All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"என் ஜீவன் என்றும் நீதானே" - கதை திரி

Status
Not open for further replies.

சாஹித்யா வருண்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்




பகுதி - 7



நிலாவின் கண்ணீர் அவளின் கன்னத்து மேன்மையை நனைத்து கொண்டு வழிந்தோட, ஏதோ யோசனையாய் அமர்ந்தவளை கலைத்தது கதவு தட்டப்படும் சத்தம்..

கண்ணை அழுத்த துடைத்து கொண்டு கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு கதவை திறக்க, கையில் தட்டுடன் பகலன் தான் நின்றிருந்தான்..

அவனை அப்படி பார்த்ததும் அவளுக்குரிய குறும்பு தலை தூக்க, "என்ன பகலன் சார் பார்ட் டைம் ஜாப் பார்க்கறீங்களா?? வீட்டுக்குள்ளயே தட்டை கைல வெச்சுட்டு சுத்துனா எப்படி காசு கிடைக்கும்.. நேரா வெளில போய் அங்கிருந்த முக்குல இருக்கற கோவில் கிட்ட நின்னா நல்லா கலெக்சன் ஆகும்" என்று கேலியாய் கூறியவளை முறைத்தே பஸ்பமாக்கி விடுபவன் போன்று முறைத்திருந்தான் பகலன்..

"உனக்கு போய் சாப்பாடு கொண்டு வந்தேன் பாரு ச்சீ போடி" என்று அவளை மீண்டும் ஒரு முறை முறைத்து விட்டு நகர போனவனின் கையை பிடித்தவள் "ரொம்பதான்டா.." என்று இழுத்து கொண்டு உள்ளே சென்றாள்..

உள்ளே சென்றவன் அவளிடம் தட்டை நீட்ட, அவளோ மறுத்து தலையசைத்து ஊட்டி விடு என்பது போல் வாயை திறக்க, அவள் தலையில் செல்லமாக கொட்டிய பகலன் சாப்பாட்டை வாயில் திணித்தான்..

"மெதுவாடா.. பாப்பாக்கு விக்கிக்க போகுது அப்பறம் என் அத்தை வந்து உன்னைய திட்டியே காதுல இருந்து ரத்தத்தை வர வெச்சிருவாங்க" என்று ஐந்து வயது குழந்தை போன்று முகத்தை வைத்து கொண்டு சொன்னவளை பார்த்து, "அடிப்பாவி அடிக்கடி எப்படிடி முகத்தை மாத்தறே??" என்று வாயை பிளந்தான்..

சாப்பாட்டை பிசைந்தபடி "ஏன் அழுதுருக்கே நிலா??" என்று அவளை பாராமலே பகலன் கேட்க, "நான் எதுக்குடா அழுக போறேன்" என்று அவனை சமாளிக்க முயன்றவளை நிமிர்ந்து கூர்மையாக நோக்கிய பகலனின் பார்வையில் "உன்னை நான் அறிவேன்" என்றிருக்க, நிலாவோ எதுவும் பேசாமல் சுவரை வெறித்து பார்த்தாள்..

"வேந்தனுக்கு உன்னைய பிடிக்கலனு அழுகறீயா??" என்று நேரடியாகவே பகலன் கேட்டு விட, அவனை விழி விரித்து நிலா பார்க்க, "எனக்கு முதல்லயே சந்தேகம் இருந்துச்சு இப்ப க்ளியர் ஆகிருச்சு.. என் நிலாவை யாருக்காவது பிடிக்காம இருக்குமா?? நீ திடீர்னு சொன்ன நாளா கூட அவன் அதிர்ச்சி ஆகிருக்கலாம்.. இல்ல மாமாவை நினைச்சு பேசிருக்கலாம்.. காதலை சொன்னதுமே ஏத்துக்கனும்னு ஏன்டி நினைக்கறீங்க?? எங்களுக்கும் நேரம் வேணுமல்ல?? அவனை நீ உண்மையா காதலிக்கறேனா அவனை சம்மதிக்க வைக்கறது என் சாமத்தியம் தான்.. அதையை விட்டுட்டு இப்படி ஒப்பாரி வெச்சுட்டு இருந்தா எல்லாம் சரியாகிருமா??" என்று பொரிந்தும் இன்னும் ஏதோ யோசனையில் இருந்தாள் நிலா..

"ப்ச் இன்னும் என்னத்தடி யோசிச்சுட்டு இருக்கே?!" என்று அலுத்து கொண்டு கேட்டவனை பார்த்து, "உனக்கு எப்படிடா இவ்ளோ அறிவு வந்துச்சுனு தான்.. உன் காதலே டப்பா டேன்ஸ் ஆடிட்டு இருக்கறது தெரியாம என் காதலுக்கு நீ அட்வைஸ் சொல்ற பாரு.. அதையை தான்டா என்னால ஏத்துக்க முடில.. லேசா நெஞ்சு வேற வலிக்கற மாதிரி இருக்கு" என்று இச் கொட்டி சொன்னவளை பார்த்து ஏகபோக கடுப்பான பகலன் "ம்ம்ம்ம்க்கும் உன் கூட இருந்தும் என் லவ் செட்டாகும்னு இன்னுமா நீ நம்பிட்டு இருக்கே?? முதல்ல உன்னைய கலட்டி விட்டா தான் என் காதல் சக்ஸஸ் ஆகும்" என்றான் சலிப்புடன்..

"என்ன மாமா பொசுக்குனு இப்படி சொல்லிப்புட்டே?? என் காதலுக்கு நீ உதவி செஞ்சு என் கல்யாணத்தை முன்னால நின்னு நடத்தி.. வருச வருசம் ஒரு குழந்தையை நாங்க பெத்து தந்தா நீ அதையை எல்லாம் வளர்த்தி.. உனக்கு இன்னும் எவ்ளோ கடமை இருக்கு.. அதை எல்லாம் செய்யாம என்னைய இப்பவே கலட்டி விடறேனு சொல்றே??" என்று வராத கண்ணீரை துடைத்து விட்டவாறு நிலா சொல்ல, "ஆத்தி இவ சொல்றதை பார்த்தா அப்ப சம்பளமில்லாத ஆயா வேலை பார்க்க சொல்லுவா போல.. ஒரு வேளை அப்படியோ???" என்று யோசித்தவனின் மூளை எதிர்காலத்திற்கு சென்று விட்டது..

பத்து குழந்தைகளுக்கு நடுவில் பகலன் அமர்ந்திருக்க, முதலில் ஒரு குழந்தை "பெப்பு நேக்கு பசிகுது:" என்று அழுக ஆரம்பிக்க, அவனோ குழந்தையை சமாதானப்படுத்தி சாப்பாடு எடுத்து வருவதற்குள் மூன்று குழந்தைகள் போட்டிருந்த டவுசரை கலட்டியபடி நின்றிருக்க, இவனை பார்த்ததும், "பெரிப்பா எங்களுக்கு ஆய் கழுவி விடுங்க" என்று சொல்ல, பகலனுக்கு மயக்கமே வந்து விட்டது..

இன்னொரு குழந்தையோ ஏதோ கடிச்சுருச்சுனு கை காலை உதறி உருண்டு பிரண்டு அழுக தொடங்க, வேந்தனை போன்று இருந்த ஒரு குழந்தை பகலனை முறைத்து, "என் பாப்பாவை பார்த்துக்க கூட உங்களுக்கு என்ன???" என்று வயிற்றில் ஓங்கி குத்த, "அடியேய் நிலா குழந்தையை பெக்க சொன்னா பிசாசுகளை பெத்து வெச்சுருக்கே?? வந்து இதுகளை பாருடி" என்று கதறாத குறையாக கத்த," என் அம்மாவை ஏதாவது சொன்னீங்க??" என்று அவனை கீழே தள்ளி அவன் மீது அமர்ந்து கொண்டு அடிக்க தொடங்க, "அய்யய்யோ கொலை கொலை" என்று கதற தொடங்க, "அடேய்" என்று நிலா அவனை உலுக்கியதும் தான் தன்னிலைக்கு வந்த பகலன் அவளை பே வென்று பார்த்தான்..

"என்னடா இப்படி முழிக்கற???" என்று அவனை சந்தேகமாக நிலா பார்த்து வைக்க, "இப்ப நம்ம சொன்னோம் கலாய்ச்சே ஒரு வழியாக்கிருவா.. சோ கெத்தை மெய்ண்ட்டன் பண்ணுடா பகலு" என்று நினைத்து கொண்டு "அது எல்லாம் ஒன்னுமில்ல.. முதல்ல அவங்களைய பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுடி அதுக்கு அப்பறம் அவனை சம்மதிக்க வைக்கலாம்" என்றிட, "எனக்கு அது எல்லாம் தேவையில்லடா" என்றாள் உதட்டை குவித்தபடி..

"அப்படியே ஒரு அப்பு அப்புனா வெய்யு அவ்ளோ தான்.. லூசாடி நீ?? லூசானு கேட்கறேன்.. அவனை பத்தி ஏதும் தெரியாம கல்யாணம் பண்ண போறீயா?? ஒரு வேளை முன்னாடியே அவன் மனசுல ஒரு பொண்ணு இருந்தா???" என்று பகலனால் கூட அதை நினைத்து பார்க்க முடியாமல் தடுமாற, "அப்படி இருக்கறது தெரிஞ்சுச்சுனா அது தான் என்னோட கடைசி நாளா இருக்கும்" என்றாள் வெறித்து கொண்டே..

பகலன் பதறிபோக, "ஹேலூசு அப்படி எல்லாம் இருக்காது" என்றிட, "இந்த சிடுமூஞ்சி யாரை பார்த்து முறைச்சாலும் அவங்க நிற்காம பத்து கிலோ மீட்டருக்கு மேல ஓடிவாங்க இவனாவது லவ் பண்றதாவது?? ஏன்டா நீ காமெடி பண்ணிட்டு???" என்று பகலன் சொன்னது போன்று இருக்காது என தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொள்வது போன்று அவனிடம் சொல்ல, அவளை குழப்ப வேண்டாம் என்று நினைத்து பகலனும் அதோடு விட்டு விட்டான்..

எழுந்ததும் வேந்தனை எதிர்பார்த்து நிலா காத்திருக்க, அவனோ அவள் கண்ணில் படாமல் இருந்தான்.. "பார்த்துக்கறேன்டா" என்று அவனை கருவி கொண்டே பகலனோடு கிளம்பியும் விட்டாள்..

அவள் சென்றதுமே உள்ளே வந்த வேந்தனை அழைத்த ராசு, வனிதாவை கோவிலுக்கு அழைத்து செல்ல சொல்ல, வேந்தனும் சென்று காரை எடுத்தான்.. கோவில் வந்ததும் வனிதா உள்ளே செல்ல, வேந்தன் வெளியிலேயே நின்று கொண்டான்..

அவனை தாண்டி ரவுடி போல் இருந்த நால்வர் உள்ளே செல்ல, ஏதோ தவறு என்று தோன்றியதும் வனிதாவை தேடி கொண்டு இவனும் உள்ளே சென்றான்.. ஒவ்வொரு இடமாக வேந்தன் தேட தொடங்க, வனிதா தான் அவன் கண்களுக்கு அகப்படவில்லை.. சிறிது பயத்துடன் வேகமாக கோவிலை சுற்றி கொண்டே தேடியவனின் கண்ணில் தூரத்தில் வனிதா நிற்பது தெரிந்து விட நிம்மதியுடன் அவளிடம் சென்றான்..

பின்னால் இருந்து வனிதாவை ஒருவன் அடிக்க வர, வேகமாக வந்த வேந்தன் வனிதாவை தள்ளி விட்டு இரும்பு கம்பியால் அடித்த அடியை இவன் கையில் வாங்கி கொண்டு அடித்தவனை ஒரு உதை விட்டான்..

முறுக்கேறிய கையாக இருந்தாலும் சுள்ளென்று வலி எடுக்க தொடங்க, வனிதாவிற்கு தெரியாமல் வலியை கட்டுபடுத்த கையை உதறினான்..

"அய்யோ கண்ணா" என்று வனிதா பதறி அழுது விட, "எனக்கு எதுவுமில்ல மேடம்... உங்களுக்கு ஒன்னுமில்ல தானே??" என்று கனிவுடன் கேட்டவனிடம் வார்த்தை வராமல் இல்லையென்று தலையசைத்தாள்..

கண்ணில் ரவுத்திரத்துடன் திரும்பிய வேந்தன் அந்த ரவுடியை பார்க்க, அவன் பார்வையிலேயே வெலவெலத்து போன அவன் கம்பியை கீழே போட்டுவிட்டு நிற்காமல் ஓடியும் விட்டான்.. கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாததால் இதை யாரும் கவனிக்கவும் இல்லை..

வேந்தனை பார்த்து பதறிய வனிதா, "கண்ணா ரொம்ப வலிக்குதா?? நம்ம வேணா ஹாஸ்பிட்டல் போலாமா?? நா வாங்க வேண்டிய அடியை நீ எதுக்கு கண்ணா வாங்குனே??" என்று கண்ணீருடன் கேட்ட வனிதாவை பார்த்து மெலிதாய் புன்னகைத்தவன் "என் கண்ணு முன்னாலேயே என் அம்மா மாதிரி இருக்கற உங்களைய அடி வாங்க விட்டுருவானா??" என்று கேட்டான் பரிவுடன்..

அவனின் பதிலில் மகிழ்ந்த வனிதா, "ஆனா என்னால நீ அடி வாங்கிட்டியே??" என்று ஆதங்கம் தாளாமல் கேட்டவரிடம், "எனக்கு அந்த அடி சாதாரண கொசுகடி மாதிரி தான் மேடம்.. நீங்க மட்டும் அந்த அடியை வாங்கிருந்தீங்க இன்னேரம் ரத்தம் வெள்ளமே ஓடிருக்கும்" என்றான் கேலியாய்..

தன்னை சமன்படுத்த முயல்வதை உணர்ந்த வனிதா, "அப்ப எனக்கும் இனி ஜிம் டிரைனிங் குடு கண்ணா.. இந்த மனுசன் கிட்ட இருந்துட்டு உயிர் வாழனும்னு ஆசைப்பட்டா இது ஒன்னுதான் வழி.." என்று பாவமாக சொல்ல, அவர் கூற்றில் வேந்தனோ வாய்விட்டு சிரித்து விட்டான்..

அவனின் சிரிப்பை அன்புடன் பார்த்த வனிதா, முகத்தை மாற்றி கொண்டு, "என்னைய பார்த்தா சிரிப்பா இருக்குல்ல??" என்று கேட்க, இல்ல "இல்ல மேடம் உங்களைய நினைச்சா பெருமையா இருக்கு" என்றான் சிரிப்பை அடக்கியபடி..

"என்னைய தனியா விட்டராத கண்ணா.. அப்பறம் நான் முழுசா வீட்டுக்கு போக முடியாது போல.. அப்படியே என் பின்னாடி வந்து என் உயிரை காப்பாத்தி குடு.." என்று கிண்டலாக கூறிவிட்டு முன்னால் நடக்க, "இப்பதான் புரியுது அந்த லூசு பேசற பேச்சு எல்லாம் எங்கிருந்து வந்துருக்கும்னு" என்று நினைத்தபடி இவனும் வனிதாவின் பின்னே சென்றான்..

கோவிலை சுற்றி விட்டு இருவரும் வந்தமர, சரியாக வனிதாவின் போனும் அடித்தது.. எடுத்து பார்த்தவள் முகத்தை சுழித்தபடி காதில் வைத்தவர் "ம்ம்ம்ம்" என்று மட்டும் சொல்ல, அந்த புறம் என்ன கேட்டதோ இவர் கடுப்புடன் பதிலேதும் சொல்லாமல் கட் செய்து விட, ஒன்னும் புரியாமல் வேந்தன் அவரை பார்த்திருந்தான்..

அவனை பார்த்தவர் பெருமூச்சுடன், "என் அண்ணன்தான்.. ஊர் வம்பு, உலக வம்புனு எல்லாத்தையும் வாங்கிட்டு வருவாரு.. ஆனா அதுனால எங்களுக்கு என்ன ஆகும்னு கூட யோசிக்கறது இல்ல.. இப்ப நடந்தது அவரு காதுக்கு போய்ருச்சு போல அதான் ஒன்னுமில்லயானு கேட்க போன் பண்ணிருக்காரு எனக்கு வர்ற கோவத்துக்கு கேவலமா திட்டிருவேனு தான் கட் பண்ணிட்டேன்.. போன ஜென்மத்துல நான் பண்ணுன பாவமோ என்னவோ இந்த மனுசனுக்கு தங்கச்சியா பிறந்து தொலைஞ்சுட்டேன்" என்று விரக்தியாய் சொன்னவரின் குரலில் வலிகள் இருப்பது இவனுக்கும் உரைத்திட, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாய் அமர்ந்திருந்தான்..

இந்த முறை வேந்தனின் போன் அடிக்க, எடுத்து பார்த்தவன் வனிதாவை ஒருமுறை பார்க்க, "என்ன அந்த மனுசனா?? வந்து தொலையறோம்னு சொல்லு" என்று கடுப்புடன் சொன்ன வனிதாவை நினைத்து மெலிதாய் புன்னகைத்து கொண்டவன், "அப்ப போலாம் மேடம்" என்றான் சின்ன சிரிப்புடன்..

காருண்யாவை விட சென்றவர்களை அவளின் பெற்றோர்கள் பிடித்து கொண்டு பாயாசம் குடித்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, "அட என்னமா முதல்லயே பாயாசம் இருக்கும்னு சொல்லிருந்தா நீங்க கூப்பிடாமயே நான் உள்ளே போய்ருப்பேனே??" என்று விட்டு முதல் ஆளாக நிலா உள்ளே ஓடி விட, " அடியேய் தினமும் பஞ்சாயத்தை கூட்டறதையே வேலையா வெச்சிருக்கே போல?? அந்த மனுசன் என்ன கத்து கத்த போறாரோ??!" என்று புலம்பி கொண்டே இவனும் உள்ளே சென்றான்..

ரன்யாவை ஒரு கண்ணால் சைட் அடித்து கொண்டே பகலன் பாயாசம் குடித்திருக்க, அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் அவள் தடுமாறி கொண்டிருந்தாள்.. "இப்ப எல்லாம் இவன் எனக்கு புதுசா தெரியறானே?? ஒரு வேளை நானும் காதலிக்க தொடங்கிட்டனோ??" என்று நினைத்தபோதே அவளின் கன்னங்கள் செழுமை பூசியது போன்று சிவந்து போனது..

நேரங்காலம் தெரியாமல் நிலா வேறு, "என்ன காரு மேக்கப் இல்லாம உன் கன்னம் இப்படி சிவந்துருக்கு எனக்கும் எப்படினு கொஞ்சம் சொல்லேன்" என்று கேட்டு விட, நிலாவின் கேள்வியில் பகலனுக்கு புரையேறி விட, ரனுவோ திருதிருவென முழித்தாள்..

"இது உண்மையாவே லூசா?? இல்ல லூசு மாதிரி நடிக்குதா?? நானே கஷ்டப்பட்டு இத்தனை வருசத்துக்கு அப்பறம் அவளை வெக்கப்பட வெச்சா இது வேற நேரங்காலம் தெரியாம?? டேய் பகலு உனக்கு எதிரி வெளில இருந்து எல்லாம் வர தேவையில்லடா.. கூடவே வெச்சு சுத்திட்டு இருக்க பாரு உன் புத்தியை பிஞ்ச செருப்பாலயே அடிச்சுக்க.. அப்பவாவது உனக்கு புத்தி வருதானு பார்ப்போம்.." என்று நொந்து கொண்டிருந்தவனின் கதறலை கலைக்கவே அவனின் கைப்பேசி அடித்தது..

யோசனையுடன் எடுத்து பார்த்த பகலன்," அய்யய்யோ ஹிட்லர் தான்.. எல்லாம் உன்னால தான்டி" என்று சின்சியராய் பாயாசம் குடித்து கொண்டிருந்த நிலாவிடம் எகிற, அவளோ "எடுத்து பேசி தொலைடா இல்ல கட்டாகிர போகுது" என்றாள் சாதாரணமாக...

அவளை முறைத்து கொண்டே எடுத்தவன், அடுத்த நொடியே "இதோ வந்தறோம் மாமா" என்று விட்டு நிலாவை இழுக்காத குறையாக இழுக்க, அவளோ பாயசம் குடிக்காம நான் வர மாட்டேன் என்பதை போல் அமர்ந்திருந்தாள்..

"அடியேய் அங்க உன் அப்பா பாயசாத்தோட பொங்கலும் வெக்க காத்துட்டு இருக்காங்க வந்துதொலைடி" என்று கடுப்புடன் கத்த, "போடா அதைய விட இதுதான் டேஸ்ட்டா இருக்கு" என்று பாயாசத்தை ஸ்பூனில் குடித்தபடி சொல்ல, "அய்யோ இவளை" என்று தலையில் அடித்து கொண்டவன்,

"எம்மா ஷியா இந்த கிண்ணத்தை நாளைக்கு வாங்கிக்கமா.. அதை எடுத்துட்டு இப்பவாவது வந்து தொலைடி" என்று காலில் விழாத குறையாக அவளிடம் கெஞ்ச, நிலாவோ பெரிய மனது செய்ததை போன்று எழுந்தவள் அவனோடு கிளம்பினாள்..




தொடரும்..
 

சாஹித்யா வருண்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்




பகுதி - 8



இவர்கள் சென்றதும் ரனுவின் அம்மா, "தங்கமான பிள்ளைக இவங்க.. நம்ம பொண்ணுக்கும் அந்த தம்பி மாதிரி நல்ல பையனா பார்க்கனும்ங்க" என்று சொல்ல, ரனுவின் அப்பாவும் அதை ஆமோதித்து," நானும் அதைய தான் நினைச்சேன்மா.. அருமையான பையன்" என்று பகலனை நினைத்து கொண்டு சொன்னவர் முகத்தில் புன்னகை..

முதலில் பகலன் முகத்தில் பீதியுடன் உள்ளே வர, அவனின் பின்னே கூலாக நிலாவும் வந்தாள்.. மூக்கு விடைப்புடன் அமர்ந்திருந்த ராசு இவர்களை பார்த்ததும் முறைக்க, வனிதாவும் செல்வியும் டைனிங் டேபிளில் கையை தலையில் வைத்தபடி அமர்ந்திருந்தனர்..

வந்ததும் நிலா, "அம்மா பசிக்குது" என்று கத்தியபடி அவர்களிடம் செல்ல போக, அவளின் முன்னே பூச்சாடி உடைந்து சிதற, அப்பவும் சாதாரணமாக திரும்பி ராசுவை பார்த்தாள் நிலா..

"அய்யோ இவ வேற?? இந்த மனுசனோட கோவத்தை ஏத்தி விட்டுட்டே இருக்கா?? எப்பா குரங்கு சாமி ச்சீ ஹனுமாரே என்னைய இவங்க கிட்ட இருந்து காப்பாத்துப்பா.. ச்சை இந்த லூசு கூட சேர்ந்து எனக்கும் இப்ப அடிக்கடி டங்கு ஸ்லிப்பாகுது.." என்று நொந்தவன், தந்தையும் மகளும் சண்டை கோழிகளாய் முறைத்து கொண்டிருப்பதை பார்த்து, "மாமா அது வந்து.." என்று ஏதோ சொல்ல, அவனின் முன்னாடியும் பூச்சாடி விழுந்து சிதற, கப்பென்று வாயை மூடி கொண்டான் பகலன்..

"எப்ப பார்த்தாலும் எங்கையாவது போய் ஊர் சுத்த வேண்டியது உங்களுக்கு என்ன ஆச்சோனு பதறிட்டு இருக்கறது தான் என் வேலையா?? நான்தான் முதல்லயே சொல்லிருக்கேனல்ல.. வேலை முடிஞ்சா நேரா வீட்டுக்கு வந்தரனும்னு.. காலைல உன் அத்தையை யாரோ கொல்ல பார்த்துருக்காங்க இப்ப உங்களைய ஏதாவது பண்ணிருந்தா??? எதுக்கு சொல்றோம்னு யோசிச்சு கூட பார்க்க முடியாதா?!" என்று ஏகத்துக்கும் பிபி தலைக்கேறி அந்த வீடே அதிரும்படி ராசு கத்த, "இதைய நீங்க ஊர் வம்பை விலைக்கு வாங்கறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கனும்.." என்றாள் ஒற்றை வரியில்..

"அதேதான் நானும் சொல்றேன்.. இவரே எல்லாத்தையும் செஞ்சுட்டு இவரே நம்மளைய பத்தி பயப்படுவாராமா?? நல்ல இருக்கு உங்க நியாயம்.. " என்று வனிதாவும் நிலாவிற்கு ஒத்து ஊத, "அய்யோ இந்த அம்மியும் இந்த லூசு கூட சேர்ந்திருச்சே.. டேய் பகலா பேசாம இவங்க கிட்ட இருந்து தப்பிச்சு எங்கையாவது ஓடிருடா.." என்று மனதில் நினைத்தவன் பாவமாக அவர்களை பார்த்து நின்றான்..

ராசுவின் கோவமோ எல்லை மீறி சென்று விட, நிலாவை அடிக்கவே கை ஓங்கியவரின் கையை பிடித்த வனிதா," அடிக்கற வேலையை எல்லாம் வெச்சுக்காத.. என் பொண்ணு மேல கை பட்டுச்சு அப்பறம் அவ்ளோதான்" என்று அவரின் கையை உதறி தள்ளியவர், "தெரியாம தான் கேட்கறேன் அவங்க எதுக்கு எங்களைய கொல்ல வர்றாங்க.. எல்லாம் நீ பண்ணுன வேலை தானே?? உன்னால பாதிக்க பட்டவங்க தானே எங்களைய கொன்னு உன்னைய கதற விடனும்னு நினைக்கறாங்க.. தான் நல்லா இருந்தா போதும்னு நினைச்சு தப்பு செய்யறவனை கூட விட்டரலாம்.. ஆனா அடுத்தவங்க நல்லா இருக்கறதை பார்த்து வயிறு எரிஞ்சு இப்படி வேலை செய்யறவங்களுக்கு மன்னிப்புனு ஒன்னே இல்ல.. நீயும் இந்த செட் தான்.. அனுபவிப்பே கண்டிப்பா நீ அனுபவிப்பே.. ஆரம்பத்துல இருந்தே உன்மேல எனக்கு ஒரு விசயத்துல சந்தேகம் இருந்துட்டே இருக்கு அது மட்டும் உண்மை ஆகட்டும் அப்பறம் இருக்கு உனக்கு" என்று ஏகத்துக்கும் கடுமையை கூட்டி சொன்னவரை ராசு கலக்கத்துடன் பார்த்தார்..

"இந்த அம்மா என்ன சொல்லுது எனக்கு ஒன்னுமே புரிலயே" என்று அந்த நிலையிலும் பகலன் மைண்ட் வாய்சில் நினைத்தபடி நின்றிருக்க, "ப்ச் அத்தை நீங்க ஏன் கத்தி கத்தி எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க?? இவங்க கிட்ட கத்தறதுக்கு ஒரு மாட்டு கிட்ட கத்துனா கூட பலன் கிடைக்கும்.." என்று ராசுவை முறைத்து விட்டு சென்று விட, "வர வர இந்த வீட்டுல எனக்கு மரியாதை இல்ல" என்று ராசுவால் கத்த தான் முடிந்தது..

"இதுக்கு முன்னாடி எப்ப இந்த மனுசனுக்கு மரியாதை இருந்துச்சு.. இப்ப மட்டும் இல்லாம போக??" என்று தீவிரமாக யோசித்து கொண்டே பகலனும் உள்ளே சென்று விட, தன் கணவனை வெறுப்புடன் பார்த்து விட்டு செல்வியும் நகர்ந்தார்..

கட்டலில் அமர்ந்து திராட்சை சாப்பிட்டு கொண்டிருந்த நிலாவிடம் சென்றவன், அவளை சாப்பிட விடாமல் அவளின் கையை பிடித்து கொண்டு, "எம்மா மென்னிலா உன் அருமை அத்தை சொன்னது ஏதாவது உனக்கு புரிஞ்சுச்சா??" என்று முகத்தில் குழப்ப ரேகையுடன் கேட்ட பகலனை கொலைவெறியில் முறைத்து பார்த்தாள் நிலா..

"ஏன்டா ஏன்.. ஏன் இப்படி?? உனக்கு நானு என்னதான்டா பாவம் பண்ணி தொலைஞ்சேன்?? என்னைய பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?? இப்படி உயிரை வாங்கிட்டு இருக்கே??" என்று கடுப்புடன் கத்திய நிலாவை ஒன்றும் புரியாமல் பே வென்று பார்த்த பகலனின் மனமோ, "இது என் டையலாக் ஆச்சே.. இதைய நான்தானே சொல்லனும் என்ன இந்த பிசாசு சொல்லிட்டு இருக்குது" என்று குழப்பத்துடன் அவளை பார்த்திருந்தான்..

ஒன்றும் புரியாமல் தன்னை பார்த்திருந்தவனிடம்," இப்ப நான் பேசுனது உனக்கு புரியாத மாதிரி எனக்கும் அத்தை பேசுனது சுத்தமா புரிலடா.. இதுல என்கிட்ட வந்து டவுட்டு எல்லாம் கேட்டுட்டு இருக்கே.." என்று உதட்டை பிதுக்கி கையை விரித்து காட்ட, "அதையை நேராவே சொல்லி தொலையறதுக்கு என்னடி?? ஆமா யாரு நம்மளைய கொலை பண்ண நினைச்சிருப்பாங்க" என்று யோசனையுடன் கேட்டவனின் முதுகில் மொத்தினாள் நிலா..

"அடேய் உன் மூளை என்ன மூளைடா.. குழப்பவாதி மூளையா முதல்ல அதையை தூக்கி வெளில வீசிட்டு கம்முனு போய் தூங்கு.. ஏதாவது நிம்மதியா சாப்பிட விடறீயா?? இந்த ஹிட்லரை விட நீதான்டா என்னைய ரொம்ப படுத்தி எடுக்கறே??" என்று அவனை வெளியில் தள்ளாத குறையாக தள்ளி கதவை சாத்திய நிலா, மீண்டும் சாப்பிட தொடங்கினாள்..

விக்கல் எடுக்க தொடங்க, "ச்சை இது வேற?? அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணிட்டு??" என்று நிலா முணுமுணுத்தபடி கீழே வர, கேரிபேக்கில் டிப்பன் பாக்ஸை வனிதா எடுத்து வைத்து கொண்டிருந்தார்..

யோசனையுடன் அவரிடம் வந்தவள், "என்ன அத்தை கேரிபேக் எல்லாம் எடுத்துட்டு எங்க கிளம்பிட்டிங்க??" என்றிட," வேந்தனை பார்க்கடா.. நான் வாங்கற அடியை அவன் வாங்கிட்டு என்ன பாடுபடறானு தெரில.. மனசு வேற உறுத்துது அதான் அவனை பார்த்துட்டு அப்படியே சாப்பாடு குடுத்துட்டு வரலாம்னு கிளம்பிட்டேன்.. வந்ததுல இருந்து அந்த ஹிட்லர் எங்கயும் போகாம குத்து கல்லாட்டம் முன்னாடியே உக்காந்துட்டாரு.. அதான் வேந்தனை பார்க்க முடில.." என்று நிலா கேட்ட கேள்விக்கு மட்டுமின்றி கேட்க நினைத்த அத்தனை கேள்விக்கும் பதில் சொல்லி விட," ஐஐஐஐ என் ஆளை பார்க்க போறேன்" என்று மனதில் குத்தாட்டம் போட்டவள் வெளியில் நல்ல பிள்ளையாய் "நானும் வர்றேன் அத்தை" என்றாள்..

இருவரும் செல்வியிடம் சொல்லிவிட்டு கிளம்ப, "வீராதி வீரர்களே எங்க கிளம்பிட்டிங்க??" என்று கேட்டபடி பகலன் கீழே வந்தான்.. "அது எதுக்கு உனக்கு?? பேசாம தின்னுட்டு தூங்கற வழியை பாரு" என்று தோளை குலுக்கி கொண்டு நிலா சொல்ல, "அப்படி எல்லாம் இருக்க முடியாது.. யூ கோ மீ பாலோ" என்று சட்டை காலரை தூக்கி விட்டு சொன்னவனை சேர்ந்தே இருவரும் காறி துப்பி விட்டு செல்ல, "க்ரேட் இன்செல்ட்டா பகலா!!" என்று தனக்கு தானே சொல்லி கொண்டு அவர்களை பின் தொடர்ந்து சென்றான்..

வேந்தனின் வீட்டின் அருகே சென்றதும், "அய்யோ மம்மி இங்க எதுக்கு இவளை கூட்டிட்டு வந்தே???" என்று கத்த வரும்போது அவனின் வாயை மூடிய நிலா," மவனே ஏதாவது எடக்குமடக்கா பேசிட்டு இருந்தே காருவோட அப்பா கிட்ட சொல்லி சீக்கிரம் அவளுக்கு கல்யாணம் பண்ண சொல்லிருவேன் பார்த்துக்க" என்று மெல்லிய குரலில் மிரட்டியதும் பகலன் கப்சிப் தான்..

"ரெண்டு பேரும் அங்க நின்னு என்ன பேசிட்டு இருக்கீங்க???" என்று வனிதா கேட்டதும் சாதாரணமாக முகத்தை வைத்து கொண்டு, "அது ஒன்னுமில்ல அத்தை இந்த மாதிரி இவனுக்கு சாப்பாடு குடுத்துருப்பீங்களானு கேட்கறான்" என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு நிலா சொல்ல, "அய்யோ என்னைய பெத்த ஆத்தாவே இப்படி எல்லாம் நான் சொல்லவே இல்லமா.. எதுவா இருந்தாலும் வீட்டுல போய் நம்ம பஞ்சாயத்தை வெச்சுக்குவோம்" என்று கெஞ்சும் தோணியில் சொல்ல, வனிதாவோ, "பார்த்துக்கறேன்டா" என்று கருவினார் மனதில்...

கதவை திறந்த செழியன் இவர்களை பார்த்து ஆச்சரியத்துடன் வாயை பிளக்க, அவனை தள்ளி கொண்டு உள்ளே சென்றாள் நிலா.. வேந்தனோ கையில்லா பனியனில் அடிப்பட்ட கையை மறு கையால் பிடித்தபடி கண் மூடி அமர்ந்திருந்தான்..

இதை பார்த்து வனிதா பதறி, "வேந்தா ரொம்ப வலிக்குதாடா??" என்று கேட்க, அப்போது தான் கண்ணை திறந்தவன் இவர்களை பார்த்து திகைத்து எழுந்து நிற்க, அவனை அமர வைத்த வனிதா, ₹ப்ச் நான் அப்பவே ஹாஸ்பிட்டல் போலாம்னு சொன்னேன் நீ தான் கேட்கல இப்ப பாரு வலிக்குது" என்று அவனை அதட்டி கொண்டே வீங்கி இருந்த கையை மெதுவாக அமுத்தி பார்க்க, வலியில் வேந்தனோ முகத்தை சுருக்கினான்..

"அத்தை அவருக்கு வலிக்குது பாருங்க" என்று வேந்தன் முகத்தை சுருக்கியதை பார்த்து நிலா பதறி கத்த, "அய்யய்யோ இவ வேற ஓவர் பர்பாமன்ஸ் பண்ணிட்டு இருக்காளே!!" என்று பகலன் நினைத்திருக்க, அவனிடம் செழியனும் "நீ நினைச்சதை தான் நானும் நினைச்சேன் மச்சி" என்று மெதுவாக சொல்ல, "அடேய் என் மைண்ட்டை ஏன்டா நீ கேட்ச் பண்ணுனே!!" என்ற ரீதியில் அவனை முறைத்தான் பகலன்..

"வெந்நீர்ல இப்ப ஒத்தடம் குடுத்துட்டு காலைலயும் இப்படியே இருந்தா ஹாஸ்பிட்டல் போய் பார்த்துக்கலாம்" என்று வனிதா சொன்னதும், "இதோ நான் வெச்சு எடுத்துட்டு வர்றேன் அத்தை" என்று உள்ளே செல்ல போன நிலாவை இழுத்து பிடித்த பகலன், "நீ ஆணியே புடுங்க வேணாம் கம்முனு நில்லு" என்றிட, "உன்னோட குக்கிங் பத்தி அடியேனும் அறிவேன் ப்யூட்டி என் அண்ணன் பாவம் சோ நானே போறேன்" என்று விட்டு செழியன் உள்ளே செல்ல, "ம்ம்ம்ம்க்கும் ரொம்பதான்டா" என்று தோளை குலுக்கி கொண்டு முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு நின்றாள்..

வேந்தனோ இவர்கள் வந்ததில் இருந்து ஒருமுறை கூட நிலாவை பார்க்காமலயே இருக்க, "வலிக்கற நாளா தான் அவன் அப்படி இருக்கான்" என்று தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டு ஒருமுறையாவது என்னை பார்த்து விட மாட்டாயா?? என்ற ஏக்கத்தில் அவனையே பார்த்திருந்தான்..

வெந்நீரில் டவலை நனைத்து மெதுவாக வனிதா ஒத்தடம் குடுக்க, வலியில் முகத்தை சுருக்கி கொண்டு அமர்ந்திருந்த வேந்தன், ஓரக் கண்ணால் நிலாவை பார்த்தான்.. அவன் பார்த்தது இவளுக்கும் தெரிந்தும்‌ எதுவும் நடவாதது போல் நின்று கொண்டாள்..

உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியவள், அமைதியாக நின்றிருக்க, வேணுமென்றே இருமிய நிலா, அவன் பார்த்ததும் கண் அடிக்க, அவனின் முகம் கடுப்பில் சிடுசிடுவென மாறியது.. நிலா அதை ரசித்து கொண்டே வேந்தன் அவளை பார்க்கும் போதெல்லாம் கண் அடித்தே அவனுக்கு பிபியை ஏத்தி கொண்டிருந்தாள்..

நிலாவின் செயலில் பகலனோ, "மச்சி நீ பார்த்தே???" என்று பாவமாக செழியனிடம் கேட்க, அவனும், "மச்சி அப்ப நீயும் பார்த்தீயா??" என்று சிலையாக நின்றபடி கேட்க, "யூ பிளட் சேம் பிளட் மச்சி" என்று கதறினான் பகலன்..

"இருந்தாலும் உன் மாமன் பொண்ணுக்கு இவ்ளோ தைரியமாக கூடாது மச்சி இத்தனை பேரு இருக்கறப்பவே சண்டியர் மாதிரி இருக்கற என் அண்ணனோட கோவத்தை கிளரிட்டு இருக்காளே?? இதை நான் வன்மையாக கண்டிக்கறேன்" என்று சொன்னவனை கேவலமாக பார்த்த பகலன், "உன் நொண்ணன் என்ன கேசரியா?? இந்த பிசாசு கிளரரதுக்கு?? போய் ஒரு நாலு பக்கம் பேசறதுக்கு நல்ல டையலாக்கா யோசிச்சுட்டு வாடா முதல்ல" என்றான் பகலன் அவனின் காலை வாரியபடி..

அவனை வெறுப்பேத்தி வெறுப்பேத்தி சலித்து போன நிலா, வேந்தனின் அறைக்க சென்றவள் சாதாரணமாக ஒவ்வொன்றையும் பார்த்த படி இருக்க, கீழே ஒரு புகைப்படம் கிடப்பதை பார்த்து அதை எடுத்து பார்த்தவளின் மனமோ இரண்டாக பிளந்தது..


தொடரும்...
 

சாஹித்யா வருண்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்



பகுதி - 9





வேந்தனின் அறையை நோட்டமிட்டு கொண்டிருந்த நிலா, ஏதேச்சையாக கீழே கிடந்த ஒரு புகைப்படத்தை பார்க்க, குனிந்து அதை எடுத்து பார்த்தவளின் மனது இரண்டாக கிழிந்தது..

அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்திற்கு கீழே "எங்களைய பிடிக்காம தான் எங்களைய விட்டுட்டு போய்ட்டிங்களா?? பட் மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மாம்" என்று இருந்ததை பார்த்து தான் நிலாவிற்கு நெஞ்சம் விம்மியது..

தன்னவனுக்கு அம்மா இல்லையா?? என்று நினைத்தவளின் யோசனைகள் தறிகெட்டு ஓட, அதை அடக்கியவள் "மகி பேபி கொஞ்ச நாள் பொறுத்துக்கோ அதுக்கு அப்பறம் மனைவியா மட்டுமில்லாம உனக்கே உனக்குனு எல்லாமுமா இருப்பேன்.. அம்மாவே ரொம்ப மிஸ் பண்றீயா மகி பேபி" என்று தன் போக்கில் நினைத்தவளுக்கு விழிகளிலும் நீர் கோர்த்திட, விம்மிய மனதை அடக்க வழி தெரியாமல் கண்ணீரை சிந்திய நிலா, கண்ணை துடைத்து கொண்டு வெளியில் வந்தாள்..

அவளை பகலன் யோசனையாக பார்க்க, நிலாவோ அவனை மட்டுமில்லாமல் வேறு யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் நின்றிருந்தாள்.. வேந்தன் கூட இவளுக்கு என்ன ஆச்சு?? என்ற
ரீதியில் அவளை பார்த்தான்..

கொண்டு வந்த இட்லியை வனிதாவே வேந்தனுக்கு ஊட்டி விட செல்ல, அவனோ அதிர்ந்து "நானே சாப்பிட்டுக்கறேன் மேடம்" என்று மறுக்க, "ப்ச் அமைதியா சாப்பிடு வேந்தா" என்று ஒரு அன்னையாய் அவனை அதட்டி ஊட்டி விட, வேந்தனுக்கு கூட கண்கள் கலங்கி விட்டது..

இதை பார்த்து செழியனும் வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டு கிச்சனுள் சென்று விட, நிலாவுக்கோ கதறி அழுக வேண்டும் என்று தோன்றிய மனதை பெரும்பாடு பட்டு அடக்கி கொண்டிருந்தாள்..

வேந்தன் கலங்கியதையும் செழியன் கலங்கியதையும் பகலன் கவனித்து கொண்டு தான் இருந்தான்.. அவனுக்கு என்னவென்று புரியாமல் நின்றிருக்க, நிலாவை பார்த்தவன் ஏதோ சரியில்லை என்று மட்டும் நன்றாகவே தெரிந்தது..

வனிதாவின் முகத்தை பார்த்து கொண்டே துக்கத்தில் உள்ளே இறங்க மறுத்த இட்லியை வேந்தன் உண்டு கொண்டிருக்க, அவன் கண்ணில் தெரிந்த வலியை கண்டு கொண்ட நிலாவுக்கோ தன்னை மீறி வழிந்த கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் வெளியில் சென்று விட, ஒன்றுமே புரியாமல் பகலனும் அவளின் பின்னே சென்றான்..

வெளியில் சென்ற நிலா, அங்கிருந்த ஒரு பென்ஞ்சில் அமர்ந்து கதறி அழுது கொண்டிருக்க, பகலன் பதறி "நிலா நிலாமா என்னடா ஆச்சு?? ஏன் இப்படி அழுகறே??" என்று ஆதரவாக கேட்டதும், அவளின் அழுகை தான் அதிகமாகியது..

பகலனின் தோளில் சாய்ந்து கொண்டு," பகலா நமக்கு அம்மா இல்லாம இருந்துருந்தா நம்மனால இவ்ளோ சந்தோசமா இருந்துருக்க முடியுமாடா?!" என்று தேம்பியபடி திக்கி திணறி கேட்டவளை குழப்பமான முகத்துடன் நோக்கினான்..

தான் பார்த்த புகைப்படத்தை பற்றி சொல்லிவிட்டு, " அத்தை மகிக்கு ஊட்டி விட்டதுல அவனோட கண்ணுல சந்தோசத்தை மீறியும் அவ்வளவு வலி தெரிஞ்சுச்சு.. அதே மாதிரி செழியனோட ஏக்கத்தை அவனோட முகமே அப்பாட்டமா காட்டுச்சு.. இந்த அளவுக்கு இருக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கலடா" என்று விட்டு நிலா தேம்ப, பகலனுக்கே மனது பாரமாக மாறியது போன்று இருந்தது..

செழியனின் சிரிப்பிற்கு பின்னால் இப்படி ஒரு வலி இருப்பதை இன்னும் பகலனால் நம்ப முடியவில்லை.. இப்போது எல்லாம் கஷ்டத்தை மறைக்க பலர் அணிவது தான் சிரிப்பு என்ற முகமூடி.. ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் வலியை அவர்கள் மட்டுமே அறிவர்..

"ப்ச் லூசு இப்படி ஒப்பாரி வெச்சா எல்லாம் சரியாகிருமா?? முதல்ல கண்ணை துடைச்சு உள்ள போலாம் வா" என்று அவளின் முகத்தை வலுக்கட்டயமாக துடைத்து விட்ட பகலன் அவளை அழைத்து கொண்டு உள்ளே வந்தவன் இமைக்க கூட மறந்து நின்றான்..

திரும்பி நிலாவை பார்க்க, அவளும் சிறுதுளி நீருடனும் உதட்டில் புன்னகையுடனும் நின்றிருந்தாள்.. அங்கு வனிதாவின் மடியில் வேந்தனும் செழியனும் தலை வைத்து படுத்திருக்க, அவர்களின் தலையை கனிவுடன் தடவி குடுத்தபடி அமர்ந்திருந்தார் வனிதா..

எதுவும் பேசாமல் நிலாவும் பகலனும் வந்து அமர, சிறிது நேரம் எதுவும் பேசாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அமர்ந்திருந்தனர்.. "ம்மா மாமா வந்துட்டா மறுபடியும் பிரச்சனையை ஆரம்பிச்சுருவாரு.." என்று இழுத்து சொன்ன பகலனை முறைத்த வனிதா," இப்ப எதுக்குடா அந்த மனுசனை நியாபக படுத்தி விடரே??" என்று நொந்தவர் இருவரும் தூங்கி விட்டார்களா?? என்று பார்க்க, செழியன் தான் நன்றாக கண் அயர்ந்திருந்தான்.. வேந்தனோ இவர்கள் பேசுவதை கூட கவனிக்காமல் சுவரையே வெறித்திருக்க, அவனை பார்த்த நிலாவுக்கு தான் அவனை இப்படி பார்க்க முடியாமல் ஏதோ போல் இருந்தது..

"ஹலோ வேந்தன் சார் நாங்க வீட்டுக்கு போகட்டுமா?? இல்ல இங்கயே பாயை விரிக்கட்டுமா??" என்று நிலா தான் மனதை கல்லாக்கி கொண்டு எப்போதும் போன்று அவனிடம் கேலியாய் கேட்க, அவளின் கேள்வியில் சுயநினைவிற்கு வந்த வேந்தன் பட்டென்று எழுந்து அமர்ந்தான்..

"சா..ரி.. மேடம்" என்று தடுமாறிய வேந்தனை முறைத்த வனிதா, "உன்கிட்ட எத்தனை தடவை தான் சொல்றது அம்மானு கூப்பிடுனு" என்று அதட்டியவர் மெதுவாக செழியனின் தலையை தன் மடியில் இருந்து எடுத்து கீழே படுக்க வைத்து விட்டு எழுந்தார்..

"அந்த மனுசன் இல்லனா இங்க இருக்கறது எல்லாம் எனக்கு பெரிய பிரச்சனையே இல்ல வேந்தா.. எங்களைய காணோம்னு செல்வியை தான் பிடிச்சு கத்துவாரு.. அதுதான் என் கவலையே" என்று ராசுவை நினைத்து கொண்டு வனிதா சொல்ல, "ஆமா ஆமா வேந்தா இவங்களைய நீயே வெச்சுக்கோ எனக்கு திட்டு வாங்கறதாவது மிச்சமாகும்.. இவங்கனால அந்த மனுசன் கிட்ட நான் தினமும் திட்டு வாங்கி வாங்கி மத்தவங்க திட்டுனா கூட ரோசமே வர மாட்டிங்குது" என்று பாவமாக பகலன் சொன்னதும், வேந்தனுக்கு சிரிப்பு வந்துவிட, அழுத்தமான உதட்டை சிறிது பிரித்து மெல்லிய புன்னகையை உதிர்த்தான்..

அவனின் சிரிப்பை ரசனையுடன் உள்ளுக்குள் ரசித்த நிலா வெளியில் உம்மென்று முகத்தை வைத்து கொண்டு பகலனை முறைக்க, மறுபுறம் வனிதாவும் அவனை முறைத்து பார்க்க, "ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல போல முறைக்குது பாரு வேந்தா.. இது எல்லா என்னனு கேட்க மாட்டியா??" என்று உதட்டை பிதுக்கி கொண்டு கேட்ட பகலனிடம், வேந்தனோ, "உன் வாய் தான் உனக்கு பெரிய எதிரி.. அதையை முதல்ல அடக்கு" என்றான் சின்ன சிரிப்புடன்..

"அப்படி சொல்லு வேந்தா" என்று வனிதா அவனுக்கு ஹைபை குடுக்க, "டேய் பகலா இது உனக்கு தேவை தான்டா தேவை தான்டா" என்று அவன் முகத்தின் முன்னே அவனே விரல் நீட்டி சொல்லி கொள்ள, நிலாவோ "அச்சோ பாவம் தான்டா நீ" என்றாள் இச் கொட்டியபடி..

வேந்தன் சாதாரணமாக மாறியதை உறுதி படுத்தி கொண்டு தான் மூவரும் கிளம்ப, வெளியில் சென்ற நிலா, மறுபடியும் அவனிடம் வந்து ஹஸ்கி குரலில், "நீ மட்டும் என் காதலுக்கு சம்மதம் சொல்லு உன் அம்மாவையும் என் கூடயே கூட்டிட்டு வந்தறேன்.. நீ என்னைய லவ் பண்ணல.. பண்ணல..." என்று கோவமாக முறைத்தவள் பின்பு கையை கட்டி குனிந்து கொண்டு "சத்தியமா அழுதுருவேன்டா அழுதுருவேன்" என்று பாவமாக சொன்னதும், உதட்டுக்குள் தோன்றிய சிரிப்பை அரும்பாட்டு பட்டு அடக்கிய வேந்தன் முகத்தை கடுகடுவென மாற்றி கொண்டு "கிளம்பு" என்று வாசலை காட்டினான்..

"ம்ம்ம்க்கும் ரொம்ப தான்டா பண்றே??" என்று தோளை குலுக்கிய நிலா "லவ் யூ சோ மச் மகி பேபி" என்று தலை சாய்த்து குறும்புடன் சொன்னவளை இமைக்க கூட மறந்து பார்த்திருக்க, அவனின் பார்வையை கலைக்க விரும்பாமல் துள்ளலுடன் வெளியேறி இருந்தாள் நிலா..

"ச்சை வர வர எனக்கு என்ன ஆகுது??" என்று தன்னிலைக்கு வந்த வேந்தன் தன்னை தானே அறைந்து கொண்டு அப்படியே அமர்ந்தும் விட்டான்.. "என்னால ஏன் இந்த லூசை மட்டும் வெறுக்க முடில?? அவ பக்கத்துல வந்தா என்னையவே மறந்து நிக்கறனே?? அப்ப நான் என் வருவை உண்மையா லவ் பண்ணலயா??" என்று சாதாரணமாக நினைத்ததுக்கே அவனின் இதயம் வலியை கொடுக்க, "நோநோநோ நான் என் வருவை மட்டும் தான் லவ் பண்றேன் இனியும் பண்ணுவேன்.." என்று தலையை பிடித்து கொண்டான்..

"முதல்ல இங்கிருந்து கிளம்பனும் அதுதான் நல்லது" என்று நினைத்து கொண்டே கதவை சாத்தி விட்டு செழியனிடம் அமர்ந்தவன் தூங்கி கொண்டிருந்தவனின் தலையை பரிவுடன் கோதி விட, தூங்கி கொண்டிருந்தவனோ எழுந்து வேந்தனின் மடியில் தலை வைத்து அவனின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு தூக்கத்தை மீண்டும் தொடர, வேந்தனும் புன்னகைத்தபடி சுவரில் தலை சாய்த்து கண் அயர்ந்தான்..

இரண்டு நாட்களாக நிலாவின் கண்களுக்கு அகப்படாமலே வேந்தன் கண்ணாமூச்சி விளையாட, அவன் எவ்வளவு தூரம் தான் செல்கின்றான் என்று நினைத்து நிலாவும் அமைதியாக இருந்தான்..

அன்றும் நிலா அவனை வறுத்தபடி காரில் அமர்ந்திருக்க, சாலை ஓரத்தில் நின்று போன் பேசி கொண்டிருந்த வேந்தனை இவள் பார்த்ததும் இன்னைக்கு இவனை விட மாட்டேன் என்று கடுப்புடன் அவனிடம் சென்றாள்..

"என்ன மகி பேபி கண்ணாமூச்சி விளையாட்டு காட்டறீயா?? அதுவும் என்கிட்டயே??" என்று பின்னால் இருந்து குரல் வந்ததும் திரும்பிய வேந்தன் நிலாவை பார்த்ததும் பதிலேதும் சொல்லாமல் பைக்கை எடுக்க போக, வண்டியின் சாவியை எடுத்தவள் அவனை திமிராக பார்த்தாள்..

"ப்ச் இப்ப உனக்கு பிரச்சனை???" என்று எரிச்சலுடன் கேட்ட வேந்தனிடம், "நீதான்டா பெரிய பிரச்சனை.." என்றாள் அலுத்து கொண்டே..

"நீ நினைக்கறது நடக்காதுனு நான் முதல்லயே சொல்லிட்டேன்.. உன் அப்பனுக்கு இது தெரியறதுக்கு முன்னாடி கிளம்பு" என்று அலட்சிய பார்வையில் வேந்தன் சொல்ல, "இப்ப என்ன அந்த மனுசன் தான் உனக்கு பிரச்சனையா?? அவரை சம்மதிக்க வெச்சா நீ சம்மதிப்பீயா??" என்று கேட்டாள் சிடுசிடுப்புடன்..

"இது என்ன விளையாட்டா?? அவங்களுக்கு சம்மதம்னா உனக்கும் சம்மதமானு கேட்க?? வாழ்க்கைமா வாழ்க்கை.. அதான் எனக்கு பிடிக்கலனு சொல்லிட்டேனல்ல?? திரும்ப திரும்ப வந்தா காதல் எல்லாம் வராது எரிச்சல் தான் வரும்" என்று சினத்துடன் சொன்னவனின் வார்த்தைகள் பெண்ணவளை தீண்டவே இல்லை என்பதை போல் கையை கட்டி கொண்டு நின்றிருந்தாள் சாதாரணமான முகத்துடன்..

"கத்தி முடிச்சிட்டிங்களா மகி பேபி.. நீங்க கத்தறதுக்கு எல்லாம் எனக்கு ரோசமே வராது அதுவும் உன்கிட்ட வரவே வராது... இப்படி பேசி என்னைய துரத்தி விட்டரலாம்னு பிளான்ல இருந்தா இப்பவே அதையை விட்டு வேற பிளான் யோசிச்சுக்க மகி பேபி.. அந்த ஹிட்லர் திட்டற திட்டுக்கு ரோசம் வந்துருந்தா நான் எல்லாம் இன்னேரம் நூறு கோடி தடவைக்கு மேல தூக்குல தொங்கிருக்கனும்" என்றாள் விழிகளை உருட்டி..

மேலும் அவனின் விழிகளை கூர்பார்வை பார்த்து மந்தகாச புன்னகையை அதில் தவழ விட்ட நிலா, "நீ எப்ப என் காதலை ஏத்துக்கறீயோ அது வரைக்கும் உனக்காகவே நான் இருப்பேன்.. இந்த ஜென்மத்துல நீ மட்டும் தான் என் கணவன்.. வேற யாரும் என்கிட்ட நெருங்க கூட முடியாது.. நீ நினைக்கலாம் பார்த்ததும் எப்படி காதல் வருதுனு.. அதுக்கான விடையை தான் நானே இன்னும் யோசிச்சுட்டு இருக்கேன்.. எனக்கு தெரிஞ்சதும் உனக்கு சொல்றேன் மகி பேபி.. டாட்டா" என்று சாவியை அவன் கையில் திணித்து விட்டு மான்குட்டியை போன்று துள்ளி ஓடியவளை பே வென்று வேந்தன் பார்த்திருக்க, அவன் மனமோ "என்ன பொண்ணுடா இவ???" என்று நினைக்க, "ச்சை" என்று தனது எண்ணத்தை மாற்றியவன் அங்கிருந்து கிளம்பினான்..

இதை அனைத்தையும் ஒரு ஜோடி கண்கள் நோட்டமிட்டு கொண்டிருந்ததை யாரும் அறியவில்லை போலும்!!?



தொடரும்...
 

சாஹித்யா வருண்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

பகுதி - 10




இவர்களை நோட்டமிட்ட கண்களுக்கு சொந்தகாரனோ உடனே ராசு எண்ணிற்கு அழைக்க, அவர் முக்கியமான வேலையில் இருந்ததால் இவனின் அழைப்பை ஏற்கவில்லை.. "ஐயாவூக வேற இப்படி பண்றாங்க??" என்று யோசித்து மறுபடியும் மறுபடியும் போன் செய்து பார்க்க, சிறிது நேரத்தில் அந்த எண் ஸ்விட்ச் ஆப் என்று வர. நொடிந்து கொண்டான்..

ராசு ஏதோ முக்கிய வேலையென வேந்தனை வேண்டாம் என்று விட்டு வேறு ஒரு டிரைவருடன் நேற்று இரவே கிளம்பி விட்டிருந்தார்.. இப்படி வெளியூர் ஏதாவது சென்றால் தன் மகளை மட்டுமில்லாமல் மற்றவர்களையும் அவர்களுக்கு தெரியாமல் கவனிக்க ஆள் ஏற்பாடு செய்து விட்டு தான் செல்வார்..

அதே போன்று இந்த முறையும் அவருக்கு நம்பிக்கையான ஆட்களுக்கு கட்டளையிட்டு சென்று விட, நிலாவையும் பகலனையும் பின் தொடர்ந்து வந்த ராமசாமி வேந்தனிடம் நிலா பேசிய அனைத்தையும் கேட்டு விட்டு ராசுவிற்கு அழைக்க முயல, அவர் தான் எடுத்தபாடில்லை..

நிலா பேசி விட்டு சென்றதில் இருந்து வேந்தனின் மனது ஏதோ போன்றே இருக்க, எதிலும் நாட்டமில்லாமல் தவித்து கொண்டிருந்தான் மனதளவில்.. இது ஏன் என்று அவனுக்கே விளங்காமல் தன்னைய சமன்படுத்தி கொள்ள முயன்றும் பலன் என்னவோ பூஜ்யம் தான்..

தோட்டத்தில் யோசனையில் அமர்ந்திருந்த வேந்தனை ஏதேச்சையாக பார்த்த வனிதா அவனிடம் வந்து "வேது கண்ணா" என்று மென்னையான குரலில் அழைக்க, அவரை பார்த்ததும் எழுந்து நிற்க முயன்றவனை அமர வைத்து தானும் அவன் அருகில் அமர்ந்தவர், "என்ன ஆச்சுடா..காலைல இருந்தே உன் முகம் சரியில்ல.. உடம்பு ஏதாவது சரியில்லையா?? நம்ம வேணா ஹாஸ்பிட்டலுக்கு போலாமா???" என்று அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டார்..

அவரை பார்த்து மென்புன்னகையை வீசியவன், "எனக்கு ஒன்னுமில்ல மேடம்.. மனசு தான் ஏதோ ஒரு மாதிரி இருக்கு அதான் ஏன்னு தெரில.." என்று உள்ளே சென்ற தோய்ந்த குரலில் சொன்ன வேந்தனின் தலையை ஆதரவாக கோதிய வனிதா, "நம்ம மனசு தான் நமக்கு முதல்ல எதிரியே" என்றார் அர்த்தத்துடன்..

"இதையை நானும் ஏத்துக்கறேன் மேடம்.." என்று பவ்யமாய் கை கட்டி சொன்ன வேந்தனை செல்லமாய் முறைத்து பார்த்தார் வனிதா..

பின்பு தயக்கமாக வேந்தன், "மேடம் கொஞ்சம் நேரம் கூட மடில படுத்துக்கட்டுமா???" என்று திணறலுடன் கேட்டவனின் கண்களில் அவ்வளவு வலி தென்பட, வனிதாவிற்கு பேச்சே வராமல் தலையை மட்டும் அசைத்ததும் கீழே அமர்ந்த வேந்தன் அவர் மடியில் தலை வைத்து படுத்து கண் மூடி தன்னை ஆசுவாசபடுத்தி கொள்ள முயன்றான்.. இதுதான் இவன் வாழ்வின் கடைசி நாள் என்பதை இவர்கள் அறியவில்லை போலும்!!!

ராசுவிற்கு மீண்டும் மீண்டும் ராமசாமி போன் செய்ய முயல, அவரோ மாலை நேரத்துக்கு பிறகு தான் போனையே எடுக்க, இவன் என்ன சொல்ல வருகின்றான் என்பதை கூட கேட்காமல் இவனை கிழிகிழிவென்று கிழித்து விட்டார்.. கட்சி அலுவலகத்தில் இந்த முறை இவருக்கு பதிலாக வேறு ஒருவர் தான் அந்த தொகுதியில் நிற்க வேண்டும் என்று முடிவாகி விட, ராசுவும் முடிந்த அளவிற்கு நானே நிற்கின்றேன் என்று காலையிலிருந்து எவ்வளவோ எடுத்து சொல்லியும் தலைவர் மசிவதாக இல்லை..

அந்த கோவத்தில் வெளியில் வந்தவர் இவன் சும்மா சும்மா அழைப்பதை பார்த்து கடுப்புற்று வாயிற்கு வந்தபடி திட்டி விட, அப்போதும் ராமசாமி பதிலேதும் பேசாமல் அவர் திட்டுவதை மௌனமாக வாங்கி கொண்டார் அவர் வாங்கி தரும் குவாட்டர் பாட்டிலுக்காக..

தன் கோவம் வடிந்ததும் என்னவென்று கேட்க, "ஐயா நம்ம சோடை போய்ட்டோமுங்க.. நிலா பாப்பா நம்மகிட்ட வண்டி ஓட்டறதுக்கு புதுசா வந்துருக்க அந்த பயலை காதலிக்கறேனு அது இதுனு பேசிட்டு இருந்ததை என் ரெண்டு கண்ணாலயும் பார்த்தேங்க.. ( அடேய் அப்ப மத்தவங்க மட்டும் என்ன அஞ்சாறு கண்ணைய வெச்சுட்டு திரியறோம்😈😈) அதுவ சொல்ல தானுங்க ஐயா நானு போனு போட்டேங்க" என்று பவ்யமாய் முழுவதையும் சொல்லி முடிக்க, அந்த புறம் இருந்த ராசுவுக்கோ கோவத்தில் நரம்பு அனைத்தும் புடைத்தது போன்று மாறியது..

அதே கோவத்தில் "நான் அங்க வர்றதுக்குள்ள அந்த ரெண்டு அநாதை பயலுகளும் ஊர்லயே இருக்க கூடாது.. நம்ம ஆளுகளை கூட்டிட்டுபோய் அவனுகளை முதல்ல அங்கிருந்து துரத்தி விடுங்கடா.. இனி ஒரு நிமிசம் கூட அந்த ரெண்டு பயலுகளையும விட்டு வெக்க கூடாது" என்று காட்டு கத்தலாய் கத்தியவர் போனை அணைத்து விட்டு வேட்டியை மடித்து கட்டி கொண்டே, "டேய் முனிசு சீக்கிரம் வண்டியை எடுடா.. எவ்ளோ சீக்கிரம் ஊருக்கு போக முடியுமோ அவ்ளோ சீக்கிரம் போவனும்" என்று கட்டளையை பிறப்பித்தவர், "என்ன தைரியம் இருந்தா என் பொண்ணையே காதலிப்பான் அந்த ஒன்னுமில்லாதவன்.." என்று கோவத்தில் பல்லை நரநரவென கடித்தார்..

மதியம் இருந்தே பகலனும் கவனித்து கொண்டுதான் இருந்தான் நிலாவை.. அவளிடம் இருக்கும் துள்ளல் சுத்தமாக வடிந்து போய் காணப்பட, ஏதோ சரியில்லை என்பதை மட்டும் உணர்ந்தவன் ரனுவிடம் மெதுவாக என்னவென்று கேட்க சொன்னான்..

ரனுவும் யோசனையாக "என்ன நிலா ஆச்சு.. நானும் பார்க்கறேன் நீ சரியா சாப்பிடவும் இல்ல ஏதோ யோசிச்சுட்டே இருக்கே?? உடம்பு ஏதாவது சரியில்லயா??" என்று அக்கறையாக கேட்ட ரனுவின் தோளில் சாய்ந்தவள், "தெரில காரு.. மனசுக்குள்ள என்ன என்னவோ பண்ற மாதிரி இருக்கு.. மனசும் படபடனு அடிக்கற மாதிரி இருக்கு" என்றாள் சிதைந்த குரலில்..

"ம்ம்ம்ம்க்கும் ஒரு அப்பாவியை போட்டு இப்படி படாபடுத்துனா அப்படிதான்டி இருக்கும்" என்று தோளை இடித்து கொண்டு பகலன் சொல்ல, இதற்கு மேல் நிலா சும்மா இருப்பாள் என்று நினைக்கிறீர்களா?? அவனை கலாய்த்தே ஒரு வழியாக்கி விட, இப்போது அவளின் மனது சிறிது தெளிவாய் இருந்தது..

ரனுவை வீட்டில் இறக்கி விட, இருவரையும் உள்ளே வர சொல்ல, நிலா திறக்க போன கார் கதவை லாக் செய்த பகலன், " எம்மா ஷியா மறுபடியும் இவ ஒரு பஞ்சாயத்தை கூட்டறதுக்கா?? நாங்க மறுபடியும் இன்னொரு நாள் வர்றோம்" என்று பாவமாக சொன்னவன் இறுதியில் அழகான புன்னகையுடன் அவளிடம் இருந்து விடைபெற்று கிளம்பினான்.. இதுதான் இவர்களை பார்க்கும் கடைசி தருணம் என்பதை இவளும் அறியலர் போலும்!!!

வீட்டில் அமைதியாக கண் மூடி அமர்ந்திருந்தவனின் கண்ணில் நிலாவின் உறுதியான முகம் வந்து செல்ல, படக்கென்று கண்ணை திறந்தவன் தன்னை தானே நொந்து கொண்டான்.. செழியனும் இதை கவனித்து கொண்டிருந்தாலும் எதுவும் கேட்டு கொள்ளவில்லை..

திடுதிடுவென இருபதுக்கும் மேற்பட்ட ஆட்கள் கையில் கட்டையுடன் உள்ளே வந்து அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் நொறுக்க, இவர்களுக்கு தான் ஒன்றும் புரியாமல் நிறுத்துங்க நிறுத்துங்க என்று கத்த, அவர்கள் தான் கேட்பதாய் இல்லை..

இதற்கு மேலும் பொறுமையில்லாமல் அவர்கள் எட்டி மிதித்த வேந்தன், "இப்ப நிறுத்தல இவன் கழுத்து தனியா வந்துரும்" என்று ஒருவன் கையில் கொண்டு வந்திருந்த அருவாளையே திருப்பி அவன் கழுத்திலேயே வைத்து கர்ஜனையாய் கத்த, "என்ன பூச்சாண்டி வேலை காட்டறீயா???" என்று வேந்தனை ஒருவன் அடிக்க நெருங்க, அவனை தீக்குழம்பாய் முறைத்தவன், கழுத்தில் வைத்து பிடித்திருந்த அருவாளை நொடி நிமிடத்தில் சரக்கென்று ஒரே இழுவாய் இழுத்து விட, அந்த ஆளோ ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தான்..

அவனின் செயலில் அடிக்க வந்தவன் மட்டுமின்றி மற்றவர்கள் சிறிது நடுங்கி போய் பின்வாங்கி விட, அருவாளை வாயில் பிடித்த வேந்தன் சேரில் கிடந்த தன் சட்டையை எடுத்து அணிந்து கொண்டு "இப்ப வாங்கடா பார்க்கலாம்.. எனக்கு எப்பவும் பயங்காட்டறது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது.." என்றான் காட்டத்துடன்..

பயந்து ஓடினால் ராசு தங்களை கொன்றாலும் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து நின்றவர்கள் செழியனை பார்த்ததும் ஒருவன் சட்டென அவனை இழுத்து கழுத்தில் கத்தியை வைத்து விட, வேந்தனோ பதறி விட்டான்..

"அவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு அப்பறம் யாரும் உயிரோட இருக்க முடியாது.." என்று அவர்களை சுட்டெரித்தவாறே சொன்ன வேந்தனை பார்த்து நக்கலாய் சிரித்தவர்கள், "அதுக்கு முன்னே இவனோட உசுரு காத்துல பறந்துருக்கும்" என்று விட்டு சிரிக்க, தன் தம்பிக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று சிறிது பயந்தவன் கோவத்தை விட்டு விட்டு "இப்ப நான் என்ன பண்ணனும்" என்றான் கண்ணை மூடி திறந்து..

"அப்படி வா வழிக்கு.. எங்க கிட்டயே உன் வேலையை காட்டறீயா?? ஒன்னுமில்லாதவனுக்கு என்ன ஐயாவூக பொண்ணு கேட்குதோ?? ஐயாவூக வர்றக்குள்ள இங்கிருந்து ஓடிரு இல்ல உன் உசுரு போகாது இவனோட உசுரு தான் போவூம்.. இப்பவும் எதாவது எடுக்கு மடக்கா பண்ணலாம்னு யோசிச்சே அவ்ளோதான் சொல்லிபுட்டேன்.. ஒழுங்க ஊரை விட்டு ஓடற வழியை பாரு.." என்று ஒருவன் சொன்னதை கேட்டதும் தான் வேந்தனுக்கே விளங்கியது எதற்கு இவர்கள் இப்படி செய்தார்கள் என்றே!!

"எல்லாம் அந்த லூசுனால.. நான்தான் முதல்ல இருந்தே சொன்னேன் கேட்டாளா அவ?? எனக்கு வர்ற கோவத்துக்கு" என்று நினைத்து பல்லை கடித்தவன் இவர்கள் மேல் இருந்த கோவம் முழுவதும் நிலாவின் மீது கொழுந்து விட்டு எரிய தொடங்கியது..

பின்பு அதே கடுகடுப்புடன்," உன் ஐயாவோட பொண்ணு என் பின்னால சுத்துனா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?? முடிஞ்சா போய் அந்த பொண்ணுகிட்ட சொல்லி புரிய வெச்சு தாராளமா வேற ஒருத்தருக்கு கட்டி வைங்க எனக்கு எந்த கவலையும் இல்ல.. இனி நீங்க இருக்க சொன்னாலும் எனக்கு இந்த ஊரும் வேணாம் உங்க ஐயா கொடுத்த பெரிய வேலையும் வேணாம்.. என்னவோ உங்க ஐயாவூக தான் பெரிய மகாராணியை வளர்த்தி வெச்சிருக்கற நினைப்பு??? நீங்க சொல்றது என்னடா நானே சொல்றேன் எனக்கு அந்த லூசு வேணாம்.." என்று தெனாவட்டாய் ஆரம்பித்தவன் இறுதியில் அலட்சியமாக சொல்லி முடித்தான்..

அப்படி இருந்தும் கோவம் இன்னும் குறையாமல் உள்ளுக்குள் ருத்ரதாண்டவம் ஆடி கொண்டிருக்க, தலையை அழுத்த கோதிய வேந்தன், "இங்க பாரு உங்களுக்கும் எனக்கு எந்த சண்டையும் இல்ல.. இப்ப என்ன நாங்க இந்த ஊரை விட்டு போகனும் அவ்ளோ தானே.. போறோம் போதுமா?!" என்று அழுத்தமாய் சொன்னதும் தான் செழியனின் கழுத்தில் இருந்து கத்தியையே எடுத்தனர்..

"உனக்கு எதுவுமில்ல தானேடா??" என்று வேந்தன் வாய் வழியாய் கேட்காமல் இருந்தாலும் அவனின் கண்ணிலேயே அந்த கேள்வி தொக்கி நிற்க, தனக்கு எதுவுமில்லயென்று மெலிதாய் புன்னகைத்தான் செழியனும்..

அவனின் கன்னத்தை தட்டியபடி உள்ளே சென்று துணிகளை எடுத்து வைக்க தொடங்க, செழியனும் பெருமூச்சுடன் உடைந்ததை சுத்தபடுத்த தொடங்கினான்.. இவ்வளவு நாட்களில் வேந்தனை பற்றி தெரிந்த வைத்திருந்ததால் அடியாட்களும் ரத்த வெள்ளத்தில் கிடந்தவனை தூக்கி கொண்டு வெளியில் சென்று விட்டனர்..

ஒருபுறம் நிலாவின் சின்னபிள்ளை தனமும் கள்ளகடபமில்லாத அன்பும் செழியனை கலங்க வைத்தாலும் எப்போதும் தன் அண்ணன் தான் முக்கியம் என்று நினைத்து அவர்களிடம் சொல்ல சொல்லி துடிதுடிக்கும் தன் மனதை அடக்கியவன் கிளம்ப தயாரானான்..

வேந்தனை பற்றியே நினைத்து கொண்டு நிலா அமர்ந்திருக்க, யாருக்கும் தெரியாமல் அவள் அறைக்கு வந்த வேந்தன் கதவை சாத்திவிட்டு, அவளை குறும்பாய் பார்த்து கொண்டே சத்தம் வராதவாறு அவளின் பின்னால் சென்றவன் அவளின் கழுத்தில் கூச்சத்தை ஏற்படுத்த, என்னவோ என்று பதறி துள்ளி எழுந்து நின்றாள் பேதையவள்..

அங்கு வேந்தனை எதிர்பார்க்காத நிலாவின் சிப்பி விழிகளோ ஆச்சரியத்தை கூட்டி அவனின் காந்த விழிகளையே பார்த்திருக்க, அவளிடம் நெருங்கியவன் அவளின் இடையை அழுத்தி பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்தான்..

இன்னும் திகைப்பில் இருந்து மீளாமல் அப்படியே நிலா நின்றிருக்க, அவளின் முடியை காதோடு ஒதுக்கி விட்டு அவளின் காது மடலை அழுத்தமாய் இருந்த தன் உதட்டை கொண்டு கூச செய்து தன் குறும்புகளை காட்ட அவனின் செயலில் பேதையவளின் உடம்பே சில்லிட்டு குளிர்ந்து போனது..

அவனின் செயலில் பெண்ணவளின் கன்னம் வேறு செவ்வானமாய் சிவந்து போயிருக்க, அதை தனது கரம் கொண்டு மெலிதாய் தடவியவனின் சட்டையை கொத்தாய் பற்றிய நிலா கண்ணை இறுக்கமாய் மூடி கொண்டாள்..

அவளையே பார்த்தவன் அவளின் சிவந்திருந்த கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதிக்க, ஆடவனின் சவரம் செய்யபடாத தாடி வேறு அவளின் கன்னத்தை குத்தி குத்தி கூசத்தை ஏற்படுத்தி அவளை நிலைகுலைய செய்தது என்னவோ உண்மை தான்..

வேந்தனின் ஒவ்வொரு செயலும் நிலாவை இன்னும் அவன் மேல் பித்து கொள்ள செய்ய, கண்ணை திறந்தவன் அவன் மார்பிலேயே சாய்ந்து கொண்டு, "உண்மையாவே நீ என்கிட்டயே வந்துட்டியா மகி பேபி.." என்று அத்தனை காதலாய் கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் தன் காதல் காவியத்தை பெண்ணவளின் உதட்டில் வரைய தொடங்கி இருந்தான் அவளின் காதலன்...



தொடரும்...
 

சாஹித்யா வருண்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


பகுதி - 11



முழித்தபடி நிலா கனவில் மிதந்து கொண்டிருக்க, ராசுவிற்கு இவளின் காதல் விசயம் தெரிந்து விட்டது என்பதை அங்கு வேலை செய்யும் மயில்சாமியின் மூலம் அறிந்த பகலன் பதறி அவளிடம் வந்தான்.. அவளோ விழித்து கொண்டே கனவுலகத்தில் மிதந்திருப்பதை நினைத்து இவனுக்கு கொலைவெறியே உண்டானது..

"அடியேய் பிசாசே" என்று அவளை உலுக்க, அப்போது தான் சுய நினைவிற்கு வந்தவள் பேந்தபேந்தவென முழித்தவள், பின்பு "அடேய் நல்ல கனவு கண்டேன்டா அதையை இப்படி கெடுத்துட்டு விட்டுட்டியே??" என்று அவனை அடிக்க வந்தவளின் கையை பிடித்து நறுக்கென அவள் தலையில் இரண்டு கொட்டி கொட்டியவன், கடுப்புடன்," இங்க நீ கனவு கண்டுட்டு உக்காந்துரு அங்க அவனுக ஊரையே காலி பண்ணிட்டு போறாங்க உன்னைய பெத்த தகப்பனால??" என்றது தான் தாமதம் அதிர்ச்சியில் நிலாவிற்கு மயக்கமே வந்து விட்டது..

"சொல்றதை தெளிவா சொல்லி தொலைடா" என்று பதைபதைப்புடன் கேட்டவளிடம் மயில்சாமி சொன்னதை சுருக்கமாக சொன்னதும் அவனை தாண்டி கொண்டு வேகமாக வெளியில் ஓடினாள்..

இன்னும் ராசு வந்திருக்கவில்லை.. இருந்தும் அடியாட்கள் முன்னால் நின்றிருந்தபோதும் அவர்களுக்கு தெரியாமல் சுவர் ஏறி குதித்து வெளியில் ஓடியவள் உயிரை கையில் பிடித்து கொண்டு உலகிலுள்ள அனைத்து கடவுளிடமும் "அவங்களைய என் கண்ணுல காட்டு" என்று வேண்டியவாறு கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் அவர்கள் எங்குவென்று சல்லடையிட்டு தேடினாள்..

இவளின் வேண்டுதலை கடவுள் நிராகரிக்காமல் வேந்தனையும் செழியனையும் இ்வள் பார்த்து விட, போன உயிர் திரும்ப வந்தது போன்று அவர்களை பார்த்ததும் மகிழ்ச்சியில் வழிந்த கண்ணீரை கூட துடைக்காமல் அவர்களின் முன்னே சென்றாள்..

நிலாவை பார்த்ததும் செழியன் அதிர்ந்து விட, வேந்தனோ தனக்குள் பொங்கிய சினத்தை கட்டுபடுத்தி கொண்டு அவளின் முகத்தை கூட பாராமல் கிளம்புவதிலேயே குறியாக இருந்தான்..

அவனின் பொறுமையை நிலா சோதித்தபடி, "மகி மகி என்னைய உங்க கூட கூட்டிட்டு போய்ருடா.. நீ இல்லாம நானும் இங்க இருக்க மாட்டேன்.. நானும் உன் கூடயே வர்றேன்" என்று வழிந்த கண்ணீருடன் அவனின் கையை பிடித்தது தான் தாமதம் பளாரென்று அவளை அறைந்து தீப்பார்வையில் முறைத்தவன் "போய்ரு" என்றான் கடுமையான குரலில்..

அவன் அடித்ததை கூட பொருட்படுத்தாமல் "என்னையும் கூட்டிட்டு போடா" என்றே நிலா நிற்க, வேந்தனின் கோவம் தான் எல்லை மீறி சென்று கொண்டிருந்தது.. முதலிலேயே செழியனின் கழுத்தில் கத்தி வைத்த கோவத்தில் இருந்தவன் இப்போது நிலா இப்படி பிடிவாதம் பிடிப்பதை பார்த்து கோவத்தை விட எரிச்சலே அதிகம் வந்தது..

செழியனோ என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தபடியே இருக்க, "என் பொறுமையை சோதிக்காம இடத்தை காலி பண்ணு.. உன் அப்பனுக்கு நீ இங்க இருக்கறது தெரியறதுக்கு முன்னாடி வீட்டுக்கு போய் சேரர வழியை பாரு.. அவ்ளோதான் சொல்லுவேன்" என்று கோவத்தை கட்டுபடுத்தி கொண்டு காட்டமாய் சொல்ல, "அவருக்கு பயந்து எல்லாம் என்னால உன்னைய விட முடியாது நானும் உன் கூட தான் வருவேன்" என்றாள் அதே பிடிவாதத்துடன்..

இதில் வேந்தனின் கோவம் எல்லை மீறி சென்று விட, மீண்டும் அவளை சப்பென்று அறைந்தவன் அவள் தலைமுடியை கொத்தாய் பற்றி, "என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல?? பொண்ணுனு அமைதியா இருந்தா ரொம்பதான் பேசற?? ஏதோ விளையாட்டு தனமா பண்றேனு அமைதியா இருந்தேன் பாரு அதுதான் இவ்ளோ பெரிய பிரச்சனையா மாறிருக்கு?? நானாடி உன் பின்னாடி சுத்துனேன்?? நீயே சுத்திக்கிட்டா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?? என்னவோ நான்தான் உன்னைய கட்டாயபடுத்துனா மாதிரி பண்ணிட்டு இருக்கான் உன் அப்பன்.. எவ்ளோ தைரியம் இருந்தா என் தம்பி கழுத்துலயே அவன் கத்தியை வெச்சிருப்பான்.. அவனுக்கு மட்டும் ஏதாவது ஆகிருந்தா அவனை திருப்பி குடுத்துருப்பீயாடி?? இத்தனை பிரச்சனையும் உன்னால தான்டி வந்ததே?? இனி என் கண்ணு முன்னாடியே மட்டும் வந்தராத.. கொல்றதுக்கு கூட தயங்க மாட்டேன்" என்று காட்டு கத்தலாய் கத்திய வேந்தனை எந்த சலனமின்றி பார்த்தாள் நிலா..

"அண்ணா கையை எடுங்க" என்று வேந்தனின் கையை எடுக்க முயல, அத்தனை வலியிலும் சிறிது கூட வலியை முகத்தில் காட்டாமல் எந்த உணர்ச்சியையும் வெளியில் காட்டாமல் அவனையே பார்த்தவாறு நிலா நின்றிருக்க, வெறுப்போடு அவளின் தலைமுடியில் இருந்து கையை எடுத்தவன் அனலாய் கொதித்து கொண்டிருந்த கோவத்தை அடக்க முடியாமல் வண்டியை ஓங்கி குத்தி விட்டு தலைமுடியை அழுத்த கோதினான்..

"இங்கிருந்து அவளை போக சொல்லுடா இல்ல எனக்கு வர்ற கோவத்துக்கு கொன்னாலும் கொன்னுருவேன்" என்று நிலாவின் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் அத்தனை வெறுப்பாய் சொன்னவனின் குரலில் மொத்தமாய் பெண்ணவள் இடிந்து போய் நின்றாள்..

இமைகளில் தேங்கி நின்றிருந்த கண்ணீர் அவளின் கன்னத்து மென்மையை நனைத்து கொண்டு வழிந்தோட, "உண்மையாவே என்னைய பிடிக்கலயா??" என்று உயிரில்லாத ஜடமாய் தேய்ந்த குரலில் கேட்டவளை நேருக்கு நேராய் பார்த்த வேந்தன், "ஆமாடி உன்னைய பிடிக்கல அதுக்கு என்ன இப்ப?? என் மனசுல ஏற்கனவே ஒருத்தி இருக்கா.. அவ மட்டும் தான் இந்த ஜென்மத்துல எனக்கு மனைவி.. அவளை தேடிதான் நான் இங்கயே வந்தேன்.. போதுமா???" என்று கத்தினான் ஆக்ரோஷமாய்..

வேந்தனின் பதிலில் நிலாவுக்கோ உலகமே இரண்டாக பிளந்தது போன்று இருந்தது.. "அப்ப உண்மையாவே என் மகி பேபிக்கு என்னைய பிடிக்கல?? அவன் இன்னொருத்திக்கு சொந்தமானவனா??" என்று நினைத்தே போதே அவளின் இதயத்தை யாரோ ஊசியாக குத்துவது போன்று இருக்க, நிற்காமல் வழிந்தோடிய கண்ணீருடன் வெற்று பார்வையில் அவனை ஒருமுறை தன் கண்களில் நிரப்பி கொண்டு சுருதியே இல்லாமல் கால் போன போக்கில் நடந்து சென்றாள்..

ராசுவின் மேலிருந்த ஆத்திரம் அனைத்தும் நிலாவின் மீது திரும்பி தான் என்ன செய்கின்றோம் என்பதை கூட அறியாத அளவில் அவன் கோவம் அவனின் கண்ணை மறைத்திருந்தது.. தன் அண்ணனின் கோவத்தை பற்றி அறிந்திருந்ததால் எதுவும் பேசாமலே அமைதியாக நின்று விட்டான் செழியன்..

இப்படியும் அப்படியுமாய் நடந்தபடி தன் கோவத்தை குறைத்த வேந்தன், பெருமூச்சுடன் "கிளம்பலாம்" என்று செழியனிடம் கூற, அவனும் பதிலேதும் பேசாமல் அமைதியாக எழுந்து நின்றான்..

அதற்குள் வீட்டிற்கு வந்ததும் ராசு நிலாவை தேடி அவள் அறைக்கு செல்ல, அவள் அங்கில்லாததை உணர்ந்து தன் ஆட்களை விட்டு அவள் எங்குவென்று தேட சொல்ல, அவர்களும் வீடு முழுவதும் தேடி பார்த்து விட்டு நிலா இல்லையென்று கையை விரித்தனர்..

வேந்தன் தான் தன் மகளை அழைத்து சென்று விட்டான் என்றெண்ணி கோவத்தில் அவன் எங்கிருந்தாலும் உயிரோடு விடாதீங்க என்று தன் ஆட்களிடம் கத்திவிட்டு அவரும் அவர்களுடன் கிளம்பினார்..

ராசுவின் ஆள் ஒருவன் வேந்தனை பார்த்து விட்டு அவன் இருக்கும் இடத்தை சொன்னதும் அவனை பற்றி தெரிந்திருந்ததால் ஐம்பதுக்கும் மேற்பட்ட அடியாட்களுடன் கிளம்பினார்..

வேந்தனும் செழியனும் கிளம்பும்போது சரியாக அவர்களை வழி மறைத்து கார் நின்றது.. "எவன்டா அது??" என்று கர்ஜனையாக வேந்தன் கத்தியதும் காரில் இருந்து இறங்கினார் ராசு..

அவரை பார்த்ததும் உள்ளுக்குள் கொழுந்து விட்டு நெருப்பு எறிய தொடங்க.. பிரச்சனை வேண்டாம் என்று அமைதியாக செல்ல நினைத்த வேந்தனை விடாமல் ராசுவின் ஆட்கள் சுத்தி வளைத்தனர்.. அவனின் முன்பு வந்த ராசு, "எங்கடா என் பொண்ணு??" என்று கடுமையான குரலில் கேட்டதும்," அதைய என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்" என்றான் அசட்டையாக..

"உனக்கு தெரியாம என்ன உன் அப்பனுக்கா தெரியும்.. ஒழுங்க என் பொண்ணை எங்க மறைச்சு வெச்சிருக்கீனு சொல்லு" என்று காட்டு கத்தலாய் ராசு கத்த, வேந்தனும் அமைதியாக இல்லாமல், "யோவ் உன் பொண்ணை வெச்சு நான் என்னயா பண்ண போறேன்.. உன் பொண்ணே என் பின்னாடி சுத்துனதுக்கு நான் எப்படியா காரணமாக முடியும்?? உன் பொண்ணு ஒன்னும் உலகமகா ராணி இல்ல அவளை ஒழிச்சு வெச்சு உன் கிட்ட விளையாடே?? இங்கிருந்து கிளம்ப சொன்னே அதான் கிளம்பிட்டேனல்ல?? தேவையில்லாம வந்து கத்திட்டு இருந்தீங்க அவ்ளோதான்" என்றான் எச்சரிக்கையுடன்..

"ஹான் என்னடா பண்ணுவே?? அவ்ளோ பெரிய ஆளா நீ?? முடிஞ்சா இங்கிருந்து உயிரோடு போடா பார்க்கலாம்" என்று அவனிடம் சவால் விட்டவர் தன் ஆட்களிடம் கண்ணை காட்ட, முதலிலேயே அதீத கோவத்தில் இருந்தவன் இப்போது ருத்ரதாண்டவம் ஆட தயாராக இருப்பது போன்று அவனின் நாடி நரம்பெல்லாம் புடைத்து கண்கள் சிவக்க தன்னை அடிக்க வந்தவர்களை ஒரே மூச்சில் பந்தாட, அவனின் ஒரே அடியில் அடியாட்களால் எந்திரிக்க கூட முடியவில்லை..

அத்தனை பேரையும் சமாளித்து அவர்களின் அடியில் இருந்து தப்பித்த வேந்தன், எப்படியாவது செழியனை இங்கிருந்து அழைத்து கொண்டு கிளம்பினால் போதும் என்றே நினைத்து முடிந்த வரைக்கும் அவர்களிடம் சிக்காமல் தப்பித்து கொண்டிருந்தவனின் தலையில் இரும்பு கம்பியில் ராசு அடித்து விட, தலையில் வழிந்த ரத்தத்தை கூட பொருட்படுத்தாமல் செழியனையாவது அங்கிருந்து அனுப்பி விடனும் என்றெண்ணி அவனை சைகையிலேயே செல்ல சொன்னான்..

செழியனோ அவன் சொல்வதை காதில் வாங்காதவனாய் "அண்ணா" என்று கத்தியபடி அவனிடம் வந்து பதறி துடிக்க, செழியனையும் அடிக்க வந்த ராசுவின் முட்டியிலேயே ஓங்கி ஒரு குத்து விட்டதும், அவர் வலியில் காலை பிடித்து கொண்டு கீழே விழுந்தார்.. தன்னையே அடித்து விட்டான் என்ற சினத்தில் "டேய் ரெண்டு பேருமே உயிரோடு இருக்க கூடாது போட்டு தள்ளுங்க" என்று கர்ஜித்ததும் மற்றவர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு கட்டையால் அடிக்க, முடிந்த வரைக்கும் செழியனை காப்பாத்த நினைத்த வேந்தனுக்கு அவன் கண் முன்னேயே செழியன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து உயிரே அவனை விட்டு செல்வது போன்று இருந்தது..

எதற்கும் கலங்காதவன் தன் உயிருக்கு மேலான தம்பியை அதுவும் உயிருக்கு போராடும் நிலையில் பார்த்தவனுக்கு இப்போதே தன் உயிர் பிரிந்து விட்டால் என்ன?? என்று கூட தோன்றியது..

தான் கால் போன போக்கில் நடந்து சென்ற நிலாவுக்கு தன் தந்தை தன்னை காணவில்லை என்றால் வேந்தனை தான் ஏதாவது செய்து விடுவார் என்று மூளைக்கு எட்டியதும் மூச்சு வாங்க ஓடி வந்தாள்.. தன் தந்தையை பார்த்ததும் வேகமாக அவர்களிடம் வர, வந்தவளை பார்த்து கொண்டே வேந்தன் கண் மூடவும் சரியாக இருந்தது.. அவர்களிருவரின் நிலைமையை பார்த்து திக்பிரம்மையில் உறைந்தே போனவள்.. "மகி" என்று அந்த தெருவே அதிரும்படி கத்த, அவளின் கத்தல் அவனின் செவியில் விழுந்தபோதும் கண்ணை தான் அவனால் திறந்து முடியவில்லை.. "இத்தனைக்கும் காரணம் இவ ஒருத்தி தான்" என்று அவளின் மீது எண்ணிடங்கா கோவம் திரும்பியது..

தன் மகளை பார்த்ததும் சப்பென்று அவளை அறைந்து, "உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா என்னைய மீறி இவன் கூட போக நினைப்பே???" என்று தீம்பிழம்பாய் கொதித்தவரை கண்டு கொள்ளாமல் வேந்தனிடம் செல்ல போக, அவளை இழுத்து மறுபடியும் ஒரு அறை விட்ட ராசு, "டேய் அவனுக உயிரோட இருந்தாலும் சரி இல்லைனாலும் சரி அப்படியே புதைச்சுருங்க" என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட்டதும், "அப்பா அவன் மேல எந்த தப்பும் இல்லப்பா எல்லாம் என்னால தான்.. நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன் அவனை விட்டுருங்க" என்று அவரின் காலை பிடித்து கொண்டு கதறினாள் நிலா..

அவளை உதறி தள்ளிய ராசு "என்னடா இன்னும் நின்னுட்டு இருக்கீங்க இவனுக இருந்த தடமே தெரிய கூடாது.. விடியறதுக்குள்ள எல்லாத்தையும் கச்சிதமா முடிச்சிருக்கனும்" என்று பேசுவது வேந்தனுக்கும் கேட்டு கொண்டு இருந்தாலும் எந்திரிக்க அவனின் உடம்பு ஒத்துழைக்க மறுக்க, இது வரைக்கும் அழுது கொண்டிருந்த நிலா ருத்ரமாதேவியாய் எழுந்து நின்றாள்..

எழுந்ததும் ஒருவன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி "எவனாவது அவன் மேல கைல வெச்சு பாருங்க.. உயிரோடு இருக்க மாட்டீங்க" என்று கண்கள் சிவக்க நிலா கத்த, அவள் என்ன செய்து விடுவாள் என்று அசட்டையாக எண்ணி வேந்தனிடம் செல்ல போன ஒருவனின் முதுகில் கத்தியை இறக்கினாள்..

இதில் ராசு கூட விக்கித்து நிற்க, "இனி அவன் மேல யாராவது கை வெச்சீங்க அப்பனு கூட பார்க்க மாட்டேன் போட்டு தள்ளிருவேன்.. என்ன உங்களுக்கு மட்டும்தான் கொலை பண்றது எல்லாம் தெரியுமா?? தெரியாம தான் கேட்கறேன் அவன் உங்களைய என்ன தான் பண்ணுனான்?? இந்த மனுசனோட பேச்சை கேட்டுட்டு ரெண்டு பேருத்தோட உயிரை எடுக்க பார்க்கறீங்களே உங்களைய எல்லாம் கொன்னு புதைச்சா கூட தப்பில்லை.." என்று கத்தினாள் படுபயங்கரமாக..

ராசுவை தீப்பார்வையில் பார்த்த நிலா, "நீ எல்லாம் மனுசனா முதல்ல?? என்ன நடந்துச்சுனு கேட்காம அநியாயமா இப்படி பண்ணிருக்கே?? இப்ப சொல்றேன் கேட்டுக்கோ அவன் என்னைய காதலிக்கவும் இல்ல கூட்டிட்டு போகவும் நினைக்கல.. எல்லாத்துக்கும் காரணம் நான் தான்.. நான் மட்டும் தான்.. சும்மா இருந்தவனை நான் தான் காதல்னு பேருல டார்ச்சல் பண்ணி அவன் பின்னாடி சுத்துனேன்.. இப்ப அதுக்கு என்னங்கற??" என்று தெனாவெட்டாய் கேட்க, அவளின் தகப்பனோ இவளையும் கொன்று விடும் வெறியில் முறைத்தார்..

அவரின் முறைப்பை சிறிது கூட அசட்டை செய்யாதவள், "என்ன இப்ப என்னையும் கொன்னு புதைப்பே அவ்ளோதானே?? அதுக்கு மேல உன்னால என்ன பண்ண முடியும்.. என் மனசுல இருக்கற அவன் மீதான காதலை அழிக்க முடியுமா?? உன்னைய மாதிரி பணம் பணம்னு பணம் பேய் பிடிச்சு சுத்தல.. சொல்ல போனா அவன் என்னைய காதலிக்கவே இல்லயே.. என்ன நாங்க பெத்தவங்களைய விட்டுட்டு வர்றோம்னு சொன்னா கூட்டிட்டு போய்ருவாங்களா?? ஏன் அவங்களுக்குனு ஒரு மனசு இருக்காதா??? நான்தான் பைத்தியம் மாதிரி பண்ணி அநியாயமா ரெண்டு பேருத்தை கொன்னுட்டேன்" என்று சொன்னதும் அவளின் கண்ணில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வெளியேறியது..

"ஏன்ப்பா இப்படி பண்ணுனீங்க?? அவன் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்காப்பா.. அவளோட சேர விடாம இப்படி பண்ணிட்டிங்க.. அவன் எந்த தப்பும் பண்ணலப்பா.. நானே அவன் பின்னாடி சுத்தியும் என்னைய ஒரு பொருட்டா கூட மதிக்காம அவனோட காதலியை தேடிட்டு இருக்கான் ப்பா.. அவனை போய்.. எப்ப அவன் மனசுல வேற ஒரு பொண்ணு இருக்கானு தெரிஞ்சுச்சோ அப்பவே அவனை விட்டு விலகிட்டேன்.. அவன் சொன்ன வார்த்தையிலயே தெரிஞ்சுச்சு அவன் எந்த அளவுக்கு அந்த பொண்ணை காதலிக்கறானு?? அவங்களைய சேர விடாம இப்படி பண்ணிட்டிங்களே?? அவன் மனசுல நான் இல்லனாலும் அவன் நல்லா இருக்கனும்னு தான் நினைச்சேன் ஆனா இப்ப???? " என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் மொத்தமாய் உடைந்து போய் பொத்தென்று அமர்ந்து கதறி கதறி அழுதாள்..

பட்டென்று எழுந்து, "நீங்க திருந்த மாட்டிங்கனு தெரியும்.. ரெண்டு உயிர் என்னால போய்ருச்சு.. அந்த குற்றவுணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம வாழ என்னால முடியாது.. உங்களுக்கு பெத்த பொண்ணை விட உங்க மானமும் மரியாதையும் தான் பெரிசுனு நினைப்பீங்கனு எனக்கும் தெரியும்.. அவன் இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது.. அவன் போன இடத்துக்கே நானும் போறேன்.." என்று ரவுத்திரமாய் கத்தியவள் கையில் வைத்திருந்த கத்தியால் தன் கழுத்தை ஒரு இழுவாய் இழுத்து விட, கண்கள் சொருகும் நிமிடத்தில் கூட தன் மனம் கவர்ந்தவனை கண்ணில் நிரப்பி கொண்டதும் அவள் நினைவில் பகலன் வந்து போக, "எனக்கு தெரியும்டா நான் இல்லாம நீயும் இருக்க மாட்டேனு.. ஆனா அம்மாவுக்காகவும் அத்தைக்காகவும் நீ இருந்து தான் ஆகனும்.. இன்னொரு ஜென்மம் இருந்தா உனக்கு மகளாக வர்றேன்டா மாமா..லவ் யூ சோ மச்" என்று நினைத்த போதே அவளின் கண்ணில் கண்ணீர் வழிந்து நிலத்தை தொட்டதும் அவளும் கண் மூடினாள்..

நொடி நிமிடத்தில் நடந்து விட்ட நிகழ்வில் அனைவரும் உறைந்து நிற்க, இவர்களை தேடி கொண்டு பகலனுடன் மற்ற இரு தாய்மார்களும் வந்து விட, கண்முன் நடந்த நிகழ்வில் மனம் பதைபதைத்து "நிலா" என்று கத்தி கொண்டே செல்வி அவளிடம் ஓடினார்..

அவளை தன் மடியில் கிடத்தி கொண்டு "நிலா எந்திரிடி உனக்கு நான் கூட வேணாமா?? உன் கூடயே என்னையும் கூட்டிட்டு போய்ருக்கலாம் தானே??" என்று அவளை கட்டி கொண்டு அழுக, இத்தனையும் கண்ணை திறக்க முடியாமல் கிடந்த வேந்தனின் செவியிலும் விழுக, கலகலப்பாக வலம் வந்த நிலாவின் சிரித்த முகம் அவனை அறியாமலே கண்முன் வந்ததும் கண்ணோரத்தில் கண்ணீரும் வழிந்தது..







தொடரும்..
 

சாஹித்யா வருண்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

பகுதி - 12



நிலாவை தன் மடியில் கிடத்தி கொண்டு செல்வி அழுக, ஆசையாக வளர்த்திய நிலாவை அப்படி பார்த்தும் ஒரு சொட்டு கண்ணீரை கூட சிந்தாமல் ஆவேசமாக மாறிய வனிதா, "யோவ் நீ எல்லாம் மனுசனாயா?? பெத்த பொண்ணை இப்படி அநியாயமா கொன்னுட்டியே?? இந்த அளவுக்கு வெறி பிடிச்ச மிருகமா இருப்பனே எதிர்பார்க்கல.. வேந்தனும் செழியனும் உன்கிட்ட வேலை பார்த்ததை தவிர வேற என்ன பாவம் பண்ணுனாங்க இப்படி ரத்த வெள்ளத்துல அவங்க உயிரை காவு வாங்கிட்டியே?? நல்லா இருப்பீயா நீ.. சத்தியமா சொல்றேன் நீ நல்லாவே இருக்க மாட்டே.. அத்தைமா அத்தைமானு எவ்ளோ துறுதுறுனு ஓடிட்டு இருந்த என் பொண்ணை இப்படி கொன்னுட்டியே??" என்று அவரின் சட்டையை கொத்தாய் பற்றியவள் எரிமலை குழம்பாய் தகித்து நின்றார்..

அலட்சியமாக அவளை தள்ளி விட்ட ராசு," இந்த ஓடுகாலி இல்லாம உன்னாலயும் இருக்க முடிலனா நீயும் அவ கூடயே போய் தொலை.. ஒரு பாரம் குறைஞ்சுருச்சுனு சந்தோசப்பட்டுக்குவேன்" என்றது தான் தாமதம் புயலாக அவரிடம் வந்த பகலன், "யோவ் யாருக்கு யாரு பாரமா இருக்காங்க நீதான்யா இத்தனை பேருத்துக்கும் பாரமா இருக்கே.. கேடுகெட்ட நீயே இந்த உலகத்துல இருக்கறப்ப என் அம்மாவும், என் அம்முவும் எதுக்குயா சாகனும்.. அவங்க மூணு பேருத்துக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும் அப்பறம் இருக்கு உனக்கு.." என்றான் காட்டமாக..

பகலனின் மிரட்டலில் சிரித்த ராசு, "இன்னுமா இவங்க உயிரோடு இருக்காங்கனு நினைச்சிட்டு இருக்கே?? இவனுக செத்தே அரைமணி நேரமாகுது.. அப்பறம் இருக்குனு சொன்னீயே அது என்னனு இப்பவே சொல்லு" என்று கேலியாய் கேட்டவரை கொலைவெறியில் குத்தி கிழிப்பதை போன்று முறைத்திருந்தான் பகலன்..

"ச்சை நீ எல்லாம் மனுசனு சொல்லிராதே.. மிருகம் கூட கொஞ்சம் இரக்கமுள்ளதா இருக்கும் ஆனா நீ எல்லாம்???" என்று அருவெருப்புடன் பார்த்தார் வனிதா..

பகலனோ, "உங்களுக்கு கட்சியோட சப்போர்ட்டு இருக்குனு தானே இப்படி ஆடறீங்க அதையை உங்க கிட்ட இருந்து பிடுங்கி உங்களைய ஒன்னுமில்லாம மாத்தல நான் பகலனே இல்ல.." என்று விழிகள் தெறிக்க அவரை முறைத்தவன் போனை எடுக்க முயல, அதற்குள் அவனின் போனை பிடுங்கிய ராசு, "அது வரைக்கும் நான் வேடிக்கை பார்த்துட்டு இருப்பீனு நினைக்கறீயா??" என்று கேட்டார் சிரித்தவாறு..

"டேய் செத்ததுகளை இருந்த இடம் தெரியாம பண்ணிட்டு தூக்கி இதுகளை எங்கயும் விடாம ரூமுல அடைச்சு வைங்கடா.." என்று பகலனின் போனை கையில் சுழற்றியவாறு தன் அடியாட்களிடம் ராசு கட்டளையிட, "அவங்க மேல யாராவது கை வெச்சீங்க அவ்ளோதான்" என்று பகலன் ருத்ரமூர்த்தியாய் மாறி நின்றான்..

"ப்ச் இவன் பேசறதை எல்லாம் எதுக்கு கேட்டுட்டு?? விடியறதுக்குள்ள நான் சொன்னதை முடிச்சிருக்கனும்" என்று ராசு சொன்னதும் அடியாட்கள் நிலாவிடம் நெருங்க, என்னதான் பகலனுக்கு அடிதடி எல்லாம் பழக்கம் இல்லை என்ற போதிலும் தன்னிடம் வம்பு செய்ய இனி தன் அம்மு இல்லையே என்று நினைத்ததும் வந்த ஆத்திரத்தில் அவர்களை பந்தாடினான்..

பகலனின் அதிரடியில் ராசுவே சிறிது திகைத்திருக்க, இது எதையும் உணராது செல்வியோ நிலாவின் முகத்தையே வெறித்திருந்தார்.. வனிதாவும் வேந்தனின் கன்னத்தை தட்டி அவனை எழுப்ப முயல, அவன்தான் கண் விழிப்பதாய் இல்லை..

இது சரி வராது என்றுணர்ந்த ராசு வேட்டியை மடித்து கட்டி கொண்டு பகலனை பின்னால் இருந்து தாக்க, திடீர் தாக்குதலை அவனால் சமாளிக்க முடியாமல் தடுமாறி விழுந்தான்..

"இவனை உங்களால அடிக்க முடில த்தூதூ திங்கறது மட்டும் கிலோ கணக்குல தின்னுங்க" என்று அடியாட்களை பார்த்து உருமிய ராசு, "செத்தவனை எழுப்புனா எப்படி எந்திரிப்பான்" என்று வனிதாவை பார்த்து கேலியாக சொன்னதும், பொசுக்கி விடும் பார்வையில் வனிதா அவரை முறைத்து விட்டு வேந்தனை எழுப்ப முயன்றாள்..

"டேய் இன்னும் என்னங்கடா நின்னுட்டு இருக்கீங்க?? செத்ததுகளை குழி தோண்டி புதைச்சிருங்க.. இதுகளையும் இழுத்துட்டு போய் அடைச்சி வைங்க" என்று கட்டளையாக ராசு கர்ஜித்ததும், அடியாட்கள் தங்கள் வேலைகளை தொடங்கினார்..

வனிதாவை இழுக்காத குறையாக இழுத்து கொண்டு இருவர் செல்ல, "வேந்தா எந்திரிடா.. வாய்க்கு வாய் அம்மா அம்மானு கூப்பிட்டியே இப்ப இந்த அம்மா கூப்பிடறது உனக்கு கேட்கலயா?? கண்ணை முழிச்சு பாரு கண்ணா" என்று அவர் வாய் விட்டு கதறியது எல்லாம் காற்றோடு காற்றாய் கலந்து மறைந்து போனது..

நிலாவை விட்டு செல்வி எந்திரிக்க மறுக்க, "என் பொண்ணை யாராவது என்கிட்ட இருந்து பிரிக்கனும்னு நினைச்சீங்க கத்தில குத்திருவேன்" என்று நிலாவின் கையிலிருந்த கத்தியை எடுத்து ஒருவனின் காலை கிழித்து விட, மற்றவர்கள் பின்வாங்கி விட்டனர்..

"ச்சே இன்னைக்குனு இவளுகளுக்கு எல்லாம் எங்க இருந்து தான் வீரம் வருதோ??" என்று கடுகடுப்புடன் செல்வியிடம் சென்ற ராசு அவள் குத்த வருவதையும் பொருட்படுத்தாமல் அவளின் கையை இறுக்கி பிடித்தவர் சப்பென்று அறைந்ததில், செல்வி மயங்கியே விட்டார்..

"இத்தனையும் உன்னால தான்டா" என்று ராசு வேந்தனை எட்டி மிதித்து, "சீக்கிரம் தூக்கிட்டு போங்கடா.. இது வெளில மட்டும் தெரிஞ்சுச்சு குடும்பத்தோட பெட்ரோல் ஊத்தி எரிச்சுருவேன் நியாபகத்துல வெச்சுக்கங்க" என்று மிரட்டலுடன் அதட்டியவரின் வார்த்தையில் அனைவரும் கட்டுண்டு வேந்தனுடன் சேர்ந்து நிலாவையும் செழியனையும் தூக்கி சென்றனர்..

கண்கள் சொருகி கீழே கிடந்த பகலன் இத்தனையும் கேட்டு "அம்மு அம்முமா" என்று மனதிலேயே அதற்றியவன் எந்திரிக்க முயன்றவனின் உடலோ அதுக்கு ஒத்துழைக்க மறுத்தது..

தன்னை தானே நொந்து கொண்டவனின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வெளியேறி நிலாவை ஏக்கத்துடன் நோட்டமிட்டது அவனின் விழிகள்.. அவள் கண் விழித்து இவர்களை துவம்சம் செய்து விட மாட்டாளா?? என்று!!

பகலனை தன் காலால் நிமிர்த்திய ராசு, "என்ன ராசா அந்த ஓடுகாலி எந்திரிக்க மாட்டாளானு ஏக்கமா இருக்கோ?? சொல்ல போனா அவளை நான்தான் கொன்னுருக்கனும் ப்ச் எனக்கு வேலை வெக்காம அவளே செத்துட்டா.. இதுதான் அவ விதினா யாருனால மாத்த முடியும்" என்று பாவமாக சொல்வதை போன்று தெனாவட்டாய் சொன்னவரின் வார்த்தைகள் இவனின் இதயத்தை பதம் பார்த்து, "அதே மாதிரி உன் சாவு என் கைல தானு எழுந்திருந்தா அதையை எப்படி உன்னால மாத்த முடியும்" என்று வாய் வழியாக சொல்ல தான் நினைத்தான் இருந்தும் அவனால் முடியவில்லை.. மனத்தினுள்ளயே சொன்னவனின் மனதும் அதை ஆமோதிப்பதாய் எக்கச்சக்கமாக துடித்து எகிறி அதன்பின் அமைதியானது..

"அங்க உன் ஆத்தாளும் அத்தையும் மயங்கி தான் போனாங்களா?? இல்ல ஒரேடியா போய்ட்டாங்களானு தெரில.. ஜோ சேடு அப்படி போகலனாலும் சீக்கிரம் உங்க மூணு பேருத்தையும் அந்த ஓடுகாலி கிட்டயே அனுப்பிறேன் கவலைபடாத" என்று பகலனின் கன்னத்தை தட்டி சொன்ன ராசுவை பார்த்து சுள்ளென்ற தோன்றிய வலியை விட, அனலாய் தகித்து நின்ற நெருப்பை தான் அணைக்க வழியில்லாமல், "ஆடற வரைக்கும் ஆடுங்க ஒருநாள் மொத்தமா அடங்கி தான் போவீங்க" என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி சொன்னான் பகலன்..

அப்பவும், "அப்படிங்கறே?? ம்ம்ம்ம் பார்த்துக்குவோம்" என்று கிண்டலுடன் கூறியவர் இருவரிடம் கண்ணை காட்ட, பகலனையும் தூக்கி கொண்டு சென்றனர்.. அவன் சென்றதும் தான் அடக்கி வைத்திருந்த கோவத்துடன் தரையை மிதித்து, "என்னையவே ஏமாத்த பார்க்கறீங்களா?? யாரு அடங்குவாங்கனு பார்ப்போம்.." என்று வெற்றி சிரிப்பை இதழில் பரவ விட்டவர் மீசையை திருகி கொண்டு நின்றார்..

செல்வி மயக்கத்தில் இருக்க, தலையில் அடி வாங்கியதால் பகலனாலும் கண்ணை திறக்க முடியாமல் போக, வனிதாவோ இருவரையும் பார்த்து கதறி கொண்டிருந்தார்..

வனிதா கதறுவது பகலனின் செவிபறையை அடைந்ததும் சிரமப்பட்டு கையை தூக்கி வனிதாவின் கையை ஆறுதலாக பற்றியவன், பின் கழுத்தை பிடித்து கொண்டு எழுந்தமர முயன்றான்..

"ரொம்ப வலிக்குதாடா?? அந்த மனுசன் சொன்ன மாதிரியே நிலாவை உயிரோட கொன்னுட்டாங்களா?? இனி என்னைய அவ அத்தைனு கூப்பிட மாட்டாளா????? அவளை இனி பார்க்க முடியாதா??" என்று அடுக்கடுகாய் கேள்வி எழுப்பிய வனிதாவை சலனமின்றி வெறித்திருந்தான் பகலன்..

"நீயும் எதுவும் பேசாமயே என்னைய கொல்லாத.. நிலாவை என்ன பண்ணுனாங்க.." என்று சட்டையை பற்றி அவனை உலுக்கி கதறியவரிடம் இவனும் என்னதான் சொல்வான்.. தன் கண் முன்னாலே நிலாவை பெத்த தகப்பனே புதைக்க சொன்னதை இவனால் சொல்ல தான் இயலுமா?? தன் அம்மு தங்களுடன் இனி இல்லை என்பதை பகலனாலே ஏற்று கொள்ள முடியாத போது இவர்களால் ஏற்று கொள்ள இயலுமா என்ன???

"எங்களைய கூட நினைச்சு பார்க்காம உன் காதல் தான் பெரிசுனு அவன் கூட போய்ட்டியல்ல??" என்று நிலாவை நினைத்த நிமிடமே ஆறாய் பெருகி நின்றிருந்த கண்ணீர் அவனையறியாமலே கன்னத்தை தாண்டியது..

இன்னும் மயக்கத்தில் இருக்கும் செல்வியை நினைத்து மனது கனமுற்று "எனக்கே ஆறுதல் தேவைபடும் போது எப்படிமா உங்களுக்கு ஆறுதல் சொல்ல முடியும்" என்று கேள்வியை கண்களில் தாங்கி தன் தாயை வெறித்தான்..

வனிதாவும் அழுது அழுது ஓய்ந்து ஒரு ஓரத்தில் அமர்ந்து விட, அழுக கூட திரணியற்று இன்னும் அப்படியே பகலன் இருக்க, அப்போது தான் கண் விழித்த செல்வி எழுந்ததும் "நிலாமா இந்த அம்மாவை பிடிக்காம தான் என்னைய விட்டுட்டு போய்ட்டியா??" என்று தலையில் அடித்து கொண்டு கத்தி அழுதவரை பார்த்து இவர்களுக்கும் வற்றாத நதியாய் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது..

"நீங்க இந்த மனுசனை பத்தி சொல்றப்ப எல்லாம் நான் நம்பாம விட்டதுக்கு தான் கடவுள் என்கிட்ட இருந்து என் பொண்ணை பறிச்சுட்டாரு.. வாழ வேண்டிய வயசுல அவ போய்ட்டா.. சாக வேண்டிய வயசுல நான் வாழனுமா?? கடவுளே உனக்கு எல்லாம் இரக்கமே இல்லயா?? என் உயிரை வேணா எடுத்துட்டு என் பொண்ணை வாழ விடுமா" என்று கத்தியவர் கடுங்கோவத்தில் அங்கிருந்த அனைத்தையும் தட்டி விட்ட செல்வி இறுதியில் தலையை பிடித்து கொண்டு கதறி கதறி அழுக தொடங்கினார்..

தட்டு தடுமாறி எழுந்த பகலன் அவரிடம் சென்றதும் அங்கிருந்த பொருளை தூக்கி எறிந்த செல்வி, "என்கிட்ட வராத.. என்னைய பிடிக்காம தான் என் பொண்ணு திரும்பி வர முடியாத இடத்துக்கே போய்ட்டா.. என் பக்கத்துல வராதே என்னைய பிடிக்காம போய்ரும்" என்று சொன்னதையே திருப்பி திருப்பி அதற்றியவர் மீண்டும் மயங்கி சரிந்து விட்டார்..

அவரின் நிலைமையை காண முடியமால் வனிதா உள்ளுக்குள்ளயே கண்ணீர் வடிக்க, இன்னொருபுறம் தான் உயிராய் வளர்த்திய நிலாவை நினைத்தும், வேந்தனுடன் செழியனுடனும் சில நாள் பழகியது தான் என்ற போதிலும் அவர்களின் அம்மா என்ற ஒரே வார்த்தைக்காக தன் மகனாக நினைத்து நெஞ்சில் சுமர்ந்தவரின் மனதிலோ ரத்த கண்ணீரே வந்தது..

சிறிது நேரம் கழித்து கர்வமுடன் உள்ளே வந்த ராசு, "என்ன எல்லாரும் அந்த ஓடுகாலியை நினைச்சு கவலை படறீங்களா?? நீங்க கவலை பட்டும் அவ திரும்பி வர போறதுல.. இப்பதான் அந்த ஓடுகாலியோட சேர்ந்து அவனுகளையும் அடக்கம் பண்ணிட்டு வந்தேன் வேணும்னா போய் அஞ்சலி செலுத்திட்டு வாங்க" என்று சாதாரணமாக சொன்னவரின் பேச்சில் கொழுந்தளித்த வனிதா, "யோவ் பெத்த பொண்ணை கொன்னா முதல் அப்பன் நீயா தான்யா இருப்பே.. அவ காதலிச்சது உண்மையாவே இருக்கட்டும்.. ஆனா வேந்தன் காதலிச்சதை நீ பார்த்தீயா?? உன் அவசர புத்தில இப்ப மூணு உயிரு போய்ருக்கு அந்த குற்றவுணர்ச்சி கொஞ்சம் கூட இல்லாம இப்படி கேவலமா பேசறே?? ச்சீ நீ எல்லாம் என் கூட பிறந்தவனு சொல்ல நாக்கு கூசுது.." என்றவர் அவர் முகத்திலேயே காறி உமிழ்ந்தும் அவரின் கோவம் தான் குறைவதாக இல்லை..

வனிதாவின் செயலில் ஆத்திரமுற்ற ராசு, ஏய் என்று அவரின் முடியை கொத்தாய் பற்றி அறைய வந்தவரின் கையை மின்னல் வேகத்தில் எழுந்த பகலன் பிடித்திருந்தான்.. "முன்னாடி மாமானு ஒரு மரியாதைக்காக தான் அமைதியா இருந்தேன்.. இப்ப நீ மனுசனே இல்லனு தெரிஞ்சதும் அமைதியா இருப்பேனு நினைக்காதே.. ஒழுங்கு மரியாதையா கையை எடு" என்றபடி கோவத்தில் மூச்சிரைத்தான்..

"என்னங்கடா பூச்சாண்டி வேலை காட்டறீங்களா?? உங்க மிரட்டலுக்கு எல்லாம் பயபடற ஆளு இந்த ராசு இல்லடா.. பெத்த பொண்ணை விட இந்த ராசுவுக்கு எப்பவும் மானம் மரியாதை தான் முக்கியம்.. அதையை காப்பாத்திக்க எந்த எல்லைக்கும் வேணாலும் போவேன்.. விட்டா உங்களைய கொல்ல கூட தயங்க மாட்டேன்" என்று சாவகாசமாக பேசி சென்றவரின் வார்த்தையில் பகலனுக்கு கோபம் கரை புரண்டு அவரின் கன்னத்தில் இடியை இறக்கினான்..

தன்னை அடித்து விட்டானா??? என்று ராசு அதிர்ச்சியில் தன் கன்னத்தை தொட்டு பார்கக, "என்னயா நீ எங்களைய கொல்ற வரைக்கும் என் கை என்ன தேங்கா பறிச்சுட்டு இருக்குமா?? என் மாமா தானேனு நினைச்சு நீங்க பண்றதை எல்லாம் பொறுத்துட்டு அமைதியா இருந்ததுக்கு பிரதிபலனா அநியாயமா மூணு பேருத்தை அதுவும் என் கண் முன்னாடியே கொன்னுட்டே.. இதுல உன் மானத்தை காப்பாத்திக்க எங்களையும் கொன்னுருவேனு மிரட்டறே?? ஹான் உன்னால என்ன பண்ண முடியும்.. மிஞ்சி போனா ஒரு மாசத்துக்கு அடைச்சு வெக்கலாம் ஆனா நீ சொலை பண்ணுன விசயத்தை வாழ்நாள் எல்லாம் மறைச்சு வெச்சு உன் மானத்தை காப்பாத்திக்க முடியுமா?? இப்ப சொல்றேன் கேட்டுக்கோ நீ பண்ணுன தப்புக்கு தண்டனை வாங்கி தந்தாலும் சொகுசா உள்ள உக்காந்து தின்னுக்கலாம்.. அப்படி பண்ணவே மாட்டேன் யாருமில்லாம ஒரு வேளை சோத்துக்கு ரோடு ரோடா உன்னைய அலைய விடல.. விடல எல்லாம் இல்ல விடுவேன் கண்டிப்பா விடுவேன்.. இது என் அம்மு மேல சத்தியம்" என்று கண்கள் சிவக்க நரம்புகள் துடிக்க வெகுண்டு எழுந்த பகலனின் வார்த்தைகள் ராசுவினுள் ஒரு வித அச்சத்தை பரவ விட்டது என்னமோ உண்மைதான்...

இருந்தும் "அதுக்கு உங்களைய நான் உயிரோடு விட்டா தானேடா.. உங்கமேல பாசமாவது பாயாசமாவது.. மண்ணெண்ணெய் ஊத்தி தீ வெச்சிட்டு வீடே தீப்பிடிச்சு எறிஞ்சுருச்சுனு சொல்றதுக்கு ஒரு நிமிசம் கூட ஆகாது.. கொஞ்ச நாளைக்கு செத்து போனவளை நினைச்சு வருத்தபட்டு அழுகுங்க அதுக்கு அப்பறம் நானே உங்களைய அனுப்பி விடறேன்.." என்று கொஞ்சமும் இரக்கமில்லாமல் சொன்ன ராசுவின் வார்த்தையை கேட்க விரும்பாத பகலன்," இப்படி சொன்னா பயந்துருவோம்னு நினைப்பா?? என் அம்முவே இல்லாத உலகத்துல எங்களுக்கு என்ன வேலை.. நாங்க சாகறது எல்லாம் பெரிசே இல்ல.. அதுக்கு முன்னாடியே நீயும் சொகுசா வாழ்ந்துக்கோ.. ஏன்னா நாங்க சாகறதுக்கு ஒரு நிமிசத்துக்கு முன்னாடி கூட உன் மானத்தை கப்பலேத்திட்டு ஊரே என்ன உலகமே உன்னைய காறி துப்ப மாதிரி செஞ்சுட்டு தான் சாவேன்.. சும்மா இங்க நின்னுட்டு வெட்டியா சவால் விட்டுட்டு??" என்றான் ஏளன நகையுடன்..

பகலனின் பேச்சில் ராசுவிற்கு கோவம் வந்தாலும் இவனிடம் பேசுவது வேலைக்காகது நேரடியாகவே செயலை காட்டுவோம் என்றெண்ணி அவனின் மேல் தீப்பார்வை ஒன்றை காட்டி விட்டு, கதவை பட்டென்று இழுத்து சாத்தியவர் அறையையும் பூட்டி விட்டு சாவியுடன் அகன்றார்..

இவ்வளவு நேரம் எரிமலை குழம்பாய் தகித்திருந்த பகலன் "அம்மா உண்மையாவே அம்மு இனி வர மாட்டாளா??" என்று மனதளவில் நொறுங்கி போனான்..

இதை கேட்டதும் வனிதாவின் விழிகளிலும் நீர்ப்படலம் சுரக்க, தன்னை ஆசுவாசபடுத்தி கொண்ட பகலன், "பச் அம்மா அழுதா நடந்தது எதுவும் இல்லனு ஆகிராது.. கடவுள்னு ஒருத்தர் இருக்காரு" என்று தன் அன்னையை அதட்டி விட்டு இன்னும் மயக்கத்தில் இருந்த செல்வியை கட்டலில் படுக்க வைத்த பகலன் "இனி என்ன செய்வது" என்று யோசிக்கலானான்..



தொடரும்..


 
Status
Not open for further replies.
Top