All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"என் நெஞ்சில் நீயோ பனித்துளி!" - கதை திரி

Status
Not open for further replies.

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

விஷ்ணுலேஸ்வரியை சுற்றி பின்னப்பட்ட அதே கதை தான்.... முந்தைய தலைப்பை காட்டிலும் இது பொருத்தமாக இருக்கும் என தோன்றிய காரணத்தால் சிற்சில மாற்றங்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.... இது அதை காட்டிலும் சற்றே மாறுபட்டது.... மாந்தர்களும் தான்... சுவாரஸ்யம் குன்றாமல் கொடுக்கிறேன்.... உங்கள் ஆதரவுகளை வழங்குங்கள்.....

நாயகி - விஷ்ணுலேஸ்வரி

நாயகன் - ??????


அன்புடன்,

ஜூஹி:)

'எல்லா புகழும் இறைவனுக்கே'
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெஞ்சில் நீ 01
விண்மீன்கள் கண்சிமிட்டி விளையாடிய இரவினை கண்கொட்டாமல் பார்த்திருந்தாள் அவள்... உள்ளுக்குள் ஆயிரமாயிரம் எண்ணங்கள் கரைபுரண்டு ஓடிய போதும் அகம் தன்னிலே எதுவும் வெளிப்படாமல் சாமர்த்தியமாக மறைத்திருந்தாள்.

அதிலெல்லாம் கில்லாடி அவள்… அதில் மட்டுமே தான்… பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால் மற்றவை எல்லாவற்றிலும் வெறும் பூஜ்யம். தோற்றுப் போன வாழ்க்கை படமாக ஓடியது… உதட்டை கடித்து உடைப்பெடுத்த கண்ணீர் சுரப்பிகளை லாவகமாக தடுத்து அணை போட்டு நிறுத்தி விட்டாள்.

ஏனோ அழக்கூட விரும்பவில்லை அவள்… அழதழுது காலமெல்லாம் ஓடிவிட மிச்சம் மீதி இருப்பதையாவது காப்பாற்றிக் கொள்ள விரும்பினாளோ என்னவோ…?

மறக்க நினைப்பவை எல்லாமும் வீறுகொண்டெழுந்து ஆட்டிப்படைக்க, கட்டுப்பாட்டையும் உடைத்து வெளியேறியது அவள் கண்ணீர்… வாழ்க்கை தனக்கு எதை வைத்துக் காத்திருக்கிறது என்பது புரியாமல் மலங்க மலங்க தொலைதூரத்தை வெறித்தது அவள் பார்வை.

இத்தனைக்கும் ஓர் சாம்ராஜ்யத்தினை ஒற்றையாக கட்டியாண்டு கொண்டிருக்கிறாள்… அதன் சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்ல, இறக்கி வைத்திட வேண்டி கெஞ்சியது அவள் உடலும் மனமும்.

அவள் ஒன்றும் பிறந்தது முதல் பணக்காரியில்லை… சாமான்யப் பெண் அவள். இன்றோ பலபேருக்கும் சம்பளம் கொடுக்கும் முதலாளி. அன்றிருந்த சுகம் இன்றில்லை… அதற்காக வேண்டி ஊமையாய் ஓலமிட்டது அவளுள்ளம். முடியாதே… விட முடியாத புலிவாலை அல்லவா பிடித்துவிட்டாள். பயணித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம்…

விரக்தியில் நெளிந்தது அவள் இதழ்கள். எங்காவது கண்காணாத இடம் நோக்கி சென்றிட மாட்டோமா? எளிமையான வாழ்க்கை வாழ்ந்திட மாட்டோமா? ஏக்கங்கள் பலநூறு அவளுள்… இருந்தும் எதையும் செய்யமுடியாத சுழலில் சிக்கிக்கொண்டு தவிக்கிறாள்.

தன்னகச் சுமையை யாரிடம் இறக்கி வைப்பதென்றறியாமல் தன்னுள்ளே புலம்பியவளையும் கலைத்தது, எங்கோ தொலைவில் இசைமீட்டிச் சென்ற பட்சிகளின் சல்லாபவோசை…

திடுக்கிட்டு நிமிர்ந்தவள் ஆழமான மூச்சிழுத்து தன்னை சமன்படுத்திக் கொண்டாள்.

சுவர்களுக்கும் கண்கள்,காதுகள் உண்டு… அவளது ஒவ்வொரு அசைவும் நூதனமாக கண்காணிக்கப்படுகிறது… சூதானமாகத் செயல்பட வேண்டுமவள்.

கசப்பான புன்னகை அதரங்களில் தவழ, விஸ்தாரமான படுக்கையறையினுள் நுழைந்தாள்.

எங்கும் பணம்… பார்க்குமிடமெல்லாம் அதன் செழிப்பு… வாரியிறைத்துக் கட்டியிருந்தார்கள் அவ்வறையை. அதைமட்டுமா? முழு வீட்டையும்… வீடென்பதா அதை? மாளிகை… மாடமாளிகை அது.

அதன் ஒவ்வொரு அங்குலத்திலும் பணத்தின் மகிமை… பழமையும் புதுமையும் கலந்த கலவை… தூரத்தில் இருந்து ரசிக்கும் போது தேவலோகம் போல் காட்சியளிக்கும் அம்மாளிகை உள்ளிருக்கும் நொடி நேரத்தையும் நரமாக்கியது.

அந்நரகத்தினுள் தான் அவள் வாழ்க்கை… வாழவேண்டிய கட்டாயம்.

அன்பிற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவள் இன்று, அதிகாரத்தின் பிடியில் கூண்டுக் கிளியாய் சிறைபட்டிருக்கிறாள்… எல்லாம் அவன் செயல்… அவன் நடத்தும் நாடகங்களில் அனைவரும் தலையாட்டி பொம்மைகள்… ஆட்டுவிக்க அவனிருக்க, தாளத்திற்கேற்ப ஆடிக்கொண்டிருகிறோம்… வாழ்வென்பது அதுதானே.

‘நடப்பதெதுவோ அது நல்லதாகவே நடக்கட்டும்’ என்றும்போல இரவின் மடியில் அமிழும் நுரை மெத்தையின் பிடியில் இறைவனிடம் மனதார வேண்டிக்கொண்டு விடாப்பிடியாக விழிகளை மூடி துயிலாழ்ந்தாள் பெண்.

*****

சரியாக அதே நேரம்… அங்கே… மும்பையில் அரங்கேறிக் கொண்டிருந்தது அம்மாபெரும் நிகழ்ச்சி… தொழிலதிபர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி.

கோலாகலமாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது… அத்தனை பேரும் பணத்தில் புரண்டு எழுந்தவர்கள்… செல்வாக்கில் உயர்ந்திருந்தவர்கள்… அரசியல் பின்னணியில் ஊறியவர்கள்… சாமான்யர்கள் அருகிலும் நெருங்கிட முடியாது… நேரலையை டிவியில் மட்டும் கண்ணாரக் கண்டு களித்திடலாம்.

விருதுகள் வழங்கும் நிகழ்வுகளின் இடையினில் ஆங்கில, இந்திப்பாடலுக்கு அழகு மங்கையர்கள் பலரும் அரைகுறை ஆடையில் நடனமாடிச்செல்ல… அலுப்புத்தட்டாமல் கரகோஷங்கள் காதை பிளந்தது.

சிறந்த நிறுவனத்திற்கான விருதை ….. மும்பையில் இருக்கும் அந்த பிரம்மாண்டமான நிறுவனம் தட்டிச்செல்ல, அதன் உரிமையாளர் பெருமிதத்துடன் கைகளில் பெற்றுக்கொண்டார்.

அடுத்து, “Then now, the annual Business and Young Entrepreneur for the year will be award presents”

“I am honoured to present the young entrepreneur award to, the most handsome Business Tycoon Mr. JK.”

“Please come upon stage to accept the award.” அழைத்தது அவனை… அவன் ஜேகே.

ஜீவித் க்ரிதிவ்… சென்னையை தலைமையாகக் கொண்ட பரந்துவிரிந்திருக்கும் ஜேகே குழுமத்தின் ஏகபோக வாரிசு அவன். பல்லாயிரக்கணக்கான தொழில்கள்… உலகம் சுற்றும் வாலிபன்… மிக முக்கியமாக ஆணழகன்.

இதழில் உறைந்த குறுநகையோடு எதிராளியை குறிபார்த்து அடிக்கும் வல்லமை கொண்டவன்.

இக்கணமோ… அகங்காரம் தலைக்கேற சூரியப்பிளம்பென கூரிய கண்கள் தீப்பொறியை கக்க, கோபத்தின் உச்சாணிக்கொம்பில் வீற்றிருந்தான்.

அவன் மட்டுமல்ல… அங்கிருந்த அவன் பாதுகாப்பு படையினர்களும் கூட கோபவெறியில் ஜேகேவின் கட்டளை ஒன்றுக்காக மட்டுமே காத்திருந்தனர்.

எதுவும் பேசினானில்லை அவன்… குறுக்கும் நெடுக்குமாக அறையை அளந்து கொண்டிருந்தான். அது மாத்திரமே முக்கியம் என்பதற்கிணங்க…

முகம் படர்ந்த கோபத்திற்கும் சிறிதும் குறையாமல் பிரித்தறிய முடியாத குறுநகையும் குடிகொண்டிருந்தது.

அடுத்த என்ன செய்வதென்ற யோசனையா அவனுள்? இல்லவே இல்லை… அதை முன்பே தீர்மானித்து விட்டான். இப்போது அவனுள் ஓடிக் கொண்டிருப்பது மற்றவர்களால் கணிக்க முடியாத ஒன்று.

இடதுபக்க புருவத்தை அழுந்த வருடிக் கொண்டான். அபூர்வமாய் அவனில் நிகழும் மேனரிசங்களில் அதுவும் ஒன்று…

செய்ய வேண்டியதையெல்லாம் சீராக திட்டமிட்டவன்… எதையோ யோசித்தவனாக அருகில் நின்ற ஆஜானுபாகுவானவனைப் பார்த்து தலையசைக்க, அதற்காகவே காத்திருந்தவனும் ஜேகேவின் முன் குற்றுயிராகக் கிடந்தவனின் பின்னந்தலையில் இரும்புத்தடி கொண்டு ஓங்கியடித்தான்.

ஆன் தெ ஸ்பாட் மரணத்தை தழுவி இருந்தான் அவன்.

முழுவீச்சில் ஆக்கிரமித்த கோபம் கரைய… குளிர் புன்னகை அவன் முகத்தில்.

“Punishment is not for revenge, but to lessen crime and reform the criminal.” தீர்க்கமாய் வந்தது அவன் குரல்…

அங்கிருந்த அனைவர்க்கும் கூறிய அவன் வார்த்தைகளின் அர்த்தம் தெளிவாகப் புரிந்திட, அவன் கீழ் வேலை பார்ப்பதையும் பெருமிதமாக உணர்ந்தனர். அதுவே அவன்… பேச்சிலும் செயலிலும் இருக்கும் தெளிவு யாரிடத்திலும் நன்மதிப்பை ஈட்டிக் கொடுத்திடும்.

“டிஸ்போஸ்…” ஒற்றை வார்த்தையை கடித்து துப்பியவன் நேரத்தைப் பார்க்க புருவங்கள் சுருங்கி மீண்டது. சில நொடிகள் மாத்திரமே…

அதற்குள் அவன் பணியாளர்கள் இன்றைய விழாவுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட விலையுயர்ந்த ஆடையை அவன் முன் கடைபரப்ப… அரக்கனாக திகழ்ந்தவன் கணநேரத்தில் ஆணழகனாக அவதாரமெடுத்தான்.

இத்தனைக்கும் முகத்தில் படர்ந்திருந்த கவர்ச்சியான புன்சிரிப்பு அகலவேயில்லை…

கருநீல நிற புல்சூட்டில் ப்ராண்டட் வாட்ச், ஷூ, கூலர் சகிதம் அசத்தலாக கிளம்பத் தயாராகியிருக்க, டிரைவர் உடன் காத்திருந்தது அவனது பி.எம்.டபுள்யூ செவென் சீரிஸ் கார். பின்னோடு அவனது பாதுகாவலர்கள்…

கம்பீரமாக பின்னிருக்கையில் அமர்ந்தவன் “டூ மினிட்ஸ்…” குறிப்புக் கொடுக்க, இரவின் அழகோடு திகழ்ந்த மும்பை நகரின் போக்குவரத்து நெரிசலை லாவகமாக கடந்து, விழா நடைபெறும் இடத்தில் தன் இயக்கத்தை நிறுத்தி இருந்தது அவன் கார்.

மெச்சுதலாக டிரைவரின் மேல் பார்வையொன்றை வீசியவனும் கோர்டின் பட்டனை ஸ்டைலாக போட்டுக்கொண்டே… அணிந்திருந்த குளிர் கண்ணாடியை உள்பாக்கெட்டில் சொருகிக்கொண்டு அலட்டலில்லாத நிமிர்வான நடையுடன் மேடை ஏறினான் விருதினை பெறுவதற்காக வேண்டி.

அங்கிருந்த அனைவர் மனதிலும் சிறு வியப்பு தோன்றாமலில்லை… கூடவே ஆச்சரியமும்… குறுகிய காலத்துக்குள் அவன் வளர்ச்சி மிகப்பெரிய சாதனை.

தொழிலை கையிலெடுத்து ஐந்தாண்டுகள் மாத்திரமே கடந்த நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் சிறந்த இளம் தொழிலதிபர்க்கான விருதை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டிருக்கிறான்…

அத்தனை சுலபத்தில் முடிந்திடாத காரியம் அது… அதையும்கூட தனித்துவமான தன் திறமையாலும் உயர வேண்டும் என்ற வெறியாலும் வெகுவிரைவிலே அடைந்து விட்டான் அவன்.

உள்ளுக்குள் பற்றியெரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க அசுர வளர்ச்சியை எய்தவனுக்குள்ளும் சிற்றளவும் குறைந்தபாடாயில்லை அத் தீ…

அத் தீயையும் அணைக்க அவன் மனம் வேண்டியது அதை அணைக்கும் கருவியை… தேடிக் கொண்டே தான் அவனும் இருக்கிறான்… கிட்டவில்லை அவன் கரங்களில்… அதற்காக பாதியில் தேடுதல் வேட்டையை விடுபவனும் அவனில்லை.

அவனுக்கான விருதை வழங்க மும்பையின் முதல்தர பணக்காரர்களுள் இடம்பிடித்திருக்கும் லால் அம்ரித் தாகூர் என்பவர் அழைக்கப்பட… வயதின் முதிர்ச்சி தளர்ச்சி ஏதும் வெளிபடாமல் கம்பீரமாக மேடையேறி அவனுக்கான விருதை வழங்கி சிறப்பித்தார் ஒருசில வாழ்த்துக்களுடன்…

கூடவே அவனும்… தன் உரையை தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலும் என மும்மொழியிலும் கூறியவன் இதழில் உறைந்த புன்னகையோடு கீழிறங்கி தனக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில் கால்மேல் கால் போட்டு தோரணையாக அமர்ந்து கொண்டான்…

கிடைக்கபெற்ற விருது அவன் வளர்ச்சியை அப்பட்டமாகப் பறைசாற்ற… கர்வமும் மமதையும் தலைதூக்குவதற்கும் பதில் வெறுமை குடிகொண்டது அவன் அகமெங்கும்…

ஒவ்வொரு வருடமும் அவன் கைகளில் தவழ்ந்து கொண்டே தான் இருக்கிறது இவ்விருதுகள். ஆனால் மகிழ்வு… அதுதான் அவனிடத்தில் இல்லை. வெறுமை, வெறுப்பு… அதற்காகவே தொழில் தன்னை மூழ்கடித்துக் கொள்கிறான்.

அதுவும், இரண்டு வருட அமெரிக்க வாழ்வு… தனிமையைப் போக்க கற்றுக் கொடுத்தது மது மற்றும் மாதுவின் துணையை. இப்போதெல்லாம், அதுவில்லாமல் இரவுகளை கழிக்க முடிவதில்லை அவனால்… பழக்கப்படுத்திக் கொண்டவை விடாமல் துரத்திக் கொண்டிருந்தது.

கண்கள் மேடையில் பதிந்திருந்தாலும் கைகள் செல்போனை நொண்டிக் கொண்டிருந்தது. இன்றைய இரவை போக்க வேண்டி… தன் சுயத்தை இழக்க வேண்டி நாடியது அவன் மனம் மாதுவை. அதை அனுப்பவது அவனின் வேலை.

அவன் மாஹேஷ்… பலருக்கும் அவன்தான் இந்தமாதிரி விஷயங்களுக்கு உதவுவது… சுருக்கமாக சொல்வதென்றால் மாமா வேலை பார்ப்பவன் அவன்… யார் எங்கிருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும் ஒரு மெசேஜில் அனைத்தையும் முடித்திடுவான்.

ஜேகே அவனுக்கு தான் தகவல் அனுப்பினான். புரிந்து கொண்டவன் கட்டை விரல் ஸ்மைலி ஒன்றை அவனுக்கு அனுப்பி வைத்தான். பிரித்தறிய முடியாத வகையில் நெளிந்து வளைந்தது அவன் இதழ்கள்.

புஃபே முறையில் டின்னர் ஏற்பாடாகியிருக்க… விழா முடிவு பெற்றதும் நவநாகரீக தோரணையில் கையில் தட்டுடன் அனைவரும் தங்களுக்கு வேண்டியதை எடுத்து உண்ணவாரம்பித்தனர்.

ஜேகே ஸ்பூனில் நாசுக்காக உண்டபடி, தொழில் முறையில் பலருடனும் பழக்கம் இருப்பதால் அங்கிருந்த முக்காவாசிப் பேர் நட்பு ரீதியிலும் அவனோடு கைகோர்க்கும் ரீதியிலும் அளவளாவிச் செல்ல… அவனுமே ட்ரேட்மார்க் புன்சிரிப்புடன் எதிலும் சிக்காமல் விலாங்குமீனைப் போல் ஒருசில வார்த்தைகளுடன் பேச்சை கத்தரித்துக் கொண்டிருந்தான்.

எதிலும் ஒன்றவில்லை அவன் மனம்… மாயச்சுழலில் சிக்கி தவிப்பது போல் பிரம்மை… தலையை உலுக்கிக் கொண்டான்.

ஆண்மையும் கம்பீரமும்… ஆறடிக்கும் மேல் அண்ணார்ந்து பார்க்கும் உயரம், கல்வெட்டினால் செதுக்கியது போன்ற முகவடிவம், கூர்மையான கருவிழிகள், கூரான நாசி, அலட்சிய மென்னகையில் நெளிந்த இறுகிய அதரங்கள், அளவாக வெட்டப்பட்ட சிகை, ட்ரிம்ட் செய்யப்பட்ட மீசை, தாடி என்று அசத்தலாக நின்றவன்பால் கன்னிப்பெண்கள் பார்வை மோகத்தோடு படிய கல்மிஷமாய் சிரித்துக் கொண்டான் ஜேகே.

எந்தளவுக்கு நல்லவர்களுக்கு நல்லவனோ… கேட்டவர்களுக்கு கெட்டவனோ… அதேயளவுக்கு பெண்களின் மீது அவன் கொண்டுள்ள அபிப்பிராயமும் வேறே.

பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்தவர்கள் அவர்கள்… காதலை விடினும் காமம் பெரிது அவர்களுள்… இதுவே அவன் கோட்பாடு.

அதனால்தானோ என்னவோ… உடல் ரீதியான கலவியாட்டத்தை ஆடியவன் மனதை இதுவரையில் யாருமே தொட்டுப் பார்க்கவில்லை. அத்தனை சுலபத்தில் அதற்கு அனுமதிக்க மாட்டாதவனும் தான் அவன்.

ஆனால், அதுவும் நிகழ்ந்ததே அவனுள்ளே… காலத்தால் மறக்கடிக்கப்பட்ட நிகழ்வுகள் சுனாமியென புரட்டி எடுக்க… கண்மூடி நிதானித்துக் கொண்டான்.

மறக்க வேண்டும்… எல்லாவற்றையும் மறக்க வேண்டும்… அதற்காகத்தானே இத்தனையும்… என்றெண்ணிக் கொண்டவனால் அதற்கு மேலும் அங்கிருக்க முடியவில்லை. மனதையும் மூளையையும் மழுங்கச் செய்ய மதுவும் மாதுவும் வேண்டுமென்று முரண்டு பிடித்தது அவனுடல்.

கிளம்பிவிட்டான்… மறுநிமிடமே கிளம்பிச் சென்று விட்டான். மும்பையில் இருக்கும் அவன் கெஸ்ட் ஹவுஸ்க்கு… அதுதான் அவனின் அந்தரங்க ராஜாங்கம் நடத்துமிடம்.

டிரைவரை தவிர்த்து தானே காரை ஓட்டிச் சென்றவன்… கார் கதவை ஓங்கியடித்து உளக்கொதிப்பை அதில் காட்டியபடி, வீட்டுக்குள் நுழைந்தவன் அணிந்திருந்த கோர்ட் மற்றும் சேர்ட்டை விசிறியடித்தவாறே… மினிபாரில் அடுக்கப்பட்டிருந்த உயர்தர மதுக்குப்பியை எடுத்து முழுமூச்சாக ஒரேயடியில் போத்தலோடு சேர்த்து தொண்டைக்குள் சரித்தான்.

அவனாக அவனிருப்பது தான் அவன் முதல் எதிரி… கொஞ்சமே கொஞ்சம் மனம் சொல்வதைக் கேட்கும் அவனுள்ளிருக்கும் நல்லவன் தவறான வழியில் அவன் செல்வதை தடுக்கத்தான் முயல்வான்… அதை விரும்ப மாட்டான் ஜேகே… அதாவது அக்கெட்டவன்.

அதை உள்ளுக்குள் புதைத்து, நல்லவனை சமாதி கட்ட உதவுவது மதுவின் போதை… காலியாகிப் போகின வரிசையாக பல குப்பிகள்… ஏறியதா போதை? ம்ஹூம்… இல்லை… இல்லவே இல்லை… மீண்டுமொரு போத்தலை சரித்தான். ஹெவி டோஸ்.

போதை மயக்கத்தில் விழிகள் சொக்கியது… அவனுடல், அப்போதும் தள்ளாட்டமின்றி ஸ்டெடியாக இருந்தது. தன்னிலை பிறழ்ந்து கொண்டிருக்க கேட்டது அழைப்பு மணியோசை. வாயில் கதவை திறக்க… அழகுப்பதுமையென அங்கு நின்றான் அவள். நெத்தேஷா… முன்னணி மாடல் பெண். கவர்ச்சிகளின் ராணி.

அந்த உயரத்தை எட்ட அவளுக்கு உதவியது கவர்ச்சியுடன் மிளிரும் அவள் உடல்… அதுவே அவளின் மூலதனம். மூடி மறைக்கப்பட வேண்டிய அங்கங்கள்… பார்வைக்கு இரையாக ஒய்லாக நிலைக்கதவில் சாய்ந்து நின்றிருந்தாள்.

எதையும் ரசித்து ஆராயும் நிலையை கடந்திருந்தான் அல்லவா அவன்? தாமதிக்கவில்லை… கதவை அடித்து சாத்தியவன் ஏதும் அவளிடம் கேளாது, கைகளில் அள்ளிக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான்.

அணிந்திருந்த அவள் ஆடைகள் திசைக்கொன்றாய் பறக்க… மெத்தையில் வீசீனான், மோகனச் சிரிப்போடு படுக்கையில் புரண்டாள் அவள். தலைகேறிய போதை வேலையைக் காட்ட… அவள் மீது கவிழ்ந்தவன் கைகள் அவளுடலில் சுதந்திரமாக அத்துமீறியது.

மதுவாசம் குமட்டலை கொடுத்தபோதும் அவளுக்கு பழகியதல்லவா? சுளுவில் அவனோடு ஒன்றிக் கொண்டாள். வேகம்…வேகம்…வேகம்… எதிலிருந்தோ தப்பிக்கும் வேகம் அவனில்! புண்ணானது அவள் மேனி…

அவளே கண்டுகொண்டாளில்லை எனும்போது அவன் கருத்திலா கொள்ளப்போகிறான்? அவள் வந்தது அதற்காகத்தான் எனும்போது அதைச் செய்வது அவள் கடமை அல்லவா? அதுதான் அவன் எண்ணமாக இருந்தது…

நேரம் நீண்டுகொண்டே செல்ல… அப்போதுதான் அவனையும் தழுவ ஆரம்பித்தாள் நித்ராதேவி. கசங்கிய மலரென அவள் அவன் கைகளுக்குள் சிக்குண்டிருக்க, அமைதியாக்க முயன்றும் முடியாமல் ஆர்பரித்த உள்ளத்தோடு தூக்கம் தழுவினான் ஜேகே.

******

ரடங்கும் நேரம்… சென்னையில் இருந்து சீறிப் பாய்ந்து இரவின் இருளை கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது விலையுயர்ந்த அந்த கார். அதனுள்ளே அமர்ந்திருந்தான் ஒருவன்… இருளின் கருமையிலும் கூட வரிவடிவமாகத் தெரிந்த அவன் உருவம் நிச்சயம் இவன் ஆணழகனாகத்தான் இருப்பான் என்பதை சொல்லாமல் சொல்லியது.

மூன்று மணிநேரப் பயணம்… நெல்லூரை நெருங்கியது அவனுடைய லம்போர்கினி உரூஸ்… அருகில் இருக்கும் சிறு கிராமத்தில் நுழைந்து ஒரு வீட்டின் முன் குலுங்கி நின்றது அவனுடைய கார்.

மெல்லிய விடிவிளக்கின் ஒளி மட்டுமே மங்கலான வெளிச்சத்தின் கீற்றை பரப்பிக் கொண்டிருக்க… கைகள் நிரம்பிய பைகளை ட்ரங்கில் இருந்து எடுத்தவன் ஓரெட்டு வைக்கும் முன்னம் திறந்தது அவ்வீட்டின் கதவு.

இறுகிக் கிடந்த அவன் முகத்தில் எட்டிப்பார்த்துச் சென்றது புன்னகையின் சாயல்.

அவன் வருகைக்காக காத்திருந்திருப்பார்களாக இருக்கும்… நடுத்தர வயது மனிதர் தான் முதலில் வெளியே வந்தார். அவர் வயதுக்கும் சோர்ந்து மெலிந்திருந்த உருவுக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லாது போலிருந்தது அவர் தோற்றம்.

பின்னாலே அன்னநடை பயின்று வந்தது ஓர் உருவம்! நிலவின் வெளிச்சம் அதன் முகத்தில்… நட்சத்திரங்களின் மின்னல் அதன் விழிகளில்… ஏக்கத்தோடு அவனை தொட்டு மீண்டது.

எதற்காகவாம் அந்த ஏக்கம்? சிறு கோபம் எழுந்தது அவனுள். அவனுக்கா தெரியாது? எல்லாமே தெரியும். ஆனால் எதுவும் பேசினானில்லை அந்த அழுத்தக்காரன்… விறைத்துப்போய் நின்றிருந்தான்.

அவன் தோற்றம் கண்டு நியாயத்திற்கு அவ்வுருவம் பயம் கொண்டிருக்க வேண்டும்… அதன் சாயல் கூட வெளிப்படவில்லை அங்கு. ரகசியமாகச் சிரித்துக் கொண்டது செவ்வரியோடிய அதரங்கள்!

யாரையும் ஏறெடுத்தும் பார்க்காமல் கொண்டு வந்த பைகளை மரக்கதிரையில் வைத்தவன் வெளியேற எத்தனிக்க, பரிதவிப்பை சுமந்த முகத்துடன் படுக்கையறையில் இருந்து வெளியில் வந்தார் நடுத்தரவயதுப் பெண்மணி.

வற்றாத நதியாய் கண்ணீர் சூழ்ந்திருந்தது விழியெங்கும்… ஆசையுடன் அவனைச் சுற்றி துழாவிய அவர் விழிகள், எதிர்பார்த்தது கிடைக்காமல் போனதில் ஏமாற்றத்தில் சுருங்கியது.

மறுபடியும் இருட்டறைக்குள் சென்று அடைந்து கொண்டார். காதுக்குள் ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருந்தது… துக்கம் தொண்டையை அடைக்க மீண்டும் ஆறாகப் பெருகி வழிந்தது கண்ணீர். கட்டிலில் தலைசாய்த்து விழிகளை மூடிக்கொண்டார்.

மூடிய விழிகளுக்கும் விரிந்தது ஓர் உருவம். அவரின் பின்னோடு வந்த அந்த மனிதர் அப்பெண்மணியின் தலையை பாசத்தோடும் பரிவோடும் கோதிக்கொடுத்தார். அது யாரென்று தெரிந்தாலும் மௌனம் சாதித்தவர்… அழுகையில் கரைந்து கொண்டே தூக்கத்தை தழுவினார்.

ஒரு பெருமூச்சுடன் கிளம்பத் தயாரானான் அவன். பல நாட்களாக பார்த்துப் பழகிய நிகழ்வு என்பதாலோ என்னவோ…? அவை சிறிதும் அவனை பாதிக்கவில்லை.

காரின் அருகில் வேக நடையோடு விரைந்தவனை வளைக்கரம் தடுக்க… நடையை நிறுத்தினானே ஒழிய அதன் முகமும் பார்க்கப் பிரியப்படாதவனாக முகம் இறுக நின்றிருந்தான்.

உடல் இறுக நின்றவனின் தகிப்பு அவளையும் சுட்டதுவோ…? ஓரெட்டு பின்வாங்கினாள். கேட்க எண்ணியதை வாய் திறந்து கேட்டிட முடியாமல் ஏதோ தடுக்க… விரக்தியாகச் சிரித்தவள் ஒன்றும் பேசாமலே வீட்டினுள் புகுந்து கதவை மூடிக் கொண்டாள்.

அவன் பார்வை… இறுகி நின்றவன் பார்வை… தொடுவானத்தை வெறித்தது. கோபம் உடலுள் புகுந்து இதயத்தை உலுக்க… கண்களை மூடி கட்டுப்படுத்த எண்ணினான் போலும். ஒரு சில நொடிகளின் பின்னர் திறக்கப்பட்ட விழிகள்… வேட்டையாட காத்திருக்கும் சிறுத்தையினைப் போல் பளபளவென்று ஜொலித்தது!

பனித்துளியாவாய்...


உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்....

"என் நெஞ்சில் நீயோ பனித்துளி!" - கருத்து திரி

அன்புடன்,
ஜூஹி.


'எல்லா புகழும் இறைவனுக்கே'
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெஞ்சில் நீ 02

ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் இருந்தான் அவன். ஜேகே!!

“ஜித்து பாவா… நாம கல்யாணம் கட்டிக்கலாமா…?” பளிங்கு முகத்திரையில் காந்தச்சிரிப்பு ஊர்வலம் நடத்த… வெட்கம் பாதி கூச்சம் மீதி என தயங்கி தயங்கி கேட்டாள் அவள்.

ஆண்மையின் கர்வத்துடன் விகசித்தது அவன் முகம். கைவளைவுக்குள் அவளிருக்க காதலோடு பிணைத்துக் கொண்டவன் “பேபி… மை பேபி…” ஜெபம் இசைத்தான்.

விட்டாளா அவள்? “சொல்லுங்க பாவா…” சிணுங்கிக் கொண்டே சட்டை பொத்தானை திருகியவள் கரத்தில் இதழ் புதைத்தவன் “பக்கத்தில் தான் பேபி ரெஜிஸ்டர் ஆபீஸ்… வா இப்போவே கல்யாணம் கட்டிக்கலாம்…” அவளைப் போலவே கூற, அந்திவானம் போல் சிவந்த முகத்தோடு “ஜித்து பாவா…” சலங்கையாய் சிணுங்கிக் கொண்டு மாரில் முகம் புதைத்தாள் அவனின் பேபி.

“பேபி…” காதலோடு முனகியவன் கரங்களில் மீண்டுமொரு முறை விரும்பியே தன்னை தொலைத்தாள் நெத்தேஷா.

கனவின் பிடியில் காதல் விளைத்தவளோடு உறவாடியவன் மனம் வித்தியாசமாய் உணர… படக்கென்று மலர்ந்தது அவன் கூரிய வாள் போன்ற விழிகள்.

போர்வையே ஆடையாக உடலை மறைக்க அவன் மார்பில் முகம் புதைத்து துயில் ஆழ்ந்திருந்தாள் விலைமாது.

‘ஜித்து பாவா’ முகத்தை சுருக்கி கைநீட்டி எச்சரிப்பவளாட்டம் தோன்றி மறைந்தது அவள் முகம். கனவில் உறவாடிய காரிகையின் முகம்… செய்யக்கூடாத எதையோ செய்து விட்டாற்போல் தடுமாறியது அவன் உள்ளம்.

எதை மறக்க நினைத்தானோ? அது மீண்டும் நினைவில் எழ… தன்னில் சாய்ந்திருவளை உதறித்தள்ளி விட்டு எழுந்தவன் தலையை பிடித்துக் கொண்டு அறையை அளந்தான்.

மோகத்தோடும் தாபத்தோடும் அவன் பிடியில் கட்டுண்டிருந்த நேத்தேஷா… எதிர்பாராத அவன் செயலில் கட்டிலின் மறுகோடியில் விழும் நிலையில் சரிந்து கிடந்தாள்.

பணத்துக்காக படுக்கையை பகிர்பவள் தான் அவள்… ஆனால் யாரும் இதுவரை அவளை உதாசீனப்படுத்தியது கிடையாது… முதன் முதலில் தன்னை அவமானபடுத்துவது போல் நடந்து கொண்ட அவன் செய்கை அவள் கோபத்தை கிளப்பியது.

மாஹேஷ் சொல்லித்தான் அனுப்பி இருந்தான் அவனை பற்றி… இருந்தும் அவன் செயல் பிடிக்கவில்லை மங்கையாளுக்கு. கோபத்தில் பல்லைக் கடித்தவள் “வாட்ஸ் திஸ் ஜேகே…” அவன் குணாதிசயங்கள் முழுமையாக தெரியாமல் சீறினாள் அவள்.

சிந்தையை சிதறடித்த காரிகையின் நினைவில் உழன்று கொண்டிருந்தவன்… அவள் குரலில் புருவங்களை சுருக்கி கூர்ந்து முகம் பார்த்தான். “பார்டன்…” அலட்சியமாக வந்தது அவன் வார்த்தைகள்.

உன்னிடமெல்லாம் எதற்கு மரியாதை என்பதை சொல்லாமல் சொல்வது போலிருந்த அவன் செய்கையில் தன்மானம் சீண்டப்பட “ஹவ் டேர் யு டு லைக் திஸ்…?” கூவினாள்

நடையை நிறுத்தி மார்புக்கு குறுக்காக கையை கட்டிக்கொண்டு மறுகையை தடையில் பதித்தவன் பார்வை அவள் கோலத்தை அலச… ஆத்திரத்தில் செந்தணலாகிப் போனது அவள் முகம். உனக்கு இதுவே அதிகம் என்றதோ அவன் பார்வை? அவமானத்தில் கூனிக்குறுகி போனது அவள் மனமும் உடலும்.

அவள் பிறப்பிலே அப்படி இல்லையே… நல்ல குடும்பத்தில் பிறந்து கனவினை நிறைவேற்ற இந்த துறையை தேர்ந்தெடுத்தவள் அவள். ஆரம்பத்தில் எத்தனை பேரிடம் அவமானப்பட்டு… உடலை கெட்டவனின் முன் அசிங்கப்பட்டு… பலநாள் கனவை கூட தூக்கியெறிய முற்பட்டவள் தான்.

விரக்தியின் உச்சத்தில் வாழ்வை துறக்க முயன்றவளையும், நானிருக்கிறேன் என்று ஏமாத்தி மனிதமிருகம் போல் உடலை சூறையாடிச் சென்ற கயவனின் பிடியில் சிக்கி மரத்துப்போன நிலையை அடைந்தவளுக்கும் பழகிப் போயிற்றே இந்நிலை.

விரும்பியா இதையெல்லாம் ஏற்றுக் கொண்டாள்? திணிக்கப்பட்ட வாழக்கையை ஏற்றுக்கொண்டு அதன் வழியில் சென்று கொண்டிருக்கிறாள். அவளுள்ளும் மனம் உண்டு அல்லவா? ஆண்களின் கோரப்பசியில் சிதைபட்டு போவது அவள் உடல் தானே…

வெறுப்பாய் அவன் முகம் பார்த்தவள் சிதறிக்கிடந்த ஆடைகளை அள்ளிக்கொண்டு அங்கிருந்த ஆடம்பரமான குளியறைக்குள் புகுந்து நொடியில் சீராகி வந்தவள் முன், கத்தை பணத்தை நீட்டினான் ஜேகே.

ஒன்றும் பேசாமல் வாங்கி ஹேண்ட்பேக்கில் வைத்துக் கொண்டவள், அத்தனை நேர கோபம் வழக்கம் போல் தணியவாரம்பிக்க… உள்ளுக்குள் வெம்பினாலும் முகத்தில் எதையும் காட்டாது மறைத்தவள் முகத்தில் எட்டிப் பார்த்த மோகனச் சிரிப்புடன் ஜேகேவின் அருகில் சென்று கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விலகிச் சென்றாள்.

மனமே வாழ்க்கை… நாம் நினைப்பது போலவே வாழ்க்கையும் அமையும். நொடிக்கொரு முறை உணர்வுகளை மாற்றுவது வேஷம் அல்ல… சிலருக்கு இயல்புப் பிரகாரம் தன்னாலே வந்துவிடும். அதில் சேர்த்தி நேத்தேஷா.

அதை அவனும் புரிந்து கொண்டானோ என்னவோ? இகழ்ச்சியில் வளைந்து இறுகியது அவன் அதரங்கள்.

தானும் குளியலறைக்குள் புகுந்து குளிர்ந்த நீரில் மேனியை நனைத்தவன் இடையில் கட்டிய துண்டோடு கண்ணாடி முன் நின்றான். அலை அலையான கேசம்… நீர்த்திவலைகளால் முன்னேற்றில் படர்ந்து பரவிக் கிடக்க, துளித்துளியாய் சொட்டியது நீர்.

கரம் கொண்டு கலைத்து விட்டான்… விடியலுக்கு இன்னம் சில மணி நேரங்களே மீதமிருக்க வாட்ரோபை திறந்து அணிய வேண்டிய ஆடைகளை வெளியில் எடுத்தான்.

வெள்ளைநிற முழுக்கை சட்டையும் கருப்புநிறத்தில் கோர்ட்டிலும் நொடியில் தயாராகியவன்… தலைகோதி விட்டபடியே கூலரை அணிந்து கொண்டு விறுவிறுவென்று வெளியில் விரைந்தான்.

அவன் கார்… டிரைவர் சகிதம் வாசலில் காத்திருந்தது. மெய்க்காப்பாளர்கள் கூடவே இருக்க… ஏறி அமர்ந்ததும் மும்பை விமான நிலையம் நோக்கி நகர்ந்தது.

இரவின் எச்சங்களோடு பிரிந்திடாத அறையிருளும் ஆதவனின் வெளிச்சக் கீற்றும் கலந்து பரவி வானின் அழகை அபரீதமாகக் காட்ட… பின்னிருக்கையில் தலைசாய்த்து கண்களை மூடிக் கொண்டான் ஜேகே.

*****

சரியாக இரண்டு மணிநேரங்களின் பின்னர்… மும்பையில் இருந்து சென்னை வந்திறங்கிய சர்வதேச விமானத்தில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தான் ஜேகே. நடை, உடையில் தெறித்தது மிடுக்கும் கமபீரமும்.

சூழ்ந்து கொண்டனர் பத்திரிக்கைகாரர்கள் மற்றும் மீடியா துறையினர். அவனது மெய்க்காப்பாளர்கள் சுற்றி வளைத்து பாதுக்காப்பை அதிகரித்தனர்.

“சார், தொடர்ந்து அஞ்சு வருஷமா சிறந்த பிசினஸ்மேன்க்கான அவார்ட் வாங்கறீங்களே... அதை பற்றி என்ன நினைக்கிறீங்க சார்?”

“உங்க மேரேஜ் பற்றி எப்போ சார் அன்னௌஸ் பண்ண போறீங்க?”

“உங்களுக்கும் மும்பை அக்ட்ரேஸ் ரித்தீஷா ராய்க்கும் கல்யாணம்னு பேசிக்கிறாங்களே… அது உண்மையா?”

அப்பப்பா!! எத்தனை கேள்விகள்… ஆளுக்கொரு கேள்விகள் வைத்திருந்தனர் போலும். அத்தனைக்கும் பொறுமையாக பதில் கூறினான் ஜேகே. இடத்திற்கேற்ப நடந்து கொள்வதில் அவனை அடித்துக்கொள்ள யாருமே இல்லை.

அப்போது தான் அந்த கேள்வியை கேட்டான் பத்திரிகைக்காரன் ஒருவன். அவனது தலைமை அதிகாரி இப்போது தான் அவனின் மொபைலுக்கு தகவல் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார்.

கிடைத்த தீனியை ருசிபார்க்க எண்ணியதோ அவன் மனம்? ஜேகேவின் அமைதி கண்டு தப்பர்த்தம் செய்து கொண்டவன் கேட்ட கேள்வி திகுதிகுவென்று அவ்விடம் முழுதும் எதிரொலித்தது.

“சார் மும்பை மாடல் நேத்தேஷாவும் நீங்களும் இருக்கிற வீடியோ சோசியல் மீடியால வைரல் ஆகிட்டிருக்கு, அதை பத்தி நீங்க என்ன சொல்றீங்க…?”

எதையும் யோசியாமல் அப்பத்திரிகைக்காரன் கேட்ட கேள்வி ஆக்ரோஷத்தை தூவி விட்டிருந்தது அவனுள்.

“பார்டன்…” ‘இன்னொருமுறை தெளிவாகச் சொல்’ என்பது போல் தீர்க்கமாக பார்வையால் அவனை ஆராய… உள்ளுக்குள் குளிரெடுக்க, முதலாளியின் வார்த்தை கேட்டு அவசரப்பட்டு விட்டோமோ?? காலதாமதமாக எண்ணிக் கொண்டவன்… மீண்டும் அதே கேள்வியை சத்தம் குறைத்துக் கேட்டான்.

வந்திருந்த அனைவரும் மொபைலை ஆராயத்துவங்க… ஜேகேவின் தலைமை மெய்க்காப்பாளர் ரவீந்தரன் கடகடவென செல்போனை தட்டி தகவலை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள முயன்றார்.

உண்மையே… அவன் சொன்னதைப் போன்றே எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோ அனைத்திலும் வைரலாகிக் கொண்டிருந்தது. பல்லைக் கடித்தவன் ஜேகேவைப் பார்த்து ஆமோதிப்பாக தலையசைக்க, சிறு நொடி நேரம் அமைதி காத்தவன் குரல், சட்டென கனமான சூழலின் அமைதியை கிழித்துக் கொண்டு ஒலித்தது.

எதிராளியை யோசிக்க விடாமல் தன் வாதத்தை வெளிப்படுத்தி இருந்தான்.

“என்னை மாதிரி பிசினஸ்மேன்ஸ்க்கு இருக்கிற ப்ரோப்ளம் இது தான்… மார்பிங் பண்ண வீடியோஸ் லீக் பண்ணி இமேஜை டவ்ன் ஆகறதுக்காக எனிமீஸ் யூஸ் பண்ற சீப் ட்ரிக்ஸ்… பட் ஐ டோன்ட் மைன்ட் இட்…” நின்ற இடத்தில் இருந்தே கேசுவலாக பேட்டி கொடுத்தான் அவன்.

பூதாகரமாக வெடிக்க வேண்டிய விஷயத்தை ஒன்றுமில்லாதது போல ஊதித்தள்ளியவன் செயல்… மற்றவர்களையும் கூட உண்மையோ? என்று எண்ணத் தூண்டியது தான் விந்தையிலும் விந்தை. அதுவே அவன் சாமர்த்தியம்.

அதற்கு சாட்சியாக நேற்று அவன் கைகளில் தவழ்ந்த விருதும் இருக்கவே… ஜேகேவின் அடையாளத்தை முடக்கவென்றே பொய்யாக தயாரிக்கப்பட்ட வீடியோ என்ற பேச்சும் கூட கணநேரத்தில் அடிபடத் தொடங்கி திசை மாறியது அவனைக் குறித்த அச்செய்தி.

பொய்யை உண்மையாகவும் உண்மையை பொய்யாகவும் சித்தரிக்கும் மனிதர்கள் இருக்கும் வரை… அதை உண்மை என்றும் நம்புவதற்கும் சில கூட்டம் உண்டு.

அது தான் அங்கும் நிகழ்ந்தது… சற்று முன்னர் வரை ஹாட் டாப்பிக் ரீதியில் பேசப்பட்ட அவன் அந்தரங்க வீடியோ, தற்சமயம் குப்பையாகத் தூக்கியெறியப்பட வேண்டிய விடயமாக மாறியே விட்டது.

கேலியாக வளைந்தது அவன் அதரங்கள்… அத்தனை சுலபத்தில் அவன் அடையாளத்தை யாராலும் முடக்கிவிட முடியாது. அது அவனாகவே செதுக்கிக் கொண்டது… அவனே நினைத்தால் மட்டுமே அவனை ஆக்கவும் அழிக்கவும் முடியும்.

******

அவன் கொடுத்த பேட்டி எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் தொடர்ந்து ஒலிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.


தன்னறையில் அமர்ந்து, டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் செய்தியை பார்த்துக் கொண்டு இருந்த பெண் அவளின் உள்ளம் காந்தியது.

ஆத்திரத்தில் பல்லைக் கடித்தவள் ரிமோட்டை தூக்கி ஏறிய… டிவியில் பட்டு சிதறியதில் அணைந்து போனது சுவரில் மாட்டப்பட்டிருந்த டிவி. பாகம் பாகமாக பிரிந்து ஓர் மூலையில் ஒதுங்கியது ரிமோட்.

எத்தனை பாடுபட்டு இந்த வீடியோவை எடுத்திருந்தாள்? நொடியில் அத்தனையும் சிதைபட்டு போய்விட்டதே… அதை எண்ணியதுமே கொந்தளித்தது அவள் மனம்.

கூடவே வெளிக்காட்டப்பாடாத சந்தோஷக் குமிழும் அவளுள்ளே… அகத்தில் இருப்பதை எந்நிலையிலும் முகத்தினில் கட்டினாளில்லை அவள்.

அவள் விஷ்ணுலேஸ்வரி ரமணன்... தொழில் வட்டாரத்தில் விஷ்ணு என்று மரியாதை நிமித்தமாக அழைக்கப்படும் பெண் சிங்கம். காரியம் யாவிலும் கைதேர்ந்து குறிபார்த்து அடிக்கும் வல்லமை கொண்டவள். நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்து முடிக்கும் வேகமும் அதேயளவு விவேகமும் கொண்டவள்.

குறுகிய காலத்தில் அவள் வளர்ச்சி அபாரமானது…

சிந்தனைகள் அதன் போக்கில் ஓடியபோதும் பார்வை நிலைத்திருந்தது என்னவோ விடியலின் அழகிலே… காலைப்பொழுதின் ரம்மியமான அழகை அவளோடு சேர்த்து தென்றலும் ரசித்ததுவோ!! இதமாய் அவளின் மேனி வருடிச் சென்று மனப்புழுக்கத்தை போக்க முயன்றது.

நேற்று இரவின் எச்சங்கள் அவளிடமில்லாத போதும் என்றைக்கும் போலவே அவளின் தவிப்பும் துடிப்பும் குறைந்தபாடாயில்லை… மீண்டுமாக அதே எண்ணம் தோன்றலானது அவளுள். எங்காவது கண்காணாத இடமாகப் பார்த்து சென்று விட மாட்டோமா? ஏங்கியது அவள் மனம்.

“சான்சே இல்ல ஸ்வீட்டி…” இளக்காரமாக ஒலித்தது அவன் குரல்.

எதையும் மனதில் நினைக்கக்கூடாது என்று தானே முகமூடியை அணிந்து தன்னை தற்காத்துக் கொள்கிறாள்… ஆனால் இவனிடம் மட்டும் அவளால் எதையும் செய்ய முடியவதில்லை. வழியத் துடித்த கண்ணீரை இதழ் கடித்து இமைகளுக்குள்ளே புதைத்துக் கொண்டாள்.

பார்வை தொலைதூரத்தை வெறிக்க… முகம் உணர்ச்சிகள் ஏதுமற்று வெறுமையாக இருக்க… மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

கழுத்தோரம் உராய்ந்து கூசியது அவன் மூச்சுக்காற்று. கூடை தணலை கொட்டியது போல் அருவருப்பில் தகித்தது அவள் மேனி… கடினப்பட்டு உணர்வுகளை முகத்தில் காட்டாமல் மறைத்து நின்றிருந்தாள்.

சிரிப்போ! வெறுப்போ! வெட்கமோ! அருவருப்போ!! ம்ஹூம்… எதுவுமே இல்லை அவள் வதனத்தில்… கல்லாக இறுகிக் கிடந்தது.

அதைக் கண்டு ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான் யுதஜித்.

மறுபுறம் திரும்பி நின்றவள் தோள் தொட்டு தன் புறம் திருப்பியவன் ஒற்றை விரலால் அவள் முகவரிவடிவை அளந்தான். முள்ளொன்று சிக்கியது போல் தொண்டைக் குழிக்குள் அடைக்க… அப்போதும் அசையாது மரம் போல் நின்றாள் விஷ்ணு.

வெளியில் பாயும் புலி தான்… ஆனால் வீட்டில்? அதுவும் அவன் கோட்டைக்குள்… அவனின் அடிமை அவள்.

எப்போது இங்கிருந்து அகல்வானோ? தவியாய் தவித்தது பெண் மனம். அதை கண்டு கொண்டானோ அவன்?? உடல் குலுங்க அட்டகாசமாகச் சிரித்தான்.

“என்ன ஸ்வீட்டி பயமா இருக்கா…?” வேட்டையாடக் காத்திருக்கும் சிறுத்தை போல் விழிகளிரண்டும் பளபளக்க அவன் நிற்கும் தோரணை… புராணக் கதைகளில் வரும் ராட்ஷசனை நினைவுறுத்த, உண்மையில் உள்ளுக்குள் பயந்து நடுங்கிப் போனாள் விஷ்ணுலேஸ்வரி.

அவள் முகபாவனை சிரிப்பை அவனுள் மூட்ட உடல் குலுங்க மீண்டுமொரு முறை சிரித்தவன், பெண்ணின் நுதலோடு நுதல் முட்டி அவள் வாசத்தை ஆழ நுகர்ந்தான்.

அவளுக்கான வாசம்… பிரத்தியேக வாசனை… வியர்வையோடு கலந்த அவள் வாசனை கிறக்கத்தை மூட்ட மெல்லிய குரலில் முனு முனுக்கலானான் அவன்.

“நான் உன் ஹீரோடி ஸ்வீட்டி… என்னை வில்லன் ரேஞ்சில் பார்க்காத… ஐ ஹேட் இட்…” குறுநகையோடு கூறியவன் பார்க்க அசப்பில் ஹீரோ போலவே இருந்தான்…

அண்ணார்ந்து பார்க்கும் உயரத்தில்… ஆஜானுபாகுவான தோற்றத்தில்… தீட்சண்யம் மிக்க கண்களும்… செதுக்கிய நாசியும்… குறுஞ்சிரிப்பில் துடிக்கும் இறுகிய அதரங்களும்… அளவாக வெட்டப்பட்ட தாடி, மீசை மற்றும் நெற்றில் புரண்டு விளையாடும் சிகையுமாக அழகனாக திகழ்ந்தான் அவன்.

ஆனால் அவள் கண்களுக்கு அவன் ஆக்மார்க் வில்லனே தான்...

எதற்கும் பதிலில்லை அவளிடம்… தலையை அழுந்தக் கோதியவன் சிலையாக நின்றவளை பார்த்ததும் இனம்புரியாத உணர்வு நெஞ்சில் குடியேற, அவள் முகம் நோக்கி குனிந்தவன் வன்மையாக செவ்விதழை சிறைபிடித்தான்.

சிலையாக நின்ற பதுமை அவன் அதிரடியில் சமைந்து போனாள். இம்முறை அடக்க முடியாமல் கன்னம் வழிந்தது கண்ணீர்த்துளிகள்… இதழ் தேன் பருகியவன், கண்ணீரின் உவப்பு கரிக்கவும் ஒரு நொடி உடல் விறைக்க நின்றவன் மறுகணமே… அமிர்தமென்றெண்ணி இதழாலே சுவைத்து, கண்ணீரை போக்கினான்.

அழுதால் விட்டு விடுவானோ? என்ற நப்பாசையில் கண்ணீர் விட்டவளின் வலி அவனுக்கு புரியாமல் இல்லை… ஆனால் அவன் தான் அவள் எண்ணியது போலவே ராட்ஷசன் ஆயிற்றே!! அதனால் தானோ என்னவோ? அவள் மறுப்புகள் ஆடவனிடத்தில் எடுபடவில்லை.

நொடிகள் நீண்டு கொண்டே செல்ல… விடும் வழியைத் தான் காணோம். மொத்தமாக மூழ்கி இருந்தான் அவன். அவளில்! அவளிதழ் அமிர்தத்தில்!! சொட்டு சொட்டாகப் பருகி சேமிக்க முனைந்தானோ? விடவே முடியாத நீண்ட முத்தமாகிப் போனது.

அவன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனின் மெல்லிசையே அவனது மோன நிலையைக் கலைக்க உதவிட “ப்ச்” சிறு சலிப்புடன் முத்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தானவன்.

அதற்காகவே காத்திருந்தவளாட்டம் அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டவள், அவனிடமிருந்து தப்பித்தோடாத குறையாக அகன்று… குளியறைக்குள் புகுந்து, நியாபகமாய் கதவை தாளிட்டுக் கொண்டாள்.

ஓடிச்சென்ற அவள் செயல் கோபத்தை விளைவிக்க வில்லை போலும் அவனில்! குளிர் புன்னகையில் நெளிந்தது அவன் அதரங்கள். ‘மை லிட்டில் ஸ்வீட்டி…’ மனதுள்ளே கொஞ்சிக்கொண்டு அழைப்பை ஏற்று காதில் வைத்தான்.

சிரிப்பின் வசம் இருந்த அவன் முகம் நொடியில் இறுகிக் போனது. அவளை செல்லமாகக் கொஞ்சிய அவன் இதழ்களே ‘நீ பண்ண வேலைக்கு கண்டிப்பா பனிஷ்மெண்ட் உண்டு ஸ்வீட்டி…’ வஞ்சத்தோடு முனகிக்கொண்டது.

விறு விறுவென அவளறையை விட்டு வெளியேறியவன், போர்டிகோவில் நின்ற காரை எடுத்துக்கொண்டு அசுர வேகத்தில் வெளியேறினான்.

அவன் வெளியேறும் மட்டும் கதவில் சாய்ந்துகொண்டு பொங்கி வந்த அழுகையை கட்டுப்படுத்த வியலாமல் மௌனமாக அழுது கரைந்தவள், மறுநிமிடமே அவசரமாக ஓடிச்சென்று தன்னறைக் கதவை மூடி தாளிட்டாள்.

உள்ளத்து வேதனை புழுவாக அரிக்கவாரம்பித்தது… இனிமேல் அழவே கூடாது என்று நேற்றெடுத்த சபதம் காற்றில் பறக்க, கட்டிலில் விழுந்தவள் சத்தம் வெளிவராது மௌனமாக குலுங்கி அழுதாள் விஷ்ணுலேஸ்வரி.

******

அதீத வேகத்தில் சீறிக்கொண்டு வந்த காரைக் கண்டதும் அவசரமாக கேட்டை விரியத் திறந்து விட்டான் காவலாளி. புயல் வேகத்தில் உள்ளே நுழைந்து போர்டிகோவில் இயக்கத்தை நிறுத்தியது… கருப்பு நிறத்தில் பளபளத்த ஜேகேவின் ரோல்ராய்ஸ் கார்.

பிரம்மாண்ட மாளிகை அது… சுற்றுச்சுவர் அரணாகக் காத்துநிற்க, சுற்றிலும் பசுமையின் ஆரோகனம். பூஞ்சோலையென காட்சியளித்தது அவன் வீட்டை சுற்றிலும் சீராகப் பராமரிக்கப்பட்ட தோட்டம்.

விமான நிலையத்தில் இருக்கும் வரைக்கும் அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் வீட்டுக்குள் நுழைந்த நொடியே சீறக் காத்திருக்க… அதை தடுப்பதற்காக வேண்டி அவனுக்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தான் சைத்ரன்.

ஜேகேவின் நெருங்கிய தோழன் மற்றும் அவனின் பர்சனல் செக்ரெட்டரி. அவனின் வருகைக்காக வரவேற்பறை சோபாவில் அமர்ந்து காத்திருந்தவன், ரௌத்திரத்தோடு உள்ளே நுழைந்த ஜேகேவை… நண்பனை… ஒருவருடத்தின் பின்னர் பார்ப்பதில் மகிழ்வு பரவ, பரவசத்துடன் எழுந்து நின்றான் வரவேற்கும் விதமாக.

அதை கண்டு கொள்ளும் நிலையிலா அவன் இருக்கிறான்? மொத்தமாக இறுகிப் போயிருந்தான் ஜேகே. தன் அந்தரங்க காணொளியை எடுத்தது என்ன… அதை சோசியல் மீடியாவில் போட்டது கூட அவன் பிரச்சினை இல்லை. அவனுள் கனன்று கொண்டிருப்பது யாருக்கு இத்தனை தைரியம்? என்ற கேள்வி மட்டுமே.

அதுவும் அவன் இந்தியா வரும் நேரம் பார்த்து திட்டமிட்டு செய்யப்பட்ட இச்செயல் கோபத்தோடு சேர்த்து வெறியையும் கிளப்பியது.

‘யார் அது...? புது எதிரியா? இல்லை செத்த பாம்பா? ஹூஸ் தட் ப்ளடி ….’ ருத்ரமூர்த்தியாக இடதுபக்க புருவத்தை வருடிக் கொடுத்தவனுக்குள் ஏகப்பட்ட யோசனைகள்.

கூடவே மறக்கப்பட்ட நிகழ்வுகள் என்றெண்ணி இருந்தவை எல்லாம் காரணமின்றி தோன்றி வதைக்க… என்றுமில்லாத வகையில் இருநாட்களாக கனவிலும் நனவிலும் தன்னை இம்சிக்கும் ராட்சசியின் நினைவிலும் தன் சுயத்தையும் இழந்தானோ அவன்…?

தன்முகம் பார்த்து நிற்கும் நண்பனையும் பொருட்படுத்தாதவனாக இரண்டாம் தளத்தில் இருக்கும் தன்னறை நோக்கி படிகளில் விரைந்தான்.

இந்நொடி தன்னிலை மறக்க குடிக்க வேண்டும் போல் பரபரத்தது அவனுடலும் மனமும்!

மினி பார்… வகைதொகையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது மதுக்குப்பிகள். ஆத்திரம் தலைக்கேறியதில் கண்மண் தெரியாத கோபம் கண்களையும் மறைக்க… கைக்கு கிட்டிய குப்பியை எடுத்து தொண்டைக்குள் சரித்தான்.

“எனாஃப் ஜேகே…” தடித்து வந்தது சைத்ரனின் குரல். தனக்குள் உழன்று கொண்டிருந்த ஜேகே அவன் குரலில் விலுக்கென்று தலையுயர்த்திப் பார்த்தவன், பின் மீண்டும் தன் பணியை தொடர்ந்தான்.

ஒரு போத்தல் காலியாக… இன்னொன்றை எடுக்க முயன்றவனின் கரத்தை கெட்டியாக பிடித்து தடுத்தது அவன் கரம்.

“இந்த ஒரு வருஷத்தில் மாறிடுவேன்னு நினைச்சேன்… ம்ஹூம்… நீ மாறவேயில்ல…” விரக்தியுடன் ஒலித்துவோ அவன் குரல்…?

எவரையும் எட்ட நெருங்க விடாதவனின் இரும்பு வளையத்தை உடைத்தெறிந்து… தோள் கொடுக்கும் சமயத்தில் நண்பனாகவும் அறிவுரை கூற வேண்டிய நேரத்தில் ஆசானாகவும் மாறி அவன் நிழலாகத் தொடரும் சைத்ரன்… நண்பனின் நிலை கண்டு எல்லையற்ற துன்பன் அடைந்தான்.

ஒரு காலத்தில் எப்படி இருந்தவன்? என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவனால். அந்நாள் நினைவுகளில் வேதனை சூழ துக்கம் தொண்டையை அடைத்தது.

தன் கரம் பற்றி தடுக்கும் நண்பனின் கரத்தை பார்வையால் அளந்தவாறே அவன் மீது கூரிய பார்வை ஒன்றையும் செலுத்த அஞ்சாது எதிர்கொண்டானாவன்.

மறுமொழி பேசாது கையிலிருந்த பியர் பாட்டலை கண்ணாடி டீபாயில் வைத்தவாறே முழு உயரத்திற்கு எழுந்து நின்றவன் தலையை கோதி சீற்றத்தை உள்ளாடக்கிய குரலில் கேட்டான்.

“யாரு பண்ணது... என்ன பத்தி தெரியாத எவனும் இதை பண்ணிருக்க மாட்டான்… தெரிஞ்சே பக்காவா ப்ளான் போட்டு பண்ணிருக்கான்… அவன் யாருன்னு எனக்கு தெரிஞ்சாகனும்…” கிட்டத்தட்ட உறுமினான்.

“ஜேகே, ரிலாக்ஸ். டூ ஹவர்ஸ்ல ரவீந்தரன் கிட்ட இருந்து இன்போர்மேசன் வரும். நான் பார்த்துக்கிறேன்… யு நீட் சம் ரெஸ்ட்…” ஆறுதலாகக் கூறவும்… ஆமோதிப்பாக தலையசைத்தவன் தனதறைக்குள் புகுந்து அமிழும் நுரை மெத்தையில் விழுந்தான்.

என்னென்வோ எண்ணங்கள் சூழ்ந்து வாட்டி வதைத்தது அவனை. கண்களை இறுக மூடி விரட்டி அடிக்க முனைந்தானோ அவன்? மூடிய விழிகளுக்கு ஓயாமல் அலைபாய்ந்தது அவன் கருமணிகள்.

பனித்துளியாவாய்....


திடீர்னு கதையை மாத்தினதுக்காக நீங்கல்லாம் எம்மேல செம காண்டுல இருப்பீங்கன்னு நினைச்சன்.... பட் எல்லாருக்குமே ரொம்ப தேங்க்ஸ்... நான் எதிர்பார்க்கவேயில்லை.... நீங்க அதே சப்போர்ட் கொடுப்பீங்கன்னு.... எலாருக்கும் ரொம்ப நன்றி பிரெண்ட்ஸ்....

அடுத்த அத்தியாயம் போட்டாச்சு... உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

"என் நெஞ்சில் நீயோ பனித்துளி!" - கருத்து திரி

அன்புடன்,
ஜூஹி...


'எல்லா புகழும் இறைவனுக்கே'
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நெஞ்சில் நீ 03
ஜேகே சென்னை வந்து இன்றோடு வாரத்திற்கும் மேல் கடந்திருந்தது… மூன்று தினங்களுக்கு மேல் எந்த நாட்டிலும் தங்காமல் அமெரிக்கா கிளம்பும் அவன், தற்போது அது குறித்த யோசனையும் அல்லாது வேறு வேலைகளில் தன்னை மூழ்கடித்திருந்தான்.

அவனின் அந்தரங்க வீடியோ லீக் அனைத்து வலைத்தளங்களிலும் முற்று முழுதாக பரவிடும் முன்னம் ரவீந்தரன் தன் சாமர்த்தியத்தால் அனைத்தையும் முடக்கி விட்டிருந்தார். அத்தோடு அவன் கொடுத்த பேட்டியும் களங்கம் ஏற்படாமல் காத்தது சமுதாயத்தில் அவனுக்கு இருக்கும் அந்தஸ்தை.

ஆனால் அது மட்டும் போதுமா அவனுக்கு…? கண்டிப்பாக இல்லை. யார்? அதை செய்தது யார்? என்பதில் மாத்திரமே அவன் முழுக் கவனமும் இருக்க… ரவீந்தரனின் தேடுதல் வேட்டை உச்சத்தை தொட்டிருந்தது.

முதலில் அவன் செய்தது மும்பையில் இருக்கும் ஜேகேவின் இல்லத்தின் சிசிடிவி புட்டேஜை தன் வசப்படுத்தியது தான். இருளில் கருமையில் வரிவடிவமாக தெரிந்த அவன் உருவத்தை அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து அவனை குறித்த விஷயங்களை சேகரித்தான்.

அத்தோடு நிறுத்தவில்லை… இதற்கு பின்னால் எத்தனை பேர் இருப்பார்கள்? என்பதில் ஆரம்பித்து நேத்தேஷா முதற்கொண்டு அவளை அனுப்பிய மாஹேஷ் வரை அனைவரும் விசாரித்து பார்த்தான்.

அவர்கள் யாருக்கும் எதுவும் தெரியவில்லை என்றதும் அவனின் இயல்பான கணக்கிடும் தன்மையின் பலன்… அவர்களே அறியாமல் அவர்களை பின்தொடர்ந்தனர் அவன் ஆட்கள்.

வீடியோ எடுத்தவன் குறித்த தகவல்கள், இடியாப்ப சிக்கல் போல் மெது மெதுவாக அவிழ… கைக்கு எட்டும் தூரத்தில் இருந்தவனை சுற்றி வளைக்கும் நேரம் கண்காணாமல் மறைந்து போனான் அவன்.

“கண்டு பிடிச்சிட்டீங்களா? எங்க இருக்கான்…?” முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றவன் முகத்தில் கோபம் தாண்டவமாட… அந்நேரம் அவன் மட்டும் ஜேகேவின் கைகளில் சிக்கி இருந்தானானால் சின்னாபின்னமாகி போயிருப்பான்.

அவனின் அதிர்ஷ்டம்! ஜேகேவின் துரதிஷ்டம்!

ஆடித்தீர்த்து விட்டான் ஜேகே. தன் கண்ணுக்குள்ளே விரலை விட்டு ஆட்டிருக்கிறான்… அந்த எண்ணமே கோபக்கங்குகளை கொழுந்துவிட்டு எரியச் செய்தது அவனுள்.

எல்லா இடத்திலும் தேடித்தேடி சலித்துப் போயினர் அவன் அனுப்பிய ஆட்கள். அவன் எங்கிருக்கிறான்? என்ற தகவல் மட்டும் அவர்கள் செவிக்கு எட்டவேயில்லை.

ஜேகேவிற்கு விழுந்த முதல் அடி அது! தோல்வியை சுகிக்காதவன் இல்லை… பல அடிகள் விழுந்த பின்பே இந்நிலையை எட்டிருக்கிறான். அதற்காக எதைச் செய்யவும் தயங்க மட்டானவன்.

வியாபார உலகில் யாரும் யாருக்கும் நண்பர்களுமில்லை… பகைவர்களுமில்லை. அவனை பொறுத்தவரையில் மற்றவர்கள் எதை தருகிறார்களோ? அதையே அவனும் திருப்பிக் கொடுப்பான்.

அப்படிப்பட்ட அவனையும் ஒருவன் எய்கிறான் என்றால் நிச்சயம் பலம் பொருந்தியவனாகவே இருப்பான் அவன். முன்பு கோபம் ஆக்கிரமித்திருந்த இடத்தில் சுவாரஸ்யம் முகிழவாரம்பித்தது.

‘இந்த விளையாட்டு கூட நல்லாத்தான் இருக்கு மிஸ்டர் அன்னோன்… கூடிய சீக்கிரமே கண்டு பிடிக்கிறேன்…’ குளிர் புன்னகை தவழ தனக்குள்ளே சொல்லிக் கொண்டானவன்.

நாட்கள் தெளிந்த நீரோடை போன்று சென்று கொண்டிருந்தது… ம்ஹூம்… அப்படி சொல்வதும் தவறோ? புயலுக்கு முந்தைய அமைதியுடன் நகர்ந்து கொண்டிருந்தது.

ஜேகேவின், கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனியின் வசம் ஒப்படைக்கப் பட்டிருந்த மிகப்பெரிய ஷாப்பிங் மால் கட்டிமுடிக்கும் பணி இறுதித் தருவாயில் இருக்க… வாட்டர்,கரண்ட் கனெக்சன், நிறப்பூச்சு அடிப்பது போன்ற இதர வேலைகள் மட்டும் பாக்கியிருக்க… சைத்ரன் தன் பொறுப்பில் இருந்த சைட்க்கு சென்று வருவதிலே நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஜேகேயுடனான நேரம் செலவழித்தலை மிகைப்படுத்திக் கொண்டான்.
வருடத்திற்கு ஒருமுறை வருவான்… வாரத்துக்குள் கிளம்பி விடுவான்... அப்போதெல்லாம் அலுவலக விஷயங்களை தவிர எதையும் பேச முடிவதில்லை…


அதை ஈடுகட்டுவது போல் இருவருமே சில சமயங்களில் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொள்வர். இல்லை…இல்லை… சைத்ரன் வாயோயாமல் பேசுவதை எல்லாம் ஜேகே செவிமடுத்துக் கொண்டிருப்பான்… அவ்வளவே!

அப்போதும் கூட அவன் யோசனைகள் முகம் தெரியாத எதிரியை நோக்கியே பயணிக்கும்… அதை சைத்ரன் அறிந்து கொள்ளாமல் மறைப்பதிலும் கெட்டிக்காரன் அவனென்பதால், இருவருக்குமான பொழுதுகள் அழகாகவே கழியும்.

*****

அன்று காலையில் எழுந்ததிலிருந்தே மாயவலையில் சிக்கியது போல் உடலும் உள்ளமும் அலைபாய… ஒருவித படபடப்புடனே நேரத்தை கடத்திக் கொண்டிருந்தான் ஜேகே.

மங்கலாய் சில நினைவுகள் நெஞ்சோரம் ராகமிசைத்துச் செல்ல… மனதை கட்டுப்படுத்தும் வழியறியாமல் தடுமாறியவன், சூரிய வெளிச்சம் முகத்தில் பட்டுத்தெறிக்க… கிழக்கு வாசல் முகம் பார்க்க கண்களை மூடி மனதை ஒருநிலைப் படுத்தினான்.

புத்துணர்ச்சி உடலுள் ஊடுருவிப்பாய… குளிர் புன்னகை முகத்தை நிறைக்க, குளித்து அன்றாடம் போலவே கோர்ட் சூட்டில் தயாராகி வந்தவன் காலையுணவுக்கு டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

மிதமான ஆகாரத்தை வேலையாட்கள் நேர்த்தியாக அடுக்கி வைத்திருக்க… தனக்கு தேவையானதை போட்டு உண்டவன் கண்கள் செல்போனிலே நிலைத்திருந்தது. தீவிரமாக எதையோ ஆராய்ந்து கொண்டிருந்தான்.

“ஜீவி, எத்தனை தடவை சொல்லியிருக்கேன். சாப்பிடும் போது செல்போனை நோண்டாதன்னு… இந்த கிழவன் என்ன சொல்றது நாம என்ன கேக்குறதுன்ன எண்ணமா…?”

அறுவது இருக்குமா வயது? முதிர்ச்சி, தளர்ச்சி ஏதுமில்லாமல்… சகவயது தோழன் போல் அதட்டி உருட்டி பணிய வைத்து, நிமிர வைக்கும் தாத்தாவின் நினைவுகள் அவனுள்.

அவர் இறந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாகியிருக்கும். எப்போதாவது அவர் நினைவுகள் வந்து கொண்டே தானிருக்கும்… இன்று சற்று அதிமாய்.

அப்போது தான் அது நியாபகம் வந்தது. அவனின் தாத்தா ஜெயவீர பாண்டியனின் பிறந்தநாள் இன்று. அவர் உடனிருக்கும் போதெல்லாம் இருவரும் அருகிலிருக்கும் ஆசரமம் சென்று சிறுவர்களுடனும் பெரியவர்களுடனும் பொழுதை கழிப்பார்கள்.

ஜேகேக்கு அதிலெல்லாம் அவ்வளவாக விருப்பம் இருப்பதில்லை… அன்றைக்கு மட்டுமாவது தாத்தாவின் சொல்லை கேட்க வேண்டும் என்பதற்காகவே அவருடன் செல்வான்.

அந்நாள் நினைவுகளில் சந்தோசம் பாதி துன்பம் மீதி என கலங்கியது அவன் மனம்.

அவனுக்கு என்றிருந்த ஒரே உறவு அவர் தான். அவர் பிறந்தநாளை எப்படி மறந்தேன்? யோசனையுடன் தட்டை அளைந்தவன், பாதியிலே எழ முயல…

“ஒருவேளை சாப்பாடு இல்லாமல் மனிசன் எவ்வளவு கஷ்டம் அனுபவிக்கிறான் தெரியுமா? பாதியில் எழுந்துக்காத உக்காரு…” தாத்தா மீசையை முறுக்கிக்கொண்டு அதட்டுவது போலிருக்க, புன்னகையின் சன்ன கீற்று அவனிதழோரம்.

‘என்னை அதட்டுற பழக்கம் மட்டும் இன்னும் உன்ன விட்டு போகல தாத்தா…’ மானசீகமாக அவரோடு உரையாடினான்.

வித்தியாசமான உணர்வது… பெரிதாக எதையோ தொலைத்து விட்டோம் என்பது போன்றதொரு கூக்குரல் உள்ளே.
உடனே செல்போனை எடுத்தவன் சைத்ரனுக்கு அழைத்தான்.


முதல் ரின்கிலே மறுபக்கம் எடுக்கப்பட, அவன் ஏதும் பேசும் முன்னம் தான் கூறவந்ததை கூறலானான் ஜேகே.

“சென்னையில் பேசிக் பாசிலிட்டிஸ் இல்லாம நடத்தப்படுற ஆசிரமத்தை கண்டுபிடிச்சு நம்ம டிரஸ்டோட அட்டாச் பண்ணிடு சைத்ரன்…”

திடீரென்று அவன் இவ்வாறு கூறவும், “என்னாச்சு ஜேகே…?” இடைமறிக்க “டூ வாட் ஐ சே…” பட்டுக் கத்தறித்தது போல வந்தது அவன் வார்த்தைகள். உடனே அழைப்பையும் துண்டித்து விட்டான்.

ஒரு சில கணங்கள் புரியாமல் குழம்பிய சைத்ரன், மறுநிமிடமே அதற்கான வேலைகளில் மூழ்கிப் போனான்.
தன்னால் முடிந்த… தாத்தாவிற்கான பிறந்தநாள் பரிசு அவனுடையது. உளமார எதையோ செய்துவிட்ட திருப்தி அவனுள்.


‘உன் பேர்ல எனக்கும் கொஞ்சம் புண்ணியம் வந்து சேரட்டும் தாத்தா…’ அடிக்கடி அவரிடம் அவன் கூறும் வார்த்தைகள் அவை. இப்போதும் அதுபோலக் கூறிக் கொண்டான்.

அதன் பின் வேறு வேலைகள் இழுக்க… அலுவலகம் கிளம்பியவன் பழையபடி இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டான்.

*****

புலரத்தொடங்கிய அதிகாலையின் துவக்கம்... ஆரஞ்சு வண்ணத்தில், நிலவுக்காரிகையை துரத்தியடித்து எழும்பிக் கொண்டிருந்தான் ஆதவன்… சிலு சிலுவென்ற இதமான தென்றல்... தோட்டத்துச் செடிகளின் மணம் கமழும் நறுமணம்... பறவைகளின் சல்லாப சங்கேதமொழிகள்.

விடியலின் வருகையை கண்கொட்டாமல் ரசித்துப் பார்த்திருந்தாள் விஷ்ணுலேஸ்வரி. காலம்பர வேளையின் அழகை ரசிக்கும் பழக்கம் அவளோடு ஒட்டிப்பிறந்தது. துன்பங்கள் எத்தனை இருந்த போதும்… இயற்கை அன்னையின் அழகை ரசிப்பதில் எந்தக் குறையும் வைத்ததில்லை அவள்.

பால்கனியில் இருந்த கூடை ஊஞ்சலில் மடியில் கனத்த மடிக்கணினியுடன் அமர்ந்திருந்தவளின் மென்விரல்கள் தட்டாச்சு செய்து கொண்டிருக்க… நயனங்கள் முழுதும் புலரும் பொழுதின் அழகிலே லயித்திருந்தது.

நாட்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்திருந்தது… ஜேகேக்கு எதிராக அவள் செய்த சதி அழகாகவே முறியடிக்கப் பட்டிருந்தது. அதன் தாக்கம் இன்னமும் கனன்று கொண்டிருந்தது அவளுள்.

அதற்கு யார் காரணம்? என்றும் அறிவாள் அவள். ஆனால் அவனுக்கு எதிராக சுண்டுவிரலைக் கூட அசைக்க முடியாதே அவளால்… அந்த நினைவே சோர்வை கொடுத்தது. இன்னம் எத்தனை நாளுக்கு தன்னை அடிமைப்படுத்தி வைக்கப் போகிறானோ அவன்? வழக்கம்போல் மனம் கேள்வி தொடுக்க… விடை தெரியாமல் தவித்தது பேதை உள்ளம்.

“ஏன் ஸ்வீட்டி… உன்னை நான் அடிமை மாதிரியா நடத்துறேன்…?” பிரித்தறிய முடியாத பாவம் கலந்த அவன் குரல், பின்னாலிருந்து ஒலித்தது.

‘வந்து விட்டான்… ராட்ஷசன் வந்து விட்டான்… ஒரு வாரம் அவன் தொல்லை இல்லாமல் நிம்மதியாய் இருந்தேன். அதை குலைப்பதற்கென்றே வந்து விட்டான்…’ உள்ளம் ஓலமிட, திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள் விழியில், முகம் இறுக தன்னை வெறித்திருந்தவன் உருவம் பட… இதயத்துள் உருண்டது பயப்பந்து. சிலையாய் சமைந்து போனாள் பெண்.

அழுத்தமாக ஒவ்வொரு எட்டு வைத்து அவளை நெருங்கியவன், பிரேத்தியக அவள் வாசனையை நுகர்ந்து கொண்டே… இறுக்கம் தளர, ரசனை குடியேற உச்சாதி பாதம் வரை ஆராய்ந்தான்.

அப்போது தான் குளித்திருப்பாள் போலும். மேனியிலிருந்து வீசிய சோப்பின் வாசமும்… கூந்தலில் இருந்து வந்த ஷாம்புவின் சுகந்தமும் உணர்ச்சிகளை தூண்ட… கண்மூடி கிறங்கினான் அவளின் ராட்ஷசன்.

நிலவு மங்கையின் வெண்மையையும் அந்திநேரத்து ஆதவனின் சிகப்பையும் கலந்து செப்பனிட்ட பளிங்கு முகம் கொண்ட பெண். தளிர் கொடியோ எனும் உடல்வாகு. வழுவழுப்பான செந்நிறத்து மேனி. உச்சிமேட்டை தொட்டுத்தழுவும் சீரான புருவங்கள். தீட்சண்யம் கொண்ட நேத்திரங்கள். கொவ்வைப் பழ இதழ்கள். வெண்சங்குக் கழுத்து. நேர்த்தியான உடல்வடிவு. மொத்தத்தில் பிரம்மனின் முழுக் கைவண்ணமும் கொண்டு செதுக்கிய எழில்மிகு பெண்நிலா…

தோகைபோல் முதுகில் படர்ந்திருக்கும் கூந்தலில் இருந்து சொட்டியது நீர்த்துளிகள்… நெற்றில் இட்ட குங்குமம். காற்றுக்கு அசைந்தாடிய சேலையின் மறைவில் வெளிப்பட்ட பளிங்கு இடை: ‘என்னை கொஞ்சம் தொட்டுத்தான் பாரேன்’ கண்சிமிட்டிச் செல்ல… நினைப்பதை நினைத்த மாத்திரத்தில் செய்யும் முடிப்பவன் அவனன்றோ?
முறுக்கேறிய அவன் கைவிரல்கள் அழுத்தமாய் பதிந்தது அவள் வெற்றிடையில்… எதிர்பார்த்திறதாவள் விழிகள் சாஸர் போல் விரிய, இமைக்க மறந்து பார்த்தாள் அவனை.


“மயக்குற ஸ்வீட்டி…” கொஞ்சிக்கொண்டே முட்டைக்கண் விழியில் முத்தமிட்டான் யுதஜித்.

எரிமலைக் குழம்பு போல் திகுதிகுவென எரிந்தது அவளுள்ளம். அவள் மனம் படித்தானோ அவன்? சிறு சுனக்கத்துடன் விலகி நிற்க, தன்னை சமன்படுத்திக் கொண்ட விஷ்ணு… முகத்தில் அரும்பிய வியர்வை துளிகளை புறங்கை கொண்டு துடைக்க முயல “வெயிட் ஸ்வீட்டி… ஜஸ்ட் வெயிட்…” குரல் கொடுத்து தடுத்தவன் அவளை நெருங்கி, மிருதுவாக கைகுட்டையால் துடைத்து விட்டான்.

பட்டும் படாமலும் கன்னம் தீண்டிய அவன் விரல்களின் ஸ்பரிசம் கூச்சத்தோடு சேர்த்து அருவருப்பையும் ஈட்டியது. பல்லைக் கடித்து தன் மனவுணர்வுகளை உள்ளேயே அடக்கியவள் அமைதி காத்து நின்றாள்.

பெண்ணவளின் அமைதி ஆடவனின் நெஞ்சத்தை தாக்கியதோ? நீண்ட பெருமூச்சு தன்னாலே வெளியேறியது.

இன்னதென்று பிரித்தறிய முடியாத பார்வை ஒன்றை அவள் மீது வீசினான். வழக்கம்போல் அதை புரிந்துகொள்ள முடியாமல் பார்வையை திருப்பிக் கொண்டாள் விஷ்ணுலேஸ்வரி.

இருவர் மோன நிலையையும் கலைக்கும் விதமாக, நாதமிசைத்து உசுப்பியது அருகேயிருந்த விலையுயர்ந்த செல்போன். கவனம் கலைந்திட திரையை கூர்ந்தவள் காதுக்கு கொடுக்க மறுபுறத்தில் அவளின் பி.ஏ சுஷ்மிதாவிடம் மெல்லிய பதட்டத்தொனி.

புருவங்கள் இரண்டும் இடுங்கியது. மிருதுவாக தடவிக்கொண்டு கண்மூடிக் கிரகித்தவளின் தேனினும் இனிமையான குரல் தேளாய் தடித்துக் கொண்டு வந்தது.

ஆடவன் கொடுத்த அதிர்வில் மனவுணர்வுகளை முகத்தில் துளியளவும் வெளிப்படுத்தாது காத்து நின்றவள் முகம், மேலும் இறுகியது. விழிகளின் கூர்மை அவள் வேட்டைக்கு தயாராகிறாள் என்பதை பறைசாட்டுவது போலிருந்தது.
தன்னிடம் பதுங்கி நிற்கும் பெண்ணவளின் அதிரடி மாற்றத்தில் சுவாரஸ்யம் குடிபுக… பேன்ட் பாக்கெட்டில் கை நுழைத்து கால்களை அகற்றி நின்றவன், விழிகளில் மின்னல் தெறிக்க அவளையே அணு அணுவாக ரசிக்கவாரம்பித்தான் யுதஜித்.


“ஹவ் இட்ஸ் பாசிபிள்…?”

வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் சென்னையில் கட்டப்படும் பீச் ரிசார்ட்ஸ் ப்ராஜெக்ட். பலகோடி பெறுமதியான பட்ஜெட்… அவளின் ட்ரீம் ப்ராஜெக்ட். இரவுபகல் பாராது அதற்காக நிறையவே மெனக்கெட்டிருந்தாள் விஷ்ணு. இன்று தான் அதற்கான கொட்டேஷன் அனுப்பும் இறுதி நாள். கடைசி நேரத்தில் ரகசியம் காத்து அனுப்பி வைத்திருந்தாள்.

அத்தனையும் ஒன்றுமில்லாமல் போய்விட்டது… அவளின் கடின உழைப்புக்கு பலனற்றுப் போய்விட்டது. அவளின் வி.பி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனிக்கு கிடைக்க வேண்டிய ஒப்பந்தம் கை நழுவி, எதிரி நிறுவனமான ஜேகே கன்ஸ்ட்ரக்ஷன்க்கு கைமாற்றப்பட்டு விட்டது.

ஏற்கனவே ஜேகேக்கு எதிராக தான் செய்த ஒன்றுமில்லாமல் போனதில் ஆக்ரோஷத்தில் இருந்தவள், தற்சமயம் தன் கம்பனிக்கு கிடைக்க வேண்டிய ஒப்பந்தம் அவனுக்கு கிடைத்ததில் கொதித்தெழுந்து விட்டாள்.

சுறுசுறுவென கோபம் பொங்க ஒற்றை விரலால் புருவத்தை வருடிக் கொடுத்தவள் “அடுத்தடுத்து அவங்க எடுக்கப்போற ப்ராஜெக்ட்ஸ் ஓட புல் லிஸ்ட், இம்மிடியட்டா என்னோட டேபிளுக்கு வரணும்… ஜஸ்ட் பைவ் மினிட்ஸ்… நான் ஆபீஸ்ல இருப்பேன். நான் கேட்டது இல்லன்னா ஐல் பையர் ஆல் ஒப் யு…”

பேச்சு முடிந்தாற்போல் அழைப்பை துண்டித்தவள், தன்னறையில் ஒருவன்… தான் பயப்படும் ஒருவன்… ஆழப்பார்வையால் தன்னை ரசித்துப் பார்ப்பது தெரிந்தாலும், கண்டுகொள்ளும் நிலையில் இல்லாத அவளோ, விடுவிடுவென கீழே விரைந்தாள்.

சிங்கத்தின் முன் தப்பிக்கும் மார்க்கம் அறியாமல் ஒடுங்கி நிற்கும் மான்குட்டியென, தன்னைக் கண்டாலே அஞ்சி நடுங்கி ஓட்டுக்குள் சுருங்கும் நத்தையாய் வெடவெடக்கும் பெண்ணவள்… இன்று சீறும் சிறுத்தையாய் குதறிக் கொண்டிருப்பதை நேரில் பார்த்ததில், அவளை இன்னம் கொஞ்சம் சீண்ட வேண்டும் போல் ஆசை கொண்டது ஆடவன் மனம்.

கள்ளச் சிரிப்பை சிந்தியது அவனிதழ்!

*****

எம்.எல்.ஏ மகாலிங்கத்தின் கட்சி அலுவலகம்.

சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த மெர்சிடஸ் பென்ஸ் வெள்ளைநிற காரினுள்ளே விறைப்பாக அமர்ந்திருந்தாள் விஷ்ணுலேஸ்வரி.

கண்களை மறைக்கும்படி போட்டிருந்த குளிர் கண்ணாடி, அவள் முகமாற்றத்தை யாராலும் கணிக்க முடியாத வகையில் துல்லியமாக மறைத்திருந்தது.

காரிலிருந்து புயல் வேகத்தில் இறங்கியவள், தன்னை கண்டதும் வாயெல்லாம் பல்லாக தலை தெறிக்க ஓடிவந்த மகாலிங்கத்தின் பி.ஏ சுந்தரேசனை சிறிதும் கண்டுகொள்ளாமல் விறுவிறுவென அங்கிருந்த அறைக்குள் நுழைந்தாள்.

முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த மகாலிங்கம், அரசியல் பிரமுகருக்கான சகல லட்சணங்களும் பொருந்தப்பெற்று இருந்தார்.

வெள்ளை வேஷ்டி சட்டை, கைகளிலும் கழுத்துகளிலும் தொங்கிய நகைகள், பழுத்த பழம் போல் இருந்தாலும் விழிகளில் அவரையும் மீறி வெளிப்பட்டு விடும் சாணக்கியம், வெற்றிலை குதப்பியதன் அடையாளமாக சிவந்திருந்த வாய்… அனைத்தையும் கூலரின் உள்ளே மறைந்திருந்த விழியால் அளந்துகொண்டே உள்ளே நுழைந்தாள் விஷ்ணு.

அவளின் வருகையை சுத்தமாக எதிர்பாராதவர் திடுக்கிட்டு திகைத்துப் போனார். பலநாள் அனுபவம்… சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு, சூசமாக அங்கிருந்தோர்களை அர்த்தம் பொதித்த பார்வை பார்க்க… அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்த ஜால்ராக்கள் சலசலத்தபடி வெளியேறிச் சென்றனர்.

கோபத்தை உள்ளடக்கிய முகத்துடன் ஒய்யாரமாக அவரெதிரில் அமர்ந்தவள், வில்லென வளைந்த புருவங்களை கேள்வியாக ஏற்றியிறக்கினாள்.

அவளின் பார்வையில் பல்லைக் கடித்து கோபத்தை அடக்கிய மகாலிங்கம் “என்னம்மா விஷ்ணு… என்னைய பார்க்கனும்னு சொல்லியிருந்தா நானே நேரில் வந்து பார்த்திருப்பேனே. உனக்கு எதுக்கும்மா வீண் அலைச்சல்…” கறைபடிந்த வாயெல்லாம் பல்லாக கூறினார்.

அவரின் பேச்சையெல்லாம் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காதவள் “அந்த கவர்ன்மென்ட் டெண்டர் விஷயம் என்னாச்சு…” என்றாள் அழுத்தம் திருத்தமாக.

‘இருக்கிற தலைவலி பத்தாம இந்தப்பொண்ணு வேற… சை... ஜேகேவும் இந்த விஷயமா போன் பண்ணான்… இதுல யாருக்கு கைநழுவிப் போனாலும் நான் வேலையை விட்டிட்டு வீட்டில் துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு இருக்க வேண்டியது தான்…’

‘உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் என்கிற கணக்காயில்ல என் நிலைமை இருக்கு…’ வெறுத்துப்போன மனநிலையில் நெற்றில் பூத்த வியர்வை துளிகளை அவளறியாமல் துடைத்துக் கொண்டார்.
அவளோ எப்பக்கமும் பார்வை திருப்பாமல் அவர் முகத்தைத்தான் ஆழ்ந்து பார்த்திருந்தாள். புருவங்களை மிருதுவாக நீவிக்கொண்டு.


அவள் பார்வையில் உள்ளே குளிர்ஜூரம் அடிக்க, “நீ கவலைப்படாதம்மா… இந்த டெண்டர் உனக்குத்தான் நான் பேசிக்கிறேன்…” எனவும், “ம்ம்.. பார்த்துப் பண்ணுங்க…” என்றவளின் வார்த்தையே சற்றுப் பிசகினாலும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவேன் என்ற தொனியில் ஒலித்தது.

அதை சரியாகப் புரிந்து கொண்டவர் தலையசைப்பை கொடுக்க, ஒன்றும் பேசாமல் மெளனமாக எழுந்தவள் கையில் இருந்த குளிர் கண்ணாடியை இடதுகை விரல்களால் ஸ்டைலாக அணிந்தபடி அங்கிருந்து வெளியேறினாள்.

புயலடித்து ஓய்ந்ததுபோல் ஆசுவாசத்துடன் மூச்சை இழுத்து வெளியேற்றியவர் தன் பி.ஏ சுந்தரேசனுக்கு அழைத்து, “யோவ்.. அந்த அரசாங்க டெண்டரை விஷ்ணுக்கே கொடுக்க சொல்லிடு…”, ‘அந்தப் பொண்ணோட ஒரே ரோதனையாப் போச்சு...’ முனகிக்கொண்டே அழைப்பை துண்டித்தார்.

வெளியில் வந்த விஷ்ணுலேஸ்வரியின் வதனத்தில் தானாகக் கேலிப்புன்னகை ஒன்று வந்து அமர்ந்து கொள்ள, அலட்சியத்துடன் வந்தவளுக்காக காரின் கதவை திறந்து வைத்துக் காத்திருந்தார் டிரைவர் பெருமாள். மெல்ல தலையசைத்து, அமர்ந்து கிளம்பச் சொன்னவள் மனம் ஜேகேவின் நினைவுகளில் பயணிக்கவாரம்பித்தது.
அதே நேரம்… அவள் உள்ளே சென்றது முதல் மகாலிங்கத்துடன் பேசியது வரை அனைத்தும் மறுமுனையில் இருந்தவரிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தான் ஒருவன்.


அவன் கூறியதை கேட்டதும் மறுமுனையில் சில நொடி அமைதி நிலவ… அவரின் பதிலுக்காக காத்திருந்தவன் அவர் கூறியதை அச்சுப்பிசகாமல் அவ்வாறே செய்வதாகக் கூறி, பெண்ணவள் காரை ரகசியமாகப் பின்தொடர்ந்தான்.

பனித்துளியாவாய்....


முந்தைய பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட அத்தனை பேருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரெண்ட்ஸ்.

இதோ அடுத்த அத்தியாயம் போட்டாச்சு... பார்த்திட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள்....

"என் நெஞ்சில் நீயோ பனித்துளி!" - கருத்து திரி

அன்புடன்,
ஜூஹி....

'எல்லா புகழும் இறைவனுக்கே'
 
Status
Not open for further replies.
Top