All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னோடும் பேசலாம்.... நான் சாஜூ!!

Stella mary

Bronze Winner
ஹாய் sis how are you? நீங்க கதை எழுதியே ரொம்ப மாதம் ஆகிவிட்டது உங்க கதை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் சீக்கிரம் வாங்க sis
 

J.வாசுகி

Well-known member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

ஸாரி. வெரி ஸாரி... சில பல காரணங்கள் இந்த பக்கம் வர முடியாமலே போய்டிச்சு.

என்னை ஞாபகம் இருக்கு தானே...!!

நான் சாஜூஊஊ...

யாரடி நீ நானாக...! அந்த கதைக்காக உங்க எல்லாரையும் நிறையவே காக்க வச்சிட்டேன். அதுக்கு முதல் மன்னிச்சு.

இப்போ எதுக்காக வந்திருக்கேன்னு நீங்க மூளையை கசக்கி யோசிக்கிறது புரியிறது. ரொம்ப வளவளக்காம விஷயத்துக்கு வர்றேன். அது என்னவென்றால் புது கதை எழுதி இருக்கேன்... இருக்கேன் இல்லை எழுதி முடிச்சு முதல் தடவை அமேசானில் போட்டிருக்கேன்.

ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பிடியே நீங்களும் படிச்சு பார்த்திட்டு எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டீங்கன்னா சாஜூ ஹேப்பி.

முக்கியமா ஒன்னு சொல்லிக்கிறேன். ஜாலியான கதை தான். லாஜிக் எல்லாம் இருக்காது மேஜிக் இருக்கான்னு படிச்சு பார்த்திட்டு நீங்க சொல்லனும். குறைகள் ஏதும் இருப்பின் பதமாக என் காதில் போட்டு விடவும். என் எழுத்தை திருத்திக் கொள்கிறேன்.

கதையை பற்றி...

அன்போடு அன்பாகக் கலந்திட...

View attachment 13919View attachment 13922View attachment 13920View attachment 13921

###

வழக்கமான புன்னகை முகத்தை அலங்கரிக்க இயல்பான வேக நடையில் பார்வையால் சுற்றத்தை அளந்து கொண்டு லிஃப்டில் நுழைந்து ஆறாம் தளத்திற்கான இலக்கத்தை அழுத்த, கண்ணாடிக் கதவுகள் மூடிக்கொள்ள எடுத்த இறுதி நிமிடத்தில் உயர்ந்த குதி வைத்த பாதணி கண்ணாடிக் கதவின் ஊடே நுழைந்ததில் கதவுகள் திறந்துகொள்ள, அது எழுப்பிய ஓசையில் சமூக வலைத்தளங்களுக்குள் உலாவிக் கொண்டிருந்தவன் மொபைலில் இருந்து பார்வை அகற்றி நிமிர்ந்தான்.

மழையோடு காற்றும் தெறிக்கும் மின்னலும் வெடிக்கும் இடியும் கொண்ட நள்ளிரவு நேரத்தில் வானம் சூழ்ந்த கருமேகங்களுக்குள் ஒளிந்து மறைந்து எட்டிப்பார்க்கும் பால் நிலவின் சௌந்தர்யம்!

அது மனித மனங்களை மயக்க வல்லது.

இருளின்றி உலகில்லை. வானின்றி நிலவில்லை. அவ்விருள் போர்வையில் ஒளிரும் நிலவின்றி காதலும் இல்லை!

நிலவும் காதலும் உடலும் உயிரும் போல!

அந்நிலவின் வனப்பை தன்னில் கொண்டிருக்கும் பெண்ணொருத்தியின் வரவில், அவன் மனதில் படபடப்புடன் கூடிய இதம் குடிகொண்டது. தீவிர பாவத்தை குத்தகைக்கு எடுக்கச் சென்றவன் யு டர்ன் அடித்து இன்ப சுவாரஸ்யத்தில் தேங்கி நின்றான்.

நேர்ப்பட்ட புருவங்களில் ஒன்று நுதலை தொட்டு மீண்டது. தளர்ந்திருந்த உடலில் நடுக்கம் அலைமோதியது. மெல்லிய இதயம் காற்றுக்குப் படபடக்கும் காற்றாடி போலானது.

‘டக் டக்’ சப்தமெழுப்பி அவள் உள்ளே நுழைந்ததும் கதவுகள் மூடிக்கொள்ள, இவன் மனக்கதவு திறந்து கொண்டதோ?!

இருவரும் மட்டுமே! இடைவெளி அதிகம் இருந்தது. இருந்தும் இவன் மனம் இயல்பிலின்றி தாளம் தப்பியது.

அவள் தெளித்திருந்த பர்ஃப்யூமின் வாசம் அவனுக்குப் பிடிக்காத வாசம். இன்றோ அனுமதி கேளாது நாசி துளைத்து நுரையீரல் தீண்டி நூதன அவஸ்தைகள் உண்டாக்கியதில் ஸ்டெடியாக நிற்க முடியாமல் நெளிந்தான் அவன். நெளிந்ததில் அலைகடலில் சிக்குண்ட படகென ஆடித்தீர்த்த பார்வை, அவள் முகத்திலிருந்து மெல்ல மெல்ல மேலும் கீழும் ரசனையுடன் அலைபாய்ந்தது.

ஐந்தடி உயரமும் சிக்கென்ற உடல் வாகும் சுண்டினால் ரத்தம் வரும் மெல்லிய சிவந்த பொன்மேனியும்! அவள் அழகிகளுக்கெல்லாம் அழகியென்றது.

‘அப்பப்பா!! அழகே பொறாமை கொள்ளும் பேரழகியோ இவள்!?’
கவிஞனாகினான் அவன்!
அவன் அன்பு தேவன்!

###

கௌதமையும் அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதில் இவனுக்கு ஒரு கொட்டு குடுத்து அனுப்பி வைத்தவள் இப்போது அவனையும் வார்த்தைகளால் வாட்டியெடுக்க அன்பு தேவனைப் போல் இல்லாமல் அமைதியாக அத்தனையையும் செவிமடுத்து நின்றான் கௌதம்.

அவள் வெளியேறச் சொன்னதும் எதுவும் பேசாமல் திரும்ப எத்தனித்தவன், அவள் கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டதைப் பார்த்ததும் என்ன நினைத்தானோ! ஃபில்டரில் தண்ணி பிடித்து அவள் முன் வைத்தான். அத்தோடு நில்லாமல் அவளின் அனுமதி கேளாமல் இன்டர்காமில் கிட்சன் டிபார்ட்மென்ட்-க்கு அழைத்து ‘மொறு மொறு ஆனியன் ரவா தோசை, கார சட்னி, கிழங்கு மசாலாவும் கொண்டு வரப் பணித்தான்.

காலையில் சரியாக உண்ணாதது மற்றும் ராத்திரியில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்த்ததில் தூக்கமின்மை காரணமாக கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. உடலின் சக்தி மொத்தமாக வடிவது போலிருக்க, மெளனமாக தண்ணீரைப் பருகியவள் எட்டிக்காய் கசப்பாக உள்ளிறங்கிய அவனின் அக்கறையை தடுக்கும் வழியறியாதவளாக சோர்ந்துபோய் இருந்தாள்.

சில நிமிடங்களில் பணியாள் ஒருவர் உணவை கொடுத்து விட்டுச் செல்ல, உணவுடன் அறையை ஒட்டியிருந்த ஓய்வெடுக்கும் அறைக்குள் நுழைய, வேறுவழியில்லாமல் எழுந்த இவள் கண்களை இருட்டியதில் தள்ளாட, வேகமாய் நெருங்கியவன் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்தி டீபாயை இழுத்துப்போட்டு உணவை பரிமாற, மறுவார்த்தை பேசாமல் வேக வேகமாக உண்ணத் தொடங்கினாள்.

உண்ணும் வேகத்திலே அவளது பசியின் அளவும் புரிய, முறைப்பான பார்வையை அவள் மீது வீசினான்.

‘பசியை மறக்கடிக்கும் அளவுக்கு வேலை முக்கியமா?’ கோபம் வந்தது அவனுக்கு!

இவனின் துளைக்கும் பார்வையை உணர்ந்தாலும் தலையை நிமிர்த்தினாளில்லை அந்த அழுத்தக்காரி!

உண்டு முடித்து, கையை அலம்பி, நீர் பருகியதும் பழைய மிடுக்கும் கம்பீரமும் தன்னால் வந்து ஒட்டிக்கொள்ள எதுவும் நடவாதது போல “உங்களை எப்பவோ வெளியே போக சொல்லியிருந்தேனே!” அதிகாரமாய் கூறினாள்.

(இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை)

‘இந்த கோபமும் அலட்டலும் இல்லாவிடின் நீ இன்று இந்த இடத்தை அடைந்திருக்க மாட்டாய் என்று பெருமிதம் கொண்ட அதே மனது தான் அவளின் தீவிரக் கோபத்திலும் பிடிவாத ஒதுக்கத்திலும் அடிபட்டு நொந்து நைந்து கொண்டிருக்கிறது.

‘எப்போது நீ மாறுவாய்? அந்த நாளுக்கான என் காத்திருப்பை நீ அறிவாயா...?’ வலி தோய்ந்த முகமும் கண்களும் யாசிப்பாய் அவளின் மீது படிய, தன் பிடிவாதத்தால் அதைப் புறக்கணித்தாள்.

அவளுக்கு யாரும் எதுவும் தேவையில்லை... அந்த முடிவை எடுத்து வெகு காலம் ஆகியிருந்தது.

அதை மாற்றி அமைக்கவோ மறுபரிசீலனைக்கு உட்படுத்தவோ அவள் தயாராக இல்லை. அவரவர்க்கு அவரவர் நியாயம். அதில் கேள்விக்குறியானது அவள் வாழ்க்கை. போனது போனதாகவே இருக்கட்டும். மாற்றவோ மாறவோ துளி அளவும் இஸ்டமில்லை அவளுக்கு!

அவன் இன்னம் வெளியேறாமல் நின்றது வேறு அவளை கோப அக்கினிக்குள் தள்ளியது.

“இன்னம் எதுக்கு நிற்கிறீங்க? அதான் வந்த வேலையை சிறப்பா செய்து முடித்திட்டிங்களே. இப்போ வரைக்கும் உங்களை வெளியே தான் போக சொல்றேன். இதுக்கு மேல் ஒரு நிமிஷம் தாமதமானாலும் வேலையை விட்டே போக வச்சிடுவேன்.” குரலுயர்த்தாமல் சாதாரணமாகத் தான் கூறினாள்.

பெருங்குரலெடுத்து கத்தினால் கூட கோபத்தில் சொல்கிறாள் என விட்டுடலாம். ஆனால் இந்த நிதானம் நிறைந்த குரலானது அவளின் உள்ளத்தை உள்ளபடி சொல்ல வல்லது.

அவளை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள கிடைத்த ஒரே வழியை தன் அவசரத்தால் இழந்து அவகாசத்தில் நொந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் தொங்கப்போட்ட தலையாக வெளியேறினான்.

சின்ன டீ... கதையை படிங்க கருத்தை சொல்லுங்க.

in India

in US

அன்புடன்
சாஜூ.
வாழ்த்துக்கள் தோழி😍😍😍😍😍
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாரடி நீ நானாக epo poduvinga sis....
Waiting...
எப்போன்னு கரெக்டா சொல்ல முடியல... ஆனா சீக்கிரமே அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வாரேன் பேபி 😍😍
 

Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் sis how are you? நீங்க கதை எழுதியே ரொம்ப மாதம் ஆகிவிட்டது உங்க கதை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் சீக்கிரம் வாங்க sis
நான் சூப்பரோ சூப்பர் டியர்ர்... நீங்க எப்படி இருக்கீங்க,?
ஆமாப்பா...‌நானும் உங்களை எல்லாம் ரொம்பவே மிஸ் பண்றேன். சீக்கிரமே வர பார்க்கிறேன்😍😍
 
Top