All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கண்ணால் காண்பதும்...! காதால் கேட்பதும்...! மெய்யே....!

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

இப்படி ஒரு பகுதி நம் தளத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்று இன்று காலை கூட தோன்றவில்லை. ஆனால் இப்போது இதன் அவசியம் நமக்கு தெரிய வேண்டிய ஒன்றாக ஆகி விட்டது. ஏனென்றால் நாம் பெண்கள் வீட்டின் கண்கள். இந்தக் கண்களில் தோன்றும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்ட நம் பிள்ளைகள், நாளை இந்த நாட்டின் கண்கள். அந்தக் கண்களை திறக்க வேண்டியது அவசியமே...!

ஆணோ..! பெண்ணோ....!

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...! பின்...
நல்லவர் ஆவதும்.. தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே...!

இந்த வரிகள் மறக்க முடியாத வரிகள்..!

மனதில் பதிந்து விட்ட வரிகள்...!

பெண் இல்லா வீட்டில் ஆண் தாயுமானவனாய் தாங்க, பிள்ளைகள் மேம்பட்ட வரிகள்.

இந்தப் பகுதியில், நான் என் கண் முன்னே வளரும் பிள்ளைகளின் போக்கை சொல்லப் போகிறேன். அது சரியா தவறா என்பதை பகுத்தறியும் போது, நாளைய சமுதாயத்தை நாம் மேம்பட்ட சமுதாயமாக வளர்க்க உதவும் என்ற நம்பிக்கையில்......

8904
விரைவில் முதல் பகுதியுடன் நாளை சந்திக்கிறேன்....

நன்றி தோழிகளே...!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தடம் மாறிய தளிர்கள்...! - 1

அந்தி சாயும் நேரம், கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் வீட்டை நோக்கிச் செல்லும் நேரம்.
கல்லூரி முடியும் மணி அடித்தவுடன், கலகலவென்று பேசிக்கொண்டு வெளிவரும் மாணவர் கூட்டமும், மாணவிகள் கூட்டமும், தங்கள் விட்டிற்குச் செல்ல தங்கள் வாகனங்களை நோக்கிச் செல்ல..., அங்கே அவரவர் இடம் தேடி அமர
கல்லூரி வாகனமும் கிளம்பியது.

பேருந்தில் ஒரு மாணவியர் கூட்டம் பயங்கர ஆரவாரத்துடன் தங்கள் கைபேசியில் படம் பிடித்து விளையாட, அதில் ஒரு பெண் தன் முன் இருந்த ஒரு மாணவனை படம் பிடித்து கேலி பேசி விளையாட, இதை அறிந்து கொண்ட முன் இருக்கையில் இருந்த மாணவன் பொறுக்க முடியாமல், அந்தப் பெண்ணிடம் உன் கைபேசியைக் கொடு என்று வாங்கிப் பார்க்க, அதில் தன்னை படம் பிடித்தது தெரிய கோபத்தில் கைபேசியை பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே வீசி விட்டான்.

உடனே, அந்தப் பெண் கோபத்தில் அந்தப் பையனை பளார் பளார் என்று நான்கு அறைகள் விடுகிறாள். சுற்றி இருந்த மாணவ மாணவியர் கூட்டம் திகைக்க, அந்தப் பெண் எனக்கு என் கைபேசியை திருப்பிக் கொடு என்று கத்துகிறாள். அடி வாங்கிய மாணவன் கொஞ்சம் அமைதியான பையன். அதனால் அவமானத்தில் முடியாது என்று சொல்கிறான்.

பிரட்சனை மறு நாள், கல்லூரியில் முதல்வரிடம் விசாரனைக்கு வர..., அங்கு பெண் முதல்வர், சம்பந்தப் பட்ட இருவரின் பெற்றோர், மற்றும் ஆசிரியர் முன் விசாரிக்க, அவர்கள் இருவரையும் குற்றம் சாட்டியது அந்தக் குழு. இங்கே பெண்ணின் பெற்றோர் அமைதி காக்க, அந்தப் பெண் என் கைபேசியை நீ கொடுத்தே ஆக வேண்டும் என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்கிறாள். ஆனால் அதிகம் பேசாத அந்த மாணவன் மற்றவர் முன் தலை குனியும் நிலை....

இங்கே, ஒரு நல்ல பெற்றோர் என்ன செய்ய வேண்டும்... என்ற கேள்வி நம் முன்....

இங்கு தடம் மாறியது யார்? யார் குற்றம்...? இவர்கள் இருவருக்கும் நம் பதில் என்ன...?
 
தாமரை

தாமரை
செல்விமா..புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்😍😍😍💖💖💐💐💐💐💐💐💐

ஒரு விவாத மேடை..உருவாக்கி இருக்கீங்க...

ஆரம்பமே...அமர்க்களம்...

ஒரு பையனை படம் எடுத்து கேலி செய்யும் உரிமை..அந்த பெண்ணுக்கு யார் கொடுத்தது..இதுபோல அந்த பெண்ணை அவன் செய்தா..இந்நேரம்...பெற்றோர் ல இருந்து...பெண்ணீயவாதிகள் வரை பொங்கிருக்க மாட்டாங்களா...

போனை தூக்கி எறிந்தான்..னு மட்டும் தான்...அந்த பையன் மேல குற்றம் சாட்ட முடியும்...அதை செய்யத் தூண்டியது...அந்த பெண்ணின் செய்கை..இந்த விஷயத்தில் நிர்வாகம் பெற்றார்...முன்னாடி தைரியமாக எதிர்த்து பேசும் இவள்..நிச்சயமா பாரதிகண்ட புதுமை பெண்ணும் அல்ல...

தடம் மாறிய இவளை...இன்னும் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களை பார்த்து கோபம் வருகிறது..

ஆண் பிள்ளைகளுக்கும் அநீதி நடக்கிறது என்று..இந்த சம்பவம காட்டுகிறது(உண்மையில் இதுவும் தான் இன்றைய சமூக நிலை...)
 
இனிய காலை வணக்கம் தாமரை.

ஆம் தாமரை, இதுவும் நாம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றே. இந்தப் பையன் அமைதியான நல்ல குணம் உள்ளவன் ஆதலால் இங்கு கைபேசி மட்டுமே உடைந்தது. அதுவே முரட்டு பையனாக இருந்தால், அந்தப் பெண்ணின் அடுத்த நிலை என்ன? இதையும் நாம் கவனிக்க வேண்டும். இங்கே தான் தவறுகளும், தப்புக்களும் அரங்கேறுகின்றன. இங்கே பெற்றவர்களும், பெரியவர்களும், ஆசிரியர்களும் தான் இதற்கு வழி சொல்ல முடியும். அதை கவனத்தில் கொண்டால் வருங்காலம் காக்கப்படும்.
 
காலை வணக்கம் செல்வி மா😍💖💖💖💐💐💐💐
நிச்சயமா...மாறுபட்ட இது மாதிரி காட்சிகளும்...உலக மேடையில் அரங்கேறுகின்றன..

மற்றவர் மனம் உடைக்கும் மனோபாவம் மாறவேண்டும்..ஆணென்ன பெண்ணென்ன...👏👏👏👍👍👍👍
 
Umasai

New member
செல்விமா..புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்😍😍😍💖💖💐💐💐💐💐💐💐

ஒரு விவாத மேடை..உருவாக்கி இருக்கீங்க...

ஆரம்பமே...அமர்க்களம்...

ஒரு பையனை படம் எடுத்து கேலி செய்யும் உரிமை..அந்த பெண்ணுக்கு யார் கொடுத்தது..இதுபோல அந்த பெண்ணை அவன் செய்தா..இந்நேரம்...பெற்றோர் ல இருந்து...பெண்ணீயவாதிகள் வரை பொங்கிருக்க மாட்டாங்களா...

போனை தூக்கி எறிந்தான்..னு மட்டும் தான்...அந்த பையன் மேல குற்றம் சாட்ட முடியும்...அதை செய்யத் தூண்டியது...அந்த பெண்ணின் செய்கை..இந்த விஷயத்தில் நிர்வாகம் பெற்றார்...முன்னாடி தைரியமாக எதிர்த்து பேசும் இவள்..நிச்சயமா பாரதிகண்ட புதுமை பெண்ணும் அல்ல...

தடம் மாறிய இவளை...இன்னும் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களை பார்த்து கோபம் வருகிறது..

ஆண் பிள்ளைகளுக்கும் அநீதி நடக்கிறது என்று..இந்த சம்பவம காட்டுகிறது(உண்மையில் இதுவும் தான் இன்றைய சமூக நிலை...)
இதுவே அந்த பையன் பெண்ணை போட்டோ எடுத்திருந்தா எவ்வளவு பிரச்சனை பண்ணி இருப்பாங்க.
 
Top