All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இணையக் காதல்...

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..,1
*******************

ஹாய்....

ஹாய்...

வணக்கம், என்னை நண்பனா ஏற்றுக் கொண்டற்கு நன்றிங்க...

வெல்கம்ங்க...

உங்கள் பெயர்...

பெயரை தெரியாமலா ரெக்யூஸ்ட் கொடுத்திங்க....

இல்லைங்க.. எதாவது பேசனுமல அதுக்கு தான் கேட்டேன்ங்க...

ஒ,ஒ..இப்படி தான் ஒவ்வோரிடம் பேச ஆரம்பிங்களா..

அப்படி இல்லைங்க உங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்....தா....

என்னைப்பற்றி தெரிந்து ' என்ன' பண்ண போறிங்க...

அட,என்னங்க ஒரு பெயரை கேட்டது குத்தமா...இப்படி சொல்லிரிங்க..

என் பெயர் கனகவள்ளிங்க...

ஒஒ நைஸ் நேம்...என் பெயர் தெரியுமாங்க ..முகுந்த்..

நல்ல பெயர்ங்க...பெருமாள் பெயர்...

ஒ..பெருமாள் பிடிக்குமா...

பெருமாள் கடவுளை யாருக்கு தான் பிடிக்காது...எனக்கு பிடிக்குங்க...

இப்படியே பேசிக் கொண்டே இருந்தார்கள் கனகவள்ளியும் முகுந்தும்...

காலையில் வணக்கம் சொல்ல ஆரம்பித்து இரவு வணக்கம் வரை சொல்லி பேசிக் கொண்டே இருந்தபோது ..ஒருநாள்

ஹாய் வள்ளி டியர்,

எனது வள்ளி டியரா.

ஆமாம் டா,உன் பெயரை சுருக்கிட்டேன்..'.ஏன்' நா அப்படி கூப்பிட கூடாதா...

ம்ம்...கூப்பிட கூடாது ...

'ஏன்' மா நாம் தான் இப்ப நண்பர்களா ரொம்ப பழகிட்டோம்மல..

ம்ம்...அதுக்கு இப்படி தான் ஒருமையில் பேசுவாங்களா...

நண்பர்களிடைய என்ன ,வாங்க போங்க பேசுவாங்க ..வாடா, டீ,மச்சி, டார்லிங் இப்படி தான் பேசுவாங்க...தெரியாதா உனக்கு..

ம்ஹும் தெரியாது...என்கிட்ட இப்படி எல்லாம் பேசக் கூடாது ...

ஒ...சரி சரி...இன்னும் என்னை நம்பல ...

நம்பமா இல்லை ..

அப்படினா நான் இப்படி தான் கூப்பிடுவேன்...சரியா டார்லிங்..

ஒன்றும் சொல்லாமல் சாட் பண்ணுவதை நிறுத்தினாள் கனகவள்ளி..

இரண்டு நாள் தொடர்ந்து முகுந்தும்சாரி,சாரிமா இனிமேல் இப்படி கூப்பிடல..சரியா பேசு..மெசஸஜ் அனுப்பவும் இரண்டு நாள் கழித்து வள்ளியும்...மெசஸ்ஜ் அனுப்ப ஆரம்பித்தாள்..பேச பேச ஒருமையிலும் டியர் மச்சி ஜாலியா பேசிக் கொண்டிருந்தார்கள்..பொதுவான பல விசயங்கள் பேசியவர்கள் ஒருநாள் உன்னை பற்றி சொல்லு வள்ளி...

என்னைப் பற்றி என்ன சொல்ல...

உன் குடும்பத்தை பற்றி ...

தொடரும்....

சசி ஜெகநாதன்

மீதி நாளை வருமுங்க..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்....2
###############

என் குடும்பத்தை பற்றியா...எதுக்கு வேண்டாமே....

இவ்வளவு நாள் பேசறேன்.'.ஏன்' நம்பிக்கையில்லையா...

நம்பிக்கை இல்லாமல் இல்லை ...பொதுவாக எல்லாம் பேசலாம்...குடும்பம் பற்றி எல்லாம் வேண்டாம் ...

சரி நீ சொல்ல வேண்டாம் ...நான் சொல்கிறேன் ...முகந்தன்...ஊர்..கரியம்பட்டி...ஆனால் நான் வேலைக்காக டெல்லி இருக்கேன்...நான் ஒரே பையன்...அம்மா அப்பா கிராமத்தில் இருக்காங்க. ...சொன்னான்..

' ம்ம்'.. சரி முகுந்த....

உனக்கு என்கிட்ட சொல்ல தோனுச்சுனா சொல்லு. .இல்லை பரவயில்லை நம்பிக்கையில்லை நினைத்துகிறேன்...

நம்பிக்கை இல்லாமல் இல்லை வேண்டாம் ...

சரி சரி விடு...நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் ...

கோபமா...

இல்லை ....எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்பறம் பேசறேன்..வள்ளி சொல்லிவிட்டு நெட் கனெக்ஷன் கட் பண்ணிவிட்டு சென்று விட்டான்..

மெசஸ்ஜ் வருவது நின்றவுடன் வள்ளிக்கு என்னமோ பாதியிலே பேசமா விட்டு விட்டது சென்றதை போல பீலிங்கல இருந்தாள்...கோபமா இருக்கும் இல்லை என்றால் பேசிகிட்டே இருப்பானே ..அவன் கேட்டதும் சொல்லிருக்கனுமோ....ஏன் சொல்லாமல் விட்டேன்...மனதில் பல குழப்பங்களோடு யோசித்துகிட்டு இருந்தாள்...நிமிடத்துக்கு நிமிடம் செல்லை பார்த்துக் கொண்டிருந்தாள் மெசஸ்ஜ் வருமா என்று....அன்று முழுவதும் மெசஸ்ஜ் வரவேயில்லை ...

அடுத்த நாள் காலையில் எழுந்தவுடனே அவனிடம் மெசஸ்ஜ் வந்திருக்கா பார்க்க மெசஸ்ஜ் காணாமல் தவித்து இவளே முகுந்த்க்கு மெசஸ்ஜ் அனுப்பினாள்..

ரிப்ளை வரவேயில்லை அன்று முழுவதும் ..மெசஸ்ஜ் பார்த்தும் ரிப்ளை பண்ணல அவனுக்கு கோபம் தான் அது தான் பண்ண மாடடேன்கிறான்..நினைத்து மனதை குழப்பி கொண்டாள் வள்ளி...

இரண்டு நாள் கழித்து அவனிடம் இருந்து மெசஸ்ஜ் வந்தது ..ஹாய்...என்று..

அதைப்பார்த்த அடுத்த நொடியே வள்ளி ரிப்ளை பண்ணினாள்...எங்கே போன,மெசஸ்ஜ் பண்ணல..கோபமா என் மேல்...வரிசையாக அனுப்ப...

அவனோ அதைப் பார்த்துவிட்டு ஒன்றும் இல்லை வேலை தான் ..சொல்லியவன்..வேற பேச ஆரம்பித்தான்...

அவன் பேச பேச அவளும் சரிக்கு சரி பேசிக்கொண்டிருந்தவள்..இனி மெசஸ்ஜ் பண்ணாமல் இருக்காதே..நீ பேசாமல் இருந்தால் மனதிற்கு கஷ்டமா இருக்கு ..வேலை செய்ய முடியில்லை...தம் மனதில் தோன்றியதே அனுப்பினாள்...

அதைப்படித்த முகுந்த்..மனதினுள் சிரித்தபடி கோபம் இல்லை ..நீ நம்பாதா மாதிரி இருந்தது அது தான் ..சாரிமா...இனிமேல் உனக்கு மெசஸ்ஜ் பண்ணிகிட்டு இருக்கேன் சரியா....

அவன் அனுப்பிய மெஸ்சஜ் படித்தவள் இன்னொரு நாள் சொல்கிறேன் என்னைப்பற்றி சரியா....

ம்ம்...சொன்னவன்..வேற பேச ஆரம்பித்தான்...

இரண்டு நாள் கழித்து உன் செல் நம்பர் தா.. உன்கிட்ட பேசனும் போலவே இருக்கு ..உன் வாய்ஸ் கேட்கனும்..சொன்னான்..

அவளோ என்னது..செல் நம்பரா' 'ம்ஹும்' தர மாட்டேன்...சொல்ல..

முகுந்த் 'நீ 'எப்ப பீரியா இருக்கியோ அப்ப பேசறேன் சரியா..நம்பர் தா...

வேண்டாம் பா...நம்பர் தர முடியாது..

நம்பர் தர மாட்டே..உன்னை பற்றி குடும்பத்தை பற்றி எதுவும் சொல்ல மாட்டே..ஆனால் நான் பேசனும் ..மெசஸ்ஜ் அனுப்பனும் எதிர்பார்க்கிற...நம்பிக்கையில்லை என்மேல்...இனி உனக்கு மெசஸ்ஜ் அனுப்ப மாட்டேன்...பை ..சொல்லிவிட்டான் முகுந்த் ..

வள்ளி அதைப் படித்துவிட்டு மனதில் இனி மெசஸ்ஜ் அனுப்ப மாட்டானா.. அவன் பேசாமல் இருந்தா மனதிற்கு கஷ்டமா இருக்குமே..எண்ணியப்படி செல்லை பார்த்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்...

சசி ஜெகநாதன் ....
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..3
###############

இரண்டு நாளாகியும் முகுந்திடம் இருந்து மெசஸஜ் வரவில்லை ...வள்ளி 'ஏன்'இப்படி பண்ணுகிறான் ....யோசித்தபடி கை நகங்களை கடித்து கடித்து துப்பிக் கொண்டிருந்தாள்..அருகில் வைத்திருந்த அலைபேசியில் 'பீப்' ஒலி வருவும் வேகமாக எடுக்க அதுவும் அவனுடைய மெசஸ்ஜ் இல்லை ...ஒரு வேலையும் செய்ய தோன்றாமல் அமர்ந்திருந்தவள் இப்படியே இருந்தால் பைத்தியமே பிடித்துவிடும்..நான் எதிர் பார்க்கும்அளவுக்கு அவனுக்கு என்னிடம் பேசனும் இஷ்டம் இல்லை ...அவனுக்காக நாம் 'ஏன்'இப்படி எதிர்பார்க்கனும் ..இனி அவன் மெசஸ்ஜ் பண்ணாலும் நாம் இனி பண்ணக்கூடாது மனதில் முடிவு எடுத்தவள் திரும்ப ஒரு தடவை மெசஸ்ஜ் வந்தே பார்த்துவிட்டு அலைபேசி தூக்கி போட்டாள் மெத்தையின் மீது...

மனம் 'ஏன்' இப்படி அலைபாய்கிறது..முடிவு பண்ணியும் அவன் மெசஸ்ஜ் வந்திருக்கா பார்க்க தோன்றுகிறதே...அந்தளவுக்கு மனம் ஏங்குகிறதா...இவ்வளவு 'வீக்கென்ஸ் நம் மனம் 'சிந்தித்தப்படி கண்ணை மூடிப் படுத்திருந்தாள்...

அருகிலுள்ள அலைப்பேசியில் போன் வருவும் வேகமாக எடுக்க...அதுவும் கம்பெனி கால் தான் வந்தது...அதைப் பார்த்துவிட்டு 'ச்சே' அவனுக்கே நம்பரே கொடுக்கல இதுல அவன் போன்கால் பண்ணுகிறான் எதிர்ப்பார்க்கிறோம்...மனமே அமைதியாக இருக்க மாட்டாயா...தன்னை தானே திட்டிக் கொண்டிருந்தாள்..

அங்கு முகுந்தோ அவள் தான் ஆரம்பத்திலேயே சொன்னாலே என்னைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் ...நாம் 'ஏன்' அவளிடம் நம்பர் கேட்கனும்..அவள் விஷயத்தில் அவள் சரியாக தான் இருக்கிறாள் நாம் தான் அதிகமாக எதிர்பார்க்கிறோம்...அவளிடம் பேசும்போது நம் மனதில் ஒரு சந்தோஷம் வந்து போவது உண்மை தான் ..எதையும் அழகாக எடுத்துரைக்கிறாள். மெசஸ்ஜ் வழியாக
பேசும் போதே மனதிற்குள் மகிழ்ச்சி உண்டாக்கும் சக்தி இருக்கிறது ..இவளிடம் பேசிக் கொண்ட இருக்கலாம் போலவே இருக்கிறது ..அவளுக்கு எப்படி இருக்கும் ..என்னிடம் பேசும்போது ...கேட்கனும் அவளிடம் என்று வேகமாக அலைபேசியில் எடுத்து 'ஹாய்' அனுப்பினான்..

'பீப்' ஒலி எழுப்பிய கேட்ட அடுத்த நொடியே வேகமாக எழுந்த வள்ளி அவனிடம் இருந்து தான் மெசஸ்ஜ் வந்தே பார்த்துவுடன் இனி மெசஸ்ஜ் பண்ணக்கூடாது முடிவு செய்யதை மறந்து வேகமாக ரீப்ளை பண்ணினாள்...

'சாரிடா' ஆரம்பத்திலேயே சொன்னலே என்னைப்பற்றி எதுவும் செல்ல மாட்டேன்...நான் தான் அவசரப்பட்டு பேசறேன்...சாரிமா..முகுந்த் சொல்ல

வள்ளியோ...'ம்ம்' என்றவள் அடுத்து என்ன பேச யோசிக்க..

முகுந்த் ..உனக்கே எப்ப சொல்ல தோனதோ அப்ப 'உன்னைப்பற்றி சொல்லு' அதுவரை நாம் எப்பவும் போல பேசலாம்...எனக்கும் உன்னிடம் பேசாமல் இருக்க முடியல...உன்கிட்ட ஏதோ ஒரு ஸ்பெஷல் இருக்கு...பேசிகிட்டே இருக்க தோனது எனக்கு.. என்னை தப்பாக எதுவும் நினைக்காதே.. உன்கிட்ட தான் எனக்கு உரிமையா பேசிக்கொண்டே இருக்கனும் ..உன்கிட்ட மனதில் உள்ளதை எல்லாமே ஷேர் செய்யனும்..
இப்படி மனதில் தோன்றிய எல்லாம் அனுப்பியவன்...
உனக்கு அப்படி எதும் தோனுதா ..கேள்வி கேட்டான்...

வள்ளியோ அவன் மெசஸ்ஜ் படித்துவிட்டு என்ன சொல்வது இதுக்கு யோசிக்க ஆரம்பித்தாள்....

சசி ஜெகநாதன் ..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..4
##############

முகுந்த் திரும்ப திரும்ப மெசஸ்ஜ் அனுப்பினான்...ஏன் ரீப்ளை பண்ண மாட்டேங்கிற வள்ளிமா..என்னாச்சு..உனக்கு என்கிட்ட பேசிகிட்ட இருக்கனும் தோன்றுகிறதா.. எதாவது பதில் சொல்லு..எதுவும் சொல்லாமல் இருந்தால் எப்படி டா ..எதுவும் தப்பாக நினைக்காதே ..உன்கிட்ட பேசினால் எனக்கு மனசில் ஒரு ரீலாக்ஸ் பீல் ஆகுது...நேரம் போவதே தெரிவதிலே...டென்ஷன் எல்லாம் குறையது அது தான் திரும்ப திரும்ப பேசறேன் ...என் மேல் எதும் கோபமா...உனக்கு இரண்டு நாளா மெசஸ்ஜ் அனுப்பதாலே..சாரி மா...இனி அப்படி பண்ண மாட்டேன் ...இப்படி மாற்றி மாற்றி
மெசஸ்ஜ் வந்து கொண்டே இருந்தது...

அதைப் பார்த்த வள்ளி...யோசிப்பதை விட்டது விட்டு ..கோபம் எதும் இல்லை ...நீ சொல்வதைப் போல எனக்கு எதுவும் தோனல...நான் எப்பவும் போல தான் இருக்கேன்...தன் மனதை மறைத்து பேசினாள்...

முகுந்தோ ஒ...சரி சரி..பா...எனக்கு அப்படி இருந்தது அது தான் உனக்கு அப்படி தோன்றியதா கேட்டேன் ...கோவிச்சுகாதே...நாம் வேற பேசலாம்....இன்று எங்க ஆபீசில் நடந்தை சொல்கிறேன் கேள்...மேனேஜர் தன் சக ஊழியரை கடிந்து கொண்டது ,தன் நண்பர்களிடம் பேசியது என்று விடாமல் பேசி கொண்டே இருந்தான்....

அவன் பேச பேச ம்ம்...சொல்லிக் கொண்டே வந்தவள் ..சகஜமா அவனை கிண்டல் பண்ணி பேச ஆரம்பித்தாள்...நண்பர்களோடு சேர்ந்து சைட் மட்டும் அடிப்பியா...இல்லை யாரைவது காதலிக்கிறாயா...கேள்வி கேக்க...

அவனோ..'.ஏய்.'..அப்படி எல்லாம் யாரையும் காதலிக்கவில்லை...அந்தளவுக்கு நான் ஒர்த் ஆன ஆள் இல்லை ..தெரிந்துக்கோ...சும்மா போறப்ப எதாவது அழகான பெண்ணை பார்த்த பார்ப்பேன்...ஒரு செடியில் ஒரு பூ மலர்ந்திருந்தாள் ரசிப்போம் அல்லவா அது மாதிரி தான் ...ஜஸ்ட் திரும்பி பார்ப்பேன்..அவ்வளவு தான் சொல்ல..

ம்ம்...சரி சரி நம்பிட்டேன்...

உண்மை தான் ...அதுவும் இப்ப உன் கூட பேச ஆரம்பித்து அப்பறம் அது கூட இல்லை ...எந்த நேரமும் உன்னை பற்றிய சிந்தனை ....தொடர்ந்து உன் கூட மட்டுமே பேசனும் பழகனும் எனக்கு ஆசை...உன் பெயர் தவிர வேறு எதுவும் தெரியாது ...''ஆனால் நீ எப்படி இருப்பே.. கறுப்பா செவப்பா ,என்ன பண்ணரே...இந்த நேரத்தில் என்ன செய்யவ...எங்கே வேலை பார்க்கிற என்ன படிச்சிருக்கிற, குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிங்க. உனக்கு என்னை பிடிக்குமா....''இப்படி தான் மைண்டுல ஓடுது தெரியுமா...

வள்ளி படித்துவிட்டு எந்த ரீப்ளை பண்ணாமல் நெட்டை ஆப் பண்ணிவிட்டாள்...

அவளுகுள்ளே பல கேள்விகள்...சாதாரணமாக முகம் தெரியாத முகநூலில் முன்ன பின்ன பார்த்திடாத ஒருவன் இப்படி பேசுகிறானே...எதனால்..நாம் அவனுக்கு ரீப்ளை அனுப்பவதாலா...இல்லை அவன் பேசுவது எனக்கு சுவாரஸ்யமாக இருக்கா..
காலையிலிருந்து நைட் வரை என்ன செய்கிறான்,எங்கே போகிறான் முதற் கொண்டு நம்மிடம் சொல்கிறான்..''தெளிந்த நீரோடையில் கல்லை எடுத்து விட்டெறிந்த போல ''ஒரு சலனத்தை மனதில் தோன்றிவிட்டது அவனால்...இனி அவனிடம் தினமும் பேசலாமா ..யோசித்தவள்...பார்ப்போம் இது எதுவரை செல்லும் குருட்டு தைரியத்தில் நெட்டை ஆன் பண்ணினாள் வள்ளி...

சசி ஜெகநாதன் ..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்...5
###############

நெட் ஆன் பண்ண அடுத்த நிமிடத்தில் இருந்து வரிசையாக மெசஸ்ஜ் ...சாரி சாரி...என்று..இவன் எதுக்கு சாரி கேட்கிறான்...சிந்தித்தவள்...மெசஸ்ஜ் அனுப்பலாமா ..வேண்டாமா... இல்லை நம்மை பற்றி அவனிடம் சொல்லிவிடலாமா...சொன்னால் அவன் திரும்ப நம்மிடம் பேசுவானா....இல்லை ரொம்ப திட்டிருவானா...இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் எப்பவும் போல நல்ல நண்பனாக பேசுவானா...பல சிந்தனை மனதில் ஒடிக் கொண்டிருக்க...இப்ப வேலை பிறகு பேசுகிறேன் மெசஸ்ஜ் மட்டும் அனுப்பிவிட்டு நெட்டை ஆப் பண்ணினாள் வள்ளி...

முகநூலில் பல நண்பர்கள் தோழிகள் என நிறைய பேர் இருந்தாலும் இவனிடம் மட்டும் பேச வேண்டும் ..பழக வேண்டும் மனதிலுள்ள மகிழ்ச்சி துக்கம் எல்லாம் ஷேர் பண்ணனும்...அவன் சொன்ன மாதிரி எனக்கு தோன்றுகிறது ...எதும் என்னைப்பற்றி சொல்ல மாட்டேன் சொல்லவிட்டு இப்ப நாமே வாலேண்ரியா சொல்லாமா...சீப்பா நினைச்சுக்கிட்டா...அவனுக்கு என்னைப் போல தானே தோன்றியது சொன்னானே..இப்படி மனம் இரண்டு பக்கமும் ஊசலாடிக் கொண்டிருந்தது வள்ளிக்கு...

அவன் யார்? எனக்கு..எங்கோ முகம் தெரியாத நேரில் பேசியிடாத ஒருவன்...அவன் சொன்னதை வைத்து மட்டுமே அவனை எனக்குத் தெரியும்...அவன் சொன்னது உண்மையா கூட தெரியாது..அவன் பெற்றோர்கள் அவனும் இணைந்த படத்தை அனுப்பிருந்தாலும் அது உண்மையா என்று தெரியாது... இப்படி எதுவும் அறியாமல் அவன் மேல் நமக்கு ஏன் இந்த பைத்திகார எண்ணம்...பேசனும் பழகனும்...என்று தன்னையே திட்டிக் கொண்டிருந்தாள் ...

ஒரு நண்பனாக கடைசிவரை நம்முடன் இருப்பானா...இல்லை வேறு எண்ணங்களோடு தான் பழகுவானா....எதுவும் நிரந்தரமாக சொல்ல முடியாது...நான் தோழியாக அவனிடம் பேசி பழகினாலும் அவன் அப்படி தான் பழகவானா ...நேரில் பழகுபவர்களே உள்ளொன்று வைத்து வெளி ஒன்று பழகிறார்கள்...எதை வைத்து நம்பவது...இப்படி எல்லாம் மனதில் அசைப் போட அமர்ந்திருந்தாள் வள்ளி...

நாளை நம்மை பற்றி அவனிடம் சொல்லிவிட வேண்டும் ...கடைசிவரை நல்ல தோழனாக பழகுவானா..கேட்க வேண்டும் ...முடிவு செய்தாள் வள்ளி...

காலையில் எழுந்தவுடன் அவனுடைய முதல் மெசஸ்ஜ்...ஹாய் குட்டி ..என்று...அதைப் பார்த்தவள் ,ஹாய், அது என்ன குட்டி...நான் என்ன சின்ன பாப்பாவா...கேட்க..

அவனோ இல்லை ''குட்டிமா''...செல்லமா கூப்பிடுவது..எனக்கு உன்னை அப்படி கூப்பிட தான் பிடித்திருக்கிறது ...இவ்வளவு நாள் பல பேர் வைத்து கூப்பிட்டாலும் இப்ப குட்டிமா கூப்பிடுவேன் ..ஒக்கே..இதுக்கு மேலே நோ..ஆர்க்யூமெண்ட்...ரைட்...

ம்ம்...என்றவள்..உன்னிடம் ஒன்று கேட்கனும்...

கேளு...

நீ நான் சொல்வதைக் கேட்டு தப்பா நினைக்காதே...நீ நல்ல நண்பனாக தானே என் கூட பழகற...ஏன்னா..காதல் கத்தரிக்காய் ..சொல்ல கூடாது அல்லவா அது தான் கேட்டேன் ...இப்படி ஒரு கேள்வி கேட்டு சறுக்கினாள் வள்ளி...

தானாகவே வலையில் மாட்டுகிறதே...ஒரு சிறு பறவை....

சசி ஜெகநாதன்..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..6
##############

ஹலோ குட்டிமா..என்ன சொல்ரே புரியல...காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் என்ன சம்பந்தம்....நக்கலாக கேட்டான்..
முகுந்த் கேட்டான்..

ம்..நக்கலு...வள்ளி கேட்க..

இல்லை டா..நீ தானே சொன்னே...காதல் கத்திரிக்காய் சொல்லகூடாது...அது தான் கேட்டேன்..காதலுக்கு கத்தரிக்காய்க்கும் என்ன சம்பந்தம்...

தெரியாமா சொல்லிட்டேன்...இப்படியே
சொல்லிகிட்டு இருந்த கத்தரிக்காய் சூப் வைத்து கொடுத்து விடுவேன் ..
பார்த்துக்கோ ....

கத்திரிக்காய்ல சூப்பா.... சூடு தண்ணியாவது வைக்க தெரியுமா ...😜

காலையில் காபி ஒரு சுடு தண்ணீ வைப்பேன் சூப்பாரா....

காபிக்கு பேரு தான் சுடு தண்ணீயா...பாவம்...மற்ற சமையல்...டிபன், சாம்பார்,சாதம் ரசம்..இது எல்லாம் எப்படி...

தெரியுமே...பருப்பு காய் போட்டு செய்தால் சாம்பார்,புளி கரைத்து ஊற்றி செய்தால் ரசம்...அவ்வளவு தான் இது கூடவா தெரியாது...

இவ்வளவு தெரியுமா..உனக்கு பரவயில்லை....பாவம் உன் வீட்டிலுள்ளவர்கள்...

'ஏன்'...

உன் சமையல் திறமைக்கு அவர்கள் தானே பரிசோதனை எலி....ஹாஹாஹா..😜

'வா உனக்கும் பாகற்காயில சூப்பூ வைத்து தரேன்....அப்ப தெரியும் என் சமையல் அருமை...''ம்க்கும்''

''வரேன் வரேன்'' நீ வைக்கிற பாகற்காய் சூப்பை சாப்பிட வரேனோ இல்லையோ...உன்னை பார்க்க வருவேன்....முகுந்த் சொன்னான்...

என்னைப் பார்க்கவா...''..ஏன்'' என்னைப் பார்க்கனும்....

'' ஏன்'' குட்டி உன்னை பார்க்க வரக்கூடாதா...உன்னை பார்க்கனும் எனக்கு ஆசையா இருக்கு...உன் போட்டோ கேட்டாலும் அனுப்ப மாட்டேன் சொல்லறே...நீ எப்படி இருப்பே ...உயரமாவா குட்டையாவா...சிவப்பா,கறுப்பா எதுவும் சொல்ல மாட்டேன் சொல்றே...இத்தனை நாள் பேசறேன்..எதுவும் உன்னைப் பற்றி சொல்ல மாட்டேன் சொன்னா எப்படிடா...நீ எப்படி இருப்பே...அதையாவது சொல்லு...முகுந்த் கேட்க..

ம்...பிந்துகோஷ் மாதிரி இருப்பேன் ....

பிந்து கோஷா...அது யாரு..
எனக்கு முட்டை கோஸ் தான் தெரியும்..
ஹாஹா 😜 😜 😜 😜

முட்டை கோஸா.😡 ..முறைத்தபடி சிம்பள் அனுப்பினாள் வள்ளி...

''ஆமாம்'' இன்னிக்கு என்ன காய்கறி பேரா வருது...சந்தைக்கு எதும் போனியா...

நீ தான் எதும் சொன்னாலும் காய்கறி பெயரா சொல்லறே ....சந்தைக்கும் போகல..வம்புக்கும் போகல...😡
பிந்து கோஷ் ஒரு நடிகை இருந்தாங்க...அவங்கள மாதிரி இருப்பேன் சொன்னேன்...😡


அப்படியா...எனக்கு அவங்க யாரு தெரியாது குட்டிமா....இப்ப உள்ள நடிகை பேரு சொல்லு... கண்டு பிடித்துவிடுவேன்...😜 😜 😜

அது எல்லாம் சொல்ல மாட்டேன்...சொல்லியவள் ... நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருந்தாள்....

முகுந்தும் எதாவது பேசி நேரத்தை இழுத்துக் கொண்டிருந்தான்...அவளைப் பற்றி எதாவது தெரிந்துக் கொள்ளலாம் என்று....

அவளைப் பற்றி அவள் எதுவும் சொல்லாமலே பல கதைகள் பேசினாள் ..நாட்களும் சென்றன...எத்தனையோ பேசினாலும் அவள் முகம் கூட தெரியாமல் பேசவது மன திற்கு கஷ்டமாகவே இருந்தது முகுந்துக்கு...

ஒருநாள்..குட்டி ...உன் போட்டோ அனுப்பேன்...நான் பார்க்கிறேன் ...சொல்ல.

'' ம்ஹீம்'' மாட்டேன் ....சொல்ல..

''ஏய்'' இத்தனை நாள் பேசற..உன்கிட்ட தப்பா பேசிருக்கானா...அப்பறம் என்ன ...முகத்தை கூட காமிக்க மாட்டேன் சொல்லறே...கோபித்துக் கொண்டான் முகுந்த் ..

அவன் கோபத்தை கண்ட வள்ளியும்...ம்ம்...நாளைக்கு அனுப்பவா...
கேட்டாள்....

முகுந்திடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை ...வள்ளி..நிஜமாகவே கோபவந்துவிட்டது போல....நாளைக்கு அவனுக்கு போட்டோ அனுப்பலாமா..யோசிக்க ஆரம்பித்தாள்..வள்ளி..

சசி ஜெகநாதன் ..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..7
##############

வள்ளியிடம் போட்டோ கேட்டான் முகுந்த் ...உன்னை எனக்கு பார்க்கனும் ''பிளீஸ்'' போட்டோ அனுப்பு...சொல்ல..

வள்ளி..வேண்டாம் பா...போட்டோ அனுப்ப மாட்டேன் என்றாள்...

என்னடா..இப்படி சொல்லற..இவ்வளவு நாள் உன்கிட்ட கேட்டனா...இப்ப தானே கேட்கிறேன்...என் குட்டிமா எப்படி இருப்பே பார்க்க ஆவலா இருக்கேன் மா...என் மனதில் உனக்கு என்று ஒரு உருவம் செதுக்கிருக்கேன்...அதே மாதிரி இருப்பியா.. ..உன் குணம் மாதிரி மென்மையான மலரைப் போல இருப்பியா...பிளீஸ்டா ஒரே தடவை உன் படத்தை அனுப்பு பார்த்தும் டெலிட் பண்ணி விடுகிறேன்...சொன்னான் முகுந்த்...

அவன் பேசுவதைக் கேட்ட வள்ளி...தயங்கி தயங்கி..போட்டோ அனுப்பினால் பார்த்தும் டெலிட் பண்ணிருவதானே...கேட்க...

நிஜமா குட்டி பார்த்தும் டெலிட் பண்ணிருவேன்...நம்புடா..என்னை...இப்படி எப்பவும் நம்பிக்கை இல்லாமலே பேசினால் எப்படி...நீ என் குட்டி மா..உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்..உன்னை பார்க்கநும் ஆசையில் தான் ..உனக்கு பிடிக்கலே என்றால் வேண்டாம். .ஆனால் நீ பேசமா மட்டும் இருக்க கூடாது..உன்கிட்ட பேசாமல் என்னால் இருக்க முடியாது புரிந்துக் கொள்...

ம்ம்..சொன்னவள் ..போட்டோ அனுப்பறேன் பார்த்தும் உடனே டெலிட் பண்ணிருனும் சரியா..எனக்கு பயமா இருக்கு...இப்ப என்னொவோ நடக்கது ...அது தான் ...

ஏய்...குட்டி ..பார்த்தும் டெலிட் பண்ணிருவேன் ...பயமா இருந்தால் அனுப்பாதே ...உனக்கு என்னைக்கு பயம் தெளியதோ அப்ப அனுப்பு சரியாடா...

ம்ம்..சொன்னவள் அனுப்பறேன் உடனே டெலிட் பண்ணிரு ...தன் படத்தை அனுப்பினாள் வள்ளி...

படத்தை பார்த்தும் முகுந்த் ஏய்..சூப்பர்டா நிஜமா தேவதை மாதிரி இருக்கே...அழகு தேவதை என் குட்டிமா...என் மனதில் செதுக்கிய சிலைப்போலவே இருக்கே...என கொஞ்சினான்...

அவன் சொன்னதை பார்த்தும் பயந்தவள்..என்ன இப்படி எல்லாம் பேசறே...போட்டோ டெலிட் பண்ணு...''பிளீஸ் பிளீஸ் ''கெஞ்சினாள் வள்ளி...

அவனோ ..'ஏய் பயப்படாதே'' டெலிட் பண்ணிட்டேன்...ஒக்கே உன்னை முதல் தடவை பார்க்கிறேன்ல அது தான் கொஞ்சம் உளறிட்டேன்..சாரி ...

''ம்ம்''்...சரி இனி இப்படி எல்லாம் சொல்லாதே...தேவதை இருக்கிறவள் காளியாத்தாவா மாறி விடுவேன்..கையில் சூலாயத்தோடு வந்து ...மிரட்டினாள் வள்ளி...

ஹோய்...காளி ஆத்தா விட்ரு...நான் சின்ன பையன் தெரியமா ...பேசிட்டேன்...முகுந்த் கிண்டலாக பதில் சொல்ல..

வள்ளி ஒவராக நக்கல் பண்ணினால் இனி உன் கூட பேச மாட்டேன் ...போ..சொல்லியவளை கண்டு ...

சாரி,சாரி...சும்மாடா ..கோவிச்சுக்காதே...என் கண்ணுல..கொஞ்ச...

''ஏய் என்ன புதுசு புதுசா கொஞ்சி பேசற...''

அது சும்மா...சரி..இதை விடு...நீ என்ன பண்ணுகிறே...பேச்சை மாற்றிவிட்டான் முகுந்த்...

வள்ளியும் வேற பேச ஆரம்பித்தாள்...இப்படியே சில நாட்களில் முகுந்த் பேசுவதில் ஒரு உரிமையும் ஆளுமையும் தன் மேல் அதிகமாக தாக்க ஆரம்பித்தை புரிந்து கொள்வதற்குள் கைமீறி போய்விட்டது ...முகுந்த் அவளை காதலிப்பதாக உளற ஆரம்பித்தான்...

அவன் உளறலை கேட்டதும் லவள்ளி..திகைத்து இத்தனை நாள் இதை கவனிக்காமலே அவனிடம் பேசிக்கொண்டருக்கிறோமே ..அந்தளவுக்கு அவன் பேசுவதில் பழகுவதில் மயங்கி விட்டோமோ ...எண்ணம் தோன்றியது வள்ளிக்கு...தன் மனம் அந்தளவுக்கு வலிமையற்றதா ..இல்லை ...மனம் எப்பவோ ஏங்கிய ஏக்கம்...இப்ப நடப்பதால் அவனிடம் மயங்கி விட்டதா...இது நல்லதா ..
''ஏன் ''இப்படி அலைபாய்கிறது மனம்...குழம்பினாள் வள்ளி...இதற்கு மேல் இவனிடம் பேசினால் நான் மயங்கி அவன் சொல்லவதற்கு தலையாட்டி விடுவேன்....இனி அவனிடம் பேசக் கூடாது ...எத்தனை மெசஸ்ஜ் அனுப்பினாலும் இனி பேசவேக் கூடாது ...முடிவு செய்தாள் வள்ளி...

சசி ஜெகநாதன் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..8
###############

வள்ளி காலையில் எழுந்திலிருந்து...எதும் செய்யவும் இன்ரெஸ்ட் இல்லாமல் ஏனோ தானோ..இருந்தாள்...அலைபேசி எடுத்தால் அவன் மெசஸ்ஜ் பார்க்க தோன்றும் ...பதில் அனுப்ப கை பரபரவென்று இருக்கும்...மேஜையிலே ஆப் பண்ணி தூக்கி போட்டதை எடுக்கவே கூடாது எண்ணியப்படி அமர்ந்திருந்தாள் ...மனதிற்குள் ஒரு குறுகுறுப்பு ..அவனிடமிருந்து மெசஸ்ஜ் வந்திருக்குமா ...

இப்படி மனதிற்குள் எண்ணியவள்...வேற வேலை பார்ப்போம் ....அப்பதான் இந்த சிந்தனைலிருந்து விடுபடுவோம்...கிச்சினுகுள் நுழைந்தாள்...
அங்கே சென்றவள் அங்கும் செய்யும் வேலையில் கவனமே இல்லை ..எதையோ சமைத்தவள் டைனிங் டேபிளில் வைத்துவிட்டு தொலைக்காட்சியாவது பார்க்கலாம்...ஆன் பண்ணிவிட்டு அமர்ந்தாள் வள்ளி...ரிமோர்ட் பல சேனல்களை மாற்றி மாற்றி பார்க்க அதுவும் போர்யடிக்கவும். ''ச்சே'' ஆப் பண்ணினாள்...
வீட்டிற்குள் வாசலுக்கும் நடந்து பார்த்தாலும் மனம் எதையோ தேடி அலைபாய்ந்து கொண்டே இருந்தது ...எதிலும் கவனத்தை செலுத்த முடியாமல் இருந்தவள் தூங்கினால் சரியாகும் படுத்தாள்....திரும்பி திரும்பி படுத்தவளின் பார்வை மேஜை மேலிருந்த அலைபேசி வாவென்று அழைப்பதைப் போல இருக்க...''ம்ஹூம்'' வேண்டாம் தொட கூடாது ...மனதில் எண்ணியவளின் கரங்கள் தானகவே அலைப்பேசியை கையில் எடுத்தது ...

அதை புதியதாக வாங்கியதைப் போல திருப்பி பார்த்தவளின் விரல் ஆட்டோமேட்டிகா ஆன் செய்தது அலைப்பேசியை...

ஆன் செய்த அடுத்த நொடி பல மெசஸ்ஜ் அவனிடமிருந்து ...''என்னாச்சு,உடம்பு சரியில்லையா ...உன்னை ஆன்லைன்ல காணாம்...எதுமவும் தெரியாமல் மனசுக்கு பயமா இருக்கு எதாவது பேசுமா...உன் நம்பர் இருந்திருந்தால் கால் பண்ணி பேசிருப்பேன்..நைட்டிலிருந்து உன்னை காணாமல் மனசு படபடவென்று இருக்குடா...எதாவது சொல்லு..''பல மெசஸ்ஜ் முகுந்திடம்...

அதை எல்லாம் படித்தவள் ரீப்ளை அனுப்பாமல் விட ...அவள் பார்த்தும் ரீப்ளை அனுப்பவில்லையே ..''.ஹாய் குட்டிமா..என்னாச்சு டா ..எதாவது பதில் சொல்லுமா... எதாவது கோபமா...என் மேல்...தப்பா எதும் பேசிட்டனா .. கோவிச்சுக்காதே ''பிளீஸ்'' பேசு குட்டி...'''முகுந்த் கேட்டுக்கொண்டே இருந்தான். .


அவன் அனுப்பியதைப் பார்த்தவள் மனசை தவிக்க செய்ய...''ஒன்றுமில்லை'' ...பதில் அனுப்பினாள் வள்ளி.....

'' என்ன..ஒன்றுமில்லை ...''என்ன கோபம் உனக்கு''
...உன் குரலைக் கேட்டதில்லை தவிர உன் எழுத்திலே நீ எந்த மாதிரி இருக்கே கண்டு பிடித்துவிடுவேன்....மனதில் எதையோ போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிற...எதிலும் கவனமில்லாமல் இருப்பது போல தெரிகிறது ....நான் சொன்னது சரியா...இன்னொன்று சொல்கிறேன் ...நீ இன்னும் சாப்பிட கூட இல்லை உண்மை தானே ...''

எதிரிலிருந்து பார்த்ததைப் போல அவன் சொல்வதை கேட்டவள் அதிரந்தாள் வள்ளி....

நான் நேற்று உன்னிடம் பேசியதை நினைத்து குழம்புகிறாய். ...சரியா...நான் என் மனதில் நினைத்தை உன்னிடம் சொன்னேன்...மனதிற்குள் ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசும் ஆள் இல்லை ...எனக்கு பிடித்தது...சொன்னேன்...அது உனக்கு பிடிக்கவில்லையா...அதை நீ சொல்லு...அதை விட்டு பேசாமல் சாப்பிடாமல் ''ஏன்'' மனதைப் போட்டு இந்த பாடுபடுத்துகிறாய் ...உன் முகத்தை நான் பார்த்தில்லை...நீ அனுப்பிய நிழல் படத்தில் பார்த்து மட்டுமே ....குரலைக் கேட்டதில்லை ..நேரில் அறிமுகமில்லை...ஆனாலும் உன் மெசஸ்ஜ் எனக்கு ஆறுதலாக மனதிற்கு சுகமாக..எனர்ஜியாக, பொய்யில்லாத, கர்வமில்லாத உன் குணம் எனக்கு பிடித்தது ...அது தான் காதலிப்பதாக..எனக்கு மட்டும் நீ சொந்தமாக வேண்டும் ..வேறு எதுவும் தேவையில்லை தோன்றியது ...அதை மறைத்து உன்னிடம் பேச முடியவில்லை..அது தான் சொன்னேன்.''..நீ ''அதற்கு பதிலே சொல்லாமல் மனதை இப்படி பாடுபடுத்துகிறாய்...''விடு ''இப்ப இதை பற்றி பேச வேண்டாம் ....கொஞ்ச நாள் ஆகட்டும் ...அப்பறம் பேசிக் கொள்ளலாம்...இப்ப நீ போய் சாப்பிடு... நான் இன்னும் அரைமணிநேரம் கழித்து பேசுகிறேன் ..நெட்டை ஆப் பண்ணினான் ...

அவன் அனுப்பிய மெசஸ்ஜ் பார்த்தவள் திரும்ப திரும்ப படித்துக் கொண்டே இருந்தாள் ....வள்ளி..பார்க்காமலே என் மேல் இவ்வளவு அக்கறையா....

சசி ஜெகநாதன் ..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்...9
################

முகம் தெரியாமல் நேரிலோ போனிலோ பேசக் கூட இல்லாமல் ஒருவன் தன் மனதில் உள்ளதை நேரில் கண்டதைப் போல கூறுகிறான் என்றால் அவன் என் மேலே எவ்வளவு அக்கறையாக இருக்கிறார்...மனம் போன போக்கில் சிந்திக்க...ஆரம்பித்தாள் வள்ளி...

அவன் காதலை சொன்னான்...அவனுடைய மனதை மறைக்காமல் சொல்லிவிட்டதான்...அதை தவறு என்று எப்படி சொல்வது...ஆரம்பத்தில் இருந்து அவன் மனதை மறைமுகமாக எடுத்துரைத்து கொண்டே தான் இருக்கிறான்...நிழல் படத்தை பார்க்கும் முன்கொண்டு...நான் தான் அதை சரியாக புரிந்து கொள்ள போல..சரியான ''தத்தியா'' இருக்கேன்..மனதுகுள் தன்னை திட்டிக் கொண்டே ...அவன் சொன்னதை ஏற்றுக் கொள்ளலாமா...இது சரி வருமா...இல்லை இதுவும் ஏமாற்று வேலையாக இருக்குமா....இல்லை எனக்கும் அவன் மேல் ஒரு சாப்ட்கார்னர் தோன்றியதா...அவன் பேசுவதை பார்த்தால் அதீத அன்பா இருப்பதைப்போல இருக்கு..ஆனால் என்னைப் பற்றி அவன் அறிந்தால் அவனுக்கு இதே மாதிரி என்னிடம் பேசுவானா...என்னையப்பற்றிய விவரங்கள் எதுவும் தெரியாமல் இப்படி பேசுவது அவனுடைய மனம் முயற்சின்மையை காட்டுகிறதா..

ஆனால் காதல் சொல்லும் அளவுக்கு எண்ணங்களை அவனுக்கு ஏற்படுத்தியது நான் தானா..எந்த இடத்தில் அவனுடைய எண்ணங்களுக்கு செவி சாய்த்தேன்...அவனுக்கு மெசஸ்ஜ் அனுப்ப கூடாது நினைத்தது கூட நிலைக்கவில்லை ...அந்தளவுக்கு என் மனம் அவனை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டது..அவனுடைய அக்கறை எனக்கு பிடித்துதான் இருக்கிறது ...ஆனால் காதல் என்று வருவது சரியில்லை என்றே தோன்றுகிறது ..என் மனமோ அவனிடம் எதையோ எதிர்பார்க்கிறது....ஆனால் என்னவென்று புரியவில்லை ...எனக்கே புரியவில்லை என்றால் அவனிடம் இதை எப்படி எடுத்துரைக்க முடியும்....பல குழப்பங்கள் மனதினுள் வள்ளிக்கு...

இதைப்பற்றி கொஞ்சம் நாள் பேச வேண்டாம் ..யோசிக்காதே...அப்பறம் பேசிக்கொள்ளலாம் என்று சொன்னானே... இதைப்பற்றி பேசாமலே கொஞ்சம் நாள் இருப்போம்...அவன் சொன்னதை தன் மனமும் ஏற்றுக் கொள்கிறதே...எண்ணினாள் வள்ளி...

எப்பவும் போல பேசிக் கொண்டிருப்போம்.. பிறகு வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் ..ஆனால் அவனிடம் சொல்லனும் காதல் என்ற எண்ணத்தில் பேசாதே...சொல்ல வேண்டும் கண்டிப்பாக.....நிலைக்குமா வள்ளியின் எண்ணம்..

சசி ஜெகநாதன் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல் ..10
################

வள்ளி இனி காதலைப் பற்றி பேசக் கூடாது ...சொல்ல வேண்டும் முடிவு செய்தவள் அவன் கூப்பிடுவதற்கு முன்னே அவளே மெசஸ்ஜ் அனுப்பினாள்...

முகந்த் உடனே'' என்னடா,''

''சாப்பிட்டியா''..

' ''ம்ம்'' சொன்னவள்..

'' உன்கிட்ட கொஞ்சம் பேசனும் ...''

'' பேசுமா.''.உன்னை யாரு பேச வேண்டாம் சொன்னா...''நம்பர் தரட்டா'' அதிலிருந்து கூப்பிடு....

''அச்சோ ''நம்பர் எல்லாம் வேண்டாம் ..இதுலயே சொல்றேன் ...

''நீ ''டைப் பண்ணி அதை அனுப்பவதற்கு அதை நான் சரியாக புரிந்து கொண்டு உனக்கு பதில் அனுப்பனும்....அதுக்கு கால்பண்ணி பேசிடலாம்..''அப்பறம் உன் இஷ்டம் ...''

நம்பர் எல்லாம் வேண்டாம் ...நான் இதிலே சொல்றேன் இடையில் ''நீ'' எந்த பதிலும் சொல்ல வேண்டாம் ...ஒக்கே....

''ம்ம்.''..சொல்லு சொல்லு என்ன தான் சொல்றேன் பார்க்கிறேன் ...''

'' ம்ம்..''சொன்னவள் சிறிது நேரம் மெசஸஜ் அனுப்பாமல் அவனுக்கு எந்த மாதிரி சொல்லி புரிய வைக்கலாம்...யோசித்தாள் வள்ளி...

அதுக்குள் அவன் மாற்றி மாற்றி ''என்னாச்சு, என்னாச்சு ''திரும்ப திரும்ப அனுப்பினான்...

''ம்ம்...''என்றவள் '' நீ ''என்கிட்ட காதலிக்கிறேன் ...எனக்கு மட்டும் தான் சொந்தம்...இப்படி எல்லாம் சொன்ன....தப்பில்லையா ....நான் உன்கிட்ட பேசும்போது காதலிக்கிற மாதிரி
சொன்னதில்லை ...நான் பேசும்போது உன்னை இம்பரஸ் பண்ணுகிற மாதிரி பேசினேனா..என்னைப் பற்றிய எந்த விவரமும் தெரியாமல் எப்படி இப்படி எல்லாம் தோன்றியது...எல்லாருக்கும் ப்ரண்ட் ரெக்யூஸ் வரும் அக்ஸபட் பண்ணுவாங்க..அது மாதிரி தானே உன்னை ப்ரண்ட் அக்ஸபட் பண்ணினேன்....ப்ரண்டிலியா பேசறோம் நினைத்து தான் உன்கிட்ட பேசினேன்...ஆனால் நீ அப்படி நினைக்கல போல...நீ சொன்ன மாதிரி பேசமா இருந்தா எங்க மெசஸ்ஜ் காணாம் தோனும்...எதுனாலே மண்டையல குடையும்...அதுமட்டும் தான் ...அதுவும் ஏன் என்றால் தினமும் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருப்போம் ...அவங்க பேசவில்லை என்றால் எது வருத்தமா,கோபமா ஏன் பேசல...உடல்நிலை சரியில்லையா...இப்படி தோன்றும் ...உன் பேச்சில் உள்ள அக்கறையான வார்த்தைகள் எனக்கும் சந்தோஷத்தை கொடுத்தாலும் நம் மேலேயும் அக்கறையாக ஒருத்தர் இருக்காங்க...அப்படி நினைத்தேன்...ஆனால் ''நீ காதலிக்கிறேன்,பிடிச்சுருக்கு, நீதான் எல்லாம் இப்படி பேசுவது எனக்கு பிடிக்கவில்லை '''...''உன்கிட்ட பேசவே இப்ப பயமா இருக்கு..''.தோன்றியதை எல்லாம் அனுப்பினாள் வள்ளி...

சிறிது நேரம் அவனிடம் இருந்து எந்தவித ''ரெஸ்பான்ஸ்'' இல்லை ...வள்ளியின் மனமோ அவன் மெசஸ்ஜ் பார்த்தும் ஏன் ரீப்ளை அனுப்பல...''கோபம் வந்துருச்சோ''...யோசிக்க... ''அவன் பேசி முடித்துவிட்டாயா.''..ரீப்ளை வந்தது...
அதைப் பார்த்த அடுத்த நொடி..''.அப்பாடா'' பெருமூச்சு விட்டவள்....''ம்ம்...'' சொன்னாள்...

முகுந்தும் நீ சொன்ன மாதிரி இனி காதலைப் பற்றி பேசவில்லை ...ஒக்கே...இனி இதைப்பற்றி நாம் பேசாமா இருக்கலாம்...அதுடன் பேச்சை முடித்துக் கொண்டான் ....

திகைத்தவள்..''.நீ ,நீ நா நான் சொன்னது புரிந்தா....''

ம்ம்..புரிந்தது புரிந்தது இன்று சமைத்த சுரைக்காய்க்கு உப்பு போடல சொன்னது....

அவளோ ''என்ன....ஏய் ''' நான் எவ்வளவு சிரியஸ் பேசிக்கிட்டு இருக்கேன் நீ காமெடி பண்ணுகிறாயா....போ ...இனி என்கிட்ட பேசாதே....நான் பேச மாட்டேன் ....''உர்'' இருக்கும் சிம்பிளையும் அனுப்பினாள்.

அவனோ ''ஹாஹா ''சிரித்தவன்...பின்ன ''என்னடா'' இவ்வளவு சின்ன விஷயத்தை பெரியதாக நினைச்சு இத்தனை நீளமா மெசஸ்ஜ் வேற...இப்ப உனக்கு என்ன வேணும்....''காதலிக்கிறேன் ..பிடிச்சிருக்கு சொல்லக் கூடாது அவ்வளவு தானே .'''..இனி சொல்லவில்லை ''ஒக்கே''...எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அப்பறம் பேசுகிறேன் நெட்டை கட் பண்ணிவிட்டு போய்விட்டான் முகுந்த்....

வள்ளியோ இவன் பேசுவது புரிந்தும் புரியாமலும் திகைத்தாள்..''.இவன் எப்படி பட்டவன் '' நான் சொன்ன விஷயத்தை புரிந்து கொண்டானா இல்லையா....ஒரே வார்த்தையில் ''ஒக்கே ''இனி பேசல சொல்லிவிட்டானே இவன் விளையாட்டுக்கு தான் பேசிருப்பானோ...நான் தான் அவனை தவறாக நினைத்து விட்டோம் போல...அது தான் நான் சொன்னதை காமெடியாக்கிவிட்டான்....இதுக்காக இத்தனை டென்ஷன் ...அப்பாடி இனி நிம்மதியா இருக்காலம்...நினைத்தவள்... இல்லை இல்லை அவன் உண்மை தான் சொல்லிருப்பான்...பேசக்கூடாது சொல்லிதை வைத்து காமெடி பண்ணிருக்கலாம்...அவனுடைய பழைய மெசஸ்ஜ்களை படிக்கும்போது உண்மை என்று தான் தெரிகிறது இப்ப நான் சொன்னதற்காக பொய் சொல்லிருக்கான்......இருவிதமாக சிந்திக்க ஆரம்பித்தாள் வள்ளி..

சசி ஜெகநாதன் ...
 
Top