All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன் கண்ணில் என்னை கண்டேன் epi 17

Karthikpriya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் கண்ணில் என்னை கண்டேன்
17

சித்தார்த் கொடுத்த கிபிட் பாக்ஸை ஆர்வமாக திறந்து பார்க்கிறாள். அதில் ஒரு கோல்ட் செயின் லாக்கெட்டுடன் இருந்தது. அதை பார்த்ததும் தித்திப்பாக அதிர்ந்தாள். அந்த லாக்கெட் பார்ப்பதற்கு இதய வடிவத்தில் இருந்தது. அதில் ஒரு சாவி நுழைவதற்கான துளையை கண்டவள் அவனை கேள்வியாக நோக்கினாள்.

அவளின் பார்வையை சந்தித்தவன் அவள் கேட்க வருவது புரிந்தும் “என்ன” என்று பார்வையாலே வினவினான்.

வர்ணா, “இதன் உள்ளே ஏதோ இருக்கும் போல இருக்கே?” என்று ஆர்வமாக கேட்டாள்.

அவளை பார்த்து சிரித்தவாறே தன் ஷர்ட்டுக்குள் மறைந்திருந்த இன்னொரு சங்கிலியை எடுத்து அவளுக்கு காண்பித்தான். அந்த செயினில் ஒரு சாவி தொங்கிக்கொண்டிருந்தது. அதை பார்த்ததும் இதை திறப்பதற்கான சாவி அது என்பதை புரிந்து கொண்டவள் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள்.

பின் அந்த லாக்கெட்டில் என்ன தான் இருக்கும் என்று பார்க்கும் ஆர்வத்தில் படபடக்கும் இதயத்தை மறைத்து இயல்பாக இருப்பது போல் தெரிய ஒரு நிமிடம் கண்ணை மூடி தன்னை நிதானித்து, பின் பொறுமையாக தன் பார்வையை உயர்த்தி அவனிடம் சாவிக்காக கை நீட்டினாள்.

அவளின் படபடப்பை ரசித்து மெதுவாக அவளருகில் வந்தவன் அவளின் கழுத்தில் அந்த செயினை அணிவித்தான். பின் சிரித்தவாறே அவளிடம் சாவியை தரமுடியாது என்று இடவலமாக தலையாட்டினான். “இப்போ திறக்க கூடாது” என்று சிரித்துக்கொண்டே கூறினான்.

வர்ணா, “டேய் கொடு டா. நான் இப்போவே பார்க்கணும். எனக்கு ஆர்வம் தாங்க முடியல” என்று வேகமாக கேட்டாள்.
சித்தார்த், “சரி ஓகே தரேன். ஆனா நான் என்ன சொன்னாலும் செய்வியா?” என்று கேட்டான்

வர்ணா, “ஹ்ம்ம் சொல்லு செய்றேன்.”

சித்தார்த், “கண்டிப்பா? பின் வாங்க மாட்டியே?”

வர்ணா, “கண்டிப்பா செய்றேன் கொடு டா.”

சித்தார்த், “சரி நான் சொல்றத திருப்பி சொல்லு. சித்தார்த் ரொம்ப நல்ல பையன்.”

வர்ணா, “சித்தார்த் ரொம்ப நல்ல பையன்.”

சித்தார்த், “சித்தார்த் தான் இந்த உலகத்திலேயே அழகு.”

வர்ணா, “சித்தார்த் தான் இந்த உலகத்திலேயே அழகு.”

சித்தார்த், “ஐ லவ் சித்தார்த்.”

வர்ணா, “ஐ லவ் சித்தார்த்.”

அவள் கூறிமுடித்த பின்னே தான் என்ன கூறினோம் என்பது புரிய அதிர்ச்சியாக அவனை பார்க்கிறாள். அவன் சிரித்துக்கொண்டே, “என்ன உண்மை தான?” என்று ஆர்வமாக கேட்கிறான்.

அவள் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் ஒரு நிமிடம் தயங்கிவிட்டு அந்த கனத்தை தாங்க முடியாமல் அங்கிருந்து சென்று விடவேண்டும் என்று வேகமாக நகர்ந்தாள்.

அவளின் நோக்கம் புரிந்து துரிதமாக சென்று கதவடைத்து தாள் இட்டுவிட்டு அந்த கதவில் சாய்ந்தவாறே நின்று, “பதில் சொல்லிட்டு போ” என்று அவளின் கண்ணை பார்த்து கூறினான்.

சிறிது நேரம் அமைதியாக தன்னை நிலை படுத்திக்கொண்டவள், “நீ முதலில் கேக் கட் பண்ணு” என்று கூறினாள்.

சித்தார்த், “அப்போ சாவி வேண்டாமா?” என்று கேட்டான்.
வர்ணா தலை குனிந்தவாறே, “ ஹ்ம்ம் கொடு” என்று கேட்கிறாள்.
சித்தார்த், “இல்ல நானே திறக்கிறேன்.” என்று கூறி மெதுவாக அவளருகில் வந்து தன் கழுத்திலிருந்த சாவிக்கொண்டு அவள் கழுத்திலிருந்த பூட்டை திறந்தான்.

அதில் அவர்கள் இருவரின் சிறு வயது படமும் அவனின் குரலில் “ஐ லவ் யூ வர்ணா” என்று பதிவு செய்த குரலும் கேட்டது. ஒவ்வொரு முறை சாவி கொண்டு திறக்கும் போதும் கேட்பது போல் செட் செய்திருந்தான்.

இதை கேட்ட வர்ணா இன்னும் படபடப்பு கூட என்ன செய்வது என்று புரியாமல் அவனை நோக்கினால். பின் கேக் பக்கம் பார்வையை திருப்பினாள். புரிந்துகொண்டவன் இவள் பதில் கூறாத கோவத்தோடே கேக் வெட்டுவதற்காக அதன் அருகில் சென்றான்.

வர்ணா, “ஏதாவது வேண்டிக்கிட்டு மெழுகுவர்த்தியை ஊது டா” என்று கூறினாள்.

சித்தார்த் அவளை முறைத்துவிட்டு “ரொம்ப முக்கியம்” என்று முனகிக்கொண்டே, “நான் இப்போ கேட்டதை வர்ணா மறந்திடனும். நானும் வர்ணாவும் எப்போதும் நல்ல பிரண்ட்ஸா இருக்கணும்.” என்று கண் மூடி வேண்டி விட்டு ஊதுவதற்க்காக கண் திறந்தான். ஆனால் அதற்குள் வர்ணா அதனை ஊதி அனைத்துவிட்டாள்.

சித்தார்த், “ஏன் டி ஊதுன?” என்று கோபமாக கேட்டான்

அவள் தலை குனிந்தவாறே, “எனக்கு பிடிக்கல.” என்று கோபமாக கூறினாள்.

சித்தார்த், “அப்போ என்ன பிடிக்கும்” என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

இவள் வெட்கத்தோடு தலை குனிந்து கொள்கிறாள்.

சித்தார்த், “சரி கேண்டல் ஏத்து. வேற விஷ் கேக்கறேன்.” என்று உல்லாசமாக கூறுகிறான்.

வர்ணா தன் தலையை நிமிர்த்தாமலே அவன் கூறியதை செய்கிறாள். அவன் மெதுவாக அவளின் தலையை நிமிர்த்தி அவளின் கண்ணை பார்த்து, “காலம் முழுக்க என் உயிர் துணையாய் வருவாயா?” என்று காதல் பொங்க கேட்கிறான்.

இவளும் அவன் கண்ணை பார்த்ததும் உண்மையை மறைக்காமல், அவன் கூறியதற்கு சம்மதம் என்று தலையசைக்கிறாள்.

அவள் சம்மதம் கூறியதும் சிரித்துக்கொண்டே மெழுகுவர்த்தியை ஊதிவிட்டு கேக்கை வெட்டி அவளுக்கு ஊட்டிவிடுகிறான். அவன் ஊட்டியதில் சிறு கேக் துண்டு அவளின் உதட்டில் ஒட்டிக்கொண்டது. அவள் அதை துடைக்க கையை உயர்த்த அவளின் கையை பிடித்து தடுத்துவிட்டு தானே அதனை சுவை பார்க்கிறான். வர்ணா என்ன நடக்கிறது என்று புரியாமல் பிரம்மித்து நிற்கிறாள்.

சத்தம் இல்லாமல் முத்தமிட்டு
ரத்தம் இல்லாமல் உதடு என்ற வாள்
கொண்டு அவளின் உதட்டில்
யுத்தம் ஒன்றை நிகழ்த்தினான்.

எவ்வளவு நேரம் இந்த யுத்தம் நிகழ்ந்தது என்று புரிவதற்குள் கால்லிங் பெல் சத்தம் கேட்டு இருவரும் வேகமாக பிரிந்தனர்.

உள்ளே வந்த சேகரும் அமுதாவும், “என்ன எங்களுக்கு எங்க கேக்?” என்று கேட்க இது எதையும் கவனிக்காமல் வர்ணா வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

அவளை விசித்திரமாக பார்த்தவர்கள், “என்ன டா ஆச்சு இவளுக்கு? பேசறதை கூட கவனிக்காம போறா.” என கேட்டனர்.

சித்தார்த், “கொஞ்ச நேரம் கழிச்சு வரேன் மா.” என்று கூறிக்கொண்டே அங்கு நிற்காமல் தன் அறைக்கு சென்று கதவடைத்து தன் படுக்கையில் வேகமாக தாவி ஏறி கண்மூடி படுத்துகொண்டான்.

“இருக்கும் சந்தோஷத்தில் ஓவரா பிஹேவ் பண்ணிட்டோமோ?” என்று யோசித்தான். “ஒருவேளை இதெல்லாம் பிடிக்கவில்லையோ? இல்ல இல்ல ஒரு மாதிரி மோன நிலைல தான் வெளியில் போனா. அதான் அப்பா அம்மாவை கூட கவனிக்காம போய்ட்டா. அவ அழல அப்போ அவளுக்கு பிடிக்காம இல்ல. முதல் முறை இல்ல அதான் கொஞ்சம் அதிர்ச்சி ஆகி இருப்பா. இனிமேல் பழகிடும்.” என கூறி தனக்கு தானே சிரித்துக்கொண்டான்.
 
Top