All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"என் ஜீவன் என்றும் நீதானே" - கதை திரி

Status
Not open for further replies.

சாஹித்யா வருண்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி - 1



விடியலுக்கு ஓய்வு குடுத்து இருள் கவ்வி கொண்டிருக்க, நவநாகரிகத்துடன் கட்டபட்டிருந்த பங்களா ஒன்றில், அந்த நேரத்திலும் வேலையாட்கள் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.. பங்களாவின் அழகே அவர்களின் பணச் செழுமையை நன்றாக காட்டியது..

ஹாலில் வெள்ளை வேட்டி சட்டையில் ஐம்பது வயதொத்த ஆண் ஒருவர் ஷோபாவில் கால் மேல் போட்டு நடுநாயகமாக அமர்ந்து கர்ஜித்தபடி திட்டியிருக்க, அவரின் முன்னே ஒரு பெண்ணும், ஆணும் கை கட்டி தலையை குனிந்து நின்றிருந்தனர்...

அவர்களோ இவர் கேட்ட கேள்விக்கு கூட பதில் சொல்லாமல் நின்றிருப்பதை பார்த்து, கோவத்தில் "செல்வி" என்று தன் மனைவியை அழைத்தார்... கிச்சனில் இருந்து ஓடி வந்து அவரின் முன்பு நின்றதும், "என்ன பொண்ணு பெத்து வெச்சிருக்க?? எது செய்ய வேணாம்னு சொல்றோமோ அதையை தான் செஞ்சிட்டு இருக்கா?? இதுக்கு இவன் வேற உடந்தையா??" என்று கேட்டார் கடுங்கோவத்துடன்..

"அது இல்லங்க.. இருந்தாலும் அவங்க பாவம் தானே" என்று திக்கி திணறி தன் மகளுக்கு சப்போர்ட்டு செய்ய வர, தன் மனைவியின் பதிலில் அமர்ந்திருந்தவர் கோவமாக எழுந்து பக்கத்தில் இருந்த சேரை தூக்கி வீசி அனல் பார்வை பார்க்க, தன் கணவனின் கோவத்தில் அரண்டு தள்ளி நின்றார் செல்வி...

"என்ன சொன்ன?? யாருனு தெரியாம ரோட்டுல போறவங்க கீழ மயங்கி விழுந்தா போய் தொட்டு தூக்கி விட்டு கொஞ்சி சிரிச்சு பேசிட்டு வர்றதா?? அந்த பிச்சைகாரன் எங்க??? நம்ம எங்க??? தொட்டதும் இல்லாம சாப்பாடு வேற ஊட்டி விட்டுட்டு வந்துருக்கா?? இது எல்லாம் என்னது?? அதுவும் இல்லாம நான் ஆளுங்கட்சில இந்த தொகுதியோட அமைச்சர் புரியதா?? இனி இந்த மாதிரி நடந்தது ஏதாவது தெரிஞ்சுச்சு பொண்ணே வேணாம்னு வெட்டி போட்டுருவேன் பார்த்துக்க!" என்று அவளின் கணவனும் அமைதியாக நின்றிருந்த பெண்ணின் தகப்பனுமான ராசு கர்ஜனையுடன் கத்தினார்..,

இவ்வளவு நேரம் தலையை குனிந்தபடி நின்றிருந்த அவரின் மகள் நிமிர்ந்து, "சபாஷ்! சபாஷ்! நீங்க ஆளுங்கட்சில இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் இந்த அளவுக்கு உயர்த்தி விட்டதே இவங்கதான்.. அது உங்க கண்ணுக்கு தெரியாதா?? நீங்க எப்படி வேணாலும் இருங்க.. அதையை பத்தி எனக்கு கவலை இல்லை ஆனா என்னைய இப்படிதான் இருக்கனும்னு சொல்லி அடக்கி வைக்க முடியாது" என்றாள் கனலுடன்...

தன் மகளின் பதிலில் கோவத்தின் உச்சிக்கே சென்று பளாரென்று அவளை ஒரு அறை விட்டு கடுங்கோவமாக முறைக்க, அடி வாங்கிய அவரின் மகளும் அவருக்கு சளைத்தவள் இல்லை என்று எதிர்பார்வை பார்த்து நிற்க, இருவருக்கும் இடையில் நின்றிருந்த அவள் வயதை ஒட்டிய ஆண் மகன் தான் திண்டாடி போனான்..

"மாமா அவ இனி இப்படி பண்ண மாட்டா போதுமா?? இனி இப்படி நடக்காம பார்த்துக்கறேன்.. கொஞ்சம் அமைதியா இருங்க" என்று அவரின் தங்கை மகனான பகலன் அவரை சமாதானப்படுத்த முயன்றான்..

அவனையும் சேர்ந்து முறைத்த ராசு, "உன்னைய தான் முதல்ல மிதிக்கனும்" என்று விட்டு நகர, அவரின் மகளும் செல்லும் அவரை முறைத்தபடியே நின்றிருக்க, அவர் சென்றதும், "ஆமா நான் என்ன பண்ணுனேனு உன் அருமை தகப்பன் என்னைய மிதிக்கனும்னு சொல்லிட்டு போராரு.." என்று தீவிர யோசனையுடன் கேட்ட பகலனை தீயாய் முறைத்து விட்டு, அறைக்கு சென்றாள் பெண்ணவள்..

செல்வியோ "ஏன்டா தினமும் ஏதாவது செஞ்சு திட்டு வாங்கறதே பொழப்பா வெச்சிருக்கீங்க.. அவர் இப்படிதான் தெரிஞ்சும் எதுக்கு அவருக்கு பிடிக்காததை எதுக்குடா செய்யறீங்க?? எனக்கு தான் உங்கனால பைத்தியமே பிடிக்குது" என்று செல்வியும் பகலனிடமே எகிற,

தன் அத்தையை முறைத்தவன்,, "என்ன பார்த்தா உங்களுக்கு எல்லாம் எப்படி தெரியுது உங்க பொண்ணு ஒரு பக்கம் உயிரை வாங்குனா இன்னொரு பக்கம் உங்க புருசனும் வாங்கறாங்க.. அந்த லூசு அவ சொல்றதை செய்யலனா முறைக்கற.. இவரு அவ சொல்றதை செஞ்சா முறைக்கறாரு.. நான்தான் ரெண்டு பேருத்துக்கும் இடையிலே மாட்டிட்டு முழிச்சா நீங்களும் என்னையவே சொல்றீங்க" என்று மூச்சு வாங்கியபடி பேசியவனுக்கு செல்வி தண்ணீரை எடுத்து குடுக்க, அதை வாங்காமல் முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்தான் பகலன்..

"என்ன அண்ணி அந்த ஹிட்லர் போய்ட்டாரா??" என்று கேட்டு கொண்டே ராசுவின் ஒரே தங்கையும் பகலனின் தாயுமான வனிதா அவர்களிடம் வந்தார்.. தன் அன்னையின் கேள்வியில் அவரை முறைத்து பார்த்த பகலன், , "நீங்க எல்லாம் எதுக்கு இருக்கீங்கனே தெரில.. அவரு திட்டறப்ப எதுக்குள்ள போய் மறைஞ்சுக்கறீங்கனு தெரில அவரு போனதும் கரெக்ட்டா வெளில வந்து சாவகாசமா அவரு போய்ட்டாரா?? இல்ல ஓடிட்டாரானு கேட்கறீங்க?? உங்களைய என்ன சொல்றது" என்று கேட்டான் கடுப்புடன்..

அவரோ அவன் கத்தியதை ஒரு பொருட்டாக கூட நினைக்காமல், " நீ எதுவும் சொல்ல வேணாம் எங்க என் பொண்ணு.. அவ தான் ரொம்ப சூடா இருப்பாலே அவளை பார்க்காம இங்க என்ன உங்களுக்கு வேலை" என்று விட்டு தன் அண்ணன் மகளின் அறைக்கு செல்ல, தலையில் அடித்து கொண்டு எழுந்த பகலனும் அவரின் பின் சென்றான்...

அறையில் அவரின் அண்ணன் மகளான மென்னிலா திராட்சையை கொறித்து கொண்டு பாட்டு கேட்டபடி கண் மூடியிருந்ததை பார்த்ததும் பகலன் தன் அன்னையை முறைத்து, "இதுதான் இந்த லூசு கோவமா இருக்கறதா??" என்றான் கேலியுடன்..

"கண்ணு வெக்காதடா என் பொண்ணு சாப்பிடறதை.." என்று சொல்ல, பகலனோ கடுப்புடன், "கண்ணு எங்குட்டு வெக்கறது கல்லுதான் வெக்கனும் போய்ருங்க அங்குட்டு" என்றவன், நேராக அவளிடம் சென்று காதில் மாட்டியிருந்த ஹெட்போனை கழட்டினான்..

கடுப்புடன் கண் திறந்த நிலா, தன் அத்தையை பார்த்ததும் எழுந்து அவரை அணைத்து கொண்டாள்.. நிலாவின் முகம் மகிழ்ச்சியுடன் இருப்பதை பார்த்து, "என்னடா நிலா இவ்வளவு சந்தோசமா இருக்கே?? நான் கூட அந்த ஹிட்லர் திட்டுனதுக்கு சோகமா இருப்பேனு நினைச்சு வந்தேன்?? அப்படி என்ன விசயம்?? தெரிஞ்சா நானும் சந்தோசபடுவேனல்ல??" என்று கேட்டதும், சிரித்து கொண்டே வனிதாவிடம் செல்லமாக, "அட போங்க அத்தை உங்க நொண்ணன் திட்றதுக்கு எல்லாம் கவலைப்பட்டுட்டு இருந்தா தூக்குல தான் தொங்கனும் அவரு பாட்டுக்கு கத்திட்டு போகட்டும் நம்ம பாட்டுக்கு நம்ம வேலையை பார்ப்போம்" என்று உதட்டை சுழித்து கொண்டு சொன்னவளிடம், "அதுவும் சரிதான்" என்று வனிதாவும் சொன்னதை பார்த்து பகலனுக்கு தான் இவர்களை என்ன செய்தால் தகுமென்றிருந்தது...

"ம்மா உனக்கே இது அநியாயமா தெரில.. இன்னும் உனக்கு குமரினு நினைப்போ?? இது கூட சேர்ந்துட்டு மாமாவை டேமேஜ் பண்ணிட்டு இருக்க?? ஆனா சத்தியமா சொல்றேன் நீதான் மாமா கூட பிறந்த தங்கச்சினு சொன்னா எவனும் நம்ப மாட்டான்" என்றான் பாவமாக..

தன் மகனின் கூற்றில் சிரித்த வனிதா,, "இருக்கறது ஒரு வாழ்க்கைடா அதையை ரசிச்சு வாழ்றதுல என்ன தப்பு.. அடுத்தவங்க அப்படி இருக்க கூடாது இப்படி இருக்க கூடாதுனு சொன்னா நம்மளும் சரினு சொல்லிட்டு இருக்கனுமா?? இது நம்ம வாழ்க்கை.. நம்மதான் வாழனும்.." என்று நீளமாக பேசி முடித்தவரை வராத கொட்டாவியுடன் பார்த்த பகலன் "நல்லாதான் பேசறீங்க.. நீங்க இப்படியே பேசிட்டு இருங்க" என்றான் நக்கலுடன்..,

இவர்கள் பேசியதை கேட்டபடி உள்ளே வந்த செல்வி, " நீயும் திருந்த மாட்டே.. இதோ இங்க நிக்குதே இதுவும் திருந்தாது.." என்று ஒருசேர இருவரையும் முறைக்க, "அட நீங்க வேற அத்தை இவங்க திருந்திட்டா இந்த உலகமே அழிஞ்சிரும்" என்று செல்வியுடன் சேர்ந்து பகலனும் அவர்களின் காலை வார, இருவரும் அவனை முறைக்கும் தோணியில் பார்த்தனர்..

"என்ன அவனை முறைக்கறீங்க அவன் உண்மையை தானே சொல்றான்.. இவரை பத்தி தெரிஞ்சும் ஏன் ஏழரையை கூட்டிட்டே இருக்கீங்க???" என்று செல்வி கேட்டது தான் தாமதம், "என்னமா நீயும் இப்படி பேசற?? கண்ணு முன்னாடி வயசான ஒருத்தரு மயங்கி விழுந்தா அப்படியே விட்டுட்டா வர முடியும்.. அவங்களும் நம்மளைய மாதிரி உயிருள்ள மனுச பிறவி தானே.. இதுல கூட உன் புருசன் மாதிரி அந்தஸ்து எல்லாம் பார்த்துட்டு நிற்பாங்களா??; அவரு எப்படியோ இருந்துட்டு போகட்டும் எனக்கு அவரை பத்தி எல்லாம் கவலை இல்லை.. நான் இப்படிதான்.." என்று கொஞ்சம் கோவத்துடனே தன் அன்னையிடம் எகிறினாள் நிலா..

"இவங்க கிடக்கறாங்க விடு நிலாமா.. சும்மா சும்மா கோவப்பட்டா நமக்கு தான் பிபி சுகர் எல்லாம் வரும்" என்று அவளை சமாதானப்படுத்தும் நோக்கில் கிண்டலுடன் சொல்ல, தன் அத்தையை சிணுங்கலுடன் பார்த்த நிலா, "நம்ம ஒருத்தருக்கு உதவி செஞ்சா அவங்க நீ நல்லா இருப்பமானு சொல்ற ஒரு வார்த்தைல எவ்வளவு சந்தோசம் கிடைக்கும்னு உணர்ந்தா மட்டும் தான் புரியும் அத்தை.. அந்த ஒரு வார்த்தைல எத்தனை சொத்து அடங்கிருக்கற உணர்வு தோணுது.. அது எல்லாம் இவங்களுக்கு எங்க தெரிய போகுது" என்று தன் அன்னையை கண்டு கொள்ளாமல் சொன்ன நிலாவை பெருமையோடு பார்த்தார் செல்வி..

"ம்ம்ம்க்கும் நான் சொன்னா மட்டும் எங்க நீ கேட்டுட்டா இருக்க??" என்று செல்வி செல்லமாய் முகத்தை திருப்பி கொள்ள, நிலாவும் அதே தோணியில், "நீ எதுக்கு சொல்றீனு எனக்கு புரியுதுமா.. ஆனா என்னால அப்படி இருக்க முடியாது.. எல்லாரும் ஒரே மாதிரிதான்... இந்த அப்பா இப்படி இருக்காருனு நம்மளும் இப்படி இருந்தா தான் கேவலம்.. இங்க இருக்கற எல்லாருமே கடவுள் குடுத்த உயிர்தான்.. இதுல எங்க பிரிச்சு பார்க்கறது.. நம்ம எப்ப சாவோம்னு சொல்ல முடியாதே அது வரைக்கும் என்னால முடிஞ்சதை இல்லாதவங்களுக்கு செ்யவேன்" என்று உறுதியுடன் சொன்னவளை நினைத்து மூவருக்கும் பெருமையாக தான் இருந்தது..

"போதும்டி ரொம்ப சென்டிமெண்ட்டா பேசி பழகிட்டு இருக்கே.. எல்லாம் இந்த வனிதாவோட டிரைனிங் தானே.. இதுக்கு தான் நான் சொன்னேன் இவங்ககிட்ட இருந்து தள்ளியே இருனு கேட்டா தானா??" என்று கிண்டலுடித்தவனின் முதுகில் ஒன்று விட்டு விட்டு வனிதா வெளியில் செல்ல, நிலாவும் அவனை முடிந்த வரைக்கும் மொத்தி விட்டு முகத்தை தூக்கி வைத்து கொண்டு கட்டலில் அமர்ந்தாள்..

முதுகை தேய்த்து கொண்டே, "உனக்கு யாருடி மென்னிலானு பேரு வெச்சது எப்பவாவது மென்மையா இருந்துருக்கீயா?? சுட்டெரிக்கற சூரியன் மாதிரி சுட்டு பொசிக்கிட்டே இருக்கே??" என்று மனதில் கதறியவன்,, "எம்மா மென்னிலா இப்ப என்ன கோவம் உனக்கு?? அடியேன் என்ன தவறு செய்தேன் என்பதை சொன்னால் தானே தெரியும்" என்று கேட்டான் பாவமான முகத்துடன்..

அவனை முறைத்த நிலா "அந்த ஹிட்லர் கிட்ட என்னடா சொன்னே??" என்றிட, "ஹஹஹஹ அதுவா?? அது எல்லாம் அதோட அவ்வளவுதான்.. இதே மாதிரி எத்தனை தடவை சொல்லிருக்கோம் அதே மாதிரி இதுவும் காத்தோட காத்தா போய்ரும்" என்று சிரித்தபடி சொன்னதும் இருவரும் ஹைபை குடுத்து கொண்டு சிரித்தனர்...

சிறிது நேரம் நிலாவுடன் பேசிவிட்டு பகலன் வெளியில் செல்ல போனவனை, புன்னகையுடன் பார்த்திருந்த நிலா, திடீரென்று "பகலா" என்று அழைக்க, அவன் திரும்பி "இல்ல இது இரவு" என்று நக்கலுடித்தவனை முறைத்த நிலா, "லவ் யூ டா" என்று கண்சிமிட்டி சொன்னதும், பகலனும் சிரித்து "லவ் யூ அம்மு" என்று இவனும் அதேபோல் கண்சிமிட்டி தலையை சாய்த்து புன்னகையுடன் சொல்லிவிட்டு சென்றான்..

ராசு - செல்வியின் ஒரே மகள் தான் மென்னிலா... இவர் அரசியல்வாதியாக இருந்தாலும் அந்தஸ்து விசயத்தில் கண்டிப்புடன் தான் இருப்பர்... தன்னை விட கீழ் அந்தஸ்து உள்ளவர்கள், ஏழையவர்கள் ஏதாவது விசயமாக வீட்டிற்கு வந்தால் கூட வெளியில் நிற்க வைத்தே தான் என்னவென்று விசாரிப்பார்..

இவரின் ஒரே தங்கச்சி தான் வனிதா.. வனிதாக்கு கல்லூரி படிக்கும் போதே காதல் அரும்ப, வனிதாவின் காதல் வீட்டிற்கு தெரிய வந்ததும், வனிதா காதலிக்கும் முத்து தங்களை விட கீழ் அந்தஸ்து என்று தெரிந்ததும் ராசு பொங்கி விட்டார்..

முத்துவின் உண்மையான அடையாளத்தை இவர் அறிந்திருந்தால் இவரே இவர்களின் திருமணத்தை முன்னால் நின்று நடந்தி வைத்திருப்பார் போலும்.. எல்லாம் காலத்தின் செயல்!!

வனிதாவும் அவருக்கு சளைத்தவள் இல்லை என்பதை போல் தான் காதலிக்கும் முத்து தான் வேணும் என்று சண்டையிட்டு முத்துவோட சென்று விட, ராசு அவமானத்தில் குறுகி தான் நின்றார்... முத்துவும் வனிதாவை உள்ளங்கையில் வைத்து பார்த்து கொள்ள, இருவரும் வாழ்வது குடிசை வீடாக இருந்தாலும் மனதில் அரண்மணையில் வாழ்வது போன்று தான் வாழ்ந்தனர்.. இருவரின் காதலுக்காக சாட்சியாக வனிதா கருவுற, முத்துவை சந்தோசத்தில் கையில் பிடிக்க முடியாமல் போனது..

அன்றிலிருந்து வனிதாவை தங்க தட்டில் வைத்து தாங்குவது போன்று பார்த்து கொள்ள, வனிதாவும் தன் கணவனின் அன்பில் நெகிழ்ந்து சிறு பிள்ளையாய் மாறி தான் போனாள்.. மகிழ்ச்சியாக சென்ற இவர்கள் வாழ்வில் முத்துவின் மரணம் புயலாக வந்து புரட்டி போட்டது..

இருந்தும் வனிதா மனதில் வைராக்கியத்தோடு தன் வயிற்றில் இருக்கும் சிசுவிற்காக வாழ கற்று கொள்ள... அடுத்த இரண்டு மாதத்தில் ராசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வனிதாவை தன் வீட்டிற்கு அழைத்து வந்து தன்னோடே வைத்து கொண்டார்...

முதலில் வனிதா மறுக்க, ராசுவின் பிடிவாதத்தால் தான் அவருடன் வந்ததே!! அப்போது செல்வியும் வயிற்றில் நிலாவை சுமர்ந்திருக்க, அடுத்த மூன்று மாதத்தில் ஓர் இரவில் வனிதாவிற்கு பகலன் பிறக்க, அடுத்த நாள் காலையிலே செல்விக்கு நிலா பிறந்தாள்..

இவர்களுக்கு ராசுவிடம் திட்டு வாங்குவதே பகுதி நேர வேலையாக மாறியிருந்தது.. கல்லூரி படிக்கும் காலங்களில் இருந்தே நிலாவுக்கு பொது சேவையில் ஆர்வமிருக்க, அவ்வபோது ஏழ்மையில் இருக்கும் அனைவருக்கும் பாராபட்சமின்றி உதவ, அவளுக்கு துணையாக பகலனும் இருந்தான்.. இது ராசுவுக்கு தெரிய வந்து அவர்களை காய்ச்சி எடுக்க, ஆனால் அவர்களோ அவர் கத்துவதை கேட்டால் தானே..

கல்லூரி முடித்துவிட்டு இப்போது இருவரும் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார்கள்.. தினமும் ஆதரவற்றோரை பார்த்தால் நிலா அவர்களுக்கு உதவாமல் அங்கிருந்து நகரவே மாட்டாள்.. இதே மாதிரி தான் இன்றும் இவர்கள் வரும் வழியில் வயதான ஒருவர் பசியின் தாக்கத்தால் மயங்கி விழுக, அதை பார்த்த நிலா பதறி அவரிடம் சென்று அவரை தூக்கி தண்ணீர் தெளித்து எழுப்ப, அவர் கஷ்டப்பட்டு கண் திறந்து, "இன்னு நா சாகலயா தாயி??? என்னைய பிடிக்காம தான் என் பையனும் மருமகனும் வீட்டை விட்டு துரத்தி விட்டாங்க.. அவங்களுக்கு தான் பிடிக்கலனு பார்த்தா சாவுக்கு கூட எங்களைய மாதிரி ஆளுகளை பிடிக்க மாட்டிங்குது" என்று யாரிடம் சொல்வதே என்று தெரியாமல் இருந்த பெரியவர் இவர்களிடம் உணர்ச்சி இல்லாத வேதனை குரலில் கண்ணீருடன் சொல்ல, இதை கேட்டதும் நிலாக்கு இதயம் சுக்கு நூறானது..

"ஏன் தாத்தா இப்படி எல்லாம் பேசறீங்க?? அவங்க பண்ணுன தப்புக்கு கண்டிப்பா கடவுள் தண்டனை தருவாங்க.. நீங்க சாப்பிட்டிங்களா??" என்று குரல் கம்ம நிலா கேட்டதும், "அதுக்கு காசு வேணுமே தாயி.. இந்த கிழவனுக்கு யாரு வேலை தருவா?? வேலை தந்தாலும் என்னால செய்ய தான் முடியுமா?? வேலை செஞ்சுதான் சாப்படனும்.. நான் சாப்பிட்டு மூணு நாளு ஆகுது இப்படியே இருந்தா கூட சீக்கிரம் நான் என் மனைவிகிட்ட போய்ரலாம் தானே?? " என்று விரக்தியாக கேட்டவரை பார்த்து நிலாவுக்கு கண்ணீர் கரித்து கொண்டு வந்தது..

இருந்தும் தன்னை சமன்படுத்தி கொண்டு பகலனை பார்க்க, அவன் புரிந்து கொண்டு சாப்பாடு வாங்கி கொண்டு வந்து தர, அதை பிரித்து நிலாவே அந்த வயதானவருக்கு ஊட்டிவிட, பகலனுக்கு கூட அவரின் நிலைமையை நினைத்து மனது கனத்தது.. அவரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தி விட்டு தான் இருவரும் வீட்டிற்கே வந்ததே ..

இதையை தான் ராசுவின் ஆள் ஒருவர் பார்த்துவிட்டு அவரிடம் சொல்ல, அதுக்கு தான் அவர் தாம்தூம் என்று குதித்து விட்டு சென்றது..

மாடியில் இருந்து "ம்மா பசிக்குது" என்று கத்தியவாறு நிலா கீழே வர, ஹாலில் அமர்ந்திருந்த பகலன் வெளியில் எட்டி பார்த்து "அத்தை ஏதோ கழுதை கத்தற மாதிரி சத்தம் வருது.. பழைய சோறு இருந்தா போடுங்க" என்று சீரியஸாக முகத்தை வைத்து கொண்டு குரல் குடுத்தவனின் முன்பு, பத்ரகாளியாய் நின்றாள் நிலா..

அவனோ புரியாமல் "இந்த லூசு இப்ப எதுக்கு முறைக்குது" என்ற ரீதியில் அவளை பார்த்து வைக்க, "டேய் நான் உனக்கு கழுதையா??" என்று அவன் தலையில் நங்கென்று கொட்டினாள்.. தலையை தேய்த்தபடி "அப்ப நீதான் கத்துனதா?? நான் கூட கழுதைனு நினைச்சிட்டேன்... வர வர உன்னோட வாய்ஸ் கழுதை மாதிரி ஆகுது என்னனு பார்த்துக்க.." என்று கேலியுடன் கூறிவிட்டு எழுந்தவன் மீது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் பறந்து வந்து விழுக, "ஆத்தி பேய் ஆட ஆரம்பிச்சுருச்சு மீ எஸ்கேப்" என்று அவன் அறைக்கே ஓடி விட்டான்..


தொடரும்...
 

சாஹித்யா வருண்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


பகுதி - 2



அதிகாலையில் போர்வையை தலை வரை இழுத்து போர்த்தி கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் நிலா இருக்க, அவளை எழுப்ப அறைக்கு சென்றான் பகலன்..

"இவளை எழுப்பறதுக்கே ஒரு வேளை என்னைய பெத்துருப்பாங்களோ!" என்று தீவிரமாக யோசித்து கொண்டே, "நிலாமா எந்திரிமா வாக்கிங் போகனும் இல்லைனா உன்னைய பெத்தவரு வந்து கத்த ஆரம்பிச்சா இந்த நாள் உருப்பட்ட மாதிரி தான்" என்று பாவமாக சொல்லியபடி அவளை எழுப்ப, அவளோ இன்னும் போர்வையை தலை வரை இழுத்து போர்த்தி கொண்டு திரும்பி படுத்து கொண்டாள்..

பகலன் கடுப்புடன், "அடியேய் பிசாசே!! எந்திரிச்சு தொலை!! வாக்கிங் போகனும்" என்று அவளை போட்டு உலுக்கியதும், போர்வையை விலக்கி அவனை பார்த்த நிலா, "என்னைக்காவது நீ சிரிச்சுகிட்டே என்னைய எழுப்பிருக்கியா?? நீ இப்படி சிடுசிடுனு மூஞ்சியை வெச்சிட்டு என்னைய எழுப்பற நாளா தான் தினமும் இந்த ஹிட்லர்கிட்ட நான் திட்டு வாங்கறேன்!!" என்றபடி பாத்ரூமுக்குள் ஓடி விட்டாள்..

"இது என்னடா புது புரளியா இருக்கு.. நான் கத்தற நாளா தான் இவ தினமும் இந்த ஹிட்லர்கிட்ட திட்டு வாங்கறாளா??" என்று முழித்தபடி நின்றிருந்தான்...

தன்னை சுத்த படுத்தி கொண்டு வெளியில் வந்த நிலா, "பகலன் சார் வாக்கிங் போகனும் போலாமா??" என்று நல்ல பிள்ளையாய் கேட்க, அவளை முறைத்து விட்டு பகலன் வெளியில் செல்ல, சிரித்தபடி நிலாவும் அவன் பின்னே சென்றாள்..

இருவரும் தினமும் காலையில் வாக்கிங் செல்ல வேண்டும் என்பது ராசுவின் எழுதப்படாத கட்டளை.. தினமும் பகலன் தான் நிலாவை எழுப்பி வாக்கிங் அழைத்து கொண்டு செல்வதற்குள் ஓய்ந்து விடுவான்..

இருவரும் நடைபயிற்சி முடித்து விட்டு வீட்டிற்குள் நுழைய, அவசரமாக கிளம்பி கொண்டிருந்தார் ராசு.... யோசனையுடன் தன் அத்தையிடம் சென்ற நிலா மெதுவாக, "அத்தை இந்த ஹிட்லர் எதுக்கு இவ்வளவு அவசரமா கிளம்பிட்டு இருக்காங்க??" என்று கேட்க, " கட்சி அலுவலகத்துக்கு வர சொல்லிருக்காங்கனு சொன்னாங்கடா... அதுக்கு தான் இந்த அலப்பறை!!.." என்று சிறிது நக்கலுடன் வனிதா சொல்ல, பகலன் தான் இருவரையும் முறைத்து "நீங்க எல்லாம் திருந்தவே மாட்டிங்க" என்றபடி அறைக்கு செல்ல , "திருந்துனா என்ன அவார்டு தர போறீங்களோ???" என்றனர் இருவரும் நக்கலுடன்...

நிலா கிளம்பி வருவதற்குள் ராசு சென்று விட, "ஹப்பாடா!! இப்பதான் வீடு வீடு மாதிரி இருக்கு" என்று சத்தமாக கூறியபடி துள்ளி குதித்து கொண்டே கீழே வந்தாள்.. இதனை கேட்ட செல்வி, "அப்ப இத்தனை நாள் எப்படி இருந்துச்சாமா??" என்று முறைக்க, "தெரியாம தான் கேட்கறேன் வீட்டுக்குள்ள இருக்கறப்ப சத்தமா பேச கூடாது.. சிரிக்க கூடாது.. தூங்க கூடாது.. எதுவுமே பண்ண கூடாதுனு சொன்னா எப்படி?? அப்படியே பொம்மை மாதிரியே மனுசன் இருக்க முடியுமா?? உன் புருசன் தான் அப்படி இருக்காருனா நம்மளும் அப்படியே இருக்க முடியுமா??" என்றாள் சலித்து கொண்டே..

"ஆமா பாரு மாமா சொன்னதும் அப்படியே சரினு தலையாட்டி அமைதியா இருந்த மாதிரி பேசற?? மாமா இப்படி இருந்தும் உன்னைய சமாளிக்க முடில இதுல செல்லம் குடுத்தா உன்னைய கைல பிடிக்க முடியுமா??" என்றபடி சட்டை கையை மடித்து கொண்டு பகலன் கீழே வர, அவளோ குறும்பாக "கைல பிடிக்க முடிலனா காலுல பிடிச்சுக்கோங்க மாமா" என்று இழுக்க, அவளின் "மாமா" என்ற அழைப்பில் பகலனுக்கு புரை ஏறியது..


"அய்யோ இந்த லூசு ஒரு மார்க்கமா தான் சுத்துது போல! நம்மதான் தெரிய தனமா இவகிட்ட மாட்டிக்கிட்டோமோ??" என்று நொந்தவன் சாப்பிட்டு முடித்ததும் இருவரும் அலுவலகத்திற்கு கிளம்பினர்..

கட்சி அலுவலகத்தில் இந்த தடவை தேர்தலில் இந்த தொகுதியில் யார் நிற்பது என்று ஆலோசிக்கவே இந்த அவசர கூட்டம்.. இந்த தொகுதியில் வெற்றி பெற்றதே தங்களால் தான் அதனால் தங்களுள் ஒருவர் தான் நிற்க வேண்டும் என்று ராசுவின் தரப்பிலும், திறமையுள்ளவர்கள் தான் தான் நிற்க வேண்டும் என்று மற்றொரு தரப்பிலும் வாதம் செய்ய, அவர்களின் தலைவரோ இதையை யோசித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று அந்த வாதத்தை அப்போதைக்கு முடித்து வைத்தார்..

இருந்தும் ராசுவின் தரப்பினர் இந்த தடவையும் ராசு தான் இந்த தொகுதியில் நிற்பார் என்று மற்றொரு தரப்பினரிடமும் சண்டை இழுக்க, அவர்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை போல் வாதம் செய்ய, வாய் சண்டை முற்றி ராசுவின் அடியாள் ஒருவர் எதிர் தரப்பினரை அடித்து விட, அவர்களும் இவர்களை அடிக்க, அங்கு ஒரு கலவரமே நடந்தது..

இதை அறிந்து இவர்களின் தலைவர் வந்து இருவரையும் பிரித்து விட்டு, "நான் இன்னும் எதுவுமே முடிவு பண்ணல! அதுக்குள்ள என்ன அவசரம் முதல்ல இங்க இருந்து போங்க!!" என்று கோவத்தில் கத்தியதும் தான் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டே நகர்ந்தனர்..

ராசு நகர்ந்ததும், அவரின் எதிர் தரப்பினர் கோபாலு தன் அடியாளிடம், "ஒவ்வொரு தடவையும் இந்த ராசு நம்மளைய அவமான படுத்தறதையே வேலையா வெச்சிருக்கான்.. இவன் கிட்ட பணம் இருக்குனு என்ன வேணாலும் செய்யலாம்னு நினைச்சிருக்கான் போல.. இவனை சும்மா விட கூடாது!!" என்று ஆத்திரத்தில் சொன்னவரை அமைதிபடுத்திய அடியாள், "தலைவரே நீங்க எப்ப இப்படி சொல்லுவீங்கனு தான் நாங்க எதிர்பார்த்துட்டு இருந்தோம் நம்ம யாருனு அவனுக்கு காட்டனும் உயிர் பயம்னா என்னனு அவனுக்கு தெரியும் இப்பவே நம்ம ஆளுகளை போக சொல்லட்டுமா??" என்று வெறியுடன் கேட்டதும், கோபாலும் தலையசைத்ததும் அடியாள் யாருக்கோ போன் செய்தபடி நகர்ந்தான்..

காரில் சென்று கொண்டிருந்த ராசுவும் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் அடியாளிடம் கோபாலை திட்டி கொண்டே வர, அவரின் காரின் முன்னே இரண்டு கார்கள் புழுதியை கிளப்பி கொண்டு வந்து வழி மறித்தது.. உச்சகட்ட கோவத்தில் ராசுவோ "எவன்டா இது?? உனக்கு போகறதுக்கு வழியா இல்லை இப்படி கொண்டு வந்து நிறுத்திருக்க??" என்று கத்தியதும், "நீங்க அமைதியா இருங்க நாங்க பார்க்கறோம் டேய் என்னனு பாருங்கடா" என்று அவரின் அருகில் அமர்ந்திருந்த ஒருவன் தங்களின் அடியாட்களிடம் சொல்ல, அவர்களும் இறங்கினார்..

"யாருடா நீ?? தள்ளி போங்கடா" என்று ரவுடிகள் அவர்களை தள்ளி விட முயல, "முதல்ல நீ யாருடா?? உனக்கு உயிர் பயம்னு ஒன்னு இருந்தா இப்படியே திரும்பி பார்க்காம ஓடிரு" என்று கோபாலின் அடியாட்களும் அவர்களிடம் எகிறினர்..

எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவில் தலையை நுழைத்து கொண்டிருந்த கோபாலின் அடியாட்களின் அடியை தாங்க முடியாமல் ராசுவின் அடியாட்கள் அவர்களின் அடியை வாங்கி கொண்டு கீழே கிடந்தனர்..

ராசுவை சுற்றி வளைத்தவர்கள் கிண்டலுடன், "கீழே இறங்குங்க தலைவரே!! இல்ல அப்படியே பெட்ரோல் ஊற்றி காரை எறிக்கட்டுமா??" என்று நக்கலாக கேட்டவனை, மூக்கு விடைப்புடன் முறைத்து கொண்டே கீழே இறங்கிய ராசு, "எவன்டா உங்களைய அனுப்புனது??" என்றார் தனக்கே உரிய கர்ஜனையுடன்..,

"ஹான் எங்க தாத்தா ஏன் அவருக்கு துணையா நீயும் மண்ணுக்குள்ள போறீங்களா??" என்று கேலியுடன் கேட்டவனை எட்டி உதைத்த ராசு, வேட்டியை மடித்து கட்டி கொண்டு நெஞ்சை நிமிர்த்தியபடி அவர்களை பார்த்தார்...

"என்னங்கடா இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் இந்த ராசு கிட்ட செல்லாது.. எவன் என்னைய கொல்ல அனுப்புனானோ அவன் கிட்ட போய் சொல்லுங்க இந்த ராசுவை யாரும் எதுவும் பண்ண முடியாதுனு" என்று கோவத்தில் கண்கள் சிவக்க கத்தியவரிடம், "அதையும் பார்ப்போம்.. நீங்க என்னடா இன்னும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க?? அவனை போட்டு தள்ளுங்கடா" என்று ராசுவிடம் உதை வாங்கியவன் கத்த, வந்திருந்த அடியாட்கள் அனைவரும் சுற்றி வளைத்து ராசுவை அடிக்க, தன்னால் முடிந்து வரை ராசுவும் அவர்களை சமாளித்தவர், ஒரு கட்டத்தில் அவர் அசந்த நேரம் பார்த்து அவர் தலையில் கட்டையால் ஒருவன் அடித்து விட, தலையை பிடித்து கொண்டு கீழே சரிந்தார் ராசு.. .

"என்ன சொன்னே இந்த ராசுவை எதுவும் பண்ண முடியாதா?? ஹஹஹஹ இப்ப உன்னையவே என் காலடியிலே விழுக வெச்சுட்டேன்" என்று அவரிடம் உதை வாங்கியவன் அவரை காலால் உதைத்தபடி நக்கலாக சொல்ல, தன்னால் முடிந்தவரை அவனை தள்ளிவிட்ட ராசு எழுந்து அமர்ந்து தன் தலையை தொட்டு பார்க்க ரத்தமாய் இருந்தது..

"நீ தனியா நின்னு என்னைய இப்படி அமர வெச்சிருந்தேனே நானே உன்னைய பாராட்டிருப்பேன்.. ஆனா நீ இத்தனை பேரு கூட நின்னு என்னைய ஜெயிச்சிருக்கீயே வெக்கமா இல்ல???" என்று திக்கி திணறி நக்கலுடன் கேட்டவரை, ஒருவன், "உன்னைய எல்லாம் இன்னும் உயிரோட விட்டு பேசிட்டு இருக்கேன் பாரு என்னைய சொல்லனும்.." என்று விட்டு மீண்டும் அவரை கட்டையால் அடிக்க போக, எங்கிருந்தோ இன்னொரு கட்டை பறந்து வந்து அவன் கையில் பிடித்திருந்த கட்டையை கீழே தள்ளியது...

இதில் அனைவரும் திரும்பி பார்க்க, முறுக்கேறிய உடம்புடன், கோவத்தில் நரம்புகள் புடைத்திருக்க, முறைப்பான பார்வையில் அவர்களை பார்த்து கொண்டிருந்தான் ஒரு இளைஞன்.. அவன் அருகில் மற்றொரு இளைஞனும் கெத்தாக நின்றிருப்பதாக நினைத்து கால்கள் நடுங்கியபடி நின்றிருக்க, இவன் யார்?? என்ற ரீதியில் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்...

"யாருடா நீ?? உனக்கு இங்க என்ன வேலை?? முதல்ல இங்க இருந்து கிளம்பு" என்று ஒரு ரவுடி அவனை தள்ளி விட நினைத்து நெஞ்சில் கைவைத்து தள்ள போக, அவன் கையை பிடித்த அந்த இளைஞன், , "ஹான் என்ன சொன்னே?? இங்க ஒருத்தரை நீங்க கொலை பண்ணுவீங்க நாங்க அப்படியே கண்டுக்காம போகனுமா?? அது எல்லாம் மனசாட்சி இல்லாத மிருகங்கள் பண்ற வேலை?? நாங்களும் இங்க மனுசங்கள் தான்.. என்னதான் ஒருத்தர் தப்பு பண்ணுனாலும் அவரை தண்டிக்கற உரிமையை உங்களுக்கு யாருடா குடுத்தது??" என்று கேட்டு கொண்டே அவன் கையை முறுக்கி பிடிக்க, அவனோ வலி தாங்க முடியாமல் கத்தினான்..

ராசுவை விட்டு விட்டு இவனை அடிக்க வர, பிடித்திருந்தவனை ஒரு மிதிமிதித்து தூக்கி எறிந்து விட்டு, தன்னை அடிக்க வந்தவர்களின் நெஞ்சிலயே எட்டி மிதிக்க அவர்கள் தூரமாய் சென்று விழுந்தனர்...

மற்றவர்களும் அவனை சுற்றி வளைத்து கையில் கட்டையுடன் அவனை தாக்க முயல, அந்த இளைஞனோ முறுக்கேறிய தன் உடம்பை லாவாக வளைத்து அவர்களிடம் இருந்து தப்பித்து அவர்களை பந்தாட , இவனின் அதிரடியில் ராசு கூட "இவன் யாருடா??" என்ற ரீதியில் கண்ணை இமைக்க கூட மறந்திருந்தார்..


கால்கள் நடுங்கியபடி நின்றிருந்த இளைஞனையும் ஒருவன் அடிக்க வர, அவனோ அவனிடம் சிக்காமல் தள்ளி நின்றவன்,, "இங்க பாரு உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்பறம் எதுக்கு என்னைய நீ அடிக்க வர்றே??" என்று யோசனையுடன் கேட்டவனிடம், "நான் அடிக்க வர்றது இருக்கட்டும் இப்ப நீ ஏன் டேன்ஸ் ஆடிட்டு இருக்க?? ஒழுங்க நின்னு தொலை பரதேசி" என்று அடியாள் கடுப்புடன் சொல்ல, "ஹிஹிஹிஹி அதுவா?? நான் டேன்ஸ் கிளாஸுக்கு போய்ட்டு இருக்கேனா.. அதான் ப்ராட்டிக்கல் பண்ணிட்டு இருக்கேன் நீங்களும் வரீங்களா?? சேர்ந்தே ஆடலாம்" என்று ஆடி கொண்டே கேட்டவனை அந்த ரவுடி மேலிருந்து கீழே வரை பார்த்தான்..

"நீங்க அவன்கிட்டயே போய் சண்டை போடுங்க பாஸ்.. நான் பாட்டுக்கு வேடிக்கை பார்க்கறேன் உங்களுக்கும் அவனுக்கும் தானே இப்ப சண்டை" என்று கை கால்களை அசைத்தபடி கூறியவனை அடிக்க போக, அவனோ "அய்யோ காலுக்கடில என்னமோ பாருங்க" என்றான் பதறியபடி..

அதை உண்மை என்று நம்பிய ரவுடியும் கீழே குனிந்த சமயத்தில் மறைத்து வைத்திருந்த கட்டையால் அவன் மண்டையில் ஒரு போடுபோட்டு எட்டி உதைத்ததும் வெளுத்து வாங்கி கொண்டிருந்த இளைஞனின் காலடியில் விழுந்தான்..

அந்த இளைஞனும் காலடியில் விழுந்தவனை தூக்கி மறுபடியும் ஒரு உதை விட, முதலில் அடித்த இளைஞனின் காலடியில் நெஞ்சை பிடித்தபடி விழுந்தான்..

முறுக்கேறிய உடம்புடன் இருந்தவனை சமாளிக்க முடியாமல், கோபாலின் அடியாட்கள் எழுந்து ஓடி விட, இடுப்பில் கை வைத்தபடி ஓடிய அடியாட்களை பார்த்திருந்தவனின் தலையில் பின்னால் இருந்து ஒருவன் அடிக்க வருவதை பார்த்த மற்றொரு இளைஞன், "வேந்தா" என்று கத்தினான் பயத்தில்..

அவன் கத்தலில் திரும்பிய வேந்தன் தன்னை அடிக்க வந்தவனை கண்ணை சுருக்கி என்னவென்று பார்க்க, கட்டையை தூக்கி எறிந்து விட்டு விட்டால் போதும் என்று ஓடியே விட்டான்..

"என்னடா இங்க என்னமோ நாடகம் நடக்கற மாதிரி உக்காந்து பார்த்துட்டு இருக்கே??" என்று வேந்தனும் அவன் அருகில் கால்களை பிடித்து கொண்டு அமர, "அதுவா ப்ரோ எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லையல்ல அதான்" என்று அவனுடன் ஒட்டி பிறந்த சகோதரனான செழியன் பல்லை காட்டி சமாளித்தவனை கண்டு கொள்ளாமல் ராசுவை ஆராய்ந்தான்..

அவரோ காரில் சாய்ந்தவாறு தலையை பிடித்து அமர்ந்திருக்க, வேகமாக அவரிடம் சென்ற வேந்தன் அவரை தூக்க போக, அவரோ கை நீட்டி தடுத்து, "நானே எந்திரிச்சுக்கறேன்" என்று விட்டு தட்டுதடுமாறி எழுந்தவர் கார் கதவை திறந்து அமர்ந்தார்.. அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து முகத்தை கழுவி, சிறிது குடித்து தன்னை மீட்டு கொண்டு வேந்தனை பார்த்தார்..

"உனக்கு கார் ஓட்ட தெரியுமா??" என்று ராசு கேட்டதும், "ம்ம்ம்ம் எங்க போகனும்னு சொல்லுங்க" என்று விட்டு அடுத்து என்ன சொல்ல வருகிறார் என்பதை கூட கேளாமல் டிரைவர் சீட்டில் ஏறி அமர்ந்தவன், "செழியா பைக்கை எடுத்துட்டு வந்துருடா.. " என்றதும் செழியனும் தலையசைத்தான்..

ராசுவுக்கு இது பிடிக்கவில்லை என்றாலும் இப்போதைக்கு வேறு வழியில்லை என்று அமைதியாகி தன் வீட்டு முகவரியை சொன்னார்.. வேகமாக காரை செலுத்திய வேந்தனும் அடுத்து பதினைந்து நிமிடத்தில் அவரின் வீட்டின் முன்னே காரை நிறுத்தினான்..

கீழே இறங்கிய வேந்தவன் ராசுவை தூக்க வர, இப்போதும் அவர் தடுத்து, "நீ போய் உள்ள இருக்கறவங்களைய வர சொல்லு" என்று மட்டும் கூற, ஏன் இப்படி சொல்கிறார் என்று புரியாமல் வேந்தனும் உள்ளே இருந்தவர்களிடம் விபரத்தை சொன்னதும் பதறி கொண்டு ஓடி வந்து ராசுவை கை தாங்கலாக அழைத்து சென்றனர்..

ராசு அடிப்பட்டு வருவதை பார்த்த செல்வி பதைபதைத்தவாறு அவரிடம் வந்து என்னவென்று கேட்க, அவரோ ஒன்றுமில்ல என்று ஷோபாவில் அமர்ந்தார்.. சிறிது நேரத்தில் அழைத்திருந்த மருத்துவரும் வந்து ராசுவை பரிசோதித்து விட்டு காயத்திற்கு மருந்து வைத்து கட்டு போட்டு விட்டு சென்றார்..

இதை அனைத்தையும் வனிதா பார்த்து கொண்டிருந்தாலும் அவரிடம் நலம் விசாரிக்கவில்லை.. வனிதா அவரிடம் திருமணத்திற்கு முன்பு பேசியது ஏதாவது அவரிடம் சொல்ல வேண்டுமென்றாலும் செல்வி மூலமாக தான் சொல்லுவார்... இப்போதும் கூட நடப்பதை மட்டுமே பார்வையாளராக பார்த்து கொண்டு நின்றிருந்தார்..

படுத்திருந்தவர் திடீரென்று எழுந்து தனக்கு துணையாக இருந்த தன் வேலையாளிடம், தன்னை அழைத்து வந்தவர்களை பற்றி விசாரிக்க சொல்ல, அவரும் "இதோ போறேன் ஐயா" என்றார் பவ்யமாக..

வெளியில் வந்தவர் இருவரையும் தேடி அவர்களிடம் சென்று "தம்பி" என்று அழைக்க, திரும்பிய வேந்தவன் என்னவென்று பார்த்தான்..

"நான் இங்க பத்து வருசத்துக்கு மேல வேலை செய்யறேன் என் பேரு மயில்சாமி தம்பி" என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டதும் வேந்தன் சிரித்து, "அவரு இப்ப எப்படி இருக்காங்க எந்த பிரச்சனையும் இல்ல தானே???" என்று கேட்டவனுக்கு இல்லையென்று தலையசைத்தவர், தயக்கத்துடன் "உங்களைய பத்தி ஐயா விசாரிச்சிட்டு வர சொன்னாங்க" என்றார்..

இதை கேட்டதும் வேந்தன் ஏதோ யோசிக்க, அவன் என்ன சொல்ல போகிறான் என்ற ஆர்வத்தில் செழியன் அவனை பார்த்திருந்தான்.. அவரை பார்த்த வேந்தன், "எங்களைய பத்தி சொல்ல அப்படி ஒன்னுமில்லை.. எங்களுக்கு தாத்தா மட்டும் தான்.. படிச்சிட்டு வேலை இல்லாம ஏதாவது வேலை கிடைக்குமோனு இங்க வந்து ரெண்டு மாசம் ஆகுது.. இன்னும் வேலைதான் கிடைச்ச பாடில்லை.." என்றவனை அதிர்ந்து பார்த்தான் செழியன்..

மயில்சாமியும் இதை ராசுவிடம் கூற, அவர் யோசித்து "அவங்களுக்கு வேலை நான் தர்றேன்.. இங்க வேலை பார்க்கறதுக்கு அவங்களுக்கு சம்மதமானு கேட்டு சொல்லு " என்றதும், மயில்சாமியும் அவர் சொன்னதை அப்படியே வேந்தனிடம் சொன்னார்..

"தம்பி ஐயாவுக்கு அந்தஸ்து ரொம்ப முக்கியம்பா.. அவரை விட உயர்வா இருக்கறவங்களைய மட்டும் தான் வீட்டுக்குள்ள விடுவாரு... மத்தவங்க யாரையும் தொட கூட விட மாட்டாரு.. அதனால தான் நீங்க அவரை தூக்க வந்தப்ப கூட உங்களைய தொட விடல.. இதைய சொல்றதுக்கு காரணமே யோசிச்சு வேலைக்கு வர்றதா?? வேணாமானு முடிவு பண்ணுங்க தம்பி.. " என்று மெதுவாக ராசுவை பற்றி சொன்னதும், செழியன் மீண்டும் அதிர்ச்சியோடு வேந்தனை பார்த்தான்..

"மத்தவங்களும் அவரை போல மனுசனுக தானே.. இதுல என்ன ஏழை, பணக்காரனு?? இப்ப கூட அவரை காப்பாத்துனது அவரு கட்டி சேர்த்துருக்கற பணமா?? இது எல்லாம் கொஞ்சம் கூட ஏத்துக்கற மாதிரி இல்ல" என்று சற்று குரலை ஏற்றி சொன்ன வேந்தனை அடக்கிய மயில்சாமி, "தம்பி தம்பி சத்தமா பேசாதீங்க.. என் வேலை போய்ரும்.. என்னைய நம்பிதான் என் குடும்பமே இருக்கு" என்று அவனை அடக்கியவர் சுத்தி சுத்தி பார்த்தார் யாரும் இதை கேட்கவில்லை தானே என்று!!!

இவர்கள் இப்படியிருக்க, ஸ்கூட்டியில் பகலனும் நிலாவும் உள்ளே வந்தனர்.. ஸ்கூட்டியை நிறுத்தியவளின் மனது ஏதோ போன்று இருக்க, சுற்றி பார்த்தவளின் கண்ணில் முதலில் சிக்கியது தோட்டத்தில் நின்றிருந்த செழியன் தான்.. யாரு இவன்?? என்ற யோசனையுடன் அவன் அருகில் நின்றிருந்த வேந்தனை பார்க்க முயல, அவனை மறைத்தபடி மயில்சாமி நின்று பேசியிருந்தார்..

கடுப்பாகிய நிலா, "இவரு ஒருத்தரு" என்று முணுமுணுக்க, "இங்க எல்லாரும் ஒருத்தரு தான் ரெட்டையா இல்லை" என்று நேரங்காலம் தெரியாமல் நக்கலடித்த பகலனை முறைத்த நிலா மீண்டும் தோட்டத்தை பார்த்தாள்.. இப்போது வேந்தன் நன்றாகவே நிலாவுக்கு தெரிய, அவனை பார்த்ததும் "வாவ்" என்று நிலாவின் உதடு தன்னிச்சையாக அசைந்தது..




தொடரும்...
 

சாஹித்யா வருண்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி - 3



வேந்தனை பார்க்கும் முன்னே அவன் அருகில் நின்றிருந்த செழியனை பார்த்து, "அங்க பாருடா உன்னைய விட சூப்பரா ஒருத்தன் நிக்கறான்.. இந்த மனுசனை பத்தி தெரியாமா வேலைக்கு வந்துட்டாங்களோ?? " என்று தீவிரமாக யோசித்தபடி கேட்டவளை கொட்ட போனவன், "என்னைய தான்டி அடிச்சுக்கனும்" என்று பகலனே தலையில் அடித்து கொண்டு உள்ளே சென்றான்..

அவன் சென்றதும் மீண்டு்ம் அவர்கள் நின்றிருந்த இடத்தை பார்க்க,, இப்போது அவளுக்கு நன்றாகவே வேந்தன் தெரிய, அவனை பார்த்ததும் "வாவ்" என்று நிலாவின் உதடு தன்னிச்சையாக அசைந்தது..

மாநிறமான தேகம், அதில் கூர்மையான கண்கள், அவனின் கேசம் காற்றில் கலைந்து நெற்றியில் விழும் போது அதை அவன் கோதிவிடும் அழகும், கையிலும் கழுத்திலும் கருப்பு கயிறு இடம் பெற்றிருக்க, அவன் போட்டுருந்த இளம்பச்சை பனியன் அவனின் முறுக்கேறிய உடலுக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது..

இதை அனைத்தையும் விட அவன் கண்கள் தான் எதிரில் நிற்போரை மயக்க, அவனையே கண் எடுக்காமல் நிலா பார்த்து கொண்டிருந்தாள்.. செழியன் என்னவோ சொன்னதை கேட்டு வெள்ளி பற்கள் தெரியும்படி சிரித்தவனின் கண்களும் சேர்ந்து சிரிப்பதை பார்த்து முற்றிலும் அவனிடமே விழுந்தாள்...

தன்னை மறந்து நின்றிருந்தவளை, "நிலாமா" என்று அங்கு வேலை செய்பவர் ஒருவர் அழைக்க, தன்னிலைக்கு வந்தவள் அவருக்கு புன்னகையை குடுத்து விட்டு, "உன்னை போல ஒருத்தனை நான் பார்த்ததே இல்ல" என்று துள்ளி குதித்தபடி பாடியவாறு உள்ளே சென்றவள், ராசு தலையில் கட்டுடன் அமர்ந்திருப்பதை பார்த்து திருதிருவென முழித்து, எதுவும் பேசாமல் நல்ல பிள்ளையாய் வனிதாவின் அருகில் நின்று கொண்டாள்..

"அத்தை வெளில புதுசா நிக்கறாங்களே அவங்க யாரு??" என்று மெதுவாக கேட்க, வனிதா பதில் சொல்லும் முன்னே பகலன் முந்தி கொண்டு, "பிசாசே அங்க உன்னைய பெத்தவரு தலைல அடிபட்டு உக்காந்துருக்காரு அது உன் கண்ணுக்கு தெரியாம வெளில புதுசா நிக்கறவங்க தான் உன் கண்ணுக்கு தெரிஞ்சாங்களா??" என்றான் முறைப்புடன்..

"ப்ப்ப்ச்ச்ச் இவரு சும்மா இருக்காம ஊர் வம்பு, உலக வம்பு எல்லாத்தையும் இழுத்துட்டு வந்தா இப்படிதான் ஆகும்?? அதுக்கு நான் எதுக்கு பீல் பண்ணனும்??" என்று தோளை குலுக்கி கொண்டு சொன்ன நிலாவை முறைத்தவன் "உன்னைய திருத்தவே முடியாதுடி" என்றான் சலிப்புடன்..

அமைதியாக நின்றிருந்தவள் திடீரென்று "டேய் யாருடா இவரை அடிச்சது?? என்று கேட்க, பகலனோ, "என்ன திடீருனு உனக்கு பாசம் வந்துருக்கு.. இப்பவாவது கேட்கனும்னு தோணுச்சே...". என்று அவன் சொல்ல வருவதை கூட கேட்காமல், "ம்ம்ம்க்கும் நான் ஒன்னும் பாசத்துல கேட்கல.. இவரை இப்படி அடிச்சு உக்கார வெச்சனுக்கு கை குடுத்து வாழ்த்து சொல்லி போஸ்டர் ஒட்டி அவர் பேருல ஒரு பாராட்டு மன்றமே நடத்தனும் அதுக்கு தான்" என்று முகத்தை அப்பாவியாய் வைத்து கொண்டு சொன்னவளை பகலன் தீயாய் முறைத்து பார்க்க, வனிதாவோ பக்கென்று சிரித்தே விட்டார்..
"அவன் கிடக்கறான் நீங்க சொல்லுங்க அத்தை" என்று மீண்டும் நிலா அதே இடத்தில் வந்து நிற்க, "அவங்க ரெண்டு பேரும்தான் ஹிட்லரை காப்பாத்தி இங்க கூட்டிட்டு வந்தது.. அப்பகூட இந்த மனுசன் அவங்களை வீட்டுக்குள்ள வர சொல்லலை.. இது கூட பரவால்ல அவங்களை தொடவும் விடல.. இவருக்கு மட்டும் ஏன்தான் இப்படி புத்தி போகுதோ??" என்று சலித்து கொண்டே சொன்ன வனிதாவிடம், "அந்த புண்ணியவன் அவங்கதானா?? இவரை பத்தி தெரிஞ்சும் நம்ம ஏன் புலம்பனும் விடுங்க அத்தை" என்று அவரை சமாதானப்படுத்தியவள் தன் தந்தையை வெறித்து விட்டு சென்றாள்..

வனிதா சொன்னதை கேட்ட பகலனுக்கும் ராசு மேல் சிறிது வெறுப்பு வர ராசுவிடம் எதுவும் பேசாமல் அறைக்கு சென்றான்..

டீக்கடையில் அமர்ந்திருந்த செழியன் யோசனையுடன், "இங்கயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டியாடா???" என்று கேட்க, வேந்தனோ எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்தபடி இருந்தான்..

"ப்ச் உன்கிட்ட தான் கேட்கறேன்டா" என்று சிறிது எரிச்சலுடன் கேட்டவனை பார்த்த வேந்தன் ஒற்றை வரியில் "ம்ம்ம்ம்" என்றான்..

"புரிஞ்சு தான் பேசறீயா???" என்று சீறிய செழியனை அழுத்தமாக பார்த்த வேந்தன், "என் முடிவு இதுதான்.." என்றான்..," அவரு எல்லாம் ஒரு ஆளுனு அவரு கிட்ட வேலை பார்க்கறதா??? முடியாது கிளம்பலாம்" என்று முடிவாய் செழியன் கூற, நிமிர்ந்து அவனை பார்த்த வேந்தன், "இங்க இருக்க போறது நான் மட்டும் தான்.." என்றான் திட்டவட்டமாக..

"ஏன்டா உனக்கும் நான் பாரமா இருக்கேனா??? அப்படி இருந்தா முகத்துக்கு நேராவே சொல்லிரு நான் எங்கையாவது போறேன்" என்று தன்னை எப்படி அவனை விட்டு போக சொல்லலாம் என்று ஆதங்கம் தாளாமல் சிறு துளி நீருடன் சொன்ன செழியனை பார்த்த வேந்தனுக்கு இதயத்தை யாரோ ஊசியாக குத்தியது போன்று உணர்வு..

அவனிடம் சென்ற வேந்தன்," நான் எப்படிடா உன்னைய பாரமா நினைப்பேன் எனக்குனு இருக்கறது நீ மட்டும் தானே?? அந்த ஆளு உன்னைய ஏதாவது சொல்லிருவாரோனு பயமா இருக்குடா.. நான் எத்தனை அவமானப்பட்டாலும் பரவால்ல.. உன்னைய ஏதாவது சொல்லிட்டா என்னால தாங்க முடியாதுடா" என்று தோய்ந்த குரலில் சொன்னவன் தன்னை சமன்படுத்தி கொள்ள திரும்பி தலையை அழுத்த கோதி இறுகிய முகத்துடன் செழியனை பார்த்தான்..

"இங்க நான் மட்டும் தான் இருக்க போறேன்.. நீ தாத்தா கிட்ட போக தான் வேணும்.. இதுதான் என் முடிவு" என்று தீர்க்கமாய் சொன்ன வேந்தனிடம் எகிறிய செழியன், "நானும் உன் கூட தான் இருப்பேன் இதுதான் என் முடிவு" என்று இவனும் முடிவுடன் சொல்ல, நொந்து தான் போனான் வேந்தன்..

அறைக்கு சென்ற நிலாவுக்கு வேந்தன் முகமே கண் முன்னே தெரிய, குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டு ஏதேதோ யோசனையில் இருந்தாள்.. இரவு எப்படியோ முடிய, காலையில் பகலன் வருவதற்கு முன்னதாகவே கிளம்பி நடைபயிற்சி செல்வதற்கு அமர்ந்திருக்க, அவளை எழுப்ப உள்ளே வந்த பகலன் இதை பார்த்து தான் காண்பது கனவா?? இல்ல நிஜமா?? என்று புரியாமல் கண்ணை தேய்த்து முழித்தான்...

நகத்தை கொறித்தபடி அமர்ந்திருந்தவள் பகலனை பார்த்ததும், "ரொம்ப ஷாக் ஆகாதே.. அப்பறம் ஹார்ட் அட்டாக் வந்துரும்" என்று அவனை கலாய்த்து விட்டு செல்ல, "ம்ம்ம்ம்க்கும் இவளுக்கு என்னைக்கு தான் வாய் குறைஞ்சிருக்கு கொஞ்சம் அதிர்ச்சில நின்னுட்டேன் அதுக்குனு ஹார்ட் பேசண்ட் வரைக்கும் போய்ட்டா??.." என்று முணுமுணுத்தபடி கிளம்பினான்..
செல்லும் வழி எல்லாம் நிலா வேந்தனை தேடி கொண்டே செல்ல, அவன் தான் அவள் கண்களுக்கு சிக்குவதாய் இல்லை.. என்னவென்று கேட்ட பகலனிடம் கூட எதுவும் சொல்லாமல் சோர்ந்து தான் போனாள்..

ஆபிஸுக்கு செல்ல இருவரும் வெளியில் வர, அதே சமயம் வேந்தனும் செழியனும் உள்ளே வந்தனர்.. வேந்தனை பார்த்ததும் அவளுக்கே உரிய குறும்பு தலை தூக்க, கையை கட்டி கொண்டு, "ஹாலோ மிஸ்டர் இங்க வாங்க" என்று கெத்தாக அழைக்க, வேந்தனோ அவளை ஏதோ ஒரு ஜந்துவை பார்ப்பதை போல் பார்த்து விட்டு சென்றான்..

மனதிலே அவனை கருவிய நிலா, " ஹலோ சிவப்பு சட்டை உன்னையதான் கூப்பிட்டேன்" என்று அவளை கடந்து சென்றவனை மீண்டும் அழைக்க, திரும்பியவன் என்னவென்று கண்களாலே கேள்வி கேட்க, அவனின் மௌன மொழியில் இவளின் மனது தான் எக்கச்சக்கமாக எகிறி குதித்தது..

சிலையாக நின்றிருந்தவளை பகலன் இடித்ததும் தான் தன்னிலைக்கு வந்தவள், "என்னைய பெத்தவரை காப்பாத்துனதுக்கு நன்றி.. ஆனா என்ன இன்னும் கொஞ்சம் அடிச்சதுக்கு அப்பறம் காப்பாத்திருக்கலாம்" என்று இச் கொட்டி சொன்னவளை "இவள் என்ன லூசா??" என்ற ரீதியில் பார்த்த வேந்தன் பதில் சொல்லாமல் நகர்ந்தான்..

"என்ன இந்த டியூப்லைட் பேசவே மாட்டிங்குது?? இவனை பேச வைக்கவே இன்னும் பத்து வருசம் ஆகும் போல??" என்று நினைத்து கொண்டே திரும்ப,, இன்னும் செழியன் நின்றிருப்பதை பார்த்து, "ஹாய் ஹேண்ட்செம்!!!" என்று குடுக்க, அவளையும் அவள் கையையும் மாறி மாறி பார்த்தபடி செழியன் நின்றிருந்தான்..

பாவமான முகத்துடன் நிலா தான், "ஏன்பா அவன் தான் என்னைய ஒரு மனுசியா கூட மதிக்காம போனா.. நீயும் கூட இப்படி நின்னா நான் என்ன பண்றது?? ஒரு வேளை பேசறதுக்கு காசு கேட்பீங்களோ??? நானும் எவ்ளோ நேரம் தான் கையை நீட்டிட்டு நிக்கறது.. கை வேற வலிக்குது" என்று கண்ணை சுருக்கி சொன்னவளை பார்த்து புன்னகைத்த செழியன், "ஹாய் பியூட்டி" என்றான் குறும்புடன்..

"வாரே வா அவனுக்கும் சேர்த்து நீயே பேசுவே போல.. இப்படி ஒரு நண்பனை தான் தேடிட்டு இருந்தேன்.." என்று துள்ளி குதித்து சொன்னவள் திடீரென்று," எதுக்கு மச்சி என் தகப்பனை இவ்ளோ சீக்கிரம் காப்பாத்துனீங்க.. இன்னும் பட்டுருந்தா தான் அவருக்கு கொஞ்சமாவது புத்தி வந்துருக்கும்" என்று விழிகளை உருட்டி சொன்ன நிலாவை," உண்மையாவே இவ லூசா??" என்ற ரீதியில் செழியனும் பார்த்து வைத்தான்..

பகலன் தான் கையை கட்டியபடி முறைத்திருப்பதை பார்த்ததும், "உண்மையை தான்டா சொல்றேன் அதுக்கு எதுக்கு இந்த முறைப்பு??? நீயும் வர வர அந்த ஹிட்லர் மாறியே மாறிட்டு வர்றே?? இது சரியில்ல பார்த்துக்கோ" என்று தோளை குலுக்கியபடி நிலா சொன்னதும், அவள் தலையில் நங்கென்று கொட்டிவன்," நேரமாச்சு கிளம்பலாம்" என்றவன், செழியனிடமும் தன்னை அறிமுகப்படுத்தி விட்டு காரில் ஏறினான்..

"அவன் அப்படிதான் மச்சி.. நம்ம ஈவ்னிங் மீட் பண்ணலாம்.. நீ ரொம்ப நல்லவனா இருக்கே.. உனக்கு இந்த வேலை வேணாம் மச்சி.. நான் வேணா வேற வேலை பார்த்து தரட்டுமா???" என்று தலை சாய்த்து கேட்ட நிலாவை செழியனுக்கு மிகவும் பிடித்து போனது..

ராசு தன் டிரைவராக வேந்தனை இருக்க சொல்ல, அவனும் கொஞ்ச நாள் தானே பார்த்துக்கலாம் என்று நினைத்து சரியென்றான்.. ராசு உள்ளே சென்றதும் செல்வி அவனிடம் வந்து "தம்பி ரொம்ப நன்றிபா நீ மட்டும் அந்த நேரத்துல அங்க வரலனா என்ன நடந்துருக்கும்னு என்னால யோசிச்சு கூட பார்க்க முடில" என்று கண் கலங்கியதும் "என்னடா இந்த வீட்டுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா இருக்காங்க.. இப்பதான் இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு போய்ருக்கலாம்னு ஒரு லூசு சொல்லிட்டு போனா இப்ப இவங்க சென்டிமெண்ட்டா பேசறாங்க.. யாரு எப்படினு புரிஞ்சுக்கவே முடிலயே" என்று மனதிலயே குழம்பியவன், "அய்யோ மேடம் யாரா இருந்தாலும் நான் காப்பாத்திருப்பேன்.. " என்றவனை அன்புடன் பார்த்தார் செல்வி..

கண்ணை துடைத்து கொண்ட செல்வி, "அவரு கொஞ்சம் அப்படிதான்பா.. தப்பா நினைச்சுக்காதீங்க.. என்னைய உங்க அம்மாவா நினைச்சு எதுவா இருந்தாலும் தயங்காம என்கிட்ட கேளுங்க.." என்று அன்புடன் சொன்னவருக்கு புன்னகையுடன் தலையசைத்தான் வேந்தன்..

அவர் சென்றதும், " எனக்கு ஒன்னுமே புரிய மாட்டிங்குது வேந்தா.. இப்பதான் ஒரு பொண்ணு ஒன்னு சொல்லிட்டு போனா இவங்க வந்து இப்படி பேசிட்டு போறாங்க" என்று புரியாமல் செழியன் வாய் விட்டே புலம்ப, "எனக்கு மட்டும் என்ன தெரியும்.. இங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு டிசைன்ல இருக்காங்க" என்றான் வேந்தனும் ஏதும் புரியாமல்..

தான் மட்டும் தான் அங்கு வேலை பார்ப்பேன் என்று வேந்தன் உறுதியுடன் சொல்லி விட, தன்னை இங்கு இருக்க சொன்னதே பெரிசு என்று நினைத்து செழியனும் சரியென்று விட்டான்..

மதிய வாக்கில் தோட்டத்தில் அமர்ந்திருந்த வேந்தன், கையில் ஒரு புகைப்படத்தை வைத்து அதனையே வருடி கொண்டிருந்தான்.. "வரு எங்கடி இருக்கே?? நான் உனக்காக அலையறதும் புலம்பறதும் உனக்கு புரியலயாடி.." என்று மனதிலே வருந்தியவாறு புகைப்படத்தை வெறித்திருந்தான் மனதில் வலியுடன்..



தொடரும்...
 

சாஹித்யா வருண்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்




பகுதி - 4




வேந்தன் தனியாக தோட்டத்தில் இருப்பதை பார்த்ததும் அவனிடம் வந்த நிலா, "ஹோய் டியூப்லைட்.. உன் பேரு என்னனு நான் தெரிஞ்சுக்கலாமா??" என்று நகைப்புடன் கேட்டவளை அவன் ஒரு பொருட்டாக மதிக்காமல் அமர்ந்திருக்க, "உன் பேரை தானே கேட்டேன் என்னமோ உன் சொத்தை எழுதி கேட்ட மாதிரி பேசாம இருக்கே" என்று முகத்தை சுருக்கியபடி சொன்னவளை ஒரு அழுத்தமாக பார்த்தவனின் கண்களில் "நான் எதுக்கு உன்கிட்ட சொல்லனும்" என்று கேள்வியே தாங்கி இருந்தது..

அவளோ அவனின் கேள்வியை கண்டு கொள்ளாமல், "ப்ப்ப்ச்ச்ச் என்னைய பார்த்தா மனுசி மாதிரி தெரியலயா?? எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டிங்கற??" என்று கடுப்புடன் கேட்டவளை, முகத்தை சுருக்கி ஒரு பார்வை பார்த்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர, நிலாவோ அவனின் முன்னே சென்று கையை கட்டி கொண்டு புருவத்தை உயர்த்தி குறுநகையுடன் நோக்க, அவளின் திடீர் செயலில் வேந்தன் திகைத்து தள்ளி நின்று அவளை எரிக்கும் பார்வையில் பார்த்தான்..

"ஆமா நீங்க ஏன் எப்ப பார்த்தாலும் முறைச்சிட்டே இருக்கீங்க.. சிரிச்சா பார்க்கறதுக்கு க்யூட்டா இருக்கும் தெரியுமா??" என்று அவன் சிரிப்பை முதன் முதலில் பார்த்ததை நினைவு படுத்தியபடி ரசனையுடன் சொன்னவளை என்ன செய்தால் தகுமென்றிருந்தது வேந்தனுக்கு..

அப்போதும் வேந்தன் எதுவும் பேசாமல் சென்று விட, செல்லும் அவனை முறைத்து கொண்டே "இவனை எப்படி பேச வைக்கிறது??" என்று தீவிர யோசனையுடன் சென்றாள்..

நிலா சென்றதும் மெதுவாக திரும்பி பார்த்த வேந்தன், "என்ன பொண்ணுடா இவ!! இப்படி ஆளையே முழுங்கற மாதிரி பார்க்கறா!!" என்று மனதில் நினைத்து கொண்டிருக்க, அவனிடம் வந்த செழியன், "என்ன வேந்தா நிலா கூட பேசிட்டே போல!!! என்று சிறிது கேலியுடன் கேட்டவனை வேந்தன் புருவம் உயர்த்தி பார்த்தான்..

"என்ன என்ன லுக்கு??? முறைச்சு பார்த்துட்டா இல்லைனு ஆகிருமா???" என்று நக்கலுடன் கேட்டவனை தீயாய் முறைத்த வேந்தன், "அது ஒரு லூசு.. அது கூட நான் பேசி என் நேரத்தை வீணாக்கனுமா?? இப்படி ஏதாவது எடக்குமடக்கா கேட்டுட்டு இருந்தீனா வெய்யு பல்லை தட்டி கைல குடுத்துருவேன்" என்று அதட்டி விட்டு சென்றவனை பெருமூச்சுடன் பார்த்திருந்தான் செழியன்..

ராசு மற்றவர்களை அழைக்க, நால்வரும் எதுக்கு என்று புரியாமல் அவரை பார்த்தனர்.. இவர்கள் வந்தும் அவர் அமைதியாய் இருப்பதை பார்த்து செல்வியிடம் என்னவென்று மெதுவாக கேட்க, அவரும் தனக்கு தெரியவில்லை என்று கையை விரித்தார்.. ராசுவே நிமிர்ந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு, "எவ்வளவு நாளுக்கு தான் இவங்களுக்கு கல்யாணம் பண்ணாம வெச்சிருக்கறது.. அது நாளா ரெண்டு பேருத்துக்கும் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன்" என்றிட, நிலாவும் பகலனும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..

"இப்ப என்ன மாமா எங்களுக்கு அவசரம்?? இன்னும் ஒரு வருசம் போகட்டும் அப்பறம் பார்த்துக்கலாம்" என்று பகலன் மறுக்க, "இப்படியே இன்னும் எத்தனை நாளுக்கு தான் சொல்லிட்டு இருப்பீங்க??" என்று அவர் பகலனிடம் எகிற, "ம்ம்ம்ம் நீங்க எப்ப எங்க காதலுக்கு ஓக்கே சொல்றீங்களோ அது வரைக்கும் தான்" என்று நிலா மைண்ட் வாய்சில் நினைக்க, ராசுவோ, "இந்த தடவை நான் முடிவு பண்ணுனது பண்ணுனது தான்" என்றார் முடிவாக...

செல்வியோ ஆர்வமாக, "அப்ப நீங்க நிலாக்கு மாப்பிள்ளை பார்த்துட்டிங்களா??"என்று கேட்டதும், "இந்த மம்மி என்னைய துரத்தி விடறதுலயே குறியா இருக்கும் போல" என்று வறுத்து எடுத்தவாறு முறைப்புடன் நின்றிருந்தாள் நிலா..

"எதுக்கு வெளில பார்க்கனும் அதான் பகலனே இருக்கானல்ல?? ரெண்டு பேரும் ஒன்னாவே இருக்காங்க ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு இருக்கும்..நம்ம கூடயே இருந்துப்பாங்க" என்று அசட்டையாக சொன்ன ராசுவின் கூற்றில் வனிதாவே அதிர்ந்து தான் போனார்..

"என்ன உளரிட்டு இருக்கே?? நிலா எனக்கே பொண்ணு மாதிரி அவளை போய் பகலனுக்கு கட்டி வைக்கறேனு சொல்றே?? புத்தினு ஒன்னு இருக்கா?? இல்லையா??? " என்று முகத்தில் அடித்தாற்போல் வெடுக்கென வனிதா கேட்டு விட, ,"கல்யாணத்துக்கு அப்பறமும் நீயே உன் பொண்ணு மாதிரி பார்த்துக்க.. யாரு வேணானு சொன்னா??" என்றவரை வனிதாவின் பார்வை எரித்தே பஸ்பமாக்கி விடும் தோணியில் இருந்தது..

"மாமா யோசிச்சு தான் பேசறீங்களா?? எனக்கு எப்பவும் நிலா தங்கச்சி மாதிரி தான் அவளை போய் என்கூட சேர்த்து... ஏன் மாமா இப்படி?? நீங்க என்ன சொனனாலும் என்னால அவளை கல்யாணம் பண்ணிக்க முடியாது.. ஒரு அண்ணனா இருந்து அவ கல்யாணத்தை தான் நடத்தி வைப்பேன்.. அது மட்டுமில்ல இன்னும் ஒரு வருசத்துக்கு கல்யாணம் பண்ற ஐடியால நான் இல்லை.. இதுதான் என் முடிவு" என்றவன் ராசுவின் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்று விட, செல்லும் அவனையே ராசு முறைப்புடன் பார்த்திருந்தார்..

ராசு கல்யாணம் என்றபோதே நிலாவுக்கு வேந்தனின் முகமே நினைவுக்கு வர, தன்னை மறந்து அப்படியே நின்றிருந்தாள்.. இதில் ராசு பகலனை திருமணம் செய்து கொள்ள சொல்ல அதிர்ந்து தான் போனாள்.. இருந்தும் பகலன் பேசியதை கேட்டதும் தானாக புன்னகை மலர்ந்தது..

"எனக்கும் இப்போதுக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லப்பா.. இதோட இந்த பேச்சை விட்டுருங்க" என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலாவும் அறைக்கு செல்ல, அவர் உச்சக்கட்ட கோவத்தில் "இந்த வீட்டுல யாரும் நான் சொல்றதை கேட்கறதே இல்ல.. என்னமோ பண்ணி தொலைங்க.. ஆனா எனக்கு பிடிக்காததை செஞ்சீங்க அவ்ளோதான்" என்று வீடே அதிரும்படி கத்தி விட்டு விறுவிறுவென வெளியில் சென்று விட்டார்.. அவர் சென்றதும் வீடு புயல் அடித்து ஓய்ந்து நின்றது போன்று இருந்தது..

"என்ன அண்ணி அவங்க இப்படியும் நீங்களும் எதுவும் பேசாம அமைதியா நிற்கறீங்க??" என்று வனிதா எப்படி நீங்க அமைதியா நிக்கலாம் என்று கடுப்புடன் கேட்க, "பகலன் பேசுவானு தான் நான் அமைதியா இருந்தேன் வனிதா.. நம்ம பேசுன அவரு கேட்கற ஆளா?? அதான் பகலனே பேசட்டும்னு விட்டுட்டேன்" என்றார் வருந்திய குரலில்..

அறையில் குறுக்கும் நெடுக்குமாய் பகலன் நடந்து கொண்டிருக்க, "எதுக்குடா வீட்டை அளந்துட்டு இருக்கே??" என்று கேலியாய் கேட்டபடி நிலா உள்ளே வந்தாள்..

"ம்ம்ம்ம் வேண்டுதல் அதான்" என்று உச்சக்கட்ட கடுப்பில் பகலன் சொன்னதும், "இதையை கோவில் செஞ்சா தான் புண்ணியத்தோட புளியோதரையும் கிடைக்கும்.. வீட்டுல செஞ்சா புண்ணியம் மட்டுமில்ல புளியோதரை கூட கிடைக்காது.. பேசாம கோவிலுக்கு கிளம்பு.. அப்பவாவது உன்னோட காதலுக்கு பலன் கிடைக்கும்" என்று நேரங்காலம் பார்க்காமல் நக்கலடித்தாள் நிலா..

அவளை கடுங்கோவத்துடன் பார்த்தவன், " நானே கடுப்புல இருக்கேன் நீ மொக்கை காமெடி பண்ணி இன்னும் கடுப்பேத்தாத.. இந்த மாமாகிட்ட பொறுமையா என்னோட காதலை எடுத்து சொல்லலாம்னு இருந்தா அதுக்குள்ள இவரு இப்படி கிளம்பிட்டாரு.. இனி சொன்னாலும் புரிஞ்சுக்குவாரா??" என்று வருந்திய குரலில் கேட்டவனை பார்த்து புன்னகைத்தவள், "இப்படி பயந்தா எதுவும் ஆகாது பகலன் சார்.. தைரியமா பேசு கண்டிப்பா உன்னோட காதல் கல்யாணத்துல முடியும்" என்று அவனுக்கு நம்பிக்கை தந்தாள்..

"என்னோட பயமே ஷியா பத்திதான்.. இவரு வேற அந்தஸ்து அது இதுனு நிறையா பார்ப்பாரே.. அவளை பத்தி தெரிஞ்சு ஏதாவது பண்ணி தொலைஞ்சிட்டா?? அவ நம்மளைய தான் நம்பி இருக்கா??" என்று கவலையுடன் சொன்னவனுக்கு இவள் என்ன பதில் சொல்வாள்... அவளுக்கு அந்த பயம இருக்கதான் செய்தது..

இருந்தும் வெளியில் காட்டி கொள்ளாமல், "அப்படி எல்லாம் எதுவும் ஆகாது எருமை.. ஏதேதோ யோசிக்கறதை விட்டுட்டு உன் காதலுக்கு எப்படி சம்மதம் வாங்கறதுனு மட்டும் யோசி.. உங்களைய சேர்த்து வைக்கறது என் பொறுப்பு.. இதுல என் உயிர் போனா கூட கண்டிப்பா உங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டு தான் சாவேன்.. சோ பயப்படாம ஹேப்பியா இரு.. இன்னும் கொஞ்ச நாளைக்கு இதைய பத்தி எதுவும் ஹிட்லர்கிட்ட பேசாத.. அப்பறம் பார்த்துக்கலாம்" என்று நிலா பேசியதை கேட்டு பகலன் பதறிதான் போனான்..

"நீ செத்துதான் நாங்க வாழனும்னா அந்த வாழ்க்கையே எனக்கு தேவையில்லடி.. நீ இப்படி பேசிட்டு இருந்தே சப்புனு ஒரு அப்பு அப்பிருவேன்" என்று அவன் கவலையை மறந்து இவளிடம் எகிற, "மாம்ஸ் விடாத கருப்புனு ஒரு பழமொழி கேட்டுருக்கீயே?? நா செத்தா கூட ஆவியா உன் பின்னாடி தான் சுத்தி உன்னைய கூட்டிட்டு போவேன்" என்று சொன்னவளை அடிக்க கை ஓங்க, நிலாவோ "அய்யய்யோ என்னைய கொல்ல பார்க்கறீயா?? நான் ஒரு பேச்சுக்கு தானேடா சொன்னேன்" என்று பதறி கத்த, பகலனும் பதறி அவள் வாயை பொத்தினான்..

ஷியா வேறு யாருமில்லை பகலனின் காதலி காருண்யா திஷ்யா தான்.... கல்லூரி படிக்கும் காலத்தில் நிலாவிடம் மாட்டி கொண்டு தவிர்ந்தவள்.. இவளின் பெயரை சுருக்கி காரு காரு என்றே அவளை ஒட்டி தள்ள, அவ்ளோ காலில் விழுகாத குறையாக நிலாவிடம் கெஞ்சி கொண்டிருப்பாள்.. அனைவரும் இவளை ரன்யா என்றே அழைக்க, நிலா மட்டும் இன்னும் காரு என்று அழைப்பாள்..

நிலாவிடம் மாட்டி கொண்டு ரன்யா முழிக்கும் போது அவளிடம் சிறிது சிறிதாய் தன்னை தொலைத்தவன் அடுத்த ஒரு வருடத்தில் தன்னே முழுவதுமாய் அவளிடம் தொலைத்து காதலில் விழுந்தான்.. இவன் ரனுவை காதலிப்பது நிலாவிற்கு தெரியும்.. இருந்தும் அவனிடம் எதுவும் கேட்டு கொள்ளாமலே இருந்தாள்.. மூன்று வருடங்களுக்கு மேல் ரனுவை காதலிக்கிறான்.. ரனுவிற்கும் இவன் காதலிப்பது தெரிந்தும் சிறிது சிறிதாக அவனிடம் இருந்து விலகி கொள்ளும் முயற்சியில் இருக்கிறாள்.. காரணம் அவள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவள்.. ஆனாலும் அழகான குருவி கூடு போன்ற குடும்பம்.. தனக்காக எதையும் செய்யும் அப்பா.. தனக்கு ஒன்று என்றால் துடிதுடித்து விடும் அம்மா.. இருவருக்கும் செல்ல பிள்ளையாய் இவள் ஒருத்தி.. காதல் என்ற வார்தையை சொல்லி அவர்களை நோகடிக்க விரும்பாமல் பகலனின் காதலை மறுக்க நினைக்கும் இவள்!!

காதல் என்ற வார்த்தையில் அவனின் உணர்வுகளை அடக்க விரும்பாமல் அவனின் காதலை கணவன் என்ற பந்தத்தில் தான் சொல்ல வேண்டும் என்று உறுதியோடு காதலை கூட ரனுவிடம் சொல்லாமல் திருமணத்திற்கே தன் மாமாவிடம் நேரம் பார்த்து பேசலாம் என்று காத்திருந்த இவன்!!!

அவரோ இவன் காதலுக்கு முற்று புள்ளி வைத்தாற்போல் நிலாவோடு தன்னை சேர்த்து பேசியதில் தன் மாமா சம்மதிப்பார் என்று மனதளவில் நம்பி இருந்தவனின் நம்பிக்கை முற்றிலும் தளர்ந்து போனது..

அறைக்கு வந்த நிலாவிற்கு திருமணம் என்றதும் ஏன் வேந்தனின் முகம் தனக்கு தோன்ற வேண்டும் என்று தன் மூளையை கசக்கி பிழிந்து யோசனையில் மூழ்கினாள்.. முதலில் அவனை பார்த்ததும் சிறு ஈர்ப்பு அவனின் மேல் தோன்றியது என்னவோ உண்மைதான்.. இருந்தும் தன் தந்தையை பற்றி தெரிந்ததால் அனைவரிடமும் வம்பு செய்வது போன்று தான் அவனிடமும் செய்தாள்.. ஆனால்.. ஆனால்... அவனின் சிரித்த முகமே தன் கண் முன்னால் வந்தது ஏன்?? என்று நினைத்தே குழம்பினாள்..

இதை பகலனிடம் கேட்டு தெளிவு படுத்தி கொள்ளலாம் தான்.. ஆனால் பகலனே அவனின் காதலை நினைத்து பயத்தில் இருக்க, நம்மளும் ஏன் அவனை குழப்பி விட வேண்டும் அமைதியாய் இருந்து விட்டாள்..

ஆனால் தினமும் காலையில் வேந்தனிடம் வம்பு செய்வதையே வழக்கமாக கொண்டிருக்க, அவனும் இவளுக்கு மௌனத்தையே பதிலாக தரும் வழக்கத்தை கொண்டிருந்தான்.. இருவரையும் நினைத்து பகலனுக்கு தான் தலையை பிய்த்து கொள்ளாத குறையாக இருந்தது.. அவளிடம் இதை பற்றி கேட்கும் போதெல்லாம் அவளின் மௌனமே பதிலாக வர, கடுப்பாகி தான் போனான் பகலன்...

வேலை முடிந்து ரனுவை வீட்டில் விட்டு வருவதையே தங்கள் வழக்கமாக கொண்டிருந்தவர்கள் இப்போதும் ரனுவின் வீட்டிற்கு செல்லும் வழியில் காரை செலுத்தி கொண்டிருந்தான் பகலன்.. அவனின் பார்வை சாலையையும் நொடிக்கொரு முறை ரனுவையும் தீண்டுவதாகவே இருக்க, பகலன் தன்னை பார்க்கிறான் என்று உணர்ந்தும் வேடிக்கை பார்ப்பதே தன் தலையாய கடமை என்று சாலையில் கவனத்தை பதித்திருந்தாள் ரனு..

பகலனின் மோனத்தை கலைத்தது நிலாவின் குரல்.. வனிதா மாத்திரை வாங்கி வர சொன்னதை நியாபக படுத்தி விட, வாங்காமல் சென்றால் தன் தாய் தன்னை பேசியே சாவடிப்பார் என்று நினைத்து மருந்து கடைக்கு அருகில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றான்..

காரில் அமர பிடிக்காமல் இறங்கிய நிலா, செல்லும் வாகனங்களில் பார்வையை சுழல விட்டவள் ஏதேச்சையாக வேந்தனை சாலை ஓரத்தில் பார்த்ததும், "டியூப்லைட் இங்க என்ன பண்றான்??" என்ற கேள்வியை கண்ணில் தாங்கி அவனை பார்த்திருந்தாள்..




தொடரும்..
 

சாஹித்யா வருண்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



பகுதி - 5




சாலையில் கண்களை சுழல‌ விட்டவளின் கண்களில் வேந்தன் தென்பட," இவன் இங்க என்ன பண்றான்???" என்ற கேள்வியை தாங்கியபடி அவனை பார்த்தாள்...

இரு கால்களும் இல்லாமல் இருந்த ஒருவர் கையை ஊன்றி சாலையை கடக்க காத்திருக்க, அவரிடம் சென்ற வேந்தன், அவரை தூக்கி கொண்டு சாலையை கடந்து அவர் சொன்ன இடத்தில் அமர வைத்து தன்னிடம் இருந்த ரூபாய் தாள்களை அவரிடம் குடுக்க அவர் பேசியது நிலாவுக்கு கேட்க வில்லை என்றாலும் மறுத்தது மட்டுமே தெரிந்தது.. வேந்தனும் ஏதோ சொல்லி அவர் மறுக்க மறுக்க அதை அவர் கையில் திணித்தவன் புன்னகையுடன் அகன்றான்..

"சிடுமூஞ்சி என் கிட்ட தவிர எல்லாத்துகிட்டயும் சிரிச்சு பேசும்.. என்கிட்ட மட்டும் வாயை திறக்க கூட காசு கேட்பான்..‌ ம்ம்ம்ம்ம்ம் இவனை‌ பேச வெச்சு... அதுக்கு அப்பறம்
காதலை‌ சொல்லி... இப்பவே கண்ணை கட்டுதே!! பேசாம நேரா அறுபதாவது கல்யாணம் பண்ணிக்கறது தான் இவனுக்கு சரிப்பட்டு வரும் போல!! நீ‌ சிங்கிளாவே தான் காலத்தை போக்கனும் போல! இது என்னடி நிலா உனக்கு வந்த சோதனை!!" என்று புலம்பியவாறு செல்லும் அவனையே வெறித்திருந்தாள்..

பகலன் வருவதை பார்த்ததும் சாதாரணமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.. இருந்தும் அவளின் நினைப்பு முழுவதும் வேந்தனையே சுற்றி இருக்க, ரன்யா கேட்டதற்கும் ஏதேதோ சொல்லி மழுப்பியவளை நம்பாத பார்வை பார்த்தான் பகலன்..

வீட்டிற்கு வரும் வழியில் ஒரு வீட்டின் முன்பு செழியன் வாசலை பெருக்கி கொண்டிருப்பதை பார்த்த நிலா, காரை நிறுத்த சொல்லி இறங்கி அவனிடம் வந்தாள்..

"என்ன ஹேண்ட்செம் இன்னேரத்துக்கு வாசல் தெளிச்சு கோலம் போட போறீயா?? இது எல்லாம் பொண்ணுக வேலைனு உனக்கு இன்னும் தெரியாம இருக்கு ஜோ சேடு.. அவன் கூட இருந்தா உனக்கு எப்படி இது எல்லாம் தெரியும்.." என்று நிலா பாட்டுக்கு பேசி கொண்டே சொல்ல, செழியனோ கையில் விளக்குமாறை தட்டியபடி, புருவத்தை உயர்த்தி அவளை பார்த்தான்..

அவன் நினைப்பை அறிந்தவள் "என்ன அடிச்சிருவீயா?? அடிச்சுருவீயா??" என்று ரவுடி தோணியில் நிலா கேட்க, "ஏன் அடிக்க மாட்டேனு நினைக்கறீயா??" என்றான் கணீர் என்ற குரலில்..

"நீ அடிக்கற வரைக்கும் என் கை என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா??? நானும் திருப்பி அடிப்பேன்" என்று முகவாயை இடித்தபடி நிலா சொல்ல, "நீ அடிக்கற வரைக்கும் என் கை என்ன மிளகா பறிச்சிட்டு இருக்குமா?? திருப்பி நான் ஒன்னு விட்டேன் அவ்வளவு தான்" என்று செழியனும் எகிற, "அதையை பறிச்சு உன் கூட இருக்கறவன் மூஞ்சில அப்பு அப்பவாவது வாயை தொறக்கறானானு பார்ப்போம்" என்றாள் சலிப்புடன்..

"அவனை பத்தி ஏதாவது சொன்னே.. சொன்னே.." என்று மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி கேட்ட செழியனை இடுப்பில் கை வைத்து பார்த்த நிலா," என்ன விளக்குமாறுல அடிப்பீயா?? அது வரைக்கும் என் கை என்ன..." என்று மறுபடியும் முதலில் இருந்து தொடங்கியவளின் பேச்சுக்கு இடையில் நுழைந்த பகலன் "என்ன தேங்காய் பறிச்சிட்டு இருக்குமானு கேளு??" என்றான் சிறு முறைப்புடன்..

"அதானே என் கை என்ன தேங்கா பறிச்சிட்டு இருக்கும்னு அவன் நினைக்கறானா????" கோவமாய் கேட்பது போன்று கேட்டவளை பார்த்து ஏகபோக கடுப்பான பகலன், "அடச்சீ கேவலமா நடிக்காதே.. பார்க்க முடில.. உனக்கு மேல இவன் நடிக்கறான்.. உங்களைய பத்தி எனக்கு எதுவும் தெரியாதுனு நினைச்சு என் காதுல பூ சுத்த பார்க்கறீங்களா???" என்றான் சுட்டெரிக்கும் பார்வையில்..

" ப்யூட்டி இன்னும் பயிற்சி வேண்டுமோ??? "என்று தீவிரமாக யோசனை செய்தபடி கேட்ட செழியனிடம், "நானும் அதைய தான் யோசிக்கறேன் ஹேண்ட்செம்.." என்று உதடு பிதுக்கி கூறினாள்..

வேந்தனை விட செழியனின் கிண்டல் பேச்சில் அவனோடு நிலாவும் நன்றாக ஒட்டி கொண்டாள்... இருந்தும் வேந்தனை பற்றி ஒரு வார்த்தை கூட அவனிடம் கேட்க விரும்பவில்லை.. வேந்தனை பற்றி அவனே சொல்ல வேண்டும் என்ற தீர்க்கத்தில் செழியனிடம் எதுவும் கேட்டு கொள்ளாமல் ஒரு தோழியை போல் ஒட்டி கொள்ள, பேச யாருமின்றி இருந்த செழியனுக்கும் அவளின் கள்ளமில்லா பாசம் நெகிழ தான் செய்தது..

செழியன் அவளிடம் பேசுவது வேந்தனுக்கும் தெரியும்.. இருந்தும் அவன் எதுவும் கேட்டு கொள்ளவில்லை.. தன்னிடம் மட்டும் தான் இப்படி இருக்கிறாள் என்று நினைத்த வேந்தனுக்கு அதையை பொய்யாக்குவது போன்று அனைவரிடமும் இதே போன்று நிலா இருக்க, இதை அவன் சாதாரணமாக எடுத்து கொண்டான்..

ஆனால் நிலாவின் மனது தெரிந்தால் இவனின் பதில் என்னவாக இருக்கும் என்பதை அவன் மட்டுமே அறிவான்...?????

முகத்தை சுருக்கி கொண்டு "என்ன ஹேண்ட்செம் நீ போய் இந்த வேலை எல்லாம் பார்க்கறே?? இதை யாராவது பார்த்தா சிரிப்பாங்க???" என்றவளை பார்த்து புன்னகையுடன், "எப்பவும் நான்தான் செய்வேன் ப்யூட்டி அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு நினைச்சா நம்ம வாழ முடியுமா!??" என்க, "அதுவும் சரிதான்.. ஆனா எங்களைய வீட்டுக்குள்ள விட கூடாதுனு வாசல்யே நிற்க வெச்சு பேசறீயல்ல?? " என்று கேட்டாள் உதட்டை சுழித்து..

செழியன் பதறி, "நான் கூப்பிட்டா தான் நீ வருவீயா??? "என்று இவனும் உதட்டை சுழித்து கேட்க, "அட போ ஹேண்ட்செம்.. எனக்கு இப்பதான் உன் வீடே தெரிஞ்சுச்சு.. இதுல எப்படி நான் வர்றது" என்று சலித்து கொண்டே உள்ளே செல்ல போன நிலாவின் கையை பிடித்த பகலன், "எம்மா நிலாமா அங்க உன் அப்பன் நம்மளைய காணோம்னு போஸ்ட்டர் அடிச்சு ஒட்டிற போறாரு.." என்று பாவமான சொன்னவனுக்கு பதிலேதும் சொல்லாமல் துள்ளி குதித்தபடி வேந்தனின் வீட்டினுள் காலெடுத்து வைத்தாள் மென்னிலா..

ஒரு அறையுடன் கூடிய சின்ன வீடுதான்.. ஆனால் சுத்தமாக அவ்வளவு அழகாக இருந்தது பார்ப்பதற்கு.. வீட்டை பார்த்து கொண்டே, "என்ன ஹேண்ட்செம் வீட்டை இவ்வளோ சுத்தமா வெச்சிருக்கே?? எனக்கு எல்லாம் இது சுட்டுபோட்டாலும் கூட வராது" என்று திகைப்பில் கேட்டவளுக்கு சிறு புன்னகையை பதிலாய் தந்த செழியன், " நானும் உன் செட் தான் ப்யூட்டி.. இந்த வேலை எல்லாம் வேந்தனோடது தான்" என்றான் மெச்சுதலாய்..

வேந்தன் என்ற பெயரை கேட்டதும் சட்டென திரும்பிய நிலா, "அந்த சிடுமூஞ்சி பேரு வேந்தனா??" என்று கண்கள் விரிய கேட்டவளுக்கு "ம்ம்ம்ம் மகிழ் வேந்தன்.." என்றான் புன்னகையுடன்..

மேலும் "அவனும் நானும் ஒன்னா பிறந்தவங்க தான்.. ஆனா என்னவோ அவனை மாதிரி என்னால இருக்க முடில??" என்று சொல்ல, நிலாவோ மைண்ட் வாய்சில் "ஆளு மாதிரியே பேரும் சூப்பரா இருக்கே.". என்று நினைத்தவள், "அவன் உன் கூட பிறந்தவனு சொன்னா யாரும் நம்ப கூட மாட்டாங்க.. என்னாலயே நம்ப முடில" என்று இச் கொட்டி கூறியவளை பார்த்து சிரித்தான்..

"அதையை விடு ப்யூட்டி.. காபியா?? டீயா??" என்று குடிப்பதற்கு எது வேணுமென்று கேட்க, "அடேய் இங்க நானும் தான்டா இருக்கேன்.. என்று கதறிய பகலனிடம், "உன்னைய எப்படி மச்சி மறப்பேன்' என்றான் பகலனின் தோள் மீது கை போட்டபடி..

"அப்ப ஸ்ட்ராங்கா ஒரு காபி போடு மச்சி" என்று பகலனும் அவனின் தோள் மீது கை போட்டு சொல்ல, "அதுக்கு என்ன மச்சி தாராளமா போட்டு தர்றேன்" என்று கிச்சனுள் செல்ல போன இருவரையும் தடுத்த நிலா," நானே போட்டு தர்றேன்" என்றிட, பகலனுக்கு மயக்கம் வராத குறையாக தான் இருந்தது..

"அது எல்லாம் ஒன்னும் வேணாம் அமைதியா இரு.. எனக்கு என் உயிர் முக்கியம்" என்று மறுத்த பகலனை முறைத்து பார்த்து விட்டு "ப்ளீஸ் ஹேண்ட்செம் நான் போடறேனே" என்று கண்ணை சுருக்கி செழியனிடம் கேட்க, அவனுக்கு மறுக்க தோன்றாமல் "இதுக்கு எதுக்கு ப்யூட்டி ப்ளீஸ் எல்லாம்.. தாராளமா போடு" என்று அனுமதி தந்து விட, "ஜாலி ஜாலி முதன் முதலா காபி போட போறேன்" என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்தபடி உள்ளே சென்றவளை பார்த்து "என்னது???" என்று அதிர்ந்து முழித்தான் செழியன்..

"ஹான் நொண்ணது?? நான்தான் வேணாம்னு சொன்னேனல்லடா?? என்னமோ தாராள பிரபு மாதிரி சம்மதம் குடுத்தே.. இனி நீ போனாலும் அந்த பிசாசு விடாது.. பேசாம அமைதியா உக்காரு" என்று தலையில் அடித்து கொண்டு செழியனை பிடித்து அமர வைத்த பகலன், ஏதோ தீவிரமாக யோசித்தபடி இருக்க, செழியனோ திகிலோடு அமர்ந்திருந்தான்..

திடீரென்று, "மச்சி ஒரு வகைல நீயும் அந்த பிசாசுக்கு மாமாவா தெரியற போல??" என்று முகவாயில் கையை வைத்து யோசித்தபடி கேட்டவனிடம், "என்னது மாமாவா??" என்று இவன் அதிர, "அடேய் மாமானா மாங்கா மடையனு அர்த்தம்டா.. உன்னையையும் மாங்கா மடையனு நினைச்சிட்டு போல?? எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது மச்சி உன்னைய நினைச்சு.." என்று வாயை மூடி கொண்டு சிரித்தான் பகலன்..

"அட கிரகமே!! தெரியாம இவங்க கிட்ட மாட்டிக்கிட்டனோ?? பேசாம வேந்தன் மாதிரியே முறைச்சிட்டு இருந்துருக்கலாம்" என்று காலந்தாழ்த்து யோசித்து கொண்டிருந்த செழியனின் முன்பு டம்ளரை நீட்ட, வாங்குவோமா?? வேணாமா?? என்று தீவிரமாக காபியை ஆராய்ச்சி செய்தவனுக்கு நுரை மட்டுமே தெரிந்தது..

முகத்தை சுருக்கிய நிலா, "என்ன ஹேண்ட்செம் வாங்க மாட்டிக்கற??" என்றிட," இப்படி பாவமா மூஞ்சியை வெச்சு வெச்சு எல்லாத்தையும் நல்லா வெச்சு செய்யறா.. டேய் பகலா இவன் குடிச்சதுக்கு அப்பறம் காபியை வாய்ல வெய்யுடா.." என்று மனதில் நினைத்து கொண்டு வெளியில் நல்ல பிள்ளையாய் நிலா குடுத்த காபியை வாங்கி கொள்ள, பகலன் வாங்கிய பிறகு செழியனும் யோசனையுடன் வாங்கி வாயில் வைத்தவன் கண்கள் இரண்டும் வெளியில் வந்து விடும் அளவிற்கு முழித்தான்..

"அய்யய்யோ" என்று துப்பி விட்டு வேகமாக எழுந்து கிச்சனுக்குள் ஓடிட, "அடியே என்னத்த போட்டு தொலைஞ்சே??" என்று தவிப்புடன் பகலன் கேட்க, "காபியை தான்டா போட்டேன் அதுக்கு எதுக்கு இவன் இப்படி ஓடறான்" என்றாள் பாவமான முகத்துடன்...

"மூஞ்சியை இப்படி வெச்சு வெச்சு ஏமாத்துனே வாய்லயே குத்துவேன் பார்த்துக்கோ" என்று தலையில் கொட்டிவிட்டு செழியனை தேடி கொண்டு பகலன் கிச்சனுள் செல்ல, உதட்டை பிதுக்கியவாறு தலையை தேய்த்து கொண்டு நின்றாள் நிலா..

வெளியில் யாரோ வரும் அரவம் கேட்டு எட்டி பார்த்தவளுக்கு இதயமே வெளியில் குதித்து விடும் அளவிற்கு படபடப்பு தொற்றி கொள்ள, கையை பிசைந்தவாறு நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள்.. தொங்கி போன முகத்துடன் உள்ளே வந்த வேந்தன், நடு வீட்டில் திருவிழாவில் காணாமல் போன குழந்தை போன்று திருதிருவென விழித்தபடி நின்றிருந்த நிலாவை பார்த்து முதலில் திகைத்தவன், பின்பு "இந்த லூசு இங்க என்ன பண்ணுது??" என்ற ரீதியில் அவளை பார்த்தான்..




தொடரும்..
 

சாஹித்யா வருண்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



பகுதி - 6



வேந்தனை பார்த்து நிலா திகைத்து நிற்க, அவனோ "இந்த லூசு இங்க என்ன பண்ணுது" என்ற ரீதியில் அவளை பார்த்து வைத்தான்..

தான் பயந்தால் அவன் மிஞ்சுவான் என்று நினைத்தவள், முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு, "வாங்க வாங்க சிடுமூஞ்சி.. ஏன் அங்கயே நிக்கறீங்க?? உங்களைய எதுவும் பண்ண மாட்டேன் பயப்படாம உள்ள வாங்க" என்று அழைக்க, "அடிங்க என் வீட்டுலயே இருந்துட்டு என்னையவே உள்ள கூப்படறீயா??" என்று மனதில் நினைத்து கொண்டு உள்ளே வந்த வேந்தன் அவளை கண்டு கொள்ளாமல் அறைக்கு சென்று விட்டான்..

"அதானே பார்த்தேன் இவனாவது என் கூட பேசறதாவது??" என்று முணுமுணுத்து கொண்டு "எங்க அதுக ரெண்டும்??" என்று யோசித்தபடி கிச்சனுள் எட்டி பார்த்ததும் பதறி அவர்களிடம் ஓடியவள், பகலனிடம் "அய்யய்யோ ஏன்டா என் ஹேண்ட்செமை கொல்ல பார்த்தே???" என்று எகிற, அவனோ "என்னது??" என்று திகைத்து நின்றான்..

"சொல்லுவேடி சொல்லுவே.. அநியாயமா அவனை கொல்ல பார்த்தது நீதான்டி.. நீ போட்ட காபியை குடிச்சனால தான் இப்படி இருக்கான்.. அப்படி எதுல காபி போட்டே???" என்று முதலில் எகிறியவன் இறுதியில் யோசனையாய் கேட்க, "இதோ இதுல தான்டா" என்று நிலா காட்டிய டப்பாவை பார்த்ததும் பகலனுக்கு மயக்கம் வராத குறை என்றால் செழியன் மயங்கியே விழுந்தான்..

"அடிப்பாவி மிளகாய் தூளையும் உப்புலயும் காப்பி போட்ட முதல் ஆள் நீ தான்டி.. அநியாயமா ஒரு வயசு பையனை கொல்ல பார்த்துருக்கே???" என்று பகலன் கதற, "அப்ப இது காபிதூள் இல்லையா??" என்று கேட்டவள், "சரி சரி விடுங்க தெரியாம பண்ணிட்டேன் நான் வேணா மறுபடியும் காபி போட்டு தர்றேன்" என்று சொன்னது தான் தாமதம் அவள் காலிலேயே விழுந்து விட்டான் செழியன்..

"எம்மா மென்னிலா மறுபடியும் என் உயிரை பணயம் வெக்க முடியாதுமா.. நீ காபி போட்டு பழக என் உயிர் தான் கிடைச்சுச்சா?? நீ முதல்ல இடத்தை காலி பண்ணுமா நீ காபி போடறேனு சொல்லிட்டு என்னைய காலி பண்ண பிளான் பண்ணிருக்கே??" என்று துரத்தாத குறையாக அவளை துரத்தி விட்டவன், "அடேய் மச்சி மச்சினு சொல்லிட்டு என்னைய வெச்சு டெஸ்ட்டு பண்ணிருக்கீயே உன்னைய என்ன பண்ணலாம்" என்றான் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி..

"நான் தான் முதல்லயே அவளை வேணாம்னு சொன்னேனல்ல?? நீதான் என்னமோ தாராள பிரபு மாதிரி சம்மதம் சொன்னே?? அவளை பத்தி தெரிஞ்சும் எப்படி நான் அந்த காபியை வாய்ல வெப்பேன்" என்று பகலன் சாதாரணமாக கூற, "இனி உன்னைய தான்டா நம்பவே கூடாது" என்ற செழியன் அவன் முதுகில் மத்தாளம் வாசிக்க தொடங்க, சிரித்தபடி அவனை தடுத்த பகலன், "அடேய் நானல்ல ஒரு லட்சத்துக்கு நூறாவது முறைக்கு மேல என் உயிரை பணயம் வெச்சிருக்கேன்டா.." என்று பாவமாக சொன்னவனை அணைத்து கொண்ட செழியன், "உண்மையாவே அவளுக்கு நம்ம மாமா போல தான் தெரியறோம் போலடா" என்றான் கதறலுடன்..

இவர்கள் இப்படி இருக்க, வெளியில் வந்த நிலா, வேந்தன் என்ன செய்கிறான் என்று எட்டி பார்க்க, அவனோ முதுகு காட்டியபடி கட்டலில் அமர்ந்திருக்க, போவோமா?! வேணாமா? என்று யோசித்தவள், "எப்பவும் முன் வெச்ச காலை பின் வெக்க மாட்டா இந்த நிலா" என்று கெத்தாக, "சிடுமூஞ்சி" என்று அழைத்தவாறு அவனிடம் செல்ல, இவளின் அழைப்பில் கையில் வைத்திருந்த புகைப்படத்தை அவசர அவசரமாக மெத்தையின் அடியில் மறைத்து விட்டு எழுந்து நின்றான்..

"ரொம்ப பெரிய மனசை வெச்சிருப்ப போல.. அதுல எனக்கும் கொஞ்சம் இடத்தை தர்றது???" என்று சாலையில் பார்த்ததை நினைத்து கொண்டே கேலியாய் நிலா கேட்டதும், ஒன்றும் புரியாமல் என்னவென்று கூர்மையாக அவளை நோக்கினான்..

அவனின் பார்வையில், "ப்ப்ச் என்கிட்ட மட்டும் ஏன் வாயை திறந்து பேச மாட்டிங்கறே??.. என்னைய பார்த்தா மனுசி மாதிரி தெரியலயா?"!என்று சலிப்புடன் கேட்டவளிடம், "உன்கிட்ட நான் எதுக்கு பேசனும்" என்று அவன் பார்வையில் கேள்வி தாங்கி நின்றது..

"ரொம்பதான்டா பண்றே?? பேசறதுக்கு கூட காசு கேட்பே போல??? "நினைத்து கொண்டவள், "ஏன் ஏதாவது இருந்தா தான் பேசுவீங்களோ??" என்று குறும்புடன் கேட்ட நிலாவை அனல் பார்வையில் பார்த்தவன் "வெளில போ" என்று வாசலை கை காட்டினான்..

"ம்ம்ம்க்கும் இதைய கூட வாயை திறந்து சொன்னா என்ன உன் முத்து பல்லு கொட்டிருமா?? நான் எதுக்கு வெளில போகனும் முடியாது நான் இங்க தான் இருப்பேன்" என்று உதட்டை சுழித்து கொண்டு கட்டலில் அமர்ந்தவளை பல்லை கடித்து கொண்டு வேந்தன் பார்க்க, நிலாவோ, "நீங்க வேணா அப்படிக்கா உக்காருங்க" என்று சேரை கை காட்டினாள்..

அவளை பார்வையாலே சுட்டெரித்த வேந்தன் வாயை திறந்து, "பொண்ணுனு பார்த்து அமைதியா இருக்கேன் என் கோவத்தை கிளராம வெளில போய்ரு.. எந்த உரிமைல முதல்ல இங்க வந்தே??" என்று பல்லை நரநரவென்று கடித்தவாறு கேட்ட வேந்தனின் முன் வந்து நின்றவள், "எந்த உரிமைனு சொல்லியே தீரனுமா??" என்றான் அவனின் விழியை நேருக்கு நேராய் நோக்கி..

அவன் எதுவும் பேசாமல் அவளை முறைத்தபடியே நின்றிருக்க, உள்ளுக்குள் புன்னகைத்து கொண்ட நிலா, அவனின் முகத்தை ஆராய்ந்தபடி, "ம்ம்ம்ம் என் புருசன் என்ற உரிமைல தான்" என்று குறும்பு பார்வையில் கூறியவளின் பதிலில் உள்ளுக்குள் திகைப்புற்றவனின் முகம் பின்பு சிடுசிடுவென முகம் மாறியது..

அவளை அடிக்கவே கை ஓங்கியவன் கையை மடக்கி கண்களை இறுக்க மூடி திறந்து தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்து மீண்டும் பார்வையாலே வாசலை காட்ட, அவனின் கோவ முகத்தை பார்த்தே உள்ளுக்குள் கலக்கமுற்றிருந்த நிலாவும் அச்சத்தை வெளி காட்டி கொள்ளாமல் அவனை நேருக்கு நேராய் திமிருடன் பார்த்தாள்..

"ம்ம்ம்ம் போறேன் போறேன்.. ஆனா ஒன்னு என்னைய விட்டுட்டு வேற எவளையாவது கரெக்ட் பண்ண பார்த்தே.." என்று விரல் நீட்டி எச்சிரிக்க வந்த நிலாவின் விரலை மடக்கி பிடித்த வேந்தன், "ஹான் என்னடி பண்ணுவே??? என் முன்னாடி விரல் நீட்டி பேசற வேலை வெச்சுகிட்டே அவ்ளோதான்.. நீ நடக்கறது எதுவும் நடக்காது.. இப்ப சொன்னதை எல்லாம் மறந்துட்டு உன் அப்பன் பார்க்கற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணுனோமா புள்ள குட்டி பெத்தோமானு இருக்கற வழியை பாரு.. இனி என் முன்னாடி வந்துட்டே பொண்ணுனு கூட பார்க்க மாட்டேன்" என்று ரவுத்திரத்துடன் கடுமையா குரலில் கத்தியவனின் முகமும் கோவத்தை தத்தெடுத்து கொண்டதை போன்று சிவப்பாக மாறியது..

நிலாவோ இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவனின் முதல் தொடுதலில் தனக்குள் தோன்றிய ஏதேதோ உணர்வுகளின் பிடியில் சிக்கி தவிர்த்தபடி அவனையே பார்த்தபடி நின்றிருக்க, அவளின் கையை உதறி விட்டதும் தான் தன்னிலைக்கு வந்தவள், அவனை பார்த்து சிறிது கலக்கமுற்றாள்..

இருந்தும், "உன் விருப்பத்தை எப்படி சொன்னீயோ அதே மாதிரி என விருப்பத்தையும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. உன்னைய உன்னைய மட்டும் தான் நான் கல்யாணம் பண்ணுவேன்.. நீ யாரு எப்படி பட்டவனு எனக்கு அது எல்லாம் தேவையில்ல.. உன்னைய பார்த்ததுமே உன்கிட்ட விழுந்துட்டேனு கூட சொல்லலாம்.. என்னைய விட்டு நீ தூரமா போனாலும் உன் முன்னாடி வந்து நிற்பேன்.. இந்த ஜென்மத்துல எனக்கு நீதான்டா.." என்று அவனின் காந்த விழிகளில் தன் விழிகளை கலக்க விட்டவாறு சொன்னவள் இறுதியில் உதட்டை சுழித்தாள்..

அவளின் விழியில் தன்னை தொலைத்து அவளையே வேந்தன் பார்த்திருக்க, நிலாவே தேடி கொண்டு வந்த பகலனும் செழியனும் இதை கேட்டு நெஞ்சை பிடித்து கொண்டு நின்றிருந்தனர்.. பகலனின் கையை சுரண்டிய செழியன், "மச்சி இது உண்மையாவே உன் மாமன் பொண்ணு தானா?? "என்று நம்பாமல் முடியாமல் கேட்க, பகலனும்" ம்ம்ம் அந்த பிசாசே தான்டா" என்றான் சாதாரணமாக..

"அடேய் என்னடா நீ இவ்ளோ சாதாரணமா சொல்றே??" என்று செழியனுக்கு தான் தலையை பிய்த்து கொள்ளாத குறையாக இருக்க, "தெரிஞ்சதுக்கு எதுக்குடா அதிர்ச்சியாகனும்" என்றதும், "என்னது அப்ப உனக்கும் தெரியுமா??" என்றான் திகைப்பில்..

"ம்ம்ம்ம் நிலாவோட அத்தனை அசைவுகளையும் எனக்கு அத்துப்படி மச்சி.. அவ வேந்தனை பார்த்ததுல இருந்து சரியில்ல.. அவளே சொல்லுவானு பார்த்தா அந்த லூசு நேராவே வேந்தன் கிட்ட சொல்லிருச்சு.." என்று அலுத்து கொண்டு சொன்னவனின் பேச்சில் செழியன் தான் திகைத்து நின்றிருந்தான்..

"இனி உன் நொண்ணனே நினைச்சாலும் அவ விட மாட்டாடா.. எந்த அளவுக்கு விளையாட்டு பிள்ளையா இருக்காளோ அதை விட அதிகமாகவே பிடிவாதம் பிடிச்சவே.. இதையை அவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத.." என்று விட்டு செழியனை இழுத்து கொண்டு மீண்டும் கிச்சனுக்குள் சென்று விட்டான் பகலன்..

தன்னை பார்த்து நின்றிருந்த வேந்தனின் முன்பு சொடுக்கிட்டு நிலா அழைக்க, சுயநினைவிற்கு வந்தவன், "ச்சை என்ன பண்ணிட்டு இருக்கோம்?? என் வருவை தவிர வேற யாருக்கும் என் மனசுல இடமில்லை" என்று நினைத்தபடி அவளிடம், "உன்னைய வெளில போக சொன்னேன்" என்றான் குரலில் கடுமையை கூட்டி..

"ம்ம்ம்ம்க்கும்" என்று தோளை குலுக்கி கொண்டு உதட்டை சுழித்தபடி வெளியில் சென்ற நிலாவின் மீது வேந்தனுக்கு கோவம் கொழுந்து விட்டு எரிந்தது.. "விளையாட்டு பிள்ளைனு நினைச்சு சாதாரணமா எடை போட்டுட்டேன் இங்க இருக்கறது இனி சரி இல்லை" என்று ஏதோ யோசித்து கொண்டே அமர்ந்தான்..

"டேய் சீக்கிரம் வாடா.. நம்மளைய காணோம்னு ஹிட்லர் குதிக்காத குறையாக குதிச்சுட்டு இருப்பாரு" என்று பகலனை இழுத்து கொண்டு சென்ற நிலா, காரில் ஏறும்போது கூட தன்னை ஒருமுறை வேந்தன் பார்த்து விட மாட்டானா?? என்ற ஏக்கத்தில் உள்ளே பார்வையை செலுத்த, அவனோ கட்டலில் தீவிரமாக ஏதோ யோசித்தபடி அமர்ந்திருந்தான்..

செழியன் உள்ளே வந்ததும், ஒரு முடிவு எடுத்தவனாய் அவனிடம் வந்த வேந்தன், "இன்னும் ஒரு வாரத்துல இங்க இருந்து கிளம்பனும்.. இது நம்மளைய தவிர வேற யாராவதுக்கு தெரிஞ்சுச்சு அதுதான் என்னைய பார்க்கற கடைசி நாளா இருக்கும்" என்று கடைசி வார்த்தையில் அழுத்தத்தை கூட்டி சொன்னதை செய்வேன் என்ற அழுத்தத்தில் சொல்ல, செழியனோ நடுங்கியே விட்டான்..

நிலாவை பார்த்ததும் ராசு குதிகுதிவென்று குதிக்க, அவளோ அவரை கண்டு கொள்ளாமல் வேந்தனின் நினைவிலேயே நின்றிருக்க, தலையில் அடித்து கொண்ட பகலன் அவளின் கையை நறுக்கென்று கிள்ளியதும், பேந்தபேந்தவென முழித்து தன் தந்தையை பார்க்க, அவரோ," எல்லாம் உன் அம்மா குடுக்கற செல்லம்.. நீ வேலைக்கு போகலனு யாரு அழுதா.. போதும் இனி வீட்டுலயே இரு" என்றார் முடிவாக..

"ப்ரண்டு வீட்டுக்கு போனது கூட தப்போ..?? உங்களைய மாதிரி எல்லாம் என்னால இருக்க முடியாது.. என்னமோ நான் தினமும் இப்படி பண்ற மாதிரி பேசறீங்க?? நீங்களும் தான் எப்ப வரீங்க எப்ப போறீங்கனு தெரியாம இருக்கு அதுக்கு நாங்க ஏதாவது சொன்னோமா?? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு அநியாயமா?? அந்த வேலை நான் படிச்ச படிப்புல சொந்தமா வாங்கினது யாரு விட சொன்னாலும் விட மாட்டேன்" என்று ராசுவை விட இவள் குதித்து விட்டு கோவத்தில் பேக்கை தூக்கி எறிந்து விட்டு மாடியேறி சென்று விட்டாள்..

ராசுவோ கோவத்தில் "என்னடி புள்ள வளர்த்தி வெச்சிருக்கே?? "என்று செல்வியை அறைய போக, அவரின் கையை பிடித்த பகலன், "கட்டுன மனைவியை அடிக்கறது ஆம்பளைகளுக்கு அழகு இல்ல" என்று தீப்பார்வையுடன் சொன்னவன் செல்வியை அழைத்து கொண்டு அறைக்கு செல்ல, இதில் தனக்கு எதுவும் சம்மந்தமில்லை என்பதை போல் வனிதா தோளை குலுக்கி கொண்டு சென்றார்..

"ச்சை இந்த அப்பா வேற.. நேரங்காலம் தெரியாம பேசறது??" என்று புலம்பி கொண்டு அமர்ந்திருந்தவளின் மனக்கண்ணில் வேந்தனின் கோவம் முகம் வர, "உண்மையாவே என்னைய பிடிக்கலயாடா??! "என்று நினைத்ததும் அவளை மீறி கன்னத்தை நனைத்தது அவளின் கண்ணீர்..

அதே நேரம் வேந்தனும் அவன் வைத்திருந்த புகைப்படத்தை கையில் வைத்து கொண்டு, "வரு எங்க இருக்கடி?? எங்க இருந்தாலும் சீக்கிரம் என்கிட்ட வந்துருடி.." என்று புகைப்படத்தை வருடியவாறு நினைத்திருந்தான் கண்களில் வலியுடன்..

முதலிலயே வேந்தனின் மனதில் வேறு ஒருத்தி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறாள் என்பது தெரிந்ததும் நிலாவின் நிலைமை??????




தொடரும்...
 
Status
Not open for further replies.
Top