All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னுள் சங்கீதமாய் நீ 6

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னுள் சங்கீதமாய் நீ 6


மேம் “தாரிணி மேமோட பங்க்ஷன்” அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் முடிஞ்சது.

ஓகே ரூபா இதோ வரேன் என்ற ஹர்ஷினி

பார்ட்டி ஏற்பாடு செய்யபட்டிருந்த ஹாலுக்குள் சென்று எல்லாவற்றையும் பார்வையிட்ட பின் சில திருத்தங்களை சொல்லிவிட்டு தாரிணிக்கு கால் செய்தாள்.

“தாரணியின் மகள் பூர்விகாக்கு முதல் வருட பிறந்த நாள் பார்ட்டி ஹர்ஷினியின் AD ஹோட்டேலில் தான் ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது .”

தாரணி முதலில் பார்ட்டி ஹால் கேட்கவும்” நீ உங்க அண்ணன் கிட்ட கேட்டுக்கோ எங்க ஹோட்டல்ல பங்க்ஷன் வச்சா வருவரான்னு “என்றாள் கொஞ்சம் கோவமாகவே .

அவருக்கு” எங்க வச்சாலும் ஒண்ணும் இல்லயாம் “என அவனின் பதிலை தாரிணி சொல்லவும் ஆத்திரத்தில் பல்லை கடித்தாள் ஹர்ஷினி .

ஹலோ தாரிணி அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் முடிஞ்சது.” பூர்விகாக்கு 4 மணிக்கு பார்லர் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு “.

நீங்க அப்போ இங்க இருக்கணும் .

ஓகே நாங்க வந்துருவோம் என தாரிணி சொல்லவும் .

இதுக்கெல்லாம் “உங்க அண்ணனை சம்பளம் கொடுக்க சொல்லு” உங்க குடும்பத்துக்கு நான் தானே இதுவரைக்கும் ப்ரீ ஈவென்ட் மானேஜர்.

ஆனா இனிமேல் “அப்படி எல்லாம் முடியாதுன்னு சொல்லு” என ஹர்ஷினி கடுப்பாக சொல்லவும்.

தாரிணி சிரிப்புடன் “நான் சொல்லிடுறேன்” என்று வைத்தவள் ஹர்ஷினி சொன்னதை யோசித்து பார்த்தாள் .

தாராணிக்கு கல்யாணம் உறுதியான சமயம் தான் ஆகாஷிற்கு ஒரு பாடலுக்கு தனியாக “கோரிய கிராப் செய்ய சான்ஸ் கிடைத்து இருந்ததால்” அவனால் தாரணியின் கல்யாணத்தில் ஒரு அண்ணனாக தன்னால் எதுவும் செய்ய முடிய வில்லையே என வருந்தவும்

அவனின் நிலையை உணர்ந்த ஹர்ஷினி “தான் செய்தால் என்ன அவன் செய்தால் என்ன இரண்டும் ஒன்றுதானே” என ஆகாஷின் வருத்தத்தை போக்கியவள்

தாரணி மூலமாக ஆகாஷின் பெற்றோர்களுக்கு தெரியாமல் ஆகாஷ் ஏற்பாடு செய்தது போல் பேருக்கு ஒரு ஈவென்ட் மேனேஜர் வைத்து “இன்விடேஷன் கார்ட் முதல் மண்டபம், கேட்டரிங், டெக்கரேஷன் என எல்லாவற்றையும் அவள் தான் செய்தாள்”.



……………………………………………………………………………



பார்ட்டி டைம் நெருங்கவும் இன்னிக்கு கண்டிப்பா பார்ட்டிக்கு செல்லத்தான் வேண்டுமா என்றே தோன்றியது ஹர்ஷினிக்கு.

கடந்த ஒரு வாரமாகவே மேனகாவின் கையில் கிடைக்காமல் எஸ்கேப் ஆகி கொண்டிருந்த ஹர்ஷினியின் செயலால் கோவமான மேனகா கிளம்பி ஹோட்டேல்க்கே வரவும்

அதுவும் ஆச்சார்யா , சந்திரன் இருக்கும் போதே வந்துவிடவும் வேறு வழியில்லாமல் எல்லோரும் கிளம்பி வீட்டிற்கு சென்றனர்.

ஆச்சார்யா , சந்திரன் இருவரும் அவர்கள் “ஊரில் இல்லாத போது நடந்ததை இந்திரன் மூலமாக தெரிந்து கொண்டாலும்” வேலை முடிந்து திரும்பி வந்த பிறகும் எதுவும் கண்டு கொள்ளாமலே இருந்தனர்.

அதுவும் ஹர்ஷி , ஆகாஷ் காதல் தெரிந்த பிறகு அவர்களுக்குமே “ஹர்ஷினியின் கல்யாணம் கூடிய சீக்கிரம் நடக்க வேண்டும்” என்றே இருந்ததால் மேனகாவையும் எதுவும் சொல்லவில்லை .

என்ன மேனகா ஏன் இவ்ளோ கோவம் என ஒன்றும் தெரியாதவர் போல் ஆச்சார்யா கேட்கவும்

“இவருக்கா தெரியாது” என கோவத்தில் பல்லை கடித்தாள் ஹர்ஷினி .

மேனகா பணிவாகவே அப்பா “ஹர்ஷினிக்கு எப்போ கல்யாணம் பண்ணுவீங்கன்னு” எனக்கு தெரியணும் என்றார் .

அத்தை என்ன கல்யாணத்தை பத்தி பேச ஒண்ணுமில்ல அதனால நீங்க அத விட்டுட்டு “ஹாசினிக்கும் , கார்த்திக்கும் ஏற்பாடு பண்ணுங்க” என ஹர்ஷினி கொஞ்சம் சலிப்பாகவே சொல்லவும் .

ஹர்ஷினியை தீர்க்கமாக பார்த்து கொண்டிருந்த ஆச்சார்யா “உன்ன பத்தி பேச ஒண்ணுமில்லயா ஹர்ஷினி” என அழுத்தமாக அவளின் காதலை மனதில் வைத்து கேட்கவும்.

அவரின் அழுத்தத்திற்கு உண்டான காரணம் தெரியாமல் அவரை பார்த்தவள் பின்பு எதுவும் இல்ல என்றுவிட்டாள்.

அவள் எப்பொழுதும் தங்களிடம் “அவளின் காதலை பற்றி சொல்ல போவதில்லை” என ஆச்சார்யாவுக்கு மட்டுமில்ல அவரின் மகன்களுக்கும் புரிந்தது .

சரி உன்ன பத்தி யாரும் எதுவும் பேசவேண்டாம் அப்படித்தானே என மேனகா இன்னதென்று புரியாத குரலில் கேட்கவும்

உஷாரான ஹர்ஷினி அத்தை என்ன பத்தி பேசுங்க ஆனா என் கல்யாணத்த பத்தி மட்டும் பேசாதீங்கன்னு தான் சொல்றேன் என கொஞ்சம் இறங்கிய குரலிலே சொன்னாள்.

தன் செயலால் “வீட்டில் உள்ள எல்லோருக்கும் எவ்வளுவு மன கஷ்டம்” என்று தெரியும் என்பதாலே பொறுமையாகவே பேசினாள் ஹர்ஷினி.

ஓகே அப்படியே இருக்கட்டும் என்றவர் ஆச்சார்யாவிடம் அப்பா நான் இப்போ “உங்க பொண்ணா பேசலை சம்மந்தியா பேசுறேன்”.

நீங்க எப்போ உங்க “முதல் பேத்திக்கு கல்யாணம் பண்றீங்களோ அப்போதான் என் பையனுக்கும் , உங்க ரெண்டாவது பேத்தி ஹாசினிக்கும் கல்யாணம் நடக்கும்”

இல்லாட்டி அவங்களும் “உங்க முதல் பேத்தி மாதிரி” இருந்துக்க வேண்டியதுதான் .

நம்ம வீட்டில் இது ஒன்னும் புதுசு இல்லையே என ஆற்றாமையுடனே சொல்லவும் ஹர்ஷினி அதிர்ந்தே விட்டாள் .

என்ன அத்தை பேசுறீங்க “இது எல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல” என கோவமாகவே கேட்கவும்

“நீ பண்றது மட்டும் சரியா ஹர்ஷினி” என நிறுத்தி நிதனமாக நேர் பார்வையாக மேனகா கேட்கவும் ஹர்ஷினியால் பதிலே சொல்ல முடியவில்லை .

அதற்கு பிறகு வீட்டில் யாரும் ஹர்ஷினியிடம் எதுவும் பேசவில்ல தான் என்றாலும்

ஆச்சார்யா , வீட்டு ஆட்கள் மட்டுமல்ல , ஆகாஷ் என எல்லோரும் சேர்ந்து தான் தன்னை கார்னர் செய்கின்றனரோ என்றே தோன்றியது ஹர்ஷினிக்கு.

யாரும் என்னை பற்றி ஏன் யோசிக்கவில்லை. எனக்கு மட்டும் குடும்பமாக வாழும் ஆசை இல்லாமலா இருக்கும் .

“நான் என்ன ரோபாவா” என இயலாமையுடனான கோவம் தான் ஹர்ஷினிக்கு.

………………………………………………………..

பார்ட்டிக்கு டைம் ஆகுவதை உணர்ந்து கொண்டு ஓகே போலாம். கொஞ்ச நேரம் மட்டும் இருந்துட்டு வந்துரலாம்.

ஆனா “ஆகாஷ் கிட்ட மட்டும் கண்டிப்பா பேசக்கூடாது” என உறுதியாக முடிவு எடுத்தவள்

குங்கும கலர் சாரீ கட்டிக்கொண்டு மிதமான அலங்காரத்துடன் தயாராகி கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்ததும் ஆகாஷின் நினைவுகளே

காலேஜ் “ட்ரெடிஷனல் டே” என்பதால் சாரீ கட்டி கொண்டு காலேஜ் சென்றிருந்தாள் ஹர்ஷினி .

எங்க போனார் இவர் சாரீல எப்படி இருக்கேன்னு கேக்கலாம் பாத்தா ஆளே காணல என ஆகாஷ தேடி கொண்டிருக்கும் போது

தன் போன் ஒலிக்கவும் எடுத்து பார்த்தால் ஆகாஷ் தான் “எங்க இருக்கீங்க” என கேட்கவும்

“நீ நம்ம ஸ்பாட்க்கு வா” என அவர்கள் எப்பொழுதும் மீட் செய்யும் இடமான லேப்க்கு வர சொல்லவும் ஹர்ஷினி அங்கு சென்றாள் .

எவ்வளவு நேரமா தேடுறேன் ஹேய் “ஜெய் வேஷ்டி சட்டை யில் சூப்பரா இருக்கீங்க” என அவனை ரசனையாக பார்த்த படி சொன்னவள்

நான் எப்படி இருக்கேன் என ஆவலாக கேட்டவாரே அவனை பார்த்தால்…..

அவனோ “நான் இந்த உலகத்தில் இல்லை “என்பது போல் மெய்மறந்து தலை முதல் கால் வரை அவளை நிறுத்தி நிதானமாக பார்த்து கொண்டிருந்தான்

அவனின் பார்வையை கண்டு முகம் அளவு கடந்த வெட்கத்தில் சிவந்தது ஹர்ஷினிக்கு. என்ன இது இப்படி பாக்குறாரு.

“ஜெய்” என கொஞ்சம் கண்டிப்போடு கூப்பிட நினைத்தால் குரல் குழைந்தே வந்து தொலைத்தது .

ஆகாஷ் கொஞ்சம் கரகரப்பான குரலில் “ஹனி நீ இவ்வளவு செக்ஸியா” என்றான் பிரமிப்பாக.

“ஜெய் என்ன இது” என அதிர்ச்சி, வெட்கம் இரண்டும் கலந்த குரலில் ஹர்ஷினி கேட்கவும்

ஹனி உன்ன சாரீல பாத்ததிலிருந்து என் கண்ணையும் மனசையும் என்னால கண்ட்ரோல் பண்ணவே முடியலடி.

நான் என்ன பண்ணுவேன் என்றவன் அவளை நெருங்கி வந்து தன் கையால் அவளின் சேலை மறைக்காத இடையை பற்றியவாறே இது “என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுதுடி” என ரசனையாக வருடவும்

“ஸ்ஸ் என்ன பண்றீங்க” என்று சிலிர்த்த ஹர்ஷினி முனகவும்

எனக்கே தெரியலடி என்றபடி அவளின் இடையை வருடியவாறே இன்னும் நெருங்கியவன் அவளின் வேற்று தோள்களில் முகத்தை புதைத்து “என்ன கொல்றடி” என்றபடியே முத்தமிட்டவன்.

கொஞ்சம் மேலேறி காதுமடல்களில் முத்தமிடவும் பதறிய ஹர்ஷினி அவனை பிடித்து விலக்கி வேகமாக தள்ளி நின்று கொண்டாள் .

அவளின் தீடிர் விலகளில் கோவமான ஆகாஷ்

“ஏன்டி” என்றபடி மறுபடியும் அவளை நெருங்கியவன் அவளின் இடையை அழுத்தமாக பற்றிய படி இழுக்கவும் அவனின் நெஞ்சின் மீது மோதிய படி வந்து நின்றாள் ஹர்ஷினி.

ஆகாஷால் தன்னுள் “புதிதாக எழும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்” அவளை தன்னோடு இறுக்கமாக கட்டிபிடித்தவன் அவளின் துடிக்கும் இதழ்களை தன் இதழ்களால் ஆவேசமாக கவ்வி கொண்டான்.

இனிமேல் என் முன்னாடி சாரீல வராதடி வந்தா இப்படித்தான் பண்ணுவேன் என்ற படியே முத்தமிட்டான்.

இதை நினைக்கும் பொழுது ஹர்ஷினிக்கு கொஞ்சம் வெறுமையான மனநிலை தான். தன்னை பற்றி ஜெய் நினைக்கவில்லையே என்று…

……………………………………………………

மேம் அவங்க எல்லாம் வந்துட்டாங்க என ரூபா சொல்லவும் ஓகே என்று விட்டு

ஹர்ஷினி வெளியே வரும் சமயம் தாராணியே அவளை தேடி கொண்டு வந்துவிட்டாள் .

சூப்பரா இருக்கீங்க என்ற தாராணி வாங்க போகலாம் “எல்லோரும் வந்துட்டாங்க” என கொஞ்சம் அழுத்தியே சொன்னாள் .

ஹர்ஷினிக்கு புரிந்தது அவள் ஜெய் ஆகாஷ தான் சொல்கிறாள் என .

ஹாலுக்குள் நுழையும் போதே வாம்மா நல்லா இருக்கியா. ரொம்ப நாளாச்சு உன்ன பாத்து என “ஆகாஷின் அம்மா விஜயா வரவேற்கவும்”

ம்மா “அவங்க ஹோட்டல் இருந்தே அவங்கள கூப்புடுறீங்க” என தாரிணி சிரிப்புடன் சொல்லவும்…. ஆமால்ல என்றார் விஜயாவும் சிரிப்புடன்.

ஹர்ஷினியும் மெலிதாக சிரித்து விட்டு “நான் நல்லா இருக்கேன் ஆண்ட்டி நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க” .

எல்லாம் நல்லா இருக்கோம். நீ உள்ள வா என “பூர்விய பாரு” பேசிகொன்டே மூவரும் உள்ளே சென்றனர்.

ஹர்ஷினிக்கு என்னதான் கோவம் இருந்தாலும் “ஒரு டைம் ஜெய் ஆகாஷை பார்த்தா போதும்” என்ற எண்ணத்தில் யாரும் அறியா வண்ணம் அவனை தேடி கொன்டே பூர்விய பார்க்க சென்றாள் .

ஹர்ஷினி உள்ளே வரும் போதே ஆகாஷ் அவளை பார்த்துவிட்டான் . ராட்சஸி எவ்வளவு அழகா வந்திருக்கா பாரு

“இவளை யாரு புடவை கட்ட சொன்னது”. என்னோட வீக்னஸ் தெரிஞ்சும் வேணுமண்ணே புடவை கட்டி இருக்கா

நான் ஒன்னும் “மயங்க மாட்டேன் போடி” என மனதுக்குள் சபதம் எடுத்து கொண்டவனின் பார்வை அப்பாட்டமாக மயக்கத்தையே காட்டியது .

உள்ளுணர்வு உந்த வேகமாக ஆகாஷ் இருக்குமிடம் திரும்பியவள் அவனை கண்டு கொண்டாள்.

அவள் திரும்புவதை உணர்ந்த ஆகாஷ் வேகமாக மொபைல் பார்ப்பது போல் குனிந்து கொண்டான்.

ஒரு டீ ஷர்ட் ஜீன்ஸ் தான் அவனின் உடை அதிலும் “ஆண்மையின் கம்பீரத்தோடு நிமிர்ந்து நின்றவனின் அழகை கொஞ்சமே ரசித்து பார்த்த ஹர்ஷினி” அதற்கு பிறகு அவன் இருக்கும் பக்கமே திரும்பவில்லை.

தாரணி கையில் இருக்கும் பூர்வியை வாங்கி கொண்டவள் “ஹாய் பேபி செமயா இருக்கீங்க” என பூர்விய சந்தோஷமாகவே கொஞ்ச தொடங்கினாள்.

…………………………………………………………………..

ஹர்ஷினி முதலில் தன்னை பார்த்ததோடு சரி அதற்கு பிறகு அவள் தான் இருக்குமிடம் பக்கம் கூட திரும்பவில்லை என்பதை ஆகாஷ் கொஞ்ச நேரத்திலே புரிந்து கொண்டான்.

ஏன் என்ன பாக்க மாட்டேங்கறா,.. நாம பேசாதனால ரொம்ப கோவமா இருக்காளோ என யோசித்தவாறே யாரும் அறியாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான் .

அவனின் பார்வையை ஹர்ஷினி உணர்ந்தாலும் கண்டு கொள்ள தோன்ற வில்லை என்றே சொல்லலாம் .

நேரம் ஆக ஆக “ஏன் என்ன பாக்க மாட்டலாமா”, எல்லாம் அழகா இருக்கோம்ன்ற திமிரு என் கையில் மட்டும் மாட்டட்டும் அப்பறம் இருக்கு அவளுக்கு என

கோவமாக எண்ணினானோ இல்ல “காதல் விரகத்தில் ஏக்கம் கொண்டானோ” என ஜெய் ஆகாஷிற்கே தெரியவில்லை .

ஆகாஷிடம் ஏதோ பேச வந்த தாரணி அவன் ஹர்ஷினியை பார்த்து கொண்டிருக்கவும் விளையாட்டாக

இனிமேல் “நம்ம குடும்பத்துக்கு ஈவென்ட் மேனேஜ் செய்ய நீங்க காசு தரணுமண்ணு கேட்டாங்க” என சிரிப்புடன் ஹர்ஷினி சொன்னதை சொல்லிவிட்டாள்.

அதை கேட்டவுடன் சொல்லவா வேண்டும் ஜெய் ஆகாஷின் கோவத்தை.

...............................................................................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்

என்னுள் சங்கீதமாய் நீ 6 போஸ்ட் பண்ணிட்டேன் . படிச்சுட்டு உங்க கருத்தை ஷேர் பண்ணுங்க ப்ரண்ட்ஸ்
 
Last edited:
Top