All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அணங்குடை முந்நீர்

Status
Not open for further replies.

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அணங்கு பெண் துன்பம்
முந்நீர் கடல்

இந்த கதையும் கதை மாந்தர்களும் சீனதேசத்தை சார்ந்தது. பதினேழாம் நூற்றாண்டு இறுதி பதினெட்டாவது நூற்றாண்டு தொடக்கத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் அடிப்படையாகக் கொண்டது
27654


27653


அந்தி சூரியன் கடலுள் முழ்கி கொண்டிருந்தான். அதனால் தானோ என்னவோ தனது பொன்னிற மேலாடை

கடல் மேல் மிதக்க அவன் ஆழியினுள் அமிழ்ந்து கொண்டிருந்தான். நாளை மீண்டும் பூமியின் பல்லாயிரக்கான பூக்களில் செய்த பூந்துகில் தனக்கு தினமும்

கிடைப்பதால் வந்த அலட்சியம் தானோ இல்லை .பரவை அவள் மீதான போதையில் மெல்ல தன் நிலை மறந்தவனானோ

என்னவோ அவன் ஆடை ஆழியில் மிதப்பதை பற்றி கவலை கொள்ளாமல் அவளுள் புதைந்து போனான்.


இவர்கள் நிலை கண்ட புள்ளினங்கள் தன் பேடை தேடி இல்லம் திரும்பத் துவங்கியிருந்தன. அந்த படகில் அமர்ந்து இருந்தாள் .

சிங்சௌ (Ching- Cabable Chu - Pearl)

கருநிறத்தில் காற்சட்டை மேல்சட்டை தலை மூங்கில் போன்ற புல்லில் வேய்த தொப்பி அணிந்திருந்தாள். தூண்டிலில் இருந்து மீன்களை எடுத்து அருகில் இருந்த கூடையில் போட்டவள் இப்போது அந்த வேலையை விட்டு விட்டு தண்ணீரில் துள்ளிக் கொண்டு இருந்த டால்பின்லில் கண்களை பதித்தாள். என்றாலும் அவளது கவனம் நினைவு வேறு இடத்தில் இருந்தது என்பதை இல்லாத இரையை போடுவதாக ஆட்டிக் கொண்டிருந்த கரம் காட்டிக் கொடுத்தது.


"நேரம் சென்று கொண்டிருக்கிறது வீடு திரும்புவோமா? சௌ" என்று கேட்ட அந்த மூதாட்டியின குரலில் திரும்பியவள் ம் என்பதாக தலையை ஆட்டவும் படகு வீட்டினை நோக்கி சென்றது. படகில் இருந்து கீழே கம்புகளை ஊன்றி பலகைகளை கொண்டு கட்டம்பட்ட அந்த வீட்டினுள் ஏறியவள் . மீண்டும் ஒரு முறை அந்த இடத்தை கண்களால் அளந்தாள். அவள் நின்றிருந்த அந்த வீடு மட்டுமல்ல அந்த கிராமமே நீரில் மிதந்து கொண்டிருந்தது.


தென் சீனக் கடல் பகுதியின் குவாங்டேங் மாகாணத்தில் கடலின் மீது மிதக்கும் டாங்கா இன மக்களின் கிராமம் அது.


நீரில் பிறந்து நீரில் வாழும் மீன்களை போல

இவர்களும் நீரில் பிறந்து நீரில் வாழ்பவர்கள் இவர்களில் நிலத்தில் கால் பதியாமலே இறந்தவர்கள் ஏராளம். ஆண்கள் வயிற்று பிழைப்புக்கு வலைவிரித்த வீட்டில் இருந்த பெண்கள் போர்த்துகீசிய ஆங்கிலேயர் மற்றும் கடற் கொள்ளையரால் விபச்சாரிகளாக வற்புறுத்தப்பட்ட 1700களின் இறுதி 1800 களின் துவக்க காலம் அது.


சில நிமிடம் நின்று பார்த்தவள் வீட்டின் உள்ளே செல்ல திரும்பி நடந்தாள். இருள் லேசாக கவியத் தொடங்கியிருக்க அந்த படகு வீடுகளில் லாந்தர் விளக்கு எரியத் துவங்கியிருந்தது. உள்ளே நுழையும் முன் ஒரு கரம் பற்றியிழுக்க அடுத்த நிமிடம் அவளது வாள் அவன் கழுத்தின் அருகில் இருந்தது.


அவளின் வேகத்திற்கு மற்றொர்வனாக இருந்தால் இந்நேரம் அவன் உயிரோடு இருக்க மாட்டான் அதை அவனும் அறிவான் ஆகையால்தான் தன் வாளால் அதைத் தடுத்து இருந்தான் .


இறக்கி அவனை உற்றுப் பார்த்தவள் கண்களில் மெல்லிய கோபம் வர வாளை வீச அவன் அதை அனாயாசமாக தடுத்தான்.

சௌ என்ன நினைத்தாளோ


"போ (Bao) எத்தனை முறை கேட்டாலும் என் பதில் அதான் . ஆதாலால் மீண்டும் மீண்டும் என்னை தொந்தரவு செய்யாதே இதுபோல் பொறுமை எனக்கு எப்போதும் இருக்காது."


என அதை செவிமடுத்தவன் முகத்தில் லேசான புன்னகை விரக்தியில் வந்ததோ.


இப்போது அவளைத் தடுத்த தன் வாளை இறக்கினான். சோர்ந்த கரங்களுடன் உள்ளே வைப்பதை பார்த்தவளுக்கு துயரம் கவிழ்ந்தது அவள் தனது வாளை இறக்க கூட நினைவு இன்றி அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவன் விழியிலும் அவள்தான் இருந்தாள். எப்படியாவது தன் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாளா எனும் அவனின் மறுகலும் மன்றாடலும் அதன் வழி தெரிய அதைக் கண்டவளுக்கு சரியென்று தலையசைத்துவிடுவோமோ எனும் பயம் வர விழிகளை மூடிக்கொண்டாள். அவனால் தான் இளகுவதை உணர்ந்தும் தனது இலட்சியம் எது என்பதையும் தனது கட்டப்பட்ட சூழ்நிலையும் புரிய திரும்பி நின்று கொண்டவள்



"என்னை மன்னித்து விடு போ. எனது இலட்சியம் அது என் காதலை விட முக்கியம்"


ஆனால் அதன் பின்புலத்தில் தானும் இருப்பது அவனுக்கு தெரிந்துதான் இருந்ததோ. எதுவும் செய்ய இயலாது கைகட்டி பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற தனது இயலாமை நிலையை வெறுத்தவன் ஆத்திரம் மிக அருகில் இருந்த பீங்கான் சாடியில் தனது ஆத்திரத்தை காட்ட அது உடைந்து துண்டுகளானது . அதில் ஒன்று அவனது கரத்தை பதம் பார்த்தது.

"போ " என்றவள் அவன் கரத்தை பிடித்து உள்ளே இழுத்து சென்றவள் அவனை அமரவைத்துவிட்டு உள்ளே வெந்நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்தாள்.அவளுடன் மருந்து பெட்டியை மற்றோர் பெண்ணும் எடுத்துவந்தாள்.

" மருந்து பெட்டியை வைத்துவிட்டு செல்" என்றதில் அவள் அவசரமாக அவனை ஆராய்வதை விடுத்து மருந்து பெட்டியை வைத்துவிட்டு வெளியே சென்றாள். அதன்

பிறகு கதவை தாளிட்டு வந்தவள்.


வெந்நீர் பாத்திரத்தை அருகில் இருந்த முக்காலியில் வைத்து விட்டு பருத்தி துணியை வெந்நீரில் முக்கி பிழிந்து காயத்தை துடைப்பதற்காக அவன் கரத்தை பிடிக்க அவனோ வெடுக்கென்று இழுத்துக் கொண்டவன் எழந்து கொள்ள. அவள் மீண்டும் அவன் தோளை அழுத்த

ஸ் ... என்றான் வலி தாங்காது .இத்தனை நேரம் அவன் முகம் மறைத்து வைத்திருந்த வேதனையை அவள் கை அழுத்தியதில் விலகிவிட மீண்டும் அவன் கொணர்ந்த இறுக்கம் பயனற்று போனது.


அவனது மேல் உடையை கழற்றுவதற்காக கை வைக்க அவளது கரத்தை பிடித்துக் கொண்டவன்


"வேண்டாம் சௌ எனது இந்த காயங்களுக்கு மருந்திடாதே இது இந்த மனம் போல் அதுவும் காயத்தோடே இருக்கட்டும். இல்லை எனில் இரண்டும் உன்னை நாடும் சித்திரவதைக்கு இந்த ரணங்களின் வாதை பரவாயில்லை."


அவளோ

"போ என்னைப் பார்" என்றாள். அவளைப் பார்த்தவன் மனம் அவள் வழி செல்ல மெல்ல அவன் கரு நிற மேலாடையை கழற்றியவள் அதிர்ந்து போனாள். உள்ளே இருந்த வெண்ணிற பருத்தி ஆடை முழுவதும் இரத்தில் தோய்ந்து செந்நிறமாகி இருந்தது. அதை மெல்ல அவிழ்க்க அது காய்ந்து காயங்களுடன் ஒட்டியிருந்ததிலேயே இது இப்போது ஏற்ப்பட்டதில்லை என்பது தெளிவாகப் புரிய

பேசாமல் வெந்நீரில் துணியை முக்கி பிழிந்து அதை வைத்து காயங்களை துடைத்தாள். வலித்தாலும் பொறுமையாக இருந்தவன் அடுத்து அவள் மருந்துக் குப்பியை கையில் எடுக்க அவளது கரத்தை பிடித்து இழுத்ததில் சௌ அவன் மடியில் இருந்தாள். ஆவேசமாக நெருக்கி அவளை அனைத்துக் கொண்டான்.

"சௌ எனது காயங்களின் காரணமும் மருந்தும் நீ தான் எடுத்துக் கொள்ள வா ப

என்ற அவனை அவள் மறுக்கவும் இல்லை விலகவும் இல்லை.

" இன்று வரை நான் உனது மட்டும்தான் போ"

என்பதை இதழ் பிரியாமல் அவன் கரங்களுக்கு தன்னை ஒப்படைத்து நின்றவளின் செய்கையில் அவளது சம்மதத்தை புரிந்து கொண்டவன் அவளை கரங்களில் ஏந்திக் கொண்டான். மிக அழகாக விரிக்கப்பட்ட மஞ்சத்தில் நுழைந்தான்.


அந்த பூக்களின் விடுதியில் மதுவும் மாதுவும் தாரளமாய்த்தான் கிடைத்தது. ஒரு பக்கம் சூதாட்டம் வேறு மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு அறையில் தனது தேவையை தீர்த்துக் கொண்டிருந்த அந்த வியட்நாமிய வீரனிடம் தனக்கு தேவையானதை பெற்றுக் கொண்ட ஆன் எனும் பெயர் கொண்ட அவள் அவன் மயங்கி சரிந்ததும் அவனை விட்டு விலகியவள் பின் கட்டுக்கு விரைந்தாள்.


"சௌ" என அவள் அழைக்க பணியாள் ஒருவன் "தலைவி உள்ளறையில் " என அவளது சயன அறையை காட்ட அதனுள் நுழைய அனுமதி தனக்கு இல்லை என்பதை அறிந்தவளாதலால் "புழு கிடைத்து விட்டது."

என்று மட்டும் சௌ விடம் கூறு . மற்ற விவரங்களை நான் பிறகு கூறிக்கொள்கிறேன்.என்றவள் திரும்பும் முன் அந்த பணியாளரின் தலை வெட்டப்பட்டிருந்தது. இவளது ஆடையின் நுனியை தனது வாளின் இரத்தத்தை துடைத்தபடி வந்த சௌ



"என்ன விஷயம் ஆன் ?" என்று அருகில் இருந்த நாற்காலியில் அமரந்தாள் சௌ அந்த விடுதியின் தலைவி. ஆன் என்ற அந்த பெண்னோ தன் கண்முன் நிகழ்ந்ததை கண்டு பயந்து போய் இருக்க


"என்ன அவன் எப்படி எதற்கு இறந்தான் எனத் தெரிய வேண்டுமா ?"


அவள் கேட்ட விதத்தில் அடுத்து தன் நிலை இதுவாக வாய்ப்பு உண்டு என்பது புரிய திக்கி தினறி வந்த விஷயத்தை கூறிவிட்டு தன்னறைக்கு ஓடினாள். அதில் புன்னகைத்தபடி எழுந்தவள்.


"நான் எங்கு இருக்கிறேன் என்ன நினைக்கிறேன் என்ன செய்கிறேன் என்னை என் அனுமதியின்றி பிறர் அறிவது எனக்கு பிடிக்காது என்பதை உன்னை அனுப்பியவனுக்கு எத்தனை முறை கூறுவது முட்டாள்"


என்று இறந்துகிடந்தவனிடம் கூறியவள்

"யாரங்கே என்றதும் ஓடிவந்தவர்களிடம் இவனை உப்பு நீரில் நனைத்து வாசலில் இரண்டு தினங்கள் தொங்கவிடுங்கள் பிறகு கடலுக்குள் வீசுங்கள்"


என்றவள் எழுந்து சென்று விட்டாள்.
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2

முன்னிரவில் அந்தக் கடற்கரையோரமாய் தற்காலிகமாக தங்குவதற்கு என போடப்பட்டிருந்த கூடாரத்தின் பந்தங்கள் எரிந்து முடிந்த அளவு வெளிச்சத்தை தந்து கொண்டிருக்க உள்ளே கண்ணாடி ஜாடியினுள் ஏற்றப் மெழுகுவர்த்திகள் அந்தக் காற்றுக்கும் அசையாமல் எரிந்து கொண்டிருந்தது.அந்த கூடாரம் அதன் அருகிலல் சில கூடாரங்களிலிருந்தும் சற்று பெரியதாக தனித்து இருந்ததிலுமே இது தலைவனுக்கானது என்றவித்துக் கொண்டிருந்தது.

பணியாளர்கள் நிலையில் வரும்
சிறு கொள்ளையர்கள் ஆங்காங்கே தீமூட்டி அமர்ந்து மதுவையும் உணவையும் ருசித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் அருகில் அவர்களது ஆயுதம் மற்றும் சிலரிடம் துப்பாக்கி இருந்தது.அதில் ஒருவன்

"சீனாவை சிங்(Qing) அரச வம்சம் ஆண்டு வந்தாலும் வியட்நாமுக்காக அவர்களை எதிர்க்கும் நமது தலைவரது அண்ணன் மிகவும் தைரியசாலிதான்"

அப்போது அவர்களிடையே அமர்ந்திருந்த வயதான ஒருவன்

"ஆமாம் நாம் தர்ம காரியம் செய்கிறோம் பார் அத்தனையும் அவர்கள் தரும் பொன்னிற்காக அதில் நாம் கொள்ளையடிக்கும் கப்பல்கள் மூலம் அரசாங்கத்திற்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் இதன் மூலம் தேசத்தை பலவீனப்படுத்தி தங்களது தோல்விக்கு பழிவாங்கவும் முயல் கிறார்கள் அவர்கள் "

என அவனை பார்த்து சிரித்தபடி தங்கள் முன் இருந்த நெருப்பில் வெந்து கொண்டிருந்த மீனை எடுத்து ஊதத் துவங்கனான்.

" என்ன உண்மையாக வா சொல்கிறாய்? கிழவா"

"இதில் பொய்யுரைக்க என்ன இருக்கிறது? இது அனைவரும் அறிந்த உண்மைதானே
நமது தலைவர் மற்றும் அவரது தமையன் இருவரும் நீண்ட காலமாக வியட்நாமிய அரசாங்கத்திற்கு விசுவாசமாய் இருப்பதால் தான் அவர்களது அரசர் கப்பற் படை தளபதி என்ற கௌரவத்தை தந்துள்ளனர்."

என்றவன் தனது மதுக் குடுவையில் இருந்து சில மிடருகள் விழுங்கினான். அப்போது இளவயதினன் ஒருவன் பின்னால் திரும்பி ஜிங்யி கூடாரத்தையும் பிறகு இவர்கள் பக்கம் இருந்த உபதளபதியின் கூடாரத்தையும் கண்கள் மின்னப் பார்த்தான். பிறகு தனது குடுவையும் சில மீன்களையும் காட்டி "நமக்கு இதுதான் மிச்சம். "

இப்போது வயதானவன்
"ஆனால் நீ நினைப்பது போல் இல்லை. நமது நிலை பரவாயில்லை நமக்கான பங்கை உப தளபதி சரியாக பெற்றுக் கொடுத்து விடுகிறாரே. " என்றவன் மேலும்
சில துண்டுகள் இறைச்சியை உண்டவன்
அவன் கண்கள் போன பாதையும் அதில் தெரிந்த பேராசையையும் அறிந்து கொண்டவன்

"நீ நினைப்பது போல் அந்த இடம் சுலபம் இல்லை மேலும் அது தலைவருக்கான உரிமை. உனது இந்த வார்த்தை நம்மைத் தாண்டிப் போனால் இன்றே கூட உனது இறுதி நாளாக இருக்கலாம். "என்றான் கண்டன குரலில்.


தலைவனுக்கான கூடாரத்தின் உள்ளே இருந்தவனும் அதுபோன்ற ஒருவன் தான். ஜாங் யி (zheng yi) தென் சீனக் கடல் பிராந்தியத்தின் வெகுவாக அறியப்பட்ட கடற்கொள்ளைகாரர்களில் ஒருவன் . ஆஜானு பாகுவான தோற்றத்தில் உயரமும் பருமனும் சரியாகத்தான் இருந்தான். உயர் குடும்பத்திற்கான பட்டால் நெய்யப்பட்டு நூல் வேலைப்பாடு செய்யப்பட்ட கால் வரையிலான நீண்ட அங்கி உள்ளே கால்சராய் இடையில் பட்டை
என அமர்ந்து இருந்தவன் கையில் மது இருந்தது. அவன் முன்னிருந்த மேசையில் ஏதோ கறிவகைகள் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை சுவைத்தபடி மதுவருந்திக் கொண்டிருந்தான்.
இருந்தாலும் அவன் சிந்தனை அதில் இல்லை.

எதையோ நினைத்தபடி உள்ளே நடை பழகிக் கொண்டிருந்தவன் வெளியே வந்தான். சில்லென்ற காற்றும் சூழலும் முன்னிரவை முடிவிற்கு வந்து நேரமாகிவிட்டதை உணர்த்த. தனது வாயிலில் இருந்து உப தளபதியின் கூடாரத்தை பார்த்தவன் அதை நோக்கிச் செல்ல துவங்கினான். அதைக் கண்ட அந்தக் கிழவன் ஜாங் யிடம் வந்தான் என்பதை விட கிட்டதட்ட ஓடி வந்தான்.
கூடார வாயிலில் அவனை மறித்தாற்போல் நின்றவன்

"தலைவருக்கு வணக்கம் . இடையூறுக்கு மன்னிக்கவும்."

என்றவனது இடையீட்டில் ஜிங் யி நிற்க வேண்டியதாகிவிட அதனை பயன்படுத்திக் கொண்டவன்

"உப தளபதி காயங்களின் காரணமாக எழு முடியாமல் படுத்து இருக்கிறார். மேலும் மருந்தின் வீரியத்தினால் உறங்கிக் கொண்டு இருக்கிறார். இப்போது தான் மருந்திட்டு விட்டு வந்தேன். "
.
என்று ஒப்புவித்து. அவரை திருப்பி அனுப்ப முயன்றார். ஜாங் யி யோ .

"விலகி நில் லீ " என்றதில் என்ன ஆகுமோ என்ற பயத்தில் உள்ளம் நடுங்க விலகி நின்றிருந்தான். உள்ளே நுழைந்த ஜியாங் கூடாரத்தின் முன் பகுதியில் யாரும் இல்லை என்றதும் அடுத்த அறைபோன்ற அந்த பகுதியில் நுழைந்தவர் . அங்கே கட்டிலில் மூடிப் படுத்திருந்தவனை போர்வையை விலக்கிப் பார்க்க அங்கே உபதளபதி உறங்கிக் கொண்டிருந்தான்.

இப்போது லீயும் அவனைக் கண்டதில் ஆசுவாசம் ஆகயிருக்க வெளியே வந்த ஜாங் யி

" அவனை நாளை வந்து என்னைப் பார்க்கச் சொல்."
என்ற விட்டு திரும்பிச் சென்று விட்டார் . ஜாங் யி தனது கூடாரத்தினுள் நுழைவதை பார்த்த பிறகே லீ., இவ்வளவு நேரம் நிறுத்தியிருந்த மூச்சை இழுத்து விட்டார்.

கோபத்துடன் உள்ளே சென்றவர்.
"எழுந்து கொள் நீ உறங்கவில்லை என்று நன்றாக தெரியும் "
அவனோ அசைவின்றி இருக்க அருகில் இருந்த ஜாடி நீரை எடுத்து அவன் முகத்தில் ஊற்றப் போக அவரது கையை பிடித்தவாறு எழுந்து அமர்ந்தவன்
"தலைவர் கூட நம்பிவிடுகிறார் லீ உங்களை ஏமாற்ற முடியவில்லை."
" ம் நான் உன்னை அருகில் இருந்து வளர்த்தவன் என்னிடமே உனது வேலையைக் காட்டினால் செல்லுபடியாகுமா? "
என்றவரை அனைத்துக் கொண்டான்.அவனைத் தள்ளிவிட்டவர் பொய் கோபத்தோடு
" உள்ளே தலைவர் வந்து பார்க்கும்போது நீ மட்டும் இல்லை என்றால் நீயும் உன்னோடு சேர்த்து எனது உயிரும் போயிருக்கும்"
"அது தான் சரியான சமயத்திற்கு வந்து விட்டேனே " என மீண்டும் அவரை கட்டிக் கொள்ள அவரோ
"போதும் நான் என்ன உன் காதலியா கட்டிக்கொள்ள. ?"

"அன்பே லீ எனது ஆருயிரும் நீ வா நாமிருவரும் போவோம் இனி"

என கர கர பெண்குரலில் வசனம் பேச லீ அவனது முன் நெற்றியில் சுண்டிவிட அதில்
ஸ் என்றவன் "நீ என் ஆருயிர் அல்ல வேறு உயிர் என்னை அரை உயிராக்குபவன் "
என முகம் திருப்ப அவரோ

"நேற்று அந்த வணிகக் கலத்தில் இருந்தபடி இதோ வருகிறேன் என்று சொல்லிச் சென்றவன் இன்று இந்நேரம் வரை வரவில்லை. உன்னை காணதது ஒரு புறம் தலைவர் கேட்டால் என்ன செய்வது என்று தவித்து விட்டேன். எப்போது வந்தாய்? "

"சற்று முன்பு நீங்கள் பேசிக் கொண்டிருக்கையில் தான் வந்தேன். மிகவும் பயந்து விட்டீர்களா?"

"ம் இல்லை எப்படியும் வந்துவிடுவாய் என்று தெரியும்"
என்றுஅவனது தலையை மெல்ல நீவியவர்

"நீ ஓய்வு எடுத்துக் கொள்.நான் வெளியறையில் படுத்துக் கொள்கிறேன் ".

என்ற விட்டு எழுந்து சென்றார். அவர் செல்வதை பார்த்தபடி இருந்தவன் மீண்டும் படுத்து கொண்டான், என்றாலும் உறக்கம் வரவில்லை.

3

ஃபோ தனது அறையில் கண்ணாடி முன்பு கால்சராயுடன் நின்றவன் தனது மார்பின் வடுக்களையும் பார்த்தவன் கைகள் அதனை வருட அதற்கு மருந்து இட்டவளையும் நினைத்தவன் லேசாக சிரித்தான். இருந்தாலும் தனது சூழல் புரிய
கண்கள் கலங்கியது என்றாலும் நிகழப் போவது எதையும் தடுக்கவோ மாற்றவோ அவனுக்கு ஏது அதிகாரம் .அதற்குமேல் அங்கு நிற்க மனமில்லாதவன் தனது வெள்ளை நிற பருத்தி மேலாடையையும் பிறகு மேல் அங்கியும் அணிந்து கொண்டவன் அதன் மேல் இடுப்பில் பட்டையையும் கட்டி முடித்தவன் தனது வாளுடன் வெளியேறினான்.

மணப் பெண் சிங் சௌ
தயாராகிக் கொண்டிருந்தாள். பாரம்பரிய வழக்கப்படி சிவப்பு நிற அங்கி போன்ற பட்டினாலான உடையை அணிவித்துக் கொண்டிருந்தினர்.அதில் தங்க இழைகள் கொண்டு வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதை அணிந்து கொண்டவள் கண்ணாடியில் தனது அலங்காரத்தை சரிபார்த்துக் கொண்டாள்.
" மணப் பெண் முகம் மெல்லிய துணியால் மூடப்பட வேண்டும்" என்று வயதான பணியாள் ஒருவள் கூற
"ஆகட்டும்." என்றவள் முகம் மெல்லிய செந்நிற துணி கொண்டு மறைக்கப்பட்டது.

பேரழகி என்பதற்கான தகுதிகள் அனைத்தும் இருந்தாலும் அத்தனையும் தாண்டி அவள் முகத்தில் இருந்த தீட்சண்யம் அவளது புத்திகூர்மையை எடுத்துரைக்கும்.
அவளது மனமோ ஆழ்கடலின் ஆழங்களை உள்ளடக்கியது. அந்த மலர்களின் விடுதியாக இருந்த அவளது பிறந்த வீட்டை சுற்றிப் பார்த்தாள். இப்போது தானே அது விடுதி இதற்கு முன்பு அவளது வீடு அல்லவா? அந்த நாள் பெரு நெருப்பு எரிவதும் பொசுங்கும் உயிர்களின் அலறலும் இப்போதும் கேட்க அதை விழியில் வழியாமல் நிறுத்தி இதயத்தில் தேக்கினாள்.

அன்று அந்த மொத்த கிராமமும் சிங் சௌவின் இல்லத்தில் தான் இருந்தது.
"மணமகன் வீட்டிலிருந்து பரிசுகள் வந்து விட்டன. " எனவும் பெண்கள் அங்கே சென்று விட்டனர். பெரிய தாம்பாளங்களில் பரிசுப் பொருட்கள் சிவப்பு நிற துணி கொண்டு மூடப்பட்டிருந்தன. அதைப் பார்த்த பெண்கள் ஆண்கள் அனைவரும் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது உள்ளே வந்தவன்
"மணமகளுக்கு பல்லக்கு தயார்."
எனவும் அவளது தம்பி முறை வரும் ஒருவன் அவளை பல்லக்கில் ஏற்றி விட பயணத்தை துவக்கினாள்.

சிங் சௌ தனது இடது கையை உயர்த்த அவள் அணிந்து இருந்த சிவப்பு அங்கியின் கை பெரிதாக தொங்க அதனுள் இருந்து அந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தவள் மீண்டும் அதனை உள்ளே வைத்தாள்.அது அவள் கேட்ட திருமணப் பரிசு.


அந்த இடம் திருமணம் என்பதற்கான அத்தனை ஏற்பாடுகளோடும் இருந்தது. செந்நிறத்தில் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மணமகன் தனது அறையில்
தன் முன்னிலையில் நின்றவனிடம்
' என்ன கூறுகிறாய்?"
"ஆம் தாங்கள் அனுப்பிய ஆள் இறந்து விட்டான்."
"எப்படி ?"
"வாளால் வெட்டப்பட்டு பிறகு இரு தினங்கள் விடுதி வாசலில் தொங்க விடப்பட்டு… "
"என்ன காரணம் கூறப்பட்டது?"
"உரிய பொருள் தரப்படவில்லை. விடுதிப் பெண்களை மிரட்டி…"
" போதும்."
என்றவன் தனது மேல்ஆடையை அணிந்து கொண்டான். எதையோ நினைத்து புன்னகையுடன் திரும்பி
"குவாங் சோ இதற்காகவே அவள் மீதான ஆசை கூடுகிறது. தான் எத்தகைய சூழலில் இருக்கிறோம் என்பதை தெரிந்தும். நான் அனுப்பி வைத்தவன் என்பதை அறிந்தும் எவ்வித தயக்கமும் இன்றி அழித்தொழிக்கிறாள் பார். "

மிங் தன்னெதிரில் இருந்த சௌவிடம்

" அவளும் இவர்களும் முட்டாள்கள் இப்படியா எளிதில் சிக்கிக் கொள்வது… "என சலித்து கொண்டாள்.

அங்கே சிங் சௌ பல்லக்கில் தன் தோழியிடம்

"இல்லை மிங் இவனை இத்தனை நாட்களாக விட்டு வைத்திருந்தேன். ஒருவனாவது இருந்தால் இறப்பு எண்ணிக்கை குறையுமே இனித் தேவையில்லை ஆகையால் தான் முடித்து விட்டேன்"

என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே இறங்க வேண்டிய இடம் வந்து விட்டதை அறிந்த மிங் மேலும் எதையும் வாயை திறந்து கேட்கவில்லை. அவளுக்குத் தான் தெரியுமே நிலைமை எதுவென . சௌ தானாக கூறினால் அன்றி அவளாக எதையும் கேட்க மாட்டாள் . தன் இடம் எதுவென்று அறிந்தவள் அல்லவா

இங்கு குவாங்சோ

"ஆனால் இவனை கொன்றாலும் மீண்டும் ஒருவனை அனுப்புவோம் தானே" எனவும்

"இனி அதற்கு தேவையில்லை அவளே இங்கு வந்துவிடுவாள்.பிறகு என் கண்ணுக்குள் வைத்து கண்காணித்துக் கொள்வேன்"

என்று கூறிக் கொண்டிருக்கும் போதே மணப் பெண்ணின் பல்லக்கு வந்துவிட்டதற்கு அறிகுறியாக வான வேடிக்கைகள் வண்ணமயமாக மலர்ந்து ஒளி தெளித்தது.அதனைக் கண்டவன்

"சரி வா நேரமாகிறது. என் தேவதையை எதிர் கொண்டு அழைப்போம் வா"
என வாயிலை நோக்கி விரைந்தான்.

பல்லக்கிலிருந்து இறங்கி வந்தவளை எல்லோரும் வரவேற்க்க இரு கைகளையும் நெஞ்சுக்கு நேராக ஒன்றன் மீது ஒன்றாக வைத்து முன்புறம் சற்று குனிந்து வணங்கினாள்.

இப்போது மணமகன் அவளருகில் வந்து அவளை தூக்கிக் கொண்டான். பிறகு திருமணத்திற்கான சம்பிரதாயங்கள் தொடங்க.

இருவரும் அனைவரின் முன் நிற்கவும்.
"ஜாங் யி வாகிய நான் சிங் சௌ எனும் இவளை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். வாழ்நாள் முழுவதும் அவளுக்கு உண்மையாகவும் நண்பனாகவும் இருப்பேன் என உறுதிகூறுகிறேன்."

"சிங் சௌவாகிய நான் ஜாங் யி எனும் இவரைக் கணவனாக ஏற்கிறேன். அவரது வாழ்நாள் முழுவதும் அவருக்கு உண்மையாக இருப்பேன் என்று உறுதிகூறுகிறேன்"

என்றவர்கள் தங்கள் கரங்களை நெஞ்சுக்கு நேராக உயர்த்தி முன்புறம் லேசாக வளைந்து திசைகளை ஒருமுறை வணங்கி மரியாதை செலுத்திய பின் முன்னோர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட அந்த நினைவுப் பலகைகளை வணங்கி மரியாதை செலுத்தினர். பிறகு கூடியிருந்த பெரியவர்களை வணங்கிய பின் எதிரெதிராக நின்று இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கிக் கொண்டனர்.

பிறகு ஒயின் நிரம்பி இருந்த அந்த கோப்பையை ஒரு கரத்தினுள் மற்றொறுவர் நுழைத்து (Cross hands ) இருவரும் அருந்தினர். பிறகு சௌவின் கரத்தை பிடித்தவன் அனைவருக்கும் முன்பும் வந்து

இவள் இனி ஜாங் சௌ எனது மனைவி எனில் என்னில் பாதி எனவே எனது சொத்துகள் மற்றும் கப்பல்களில் பாதி அவளுக்கு உரிமையானது . அதற்கான பத்திரத்தில் முத்திரையிட்டு திருமணப் பரிசாக வழங்குகிறேன்.என்று அறிவித்தவன் அவளிடம் இருந்து பத்திரத்தை வாங்கி அவனது முத்திரையை பதித்து கொடுத்தான்.
இதில் அவளது மக்கள் மகிழ்வில் ஆர்பரித்தனர் . அதைக் கண்டவன்
திரையின் பின் அவள் என்ன உணர்வாள் என்று அவதானிக்க நினைத்தானோ சில நொடிகள் கூர்ந்து நோக்கியவன்

"மீண்டும் இந்த இனிய தருணத்தில் மற்றுமொரு நற்செய்தியை அறிவிக்க விழைகிறேன். எனவும் மீண்டும் ஒரு நிசப்தம் உங்கள் உபதளபதியும் என்னால் வளர்க்கப்பட்ட ஜாங்ஃபோ வை எனது அதிகாரப்பூர்வ வாரிசாக அறிவிக்கிறேன்."

என்றதும் அவனது வீரர்களுக்கு கொண்டாட்டம் . ஃபோ மீனவக் கிராமத்தை சார்ந்தவன் பதினைந்து வயதில் ஜாங் யி னால் கடத்தி வரப்பட்டு கட்டாயப்படுத்தப்பட்டு கொள்ளையனாக்கப்பட்டவன் . அவனை தன் வாரிசாக அறிவித்ததில் லீக்கும் மற்றவர்களுக்கும் அத்தனை சந்தோஷம் . திருமண விழாவில் மது விருந்தும் மகிழ்வும் கரைபுரண்டோடியது.

செள மற்றும் ஃபோ இருவரையும் தவிர அவளும் ஒரு விதத்தில் இதை எதிர்பார்த்தாள் தான் இனி ஃபோவை நினைக்க முடியாது. தனக்கு உரிமை கிடையாது என்பது போன்று அதனை தாங்கிக் கொள்ள தன்னை ஆயத்தம் செய்திருந்தாள் ஆனால் தனது காதலனை தனக்கு மகனாக மாற்றப்பட்டு அவர்களுக்கு ஆயுதமாக்குவான் என்று எதிர் பார்க்கவில்லை. இனியும் அவன் உறவுதான் உரிமைதான் ஆனால் அவர்களின் இணைவு ?? அதில் கண்கலங்கினாலும்
தனது மக்களை பார்த்தவள் எதுவும் நடக்கலாம் என்பதும் அவள் அறிந்தது தான். வந்தாயிற்று இனி அவனைப் பற்றி எண்ணக் கூடாது ஃ போவையும் அவன் நினைவுகளையும் மூடி வைத்தாள்.

ஆனால் இவர்களின் உண்மை நிலை நடந்தவை அறிந்தவள் அல்லவா மிங் நடப்பதில் இரு கண்ணும் நீர்சொரிய நின்றாள்.

ஜாங் ஃபோ மது அருந்திக் கொண்டிருந்தான் இத்தனை போதையிலும் தன் நினைவில் அகலாதவளை தன்னிலையற்ற நிலையிலும் நினைக்க இயலாதபடி மாற்றிய ஜாங் யியை எண்ணிச் சிரித்தானோ இல்லை தண்ணீரைத் தேடும் அவன் வாழ்வில் நாவில் வீழ்ந்த துளி தேனாய் அமைந்தது தன் காதல் என எண்ணியிருக்க விதி இனி அது மகன் மாற்றியிருந்த விந்தை கண்டு

சிரித்தானோ
 
Last edited:

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நண்பர்களே உங்களுக்கு புதிய கதையின் அடுத்த அத்தியாயங்களுடன் வந்து விட்டேன் படித்து விட்டு பகிர்ந்து கொள்ளுங்கள்

 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
4
முதலிரவு அறையில் அமர்ந்திருந்தாள்சௌ.
அவளிடம் வந்து நின்றான் ஜாங் யி. வெற்றி பெற்றவனின் மகிழ்சி அவனிடம் மதுவின் பிடியில் வேறு இருந்தான்.ஒற்றை கரத்தால் அவளைப் பிடித்து இழுத்தான்.

அவன் இழுத்ததில் ஈர நிலத்தின் அப்போது ஊன்றிய கொடி சிரமமம் இல்லாமல் கரம் சேருவது போல் அவள் ஜாங் யின் மீது மோதி நின்றாள்.அவனோ மோகத்தின் பிடியில் இருந்தான்.அவளை அனைத்து இதழ் மீது வலியப் பதிந்த அவனை அவள் விலக்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை.

அவளிடம் பதில் வினை இல்லை என்றதும்.
விலகியவன் அவளை நிதானமாக உற்றுப் பார்த்தான்.அவள் விழிகள் எதுவும் பேசவில்லை மெளனமாக இருக்க அதை அவன் சம்மதமாகக் கொண்டானோ சாதரணமாகவே அவளிடம் மயங்கியவன் அவன் இதோ இன்று மணப் பெண்ணாக மனைவியாக அவனுக்காகவே அலங்கரிக்கப்பட்ட அவளைப் காண காண அவன் மேகத்தில் தான் நின்றான்.

" பூக்களில் தேன் நிறைந்து பார்த்திருக்கிறேன். ஆனால் முத்துத்களும் பவளங்களும் தேன் சொரியக் கண்டதில்லை உன் இதழ்களை தீண்டும் வரை. பூக்கடல் ஈன்ற முத்துப் பூவோ நீ. வான் நிலவாய் ஒளிரும் வெண்தாமரை உன் முகம். நிறமில்லா நீர் என்றாலும் பெரும் பரப்பில் நீல நிறம் கொள்ளும் செஞ் சூரியன் தீண்ட சிவந்து போவது போல் உன் தேகமும் வெள்ளை நீரால் செய்தது போலும் நான் தீண்ட சிவந்து போகிறதே "

என அவளை வர்ணிக்க இத்தனை போதையிலும் தன் நிலை இழக்காமல் தன்னை நிதானமாக ரசித்து வர்ணிக்கும் அவனை இமையாமல் பார்த்தாள். அவள் விழியில் சிறு வியப்பு

அவள் பார்வையில் நெருங்கி "உன் அழகு ஊமையையும் பேச வைக்கும் எனில் நான் கவித்துவமாக வர்ணிப்பதில் வியப்பதேன்?"

இருவிழிகளிலும் முத்தம் வைத்தான். அதில் சௌ தன் விரல்களை இறுக்கிக் கொண்டாள் முகத்தில் கல் போன்ற பாவனை போய் அருவருப்பு . விழிகளில் முத்தம் வைத்த அவனோ அவளுடன் அடுத்த கட்டத்திற்கு செல்ல முனைந்தான் கழுத்து வளைவில் முத்தமிட்டான் மீண்டும் ஆதரிப்பும் எதிர்ப்பும் அற்ற அதே உடல்மொழி அவளிடம் இப்போது மீண்டும்
ஏதோ தடுத்தது அவனை சற்று தள்ளி அமர்ந்தவன் ஆராய்ச்சியாக அவளைப் பார்த்தான். அவள் அழகு தூண்டத்தான் செய்தது என்றாலும் அவன் முன்னேறவில்லை. சற்று யோசித்தவனுக்கு புரிந்தது அவள் விழிகளில் அவனுக்கான காதல் தேடல் இல்லை ஆகையால் அவள் உடல் இவன் தீண்ட குழையவில்லை.
ஆத்திரம் பொங்க அவளிடம்

" நீ என் மனைவி இது நமது முதலிரவு என்பதை நினைவில் கொள் "

அதில் இதழ் புன்னகையுடன் மிளிர அவனைப் பார்த்தவள் " ஆம் நான் உங்கள் மனைவிதான் ஆகையால் தான்... இல்லை எனில்... ."
என்றவளின் பார்வை அருகில் இருந்த குறுவாளில் பதிய அது உணர்த்திய செய்தியை அறிந்தவன்

"இந்நேரம் நீங்கள் உயிரோடு இருக்க மாட்டாய். என்று தானே கூற வருகிறாய் அது அத்தனை சுலபம் அல்ல மேலும் மலர்களின் விடுதியில் இருந்தவள் நீ உனக்கு இது புதிதா என்ன சமூகத்தில் உங்களுக்கான பெயர் என்ன பணி என்ன என்பதும் தெரியும் அல்லவா?
உனக்கு நான் அந்த பெயரிலிருந்து அந்த இடத்தில் இருந்து எனது மனைவி எனும் அந்தஸ்தை சட்டபூர்வமாக வழங்கியுள்ளேன்."

என்றவனின் கண்களை பார்த்தாள் அதில் இரையை விட மனம் இல்லாத பசித்த புலியின் பார்வையின் பளபளப்பைக் கண்டவள் ஏளனத்தை தன் விழிகளுக்கு தந்தாள்.

" சட்டபூர்வமாக… ம்ஹூம் உண்மை.உங்களுக்கு உண்மையானவளாகவே நடந்து கொள்வேன் . ஆனால் காதலியாக நடந்து கொள்ள முடியாது இந்தக் கண்களில் உங்களுக்கான காதலை எதிர்பார்க்காதீர்கள் அது கிடைக்காது. இந்த உடல் உங்களுக்கு முழு உரிமை அதனால் உங்களை தடுக்க மாட்டேன். ஏனெனில் நீங்கள் கூறியது போல்
மலர்களின் விடுதியில் இருந்தவளான எனக்கு இனி மனைவி எனும் பெயரில் உங்கள் ஒருவரை மட்டும் மகிழ்சி படுத்துவது பாக்கியம் அல்லவா?
ஏனெனில் சமூகத்தில் எனது பெயரை அந்தஸ்தை மாற்றிய தனிப் பெரும் வள்ளல் அல்லவா தாங்கள்."

அவன் கூறியதையே கூர்வாளாய் திருப்பியவளின் குரலில் தொணித்த போலி மரியாதையிலும் பரிகாசத்திலும் அவன் மனம் சினத்தின் விழிப்பில் இருக்க

"சிங் சௌ வரம்பு மீறிப் பேசுகிறாய். இதன் விளைவுகள் மோசமாக இருக்கும்."
என எச்சரித்தான்.

"இனியும் கீழாக என்ன இருக்கிறது. என் வாழ்வில். ஆனால் அதற்கு காரணமான நீதானே சரிசெய்யவும் வேண்டும்.
அதற்காகத் தான் இந்த திருமணம்."

என்றாள் அவன் செய்த சதிகளை மனதில்
கொண்டு வந்த அது அவள் வார்த்தைகளை கனலாக கனிய வைத்தது. பல கோடி ஆண்டாக ஆறாத பூமியின் நெருப்பை அவளுக்குள்ளும் ஊற்றியது அவன்தானே அதன் பலனை அனுபவித்து தானே ஆகவேண்டும்.

இப்போது அவனுக்கும் அவளின் கடந்த காலம் அவள் யார் என்பதும் நினைவுக்கு வந்தது கூடவே தன் காதலை உபயோகித்து கொண்டாள் என்பது புரிந்தது. கண்கள் சிவக்க அழுத்தமாக உரைத்தான்.

"துரோகி "

"துரோகியா நானா எனில் தாங்கள் யார்? கொள்ளைகாரர் தவறு தவறு வியட்நாமிய லீ அரசரின் தளபதி"

எனப் போலியாக பணிந்தவளை கண்டவன் கண்கள் சினத்தில் பளபளத்தன. அதனைக் கண்டவள் திருப்தியாக புன்னகைத்தபடி நிதனாமாக கட்டிலின் இந்த புறம் இருந்து மெல்ல ஆனால் ராணியின் அவன் முன் தோரணையுடன் வந்தாள்.

"இத்தனை சீக்கிரம் அந்தப் பட்டத்தை தராதீர்கள் இன்னும் சந்திக்க எவ்வளவோ உண்டு "

"துரோகி எத்தனை சுலபமாக கூறிவிட்டீர்கள்.ம்ஹீம் துரோகிகள் . உங்களுக்கு ஒன்று தெரியுமா துரோகிகள் பிறப்பால் வருவது இல்லை. உன் போன்ற வலியவர்களின் ஆணவத்தில் ஆசையில் அதிகார வெறியில் அழிக்கப்பட்ட என் போன்ற எளியவர்களின் கண்ணீரில் உருவாக்கப்படுகிறார்கள்."

இப்போது அவள் முகம் அவனுக்கு மிக அருகில் இருக்க இப்போதும் அவள் கண்களில் அழகினில் அவன் தொலைந்து போனான்.ஆசை மிக

"உன் மீதான எனது காதல் என்னிடம் எதுவும் தவறில்லை என்கிறதே. இந்தக் கண்களில் எனக்கான காதலை கண்டு விடும் ஆவல் மீதூற அதற்காக எதையும் செய்ய வேகம் மிகுகிறது. "

என எட்டி அவளை அனைக்க முயல இரண்டு அடிகள் பின்னால் நகர்ந்தவள் அவனை முறைத்தாள்.

" எனது காதலை மகிழ்சியை உனது சூழச்சியும் அதிகார ஆசையும் சுயநலமும் கொன்று விட்ட இப்போது உன்னை காதலிக்க வேண்டுமா?. புறங்கள் மட்டுமே காணும் அரசியல் திருமணம் இது. இந்த உடல் உன்னை மகிழ்விக்கும் உனக்கு உண்மையாக இருக்கும் ஆனால் இந்த உள்ளத்தையோ அதன் காதலையோ ஒரு நாளும் எதிர்பாராதே அங்கு உனக்கு இடமில்லை. அப்படி நடிக்க கூட என்னால் இயலாது."

இப்போது அவனிடம் ஒரு புன்னகை அவளை நிதானமாக அளவிட்டவன் . "சூளுரை ம்? இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கும்எந்நேரமும் கலங்களை துரத்திஎனக்கும் சற்று சலிப்பாக இருக்கிறது. இந்தப் பெண் புலியுடானா ஆட்டம் எப்படி இருக்கிறது என்று ஆடிப் பார்க்கலாம் "

என்றவன் தனது மேலங்கியை தானே கழற்றப் போனவன்" சௌ" என்றான். அதுவரையில் அவள் தன்னுள் உழன்று கொண்டு இருந்தாள் இது தவறோ என மனம் தவிக்கத் தொடங்கியிருந்தது. ஆனாலும் காலம் கடந்து யோசித்து என்ன பயன் அவள் மனம் மீண்டும் ஃபோவை நாட அதனை இவன் உணர்ந்து கொண்டான். அதனால் தானே அழைத்ததது.அவன் குரலில் முகத்தில் வெறுப்பு வர
'சொல்லித் தொலை 'என்பதான அவள் பாவத்தை கண்டவன் மீண்டும் அவளிடம் வந்து அவளை இழுத்து அனைத்து கொண்டான். அவளோ இவன் தொட்டதில் அருவருத்து அவனை தள்ள இப்போது மிக நெருங்கி அவள் வாசனையை தன் நுரையீரலுக்கு ஏற்றிக் கொண்டவன் அதில் தன்னை மறந்த நொடி அவனைத் தள்ளிவிட்டிருந்தாள்.சிரித்தபடி தள்ளி நின்றவன்


" ஓ ஃபோவை அல்லவா நேசித்தாய்? இனி அவன் உன் மகன் அல்லவா...உனக்கும் ஏற்றுக் கொள்ள அவகாசம் வேண்டும் தானே ஆகையால் ஓய்வு எடுத்துக் கொள்."

இது உண்மையா ? என சௌ வின் பார்வையில் இருந்த ஐயத்தை கண்டவன்.. அவள் தாடையை இறுகப் பற்றி கண்களுக்குள் பார்த்தவன்

" இனி நீ என்னுடைய பொருள் எனக்கு மட்டும் எப்போது வேண்டுமோ அப்போது துய்த்துக் கொள்கிறேன் . இப்போது துயல் கொள்" என்று விலகினான்.

' உன் மனதில் என்னை பற்றிய எண்ணங்கள் மட்டுமே இருக்க வேண்டும் இல்லை வெறுமையாக இருக்கட்டும் ஆனால் வேறு யாரும் அங்கு இருக்கக் கூடாது.' என்று தன்னுள் உறுதி கொண்டான்.

தனது மேலாடையை கழற்றிவிட்டு கட்டிலில் படுத்து விட்டான். அவளோ அயர்ந்து போய் இருந்தாள். தன் மன்னவனாக வேண்டியவனை மகனாக நிறுத்தி வைத்திருக்கும் ஜாங் யி யை காணக் காண ஆத்திரம் வந்தது. இதில் அவனை உடனே மறந்து விட வேண்டுமாம். இதற்கான கடைசி அஸ்திரமாகத்தானே அவள் பாதி அதிகாரத்தை கேட்டது. கடந்தவற்றில் நடந்தவை நடப்பவற்றில் உரச.உறங்காத அலைகளை போல இவள் இரவும் உறங்காமலே கழிந்தது. கரை சேர்ந்த கலம் போலஅதிகாலையில் அமர்ந்தவாறே இவள் கண்ணயர்ந்திருந்தாள்
 
Status
Not open for further replies.
Top