதிக்கு கண் ஜாடைக் காட்டினார். தன் கையில் வெள்ளைப் பூந்துவளையால் சுற்றப்பட்டக் குழுந்தையைக் சற்குணபாண்டியன் வீட்டுப் பெண்டிரிடம் காட்டினாள்.



வேண்டா வெறுப்பாகப் பார்த்தவர்கள் அதிர்ந்துவிட்டனர். அங்கயற்கண்ணி “அ ஆஆஆ” எனத் தன்னையும் மீறிக் அலறிவிட்டாள் தன்னுடைய அக்காளின் மகவைக் கண்டு.



“இது எங்க வீட்டுப் புள்ளெ இல்ல” எனக் கத்தினார்கள் சுந்தரவல்லியும், வடிவாம்பாளும்.



“ஷ், இது உங்க வீட்டுப் பிஅள்ளதான், பிளட் டெஸ்ட், மரபணு சோதனை வேணாப் பண்ணிப் பாருங்க, அது மட்டுமில்லை நீங்க ஒழுங்கா கவனிக்காததாலக் குழந்தையோட இடதுக் கால் சூம்பிப் போயிருக்கு, கொஞ்சம் குட்டையாவும் இருக்கு?” அழுத்தமாகக் கூறினார் டாக்டர் புவனேஸ்வரி.



“நொண்டியா” என இளக்காரமாக வினவினார் சுந்தரவல்லி.



இவர்களின் இளக்காரத்துக்குக் காரணம்... பிறந்த அந்த நல்முத்து கறுப்பாக, மொட்டைத் தலையுடன், எலும்புதோல் போர்த்திய உடலுடன், சூம்பிவிட்ட குட்டையான இடதுக் காலுடன் இருந்தது...



அவள் பௌர்ணமியில் பிறந்த அமாவாசை!





கருப்பு அழகி வருவாள்













 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே :smiley6:

'என் கருப்பழகி-3 & 4' அத்தியாயங்களைப் பதிந்துவிட்டேன். ஆம்! நாளைய அத்தியாத்தையும் சேர்த்து பதிந்துவிட்டேன். ஞாயிறு அப்டேட் டிலே ஆகிவிட்டதல்லவா. அதனால் ஒரு சின்ன ஆஃபர் :)

உங்கள் கருத்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இரண்டொரு நாட்களில் உங்களின் தனிப்பட்டக் கருத்துகளுக்கு பதிலளிக்கிறேன் :)
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“என் கருப்பழகி”

அத்தியாயம் – 3

சற்குணபாண்டியன் சிங்கவேலு குடும்பத்தினர் செல்வமும், செல்வாக்கிற்கும் மற்றும் பெயர் பெற்றவர்கள் அல்லர்! வாட்டசாட்டமான தேகத்திற்கும், வசீகரமானத் தோற்றத்திற்கும், செக்கச் சிவந்த நிறத்திற்கும், வாளிப்பான மேனிக்கும் சொந்தக்காரர்கள். செல்வத்தின் செழுமை அவர்களின் மனதிலும், உடலிலும் ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் பிரதிபலித்தன. விரல் நுனியில் அழுக்குப்படாமல் பட்டும், பகட்டுமாக வாழும் மேந்தட்டு மக்கள்! அழகும், நிறமும் அவர்களது அடையாளம்! செல்வமும், செழிப்பும் அவர்களது கவுரவம்!! அதிகாரமும், ஆளுமையும் அவர்களது கம்பீரம்!!!



வெள்ளை என்பது அழகல்ல நிறம் !!!!!



அவள் பௌர்ணமியில் பிறந்த அமாவாசை! ஆம், அவள் கருப்பு நிலா!! அவள் குடும்பத்தினருக்கு, அவள் வெண்பட்டில் விழுந்தக் கரும்புள்ளி!!! வானிலிருக்கும் வெண்மேகமென அவள் குடும்பத்தினர் அழகுற வலம் வர, அந்த இளம்பிஞ்சு அதில் கறை படிந்தக் கருமேகமாகக் காணப்பட்டது.. கறை படிந்தக் கருமேகத்தை மறைத்து விழுங்கவே வெண்மேகங்கள் ஆசைக் கொண்டன! அந்தக் கறை படிந்தக் கருமேகம் தான், நாம் வாழும் பூமி செழிக்க மழையையும், சூரியனின் செங்கதிர்களால் உருவான வெப்பத்தைத் தணிக்கக் குளுமையையும் தருகிறது.



“நொண்டியா?” என சுந்தரவல்லி இளக்காரமாக வினவியவுடன், டாக்டர் புவேனஸ்வரியும், பி.ஏ சங்கரும் தங்களது பார்வைகளைப் பரிமாறிக் கொண்டனர்.



“இந்த கருத்த சுண்டெலிய, நம்மெ வீட்டுப் புள்ளன்னு சொன்னா கூறுகெட்டெவன் கூட நம்பமாட்டேய்ன்” என நொடித்துக் கொண்டாள் அங்கயற்கண்ணி.



“அன்ன(ம்) போல அம்சமா எம்மவ இருக்கெ, காக்கா குஞ்சிப் போல அசிங்கமால்ல இருக்குது இந்த மூதேவி.. இம்புட்டூண்டு இருக்குது? பொட்டக் குஞ்சு.. அதுலெயும் நொண்டிக் குஞ்சாலெ இருக்கு.. டாக்குடரே நெசமாத்தேன் சொல்லிறியளா! இது எம்மவ வவுத்துப் புள்ளன்னு? இல்ல எவளாவது போக்கத்தவப் பெத்துப் போட்டுப்புட்டு மாண்டுட்டாளா? அவப் புள்ளய சுளுவா எங்கத் தலையிலக் கட்டப் பாக்கிறியளா?” எனத் தனது மனதின் விகாரத்தை கடைப் பரப்பினாளர் வடிவாம்பாள்.



“எம்மா மந்திரி மருவளேஏ! நீ நல்லாத்தேன் படிச்சி டாக்குடுருப் பட்டம் வாங்குனியா? இல்ல மந்திரி மருமவன்னு சுளுவா ஒன்னய பாஸுப் பண்ணி விட்டாய்ங்களா?” என ஏளனமாக வினவினாள் சுந்தரவல்லி.



“வாத்தியார் புள்ள தான் மக்குன்னு சொல்லுவாங்க! இவங்க என்னடான மந்திரி வீட்டு புள்ள மக்கா தான் இருக்கும்னு சுத்தி வலைச்சி சொல்றாங்க? இந்தம்மாக்கு இருக்கிறக் கொழுப்பப் பாறேன்? மேடமும், சங்கரும் சாரும் எந்த ரியாக்சனும் காட்டாம இருக்கிறாங்க? நான் போய் கேட்டா என்னையும் இந்தம்மா இப்பிடிக் கேள்வி கேட்டு அசிங்கப் படுத்திரும். எதுக்கு வம்பு! இதுக்கிட்ட வாய் குடுத்து மீள நம்மாள முடியாதுப்பா சொக்கா... நாமப் பதுங்கியே இருப்போம் அது தான் நமக்கு நல்லது.” என வெளியில் பம்பிக் கொண்டு மனதினில் பேசிக் கொண்டான் டாக்டார் குணா.



“ஏன் கேக்குறேன்னா? ஒரு புள்ளெப் பொறந்தா அதோடெ ஐயனக் கொண்டுப் பொறக்கும், இல்ல அதோட ஆத்தாளக் கொண்டுப் பொறக்கும், அதுவும் இல்லன்னா அவிய்ங்க ஒறமொறயக் கொண்டுப் பொறக்கும். இங்கெ தேக்கு மரம் போல ஆகிருதியா எம்மவன் இருக்கா(ய்)ன், செதுக்கி வச்ச சந்தனக் கட்டெப் போல எம்மருமவ இருக்கா, நாங்களும் வாட்டசாட்டாமெ வனப்போடத்தேன் இருக்கோம். இந்தா இது யாரெக் கொண்டுப் பொறந்துருக்கு? அடங்கொப்புரானே இதுத் தெரியாமையா டாக்குடரம்மாவும், டாக்குடரய்யாவும் இம்புட்டு நாளா எல்லாருக்கும் புள்ளப் பேறுப் பாத்தியா!! ஆத்தீஈஈ! கேட்டியளா மந்திரிவூட்டுக் கணக்குப் புள்ள இந்த சேதியெ! ஒடிஞ்சிப் போன இந்தக் கருஞ்சுள்ளி எங்க வீட்டுப் புள்ளயாம்? நீங்களே ஒரு நாயத்தச் சொல்லுங்க கணக்குப் புள்ள…” எனத் தனது தாவங்கொட்டையில் கை வைத்துக் கொண்டு வியப்பது போல் எள்ளி நகையாடினார் சுந்தரவல்லி.



“இந்தாங்கம்மா, என்ன விட்டா நீங்கப்பாட்லப் பேசிட்டேப் போறிங்க? எங்க உயிரைக் குடுத்து இங்க வர ஒவ்வொரு உயிரையும் நாங்க எல்லாரும் காப்பத்திறோம். மேடம் சொன்ன மாதிரி உங்களுக்குத் தான் எல்லாம் தெரியுதே! அப்புறம் ஏன் உங்க மருமகள இங்கத் தூக்கிட்டு வந்திங்க? நீங்களேப் பிரசவம் பாத்துக்க வேண்டியது தானே? நாங்க டாக்டர் பட்டம் படிச்சி வாங்கினோமா இல்லைப் படிக்காம வாங்கினோமானுத் தெரிஞ்சிக்கவா இங்க வந்திங்க? மிஸ்டர் சங்கர் ஐ.பி.ஸ் ஆஃபிசரா இருந்தவருத் தெரியுமா? அவரு உங்களுக்குக் கணக்குப் புள்ளையா?



உங்க பணம், பதவிசு எல்லாம் உங்களோட. எங்களுக்கு நீங்களும் ஒன்னுதான், தெருவுலக் குப்பை அள்ளுர சுப்பனும் ஒன்னுதான். அதாவது மனுஷங்க.. எந்தப் பாகுபாடும் காட்டாம எல்லாருக்கும் வைத்தியம் பாக்குறது தான் எங்கத் தொழில் தர்மம், அந்த தொழில் தர்மத்தை நானோ இல்லை மேடமோ, இங்க வேலைப் பாக்குற யாரும் சிதைச்சது இல்லை. உங்க பண பலத்தையும், அதிகார பலத்தையும் காட்ட இது இடமில்லை, இது அரசு பொது மருத்துவமனை. அதை மனசில வச்சிக்குட்டு ஹாஸ்பிட்டலுக்குள்ள அடி எடுத்துவைங்க. மீறி மரியாதைக் குறைவா நடந்துக்கிட்டா? ஜாக்கிரதை..” எனத் தனது ஒற்றை விரலை உயர்த்தி எச்சரித்தான் டாக்டர் குணா, சற்குணபாண்டியன் குடும்பத்தை நோக்கி.



சற்குணபாண்டியன் குடும்பத்தினரின் செய்கைகளும், பேச்சுகளும் அவனது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தி இருந்தது. ஊனமாகப் பிறந்த பச்சிளம் குழந்தையை வார்த்தைக்கு வார்த்தை ‘நொண்டி’ ‘காக்கா குஞ்சு’ ‘கருத்த சுண்டெலி’ ‘கருஞ்சுள்ளி’ என்பனப் போன்ற ஏச்சுக்கள் அவர்களின் மேல் உள்ள பயத்தைப் போக்கி, அருவருப்பைத் உண்டாக்கியது. “சீ என்ன மனுஷங்க இவங்க? இல்ல இதுங்கெல்லாம் மனுஷ ஜென்மங்களே இல்ல” என மனதினுள் அவர்களைத் திட்டித் தீர்த்தார் டாக்டர் குணா.



டாக்டர் புவனேஸ்வரியின் மேல் மலை அளவு மரியாதை வைத்திருப்பவன் டாக்டர் குணா. ஏன், பக்தி என்றே சொல்லலாம். ஆம் குருபக்தி! பாகுபாடுப் பார்க்காமல் அனைவரையும் சமமாக பாவித்து சேவை செய்யும் அன்பு தெய்வம். தான் இந்தியாவிலேப் பெரியத் தொழில் அதிபரின் மகளென்றோ, மந்திரி வீட்டு மருமகளென்றோ, தமிழ்நாட்டின் வருங்கால முதல்வரின் மனைவியென்றோ சிறிதும் அலட்டலின்றி எல்லோருடன் தோழமையுடன் பழகுபவர். தனது பின்புலத்தை என்றுமே அவர் காட்டிக் கொண்டதில்லை. மகப்பேறு மருத்துவர் என்பதையேத் தனது அடையாளமாக எண்ணுபவர். அதனையேத் தனது அடையாளமாகக் கொண்டவர். அப்படிப்பட்டவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை செய்யவும் துணிந்த இந்த அரக்க குலக் கூட்டத்தை அடக்கத் தான், மந்திரி கரிகாலனின் பி.ஏவும், முன்னாள் காவல் துறை அதிகாரியுமான சங்கர் வரவழைக்கப் பட்டார்.



ஆம், சங்கரை வரவழைத்தது டாக்டர் குணா தான். டாக்டர் புவனேஸ்வரி அவரையும் அறியாமல் சங்கரின் பாதுகாப்பு வளையத்திற்குள் எப்பொழுதுமே இருப்பார். அந்த மருத்துவமனையில் வெகு சிலருக்கே டாக்டர் புவனேஸ்வரியின் பின்புலம் தெரியும் என்பதால், அவர்கள் மூலமாக அவரைக் கண்காணித்து, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தனர். ஒரு ரிப்போட்டை எடுக்க அப்ரேஷன் தியட்டரிலிருந்து வெளியே வந்த போது, வார்ட் பாய் கண்ணப்பன் தான் பார்த்ததையும், கேட்டதையும் குணாவிடம் மிக ரகசியமாகக் கூறினார். சூழ்நிலைக் கை மீறும் அபாயம் இருக்கவே, சங்கரைத் தொடர்பு கொண்டான் டாக்டர் குணா.



“சாது மிரண்டால் காடு கொல்லாது”



குணா என்னும் அமைதியான நதி, அசுரக் கூட்டத்தின் அட்டூழியங்களைத் காணச் சகிக்காமல் ஆர்ப்பரிக்கும் அலைகடலெனப் பொங்கி எழுந்துவிட்டது!



“என்னம்மா புவனா, நாகேஷ் மாதிரி இருந்த குணா, எம்.ஜி.ஆர் மாதிரி பொங்கிட்டாரு?” என டாக்டர் புவனேஸ்வரியின் காதுக்குள் நமட்டு சிரிப்புடன் கிசு கிசுத்தார் சங்கர்.



“நீங்க வேற, சும்மா இருங்க சித்தப்பா” எனப் புன்னகையுடன் பதில் கூறினார் புவனேஸ்வரி. அவருக்கு டாக்டர் குணாவைப் பற்றித் தெரியும். அன்பானத் திறமையான மருத்துவன், சின்ன வயது தான் ஆனால் நல்ல மனமுதிர்ச்சி. கொஞ்சமே கொஞ்சம் பயந்த சுபாவம்! இன்று, அந்தப் பயம் தெளிந்துவிட்டதில் அவருக்கு ஏக சந்தோசம்.



இந்த களேபேரத்திலும், நிலவழகி பிரசவ மயக்கத்திலிருந்து விழிக்கவில்லை. பேச்சு திசை மாறும் போதே டாக்டர் புவனேஸ்வரி நர்ஸ் இன்பவதியிடம் குழந்தையை இன்குப்பேட்டர் ரூமிற்குக் கொண்டு செல்லுமாறு சாடைக் காட்டினார். அதன்படி நர்ஸ் இன்பவதியும் குழந்தையுடன் எவரும் கவனிக்காத பொழுது அந்த அறையில் இருந்து நழுவினார். நடந்தக் களபேரத்தில் இதனை யாரும் கவனிக்கவில்லை, ஆனால் சங்கர் கவனித்துவிட்டு சாதுர்யமாக மற்றவர்களைத் திசை திருப்பினார்.

“சைலென்ஸ்! இது ஹாஸ்பிட்டல்.. பேஷண்ட் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்க. நீங்க பாட்ல சந்தைக் கடைக் கணக்கா சத்தம் போட்டா என்ன அர்த்தம்?” என சற்றுக் குரலை உயர்த்தி வினவினார் டாக்டர் புவனேஸ்வரி.



சற்குணபாண்டியன் குடும்பத்தினர் டாக்டர் குணாவின் மேல் பாய இருப்பதை சரியாகக் கணித்து, அவனை மறைத்தார் போல் நின்றுக் கொண்டார் சங்கர். சற்குணபாண்டியன் குடும்பத்தினரால் சங்கரைத் தாண்டி டாக்டர் குணாவை நெருங்க முடியவில்லை. அடிபட்டப் புலியென குரோதம் கொப்பளிக்கும் கண்களுடன் உறும ஆயத்தமாகினர்.



டாக்டர் புவனேஸ்வரி, அவர்களின் நோக்கம் புரிந்து முந்திக் கொண்டார். “யாரும் இங்க எதுவும் பேச வேண்டாம், மீட்டிங் ஹால்லப் பேசிக்கலாம். வாங்க எல்லாரும்” என முன்னே நடந்தார். மறக்காமல் குணாவிடம் திரும்பி “கமான் குணா, ஜாயின் மீ. சித்தப்பா மீட்டிங் ஹால் கீழ இருக்கு நீங்க இவங்க எல்லாரையும் உங்க கூடக் கூட்டிட்டு வந்துடுங்க” என்றார்.



“சரிம்மா புவனா” எனக் கூறிவிட்டு சற்குணபாண்டியன் குடும்பத்தினரைத் திரும்பிப் பார்த்துவிட்டு ‘போகலாம்’ என்பதுபோல் வாசலை நோக்கிக் தனது வலதுக் கையைக் காட்டினார். எல்லோரும் அசையாது அவரை வெறித்துப் பார்த்தனர். டாக்டர் புவனேஸ்வரியும், டாக்டர் குணாவும். பாதுகாப்பு படையினரைக் கடந்து அந்த அறையை தாண்டிச் சென்றுவிட்டனர்.



சற்குணபாண்டியன் ஆழ மூச்சிழுத்துக் கொண்டு முன்னே வந்தார், நிலவழகியை திரும்பிப் பார்த்துவிட்டு “வாங்கப் போவலாய்ம்” என்றார். “வாங்க” என முன்னே நடந்தார் சங்கர். எல்லோரும் இறுகிப் போய் அவர்களைப் பின் தொடர்ந்தனர். பாதுகாப்பு படையினரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.



மீட்டிங் ஹாலுக்குள் அனைவரும் நுழைந்தனர். பாதுகாப்பு படையினர் இருவர் மட்டும் வாயிலிலேக் காவலுக்கு நின்றனர். மீட்டிங் ஹாலுக்குள் ஒரு பெரிய மேசை, அதன் பின் ஆறு இருக்கைகள் இருந்தன. எதிரே 30 நாற்காலிகள் அமர்வதற்கு ஏதுவாக அடுக்கப்பட்டு இருந்தன. மேசைக்கு அருகே ஒரு தொலைக்காட்சியும், வி.ச.ஆரும் பொருத்தப் பட்டிருந்தன. சங்கருக்கு எதோப் புரிவது போல் இருந்தது.



சங்கர் திரும்பி அங்கிருந்தவர்களைப் பார்த்தார், அவர்களைத் தன் பார்வையால் அளந்தார். எவருக்கும் இந்த அறைக்குள் வரவழைப்பட்டதன் உண்மைக் காரணம் புரிபடவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். அவர்களைப் பார்த்து “ஏன் எல்லாம் நிக்கிறிங்க உக்காருங்க.. காலையிலே இருந்து ரொம்பத் துள்ளிக்கிட்டுத் தவ்விக்கிட்டு இருந்திங்கள்ள எல்லாரும்? உங்கக் காலுக்கெல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டாமா? கமான் ப்ளீஸ் டேக் யுவர் சீட்ஸ்.” என்றார் கேலியாக.



சற்குணபாண்டியன் குடும்பத்தினர் சங்கரை தங்கள் பார்வையால் சுட்டனர். சங்கர் அவர்களைப் புன்சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது புன்சிரிப்பு அவர்களை மேலும் வெறுப்பேற்றியது. சற்குணபாண்டியன் யோசனையுடன் நின்றார், பின்புத் தன் குடும்பத்தினரை ஒருப் பார்வைப் பார்த்துவிட்டு அமர்ந்தார். அவர்களும் அவர் அமர்ந்தப் பின்னர் அமர்ந்தனர்.



சங்கருக்கு சற்குணபாண்டியனின் ஆளுமையைப் பிடித்திருந்தது. “சும்மாவா இந்த ஆளாப் பாத்து எல்லாரும் அரண்டுப் போராங்க? கண்ணசைவுல மொத்தக் குடும்பத்தையும் கட்டுப்படுத்தி வச்சிருக்கார்! ம்ம்ம் க்ரேட் தான்!” என மனதிற்குள் சற்குணபாண்டியனைப் புகழ்ந்தார். மறந்தும் அதனைத் தன் முகத்தில் காட்டவில்லை.
 
Status
Not open for further replies.
Top