All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் 'என்னவளே' - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்...

எப்படி இஇருக்கீங்க எல்லோரும்???

முதல் கதைக்கு உங்கள் ஆதரவு நான் எதிர்ப்பார்க்காதது நண்பா... எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

இது என் இரண்டாவது கதை... இதற்கும் உங்கள் ஆதரவை எதிர்ப்பார்த்து,

ரிஷி.

நன்றி.

12-06-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 01 [ A ]

அந்த பிரம்மாண்டமான கல்யாண மண்டபம் கலை கட்டியிருந்துதுன்னு நீங்க நெனச்சீங்கன்னா அதுதான் இல்ல....

அன்னிக்கின்னு பாத்து அது ரொம்ப பரபரப்பா இருந்துது.

ஏன்?????

அட நம்ம ஹீரோயினுக்கு கல்யாணம்❤

அய்யயோ அப்போ ஹீரோ எங்க போய்ட்டாரு???

பொண்ணுக்கு பக்கத்துல ஹண்ட்ஸம்மா ஒருத்தன் நிக்கிறானே அவனா இருக்குமோ????

வாங்க போய் விசாரிக்கலாம் நண்பா.....

அவன் அண்ணன் காரனாமே நண்பா...

பேரு அப்பறமா கேட்டுக்கலாம்....

நாம ஹீரோவ தேடலாம் வாங்க....

ஊஹூம் நம்ம ஹீரோ இன்னும் என்ட்ரியே ஆகல!!!

ஸ்டோரிக்கு வெளிய இருக்குறா மாறி பீல் ஆகுதில்ல...

ஓகே ஓகே உள்ள போலாம்.....

அழகுப் பதுமையாக மேடையில் அமர்ந்திருந்தவளின் கண்கள் மிரட்சியில் இருக்க உடல் வெளிப்படையாகவே நடுங்கிக் கொண்டிருந்தது.

அவள் அருகில் நின்று கொண்டிருந்தவனின் கண்கள் இரத்தமென சிவந்து நெருப்பை கக்கிக் கொண்டிருந்தது.

சலசலப்பிற்கு காரணமானவனோ வேஷ்டி சட்டையில் காலுக்கு மேல் கால் போட்டு தன் இரு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்து உதட்டில் ஒரு இகழ்ச்சி சிரிப்புடன் அமர்ந்திருந்தான்.

"வேலு....ப்ளீஸ் என் மாப்பிள்ளய விட்டுடு.... என் பொண்ணு வாழ்க்க நாசமா போயிடும்.... எதுவா இருந்தாலும் தாலி கட்டினதுக்கு அப்பறம் பாத்துக்கலாம்....." கையெடுத்து கும்பிட்டு தன் மகள் வாழ்க்கைக்காக கெஞ்சினார் அந்தத் தந்தை.....

அவனிடம் சிறு சலனம் கூட இல்லை.....


"இன்னிக்கு இந்த கல்யாணம் நடக்கலன்னா இந்த ஜென்மதுல என் பொண்ணுக்கு கல்யாணமே நடக்காது வேலு....." முகத்தை மூடிக் கொண்டு அவர் அழ அவரையே கூர்ந்து பார்த்தவன் தனக்கு அருகில் இருந்த தன் அடியாளுக்கு கண் காட்ட அடுத்த நிமிடம் கல்யாணப் பெண் அவன் முன் நிறுத்தப்பட்டிருந்தாள்.

அங்கே அண்ணன் இரண்டு தடியர்களிடம் திமிரிக் கொண்டிருக்க அவனை ஒரு பார்வை பார்த்தவன் எழுந்து தன் ஷரட்டை சரியாக்கி விட்டு திடுமென அவள் கழுத்தில் தாலியை கட்டி விட அதை எதிர்பாக்காத அதிர்ச்சியில் நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்தார் அவள் தந்தை!!!

ஹாஸ்பிடல்......

"அப்பா...." கதறியழுத தங்கையை பார்க்க தன் கண்களும் கலங்கும் போல் இருந்தது ஆதர்ஷிற்கு....

(அதாங்க அவளோட அண்ணன்காரன் ஒருத்தன் இருந்தானே....அவனோட பேருதான் நண்பா)

அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை வருடிக் கொடுக்க

"அ...அண்ணா....அ...அ...அப்பாக்கு ஒன்னும் ஆகாதுல்ல....?" நிமிர்ந்து கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வதென்று அவனுக்குமே சத்தியமாக புரியவே இல்லை....

"சொல்லுங்கண்ணா ப்ளீஸ்.... அ...அ.. அப்பாவுக்கு எதுவும் இல்லல்ல?"

"நோ அம்முகுட்டி.... நம்ம அப்பாவுக்கு எதுவுமில்லமா....நீ அழாத"

"எப்பிடிணா அழாம இருக்க முடியும்....எ... எனக்கு பயமா இருக்குணா...." அவள் மீண்டும் அழ அவளை தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.

டாக்டர் வெளியே வராதது வேறு பதற்றமாகவே இருந்தது அங்கிருந்த அணைவருக்கும்....

தங்கையை பார்பதா அல்லது எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் தாயை பார்ப்பதா என குழம்பித் தவித்தவன் தன் நண்பனை அழைத்து தங்கையிடம் விட்டு விட்டு தாயிடம் விரைந்தான்.

அவர் தேவி....

அருகில் அமர்ந்தவன் அவர் கைகளை எடுத்து தனக்குள் பொத்தி வைத்துக் கொண்டு

"மா...அழுதுருமா....இப்பிடி இருக்காத ப்ளீஸ்....அம்மா...." அவர் தொள் தொட்டு உலுக்கினான் அவன்....

அவர்தான் இந்த உலகிலேயே இல்லையே....

பிறகு எப்பிடி அவன் சொல்வது கேட்டிருக்கும்???

"மா...." தன்னை மீறி கத்தவும் தான் அவரிடம் ஒரு திடுக்கிடலே வந்தது போலும்....

அவனை பார்த்து மலங்க மலங்க விழித்தவருக்கு கண்களிலிருந்து கரகரவென வழியத் துவங்கியது கண்ணீர்.....

***

அந்த பெரிய மாளிகையின் உள்ளே காலுக்கு மேல் கால் போட்டு நடுநாயகமாக அமர்ந்திருந்தான் அவன்!!!

கதிர்வேல்!!!

அவன் மனக்குமுறலை வெளியே தெரியாமல் மறைக்க பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருப்பது அவன் கை முஷ்டிகளை மடக்கியிருப்பதிலிருந்தே தெரிந்து கொண்ட அவன் பீ.ஏ "ரித்விக் " எல்லோரையும் வெளியே அனுப்பி விட்டு தான் மட்டும் அவனருகில் சென்று அமர்ந்தான்.

"கதிர்...." அவன் தோள் தொட நிமிர்ந்து தன் நண்பனை பார்த்தவனின் கண்களில் முதன்முறை கலக்கத்தை கன்டவன் துடித்தே போனான்.

(அட....நண்பனா....?)

"மச்சி....ப்ளீஸ்" கண்கள் கலங்க தன்னிடம் கெஞ்சியவனை பார்த்தவன் சடாரென தன் இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள குழப்பத்துடன் நண்பனை ஏறிட்டான் ரித்விக்....

"ஐ அம் ஆல்ரைட் ரித்விக்....நா தனிய இருக்க விரும்புறேன்..... யாரையும் டிஸ்டர்ப் பண்ண விடாத" அவன் முகம் பார்க்காமல் விறுவிறுவென்று அவன் மேலேறிச் சென்றிட உயிர் நண்பனை பார்த்து பெருமூச்சு விட்டான் அவன்.....

தன்னறைக்கு வந்தவன் தன் கோபத்தை எதில் காட்டுவதென்று தெரியாமல் தனக்கு முன்னால் இருந்த கண்ணாடிக்கு ஓங்கி குத்தினான்.

உடல் வலியை விட மன வலி மேலோங்கி இருந்ததில் கையிலிருந்து இரத்தம் கொட்டுவது கூட பெரிதாக தெரியவில்லை போலும் அந்த ஆறடி ஆண்மகனுக்கு....

கட்டிலில் தொப்பென அமர்ந்து தலையை தாங்கிக் கொண்டவனின் முன் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்த கைக்கு சொந்தக்காரர் தனக்கு அருகில் இப்போது இல்லை என்ற உண்மை புரிந்ததில் மனம் கனத்துப் போனது அவனுக்கு....

கூடவே மனப்பாரம் நீங்க தலை சாய்த்த தாய்மடியும் சேர்ந்து கலைந்து போனதில் அந்த அஞ்சா நெஞ்சனின் கண்களிலிருந்தும் இரு சொட்டுக் கண்ணீர் துளிகள் உருண்டு விழுந்ததுவோ???

"அவன விட்டுடாதடா..." காற்றில் கரைந்து வந்து தன் செவிகளை தீண்டிய சகோதரனின் குரலில் விறைத்து இறுகியது அவன் தேகம்!!!

விழவா வேண்டாமா என தேங்கி நின்ற கண்ணீரை சுண்டி எரிந்தவன்

"விட மாட்டேன்பா...உங்கள அழிச்சவங்கள உறுத்தெறியாம அழிக்கும் வர நா ஓய மாட்டேன்" பழிவெறி மின்னியது அவன் கண்களில்!!!

***

ஹாஸ்பிடல்......

அவன் அவளுக்கு தாலி கட்டியதில் அதிக சந்தோஷப்பட்டது அவர் உள்ளம் மட்டும்தான்!!!

எங்கே தன் ஒரே சொந்தமும் தன்னை விட்டுப் போய்விடுமோ என அஞ்சிக் கொண்டிருந்தவருக்கு பால்வார்த்தது போல் இருந்தது அவன் செய்கை....

ஆனால் அதன் பிறகு தன் கணவன் நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்ததில் மொத்த சந்தோஷமுமே வடிந்து போனது அந்தத் தாய்க்கு.....

தன் மகனிடமே கதறித் தீர்தவரை தடுக்க முன் வர வில்லை அவன்...

அவர்கள் அனைவரின் தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் டாக்டர் அறையிலிருந்து வெளியே வர தாயிடமிருந்து விலகி அவசரமாக அவரருகில் சென்றான் ஆதர்ஷ்.....

"டாக்டர்...அப்பா...?"
அவன் தவிப்பாக நிறுத்தவே

"பயப்பட்ற மாறி எதுவும் இல்ல மிஸ்டர்.ஆதர்ஷ்....பட்..." அவனுக்கு ஆறுதலாக கூரிவிட்டு அவர் நிறுத்த கலவரமானான் அவன்....

"டாக்டர்..."

"உங்க அப்பாவுக்கு இது ரெண்டாவது அட்டாக்.... இனி ஒரு தடவ வந்துதுன்னா அவர் பொழக்கிறது கஷ்டம்...." சத்தமில்லாமல் அவன் தலையில் இடியை இறக்க நிலைகுலைந்து போனவனது மனம் அவர் கூற்றை அவசரமாக மறுத்தது.

"நோ டாக்டர்....அப்பாவுக்கு இது மாதிரி வந்ததே இல்ல... அப்பறம் எப்பிடி?" இருந்துவிடக் கூடாதே என்ற மன்றாட்டம் அவன் குரலில்....

அதை தவிடுபொடியாக்கியது அவர் வார்த்தைகள்....

"நோ மிஸ்டர்.ஆதர்ஷ்....அவருக்கு ஏற்கனவே ஒரு தடவ வந்திருக்கு..... ஏன் அவரு உங்க கிட்ட மறச்சிட்டாரா?" அவர் கேள்வியில் பரிதாபமாக விழித்தவனின் கையை தட்டிக் கொடுத்தவர் அங்கிருந்து நகரவே தன்னைத் தவிர வேறு யாரும் கேட்டிருப்பார்களோ என எண்ணியவன் கலவரமாக திரும்ப அவன் நினைத்தது போலவே பேயறைந்தது போல் மயங்கிச் சரிந்தவளை திடீரென தாங்கிப் பிடித்தது இரு வலிய கரங்கள்....

அவள் அமிர்தவர்ஷினி!!!

டாக்டர் கூறியவற்றை எதிர்பாராமல் கேட்டு அதிர்ச்சியில் மயங்கிச் சரிந்தவளை சட்டென வந்து தாங்கிக் கொண்டன அவள் கணவன் கரங்கள்!!!

தங்கை கணவனை அங்கு அதுவும் அந்நேரம் எதிர்பாரா அதிர்சியில் உறைந்தவன் சட்டென தெளிந்து அவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டு விட்டு மற்றவனை உறுத்து விழித்தான்.

அவன் கோபம் அவனுக்கு சுவாரஷ்யத்தை கூட்டியதோ என்னவோ முகத்தில் சட்டென வந்து ஒட்டிக் கொண்டது ஒரு இகழ்ச்சிச் சிரிப்பு....

தங்கையை நண்பனிடம் ஒப்படைத்து விட்டு, வந்தவன் புரம் திரும்ப அவனோ ஹாஸ்பிடல் வராண்டாவில் போடப்பட்டிருந்த சேரில் உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டிருக்க வந்தவனின் திமிர் தோற்றத்தில் அவனுக்கு வந்ததே கோபம்!!!

கண்கள் சிவக்க வந்தவனின் சட்டையை கெத்தாகப் பற்ற அப்போதும் அவன் அசைந்தானில்லை....
அதை கண்டு ரித்விக் எகிறிக் கொண்டு வர அவனை ஒற்றைப் பார்வையில் அடக்கியவன் மீண்டும் தன் பார்வையை நிதானமாக திருப்பினான் ஆதர்ஷிடம்....

தன் சட்டையிலுள்ள அவன் கையை பார்த்து விட்டு அவனை நிமிர்ந்து பார்க்க அவன் கை தானாக கீழிறங்கியது.

அதை பார்த்து மீண்டும் இகழ்ச்சியாய் சிரித்தவன் எழுந்து தன் ஷர்ட்டை சரியாக இழுத்து விட்டு

"அட மச்சானுக்கு கோபத்துல கண்ணு சிவந்திருக்கு பாருடா" ரித்விக்கை பார்த்து கேலி பேசியவனிடம் மீண்டும் கோபப்பட்டான் ஆதர்ஷ்....

"யாருக்கு யாருடா மச்சான்.... மரியாதையா போயிடு இங்க இருந்து.... இல்ல...நடக்குறதே வேற" அவன் அடிக்குரலில் சீற அவன் என்னவோ பெரிய ஜோக் சொல்லி விட்டது போல் கத்தி கத்தி சிரிக்க

"ச்சேஹ்...." அலுப்புடன் மொழிந்து விட்டு நகரப் போனவனை தேக்கியது அவன் வார்த்தைகள்.....

"ரித்விக்....என் மாமாவுக்கு சாவு காலம் நெருங்கிடிச்சாம்டா.... இப்போ தான் எனக்கு நிம்ம்ம்மதியா இருக்கு....கடவுள் இருக்கான்டா....கடவுள் இருக்கான்..." சொல்லிவிட்டு தன் நண்பன் கழுத்தில் கையை போட்டுக் கொண்டு சென்று கொண்டிருப்பவனையே வெறித்தது ஆதர்ஷின் பார்வை!!!

சட்டென தங்கை நினைவு எழ அவளை தேடி ஓடியவன் சடாரென கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.

அவள் என்னமோ மயக்கத்திலிருந்து தெளிந்து அமர்ந்திருந்தாலும் வெளியே வெறித்துக் கொண்டிருந்த அவள் தோற்றத்தில் அண்ணன் தான் அதிகமாக துடித்துப் போனான்.

வீட்டில் அனைவருக்கும் செல்லம் அவள்....
என்றாலும் அவளிடம் அப்படி ஒரு அமைதி!!!

அதிர்ந்து கூட பேசத் தெரியாதவளுக்கு எல்லாமே அப்பா தான்....

அண்ணனுக்கும் அம்மாவுக்கும் செல்லம் தான் என்றாலும் ஏனோ தந்தையிடமே அவளுக்கு ஒட்டுதல் அதிகம்...

அவ்வளவு செல்லமாக வளர்க்கப்பட்டவளுக்கு இப்படி ஒருவன் தாளி கட்டி விடுவான் என அங்கிருந்த யாருமே எதிர்ப்பார்த்திருக்கவில்லை.....

நடந்து முடிந்த நிகழ்வில் கசப்பாக முறுவலித்துக் கொண்டவன் தங்கை அருகில் சென்று அமர்ந்தான்.

அருகில் அரவம் உணர்ந்து தன் பார்வையை திருப்பியவள் தன் சகோதரனை பார்த்து புன்னகைத்தாள்.

எவ்வளவு தான் நடந்தாலும் இந்த புன்னகை மட்டுமே அவளது பதிலாக இருக்குமென்று உணர்ந்து கொண்டவனுக்கு உள்ளம் வலித்தது.

"இப்போ எப்பிடி இருக்கு அம்மு?"

"ஐ அம் ஆல்ரைட்ணா...." மீண்டும் ஒரு முறுவல்....

"...."

"ஏண்ணா....அப்.. அப்பா.." தொண்டை அடைத்து கரகரவென கண்ணீர் வழிந்தது அவள் கண்ணத்தில்....

"ஷ்...அழக்கூடாது மா...." எழுந்து தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டவனுக்கும் மேற்கொண்டு எதுவும் பேசத் தோன்றவில்லை....

கதவு இலேசாக தட்டப்பட்டதில் இருவரும் ஒருசேர திரும்பியதில் அதற்கும் கலாய்க்கத் துவங்கினான் வந்தவன்!!!

ஆம் மீண்டும் வந்தது அவனே தான்....

கதிர்வேல்!!!

அவனைப் பார்த்து பொங்கியவனுக்கு உடல் வெளிப்படையாக நடுங்க தனக்குள்ளே ஒன்றிப் போய் இருந்தவளில் கவனம் பதிய அவசரமாக தங்கை புறம் பார்வையை திருப்பினான்.

கண்களில் மிரட்சியுடன் வந்திருந்தவனை பார்த்தவளின் பயம் அவனுக்கு கோபத்தை கொடுக்க இவன் ஆரம்பிப்பதற்குள் அவனே அருகில் வந்திருந்தான்.

"அட....மச்சான்....நீயும் இங்கேயா இருக்க....?" எள்ளல் வழிந்த அவன் குரலில் பல்லை கடித்தான் ஆதர்ஷ்.

நின்றிருந்த அவன் பார்வை சட்டென மனைவி புறம் திரும்ப திடீரென அவள் உடல் தூக்கிவாரிப் போட்டதில் வழமை போல் இகழ்ச்சியாய் வளைந்தது அவன் உதடுகள்....

"இப்பிடி பன்னிட்டீயே மச்சான்....?" அவன் திடுமென கேட்டதில் குழப்பமாய் சுருங்கியது ஆதர்ஷின் புருவங்கள்......

"பின்ன....தங்கச்சிக்கு கல்யாணம் நடந்துடிச்சுன்னு சொல்லவே இல்ல பாத்தியா?" என்றவனின் கேள்வியில் அதிர்ந்தது இருவருமே தான்....

தன்னை சுதாரித்தவன்
"நாங்க எதுக்குடா உன்கிட்ட அதெல்லாம் சொல்லிட்டு இருக்கனும்?" எகத்தாளமான ஆதர்ஷின் கேள்வியில் அதிர்வான் என இவன் நினைத்திருக்க அவனோ அதற்கு நேர்மாறாக வாய்விட்டுச் சிரிக்கவும் இவன் தான் மீண்டும் பல்லை கடிக்க வேண்டியதாய் போயிற்று.....

"குட் ஜோக்...." என்றவனின் சிரிப்பு சட்டென நின்று போய் அவன் அடுத்து சொன் வார்த்தையில் தன் தாலியை பயத்துடன் தன் கைகளுக்குள் பற்றினாள் அவன் மனையாள்....

"ஏன் மச்சான்.... புடிக்காத கல்யாணமா இருந்தா பேசாம உன் தங்கச்சிக்கு தாலிய கழட்டி எறிஞ்சிட சொல்லிடேன்"

கண்களை இறுக்க மூடித் திறந்தவன் ஒரு முடிவுடன் தங்கை புறம் திரும்ப தன் மனைவியையே கூர்மையாய் நோக்கத் துவங்கியது அவன் கண்கள்!!!

"அம்மு...." என்றவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் தெரிந்த பதற்றம் அவனை துணுக்குற வைத்தது.

"அந்த தாலிய கழட்டி என் கையில கொடுத்துடு" அவளை விலக்கி நிறுத்தி அவன் கைகளை நீட்ட தன் தாலியை இன்னும் இறுக்கமாக பற்றிக் கொண்டவள் இரண்டடி பின்னால் நகர ஆதர்ஷின் முகத்தில் குழப்ப ரேகைகள் படர்ந்ததென்றால் அவள் கணவன் முகம் பாறை போல் இறுகிப் போனது.

(( என்னடா இவன்.... அவ அப்பிடி பண்ணினதுல நியாயமா சந்தோஷப்பட்டிருக்கனும்.....இவன் என்னடான்னா....இவன புரிஞ்சிக்கவே முடில நண்பா....
உங்களுக்கு ஏதாவது புரிஞ்சிதூ......???))

மீண்டும் ஏதோ பேச வாயெடுத்தவன் அவன் விறுட்டென வெளியேறவும் அப்படியே நிறுத்தி விட்டான்.

***

"என்னங்க...."தன் கணவரின் கைகளை பிடித்துக் கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் தேவி.....

"தேவி எதுக்கிப்போ தேவயில்லாம அழுதுகிட்டு இருக்க?" சற்றே கடிந்து கொண்டார் ராஜா!!!

அமிர்தவர்ஷினியின் தந்தை!!!

(( அதாங்க நம்ம ஹீரோ மாமனார் இருக்காருல்ல....அவரு பேரு....
என்னதூ.... உங்க எல்லோருக்கும் ஏற்கனவே தெரியுமா???
அது சரி.....ரீடர்ஸ் பத்தி தெரிஞ்சும் சொல்லிட்டிருக்கேன்ல.....எனக்கு நல்லா வேணும்....
வெட்டி பேச்சு பேசாம ஸ்டோரிகுள்ள வாங்க.....
அய்யய்யோ மொறக்கிறாய்ங்களே....))

"இப்போ நீ அழுதுகிட்டு இருந்தா நம்ம குழந்தைங்களுக்கு யாரு ஆறுதல் சொல்றது?" அவர் கேட்ட கேள்வி கொஞ்சம் வேலை செய்தது தான் போலும்....

வழிந்த கண்ணீரை துடைக்கவும் ஆதர்ஷ் அமிர்தவர்ஷினியுடன் வரவும் சரியாக இருந்தது.

"அப்பா...." ஓடி வந்து தந்தை பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள அவள் தலையை தன் நடுங்கும் கை கொண்டு வருடினார் அவர்....

"நா ரொம்ப பயந்துட்டேன்பா...." கேவலாக வெளிப்பட்டது அவள் குரல்.....


"ஷ்....அம்மு....என்னம்மா இது... அப்பாவுக்கு ஒன்னில்ல...
முதல்ல அழறத நிறுத்து"

"...."

"அம்மூ....ஐ அம் சாரிமா...."

"அப்பா...என்னப்பா நீங்க போய்...." பதறி மறுத்தாள் மகள்....

"இல்லம்மா....என் மேல தான் தப்பு.... உன் வாழ்க்கய நானே பாழாக்கிட்டேன்"

"...."

"அப்பிடி நடக்கும்னு நா எதிர்பாக்கலமா... மாப்பிள்ளய பத்தி விசாரிக்காம சரின்னு சொல்லிட்டேன்.....கடைசியில என்னென்னவோ நடந்துடுச்சு"

"விடுங்கப்பா அப்பறம் பேசிக்கலாம்" இடையிட்டான் ஆதர்ஷ்....

"ஆமாங்க....வீட்ல போய் பாத்துக்கலாம் நீங்க ரெஸ்ட் எடுங்க" தேவியும் ஆமோதிக்கவே அப்படியே அமைதியாகி விட்டார்.

"ஆதி..."

"என்னம்மா...."

"நீ அம்முவ கூட்டிட்டு வீட்டுக்கு போ...நா பாத்துக்குறேன்"

"இல்லமா...நீங்க அம்முவோட கிளம்புங்க நா பாத்துக்குறேன்...."

"இல்லடா நா...."

"அம்மா அதான் நா பாத்துக்குறேன்னு சொல்றேன்ல.... கிளம்புங்க..." அவரை கட்டாயப்படுத்தி தங்கையுடன் அனுப்பி வைத்து விட்டு வந்தவனுக்கு இதயம் பாரமாய் அழுத்தியது.

***

"மச்சான் அந்த பொண்ணு வந்திருக்காடா....." வெளியே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் சடாரென நண்பன் புறம் திரும்பினான்.

"அவங்க அம்மா கூட வந்திருக்காங்...." அவன் கூறி முடிக்கவில்லை அவன் காலரை கெத்தாக பற்றியிருந்தான் கதிர்....

"என்னடா சொன்ன?" கண்கள் சிவக்க கேட்டவனை கண்டு ரித்விக்கே ஒரு கணம் பயந்து போனான்.

"ம...மச்சான்...." அவன் திணற அவனை உதறித்தள்ளி விட்டு தடதடவென கீழே இறங்கிச் சென்றவனை கண்டு இன்னுமின்னும் கலக்கம் அதிகரித்தது அந்த நண்பனுக்கு.....

........

கோபமாய் கீழிறங்கி அவன் வர தன் அருகில் நடுங்கிக் கொண்டிருந்த மகளையும் சடாரென எழுப்பி விட்டு தானும் எழுந்து நின்றார் தேவி!!!

அவன் பேச வாயெடுக்கு முன் அவனை கைநீட்டி தடுத்திருந்தார் அவர்...

"இருங்க சார் நா பேசிட்றேன்" அழுத்தமாக வந்து விழுந்த வார்த்தைகளில் அவன் வாய் தானாக மூடிக் கொண்டது.

"கல்யாணம் எப்பிடி நடந்திருந்தாலும் என் பொண்ணு இப்போ உங்களுக்கு மனைவிதான் சார்"

"...."

"நீங்க ஏத்துக்க முடியாதுன்னு சொன்னாலும் இவள இங்க தான் நான் விட்டுட்டு போக போறேன்"

"வாட்....?" அவன் கோபத்தில் கத்த அவளோ தாயை உச்சகட்ட அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள்.

"தன் மனைவிய நடு ரோட்டுல விட்ற அளவுக்கு நீங்க மோசமானவர் இல்லன்னு நெனக்கிறேன் சார்" அவர்கள் இருவரும் என்னவென்று கிரகிப்பதற்குள் அவர் வாசல் தாண்டியிருக்க திடீரென தெளிந்தவள் அவர் பின்னே அழுது கொண்டே ஓடினாள்.

கேட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தவரின் கையை இறுக்கப் பற்றிக் கொண்டு அழுதாள் அவள்....

"மா...ப்ளீஸ் மா.... என்ன விட்டு போய்டாத....எனக்கு பயமா இருக்குமா.... ப்ளீஸ் மா...."

"...."

"மா எனக்கு அவங்கள பாத்தாலே பயமா இருக்குமா....நா எப்பிடிமா இருப்பேன்....ப்ளீஸ் உன்கூட என்னயும் கூட்டிட்டு போய்டுமா..." அவள் கேள்வியில் அவளை திரும்பிப் பார்த்தவர்

"சரி....நீ சொல்ற மாறியே பண்ணிட்றேன்...." மலர்ந்த முகம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தது அவர் அடுத்து சொன் வார்த்தைகளில்.....

"அப்பிடி நீ என்கூட வர்றேன்னா இப்போ இந்த நிமிஷத்தோட அவரு கட்டின தாலிய கழட்டி கொடுத்துட்டு வந்துடு...." தன் வளர்ப்பை பற்றி தெரிந்தே அவளை தாக்கினார்.

அவர் நினைத்தது தான் நடந்தது!!!

கழுத்தில் தொங்கிங் கொண்டிருந்த தாளியை இறுக்கப் பற்றியவாறே

"நா இங்கேயே இருக்கேன்மா....நீ போ...." என்றவளை பார்த்து அவர் கண்களில் அப்படி ஒரு நிம்மதி!!!

நினைத்தது எல்லாம் நடந்து விட்டால் கடவுளுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது???

.......

இரவு ஒரு மணியை தாண்டியும் வெளியே போனவன் திரும்பி வரவும் இல்லை வெளியே நின்றவள் உள்ளே வரவும் இல்லை...

நடுவில் ரித்விக் தான் திண்டாடிப் போனான்.

அவனும் எவ்வளவு தான் கெஞ்சுவது???

அவளும் அசைந்து கொடுக்க வேண்டுமே???

ஒரே ஒரு தலையசைப்பை தவிர வேறு எந்த பதிலுமே அவளிடமிருந்து வருவதாகவே தெரியவில்லை....

நூறாவது முறையாக தன் முன் வந்து நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள் வர்ஷினி....

"ராத்திரி ஒன்ன தாண்டுதுமா... ப்ளீஸ் பண்ணி உள்ள வா"

"...."

"அவன் கோபப்படுவான்னு பயப்பட்றியா.. அவன் எதுவும் சொல்ல மாட்டான் நீ வாமா" அவளிடம் மாட்டேன் எனும் தலையாட்டல் மட்டுமே....

"டைம் பாருமா.... ப்ளீஸ் உள்ள வா"

"எனக்கு அப்பாவ பாக்...." வந்ததற்கு பேசப் போன போன முதல் வார்த்தையும் சர்ரென்ற பைக் சத்தத்தில் அப்படியே தேங்கிப் போனது

புஜங்கள் இறுகி கண்கள் சிவக்க வந்து இறங்கியவனை பார்த்து அவள் ரித்விக்குக்குப் பின்னால் மறைந்து கொள்ள அவன் பற்களை நறநறவென கடித்தான்.

"மச்சான்....அது...." அவனை கை நீட்டி தடுத்தவன்

"ஏன் அம்மணிக்கு பார்டி காட் வேற முன்னால நிக்கனுமோ?" என்றான் எகத்தாளமாக....

அவன் வார்த்தைகளில் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த கண்ணீர் மீண்டும் கரகரவென வழியத் துவங்க ரித்விக்கை விட்டு சற்றே நகர்ந்து நின்றாள் பெண்ணவள்!!!

"மச்சான் ஏன் இப்பிடி பண்ற...நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்லடா....பாவம் அவங்க..." பொறுக்கமாட்டாமாமல் கேட்டவனை அசட்டை செய்தவன் அவனை உறுத்து விழித்தான்.

"நீ இங்க என்ன பண்ணிகிட்டு இருக்க?"

"நா என்னமோ பண்றேன்...நீ எங்க போன?" பதில் சொல்லாமல் கேள்வி கேட்பவனை முறைக்க மட்டுமே முடிந்தது அவனால்...

"இவங்க இன்னும் சாப்புட கூட இல்ல"

"ஸோ வாட்?"

"என்னடா இப்பிடி கேக்குற....நா இவங்க இன்னும் சாப்புடலன்னு சொல்லிகிட்டு இருக்கேன்" அவனும் கோபத்தில் கத்த இவன் கோபம் கரையை கடந்தது.

"அதுக்கு தான் நானும் கேக்குறேன்.... இந்த *** வ சாப்புடலன்னு நா என்ன பண்ணனும்குற?" சிதறிய வார்த்தைகளில் விக்கித்துப் போனது அவன் மனையாள் மட்டுமல்ல அவன் நண்பனும் கூடவே!!!

ஏன் இப்படி ஒரு வெறுப்பு???

யாரோ செய்த தப்பிற்கு இவளுக்கு தண்டனை தருவதில் அப்படி என்ன நியாயத்தை கண்டுவிட்டான் தன் நண்பன்!!!

மனம் கனத்தது நண்பன் செயலில்.....

நண்பனை நிமிர்ந்து பார்த்த அவன் பார்வையில் மனதில் குற்ற உணர்ச்சி எழ முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான் கதிர்....

"சாரிடா...." மனம் கேட்காமல் சட்டென மன்னிப்பு யாசித்தவனை ஆச்சரியத்துடன் ஏறிட்டன அவன் மனையாள் கண்கள்....

போலியாய் புன்னகைத்து விட்டு நகரப் போனவனின் கையை பற்றி தடுத்தவன்

"அதான் சாரி சொல்றேன்லடா" மீண்டும் கேட்டான்.

அவன் முகம் தெளியாததை கண்டவனுக்கு விலகியிருந்த கோபம் மீண்டும் துளிர் விட கையை உதறித் தள்ளியவன் மீண்டும் அவனின் ராயல் என்ஃபீல்டை எடுத்துக் கொண்டு சென்று விட இவனுக்குத் தான் என்னடாவென ஆகிப் போனது.

திரும்பி அந்த பாவப்பட்ட ஜீவனை பார்த்தான்...

ஆச்சரியம் மறைந்து வேதனை குடி கொண்டிருந்ததில் அவனுக்கு மீண்டும் ஏதோ பிசையும் உணர்வு.....

"அ...வந்து....அவனுக்காக நா உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேங்க....
மனசுல வெச்சுகாதிங்க ப்ளீஸ்.... ஏன் இப்பிடி பண்றான்னு எனக்கும் புரிய மாட்டேங்குது.....அகைன் சாரிங்க...."

"அ...அப்பிடியெல்லாம் இல்லணா...." அதற்கு மேல் பேச முடியாமல் அவள் முகத்தை மூடி அழ அவள் அண்ணா எனும் அழைப்பில் பூரித்துப் போன மனது அவள் முகத்தை மூடி அழுததில் அப்படியே வடிந்து போயிற்று....

"ஐ...ஐ...ஐ அம் ரியலி சாரி வர்ஷினி.....ப்ளீஸ் அழாதிங்க"

"...."

"அவன் ஏதோ கோபத்துல அப்பிடி சொல்லி இருப்பான்.... மத்தபடி அவன் அப்பிடி கிடையாதுங்க" கோபமே இருந்தாலும் நண்பனுக்காக பேசினான் அவன்....

"நீங்க முதல்ல உள்ள வாங்க ப்ளீஸ்... இத அப்பறமா பாத்துக்கலாம்"

"...."

"என்ன அப்போ சும்மா தான் அண்ணன்னு கூப்டிருக்க?"

"அச்சோ அ...அப்பில்லாம் இல்லணா..."

"அப்பிடி இல்லணா வீட்டுக்குள்ள நீ வரணும்" என்றான் கட்டளை போலும்....

"...."

"ஒனக்கு என்னமா பிரச்சின?" அவன் கனிவில் மீண்ட கண்ணீரை கஷ்டப்பட்டு விழுங்கியவள்

"என்னால உள்ள வர முடியாதுணா" என்றாள் உறுதியாய்....

அவள் பதிலில் நெற்றி சுறுக்கியவன்
"ஏன்?" ஏதோ கேட்கப் போய் பாதியில் நிறுத்தி விட்டான் புரிந்து கொண்டவனாய்.....

"நீ நெனக்கிறதுல தப்பு இல்ல தான்..... இருந்தும் அவனா வந்து உன்ன வீட்டுக்குள்ள கூப்டுவான்னு நீ எப்பிடி நம்புற?"

"எனக்கு நம்பிக்க இருக்குணா அவங்க மேல.... அவங்க அவ்வளவு மோசமானவங்க இல்லன்னு என் மனசு சொல்லுது" இலேசாய் புன்னகைத்தவனுக்கு மனதில் அப்படி ஒரு அமைதி!!!

"நீங்க போய் தூங்குங்கண்ணா..." அவள் கூற்றில் அவளை முறைத்தவனை கண்டு கப்பென வாயை மூடிக் கொண்டாள் காரிகை.......

......

மணி அதிகாலை ஐந்தை தாண்டிக் கொண்டிருந்தாலும் அவன் வரும் சுவடு மட்டும் தெரியவே இல்லை....

அருகிலிருந்த தூனில் சாய்ந்து உறங்கி விட்டிருந்தவளை பார்த்து பெருமூச்சு விட்டவனுக்கு நண்பன் மேல் கடுப்பாக வந்தது.

மீண்டும் மீண்டும் அழைப்பெடுத்தும் அவன் அழைப்பை ஏற்காததில் ஏற்கனவே கடுப்பில் இருந்தவனுக்கு இந்த செய்கை எறிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல் இருந்ததில் ஆச்சரியத்திற்கு இடமில்லை.....

காலை.....

மணி ஏழு....

ஊஹூம்.....அவன் வரவே இல்லை....

தூங்கி எழுந்தவள் மலங்க மலங்க விழித்துப் பார்க்கவும் ஒருவனை வரவழைத்து காபி கொண்டு வந்து கொடுத்தான்.

வீட்டை சுற்றி எப்போதுமே அடியாட்கள் இருந்து கொண்டே தான் இருப்பர்.

நேற்றைய சம்பவத்தில் அவள் கண்களில் மிரட்சியை கண்டவன் எல்லோரையும் வீட்டுக்கு சற்றே தள்ளி இருக்குமாறு சொல்லி விட்டான்.

(( கதிர்னு நீங்க தப்பு கணக்கு போட்டிங்கன்னா அது தான் இல்ல நண்பா....அவன் அவ முகத்தயே பாக்கல இதுல எங்க இருந்து கண்ணுல இருந்து படிக்கிறது???
எல்லாம் நம்ம ரித்விக் வேல தாங்க....))

நெரம் சென்று கொண்டிருந்ததில் இருந்த கோபம் மறைந்து அங்கே சற்றே பதற்றம் குடி கொண்டதில் அவனை தயங்கி நோக்கினாள் பாவை.....

இலேசாய் கலைந்து போன கூந்தல்.....
நீளமான முக அமைப்புக்கு பொறுந்தியிருந்த கயல்விழிகளில் அத்தனை சோகம்!!!

வில்லாய் வலைந்த புருவ மத்தியில் சின்னதாய் ஒரு பொட்டு..... கூர் நாசிக்கு கீழே இருப்பதே தெரியாமல் செப்பு இதழ்கள்....

முன்னால் வந்து விழுந்த கட் முடிக்கற்றைகளை பின்னால் ஒதுக்கியவள் அவனை நெருங்கினாள்.

"அண்...அண்ணா..."

"என்னமா?"

"எனக்கு அப்பாவ பாக்கணும்" அழுதழுது கண்ணீரும் வற்றி விட்டது போல் அவளுக்கு....

கண்கள் மட்டும் கலங்கி அழத் தயாராய் இருந்தது.

"ப்ளீஸ் என்ன அப்பாகிட்ட கூட்டிகிட்டு போறீங்களா?" அவனுக்கு மட்டும் இப்படி எதுவும் பேசாமல் இருக்க ஆசையா என்ன???

வீட்டிற்கு வந்ததற்கே இந்தளவு பேசி விட்டுச் சென்றவன் அவளை கூட்டிச் சென்றால் கொன்று விட்டுத்தான் மறு வேலை பார்ப்பான் என அறிந்த மனம் அமைதி காத்தது.

"ப்ளீஸ் ணா.... ப்ளீஸ்..." கையெடுத்து கும்புடப் போனவளின் கையை கையை சட்டென பிடித்தவன் கை தட்டும் ஓசை கேட்டு திடுக்கிட்டு திரும்பினான்.

தொடரும்.....

23-06-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 01 [ B ]



தன் ஆபிஸ் முன் கேட்ட ஸைரன் சத்தத்தில் உள்ளே கம்பீரமாக அமர்ந்திருந்த அமைச்சர் ஷக்தியின் முகத்தில் இறுக்கம் தளர்ந்து புன்னகை அரும்பியது.



கதவு தட்டப்பட உள்ளே வர அனுமதித்தவருக்கு உள்ளே நுழைந்த ஆறடி ஆண்மகனை பார்க்க உள்ளம் பெருமையில் பூரித்தது.



அவனுக்கு அதுவே கசந்தது போலும்....



முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டே அவரைப் பாரத்து விறைப்பாய் ஒரு சல்யூட் வைத்து நிமிர்ந்தான்.



"குட் மார்னிங் சார்"



"வெர்ரி குட் மார்னிங் மிஸ்டர்.எ.ஸி.பி சார்" அவர் பதிலில் அவன் பல்லை கடிக்க சிரிப்பை அடக்க படாத பாடுபட்டுப் போனார் அவர்.



"எனிவே நா சொன்ன வாக்கை காப்பாத்திட்டேன் பாத்தீங்களா எ.ஸி.பி சார்?"



"...."



"சென்னை சிட்டியோட அஸிஸ்டன் கமிஷ்னர் அமைதியா இருக்காரா?" அவர் வேண்டுமென்றே போலியாய் ஆச்சரியப்பட அவனுக்கு அப்படியே பற்றிக் கொண்டு வந்தது.



"சார்..."



"சொல்லுங்க எ.ஸி.பி சார்" என்க தன் கையிலிருந்த பத்திரத்தை கொடுத்தவன்



"எனக்கு சென்னை அஸிஸ்டன் கமிஷ்னரா சார்ஜ் எடுக்க சொல்லி ஆர்டர் வந்திருக்கு சார்....அதோட லெட்டர்" அவருடைய கையிலிருந்த பத்திரத்தை கண்ணால் காட்டி விட்டு மீண்டும் ஒரு சல்யூட் வைத்தான்.



அதை தலையாட்டி ஆமோதித்தவர்



"யூ மே கோ" செல்ல அனுமதி வழங்க விட்டால் போதுமென்று விறுட்டென வெளியேறி விட்டான்



எ.ஸி.பி கிருஷ்ணா.



***



தன் கேப்பை தலையிலிருந்து சோபாவில் வீசியெறிந்தவன் "அம்மா..." கத்தினான் ஹை டெஸிபலில்....



சமையலறையில் ஏதோ வேலையாக இருந்தவர் அவசரமாக வெளியே ஓடி வந்தார்.



மகன் ருத்ரமூர்தியாய் சிலிர்த்துக் கொண்டு நிற்பதை கண்டு உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் அதை கவனிக்காதது போலவே அவனருகில் வந்து நிற்க அவரை கோபமாய் முறைத்தவன்



"இப்போ அந்தாளுக்கு சந்தோஷமா?" அமைச்சரின் மேலுள்ள கோபத்தில் தாயிடம் எகிறினான் அவன்....



மகன் கேட்டதில் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பேந்த விழித்தவர்



"யாருக்குடா சந்தோஷம்?" என்றார் அப்பாவியாய்....



"வேற யாருக்கு நா சந்தோஷமா இருக்குறது புடிக்காது....எல்லாம் உன் அரும புருஷன் அந்த எமன் ஷக்திக்குத்தான்" கோபமாய் சொன்ன மகனை பார்த்து தன் கணவருக்கு நன்றாக அர்ச்சனை செய்து கொண்டார்.



((அட மனசுக்குள்ள தாங்க))



"கண்ணா...."



"என்ன?" அப்போதும் காரமாகவே கேட்டான்.



"எதுக்குடா இவ்வளவு கோபம்?"



"பின்ன என்னமா நான் சிவனேன்னு ப்ரண்ட்ஸ் கூட ஜாலியா கொல்கத்தால இருந்தேன்....உன் புருஷனுக்கு தான் நா சந்தோஷமா இருந்தாலே புடிக்காதே.... சென்னைக்கு ட்ரான்ஸ்பர் பண்ணி வெச்சிருக்காரு" அம்மாவின் கண்ணா எனும் அழைப்பில் கொஞ்சம் மலையிறங்கி இருந்தவன் தந்தையின் செயலில் மீண்டும் பல்லை கடித்தான்.



அது ஏனோ தந்தைக்கும் மகனுக்கும் மட்டும் ஏழாம் பொருத்தம்!!!



அவர் வடக்கு என்றால் இவன் தெற்கில் நிற்பான்.



இருவருக்கு நடுவில் வந்து அல்லாடுவது என்னவோ தாய் தான்...



அவன் இன்ஜினியரிங் படிக்கப் போகிறேன் என வந்து நிற்க அவரோ போலிஸுக்கு போ என வந்து நின்றார்.



இவன் முடியவே முடியாது என வாதாடியும் அவர் என்னவோ தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்பது போல் இருந்து விட கடைசியில் தாய் தான் இருவருக்கும் பாலமாகிப் போனார்.



கணவனிடம் கெஞ்சி சோர்ந்து போனவர் மகனிடமே கணவனுக்காக கெஞ்சத் துவங்க கடைசியில் இவன் தான் சம்மதிக்க வேண்டியதாகிப் போயிற்று....



அதற்கும் எத்தனை போராட்டம்!!!



வீட்டை விட்டுக் கூட வெளியே போய் தன் பிடிவாதத்தை நிலைநிறுத்தி விட்டான்...



ஊஹூம்....எங்கே??



நான் உனக்கு அப்பன்டா என்பது போல் அவர் பிடியிலேயே இருக்க தாயின் கண்ணீரை காணப் பொறுக்காது திரும்பவும் வீடு வர வேண்டியதாகி விட்டது.



அது போதாதென்று அவர் தொல்லை இல்லாமல் அவன் நண்பர்களுடன் கொல்கத்தாவில் போஸ்டிங் வாங்கிக் கொண்டு செல்ல, வேண்டுமென்றே சென்னை வர வைத்து விட்டார்.



((இப்போ சொல்லுங்க நண்பா அவனுக்கு கடுப்பாகுமா ஆகாதா???))



மகனை சோபாவில் அமர வைத்தவர் தானும் அவனருகில் அமர்ந்து கொள்ள சட்டென அவர் மடியில் படுத்துக் கொண்டான்.



அவன் தலையை வாஞ்சையாக தடவிக் கொடுத்தவருக்குமே கணவன் மீது கோபம் தான்....



இருந்தும் அவர் காரணமில்லாமல் எதுவும் செய்ய மாட்டார் எனும் நம்பிக்கையில் அமைதியாக இருந்து விட்டார்.



"மா...."



"சொல்லு கண்ணா?"



"ஒன்னில்லமா"



"என்கிட்டயே மறைக்க நெனக்கிறியா.....உன் மனச அரிக்குற விஷயம் என்னன்னு சொல்லு" என்றார் விடாமல் கோதியவாறு.....



"அவன் கோச்சிகிட்டான்மா"



"டேய் தெளிவா பேசவே மாட்டியா நீ?" அவரும் எவ்வளவு தான் பொறுப்பது???



"ஹி...ஹி...கூல் மம்மி"



"என்னத்த கூலோ"



"ஓகே ஓகே சாரி...."



"ம்...ம்..."



"சொல்லாம கொல்லாம வந்துட்டேனாம்னு கால் கூட அடன்ட் பண்ண மாட்டேங்குறான்மா அந்த பக்கி" மகன் சொல்ல இப்போது அவருக்கு விளங்கி விட்டது அந்த பக்கி எனும் பெயருக்கு சொந்தக்காரன் யாரென்று....



"இங்க கொடு நா பேசுறேன் அவன் கூட" மகனிடமிருந்து போனை வாங்கி அவன் நண்பனுக்கு அழைத்து விட்டார்.



அவன் அபினவ்!!!



எ.ஸி.பி கிருஷ்ணாவின் உயிர் தோழன்...



மூன்று முறை அழைத்தும் அவன் கட் பண்ணி விட மகன் முகம் சுருங்குவது பொறுக்காமல் தன் எண்ணிலிருந்து அழைக்க இப்போது உடனே அழைப்பு எடுக்கப்பட்டது.



"சொல்லுங்க மா...எப்.." அவன் முடிக்கும் முன் இவர் கரிக்கத் துவங்கி விட்டார்.



"என்னடா உனக்கு அவ்வளவு திமிரா.... என் கூட பேசுவ நா பெத்தவன் கூட பேச மாட்டியா..... பாவம் என் புள்ள....ஏற்கனவே நொந்து போயிருக்கான்...இதுல நீ வேற அவன படுத்தி எடுக்குற.... ஒழுங்கு மரியாதயா அவன் கால அடண்ட் பண்ணு" அவன் பதில் பேசும் முன் துண்டித்தவர் மகனை பார்த்து புருவம் உயர்த்த அவரை வயிற்றோடு சேர்த்து கட்டிக் கொண்டான்.



"கண்ணா அப்பா மேல கோபமா இருக்கியா?" தன் தலையிலிருந்த அவர் கையை தட்டி விட்டு சட்டென எழுந்து கொண்டவன் அவரை உறுத்து விழித்து ஏதோ பேசப் போகவும் அவன் மொபைல் அலறவும் சரியாக இருந்தது.



"இரு உன்ன வந்து வெச்சுக்குறேன்" கோபமாய் மொழிந்து விட்டு செல்லும் புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் நந்தினி....!!!



அவன் தாய்......



தன் நண்பனிடமிருந்து வந்து கொண்டிருந்த அழைப்புக்களை சிரிப்புடன் கட் பண்ணிக் கொண்டெ படுத்திருந்தான் அவன்.....



அடித்து ஓய்ந்து மீண்டும் ஒலியெழுப்ப இம்முறை அதை அவன் கையிலிருந்து பறித்தெடுத்து அடண்ட் செய்தது வேறு யாரும் இல்லங்க...



நம்ம எ.ஸி.பி சாரோட இன்னொரு உயிர் நண்பன்...



ச்சே ச்சே இல்ல இல்ல பலியாடுன்னு சொன்னாதான் கரெக்ட்



மிஸ்டர்.ரக்ஷன்!!!

டிடெக்டிவ் ஏஜன்ட்....



((அப்பறம் என்ன நடந்துதுன்னு நா சொல்றதுக்கு முன்னாடியே நீங்க யூகிச்சு இருப்பீங்க...

சொல்றது என் கடம இல்லயா???

எதுக்கும் சொல்லிட்டே போயிட்றேன் நண்பா.....))



கேக்க கூடாத வார்த்த எல்லாம் கேட்டு....எதுக்கு அர்ச்சனை பண்றான்னே தெரியாம அழுது.... கடைசியில் வைடா போனன்னு அவன் கட் பண்ண காதுல இருந்து எடுத்தா.... அவன் நிலைய பாத்து விழுந்து விழுந்து சிரித்த நண்பனை நன்றாக மொத்தி எடுத்ததுக்கு அப்பறம் தான் நம்ம ரக்ஷனோட வெறியே குறைஞ்சிதுங்க.....



நம்மாளுக்கு விழ வேண்டியதெல்லாம் இவன் தானா வந்து மாட்டி வாங்கி கட்டிகிட்டான்......



இப்போ சொல்லுங்க நண்பா அவனுக்கு நா பழியாடுன்னு சொல்றது சரி தானே????



இத சொன்னா ரைட்டரயே அடிக்க வர்றான் நண்பா.....



என்னன்னு கொஞ்சம் கேளுங்க....



"இதுக்கு மெலயும் சிரிச்ச மவனே நா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது" கடுப்பாக மொழிந்தான் நண்பன்.



தன் இரு கைகளாலும் வாயை இறுக்க பொத்தியவனுக்கு மீண்டும் சிரிப்பு பீரிட்டுக் கிளம்ப மெதுவாக எழுந்து வாசலில் போய் நின்று கொண்டவன் அடக்கமாட்டாமல் மீண்டும் சிரிக்க அவனை துரத்திக் கொண்டு ஓட சிரித்துக்கொண்டே வெளியே ஓடியவன் கேட்டை தாண்டி உள்ளே வந்து கொண்டிருந்த பெண்ணை பார்த்து சடன் பிரேக் போட்டு நின்று விட்டான்.



அவனை கண்ட அதிர்ச்சி முன்னால் நின்றிருந்தவளுக்கு இல்லை போலும்!



ஓடி வந்து அவனை பாய்ந்து கட்டிக் கொண்டாள் "அண்ணா" எனும் கூவலுடன்....



யாழினி!!!



அவன் எவ்வளவு தடுத்தும் அவனை விட்டு மும்பைக்கு படிக்கச் சென்ற கோபம் தங்கை மீது...



இன்று எதிர்ப்பாராமல் கண்டதில் அதிர்ச்சியானாலும் தங்கை அன்பில் நெகிழ்ந்தது உள்ளம்.



"குட்டிமா நீ உள்ள போ... நா தோ வந்தட்றேன் டா" தலை தடவி அனுப்பி வைத்தவன் நண்பன் ரக்ஷனுடன் பேசிக் கொண்டிருந்த வனை முறைத்துப் பார்க்க அவன் சிரிக்கவும் பல்லை கடித்தான் எ.ஸி.பி.



அர்ஜுன்!!!



கிருஷ்ணா மற்றும் யாழினியின் அண்ணன்...



குடும்பத்தில் மூத்தவன்.



"ரக்ஷன் இவன் கூட எதுக்கு டா பேசிகிட்ருக்க... இவனெல்லாம் உதைக்கணும்...."



"யப்பா சாமி... அவனுக்கு உதைக்கணும் சொல்லிட்டு எனக்கு தான் உதைப்ப நீ... எனக்கு வேலை இருக்கு நான் கிளம்பறேன்... ஆள விடு" நண்பனை அளிந்தவனாய் அவன் கையெடுத்து கும்பிட வாய் விட்டுச் சிரித்தனர் இருவரும்...



"டேய் நான் உன் நண்பன் டா"



"அதானே ட பிரச்சனையே"



"டேய்.... டேய்... " அவன் பைக்கில் சென்று விட கிருஷ்ணாவின் குரலும் சிரிப்பும் காற்றோடு கரைந்து போனது.



"க்ருஷ்... நான் அம்மா" தன்னிடம் ஏதோ கூற வந்த அண்ணனை மீண்டும் முறைத்தவன் உள்ளே செல்ல அவனை சமாதானப்படுத்திக் கொண்டே தானும் பின்னால் சென்றான் அர்ஜுன்.



அவன் யாழினியின் அருகில் அமர்ந்து கொள்ள முன்னால் அமர்ந்திருந்த தாய் மடியில் தலை சாய்த்து படுத்துக் கொண்டு தம்பியிடம் கண்களால் கெஞ்சினான் அண்ணன்.



"ம்மா க்ருஷ் எஎம் மேல கோபமா இருக்கான் மா.. பேச சொல்லு"



"நீ என்ன பண்ணி வெச்ச?"



"ம்மா நீ இப்போ எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும்... நா எதுவுமே ப.."



"அர்ஜு அண்ணா பொய் சொல்றாங்க மா... க்ருஷ் அண்ணாவ சென்னைக்கு ட்ரான்ஸ்பர் பண்ண வெச்சதே இந்த அர்ஜு அண்ணா தான்... அதான் க்ருஷ் அண்ணன் கோபமா இருக்காங்க" இடை புகுந்த யாழினியிடம் ஹை பை போட்டவன் தாயிடமிருந்து தப்பியோடியவனை துரத்த ஆரம்பித்தான்.



"அண்ணனா பிறந்துட்டு வில்லன் வேலை பாத்து வெச்சிருக்கடா நீயி... நான் சிவனேன்னு நிம்மதியா அங்க இருந்தா நீ அந்த எமன் கிட்ட மாட்டி விட ட்ரை பண்றியா... உன்ன இன்னிக்கு கொல்லாம விட மாட்டேன் டா நில்லுடா.... அர்ஜுன் சொன்னா கேளு நில்லுடா" ஒரு கட்டத்தில் கையில் அகப்பட்டவனை நன்றாக மொத்தி எடுக்க



"க்ருஷ் அம்மா நீ வீட்டுக்கே வர்றதில்லன்னு வருத்தப்பட்டாங்கடா... அதனால தான் அப்பிடி பண்ணேன்டா... அப்பா மேல எதுக்குடா கோபம்? "



"எதுக்கு கோபமா... உன் அப்பன் தான் எனக்கு எமன்... அவன் மட்டும் எனக்கு புள்ளையா பிறந்தான்னு வையி...."



"டேய் அப்..." அர்ஜுனன் குரல் தடைபட "ம்... சொல்லுங்க மகாராஜா... நான் பிள்ளையா பிறந்தா என்ன பண்ணுவீங்க... " கர்ச்சனையாய் கேட்டது தந்தை ஷக்தியின் குரல்....



தொடரும்......



24-06-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 02 [ A ]



கை தட்டும் ஓசையில் திடுக்கிட்டுத் திரும்பிய இருவரும் அங்கு சத்தியமாய் ஆதர்ஷை எதிர்ப் பார்த்திருக்கவில்லை...



உள்ளே வர விரும்பாதவன் போல் வாசலில் நின்றவாறே முறைத்துக் கொண்டிருந்தவனை குற்றம் சாற்றின இரு ஜோடிக் கண்கள்!!!



அண்ணனை கண்டதும் தாய் மடி தேடிய கன்றாய் ஓடப் போனவளை இழுத்துப் பிடித்து நிறுத்தினான் ரித்விக்.



அவனை அதிர்ச்சி விலகாமல் திரும்பிப் பார்த்தவள் அவன் பார்வை போன திசையில் தானும் திருப்ப அங்கேயே நிலைகுத்தி நின்று விட்டன அவள் கண்கள்....



இப்போது தானா இவன் வர வேண்டும்???



(( நீங்க நெனக்கிறது சரிதான் நண்பா....

ஆதர்ஷுக்கு பின்னாடி பைக்குல இருந்து இறங்க கூட செய்யாம அவள பார்வையாலேயே பொசுக்கிட்டு இருந்தது நம்ம அய்யாவே தான்....

கதிர்வேல்!!!! ))



தங்கையை கண்டு புருவம் சுருக்கிய ஆதர்ஷ் தானும் பார்வையை திருப்ப அதற்காகவே காத்திருந்தவன் போல் வேண்டுமென்றே கை நீட்டி சோம்பல் முறித்தான் அவள் கணவன்....



அவன் செயலில் பல்லை கடித்தவன் சட்டென பார்வையை திருப்ப



"ஹூம்...." பெருமூச்சு விட்டவாறே இறங்கியவன் அவன் அருகில் வந்து தோலுக்கு மேல் கை போட அவனை முறைத்து விட்டு தட்டி விட்டான் அவன்.....



"அட....என்ன மச்சான் நீ....முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்க.... உன்ன நா எப்பிடி கவனிக்கணும்" அவன் நக்கல் புரிந்தாலும் அமைதியே அவன் பதிலாய்....



"சரி சரி....வா உள்ள..." அவன் மீண்டும் கை பிடித்து இழுக்க அதை தட்டி விட்டவன்



"கண்ட கண்ட நாய்களோட வீட்டு வாசல் படிய மிதிக்கிற பழக்கம் எங்க வம்சத்துக்கே கிடையாது" என்றான் வார்த்தைகளை அழுத்தி....



அதில் அவன் முகம் கறுக்க அதற்குள் அவன் சட்டையை பிடித்திருந்தான் ரித்விக்.....



தன்னை சமன் செய்தவன் ரித்விக்கிடம் கண்ணை காட்டி விட்டு தானே பேசினான்.



"ஓஹ் அப்பிடியா..... சொல்லவே இல்ல....ஏன் மச்சான் இவங்க வம்சம் கண்ட கண்ட நாய்களோட வீட்டு வாசல் படிய மிதிக்க மாட்டாங்கன்னா..... இதோ நிக்கிறாளே இவ.... இவ வேற வம்சமோ???" அவன் ஒரே போடாக போட்டதில் இப்போது இவன் முகம் கறுத்தது.



தங்கையை எப்படி மறந்து தொலைத்தான்???



தவற விட்ட வார்த்தைகளின் பாரதூரம் தாங்காமல் அவன் தலை குனிய அவனை நிமிர்த்தி அவன் கண்களை ஊடுறுவியவன்



"தலைய தொங்க போட்றது எனக்கு பிடிக்காது" கண்டிப்பாய் சொன்னாலும் அதிலிருந்த நடுக்கம் மற்ற இருவருக்கும் நன்றாகப் புரியத் தான் செய்தது.



தன் முன் நின்றவனை ஒரு நொடி பார்த்தவன் அதற்கு மேல் முடியாமல் முகத்தை திருப்ப துரதிஷ்டவசமாக அவன் கண்கள் கலங்கி சிவப்பேறி இருந்ததை கண்டு விட்டான் கதிர்....



ஏதோ ஒரு பாரம் நெஞ்சை கணமாய் அழுத்தியதில் அதை தாங்க முடியாதவன் ரித்விக் கையை அழுத்திப் பிடிக்க நண்பன் முகத்தை ஏறிட்டுப் பார்த்த அவன் கண்களுமே கலங்கிப் போய் தான் இருந்தது.



அப்பாவைக்கு மட்டும் தான் எதுவும் புரியவே இல்லை....



ஆக மொத்தத்தில்... மூவர் கண்களும் கலங்கி இருந்ததில் குழம்பித் தவித்தது பேதை மனம்.....



"ரித்விக்..... மேல யாரயும் வர விடாத" சொல்லி விட்டு திரும்பிக் கூட பார்க்காமல் செல்பவனையே வெறித்தது அவன் பார்வை!!!



"அண்ணா....." தங்கை அழைப்பில் சட்டென தன்னை மீட்டவன் அவளை பார்த்து சிரித்தான்.



"யாருன்னா அவங்க....அவங்கள முன்னாடியே ஒனக்கு தெரியுமா?"



"...."



"அண்ணா....நா உன் கிட்ட தான் பேசுறேன்"



"இ...இல்ல..." அவன் தடுமாற அவனை பார்த்து விட்டு நகர்ந்தான் ரித்விக்.



"அ...அண்ணா எனக்கு அப்பாவ பாக்கணும்" அவள் அழத் தயாராக



"அம்மு....அப்பா நல்லா இருக்காங்கமா.... நீ அழக் கூடாது" அவள் கூந்தலை வருடிவிட்டு தேற்றினான் அவன்....



"என்ன கூட்டிட்டு போயிட்றியாணா?" முடியாமல் அவள் கதற அவன் கை முஷ்டி இறுகியது.



"ப்ளீஸ் ணா.....எனக்கு பயமா இருக்குணா....."



"ஒன்னில்ல அம்மு.... அதான் நாங்க இருக்கோம்? அ...அ...அவன் ரொம்ப நல்லவன் அம்மு....அவன கஷ்டப்படுத்திடாத " அவன் வார்த்தைகளில் அவள் அதிர்ச்சியாய் நிமிர அதற்கு மேல் முடியாமல் அங்கிருந்து கிளம்பி விட்டான் அவன்.....



அவளுக்கு தலையே சுற்றியது.....



கேட்டால் தெரியாது....

ஆனால் எப்படி???



போகும் தன் சகோதரனையே ஏக்கத்துடன் பார்த்து நின்றவள் அப்படியே அசையாது நின்று விட அவளை கலைத்தான் ரித்விக்.



"வர்ஷினி..."



"...."



"அமிர்தவர்ஷினி.." இம்முறை சற்று அழுத்தி சொல்லவும் தான் திடுக்கிட்டு திரும்பினாள் பாவை....



"எ...எ...என்னணா?"



"உள்ள வா"



"முடியாது ணா..." அவள் உறுதியாக மறுத்து விட பெருமூச்சு விட்டவன்



"இரு வர்றேன்" என்றுவிட்டு உள்ளே சென்றான்.



***



வெள்ளை வேஷ்டி சட்டையில் காலை சற்றே அகற்றி கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு வானத்தை வெறித்தவாறு நின்று கொண்டிருந்தவனின் கண்கள் ஏகத்துக்கும் கலங்கி சிவந்திருந்தது.



அவன் கட்டு மஸ்தான தேகத்துக்கு ஏற்றவாறு அவனுடைய தோள் புஜங்கள் வெளியே திமிரிக் கொண்டிருந்தது.



ஆளை வீகரிக்கும் முகத்துக்கு சற்றும் பொருந்தாத கூர் விழிகளில் தெரியும் தீட்சண்யம் எதிரில் நிற்பவரை நடுங்க வைக்கும்.



மழிக்கப்பட்ட தாடிக்கு மேலே கம்பீரமாய் வீற்றிருந்த தன் மீசையின் ஒரு பக்கத்தை தன் சுட்டு விரலாலும் மறு பக்கத்தை தன் பெரு விரலாலும் நீவி விட்டுக் கொண்டிருந்தவன் தன்னை கட்டுக்குள் கொண்டு வர பெரும் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தான்.



தன் பின் அரவம் கேட்க கண்களை இறுக்க மூடித் திறந்தவன் நிர்மலமான முகத்துடன் திரும்ப அவன் என்ன நினைக்கிறான் என கண்டு பிடிக்க முடியாமல் ரித்விக் தான் குழம்பிப் போனான்.



"சொல்லு ரித்விக்"



"அ...அ...வந்து..."



"அதான் வந்துட்டல்ல....சொல்லு"



"அவங்கள உள்ள கூப்பிடலாமே?"



"எவங்கள?"



"நீ தாலி கட்டி... அப்பிடியே விட்டுட்டு வந்தியே....அவங்கள...நீ பண்றது நல்லா இல்ல கதிர்"



"யாரோ பண்ண தப்புக்கு இவள எதுக்கு தண்டிக்கனும்னு நெனக்கிற?" பொறுக்க முடியாமல் கேட்டே விட்டான்.



அவனை உறுத்து விழித்தவன் எதுவும் பேசாமல் நகரப் போக



"கீழ போயி அவங்கள கூப்டுகிட்டு வர்ற..." என்றான் கட்டளையாய்....



அதில் சலேரென அவன் புறம் திரும்பியவனின் பார்வை நண்பனை குற்றம் சாட்டியது.



"எனக்கு புரியுது மச்சான்....பட்.... யாரோ பண்ண தப்புக்கு அவ என்ன பண்ணுவா சொல்லு... ப்ளீஸ் மச்சான்"



ரித்விக் அமைதியாகி விடவும் என்ன நினைத்தானோ விறுட்டென வெளியேறியவன் தடதடவென படிகளில் இறங்கி வெளியே வந்தான்.



.....



"ஏன் மகாராணிக்கு உள்ள வர்றதுக்கு கார்பட் விரிச்சு வெக்கணுமோ?" திடுமென தன் பின்னால் கேட்ட குரலில் உடல் தூக்கிவாரிப் போட திரும்பினாள் பேதை....



"நீ நல்லவ மாதிரி நடிச்சா நா உடனே நம்பிடுவேன்னு மட்டும் தப்பு கணக்கு போட்டுடாத" வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.



எச்சில் கூட்டி விழுங்கியவளின் உடல் அவனை கண்ட பயத்தில் நடுங்க கண்களை இறுக்க மூடிக் கொண்டவள் சட்டென தலையை குனிந்து கொண்டாள்.



அதில் அவனுக்கு அப்படி ஒரு கோபம் போலும்!!!



சட்டென அவள் இரு தோள்களையும் பற்றியவன் பின்னிருந்த சுவற்றில் சாய்க்க அவளுக்குத் தான் எங்கே பயத்தில் இதயம் வெளியே வந்து விடுமோ என்றிருந்தது.



அவள் தாடையை பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்குமாறு செய்தவன்



"தோ பார்....என்ன மறுபடி மறுபடி சொல்ல வெக்காத... நா பேசும் போது என் முகத்த பாக்கணும்.... அண்டர்ஸ்டான்ட்?" அவளை பிடித்து அவன் உலுக்கியதில் அவள் தலை தானாய் ஆடியது.



அவளை கொஞ்ச நேரம் பார்த்தவன்



"உள்ள போ..." என்றவாறே அவளை உதறித்தள்ளி விட்டு சென்று விட ஏனென்றே தெரியாமல் அவள் கண்ணீர் சட்டென கண்ணத்தை தொட்டது.



தன் நண்பனின் பைக் சத்தத்தில் அவசரமாக வெளியே வந்தவனுக்கு அவள் அழுகையில் மனது திக்கென்றது.



'என்ன பண்ணித் தொலச்சானோ' மனதிற்குள் புலம்பியவாறே அவளருகில் சென்றான்.



"க்கும்...வ...வர்ஷினி...ப்ளீஸ் ஸ்டாப்"



"...."



"அவனுக்காக நா மன்னிப்பு கேட்டுக்குறேன்மா...ப்ளீஸ் அழாத... ஏதாவது மனச கஷ்டப்படுத்துறா மாதிரி...."



"அப்பிடியெல்லாம் இல்லணா...." சட்டென இடைபுகுந்தாள் அவள்....



"அப்போ என்னமா?"



"எனக்கு அவங்கள பாத்தாலே பயமா இருக்குணா....என் வாழ்க்க இப்பிடியே போய்டுமா....?"



"...."



"அவங்க கண்கள்ல தெரியுர வெறுப்பு என்ன கொல்லுதுணா" முகத்தை மூடிக் கொண்டு அவள் கதறவும் இவனுக்குத் தான் என்னவோ போலாகி விட்டது.



இதற்கு என்னதான் முடிவு???



பேசினாலே கண்களால் தடை போடுபவனை அவனும் எப்படித் தான் நெருங்குவது???



எத்தனையோ தடவை அவனும் சொல்லிப் பார்த்து விட்டான்...



ஆனாலும் அதை அவன் காதில் வாங்கிக் கொண்டால் தானே...



பெருமூச்சு விட மட்டுமே முடிந்தது அவனால்...



"சரி....உள்ள வா" அவன் அழைக்கவும் எதுவும் பேசாமல் அவன் பின்னே நடந்தாள்.



***



தந்தையை ஹாஸ்பிடலிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து கொண்டு வந்து விட்டு விட்டு தன் காரை எடுத்துக்கொண்டு நேரே கடற்கரைக்கு வந்தான் ஆதர்ஷ்.



மனம் பாரமாய் அழுத்தியதில் வீட்டிலிருப்பது மூச்சு முட்டும் போல் இருந்தது அவனுக்கு....



காரை ஓரமாய் நிறுத்தியவன் ஸ்டீரிங் கியரில் தலை சாய்த்து அப்படியே படுத்து விட்டான்.



ஏன் வாழ்க்கை இப்படி மாறிப் போனது???



நண்பன் கஷ்டப்படுவது தெரிந்தும் கை கட்டி வேடிக்கை பார்க்கும் நிலை தன்னை போல் இனி யாருக்குமே வந்து விடக் கூடாது என்பதுவே அவன் பிரார்த்தனையாய் இருந்தது.



தான் சந்தோஷமாய் இருப்பது கடவுளுக்கு மட்டும் ஏன் தான் பிடிக்கவில்லையோ....



எங்கெங்கோ தறி கெட்டு ஓடிய மனது கடைசியாய் நண்பன் முகத்தில் வந்து நிற்க அவன் அனுமதி இன்றியே கரகரவென வழியத் துவங்கியது கண்ணீர்....



"கதிர்...." அவன் வாய் தானாய் முணுமுணுக்க அதே கடற்கரையில் மறு பக்கத்தில் அலையில் நின்று கொண்டிருந்தவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.



சுற்றும் முற்றும் பார்வையை சுழல விட்டவனுக்கு மனது ஏனோ ஒரு நிலையிலில்லாம் திடீரென படபடவென அடிக்கத் துவங்கியது.



.....



ஆதர்ஷின் காரை திடீரென சூழ்ந்து கொண்டனர் நான்கைந்து முகமூடி நபர்கள்!!!



காரின் பின் கண்ணாடி உடைந்ததில் அதிர்ச்சியாய் பதறி எழுந்தவன் முன்னால் அடி விழவும் கதவை திறந்து கொண்டு சட்டென வெளியே பாய்ந்தான்.



அதற்காகவே காத்திருந்தவர்கள் போல் அவர்களை அவனை அடிக்கத் துவங்கவும் தன் பலம் கொண்ட மட்டும் எதிர்த்தவனால் அதற்கு மேல் மனச் சோர்வு இடம் கொடுக்காமல் போக அப்படியே மடங்கி அமர்ந்து விடவும் அவனை இறு பக்கம் வந்து கெட்டியாய் பிடித்துக் கொண்டனர் இருவர்......



அதில் தலைவன் போல் இருந்தவன் கையில் கத்தியுடன் அவனை நெருங்க அவன் கண்கள் அவனின் பின்னால் வந்து நின்றவனில் நிலைகுத்தி நின்றது.



ஆம்....அவன் நண்பனே தான்....



கதிர்வேல்!!!



குத்தப் போனவனின் முதுகுக்கு ஓங்கி மிதித்தவன் தன்னை தாக்க வந்தவர்களை புரட்டி எடுத்து விட்டான்.



"கதீர்...." நண்பன் குரலில் சலேரென அவன் புறம் திரும்பியவனுக்கு இதயம் நின்று துடித்தது.



வயிற்றில் கத்தியுடன் அதை பிடித்த படியே சரிந்தவனின் தலை கீழே படு முன் தன் மடி மீது தாங்கியிருந்தான் அவனை....



"நீ...வருவேன்னு எ...எனக்கு தெரியும் மச்சான்....நா...." அப்படியே மயங்கி விட்வனின் கண்ணத்தை தட்டியவன் அது பயனில்லாமல் போகவும் கைகளில் ஏந்தியவாறே ஓடினான்.



......



அடுத்த அரை மணி நேரத்தில் அவன் எப்படி ஹாஸ்பிடல் வந்து நண்பனை அனுமதித்தான் என்பதெல்லாம் அவனுக்கே தெரியாது என்று தான் கூற வேண்டுமோ!!!



இடிந்து போய் அமர்ந்திருந்தவனின் நினைவெல்லாம் தன் மடியில் படுத்துக் கொண்டு என்னவோ சொல்ல வந்தவனையே சுற்றிக் கொண்டிருந்தது.



'ஏதாவது தவறாக புரிந்து கொண்டு இருக்கிறோமோ??' முதன் முறையாக மனதுக்குள் எழுந்த கேள்வியில் திடுக்கிட்டுத் தான் போனான் அந்த ஆறடி ஆண்மகன்...



"சத்யா..... உன் புள்ளைக்கி இது ஒன்னு தான் குறை"



"ஏன் அருண் மட்டும் என்னவாம்?"



"நா இல்லீங்கோ"



அலைவரிசையாய் மாறி மாறி கேட்ட குரல்களில் தவிப்பில் இருந்த அவன் முகம் திடீரென இறுகிப் போனது.



சட்டென இருக்கையிலிருந்து எழுந்து செல்லப் போனவன் அவன் முன்னால் மூச்சு வாங்க நின்று கொண்டிருந்த ரித்விக்கை கண்டு அதிர்ந்து அப்படியே நின்று விட்டான்.



"ம...ம...மச்சான்....என்னடா ஆச்சு?"



"...."



"டேய்...." அவன் பதில் பேசாமல் இறுகி இருக்கவும் ஆத்திரத்தில் அவன் ஷர்ட் காலரை கெத்தாக பற்ற அப்போதும் அவன் அசைந்தானில்லை....



"கதிர்...." அவன் அழுத்தி அழைக்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தானே தவிற வாயை மட்டும் திறக்கவே இல்லை....



"ச்சேஹ்...." அவனை விடுத்தவன் நேரே வெளியே வந்த மருத்துவரிடம் விரைய நின்ற இடத்திலேயே வேறூன்றி நின்றவன் அடுத்த நிமிடம் வெளியேறி இருந்தான்.



***



"டாக்டர்.... அ...அவனுக்கு எப்பிடி இருக்கு?" எவ்வளவு முயன்றும் குரல் நடுங்கவே செய்தது.



"நீங்க....?"



"நா...ன்.... அவனோட ப்ரண்ட்"



"அப்போ இங்க இருந்தவரு?" அவர் சந்தேகமாகவே கேட்க தவித்துப் போனான் ரித்விக்.



"அவன் பொய்ட்டான் டாக்டர்....ப்ளீஸ் அவனுக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க"



"ஆபத்து கட்டத்த தாண்டிட்டாரு" அவர் பதிலில் தான் பிடித்திருந்த மூச்சையே விட்டான் அவன்....



"அவன நா பாக்கலாமா?" அவன் குரலில் அப்படி ஒரு தவிப்பு...



"இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு பாருங்க மிஸ்டர்"



"ஓகே...தேங்க்ஸ் டாக்டர்"



"அண்ட்....அவர பெட் ரெஸ்டலயே இருக்குறா மாதிரி பாத்துக்கோங்க"



"ஷூர் டாக்டர்" அவர் சென்று விடவே தொப்பென இருக்கையில் அமர்ந்தவனுக்கு இதை எப்படி அவன் குடுப்பத்திற்கு தெரியப்படுத்துவது என்றே புரியவில்லை....



இப்பொழுது தான் கணவனின் அதிர்ச்சியிலிருந்து மீண்டிருப்பவர் இதை தாங்குவாரா???



அதை விட வர்ஷினிக்கு என்னவென்று சொல்வது???



பெரும் வினாவே அவன் முன்னால் வந்து மிரட்ட உண்மையில் சோர்ந்து தான் போனான் அவன்....



எல்லாவற்றையும் விட நண்பனின் செயலில் அவனை அடித்தே கொன்று போடும் வெறி!!!



முயன்று தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவன் எழுந்து நண்பனை பார்க்கச் சென்றான்.



......



கட்டிலில் சோர்வாய் படுத்திருந்தவன் கதவு திறக்கும் சத்தத்தில் ஆர்வமாய் கண்களை திறந்தான்.



கதிருக்கு பதிலாய் நின்றிருந்த ரித்விக்கை கண்டதும் அவன் மனம் அடிபட்டுப் போனது.



'என்ன அவ்வளவு வெறுக்குறியா மச்சான்' ஊமையாய் அழுதது மனது...



மெதுவாய் அவனருகில் சென்று நின்றவன் அவனின் பார்வையில் சுவற்றை வெறித்தான்.



இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் இருவர் மனமும் தவியாய் தவித்துக் கொண்டிருந்தது.



என்ன செய்யவென்று தெரியாமல் வெளியேறப் போனவனின் கையை இறுக்கிப் பிடித்திருந்தான் ஆதர்ஷ்.



அவன் பக்கம் திரும்பாமல் கண்களை இறுக்க மூடித் திறந்தவன் அசையாது அப்படியே நின்றான்.



"ம..மச்சான்....சாரிடா...."



"...."



"இந்த உசுர எதுக்குடா காப்பாத்தி கொடுத்தான்... நா இப்பிடியே செத்து...."



"டேய்...ஓங்கி ஒன்னு விட்டேன்னா தெரியும்" அவன் முடிக்கும் அவனிடம் திரும்பி கையை ஓங்கியே விட்டான் ரித்விக்.



அதில் மெலிதாய் சிரித்தவன்

"தேங்க்ஸ்...." என்றான் குரல் கரகரக்க.....



அந்தரத்தில் இருந்த கையை அப்படியே இறக்கியவன் எதுவும் பேசாமல் வெளியேற அவனையே தொடர்ந்தது ஆதர்ஷின் வெறித்த பார்வை....



***



வீட்டின் முன் கேட்ட சர்ரென்ற சத்தத்தில் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தமர்ந்தாள் பேதை....



ரித்விக் அவ்வளவு சொல்லியும் ரூமுக்கு போக மறுத்தவள் சோபாவிலேயே உறங்கி விட்டிருந்தாள்.



புயலென உள்ளே நுழைந்தவன் அவளையும் பொறுட்படுத்தாமல் கைக்கு கிடைத்தவற்றையெல்லாம் அடுத்து நொறுக்க காதை இறுக்க மூடிக் கொண்டவள் பயத்தில் நடுங்கினாள்.



அவனுக்கோ கண்மண் தெரியாத கோபம்!!!



தன்மேலா அல்லது அடுத்தவர் மீதா அது அவனுக்கே வெளிச்சம்...



கடைசியாய் பூச்சாடியை அவள் காலுக்கு கீழேயே அடித்து நொறுக்கியவன் அப்போதுதான் அவள் ஒருத்தி இருப்பதையே கண்டு கொண்டான் போலும்....



வந்த கோபத்தில் அவளை அடிக்க கையை ஓங்கியவன் அவள் அதிர்ந்து விழிக்கவும் அவள் கழுத்தை பிடித்தவன்



"ஏன்டி அப்பிடி பண்ணான்.... சொல்லு.... ஏன் அப்பிடி பண்ணான்....சொல்லுடி?" கண்கள் சிவக்க வெறி பிடித்தவன் போல் அவள் கழுத்தை நெரிக்க அவனிடமிருந்து விடுபட போராடியவள் அது முடியாமல் போகவும் அவன் கைகளிலேயே மயங்கிச் சரிந்தாள் பாவை!!!



திடிரென தன் கைகளில் மயங்கிச் சரியவும் உண்மையில் ஒரு நிமிடம் உறைந்து நின்று விட்டான் கதிர்.



மூளை மறத்துப் போனவனாய் நின்றவன் சட்டென தன்னை மீட்டுக் கொண்டு அவளை சோபாவில் கிடத்தி அவளை பதற்றமாய் தட்டினான்.



"ஏய்....எந்திரி...ஏய்..." கத்திக் கொண்டிருந்தவன் தன் அடியாள் ஒருவன் பெயரை சொல்லி காட்டுக் கத்தல் கத்தினான்.



"வர்மா...." அடித்துப் பிடித்து உள்ளே ஓடி வந்தவன்



"பய்யா?" என்றான் அவனும் பதற்றமாய்....



"த..த...தண்ணி...தண்ணி.... கொண்டு வா" அவன் பதற உள்ளுக்குள் ஓடியவன் தண்ணீர் கோப்பையுடன் வெளியே வந்தான்.



வேகமாக அதை வாங்கி முகத்துக்கு ஓங்கி அடித்தவன் அவள் கண்கள் சற்று அசையவும் தான் சற்று ஆசுவாசமானான்.



திரும்பவும் இலேசாய் தண்ணீரை தெளித்தவன் அவள் கண்களை திறக்கவும் சட்டென எழுந்து கொண்டான்.



மெதுவாக கண்களை திறந்தவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவனை கண்டு பயத்தில் நடுங்கி மிரண்டு விழித்தாள்.



"வர்மா....இவளுக்கு சாப்பாடு கொடு" அவன் சொல்ல மீண்டும் உள்ளே ஓடினான்.



அவனை பயத்துடன் ஏறிட்டுப் பார்த்தவள் மெதுவாய் எழுந்து அமர அதற்கும் எரிந்து விழுந்தான்.



"நா ஒன்னும் ஒன் அழகுல மயங்கி விழப் போறதில்ல... சும்மா சீன் கிரியேட் பண்ணாம படு" அவன் வார்த்தைகளில் திடுக்கிட்டுப் போனது பேதை மனம்.



தலை குனிந்து அமர்ந்திருந்தவளின் கண்கள் கண்ணீரை சொரிய



"ப்ச் இப்போ எதுக்கு அழுதுகிட்ருக்க?" அதற்கும் காய்ந்தான்.



அவசர அவசரமாக கண்ணீரை துடைத்தவள் மீண்டும் பயத்துடன் அவனை ஏறிடவும் அவன் அடியாள் சாப்பாடு தட்டுடன் வரவும் சரியாக இருந்தது.



தட்டை அவளிடம் நீட்டியவன்

"ம்...சாப்புடு...." என்றான் உறுமலாய்....



இடம் வலமாக தலையை ஆட்டியவள் அவனை பார்க்கவே பயப்பட்டாள்.



கொஞ்சம் மட்டுப்பட்டிருந்த கோபம் தலை தூக்க அவளை உறுத்து விழித்தவன் கையிலிருந்த தட்டை விசிறி அடித்து விட்டுச் செல்ல விக்கித்து நின்று விட்டாள் பேதை!!!



***



ஹாஸ்பிடல்.......



நண்பனை பார்த்து விட்டு மனம் கனக்க வெளியே வந்தவன் அந்த நீண்ட வராண்டாவில் போடப்பட்டிருந்த நாட்காலியில் தொப்பென அமர்ந்து விட்டான்.



அடுத்து என்ன செய்வது யாரிடம் சொல்வது.... சொல்லி விட்டால் அவர்கள் நிலை???



நினைக்கவே உடல் நடுங்கியது அவனுக்கு...



தன்னை சமன்படுத்திக் கொண்டவன் கைகள் நடுங்க வர்ஷினிக்கு அழைத்தான்.



அவன் நடந்து கொண்ட விதத்தில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தவள் அழுகையை அடக்கிக் கொண்டு மொபைலை காதுக்கு கொடுத்தாள்.



"வ...வர்ஷினி"



"சொல்லுங்கண்ணா" சாதாரணமாக இருந்திருந்தால் அவள் குரல் மாறுபாட்டை கண்டு கொண்டிருப்பானோ என்னவோ....



"வந்து...உ...உன் அண்ணன்..."



"அ...அண்ணா...அ...அண்ணாக்கு என்னாச்சு?" விடயத்தை சொல்லும் முன்னரே பதற்றப்பட்டால் அவனும் என்ன தான் செய்வான்???



"அண்ணாக்கு ஒன்னில்லமா....நீ கொஞ்சம் *** ஹாஸ்பிடல் வர்றியா?"



"அண்ணா...யாருக்கு என்னாச்சு... ப்ளீஸ் சொல்லுங்க" அழுதே விட்டாள் பாவை...



"இல்லமா எல்லாம் நல்லா தான் இருக்காங்க...நீ வா"



"இ...இ...இதோ கெளம்பிட்டேண்ணா"



"ம்" அழைப்பை துண்டித்தவன் கண்களை மூடி அப்படியே சாய்ந்து கொண்டான்.



***



தான் தற்போது எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை அவளுக்கு....



தந்தை சோகத்திலிருந்தவளை தாய் கையோடு இழுத்து வர அப்படியே நடை பிணம் போல் வந்து விட்டாள்.



இப்போ என்ன செய்வது???



யாரிடம் உதவி கேட்க???



வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த இரு அடியாட்களை பார்க்கவே பயத்தில் காய்ச்சல் வரும் போல் இருந்தது அவளுக்கு.....



மீதம் இருப்பது இவள் கணவன் மட்டும் தான்....



அவனிடமா???



உடல் தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு....



அவனைப் பார்த்தாள் ஏனென்றே தெரியாத பயம் நெஞ்சுக்குள்!!!



கண்களை சுழற்றி சுற்றும் முற்றும் பார்த்தாள்.



ஊஹூம்....யாருமே இல்லை.....



அவனிடமே தான் போக வேண்டுமா???



அழுகை முட்டிக் கொண்டு வந்தது பேதைக்கு....



மூச்சை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டவள் மாடி ஏறினாள்.



அவன் அறை வாசல் மட்டும் ஏன் அவசரமாக வந்து விட்டது???



அப்படித்தான் இருந்ததோ அவளுக்கு....



கால்கள் பின்னிக் கொள்ள அதற்கு மேல் நடக்கவே முடியவில்லை அவளால்....



சட்டென கதவு திறக்கப்பட அதிர்ந்து இரண்டடி பின்னால் நகர்ந்தவளுக்கு இதயம் தொண்டை குழியில் துடித்தது.



கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவன் அங்கே அவளை சற்றும் எதிர்பார்க்கவே இல்லை...



"வ....வந்து...." அவள் பேச நெற்றி சுருக்கியவனின் பார்வை அவளை கூர்மையாய் துளைத்தது.



அவள் தான் குனிந்த தலை நிமிரவே இல்லையே....



"எ...என்ன ஹா...ஹாஸ்பிடல் அழச்சிட்டு போறிங்களா?" கேட்கும் போதே கரகரவென வழியத் துவங்கியது கண்ணீர்.



"ப்...ப்ளீஸ்....எ...எனக்கு எப்பிடி போறதுன்னு தெ... தெரில"



"...."



"ப்ளீஸ்ங்க" கும்பிடப் போனவளை உறுத்து விழித்தவன்



"வர்மா....வண்டிய ஸ்டார்ட் பண்ணு" மேலிருந்து கத்தியவாறே கீழிறங்கிச் செல்ல அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட அவன் பின்னே ஓடினாள் பேதை!!!



தொடரும்.........



28-06-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 02 [ B ]



ஸ்லோ மோஷன்ல அப்பா பக்கம் திரும்புறாரு நம்ம எ.ஸி.பி.....



அப்பறம் என்னங்க... இவன் பேசின பேச்சுக்கு அவன் அப்பன் சும்மா இருந்திருப்பாருன்னு நெனக்கிறீங்க???



நந்தினி.....அப்பிடீன்னு எட்டு ஊருக்கு கேக்குறா மாதிரி கத்தினாரூ பாருங்க....



நம்ம சாரு அம்மாவுக்கு குலையே நடுங்கி போச்சு....



பவ்யமாய் தன் முன் வந்து நின்றவரை உறுத்து விழித்தார் சக்திவேல்....



"புள்ளய பெத்து குடுடீன்னா ஒரு தருதலய பெத்து வெச்சிருக்க.... பெத்த அப்பனுக்கே மரியாத இல்ல....இதுல எங்க இருந்து உறுப்பட்றது....எ.ஸி.பி ன்னு நெஞ்ச நிமித்து கிட்டு சொன்னா மட்டும் போதாது.... அதுக்கு தகுதியா இருக்க தெரியணும்... உன் கூட தானே அவனும் பொறந்தான்....பாரு அவன பாத்து கத்துக்கோ.....நீயும் தான் இருக்கியே.... உறுப்படாத ப்ரண்ட்ஸ் வேற.... இவரு பண்றதுக்கு அவங்க சப்போர்ட்...." சற்றே மூச்சு வாங்கியவர் மகனை பார்க்க அவன் இருந்த கோலத்தில் அவருக்கு காதில் புகை வராத குறை தான்.....



(( அப்பிடி என்ன தான் செஞ்சிகிட்டு இருக்கான்??

நண்பா வாங்க நாமலும் அப்பிடி ஓரமா நின்னு பாக்கலாம்.....

அடப்பாவி.....இவ்வளவு நேரம் அவரு திட்ன திட்டுல எங்களுக்கே நீ திருந்திடுவன்னு தோனிருச்சுடா......

நீ என்னடான்னா காலுக்கு மேல கால போட்டு டி.வி பாத்துகிட்டு இருக்க?

கையில ஸ்னாக்ஸ் வேற....

நீ நடத்து ராசா.... நடத்து.....

அய்யய்யோ உன் அப்பா முறைக்கிறாருடா..))



"பாருடி உன் புள்ளய....இவன் எல்லாம் எங்க உறுப்பட?"



"ஏன் மா ஏன் உன் புருஷன் இப்பிடி இருக்காரு.... இப்போ கொஞ்சம் முன்னாடி பெத்த அப்பன்....னு ஏதோ சொல்லிட்டு... இப்போ உன் புள்ளனு மாத்தி பேசுறாருமா...." அவன் சீரியஸாய் டவுட் கேட்க அவருக்கு உள்ளுக்குள் புளியை கரைத்தது.



"கொஞ்சம் சும்மா இர்றேன்டா" வாய்க்குள் முணுமுணுத்தவர் அவனிடம் கண்களால் கெஞ்ச மனைவியை உக்கிரமாக முறைத்தார் அவர்....



யாழினியும் அர்ஜுனும் தான் சிரிப்பை அடக்க படாத பாடு பட்டுப் போயினர்.....



"அவன வீட்ட விட்டு வெளிய போக சொல்லு...." அவர் மனைவியிடம் கத்த அவரோ மகனை பரிதாபமாகப் பார்த்தார்.



(( இதுல யாரும் ஷாக் ஆக மாட்டாங்க நண்பா....ஏன்னா அவன் இதுல கோல்ட் மெடலிஸ்ட்....

அடேய்....வீட்ட விட்டு வெளிய போறதுல எல்லாமாடா கோல்ட் மெடல் வாங்குவாய்ங்க.....

அவ்வ்வ்வ்வ்......))



"இது தாத்தா கட்ன வீடு....இதுல தான் நான் இருப்பேன்"



"இங்கப் பாரு நந்தினி....அவன் இப்போ வெளில போகல....நா வெளில போயிடுவேன்"



"ஹெஹ்ஹேய்....யாரு கிட்ட ரீல் சுத்துறீங்க....ஒவ்வொரு தடவயும் உன் புருஷன் இப்பிடி சொல்லி தான் என்ன ப்லாக் மெயில் பண்றாரு மம்மி.....என்ன ஆனாலும் சரி....நா போக மாட்டேன்"



"இது தான் இவன் முடிவுன்னா நா போறேன்..." சொல்லி விட்டு நடந்தவரை "என்னங்க....அப்பா..." எனும் குரல்களை தாண்டி

"மிஸ்டர்.அமைச்சர் சார்....ஒரு நிமிஷம்..." எனும் குரல் தேக்கி நிறுத்தியது.



((அட....வேற யாருங்க அவர இப்பிடி பயம் இல்லாம பேரு சொல்லி கூப்புடுவா...எல்லாம் அய்யா தான்....))



"நானும் யோசிச்சு பாத்தேன்....என்ன தான் இருந்தாலும் நீங்க என் தாயின் கணவர்....வயசு வேற ஆகிடுச்சு.... அதனால நானே வெளில போறேன்....அ...அ..அதுக்குன்னு உங்க மேல பாசம்னு நெனச்சிங்கன்னா அது என் தப்பு கிடையாது" அவரை தாண்டி நடந்தவன் வாசல் வரை சென்று விட்டு திரும்பி வந்து



"வர்றேன் டாடி...." மொழிந்து விட்டுச் செல்ல அவருக்குத் தான் எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.



மனைவியை முறைத்து விட்டு விடுவிடுவென மேல ஏறிச் சென்றவர் மேலே இருந்து தன் முதல் புதல்வனை வருமாறு அழைக்கவும் பவ்யமாக மாடி ஏறிச் சென்றவனை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள் யாழினி.



கணவர் தலை மறையும் வரை காத்திருந்தவர் அவசரமாக சென்று மகனுக்கு அழைக்க தங்கையும் சிரிப்பை நிறுத்தி விட்டு சென்று அன்னை பக்கத்தில் அமர்ந்தாள்.



"சொல்லுமா"



"எங்க இருக்க கண்ணா?"



"அத்தை வீட்டுக்கு போய்கிட்டிருக்கேன்மா"



"அப்பா பேசினத மனசுல வெச்சிகாம வீட்டுக்கு வாடா கண்ணா"



"மா....ப்ளீஸ்....நானே எப்போடா உன் புருஷன் வீட்ட விட்டு துரத்துவார்னு பாத்துட்டு இருந்தேன்.....இதுல நீ வேற"



"என்னடா இப்பிடில்லாம் பேசுற?"



"பின்ன என்னமா.... அந்த ஆள் கூட எப்பிடிமா இவ்வளவு நாள் குடும்பம் நடத்துன?" கடுப்பாக கேட்ட அண்ணன் கேள்வியில் கலகலவென சிரித்தாள் அவன் தங்கை.....



"ஏ...வாயாடி நீயும் பக்கத்துல தான் இருக்கியா?"



"ஆமா ணா....ப்ளீஸ் வீட்டுக்கு வா ணா...."



"இல்ல குட்டிமா....அண்ணன் கல்கத்தா போறேன்... வர முடியாதுடா"



"போர் அடிக்கும் ணா....ப்ளீஸ்...." அவள் சிணுங்க அவனுக்கு அப்படியே உறுகிற்று....



"என் செல்ல தங்கச்சில...ப்ளீஸ்... இன்னும் ரெண்டே ரெண்டு நாள் தான் அதுக்கப்பறம் டான்னு உங்க முன்னாடி வந்து நின்னுடுவேன்"



"கண்டிப்பா??"



"கண்டிப்பா டா செல்லம்"



"ம்...ஓகே...."



"ஆமா என் தாய்க்குலம் எங்க...?"



"இதோ தான் இருக்காங்கண்ணா"



"வொய் மம்மி....எதுக்கு இத்தனை அமைதி?"



"...."



"மா....அதான் வந்துடுவேன்னு சொல்றேன்ல?"



"ப்ச்...அது இல்லடா"



"என்னது அது இல்லயா....?"



"ஊஹூம்"



"இன்னும் என்ன?"



"இல்ல....ஒனக்கு ஒரு கால் கட்டு போட்டா தான் நீ திருந்துவன்னு தோனுதுடா"



"மா....." அலறியே விட்டான் மகன்.....



"ஏன்மா உனக்கு இந்த கொலை காண்டு என் மேல?"



"ஹி...ஹி...அப்பிடி இல்ல கண்ணா..."



"ச்சீ வழியாத"



"டேய் நா உன் அம்மாடா..."



"இந்த டயலாக மட்டும் வக்கனயா சொல்லு....ஆனா எல்லாத்துலயும் கோட்ட விட்று"



"ஏன்டா குழப்புற?"



"எனக்கு முதல்ல உன் புருஷனோட அரும புத்திரன் இருக்கானா இல்லயா?"



"இருக்கான்....அதுக்கென்ன?"



"அட லூசு மம்மி.... அவனுக்கு பொண்ணு செட்டானா தானே எனக்கு கல்யாணம் பண்ண உன் புருஷன் அனுமதி தருவான்"



"அடப்பாவி.....நீ அலறுன அலறுல எங்க வேணான்னு சொல்லிருவியோன்னு பயந்தே பொய்ட்டேன்டா..... வாலு..."



"ஹி...ஹி...நா எதுக்கு மம்மி வேணான்னு சொல்ல போறேன்?"



"அடேய் போதும்டா..."



"அர்ஜு எங்க அவன்... இருக்கு அவனுக்கு"



"சரி சரி.... வந்துடுவேல்ல கண்ணா?"



"கண்டிப்பா வந்துடுவேம்மா...."



"உடம்ப பாத்துக்கோடா...."



"ஓகே மம்மி...."



"பத்தரமா இருடா"



"ஓகே மம்மி...."



"வந்துடுவ தானே?"



"வந்துடுவேன்மா..பய்....மிஸ் யூ...." அழைப்பை துண்டித்தவனின் உதட்டில் புன்னகை உறைந்திருந்தது....



***



வீட்டின் முன் கோலம் போட்டு விட்டு புறங்கையால் முடியை ஒதுக்கி விட்டு நிமிர்ந்தாள் காரிகை!!!



காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்த கூந்தலுக்கு நடுவே சின்ன க்ளிப்....



அப்போதுதான் குளித்து முடித்திருப்பாள் போலும்.....



கூந்தலிலிருந்து விழுந்த நீர்த் திவலைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது.



சூரிய ஒளி பட்டு ஜொலித்த அவள் மதி முகத்துக்கு கீழே இருந்த கயல்விழிகள் இரண்டும் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்ததில் சொக்கித் தான் போவர் அனைவரும்....



அவள் கூந்தலுக்கு எதிராக போட்டி போட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தது அக்காரிகையின் இமை முடி!!!



வாயில் ஏதோ பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தவள் தன் முன் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தாள்.



அலையலையான கேசத்துடன் சிரிக்கும் கண்கள் அவளை ஆராய்ச்சி பார்வை பார்க்க அவசரமாக எழுந்து நின்றாள்.



அது சாட்சாத் நம்ம எ.ஸி.பி சாரே தானுங்க....



"யார் நீங்க?"



"நீ யாரு முதல்ல.... என் மாமா வீட்ல நீ என்ன பண்ணிகிட்டு இருக்க?" அவளுக்கு பதில் சொல்லாமல் அவளையே கேள்வி கேட்டான் அவன்....



ஏனோ அவள் நீ யாரென்று அவனை பார்த்து கேட்டுவிட்டது அவனுக்கு கடுப்பாகி விட்டது போலும்....



"நீங்க தான் நந்தினி அத்த பையனா?" அவள் குரலில் உற்சாகம்....



"என்னது அத்தையா.... அதுக்குள்ள பொண்ணு பாத்துட்டாங்களா?"



"என்னது பொண்ணா?" அவனும் குழம்பி அவளையும் குழப்பி விட காரை பார்க் பண்ணி விட்டு அப்போது தான் உள்ளே நுழைந்தான் ரக்ஷன்....



"வாவ் பியூட்டி...." சிலாகித்தவாறே நண்பன் பக்கத்தில் வந்து நின்றான்.



"மச்சான் யாருடா இவ?"



"பாத்தா தெரில....?"



"தெரியாததுனால தானேடா கேக்குறேன்..... ஏன்டா படுத்துற?"



"எனக்கும் தெரில" அவன் உதட்டை பிதுக்க



"டேய் அட்ரஸ் மாறிட்டோமோ?" சந்தேகமாக கேட்டான் நண்பன்.



"ச்சே ச்சே....என் அத்தை மாமா வீடு எனக்கு தெரியாதாடா?"



"அப்போ இந்த பொண்ணு.....?"



"அதான்டா ஒன்னும் புரிய மாட்டேங்குது"



"மாமா....என்ன உங்களுக்கு அடையாளம் தெரிலயா?" இடையிட்டாள் பெண்....



"மாமா வா....?" நண்பர்கள் இருவரும் ஒருசேர வாயை பிளக்க உள்ளே இருந்து சத்தம் கேட்டு வெளியே வந்தார் லக்ஷ்மி!



அவன் அத்தை....அமைச்சர் சக்திவேலின் தங்கை!!!



"அடடே வாடா கண்ணா....."



"ஹாய் அத்தை..." அணைத்து விடுவித்தவனின் தலையை பாசமாக கோதி விட்டார் அவர்....



"வீட்டுக்கு வந்தவங்கள உள்ள கூப்புட மாட்டியா மா?" மகளை கடிந்து கொண்டவர் அவனுடன் உள்ளே நுழைந்தார்.



உள்ளே சென்றவனுக்கு அவள் யாரென்ற கேள்வியே குடைந்து கொண்டிருக்க நண்பன் மனதை படித்தவன் போல் அதை வாய் விட்டே கேட்டு விட்டான் ரக்ஷன்....



"மா....அங்க முன்னால நிக்கிற பொண்ணு யாரு?"



"அத உன் ப்ரெண்டு கிட்டயே கேளு" அவர் மாட்டி விட திருதிருவென விழித்தான் அவன்.



"மா....நீ வேற..... மாமாக்கு என்ன தெரிலமா" சோகமாய் அருகில் வந்து நின்ற மகளை பார்த்து அவர் சிரிக்க அவன் முறைத்தான்.



"ஏன் மச்சான்....நீ முறை மாமன்குறதால தான் அவள முறைச்சிகிட்டே திரியுறியா?" நண்பன் காதிற்குள் குசுகுசுக்க இப்போது அவனை முறைத்தான்.



"ஏன்பா உனக்கு நிஜமா இவள அடையாளம் தெரிலயா?" அவன் உதட்டை பிதுக்கவும் அவள் முகம் வாடிப் போனது.



அவள் ஆர்த்தி!!!

அபினவ்வின் தங்கை......



"நல்லா பாருப்பா....உனக்கு இவன்னா உசுரு....." அவர் அவனுக்கு ஞாபகப்படுத்த முயல சட்டென மின்னல் வெட்ட கண்கள் பிரகாசமாய் "பொம்ம" முணுமுணுத்துக் கொண்டே சட்டென திரும்பினான் அவள் புறம்....



அவள் முகத்தை தூக்கி வைத்துக் கொள்ளவும் அவன் உதடுகள் சிரிப்பில் துடித்தன.



"அதானே அவள எப்பிடி நீ மறப்ப?" அவனை கிண்டலடித்து விட்டு அவர் உள்ளே செல்ல முகத்தை திருப்பிக் கொண்டிருந்த ஆர்த்தியையும்... அவளை பார்த்து வாய் பொத்தி சிரித்துக் கொண்டிருந்த தன் நண்பனையும் மாறி மாறி பார்த்தவன் மெல்ல நண்பனை சுரண்டினான்.



"டேய்...."



"என்ன மச்சி?"



"யாருடா இவ.... அப்போ உனக்கு தெரியுமா இவங்கள?"



"தெரியாது" அவன் பதில் அவள் முறைக்க ரக்ஷனுக்குத் தான் மண்டை குழம்பியது.



"ஏன்டா குழப்புற?"



"நா எதுவும் பண்ணலியே" அவன் தோள் குழுக்கவும்



"டேய்...." பல்லை கடித்தவன் அவனை பார்த்து முறைத்தான்.



"முடிவா என்னதான்டா சொல்ல வர்ற நீ....உனக்கு இந்த பொண்ண தெரியுமா...தெரியாதா?"



"தெரியும்....பட்..."



"போதும் நிறுத்திக்கடா....எனக்கு ஒரு பதிலே போதும்..." கடுப்புடன் மொழிந்து விட்டு நகர்ந்தவனை பார்த்து வாய் விட்டுச் சிரித்தவன் அவள் புறம் திரும்பினான்.



"பொம்ம....எப்பிடி இருக்க?"



"..."



"எதுக்குடி கோபம்?"



"போ மாமா....நீ ரொம்ப மோசம்"



"நா என்னடி பண்ணேன்?"



"உனக்கு என்ன ஞாபகமே இல்ல" அவள் கண்கள் கலங்கி விட அவன் தான் பதறிப் போனான்.



(( ராம் லக்ஷ்மி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள்....

மூத்தவன் அபினவ்... இளையவள் ஆர்த்தி...

ராம் கல்கத்தாவில் எம்.எல்.ஏ!!!

தனக்கு தெரிந்த நண்பர் மூலம் ராம் அறிமுகமாக அவருக்கே தன் தங்கையை மணமுடித்துக் கொடுத்தார் ஷக்திவேல்....



அர்ஜுனுக்கு அடுத்ததாக கிருஷ்ணா பிறக்க நந்நினிக்கு உடம்பு சற்று முடியாமல் போகவும் அபினவ்வுடன் அவனை தானே வளர்ப்பதாக கூறி அவருடனேயே வைத்துக் கொண்டார் லக்ஷ்மி...



இதனாலேயே கிருஷ்ணா அவன் அம்மாவை விட அத்தையுடன் ஒட்டிக் கொண்டான்.



அபினவ் பிறந்து ஏழு வருடங்கள் கழித்து தேவதையாய் வந்து பிறந்தவள் ஆர்த்தி...



அவளை முதலில் கைகளில் ஏந்தியவனும் அவனே!!!



ஏழேழு ஜென்ம தொடர்பு போல் அவளிடம் மட்டும் அப்படி ஒரு பாசம் அவனுக்கு....



சிறு வயதிலிருந்தே அவள் கண்கள் கலங்குவது கூட ஏனோ அவனுக்கு பிடிக்கவே பிடிக்காது.



தன் கைகளில் சிறு பொம்மை போல் இருந்தவளை அவனும் அப்படியே அழைக்கத் துவங்க அது அவளுக்கும் பிடித்துப் போனது.



எப்போதும் அவன் பின்னால் மாமா....மாமா என சுற்றிக் கொண்டிருப்பவளை அவனுக்கு பிடிக்காமல் போகுமா என்ன??



ஷக்திவேலுக்கு சென்னையில் ட்ரான்ஸ்பர் கிடைக்க அவர்கள் அங்கு குடியேறவும் இவன் மட்டும் இங்கேயே தங்கிக் கொள்ள தாய் நந்தினி தான் அதிகம் தவித்துப் போனார்.



அதை சுட்டிக்காட்டி தந்தை அவனை திட்ட....



"அவ்வளவு பாசம் இருந்தா என்ன எதுக்கு அத்த கிட்ட வளர விட்டீங்க" அவன் வார்த்தையை விட அதுவே பெரிய அடியாகிப் போனது ஷக்திக்கு....



அதிலிருந்து தந்தைக்கும் மகனுக்கும் ஆவதே இல்லை....



அவருக்காக போலிஸ் படித்தவனால் கொல்கத்தாவை விட்டு வரவே முடியாமற் போக அங்கேயே போஸ்டிங் எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.



இதுல ஆர்த்தி வரவே இல்லயேன்னு நீங்க யோசிக்கிறது புரியுது நண்பா....

இருங்க சொல்றேன்....



அவனால் கொல்கத்தாவை விட்டு வர முடியாது என்பதை விட அவளை விட்டு விலகி இருக்க முடியாது என்பதே நிஜம்!!!



அவனுக்கு அவ மேல அப்போ பாசம் மட்டும் தான்....காதலெல்லாம் இல்லவே இல்ல...அப்பிடியே இருந்தாலும் அத புரிஞ்சிக்குற வயசு கூட இல்ல...ஆனா....

இவன் அப்பன் என்ன பண்ணாரு... தன்னோட மனைவி மகன நெனச்சி கஷ்டப்படுறது புடிக்காம நம்ம ஆர்த்தி அப்பா ராம் கிட்ட போயி....



அவ சின்ன பொண்ணு....அவ மனச இப்போவே நாம கலைக்க வேணாம்...அப்பறமா பாத்து நாமலே கல்யாணம் பண்ணி வெக்கலாம்.... இப்போ அவள அவன விட்டு தூர படிக்க அனுப்பிடுங்கன்னு பத்தி விட அவ அப்பாக்கு நம்ம சாரு மேல நம்பிக்க இருந்துதுனாலும் மனைவியின் அண்ணங்குற மரியாதைக்காக அவள படிக்க அனுப்பி வெச்சிட்டாரு நண்பா....



அவ தன்ன விட்டு போறதுக்கு தன் தந்தை தான் காரணம்னு அவனுக்கு தெரிய வர இருந்த விரிசல் இன்னும் அதிகமாயிடுச்சு....))



அவள் முகத்தை தாங்கி கண்ணீரை துடைத்து விட்டவன்



"ஒன்ன எனக்கு மறந்து போகுமா பொம்ம...." என்றான் கனிவாய்...



"அப்போ நீ மட்டும் இந்த மாமன யாரு நீங்கன்னு கேக்கல?"



"அ...அது அது...." அவள் தடுமாறவும் பக்கென சிரித்து விட அவள் உதடுகளிலும் புன்னகை அரும்பியதோ???



"சிரிச்சா எவ்வளவு அழகா இருக்க" என்றவன் அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டி விட்டுச் செல்ல அவனையே புன்சிரிப்புடன் பார்த்திருந்தாள் அவள்....



***



இரவு....



மொட்டை மாடியில் தரையில் அமர்ந்தவாறே பேசிக் கொண்டிருந்தனர் நண்பர்கள் இருவரும்....



"மச்சான்....என்னடா இன்னும் அபி வர்ல?" கேள்வி கேட்டே கடுப்பாக்கிக் கொண்டிருந்தவனை முறைத்தான் ரக்ஷன்.



"எதுக்குடா முறைக்குற?"



"பின்ன உன்ன மாதிரி ஒருத்தன கொஞ்சுவாங்களா?"



"ஏன் என்ன மாதிரி ஒருத்தன கொஞ்ச மாட்டாங்களா?"



"மாட்டாங்கடா"



"ஏன் ஏன் ஏன்....ஏன் கொஞ்ச மாட்டாங்க?" அவன் எகிற



"நீ பண்ற வேலைக்கு உன்ன கொஞ்ச மாட்டானுங்கடா.... கடுப்பாயிடுவானுங்க" என்றான் கோபமாய்...



"உன்னப் போல" அவன் சிரிக்க பல்லை கடித்தான் அவன்....



"அபி எப்போடா வருவான்" மீண்டும் தொடங்க எழுந்து செல்லப் போனவனை இழுத்து உட்காற வைத்தான் கிருஷ்ணா.



"வாய திறந்த நானே உன்ன கொண்ணுடுவேன் பாத்துக்க" அவனிடம் காய்ந்து விட்டு மீதமாக இருந்த பீர் பாட்டிலையும் உள்ளே தள்ளினான் ரக்ஷன்....



கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தவன் மீண்டும் அவனை சுரண்ட



"மவனே அபி எப்போ வருவான்னு கேட்ட சாவச்சிருவேன் உன்ன...." என்றான் முன் எச்சரிக்கையாய்....



"ஏன் மச்சி.... அபினவ் எப்போ வருவான்?"



'அப்பிடி கேட்காதன்னா எப்பிடி கேக்குறான் பாரு....பாவி' ரக்ஷனுக்கு அழுகையே வந்துருச்சுங்க....



"ஏன்டா அமைதியாகிட்ட?"



"ம்...வேண்டுதல்"



"கூல் மச்சி"



"எங்கடா கூலா இருக்க விட்ட?"



"நா என்னடா பண்ணேன்?" அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டவனுக்கு நான்கு அப்பு அப்பினால் தான் என்னவென தோன்றி விட்டது அவனுக்கு....



"நீ எதுவுமே பண்ணல ராசா.... எதுவுமே பண்ணல....." கையெடுத்து கும்பிட்டே விட்டான்.



"மச்சி...."



"இன்னும் என்னதான்டா உன் பிரச்சின?"



"இல்ல....அபி...."



"என்ன கொலகாரனாக்காத.... அவன் வருவான்டா...."



"அதான் எப்போ?"



"அவன் என்ன நம்மள மாதிரி வெட்டியாவா சுத்திட்டு இருக்கான்... நைட் டியூட்டி முடிஞ்சதுக்கப்பறம் வர்றேன்னு சொல்லி இருக்கான் வருவான்....அது வர உன் திரு வாய கொஞ்சம் மூடு"



"என்ன சொல்லிட்டு இருந்த மச்சான்?" காதிலிருந்து இயர் போனை கலற்றியவாறே அவன் கேட்ட இம்முறை பொங்கியே விட்டான் நண்பன்.



"பாவி....நா எவ்வளவு கஷ்டப்பட்டு பேசிட்ருக்கேன்.... நீ என்னடான்னா..." பல்லை கடித்தவன் அவன் மேல் பாய்ந்தான்.



இருவரும் உருண்டு புரண்டு சண்டை பிடித்துக் கொண்டிருக்க மொட்டை மாடி வாசலில் வந்து நின்று இவர்கள் கூத்தை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் ஒருவன்!!!



கிட்டத்தட்ட கிருஷ்ணாவின் உயரமே எனும் தோற்றம்....



தாடியை ஷேவ் செய்து மீசை மட்டுமே இருந்ததுவும் அவனுக்கு கம்பீரமாகத்தான் இருந்தது.



கொஞ்ச நேரம் சிரித்தவன் அவர்கள் அருகில் சென்று அமர அவன் மடியில் பாய்ந்து வந்து படுத்துக் கொண்ட கிருஷ்ணாவை பார்த்து தலையிலடித்தான் ரக்ஷன்.



"ஏன்டா லேட்டு?" அண்ணார்ந்து பார்த்து அவன் கேட்க



"கொஞ்சம் ஒர்க் மச்சி" என்றான் சமாதானமாய்....



"ம்..."



"ஆமா நீ எடுத்த கேஸ எதுக்கு பாதியிலேயே விட்டிருக்க?"



"அவனுக்கு முத்திப் போச்சு மச்சான்" கிருஷ்ணாவை முந்திக் கொண்டு அபியிடம் விடையளித்தான் ரக்ஷன்.



"டேய் கடுப்ப கிளப்பாத" அவன் எகிற



"இப்பிடி தானேடா எங்களுக்கும் இருக்கும்" அழுது விடுபவன் போல் சொன்னவனை பார்த்து அபி சிரிக்க அவனுமே சிரித்து விட்டான்.



"ரொம்ப படுத்துறான் மச்சி"



"நீ என்ன பண்ண?" அபியின் கேள்வியில் அவனை முறைத்தவன்



"அதெப்டிடா..... அவன் எதுவுமே பண்ணியிருக்க மாட்டான்னு நம்புற?" என்றான் கோபமாய்....



"ஓகே...ஓகே அவன் என்ன பண்ணான்?"



"இப்போ வந்து கேளு"



"சாரிடா"



"நா சொல்றேன் மச்சான்" இடை புகுந்தான் கிருஷ்ணா.



"சொல்லு மச்சி"



"நீ எப்போ வருவன்னு இவன் கிட்ட கேட்டா....நீ உன் கேர்ள் ப்ரண்டோட ஊர் சுத்திட்டு இருப்பன்னு அபாண்டமா பொய் சொல்றான்டா.... அவ்வா... அவ்வா..." தன் வாய்க்கு அடித்துக் கொண்டவனை கொலை வெறியுடன் முறைத்தான் நண்பன்.



அவன் சொல்லி முடிக்க ஒரு பெண்னின் முகம் சட்டென மின்னி மறைந்தது அபிக்கு....



தன் கண் முன்னே வந்த பெண் பிம்பத்தில் சிலிர்த்தது அவன் தேகம்....



அதிலேயே அவன் அமைதியாகி விட கொஞ்ச நேரம் தன் நண்பனை கடுப்பாக்கிக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து அபியை பார்த்தான்.



அவன் கவனம் இங்கில்லை என்பதை உணர்ந்தவன் ரக்ஷனுக்கு கண்களை காட்ட இருவரும் சேர்ந்து கொடூரமாக பாடத் தொடங்கியதில் வானில் பறந்து கொண்டிருந்தவன் நண்பனை தள்ளி விட்டு அலறியடித்துக் கொண்டு எழுந்து நின்றான்.



அதை பார்த்து இருவரும் வாய் விட்டுச் சிரிக்க அவன் முறைத்தான்.



"மச்சான் அவன் மூஞ்சிய பாரேன்" கிருஷ்ணாவிடம் சொல்லி விட்டு சிரித்தவனை கொலவெறியாய் முறைத்தான் அபினவ்.



"நா என்னடா பண்ணேன் உங்க ரெண்டு பேருக்கும்....என் மேல அப்பிடி என்ன கொலவெறி?" அழுபவனை போல் கேட்டவனை பார்த்து சிரித்து சிரித்து கண்ணீரே வந்து விட்டது இருவருக்கும்....



"போதும் நிறுத்துங்கடா" கடுப்பாய் மொழிந்து விட்டு போகத்திரும்பியவனை தேக்கியது கிருஷ்ணாவின் திடீர் கேள்வி....



அவன் அப்படி கேட்டதில் அசையாது அவன் நிற்க அவன் முகத்தை அதிர்ச்சியாய் நிமிர்ந்து பார்த்தான் ரக்ஷன்.



முகத்தில் அப்படி ஒரு தீவிரம்!!!



"சொல்லு அபி.... யாரயாவது லவ் பண்றியா?" மீண்டும் அவன் கேட்க அப்போதும் அவன் அப்படியே நின்றான்.



நிதானமாய் அவனருகில் சென்றவன் அவன் தோள் தொட்டு தன் புறம் திருப்ப அவன் தலை தானாக கவிழ்ந்தது.



முகத்தை தன் புறமாய் நிமிர்த்தியவன்



"நீ எப்பவும் தல நிமிர்ந்து தான் நான் பாக்கணும்....." எனவும் கண்கள் கலங்க அவனை இழுத்து அணைத்துக் கொண்டான் அபி.



அவனிடம் மறைத்து விட்ட குற்றவுணர்வு.....இதில் அவள் அவனுடைய தங்கையாக இருந்ததில் ஏதோ ஒரு தயக்கம்....



தான் சொல்லப் போய் கேவலமாக நினைத்து விட்டானென்றால்.... அவனால் தாங்க முடியாதே!!!



அவனை தன்னிலிருந்து பிரித்தவன்



"ம்....ஓகே...சொல்லு...யாரு அந்த லக்கி கேர்ள்?" என்றான் கண்களை சிமிட்டி...



அவன் மௌனமே பதிலாக்கிக் கொண்டிருக்க நண்பர்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



"அபி...." கிருஷ்ணாவின் அழைப்பில்



"ஐ அம் சாரி மச்சான்" என்றவன் கண்கள் கலங்க மறுபடி கீழே குனியவும் மற்ற இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை....



தலையை நிமிர்த்தி

"நீ தலை நிமிர்ந்து தான் நான் பாக்கணும்னு சொல்றேன்ல" என்றான் சற்று கோபமாய்.....



அதில் விழுக்கென நிமிர்ந்தவன் அவன் முகம் காண சங்கடப்பட்டு சுவற்றை வெறிக்க அவன் முன்னால் வந்து நின்றான் ரக்ஷன்.



"அபி...என்னதான்டா ஆச்சு உனக்கு....?" சத்தியமாய் மண்டை குழம்பியே போனான்.



தன் இடக்கையை இடுப்பில் குற்றி வலக்கை சுட்டு விரல் மற்றும் நடுவிரலாய் தன் நெற்றியை தேய்த்துக் கொண்டே அபியை யோசனையாய் பார்த்தான் எ.ஸி.பி கிருஷ்ணா.



வழமையாக இப்பிடி நடந்து கொள்பவனில்லை அவன்.... எதுவாக இருந்தாலும் தன்னிடம் மனம் விட்டு பேசிவிடுபவனின் செய்கை சற்று வித்தியாசமாகத் தெரிந்தது அவனுக்கு....



ரக்ஷன் கிருஷ்ணாவை திரும்பிப் பார்க்க கண்களை மூடித் திறந்தவன்



"இட்ஸ் ஓகே மச்சி.... விடு.... ரிலாக்ஸ்டா இரு...உனக்கு எப்போ சொல்லணும்னு தோனுதோ அப்போ வந்து சொல்லு...." தோளில் தட்டிக் கொடுத்தவன்



"ரக்ஷன்....நா கொஞ்சம் வெளியில பொய்ட்டு வர்றேன்...." சொல்லி விட்டு விடுவிடுவென கீழிறங்கிச் சென்றவனை பார்த்திருந்த ரக்ஷன் அபியை தன் புறம் திருப்பினான்.



"நீ யாழினிய லவ் பண்றியா அபி?" அவன் நேருக்கு நேர் கேட்டு விட்டதில் அவனின் கண்கள் அதிர்ச்சியாய் விரிந்தது.



"அப்போ அது தான் நிஜம்...ரைட்....?" அவன் கண்கள் கூர்மையடைந்தது.



"அபி நா உன் கிட்ட தான் பேசிட்ருக்கேன்"



"மச்சி...." குரல் அடைத்தது அவனுக்கு....



"இது ஒத்து வரும்னு நினக்கிறியா?"



"என்னால அவள விட்டுக் குடுக்க முடியாதுடா" அவ்வளவு மன்றாட்டம் அவன் குரலில்.....



"இத அவன் கிட்ட சொல்றதுக்கு என்ன?" சற்றும் கோபம் குறையவில்லை அவனுக்கு.....



"என்னால அவன் முகத்த கூட நேருக்கு நேர் பாக்க முடிலடா.... இதுல எப்பிடி அவன் கிட்ட சொல்றது?" அப்பாவியாய் கேட்டவனை பார்த்து வந்த கோபம் அப்படியே அடங்கிப் போனது.



"அவ சின்ன பொண்ணு...." அதற்கு மேல் அவனால் எதையும் கேட்க முடியாமல் போகவே அபியை ஏறிட்டான்.



"மூளைக்கு எட்ற விஷயம் மனசுக்கு புரியலயேடா.... சின்ன வயசுல இருந்து வளத்த காதல ஒரே நிமிஷத்துல தூக்கி போட முடிலயே" எவ்வளவு முயன்றும் கண்ணீரை அடக்க முடியாமல் போக வழிந்த கண்ணீரை பதறித் துடைத்து விட்டு அவனை அணைத்துக் கொண்டான் ரக்ஷன்.



"ப்ச்.....விடு மச்சி...."



"நோடா....எனக்கு கிருஷ்ணா கேவலமா என்ன பாத்துடுவானோன்னு பயமா இருக்கு"



"விடுன்னு சொல்றேன்ல"



"என்ன வெறுத்துட மாட்டான்லடா....?"



"டேய்....அவனுக்கு ஒருத்தர வெறுக்குறதுன்னா என்னன்னு கூட தெரியாது... கிருஷ்ஷுக்கு அவன் கேட்டு நீ சொல்லலயேங்குற வருத்தமே தவிற கோபமெல்லாம் இல்லடா....அவனே வந்து உன் கிட்ட பேசுவான் பாரு"



"...."



"பட்....நீ அவன் கிட்ட சொல்லிட்றது தான் நல்லது மச்சான்" அவனை தன்னிலிருந்து விலக்கியவன் சினேகமாய் புன்னகைத்தான்.



........



ஏதோ யோசனையில் இறங்கி வந்தவனை கை நீட்டி மறைத்தாள் அவள்...



"மாமா...."



"...."



"மாமா....." அவன் காதுக்குள் கத்தவும் தான் அவனிடம் அசைவே வந்தது.



"பொம்ம...."



"போ மாமா.... இப்போல்லாம் நீ பேசவே மாட்டேங்குற"



"அப்பிடியெல்லாம் எதுவுமில்லடா.... ஏதோ யோசன அதான்"



"ம்...." அப்போதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கவும் சிரித்தவன்



"என் பொம்மக்கு கோபமெல்லாம் கூட பட தெரியுமா?" அவள் மூக்கை பிடித்து ஆட்ட சிணுங்கினாள் பேதை....



"ம்...சொல்லு.... எதுக்கு கூப்ட?"



"என்ன வெளில கூட்டிகிட்டு போறியா?" கண்களில் ஆர்வம் மின்ன அவள் கேட்கவும் அவன் தலை சம்மதமாய் ஆடிற்று.....



.......



சென்னை......



தன் இருக்கையில் கண்கள் மூடி தளர்வாய் அமர்ந்திருந்தார் அமைச்சர் ஷக்திவேல்....



ஏனோ மனம் அமைதியடைய மறுத்து ஒதுக்கி வைக்க நினைக்கும் நினைவுகளுக்குள்ளேயே மூழ்கத் துவங்கியது.



((ராமின்....அதாவது நண்பா....அவர் தங்கயொட புருஷன்.....

நம்ம எ.ஸி.பியோட மாமனார்.....

மஉதல்ல இருந்தே ஆரம்பிச்சுகுறேன்..



ராமின் அண்ணன் ராமலிங்கம் ஒரு சொத்து பைத்தியம்....தோற்றத்தில் ஒரே அமைப்பில் இருந்ததால் ராம் பெயரிலேயே அவ்வளவு முல்லமாரித் தனத்தையும் பண்ணி திருஞ்சு கிட்டு இருந்தவன் பெண் கடத்தல் பிஸ்னஸ் பன்ன வேலைல நம்ம கிருஷ்ணா கிட்ட மாட்டி கிட்டான்.



அவன் அதை ஆராய தொடங்கவும் உஷாரானவன் ஷக்தி கிட்ட கால் பண்ணி குடும்பத்தோட தூக்கிடுவேன்னு மிரட்ட ஒரு தந்தையாய் ரொம்ப பலகீனமானவரு கிருஷ்ணாவ உடனே சென்னைக்கு டிரான்ஸ்பர் பண்ண அந்த கேஸ அவனால தொடர முடியாம போய்டுச்சு...



இத இவர் மறந்திருக்க சென்னைல ஒரு பொண்ண காணோம்குற கேஸ் அவர் காதுக்கு அடிபட தான் தன் குடும்பத்துக்காக சுயநலமா சிந்திக்கிறோமோன்னு ஒரே மன உளைச்சல்....



அதான் அப்படியே கண்ண மூடி யோசனைல உக்காந்திருக்காரு))



***



மணலில் அமர்ந்திருந்தவனின் கண்கள் கடலலையில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தவளிலையே நிலைத்திருந்தது.



ஆடிக் கலைத்து வந்தவள் அவனருகில் தொப்பென அமரவும் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.



"என்ன மாமா...ஏன் டல்லா இருக்க?"



"அப்பிடில்லாம் எதுவுமில்லடா...சரி கிளம்பலாமா?" அவன் அந்தப் பேச்சை தவிர்ப்பது புரிந்து தலையாட்டியவள் சட்டென எழுந்து கொண்டாள்.



"பொம்ம...."



"சொல்லு மாமா" நடந்து கொண்டிருந்தவள் அவன் முகம் பார்த்தாள்.



"இல்ல...மாமா எங்க ஆளயே புடிக்க முடில"



"அப்பா ஏற்காடு போயிருக்காங்க மாமா... ஏன் மாமா ஏதாவது சொல்லனுமா?"



"இல்லடா சும்மா தான் கேட்டேன்"



"நீ அண்ணா கூட கோபமா இருக்கியா?"



"இல்லயே பொம்ம... எதுக்காக அப்பிடி கேக்குற?"



"உன் முகமே சரியில்ல அதான்"



"ஐயோ பொம்ம....ஈ... போதுமா...?" அவன் சிரிக்கவும் அவளும் உடன் நகைத்தாள்.



அவனுள் பெரும் பாரம் இறங்கி விட்ட உணர்வு!!!



......



காலை.....



தன் வாட்சில் மணி பார்த்தவாறே இறங்கி வந்து கிருஷ்ணாவின் அருகில் போய் அமர்ந்தான் அபினவ்.



"என்ன மச்சான் வேலைல ரொம்ப சின்ஸியாரிட்டி போல" கிருஷ் தானாக பேசவும் தான் அவனுள் பெரும் நிம்மதி.



"வழமையா கிளம்புற டைம் தான்டா.... ஆமா ரக்ஷன் எங்க மச்சான்?" கண்களால் துலாவியவாறே கேட்டான்.



"நீ எவ்வளவு தான் தேடினாலும் அவன் உன் கண்ணுக்கு தெரிய மாட்டான்"



"டேய்..."அவன் அலற



"இன்னும் ஆவியா சுத்த ஆரம்பிக்கல மச்சான் அலறாத" என்றவன் வாய் விட்டுச் சிரித்தான்.



"அப்போ இன்னும் தூங்குறான்னு சொல்ல வர்ற?" கிருஷ் வாயை திறப்பதற்குள் முந்திக் கொண்டு பதிலளித்தான் ரக்ஷன்.



"நோ மச்சி..நா ஜாகிங் போயிருந்தேன்டா" என்றவன் கிருஷ்ணாவை கடுப்புடன் முறைத்தான்.



"அபி...பொண்ணு பாக்க வந்தா மாறி என்னயவே பாத்துட்ருக்கான் பாரேன்" சிரியாமல் சொல்லி விட்டு தன் சாப்பாட்டில் கவனமாக வாய் விட்டுச் சிரித்தான் அபினவ்.



"பாவி....ஏன்டா காலங்காத்தாலயே ஆரம்பிக்குற?" விட்டால் அழுது விடுவான் போல் இருக்கவும் அவனை இழுத்து அமர வைத்தான் அபி.



"சாப்புடு மச்சான்" கூறி விட்டு அவனும் உண்ணத் துவங்க கிருஷ்ஷை ஆன மட்டும் முறைத்து விட்டே உண்ணத் துவங்கினான்.



"மச்சீ்ஸ்....நா கெளம்புறேன்டா" எழப் போனவன்



"கிருஷ் நீ ஏன் வேலைக்கு போகாம இருக்க?" என்றான் நெற்றி சுருக்கி...



"ம்...உன் மாமன் அந்த ஷக்திவேல் என்ன டிரான்ஸ்பர் பண்ண கடுப்புல நானும் ஜாயின் பண்ணிட்டு அவன் துறத்தி விட இங்க வந்துட்டேன்.... இதுல எங்க இருந்து வேலைக்கு போறது?" அவன் சலித்துக் கொள்ளவும் தலையிலடித்தான் அபி.



"சரி...இன்னிக்கு கிளம்புறியா?"



"ம்..ம்.."



"என்னடா ஒரு மார்க்கமா ஆட்டிகிட்ருக்க?" இடை புகுந்தான் ரக்ஷன்.



"ஹி...ஹி...ஒன்னு இல்லயே" சமாளித்தவனை சந்தேகத்துடனேயே பார்த்து வைத்தான்.



"ஓகே அபி....நீ கிளம்பு....நா பாத்துக்குறேன்"



"ம்...ஓகே பய்டா.... போயி சேர்ந்த உடனே ஜாப்ல ஜாயின் பண்ணிட்டு கால் பண்ணு" என்று விட்டு வெளியேறியவனின் வார்த்தைகள் கேட்போருக்கு சாதாரணமாய் தெரிந்தாலும் நீ ஜாயின் பண்ணியே ஆக வேண்டும் என்ற கண்டிப்பு இருப்பது நண்பர்களுக்கு மட்டுமே தெரியும்.



***



சென்னை......



சாப்பாட்டு தட்டை படக்கென வைத்து விட்டுப் போன மனைவியை முறைத்தார் ஷக்தி.



தாயின் செயலில் வந்த சிரிப்பை அடக்கியவர்கள் தந்தையின் முன் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டனர்.



தானும் தட்டுடன் வந்தமர்ந்த நந்தினி



"ஒருத்தன் எப்பிடி இருக்கான் என்ன பண்றான் எதுவுமே விசாரிக்கவே மாட்டாரு....ஆனா இவருக்கு மட்டும் கரெக்ட் டைம்ல எல்லாம் இருக்கணும்" கணவனை ஜாடை காட்டியவாறே தன் பிள்ளைகளிடம் பொரிந்துத் தள்ளினார் அவன் தாய்.



"புள்ளையா இருந்தா விசாரிக்கலாம்....அவன்???" அப்படியே நிறுத்தி விட்டு எழுந்து கொள்ள



"ஏங்க...இப்போ எதுக்கு சாப்புடாம எந்திரிக்கிறீங்க?" பரிதவிப்பாய் கேட்ட தாயை அதிர்ச்சியாய் பார்த்தனர் அண்ணனும் தங்கையும்...



பின்னே இவ்வளவு நேரம் அர்ச்சித்துக் கொண்டிருந்தவர் அப்படியே அந்தர் பல்டி அடித்தால் அவர்களுக்கும் அதிர்ச்சியாகாமல் என்ன தான் நடக்கும்???



"உன் சாப்பாட்ட உன் புள்ளைகே ஊட்டி விடு" கோபமாய் கையை உதறியவர் எழுந்து சென்று விட அவர் பின்னாலேயே ஓடியவரை பார்த்து அண்ணனும் தங்கையும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



"அர்ஜு அண்ணா"



"ம்..."



"எண்ணனா நடக்குது?"



"நீ சின்ன குழந்த குட்டிமா....நீ அதெல்லாம் கண்டுக்காத"



"நா ஒன்னும் சின்ன குழந்த கிடயாது..." முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள



"அய்யோ செல்ல குட்டி நா அப்பிடி சொல்ல வர்லமா" அவள் வாடுவது பொறுக்காமல் அவசரமாக மறுத்தான்.



"இரு உன்ன கிருஷ் அண்ணா கிட்ட போட்டு குடுக்குறேன்...."



"அம்மா தாயே நம்ம அப்பா கிட்ட வேணும்னாலும் போட்டு குடுத்து அடி வாங்கி தாமா.... ஆனா அவன் மட்டும் வேணாம்.... சும்மாவே என் மேல கொல காண்டுல சுத்திகிட்ருக்கான்... இதுல இது வேற சேந்துச்சு....என்ன கொண்ணுட்டு தான் மறு வேல பாப்பான்" அவன் அலறவே கலகலத்து சிரித்தாள் அவன் தங்கை....



அதை ஆசையுடன் பார்த்தவன்

"குட்டிமா...அண்ணா வெளில வேலயா பொய்ட்டு வர்றேன்..." அவன் எழுந்து கொள்ள



"ஓகே பய்ணா.... பத்தரமா போங்க" என்றால் அக்கறையாய்...



"சரிங்க மகாராணி" இடை வரை குனிந்தவன் சிரிப்புடனேயே வெளியேறினான்.



***



"டேய் ரக்ஷன் வா வெளில கிளம்பலாம்" பேப்பரில் கவனமாய் இருந்தவன் தலையுயர்த்தி தன் முன் வந்து நின்ற கிருஷ்ணாவை முறைத்தான்.



"இப்போ என்ன ஆகி போச்சின்னு என்ன முறைப் பொண்ணு மாறி முறைச்சிகிட்டே திரியுற?" வேண்டுமென்றே கத்திக் கேட்க அங்கே சிரித்துக் கொண்டே வந்து நின்றார் லக்ஷ்மி.



சட்டென இருக்கையிலிருந்து எழுந்தவன் மீண்டும் முறைக்க வாய் பொத்திச் சிரித்தான் கிருஷ்ணா.



"ஏன்டா அவன போட்டு பாடா படுத்துற?" அவர் பரிந்து கொண்டு வர



"நல்லா கேளுங்க அத்த....இவன் தொல்லை தாங்க முடில" அவருடன் இணைந்து கொண்டான் ரக்ஷன்.



"அய்யோ அத்த அப்போ உங்களுக்கு நிஜமாலுமே தெரியாதா?"



"என்ன தெரியாதா?"



"அப்போ தெரில?"



"என்னன்னு சொன்னா தானேடா தெரியுமா தெரியாதான்னு சொல்ல முடியும்?" அவரும் கடுப்பாக ரக்ஷனுக்கு சரிப்பை அடக்குவது பெரும் பாடாய் போய் விட்டது.



"அப்போ உங்களுக்கு தெரியுமா?" நன்றாக குழப்பி விட்டான்.



"அய்யோ ராமா.... என்னன்னு தான் சொல்லித் தொலயேன்டா"



"அட என்ன அத்த நீங்க.... உங்களுக்கு தெரிஞ்ச விஷயத்த எத்தன தடவ கேப்பீங்க?"



"என்னடா தெரியும் எனக்கு?"



"அப்போ தெரியாதுங்குறீங்க?"



"கடவுளே.....இவன் கிட்ட இருந்து என்ன காப்பாத்துபா" வாய் விட்டே புலம்ப நண்பர்கள் இருவரும் வாய் விட்டுச் சிரிக்கவும் அடிக்க கை ஓங்கியவர் அவர்கள் ஓடி விட்டது கண்டு தலையாட்டி சிரித்துக் கொண்டார்.



தொடரும்........



29-06-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 03 [ A ]



வர்மன் கதிரின் ராயல் என் ஃபீல்டை ஸ்டார்ட் செய்து வைத்திருக்கவே அதில் ஏறி அமர்ந்தவன் தன் மனையாளை திரும்பிப் பார்த்தான்.



கைகளை பிசைந்து கொண்டு தயங்கியவாறு நின்றிருந்தவளின் தோற்றத்தில் என்ன கண்டானோ



"ஏறு..." சற்று கடுமை குறைந்திருந்ததோ!!!



"இ....இ....இல்ல...எ...எனக்கு...ப.... பயம்" அவனை மிரண்ட பார்வை பார்த்தவளுக்கு இதற்கும் என்ன சொல்வானோ என்றுதான் இருந்தது.



ஆனால் அதிசயித்திலும் அதிசயமாக



"ஏறி என்ன புடிச்சிக்கோ" என்றான் மென்மையாக....



விழி விரித்து அவனை பார்த்தவள் அவன் முகம் திரும்பவும் மாறி விட முன் சட்டென ஏறி அமர்ந்தாள் அவன் தோள்களை பற்றிய படி....



அவள் கை வைத்த தோளை திருப்பிப் பார்த்தவனுக்குள் ஏதேதோ எண்ண ஊர்வலங்கள்!!!



அவ்வளவு தான்...



முகம் இரும்பென இறுக அவன் கைகளில் சீறிப் பாய்ந்தது ராயல் என் ஃபீல்ட்.....



***



ஹாஸ்பிடல்.....



வண்டி திடுமென நிறுத்தப்பட்டதில் அவனை சட்டென விழியுயர்த்திப் பார்த்தாள் பேதை....



அவன் அமைதியாய் இருக்கவும் இறங்கிக் கொண்டவள் மீண்டும் கணவன் முகம் பார்த்தாள்.



"வ...வந்து...நீ...நீங்களும் வ...வர்றீங்களா?"



"...."



"வ...வந்து....வந்து எ...எனக்கு பயமா இருக்கு" அவள் சொல்லி முடிக்க கோபமாய் இடையிட்டான் அவன்.



"அதென்ன எப்போ பாரு....பயம்...பயம் பயம்.... இருக்குறது என்ன பேயா பிசாசா....ச்சேஹ்....எப்போ பாத்தாலும் பயம்னு கிட்டு" அவன் கோபத்தில் கத்தவே திடுக்கிட்டு பின்வாங்கியவளின் கண்கள் அவள் அனுமதி இன்றிய கண்ணீரை உதிர்க்க அதைப் பார்த்து இன்னும் கோபப்பட்டான்.



"ஆ...ஊன்னா அழ வேண்டியது....

கொஞ்சம் கோபமா பேச முடியுதா உன்கூட"



((அடப்பாவி....நீ எப்போடா அக்கறயா பேசியிருக்க அவ கூட??))



மிரண்டு விழித்தவள் அவசர அவசரமாக கண்ணீரை துடைத்து விட்டு நிமிர அவளையே பார்த்திருந்தவன் வண்டியை விட்டு கீழிறங்கினான்.



***



அந்த உயர் ரக சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் ஒருவர்.



கழுத்தில் தடிமனான தங்கச் சங்கிலி....



விரல்களில் வைர மோதிரம் என இருந்தவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவரைப் பார்த்து பயந்தவாறே முன்னால் கை கட்டி நின்றிருந்தனர் அறுவர்....



"என்னங்கடா....அவன போட்டுத் தள்ள சொல்லி அனுப்பி வெச்சவனுங்கள இன்னும் காணும்?" அவர் கூறி முடிக்க கதவு தடாரென திறக்கப்பட அங்கே இரத்தம் வழிய நின்றிருந்தான் அடிவாங்கியவர்களில் ஒருவன்....



சட்டென இருக்கையிலிருந்து எழுந்தவரின் ஆக்ரோஷத்தில் நடுநடுங்கிப் போயினர் முன்னிருந்தவர்கள்...



வந்தவனின் சட்டையை கெத்தாகப் பற்றியவர்



"போட்டுத் தள்ளிட்டேன்ன வார்த்தய தவிர வேற ஏதாவது உன் வாயால வந்துது...." அவனை உதறித் தள்ளியவர் மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டார்.



சடாரென அவர் கால்களில் விழுந்தவன்



"அய்யா எங்கள மன்னிச்சிருங்கய்யா.... அந்த வேலன் அந்த நேரத்துல எப்பிடி தான் அங்க வந்தான்னு தெரிலயா....

நம்மாலுங்கள அடிச்சி போட்டுட்டு அவன தூக்கிட்டு பொய்ட்டான்யா...." காலை பிடித்துக் கொண்டு கெஞ்சியவனை எட்டி உதைந்தார் அவர்....



"நாயே....இத என்கிட்ட வந்து சொல்றதுக்கு வெக்கமா இல்ல உனக்கு..... என் கண்ணுல மாட்டாம போ இங்கிருந்து" அவர் வார்த்தைகளில் அவரை கையெடுத்து கும்பிட்டவன் அடுத்த நிமிடம் மறைந்திருந்தான்.



அவன் செல்லவே அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் அப்பட்டமாய்....



"அந்த பொட்டப் பயலும் இந்த வேலனும் மோதிகிட்டு தானேடா இருந்தானுங்க?"



"ஆமாங்கய்யா...." அதில் ஒருவன்.



"அப்போ வேலனுக்கு உண்ம தெரியுமா?" சற்று கூடுதல் டென்ஷனாகி விட்டார் மனிதர்.



***



ஹாஸ்பிடல்......



அந்த நீண்ட வராண்டாவையே அதிர வைத்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி.



சுவற்றில் சாய்ந்து இரு கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டியிருந்தவனின் பார்வை தன் மனையாளையே வெறித்திருக்க அவனை குற்றம் சாட்டும் பார்வை பார்த்திருந்தான் ரித்விக்.



தன் நண்பனை பற்றி தெரிந்தும் எதிர்ப்பார்த்த தன் மடத்தனத்தை நொந்தவன் அவளை நெருங்கினான்.



"அழாதமா....எல்லாம் சரியாகிடும்"



"....."



"அதான் உயிருக்கு ஆபத்தில்லன்னு டாக்டர் சொல்றாருல்ல?"



"ஏண்ணா கடவுளுக்கு என்மேல இரக்கமே இல்லாம போச்சு முதல்ல அப்பா.... இப்போ அண்ணன்..... என்னால முடிலணா.....இதுக்கு மேல என்கிட்ட எதயும் தாங்குற சக்தி இல்லணா.....நா இப்போ அம்மா கிட்ட எப்பிடிணா சொல்லி புரிய வெப்பேன்" கதறி அழுதாள் பேதை....



நண்பனை திரும்பிப் பார்த்து விழிகளால் கெஞ்சியவன் மீண்டும் திரும்பிக் கொள்ள அவன் கால்கள் தானாய் அவளை நோக்கி நகர்ந்தது.



ரித்விக் நகர்ந்து கொள்ள அவளை நெருங்கி தோள் தொடவும் அவன் நெஞ்சில் விழுந்து மீண்டும் அழுதாள் அவன் மனையாள்!!!



அவன் உடலில் சட்டென ஒரு விறைப்பு!!!



தன்னை இறுக்கிப் பிடித்து அழுது கொண்டே இருந்தவளை கையாலாகாத தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.



இதற்கு மேலும் முடியாதென தோன்றி விடவே அவள் கூந்தலை வருடப் போனவனின் கை அந்தரத்திலேயே நின்று போனது திடீரென கேட்ட அவள் தாயின் கதறலில்.....



அவளை பிடித்து தள்ளியவன் சற்றே மறைந்து நிற்க அதிர்ந்து விழித்தாள் பெண்....



தாய் தன்னை உலுக்கவே நினைவு கலைந்தவளுக்கு மீண்டும் மீண்டும் பீரிட்டுக் கிளம்பியது அழுகை.....



அவர்கள் இருவரையும் வெறித்துப் பார்த்தவன் விறுவிறுவென வெளியே சென்று விட நடுவில் தத்தலளித்த நண்பன், வேறு வழியின்றி கதிர் பின்னால் ஓடினான்.



தன் பைக்கை முறுக்கிக் கொண்டிருந்தவனை முறைத்தவன் அவன் பின்னால் ஏறி அமர கதிரின் கைகளில் வேகமெடுத்தது வண்டி.....



"பீச்சுக்கு விடு" ரித்விக்கிடமிருந்து கோபமாய் பதில் வர எதுவும் பேசாமல் வண்டியை திருப்பினான்.



......



தூரத்தில் தெரிந்த கடலை வெறித்துப் பார்த்தபடி அருகருகே நின்றிருந்தனர் இருவரும்....



"கதிர்" அழுத்தமாக அழைத்தவன் நண்பனை ஏறிட்டான்.



ஊஹூம்....அவன் பார்வையில் எந்த மாற்றமுமே இல்லை....



"கதிர்....நீ தப்பு பண்ற மச்சான்.. அந்த நிலமயில கூட உன் மனசு மாறவே இல்லல்லடா?"



"...."



"உன் மனசு என்ன கல்லா.. நீ இந்த அளவு மாறி இருப்பன்னு நா எதிர் பாக்கல மச்சி"



"...."



"வர்ஷினிக்கு ஏன் தண்டன கொடுக்குறன்னு தான் எனக்கு புரியவே மாட்டேங்குது டா... உன் கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லன்னு தெரிஞ்சும் பேசுறேன் பாத்தியா....என்ன சொல்லணும்"



"...."



"வாயத் திறந்து பேசுடா"



"போலாம்" ஒற்றை வார்த்தையில் அவன் முன்னே நடக்க சோர்ந்து தான் போனான் நண்பன்!!!



***



கைகளை பின்னால் கட்டிக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் அவர்.....



முகம் தீவிர சிந்தனையில் இருக்க சட்டென தடை பட்டவரின் பார்வை தன் முன் நின்றவர்களை தீவிரமாய் நோக்கியது.



"அந்த ராஜா இப்போ வீட்ல தனியா தானே இருப்பான்?"



"ஆமாங்கயா"



"அப்போ அவன போட்டுரு... அவன் உயிரோட இருக்குறது ஆபத்து"



"சரிங்கயா"



"அப்பறம் இந்த பொட்டப் பய எப்போ தனியா மாட்றான்னு பாத்து அவனயும் போட்ரு....வேலனுக்கு சந்தேகம் வர்றது கூட நமக்கு தான் ஆபத்து"



"சரிங்கயா....சரிங்கயா......."



"ம்....சரி நீ போ.... எதுக்கும் அந்த வேலு மேல ஒரு கண் இருக்கட்டும்" என்றவருக்குள் மீண்டும் குழப்பம்....



***



"ரித்விக்....நீ மா.... க்கும்... வந்து ராஜா வீட்ட சுத்தி நம்மாலுங்கள நிக்க சொல்லு" சரியென தலையாட்டியவன் நண்பனை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே வெளியேறினான்.



சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டவனுக்கு ஏனோ நெஞ்சு அடைத்தது.



எவ்வளவு பண பலம் ஆள் பலம் இருந்தும் தனிமையை உணரும் மனதை என்னவென்று சொல்லித் தேற்ற???



தாயின் மடி வேண்டும் போல் இருந்தது அவனுக்கு....



ஆனால் தாய்???



கலங்கிய கண்களை நாசூக்காக துடைத்துக் கொண்டு எழுந்தவன் நண்பன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது கண்டு அதிர்ந்து போனான்.



மெல்ல நடந்து நண்பன் அருகில் வந்த ரித்விக் அவனை இழுத்து அணைத்துக் கொள்ள கண்களை இறுக்க மூடி தன்னை கட்டுக்குள் கொண்டு வர போராடியவனின் பிடி இறுகியது.



"ஐ அம் சாரி மச்சான்...." ஏனோ மன்னிப்பு வேண்ட அதை மறுத்தான் கதிர்.



"இட்ஸ் ஓகே மச்சி.... விடு" நண்பனை விலக்கி நடந்தவனையே தொடர்ந்தன ரித்விக்கின் பார்வை.....



***



இரவு.....



ஹாஸ்பிடல்......



தாய் மடியில் தலைசாய்த்து படுத்திருந்தவள் ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் வரவே சட்டென எழுந்தமர்ந்தாள்.



"பேஷன்ட டிஸ்டர்ப் பண்ணாம போய் பாருங்க"



"தேங்க் யூ டாக்டர்" அவள் நகரப் போக தாய் டாக்டரிடம் கேட்பது காதில் விழ அவள் கால்கள் தானாய் நின்றது.



"டாக்டர்....இங்க இவன அட்மிட் பண்ணவன உங்களுக்கு தெரியுமா?"



"மிஸ்டர்.கதிர்வேல் தான் அட்மிட் பண்ணாரு" அவர் நகரவே அவள் மனதில் மெல்லிய சலனம் கூடவே குழப்பம்.



தாயை திரும்பிப் பார்த்தவளுக்கு அவர் முகத்தில் தெரிந்த சந்தோஷம், நிம்மதி.... அது எதற்காகவென்று புரியவே இல்லை....



பெரு மூச்சு விட்டவள் தன் நடையை எட்டிப் போட்டாள்.



......



"எப்பிடிணா இருக்கு?"



"பரவாயில்லமா"



"சாரி ணா... என்னால தானே... நா உங்கள வீட்டுக்குள கூப்டிருக்கணும்"



"விடுமா.... அதெல்லாம் ஒரு ப்ராப்ளமா?"



"...."



"அம்மா எங்கே?" கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவர் மகனின் நிலை பார்த்து மௌனமாய் கண்ணீர் வடித்தார்.



"ப்ச்....அதான் எனக்கு ஒன்னில்லல்லமா?"



"...."



"அழாத மா... அப்பா எங்கே?"



"வீட்லடா....நம்ம கந்தய்யா கிட்ட விட்டுட்டு வந்திருக்கேன்"



"ம்....நீ வீட்டுக்கு கிளம்பு.... நா பாத்துக்குறேன்"



"இல்லடா நா இங்கேயே இருக்கேன்"



"இல்லமா வேண்டாம்.... அப்பாக்கு ஆபத்து வரலாம்....நீங்க போங்க"



"அது இல்லடா....நா"



"நோ மா....அம்மு நீயும் போ"



"ணா....நா இங்கேயே இருக்கேன்...."



"அது சரி வராது நீ போ"



"நீ தனியா இருக்கணா?"



"இல்ல மா கதிர் வருவான்...." அவன் பதிலில் விழி விரித்து நோக்கினர் இருவரும்.



"யெஸ்....அவன் வருவான் எனக்கு தெரியும்....நீங்க கிளம்புங்க"



"அண்ணா அவங்க வரும் வர நா இருக்கேனே?" அவன் சம்மதிக்கவே மனமே இல்லாமல் கிளம்பினார் தாய்....



***



"ரித்வி....கிளம்பு" மறு பேச்சு பேசாமல் வண்டியில் ஏறி அமர்ந்தான் நண்பன்.



ஹாஸ்பிடல் வரவே தன்னை ஆராய்ச்சியாய் தொடர்ந்த நண்பனின் பார்வையை அசட்டை செய்தவன் அவனுடன் உள்ளே நுழைந்தான்.



.....



வராண்டாவில் அமர்ந்திருந்த வாக்கிலேயே உறங்கி விட்டிருந்தவள் அரவம் உணர்ந்து கண்களை திறந்தாள்.



மனதினுள் சட்டென ஒரு பாதுகாப்புணர்வு!!!



சட்டென எழுந்து கொண்டவள் ரித்விக் அருகில் போய் நிற்க அவளை முறைத்தான் கதிர்.



"ரித்விக்....நீ இவள கூட்டி கிட்டு வீட்டுக்கு கிளம்பு"



"ஓகே டா...."



"அண்ணா நானும் தங்கிகட்டுமா?" அவன் கதிர் முகம் பார்க்க கண்களை மூடித் திறந்தவன் பேசாமல் சென்று அமர்ந்து கொள்ள வர்ஷினியை விட்டு விட்டு கிளம்பி விட்டான்.



உட்காராமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றவளை மீண்டும் முறைத்தவன்



"உட்கார்" என்றான் உறுமலாய்....



மிரண்டு விழித்தவள் சட்டென அமர்ந்து கொள்ள அவன் உதட்டில் கீற்றாய் புன்னகை!!!



((அட ஹீரோக்கு சிரிக்க வருது நண்பா.... ))



.......



இரவு இரண்டு மணி.....



முகத்தை மறைத்த உருவமொன்று கையில் கத்தியுடன் பதுங்கிப் பதுங்கி அவர்கள் பக்கம் நகர்ந்து வந்தது!!!





தொடரும்......



03-07-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 03 [ B ]

பாதி சாப்பாட்டில் எழுந்து போன கணவரை கெஞ்சிக் கொஞ்சி உள்ளே இழுத்து வந்தார் நந்தினி.

அதற்குள் மகள் உண்டு முடித்திருக்க

"குட்டிமா நீ போய் ரெடி ஆவுமா....அம்மா இப்போ வந்தட்றேன்" அவளை அனுப்பி வைத்தவர் கோபமாய் முறைத்துக் கொண்டிருந்த கணவனிடம் கண்களால் கெஞ்சி விட்டு தட்டை எடுத்து வைத்தார்.

"நீயும் உட்கார்" குரலில் கடுமை இருந்தாலும் அவர் அன்பு அறியாததா???

புன்னகையுடனேயே அமர்ந்து கொள்ள அர்ஜுனை பற்றி பேசினார் அவர் கணவர்.

"நம்ம ஆபிஸ அர்ஜுன் நல்லா பாத்துக்குறதா பீ.ஏ ஷங்கர் சொன்னான்...."

"ம்...."

"நல்ல வரன் ஒன்னு வந்திருக்கு" அவர் விடயத்தை முடிக்கு முன் தன் இரண்டாவது மகனின் பேச்சு காதுக்குள் ரீங்காரமிட மெல்ல சிரித்துக் கொண்டார்.

"இப்போ எதுக்கு லூசு மாறி சிரிச்சிகிட்டு இருக்க?" கணவன் கேள்வியில் சட்டென தன்னை மீட்டவர்

"அப்போ பாத்து முடிச்சிடலாம்ங்க" என்றார் அசடு வழிந்தவாறே....

"ம்...அதான் நானும் விசாரிக்க சொல்லி இருக்கேன்....பாக்கலாம்.. எதுக்கும் லக்ஷ்மி கிட்டயும் ஒரு வார்த்த கேட்டா என்ன?"

"நம்ம ஆர்த்திய கண்ணனுக்கு எடுக்கலாம்ங்க" அவர் தன் ஆசையை சொன்னதில் யோசனை காட்டியவர் உடனே ஒத்துக் கொண்டார்.

"அதுக்கு முன்னாடி உம்மகன உறுப்படியா வந்து வேல பாக்க சொல்லு"

"அவன் அதெல்லாம் பாத்துப்பான்" அவர் பரிந்து கொண்டு வர

"கிழிச்சான்" கோபத்துடன் மொழிந்தார் அவர்....

"ஏங்க எப்போ பாத்தாலும் அவனயே குறை சொல்லிகிட்டு இருக்கீங்க?"

"அவன் ஒழுங்கா இருந்தான்னா நா எதுக்கு அவன பத்தி பேச போறேன்"

"நீங்க இப்பிடி எப்போ பாரு அவனயே நோண்டிகிட்டு இருக்குறதால தான் அவனும் இப்பிடி இருக்கான்"

"நீயும் திருந்த மாட்ட அவனும் திருந்த மாட்டான்" மகள் வரவுமே அப்படியே தடை பட்டது பேச்சு....

***

"மச்சான்.....இது தேவையா நமக்கு.... உன் அப்பாவுக்கு மட்டும் தெரிஞ்சிது....மவனே செத்தோம்டா" பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த ரக்ஷன் நண்பனிடம் அலறினான்.

"அந்த எமன் ரூபத்துல இருக்குற மய் மம்மியோட புருஷனுக்கு எதுவும் தெரியாம நா பாத்துக்குறேன்.... நீ மூடிட்டு வா" அவன் கடுப்பாக மொழிந்ததில் அவன் ஒன்றுமே பதில் பேசவில்லை....

அவன் தான் அவன் பேச்சு புரியாமல் திகைத்திருந்தானே!

"அடப்பாவி....அப்பா ன்னு சொல்றதுக்கு என்னடா?" அப்பொழுது தான் தெளிந்தான் போலும்.

"நானும் அதயே தானேடா சொன்னேன்"

"ஷ்ஷப்பாஹ்....உன் அலப்பற தாங்க முடிலடா சாமி....ஆள விடு" சட்டென ஜகா வாங்கிக் கொண்ட நண்பனை பார்த்து சிரித்தான் கிருஷ்ணா.

"ஆமா....இப்போ எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேல?"

"பொண்ணுங்கள சைட் அடிக்கிறதுல இருக்க கிக்கே தனி ஃபீல் மச்சி"

((அடப்பாவிங்களா...அப்போ காலயோட கிளம்பி பொண்ணுங்கள சைட் அடிக்க தான் போறீங்களா....
டேய் நீ ஒரு மார்க்கமா சிரிக்கும் போதே நெனச்சேன்டா))

"அத என்கிட்ட வந்து சொல்ற பாரு....ம்...."

"ஓகே ஓகே நீ இதுல எக்ஸ்பேர்ட்னு ஒத்துக்குறேன்"

"நீ உடனே ஒத்துக்குற ஆள் கெடயாதே மச்சான்" சந்தேகமாய் நண்பனை பார்த்தான் ரக்ஷன்.

"என்ன நம்ப மாட்ட அப்பிடித்தானே?"

"ச்சி...ச்சி...ஒன்ன நம்புவேனா....ச்சே நம்பாம இருப்பேனா மச்சி" நமுட்டுச் சிரிப்புடன் சொன்ன நண்பனை கண்ணாடி வழியாய் முறைத்தான் எ.ஸி.பி.....

காலேஜ் முன் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கியவர்கள் அதில் சாய்ந்து நின்று கொண்டனர்.

கொஞ்ச நேர மௌனம்.....

"மச்சான் அந்த பிங்க் கலர் சுடிதார் பொண்ணு செம்மயா இருக்கால்ல?" நண்பனிடம் அபிப்பிராயம் கேட்ட ரக்ஷனை முறைத்தான் கிருஷ்.

"ஏன்டா நல்லா இல்லையா?"

"அது நா சொல்லி தான் உன் மண்டைல உறைக்குமா?"

"சாரி மச்சி...."

மீண்டும் மௌனம்....

"மச்சான்...மச்சான்....அந்த எல்லோ தாவணிய பாருடா" இப்போது கிருஷ்.

((டேய் உன்ன கதைல போலிஸ் ஆபிஸர்னு சொல்லவே வெக்கமா இருக்குடா....))

"ஆமா மச்சி.... செம்மயா இருக்காடா"

உண்மையில் அழகாகத் தான் இருந்தாள்.

அலையலையான கேசம் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருக்க அவள் தலையசைப்புக்கு ஏற்றவாறு அவளுடைய ஜிமிக்கி ஆடியதில் அப்படியே லயித்திருந்தனர் நண்பர்கள்.

"ஏதாவது விழாவா இருக்கும் போலடா" கண்களை துளாவியவாறே ரக்ஷன் சொல்ல அதை ஆமோதிப்பவன் போல் தலையசைத்தான் கிருஷ்.

"டேய் அந்த பொண்ணுகிட்ட பேசலாமா?"

"மச்சி வேணான்டா.... உன் அப்பனுக்கு தெரிஞ்சா பொழந்து கட்டிருவாரு"

"அய்யோ....அவன் எங்கடா இங்க வரப் போறான்....அவனுக்கு அவன் தொகுதி வேலய பாக்கவே டைம் கிடயாது....இதுல கொல்கத்தாவா.... சேன்ஸே இல்லடா...."

"டேய் கொஞ்சமாவது மரியாதையா பேசுடா"

"ப்ச்" சலித்துக் கொண்டான்.

"மச்சி....எனக்கென்னவோ பயமா இருக்குடா"

"அடச்சி அடங்கு.... அங்க பாருடா கலர் கலரா பொண்ணுங்க"

"டேய்....எங்கேயோ சைரன் சத்தம் கேக்குறா மாறி இல்ல?" ரக்ஷன் மீண்டும் அமைதியை கிழிக்க இந்த தடவை அவனை கண்டு கொள்ளவே இல்லை.....

"டேய் மச்சான்.... சத்தியமா கேக்குதுடா" தோளை பிடித்து உலுக்கியும் பார்த்து விட்டான்.

ஊஹூம்....அவனிடம் அசைவே இல்லை....

காதிற்கருகில் சைரன் ஒலி நெருங்கவும் சட்டென பார்வையை திருப்பியவனுக்கு பயத்தில் உடல் வெளவெளத்துப் போனதுவோ!!!

ஆம், அங்கே வந்து கொண்டிருந்தது அமைச்சர் ஷக்திவேலே தான்!!!

புதுக் கட்டிடம் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

நண்பனை படபடவென தட்டியவன் அது முடியாமல் போகவும் பிடித்து திருப்பி விட உண்மையில் அதிர்ந்து தான் போனான் எ.ஸி.பி கிருஷ்ணா!!!

ரக்ஷன் தன்னை திருப்பி விட்டதில் எரிச்சலடைந்தவன் உண்மையில் அங்கு தந்தையை கண்டு அதிர்ந்து போனான் என்றுதான் கூற வேண்டுமோ!!!

ஷக்தி எவ்வளவுக்கு எவ்வளவு அவன் பேசுவதை அசட்டை செய்வாரோ அவ்வளவு பெண்கள் விஷயத்தில் கண்டிப்பானவர்.

பெண்களை வம்பிலுப்பது, சீண்டுவது... இதுவெல்லாம் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது.

அவன் செய்திருக்கிறான் தான் அதுவும் அர்ஜுன் ரக்ஷனுடன் இதுவே அவனுக்கு வேலை...

ஆயினும் அதுவெல்லாம் தந்தை காணாமல் ஒரு எல்லை கோட்டுக்குள் நிறுத்தி விடுவான்.

ஆனால் இன்று???

காலேஜுக்குள் சீண்டினாலே அவருக்கு பிடிக்காது....இது நடு ரோட்டில்!!!

அவரின் ருத்ரதாண்வத்தை எதிர்ப்பார்த்திருந்தவனுக்கு அவர் காரிலிருந்து இறங்காமலே இருந்தது உள்ளுக்குள் பயத்தையும் நிம்மதியையும் ஒரு சேர விதைத்து.

சுட்டு விரலையும் நடு விரலையும் சேர்த்து தன் நெற்றியை அழுத்தத் தேய்த்தவன் நண்பனை குழப்பத்துடன் ஏறிட்டான்.

அவனோ தந்தையையும் மகனையும் மாறி மாறி பார்த்திருந்தவன் நண்பன் தன்னை பார்க்கவும் அவன் கையை பிடித்து இழுத்துக் கொண்டே சென்று விட அவர்களை கடந்தது கார்.

.......

வீட்டுக்கு வரும் போதும் சரி...அதன் பின்னும் சரி....ஏதோ யோசனையிலேயே மூழ்கி இருந்த நண்பனை பார்த்து ரக்ஷனுக்குத் தான் மண்டை காய்ந்தது.

அவன் மதிய உணவை தவிர்க்கவே அவனைத் தேடி வந்தாள் பாவை....

யோசனையாய் நெற்றியை சுருக்கிக் கொண்டிருந்தவன் அவள் இடித்துக் கொண்டு அமரவும் சட்டென சிந்தை கலைந்தான்.

"வா பொம்ப"

"...."

"ஏய் எதுக்குடா அமைதியா இருக்க?"

"...."

"பொம்மு... என்னடா?"

"...."

"ஏய் என்ன தான்டி ஆச்சு?" அவள் முகவாயை பற்றி தன் புறம் திரும்ப பட்டென தட்டி விட்டாள்.

"ப்ச்..." ஏற்கனவே ஏதோ குழப்பத்தில் இருந்தவனுக்கு எரிச்சலாகி விட்டது போலும்.

அவனை சலேரென திரும்பிப் பார்த்தவளின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருக்க துடித்துப் போனான்.

"பொம்ம....சாரிடா சாரி சாரி"

"...."

"ஏய் அதான் சாரி சொல்றேன்ல... முதல்ல கண்ண துடை..என்ன பிரச்சின இப்போ சொல்லு"

"பிரச்சனன்னா மட்டும் தான் உன்கிட்ட வருவேனா மாமா?"

"ஹே....அப்பிடி இல்ல செல்லம்.... உன் முகம் டல்லா இருந்துது.... அதான் கேட்டேன்"

"அந்த முன் வீட்டு பையன் எப்போ பாரு வம்பு பண்ணிகிட்டே இருக்கான் மாமா" அவள் கூறி முடிக்கவே தங்கையிடமிருந்து அழைப்பு வர

"இரு பொம்ம.... இதோ வந்துட்றேன்" என்றவன் அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

"செல்ல குட்டி எப்பிடிடா இருக்க?"

"அண்ணா....நீ சீக்கிரம் வாணா.... எ...எ...எனக்கு பயமா இருக்குணா... அ...அ....அம்மா அம்மா...." தங்கை கதறி அழவே கையிலிருந்த போன் நழுவி தரையில் விழுந்தது.

***

அடையாளமே தெரியாமல் வெடித்துச் சிதறியிருந்தது அந்த பெரிய அரண்மனை!!!

எங்கும் ஓலம்!!!

கருகியிருந்த உடலின் அருகே இறுக்கமாய் அமர்ந்திருந்தார் ஷக்திவேல்.....

தங்கையை தேற்ற முடியாமல் அருகில் அர்ஜுன்....

கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கவே அனைவர் கண்களும் வாசலை நோக்க அடித்துப் பிடித்து உள்ளே ஓடி வந்த அவரின் செல்ல மகனின் கண்கள் அப்படியே தாய் உடலில் நிலை குத்தி நின்றது.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றானோ தங்கை தன்னை கட்டிப் பிடித்து உலுக்கி அழவும் சுவர்ணை வரப் பெற்றவன் தங்கையை தள்ளி விட்டு தாயருகே ஓடினான்.

அவரை தன் மடியில் போட்டுக் கொண்டவனுக்கு கிட்டத்தட்ட பைத்தியம் தான் பிடித்து விட்டதோ!!!

"மா....மா.....என்னமா இதெல்லாம்..... ஏன் உன் முகம் இப்பிடி இருக்கு....நீ....நீ....என்கிட்ட விளையாடி கிட்டு தானே இருக்க..... மா.... நா பேசுறது உனக்கு கேக்குதுன்னு எனக்கு தெரியும்.... பதில் சொல்லுமா....மா....எ.... எ....எனக்கு பயமா இருக்குமா.... என்கிட்ட பேசுமா.... மா ப்ளீஸ் மா.... நா உன் கண்ணன் வந்திருக்கேன்மா.... ப்ளீஸ் பேசுமா....நா இனிமே உன்கூடவே இருக்கேன்மா.....மா ப்ளீஸ் மா....எனக்கு பயமா இருக்குமா..... மா....இங்க பாரு என்ன.....ரெண்டு நாளுல உன் கண்ணு முன்னாடி நிக்கிறேன்னு சொன்னேனே மா..... அதுபடி வந்துட்டேன்ல..... இன்னும் உனக்கு என் மேல கோபமா... பேசுமா என்கிட்ட.... மா...." கண்ணத்தை தட்டியவனின் கண்களிலிருந்து கரகரவென வழியத் துவங்கியது கண்ணீர்!!!

அப்பொழுது தான் அவன் மூளை அவர் இறந்த விடயத்தை ஏற்றுக் கொண்டது போலும்....

அழுகையில் குழுங்கிய அவன் தேகம் தாயை வளைத்து தன்னோடு இறுக்கி இருந்தது.

"மா....நா இனிமே உன் கூடவே இருந்துக்குறேன்மா....ப்ளீஸ் என்கிட்ட வந்துடு....நா கல்கத்தா கூட போலமா....சென்னைல உன் கூடவே இருக்கேன்...ப்ளீஸ் என்கிட்ட வாமா..... அம்மா.... பேசுமா.... அம்மாஆஆஆ.... " பெருங் குரலெடுத்து அழத் துவங்கினான் அவன்....

எ.ஸி.பி கிருஷ்ணா!!!

நண்பனை பார்க்க முடியாமல் அருகில் செல்லப் போன ரக்ஷனின் கையை பிடித்து தடுத்தார் அமைச்சர் ஷக்திவேல்....

அவருக்கு தெரியாதா மனைவியின் மகன் மீதான பாச அளவு!!!

அவ்வளவு நேரம் தனக்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் மகன் அழவே பீரிட்டுக் கிளம்ப அவர் கண்களிலும் மெல்லிய நீர் படலம்!!!

........

தாய்க்கு காரியம் முடிந்து இன்றுடன் மூன்று நாட்கள் முடிவடைந்திருக்க எப்போதும் ரூமிற்குள்ளேயே விட்டத்தை வெறித்து அமர்ந்திருந்தவனை கண் கொண்டு பார்க்கவே முடியாமற் போயிற்று அனைவருக்கும்!!!

அமைச்சர் ஷக்திவேல் கூட மகனிடம் ஆதரவாய் சென்று பேசிவிட்டு வந்து விட்டார்.

ஊஹூம் அவனிடம் சிறு அசைவு கூட இல்லவே இல்லை....

"கண்ணா.... ஏன்டா இப்பிடியே ஊட்காந்து கிட்டு இருக்க....அப்பா மேல கோபமா இருக்கியா.....அவரு கெடக்காரு விடுடா" தலை வருடி தாய் கேட்கவே சந்தோஷமாய் திரும்பியவன்

"மா... நீ...நீ என்கூடவே இருமா" அவரை தொடப் போக காற்றோடு கரைந்து போனது அந்த உருவம்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மா....ஏன்மா என்ன விட்டு போன.... எனக்கு....எனக்கு.... நீ பக்கத்துல வேணும்மா..... ஏன் தனியா விட்டு போன... என்னால இந்த வலிய தாங்கிக்கவே முடிலமா" சிறு பிள்ளை போல முகத்தை மூடிக் கொண்டு விசும்பினான் மகன்......

வாசலில் அழுது கொண்டே நின்ற ஆர்த்தி ஓடிச் சென்று தன் மாமனை கட்டிக் கொண்டு தானும் அழுதாள்.

"மாமா.....அழாத...." அழுது கொண்டே அவனை அழ விடாமல் தடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் பேதை.....

"பொ....பொம்ம.... எனக்கு அம்மா வேணும்டி....ஏன் என் கிட்ட சொல்லாமலேயே கெளம்பி பொய்ட்டாங்க.....ப்ளீஸ்டி திரும்ப வர சொல்லு பொம்ம.... எனக்கு யாருமே இல்ல பொம்ம"

"ஏன் மாமா இப்டில்லாம் பேசுற... ஏன் உனக்கு நாங்க எல்லாம் இல்லயா....?" சிறு கோபம் எட்டிப் பார்த்ததுவோ....

"எனக்கு அம்மா தான் வேணும்டி.... என்னால அவங்கள விட்டு இருக்க முடியாதுன்னு தெரிஞ்சும் விட்டுட்டு பொய்ட்டாங்களே.... ஏன்டி?" அவள் கோபம் அவனை பாதித்ததாகவே தெரியவில்லை.....

"மாமா ப்ளீஸ்.... அத்தை எப்பவும் நம்ம கூடதான் இருப்பாங்க.... நீ முதல்ல அழறத நிறுத்து"

"...."

"மாமா ப்ளீஸ் கண்ட்ரோல்... இங்க பாரு... என்ன பாரு மாமா" அவனின் கண்ணத்தை ஏந்தி தன் முகம் காண வைத்தாள் பெண்.

"இனி எப்பவும் நீ அழ கூடாது.... உனக்கு நா இருக்கேன்.... புரிஞ்சுதா?" புரிந்து கொள்ள வேண்டுமே என்ற தவிப்பு அவள் கண்களில் அப்பட்டமாய்....

அவளையே பார்த்தவன் சட்டென அவள் மடியில் தலை சாய்த்து உறங்கிப் போனான்.

அவன் முடியை வருடிக் கொண்டே இருந்தவளுக்கு கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

அவனுக்கு எப்படியோ அவள் அவனை உயிருக்குயிராய் நேசித்துக் கொண்டிருக்கிறாள்.

சின்ன வயதிலிருந்து தன்னிடம் பாசம் மட்டுமே காட்டுபவனை அவளுக்கு அப்படி பிடிக்கும்.

சொல்லப் போனால் உலகில் அனைத்தையும் விட அவனைத் தான் பிடிக்கும் என்று கூட சொல்லலாம்.

தவறு செய்தால் தண்டிக்காமல் அதை திருத்தி விடும் அவன் குணம்...

தந்தையை விட அதிகம் பாதுகாப்பாய் அவனிடம் உணர்வாள் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.

முதன் முதலாய் அவனை விட்டு தொலை தூரம் படிக்க சென்ற போது அறிந்து கொண்டாள் அவனை தான் எவ்வளவு மிஸ் செய்து கொண்டிருக்கிறேன் என்று....

கிட்டத்தட்ட ஆறு வருடக் காதல்!!!

அதை முகத்தில் காட்டாமல் அவனுக்கு மறைக்க அவள் படும் பாடு....

வருடங்கள் கழித்து ஒரு ஆண்மகனாய் அவள் முன் அவன் வந்து நின்ற நாள் இன்றும் அவளுக்கும் நினைவிருக்கிறது.

தன்னை அறிமுகப்படுத்தியும் அவன் தன்னை அடையாளம் கண்டு கொள்ளாத போது சுணங்கிய மனது அவனின் ஒற்றை அழைப்பில் பனிக்கட்டியாய் கரைந்து போனது.

பொம்ம!!!

***

அமைச்சர் அலுவலகம்.....

கண்களை மூடி தளர்வாக அமர்ந்திருந்தவரின் கடைவிழியோரம் இரண்டு நீர் மணிகள் உருண்டு வந்து கண்ணத்தை நனைத்தது.

கண்ணுக்குள் மனைவியின் சிரித்த முகம் வலம் வர நெஞ்சு பாரமாய் அழுத்தும் உணர்வு!!!

எல்லோரையும் போலவே அவர்களதும் வீட்டாரால் முடிவு செய்யப்பட்ட திருமணம் தான்....

மனைவி மீது உயிரையே வைத்திருந்தவர் அதை ஒரு போதும் வெளியே காட்டியதே இல்லை....

செயல்களில் வெளிப்படுமே தவிர எப்போதும் அவரிடம் அதிகமாய் கண்டிப்பே இருக்கும்.

கடைசியாய் மனம் விட்டுப் பேசிய மனைவியின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அலைமோத துவண்டு போனார்.

"ஏங்க....நம்ம கண்ணன் கிட்ட அதிகமா கோபம் காட்டாதீங்க.... அவனுக்கு உங்கள ரொம்ப புடிக்கும்... ஆனா வெளில காட்டிக்க மாட்டேங்குறான்....நா செத்து போனா அவனுக்கு யாருமே இல்லன்னு புலம்ப வெச்சிடாதீங்க.... ஆதரவா ரெண்டு வார்த்த பேசுங்க"

"ஏய் எதுக்கிப்போ சாவ பத்தி பேசிட்ருக்க... சும்மா" அன்று அவரிடம் காய்ந்தவரால் இன்று அவர் சாவுக்கு காரணமானவன் யாரென்று தெரிந்தும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையை என்னவென்று சொல்ல???

ஆம் அவருக்கு தெரிந்தே தான் இருந்தது.

அவர் அமைதி காப்பது குடும்பத்தினருக்காக மட்டுமே!!!

"என்ன வேண்டுமானால் செய்து கொள்" என்ற அவரின் சவாலுக்குத் தான் ஒரு உயிர் காவு போனது.

அன்று....

அலுவலகத்தில் மும்முரமாய் தன் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தவரை கலைத்தது லேன் போனின் அலறல்!!!

"இன்னா சக்தி.... மனைவி மக்களோட ரொம்ப சந்தோசமா இருக்க போல" எல்லள் வழிந்த குரல் யாரென்று அவருக்கா தெரியாது....

ராமலிங்கம்!!!

தங்கை கணவரின் அண்ணன்!!!

((நண்பா இவன பத்தி ஏற்கனவே உங்க கிட்ட சொல்லி இருக்கேன்...
ஞாபகம் வெச்சிருக்கீங்களா???
அந்த பெண் கடத்தல் கேஸ்....
கிருஷ்ணா இன்வால்வ்....
அப்பறம் மெரட்டல்...
அதுக்கப்பறம் ஷக்திவேல் சென்னைக்கு கிருஷ்ஷ டிரான்ஸ்பர் பண்ணது....
ஞாபகம் வந்துடிச்சா???
அவனே அவனே))

"அதுக்கென்ன ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன்" அவரிடம் அதை விட எல்லள்.

"ந்தா அமைச்சரு.... நானும் சொல்லிகிட்டே இருக்கேன் என் லைன கிராஸ் பண்ணாதன்னு... நீ மறுபடி மறுபடி தப்பு பண்ற"

"...."

"உன் அரும பையன் கல்கத்தா போயிருக்கானாமே?"

"ஏய்"

"இன்னா சக்தி சவுண்டு விட்ற?"

"உன்னால முடிஞ்சத பாத்துக்கோ லிங்கம்"

"உன் புள்ளய நா எதுவும் பண்ண மாட்டேன் பா" போலிப் பயம் அவன் குரலில்....

அவர் மனது திடீரென அதிர திரும்ப பேசுவதற்குள் அழைப்பு துண்டிக்கப்பட்டிருக்கவே கல்கத்தாவில் அந்த காலேஜிற்கு சிறப்பு விருந்தினராய் வர முடியாதென சொல்லி விட்டதை வருகிறேன் என அறிவித்து விட்டார்.

மகனை காப்பாற்ற முடிந்த அவரால் மனைவியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாமற் தான் போயிற்று!!!

கதவு தட்டப்படவே சிந்தை கலைந்தவர் தன்னை சீராக்கிக் கொண்டு உள்ளே வர அனுமதி வழங்கினார்.

உள்ளே நுழைந்தது அர்ஜுன் தான்...

"வாப்பா.... உட்காரு"

"ம்...."

"என்னப்பா என்ன விஷயம்?"

"நீங்க எங்க கிட்ட ஏதாவது மறைக்கிறீங்களாப்பா?" அவன் திடுமென கேட்டதில் அதிர்ந்து போனவர் சட்டென தன்னை சமன் செய்து கொண்டார்.

"நா என்னபா உங்க கிட்ட மறைக்க?"

"...."

"அர்ஜுன்...."

"ப்பா....என்னால குட்டிமாவ சமாளிக்க முடிலபா" சட்டென உடைந்தது அவன் குரல்....

"அழுது கிட்டே இருக்கா... க்...க்...கிருஷ்ணா" குழுங்கி அழுதவனை எழுந்து ஆதரவாய் அணைத்துக் கொண்டார்.

"அர்ஜுன்....நீயே இப்பிடி உடஞ்சி பொய்டன்னா குட்டிமாவ யாரு பாத்துபா... முதல்ல கண்ண துடை"

"...."

"அழறத நிறுத்து அர்ஜுன்" ஆதரவாய் பேசும் தந்தை அவனுக்குமே புதிது!!!

***

கால்களை குறுக்கி அதில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்தவளை நெருங்கினான் அபினவ்....

"பேப்...யாழ்" தோளில் கை வைத்தும் அவள் நிமிரவே இல்லை....

அவளை இழுத்து தன் நெஞ்சில் போட்டுக் கொள்ள துடித்த உணர்வை முயன்று அடக்கியவன் மீண்டும் அவளை அழைத்தான்.

"யாழ்....இங்க பாருடா"

"..."

"பேபி மா" அதற்கு மேல் முடியாமல் அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொள்ள அவள் கண்ணீர் அவன் டீ ஷர்டை நணைக்க துடித்துப் போனான்.

அவளுக்கு தெரியா விட்டாலும் அவனது காதல் கொண்ட நெஞ்சமல்லவா??

"அழாதடா ப்ளீஸ்"

"...."

"பேபி மா....ப்ளீஸ் டா மாமாக்கு கஷ்டமா இருக்கு"

"மா....மா....மாமா.... அம்மா...." கதறி அழுதாள் பெண்.

"ஷ்....." அவள் உதட்டில் கை வைத்து தடுத்தவன் கண்ணீரை துடைத்து நெற்றியில் இதழ் பதித்து விட்டு தன் நெஞ்சில் அவள் முகத்தை இன்னும் ஆழமாய் புதைத்தான்.

..........

தன் மன வேதனையை உள்ளுக்குள் புதைத்து விட்டு சாப்பாடு தட்டுடன் தங்கையை நெருங்கினான் அர்ஜுன்.

"குட்டிமா"

"...."

"டேய் எந்திரி"

"...."

"செல்லம்...எந்திரி டா " பாசமாய் தலையை வருடியவன் அவள் பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

"இந்தா....சாப்புடு" அவன் ஊட்டி விட கையை நீட்ட தலையை மறு பக்கம் திருப்பிக் கொண்டவள் மீண்டும் மீண்டும் அழுதாள்.

"குட்டிமா....இது மட்டும் சாப்புடுடா... நீங்க சாப்டா தானே கிருஷ் சாப்புடுவான்" சட்டென அவன் கையை எடுத்து சாப்பாட்டை தன் வாய்க்குள் திணித்தாள்.

"அண்ணாக்கு கொடு"

"நீ சாப்புடுடா....நா கொடுக்குறேன்"

"நீ சாப்டியா?" கண்கள் சட்டென கலங்கி விட்டன அவனுக்கு....

"ஆமாடா"

"ம்...அ...அப்பா"

"அவரும் இப்போ தான் சாப்டாரு மா"

"இல்ல...எனக்கு சாப்பாடு வேணாம்... அம்மா தான் வேணும்" உதட்டை பிதுக்கி மீண்டும் அழுகைக்கு தயாரானாள் அந்த இளம் சிட்டு.....

"குட்டிமா....அம்மா எப்போவும் நம்ம கூடவே தான்டா இருக்காங்க....நீங்க அழுதா அம்மாக்கு புடிக்குமா சொல்லுங்க?"
அழுது கொண்டே இல்லையென தலையாட்டினாள் பெண்....

"அப்போ அழ கூடாது சரியா....என் செல்லம்ல?" தலையை மேலும் கீழும் ஆட்டியவள் கண்ணீரை துடைக்க அது நிற்பேனா என்றது.

அவளுக்கு ஊட்டி முடித்து கை கழுவி வந்தவன் தங்கை கண்ணீரை துடைத்து விட்டு தன் மடியில் போட்டு தட்டிக் கொடுத்தான்.

***

கோபத்தில் வெறி பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான் அவன்....

ராமலிங்கம்!!!

"ஷக்தி எதுக்குடா கால அடண்ட் பண்ண மாட்டேங்குறான்?"

"...."
"அவன் கூட நா பேசியே ஆகனும்"

"அ...ஐயா....வேணும்னா வீட்டு லேன் லைன்னுக்கு..."

"சபாஷ் டா....அங்க எடு"

.....

வீடே அதிரும் படி கேட்டுக் கொண்டிருந்தது அலறல்....

தங்கையை ஏந்தி கட்டிலில் கிடத்தியவன் அவள் கூந்தலை பாசமாய் வருடி விட்டு அவசரமாக கீழிறங்கி வந்தான்.

ஹை டேஸிபலில் அலறிய போனை சட்டென எடுத்து காதில் வைக்க மறு முனை மயான அமைதி!!!

"ஹலோ யாருங்க பேசறது?"

"...."

"ப்ச்..."

"அட ஷக்தி புள்ளக்கி கோபத்த பாரேன்"

"யாரு நீங்க... எதுக்காக கால் பண்ணி இருக்கீங்க?"

"என்ன உனக்கு தெரியாது அர்ஜுன்"

"என் பேரு எப்பிடி.....?"

"உன் அப்பன் வம்சாவழியே தெரியும்... எங்க உன் அப்பன்?"

"உங்களுக்கு எதுக்கு அது?"

"தோ பாரு அர்ஜுன்.... உன் அப்பனுக்கும் எனக்கும் தான் பேச்சுவார்த்த...தேவயில்லாம நீ மூக்க நுழச்சா உன் அம்மா போன மாதிரி உன்னையும் அனுப்பி வெச்சிடுவேன்"

"டேய்...யார்டா நீ... எ...எ...ன்... அம்மாவ எதுக்குடா கொன்ன?"

"ஹாஹாஹா"

"உன்ன நா உயிரோட விட மாட்டேன்டா...."

"அச்சச்சோ...என்ன உனக்கு தெரியுமா அர்ஜுன்? தெரியாம எப்பிடி சாவடிக்க போற?"

"...."

"முடிஞ்சா வந்து பாருடா" அழைப்பு துண்டிக்கப்பட்டும் இன்னும் தன் கேட்ட செய்தியிலிருந்து மீளாமலேயே நின்றிருந்தான் அவன்....

***

"மாமா ப்ளீஸ்.... கொஞ்சமாவது சாப்புடு"

"...."

"சாப்புடு மாமா....நீ சாப்புட்டு நாளு நாள் ஆகுது"

அவள் ஒரு கவளம் நீட்ட தாய் முகம் மின்னி மறைந்தது.

"ப்ச்...எனக்கு வேண்டாம்"

"ஏன் மாமா இப்பிடி பண்ற?"

"அதான் வேணான்றேன்ல?"

"கோபப்படாத மாமா... சரி சாப்புடாத.... நானும் சாப்புட போறதில்ல"

"எதுக்கு புடிவாதம் பிடிக்குற....?"

"நீ என்ன பண்ணிகிட்ருக்க?"

"...."

"இந்தா சாப்புடு" இம்முறை மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.

"எழுந்து வெளிய வா மாமா...."

"அம்மா போறத எ....எ.... என்னால பாக்க முடியாது பொம்ம" அடக்க முடியாமல் அழுதான்.

"ப்ச்...சின்ன பசங்க மாறி அழறத முதல்ல நிறுத்து மாமா"

"முடிலயே பொம்ம.... எங்க போனாலும் அம்மா தானே தெரியுறாங்க... அவங்களுக்கு என் மேல கோபம்.... அதான் கிளம்பி பொய்ட்...டாங்... க.."

"மாமா ப்ளீஸ் அழாத... நீ இப்பிடி அழறதால எல்லாம் சரி ஆகிடும்னு நினைக்குறியா?"

"...."

"நம்ம குட்டிமாவ யாரு பாத்துக்குறது?"

"கு....கு....குட்டிமா...." மீண்டும் அழுதவன் எழுந்து தங்கையை தேடி ஓடினான்.

***

அர்ஜுனை தோள் தொட்டு திருப்பினான் அபி.

"அர்ஜுன் என்னாச்சு.... யாரு பேசினாங்க?"

"அ...அ...அபி எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா?"

"என்னடா இப்பிடி கேட்டுட்ட.... சொல்லு"

"இப்போ நம்ம லேன் லைனுக்கு வந்த நம்பர் யாரு...எங்க இருக்கான்...எல்லா டீடெய்ஸும் எனக்கு இன்னும் பத்து நிமிஷத்துல வேணும்"

"பண்ணலாம்டா...பட்...."

"என்கிட்ட எதுவும் கேக்காத ப்ளீஸ்... அப்பறமா சொல்றேன்" இனிமேல் சொல்லவே முடியாமல் போகும் என்பதை யார் அவனுக்கு சொல்லி புரிய வைப்பது???

.....

அடுத்த பத்தாவது நிமிடம் தன் கையிலிருந்த பேப்பர்ஸை வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தான் அர்ஜுன்.

தாமதித்தால் ஆகாதென்பதை உணர்ந்தவன் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறினான்.

விதியின் விளையாட்டில் சிக்காதவர்கள் உலகில் உண்டோ???

***

ஒதுக்குப்புறமான ஒரு காட்டில் பாதி கட்டப்பட்ட நிலையில் வீற்றிருந்தது அந்த கட்டிடம்!!!

காரில் இடத்தை அடைந்தவன் இறங்கி மீண்டுமொருமுறை சரி பார்த்துக் கண்டான் அந்த இடத்தை.....

காட்டை கடந்து முதல் மாடி கட்டிடத்தை தாண்டியவனின் பின் மண்டை திடீரென தாக்கப்பட்தில் தலை சுற்றி முகம் குப்புற விழுந்தான் அவன்.....

"அட...என்னடா ஒரு அடிக்கே ப்ளாட் ஆகிட்டான்" நக்கலாய் கேட்டுக் கொண்டே அவ்விடம் வந்தான் ராமலிங்கம்!!!

"டேய் அவன தூக்கி பிடிங்கடா" அவன் சொல்லவே அர்ஜுனை நிறுத்தி அருகில் நின்று கொண்டனர் இருவர்....

முகத்தை தன் கூரிய கத்தியால் தூக்கியவன் அவனை எள்ளலாய் பார்த்தான்.

"நீ...நீ....மாமா..."

"ஓஹ்...நா உன் மாமா ராம் இல்ல.... ராமலிங்கம்... ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் தான் போ"

"உன்ன நா சு...சும்மா வ...வி... விட மாட்....." அதற்குள் அவன் வயிற்றில் சொறுகப்பட்டிருந்தது அந்த கூரிய கத்தி!!!

"நீ சா....சாவ....எ... ன்....க்....ரு...ஷ்" அவன் முடிக்கு முன் மீண்டும் சொறுகப்பட்டது!!!

"நான் சாவேனாம்.... என்கிட்யே சொல்றான்" பேசிக் கொண்டே அவன் வேளியேற யாருமற்ற தனிமையில் விழுந்திருந்தது அந்தப் பிணம்!!!

தொடரும்.....

06-07-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 04 [ A ]

தன்னையறியாமல் கணவன் தோளில் தலை சாய்த்து உறங்கி விட்டிருந்தாள் வர்ஷினி.

சிறு சத்தத்திற்கும் விழித்துக் கொள்பவளுக்கு இன்று விழிப்பு வராமல் இருந்தது தான் விதி செய்த விளையாட்டோ???

முகமூடி உருவம் பதுங்கிப் பதுங்கி அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தது.

கையிலிருந்த கத்தி ஒரு இடத்தில் பட்டு விழுந்து விட்டதில் அந்த மயான அமைதியை கிழித்துக் கொண்டு கேட்டது அந்த சத்தம்.

முகமூடி உருவம் அப்படியே நின்று விட சட்டென விழி திறந்தான் கதிர்.

சுற்று முற்றும் கண்களால் துளாவியவனுக்கு எல்லாம் அதன் படியே இருந்தாலும் ஏதோ ஒன்று உறுத்த அவன் புலன்கள் சட்டென கூர்மையடைந்தன.

தன் நெஞ்சில் பாராமாக ஏதோ அழுத்தவும் தான் கீழே குனிந்து பார்த்தான் கதிர்வேல்.

மனைவி தன் நெஞ்சில் தலை சாய்த்து உறங்கியிருப்பது கண்டு அவனுள் ஏதோ தடம் புரண்டது.

காலடி ஓசை மீண்டும் காதை எட்ட சலேரென திரும்பியவனின் கண்கள் தன் மனைவியின் அண்ணன் அறை நோக்க அது பாதுகாப்பாக பூட்டியிருந்ததில் சற்று ஆசுவாசமானான்.

மனையாளின் தலையை மெதுவாக நிமிர்த்தி வைக்க போராடியவனால் அது முடியாமல் போக இருக்கும் எச்சரிக்கை உணர்வில் சட்டென கோபம் மூண்டது அவனுள்.

அவள் தலையை வேகமாக நிமிர்த்தவும் "அம்மா...." கத்திக் கொண்டே விழித்தாள் பாவை...

"ப்ச்.....ஷ்....கத்தாத"

அவன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த சங்கிலியும் அவள் தாலிக் கொடியும் பிணைந்து மாட்டியிருக்க அவளால் அவனை விட்டு நகரவே முடியவில்லை...

"ப்ச்....இவ ஒருத்தி... என்ன பண்ற.... எந்திரி"

"எ...எ...என்னால முடில மாமா" அவ்வளவு தான்.

அவள் அழைப்பில் கத்திக் கொண்டிருந்தவன் ஸ்தம்பித்து நின்று விட்டான்.

"மா...மா...." மீண்டும் அவள் அழைக்கவே கலைந்தவன்

"என்ன முதல்ல அப்பிடி கூப்புட்றத நிறுத்து" அவனால் கோபத்தை அடக்கவே முடியாமற் போனதுவோ!!!

"சா...சா....சாரி மாமா"

"சாரி மட்டும் போதும் எதுக்கு அதயும் சேக்குற?"

"சா....சாரி"

"எந்திரி"

"என்னால முடில.... உங்க கழுத்துல இருக்கற சங்கிலி கூட என் தாலி மாட்டிக்கிச்சு மாமா"

"ஒனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா இடியட்....."

"சா....சா....சாரி"

"ச்சேஹ்...." தலையை அழுத்தக் கோதிக் கொண்டவன் தானே அதை எடுத்து விட்டு நிமிர மீண்டும் காலடி ஓசை!!!

"ஷ்....பேசித் தொலச்சிடாத" அவன் உறுக்கவும் கண்ணை சிமிட்டியவள் கணவனை பயத்துடன் ஏறிட்டாள்.

"ப...ப...பயமா இருக்கு மாமா" அவள் கண்களில் நீர் தேங்கி இருக்க

"பயப்படாத....அதான் நா இருக்கேன்ல?" தைரியமளிக்க முயன்றான்.

இருக்கையிலிருந்து எழுந்து கொள்ள தன் கையை பிடித்துக் கொண்டவளை திரும்பிப் பார்த்து முறைக்க அவள் கை தானாய் விடுபட்டது.

"அதான் நா இருக்கென்னு சொல்றேன்ல....பயப்படாத...."

"ம்...." தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்.

"நீ இங்கேயே இரு... நா இதோ வந்துட்றேன்"

"இ....இ....இல்ல...இல்ல.... நானும் உங்க கூட வர்றேன் ப்ளீஸ்...." சட்டென இருக்கையிலிருந்து எழுந்து கொண்டவள் அவனை ஒட்டி நின்று கொண்டாள்.

சுள்ளென எழுந்த கோபத்தை அடக்கியவன் தலையை அழுத்தக் கோதிக் கொண்டான்.

"கொஞ்ச நேரம் இரு..... என்னன்னு பாத்துட்டு வந்துட்றேன்" இதுவரை யாருக்குமே விளக்கமே சொல்லியிராதவன் அவளிடம் பொறுமையாய் விளக்கிக் கொண்டிருந்த விந்தையை எங்கு போய் சொல்ல???

"ப்...ப்ளீஸ் மாமா.... என்ன விட்டு போய்டாதிங்க...." கண்ணீரில் முகம் மறைக்க அவள் கெஞ்சவும் அவனால் அதற்கு மேல் மறுத்துப் பேச முடியாமற் தான் போயிற்று.....

"மாமா....." வீறிட்டவள் அவனை பிடித்து இழுக்க அவனை தாக்க வந்த கத்தி அவள் தன்னை இழுத்ததில் அவள் தோள் பட்டையை நெருங்கு முன் அவன் கையால் இறுக்கிப் பிடித்திருந்தான்.

அப்படியே திருப்பி மடக்கிப் பிடித்தவன் அவன் கத்தியை பிடுங்கி அவனுக்கே வயிற்றில் குத்த அவள் கண்கள் அதிர்ச்சியில் நிலை குத்தி அப்படியே நின்று போனது.

தன் முன்னால் நடந்த கொலையில் ஸ்தம்பித்து நின்று விட்டாள் அவள்!!!

பெற்றோர் மற்றும் அண்ணன் வாயால் அவனைப் பற்றி கேட்டு கேட்டு மனதில் ஏற்கனவே பதிந்து போயிருந்த பிம்பம் இன்று நேராகவே கண்டு விட்டதில் உடல் தூக்கி வாரிப் போட பின்னால் நகர்ந்தாள் பாவை!!!

தன்னை தாக்க வந்தவனை அடித்து வீழ்த்தியவனின் கண்கள் மீண்டுமொருமுறை அலச ஆங்காங்கே சில பேர் மறைந்து நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

அவசரமாக திரும்பி மனையாளை நோக்க அவள் சுவற்றோடு ஒன்றி நின்று கொண்டு அவனை கண்டு நடுங்கிங் கொண்டிருந்தாள்.

இருந்த கலேபரத்தில் அவள் உடல் நடுங்குவதை கவனிக்காதவன்

"வா என் கூட" கையை நீட்டினான்.

அவன் தன்னுடன் பேசவே இன்னுமின்னும் ஒன்றியவள் அவனை பார்த்து மிரண்டாள்.

அவள் வராமல் தாமதிக்கவே எரிச்சலில் திரும்பியவன் அவள் நிலை கண்டு புருவம் சுருக்கினான்.

"என்னாச்சு....வா"

"...."

"ப்ச்....என்ன தான் ஆச்சு?" கேட்டுக் கொண்டே நெருங்க

"இ...இ...இல்ல இல்ல நா வர மாட்டேன்" தடுமாறினாள்.

கண்களை இறுக்க மூடி திறந்து தன் கோபத்தை கட்டுப்படுத்தியவன் அவளை தரதரவென இழுத்துக் கொண்டு சென்று அண்ணன் அறையில் விட்டு விட்டு கதவை வெளியாள் தாழிட்டுத் திரும்பினான்.

கிட்டத்தட்ட ஒரு நாற்பது பேர் கையில் ஆயுதங்களுடன் அவனை சுற்றி நின்றிருக்க அவன் கை தானாய் தன் மீசையை வருடிக் கொண்டது.

***

முகமே தெரியாத அளவு கரி பூசி வீட்டை சுற்றி நின்று கொண்டிருந்தனர் கதிரின் அடியாட்கள்.

காம்பவுண்ட் சுவருக்கு அருகில் மறைந்து நின்றிருந்தவர்கள் வர்ஷினியின் தந்தை ராஜாவுக்கு பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

தங்கள் அண்ணனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வந்திருந்தாலும் எதிரியாய் நினைப்பவருக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கச் சொன்னான் என்பதுவே புரியாத புதிராகிப் போனது.

தூரத்தில் வண்டி வரும் அரவம் கேட்கவே கையிலிருந்த ஆயுதங்களை இறுக்கிப் பிடித்தவர்கள் முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு வீட்டை நெருங்கியவர்கள் மீது பாய்ந்தனர்!!!

***

நகத்தை கடித்துத் துப்பிக் கொண்டு டென்ஷனாக அமர்ந்திருந்தார் அவர்....

தன் ஆட்களை ராஜா வீட்டுக்கு அணுப்பி அரை மணி நேரம் கடந்திருந்ததென்றால் ஆதர்ஷை கொலை செய்ய அனுப்பி இரண்டு மணி நேரம் கடந்திருந்தது.

வழமையாக வேலையை முடித்துவிட்டு கால் செய்து சொல்லி விடுபவனின் அழைப்பு வேறு தாமதித்துக் கொண்டிருந்ததில் இங்கே அவருக்கு பி.பி ஏறிக் கொண்டிருந்தது.

"டேய்....அவனுக்கு கால் பண்ணு"

"ஐயா..."

"இல்ல இல்ல வேணாம்"

"...."

"கால் பண்ணுடா"

"...."

"வேண்டாம் டா எரும" அவர் டென்ஷனை அடுத்தவருக்கு கடத்திக் கொண்டிருக்க விழி பிதுங்கிப் போயினர் அணைவரும்.

***

ஹாஸ்பிடல்....

பூட்டிய அறைக்குள் அதிர்ந்து நின்றவள் சடாரென அண்ணன் புறம் திரும்பினாள்.

விழிகளை திறந்திருந்தவனின் முகம் பதற்றத்தை தத்தெடுத்திருக்க அவளும் பதற்றமாகவே நெருங்கினாள்.

"எ...எ...என்னமா"

"அ...அ...அண்ணா...அண்ணா" எழ முயற்சித்தவனுக்கு வழியெடுக்கவே சற்று அதிகமாகவே கத்தி விட்டானோ!!!

.....

ஒருவனை வெட்ட கை ஓங்கிக் கொண்டிருந்தவனின் கை உள்ளேயிருந்து கேட்ட குரலில் அந்தரத்திலேயே நிற்க அந்த இடை நேரத்தில் புஜத்தில் இன்னொருவன் வெட்டி விட இரத்தம் பீரிட்டுக் கிளம்பியது.

.....

"நீ எந்திரிக்காதணா" அவசரமாக தடுத்தாள்.

"என்னமா என்னாச்சு?"

"அ...அ...அண்ணா மா..மா"

"க...க..கதிருக்கு எ...என்னாச்சு?" அவனுக்கு பதற்றம் அதிகமாகியது.

"அ...அவங்க க...கொல....பண்..." அவளுக்கு பேசவே முடியாமற் போனதுவோ???


"எ...எனக்கு ப...பயமா இருக்குணா...எ.....எனக்கு..... எனக்கு அவ...அவங்க வேண்டாம்ணா" அதீத பயத்தில் அவள் உலற்ற கதவை திறந்து கொண்டு வந்தவன் வந்த வேகத்திலேயே வெளியேறி விட திடுக்கிட்டு போனான் ஆதர்ஷ்.

"அம்மு....
அப்பிடியெல்லாம் சொல்ல கூடாது மா... பாரு இப்போ அவன் கேட்டுட்டான்" அவன் குரலில் வருத்தம்.

"...."

"போ அவன் கிட்ட" மீண்டும் எழ முயற்சிக்க மீண்டும் கத்தினான்.

.....

எல்லோரையும் அடித்துப் போட்டு அமர்ந்திருந்தவனின் கை முஷ்டி இறுகியது உள்ளிருந்து கேட்ட சத்தத்தில்....

கை புஜத்திலிருந்து வேறு இரத்தம் வழிந்து கொண்டே இருக்க தன் கையால் அழுத்திப் பிடித்தான்.

.....

"ப...பயமா இருக்குணா" சட்டென கண்ணம் தொட்டது கண்ணீர்.

"ப்ளீஸ் அம்மு...போ அவன் ரொம்ப நல்லவன் மா"

"...."

"எனக்காக"

"போறேன்ணா" வெளியே வந்தவள் வடிந்து கொண்டிருந்தது இரத்தம் கண்டு துடித்துப் போனாள்.

சட்டென தன் சுடிதார் தாவணியை இழுத்தெடுத்தவள் ஓடிச் சென்று அவன் புஜத்தில் கட்ட அவளை வெறித்துப் பார்த்தான் அவள் கணவன்!!!

"விடு...." பட்டென தட்டி விட்டான்.

"இரத்தோம்ங்க" அவள் பதறவே

"சும்மா நடிக்காக விடுடி" பொரிந்துத் தள்ளினான்.

"ப்ளீஸ்ங்க" அவன் அமைதியாகி விடவே கட்டுப் போட்டு நிமிர்ந்தவள் அவன் கையிலும் இரத்தம் வழிந்து கொண்டிருப்பது கண்டு தாவணியிலிருந்து மீண்டும் கிழித்து கட்டப் போக அவளை தள்ளி விட்டு எழுந்து நின்றான்.

அவனுக்கு கட்டு போட வேண்டுமே என்ற மாய உலகத்தில் இருந்தவள் அவன் தள்ளி விட்டதில் விதிர்த்துப் போனாள்.

தான் தானா???

அவளுக்கே தன்னை குறித்து ஆச்சரியமாய் போயிற்று!!!

"உன் கும்பத்து ஆளுங்க நடிப்பு பிரமாதம்....உன் அப்பனே உன் அண்ணன கொலை பண்ண ஆள் அணுப்பிட்டு நல்லவன் மாறி நடிச்சு கிட்டு படுத்துகிட்ருக்கான் அவனுக்கு போய் பாடி காட்ஸ் அனுப்பினேன் பாரு என்ன சொல்லணும்" இந்த விடயம் அவளுக்குமே புதிது!!!

அவள் மெல்லிய இதயத்தில் தன் இடத்தை முதல் முதலாய் அழுத்தமாகப் பதித்தான் காளையவன்!!!

***

வீட்டுக்கு வெளியே கேட்ட தடால் என்ற சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தனர் வர்ஷினியின் தாய் தந்தையர்!!!

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள

"தேவி....நீ இரு நா பாக்குறேன்" எழப்போனவரை அவசரமாக தடுத்தார் மனைவி.

"இல்லங்க....நீங்க இருங்க....டாக்டர் உங்கள ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காரு....நா போயி பாக்குறேன்" அவர் பதிலை எதிர்பாராமலேயே கட்டிலிலிருந்து இறங்கிச் சென்ற மனைவியை பார்த்துக் கொண்டிருந்தார் ராஜா.

வெளியே வந்தவர் மேல் மாடி பால்கனியை திறந்து வெளியே எட்டிப் பார்த்தார்.

ஒருவருமே இல்லை!!!

"என்ன யாருமே இல்லயே....." தனக்குள் பேசிக் கொண்டவர் மீண்டும் உள்ளே சென்று விட புதருக்குள் மறைந்திருந்த கதிரின் ஆட்கள் தாக்க வந்தவர்களை வாய் பொத்தி இழுத்துக் கொண்டு வெளியே வந்தனர்.

......

"தேவி என்னமா சத்தம்?" மனைவி உள்ளே வரவே கேட்டார்.

"எதுவும் இல்லங்க.... வேற ஏதாவதா இருக்கும்"

"ம்...."

"நீங்க தூங்குங்க" சொல்லி விட்டு மறுபக்கம் வந்து படுத்துக் கொள்ள அவருள் பலத்த யோசனை....

......

"யாருடா நீங்க.... எதுக்காக இங்க வந்திருக்கீங்க.....யாரு உங்கள அனுப்பி வெச்சது?" அடுக்கடுக்காக கேள்விகளை கோர்த்தான் கதிர் அடியாட்களின் தலைவன்.

"...."

"சொல்லு" மீண்டும் கத்தி எடுக்கவே

"சொ....சொ...சொல்லிட்றோம்... சொல்லிட்றோம்"

"ம்...சொல்லு...."

"அ....அ....அய்யா தான்"

"அடிங்க....அய்யா நொய்யான்னாம உன் நொய்யாட பேரு சொல்லுடா" அவன் உறுமவே அடுத்து அவன் சொன்ன வார்த்தையில் அதிர்ந்து போயினர் அனைவரும்!!!

***

"என்னங்கடா இன்னும் காணும்" குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் அவர்.

"அ...அய்யா யாருமே பேச மாட்றாங்கய்யா"

"என்னடா நடந்திருக்கும்?" அவருக்கு பீ.பி எகிறிக் கொண்டிருந்தது.

"அய்யா வேணும்னா இன்னும் ஐம்பது ஆளுங்கள அனுப்பி வெக்கலாமா?"


"இல்ல அது சரியா வராது....இப்போ அனுப்பி மாட்டிகிட்டானுங்கன்னா நமக்கு தான் அது ஆபத்து"

"...."

"நம்மாளுங்கள்ள ஒருத்தன மட்டும் சும்மா போயி பாத்துட்டு வர சொல்லு"

"சரிங்கயா"

"முக்கியமா அவன் மூஞ்சி வெளியில பழக்கம் இல்லாதவனா இருக்கணும்.... அப்பிடி பட்டவன தேடி அனுப்பு"

"சரிங்க ஐயா" அவன் செல்லவே யாருக்கோ அழைப்பெடுத்தார் அவர்.

***

கணவன் கூற்றில் அதிர்ந்து விழித்தாள் பெண்!!!

தன் தந்தையா???

இல்லை நிச்சயமாக இருக்கவே முடியாது.

"இ...இ...இல்ல அப்பா அப்பிடி பண்ணியிருக்க மாட்டாரு" தைரியத்தை வரவழைத்து சொல்லி விட்டு கணவனை பயத்துடன் பார்த்தாள்.

கண்கள் இரத்தமென சிவக்க

"என்னடி சொன்ன?" அவளை இழுத்து சுவற்றில் சாற்றியவன் அவளை உறுத்து விழித்தான்.

மிரண்டு விழித்தவளுக்கு இதயம் தொண்டை குழியில் துடித்தது.

"உன் அப்பன மாதிரி தானே நீயும் இருப்ப....அதானே அந்த இரத்தம் தானே இங்கயும் ஓடுது"

"...."

"உன் குடும்பத்துல இருக்கவனுங்க அடுத்தவனுக்கு துரோகம் செய்ய தான் பிறப்பு எடுத்திருக்கானுங்க போல.... விஷம்.... உடம்பு முழுக்க விஷம்" வார்த்தைகளை கடித்துத் துப்பினான்.


"சொந்த மகன கொல பண்ண அனுப்புற அளவுக்கு அப்பிடி என்னடி கோபம்?"

"இல்ல இல்ல நீ...நீங்க தப்பா...."

"ஏய்...." நடுநடுங்கிப் போனாள் பாவை.

"போ...போயி உன் நொண்ணன் கிட்ட சொல்லு கதிர் இப்பிடி சொல்றான்னு.... அவனும் சேந்துப்பான் உன்னோட....என்ன ஜென்மமோ" அவளை உதறி விட்டு மீண்டும் போய் அமர்ந்து கொள்ள ஆடாது அசையாது அப்படியே நின்று கொண்டாள்.

அவன் வார்த்தைகளை புரிந்து கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்திற்று அவளுக்கு....

ஏன் இவ்வளவு வெறுப்பு???

என்னதான் இவங்க என் குடும்பத்துக்கு திட்னாலும் ஏன் குடும்பத்து ஆளுங்க இவங்களுக்கே சப்போர்ட் பண்றாங்க????

புரியாத புதிராகிப் போனதுவோ!!!

அவள் துப்பட்டாவையும் மீறி இரத்தம் கசிவதை கவனித்தவள் மெதுவாக மீண்டும் அவனை நெருங்கினாள்.

"என்ன?" என்றான் தலையுயர்த்தி...

"வ...வந்து ர...இரத்தம்"

"ப்ச் ..." குனிந்து பார்த்து தானும் கண்டு கொண்டவன்

"அதுக்கென்ன இப்போ?" என்றான் வெடுக்கென....

இதற்கு அவள் என்ன தான் பதில் கூற???

"இ..இல்ல டாக்டர்.."

"நா எங்கயும் வர்றதா இல்ல" இடையிட்டான் மீண்டும் கண்களை ஒரு முறை அலசியவாறு....

"இன்னும் என்ன?"

"நா டாக்டர் கிட்ட போனும்" அவள் சொல்லவே குழப்பமாய் அவள் முகம் பார்த்தான் கணவன்.

"ஏன்?"

"...."

"ஏன்னு கேக்குறது காதுல விழல?"

"டாக்டர் கிட்ட பேசி நா அவங்கள இங்க கூட்டி வர்றேன்"

"ஒன்னும் தேவயில்ல நீ உட்காரு"

"ப்ளீஸ்...அதிகமா ப்ளட் போய்கிட்டு இருக்கு"

"உன் நடிப்ப நா நம்ப போறதா இல்லன்னு தான் சொல்லிட்டேனே.... அப்பறமும் என்ன?"


"ப்ளீஸ் மாமா" விலுக்கென நிமிர்ந்தவன் அவளை முறைத்தான்.

"இ...இல்ல சொல்லல... ப்ளீஸ் வாங்க"


"சும்மா சும்மா கெஞ்சி கிட்டு இருக்காத.... நாம போனா உன் அண்ணனுக்கு ஆபத்து வரும்" மெல்ல அவன் பால் சாயத் துவங்கியது பேதை மனம்.

"உட்காரு"

"அப்போ நா போறேனே ப்ளீஸ்...." அவளை கூர்ந்து பார்த்தவன் அவள் பார்வை தன் காயத்தின் மீதே இருப்பது கண்டு பேசாமல் திரும்பி விட்டான்.

"மா..." அவன் முறைக்கவே

"என்னங்க..." மாற்றி விட அதற்கும் கொபம்.

"என்னங்க நொன்னங்கன்னு சொல்லி கிட்டு இருக்காத... ஒன்னு பேரு சொல்லி கூப்புடு... இல்லயா.... வாய முடிகிட்டு இரு"

((ஷ்ஷப்பாஹ்....
முடிலடா உன்னால))

"உட்கார சொன்னதா ஞாபகம்"

"...."

"ப்ச்...." சலித்தவன் நிமிர்ந்து பார்க்க நின்ற இடத்தில் அவள் இல்லை!!!

மனம் திக்கென அதிர சடாரென எழுந்து கொண்டான்.

"இடியட்...எங்க போனா" தலையை அழுத்தக் கோதிக் கொண்டவனின் கண்களில் அவள் தூரத்தில்
டாக்டருடன் வருவது தெரியவும் இழுத்துப் பிடித்த மூச்சை மெதுவாக விட்டான்.

"டாக்டர்...இவங்களுக்கு தான்...." அவள் கை காட்ட டாக்கடரே பயந்து போனார்.

"கதிர் சார் நீ...நீங்களா...?"

"...."

"வாங்க என் கேபின் பக்கத்துல தான்" அவன் மனைவியை முறைக்க அவளோ குழப்பமாய் நின்று கொண்டிருந்தாள்.

"நர்ஸ்...." கத்தி அழைத்தவர் ஒரு நர்ஸ் வரவே

"இவங்க கூட கொஞ்ச நேரம் இருங்க...." சொல்லவும் தான் அவன் பார்வை வேறு புறம் திரும்பியது.

அவள் மனதில் மீண்டும் சலனம்!!!

அவள் நர்ஸுடன் நின்று கொள்ள டாக்டருடன் உள்ளே நுழைந்தான் அவன்....

.......

சிறிது நேரத்திலே அவன் வெளியே வர பெரு மூச்சு விட்டார் டாக்டர்.

((அது ஒன்னில்ல நண்பா.....

ஒரு தடவ நம்ம கதிரு நடு ரோட்டுல வெச்சி ஒருத்தன போட்டானா....

அவன் சுத்திகிட்டு போயி இந்த டாக்டர் இருக்காருல்ல....

அவர் கார் மேல விழுந்துட்டான்....

அவன புடிச்சி தூக்கி இவரு கண்ணு முன்னாடியே மறுபடி வயித்துல குத்த அத கண்டவருக்கு அன்னைல இருந்து கதிர கண்டா உச்சா போர அளவு பயம்.....

இது தான் பா கத....))

அவன் வெளியே வர நர்ஸ் நகர்ந்து கொண்டாள்.

"இடியட்....இப்பிடி தான் திடீர்னு சொல்லாம போவியா?" வந்ததும் வராததுமாக அவள் மேல் பாய அமைதியாகவே நின்று கொண்டாள்.

"உன்ன வெச்சிகிட்டு...."

"இனிமே சொல்லிட்டு போறேன் மாமா திட்டாதிங்க ப்ளீஸ்..." தலையை குனிந்திருந்தவளுக்கு அவன் முறைத்தது தெரியவே இல்லை.

பல்லை கடித்தவன் அப்படியே அமைதியாகி விட மொபைல் அலறியது.

"சொல்லு" மறுமுனை கூறப்பட்ட செய்தியில் கையிலிருந்த போன் நழுவி தரையில் விழுந்தது.

தொடரும்.....

11-07-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 04 [ B ]



தூங்கிக் கொண்டிருந்த தங்கைக்கு அருகில் சென்று நின்றான் எ.ஸி.பி கிருஷ்ணா.



உறக்கத்தில் கூட கண்ணீர் வழிந்து கொண்டே இருந்ததுவோ!!!



அருகில் அமர்ந்தவன் மெதுவாக தலையை வருடிக் கொடுத்தான்.



அவனுக்கு மீண்டும் கண்கள் கலங்கி விட்டன.



ஏன் தான் கடவுளுக்கு தங்கள் மீது இவ்வளவு கோபமோ???



அம்மா!!!



அவர் என்ன செய்து விட்டார்???



பேசாமல் என் உயிரை எடுத்துக் கொண்டிருக்கலாமே!!!



தாயை சுற்றி வந்த நினைவுகள் தந்தையிடம் வந்து சிக்கிக் கொண்டன.



வெளியில் இறுக்கமாக காட்டிக் கொண்டிருந்தாலும் அவர் மன வேதனையை அவனும் அறிந்தே தான் இருந்தான்.



அவனுக்கு அவரிடம் நிறைய பேச வேண்டி இருந்தது.



டாக்டர் ரிப்போர்ட் படி அம்மா சிலிண்டர் வெடித்து இறந்து விட்டதாக கூறப் பட்டிருந்த போதும் அவன் போலிஸ் மூளைக்குள் சந்தேகம் குடைந்து கொண்டே இருந்தது.



இதற்கு பின் வலுவான காரணம் இருக்கும் என அவன் ஆணித்தரமாக நம்பினான்.



இதெற்கெல்லாம் விடை தந்தையிடம் இருக்குமென்றும் அவனுக்கு தெரியும்.



அன்று காலேஜ் முன் நடந்து கொண்ட விதத்தை அவர் கண்டு கொள்ளாமல் விட்ட போதே அவனுக்கு சந்தேகம் தான்.



ஆனால் ஏன்???



தன் கரம் தங்கையை வருடிக் கொண்டிருக்க தன் சிகையை ஆதரவாய் வருடிய தலை கோதலில் சிந்தை கலைந்தான் எ.ஸி.பி.



அவன் அத்தை லக்ஷ்மி தான் நின்றிருந்தார்....



அண்ணார்ந்து பார்த்தவன் மீண்டும் தங்கையை பார்த்தான்.



"சாப்டியா கிருஷ்?" தாயின் முகம் மின்னி மறைய வெகு சிரமப்பட்டு தன்னை அடக்கியவன் ஆமென தலையசைத்தான்.



"எல்லாம் சரியாகிடும்பா... குட்டிமா சாப்டாளா?"



"...."



"அர்ஜுன் எடுத்து கிட்டு வந்தானே.... ஆமா அர்ஜுன் எங்கபா... நீ இரு நா பாக்குறேன்" நெற்றியில் பாசமாய் முத்தமிட்டவர் விலகி நடந்தார்.



***



அமைச்சர் அலுவலகம்.....



போன் சிணுங்கலில் விழித்தவர் அதை வெறித்துப் பார்த்தார்.



அடித்து ஓய்ந்து மீண்டும் ஒலியெழுப்ப வேண்டா வெறுப்பாக எடுத்தவர் காதிற்கு கொடுத்தார்.



"சக்தி...இன்னாப்பா அமைதியா இருக்க?"



"...."



"பாவம் ரொம்ப பயந்துட்டியோ.. ஆனாலும் உன் புள்ளக்கி ரொம்ப தைரியம் தான் போ"



"ட...ட....டேய்" உள்ளுக்குள் பதறியது அவருக்கு.



"ச்சு.....ச்சு....ச்சு.....பாவம் சக்தி நீ.... புள்ள செத்துட்டான்னு தெரியாமலே இவ்வளவு பதட்டம்.... அப்போ....." அழைப்பு துண்டிக்கப்பட



"டே....ய்...." கத்திக் கொண்டே எழுந்தார் அமைச்சர் ஷக்திவேல்.



"இ...இ...இல்ல இல்ல இது நடந்திருக்க கூடாது" கத்தி விட்டு வீட்டு எண்ணுக்கு அழைக்க எதிர்பாரா விதமாய் எடுத்திருந்தான் கிருஷ்ணா.



"ஹ...ஹலோ யா...யா....யாரு பேசுறது?"



"அ...அ...அப்பா" அவனுக்கு தெரிந்த வரையில் இன்று தான் அழைக்கிறான்.



"க்...க்...கிருஷ்...." அவருமே அதே நிலைதான்.



"ஏன் பதட்டமா இருக்கீங்க.... என்னாச்சு?" தன் பதற்றத்தை மறைத்துக் கொண்டு கேட்டான்.



"க...க...கண்ணா....அ....அர்... அர்ஜுன்"



"அர்ஜுன்....அர்ஜுனுக்கு.... என்னபா?" தன் ஆள் காட்டி விரலையும் நடு விரலையும் சேர்த்து அழுத்தமாக நெற்றியில் தேய்த்தான்.



"அர்ஜுன் எங்க?" அப்பொழுது தான் அத்தை சொல்லிச் சென்றது நினைவில் வர அவரை அழைத்தான்.



"என்ன கிருஷ்....?"



"அர்ஜுன் எங்க அத்த?" அவன் அழைத்ததில் அனைவரும் வந்து விட்டிருக்க அனைவரும் அவன் கேள்வியில் லக்ஷ்மியை ஏறிட்டனர்.



"நானும் தேடி பாத்துட்டேன் பா.... அவன் இல்ல" இடையிட்டார் ராம்.



போன் வழியே கேட்டுக் கொண்டிருந்தவர் தொப்பென அமர்ந்து விட



"பா....டிட் யூ ஹியர் மீ" மறுமுனையிலிருந்து கத்தினான் மகன்.



"பா....அப்பா...."



ஊஹூம்....சத்தமே இல்லை....



ரிசீவரை படக்கென வைத்தவனின் கண்கள் அவ்வளவு பதற்றத்திலும் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்த அபியை கண்டு சுருங்கியது.



"அபினவ்" அவனின் அழுத்தமான அழைப்பில் திடுக்கிட்டு திரும்பினான் அபி.



"அபி....அர்ஜுன் எங்க?"



"இல்ல மச்சி..."



"அர்ஜுன் எங்க?"



"அ...அவன்...." தொடங்கி நடந்ததை கூற அடுத்த நிமிடம் பாய்ந்து அவன் சட்டையை பற்றியிருந்தான் கிருஷ்ணா.



"அறிவிருக்கா உனக்கு.... அவன பத்தி தெரிஞ்சும் எதுக்குடா அவன தனியா போக விட்ட இடியட்"



"மச்சான் நா சொல்ல வர்றத கொ..."



"மூடு வாய...வாய தொறந்தா கொன்னுடுவேன்"



"கிருஷ் நீ தப்பா..." அவன் முடிக்கு முன் அவன் கண்ணத்தில் இவன் கரம் பதிந்திருந்தது.



அதிர்ந்து நின்றவர்கள் அப்போது தான் கலைந்தனர் போலும்!!!



மீண்டும் அவனை அடிக்கப் பாய்ந்தவனை தடுத்துப் பிடுத்தனர் ராமும் ரக்ஷனும்.



"அவன் அப்பிடி சொன்னா நீ பேசாம இருந்துடுவியா.... போலிஸ் தானே நீ... யாரு என்னன்னு விசாரிக்க மாட்டியா...?"



"இல்லடா நா...."



"அவனுக்கு மட்டும் ஏதாவதொன்னு ஆச்சு.....உன்ன நா கொல்லாம விட மாட்டேன்....ஜாக்கிரத" பிடித்திருந்த இருவரையும் உதறி விட்டு புயலென வெளியேறினான் அவன்.....



***



ரக்ஷன் அட்ரஸை சொல்லி இருக்கவே நேரே அங்கே வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான் க்ருஷ்!!!



ஷக்திவேலும் அங்கு தான் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தார்.



அவருக்கு முடிவு கண் முன்னே விரிந்திருந்தாலும் நேரில் காணாத வரை மனது திடும் திடுமென தூக்கிப் போட்டுக் கொண்டே இருந்தது.



.....



வண்டியிலிருந்து பாய்ந்து இறங்கியவன் தந்தை வண்டி வந்து நிற்பதை கண்டு அப்படியே அசையாது நின்றான்.



நிமிடங்கள் கடந்தும் அவர் இறங்காமல் போகவே அவன் செல்ல எத்தனிக்க சட்டென கதவு திறக்கப்பட்டது.



இறங்கி அவனை நோக்கி வந்தவர் அவன் தலையை தடவ அவரை ஆச்சரியமாய் பார்த்தான் காளை!!!



இதுவரை உணர்ந்திராத தந்தை பாசம்!!!



"கண்ணா....அப்பாவுக்கு உன் மேல வெறுப்பெல்லாம் இல்லடா.... நீ என் மகன்.... என் கண்ணு முன்னால ரொம்ப பெருசா வளந்து நிக்கிறத பாத்துடனும்னு ஒரு ஆச.... சின்ன வயசுல இருந்து நீ போலிஸ் ட்ரஸ் போட்டு நா பாக்கனும்னு ஆச பட்டேன்....உனக்கு புடிக்கல....ஆனா அதுல தான் நீ கம்பீரமா தெரிவன்னு தான் உன்ன கட்டாய படுத்தினேன்.... மத்தபடி உன் மேல கோபம் இல்ல கண்ணா.....நம்ம லக்ஷ்மியோட பொண்ண நீ கட்டிகனும்குறது உன் அம்மாவோட கடைசி ஆச.... நீ அவளுக்கு பொருத்தமா இருக்க மாட்டன்னு நா சொல்ல வர்றத கூட கேக்காம நிம்மதியா போய் சேந்துட்டா பாரேன்...குட்டிமாவ பாதுகாப்பா பாத்துக்க கிருஷ்ணா.....ந...நம்ம ரா...ராம்" பேசிக் கொண்டிருந்தவர் அவன் கைகளில் முகம் குப்புற விழ முதுகில் சொறுகப்பட்டிருந்த கத்தியில் நிலை குத்தி நின்றன அவன் கண்கள்!!!



"அப்....பா" கண்கள் சிவந்திருக்க வார்த்தை வராமல் தடுமாறித்தான் போனான் அந்த ஆறடி ஆண்மகன்!!!



இல்ல...இல்ல.....இது பொய்....!!!



மனம் மாயமாய் வாதாட அப்படியே அவரை முகம் குப்பற கிடத்தியவனுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்திருந்ததுவோ!!!



தரை தளத்திற்கு பக்கத்தில் இருந்தவனை திடீரென கேட்ட முனகல் சத்தமே நினைவுக்கழைத்தது.



"அர்ஜூன்....." கத்திக் கொண்டே ஓடினான்.



உயிரை கையில் பிடித்திருந்தவனுக்கு தம்பியை கண்டதும் கண்களில் மின்னல்!!!



அவனருகே தரையில் அமர்ந்தவன் அவன் தலையை மடியில் வைத்து கண்ணங்களை தட்டினான்.



"அருண்(அர்ஜுன்) ....அர்ஜு இ... இங்க பாருடா.... உனக்கு ஒன்னில்ல.... ஒன்னும் ஆகாது.... ஆக நா விட மாட்டேன்"



"க்...க்....கிருஷ்.....ந...நம்ம....அ...அம்....மா..வ....அ...அந்...த ரா....ம்....ராம் தா....ன்" ஒரு முறை ஏங்கியவனின் தலை அப்படியே சரிய



"அ...அர்ஜூ....அர்ஜூ....."



ஊஹூம்....அவன் உயிர் பறவை இவ்வுலகில் இல்லை....



"அர்ஜூன்......" அவன் கத்திய கத்தலில் இரைக்காக தேடி வந்த பறவைகள் திடுக்கிட்டு பறந்தன.



எப்படித்தான் தன்னை சமாளித்தானோ!!!



தூக்கிக் கொண்டு கீழே வந்தவன் தந்தைக்கு அருகில் கிடத்தி விட்டு குழுங்கிங் குழுங்கி அழுதான்.



தன் கண் முன்னே உறவுகளின் உயிர் பிரியும் வலி!!!



அதை வார்த்தைகள் கொண்டு வடித்திட இயலாது.



அப்பொழுது வெறுத்தான் அவன் காக்கியை!!!



ஒரு ஆண்மகனாக தோற்றுப் போய் விட்டவனுக்கு எதற்கு அந்த உடை???



அனைத்திலும் வெறுப்பு!!!



கவர்மெண்ட் என்ற சொல்லே கசந்து போனதுவோ???



அமைச்சராக இருந்த தந்தைக்கு பாதுகாப்பு கொடுக்க தெரியாத அந்த கவர்மெண்டை அடியோடு வெறுத்த நாள் அன்று!!!



முதலில் தாய்....பின் அண்ணன்.... அதன் பின் தந்தை!!!



மனதை யாரோ குத்தி கிழிப்பது போன்று இருந்தது அவனுள்!!!



அப்படி ஒரு வலி!!!



தானும் இனி அனாதை தானோ???



வலி...வலி...வலி....



அது மட்டுமே வாழ்க்கையாகி விடுமா???



கண்களை அழுத்த துடைத்துக் கொண்டு எழுந்தவனின் கண்கள் பழி வெறியில் பளபளத்தது.



தன் கர்சீப்பை எடுத்து தந்தை முதுகுக்கு பின்னால் இருந்த கத்தியை பத்திரமாய் எடுத்தவன் அதை பார்த்துக் கொண்டே இருந்தான்.



"உன்ன விட மாட்டேன் டா.... உன்ன என் கையால கொல பண்ற வர நா சாக மாட்டேன்"



அவன் வாய் வன்மமாய் முணுமுணுத்தது.



***



ஆயிற்று....



இன்றுடன் தந்தையையும் சகோதரனையும் எரித்து ஒரு நாள் ஆயிற்று....



ரக்ஷனை மட்டும் அருகில் விட்டவன் மற்றவர்களை கண்களால் எரித்தே பொசுக்கினான்.



அதை விட தங்கையின் அழுகுரல் காதை நிறைக்கும் போதெல்லாம் அவன் கண்களில் ஏறும் சிவப்பு!!!



அப்பப்பா....விட்டால் கண்களால் எரித்தே கொன்று விடுவான் போலும்.



"மச்சான்" நண்பன் தோள் தொட திரும்பிப் பார்த்தானே ஒழிய ஒரு வார்த்தை பேசவில்லை அவன்...



"லக்ஷ்மி அம்மா ரொம்பவே உடஞ்சி பொய்ட்டாங்கடா.... ஒரு வார்த்த பேசு ப்ளீஸ்"



"அவங்க எல்லோரையும் வீட்ட விட்டு போக சொல்லு" அத்துடன் பேச்சை கத்தரித்து விட வாசலருகே நின்றிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர்.



"ம...மச்சி...." அவனுக்குமே அதிர்ச்சி!!!



அவன் அறியாத நண்பனின் பாசமா??



"மாமா...." ஆர்த்தி வந்து தோள் தொடவே கை முஷ்டியை இறுக்கியவன் அப்படியே அமர்ந்து கொண்டான்.



"மாமா எங்க மேல தப்பு இருந்தா மன்னிச்சிரு....ஆனா என்ன தப்பு...." ஆவேசமாய் எழுந்து அவள் கழுத்தை பிடித்து சுவற்றில் சாய்க்க அனைவருக்கும் ஒரு நிமிடம் இதயம் நின்று துடித்தது.



"மச்சான் என்ன பன்ற விடு...."



"கிருஷ்...."



தடுக்க வந்த ரக்ஷனையும் அபியையுய் பார்வையால் நிறுத்தியவன்



"தப்பு....என்ன தப்பா?" கண்கள் சிவக்க கத்தினான்.



"உன் அப்பன் தான்டி என் மொத்த குடும்பத்தையும் சிதைச்சு வெச்சிருக்கான்.... அப்பிடி என்னடி து... துரோகம்" கை தளர தொப்பென விழுந்தவனை இமைக்க மறந்து வெறித்திருந்தனர் அனைவரும்.



"பொய்....பொய்...பொய்...." காதை மூடிக் கொண்டு ஆவேசமாக கத்திய கத்தலில் தான் அனைவரும் நிகழ் காலத்திற்கு திரும்பினர்.



"எதுடி பொய் எது பொய்....நா அவன கொல்லாம விட மாட்டேன் டி...." கர்ஜித்தவன் மீண்டும் கழுத்தை நெறித்தான்.



"மச்சான் விடுடா அவள" நண்பனை பிரித்து இழுத்தெடுத்தான்.



லக்ஷ்மி கதறி அழ அபி அப்படியே அசையாமல் நின்றிருந்தான்.



"வீட்ட விட்டு போக சொல்லுடா" அவன் உறுமவே அவனை ஒரு பார்வை பார்த்தவள்



"வாங்கம்மா...." தாயின் கை பிடித்து இழுத்தாள்.



திரும்பிப் பார்த்த அபியின் கண்கள் இருந்தது என்ன???



நண்பனாக இருந்தவனே புரிந்து கொள்ள வில்லையே என்ற வலியா???



கண்களை இறுக மூடித் திறந்தவன் முன்னே மறுபடி நின்றிருந்தாள் பேதை!!!



"ஐ லவ் யூ மாமா" சொன்னவள் திரும்பி நடக்க அவன் தான் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தான்.



***



ஒரு மாதத்திற்கு பிறகு....



"மா நான் கோயிலுக்கு பொய்ட்டு வர்றேன்..." உயிர்ப்பே இல்லாமல் சொன்ன மகளை பார்த்து பெருமூச்சு விட்டார் தாய்.



"அண்ணன் கூட போமா"



"இல்லமா அண்ணா ஏதோ வேலயா கெளம்பி பொய்ட்டாங்க நா போய்க்குவேன்"



"அப்போ நா வரட்டுமா?"



"இல்ல மா...நான் போயி அத்த மாமா அத்தான் பேருக்கு அர்ச்சன பண்ணிட்டு வந்தட்றேன்...நீ இருந்து அப்...அப்பாவ பாத்துக்க" மகளின் கண்ணம் வடியவர் மௌனமாய் கண்ணீர் வடித்தார்.



.....



"சாமி அர்ச்சன பண்ணனும்" எதிரெதிரே நின்றிருந்தனர் இருவரும்.



தன்னவனை கண்களால் நிரப்பிக் கொண்டாள் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு....



அவனோ கவனமாக அவள் பார்வையை தவிர்த்தான்.



அப்பாவிற்கு சொந்த ஊர் கொல்கத்தா என்பதால் அங்கே தான் இருந்தது மூவர் சமாதியும்....



"தம்பி....இவாளுக்கு முடிச்சுன்டு உங்களுக்கு பண்றேன்" அய்யர் சொல்லவே மௌனமாய் தலையசைத்தவன் அருகிலிருந்த தங்கையின் கையை இறுக்கப் பற்றினான்.



"யார் பேருக்கு அர்ச்சனை?" அவள் மூவர் பெயர் சொல்லவே விலுக்கென நிமிர்ந்தவன் அவளை வெறித்தான்.



"நட்சத்திரம்?"



"அக்னி நட்சத்திரம்" அவர் உள்ளே செல்லவே அவன் புறம் திரும்ப வெடுக்கென தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.



"தம்பி உங்களுக்கு?" அவனும் அதே பெயர் அதே நட்சத்திரம் சொல்லவே மாறி மாறி பார்த்தவர் அமைதியாய் உள்ளே சென்று விட்டார்.



......



மரத்தடியில் வந்தமர்ந்து கொள்ள தோள் சாய்ந்தாள் தங்கை....



"குட்டிமா என்னடா?"



"அம்மாப்பா... அர்ஜு அண்ணா இருந்தா நல்லா இருக்கும்ல ணா?"



"....."



"ஐ அம் சாரி இனிமே பேச மாட்டேன்" அவன் அமைதியை புரிந்து கொண்டவள் தன் இரு கைகளையும் காதில் வைக்க மென்மையாய் சிரித்தவன் மீண்டும் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.



தூரத்திலிருந்து அவனை பார்த்து தன் கண்ணீரை நாசூக்காய் துடைத்துக் கொண்டவள்



"நோ....." கத்திக் கொண்டே ஓடி வந்த தன்னவனை புரியாது பார்த்திருக்க அவன் வருவதற்குள் இடுப்பில் சொறுகியிருந்தது ஒரு ஆடவனின் கத்தி.



இடுப்பில் குத்தியவனை இழுத்து அவன் அடித்து பந்தாட முனகியவாறே கீழே விழுந்தாள் ஆர்த்தி.



அவனை உதைத்தவன் அவளை தன் மடியில் வைத்து கண்ணத்தை தட்டினான்.



"ப...பொ...பொம்ம...பொம்ம....ஏய் இங்க பாரு பொம்ம....பாருமா" கரகரவென வழிந்தது கண்ணீர்.



"ம்....மா....மா....ஐ.... ஐ....லவ் யூ மாமா"



"பொம்ம இங்க பாரு நாம ஹாஸ்பிடல் போலாம்டா....எந்திரி"



"இ...இ...இல்ல மாமா.... எ.... எனக்கு இ...இந்த உ...உசுரு வே...வேணாம்...."



"பொம்ம ப்ளீஸ் எந்திரி"



"மாமா அ...அப்பா எ...எந்த த...தப்புமே பண்ணல....நம்பு மா..மா....அம்...மாவையும் அ...அண்ணா....அப்பறம்...அ...அப்ப...பா வயும்... நல்லா பாத்துக்கோ மாமா.... உன் பாதுகா...ப்புல வ....வெச்சிக்கோ....அவங்களுக்கு ஒன்னுன்னா.... எ....என்னால தா...தாங்க முடியாது மா...மா"



"நீ உயிரோட தான் இருப்ப... எனக்கு தெரியும்..." கிட்டத்தட்ட பிதற்றினான்.



"ஏ...ன் மாமா உ...உனக்கு என் மேல ல...லவ் வரவே இ..ல்லல்ல....ஆனா நீ காட்ன பாசம் எ...எனக்கு ல..லவ்வா மாறிடுச்சே மா...மா...உ...உனக்கு எ...என்ன புடிக்கும்னு த...தெரியும் மாமா.... பட் அது அ...அத்த பொண்ணா ம...மட்டும்ல?"



"அ...அய்யோ எனக்கு உன்ன பு...புடிக்கும் பொம்ம"



"புடிக்கும் தான் ஆனா லவ் இல்ல... ப...பட் ஐ லவ் யூ மாமா....சின்ன வயசுல இருந்து உ...உன்ன அ..அவ்வளவு புடிக்கும்....உன்னயே க..கல்யாணம் ப..பண்ணி உ...உன் மடியிலயே சாகனும்னு ஆச...என் க..கனவு நினைவாகிடுச்சு மா...மா...."



"ஏன் இப்பிடி பேசற பொம்ம...."



"நா போக மாட்டேன் மாமா....உன் பக்கத்துல தான் இருப்பேன்..... ஆ..ஆனா...மா...மா ஐ லவ் யூ டா....எல்லோரயும் பா...பாத்துக்...." தன் கைகள் கொண்டு அவன் கழுத்தை வளைத்தவள் அவன் அதரங்களுக்கும் தன் அதரங்களை பொருத்தினாள்.



***



ஹாஸ்பிடல்.....



முழுக் குடும்பமுமே நிலைகுலைந்து நின்றிருந்தது அந்த வராண்டாவில்....



தங்கையை ரக்ஷனிடம் பாதுகாப்பாய் அனுப்பி வைத்தவன் அனைவருக்கும் தகவல் சொல்லி விட்டு அப்படியே தலையை தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தான்.



"இங்க கிருஷ்ணா?" பதற்றமாக டாக்டர் வெளியே வர படக்கென எழுந்து கொண்டவன் அவரிடம் போய் நின்றான்.



"டாக்டர்..."



"நீங்க தான் கிருஷ்ணாவா?" அவன் ஆமோதிப்பாய் தலையசைக்க அவனை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றார் அவர்.



.....



"ம....மாமா...."



"பொம்ம..."



"எ...எனக்கு ஒரு க...கடைசி ஆச"



"நீ பொழச்சி வா...அப்பறம் பேசலாம்" பேசக் கூட முடியாமல் தொண்டை அடைக்க திரும்பியவனின் கையை இறுக்கப் பற்றியிருந்தாள் அவள்.



"ப்ளீஸ் பொம்ம இப்பிடில்லாம் பேசாதடி" அவள் அடுத்து சொன்ன வார்த்தைகளில் சலேரென அவள் புறம் திரும்பியவன் கோபமாக கத்தினான்.



"லூசாடி நீ....இடியட்"



"எ...எனக்கு சத்தியம் பண்ணு மாமா"



"முடியாது"



"எனக்கு த்...தெரியும் ந்...நா ஆச...பட்டது கெ...கிடைக்கும்... உன்னோட இ... இருக்க வே...வேற வழி த...தெரில மா...மா.. என் ஆசய..." அவள் பேச்சு தடை பட்டுப் போக அவளை இழுத்து தன் வயிற்றில் புதைத்தவன் கதறி அழுதான்.



அறைக்குள் கேட்ட அழுகை சத்தத்தில் வெளியே வீறிட்டார் தாய்" "லக்ஷ்மிதேவி."



அவ்வளவு நேரம் மனதில் அடக்கி வைத்திருந்த வேதனை பீரிட்டுக் கிளம்ப நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்த தந்தை" ராஜா ராமை" சட்டென வந்து தாங்கினான் அபினவ்.



"அவன் அபினவ் ஆதர்ஷ்!!!"



***



வராண்டாவில் கண் மூடி சாய்ந்திருந்த கதிரின் மனக்கண்ணில் வந்து சிரித்தாள் பேதை!!!



படக்கென விழிகளை திறந்தவனின் முன்னால் அவன் மனையாள்!!!



"மா...மா....உன் கூடவே தானே நா இருக்கேன்.... ஏன் என்ன பாத்து பேச மாட்டேங்குற?" அசரீரியாய் அவள் குரல் ஒலிக்க தன் முன் பயந்து போய் நின்றிருந்த மனைவியை வெறித்தான் கதிர்.



"எ.ஸி.பி கதிர்வேல் கிருஷ்ணா!!!"



தொடரும்.......



12-07-2021.
 
Status
Not open for further replies.
Top