All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன் கண்ணில் என்னை கண்டேன் epi 18

Karthikpriya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் கண்ணில் என்னை கண்டேன்
18

வர்ணா சென்றவுடன் தன் அறைக்கு வந்தவன், சிறிது நேரம் வர்ணாவை நினைத்து புலம்பிக் கொண்டிருந்தான். பின் நியாபகம் வந்தவனாக தன் டேபிள் ட்ராயரை திறந்து ஒரு டைரியை வெளியில் எடுத்தான். அது வர்ணா காலையில் நிலாவை அடித்துவிட்டு வேகமாக செல்லுக்கும்போது தவறவிட்ட டைரி. அதை திறந்து மெதுவாக வருடிக்கொடுத்தான். அதன் முதல் பக்கத்தில் இருந்த தங்கள் இருவரின் சிறு வயது புகைப்படத்தை பார்த்து சிரித்துக்கொண்டான். பின் மெதுவாக அதில் இருந்த குட்டி வர்ணாவுக்கு மெல்லிய முத்தம் ஒன்றை பதித்தான்.

“இந்த டைரியை மட்டும் நான் இன்றைக்கு பார்க்கவில்லை என்றால், நீ என்னை விரும்புகிறாய் என்பதை தெரிந்து கொள்ளாமலே இருந்திருப்பேன். நீ என்னை சின்ன வயதில் இருந்தே நினைத்துக் கொண்டிருந்தாயா ? இந்த டைரியில் முக்கால்வாசிக்கும் மேல் என்னை பற்றி தான் எழுதி இருக்கிறாய். (அது வர்ணா சிறு வயதிலிருந்து தனக்கு பிடித்த மற்றும் தன்னை பாதிக்கும் விஷயங்களை எழுதும் டைரி. அதிக நேரம் அவனே அவளை பாதித்ததால், அதிக இடங்களில் அவனை பற்றியே எழுதியிருந்தாள். ) இந்த டைரியை பார்த்ததால் தான் நான் இன்று தைரியமாக வந்து உன்னை ப்ரொபோஸ் செய்தேன். இல்லை என்றால் எங்கே நீ என்னை வேண்டாம் என்று சொல்லிடுவாயோ? இல்லை என்றால் உன்னுடைய நட்பையும் இழந்துவிடுவோமோ? என்று பயந்து என் காதலை உன்னிடம் சொல்ல தயங்கிக்கொண்டே இருந்துருப்பேன். ஆனாலும் நான் அத்தனை முறை கேட்டும் நீ ஒத்துக்கொள்ளவே இல்லை இல்ல. கடைசியில் தான் ஏதோ போனால் போகிறது என்று ஒத்துக் கொண்டாய் இல்ல?” என்று எதிரில் அவள் இருப்பது போலவே பாவித்து அவளின் டைரியிடம் பேசிக்கொண்டிருந்தான்.

வீடு வந்த வர்ணா யாரிடமும் பேசாமல் நேராக தன் அறைக்கு வந்து கதவடைத்து அதன் மீதே சாய்ந்து கொண்டு வேகவேகமாக மூச்சை இழுத்துவிட்டாள். இன்னமும் அவளால் சித்தார்த் அவளை காதலிப்பதாக கூறியதை நம்ப முடியவில்லை.

ஒரு நிமிடம் தன் உதட்டை தடவி பார்த்தவள் “ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி இருந்துட்டு பஜக்குனு முத்தா கொடுத்துட்டானே! அவன் லவ் சொன்னதையே இன்னும் என்னால நம்ப முடியல, இதுல கிஸ் வேற அடிக்கிறான். படிப்ஸ்! பழம்! ரூல்ஸ் மன்னன்னு! நெனைச்சா இவனுக்குள்ளவும் ஒரு ரெமோ இருந்திருக்கான் போலயே! இதை நான் எப்படி இத்தனை நாளாக கவனிக்காம விட்டேன்?” என்று யோசித்துக்கொண்டே வந்து தன் படுக்கையில் படுத்து, விட்டம் பார்த்து தன் புலம்பலை தொடர்ந்தாள்.

“நான் இன்னைக்கு நிலாவை அடித்திருக்க கூடாது. அவளுக்கு சித்தார்த் மேல வந்த பீலிங்ச அவள் அவனிடம் தெரிவித்தாள். அது அவளுடைய பர்சனல். நான் நடுவில் வராமல் இருந்திருந்தால் அதை சித்தார்த்தே பேசி சரி செய்திருப்பான். நான் தான் முந்திரிக்கொட்டை மாதிரி நடுவில் வந்து குழப்பிவிட்டேன். அது மட்டுமா அவளை அடிக்க வேறு செய்தேன். என்ன தான் அவள் என் பிரண்ட் என்றாலும் அவளை அடிக்கும் உரிமையை எனக்கு யார் கொடுத்தது? முதல் வேளையாக நாளைக்கு போய் எல்லார் முன்னும் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.” என்று தெளிவாக முடிவெடுத்தாள்.

“நான் அவளை அடித்ததை வைத்து தான் சித்து ஒருவேளை நான் அவனை விரும்புவதை கண்டுபிடித்தானோ? அதை தெளிவு படுத்திக் கொள்ள தான் நான் அத்தனை முறை அவன் ப்ரொபோஸ் பண்ணியும் என்னோட காதலை ஒத்துக்கொள்ளவே இல்லை. முதலில் கேக் கட் பண்ணட்டும் பேசிக்கொள்ளலாம் என்று பார்த்தால் அதிலும் ஒரு ட்விஸ்ட் செய்து என்னை ஒத்துக்கொள்ள வைத்து விட்டான். பிராடு.” என்று செல்லமாக திட்டியவாறே தன் படுக்கையில் புரண்டுக் கொண்டிருந்தாள்.

இந்த சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள தன் சிறு வயது தோழியான தன் டைரியை தேட தொடங்கினாள். முதலில் தன் காலேஜ் பாகில் தேடியவள் அதில் இல்லாததால் கபோர்டை குடைய ஆரம்பித்தாள். தன் ரூமையே தலை கீழாக புரட்டியும் டைரியை அவளால் கண்டறிய முடியவில்லை (எப்படி கிடைக்கும் அது தான் நம் சித்தார்த்திடம் இருக்கிறதே)

“எங்கு போனாலும் கூடவே தான எடுத்துட்டு போவோம்? ஒருவேளை வெளியில் எங்கேயாவது மிஸ் ஆகி விட்டதா? நாளைக்கு காலேஜ் போனவுடன் டைரியை போய் தேட வேண்டும். அச்சோ யாராவது எடுத்து படித்தால் என்னோட பர்சனல் எல்லாம் தெரிந்து விடுமே. நான் எப்படி இவ்வளவு கவனக்குறைவாக இருந்தேன்? இப்போ என்ன தான் செய்வது?” என்று கவலையோடு யோசிக்க தொடங்கினாள்.

“தொலைத்து விட்டு கவலைப்படுவதில் ஒரு பயனும் இல்லை. நாம் நல்ல விதமாகவே யோசிப்போம். தப்பானவங்க கையில் கிடைத்திருக்காது. திரும்ப எந்த பிரச்சனையும் இல்லாமல் கிடைச்சுடும்.” என்று நல்ல விதமாக யோசித்துவிட்டு தூங்க தொடங்கினாள்.

அடுத்தநாள் காலை எழுந்ததும் சித்தார்த்தின் முகம் மனக்கண்ணில் தோன்ற, பின் அவன் முத்தமிட்டது நினைவில் வர தன் உதட்டை கடித்தவள் அவனை பார்க்க வெட்கப்பட்டு “அவன் கண்ணில் படாமல் சீக்கிரமாக காலேஜ் போகணும்.” என்று தனக்குள் பேசிக்கொண்டே வேகமாக தயாராகி கிளம்பி வெளியில் வந்தாள்.

அப்போது தான் தயாராகிக் கொண்டிருந்த சித்தார்த் இவள் வெளியில் வருவதை பார்த்து “அவளுடன் இன்று பேசியவாறே காலேஜ் செல்லலாம்” என்று வேகமாக தயாராகி வெளியில் வந்தான். வர்ணா ஏற்கனவே தயார் நிலையில் இருந்த தன் தந்தையின் காரில் சென்று அமர்ந்தவள், தான் நினைத்ததை போல் அவன் வருவதற்கு முன் கிளம்பிவிட்டாள்.

காலேஜ் வந்தவள் தன் இடத்தில் அமர்ந்தாள். சிறிது நேரத்தில் நிலா வகுப்பறைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். அவளை பார்த்ததும் தான், தான் அவளை அடித்து அவமான படித்தியதும், அவள் வந்ததும் அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முடிவு செய்ததும் நினைவு வந்தது. அதற்குள் அவளின் அருகில் வந்த நிலா, அவளின் இடம் உள் இருக்கை என்பதால் வர்ணா எழுந்து வழி விடுவதற்காக காத்திருந்தாள்.

வர்ணா வழி விட்டதும் உள்ளே வந்தவள் தன் இருக்கையில் அமர்ந்தாள். வர்ணா அவளிடம் மன்னிப்பு வேண்ட மெதுவாக நிலாவின் புறம் திரும்பினாள். அதற்குள் வர்ணாவின் புறம் திரும்பிய நிலா, “சாரி வர்ணா. எனக்கு நீயும் சித்தார்த்தும் விரும்புவது தெரியாது. நான், நீ சீனியர் அண்ணாவை விரும்புவதாக தான் நினைத்தேன். ரியலி சாரி.” என்று ஆத்மார்த்தமாக மன்னிப்பு கேட்டாள்.

வர்ணா, “உனக்கு எப்படி நானும் சித்துவும் விரும்புவது தெரியும்? எனக்கே நேத்து தான்.......” என்று முழுவதும் சொல்லி முடிப்பதற்குள் வகுப்பறையின் உள்ளே நுழைந்த சித்தார்த், வர்ணாவின் அருகில் வந்து, “ஹாய் பேபி! இன்னைக்கு எனக்கு முன்னே வந்துவிட்டாயா?” என்று ரொமான்டிக்காக கேட்டான்.

வர்ணா, அவன் “பேபி” என்று கூறியதுமே அதிர்ச்சியாகி “ஆ” என்று வாய் திறந்து அவனை பார்த்தவள், அதன் பிறகு அவன் பேசிய எதுவும் அவள் காதில் விழவில்லை அதனால் திருதிருவென்று முழித்தவாறு நின்றிருந்தாள்.

பின் அவனே அவளின் அதிர்ச்சி புரிந்து சுதாரித்து தன் பேச்சை தொடர்ந்தான், “நான் தான் நேற்று இரவு நிலாக்கு கால் பண்ணி நாம் இருவரும் சின்ன வயதிலிருந்து டீப்பா லவ் பண்ற விஷயத்தை சொன்னேன். நீ காலேஜ் சேரும்போதே யாரிடமும் சொல்ல கூடாது என்று சொல்லி இருந்த தான், இருந்தாலும் அவள் உன்னோட பெஸ்ட் பிரண்ட் தான அதான் ரூல்ஸ் பிரேக் பண்ணி சொல்லிட்டேன். சாரி.” என்று கூறி தன் காதை தோப்புக்கரணம் போடுவது போல் பிடித்துக்கொண்டான்.
வர்ணா, “அட பாவி! இதெல்லாம் உலக மகா நடிப்பு டா சாமி!” என்று மனதுக்குள் கவுண்டர் கொடுத்தவள், நிலாவை பார்த்ததும், “ இட்ஸ் ஓகே நிலா. உனக்கு தான் நாங்க லவ் பண்ற விஷயம் தெரியாதே விடு. நான் தான் அத்தனை பேர் முன்னால உன்னை கை நீட்டி அடிச்சிட்டேன். என்னை மன்னித்துவிடு நிலா. எந்த நினைப்புல, எந்த உரிமையில் அடிச்சேன்னு இப்போ வரைக்கும் புரியல. ரியலி சாரி நிலா.” என்று இடைவெளி விடாமல் தன் மன்னிப்பை வேண்டினாள்.

நிலா, “இட்ஸ் ஓகே விடு. நீ என் பிரண்ட் தான. நான் அதை பெரிய விஷயமா நினைக்கல. பிரண்ட்ஸ் குள்ள சண்டை போட்டுக்கற மாதிரி தான் நினைத்தேன். இதுக்கு ஏன் இத்தனை சாரி. சரி விடு நீங்க ரெண்டு பேரும் காதலிக்கும் விஷயம் இப்போ தான் தெரிந்துவிட்டதே ட்ரீட் எங்க?” என்று பேசி அந்த கனமான சூழலை கலகலப்பாக்க முயன்றாள்.

சித்தார்த், “ஹ்ம்ம், பிரேக்ல கேன்டீன் போகலாம் இன்னைக்கு ட்ரீட் என்னோடது. எது வேணும்னாலும் சாப்பிடுங்க.” என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு தன் இடத்தில் சென்று அமர்ந்தான். பின் ஆசிரியர் வர வகுப்பும் தொடங்கியது.

இடைவேளையின் போது கேன்டீன் வந்தவர்கள் அவனிடம் வேண்டியதை கூறிவிட்டு தாங்கள் அமர இடம் தேட, அங்கு ஏற்கனவே இருந்த ரம்யா இவர்களை பார்த்து கை அசைத்து அழைத்தாள்.

சிறிது நேரத்தில் சித்தார்த்தும் வர அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டே உண்ண ஆரம்பித்தனர். நிலா பேச்சுவாக்கில் ரம்யாவிடம் இவர்களின் காதலை பகிர, ரம்யா, “அட பாவி! சீட்டர், என்னையே ஏமாத்திட்டயா? உன்னை விடமாட்டேன்.” என்று கோபமாக சித்தார்த்தின் சட்டையை, தான் உணவுண்ணும் கையாலேயே பிடிக்க மற்ற இருவரும் அவளை அதிர்ந்து போய் பார்த்தனர்.
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் என்ன aachi இந்த ramya vuku ethuku avana cheater nu solra... Ava dairy ah paathutaan ah athu thaan ஒடனே purpose pannitaan... Super Super pa
 
Top