All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன் கண்ணில் என்னை கண்டேன் epi 19

Karthikpriya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் கண்ணில் என்னை கண்டேன்
19

திடீரென ரம்யா சித்தார்த்தின் சட்டையை பிடிக்க மற்ற இருவரும் அதிர்ந்து போய் அவர்களை பார்த்தனர். ஆனால் சித்தார்த் கோவம் கொள்ளாமல் லாவகமாக தன் சட்டையை அவள் பிடியில் இருந்து எடுத்தவன் “சாரி” என்று புன்சிரிப்புடன் கூறிவிட்டு, கைக்குட்டையால் தன் சட்டையை துடைக்க தொடங்கினான். .

ரம்யா விடாமல் அவனை தன் காலேஜ் பேகால் அடித்துக் கொண்டிருந்தாள். மற்ற இருவரும் வந்து ரம்யாவை அவனிடம் இருந்து பிரித்து “என்ன தான் டா பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்? சொல்லி தொலைஞ்சிட்டு அடிச்சிக்கோங்க.” என்று கோபமாக கேட்டாள் வர்ணா.

சித்தார்த் ஏதோ சொல்ல வாயை திறக்க “ஒன்றும் பேசாதே. வாயை திறந்த என்ன பண்ணுவேன் என்று எனக்கே தெரியாது.” என்று கோபமாக கத்திவிட்டு, இவர்களின் புறம் திரும்பி, “நானே சொல்றேன். அவனை வாயை திறக்க வேண்டாம் என்று சொல்லுங்க.”என்று கண்ணை மூடி அவனின் புறம் நிறுத்து என்பது போல் கை நீட்டுகிறாள்.

வர்ணா, “சரி சரி கோவ படாமல் தண்ணீர் குடித்துவிட்டு பொறுமையா சொல்லு.” என்று அவளை ஆசுவாச படுத்தி தண்ணீரை கொடுக்கிறாள்.

ரம்யா தண்ணீர் குடித்து முடித்து சிறிது இயல்பு நிலைக்கு வந்தபின் என்ன நடந்தது என்று கூற தொடங்கினாள். “நான் 12th படிக்கும் போது இவனிடம் வந்து நான் ராகுலை லவ் பண்ற விஷயத்தை சொன்னேன். இவன் தான் எங்க வீட்ல எல்லார்க்கும் செல்லம் அதனால் இவன் சரி சொன்னா இவனே பின்னாடி எங்க கல்யாணத்தை பற்றி வீட்ல பேசும்போது உதவி பண்ணுவான்னு இவனிடம் தான் முதன் முதலில் எங்களுடைய காதலை பத்தி சொன்னேன். இவனும் நல்லவன் மாதிரி சரி கூட்டிட்டு வா நல்லவனா இருந்த உங்க காதலுக்கு உதவி பண்றேன்னு சொன்னான்.”

வர்ணா, “நல்ல விதமாக தான சொல்லி இருக்கான். எல்லா நண்பர்களும் சொல்றத தான சொன்னான்.”

ரம்யா, “கிழிச்சான். அடுத்த நாள் எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு ராகுலை கூட்டிட்டு வந்தேன். இவர்கள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தேன். இவன் எங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசா இருக்கு எப்படி புரிதல் இருக்கும்? செட் ஆகுமானு கேட்டான்.”

நிலா, “அட பாவி உனக்கும் வர்ணாக்கும் கூட ஒரே வயசு தான டா.” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

ரம்யா, “அதேதான். அப்படி கேளு”.

சித்தார்த், “நாங்க ரெண்டு பேரும் சின்ன வயசில் இருந்து ஒன்றாகவே இருக்கோம். அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது. அவளுக்கு எப்போ கோபம் வரும் அதை எப்படி குறைக்கணும் என்று எல்லாம் எனக்கு தெரியும். அதே போல் என்னை எப்படி சமாதான படுத்தணும்னு அவளுக்கு தெரியும். ஆனால் இவங்க ரெண்டு பேரும் ரொம்ப நாள் பழகாதவங்க. மூன்று மாதம் பழகியதும் வந்த காதல். அட்லீஸ்ட் அவர் கொஞ்சம் பெரியவராக இருந்தா கொஞ்சம் இவளை அனுசரிச்சு நடந்துப்பாரு இல்லையா அதனால்தான்.” அவன் ஏன் அவ்வாறு செய்தான் என்று பொறுமையாக விளக்கினான்.

நிலா, “இதுவும் கரெக்ட் தான? சரி சரி மீதியை சொல்லு. இதுக்கா இவ்ளோ கோவம் உனக்கு?”

ரம்யா, “இல்லை இல்லை. இவன் சொன்னதுக்கு ராகுல், நாங்க ரெண்டு பேரும் உண்மையா விரும்புகிறோம். ரம்யாவை நான் குழந்தை மாதிரி பார்த்துப்பேன். அதெல்லாம் நீங்க கவலை படாதீங்கன்னு அவ்வளவு காதலோட சொன்னான்.”

நிலா, “சூப்பர். அப்பறம் என்ன நடந்தது? உனக்கு ஏன் இந்த கொலைவெறி?” என்று ஆர்வமாக கேட்டாள்.

ரம்யா, “நாங்க ரெண்டு பேரும் இதே காலேஜ்ல சேர்ந்து படிக்க போறோம்னும், படிப்பு முடிந்ததும் எங்க காதலை பத்தி அப்பா அம்மாவிடம் பேசலாம்னும் முடிவு செய்திருக்கோம், அப்போ இவனை உதவி பண்ணுனு கேட்டேன். அதுக்கு இவன் ராகுல்கிட்ட ஒரே காலேஜ் சேர வேண்டாம். ரேண்டு பேரும் வேற வேற காலேஜ், இல்லை இல்லை வேற வேற ஊர்ல படிங்க அப்போ தான் கொஞ்சம் பிரிவு இருக்கும். ஐந்து வருடம் கழித்தும் இதே காதலோட இருந்தா கல்யாணத்துக்கு வீட்ல பேசலாம் என்று இன்னும் ஏதேதோ பேசி கரைத்து அவனை பெங்களூருக்கு அனுப்பி விட்டுட்டான் இந்த பிராடு. ஆனா இவன் மட்டும் சின்ன வயசுல இருந்து லவ் பண்ணுவானாம் அதுவும் பக்கத்து பக்கத்து வீடு ஒரே ஸ்கூல் ஒரே காலேஜ் வேற. இவனை சும்மா விட மாட்டேன் இன்னைக்கு.” என்று அவனை துரத்திக்கொண்டு ஓடினாள்.

கொஞ்ச தூரம் சென்றதுமே ரம்யா சித்தார்த்தை பிடித்துவிட்டாள். அவனின் முடியை பிய்க்காத குறையாக இழுத்து மாவாட்ட தொடங்கினாள். இவர்களின் சண்டையை பார்த்து வர்ணாவும் நிலாவும் வயிற்றை பிடித்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில், இனி எதையும் மாற்ற முடியாது என்பது புரிந்து அவர்களே சமாதானம் ஆகி வந்தனர். பின் நால்வரும் தங்கள் உணவை முடித்து கொண்டு வகுப்பிற்கு திரும்பினர்.

காலேஜ் முடிந்து வர்ணாவும் நிலாவும் வெளியில் வந்தனர். சிறிது தூரம் சென்றதும் நிலா, “நான் லைப்ரரி போகணும் வர லேட் ஆகும். நான் ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போய்டுவேன். நீ போ பஸ்சுக்கு நேரமாகிட போகுது.” என்று கூறிவிட்டு வேகமாக சென்று விட, வர்ணா தனியாக தன் பஸ் நிற்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள். அப்போது வெளியில் வந்த சித்தார்த் இவளை பார்த்ததும் ஓடி வந்து அவளின் அருகில் நடக்க தொடங்கினான். சிறிது தூரம் சென்றதும் மெதுவாக வர்ணாவின் கையோடு தன் கையையும் கோர்த்துக்கொண்டான்.

வர்ணா இரு கைகளையும் தன் முகத்தின் அருகில் கொண்டுவந்து கண்கள் பணிக்க பார்த்தாள்.

சித்தார்த், “என்ன ஆச்சு வர்ணா? உடம்புக்கு ஒன்னும் இல்ல தான? ஏன் உன் கையெல்லாம் நடுங்குது?” என்று பரபரப்புடன் கேட்டான்.

வர்ணா, “உடம்புக்கு ஒன்னும் இல்லை சித்து. இது கனவா நினைவானு யோசித்தேன். இதே போல் காதலோடு உன் கையை பிடித்து நடப்பது போல் எத்தனை நாள் கனவு கண்டிருக்கிறேன் தெரியுமா. இது நடக்குமா நடக்காதான்னு பயந்துட்டே இருந்தேன்.” என்று மெலிதாக சிரித்தவாறு கூறினாள்.

சித்தார்த், “எத்தனை முறை நான் உன் கை பிடித்து உன் தோள் சாய்ந்து நடந்திருக்கேன்.”

வர்ணா, “அது நட்பின் அடையாளமாக நடந்தது டா. நான் கேட்டது காதலாக.”

சித்தார்த், “ஓ அப்படி ஒன்னு இருக்கோ?”

வர்ணா, “ஹ்ம்ம் ஹ்ம்ம். இது கனவு இல்லை தான?”

சித்தார்த், “கவலையே படாத சீக்கிரமா வீட்டுக்கு போய் டெஸ்ட் பண்ணி பார்த்துடலாம்.” என்று விஷமமாக கூறி சிரித்தான்.

வர்ணா, “எப்படி?”

சித்தார்த், “உன்னை ப்ரொபோஸ் பண்ணும் போது ஒரு டெஸ்டிங் தெரபி கத்துக் கொடுத்தேனே அதே மெத்தெட்ல தான்” என்று கூறி கண் அடித்தான்.

சிறுது நேரம் யோசித்த வர்ணா அவன் தன்னை முத்தமிட்டதை தான் கூறுகிறான் என்பது புரிந்து “ரவுடி ரவுடி” என்று கூறி அவன் முதுகில் மொத்துகிறாள். இப்படியே மாற்றி மாற்றி சீண்டியவாறே இருவரும் வீடு போய் சேர்க்கின்றனர்.
 
Top