Dismiss Notice
Dear Guest , Navigation menu has been added to Our website, Put mouse cursor on menu's down Arrow and you can goto particular section of the website.

Umaiyaal Adhi's-Un Vizhikalil Vizhuntha Nodi-Story Thread

Discussion in 'Umaiyaal Adhi's Novels' started by Srikala, Oct 18, 2017.

Thread Status:
Not open for further replies.
 1. Srikala

  Srikala 'உயிரோடு சதிராடும் உயிரே'

  Joined:
  Dec 10, 2016
  Messages:
  5,426
  ஹாய் பிரெண்ட்ஸ்,

  இதோ இன்னுமொரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் நான் வந்துவிட்டேன்... இவர் நமது கதைகளுக்கு ஒரு நல்ல வாசகராக இருந்தவர்... சமையலில் ராணி... விதம் விதமாய் சமைப்பது அவரது பொழுதுபோக்கு மட்டுமல்ல அவருக்கு பிடித்தமானதும் கூட... பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்... அவர் இப்போது எழுத்தாளாராக புது அவதாரம் எடுக்க இருக்கிறார்... உங்களது ஆதரவை அவருக்கு நல்கும்படி கேட்டு கொள்கிறேன்... உங்களது கருத்துக்கள் எழுத்தாளருக்கு உற்சாகத்தை தரும உந்துசக்தி... நன்றி மக்களே...

  தலைப்பு : 'உன் விழிகளில் விழுந்த நொடி'
  ஆசிரியர் : உமையாள் ஆதி


  ஆசிரியர் அவரை பற்றியும், கதையை பற்றியும் அவரே வந்து கூறுவார்...

  அன்புடன்,
  ஶ்ரீகலா :)
   
  mala, Aru, Mythilimanivannan and 34 others like this.
 2. AmmuJ

  AmmuJ உமையாள் ஆதியின் "காதல் வைரஸ்!!!..."

  Joined:
  Dec 13, 2016
  Messages:
  1,401
  ஹாய், ஸ்ரீ அண்ணி.. நான் கேட்டதுமே என்னை ஊக்கப்படுத்தி உடனே த்ரட் ஓபன் பண்ணி குடுத்ததுக்கு தேங்க்ஸ் அ மில்லியன்(thanks a million)..

  எப்போதும் உங்களோட ஊக்கமும், அன்பும், ஆதரவும் வேணும்ன்னு கேட்டுக்கறேன் அண்ணி.. வாசகியா இருந்த நான் இன்னிக்கு கத்துக்குட்டி எழுத்தாளரா அடியெடுத்து வைக்குறதுக்கு நீங்களும் ஒரு காரணம்ங்கறதை மகிழ்ச்சியா சொல்லிக்கறேன்.

  எனக்கு வாய்ப்பளிச்சதுக்கு மிக்க மிக்க நன்றி அண்ணி.. நன்றியை தவிர வேற என்ன சொல்றதுன்னு தெரியல..
   
  Last edited: Oct 18, 2017
 3. AmmuJ

  AmmuJ உமையாள் ஆதியின் "காதல் வைரஸ்!!!..."

  Joined:
  Dec 13, 2016
  Messages:
  1,401
  ஹாய் மக்களே...
  Its me AmmuJ.. உமையாள் ஆதிங்குற நேம்ல என்னோட முதல் நாவலை கொடுக்க வந்துருக்கேன்..

  என்னை வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களான அக்காஸ், அண்ணீஸ், தங்கச்சிஸ், ப்ரண்ட்ஸ் எல்லாருக்குமே மிக்க மிக்க நன்றி..

  உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி மக்களே.. இது எப்போதும் தொடர்ந்து கிடைக்க நான் கண்டிப்பா முயற்சி செய்வேன்..

  என்னை எழுதா தூண்டிய என் செல்லங்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமை பட்டுருக்கேன்..

  ஒரு ஆர்வத்துல எழுத வந்துட்டேன்..

  "learn from mistake" னு ஒரு பிலாசபி இருக்கு...

  என் கதையில என்ன நிறை குறை இருந்தாலும் சுட்டிக் காட்டி இந்த சின்ன புள்ளையை வளர வைக்கணும்ன்னு பணிவன்போடு கேட்டுக்கறேன் மக்காஸ்..

  என்னால முடிஞ்சா அளவு ட்ரை பண்ணி இருக்கேன்.. படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க...
  மொக்கையா இருக்கா? எப்படி இருக்குன்னு நீங்க சொன்னா தான் தெரியும்..

  கதையை பத்தி சொல்லாம இவ... கருத்தை சொல்லுங்கன்னு சொன்னா நீங்க காண்டாகறது தெரியுது... ஹி.. ஹி... ஹி...

  எப்பவும் போல காதல் கதை தான்... சோ ஹீரோ ஹீரோயினை கதையின் போக்குலயே பாக்கலாம்... ஹி...ஹி..ஹி (இவ அலப்பறை தாங்கலன்னு உங்க மைன்டு வாய்ஸ் கேக்குது..)

  தீபாவளி ட்ரீட்டா முதல் அத்தியாயத்தை இப்பவே குடுக்கலாம்ன்னு இருக்கேன்..
  மிட் நைட்ல எப்பி போடுற ஆளு நானா தான் இருப்பேன்..
  மன்னிச்சுகோங்க மக்காஸ்... டுடே எதிர் பாராத வேலை வந்துருச்சு.. தவிர்க்க முடியல...

  :thanks:
   
  mala, raya, vani and 31 others like this.
 4. AmmuJ

  AmmuJ உமையாள் ஆதியின் "காதல் வைரஸ்!!!..."

  Joined:
  Dec 13, 2016
  Messages:
  1,401
  உன் விழிகளில் விழுந்த நொடி!....

  இணையும் விழிகள் - 1

  அதிகாலை பொழுது ஆதவன் தன் பொன் கரங்களால் பூமியை முத்தமிட்டு ஆரஞ்சு வண்ண கலவையை பூமி எங்கும் அள்ளி தெளித்துக் கொண்டிருந்தான்.

  அழகான ரம்மியமான விடியலை தோட்டத்தில் செடிகளுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டே ரசித்துக்குக் கொண்டிருந்தாள் நம் பிரம்மன் வரைந்த ஓவியம். பார்க்க மட்டும் ஓவியம் அல்ல அவளைப் போலவே அவள் பெயரும் தான். ஓவியப்பாவை.


  இந்த அழகான தருணத்தை கலைக்கும் விதமாக அந்த குரல் அவளுக்கு ஆணை இட்டது.

  “அடியேஏஏ! பாவை இன்னும் அங்க என்ன டி பண்ணிட்டு இருக்க. போனா போன இடம் னு இருந்துட்டா இந்த வேலை எல்லாம் யார் செய்வா?”

  “சீக்கிரம் வந்து காபி அ போட்டு ஏன் ரூம்க்கு கொண்டு வா...
  ‘அப்படியே தாமரை, தான்யாவ எழுப்பி ஹோர்லிக்ஸ் குடுத்துட்டு வா’ ” என்று கத்தி கொண்டே சென்றாள் அந்த வீட்டின் தலைவி மீனாட்சி.


  (கதையின் போக்கிலே அனைவரை பற்றியும் பாப்போம் மக்களே!)

  தோட்டக்காரர் செங்கன், “ ஓவி மா உனக்கு ஏன் மா இந்த வேலை? இதெல்லாம் செய்ய தான நான் இங்க இருக்கேன்.”

  “நீ போ மா பெரிய அம்மா இன்னும் திட்ட போறாங்க.”

  “தாத்தா, இது அவ்ளோ பெரிய கஷ்டமான வேலையே இல்ல!”

  “சொல்ல போனா எனக்கு ரொம்ப பிடிச்ச வேலை.”

  “இந்த தோட்டத்தையும் இங்க இருக்கற மரம் செடி கொடிகளை பார்த்து தண்ணீர் பாய்ச்சினா தான் அன்னிய பொழுது நல்லா போகுது.. மனசுக்கும் இதமா இருக்கு.”

  “கண்ணுக்கு குளிர்ச்சியா எப்படி இருக்கு!! நீங்க என்ன டான்னா என்னை தொரத்தி விட்டுட்டு நீங்க மட்டும் இதை ரசிக்கலாம்னு பாக்குறீங்களா?”

  “அப்புறம் நானும் இந்த மரம், செடிங்க கிட்ட சொல்லி உங்க கூட டூ விட்ருவேன் சொல்லிடுவேன்...”

  “சரி தாத்தா இந்த ஒரு பக்கம் மட்டும் தண்ணீர் விட்டுட்டு நிறுத்திடுங்க. நான் உள் வேலைய பாக்க போறேன்.” என்று வீட்டை நோக்கி நடந்தாள் அப் பாவை.

  போகும் ஒவியாவையே கண்களில் நீர் திரள பார்த்திருந்தார்.

  (பாவை வீட்டுக்குள்ள போறதுக்குள்ள நம்ம இன்ட்ரோ பார்த்துட்டு வந்துருவோம் மக்களே!)

  ஓய்வு நேரங்களில் எப்பொழுதும் பாவை செங்கனுடன் செடி நடுதல் தண்ணீர் பாய்ச்ச என்று தோட்டத்திலே தான் குடி இருப்பாள்.

  அவர்கள் நட்ட செடிகள் அனைத்தும் செழித்து வளரும் போது அதனால் உண்டாகும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை.


  தனிமையில் அவளுக்கு தோழிகளும் இந்த தோட்டத்து மரங்கள் மற்றும் செடிகள் தான்.

  செங்கனுக்கு வயதின் காரணமாக இந்த வாரம் முழுவதும் உடல் நிலை சரி இல்லாததால் செங்கனின் வேலைகளையும் ஓவியாவே பார்த்துக் கொண்டாள்.

  இந்த உதவியை அவள் நேரடியாக செய்கிறேன் என்று சொன்னால் செங்கன் சம்மதிக்க மாட்டார் என்று அவருக்கு முன்னே சென்று
  அவருடைய வேலைகளை முடித்து அவருக்கு ஓய்வு கொடுப்பாள்.


  இந்த சிறிய வயதிலேயே அவளுக்கு இருக்கும் உதவும் மனது தான் பெற்ற மக்களுக்கு இல்லை என அடிக்கடி செங்கன் வருந்துவதுண்டு.

  செங்கன் தம் மக்களால் கை விடப்பட்டவர். கடந்த 5 வருடமாக ‘சாரல் குடிலில்’ வேலை செய்து கொண்டிருக்கிறார்.

  “சாரல் குடில்” கதிர் உழைப்பில் கைவண்ணத்தில் உருவான அழகிய இல்லம்.

  மீனாட்சி கதிரின் மனைவி.

  கர்ப காலத்தில் மீனாட்சி தனியே கஷ்ட பட, அப்போது தன் பேத்தியுடன் வேலை கேட்டு வந்த கங்கம்மாவை உடனே வேலைக்கு எடுத்துக் கொண்டனர் கதிரும் மீனாட்சியும்.


  கதிர் மற்றும் மீனாட்சிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள் தான் தாமரை, தான்யா.

  அவ் வீட்டின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்து வேலைகளையும் செய்யும் வேலையாள் கங்கம்மா பாட்டி. அவரின் பேத்தி தான் ஓவியா.  ஓவியாவுக்கு ஒரே சொந்தமான கங்கம்மாவும் 2 வருடத்திற்கு முன் இயற்கை எய்தினார். அவளுக்கு இருந்த ஒற்றை சொந்தமும் தற்போது இல்லை.  தற்போது அவளுடைய கார்டியன் கதிர் தான். கங்கம்மா வேலையாள் ஆக இருந்தாலும் கதிர் மீது தனி பாசம் அவருக்கு உண்டு.

  கதிருக்கு தன் அம்மாவின் ஞாபகம்வரும் போது கங்கம்மாவிடம் தான் பேசிக் கொண்டிருப்பர். கங்கம்மாவிற்காக ஓவியாவை அவர் தன் பொறுப்பில் வைத்துக் கொண்டார்.

  இதில் மீனாட்சிக்கு துளி அளவும் விருப்பம் இல்லை. கங்கம்மா ஓவியாவை வளர்க்கும் போதே அவளுக்கு தன்னம்பிக்கையையும் ஊட்டி வளர்த்தார்.

  கங்கம்மாவின் துணை இருந்ததால் ஓவியா இத்தனை வருட மீனாட்சியின் ஏச்சு பேச்சுக்களை பொறுத்துக்கு கொண்டாள்.

  அவள் மன சுணக்கம் அடையும் போதும், வருத்தப்படும் போதும் அவள் பாட்டி தான் அவளை தேற்றுவார்.

  வருடம் ஆக ஆக ஓவியா,
  “நம்ம இங்க இருக்க வேணாம். எனக்கு பிடிக்கல, வேற எங்கயாவது போய்டலாம் வா பாட்டி.”
  என்று ஓவியா ஓராயிரம் முறை சொல்லி இருப்பாள்.


  வெளி உலகில் நடக்கும் மோசமான சம்பவங்களை கேள்விப் பட்டு அவ்வீட்டை விட்டு வெளியேறும் எண்ணத்தை கங்கம்மா கை விட்டார்.

  கங்கம்மவிற்கோ இந்த பாதுகாப்பான இடத்தை விட்டு செல்ல வழி இல்லாமலும், ஓவியாவும் நலத்தை கவனத்தில் கொண்டே அவளை தேற்றுவார்.

  ஓவியா ஏழையாக இருந்தாலும் சிறு வயதில் இருந்து அவளின் மீதி மீனாட்சிக்கு பொறமை உண்டு. அவள் மீது பிடித்தமும் இல்லை.

  ஏனெனில் தன் மக்களை காட்டிலும் ஓவியா அழகு பெட்டகமாகவே இருந்தாள். படிப்பிலும் படு சுட்டி. வேலைகளையும் சரியாக செய்பவள். அவள் முகத்திற்கு தனி தேஜஸ் உண்டு.

  தற்போது கங்கம்மாவும் இல்லாததால் ஓவியாவுக்கு அதிக வேலையும் கொடுத்து தன் இஷ்டத்திற்கு அவளை வேலை வாங்கினர்..

  வருடங்கள் உருண்டோட இதோ ஓவியா பதின் வயதை எட்டி விட்டாள்.


  ஓவியப்பாவை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பருவ மங்கை.

  இன்று முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வும் இதன் மதிப்பெண்களும் தான் தன்னை உயர்த்தவும் மேற் படிப்பு படிக்கவும் உதவும் என்பதில் உறுதியாக இருந்தாள்.

  கங்கம்மாவின் இறுதி விருப்பமும் தன் பேத்தி படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்பது தான்.

  தற்போது தாமரை மற்றும் தான்யா பணக்காரர்கள் படிக்கும் பள்ளியில் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள்.
   
 5. AmmuJ

  AmmuJ உமையாள் ஆதியின் "காதல் வைரஸ்!!!..."

  Joined:
  Dec 13, 2016
  Messages:
  1,401
  அளவான உயரத்தில், மெலிந்த தேகத்தில், பிறை போன்ற நெற்றியும் அதில் புரண்டு விளையாடும் அலை அலையன கூந்தலும், கன்னக் குழியுடன், துரு துரு பேசும் விழியும், கூர் நாசியும், அரஞ்சு சுளை இதழ்களும், எலுமிச்சை நிறமும் சற்று சிவந்த மேனியும் பாவைக்கு பணக்கார வீட்டு குழந்தை போன்ற ஒரு தோன்றம் கொடுத்தது.

  பார்க்க பார்பி டால் போன்ற தோற்றம்.

  பொது தேர்வன்று கூட இன்றும் அவளை படிக்க விடாமல் வேலை வைத்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

  பொதுத்தேர்வு பற்றிய பயம் இருந்த போதிலும் முன் கூட்டியே அவள் இரவில் வெகு நேரம் கண் விழித்து படித்து முடித்து விட்டாள்.


  ஒவ்வொரு பரிட்சைக்கும் இடையில் விடுமுறை இருந்ததால் கொஞ்சம் மன நிம்மதியோடு இருந்தாள்.

  சென்னை, அடையாரில் இருந்த அந்த பங்களா காலை வேளையிலே டம்மு டும்மு என்று அலற ஆரமித்திருந்தது.

  ஓவியா, ஹோர்லிக்ஸ் ஐ கலந்து படிகளை கடந்து தாமரை, தான்யா அறையை நோக்கி சென்றாள். அவர்கள் எழுந்து விட்டார்கள் என்று அங்கு டாமல் டுமில் என்று காதையே கிழிக்கும் பாடலே சொல்லியது.

  யே ஜிந்தா யே ஜிந்தா யே ஜிந்தா
  யே ஜிந்தா யே ஜிந்தா யே ஜிந்தா
  பேர் பெருசு இவன் ஆள் புதுசு
  வழியோ தினுசு இரும்பு மனசு
  ஹே உள்ளார குத்தமில்ல
  சுத்தமில்ல பத்தமில்ல
  குத்தமில்ல சுத்தமில்ல
  குத்தமில்ல சுத்தமில்ல
  பாக்காத தூரமில்ல
  சோகம் இல்லா பாரமில்ல
  சோகம் இல்லா பாரமில்ல
  மாரி
  கொஞ்சம் நல்ல மாரி
  ரொம்ப வேற மாரி
  மாரி
  சிரிச்சா தங்க மாரி
  முறைச்சா சிங்க மாரி
  என்று நைட் டிரஸ் மீது லுங்கி கட்டிக்கொண்டு பேய் மாதிரி தலையை மற்றும் கை கால் ஐ ஆட்டி ஆட்டி ஆடிக்கொண்டிருந்தாள் தான்யா..


  தாமரையோ தலையானையால் காதை மூடி குப்புற படுத்திருந்தாள்.

  தான்யாவின் ஆட்டத்தை பார்த்து ஒவியின் இதழில்
  மென்னகை மலர்ந்தது.


  இந்த வீட்டில் ஓவியை சிரிக்க வைக்கும் ஒரே ஜீவன் தான்யா தான்.

  வந்த சிரிப்பை வாயில் மென்றபடி ஹோர்லிக்ஸ் ஐ மேஜை மீது வைத்து விட்டு செல்ல திரும்பினாள்.

  “இன்னா மாமு வந்துகினு கண்டுகாம போறியேமே.. நம்ம ஆட்டம் எப்டிகீது னு என் கைல சொல்லிகினு கெளம்பு” என்று மெட்ராஸ் பாஷையில் பேசினாள். ஓவி வாய் விட்டே சிரித்து விட்டாள்.

  அதுவரை தூங்கி கொண்டிருந்த தாமரை, ஒவியின் சிரிப்பை கேட்டதும் எழுந்தவள் தன் உடன் பிறப்பை பார்த்து

  “ஏய் உனக்கு காபி கொண்டு வர இவ்ளோ நேரமா?” நாங்க டான்ஸ் கிளாஸ் கிளம்ப நேரம் ஆச்சு”

  “உன் சிரிப்ப சேர்த்து வச்சு அப்புறம் தனியா சிரிச்சுக்கோ.”

  “அப்போவாது உன் பேர் எல்லாருக்கும் தெரியட்டும்” என்று நக்கலாக சொன்னாள்.

  தன்னை விட 2 வயது சிறியவள் ஆக இருந்தாலும் அவள் தன்னை ‘லூசு’ என்று சொல்கிறாள் என்று மனம் வேதனை அடைந்தாலும் சிறிய புன்னகையை சிந்தி விட்டு மீனாட்சியின் அறையை நோக்கி காபியுடன் சென்றாள்.

  அறைக் கதவை மூடும் வேளையில் தான்யா தாமரையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள் ஓவிக்கு சப்போர்ட் செய்து.

  மீனாட்சி, “வாஆஆஆ.. மா.. மின்னலு.. ரொம்ப சீக்கிரம் வந்துட்ட போல..”

  “இல்ல மா அது”... என்று சொல்லி முடிக்கும் முன்

  “ஏய் நிறுத்து டி, யாருக்கு யாரு டி அம்மா” இன்னொரு முறை அம்மா கிம்மா னு சொன்ன அப்புறம் நடக்குறதே வேற”

  “என்ன ரெண்டு வேலை சாப்பாடு ஒரு வேலை ஆகணுமா?”

  “ஒழுங்கா மேடம் னு கூப்பிடு”..

  “சரிங்க மேடம்” என்று மொழிந்தாள் ஓவி.
  மீனாட்சி அவள் ஏரியாவில் உள்ள பேமஸ் லேடிஸ் கிளப்ல் மெம்பெர் ஆக உள்ளார். அங்கு இன்னொரு மெம்பெர் ஆனா லதா,


  “எங்க வீட்டு வேலைகாரங்க எல்லாம் என்னை மரியாதையா மேடம் னு தான் கூப்பிடுவாங்க”.

  “அவங்களுக்கே தெரிஞ்சுருக்கு அம்மா னு கூப்பிடுற அளவு எனக்கு வயசாகல னு”. என்று செல்ப் டப்பா (சுய தம்பட்டம்) அடித்துக் கொண்டிருந்தார்.

  எல்லாருக்கும் 1000 ரூபாய் அன்று லாபம் என்பது தனிக்கதை.

  இதைப் பார்த்து தான் மீனாவும் அவளை அவ்வாறு கூப்பிட சொன்னார்.

  “சரி சரி என் வாய பாக்காம சீக்கிரம் போய் வேர்கடலை சட்னி, பாசி பருப்பு சம்பார் வச்சு இட்லி ஊத்தி வச்சுடு”.

  “மதியத்துக்கு வத்த குழம்பும், அப்பளம், உருளைகிழங்கு பொறியல் பண்ணிடு”.

  “உனக்கு நேத்து நைட் பண்ணின சப்பாத்தி இருக்கு வேஸ்ட் பண்ணாம சாப்பிடு என்ன?” என்று தாராள மனசு காரியாக மொழிந்தவர்,

  “மச மச னு நிக்காம மட மட னு உன் வேலைய முடிச்சுட்டு போய் படி”.

  “இன்னிக்கு உனக்கு பப்ளிக் எக்ஸாம் தான? இல்ல நாளைக்கா?” என்று தெரிந்தும் தெரியாதது போல காட்டிக் கொண்டார்.

  “இன்னிக்கு தான் மா...ஆஆ.. இல்ல மே.....மேடம்”.
  அவளுடைய பதிலில் மீனாவே குழம்பி விட்டார்.


  “ஆமாவா? இல்லையா? எதுக்கு இப்படி உளறுற?”

  “இன்னிக்கு தான்” என்று பதிலளித்து விட்டு சமையல் வேலையை கவனிக்க சென்றாள் ஓவி.

  ஓவியை மீனாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் அவள் சமையலை சப்பு கொட்டி சாப்பிடுவார். இதில் 2 சுற்று பெருத்துவிட்டார் என்பது உண்மையிலும் உண்மை.

  தாமரை, “என்னம்மா நீ சாப்ட்டு சாப்ட்டு இப்படி குண்டகிட்டே போற?! நீ உடம்ப குறைக்கலனா என் ஸ்கூல்ல பேரென்ட்ஸ் மீட்டிங்க்கு வராதீங்க“.

  “எல்லாரும் என்னை தான் கிண்டல் பண்ணுவாங்க” என்றாள்.

  தன் ஆசை மகள் சொன்னதற்காகவே தான் இந்த அதிகாலை 6 மணி விழிப்பு, வாக்கிங் எல்லாம்.
  வீட்டை பராமரிக்க, தோட்டம் பராமரிக்க என்று எத்தனை வேலையாள் இருந்தாலும் ஒரு போதும் அவர்களை மீனா சமைக்க அனுமதிப்பதில்லை.


  கங்கம்மாவின் கை மனம் அப்படியே ஓவிக்கும் உண்டு என்பதை இந்த 1 வருட காலத்திலே தெரிந்து கொண்டார்.

  ஒவியின் கை மனத்தை சுவைத்து விட்டு மற்ற யார் சமைத்தாலும் அதில் மீனாவிற்கு அவ்வளவாக விருப்பம் இல்லை.

  பின்னே இந்த காலத்தில் இப்படி ருசியாக சமைத்து, தன் சொல் பேச்சு கேட்கும் வேலையளுக்கு எங்கே செல்வது.
  ஓவியை தவிர மற்ற 3 பெண் வேலையாட்களில் இருவர் வீட்டை பரிமறிக்கவும் மீதமுள்ள ஒருவர் ஓவிக்கு காய்கறி நறுக்கவும், பாத்திரம் துலக்க, துணி துவைக்க என்று மற்ற வேலைகள் உண்டு.


  இந்த மூவரும் காலையில் வந்து அவர் அவர் வேலைகளை முடித்துக் கொண்டு மாலை நான்கு மணிக்கு மேல் கிளம்பி விடுவர்.

  ஓவிக்கு காலையில் சமைத்து விட்டு பள்ளிக்கு சென்று விட்டு அதற்கு மேல் மாலை தான் வேலைகள் நிறைய உண்டு.

  இரவு பதினொன்று வரை வேலைகள் இருக்கும். தாமரை, தான்யா இருவருக்கும் மாலை சிற்றுண்டி, இரவு உணவு என்ற வேலைகளும் இதில் அடக்கம்.

  மீனா தன் வீட்டிற்கு விருந்தினர் என்று வாரத்திற்கு 3 நாள் லேடிஸ் கிளப்பிலோ அல்லது கதிரின் பிஸினெஸ் பீப்பிள் அல்லது தாமரை, தான்யா நட்புக்கள் என்று யாராவது டின்னர்க்கு வந்த வண்ணமே இருப்பர்.

  எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஹோம் வொர்க், படிக்க என்று ஓவி தூங்கவே 12 அல்லது 1 மணி ஆகி விடும்.

  இதனால் ஓவி பள்ளியில் ஸ்பெஷல் கிளாஸ் என்று முயன்ற வரை அங்கேயே படித்து விட்டு வந்து விடுவாள்.

  வேலையின் அலுப்பும், தனிமை மனதின் வேதனையும் அவளை சோர்வடைய செய்துவிடும்.
  அவளுடைய பாட்டிக்கு பிறகு அவளுக்கு இருக்கும் சிறு பொழுது ஆறுதல் மதியழகியும், அவளின் அம்மா கார்த்தியாயினியும் தான்.

  மதியழகி அவள் பெயரை போலவே அவள் முகமும், மதியும் அழகு தான்.


  பணக்காரி என்ற அகந்தையும் ஆணவமும் அவளிடத்தில் துளி அளவு கூட அவளிடத்தில் கண்டதில்லை.

  கதிரின் வீட்டை அடுத்து உள்ள பங்களா தான் மதியழகியின் வீடு.

  ஓவியை விட 3 வயது பெரியவள். மதி மற்றும் அவள் அம்மா கார்த்தி அவளையும் தன் மற்றொரு பெண்ணை போலவே நடத்துவார்.

  ஓவியா தன் வேலைகளை மட மடவென்று முடித்து விட்டு குளித்து பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.
  பரிட்சைக்கு தேவையானவற்றை அவளுக்கு கிடைக்கும் சம்பளத்தில் வாங்கிக் கொண்டாள்.


  கதிர் தான் அவளுடைய சம்பளத்தை அந்த ஏரியாவில் உள்ள தபால் அலுவலகத்தில் அக்கௌன்ட் ஓபன் பண்ணி கொடுத்தார்.

  மதியின் வீட்டிற்கும் கதிரின் வீட்டிற்கும் இடையே தோட்டத்தாலே சுவர் போல 8 அடியில் கொடி அமைத்திருந்தனர்.

  அதன் ஓரத்தில் இருந்த ஒரு ஆள் நுழையும் சிறு இடைவெளியில் ஓவி எப்பொழுதும் மதியின் வீட்டுக்கு செல்வாள்.

  தோட்டத்தின் வழியே மதியின் வீட்டை அடைந்த ஓவி,’
  “கார்த்திம்மா, கார்த்திம்மா எங்க இருக்கீங்க என்று நேரே கிட்சென் ஐ நோக்கி சென்றாள்.


  அங்கே அவரை காணவில்லை என்று, மதியின் அறையை நோக்கி சென்றவள் அங்கே கண்ட கட்சியில் வயிறு வலிக்க சிரிக்க ஆரமித்தாள்.

  மதியழகி, “தூயவன் அண்டு கார்த்தி இப்போ நீங்க என்ன பண்றீங்கனா நான் சொல்லுறதை கரெக்ட் ஆ கேட்டு அப்படியே செய்யணும்” என்று
  ஒன்னு
  , ரெண்டு, மூனு
  உட்டாலே அப்னா போனு
  வெல் கம் டு சென்னை
  எங்க ஊரு இந்த ஊருகுள்ள
  நாங்க தாருமாரு

  first-u வாத்தியாரு
  அவர் சூப்பஸ்டாரு
  கவிதைக்கு யாரு பாரதியாரு
  இங்லிஷ் படதுல திஸ் இஸ் ஸ்பர்டா
  இது தமிழ் படம் அதனால அட்ரவங்க
  எங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான்

  இங்கிலிஷ் பேசுனாலும் தமிழன் டா

  பாடலுக்கு ஏற்ற மாதிரி வெஸ்டெர்ன் ஸ்டெப் ஐ போட்டு அவள் அம்மா அப்பா இருவரையும் ஆட சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தாள்.

  அவர்களும் தன் செல்ல மகளின் ஆசைக்கினங்க எப்படியோ கை கால் ஐ ஆட்டி கொண்டிருந்தனர்.

  “தூயவன் அப்படியே கார்த்தியோட இடுப்ப பிடிச்சு உங்க ரைட் ல இருந்து லெப்ட் ல தூக்கி வைங்க”
  என்று சொன்னதும் ஆடிக்கொண்டிருந்த தூயவன் மயக்கம் வருவது போல ஆக்ஷன் கட்டினார்.


  கார்த்தியோ, “மதி நான் என்ன அவ்ளோ குண்டவா இருக்கேன்?” என்று முகத்தை திருப்பிக் கொண்டார்.
   
 6. AmmuJ

  AmmuJ உமையாள் ஆதியின் "காதல் வைரஸ்!!!..."

  Joined:
  Dec 13, 2016
  Messages:
  1,401
  திரும்பிய கார்த்தி ஓவியாவை பார்த்து, “அடடே, பாவை என்ன டா இங்கயே நின்னுட்ட உள்ள வா டா மா” என்று அன்பொழுக அழைத்தார்.

  “சிரிச்சா நீ ரொம்ப அழகா இருக்க டா”.. என்று கூறிய அவளுக்கு நெட்டி முறித்தவர்..

  “ஹும் இந்த கூத்தை பார்த்துட்டு சிரிக்காம இருந்தா தான் அதிசயம்”
  கார்த்தியும் ஓவியம் பேசிக் கொண்டிருந்த இடைவெளியில்,
  மதியோ
  “இதை எப்படி உண்மை னு நான் சொல்லுவேன்னு தெரியலையே” என்று வாய் விட்டு சொல்லி யோசிப்பதை போல பாவ்லா கட்டினாள்.

  “மதி குட்டி, நீ கேக்குறது எல்லாம் அப்பா வாங்கி தரேன் டா! என் செல்லம் இல்ல..


  இந்த வயசான காலத்துல ஒரு அரிசி மூட்டைய இப்படிக்கா தூக்கி அப்படிக்கா வைக்க சொல்றியே நான் என்னம்மா பண்ணுவேன்” என்று தூயவன் கேட்கவும்.......

  “என்ன டாடி இப்படி சொல்லிடீங்க?! யூ ஆர் அ யங் மேன் நொவ் இட்செல்ப்”

  “என் காலேஜ் பிரிண்ட்ஸ் எல்லாம் யாரு இந்த ஹீரோ னு உங்கள கேக்குறாங்க”

  “உங்க புகழ் உங்களுக்கே தெரியல பா டூ பேட்”என்றாள் மதி.

  “என்ன ரெண்டு பேரும் என்ன கலாய்கிறதா நெனப்பா?” என்று கூறிய கார்த்தி
  இடுப்பில் இரண்டு கைகளையும் மடக்கி வைத்து கோபமாக


  “சாப்பிடுறதுக்கு கிட்சென் பக்கம் தானே ரெண்டு பேரும் வரணும்!.. அப்போ வச்சுக்கறேன் கச்சேரிய”

  “பாவை நீ வா டா நம்ம கீழ போவோம்”.


  “உங்க அம்மாவுக்கு பாம்பு காது டா மதி குட்டி”.

  “டாடி, பாம்புக்கு காதே இல்ல தெரியுமா?!”

  “இன்னும் அங்க என்ன பேச்சு” ரெண்டு பேருக்கும் கெளம்புற எண்ணம் இல்லையா?!”

  “அப்பா உங்கள பாம்புன்னு சொல்லுறாரு” மா. உங்களுக்கு காதே இல்லன்னும் சொல்லுறாரு”.

  “இவங்க அழும்பு வர வர அதிகமாகிடுச்சு”.

  “டாடி வர வர அம்மா ரொம்ப மிரட்டுறாங்க.. நான் உங்களுக்கு இன்னொரு பொண்ணு பாக்கலாம் னு இருக்கேன் நீங்க என்ன சொல்றீங்க” என்ற மதியை

  “அடிக்கழுதை காலேஜ் முதல் வருஷம் சேர்ந்தாலும் சேர்ந்த வாய் கூடி போச்சு உனக்கு” என்று அவளை அடிக்க துரத்தியவர், சோஃபாவை சுற்றி சுற்றி ஓடி களைத்து விட்டார்.

  “ரெண்டு பேருக்கும் இன்னிக்கு சாப்படு கட்” போய் ஹோட்டல் ல சாப்பிடுங்க அப்போ தான் என் அருமை புரியும்” என்றார் கார்த்தி.

  “அம்மா இதுக்கு பேரு விடுதலை.. தாங்க் யூ மா... டாடி சீக்கிரம் கெளம்பி வாங்க நம்ம தாஜ் க்கு போகலாம்”

  “ஆஹா நம்ம பொண்ணு நம்ம சாப்பாட்டுக்கே வேட்டு வச்சுருவா போலவே?!” என்று உணர்ந்த தூயவன்

  அம்மாடி மதி குட்டி, “இன்னிக்கு இடியாப்பமும் தேங்காய் பாலும் னு நெனைக்கிறேன்.

  ஏலக்காய் வாசனையே இங்க வரைக்கும் ரொம்ப நேரமா தூக்குது நானே உன் டான்ஸ் அ முடிச்சுட்டு எப்போ டா சாப்பிட போலாம் னு இருக்கேன் நீ என்ன டா இப்டி சொல்ற?!”

  “அய்யோ, அப்பா நமக்கு நம்ம ப்ரிஸ்டீஜ் முக்கியமா இல்ல சாப்பாடா?”என்ற மதியின் கேள்விக்கு

  “இது என்ன டா கேள்வி கண்டிப்பா சாப்பாடு தான்” என்றவரை பார்த்து தலையில் அடித்துக் கொண்டாள்.

  “அம்மா செஞ்சத சாப்பிடவா இவ்ளோ ஆசை உங்களுக்கு?”.

  “என்னமா நீ அப்பா பத்தி தெரிஞ்சும் இப்டி கேக்குறியே”

  “இந்த டிஷ்ஷை சொல்லி குடுத்ததே நம்ம குட்டிமா பாவை தான் மா”

  “இது தெரிஞ்சும் வேணாம் னு சொல்ல எனக்கு என்ன பைத்தியமா?”

  “என்னதுஊஊஊ ஓவி தான் சொல்லி குடுத்தாளா”

  “இதை ஏன் பா முன்னாடியே சொல்லல?!”

  “இப்போ அம்மாவை எப்படி நான் சரி கட்டுவேன்!!!” போங்க பா.. என்று புலம்பிக் கொண்டே குளித்து முடித்து காலேஜ்க்கு ரெடி ஆகி கிட்சென் வந்தாள் மதி.   
 7. AmmuJ

  AmmuJ உமையாள் ஆதியின் "காதல் வைரஸ்!!!..."

  Joined:
  Dec 13, 2016
  Messages:
  1,401
  ஹாய் மக்காஸ்... உங்களோட அன்புக்கும் ஆதரவுக்கும் மீண்டும் நன்றி சொல்ல கடமை பட்ருக்கேன்.. முதல் எப்பி போட்டாச்சு... படிச்சுட்டு ஒரு வார்த்தை கருத்தை சொன்னா கத்துக்குட்டி புள்ளை ரொம்ப சந்தோசப்படுவேன்.. உங்க கருத்துக்காக மீ ஆவலோட வெயிட்ங்.. :flower:

  You must be registered for see links
   
 8. AmmuJ

  AmmuJ உமையாள் ஆதியின் "காதல் வைரஸ்!!!..."

  Joined:
  Dec 13, 2016
  Messages:
  1,401
  இணையும் விழிகள் - 2

  துயவனும் தன் ஆபீஸ்க்கு நேரம் ஆவதை உணர்ந்து குளிக்க சென்றார்.

  இருவரும் கிளம்பி டைனிங் டேபிளின் மீது சாப்பிட அமர்ந்தனர்.

  கார்த்தியும் ஓவியும் சமைத்தவற்றை எடுத்து டேபிள் மேல வைத்துக் கொண்டிருந்தனர்.

  கார்த்தி சமையல் அறையின் உள்ளே சென்றதும் மதி பூனை போல பதுங்கி வந்து, கார்த்தியை கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் முத்தமிட்டு, “சாரி மா சும்மா உன் கூட விளையாண்டேன்” என்று தாஜா பண்ணிக் கொண்டிருந்தாள்.

  “அடியே!, என்னடீ இது கன்னத்தை எச்சில் பண்ணிக்கிட்டு போடி அந்த பக்கம்” என்று’ பொய்யாக கோபம் காட்டினார்.

  “என்னம்மா அப்பா கூட போன வாரம் இப்படி தான் உன்னை சமாதான படுத்தி, பிரியாணிய நல்லா வெளுத்து கட்டினாரு"... "அப்போலாம் நீங்க அப்பாவ திட்டவே இல்லை! என்ன மட்டும் திட்டுறீங்க?!” என்று தன் அப்பாவையும் போட்டு கொடுத்தாள் தன் புத்திரி.

  தன் கெத்தை விடாத கார்த்தி, “இப்போ இடியாப்பம் வேணுமா? வேணாமா?” என்றார்.

  “வேணும் மா” என்றவளிடம்

  “நீ இப்படியே என்கிட்ட கேள்வி கேட்டு முடிக்கறதுக்குள்ள உன் அப்பா அங்க எல்லாத்தையும் முடிச்சுருவாரு” என்றதும் சிட்டாக பறந்து சென்றாள் மதி.

  "ஸ்ஸ்...சப்பாஆ இந்த புள்ளைய டைவேர்ட் பண்ண என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு?!" என்று பெரு மூச்சை வெளியிட்டவர்

  பரிமாறும் சாக்கில் துயவனின் அருகில் சென்ற கார்த்தியோ, குனிந்து அவரின் காதில்
  “இன்னிக்கு நைட் உங்களுக்கு இருக்கு கச்சேரி என்று!” கடித்த பற்களுக்கிடையில் வார்த்தையை துப்பினார்.


  அதைக் கேட்டு முகம் மலர்ந்த துயவனோ, கார்த்தியை நிமிர்ந்து பார்த்து ரொமாண்டிக் லுக் ஒன்றை விட,

  அவரின் தர்ம பத்தினி அவரை முறையோ முறை என்று முறைத்துக் கொண்டிருந்தார்.

  “எதுக்காக இவ நம்மள இப்போ இந்த முறை முறைக்கிறா?” என்று தனக்குள் யோசித்தவர் தன் மகளை திரும்பி பார்த்தார்.

  மதியோ தன் வேலையை சிறப்பாய் செய்து விட்டு நமட்டுச் சிரிப்புடன் இடியப்பத்தை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.

  “ஆஹாஆஆஆஆ!!! இது நம்ம பொண்ணு வேலையோ?!” என்று நினைத்தவர் அசடு வழியும் சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு தன் இடியாப்பத்தில் கவனமாய் இருப்பவர் போல காட்டிக் கொண்டார்.

  கார்த்தி, பாவையை உட்கார வைத்து பரிமாறினார்.
  “அம்மா இல்ல மா எனக்கு வேண்டாம். நான் சாப்பிட்டேன். நீங்க சாப்பிடுங்க” என்று வாதாடி கொண்டிருந்தாள்.


  “பாவை, எப்போ இருந்து என் கிட்ட பொய் சொல்ல ஆரமிச்ச” என்ற கார்த்தியின் கேள்வியில்,
  பாவையின் கண்கள் கலங்கினாலும், அந்த கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு கார்த்தியின் முகத்தை ஏறிட்டு


  “அ...அ..அது மா.... டென்ஷன் ல சாப்பிட முடியல. உங்க கிட்ட சொன்ன நீங்க பீல் பண்ணுவீங்க அதான்.. அதான்.. அப்படி சொன்னேன்”.

  “அப்படி சொன்னனா எப்படி பொய் ஆ?”என்றவரிடம்

  “அய்யோ அம்மா இல்ல மா” என்று கூறியவளின் கசங்கிய முகத்தை கண்ட கார்த்தி

  அவளுடைய கைகளை பிடித்தவர் சில்லிட்டு இருந்த அவள் கைகளை வைத்தே அவள் பயத்திலும், டென்ஷனிலும் இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு அவளிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே அவளுக்கு ஊட்டி விட தொடங்கினார்.

  முதலில் மறுத்த பாவை பின் கார்த்தியின் பிடிவாதத்தில் சாப்பிட வாயை திறந்தாள்.

  இதை அனைத்தையும் மதி மற்றும் தூயவன் இருவரும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

  அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், "பாவை, வாடா சாமி கும்பிட்டுட்டு கெளம்பு".. "நல்லா படிய பரீட்சை எழுதணும்".

  "பாட்டி எப்பவும் உன் கூட துணையா இருப்பாங்க. நாங்களும் தான்".

  "சோ பீ போல்டு.." என்று அறிவுரை வழங்கியவர் சாமி ரூமின் கதவை திறந்தார்.

  அங்கே சாமி படங்களுக்கு இன்று பூ போடவில்லை என்பது நினைவில் வர கார்த்தி தோட்டத்தை நோக்கி சென்றார்.

  அவரின் எண்ணம் புரிந்த பாவை, “அம்மா நீங்க இருங்க நான் போயிட்டு வரேன் உங்களுக்கு ஹைட் பத்தாது”.

  “ஆமா நீ பனமரத்துல பாதி இருக்க... நகரு டா நானே போயிட்டு வரேன்".

  "நோ....ஓ...ஓ..ஓ... மா...", “டுடே எக்ஸாம் இஸ் ஃபார் மீ”. “சோ, அய் வில் கோ அண்ட் பிக் இட் அப் மைசெல்ப்” என்று அழகாய் ஆங்கிலத்தில் பேசிய பாவையை ஆச்சர்யம் அகலாது பார்த்தார்.

  பின்னே, மூன்றே மாதத்தில் கற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் பேசுபவளை கார்த்தி மட்டுமல்ல பாவையின் பள்ளியிலும் அவள் ஆசிரியைகளும் ஆச்சர்யப் பட்டனர்

  தாயின் பின்னே வந்த மதி, “இட்ஸ் ஆல் மை ட்ரைனிங் மாம்”. “ஆல் க்ரிடிட் கோஸ் டூ மதி”. “ஹொவ் இஸ் இட்?” என்றாள்.

  “இது மட்டும் தான பார்த்து இருக்கீங்க இன்னும் ஓவியோட பல திறமைகளை நீங்க பாக்கல. அவ எக்ஸாம் முடிஞ்ச பிறகு பொறுமையா பாருங்க.” என்ற
  மதி பாவையுடன் பூ பறிக்க தோட்டத்துக்கு சென்றாள்.


  பூப் பறித்துக் கொண்டிருந்த சமையம், போர்டிகோவில் லேட்டஸ்ட்டு மாடல் டுகாட்டி பைக் சத்தம் கேட்டு பூக்களை பறித்துக் கொண்டிருந்த மதி அதை பாவையின் கைகளில் கொடுத்து விட்டு

  “ஹை நண்டு வந்தாச்சு!!...” என்று கத்திக் கொண்டே வீட்டின் உள்ளே சென்றாள்.

  ப்ளூ டெனிம் ஜீன்சும், வெள்ளை நிறத்தில் மேற்சட்டையும், இடது கையில் மெல்லிய வைட் கோல்ட் ப்ரேசலெட்டும், வலது கையில் பொருத்தமான ரோலெக்ஸ் வாட்ச்சும், கால்களில் ப்ரேன்டட் ஷூவும் அணிந்து தன் விலை உயர்ந்த பைக்கில் இருந்து உற்சாகமாய் குதித்து இறங்கினான்.

  "ஹாய் சித்தப்பா!!.." என்று ஸ்டைலாக ஹெல்மெட்டை கழற்றிவிட்டு தன் கேசத்தை கோதியபடி உள்ளே வந்தான் நம் கதையின் நாயகன் நந்து..

  பதினெட்டு வயது இளைஞன். வயதிற்கு ஏற்றார் போல அளவான உடல் வாகு. சராசரி உயரம் எவரையும் கவர்ந்து விடும் லேசர் விழிகள்,

  காற்றில் அலை அலையென பறக்கும் மினு மினுப்பான கேசம், கூர்மையான நாசி, இதழில் எப்போதும் தவழ்ந்து கொண்டிருக்கும் வசீகர புன்னகை,..

  கல்லூரி முதல் வருடத்திலேயே சீனியர் முதல் ஜூனியர் வரை அனைவரும் அவனுடைய விசிறிகள்.

  “வாடாப்பா.. கூப்பிடும் போதுலாம் இதோ “இப்போ வரேன்”, “அப்போ வரேன்” னு ஆட்டம் காமிச்சுட்டு வர்றதே இல்ல”..

  “இப்போலாம் அடிக்கடி இந்த பக்கம் காத்து வீசுது”
  என்று கேட்ட தன் சித்தப்பாவிற்கு பதில் அளிக்கும் முன்


  அங்கிருந்து துள்ளி ஓடி வந்த மதியின் மேல் அவன் பார்வை ஒரு நொடி அழுத்தமாக பதிந்து மீண்டது.

  நந்துவின் முன் இருந்த சோஃபாவில் அமர்ந்த மதி, “ஹாய்! நண்டு...” என்றாள்.

  "போடி குண்டு..." என்றவன்,

  “ஒன்னும் இல்ல சித்தப்பா வானிலை அறிக்கை கேட்டேன்... திடீர் னு மழை வருதுன்னு சொன்னங்க அதான் இங்க வந்தேன்”.

  “டேய் மழை வர்றதுக்கும், நீ இங்க வர்றதுக்கும் என்ன டா சம்மந்தம்?”

  “என் தங்கச்சி மழைல நனஞ்சுற கூடாதுன்னு ‘பாதுகாக்க’ வந்தேன்”. என்றான் பாதுகாக்க என்ற வார்த்தையில் சிறு அழுத்தம் கொடுத்து.

  “பொய் சொன்னாலும் பொருந்த சொல்லு டா மகனே!” என்றார்.

  மதியின் மனதிற்குள் கலவரம் மூண்டாலும், அவன் தங்கை என்ற வார்த்தையில் வீறு கொண்டு எழுந்தவள்

  “ஹே! யார் யாருக்கு தங்கச்சி. உனக்கும் எனக்கும் ஒரே வயசு தான்!”.

  “நீயும் நானும் ஒரே காலேஜ்... அதும் ஒரே கிளாஸ் தான் படிக்கிறோம். ஸ்சோ.....ஓஓஓ, நோ தங்கை நோ அண்ணன்”. என்று குதித்தாள்.

  “மதி யூ நோ, நீ என்ன விட 6 மாசம் சின்னவ... சோ, கால் மீ ‘ப்ரோ’ ஓகே”.

  மதியோ, “நண்டை எல்லாம் ப்ரோன்னு கூப்பிட முடியாது..” எனக் கூறி டீ பாயின் மேல் உள்ள ஃப்ளவர் வாஷை கையில் எடுக்க

  துயவனோ, “அடேய்! அடேய்!, உங்க சண்டைய அப்புறமா ஆள் இல்லா அமேசான் காட்டுல வச்சுகோங்க!!..”.

  “இப்போ என் கேள்விக்கு பதில் சொல்லு டா பையா”. என்றார்.
   
 9. AmmuJ

  AmmuJ உமையாள் ஆதியின் "காதல் வைரஸ்!!!..."

  Joined:
  Dec 13, 2016
  Messages:
  1,401
  “சித்தி கடந்த 6 மாசமா புது புது டிஷ் சூப்பரா செஞ்சு அசத்துறாங்கலாம்?!..”

  "அதான் சென்னை கூட வெள்ளத்துல மூழுகிடுச்சுன்னு வானிலை அறிக்கைல பேசிக்கறாங்கலாம்.."

  “ஆமா அதுக்கென்ன இப்போ?” என்று துயவன் அதற்கு முந்தைய கேள்விக்கு பதில் அளிக்க

  “அப்போ சென்னை வெள்ளத்துல மூழ்கினதுக்கு காரணம் சித்தி தான்னு வாக்கு மூலம் கொடுக்குறீங்க... அப்படி தான சித்தப்பா?!”

  என்று கேட்ட நந்து தூயவனின் பின்னால் நின்றிருந்த தன் சித்தி கார்த்தியை பார்த்தான் நமட்டுச்சிரிப்புடன்.

  வாக்குமூலம் என்ற குறிப்புச் சொல்லை கவனிக்க தவறிய தூயவனோ “டேய்!.. டேய்!.. நீ ஒருத்தன் போதும் டா... மொத்த சென்னை மக்கள்கிட்டயும் அடி வாங்கி
  குடுத்துருவ போல இருக்கு?!”.

  “சே! சே! உங்களுக்கு சித்தி மட்டும் போதும்னு நெனைக்கிறேன் சித்தப்பா”

  என்று கூறியவன் தூயவனின் பின்னால் பார்த்துக் கொண்டே “சித்தி ஆர் யூ ரெடி” என்றான்.

  பாவைக்கு ஆசிர்வாதம் செய்து திருநீறு பூசி விட்டு அவளை அவளது ஸ்கூலில் ட்ராப் செய்ய சொல்லி துயவனை தேடி வந்தவர்

  அங்கே துயவனின் வார்த்தைகளை கேட்டு காளி அவதாரம் எடுக்காதது மட்டுமே குறை..

  கோபத்தின் மறு உருவமாக நின்றிருந்த கார்த்தியை பார்த்ததும்,

  “கார்த்தி ஃபைல் ஒன்னு ரூம்ல வச்சுருக்கேன் மா.. எடுத்துட்டு வந்துடுறேன்” என்று ஒரே ஓட்டமாக ஓடினார்

  நந்துவை பார்த்ததும் “வாப்பா.. எப்படி இருக்க? அக்கா, மாமா, மேகி எல்லாரும் எப்படி இருக்காங்க? என்று எல்லோர் நலத்தையும் விசாரித்தார் அவனின் காதை செல்லமாய் திருகிய படி, "வந்த உடனே உன் வேலையை ஆரமிச்சாச்சா?!.." என்றார் சிரிப்புடன்,...

  "அதான் கண்டுபிடிச்சுட்டீங்களே!.. பின்னாடி என் நிலைமையும் இப்படி ஆகாம இருந்தா சரி தான்!".. என்றான் வலிக்காத தன் காதை தேய்த்த படி..

  கார்த்தி சாப்பிட அழைக்கவும் பிகு செய்யாமல் வந்து திருப்தியாக சாப்பிட்டவன் ஹாலுக்கு வந்தான்.

  “பாதகா, ஏன் டா என்ன மாட்டி விட்ட? என்ற தூயவனின் கேள்விக்கு

  “பின்ன, சித்தி கொடூரமா சமைக்கும் போது என்னை கம்பெனி குடுக்க கூப்பிட்டுட்டு, இப்போ நல்லா சமைக்கும் போது என்னை டீல்ல விட்டுடீங்க இல்ல?!.... அதுக்கு தான்!...” என்று கண் அடித்து கூறினான்.

  “உன் சித்தி கைல சாப்பிடுட்டு அன்னிக்கு தலை தெறிக்க ஓடுனியே?” “இப்போ எப்படி அவ ஸ்பெஷல் டிஷ் நல்லா பண்ணும் போதுலாம் வந்துடுற?...” என்ற கேள்விக்கு

  “மதி இருக்க இன்பர்மேஷன்க்கு குறை ஏன்?!...” என்று கூறியவன் எல்லோரிடமும் விடை பெற்று கிளம்ப சென்றான்.

  மதி, நீ ரெடி ஆ? உன்னையும் பாவையையும் ட்ராப் பண்ணிட்டு கம்பனிக்கு நான் அப்படியே கெளம்பிடுவேன்.. என்று தூயவன் கேட்க

  “ரெடி தான் டாடி”.

  “டாடி நந்து வந்த விஷயம் பெரியம்மாக்கு தெரிய வேணாம்”...
  “உங்களுக்கு தான் பெரியம்மாவ பத்தி தெரியுமே...” என்றவளின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தவர் “சரி டா மதிகுட்டி...” என்றார்.

  “அப்பான்னா அப்பா தான்..." என்றவள் அவர் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

  இருவரும் தங்கள் காரை நோக்கி சென்றனர்.

  ‘ஓவி’ என்று மதி குரல் கொடுக்க “இதோ வரேன் கா!...” என்றவள் தன் ஹெல்மெட்டை எடுக்க எதிரில் வந்த நந்துவின் மேல் மோதிவிட்டு

  “சாரி” என்ற சொல்லை காற்றோடு அவனிடம் விட்டு விட்டு சிட்டாக காரை நோக்கி பறந்தாள்.

  தன் மொபைலை பார்த்து குனிந்து கொண்டே வந்தவன் இடித்தது யார் என்று நிமிர்ந்து பார்ப்பதற்குள்

  சாரி என்ற சொல்லோடு மாயமானவளை நினைத்து “நின்னு கூட சாரி சொல்ல முடியல..” என சிறிது கோபம் கொண்டவன்

  தன் முழங்கையை தேய்த்து விட்டுக் கொண்டான்.

  “என்னப்பா? என்னாச்சு? ஏன் கையை தேச்சுட்டு இருக்க? என்றார் கார்த்தி.

  “ஒன்னும் இல்ல சித்தி”.

  “இப்போ ஒரு மின்னல் போச்சே யாரு அது?”

  “ஹா ஹா ஹா பார்த்த ஒரு நிமிஷத்திலே உன் கிட்டயும் இந்த பேரு வாங்கிடாளா?!...” என்று சிரித்தவர்

  “மதியோட ப்ரண்டு பா..” “இந்த வீட்ல எல்லாருக்கும் பிடிச்ச பொண்ணு.. நம்ம வீட்டு கடை குட்டினும் சொல்லலாம்”.

  “பார்த்த நிமிஷமா பாக்காத செகண்ட்லயே இந்த பேரு தான் வாங்கி இருக்கா...” என்று மனதிற்குள் நினைத்தவன்

  “நம்ம மதி லேசிக்கு இப்படி ஒரு ப்ரண்டா?!..” “பட், ஸ்கூல் யூனிபார்ம் மாதிரி இருந்துச்சு?...”

  “ஆமா பா மதியை விட 3 வயசு சின்ன பொண்ணு...” என்று கூடுதல் தகவலையும் வழங்கினார்.

  “சரி சித்தி நான் கெளம்புறேன்..” “காலேஜ்க்கு டைம் ஆகுது.. வரேன்..” என்று கிளம்பினான்.

  கார்த்திக்கு இப்போது தான் புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது.

  "ஸ்ஸ்.. சப்பா இவங்கள கெளப்புரதுகுள்ள போதும் போதும்ன்னு ஆகிடுது.." என்று அசூசையாக சோஃபாவில் அமர்ந்தார்.
   
 10. AmmuJ

  AmmuJ உமையாள் ஆதியின் "காதல் வைரஸ்!!!..."

  Joined:
  Dec 13, 2016
  Messages:
  1,401
  பரமசிவன் மற்றும் கல்பனாவின் தவப்புதல்வன் நந்து.. இவர்களின் தவப்புதல்வி.. நந்துவின் தங்கை யாழ் மேக்னா.

  பரமசிவன் மற்றும் தூயவன் இருவரும் கட்டிடகலை நிபுணர்கள். இருவரும் பார்ட்னர் ஆக இணைந்து கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நடத்தி வருகிறார்கள்.. அதற்கு முன்பே இருவரும் நல்ல நெருங்கிய நண்பர்களே..

  “போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்னும் பழ மொழிக்கு ஏற்ப தூயவன் இந்த தொழிலை மட்டுமே நகரத்தில் நடத்தி வந்தார்..


  மற்றும் நகரின் சில முக்கிய இடங்களில் சில கட்டிடங்களை கட்டி அதை அப்பார்ட்மென்ட் ஆகவும் கடையாகவும் வாடகைக்கு விட்டு அதிலும் வருமானம் ஈட்டுகிறார்.

  தன் மனைவியின் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு பக்கத்தில் பூம்பொழில் கிராமத்தில் பல ஏக்கர் நிலங்களில் பல வகை நெற்களையும், பல தானியங்களையும் பயிர் செய்து ஏழை விவசாயிகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்.

  விற்பனைக்கு போக மீதமுள்ள பயிர்கள் மட்டுமே நகரத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருவார்.

  வயதான காலத்தில் தன் மனைவியுடன் அந்த எழில் கொஞ்சும் மண் வாசனை மிக்க கிராமத்தில் வசிக்க வேண்டும் என்பதே அவர் திட்டம்.

  தினமும் வேலை முடிந்தவுடன் உடனடியாக குடும்பத்துடன் தன் நேரத்தை செலவழிக்கவே அவர் விரும்புவார்.

  பரமசிவன் (A) சிவா. “சிவாவோ திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்னும் பழமொழிக்கு ஏற்ப இன்னும் பல நிறுவனங்களையும், நந்தன் இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் பிஸினெஸ் ஐயும், கல்லூரி, 5 ஸ்டார் ஹோட்டல்ஸ், ரெசார்ட்ஸ், கார்மெண்ட்ஸ், அப்பார்ட்மென்ட், நந்தன் கோல்ட் ஜீவல்லரி மற்றும் பல தொழிலை திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார்.

  பள்ளி படிப்பை முடிக்கும் வரை சிவாவும் அதே பூம்பொழில் கிராமத்து வாசி தான்.

  பின் கல்லூரி படிப்பு, அதன் பின் தொழில், இடைவிடாத உழைப்பு என அவர் வேலைகள் சென்னை நகரத்திலே அமைந்து விட்டது.

  பள்ளி விடுமுறையின் போது கூட மனைவி, மகன், மகள் என மூவரையும் சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைப்பவர் தொழிலின் காரணமாக மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே தன் கிராமத்தில் தங்கிச் செல்வார்.

  கல்பனாவும் ஒரு வாரம் தங்கி விட்டு பிள்ளைகளை தன் தாய் காந்திமதியின் பொறுப்பில் விட்டு விட்டு சென்னை கிளம்பி விடுவார்.

  பின் விடுமுறையின் முடிவில் நந்து மற்றும் மேக்னாவை காந்திமதி பாட்டி தன் தங்கை மகள் கார்த்தியாயினியுடன் சென்னைக்கு அனுப்பி வைத்து விடுவார்.

  தூயவன் சிவாவின் புதல்வர்களை ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள அவர்கள் வீட்டில் விட்டுச் செல்வார்.

  அதே பள்ளி விடுமுறையின் போது தூயவன் அவர் மனைவி மற்றும் மகள் மதியுடன் கிராமத்திற்கு வந்து மொத்த விடுமுறை நாட்களையும் குடும்பத்துடன் செலவழித்து அங்கு உள்ள தன் நிலபுலன் மற்றும் அதன் கணக்கு வழக்குகளையும் சரி பார்த்துச் செல்வார்.

  தூயவன் அவர் மனைவி மற்றும் மதியுடன் செலவழிக்கும் விதத்தை பார்க்கும் போது அச்சிறு வயதில் நந்துவிற்கு ஏக்கமாக இருக்கும்.

  பின் வருடங்கள் நகர நகர பள்ளி, விளையாட்டு, நண்பர்கள், ஸ்பெஷல் ஆக்டிவிட்டி கோர்செஸ், பார்டீஸ் என்று பிஸியாக இருந்ததில் இந்த ஏக்கம் தற்காலிகமாக மறைந்தது எனலாம்..

  பூம்பொழில் கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் பெரிய குடும்பம் தான்
  நாகராஜன் - காந்திமதி தம்பதியர்.
  இவர்களுக்கு மொத்தம் 2 ஆண் வாரிசுகள் மற்றும் 1 பெண் வாரிசு.
  அவர்களில் முதல் (கைலாசம்) மற்றும் மூன்றாம் (வேலு) வாரிசு ஆண் குழந்தைகள். இரண்டாவது வாரிசு பெண் (கல்பனா).


  தம்பதிகள் முறையே கைலாசம்- சிந்தாமணி,
  கல்பனா - பரமசிவன்
  வேலு – நாட்சி.


  காந்திமதியின் தங்கை மகள் கார்த்தியாயினி – தூயவன்

  காந்திமதியின் தங்கை குடும்பம் சிக்கிய விபத்தில் எஞ்சியது கார்த்தியாயினி மட்டுமே.

  பின் தங்கை மகளை தன் இரண்டாவது மகளாகவே பாவித்து வளர்த்தார்.

  தூயவன் கார்த்தியாயினிக்கு அக்கிராமத்தில் சொந்த வீடு இருந்தாலும் வருடா வருடம் திருவிழாவின் போது நாகராஜன் - காந்திமதி தம்பதியினர் அவர்களையும் மற்றும் பல சொந்த பந்தங்களையும் தன் வீட்டில் தான் தங்க வைப்பார். அது வீடு அல்ல அரண்மனை என்று தான் கூற வேண்டும்.

  சென்னை ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஐந்து அடுக்கு மாடி கொண்ட பங்களாவில் மாலை நேரத்தில் தன் அறையின் ஐந்தாவது மாடியின் பால்கனியில், கண்ணாடி மற்றும் தேக்கு மரத்தால் ஆன ஊஞ்சலில் கண் மூடி அமர்ந்து இருந்தான் நந்து.

  ஈரமான கடற்காற்று முகத்தில் அறைந்தும் அவன் மனதின் வெம்மையை தணிக்க முடியவில்லை.

  காலையில் ஏன் சித்தப்பாவின் வீட்டிற்கு சென்றோம் என்னும் படி நந்தனுக்கு அன்றைய தினம் மோசமான நாளாக ஆகிவிட்டது.

  அன்று காலை நந்து யார் முகத்தில் விழித்தனோ
  தெரியவில்லை. அன்று நடந்த அச்சம்பவத்தை நினைத்து நினைத்து தற்போது வரை அவன் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது.


  எல்லாம் அவளால் வந்தது எவ்ளோ நல்லவ மாதிரி நடிச்சா.. சே.. ஊமை கோட்டான் என்று மனதில் அவளை திட்டியும் அவன் கோபம் குறைந்த பாடில்லை.

  பாவைக்கு அன்று பொதுத் தேர்வின் முதல் பரீட்சை என்பதால் தூயவன் மற்றும் மதி வாழ்த்து கூறி அவளை அவள் பள்ளியின் வாசலில் இறக்கிவிட்டார்.

  பின் மதியை அவள் கல்லூரி வாசலில் இறக்கி விட்டவர் தன்னை பின் தொடர்ந்து கல்லூரிக்கு வந்த நந்துவுக்கும் ஒரு கை அசைவை கொடுத்து விடைபெற்று தன் அலுவலகத்தை அடைந்தார்.

  நந்துவும் மதியும் கல்லூரி உள்ளே சென்று தன் வகுப்பு சக தோழி தோழருடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த பதினைந்தாவது நிமிடத்தில் மதியின் மொபைலுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
   
Thread Status:
Not open for further replies.

Share This Page