All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொக்கியின் 'என் கருப்பழகி' - கதை திரி

Status
Not open for further replies.

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“ராஜா உன் அம்மாவையும் தங்கையையும் பார்த்து இப்படி பேச எப்படி உனக்கு மனசு வந்தது? நீயா இப்படி மரியாதை இல்லாம நடந்துக்கிற???” என வினவினார் கஜேந்திரன்.



நக்கலாகச் சிரித்து விட்டு “நான் என்ன பொட்டப் பயலா! பொண்டாட்டியக்

கண்ணீர் விடவிட்டு வேடிக்கைப் பார்க்க! நான் ஆம்பளை! என் பொண்டாட்டி தல முடிய அவ பிடிச்சி உலுக்கி என்ன வாக்கியம் பேசினா?? அவள பிடிச்சி கன்னத்தில இரண்டு குடுத்திருந்தா நீர் பெரிய மனுசன்!! என் பொண்டாட்டிய பார்த்து கண்ட கண்ட தெருவுல பொறுக்குற நாயினு இதோ என்னய பெத்தேன் சொல்லிக்கிட்டு ஒருத்தி நிக்கிறாங்களே இந்த புண்ணியவதி சொல்லும் போது எப்படி இப்படி பேசலாம்னு கேட்டிருந்தா நீங்க பெரிய்ய்ய்ய மனுசன்! ஆனா இது எதையும் நீங்க செய்யலையே! ம்ம்ம்ம்ம் ஏன்? நான் அடிச்சதும் பேசினது மட்டும் கண்ணுக்குத் தெரியுது?? அவளுங்க செஞ்சதெல்லாம் கண்ணுக்கு புலப்படுலை. உங்க வீட்டு பொம்பளைங்க மட்டும் வெள்ள கட்டி, அடுத்தவன் பொண்டாட்டி மழையில கரையிற உப்புக் கல்லா???” என உறுமியபடி வினவினார் ராஜேந்திரன்.



கஜேந்திரனுக்கு பேரன் கூறிய “நான் என்ன பொட்டப் பயலா பொண்டாட்டியக் கண்ணீர் விடவிட்டு வேடிக்கைப் பாக்க?” என்கிறக் கேள்வி தனக்கானதோ என்று எண்ணித் துணுக்குற்றார். பேரனின் இந்த ரூபம் அவருக்குப் புதிது. “நீ பெரிய மனிசன் இல்லை” எனப் பேரன் சொல்லாமல் சொல்லிவிட்டதில் அவர் கொதித்துப் போயிருந்தார். அதோடு “உங்க வீட்டு பொம்பளங்க” எனப் பேரன் தன்னை அன்னியப் படுத்திக் கொண்டதை மனதினுள் குறித்துக் கொண்டார். பேரனின் கொதிப்பின் முன் எவராலும் இப்பொழுது நிற்க இயலாது என்பதனை தெளிவாகப் புரிந்து கொண்டவர், இந்தப் பிரிச்சனையை எப்படிக் கையாள்வது எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.



ராஜேந்திரன் தன் விரல்களைச் சொடுக்கி, தன் மனைவியைத் தோளோடு அணைத்துக் கொண்டு “இவள் என் மனைவி சுகுணா. நான் தான் சுகுணா, சுகுணா தான் நான். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்! இன்னைக்கு நடந்த மாதிரி யாராவது அவகிட்ட அத்துமீறி நடந்துக்கிட்டா, வெட்டி பொலிப் போட்டுவேன், ஜாக்கிரதை!” எனக் கடுமையாக எச்சரித்து விட்டுத் தன் மனையாளுடன் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.



சுகுணா கணவனின் ருத்ர அவதாரத்தில் வெளு வெளுத்துப் போயிருந்தாள். அதனால் சாவிக் கொடுத்த பொம்மையைப் போல ராஜேந்திரனுடன் சென்றாள்.



உள்ளேச் சென்ற ராஜேந்திரன் தனது பாட்டி சிவகாமியின் படத்தின் முன் மனைவி சுகுணாவுடன் பணிந்து எழுந்தார். சுகுணாவை தனக்கு மனைவியாய் அளித்தமைக்கு சிவகாமிக்கு மனதினில் நன்றிக் கூறிக் கொண்டிருந்தார். பின்பு பூஜை அறையில் சென்று தெய்வங்களை வணங்கிவிட்டு புது மனைவியை விளக்கேற்றும்படி வேண்டினார்.



இவை யாவையும் மொத்தக் குடும்பமும், வேலையாட்களும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். சிவகாமியின் படத்தின் முன் பேரன் விழுந்து எழுந்தது கஜேந்திரனின் முகத்தைச் சுளிக்க வைத்தது. தர்மேந்திரன் இதற்கு இடையில் அலுவலகத்தில் இருந்து பறந்து வந்துவிட்டார். மகனின் இந்தச் செயலை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மேகவதி மெல்லியக் குரலில் நடந்தவற்றைக் கணவனிடம் ஒப்புவித்தார். மகளின் நிலையைப் பார்த்த தர்மேந்திரனின் ரத்தம் கொதித்தது. ஆனால் பதறினால் காரியம் சிதறி விடும் என்பதால் முயன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு மகனுடன் பேச்சு வார்த்தையைத் தொடங்குவதற்காகக் காத்திருந்தார்.



பூஜையறையில் இருந்து வெளியே வந்த ராஜேந்திரன் தன் மனைவியுடன் யாரையும் கண்டுக் கொள்ளாது மாடிப் படிகளை நோக்கி நடந்தார். கஜேந்திரன் வாய் திறக்கும் முன் அவரை அமரும் படி செய்கை செய்துவிட்டு, தானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டு தன் மகனை “ராஜேந்திரா” என்று அழைத்தார் தர்மேந்திரன். மனைவியையும் மகளையும் அமரச் சொன்னவர், வேலையாட்களை நோக்கி அர்த்தப் பார்வையை வீசினார். அவரது கூரியப் பார்வைக்கு பயந்து அலறியடித்துக் கொண்டு எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டுனர் தங்கள் காதுகளைத் தீட்டிக் கொண்டு. ராஜேந்திரன், தான் பற்றிய மனைவியின் கரத்தை விடவும் இல்லை, நின்றவர் திரும்பி பார்க்கவுமில்லை.



“ராஜேந்திரா இப்படி நின்னா என்ன அர்த்தம்? வா இங்க வந்து உக்காரு. உங்கிட்ட கொஞ்சம் பேசனும்.” என்றார் தர்மேந்திரன். மனைவியின் கரத்தை விடாது பற்றிக் கொண்டு அவர்கள் யாவரும் அமர்ந்திருந்த சோபாவிற்கு எதிர் சோபாவில் மனைவியின்த் தோள்களை அணைத்தவாறு, கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டார்.



மகனின் இந்தத் தோரணைப் புதிது. எவரின் முன்பும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர மாட்டான், அது மரியாதை இல்லை என்று எண்ணுபவன். அதுவும் தந்தை மற்றும் தாத்தாவின் முன் கண்டிப்பாக இதுவரை இப்படியொரு தோரணையில் அமர்ந்ததில்லை. இன்று அமர்ந்து விட்டான்! இது எதனைக் குறிக்கிறது? அதுவும் மனைவி என்று எவளையோ ஒருத்தியை அருகில் அமர்த்திக் கொண்டு அவளின் தோள்களை அணைத்தவாறு, அவளை அடைகாப்பவன் போல! என்னையன்றி யாரும் என் மனைவியை நெருங்க முடியாது என்பதனை சொல்லாமல் சொன்னது அவன் தோரணை. தர்மேந்திரனுக்காப் புரியாது!! அவர் பற்களை நறநறத்தார்.



“என்ன ராஜேந்திரா தோரணையல்லாம் புதுசா இருக்கு! எங்க இருந்து

கத்துக்கிட்ட இந்த புது பழக்கத்தை எல்லாம்? எங்க முன்னாடி கால் மேல் கால் போட்டு உட்காருர பழக்கத்தை எல்லாம்? யாரு கத்துக் கொடுத்தா இதை எல்லாம் உனக்கு?” என சுகுணாவை பார்வையால் சுட்டவாறு வினவினார் தர்மேந்திரன்.



சுகுணா எவரின் பார்வையும் சந்திக்கும் திராணியற்று பயந்து தலை குனிந்து அமர்ந்திருந்தார். சோபாவில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டு “ம்ம்ம்ம் ஏன் நான் தோரணையா இருந்தா உங்களுக்கு காணாதா? அப்புறம் என்ன கேட்டிங்க? ஆங்! கால் மேல் கால் போட்டு உட்காருர பழக்கத்தை சத்தியமா இந்த வீட்டுல தான் கத்துக்கிட்டேன். என்ன அப்படி பாக்குறிங்க? உங்க பொண்டாட்டியும் மகளும் தான் ஸ்டைலா, ராயலா எல்லார் முன்னாடியும் கால் மேல் கால் போட்டு உட்காருவாங்க. இதோ இப்பவும் அப்படி தான் உக்காந்து இருக்காங்க. நீங்க வேணா கொஞ்சம் திரும்பி பாருங்களேன்.” என்றார் ராஜேந்திரன் நக்கலில் குரலில்.





தர்மேந்திரன் சட்டென தலையைத் திருப்பி தன் மனைவியும் மகளையும் பார்த்தார். அவர்கள் அவ்வாறு தான் அமர்ந்திருந்தனர். மகன் கேலியாக சொன்ன பிறகும் கீழே காலை இறக்கும் நோக்கம் அவர்களுக்குத் தெரிவதாக இல்லை.



“என்ன பார்த்தாச்சா? அப்ப நான் தோரணையா கால் மேல் கால் போட்டு

உட்கார்ரது தான் உங்க பிரச்சனை இல்லையா? எப்பவும் அடங்கி ஒடுங்கி உங்க காலுக்கு கீழே கிடக்கனும்னு நினைக்கிறிங்களா?? ம்ம்ம்ம்! அப்படியொரு நினைப்பு இருந்தா அதை அடியோட மனுசல இருந்து அடியோடு அழிச்சிடுங்க, அது தான் எல்லாருக்கும் நல்லது” என அழுத்திச் சொன்னார் ராஜேந்திரன்.



“அவங்க எப்பவும் அப்படி தான் ராஜேந்திரா, ஆனா நீ அப்படி இல்லையே! எல்லாம் புதுசா இருக்கே அதான் ஏன் அப்படின்னு கேக்குறேன்???” என அமைதியாக வினவினார் தர்மேந்திரன்.



“மாற்றம் ஒன்று தான் மாற்றம் இல்லாதது. கேள்விப்பட்டது இல்லையா?? இங்க நிறையப்பேர் சுழ்நிலைக்குத் தகுந்தாற்படித் தங்களை மாத்திக்கிறாங்க. பச்சோந்தி மாதிரி!! மாத்தி மாத்தி பேசுராங்க. அவங்களை எல்லாம் கம்பேர் பண்ணும் போது நான் எதுவுமே செய்யலியே.” எனத் தன் தாத்தாவை ஓரக் கண்ணால் பார்த்தபடி முகத்தில் ஆச்சர்யத்தைக் காட்டி வினவினார் ராஜேந்திரன்.



தர்மேந்திரன் அந்த சாடைப் பார்வைச் சென்ற திசையில் அமர்ந்திருந்த தந்தையை, யோசனையுடனும் ஆராய்ச்சியுடனும் நோக்கினார். முகம் சிவுசிவுக்க அமர்ந்திருந்த கஜேந்திரன், மகனின் ஆராய்ச்சிப் பார்வையை கவனித்து விட்டுச் சட்டென ஒன்றும் அறியாதவர் போல் முகத்தை வைத்துக் கொண்டார். ராஜேந்திரன் தன் தாத்தாவின் முக மாறுதலைக் கவனித்து விட்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.



கஜேந்திரன் கொதித்துப் போயிருந்தார். பேரன் தன்னைத் தொடர்ந்து சீண்டுவதாகவே எண்ணினார். “நேத்து பேஞ்ச மழையில முளைச்சக் காளா(ன்) இவன், எனக்கே வேட்டு வைக்கிறானா!! இருடா நான் உனக்கு வெடிகுண்டே வைக்கிறேன்” எனப் மனதினுள் பேரனைக் கருவிக் கொண்டு பகைமைப் பாராட்டினார்.



கஜேந்திரன் மகனின் ஆராய்ச்சிப் பார்வையில் இருந்துத் தப்பித்துக் கொள்ள “தர்மா இங்க என்ன நடந்திருக்கு, அதை எல்லாம் விட்டுட்டு அவனை ஏன் தோரணையா உக்காந்தி இருக்கன்னு கேள்விக் கேக்குற! இப்ப அது ரொம்ப முக்கியமா???” எனக் கண்டிப்புடன் வினவினார்.



தர்மேந்திரன் மகன் பக்கம் திரும்பி “ராஜேந்திரா உனக்கு நீ யாருன்னு தெரியும் தானே??? எப்படி இவ வலையில விழுந்த??? பெண் பித்துப் பிடிச்சிடுச்சா உனக்கு??? அப்படி பிடிச்சிருந்தா உன் தேவைதைத் தீர்த்துக்கக் காசுத் தூக்கிப் போட்டா ஆயிர(ம்) பேரு வருவாளுங்க, அவளுங்கக்கிட்ட போக வேண்டிய தானே?? அத விட்டுட்டு கல்யாணம் அது இதுன்னு. ராஜ பரம்பரையில் பிறந்தப் பொண்ண உனக்கு சம்பந்தம் பேசி முடிச்சாச்சி. உன் முன்னாடி தானே சம்பந்தம் பேசினோம்? இப்ப ஒன்னும் தெரியாதவன் மாதிரி எவளையோத் தெருவில் போகிறவளைக் கூட்டி வந்து பொண்டாட்டினு சொன்னா, நாங்க அப்படியே பூரிச்சிபோய் பல்லை இளிச்சிட்டு “வாழ்க வளமுடனு” அட்சதை தூவி ஆசிர்வாதம் பண்ணனுமா??? எங்களைப் பாத்தா இளிச்சவாய்ங்க மாதிரி தெரியுதா உனக்கு?” எனக் காட்டமானக் குரலில் வினவினார்.



சுகுணாவுக்கு கண்கள் நிறைந்துவிட்டன. அவள் உடல் ஆடிற்று. அவள் வாழ்நாளில் இப்படிப்பட்ட வார்த்தைகளை இதுவரை செவிமடுத்தது இல்லை. தவறு செய்தாலும் அதை அமைதியுடன் எடுத்துச் சொல்லும் பெற்றோருக்குப் பிறந்தவள். இரு அண்ணன்களின் செல்லத் தங்கை. பாட்டி தாத்தாவிற்கு பாசமிகுப் பேத்தி. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்த அவளை என்னவெல்லாம் சொல்லிவிட்டார்கள். அப்பப்பா! தாங்க இயலவில்லையே!



“உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?

நிலைக்கெட்டுப் போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது!!!”



ராஜேந்திரன் கோபத்தில் மூக்கு விடைக்கப் பல்லைக் கடித்தார், இவர்களை!!!!! “வலை வீசறது, வலைப் போட்டுப் பிடிக்கிறது எல்லாம் உங்கக் குடும்பத்து வேலை. நான் எங்க பாட்டி சிவகாமி மாதிரி ரொம்ப நல்லவன். சில களவானிப் பசங்க மாதிரி இவ தான் என்ன மயக்குனான்னு பிற்காலத்தில பொய் சொல்ல மாட்டேன். நான் தான் இவகிட்ட மயங்கி இவளைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சேன்.



எனக்கு பெண் பித்துப் பிடிக்கலை, இனிமேலும் பிடிக்காது. ஏனா, நான் ஏகப் பத்தினி விரதன். எங்கிட்ட எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. அது தொழில் வட்டாரத்துல கூடத் தெரியும். நீங்களும் உங்க அப்பாவும் எத்தனை பொண்ணுங்களுக்குக் காசத் தூக்கிப் போட்டு இருக்கிங்க?? சுமார் 1000 பேர் இருப்பாங்களா!! நான் வேணா ஹோட்டல்ஸ் பெயரை எல்லாம் ஞாபகப்படுத்தவா? வெளியூர் கூடப் போறது உண்டு போல?? உங்க மகளோட கலேஜ் மேட் கூடப் போன வாரம் போனிங்களே கோவா ரிசார்டுக்கு, மறந்துப் போச்சா!!!



நான் சட்டப்படி கல்யாணம் பண்ணிருக்கேன், எவனாலயும் எங்களை ஒன்னும் பண்ணமுடியாது. அப்புறம் என்னக் கேட்டிங்க ராஜ குடும்பத்து சம்பந்தமா? என்னைக் கேட்டிங்களா? எனக்கு பிடிச்சிருக்கானுக் கேட்டிங்களா? நீங்க பாட்டுக்கு உங்க இஷ்டத்துக்கு முடிவு பண்ணினா! நான் என்ன பொருளா??? மகாராணி அவக் கேட்டானுத் தூக்கிக் கொடுக்கிறிங்க. இதுக்குப் பேரு என்னத் தெரியுமா???



உங்களை மாதிரி ஒருத்தியக் காதலிச்சிட்டுப் பணத்துக்காக வேற ஒருத்தியக் கல்யாணம் பண்ணிக்க என்னால முடியாது. மனசுக்கப் பிடிச்சவளோட வாழ்க்கையை வாழ்ந்துக்கிட்டு, திறமையா சம்பாதிக்கிறவன் தான் உண்மையான ஆம்பளை. நான் உண்மையான ஆம்பளையா இருக்கேன். இருப்பேன்..



உங்களை யாரையும் எங்களை வாழ்த்தச் சொல்லலியே! என்னோட டிகிரி செர்டிஃபிகெட்ஸ எடுக்க வந்தேன். நான் பார்க் டைம் வேலைப் பார்த்து தான் எட்டாவுதல இருந்து படிச்சேன் தெரியுமா??? உங்க கம்பெனியில நான் பார்த்த வேலைக்கானச் சம்பளத்தை நீங்க கொடுக்கலை. அது இங்க நான் தங்கினதுக்கும் சாப்பிடதுக்கும் எல்லாத்துக்கும் சேர்த்து கழிச்சிடுங்க.



என் பொண்டாட்டியோட இங்க நிம்மதியா இருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியும். அதோட எங்களுக்குப் புள்ளைங்கப் பிறந்தா அவங்க உங்களை மாதிரி சுயநலம் பிடிச்சப் பணப் பேய்களா இருக்கக் கூடாது பாருங்க! அதனால தான் நான் தனியா போறேன். உங்க சொத்து சுகங்கள் எதுலையும் எனக்குப் பங்கு வேண்டாம். உங்க ஆசை மகளுக்கே எல்லாத்தையும் கொடுங்க. லீகல் டாக்குமண்ட்ஸ் ரெடிப் பண்ணுங்க எல்லாத்துலையும் நான் சைன் பண்ணிடறேன்.



ஏதோ ஒருக் குக்கிராமத்துல பிறந்த குடிப்பெயர்ந்து வந்த மிஸ்டர் கஜேந்திரனும் என் பாட்டி சிவகாமியும் இங்க வந்து வாழ்ந்து காட்டலையா! சாரி மிஸ்டர் கஜேந்திரன் மட்டும் தான் சந்தோசமா வாழ்ந்தாரு. என் பாட்டி ஒரு வினாடிக் கூட சந்தோசம் நிம்மதியும் இல்லாம வாழ்ந்தாங்க. நான் மிஸ்டர் கஜேந்திரனும் இல்லை, என் மனைவி சிவகாமியும் இல்லை. என் பாட்டி சிவகாமி வாழாத சந்தோசமான வாழ்க்கையையும் என் மனைவி சுகுணா சேர்த்து வாழப்போறா என்னோட.



“எலி வலையா இருந்தாலும் தனி வலை வேணும்”. எனக்கே எனக்கான வீட்டில் நான் ராஜாவாவும் என் மனைவி மகாராணியாவும் எங்க பிள்ளைங்களோட நான் சந்தோசமா இருக்கப் போறேன்.



அப்புறம் என் பொண்டாட்டியை அவ இவன்னு சொன்னதுக்கு பல்லத் தட்டிக் கையில குடுத்துருப்பேன். ஆனால் திருந்தாத ஜென்மங்களுக்கு கிலாஸ் எடுக்க என்னால முடியாது, அதுக்கு நான் ஆளும் இல்லை. எப்படியோ போங்க! என்ன ஆள விட்டாப் போதும் .



சுகுணாமா வாடா மேலப் போய் என் திங்கஸ் எடுத்துட்டு நம்ம கிளம்பலாம். பக்கத்துல எதாவது ஹோட்டலில் லன்ச் முடிச்சிக்கலாம். சரியாடா..” என மனைவியிடம் பேசியபடி விறுவிறு என மாடியேறிச் சென்றுவிட்டார்.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நால்வரும் அசையாமல் அமர்ந்திருந்தனர். மேகவதி டீப்பாயின் மேல் இருந்த அலங்கார பொம்மையை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். கணவரின் நடவடிக்கைகளை அறிந்தும் அறியாதவர் போல் இருப்பார். தன்னை எதற்காக மணந்தார் என்கிற காரணமும் அவர் அறிந்ததே. ஹை கிலாஸ் சொசைட்டியில் இவை யாவும் சர்வ சாதாரணம். பணம், அந்தஸ்து, அழகு இவை தான் பிராதனப்பட்டவை!! குணத்திற்கு அங்கு இடமில்லை. ஆனால் மகனின் வாயிலாகக் கணவனின் லீலைகளைக் கேட்க மணம் சற்று வலிக்கத் தான் செய்தது. என்ன இருந்தாலும், அவரும் பெண் தானே! தன் புத்தம் புது மனைவிக்காக தங்களுடன் சண்டைப் போடும் மகனைக் கண்டு ஆச்சரியமாகவும் ஆத்திரமாகவும் வந்தது. ஒரு நாளும் தன் கணவர் தர்மேந்திரன் தன் தந்தையிடம் தனக்காக இப்படி வாதிட்டதில்லையே! மனைவியின் மேல் கை வைத்தத் தங்கையை அடி பின்னி எடுத்துவிட்டானே! என் மகன் ஹீ மேன் தான்! என மனதுக்குள் எண்ணிக் கொண்டார் மேகவதி.



வசுந்தராவிற்கு தந்தை மற்றும் தாத்தாவைப் பற்றி அரசல் புரசலாகத் தெரியும். ஆனால் மகள் வயதொத்த பெண்ணோடு அதிலும் அவளுடன் பயின்ற பெண்ணோடு உறவு வைத்திருந்தார் என்பதை ஜீரணிக்கச் சற்றுச் சிரமப்பட்டாள். இவை யாவையும் கம்பெனி கணக்காளரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். தன் முதுகை ஆதரவோடுத் தடவிக் கொடுத்த மகள் வசுந்தராவை, மேகவதி வெறுமையாக நோக்கினார். தாயின் கண்கள் சீவன் இன்றியிருந்ததைக் கண்ட வசுந்தராவிற்கு தன் வீட்டு ஆண்மக்கள் மீது கோபம் கொள்ள வைத்தது. ஆனால் அவளின் கோபத்திற்கு அங்கு மதிப்பிருக்காது என்கிற உண்மையை உணர்ந்தவளாக லேசாகப் பெருமூச்சிட்டாள் வசுந்தரா.



ராஜேந்திரன் தனது தாத்தா கஜேந்திரனை மறைமுகமாகச் சாடினார் என்றால், தன்னுடைய தந்தை தர்மேந்திரனை நேரடியாகவேத் தாக்கிவிட்டார். இருவரும் கொதித்துக் கொண்டிருந்தனர்.



மகனின் “நீ ஆண்மகன் இல்லை” என்கிற மறைமுகமானக் கூற்று தர்மேந்திரனை வெகுவாகக் காயப்படுத்தியது. “தந்தையின் சொல்லுக்கு இணங்கி தான் அவர் மேகவதியை மணந்து கொண்டார், அதன் மூலம் பணமும், அந்தஸ்தும் கிடைத்தது. ஆனால் தன்னுடையச் சில தேவைகளைப் பூர்த்திச் செய்ய மனைவி ஒத்து வரமாட்டாள் எனப் புரிந்து கொண்டார். மது! மாது! மூலம் அதனை பூர்த்திச் செய்து கொண்டார் தர்மேந்திரன். இதை என்றுமே தவறாக அவர் எண்ணியதில்லை. என்னுடையத் தேவைகளை நான் பூர்த்திச் செய்துக் கொள்வதில் இதில் என்ன தவறு என்று நினைப்பவர். ஆனால் மகன் அதனை தவறென்று கூறுகிறானே!!! அவன் வாழ்க்கைப் பாடம் படிக்க வேண்டும். கண்டிப்பாகப் படிப்பான். உனக்கு நான் கற்பிக்கிறேனடா!!” என மகனை நினைத்து மனதினில் கறுவினார் தர்மேந்திரன்.



கஜேந்திரன் “சே, இந்த தர்மன் இன்னொருப் பையனைப் பெத்துக்கிட்டு இருக்கலாம். இப்படி கூறுக் கெட்ட விளாங்கா வெட்டிப் பயலோட மல்லுக்கட்ட வேண்டியதில்லையே! இப்போ போடா நாயேன்னு போவலாம். ஆனா இத்தனை வருஷம் சம்பாதிச்ச சொத்து எல்லாம் எவனோ ஒருத்தன் அனுபவிக்கிறதா?? அய்யோ எனக்கு நெஞ்சி வலி வரும் போல இருக்கே. இந்த பயலுக்கு எவ்வளவு தைரியம்??? தர்மனை எப்படிக் கேள்விக் கேட்டான்!! இவனுக்குத் தொழிலைத் தவிர ஒன்னும் தெரியாது அப்படின்னு நினைச்சிது தப்பு. ஊமைக் கோட்டான் மாதிரி இருந்திக்கிட்டு எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கான். சிவகாமியைப் பத்தியும் உள் குத்தோட பேசுறான். பயக்கிட்ட உஷாரா இருக்கனும், இல்லை நம்மளையேப் பலிப் போட்டுவான்!” என மனதிற்குள் தன்னையும் மீறிப் புலம்பினார் கஜேந்திரன்.



“தட் தட் த்ட்ட்ட்ட் தட்ட்ட் தட்ட்ட்” ராஜேந்திரன் கையில் பெட்டியுடன் மனைவியை அணைத்தவாறு வேகமாக மாடிப் படிகளில் இருந்து இறங்கி வாயிலை நோக்கி வேக எட்டுகள் எடுத்து வைத்தார்.



“ராஜா” “ராஜேந்திரா” “ராஜ்” “அண்ணா” என வித விதமானக் குரல்கள் காற்றோடு கரைந்து காணாமல் போயின. ராஜேந்திரன் எவரின் குரலுக்கும் கட்டுப்படாமல் தனது மனைவியுடனானச் சந்தோசமான வாழ்விற்காக சுபிக்‌ஷத்தை விட்டுச் வெளியேறிவிட்டார்!



சுகுணாவுடன் ராஜேந்திரனின் வாழ்க்கை சுபிக்‌ஷமாக இருக்குமா?



கருப்பு அழகி வருவாள்
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே :smiley6:
இதோ வந்துட்டேன் .... 'என் கருப்பழகி'-6வது அத்தியாயம் பதிந்துவிட்டேன் :)

நள்ளிரவாகிவிட்டதால், 7,8 அத்தியாயங்கள் நாளைப் பதியப்படும்...
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கருப்பழகி”

அத்தியாயம் – 6

ராஜேந்திரன் வீட்டை விட்டு வெளியேறியதை அங்குள்ளவர்களால் தடுக்க இயலவில்லை. ராஜேந்திரன் அவர்கள் தடுப்பதற்கு இடம் அளிக்கவும் இல்லை. வெளியேறி விட்டான்! இந்த வீட்டின் ஒரே ஆண் வாரிசு, திரன் குழுமத்தின் வருங்காலத் தலைவன் தன் திருட்டு மனைவியுடன் சாமார்த்தியமாக நழுவி ஓடிவிட்டான்!



வசுந்தரா “மாம்ம்ம்ம் என் என்..ன்ன் என்னோட கல்யாணம்?? எனக்கு அந்த பிரின்ஸோட கல்யாணம் நடக்காதா???” என ஓங்காரக் கூச்சலிட்டு கத்தியபடி வினவினாள்.



தாய்க்கும் அந்தக் கலக்கம் இருக்கத் தான் செய்தது. ஆனால் மகளின் நிலையைக் கருத்தில் கொண்டு அவளை அணைத்து முதுகை வருடிக் கொடுத்துவாறே கணவனையும், மாமனாரையும் வெறித்தார். அவர்கள் அசராமல் மேகதியின் பார்வையைத் தாங்கி நின்றனர். இது போன்ற எத்தனைப் பார்வைகளை அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்விலும், தொழில் வட்டத்திலும் பார்த்திருப்பார்கள்!



தர்மேந்திரன் தொண்டையைச் செறுமிக் கொண்டு “வசு! லிசன் டு மீ, உன் அண்ணன் பண்ணி இருக்கிறது பொம்மக் கல்யாணம். என்ன அதிக பட்சமா ரெஜிஸ்டர் பண்ணி இருப்பான்! இன்னைக்கு காலைல தான் கல்யாணம் நடந்திருக்கு, சோ ஈசியா ரெஜிஸ்டர்ல மாத்திடலாம், ஒகே. மேகா நீ வசுவ அழச்சிட்டு ஹாஸ்பிட்டல் போயிட்டு வா, பாரு உடம்பெல்லாம் வரி வரியா வரி குதிரை மாதிரி இருக்கு! சம்பந்தி வீட்டுக்காரங்க வந்தா என்ன நினைப்பாங்க???





வசு நீ பிஸ்னஸ் சாம்ராட் கஜேந்திரனோட பேத்தி, இண்டஸ்ட்ரியலிஸ்ட் தர்மேந்திரனோட பொண்ணு அத மறக்காத. நம்மால் முடியாததுனு இந்த உலகத்துல எதுவும் இல்லை. உன் அண்ணன் யாருக்கும் தெரியாமா திருட்டு கல்யாணம் பண்ணி இருக்கான். அது தான் நமக்கு இப்ப பெரிய பிளஸ் பாயிண்ட்! நாமளும் யாருக்கும் தெரியாம அந்த பொண்ணையும் அவ குடும்பத்தையும் இல்லாம ஆக்கிட்டா! கல்யாணத்த வாயிட் ஆக்கிடலாம். நாளைக்கு மார்னிங் யு வில் ஹியர் தி குட் நீயுஸ். நௌ கமான் கோ கெட் ரெடி..ஹாஸ்பிட்டல் போயிட்டு வா.” எனச் சொல்லியவாறே தொலைப்பேசியை நோக்கி நடந்தார். கஜேந்திரனும் யோசனையுடனே மகனுடன் சேர்ந்து சென்றார்.



வசுந்தராவும், மேகவதியும் தர்மேந்திரனின் மேல் உள்ள நம்பிக்கையில் சற்று சந்தோசமாகவே மருத்துவமனைக்குச் சென்றனர். அவர்களுக்குத் தெரியவில்லை இவர்களின் சந்தோசத்திற்கு ஆயுள் குறைவு என்று. அவர்கள் ராஜேந்திரனை இன்னும் சரியாக கணிக்கவில்லை என்பதற்கானச் சான்றுதான் அந்த அற்ப சந்தோசம். ராஜேந்திரன் அவர்களின் தலையில் ஒரு மலை அளவு மண்ணைக் கொட்டி கவிழ்த்து இருக்கிறார் என்று அன்று மாலையேப் புரிந்து கொண்டு எரிமலையாக வெடித்துச் சிதறினர். அந்த எரிமலையின் நெருப்புக் குழம்பு ராஜேந்திரனை சுட்டுப் பொசுக்கியதா???



ராஜேந்திரன் தன் தாத்தா, தந்தை இவர்களிடம் தான் தொழிலைக் கற்றார். அவர்களின் சுழ்ச்சமங்களையும் சூழ்ச்சிகளையும் அவர் நன்கு அறிவார். தன்னுடைய காதல் விவகாரம் கடுகளவு வெளியே கசிந்தால் கூட தன் குடும்பத்தினர் தன்னுடைய காதலியை அழித்துவிட்டு, அவரைக் கடத்திக் கொண்டு போய் அந்த ராஜகுமாரிக்கு கட்டாயத் தாலி கட்ட வைப்பார்கள் என்பதைத் திண்ணமாக நம்பினார். அது ஒரு வகையில் உண்மையும் கூட.



தன் குடும்பத்தினரின் செல்வாக்கு மெட்ராஸ் மாநகரத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலும் வலுத்து இருக்கிறது என்பதினால், தன் காதலி சுகுணாவின் சொந்த ஊரான தஞ்சையில் உள்ள மாரியம்மன் கோயிலில் மாலை மாற்றித் தாலி கட்டி சுகுணாவை தன்னுடைய இணையாளாக ஆக்கிக் கொண்டார் ராஜேந்திரன். சுகுணாவின் குடும்பத்தினர் இந்தத் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தனர். பின்பு பதிவாளர் அலுவலகம் சென்று சட்டப்படி தனது திருமணத்தையும் பதிவு செய்து வந்தார்.



ராஜேந்திரனுக்கு தன் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற வெறி இருந்தது. திரன் குரூப் அஃப் கம்பெனிஸில் தன்னுடைய சுதந்திரம் பறிக்கப்பட்டு விடும் என்பதால் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்தார். தனது பாட்டி சிவகாமியின் பெயரில் தொடங்கவிருக்கும் புதிய நிறுவனத்தின் வங்கிக் கடன் சம்பந்தப்பட்ட விவகாரத்திற்காகத் தான் அன்று அவர் அந்தப் பிரபலமான வங்கிக்கு வந்திருந்தார், தன் வாழ்க்கைத் துணை சுகுணாவையும் கண்டு கொண்டார்!



சுகுணாவைக் கண்ட பின் புதிய நிறுவனம் தொடங்குவதில் அதிக தீவிரம் காட்டினார். தொடக்க நிறுவனம் என்பதால் கஜேந்திரனுக்கோ, தர்மேந்திரனுக்கோ எந்த வித சந்தேகமும் வரவில்லை. வங்கிக் கடனுக்கான சூயுரிட்டி கையழுத்தை அவரது தொழில் தொடர்பில் உள்ள உற்ற நண்பனிடம் பெற்றுக் கொண்டார். ஓசையில்லாமல் ஐந்து மாதக் காலமாக தன்னுடைய நிறுவனத்தைச் செங்கல் செங்கல்லாக செதுக்கினார். சிறிய, பெரிய சருக்கல்களைச் சந்தித்த போதும் அவர் தனித்து நிற்பதில் உறுதியாக நின்றார்.



தனக்கு ராஜ வம்சத்துப் பெண்ணுடன் திருமணம் முடிவான மறுநாளே, திரன் குரூப் அஃப் கம்பெனிஸில் தனது ஜெ.எம்.டி பதவியைச் சத்தமில்லாமல் ராஜினாமா செய்துவிட்டு, அந்த ராஜினாமா கடிதம் ஒரு வார இடைவெளிக்குப் பிறகு தனது தாத்தா மற்றும் தந்தையின் கண்பார்வைக்கு வரும்படி பார்த்துக் கொண்டார்.



தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு சில பால்ய நண்பர்களின் உதவியுடன் திருமண ஏற்பாடுகளைச் செய்து, மூன்று நாட்களுக்குப் பிறகு மணமுடித்துக் கொண்டார். திருமணத்தை முடிந்துக் இரண்டு நாட்கள் கழித்து கையில் அரசு முத்திரைக் குத்தப்பட்ட திருமணப் பதிவு சான்றிழதுடன் தஞ்சையில் இருந்து நேராக மெட்ராஸில் உள்ள ஐ.ஜி அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு தனக்கோ தன் மனைவிக்கோ, மனைவியின் குடும்பத்தாருக்கோ இந்தக் காதல் திருமணம் காரணமாக தனது குடும்பதினிரால் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி ஆபத்து ஏற்பட்டால் தனது குடும்பத்தினரே அதற்கு முழு முதற் காரணம் என்றும், அதனால் அவர்களிடம் இருந்து தங்களுக்கு தக்கப் பாதுகாப்பு அளிக்கும் படியும் புகாரைப் பதிவு செய்துவிட்டு, முதல் தகவல் அறிக்கையை நேரடியாக வாங்கிக் கொண்ட பின்பு தான் அசுவாசமாக உணர்ந்தார். ஐ.ஜி தனக்கு நன்கு பழக்கம் உள்ளவர் என்பதால், தான் அளித்த புகார் தன் வீட்டினரிடம் சென்று அடையாமல் பார்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார். பின்பு தன் இல்லாளுடன் சுபிக்ஷத்துக்குச் சென்றார்.



மனைவியிடம் தன் குடும்பத்தினரின் குண நலன்களை எடுத்துச் சொல்லவும் அவர் தவறவில்லை. வழியெங்கும் சுகுணாவை தைரியப் படுத்திக் கொண்டே வந்தார். தன்னுடைய மனைவியுடனானத் தனிக் குடும்ப வாழ்விற்கு அவர் எல்லாவற்றையும் எந்தக் குறையும் இன்றித் தயார் செய்து வைத்து இருந்தார். தன்னுடைய வீட்டினருக்கு தன் திருமணத்தைத் தெரியப்படுத்தவே அவர் இல்லாளுடன் சுபிட்சத்துக்குச் சென்றார். மற்றபடி அவருக்கு அங்குத் தங்கும் நோக்கம் எல்லாம் சிறிதும் இல்லை. அவர் பூகம்புத்தை எதிர்பார்த்துத் தான் சென்றார். அவர் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. பூகம்பம் வெடித்தது!!!! அதில் வெடித்துச் சிதறியது திரன் குடும்பத்தினரே. ஆனால் அது ராஜேந்திரனை இம்மியளவும் பாதிக்கவில்லை.



தர்மேந்திரன் தனது வலது கையைத் தொலைப்பேசியில் அழைத்து இன்னும் இரண்டு மணி நேரத்தில் என்ன என்னச் செய்ய வேண்டும் என்பதனை பட்டியலிட்டார். பட்டியலிட்டக் காரியங்களை முடித்த பிறகு தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு உத்தரவிட்டார். யோசனையுடன் அமர்ந்திருந்த தந்தை கஜேந்திரனைக் கண்ட தர்மேந்திரன் “என்னப்பா யோசிக்கிறிங்க?” என்று வினவினார்.



“தர்மா, நாம ராஜாவ குறைவா எடைப் போடுறமோனு தோணுதுப்பா. நீ நினைக்கிற மாதிரி அவனையும், அந்த பொண்ணையும் அவ்வளவு ஈசியா தூக்கிடமுடியாது. அவன் நம்மகிட்ட தான் தொழில் கத்துக்கிட்டான். நாம எப்படி யோசிப்போம், எப்படி செயல்படுவோம் இதெல்லாம் அவனுக்கு அத்துபடி. கண்டிப்பா பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணிருப்பான். கொஞ்சம் யோசிச்சா உனக்கே புரியும். இங்க தைரியமா பொண்டாட்டியோட வந்துட்டுப் போயிருக்கான். வசுவ வேலைக்காரங்க முன்னாடி வெளக்கமாத்தால சாத்தியிருக்கான். மேகவதி, உன்னை, என்னை ஒருத்தரையும் விடாம விளாசுறான். எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்? இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? உனக்கு புரியலையா தர்மா?? அவன் எல்லாத்துக்கும் தயாரா இருக்கான்னு தான் அர்த்தம். ஆனா என்ன செஞ்சு வச்சிருக்கான்னு தான் புரியல. எதோ தப்பா நடக்கப் போகுதுன்னு என் உள்ளணர்வு சொல்லுது தர்மா.” எனச் சொல்லிவிட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து தன் இமைகளை மூடிக் கொண்டார்.



தர்மேந்திரனுக்கு தந்தையின் கூற்றில் உள்ள உண்மை விளங்கத்தான் செய்தது. ஆனால் நூற்றில் ஒரு சதவீதமாக அவர் வெற்றி கொண்டு விட்டால்! அவருடைய குடும்ப கௌரவம் காக்கப்பட்டு அவரது மகளின் திருமணமும் திட்டமிட்டபடி விமர்சையாக நடைபெறும். அதனால் அவரால் ஆன நிழல் முயற்சிகளை மேற்கொண்டார். இருந்தாலும் தந்தையின் வார்த்தைகள் அவரை உறுத்திக் கொண்டே இருந்தது.



கஜேந்திரனின் கூற்று உண்மையாயிற்று! அடுத்த இரண்டரை மணி நேரத்தில் தர்மேந்திரனின் வலதுகை வேகமாக வீட்டினுள்ளே நுழைந்தான். தர்மேந்திரனும், அவரைத் தொடர்ந்து கஜேந்திரனும் எழுந்து கொண்டனர். வேகமாக தங்களது அலுவலக அறைக்குச் சென்றனர். தொழில் ரகசியம் பேசுவதற்கென வடிவமைக்கப்பட்ட அறை. அறையினுள் பேசுவது வெளியில் கேட்காது.



தர்மேந்திரனும் கஜேந்திரனும் அங்குள்ள சோபாவில் அருகில் அமர்ந்து கொண்டனர். வலதுகை தன் கையில் இருந்த ஒரு செய்தித்தாளை நீட்டினான். தர்மேந்திரன் யோசனையுடன் அதனை தன் கைகளில் வாங்கினார். அது ஒரு பிரபல நாளிதழ். முதல் பக்கத்தின் கீழே வலது கோடியில் அவரது மகன் திருமணக் கோலத்தில் தன் புது மனைவியுடன் புன்சிரிப்புடன் நின்றிருந்தார். அந்த திருமணப் படத்தின் கீழே இருந்த செய்தி அவரை முற்றிலும் சாய்த்துவிட்டது என்றால் அது மிகையாகாது.



என் அன்புக்குரியவர்களுக்கு,

ஒரு சந்தோசமான அறிவிப்பு. நான் தை மாதம் 5ஆம் தேதி 1978 (Jan 18th 1978) அன்று செல்வி சுகுணா என்பவரைத் தஞ்சையில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டேன். நாளை மாலை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஹோட்டல் ராயல் பேலஸில் எங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி விமர்சையாக நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தாங்கள் சுற்றமும், நட்பும் சூழக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும், எங்களை மனப்பூர்வமாக வாழ்த்தி ஆசிர்வத்திக்கமாறும் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

ராஜேந்திரன்

நிறுவனர், சிவகாமி இண்டிஸ்ட்ரீஸ்

சென்னை-5



“தர்மா என்னாச்சு? ஏன் இப்படி உக்காந்திருக்க?” எனத் தனது மகனை உலுக்கியபடி பதட்டத்துடன் வினவினார் கஜேந்திரன். தர்மேந்திரன் பேசா மடந்தையாக தன் கையிலிருந்த செய்தித்தாளை தந்தையிடம் நீட்டினார்.



கஜேந்திரன் அவசரமாக அதனை வாங்கிப் பார்த்தார். எதோ படம் மங்கலாகத் தெரிந்தது. தன் சட்டை பையிலிருந்த தன்னுடைய மூக்குக் கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டு பார்த்தார். இப்போது தெளிவாகத் தெரிந்தது. மகனின் அசைவற்றத் தோற்றதிற்கானக் காரணம் புலப்பட்டு விட்டது. கடைசியில் அவர் பயந்தது போலவே நடந்து விட்டதே!



அறையின் கதவு தட்டப்பட்டது. மருமகளும், பேத்தியும் வந்துவிட்டனர் எனப் புரிந்து கொண்டார். வலது கையை கதவைத் திறக்குமாறு செய்கைச் செய்தார். கதவு திறக்கப்பட்டது, தாயும், மகளும் ஆவலுடன் உள்ளே வந்தனர். ஆனால் அமர்ந்திருந்தவர்களின் தோற்றம் கண்டு அவர்களுக்கு அடிவயிறு பிசைந்தது. என்ன காத்திருக்கிறதோ???



கஜேந்திரன் மருமகளிடம் செய்தித்தாளை நீட்டினார். மேகவதி தயக்கத்துடன் அதனை வாங்கிப் பார்த்தார். அவரது பார்வை அந்த அறிவிப்பில் நிலைக்குத்தீ நின்றது. வசுந்தரா தாயின் அருகில் வந்து பார்த்தாள். பார்த்த மறுகணம் அவள் முகம் விகாரமாக மாறியது. “அப்ப்பாஆஆஆஆ” என அலறினாள்.



“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்” என மகளை அதட்டினார் தர்மேந்திரன். பின்பு தன் வலது கையிடம் திரும்பி தனது தொண்டையை செறுமிக்கொண்டு “இன்னும் வேற எதாவது இருக்கா எங்களுக்குத் தெரியாம?” என அழுத்தமாக வினவினார்.



அவரிடம் இரண்டு கடித உறைகள் கொடுக்கப்பட்டது. ஒன்று ராஜேந்திரனின் ராஜினாமாக் கடிதம், மற்றொன்று அவரது ரத்தக் கொதிப்பை எகிறச் செய்தது. அது ராஜேந்திரன் போலிஸ் ஐ.ஜிடம் கொடுத்த புகாரின் பேரில் எழுதப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் மாதிரி. அதனுடன் ராஜேந்திரனின் திருமண சான்றிதழ் மாதிரியும் இணைக்கப்பட்டு இருந்தது.



கஜேந்திரனும் அவற்றைக் கண்டார். இருவரும் தங்கள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர். வசுந்தரா பித்துப் பிடித்தவள் போல் தந்தையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த அறிவிப்பு அவர்கள் குடும்பத்தை எந்த அளவு பாதிக்கும் என்பதனை நினைத்து மேகவதி கதி கலங்கிப் போயிருந்தார்.



அதன் பின்பு நடந்தவற்றை திரன் குழுமத்தால் கட்டுப்படுத்த இயலவில்லை. விசயம் காட்டுத் தீ போல் பரவியது. தொழிலிலும் வாழ்விலும் ஒரே நேரத்தில் அடி மேல் அடி விழுந்து கொண்டே இருந்தது. ராஜ குடும்பத்துச் சம்பந்திகள்(?) தங்களையும் தங்களது பெண்ணையும் அவமதித்து விட்டதாகச் சீறினார்கள். திரன் குடும்பத்தின் எந்த சமாளிப்பும் அவர்களிடம் எடுபடவில்லை. இரண்டு திருமணங்களும் நிறுத்தப்பட்டன. திரன் குழுமத் தொழில்களை முற்றுலிமாக முடுக்கப் போவதாக சவால் விட்டுச் சென்றனர். ஆனானப்பட்ட கஜேந்திரனே அதனைக் கேட்டுவிட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.



நண்பர்கள், உறவினர்கள், சுற்றத்தார், தொழில் தொடர்புடையவர்கள் என யாவரும் முதுகிற்குப் பின்னே கேலிப் பேசி சிரித்தனர். சிலர் முகத்தின் நேரே கேலியாக சிரிக்கவும் செய்தனர். தங்களது நட்சத்திர அந்தஸ்தை திரன் குழுமம் இழக்கத் தொடங்கியது. வசுந்தராவின் திருமணம் நின்றது மட்டுமல்லாமல் அவர்களின் அந்தஸ்துக்கு இணையாவர்கள் எவரும் அவளைப் பெண் கேட்டு வரவில்லை. இவர்களே வலியச் சென்று பெண் கொடுப்பதாகச் சொன்ன போதிலும் மழுப்பலான சிரிப்பை பதிலாகக் கொடுத்துவிட்டுச் சென்றனர் பிள்ளை வீட்டார்.



நடப்பவற்றைச் சகிக்க முடியாமல் தூக்க மாத்திரைகளை உட்கொள்ள இருந்த வசுந்தராவின் தற்கொலைக்கு முயற்சி, கடைசி நொடியில் மேகவதியால் தடுத்து நிறுத்தப் பட்டது. அதன்பிறகு மேகவதி மகளைவிட்டு இம்மியும் அகலாது நிழலைப் போல உடனிருந்து காவல் காத்தார். உயர் ரக நட்பு வட்டத்தில் தானும் தனது மகளும் கேலிக் கூத்தாக்கப் படுவதை விரும்பாது வீட்டுச் சிறையில் மகளோடு சேர்த்து தன்னையும் அடைத்துக் கொண்டார்.



சுபிக்ஷத்தில் சூனியம் பரவியது.



மகள் தற்கொலைக்கு முயன்றாள் என்ற செய்தி அறிந்த தர்மேந்திரன் ஆடிப் போய்விட்டார். அதனால் விரைவாக மகளின் திருமணத்தை முடிக்க எண்ணினார். இல்லை என்றால் மகளின் நிலை விபரீதம் ஆகிவிடும் என்பதை அவர் உணர்ந்தே இருந்தார்.

 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவர்கள் நினைத்தார் போல் மாப்பிள்ளை வசுந்தராவிற்கு அமையவில்லை. மாப்பிள்ளை வீட்டார் ஒருச் சிறிய தொழிற்சாலைக்கு மட்டுமே அதிபதியாக இருந்தனர். அவ்வளவே! வேறு பெரியச் சொத்துகள் என்று எதுவும் இல்லை அதில் ஒன்பத்திரண்டு பங்குகள் வேறு! திருமணத்தின் முன்பு மாப்பிள்ளையின் பெயரிலும் பெண்ணின் பெயரிலும் சேர வேண்டிய சொத்துக்களை பதிந்து விடுமாறு மறைமுக கட்டளையிட்டனர் மாப்பிள்ளை வீட்டினர். தொழில்களைத் தவிர ஏனைய அசையாத சொத்துக்கள் வசுந்தராவிற்கும் மாப்பிள்ளைக்கும் கொடுக்கப்பட்டது. அத்தோடு அல்லாமல் தொழில் முதலீட்டில் இருந்து ஒரு பெருந்தொகை வசுந்தராவின் பெயரில் சுவிஸ் வங்கியில் போடப்பட்டது. திருமணச் செலவுகள் முழுவதும் பெண் வீட்டாரேப் பார்த்துக் கொண்டனர். இவையாவும் திரன் குடும்பத்தை வெறுப்பேற்றியது. மாப்பிளை வீட்டுச் சொந்தக்காரர்களின் ஏவலுக்கு பல்லைக் கடித்துக் கொண்டு கட்டுப்பட்டனர். அவர்களின் உயரம் என்ன? அவர்களின் இன்றைய நிலைதான் என்ன?? என்ன செய்ய! தங்கள் வீட்டுப் பெண்ணுக்காகப் பொறுத்துக் கொண்டனர்.



வசுந்தராவின் திருமணம் நந்தன் இண்டிஸ்ட்ரீசை சேர்ந்த ரகுவரனுடன் ஓரளவுக்கு விமர்சையாகவே நடந்து முடிந்தது. ராஜேந்திரன் தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. அதுவேறு பேச்சாகிப் போனது. விருந்தினர்களுக்கு சமாளிப்பாக பதில் சொல்லி ஓய்வதற்குள் அவர்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.



வசுந்தராவின் திருமணச் சடங்குகளை முடித்து, அவளைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு அசந்து உட்கார்ந்து விட்டனர் திரன் குடும்பத்தினர். அவர்கள் வசுந்தராவை எண்ணி வருந்தினர், எப்பேர்ப்பட்ட குடும்பத்தில் வாழ்க்கைப்பட வேண்டியவள்!! என எண்ணிக் கண் கலங்கினர்.



சுபிக்ஷத்தில் திரன் குடும்பம் கலங்கிப் போய் இருக்க, இங்கு ராஜேந்திரன் தனது காதல் மனைவியுடன் தான் வாழ்ந்த அன்பு வாழ்க்கைக்குக் கிடைத்த பரிசை எண்ணி சந்தோசத்தில் குதித்துக் கொண்டிருந்தார். ஆம்! சுகுணா மூன்று மாதம் கருவுற்று இருந்தார். அந்தச் செய்தி தம்பதியரைச் சந்தோச வானில் ரெக்கையின்றி சிறகடித்து பறக்கச் செய்தது.



திருமணம் முடிந்ததும் ராஜேந்திரன் புத்தம் புது மனைவியுடன் புதுவீட்டினில் வசக்கித் தொடங்கினார். மனைவி மற்றும் அவளது குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காக, சுகுணாவின் பிறந்த வீடு இருந்த தெருவிலேயே இவர்களுக்கும் வீடு பார்க்கப்பட்டது. அதைத் தவிர அவர்களுக்கு சில பாதுகாவலர்களையும் நியமித்திருந்தார். அவருடைய புதிய நிறுவனம் அவரை வேலையில் ஆழ்த்தியது. அதனால் தான் அத்தகைய ஏற்பாடு.



திரன் குழுமத்து பிரச்சனைகளை அவர் அறிந்தே இருந்தார். அவர்களைக் கண்காணிக்கவும் செய்தார். தங்கை வசுந்தராவின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லையன அவருக்குச் சிறிதும் வருத்தமில்லை. அவர் தனது மனைவி, மக்கள், தொழில் என வாழத் தொடங்கினார்.



திரன் குடும்பத்தினர் என்றுமே வீட்டுப் பெண்களிடம் தொழிலைப் பற்றி விவாதித்ததும் இல்லை, ஆலோசனைக் கேட்டுக் கொண்டதும் இல்லை. பெண்கள் பற்றிய அவர்களின் கணிப்பே வேறு! ஆனால் ராஜேந்திரன் மனைவியிடம் தனது அனைத்துத் தொழில் ரகசியங்களையும் பகிர்ந்து கொண்டு, ஆலோசனைகளையும் தவறாதுக் கேட்டுக் கொண்டார். மனைவி பி.காம் படித்திருப்பதால் தன்னுடன் அலுவலத்தில் வந்து தொழிலைக் கற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினார். சுகுணா முதலில் வேண்டாம் எனத் தயங்கிவிட்டுப் பிறகு கணவன் வற்புறத்தவே ஒத்துக் கொண்டார். பின்னே, தன் காதல் கணவனுடனான அந்தப் பொன்னான நிமிடங்களை விட்டுவிடுவாரா என்ன! சுகுணா கணவனுடன் அலுவலகம் சென்று தொழிலைக் கற்கத் தொடங்கினார்.



தனது மனைவியை தனக்கு அடுத்தபடியானப் பதவியில் அமர வைத்துவிட வேண்டும் என்று முழு முனைப்போடு செயலாற்றினார் ராஜேந்திரன். தனக்குப் பிறகு தன்னுடைய மனைவி தான் சிவகாமி இண்டஸ்ட்ரீசை முன் நின்று எடுத்து நடத்த வேண்டும் என உறுதியாக எண்ணினார். சுகுணாவிற்கு பின்னரே தனது மக்களுக்கு தன்னுடைய நிறுவனத்தை ஆளும் உரிமை வழங்க வேண்டும் எனவும் மனதினில் உறுதி பூண்டார்.



ஒவ்வொரு நாளும் அவர்களது வாழ்க்கை தேனைவிடத் தித்திப்பாக இனித்தது. அள்ள அள்ளக் குறையாத அன்பினை ஒருவரின் மீது மற்றொருவர் செலுத்தினர். இந்நிலையில் தான் சுகுணா கருவுற்றார். ராஜேந்திரனுக்கு தன்னுடைய பாட்டி சிவகாமியைப் போல் தனக்கு ஒரு மகளும், மனைவியைப் போல் ஒரு மகனும் வேண்டுமென மனைவியுடன் ஆவலுடனும் மகிழ்ச்சியுடனும் தன்னுடைய வாழ்நாள் ஆசையை பகிர்ந்து கொண்டார். அதற்கு சம்மதமாக சுகுணா வெட்கத்துடன் அவர் மார்பில் முகம் புதைத்துக் கொண்டார்.



காலம் உருண்டோடியது. சுகுணா இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தார். இருவரும் சுகுணாவைப் போலவே அழகுடன் துறுதுறுவென இருந்தனர். ராஜேந்திரனுக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. தனது நன்றியையும் சந்தோசத்தையும் தனது மனைவியின் நெற்றியில் முத்துமிட்டு வெளிப்படுத்தினார். சுகுணா அந்தக் கணத்தில் தான் அதிர்ஷ்டசாலி, பாக்கியம் செய்தவள் என மனதிற்குள் எண்ணியவர், இப்படிப்பட்ட அன்பானக் கணவனையும் அழகான பிள்ளைகளையும் தனக்குக் கொடுத்த இறைவனுக்கு மனமார நன்றி கூறினார் மனதிற்குள்.



திரன் குடும்பத்தினர் தங்களது பேரன் பேத்தியைக் காண வேண்டி மருத்துவமனைக்கு வந்தனர். ஆம்! சுகுணாவிற்கு ஒரு ஆண் மகவும், ஒரு பெண் மகவும் பிறந்திருந்தனர். ராஜேந்திரன். சுகுணாவின் குடும்பத்தினரைச் சற்று ஓய்வு எடுக்குமாறுக் கூறி அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டுத் தூங்கும் மனைவியையும் பிள்ளைகளையும் ஆசையுடனும் நேசத்துடன் தன் உதிரத்தில் உதித்த பிஞ்சுகளின் பட்டு மேனியை தொட்டு தடவியபடி இருந்தார். அறையின் வாயிலில் நிழலாடவது போல் தோன்றத் திரும்பியவர், தனது குடும்பத்தினரைக் கண்டு சற்றுத் திடுக்கிட்டுத் தான் போனார். ஆனால் நொடியில் தன்னை சமாளித்துக் கொண்டு, தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்தார். ஆனால் வாருங்கள் என்று அழைக்கவில்லை. அவருடைய முகமோ எந்த உணர்வுகளையும் பிரதிபலிக்காமல் இருந்தது.

திரன் குடும்பத்தினர் அறையினுள் நுழைந்தனர். வசுந்தராவின் கணவன் ரகுவரன் அலட்சியமாக ராஜேந்திரனைப் பார்த்தவாறு உள்ளே நுழைந்தான். அவனை அதைவிட அலட்சியமாக எதிர்கொண்டார் ராஜேந்திரன். அதில் அவனது முகம் சிறுத்துவிட்டது.



கஜேந்திரனும், தர்மேந்திரனும் குழந்தைகள் கிடத்தப்பட்ட தொட்டில் அருகில் சென்று ஆவலுடன் குனிந்தவர்கள், பிள்ளைகள் சுகுணாவின் ஜாடையில் இருப்பதைக் கண்டு ஏமாற்றத்துடன் முகம் சுளித்தனர். ராஜேந்திரனுக்கு அவர்களின் எண்ணம் புரியாமல் போகுமா! அவர் உடலும் உள்ளமும் மேலும் ஒருபிடி இறுகியது. பையிலுனுள்ளே இருந்த தங்கச் சங்கிலியைப் வெளிய எடுத்து பேரக் குழந்தைகளின் கழுத்தில் அணிவிப்பதற்காக மேகவதி அவர்களை நோக்கிக் குனிய முற்பட, சட்டென அந்தத் தொட்டில் சத்தமின்றி இழுக்கப்பட்டது. ராஜேந்திரன் தான் தொட்டிலை இழுத்திருந்தார்.



“அண்ணா என்னப் பண்ணுற நீ? உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க?” என ஆத்திரத்துடன் கத்தினாள் வசுந்தரா.



“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஹ்” என வாயில் ஒற்றை விரலை வைத்து எச்சரித்துவிட்டு, தனது மனைவியும் குழந்தைகளும் உருங்கவதை சுட்டி, வெளியேப் போகுமாறு செய்கை செய்தார் ராஜேந்திரன்.



அவமானத்தில் திரன் குடும்பற்றவரின் முகம் கருத்து சுருங்கி விட்டது. ரகுவரனோ “வீட்டு மாப்பிளைன்னு கொஞ்சமாவது பயமிருக்கா பாரு! கடுகுக்குக் கூட மதிக்க மாட்டேங்கிறானே! திமிர் புடிச்சவன். அம்சமான பொண்டாட்டி, அழகானக் குழந்தைங்க, தாத்தன் சம்பாதிச்ச சொத்து இருக்கு, அவனோட சொந்த கம்பனினு நல்லா வாழ்றான்!! ஹ்ம்ம்ம் பின்னே ஏன் அவனுக்கு திமிர் இருக்காது! நானும் தான் கட்டியிருக்கேன் ஒரு பிடாரிய. பையன் ஓடி போயிட்டான் முழு சொத்தும் இவளுக்குத் தான் வரும்னு பாத்தா, கெழட்டு நாய்ங்க அவன் காரி துப்பினாலும் பாசப் பறவையப் பறக்க விடுதுங்களே..” என ராஜேந்திரனைப் பார்த்து பொறாமையுடன் மனதிற்குள் குமைந்தான்.



ஒரு நர்ஸ் லேசாகக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தார். திரன் குடும்பம் மகனையும் அவனது பிள்ளைகளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஓசைபடாமல் வெளியேறி விட்டனர்.



வசுந்தராவின் திருமணத்திற்குப் பிறகு திரன் குடும்பத்தினர் தனது மகனுக்குத் தூது மேல் தூது அனுப்பினர், குடும்பத்தில் சேர்ந்து கொள்ளுமாறு வேண்டி. மறந்தும் அவர்கள் சுகுணாவைப் பற்றிப் பேசவில்லை. தூதுகளை தனது தோளில் படிந்த தூசியை தட்டிவிடுவது போல் தட்டிவிட்டார் ராஜேந்திரன். ஆனால் தீரன் குடும்பம் விடாமல் அவருடன் ஒட்டிக் கொள்ள முனைப்புக் காட்டியது. அந்தத் தீவிர முனைப்பின் பின்னணி! தீரன் குடும்பம் தொழலின் சரிவிலிருந்து ஒருவாறு மீண்டு வந்து கொண்டுதான் இருந்தனர். ஆனால் மகனின் அசுர வேக வளர்ச்சி அவர்களை ஆச்சரியப்படுத்தியது. மகனின் வேகம் முன்பு தாங்கள் காணாமல் போவதை அவர்கள் உணர்ந்திருந்தனர். எப்படியாவது மகனை மறுபடியும் குடும்பத்திற்குள் மறுபடியும் இழுத்துக் கொண்டு, அவனது புதிய நிறுவனத்தைத் தீரன் குரூப்புடன் ஒன்றிணைத்து விட்டால் இழந்த தங்களது நட்சத்திர அந்தஸ்தைக் கண்டிப்பாக மீட்டெடுத்து விடலாம் என நம்பினார்கள். ஆனால் ராஜேந்திரன் எஃகு இரும்பென அவர்களிடம் இறுகி நின்றார். அவர்களால் மகனிடம் நெருங்கக் கூட முடியவில்லை. பின்னே எப்படி காரியம் சாதிப்பது?



இந்த நிலையில் தான் சுகுணாவிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைச் சாக்கிட்டு மகனை நெருங்க முடிவு செய்து எல்லோரும் சென்றனர். ஆனால் ராஜேந்திரன் தங்களை “வா” வென்று தலையசைத்துக் கூட வரவேற்காதது அவர்களை வெகுவாக அவமானப் படுத்தியது. உடன் பிறந்த ஒரே தங்கையின் கணவன், தங்கள் வீட்டின் மாப்பிள்ளை ரகுவரனுக்குக் கூட மரியாதை அளிக்கவில்லையே என மனம் புகைந்தனர். இறுதியாக வெளியேப் போகுமாறு செய்கைச் செய்தது அவர்களைக் கொதிப்பின் உச்சத்திற்கேக் கொண்டு சென்றது. பற்றாக்குறைக்கு ரகுவரன் வேறு தன்னை மதிக்கவில்லை என்றும், தன்னைக் கூட்டி வந்து பொது இடத்தில் அவமானப்படுத்தி விட்டதாகவும். இதற்காகவா ஊரில் உள்ளவன் வாயில் அரைபட்டு, மிதிப்பட்டு உங்கள் வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன் என வசுந்தராவைத் திருமணம் செய்ய தான் பலத் தடைகளைத் தாண்டி வந்து அவளை மணம் செய்தது போல் பேசி தீரன் குடும்பத்தினரை வறுத்தெடுத்து விட்டான்.



கஜேந்திரனும், தர்மேந்திரனும் உணர்ச்சித் துடைத்த முகத்துடன் தலை குனிந்தவாறே தங்கள் காரினை நோக்கி நடந்து சென்றனர். வசுந்தரா கைகளைப் பிசைந்தபடி நின்றாள். மேகவதி தான் மருமகனை சமாதானப் படுத்தினாள். ஹிரன்லால் ஜூவல்லரியில் ஆடவருக்கானப் புதிய வைர நகைகள் வந்திருப்பதாகவும், போய் பார்த்துவிட்டு வரலாமா என நைச்சியமாக வினவினார். ரகுவரனின் முகத்தில் வெளிச்சம் பரவியது. இதற்காகத் தானே தொண்டைத் தண்ணி வற்ற அவர்களை வறுத்தெடுத்தான்.



ரகுவரனின் முகத்தில் பரவிய வெளிச்சம் இன்று நேற்று வந்தது அல்ல. வசுந்தராவுடன் திருமணம் முடிவானவுடன் வந்தது. அடிக்கடி இப்படி ஏதாவது மனைவியின் குடும்பத்தினரைக் கரித்துக் கொட்டி விட்டுப் பணமோ பொருளோ வாங்கிச் செல்வான். கஜேந்திரனும், தர்மேந்திரனும் இதனைத் தீவிரமாக எதிர்க்க தான் செய்தனர். ஆனால் மேகவதி மகளின் வாழ்க்கையில் சிறுப் பிசகு கூட வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதற்காக எதை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராகவும் இருந்தார். அந்த ஒரு விசயத்தில் மட்டும் தர்மேந்திரனும், கஜேந்திரனும் மேகவதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டனர். பெண்ணாகவே இருந்தாலும், வசுந்தரா அவர்கள் வீட்டு இளவரசி அல்லவா! இதனை நன்றாகக் கண்டு கொண்ட ரகுவரன், ருசி கண்ட பூனை போல் அவர்களை அடிக்கடி விரட்டி, வருத்தி பணமும் பொருளும் பறித்தான்.



ரகுவரனின் ஒரே நோக்கம் தீரன் குரூப் ஆஃப் கம்பெனிஸை தானும் தனது வருங்கால சந்ததிகளும் ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்பது தான்!. ராஜேந்திரன் ஒதுங்கிக் கொண்டதால் காரியம் எளிதாக முடியும் எனப் பகல் கனவுக் கண்டவனின் தலையில், கடும் பாறையைத் தூக்கிப் போட்டனர் அவனது மனைவியின் குடும்பத்தினர். மகனுடன் இணைய அவர்கள் காட்டிய முனைப்பு அவனை வெறியனாக்கியது. அந்தக் கோபத்தை மனைவி மீதும் மனைவியின் குடும்பத்தினரின் மீதும் காட்டத் தவறியதில்லை. அது போன்றத் தருணங்களில் பணம் பிடுங்கும் பேயாக உருமாறுவான்!



ஆயிற்று! ஏழு ஆண்டுகள் ஆயிற்று, ராஜேந்திரன் சுபிக்ஷத்தை விட்டுச் சென்று. பிள்ளைகள் வளர்ந்து பள்ளிக்குச் சென்றனர். அவர்களுடைய தாய்வழி தாத்தா பாட்டி தான் அவர்களை அன்புடன் கவனித்துக் கொண்டது. பிள்ளைகளுக்கு முறையே விஷ்வேந்திரன், ரூபா தேவி எனப் பெயரிட்டார் சுகுணா. ராஜேந்திரனுக்கு தனது குடும்பம் சார்ந்த பெயர்களை பிள்ளைகளுக்கு வைப்பதை விரும்பவில்லை. இருப்பினும் ஆருயிர் மனைவி கண்களைக் சுருக்கி, பிளீஸ் எனக் கெஞ்சும் போது எந்த காதல் கணவனுக்கு மனைவியின் வேண்டுதலை நிராகரிக்க முடியும்! அவர் சம்மதத்துடன் மனைவியிடம் தலையாட்டினார். சுகுணா மகிழ்ந்து போனார்.



சுகுணா, சிவகாமி இண்டஸ்டீரிஸின் ஜெ.எம்.டியாக அமர்த்தப்பட்டார். சுகுணா அமைதியானவர் மட்டும் அல்ல, நல்ல திறமை வாய்ந்தப் பெண்மணியும் கூட. அவருக்கு அலுவலகத்தில் நல்ல மரியாதை இருந்தது, முதலாளி என்பதால் அல்ல. நல்ல உழைப்பாளி, சிறந்தப் பண்பாளர், வேற்றுமைப் பார்க்காதவர் என்பதால். கணவனும் மனைவியும் தொழிலிலும், சொந்த வாழ்விலும் ஆதர்ச தம்பதிகளாக வளம் வந்தனர்.



ஐந்து வருட நீண்ட இடைவெளிக்குப் பின்பு சுகுணா மீண்டும் கருவுற்றார். ராஜேந்திரன் மனைவியின் பாதங்களை தரையில் பதிய விடாமல் தாங்கிக் கொண்டார். சுகுணாவின் குடும்பத்தினருக்கு மருமகனின் மீது அவ்வளவு மரியாதையும் நெகிழ்ச்சியும். பின்னே தாய் தந்தை போல பாவித்து, அவர்களின் மகளைத் தங்கமெனத் தாங்கும் மருமகன். யாருக்கு வாய்க்கும் இப்படி ஒரு பாக்கியம். அவர்களும் அவர்களது மகளும் பாக்கியசாலிதான்.



ராஜேந்திரன் தனது வேலைகளைக் குறைத்துக் கொண்டு மனைவியுடனேச் சுற்றித் திரிந்தார். அலுவலகத்தில் அனைவரும் கேலி செய்யும் அளவிற்கு மனைவியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு சுற்றினார். சுகுணாவுக்குத் தான் வெட்கமாகவும், தர்ம சங்கடமாகவும் இருந்தது. ஆனால் ராஜேந்திரன் இவை யாவையும் கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை! கண்டிப்பாகத் தனது பாட்டி சிவகாமியேத் தனக்கு மகளாகப் பிறப்பார் என்று நம்பிக்கையுடன் வலம் வந்தார்.



சிவகாமிப் பிறந்தார்! ஆண் மகவாகப் பிறந்தார்! தன்னை ஆண்ட ஆண்களை ஆளுமையுடன் ஆளப்போகும் ஆண் மகவாகப் பிறந்தார். முற்பிறவியில் விதைத்த வினையை இப்பிறவியில் அறுவடை செய்யப் பிறந்தவனோ!



தன்னுடைய இளைய மகனைக் கண்டதும் கண்கள் பணிக்க உச்சி முகர்ந்தார் ராஜேந்திரன். அவருக்கு சந்தோசத்தில் கேவலுடன் கண்ணீர் வந்தது “சிவகாமிமீ பாட்டிஈ சிவகாமி பாட்டி என்னோட்ட்ட்ட சிவ்வ்வ்காமி பாட்ட்ட்டி” எனச் சத்தமிட்டு அழுதார். சுகுணாவின் அம்மா தான் மருமகனை சமாதானப் படுத்தினார். விஷ்வேந்திரனும், ரூபா தேவியும் தங்கள் குட்டித் தம்பியை தொட்டுத் தொட்டு மகிழ்ந்தனர்.



இந்தக் காட்சியை இரு ஜோடிக் கண்கள் கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தன. பின்னர் இருந்த சுவடு தெரியாமல் அவை மறைந்துவிட்டன.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொக்கியின் “என் கருப்பழகி”

அத்தியாயம் – 6 பாகம்-2

ராஜேந்திரன் ஒரு அவசர வேலையாக மனைவியை மருத்துவமனையில் அவளின் பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு இரவில் திரும்பி வந்து விடுவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.



ராஜேந்திரன் சென்று ஒரு மணி நேரம் கழிந்து திரன் குடும்பத்தினர் வந்தனர். ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, விழித்துக் கிடந்து கை கால்களை உதைத்து விளையாடும் மகனின் அழகை காணக் காண சுகுணாவிற்குத் தெவிட்டவில்லை. மற்றப் பிள்ளைகளைவிட இவனின் மேல் பாசமும் ஈர்ப்பும் அதிகமாக இருப்பதாக உணர்ந்தார். தன் ஆருயிர் கணவனைக் கொண்டு பிறந்ததனால் கூட இருக்கலாம் என எண்ணி புன்னகைப் பூத்தார். கணவனின் எண்ணம் தோன்றிய உடனே அவரது முகம் செம்மையானது.



இதை யாவையும் அறையின் வாயிலில் நின்று கொண்டு உணர்ச்சித் துடைத்த விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் திரன் குடும்பத்தினர். சுகுணாவின் தாயார் அசதியின் காரணமாக அங்கு இருந்த திவானில் உட்கார்ந்தவாறே உறங்கிவிட்டார். மகளுக்கு மருந்து வாங்கச் சென்றிருந்த சுகுணாவின் தந்தை மகள் இருக்கும் அறையின் வாயிலில் ஆட்கள் குழுமிருப்பதைக் கண்டு பதட்டத்துடன் ஓடி வந்தார். அருகில் வந்ததும் இன்னார் என்று அறிந்து கொண்டு அவர்களை வரவேற்று அறையினுள்ளே என்றிழைத்தார். அதனைத் தலையசைத்து ஏற்றுக் கொண்டனர் திரன் குடும்பத்தினர்.



சம்பந்தி வீட்டினரிடம் மிகவும் பவ்யமாகவும் தன்மையுடனும் நடந்து கொண்டார்கள் சுகுணாவின் வீட்டினர். என்ன தான் பிணக்காக இருந்தாலும் மாப்பிளையின் ரத்தம் சொந்தம் அல்லவா! சுகுணாவினால் எழுந்துவிட முடியவில்லை. மேகவதி ஓடி வந்து அன்போடு அதனைத் தடுத்தார். வசுந்தரா தன் மருமகனைத் தூக்கிக் கொஞ்சினாள். தர்மேந்திரன் குழுந்தையைக் கைகளில் ஏந்திக் கொண்டார். கஜேந்திரன் கைகள் நடுங்க “திரன்” எனப் பெயர் பொறிக்கப்பட்ட வைர டாலருடன் கூடிய கனமானத் தங்கச் சங்கிலியை கொள்ளுப் பேரனின் கழுத்தில் போட்டு அழகுபார்த்தார் கண்கள் பணிக்க.



“அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்” நிரம்ப அழுது கரைந்து நாடகமாடினர். தாங்கள் செய்த தவறை மன்னிக்குமாறும், தங்களுடன் சேர்ந்து வாழ வருமாறும் திரன் குடும்பத்தினர் அனைவரும் கைக் கூப்பிக் கேட்டுக் கொண்டார்கள். சுகுணா பதறிவிட்டார். கண்டிப்பாகக் கணவனை சமாதானப்படுத்தி சுபிக்ஷத்துக்கு பிள்ளைகளோடு நிரந்தரமாக வருவதாக வாக்குக் கொடுத்தார். சுகுணாவை இப்போதைக்கு ராஜேந்திரனிடம் தங்கள் வரவைப் பற்றிச் சொல்ல வேண்டாம் எனவும், நாங்கள் கூறும் பொழுது ராஜனை அழைத்துக் கொண்டு பிள்ளைகளுடன் வரவேண்டும், நிரந்தரமாக சுபிக்ஷ்த்தில் தங்க வேண்டும் எனப் பிறந்த குழந்தையின் மேல் ஆணையிட்டு சத்தியம் வாங்கிக் கொண்டனர். ராஜேந்திரனிடம் இதைப் பற்றிச் சொல்லக் கூடாது எனக் கேட்டுக் கொண்டனர். சுகுணாவும் அதற்கு உடன் பட்டார்.



திரன் குடும்பற்றவருக்கு சத்தியம் என்பது கரும்பு சக்கை போல கரும்பின் சாரை முழுதாக உறிஞ்சிவிட்டு சக்கையைத் துப்பிவிட்டு போய்விடுவர். சுகுணா! அவர் நேர்மையானவர், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர். அதுவும் பிறந்த பச்சிளம் குழந்தையின் மேல் ஆணையிட்டு இருக்கிறாரே! தன் அருந்தவப் புதல்வன் மேல் அல்லவா சத்தியம் செய்திருக்கிறார்! மீற முடியுமா??? தொழிலில் நடக்கும் வில்லங்கங்களை கண்டு களைந்தெறியும் வித்தைத் தெரிந்த சுகுணாவிற்கு, அவருடைய சொந்த வாழ்வில் நடக்கும் வில்லங்கங்களை பகுத்தறிய முடியவில்லையே! வெளிவர முடியாது சுழலில் அவர் ஆழமாகக் காலை விட்டு விட்டார் என அப்பொழுது அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.



கணவன் வீட்டினரின் அழுகை நாடகத்தை அவர்களின் ஒடுங்கியத் தோற்றம் கண்டு நம்பிவிட்டார். விதியின் கோர வலையோ! அல்லது சதியின் அகோர வலையோ! வீழ்ந்து விட்டார் சுகுணா! இனி எழவே முடியாதோ???



திரேத யுகத்தில் கைகேயி தசதரனிடம் இராமனைக் காட்டுக்கு அனுப்ப வேண்டி வரம் கேட்டாள். கலியுகத்தில் இந்தச் கூனிக் கூட்டம் சுகுணாவிடம் ராஜேந்திரனை சுபிக்ஷததிற்கு அழைத்து வரவேண்டி வரம் கேட்டனர். சுகுணாவும் அந்த வரத்தை அவர்களுக்குக் கொடுத்து அருளிவிட்டாரே!!!



யுகங்கள் மாறினும், குணங்கள் மாறில!!



அன்று கூனி, இன்று திரன் குடும்பத்தினர். இராமனுக்கு 14 வருட வனவாசம், சுகுணாவிற்கு வாழ்வு முழுவதுக்குமான வீட்டுச் சிறைவாசம்!!! இந்த உண்மைகளை சுகுணா புரிந்து கொண்டிருந்தால் அவரது வாழ்வின் வசந்த காலம் தொடர்ந்து இருக்குமோ??? யார் கண் பட்டதோ!!! அன்பு மழையில் சிரிக்க சிரிக்க நனைந்த சுகுணா, இனி கண்ணீர் மழையில் அழுது அழுது கரையப் போகிறாரே!!!



ராஜேந்திரனுக்கு மருத்துவமனையில் நடந்தவைத் தெரியாது. தெரிந்திருந்தால் பின்னால் நடப்பவற்றை தடுத்து நிறுத்தி இருப்பாரோ? ஆம்! தடுத்து நிறுத்தி இருப்பார், தன்னுடைய துணைவியைக் கலங்காமல் காப்பாற்றி இருப்பார்!!!



ராஜேந்திரன் எப்பொழுதும் போல் தனது மனைவியையும், மக்களையும் ரசித்துக் கொண்டும், கொஞ்சிக் கொண்டும் நாட்களை சந்தோசமாகக் கடத்தினார். தொழிலிலும் தனது மனைவியுடன் சேர்ந்து வெற்றி கொண்டார். சுகுணாவும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு கணவனுடனும் பிள்ளைகளுடனும் சுகமாக தனது நாட்களைக் கழித்தார்.



சிவகாமியின் சாயலில், அவரின் நினைவாகத் தன் தந்தை ராஜேந்திரனின் கம்பீரத்தைக் கொண்டு பிறந்தவனுக்கு ஷிவேந்திரன் எனப் பெயரிட்டனர். ஷிவேந்திரன் மற்றப் பிள்ளைகள் போல் அழுது ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டான். பக்கத்தில் இருக்கும் பொருட்களை தூக்கிப் போட்டு உடைத்து எல்லோரையும் அவன் பக்கம் திரும்பச் செய்து தனக்கு வேண்டியதை வாங்கிக் கொள்வான்.



ராஜேந்திரன் இளைய மகன் ஷிவேந்திரனின் பிள்ளை விளையாட்டில் அகமகிழ்ந்து போவார். தன்னுடைய பாட்டி சிவகாமிக்கு இல்லாத ஆளுமையும், துணிச்சலும் அவரின் சாயல் கொண்ட தன் மகன் ஷிவேந்திரன் கொண்டிருப்பதை எண்ணி புலங்காயிதம் அடைந்தார். தனது குடும்பத்தினரை எதிர்ந்து நின்று தோற்கடிக்க ஷிவேந்திரனால் முடியும் என உறுதியாக நம்பினார். கஜேந்திரனை போல் ராஜேந்திரன் பிள்ளைகளிடம் பாகுபாடு பார்ப்பவர் இல்லை. மூன்று பிள்ளைகளும் அவருக்குச் சமம் தான். சொத்து சுகங்களிலும் சம பங்குகளைப் பிற்காலத்தில் கொடுக்கவுள்ளார். ஆனால் ஷிவேந்திரனிடம் இருக்கும் ஆளுமை மற்றப் பிள்ளைகளிடம் சற்றுக்(!) குறைவாக இருப்பதை தெளிவாகப் புரிந்து கொண்டார்.



வசுந்தராவிற்கு திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் ஆயிற்று, ஆனால் பிள்ளைப் பேறு இல்லை. இதனை சுட்டிக் காட்டி குண்டூசி போன்று வார்த்தைகளால் குத்தி குத்தி அவள் மனதைச் சல்லடையாக்கினர் பிள்ளைவீட்டார். ஆனால் மறுபக்கம் மருமகள் வீட்டுக் கப்பத்தை மட்டும் கண்களில் பேராசை மின்ன வாங்கிக் கொள்ளத் தயங்கவில்லை. மனமும் உடலும் சேர்ந்து நோக வசுந்தரா உடல் இளைத்துக் கருத்துவிட்டாள்.



திரன் குடும்பத்தினர் தங்கள் பெண் படும் அவலங்களைக் காணச் சகிக்காது அவளது புகுந்த வீட்டினரிடம் சண்டையிட்டனர். அவர்களோ மலட்டுப் பெண்ணை தங்களை ஏமாற்றி, தங்கள் மகன் தலையில் கட்டிவிட்டதாக எகிறினர். இனி பொறுக்கப் போவது இல்லை, தங்கள் மகனுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப் போவதாக அறிவித்தனர் பிள்ளை வீட்டார்.



மனைவி மேகவதியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அமைதிகாத்த தர்மேந்திரன் பொங்கி எழுந்துவிட்டார். அவரின் ஆவேசத்தில் ரகுவரன் குடும்பத்தினர் பயந்து நடுங்கி விட்டனர். ரகுவரன் மனைவியின் பின்னே போய் ஒளிந்து கொண்டான். இப்படி மிரட்டிப் பேசினால் சொத்துக்கள் முழுவதையும் தங்கள் மகன் பெயருக்கு எழுதி வாங்கி விடலாம் என மனக் கோட்டைக் கட்டினார்கள் ரகுவரன் பெற்றோர். ஆனால் தர்மேந்திரன் தான் அதனைக் காகித கோட்டையான ஊதித் தள்ளிவிட்டாரே!!!



ஆனால் எரிமலையாகக் கொதித்த தர்மேந்திரன் அங்குள்ள ஒரு மூதாட்டியின் பேச்சைக் கேட்டு பொங்கியப் பாலில் தண்ணீர் தெளிக்கப்பட்டது போல அடங்கிற்று அவரது ஆவேசம்.



“எப்பா நிறுத்து.. முதல்ல் ஏன் பேரன் சட்டைய விடு.. விடுங்கிறேன்ல.. ஏம்பா பெரிய மனுசங்களா!!! இவங்க பண்ணுறது தப்புன்னா, உன் வீட்டுக்கு வாழவந்த மருமகள பேசாத பேச்செல்லாம் பேசி உங்க மகனோட சேத்து வெளியத் துரத்தினிங்களே அதுக்கு பேரு என்னப்பா? இதோ நிக்கிறாளே உம்ம வீட்டுப் பொண்ணு, அந்த பாவப்பட்ட பொண்ண பார்த்து வேசின்னு சொல்லாம சொல்லி முடியபிடிச்சி அவள இழுத்துப் போட்டு அடிச்சிருக்கா. அத பாத்துட்டு உங்க மகன் இவளை விளக்கமாத்தாலயே சாத்தி இருக்கான். அவன் தான்யா ஆம்பிளை.. தன் பொண்டாட்டிக்கு ஒன்னுன்னு பொங்கி எழுந்தான் பாரு. இந்த இந்தப் பொண்ணு, உன் மக உன்னப் போல தானே இருப்பா??



என்ன பாக்குற நான் சொல்றது புரியலையா??? உடம்பாசை வந்தா வேசிக்கிட்ட போக வேண்டியது தானே, இவள ஏன் கட்டிக்கிட்டு வந்தனு கொஞ்சம் கூட நாக்கு கூசாம உன் பிள்ள கிட்ட கேட்டுருக்க. ஒரு நல்ல தகப்பன் தன் பிள்ளைக்கிட்ட பேசிற பேச்சா இது?? அது சரி நீயும் உன் அப்பனும் இந்த வயசிலேயே இளவயசுக் குட்டிகளத் தேடுறிங்க! பின்ன இந்த மாதிரி அசிங்கப் பேச்சல்லாம் நீ பேசாம இருந்தா தான் அதிசயம்?? இதுலயே உன் குடும்ப லட்சணம் தெரியுது. அத்தோட நிறுத்திக்கிட்டியா நீ?? அந்த பொண்ண வெட்டி விட்டுட்டு ராஜகுமாரிய கல்யாணம் பண்ணிக்க சொல்லியிருக்க! எதுக்கு சொன்ன உன் குடும்ப கவுரவத்தை காப்பாத்த தானே?



ஏன் பேரப் புள்ள உங்கள மாதிரி பொம்பளங்களுக்கு நாக்கத் தொங்கப் போட்டுட்டு அலையல. கொழுப்பெடுத்து ரெண்டாம் தாரம் பண்ணவும் நினைக்கலை. தனக்கு ஒரு வாரிசு வேணும்னு நினைக்கிறான், அதுல என்ன குத்தங்கிறேன்? உன் மகன் மட்டும் பொண்டாட்டியோட ஒன்னுக்கு மூனா புள்ளைங்களப் பெத்துக்கிட்டு சந்தோசமா இருக்கினும், ஏன் பேரன் மட்டும் பட்ட மரமா நிக்கனுமா?



வருசம் ஆறாச்சு இன்னும் உன் மக வாந்தி எடுக்க காணும். வேற என்ன பண்ணச் சொல்லுற? எங்க இடத்தில நீ இருந்திருந்தா இந்த பயலுக்கு ரெண்டாம் தாரம் கல்யாணம் பண்ணி, இப்ப இவன் புள்ளங்க எல்லாம் ஸ்கூல் போயிட்டு இருந்திருக்குங்க! என்ன நான் சொன்னது தானே நடந்திருக்கும்?? இல்லைன்னு சொல்லு பாப்போம்??? உன் வீட்டு பொண்ணுக்கு ஒரு நியாயம் ஊரான் வீட்டு பொண்ணுக்கு ஒரு நியாயமா??? நல்லா இருக்குயா கதை!!!!



சரி சரி.. எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காமப் பேசியாச்சு! முதல உன் மருமக கிட்ட மன்னிப்புக் கேட்டு வீட்டுக்கு கூப்பிடு. அந்தப் பொண்ணுக்கு நீங்க பண்ண பாவமோ என்னவோ உன் மக வயித்துல கருத்தங்கல. உன் மகன் குடும்பத்த கூப்பிடு அப்பயாவது இவங்களுக்கு ஒரு வழிப் பொறக்குதானு பார்போம். பெத்தவங்க சொத்து மட்டுமில்ல தம்பி, பாவச் சுமையும் பிள்ளைங்க மேலதான் விழும். பண்ண பாவத்துக்கு பிராயசித்தம் பண்ணுங்கனு சொல்லுறேன். இனி எல்லாம் நல்லதே நடக்கும்.. என்ன நான் சொல்றது புரிஞ்சிதா?



ரகு, என்ன இருந்தாலும் வசுந்தரா உன் பொண்டாட்டி பா, இப்படி மனசு நோக பேசாத, அடுத்தவங்களையும் பேச விட்டு வேடிக்க பாக்காதப்பா. சரியா ராஜா! மாங்காடு அம்மனுக்கு வாரம் வாரம் வெள்ளிக் கிழமை உன் விளக்கு போடுபா உன் பொண்டாட்டியோட சேர்ந்து. அந்த அம்மன் உன்னை கைவிட மாட்டாப்பா! கண்டிப்பா சீக்கிரம் உனக்கு புள்ள பொறக்கும் அதவும் ஆம்புள புள்ளையேப் பொறக்கும். பழசெல்லாம் மறந்திரு, உன் பொண்டாட்டியோட எந்த சண்டைச் சச்சரவு இல்லாம சந்தோசமா நூறு வருசம் நீயும் வாழனும்பா! இந்த கிழவி சொல்லுறத கேளு ராஜா..” என நீளமாகச் சமார்த்தியமாகப் பேசி முடித்தார் அந்த மூதாட்டி. திரன் குடும்பத்தினரையே விழிபிதுங்க வைத்துவிட்ட அந்த மூதாட்டியைத் தெய்வத்தைப் பார்ப்பது போலப் பார்த்து வைத்தனர் ரகுவரன் வீட்டினர்.



அனுபவம் எனும் பள்ளியிலே வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுத் தேர்ந்தவர், வெடிக்க இருந்த எரிமலையைத் தனது வாய் ஜாலத்தின் மூலம் அமிழ்த்திவிட்டார். திரன் குடும்பத்தினரின் வண்டவாளங்களை அவர் ரகுவரனின் திருமணத்தின் பொழுதே வீட்டு வேலையாட்களிடம் நைச்சியமாகப் பேசி தெரிந்து கொண்டார். இன்றளவும் அதைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை. ஆனால் இன்று சூழ்நிலைக் காரணமாக போட்டுடைத்து விட்டார்.



திரன் குடும்பத்தினர் மகளின் வீட்டினரின் கேலியான, அருவறுப்பானப் பார்வைகளைச் சந்திக்க இயலாமல் தங்கள் மகளை அழைத்துக் கொண்டு சுபிக்ஷத்திற்கு பறந்துவிட்டனர். ரகுவரன் வீட்டினர் யாரும் அவர்களைத் தடுக்க வில்லை.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசுந்தராவிற்கும் மேகவதிக்கும் அவமானம் பிடுங்கித் தின்றது. வசுந்தராவின் புகுந்த வீட்டில், என்ன தான் அவள் அவர்களை விடப் பலமடங்கு வசதி படைத்தவளாக இருந்தாலும் அவளை என்றுமே ஒரு பொருட்டாக மதித்தது இல்லை. ஒருத்தனும் சிக்கமா தான எங்க ரகுவ வலைப் போட்டு புடுச்சிங்க என்பன போன்ற பார்வைகளும் பேச்சுகளும் தான் அவளுக்குக் கிட்டியது.



இவற்றைக் கூறி தாயின் மடியில் விழுந்து கதறுவாள் வசுந்தரா. தர்மேந்திரனுக்கு தன் பெண்ணின் கதறலைக் கண்டு கண்கள் பணித்து விடும். மேகவதி கணவனிடமும், மாமனாரிடமும் தேவையின்றி ஒரு வார்த்தைக் கூடப் பேசுவதுமில்லை,ஏன் ஒரு பார்வை கூடப் பார்ப்பதுமில்லை.



கோபுரம் குப்பை மேட்டில் சாய்ந்து விழுந்தது!!!



ஷிவேந்திரனுக்கு நான்கு வயதானது, அப்பொழுது தான் வசுந்தரா பிள்ளை பேறுக் கண்டாள். அவளுக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். மகனுக்கு வசந்த் எனவும் மகளுக்கு விமின்யா எனவும் பெயரிட்டனர் வசுந்தரா ரகுவரன் தம்பதியர். சுபிக்ஷத்தில் வெகு நாட்களுக்குப் பிறகு கொஞ்சம் சந்தோச சாரல் வீசியது. விசயம் கேள்விப்பட்டு தனது தாயுடனும், மகன் ஷிவேந்திருடனும் நாத்தனாரையும் அவளின் குழந்தைகளையும் காண ஓடோடி வந்தார் சுகுணா, கணவனுக்குத் தெரியாமல் தான்.



ஆம்! தீரன் குடும்பத்தினர் சுகுணாவுடன் தொடர்பில் இருந்தனர். மகனை நெருங்க முடியாது என்பதால் மருமகளை நெருங்கினர். ஷிவேந்திரனைக் கண்டதும் வேகமாக அருகே வந்து அவனைத் தூக்க முற்பட்டார் தர்மேந்திரன். ஆனால் சிறுவனோ ‘யார் நீ’ என்றுப் பார்வையால் கேள்வி கேட்டுத் தள்ளி நிறுத்தினான். தர்மேந்திரனின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.



சுகுணா கணவனின் குடும்பத்தினரை தன் இளைய மகனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். அவன் சரியென்று தலையசைத்தான். ஆனால் பேசவோ புன்னகைக்கவோ முற்படவில்லை, அதற்குப் பதிலாக அவர்களை ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தான். கஜேந்திரன் கண்கள் மின்ன தன் மகனைப் நோக்கினார். தர்மேந்திரன் தந்தையின் பார்வையைப் புரிந்து கொண்டு தலை அசைத்தார்.



நாட்கள் பறந்தோடின. வசுந்தராவின் குழந்தைகளின் முதல் பிறந்த நாள் சுபிக்ஷத்தில் விமர்சையாக நடந்தது. ராஜேந்திரனுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தனர் வசுந்தராவும், ரகுவரனும். ஆனால் ராஜேந்திரன் விழாவில் கலந்து கொள்ளவில்லை. ரகுவரனுக்கு இது பெருத்த அவமானமாகப் பட்டது. ஆனால் அமைதியாக இருந்தான். எதற்கு இந்த அமைதி? புயலை உள்ளடக்கிய அமைதியா??? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!!!



ராஜேந்திரன் மனைவியின் உறுதுணையுடன் தொழில் வளர்ச்சியின் உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு ஒரு அரியத் தொழில் ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பு கிட்டியது. மேற்கத்திய நாடுகளில் தொழில் செய்யும் வாய்ப்பு! தன்னுடையக் கிளைகளை அங்கு விரிவுபடுத்த ஒரு அரிய வாய்ப்பு. ஆனால் இந்தத் தொழில் ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டு, தொழிலை விஸ்தரித்து, அதனை நிலைப்படுத்த அவர் அங்கு இருக்க வேண்டிய கட்டாயம். கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகும் அவற்றை ராஜேந்திரன் செய்து முடிக்க. இரண்டரை வருடங்கள் மனைவி மக்களைப் பிரிந்திருக்க வேண்டும்!!!



மனைவி மக்களைப் பிரிய அவர் விரும்பவில்லை. அதனால் இந்த ஒப்பந்தம் தங்களுக்கு வேண்டாம் எனத் தன்மையுடன் மறுக்க எண்ணினார். மனைவியிடம் இதனைப் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆனால் நிறுவனத்தின் ஜி.எம் இதனை சுகுணாவிடம் தெரிவித்தார், அரிய வாய்ப்பை ராஜேந்திரன் உதறித் தள்ளுவதாக வருத்தத்துடன் கூறினார்.



சுகுணாவிற்கு கணவனின் மனநிலை நன்கு புரிந்தது. ராஜேந்திரன் தொழில் கனவை நிறைவேற்ற இந்த ஒப்பந்தம் ஒரு படிக் கல்லாக அவருக்கு அமையும். இந்தத் தொழிலை நிலை நிறுத்துவதற்காகக் கணவன் கடந்த ஏழு ஆண்டுகளாக தன் குடும்பத்தினரைப் பகைத்துக் கொண்டு பட்ட கஷ்டங்கள் ஏராளம். அந்தக் கடின உழைப்பு தங்களை காரணம் காட்டி, விழலுக்கு இரைத்த நீராகி விடக் கூடாது என மனதிற்குள் முடிவெடுத்தார் சுகுணா.



கணவனிடம் தன் முடிவைச் சொல்லவும் செய்தார். பலத்த வாக்குவாதம், சில பல கொஞ்சல் கெஞ்சல்களுக்கு பிறகு அரை மனதுடன் சம்மதித்தார் ராஜேந்திரன், தனது இரண்டரை ஆண்டு மேற்கத்திய நாட்டு சுற்றுப் பயனித்திற்கு. சுகுணாவிற்கு கணவனைப் பிரிவது வருத்தமே. ஆனாலும் கணவனின் வளர்ச்சிக்குத் தானோ தன்னுடைப் பிள்ளைகளோ தடைக் கற்களாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.



ராஜேந்திரன் அந்நிய தேசத்திற்கு பறந்துவிட்டார். சுகுணா சிவகாமி இண்டஸ்ட்ரிசை முழுமையாகத் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தார். மனைவி எந்தச் சிரமும் இன்றி தொழிலை எடுத்த நடத்த நம்பிக்கையான ஆட்களை ராஜேந்திரன் உதவிக்கு விட்டுச் சென்றார். எல்லாம் நல்ல படியாக தான் சென்று கொண்டிருந்தது, திரன் குடும்பத்தினர் அவளை மறுபடி அணுகும் வரை!



தர்மேந்திரன் சுகுணாவை சுபிக்ஷத்திற்குள் இழுக்கும் முயற்சியில் இறங்கினார். மகனிடம் தங்கள் பாச வேசம் எடுபடாது என்பது அவர் அறிந்ததே. அதனால் சுகுணாவின் மூலம் காய் நகர்த்த முடிவெடுத்தார். ஒரு மத்திய குடும்பத்து பெண்ணிடம் தான் வளைந்து போவது அவருக்கு இழுக்குதான். ஆனால் காரியம் பெரிதா, வீரியம் பெரிதா என்று வருகையில், அவர் காரியத்தில் கண்ணாக இருந்தார். தொழிலதிபர் ஆயிற்றே!



நாடகம் ஆரம்பானது! கஜேந்திரன் தீராத நெஞ்சு வலியன ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டார். சுகுணாவிற்கு தகவல் சென்றது, அவர் தனது பெற்றோருடனும், பிள்ளைகளுடனும் கஜேந்திரனை காண மருத்துவமனைக்கு விழுந்தடித்துக் கொண்டு வந்தார். தர்மேந்திரன், மேகவதி, வசுந்தரா, ரகுவரன், ரகுவரனின் தந்தை யாவரும் அப்ரேஷன் தியட்டர் வாயிலில் சோகமே வடிவாகக் காத்துக் கிடந்தனர். மேகவதி அழுது கரைந்தார். வசுந்தரா சுகுணாவைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள். சுகுணாவின் பெற்றோர் அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். தர்மேந்திரன் ஷிவேந்திரனைத் அணைத்துக் தூக்கிக் கொண்டார். ரகுவரன் விஷ்வாவையும் ரூபாவையும் தன்னுடன் இருத்திக் கொண்டான்.



மருத்தவர்கள் கஜேந்திரனிற்கு ஏற்பட்ட மன அழுத்தமே அவரது மோசமான உடல் நிலைக்குக் காரணம் என்றும், தொடர்ந்து உடல் நிலை மோசமானால் அதிக பட்சம் ஆறு மாதம் காலம் தான் அவர் ஆயுள் நிலைக்கும் எனக் கூறிவிட்டார். பின்பு அவரின் மனதை சங்கடப் படுத்தாமல் பார்த்துக் கொள்ளுமாறுக் கூறிவிட்டு தர்மேந்திரனை அர்த்தப் பார்வைப் பார்த்து விட்டுச் சென்றார்.



பேரனைப் பிரிந்திருப்பதும், கொள்ளப் பேரப் பிள்ளைகளைக் காணாமல் தவிப்பதும் தான் மோசமான உடல் நிலைக்குக் காரணம் என நாடகமாடினர். கஜேந்திரன் ஒரு படி மேலே போய் சுகுணாவின் கைகளைப் பிடித்து “இந்தக் கிழவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுமா, என் பேரனுடன் மீண்டும் சந்தோசமாக வாழ! என் கொள்ளுப் பேரப் பிள்ளைங்கள கொஞ்ச நாள் பார்த்திட்டு இருந்தாலே போதும்மா எனக்கு, அப்புறம் நான் நிம்மதியா கண்ணு மூடுவேன்! கொஞ்சம் கருணை காட்டுமா..” எனத் கைதேர்ந்த நடிகரைப் போல பொய்யாக அழுது கண்ணீர் வடித்தவாறு இறைஞ்சினார் கஜேந்திரன்.



சுகுணாவோ “ஐயோ என்ன தாத்தா என் கிட்ட போய் கெஞ்சிக்கிட்டு, உங்களுக்கு இல்லாத உரிமையா?? நீங்க வான்னு சொன்னா வரப்போறேன். நான் முன்னடியே சொன்னபடி சுபிக்ஷ்த்திற்கு உங்க கொள்ளுப் பேர்க் குழந்தைங்களோட வந்துடுறேன். உங்க பேரனையும் சமாதானமாகி அங்க வருவார் அதுக்கு நான் பொறுப்பு. நீங்க கவலைப் படாதிங்க தாத்தா. உங்களுக்கு ஒன்னும் ஆகாது.” என அக்கறையுடன் சமாதானப் படுத்தினார். சுகுணாவின் பெற்றோர் சுகுணாவின் பதிலை அமோதித்தனர். அவர்களுக்கு வேறு என்ன வேண்டும்! மகள் கணவன் குடும்பத்துடன் இணக்கமாக வாழ்வதில் தான் அவர்களுக்கு விருப்பமும் சந்தோசமும்!!!



மேகவதியும், வசுந்தராவும் மனதிற்குள் “கெழம் வெளுத்துக்கட்டுது போ” என கஜேந்திரனின் நடிப்பை மனதிற்குள் சிலாகித்தனர்.





சுகுணா தன் பிள்ளைகளிடம் திரும்பி “விஷ்வா கண்ணா, ரூபா செல்லம், ஷிவா குட்டி நாம இனிமேல் நம்ம தாத்தா வீட்ல தான் இருக்கப் போறோம்.” என அறிவித்தார். பிள்ளைகள் தங்கள் அறிவிற்கு எட்டிய ஏன், எதற்கு என்பன போன்ற கேள்விகளைக் கேட்டனர். சுகுணாவும் அவர்களுக்குப் பொறுமையுடன் பதில் சொன்னார்.



ஆனால் ஷிவேந்திரன் மட்டும் கஜேந்திரனை கூர்ந்து நோக்கினான். ஆனானப்பட்ட கஜேந்திரனே அவன் கூரியப் பார்வையை சந்திக்க இயலாது தன் கண்களை அயர்வில் மூடிக் கொள்வது போல் மூடிக் கொண்டார். அவர் மனதில் “பய விவகாரம் புடிச்சவனா இருப்பான் போலியே, என் சுண்டு விரலளவு இருப்பான்(ஷிவேந்திரன் 5 வயதில் 8 வயது சிறுவனின் உடல் வளர்ச்சியைக் கொண்டிருந்தான்) இந்த சுண்டுப் பய, நம்மளையே சங்கடப் பட வச்சிட்டானே!!! நல்ல வாரிசு தான் போ!!! அவன் அப்பனைப் போலயே இருந்து வைக்கிறான், பாக்கறதுக்கு சிவகாமிப் போல இருக்கான்! ஆனா அந்தக் கண்கள்ல அமைதியும் அன்பும் இல்லை. மாறா ஆராய்ச்சி, தீட்சண்யம் தானே இருக்கு. அந்த ஆளுமையும் தோரணையும்!!! பய எல்லார் கண்ணுலயும் விரல விட்டு ஆட்டுவான் போலயே!! இவன் கிட்ட சுதாரிப்பா இருக்கனும், இல்லைக் காரியம் கெட்டுடும்..” என மனதிற்குள் ஷிவேந்திரனைப் பற்றி அனுமானித்துக் கொண்டிருந்தார்.



ராஜேந்திரனுக்கு மனைவி சுபிக்ஷ்திற்கு குடி பெயர்ந்தது தெரியாது, அவரை அந்தச் செய்தி அணுகாமல் இருக்கும்படி அவரின் விசுவாசிகளுக்கு அன்பு கட்டளையிட்டார் சுகுணா. நிறுவனத்தைப் பார்க்கவும், கஜேந்திரனுக்கு பணிவிடை செய்யவும், வீட்டு மருமகளாக எல்லா வேலைகளையும் மேற்பார்வை பார்க்கவும் தான் அவருக்கு நேரம் இருந்தது. ஓய்வின்றி கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொள்ளாதக் குறையாக அவர் ஓடிடோடி வேலை செய்தார்.



பிள்ளைகளை அவர் மறந்துவிட வில்லை. பெரியவர்களுடன் அவர்களைப் பழகவிட இதுவே சிறந்த தருணம் என எண்ணினார். அவர்கள் தானே அந்த வயதிகரின் நோய்க்கு அருமருந்து!!! அதற்கு ஏற்றார்போல் பிள்ளைகளை தாங்கள் கவனித்துக் கொள்வதாக கூறிப் பொறுப்பேற்றுக் கொண்டனர் தர்மேந்திரனும் மேகவதியும். தங்கள் பேரன் பேத்தியை தங்கள் மகனைப் போலவே வளர்க்க(?) ஆசைப்படுவதாகக் கண்களில் போலி கனிவைத் தேக்கிக் கூறினர். கணவனைப் போல என்ற வார்த்தைகள் சுகுணாவை முடிவை ஸ்திரப்படுத்தியது.



சுகுணவின் பெற்றோரிடம் “நீங்க இங்க வந்து போனா குழந்தைங்க ஏங்கி போய் அடம் பிடிப்பாங்க. அப்புறம் எங்களோட ஒட்டமாட்டாங்க, அதனால கொஞ்ச நாள் ஒதுங்கி இருங்க. கொஞ்ச நாள் தான்! அப்புறம் நாம எல்லாரும் சேர்ந்து இங்க சந்தோசமா இருக்கலாம்.” என தன்மையுடன் வேண்டுகோள் விடுத்தார் மேகவதி. சுகுணாவின் வீட்டினர் சம்பந்தியம்மா சொல்வது சரியே என முடிவு செய்து, தனது மகளையும் பேரப் பிள்ளைகளையும் விட்டு ஒதுங்கிக் கொண்டனர் தற்காலிகமாக(???).



யானை தன் தலையில் தானே மண்ணை வாரி இரைத்துக் கொள்ளுமாம்!!! அதுபோல சுகுணா தன் பிள்ளைகளை விட்டுத் தானே விலகி, அவர்களுக்கும் அவருக்குமான உறவினில் பெரிய பள்ளத் தாக்கையே ஏற்படுத்திக் கொண்டார். ‘இதற்குத் தானே இவ்வளவு காலம் காத்துக் கிடந்தோம்’ என்று சகுனி கூட்டம் கள்ள சிரிப்பு சிரித்துக் கொண்டது, தங்கள் சகுனி விளையாட்டை விளையாட சரியான ஆடுகளைத்தை அவளே ஏற்படுத்திக் கொடுத்துவிட்டாள்!



‘முட்டாள் உன் பிள்ளைகள் தானடி நாங்கள் உருட்டி விளையாடப் போகும் தாயங்கள்!!! இனி தான் எங்கள் ஆட்டம் ஆரம்பம் சுகுணா, எங்கள் ராஜாவின் காதல் மனைவியே!! சிரித்துக் கொள் உன் வாயும் வயிறும் வலிக்கும் வரை கடைசி முறையாக ஆசை தீரச் சிரித்துக் கொள், இனி நீ சிரிக்கப் போவதில்லை! அழப் போகிறாய் சாகும் வரை அழப் போகிறாயடி!!!’ என மனதிற்குள் வஞ்சத்துடன் சுகுணாவை எண்ணி எள்ளி நகையாடினர்.



தன் சொந்தப் பிள்ளைகளைக் கூட மேகவதி வேலையாட்களிடம் தான் ஒப்படைத்தார். அவர்களுக்கு மேல் தட்டு பழக்க வழக்கங்களைக் கற்று கொடுக்க ஒரு கவர்னஸை நியமித்திருந்தார். அவருக்கு மாதர் சங்கம், பார்டிகள், சீட்டாட்டம், குதிரை ரேஸ் இவற்றிற்குத் தான் நேரம் இருந்தது! மேகவதி கணவனின் சொல்லுக்கு இணங்கி தனது பேரன் விஷ்வேந்திரனையும், பேத்தி ரூபாவதியையும் கவனித்துக் கொண்டார். அவர்கள் தான் திரன் குடும்பத்து ஏக போக வாரிசு என மனதில் பதிய வைத்தார். பணம் எனும் போதையை அவர்களின் தலைக்கு ஏற்றிவிட்டார். அவர்களும் ஏற்றுக் கொண்டனர்!!!



தர்மேந்திரன் ஷிவேந்திரனை எப்பொழுதும் தன் கைக்குள்ளேயே வைத்துக் கொண்டு அடைகாத்தார். அத்தி பூத்தார் போல் அவனுடைய அன்னைக்கும் அவனுக்குமான சந்திப்பு நிகழ்ந்தது. அவ்வாறு நிகழவைத்தவர் தர்மேந்திரன்.



ஷிவேந்திரன் யாரிடமும் அவ்வளவு எளிதில் ஒட்டமாட்டான். சுபிக்ஷத்தில் கூட அவன் தர்மேந்திரனுடன் மட்டும் தான் பேசுவான். மற்றவர்களிடம் ஒதுங்கியே இருப்பான். வேலையாட்களைப் பார்வையாலே தள்ளி நிறுத்துவான். ‘நீ எனக்கு கீழே தான்’ என்று சொல்லாமல் சொல்லும் அவன் பார்வை.



தர்மேந்திரன் ஒரு விஷயத்தைத் தெளிவாக புரிந்து கொண்டார், ஷிவேந்திரன் கட்டுக்குள் சிக்காதவன். எதையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்து ‘தான், தன்னுடையது’ என முன்னிறுத்தும் அவனது தீரத்தை மிகச் சரியாக பயன்படுத்தினார். தொழில் சம்பத்தப்பட்ட அனைத்து விவரங்களையும் அவன் முன்னிலையில் விவாதித்தார். மறந்தும் அவர் பேரன் விஷ்வேந்திரனையும், பேத்தி ரூபாவதியையும் இவ்வாறானத் தருணங்களில் அழைத்ததில்லை.



சரித்திரம் திரும்பிவிட்டதா! கஜேந்திரன் எதைச் செய்து தர்மேந்திரனை கடிவாளமிடபட்ட குதிரையாக தன் சொற் பேச்சு கேட்க வைத்தாரோ! அதே ஆயுதத்தைக் கொண்டு தர்மேந்திரன் ஷிவேந்திரன் ஆட்டுவிக்க முடிவு செய்தார். அதில் கொஞ்சமே கொஞ்சம் வெற்றியும் கண்டார். ஆனால் அவனை முழுவதுமாக அவர் கட்டுக்குள் கொண்டுவர முடியாது எரிச்சலுற்றார்.



ஷிவேந்திரன்! அடுங்குபவான அவன்! அவன் அடக்கப் பிறந்தவன் ஆயிற்றே!! ஆர்ப்பரிக்கும் பெருங்கடலை தன் உள்ளங்கைக்குள் அடுக்குவதற்குச் சமம், ஷிவேந்திரனை தனது ஆளுகைக்குள் கொண்டு வருவது, என்பதனை மிகத் தெளிவாக புரிந்து கொண்டார் தர்மேந்திரன். இவன் தன்னைப் போலோ, தன் மகனைப் போலோ, தன் தந்தையைப் போலோ இல்லை. இவன் முரட்டுக் குதிரை! அதிலும் கருப்பு குதிரை!!! மிரட்டறான்!!!



எனவே தனது போர் முறையை மாற்றினார். திரன் குடும்பம் மொத்தமும் அவனது ஆளுகைக்குள் கட்டுப்பட்டது, போன்றொரு தோற்றத்தை உருவாக்கினார். பிற்காலத்தில் அதுவே உண்மையாகப் போகிறது என்பதை அவர் அப்பொழுது அறிந்திருக்க வில்லை. அவன் தான் திரன் குழுமத்தின் மற்றும் குடும்பத்தின் வருங்காலம் என்பதனை ஒவ்வொரு நொடியும் அவனை உணர வைத்தார். அதில் அவர் வெற்றியும் கண்டார். பின்னே தன் மகன் ராஜேந்திரனிடம் அவர் நிறையப் பாடங்களை கற்றுவிட்டார். இப்போது அவரது முறை! அவர் தான் அனைவருக்கும் பாடம் கற்பிக்கப் போகிறார் ஷிவேந்திரன் மூலமாக.



“டாட்ட்ட்ட்ட்ட்ட்” என அலறினாள் வசுந்தரா. பழைய நினைவுகளில் இருந்து மீண்டவராக “என்ன” என்பது போல் பார்வைப் பார்த்தார் தர்மேந்திரன். “அந்த ஷிவ் என்னையும் அம்மாவையும் இன்சல்ட் பண்ணிட்டு போறான்.. அதோட விட்டானா, எனக்கும் இந்தக் குடும்பத்தில எதுக்கும் உரிமை இல்லைனு முகத்தில அடிச்ச மாதிரி சொல்லிட்டான்!! இதை விட எனக்கு அசிங்கம் இல்லை. ஆனா நீங்களோ மாம்மோ கொஞ்சம் கூட ரியாக்ட் பண்ண மாட்டேங்கிறிங்க” எனக் கடப்புடன் வினவினாள் வசுந்தரா.
 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


“வசு, லிசன் ஷிவ்வ இரிட்டேட் பண்றத இத்தோட நிறுத்திக்கோ, தீரன் குரூப்போட ஃபுயுச்சர் அவன் தான். அவன் சொன்னது உண்மைதானே பாதிக்க மேல் இருந்த சொத்தை எல்லாம் உனக்குத் தான் நாங்க வச்சு அழுதோம், அண்ட் ஸ்டில் வீ ர் கண்டினுயிங்! நீ என் பொண்ணு எங்க பொண்ணு எங்கள கொஷின் பண்ணத் தான் ஒனக்கு ரைட்ஸ் இருக்கு. ஷிவ்வையோ அவனோட ஃபாமிலியோ இல்லை புரிஞ்சிதா. ஒரு தடவை அவசரப்பட்டு கஷ்டப்பட்டது மறந்து போயிடுச்சா?



அவனோடு எல்லைக்குள்ள நுழைஞ்சு, அவன சேர்ந்தவங்கள நீ டிஸ்டர்ப் பண்ணினா, அவன் சும்மா இருக்க மாட்டான். உன்னையும் உன் பணம் பறிக்கிற குடும்பத்தையும் இந்த சுபிக்ஷ்தக்குள் வரவிடாமப் பண்ணிடுவான். அப்படி நடந்தா நாங்க அவன எதிர்த்து பேச மாட்டோம். அவனுக்கு இன்னிக்கு 9 வயசு முடிஞ்சு 10 வயசு ஆரம்பம் ஆகுது. இப்பவே என்கூட பேக்டரிக்கு எல்லாம் வரான். இன்னும் 8 இயர்ஸ், அவன் திரன் குரூப்ப அவனுக்கு கீழே கொண்டு வந்துடுவான். மத்தவங்க மாதிரி அவன் வாய் பந்தல் போடுறவன் இல்லை. அதனால நீ உன் வாலை சுருட்டிட்டு இரு. நான் சொல்றது உனக்கு புரியுதா?



ஷிவ்வும், திரன் குரூப் ஆஃப் கம்பெனிசும் தான் எனக்கு முக்கியம். இந்த இரண்டுக்காக எதை வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் நான் இழக்கத் தயாரா இருக்கேன்.” என அழுத்தமானக் குரலில் மகளுக்குப் பதில் கூறிவாறிவிட்டு டைனிங் டேபிளில் இருந்து எழுந்து சென்றுவிட்டார்.



வசுந்தராவிற்கு உள்ளம் கொதித்தது. புகுந்த வீட்டிலும் தனக்கு மரியாதைக் கிட்டவில்லை, பிறந்த வீட்டிலும் அதே நிலைமையா?? என எண்ணி நொந்தாள். ஷிவேந்திரன், சுகுணா, ராஜேந்திரன் இவர்கள் தான் தன்னுடையக் கேட்பாரற்ற நிலைக்குக் காரணம். நிச்சயம் பழி வாங்க வேண்டும்! வாங்குவேன் என மனதிற்குள் வஞ்சினத்தை மறைத்துக் கொண்டு நடமாடினாள்.



முதல் தளத்தில் உள்ள பால்கனியில் நின்று கொண்டு வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தன் அன்னையைத் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஷிவ் உணர்வைக் காட்டாத முகத்துடன். அவனின் கண்கள் தாயின் கன்னங்களில் கண்ணீர் இறங்குவதைக் கண்டு உடல் விரைப்புற்று வந்த வழியே திரும்பி சென்றுவிட்டான்.



அழுகை ஒருவனைப் பலவீனப்படுத்தும் ஆயுதம். அதுவும் பெண்களின் கண்ணீரில் ஆண்கள் வீழ்ந்தேவிடுவர்!! நான் ராஜேந்திரன் அல்ல! பெண்களின் அழுகையைக் கண்டு தவித்து, சிரிப்பைக் கண்டு மயங்குவதற்கு! நான் ஷிவேந்திரன்! ஆளுபவன்! அடுக்குபவன்!! அழிப்பவன்!!!



இன்று அவனது பிறந்த நாள்! 10 ஆவது பிறந்த நாள்! (27th January 1994). தனக்காகத் தனது அன்னை இன்று அலுவலகத்து செல்லாமல் தன் கைவண்ணத்தில் மணக்க மணக்கச் சமைத்திருந்தார். தன் கையால் ஊட்டி விடவும் ஆசை கொண்டார், ஆனால் மகனுக்குப் பிடிக்காது என்று பரிமாறுவதோடு நிறுத்திக் கொண்டார். மகனின் ஒதுக்கத்தில் மனம் உடைந்து போய் கண்ணீர் விட்டார். இவற்றை ஷிவேந்திரன் உணர்ந்தும், மனம் அசறவில்லை.



தனது அறையின் பால்கனியில் நின்று கொண்டு தனது வீட்டில் இரவு நடக்க இருக்கும் தனது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஐந்து வருடங்களாக நடப்பது தான். ஆனால் ஏனோ மனம் குறு குறுவென்று இருந்தது. கண்டிப்பாக தன் அன்னையின் கண்ணீரால் வந்தக் குறு குறுப்பல்ல! வேறு ஏதோ ஒரு நுன்னிய உணர்வு. ஏதோ மனதிற்குள் செய்கிறதே! என்ன அது?? ஏன்??? ஏது ஒரு குரல் அவனை அழைக்கிறது அழுகையுடன்!!! யாரின் குரல்??? குழந்தையின் அழுகுரல் போல் அல்லவா இருக்கிறது!!! யார் அந்தக் குழந்தை?? அவனை ஏன் அழைக்கிறது?? என மனதிற்குள் கேள்விக் கேட்டுக் கொண்டான் அச் சிறுவன்.



அடே! ஷிவ் பயலே!! அடங்காதவனே!! உன் பொண்டாட்டி பிறந்துவிட்டாளடா!!! உன் பிறந்த நாளையே தன் பிறந்த நாளாக் கொண்டு பிறந்துவிட்டாளடா!! அழுகையால் தன்னுடைய வரவை உனக்கு உணர்த்திவிட்டாள்!!! நீயும் அவளை உன்னை அறியாமல் உணர்ந்து கொண்டாய்!!! இனி என் ஆட்டத்தைப் பார் மகனே!!! என விதி அவனைப் பார்த்து சிரித்தது.



ஆளுமையான ஆண் சிங்க குட்டிக்கு மருளும் மான் குட்டி இணையா??? விதியின் முடிச்சை அவிழ்ப்பவர் எவரோ???



கருப்பு அழகி வருவாள்…



 

sokki

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நட்புகளே :smiley6:

'என் கருப்பழகி' - 7 & 8வது அத்தியாயங்களை பதிந்துவிட்டேன் :)

சின்ன வேண்டுகோள். அடுத்த வாரம் எனக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு, கொஞ்சம் படிக்க வேண்டும். அதனால் அடுத்த ஞாயிறன்று (11.11.2018) தான் அடுத்த அத்தியாயம் பதியப்படும்.சோ கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோங்கபா :)
 
Status
Not open for further replies.
Top