All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எனை ஈர்க்கும் காதலே - கதை திரி.

Status
Not open for further replies.

riyavathy47

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டியர் பிரண்ட்ஸ்....

நான் பிரியதர்ஷினி. S.... பல பேருக்கு என்னை தெரிந்திருக்கும்... நானும் ரேவதி சகோதரியும் சிறு முயற்சியாக ஒன்றாக இணைந்து இக்கதையை எங்களின் ஒருங்கிணைந்த கற்பனையாக உங்கள் முன் கொண்டு வர இருக்கின்றோம். இத்தகைய எங்களின் முயற்சிக்கும் உங்களின் ஆதரவினை கருத்துக்களின் மூலம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இணைவுடன்💕💕,
பி(ரியா)தர்ஷினி + ரே(வதி) = ரியாவதி.

*********************************

முன்னோட்டம்:

கதையின் தலைப்பு : எனை ஈர்க்கும் காதலே.

நாயகன் : விதாந்த்
நாயகி : வினூத்னா

சற்றுன் முகஞ்சிவந்தால் - மனது
சஞ்சல மாகுதடி!
நெற்றி சுருங்கக்கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்குதடி!
உன் கண்ணில் நீர்வழிந்தால் - என்
நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
என்கண்ணிற் பாவையன்றோ? -
கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ?

- மகாகவி பாரதியார்.

அவனின் மனதிற்கு மிகவும் விருப்பமான பாடல்.... அடர்ந்த அடவிக்கு நடுவிலிருக்கும் கம்பீரமான வீட்டின், தன்னறையில் தனித்திருக்கும் அவன், நள்ளிரவில் எப்போதும் விரும்பிக் கேட்கும் பாடல்.

எப்போது இப்பாடலைக் கேட்டாலும் இதயம் பிளக்கும் வலியை அவன் உணர்கிறான். மனம் மரத்துப் போக, விழிநீரை கன்னங்களில் தாங்கியபடி அவன் உறங்காத இரவுகளின் நீளம் அதிகம்.

பாடலுக்கு ஏற்றவாறே, அவளின் முகம் சிவந்தாலே விதாந்தின் மனம் கலங்கிவிடும், அவளின் நெற்றியில் கோடுகளை கண்டால் விதாந்தின் நெஞ்சம் துடித்துடிக்கும், அவளின் கீழாநெல்லிக் கண்ணில் நீர் மணிகள் உருண்டால் விதாந்தின் இதயத்தில் குருதி வடியும், மொத்தத்தில் விதாந்தின் கண்ணம்மாவே அவனின் உயிராவாள். "தனது கண்ணம்மாவின் மீது அலாதி பிரியமும்.. உயிர் உருகும் அன்பு வைத்திருந்தவன்."

ஆம், வைத்திருந்தவன் தான்....

_______________________________________________________

தன்னவளின் நினைவிலிருந்து மீண்டெழ அடவிக்குள் புயல் போல் சென்று கொண்டிருப்பவனுக்கு தீடீரெனக் கேட்டது அந்த வித்தியாசமான ஒலி. வண்டியினை நிறுத்தி விட்டு கூர்ந்து கவனித்தான்.

அது கூட்டத்திலிருந்து தனித்து விடப்பட்ட ஒற்றை யானையின் பிளிறல் சத்தம். யானையின் சத்தம் அவனுக்கு வெகு விரைவில் கேட்டது. மரணத்துடன் போராட வேண்டுமென்பது அவனுக்கும் ஆசை தான்.. ஆனால், என்றாவது ஒருநாள் தன்னவளை பார்த்து நீயில்லாமல் நான் மிகவும் நலமுடன் சந்தோஷமாக வாழ்கிறேன் என்று சொல்ல அவன் உயிருடன் இருக்க வேண்டும். அதற்காக யானையிடம் தன் உயிரை பணயம் வைக்காமல் உயிர் தப்ப முடிவு செய்தான்.

வண்டியை விட்டு கீழிறங்கியவன், ஓங்கி உயர்ந்து ராட்சத தோற்றத்துடன் காட்சியளித்த மரத்தின் மீது அசுர வேகத்தில் ஏறி உச்சியை அடைந்தான்.

யானைக்கு மோப்ப சக்தி அதிகம். மனித நடமாட்டத்தை ஒரு கிலோ மீட்டர் தொலைவிலே கண்டுகொள்ளும். எப்படியும் வண்டியை வைத்து ஆள் இருக்கின்றனர் என்பதை கண்டு பிடித்து சிறிது ஆழ்ந்து சுவாசித்தாலும் தான் இம்மரத்தின் மீதிருப்பதை கண்டு கொள்ளும். அதன் பின்னர் மரத்தினை ஒரே மோதலில் வீழ்த்துவது யானைக்கு சாதாரணம், சிந்தித்தவன் கன் பவுடரினை எடுத்து தன் உடல் முழுக்க தடவிக்கொண்டான்.

அருகில் கேட்ட சத்தம் மிக அருகில் நன்கு தெளிவாகக் கேட்கவும் எதற்கும் துணிந்தவனாக தயாராக மரத்தின் மீது கம்பீரமாக நின்றிருந்தான்.

வண்டியை நெருங்கிய யானை அதனை கூர்ந்து பார்க்க.. வண்டிக்கு அருகிலிருக்கும் மரத்திற்கு கீழ் நின்றது. சுற்றியும் தனது பானை உடம்பினை திருப்பி ஆள் இருக்கின்றனரா என்று நோட்டமிட்டது. மனித வாசத்தை நுகர்ந்ததோ என்னவோ, தலையை நிமிர்த்தி, துதிக்கையினை மேல்நோக்கி உயர்த்தி அதிக சத்தத்துடன் பிளிறியது

________________________________________________________________________

"ஒன்னா இருந்த
ஞாபகத்த நெஞ்சோடு
சேர்த்து வச்சேன் தனியா
இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்

பறவையின்
சிறகுகள் விரிஞ்சால்
தான் வானத்தில் அது
பறக்கும் காத்திருந்தால்
தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்...."

எப்பொழுதும் போல் மனதிற்கு வலியை கொடுக்கும் பாடல்களை வேண்டும் என்றே இப்பொழுதும் கேட்டாள். அதன்மூலம் வலியை மிகைபடுத்தினாள்.

சிறிது நேரம் புரண்டு படுத்தவள், நித்ராதேவியை தொலைவில் இருந்து கூட பார்க்க அதிர்ஷ்டம் இல்லாது போன்று தன்னுடைய கட்டிலில் அவதிக்குள்ளானாள்.

பின் தன் காதில் மாட்டியிருந்த இயர்போனை கழட்டி கட்டிலில் வைத்துவிட்டு தன் அறையுடன் ஒட்டி அமைக்கப்பட்டு இருந்த பால்கனியில் சென்று கருமைநிற போர்வை கொண்டு போர்த்தியது போன்று காணும் இருள் சூழ்ந்த வானை வெறித்து பார்த்தபடி நின்றவளின் இதழோறம் ஒரு கீற்று புன்னகை உதித்தது.

அந்த புன்னகை சந்தோஷத்தினால், மகிழ்வினால் உண்டான புன்னகை என்று சிறு குழந்தை கூட சொல்லாது. வாழ்க்கையை வெறுத்தவாளாக, விரக்தியான புன்னகை.

திடீரென பலமான காற்று முகத்தினை தீண்டியது. ஒரே ஒரு வினாடி சிலிர்ப்பு. பால்கனியின் கம்பியை இறுக்கி பிடித்தவள் சிறிது தன் முதுகினை பின்னோக்கி சாய்த்து கண்மூடி நின்றவள் அதன் சிலிர்ப்பை அனுபவித்தாள். திடிரென காதின் அருகில் "வினு பேபி...." என்று தன்னவனின் குரல் செவிமடலை தீண்டிய பிரம்மை...

ஆம் பிரம்மையே தான்....இனி இது போன்ற இனிமையான அத்தியாயங்கள் அவளின் வாழ்வில் பிரம்மையாக தான் இருக்கும்...

இதே போல் அவள் தினமும் தன் தூக்கத்தினை துளைத்து மீண்டும் தேடுகிறாள்..எவ்வளவு நேரம் நின்றாளோ....தன் அறையில் மாட்டியிருந்த கடிகாரத்தில் இருந்து எழுந்த மெல்லிய சத்தம் கூட அந்த நேரத்தில் நரகாசுரமாய் ஒலித்தது.

அதன்பின் தன் மறுநாள் பணியின் முக்கியத்துவம் புரிய சிறிது ஓய்வு எடுக்க எண்ணி கட்டிலில் படுத்தவள் உடல் அசதியிலும், மன உளைச்சலிலும் தன்னை அறியாது கண் அயர்ந்தாள்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களில் "விதுதூதூதூதூ....." என்று அலறினாள்.

____________________________________________________________________________

ஓங்கி வளர்ந்த மரங்களும் அடர்ந்த முட்புதர்களும், அடவிக்குள்ளே சிறு அடவியாக காட்சியளித்தது. பகல் நேரத்திலேயே அப்பகுதி இருள் படிந்து காணப்பட்டது. விளக்கொளியின் வெளிச்சமில்லாது அப்பகுதியில் சிறு அடி கூட வைக்க முடியாது.

அப்படிப்பட்ட ஆபத்தான பகுதியில்... நள்ளிரவு நேரத்திலும் கைகளில் துப்பாக்கி எந்தியவாறு ஆட்கள் நடமாட்டம் தென்பட்டது. அவர்கள் யாவரும், சாதாரண மனிதர்கள் அல்ல என்பது அவர்களின் தோற்றத்திலும் பேச்சிலும் தெரிந்தது.

அங்கிருந்த சிறு குகைபோன்ற கற்பாறைகளின் அடுக்கில் அக்கூட்டத்திற்கு தலைவன் போன்றவன் நடுநாயகமாக அமர்ந்திருக்க, அருகிலிருக்கும் மரங்களின் தண்டுப்பகுதியில் மூன்று பெண்கள் உட்பட ஏழு பேர் கட்டி வைக்கப்பட்டிருந்தனர்.

திடீரெனக் கேட்ட துப்பாக்கிச்சூட்டில்... அந்த இருட்டிலும் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த தடியர்கள் நாற்திசைக்கும் சிதறி ஓடினர். பயத்தில் அல்ல, தங்களை சூழ்ந்திருக்கும் வன காவலர்களை அழிப்பதற்கு.

__________________________________________________________________________

எல்லோரையும் மீட்டாச்சா....

விதாந்தின் கேள்வியில் மீட்கப்பட்ட ஆறு பேரும் ஒருவரையொருவர் தங்களுக்குள் திரும்பி பார்க்க,

சார் ஏழு பேருன்னு நமக்கு ரிப்போர்ட் வந்தது.. பட் ஆறு பேர் தான் இருக்காங்க. தனது உதவியாளனின் பதிலில் அந்த இன்னொருவர் யார் என்ற விதாந்த் அவர்கள் சொல்லிய பெயரில் தன் கை முஷ்டி இறுக பாறையென விறைத்தான்.

அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பயந்து குகைக்குள் சென்று ஒளிந்தவள் சண்டை முடிந்தும் வெளியில் வராது பாறை இடுக்கிற்குள் ஒண்டி அமர்ந்திருந்தாள்.

அவள் பெயர் மட்டும் தான் வினுத்னாவாக இருக்குமா... நொடியில் உதித்த தீர்மானத்தில் குகைக்குள் சென்று அலசினான். இருட்டில் உருவம் மட்டும் தென்பட பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தவளை மெல்ல கைகளில் ஏந்தி வெளி வந்தான்.

அங்கு ஒளிர்ந்து கொண்டிருந்த தீப்பந்தத்தின் ஒலியில் தன் கைகளில் மிதந்து கொண்டிருந்த பூங்கொடியாளின் முகத்தைக் கண்டவன் தொப்பென்று தரையில் போட்டுவிட்டு, யாரையும் திரும்பியும் பாராது விடுவிடுவென அவர்களைக் கடந்து முன்னேறினான்.

விதாந்தின் நண்பன் மற்றும் உதவியாளனுமாகிய விமல், நடப்பவனை தடுத்து நிறுத்தி.... "ஷீ இஸ் யுவர் வைஃப் விதாந்த்" என்க,

என் மனைவி இறந்து சில வருடங்கள் கடந்து விட்டன. அழுத்தமாகக் கூறியவன் விமல் பேசுவதைக் கேட்க அங்கில்லை.

கருத்துக்களை கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
Status
Not open for further replies.
Top