All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அவிராவின் 'நீலியின் வதம்' - கதை திரி

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Semma episode.... ஆரி அம்மா semma la அந்த வயசுல avanuku solli வளர்த்து இருக்காங்க.... அவனும் ava kita மன்னிப்பு kekanum nu நினைச்சி kitu இருக்கான்.... Ava வீடு la தான் தங்கி இருகாங்க la.... Ethuku அந்த இடத்தை vikkaraaru...
Two epila reason theriyum sago
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வதம்-11 a

இரவு உணவை முடித்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டிற்கு திரும்பிய நண்பர்கள், ஹாலில் விசிராந்தையாக அமர்ந்து, ஒய்வு எடுக்க ஆரம்பித்தார்கள்...

வினய்யின் மனமோ, சற்று முன் "பெண்ணவள், ஆரியின் அருகே நெருங்கி நின்று அவனுக்கு உணவு
பரிமாறியதிலேயே உழன்றது.... இதற்கு முன் ஆரி , எந்த பொண்ணையும் இவ்வளவு அருகில் அவனிடம் நெருங்க விட்டதில்லை, முதன் முதலில் பார்த்த இந்த பெண்ணை மட்டும் , அவ்வளவு நெருக்கமாக உணவை பரிமாற எத்தகைய கோவமும், முகச் சுழிப்பின்றி அனுமதித்து ஏன்?... ஆரி மனக்குழப்பத்தில் இருந்ததால் பெண்ணவளின் நெருக்கத்தை கவனிக்கவில்லையா?.. இல்லை காலையில் அந்த பெரியவர் சொன்னது போல் "ஆரி மனக்குழப்பத்தால் அடிக்கடி தன்னிலை இழக்கிறானா?.. உண்மையில அவனின் மனத் தடுமாற்றத்திற்கு காரணம் ஏதேனும் தீய சக்தியாக இருக்குமோ?. இப்படி பல்வேறு சிந்தனையில் இருந்த வினய்யின், மண்டையில் கொட்டினான் ஆரி...

அதில் அதிர்ந்து தன் முன்னே நின்ற ஆரியின் முகத்தை, "எதுக்கு கொட்டினாய்?'' .. என்பது போல் வினய் பார்க்க?....

" மாமா, இன்னைக்கு ரொம்ப அலைச்சல், ஸோ, தண்ணி அடிக்கலாமா?...

"டேய் மச்சி, நிஜாமா வாடா... வினய்யின் கண்ணில் ஜொல்லு வடிந்தது, தன்முன்னே இருந்த ஃபாரின் சரக்கு பாட்டிலை பார்த்து..

மீன் சிக்கிகுச்சுடா .. பிடிச்சி தண்ணீல நீந்த விட்டிடலாம்; இதை தான் எதிர்பார்த்தேன் என்பது போல் மனத்திற்குள் நினைத்து சிரித்த ஆரி..

இரு மாமு மிக்ஸிங்கு வாட்டர், எடுத்துட்டு வரேன்... என கண்ணாடி கிளாஸ்யுடன் கிச்சன்செல்ல திரும்பிய ஆரியின் கைப்பிடித்த வினய்

"எனக்கு மட்டும் மிக்ஸிங்க்கு தண்ணி , உனக்கு சோடா வா?.... இது இந்த ஊர் நியாமா?.... உன்ன நல்லவனு நினைச்சேன்... முகத்தை
அஷ்ட கோணலாக்கி கேள்வி கேட்டான் வினய் ..

" டேய் இதுல நீ குழந்தை டா .. இப்பத்தான் பழகி இருக்க.. சோடா மிக்ஸ் பண்ணினா மயக்கம் அதிகம் வரும், அது தான் உனக்கு தண்ணீர் கலக்கலாம்னு.. ஆரி ராகம் இழுத்தான்..

"நீ என் அம்மா போல, இல்ல அதுக்கும் மேலடா நீ., நான் குழந்தையாக இருந்த அப்போ., என் அம்மா பால் பவுடர்ல ... தண்ணீ கம்மியா கலக்கி .... குடுப்பாங்களாம் அதனால எனக்கு அடிக்கடி "டிஸ்என்ட்ரி போகுமாம்.. அதுனாலதான் நான் இப்படி நோஞ்சானா இருக்கனாம்.. அடிக்கடி பாலை கூட சரியாக கொடுக்க துப்பு இல்லைனு., அடிக்கடி அப்பா இதை சொல்லி
திட்டுவாறுடா அம்மாவை ... ஆனா நீ ....
அதற்கு மேல் பேச முடியாமல் வினய்யின் கண்கள் கலங்க..

சற்ற முன் வினய் பேசியதை கேட்டப்படியே, சமையலறைக்குச் சென்று, தண்ணீர் பிடித்து , அதனுள் தன் கையிலிருந்த மாத்திரையைப் போட்டு ஸ்பூனால் கலக்கியவன், மாத்திரை கரைத்ததும் ஸ்பூனை எறிந்து விட்டு வினய்யிடம் வந்தவன்.. கடைசியாக அவன் கூறியதைக் கேட்டு முதலில் சிரித்தவன், பிறகு தான் செய்யப் போகும் செயலால் மனம் தடுமாற, அதை தலையை உலுக்கி தன்னை சரிப்படுத்திக் கொண்டான் ஆரி...

அதன்பிறகுதன் கையிலிருந்த கிளாஸ்ஸில் சரக்கை ஊற்றி வினய்க்குக் கொடுத்து விட்டு, தனக்கும் ஒரு கிளாஸ்ஸில் ஊற்றிக் கொண்டு, வினய்யின் முன்னே அமர்ந்தவன்; குடிப்பது போல நடித்துக் கொண்டே வினய்யை பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த சில நொடிகளில் மயங்கி சரிந்த வினய்யை, தூக்கிச் சென்று படுக்க வைத்துவிட்டு, போர்த்தி விட்டவன், ' ஜெர்க்கின் " அணிந்துக் கொண்டு, நவீன ரக துப்பாக்கியை தன் பையிலிருந்து எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு "டார்ச் லைட்டோடு வெளியேறிவன்... வீட்டைப் பூட்டி சாவியை தன் சட்டைப் பையினுள் போட்டுக் கொண்டு, வீட்டின் பின்புற இருளில் இறங்கி நீலிக் குகையை நோக்கி நடக்க வாரம்பித்தான்..

சுற்றிலும் அடர் கருமை பூசியிருந்த இருட்டில் .. சற்று மங்கலான
நிலவு வெளிச்சத்தில் வயல் வரப்பில் நடந்தவனின், காதில் காட்டுப் பூச்சிகளின் ரிங்காரமும், தவளைகளின் கத்தலுமே கேட்டுக் கொண்டிருக்க... இருபது நிமிட நடையில் வயல் பரப்பு முடிந்து .. பாக்குத் தோப்பு ஆரம்பிக்க அதனுள் புகுந்தவன் ... அடர்ந்த இருட்டில் . எந்தப் பக்கம் செல்வது என ஒரு நொடி நின்று யோசிக்க.. டார்ச்சை இயக்கி வழி பார்க்கலாம் என டார்ச்சில் கை வைக்க போகும் சமயம், அவன் பின்னே நாற்புறமும் சருகுகள் மிதிப்படும் ஒசை கேட்டதும் அதில் சற்று நிதானித்தவன்.. அப்படியே மரத்தில் சாய்ந்து ... கண்மூடி நின்றவன், சருகுகள் மிதிப்படும் ஒசையை வைத்து ... தன்னை பின் தொடர்வது மனிதர்களா?.. இல்லை விலங்குகளா?... என அவதானிக்க ஆரம்பித்தான்.
அவன் நின்றதும் அவ்வொலியும் நிற்க ., இப்பொழுது எத்திசையில் செல்வது என, யோசிக்க ஆரம்பித்தான் .
அவனின் வலப்புறம் .... சற்று தூரத்தில் நீர்வீழ்ச்சிலிருந்து நீர் வீழும், ஒலியை உள்வாங்கியவன் ... அந்தத் திசையை நோக்கி நடக்க ஆரம்பிக்கவும்.. மீண்டும் அந்த வித்தியாசமான ஒலிகள் அவனை பின் தொடர ஆரம்பித்தது.

பாக்கு மரங்கள் 'சலசலவென 'காற்றில் அசைந்து பெரும் சப்தத்தை எழுப்பிக் கொண்டிருந்தன....
அதே நேரம் ...' செம் பூத்து, 'பறவைகள்..'க்ரிக், க்ரிக்' என கத்தியும்,
எங்கிருந்தோ, நரிகள் "ஊளையிடும் சத்தங்கள் அவ்விடத்தை அமானுஷியமாக காட்டிக்கொண்டிருந்தன...

தன்னை மீண்டும் தொடர்ந்த கால் அடிகளின், ஒலியில் அவைகள் என்னவாக இருப்பின் என அனுமானத்திற்கு வந்தவன் .... கும்மிருட்டு, வித்தியாசமான ஒலிகள், விலங்குகளின் கர்சனைகள் இவற்றினால் எந்தவித பயமும் இன்றி, "விக்கிரமாதித்தன் வேதாளத்தை சுமந்து மந்திரவாதி குகைக்கு செல்லும் வழியில், குறுக்கே ; பேய், பிசாகளும், யட்சிணிகளும், கிங்கர்களும் ,, கொலை நடுங்கும் ஒலி எழுப்பி, விக்கிரமாதித்தியன் பயந்த வேளை அவனை குத்தி, குதறி இரத்ததோடு புசிக்க பின் தொடர, அந்தோ! பரிதாபம், விக்கிரமதித்தியன் எதற்கும் அஞ்சாமல், தன் காரியமே கண்ணாக, '
துணிந்து சென்றதைப் போல், ஆரியும், தொடர்ந்து வரும் ஆபத்தையும், எதிரே உயிர் குடிக்க காத்திருக்கும் ஆபத்தையும் எதிர்நோக்க துணிந்து முன்னேறி கொண்டிருந்தான்.... ஆனால் முன்னவன் வேதாளத்தை சுமந்தான் ... பின்னவன் வேதாளத்தை வீட்டில் தூக்க மருந்தை கொடுத்து தூங்க வைத்துவிட்டு ,,, தனியாளாக நடக்கிறான்...

அடர்ந்த கரும் இருட்டு தோப்பிலிருந்து, கரடு முரடணான பரந்த வெளியில் ஆரியின் பாதங்கள் படவும்.. அய்யோ பாவம் இவன் .. என நிலவு மகள் சற்று கருணை காண்பித்து அவ்விடத்திற்கு நிலவொளியை வீச ஆரம்பித்தாள் ...

பரந்த வெளியில் இருபது நொடிகள் நடந்தவன்; மேகம் முட்டிய மலை ஆரம்பிக்கும் இடத்தில் நின்று; தலையை உயர்த்தி அம்மலையை பார்க்க.. ' மனிதரை புசிக்கும் அரக்கன்'ஒருவன் அமர்ந்திருப்பது போல காட்சியளிக்க, அதன் மீது ஏற காலை வைத்த நொடி; அவனின் முன் தோன்றியிருந்த உருவத்தைப் பார்த்து, ஒரு அடி பின்னால் வைத்து, நின்றான்.
அந்த நெடிய உருவம் ; தன் கையில் இருந்த கழியை ஆரியின் தலை மீது வைத்திருந்தது ...


_,,,,,,, x -,,,,,,,,X....,,,,,,,,,,,,,,,,,x.,,,,,,,,,,,,,,X.,,,,,,,,,,,,,,,,
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீலியின் வதம்-11 - a
பாகம் பதிந்துள்ளேன்.... போன
ud-க்குComment மற்றும் லைக்ஸ் போட்ட உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்...தாமத்திற்கு மன்னிக்கவும் ., 11 bவிரைவில்
 

Chitra Balaji

Bronze Winner
கழி means enna..... Super Super maa.... Vinay ah ஏமாத்தி மயக்கம் மருந்து koduthuttu அந்த குகை ku varaan.... அவன் pinnadi தொடர்ந்து varathu யாரு....
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கழி means enna..... Super Super maa.... Vinay ah ஏமாத்தி மயக்கம் மருந்து koduthuttu அந்த குகை ku varaan.... அவன் pinnadi தொடர்ந்து varathu யாரு....
கழினா ... தடி Sis Sorry என்னோட ஸ்லாங்குல எழுதிடேன்.
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீலியின் காதல் வதம் - அவிரா ( பகுதி - 12)

"பெளணர்மி வரை காத்திருடா.. துரோகத்தால் பலியான உயிர், உயிர் கொல்லத் துடிக்குதுடா.. காதல் கொண்டு காலனாய்
வதைந்தவனை வதம் செய்ய .. அருவமாய் ( காற்று உருவம்) அடைப்பட்டவளை.. உன் உயிர் மூச்சைக் கொண்டு கட்டு அவிழ்த்து விடாதடா.. "என கர்சித்தவர்.. தன் கைத்தடியால் .. ஆரியை மலை மீது ஏறாமல் தடுத்து... அவனை.. விரட்டினார். அங்கு காவல் காப்பவர்.,

ஆரி மனதினுள் "மதி சொன்ன இந்த இடத்தை காவல்காப்பவர் போல.. இவரு .. ஏது ஏதோ உளறுறாரு.. என நினைத்துக் கொண்டு அவரிடம் வாக்குவாதம் செய்யாமல்... வந்த வழியே திரும்பி
செல்லவாரம்பித்தான்.ஆரி.

ஆரி சென்ற சிறிது நேரம் அவன் சென்ற
திசையையே... பார்த்துக் கொண்டிருந்த பெரியவர். அதன் பின் மலையின் பக்கவாட்டில் நடந்துச் சென்றார் ... சிறிது தூரம் சென்றதும் .,அவர் உடல் அதிர..நின்று திரும்பிப் பார்த்து.. " விதி வலியது, நில் என்றாலும் நிற்காது .. ஈசா .. யான் என்ன செய்ய " .. எனப் பெருமூச்செறிந்து விட்டு .. புகையாகி மாயமானார்.

இங்கே, ஆரி திரும்பிச் செல்வதைப் போல் சென்று விட்டு ..பெரியவரின் தலைமறைந்ததும்.. மீண்டும் மலை ஏற ஆரம்பித்து விட்டான். அவன் பாதம் மலையில்பட்டதும்.. அந்த மலையைச் சுற்றிப் போடப்பட்டிருந்த எல்லைக் கட்டு.. உடைய .. உச்சிக்
குகைக்குள் பயங்கர அழுகை ஒலி எழுந்தது.

என்னேl.ஒரு மாயம் ஆரி அந்த அழுகை ஒலி கேட்காமல் .." உஸ் " என்ற சப்தம் மட்டுமே .இரைச்சலாக காதில் விழ.. பயம் கொள்ளாமல் .. குகையை நோக்கி முன்னேறினான்.

அவனை.. பின் தொடர்ந்தவைகளும், அவன் பின்னே , .மலையேறத் துவங்கின..

மறுபுறம்..மலையின் கட்டு உடைக்கப்பட்டதுமே.. தூங்குவதுப் போல் படுத்திருந்த உருவம் .... திடுக்கென்று எழுந்து... பூஜை அறைக்குச் சென்று .. அங்கே.. இது போல் நடக்கும் என்பதை... முன்கூட்டி அறிந்ததைப் போல் .. தயாராக இருந்த ஹோம் குண்டத்தில் தீ வளர்த்து... மந்திர உச்சாடம் செய்துக்கொண்டே, நிறைய, சடங்குகளை நடத்திக் கொண்டிருந்தார்.பெரியவர் .. ஒருவர் ..

இங்கே, மலையின் உச்சியை ஆரிஅடைந்ததும்.. அங்கிருந்த பெரிய புளியமரம் காற்றில் பேய்யென .. நாற்புறமும் "உஸ்ஸ். ",, என்ற பெரும் சப்தத்துடன் அசைந்து .. மண் துகள்களை வாரி இறைத்தது.

சுற்றிலும் படர்ந்திருந்த
மை இருட்டிலும், வீசிய பேய்காற்றினாலும், அஞ்சாது ... அசையாது நின்றிருந்த ஆரியின் .. முகத்தில் மண் துகள்கள் விழும் முன்னே.. கையை வைத்து கண்ணை மறைத்து அப்படியே அசையாது நின்றான்.

சிறிது நேரத்தில் அவ்விடம் அமைதியாக ..மேலும், முன்னேறி சென்று... கற்களால் ஆன குகைக்குள், ஸ்டார்ச்சின்.. உதவியுடன் .. உள்ளே நுழைந்து அவ்விடத்தை... பார்த்தான் ஆரி..

சிறிய அறையின் வடிவிலான அவ்வறையின் உள்ளே, வெறும் மண் தரையும், சில கூரிய கற்கள் சிதறி கிடந்தன.. அதை கையில் எடுத்து பார்த்த... அடுத்த நொடி ... அக் கல்லை விசிறி விட்டு... அந்த இடத்தை மேலும், ஒரு முறை சுற்றிப் பார்த்தவன்; அங்கு... இரத்தம் தோய்ந்த கூரிய கல்லைத் தவிர வேறொன்றும் இல்லை ஆதலால் .. அங்கிருந்து வெளியேறி ... குகையின் மற்றொரு புறம் இருந்த .. அருவியை எட்டிப் பார்க்க..

அப்போது, பெருமூச்சுடன் .. அவன் பின்னிந்து அவனை... யாரோ! அருவியில் தள்ள முயற்சிப்பதைப் போல் தோன்ற .. சட்டென்று திரும்பியவன்.
கண்ணில்ப்பட்டது.

கருமையான உருவம் ஒன்று. அது ...இவனிடமிருந்து ஓடி.. புளியமரத்திற்கு பின்னால் ஒளிந்ததை தான்.,,

அப்போதும், அவன் பயப்படாமல் .. புளியமரத்திற்கு பின்னால், சென்றுப்பார்க்க.. என்னே.. அதிசயம் ... அங்கு யாரும் இல்லை.. மேலும், புளியமரத்தை ஒரு சுற்று சுற்றியவனின் .. கண்ணில் யாரும் தென்படாததால் ...

"டிஸ்கஸ்ட்டிங் " .. இங்க .. நான் எதிர்பார்த்த எதுவும் இல்லையே.. என சிந்தித்துக் கொண்டிருக்கையில் .
.அவன்; தலையில் வெளவால் உரசுவதுப் போல் செல்ல... தன்னை தற்காத்துக் கொள்ள இரு கைகளையும்; தலைக்கு மேல் தூக்க...... அவன் கரங்கள் மோதி .. நீலியின் ஆத்மாவை அடைத்து வைத்திருந்த .. மந்திர குடுவை பை... அவிழ்ந்து அவன் தலையில் பட்டு கீழே விழுந்தது.

அதை, குனிந்து கைகளில் எடுத்துப் பார்த்தவன். மூச்சுக்காற்று பட்டதும் ... மஞ்சள் நிறப்பை.. கரிய நிறத்திற்கு மாறியதும் .. அதை ஏந்தியிருந்த அவன் கரங்கள் சுடவும் ... விலுக்கென்று உடல் அதிர அவற்றை கீழே விட்டான் ஆரி..

மீண்டும், கீழே குனிந்து அது என்னப் பொருளாக இருக்கும் என
ஒற்றைக்காலிட்டு... அமர்ந்து ஆராய்ந்தான் ... அது.. மந்திர கோடுகளாலான தங்கத் தகடோடு .. செம்பு குடுவையும்.. இன்ன பிற பொருட்களும் அப்பையிலிருந்து சிதறி கிடந்தன.

அதில் ஏதும் வெப்பம் வெளிவரும் வகையில் பொருட்கள் இல்லாமல் போகவும்... பின் எப்படி தன் கரங்கள் சுட்டது என்ற குழப்பத்துடனே ...எழுந்து அவன் நிற்கவும்.

"அய்யோ.. அம்மா.. ஆத்தா.. எனப் பலக் குரல்கள் அவன் முதுகுப் புறம்.. கேட்க...

பட்டென்று ஆரி திரும்ப ... அவன் முன்னே ,, ஆஜானுபாவமான மூன்று தடியர்கள் "ஆ...... வென வாயைப் பிளந்து கண்கள் தெறிக்க உறைந்து நின்றிருந்தார்கள்.
அவர்கள்.,,மாலையில் இருந்தே ஆரியை தீர்த்துக் கட்டும் எண்ணத்தில் ஆரியைப் பின் தொடர்ந்த தடியர்கள் ... ஒருவாறாக ஆரியை அவர்கள் நெருங்கும் சமயம் ..

ஆரியின் அருகே .. " ேகாரைப் பற்களை வெளியே நீட்டியவாறு... முகம்; உடல், முழுவதும் தசைகள் பிய்த்து ..தொங்கிக் கொண்டு .. அதில் .இரத்தம் வடிந்தும்.... பெரிய கண்களும்..நீண்ட முடி தோளில் தவழ .. நீண்ட விரல் நகங்களை கொண்ட... தடித்த .. இரு கரங்களினால் ..
அவ்உருவம் குனிந்திருந்த ஆரியை.. நெரிக்க.. நெருங்கியதைப் பார்த்து விட்டு .. தான் ... அவர்கள். அலறியது ...

மாலையிலிருந்த தன்னை... பின்தொடர்பவர்கள் .. ஏன்? என்னை தாக்காமல் அலருகிறார்கள். என யோசித்துக் கொண்டே .. சுற்றும், முற்றும் .. பார்த்து விட்டு... அவர்களை ஆரி.. நெருங்க... அவன்.. பின்னே.. அவ் உருவமும் அவனுடனே நகர்ந்ததில்...

தடியர்கள் சுய உணர்வு பெற்று.... பேய் "லைப் ஷோ பார்த்தது போதும்.. இன்னும் இங்கிருந்தால் தம்மையும் ....
கோரபல்லோடு ஆவியாகிவிட்டிடும். அந்தப் பேய் என்று நினைத்தவர்கள் பின்னங்கால் பிடரியில் அடிக்க... தலை தெறிக்க ஓட ஆரம்பித்தனர்..

அவர்கள் ஓடவும் ... ஆரியும் அவர்களை தூரத்தியவாறு... அவர்களைப் பிடிக்க ஓட..பேய்யும்.. ஆரியைப் பிடிக்க .. அவன் பின்னே தொடர்ந்தது ..

சாதாரண நேரமாக இருந்திருந்தால் தடியர்களை ஆரி.. சுலபமாக பிடித்திருப்பான். உயிர் பயத்தில் தடியர்கள் ஓடுவதால் .. அவர்களை பிடிக்க ஆரி இன்னும் வேகமாக ஓடி... மலையின் எல்லைக் கோட்டைத் தாண்டவும்.... பெரியவர் மந்திர யாகப் பூஜை செய்து .. மலையைச் சுற்றி காவல்' கட்டு.. இடவும் சரியாக இருந்தது.

ஆரியைத் தொடர்ந்த பேய்யுருவம்... மந்திர கட்டால் மேற்கொண்டு நகர முடியாமல் .. அந்த மலையிலே.. சுறாவளி காற்றாக சுழல ஆரம்பித்தது..

இங்கே ... புயல் வேகத்தில் பாய்ந்தவர்களில் கடைசியாக ஓடிய... குண்டனை தோளைப் பற்றி பிடித்த ஆரி.. அவனை தன் உடலலோடு .. இருக்க.... மரண பயத்தோடு, உடல் வலியும் ஏற்பட ..

" பேய்யிடம் மாட்டினாலும், சரி .. இவனிடம் மாட்டினாலும். சங்கு கன்பார்ம்.
கைபிள்ளை .. எப்படியாவது தப்பிச்சு ஓடிடு .. என மூளை அறிவுறுத்த....ஆரியை முழு பலம் கொண்டு உதறி விட்டு .. குண்டுப் பயல் பாய்ந்து ஓடி மறைந்தான்..

தன்னுடைய முழு சக்தியை பிரோகித்தும். அவர்களை பிடிக்க முடியாமல் .. "சே" எனக் கத்தியவன் ... குண்டனோடு கட்டிப்பிடி சண்டையில் அவன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்த செல்பேசியை ...நீயாவது கிடைத்தாயே?.. இது போதும் என்று நினைக்கும் பொழுது அலறியது அப்பேசி ..

அதை .. ஆன் செய்து. காதில் வைக்க .. அந்தப்புறம் பேசிய வார்த்தைகளில் .... இதயத்தில் ஆணி அடித்ததைப் போல் நெடுநேரம் நின்றவன். ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு .அடுத்து செய்ய வேண்டியவற்றை ... கண்மூடி அடுத்தது யோசித்தவன்.. பின் ..தன் இருப்பிடம் சென்று...
நித்திராதேவியிடம்
சரண் புக முயல... அவளோ.. பல கோரக் காட்சிகளை அவனுக்கு காட்டி .. அவனை அளைப் புற செய்துக்கொண்டிருக்கும் போது..

பனியை ஒத்த மென் கரங்கள் அவன் நெற்றியை சுத்தம் செய்து ..மருந்திட.... ஆரம்பித்தது.. அந்த சுகத்தில் ஆரி ஒரு நொடி கண்ணை மூட..

"அய்யோ.. அய்யோ.. பச்ச புள்ளை ஆன எனக்கு மயக்க மருந்து கொடுத்து, தூங்க வைச்சுட்டு .. விடிய, விடிய இந்த கூத்து தான் நடக்குதோ ?.. என பாய்யை தன்னுடலில் சுருட்டியப் படி வினய் கத்த..

அவன் கத்தலில் கண் விழித்த ஆரி.. தன்னை நெருங்கி அமர்ந்திருந்தவளின் .
.கண்ணில் கண்ட சேதியால் பட்டென்று அவளை கட்டிலிருந்து தள்ளி விட்டிருந்தான்.
°....... வதம் தொடரும் ....
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ் ... நீலீயின் வதம் .. பாகம் 12 .. பதிந்துள்ளேன் சில., .... உடல், நல குறைவால்...பாதியில் விட்ட கதையின் .. பாகம் ... தாமதத்திற்கு மன்னிக்கவும் .. இப்படிக்கு ... அவிரா
 
Top