All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனுசரணின் "உயிரின் தேடல் நீய(டா)டி" - கதை திரி

Status
Not open for further replies.

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16

அன்றிரவே ரவி தர்மபுரி கிளம்பியிருந்தான். அவனுடன் ராம் மற்றும் விஷ்ணு வும் உடன்‌ வருவதாய் கூற அவர்களும் பொள்ளாச்சியிலிருந்து கிளம்பியிருந்தனர்.

தன் நண்பனின் மூலம் இன்ஸ்பெக்டரின் தற்போதைய பணியிடத்தை அறிந்த ரவி அன்றே கிளம்பி விட்டான். அடுத்த நாள் காலை மூவரும் ஒரு ஹோட்டலில் காலை உணவை முடித்துவிட்டு அவர் பணியாற்றும் காவல் நிலையத்திற்கு சென்றனர். ரவி நேரே உள்ளே சென்றவன் இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என கூற அங்கிருந்த கான்ஸ்டபிளும் அவரின் அறையைக் காட்டிவிட்டு ஒதுங்கி கொண்டார். அனுமதி பெற்று உள்ள வந்த மூவரையும் பார்த்த சேகருக்கு அடையாளம் தெரியாமல் புருவம் சுருக்கி யோசித்தவர் " யார் நீங்க "‌ எனக் கேட்க

ரவி " ஐ அம் ரவிக்குமார் ஐபிஎஸ் அசிஸ்டன்ட் கமிஷ்னர் சென்னை சிட்டி. இப்போ அன்அபிசியலா ஒரு கேஸ் விசயமா உங்ககிட்ட விசாரிக்கலாம்னு வந்துருக்கோம். இது ராம் அண்ட் விஷ்ணு என்னோட பிரதர்ஸ்." என தன் அடையாள அட்டையைக் காண்பிக்க சேகரோ சட்டென இருக்கையை விட்டு எழுந்தவர் அவனுக்கு சல்யூட் அடித்தார்.

அதை ஏற்றவன் அவரை அமர சொல்ல அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் மூவரும் அமர்ந்து கொண்டனர். " சொல்லுங்க சார் எந்த கேஸ் பத்தி கேட்கணும்" சேகர்.

"நீங்க டிரான்ஸ்பர் ஆகி வர்றதுக்கு முந்தின நாள் உங்க ஏரியால ரெண்டு பொண்ணுங்க வந்த டூவீலர் ஆக்ஸிடென்ட் கேஸ். ஒரு பொண்ணு ஸ்பாட் அவுட் ..." ரவி.

"ஆமா சார் அதுதான் என்னோட லாஸ்ட் கேஸ் . அடுத்த நாளே என்ன டிரான்ஸ்ஃபர் பண்ணீட்டாங்க சார். என்னோட பொண்ணு வயசு தான் சார் அந்த இறந்த பொண்ணுக்கு ..‌அந்த பொண்ணுக்கு கண்ணுல அவ்வளவு உயிரோட்டம் சார் " இன்னும் அவரால் அந்த இமைக்காத விழிகளை மறக்க முடியாமல் தற்போதும் அவர் கண்களில் வலியைக் கண்ட மூவருக்கும் நெஞ்சில் சுருக்கென வலி உருவானது. .

“ அந்த பொண்ணு எங்களோட சிஸ்டர் தான் அவங்க டூவீலர் பிரேக் இல்லாம தான் ஆக்சிடென்ட் ஆனதா கேஸ் கிளோஸ் பண்ணிருக்காங்க அன்னைக்கு ஸ்பாட்ல என்ன நடந்தது சேகர்”

“அன்னைக்கு விபத்து நடந்த அப்போ பக்கத்துல தான் நானும் இன்னொரு கான்ஸ்டாப்பிலும் ரௌண்ட்ஸ்ல இருந்தோம் சார் . தகவல் கிடச்ச கொஞ்ச நேரத்துலேயே நாங்க அங்க போய்ட்டோம். நாங்க போன உடனேயே அம்புலனசும் வந்துருச்சு. ரோடு சைடு இருக்க நடை பாதைல அந்த பொண்ணோட தல மோதினதால ஸ்பாட்லேயே டெத் சார் வண்டி ஓட்டுன இன்னொரு பொண்ணு கால் வண்டில மாட்டி இழுத்துட்டு போனதால கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன்ல இருந்தாங்க அவங்கள ஆம்புலன்ஸ்ல கான்ஸ்டாபில் கூட அனுப்பிட்டு நா அந்த ஏரியால விசாரிக்கும் போது ஒரு பிளாக் கலர் கார் தான் இடுச்சதா சொன்னாங்க சார் ஸ்டேஷன் கால் பண்ணி கேஸ் பைல் பண்ண சொல்லிட்டு கன்ட்ரோல் ரூம்க்கு வண்டி டீடெயில்ஸ் பார்வேர்ட் பண்ணேன் மேற்கொண்டு விசாரிக்கறதுக்குள்ள என்னை டிரான்ஸபர் பண்ணிட்டாங்க அடுத்த ரெண்டு நாளும் அங்க நா டியூட்டி லேயே இல்லை சார்” என்க

“நீங்க மேல எதுவும் விசாரிக்கலயா ஐ மீன் கார் மோதினதுக்கான எவிடென்ஸ் ஏதும் இல்லையா” ரவி.

“அப்டி ஏதும் இல்லை சார் நா அந்த கேஸ் பத்தி விசாரிக்கும் முன்னவே பக்கத்துல இன்னொரு அச்சிடேன்ட்ன்னு எனக்கு கால் வந்தது அங்க நா கெளம்பிட்டேன் சார்” சேகர்..
“அது என்ன கேஸ்”
“அது விபத்து நடந்த பகுதில இருந்து ரெண்டு ஏரியா தள்ளி பாண்டிச்சேரி மெயின் ரோடுல கன்டைனர்ல கார் மோதிருச்சு சார் ட்ரின்க் அண்ட் டிரைவ் கேஸ் சார்”
“என்ன கார்”
“ப்ளாக் கலர் பெர்ராரி கார் சார்” சேகர்
“இந்த கேஸ் பத்தி விசாரிக்கும் பொது உங்களுக்கு மிரட்டலோ இல்லை வேற மாதிரியான திரேட் கால்ஸ் ஏதும் வந்ததா” ரவி
“நோ சார்” சேகர்.
“ஓகே அந்த அச்சிடேன்ட் கேஸ் யாரு விசாரிச்சது” ரவி
“அது பக்கத்துக்கு ஏரியா இன்ஸ்பெக்டர் எனக்கு தெரிஞ்சவரு தான் சார் ஹெல்ப் காக கூப்டாரு... கன்டைனர் டிரைவர் சரண்டர் ஆகிட்டான் சார் கார் ல இருந்தவங்க சீரியஸ் கண்டிஷன் னு சொன்னா சார் அப்புறம் கொஞ்ச நேரத்துலயே எனக்கு டிரான்ஸபெர்ன்னு சொல்லி கால் வந்து நா கெளம்பிடேன் சார்”
“உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி சேகர்” ரவி என்றவன் அவருக்கு கை குலுக்கி விட்டு வெளியில் மூவரும் வந்தனர்.

“என்ன ரவி இவருகிட்ட இருந்து எந்த தகவலும் சரியா கிடைக்கல” விஷ்ணு.

“இல்லை விஷ்ணு நிறைய க்ளூ நமக்கு கெடச்சுருக்கு அவரு சொல்றத பார்த்தா இடிச்சது கண்டிப்பா கார் தான் ஏன்ன ஸ்பாட் ல இருந்தவங்க உடனே மாத்தி சொல்றதுக்கு வாய்ப்பு இல்லை அதுக்கு அடுத்த நாள் தான் யாரோ மாத்தி சொல்ல வச்சிருக்கணும்” ரவி.

“கரெக்ட் ரவி அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா வர்ஷினி சொல்றத பார்த்தா அவங்கள இடிச்சது பிளாக் கலர் பெர்ராரி அச்சிடேன்ட் ப்ளஸ்ல இருந்து கொஞ்ச தூரத்துல நடந்த விபத்துலயும் பிளாக் கலர் பெர்ராரி ஏன் அந்த கார் தான் இந்த கார் ஆஹ் இருக்க கூடாது அண்ணா” என்று ராம் தன் சந்தேகத்தை கூற மற்ற இருவரும் திகைத்து அவனை பார்த்தனர்...

----------------------------------------------------------------------------------

ஆறடி உயரமும் கட்டுமஸ்தான உடலமைப்பும் கொண்டு வசீகரிக்கும் நீலநிற விழிகளால் தன்னை ஆராய்ச்சி பார்வை பார்த்து நிற்கும் ஆருஷி கண்டவளுக்கு 'யாரிவன் ? எதற்கு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்' என நினைத்தவள் மீண்டும் அவன் விழிகளை நோக்க அதில் என்ன கண்டாளோ சில நிமிடங்கள் அதில் கண்டுண்டவள் போல் அசையாது அதிர்ச்சியில் திறந்த வாய் மூடாது நின்றாள்..

அவனோ அவளின் நிலையில் மனதினுள் குளிர்ந்து முகத்தில் எதுவும் காட்டாது சற்றென்று அவளை பார்த்து கண் சிமிட்டினான். அவனின் செயலில் தன் நிலை அடைந்தவள் 'யப்பா..என்ன கண்ணுடா இது .. அப்படியே அதுக்குள்ள மூழ்கிருவேன் போல' என மனதினுள் பேசியவள் வெளியில் அசடு வழிய சிரித்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

'அய்யோ ஸ்ரீ மிட்டாய் கடைய பார்க்குற மாதிரி இப்பிடியா ஆ னு பார்த்து வைப்ப' என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் மீண்டும் அடுத்தடுத்த கேக்கை ரசிப்பது போல அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.

அவளின் செயலையும் முகமாற்றத்தையும் கண்டவனுக்கு இதழ் ஓரம் புன்னகை அரும்பியது.அவள் அந்த இடத்தைவிட்டு நகர்வதை உணர்ந்தவன் காற்றுக்கும் வலிக்கும் என மெல்லிய உயிர் உருக்கும் குரலில் "ஸ்ரீ..." என அழைக்க அவளின் நடை தடைபட்டது.

அவனின் குரலில் ஏதோ செய்ய 'என் பேரு எப்படி தெரியும்' எனும் கேள்வி கணைகளை கண்ணில் கொண்டு ஸ்ரீ அவனை திரும்பி பார்த்தாள்.
அதை புரிந்து கொண்டவன் போல் ஸ்ரீ அருகில் சென்று "ஐ யம் ஆருஷி " என கையை நீட்ட அவளோ அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு 'பேரப் பாரு ஆரு குளம்னு ' என முணுமுணுத்து விட்டு மீண்டும் அவ்விடத்தை விட்டு நகர முயல அவனுக்கோ அவளின் செயலில் சட்டென கோபம் வர இருந்தும் பொறுமையை கையாண்டான்.

அவனுக்கோ இன்னும் நான்கு நாட்களில் அவளை வெளிச்சத்திற்கு அனுப்ப வேண்டும் இல்லையெனில் அந்த அரக்கனிடம் மாட்டிக் கொள்வாள். எனவே எப்படி அவளிடம் நெருங்குவது என அறியாது முழித்து கொண்டிருந்தான். அதுவும் அவளின் மரணத்திற்கு காரணமானவனே அவளைக் காக்க வந்துள்ளதாய் கூறினால் ஸ்ரீ எப்படி ஏற்றுக் கொள்வாள் எப்படி நடந்ததை புரிய வைப்பது சொன்னாலும் அதையெல்லாம் நம்புவாளா என ஏகப்பட்ட குழப்பத்திற்கு மத்தியில் தான் அவன் பேசியது ஆனால் அவளோ பேச விருப்பம் இல்லாது போல் ஒதுங்கி போவது கோபத்தைத் தந்தாலும், காதல் கொண்ட மனமோ அவளின் ஒவ்வொரு அசைவையும் உணர்ச்சியையும் உள்ளக்கிடங்கில் பொக்கிஷம் போல் சேர்த்து வைக்கிறது.

வாழ்நாளிலேயே அவளுடன் களிக்கும் பொழுதுக்காக அவன் எத்தனை இரவுகளில் கனவு கண்டிருக்கிறான் ஆனால் அவையெல்லாம் கனவாய் மாறிப்போக வரம் போல் கிடந்த இந்த நான்கு நாட்களும் அவளுடனான இனிமையான தருணங்களாக மாற்றவே அவனுக்கு மிகுந்த பேராவல். இருந்தும் மனமோ அவளின் பாதுகாப்பையே முதன்மையாய் நிறுத்த அவளுக்கான பாதுகாவலாய் தான் மாறிப் போனான்.

அந்நேரம் என ஒரு பெண் ஸ்ரீ யின் ஆன்மாவை ஊடுருவி சொல்ல அவளோ ஒரு நிமிடம் நிலையில்லாது கீழே அமர்ந்து விட்டாள். அதைக் கண்ட ஆருஷியோ அவளின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவளுக்கு உதவ முன்வர அவளோ அதைத் தடுத்து எழுந்தவள்
"ச்ச அடிக்கடி இப்படித் தான் ஆகுது என்னன்னே தெரியல" என முணுத்தவள் அவ்விடம் விட்டு செல்ல முயல
ஆருஷியோ " உன்னோட மனசு வீக்கா ஒரு நிலையில்லாம இருந்தா இப்படி தான் நடக்கும்" என்க அவளின் நடை ஒரு நிமிடம் தடைபட்டது.
ஸ்ரீ " என்ன சொல்றீங்க எனக்கு எதுவும் புரியல " என வினவ ஆருஷி அவள் அருகில் வந்தவன் " இந்த மாதிரி நிலையில மனசு ஒரு நிலையில் இல்லாம குழப்பத்திலையோ இல்லை பயத்துலையோ இருந்தா நம்மால திடப் பொருட்களை தொடவோ அல்லது அதனை ஊடுருவவோ முடியாது" என விளக்க இன்னும் ஸ்ரீ முகத்தில் தெளிவில்லாததை உணர்ந்தவன் மேலும் தொடர்ந்தான்

"என்னுடன் வா" என அருகில் உள்ள சுவர் பக்கம் ஸ்ரீ யை அழைத்து சென்றவன் தன் கைகளை அந்த சுவற்றில் வைத்து அழுத்த அவனின் கைகளோ சுவற்றை ஊடுருவிச் சென்றது.

"ஸ்ரீ இப்போ உன்னோட கையை சுவற்றில் வை " எனக் கூற அவளும் அவன் கூறியதை செய்ய "இப்போ உன்னோட கைக்கு அழுத்தம் குடு " என்க அவளும் அதேபோல் செய்ய என்ன ஆச்சரியம் ஸ்ரீ யினது கைகள் அந்த சுவற்றை ஊடுருவிச் செல்லாமல் காற்றில் கரைந்து மீண்டும் சேர்ந்தது.

இதைக் கண்டவள்"ஏன் இப்படி நடக்குது ஒவ்வொரு முறை மனிதர்கள் என்னை ஊடுருவி போகும் போது இப்படி தான் நா கீழ விழுந்தறேன்" என கேள்வியாய் அவனிடம் சொல்ல

"நம்மோட ஆன்மா காற்றால உருவாகிறது சோ காற்றால் திட பொருட்களை ஊடுறுவ முடியாது ஆனா நம்மால அத ஊடுறுவ முடியும்"என்க ஸ்ரீ யோ அவனின் விளக்கத்தில் இமை மூடாது அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

"இங்க பாரு மொதல்ல நீ மனச குழப்பிக்காம எதை பத்தியும் யோசிக்காம மனச ஒரு நிலை படுத்து மனசுல எப்பவும் சந்தோஷமான விஷயத்தை தான் நெனச்சுக்கணும் புரியுதா நெகடிவ் ஆ எதையும் நெனைக்க கூடாது ஓகே" என கூற அவளும் சம்மதமாய் தலையாட்டியவள் ஒரு நிமிடம் கண் மூடி ஆழ்ந்த மூச்செடுக்க அவளுக்கோ நள்ளிரவில் நடந்த சம்பவமே நினைவுக்கு வர சட்டென விழி திறந்தவளுக்கு பயம் மட்டுமே எஞ்சி இருந்தது பாவமாய் ஆருஷியை பார்த்தாள்.

அவனுக்கு அவளின் நிலை புரிந்தாலும் வேறு வழி இல்லை அவள் பயத்தை விட்டு தனியாய் போராட வேண்டிய சூழ்நிலை எனவே விடாது அவளிடம் "ஸ்ரீ உன்னோட வாழ்க்கைல நடந்த நல்ல விஷயம் இல்லை ரொம்ப சந்தோசமா இருந்த நாட்களை உன் மனசுல நெனச்சுக்கோ" என ஊக்கப்படுத்த மீண்டும் கண்களை மூடி அவள் வாழ்நாளில் நடந்த அனைத்து சந்தோஷமான தருணங்களையும் மீட்டியவள் இறுதியாய் அவளின் கண்முன் அவளவனுடன் கனவில் பைக்கில் சென்ற நினைவும் கண் முன் வர அதை ஆழ்ந்து அனுபவித்து கண் விழித்தாள். இப்பொது அவள் கண்ணில் பயமோ இல்லை குழப்பமோ இல்லாமல் இருக்க அந்த சுவற்றில் கை வைத்து அழுத்தம் கொடுத்தாள் என்ன ஆச்சர்யம் அவளின் கை அந்த சுவற்றில் அனாயசமாக ஊடுருவி அடுத்த பக்கம் சென்றது அதை உணர்ந்தவள் மிகுந்த மகிழ்ச்சில் ஆருஷியை பார்க்க அவனும் அவளைத் தான் கண்ணில் காதல் மிகப்பார்த்துக் கொண்டிருந்தான்

அவனின் பார்வையின் பொருளை உணராதவள் "ஏன் நாம் ஆன்மாவா இருக்கோம் இந்த நிலைக்கு ஒரு முடிவு இல்லையா" என கேட்க ஆருஷியோ " இருக்கு " என்றவன் சித்தர் கூறியவற்றில் ஆன்மாவை பற்றி மட்டும் ஸ்ரீ க்கு விளக்கினான். மேலும் ஆதிலிங்கம் பற்றியும் அவளின் பிறப்பின் ரகசியம் மற்றும் அவளின் மரணத்திற்கான காரணம் என அனைத்தையும் கூறினால் எங்கே குழம்பிவிடுவாளோ என எண்ணியவன் நேரம் வரும் போது சொல்லிக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.

குறைந்தது அவளின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்பதையாவது அவன் கூறியிருக்கலாம் அதனால் பின்னால் நடக்கவிருக்கும் விபரிதங்களை உணராமல் போனான்.. ஸ்ரீ யுடன் இனிமையான நினைவுகளை சேர்க்க நினைத்தவனுக்கு அவளுக்கு உண்மை தெரிந்தபின் அவளுடைய செயலில் தன் உயிர் போகும் வலியை விட அதிக வலியை அனுபவிக்க போவதை இப்போதே தவிர்த்திருக்கலாம். விதி வலியது...

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே.....


கதை பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 👇👇


என்றும் அன்புடன் உங்கள்
Anucharan
 
Last edited:

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26675

அத்தியாயம் 17

கேஸ் முடியும் வரை ராம் சென்னையிலேயே இருப்பதாக கூறிவிட வேறுவழியின்றி விஷ்ணு பொள்ளாச்சி சென்றுவிட ராம் ரவி இருவரும் சென்னை கிளம்பினர்.

சென்னையை அடைந்ததும் முதல் வேளையாக ரவி இரண்டாவது விபத்து பற்றிய விவரங்களை விசாரிக்க செல்ல ராம் மீண்டும் ஒருமுறை விபத்து நடந்த இடத்திற்கு சென்றான் . சிறிது நேரம் அங்கேயே உலாவினான்.

சிறுவயதில் இருந்தே தன்னுடன் தன் விரல்களை பிடித்துக் கொண்டு நடந்தவள் இன்று இல்லை என்பதை அவனால் அவ்வளவு சீக்கிரம் ஏற்றக் கொள்ள முடியவில்லை அவன் நிம்மதியாய் தூங்கி பல நாட்கள் ஆகிவிட்டது கண் மூடினாலே 'ராம், ராம் ... ' என தன்னை வால் பிடித்துக் கொண்டே சுற்றிய ஸ்ரீ யின் நியாபகமே. கண்கள் மீண்டும் கலங்க துவங்க ஸ்ரீ விழுந்த இடத்தை ஒருமுறை பார்த்தவன் பின் திரும்பி பார்க்காமல் அவ்விடத்தை விட்டு சென்றான்.

சோர்வாய் வீட்டிற்கு வந்தவன் அப்படியே படுத்துக் கொண்டான். ரவி தங்கி இருப்பது கவர்மென்ட் அளித்த இரண்டு பெட்ரூம் வசதி கொண்ட கோட்டரஸ் வீடு. ரவிக்கு அந்த வீட்டின் வசதி எல்வாம் கண்ணில் படவே இல்லை ஸ்ரீ விபத்திற்கு காரணம் யார் என அறிவதே பிராதனமாக இருந்தது. அவனின் பொருட்கள் கூட பிரிக்கப்படாது இன்னும் பேக்கங்கிலேயே இருந்தது. இரவு உணவை கையோடு வாங்கி வந்திருந்தான் ரவி. உணவை முடித்துக் கொண்ட இருவரும் ஓய்வாய் அமர ராம் "எதாவது தகவல் கிடச்சுதா ரவி "
"ம்ம்.. அந்த இரண்டாவது விபத்து ஸ்ரீ க்கு விபத்து நடந்த பகுதியில் இருந்து கொஞ்சம் தூரம்... அப்படியே அந்த கார் தான் இடுச்சதுனாலும் அதுக்கு நம்ம கிட்ட எந்த எவிடன்சும் இல்ல .. ரெண்டு விபத்துக்கும் ஒரு ஒற்றுமை அந்த கார்." ரவி. "அப்போ அந்த கார் யாரோடது" ராம்.
"அந்த கார் கோவைல ஒரு தொழில் அதிபரோட பேர்ல ரிஜிஸ்டர் ஆகிருக்கு அவங்க ரிலேட்டிவ் ஒரு பையன் ஓட்டும் போது இந்த விபத்து நடந்திருக்கு அந்த விபத்தில அவனும் இறந்துட்டான். சோ இதுல யார விசாரிக்க. திரும்பவும் ஆரம்பிச்ச இடத்துக்கே வந்துட்டோம் . இப்ப நம்ம கிட்ட இருக்க ஒரே க்ளு இன்ஸ்பெக்டர் நல்லதம்பி அவருக்கு முழுசா தெரிஞ்சிருக்க வாய்பில்லை ஆனா இதுல யார் சம்பந்தப்பட்டிருக்காங்கனு தெரியலாம்." என்றான் யோசனையாய்.
ராம் " அப்போ அவரை மிரட்டியாவது உண்மைய வாங்கு. உனக்கு தான் பவர் இருக்குல அத வச்சு எதாச்சும் செய் ரவி" என்க.
"செய்யலாம் ஆனா அபிசயலா அவர எதும் செய்ய முடியாது . மிரட்டுனா கடைசில அது நமக்கே திரும்ப வாய்ப்பு இருக்கு ராம் . இப்பதான் நா ஜாயின் பண்ணிருக்கேன் சோ யாரு எப்படினு தெரியல. எதையும் கொஞ்சம் பிளான் பண்ணி தான் செய்யனும் .அவருக்கு எதிரா நம்ம கிட்ட எந்த எவிடன்சும் இல்ல முதல்ல அத கண்டுபிடிப்போம். என் பிரண்ட் மூலமா நல்லதம்பியோட போன்கால் ட்ராக் பண்ண சொல்லிருக்கேன் " ரவி.
"நல்ல யோசனை . ஆனா நம்ம இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்கனும் தெரியல." ராம்.
"என்னோட கணிப்பு சரியாய் இருந்தா இன்னைக்கு நைட்டே நமக்கு அவர் மூலமா ஏதும் க்ளு கிடைக்கும். " என்றான் யோசனையாக.
அவன் நினைத்தது போலவேதான் நடந்தது நள்ளிரவில் அந்த இன்ஸ்பெக்டர் யாருடமோ பதினைந்து நிமிடங்கள் பேசியதாக அடுத்தநாள் காலை ரவிக்கு தகவல் வந்தது. அந்த நம்பரை ட்ரேஸ் செய்ததில் கண்ணன் என்பவர் பெயரில் வாங்கப்பட்டிருந்தது. அவரின் எண்ணிற்கு அழைத்தான் ரவி.

அதில் கிடைத்த தகவல் படி அந்த காலை வேளையிலேயே ரவி மற்றும் ராம் இருவரும் அந்த ஆறு மாடி கட்டிடத்தின்முன் நின்றிருந்தனர்.உள் நுழைந்தவர்கள் தங்கள் சந்திக்க வந்த நபரைப் பற்றி விசாரித்து அவரின் அறைக்குள் அனுமதியின்றி படாரென கதவை திறந்தவர்களுக்கு அங்கு சுழல் இருக்கையில் அமர்ந்து இருந்தவனைக் கண்டவர்கள் அதிர்ச்சியின் உட்சத்திற்கே செல்ல அவர்களின் இதழ்களோ ஒருசேர " விக்னேஷ்" என முணுமுணுத்தது.

------------------------------------------------------

உண்மையில் ஸ்ரீ க்கு ஆருஷியை பார்த்ததும் ஏதோ பிரித்தறிய இயலா பயம் அதனால் தான் அவன் பேச முயற்சி செய்யும் போது தவிர்த்தாள். ஆனால் அவன் ஆன்மாக்களை பற்றிக் கூறியதை கேட்டவளுக்கு இதில் இவ்வளவு விசயம் உள்ளதா என ஆச்சர்யமாக அவனைப் பார்த்தாள்.
"அப்போ நான் எப்போ வெளிச்சத்திற்கு போவேன்" என்க
"தெரியல. ஆனா நீ சீக்கிரம் போகனும். அதுதான் உனக்கு நல்லது" என்றான் ஆருஷி.
ஸ்ரீ புரியாமல் உதட்டை பிதுக்க அவளின் அழகில் ஒருநிமிடம் வீழ்ந்து தான் போனான் அந்த ஆறடி ஆண் மகன்.. நீண்ட நெடிய பெருமூச்சு விட்டபடி" நைட் உங்களுக்கு நடந்ததை நான் பார்த்தேன் . ஏதோ தப்பா நடக்க போகுதுனு தோனுச்சு அதான் உன்னை வார்ன் பண்ண நினைச்சேன்." என அவன் எதார்த்தமாய் அவளைப் பார்த்ததாக பொய்யுரைக்க.
"அப்போ நீங்க அத பார்த்தீங்களா... அந்த இடமே ரொம்ப குளிர்ச்சியா ஐஸ் கட்டி மாதிரி ஆகிடுச்சு . அப்புறம் எங்கள சுத்தியும் சுழல் காற்று மாதிரி இருட்டா அதுல கண்ணெல்லாம் சிவப்பு கலர்ல பல்லு கூர்மையா அவ்வளவுதான் பார்த்தேன் எனக்கு ரொம்ப பயமாகி கண்ண மூடிட்டேன் அப்புறம் என்ன நடந்ததுனு தெரியல சுவிட்ச் போட்ட மாதிரி எல்லாமே ஒரு செகண்ட் ல ஆஃப் ஆகிடுச்சு" என மடைதிறந்த வெள்ளம் போல் அப்படியே ஒப்பித்தாள் ஸ்ரீ ‌.

எங்கே தன் பயத்தை எல்லாம் ஆதியிடம் காண்பித்தால் அவன் பயந்து விடுவான் என்று தான் தனக்குள்ளேயே அழுத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கும் வேறு வழியில்லை எப்படியாவது இந்த நிலையில் இருந்து மீண்டு விட மாட்டோமா என தவித்தவளுக்கு கடலில் தத்தளிக்கும் போது கிடைக்கும் சிறு துருப்பு போல் இப்போது ஆருஷி துணையாய் இருப்பது மற்றும் அவன் சற்று ஆறுதலாக பேசியது என மனதில் இருந்தவற்றை அப்படியே கொட்டிவிட்டாள் இவ்வளவு நேரம் இருந்த அழுத்தம் குறைந்தது போல் உணர்ந்தாள்‌.
மேலும் பேசுவதற்குள் ஆதித்யா அவர்கள் நின்றிருந்த இடத்தை நோக்கி வந்தான். "ஸ்ரீ அங்க எவ்வளவு ஜாலியா இருந்தது தெரியுமா நா யாரு கண்ணுக்குமே தெரியலையா அவங்க கூடவே விளையாட ரொம்ப நல்லா இருந்தது" என ஏதேதோ பேசியவன் பேச்சுவாக்கில் திரும்ப அங்கே கைகளைக் கட்டிக் கொண்டு இருவரையும் சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்த ஆருஷியை கண்டவன் பேச்சை நிறுத்தி விட்டு கேள்வியாய் ஸ்ரீ யைப் பார்க்க

"இவரும் நம்மள மாதிரி தான் ஆதி நமக்கு ஹெல்ப் பண்ண வந்துருக்காங்க " என்க ஆதி திரும்பி ஆருஷியை பார்த்தவன் அருகில் வருமாறு சைகை செய்ய , அருகில் வந்த ஆருஷி அவன் உயரத்திற்கு முழங்காலிட்டு அமர ஆதி அவனின் தாடியை பிடித்து இழுத்தான். இதை எதிர்பாரத ஆருஷி திகைத்து பின் வாய் விட்டு சிரித்தான்.

ஆதியின் செயலில் திகைத்து எங்கு கோபப்பட்டு விடுவானோ என பயந்து ஸ்ரீ அவனின் முகத்தைக் கலக்கமாக பார்த்துக் கொண்டிருக்க அவனின் இந்த சிரிப்பு அவளுக்கு நிம்மதியை அளித்ததோடு அவனின் முத்துப் பற்கள் தெரியும் சிரிப்பின் அழகில் மயங்கி இமைக்க மறந்து நின்றுவிட்டாள்..

"ஐயோ ஸ்ரீ உனக்கு என்னமோ ஆகிருச்சு .. நான் ஏன் இவனை இப்படி பார்க்குற... கடவுளே அவன் என்ன பண்ணாலும் என் கண்ணுக்கு அழகாவே தெரியுரானே... இனி அவனைப் பார்க்கவே கூடாது... " என மனதிற்குள் புலம்ப இன்னொரு மனமோ "இந்த சூழ்நிலையில் இருந்து வெளியவர இவனை விட்டாலும் நமக்கும் வேற வழியில்லை... இனித் தடுமாறக் கூடாது ஸ்டெடி ஸ்ரீ ஸ்டெடி " என்க "ஹைய்யோ உயிரோட இருந்தாதான் இந்த மாதிரி பிலிங்க்ஸ்ல வரும்னு நினைச்சா செத்தும் வருதே .. நான் என்ன பண்ணுவேன்" என மனதோடு போராடியவளின் முகமாறுதல்களைக் கண்ட ஆருஷிக்கு குத்தாட்டம் போட வேண்டும் போல இருந்தது வேறுவழியின்றி தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டு ஆதியிடம் தன் கவனத்தை திருப்பினான்.

" ஏன் என்னோட தாடி பிடித்து இழுத்தாய்" என்க
" சாரி அங்கிள் எங்க அப்பாவும் இப்படித் தான் தாடி வச்சுருப்பாங்க எங்க அம்மா டிரிம் பண்ண சொல்லுவாங்களா எங்கப்பா கேட்க மாட்டாரு அப்போ எங்க அம்மா அவரு தாடி பிடிச்சு இழுப்பாங்க அதே ஞாபகத்துல இழுத்துட்டேன்.. சாரி " என சோகமாக கூற .. அதைக் கேட்ட இருவருக்கும் அவன்பால் இரக்கமே சுரந்தது சிறுவயதிலேயே மரணத்தை தழுவியது மட்டுமில்லாமல் அதையே அவன் ஒவ்வொரு நொடியும் உணரும்படி ஆகிவிட்டதே... ஏன் இப்படி ஒரு நிலையை கடவுள் படைத்தார் என்றே இருவருக்கும் தோன்றியது.

"நீ உங்க அம்மா அப்பா வை மிஸ் பண்றயா ஆதி" ஆருஷி. "ஆமா அங்கிள். எங்க அம்மாவுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல பாப்பா வரப் போகுது தெரியுமா. அம்மா நீ தான் எப்பவும் பேபிய பாத்துக்கணும் ஆதினு சொல்லுவாங்க " என ஆசையாக கூற ஆருஷி அவனைப் பார்த்து
" அப்போ நீ இங்க இருந்தா பேபிய யார் பாத்துப்பா சொல்லு" என்க.
"ஆனா அங்கிள் நா எப்படி பேபிய பாத்துக்க முடியும்." ஆதித்யா.
"ஏன் முடியாது அவங்களால தான் உன்ன பார்க்க முடியாது ஆனால் உன்னால அவங்கள பார்க்க முடியும்ல அப்போ நீ உன் பாப்பாவ தாரளமா பார்த்துகலாமே " என்றான் ஆருஷி.
"நிஜமாவா அங்கிள் அப்போ நா பேபிய பார்க்கலாமா.‌.ஆனா அங்கிள் எப்படி நா அங்க போறது எனக்கு தான் இங்க இருந்து எங்க வீட்டுக்கு வழி தெரியாதே " என்றான் சோகமாக.
"உன் வீடு எங்க இருக்குனு மட்டும் சொல்லு ஒரு செகண்ட்ல நாம அங்க போகலாம்." ஆருஷி.
இதைக் கேட்டதும் மகிழ்ச்சி நிறைந்த குரலில்"அப்போ பிளீஸ் அங்கிள் என்ன இப்பவே கூட்டிட்டு போறீங்களா " என்றவன் அவர்கள் வசிக்கும் தெருவை கூறியவனால் வீட்டின் எண் கூற முடியவில்லை. இதுவே போதுமென நினைத்தான் ஆருஷி. "சரி இப்ப ரெண்டு பேரும் என் கைய கெட்டியா பிடித்துக் கொள்ளுங்கள்"என்க .

ஆதித்யா ஆருஷியின் இடதுகையைப் பிடித்துக் கொள்ள ஸ்ரீ ஆதியின் மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டு தயக்கத்துடன் தன்முன் நீண்ட ஆருஷியின் கையைப் பார்த்தாள்.
ஆருஷியும் கண்ணில் ஏக்கத்துடன் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது ஸ்ரீயைப் பார்க்க அவளும் அவன் விழிமொழிக்கு கட்டுப்பட்டு ஒரு பெருமூச்சுடன் ஆருஷியின் வலது கையைப் பற்றிய அந்த நொடி !
அவன் ஸ்பரிசத்தில் இவளின் கண்ணில் தோன்றிய காட்சிகளைக் கண்டவள் விதிர்விதித்துப் போனாள்.

இதுவரை அவளுக்கு அவனின் மீதிருந்த மாயவலை அறுபட கண்ணில் தோன்றிய காட்சிகளை ஏற்க இயலாமல் தன் கைகளை அவன் கையில் இருந்து உருவிக் கொள்ள முயல அவனோ சித்தரின் சக்திகள் மூலம் இடம்பெயர முயன்றவனுக்கு அவளின் முயற்சியை உணர முடியாமல் போக இருக்கமாய் பற்றி இருந்த கையுடன் ஆதித்யாவின் வீடு இருக்கும் தெருவினை அடைந்தான்.

ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆதி ஆருஷியின் கைகளை பிடித்துக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தான். ஆருஷி ஆதியின் சந்தோஷத்தில் திக்குமுக்காடி அதே மகிழ்ச்சியுடன் அருகில் இருந்த ஸ்ரீ பார்த்தவன் திகைத்து நின்று விட்டான். கண்ணில் இதுவரை அவனின் மேல் இருந்த ஆர்வம் வற்றி சிறிது கண்கள் கலங்க அவனையே வெறித்தபடி நின்றிருந்தாள் ஸ்ரீ.

கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 👇👇


என்றும் அன்புடன்
anucharan
 
Last edited:

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26736

அத்தியாயம் 18

ரவி அவன் நண்பன் கொடுத்த எண்ணிற்கு அழைத்துப் பேச அந்த எண்ணிற்கு சொந்தக் காரனான கண்ணன் அன்று அழைப்பேசியை இல்லத்திலேயே வைத்துவிட்டு வந்திருக்க அழைப்பை ஏற்ற அவர் மனைவியும் போலீஸ் என்றவுடன் பணியிடம் பற்றிக் கூறி அவரின் பணிபற்றிக் கூறி வைத்திருந்தார்.. பிஏவாக வேலை செய்பவருக்கு கேஸை திசைதிருப்பும் அளவுக்கு பவர் இருக்க வாய்ப்பு இல்லை என யூகித்தவர்களுக்கு அவரின் முதலாளியே இதற்கு காரணமாக இருக்கலாம் என சிந்தித்துக் கொண்டுதான் சென்றனர்.. அவரின் பெயர் சொல்லி ரிசப்ஷனில் விசாரிக்க எம்டி அறையில் இருப்பதாக கூற கோபத்தின் உச்சிக்கே சென்றனர்...
ரவிக்கு இரண்டாவது விபத்தில் கோவை தொழிலதிபரின் கார் சம்பந்தப்பட்டதை வைத்து விசாரித்ததில் அது விக்னேஷின் அப்பா என்று அறிந்து கொண்டவன் அதை ராமிடம் கூறாமல் மறைத்திருந்தான்..

முக்கியமான கோப்புகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவன் அனுமதியின்றி திறந்த கதவின் சத்தத்தில் சிறிது எரிச்சல் மீதூற நிமிர உள்ளே வந்தவர்களை கண்டவனின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தன அவன் இதழ்களோ "ராம்" என முணுமுணுக்க அதே சமயம் ரவி மற்றும் ராம் இருவரும் அதிர்ச்சியில்"விக்னேஷ் " என முணுமுணுத்தனர்.

விக்னேஷ் முன்னோரு நாளில் கல்லூரி படித்த காலத்தில் ஸ்ரீயின் மீது ஈர்ப்பு கொண்டு அவளிடம் பேச முயற்சி செய்ய ராம் அதற்கு தடையாய் நின்று ஒதுங்கி செல்ல கூற கோபம் கொண்டு ஸ்ரீ யை தூக்குவேன் என்று தான் கனவிலும் நினையாத ஒன்றை வாய் வழியாய் உளறியதற்காக...
ஒரு மாதம் பெட் ரெஸ்ட் எடுக்க வைத்த நல்லுள்ளங்களை மறக்க அவன் ஒன்றும் அம்னிசியா நோயாளி அல்லவே!!!

இருவரும் சத்தியமாக விக்னேஷை அங்கு எதிர்பார்க்கவில்லை.. அவன் அதிர்ச்சியில் இருந்து வெளிவரும் முன்னே ஆத்திரத்தில் கண்கள் சிவக்க ராம் அவன் மீது பாய்ந்திருந்தான்.

தன் வலதுகையால் அவன் கன்னத்தில் குத்தியவன் அவன் சட்டைக் காலரைப் பற்றி இழுத்து தன் கால்முட்டியால் அவன் வயிற்றில் தாக்கியிருந்தான். விக்னேஷ் என்ன ஏதென்று உணரும் முன்னே ராம் தாக்கியதில் நிலைகுலைந்து வயிற்றில் பட்ட அடியில் இருமல் வர

"ரா..ம்... நில்லு ... என்னா..ச்சு..." என திக்கில் திணறி பேசவர மீண்டும் அவன் முகத்தில் குத்தியிருந்தான் ராம். .
அவன் இதில் சமந்தப்பட்டிருப்பான் என சிறிதும் ரவி எதிர்பார்க்கவில்லை....

அந்த அறையில் கோப்புகளை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த அந்த கம்பெனியின் விசுவாசியான பிஏ திடீரென உள்நுழைந்து தன் முதலாளியை இருவர் மாறி மாறி அடிப்பதைக் கண்டவர் இருவரைத் தடுக்க முயன்றார்.

ஐம்பதை நெருங்கும் அவராலோ இருபதுகளில் இருக்கும் ஆக்ரோஷமான அந்த இரு கட்டிளங்காளைகளை அடக்க முடியுமோ!!!!

உடனடியாக பக்கத்து அறையில் இருக்கும் தன் இன்னொரு முதலாளிக்கு தகவல் அளிக்க விரைந்து வெளியேறினார்.. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த விக்னேஷோ வலியைப் பொறுத்துக் கொண்டு

"நிறுத்து ராம் .... என்ன பிரச்சினை ... ஏன் இப்படி மிருகம் மாதிரி நடந்துகிறீங்க "என்க ..

ராமோ அவன் சட்டைக் காலரை விடாது " உன்னால தான்டா எங்க ஸ்ரீ க்கு இப்படி ஆச்சு.. உன்னைக் கொல்லாம விடமாட்டேன் டா" என்றான் ஆக்ரோஷமாக...

இதுவரை அவர்களின் அடியை வாங்கிக் கொண்டு இருந்தவன் ஸ்ரீ என்ற வார்த்தையைக் கேட்டு ஒருநிமிடம் திகைத்து திருப்பி ராமின் சட்டையைக் கொத்தாக பிடித்தவன் " ஸ்ரீ க்கு என்னாச்சு டா... அவளுக்கு ஒன்னும் இல்லைல... அவ நல்லா இருக்கால்ல சொல்லுடா சொல்லு" என்று ராமை உலுக்கினான்..

ஆத்திரம் குறையாத ராமும் "நடிக்காத டா .... விபத்து மாதிரி செட் பண்ணி எங்க ஸ்ரீ ய கொன்னுட்டு இப்ப நல்லவன் மாதிரி நடிக்கிறயா ... உன்ன சும்மா விட மாட்டேன் டா" என்க ...

அவனுக்கு மற்ற வார்த்தைகள் எதுவும் காதில் விழவில்லை ' என்னது ஸ்ரீ உயிரோட இல்லையா' என்பதை மட்டும் உணர்ந்தவனுக்கு இவ்வளவு நேரம் அவர்கள் அடித்ததால் உண்டான வலியில் கூட கண்கலங்காதவனுக்கு தற்போது
கண்ணீர் துளியானது சூடாய் அவன் கன்னத்தை நனைத்தது.....

மொத்த சக்தியும் வடிந்தது போலான விக்னேஷ் ராமின் மீதான தன் பிடியில் இருந்த சட்டை நழுவ ராம் மீண்டும் அவனை அடிக்க கை ஓங்கிய வேளையில் " ஸ்டாப் இட்" என்ற கர்ஜனையில் மூவரும் ஒருசேர திரும்பி அந்த அறையின் வாயிலைப் பார்த்தனர்.
-----------------------------------------------------------------------------
ஆதித்யா ஒவ்வொரு வீடாகப் பார்த்துக் கொண்டே முன்னேற அவனின் பின்னே ஆருஷியும், ஸ்ரீ யும் வெவ்வேறு மனநிலையில் சென்றனர்.

' ஸ்ரீ இவ்வளவே நேரம் நல்லாதான இருந்தா அதுக்குள்ள என்னாச்சு ... ஒருவேளை இங்க வர நான் பயன்படுத்திய சக்திய பார்த்து பயந்து விட்டாளோ.... இல்லையே பார்த்த அப்படித் தெரிலயே... அவ கண்ணுல ஏதோ ஒன்னு குறையுதே..' என ஆருஷி தீவிரமாக அவளின் முகத்தை பார்த்துக் கொண்டே வந்தான்...

ஸ்ரீயோ தன் கண்ணால் கண்ட காட்சிகளை ஏற்க முடியாமலும், அதே சமயம் அவன் மீதான பிம்பம் பொய்த்துப் போனதால் உண்டான ஆதங்கமும் சேர்ந்து பல்வேறு குழப்பமான மன நிலையில் இருந்தாள்...

"அங்கிள் இதுதான் என்னோட வீடு " என்ற ஆதித்யா வின் ஆர்ப்பாட்டமான குரலில் இருவரும் சுயநினைவை அடைந்தனர்..
ஆதித்யாவின் வீடு இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம் ... வீட்டின் முன் வெள்ளை நிறக் கார் நிற்க அருகில் பூந்தொட்டியும் வெண்ணிற ஊஞ்சலுடன் பார்க்க அழகாய் இருந்தது. மூடியிருந்த கேட்டின் வழியே ஊடுருவி சென்றவர்களை அந்த வீட்டின் நாய் அவர்களைப் பார்த்து சத்தமாய் குரைத்து தன் இருப்பை உணர்த்தியது....

ஆதித்யாவும் அதனைக் கண்டதும் "ஜீரோ.. ஜீரோ ... ". உற்சாகமாய் அதனைத் தொட அதுவும் இத்தனை நாள் தன் தோழன் இல்லாததில் வருத்தத்தில் இருந்து மீண்டு உற்சாகமாய் அவனை சுற்றி சுற்றி வந்தது.. ஜீரோவின் சத்தத்தில் உள்ளிருந்து வந்த நாற்பது வயது மதிக்கத்தக்க தக்க நபர் பலநாள் வெட்டாத தலைமுடி மற்றும் தாடியுடன் சிறிது தொந்தியும் கண்களை சுற்றி கருவளையமும் என வந்தவர்

"ஜீரோ காம் டவுன் ....அங்க என்ன பண்ற " அதுவோ அவரின் பேச்சைக் கேட்காமல் ஆதித்யா வை சுற்றி சுற்றி வர அவரின் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை..

ஆதியோ "இதுதான் எங்க அப்பா... ஆனா ஏன் இவரு இப்படி இருக்காரு" என அவரின் வெளித் தோற்றத்தைப் பார்த்து கவலை கொண்டான்.ஆருஷி மற்றும் ஸ்ரீ இருவரும் அவனின் தோளை ஆதரவாய் பற்றிக் கொண்டனர்.

வெளியில் வந்தவர் ஒருமுறை சுற்றிலும் பார்த்து விட்டு ஜீரோவை அதன் கழுத்துப் பட்டையில் சங்கிலியைக் கட்டி இழுக்க அதுவோ ஆதித்யா வை விட்டு வர மறுக்க அவரோ "ஜீரோ ‌..வா அங்க எதும் இல்லை... வா " என வெற்றிடத்தைப் பார்த்துவிட்டு அதன் தலையையைத் தடவி தூக்கிச் சென்றார்..

அந்த நாய் குட்டியோ ஆதித்யாவைப் பார்த்துக் கொண்டே சென்றது...

இவர்கள் மூவரும் உள்ளே செல்ல பின்னால் வந்த ஆதித்யா வின் தந்தை ஸ்ரீயை ஊடுருவி செல்ல மீண்டும் அவள் கீழே விழுந்து விட்டாள்... அதைப் பார்த்த ஆதி சட்டென சிரித்துவிட இதழில் தோன்றிய புன்னகையை மறைக்க ஆருஷி பெரும்பாடு பட்டான்...

"என்ன ஸ்ரீ நீ எப்பப் பார்த்தாலும் இப்படியே விழுற.... உன்னால பேய்க்கு உண்டான மரியாதை போச்சு " என நக்கல் பண்ண அதற்கு மேல் முடியாமல் ஆருஷி வாய்விட்டு சிரித்துவிட்டான்.

ஸ்ரீ அவன் சிரிப்பில் மீண்டும் தொலையவிருந்த மனதை அடக்கியவள் அவர்களின் சிரிப்பில் காண்டாகி இருவரையும் கொலைவெறியோடு முறைத்தாள்.அவளின் உஷ்மான பார்வையின் வீச்சு தாங்காமல் தன் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஆதிக்கு பார்வையால் ஸ்ரீ யைக் காட்டினான்.
உள்ளிருந்து வந்த பேச்சு சத்தத்தில் மூவரும் கலைந்து சத்தம் வந்த அறையை நோக்கி சென்றனர்...
"என்னங்க சத்தம்" என பெண்குரல் கேட்க
அவரோ "ஜீரோ தான்மா எதையோ பார்த்து குரைச்சுது அதான் அதை அதோட இடத்துல கட்டிட்டு வந்தேன்..." என்க..

" என்னங்க சொல்றீங்க ஜீரோ அதோட இடத்த விட்டு வந்துதா.... நம்ம ஆதி போனதுக்கு அப்புறம் அது அதோட இடத்த விட்டு வெளிலையே வரலயே சாப்பாடு கூட ஒரு நேரம் தான சாப்பிட்டுச்சு " என ஆச்சர்யமாக கூறினார் அந்த பெண்மணி...

ஆம் அந்த ஐந்தறிவு ஜீவனும் கடந்த ஒரு மாதமும் தன் நண்பனின் பிரிவில் தவித்து ஒரு நேரம் மட்டுமே உணவு எடுத்துக் கொண்டு அதனின் இடத்தைவிட்டு நகராமலும் சிறிதும் சத்தம் எழுப்பாமல் அதன் இடத்திலேயே படுத்துக் கிடந்தது .. அவன் ஆசையாய் வளர்த்து தனக்கு மிகவும் பிடித்தமான கார்டூனைப் பார்த்து வைத்த பெயர்தான் ஜீரோ....

ஆதியின் தந்தை ஏதோ பேசிவிட்டு வெளியேற இவர்கள் மூவரும் அந்த அறையினுள் நுழைந்தனர்..அங்கு அமர்ந்திருந்த பெண்மணியைக் கண்டதும் அந்த பத்து வயது சிறுவனும் மடி தேடும் கன்று போல் ஓடிச்சென்று அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டான்... அந்த பெண்மணிக்கோ என்னவென்று தெரியாமல் உடல் சிலிர்க்க கண்களை மூடி 'ஆதிக்கண்ணா' என முணுமுணுத்தார்..

தன் கருவில் உருவாகி தன் சதையில் உருவம் தந்து பத்து மாதங்கள் சுமந்து தன் இரத்தத்தை உணவாக்கி ஊணும் உயிருமாய் கலந்த தன் உறவை அவரால் உணராமல் தான் போக முடியுமா ..... கண்களை விழித்தவருக்கு வெறுமையாய் காட்சியளித்த ஆதியின் அறை தன் உயிருக்கு உயிரான தன் மகன் உயிருடன் இல்லை என்ற உண்மை உரைக்க மனம் ஊமையாய் கதறியது...

அவன் இறந்த சில நாட்களிலேயே அவன் வாழ்ந்த அவன் மூச்சுக் காற்று கலந்த அவன் சிறு அறையிலேயே அவர் தங்கிக் கொண்டார்... அந்த சிறு அறை அவனின் கைவண்ணத்தில் சுவர் முழுதும் அவன் வரைந்த கிறுக்கல்களும்... இல்லை இல்லை அதை கிறுக்கல் என்று கூறவே முடியாது அவன் இவற்றை சுவற்றில் வரையும் போதுகூட அவள் திட்டியுள்ளாள் .. தற்போது அவளின் உயிரோட்டமே அந்த அறையும் அவனின் ஓவியங்களும் தான்...

ஆதி "இது தான் எங்க அம்மா" என இருவருக்கும் அறிமுகப் படுத்தினான்... கண்ணில் கருவளையம் சூழ்ந்து உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக காட்சியளித்தார்...ஆதியின் தந்தையோ வெளியில் சென்றவர் கையில் உணவுத்தட்டுடன் வந்து
" இங்க பாரு தனுமா... நீ சாப்பிடாம இருந்தா நம்ம பேபியை எப்படி உன்னால பார்த்துக்க முடியும்.... கொஞ்சமா சாப்பிடிடா...."என கெஞ்சும் குரலில் பேசினார்....

"இல்லங்க எனக்கு பசிக்கல .. இன்னைக்கு என்னமோ எனக்கு ஆதி நினைவாவே இருக்குங்க... இத்தனை நாளா இல்லாம இன்னைக்கு அவனோட மூச்சுக் காற்று இந்த ரூம் முழுக்க இருக்க மாதிரி இருக்குங்க... எனக்கு அதுவே மனசெல்லாம் நிறைஞ்ச மாதிரி இருக்குங்க..."என பேசிக் கொண்டிருக்க அவரின் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை சிணுங்க அவரும் தொட்டிலை ஆட்டிக் கொண்டே பேசினார்...

" ஏன்ங்க நமக்கு மட்டும் இப்படில நடக்குது .. நம்ம பையன் ஆதி என்னங்க பண்ணா ... அவனோட முகத்தக்கூட நம்மால பார்க்க முடியாம போயிருச்சுங்கல்ல... " என அழ ஆதியின் தந்தையோ

" எதை நினைச்சும் நீ வருந்தாத ... உனக்கு எதாவதுனா நானும் பாப்பாவும் என்னடி பண்ணுவோம் ... கொஞ்சம் சாப்பிடுடி " என அவரை சமாதானப் படுத்தி உணவை ஊட்ட ...

ஆதியின் அன்னை அழுததில் இருந்து ஆதியும் அழ ஆரம்பிக்க நிலமையைக் கையில் எடுத்த ஆருஷி அவனை திசைதிருப்பும் பொருட்டு அவனுக்கு மறுபுறம் இருந்த குழந்தையின் தொட்டிலைக் காட்டினான். அதில் சற்று தெளிந்த ஆதியும் தன் தங்கையைப் பார்க்கும் ஆவலில் தொட்டிலை நோக்கி நடந்தான். அங்கு ரோஜா பூவைப் போன்று துணிகளுக்குள் உறங்கிக் கொண்டிருந்த தன் தங்கையைக் கண்டவனுக்கு உலகமே மறந்துதான் போனது...

குழந்தையின் கன்னத்தைத் தொட்டவன் ஸ்ரீயிடம் " ஸ்ரீ,அங்கிள் இங்க பாருங்க பாப்பா எவ்வளவு க்யூட்டா இருக்கு ...அதோட கன்னம் ரொம்ப சாஃப்ட் ஆ இருக்கு..." என உற்சாகமாக காட்டினான்.

ஆதி இறந்த சம்பவம் கேள்விப்பட்ட அவனின் அன்னை மயங்கி விழ ... இரண்டு மணிநேரம் கழித்து விழித்தவருக்கு பிரசவவலியும் வந்துவிட அன்றே அவர்களின் பெண்குழந்தை பிறந்தது. முதல் குழந்தை ஒருபக்கம் உயிரற்ற உடலாய்.. இரண்டாவது குழந்தை கையில் என அவர்களின் நிலை சற்று மோசமாய் தான் இருந்தது...

ஆதி அந்த குழந்தையின் கையைப் பற்றிக் கொண்டே " பாப்பா நீங்க எப்பவும் குட்கேர்ள் ஆ இருக்கணும் சரியா.... அம்மாவ அழாம பாத்துக்கணும் .. அண்ணன் எப்பவும் உங்க கூடவே இருப்பேனாம்.. " என்று பெரிய மனிதன் போல் பேச அந்த கண்விழிக்காத மொட்டுவும் தன் அண்ணன் கூறியது கேட்டதுவோ....
தன் செப்பு இதழ் பிரித்து சிரிக்க அதைக் கண்ட மற்றவர்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியாய் இருந்தது....
அதைப் பார்த்து சிரித்த ஆதி அந்த பூக்குவியலுக்கு முத்தமிட்ட அந்த கணம்....

ஆதியின் பேச்சில் கண்கள் கலங்க ஸ்ரீ யும் ஆருஷியும் அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க...

ஆதித்யா வின் பிம்பம் அவனின் பின் தோன்றிய வெள்ளைநிற வெளிச்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது...

ஆருஷிக்கு அங்கு நடப்பதை முன்னாடியே அறிந்திருந்தமையால் அவன் அமைதியாய் பார்த்துக் கொண்டிருக்க நடப்பதை புரியாமல் பார்த்த ஸ்ரீயோ அவனுக்கு ஆபத்து என எண்ணி அவனைக் காக்கும் பொருட்டு

" ஆதி.. ஆதி ... இந்த பக்கம் வாடா... " என கத்திக் கொண்டே அவனின் புறம் செல்ல முயல ஆருஷி ஸ்ரீ யின் கையைப் பிடித்துக் கொண்டு"அமைதியா இரு ஸ்ரீ ... அவனைப் போக விடு " எனக் கூறி அவளை சமாதானப் படுத்த முயன்றான்..

தன் தங்கைக்கு முத்தமிட்டபடியே ஆதித்யாவின் ஆன்மா இந்த பூவுலகை விட்டு அந்த வெளிச்சத்தினுள் சிறு புள்ளிபோல் மறைந்தது ..

யார் விழியில்
யார் வரைந்த கனவோ...
பாதியிலே கலைந்தால்
தொடராதோ ......
ஆள் மனதில்
யார் விதைத்த நினைவோ......
காலமதை சிதைத்தும் மறக்காதோ .....

கதையைப் பற்றி நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே.. உங்கள் கருத்துக்களே என்னை இன்னும் எழுத தூண்டும்... நன்றி 🙏🙏🙏


என்றும்
அன்புடன் உங்கள்
Anucharan
 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 19

இதழின் ஓரம் இரத்த வழிய முகம் சிவந்து வீங்க துவங்கியிருக்க மேலும் இரு கண்களிலும் கண்ணீர் வழிய நின்றிருந்த தன் தோழனும் ‌சகோதரனுமான விக்னேஷின் நிலைகண்டு கண்கள் சிவக்க கத்தியிருந்தான் அபிநந்தன்.. ஆருஷியின் ஆருயிர் தமையன்.‌.‌‌

அங்கு கண்களில் கனல் பறக்க நின்றிருந்த ராம் மற்றும் ரவியைக் கண்டவனுக்கு வியப்பில் ஒருநொடி இருபுருவமும் உயர்ந்தது.. பின் தான் அதிர்ச்சியில் இருந்த விக்னேஷைக் கண்டவனுக்கு அவனுக்கு உண்மை தெரிந்துவிட்டதை உணர்ந்தான்...

முதலில் அவனின் காயங்களுக்கு மருந்திட நினைத்தவன் தன் ஆஸ்தான பிஏ விடம்

"கண்ணன் ப்ர்ஸ்ட் ஏய்டு பாக்ஸ் எடுத்துட்டு வாங்க... அப்படியே நம்ம டாக்டர்க்கு கால் பண்ணி வர சொல்லுங்க க்வீக் ..‌ " என அடுக்கடுக்காய் கட்டளைகளைப் பிறப்பித்தவன் மற்ற இருவரையும் முறைத்துக் கொண்டே விக்னேஷை கைத்தாங்கலாக அழைத்து வந்து அங்கிருந்த ஷோபாவில் அமர வைத்தான்...

அபிநந்தனின் முகபாவங்களை கூர்ந்து கவனித்த ரவிக்கு தங்களைக் கண்டதும் ஒரு நொடி வியப்பில் உயர்ந்த புருவங்களைக் கண்டான்... அந்த நொடி இதற்கு காரணம் அவன் தான் என்பதை சரியாக கணித்தவன் சற்று நேரம் நடப்பதை பொறுமையாய் கவனித்தான்...

ஆனால் அதீத கோபத்தில் இருந்த ராமோ தங்கள் பிடியில் இருந்து விக்னேஷை அவன் அழைத்து செல்வதை கண்டவன் இருவரையும் தாக்க வெறியுடன் முன்னேற ரவி அவனின் கையைப் பிடித்து இழுத்தான்... " விடு ரவி அவன் தான் ஸ்ரீ யை நம்ம கிட்ட இருந்து பிரிச்சான் இன்னைக்கு அவனைக் கொல்லாம விடமாட்டேன்..." என அக்ரோஷத்தில் கத்த..

" வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் திஸ் " என அவ்வறை அதிர அபி கர்ஜிக்க மீண்டும் வாய் திறந்து பேசபோன ராமை தன் கண்களாலே அமைதிப் படுத்தினான் ரவி... தன்னைச் சுற்றி நடப்பதை உணராமல் திக் பிரம்மை பிடித்தவன் போல் இருந்த விக்னேஷ் கூட அபியின் கர்ஜனையில் தான் சுய நினைவை அடைந்தான்...

கைத்தாங்கலாக அழைத்து வந்த விக்னேஷை ஷோபாவில் அமர வைத்தவன் கண்ணில் கனலுடன் நின்ற ராமின் முன்வந்த அபி தன் முழு உயரத்துடன் நிமிர்ந்து நின்று கைகளைக் மார்புக்கு குறுக்காக கட்டியவன் தன் கண்களில் கூர்மையுடன்
" என்ன சொன்ன ஸ்ரீ ய கொன்னவனை நீ உன் கையால கொல்லனும்...... ரைட்.... அப்போ முதல்ல நீ மேலே போய்.‌‌."என அவன் தன் கையால் மேலே சைகை காட்டி "அப்புறம் அவனுங்களை கொன்னுக்கோ ... " என ஏளனமாய் உரைக்க ராம் ஒரு நொடி புரியாமல் விழித்தான்..
ரவிக்கு புரிந்தாலும் இந்த உண்மை எங்கு எப்படி மறைந்தது என்பதை தெளிவுபடுத்தியாக வேண்டுமல்லவா!! அதனால் கேள்வியாய் அபிநந்தனைப் பார்க்க... அதே சமயம் அவனும் ரவியைத் தான் பார்த்தான்...

ரவியை விட வயதில் சிறியவனாக இருந்தாலும் அவன் அண்ணன் ஆருஷி போல அபிநந்தனும் புத்திக் கூர்மையில் சிறந்துதான் இருந்தான்.

அதற்குள் அந்த அறைக்குள் அனுமதி பெற்று வந்த அபியின் பிஏ மற்றும் டாக்டர் விக்னேஷை பரிசோதித்து காயங்களுக்கு மருந்திட்டவர் ஓய்வெடுக்க சொல்லி வெளியேறினார்... அனைவரும் அபியை கேள்வியாய் பார்க்க அவனோ கண்ணனை நால்வருக்கும் காபி வாங்க வருமாறு அனுப்ப ராம் கோபத்துடன் மறுக்க ரவி அவனை சமாதானம் செய்து அவரை அனுப்பினான்...
அபி நடந்தவற்றை கூறக்கூற மூவரும் திகைத்து விழித்தனர்.... இதில் யாரைக் குற்றம் சொல்லி யாரைத் தண்டிப்பது என்றே ராமிற்க்கும் ரவிக்கும் தெரியவில்லை ..... இதில் தன்னளவு அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை உணர்ந்தவர்கள் அமைதியாய் விடைபெற எழுந்தனர்..
"ஒரு நிமிஷம் ராம்" என்ற விக்னேஷ் அவனின் அருகில் வந்து "அன்னைக்கு வன்மம் வச்சு நா அப்படி பேசலடா... எனக்கு எப்பவுமே உங்க ரெண்டு பேரையும் ரொம்ப புடிக்கும்.... என்னதான் எனக்கு ஆருஷி அண்ணாவும் அபியும் இருந்தாலும் அவங்க சென்னை வந்ததுக்கு அப்புறம் தனியாத்தான் வளர்ந்தேன் எப்பவுமே உனக்கும் ஸ்ரீக்குமான பாண்டிங் என்ன பிரமிக்க வச்சுது உங்களோட இருக்கணும்னு ரொம்ப ஆசை.... அதான் நா அப்படியெல்லாம் நடந்துக்கிட்டேனு நினைக்குறேன்... " என வருந்தி பேச ராம் அவனை இறுக அணைத்து கொண்டான்.

"ஸ்ரீ நம்ம கூட இல்லைனு என்னால ஏத்துக்கவே முடியலடா " என விக்னேஷ் கண்ணீர் சிந்தினான். மற்ற இருவரும் பார்வையாளராகவே இருக்க .. ரவி விக்னேஷின் தோளைத் தொட்டு ஆசுவாசப்படுத்தி சிறு தலையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றனர்.....
------------------------------------------
நள்ளிரவில் நடந்த சம்பவத்தினால் சற்று குழப்பமும் பயமுமாய் இருந்தவளுக்கு ஆதித்யா வெண்ணிற ஒளியூனுள் மறைவதைக் கண்டதும் அவனுக்கு தவறாய்தான் ஏதோ நடக்கிறது என நினைத்துக் கொண்டாள்...

"ரிஷி விடு .. ஆதிக்கு என்னமோ நடக்குது.... அவன காப்பாத்து ...." என அவனிடம் இருக்கும் தன் கையை விடுவிக்க போராட...

தன் மனங்கவர்ந்தவளின் ரிஷி என்ற அழைப்பில் ஒரு நொடி மனம் குளிர்ந்தவன் அவள் தன்னிடம் இருந்து விலக போராடுவதை உணர்ந்து அவளுக்கு நடப்பதை விளக்கும் பொருட்டு

" ஸ்ரீ நான் சொல்றதை கேளு... அவன் போகட்டும் விடு... இது தான் அவனுக்கு நல்லது" என்க...

அவன் கூறுவதை சிறிதும் புரிந்து கொள்ளாதவள் " இல்லை எனக்கு பயமா இருக்கு காலைல நடந்த மாதிரி அவனுக்கு ஏதோ ஆபத்து நா அவன் காப்பாத்தனும் என்னை விடுங்க ....." என போராட... தன் மேல் நம்பிக்கையின்றி தான் சொல்வதை நம்பாமல் செயல்படுவதைக் கண்டவனுக்கு பொறுமை எங்கோ பறந்து போனது.... அந்த அறையின் வெண்ணிற ஒளி முற்றிலும் மறைந்து ஆதியும் அதனுள் மறைந்து போக....

ஸ்ரீக்கு தாம் அருகில் இருந்தும் அவனைக் காக்க முடியாத ஆதங்கம் மொத்தமாய் ஆருஷி மேல் திரும்ப

" உன்னால தான் ஆதித்யா என்ன விட்டு போனான்.. என்னோட இந்த நிலைமைக்கும் நீதான் காரணம்... யூ ஆர் அ ச்சீட்டர்(நீ ஒரு ஏமாற்றுக்காரன்).. எங்கள நம்ப வெச்சு ஏமாத்திட்ட... உன்ன நம்பி வந்ததுக்கு ஆதித்யா வை என்னமோ செஞ்சிட்ட... " என வார்த்தைகளால் அவனின் காதல் கொண்ட உள்ளத்தை வதைக்க அவன் மனம் ஊமையாய் கதறியது...

அவள் கூறியதை நன்றாய் கவனிக்காதவன் தன்னை ஏமாற்றுக்காரன் என்று கூறியதில் ஆத்திரம் மிக "ஸ்டாபிட் ஸ்ரீ .... உன்கூட இருந்தா அவனும் ஆபத்துல மாட்டிப்பான்...உன்னால அவன் ஆன்மாவும் சிக்கல் மாட்டிக்கும்... அவன் வெளிச்சத்திற்கு போகுறதுதான் நல்லது " என ஆத்திரத்தில் வார்த்தையை விட ....

எதிரில் இருந்த ஸ்ரீக்கு கண்கள் கலங்கியது.. இதுவரை அவளிடம் இவ்வளவு கடுமையை யாரும் காட்டியதில்லை....எனவே ஆருஷியின் அதட்டலால் தானாய் அவளின் வாய் மூடிக்கொண்டது. இருந்தும் அவன் சொல்லும் உண்மையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியாது தவித்தாள்...

ஸ்ரீ யின் கலங்கிய விழிகளை கண்ட பின்பே தான் கடுமையாக பேசியதை உணர்ந்தவன் மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.... பொறுமையாக கூறி புரிய வைக்க வேண்டிய விசயத்தை இப்படி ஆத்திரத்தில் போட்டு உடைத்ததை எண்ணி தன்னையே கடிந்து கொண்டான்... என்னதான் உடனிருந்து அவளுடன் பழகவில்லை என்றாலும் அவனுக்கு தெரியும் ஸ்ரீ யின் குணங்கள்.... சமாதானம் செய்ய அவன் அவளருகே செல்ல ஸ்ரீயோ அவனைத் தாண்டி அங்கிருந்த சுவரின் வழியே ஊடுருவி சென்றாள்...

"ஸாரி ஸ்ரீ .. ஏதோ கோபத்துல பேசிட்டேன்... நில்லு ஸ்ரீ " அவன் கூறிய சமாதானங்கள் எதுவும் அவள் செவியை சென்றடையவில்லை.. ஆருஷியும் அவள் பின்னேயே சுவற்றை தாண்டி சென்றுஅவளைத் தடுக்க முயற்ச்சிக்க அவளோ வேகமாய் அவ்விடத்தை விட்டு நகர ஆருஷி அவள் பின்னாலேயே சென்றான்....

அவ்வழியே சென்ற சில வண்டிகளையும் மனிதர்களையும் ஊடுருவி செல்ல ஒரு சில நொடிகளில் ஸ்ரீ ஆருஷியின் கண்முன்னேயே மறைந்து போனாள்... தன் கண்முன் கண்ட காட்சியில் அவள் மறைந்து போவதைக் கண்டவன் 'ஸ்ரீ.... ஸ்ரீ .... ' என அழைத்தவை காற்றிலேயே கரைந்து போனது..

சூரியன் வேறு மறையத் துவங்கி இருக்க இருளில் அவளைக் கவர்ந்து செல்லக் காத்திருக்கும் அவளுக்கான ஆபத்து நெருங்குவதை உணர்ந்தான்... எங்கு சென்றாள் என குழம்பி ஒருநிமிடம் உலகமே அவனுக்கு தட்டாமாலை சுற்றுவது போல் உணர்ந்தான்.... ஒருவேளை கடற்கரை சென்றிருப்பாளோ என நினைத்தவன் வாய்ப்பிருக்கிறது என அங்கு செல்ல சித்தரின் சக்திகளைப் பயன்படுத்தினான்.....

ஆன்மாக்களுக்கு வெளிச்சத்திற்கான பாதை திறந்து விட்டால் அவர்களுக்கான சக்திகளும் முடிந்துவிடும் அதனால் தான் ஆருஷிக்கு தனியாக எந்த சக்திகளும் கிடையாது சித்தர் அளித்த சக்தியும் அவர் கொடுத்த ருத்ராட்சமுமே அவனை இந்த பூமியில் இருக்க வைத்துள்ளது அதுவும் நான்கு நாட்களுக்கு மட்டுமே... எனில் ஆருஷியும் ஒரு ஆன்மாவா ???? ஆம் அவனும் ஆன்மா தான் அவனுக்கான வெளிச்சப் பாதையும் முன்னாடியே திறக்கப் பட்டுவிட்டது....

இருள் கவிழ துவங்கியிருந்த அந்த ஆள்நடமாட்டம் குறைந்த முன்பு ஸ்ரீயும் ஆதியும் இருந்த கடற்கரைப் பகுதியில் அலையில் தன் ஜீவனை கலக்கவிட்டு ஸ்ரீ கண்களில் கண்ணீர் வழிய கடலை வெறித்தபடி நின்றிருந்தாள்.... இன்னும் இந்த வாழ்க்கை தனக்காக என்ன வைத்திருக்கிறது என தெரியாமல் தனக்கிருந்த ஒரே ஆறுதலையும் இழந்து , தான் கண்மூடி தனமாய் நம்பிய ஆடவனும் பொய்த்து போனது என ஆதீத மன அழுத்தத்தில் நிற்காமல் வழியும் கண்ணீரையும் துடைக்க மனமின்றி அவளை சுற்றி நடக்கும் மாற்றங்களை கவனியாது நின்றிருந்தாள்...

மெல்ல மெல்ல இருள் கவ்வ துவங்கியிருந்த வேளையில் கடற்கரையில் அவளிருந்த பகுதி மட்டும் சற்று கூடுதலாக இருள் பரவத் துவங்கியிருந்தது குளிர்ந்த காற்று அவளின் ஆன்மாவை வருடியதில் சுயம் உணர்ந்தவள் மாறும் வானிலையில் மனம் திடுக்கிட பயத்துடனே சுற்றிலும் தன் பார்வையை ஓட்டினாள்....

இதேபோல் தான் நள்ளிரவிலும் நடந்தது என உணர அவள் மனமும் ஆன்மாவும் நடுங்க ஆரம்பித்தது... அலைகளுடன் உறவாடிக் கொண்டிருந்த தன் கால்களை மெல்ல பிரித்து தரையை அடைய அவளின்
பின்னே 'கர்ர்..... கர்ர்ர்ர்....' என்ற உறுமலில் உயிர் உறைய நடுக்கத்துடன் பின்னால் திரும்பிப் பார்த்தாள்.....

உயிர் உள்ள எவரேனும் அவ்விடத்தில் இருப்பின் இரத்தம் உறைந்து இதயம் நிச்சயம் தன் செயல்பாட்டை நிறுத்தியிருக்கும்... அவளின் கண்முன்னே அவளை வெறித்தபடி இருந்த மஞ்சள் நிறக் கண்களும் முன்நீண்ட மூக்கில் இரத்தம் பரவியிருக்க அதன் கீழ் சிங்கத்தின் பற்களை போல இருபக்கமும் நீண்ட இரத்தகறையுடன் கூடிய பற்களும் மேலும் சில இரத்தத்துளிகள் வாயிலிருந்தும் வழிய நான்கு கால்களில் நகங்கள் நீண்டு அதன் உடலில் அங்கு அங்கு காயங்களுடனும் இருந்த அந்த ஜந்து நாயா இல்லை ஓணாயா அல்லது இது வேறு ஏதோ வகை அரக்கனா எனும் சந்தேகத்தை தோன்றிவிக்கும் போல் இருந்தது...

ஸ்ரீ அதைப்பார்த்து பயந்து முதலில் அலற வாயெடுத்தவள் என்ன நினைத்தாளோ பின் தன் கைகளைக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள் மெல்ல பின்னோக்கி கால்களை வைக்க அந்த ஜந்துவின் உறுமல் அதிகமானது...

எப்படி இதனிடம் இருந்து தப்பிப்பது என தெரியாமல் விழித்தவளுக்கு திடீரென அந்த யோசனை எழுந்தது... முதலில் விபத்து நடந்த அன்று திடீரென மறைந்து வர்ஷினியிடம் சென்றது... அதாவது ஸ்ரீ அவளுக்கே தெரியாமல் தன் ஆன்ம சக்திகளைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாள்...தற்போது கூட கடற்கரை என‌ நினைத்ததும் ஆதித்யா வீட்டிலிருந்து மறைந்து வந்தது என வரிசையாய் நினைத்தவளுக்கு மீண்டும் அதே போல் மறைந்து இங்கிருந்து தப்பிக்கலாம் என நினைத்து முயற்சித்தாள்...

அந்தோ பரிதாபம் முன்னவே தீய ஆன்மாக்கள் அவளை சூழ்ந்து கொண்டதால் அவளால் அவ்விடத்தை விட்டு இம்மியளவும் நகர முடியவில்லை... எலும்பை உருக்குவது போன்று குளிரும் கெட்ட அழுகிய வாடையும் அவ்விடத்தை ஆக்கிரமித்தது....

அந்த ஜந்துவோ அவளை நோக்கி முன்னேற இவளுக்கு கண்ணீர் மட்டுமே வந்தது .. மெதுவாய் இவளும் பின் நகர சட்டென அவ்விடம் முழுதும் கருமை பரவி அவளால் எதையும் பார்க்க முடியாமல் போனது....

சிறிது நேரத்திலேயே அம்மிருகம் வேகமாய் அவளின் மீது பாய அவளோ அது தன்னை நோக்கி வருவதை அதன் சத்தத்தை வைத்து உணர்நதவள் இனி தன்னால் இவைகளிடம் இருந்த தப்பிக்க இயலாது என உணர்ந்தவள் பயத்தில் தன் இரு கைகளை மடக்கி தன் முகத்திற்கு நேராய் வைத்தவள் 'ஆ..ஆ... ' என அலறியிருந்தாள்....

ஸ்ரீ யைத் தேடி கடற்கரை வந்தவனுக்கு அந்த நீண்ட இடத்தில் கரைப்பகுதி சந்தடி குறைந்து காட்சியளித்தது.. மனிதர்கள் புழங்கும் பகுதியில் அவள் இருக்க மாட்டாள் ஏனெனில் அவர்கள் அவளை ஊடுருவி செல்லும் போது தடுமாறுவதால் அவ்விடங்களில் அவள் அதிக நேரம் இருக்க மாட்டாள்.... இன்னும் சிறிது நேரத்தில் நன்றாக இருட்டி அவளுக்கான ஆபத்தும் நெருங்கிவிடும் அதனால் ஸ்ரீ எங்கேனும் தென்படுகிறாளா என வேகமாக அவ்விடத்தை ஆராயந்தான்..

அந்த கடற்கரையின் கிழக்கு பகுதியில் ஆட்கள் அவ்வளவாக புலங்காத அவ்விடம் மட்டும் சற்று அதிக இருளாக இருக்க பதற்றத்துடன் அவ்விடம் சென்றான்.

அந்த மையிருளிலும் பாவையின் ஜீவன் ஒருவித பிரகாசத்துடன் அவனுக்கு மட்டும் மின்ன அதே நேரம் இருளில் எதையோப் பார்த்து கைகளால் தன்னை மறைத்து கத்தும் போது தான் அவனும் அங்கு நடக்கும் விபரீதத்தை உணர்ந்தான் விரைந்து செயல் பட்டவன் புயலை ஒத்த வேகத்தில் அந்த இருளைக் கிழித்துக் கொண்டு உள் நுழைந்தவன் அவளைத் தன் கைகளினால் தோளோடு அணைத்தவாறு பிடித்துக் கொண்டு அவ்விடத்தில் இருந்து மறைந்தான்....

யாரோ தன்னை அணைத்ததில் முதலில் பயந்தவள் பின் அந்த ஸ்பரிசத்தை யாரென உணர்ந்தவள் அவன் இழுத்த இழுப்புக்கு சென்றாள்... ஏதோ ஒரு வெளிச்சமான இடத்திற்கு வந்த ஆருஷி தன் கையணைவில் இருந்தவளை குனிந்து பார்க்க அதே நேரம் காரிகையவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்....
" ஆர் யூ ஓகே .. ஸ்ரீ" என்ற கேள்வியில் சுயம் தெளிந்தவள் அவனை விட்டு அவசரமாய் விலகி நின்றாள்...
"ஹே... ரிலாக்ஸ்.. " என ஆருஷி அவளை ஆசுவாசப்படுத்தினான்..

தன்னை நிதானப்படுத்திக் கொண்ட ஸ்ரீயும் ஆருஷியை நோக்கி " நீங்க யாரு ??? என்னோட இந்த நிலைமைக்கு நீங்க தானே காரணம் .. அப்புறம் ஏன் என்ன காப்பத்துற மாதிரி நடிக்கிறீங்க ..என்ன சுத்தி என்ன நடக்குதுனு சொல்றீங்களா ... " என்று கேள்விக் கணைகளை சற்று கோபமாக கேட்டாள்... ஆருஷிக்கோ அவளின் கேள்வியில் 'என்ன அவளோட இறப்புக்கு நான் தான் காரணம்னு எப்படி தெரிஞ்சது 'என குழப்பமான மனநிலையில் சற்று திகிலுடன் ஸ்ரீ யைப் பார்த்தான்...

கதையைப் பற்றி நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே.. உங்கள் கருத்துக்களே என்னை இன்னும் எழுத தூண்டும்... 👇👇

என்றும் அன்புடன்
உங்கள்
AnuCharan
 
Last edited:

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 20

மூன்றாண்டுகள் கடும் உழைப்பினால் சென்னையில் வளர்ந்து வரும் தொழில் அதிபர்கள் வரிசையில் இடம் பிடித்திருந்தான் ஆருஷி.

கடிவாளமிட்ட குதிரை போல் அவனுக்கு உறங்கும் நேரம் தவிர மற்ற பொழுதுகளில் எல்லாம் பிஸ்னஸ் தான்... அவனின் வளர்ச்சியில் பெற்றோர்கள் மகழ்ந்தாலும் இந்த வயதிலேயே இப்படி ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டே இருப்பதில் மிகப் பெரிய வருத்தம் இருந்து கொண்டே இருந்தது அதனை ஆருஷியிடம் எடுத்துரைக்கவும் செய்தனர்.

அதனால் வருடத்திற்கு பத்து நாட்கள் ஓய்வு எடுப்பது போல வீட்டில் காட்டிக் கொண்டு கோவை சென்றுவிடுவான்... அங்கு நான்கு நாட்கள் தன் பள்ளி கால நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு அடுத்தடுத்த நாட்களில் எல்லாம் சித்தப்பா (விக்னேஷின் அப்பா) செய்யும் தொழில்களில் உதவி செய்வதோடு அவரின் அனுபவங்களையும் உடன் இருந்து கற்றுக் கொள்வான் ‌..இந்த விசயம் அவனின் பெற்றோர்களுக்கு தெரிந்தாலும் கண்டும் காணாமலும் விட்டு விடுவர்.....

இப்படியான நாட்களில் தான் வெளிநாட்டவருடனான புது டீலிங்கான அறிவிப்பு வந்தது.. அது சற்று பெரிய புராஜெக்ட் ஆனால் லாபமோ ஆருஷி வருடத்தில் நான்கு புராஜெக்ட் முடித்தால் கிடைக்கும் லாபத்தை விட அதிகம்... எனவே ஆறுமாதம் கடுமையான உழைப்பின் பயனாக அந்த டீலிங்கை வெற்றிகரமாக முடிப்பதற்கான அத்தனை வேலைகளையும் முடித்திருந்தான்..

அந்த மாதத்தின் இறுதியில் அனைவரின் கருத்துகளும் கலந்தாலோசிக்கப்பட்டு அதில் சிறந்த கம்பெனிக்கு புராஜெக்ட் தருவதாக அந்த வெளிநாட்டு நிறுவனம் முடிவு செய்திருந்தது..... சென்னையிலேயே முன்னிலையில் இருந்த மற்றொரு நிறுவனமான கே.கே குரூப்ஸ் ஆஃப் கம்பெனி அந்த புராஜெக்ட் தனக்கே வேண்டுமென மற்ற போட்டி நிறுவனங்களை விலைபேசி அந்த இறுதி மீட்டிங்கிற்கு வரவிடாமல் செய்திருந்தனர்..

ஆருஷியிடமும் அதேபோல் விலை பேச அவனோ மறுத்து போட்டியில் பங்கு பெறுவதாக கூறினான்.... கேகே குரூப்ஸின் உரிமையாளனான வருண் கிருஷ்ணன் ஆருஷியின் மொத்த விவரங்களையும் அறிந்து அவன் இந்த மீட்டிங்கில் பங்கு பெற்றால் நிச்சயம் இந்த புராஜெக்ட் தன் கைவிட்டு போய்விடும் அதுமட்டுமின்றி இதுவரை நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தன் கம்பெனி அதையும் இழக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தான்

பல்வேறு விதமாக ஆருஷிக்கு தொல்லைகள் தர பொறுத்துப் பார்த்தவனும் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் அவனை நேரில் சந்தித்து சமாதானம் பேசினான்.... வருணும் அந்த புராஜெக்ட் பெறுவதில் உறுதியாய் இருக்க ஆருஷி பொறுமையாய் " இருவரும் பங்குபெறுவோம் யாருடைய பிளான் அவர்களுக்கு பிடித்திருக்கிறதோ அவர்களுடையதை தேர்வு செய்யட்டும் .... இதில் நாம் தனிப்பட்ட விதத்தில் மோத என்ன இருக்கிறது" என பொறுமையாய் எடுத்துரைக்க இறுதியில் வருண் ஆருஷியின் பிளானிற்கு விலைபேசும் அளவு வந்துவிட்டான்..

அடுத்தவர்கள் உழைப்பைத் திருடும் அளவிற்கு அவன் தரம் தாழ்ந்து நடந்து கொள்வதில் இனி இவனால் நமக்கு நிச்சயம் தொந்தரவு இருக்கும் என எண்ணிய ஆருஷி அவனின் ஆணிவேர் வரை தெரிந்து கொள்ள நினைத்தான்..

ஆருஷிக்கு எப்போதும் ஒரு பழக்கம் தொழிலும் சரி வாழ்க்கையிலும் சரி தமக்கு தொல்லை கொடுப்பவர்களிடம் முதலில் பொறுமையாய் சமாதானமாக பேசுவான் அதனை கேட்டுக் கொண்டால் தப்பிப்பர் இல்லையெனில் அவர்களின் அடிவேர் வரை தோண்டி அந்த குழியில் அவர்களையே இறக்கிவிடுவான் ..‌‌ பின் அவனிடம் கெஞ்சினாலும் வேலைக்காகாது....

வருண் கிருஷ்ணன் தொழில் சிலபல குளறுபடிகள் செய்தாலும் பெரிதாக அவனை மாட்ட வைப்பதற்கு எதுவும் இல்லை... ஆனால் அவனின் பெரிய வீக்னெஸ் பெண்கள்..அவனே தனக்கான பெண்ணைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஒத்துக் கொண்டாலும் இல்லையென்றாலும் கட்டாயப்படுத்தி தனக்கு ஒத்துழைக்க வைப்பான்.. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க சென்றால் தன் பணபலத்தின் மூலம் கேஸை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவான். அவனால் இதுவரை இரண்டு மூன்று பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்....அதோடு சில நேரங்களில் போதைவஸ்துகளும் பயன்படுத்துவது தெரிந்தது...

பொதுவாகவே ஆருஷி தன் எதிரிகளை தொழில் மூலமாக அடிப்பான் யாருடைய சொந்த வாழ்க்கையிலும் தலையிட மாட்டான்.. ஆனால் வருண் விசயத்தில் அவனால் அதைக் கடைபிடிக்க இயலவில்லை பெண்களை பெரிதும் மதிப்பவன் இப்படியொருவனின் முகத்திரையை சமூகத்தின் முன் பட்டவர்த்தனமாக காட்ட வேண்டி அதற்கான எல்லா ஆதாரங்களையும் திரட்டினான் ..

புது புராஜெக்டின் மீட்டிங்கிற்கு இன்னும் ஒரு வாரம் இருந்த நிலையில் அன்று அபியும், விக்னேஷும் படிப்பு முடிந்து சென்னை வரவுள்ளதால் அதற்கான ஏற்பாடுகளும் செய்துவிட்டு ஆபிஸில் இருந்து வீடு திரும்பினான்... தன் கார் பழுது என்று விக்னேஷ் இங்கிருக்கும் வரை பயன்படுத்திய காரை எடுத்துவந்திருந்தான் ...

வேலைப்பளுவில் மதிய உணவை மறந்திருந்தவன் வழக்கமாக உணவு எடுத்துக் கொள்ளும் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்றிருந்தான்...எப்போதும் போல் உணவை உண்டு முடித்தவனுக்கு அலைப்பேசி ஒலியெழுப்ப அபியிடம் இருந்து கால் வந்திருந்தது அவனிடம் பேசிக்கொண்டே அவனுக்கான லெமன் ஜூசைக் குடித்தான்....

அலைப்பேசியில் பேசாமல் குடித்திருந்தால் அதன் சுவை வேறுபாட்டை உணர்ந்து நடக்கும் விபரிதத்தை தடுத்திருக்கலாம் ஆனால் அவனின் கவனம் சிதறியிருக்க முழு ஜூசையும் குடித்திருந்தான்...உணவிற்கான தொகையை செலுத்திவிட்டு காரில் வந்தவனுக்கு சிறிது நேரத்தில் தலை சுற்ற ஆரம்பித்தது....

தன்னைப் பற்றிய ஆதாரங்களை ஆருஷி சேகரித்து வைத்திருப்பதை எப்படியோ தெரிந்து கொண்ட வருண் அவனைத் தடுக்க நேரடியாக மிரட்ட சிறிதும் பயமின்றி "இந்த புராஜெக்டை உன் கண் முன்னே பெற்று அதன் பின்பு இந்த சமூகத்தின் முன் உன் முகத்திரையை கிழிப்பேன்"என சவால் வேறு விட்டிருந்தான் ஆருஷி.

வருண் சமூகத்தில் நல்ல பெயரோடு இருப்பவன் நாளை இந்த விசயம் வெளியில் வந்தால் பெரிய அசிங்கம் என உணர்ந்தவனுக்கு அவனின் பேச்சுகள் தூபம் போட எந்தவொரு விசயத்தை தனக்கு செய்ய நினைத்தானோ அதையே அவனுக்கு திருப்பித் தர வேண்டும் என்று நினைத்தான் ..

தன் திட்டத்தை செயல்படுத்த இருபத்தி நான்கு மணி நேரமும் அவனை ஃபாலோ செய்து அவன் குடிக்கும் ஜூஸில் போதை மருந்தை கலக்கி இருந்தான் அத்தோடு நில்லாமல் ஆருஷியின் காரின் பிரேக் பழுது ஆவது போல் செட் செய்திருந்தான்... போதையில் கார் ஓட்டியதால் விபத்து என‌ அவனுடைய பெயரைக் கெடுப்பதே வருணின் நோக்கம்..

இதுவரை மதுபானம் சிகரட் என எந்த தீயப் பழக்கங்களையும் தொட்டு கூட பார்த்திராதவன் உடலில் கலந்த போதை வஸ்துவால் முற்றிலும் நிதானம் இழந்துதான் போனான்.... காரை நிறுத்த முயற்சி செய்ய அந்நேரம் பார்த்து வண்டியின் பிரேக் வேறு செயலிழந்தது....

நடக்கும் விபரீதத்தை உணர்ந்தும் உணராமலும் போதை நிலையில் இருந்தாலும் இத்தனை வருடங்கள் கார் ஓட்டி பழக்கமானதில் அவனின் கை மற்றும் கால்கள் சற்று நிதானத்துடனே காரினை இயக்கிக் கொண்டிருந்தது...

இருந்தும் முதல்முறை உடலில் கலந்த போதைவஸ்து அவன் உடலில் வீரியத்துடன் செயல்பட ஆரம்பித்து இருக்க சிறிது நேரத்திலேயே முற்றிலும் நிதானத்தை இழந்திருந்தான்.....

கடினப்பட்டு ஓட்டியவன் எவருக்கும் பாதிப்பு வராமல் நிறுத்த ஆள் நடமாட்டம் குறைந்த அந்த ஒரு வழிப் பாதையில் காரினை செலுத்தினான்....

அதற்கு முன்பே தன் மொபைலில் வாய்ஸ் ரெக்கார்டரை ஆன் செய்திருந்தவன் வருண் பற்றி முழுவதும் கூறிவிட்டு "எனக்கு என்ன நடந்தாலும் அதுக்கு அந்த வருண் தான் காரணம் அபி அவன சும்மா விட்டுடாத.... " என்று போதையில் உளறிக் கொண்டு இருக்கையிலேயே அவன் கண்கள் சொருக ஆரம்பிக்க "அபி என்னால கன்ட்ரோல் பண்ண முடியலடா ... "என்றான் உள்ளே போன குரலில்.....

அவனின் உடல் சிறிது சிறிதாக கட்டுப்பாட்டை இழந்து தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியிருக்க வண்டி வேகமெடுத்தது தாறுமாறாக ஓடிய காரில் சட்டென ஏற்பட்ட அதிர்வில் மீண்டும் கண்களை திறந்தான் ஆருஷி... வெளியில் இருந்து பார்ப்பவருக்கு கார் வேகமாக செல்வதுபோல் தான் தெரியும் ஏனெனில் ஆருஷி முடிந்தமட்டும் காரை சீராய் செலுத்தினான்....

அந்த வழியே வந்த ஸ்ரீ யின் வண்டியில் மோதியதில் ஏற்பட்ட தீடீர் அதிர்வு அவன் கவனத்தில் பதியாமல் இருந்தாலும் ஆருஷி ஆன் செய்து வைத்திருந்த ரெக்கார்டரில் அந்த சத்தமும் தெளிவாய் பதிவாகி இருந்தது... அந்த பாதையின் முடிவு நெடுஞ்சாலையை அடைந்திருக்க மீண்டும் பேச ஆரம்பித்தான்...

"அபி நம்ம அப்பா அம்மாவ நல்லா பாத்துக்கோடா.... அவங்களை தனியா விட்டுடாத " என நாகுழற கூறினான்...

ஏனோ அவனுக்கு சிறிதும் நம்பிக்கையில்லை சுயநினைவில் இருந்திருந்தால் நிச்சயமாக தன்னைக் காக்க ஏதேனும் முயற்சி செய்திருப்பான்.... தன்னவளின் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்ததை உணர்ந்தானோ என்னவோ தன்னைக் காக்கும் மார்க்கத்தையும் கைவிட்டான்...

வருணைப் பற்றி தான் சேகரித்த ஆதாரங்கள் இருக்கும் இடத்தைக் கூறியவனுக்கு தற்போது முழு மயக்கம் ஏற்பட்டு இருந்தது....

அடுத்தடுத்த சில நொடிகளிலேயே எதிரில் வந்த கன்டெயினர் மீது அவனின் கார் தாறுமாறாக மோதியிருக்க தனக்கு என்ன நிகழ்கிறது என்று அறியாமலேயே உயிரை விட்டிருந்தான்....

அன்று நள்ளிரவில் சென்னையை அடைந்த அபிநந்தனையும் விக்னேஷையும் தன் அண்ணனான ஆருஷியின் மரணமே வரவேற்றது...விசயம் கேள்விப்பட்டு மருத்துவமனை அடையும் முன்பே அவனின் பெற்றோர்கள் அங்கு சூழ்ந்திருந்தன.... கண்ணீருடன் அபி மற்றும் விக்னேஷை கட்டிக் கொண்டு அவர்களின் அன்னை கதற இருவரும் எவ்வாறு ஆறுதல் சொல்வது என தெரியாமல் விழிகளில் வழியும் தண்ணீருடன் நின்றிருந்தனர்...

சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்ட அபி விக்னேஷை பெரியவர்களுக்கு துணையாய் இருக்க வைத்துவிட்டு தன் அண்ணனின் விசுவாசியான பிஏ கண்ணனை அழைத்து விசாரிக்க விபத்தைத் பற்றிய முழு விவரமும் அறிந்து கொண்டான்..

மேலும் "போதையில் வண்டி ஓட்டியதால் கன்டெய்னரில் மோதி பிரபல தொழிலதிபர் சாவு" என அடுத்தநாள் வரவிருந்த செய்தியை தன் பத்திரிக்கை நண்பனின் மூலமாக அறிந்து கொண்ட அபிக்கு இரத்தம் கொதித்தது.... அவனுக்கு தான் தன் அண்ணனைப் பற்றி தெரியுமே... நிச்சயம் இதில் ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தவன் முதலில் இந்த செய்தியை மாற்ற எண்ணி தன் இன்னொரு நண்பனின் தந்தை அரசியலில் இருப்பதால் அவனின் உதவியை நாடி ஒரு நாள் இரவில் அனைத்தையும் மாற்றியிருந்தான்....

அதில்தான் ஆருஷியால் ஏற்படுத்தப்பட்டு இருந்த விபத்தைத் பற்றியும் தெரிந்து கொண்டவன் அதில் சம்பந்தப்பட்ட அனைவரின் முழுவிவரமும் அறிந்து அதனை சாதா விபத்து போல் மாற்றியிருந்தான் இதில் ஸ்ரீயின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்கையிலேயே ரவியைப் பற்றித் தெரிந்து கொண்டவனுக்கு நிச்சயம் அவன் தன்னை தேடி வருவான் என்பதில் உறுதியாய் இருந்தான் ... இறுதியில் அதேபோல் தான் நடந்ததும்...

காவல்துறையிலிருந்து ஸ்ரீ விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் வரை அனைத்தையும் தனக்கு சாதகமாக மாற்றி அமைத்து சாதாரண விபத்து போல் செய்திருந்தான் இவை அனைத்திலும் ஆருஷியின் பிஏ உடனிருந்து உதவி செய்தார்...

அனைத்தும் முடிந்து அபி வீட்டிற்கு வர அங்கு நடு ஹாலில் முகம் மட்டும் தெரிய உடல் முழுதும் வெண்ணிற துணியால் மூடப்பட்டு கண்ணாடிப் பெட்டியினுள் வைக்கப் பட்டிருந்த ஆருஷியைக் கண்டு துக்கம் தொண்டையை அடைக்க அருகில் சென்று தன் கைகளால் அந்த கண்ணாடிப் பெட்டியைத் தடவினான் அபி....

இங்கிருந்து வெளிநாடு செல்கையில் ஏர்போர்ட்டில் கம்பீரமாய் தன்னை வழியனுப்பிய அண்ணனின் காட்சி கண்முன்னே வர அவனுக்கு எதிரில் இருந்த உருவங்கள் கண்ணீரினால் மூடப்பட்டது.... விக்னேஷ் ஓடிவந்து அபியைக் கட்டிக் கொண்டு அழ அவனாலும் தாங்க இயலாது கண்ணீர் வடித்தான்...ஆருஷிக்கான இறுதி சடங்குகள் முடிய இரண்டு நாட்கள் கழித்து விபத்தான கார் மற்றும் இதர பிற ஆருஷியின் பொருட்களும் அபியிடம் ஒப்படைக்கப்பட்டது....

அதில் செயலிழந்திருந்த ஆருஷியின் மொபைலை சரிசெய்து பரிசோதித்தவனுக்கு அவன் கடைசியாய் பயன்படுத்திய ரெக்கார்டரை ஓபன் செய்ய அதில் அவன் பதிவிட்டிருந்த வாய்ஸ் மெஸேஜைக் கேட்டான்...அனைத்தையும் கேட்ட அபியின் முகம் இறுகிப் போனது....

நடந்த உண்மைகளை அறிந்தவன் தன் அண்ணனின் ஆசையான அந்த வெளிநாட்டு புராஜெக்ட்டை கடினப் பட்டு வருண் முன் பெற்றதோடு அவன் விபத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழிக்க ஆரம்பித்தான் ...இதை விக்னேஷிற்கு கூட தெரியாமல் பார்த்துக் கொண்டான்..
இறுதியில் இதற்கு எல்லாம் மூலக் காரணமான வருணனை தேடுகையில் அவன் அபிக்கு பயந்து வெளியூரில் பதுங்கிக் கொண்டான்...

ஏனெனில் மீட்டிங்கின் போதே அபியின் பார்வையில் ஆருஷியின் மரணத்தில் தனக்கு சம்பந்தம் இருப்பது அவனுக்கு தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டான் அத்தோடு அவனின் ஆட்கள் ஒவ்வொருவராய் மர்மமான முறையில் மரணமடைவதையும் அறிந்த வருண் தன் உயிரைக் காக்க தலைமறைவாகி விட்டான்....

வருணைத் தேடிக் களைத்த அபி புது புராஜெக்டில் கவனம் செலுத்தியிருந்த சமயத்தில் ஒருநாள் காலை "பிரபல தொழில் அதிபர் வருண் கிருஷ்ணன் வால்பாறை சொகுசு பங்களாவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்"என்ற செய்தியே வந்தது.... இதைக் கேட்ட அவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை....

அவனோ விக்னேஷை வைத்துக் கொண்டு முழுநேரமும் தொழில் மற்றும் குடும்பம் என மிகவும் பிஸியாய் இருந்ததில் ரவியை மறந்தே போயிருந்தான்..
அந்த சமயத்தில் தான் நூல் பிடித்து ராமும் ரவியும் அபியை நெருங்கியிருந்தனர்...

-------------------------------------------
லேட்டா யூடி போடறதுக்கு முதல்ல எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க மக்களே:rolleyes::)...சொந்த வேலைப் பளுவினால் தாமதமாகிவிட்டது.....

கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 21

அரசு அளித்திருந்த குவார்ட்டர்ஸ் மொட்டைமாடியில் அமர்ந்து அபிநந்தன் கூறியதை நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ராமிற்கும் ரவிக்கும் தோன்றியது எல்லாம் விதி வலியது என்பதே ....

இதில் அப்பாவியாய் மாட்டி பலியான ஸ்ரீ க்கு எந்தவிதத்தில் நியாயம் செய்வது என அறியாமல் இருவரும் இருள் கவ்விய அந்த தொலைதூர வானத்தை வெறித்துக் கொண்டிருந்தனர்..

நீண்ட நெடிய அந்த மௌனத்தை உடைத்த ரவி "ராம் நாளைக்கு நீ ஊருக்கு கிளம்பு .... வீட்ல கேஸ் பத்தி ஏதும் கேட்டாங்கன்னா இது விபத்துனு சொல்லிவிடு... " என்க ..

"சரி ரவி... இனி நீ இங்க என்ன செய்ய போறீங்க ... பேசாமல் நம்ம ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துரு" என மெல்ல வினவினான் ராம்...

"அதுக்கு கொஞ்சநாள் ஆகும் ராம்.‌ அதுவரை நான் இங்க இருக்கணும்... இப்போதைக்கு நம்ம குடும்பத்துக்கு நீ ரொம்ப தேவை ... உன்னால மட்டும் தான் அவங்களை பழைய நிலைமைக்கு கொண்டு வர முடியும்.... "என்றான் ...

அவன் சொல்வதும் சரியே... ராம் ஸ்ரீ இருவரும் இருந்தால் அந்த இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது...

ஸ்ரீ யின் இழப்பிலேயே அனைவரும் மூழ்கி இருந்தால் மிச்ச வாழ்க்கையும் சோகத்திலேயே கழிந்துவிடும் எவரேனும் ஒருவராவது அவர்களை பழைய நிலைக்கு திரும்ப வைக்க முதல் படி எடுத்து வைக்க வேண்டும்... அது நிச்சயம் ராமால் மட்டுமே முடியும் என்பதில் ரவி உறுதியாய் இருந்தான்....

எனவே அடுத்த நாளிலேயே அவனை பொள்ளாச்சி அனுப்பி வைத்திருந்தான்...

----------------------

" என் பேத்தி உனக்கு என்ன பாவம் செய்தாள்.. ஏன் அவளோட வாழ்க்கையை இப்படி பாதியிலேயே முடித்து வைத்தாய் சொல்லு... இதுவரை உன்னை கடவுளாய் நினைத்து பூஜித்த எங்களுக்கு நீ உண்மையிலேயே கல் தான் என்பதை உணர்த்திவிட்டாய்.... உன்னைப் போய் என் பேத்தி நம்பி நிதமும் உன்ன தொழுதாலே அதற்கெல்லாம் கிடைத்த பரிசுதான் இதுவா " என மானசீகமாய் தன் மனதின் ஆற்றாமையை மௌனமாய் மொழிந்து கொண்டு...
அந்த சிவன் சன்னிதானத்தில் இருந்த சிவலிங்கத்தை வெறித்துக் கொண்டிருந்தார் வள்ளி (ஸ்ரீயின் பாட்டி)...

ஸ்ரீ மற்றும் சுந்தரத்தின் மரணத்திற்கு பிறகு உயிரற்ற நடைபிணமாகத் தான் இருந்தார் இன்று வற்புறுத்தி அவரின் பேரன்கள் தோட்டத்திற்கு அழைத்து வந்திருந்தனர்...

அவ்வழியிலேயே சிவன் கோவில் இருக்க அதனுள் நுழைந்திருந்தார்...

எங்கோ கேட்ட மணியோசையில் தன்னுணர்வு பெற்றவர் லிங்கத்தின் மீதான பார்வையை விலக்க அவரின் அருகிலேயே குருஜி சோகம் அப்பிய முகத்துடன் பரிதாபமாக அவரைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்.... குருஜியை பார்த்தவுடன் அவருக்கு நினைவு வந்ததெல்லாம் ஒருமுறை ஸ்ரீ க்கு வரன் பார்க்கலாமா என கேட்க சென்ற அன்று ஸ்ரீ யின் ஜாதகத்தைப் பார்த்து அவரின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களே...

அந்த சம்பவத்திற்குப்பின் வள்ளி பாட்டி பல முறை சென்று அவரிடம் உண்மையை கூற சொல்லி கேட்க அவரோ எதுவும் கூற மறுத்து விட்டார்....

அதனை நினைவு கூர்ந்தவராய் தன் கூர்மையான பார்வையால் நோக்கினார் வள்ளி பாட்டி...
"அப்போ உங்களுக்கு இதெல்லாம் நடக்கும்னு முன்னாடியே தெரிந்து உள்ளதே சரியா.. " என நேரடியாக விசயத்திற்கு வர...

குருஜி தெரியும் என்பது போல் தலையசைத்தவர்... சன்னிதானத்திற்கு அருகில் இருந்த திண்ணையில் அமர அவரை அழைத்து சென்றார்..

"நீங்கள் முன்னாடியே இதைப் பற்றி எங்களிடம் தெரிவித்திருந்தால் நாங்கள் எங்கள் உயிரைக் கொடுத்தேனும் ஸ்ரீயைக் காத்திருப்போம்... ஏன் இப்படி எங்ககிட்ட இருந்து மறைத்தீர்கள். உங்கள் மேல் இருந்த நம்பிக்கையே போய்விட்டது "என கண்ணீருடன் ஆதங்கமாய் வினவினார்...

குருஜி " விதியை யாராலும் மாற்ற இயலாது அம்மா... நீங்கள் என்ன முயற்சி செய்து இருந்தாலும் ஸ்ரீயை காப்பாற்றியிருக்க இயலாது... என்ன நடக்க வேண்டுமோ அது கட்டாயம் நடந்தே தீரும்...
உங்கள் பேத்தி ஒரு அதிசய குழந்தை அவளின் உடல் உங்கள் வம்சத்தில் உருவாகி இருந்தாலும் அவளின் ஜீவன் அரக்கனை அழிக்கும் சக்தி வாய்ந்தது..."என்றவர்
ஸ்ரீ யினது பிறப்பு ரகசியத்தை வள்ளி பாட்டியிடம் கூறினார்...

அவர் கூறியதை கேட்டவருக்கு அதிர்ச்சியில் வார்த்தைகள் வர மறுத்தன...

மேலும் தொடர்ந்த குருஜி "அவளுடைய உடல் வேண்டுமானால் அழிந்திருக்கலாம் ஆனால் அவளின் ஜீவன் இன்னும் இவ்வுலகை விட்டு செல்லவில்லை.... அதற்கான நேரமும் வர வில்லை... அனைத்தும் சரியானதும் அவள் உங்களிடமே வந்து சேருவாள்... நம்பிக்கையுடன் அந்த சிவபெருமானே கதி என தொழுது வாருங்கள்... நல்லதே நடக்கும் ... " என்றவர் மேலும் சில முக்கியமான விடயங்கள் அவரிடம் கூறியவர் அதன்படி செய்ய சொல்லிவிட்டு அவ்விடத்திலிருந்து நகர்ந்தார்.. ...

வள்ளி பாட்டிக்கு அவரிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருப்பினும் அவர் கடைசியாக கூறிய செய்தி சற்று மனத் தெளிவை அளித்தது..

மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றை மனதில் கணக்கிட்டவர் வீட்டை நோக்கி சென்றார்...
----------------------

ஆருஷி தனக்கு நடந்தவற்றை கூறி முடிக்கையில் ஸ்ரீயின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது....

"ஸாரி ரிஷி ... உன்ன ரொம்ப தப்பா நினைச்சுட்டேன்... எதிர்பாராம நடந்த விபத்துக்கு நீ என்ன பண்ணுவ... ஆமா அந்த வருண் எப்படி இறந்தான்..." என்றதும் அவனுக்கு அன்றைய இரவு நினைவுக்கு வந்தது..." தன் மரணத்தை முதலில் ஏற்றுக் கொள்ளாத ஆருஷி ...

ஆக்ரோஷத்தில் என்ன செய்வதென்று தெரியாது தன் உயிரற்ற உடலின் அருகிலேயே இருந்தான் ...

அங்கு தன் உறவுகள் கதறுவதை பார்த்தவனுக்கு தன்னை இந்நிலைக்கு ஆளாக்கியவனை தடம் தெரியாமல் அழிக்கும் வெறி அதிகமானது...

ஆனால் அபிநந்தன் சமயோஜிதமாய் செயல்படுவதை பார்த்தவனுக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்தது... இனி அவன் தன் குடும்பத்தையும் தொழிலையும் பார்த்துக் கொள்வான் என நம்பிக்கையில் தன் மரணத்திற்கு காரணமான வருணைத் தன் கையாலேயே கொல்ல நினைத்தான்...

தன் ஆன்ம சக்திகள் மூலம் அவனின் இடத்தை ஒரு நிமிடத்தில் அடைந்தவன் அந்த சொகுசு பங்களாவில் அவன் உடல் முழுதும் காயத்தை ஏற்படுத்தி மாடியில் இருந்து குதிக்க வைத்திருந்தான்...

ஆக்ரோஷமான ஆன்மாக்களால் தன் இலக்கை அடைய எந்த எல்லைக்கும் செல்ல இயலும் என்பதை ஆருஷி நன்கு உணர்ந்திருந்தான்...

அதற்கு மனவலிமை மிகவும் அவசியம்.. அவனின் மரணத்தை தன் கண்கூடாக பார்த்தவனுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.. அதன்பின்னரே அவனுக்கான வெளிச்சப்பாதை திறக்க அதனுள் செல்ல வேண்டியவனை சித்தர் தன் சக்திகள் மூலம் தடுத்திருந்தார்...

அவனோ ஒரு நிமிடம் அனைத்தையும் நினைத்துப் பார்த்தவனுக்கு 'உண்மையை சொல்லுவோமா ...வேணா இப்பதான் கொஞ்சம் மலையிறங்கி இருக்கா மறுபடியும் எதும் சொல்லி கோவிச்சுக்கிட்டு போயிட்டா... இப்பவே சென்டிமென்ட்அ வச்சு தான் கவர் பண்ணிருக்கேன் ' என பலவாறு சிந்தித்தவன்...

"தெரியல ஸ்ரீ ... ஆமா ரிஷி ரிஷி னு சொல்றியே அது யாருனு தெரிஞ்சுக்கலாமா " என பேச்சை மாற்றியவன் கேலியாய் ஒற்றை புருவத்தை உயர்த்தி வினவ ,அவன் அழகில் ஒரு நிமிடம் சொக்கி தான் போனாள்.. அவன்பால் மயங்கி துவங்கிய மனதை கட்டுப்படுத்தியவள் குரலை செருமிக் கொண்டே

"அதானே உங்க பேரு " என்க .. அவனோ "என்னோட பேரு ஆருஷினு சொன்ன மாதிரி நியாபகம்" என தாடையில் கைவைத்து யோசிப்பதுபோல் பாவனை செய்தான்...

அவன் சொன்ன பாணியில் அசடு வழிய சிரித்தவள் "எனக்கு ரிஷினுதான் கேட்டுது.. வேணாம்னா சொல்லுங்க இனி ஆரு....ஷினே கூப்புடுறேன் " என இழுத்து சொல்ல ஆருஷியோ வேகமாக மறுத்து

"நீ ரிஷினே கூப்பிடலாம் " என்றான்... எளிதில் அவனுடன் ஒட்டியதை எண்ணி ஸ்ரீக்கு தன்னை நினைத்தே ஆச்சர்யமாக இருந்தது அவன் பெயர் சொன்ன கணமே அவள் மனதிற்கு ரிஷியாகவே பதிந்து போனான்...

அவர்கள் கடற்கரைக்கு மறுகோடியில் தெரு விளக்கின் வெளிச்சத்தில் நின்று பேசிக் கொண்டிருக்க அந்த தெருவிளக்கு விட்டு விட்டு எரிய ஆரம்பித்து இருந்தது....

தீடீரென அந்த பகுதியில் அதீத குளிர் பரவ ஆரம்பித்து இருக்க அவ்விடமே அழுகிய வாடையில்
நிரம்ப ஆரம்பித்தது...

இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக் கொள்ள அந்நேரம் விட்டு விட்டு எரிந்த தெரு விளக்கு முழுதும் தன் உயிரை விட்டிருந்தது... அந்த கும்மிருட்டிலும் ஸ்ரீ ஆருஷி இருவரின் கண்கள் மட்டும் நீல நிறத்தில் ஜொலிக்க மேலும் இரு ஜோடி கண்கள் இரத்தமென பளபளத்தது...

நிலைமையின் வீரியத்தை உணர்ந்த ஆருஷி ஸ்ரீயின் கைகளை பிடித்துக் கொண்டு "ஸ்ரீ அந்த பிசாசுங்க வந்துருச்சு ‌.... என்னை கெட்டியா பிடிச்சுக்கோ .. அப்போதான் அதுங்கிட்ட இருந்து தப்பிக்க முடியும் " என வேகவேகமாக கூற ஸ்ரீயும் ஆருஷி கைகளை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள்...

சித்தரின் சக்திகளைப் பயன்படுத்திய ஆருஷி ஒரு நிமிடத்தில் சென்னையின் மேம்பாலத்தின் மீது இருந்தான்...

நள்ளிரவு ஆனதால் போக்குவரத்து குறைவாக இருக்க நடுரோட்டில் இருவரும் நின்றிருந்தனர்...

" ஸ்ரீ நாம ஒரே இடத்துல இருந்தா அந்த பிசாசுங்க நம்ம சுலபமாக கண்டுபிடிச்சுரும்... அதனால அடிக்கடி நம்ம இடத்தை மாத்திக் கொண்டே இருக்க வேண்டும்.... " என்க ஸ்ரீயும் வேகமாக தலையசைத்தவள் ஆருஷி கைகளை மட்டும் விடவே இல்லை..

அவளோ " ரிஷி இதுங்க எல்லாம் ஏன் என்ன பயமுறுத்துதுங்க ...அதான் என்னோட உயிரே போயிருச்சே அப்புறம் என்கிட்ட இருந்து இதுங்களுக்கு என்ன வேணும்.... " என கேட்டாள்...

ஆருஷி "அதபத்தி இப்போ என்னால விரிவா சொல்லமுடியாது ஸ்ரீ அதுங்க மறுபடியும் நம்மல கண்டுபிடிக்கும் முன்னே இங்கிருந்து போகணும் .. என்னால சித்தரோட சக்திகளையும் அதிகம் பயன்படுத்த முடியாது . அப்படி செய்தால் நான் சீக்கிரமே வெளிச்சப் பாதைக்கு போயிருவேன்...அதுக்கு முன்னே உன்ன வெளிச்சத்திற்கு அனுப்பனும்..உன்னோட ஆன்மா சக்திகளை பயன்படுத்தலாம்னா நீ மனசலவுள ரொம்ப வீக் .. இடம் மாறுவதற்கு அதுவும் ரெண்டு பேரு எல்லாம் மறைய நிறைய மனவலிமை வேணும்.. " என கவலையாய் வினவ..

ஸ்ரீ " என்னால முடியும் ரிஷி முன்னாடி ரெண்டு தடவை நான் மறைஞ்சு போயிருக்கேன்." என வர்ஷினியைப் பார்க்க சென்றது மற்றும் ஆருஷி விடம் சண்டையிட்டு வந்தது என இருநிகழ்வுகளையும் விளக்க ,

" இல்ல ஸ்ரீ அது எல்லாம் நீ உணர்ச்சிவசத்தில இருந்த போது உனக்கே தெரியாம நடந்தது ... ஆனா இப்போ உனக்கு பயம் மட்டும் தான் இருக்கு . வேணும்னா முயற்சி பண்ணி பாரு " என்க...

அவளும் ஒரு இடத்தை மனதில் வைத்து கொண்டு ஆருஷி கைகளை பிடித்து முயற்சி செய்ய .. ம்ஹூம்... அவளால் அவ்விடத்தை விட்டு இம்மியளவும் நகர இயலவில்லை பாவமாய் ஆருஷியைப் பார்க்க.. அவனும் அவளை புரிந்து கொண்டு "பரவாயில்லை ஸ்ரீ .. நாம் வேறு எதும் வழி கண்டுபிடிப்போம்... "என யோசிப்பதற்குள் மீண்டும் அவர்கள் நின்ற சாலையின் தூரத்தில் இருந்த விளக்குகள் ஒவ்வொன்றாக விட்டு விட்டு எரிய ஆரம்பித்தது....

அப்படியே நகர்ந்து நகர்ந்து அவர்கள் நின்ற பகுதியை நோக்கி ஒவ்வொரு விளக்காய் அணைந்து அணைந்து எரிய ..

" ஸ்ரீ அதுங்க வந்துருச்சு வா சீக்கிரம் இங்க இருந்து போவோம்" என்றவர்கள் மீண்டும் அவ்விடத்தை விட்டு மறைந்தனர்....

❤❤❤

கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 🙏👇👇




 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 22


தொடர்ந்து சித்தர்கள் சக்தியை பயன்படுத்தியால் ஆருஷியின் ஆற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியிருந்தது....அதை இருவருமே உணர்ந்து தான் இருந்தனர்...


"ஸ்ரீ உன்னை சீக்கிரம் வெளிச்சத்திற்கு அனுப்பனும்... அதற்கான வழியை இப்போ நாம தேடணும் அதுமட்டுமல்ல விடியும் வரை நாம எப்படியாவது அந்த பிசாசுங்க கிட்ட இருந்தும் தப்பிக்கணும்..‌‌...ஒரே இடத்திலேயே நம்மால இருக்கவும் முடியாது"என தற்போதைய நடைமுறை பிரச்சினைகளைக் கூற எதையே யோசித்துக் கொண்டிருந்த ஸ்ரீ அப்போது தான் தங்கள் நிற்கும் இடத்தை ஆராய்ந்தாள்....


அது சென்னையின் முக்கிய பேருந்து நிலையம்... சட்டென அவளுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது அதை ஆருஷியிடமும் கூறினாள்...


"நம்மால பஸ்ல போக முடியுமா ரிஷி"என சந்தேகத்துடன் கேட்க ... அவனும் " வொய்நாட் ஸ்ரீ... பிகாஸ் நமக்கு டிக்கெட் கூட எடுக்க வேண்டியது இல்லை"என குறும்பாய் கண்ணடித்து கூற ஸ்ரீக்கு இந்நிலையிலும் அவனால் எப்படி சாதாரணமாக இருக்கமுடிகிறது என்று ஆச்சரியமாக இருந்தது..


"ரிஷி நீ இருக்கியே "என்றாள் புன்னகையுடன்... "நாம எங்க போவது " ஸ்ரீ


"ஸ்ரீ உனக்கு பிடிச்ச இடத்தை சொல்லு அங்க போவோம்.... ஆதித்யா வை பாத்தில.. அதே போல உனக்கு எதாவது ஆசை இருந்து நிறைவேறுச்சுனா உனக்கும் வெளிச்சத்திற்கான பாதை திறக்கலாம்ல... " என்க...


"ஒரு வேளை இருக்குமோ ... அப்படினா என்னோட ஆசை என்ன.... " நாடியில் ஒரு விரலை வைத்து யோசித்தவளுக்கு சட்டென எதும் நியாபகம் வந்தால் அல்லவா.... அவளின் சிறுபிள்ளை தனமான செயலில் இதழில் புன்னகை பூக்க அவளை ரசித்துக் கொண்டிருந்தான் ஆருஷி...


நேரம் ஆவதை உணர்ந்த ஆருஷி "ஸ்ரீ உன் ஊருக்கு போகிற பஸ் இருக்கு பாரு ... அதுல போவோமா " என்றதும் அவளோ வேகமாக மறுப்பாக தலையசைத்தாள் ... இதுவரை அவள் முகத்தில் இருந்த சிறுபிள்ளைதத்தனம் மாறியிருக்க அதில் ஒரு வித தீவிரமும் வெறுமையும் குடிகொண்டது.


அதை கவனித்த ஆருஷி"ஸ்ரீ என்னாச்சு.. உன் ஊருக்கு போக உனக்கு விருப்பம் இல்லையா" என்க.‌


" அப்படியில்லை..‌..." என இழுக்க.. ஆருஷிக்கு ஏதோ வித்தியாசமாக பட்டது... " ஸ்ரீ உண்மைய சொல்லு ஊருக்கு போவது பிடிக்கலையா இல்லை உன் குடும்பத்தை பார்க்க விருப்பம் இல்லையா" என கூற ஸ்ரீக்கு அவன் சரியாக தன் எண்ணத்தை கணிதத்ததில் ஆச்சர்யமாக பார்த்தாள்...


அவளின் அதிர்ந்த தோற்றத்திலேயே உண்மையை உணர்ந்தவன் "அப்போ உன் குடும்பத்தை பார்க்க போவதுதான் பிடிக்கல.. உண்மையை சொல்லு ஸ்ரீ கடைசியா உன் ஃபேமிலியை எப்போ பார்த்தாய்"என கேட்க அவளோ மறுப்பாக தலையசைத்தாள்...


ஆதித்யா வை போல ஒருவேளை.... என யோசித்தவனுக்கு அவள் மறுப்பின் காரணம் மட்டும் புரிவதாக இல்லை... கேள்வியாய் அவளைப் பார்க்க அவளோ தவறு செய்த குழந்தையைப் போல தலைகுனிந்தாள்....


'உணர்ச்சிகளால் தான் அவளை வெளிச்சத்திற்கு அனுப்ப இயலும் ' என்று சித்தர் சொன்ன வார்த்தைகள் தான் ஆருஷிக்கு நியாபகம் வந்தது...


"ஸ்ரீ இப்போ நீ என்கூட வர்ற அவ்வளவுதான்... நாம உன் வீட்டுக்கு போறோம் " என கட்டளையாய் கூறினான்... ஏனெனில் அவனுக்கு தெரியும் இப்போது கெஞ்சினால் வேலைக்கு ஆகாது எனவே தான் கண்டிக்கும் குரலில் அதட்டினான்.. அவனின் கடுமையான குரலில் ஒரு நிமிடம் மனம் திடுக்கிட கண்கள் கலங்கி மறுப்பாக தலையசைத்தாள்...


" ஸ்ரீ நமக்கு வேற வழி இல்ல நாம இப்போ வேற எங்காவது போயே ஆகணும்.... என்ன நம்பு ஸ்ரீ நாம பொள்ளாச்சி போறோம்..."என்றவன் ஸ்ரீ யின் கரத்தைப் பிடித்தான்...


அவனுக்கு தன் ஊர் எப்படி தெரியும் என அவளும் கேட்கவில்லை அவனும் சொல்லவில்லை...ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அவர்களின் பயணமும் ஆரம்பமானது..


அவனின் நம்பிக்கையான வார்த்தைகளில் சிறிது தைரியம் வரப் பெற்றவள் அவன் இழுத்த இழுப்பிற்கு உடன் சென்றாள்...


அது வாரநாட்கள் என்பதால் கோவைப் பேருந்து அவ்வளவு நெரிசல் இன்றி குறைவான இருக்கைகளே நிரம்பி இருக்க அதன் சீரான பயணத்தை துவங்கியிருந்தது...


இவர்கள் இருவரும் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்... ஆருஷிக்கு சற்று பதற்றமாகவே இருந்தது எங்கே மீண்டும் அந்த பிசாசுகள் தொடர்ந்து வந்து விடுமோ என பேருந்தை சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான்...


ஸ்ரீயோ எதையும் கவனியாதவள் போல் சோகமான முகத்துடன் ஜன்னல் வழி தொலைதூர நிலவை வெறித்துக் கொண்டிருந்தாள்...


அவள் உயிரோடு இருந்த காலகட்டத்தில் எல்லாம் எந்த விடயத்திற்கும் இவ்வளவு பயந்தது கிடையாது அதைவிட அவளை வருத்தும் விடயங்கள் எதுவும் அவளை அணுக விடாமல் எப்போதுமே வேலி போல் அவளின் உறவுகள் பக்கபலமாக இருந்தது அப்படிப்பட்ட சூழிநிலையில் வளர்ந்தவளுக்கு இவையெல்லாம் ஒருவித பயத்தையே உருவாக்கியது.....


பேருந்து புறப்பட்டிருக்க அப்போது தான் ஸ்ரீயை கவனித்தான்‌.‌..‌ அவளின் முகம் ஒரு வித இறுக்கத்துடன் இருக்க அவளை எப்படி சமாதானம் செய்வது என அறியாமல் விழித்துக் கொண்டிருந்தான்..


ஆருஷியும் மௌனத்தையே கடன் வாங்கிக் கொள்ள ஸ்ரீ "சொல்லு ரிஷி எதுக்காக அந்த பிசாசுங்க நம்ம துரத்திட்டு இருக்கு... என்கிட்ட இருந்து அதுங்களுக்கு என்ன தான் வேணும் " என ஒருவித இயலாமையுடன் வினவினாள்...


இனி உண்மையை மறைத்து பயனில்லை என்பதை உணர்ந்தவன் " அதுங்களுக்கு நீதான் வேணும் ஸ்ரீ...உன்னோட ஆன்மா "என்றவன் ஆதிலிங்கத்தைப் பற்றி கூறி தற்போது அவனின் நோக்கத்தையும் விளக்கினான்...


"அதுமட்டும் இல்லை ஸ்ரீ உங்க அப்பா சிவகணத்தோட வாரிசு"என்றதும் ஸ்ரீ குழப்பமாக ஆருஷியைப் பார்த்தாள்.. ஏனெனில் அவரின் தாத்தா சிவகணம் என அவன் கூறவில்லை தந்தை என்றே அல்லவா கூறுகிறான்... எனில் உண்மையில் என்னதான் நடக்கிறது என புரியாமல் தலையைப் பிடித்துக் கொண்டாள்....


"ஆமா ஸ்ரீ உங்க தாத்தாவோட வளர்ப்பு மகன் தான் உங்க அப்பா... "என கூற அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது... தன் தந்தை வளர்ப்பு மகனா .. இந்த உண்மை குடும்பத்தில் யாருக்கெல்லாம் தெரியும் என ஒரே குழப்பமாக இருந்தது.. இருந்தும் யாரும் இதுவரை அவரைப் பிரித்து பார்த்து நடத்தியதில்லை என்பதை யோசித்தவளுக்கு இந்த உண்மை என்னோடே போகட்டும் என்று நினைத்து கொண்டாள்...


மேலும் தொடர்ந்த ஆருஷி " சிவகணங்களுக்கு ஒரே வாரிசு அதுவும் ஆண் வாரிசு தான் அப்பிடிங்கறதுதான் நியதி ஆனா அத மாத்தி பிறந்தவதான் நீ அதுவும் சிவபக்தியோட... என்னதான் பிறப்பு சிவவம்சத்தில இருந்தாலும் உண்மையான சிவபக்தி இருக்கவங்க தான் சிவகணம்னு சொல்றதுக்கு தகுதியானவங்க.." என்க அவளுக்கு அது சரியெனவே பட்டது அவள் தந்தையோ தமையனோ சிவ வழிபாட்டை ஆதரிப்பவர்கள் கிடையாது அதே சமயம் தூற்றுபவர்களும் அல்ல... கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என்பது உண்மையே... என யோசிக்க


ஆருஷி "ஆனா சிவகணங்கள் வம்சத்துல பிறக்குற மூத்த பெண்ணாலதான் அவனுக்கான அழிவுனு சித்தர் சொன்னாரு ஆனா நீ ரெண்டாவது பொண்ணுதான அப்புறம் ஏன் உன்னோட ஆன்மாவ அவன் அடைய நினைக்குறானு மட்டும் புரியல ஸ்ரீ"...என்க


ஸ்ரீ "ஒருவேளை என்னோட பக்தியே அவனுக்கு பலமா இருக்கலாம் " என்றாள்...அப்படியும் இருக்கலாம் என்றே ஆருஷிக்கும் தோன்றியது .....


ஸ்ரீ " நாம வேற இடத்துக்கு போலாம் ரிஷி... "என்றாள் உள்ளே போன குரலில்...


அதைக் கேட்ட ஆருஷி "உன்னோட குடும்பத்தைதான பார்க்க போறோம் அப்புறம் ஏன் ஸ்ரீ வேணாம்னு சொல்ற" என்க


"அதுவந்து எனக்கு தெரியல ரிஷி ....என்னால அவங்கள ஃபேஸ் பண்ண முடியும்னு தோணல .... என் குடும்பத்துக்கு நான்னா உயிரு... என் தாத்தா அஞ்சு வயசுவர என்னை அவரு தோளைவிட்டு இறக்கவே மாட்டாரு, வள்ளிப் பாட்டி பாசத்தைக்கூட கண்டிப்பாதான் காட்ட தெரியும்... அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் நான்தான் உலகம்... சித்தி சித்தப்பாக்களுக்கு எல்லாம் அவங்க பசங்களவிட என்னைதான் பாசமா வளர்த்தாங்க.. அப்புறம் விஷ்ணு அண்ணா , ரவியண்ணா , ....என அவள் அடுத்து கூறும் முன்


ஆருஷி "ராம் , டிவின்ஸ் நரேன், நவீன், மனோஜ் .... " என்றான் இழுவையாக... ஸ்ரீ அதிர்ச்சியில் கண்கள் விரிய அவனைப் பார்க்க அப்போதுதான் அவனுக்கும் தான் உளறியதை உணர்ந்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.....


---------------------------


மதிகெட்டான்சோலையின் ஒரு பகுதியோ நெருப்பில் வெந்து கொண்டிருந்தது.... ஆள்நடமாட்டம் அற்ற வனத்துறையால் தடைசெய்யப்பட்ட அந்த பகுதியில் தீப்பற்றி மளமளவென பரவ அதனை தீயணைப்பு படையினரும் , காட்டின் அருகில் உள்ள கிராம மக்களும் அணைக்க தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தனர்


ஆனால் இத்தனை கலவரங்களுக்கும் காரணமானவனோ வெறிகொண்ட வேங்கையென அந்த காட்டையே ஒரு வழிப் படுத்திக் கொண்டிருந்தான் அவன் ஆதிலிங்கம்... தன்னுடைய விடுதலை அருகில் பிரகாசமாக இருக்க கையில் கிடைத்த பொக்கிஷத்தை அடைய இயாலாதது போல் அந்த ஆன்மாவை அவனால் நெருங்க முடியாமல் இருப்பதில் அதீத கோபமுற்றான் அவனின் கோபக்கணலே காட்டின் ஒரு பகுதியை எரித்துக் கொண்டிருந்தது....


பிசாசுகள் மூலம் ஒவ்வொரு முறை அந்த ஆன்மாவை நெருங்கி செல்கையிலும் ஏதோ ஒரு ஒளி தடுத்து அதை காப்பதை தன் ஞானவொளி மூலம் அறிந்தவனுக்கு நிதானம் என்பதே சிறிதும் இன்றிப் போனது...


இதற்காக கிட்டத்தட்ட அறுபது எழுபது வருடங்களுக்கு மேல் காத்திருப்பவனுக்கு இந்த தோல்வி நிதானத்தை அளித்தால் அது அதிசயமே..‌‌ தீ பரவாமல் இருக்க இரவு பகல் என ஒரு நாள் முழுதும் போராடி அந்த தீயிணை அணைத்து இருந்தனர்...அந்த காட்டின் நாற்பது சதவீத மரங்கள் முற்றிலும் அழிந்து இருக்க அதனை அப்புறப்படுத்தும் அங்கிருந்த வனத்துறை முயற்சிக்க அந்த ஊர் மக்களோ முற்றிலும் மறுத்துவிட்டனர்...


அந்த காட்டைப் பற்றி அறிந்துதான் அரசாங்கமே தடைவிதித்திருக்க மேற்கொண்டு எந்த பணியும் நடக்காமல் தீப்பிடித்ததற்கான காரணத்தைகூட விசாரிக்காமல் நெருப்பு அணைக்கப்பட்டதோடு அங்கிருந்த அனைவரும் திரும்பிவிட்டனர்...


அந்தக் காடே சாம்பலும் புகையும் நிறைந்து காட்சியளித்தது......


❤❤❤❤❤

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 23


"இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் ரிஷி... என்னை உனக்கு முன்னாடியே தெரியுமா" என சந்தேகமாக வினவினாள்...

தான் உளறியதை நினைத்து தன்னையே நொந்து கொண்ட ஆருஷி சமாளிக்கும் விதமாக "அப்படியெல்லாம் இல்லை ஸ்ரீ.... நா... நாம தான் இப்போ ஆவி ஆகிட்டமே அதனால உன்ன பார்த்ததுமே எனக்கு உன்னோட பூர்வீகமே தெரிஞ்சுருச்சு.... "என ஒருவாறு சமாளிக்க அவளோ அவனை ஒரு நம்பாத பார்வை பார்த்தவள் சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அப்படியே விட்டுவிட்டாள்...

அவனும் பெருமூச்சு விட்டவன் பேச்சை மாற்றும் பொருட்டு "ஏன் ஸ்ரீ நீ யாரையாவது லவ் பண்ணியிருக்கியா "என அவளைப் பற்றி தெரிந்து கொள்ளும் பொருட்டு ஆவலாக அவள் முகத்தைப் பார்த்து வினவினான்....

அதற்கு சிறிய புன்னகையை தந்தவள் "லவ்னா என்ன ரிஷி" என்க என்ன கேட்குறா இவ என யோசித்தவன் " ஒருத்தவங்க நம்ம மேல வைக்குற கண்மூடித்தனமான தன்னலமில்லாத பாசமும், எதிர்பார்ப்பு இல்லாத நேசமும் தான் லவ் அன்புனும் சொல்லலாம்"என தன்னவளுக்கு தான் அவள் மீது வைத்த பாசத்தை இலைமறைக் காயாக எடுத்துரைக்க...

அவளோ அதே புன்னகையுடன் "அதெல்லாம் தான் என்னோட குடும்பத்திலையே கிடைச்சுதே அப்புறம் தனியா ஏன் நான் லவ் அ தேடணும்‌... ஐ லவ் மை ஃபேமிலி அண்ட் ஐ அம் சோ லக்கி டு கேவ் மை பேமிலி ‌..."என கண்களில் பிரகாசத்துடன் பேச அவனுக்கு ஏக்கமாக இருந்தது.. அவள் குடும்பத்தைப் பற்றி பேசும் ஒவ்வொரு முறையும் அவளின் கண்களிலும் முகத்திலும் வரும் பிரகாசத்தைப் பார்த்து அவனுக்கு சிறிது பொறாமை கூட எழுந்தது எனலாம்...


தன்னவள் ஒருநாளாவது ஒருநொடியாவது தன்னை பற்றி பேசுகையிலேயோ இல்லை தன்னைப் பற்றி நினைக்கையிலோ இதோ இதே போல் ஒரு பிரகாசம் வராதா என ஏங்கத் தொடங்கினான்....

அதே நினைவில் மூழ்க அவன் முகத்தில் வரும் உணர்ச்சிகளை பார்த்தவள் எதுவும் புரியாமல் அவனை உலுக்கினாள்.

"ரிஷி ரிஷி.. "என உலுக்க அவளின் ஸ்பரிசத்தில் உணர்வுக்கு வந்தவன்
"ஹான் சொல்லு ஸ்ரீ..."என்றான்...,

அவளோ "ஹய்யோ ரிஷி நா அப்போ இருந்து கூப்டுறேன் நீ ஏதோ கனவு கண்டுட்டு இருக்க ..."என சலிப்பாக கூற...

"சாரி ஸ்ரீ ஏதோ நினைவுல இருந்துட்டேன் " என்க "அது சரி " என்றவள்

"ஆமா ரிஷி நீ யாரையும் லவ் பண்ணிருக்கயா" என கண்ணில் ஆர்வத்துடன் வினவினாள்..

அவள் கேட்டதும் ஆருஷிக்கு கடந்து சில மாதங்களாக தான் அவளை பைத்தியக்காரத்தனமாக காதலித்ததே நினைவில் வந்தது....

அந்த உணர்வை தற்போதும் அனுபவிப்பது போல் ஒரு நிமிடம் கண்களை முடியவன் இதழ்கள் விரிய தன் காதல் தேவதையை கண்ணில் காதலைத் தேக்கிக் கொண்டு ஆசையுடன் பார்த்தான்....

அவன் முகத்தில் வந்த உணர்ச்சிகளைப் பார்த்த ஸ்ரீ இன்னும் அதிக ஆர்வம் உருவாக "என்ன ரிஷி உன் முகம் இவ்வளவு பிரைட் ஆகிட்டு... அப்போ நீ காதலிச்சுருக்கியா... யாரு அந்தப் பொண்ணு .... முதல் முறை எங்க பாத்த" என மேலும் ஊக்கினாள்.....

"ம்ம் அவ என்னோட தேவதை... அவளை ஃப்ஸ்ட் டைம் ஒரு மால்ல பாத்தேன்.... லவ் அட் ஃபஸ்ட் சைட் சொல்றவங்கள எல்லாம் நான் ஏதோ ஏலியன்ஸ் மாதிரி பாத்துட்டு இருப்பேன் ஸ்ரீ... ஆனா அதுவே எனக்கு நடக்கும் போது அப்பப்பா ... அப்படியே என்ன போட்டுத் தாக்கி .... அதெல்லாம் வேற லெவல் ஃபிலிங்னு அப்போ தான் புரிஞ்சுக்கிட்டேன்.. ஸ்ரீ.."என அவளை முதல்முறை பார்த்த போது ஏற்பட்ட உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளின்றி தவித்தான்....

அதைக் கண்ட ஸ்ரீக்கு அவனின் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ள மேலும் ஆர்வத்துடன் அவன் தன்னை பற்றி கூறுவதை கூட உணராமல் அதில் லயித்துப் போனாள்... மேலும் தொடர்ந்தவன் "அந்த நாளை என்னால மறக்கவே முடியாது ஸ்ரீ.... நல்லா பிங்க் கலர் தாவணில அந்த மாடர்ன் ஆன மாலுக்கும் அவளுக்கு சம்பந்தமில்லாத போல வந்திருந்தா....நான் கூட மொதமொதல்ல அவளைப் பார்த்ததும் ஏதோ பட்டிக்காடுனு நினைச்சேன் ஆனா அவளை கடந்து போகும் போது என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு ... ப்பா.....அதுவும் ஒரு அரை செகண்ட் கூட இருக்காது அப்போ அவளோட கண்ணு அப்படியே என்னை முழுசா விழுங்கிடுச்சு....அவ்வளவு கூட்டத்துலையும் அவளோட கொலுசு சத்தத்தை என்னோட காதுக்கு இன்னிசை யா கேட்டுச்சுனா பார்த்துக்கோயேன்.... அங்கையே அவளோட வெள்ளிக் கொலுசு அணிஞ்ச காலடியில தொபுகடீர்னு விழுந்துட்டேன் ஸ்ரீ...."என அவன் கூறிய விதத்தில் ஸ்ரீக்கு சிரிப்பு வர வாய்விட்டு சிரித்தாள்..

பின் "ஆனா ரிஷி நீ வர்ணிக்கறதை பார்த்தா பொண்ணு ரொம்ப அழகா இருப்பாங்க போல ...ஆனா நீயும் நல்லா பார்க்க ஹைட் அண்ட் வெயிட்டா அழகாதான் இருக்க ரிஷி... உன்ன பார்த்ததுமே எந்த பொண்ணும் கண்டிப்பா திரும்பி இன்னோரு தடவை பார்க்காம போக மாட்டா...சோ நீ புரப்போஸ் பண்ணவும் ஓகே ஆகிருக்கும் சரியா " என்க அவனுக்கோ அவளுடன் இருக்கும் இந்த அழகான கடைசி தருணம் மிகவும் பிடித்திருந்தது என்னதான் அவனுக்கான தேவை இந்த பூமியில் முடிந்து வெளிச்சத்திற்கான பாதை திறந்திருந்தாலும் தன் தேவதை ஸ்ரீயுடன் அவன் சந்திப்பு என்பது உயிருடன் இருக்கையில் சாத்தியமற்றுதான் போனது ... அந்த ஆசையும் ஏக்கமும் நிறைவேற்றவே கடவுள் அவனுக்கு இரண்டாம் வாய்ப்பு அளித்துள்ளதாக எண்ணினான்....

அவளின் இதழ்வழி தன்னை அழகன் என்று கேட்டதுமே அவனுக்கு வானத்தில் சிறகின்றி பறப்பது போல உணர்ந்தான்..

தன்னைத்தானே கட்டுப் படுத்திக் கொண்டவனுக்கு அவளுக்கு தான் யாரைப் பற்றி கூறுகிறேன் என்பது புரியாமல் இருப்பதில் சற்று வருத்தமாக தான் இருந்தது....

"அப்படியெல்லாம் இல்ல ஸ்ரீ நான் உயிரோடு இருக்க வரை அந்த பொண்ணுக்கு என்னை தெரிஞ்சி இருக்க வாய்ப்பு இல்லை ... ஏன்னா நான் அவளைப் பார்த்த அடுத்த நாளே வெகேஷன் முடிச்சு சென்னை வந்துட்டேன்.... "என்க ...

அவளோ "அப்போ அதுக்கு அப்புறம் நீ அந்த பொண்ணை பார்க்கலையா " என்பதற்கு மறுப்பாக தலையசைத்தவன் மேலும் "அன்னைக்கு முழுதும் அவளோடதான் அவள் நிழல் போல பின்னாடி சுத்துனேன்... அப்போதான் தெரிஞ்சுது அவளுக்கு அன்னைக்கு பிறந்தநாள்னு... அவ்வளவு ஹாப்பி... ஆனா அவ பக்கத்துலையே இருந்தும் அவளுக்கு விஷ் பண்ண முடியலைனு ரொம்ப வருத்தமா இருந்தது... அப்போதான் முடிவு பண்ணேன் அவளோட அடுத்த பிறந்தநாளுக்கு கண்டிப்பா என்னை வெளிப்படுத்தி.... அவங்க பேரன்ஸ் சம்மதத்தோட என் உரிமையானவளா மாத்தி கொண்டாடனும்னு... ஏன்னா அவளுக்கு அவ குடும்பம் தான் எல்லாம்... அதுவும் அவ கூடவே பாடிகார்டு மாதிரி மூணு பேரு இருப்பானுங்க ...அண்ணணுங்களா... அப்பப்பா .... அவள நான் பாலோ பண்றத ஒரு மணி நேரத்திலேயே கண்டுபுடுச்சுட்டானுங்க அதிலையும் அவ கூடவே ஒருத்தன் இருப்பான் ஸ்ரீ அவன் என்னை ஒரு பார்வை பார்த்தா பாரு அவனுக்கு மட்டும் பவர் இருந்துது என்னை அந்த இடத்துலையே எரிச்சுருப்பான்... "என கூறியவன் ராம் நினைவில் சிரித்துக் கொண்டான்...

அவன் தன் உடன்பிறப்புகளை பற்றி கூறுவதைக் கூட உணராதவள் வாய்விட்டு சிரித்தாள் .....மேலும் "அந்த நாளுக்கு அப்புறம் நா அவள பாக்கவே இல்லை ஆனா அவளை எப்போதுமே நினைச்சுட்டேதான் இருப்பேன்... அவளுக்கு படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருந்ததால ... நானும் அவ முடிக்கட்டும் அப்புறம் வீட்டுல சொல்லி பேச வைக்கலாம்னு இருந்தேன் ... அதுக்குள்ள எனக்கு இந்த புராஜெக்ட் வந்ததால சேர அதோட வெற்றியோட அவளை சந்திக்கனும்னு ஆசையா இருந்தேன் ஸ்ரீ ... ப்ச்ச ... அதுக்குள்ள இந்த மாதிரி ஆகிடுச்சு..."என்றவன் குரலில் அவ்வளவு வருத்தம் ... ஸ்ரீக்கு அவனின் காதல் பிரமிப்பையே உண்டாக்கியது... 'ஒரே ஒரு நாள் சில மணி நேரங்கள் மட்டும் பார்த்த பெண்ணுக்காக இவன் இப்படி உருகுகிறானே... விதி மட்டும் இவன் வாழ்வில் சதி செய்யாமல் இருந்திருந்தால் வாழ்க்கையை அனுபவித்து அந்த பெண்ணுடன் மகிழ்ச்சியாய் வாழ்ந்திருப்பானே... ச்சே....' என்று ஆதங்கப்பட்டாள்...

அவன் சோகம் அவளையும் தாக்க கண்கள் கலங்கிக் தான் போனது.... அவளோ "ச்ச பாவம் ரிஷி நீ எவ்வளவு ஆசையா இருந்துருப்ப அந்த பொண்ணு கூட வாழணும்னு ஆனா அதுக்குள்ள இப்பிடி ஆகிடுச்சு... " என்றாள் கண்ணில் கண்ணீர் வழிந்தது...

அவள் அழுவதை கண்டவனுக்கும் மனதில் ஒருவித வலி உண்டாக அவளை சமாதானப் படுத்தினாள்..‌

"ஸ்ரீ நீ ஃபீல் பண்ணாத... எனக்கு இப்போ எந்த வருத்தமும் இல்லை ... அவ எப்பவும் ஹாப்பி யா இருந்தா அதுவே போதும்... முன்னாடி எப்பிடியோ ஆனா இப்போ நா ரொம்ப சந்தோஷமா தான் இருக்கேன்.. அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத இந்த வாழ்க்கையில எதுவுமே நிரந்தரமில்லை ஸ்ரீ..... ஒரு பத்துநாள் முன்ன நம்ம வாழ்க்கையில இதெல்லாம் நடக்கும்னு சொல்லிருந்தா நாம சிரிச்சுருக்க மாட்டோம்.. எல்லாத்தையும் ஏத்துக்கணும் ஸ்ரீ... ஆரம்பம்னு ஒன்னு இருந்தா முடிவு கண்டீப்பா இருக்கும் " என்க...

ஸ்ரீக்கும் சற்று முகம் தெளிந்தது... ஆருஷி இந்த சில மணி நேரங்களை வீணடிக்க விருப்பமில்லை எனவே ஸ்ரீ பற்றி அனைத்தும் தெரிந்தாலும் அவள் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள மேலும் பேசினான்...

"லவ் பண்ணிருக்கியானு கேட்டா நான் புதுசா ஏதேதோ விளக்கம் குடுக்குற ...சரி.... ஒரு கிரஷ் கூடவா இல்லை." என்று வினவினான்...

அவன் கேட்டதும் அவளுக்கு அவள் கனவு நாயகன் தான் ஞாபகம் வந்தது... அவள் முகத்தில் வந்த பிரகாசத்தைக் கண்டவனுக்கு பக்கென்று இருந்தது...

ஸ்ரீ " ம்ம்... இருக்கு ... அவனால என் தூக்கமே போச்சு ரிஷி...."என்றதும் அவன் முகம் கருத்து விட்டது...

அவள் முகத்தில் வந்த உணர்வும் கண்ணில் தெரிந்த ஆசையையும் கண்டவனுக்கு முகம் இறுகியது.....

அவளைப் பற்றி விசாரிக்கையில் அவள் யாரையும் காதலிக்கவில்லை அதோடு அவள் நண்பர்கள் தவிர வேறு யாரிடமும் அவ்வளவு சீக்கிரம் பழகாதவள் என்றல்லவா சொன்னார்கள் ஆனால் இவள் யாரை இந்த அளவிற்கு கவனித்தாள் என்பது புரியாமல் "யாரு ஸ்ரீ அது "என்றான் ஒரு மாதிரியான குரலில்...

அவனின் குரல் மாற்றத்தை உணராதவள் கண்ணில் கனவுடன் " தெரியல ரிஷி " என்றதும்
அவன் புருவம் சுருக்கி "அவன எங்க பார்த்த "
ஸ்ரீ "அதான் சொன்னேனே தூக்கம் போச்சுனு கனவுல தான் " என்றதும்

ஆருஷி என்ன ... என்று கத்தியே விட்டான்... அவனின் முகபாவனையில் சிரித்தவள் ...

"ம் ஆமா ரிஷி ரொம்ப நாளாவே என் கனவுல ஒருத்தன் வரான் ரிஷி ..... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துல அவனை பார்ப்பேன் ... ஆனா அவனோட முகத்தை மட்டும் காட்டவே மாட்டிரான்.... சாடிஸ்ட்.... எவ்வளவோ டிரை பண்ணினேன் அவன் முகத்தைப் பார்க்க பட் முடியல... அவன் மேல் சின்ன ஈர்ப்பு அவ்வளவுதான்...." என்றதும்
ஆருஷி வாய் விட்டு சிரித்தான்...

அவன் சிரிப்பதைப் பார்த்ததும் அவளுக்கு கோபம் வரமுகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டாள்... ஆருஷி கைகளை வாயில் வைத்து "சாரி ஸ்ரீ என்னால கன்ட்ரோல் பண்ண முடியல... இந்த சாமியாரிணிக்குள்ள இப்படியொரு கிரஷ் ஸ்டோரி இருக்கும்ணு சத்தியமா நா நினைக்கல.... " என மேலும் சிரிக்க அவளோ அவன் தோள்களில் தன் பிஞ்சு விரல்களால் அடித்தாள்...

"சிரிக்காத ரிஷி...." என சிணுங்கியவள் அடிப்பதை நிறுத்திவிட்டு "அது எப்படி ஒரே மாதிரி கனவு டெய்லியும் வருமா. அதனால்தான் இப்படி ஆகிட்டேன். ... ஆனா ஆளு செமையா இருப்பான் ரிஷி .. பட் முகத்ததான் பார்க்கவே முடியல " என்றதும் தன்னவள் தன்னை விடுத்து வேறொருவனைப் பற்றி பேசுவது அது வெறும் கனவு என தோன்றினாலும் அவன் மனது முரண்டு பிடித்தது...
சரி பார்த்துக் கொள்வோம் என எண்ணியவன் அவளிடம் கல்லூரி வாழ்க்கை நண்பர்கள் என பேச்சுக் கொடுத்தான்....

இருவருமே தங்கள் மனதில் இருப்பவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை ... ஆருஷிக்கோ தன் கண்முன்னே தன் தேவதை இருந்தும் நேரடியாக அவளிடம் உண்மையை கூற ஏதோவொன்று தடுத்துக் கொண்டேதான் இருந்தது.. ஸ்ரீயோ தன் கனவு நாயகனின் அடையாளத்தையும் கூற மறந்திருந்தாள்....

அவர்களிடையேயான அந்த மெல்லிய திரையில் இருவரின் கடைசி சில மணிநேரங்களும் மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்தது...

அதேபோல் பேருந்தும் தன் சீரான வேகத்துடன் ஸ்ரீயின் சொந்த ஊர் நோக்கி பயணிக்க இருவரின் ஏகாந்த நிலையை விவரிக்கும் விதமாக

"எங்கேயோ
எங்கேயோ இவனை
இவனே தேடுகிறான்
தாய் மொழி எல்லாம்
மறந்து விட்டு தனக்குள்
தானே பேசுகிறான்

காதல் மட்டும்
புரிவதில்லை காற்றா
நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூர்ச்சை நிலை
நான் கண்கள் திறந்தும்
தெளியவில்லை"

என்ற பாடல் வரிகள் கானமாய் ஒலித்தது....

🖤🖤🖤

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே


 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 24

இருளைக் கிழித்துக் கொண்டு ஆதவன் தன் கதிர்களை இந்த பூமியில் பரவிக் கொண்டிருந்த வேளையில் ஸ்ரீ மற்றும் ஆருஷி பயணித்த பேருந்து கோவையை அடைந்தது...

இருவரினுள்ளும் இந்த இறுதிப் பயணம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது....

ஒருவரை மற்றொருவர் நன்கு புரிந்து கொண்டனர்... ஆருஷிக்கோ இந்த பயணம் வாழ்நாளிலேயே மிகப்பெரிய பொக்கிஷம் ... அவனைப் பொருத்தவரை இதுவேப் போதும் இனி வெளிச்சத்திற்கு சென்றாலும் கவலை இல்லை என்ற நிலையில் தான் இருந்தான்...

ஸ்ரீக்கோ என்ன உணர்வென்றே புரியவில்லை.. ஏதோ ஆண்டாண்டு காலங்கள் அவனுடன் பழகியது போன்று இருந்தது... தன் குடும்பத்துடன் இருந்த போது உண்டான பாதுகாப்பு உணர்வை தற்போது ஆருஷியிடம் உணர்கிறாள்...சில சமயங்களில் அதைவிட ஒருபடி மேலே சென்று தாயின் கருவறை கதகதப்பையும் அவனுடன் இருக்கையில் உணர்ந்தாள்...

அவர்களின் பேருந்து அடுத்து நான்கு மணி நேரம் கழித்து தான் அடுத்த பயணத்தை துவங்க இருந்ததால் நடத்துனர் பேருந்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்... ஸ்ரீ ஆருஷி இருவருக்கும் இந்த பயணம் இன்னும் சில மணி நேரங்கள் தொடராத என்று இருந்தது அதனால் பேருந்தை விட்டு இறங்காமல் அதே இருக்கையில் அமர்ந்திருந்தனர்...

பேச்சினூடே ஆருஷி அவனையறியாமலேயே ஸ்ரீ யை நெருங்கி தன் இரு கைகளால் அவளின் இருபுறமும் அணைகட்டியது போல கைகளை முன்பின் இருக்கையில் வைத்தவன் முழுதும் திரும்பி அவள் முகம் பார்த்து அமர்ந்திருந்தான்...அவளின் பேச்சில் தன்னை மறந்து அவளின் இதழசைவும் ,அதற்குப் போட்டியாய் கண்களில் தோன்றிய பாவனைகளையும் பார்த்தவன் அதன் அழகில் சொக்கிப் போனான்....

காதலர்களுக்கு தன் காதலி தான் அழகு என்பதிற்கேற்ப அவள் அழகில் இமைக்க மறந்து கண்களில் காதல் வழிய அமர்ந்திருந்தான்...

"ஒருநாள் அந்த பூனை நான் வளர்த்தின கிளியை பிடிச்சுட்டு போயிருச்சு... " என்று பேசிக்கொண்டே திரும்பியவள் அப்போதுதான் ஆருஷியின் நெருக்கத்தைக் கவனத்தாள்...

அதிர்ச்சியுடன் அவனின் கண்களை பார்த்தவளுக்கு அதில் தெரிந்த உணர்ச்சிகளில் வாயடைத்துப் போனாள்.. சில நொடிகளிலேயே அவனின் நீலநயனமும் இவளின் நீலநயனங்களும் ஒன்றையொன்று கவ்விக் கொண்டது... நீண்ட சில மணித் துளிகள் கடந்த பின்னும் பார்வையை மாற்றாமல் அமர்ந்திருந்தனர்...

மொழியற்ற அவனின் காதலினை தன் விழிகளில் அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தான்... ஆனால் காதலின் அரிச்சுவடி கூட அறியாத நம் ஸ்ரீ யோ ஏதோ மாயவலையில் சிக்கியது போல அவன் விழிகளில் கட்டுண்டு கிடந்தாள்...

ஆருஷியோ ஒருநிமிடம் தன்னையும் ,தங்களை சுற்றியுள்ள உலகம் ஆபத்து என அனைத்தையும் மறந்தான் அவனைப் பொருத்தவரை ஸ்ரீ மட்டுமே அவன் உலகம் .. மிகுந்த உணர்ச்சி வசத்தில் இருந்தவன் மெல்ல மெல்ல ஸ்ரீ யின் முகத்தை நெருங்கி தன் வலது கையை அவளின் கன்னத்தில் மென்மையாய் பதித்தவன் அதிர்ச்சியில் விரிந்திருந்த ஸ்ரீ யின் இதழை நோக்கி முன்னேறினான்....

அவனின் முகத்தை புரியாது பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் தன்னை நோக்கி முன்னேறுவதை பார்த்து அடுத்து என்ன நிகழப் போகிறது என்பதை நினைக்க மனது பக்கென்று இருந்தது .. இருந்தும் அவனின் விழியசைவில் மயங்கியவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை... அவளும் உணர்வுகளுக்கு ஆட்பட அவன் கண்களை எதிர் கொள்ள இயலாது அவளின் விழிகள் மெதுவாய் மூடிக் கொண்டது...

இருவரின் இதழ்களுக்கும் நூலளவு இடைவெளி இருக்க எங்கோ அடித்த ஹாரன் சத்தத்தில் நினைவுலகம் வர தங்களின் நிலையை உணர்ந்து பதறி அடித்துக் கொண்டு விலகி அமர்ந்தனர்...

ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கொள்ளவே மிகவும் சங்கடப்பட்டுப் போயினர்.. ஸ்ரீ க்கோ தன்னை நினைத்தே மிகுந்த அவமானமாக இருந்தது...' ச்ச... ரிஷி என்னபத்தி என்ன நினைச்சுருப்பான்... என்னால் ஏன் என்னோட உணர்வுகளை கட்டுப்படுத்த முடியல... ஹையோ இனி எப்படி அவன் முகத்துல முழிப்பேன்.' என மனதினுள் புலம்பியவள் சன்னல் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்...

ஆருஷியோ ' என்னடா பண்ணி வச்சுருக்க ...... சும்மாவே லேசர் கண்ணால நம்ம ஸ்கேன் பண்ணுவ ... இப்ப என்ன சொல்லி சமாளிக்க போறேனோ தெரியலையே...'என ஒரு மனது புலம்பினாலும்... மற்றொரு மனமோ ' ச்ச .. நல்ல சான்ஸ் மிஸ் ஆகிடுச்சே... இந்த பிளடி பஸ்.. சவுண்ட் விட்டு நல்ல மூட கெடுத்துருச்சு' என எரிச்சல் பட்டான்...

இருவரின் மன குமுறல்களையும் கலைக்கும் விதமாக வந்து சேர்ந்தது மக்களின் சலசலப்பு... அப்போது தான் இருவரும் சுற்றுப்புறத்தை ஆராய நன்கு வெளிச்சம் பரவியிருந்த வானம் சட்டென கருமேகங்களால் சூழ்ந்து இருந்தது...

இருவரும் பேருந்திலிருந்து வெளியே வந்தவர்கள் வானத்தை பார்த்தனர்... இது வெயில் காலம் ஆச்சே எப்படி திடிரென மழை வர மாதிரி இப்படி மாறுச்சு அதுவும் காலையில் வானம் தெளிவாக இருந்ததே என இருவரும் குழப்பமாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர்....

காற்று ஒரு பக்கம் வேகமாக வீச... மக்கள் மழை வரப் போகிறது என வேகமாய் அங்குமிங்கும் ஓடினர்... அதில் ஸ்ரீ யைக் கடந்தும் சிலர் செல்ல அவளோ தடுமாறி கீழே விழுந்தாள்....

ஆருஷி அவளின் தோளைத் தொட்டு "ஸ்ரீ என்னாச்சு ஒன்னும் இல்லையே" என கேட்டுக் கொண்டே எழுப்பியவன் தன்னுடன் அணைத்தவாறு அவளைத் தாங்கி கொண்டான்...

ஸ்ரீ "ரிஷி என்னாச்சு தீடிரென வானிலை ஏன் மாறிருச்சு... எனக்கு ரொம்ப பயமா இருக்கு..." என்க

ஆருஷி " ஒன்னுமில்லை ஸ்ரீ... நீ பயப்படாதே " என்றவன்... குழப்பமாய் கரு மேகங்களைப் பார்த்தான்... அவனுக்கு ஏதோ தவறாய் பட்டது சித்தரின் சக்திகள் அவனுக்கு ஏதோ ஆபத்து வருபோவதாய் உணர்த்திக் கொண்டே இருந்தது...

இடியின் சத்தத்தில் இருவரும் வானத்தை பார்க்க அதில் கருமேகங்கள் நடுவே நிறைய ஜோடி சிவப்பு நிறக் கண்கள் இவர்களுக்கு மட்டும் தெரிந்தது....

அதைப் பார்த்தவுடன் அவர்களுக்கு புரிந்து விட்டது பிசாசுகள் தங்களை நெருங்கி விட்டது என...

ஸ்ரீ " ரிஷி அங்க பாரு அதுங்க நம்ம நெருங்கிருச்சு... ஆனா அதுங்களாலதான் பகல்ல வெளிவர முடியாதுல அப்புறம் எப்படி...." என இழுக்க...

ஆருஷி "தெரியல ஸ்ரீ... இதுவரை நம்மை ஒன்று ரெண்டு பிசாசுங்க தான் துரத்திட்டு இருந்தது இப்போ நிறையா இருக்கும் போல தெரியுது ... என்ன பண்றதுன்னு தெரியல ஸ்ரீ "என்றான்...

ஆம்... ஆதிலிங்கம் காட்டை எறித்ததற்கு பிறகு ஒன்றை கற்றுக் கொண்டான்... ஒரே நேரத்தில் பல பிசாசுகளை ஒன்றாய் ஒரு காரியத்தை ஏவினால் பலன் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு என்பதை ... அதனால் தான் தன்வசம் இருந்த பிசாசுகள் அனைத்தையும் ஏவ அவைகளோ காலநிலைகளை தனக்கு சாதகமாக மாற்றியுமிருந்தது....

மழைத்துளி விழ ஆரம்பிக்க அந்த நீர் இருவரின் ஆன்மாவிலும் பட்டவுடன் இருவருக்கு அது மிகுந்த உஷ்ணத்தை உருவாக்கியது... சாதாரண மனிதர்களுக்கு இது மழையாக தோன்றினாலும் , ஸ்ரீ மற்றும் ஆருஷிக்கு அக்னி மழையாகவே பட்டது....

ஆருஷிக்கு ஒன்று நன்றாய் புரிந்தது இவை தங்கள் இருவரையும் பலவீனப்படுத்த முயற்ச்சிக்கிறது என்று.... ஸ்ரீ " ரிஷி என்னால முடியல ரொம்ப எரிச்சலா இருக்கு ஆ..ஆ..." என மழைத்துளி படும் ஒவ்வொரு பகுதியும் தீயாய் தகிக்க வலி பொருக்க இயலாது கத்தினாள்...

ஆருஷி "ஸ்ரீ ஒன்னும் இல்லை பயப்படாத வா நாம மறைவான இடத்துக்கு போய்ரலாம்..." என் கூறிவிட்டு கைத்தாங்கலாக அவளை மழைத்துளி படாத இடத்திற்கு அழைத்து செல்ல முற்பட்டான் இருந்தும் அவர்களால் அந்த மழையில் இருந்து தப்பிக்கவே இயலவில்லை...

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தவன் ஸ்ரீ யைப் பார்த்து "ஸ்ரீ நாம இப்போ உடனே இங்கிருந்து மறையணும்.. என்னை கெட்டியா பிடித்துக் கொள்... " என்றவன் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மறைந்தான்....

மழையின் மூலம் ஆன்மாக்களை அடைய முயற்ச்சித்த பிசாசுகள் அவர்கள் தப்பியதை எண்ணி கடுங்கோவத்தில் மழையாய் அவ்விடத்தில் கொட்டி தீர்ந்துவிட்டு மீண்டும் அவர்களை பிடிக்க கருமேகங்களாய் கலைந்து சென்றனர்...தீடிரென மாறும் வானிலைகளை கண்ட சாதாரண மக்கள் ஆச்சர்யத்துடன் கடந்து சென்றனர்....

இருவரும் ஸ்ரீ யின் வீட்டின் முன் நின்றிருந்தனர்... ஸ்ரீ அதிர்ச்சியில் கண்கள் கலங்க தான் வாழ்ந்த வீட்டினை பார்த்துக் கொண்டிருந்தாள்...

ஆருஷி தன் முழு சக்திகளையும் இழந்திருந்தான்... ஆருஷி " ஸ்ரீ ஸ்ரீ ... " என்ற மெல்லிய குரலில் திரும்பியவள் தான் கண்ட காட்சியில் அவ்விடத்திலேயே உறைந்து விட்டாள்.... அங்கு ஆருஷி நிற்க இயலாது தரையில் இருக்க அவன் கரங்கள் மட்டும் ஸ்ரீ யினை விடாது பற்றியிருந்தது....

ஸ்ரீ அவனுக்கு இணையாய் அமர்ந்தவள் "ரிஷி ரிஷி .... எழுந்திரு ..." என கூறிக் கொண்டிருக்கும் போதே அவனின் அருகில் மெல்லிய வெண்ணிற ஒளி தோன்றியது... அதைக் கண்டதும் அவளுக்கு பதற்றம் அதிகரித்தது ஏனெனில் ஆதித்யா மறைந்ததும் இந்த ஒளியில் தான்...

வேகமாய் அவனை தாவி அணைத்தவள் " ரிஷி ப்ளீஸ் என்னை விட்டு போகதடா.. என்கூடவே இருடா " என கதறி கண்ணீர் விட்டவளின் இறுக்கம் அதிகமானது...

அவளின் அழுகை அவனையும் தாக்க கண்கள் தாமாய் கலங்கியது.. அவனுக்கு இன்னும் அவளை வெளிச்சத்திற்கு அனுப்ப முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது... இதுவரை சரி இனி அவள் எப்படி அந்த பிசாசுகளிடம் இருந்து தப்பிப்பாள் என்பதை நினைத்தவன் தன்னை அணைத்திருந்தவளின் முதுகை ஆதரவாய் தடவி ஆசுவாசப் படுத்தினான்...

ஆருஷி " ஸ்ரீ ஸ்ரீ .. இங்க பாரு ... முதல்ல அழாத ... இந்த சூழ்நிலைய கண்டிப்பா நீ ஏத்துக் கிட்டுதான் ஆகணும்...என்னோட வாழ்க்கைல உயிரோட இருந்தபோதும் சரி இப்பவும் சரி நீ ரொம்ப முக்கியமானவ ... நான் செல்றத கவனமா கேளு ஸ்ரீ அதுங்க திரும்ப வரதுக்கு முன்னாடி நீ உன்னோட குடும்பத்தோட சேர்ந்திருக்கணும்... சரியா ..எப்பவும் தைரியமா இருக்கணும் அதுங்கள விட நம்ம ரொம்ப சக்தி வாயந்தவங்க ஸ்ரீ அத எப்பவும் மறக்காத... " என்றவனின் ஆன்மா மெல்ல மெல்ல அந்த ஒளியை நோக்கி இழுபட

ஸ்ரீ யோ "போகாத ரிஷி ப்ளீஸ் ... "என்றவள் அவனை அணைக்க வர .. ஆருஷி "வராத ஸ்ரீ என்னை பிடிச்சு வைக்க நினைச்சா நீ ரொம்ப காயப்படுவ " என்றவன் கடைசியாய் கண்ணில் தன்னுடைய ஸ்ரீ யை நிரப்பிக் கொண்டான்... அவளோ அழுது கொண்டே அவனின் வலது கையை கெட்டியாய் பிடித்திருக்க ...

ஆருஷி என்ன நினைத்தானோ வேகமாய் அவளை இழுத்து அணைத்தவன் அவளின் நெற்றியில் மென்மையாய் தன் இதழை ஒற்றி எடுத்தான் அவனின் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீர் ஸ்ரீ யின் கன்னத்தில் விழுந்து அவளின் கண்ணீருடன் கலந்தது...

அவனோ "ரொம்ப நாளாக உன்கிட்ட சொல்ல நினைச்சேன் ஆனா முடியல....
ஐ லவ் யூ அம்மு ..."என்றவனின் ஆன்மா முழுதும் அந்த ஒளியினுள் இழுக்கப்பட்டது... அவளோ அவனின் வார்த்தை அபபோதுதான் செவியடைந்து மூளையில் பதிந்திருக்க கண்கள் விரிய அவனைப் பார்த்தாள்... பின் அவன் இழுக்க படுவதை உணர்ந்தவள் அவன் வலது கையை விடாது பற்றியிருக்க எதர்ச்சியாய் அவனின் வலது கையைப் பார்த்தாள்.... பார்த்தவளுக்கு அதிர்ச்சி மேலுற ரிஷி..... என அழைப்பதற்குள் அவன் ஆன்மா முழுதுமாய் அந்த ஒளியினுள் மறைந்து போனது....

சிறுபுள்ளியாய் அவன் மறைவதைப் பார்த்தவள் வாய்விட்டே கதறினாள்..... ரிஷி ரிஷி.... என்றவள் கண்டது அவனின் வலது கையில் பெருவிரல் அருகில் இருந்த சற்று பெரிய மச்சத்தைதான்... ஆம் அவள் கனவு நாயகன் ஆருஷி என்பதை உணர்ந்த மறுநொடி அவன் இவ்வையகத்திலேயே இல்லை என்பதை ஏற்க முடியாதவள் இயலாமையில் அவ்விடத்திலேயே அமர்ந்து கதறி அழுதாள்......

"நிஜமாய் வந்தேன் நிழலைத் தேடி அழைந்தாய் என் கண்மணியே....

உன் மடியில் உயிர்நீக்க தவங்கள் செய்தோனோ என் கண்மணி..

உன் விழியில் நிறைந்துள்ளேன் கண்ணீராய் எனைக் கரைக்காதடி பெண்ணே....

இனியொரு ஜென்மமே வேண்டமடி...
இந்த நினைவுகளே போதும் என் கண்மணி..."

🤍🤍🤍

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25

நீண்ட நேரமாக ஆருஷி விட்டு சென்ற இடத்திலேயே அழுது கொண்டிருந்தவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை....

அவன் இறுதியாய் கூறிய "ஐ லவ் யூ அம்மு" என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது...

அதுமட்டுமின்றி அவன் கரத்தில் இருந்த மச்சம் வேறு அவளை கொல்லாமல் கொன்றது..இவ்வளவு நாள் ஏதோவொரு உணர்வாக தன்னுள் இருந்தது எப்போது தன் கனவு நாயகன் ஆருஷி என தெரிந்ததோ அதிலிருந்து அது காதலாக மாறிப் போனது ..

அதோடு இல்லாமல் காதலை உணர்ந்த மறுநொடியே பிரிவின் வலியையும் உணர்கிறாள்...

கட்டுப்படுத்த இயலாது கண்ணீர் ஒருபக்கம் வலிந்தாலும் , இன்னொரு மனமோ அவன் கடைசியாய் கூறிய வார்த்தையிலும் அவன் கூறிய விடயங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது அவனின் காதலி தான் தான் என்பதையும் புரிந்து கொண்டாள்....

இருவரும் ஒருவரை ஒருவர் மறைமுகமாக விரும்பியிருந்தபோதும் அதை வெளிப்படுத்தாமல் விட்டதை நினைத்து மனம் கனத்து போனது... அவள் மனம் ரிஷி ரிஷி என உருப்போட... வாய்விட்டு அழுது கொண்டிருந்தாள்... வாழ்வின் நிதர்சனம் நன்றாக உறைக்க துவங்கியிருந்த வேளையில் வீட்டினுள் இருந்து வந்த சத்தம் அவளை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது....

இதுவரை ஆருஷி நினைவில் இருந்தவளுக்கு தற்போதுதான் தான் தன்னுடைய வீட்டில் இருப்பதை உணர்ந்தாள்.... அவன் இறுதியாய் கூறிய அறிவுரைகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டவள் முயன்று வரவைக்கப் பட்ட தைரியத்துடன் கேட்டினுள் நுழைந்தாள்....

வீடே ஏதோ கலை இழந்தது போல் இருந்தது... வீட்டின் பின்புறம் இருந்த மரத்தைப் பார்த்ததும் குடும்பத்துடன் சேர்ந்து அவளின் பிறந்தநாள் கொண்டாடிய நினைவுகள் என அத்தனையும் விழிகளில் சுழன்றது...அதை நினைத்ததுமே அவளின் இதழ்களில் ஒரு புன்னகை... எவ்வளவு அழகான நாட்கள் அவை ...

ஏதோ புதிதாய் பிறந்த குழந்தை போல் ஆவலுடன் தன் குடும்பத்தைக் காண வீட்டினுள் நுழைந்தவளுக்கு ஹாலின் நடுவில் அவளுடைய புகைப்படத்தின் அருகிலேயே தன் தாத்தாவின் புகைப்படம் மாலையுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் அவ்விடத்திலேயே உறைந்து விட்டாள்....

ஆருஷி நினைவிலிருந்து சற்று விடுபட்டு நின்றிருந்த கண்ணீர் தற்போது தன் தாத்தாவின் நினைவில் மீண்டும் வழிந்தது...

விவரம் தெரிந்த வயதாகியும் கால் தரையில் படாமல் தன் தோளிலேயே வைத்துக் கொண்டு ஊரை சுற்றிக் காட்டியது அவளின் நினைவிலாட .... தன் தாத்தாவிற்கு என்னவானது என மனதினுள் புலம்பியவள் அவரை இறுதியாய் கூட பார்க்க முடியாமல் போனதை நினைத்து வருந்தினாள்...

மெல்ல அருகில் வந்து அவரின் புகைப்படத்தை தன் விரலால் வருடினாள்...

அந்த நொடி அன்றிரவு நடந்த நிகழ்வுகள் அவளின் கண் முன்னே விரிந்தது.....

அதீத நெஞ்சுவலியால் துடித்த சுந்தரத்தை குடும்பத்தினர் அவசரமாக காரினுள் ஏற்றி மருத்துவமனை அழைத்து சென்றனர்... ஆனால் மருத்துவமனை அடையும் முன்னரே அவரின் உயிர் தன் மெய்க் கூட்டில் இருந்து விடுதலை பெற்றிருந்தது.

பார்வையாளராக மட்டுமே இருந்த ஸ்ரீ க்கு அவரின் இறுதித் தருணங்கள் மிகுந்த வலியை ஏற்படுத்திக் கொண்டிருந்தது... இருந்தும் காட்சிகள் கண்களில் ஓட அவரின் உடலினின்றும் ஆன்மா வெளியேற அந்த நிமிடமே அவரை சுற்றிலும் வெண்ணிற ஒளி தோன்றியது... அவரின் ஆன்மாவோ உடலைவிட்டு வந்ததும் தன்னை சுற்றி கதறிக் கொண்டிருந்த தன் குடும்பத்தை ஒரு நிமிடம் பார்த்தவர் ... மேலும் தன்னை மனக்கண்ணில் பார்க்கும் ஸ்ரீ யையும் பார்த்து அவளுக்கு மெல்லிய புன்னகையை மட்டும் தந்துவிட்டு அந்த வெளிச்சத்தினுள் மறைந்து போனார்....

கண் திறந்த ஸ்ரீ யின் இதழ்கள் தாத்தா... என்று உச்சரித்தது..

பூஜையறையில் இருந்து வள்ளிப் பாட்டியும் அவருடன் ஸ்ரீ தந்தை தாய் மற்றும் சித்தப்பாக்கள் என அனைவரும் வெளிவர பாட்டியின் முகத்தில் தெளிவும் மற்ற அனைவரின் முகத்திலும் ஒருவித கலக்கமுமே மிஞ்சியிருந்தது....

மாண்டவர் மீள்வதுண்டோ!!!! என்பது மூளைக்கு உறைத்தாலும் மனது உண்மையை ஏற்றுக் கொள்ள வெகுவாய் பயந்தது.... பழைய சந்தோசமான வாழ்க்கை இனி வராதுதான்... ஆனால் இறந்தவர்களையே நினைத்துக் கொண்டு இருந்தால் வாழ்பவர்களின் நாட்கள் நரகமாகிவிடுமல்லவா....

இருக்கின்ற பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரவேண்டுமே என பெரியவர்கள் சிறியவர்களுக்காக இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்க .... சிறியவர்களும் தாங்கள் வருத்தப்பட்டால் பெரியவர்கள் வருந்துவர்கள் என ஒவ்வொருவரும் அடுத்தவர்களுக்காக எண்ணி தங்கள் வலிகளை வெளிக்காட்டாமல் மனதில் புதைத்து கொண்டனர்....

இந்த சில வாரங்களில் மெல்ல மெல்ல ஸ்ரீ எல்லாருடைய நினைவிலும் நீங்காது இருந்தாலும் மிச்ச வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டுமே என்று வாழ ஆரம்பித்து இருந்தனர்....

வீட்டில் இருந்தவர்கள் எவ்வளவு சொல்லியும் வள்ளி பாட்டி கேட்பதாய் இல்லை அவரின் முடிவில் உறுதியாய் இருந்தார்... அவரின் சொல்படி ஸ்ரீ யின் நினைவாக அந்த வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களையும் பெரிய பெட்டிகளில் அடுக்கியவர்கள் அதனை ஒரு சிறிய அறையினுள் வைத்துப் பூட்டினர்...

அதோடு ஸ்ரீ அஸ்தியின் ஒரு பகுதியும் சுந்தரத்தின் அஸ்தியையும் கங்கையில் கரைப்பதற்காக ஸ்ரீ யின் தந்தை ரவி ராம் மூவரையும் வழியனுப்பும் படலமே தற்போது பரபரப்பாய் நிகழ்ந்து கொண்டிருந்தது...

குருஜி சொன்ன அனைத்தும் அச்சு பிசகாமால் வள்ளிப் பாட்டி ஒவ்வொன்றையும் செய்ய மற்றவர்களுக்கு அதில் விருப்பமில்லாமல் இருந்தாலும் அவர் இவ்வளவு உறுதியாய் இருக்க நிச்சயமாக ஏதேனும் காரணம் இருக்கும் என்பதை உணர்ந்தவர்கள் அவரின் போக்கிலேயே விட்டனர்...

அங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ க்கு என்ன உணர்வென்றே வரையறுக்க முடியவில்லை.... தன்னை தாங்கி தூக்கி வளர்த்த குடும்பம் தன் பிரிவில் வெறும் நடைபிணமாய் இருப்பதைக் கண்டவளுக்கு தான் இன்னும் உங்களுடன் தான் இருக்கிறேன் என கத்த வேண்டும் போல இருந்தது... ஆனால் நிஜத்தில் அதற்கான சாத்தியக்கூறுதான் இல்லை...

முகத்தில் சிரிப்பு மாறாமல் புகைபட சட்டத்தினுள் மறைந்து போன இருவரின் முன்னும் அனைவரும் கூட அதில் ஆறாம் மாத தொடக்கத்தில் தன் மேடிட்ட வயிற்றுடன் நின்றிருந்த சவிதாவின் மீது ஸ்ரீ யின் பார்வை வாஞ்சையுடன் பதிந்தது.....

விளக்கு ஏற்றி வைத்து விட்டு கண் மூடி நின்றவர்களின் மூடிய இமையிலிருந்து கண்ணீர் வழிந்தது.... ஸ்ரீ அவர்களின் துன்பத்தை போக்க இயலாத தன் கையாலாகாத தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள்....

இருவரின் அஸ்தியையும் மூவரிடம் கொடுத்தவர் திரும்பி பார்க்காது கிளம்புமாறு அவர்களை பணித்து மற்றவர்களை உள்ளே அனுப்பி விட்டு அங்கிருந்த சோஃபாவில் சற்று ஓய்வாக அமர்ந்தார்.... அவரருகில் சென்று அமர்ந்த ஸ்ரீ எப்போதும் போல அவரின் மடியில் தலை சாய்த்து கொண்டாள்.... காடு மேடு தாண்டி வீடு வந்த உணர்வு அத்துடன் அதனை கண்மூடி அனுபவித்தாள்....

ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தவருக்கு
எப்போதும் போல ஸ்ரீ தன் மடியில் தலை வைத்து படுத்ததும் தலைகோதுவது போல் தானாக கை மேலெழுந்தது... திடுக்கிட்டவருக்கு வெறுமையான மடியே காட்சியளிக்க நெஞ்சில் சுருக்கென்று வலியெடுத்தது... இயலாமையில் வாய்மூடி அழ அவரின் கண்ணீர் நிழலாய் அவரின் மடியில் படுத்து இருந்த ஸ்ரீ யை ஊடுருவி விழுந்தது...

பாவமாய் அவரைப் பார்த்த ஸ்ரீ "ஸாரி பாட்டி உங்கள எல்லாம் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல... இனிமே உங்கள விட்டு எங்கையும் போக மாட்டேன்... உங்க கூடவே உங்களுக்கு எல்லாம் பாதுகாப்பா நா இருப்பேன் பாட்டி...."என்றவளின் வார்த்தை அவரின் செவியை அடைய வேண்டுமே!!!

கண்ணைத் துடைத்துக் கொண்டவர் கால் வலி காரணமாக எழுந்து அறைக்குள் செல்ல முற்பட்டவருக்கு சவிதாவின் அறையில் இருந்து வந்த சத்தத்தில் திடுக்கிட்டார்.....

ஸ்ரீ யின் தாய் வெளிவந்தவர் "என்ன சத்தம் அத்தை, ஏதோ கண்ணாடி விழுந்தது மாதிரி இருந்தது" என்க அவரோ "தெரியல மா சவிதா அறையில் இருந்து தான் சத்தம் வந்தது என்றவர் "அம்மாடி சவிதா என்ன சத்தம் மா என்னாச்சு" என சத்தமாய் அழைக்க அறையிலிருந்து எந்த பதிலும் இல்லாமால் போனதில் அனைவரும் பயந்தனர்....

அனைவரும் சவிதா அறையை நோக்கி விரைய அங்கிருந்த ஸ்ரீ க்கு ஏதோ விபரிதமாய் தோன்ற அவர்களுக்கு முன் அறையினுள் நுழைந்திருந்தாள்.... அங்கு அவள் கண்ட காட்சியில் அவ்விடத்திலேயே உறைந்து நின்று விட்டாள்....

ஏதோவொரு கண்ணாடிப் பொருள் அதனுடன் கைபேசியும் தரையில் சிதறிக் கிடக்க அதன் நடுவில் உணர்வற்ற நிலையில் அவளின் அண்ணி சவிதா மயங்கிக் கிடந்தாள்....

பதற்றத்துடன் அவரின் அருகே சென்றவள் "அண்ணி அண்ணி ... எழுந்திருங்க என்னாச்சு உங்களுக்கு" என்றவளுக்கு அவரின் குழந்தைக்கு ஏதேனுமாகிவிடுமோ என அவரைக் காப்பாற்ற போராடினாள் ...

அவரை உலுக்க முயற்சி செய்தவளுக்கு முயற்சிகளனைத்தும் தோல்வியில் முடிய இறுதியாய் வயிற்றில் கை வைக்க

அவளின் கண் முன்னே நீர் நிரப்பப்பட்டது போல ஒரு இடம் ஒன்றும் புரியாமல் விழித்தவளுக்கு மெல்ல மெல்ல குறைந்து கொண்டிருக்கும் இதய துடிப்பு காதில் விழ மெதுவாய் திரும்பி பார்த்தவள் முன் ரோஜா இதழ்களை விட சிவந்த கையளவே உள்ள சிறிய உருவம்...

கண்விழிக்காத அந்த உருவம் கை கால்களை சுருக்கியும் சில நொடிகளில் வெட்டுவது போலவும் மங்கலாக தெரிய அவளுக்கு வியர்த்து வழிந்தது... வேகமாய் வயிற்றிலிருந்து கையை எடுத்தவளுக்கு அங்கு நடந்தவற்றை கிரகிக்கவே சில நொடிகள் தேவைப்பட்டது....

புரிந்த மறு நொடி அவளின் ஆன்மாவிற்குள் குளிர்பரவ " அண்ணி அண்ணி முழுச்சுக்கோங்க ... நம்ம பாப்பா பாவம் அண்ணி எழுந்துருங்க ... பாப்பாவுக்கு என்னமோ நடக்குது எழுந்திருங்க " என கண்ணீருடன் அழுது கொண்டே அவளை தட்ட முயற்சி செய்து கொண்டிருக்கும் போதே...

அறையினுள் வந்த குடும்பத்தினருக்கு பேச்சு மூச்சின்றி கிடந்த சவிதா வின் நிலையைக் கண்டதும் அதிர்ந்தவர்கள் .... நிலைமையின் வீரியத்தை உணர்ந்து சவிதாவைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனை விரைந்தனர்...

அவசர பிரிவில் சவிதா அனுமதிக்கப்பட வெளியில் அனைவரும் கலக்கத்துடன் நின்றிருந்தனர்... என்ன நடந்தது எப்படி அவள் தரையில் கிடந்தாள் .... என பல யோசனைகள் மனதில் ஓடிக் கொண்டிருக்க ஒரு ஓரமாய் கண்ணில் கண்ணீருடன் நின்றிருந்த விஷ்ணுவை ஒருவராலும் கண்ணால் காண இயலவில்லை...

மீண்டும் ஒரு இழப்பை தாங்க அந்த குடும்பத்தில் ஒருத்தருக்கும் தெம்பு இல்லை என்பது மட்டும் உறுதி....

ஐசியுவில் இருந்து வெளிவந்த மருத்துவர் முகத்தில் மிகுந்த சோகம் .. தன் கையுறையைக் கழட்டியவர்... "ஐயம் சாரி ... அவங்க வயித்துல இருக்க குழந்தையோட துடிப்பு ரொம்ப குறைந்து கொண்டே வருது... இப்போ குழந்தை இருக்க ஸ்டேஜே அல்மோஸ்ட டை கன்டிஷன் தான்.... அவங்க கீழ விழுந்ததால எந்த அடியும் பெருசா படல மே பி மயங்கர முன்னாடி எதையாவது பிடிக்க முயற்சி செய்து பலமான அடியில்லாம தப்பிருக்கலாம் ... ஆனால் அவங்க மயங்கும் போது ஏதோ அதிர்ச்சி தரக்கூடிய வகையில நடந்துருக்க அதனால பேபிக்கு போகிற ஆக்ஸிஜன் தொடர்ந்து கட் ஆகியிருக்கு ... சரியான நேரத்துக்கு நீங்க கொண்டுவந்தாலும் ஆக்ஸிஜன் திரும்ப பேபினால எடுத்துக்க முடியல சோ சாரி டூ சே திஸ்... இன்னும் கொஞ்சம் நேரத்துல பேபிய ஆப்ரேட் பண்ணி ரீமுவ் பண்றது தான் பெட்டர்..." என கூறிவிட்டு செல்ல மொத்த குடும்பமும் இடிந்து போனது... இன்னும் எத்தனை உயிர்களைக் தான் இழந்து எவ்வளவுதான் தாங்குவது.... விஷ்ணுவோ அதற்கு மேல் முடியாது கண்ணீருடன் மருத்துவமனையை விட்டு வெளியேறினான்....
***************************
சவிதாவை மருத்துவமனை அழைத்து செல்வதை ஒரு பார்வையாளராக மட்டுமே இருந்த ஸ்ரீ சிறு நடுக்கத்துடனும் ஏதும் தவறாக நடக்கக்கூடாது என்ற பிரார்த்தனையுடனும் அவர்களின் பின்னே செல்ல முயற்சிக்க அவள் இருந்த அறையின் கதவு மற்றும் சன்னல்கள் அனைத்தும் வேகமாய் அடைக்கப்பட்டது....

அவளோ இருந்த பதற்றத்தில் சுற்றிலும் நடக்கும் சூழ்நிலை மாற்றத்தை கவனிக்காது எப்போதும் போல சுவற்றில் ஊடுருவி செல்ல முயற்சிக்க அந்தோ பரிதாபம் சுவற்றில் இடித்து கீழே விழுந்தாள்....

அப்போது தான் சுற்றுப்புறத்தை கவனித்தவளுக்கு இவ்வளவு நேரம் வெளிச்சமாய் இருந்த அறை தீடிரென்று இருள் பரவி இருப்பதை கண்டு அதிர்ந்தாள்.... மீண்டும் மீண்டும் சுவற்றின் வழியே வெளியேற முயற்சித்து முடியாது போக பயத்துடன் திரும்ப ....

அவளின் பின்புறம் ஒரு கருப்பு உருவம் வேகமாய் அவளை நெருங்க நடுங்கிக் கொண்டே சுவற்றுடன் ஒன்றினாள்...

அண்ணியின் நிலையை அறியவேண்டும் குழந்தையை எப்படியாவது காக்க வேண்டும் என்ற மனப்பதற்றத்தில் இருந்தவளுக்கு ஆருஷி கூறிய எந்த தற்காப்பும் அவளின் நினைவில் வராமல் போனது அவளின் துர்தஷ்டவாசமாகியது..

நாற்புறமும் கருப்பு உருவ பிசாசுகள் அவளை முழுவதும் நெருங்கி தன் சக்திகள் மூலம் அவளை கவர்ந்து செல்ல இரத்தகறை படிந்த சங்கலியால் அவளை சுற்றி வளைத்தனர்...

சற்றேனும் சுயநினைவில் அவள் இருந்திருந்தால் அந்த சங்கலி ஒரு மாயை என அறிந்திருப்பாள் ஏனெனில் பிசாசுகள் நன் ஆன்மாவை தொட்டால் அவை சாம்பல் ஆகிவிடும் என்பதை அறிந்திருந்தனர்......

எவ்வளவு போராடியும் அந்த சங்கலியில் இருந்து வெளிவர இயலாதவள் தான் வசமாய் அவைகளிடம் மாட்டிக் கொண்டதை உணர்ந்தாள்....

பயத்தில் ஒரு நிமிடம் கண் மூடியவளுக்கு அந்த சிறு சிசுவின் துடிப்பைக் காண எங்கிருந்துதான் அவ்வளவு வெறி வந்ததோ ஆ....... என கத்திய சங்கிலியை உடைத்துக் கொண்டு வெளிவந்தவளின் கண்கள் சிவப்பு நிறத்தைப் பிரதிபலித்தது....

தீய ஆன்மாக்கள் அவளை பயமுறுத்த நெருங்க அனைத்தையும் ஆக்ரோஷமாக தாக்க முயற்சிக்க அந்தோ அவளின் கரம் பட்டே அவைகள் அவ்விடத்திலேயே பொசுங்கி போனது...

மீண்டும் அவ்வறையில் வெளிச்சம் பரவத் துவங்க அவளின் விழியும் நீலநிறத்தில் மாறி அவளை சாந்தப் படுத்தியது....

தன் அண்ணி மற்றும் அவரின் குழந்தையையும் காண விரைந்தவளுக்கு இடிந்து போய் அமர்ந்து இருந்த குடும்பத்தைக் கண்டு மீண்டும் பதற்றமானது....

அந்த அறையை அவள் நெருங்கி செல்ல அவளின் பின்னே வெண்ணிற ஒளி தோன்றியது திரும்பி பார்த்தவளுக்கு அது தனக்கானதுதான் என்று புரிந்தது இருந்தும் அவளுக்கான கடமை இன்னும் முடியாமல் இருக்க அதற்குள் எப்படி செல்வது என்ற குழப்பத்தில் வேகமாய் சவிதா வை காண விரைந்தாள்.....

அதற்குள்ளாகவே அந்த ஒளியிலிருந்து ருத்ராட்சம் அணிந்த நீலநிற கை வெளிவந்து ஸ்ரீ யின் வலது கையை பிடிக்க அவளோ மேலும் பதறி "இல்லை இல்லை .... என்னை விடு நான் என்னோட அண்ணியையும் அவங்க குழந்தையையும் காப்பாத்தனும் என்னை விடுங்க..." என அக்கரங்களிலில் இருந்து விடுபட போராடினாள்.... ஆனால் வலிமை மிகுந்த அந்த கரமோ அவளை விடாது பிடித்து இழுக்க அவள் அழுகையினுடே கதற கதற அவ்வொளியினுள் முழுதும் கரைந்து போனாள்...

"எதை எடுத்து வந்தோம் இறுதியில் உடன் கொண்டு செல்ல ...
பிறப்பிற்கும் இறப்பிற்க்கும் நடுவிலே அன்பெனும் பாலமில்லையெனில் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் அது வீணே!!!!!!!"

முழுதும் அன்பினாலே திளைத்து வாழ்ந்த ஒரு அப்பாவி ஜீவனின் வாழ்க்கை விதி விளையாட்டில் சிக்கி உயிர்ப்பற்றுப் போனாலும் அவளின் எஞ்சிய நினைவுகள் என்றும் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கும்............

**************************

"இல்லை........................." என கத்திய ஆதிலிங்கத்தின் ஆக்ரோஷம் அந்த காட்டை நிறைக்க..... இவ்வளவு வருட காத்திருப்பின் பலன் கை வந்தும் கிடைக்காமல் போன ஏமாற்றம் வலி அவனை மேலும் வெறியேற்ற.....
"உன்னை விடமாட்டேன்......." என்று உருப் போட்டவனின் உருவம் புதிய அத்தியாயத்திற்கான காத்திருப்பாய் மாறியது.......

முற்றும்...
 
Status
Not open for further replies.
Top