All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அணங்குடை முந்நீர்

Status
Not open for further replies.

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தென் சீனக் கடல் வணிகம் மட்டும் மன்று அதன் முத்துக்களுக்கும் பெயர் பெற்றது. சீனாவின் ஹான் அரசர்களின் காலத்தில் இருந்தே பிரபலம் . வெண்மையான ஒளியுடைய உருண்டையான கடல்முத்துக்கள். அவர்களுக்கு மிக விருப்பம் டிரகானின் கண்ணீர்த் துளிகள் அவை எனும் நம்பிக்கையோடு இருப்பவர்கள் உண்டு. மருத்துவ ரீதியிலும் பயன்படுத்தப்பட்டது.


இவை சீன அரசியின் மகுடம் ஆடைகள் செல்வந்தர்களின் வீட்டு பெண்களின் ஆபரணங்கள் மட்டும் இன்றி ஏற்றுமதியும் செய்யப்பட்டது. அமெரிக்க மற்றும் ஜரோப்பிய வணிகர்கள் இதனை பெரிதும் விரும்பினர் தங்கள் மக்கள் இம்முத்துக்களின் நுகர்வோர் ஆனதில்.


முத்துக் குளித்தல் என்பது எப்போதுமே சவால் மட்டும் அல்ல சாவின் விளிம்பை தொட்டு வருவது. சௌ காற்றின் திசைக்கு ஏற்ப மிக நேர்த்தியாக கலத்தை செலுத்திக் கொண்டிருந்தாள். அவள் அருகில் ஃபோவும்

அமர்ந்து இருந்தான்.அவன் வயதையும் அதன் ஆபத்தையும் கவனத்தில் கொண்டவள்.

"ஃபோ கட்டாயம் நாம் இதை செய்துதான் ஆக வேண்டுமா? "

அவள் முகத்தில் தெரிந்த பயத்தில்

"சாவு என்பது வாழ்வின் ஒரே உண்மை நாம் அதை தவிர்க்க முடியாது. அதை நினைத்து அஞ்சியபடி வாழ்வதும் இயலாது. பசியில் இறப்பதை விட இப்படி முயன்று இறப்பதில் தவறு இல்லை."


என்று அவன் உரைத்தன் நிதர்சனம் நன்றாக புரிந்தது ஆயினும் அவளுக்கு மனம் ஆறிற்று இல்லை ஆயினும் சற்றேனும் அவர்கள் உயிர்

மூச்செடுக்க அவனின் இந்த மூச்சடக்குதல் அவசியம்

என்பது விளங்கியதால். தனது பதைபதைக்கும் நொடிகளுக்கு தயாரானாள்.


சீனாவின் அரசு முத்து குளித்தலுக்கு பல விதிமுறைகளை வகுத்து இருந்தது. அதன் படி யார் முத்துக் குளிக்க உள்ளே இறங்கினாலும் அரசின் அனுமதியுடன் தான் இறங்க வேண்டும். மேலும் பறிக்கப் படும் முத்துக்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். முத்தின் அளவுக்கு ஏற்ப அவர்களுக்கு வெள்ளி வழங்கப்படும். அதற்காவே அவளது மக்கள் பலர் கடலிலேயே இருக்க அதுவும் விளைச்சல் இருந்தால் தானே அதிக அளவில் நடைபெற்ற முத்துக் குளித்தல் முடிவுக்கு வந்து விடும் என்றதும் அரசு விழித்து கொண்டது.ஆனால் அதை மட்டுமே அறிய வைக்கப்பட்டிருந்த அவளது மக்கள் வறுமையில் பட்டினியில் நோயில் இறந்தனர். இதோ இப்போது இவனும் அந்த வரிசையில் சேர்ந்து விடுவானோ எனும் அச்சம் அவளை ஆட்கொண்டது.


ஃபோ இடையில் ஒரு பருத்தி ஆடை சிப்பி சேகரிக்கும் கூடை கழுத்தில் இருந்து தொங்கிக்கொண்டு இருந்தது. டின் எனும் மெல்லிய உலோகத்தால் ஆன காது மற்றும் மூக்கினுள் நீர் புகாமல் இருக்க கவசமாக அணிந்து இருந்தான். அவன் இடையில் இருந்து நீண்ட கயிற்றின் மறு முனையை சௌவிடம் தந்தவன் உள்ளே குதித்து இருந்தான்.


ஒருவர் ஒரு முறை குதித்தால் குறைந்தது ஒரு நிமிடம் தான் முத்து சேகரிக்க நேரம் கிடைக்கும். புதிதாக உள்ளே குதித்தவனுக்கு நீச்சல் தெரியும் ஆனால் முத்துக் குளித்தல் அவ்வாறு அல்லவே.

முதல் முறை என்பதால் நீரின் அழுத்தம் தாங்காமல் காது மற்றும் மூக்கில் இரத்தம் கசியத் துவங்கியது. அதனை பொருட்படுத்தாமல் முடிந்த அளவு வேகமாக சிப்பிகளை சேகரிக்கரித்தான்.

அவன் கவனத்தில் கொள்ளவில்லை ஆனால் அது கண்டு கொண்டது. தனது பசிக்கான இரை மிக சமீபத்தில் உள்ளது என்பதை இரத்த வாடையை கொண்டு சுறாவின் புலன்கள் உணர்ந்து கொண்டது.

அதில் அது அவனை நோக்கி நகரத் துவங்கியது அதன் முழு வேகத்தில்.


தனது வேலையை முடித்தவன் மேலே செல்ல திரும்பவும் அவனை நோக்கி அது பாயவும் சரியாக இருந்தது. அதில் சற்று விலகி தப்பினான்..


அவனது அலைவை கயிற்றில் உணர்ந்து அவனுக்கு ஆபத்து எனபதை உணர்ந்து அதை மேல் நோக்கி இழுத்தாள்.

ஆனால் அது தன் இரையை விட்டு விட எண்ணவில்லை மீண்டும் அவனை நோக்கி பாய தனது கயிற்றை எடுத்து அதன் கீழ் பக்கம் வந்து மேலாக ஒரு சுற்று சுற்றி இறுக்கினான். அதில் கோபம் கொண்டு அங்கு ம் இங்கும் அலைய அதில் அவனும் அலைகழிக்கப்பட லேசாக மூச்சு விட திணற தொடங்கியவன் தன்னை விடுவித்துக் கொள்ள அவனைப் பிணைத்திருந்ந்த கயிற்றை அவிழ்த்தான் அதற்குள் சுழன்ற அதன் வாயில் அகப்பட்டு துண்டு துண்டாகி விட்டது.

அதில் விடுபட்ட அவன் வேகமாக நீந்த இரை கைநழுவி போகுமோ என மீண்டும் அது அவனை நோக்கி ஆக்ரோஷமாக பாய இம்முறை அவனுக்கு கண்ணை கட்டி கொண்டு வந்தது .


கயிற்றில் அதன் கனம் இல்லை என்று உணர்ந்தவள் . கயிற்றை படகை சுற்றி இறுக்கியவள் தானும் உள்ளே குதித்து இருந்தாள்.


ஏற்கனவே முதல் முறை என்பதால் இரத்தம் கசிய சோர்வடைய துவங்கியிருந்தவனுக்கு இப்போது என்ன செய்ய வேண்டும் என்று கூட தெரியவில்லை. இந்த நொடியோடு தனது வாழ்வு முடிந்தது என்று உணர்ந்து கண்களை மூடி கொண்டான். அது விரிந்த வாயின் பற்களை அவன் மீது பதிக்க அவனை நெருங்க சௌவின் கத்தி அதன் கண்ணை பதம் பார்த்து இருந்து.

அதில் பதறியது திரும்ப அதன் இரத்தம் பெருகத் துவங்கியது .

தனது ஆபத்தை எண்ணி அது பின்வாங்கியது ஆனால் சௌ ஒரு நொடி கூட அவள் அதற்கு அவகாசம் தரவில்லை. ஏற்கனவே அவள் குத்தியதில் நிலைகுலைந்த சுறாவின் மீது அடுத்தடுத்த அவளது வெட்டுக்கள் அதை கொன்று இருந்தது.


இரத்த வாடை இன்னும் பல சுறாக்கள் மட்டும் அல்ல மீன்களையும் ஈர்த்ததில் அவை அவர்களை நெருங்க சுறாவை விட்டு நகர்ந்தவள் கண்கள் ஃபோவைத் தேட அவன் சற்று தள்ளி கடல் நீரோட்டத்தில் இழுபட்டு போனவனை தன் புறம் இழுத்து மேல் நோக்கி வந்தாள். அவளைக் கண்டதும் வாங் மகிழ்ச்சியோடு அவனை தூக்கி படகில் இழுத்துப் போட்டு மீண்டும் அவளுக்காக திரும்ப அதற்குள் அவள் ஒரே நாவலில் உள்ளே ஏறி இருந்தாள்.


வாங் ஃபோவிற்கான‌ முதலுதவியை தொடங்க அவள் அவனையே பார்த்தபடி இருந்தாள். சற்று நேரத்தில் கண்விழித்த அவனை படுக்க வைத்து விட்டு தானே கரையை நோக்கி படகை செல்லுத்த துவங்கினாள்.


வாங் இருவரையும் வாங்கு வாங்கு என்று வாங்கினார்.

"முட்டாள் தனமான காரியங்களை செய்து வைப்பது இதுவே உனக்கு வேலை. எத்தனை முறை கூறுவது. இதற்கு இவள் வேறு உதவி என்று அவள் முதுகில் ஒன்று வைத்தார்."

அதில் அவள் அவரை முறைக்க

சீரான சுவாசத்திற்கு திரும்பி இருந்தவன்.

"சௌ வேண்டாம் என்று தான் கூறினாள்.நான் தான் படிப்பதற்கும் அதைவிட நல்ல உணவு சாப்பிட்டு நாளாயிற்று என்று வற்புறுத்தியதிலும் தான் ஒப்புக் கொண்டாள்."


"இனி இருவரும் இது போன்ற விஷயங்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி கூறுங்கள்."


என்றதில் வேறு வழியின்றி ஃபோவும் சௌவும் "இனி இது போன்ற விஷயங்களில் ஈடுபட மாட்டோம்" என்று உறுதி அளித்தனர். ஆனால் அவரோ இதனால் வரப்போவதை எண்ணி கலங்கி போனார்.


அவளோ ஃபோ அன்று கூறிய வார்த்தைகளைத்தான் அசை போட்டுக் கொண்டு இருந்தாள்.

"நாம் முத்து சேகரிக்க செல்வோமா?"

என்றவனிடம்

"வேண்டாம் ஃபோ அது ஆபத்து மட்டும் அல்ல அரசாங்கத்தின் கீழ் உள்ளது."

"ஒரு நல்ல முறை மட்டும் போகலாம் சௌ நல்ல உணவு ஒரு வேளையாவது உண்ண வேண்டும்"

"உண்மையை சொல் ஃபோ ?"

என்றவளிடம்

"அரசாங்க வேலைக்கான தேர்வை எழுதலாம் இல்லை போர் வீரனாக ஆக வேண்டும்.அதற்கு அங்கு செல்ல பணம் வேண்டுமே மேலும் நல்ல உணவு என்பது பொய் இல்லை.அதற்கே பல முறை முத்து சேகரிக்க வேண்டும். "


என்றதில் கண்ணீர் வர அவனை அனைத்துக் கொண்டாள்.


சீனாவில் அரசு தேர்வு எழுதி அதன் மூலம் அரசாங்கம் வேலை என்பது நீண்ட கால நடைமுறை.இப்போது அதில் ஊழல் மலிந்து கிடக்கிறது. மேலும் அதற்கான அறிவு அவனுக்கு இருந்தது ஆனால் படிக்க தேவையான பொருட்கள் வாங்க ஒரு சில வெள்ளிகளாவது வேண்டும் என்பதையும் விட நல்ல உணவு என்பது ஆடம்பர வகையில் அடங்குமா எனில் ஏன்? எப்படி? எப்போதிருந்து ?

என்ற கேள்வி எழுகிறது என்றாலும் அவனுக்காக தானே செய்ய முன் வந்தாள். அவனோ இரையை ஊட்ட கூடாது அதைத் தேடுவது அடைவது எப்படி கற்றுத்தர என்று கேட்கிறான்.


இந்த ஐந்து ஆண்டுகளாய் அவளுள் அவன் இறங்கியிருக்கும் விதம் மேலே பார்க்க எந்த மாற்றமும் இல்லை என்றாலும் கீழே தன் வேர்ப்பகுதியை பரவிவிட்டு பலப்படுத்திக்கொள்ளும் மூங்கிலின் வளர்ச்சியை ஒத்தாககும்.


அந்த சிப்பியை பிரித்து முத்துக்களை சேகரித்த வாங் அதிர்ந்து போனார். மிக தரமான மற்றும் அரிய வகையான அவற்றை விற்பனை செய்ய போனால் இன்னும் என்னென்ன புயல் வருமோ என்று அதிர்ந்து போனார். ஆனால் அவர் அறியாதது என்னவெனில் அது அவர்களை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது என்பதும்

மேலும் இது ஃபோவுக்கு மட்டும் தான் முதல் முறை ஃசௌவுக்கு அல்ல .


அதன் விளைவாக ஜாங் யின் சிறு கலம் அவர்களை நோக்கி வந்து கொண்டு இருந்தது.
 
  • Like
Reactions: Ums

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்அத்தியாயம் 14


தென் சீனக் கடலின் குவாடாங் மாகாணத்தின் குவாங்ஸோ நகரம் கடல் வழி பட்டுப் பாதையின் முதல் துறை முகம் அனைத்து கப்பல்களும் இங்கு தான் வரும் அது நமது பழைய மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களை ஒத்து இருந்தது. மிக குறுகால தெருக்கள் விரையும் மக்கள் மலியும் பொருட்கள்.பொருள் இருப்பின் சொர்க்கம் இல்லாதவர் வாழ்க்கை பலியாகும்.மிங் வம்சத்தை சார்ந்தவனான அண்ணன் ஜாங்குயி தம்பி ஜாங்யி இருவரும் கடற்கொள்ளையில் தேர்ந்து இருந்தனர்.தனது தமையன் ஜாங் குயி இன்கீழ் இருந்தான் ஜாங் யி .

மக்களிடம் முத்துக்களின் மீதான மோகம் அபரிதமாக இருந்தது. இறந்தவர்களின் வாயில் முத்துக்களை போட்டு புதைத்தான் அவர்கள் உடல் கெட்டு போகாமல் இருக்கும் என்று நம்பினர். அத குறித்து கதை ஒன்று உண்டு ஒரு பெர்ஷிய பயணி ஒருவர் சீனாவுக்கு வந்த இடத்தில் இறக்க நேரிடுகிறது அப்போது தனது இறுதி நேரத்தில் தனக்கு கஞ்சியும் மருந்தும் அளித்த அவனுக்கு இறக்கும் தருவாயில் தனது போர்வையை காட்டிவிட்டு இறந்து விட்டான். அதில் நல்ல பெரிய முத்து ஒன்று இருந்தது. திருடர்களிடம் காப்பாற்ற அதனை அவன் வாயில் வைத்து புதைத்து விட்டு வெளியூர் சென்று விட்டான். இங்கு இறந்த போனவனோ வெளிநாட்டை சார்ந்தவன் என்பதால் சீன அரசாங்கம் அவனைத் தீவிரமாக தேடியது. இவனைப் பிடித்து விசாரிக்கவும் அவன் இறந்ததை கூறி புதைத்த இடத்தையும் காட்ட அதை தோண்டி எடுக்கும்போது அந்த உடல் கெட்டு போகாமல் இருக்க முத்து உடலை கெட்டு போகாமல் காக்கும் என்று நம்பிக்கை நிலவுகிறது. அது மட்டுமல்ல தற்போதைய ஆட்சியில் முத்துக்கள் தேவை மிக அதிக அளவில் இருந்தது.

ஆகையினால் போலி முத்துகள் புழக்கமும் அதிகமாக இருந்தது.

மீனின் செதில்கள் அல்லது எலும்புகளை நன்கு அரைத்து மாவாக்கி அதனுடன் பளபளப்பாக வர ஜெல் போன்ற ஒன்றை சேர்த்து கண்ணாடி மணிகளை அதில் தோய்த்து அந்த பசை கண்ணாடி மணிகளில் ஒட்டிக் கொள்ளும் பொருட்டு ஆவியில் வேகவைத்து பிறகு காயவைத்து சரியான தரத்தில் பிரிக்கப்படும் முத்துக்கள் உண்மையான முத்துக்களுக்கு போட்டியாக மாற்றம் அடையும் நாளடைவில் உண்மையான முத்துக்களை விட இதற்கான தேவை அதிகரித்தது. இத்தகைய போலி முத்துக்களை தயாரிக்கும் இடத்தில் நின்று கொண்டு இருந்தான்.


சிலர் அதன் செய் முறையில் தவறுகள் செய்ய தன் அதைப் பார்த்தவன் அதைப் பறித்து திருத்தம் செய்தவன்

"சரியாக செய்யுங்கள்."

என்று அறிவுறுத்தியவன் நகரப் போக அதில் ஒருவன்

"செய்வது போலி அதில் என்ன சரியாக செய்வது."

"முட்டாள் இயற்கை எப்போதும் தனித்துவம் வாய்ந்தது. அதை பின்பற்ற நேர்மை சிரத்தை வேண்டும். அப்படி சிரத்தை எடுத்து செய்தவனுக்கு மட்டுமே அது தன் இரகசியம் உரைக்கும்."

அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாது முழித்துக் கொண்டிருக்கும் அவனது ஆட்களை பார்த்தவன்

எரிச்சலில்"செய்யும் வேலையை திருந்தச் செய்யுங்கள்.இந்த போலி முத்துக்களுக்கும் உண்மையான முத்துக்களுக்கும் எந்த வேறுபாடும் தெரியக் கூடாது என்கிறேன். அப்போதுதான் இதை விற்பனை செய்ய முடியும்."


என்றவன் போலி முத்துக்கள் தயாரிப்பை பார்வையிட்டு கொண்டு இருந்தான்.

அப்போது உள்ளே வந்த ஒருவன் ஜாங் யியை பணிந்து விட்டு ஒரு துண்டு காகிதத்தை அவன் கையில் தந்து விட்டு தள்ளி நின்று கொண்டான்.அதை வாசித்து விட்டு தலையை அசைக்க அவன் சென்று விட்டான்.


அன்று மாலை ஐந்து மணிக்கு அந்த விடுதிக்குள் ஜாங் யி நுழைந்தான். பொதுவான உணவு மேசையில் அமர்ந்தவன் முன் வந்து நின்ற பணியாள்.


" மேலே முதல் தளத்தில் இரண்டாம் அறை. "

என்றவன் பின் காலை அவனை சந்தித்தவன் நின்று இருந்தான். இவன் பார்வை அவன் மீது படவும் எழுந்து கொண்டான். அவனைப் பின் பற்றி ஜாங் யியும் வெளியேற அவன் முதல் தளத்தில் முன் முகப்பில் நின்று கொண்டு உள்ளே கை காட்டினான்.

உள்ளே இருந்தவன் அணிந்து இருந்த உயர்தரமான முத்து மாலை அவன் செல்வம் மற்றும் செல்வாக்கு நிலையை கூறிட


" ஏதேனும் தகவல் தெரிந்ததா?"

"இல்லை."

"இதோ பார் "

என்றவன் அவன் நன்கு விளைந்த உயர் தர முத்துக்களை வைத்தான்.அதைக் கண்ட ஜாங் யின் கண்கள் ஒளிர்

"இது இவை …"

என தடுமாறவும்

"ஆம் செயற்கை முத்துக்கள்"

"எப்படி என்றான்."

"அதை நீங்கள் தான் கண்டுபிடித்தது கூற வேண்டும்."


ஜாங் யி ஏற்கனவே அவர்களை தேடிக் கொண்டு இருந்தான்.ஆனால் அவன் கையில் இல்லாமல் இவன் கையில் கிடைத்தால் உருவான மனச்சுணக்கம் இன்னும் அவர்கள் கண்டுபிடிக்க வில்லை இவன் தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில் விலகியது.

அதில். மீண்டும் எதிரில் இருப்பவன் வார்த்தைகளுக்கு காதுகொடுத்தான்.

"இது இந்த பகுதியில் தான் எனக்கு விற்கப்பட்டது.இந்த முத்துக்களை எடுத்தவர்கள் எனக்கு வேண்டும் . சிறுவன் என்று கடைக்காரன் கூறினான் எனில் அவன் வாழ்நாள் முழுதும் நமக்கு பயன்படுவான்."


"சரி உங்கள் விருப்பப்படியே ஆகட்டும்.ஆனால் தாங்கள் ஏன் இவ்வளவு அக்கறை கொள்ள கிறீர்கள் என நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்."


"என் ஐயம் என்னவென்றால் ஒரு வேளை இவர்கள் தான் நாம் தேடும் நபர்களாக இருப்பார்களோவென்று "


"அப்படி இருந்தால் நம் கையில் பொக்கிஷ அறையின் சாவி கிடைத்தது போல் நானே நேரிடியாக விசாரித்து வருகின்றேன்."


என்று விடை பெற்று கொண்டான்.இவனை பின்தொடர அவன் ஆள் வைப்பான் என்பதையும் மேலும் செய்ய வேண்டிய வேலைகள் உள்ளன என்பதும் உணர்ந்து நேராக இல்லம் சென்று விட்டான்.பிறகு உளவாளி மூலம் இடத்தை அறிய ஆட்களை அனுப்பி வைத்தான்."அவர்கள் இருக்கும் இடம் தெரிந்து விட்டது."

என்ற தகவல் வந்ததும்

"எனில் நாம் செல்லலாம்."

என்று தனது ஆடையை சாதாரண குடிமக்கள் போல் மாற்றிக் கொண்டு எவர் கண்ணிலும் படாமல் வள்ளத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.


வாங் ஃபோ மற்றும் சௌ இருவரையும் சேர்த்து தன்னுடன் அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டின் பின்புறம் இருந்த அந்த தோட்டத்தில் இருந்த செயற்கை குளத்தின் சிப்பிகளை சேகரித்து கொண்டு இருந்தனர். சௌவிற்கு ஆச்சரியம் தாளவில்லை. இப்படி செயற்கை முறையில் முத்து வளர்க்க முடியுமா என்று.அவளை ஆச்சரியம் கண்ட வாங்


"ஃபோ தனது பெற்றோரை இழந்தது இதனால் தான்.

இந்த முத்து வளர்ப்பு முறையை இவன் தந்தை கண்டு பிடித்தான். ஆனால் அதுவே அவன் உயிருக்கு ஆபத்தையும் அழைத்து கொண்டு வந்தது."ஏற்கனவே இவர்களின் முத்துக்களை வாங்கியவர்களின் ஆட்களில் ஒருவன் ஃபோவின் தந்தை மற்றும் தாயை அடிமையாக்க நினைக்க அதில் நடந்த போராட்டத்தில் இருவரும் இறந்து விட்டனர். இவன் மட்டும் தான் மிச்சம்.

இப்போது நீ விற்ற முத்துகள் நீங்கள் சேகரித்தது மற்றும் செயற்கை‌ முத்துகள் இரண்டும் தான்.அதனால் ஆபத்தும் நம்மை நெருங்குகிறது."


தனக்கு கிடைத்த ஒரு உறவு ம் பொய்யாகிப் போகுமோ எனும் பயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது கூட மறந்து அமர்ந்து விட்டாள்.ஆனால் அவன் வந்து விட்டான்
 
  • Like
Reactions: Ums

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாங்க பெருமக்கள் மன்னிக்கவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் சற்று தாமதமாகிவிட்டது.எனக்காக காத்திருந்த உங்களுக்கு அன்பு
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் இதுவரையிலான உங்கள் வார்த்தைகளுக்கு ஆதரவிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு உங்களுக்கு
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 15


வாங் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக செயல் பட்டார்.

"அனைத்து சிப்பிகளையும் மேலே ஏற்றுங்கள் . உங்கள் கேள்விகளுக்கு விடைகள் இப்போது கிட்டாது"

என்றதும் அனைத்தையும் சேகரித்து மூட்டைகளாக கட்டி அவர்கள் இருவரையும் வீடு நோக்கி அனுப்பி வைத்தவர் அந்த இடத்தில் இருந்த நீர்த்தொட்டிகள் அனைத்தையும் கூடிய வரை தடயங்களை அழித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.


அவர்கள் இருவரையும் பார்த்தவர் தன்னிடம் இருந்த அந்த புத்தகத்தை ஃபோவிடம் கொடுத்தவர்


" முத்து வளர்ப்பு ஆண்டுகள் ஆகும் அதற்குள் ஃபோ வளர்ந்து விடுவான் அவனுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். இப்போதே தெரிந்து விட்டால் அதுவே அவன் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றுதான் இதுவரை அமைதி காத்தது மேலும் இந்த முத்துக்களை விற்பனை செய்து மீண்டும் பெரிய அளவில் துவங்கி அவனுடைய தந்தையின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எனது எண்ணம் இனி காலம் அதற்கு கை கொடுக்குமா தெரியவில்லை. "" சௌ நீ கூறாவிட்டாலும் உனது பூர்வீகம் நான் அறிவேன் உனது கழுத்தில் தொங்கும் இந்த பொதிந்த வைக்கப்பட்ட உயர் தர முத்து நீ யார் என்பதை கூறிவிட்டது."

ஆனால் இப்போது அதைப் பற்றி கூறும் நிலையில் நான் இல்லை.

இந்த புத்தகத்தை வைத்துக் கொள் முத்து தாயாரிப்பை பற்றி என் மகன் விரிவாக எழுதியது இது மிகவும் முக்கியமானது என்று கூறவும்."

"இதை ஃபோவின் திருமணப் பரிசாக எண்ணிக் கொள் . அவனுக்கு மிகவும் பொருத்தமானவளாக இருப்பாய்.

என்று அவனுக்கும் அவளுக்கும்

இடையேயான உறவை அவர் நிச்சயம் செய்தார்."

"தாத்தா இப்போது என்ன அவசரம் முதலில் இங்கிருந்து செல்லாம்.பிறகு மற்றவற்றை பேசிக் கொள்ளலாம் " என்றவள் அவசரத்தில் தனது உடையின் உள் பக்கம் வைத்துக் கொண்டாள். வெளியேற போகையில் மழையும் ஆரம்பித்தது.மீண்டும் ஓரளவு முத்துக்களை பிரித்து பையில் நிரப்பியவர் அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு வெளியேறினார்.


அவர்கள் வெளியேறிய சற்று நேரத்தில் ஜாங் யி உள்ளே நுழைந்தான். இரு அறை கொண்ட அந்த குடிசையில் அவன் அதிக நேரம் தேடலில் செலவு செய்ய வேண்டியிருக்கவில்லை.


உடைந்த கிடந்த சிப்பிகள் அவற்றின் ஈரம் எந்த பொருட்களும் எடுத்து கொள்ள தேவையில்லாது விட்டு சென்றிருந்த அவசரம் அவர்கள் நீண்ட தூரம் சென்று இருக்க முடியாது என்பதை பறைசாற்றியதில்

விரைந்து சென்று நிறுத்திய புரவியில் ஏறியிருந்தான்.


நகரத்தின் உள்ளே நுழைந்து விட்டால் அவர்களை நெருங்குவது சிரமம் மேலும் தப்புவதற்கு வாய்ப்புகள் அதிகம் எனவே அவர்களை கண்கள் தேடியபடி இருந்தன.


அவனது புரவியின் ஓசை மழையின் ஓசையில் நைந்து போய் ஒலித்தது. ஊடாக இருந்த மரங்கள் அடர்ந்த புதர் செடிகள் அவர்களை மறைத்தது போல் அவனையும் மறைத்தது.


ஆனால் சற்று நேரத்தில் அவன் நெருங்கியதும் அவனைக் கண்டு கொண்டவர்கள் விரைந்து ஓட அவனது கத்தி குறிதவறாமல் வாங்கின் முதுகை துளைத்து.அதில் தடுமாறியவர் கீழே விழும்போது அவர் பக்கம் இருந்த‌ சௌவை தள்ளிவிட " தாத்தா " என்று அவள் பள்ளத்தாக்கில் உருண்டு போனாள்.ஆனால் ஃபோவை தள்ளும் முன் ஜாங் யி நெருங்கியிருந்தான். உருண்டு போனவளோ கூர்மையான கல் மோதி பாதி மயக்கத்திற்கும் விழிப்புணர்வுக்கும் இடையே ஊஞ்சல் போனாள். கண்கள் மேலே பதினைந்து வயது ஃபோவின் மீது இருந்தது.

ஃபோவோ ஓட வேண்டுமா எதிர்க்க வேண்டுமா என்று கூட தெரியாமல்

" தாத்தா தாத்தா எழுந்து கொள்ளுங்கள்"

என்று புலம்பிக் கொண்டு இருந்தான் குழந்தையாக.மழை மீண்டும் வலுக்க கீழே இருந்த சௌவோ " ஃபோ ஓடு ஓடு … " என்று கத்தினாள் ஆனால் குரல் வெளியே வரவேண்டுமே அவளது உடலின் சிராய்ப்புகள் இன்னும் வெளியேறிய இரத்தம் அவளை மயக்கத்திற்குள் ஆழ்த்த முயல் முயன்று தன்னை நிலைப்படுத்தியவள் மேலே வர பார்த்தாள். லேசாக சரள்கற்களை துழாவி ஏதேனும் பெரிய கல் பிடிமானமாக கிடைக்குமா என்று சுற்றி பார்க்க எதுவும் இல்லை. மெல்ல ஊர்ந்து மேல் வர முயல மழை நீர் இன்னும் வழுக்கியது. காலின் கீழ் இருந்த பாறை தட்டு அதன் மீது உந்தி மேலே வர துவங்கினாள். ஆனால் ஃபோவின் கண்களில் மட்டும் அல்ல ஜாங் யின் கண்களிலும் இவள் படவில்லை. ஜாங் யி மிகவும் சாதாரணமாக குதிரையில் இருந்து இறங்கியவன் வாங்கின் தோளில் கிடந்த முத்துக்கள் நிறைந்த பையை எடுத்துக் கொண்டான். திரும்பி போக போனவன் ஃபோவை பார்த்து விட்டு நகரப் போக ஃபோ அவன் மீது பாய்ந்தான் . ஜாங் யி மிக இலகுவாக அவனது கழுத்தில் வர்மத்தில் தாக்க அவன் மயங்கி விழுந்தான். அவனது சட்டையை கொத்தாகப் பற்றி தூக்கி குதிரையின் மீது போட்டவன் விரைந்து விட்டான்.


அதுவரை இருந்த தெளிவும் உறுதியும் போய் விட சௌ மயங்கி கிடந்தாள்.


ஜாங் யி க்கு இப்போது நன்றாக நினைவு வந்தது. அவளை திகைத்து போய்பார்த்துக்கொண்டு இருந்தான்.

"என்ன மலர்ந்து விட்டது போலும் நினைவுகள்.ஆனால் பயன் தான் இல்லை."

அவள் கூறியது போல அன்றைய நினைவுகள் அவனிடம் ஆனால் மலர்கள் என்றாலும் அழுகிய மலர்கள் நாற்றம் உகந்ததாக இல்லையே.

ஃபோ மட்டும் தான் இருப்பதாக எண்ணி அவனிடம் இருந்து அந்த முறையை வாங்க முயல அவனுக்கு தெரியாது என்ற அவனுக்கு வந்த வெறியில் அவனை துவைத்து விட்டான்.


இருப்பினும் வேறு வழியின்றி அடிமையாக்கி வைத்து இருந்தான். பிறகு அவனை மறந்து போனான். ஆனால் ஃபோ தன் முயற்சியில் அவனது படைவீரனாக மாற்றி படி படிப்படியாக உயர்ந்து நின்றான்.


"ஆனால் நான் அங்கேயே தான் இருந்தேன்."

என்றவள் கையில் அந்த கத்தி வந்து இருந்தது. அது எப்போது வந்தது எப்போது அவனைக் கீறிற்று ஜாங் யி அவன் அறியவில்லை. அவன் தான் செய்த வினைகள் அனைத்தும் அவள் உருக் கொண்டு வந்து கேள்வி கேட்க பதில் சொல்ல வகையற்று இருந்தானே.


"இந்த கத்தி வாங் கின் மீது நீ பாய்ச்சியது. என்ன ஒரு கீறல் தானே அதற்கே கிறங்குகிறதா ஆனால் அன்று இதைவிட அதிக கீறல்களுடன் இருந்தேன் ஆதரவின்றி தவிக்கும் போது உன் உயிரை காப்பாற்றிய ஒரு உயிரை காப்பாற்ற இயலாது துடிக்கும் இதயம் அப்போதே நின்று விட தோன்றும் ஆனால் அந்த உடலை நாம் மட்டும் புதைக்கும் போதே உணர்வுகளும் இற்றுப் போய்விடுகிறது."

என்றவளை அரண்டு போய் பார்த்தான் அவன் எத்தனை நாள் வஞ்சம் இதுவோ என்று.அவனைப் பார்த்து சிரித்தவள்

"இன்னும் கேள் உன் சுவர்க்கம் எனக்கு எப்படி நரகமானது என்பதை."கண்கள் திறந்த பார்த்தவளுக்கு சுற்றுப் புறம் உரைத்தில் வேகமாக எழுந்து கொள்ள போனாள். ஆனால் உடல் ஒத்திசைவு தரவில்லை. வலி பகுதி வாரியாக இன்றி முழுமையாக இருக்க வாங் கின் நிலையை எண்ணி முயன்று வேகமாக எழுந்து கொண்டவள்.


மேலே ஏறி வர வெறித்த பார்வையுடன் ஜில்லிட்டு விரைத்து கிடந்தது வாங் கின் உடல் அந்த கத்தியை உருவுவியவள்.கண்களில் துளி நீர் வரவில்லை. அருகில் அமர்ந்து இருந்தவள் சிதறி இருந்த சில முத்துக்களை பொறுக்கி எடுத்து கொண்டாள்.

இரண்டு கட்டைகளை கட்டி அதன் மீது குறுக்கா சில கட்டைகளை வைத்து அதில் அவரது உடலை வைத்தவள் மெல்ல கயிற்றை தன்னுடன் கட்டி இழுத்துச் சென்றவள்

அவரை புதைக்கும் போது அவர் வாயில் சில முத்துக்களைப் போட்டாள் . பிறகு அதில் கற்களை கொண்டு ஒரு நினைவிடம் எழுப்பி விட்டு அதன் முன் ஒரு பலகையை அவர் பெயர் பொறித்து பட்டு வைத்து விட்டு விழுந்து வணங்கினாள்.


அந்த கத்தியை எடுத்து பார்த்து விட்டு அந்த கூர்மையை கண்களில் கொண்டு வந்தாள்.


"உன்னை சிறுக சிறுக கொன்று இரசிக்க வேண்டும் என்று இலட்சியம் கொண்டேன்.. அதற்கு பணம் வேண்டும் எப்படியாவது செல்வநிலையை உயர்த்த வேண்டும் அது எளிதா என்ன? சகித்துக் கொண்டேன்
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 16

உக்கிரமாக போரிட்டு கொண்டு இருந்தனர். ஜாங் யியும் செளவும் இத்தனை காலமும் சேர்த்து வைத்த ஆத்திரம் அவளை செலுத்திக் கொண்டு இருந்தது. விதி செய்ய கிடைத்த இந்த தருணத்தை இழப்பதாக இல்லை அவள். சுழன்றாடினாள்.அவனும் அவருக்கு ஈடு கொடுத்துக் கொண்டு இருந்தான்.

நாற்புறமும் நீர் முகந்து மேலேறி வந்த கருங்கொண்டல்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு நீருற்ற கூடி களிக்க சூறாவளியும் சேர்ந்து கொள்ள அந்த சூழல் எவரையும் அசைத்துப் பார்க்கும் ஆனால் அவனையோ அவளையோ அல்ல. தனக்கு இணையாக வாள்சுழற்றும் சௌவை பார்த்தவனுக்கு ஆசை கூடியது.

அவளும் தன்னைப் போலவே நின்று நிதானமாக குறி நோக்கி ஓடுவதில் அவனுக்கு சௌவின் மீதான மோகம் கூடியது. அவளோடு வாழ்ந்து பார்க்க ஆசையும் கொண்டது மனம் ஆனால் காலம் அவனையும் அவளையும் எதிரெதிராக வாளோடு அன்றோ நிறுத்தியிருக்கிறது. அவளது கவன குவிவில் சற்றே அவன் கவனம் சிதறியது. அதில் அவளது வாள் இவனை பதம் பார்க்க வர விலகி பாய்மரத்தினின்றும் தொங்கிய கயிற்றில் ஒன்றை பிடித்து சுழன்று கலத்தின் விளம்பில் கால் ஊன்றியவன் அப்போது தான் சுருக்கென்று நெஞ்சில் வலி தோன்ற கீழே பார்க்க அவளது வாள் பாய்ந்திருந்தது. தான் விலகிவிட்டதாக அன்றோ நினைத்து இருந்தான் ஆனால் வேறு அல்லவா நடந்தேறியிருந்தது. வாளை உருவியவன் அவளைக் கண்டு புன்னகைத்தான்.
"சற்று ஆழமாகத்தான் பாய்ச்சியிருக்கிறாய்.ம் புத்திசாலிதான்."
"ஆகையால் தான் இது வரை உன்னால் கண்டுபிடிக்க இயலவில்லை."
என்றவளுக்கு தெரியும் தான் செலுத்தியிருமீண்டும் ச
ஆனால் அவன் சோர்ந்து போகவில்லை பல போர்களை தாண்டி வந்தவன் ஆனால் அந்த நேரம் அவன் தன் அந்திம நேரம் போலும் ஒரு பேரலை பெருங்காற்றுடன் சேர்ந்து அந்த கலத்தை வீசி விளையாடியதில் நிலைதடுமாறியவன் கலத்திலிருந்து கடலுக்குள் வீழ்ந்திருந்தான். நடந்ததை உணர்ந்தவள் நொடிக்கும் குறைவான நேரத்தில் அவன் நோக்கி சென்றவள் எட்டி பார்க்க விழித்திருந்த அவன் நினைவும் இமைக்காது நின்ற கண்களும் அவளை கவ்விக் கொண்டன. அந்நிலையிலும் அவன் கண்களில் காதல் கணிய உதடு விரிய இரு கைகளையும் விரித்து அவளையும் அனைத்தையும் அகிலத்தையும் விடுத்து வேகமாக சமுத்திரத்தினுள் ஆழ்ந்தான்.

ஜாங்கியிக்கு அவளது குறி தமையன் என்று நினைத்தான் அவனது இறப்பின் பின் அவள் தன்னை நாடுவாள் என நினைத்தான். அவள் அவன் வளர உதவினாள் . மனதால் இன்று வரை ஃபோவின் காதலியாகத் தான் இருக்கிறாள். அவனோ வலுக்கட்டாயமாக வாழ்ந்து இருந்தால் அவள் மறுக்க முடியாது ஆனாலும் விலகி நின்றான். அதுதான் அவன் ஆயுளை நீட்டித்தது என்று அறியவில்லை . கண்கள் எதிரில் அவள் அமைதி மற்றும் உதவியை அவளுக்கு தன் மீதான காதல் என்று அவனாக கற்பித்து கொண்டான். தானும் தனது தனது இடமும் அழிப்பதே அவளது குறியாகும் என அவன் எதிர்பார்க்கவில்லை. எதையும் தீர ஆலோசிப்பவன் இவளது பின்புலத்தையும் அதில் தனது பங்கையும் ஆராயாது போனான்.
இளமையில் இருந்தே இந்த கடல் சாம்ராஜ்யத்திற்கு அரசனாக வேண்டும் அதனை நோக்கியே தன் அடிகள் இருக்க வேண்டும் என செயல்பட்டவன் தனது அழிவும் அதிலேயே அடங்கியிருந்ததை உணரவில்லை. கள்பித்தேறியவனை விஞ்சியிருந்தது அவனது களவுப் பித்து.


இன்னுமே ஜாங் யிக்கு தன் தவறுகள் பற்றி புரியவே இல்லை. அவன் பிறந்தில் இருந்தே அரச வம்சம் அவனைப் பொறுத்தவரை கடல் அது அவர்களின் சாம்ராஜ்யம் அந்த ராஜ்யம் அவன் கீழ் இருக்க வேண்டும். அது தான் அவனுக்கான மதிப்பை அவன் சார்ந்திருக்கும் சமூகத்தில் பெற்றுத்தரும் என்பதை அவன் புரிந்திந்திருந்தான். புரிந்திருந்தான் என்பதைவிட புரிய வைக்கப்பட்டு இருந்தான் எவன் ஒருவனும் தான் வாழ்ந்ருந்திருக்கும் சூழலில் அது கற்றுத்தரும் பாடங்களுக்கு ஏற்ப எவ்விதம் எதிர்வினையாற்ற பயில்கிறான் பயிற்றுவிக்கப்படுகிறான். என்பதே அவனை யார் என நிர்ணயம் செய்கிறது.

ஜாங் யி ஜாங்குயி இருவரின் தந்தை ஒருவர் ஆனால் தாய் வேறு வேறு ஜாங் யின் தாய் மனைவி என்ற நிலையில் அந்த வீட்டில் இல்லை. ஏதோ ஒரு இரவு அவனது தந்தை அவளுடன் இரவை செலவிட அதன் காரணமாக அந்த வீட்டில் இருந்தாள்.
ஆனால் அவனுக்கும் அவளுக்கும் கிடைத்த மரியாதை தொழுவத்தில் இருந்த குதிரைக்கு தரபட்டதை விட கீழ் என்பது அவனுக்கு நன்றாக தெரியும் ஏனெனில் அவன் அங்கு குதிரைகளுடன் தான் வளர்ந்தான். பன்னிரு வயதில் அந்த புரவிகளின் உணவு உறைவிடம் அதில் இவனும் பங்குக்கு சென்றதில் அந்த புரவிகளில் ஒன்று இவனை முதலில் எதிர்த்து விட்டு பின் அடங்கியது குதிரை. அது அதன் அந்த அடிமைத்தனம் வெற்றி அவனைத் தூண்டியது இன்னும் இன்னும் என்றது. தனக்கு மறுக்கப்பட்ட அந்த பணம் அந்த செல்வம் அந்த அதிகாரம் அது தனக்கு மற்றும் தன் தாய்க்காக மரியாதையை அந்த வீட்டில் பெற்றுத்தர வேண்டும் என்பது அவனது இலட்சியமாக ஓடத் துவங்கினான். ஓடிய அவன் கண்ணில் நியாயம் தர்மம் எதுவும் தெரியவில்லை அதனால் தான் தமையனுக்கு அடுத்த நிலையில் நின்றான்.
பிறகு தான் தான் என்று கனவு கண்ட அவன் ஒருநாள் சௌஅவளைப் பார்த்தான். அவளது நிமிர்வு பார்வை அவன் தன்னை இழுக்க இவள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று எண்ணியவன் அவள் தன்னை மறுக்க முடியாது என்ற எண்ணம் உடையவனாக அவளிடம் கேட்க அவள் அதை உடைத்தாள்.
இப்போது முதலில் தான் அடக்கி அடிமைபடுத்திய குதிரையென்றே அவளையும் நினைந்தான். தனை அவள் மறுதலிக்க இயலா நிலையில் அவளை நிறுத்தி மணந்தான். அவள் அவனுக்கு துணையாக வந்தால் அவளது ஆலோசனைகள் அரசியலுக்கு உறுதுணையாக இருக்கும் அது அவனது சாம்ராஜ்யத்தை சரியாமல் காக்கும் சிறந்த அஸ்திவாரமாக இருக்கும் என தன் புற நன்மை தீமை நலம் யோசித்தவன் அவள் புறம் பார்த்தான் அகம் பார்க்கவில்லை. தெரிந்தும் தான் ஆசை வைத்தே அவள் பாக்கியம் என அகமும் சேர ஆட்டிவிக்க எண்ணி அழிந்துபோனான்.

கலத்தின் மேல் விளிம்பில் நின்று அவன் வீழ்ந்து முழ்குவதை இமை மூடாமல் முகம் முழுவம் நீர்வழிய பார்த்திருந்தாள்.
பிறகு கலத்தின் உள் குதித்தவள் மனம் தாய் தந்தை என சுழன்றதுவோ இல்லை இனி என்ன ? என உழன்றதுவோ ? எதுவும் தெரியவில்லை. குளிரில் விரைத்த உடல் எந்த உணர்வையும் கொட்ட வில்லை. அப்படியே தரையில் அமர்ந்தவள் அங்ஙனம் தான் இருந்தாள். நின்று பெய்த பெருமழையும் பெருங்காற்றும் அவள் நிலையை கலைக்கவில்லை.

ஆனாலும் புயல் கரை கடந்து தூறலும் நின்று கிழக்கு வெளுக்கத் துவங்கியது. பட படவென சிறகு உலர்த்தும் பறவைகள் மேலே பறந்தபடி இவளைத் இருப்பவளோ இறந்தவளோ என்று ஆராயத் துவங்கின.

 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


அத்தியாயம் 17

நீலக் கடல் நிர்மலமாக வானை வாங்கிக் கொண்டிருந்தது. அதில் பகோடா வடிவமைப்பு எனும் இரண்டு மூன்று தளம் கொண்டுள்ள அந்த கலத்தை நோக்கி வந்து கொண்டு இருந்தது அந்த ஒற்றை பாய் மரப்படகு . படகு கலத்தை நெருங்க நெருங்க கலத்தின் அளவு எப்படி பெரிதாக கண்களுக்கு தெரிந்ததோ அதுபோல் தான் கலத்தில் இருந்தவன் அச்சமும் நெருங்க நெருங்க பெருகிக் கொண்டே சென்றது.

உள்ளே இழுத்துச் செல்லப்பட்டவனின் சர்வாங்கமும் பதறிக் கொண்டு இருந்தது.

மக்காவ் போர்ச்சுகீசிய அலுவலக விடுதியில்

அவள் அழிய வேண்டும் இல்லை எனில் வணிகத்திற்கு பெரும் கேடாக முடியும். என்றான் அந்த போர்ச்சுகீசிய கடற்தளபதி . அதுதான் எங்களின் நிலைப்பாடும் என்ற சீன தளபதியவனை பார்த்த போர்ச்சுக்கல் தளபதி ஒரு எள்ளல் புன்னகையை உதிர்த்தான்.
"ஆம் நிச்சயம் தேவைதான் ஏனெனில் ஃபோவுடன் மோதிய பிறகு உங்களிடம் படகுகள் மட்டும் தானே மிஞ்சியிருக்கின்றன."
பதிலாக அந்த சீன தளபதி
"இருக்கலாம் ஆனால் அப்படியாவது எங்களுடன் வியாபாரம் வைத்துக் கொள்ள துடிப்பது உங்கள் அரசர் தான்."

அதில் அவன் கோபத்தில் முகம் சிவக்க இன்னும் ஏதேனும் பேசும் முன் இடையிட்ட கவர்ணர்.
" இது போன்ற பேச்சுக்களை தவிர்த்து இனி என்ன செய்வது என்று இருபுறமும் நயந்து பேசுவது நன்மை பயக்கும். இல்லை இன்னும் பிரிந்து கிடக்க கிடக்க நாம் தோற்றுக் கொண்டே தான் இருப்போம். "

என்ற கவர்ணரின் வார்த்தைக்கு பலன் இருந்தது. இருவரும் அவரவர் இடத்தில் அமர்ந்தனர்.

"அவள் முத்து டெல்டாவினுள் நுழைந்து விட்டது மட்டுமின்றி கால் வைத்த கடற்கரை சிற்றூர்கள் அனைத்தும் தனக்கே சொந்தம்
என்கிறாள். "

"ம் அவர்களை ஒடுக்கியாக வேண்டும். "
அப்போது எழுந்த அந்த போர்ச்சுக்கல் தளபதி
"நான் இவர்களை அழித்தொழிக்கிறேன்."
எனில் நாங்கள் எப்போதும் எவ்விதத்திலும் உதவ தயாராக இருக்கிறோம்."


அங்கு கடலில்

அவள் சலனம் நிறைந்த நீரை நிச்சலனமாக பார்த்திருந்தாள்.
"தலைவி "
என்ற அழைப்பில் திரும்பியவளின் விழி வீச்சில் அழைத்தவன் ஒருமுறை அதிர்ந்து பின் தெளிந்தவன்.
"தங்களின் பார்வைக்கு"
"வரச் சொல்"
என்றவள் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். கனன்று கொண்டிருந்த நெருப்பு துண்டங்கள் மேல் இருந்த பாத்திரத்தில் இருந்த நீரை கவனமாக கோப்பையில் ஊற்றி தனக்கான தேனீரை ஆயத்தம் செய்தவள் தன் முன் வந்து நின்றவனை நிமிர்ந்து பார்க்க . அவள் முன் கரங்கள் கட்டப்பட்டு ஒருவன் மண்டியிட்டு இருந்தான். இருபுறமும் இருந்த சௌ வின் வீரர்கள். அவளை பணியவும்

"வழக்கு"
"இவன் கருப்பு கொடியில் குவாங்சோவின் தளபதி "
"ம் "

"விவரம் தேவையில்லை . விஷயம் என்ன?"

எப்படி கூறுவது? கூறினால் என்ன ஆகுமோ என்று அவன் யோசித்து கொண்டு இருக்கையில் உள்ளே வந்த குவாங்சோ . ஒன்றும் பெரிதாக தவறு இழைத்துவிட வில்லை. கடந்த முறை நாம் சென்ற கிராமத்தில் இருந்த ஒரு பெண் இவன் மனதை கவர்ந்துவிட்டாள்.
மோகம் கொண்டதில் இவன் மேகம் போல அவளது விருப்பம் மற்றும் எதையும் கேளாமல் வலிய ஆண்டுவிட்டான். மேகங்கள் கேட்டுவிட்டுத்தான் பொழிகிறதா என்ன ?

எனும் வார்த்தைகளை அவன் முடிக்கும் முன்பே சுழன்று வந் அவளது வாளின் நுனி அவனது இமையை முடியை தீண்டிட அதில் இமைய மறந்து அவன் பார்க்கும் போதே அவனது தளபதியின் தலை கொய்யப்பட்டு கிடந்தது.

எழுந்து வந்தவள் அவர்களை சமீபிக்கும் முன் தானாகவே மண்டியிட்டு இருந்தான் குவாங்சோவும் அவன் உடன் இருந்தவர்களும்

"நெறி முறைகள் மறந்துவிட்டது போலும். நினைவுபடுத்த வேண்டுமோ? "
மண்டியிட்ட நிலையில் குனிந்தவன்

"மன்னியுங்கள் தலைவி. "
என்றவனது வார்த்தைகளை அவள் செவிமடுக்கவே இல்லை.
"யாங்"
"தலைவி "
"நமது சட்டங்களை இவர்களுக்கு கூறு. "

"முதலாவது கொண்டுவரப்படும் பொருட்கள் அனைத்தும் பொது நிதியில் வரவு வைக்கப்படும். ஒவ்வோர் வருக்கும் அவர்கள் கொண்டுவரும் பொருட்களில் பத்தில் இரண்டு பங்கு கொடுக்கப்படும். மீறி கணக்கில் தராமல் ஏதேனும் பொருட்களை அவர்களிடம் இருப்பது தெரியவந்தால் மரண
தண்டனை விதிக்கப்படும்.

இரண்டாவது கைப்பற்றி கொண்டு வரப்பட்ட பெண்களிடம் முறைப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதுவும் அவர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே . அவ்வாறு இல்லாமல் தகாத முறையிலோ அல்லது அவர்கள் விருப்பத்துடனோ உறவு கொள்ள கூடாது. மீறினால் தலை துண்டிக்கப்படும்.

தலைமையின் வார்த்தைகளுக்கு கீழ்படியாதவர்களுக்கும் அதே தண்டனைதான்.

உளவு மற்றும் ஒட்டு கேட்பவர்கள் அனைவரின் முன்னிலையிலும் காது வெட்டப்பட்டு தூக்கிலிடப்படுவர். "

"நான் சொல்லும் வரை இதை மீண்டும் மீண்டும் கூறி நினைவுபடுத்தி கொள்ளட்டும். இப்படியே என அவர்கள் மண்டியிட்ட நிலையை சுட்டியவள்."

"யாங் இடையிடையே உணவு நீர் "
"தந்து விடுகிறேன்."
"ம் பிறகு உனக்கு கரங்கள் இராது."
"தரவில்லை."
"ம் தொடங்கலாம்."
என்றவள் கீழே இறங்கிவிட்டாள்.

மக்காவ் ல் தன் முன் இருந்த மதுக் கோப்பையை எடுத்துக் கொண்ட குவான் மோ எனும் அந்த போர்ச்சுகீசிய தளபதி அவன் தன் முன் இருந்த அந்த ஆங்கிலேயனிடம் எனில்
ராணுவ ஒழுக்க நடைமுறை மற்றும் பயிற்சி தரப்படுகிறது. என்று கூறு என்றபடி ஒரு மிடறு பருக தன் முன் இருந்த மதுக் கோப்பையை எடுத்துக் கொண்ட அவனும்
"ஆம் மிக சீரான ராணுவ பயற்சி ஆயுதம் தொழில் நுட்பம் அவர்களிடம் உள்ளது. "
"வேறு ஏதாவது."
" நான் பிணையக் கைதியாய் இருந்தேன். விருந்தினராக அல்ல ஆகையால் என்னால் இயன்ற அளவு விவரங்களை மட்டுமே சேகரிக்க முடியும்."

"ம் புரிகிறது. ஆனால் இன்னும் ஏதேனும் தெரிந்தால் நமது தாக்கும் யுத்தியை வடிவமைக்க ஏதுவாக இருக்கும்."

என்றவனை உறுத்து பார்த்தவன்.
"ஒன்று மட்டும் நிச்சயம்."
"அவர்களின் இப்போதைய வெறியுடன் கூடிய வேட்டைக்கு நீங்கள் தான் காரணம் ."
"என்ன உளருகிறாய் "
"ஆம் நீங்கள் தானே கடந்த முறை அவர்களது வெள்ளை கொடியின் தலைவனை கொன்றது. அதற்கு பழி தீர்க்கத்தான் அவர்கள் இப்படி கண்ணில் படும் உங்கள் கலங்கள் அனைத்தையும் சூறையாடுகிறார்கள். "

"அதற்காக இவர்களைப் போல கொள்ளை கூட்டத்திற்கு அஞ்சி அஞ்சி திரைகட்டிக் கொண்டு இருக்க முடியுமா ?"

"ம் எல்லா போர்களுக்குள்ளும் வெள்ளைப் பக்கம் ஒன்று உண்டு அது இது போன்ற நியாயம் பேசும் . கருப்பு பக்கம் என்ற ஒன்று உண்டு அது எதையும் பேசாது மாறாக செய்யும் எதையும் அதன் நியாங்கள் தனிவகை"

எழுந்து கொண்ட குவான் மோ
"உண்மை தான் நான் இப்போது வீட்டுக்கு செல்கிறேன் விரும்பினால் தாங்களும் என்னுடன் இணைந்து கொள்ளலாம்."
என்றதும் எழுந்து கொண்ட அந்த பிரிட்டிஷ்காரனும்
"இல்லை மற்றொரு நாள் பார்க்கலாம் இப்போது நேரம் ஆகிவிட்டது. வருகிறேன்."

என்று விட்டு வாயிலை நோக்கி நடந்தான்
 
Status
Not open for further replies.
Top