All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

Status
Not open for further replies.

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 24:

தன் கண் முன்னே இருக்கும் பெரிய கட்டிடமதை வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நிவி. அன்று வினய் அவளை திட்டிய பிறகு அவனிடம் பேச வேண்டும் என எவ்வளவோ முயல்கிறாள் ஆனால் அவனோ இவளை அழகாக தவிர்த்துக் கொண்டே வந்தான்.

என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று இன்று அவள் அவனது அலுவலகத்திற்கே வந்துவிட்டாள். தன்னைடைய முட்டாள் தனத்தால் தான் மதியின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் வந்தது என்பதை அறிந்தவளுக்கு தன்னை எண்ணியே கோபம் வந்தது.

அவளது சிந்தையில் இருந்ததெல்லாம் அன்று நடந்த நிகழ்வு தான். அன்று அந்த பத்திரங்களை படிக்கும் முன்பு வரை அவளது மனதில் வினய் தீயவனாகவே உருபெற்றிருந்தான். மதியின் தந்தை அதை படித்துவிட்டு மயங்கியதும் இவன் மீது கொண்ட கோபத்தோடு அதை படித்தவளுக்கு புரிந்தது என்று தான்.

இதுவரை வினயின் பெயரிலிருந்த மதி குழுமத்தின் மொத்த பங்குகளையும் அவன் மதியின் பெயருக்கு மாற்றி எழுதியது மட்டுமின்றி இனி சாதாரண மாத சம்பளக்காரனாக மட்டுமே அங்கு வேலையில் இருப்பதாகவும் எழுதியிருந்தான்.

மதியின் குடும்ப சொத்துகளுக்கும் தனக்கும் எந்தவித உரிமையும் இல்லையென அவன் கையொப்பமிட்டு இருக்க முழுதாக தங்களை விட்டு அவன் விலகியதை ஏற்க முடியாமல் தான் மதியின் தந்தை மயங்கினார் என்று நிவி அறிந்த பின்பு அவளது மனம் அவளை உறுத்திக் கொண்டே தான் இருந்தது.

வானைத் தொட நிமிர்ந்திருந்த கட்டிடம் அவளது பயத்தை கூட்ட தனது மனதை திடப்படுத்தியவள் அதன் உள்ளே சென்று வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் தான் வந்ததற்கான காரணத்தை சொன்னாள்.

அந்த பெண்ணோ அவளை மேலும் கீழுமாய் ஒரு ஆராய்ச்சி பார்வை செலுத்தினாள். 'அடியேய் நா என்ன உன்னோட புருஷனயா பாக்க போறேனு சொன்னேன்.இந்த லுக் விடற. மவளே இப்ப எனக்கு காரியம் ஆகனும் இல்லனா இந்நேரம் இந்த நிவி யாருனு தெரிஞ்சிருக்கும்' என மனதினுள் வசைப்பாடிக் கொண்டே வெளிய இரு உதடுகளையும் "ஈ" என விரித்து வைத்தாள்.


அதைக் கண்ட வரவேற்பில் இருந்த பெண்ணோ 'இவள் ஏதோ வழியும் கேஸ் போல. எங்க இருந்து தான் வருதுங்களோ. ' என தலையில் அடித்துக் கொண்டு "ஏற்கனவே பர்மிஷன் வாங்கியாச்சா" எனவும் திருதிருவென விழித்த நிவி "நா மதியோட ப்ரண்ட். அவருக்கு நல்லா தெரியும். வேணும்னா கேட்டு பாருங்க "

"அட.... யாருங்க நீங்க. தினமும் இப்படி ரெண்டு பேர் வந்து சார தெரியும், மேடம தெரியும்னு சொல்றாங்க. எல்லாரையும் உள்ள விட முடியுமா." என்றவள் அங்கிருந்த காவலாளியை அழைக்க நிவிக்கு அவமானம் பிடுங்கி தின்றது. வாழ்வில் முதல் முறையாய் அவமானப் படுகிறாள்.


ஏனோ அவளது மனதில் கோபம் இல்லை "இது போல தான அவங்களுக்கும் இருந்திருக்கும். " என தன்னையே நொந்து கொண்டிருந்த நேரம் காவலாளி அவளை வெளியே போகச் சொல்லி விரட்டினான். கண்ணீர் அவளது விழிகளை சூழ அங்கிருந்த உருவங்கள் மங்கலாக தெரிந்தது.

அதற்கு மேலும் அங்கிருக்க பிடிக்காமல் வெளியே செல்ல எத்தனித்தவள் காட்சிகள் இருளாக அங்கிருந்த நாற்காலியில் இடித்து கீழே விழ அதைக் கண்ட வரவேற்பில் அமர்ந்திருந்த பெண்ணிற்கு சிரிப்பு வந்தது.

அந்நேரம் "ஷட் அப்.... வாட்ஸ் த ஹெல் கோயிங் ஹியர்" என்ற படி வந்த வினய் கீழே விழுந்திருந்த நிவியை தனது கரம் கொண்டு தூக்கி விட்டான். அவளுக்கு எதுவும் அடிபடவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு திரும்பியவன் அந்த பெண்ணை கோபமாய் முறைக்க அவளோ பேயறைந்தாற் நின்று கொண்டிருந்தாள்.

"சிவா...." அவனது குரலில் அவனது உதவியாளர் அடித்து பிடித்து ஓடி வர "டிஸ்மிஸ் ஹெர்... "என்றான். அந்த பெண்ணோ "என்ன மன்னச்சிடுங்க சார். இனிமே இப்படி நடக்காது" என்றிட தீப்பார்வை பார்த்தவன் நிவியை இழுத்துக் கொண்டு தன்னறைக்கு சென்றான்.


அவனது கோபம் நிவிக்கும் பயத்தை உண்டு பண்ண அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்றவள் அவனறையை அடைந்ததும் கோபமாய் தன்னை பார்ப்பவனைக் கண்டு தலையை குனிந்து கொண்டாள்.

"என்ன வேணும் உனக்கு. அன்னைக்கே உன்ன வார்ன் பண்ணேன்ல. அப்படி இருந்தும் என் முன்னாடி வர எவ்ளோ தைரியம்"

"இல்ல.. சார்... அது.... வந்து" பயத்தில் அவளது வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. அவளது திணறலை கேட்டவனுக்கோ மேலும் கோபம் வந்தது. அதில் மேலும் மிரண்டவள் மனதினுள் 'அடியே.... நிவி.... வாய்க்கு வாய்க்கு வக்கனையா பேசுவியேடி... இப்ப ஏன்டி ஊமை மாதிரி நிக்குற. இப்ப நீ பேசல இந்த டெடர் பீஸ் உன்ன டெட் பாடியா மாத்திடுவான்.பேசுடி ... பேசு...'

அவளது முகத்தை வைத்தே அவள் என்ன நினைக்கிறாள் என அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. "லுக் ஹியர்.... டோன்ட் வேஸ்ட் மை டைம்... எனக்கு வர கோபத்துக்கு உன்ன கொல்லணும் போல தோணுது. "
'என்னது கொலையா.... கொன்னுடுவானோ... ச்ச...ச்ச....
... அதுவரைக்கும் நாம என்ன சும்மாவா இருப்போம். நம்ம ஸ்பீக்கர அலற விட்ற மாட்டோம்'
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மதியோட ப்ரண்டுனு பாக்குறேன்"

'ஸ்ப்பா.... அப்ப உசுருக்கு பாதகமில்லை. வந்த வேலய காட்டுடி கைப்புள்ள'

"சார்.... நா உங்க கிட்ட சாரி கேட்க தான் வந்தேன். அன்னைக்கு உங்கள தப்பா புரிஞ்சுகிட்டு அத அப்பா கிட்ட சொல்லி அவருக்கும் உடம்பு சரியில்லாம போய் என்னால தான எல்லாமே.. நா இப்படி நடக்கும் நினைக்கல சார் . என்ன மன்னச்சிடுங்க சார்" மனதில் பதிவேற்றி வைத்திருந்த வசனங்களை அவன் விழிக் காணாமல் அவள் உரைத்திட ஆணவனோ அவளுக்கு பதிலுரைக்காமல் அழுத்தமான பார்வை ஒன்றை பார்த்து வைத்தான்.

அவனது பார்வையில் நடுங்கிய உள்ளமதை வெளிக்காட்டாமல் பார்வையை மட்டும் தழைத்துக் கொண்டு அவள் நிற்க அவனோ அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கி வந்தான். "மன்னிப்பு கேட்டா எல்லாம் முடிஞ்சு போச்சா... உன்னப் பாத்தாலே எரிச்சலா இருக்கு. போய்டு இங்க இருந்து" கர்ஜனையாய் ஒலித்தது அவனது குரல் அவளது செவியருகே.

அதுவரை அவள் விழிகளில் ஒளிந்திருந்த கண்ணீர் அருவியாய் கொட்டியது."ஏய்..... இப்ப எதுக்கு அழற. தேவயில்லாம சீன் கிரியேட் பண்ணாத. நீ பண்ணதுக்கு நா திட்டுனதோடு விட்டுடேனு சந்தோஷப்படு. ஒழுங்கா முகத்தை துடச்சிட்டு கிளம்பு. "

அவள் கண்ணீர் சிந்தினாலும் அவ்விடத்தை விட்டு அகலாமல் அவனையே பார்த்திருந்தாள்.அதனைக் கண்டவனுக்கு எரிச்சல் அதிகரித்திட "சொன்னாப் புரியாதா??? போ ...." என்றிட அவனது தொலைபேசி அழைத்தது.

நிவியை முறைத்தவாறே எடுத்து பேசியவனின் முகம் ஒரு நிமிடம் சுருங்கி பின் விரிந்தது. அலைபேசியை அணைத்தவன் , நிவியிடம் திரும்பி "எதுக்காக அன்னைக்கு அப்படி நடந்துகிட்ட. உனக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் இல்ல. அப்றம் எதுக்கு மதி அப்பா கிட்ட என்ன தப்பானவனு காட்ட முயற்சி பண்ண. சொல்லு" கூர்மையான பார்வையுடன் கேட்க அவனது பார்வையை கண்டு நடுங்கிய மனதை தன்னுள்ளே சமாதானப்படுத்தி கொண்டிருந்தாள். ' நிவி பயப்படாத. நீ பண்ண தப்புக்கு மன்னிப்பு கேட்டுட்ட அதனால நீ தைரியமா இரு.. இவங்களால உன்ன என்னப் பண்ண முடியும்'

"ஏய்... என்ன கனவு கண்டுட்டு இருக்க. பதில் சொல்லு"
"இல்ல சார்... அன்னைக்கு கல்யாண மண்டப வாசல்ல நீங்க பேசுனத அறகுறயா கேட்டுட்டு எங்க மதிய ஏமாத்துறீங்களோனு தோணுச்சு அதான் தெரியாம அப்படி பண்ணிட்டேன் சார்"

"மதிய உனக்கு ரொம்ப பிடிக்கும்?"
"ஆமாம் சார்...என்னோட பெஸ்ட் பிரண்ட்.ரொம்ப நல்லவ. "
அவளது பேச்சினை கேட்டவன் "சரி எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும். மதிய சுத்தி நிறைய ஆபத்து இருக்கு. அவ உயிருக்கு ஏதாவது ஆகிடுமோனு நானும் ஆதியும் ரொம்ப கவலப்படுறோம். மதி எதையோ நினச்சு தனக்குள்ளே கஷ்டப்படுறா. அது என்னனு எங்களுக்கு தெரியனும். நீ அவ பிரண்ட் தான. சோ அவளுக்கு என்ன பிராப்ளம்னு கண்டுபிடிச்சு எங்க கிட்ட சொல்லனும். செய்வியா?" கம்பீரமான குரலில் அவன் பேச பேச அவனது குரலின் ஆளுமையில் கட்டுப்பட்டிருந்தவள் அவனது முறைப்பை கண்டு" சரி சார்.... மதிக்காக கண்டிப்பா நா இத செய்றேன். அப்றம் என்ன மன்னிச்சிட சொல்லி கேட்டேனே. அது...." என இழுக்கவும் அவளை பார்த்து சிறு புன்னகை புரிந்தவன் "மன்னிச்சதால தான் உன் கிட்ட ஹெல்ப் கேக்குறேன். போ...." அதட்டலாய் கூற அதில் கோபமானவள் உதட்டை சுழித்துக் கொண்டு வெளியேறினாள்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25:

அந்த இரண்டு கொலைகளுக்கான ஆதாரங்களை தேடி தேடி கலைத்து போய்விட்டான் ராம். அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பதட்டத்தில் இருக்கும் ஒருவருக்கு அவரின் கண்முன்னால் இருக்கும் பொருள் கூட தெரியாது என்பார்கள். அது போல காதல் தோல்வியில் துவண்டிருந்தவனின் கவனத்திற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

வழக்கம் போல் கொலைக்கான ஆதாரங்களை தேடிச் சென்றவனுக்கு மீண்டும் ஏமாற்றமே.. செல்வியின் நம்பிக்கையான முகம் வேறு அவனது கண்களில் அடிக்கடி வந்து போனது. என்ன செய்வதென்று தெரியாமல் சாலையோரம் இருந்த மரத்தடியில் தனது வண்டியில் சாய்ந்து நின்று விட்டான். அவனது பாதுகாப்பு குழுவினர் சிறிது தொலைவில் நின்று அவனை கண்காணித்து கொண்டு இருந்தனர்.

கண்மூடி இருந்தவனின் மனதில் கனியின் புன்னகை முகம் வந்து போக அவனது கண்களில் ஒரு துளி கண்ணீர் 'ஏன்டி என்ன இப்படி படுத்துற. என்ன ஏன்டி உனக்கு பிடிக்கல. அவன் யாருடி. அவன் தான் உனக்கு பிடிச்சிருக்கா. என்னால இத ஏத்துக்கவே முடியல. உன்னால நா எல்லா இருந்தும் அனாதை மாதிரி இருக்கிறேன்டி. ' மனதோடு புலம்பியவாறு நிமிர்ந்தவனின் கண்களில் விழுந்தாள் கனி.

அந்த சாலையில் சற்று தொலைவில் தனது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தாள் கனி. இளரோஜா வண்ண புடவையில் கைகளிலும் காதுகளிலும் அதே ரோஜா வண்ண செயற்கை ஆபரணங்களை அணிந்து தேவதையாய் வந்து கொண்டிருந்தாள்.

ராம் இதுவரையிலும் கனியை புடவையில் பார்த்ததில்லை. முதன் முறையாக மனம் கவர்ந்தவளை புடவையில் பார்த்ததும் அவனது மனம் எல்லாவற்றையும் மறந்து குத்தாட்டம் போட்டது. இமைக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

கனியும் ராமை பார்த்து விட்டாள்
. அன்றைய கசப்பான நிகழ்விற்கு பிறகு இன்றுதான் அவனை பார்க்கிறாள். இருவரது பார்வையும் ஒன்றை ஒன்று காந்தமாய் ஈர்த்துக் கொள்ள கடந்து போன சில நொடிகளுக்கு பின் ராம் தான் சுதாரித்து கொண்டான்.

அவன் தனது முகத்தை திருப்பிக் கொள்ள , அவனை நெருங்கிய கனி தனது வண்டியை நிறுத்தினாள். "ராம்.... ராம்... " அவனது அருகில் சென்று அவனை அழைக்க அலட்சிய பாவத்தோடு அவளைப் பார்த்தான்.

இதுவரை கண்களில் காதலோடு தன்னை பார்த்த ராமின் கண்களில் தெரிந்த அலட்சியத்தில் கனியின் மனம் ஒரு கனம் சுனங்கியது . "ராம் என் கிட்ட பேச மாட்டிங்களா??? ஏன் இங்க உட்காந்து இருக்கீங்க. என்னாச்சு உங்களுக்கு ஒரு மாதிரி இருக்கீங்க" பதட்டத்தோடு வினவ அவனிடத்தில் மௌனம் மட்டுமே.

கண்களை மூடி தலையில் கைகளை கட்டி ஆகாயத்தை பார்ப்பது போல் அமர்ந்திருந்த அவனது தோற்றம் பயத்தை தந்தாலும் மனதை திடப்படுத்தி அவனை நெருங்கி அவனது தோளில் கை வைத்தாள். அடுத்த நொடி வேகமாக அவள் கைகளை அவன் தட்டி விட தடுமாறியவள் கீழே விழப் போக அவளைத் தாங்கியவன் அவளை நிற்க வைத்து விட்டு

" இங்கிருந்து போய்டு. ஏற்கனவே நா செம கடுப்புல இருக்கேன். உன்ன ஏதாவது பண்ணிட போறேன். போய்டு போடி....." என்று கத்தினான். அவனது கத்தலில் தொலைவில் நின்றிருந்த பாதுகாவலர்கள் அவனை நோக்கி ஓடி வர முயல்கையில் அவர்களை விழியசைவில் தடுத்தவன் கனியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏனோ கனிக்கு ராமிடம் பேச வேண்டும் போல இருந்தது. "ராம் நீங்க கோபப்படலனா என் கூட சாப்ட வரீங்களா. எனக்கும் பசிக்குது. இன்றைக்கு உங்க கூட சேர்ந்து சாப்டுறேன். ப்ளீஸ் முடியாதுனு சொல்லாதீங்க
ப்ளீஸ்" என கெஞ்சிடத் துவங்க அவனது காதல் மனம் அவளுடன் செல்லவே விரும்பியது அவனையும் மீறி.

இருப்பினும் வீம்பாக அமர்ந்திருந்தான். அவனிடம் பதில் இல்லையென்றாலும் அவனுடைய கையைப் பற்றி அவனை எழுப்பி விட முயன்றாள். குச்சி போன்ற உடல் கொண்ட அவளால் அவனை அசைக்க கூட முடியவில்லை. ஏன் அவனது கையைக் கூட அசைக்க முடியவில்லை.

தன்னை அவளால் அசைக்க முடியுமா??? இருப்பினும் அவள் முயற்சியை கண்டு அவனது இதழில் சிரிப்பு விரிந்தது. காதல் எல்லாவற்றையும் மன்னித்து விடுமே. மறந்தும் விடுமே. மெல்ல அவள் மீதான மனச்சுணக்கம் குறைந்து போனது. அதிலும் அவள் பசி என்றிட எல்லாமே மறந்து போனது.

அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றவனை தனது வண்டியருகில் நிறுத்தியவள் "ராம்.... இன்னைக்கு நா லன்ச் வாங்கி தரேன். செலவு எல்லாம் என்னுடையது. ப்ளீஸ் வேணாம்னு சொல்லாதீங்க ராம்"

"சரி உன் இஷ்டம்" என்ற படி அவனது வண்டியில் ஏறப்போனவனை தடுத்தவள் "என் கூட வண்டியில் வாங்க. நா உங்கள கீழே தள்ள மாட்டேன். நம்பி உட்காரலாம்" என்றிட அவன் மனமோ' ஐயோ சோதிக்கிறாளே..... எனக்கு பிடிச்ச டிரஸ்ல தேவதை மாதிரி வந்து கொலறாளேனு நானே என்ன கண்ட்ரோல் பண்ணிகிட்டு தள்ளிப் போறேன் விட மாட்ட போலவே... '

"வேணாம் கனி அது சரிவராது. நா என்னோட பைக்ல வரேன்" அவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய அவனது வண்டி சாவியை பறித்தவள் '" என் கூட தான் நீங்க வரணும்"
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னவோ பண்ணு" அவள் வண்டியில் அவள் பின்னால் இருபுறமும் கால் போட்டு அமரந்தான். தனது பாதுகாவலர்களுக்கு கண்ஜாடையில் கட்டளை பிறப்பித்தான். அவனது உயரத்திற்கு அந்த வண்டி மிகவும் சிறியதாக இருந்தது.

அவனுக்கு இது ஒரு புது வித அனுபவமாக இருந்தது. கீழே இடித்து கொள்ளமளவு நீண்டிருந்த கால்களை கஷ்டப்பட்டு சுருக்கி வைத்து கொண்டான். அவனை பொறுத்தவரையில் இது அவனது வாழ்க்கையின் மிக மிக பொக்கிஷமான தருணம்.


தன்னை மறந்து கனியை ரசித்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் விழுந்தது ஆடையின் இடைவெளியில் தெரிந்த இடை. முதன் முறையாக தனது காதலியின் அழகை இவ்வளவு நெருக்கத்தில் கண்ண அவனது மனம் தடுமாறத் தொடங்கியது. பார்வையில் வருடிய தன்னவளின் இடையை விரல்களால் வருடிட துள்ளியது அவனது உள்ளம்.
அவன் எவ்வளவு தான் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.

தன்னுள்ளே போராடித் தோற்றவன் தனது இடது கரத்தினால் புடவையின் இடுக்கில் வெளிப்பட்ட வெற்றிடையில் வைத்து விட்டான். அவனது விரல்களின் பரிசத்தை உணர்ந்த அடுத்த நொடி வண்டியை நிறுத்தி விட்டாள் கனி. அவளது பார்வை திரும்பி அதிர்ச்சியாய் அவனை பார்த்தது.

அவளின் பார்வையை அவன் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அவளுக்கு தான் கண்ணீர் வழிந்தது. நல்ல வேளையாக வாகன நடமாட்டம் இல்லை. ஆதலால் யாருடைய கண்களுக்கும் அக்காட்சி விருந்தாகவில்லை. அவனது கையை இடையிலிருந்து தட்டி விட முயல்கையில் அவனது பிடி இறுகியது. அவளுக்கு வலிக்கவும் செய்தது.

"ராம் சார்... ப்ளீஸ் கையை எடுங்க" அவள் கண்ணீரோடு கெஞ்ச அவனோ அவளுக்கு மேல் பரிதாபமாக அவளை பார்த்தான். "ப்ளீஸ் கனி...
கொஞ்ச நேரம்... அப்றம் நா உன்ன டிஸ்டர்ப் செய்ய மாட்டேன். இதுவே என் ஆயுசுக்கும் போதும். ப்ளீஸ்.... ப்ளீஸ்"

அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ராமின் இந்த செய்கையையும் கெஞ்சலையும் எதிர்பார்க்கதவள் ஒரு நிமிடம் கண் மூடி சிந்தித்து விட்டு வண்டியை எடுத்தாள். இதுவரை இடது கரத்தினால் மட்டுமே பிடித்திருந்த இடையை இருகரங்களிலும் இறுக்கி பிடித்து கிட்டதட்ட அவளை அனைத்தபடி அமர்ந்திருந்தான் ராம்.

உணவகத்தை நெருங்கும் வரை கனியின் மனம் ஒரு நிலையில் இல்லை. வண்டியை நிறுத்திய பின்னும் அவள் இடையை விடாமல் பற்றியிருந்த கையை அவன் எடுக்க வில்லை. சுற்றுப் புறம் உணர்ந்து அவன் விலக முயல்கையில் பறந்து வந்த பெட்ரோல் குண்டு அவர்களை கடந்து சற்று தள்ளிப் போய் வெடித்தது.

அதன் சத்தத்தில் மக்கள் அங்கும் இங்கும் ஓட ராமின் கரங்கள் கனியினை இறுகப் பற்றியிருந்தன. அடுத்தடுத்த வீசப்பட்ட குண்டுகளில் இருந்த அவளை பாதுகாத்தவாறு அழைத்து வந்தவனுக்கு லேசாக அடிப்பட்டிருந்தது. அதற்குள் அவனின் பாதுகாவலர்கள் வந்துவிட நிலைமை சற்று நேரத்திற்குள் கட்டுக்குள் வந்தது.

அவனது காயத்திற்கு முதலுதவி நடந்து கொண்டிருக்கையில் கனி எழுந்து தனியே செல்வதை கண்டவன் அவள் பின்னேயே ஓடினான் மருத்துவரின் குரலை பற்றி கவலைப்படாமல். "கனி...
கனி.... நில்லு... நில்லுனு சொல்றேன்ல "என்றவாறு அவளது முன் வந்து நின்றான்.


அவனது முகத்தை ஒரு முறைக் கூர்மையாய் பார்த்தவள் "என்ன.. சொல்லுங்க" அவளது குரலில் மருந்துக்கும் நட்பு இல்லை. " கனி.... நா சொல்றத கேளுமா... இது.. வந்து" அவன் தடுமாற "போதும் ராம்.. உங்க கூட வந்தாலே பிரச்சனை தான். ஏன்னா நீங்களே ஒரு பிரச்சனை. எதுக்கு என் பின்னாடி வந்தீங்க. இன்னும் சாகலையானு பாக்கவா... உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராது சார்... இனிமேல் என் பின்னாடி வராதீங்க. தன்னுடைய உயிருக்கு உத்தரவில்லாத ஒருத்தனுக்கு காதல் ரொம்ப முக்கியம். உங்க வழிய நீங்க பாருங்க. என் வழிய நா பாக்குறேன். இனிமேல் என் முகத்துல முழிக்காதீங்க. " என்று கத்தியவள் அவனை அலட்சியப்படுத்தி தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு "காதலாம் காதல்.... பெரிய புடலங்காய் காதல்... உயிர் போனா வருமா" என்று முணுமுணுத்தவாறு சென்றுவிட்டாள்.

அங்கே இரத்தம் வழியும் முகத்தோடு அதிர்ந்து நின்றான் ராம்....
 
Last edited:

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,

Hope all are fine. Many of u have angry about me. I know that. I am sorry friends.

Because I have started "kalnenje kasinthurugu" story on 2018. Still i didnt complete it. I will promise you guys , will complete this novel within this month.

Will post the first part on December 15. Please wait and support me.

Thank you friends being with me.

Poovini sekaran.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று அத்துவின் பிறந்தநாள். அவனது குடும்பத்தினர் அனைவரும் அவனுக்கு வாழ்ந்து கூறி அன்றைய தின கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்ய போக அனைத்தையும் மறுத்தவன் தனிமையை நாடி சென்றான். அவனால் இந்த பிறந்தநாளை‌ மகிழ்ச்சியாக கொண்டாட முடியவில்லை.

ஏனோ அவனது மனம் அவனது அனுமதி இல்லாமல் ஹரிணியுடன் கொண்டாடிய பிறந்தநாளை நினைத்து வருந்தியது. அன்றைய தினத்தில் அவன் அனுபவித்த இன்பம் ‌மட்டுமே அவனை‌ இன்னும் உயிர்ப்புடன்‌ வைத்திருக்கிறது.

நினைவுகளில் ‌நிறைந்த அவள் நிஜத்தினில் இல்லையே என்று அறிவிற்கு தெரிந்தாலும் மனதிற்கு தான் ஏனோ தெரியவில்லை. அவனது நினைவுகள் பின்னோக்கி கல்லூரி காலத்திற்கு சென்றது.

நாளை அத்துவின் பிறந்தநாள். இன்று கல்லூரியில் ஹரிணியை கண்ட போதும் அவளிடம் பிறந்தநாளை பற்றி சொல்லவில்லை. அமைதியாக அவளை ரசித்ததவனது உள்ளம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இத்தனை பிறந்தநாள்கள் கடந்தது எப்படியோ. ஆனால் இப்போது முழுமையாக அவனுக்கே உரிமையான ஒரு ஜீவன்.

அந்த நினைவே அவனுக்கு ‌நிறைவாக இருக்க அதை தாண்டி அவன் வேறெதுவும் எதிர்பார்க்கவில்லை. இரவு உறங்க சென்றவனது மனம் ஆழ்கடலை போல அமைதியடைந்திருந்தது.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரியாக இரவு பதினொன்று ஜம்பத்து ஜந்து அவனது கைபைசி ஒலித்தது. தூக்கத்தில் அழைப்பை ஏற்றவனுக்கு அதில் கேட்ட குரலில் தூக்கம் தொலை தூரம் போனது. "அத்த்த்த்து...... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அத்து. இந்த வருஷம் நீங்க நினைச்சது எல்லாம் உங்களுக்கு கிடைக்கும். எப்பவும் சந்தோஷமா இருப்பீங்க. ஹேப்பி பர்த்டே அத்து குட்டி."

அவளது வாழ்த்தில் இனிமையாக அதிர்ந்தவன் " ஹனி.... இன்னைக்கு எனக்கு பர்த்டேனு உனக்கு தெரியுமா????. ரொம்ப தேங்க்ஸ்டி செல்லம். சத்தியமா நா இத எதிர்பாக்கல.... லவ் யூ டி ஹனி. லவ் யூ சோ மச்" அவனது குரல் கரகரப்பாக ஒலித்தது.

"உங்க பிறந்தநாள் எனக்கு தெரியுமா இருக்குமா அத்து. சரி‌ சொல்லுங்க. பர்த்டே பேபிக்கு என்ன கிஃப்ட் வேணும்."

"என்ன கேட்டாலும் தருவியா ஹனி...." அவனது குரல் கிசுகிசுப்பாக ஒலித்தது. அந்த குரலில் தெரிந்த ஏக்கத்திலும்,தாபத்திலும் அவளது இதயம் தாறுமாறாக துடித்த்து. இருவரும் காதலிக்க துவங்கியது முதல் இன்று வரை வெறும் கன்னியமான பார்வைகளை மட்டுமே பறிமாறிக் கொண்டுள்ளனர்.


முதன் முறையாக அத்துவின் தாபக்குரலை கேட்கிறாள். அவனது குரலிலேயே அவளுக்கு படபடப்பு கூடியது. வார்த்தைகள் வராமல் மௌனத்தில் அவள்‌ துடித்திட அதை அறிந்த கள்வனோ மீண்டும் அநேகம் குரலில் "ஹனி.... சொல்லுடி... என்ன கேட்டாலும் தருவியா.... இந்த பிறந்தநாளை‌ எப்பவும் மறக்க கூடாதுனு நினைக்கிறேன்.. அதனால் நீ... நீ..நாளைக்கு உன்ன எனக்கு தருவியா" என்றான்.

"என்னது.." அதை கேட்ட ஹரிணியின் மனம் அதிர்ந்தது. "என்னடி பயந்திட்டியா..... நாளைக்கு உன்னோட ஒரு நாள எனக்கு தாடி.... நாளைக்கு முழுசும் நீ என் கூடவே இருக்கணும்... இது தான் என் கிப்ட்.... கிடைக்குமாடி.."

அவனின் பதிலில் தெளிந்தவள் "கண்டிப்பா அத்து.... நாளைக்கு full‌ டே உங்க கூட தான்... இப்போ அமைதியா தூங்குவீங்களாம்..என் செல்லம்ல.. தூங்குங்க..."

"இல்லடி எனக்கு தூக்கம் வரல... என்னவோ பண்ணுது டி.... 'மீண்டும் அவன் மயக்கும் குரலில் சொல்ல அவளுக்கோ பெரும் அவஸ்தையாகி போனது.

"அத்து... ப்ளீஸ்... என்னாச்சு ஏன் இன்னைக்கு இப்டிலாம் பேசுறீங்க.. தூங்குங்க"

"ஹனி... கொல்றடி என்ன... இப்பவே உன்ன பாக்கணும் போல தோணுது... நீ தான் ஓகே சொல்ல மாட்ட.. சரி விடு... நீ வந்ததுக்கு அப்புறம் என்னோட லைப் ரொம்ப ஹேப்பியா இருக்கு டி.நாளைக்கு எப்போ விடியும்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.அப்போ தான உன்ன பக்க முடியும். இ ரியலி மிஸ் யூ டி. நாளைக்கு full டே என்கூட தான இருப்ப.. என்ன ஏமாத்திட மாட்டல... "ஏக்கம் வழியும் குரலில் அவன் சொல்ல
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன அத்து என் மேல நம்பிக்கை இல்லையா நாளைக்கு மோர்னிங் ஒன்பது மணிக்கு வந்துடுறேன் நாம எப்பவும் பாத்துக்குற பிளேஸ்க்கு ஓகே வா"

"ஹம்ம்ம்... சரி நீ தூங்கு.. எனக்கு உங்கிட்ட பேசிட்டே இருக்கனும் போல இருக்கு... விட்டா நைட் full கூட பேசுவேன்.. பட் டைம் ஆகிடுச்சு... சோ நாளைக்கு பாத்துக்கலாம்... மிஸ் யூ டி...குட் நைட்... லவ் யூ"

"லவ் யூ‌ அத்து... மிஸ் யூ டூ.... "அவனிடம் பேசிவிட்டு தூங்க சென்றவளுக்கு அவனது நினைவு தான்..

இதுவரையிலும் எந்த பெண்ணையும் நிமிர்ந்து பார்க்காத‌ ஒருவன் தனக்காக ஏங்கி தவிப்பது அவளுக்கு ஒரு வித சுகமான உணர்வை தந்தது. அவன் மீது அவள் உயிரையே வைத்திருக்கிறாள்... இப்போது அவனது காதலும் அதற்கு குறைவில்லையே... மனம் நிம்மதியில் நிறைந்து இருந்தது.அந்த இதமான மனநிலையுடன் உறங்க சென்றாள்..

காலை ஒன்பது மணி........
அத்து அந்த பழைய சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தான்... அவனது ஹனிக்கு பிடித்த ஆகாய நீல வண்ண டீ-ஷர்ட்.... கருப்பு நிற ஜீன்ஸ்... கையில் சில்வர் வாட்ச்... கண்களில் வழியும் காதல் என அவளுக்காக காத்திருந்தான்.. ஒன்பது மணிக்கு வர வேண்டிய இடத்திற்கு காலை ஆறு மணிகே வந்து விட்டான். ஏனோ அவனது மனமும் உடலும் கனியை அதிகமாய் தேடியது... அவளுக்காக காத்திருந்த நொடிகள் யுகமாக ஒருவித அவஸ்தையுடன் காத்திருந்தான்.


சில்லென்ற உணர்வு அவனை தாக்க நிமிர்ந்து பார்த்தவன் சிலையாகி போனான்... அங்கே அவனது இதய தேவதை நிஜமான தேவதையாகி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

அவனுக்கு இணையாக அவளும் சேலை தான் உடுத்தி இருந்தாள். மிக எளிய அலங்காரம் மட்டுமே. அதிலேயே அவள் தேவதையாக தெரிந்தாள்.. காலை நேர சூரிய ஒளி அவளது முகத்தினில் விழுந்து அவளது அழகு முகத்தை மேலும் அழகாக காட்டியது...

அந்த இடத்தில் இருந்த அத்தனை பேரின் பார்வையும் ஒரு முறை அவளை தொட்டு மீண்டது.சிலரது பார்வை அவளை விட்டு நகர மறுத்து அவளிடமே நிலைத்து நின்றிட அத்துவிற்கு தான் கோபம் வந்தது. வேகமாக அவளை நெருங்கியவன் அவளது கையினை பிடித்து இழுத்து கொண்டு காரினுள் அமர்ந்து அதை ஓட்ட துவங்கினான். அவனது முகம் கோபத்தில் இருக்கவும் ஹரிணி திகைத்து விழித்தாள்..

"அத்து ஹேப்பி பர்த்டே.... எப்பவும் நீங்க ஹேப்பியா இருக்கனும். இந்த பிறந்தநாள் உங்க லைப்ல மறக்க முடியாத பிறந்தநாளா இருக்க என்னோட வாழ்த்துக்கள்." மிகவும் உற்சாகமாக அவள் பேச அவனோ அவளை முறைத்தான். அதில் அவளது பேச்சு தடைபட

"என்னாச்சு அத்து. ஏன் கோபமா இருக்கிங்க"

"புடவை கட்டிட்டு வரேன்னு ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை"

"இதுக்கா கோபம்.. ஒரு சர்பிரைஸ்க்காக தான் சொல்லல. ஏன் நல்லா இல்லயா"

"நல்லா இல்லையாவா... ரொம்ப அழகா இருக்க டி... கண்டவனும் உன்ன தான் பாத்தானுங்க... நீ முன்னாடியே சொல்லிருந்தா வீட்டுக்கு வந்துருப்பேன்ல"

"ஒஹ்ஹ... இது தான் கோபமா... விடுங்க அத்து... நா தெரியாம இப்டி பண்ணிட்டேன்.. இப்போ பர்த்டே செலிப்ரேஷன் இருக்கு. சோ கோபப்படக்கூடாது. ஹாப்பி பர்த்டே ஒன்ஸ் அகைன்" அவனது கரங்களை பற்றி அவள் வாழ்த்து கூற அவனோ அவளது கைகளின் மென்மையினை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

"அத்து..... அத்து.... வாங்க போலாம்.."

"எங்க போகணும் சொல்லு"

"முதல்ல கோவிலுக்கு தான் போகணும்.. வாங்க இங்க பக்கத்துல இருக்குற சிவன் கோவில் ரொம்ப பேமஸ். அங்க போகலாம்."

"கோவிலுக்கா... ஹனி..."
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஹ்ம்ம்ம்... நோ எஸ்கியூஸஸ்..போங்க"
செல்லமாய் அவனை மிரட்ட அவனும் அவள் சொன்னபடியே கோவிலுக்கு சென்றான்.

பழம்பெரும் பெருமை மிக்க அந்த சிவன் கோவிலில் நுழைந்த உடன் இருவர் மனதும் அமைதியால் நிறைந்தது. இறைவனை வணங்கிய இருவர் மனதிலும் இருந்தது ஒன்று தான் அது இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருக்க வேண்டும் என்பது.

"அத்து.... பர்த்டே அன்னைக்கு முதல்ல கோவிலுக்கு தான் வரணும். இனி வர எல்லா பிறந்தநாளுக்கு நாம இந்த கோவிலுக்கு வரலாம்.. ஓகே வா"

"ஹ்ம்ம். நீ சொன்ன பிறகு நோ அப்பீல் தான் ஹனி.அடுத்து எங்க"

" சொல்றேன் வாங்க "என்றவள் அவனை ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு அழைத்து சென்றாள்... அங்கு இருந்த நொடிகள் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுவரை அவனது மனதில் இருந்த சில வருத்தங்கள் இப்பொழுது இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருந்தன. அவன் வாய் திறந்து சொல்லாமலே அவனது மனதில் இருந்ததை புரிந்து கொண்டதை நினைத்து அவனுக்கு பெருமையாக இருந்தது. காலை உணவை அவர்களுடனே உண்டனர்.

அமைதியாக அந்த குழந்தைகள் விளையாடுவதை பார்த்து கொண்டு அமர்ந்து விட்டான்.

"அத்து.... இங்க என்ன பண்றீங்க"

"ஒண்ணுமில்ல ஹனி... "

"இவங்கள பாருங்களேன் அத்து. வாழ்க்கைல நாம எவ்ளோ நல்ல நிலமைல இருக்கோம்னு நமக்கு இவங்கள பாத்தா தெரிஞ்சிடும். நாமெல்லாம் ருசிக்கு சாப்பிடுறோம் அத்து ஆனா இவங்க பசிக்கு சாப்பிடறாங்க.. நமக்கு கடவுள் எல்லாத்தையும் குடுத்துருக்கார் ஆனா நாம எப்பவும் அவரை திட்டி குறை சொல்லிட்டே இருப்போம். இவங்களுக்கு கஷ்டத்தை தன குடுத்துருக்கார்..ஆனா எப்பவும் அவருக்கு நன்றி சொல்லிட்டே இருப்பாங்க.

நமக்கு எல்லா உறவுகளும் இருக்கு... இவங்களுக்கு யாருமே இல்ல.நாமெல்லாம் நம்ம அப்பா அம்மா திட்டுனா கோபப்படுறோம். வீட்டை விட்டு வெளிய போறோம். அவங்க கூட சண்டை போடுறோம் நீங்க என்ன என்னை கேள்வி கேக்குறதுனு.

அப்டி யாரும் எங்களை கேக்க மாட்டங்களானு இவங்க நினைக்குறாங்க.. இருக்குறத வச்சு சந்தோசமா வாழுற மனசு நமக்கு ஏன் வருவது இல்ல அத்து.இன்னும் சொல்ல போன எனக்கு அடிக்கடி ஒன்னு தோணும்.

இது என்னோட கருத்து மட்டும் தான். நம்ம நாட்டுல எத்தனையோ பேரு குழந்தை இல்லாம கஷ்டப்படுறாங்க....இங்க இவங்க பெத்தவங்க அன்பு இல்லாம கஷ்டப்படுறாங்க... ஏன் குழந்தை இல்லாதவங்க காலம் முழுக்க அத நினைச்சு கஷ்ட படுறதுக்கு ஒரு குழந்தையை இங்க இருந்து கூட்டிட்டு போய் வளக்கலாம் இல்லையா. ரெண்டு பெருகும் அவங்க எதிர்பாத்த அன்பு கிடைக்கும்ல. "

"ஹனி.. நாம யாரையும் கட்டாய படுத்த முடியாது. அவங்க அவங்க விருப்பம் தான். என்ன இது என்னோட பர்த்டே செலிப்ரேஷன்னு சொல்லிட்டு ஒரே கருத்தா சொல்லிட்டு இருக்க"

"இல்லை அத்து காரணமா தான் உங்கள இங்க கூட்டிட்டு வந்தேன். சின்ன வயசுலேர்ந்து எனக்கு ஒரு ஆசை. ஒரு குழந்தையை தத்தெடுத்து வளக்கணும்னு. நமக்கு ரெண்டு குழந்தை வேணும் அத்து. ஒன்னும் நம்ம வயித்துல பொறந்தது. இன்னும் ஒன்னு நம்ம வயித்துல பொறக்காதது. நீங்க இதுக்கு ஓகே சொல்லுவீங்களா"

மென்மையான புன்னகை மட்டும் தான் அவனிடம் இருந்து பதிலாக கிடைக்க "என்னாச்சு அத்து வேணாமா"

"உன் விருப்பம் தான் ஹனி எனக்கு முக்கியம்.'

"தேங்க் யூ சோ மச் அத்து... நா ரொம்ப சந்தோசமா இருக்கேன். பல நாள் கனவு. என்னோட உயிர் அத்து நீங்க. சரி வாங்க அடுத்த இடத்திற்கு போகலாமா"

"எங்க"

அடிக்கடி கேள்வி கேக்க கூடாது.... வாங்க" அவனை அழைத்து கொண்டு அவள் சென்ற இடம் சென்னைக்கு சற்று தள்ளி இருந்தது. போகும் வழியிலேயே மதிய உணவை முடித்து கொண்டனர்.

அது வயல்கள் நிறைந்த இடம்.. பச்சை பசேல் என்று இருந்தது... வயலுக்கு நடுவில் சிறிய வீடு.. வீட்டை சுற்றிலும் பெரிய தோட்டம்.. மரங்களும் செடிகளும் அந்த வீட்டிற்கு தனி அழகை கொடுத்தன.அதன் அழகில் அவன் மெய்மறந்திட கரத்தினை பற்றி அவனை அந்த வீட்டிற்கு உள்ளே அழைத்து சென்றாள்.

"யார் வீடு ஹனி. அழகா இருக்கு"

"நம்ம வீடு தான் அத்து... நா சின்ன வயசா இருக்கும் பொது அப்பா இந்த இடம் வாங்குனாங்க . அப்போலேர்ந்து இங்க விவசாயம் செய்யுறோம். இத பாத்துக்க ஆள் தனியா இருக்காங்க. லீவு கிடைச்சா இங்க தான் அத்து வருவோம். ரொம்ப ஜாலியா இருக்கும். கல்யாணம் ஆகி என் புருஷன் கூட இங்க தான் இருப்பேன்னு அப்பா கிட்ட சொல்லிட்டே இருப்பேன். இன்னைக்கு உங்கள இங்க கூட்டிட்டு வரணும்னு தோணுச்சு அதான்... இருங்க நா உங்களுக்கு சாப்பிட ஏதாவது செய்யுறேன் "என்றபடி அவள் சமையல் அறைக்குள் நுழைந்தாள்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சேலையை இடுப்பில் சொருகி கொண்டு அவள் சமையல் வேலையை ஆரம்பிக்க இவன் அவளை சைட் அடிக்கும் வேலையே ஆரம்பித்தான். அவனது உணர்வுகள் எல்லாம் மெல்ல மெல்ல உயிர்த்தெழ தொடங்கின.இதுவரை காதலாக மட்டுமே பார்த்த்க்க அவளை கொஞ்சம் காமமும் கலந்து பார்க்க ஆரம்பித்தான்.

தலை முதல் கால் வரை அவளை ரசித்து பார்த்தான். அவனது உடலும் மனமும் அவளது நெருக்கம் இப்போதே வேண்டும் என்றது..முயன்ற அளவு தன்னைக் கட்டு படுத்த முயன்றான். யாரும் அற்ற தனிமை அவனை மேலும் உசுப்பேற்ற மெதுவாய் அவளை நோக்கி நடை போட்டான். எதோ உள்ளுணர்வின் படி திரும்பி பார்த்தவள் அத்துவை கண்டு திகைத்தாள் அவனது கண்களில் தெரிந்த தாபத்தை கண்டு.

தானாக அவளது கால்கள் பின்னோக்கி நகர்ந்தன. அவனோ தன் வசம் முற்றும் இழந்திருந்தான். சுவற்றில் மோதி நின்றவளை நெருங்கியவன் கொஞ்சமும் யோசிக்காது அவளது உதடுகளை சிறை செய்தான் வன்மையிலும் வன்மையாய். அதில் அதிர்ந்து போன ஹரிணி அவனை தள்ள முயற்சிக்க அவளால் அவனை அசைக்க கூட முடியவில்லை.

முதல் முத்தம் அதை மிகவும் ஆழ்ந்து அனுபவித்தான் அத்து. தூரத்தில் கேட்ட சப்தமதில் தன் நினைவிற்கு வந்தவன் ஹரிணியை பார்க்க உதட்டில் வழியும் இரத்தத்துடன் கண்ணீர் கரைபுரண்டு ஓட அவனை தாண்டி வாசலை நோக்கி ஓடினாள்.

"என்ன காரியம் செய்துவிட்டேன்" என தலையில் அடித்து கொண்டவன் "ஹரிணி ஹரிணி" என அழைத்து கொண்டே அவளை பின் தொடர்ந்து ஓடினான்.

"தம்பி.... கனவு காணுறதுனா கொஞ்சம் தள்ளி போய் கனவு காணுப்பா. அடுத்து தரிசனம் பாக்க பின்னாடி ஆளுங்க இருகாங்க பாரு. போ பா" என்ற அர்ச்சகரின் குரலில் நினைவிற்கு வந்தவன் அவ்விடத்தை விட்டு ஓரமாக இருந்த தூணின் அருகில் அமர்ந்தான்.

இருட்ட ஆரம்பித்திருந்ததால் அவன் அங்கு அமைந்திருப்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. சற்று நேரத்தில் அர்ச்சகரிடம் யாரோ பேசும் குரலில் தன நினைவிற்கு வந்தவனுக்கு அந்த குரலை கேட்டதும் உள்ளுக்குள் சந்தோசம் பொங்கியது.எத்தனை நாட்கள் கழித்து இந்த குரலை கேட்கிறான்.

அவனது பெயர் எல்லாம் சொல்லி அர்ச்சனை செய்த பின் அவன் இருப்பது தெரியாமல் அவன் அருகிலேயே வந்து அமர்ந்தது அந்த குரலுக்கு சொந்தமான உருவம். பின்பு தறது தொலை பேசியை எடுத்து யாருக்கோ அழைத்தது.

"நீ சொன்ன மாதிரி அர்ச்சனை பண்ணிட்டேன் போதுமா"

"......"

"ஹ்ம்ம்ம்... ராசி நட்சத்திரம்லாம் கரெக்ட் சொன்னேன்"

".. ......"

"அடியேய்ய் என்ன நம்புடி......இவ்ளோ பேசுற... அப்போ நீயே வந்து அர்ச்சனை பண்ணிருக்க வேண்டியது தான.உன்கூட பெரிய..." என்றபடி நிமிர்ந்தவள் அதிர்ச்சியில் எழுந்து விட்டாள். அவளது மடியில் இருந்த பூஜை பொருட்கள் சிதறி ஓடியது.

அத்துவை கண்டு தனது அலைபேசியை அணைக்க நினைக்க அந்தோ பரிதாபம் பதட்டத்தில் அவள் விரல்கள் ஸ்பீக்கர் அழுத்திவிட்டன. அடுத்த நொடி அவளது மொபைல் அத்துவின் வசம் இருந்தது.

"என்னாச்சு பிரியா.... என்ன சத்தம் டி அது... ஒன்னும் ப்ராப்ளம் இல்லாதான" என்றது மொபைல் வழியே அந்த குரல்...

அத்துவின் கண்களில் கண்ணீர் வழிந்தது எந்த குரலை கேட்க ஏங்கினானோ அந்த குரல்.. ஆம் அது ஹரிணியின் குரல்.. உயிர் வரை ஊடுறுவிய அவனது ஹனியின் குரல் .

கசிந்திடும் நெஞ்சம்.....
 
Status
Not open for further replies.
Top