கதைத்திரி நீக்கப்பட்டு விட்டது நண்பர்களே!
புத்தகமாக ஆர்டர் செய்ய கீழ்க்கண்ட இணைப்பை பயன்படுத்தலாம். அல்லது கீழே குறிப்பிட்டுள்ள வாட்ஸ் ஆப் எண்ணை பயன்படுத்தியும் ஆர்டர் செய்யலாம்.
வாட்ஸ் ஆப் எண்
97901 22588
அல்லது அமேசான் கிண்டிலிலும் படிக்கலாம். இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
ஒருவர் மனதிலே ஒருவரடி! (Tamil Edition) eBook : Thoorika Saravanan, தூரிகா சரவணன்: Amazon.in: Kindle Store
www.amazon.in
நன்றி! வணக்கம்!






அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்




பண்டிகை மற்றும் நான்கு நாட்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருக்கும் காரணத்தால் காலை ஆன்லைன் வர இயலவில்லை.
மூன்று வருடங்கள் முன்பு 2019 ஆம் ஆண்டு இதே சித்திரை திருநாளில்தான் முதன் முதலில் உண்மை சொன்னால் நேசிப்பாயா ( மனமே நினைவை மறந்து விடு) கதை மூலம் என் ஆன்லைன் பயணத்தை துவக்கினேன். நடுவில் ஓராண்டு இடைவெளி விட்டாலும் என்னை மறந்து விடாது இன்றளவும் ஆதரவு கொடுத்து வரும் வாசகக் கண்மணிகள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன். அதே ஆதரவை இனியும் தொடர்ந்து தருவீர்கள் என்ற நம்பிக்கையுடனும் நட்புடனும்
தூரிகா
இன்று ஊரில் இருந்திருந்தால் முதல் பதிவே கொடுத்தி௫ப்பேன். முடியாததால் இன்று முன்னோட்டம் மட்டும்
ஒ௫வர் மனதிலே ஒ௫வரடி
“ஏங்க! மாப்பிள்ளைக்கும் பூவிக்கும் தனிவண்டி ஏற்பாடு பண்ணியிருக்கலாம்ல”
“ஏன் விழிம்மா...இந்த வண்டிக்கு என்ன?”
“இல்லைங்க...நீங்க முன்னால உக்காந்துட்டா நான், பூவி, மாப்பிள்ளை மூணு பேரும் பின்னாலதானே உக்காரணும்... இடிச்சுகிட்டு பிடிச்சுகிட்டு உக்கார்ந்து இருக்கணுமேன்னு பார்த்தேன்”
மனைவியைக் குறும்புப் பார்வை பார்த்தவர், “புதுசாக் கல்யாணமான புருஷன் பொண்டாட்டிக்கு இடிச்சுப் பிடிச்சு உக்காந்தாத்தான்டி பிடிக்கும்... கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகுது...இன்னும் உனக்குக் க்ளாஸ் எடுக்க வேண்டி இருக்கு” என்று அவர் கண்ணடிக்க அவர்கள் அருகில் நெருங்கியிருந்த பாலகிருஷ்ணனுக்கு இந்தப் பேச்சைக் கேட்டு சிரிப்பும், முதல் நாள் திருமணத்தில் அத்தனை கம்பீரமாக அனைத்து பெரிய மனிதர்களுக்கும் ஈடு கொடுத்த தன் மாமனார், மனைவியிடம் குறும்பும் குழைவுமாகப் பேசுவது கண்டு வியப்பும் ஒருங்கே எழ, தன்னிருப்பை அறிவிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன் கொஞ்சம் தொண்டையைச் செருமிக் கொண்டான்.
.......................................................................
வண்டி கிளம்பி, கொஞ்ச தூரம் சென்றதும் தன் கைப்பையை எடுத்தவள் அதிலிருந்த அலைபேசியையும் இயர் ஃபோனையும் எடுத்துப் பாட்டுக் கேட்கத் தயாரானாள்.
பாலகிருஷ்ணனிடம் “நீங்க கேக்குறீங்களா?” என ஒரு முனையை நீட்ட அவனும் வாங்கிக் காதில் மாட்டிக் கொண்டான்.
இசை மழையில் நனைந்தவாறே தங்கள் இல்லற வாழ்க்கைப் பயணத்தைத் துவங்கினர் தம்பதியர்.
பத்து நிமிடங்கள் கூடச் சென்றிருக்காது…
இசையின் இனிமையும், வண்டியின் குலுக்கலில்லாத இதமான தாலாட்டும், முந்தைய நாள் களைப்பும், போதிய தூக்கமின்மையும் என எல்லாம் சேர்ந்து தள்ள பாலகிருஷ்ணனின் தோள் மீதே சரியலானாள் பூங்குழலி.
அவள் நிலையை உணர்ந்தவன் தன் இடது கையை அவளைச் சுற்றிக் கொண்டு சென்று இடது தோளில் சாய்ந்திருந்தவளைத் தன் மார்புக்கு இடம் மாற்றி, நன்றாக அவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டு, அலைபேசியை அணைத்து அவளது ஒரு காதிலும் அவனது ஒரு காதிலும் இருந்த இயர் ஃபோனையும் எடுத்து முன் இருக்கையின் பின்புறம் இருந்த பையில் போட்டான்.
மகள் உறங்கி விழுவதையும், சுற்றி உள்ளவர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தன் மீது சாய்த்துக் கொள்ளும் மாப்பிள்ளையையும் ஓரக்கண்ணால் கண்ட கணபதி தன் முன் உள்ள ரியர்வியூ கண்ணாடி வழியாக மனைவியிடம் ‘நான் சொன்னதுதான் நடந்தது பார்த்தாயா’ என்பது போல புருவம் உயர்த்திச் சிரிக்க மலர்விழியும் புன்னகைத்தவாறே மகள் பக்கம் திரும்பாமல் ஜன்னலின் புறமே தலை திருப்பி வைத்து பின்னாலிருந்த குஷனில் சாய்ந்து உறங்க ஆரம்பித்தார்.
தொடர்ச்சி "ஒ௫வர் மனதிலே ஒ௫வரடி "யில்
கருத்துகள் பகிர