All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நவ்யாவின் "தேடல் தொடங்கியதே" - கதைத்திரி

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேடல் மூன்று:-
11573


உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேடல்…. இவர்களின் தேடல் எதை நோக்கி??? இரண்டு மணிநேரம்தான் அதற்குள் பத்து தேடல் ஆச்சரியமே!!! தேடல் ஆதாயத்திற்கு உரியதா?? என்ற யோசனை இங்குள்ள யாரிடத்திலும் இல்லை!!! பெரியதா சிறியதா அதை பற்றிய எந்த கவலையுமில்லை….. அவ்வளவு ஏன் அதற்கான சிந்தனையும் இல்லை….

கள்ளனுக்கோ வெவ்வேறு முகத்திரை ஒவ்வொரு தேடலின் முடிவிலும்…. அருகில் சென்று அவனை திருப்பி பார்த்தால் அறிந்த முகமே… இருந்தும் துவளாது தேடுகிறார்கள் பசியறியாது…

கள்ளனின் அடுத்த என்று சொல்வதை விட இறுதியான இலக்கு சஞ்சீவ்!!! அவன் மட்டுமே அகப்படாமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருப்பது… விடை அவனால் சொல்லப்பட்ட மறுநிமிடம் அனைவரும் ஓட கள்ளனோ சஞ்சீவின் திசையில் வேகமாக ஓட்டமெடுத்தான்… இவன் ஓட அவன் ஓட என்று சஞ்சீவ் பிடிபடும் நேரம் அவர்கள் எதிரில் நிழல்போல சில உருவங்கள் அனுமாரை போல வளர்ந்துக் கொண்டே போக….

யாரடா அது சரியா இந்த நேரத்துல… என்று யோசித்த சஞ்சீவ்… நிழலை தொடர்ந்து அந்த உருவங்களை நிமிர்ந்து பார்க்க,

பார்த்தவன் அதிர்ந்து ஓரடி பின்னே நகர்ந்து விட்டான் கள்ளனின் கையை பிடித்துக்கொண்டு… என்ன ஒரு ஆச்சரியம் கள்ளனுடன் நல்லவனா!!! அப்படியென்ன அதிர்ச்சி???

எதிரில் நிற்பவர்கள் பத்து பேரின் தலைவர்கள் கள்ளனதும் சேர்த்து… இவர்களின் பயத்திற்கு காரணம் அழைப்பு!!! பலமுறை தனக்கு எதிரில் நிற்பவர்களிடம் இருந்து அந்த துறை சார்ந்தவர்களுக்கு… யாரும் என்னவென்று கூட கேட்கவில்லையே…. அத்தனை ஆர்வம் தங்களின் தேடலில்!!! எல்லாரும் எதிரில் நிற்பவர்களை ஏறெடுத்து பார்த்துக் கொண்டிருக்க,

இதழுக்கு அந்த பொறுமையெல்லாம் சுட்டு போட்டால் கூட வராது பிறகு எங்கே இவர்கள் முறைத்தால் வந்துவிடுமா என்ன??? அவள் தலைவரிடம் வந்து கேட்டாலே பார்க்கலாம் ஒருகேள்வி மொத்த தலைவர்களும் கோவத்தை மறந்து அவரவர் இடத்திற்கு தன் படை வீரர்களை திட்டாமல் அழைத்து செல்லும் அளவிற்கு…
அப்படியென்ன கேள்வியது???

அம்மா ரொம்ப பசிக்குதுமா போலாமா!!!! என்று அவர் கையை பிடித்து மூக்கை சுருக்கி….

( ஹா ஹா இப்ப உங்க எல்லாருடைய தேடலுக்கான பதிலும் கொஞ்சம் கிடைச்சிருக்கும்…. எல்லாரும் கையில குச்சியோடு என்ன அடிக்க வரது தெரியுது,
இதுக்கா இவ்ளோ பில்டப் குடுத்தேன்னு…. இது எனக்கு திடிர்னு தோன்றின ஒரு சின்ன தேடல்…

நமக்கெல்லாம் விளையாட்டுன்னு பெயர இன்னைக்கு இருக்குற சூழ்நிலைக்கு சொன்னாலே ஞாபகம் வருவது நம்ப செல்லுல இருக்குற ஏதோ ஒரு பிரபலமான விளையாட்டு அத்தனை கேடுகளையும் தன்னுள் புதைத்து…

ஆனால் இந்த ஆன்டிராய்ட் செல் வருவதற்கும் தெருக்கள் பாதுகாப்பாக இருந்தவரைக்கும் நம்முடைய ஆடுகளம் நான் கீழே குறிப்பிட்டுள்ள ஏதோ ஒன்று உடலுக்கும் மூளைக்கும் சேர்த்து பயிற்சி தருவதாக…. அதை நினைவுபடுத்தவே இந்த அறிமுகம்…. )

அப்படியென்ன விளையாட்டு!!!!

பத்திலிருந்து இறங்குவரிசையில் கண்ணைமூடிக் கொண்டு கவுண்ட்டவுன்…. எண்ணிக்கை முடிவில்

டிக்… டிக்…. கள்ளனின் அறிமுகம்,

யாரது???? பத்து பேரின் கேள்வி,

திருடன்… எந்தவித ஒளிவுமறையுமின்றி…

என்னவேணும்??? தொடரும் கேள்விகள்…

நகை வேணும்..

என்ன நகை??? ஒவ்வொரு முறையும் கூட்டத்தோடு சேர்ந்து காட்டுகத்தல் போட்டி போட்டுக் கொண்டு.....

கலர் நகை!!!!

என்ன கலர்???

பச்சை கலர்…

என்ன பச்சை???

மாபச்சை….

இந்த பதிலின் முடிவிலே அவர்களின் ஓட்டம் தொடங்கியது…. முடிவின்றி….

முடிவின்றி மகிழ்ந்து ஆண் பெண் பேதமின்றி விளையாடிய காலம்.... விகல்பம் என்ற சொல்லிற்கு அர்த்தம் அந்த பிஞ்சு நெஞ்சுகளுக்கு அறவே தெரியாது சுற்றி கண்டிருக்கிறார்கள்.... முடிவோ வாழ்வின் இறுதிவரை ஏதோ ஒன்றை தேடி....

ஆனால் மனமோ ஒரு நிலையில் திருப்தி அடைவதில்லை இவர்களை போல்..... தேடுவோம் நாமும்!!!!

நான் முதல் கொடுத்த இரண்டு பதிவுடன் இந்த விளையாட்டை சேர்த்து பார்த்தீர்கள் என்றால் அவர்களின் வழியில் உங்கள் தேடலும் முடிவிற்கு இப்பொழுதைக்கு வந்திருக்கும்…. இதுவே என் கதையின் தொடக்கம்!!!!!

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

எல்லாரும் கலவரத்துடன் அவரவர் அம்மாவை பார்த்து நிற்க இதழுக்கோ அவள்பாடு…. இவள் பசியென்று கேட்டதிலே மற்ற தாய்மார்களும் எதற்கு அழைக்க வந்தோம் என்பதை உணர்ந்து அவரவர் இல்லம் தத்தம் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றனர்…..

ஆனால் இதில் இரண்டு உயிர் அருகருகில் இருந்தே தங்கள் தேடலை தொடர போகிறார்கள் தொலைத்த இடத்திலிருந்தே!!!! கிடைக்குமா??? கிடைக்காதா???

இதற்க்கு மேல் அவர்கள் வாழ்க்கையின் மெய்தேடல் தொடங்க போகிறது என்னுடன் சேர்ந்து தேட தயாரென்றால் கருத்துக்களின் மூலம் உங்கள் ஆதரவை சொல்லிவிட்டு செல்லுங்கள் மக்கா!!!!!

தேடல் தொடரும்…..

போன இரண்டு பதிவிலும் என்னோடு சேர்ந்து தேடலை தொடர்ந்த அனைவருக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏 இதுதான் தேடலுக்கு பதிலா வரும்னு நீங்க எதிர்ப்பாதீங்களா அப்டிங்கறதையும் சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ் அதுதான் எனக்கு ஊக்கத்தை கொடுத்து என்னை மேலும் எழுத வைக்கும் 😍😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
சத்தியமா இப்படி ஒரு thedala ethir paakala maa... It's very very superb... Naala சின்ன வயசுல விளையாடின விளையாட்டு... இந்த விளையாட்டு... கல்லா.. மண்ணா.... Ukkaantha.. நின்னா.... இந்த maari neriya... Semma different ah naa முயச்சி. I like it... Super Super Super maa... Eagerly waiting for next episode
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சத்தியமா இப்படி ஒரு thedala ethir paakala maa... It's very very superb... Naala சின்ன வயசுல விளையாடின விளையாட்டு... இந்த விளையாட்டு... கல்லா.. மண்ணா.... Ukkaantha.. நின்னா.... இந்த maari neriya... Semma different ah naa முயச்சி. I like it... Super Super Super maa... Eagerly waiting for next episode
ஹா ஹா நன்றி சித்ரா ஜி 😍😍😍 நானும் அந்த மாதிரி நிறைய விளையாட்டு பச்சை குதிரை... கண்ணாம்பூச்சி.... இது போல சின்ன சின்ன நினைவுகள் ... சீக்கிரம் வர பாக்கிறேன் 😉😉😉😍😍
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sisssy yen yen ippadi:mad::mad::mad: manasalam padaku padaku nu irunthuchu:eek::eek: but neenga chinna pasanga vilayattu nu as solli suspens ah onnum illama agitinga :smiley52: but semma sis aprm ungaloda thedaluku i am coming:smiley43:
அடடா🤪🤪 நம்ப புள்ள ஏமாந்துடுச்சே இனிமேல் பாருங்க உமா சிஸ் எல்லாம் சஸ்பென்ஸ்தான் 💪💪 தேடிட்டே இருங்க 😉😉😉 and ரொம்ப நன்றி உங்க இதயம்பூர்வமான கருத்துக்கு 😍😍😍
 
அடடா🤪🤪 நம்ப புள்ள ஏமாந்துடுச்சே இனிமேல் பாருங்க உமா சிஸ் எல்லாம் சஸ்பென்ஸ்தான் 💪💪 தேடிட்டே இருங்க 😉😉😉 and ரொம்ப நன்றி உங்க இதயம்பூர்வமான கருத்துக்கு 😍😍😍
Thedal arambam coming soon:smiley51:nnavya baby da
 
Top