All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன் கண்ணில் என்னை கண்டேன் epi 20

Karthikpriya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் கண்ணில் என்னை கண்டேன்
20

அடுத்த நாள் ஞாயிற்று கிழமை என்பதால் வர்ணா பத்து மணி ஆகியும் தூங்கிக் கொண்டிருந்தாள். திடீரென போன் சத்தம் கேட்கவே தூக்கக் கலக்கத்தோடே அதை அட்டென்ட் செய்து, “யாரு டா அது காலங்காத்தால கால் பண்ணி தொந்தரவு பண்றது?” என்று கத்தினாள்.

லைனில் இருந்த சித்தார்த் ஒரு நிமிடம் போனை நகர்த்தி விட்டு தன் காதை தேய்த்து கொண்டான். பின், “நான் தான் டி.”என்று இயல்பாக கூறியவன் “வெளிய போலாமா வரு?” என்று ஹஸ்கி வாய்சில் கேட்டான்.

அவனின் குரல் மாறியதும் வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தவள், “ஹ்ம்ம் ஓகே சித்து” என்று மெதுவாக கூறினாள்.

“இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பி வெளிய வா வெயிட் பண்றேன்” என்று உல்லாசமாக கூறிவிட்டு போனை வைத்தவன் விசில் அடித்துக்கொண்டே தயாராக தொடங்கினான்.

அரைமணி நேரத்தில் தயாராகி வெளியே வந்தவள் அங்கு சித்தார்த் தன் பைக்கில் ஸ்டைலாக சாய்ந்தவரே இவளை கீழிருந்து மேலாக பார்ப்பதை கண்டு சிறு வெட்கத்தோடு சிரித்து கொண்டே அவன் அருகில் வந்தாள். ஆரஞ்சு மற்றும் பிங்க் கலந்த அனார்கலி சுடியில் மிகவும் அழகாக இருந்தாள்.

அருகில் வந்து நின்றவளை கை பிடித்து இழுத்து தன் மீது சாய்தவாறு நிற்க வைத்தான். அவன் கை பிடியில் இருந்த அவளின் கையில் நடுக்கத்தை உணர்ந்து, “ஏன் டி நடுங்கற?” என்று கேட்டவன் அவள் அமைதியாக அவர்களின் கோர்த்த கைகளை பார்ப்பதை கண்டு, “உனக்கு எத்தனை முறை சொல்வது? நான் உன்னோட லவர் தான் நம்பு.” என்று சிரித்தவாறே கூறுகிறான்.

வர்ணாவும் சிரித்தவாறே, “ஹ்ம்ம் புரியுது டா. ஆனா.....” என அவள் கூறி முடிப்பதற்குள் அவளை அவன் தன் மீது வாகாக சாய்த்து கொண்டு அவளின் செம்மையுற்ற கன்னத்தை நிமிட்டி, “உன் கன்னம் ரொம்ப சாப்டா பின்கிஷா இருக்கு வரு. ஆனா ரொம்ப சுடுது” என்று அவளின் கன்னத்திலிருந்த கையை விலக்காது கூறினான்.

வர்ணா அவனின் கையை வேகமாக தட்டிவிட்டு, “டேய் ஒழுங்கா நார்மலா எப்போதும் பேசுவது போல் பேசு டா. என்னால முடியல ஒரு மாதிரி இருக்கு டா. இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே.” என்று பாவமாக கூறுகிறாள்.

சித்தார்த் சிரித்து கொண்டே அவளின் கை பிடித்து பைக்கில் ஏற்றி, “சரி எங்க போகலாம்? இன்னைக்கு முழுக்க உன்னோடு தான். அங்கிள் கிட்ட ஏற்கனவே பெர்மிசஸன் வாங்கிட்டேன். எங்க போகலாமுன்னு நீயே சொல்லு உன் இஷ்டம் தான்” என்று பைக்கை ஸ்டார்ட் செய்தவாறே கேட்கிறான்.

சிறிது நேரம் யோசித்த வர்ணா, “ஏதாவது ஒரு மால்க்கு போ. அங்க ஒரு படம் பார்த்துட்டு, அங்கேயே லஞ்ச் சாப்பிட்டு, பீச் போயிட்டு வரலாம்.” என பிளான் போடுகிறாள். இவனும் சரி என்று கூறி பயணத்தை ஆரம்பிக்கிறான்.

அடுத்த ஒரு வாரம் முழுவதும் அனாடமி வகுப்பு இல்லாததால் வர்ணா நிம்மதியாக இருந்தாள். ஆனால் சார் இன்று மதியம் அவர்களுக்கு அனாடமி வகுப்பு உள்ளது என்று கூறியதும் பயத்தோடு தன் விரல் நகங்களை கடித்தவாறே அமர்ந்திருந்தாள். நிலா அவளை சமாதானம் செய்தவாறு நடக்கும் வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தாள்.

வர்ணாவின் முகம் சிறிது நேரமாக வெளிறி தெரியவே என்ன ஆச்சு வர்ணாவுக்கு என்று புரிந்தும் புரியாமலும் இடைவேளை விடும் நேரத்திற்காக காத்திருக்க தொடங்கினான் சித்தார்த். இது எதையும் கவனிக்காத(தெரியாத) ரம்யா பொறுப்பாக பாடத்தில் மூழ்கியிருந்தாள்.

ஒரு வழியாக பாடத்தை முடித்த ஆசிரியர், “அனைவரும் வேகமாக உண்டு விட்டு அனாடமி லேபுக்கு வந்துடுங்க. லேட் பண்ணாதீங்க அப்புறம் மார்க்ஸ்ல கை வெச்சுடுவேன்” என்று மிரட்டி விட்டு சென்றார்.

இடைவேளை விட்டதும் முதல் ஆளாக வர்ணாவின் அருகில் சென்ற சித்தார்த், “பயப்படாமல் வா. இப்போதே பயந்தால் பிறகு வகுப்பில் எப்படி தைரியமாக இருப்ப? வா பாத்துக்கலாம்” என்று தைரியம் கூறி அவளை சிறிது தெளிய வைத்து உணவுண்ண அழைத்து சென்றான்.

இதை பற்றி அறியாத ரம்யா நிலாவிடம் விசாரித்தாள். நிலாவும் வர்ணாவின் பிரச்சனைகளை ரம்யாவிடம் கூறினாள். இருவரும் தங்களின் உதவி அவளுக்கு தேவைப்பட்டால் உதவுவோம் என்று தங்களுக்குள் பேசியவாறே வந்து வர்ணா மற்றும் சித்தார்த்தின் அருகில் அமர்ந்தனர்.

சார் கூறியது போல் அனைவரும் அவர் வருவதற்கு முன்பே தங்களின் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டனர். போன முறை இருந்த குழுவை போலவே நிற்க கூறியதால் வர்ணாவும் நிலாவும் ஒரு குழுவிலும் சித்தார்த் மற்றும் ரம்யா வேறொரு குழுவிலும் நின்றிருந்தனர்.

சரியான நேரத்திற்கு சார் உள்ளே நுழைய அனைவரும் பரபரப்பாகவும் மௌனமாகவும் தங்களின் இடத்தில் எழுந்து நின்றனர். சற்று பொறுத்த சித்தார்த் சாரிடம் சென்று தான் வர்ணாவின் குழுவில் இருக்க விரும்புவதாகவும் அதற்கு பதில் நிலாவை தங்களின் குழுவிற்கு மாற்றுமாறும் வேண்டிக் கொண்டான்.

சார், “போன முறை மயங்கி விழுந்த பெண் தானே வர்ணா? அவளுக்கு இன்னும் சரி ஆகவில்லையா?” என்று யோசனையோடு கேட்டார்.

“சரி ஆகிடுவா சார். நான் அவளுக்கு மாரல் சப்போர்டா இருப்பேன் நான் அவளோட சைல்டுஹூட் பிரண்ட் சார்.” என்று கூறி அனுமதி கேட்டான்.

சார் சிறிது நேரம் யோசித்தவர் “ஓகே” என்று கூறி ஒத்துக்கொண்டார்.

சித்தார்த் தன் அணியில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு வர்ணாவின் குழுவில் வந்து இணைந்து கொள்கிறான். சித்தார்த் வந்து நின்றதும் பயத்தோடு நின்றிருந்த வர்ணா வேகமாக அவன் கையை பிடித்துக் கொள்கிறாள். “பயப்படாதே வர்ணா. நான் உன் கூட தான் இருப்பேன்” என்று கூறி ஆறுதலாக அவள் கையை அழுத்துகிறான்.

சார் அனைத்து குழுவின் முன்பும் இருக்கும் பேகை குழுவில் இருக்கும் அனைவரும் சேர்ந்து திறக்க சொன்னார். வர்ணாவின் குழுவில் இருந்த அனைவரும் தங்களின் ஒரு கையை பேகின் மேல் வைத்தனர்.

வர்ணா ஒரு கையால் சித்தார்த் கையை கெட்டியாக பிடித்துக்கொண்டே இன்னொரு கையால் மற்றவர்களுடன் சேர்ந்து ஜிப்பை திறந்தாள். அந்த பேகில் சமீபத்தில் ஒரு விபத்தில் சிக்கிய ஆடவனின் உடல் பதபடுத்தப்பட்ட நிலையில் இருந்தது.

அதை பார்த்ததுமே வேகமாக இரு கண்களையும் மூடிக்கொண்டாள் வர்ணா. இருந்தும் அவளுக்கு கை காலெல்லாம் நடுங்க தொடங்கியது. இதை உணர்ந்த சித்தார்த் அவளின் கையை அழுத்தி “ரிலாக்ஸ் வர்ணா ரிலாக்ஸ்” என்று கூறி அவளை அமைதி படுத்தினான்.

இதில் சிறிது பயம் விலகிய வர்ணா ஒரு கண்ணை மட்டும் திறந்து ஒரு விரலால் அங்கு கிடத்தியிருந்த உடலை தொட்டுவிட்டு சித்தார்த்தை பார்க்கிறாள். இதை பார்த்த சித்தார்த், “ஹே நீ தொட்டுட்ட டீ” என்று சந்தோசமாக கூறுகிறான்.

வர்ணா உடனே தன் கையை எடுத்துவிட்டு “உண்மையாகவே நான் அவரை தொட்டேனா?” என்று ஆர்வமாக கேட்கிறாள்.

சித்தார்த் மெலிதாக சிரித்தவாறே, “ஆமாம் டி. இப்படியே கொஞ்சம் கொஞ்சமா முயற்சி பண்ணா சரி ஆகிடும்.” என்று கூறும்போதே சார் அனைவரையும் கவனிக்க சொல்கிறார். இவர்களும் அவர் கூறுவதை கவனிக்க திரும்புகிறார்கள்.

சார் கூர்மையான ஒரு கத்தியை எடுத்து டோனரின் மார்பில் வைத்து லேசாக அழுத்தி கிழிக்கிறார். இதை பார்த்த வர்ணாவுக்கு அந்த உடலில் இருந்து ரத்தம் பீறிட்டு வருவது போலவும், அந்த அறை முழுவதும் ரத்தத்தில் மிதப்பது போலவும் தோன்ற “ரத்தம் ரத்தம்” என்று கத்திகொண்டே மயங்கி சரிகிறாள்.

இதை பார்த்த சார், “அடச்சை ஒரு கிளாஸ் கூட உருப்படியா எடுக்க முடியல. என்ன தான் அந்த பொண்ணுக்கு பிரச்சனை?” என்று கோபமாக கேட்கிறார். இது எதையும் காதில் வாங்காத சித்தார்த் வர்ணாவை தூக்கிக்கொண்டு அடுத்த அறைக்கு செல்கிறான். அவன் பின்னோடு நிலாவும் ரம்யாவும் வந்தனர்.

சார் இவர்களை பார்த்து, “ஒருத்தரும் நான் பேசுவதை மதிக்கறதில்ல. யாருக்காவது தெரியுமா அந்த பொண்ணுக்கு என்ன ப்ரோப்லம்னு?”என்று மற்ற மாணவர்களை பார்த்து கேட்கிறார்.

அங்கிருந்த மாணவி ஒருத்தி வர்ணாவிற்கு பிளட் போபியா இருப்பதை பற்றி கூறுகிறாள்.

இதை எதிர்பார்க்காத சார், “அப்படியா அப்போ ஏன் இந்த பொண்ணு டாக்டர் படிக்க வந்துச்சு. எதுக்கு இந்த தேவை இல்லாத வேல பார்த்து எல்லாரையும் தொந்தரவு பண்ணுது. இதை ஏன் யாரும் என் கிட்ட இன்போர்ம் பண்ணல?” என்று கத்திவிட்டு பிரின்சிபாலை பார்க்க சென்றார்.

சித்தார்த் வர்ணாவை தண்ணீர் தெளித்து எழுப்ப முயற்சிக்கிறான். அவள் எழாமல் இருக்கவே என்ன செய்வது என்று புரியாமல் அருகில் உள்ள ஹெல்த் சென்டர்க்கு அழைத்து செல்கிறான்.

வர்ணா சிறிது நேரத்தில் முழித்து விடுவாள் என்று கூறிய மருத்துவர் அவள் அதிகமாக பயந்து இருப்பதாகவும் அவளை பொறுமையாக கையாளுமாறும் கூறிவிட்டு சென்றார்.

வர்ணா கண் முழித்ததும் தான் நிலாவும் ரம்யாவும் நிம்மதி அடைந்தனர். ஆனால் சித்தார்த் வர்ணாவின் மேல் அதிக கோபத்தில் இருந்தான். எனவே அங்கிருந்தால் எங்கே அவளை திட்டி விடுவோமோ என்று எண்ணி வேகமாக நிலாவிடம் அவளை பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு வெளியில் சென்று விட்டான்.
 
Top