All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ப்ரவினிகாவின் "மைதி(லி)யின் காதல் பூ" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 
Last edited by a moderator:
G

Geetha sivakumar

Guest
வணக்கம் நண்பர்களே,

எல்லாரும் எப்படி இருக்கீங்க. நான் தான் உங்கள் கீதா சிவக்குமார். எப்படி சொல்றதுனு தெரில கொஞ்சம் சந்தோஷம், நிறைய பயம் இருக்கு. கொஞ்ச நாட்களாக கதை எழுதனும்னு ஆசை. ஆனா நம்ப கதைய யாரு படிப்பானு தோணும். ஆனால் இப்பொழுது சரியோ தவறோ எழுதி பார்க்கலாம் நினைத்தேன். அதனால் இப்பொழுது உங்கள் பார்வைக்கு ஒரு கதை கொண்டு வரலாம்னு முடிவெடுத்து இருக்கிறேன்.

நான் சொன்ன உடனே எனக்கு திரி அமைத்து கொடுத்த கலா மேம்க்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து என்னோட கதைய படிக்கப் போகிற உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கதையின் பெயர் "மைதி(லி)யின் காதல் பூ"

இந்த கதை வெற்றி பெற உங்களுடைய முழு ஆதரவும் எனக்கு வேண்டும். என்னுடைய முதல் கதை என்பதால் என்னுடைய நிறைகுறைகளை சுட்டிக் காட்டி இந்த கதை முழுமை அடைய வாழ்த்துமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே. நன்றி

உங்களுடைய தோழி,
கீதா சிவக்குமார்.
 
G

Geetha sivakumar

Guest
முன்னோட்டம்

மனதில் ஒருவித பயம் , வேதனை, சந்தோஷம், குழப்பம் என்று எல்லாம் சேர்ந்து சூறாவளியாக சுற்றி அடித்துக்கொண்டிருந்து மைதிலியின் நெஞ்சில். கூரைப்பட்டு உடுத்தி புதுமணப்பெண் ஆக அலங்கரித்து கொண்டிருந்தனர்.
புதுமணப்பெண்ணிற்க்கு இருக்கும் வெட்கம், சந்தோஷம் எந்த உணர்வும் இல்லை அவளிடத்தில்.

மணமகன் சரவணன் மனதில் குழப்பங்கள் இருந்தாலும் அதையும் மீறி மணமகனுக்கு உரிய சந்தோழத்தில் காதலித்தவளையே கை பிடிக்கப் போகிறேன் என்று மகிழ்ச்சியில் இருந்தான்.

கும்பகோணத்திலுள்ள சாரங்கபாணி கோவிலில் இறைவன் சன்னிதானத்தில் ஒரு சில உற்றார் உறவினர்கள் மற்றும் மணமகனின் தோழர்கள் சிலர் சுற்றி இருக்க, அவர்கள் அனைவரும் அஷதை தூவ சரவணன் மைதிலியின் கழுத்தில் மங்கள நாண் பூட்டினான்.

மைதியின் மனதில் ஆயிரம் கவலைகள் இருந்தாலும், இந்த தருணம் வாழ்வில் ஒருமுறை தான் வரும் என்று மனதை மாற்ற முயற்சி செய்து சிறிது புன்னகையுடன் காட்சி தந்தாள் நிழல் படத்திற்கு. இருந்தாலும் அவள் மனதில் நான் செய்வது சரியா? தவறா?

விடை அறிவது கடவுளின் கையில்....
 
G

Geetha sivakumar

Guest
பூ-1

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்-
கோலம் செய் துங்கக் கரி முகத்துத் தூமணியே! நீ
எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!
என்ற பிள்ளையார் மந்திரத்தை அழகாக சொன்னாள் நம் கதையின் நாயகி மைதிலி.

நம் கதையில் வரும் நாயகி. மீன் போன்ற கண்கள் , செர்ரி பழம் போல் உதடு, வில் போன்ற புருவம், ஆப்பிள் போன்ற கண்ணம், அழகான நாசி, கணகட்சிதமான உடலமைப்பு இந்த அழகு அணைத்தும் பொருந்தியவள் தான் நம் கதையின் நாயகி. மொத்தத்தில் பிரம்மன் படைத்த சிலையோ என்று நினைக்க தோன்றும். அனைவரையும் திரும்பி பார்க்க தூண்டும் அழகு, அப்படினு சொல்வனு எல்லாரும் எதிர் பாத்திங்களா. (அப்பறம் ஏண்டி நீதன சொன்ன நாங்க கற்பனைலாம் பண்ணி வச்சுட்டோம் கடைசி அப்படி இல்லனு சொல்ற எங்க டைம்லா வேஸ்ட் பண்ணிட்டியே ஒழுங்கா கதைல இருக்கறத மட்டும் நீ சொன்னா போதும்னு உங்க மனசுல என்னை திட்டிட்டு இருக்கறது எனக்கு இங்க வரைக்கும் கேட்குது. (ஒழுங்கா கதைக்கு வா இல்ல கொலவெறி ஆகிடுவோம் பாத்துக்க)) நீங்க நினைக்குற மாதிரி அந்த அளவுக்கு அழகு இல்ல ஆன குண்டு கண்கள், அளவான நாசி, மிதமான கண்ணம், அளவான உடலமைப்பு, உயரம் 5.1 இப்படி தாங்க இருப்பாங்க நம் கதையின் நாயகி.(ஏம்மா மைதி உன்னை இண்ரோ குடுத்துட்டமா எல்லாருக்கும். நீ சொன்ன மாதிரி பொய்லாம் சொல்லாம இருக்குற உண்மைய மட்டும் சொல்லிட்டன் போதுமா) நம்ம இப்ப கதைக்கு வருவோம்.

அம்மா என்னமா பண்ற எனக்கு ஸ்க்கூலுக்கு டைம் ஆய்டுச்சு சீக்கிரம் வா சீக்கிரம் சாப்பாடு கட்டி குடுமா என்று கத்தி கூப்பிட்டுட்டு இருந்தாள் மைதிலி. ஆமா சாப்பாடு கட்டுறது இருக்கட்டும், உனக்கு இன்னைக்கு term test ல படிச்சுட்டியா. 10த் படிக்கிறனு தான் பேரு ஆனா நீ புத்தகத்த திறந்து படிக்க உட்கார்ந்தாலே ஒன்னு தூங்கிடுற இல்ல மண்டைய சொறிஞ்சுட்டு வேடிக்கை பார்க்கிறது இல்லன அண்ணன் கிட்ட சண்டைக்கு போறது. நீ ஒரு நாளும் ஒழுங்கா உட்கார்ந்து படிச்சு நான் பார்த்ததே இல்ல. இந்த வாட்டி ஆச்சும் science ல பாஸ் பண்ணுவியா இல்ல இந்த வாட்டியும் புட்டுக்குமா.(நீங்க நினைக்கறது கரெக்ட் தான்க நம்ப மைதிலிக்கு maths ன ரொம்ப பிடிக்கும், ஆனா science அரவே பிடிக்காது. அதுலயும் chemistry னா ஓடிருவா. அவ்ளோ வெறுப்பு science மேல)
அம்மா அதலாம் நான் பாஸ் பண்ணிடுவன். நீ சீக்கரமா சாப்பாடு கட்டு மணி இப்பவே 8.45 ஸ்க்கூல்ல 9 மணிக்குலாம் உள்ள இருக்கணும். சரி இந்தா சாப்பாடு உன்னை சாய்ங்காலம் பாத்துக்கிறேன். டிபன் சாப்பிட்டியா? சாப்பிட்டன் மா நான் போய்ட்டு வரன். பை மா.

நம் கதையின் நாயகியின் பெற்றோர் தந்தை தனசேகர் தாய் தனலட்சுமி அவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண். பையன் குணசீலன், பெண் நம்நாயகி மைதிலி. நடுத்தரவர்க குடும்பம் இவர்களுடையது.

தனசேகர் சின்னதாக ஒரு துணிக்கடை வைத்திருக்கிறார். தனலட்சுமி இல்லத்தரசி, சில நேரங்களில் கணவர் கடைக்கு உதவி செய்வார். கணவன், பிள்ளைகள் அவர்கள் இருவரும் தான் லட்சுமியின் உலகம். முக்கியமாக காதல் என்றால் அவருக்கு அறவே பிடிக்காது.

சேகர் தன் குடும்பத்துக்காகவே வாழ்கிறவர். தனக்கு என்று எதையும் செய்து கொள்ள மாட்டார். எவ்வளவு நேரம் ஆனாலும் வீட்டுக்கு வந்து தான் சாப்பிடுவார். நேர்மை மற்றும் மனிதநேயம் மிக்க மனிதர்.

அண்ணன் குணசீலன் எல்லாத்தையும் விளையாட்டாகவே எடுத்துக் கொண்டு போய்ட்டே இருப்பான். வீட்டில் எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்தக் கொள்ள மாட்டான். ஒரு தனியார் நிறுவனத்தில் கிராபிக் டிசைனராக பணிபுரிகிறான். சனி, ஞாயிறுகளில் நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, சினிமா பார்ப்பது என்று வாழ்க்கையை இன்பமாக வாழ்பவன்.

நாயகி மைதிலி பெற்றோர் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பவள். அவர்களுக்கு அடங்கி நடப்பவள். ஆனால் வீட்டில் அம்மா உடன் கண்டிப்பு மற்றும் விளையாட்டு, அப்பா கிட்ட பாசம் மற்றும் செல்லம் கொஞ்சுவது, அண்ணனுடன் அடிதடி மற்றும் சண்டை போடுவது இது தான் அவளுடைய உலகம். 10த் படிக்கிறாள். சுமாராக தான் படிப்பாள்.

பள்ளியில் உமா, ஹே மைதிலி நீ இன்னைக்கு படிச்சுட்டியாடி. மைதிலி, யாரு படிச்சா எப்பயும் போல என்ன கதை மண்டைல தோணுதோ அதை எழுத வேண்டியது தான். Science புத்தகத்த கைல வச்சுட்டு உட்கார்ந்தாலே அதுல இருக்கிற வார்த்தைய பார்த்தா ஏதோ கண்ண கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு நான் என்னடி பண்ணட்டும். அதுக்கு மேல எப்படியாவது படிக்கலாம்னு பாத்தா தூக்கம் தான் வருதுடி. சரி நம்பலே திக்கி திணறி கொஞ்சம் படிச்சுட்டு போனா அந்த மிஸ் கரெக்டா நான் படிச்சத தவிர மத்த எல்லாத்துல இருந்தும் கேள்வி கேட்குது. சரி இந்த பிரச்சனையே வேண்டாம் மிஸ் 20 மார்க்ல முக்கியம்னு சொன்னத மட்டும் படிச்சுட்டு போனா அந்த மிஸ் அத 2 மார்க்ல கேட்குது இல்லனா சில சமயத்துல அதை கூட கேட்க மாட்டுது. அதுக்கு தான்டி நான் எதையுமே படிக்கல. நம்ப படிக்கறது வராது தெரிஞ்ச பிறகு எதுக்கு படிக்கனும்னு விட்டுட்டன் எப்புடி. சரி வா கிளாஸ்க்கு போலாம். அங்க போய் 2 மணி நேரம் தூங்கலாம் எப்படியும் ஒன்னும் தெரியாது. ஏதோ தூங்கி கிட்டே கிறுக்கலாம் வா.

பூ மலரும்.

"கொஞ்சம் கூட கோபமே இல்லாம சிரிச்சு மட்டுமே உங்க கூட ஒருத்தர் பழகுறார் என்றால் அவர் அன்பில் சிறந்தவர் என்பதை விட நடிப்பதில் சிறந்தவர் என்பதே உண்மை!!!"
 
Last edited by a moderator:
G

Geetha sivakumar

Guest
ஹாய் நண்பர்களே, இந்த கதை வாரத்திற்க்கு 2 முறை கொடுக்கிறேன். ஆனால் எந்த கிழமை என்பது என்னால் உறுதியாக சொல்ல முடியாது. நேரம் கிடைக்கும் போது பதிவிடுகிறேன்.
 
G

Geetha sivakumar

Guest
பூ-2


உமா, மைதிலி test நல்லா எழுதுனியாடி. ஏதோ எழுதி இருக்கேன்டி, இன்னைக்கு அந்த மிஸ் போனா போகுதுனு நான் முன்ன ஒரு தடவை படிச்சதுல இருந்து இன்னைக்கு கேட்டுச்சு. அதனால இரண்டு 20 மார்க் எழுதி இருக்கேன்டி. நான் காலைல புலம்புனது கடவுள்க்கு கேட்டுருச்சு போல அதான் அந்த மிஸ் எப்படியோ தப்பி தவறி எனக்கு தெரிஞ்சதா கேட்டுருக்கு.

போன தடவையே எங்க அப்பா கிட்ட report card ல கையெழுத்து வாங்கறத்துக்குள்ள நான் பட்டபாடு எனக்கு தான்டி தெரியும். எங்க அப்பா கிட்ட கையொழுத்து கேட்டா நீ science ல ஃப்யில் ஆயிட்ட அதனால அம்மா கிட்ட சொல்லு அம்மா சரினு சொன்னா நான் போடுற இல்லனா நான் போட மாட்டனு சொல்லிட்டாரு.

உமா, ஏன்டி கையெழுத்து உங்க அப்பா தான போடனும், ஏன் உங்க அம்மா கிட்ட அனுமதி வாங்க சொல்றாரு.

மைதிலி அது எங்க விஷயத்துல எந்த முடிவு எடுக்கறதா இருந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்து சம்மதிச்சா தான் நாங்க கேட்டது செய்வாங்க. எங்க அம்மா எதாவது வேண்டானு சொல்லிட்டா அத செய்ய மாட்டாங்க. ஆனா நான் அந்த கையெழுத்து வாங்கறத்துக்கு பட்டபாடு இருக்கே.

எங்க அம்மா என்ன நீ அடுத்த தடவை science ல பாஸ் ஆகலனா என்ன பண்ணலாம்னு என்கிட்டயே கேட்டாங்க. நான் திரு திருனு முழிச்சனா அவங்க என் முழிய பார்த்துட்டு ஒன்னு சொன்னாங்க பாரு நான் அப்படியே ஷாக் ஆயிட்டன்.

உமா, என்னடி சொன்னாங்க. மைதிலி, உனக்கு இரண்டு நாளைக்கு சோறு குடுக்க மாட்டனு சொல்லிட்டாங்கடி, நான் எதவேணாலும் தாங்கிப்ப ஆனா என்னால சாப்பிடாம மட்டும் இருக்க முடியாதுடி. உனக்கே தெரியும் இந்த ஸ்க்கூலே இடிஞ்சு விழுந்தாலும் எனக்கு சோறு மட்டும் இல்லாம இருக்க முடியாதுனு. எங்க அம்மாக்கு என்ன பத்தி தெரிஞ்சே அப்படி சொல்லிட்டாங்கடி அது தான் கஷ்ட்டமா ஆயிடுச்சு.

என் மண்டைல என்ன ஏறுதோ அது தான வரும். வராதத வா வான எப்படி வரும்.

சரி என்ன விடு நீ எப்படி எழுதுன.

உமா, ஏதோ எப்பயும் போல 70 மார்க் வர மாதிரி எழுதி இருக்கன்டி.

எனக்கு ஒரு சந்தேகம் உமா, நீயும் என்கூட தான் இருக்க என் பக்கத்துல தான் உக்காருர. இரண்டு பேரும் ஒன்னா தான் கிளாஸ் நடக்கும் போது நடத்துறது புரியாத அப்ப தூங்கறது, கிளாஸ் நடக்கும் போது சாப்பிடுறதுனு எல்லா வேளையும் செய்றோம்.

அது எப்படி exam அப்ப மட்டும் கரெக்ட்டா நீ பாஸ் பண்ணிடுற நான் fail ஆயிடுற.

எங்க அம்மா முதல்ல உன்ன வச்சு ஒப்பிட்டு பார்த்து தான் என்னை திட்டுறதே. அவ உன்கூட தான இருக்கா அவ பாஸ் ஆயிடுறா நீ fail ஆயிடுறனு திட்டுறாங்க. உன்னால தான் நான் நிறைய திட்டு வாங்கிறன்.

நானே யோசிப்பன் நம்ப கூட தான இவ சுத்துற ஆனா இவ மட்டும் எப்படி பாஸ் ஆகுறானு. முதல்ல உன் friendship விட்டாலே நான் பாஸ் ஆயிடுவன். எருமை மாடு கூடவே இருந்து எனக்கு எதும் சொல்லி தர மாட்டுற.

உமா, சரி சரி விடுடி நான் ஏதோ கொஞ்சம் சொல்றத கவனிக்கிறன். அதனால கவனிச்சத மட்டும் மனசுல வச்சு exam சமயத்துல எழுதிடுற. சரி விடு வா இனிமேட்டு பாத்துக்கலாம்.

ஹே உனக்கு ஒன்னு தெரியுமா பக்கத்துல அந்த பாய்ஸ் ஸ்க்கூல் correspondent இறந்துட்டாராம் அவங்க ஸ்க்கூல் விடுமுறை விட்டுட்டாங்கலாம். அதே போல நம்ப ஸ்க்கூல் தலைமை ஆசிரியர் இல்லனா நம்ப correspondent வயசானவர் தானடி அவங்கள்ள யாராச்சும் ஒருத்தர் செத்தா கூட நாளைக்கு விடுமுறை விட்டுருவாங்கல.

இந்த வருஷம் தினமும் ஸ்க்கூல் போறோம்டி எல்லா தமிழ் பண்டிகையும் இந்த தடவை சனி, ஞாயிறு ல தான் வந்துருக்குடி. ரொம்ப காண்டா இருக்கு.

இரண்டு மாதம் கழித்து

ஹே மைதிலி இன்னைக்கு தான உனக்கு ரிசல்ட் வருது நீ கொஞ்சம் கூட கவலையே இல்லாம தூங்குற. போ போய் குளிச்சுட்டு கோவிலுக்கு போய்ட்டு சாமி கிட்ட வேண்டிட்டு பிள்ளையார்க்கு 9 சுத்து சுத்திட்டு வா.

அய்யோ அம்மா வேற நான் எங்க தூங்குற பயத்துல கண்ண மூடிட்டு படுத்துட்டு இருக்க. நான் ஃப்யில் ஆயிட்டனா எங்க அம்மா நல்லா என்ன திட்டுறாங்களோ இல்லையோ கூட இருக்குற சொந்தகாரங்க ஃபோன் பண்ணி எங்க அம்மாவ உசுப்பு ஏத்தி என்ன நல்லா அடிவாங்க வெப்பாங்க கடவுளே அதுக்காக ஆச்சும் நான் பாஸ் பண்ணிடனும். சரி போய் கோவில சுத்திட்டு வருவோம்.

அப்பா, ஹே மைத்து பாஸ் ஆயிட்ட சூப்பர் சுப்பர். 361 மார்க் எடுத்துறுக்கமா. அம்மா, சரி நாளைக்கே நாம வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு போய் பதிவு பண்ணிட்டு வரலாம். நாளைக்கு 7மணிக்குலாம் கிளம்புனா தான் சீக்கிரமா பதிவு பண்ணிட்டு வர முடியும்.

கடவுளே நீ என்ன காப்பாத்திட்ட science ல ஜஸ்ட் பாஸ் ஆச்சும் ஆகனும்னு நினைச்சன் நீ 45 மார்க் வாங்கி குடுத்துருக்க, நன்றி கடவுளே.

பூ மலரும்.

(நம்ம ஹூரோ என்ட்ரி அடுத்த எபில தரேன்)

"இதயம் எந்த அளவுக்கு பிடித்தவர்களிடம் சண்டை போடுகிறதோ, அந்த அளவுக்கு அவர்களிடம் அன்பை எதிர் பார்க்கும்"

(படித்துவிட்டு உங்களின் மேலான பிடித்தம் மற்றும் பிடிக்காதவைகளை கருத்து திரியில் பதிவிடவும். உங்கள் விருப்பத்திற்க்கு ஏற்ப என் தவறுகளை திருத்திக் கொள்வேன். (எதுவா இருந்தாலும் ஒரு கமெண்ட் சொல்லிட்டு போங்க பா))
 
G

Geetha sivakumar

Guest
மைதி(லி)யின் காதல் பூ

பூ-3

சோளிங்கநல்லூர் அல்லது சோழிங்கநல்லூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சென்னை மாவட்டத்தில் இருக்கும் ஒரு சோழிங்கநல்லூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது சென்னை நகரின் சுற்றுப்பகுதிகளில் ஒன்று ஆகும். இங்கு பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்கள் இயங்குகின்றன.

அந்த கட்டிடத்தில் இருந்த புகழ்பெற்ற கணினி நிறுவனத்தில் முதன்மை ஊழியராக பணிபுரிந்து வருகிறான். மிகவும் நேர்மையான மற்றும் திறமையான ஊழியர்.

சரவணனின் குடும்பம். தர்மலிங்கம், பார்வதி அவர்களின் ஒரே ஒரு தவப் புதல்வன் சரவணன். தர்மலிங்கம் அவர்கள் வீட்டு பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பு ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகின்றார். தாய் பார்வதி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுடையது நடுத்தர வர்க்க குடும்பம்.

சரவணன் மிகவும் அமைதியானவன். எந்த வம்பு சண்டைக்கும் போக மாட்டான். யாரிடமும் தேவை இல்லாமல் பேச மாட்டான். அவனுக்கு அந்த ஏரியா நெருங்கிய நண்பர்கள் குமரன், பாபு, அன்பு மற்றும் பாலன். இவர்களுடன் தான் அவன் எப்பவும் இருப்பான்.


சரவணன் நன்றாக படிக்க கூடியவன். போதிய பணவசதி இல்லாத காரணத்தாலும், அவன் அம்மா கட்டப்படும் போது தாம் அம்மாவுக்கு உதவ வேண்டும் என்று நினைத்தான். அவன் அம்மா பார்வதி கஷட்டப்பட்டு கூலி வேலை செய்வதை பார்த்து 10த் படிக்கும் போதே வேலைக்கு சென்று அம்மாவை பார்த்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து நண்பர்களின் ஆலோசனை படி ITI கணினி பிரிவு தேர்ந்தெடுத்து படித்து 17 வயதிலிருந்து வேலைக்கு சென்று கொண்டிருப்பவன். சரவணனின் தற்போதைய வயது 21.

அதிகாலை வேளையில் சூரியன் தன் செந்நிறக் கதிர்கள் வீச அதன் கதிர் வீச்சு இவ்வுலகெங்கும் பரவ அன்றைய நாளின் தொடக்கம் அழகாய் மலர்ந்தது. மனிதர்கள், பறவைகள், கால்நடை விலங்குகள் என்று மற்ற ஜூவராசிகள் எல்லாம் அன்றைய நாளை இனிமையாக தொடங்கியது. தூரத்தில் பறவைகள் சலசலத்து கொண்டிருக்க அதன் சத்தத்தில் கண் விழித்தான் சரவணன்.

அம்மா இன்னைக்கு வேலைக்கு கிளம்பிட்டியா. நேத்தே உனக்கு உடம்பு முடியலனு சொன்னல இன்னைக்கு ஏன் போற நாளைக்கு வேலைக்கு போலாம்ல மா. நான் உன்னை வேலைக்கு போகவே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்னன்னா உடம்பு முடியாம இன்னைக்கும் வேலைக்கு போற.

இல்லடா கண்ணா இது ஓட்டு வீடா இருக்குபா உனக்கு கல்யாணம் ஆகறத்துக்குள்ள சீக்கிரமா காசு சேர்த்து வைச்சு இங்க முன்னாடி இருக்க கொஞ்ச இடத்துல வீடு கட்டிட்டா நல்லா இருக்கும்லபா. அப்போது அவர்களுக்கு தெரியவில்லை தன் ஒரே மகனின் திருமணத்தை கண்ணால் கூட பார்க்க போவது இல்லை என்று.

நீ மட்டும் தனியா காசு சேர்த்து வைச்சு கட்டனும்னா கஷ்ட்டம் ஆச்சேபா உங்க அப்பன நம்ப முடியாது அந்த ஆளு கொஞ்சம் உடம்பு சரியில்லனா கூட வேலைய விட்டு நின்றுவான். அது தான் நைனா நானும் கொஞ்ச நாளைக்கு கஷ்டப்பட்டு வேலை பார்த்தா சீக்கிரம் கட்ட ஆரம்பிச்சுரலாம் நைனா.

நீ என்ன பத்தி கவலை படாத நான் சாய்ங்காலமா வேலைய விட்டு வர அப்ப டாக்டர் கிட்ட போய் காட்டிட்டு வரன். சரி்மா நான் சீக்கிரம் இன்னைக்கு ஆஃபீஸ் போகனும். ஈவ்னிங் சீக்கிரம் வந்து உன்னை டாக்டர் கிட்ட கூட்டிட்டு போறேன்.

அம்மா நீ க்ளீனிக் உள்ள போ நான் வெளியே நிற்கிறேன். எனக்கு உள்ள வரதுத்கு ஒரு மாதிரி இருக்கு. சரவணன் இப்படி சொன்னது பார்வதித்கு வசதியாக போய்விட்டது. அது பார்வதியின் துரதிர்ஷ்டமா இல்லை சரவணனின் துரதிர்ஷ்ட்டமா. சரி நைனா நான் போய்ட்டு வாறன்.

டாக்டர், ஏம்மா நீ தனியாகவா வந்த ரொம்ப ஜுரம் அதிகமா அடிக்கிறதுமா. ரொம்ப வீக்கா இருக்க சுகர் வேற இருக்கு. இதுலாம் உன் பையனுக்கு தெரியுமா. இல்ல சார் என் பையன் வெளிய நிக்கிறான் அவனுக்கு ஆஸ்பத்திரி வாடை ஒத்துக்காது. சரிமா இதுலாம் உன் பையன் கிட்ட சொல்லு. இப்படியே போச்சுன்னா ரொம்ப அதிகமா ஆய்டும் பார்த்துக்க. இந்த மாத்திரை போட்டுட்டு ஒரு வாரத்திற்கு நல்லா ரெஸ்ட் எடு. சரிங்க சார்.

அம்மா டாக்டர் என்ன சொன்னாங்க. ஒன்னுல நைனா இரண்டு நாள் ஓய்வு எடுக்க சொன்னார். சரிமா நல்லா தூங்கி ரெஸ்ட் எடு மூன்று நாளைக்கு வேலைக்கு போகாத.

சரி நைனா போமாட்டேன். இரண்டு நாள் கூட வேண்டாம் நைனா தூங்கி காலையில எழுந்திரிச்சாலே சரி ஆய்டும் அந்த டாக்டர் நம்ப கிட்ட பணம் புடுங்கறதுக்கு இப்படிலாம் சொல்றான். நீ வரலனா நான் டாக்டர் கிட்ட போக வேண்டாம் படுத்து தூங்கலாம்னு இருந்த நீ தான் டாக்டர் கிட்ட கூட்டிட்டு வந்துட்ட. டாக்டர் சொல்றத கேளுமா. சும்மாவா அவங்க படிச்சு டாக்டரா இருக்காங்க.

இப்ப எங்க நைனா எல்லா ஒழுங்கா இருக்காங்க நல்லா படிச்சு டாக்டரா ஆய்ட்டு மக்கள ஏமாத்தி தப்பு தப்பா ஏதாவது பண்ணி இல்லனா தேவை இல்லாதது பண்ணி பணத்தை புடுங்கறதுல தான் குறியா இருக்காங்க. யாரும் ஒழுங்கா இல்ல நைனா. நம்மள மாதிரி நடுத்தர வர்க்க மக்கள் தான் பாவப்பட்ட ஜென்மமா எல்லாத்தையும் அனுபவிக்கிறது.

நீ சொல்றது கரெக்ட் தான் மா ஆனா எல்லாரையும் அப்படி தப்பு சொல்ல முடியாதுல. நல்லவர்களும் சில பேர் இருக்காங்க. சரி நீ போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடுமா.

இந்த உலகத்தில் தன்னலமின்றி வாழும் ஒரே ஒரு ஜீவன் என்றால் அது அம்மா. தன் நலனில் அக்கறை இல்லாமல் தன் குழந்தைகள் நலனிற்காக பாடுபடும் ஒவ்வொரு தாய்மாரும் சிறந்தவர்களே. தான் சாப்பிடா விட்டாலும் தன் குழந்தை சாப்பிட்டால் தன் வயிறு நிறைந்து விடும் என்று நினைக்கும் ஒவ்வொரு தாய்மாரும் அற்புதமானவர்களே. தான் சிறந்த உடை உடுத்தாவிட்டாலும் தன் குழந்தை நல்ல உடை உடுத்த வேண்டும் என்று பண்டிகை காலங்களில் குழந்தைக்கு மட்டும் பொருத்தமான, சிறப்பான துணிகள் எடுத்து தரும் அனைத்து தாய்மார்களும் உன்னதமானவர்களே. தான் யாரிடமும் கையேந்தி அவமானப் பட்டாலும் தன் குழந்தைகள் யாரிடமும் கையேந்த கூடாது, யாரிடமும் அவமானப் படக்கூடாது என்று விரும்பும் அனைத்து தாய்மார்களும் மேன்மையானவர்களை. கால் வயிற்று கஞ்சிக்கு தான் கஷ்ட்டப்பட்டாலும் தன் குழந்தைகளுக்கு வயிறு வாடாமல் பார்த்து கொள்ளும் அனைத்து தாய்மார்களும் போற்றுதலுக்குரியவர்களே. தனக்கு போதிய படிப்பு அறிவு இல்லை என்றாலும் தன் குழந்தை சிறந்த கல்வி கற்க வேண்டும் என்று தன்னையே வருத்திக் கொண்டு தன் குழந்தையை சான்றோனாக்கும் ஒவ்வொரு தாய்மாரும் அறிவிற் சிறந்தோறே. தான் நல்ல வேலை செய்யா விட்டாலும், தனக்கு பிடிக்காத வேலையை அடுத்தவரிடம் தலை குனிந்து நின்று ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் வாங்கி கொண்டு தன் குழந்தை தனக்கு பிடித்த வேலை செய்ய வேண்டும், அடுத்தவர் முன்பு தலை நிமிர்ந்து நின்று கம்பீரமாக வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு தாய்மாரும் தலை சிறந்தவர்களே.

தன் குடும்பம் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு தகப்பனும் தாயுமானவர்களே. ஒவ்வொரு தகப்பனும் தாய்க்கு சமம்.

இரு கை சேர்ந்தால் தான் ஓசை வரும் அது போல தகப்பனும் தாயும் வேறுவேறு அல்ல இருவரும் ஒருவர் தான் அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் தான் குடும்பம் என்ற தோட்டம் பூத்துக் குலுங்கும். இருவரில் ஒருவர் சரி இல்லை என்றால் கூட அந்த தோட்டம் சரிவர இருக்காது பூத்துக் குலுங்குவது மிகவும் சிரமம்.

பெற்றோர்களின் மனமறிந்து பிள்ளைகள் அவர்களின் கஷ்ட்டங்களில் பங்கெடுத்து பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்து முன்னேறினால் அவர்கள் வாழ்வின் இலட்சியத்தையும், அனைவரும் அன்னார்ந்து பார்க்கும் இடத்திற்கும் செல்வர். அவர்கள் வெற்றிக் கனியை எட்டிப் பிடிப்பது உறுதி.

பூ மலரும்.

(முந்தைய அத்தியாத்திற்க்கு லைக், கமென்ட் மற்றும் சைலன்ட் ரீடர் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த அத்தியாயத்திற்கும் உங்கள் ஆதரவை தருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். (லைக் போட்டவங்க கூட கொஞ்சம் கமென்ட் சொல்லிட்டு போங்க. சைலண்ட் ரீடர் லைக் அச்சும் பண்ணிட்டு போங்க பா))

"என் தோல்விக்குப் பின்னால் நான் மட்டுமே இருப்பேன் ஆனால்
என் வெற்றிக்குப் பின்னால் நான் பட்ட ஆயிரம் வலிகள் இருக்கும்."
 
G

Geetha sivakumar

Guest
பூ-4

ஒன்றரை வருடம் கழித்து


மைதிலி தனது இடைவரை நீண்ட கூந்தலை அழகாக ரிப்பன் வைத்து பிண்ணி இரண்டாக மடித்து கட்டி, நெற்றியில் சிறிய பொட்டிட்டு அதற்கு மேல் மெலிதாக செந்தூரக் கீற்று வைத்து பள்ளி சீருடை அணிந்து கிளம்பி கொண்டிருந்தாள். 12த் Commerce group எடுத்திருந்தாள். அம்மா நான் கிளம்புறேன். சரி மைதிலி பத்திரமா போய்ட்டு வா. சாய்ங்காலம் கோவிலுக்கு போகனும் சீக்கிரமா வந்துரு. சரிங்க ம்மா.

உமா science க்ரூப் எடுத்து விட்டால் மைதிலி commerce க்ரூப். அதனால் இருவரும் சாப்பிடும் நேரத்தில் தான் பார்த்து கொள்வர். மைதிலிக்கு அவள் வகுப்பில் சுகுணா, சைந்தவி என்று இரண்டு நண்பர்கள் இருந்தனர். சைந்தவி இச்சிறு வயதிலேயே காதல் வயப்பட்டாள்.

சைந்தவி, மைதிலி என்கூட வரியாடி. எங்கடி வரனும் இன்னைக்கு என்னவோ திடீர்னு டெஸ்ட் முடிஞ்சு மதியம் வேற லீவ் விட்டுருக்காங்க வீட்டுக்கு போய் நல்லா தூங்கலாம்னு இருக்கேன். இப்ப நீ எங்கே கூப்பிடுற.

இல்லடி என் ஆளு இன்னைக்கு பாக்கறத்துக்கு வர சொல்லி இருக்காங்கடி. அது தான் தனியா போக ஒருமாதிரி இருக்கு கூட நீயும் வாடி சீக்கிரமா வீட்டுக்குப் போய்டலாம்.

சரி வரன். ஆனா சீக்கிரமா கிளம்பிடனும் புரிஞ்சுதா.

இன்னைக்கு அவளின் கெட்ட நேரமோ என்னவோ மைதிலி மதியம் சாப்பாடு எடுத்து வர மருந்து விட்டதால் அவளின் அம்மா லட்சுமி பள்ளிக்கு சாப்பாடு கொடுக்க வந்தார். வாட்ச்மெனிடம் லன்ச் டைம் முடிஞ்சுருச்சுங்களா பசங்க யாருமே இல்லை. இல்லமா இன்னைக்கு 12த் பசங்களுக்கு மட்டும் ஸ்கூல் மதியம் லீவ் விட்டார்கள். மத்தவங்களுக்கு க்ளாஸ் நடக்குதுமா. ஓ...ஓ... சரிங்க.

மைதிலி வந்துருந்தா எதிர்க்க நான் பார்த்து இருக்கனுமே. ஒருவேளை நம்பதான் சரியா கவனிக்கல போல. யோசைனையோடே வீடு வந்து சேர்ந்தார் லட்சுமி. வீடு பூட்டியே இருந்தது அவக்கிட்ட ஒரு சாவி இருக்கே வந்துருந்தா இந்நேரம் வந்துருக்கனுமே. அவர்கள் வீடு அமைந்து உள்ளது மையின் ரோட்டில் என்பதால் கிழே இறங்கி வந்து காயின் ஃபோனில் இருந்து கணவருக்கு அழைத்தார்.

தனசேகர், என்னமா. இல்லங்க மைதிலி இன்னும் வீட்டுக்கு வரல அவ ஸ்கூல் மதியம் லீவ் விட்டுட்டாங்களா ஆனா இன்னும் வரல. நீ கொஞ்ச நேரம் பொறுமையா இருமா. கடைக்கு எங்கயாவது போயிருப்பா. அப்படியும் வரலனா எனக்கு கூப்பிடு. சரிங்க.

இதில் மைதிலி அறியாத ஒன்று இன்றைக்கு பிப்ரவரி 14 காதலர் தினம். ஆனால் லட்சுமி அவளையே நினைத்து கொண்டு இருந்ததில் அவரது மூளைக்கு இந்த தினம் எட்டியது அவளின் கெட்ட நேரம் போலும். ஒருவேளை நம் மகள் காதலில் விழுந்து இருப்பாளோ. ஒருவேளை அவளுக்கு ஏதாவது ஆகி இருக்குமோ என்ற பயத்துடனே தன் யோசனையிலேயே உழன்று கொண்டிருந்தார். நேரம் கடந்து சென்று கொண்டிருந்ததே தவிர அவள் வரவில்லை.

தனசேகரே வீட்டுக்கு வந்து விட்டார் மைதிலி இன்னும் வரலையா. இல்லங்க. சரி ஸ்கூல்ல போய் தேடுவோம். சீக்கிரம் வா. இரண்டு பேரும் ஸ்கூலில் விசாரித்தனர். மைதிலியின் க்ளாஸ் மேம், இல்லைங்க மதியமே எல்லா 12த் பசங்களையும் அனுப்பிட்டோம். அவ ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்கு போய்யி்ருக்கப் போறா நீங்க சுகுணா, சைந்தவி வீட்டுக்கு போய் பாருங்க. லட்சுமி ச... சரிங்க மேம்.


அவர்கள் கிளம்பியவுடன் பக்கத்து மேமிடம் இப்பல்லாம் இந்த சின்ன வயசுலயே பசங்க லவ் பண்ண ஆரம்பிச்சுடுறாங்க. இன்னைக்கு லவ்வர்ஸ் டே வேற எங்க போய் ஊரு சுத்துதோ. அந்த மேமி்டம் எதையோ கேட்க வந்த லட்சுமி இவர்கள் பேசியதை கேட்டு விட்டார். முகம் எல்லாம் வியர்த்து வழிய என் பெண்ணை யாரோ ஒருவர் இப்படி பேசுவதா நான் அவளை ஒழுங்காக வளர்க்க வில்லையா, என் வளர்ப்பு சரியில்லையா என்று மனம் கலங்கிப் போனார்.

அதை தனசேகரிடம் சொன்னார். நீ அவங்க சொல்றது எல்லாம் காதில் வாங்காதமா. இப்போதைக்கு நம்ப பொண்ணு எங்க இருக்குனு போய் தேடுவோம். ஆனால் லட்சுமியின் மனதில் அது பெரும் கலக்கமாக இருந்தது அவரால் " லவ் பண்ணி யார்க்கூடயாவது ஊர் சுத்தி இருப்பாள்" என்ற வார்த்தையே அவரது காதில் ஒலித்து கொண்டிருந்தது.

அதன் பின் ஃப்ரண்ட்ஸ் வீட்டில் எல்லாம் தேடினர். அவர்களுக்கு இன்னும் பயம் பிடித்து கொண்டது. யாராவது ஏதாவது பண்ணி விட்டார்களோ என்று மிகவும் பயந்தார்கள். ஒருமுறை வீடு சென்று பார்க்கலாம் என்று கிளம்பினார்கள்.

அப்போது தான் மைதிலி வீடு வந்து சேர்ந்தாள். இன்னைக்கு சாவி எடுத்து கொண்டு போகாததால் வீடு பூட்டி இருக்கவே அப்பா கடையில் அம்மா இருப்பார்கள் என்று நினைத்து கிளம்பி ரோட்டில் நடந்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது எதிர் திசையில் அவள் அம்மா அப்பா டீவிஎஸ் 50 யில் வந்து கொண்டிருந்தனர். மைதிலியை தனசேகர் பார்த்து விட்டார். வண்டி வந்து கொண்டிருந்ததால் தனசேகர் "மைதிலிலிலிலிலிலி" என்று கத்தி கூப்பிட்டார். பக் என்று தூக்கி வாரி போட்டது உடல் ஒதுர ஆரம்பித்தது. நம்மை யார் இப்படி கத்தி கூப்பிடுகிறார்கள் என்று சத்தம் வந்த திசையில் பார்த்தாள்.

அம்மா அப்பா ஒன்றாக வருகிறார்கள் ஏன் கத்தி கூப்பிடுகிறார் நம்மள ஏன் மொறைக்கிறார் என்று ஒன்றும் புரியாமல் முழித்தாள்.

அவர்களுக்கு தானே தெரியும் அவள் காணவில்லை என்று அவர்கள் பட்ட துன்பம், வேதனை எல்லாம் அவர்கள் உயிரே அவர்கள் கையில் இல்லை. அவள் இல்லாத அந்த 2 மணி நேரத்தில் நம் பொண்ணு என்ன ஆனாளோ ஏது ஆனாளோ என்று பட்ட கஷ்ட்டங்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை. இப்பொழுது பேப்பர்களில், டீவியில் வரும் செய்திகள் அவர்களை பயமுறுத்தியது அனைத்தும் அவர்கள் கண் முன் வந்து போனது.

வீட்டிற்கு மைதிலி வந்தவுடன் கதவை நன்கு சாத்தி விட்டு அடிப் பிண்ணி எடுத்தார் லட்சுமி. லட்சுமியின் காதில் அந்த மேம் சொன்னது காதில் விழுந்து கொண்டிருந்ததால் மேலும் அடி வெளுத்து விட்டார். நான் வளர்த்த விதத்தில் எங்கயோ தவறு நடந்து இருக்கிறது. நான் மற்றவர் ஒரு சொல் சொல்லாத படி தானே என் மகளை வளர்த்தேன். இப்பொழுது இந்த அவப்பெயர் வந்து விட்டதே என்று மனம் கலங்கி துடித்துப் போனார்.

ஆனால் அவருக்கு தெரியவில்லை இப்பொழுது அவள் தெரியாமல் செய்த தவறு தான். ஆனால் பின்னொரு நாளில் அவள் அவர்களை தெரிந்தே தவிக்க விடப்போகிறாள் என்று லட்சுமியும், தனசேகரும் ஏன் மைதிலியே கூட நினைத்து பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இனி மைதிலியின் வாழ்வில் நடக்க விருப்பது முள்ளா? மலரா?

பூ மலரும்.

"சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்கையில் தோல்வியே இல்லை". - அப்துல்கலாம்.
 
G

Geetha sivakumar

Guest
Hai friends,

Maithiliyin Kadhal poo - 4 post paniten. Read panitu edavadu thappu irunda solunga. Na idu tan mudhal mudhalaga kadhai ezhuduvadal edavadu mistake irunda solunga. En thavarugalai soningana next time correct pani inum better ah kuduka try pandren friends. Please share ur reviews.
 

Attachments

Status
Not open for further replies.
Top