All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உன் கண்ணில் என்னை கண்டேன் epi 22

Karthikpriya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன் கண்ணில் என்னை கண்டேன்
22

பிரின்சிபால் அவளை வெளியேறுமாறு சைகை செய்தும் வர்ணா அசையாது நின்றாள். ஒரு முழு நிமிடம் எடுத்து தன்னை நிலை படுத்தியவள் பிரின்சிபாலிடம் வாதாட தொடங்கினாள்.

“சார் இன்னும் ஒரு சான்ஸ் கொடுங்க சார் பிளீஸ். திடீர்னு என்னை கூப்பிட்டு டிஸ்கன்டினியு செய்ய சொல்வது நல்லா இல்லை சார். நான் எந்த குற்றமும் செய்யல சார். என் கிட்ட இருக்க பிரச்சனை தெரிந்தும் டாக்டர்க்கு படிக்கணும்னு நினைச்சது தப்பு தான் ஒத்துகிறேன். ஆனா என்னால முடியும் சார். ஒரு சான்ஸ் கொடுங்க பிளீஸ்.”

“நீ புரிந்து தான் பேசுகிறாயா வர்ணா. இது சாதாரண பிரச்சனை கிடையாது. நீ எங்க பிளட் பார்த்தாலும் மயங்கிடுற. அதுவும் இல்லாமல் பிளட் இல்லாத காடவர் பார்த்து கூட பிளட் இருப்பது போல் கற்பனை பண்ணி மயங்கிடுற. இதனால் எங்களுடைய தொடர்ச்சியான வகுப்பு தடைபடுது. நீ இப்படியே தடை பண்ணிட்டு இருந்தா நாங்க எப்படி போர்ஷன் முடிக்க முடியும் சொல்லு.”என்று தெளிவாக கேட்டார்.

“சார் ஓகே நீங்க சொல்லுவதற்கு நான் ஒத்துக்கறேன். டூ மந்த்ஸ் நான் அனாடமி கிளாஸ் அட்டென்ட் பண்ணல. ஆனால் நான் இந்த டூ மந்த்ஸ்குள்ள என்னோட பிரச்சனையில் இருந்து வெளிய வந்ததும் ஒரு கிளாஸ் அட்டென்ட் பண்றேன். அப்போ நான் மயங்கி விழாமல் பயப்படாம கிளாஸ் அட்டென்ட் பண்ணா என்னை இந்த கோர்ஸ் கண்டின்யு பண்ண விடுவீர்களா சார்?” என்று கேட்டாள்.

இவள் இவ்வளவு உறுதியாக இருப்பதை பார்த்து பிரின்சிபால் யோசிக்க ஆரம்பித்தார். அப்போது வைஸ் ப்ரின்சிபாலும் “ஒரு சான்ஸ் கொடுத்து தான் பார்ப்போமே சார். இதனால் யாருக்கும் எந்த லாஸும் இல்லை. ஒரு வேலை இவள் போபியாவில் இருந்து வெளிய வந்துட்டா அவ கனவாவது நிறைவேறும்” என்று வர்ணாவுக்கு ஆதரவாக பேசினார்.

“பிராக்டிகலா இது ஒத்துவருமானு தெரியல. ஆனாலும் உனக்காக ஒரு சான்ஸ் தரேன். இன்னும் ஒன் மந்த்ல ஒரு அனாடமி கிளாஸ் இருக்கு அதையும் அட்டென்ட் பண்ணு ஆனால் அதில் நீ மயங்கி விழுந்தாலும் நான் எதுவும் கேட்க மாட்டேன். அதுக்கு அடுத்த மந்த் தான் உன்னோட டார்கெட் டே பார்ப்போம் நீ சொன்ன படி செய்து காட்டுகிறாயா என்று.” என்று கூறி அவளுக்கு அனுமதி அளித்து அனுப்பி வைத்தார்.

வெளியில் வந்த வர்ணா ஆவலே உருவாய் காத்திருந்த நிலாவிடம் சென்று நடந்ததை கூறினாள். வர்ணா இப்போது கல்லூரியை விட்டு வெளியேற போவதில்லை என்பதை கேட்டதும் வர்ணாவை கட்டி அணைத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டாள்.

பின் இடைவேளையின் போது சித்தார்த்திடமும் ரம்யாவிடமும் நடந்ததை கூற, இருவரும் இன்னும் டைம் இருக்கு கவலையை விடு என்று தேற்றினர்.

“நான் இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வந்துடுவேன் தானே சித்து?” என்று பயந்தவாறே கேட்டாள்.

“இவ்வளவு நேரம் ப்ரின்சிபாலிடம் தைரியமாக பேசிய என் வர்ணா எங்கே? எனக்கு இந்த பயந்தாங்கொள்ளி வர்ணா வேண்டாம்” என்று சிரித்தவாறே அவளை வம்புக்கிழுத்தான்.

அது சரியாக வேலை செய்ய “போடா” என்று சிரித்தவாறே அவனை அடித்தாள்.

“தட்ஸ் மை கேர்ள். எப்போதும் சிரிச்சிட்டே இரு. இதுக்கான தீர்வை நாம கண்டுபிடிப்போம். நான் நேத்து எங்க அங்கிள் ஒருத்தர் டாக்டரா இருக்கார் அவரிடம் பேசினேன். அவர் கொஞ்சம் எனக்கு டிப்ஸ் கொடுத்திருக்கார். அதை நாம் கடைபிடித்தால் போதும். இப்போதைக்கு ரிலாக்ஸா கிளாஸ் கவனி” என்று கூறிவிட்டு சென்றான்.

பின் இரு நாட்கள் எந்த தடங்கலும் இல்லாமல் செல்ல, அன்று சித்தார்த் தன் லேப்டாபுடன் வர்ணாவின் வீட்டிற்கு வந்தான். வர்ணாவை அழைத்து, தான் கொண்டு வந்த வீடியோவை பார்க்குமாறு அழைத்தான். வர்ணாவும் என்ன வீடியோ டா என்று ஆர்வமாக கேட்டவாறு வந்து அமைந்தாள்.

“நான் கொண்டு வந்திருப்பது பேசிக் பஸ்ட் எயிட் வீடியோஸ் தான். நீ கூட எனக்கு கோவில்ல தேங்காய் சில்லு பட்ட போது பேண்ட் எயிட் போட்டாயே அதே போல் சின்ன சின்ன பஸ்ட் எயிட் ஐடியாவை குறித்த வீடியோஸ் தான்.” என்று தெளிவு படுத்தி அவளின் கையை பிடித்தவாறு அமர வைத்தான்.

அவளும் அவனின் கையை கெட்டியாக பிடித்தவாறு வீடியோவை பார்க்க தொடங்கினாள். முதல் வீடியோவில் ஒரு சிறுவன் விளையாடும் போதும் தரையில் விழுந்ததால் கால் முட்டியில் அடிபட்டு வந்திருந்தான். அவனுக்கு எவ்வாறு துடைத்து மருந்திடவேண்டும் என்று இருந்தது. அந்த பையனின் முட்டியை திரையில் கட்டியதுமே வர்ணா மயங்க தொடங்கினாள். உடனே சித்தார்த் தன் அருகில் தயாராக வைத்திருந்த தண்ணீரில் நனைத்த துணியை எடுத்து அவளின் முகத்தை துடைத்துவிட்டான். பின் சிறிது தெளிவாகி அந்த முழு காட்சியையும் பார்த்தாள். அடுத்து ஒரு பெண் கையில் அடிபட்டு வந்த காட்சி என்று இன்னும் இரு காட்சிகளை ஓட விட்டான். அவை அனைத்தையும் எந்த தடங்கலும் இல்லாமல் அவனின் கையை பிடித்துக்கொண்டும் நடு நடுவே ஈர துணியால் முகத்தை துடைத்துக் கொண்டும் பார்த்தாள்.

இதை கண்ட சித்தார்த் மிகவும் சந்தோசமாக உணர்ந்தான். பின் இருவரும் பேசியவாறே அமர்ந்திருந்தனர். ஒரு அரைமணி நேரம் கழித்து சித்தார்த் கிளம்ப எத்தனிக்கும் போது வர்ணாவின் அம்மா விஜயா தர்பூசணி பழச்சாறுடன் உள்ளே நுழைந்தார்.

இவ்ளோ நேரம் ஏதோ வேலை பார்த்துட்டிருந்தீங்களேன்னு தொந்தரவு பண்ணல. இந்தாங்க ஜூஸ் குடிங்க என்று இருவருக்கும் பொதுவாக வைத்துவிட்டு சென்றுவிட்டார். சித்தார்த் அந்த ஜூஸ் முழுவதும் குடித்து முடித்து, வர்ணா இன்னும் அதை குடிக்காமல் இருப்பதை கண்டு அருந்த சொன்னான். வர்ணா முதலில் அந்த சிகப்பு நிற பழச்சாறை பார்த்ததும் ஒரு மாதிரி இருக்கவே வேண்டாம் என்று மறுத்தாள். ஈவினிங்ல இருந்து ஒன்னும் சாப்பிடல குடி என்று குடிக்க சொன்னான்.

சித்தார்த் குடிக்க வற்புறுத்தியதால் வர்ணாவும் குடிக்க தொடங்கினாள். முழுவதும் குடிப்பதற்குள் அவள் பார்த்த வீடியோ நியாபகம் வரவே மொத்த பழச்சாறையும் சித்தார்த்தின் மீது வாந்தி எடுத்தாள், பின் அவன் மீதே மயங்கிவிட்டாள்.

ஒரு நிமிடம் அதிர்ந்த சித்தார்த் அவளின் நிலை புரிய அவளை அமர வைத்துவிட்டு அருகில் இருந்த ஈர துணியால் அவள் முகத்தை துடைத்தான். அவள் கண் திறக்க முயற்சிக்கவே வேகமாக குளியலறை சென்று தன்னை சுத்த படுத்த ஆரம்பித்தான்.

சித்தார்த் அந்த அறையில் இருந்து நகர்ந்ததும் தான் அவன் மீதே வாந்தி எடுத்ததை உணர்ந்தாள். வேகமாக வெளியில் வந்தவள் பிரேமை அழைத்து சித்தார்த்தின் உடை ஒன்றை வாங்கி வர சொல்லிவிட்டு தன் தந்தையை சித்தார்த்திற்கு உதவுமாறு கூறிவிட்டு வேறு குளியலறைக்கு தன்னை தூய்மை படுத்திக்கொள்ள சென்றாள்.


இன்னும் இரு தினங்கள் இடைவெளி விட்டு திரும்பவும் தங்களின் முயற்சியை தொடர்ந்தனர். இந்த முறை சுலபமாக இருக்கட்டும் என்று அவளுக்கு பிடித்த ட்ராயிங் முறையில் தொடங்கலாம் என்று சித்தார்த் சில போட்டோக்களை கொண்டு வந்தான். அதில் இதயம் நுரையீரல் மற்றும் குடல் பகுதிகள் இருந்தது. அதை பார்த்ததும் வர்ணாவின் முகம் மாறிவிட்டது.

அவளின் முக மாற்றத்தை கண்டுகொண்ட சித்தார்த், “எல்லாத்துக்கும் முகத்தை சுளிக்கறதா இருந்தா வேற கோர்ஸ் எடுக்கும் வேலையை பாரு. பெரிய இவ மாதிரி என்னால் முடியும் சார் என்று ப்ரின்சிபாலிடம் சவால் விட்டா மட்டும் போதாது கொஞ்சம் கஷ்டப்பட்டு பழகிக்கவும் வேணும். நானும் எங்க எங்கயோ கேட்டு தேடி ஏதாவது கொண்டு வந்து உன்னை மாற்ற முயற்சிக்கிறேன் ஆனா நீ எதுக்கெடுத்தாலும் தவிர்பது போல் பார்க்கிறாய். கொஞ்சம் நீயும் ஒத்துழை வர்ணா” என்று கோபத்தில் ஆரம்பித்து கெஞ்சலில் முடித்தான்.

“ஓகே ஓகே டென்ஷன் ஆகாத டா. நான் செய்ய மாட்டேன்னு சொல்லலையே அதை பார்த்ததும் ஒரு மாதிரி இருந்தது அதான்” என்று சமாதான படுத்தினாள்.

“எந்த மாதிரி இருந்தாலும் கட்டு படுத்திட்டு வரை” என்று கூறி அவளிடம் பேப்பர் பென்சிலை கொடுத்தான்.

அவளும் கஷ்டப்பட்டு நடுவில் வரும் கொமட்டலையும் கட்டு படுத்தி இதயம் மற்றும் நுரையீரலை வரைந்து வண்ணம் தீட்டினாள். ஆனால் என்ன முயன்றும் அவளால் குடல் பகுதிகளை வரைய முடியவில்லை.

“முடியல சித்து” என்று பாவமாக கூறினாள்.

“அங்கிள் மட்டன் போட்டி வாங்கிட்டு வந்தா மட்டும் இன்னும் வேணும்னு கேட்டு வாங்கி சாப்பிட முடியுது வரைய மட்டும் ஏன் டி முடியல?” என்று உண்மையாகவே புரியாததால் கேட்டான்.

“டேய் அதுல நல்லா மசாலா, முட்டை எல்லாம் போட்டு சூப்பரா கொடுப்பாங்க டா. ஆனால் இதை பாரு ஏதோ புழு மாதிரி இருக்கு.”என்று முகத்தை சுழித்தவாறே கூறினாள்.

“அப்போ நூடுல்ஸ் மட்டும் அம்மணிக்கு எப்படி இருக்கு?” என்று நக்கலாக கேட்டான்.

“டேய் வேண்டாம் எனக்கு புடிச்ச எல்லா உணவையும் நீ டேமேஜ் பண்ற. அப்பறம் எப்படி டா நான் சாப்பிடறது? சாப்பிடும் போதும் இது தான் நியாபகத்துக்கு வர போகுது” என்று கவலையோடு கூறினாள்.

“இப்போ அது தான் ரொம்ப முக்கியமா டி? ஒருத்தன் உயிர கொடுத்து வரைய சொல்லி கெஞ்சிகிட்டு இருக்கேன் உனக்கு எங்கயாவது பொறுப்பு இருக்கா?” என்று கத்த ஆரம்பித்தான்.

“சரி சரி புலம்பாத இப்போ என்ன செய்யட்டும்? இதை வரைய முடியலையே.”என்று அவனிடமே வழிகேட்டாள்.

“இது நீ சாப்பிடும் நூடுல்ஸ்னு நினைச்சிட்டே வரை எல்லாம் வரையலாம்” என்று கடுப்பாக கூறினான்.

வர்ணா வேறு பதில் பேசாது வரைய தொடங்கினாள்.

“இதே போல் படுத்தாம இனி ஒழுங்கா வரைந்து ப்ராக்டிஸ் பண்ணு.”என்று கூறி தன் வீட்டுக்கு திரும்பினான். வர்ணாவும் அவனை திட்டிக்கொண்டே இன்னொரு முறை அனைத்தையும் வரைந்தாள்.
 
Top