All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
தமிழரின் பண்பாட்டு விழாவான தைத்திருநாளாம்! பொங்கலன்று, ஆடலரசு குடும்பம் விடிய காலையே !எழுந்து, குளித்து புத்தாடை அணிந்து, வாசலில் வண்ணகோலமிட்டு,அங்கே மூன்று கல் அடுப்பு வைத்து, மஞ்சள் கொத்து கட்டிய மண்பானையில், சர்க்கரை பொங்கல் வைத்தனர் .
தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பெரியோர் வாக்குக்கு ஏற்ப,தை முதல்நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்..
வழக்கம் போல தன் அத்தைக்கு பொங்கலையும், தங்கள் வீட்டு பலகாரத்தையும் கொடுத்து வர நிறையாழி சென்றாள்..
அத்தை வீட்டை தொட்டதுமே,வாசலிருந்தே ,"அத்தை..அத்தை.." என்று அழைத்தபடியே சென்றாள்..
"அதெல்லாம் நேரமாவே வெச்சாச்சு அத்தே..அம்மா பொங்கலையும் ,பலகாரத்தையும் உங்களுக்கு கொடுத்து வரச் சொன்னாங்க.."
"ஏம்மா..உதி அங்கு வந்தா..கொடுத்து இருக்கலாமே!வயசுப்பிளளை உன்னை இந்த அண்ணி எப்பப் பாரு அனுப்புறாங்களே.." என்று அங்கலாய்த்தவரிடம்..
"அத்தை அதனாலென்னா? நான் தான் உங்களையும் பார்த்ததுட்டு போலாம்ன்னு வந்தேன்.. அப்புறம் அதை விட ஒரு பெரிய விஷயம் என்ன தெரியுமா?" என்ற மருமகளை புரியாமல் பார்த்தவரிடம்..
"அங்கிருந்தா வேலை செய்யனும்,இல்லைன்னா செந்தி என்னைத் திட்டித் திட்டியே! கொன்னுடுவாங்க..அது தான் நானே கொடுத்துட்டு வரேன்னு, தப்பிச்சு ஓடிவந்துட்டேன்.." என்று கண் சிமிட்டியவளை பார்த்து.. "போக்கிரி.." என்று செல்லமாக அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினார்.
நிறையோ,வீட்டையே சுத்தி ..சுத்தி பார்த்துட்டே.. தாழ்குழலியுடன் உள்ளே சென்றவள் ,தயங்கி..தயங்கி, "அத்தே வீட்டில் யாரும் இல்லையா..?" என்றாள்.
தாழ்குழலியோ," யாரை கேட்குறே ..ஓ! உதியா? அதை ஏன் மா கேட்குறே.. காலையிலே பொங்கல் வைத்து சாமி கும்பிட்டதும், அவசரமாக சாப்பிட்டவன், வெளியில் போய்ட்டு வரேன்னு போனான். போனைக் கூட எடுக்காமல் போய்ட்டான் மா..இன்னும் வரலை.."என்று புலம்பினார்.
"ஓ!அப்படியா.." என்றவள் மனதிற்குள் 'நம்பியார் வீட்டில் இல்லையா? அப்போ கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்கலாம்..' என்று நினைத்தாள்.
சிறிது நேரம் தாழ்குழலியுடன் பேசிட்டு இருந்தாள்..தாழ்குழலியோ, மருமகளிடம் பேசினாலும், அவரின் கண்கள் வாசலையே பார்த்ததுட்டு இருந்தது..
நிறையும் அதைக் கவனித்து விட்டு ,"அத்தை ஏன் ?ஒருமாதிரி இருக்கீங்க .." என்றவளிடம்..
"உதியை வேறு இன்னும் காணோம்மா.. அதுதான் ஏனோ ஒரு மாதிரி மனசுக்குள் கொஞ்சம் பயமா இருக்கும்மா.."
"அத்தே அவர் என்ன சின்னப்பையனா! வந்துருவார் ..நீங்க பயயப்படாதீங்க .."என்றவளிடம்.
"என்னன்னு தெரியலைம்மா.. ஒரு போன் வந்துச்சு ,அதிலிருந்து அவன் முகமே சரியில்லை.நான் கேட்டதற்கும் ஒன்னுமில்லைம்மா என்றானே தவிர , எதுவும் சொல்லலை.மனசு கஷ்டமா இருக்கு.."என்று கலங்கியவரிடம் நிறையோ,என்ன சொல்லி சமாதான்ப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தாள்..
"அத்தே ஏதாவது ரொம்ப முக்கியமான விசயமா இருந்திருந்தால், அவர் கண்டிப்பா சொல்லியிருப்பார் நீங்க வருத்தப்படாதீங்க .."என்றவள் .
தாழ்குழலியோ,"அவன் எப்போதும் எந்த கஷ்டத்தையும் வெளியில் காட்டமாட்டன் மா.. அதுவும் எனக்கு உடம்பு முடியாமல் போனதிலிருந்தே, அவன் கவலைகளை என்னிடம் சொல்வதே இல்லைம்மா.." என்றார் வருத்ததுடன்..
"அத்தை ப்ளீஸ் நீங்க வருத்தபடாதீங்க..அது உங்க உடம்புக்கு நல்லதில்லை ..எந்த பிரச்சினையும் இருக்காது. அவர் வந்துடுவார்.." என்று தாழ்குழலியை தேற்றினாள்..
நிறையாழியோ,செந்தழைக்கும் போன் செய்து, தான் வருவதற்கு தாமதமாகும்.. என்று தெரிவித்தவள்,உதயனம்பி வரும் வரை அங்கேயே இருந்தாள்..
உதயனம்பியோ ,மாலை இருட்டின பின்பு தான் வீட்டுக்கு வந்தான்..வந்தவன் முகமே பொழிவிழந்து,வாடி வதங்கியிருந்தது.
நிறையை அந்த நேரத்தில் அங்கு பார்த்தவனுக்கு வியப்பாக இருந்தது.. ஆனால், எதையும் காட்டிக்காமல் தன் அறைக்குச் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்..
தாழ்குழலியோ, மகனைக் கண்டதும் எதுவும் கேட்காமல் அவனுக்கு உணவை எடுத்து வைத்தார்..அவருக்கு மகனின் முகமே காட்டிக் கொடுத்தது.மதியம் எதுவும் உண்டிருக்க மாட்டனென்று..
உதியநம்பியும் ,அமைதியாக தாய் கொடுத்த உணவை உண்டுமுடித்தான்..தாழ்குழலியோ ,அவன் உண்டு முடிக்கும் வரை அருகிலேயே அமர்ந்து பறிமாறினார்..
நிறையாழியும், அவன் முகத்தை பார்த்தே கண்டு கொண்டாள்..அவன் ஏதோ பிரச்சினையில் இருக்கிறானென்று..
தாழ்குழலியோ, மகன் உண்டு முடித்ததும், "ஏம்பா இத்தனை நேரம்! எங்கே போனாய்..போனையும் வேறு வைத்துட்டே போய்டே.. ஏதாவது பிரச்சினையா..உன் முகமே சரியில்லையே .."என்று அடுக்கடுக்கா கேள்வி கேட்டவரிடம்..
"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லைம்மா..ஒரு அவசர வேலை! அது தான் வர தாமதமிவிட்டது..நீங்க எதையும் போட்டு மனசில் குழப்பிக்காதீங்க.." என்றவனிடம்..
"ஆமாம், நீ எப்ப தான் என்னிடம் சொல்லியிருக்கே.." என்று வருந்தியவரிடம்..
"அம்மா உங்ககிட்ட சொல்லாமல் நான் யாருகிட்ட சொல்லப் போறேன்..நீங்க மனசை அமைதியாக வைசசுக்கோங்க..அது தான் உங்க உடம்புக்கு நல்லது.." என்றான்..
அவரோ,"எப்ப பாரு இதையே சொல்லி என் வாயை அடை.." என்றவர் மகன் உண்ட பாத்திரங்களை சுத்தம் செய்தார்.
நிறையோ ,தாயும் மகனும் பேசுவதை கவனித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்..உதியின் முகமே சொன்னது அவன் எதையோ மறைக்கிறானென்று..
தாழ்குழலியோ, நிறையையும் சாப்பிட வைத்து தான் அனுப்பி வைத்தார்.இந்த முறை தாழ் குழலி சொன்னவுடன் நிறை எந்த எதிர்ப்பையும் காட்டாமலேயே ! உதியனம்பியுடன் அமைதியாக வண்டியில் சென்றாள்.
உதயனம்பியோ ,நிறை பேசாமல் தன் வண்டியில் ஏறியது அவனுக்கு மிகுந்த ஆச்சரியத்தை தந்தது..அவளின் அமைதியும் வியப்பளித்தது..
நிறையாழியோ மனதிற்குள் , கேட்கலாமா? வேண்டாமா? என்ற யோசனையுடனேயே இருந்தாள்.அத்தையின் கலங்கிய முகம் அவளின் கண்முன்னே வந்து போனது..
இனி ஒரு முறை தன் அத்தை இப்படி கலங்க கூடாது, என்று எண்ணியவள்.. ஒருவாறு தன் தைரியத்தைக் கூட்டிக் கொண்டு, "வெளியில் போகும் போது உங்களால் சொல்லிட்டு போக முடியாதா? அத்தை எப்படி கலங்கிவிட்டார்கள் தெரியுமா? "என்றாள்.
அவனோ, ஒரு நிமிடம் திகைத்துப் போனான்.. அம்மாவுக்காக என்றாலும், நிறையாழியா! தன்னிடம் இவ்வளவு உரிமையுடன் கேள்வி கேட்கிறாள் என்று நினைத்தவன்..
"கொஞ்சம் அவசர வேலை அது தான்.."என்றான் தயக்கத்துடன்..
"என்ன அவசர வேலை என்றாலும், அத்தையிடம் சொல்லிட்டு போவது தானே..போனையும் வேறு வைத்துட்டு போய் இருக்கீங்க .."என்றாள் கோபத்துடன்.
"இனிமேல் இது போல் நடக்காது நிறை..சாரி.."என்றவனுக்கு,காலையிலிருந்து அவன் பட்ட மன வேதனைக்கு! அவள் உரிமையாய் தன்னை கேள்வி கேட்டது, அவனின் மனக் காயத்திற்கு மருந்தாக இருந்தது..
"என்னிடம் சாரி கேட்டு என்ன பயன் ..அத்தையின் உடல் நலம் பற்றி நன்கு தெரிந்திருந்தும், நீங்களே இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொள்வது தான், எனக்கு எரிச்சலாக வருது.." என்றாள்..
அவனோ,ஓகே ..ஓகே.. நான் ஏதோ டென்ஷனில் சொல்லாமல் போய்ட்டேன்.இனி கவனமாக நடந்து கொள்கிறேன்.." என்றவன் அவனின் வழக்கமான குறும்பு தலை தூக்க..
"நீ எப்போதும் என் கூடவேயிருந்து என்னை இப்படி கேள்வி கேட்டால், நான் ரொம்ப பொறுப்பா நடந்துக்குவேன் .."என்றான் சிரிப்புடன்..
அவளோ, "அத்தையிடம் போல் என்னிடமும் மறைக்காதீங்க..சொல்ல விருப்பம் இல்லைன்னா வேண்டாம்.." என்று முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே போனவளை, உதயனம்பி அவளின் கைகளை பிடித்து தடுத்தான்.
"நிறை நீ கேட்டதே எனக்கு மகிழ்ச்சி தான்..ஆனால் நீ நினைக்கும் அளவு எதுவும் பெரிதில்லை..உன்னிடம் போய் நான் மறைப்பேனா.."என்று மென்மையாக கூறினான்.
அவளோ,"ம்ம்.."என்றவள் அவனின் பிடியிலிருந்த தன் கைகளை மெல்ல உருவ முயற்சித்தாள்..
அவனோ,அவள் முயற்ச்சியை தடுத்தவன், அவளின் கைவிரல்களை தன்உள்ளங்கையில் வைத்து மென்மையாக அழுத்தினான்.. "நிறை உண்மையாளுமே நீ கவலைப்படும் படி எந்த பிரச்சினையும் இல்லை..என்னை நம்பு.."என்றவன் தன்னையும் அறியாமல் குனிந்து அவள் கைகளில் பட்டும் படாமல் மென்மையாக தன் இதழ்களை பதித்தான்.
நிறையோ, அவனின் செயலில் விதிர்விதித்து போனாள்..சட்டென்று தன் கைகளை உருவிக்கொண்டு வீட்டிற்குள் ஓடினாள்..
உதயனம்பிக்கோ ,அப்போது தான்!தன் செயல் புரிந்தது.. 'அச்சோ போச்சுடா தன் அவசரபுத்தியால் எல்லாம் கெட்டது..இன்று தான் அவள் இவ்வளவு பேசியிருக்கிறாள்.இனி சுத்தமாக தன்னை வெறுத்து விடவாள்' என்று அவன் மனம் புலம்பியது..
அப்படி ஒரு காரியம் செய்வதற்கு,நிறையின் அன்பான பேச்சும்,அருகாமையும் தான் அவனை நிலைகுழைய வைத்து விட்டது..
அவனுக்கு தலைபோகும் பிரச்சினை தான்.. ஆனால் அதை சொல்லி தாயையும்,தன் மனம் கவர்ந்தவைளையும் வருத்தப்பட வைக்க வேண்டாம் என்று எண்ணித் தான், அனைத்தையும் மறைத்தான்..
ஆனால் அவனின் மனக்கவலைக்கு மருந்தாக அவளின் அக்கறையான பேச்சு அவன் புத்தியை மழுங்கடிதது..இப்படி ஒரு செயலை செய்ய தூண்டிவிட்டது.
ஆடலரசும்,செந்தழையும் வழக்கம் போலவே அவனை வரவேற்று உபசரித்தனர்..
உதயனம்பி வீட்டிலிருக்கும் வரை நிறை அவள் அறையிலிருந்து வெளியே வரவே இல்லை..
உதயனமபிக்கோ, தன் செய்த செயல் அவன் மனதை சுட்டது.. அதிக நேரம் அங்கே இருக்க முடியாமல் கிளம்பிவிட்டான்..இன்னும் சிறிது நேரமிருந்தால் அவனின் அன்பு மாமா எளிதாக அவன் கவலைகளை கண்டு கொள்வார்..இந்த சூழலில் அவரிடம் சொல்லி அவரை கலங்க வைக்க வேண்டாமென்று நினைத்தான்..
நிறையோ, தன் அறையில் உதியனம்பி இதழ் பதித்த தன் கைகளை அழுந்த சோப்பு போட்டு கழுவிக் கொண்டிருந்தாள்..
மனமோ, அவனை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தது.. "எவ்வளவு தைரியமிருந்தால் அவன் இப்படி ஒரு காரியம் செய்வான்..இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பார்கள் என்று சும்மாவா சொல்லி வைத்திருக்காங்க..பாவம் ஏதோ பிரச்சினை என்று கேட்கப் போனால், என்ன செய்கிறான் பார் ராட்சசன்.. எப்படா இப்படி செய்யலாம்ன்னு காத்திருந்தான் போல..ஒரு நாள் வசமா மாட்டுவான் தானே! அப்போ வைத்ததுக் கொள்கிறேன்.அத்தைக்காக பார்த்தால் ரொம்ப ஓவரா போறான்.." என்று வாய்விட்டு புலமபிக் கொண்டிருந்தாள்..
அவள் என்ன கழுவியும் அவன் இதழ் பதித்த இடத்திலிருந்த குறுகுறுப்பு மட்டும் அப்படியே இருந்தது..அந்த உணர்வை அவளால் தாங்க முடியாமல் தவித்தாள்..
உதயனம்பியோ, ஒருத்தி தன்னை கரித்துக் கொட்டிக் கொண்டிருப்பது தெரியாமல்..தன் அறையில் சாளரத்தின் வழியாக நிலவின் அழகை பார்த்தபடி நின்றிருந்தான்..அவன் மனமோ,நிறையையே சுற்றி..சுற்றி வந்தது..
அவள் தனக்கு கிடைப்பாளா? என்று அவனுக்கு தெரியவில்லை..ஆனால் அவள் தன் வாழ்வில் வந்தால் அதை விட ஒரு பெரிய மகிழ்ச்சி! இந்த உலகில் அவனுக்கில்லை என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.
அவளின் கைகளின் மென்மை..இன்னும் அவன் இதழ்களை விட்டு போகவில்லை..மெல்ல தன் இதழ்களை வருடியவன்.. மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
அவளையே நினைத்துக் கொண்டு படுக்கையில் படுத்தவனுக்கு, அவனின் பிரச்சினைகள் கூட மறந்து தான் போனாது..மனம் அவளின் நினைவில் இனிப்பாய் இனித்தது..
காலம் அவர்களுக்கு என்ன வைத்து காத்திருக்கோ?
தொடரும்..
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Hi friends, தொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயம் 4 பதிந்துள்ளேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
போன அத்தியாத்திற்கு லைக் மற்றும் காமெண்ட் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
எத்தனை பேர் படிக்கிறீர்கள் என்றே தெரியவில்லை..கதை பிடித்து இருக்கா என்று படித்தவர்கள் கொஞ்சம் சொன்னால் எனக்கு ஊக்கமாக இருக்கும்.. உங்கள் கருத்துக்கள் தான் எனக்கு அடுத்த அத்தியாயத்தை விரைவாக பதிவிட ஊக்கத்தை கொடுக்கும்.. கருத்து சொல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்..
இனிதா மோகன் தமிழினி
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
பொழுது புலராத இளங்காலை நேரம்! ஊரின் நடுநயமாக வீற்றிருந்த அந்த பெரிய மண்டபம் ,விழாக் கோலம் பூண்டிருந்தது.
திருமண மண்டப நுழைவாயிலின் இருபுறம், வாழைமரமும்! தோரணமாக, தென்னம்பாளையும் கட்டப்பட்டிருந்தது..அவை காற்றில் ஊஞ்சல் ஆடும் பொழுது !திருமணத்திற்கு வருவோரை தலை அசைத்து வரவேற்ப்பது போல் அழகாக இருந்தது.
மண்டபத்திற்குள் நாதாஸ்வர ஓசை செவிகளை மென்மையாக வருடிக் கொண்டிருந்தது.. மணவறையில் மாப்பிள்ளை சேத்தன் பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான்.. அருகில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன், பச்சை நிறத்தில் பட்டுஉடுத்தி பனிநிலவு பொன் சிலையாக அமர்ந்திருந்தாள்.
ஆடலரசும்,செந்தழையும்..சொல்ல முடியாத மனநிலையில் மேடையில் நின்றிருந்தார்கள்.
இத்தனை நாள்! தாங்கள் சீரும் சிறப்புமாக வளர்த்த மகள்! இன்று முதல் இன்னொருவரின் வீட்டுக்கு வாழ போவதை நினைத்து மகிழ்ந்தாலும்,ஏனோ ஒரு வெறுமை அவர்கள் மனதை பிசைந்தது..
பெண்பிள்ளைகளை பெற்றால் மட்டும் ஏன்னிந்த பிரிவோ?என்ற கேள்வி மனதை குடைந்தாலும், மகள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமே! என்றபரிதவிப்பும் அவர்கள் கண்களில் தெரிந்தது..
தாழ்குழலியோ, மண்டபத்தில் ஓர் ஓரமாக அமர்ந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்..அவரின் மனமோ! தன் அண்ணன்,அண்ணியின் மனநிலையை நினைத்து கலங்கியது..
உதயனம்பியோ,நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தான்..அவன் அணிந்திருந்த மெரூன் சட்டையும் ,பட்டு வேட்டியும் அவனுக்கு மிக நேர்த்தியாக பொருந்தியிருந்தது! காண்போரைக் கவர்ந்திழுக்கும் வசீகரத்துடன் வலம் வந்தான்.
அவனின் கண்களோ,அடிக்கடி மெரூன் பட்டுத்தி தேவைதையாக ஜொலித்த தன் உயிரானவளின் அழகை ரசித்தது!
நிறையாழியோ, உதயனம்பி அன்று துணிக்கடையில் வேண்டாமென்று சொன்ன அந்த பட்டுப் புடவையைக் தான் உடுத்தியிருந்தாள்..
உதயனம்பியோ ,மனதிற்குள் அவன் ஆசைப்பட்ட மாதிரியே நடந்ததை நினைத்து சிரித்துக் கொண்டான் .
உதியனம்பிக்கு நிறையாழியைப் பற்றி நன்றாக தெரியும்.. தான் வேண்டாமென்று சொன்னால்! அதைத் தான் அவள் எடுப்பால் என்று நினைத்தான். அதனாலேயே தனக்கு மிகவும் பிடித்த அந்த புடவையை வேண்டாமென்று சொன்னான்.
நிறையாழியும் அவன் கூற்றை பொய்யாக்காமல்! அவன் வேண்டாமென்றதையே தேர்ந்தெடுத்தாள்..உதயநம்பி
அவள் உடை எடுத்த பின்னரே, அவளின் உடைக்கு பொருத்தமாக! அதே நிறத்தில் தனக்கும் சட்டை எடுத்தான்..
அவன் எண்ணியபடியே! இன்று இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்தே மண்டபத்தை வலம் வந்தனர்..
நிறையாழிக்கும் உடை விஷயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மனதில் சந்தேகம் எட்டிப் பார்த்தது..'தான் நினைத்ததுப் போல் மட்டுமிருந்தால்! அந்த நம்பியாரை இன்று உண்டு இல்லைன்னு பண்ணலை நான் நிறையாழி இல்லை..' என்று மனதிற்குள் சபதமிட்டுக் கொண்டாள்..
அவளின் சந்தேகத்தை உறுதிப்படுத்துவது போல்! தன் அருகிலிருந்த பூவணி, "நிறை என்ன நீயும் அண்ணாவும் ஒரே கலரில் டிரஸ் போட்டிருக்கீங்க..செம சூப்பராக இருக்கு..அண்ணா வேறு உன்னையே ரசித்து..ரசித்து பார்க்கிறார் .."என்றவள் நிறையின் கோப முகத்தைக் கண்டு கப்பென்று வாய் மூடினாள்..
குறித்த நேரத்தில் தமிழ் முறைப்படி இனிதே திருமணம் நடைபெற்றது.. சேத்தன் ,பனிநிலவை பெரியோர்களின் ஆசியுடன் தன் மனைவியாக மங்களநாண் பூண்டு ஏற்றுக் கொண்டான்.
மணமக்களின் பெற்றோர்களோ! தம் மக்கள் உலகிலுள்ள அத்தனை இன்பத்துடன் பெரு வாழ்வு! வாழ வேண்டுமென்று மனதார வாழ்த்தினார்கள்..
நிறைக்கோ, தன் உடன்பிறந்தவளின் திருமணத்தில் மகிழ்ந்தாலும்,இனி தன் அக்கா தன்னுடன் இருக்க மாட்டேளே! என்ற எண்ணம் மனதை வலிக்க வைத்தது..
அவளின் கண்கலங்குவதை கண்ட பூவணி,"நிறை இது தாண்டி எதார்த்தம். அதை ஏற்றுத் தான் ஆகனும் ..வருத்தப்படாதே.." என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாள்..
மணமேடையில் மணமக்கள் மாலைமாற்றும் நிகழ்வு நடந்தது..இளவட்டங்கள் எல்லாம் அங்கே கூடி அந்த இடத்தையே ரணகலம் செய்து கொண்டிருந்தார்கள்..
உதயநம்பி,நிறையாழி,பூவணி எல்லோருமே மேடையில் தான் இருந்தார்கள்..
சேத்தன் எளிதாக பனி நிலவின் கழுத்தில் மாலையை போட்டுவிட்டான்..ஆனால் பனிநிலவால் சேத்தன் கழுத்தில் மாலையிட முடியவில்லை..
உதியனம்பி தான் அதற்கு காரணம்..சேத்தனை தன்னால் முடிந்தவரை உயரமாக தூக்கி கொண்டிருந்தான்..பனிநிலவால் அந்த உயரத்திற்கு எட்டி மாலையிட முடியவில்லை..
நிறையோ, தன் அக்கா தடுமாறுவதை கண்டவள், உதயனம்பியை முறைத்தபடியே சேத்தனிடம், "மாமா அக்காவிடம் நீங்க தோத்தால் தான், வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.ஃபிளீஸ் மாமா பாவம் அக்கா.. கொஞ்சம் தலையை குனியுங்க.." என்றாள்..
சேத்தனோ, தூக்கி வைத்திருக்கும் உதயனம்பியை திரும்பி பார்த்தான்.ஆனால், அவனோ! அசையாமல் அப்பட்டியே நின்றான்.. சேத்தன் என்ன செய்வதென்று தெரியாமல் பாவமாக நிறையை பார்த்தான்..
பூவணியோ, நிறையின் காதுகளில், "நிறை நீ உன் மாமாவிடம் கேட்பதற்கு பதிலாக, நம்பி அண்ணாவிடம் இப்படிக் கேளு அடுத்த நொடி நடப்பதை பாரேன்.." என்றாள்..
நிறையோ, அவளை முறைத்தாளும், அடுத்த நொடி பூவணி சொன்னதை செய்யலாமா? என்று யோசித்தாள்.
உடனே உதயனம்பியிடம், "உதி மாமா ஃப்ளீஸ் எனக்காக.." என்று அவன் கண்களை பார்த்துக் கொண்டே மனதை மயக்கும் குரலில் கேட்டாள்..
உதயனம்பியோ, ஒரு நொடி நிறை தன்னை மாமா என்று அழைத்ததில் திகைத்தாளும், அடுத்த நொடி சேத்தனை வெகுவேகமாக கீழே இறக்கினான்.
நிறையோ, தான் சொன்ன அடுத்த நொடி சேத்தனை கீழே இறக்கவிட்டதை கண்டு அதிர்ந்தாள்.தன் வார்த்தைக்கு அவன் மதிப்பளித்தை நினைத்து ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டாள்..தன்னை எவ்வளவு உயர்வாக நினைக்கிறான் என்று நினைக்கையில் மனதில் இனம் புரியா உணர்வொன்று அவளை ஆட்கொண்டது..
பூவணியோ,தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததவளை,லேசாக இடித்து" நிறை நான் சொன்னேன் அல்லவா?நீ சொன்னவுடன் அண்ணா எப்படி கேட்டாரென்று பார்த்தாயா?"என்று கூறியதைக் கேட்டுக் கொண்டே நம்பியை பார்த்தாள்..
சடங்குகள் எல்லாம் முடிந்தவுடன் மணமக்கள் திருமணத்திற்கு வநதவர்களுடன் போட்டோ எடுப்பதில் மும்மறமானர்கள்..
குடும்ப படம் எடுக்கும் பொழுது, ஆடலரசு தன் தங்கை குடும்பத்தையும் தங்களுடனே நிறுத்திக் கொண்டார்..
உதயனம்பியோ,யாருடைய கவனத்தையும் கவராமல் நிறையின் அருகில் நின்று நிழற்படம் எடுத்துக் கொண்டான்..
நிறையோ, குழப்பத்துடனேயே வலம் வந்தாள். உதியனம்பி நினைப்பது போல், நடப்பதற்கு என்றுமே வாய்ப்பில்லை என்று நினைத்தாள்.
தன் நினைவிலேயே சுழன்று கொண்டிருந்தவளை, செந்தழை அழைத்து ஸ்டோர் ரூமில் சில பொருட்களை எடுத்து வரச் சொன்னார்..
நிறையோ,துணைக்கு பூவணியை தேடினாள். அவளை எங்குமே காணவில்லை..சரி..தானே எடுத்துவரலாம் என்று சென்றாள்,அங்கு உதயனம்பி இருப்பதை அறியாமல்..
உதயனம்பியோ,வெகு மும்மரமாக மீதியான பொருட்களை பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான்.
நிறையாழி வந்ததை முதலில் அவன் கவனிக்கவில்லை.
நிறையாழியோ,அவனை அங்கு கண்டதும் ஒரு நொடி திகைத்து நின்றாள். மனதிற்குள் இன்று இவனிடம் தெளிவாக பேசிவிட வேண்டும் என்று எண்ணினாள்.
உதயனம்பியோ,தன் அருகில் நிழலாடுவதை கண்டு நிமிர்ந்தவன்,நிறையை அங்கு கண்டு வியந்தான்..
நிறையோ தன்னை வியப்பாக பார்த்தவனிடம் தன் தாய் கேட்ட பொருட்களை எடுத்துச் தரச் சொன்னாள்.
அவனோ, அவளிடம் வம்பு வளர்க்கும் பொருட்டு, "அப்போது போல் இப்போதும் என்னை மாமான்னு சொல்லு எடுத்து தரேன் .."என்றான்.
அவளோ, "அதுயெல்லாம் முடியாது..அப்போது என் அக்காவுக்காத் தான் சொன்னேன்.."என்று கூறியவள் திரும்பிச் செல்ல முயன்றாள்..
அவனோ, சட்டென்று அவளின் கைபிடித்து தடுத்து, ""சரி..சரி..வெய்ட் பண்ணு எடுத்து தரேன்.." என்றவன் அவள் சொன்னப் பொருட்களைத் தேடினான்..
நிறையோ, யோசனையுடன் தன் மனதில் அரித்த சந்தேகத்தை கேட்டேவிட்டாள்."நீங்க ஏன் ?என் சேலை கலரிலே சட்டை போட்டு இருக்கீங்க .."என்றாள்..
அவனோ,தேடுவதை நிறுத்திவிட்டு,அவளை பார்த்தவன்,"நான் கேட்க வேண்டிய கேள்வியை நீ கேட்கிறே..இப்பச் சொல் ஆமாம் நீ ஏன்? என் சட்டைக் கலரில் புடவை கட்டியிருக்கே .."
"பேச்சை மாத்தாதீங்க , நான் தான் முதலில் கேட்டேன். பதில் சொல்லுங்க .."என்றாள்.
அவனோ, பதிலே பேசாமல் நிற்கவும்,"ஓ! அது தான் நான் இந்தப் புடவையை எடுத்தவுடன் நக்கலாக சிரித்தீங்களா! உங்களுக்கு எவ்வளவு தைரியம்! வேண்டுமென்றே உங்களுக்கு பிடித்த டிரஸை என்னை எடுக்க வைத்தீங்க.." என்று முகம் சிவக்க நின்றவளிடம்..
"இது என்னடா வம்பா போச்சு..நீயா ஒரு காரணத்தை நினைத்துக் கொண்டு எங்கிட்ட வேனும்ன்னு சண்டை போடாதே.."
"நான் ஒன்னும் வேனும்ன்னு சண்டை போடலை..உண்மை அது தான்! அது உங்களுக்கே, நல்லாத் தெரியும் .."என்றவளிடம்..
"அச்சோ! நீ இவ்வளவு புத்திசாலியாக இருந்தால் நான் என்னமா செய்யட்டும்..வருங்காலத்தில் என்பாடு திண்டாட்டம் தான் போல்..இருந்தாலும் என் குழந்தைகளுக்கும் இந்த அறிவு இருக்கும்னு நினைக்கும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷமா இருக்கு.." என்றான் உதட்டோரம் சன்ன சிரிப்புடன்..
நிறைக்கோ,அவன் சொல்வது முதலில் புரியவில்லை..புரிந்தவுடன் அவனை எரித்து விடுவது போல் பார்த்தவள்," நீங்க நினைப்பது கனவிலும் நடக்காது ..தேவையில்லாமல் மனதில் ஆசையை வளர்த்துக்காதீங்க .."என்றாள் கோபமாக.
அவனோ,"நடக்குமா?நடக்காதோ? அதை காலம் முடிவு செய்யட்டும் . அப்போது அதை பாரத்துக்கலாம்.இந்தா, நீ கேட்டது.." என்று அவள் கேட்ட பொருட்களை அவளின் கைகளில் திணித்தான்..
அவளோ, கோபத்துடன் "உங்களுக்கு நல்ல முறையில் சொன்னால் புரியாதா?வீணா கஷ்டப்படுவீங்கன்னு சொன்னா .."என்றவளின் பேச்சு அப்படியே பாதியில் நின்றது..
உதயனம்பியோ, அவளின் அருகில் நெருங்கி நின்று , அவளின் கண்களைப் பார்த்தவாறு,"நீ என் மேல் நேசமில்லாத மாதிரி எப்படி நடித்தாலும், உன் கண்கள் உன் மனதை என்னிடம் அப்படியே காட்டிக் கொடுத்து விடுகிறது."என்றான்..
அவளோ, "அப்படியெல்லாம் இல்லை ..நீங்களே ஏதோ நினைச்சுட்டு உளராதீங்க.." என்றவளின் வாயில் கைவைத்து அவள் பேசுவதை தடை செய்தவன்.
"ப்ளீஸ் என் நல்ல மூடை கெடுக்காதே.. இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. என் அன்பு உண்மையாக இருந்தால் நான் நினைத்து நடக்கும்.."என்றவன், அவன் தொடுகையில் உறைந்து நின்றிருந்தவளின் இதழ் வடிவங்களை மென்மையாக ஒரு முறை வருடியவன், அடுத்த வினாடி அங்கிருந்து சென்றிருந்தான்..
நிறையோ,சில நிமிடங்கள் சிலையாக நின்றிருந்தவள், அருகில் கேட்ட தன் தாயின் அழைப்பில் தான் நிகழ்வுக்கு வந்தாள்.
உதயனம்பியை அதன் பிறகு அவள் பார்க்கவே இல்லை..அவனுக்கு வேலை தலைக்கு மேல் இருந்தது.. மணமக்கள் வீடு சென்ற பின்,மண்டபத்தின் கணக்கு வழக்குகளை முடித்து விட்டு இரவு தான் வீட்டிற்கு சென்றான்.
ஓய்ந்து போய் வீடு வந்த மகனை வழக்கம் போல் மலர்ந்த முகத்துடன் வரவேற்றார் தாழ்குழலி..
உதயனம்பியோ , எப்போதும் போல் தாயின் மடியில் தலை சாய்ந்தான்..தாழ்குழலியோ ,மகனின் தலையை மென்மையாக வருடியபடியே, "உதிம்மா வேலை எல்லாம் முடிந்ததா?ரொம்ப களைப்பா இருக்கப்பா? சாப்டீயா ?"என்றவரிடம்..
"அத்தை வீட்டிலேயே சாப்ட்டேன் மா.. கொஞ்சம் இன்னைக்கு வேலை அதிகம் .. அது தான் டையேடா இருக்குமா.."
"அதுமட்டுமா உதிம்மா! வீட்டு ஓனரை நான் கல்யாணத்தில் பார்த்தேன் ..நீ எங்கிட்ட என்ன மறைச்சாலும் எனக்கு தெரியாம போகுமா? நீ அதையே நினைச்சு வருந்தாதேப்பா... எல்லாம் சரியாகும்.உன் மனக்கவலை தான் உன்னை இந்தளவு களைக்க வைத்திருக்கு.."என்றவரை திகைத்துப் பார்த்தான்..
அவனின் மனதில் தாய் வருந்துவாரே! என்று தானே அந்த விஷயத்தை தன் அன்னையிடம் மறைத்தான்.. ஆனால் அவருக்கு தெரிந்து விட்டதே! என்று கலங்கினான்.
மகனின் திகைத்த பார்வையை எதிர் நோக்கிய படியே, "உதிம்மா நீ மனதை போட்டு குழப்பிக்காதே !மாமாவுக்கு இது தெரியாமல் பார்த்துக்கோப்பா. ஏற்கனவே அவருக்கு கல்யாண செலவும் ரொம்ப அதிகமா ஆகியிருக்கும் போல்.. இதுவும் தெரிந்தால் தாங்க மாட்டார்.." என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே..
"அம்மாவும் மகனும் இப்படி என்னை நன்றிக்கடன் பட வைக்கிறீங்களே! நான் என்ன செய்வேன்.." என்ற குரலில் தூக்கி வாரிப்போட இருவரும் திரும்பினார்கள்..
அங்கே ஆடலரசு குற்றம் சாட்டும் பார்வையுடன் ஓய்ந்து போய் நின்றிருந்தார்..
தொடரும்..
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
தாழ்குழலியும், "வாங்கண்ணா.." என்று வரவேற்றவர், அவருக்கு குடிக்க நீர் எடுத்து வந்து கொடுத்தார்..
ஆடலரசோ, தங்கை கொடுத்த நீரை அருந்தி..தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
உதியனம்பியோ,ஆடலரசு தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் வரை அமைதியாக இருந்தவன்,"மாமா ஏதாவது அவசர மென்றால் எனக்கு ஒரு போன் செய்து இருக்கலாமே!இந்த நேரத்தில் இவ்வளவு தூரம் வரவேண்டுமா?" என்றான்.
தழ்குழலியும்,"உதி சொல்றமாதிரி ஒர் போன் செய்திருக்கலாமே அண்ணா..உங்களுக்கு எத்தனை வேலை!அத்தனையும் பார்த்துட்டு ஓய்வு எடுக்காமல் இந்த நேரத்தில் இங்கு தனியா வந்திருக்கீங்க.." என்ற புலம்பியவரிடம்..
"நான் அப்படி உங்களுக்கு என்னம்மா செய்துட்டேன்..அம்மாவும் மகனும் என்னை இப்படி தாங்குறீங்க! எனக்கு குற்றயுணர்வில் மனசு கிடந்து தவிக்குத்தம்மா.."
"அண்ணா என்ன வார்த்தை சொல்றீங்க..நீங்க என்ன தப்பு செய்தீங்க குற்றயுணர்வு வருவதற்கு..ஏன் ? அண்ணா! என்னாச்சு, பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க.."
"போதும்மா என்னால் முடியலை.. எல்லாம் எனக்கு தெரியும் வீட்டு ஓனர் என்னிடம் சொல்லிட்டார் .."என்றவுடன் தாயும் மகனும் திகைத்துப் போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
ஆடலரசோ, அவர்களின் திகைத்த பார்வையை வருத்துடன் கண்டவர்,"நான் செய்த ஒரு தவறால் இன்று நீங்கள் இப்படி நடுத்தெருவில் நிற்கிறீங்களே.."என்று கண்கலங்கியவரை கண்ட உதயனம்பி ஓடிவந்து அவரின் காலடியில் அமர்ந்தவன்..
"மாமா அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. என்ன இது! நீங்க குழந்தை மாதிரி கண்கலங்கிட்டு.. எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாதீங்க.." என்றான்..
ஆடலரசோ,"தன் காலடியில் அமர்ந்திருந்தவனின் தலையை வருத்தத்துடன் தடவியவர், உன்னை மாதிரி ஒரு மருமகன் கிடைக்க நான் என்ன தவம் செய்தானோ தெரியலை..உன் உழைப்பை உறிஞ்சும் அட்டையாய் நான் இருக்கேனே .."என்று வருந்தியவரிடம்..
" ஏன்? மாமா இன்று இப்படி பெரிய வார்த்தையெல்லாம் பேசறீங்க..இனிமேல் எப்போதும் இது போல் பேசாதீங்க.. என்னால் தாங்க முடியாது.." என்று அவரின் மடியில் முகம் புதைத்தான்..
தாழ்குழலியோ, "இன்னைக்கு என்னாச்சுண்ணா இந்த மாதிரி எங்களை பிரித்து பார்த்து பேசறீங்க.." என்று கலங்கினார்..
ஆடலரசோ,தன் மடியில் முகம் புதைத்திருந்த மருமகனின் தலையை வருடியபடியே, "என்னை என்னச் செய்ய சொல்றமா.. வீட்டை ஓனர் வேறு ஒருவருக்கு வித்துட்டேன்னு சொல்றார்.. அதுவும் வீட்டை வாங்கியவர் உடனடியாக வீட்டை காலி செய்ய சொல்லுறாங்கன்னு கேள்விப்பட்டதிலிருந்து என் நெஞ்சே வெடித்து விடும் போல இருக்கு.."என்றார்..
உதயனம்பியோ தலையை நிமிர்த்தி, "மாமா அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீங்க வருத்தப்படாதீங்க .."என்றவுடன்..
அவரோ, "எப்படி நம்பி இவ்வளவு ஈஸியா சொல்றே..என் முட்டாள்தனத்தால் உங்களுக்கு எத்தனை கஷ்டம்.. என் நண்பன்னென்று நான் அவனை நம்பி போட்ட ஜாமீன் கையெழுத்தால் வந்த வினை.." என்று தவித்தவரிடம்..
"நீ இப்போ கஷ்டப்படும் போது நான் எப்படிப்பா அதை நினைக்காமல் இருக்க முடியும்.பத்து லட்சம் என்பது சாதாரணமா? அவன் இப்படி கடன் வாங்கிட்டு ஓடுவான்னு நினைக்கலையே.." என்று புலம்பினார்.
நான்கு வருடங்களுக்கு முன்.. தன்னுடன் படித்த நண்பர் ஒருவரின் அவசர தேவைக்காக, ஃபைனான்ஸ் ஒன்றில் பத்து லட்சம் கடன் வாங்கியதுக்கு ஆடலரசு தான் ஜாமீன் கையெழுத்து போட்டார்..
நண்பரோ, இரண்டு மாதம்ஒழுங்காக பணம் கட்டியவர், அப்புறம் கட்ட முடியாமல் குடும்பத்துடன் தலைமறைவாக்கிட்டார்..அந்த கடனை, ஜாமீன் போட்ட ஆடலரசை கட்டச் சொல்லி, ஃபைனான்ஸ்காரர் மிரட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆடலரசுக்கோ ,என்ன செய்வதென்றே தெரியவில்லை.. பெண்கள் இருவருமே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.. ஃபைனான்ஸியர் போலிஸ்சுக்கு போனால், இவர் வேலைக்கே ஆபத்து.. இவரோ,திக்கு தெரியாமல் கதிகலங்கி நின்றார்.
எந்த வழியும் தெரியாமல் கடனை அடைக்க, தன் வீட்டை விற்பதற்கு விலை பேசினார்..இந்த விசயத்தை கேள்விப்பட்ட தாழ்குழலியும்,உதயனம்பியும் பெண்பிள்ளைகளை வைத்துக் கொண்டு குடியிருக்கும் வீட்டை விற்றுவிட்டு நாளை எங்கு போவீர்கள்.. வாடகை வீடெல்லாம் சரிவராது.. என்று வற்புறுத்தி அவர் வீட்டை விற்பதை தடுத்தார்கள்.
ஆடலரசு கட்டவேண்டிய பணத்திற்கு, தாயும்,மகனும் தாங்கள் குடியிருந்த வீட்டை அவர் எவ்வளவு மறுத்தும் கேட்காமல் விற்றனர்..
பதினைந்து லட்சத்திற்கு மேல் பெறுமானம் உள்ள வீட்டை !வந்த விலைக்கு விற்று, பத்துலட்சத்தை அப்படியே கொண்டுவந்து கடனை அடைக்க ஆடலரசிடம் கொடுத்தார்கள்..
ஆடலரசும், செந்திழையும் எத்தனையோ மறுத்து பேசியும்.. அம்மாவும் மகனும் கேட்கவே இல்லை.. தங்களின் ஒரே சொத்தை விற்று அவரின் மானத்தை காப்பாற்றினார்கள்..
உதயனம்பியோ, தங்கள் வீட்டை வாங்கியவரிடமே! அதே வீட்டில் தாங்கள் வாடகைக்கு இருப்பதற்கு சம்மதம் வாங்கியிருந்தான்..
இத்தனை நாள் எந்த பிரச்சினை இல்லாமல் தான் ஓடியது. இப்போது அந்த ஓனருக்கு ஏதோ அவசரமென்று ,வேறு ஒருவருக்கு வீட்டை விற்றுவிட்டார். புது ஓனர் இப்போது வீட்டைக் காலி செய்யச் சம்பள சொல்லி வற்புறுத்துகிறார்..
உதயனம்பிக்கே, இந்த விசயம் ஒரு வாரம் முன்பு தான் தெரியும்.அவனுக்கு என்ன செய்வதேன்றே தெரியவில்லை..
தன் தகப்பனின் நினைவாக ! தன் அன்னை கருதும் இந்த வீட்டை விட்டு போக அவனுக்கு சிறிதும் விருப்பம் இல்லை.. எப்படியாவது புது ஓனருடன் பேசி.. இங்கேயே இருக்க சம்மதம் வாங்க வேண்டும்..அதுவரை தன் தாயுக்கும்,மாமானுக்கும் இது தெரியக் கூடாது என்று எண்ணினான்..
ஆனால், இன்று அவன் நினைத்தது நடக்கவில்லை.. இருவருக்குமே அது தெரிந்து விட்டது..அவன் மனதில் ஏதோ பெரிய பாராங்கல்லை தூக்கி வைத்தது போல் பாரமாக இருந்தது..
ஆடலரசோ, "நம்பி கொஞ்சம் எழுத்திருப்பா.." என்றவர்,தானும் எழுந்து கொண்டு, " நம்பி தயவுசெய்து இதை வாங்கிக்கோப்பா .."என்று தன் கையிலிருந்த துணிப்பையை மருமகனிடம் கொடுத்தார்..
உதயனம்பியோ,அதை வாங்காமல் தன் மாமனை புரியாமல் பார்த்தான்..
அவரோ," நம்பி இதில் மூன்று லட்சம் இருக்கு..இதை இப்போது வீட்டை வாங்கியவரிடம் கொடுத்து.. வீட்டை ஒத்திகைக்கு இரண்டு வருடத்திற்கு எழுதிக் கொள்ளப்பா..அதற்குள் எப்படியாவது இந்த வீட்டை திரும்ப வாங்கி விடலாம்.."என்றவரை தாயும், மகனும் புரியாமல் பார்த்தனர்.
ஆடலரசோ,"நான் இப்போது வீட்டை வாங்கியவரிடம் பேசிவிட்டேன்.. அவர் ஒத்திகைக்கு சம்மதித்து விட்டார்.." என்றவரிடம்.
உதயனம்பியோ,"மாமா இப்போது இவ்வளவு பணம் உங்களுக்கு ஏது? அதுவும் பனி கல்யாணமும் இன்று தானே முடிந்து இருக்கு..அதற்கே நிறைய செலவு வேறு.." என்றவனிடம்..
"நம்பி ஒரு லட்சம் மொய்பணம்ப்பா..மீதி இரண்டு லட்சம் கல்யாண செலவுக்காக.. எதற்கும் இருக்கட்டுமென்று லோன் போட்டு எடுத்து வைத்திருந்த பணம்.." என்றார்..
உதயனம்பியோ,"மாமா என்ன காரியம் செய்றீங்க,இன்னும் பனிக்கு வீட்டுக்கு தேவையான சாமானம் வாங்கித் தரனும்,அதுமட்டுமில்லாமல் சமையல்காரருக்கும் பணம் தரனும் முதலில் அதை எல்லாம் சரி பண்ணுங்க.." என்றான்..
ஆடலரசோ தாழ்குழலியை பார்த்தார்..அவரோ மகன் சொல்வதை ஆமோதிப்பது போல் நின்றிருந்தார்..
ஆடலரசோ பிடிவாதமாக,"அதை எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..நீ முதலில் இதை வாங்கி நான் சொல்வதை நாளைக்கே செய்யப்பா..ஓனர் மனம் மாறுவதற்குள் ஓத்திகைக்கு எழுதி விட வேண்டும் .."என்றார்..
உநயனம்பியோ அவர் தந்ததை வாங்காமல் அசையாமல் நின்றிருந்தான்..
ஆடலரசோ, தன் பொறுமையை கைவிட்டவர்," நம்பி நீ என் மீது கொஞ்சமாவது மரியாதை வைத்திருந்தால் நான் சொல்வதைக் கேளு .."என்றவுடன்..
"மாமா இந்த பணம் இப்போது உங்களுக்குத் தான் அவசியம்..நான் எப்படியாவது சமாளித்துக் கொள்கிறேன்..?"
"நீ மட்டும் இப்போது இதை வாங்கவில்லையென்றால் நான் குற்றயுணர்வில் செத்து விடுவேன்.." என்றார் மிகுந்த வருத்தத்துடன்..
அவர் சொல்லியதை கேட்டு திகைத்துப்போய், "மாமா.." என்று உதயனம்பியும்,"அண்ணா .."என்று தாய்குழலியும் கத்திவிட்டார்கள்..
"மாமா தயவுசெய்து இனிமேல் இந்த மாதிரி பேசாதீங்க.. நான் பணத்தை வாங்கிக்கிறேன் .எதற்கும் அத்தையிடம் ஒரு வார்த்தை கேளுங்க.."
"உன் அத்தை தான் முதலில் இந்த பணத்தை கொடுத்துட்டு வாங்கன்னு என்னை அனுப்பி வைத்தாள்.." என்றார்.
தயங்கி நின்ற மருமகனை இழுத்து அணைத்துக் கொண்டவர்,"நான் நிலை தெரியாமல் தவித்த போது ,நான் கேட்காமலேயே குலசாமியாட்ட நீ என் மானத்தை காப்பத்தினாயே, உனக்கொரு கஷ்டம்ன்னா இந்த மாமானால் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா ?"என்று நா தழு..தழுக்க சொன்னவரை இன்னும் ஆதரவாக கண்கலங்க அணைத்துக் கொண்டான் உதயநம்பி..
தாழ்குழலியோ ,கண்களில் நீர் வடிய அவர்களின் பாசப்போராட்டத்தை பார்த்துக் கொண்டு நின்றார்..
உதயனம்பியோ ,அவர் கொடுத்த பணத்தில் இரண்டு லட்சத்தை மட்டும் வாங்கிக் கொண்டு மீதி ஒரு லட்சத்தை திருப்பிக் கொடுத்தான்..
அவர் புரியாமல் பார்க்க.."மாமா இதில் பனிக்கு அவள் புகுந்த வீட்டிற்கு போகும் போது தேவையான சாமான்களை வாங்கிக் கொடுங்க..நான் மீதியை மேனேஜ் செய்துக்கிறேன்.." என்றவனை என்ன சொல்வதென்றே தெரியாமல் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த தாயுமானவர்..
தாழ்குழலியோ, மகன் அண்ணனின் நிலை அறிந்து நடந்து கொள்வதை நினைத்து மகிழ்ந்தார்..
ஆடலரசும் அதற்கு மேல் அவனை வற்புறுத்தவில்லை..உதயனம்பி இந்தளவு ஒத்துக்கொண்டதே பெரிது என்று நினைத்தவர் அவனுடனேயே வீடு சென்றார்..
அடுத்த நாள் தன் மாமான் சொன்னதைப் போலவே உதயனம்பி,ஒத்திகைக்கு தாங்கள் குடியிருந்த வீட்டை எழுதிக் கொண்டான்..
நாட்கள் தெளிந்த நீரோடையாக நகர்ந்தது.. சேத்தனும்,பனி நிலவும் தங்கள் வாழ்க்கையை அழகாக தொடங்கினார்கள்..
சேத்தன் மருமகன் போல் இல்லாமல்,இன்னொரு மகனாகவே இருந்தான். நிறையாழியை தன் உடன்பிறவா சகோதிரியாகவே நினைத்தான்..
நிறையாழியின் குறும்புத்தனமும்,பேச்சும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது..தனக்கு தங்கை இல்லையென்ற குறை தீர்க்க வந்த பெண்ணாகவே அவளைக் கருதினான்..
நிறையாழியோ, தனது முதுகலைப் படிப்பை முடித்தவள்,அடுத்து எம்.பில் படிப்பில் அடம்பிடித்து சேர்ந்தாள்..
உதயனம்பியோ ,வழக்கம் போல மாமன் வீட்டிற்கு வந்து போய்க்கொண்டு தான் இருந்தான்.ஆனால், நிறையோ சுத்தமாக அவனை மதிக்காமலே சுற்றிக் கொண்டிருந்தாள்..
சேத்தனுக்கும்,உதயனம்பிக்கும் ஒரு நல்ல நட்பு உருவாகியிருந்தது..
உதயனம்பியின் அறிவையும்,உழைப்பையும் கண்டு சேத்தன் பல முறை வியந்துள்ளான்.. இன்னும் படித்திருந்தால் நல்ல நிலைமைக்கு வந்திருப்பான் என்று நினைப்பான்..அதை நம்பியிடமும் தயங்காமல் சொல்லுவான்..
ஆனால் நம்பியோ, சேத்தன் சொல்லும் பொழுதெல்லாம் மென் சிரிப்புடன் அதை கடந்துவிடுவான்.
நிறை என்ன தான் நம்பியை உதாசீனப்படுத்தினாலும், தன் அத்தையை கவனித்துக் கொள்வதில் மட்டும் குறையே வைக்க மாட்டாள்..அவர் ரெகுலர் செக்கப் தேதியை மறக்காமல் ஞாபகம் வைத்துக் கொள்வதுடன்,முடிந்தால் தானும் கூட சென்று வருவாள்..
உதயனம்பியோ,நிறை எப்படி நடந்து கொண்டாலும் அதை கண்டு கொள்ளாமல்,அவள் கல்லூரிக்கு போகும் போதும்,திரும்பி வரும் போதும் அவளை பின் தொடர்ந்தான்..
நிறையும், உதயனம்பி பின் தொடர்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளாவில்லை..ஆனால், அவளுடைய ஃப்ரெண்ட்ஸ் இவளை அவனுடன் சேர்த்து வைத்து பேசி கேலி செய்யவும் ,நிறைக்கு அது மிகுந்த அவமானமாக இருந்தது..
அன்று இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்தவள், கல்லூரி முடிந்து வீடு திரும்பு போது உதயனம்பிக்காக காத்திருந்தாள்..ஆனால் அன்று அவன் ஏனோ வரவில்லை..
நிறையோ, அவனுக்காக காத்திருந்தவள் அவன் வராததால் நேராக உதயனம்பியின் கடைக்கு சென்றாள்..
ஆனால் அங்கு நம்பி இல்லை ..சங்கு மணி தான் இருந்தான்.உதயனம்பிக்கு காய்ச்சல் என்று கட்டாயப்படுத்தி அவனை ஓய்வெடுக்க வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தான்..
நிறை கடைக்கு வந்ததை ஆச்சரியாமாக பார்த்த சங்குமணி ,"என்ன அக்கா கடைக்கு வந்திருக்கே! ஏதாவது பிரச்சனையா ?"என்று கேட்டான்.
நிறையோ,"உன் அண்ணன் இல்லையா..? என்றவளிடம்..
"அண்ணாவுக்கு உடம்பு சரியில்லை..மதியம் நான் தான் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.."
"ஓ! .."என்றவள் ,'மனதிற்குள் இன்று அந்த நம்பியார் தப்பிச்சுட்டான்..' என்று நினைத்தாள்..
சங்குமணியோ,"என்ன விசயம்க்கா.. ஒரு நாள் கூட அண்ணாவைப் பார்க்காமல் இருக்க முடியலையா?"என்றவனை கோபமாக பார்த்தவள்..
" நான் செம டென்ஷன்ல வந்தேன்.. உங்க அண்ணன் மட்டும் இப்ப இருந்திருந்தா! நடப்பதே வேறு.. அவருகிட்ட சொல்லி வை. இனி என்பின்னாடி வரவேண்டாம்ன்னு..அப்படி வந்தா நான் மனுசியா இருக்க மாட்டேன் சொல்லிட்டேன்.."
"இப்ப மட்டும் நீ மனுசியாவ இருக்கே?" என்றவனை கொலை வெறியில் பார்த்தவள்..
"உன் இஷ்டத்திற்கு அப்படியெல்லாம் கூப்பிட முடியாது .உன் அண்ணனையே நான் நம்பியார்ன்னு தான் கூப்பிடுவேன் பெருசா சொல்ல வந்துட்டான்.."
"ம்ஹும் மத்தவங்ககிட்டத் தானே அப்படி சொல்றே.. எங்கே உனக்கு தைரியம் இருந்தா எங்க அண்ணகிட்ட நம்பியார்ன்னு சொல்லே பார்ப்போம்.."
"டேய் என்ன என்னால முடியாதுன்னு நினைக்கிறாயா? வரச்சொல் உங்கண்ணனே ..அந்த நம்பியாரை நான் சொல்றேனா? இல்லையான்னு பாரு.."
"அவரை நீ எப்படியோ ஆசையா கூப்பிட்டுக்கோ..ஆனா அண்ணே பாவம் கா .உனக்காக டெய்லியும் வேலை வெட்டி உட்டுப்புட்டு உன் பின்னாடி வருது.அது மனசை நோகடிக்காதே அக்கா.."
" டேய் நானா என் பின்னாடி வரச் சொன்னேன்.என் மானத்தை வாங்கவே உன் அண்ணே என் பின்னாடி வரான்..என் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி எனக்கு அவமானமா இருக்கு.."
"என்ன செய்ய எனக்குந்தான் அவமானமா இருக்கு ,ஊர் உலகத்திலே வேறு பொண்ணா இல்லை .போயும் ..போய் உன் பின்னாடி சுத்துதேன்னு.."
"டேய் என்ன லொள்ளா..என்னை வெறுப்பேத்தாமே ..மரியாதையா நான் சொன்னதை உங்க லொண்ணகிட்ட சொல்லிடு புரியுதா?இல்லைன்னா உனக்கு சங்கு தான் ஞாபகம் வச்சுக்கோ.." என்றாள்.
Hi friends, எல்லோரும் எப்படி இருக்கீங்க. தொடுக்காத பூச்சரமே! அடுத்த இரண்டு அத்தியாயங்கள் (5,6) பதிந்துள்ளேன்..சாரி கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.. அதனால் தான் இரண்டு அத்தியாயங்கள்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. முடிந்தவரை இனி விரைவாக அடுத்த அத்தியாயங்கள் பதிக்கிறேன்..
போன அத்தியாத்திற்கு லைக் மற்றும் காமெண்ட் செய்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..
அன்புடன்
இனிதா மோகன் தமிழினி
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
உதயனம்பி எப்போது மாலை நேரம் வருமென்று காத்திருந்தான்.அவன் மனமோ சலசலக்கும் அருவியைப் போல் ஆர்பரித்துக் கொண்டிருந்தது.
அவனின் மனதிற்கினியவள், "உங்களுடன் இன்று பேசனும் மாலைவாங்க .."என்று கூறியதிலிருந்தே அவன் ஒரு நிலையில் இல்லை..பதினாறு வயது விடலைப் பையன் போல் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தான்.
சங்கு மணி கூட அவனின் நிலை கண்டு ஆச்சரியப்பட்டான்..தன் அன்பு அண்ணன் எப்போதும் இது போல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று மனதார கடவுளிடம் வேண்டிக் கொண்டான்.
சரியாக நிறையாழி வரும் நேரத்திற்கு உதயனம்பி மிக நேர்த்தியாக தயாராகி சென்று ,பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தான்.
நிறையின் வருகைக்காக அவனின் கண்கள் வழி மீது விழி வைத்துக் காத்திருந்தது.
நிறையோ சரியான நேரத்திற்கு வந்தாள்.அவளின் கண்களும் அவனையே தேடியது!
நிறை தன்னை தேடுவதை கண்டு மனதில் மகிழ்ச்சியுடன் உதயனம்பி அவள் முன்பு சென்று நின்றான்.
நம்பியை கண்டதும்! நிறையாழி மனதில் நிம்மதியுடன், "வாங்க அங்கே பக்கத்திலிருக்கும் பூங்காவிற்கு போய் பேசலாம்.. "என்று கூறியபடியே ,பூங்காவை நோக்கி சென்றாள்.
உதயனம்பியும் அமைதியாக அவள் பின் சென்றான்.
பூங்காவில் இருவரும் காலியாகயிருந்த சிமிண்ட் நாற்காலியை தேடி அமர்ந்தார்கள்.
இருவரும் சில நிமிடங்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை..அங்கு விளையாடும் குழந்தைகளை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.
நிறையோ மனதிற்குள் எப்படி சொல்வது என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள்.
உதயனம்பியோ,அவளை யோசனையாக பார்த்தபடியே, "நிறை ஏதோ சொல்ல வேண்டுமென்றாயே.." என்று பேச்சை தொடங்கினான்.
நிறையோ ,அவனை நிமிர்ந்து பார்த்தவள்,அவன் கண்களில் தெரிந்த ஆர்வத்தை கண்டு ஒரு நொடி திகைத்தாள்.
தான் சொல்ல வந்ததை எப்படி சொல்வது என்று ஒரு வினாடி குழம்பினாள். அடுத்த வினாடி தன் குழப்பத்தை தூக்கி எறிந்தவள்.
"நீங்க நினைப்பது என்றும் நடக்காது.தேவையில்லாமல் மனதில் ஆசையை வளர்த்துக்காதீங்க.." என்றாள்.
"நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கு தெரியுமா?"
"ஏன் ?தெரியாது! நன்றாகத் தெரியும்.. நீங்கள் என் பின்னாடி சுத்துவதிலிருந்தே அது தெரியாமல் போகுமா?"
"சரி அதிலென்ன தவறு.." என்று கேட்டவன், தன் மார்ப்புக்கு குறுக்கே கைகளை கட்டிய படியே அவளையே பார்த்தான்.
"உங்களுக்கு நல்ல படியா சொன்ன புரியாதா? நான் இரண்டு டிகிரி முடித்து இருக்கேன்.. இப்போது எம்.பில் படிக்கிறேன்..நீங்க வெறும் பத்தாவது .."
"படிப்பு தான் உனக்கு பிரச்சனையா?"
"படிப்பு மட்டுமில்லை.. நீங்க ஒரு மெக்கானிக்..உங்க தொழிலும் எனக்கு பிடிக்கலை.."
"என்னை பிடித்து இருக்கா?" என்றான்.
அவளோ பதில் கூறாமல் அமைதியாக இருந்தாள்.
"நிறை நான் கேட்டதற்கு பதில் சொல்லு.."
"பிடிக்கல.." என்று நிறை சட்டென்று சொன்னாள்.
உதயனம்பியோ,ஒரு நிமிடம் அவளின் பதிலில் கலங்கினாலும், "நிறை பொய் சொல்லாமல் என் கண்களைப் பார்த்து சொல்லு.."
"பிடிக்கல..பிடிக்கல.. எத்தனை முறைதான் சொல்வது..ஒரு மெக்கானிக் எனக்கு கணவனா? என்னால் நினைச்சு கூட பார்க்க முடியலை.."
"ஏன் ?அந்த தொழிலுக்கு என்ன குறைச்சல்..நான் உழைத்து தானே பிழைக்கிறேன்.."
"நான் குறைச்சல் என்று சொன்னேனா? எனக்கு கணவரா வருபவர்! எப்படி இருக்க வேண்டுமென்று எனக்கும் சில எதிர்பார்ப்பு இருக்கு. அதைத் தான் சொன்னேன்.."
"ஏன்? அந்த எதிர்பார்ப்பு என்னிடம் பூர்த்தியாகவில்லையா?" என்றான் ஏக்கத்துடன்!
"இல்லவே இல்லை..என்னால் உங்களை கணவனாக நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை..நீங்க என் பின் சுத்துவதைப் பார்த்து.. என் ஃப்ரெண்ட்ஸ் நம் இருவரையும் இணைந்து கேலி செய்கிறார்கள்.அதைக் கூட என்னால் பொறுக்க முடியாமல் தான் உங்களிடம் பேச வந்தேன்.."
"நிறை உன் எதிர்பார்ப்பு என்னவென்று எனக்கு தெரியலை..ஆனால் உனக்கு என்படிப்பும்,தொழிலும் பிரச்சினை என்றால் அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது.." என்றவன், ஒரு நிமிடம் கண்களை இறுக மூடித் திறந்தவன் தொடர்ந்து..
"எனக்கும் படிக்க வேண்டுமென்ற ஆசை நிறைய இருந்தது.குடும்ப சூழல் அதற்கு ஒத்துவரவில்லை. என் படிப்புக்கு இந்த மெக்கானிக் தொழில் தான் குடும்ப கஷ்டத்தை போக்க அப்போது உதவியது.திருடாமல்,பொய் பேசாமல் , நேர்மையாக மற்றவர்களை பாதிக்காமல் செய்யும் எந்த தொழிலுமே என்னைப் பொறுத்தவரை உயர்ந்தது தான்.." என்றான்.
அவளோ எதுவும் பேசாமல் மெளனமாகவே இருந்தாள்.
"நிறை வாழ்க்கையில் படிப்பு முக்கியம் தான்.ஆனால் அதைவிட ,ஒழுக்கமும்,நற்பண்புமும், நேர்மையும் மிக முக்கியம். அது என்னிடம் இருக்கிறது என்பது உனக்கே தெரியும். படிப்பும்,தொழிலையும் தவிர வேறு ஏதாவது குறை என்னிடம் இருந்தால் சொல். அதை நான் மாற்றிக் கொள்கிறேன்.."
"உங்களிடம் குறை கண்டுபிடிக்குமளவு நான் பெரிய ஆள் இல்லை..உங்கள் மீது எனக்கு நேசம் வரவில்லை.புரிந்து கொள்ளுங்கள்.காதல் தானாக வரவேண்டும்.அது கட்டாயப்படுத்தி வரக்கூடாது.இதற்கு மேல் எனக்கு சொல்லத் தெரியவில்லை.."
"கண்டிப்பா காதல் கட்டாயப்படுத்தி வரக் கூடாது தான்.ஆனால் படிப்பையும்,தொழிலையும் வைத்து நீ என்னை நிராகரிப்பதைத் தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.."
"உங்களுக்கு எத்தனை முறை தான் சொல்வது. என் எதிர்பார்ப்புக்கு நீங்க இல்லை.எந்த நிலையிலும் உங்கள் மீது எனக்கு காதல் வராது.பிளீஸ் இனி என் பின்னாடி சுத்தாதீங்க.அது எனக்கு அவமானமாக இருக்கு.நீங்க விரும்பும் அளவு நான் தரம் குறைந்து போகவில்லை .."என்றாள் தான் என்ன பேசுகிறோம் என்று உணராமலேயே..
உதயனம்பியோ,அவளின் வார்த்தைகளை கேட்டு உறைந்து போனான்.
அவளோ,தன் அருகிலிருப்பவன் சுக்கு நூறாக நொருங்கி இருப்பதை அறியாமல்,மேலும் விஷத்தை கக்கினாள்.
"இதுவே கடைசியாக இருக்கட்டும். கொஞ்சமாவதுஉங்களுக்கு ரோஷம் இருந்தால் இனி என் முகத்தில் முழிக்காதீர்கள். என்னிடம் பேசாதீர்கள் . உங்களுக்கு தகுந்த மாதிரி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழும் வழியைப் பாருங்கள்..இனி பேச எதுவுமில்லை..நான் வருகிறேன்.." என்று கூறியவள் ,அவனை திரும்பி கூட பார்க்காமல் சென்றாள்.
தனக்கு திருமணம் அவனோடு தான் விதி கணித்திருக்கிறது! என்று அறியாமல் வாய்க்கு வந்ததை பேசிவிட்டு சென்றிருந்தாள்.
உதயநம்பியோ,தன்னுள் ஏதோ ஒன்று செத்துக் கொண்டிருப்பதை உணராமல் இடிந்து போய் அமர்ந்திருந்தான்.
எத்தனை நேரம் அப்படி அமர்ந்திருந்தான் என்று அவனுக்கே தெரியாது..அவன் மனம் அழுது கொண்டிருப்பதைப் போல் வானமும் அன்று பொத்துக் கொண்டு அழுது தீர்த்தது.
எப்படி நினைவு வந்து வீடு வந்தானோ! அவனே அறியவில்லை.
தாழ்குழலியோ, மகன் வழக்கமாக வரும் நேரத்தை கடந்தும் இன்னும் வரவில்லையே ! மழை வேறு இப்படி கொட்டி தீர்கிறதே!மகன் பத்திரமாக வீடு வந்து சேரனும் என்று மனதிற்குள் கடவுளிடம் வேண்டியபடியே வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் வேண்டுதல் கடவுளின் காதுகளுக்கு சென்றது போல்! உதயனம்பி மழையில் முழுதும் நனைந்தபடி வீடு வந்தான்.
தாழ்குழலியோ,மகன் வந்திருந்த நிலையைக் கண்டு திகைத்தவர்,உடனே ஒரு துண்டை எடுத்து வந்து மகனின் தலையை துடைத்த படியே, "என்னப்பா சின்னப்பிள்ளையாட்டா இப்படி மழையில் நனைஞ்சுட்டு வந்திருக்கே .."என்று கடிந்து கொண்டார்.
அவனோ, தலை துடைத்து கொண்டிருந்த தாயின் கைகளை பிடித்து தடுத்த படியே , அம்மா நான் கொஞ்ச நேரம் உங்க மடியிலே படுத்துக்கட்டுமா?" என்றான்.
தாழ்குழலியோ ,மகனின் சோர்ந்த முகத்தைக் கண்டவர் ," சரிப்பா.. நீ முதலில் இந்த ஈரத் துணியை மாத்திட்டு வா.." என்றார்.
அவனும் தாய் சொல்லைத் தட்டாமல் உடையை மாற்றிவந்தவன், தாயின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.
தாழ்குழலியோ,மகனின் ஈரத் தலையை துடைத்து படியே அமைதியாக இருந்தார். சிறிது நேரத்தில் தன் மடியில் கண்ணீரின் ஈரத்தை உணர்ந்தவர், பதறிப் போய் மகனின் முகத்தை நிமிர்த்தி பார்த்தார்.
மகனின் கண்களில் கண்ணீரைக் கண்டு அதிர்ந்தவர், "உதிம்மா என்னாச்சுப்பா.." என்று துடித்துப் போய் கேட்டார்.
நம்பியோ தாயின் கேள்விக்கு பதில் கூறாமல்.. தன் கவலையின் புகழிடமாக மீண்டும் தாயின் மடியையே நாடினான்.
தாழ்குழலியோ,மகனின் நிலைகண்டு மனதிற்குள் கலங்கித் தவித்தார்..தன் கணவர் நிராதரவாக தங்களை விட்டுச் சென்ற போது கூட கலங்காதவன்! வயதுக்கு மீறிய சுமைகளை சுமந்து தன் குடும்பத்தை தலை நிமிரச் செய்தவன், இன்று சிறுபிள்ளைப் போல் கண்ணீர்விடுவதைக் கண்டு தாயுள்ளம் பரிதவித்தது.
தன் தவிப்பை புறந்தள்ளிவிட்டு, மகன் தாங்கள் குடியிருக்கும் வீட்டிற்கு பணத்தை புரட்ட முடியாமல் தான் தவிக்கிறானோ?என்று நினைத்து," உதிம்மா எது நமக்கு கிடைக்கனும்னு இருக்கோ அது நிச்சயம் கிடைக்கும்.. ஒன்று நம் கைநழுவி போகுதென்றால் அதை விட நல்லதாக வேறொன்று நமக்கு கிடைக்கும் .நீ எதற்கும் கவலைப்படாதேப்பா.. "என்று பெரூமூச்சு விட்டார்.
நம்பியோ அமைதியாகவே படுத்திருந்தான். மகனின் அமைதியைக் கண்டு வருந்திய தாழ் குழலி.
"உதிம்மா எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கும்.. பிரச்சினையை கண்டு கலங்கினால் அது நமக்கு பூதகரமாகத் தான் தெரியும்.. எது வந்தாலும் பார்த்துக்கலாமென்று நினை!எளிதாக அதை கடந்து விடலாம்.என்றார்.
மகனோ !மெளனத்தையே தந்து எடுத்திருந்தான்.
தாழ்குழலியோ,மகனின் நிலை கண்டு கலங்கியவர் மனதிற்குள் , 'எந்த பிரச்சினையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மகன் இன்று ஏன்? இப்படி இருக்கிறான்..' என்று நினைத்தார்.
மகனின் கேசத்தை மென்மையாக வருடியபடியே."உதிம்மா எது நடந்தாலும் அதை நல்லதுக்குன்னே நினைச்சுக்கோ..எது நமக்கு விதிச்சுருக்கோ அது நிச்சயம் நம்மை வந்து சேரும். நீ எதையும் மனதிற்குள் போட்டு கலங்காதே !என்று மகனின் மனதை படித்தவர் போல் ஆறுதல் சொன்னார்.
நம்பியோ, தாயின் மடியில் முகத்தை புதைத்துக் கொண்டே "ஏம்மா அப்பா நம்மை இப்படி நிர்கதியா விட்டுப் போனார்?அப்பா இருந்திருந்தா! என்னை நல்லா படிக்கவச்சிருப்பார் தானே!நானும் நல்லா படித்திருப்பேன்.." என்ற மகனின் வார்த்தைகள் அவரை நிலைகுலையச் செய்தது.
மகன் என்றும் கேட்டிடாத கேள்வியை கேட்டதிலேயே மகனின் மனதை படித்தவர்.
"உதி ஏப்பா ?இன்று இப்படி எல்லாம் பேசுறே.. உனக்கு என்னப்பா குறைச்சல்.."
"ம்மா நானும் நல்லா படித்திருந்தா எல்லாருக்கும் என்னை பிடித்து இருக்கும் தானே !"என்று குழந்தை போல் கேட்ட மகனை ஒன்றும் புரியாமல் பார்த்தவர்.
"யாருக்கு என் மகனைப் பிடிக்கலை ..உன்னை போய் பிடிக்கலைன்னு யாரால் சொல்ல முடியும். அப்படி சொன்னால் அவர்களுக்கு கண் இல்லைன்னு தான் சொல்லனும்.."
"ஆமாம் உங்களுக்கு எப்போதும் உங்க மகன் தான் ஓசத்தி!"
"ஆமாம் என் மகன் எனக்கு ஓசத்தி தான்..உனக்கு என்னடாம்மா கொறைச்சல்..சும்மா ராஜாவாட்ட இருக்கே..கை நிறைய சம்பாதிக்கிறே.எந்த கெட்ட பழக்கமும் இல்லை.இதுக்கு மேலே என்ன வேனும்.."
"ம் ! படிப்பு வேனும்.."
"படிப்பு என்ன படிப்பு ! மெத்த படிச்சவங்களே என் மகனிடம் அறிவு பிச்சை வாங்கனும்.."
"போதும்மா உங்க மகனின் பெருமை..படிப்பில்லைன்னா யாரும் நம்மளை மதிக்க மாட்டாங்க.."
"அப்படி உன் குணத்திற்கு கொடுக்காத மதிப்பு! உன் படிப்புக்குத் தான் கொடுப்பாங்கன்னா! அப்படிப் பட்டவங்க சவகாசமே உனக்கு வேண்டாம்.." என்ற தாயை திகைத்துப் போய் பார்த்தான் உதயனம்பி.
தன்னை திகைத்து பார்த்த மகனிடம்,"உதிம்மா உன்னை உனக்காக பிடித்தவர்கள் உன்னிடம் குறை காண மாட்டார்கள்.மற்றவர்களுக்காக படிக்கவில்லை என்று கவலைப்படாதே..உனக்கு படிப்பு இப்போதும் அவசியம் மென்றால் ,ஏதோ கரஸ்ன்னு சொல்றாங்களே !அதில் கூட சேர்ந்து படி..எங்க காலத்தில் தான் நினைத்த போது படிக்க முடியாது.அதற்கான வசதிகள் இல்லை..ஆனால் இப்போது அப்படி இல்லையே ! எத்தனை வயசு வரை வேண்டுமானாலும் படிக்கலாமே .."என்ற தாயை வியந்து பார்த்தான் உதயனம்பி.
தாய் சொன்ன விசயத்தை நாம் இதுவரை யோசித்தாதே இல்லையே !எனக்கு ஏன் ?இத்தனை நாள் இது தோன்றவில்லை என்று நினைத்தான்.
தாழ்குழலியோ,"படிப்பு தான் உன் பிரச்சினை என்றால் தாரளமாக நீ இப்ப கூட படிப்பா..பெருமைக்கு படிப்பதை விட அவசியத்திற்கும்,தேவைக்கும் படிக்கனும்.உன் லட்சியம் என்னன்னு எனக்கு தெரியும். கண்டதை நினைத்து வருந்தாமல் உன் கவனத்தை அந்த லட்சியத்தை நிறைவேற்ற போராடு! அதற்கு தேவையான படிப்பை கற்றுக் கொள்.." என்ற தாயை ஆச்சரியமாக பார்த்தான்.
மகனின் வியந்த பார்வையைக் கண்டு சிரித்தபடியே " என் மகனை நான் பக்குவப்பட்ட பெரிய மனிதனாக நினைத்திருந்தேன்.ஆனால் நீ இன்னும் சிறுபிள்ளை போல் நடந்து கொள்கிறாயே! வளரந்த குழந்தை !என்று செல்லமாக மகனை கொஞ்சினார்.
நம்பியோ மனககுழப்பத்துடனேயே எழுந்து அமர்ந்தான்.
தாழ்குழலியோ,மகனின் தெளிவில்லாத முகத்தைக் கண்டு,"உதி உன்னை படிக்கவில்லை என்று யாராவது அவமானப்படுத்தினால் அவர்கள் முன் உழைப்பால் உயர்ந்துகாட்டனுமே தவிர இப்படி சோர்ந்து போகக் கூடாது .நீ என் உயிர் டா.உனக்காகத் தான் நான் என் மூச்சை பிடித்து வைத்திருக்கிறேன்..உன் முகம் வாடினால் என்னால் தாங்க முடியாதுப்பா..நீ நல்லா இருக்கனும்..என் மகன் எதற்காகவும் இனி கண்கலங்க கூடாது.. "என்றவரின் விழிகளிலும் நீர் பெருகியது.
அத்தனை நேரம் தன் கவலையிலேயே உழன்றவன், தாயின் கண்களில் நீரைக் கண்டதும் துடித்துப் போனவன்,"ம்மா நீங்க வருந்தாதீர்கள்.இனி நான் எதற்கும் கலங்க மாட்டேன்.உங்களை விட எனக்கு எதுவும் முக்கியமில்லை.."என்று தாயுக்கு சொல்வதைப் போல் தனக்கும் சொல்லிக் கொண்டான்.
மகனின் வார்த்தைகள் அந்த தாயை ஆனந்தப்படுத்தியது.மகனின் கன்னத்தை செல்லமாக கிள்ளியபடியே , "எத்தனையோ பிரச்சினையின் போது உன் தைரியத்தையும்,பக்குவமான அணுகு முறையையும் கண்டு நான் பிரமித்து இருக்கிறேன்..அப்படிப்பட்ட நீ இன்று இப்படி கலங்குவது என் நெஞ்சை வலிக்க செய்கிறது .."என்றவுடன்.
" சாரிம்மா..இனிமேல் இப்படி நடக்காது .ஏதோ ஒரு குழப்பத்தில் புத்தி தடுமாறிட்டேன்..இனி இப்படி நடந்து கொள்ளமாட்டேன் .." என்றான்.
"சரிப்பா இனி என் பையன் எதற்கும் வருந்தக் கூடாது..உன் மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் இப்போது சாப்பிடலாமா ?அம்மாவுக்கு பசிக்குது.." என்றவரிடம்.
"ம்மா இன்னும் நீங்க சாப்பிடலையா? இத்தனை நேரம் சாப்பிடாமலா இருப்பீங்க..நீங்க மாத்திரை போடனும்.எனக்காக காத்திருக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.." என்று கடிந்து கொண்ட மகனுக்கு ,புன்னகையுடனே சாப்பாட்டை எடுத்து வைத்தார் தாழ்குழலி.
உதயனம்பியோ, தாயுடன் சாப்பிட்டுவிட்டு தன் அறையில் வந்து படுததவனுக்கு, உறக்கம் தான் வரவில்லை.
நிறையின் வார்த்தைகள் அவன் மனதை இன்னும் வதைத்துக் கொண்டே தான் இருந்தது.
ஆனால் ,இப்போது அவன் மனம் தெளிந்திருந்தது.அந்த தெளிவு அவனை சில முடிவுகள் எடுக்க தூண்டியது.தன்னை வேண்டாமென்று ஒதுக்கியவள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வெறி தலைதூக்கியது.
இனிமேல் அவள் சொன்னது போல் அவள் முன் செல்லக் கூடாது.அவள் முகத்திலும் விழிக்க வேண்டாம்.தன் தாய் சொன்னது போல் தன் லட்சியத்தை அடைய முழுமனதுடன் பாடுபட வேண்டும் என்று எண்ணினான்.
தன் தாயை நினைத்தவனுக்கு மனதிற்குள் பெருமையாக இருந்தது. தான் வீடு வரும் போது இருந்த மனநிலைக்கும் இப்போது இருக்கும் மனநிலைக்கும் எத்தனை வித்தியாசம்.
தன் மனக்கவலையை பனிப்போல் விளக வைத்துட்டாரே! என்று வியந்தான்.
நிறையோ தான் நினைத்ததை உதயனம்பியிடம் சொல்லிவிட்டோம் என்ற நிம்மதியில் இருந்தாள்.
விதி தனக்கு வைத்திருக்கும் சோதனையை அறியாமல்! தான் இன்று வேண்டாம் என்று தூக்கி எறிந்தவனின் அன்புக்காக ஒரு நாள் ஏங்கி தவிக்க போகிறோம் என்று உணராமல் நிம்மதியாக உறங்கினாள்.
தொடரும்..
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Hi friends, எல்லோரும் எப்படி இருக்கீங்க.. தொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயம் (7) பதிந்துள்ளேன்..படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
சாரி ப்ரெண்ட்ஸ்..வீட்டில் ஒரு பெரிய இழப்பு .. அதிலிருந்து மீண்டு வர கொஞ்ச நாள் ஆகிவிட்டது..அது தான் என்னால் தொடர்ந்து யூடி போடமுடியலை..இனி தொடர்ந்து தவறாமல் யூடி வரும்.. உங்கள் ஆதர்வை வழக்கம் போல கொடுத்து என்னை ஊக்கபடுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
நாட்கள் தெளிந்த நீரோடையாக அழகாக நகர்ந்து கொண்டிருந்தது.உதயனம்பி தன் உழைப்பால் தாங்கள் குடியிருக்கும் வீட்டை தன் தாயின் பெயருக்கு வாங்கியிருந்தான்.
அதுமட்டுமின்றி தன் மாமா தன்னிடம் போக்கியத்திற்காக கொடுத்த பணத்தையும் திரும்ப கொடுத்து ,அவரை கட்டாயப் படுத்தி வாங்க வைத்திருந்தான்.
உழைப்பு மட்டுமே அவன் மூச்சானது..தன் கனவை நனவாக்க போராடிக் கொண்டிருந்தான்.
உதயனம்பி நிறையை பார்த்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.
நம்பி தன் மாமா வீட்டிற்கு போனாலும் ,நிறை இல்லாத நேரமாக சென்று வந்தான் .நிறையும் தன் படிப்பை முடித்துவிட்டு இப்போது ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறாள்.
உதயநம்பியோ,மாலை நேரம் ஆட்டோமொபைல் இஞ்ஜினியரிங் கல்வியை பற்றி படிக்கிறான்.
ஆம் ,அவன் நல்ல மனதிற்கு அவன் ஆசைப்பட்டது நடக்கிறது.
உதயனம்பி தான் படிக்கவில்லையேன்னு! தன் தாயிடம் என்று வருத்தபட்டனோ,அன்றே தாழ்குழலி தன் நிம்மதியை இழந்தார்.
மகனின் வருத்தத்தை தாங்க முடியாத தாழ்குழலி,தன் அண்ணனிடம் மகனின் ஏக்கத்தைப் பற்றி சொல்லி புலம்பினார்.
ஆடலரசோ ,தங்கை சொன்னதைக் கேட்டு வருந்தியவர், மருமகனின் கவலையை போக்க என்ன செய்யலாம் என்று யோசித்த படியே இருந்தார்.
சரியாக அப்போது பனி நிலவும் , தன் கணவன் சேத்தனுடன் ,தன் தாய் தந்தையை பார்க்க அந்த வாரம் வந்திருந்தாள்.
எப்போதும் கலகலப்பாக இருக்கும் தன் மாமனாரின் யோசனையான முகம் அன்று சேத்தனை குழப்பியது.
அன்று இரவு உணவு முடிந்தபின் ,உறங்க செல்லும் முன் தன் மாமனாரிடம் சேத்தன் பேசினான்.
ஆடலரசும் தன் மனச்சுமையை யாரிடமாவது இறக்கிவைக்க நினைத்தவர் ,தன் பெரிய மருமகனிடம் தன் கவலையைச் சொன்னார்.
சிறிது நேரம் கழித்து, "மாமா நான் வேண்டுமானால் நம்பியுடன் பேசி பார்க்கட்டுமா?"என்று கேட்டான்.
"தாரளமாக பேசிப் பாருங்கள்.. நிச்சயமாக உங்களிடம் பேசினால் அவன் மனச்சுமையாவது குறையும்.." என்றார் ஆடலரசு.
சேத்தன் தாமதிக்காமல் அடுத்த நாளே உதயனம்பியை தனியாக சந்தித்து பேசினான்.
ஏற்கனவே இருவருக்கும் ஒரு நல்ல தோழமை உறவு இருந்தால், எந்த பிரச்சினையும் இல்லாமல் நம்பி தன் மனதை அரித்த கவலைகளையெல்லாம் சேத்தனிடம் கொட்டித் தீர்த்தான்.
சேத்தனோ,நம்பி நிறை மீது வைத்திருக்கும் காதலை கண்டு பிரமித்தான்.அதுமட்டுமின்றி நம்பியின் ஆசையையும், லட்சியத்தையும் கேட்டு வியந்து போனான்.என்ன மாதிரி மனிதன் இவன்!
எத்தனை அறிவும்,ஆற்றலும் நிறைந்தவனாக இருக்கிறான்..இவனின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் எத்தனை பேருக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று எண்ணினான்.
உதயனம்பிக்கும் தன் மனப்பாரத்தை இறக்கி வைக்க சேத்தன் தேவைப்பட்டான்.
சேத்தனோ, நம்பியின் கனவை நனவாக்க ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டவன்,நம்பியிடம் ஆறுதலாக பேசினான்.
"நம்பி நீ கவலைப்படாதே ! உனக்கு இனி எல்லாம் நல்லதாகவே நடக்கும்.கூடிய விரைவில் நிறையும் உன்னை புரிந்து கொள்வாள்.."என்று நம்பியின் மனதை உணர்ந்து சொன்னான்.
நம்பியோ,சேத்தன் சொன்னதைக் கேட்டு வெற்று சிரிப்பை உதிர்த்தான்.
சேத்தனோ, அவனின் தோள்களை ஆறுதலாக தட்டிக் கொடுத்த படியே,"இந்த அண்ணனிடம் சொல்லிவிட்டாய் தானே! இனி நான் பார்த்துக் கொள்கிறேன்.என்னை நம்பு! நான் விரைவில் ஒரு நல்ல செய்தியுடன் உன்னை சந்திக்கிறேன்.." என்று கூறிச் சென்றான்.
உதயனம்பியோ, தன் மனக்கவலைக்கு ஒரு தீர்வு கிடைக்குமென்று அப்போதும் நினைக்கவில்லை.
ஆனால், அடுத்த நாள் சேத்தன் சொன்னது போலவே, ஒரு சிறந்த யோசனையுடன் வந்தான்.
"நம்பி நான் இப்போது சொல்வதை நீ எப்படி எடுத்துக்குவேன்னு தெரியலை..தப்பா நினைக்காதே .."என்று பீடிகையுடன் ஆரம்பித்தான்.
"எதுவாக இருந்தாலும் சொல்லுங்க அண்ணா! உங்களைப் போய் நான் எதற்கு தப்பா நினைக்க போறேன்.."
"நம்பி என் ப்ரெண்டோட அப்பா இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர்.. அதுவும் ஆட்டோமொபைல் துறையில் தான் இருக்கிறார்.அவரிடம் உன்னைப் பற்றியும்,உன் லட்சியம்பற்றியும் பேசினேன் .."என்று பேச்சை நிறுத்திவிட்டு நம்பியைப் பார்த்தான்.
நம்பிக்கோ, அவனின் பார்வையின் பொருள்படும் புரியவில்லை.
சேத்தன் தன்னை புரியாமல் பார்த்த நம்பியிடம்,"உன் லட்சியம் நிறைவேறவும்,நீ படிக்கவில்லையே !என்ற உன் ஏக்கம் தீரவும் அவர் ஒரு யோசனை சொன்னார் .."என்றவனை ஆர்வமாக பார்த்தான் நம்பி.
" நம்பி நீ மாலை நேரம் அவர் வீட்டுக்குச் சென்று ஆட்டோ மொபைல் படிப்பை பற்றி அறிந்து கொள்ளலாம்..நீ ஏற்கனவே பத்தாவது வரை ஆங்கில வழிக் கல்வியில் படித்திருப்பதால் உன்னால் அந்தப் பாடத்தை எளிதாக கற்றுக் கொள்ள முடியும்..நீ நல்லா படிப்பாய் என்று மாமாவும் சொல்லியிருகார்.உன் லட்சியத்தை அடையவும் அது உனக்கு பேருதவியாக இருக்கும்.." என்றான்.
நம்பியோ எதுவும் பேசாமல் யோசனையுடன்! அவனே, மேலே சொல்லட்டும் என்று மெளனமாக இருந்தான்.
சேத்தனோ,அவனிடம் மீண்டும் தொடர்ந்து," இதில் ஒரே ஒரு மிகப் பெரிய மைனஸ் என்னவென்றால் ,நீ இன்ஜினியரிங் படிப்பை பற்றி நன்கு கற்றுக் கொள்ளலாம்.. ஆனால் நீ கற்றுக்கொண்டதற்கான சான்றிதழ் மட்டும் கிடைக்காது.."என்றான்.
உதயனம்பியோ, "சான்றிதழ் இல்லாமல் என்ன படித்து என்ன ப்ரயோஜனம்..இனி நான் இன்ஜினியரிங் படிப்பை பற்றி தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறேன்.. "என்று சலிப்புடன் சொன்னவனிடம்.
"நம்பி அப்படி சொல்லாதே! மனம் தளரவிடாதே!அந்த படிப்பு நீ ஆசைப்பட்ட விஷயத்தை செய்து முடிக்க மிக உதவியாக இருக்கும்.. ஆட்டோமொபைல் பற்றிய அனுபவத்தை வைத்தே! நீ உன் வெற்றி பாதையில் பாதி தூரம் கடந்துவிட்டாய்.இன்னும் அதை பற்றிய கல்வியறிவும் இருந்தால் உன் நோக்கத்தை எளிதாக அடைந்து விடலாம்..அது மட்டுமின்றி நீ படிக்கவில்லையே என்ற உன் மனக்கவலையும் தீர்ந்துவிடும்.."
"அண்ணா இது நடைமுறைக்கு ஒத்துவராது.கேட்பவர்கள் சிரிப்பார்கள்.படித்தற்கான சான்றிதழ் இல்லாமல் படித்து என்ன ப்ரயோஜனம் ..படிக்க வேண்டிய வயதில் படிக்காமல் இனி படித்து என்ன பயன். இந்த வயதில் போய் படிக்க முடியுமா? சொல்வதற்கு எளிதாகத் தான் இருக்கும்.ஆனால் நடைமுறைக்கு சாத்தியப்படுமா?" என்று கேட்டவனிடம்.
"நம்பி படிப்பதற்கு வயது என்றும் தடையில்லை. ஆர்வமிருந்தால் போதும்.எந்த துறை பற்றிய அறிவும் வீணாகாது.அதுமட்டுமின்றி நீ அந்த துறையில் தான் வேலை பார்க்கிறாய்.அனுபவ அறிவுடன் கல்வியறிவும் சேர்ந்தால் உன்னால் எளிதாக சாதிக்க முடியும்.அதை பற்றிய தெளிவு கிடைக்கும்.அந்த தெளிவு உன்னை உச்சத்துக் கொண்டு செல்லும்.மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்யென்று பயந்து பயந்து வாழ்ந்தால்! நமக்கு பிடித்த மாதிரி எப்போது தான் வாழ்வது!லட்சியவாதிகள் எல்லாம் நடைமுறைக்கு சாத்தியப்படாததைத் தான் சாதிக்கிறார்கள்.."
"அண்ணா நீங்க சொல்வது எல்லாம் சரிதான்.. ஆனாலும் என் மனம் ஏனோ குழப்பமாகவே இருக்கு.."
"நம்பி இதில் குழம்புவதற்கு எதுவும் இல்லை..நான் அவரிடம் பேசிவிட்டேன்..நீ நாளையிலிருந்து அவர் வீட்டுக்கு போறே..படிக்கிறே! ஓகே.."என்று தன் கட்டைவிரலை உயர்த்தி அவனிடம் காட்டினான்.
"ஓகே அண்ணா! நீங்க இவ்வளவு தூரம் சொல்வதால் போகிறேன்.."
"குட் ..ம் ம்.. ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.நீ படித்து முடிக்கும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம்..உனக்கு தேவையான அனைத்து உதவியும் நான் செய்றேன்.. அதுமட்டுமில்லாமல் கரஸ்பாண்டஸ் கோர்ஸ்சும் ஜாயின்ட செய்து, நீ ஒரு டிகிரி சான்றிதலும் வாங்க நான் ஏற்பாடு செய்யறேன் .."என்றவனை வியந்து பார்த்தான் உதயனம்பி.
தன்னை ஆச்சரியமாக பார்த்த நம்பியை இழுத்து ஆரத்தழுவிக் கொண்ட சேத்தன்."நீ என் உடன்பிறவா சகோதரன் டா ..என்னமோ உன்னைப் பார்த்த முதல் நாளிலிருந்தே உன்னை வேறாக என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.." என்றவனை உதயனம்பியும் அன்புடன் தழுவிக் கொண்டான்.
அதன் பிறகு எல்லாமே வேகமாகவும்,சுமூகமாகவும் நடந்தது.
சேத்தன் மூலமாக விஷயத்தை கேள்விப்பட்ட ஆடலரசும்! மகிழ்ந்து போனார்.தன் மருமகனை படிக்க வைக்க முடியவில்லையே என்ற அவரது குற்றவுணர்வும் மறைந்தது.
உதயனம்பியும் சேத்தன் சொன்னதை கேட்டு இந்த ஒருவருடமாக மாலை சங்குமணியிடம் கடையை ஒப்படைத்து விட்டு படிக்க சென்று வருகிறான்.
சேத்தன் சொன்னது போல் ஆட்டோமொபைல் கல்வியைப் பற்றிய அறிவு அவன் கனவுக்கும், முயற்சிக்கும் பேருதவியாக இருந்தது.
நம்பியின் ஆர்வத்தையும்,அறிவையையும் கண்டு பேராசிரியரே வியந்து போனார்..
சேத்தனிடம்.." இந்த மாதிரி ஒருவனை நான் பார்ப்பது இதுவே முதல்முறை..இவன் மட்டும் சரியான நேரத்தில் படித்து இருந்தால் இன்னேரம் எங்கேயோ போய் இருப்பான்.." என்று மனதார பாராட்டியிருந்தார்.
உதயனம்பியோ,நான்கு வருடத்தில் கற்க்க கூடிய கல்வியை அவனின் ஆர்வத்தால் இரண்டே வருடத்தில் கற்றுக் கொள்ளும் நிலையில் இருந்தான்.
நிறையின் ஞாபகமும்,அவளின் வார்த்தைகளும் அவனை வதைத்தாளும்..அதை ஒதுக்கி விட்டு தன் வேலையில் தன்னை புகுத்திக் கொள்ள பழகிக் கொண்டான்.
நிறையோ, தான் சொன்ன பிறகு நம்பி தன்னை தொந்தரவு செய்யவில்லையே !என்று மகிழ்ந்தாலும்,ஏனோ அவளுள் ஒரு வெறுமை குடிகொண்டது.
அதற்கான காரணத்தைத் தான் அவளால் அறிந்து கொள்ளமுடியவில்லை.
உதயனம்பி அன்று தன் வேலைகளை யெல்லாம் முடித்துவிட்டு இரவு ஓய்ந்து போய் வீடு வந்தவனை தாழ்குழலியின் வாடிய முகமே வரவேற்றது.
தாயின் வாடிய முகம் உதயனம்பியின் மனதை பிசைந்தது.
வேகமாக சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன், தாயின் அருகில் வந்தமர்ந்து என்னவென்று விசாரித்தான்.
"நீ முதலில் சாப்பிடுப்பா.. அப்புறம் சொல்றேன்.." என்றவர் மகனுக்கு உணவை எடுத்து வைத்தார்.
நம்பியும் தாய் சொல்லைத் தட்டாமல், உண்டு முடித்து விட்டு தாயின் அருகில் வந்து அமர்ந்தவன், கேள்வியாக தாயைப் பார்த்தான்.
மகனின் பார்வையை புரிந்து கொண்டவர்,"உதிம்மா நான் இன்னைக்கு ஏதேச்சையா மாமா வீட்டிற்கு போனனேன்.." என்றவர் அங்கு நடந்ததை சுருக்கமாக மகனிடம் கண்களில் கண்ணீருடன் சொன்னார்.
உதயனம்பியோ தாய் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தவன்,"அம்மா .. இது..இது ,எல்லாருக்கும் தெரியுமா?"
தாழ்குழலியோ, மகன் கேட்கவருவதை புரிந்து கொண்டவர், "இல்லை.." என்று தலையை மட்டும் ஆட்டினார்.
தாய் சொன்னதைக் கேட்ட உதியனம்பியோ, நிம்மதி பெருமூச்சு விட்டான்.
தாழ்குழலியோ,மகனிடம் "ஏன் தான் நம் குடும்பத்துக்கு இப்படியெல்லாம் நடக்குதோ!மாமாவையும் ,அத்தையையும் என்னால் கண்ணில் பார்க்க முடியவில்லை..என்னால் முடிந்தவரை அவர்களுக்கு ஆறுதலும், ஒரு உறுதியும் கொடுத்து வந்திருக்கிறேன்.." என்றவர் மகனின் முகத்தை யோசனையாக பார்த்தார்.
மகனோ தாயே சொல்லட்டும் என்று மெளனம் காத்தான்.
தாழ்குழலியோ,தன் அண்ணனுக்கு தான் கொடுத்து வந்த வாக்கை மகனிடம் சொன்னவர் ,"நீ இதற்கு சம்மதிப்பாயா?என்று எனக்கு தெரியவில்லை..ஆனால் என் சொல்லை மீறமாட்டாய் என்ற உறுதியில் வாக்களித்து விட்டேன்..உனக்கு சம்மதம் தானே?"
"அம்மா நான் என்று உங்கள் பேச்சை மீறியிருக்கேன்..உங்க இஷ்டம்.." என்றவன் எழுந்து தன் அறைக்கு செல்ல முற்பட்டான்.
தாழ்குழலியோ, மகனின் கையை பிடித்து இழுத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டவர்," எல்லாருக்கும் தங்கள் எதிர்கால வாழ்க்கையை பற்றிய கனவு இருக்கும்.ஆனால் நான் எடுத்த இந்த முடிவு உனக்கு கஷ்டமாக இருந்தால் என்னை மன்னித்துவிடுப்பா ..என்று வருந்தியவரிடம்.
"அம்மா என்ன பேச்சு இது..எனக்கென்று தனியாக எந்த கனவும் இல்லை.உங்கள் விருப்பம் தான் என் விருப்பம்.இனிமேல் இது போல் பேசாதீர்கள்.."என்று கோபமாக சொன்னான்.
"சரிப்பா இனி அப்படி பேசவில்லை..உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும்.நீ உன் மனதைப் போட்டு குழப்பிகாதே.. போய் நிம்மதியாக தூங்கு.." என்றவரிடம் தலையை ஆட்டி விட்டு வந்து தன் அறையில் படுத்தவனுக்கு தூக்கம் தான் எட்டா கனியானது.
தான் தாய் சொன்னதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை..விதி ஏன்? தன் வாழ்க்கையில் இப்படி விளையாடுகிறது என்று கலங்கிக் தவித்தான்.
எது நடந்தாலும் மாமாவுக்கும்,தன் அன்னைக்கும் எந்த கவலையையும் தராமல் ,நிம்மதியை மட்டுமே! தான் தரவேண்டும் என்று எண்ணினான்.இதைப் பற்றி சேத்தன் அண்ணாவிடம் நாளை பேச வேண்டுமென்று மனதிற்குள் முடிவு செய்தான்.
அடுத்த நாள் பொழுது விடிந்ததும்,அவசரமாக கிளம்பி சேத்தனைப் பார்க்க மருத்துவமனை சென்றான்.
சேத்தனோ, மருத்துவமனையில் காலில் அடிப்பட்டு வந்திருந்த ஒரு நாய் குட்டிக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தான்.
சேத்தன் தன் வேலையை முடித்து வரும் வரை காத்திருப்போர் இருக்கையில் நம்பி அமைதியாக அமர்ந்திருந்தான்.
தன் சிகிச்சையை முடித்து விட்டு நாய்குட்டியின் உரிமையாளரிடம் பேசிய படியே அறையிலிருந்து வெளியே வந்த சேத்தன், அங்கே நம்பியை கண்டதும் ஆச்சரியத்துடன் அவனிடம் வந்தான்.
நம்பியும் சேத்தனை கண்டதும் எழுந்து அவன் அருகில் வேகமாக சென்றவன், "அண்ணா நான் கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா ?"என்று பதற்றமாக கேட்டான்.
சேத்தனும் அவன் என்ன கேட்க வருகிறான் என்று புரிந்து கொண்டவன்,நம்பியின் கைகளை ஆறுதலாக பிடித்த படி, "ஆமாம்.." என்றுபெருமூச்சு விட்டபடி சொன்னான்.
நம்பியோ," இது எப்படி அண்ணா சாத்தியம்.." என்று கேட்டவனிடம்.
சேத்தன் அவனுக்கு புரியும்படி விளக்கிச் சொன்னான்.
சேத்தன் சொன்னதை கேட்டவனுக்கு கண்களில் நீர் தேங்கியது.
சேத்தனுக்கும் அவனின் நிலை கண்டு மனம் கலங்கியது.நம்பியின் ஆசையை அறிந்திருந்தவனுக்கு அவனின் வேதனை புரிந்தது.
நிலை கொள்ளாமல் தவித்த உதயனம்பியிடம்," நம்பி நீ மனதை தளரவிடாதே உன் மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.." என்று ஆறுதல் சொன்னான்.
நேற்று தாழ்குழலி தன் அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்த போது சேத்தனும் அங்கு தான் இருந்தான்.. நம்பியின் மனதிலிருக்கும் ஆசையும் அவனறிந்த ஒன்றே.
உதயனம்பியோ, சேத்தனின் ஆறுதலான வார்த்தையை கேட்டு கண்ணுக்கு எட்டாத சிரிப்பை உதிர்த்தவன், அவனிடம் தலை அசைப்புடன் விடை பெற்றுக் கொண்டு தன் கடையை நோக்கிச் சென்றான்.
அவனின் மனமோ! அடை மழை போல் அழுது கொண்டிருந்தது..தான் ஒரு நொடி கூட யாரையும் மனம் நோக பேசியதும் இல்லை,சபித்ததும் இல்லையே ..ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று நினைத்தவனுக்கு, தன் மனம் கவர்ந்தவளின் முகம் கண் முன்னே வந்து சென்றது.தான் கேள்விப்பட்ட விஷயம் மட்டும் பொய்யாக இருக்க கூடாதா?என்று கலங்கி தவித்தவனுக்கு வாழ்க்கை மீதிருந்த பிடிப்பே போய்விட்டது.
விதியின் விளையாட்டை யார் அறிவார்?
தொடரும்..
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Hi friends, எல்லோரும் எப்படி இருக்கீங்க..தொடுக்காத பூச்சரமே! அடுத்த அத்தியாயம் (8)பதிந்துள்ளேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.. கதையின் போக்கு பிடித்து இருக்கா என்று ஒரு வார்த்தை சொன்னால் அடுத்த வரும் அத்தியாயங்கள் எழுத எனக்கு ஊக்கமாக இருக்கும்..
சைலண்ட் ரீடர்ஸ்சும் உங்க கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்..
போன யூடிக்கு லைக்கும் காமெண்ட்ஸ்சும் கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. அன்புடன், இனிதா மோகன்
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Hi friends, தொடுக்காத பூச்சரமே!அடுத்த அத்தியாத்திலிருந்து குட்டி துணுக்கு..
முன்னோட்டம்
உதயனம்பி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.அவன் மீது ஏதோ தொப்பென்று விழவும்,என்னவோ!ஏதோவென்று..உறக்கம் கலைந்து விழித்துப் பார்த்தான்.
.
தன் மேல் விழுந்து கிடந்தவளை கண்டவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை.
இது எப்படி என்று குழம்பியவனுக்கு,அவள் உறக்கத்தில் படுக்கையிலிருந்து உருண்டு தன் மீது தெரியாமல் விழுந்திருக்கிறாள் என்று புரிந்தது.
அவளோ, கீழே ஒருவன் மீது தான் விழுந்து கிடக்கிறோம் என்று அறியாமல்..
என்னமோ பஞ்சு மெத்தையில் படுத்திருப்பது போல் சொகுசாக அவன் நெஞ்சில் முகத்தை அழுத்திக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
உதயனம்பியோ,இரவு தன்னை என்ன பேச்சு பேசினாள்.. இப்போது தன் மீது பசை போல் ஓட்டிக் கொண்டு கிடப்பதை நினைத்து அழுவதா ?சிரிப்பதா ?என்று எண்ணினான்..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.