All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இணையக் காதல்...

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே இன்றே கதை முடிவு வரை போட்டுவிடுவேன் உங்கள் கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள் உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கும் உங்களில் ஒருத்தி மா 😍 😍 😍 😍
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்...21
#################

வள்ளிக்கு முகுந்த் அருகில் அமர்ந்து பேச அவனுக்கு என்ன பதில் சொல்வது குழப்பம்...பயத்தில சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தாள்...அதை பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்த முகுந்த்..ஸ்வீட் எடுத்து முதல் முதலாக உன்னை பார்க்க வந்தால் வாங்கி வந்தேன் ...இந்தா சாப்பிடு மா....வள்ளிக்கு எடுத்துக் கொடுத்தான்...வள்ளி அதை வாங்கவே தயங்குவும்..ஹேய்..இது இந்த ஊர்ல வாங்கின உனக்கு பிடித்த ஸ்வீட் தான்...பயப்படாதே...சொல்ல வள்ளி இல்லை நான் வீட்டில போய் சாப்பிடறேனே....இல்லமா..நாம் முதல் முதலாக பேசும்போது ஸ்வீட்டுன் கொண்டாடி பேசலாமே ....எங்க அம்மா சொல்லிருக்காங்க ..எதையும் செய்யும்போது ஸ்வீட் கொடுத்து கொண்டாடு...சிரிக்காமல் சொன்னான் முகுந்த்...அதை கேட்டவுடன் திகைத்த வள்ளி...கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள் .....

அவள் சிரிப்பதை ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் முகுந்த்....சிரித்து முடித்ததும்....ஸ்வீட்டை கையில் வாங்கியவள் நீங்களும் சாப்பிடுங்கள் ..சொல்ல முகுந்த் இதோ. அவனும் வாயில் போட்டான்...அப்பறம் சொல்லு குட்டிமா....ஏதோ பேசனும் சொன்னில பேசு...வள்ளியும்...சிரிக்க வைத்து பேசியதால் மனதில் தோன்றிய தடை அகன்றது போல இருக்க...ஆமாம்..உங்களுடன் பேசனும் சொன்னேன் ...நேரில் பார்த்தும் என்ன பேசுவது நான் நினைத்தை உங்களுக்கு புரியும்படி எடுத்து சொல்ல முடியுமா...டவுட் வந்துருச்சு...தலை குனிந்தபடி சொன்னாள் வள்ளி....

ஹேய்..அப்படி இல்லை நீ சொல்லவருவதை சொல்லு...எனக்கும் புரியும் ..எதுக்கு தயக்கம்...இத்தனை நாளாக பேசுகிறேன் ...ஏன் பயந்த மாதிரி பேசிகிறாய்...நான் உன் முகுந்த் தான் குட்டிமா ..தயக்கமில்லாமல் பேசு...
ம்ம்...சொன்னவள்...அவனிடம் நேராக கேட்டு விடலாம்...தோழனாக பழகிறானா..இல்லை லவ்..பண்ணுகிறானா என்று...நீங்க என்னை என்ன நினைச்சு பழகறிங்க.....திக்கி திக்கி கேட்க..

புரியலடா..என்ன நினைச்சு...பேசுகிறேன்...வள்ளி என் குட்டிமா நினைச்சு தான் பேசுகிறேன் ...

அது கேட்கல...

வேற..என்ன கேட்கனும்..இவ்வளவு தூரம் உன்னை தேடி வந்து இருக்கேன் உன்னை பார்க்க..நீ இப்படி பேசவே தயங்கினால் எப்படிமா .....நீ சொல்ல வந்ததை நானே சொல்லவா....வள்ளியும் தலையாட்டி சொல்லுங்கள்...சொல்ல..

முகுந்த் உன்னை நான் லவ் பண்ணுகிறானா,தோழியாக நினைக்கிறானா..டவுட் உனக்கு...கரேக்டா....முகுந்தின் முகத்தை பார்த்தவள் சிறிது ஆச்சரித்துடன் ஆமாம்...என்றாள்.....

உன்னை நேரில் பார்க்காத வரை லவ் பண்ணுகிறானா இல்லை தோழியா பார்க்கிறானா..எனக்கும் மனதில் ஒரு டவுட் இருந்தது...ஆனால் உன்னை நேரில் பார்த்தும் என் மனதில் தோன்றியது வேறு...அதை அப்பறம் சொல்கிறேன் ....என்னைப் பற்றிய உன் கணிப்பை சொல்லு..இவ்வளவு நாட்களாக மனதில் ஓரத்தில் உனக்கு ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது...இப்ப நேராக பார்த்தும் என்ன தோன்றுகிறது...சொல்லு குட்டிமா ..

வள்ளி அவன் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தவள் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை..மெசஸ்ஜ் கலகலப்பாக பேசுவது போல தான் இங்கும் பேசுகிறீர்கள்....முதலில் பார்த்தவுடன் ஒரு பயம் இருந்தது.. நீங்கள் பேச பேச இப்ப கொஞ்சம் பயம் குறைந்துவிட்டது ..நான் பாடிய ஆடியோவை நீங்க உங்கள் படத்திற்கு வைக்கவும் எனக்கு பயமாக இருந்தது...ஏன் அப்படி செய்தீர்கள்..

அதுக்கு தான் சாரி கேட்டுவிட்டேன் மா..திரும்ப அதை பேச வேண்டாம் ...ஒக்கே...முகுந்த் சொல்ல..

ம்ம்..சொன்ன வள்ளி....போட்டோவில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உங்களிடம்..எனக்கு சட்னு அடையாளம் தெரியல..தெரியுமா...

ஒ...ஆனால் உன்னை பார்த்தும் நான் கண்டு பிடித்துவிட்டேன்...போட்டோவில் பார்ப்பதைவிட நேரில் இன்னும் அழகாக இருக்கடா...உன் குரலைப் போலவே மென்மையான முகம்..இன்சென்டா, கொஞ்சம் பயந்தபடி ஓரக்கண்ணால என்னைப் பார்ப்பதும் நான் பார்த்தும் திரும்பிக் கொள்வதும்...ஹாஹா..அழகு குட்டிமா நீ..

அவன் சிரிப்பதை பார்த்த வள்ளி முறைத்தாள் ...ஓரக்கண்ணால் பார்க்கிறனா ..நானு...

ஹாஹா..சும்மா சொன்னேன்..நீ நேராகவே என்னைப் பார்க்கலாம்...குட்டி..

'என்ன 'எப்ப பாரு குட்டி சொல்லிகிட்டே இருக்கே..நான் என்ன குட்டியா..இனி என்னை அப்படி கூப்பிட கூடாது...

ஹேய்..நான் குட்டி கூப்பிடுவது செல்லமா சொல்வது. ...பெயரை விட குட்டிமா,கண்ணம்மா.. டியர், டார்லிங் சொல்வது எல்லாம் மனதில் நெருங்கியவர்களுக்கு மட்டும் தான் ..எனக்கு நெருக்கமான உன்னை அப்படி தான் கூப்பிடுவேன். ..

அவன் சொன்னதை கேட்ட வள்ளி சில நிமிடங்கள் ஒன்றும் பேசவில்லை ...அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் வள்ளி . .

முகுந்த் அவள் முன் சொடக்கிட்டு என்னடா..அப்படி பார்க்கிற. ...எத்தனை நாட்கள் முகம் தெரியாமல் பேசி இருந்தாலும் முதல் முறை பார்க்கும்போது மனதிற்கு நெருக்கமானவள் சொல்லவும் பயம் வந்துருச்சா...

ஆமாம் இல்லை ..இருபக்கமும் தலையாட்டினாள் வள்ளி

ஹாஹா சிரித்தவன் ஆமாவா,இல்லையா...சொல்லுடா

ஆமாம் தான் ...தலையாட்டினாள்...

சில பேர முகம் தெரியாமல் போகும்போது பேசும்போது பிடித்து போய்விடும் ...சிலபேரை பாத்தலோ பேசினாலோ பிடிக்காது..ஒதுங்கி போக தோனும். ஆனால் உன்னிடம் எனக்கு எப்பவும் பேசிக் கொண்டே இருக்கனும் தோன்றியது முகம் தெரியாமல் இருக்கும்போதே ....உன் தனிமை சொல்லும்போது இனி உன்னை வாழ்நாள் முழுவதும் தனியாக இருக்க விடக்கூடாது ..என்னுடனே வைத்துக் கொள்ளனும் தோன்றியது ...உனக்கு இருக்கும் பாட்டு திறமை பார்க்கும்போது உலகிற்கே உன் குரல் ஒலிக்க செய்யனும் எல்லாரும் என் குட்டிமாவை பாராட்டனும் கொண்டானும் தோன்றியது...இப்ப உன்னை நேரில் பார்த்தும் இனி உன்னை பிரியவே கூடாது எப்பவும் என்னுடனே வைத்துக் கொள்ளனும் ..யாரும் உன்னிடம் உரிமை கொள்ளக் கூடாது ..எனக்கே எனக்கு தான் எனத குட்டிமா...தோன்ற ஆரம்பித்துவிட்டது.....

அவன் பேச பேச வள்ளி என்ன பதில் சொல்வது திகைத்துப் போய் அவன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்....

சசி ஜெகநாதன் ..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..22
################

வள்ளியின் முகத்தை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான் முகுந்த் ..உன்னுடைய முகத்தின் அழகைப் பார்த்து நான் பேசவில்லை...இத்தனை நாட்கள் உன் முகத்தை பார்க்காமலே பேசிருக்கேன்...அப்பவே உன்னுடைய இன்சென்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும் ..நீ பேசும்போது சில நேரங்களில் நான் எதாவது தப்பாக சொல்லிருவேன்.. பேசிருவேன்.. .நினைச்சிகிட்டு பேசுவே...அப்ப எல்லாம் நான் தப்பானவானா...இனி உன் கூட பேசவே கூடாது நினைப்பேன்...அது எல்லாம் அந்த நிமிடம் மட்டுமே ...உனக்கு சிறு வயதிலே உன் தாயார் இறந்துவிட்டாங்க சொன்னப்ப ரொம்ப கஷ்டமா இருந்தது...அந்த நேரத்தில்் உனக்கு நான் ஆறுதலாக இல்லாமல் போய்விட்டனே என் குட்டிமாவுக்கு.....இப்படி பல விசயங்களை அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் முகுந்த் அவன் பேச பேச வள்ளியோ திகைத்துப் போனாள் அவன் பேசுவதற்கு என்ன பதில் சொல்வது தெரியாமல் ...யாரிவன்...இவன் முகமே தெரியாமல் பழகியவன் பார்த்த நொடிலிருந்து என் மனதை இப்படி ஆட்டி வைக்கிறான்..இவன் என்னிடம் எதை எதிர்பார்க்கிறான் ..ஒன்றும் புரியாமல் அவனை பார்த்தப்படி அமர்ந்திருந்தாள்...

முகுந்தோ அருகில் நெருங்கி அமர..அவள் பயந்து தள்ளி அமர...ஹேய்...ரொம்ப தள்ளிப் போய் கீழே விழந்து விடாதே...நான் எதுவும் செய்ய மாட்டேன் பயப்படாமல் உட்காரு.....சொன்னவன்...நான் ஐந்து வருடமா இந்த முகநூலில் இருக்கேன் எத்தனையோ பேர் நண்பர்களாக தோழிகளாக கடந்து வந்து இருக்கேன்...ஆனால் உன்னிடத்தில் அப்படி கடந்து செல்ல முடியவில்லை ...எனக்கே ஏன் என்று தெரியவில்லை குட்டிமா ..உன்கிட்ட ஏதோ சம்திங் ஸ்பெஷல் ...அது தான் பார்த்தவுடன் என் மனதில் தோன்றியதை எல்லாம் கொட்டிவிட்டேன் தப்பாக நினைக்காதே...ஒக்கே ...நான் தான் வந்தலிருந்து பேசிக்கிட்டு இருக்கேன் ..நீ எதுவும் பேச மாட்டியா...

அப்படி எல்லாம் இல்லை நீங்க பேச பேச எனக்கு என்ன பேசுவது புரியவில்லை ...அது தான் ...இன்று தான் முதல் முறையாக பார்க்கிறோம்...ஆனால் நீங்கள் என்ன என்னவோ பேசிக்கிட்டு இருக்கிங்க..எனக்கு இதுக்கெல்லாம் என்ன சொல்வது தெரியவில்லை ...முகமே தெரியாமல் பேசியதை விட முகம் தெரிந்து இப்ப பேசுவதை பார்ப்பதற்கு பயமா இருக்கு....நான் சொல்ல வநத்தை மறந்து விட்டனா..தெரியல..திகைப்பா இருக்கு ..நீங்கள் சொல்வது போல எனக்கு எதுவும் தோனல ..உங்களை பிடிச்சிருக்கா பிடிக்கலயா ..அப்படி தோன்றவில்லை.

அச்சோ..இத்தனை நேரமா நான் பேசிய வசனமெல்லாம் காமெடி ஆயிருச்சே .என்ன குட்டிமா இப்படி பொசுக்கனு சொல்லிட்டே ..முகுந்த் சிரித்தபடி பேச ..

கொஞ்ச நேரம் நான் பேசி முடித்து விடிகிறேன்...நீங்கள் இடையில் இப்படி பேசினால் சொல்ல வருவதை எப்படி சொல்வது...பிளீஸ் ..வள்ளி சொல்ல...சரி சரிடா குட்டிமா...வாயில் விரலை வைத்தபடி அமைதியாக அவள் முகத்தை பார்க்கா அவன் செய்கை பார்த்தவள் சிரித்துவிட்டாள்..

இருவரும் சிரித்து முடித்துவுடன் முகுந்த் இப்ப சொல்லு நான் எதும் பேசல..

ம்ம்...சொன்ன வள்ளி, இங்கே பார்க்க வந்தது கேட்க வந்தது எல்லாம் வேறு ...ஆனால் இப்படி நீங்கள் பேசியதை பார்த்தும் பயமா தான் இருக்கு...முகநூலுக்கு நான் வந்தே இந்த கொஞ்ச நாள் தான் ...அதில் நீங்கள் பேசவும் நானும் பேசிக் கொண்டிருக்கேன் ..அவ்வளவு தான் இதில் வேறு எண்ணங்களை கொண்டு வரவது வேண்டாம் சாத்தியமில்லை ...புரிந்துக் கொள்ளுங்கள்...என்னைப் பொறுத்தவரை நல்ல தோழனாக பழகனும் மனதில் எந்தவித தவறான எண்ணங்களோடு பழக கூடாது ..போனில் சொல்வதைவிட நேரில் சொல்லிவிடலாம் ..வந்தேன்...வேறு மாதிரி கற்பனை எல்லாம் காண வேண்டாம் ...பிளீஸ் புரிநதுக் கொள்ளுங்கள் ...

அவள் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்த முகுந்த் ..இவ்வளவு நாட்களாக உன்கூட பேசிருக்கேன்...இப்ப இங்கு பார்க்கலாம் வா கூப்பிட்டு இருக்கேன்...நீ இங்கு பார்க்க வந்திருக்க. முகம் தெரியல...சும்மா ஜஸ்ட் பேசி இருக்கோம்..என்கூட பேசும்போது உன் தனிமை குறைந்திருக்கு...சொல்லிருக்க...ஆனால் அங்கு பேசும்போது சரி ...இப்ப என்னை பார்க்க வந்திருப்பதும் ..எந்த நம்பிக்கையில் வந்தே ...என்னை பார்க்க வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லிவிட்டு வந்திருக்க மாட்டே ...ஆனால் வந்திருக்க...நம்பிக்கை இல்லாமல் எப்படி இவ்வளவு தூரம் உன்னால் வர முடிகிறது ...பேச முடிகிறது..
இப்ப ஒன்று சொல்கிறேன் தவறா நினைக்காதே. .உனக்கு தனிமை போகவதற்காக என்னிடம் பேசிகிட்டு இருக்கியா ...சொல்லு..எதன் அடிப்படையில் பேசிகிட்டு இருக்க. .. உனக்காக இவ்வளவு தூரம் நான் பார்க்க வந்திருக்கேன் ...அதை எல்லாம் விட்டுவிட்டு ஏதோ பேசிக்கிட்டு இருக்க....தோழனா லவ்ரா..கேட்டுகிட்டு...நல்ல தோழனா என்ன உன் வழியிலே சொல்லு...எனனைப் பொறுத்தவரை எல்லாமாக இருக்க தான் என் விருப்பம் குட்டிமா..ஆனால்...உனக்கு எப்படி இன்னும் எனக்கு புரியல...இனி உன்கிட்ட பேசவதற்கு யோசிக்கனும்...போல...அவன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டிவிட்டு...இதற்கு இன்றே முடிவு செய்துவிடலாம்...நீ சொல்லும் பதிலில் தான்...இனி முடிவு செய்யனும்...ஒக்கே இன்னும் கொஞ்சம் நேரம் தான் ..நீ வீட்டுக்கு போகனும் நான் ஊருக்கு கிளம்பனும். சீக்கிரம் சொல்லு வள்ளிடம் கேட்டான்...முகுந்த் ...

சசி ஜெகநாதன் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..23
################

முகந்த் எந்த நம்பிக்கையில் என்னை பார்க்க வந்தே ..பேசும்போதே நான் வர மாட்டேன் சொல்லாமே ..உனக்கு உன்னை பற்றி முடிவு எடுப்பது உன் கையில் இருக்கும்போது நான் கூப்பிட்டேன் அது தான் பார்க்க வந்தேன் சொல்லாதே ...வரமாட்டேன் சொன்னால் உன்னை நான் கட்டாயபடுத்த முடியாது....ஆனால் வந்திருக்க ..என்கிட்ட பேசிகிட்டு இருக்கே ...அப்ப என் மேல் நம்பிக்கை தானே குட்டிமா ....நான் பிடித்து இருக்கு சொல்லும்போதே...வேண்டாம் அப்படி சொல்லாதீங்க சொன்னே...சரி நானும் விட்டுடேன்..

ஆனால் உன்கூட பேச பேச உன்னை என்னால் விட முடியும் தோன்றவில்லை ...அதுவும் இப்ப பார்த்தபிறகு கண்டிப்பாக உன்னை விட முடியாது....நான் ஓப்னாகவே சொல்லிவிடுகிறேன்.. எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது ...இப்பவும் உன்னை என்கூடவே வந்தால் கூட்டிகிட்டு போய்ருவேன்.....இல்லை வரமாட்டேன்...இனி பேச மாட்டேன் இப்படி இனி பேசக் கூடாது...இவ்வளவு தூரம் வந்தபோதே தெரிந்துவிட்டது...உன் மனம்...ஆனால் எனக்கு அந்தமாதிரி எண்ணமெல்லாம் இல்லை. ஜஸ்ட் பிரண்டு தான் ...இனி பேசாதீங்க ..மெசஸ்ஜ் அனுப்பாதீங்க டயலாக் சொல்லாதே ...சீக்கிரம்‌ முடிவு பண்ணு....ஒக்கே ....இனி நீயா வேண்டாம் சொன்னாலும் நான் விட மாட்டேன் ..மனசில வைத்துகிட்டு முடிவு பண்ணு...ஒக்கே. இப்ப கிளம்பு ...நான் இரவு போன் பண்ணுகிறேன்....அவனே பேச முடித்துவிட்டு கிளம்ப சொன்னான் முகுந்த் ...

வள்ளியோ பேந்த பேந்த முழித்துக் கொண்டு நின்றிருந்தாள்...அவனுக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல்...தானே வந்து மாட்டிக் கொண்டமா...இந்த சிக்கலிருந்து எப்படி வெளியே வர போறேன் ...அப்பா தங்கை என்னைப் பற்றி என்ன நினைப்பாங்க ...வெளியே தெரிந்தால் என்ன ஆகும் ...இப்படி பல ஒலட்டலோடு வீடு வந்து சேர்ந்தாள் வள்ளி...வீட்டிற்கு வந்ததும் என்ன செய்யலாம்..இதிலிருந்து எப்படி வெளியே வருவது ..ஒன்றும் புரியவில்லை யே எனக்கு ...தோழிகள் யாரவது இருந்தாலும் அவர்களிடம் ஐடியா கேட்கலாம் ...பள்ளி படிப்போடு அவர்களேடைய பழக்கம் நின்று போய்விட்டது ...அய்யோ..இப்ப என்ன செய்ய போகிறேனே தெரியவில்லையே ....

கடவுளே...நீதான் எனக்கு நல்வழி காட்டனும்....அவன் சொன்னமாதிரி...அவனை எந்த நம்பிக்கையில் பார்க்க போனேன்...தெரியாத ஒருத்தரை வீட்டிற்கு தெரியாமல் பார்க்க போனது எவ்வளவு பெரிய தவறாயிற்று ....இனி நானே வேண்டாம் சொன்னாலும் இனி விடமாட்டேன் சொல்கிறானே ...எனக்கு என்ன பண்ணவது என்றே புரியவில்லை ..அப்பாவிடம் இதைப் பற்றி பேசலாமா. அவர் சொன்னால் புரிந்து கொள்வாரா...என்னை திட்டுவாரா.அடித்துவிடுவாரா ..திட்டினாலும் அடித்தாலும் அவரிடம் சொல்லி விடலாம்..தோனறுகிறது....அவன் சொன்னமாதிரி விடமாட்டேன் சொன்தற்கு பயந்துவிட்டால்...அவருக்கு முதலே பிபி இருக்கு ...எதும் பிரச்சினை ஆகிவிட்டால் ...என்ன முடிவு பண்ண போகிறேன் ...

இனி அவனை நான் வேண்டாம் சொன்னாலும் அவன் விடமாட்டான்....இதை எப்படி சரி செய்வது யோசிக்கனும் .இப்படி புலம்பிகிட்டு இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது...அவன் போன் செய்றேன் சொன்னான்...சொல்லிவிடனும் எனக்கு இது எல்லாம் ஒத்துவராது என்று...

முகமே தெரியவில்லை என்றாலும் இந்த முகநூலில் பேசுகிறோம் ...அதுக்காக அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டே ஆகனுமா...சில நாள் பேசிவிட்டு ஒரு தடவை பார்த்துவிட்டால் உடனே வாழ்க்கை தூக்கி அவனிடம் கொடுக்க முடியுமா....என்ன நினைச்சுகிட்டு இருக்கான்... தனிமையில் இருப்பதால் அவனோடு பேசிக் கொண்டு இருக்கேன்...
உன் தனிமை போகனும் என்கிட்ட பேசினியா கேட்கிறான்....என் எண்ணங்களை அவனோடு பகிர்ந்து கொணடால் தான் ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்கிறான்...ஒருவரிடம் அளவுக்கு மீறி பழகினால்...என்னைப் பற்றிய முடிவுகளையும் அவங்களே எடுக்க முடியுமா...அந்தளவுக்கு அவனுக்கு இடம் கொடுத்துவிட்டேன்...இது என்னுடைய மிகப் பெரிய தவறு...இதை இப்போதாவது சரி பண்ண வேண்டும் இல்லையென்றால் எனக்கும் கஷ்டம் அப்பா தங்கைக்கு தெரிந்தால் அவர்களும் கஷ்டபடுவார்கள்....
எப்படி சரி பண்ணலாம்...அவன் இனி பேசினால் பேசாமல் இருந்துவிடனும்..பதில் அனுப்பக் கூடாது...போன் பண்ணினாலும் அட்டென் பண்ணக் கூடாது...நான் செய்த தவறை நானே சரிபண்ணி ஆகனும் முடிவு பண்ணினால் வள்ளி...இப்படி இருந்தால் அவன் விட்டுவான்...நம்பினாள் மனதில் வள்ளி..

சசி ஜெகநாதன் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..24
#################

எங்கு எந்த இடத்தில் தவறு செய்கிறோம் ...எதனால் அந்த தவறு நடக்கிறது ..அந்த நேரத்தில் நம்முடைய மனநிலை எவ்வாறு மாறியது...எது நம்மை பலவீனமாக்கியது ...இதை நாம் அறிந்து கொண்டாலே...செய்யும் தவறே சரிப்பண்ணிவிடலாம்...வள்ளியும் அதை பற்றி சிந்தனை பண்ணிக் கொண்டிருந்தாள்....எங்கு தவறு செய்தேன் ..எந்த நம்பிக்கையில் அவனை பார்க்க போனேன் ...அவன் நல்லவனாக மட்டுமே இருப்பான் எதை வைத்து முடிவு பண்ணினேன்.... என்னை பற்றிய முடிவை அவனே எடுக்கும் வரை நான் அவனிடம் பேசிருக்கேன்...

என்னுடைய தனிமை அவன் பயன்படுத்தி கொண்டான்...அடுத்தவர் மேல் பழியை போட்டு ஒதுங்கி கொள்வதை விட. என் தனிமை குறைய.அவன் பேசவும்..நான் பேசிருக்கேன் ..என்னை குட்டிமா கூப்பிடும் போதே கூப்பிட கூடாது சொல்லிருக்கனும்..என் அம்மா கூப்பிடவாங்க சொல்லவும் அவனும் அதை கூப்பிட்டே பேசவும் நானும் விட்டுடேன் என்னுடைய தவறும் இது தான் ...அதனால் தான் பிடித்தது பிடிக்காது எல்லாவற்றையும் அவனிடம் பேசவும்...அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டான்...இன்று கூட எனக்கு பிடித்த ஸ்வீட் வாங்கி வருகிறான்...இனி நானே வேண்டாம் சொன்னாலும் விட மாட்டேன் சொன்னான்...என்ன செய்வான் தெரியல எனக்கு என்ன செய்வது புரியலயே ..தனக்கு தானே ஒரு சுய அலசல் பண்ணிக் கொண்டிருந்தாள் வள்ளி...

இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும் வரை எனக்கு மனதில் பயமாக தான் இருக்கு ..அம்மாவின் படத்திற்கு முன் நின்றவள்..அம்மா இதிலிருந்து வெளியே வர வழி செய்யுங்கள் ...இந்த பிரச்சினை எப்படி நான் வெளி வருவேன்..நீங்கள் கூட இருந்திருந்தால் எனக்கு இந்த மாதிரி துன்பம் இருந்திருக்காது...தவறு செய்தால் தண்டிப்பது அதை சரி பண்ண வழி செய்ய..முடிந்திருக்கும்.. எதாவது வழி சொல்லுங்கள் மனதிலே வேண்டி கொண்டிருந்தாள் வள்ளி ...

என்ன செய்வது என்ன செய்வது இதை மட்டுமே நினைத்து கொண்டிருக்க...முகுந்த் மாற்றி மாற்றி மெசஸ்ஜ் போன்கால் பண்ணிக் கொண்டிருந்தான்....வள்ளி எதுக்கும் ரெஸ்பான்ஸ் பண்ணாமல் இருக்க...முகுந்த் பயங்கர கோபம்...என்கிட்டேயவா...இனி தான் உனக்கு இருக்கு...

அத்தனை நேரம் சொல்லிவிட்டு வந்தே காற்றோடு பறக்கவிட்டே ..உனக்கு தேவை என்றால் பேசவும் தேவை இல்லையென்றால் தூக்கி எறியவும் நான் என்ன விளையாட்டு பொருளா ..
சீற்றதுடன் இங்கும் அங்கும் நடந்துக் கொண்டும் அவளுக்கு போன் பண்ணிக் கொண்டு இருந்தான்...

வள்ளி போன் அடிப்பதை பார்த்தாலும் எடுக்கவில்லை..பிறகு யோசித்தவள் போனை சுவிட்ச் ஆப் பண்ணி தூக்கி போட்டு விட்டாள்்..தங்கைக்கு அப்பா போன்லிருந்து பேசியவள் போன் ரிப்பேர் ஆகிவிட்டது என் போன்க்கு ரிங் விட வேண்டாம் ..நீ வந்த பிறகு கடையில் கொடுக்கலாம் சொல்லிவிட தங்கையும் சரிக்கா..விட்டு விட்டாள்...

ஆன்லைன் போகவில்லை ...போன்னும் சுவிட்ச் ஆப்...முகுந்த்க்கு டென்ஷனே அதிகமாயிற்று ...இவளை என்ன செய்வது. ...கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான் ...இரண்டு நாட்கள் மனதில் இருப்பதை வெளியே சொல்லாமலே எதுவும் நடக்காது போலவே ஓடிக் கொண்டிருக்க...வள்ளியும் இதுடன் பிரச்சினை முடிந்துவிட்டது போன் சுவிட்ச ஆப்ல இருக்கட்டும் இனி அவன் போன் பண்ண மாட்டான்...அவனே விட்டு விடுவான்...நினைத்து கொண்டிருந்தாள் வள்ளி ...

இப்படி மேலும் இரண்டு நாட்கள் கழிய வீட்டிற்கு கொரியர் பாய் ..யாருங்க வீட்டில.. போஸ்ட் வந்திருக்கு கையெழுத்து போட்டு வாங்கனும் வாங்க. கூப்பிட்டான்....வள்ளியும் நமக்கு யார் அனுப்பிருக்கா...அதுவும் கொரியர்...தெரியலயே. அதை வாங்கி திருப்பி திருப்பி பார்த்தாள்..அனுப்பின அட்ரஸ் எதும் இருக்கா என்று...வெறும் ஊர் பெயர் மட்டுமே இருக்க. அங்கு யாரும் தெரிந்தவர்கள் இல்லையே ..என் பெயருக்கு வந்திருக்கு...யோசித்தபடி அதை கிழித்து உள்ளே என்ன இருக்கு பார்த்தவள்...சாக்காகி நின்றாள் வள்ளி...

சசி ஜெகநாதன் ....
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..25..
#################

வள்ளி பல சிந்தனைகள் மனதில் ஊடுறுவ...அமைதியாக அமர்ந்திருக்க கொரியர் வந்திருக்கிறது பெல் அடிக்கவும் போய் வாங்கி உள்ளே வந்தவள்..எனக்கு இதை யாரு அனுப்பிருப்பா...மேசையில் வைத்து விட்டு போய் படுத்துவிட்டாள்...எதா இருந்தாலும் அப்பறம் பார்த்துக் கொள்ளலாம் ..இப்ப தான் இரண்டு நாட்கள் உள்ளே ஓடிய பயம் அகன்று நிம்மதியாக இருக்கு. இதில் இன்னொரு பிரச்சினை தலையில் ஏற்றுக்க முடியாது ..நினைத்து படி தூங்கி விட்டாள் வள்ளி ....

முகுந்தோ கொரியர் போய்ருக்கமா...வாங்கிப் பார்ர்திருப்பாளா தெரியலயே பார்த்திருந்தா இந்நேரத்திற்குள் போன் பண்ணிருப்பாள் ...சரியான அட்ரஸ் தானே அனுப்பினேன் ....அவள் வந்து போனபின் அவள் பின்னாடியே போய்...அங்கே ஆளைப் பிடித்து சரியான அட்ரஸ் வாங்கி வந்து அதை அனுப்பினோமே...இன்றுஅவள் கைக்கு கிடைத்து இருக்கும் ...ஆனால் இன்னும் அவள் போன் பண்ணல மெசஸ்ஜ் அனுப்பல...இருக்கடி உனக்கு..இவ்வளவு தூரம் வந்த அப்பறம் உன்னை விட மாட்டேன்....நீ லவ் பண்ணலே சொன்னா சொல்லிட்டு போ...ஆனால் நான் நினைத்து கண்டிப்பா நடக்கதான் வேண்டும்....இன்று இரவு வரை பார்க்கிறேன் ..போன் வரவில்லை என்றால் கண்டிப்பா நடப்பதை தடுக்க உன்னால் முடியாது...டென்ஷன்ல ரூம்மை அளந்துக் கொண்டிருந்தான்....அவ்வளவுதூரம் சொல்லி அனுப்பியும் போன் சுவிட்ச் ஆப் பண்ணிட்டு என்கிட்ட ஆட்டம் காட்டிருக்க...உன்னை போல எத்தனை பேரை நான் பார்த்திருப்பேன்...இருடி...உனக்கு இருக்கு ..கோபத்தில் கண்டபடி பேசி முணுமுணுத்துக் கொண்டிந்தான்.....

தூங்கி எழுந்த வள்ளி...கையில் டீடன் அமர்ந்தவள்...அங்கே கொரியர் கவரைப் பார்த்தும் ஞாபகம் வந்து..மதியமே வந்தது ...பிரித்தே பார்க்கல...என்ன வந்திருக்கும்...நமக்கு யார் இதை அனுப்பிருப்பாங்க. ..அனுப்பின அட்ரஸ் இல்லை ..யோசித்தவள் டீயை குடித்துவிட்டு...அந்த கவரை எடுத்து ஒபன் பண்ண ஆரம்பிக்க...வெளியே இருந்து அவளுடைய அப்பா குரல் கேட்ட து...அம்மாடி ஒரு டீ கொடுடா ...இதோ ஒரு நிமிடம் வருகிறேன்...கவரை அப்படியே தூக்கி மேசையில் வைத்தவிட்டு வெளியே போய்விட்டாள்...இரவு வரை மாற்றி மாற்றி எதாவது வேலை இருந்துக் கொண்டே இருக்க....படிக்கும்போது ரூமிற்கு சென்றவள்...ச்சே கொரியரே மறந்தே போயிற்று ...எப்படி மறந்து போறேனே தெரியல...தன்னை திட்டிக் கொண்டவள்...அதை எடுத்து ஒபன் பண்ணினாள்...

அதில் ஒரு சீட்டும்..ஒரு பென்டிரைவர் மட்டுமே இருந்தது...சீட்டை கையில் எடுத்தவள் திருப்பி பார்க்க அதில் ஒரே வரி மட்டுமே ..பென்டிரைவரை போட்டு பாரு...என்று....அதை படித்தவள்..இதை யாரு அனுப்பிருப்பா ..போட்டு பார்க்கலாமா...எதும் தப்பாக இருக்குமோ...தெரியலே...இல்லை அப்பாவிடம் கேட்போமா...கொரியர் வந்ததும்..அதில் இருந்தையும் ..நினைத்தவள்...ரூமிற்கு வெளியே எட்டிப் பார்க்க அப்பாவின் அறைக் கதவு சாத்திருந்தது...சரி நாமே போட்டு பார்க்கலாம் .எண்ணியவள் தன் லப்டாப் எடுத்து ஆன் பண்ணினாள் வள்ளி..

பென்டிரைவரை அதில் சொருகியவள்...அதில் வருவதை பார்த்து திருதிருவென்று முழித்தவள் முகமே வேர்க்க ஆரம்பித்தது..உடம்பு நடுங்க மனதில் பயம் கொள்ள மூச்சு காற்றுக்கு உள்ளம் ஏங்க எதுவும் செய்ய முடியாமல் அதை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..கண்களில்..கண்ணீர் வடிந்துக் கொண்டு இருந்தது...ஒன்றும் செய்ய முடியாமல் பேசவே மறந்து போனது போல அப்படியே அமர்ந்திருந்தாள் வள்ளி ...

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தளோ தெரிய வில்லை .. என்ன பண்ணப் போகிறேன் ...எனக்கு மட்டுமே தெரிந்தது இனி வீட்டில் எல்லாரும் தெரிந்து விடும் ..அப்பா என்ன நினைப்பார் என்னைப் பற்றி நம்பிக்கை கெடுத்துவிட்டாயே..மா.உன்னால் நம் குடும்ப மானமே போய்ருமே..அம்மா இல்லாமல் உங்களை வளர்த்து வந்திருக்கு நல்லா பெயர் வாங்கிக் கொடுத்துவிட்டாய்...கோபடுவாரே தங்கை என்ன சொல்வாளோ அக்கா நீ இவ்வளவு தானா...உன்னை பார்த்து நல்லது கெட்டது தெரிந்து கொள்வேன்..இருக்க எனக்கும் நீ தவறான பாதை காட்டி இருக்கேயே......வெளியே மற்றவர்கள்தெரிந்தால் என்ன நினைப்பார்கள்... ..இதிலிருந்து மீண்டுருவனா...திகைத்துப் துடித்துப் போனாள் வள்ளி...

என்ன நடக்க போகதோ தெரியல...இதை உடனே அப்பாகிட்டே சொல்லிவிடலாமா...தெரிந்தால் தாங்க மாட்டாறே...என்ன செய்ய போகிறேன் தெரியலயே ...எதையும் சரிவர யோசிக்க முடியவில்லை வள்ளிக்கு...சிறிது நேரம் கழித்து அங்குள்ள தன் போனை ஆன் பண்ணினாள் வள்ளி ..ஆன் பண்ண அடுத்த விநாடி அத்தனை மெசஸ்ஜ் போன் காலஸ் நினைத்தபடி...முகுந்திடமிருந்து...அதை பார்த்தவள் அவனுக்கு மெசஸ்ஜ் அனுப்பினாள்...வள்ளி...
அப்படி அந்த பென்டிரைவில் என்ன இருந்தது. .நாளைக்கு பார்க்கலாம்...

சசி ஜெகநாதன் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல் இத்தொடரின் மீதி பகுதி ... இதுடன் இக்கதை முடிந்து விடும் ..எப்படி இருக்கு சொல்லுங்கள் தோழிகளே..
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்...26
################

வள்ளியின் மனதில் திரும்ப இவனுக்கு மெசஸ்ஜ் அனுப்பினால் பிரச்சினை இழுத்துக் கொண்டே தான் போகும் ...இதிலிருந்து வெளியே வரவதற்கு வழியே பார்க்கனும்...மெசஸ்ஜ் அனுப்ப போனை எடுத்தவள் யோசித்துவிட்டு அப்படியே வைத்துவிட்டாள்...எத்தனையோ பார்க்கிறோம்...அடுத்தவர்களுக்கு என்றால் ஆயிரம் யோசனைகள் தோன்றும் ..நமக்கு என்று வரும்போதுஎதும் தோன்றவில்லை ...ரொம்ப புத்திசாலியாக இருப்பதாக நினைத்துக் கொண்டே படு முட்டாளாக தான் இருக்கிறேன் போல...அவன் வீடியோ அனுப்பினால் அதைப் பார்த்து பயந்து ஒடுங்கி அழுது என்ன பண்ணவது தெரியாமல் அந்த நிமிடங்களில் தோன்ற தான் செய்தாலும் சிறிது நேரத்தில் அதற்கான முடிவை தெளிவாக எடுக்கவேண்டும்...இதை வீட்டில் சொல்லி தான் ஆகனும்...அப்பாவிற்கு பயந்தோ தங்கைக்கு தெரிந்தோ..மற்றவர்கள் தெரிந்தோ..எதாவது சொல்லிவிடுவார்கள் பயந்து திரும்ப அவன் வலையில் விழுந்தோம் ...அவ்வளவு தான் எல்லாம் முடிந்தது ...கடைசி நேரத்தில் சரியாக யோசித்தாள் வள்ளி ...திரும்ப அந்த வீடியோ பார்ப்போம் ...முதல் தடவை பார்க்கும்போது இருந்த பயத்தில் எதையும் சரியாக பார்க்க முடியாமல் போயிற்று ...திரும்ப பார்ப்போம் ..வீடியோ பார்த்தாள் வள்ளி...

வள்ளி பார்க்கில் நுழைந்து அவளுடைய நடை செடிகளை வருடி செல்வதும் பூக்களை மென்மையாக தொடுவதையும் அதற்கான அவள் பாடிய பாட்டை இணைத்திருக்க அங்குள்ள பெஞ்சில் அமர்ந்து சுற்றிலும் பார்ப்பதும் அவளுடைய சின்ன சின்ன அசைவுகளையும் முகபாவங்களையும் ஒடிக் கொண்டிருக்க அங்கே முகுந்த் வந்து அவளுடன் பேசுவதும் அருகில் அமர்ந்து பேசியதையும் சிரித்து எல்லாம் ஒடிக் கொண்டிருக்க அதில் இருவரும் பேசியதை வார்த்தைகள் உல்டவாக மாறியது...இவள் பேசியதற்கு அவன் சொன்ன பதிலும் எப்படி சேஜ்ச் பண்ணமுடியும்...இப்படி எல்லாம் செய்ய முடியுமா பார்க்க...அதில் இருவரும் பேசிக் கொள்வது காதலர்கள் உரையாடல போல அவர்கள் பேசுவதைப் போலவே ..

ஹேய் குட்டிமா,

ஹேய் ..

என்ன வெறும் ஹேய்யா...நான் உன்னை கல்யாண பண்ணிக் கொள்ளும் மாப்பிள்ளை உன்னை பார்த்த முதலிருந்து லவ் பண்ணுகிறேன்......என்கிட்ட இப்படி தான் ் பேசுவியா..யாரோ மாதிரி..

இல்ல கொஞ்சம் தயக்கமா இருக்கு...

என்ன தயக்கம் உனக்கு நான் எனக்கு நீ முடிவு பண்ணியாச்சு..இப்ப என்ன தயக்கம்..அழகா மாமு கூப்பிடு சொல்ல..

அவளோ ம்கூம் மாட்டேன் தலையாட்ட...

இனி நீ இப்படி தான் கூப்பிடனும்...இல்லை என்றால் என்கிட்ட பேசாதே...

ம்ம்..மாமு..மாமு..சொல்லிபடி தள்ளி அமர...

அவனோ ஹேய் பார்த்து குட்டிமா ..விழுந்துவிடாதே....உன்னை தொடவது எல்லாம் கல்யாணத்திற்கு பிறகு தான்... சிரித்தபடி சொல்லவும்

அதைக் கேட்ட வள்ளி சிணுங்கியவள் அவன் சிரிக்கவும் கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தாள்...

இருவரும் சிரித்தபடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதும் அவள் தலைகுனிவதும் நிமிர்ந்து அவனை பார்ப்பதும்...இருக்க..இப்படியே பார்த்துக்கிட்டே இருப்பியாடா...பேசலாமல என்ன பேச எதாவது..பேசு..என்னைப் பிடித்திருக்கா...அழகாக இருக்கானா ..இப்படி பேச ஆரம்பிக்கலாமே ..ம்கூம்...வள்ளி தலையாட்ட...ஏன் நான் அழகா இல்லையா...கேட்க..அவளோ இல்லை நல்ல இருக்கிங்க ..என்ன நல்ல இருக்கிங்களா...அழகா இருக்கானா சொல்லு...அழகாக இருக்கிங்க...போதுமா ..ம்ம் ..போதுமா கல்யாணத்துக்கு அப்பறம் சொல்றேன்...ஆனால் நீ எப்படி இருக்க நான் சொல்லட்டா...ம்ம்..சொன்னவள்..ம்கூம் வேண்டாம் மறுக்க..இல்லை நான் சொல்வேன்..நான் சொல்லும்வரை இடையில் பேசக் கூடாது..ஒக்கே...ம்ம்...
அழகான வட்ட முகம்...பிறைப் போல நெற்றி...வில் போன்ற புருவம் என்னை ஈட்டியா பாயுது என் மேல் ...சிறகு போல இமைகள் நீண்ட கருவிழிகளை..யாரும் பார்த்துவிடுவாங்களோ பயந்து சுற்றி சுற்றி பார்த்தாலும் என்னை கீழ் கண்ணால் பார்ப்பது அவளோ அழகு ..கூர்மையான மூக்கு..அதில மூக்குத்தி உன் முகத்திற்கே வெளிச்சமாக இருக்குடா..அழகான வடிவான இதழ்கள்..அதைப் பார்க்கும்போது...அதற்கு மேல எதும் இப்ப சொல்ல மாட்டேன் ..கல்யாணத்திற்கு பிறகு தான்...சொல்லி கொஞ்சவதைப் போல...வீடியோவை எடுத்திருந்தான்...அவள் அங்கே பேசியவதையும் இவன் பேசுவதையும் அப்படியே..வாய்சைகளை கொண்டு பேசிருப்பதை பார்த்தாள் திரும்ப திரும்ப வள்ளி ..கடைசியில் அவன் தனியாக பேசியதை நான் சொல்லுவதை கேட்கவில்லை என்றால் இதைவிட மோசமாக வீடியோ உன் வீடு தேடி வரும்...நாம் பேசுவதை அப்படி மாற்றி அனுப்பிருக்கேன்...இதைப் பார்த்தும் எனக்கு போன் பண்ணவில்லை இதை என் பக்கத்தில் என் வருங்காலம் உட்பி..போஸ்ட் போட்டு விட்டு உன் அப்பாவிற்கு தங்கைக்கு அனுப்பி வைத்து விடுவேன்...இந்த வீடியோவை அல்ல...ஒக்கே ...அதை கேட்டபடி அமைதியாக அமர்ந்திருந்தாள் வள்ளி...

சசி ஜெகநாதன்
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..27
#################

வாழ்க்கையில் சின்ன விசயம் தானே என்ன பெரிதாக வந்துவிட போகிறது செய்யும் காரியம் எவ்வளவு பெரிய இக்கட்டில் கொண்டு வந்துவிடும் ...நாம் செய்யவதை புரிந்து செய்கிறமா..இல்லை புரியாமல் செய்கிறமா...அப்படி செய்தால் என்ன தான் ஆகும் பார்க்கலாம் குருட்டு தைரியத்தில் செய்கிறமா...வள்ளி தான் குருட்டு தைரியத்தில் செய்தை அவளை எங்கு கொண்டு வந்து நிறுத்திருக்கிறது...வீடியோவை முழுவதும் பார்த்தவள்...நானும் அவனும் பேசியதிற்கு..அவன் எப்படி எல்லாம் மாற்றி இருக்கிறான். ...இதை வேறு மாதிரி மாற்றி அனுப்புவேன் சொல்லி மிரட்டும் அவனை கண்டு பயப்படுவதா இல்லை இதை வீட்டில் சொல்லி அதற்கான முடிவை எடுக்க வேண்டும்...
இன்னும் இப்பிரச்சினையை வீட்டில் செல்லாமல் இருந்தால் வெளியே தெரிந்து யாரவது வீட்டில் சொல்லி எகஸ்ரா பிரச்சினை ஆகுவதற்கு சொல்லிவிடலாம்...அப்பாவிடம்...இப்பயாவது சரி பண்ணவில்லை என்றால் எப்பவும் சரி பண்ணவே முடியாது...
அப்பா வந்தவுடன் சொல்லிவிட வேண்டும் ...முடிவு செய்தாள்...
அதற்குள் போன் ரிங் ஆகி கொண்டே இருந்தது மாற்றி மாற்றி வெவ்வேறு நம்பர்களில்....அட்டென்ட் செய்ய வேண்டாம்..நினைத்தவள் அப்பாவிடம் எப்படி சொல்லாம்...அவர் கோபபட்டாலும் சொல்லிவிட வேண்டும் ...அடித்தாலும் வாங்கிக் கொள் தான் வேண்டும் ...இதை மறைத்து அசிங்கபடவேண்டாம் தெளிவாக முடிவு செய்தாள் வள்ளி...

மாலையில் அப்பா வந்தவுடனே...அப்பா....உங்ககிட்ட ஒன்று சொல்ல வேண்டும் ...

வாடா மா வந்து உட்கார்...என்ன சொல்லனும் புதுசா அப்பா கிட்ட பேச பர்மிஷன் கேட்கிற...

நா, நா..ஒரு தப்பு செய்துவிட்டேன் ..
அதை எப்படி சொல்வது...தெரியல...

என் செல்லகுட்டி என்ன தப்பு செய்தீங்க..
அப்பா கிட்ட என்ன தயக்கம் ...

சாரிபா..வீட்டில் சும்மா தான் இருக்கேன் முகநூல் ஓபன் பண்ணி அதில்
நான் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தது பாட்டு பாடி அனுப்பியது அவனை சந்தித்தது எல்லாமே ஒரே மூச்சாக சொல்லி முடித்தாள்..வள்ளி...

அவள் பேசுவதை கேட்ட அப்பாவின் முகம் கோபத்தில் இறுகி போய் கொண்டே இருந்ததை பார்த்தவள்..சொல்வதை பாதியில் நிறுத்தினாள்...வள்ளி...

முழுவதும் சொல்லி முடி...இன்னும் என்ன செய்தாய்...சொல்லி முடி...உன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை இன்னும் நான் விடவில்லை ...பயப்படால் சொல்லு...

அப்பா சாரிப்பா...பிளீஸ் சாரிப்பா ..அவனை சந்தித்து...அவன் பென்டிரைவரில் வேறு மாதிரி போட்டு பேசி அனுப்பிருக்கான்...பா...நா ஏந்தவித தப்பாகவும் பேசல. .அவன் கேட்பதற்கு பதில் சொல்வேன்....உனக்கு பிடித்தது என்ன என்று கேட்கும்போது பாட்டு பாடுவேன் சொல்வும்..அதை அனுப்பினேன்...அவன் அம்மா மாதிரி என்னை குட்டிமா கூப்பிட்டு..ரொம்ப பாசமா பேசினான் பா ..அது தான் நம்பிட்டேன்...அவன் என்னை பிடிச்சிருக்கு சொல்லும்போதே சொல்லிவிட்டேன்...எனக்கு அப்படி எல்லாம் இல்லை சொல்லிவிட்டேன்...அவனும் விட்டுவிட்டான்...நா அவனுக்கு இதை நேரிடையாக சொல்லிவிடலாம் அவனை சந்திக்க போனேன்...அதும் உங்கிட்ட சொல்லாமல் போனது எவ்வளவு பெரிய தவறு தெரிஞ்சிருச்சு மன்னிச்சுங்கோங்க.....நான் தனியாக இருக்கவும் எனக்கு என்ன பண்ணவது சரியாக தெரியாமல் இந்த மாதிரி பண்ணிட்டேன்...நீங்க வேலைக்கு சென்றவுடன் எப்பவும் தனியாக இருப்பதால் முகநூலை பயன்படுத்தினேன்...அது இவ்வளவு தூரம் எனக்கு பிரச்சினை ஆகும் தெரியல பா..பிளீஸ் பா எதாவது சொல்லுங்க ...இல்லை அடித்துவிடுங்க...இப்படி இறுகி போய் இருக்காதீங்க...பிளீஸ் பா..சாரிபா...சாரிபா ...அழுதபடி கெஞ்சிக் கொண்டிருந்தாள் வள்ளி...அவள் அழுவதை பார்த்தபடி இருந்தவர்....

உன்னை என்ன சொல்வது...உன்மேல் எவ்வளவு நம்பிக்கை....அம்மா இல்லாமல் இத்தனை நாட்கள் குடும்பத்தை பார்த்து எனக்கும் சாப்பாடு மாத்திரை நேரத்திற்கு கொடுத்து எனக்கு அம்மாவா என் பெண் இருக்கா பெருமை பட்டுக் கொண்டிருந்தேன்...ஒரே நொடியில் அதை அழித்திவிட்டே ..இப்படி இரண்டு பெண்ணை வைத்துக்கொண்டு அவர்களுக்கு காலகாலத்திற்கு நல்லது செய்யனும்...அம்மா இல்லாமல் பொறுப்பா இருக்கிறார்கள் ..நல்ல இடத்தில் கல்யாண பண்ணி வைக்கனும்..நீங்க சந்தோஷமாக வாழ்வதை பார்க்கணும்..ஆயிரம் ஆசைகளை மனதில் வைத்துகிட்டு இருக்கேன்....இல்லைனா உன் அம்மா இறந்து போனப்பே நான் போய்யிருப்பேன்...கண்கள் கலங்க பேசிக் கொண்டிருந்தார்...வள்ளியின் அப்பா ...

அப்பா சாரிபா...தெரியாமல் செய்துவிட்டேன் மன்னிருங்க...பா..பிளீஸ் கெஞ்சி அழுதாள் வள்ளி ...

அவள் அழுவதை பார்த்தவர்..உன்னை அடித்து திட்டி கோபபட்டு...எல்லாம் செய்யவாள் உன் அம்மா..அவள் இருந்திருந்தாள் இந்த பிரச்சினையே இல்லை ..நான் உன்னை திட்டி கோபத்துடன் அடித்தில்லை இத்தனை வருடதிற்கு.....நம்பிக்கை விட்டுடேன் உன் மேலே...நான் செய்த ஒரே தவறு ஆரம்பத்தில் இருந்து நீ என்ன செய்கிறாய்...வீட்டில்...மாலை வந்தும் உன்னிடம் உட்கார்ந்து பேசி..உனக்கு பிடித்ததை செய்ய சொல்லிருக்கனும்..
நா வேலைக்கு போவதும் வருவதுமாக இருப்பதால் உன்னை சரியாக கவனிக்கவில்லை போல...அது தான் இந்தளவுக்கு பிரச்சினை வந்திருக்கிறது ...உன்னை கவனிச்சு வளர்த்து இருந்தால் இப்ப நீ கூனிக் குறுகி நிற்க மாட்டே ..நானும்..இப்படி பண்ணிவிட்டாளே என் பெண் அழுக மாட்டேன் ....என் மேலேயு ம் தப்பு தான்...சாரிமா ..ரொம்ப சாரி ..சொல்லவும்..

அப்பா அழுகாதிங்க..நீங்க சாரி கேட்க கூடாது ...நான் தானே தப்பு பண்ணிட்டேன்... அப்பாவின் காலில் விழுந்தாள் வள்ளி..

சசி ஜெகநாதன் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்...28
#################

வள்ளிமா..அழுகாமல் இன்னும் வேறு எதும் இருந்தால் சொல்லிவிடுடா...அப்பாவிடம் எப்படி சொல்வது என்று எல்லாம் யோசிக்க வேண்டாம்மா...அவனை சந்திக்க போது கூட யாரும் வந்திருந்தாங்களா...

வள்ளி யோசித்தவள் இல்லை பா...நான் போகும்போது அவன் வரவில்லை ...நான் அங்கு சுற்றி பார்த்து கொண்டிருந்த போது தான் வந்தான்....வேறு யாரும் அவனுடன் பார்க்கவில்லை ....

சரி அவனுக்கு எப்படி நமய வீட்டு அட்ரஸ் கிடைத்தது...தெரியுமா ...

தெரியலபா...நான் சொல்வே இல்லை ...அவனை பார்த்துவிட்டு உடனே வந்து விட்டேன்..

அவன் உன் பின்னாடி தொடர்ந்து வந்தானா...பார்த்தியா...

சாரிபா ..அவன் பேசியதை கேட்டதும் பயந்து சீக்கிரம் வீட்டுக்கு போகனும் டென்ஷன்ல கவனிக்கல...

ம்ம்...அவனை பார்த்தற்கு அப்பறம் அவன் மெசஸ்ஜ் போன் கால் பண்ணியா...

இல்லை பா...வந்தும் சுவிட்ச் ஆப் பண்ணிவிட்டேன்...இரண்டு நாள் உங்க போன்லிருந்து தான் பேசறேன்..பாப்பாகிட்ட..(தங்கை)

கொரியர் வந்த கவர் அந்த பென்டிரைவர் எடுத்து வா...பார்க்கலாம்...

அப்ப வீடியோ பார்க்க வேண்டாம் பா தலை குனிந்தபடி சொன்னாள் வள்ளி...

அவள் தலை தடவியபடி மற்றவர்கள் பார்த்து பேசி தலை குனிவதைவிட இப்ப பார்ப்பது தப்பில்லை...அவன் யாரு என்ன தெரியனும்...அது தான் ..ஆள் தெரிந்தால் எதாவது செய்ய முடியுமா பார்க்கலாம்...

ம்ம்..சொன்னவள் உள்ளே சென்று எடுத்துவந்து லேப்டாப்பில் போட்டு விட்டாள் வள்ளி....

அதைப் பார்த்தவர் இருவரும் அருகே அருகே உட்கார்ந்து பேசுவதும் சிரிப்பதும் கண்டு மனதினுளே அழுதார்...இதை எல்லாம் நான் பார்க்கும் சூழ்நிலைக்கு வந்துவிட்டதே...மனைவி இருந்தால் இந்த மாதிரி ஆயிருக்குமா...நான் அவள் கவனித்து இருப்பாள் ...நான் இப்படி கவனிக்காமல் விட்டு விட்டேன்...எண்ணியவர் ..முழுவதும் பார்த்துவிட்டு அவன் பேசியதை கேட்டவர்..இதுக்கு உடனே ஒரு முடிவு எடுக்க வேண்டும் ...என்ன செய்வது யாரிடம் ஐடியா கேட்கலாம் யோசித்தார்...

அவர் யோசிப்பதை பார்த்து என்ன செய்யலாம்பா...நான் இரண்டு நாட்களாக ஆன்லைன் போகல பா...என்ன செய்யலாம் புரியலபா...

ம்ம்...சொன்னவர் உன் முகநூலில் அவன் பேசியது ஸ்கிரீன் சாட் எடுத்துவிட்டு அவனுடைய ஐடியை பிளாக் பண்ணுமா..
உன் ஐடியை deactivate பண்ணிவிடு.. அவன் நம்பரை என்கிட்ட கொடு..அவனைப் பற்றி வேறு எதும் தெரிந்தால் சொல்லு...என் நம்பர் ஒருவர் இருக்கிறார் அவரிடம் பேசிப் பார்க்கலாம்...எதாவது ஐடியா சொல்வார்...

சாரிபா..என்னால் எவ்வளவு பிரச்சினை ...

விடுமா..இதை இப்பயாவது என்னிடம் சொன்னியே..இன்னும் நாளாகி சொல்லிருந்தால் பிரச்சினை பெரியதாக இருக்கும் ...அவனிடம் இருந்து உன்னை பற்றிய வீடியோ வாங்கி விடுனும்...உன் நம்பரை சேஞ்ச் பண்ணனும்...

இனி எதாக இருந்தாலும் அப்பவிடம் சொல்லிவிடுங்கள் ...அப்பா எப்பவும் உனக்கு துணையாக தான் இருப்பேன்...எந்த இடத்திலும் உங்க மேல் நான் வைத்த நம்பிக்கை விட மாட்டேன்...என் பெண் எப்பவும் தப்பு செய்ய மாட்டாள் எனக்கு தெரியும் ..வேலை அதிகமானாலே..என்னால் உன்னிடம் அமர்ந்து பேச நேரமில்லை ...இனி அப்பா அப்படி இருக்க மாட்டேன் ...முடிந்தவரை உன் கூட இருந்து கவனித்து நல்ல இடத்தில் உன்னை கட்டிக் கொடுக்கும் வரை பார்த்துக்கிறேன் டா...அழுகாமல் இருக்கனும்...எதையும் எதிர்த்து நிற்க கத்துக்கோ....தப்பு செய்தால் பயம்...
பதட்டம் எல்லாம்...எவனோ செய்த தப்புக்கு நீ ஏன் தலை குனிந்து கொள்ளனும்...என் பெண் எப்பவும் எதையும் எதிர்த்து நிற்பாள்...தைரியமா இரு இனி அப்பா பார்த்துக் கொள்கிறேன் ...முகத்தை கழவி விட்டு வா...சாப்பிடலாம்..அப்பறம் போய் என் நண்பரையும் பார்த்துவிட்டு விடலாம்...உள்ளே அனுப்பினார்...

.
சசி ஜெகநாதன் ...
 
Top