All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இனிதா மோகனின் "உன் விழி நானாவேன்! _கதை திரி"

Status
Not open for further replies.

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபிரெண்ட்ஸ்,
என் அடுத்த கதையான" உன் விழி நானாவேன்! " கதையின் முன்னோட்டம் இன்று பதிகிறேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி 🙏
இனிதா மோகன் தமிழினி
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
ஒரு சர்பிரைஸ் உடன் வந்துட்டேன்😍😍
என் மெளனத்தின் கவிதையே! முடிந்தவுடன் இந்த கதை வரும்.. அடுத்த வாரத்தில் முதல் யூடி போடுகிறேன்..
இதுவும் ஒரு சாதாரண காதல் கதை தான்..என் நடையில் தருகிறேன்.
கண்டிப்பாக இவர்கள் உங்களை தங்களின் மெல்லிய காதல் உணர்வால் வருடி செல்வார்கள்..
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..


உன் விழி நானாவேன் !

நாயகன்: செவ்வியன்
நாயகி : சிற்பிகா


முன்னோட்டம்

அந்தி சாயும் அந்த மாலை நேரத்தில் அந்த அரங்கமே விழா கோலம் பூண்டிருந்தது..

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற்றிருந்த ,இளம் இசையமைப்பாளர் செவ்வியனை.. கெளரவிக்கும் விதமாக அந்த விழாவை திரைப்பட சங்கத்தின் சார்பாக ஏற்பாடு செய்து இருந்தார்கள்..

திரைத்துறையின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் அங்கே தான் குழுமியிருந்தனர்..
அனைவரின் விழிகளும் விழா நாயகனின் வரவை எதிர்நோக்கி காத்திருந்தது..

சற்று நேரத்தில் நுழைவாயிலில் சிறு சலசலப்பு உண்டானது.அனைவரின் பார்வையும் அங்கே தான் தேங்கியது..

ஒலிப்பெருக்கியில் "வெல்கம் மிஸ்டர் செவ்வியன்.." என்ற சத்தமே ஓங்கி ஒலித்தது.ஆனால் அதை விட கரகோசத்தின் ஒலி விண்ணைத் தொட்டது.

இத்தனை புகழுக்கும் சொந்தக்காரனோ! எந்த செருக்கும் இல்லாமல் தன் இயல்பான வேகநடையுடன் விழா மேடையில் ஏறினான்.

பார்வையாளர்கள் அனைவரையும் பார்த்து இருகை குப்பி வணக்கம் சொல்லியவன்.தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மேடையின் நடுநயமான இருக்கையில் சென்று அமர்ந்தான்.

மேடையின் கீழ் அமர்ந்திருந்த பார்வையாளர்கள்,சில பேர் இந்த வயதில் இவ்வளவு புகழா !என்று பெருமையாகவும்,சில பேர் பொறாமையாகவும்! அவனைப் பார்த்தனர்.

இளம் நடிகைகளோ ! அவனை பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர்..

விழா இனிதே தொடங்கியவுடன் ,முக்கிய பிரமுகர்கள் எல்லாம் செவ்வியனை பாராட்டி பேசினார்கள். நினைவு பரிசையும் வழங்கி கெளரவித்தார்கள்..

இறுதியில் அவனிடம் மைக்கை கொடுத்து சில வார்த்தைகள் பேச சொன்னார்கள்.

அவனோ மைக்கி வாங்கி ஒரு நொடி விழிகளை அழுத்தமாக மூடி திறந்தான்.

பின் தன் கனீர் குரலில், "இங்கே வந்துள்ள திரைபிரமுகர்களுக்கும்,என் ரசிக பெருமக்களுக்கும் " மாலை வணக்கம்.." என்றான்.

அதை கேட்ட அவனின் ரசிகர்கள் விசில் அடித்தும்,கை தட்டி கரகோசம் எழுப்பியும், தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்.

அவனோ,அந்த சத்தம் அடங்கும் வரை அமைதியாக இருந்தான். சத்தம் ஓய்ந்த பின்"உங்களின் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள்.."என்றான்.

சிறிது நேரம் விழாவைப் பற்றியும்,தன்னை கெளரவித்த திரைபிரமுகர்களைப் பற்றியும்,பேசியவன், அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு தன் பேச்சை முடிக்கும் சமயத்தில்..

முன் வரிசையில் அமர்ந்திருந்த பத்திரிக்கையாளர்கள் அவனிடம் சில கேள்விகளை கேட்டனர்.

"சார் இந்த விருது பற்றி உங்களின் கருத்து .."என்றவரிடம்.

"என் பல நாள் கனவு நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.."என்றான்.

இன்னொருவரோ,இந்த இளம் வயதிலேயே இந்த விருது கிடைத்ததை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் .."என்றார்.

அவனோ,இந்த புகழ் என் தலைக்கு ஏறக்கூடாது என்றும், வெற்றியையும்,தோல்வியையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும் என்றும் நினைக்கிறேன்.."என்றான்.

"சார் அடுத்தது என்ன படம் செய்றீங்க.." என்றவரிடம்.

"இப்போதைக்கு எதுவும் இல்லை.. ஒரு மூன்று மாதம் கழித்துத் தான் அடுத்த படம் பற்றி சிந்திக்கனும்.." என்றான்.

ஒருவர் எழுந்து "சார் உங்கள் குரலில் ஒரு பாடல் பிளீஸ் .."என்றார்.

செவ்வியனோ, தன் கண்களை மூடியபடி தனது காந்த குரலில்,
"ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்...
கேட்கும் போது எல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்...
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்..
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்..
ஞாபகங்கள் மழையாகும்..
ஞாபகங்கள் குடையாகும்...
ஞாபகங்கள் தீமூட்டும்..
ஞாபகங்கள் நீருற்றும்...
என்று தன்னை மறந்து ரசித்து பாடினான்..

அரங்கில் இருந்தவர்கள் அனைவரும், அவனின் வசீகர குரலில் உறைந்து போனார்கள்.

அவன் பாடி முடித்த பின் ,ஒரு நிமிடம் எந்த சத்தமுமே இல்லை. குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்குமளவு அமைதி நிலவியது..

அடுத்த நிமிடம் அத்தனை பேரும் எழுந்து நின்று தங்கள் கரகோச சத்தத்தை வானை எட்டச் செய்தனர்.

அடுத்த கேள்வி கேட்க பத்திரிக்கையாளர் ஒருவர் எழுந்து போது செவ்வியனின் உதவியாளன் நம்பி அவன் அருகில் ஓடிவந்து நின்று, பத்திரிகையாளர்களை பார்த்து, "நோ கொஸ்டியன்.."என்று கூறியவன்.

செவ்வியன்னிடம் திரும்பி, பவ்வியமாக" சார் டைம் ஆகிடுச்சு போகலாம் .."என்றான்.

செவ்வியனும் "ம்ம்! "என்றவன். பார்வையாளர்களை பார்த்து தன் இருகைகுப்பி வணங்கி விடை பெற்றான்.

அவன் மேடையை விட்டு கீழே இறங்க போகும் சமயத்தில் "வியன் சார் லாஸ்ட் ஓன் கொஸ்டியன் பிளீஸ் சார் .."என்று ஒரு இளம் பத்திரிக்கையாளர் கேட்டார்.

செவ்வியனோ, பதிலேதும் சொல்லாமல் கேள்வியாக அவனைப் பார்த்தான்.

"சார் உங்கள் திருமணம் எப்போது?நீங்கள் அந்த பாடலை ரொம்ப ரசித்து பாடுனீர்களே..யாரையாவது காதலிக்கிறீர்களா? எல்லாரும் உங்கள் திருமணத்தை ஆவலாக எதிர்பார்த்துக்காத்திருக்கிறார்கள்.." என்றவனிடம்.

ஒரு நொடி..ஒரே ஒரு நொடி ..தன் கண்களை இறுக மூடித் திறந்தான்.

அந்த நொடி அவன் மனம் முழுவதும் அவளின் ஞாபகம் மட்டுமே குடி கொண்டது. அடுத்த நொடி அவர்களை பார்த்து மென் புன்னகை புரிந்தவன், பதில் ஏதும் சொல்லாமல் மேடையை விட்டு வேகமாக இறங்கி வாயிலை நோக்கி சென்றான்.

**********************************************

"என் பாப்புக் குட்டி.. மணி எட்டாகிறது எழுந்திருக்கிறீங்களா.." என்றவர் .கையில் காப்பி கோப்பையுடன் தன் அன்பு மகளை எழுப்பிக் கொண்டு இருந்தார்.

அவளோ ,மெல்ல சோம்பல் முறித்தபடியே படுக்கையில் எழுந்து அமர்ந்தவள்,தன் தந்தையின் கையிலிருந்த காபிக் கோப்பையை வாங்கி அருகிலிருந்த மேஜையில் வைத்த படியே..

"மிஸ்டர் மருதவளவன்.. உங்களுக்கு எத்தனை முறை சொல்லி இருக்கேன்..நான் எழுந்து பின் காபி போட்டு குடித்துக் கொள்கிறேன் என்று.."என தன் தந்தையை கடிந்து கொண்டாள்.

அவரோ,"பாப்பு உனக்கு காபி என்றால் ரொம்ப பிடிக்குமே ..அது தான் நீ எழுந்து கலக்கும் வரை வெயிட் செய்ய வேண்டாமேன்னு நானே கலந்து எடுத்து வந்தேன் அதனால் என்னடா .."
என்றார்.

அவளோ,"உங்களை திருத்தவே முடியாது.." என்று சலிப்புடன் கூறிவிட்டு பல் தேய்க்க வாஷ்பேஷன் நோக்கி சென்றாள்..

அவரோ,தன் மகள் என்னமோ தன்னை புகழ்ந்தது போல் ..கண்களில் கனிவு பொங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

அவரின் உயிரே அவள் தானே!அவள் தன் மீது வைத்திருக்கும் பாசத்திற்கும்,தான் அவள் மீது வைத்திருக்கும் பாசத்திற்கும் எல்லை ஏது!

*****************************************

செவ்வியனுக்கு அன்று அளவில்லாத மகிழ்ச்சியாக இருந்தது.

எத்தனை வருடங்கள் கழித்து அன்று தான் அவன் வெளியில் வந்து இருக்கிறான்.

வெளிக்காற்றை சுவாசித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது .என்று நினைத்த படியே அவளுடன் நடந்து வந்தான்..

அவளோ,அங்கு இருக்கும் கடைகள் ஓவ்வொன்றை பற்றியும் கதை சொல்லியபடியே அழைத்து வந்தாள்..

அவளின் தேன் குரலும்,அவளிடமிருந்து வந்த பூ வாசமும் அவனை போதை கொள்ள செய்தது.
*************************************


.விரைவில் யூடி உடன் வருகிறேன் 😍😍15094
 
Status
Not open for further replies.
Top