All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பூபாள ராகம்........

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!


அதிகாலை மூச்சும்
பனி வாடை காற்றும்
அலை மோதும் நேரம்
பூபாளமே...!

துயில் மீட்கும் சிட்டும்
குயில் கூவும் பாட்டும்
கிளை மோதும் நேரம்
பூபாளமே...!

பாய்ந்தோடும் மேகம்
சாய்ந்தாடும் தேகம்
மலை மோதும் நேரம்
பூபாளமே...!

முன் பனியின் துளியும்
வெண் நிலவின் ஒளியும்
இலை மோதும் நேரம்
பூபாளமே...!

செவ்வரியில் உதிக்கும் சூரியனும்
மெய்வரியில் தகிக்கும் வான்மகனும்
சிலை மோதும் நேரம்
பூபாளமே...!

இனிதான காலை இனிதாக மலர்ந்து இசையோடு இணைந்து இதம் சேர்க்கட்டும்.

இனிய காலை வணக்கம் தோழிகளே....!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே....

விடியல் விடிந்த போது
ஆடாத மனங்கள்.....
இருந்தென்ன லாபம்.....?
குயில் கூவும் போது
பாடாத மனங்கள்.....
பிறந்தென்ன லாபம்......?
பூபாளத்தின் ஆரோகனம்
கபாளத்தில் ரோக நிவாரணம்!

இனிதான காலை இனிதாக மலர்ந்து இசையோடு இணைந்து இதம் சேர்க்கட்டும்.

இனிய காலை வணக்கம் தோழிகளே....!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

பூபாளம் பாடும் நேரம்
அசைந்தாடும் நெஞ்சங்கள்;
கும்மாளம் போடும் நேரம்
குதித்தாடும் தஞ்சங்கள்!
நெஞ்சங்களின் தஞ்சங்கள்
நெகிழ்வுகளில் சொந்தங்கள்!

இனிதாய் விடிந்த இனிப்பான விடியல் இயல்பாய் மனம் மீட்டட்டும்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே,

அதிகாலை பாடும்
சுகமான ராகம் - அது
பூபாள ராகம்!
விடிகாலை ஒடும்
சுகமான நேரம் - அது
ஏகாந்த நேரம்!

இனிதாய் ஒரு விடியல், தெளிவாய் ஒரு விடியல். இன்றைய நாளை மணமாக்கட்டும்.
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே,

நீரோட்டத்தின் ஆற்றில்
தேரோட்டத்தின் கூற்றில்
வேரோட்டத்தின் நாற்றில்
பூபாள சங்கீதம்
கவிபாடும் இங்கிதம்
சாகித்ய சம்மேளனம்!

இனிய விடியலின் இன்சுவை இமை மீட்டும் இனிமையே!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

அதிகாலை...
சுபவேளை...
அகம் மீட்டும்
இதம் சேர்க்கும்
கோவில் மணியும்.....
முகம் காட்டும்
சுகம் சேர்க்கும்
பூவின் மலர்வும்.....
காண கிடைக்கா பொக்கிஷமன்றோ பூபாள நேரம்!

இனிய விடியல் இதமாய் மலர்ந்து இனிமைத் தேனை இனிப்பாய் ஊட்டட்டும்.....!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

சித்திரமாய் சிரிக்கும்
சித்திரைப் பெண்ணும்
சிங்காரமாய் வந்து விட்டால்…?
வைரங்களாய் வரிக்கும்
வைகாசி நாதனும்
வைபவமாய் வந்து விட்டால்…?
ஆனந்தமாய் விரிக்கும்
ஆனி திருமஞ்சனமும்
ஆரவாரமாய் வந்து விட்டால்…?
ஆரூடமாய் கரிக்கும்
ஆடி மாதமும்
ஆர்ப்பாட்டமாய் வந்து விட்டால்…?
ஆச்சர்யமாய் உரிக்கும்
ஆவணி அவிட்டமும்
ஆரோகணமாய் வந்து விட்டால்…?
புருசோத்தமனை வரிக்கும்
புரட்டாசி திங்களும்
புண்ணியமாய் வந்து விட்டால்…?
ஐஸ்வர்யமாய் தரிக்கும்
ஐப்பசி ஜணனமும்
ஐய்க்கியமாய் வந்து விட்டால்…?
காந்தர்வமாய் சரிக்கும்
கார்த்திகை தீபமும்
காருண்யமாய் வந்து விட்டால்…?
மானசீகமாய் அரிக்கும்
மார்கழி பாவையும்
மகத்துவமாய் வந்து விட்டால்…?
தைபொங்கலாய் பூரிக்கும்
தை மகளும்
தைரியமாய் வந்து விட்டால்…?
மாமாங்கமாய் நெரிக்கும்
மாசி மகமும்
மங்களமாய் வந்து விட்டால்…?
பங்காளியாய் சிரிக்கும்
பங்குனி மஹோற்சவமும்
பரவசமாய் வந்து விட்டால்…?
புத்தாண்டே ……!
உன் வரவு வசந்தமாய்
உலகுக்கு உற்சவமாய்
ஊர் போற்றும் திரு நாளாய்
உன்னதமாய் மலரட்டும்!
உல்லாசம் திரும்பட்டும்!
வாழிய புத்தாண்டே! வாழ்க! வாழ்க!


இனிய புத்தாண்டு இன்பங்களை
இனிதாய் இசைக்க
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
செல்வி சிவானந்தம்.

 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

ஆரவாரம் அற்ற
அமைதியின் சிகரமே
பூபாளமே....
அரிய சிந்தனைக்கு
உன் அவதாரமே!

இனிய காலை இனிமையாய் விடிந்து நல்லிசை பரப்பட்டும்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

முன் பனியின் ஈரம்
இளம் காலை நேரம்
ஒளிமீட்கும் கதிரின்
அலங்காரமே....
அது-
சில்லென்ற மனதில்
மெல்லிசை மீட்கும்
அரிதாரமே......!

இனிதாய் வந்த விடியல் இனிமைகள் சேர்த்து இயல்பை மீட்கட்டும். இனிய காலை வணக்கம்.
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

ஆகாய வானம்
வெளுக்காத காலை..
பூலோக கானம்
விழிக்காத காலை...
பூபாள ராகம்
இசைக்கும் ஒலியில்
மெய் மறந்திட்டால்
உயிர் சிலிர்க்காதோ...?

இனிய காலையின் இன்னிசை இன்பமாய் இசைக்கட்டும். இந்த நாள் பொன்னாளாக வாழ்த்துக்கள்
 
Last edited:
Top