All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “கௌரிசங்கர்” - கதைதிரி

Status
Not open for further replies.

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
25061

கௌரிசங்கர்:
ஹாய் எல்லோரும் எப்படி இருக்கிங்க... அடுத்த கதையோடு உங்களை எல்லாம் பார்க்க வந்திட்டேன்.கௌரிசங்கர் இது ஏற்கனவே சில எபிஸ் போட்டதுதான், அத திரும்ப ரீரைட் பண்ணப் போறேன்... வழக்கம் போல உங்க ஆதரவை எதிர்பார்த்து நான்...
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
25165

கௌரிசங்கர் - 1


வண்ண விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்த அந்த பிரம்மாண்ட அரங்கத்திலிருந்து எழுந்த கரவொலி, அந்த அரங்கை தாண்டி சாலையில் சென்றவர்களை ஒரு நொடி திரும்பி பார்க்க வைத்தது. அதில் நடுநயமாக போடப் பட்டிருந்த மேடையில் கையில் மைக்கை பிடித்தப்படி தனக்கு கிடைத்த வரவேற்பை சிறு புன்னகையுடன் சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவன் பின் தன் கம்பீர குரலில்,

“தேங்க்யூ ... தேங்க்யூ சோ மச் ... இங்க உங்க எல்லார் முன்னால நிக்கிறது ரொம்ப பெருமையா நினைக்கிறன் ... அதுவும் நம்ம ஹானரபிள் மினிஸ்டர் கையால பெஸ்ட் பிசினஸ்மேன் அவார்ட் வாங்கிறது ரொம்ப சந்தோசமா இருக்கு... இந்த தருணத்தை ஏற்படுத்தி கொடுத்த கடவுளுக்கு என் நன்றியை தெரிவிச்சுக்கிறேன்... அடுத்து என்ன சுதந்திரமா வளரவிட்டு என்னோட முயற்சிக்கு முட்டுக் கட்டை போடாம ஊக்குவிச்ச என் பேரெண்ட்ஸ்க்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன் ...” என்று தன் நன்றி உரையை தொடங்கியவன் மேலும் சிலருக்கு நன்றியை தெரிவித்த பின்,

“இவங்க எல்லாரையும் விட ரொம்ப ரொம்ப முக்கியமான பெர்சனுக்கு இந்த அவார்டை டெடிகேட் பண்ணுறேன்... வித் யுவர் பெர்மிஷன், அவங்களை ஸ்டேஜ்க்கு அழைக்கிறேன்...” என்றவன்,

“பேபி ...ப்ளீஸ்...” என்று ஒற்றை கையை நீட்டி மூன்றாவது இருக்கையில் அமர்ந்திருந்தவளை அழைக்கவும், ஒருவித படபடப்புடன் எழுந்தவளின் மனம் பெருமிதம் கொள்ள , இவன் என்னவன் என்ற கர்வம் கண்களில் மின்ன மேடையில் ஏறினாள் அவள்.

தன்னருகில் வந்தவளை காதலுடன் பார்த்தவன் தன் கரத்தை அவள் தோள்களை சுற்றி படரவிட்டு தன்னுடன் நெருக்கிக் கொண்டான். பின்,

“லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் ... ப்ளீஸ் மீட் மை லவ்வபில் வைப் பிரியா... என்னோட எல்லா டப்பெஸ்ட் சுச்சுவேஷன்லயும் என்ன மோட்டிவேட் பண்ணி என்ன சோர்ந்து போகமா பார்த்துக்கிட்டு ... எப்போலாம் நான் ஒரே இடத்துல ஸ்ட்ரக் ஆகி நிக்கிறேனோ அப்பொல்லாம் எனக்கு தூண்டு கோலாய் இருந்து அடுத்த கட்டத்துக்கு அடி எடுத்து வைக்க பெரிதும் உதவியவங்க ... ...” என்று நிறுத்தி அவளை காதலுடன் பார்த்தான். பின்

“நீ என் லைப்ல வராம இருந்திருந்தா ...எல்லார் முன்னும் இப்படி பேசிகிட்டு இருந்திருக்க மாட்டேன் ... இந்த மரியாதையும் எனக்கு கிடைச்சுருக்காது ...” என்று தான் வாங்கிய கேடியத்தை தூக்கி காட்டி,

“ ஐ லவ் யு பேபி ...” மனம் உருக கூறியவன் அவளை இழுத்து அணைத்துக் கொள்ள, மீண்டும் விண்ணை எட்டும் அளவிற்கு கரவோசம் காதை பிளக்க , மேலிருந்து ரோஜா இதழ்களை மேடையில் நின்றியிருந்தவர்களின் மேல் தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் விழா அமைப்பினர்.

தன் கணவனின் அணைப்பில் இருந்தவளுக்கு திடீரென்று சுள் என்ற வலியெழ , வலித்த இடத்தை கை கொண்டு தடவி கொடுத்தவள், மேலும் தன் கணவனுடன் ஒன்றிப் போனாள்.

மேலும் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் ஊசியால் குத்துவதை போல உணரவும் ,

‘யாருடா ... ரோஜா இதழ்களோடு முள்ளையும் கலந்து கொட்டுறது...’ என்று சலித்தபடி திரும்பி பார்க்க அங்கே துடைப்பத்தை கையில் வைத்தபடி நின்றிருந்தார் ஜெயந்தி.

‘இந்த ஸ்டேஜ்ல நம்ப அம்மா எப்படி வந்துச்சு...’ யோசித்தவள் பின்

“மா ... கீழ இறங்கு உன்ன யாரு ஸ்டேஜ்க்கு வர சொன்னது ... பிரஸ்காரங்க உன்ன போட்டோ எடுக்குறதுக்கு முன்ன கீழ இறங்கு...”என்றவளை நக்கலாக பார்த்த ஜெயந்தி கையிலிருந்த துடைப்பத்தால் காலில் மீண்டும் வலிக்கும் அளவிற்கு அடித்தவர்,

“என்னது ஸ்டேஜா ... ஓஹ் வழக்கம் போல கனவுல உன் வருங்கால புருஷன் கூட அவார்ட் பங்க்ஷன்ல கலந்துக்கிட்டு இருக்கியா ... இப்படியே பொழுதணைக்கும் கனவு கண்டுக்கிட்டே இரு உருப்பிட்ட மாதிரிதான்...கனவு காண்றதை விட்டுட்டு , சீக்கிரம் எழுந்து கொட்டிக்க வா ... நைட் எல்லாம் வெட்டி முறிச்சு வேலை பார்த்தவ போல , காலைல பத்து மணி வரைக்கும் தூக்கம் ... எழுந்துரு எருமை ... “ என்றவர் படுத்திருந்தவளின் கை பிடித்து எழுப்ப முயற்சிக்க, சிறிதும் அசைந்து கொடுக்காதவளுக்கு தான் கண்டது கனவு என்று தெரிய சலிப்புடன் தன் அன்னையை பார்த்து

“ப்ச்... போமா அங்கிட்டு ... எப்போ பாரு நல்ல சீன்ல வந்து கனவை கலைச்சி விட்டுக்கிட்டே இருக்க ... இன்னைக்காச்சும் அவன் பேரை என்னன்னு தெரிஞ்சுக்கலாம் பார்த்தா ... துடைப்பத்தால் அடிச்சு கலைச்சி விட்டுட...” என்று அலுத்துக் கொண்டவள் மீண்டும் தூங்க முயன்றாள். அதில் பதறி ஜெயந்தி,

“சாப்பிட்டு தூங்கு டி ... நீ சாப்பிட்ட பிறகுதான் பாத்திரத்தை கழுவனும் ... எழுந்திரு பிரியா...” சற்று குரலை உயர்த்தி அதட்டல் போடவும், அலுப்புடன் கண்ணை திறந்தவள் எழுந்து உட்கார்ந்து கொண்டு இரெண்டு கைகளையும் தூக்கி சோம்பல் முறிக்க, தலை கலைந்து வெகு நேரம் தூங்கியதால் கண்கள் சிவந்து அழுக்காக தெரிந்தவளை கண்டு தலையில் அடித்துக் கொண்டவர்,

“எரும எரும ... வயசு பொண்ணா லட்சணமா காலைலயே எழுந்து எனக்கு சமையல்ல ஒத்தாசை பண்ணா என்ன ... மூதேவி போல பத்து மணி வரைக்கும் தூங்கிறியே குடும்பம் விளங்கின மாதிரிதான்...” என்று கோபப்பட்டவரை கண்கள் உருட்டி முறைத்த பிரியா

“தோ பாரு காலைலயே கடுப்ப கிளப்பாத ... சமைக்கிறதா நானா நோ நெவர் ... அதுக்கு வேற ஆளை பாரு ... இந்த உலகத்த ஆளப் போறவனை ஆள பிறந்தவ நானு ... என்ன பார்த்து சமையலுக்கு ஒத்தாசையா இருக்க சொல்ற ... இது மட்டும் என் பேபிக்கு தெரிஞ்சுது ... கண்ணாலயே பொசுக்கிடும் ... ஜாக்கிரதை ...” என்று விரல் நீட்டி எச்சரித்தவளின் வாயில் ஒரு போடு போட்ட ஜெயா,

“பேபியாம் பேபி ... பெரிய வெள்ளக்கார துரை வீட்டுல பொறந்திருக்கா ... இங்க பாரு என்ன உருட்டி மிரட்டி வாய் கிழிய என்ன வேணாம் பேசலாம் ... நாளைக்கே கல்யாணம் ஆகி புருஷன் வீட்டுக்கு போன பின்ன உன் மாமியாரை பார்த்து சமையலா நோ நெவெர்ன்னு சொல்லு துடைப்பதாலயே உன் முகரய பேத்து, என் மூஞ்சுல காரி துப்புவா என்ன பொண்ணு வளர்த்துருக்க சொல்லி...” என்ற ஜெயந்தியை முறைத்த பிரியா,

“என்ன மம்மி ... மறைமுகமா சாபம் விடுறியா ...விட்டுக்கோ விட்டுக்கோ ... நல்லா விட்டுக்கோ ... இதுக்கெல்லாம் அசறுர ஆளு நான் இல்ல...” என்றவள் “அப்புறம் என்ன என்ன உன்ன மாதிரி கவர்மெண்ட் மாப்பிள்ளை குமாஸ்தாவா இருந்தாலும் பரவால்லைனு கழுத்தை நீட்டுவேன்னு நினைச்சியா... அதெல்லாம் என் கிட்ட வேலைக்கு ஆகாது ... நல்ல கொழுத்த பணக்காரனா பார்த்துதான் கட்டுவேன் ... அதுவும் மூணு நாலு பிசினஸ் பண்ணனும் ... எப்பவும் ரவுண்டுல இருக்கனும் ... கூடவே நானும் கையை கோர்த்துக்கிட்டு உலகத்தை சுத்திவரனும்... புரியுதா சும்மா உங்க கடமையை முடிக்கனும்னு எவன்கிட்டயாவது தள்ளிவிட பார்த்த... ” என்று மிரட்டியவளை பார்த்து நக்கலாக சிரித்தவர்,

“என்னது மூனு நாலு பிசினெஸ்ஸா ... ஓஹ் இந்த சாதாரண பணக்காரங்களாம் உங்க லிஸ்ட்ல கிடையாதா ... நாய் கெட்ட கேடுக்கு தேங்காய் பால் சோறு கேக்குதாம் ... அதுக்கு நீ அம்பானி வீட்டுலதான் பொறந்திருக்கனும்... என்ன பண்றது உன் கெட்ட நேரம் குமாஸ்தா தனசேகர் பொண்ணா பொறந்துட்ட... காலைலயே வெட்டி வியாக்கியானம் பேசியது போதும் ... பல்லு விளக்கிட்டு வந்து கொட்டிக்கோ...” என்ற எழுந்த அன்னையை கடுப்புடன் பார்த்தவள்,

“ஹலோ மம்மி இன்னொரு முக்கியமான விஷயம்... காத கிட்டக்க கொடேன்...” என்றவள், பின்

“அதுவந்து மம்மி நான் லேட்டா எழுந்துகிறதால தான் நம்ம குடும்பம் விளங்காம போச்சு ... நீ லைனா பூனை குட்டி போடுற மாதிரி வத வதனு பொம்பள பிள்ளையாய் பெத்து போட்டதால கிடையாது... சரியா எப்போ கேட்டாலும் இதையே மெண்டைன் பண்ணுற” என்று நக்கல் அடித்தவள் அங்கிருந்து சிட்டாய் பறந்து பல் விளக்குவதற்காக தோட்டத்திற்கு ஓடியிருந்தாள் . இல்லையென்றால் தன் அன்னையின் கையில் உள்ள துடைப்பக்கட்டை இந்நேரம் பிய்ந்திருக்கும் என்று அறிந்ததால் எடுத்த ஓட்டம் தான் அது.

பல்லை பிரஷால் தேய்த்தபடி மீண்டும் தான் கண்ட கனவை நினைத்து பார்த்தவளின் உதடுகளில் மெல்லிய புன்னகை தோன்ற ,

“... எங்கடா இருக்க ... எப்போ என் கண்ணுக்கு தெரிவ ... இல்ல நான்தான் உன்னை தேடி வரணுமா ... “ என்று முணுமுணுத்தவள், பின்

“ஹ்ம்ம் ... இந்நேரம் எந்த பிசினஸ் டீலிங்க்ல இருக்கேன்னு தெரில ...” என்று ஏக்க பெருமூச்சை விட்டவாறே பல்லை துலக்க தொடங்கினாள்.

லம்போகினியை விரட்டிக் கொண்டிருந்த சங்கருக்கு திடீரென்று பொறையேற, நிற்காமல் தொடர்ந்து இரும்பியவனை கண்டு,

“பேபி ... என்னாச்சு ...” என்று பதறினாள் அவன் தோளில் சாய்ந்தபடி அருகில் அமர்ந்திருந்த பேரழகி. அவளை திரும்பி பார்த்தவனின் கண்கள் இரண்டும் தொடர் இருமலால் சிவந்து போயிருக்க , பதில் சொல்ல முடியாமல் சிரம பட்டவனை கண்டு சங்கடப்பட்ட அழகி , பின்னால் இருந்து தண்ணீர் பாட்டலை எடுத்து அவன் வாயருகில் கொண்டு செல்ல, இருமிய படி அதை குடிக்க மறுத்தவன், தன் இடக்கையை அவள் பின்னந்தலையில் கொண்டு சென்று தன்னை நோக்கி இழுத்து சிவந்திருந்த அவள் அதரங்களில் இருந்து தேன் பருக தொடங்கினான்.

சில நொடிகள் முத்தத்தில் லயத்திருக்க , மெல்ல தன் உதடுகளை அவளிடமிருந்து பிரித்து எடுத்த சங்கர்,

“பேபி அமிர்தமே கிடைக்கும் போது தண்ணி எதுக்கு பேபி...” என்று கிறக்கமாக கூற, வெட்கம் கொண்ட அழகி

“போ பேபிஈஈ ... நீ ரொம்ப மோசம் பேபிஈஈ ...” என்று சிணுங்கியவளின் அழகில் மனம் தடுமாற, வேண்டுமென்றே பொய்யாக இருமியவன், மீண்டும் அவள் முகம் நோக்கி குனிந்தான். ஒருகையால் காரை ஓட்டியபடி அவள் இதழ்களில் தேன் பருகியவனை கலைத்தது எதிரே கேட்ட வாகனத்தின் தொடர் ஹார்ன் ஒலி , அதில் திடுக்கிட்டு போய் நிமிர்ந்து பார்த்தவன் எதிரே வந்த வாகனத்தை இடிக்காமல் இருப்பதற்காக லம்போகினியை ஒடித்து வளைக்க , அவன் கட்டுப்பாட்டை மீறி சாலையோரத்தில் நின்றிருந்த மரத்தில் பெரும் சத்தத்துடன் மோதி நின்றது அந்த நான்கு சக்கர குதிரை.
 
Last edited:

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
25198

கௌரி - 2

லம்போகினி பெரும்சத்ததோடு மரத்தில் மோதி நிற்கவும் , திடுக்கிட்டு போய் கண் விழித்தான் கௌரிசங்கர். தான் கண்டது கனவு என்று புரிவதற்கே சில நொடிகள் தேவை பட்டது அவனிற்கு. மொட்டை மாடியில் சுட்டெரிக்கும் சூரியனையும் பொருட்படுத்தாமல் கட்டியிருந்த கையிலியை கொண்டு தன்னை மறைத்து கொண்டு உறங்கியவனுக்கு, கனவோடு சேர்ந்து இருமலும் தூக்கத்தை கலைக்க,

“எந்த நாதாரி நாய் காலங்கார்த்தால நம்மள நினைக்குதுன்னு தெரில ...” மேலும் சில கெட்ட வார்த்தைகளை சேர்த்து வாய்விட்டு திட்டிக் கொண்டே , மார்பு வரை தூக்கி போர்த்தியிருந்த கையிலியை இடுப்பில் கட்டியபடி எழுந்தவன் இரெண்டு கைகளையும் தூக்கி சோம்பல் முறித்தபடி கொட்டாவி விட்டவாறே சாலையை நோட்டம் விட்டவன் தான் கண்ட கனவை பற்றி சுய அலசலில் இறங்கினான்.

“கைல லம்போகினி ... பக்கத்துல பணக்கார பேபி... இந்த இரண்டையும் அனுபவிக்க முடியாம ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சே ...” என்று தீவிர யோசனையில் மூழ்கியவன் பின் ,

“இந்த கனவு நமக்கு என்ன சொல்ல வருது ... ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைச்சும் வாழ முடியுமா அல்பாயுசுல போய்டுவேன் சொல்லுதா ...” என்று தாடையை தடவி யோசித்த சங்கர்,

“இல்ல இல்ல ... ஆக்ஸிடெண்ட் நடந்துச்சே தவிர ... அதுக்கு அப்புறம் என்ன ஆச்சுன்னு தான் நமக்கு தெரியாதே ... நான் தான் சேப்பா சீட் பெல்ட் எல்லாம் போட்டிருந்தேன் ... அந்த பேபி தான் பெல்ட் போடாம நம்ம தோள்ல தொங்கிட்டு வந்துச்சு... அப்போ அதுக்குதான் எதுவோ ஆகியிருக்கும் ...” கூட்டி கழித்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்தவன்

“ம்ம்ம் ... இதுல இருந்து என்ன தெரியுது ... கல்யாணம் முடிஞ்ச கையோடு சொத்தை எல்லாம் நம்ம பேர்ல மாத்திக்கணும் ... ஒருவேளை கனவுல கண்டது போல நடந்தா , அந்த பேபியோட அப்பன்காரன் ஒரு மண்ணும் கிடையாதுன்னு துரத்தி விட்டா நாம இவ்வளவு நாள் கஷ்ட பட்டத்துக்கு பலன் இல்லாமலே போய்டும் ...” என்று அதி முக்கியமான தீர்மானத்தை எடுத்தவனுக்கு தன்னை நீண்ட நேரமாய் யாரோ கவனிப்பதை போல தோன்றியது.

‘என்னடா இது லவர்சுக்கு வர பிசிக்ஸ் எல்லாம் நமக்கு வருது ... இந்த ஏரியால நம்ம ரேஞ்சுக்கு தகுந்தத போல யாரும் இல்லையே ... யாரா இருக்கும்...’ என்று யோசித்தவாறே திரும்பியவனின் கண்களுக்கு எதிர்த்த வீட்டு பெண் தெரியவும்,

‘ம்க்கும் ... இந்த குந்தானியா...’ என்று மனதில் அலுத்துக் கொண்டவன், அந்த பெண்ணை கண்டுக் கொள்ளாமல் அலட்சியத்துடன் திரும்பி நடக்க,

‘இவ வீட்டோட மதிப்பே ஒரு கோடிக்கு வரும் ... ஊருல நிறைய பூர்விக நிலம் இருக்கு ... ஒத்த பொண்ணு வேற ... எதுக்கும் இருக்கட்டும் பல்லை காட்டிட்டு போவோம் ... நாளை மறுநாள் யூஸ் ஆகும்...’ என்று மனதில் அவசரமாக கணக்கு பண்ணியவன் திரும்பி பார்த்து அழகிய புன்னகையை உதிர்த்து விட்டு கீழே இறங்கி சென்றான்.

இரும்பி கொண்டே கீழே இறங்கிய இளையமகனை கண்ட வளர்மதி

“ஏண்டா தம்பி எத்தன தடவ சொல்றது மொட்டை மாடில வெறும் தரைல படுக்காத படுக்காதன்னு ... இப்போ பாரு உடம்புக்கு சூடு ஏறி இருமலை கிளப்பி விட்டுருச்சு ...” என்று கவலைப் பட்டவரிடம் ,

“யெம்மா ... மொட்டைமாடில நான் என்ன புதுசாவா படுக்கிறேன் ... பல வருசமா அங்கதான் தூங்கிட்டு இருக்கேன் ... காலைலயே என் மூட ஸ்பாயில் பண்ணாம போய் டீ எடுத்துட்டு வாமா ...” என்று விரட்டியவன் டிவியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியை மாற்றி கால்பந்து விளையாட்டை பார்க்க தொடங்கினான்.

அதுவரை தொலைக்காட்சியில் ஆர்வத்துடன் செய்தி பார்த்துக் கொண்டிருந்த அவன் தந்தை தண்டபாணி, திரும்பி பார்த்து அவனை முறைத்து

“நியூஸ் பார்த்துகிட்டு இருக்கிறது உன் கண்ணுக்கு தெரில...” என்றவரை சிறிதும் கண்டுக் கொள்ளாதவன்,

“யெம்மா ... ஒரு டீ போட்டு எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா ... சீக்கிரம் வாமா ...” என்று கத்தவும்

“கௌரி ... உன்கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன் ...” என்று பல்லை கடித்தவரிடம் ,

“காலைல எழுந்ததுல இருந்து இதுவரைக்கும் பத்து தடவையாவது நியூஸ் கேட்டுருப்பீங்க ... இந்த நியூஸ்லாம் கேட்டுட்டு போய் என்ன பண்ண போறீங்க ...சட்ட சபையிலே பேச போறீங்களா ...” என்று நக்கல் அடிக்கவும்,

“ஓஹ் ... அப்போ சார் புட்பால் மேட்ச் பார்த்துடு போய் மேட்ச்ல கலந்துக்க போறீங்களா ...” என்று பதிலுக்கு நக்கல் அடித்தவரை திரும்பி பார்த்து முறைத்தவன், பின் கேலியாக சிரித்தபடி

“யு க்நோவ் ... ஐ அம் ஜஸ்ட் டுவெண்ட்டி த்ரீ ... அதாவது இரண்டுக்கு பக்கத்துல மூன போட்ட வருமே அந்த 23 ... நான் நினைச்சா புட்பால் என்ன கார் ரேஸ்ல கூட கலந்துப்பேன் ... பட் யு ரிட்டையர் வாத்தி ... தலைகீழ நின்னாலும் ஒன்னும் ...” என்றவன் தன் தலைமுடியை பிடித்து இழுத்து காட்ட, தோட்டத்தில் இருந்து வீட்டிற்குள் நுழைந்த தண்டபாணியின் தாய் சரசம்மா கண்ணில் அந்த காட்சி படவும்

“அடி செருப்பால ... யாரை பார்த்து மசுருன்னு சொல்லுற ... என் பையன் ரிட்டையர்டு வாத்திதாண்டா ...
அவனுக்குள்ள பொறுப்ப நல்ல படியா நிறைவேத்திட்டு காலாட்டிக்கிட்டு வீட்டுல உட்கார்ந்துகிட்டு டிவி பார்த்துகிட்டு இருக்கான் ... உன்னப்போலவா சம்பாதிக்க வேண்டிய வயசுல வெட்டியா ஊரை சுத்திகிட்டு அப்பன் காசுல உட்கார்ந்து கொட்டிக்கிட்டு இருக்கான் ...” என்று சீறிக் கொண்டு வந்தவர்

“வளரு ... ஏய் வளரு இங்க வா ... என்ன உன் பையனை பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறியா ...” என்று சமையலறை பக்கம் பார்த்து சத்தம் போடவும், டீ எடுத்துக் கொண்டு வந்த வளர்மதி அதை கௌரியிடம் கொடுத்தவாறே,

“சின்ன பையன் பேசுறதை எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு சண்டைக்கு வருவீங்களா... காலைல ஆறு மணில இருந்து செய்திதான் ஓடிக்கிட்டு இருக்கு நீங்களும் தான் அத பார்த்துகிட்டு இருக்கீங்க ... இப்போதான் தூங்கி எழுந்து வந்திருக்கான் கொஞ்சம் நேரம் டிவி பார்க்க போறான்... அப்புறம் அவன் வேலையை பார்த்துகிட்டு போக போறான் அதுக்குள்ள ஏன் இந்த அக்கப்போரு...” என்று சலித்துக் கொள்ளவும்

“என்னது சின்ன பையனா ... விட்டா பத்து குட்டி போடுற மலைமாடு போல இருக்கான் இவன் சின்ன பையனா ... இவன் வயசுலலாம் என் புள்ளைக்கு கல்யாணம் ஆகி கதிரேசனே பொறந்துட்டான் ...” என்றவரை இடைமறித்த கௌரி,

“நிறுத்து நிறுத்து ... உன் பையனோட புராணத்தை கேட்டு கேட்டு சலிச்சு போய்டுச்சு ... இருபத்தி மூனு வயசுல கல்யாணம் பண்ணி புள்ள பெத்துகிறது எல்லாம் ஒரு சாதனையா ... அதவிடு ... மஹாலட்சுமி போல இருக்கிற எங்க அம்மா மேல தீஞ்சி போன மனோபாலா போல இருக்கிற உன்னோட புள்ளைக்கு ஒரு கண்ணு , எங்க எங்கம்மா கிடைக்காம போய்டுவாங்கனு நீ அவசர அவசரமா அவங்க மனச களைச்சு ரெட்டவட சங்கிலி போடுறேன் ஆசை வார்த்தை காட்டி உன் பையனை அவங்க தலைல கட்டிவச்சுட்ட... இதுல பெருமை வேற ... ஆமா சொன்னது போல அந்த ரெட்டவட சங்கலியாவது எங்க அம்மா கண்ணுல காட்டுனீங்களா ... யெம்மா... இத்தனை வருசத்துல ஒரு தடவையாவது உன் கழுத்துல அந்த சங்கிலிய போட்ருக்கியா...” என்று வளர்மதியை பார்த்து பாவமாய் கேட்கவும், கசங்கி போன முகத்துடன் இல்லையென்று தலையாட்டியவர், தன் கணவனை தீப்பார்வை பார்க்க, கௌரியின் குற்றச்சாட்டிற்கு பதில் கூற வாயை திறந்த சரசம்மாவை பார்த்து எதுவும் பேச வேண்டாம் என்று சைகை செய்தவரை கண்டுக் கொண்ட கௌரி நக்கல் சிரிப்புடன் டீயை குடித்தபடி டிவியை பார்க்க தொடங்கினான்.

தண்டபாணி அரசுப்பள்ளியில் ஆசிரியராக இருந்து ரிட்டையர்டு ஆனவர். இரண்டு தங்கைகள் ஒரு தம்பியுடன் பிறந்தவருக்கு குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதிலிருந்தே பொறுப்புடன் வளர்ந்தவருக்கு வளர்மதியை கண்டதும் பிடித்து விடவும் தாயிடம் தன் விருப்பத்தை கூற,வசதி குறைந்த குடும்பத்தில் பிறந்த வளரை மருமகள் ஆக்குவது பெரிய விடயமாக இருக்கவில்லை சரசமாவிற்கு.

ஆசை கொண்டு திருமணம் முடித்த சந்தோஷத்தில் அவர்களின் முதலிரவு அன்று ரெட்டவட சங்கிலி போடுவதாக வாக்கு கொடுத்தவருக்கு தன் தம்பியின் தீடீர் மரணம் மொத்த குடும்பத்தின் சுமையை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தன் தங்கைகளின் திருமணம் முதற்கொண்டு அவர்கள் குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டதிற்கு அனைத்திற்கும் இவரே முன்னின்று செய்ய வேண்டிய சூழ்நிலை.

அடுத்து வளர்மதியின் மேல் உள்ள ஆசையில் ஒன்றோடு நிறுத்தி கொள்ளாமல் மூன்று மகன்கள் இரண்டு மகள்கள் என்று குடும்பம் பெரிதாக, செலவுகளும் அதைவிட பெருத்து போயின. முதலிரவு அன்று வாக்கு கொடுத்த ரெட்டவட சங்கிலியை இன்று வரை கொடுக்க முடியாமல் போக , அவ்வப்பொழுது கௌரியின் புண்ணியத்தால் நினைவூட்ட பட்டு தன் மனைவியின் கோபத்தை சமாளிக்க முடியாமல் திணறி போனார் தண்டபாணி.

இன்றும் அதே நிலைக்கு தள்ளிய தன் இளைய மகனை முறைத்தவர் மனதில் ஊரில் உள்ள கெட்ட வார்த்தையால் அர்ஜித்து கொண்டிருந்தார். அவரை கண்டுக் கொண்ட கௌரி நக்கலாக சிரித்தபடி கைகள் இரெண்டையும் தூக்கி சோம்பல் முறிக்க, திடீரென்று தான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து கீழே குனிந்து எதையோ தேட தொடங்கினார் தண்டபாணி,

“என்னப்பா தேடுற ...” என்ற சரசுவை நிமிர்ந்து பார்க்காமல் ,

“இந்த பூனை செத்த எலிய வீட்டுக்குள்ள தூக்கிட்டு வந்திருச்சு போல ... நாத்தம் குடலை புடுங்குது...” என்றவரை கண்டு தன் பொக்கவாய் தெரிய சிரித்த சரசமா,

“அது செத்த எலி இல்லப்பா ... வீட்டுல வெட்டியா சுத்திகிட்டு இருக்கிற திருட்டு எலி ... ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் வசமா மாட்டும் அப்போ இருக்கு அந்த எலிக்கு...” தன் பேரனை பார்த்தபடி கூற, தன்னை கிண்டல் செய்வதை கண்டுக் கொள்ளாத கௌரி மெல்ல அங்கிருந்து எழுந்தவன் , சரசமா எதிர்பார்க்காத வேளையில் அவரை நெருங்கி தன் கையை மேலே தூக்கி அவர் முகத்தருகில் கொண்டு செல்லவும் , அதிலிருந்து கிளம்பிய வாடையில் வயிற்றை பிரட்டி கொண்டு வர, அவனை தள்ளிவிட்டு கெட்டவார்த்தையால் திட்டிக் கொண்டே வாந்தி எடுப்பதற்காக தோட்டத்திற்கு வேகமாக ஓடினார் சரசம்மா.

அவரை கண்டு சத்தம் போட்டு சிரித்தவன் பின் தன் தந்தையை திரும்பி பார்த்து உனக்கும் வேணுமா என்ற ரீதியில் பார்க்க , தன் மகனின் விளையாட்டு தனத்தை கண்டு தலையில் அடித்துக் கொண்ட தண்டபாணி இது எல்லாம் எங்கே திருந்த போகிறது என்று பார்வை பார்த்திருக்க, கௌரி அடித்த கூத்தை சமையலறையில் இருந்த பார்த்துக் கொண்டே வெளியே வந்த வளர் ,

“என்ன விளையாட்டு இது ...” என்றவர் முதுகில் ஒரு அடி போட, அவர் கை பிடித்து இழுத்து தன்னருகில் உட்கார வைத்து,

“யெம்மா ... எனக்கு ரெட்ட சுழி இருக்கா ...” என்றவன் தலையை தன் அன்னையிடம் காட்ட,

“இல்லடா தம்பி ... ஏற்கனவே பார்த்துட்டேன் ... எதுக்கு கேட்கிற ” என்ற வளர் மீண்டும் அவன் தலையை ஆராய்ந்தபடி கேட்க ,

“போன வருஷம் என்னோட ஜாதகத்தை எடுத்துட்டு போய் ஜோசியம் பார்த்தில ... அந்த ஜோசியக்கார் என்ன சொன்னார் எனக்கு ஒரு தாரம் சொன்னாரா இல்ல இரண்டு தாரம் சொன்னாரா ...” என்று நோண்டி நோண்டி கேள்வி கேட்டவனை அதிசயமாய் பார்த்த வளர்,

“உனக்குத்தான் ஜாதகத்துல ஜோசியத்துல நம்பிக்கை இல்லைன்னு சொல்லுவா இப்போ என்ன , மாத்தி மாத்தி கேள்வி கேட்டுகிட்டு இருக்க ...” என்ற அன்னையை பொறுமையிழந்து பார்த்தவன்,

“உனக்கு ரெட்டவட செயின் வேணுமா வேணாமா ...” என்று புதிர் போட்டவனை கண்டுக் கொள்ளாமல் , அருகில் உட்கார்ந்திருந்த தண்டபாணியை திரும்பி பார்த்து முறைத்த வளரை கண்டு பதறிய தண்டபாணி,

“வளரு ... உனக்கு ரெட்டவட செயின் தானே கண்டிப்பா வாங்கி தரேன்மா ... முதல்ல உன்னோட செல்ல மகனை வேலைக்கு போக சொல்லுமா ... பாரு இருபத்தி மூனு வயசாகிடுச்சு இன்னும் வேலைக்கு போகாம ப்ரெண்டஸ் கூட சுத்திகிட்டு இருக்கான்... நம்ம குமார் கிட்ட சொல்லிருக்கேன் அவன் நாளைல இருந்து வேலைக்கு வர சொல்லிருக்கான் ... உன் பையனுக்கு புத்தி சொல்லி ...” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே

“என்னாலனா அடுத்தவன் கிட்ட கை கட்டி வேலைலாம் பார்க்க முடியாது ... உங்களை யாரு எனக்காக வேலை தேட சொன்னது ...” என்று திமிராய் ஆரம்பித்து அவரிடம் எரிந்து விழவும்,

“இப்போ எதுக்கு அப்பா கிட்ட சண்டைக்கு போற ... படிச்சு முடிச்சு மூனு வருஷம் ஆகிடுச்சு ... நீயும் எந்த வேலைக்கு போகல அப்பா பார்த்து கொடுத்தாலும் சண்ட போடுற ... என்னடா தம்பி இதெல்லாம் ... யார்கிட்டயும் கை கட்டி வேலை பார்க்க மாட்டனா என்ன அர்த்தம்... அப்போ என்னதான் செய்ய போற ...” சற்று கடுமையாய் கேட்ட வளரை பாவமாக பார்த்த கௌரி,

“என்னமா நீயும் என்ன புரிஞ்சுக்காம பேசுற ... பாரு அப்பா முப்பது வருஷமா செயின் வாங்கி தரேன் சொல்லி சொல்லி உன்ன ஏமாத்திகிட்டு இருக்காரு ... இப்போ கூட அத சொல்லிக் காட்டி உங்க எல்லார் முன்னாடியும் அவரை கிண்டல் செஞ்சு உன்னையும் கஷ்டப்படுத்தினேன் தானே ...” என்று நிறுத்தியவனை இப்போ எதுக்கு இந்த பேச்சு என்ற ரீதியில் புரியாமல் வளர் பார்க்க , தண்டபாணியோ ,
’தெரிஞ்சே கிண்டல் பண்ணிட்டு யோக்கியனாட்டும் எதுக்கு இந்த பேச்சு பேசுறான்’ என்று யோசனையோடு அவனை பார்த்துக் கொண்டிருந்தார்.

“அதான்மா ... நானும் அப்பா சொல்ற மாச சம்பளத்துக்கு போனேன் வச்சுக்க நாளைக்கு எனக்கும் இன்னைக்கு அப்பாக்கு ஏற்பட்ட நிலைமைதான் வரும் ... என்னதான் இரண்டு அண்ணன்கள் இருந்தாலும் நான் செய்ய வேண்டிய சீரை அக்காங்களுக்கு செய்யாம இருந்துட முடியுமா ... கல்யாணம் ஆகி குழந்தை குட்டின்னு ஆனா பிறகு ,பொண்டாட்டி மயக்கத்துல இத செய்யுறேன் அத செய்யுறேன் வாக்க கொடுத்துட்டு... ஒருவேளை நாளைக்கு செய்ய முடியாம போற நிலை வந்து ... என்ன போலவே என் மகன் நடுக்கூடத்துல உங்க எல்லார் முன்னாடியும் என்ன கேள்வி கேட்டா அப்பா மாதிரி அவமானத்தை தாங்கிட்டு என்னாலலாம் நடமாட முடியாதுயெம்மா ... அடுத்த நொடி தூக்குல தொங்கிடுவேன் ...” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு பயம் காட்டி பேசியவனை கண்டு குழம்பி போய் பார்த்திருந்தார் வளர்.

அப்பொழுதுதான் உள்ளே நுழைந்த சரசமாவின் காதில் கௌரி பேசியது விழ , இல்லாதா காக்காவை விரட்டியவாறே

“ச்சூ... ச்சூ ... இந்த காக்கா தேவையில்லாமா எதுக்கு கத்துக்கிட்டு இருக்குன்னு தெரில ...” என்று கூறிக்கொண்டு உள்ளே நுழைந்தவரை திரும்பி பார்த்து முறைத்த கௌரி, பின் வளரிடம்

“யெம்மா... எவ்வளவு நாளைக்கு தான் நாம அடுத்தவன் கையை நம்பி வாழறது ... நாமலும் கார் பங்களானு வசதியா வாழ வேணாமா ... சொல்லுமா ...” என்றவனை புரியாமல் பார்த்த வளர்

“அதுக்குஉஉ...” என்று இழுத்தவரை கண்டு சிரித்த கௌரி

“வசதியான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான் ...” என்றவனை பார்த்து ப்பூ இவ்வளவு தானா என்ற தோரணையில் பார்த்த வளரின் முகம் தெளிந்து சிரிப்பு எட்டி பார்க்க

“டேய் தம்பி... இன்னைக்கே தரகர் கிட்ட சொல்லி நல்ல வசதியா அழகான பொண்ண பார்க்க சொல்றேன்” என்றவரை நிமிர்ந்து பார்த்தவன்,

“யெம்மா... அழகான பொண்ண அதெல்லாம் வேணாம் நல்ல வசதியா ஒரே பொண்ணா இருக்கனும்... ஊருல இருக்கிற பொண்ணு எல்லாம் செட் ஆகாதுமா... சென்னைல தான் கோடியில புரளுவாங்க ஈஸியா செட்டில் ஆகலாம்... ஒரு மாசம் அங்க இருந்து ... பொண்ண பார்த்து கட்டம் கட்டி தூக்கிறேன்” என்றவனை பார்த்து தலையில் அடித்து கொண்ட தண்டபாணி,

“அட வீணா போனவனே ... புருஷ லட்சணம்ன்னு ஒன்னு இருக்கு கேள்வி பட்டுருக்கியா ... ஆம்பளைக்கு அழகே பொண்டாட்டி புள்ளைங்களை தன்னோட சம்பாத்தியத்துல காப்பாத்துறதுதான் ... இப்படி பொண்டாட்டி காசுல உட்கார்ந்து திங்கணும் நினைக்கிறியே வெட்கமா இல்ல ...” என்றவரை நக்கலாக பார்த்தவன் ,

“எல்லா ஆம்பளைங்களும் தன்னோட சம்பாத்தியத்துல தான் பொண்டாட்டி வாழனும் நினைச்சா ... என் வருங்கால பொண்டாட்டி போல தன்னோட சொத்துல தான் புருஷன் வாழனும் நினைக்கிற சிங்க பெண்களுக்கு யாரு வாழ்க்கை கொடுக்கிறது ...” என்று வியாக்கினம் பேசியவனை கண்டு

“இது எல்லாம் எங்க உருப்பட போகுது... இங்க பாரு டி ஏற்கனவே ஏறுக்கு மாற கிறுக்குத்தனம் பண்ணிக்கிட்டு அலைஞ்சுக்கிட்டு இருக்கிறவனை... நீ வேற பேசி உசுப்பேத்தி விடாத ... அப்புறம் அசிங்க பட்டு நீதான் நிக்கணும்” என்று தன் மனைவியை எச்சரித்தவர்,

“ஏண்டா எருமை மாடு மாதிரி உடம்பை வளர்த்து வச்சுருக்கல ... உழைச்சி முன்னுக்கு வாடா அத விட்டு செருப்படி வாங்கிறதுக்கு அலையாத” என்ற தந்தையை நக்கலாக பார்த்தவன்,

“உழைச்சு முன்னுக்கு வர்ரது எல்லாம் சினிமால மட்டும்தான் நடக்கும் ...நிஜத்துல வாய்ப்பே கிடையாது ... இன்னைக்கு தமிழ்நாட்டுல இருக்கிற முக்கால் வாசி பணக்காரங்களாம் திருட்டு தனம் பண்ணிதான் இந்த நிலைக்கு வந்துருக்கானுங்க... நான் ஒன்னும் அவங்களை போல கள்ள கடத்தல் பண்ணியோ கொலை பண்ணியோ முன்னேற விரும்பலை ... ஜஸ்ட் ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுத்து லைப்ல செட்டில் ஆகா போறேன் ... இதுல ஒன்னும் எனக்கு தப்பா தெரியல ...” என்று உறுதியாய் கூறியவனின் கண்களில் தான் சொன்னதை செய்து முடிக்கும் வெறி தெரிந்தது.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
25210

கௌரிசங்கர் - 3

இரவு சாப்பாட்டை முடித்தபின் தூங்க செல்வதற்கு முன் கூடத்தில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியா. அவள் அருகே உட்கார்ந்த தனசேகர்,

“அம்மாடி ... கொஞ்சம் டிவி சத்தத்தை குறை முக்கியமான விஷயம் பேசணும் ...” என்றவரை புருவம் சுருக்கி பார்த்த பிரியா சத்தத்தை குறைக்கவும்,

“ஜெயா... இங்க வா ... பாப்பா நீயும் இங்க வா...” என்று தன் மனைவியையும் மூன்றாவது மகளையும் அழைக்க, எதற்காக அழைக்கிறார் என்ற கேள்வியோடு சமையலறையிலிருந்து கையை துடைத்தபடி கூடத்திற்கு வந்தனர் இருவரும்.

“ஜெயா... இன்னைக்கு துரை மாமா என்ன வந்து பார்த்தார் ... அவருக்கு தெரிஞ்ச குடும்பமாம் ... நல்ல பையனாம் ... நம்ம பாப்பா போல டீச்சரா இருக்காரு ... பண்ருட்டி ஸ்கூல்ல பத்தாவது பசங்களுக்கு கிளாஸ் எடுத்துக்கிட்டு இருக்காராம்... அவரும் கவர்மெண்ட் வேலைக்கு எக்ஸாம் எழுதிருக்காரு போல ... கண்டிப்பா கிடைச்சுடும் துரை மாமா சொன்னாங்க ...நம்ம பாப்பாக்கு பார்க்கலாமா கேட்டார்... உன்கிட்ட கேட்டுட்டு பதில் சொல்றேன் சொல்லிருக்கேன்...என்ன சொல்ற ...” மாப்பிள்ளையின் புகைப்படத்தை தன் மனைவியிடம் நீட்டியபடி அவரின் பதிலுக்காக காத்திருந்தார் சேகர்.

ஜெயா வாங்குவதற்குள் சேகரிடம் இருந்து புகைப்படத்தை பிடுங்கிய பிரியா , ஆர்வத்துடன் அதை பார்த்தவளின் முகம் அஷ்டகோணலாக மாற,

“வியாக் ... இவன் தான் மாப்பிள்ளையா கருங்குரங்கு போல இருக்கான் ... எனக்கு புடிக்கலை ... அக்காக்கு வேற பாருங்க ... இவன் வேணாம் ...” என்றவள் அலட்சியமாக அந்த படத்தை தூக்கி எறிய, அதில் கோபம் கொண்டு கண்கள் சிவக்க

“பிரியாஆஆஆ ...” என்று கர்ஜித்தார் தனசேகர். அதற்குள் அவள் பின்னந்தலையில் தட்டிய ஜெயா,

“நல்ல விஷயம் பேசும்போது ... அபசகுனமா பேசாதனு எத்தனை தடவை சொல்லிருக்கேன் ...” என்றவர் கீழே கிடந்த புகைப்படத்தை எடுப்பதற்குள் அதை எடுத்த காயத்ரி, படத்தில் உள்ள நபரை நன்றாக பார்த்தபின்,

“உங்களுக்கு ஓகேனா ... எனக்கு சம்மதம்பா...” என்று தன் சம்மதத்தை தெரிவிக்க, பெருமையுடன் தன் மகளை பார்த்தார் சேகர்.

“அக்காஅஆ ... உனக்கு என்ன பைத்தியமா ... அந்த மாப்பிள்ளை போட்டோல கூட கலரா காட்ட முடியாத அளவுக்கு கருப்பா இருக்கார் ... இவரை கட்டிக்கிறேன் சொல்ற லூசா நீ...” என்றவளுக்கு கோபத்தில் கண்கள் கலங்க தொடங்கின.

“கொஞ்ச நேரம் நீ வாய மூடுறீயா ... எங்களுக்கு தெரியும் எது நல்லதுன்னு ... இனி வாய திறந்த ...” என்று விரல் நீட்டி தனசேகர் எச்சரிக்கை செய்யவும்,,

“வாய மூடிக்கிட்டு போனா இதோ இந்த கருங்குரங்கை எங்க அக்கா தலைல கட்டி வச்சுடுவீங்க ... நீங்களே மனசாட்சி தொட்டு சொல்லுங்க நம்ம அக்கா பக்கத்துல நிக்க கூட இந்தாளுக்கு தகுதி இருக்கா ... ஏன் இவன விட்டா ஊர் உலகத்தில வேற மாப்பிள்ளையே கிடைக்க மாட்டாங்களா...” என்று அடங்காமல் எகிறியவளை கண்டு ஆத்திரம் கொண்ட சேகர் , தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை தள்ளிக் கொண்டு எழவும் பதறிப்போன ஜெயா அவரை மறித்தபடி,

“இருங்க இருங்க கோபப்படாதீங்க ... அவகிட்ட நான் பேசிக்கிறேன்...” என்று தன் கணவனின் கோபம் அறிந்தவராக அவரை சாந்த படுத்த முயல,

“என்ன பேச போற ... யார் தலையிலாவது கட்டிவிட்டா உங்க கடமை முடிஞ்சு கை கழுவிட்டு போய்டலாம் நினைக்கிறியா ...” என்று சீரியவளை , “பாப்பா...” என்று காயத்ரி அடக்க முயல,

“நீ சும்மா இருக்கா ... மாப்பிளைத்தான் சுமார் மூஞ்சா இருக்கார்ன்னு பார்த்தா , பார்க்கிற வேலையும் அதைவிட மோசம் ... பிரைவேட் ஸ்கூல்ல வாத்தியாரா இருக்கார் ... மிஞ்சி மிஞ்சி போனா மாச மாசம் பத்துல இருந்து பதினைந்து ஆயிரம் வாங்குவாரா ... இவருக்கு என் அக்கா கேட்குதா ... பெரிய அக்காங்களை தள்ளி விட்டதை போல இவளையும் யார் தலையிலயாவது கட்டி விடலாம் பார்க்கிறிங்களா ... முடியாது இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்...” என்று மீண்டும் பெண் சிங்கமாய் சிலிர்த்தவளை கண்டு காயத்ரியும் ஜெயாவும் திகைத்து போய் பார்க்க , புருவம் சுருக்கி அவளையே ஆழுந்து பார்த்துக் கொண்டிருந்தார் தனசேகர்.

“என்னடி பேசுற ... மூத்தது இரெண்டுத்துக்கும் கவர்மெண்ட் மாப்பிள்ளையா பார்த்துதான் கல்யாணம் பண்ணி கொடுத்துருக்கோம் ... ஏனோ தானோன்னு தள்ளி விட்டத போல பேசிகிட்டு இருக்க ... காயத்ரிக்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளைக்கும் கவர்மெண்ட் வேலை கிடைச்சுடும் தானே அப்பா சொல்லிக்கிட்டு இருக்காங்க ... எதுக்கு இப்போ தலை அறுபட்ட கோழி போல துள்ளிக்கிட்டு இருக்க ...” பிரியா பேசுவதை பொறுக்க முடியாமல் ஜெயா சத்தம் போட, நக்கலாக சிரித்த பிரியா ,

“அடேயப்பா பெரியஆஆஆ கவர்மெண்ட் மாப்பிள்ளை ... எது பேங்க் மேனேஜருக்கா கட்டி கொடுத்திருக்க ... சாதாரண போஸ்ட் மேனுக்கும் கார்பொரேஷன்ல பியூனா இருக்கிறவங்களுக்கு தானே கட்டி கொடுத்த... இதுல பெருமை வேறயா உனக்கு...” என்று நக்கல் அடிக்கவும், முதல் இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிப்பதற்குள் தாங்கள் பட்ட கஷ்டத்தை சிறிதும் யோசிக்காமல் கேலி பேசியதை கண்டு பொறுக்க முடியாமல் கண் கலங்கிவிட்டார் ஜெயா. தன் மனைவி கண் கலங்குவதை கண்டு கோபம் கொண்ட சேகர்

“எங்க வசதிக்கு தகுந்த படிதான் மாப்பிள்ளை பார்க்க முடியும் ... அதுக்காக எப்படியோ போய் தொலைங்கன்னு எவன் தலையிலையும் நாங்க கட்டல ... இதுக்கு மேல பேச ஒன்னும் இல்ல ... இவர் தான் மாப்பிள்ளை நாளைக்கு ஜாதகம் பார்க்க போறோம் ... ஜாதகம் செட் ஆச்சுன்னா அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம் வச்சுடலாம்...” இவ்வளவுதான் பேச்சு முடிந்து விட்டது என்ற ரீதியில் படுக்க செல்வதற்காக அறைக்குள் நுழைய போனவரை,

“ஓஹ்... உங்க வசதி படிதான் மாப்பிள்ளை பார்ப்பீங்களா ... அப்போ அத புள்ள பெக்குறதிலையும் காட்டிருக்கணும் ... அஞ்சு பொண்ணு பெத்தா அரசனும் ஆண்டியாவான் சொல்லுவாங்க ... நீங்க என்ன தையிரியத்துல பண்ணி குட்டி போடுறத போல வத வதனு பொட்ட புள்ளையா பெத்து போட்டிங்க ... உங்களால தான் முடியாதுனு தெரியும்ல அப்புறம் எதுக்கு என்ன பெத்துக்கிட்டீங்க...” என்று ஆவேசம் வந்ததை போல கத்தியவளின் குரல் படுக்க சென்றவரைலதடுக்க, திக்பிரமை பிடித்ததை போல நின்றுவிட்டார் தனசேகர். தன் கணவரின் தோற்றத்தை கண்டு துடித்து போன ஜெயா பிரியாவின் கன்னத்தில் ஓங்கி அறைய, கன்னத்தை பொத்தியபடி அடிபட்டப்பார்வையை தன் தாயை நோக்கி வீசிய பிரியா,

“ஏன்மா அடிச்ச ... உண்மை சுடுதா ... சொல்லுமா உங்க ஆசைக்கு எங்களை பெத்து போட்டுட்டு எங்க ஆசையை கொன்னுட்டிங்களே ... சின்ன வயசுல இருந்து ஆசை பட்டதை வாங்கி தின்ன முடிஞ்சுதா ... இது வரைக்கும் எனக்கு எத்தனை புது டிரஸ் வாங்கி கொடுத்துருக்க ... எல்லாமே அக்காங்க போட்ட பழைய டிரஸ் தானே ... ஏன் அவங்க யூஸ் பண்ண பாக் வளையல் கம்மல் ஸ்கூல் ஷூ ... ஏன் புக் கூட அவங்க யூஸ் பண்ணதை தானே நான் யூஸ் பண்ணிருக்கேன் ... இதோ இப்போ போட்டிருக்க நைட்டி கூட சின்ன அக்காவோடது ... எனக்குன்னு என்னமா வாங்கி கொடுத்திருக்க ... எனக்கும் புதுசா போடணும் ஆசையா இருக்காதா ... ஆனா ஒரு தடையாவது உன்கிட்ட அத பத்தி பேசியிருக்கேனா ...” என்று கன்னத்தை நனைத்த கண்ணீரை துடைத்து கொண்டு பேசியவள், பின்

“அக்காக்கு விருப்பம்னா அவரையே கட்டி வைங்க ... ஆனா எனக்கு பண்ணுறப்போ என் விருப்ப படிதான் கல்யாண பண்ணிப்பேன் உங்களுக்காக எல்லாம் கண்டவனையும் கல்யாணம் பண்ணி கஷ்ட பட மாட்டேன் ...” என்று தீர்க்கமாய் பேசியவள் கீழே விரித்திருந்த பாயில் கண்ணை மூடி படுத்துக் கொண்டாள் .

தன்னை நிற்க வைத்து குற்றம் சாட்டியதை தாங்க முடியாதவராக வெளி திண்ணையில் சோர்ந்து போய் அமர்ந்துக் கொண்டார் சேகர். இதுவரை கம்பீரமாய் வளைய வந்த தன் கணவரின் ஓய்ந்த தோற்றம் ஜெயாவின் மனதை பிசைய, அவரை தேடி சென்று அவர் அருகில் உட்கார்ந்தவர்,

“ஏங்க ... அவ சின்ன பொண்ணு ...” என்று ஆரம்பித்தவரை கலங்கிய கண்களுடன் பார்த்த சேகர்,

“கொஞ்சம் என்ன தனியா விடு ஜெயா ...” என்றவருக்கு மறுப்பு சொல்லாமல் உள்ளே சென்றார் ஜெயந்தி.

தனசேகர் ஜெயந்தி தம்பதிகளுக்கு நான்கு பெண்கள், தாலுகா ஆபீசில் குமாஸ்தாவாக வேலை பார்ப்பவருக்கு இரெண்டு பெண்களை கரை சேர்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.காயத்ரியை புகைப்படத்தில் பார்த்த மாப்பிள்ளை ரகுராமிற்கு பிடித்து விட, அவரின் நல்ல குணத்தை துரை மூலம் அறிந்த சேகருக்கும் தன் பெண்ணை அங்கே கட்டிக் கொடுக்க ஆசைக் கொண்டார்.

வீட்டிற்குள் நுழைந்த ஜெயா, அங்கே கண்ணை மூடி படுத்திருந்த தன் இளையமகளை முறைத்துக் கொண்டே சமையலறைக்குள் நுழைய, அவர் பின்னோடு சென்ற காயத்ரி தன் அன்னையை சமாதானம் படுத்த தொடங்கினாள்.

ஊரை சுற்றிவிட்டு பதினொரு மணி வாக்கில் வீட்டிற்கு வந்த சங்கருக்கு, வளர் சாப்பாடு எடுத்து வைக்கவும்,

“யெம்மா... எனக்கு சாப்பாடு போட்டு சாப்பிட தெரியாத ... நீ ஏன்மா கண்ணு முழிச்சுகிட்டு இருக்க ...” என்று அக்கறையாய் கேட்டபடி சாப்பிடவும்,

“நீயா போட்டு சாப்பிட்டா கொஞ்சமா சாப்பிடுற ... எனக்கும் தூக்கம் வரலை ... நீ சீக்கிரம் சாப்பிட்டு பாத்திரத்தை கொடு ...” என்ற அன்னையை பாசத்துடன் பார்த்த சங்கர் , ஒரு வாய் சோற்றை அள்ளி அதை அழகாக உருட்டி தன் அன்னையின் வாயருகில் கொண்டு சென்றவன்,

“ஆஅ திறமா...” என்க , வளரும் பிகு பண்ணாமல் சிறு சிரிப்புடன் அவன் ஊட்டுவதை வாங்கி கொண்டார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரசமா, சற்று தள்ளி படுத்திருந்த தன் மகனிடம், கண்களால் இந்த கூத்தை எல்லாம் பார்த்தியா என்னும் விதமாக பார்க்க,

“எம்மா... சோழியன் குடுமி சும்மா ஆடாது ... இந்த பய சரியான காரியகாரன் ... சும்மாலாம் சோத்தை ஊட்ட மாட்டான் ... இரு இரு என்ன நடக்குதுன்னு பார்ப்போம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ,

“யெம்மா... நான் இரண்டு மாசம் சென்னைல இருந்துட்டு வரேன் மா ... அங்க தங்கிறதுக்கு கூட எடத்த பார்த்துட்டேன் ... போய்ட்டு வர செலவுக்கு ஒரு பத்தாயிரம் ரெடி பண்ணி கொடுமா ...” என்று மெல்ல வளரின் தலையில் இடியை இறக்க, அவனை அதிர்ந்து போய் பார்த்தவர்

“என்னது பத்தாயிரமா ... அதுக்குதான் சோத்தை ஊட்டி விட்டியா ... வேணும்னா சொல்லு வாயில கையை விட்டு அத வெளில எடுத்துடுறேன் ... இந்த பத்தாயிரம் நாலாயிரம் கேட்கிற வேலை வச்சுக்காத... நூறு அம்பது கேட்கிறது போய் இப்போ பத்தாயிரமா ...”என்று முணுமுணுக்க தொடங்கியவரை கடுப்புடன் பார்த்த சங்கர்,

“யெம்மாஆ ... நீ ஒன்னும் சும்மா கொடுக்க வேணாம் , கடனா கொடு மூனு மாசத்துல திருப்பி கொடுத்துடுவேன்...” என்றவனை முறைத்து பார்த்தவரை கண்டு,

“ரெட்டவட செயின்னு ... ஏசி காரு ... வாஷிங் மிசினு ... நீச்சல் குளம் வச்ச வீடு... இதெல்லாம் வேணுமா வேணாமா ... வேணும்னா பணத்தை ஏற்பாடு பண்ணி கொடு...” என்று ஆசை வார்த்தை காட்டி பேசியவனை கண்டு கடுப்பான வளர்

“அடி செருப்பால ... காலைல ஏதோ உளறிக்கிட்டு இருக்கேனு பார்த்தா ... மாமி வேலை பார்க்க என்கிட்டயே பணம் கேட்பியா ... வெளக்கமார்த்த எடுத்தேன் வச்சுக்கோ தோளை ஊறிச்சி உப்புக்கண்டம் போட்டுடுவேன் ...ஒழுங்கா அப்பா சொன்ன வேலைல சேர்ந்து வேலைக்கு போற வழியை பாரு ... தேவையில்லாதது பண்ணிக்கிட்டு இருக்காதா ...” கோபத்துடன் கூறியவர் அவன் சாப்பிட்ட தட்டை தூக்கிக் கண்டு சமையலறைக்குள் செல்ல,

“தோ பாரு பணம் குடுக்க முடியாதுன்னா அதோட நிறுத்திக்கோ ... நான் என்ன பண்ணனும்னு நீ சொல்லிக்கிட்டு இருக்காதா புரியுதா ...” என்று கோபத்துடன் கத்தியவன் சட்டையை மாட்டிக் கொண்டு மீண்டும் வெளியே சென்றுவிட்டான்.

நல்ல உறக்கத்தில் இருந்தவளின் காலை யாரோ வருடுவது போல இருக்க கண் முழித்து பார்த்த பிரியா, அங்கே தன் கால்களை தன் மடியில் கிடத்தி வருடிக் கொண்டிருந்த தன் தந்தையை கண்டு திடுக்கிட்டு

“ப்பா...” என்று அதிர்ந்து கத்த, அவள் சத்தத்தில் ஜெயாவும் காயத்ரியும் கூட கண் முழித்துக் கொண்டனர்.

“விடுங்கப்பா ...” என்று தன் காலை உருவ முயன்றவளுக்கு இசைந்து கொடுக்காமல், அவள் கால்களை மெல்ல அழுத்திய படி

“அப்பாவா மன்னிச்சுடுடா ...”என்றவருக்கு , “அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா ... நீங்க போய் தூங்குங்க ...” என்று பிரியாவும் , “இப்போ என்ன தப்பு பண்ணிடீங்கனு இவகிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்கீங்க ” என்று ஜெயாவும் கூற, அவர் அருகில் சென்ற காயத்ரி பிரியாவின் காலை பிடித்திருந்த அவர் கையை எடுத்து விடவும் ,காயுவையும் திரும்பி பார்த்து “நீயும் என்ன மன்னிச்சுடுடா” என்றவருக்கு எதுவோ சொல்ல வர கை நீட்டி தடுத்தவர்

“நான் உங்க அம்மாவை புடிச்சு போய்தான் கட்டிகிட்டேன் ... எங்களுடைய அன்பின் வெளிப்பாடுதான் நீங்க எல்லாம் ... ஏனோ என்னால ஒத்த புள்ளயோட நிறுத்திக்க முடில ... உங்கம்மாவை அவ்வளவு புடிக்கும் ... ஒவ்வொருத்தரா பொறக்கும் போதும் எங்க அன்போட பரிசாத்தான் நான் நினைச்சேன் ... நீ சொன்ன மாதிரி எல்லாரும் சொன்னாங்க தான் ரெண்டு பொண்ணோட போதும் , அதுங்களுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கவே முட்டி மோதணும்னு ... எனக்கும் சரி உங்க அம்மாக்கும் சரி எங்க எதிர்பார்ப்பும் ஆசைகளும் ரொம்ப ரொம்ப சின்னது ... இருக்கிறத வச்சு சந்தோச பட்டுகிற ஆட்கள்... அதனாலயே என்னவோ எங்க ரத்தம் எங்கள போலத்தான் இருப்பாங்கன்னு தப்பு கணக்கு போட்டுட்டேன் ... இப்போ நீ பேசின பின்னதான் தெரியுது உன்னோட ஆசைகள் ஒண்ணுகூட நாங்க நிறைவேத்தலைன்னு ...” அவர் பேசுவதை கேட்டு ஜெயா கண் கலங்க , காயத்ரியோ ,

“அப்ப்பா... இப்போ எதுக்குப்பா எங்களுக்கு விளக்கம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க ... எனக்கு இதுவரைக்கும் எந்த குறையும் நீங்க வைக்கலபா ... நீங்க பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்க எனக்கு முழு சம்மதம்பா ...” என்க , பிரியாவோ ,

“சாரிபா உங்களை கஷ்ட படுத்த சொல்லலை ... அக்காங்க கல்யாணத்துல ரொம்பநாளா உறுத்திகிட்டு இருந்துச்சு அதான்பா என்ன மீறி கேட்டுட்டேன்...” அவர் தன்னிலை விளக்கம் கொடுப்பதை கண்டு சங்கட பட்டவளாக கூற , மெல்ல சிரித்துக் கொண்ட சேகர்,

“உங்க அக்காவுக்காக என்ன கேள்வி கேட்டது ரொம்ப சந்தோசமா இருக்கு டா ... ஆனா நீ கவலை படுற அளவுக்கு அவங்க வாழ்க்கை கஷ்டத்துல இல்ல ... பெரிய பொண்ணும் நடுப்பொண்ணும் சந்தோஷமாத்தான் இருக்காங்க ... இரண்டு மாப்பிள்ளைக்கும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது ... சரிடா அவங்களை எல்லாம் விடு ... உன்னோட எதிர்பார்ப்பு என்னன்னு இப்போ எனக்கு தெரிஞ்சுடுச்சு ... அதுக்கு தகுந்ததை போல மாப்பிள்ளை பார்த்துட்டா போச்சு ...” என்றவர் , எதையோ யோசித்தவராக,

“ஹாங் ... சொல்ல மறந்துட்டேன் போன மாசம் அரிசி மண்டி வேலு அவர் பையன் செல்வராஜுக்கு நம்ம சின்ன பொண்ண கேட்டார் ... அந்த பையன் நம்ம பொண்ண கடைவீதில பார்த்துருக்கான் போல, புடிச்சு போய் அவங்க வீட்டுல பேச சொல்லிருக்கான் ... பையன் ஆசைப்பட்டு கேட்கிறான் உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க மேற்கொண்டு பேசலாம் சொன்னார் ...நான் தான் என் பொண்ணுங்களுக்கு கவர்மெண்ட் மாப்பிள்ளையை தவிர வேற யாருக்கும் தறதா இல்லைனு முடிவுல இருந்தேன்ல ... அதான் அத கண்டுக்காமா விட்டுட்டேன் ...” என்றவர், பிரியாவிடம் திரும்பி

“அம்மாடி ... நீ ஆசைப்பட்ட போலவே வசதியான இடம் டா... அவங்க கிட்ட அம்பாசிடர் கார் இருக்கு ... பெரிய மாடி வீடு , சொந்தமா நிறைய நிலம் கூட இருக்கு ... இரண்டே இரண்டு பையன்தான் பிச்சல் புடுங்கல் இருக்காது ... என்ன நம்ம சக்திக்கு மீறி சீர்வரிசை எதிர் பார்ப்பாங்க , அதுக்குதான் இந்த வீடு இருக்கே ...” கண்கள் மின்ன எதையோ சாதிக்கப்போற நினைப்பில் அவர் பேச , அவர் பேச்சை தட்டமுடியாமல் திணறியவளின் மனமோ,

‘நான் ஆடி காருக்கு ஆசைப்பட்டா இந்த அப்பா அம்பாசிடருக்கு வாழ்க்கை பட சொல்லுது ... அய்யோ இவனை கட்டிக்கிட்டா புள்ளகுட்டி பெத்துக்கிட்டு இந்த ஊர்லயேதான் கிடக்கணும் ...’ என்று நினைக்க பதில் சொல்ல முடியாமல் நெளிந்தவளை முறைத்துக் கொண்டிருந்தார் ஜெயந்தி . அவருக்குத்தான் இவளை பற்றியும் இவள் கனவை பற்றியும் நன்கு தெரியுமே.

தன் முகத்தையே ஆர்வத்துடன் பார்த்திருந்த தந்தையை பார்க்க பாவமாக இருந்தாலும் , தன்னுடைய ஆசையே பிரதானமாக தெரிய மெல்ல,

“ப்பா... முதல்ல அக்கா கல்யாணத்தை நல்ல படியா முடிங்கப்பா ... அதுக்கே ஏகப்பட்ட செலவு இழுக்கும் ... எனக்கு இப்போ என்னப்பா அவசரம் இன்னும் இரண்டு வருஷம் போகட்டும்ப்பா ... அதுவரைக்கும் நான் சென்னைல வேலைக்கு போகட்டா ...” என்று நாசுக்காக தன் திருமணத்தை மறுத்தவள் , தன் விருப்பத்தையும் அவர் முடிவுக்கு விட்டுவிட, சில நொடிகள் அமைதியாய் யோசித்தவர்,

“சரிடாமா ... அவங்ககிட்ட சொல்லிடுறேன் ஒரு வருஷம் கழிச்சுத்தான் கல்யாணம்ன்னு ... விருப்பம் இருந்தா காத்திருக்கட்டும் இல்லனா வேற நல்ல இடமா பார்த்துக்கிடலாம் ... அதுவந்து எப்படி டா உன்ன தனியா சென்னைக்கு அனுப்புறது ... ஏன் இங்கயே எதாவது ஒரு வேலை பாரு இல்லைனா வீட்டுலயே இருடா ... சென்னைலாம் நமக்கு சரி பட்டு வராது” என்று கறாராய் கூறியவர் தூங்க செல்லவும் , அவர் மறுத்ததால் கண்கள் இரண்டும் கலங்க வந்த அழுகையை உதட்டை கடித்து கட்டுப்படுத்தியவளை கண்டு காயத்ரிக்கு பார்க்க பார்க்க பாவமாய் இருந்தது ,பிரியாவை நெருங்கி படுத்துக் கொண்டவள், அவள் கைகளை எடுத்து தன் மீது போட்டுக் கொண்டவாறே ,

“இப்போ எதுக்கு கண்ண கசக்குற ... அப்பா கிட்ட நான் பேசுறேன் ... பட் எங்ககிட்ட உளறிக்கிட்டு இருக்கிறத போல அங்க போய் நடந்துக்க கூடாது ... ஒரு மாசம் டைம் வாங்கி கொடுக்கிறேன் அதுக்குள்ள வேலை தேடி சேர்ந்துகிற ... இல்ல ஒரு மாசம் முடிஞ்ச மறுநாளே பெட்டியை தூக்கிட்டு வந்துடனும் ... என்ன சொல்ற ...” என்று கிசுகிசுப்பாய் கூறவும் முகம் சந்தோஷத்தில் விரிய மேலும் காயத்ரியை நெருங்கி படுத்து தன் கால்களையும் அவள் மேல் போட்டு அனைத்துக் கொண்ட பிரியா ,

“ப்ளீஸ் ப்ளீஸ் பெர்மிசன் வாங்கி கொடுக்கா ... நீ சொன்ன படியே நடந்துக்குறேன்...” கிசுகிசுப்பான குரலில் கொஞ்சிய படி அக்காவின் கன்னத்தில் முத்தம் வைக்கம் , “சரி ...” என்ற சிரிப்புடன் தன் தங்கையை அனைத்துக் கொண்டு தூங்கினாள் காயத்ரி.

கூடத்தில் டிவி பார்த்துக் கொண்டே கீரை ஆய்ந்துக் கொண்டிருந்த வளர்மதியை வாயிலில் நின்று தெரிந்தவர் ஒருவர் அழைக்க, எட்டி பார்த்து

“தோ வரேன் ...” என்று குரல் கொடுத்தவர் தன் அத்தையிடம் கீரையை நகர்த்தியபடி ,

“அத்த இந்த கீரையை ஆஞ்சுகிட்டு இருங்க ... விஜயா பையன் குழு பணம் வாங்க வந்திருக்கான் கொடுத்துட்டு வரேன் ...” என்றவர் பணத்தை எடுப்பதற்காக சமையலறைக்குள் நுழைய , போன வேகத்தில் பதட்டத்துடன் திரும்பியவரை பார்த்து தண்டபாணி,

“என்ன பணத்தை வச்ச இடத்துல இல்லையா ...” என்று அசால்டாய் கேட்க , கோபத்துடன் அவரை நெருங்கிய வளர் ,

“உங்களுக்கு எப்படி தெரியும் ... அப்போ நீங்கதான் எடுத்தீங்களா ...” என்று குற்றம்சாட்ட, கேவலமான பார்வையை பார்த்த தண்டபாணி,

“ஏண்டி ...சம்பாதிச்ச காலத்தலையே சம்பள பணத்தை உன்கிட்டத்தான் கொடுத்தேன் ... இப்போ வர பென்ஷன் பணத்தையும் உன் கைல தான் கொடுக்கிறேன் ... நான் ஏண்டி திருட போறேன் ... எல்லாம் உன் அருமை இளைய புதல்வன் பண்ண வேலையாத்தான் இருக்கும் ... முதல்ல அவன் வீட்டுல இருக்கானா பாரு...” என்று நக்கல் அடிக்கவும் அவரை முறைத்துக் கொண்டே மொட்டை மாடிக்கு மூச்சிரைக்க ஏறிய வளருக்கு காலியான மாடியே காட்சியளிக்க, தன் கணவர் சொன்னது போலத்தான் நடந்திருக்கும் என்று எண்ணியவராக கடும்கோபத்துடன் கீழிறங்கி சென்று தன் கணவர் முன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றவரை பார்க்க தண்டபாணிக்கு பாவமாகத்தான் இருந்தது,

“அந்த பையனை ஒரு மணி நேரம் கழிச்சு வர சொல்லு நான் போய் பேங்க்ல எடுத்துட்டு வரேன் ... ஆமா எவ்வளவு ...” என்றவருக்கு ,வந்த கோபத்தை உதட்டை கடித்து கட்டுப்படுத்தியபடி

“பதினேழாயிரம் ...” பதில் சொல்வதற்குள் ஆத்திரத்தில் கண்கள் கலங்க தொடங்கின வளர்மதிக்கு.

“சரி சரி விடு விடு ... அவன் கேட்டப்பவே தரேன் சொல்லி இன்னைக்கு தரேன் நாளைக்கு தரேன் சொல்லி ஏமாத்திருக்கலாம் ... செருப்பால அடிப்பேன் துடைப்பத்தாலஅடிப்பேன் சொன்ன ... இப்போ பாரு சொல்லாம கொள்ளாம எடுத்துட்டு போய்ட்டான் என்ன என்ன ஏழுரையை இழுத்துகிட்டு வர போறான்னு தெரில ... ம்ம்ம் வீட்டுக்கு அடங்காததா ஊரும் உலகம்தான் திருத்தனும் விதி இருந்தா யாரால மாத்த முடியும்...”என்றவரை அனல் தெறிக்க பார்த்த வளர் ,

“கொஞ்சம் விட்டா போதுமே... அவனை யாருன்னு நினைசீங்க ... அவனுக்கு இருக்கிற மூளைக்கு எங்கயோ போக போறான் பாருங்க ... சும்மா என் பையனை குறை செல்றத விட்டுட்டு பணத்தை எடுத்துட்டு வர வழிய பாருங்க ...” தண்டபாணியிடம் எகிறிய வளர் கோபத்துடன் செல்ல , தலையில் அடித்துக் கொண்ட தண்டபாணி

“பார்க்கத்தானே போறேன் எங்க போக போறான்னு ... மாமியார் வீட்டுக்கு போகாம இருந்த சரி...” என்று முனகியவர் பணத்தை எடுப்பதற்காக கிளம்பலானார்.

அங்கே தன் பெற்றவர்களின் பிபியை எகிற விட்டவனோ, சென்னையில் உள்ள புகழ் பெற்ற கட்டுமான கம்பெனியின் முன் ஒரு காலை மடக்கியபடி ஸ்டைலாக சாய்ந்த படி நின்றிருந்தான். அவனை தாண்டி சென்ற ஆண்களும் பெண்களும் மீண்டும் ஒருமுறை திரும்பி பார்த்து செல்லவும் , அதில் கர்வம் அடைந்தவனின் இதழ்கள் கேலியாய் புன்னகைக்க, தொலைவில் நின்று வெகு நேரமாய் இவனை ரசித்துக் கொண்டிருந்த அப்பெண்ணிற்கு இவனின் கேலி புன்னகை கூடுதல் அழகை கொடுத்து அவளை வசீகரிக்க மெல்ல அவனை நெருங்கினாள். அருகில் நெருங்கியதும் தன் கரத்தை நீட்டி,

“ஹாய் ... ஐ அம் பிரியா ...” என்று அறிமுகப்படுத்தி கொள்ள , அலட்சியமாய் திரும்பியவனின் எக்ஸ்ரே கண்கள் நொடியில் அவளை அலசி ஆராய்ந்து இவள் தனக்கானவள் இல்லை என்று ரிப்போர்ட் வாசிக்க , மெல்லிய புன்னகையை உதிர்த்தவன்,

“ஹாய் ஐ அம் சங்கர் ...” என்று அறிமுகப்படுத்திக் கொண்டவன் , அவள் கைகளை பற்றிக் கொள்ளாமல் உதாசீனப்படுத்தி திரும்பி நிற்கவும் , அவனின் அலட்சிய போக்கை ரசித்தவள் சிறு சிரிப்புடன் அங்கிருந்து விலகி செல்ல , மூச்சை இழுத்துவிட்டு சங்கர்,

“ஊப் ...வாடக கார்ல போறதுக்கெல்லாம் நம்மளை புடிச்சிருக்கு போல ... எவ்வளவு தைரியமா தானா வந்து பேசுவா சரியான லம்பாடியா இருக்கும் போல ... லம்போகினி எதிர்பார்த்தா லம்பாடி வந்து நிக்குது ... ம்ம்ம் ... நம்ம ஆளு மட்டும் கண்ணுல மாட்ட மாட்டுது ... எங்கடி இருக்க செல்லக்குட்டி ... உன் பேபி உனக்காக வைட்டிங்...” என்று புலம்பியவனின் புலம்பல் காற்றில் கரைந்து சென்றது.

அதே நேரம் வீட்டில் குளிக்காமல் அழுக்கு நைட்டியுடன் சோபாவில் படுத்துக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த பிரியா

“இங்கதான் இருக்கேன் ... ஏன் கத்திக்கிட்டு இருக்க ...” என்று தெருவை நோக்கி பெருங்குரலெடுத்து கத்திக் கொண்டிருந்தாள்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
25567

கௌரிசங்கர் - 4a

சென்னையை வந்தடைந்து இன்றோடு ஒன்றரை மாதங்கள் ஓடிவிட்டன , இன்னும் அவனின் கனவு கன்னியை கண்டு பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தான் சங்கர் . தன் நண்பன் பிரசன்னாவின் அறையில் அவன் அனுமதியில்லாமல் தங்கிக் கொண்டவனை என்ன முயன்றும் பிரசன்னாவால் வெளியேற்ற முடியாமல் போக , அவனை வெளியேற்றுவதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான் சங்கரின் நண்பன்.

அன்று காலையில் இன்னும் படுக்கையில் இருந்து எழாமல், கண்ணை மூடிக் கொண்டு காலை ஆட்டிக் கொண்டிருந்தவணை கண்டு பல்லை கடித்த படி தலைவாரிக் கொண்டிருந்த பிரசன்னா,

“என்னடா இன்னும் எழுந்திருக்கலையா ... எப்பவும் இந்த நேரத்துக்கு எழுந்து குளிச்சு முடிச்சு பக்காவ கிளம்பி பொண்ணு தேடுற வேட்டைக்கு கிளம்பிடுவ ... இன்னைக்கு என்ன இன்னும் படுக்கையை விட்டு எழல ...” என்றவனின் மனமோ அவன் எதிர்பார்த்த பெண் கிடைக்க கூடாது என்று அவசர வேண்டுதலாக கடவுளிடம் முறையிட்டது.

பிரசன்னா , சங்கரின் ஊர்க்காரன் ஒருவகையில் தூரத்து சொந்தம் கூட அவனைவிட இரு வயது மூத்தவன், இருவரும் நெருங்கி பழகினாலும் மற்றவரை சமையம் கிடைக்கும் போதெல்லாம் வாரிவிடவும் தயங்கியதில்லை.

அவன் கேள்வியில் கண்ணை திறந்த சங்கர் முகத்தை சலிப்பாக வைத்துக் கொண்டு,

ம்ப்ச்... அந்த பிரியா பொண்ணு ... நேத்து என்கிட்ட வந்து பேசிச்சுடா ...” என்றவனை கண்கள் விரிய பார்த்த பிரசன்னா அவசரமாக இடையிட்டு,

“எந்த பிரியா என்கூட வேலை பாக்குதே அதுவா ...” என்று நம்பாமல் கேட்டவனுக்கு ,

“ம்ம்ம் ...” என்று தலையை ஆட்டியவன் “ம்ம்ம் ... அதேதான், உன்ன உன் ஆபீஸ்ல ட்ராப் பண்ணிட்டு போகும் போது எப்பவும் என்ன சைட் அடிச்சுகிட்டு போகும் ... நானும் பார்த்துட்டு போகட்டும் விட்டுட்டேன்... ஆனா நேத்து என்கிட்ட வந்து என்ன பிடிச்சுருக்குன்னு சொல்லிடுச்சு ...” என்றவன் நேற்றைய நிகழ்வை அசைபோட தொடங்கினான்.

சென்னைக்கு வந்த முதல்நாள் தன் நண்பனை காண்பதற்காக, அவன் அலுவலகத்திற்கு வந்தவன் அவன் வரவிற்காக காத்திருக்கும் பொழுது, தானாகவே முன்வந்து தன்னிடம் பிரியா என்று தன் பெயரை அறிமுகப்படுத்தியவளை அலட்சியத்துடன் பார்த்த சங்கர், வேண்டா வெறுப்பாக தன் பெயரை அறிமுகம் படுத்திக் கொண்டவன் அதன் பின் அவளை கண்டுக் கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொள்ள, சிறு புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தாள் பிரியா.

தினமும் காலையில் பிரசன்னாவை அவன் இடத்தில் இறக்கி விடும் சங்கர், அவன் பைக்கை எடுத்துக் கொண்டு ஊர் சுற்ற தொடக்கி விடுவான் . அப்பொழுது எல்லாம் அவன் எதிரே சிறு சிரிப்புடன் எதிர்ப்படும் பிரியாவை , சிறு அலட்சியத்துடன் கடந்து விடுவான் சங்கர்.

இதுவே தொடர் கதையாய் தொடரவும், மனதில் சிறு சந்தேகம் உருவாக, ‘ஒருவேளை பணக்காரியா இருந்தா ... கைல வெண்ணையை வச்சுக்கிட்டு ஏன் நெய்க்கு அலையனும் ... பார்க்க சுமாராவும் இருக்கா...’ என்று நினைத்தவன் அன்றிலிருந்து அவள் அறியாமல் அவளை பின் தொடர்ந்து சென்றவனுக்கு அவளின் ஹாஸ்டல் வாசம் பெருத்த ஏமாற்றத்தை தர, அதன்பின் அவள் நினைப்பை சுத்தமாக ஒதுக்கி வைத்தவனை தேடி வந்து பேசினாள் பிரியா.

நேற்று காலையில் வழக்கம் போல பிரசன்னாவை இறக்கி விட்டவன், பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே வரவும் அவனிற்காக காத்துக் கொண்டிருந்தவள் அவன் வழிமறித்து பேசவேண்டும் என்று கூறவும் சில நொடிகள் தயங்கியவன் பின் பைக்கை நிறுத்திவிட்டு அருகிலிருந்த மரத்தடியில் போய் நின்றுக் கொண்டான். சற்று தயங்கி அவனிடம் ,

“நீங்க என்ன படிச்சிருக்கீங்க ... எங்க வேலை பார்க்கிறீங்க ...” என்று கேள்விகள் கேட்கவும், சங்கருக்கு சுர்ர்ர்ர் என்று கோபம் தலைக்கு ஏற , கோபமாக

“இத கேட்கத்தான் கூப்டீங்களா ... இத தெரிஞ்சு வச்சுக்கிட்டு என்ன பண்ண போறீங்க ...” என்று அங்கிருந்து கிளம்ப தொடங்க ,

“சாரி சாரி ... அதுக்காக பேச கூப்பிடல ...” பதற்றத்துடன் கூறியவளை

“ம்ப்ச் ... சீக்கிரம் விஷயத்தை சொல்லுங்க ... பொறுமையா கேட்கிற அளவுக்கு டைம் இல்ல...” அலுத்துக் கொண்டவனை தயக்கத்துடன் பார்த்தவள்,

“அதுவந்து ... உங்கள முதல் தடவை பார்த்ததிலிருந்து ரொம்ப பிடிச்சு போச்சு ... நாமா பழகி பார்க்கலாமா...” என்று மனதில் உள்ளதை போட்டுடைத்தவளை, கேவலமான பார்வை பார்த்தான் சங்கர்.

சங்கர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன், அத்தியாவசிய வசதிகளை தவிர வேற வசதிகளை அனுபவிக்காதவன்... பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற மனநிலை படைத்தவன் . வசதி படைத்த பெண்கள் அதுவும் சென்னையை வசிப்பிடமாக கொண்டுள்ள பெண்கள் ஒழுக்கத்தை கடைப் பிடிக்காதவர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் உடையவன். அதனாலயே நடுத்தர வர்கத்து குடும்பத்து பெண் போல தோற்றம் உடைய பிரியா , பழகி பார்க்கலாமா என்று கேட்கவும் , அவளை கேவலமாக பார்த்து வைத்தான். அமைதியாய் தன்னை பார்ப்பவனை சங்கடத்துடன் பார்த்தவள் ,

“என்ன பதில் சொல்லாம இருக்கீங்க ...” என்க, ஆழ்ந்த மூச்சு விட்ட கௌரி

“உங்களுக்கு என்ன எத்தனை நாள் தெரியும் ... ஒரு ஒன்றரை மாசம் பார்த்திருக்கீங்களா ... என்ன பத்தி என்ன தெரியும்னு பிடிச்சுருக்குனு சொல்றீங்க ...” என்று நக்கல் குரலில் கேட்டவனை பார்த்து மெல்ல சிரித்தவள்,

“ஒருத்தங்களை பிடிச்சு போக வருஷக்கணக்கு தேவையில்ல ... ஒரு நொடி பொழுது போதும் ... அப்படிதான் உங்கள பார்த்தவுடனே பிடிச்சு போச்சு ... உங்களை பத்தி என்ன தெரியும் கேட்டிங்கள , தெரிஞ்சுக்கத்தான் பழகி பார்க்கலாமா கேட்டது ... என்ன சொல்றீங்க பழகி பார்க்கலாமா ...” என்று குறுஞ்சிரிப்புடன் கேட்டவளை உதட்டை பிதுக்கி பார்த்தவன்,

“பழகி பார்த்து பிடிக்கலைன்னா ... விட்டுட்டு போய்டுவீங்களா ...” என்று கேலியாக கேட்கவும் ,

“ம்கூம் ... விட்டுட்டு போகவா பழகி பார்க்க கேட்கிறேன் ... உங்களை பத்தி தெரிஞ்சுக்கவும் உங்களை புரிஞ்சு அதுக்கு ஏத்தமாதிரி என்ன மாத்திக்கவும் தான் கேட்கிறேன் ...” அதே குறுஞ்சிறுப்புடன் பதிலளித்தவளின் உண்மையான நேசத்தை புரிந்துக் கொள்ளாத சங்கர்,

“ம்ம்ம் ...என் அளவுக்கு இல்லைனாலும் பார்க்க சுமாரா இருக்கீங்க ... அழகுலாம் எனக்கு ஒரு மேட்டர் இல்லைங்க ...” என்று நிறுத்தியவனை பார்த்து சத்தம் போட்டு சிரித்தவள் ,

“தேங்க்ஸ் சுமாராவது இருக்கேன் சொன்னதுக்கு ... அழகு முக்கியம் இல்லனா ... அப்போ ...”என்று அவனை போல நிறுத்தியவளிடம் ,

“எனக்கு பொண்ணுங்க மேல இருக்கிற ஆசையை விட பணத்து மேலதாங்க ஆசை ... அதை ஆசைன்னு சொல்றதை விட வெறின்னு கூட சொல்லலாம் ... உங்ககிட்ட சொல்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைங்க ... நான் சென்னைக்கு வந்ததே பணக்கார பொண்ணா பார்த்து லவ் பண்ணி கல்யாணம் செஞ்சு லைப்ல செட்டில் ஆகிறதுக்கு தான் ... லம்போகினி கார் வச்சிருக்க பொண்ணா எதிர் பார்த்துகிட்டு இருக்கேன் ... உங்ககிட்ட அம்பாசிடர் கூட இல்லைன்னு தெரியும் ... கண்டிப்பா நீங்க நான் எதிர் பார்த்த பொண்ணு இல்லைங்க ...” என்றவன் அவள் பதிலுக்கு எதிர் பார்க்காமல் பைக்கை கிளப்பி கொண்டு சென்றுவிட , மனதை மறைக்காமல் தன்னிடம் உண்மையை கூறியவனை கண்கள் மின்ன பார்த்திருந்தாள் பிரியா.

நேற்று நடந்ததை நினைத்து பார்த்தவனை, பிரசன்னாவின் குரல் கலைக்கவும் ,

“என்னடா ...” என்று சலிப்புடன் கேட்டவனை முறைத்து பார்த்த பிரசன்னா ,

“அவ என்ன சொன்னா ... நீ இப்படி பயந்து படுத்துகிறதுக்கு ...” என்றவனை நக்கலாக பார்த்த சங்கர்,

“பயமா ... எனக்கா ... அந்த லூசுக்கு என்ன புடிச்சுருக்கமாம் பழகி பார்க்கலாமா கேட்டுச்சு ... நான் முடியாதுன்னு சொல்லிட்டேன் ...” காலாட்டியபடி கூறியவனை நம்பாமல் பார்த்திருந்தான் பிரசன்னா .

அவனுக்கு தெரிந்த வரை பிரியா அமைதியான அடக்கஒடுக்கமான பெண் , பிரசன்னாவின் கம்பெனியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவள்,
அதனாலயே சங்கர் கூறியதை நம்ப முடியாமல் சந்தேகமாய் பார்க்க ,

“டேய் நீ நம்பறதுக்காக எல்லாம் சத்தியம் அடிச்சு நிருபிக்க முடியாது ... அவளை பார்க்க சங்கடப்பட்டு தான் வரலைன்னு சொன்னேன் ... டென் மினிட்ஸ் வைட் பண்ணு கிளம்பி வரேன் ...” என்றவன் குளியலறைக்குள் நுழைந்து கொள்ள , போகும் அவனையே சந்தேகமாக பார்த்திருந்தான் பிரசன்னா.

வழக்கம் போல பிரசன்னாவை அவன் அலுவலகத்தில் இறக்கிவிட்ட சங்கர் பைக்கை திருப்ப முயல , அவன் முன் எதிர்ப்பட்ட பிரியா, புன்னகையுடன்

“ஹாய் சங்கர் ... உங்க கனவு கூடிய விரைவில் நனவாக வாழ்த்துக்கள் ...” கண்களை சிமிட்டியபடி கூறியவள் மர்மசிரிப்புடன் அங்கிருந்து விலகி செல்ல , அதிர்ந்து போய் பார்த்திருந்தான் பிரசன்னா. சங்கரோ தலையில் அடித்துக் கொண்டே

“சரியான லூசா இருக்கும் போல ...” என்றவனை பார்த்து விதி ‘யாருடா லூசு ... லூசுப்பயலே ... நீதாண்டா லூசு கிடைச்ச வாய்ப்பு நழுவ விட்ட லூசு ...’ என்று சத்தமாக சிரித்தது.

நடுக்கூடத்தில் பாய் விரிக்க பட்டு, அதில் பூவும் பழங்களும் அடங்கிய தட்டுகளை வைத்தபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர் இரு பெண்மணிகள்.

தன்னருகில் அமர்ந்திருந்த அரிசி மண்டி வேலுவுடன் பேசிக் கொண்டிருந்த சேகரின் கண்கள் அவர் அருகில் இருந்த செல்வராஜை எடை போட்டுக் கொண்டிருந்தது.

பிரியாவின் அன்றைய பேச்சு சேகரின் மனதில் பயத்தை விளைவிக்க , செல்வாவை பற்றி விசாரித்து அறிந்துக் கொண்டவர் சற்றும் தாமதிக்காமல் வேலுவிடம் பிரியாவை பெண் பார்க்க வர சொல்லி சம்மதம் தெரிவித்திருந்தார். அந்த பெண்மணிகள் தட்டை அடுக்கியபின் ,

“சேகர் நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ண வர சொல்லுங்க ...” என்று வேலு சேகரிடம் கூறவும் , ஜெயந்தியிடம் பிரியாவை அழைத்து வரும்படி கண் ஜாடை காட்ட , அவளை அழைப்பதற்காக அறைக்குள் சென்ற ஜெயாவிற்கு முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு கடுவன் பூனை போல் உட்கார்ந்திருந்த மகளை பார்த்ததும் பயம் பற்றிக்கொண்டது. பரிதாபமாக காயத்ரியை பார்க்க தன் அன்னையிடம் தான் அழைத்து வருவதாக ஜாடை காட்டிய காயு, பிரியாவின் தாடையை பற்றியபடி,

“என் அழகு குட்டி பிரச்சனை பண்ணாம சமத்தா அம்மா கொடுக்கிற காபியை வந்திருக்கவங்களுக்கு கொடுப்பாங்களாம்...” என்று கொஞ்சவும் , அவள் கையை தட்டிவிட்டு பிரியா கண்கள் சிவக்க , ஆத்திரத்துடன்,

“இப்போ என்ன அவசரம் ... நீ இருக்கும் போது எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாங்க ... அதுவும் அரிசி கடை ... ச்சி ... அவன் பார்த்துட்டு பிடிச்சுருக்கு சொன்னா கூட நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் மீறி ஏற்பாடு பண்ணீங்க கல்யாணத்து அன்னைக்கு மண்டபத்தை விட்டு ஓடிடுவேன் ...” என்று சீரியவளின் கன்னம் வழித்து திருஷ்டி முறித்த காயு ,

“சரி ...” என்று ஒற்றை வார்த்தையோடு முடித்து கொள்ளவும் , அவளை முறைத்துக் கொண்டே வெளியேறினாள் பிரியா. முகத்தில் கோபம் கொப்பளிக்க வெளிய வந்த சின்ன மகளை கண்டு உள்ளுக்குள் கலங்கிய ஜெயா , அவளிடம் காபி தட்டை நீட்டியபடி ,

“முகத்தை கொஞ்சம் சிரிச்சபடி வச்சுக்கோ டா ...” என்றவரை கண்களால் எரித்தவள் ,

“என் மூஞ்சே இப்படித்தான் பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கிட்டும் இல்லனா ஓடி போட்டும் ...” என்றவள் தட்டை அவர் கையிலிருந்து பிடுங்கி , கூடத்தை நோக்கி சென்றாள்.

கூடத்தில் கூட்டத்தை கண்டதும் தலையை குனிந்து கொண்டவளின் உள்ளம் மாப்பிள்ளையின் கரிய தோற்றத்தை கண்டு உலை கொதிப்பது போல கொதித்தது. முகத்தில் எதையும் காட்டாமல் அமைதியாய் அனைவருக்கும் காப்பியை கொடுத்து முடித்தவளை வந்திருந்த பெண்மணிகளில் ஒருவர் அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.

தலை நிமிராமலே தன்னை மாப்பிள்ளை விடாமல் பார்ப்பதை கண்டுக் கொண்டவளின் உள்ளமோ,

‘கருகி போன சட்டி போல இருக்கான் இவனுக்கு நான் வேணுமா ... அரிசி மூட்டை தூக்கிறவனுக்கு அழகான பொண்ணு கேட்குதோ ... நீ மட்டும் பிடிச்சுருக்குனு சொல்லு நான் அசிங்க படுத்துறதுல ஆம்பளையா இருந்தா நான் வேணாம் சொல்லிட்டு ஓடிடுவா ... இல்ல ஓட வைப்பேன் ...’ என்று மனதில் வன்மமாம் நினைத்துக் கொண்டாள்.

அதன் பின் அவர்கள் பேசியதை எதையும் காதில் வாங்கி கொள்ளாதவள், மனதில் ‘இந்த சம்பந்தம் முடிய கூடாது’ என்று உருபோட்டுக் கொண்டிருக்க , தன் தலையில் அழுத்தத்தை உணர்ந்து தலை நிமிர்ந்து பார்த்தவளின் கன்னத்தை வழித்து நெட்டி முறித்த பெண்மணி ,

“அம்மாடி ... இப்போ பூ வச்சு கல்யாணத்தை உறுதி பண்ணியாச்சு ... உங்க அக்கா கல்யாணம் முடிஞ்ச உடனே நம்ம வீட்டு கல்யாணத்தை வச்சுக்கலாம் ... உன் மூலமாத்தான் நம்ம வீட்டுக்கு நிறமா புள்ளை பிறக்க போகுது ...” என்று வெள்ளந்தியாய் பேசியவரை அதிர்ந்து போய் பார்த்தவளின் கைகள் அனிச்சம் செயல் போல உயர்ந்து தலையை வருட , துருத்திக் கொண்டிருந்த பூச்சரம் கையில் படவும் இதோ இதோ என்று கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க , அதை கண்டுக் கொண்ட ஜெயந்தி பதறியவராக அவள் அருகில் சென்று,


“வாடா சாமி படத்துகிட்ட விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம் ...” என்றவர் அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தவளின் கரத்தை பற்றி உள்ளே அழைத்து சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற காயத்ரியும் தங்கையின் மனநிலையை மாற்றும் பொருட்டு பேச்சு கொடுக்க முயல , யாரையும் பார்க்க பிடிக்காதவளாக கண்ணை மூடிக் கொண்டு நாற்காலியில் உட்கார்ந்துக் கொண்டாள் பிரியா.

மேலும் சில நிமிடங்கள் கழிந்த பின் இரு பெண்மணிகளும் அவளிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப , செல்வாவிற்கு பிரியாவிடம் பேசவேண்டும் என்று ஆசை பிறக்கவும் மெல்ல சேகரிடம் ,

“மாமா நாம் பிரியாகிட்ட சொல்லிட்டு கிளம்பலாமா ...” என்று தன்மையாய் கேட்கவும் , அவனின் பணிவில் உருகிவிட்ட சேகர் ,

“இதுல என்ன இருக்கு மாப்பிள்ளை ... இருங்க வர சொல்றேன் ...” என்றவர் ஜெயாவிடம் விஷயத்தை சொல்ல , பிரியாவின் நிலைமை புரியாமல் இது என்ன ஆசை என்று நொந்துக் கொண்டவர் மெல்ல அவளிடம் விஷயத்தை கூறவும், எந்தவித பிகு பண்ணாமல் அமைதியாய் தோட்டத்தில் போய் நின்றவளை கண்டு ஜெயாவிற்கு ஹார்ட் அட்டாக்கே வர பார்த்தது.

தோட்டத்தில் கிணற்றுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்தவளை கண்டு செல்வாவின் நெஞ்சம் இவள் என்னவள் என்று பெருமையில் விம்மியது. கண்கள் மின்ன முகம் மகிழ்ச்சியில் பிரகாசமாய் ஒளிர கருப்பாய் இருந்தாலும் களையாய் இருப்பவனின் முகம் இன்று மேலும் அழகுடன் ஜொலிக்க , வேகமாக அவளை நெருங்கியவன்,

“பிரியா...” என்று ஆசையுடன் அழைக்கவும் அதுவரை கிணற்றின் புறம் நின்றிருந்தவள் மெல்ல அவனை நோக்கி திரும்பியவளின் தலை குனிந்தே இருந்தது. மேலும் அவளை நெருங்கிய செல்வா ,

“உங்களை ...” என்று ஆரம்பித்தவன், பின்

“உன்ன கடைத்தெருவுல நிறைய தடவை பார்த்து சைட் அடிச்சுருக்கேன் ... அப்போலமாம் நீதான் என் பொண்டாட்டியா வர போறேன்னு தெரியாது ...” என்று மெல்ல சிரித்தவன் அவள் பதிலுக்காக காத்திருக்க , குனிந்த தலையை நிமிராமல் நின்றிருந்தவளை கண்டு சிறு நெருடல் எழுந்தாலும் அவள் மீது கொண்டிருந்த ஆசையால் அதை உதறி தள்ளியவன் ,

“அது ... இன்னும் மூணு மாசத்துல எப்படியும் கல்யாணம் நடந்துடும் ... பூ வச்சதால இப்பவே நீ பாதி பொண்டாட்டி போல ... அதான் என் பொண்டாட்டிக்கு ஆசையாய் ஒன்னு வாங்கிட்டு வந்துருக்கேன் ... கொஞ்சம் உன் கையை நீட்டேன் ...” என்று ஆசை பொங்க பேசியவனின் மண்டையை உடைக்கும் வெறி எழ கையை நீட்டாமல் அமைதியாக நின்றவளை சில நொடிகள் பொறுமையாக பார்த்தவன் பின் , தானே அவள் கையை பற்றி மோதிர விரலில் வைர மோதிரத்தை மாட்டிவிட்டவன் ,

“பிடிச்சிருக்கா பாரு பிரியா ...” என்று அவள் முகத்தை ஆசையுடன் பார்த்தபடி கூற , அவன் அறியாமல் அந்த மோதிரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விரலின் நுனியில் கொண்டு வந்தவள் மெல்ல தன் கரத்தை உயர்த்தி ஒருகட்டத்தில் தன்னை நோக்கி வேகமாக கரத்தை உயர்த்த , லூஸாகியிருந்த மோதிரம் விரலில் இருந்து பறந்து சென்று கிணத்தில் விழுந்தது.

மோதிரம் கிணற்றில் விழவும் போலியாக பதறி அவன் முகம் காண , கருமையான அவன் முகம் மேலும் கருத்து சிறுத்து போனது ,ஆசையாய் கொடுத்த மோதிரம் கண் முன்னே எடுக்க முடியாத இடத்திற்கு போகவும் உள்ளுக்குள் துடித்து போனான் செல்வா . இருந்தும் துக்கத்தை முழுங்கியபடி அவளை பார்த்து வலுக்கட்டாயமாக சிரித்தவன் ,

“பரவாயில்ல ... வேற வாங்கிக்கலாம் ... நீ பீல் பண்ணாத ...” என்றவனுக்கு கண் கலங்க தலையசைத்தாள் பிரியா.

“சரி நான் கிளம்புறேன் ... வெளில எல்லாரும் வைட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க ...” என்றவன் தளர்ந்து நடையுடன் வாசலுக்கு செல்லவும் ஒருவித குரூர சிரிப்புடன் அவன் செல்வதை பார்த்திருந்தாள் பிரியா.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
25874

கௌரி - 4b

வழக்கம் போல பிரசன்னாவை அவன் அலுவலகத்தில் இறக்கி விட்ட சங்கரிடம் ,

“என்னடா அதிசயமா இருக்கு எங்க பாஸ் வந்திருக்காரு ... எதாவது புது ப்ராஜெக்ட் கிடைச்சுருக்கா...” என்று பிரசன்னா அதிசயப்பட , அவனை கேள்வியாய் பார்த்த சங்கருக்கு ,சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரேஞ்ரோவர் காரை கண்களால் காட்டினான் பிரசன்னா. அதை வாய் பிளந்து பார்த்திருந்த சங்கர்,

“டேய் ரேஞ்ரோவர் கார் வச்சுக்கிற அளவுக்கு உங்க பாஸ் பெரிய ஆளாடா ...” என்று அதிசயப்பட,அவனை மேலும் கீழும் பார்த்த பிரசன்னா ,

“என்ன கேட்ட ... நீ நின்னுகிட்டு இருக்கிற இந்த 12 மாடி கட்டிடம் எங்க சொந்த பில்டிங் ... இது மட்டும் இல்ல எஸ்.பி குரூப்ஸ் பத்தி கேள்வி பட்டுருக்கியா ... அதோட ஓனர் டா அவரு , அவருக்கு ரேஞ்ரோவர்லாம் மேட்டரே இல்ல ...” என்றவனின் முகம் திடீரென்று பிரகாசம் அடைய கிசுகிசு குரலில் சங்கரிடம்

“டேய் டக்குன்னு திரும்பி பார்க்காத ... அங்க பேசிகிட்டு இருக்கவங்கள ப்ளூ ஷர்ட் போட்டுக்கிட்டு இருக்கார் பாரு ... அவர்தான் எங்க பாஸ் ...” என்க, மெல்ல திரும்பி பார்த்தவன் அங்கே நின்றிருந்தவரை கண்டு திகைத்து போய் பார்த்தவன், பின் நம்பாமல்

“என்னடா சொல்ற ... அந்தாளா உங்க பாஸு...” தன் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் கேட்டவனை திரும்பி ஒரு பார்வை பார்த்த பிரசன்னாவிடம் ,

“அதில்ல டா ... பாக்கிறதுக்கு செந்திலோட தம்பி போல இருக்காரு இவரா அவ்வளவு சொத்துக்கு சொந்தக்காரரு ...” அவர் உருவத்தை வைத்து மதிப்பிட்ட சங்கரை அற்ப பதர் போல பார்த்த பிரசன்ன ,

“ஆளை பார்த்து எட போடாதடா ... அவ்வளவும் மூளை ...” என்றவன் கட்டிடத்துக்குள் நுழைய போக ,

“டேய் மச்சான் ... அவருக்கு பசங்க எத்தனை பேரு ... குறிப்பா பொண்ணுங்க எத்தனை பேருன்னு தெரியுமா...” சிறு வழிசலோடு கேட்ட சங்கரை , எரிச்சலோடு பார்த்தவன்

“எனக்கு அந்த டீடெயில்ஸ் எல்லாம் தெரியாது ... எனக்கு டைம் ஆகிடுச்சு ஆளைவிடு” என்று நழுவ பார்த்த பிரசன்னாவை , தாஜா பண்ணி

“டேய் டேய் ப்ளீஸ் ட ... அந்த டீடெயில்ஸ் மட்டும் கலெக்ட் பண்ணி கொடுடா ...” என்று கெஞ்சியவனுக்கு, வேண்டா வெறுப்பாக சம்மதம் தெரிவித்தான் பிரசன்னா.

அங்கே பிரியாவோ சென்னை செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, அதற்கு முட்டுக்கட்டை போட்ட ஜெயந்தியை பேசியே ஒரு வழி பண்ணிவிட்டாள்.

“இந்த ஆசைய கூட நிறைவேத்த மாட்டிங்களா ... கல்யாணம் தான் உங்க விருப்ப படி நடக்க போகுதுல்ல ... ஒரு மாசம் என் இஷ்டத்துக்கு சென்னைல இருந்து சுத்தி பார்த்துட்டு வர கூட எனக்கு உரிமையில்லையா ... உங்களுக்கு பொண்ணா பொறந்த பாவத்துக்கு ஒரு சந்தோஷமும் அனுபவிக்கமாலே போக போறேன்... ” என்று மூக்கை சிந்தியவளை , பரிதாபமாக பார்த்த ஜெயா

“பூ வச்சாச்சு டி ... இப்போ போய் எப்படி வெளிய அனுப்புறது ...” என்று கையை பிசைந்தவரை கண்டு ஒரு ஆட்டம் ஆடிய பிரியாவை சமாதானம் படுத்தினாள் காயத்ரி . பின் தன் தந்தையிடம் போராடி சென்னை செல்வதற்கு அனுமதியும் வாங்கி கொடுக்க, இந்த ஒரு மாதத்தில் தான் நினைத்ததை எப்பேர் பட்டாவது சாதித்து விட வேண்டும் என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டாள்.
வழக்கம் போல பணக்காரர்கள் கூடும் இடங்களில் சுற்றி திரிந்த சங்கருக்கு, அங்கே பார்த்த சில பெண்களில் முன் அவன் ஜம்பம் எடுபடாமல் போக ,ஏமாற்றத்துடன் பிரசன்னாவை அழைத்து வர சென்றான். எப்பொழுதும் பிரகாசமாய் காட்சியளிக்கும் பிரசன்னாவின் முகம் இன்று யோசனையில் சுருங்கியிருக்கவும் ,

“என்னடா பலத்த யோசனைல இருக்க போல ... வா வா சீக்கிரம் வண்டில ஏறு ... இன்னைக்கு அம்பா மால் போகலாம்னு இருக்கேன் ...” என்ற சங்கரை சில நொடிகள் வெறித்துப் பார்த்த பிரசன்னா ,பின்

“டேய் மச்சான் உனக்கு ஒரு குட் நியூஸ் வச்சுருக்கேன் ... அதுக்கு முன்னாடி நீ கேட்ட டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன் ... வா அங்க உட்கார்ந்து பேசுவோம்...” என்று ஓர் இடத்தை சுட்டிக்காட்டி கண் சிமிட்டினான். அவன் காட்டிய இடத்தில் உட்கார்ந்த பின்

“முதல்ல அந்த டீடெயில்ஸ சொல்லு ,அதுக்கு அப்புறம் அந்த குட் நியூஸ கேட்டுக்கிறேன் ...” என்று அவசரப்படுத்தியவனை கண்டு மெல்ல சிரித்த பிரசன்னா,

“டேய் நீ எதிர்பார்த்தப்படி எங்க பாசுக்கு பொண்ணு மட்டும்தான் இருக்கு ... அதுவும் ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணுனு ஒத்த பொண்ண பெத்து வச்சிருக்காரு ... பூரா சொத்தும் அந்த பொண்ண கட்டிக்க போறவன்தான் அனுபவிக்க போறான் ... ம்ம்ம் நமக்கு அந்த கொடுப்பினை இல்லடா ...” என்று ஏக்க பெருமூச்சை விட்டவனை கண்டுக் கொள்ளாமல் , மும்முரமாய் போனை நோண்டிக் கொண்டிருந்தான் சங்கர்.

“என்னடா மச்சான் ... அந்த ஆளோட பேமிலி போட்டோ ஒன்னு கூட கூகிள்ல இல்ல ... அந்தளவுக்கு கேவலமா இருக்குமோ அந்த குடும்பம் ...” என்று வருத்தப்பட்டவன் மும்முரமாய் கூகிளில் பிரசன்னாவின் முதலாளி சந்தனபாண்டியனின் குடும்ப படத்தை பல கோணத்தில் தேடிக் கொண்டிருந்தான்.

“தேடி பார்த்து மட்டும் என்ன பண்ண போற ... அது ரொம்ப பெரிய இடம் சென்னைல ஒரு மாலு ,கல்யாண மண்டபம் நிறைய அப்பார்ட்மெண்ட்ஸ் இப்படி ஏகப்பட்ட வசதி இருக்கு ... அந்த பொண்ணு நம்மளை திரும்பி கூட பார்க்காது ...” என்று சலித்துக் கொண்ட பிரசன்னாவை நக்கலாக பார்த்தவன் ,

“டேய் தம்பி நம்பளைன்னு சொல்லாத ... உன்னனு சொல்லு ... நானும் வந்ததிலிருந்து பல பொண்ணுகளை பார்த்துட்டேன் ஒருத்தியும் திரும்பி பார்க்கல ... ஏன்னா அவளுக எல்லாம் வசதில மட்டுமில்ல அழகிலும் நாம எல்லாம் தொட முடியாத இடத்துல இருந்தாங்க ... ஆனா இந்தாள பார்த்தா இவன் பொண்ணும் இவனை போல கேவலமாதான் இருக்கும் தோணுது ... பாரு சோசியல் மீடியால ஒரு போட்டோ கூட இல்ல ... கண்டிப்பா மிஸ்டர் சந்தனபாண்டியனின் ஜெராக்ஸ் காபியாதான் இருக்கும்ன்னு என் உள் மனசு சொல்லுது ... அதான் வெளில மூஞ்ச காட்ட அசிங்க பட்டுக்கிட்டு ஒரு போட்டோ கூட போடலை ... அத மடக்கி கல்யாணம் பண்றது ஒன்னும் கஷ்டமான விஷயமா இருக்காதுன்னு தோணுது ... நீ அந்த பொண்ண பத்தின டீடெயில்ஸ் மட்டும் கலெக்ட் பண்ணி கொடுடா ...மத்தத நான் பார்த்துகிறேன் ...” என்று கண்கள் மின்ன பேசியவனை அதிர்ச்சியுடன் பார்த்த பிரசன்னா ,

“டேய் நீ சொல்றத கேட்கவே கேவலமா இருக்கு ... உன் மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்க இவ்வளவு வசதியா இருக்கிற பொண்ணு நீ பல்ல காட்டினா உன் பின்னாடியே வரும்ன்னு நினைப்பா ... பொண்ணுங்கள பத்தின உன்னோட அபிப்பிராயம் எனக்கு பிடிக்கலைடா ...” என்று கோபப்பட்ட தன் நண்பனை கண்டு நக்கலாக சிரித்த சங்கர் ,

“உன் தங்கச்சிய தப்பா பேசுனத போல நீ ஏண்டா கோப படுற ... டேய் இந்த உலகத்துலயே ஈஸியா செய்ய கூடிய விஷயம் என்னனு தெரியுமா இந்த பொண்ணுங்களை மடக்கறது தான் ... அதனால தான் நியூஸ் பேப்பரை திறந்தாலே இவ ஏமாந்துட்டா ,அவன் ஏமாத்திட்டான்னு வயித்தை தள்ளிக்கிட்டு நிக்கிற நியூசா இருக்கு ... சில டெக்னிக் இருக்குடா மச்சான் ... எப்பவும் பொண்ணுங்க பின்னாடி நாய் மாதிரி சுத்த கூடாது , மீறி சுத்துன வச்சுக்கோ ஒருத்தியும் திரும்பி கூட பார்க்க மாட்டாங்க ... இதுவே கண்டுக்காத போல இருந்தா நம்மளை சுத்திதான் அவங்க புல் போகஸும் ... அந்த பிரியா பொண்ணு போல ...” என்று தலைசாய்த்து சிரித்தவன், பின்

“அப்புறம் நம்ப ஆளு உள்ளூர் கிழவியா இருந்தாலும் பாக்கிற நேரம் எல்லாம் உன் கண்ணுக்கு உலக அழகியா தெரியற ரேஞ்சுக்கு பேசணும் ... நடு நடுவே செல்லம் புஜ்ஜு ... அப்புறம் தட்டுற இடத்துல லைட்டா தட்டுனா போதும் உன் காலடில கிடப்பாங்க டா ...” என்று கண்ணை சிமிட்டியவன் ,

“நீ வேணா பாரு உன்னோட சுமார் மூஞ்சு பாஸோட சுமார் மூஞ்சு சுந்தரி பொண்ண எப்படி கரெக்ட் பண்ணி காட்டுறேன்னு ...” கர்வமாய் பேசியவனை புழுவை பார்ப்பதை போல பார்த்த பிரசன்னா அங்கிருக்க பிடிக்காததை போல எழுந்துக் கொள்ளவும் , “உல்லாசம் உலகம் உனக்கே சொந்தம்” என்ற பாட்டை விசிலடித்தபடி அவனை தொடர்ந்து சென்றான் சங்கர்.

சங்கர் பேசிய அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் அவனுக்கு பின்புறமாக தன் தோழிகளுடன் உட்கார்ந்திருந்த பிரியா. சங்கரும் பிரசன்னாவும் தாங்கள் அமர்ந்திருந்த இடத்தின் அருகில் வரவும் என்ன பேச போகிறார்கள் என்று ஆர்வத்துடன் காத்திருந்தவளுக்கு சந்தனபாண்டியனை பற்றியும் தன்னை பற்றியும் சங்கர் கேவலமாக பேச பேச கண்கள் சிவந்து இறுகி போய் உட்கார்ந்திருந்தவளுக்கு தன் காலில் இருப்பதை கழட்டி அவனை விளாச வேண்டும் என்ற வெறியே எழுந்தது.

‘பெண்களை பற்றி எவ்வளவு கீழ் தரமான எண்ணம் ... இவனை போய்...’ என்று உள்ளுக்குள் மருகிப் போனாள் சந்தனபாண்டியனின் ஒரே மகள் சண்முகபிரியா. என்ன முயன்றும் ஏமாற்றத்தாலும் ஆத்திரத்தாலும் அவளை மீறி கண்களில் இருந்து விடாமல் கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்தது.
 
Last edited:

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26045

கௌரி - 5a

“சாரி டு சே திஸ் பிரியா ... அந்த ராஸ்கல் சொன்னது போல பொண்ணுங்க ஈஸியா மடியுறவங்க போலத்தான் தோணுது ... இல்லனா பாரின்ல போய் பிசினஸ் அட்மினிஸ்டரேட்டிவ் படிச்சுட்டு வந்த நீ இவனை போல ஒருத்தவனை போய் பிடிச்சுருக்குனு சொல்லுவியா ... ச்சை என்ன ஒரு கேவலமான புத்தி எவ்வளவு அற்ப ஜந்துவா நம்மளை நினைச்சுகிட்டு இருக்கான் ... தப்பு பண்ணிட்ட பிரியா அந்த பொறுக்கி பேசிகிட்டு இருக்கும் போதே அவனை செருப்பால அடிச்சுருக்குனும் ... ச்சை எனக்கு வர ஆத்திரத்துக்கு ...” என்று தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்த தெரியாமல் வாயில் தன் உள்ளங்கையை கடித்து கோபத்தை அடக்கி கொண்டாள் பிரியாவின் தோழி செரின்.

“பிரியா அவனை கண்டிப்பா எதாவது பண்ணியே ஆகணும் டி ... என் ரத்தம் எல்லாம் கொதிக்குது ... டூ சம்திங் ...” என்றாள் மற்றொரு தோழி ப்ரீத்தி.

அவர்கள் பேசுவதை கண்கள் சிவக்க கேட்டுக் கொண்டிருந்த பிரியா, லண்டனில் மேற்படிப்பை முடித்துக் கொண்டு இரெண்டு மாதங்களுக்கு முன் தான் சென்னை வந்திருந்தாள். பல தொழில்கள் அடங்கிய குழுமம் தான் எஸ்.பி குரூப்ஸ் , பிரசன்னா வேலை பார்க்கும் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் பல தில்லுமுல்லு வேலைகள் நடை பெறுவதால் , அதை பற்றி தெரிந்துக் கொள்வதற்காக தன் அடையாளத்தை மறைத்து வேலையில் சேர்ந்தவளின் பார்வையில் விழுந்தான் சங்கர்.

பார்த்த முதல் பார்வையிலையே அவனிடம் ஈர்கப்பட , தன் மனதை மறையாமல் அவனிடம் வெளிப்படுத்தியவளை தன் இலட்சியத்தை கூறி நிராகரித்தவனை கண்டு உள்ளுக்குள் மகிழ்ந்துப் போனவள் இன்று எப்படியும் தன் தந்தையை அவனிடம் பேச வைத்துவிட வேண்டும் என்று நினைத்தவளின் சந்தோஷத்தில் மண்ணை அள்ளிப் போட்டது மட்டுமில்லாமல் அவள் வெறுப்பையும் சம்பாரித்துக் கொண்டான் சங்கர்.

அந்நேரம் சண்முகபிரியாவின் தோழி ரோஹினியின் அலைப்பேசி விடாமல் அடிக்கவும் , அதை எடுக்காமல் தன் தோழிக்கு ஆறுதல் கூறியவளை கண்டு கடுப்பான பிரியா ,

“மப்ச் ... அத அட்டென்ட் பண்ணிதான் தொலையேன் டி ...” என்று எரிந்து விழ ,

“வேணாம் டி ... சரியான அலஞ்சான் கேசு டி அது ... இப்போ பொண்ணுகளை கேவல படுத்திட்டு போனானே அவனோட லேடி வெர்சன் தான் இவ ... பணக்கார பையனா பார்த்து கல்யாணம் பண்ணி லைப்ல செட்டில் ஆகணும் குறிக்கோளோடு சுத்திகிட்டு இருக்கிறவ ... இதுக்கே கல்யாண் பிக்ஸ் ஆகிடுச்சு இருந்தும் சென்னைக்கு வரனும் ஒத்தக்கால்ல நிக்கிறா... சரியான இம்சை அவனுக்கு ஏத்த ஜோடி இவதாண்டி ...இன்னொன்னு உன் பேருதான் அவளுக்கு “என்று அலுத்துக் கொண்டவளை கூர்ந்து பார்த்த சண்முகபிரியா சில நொடிகள் எதையோ யோசித்து தலையை ஆட்டிக் கொண்டவள் , பின்

“கால் அட்டென்ட் பண்ணி அவள இங்க வர சொல்லு...இவள வச்சுதான் அந்த ராஸ்கலுக்கு பாடம் புகட்டனும்...” என்று அழுத்தமாய் பேசியவளை சலிப்புடன் பார்த்த ரோஹி ,

“வேணாம் வேணாம் ... அவ என் கூட ஸ்டே பண்ண கேட்டுத்தான் கால் பண்றா ...என்னால அவளுக்கு செலவு பண்ணிக்கிட்டு மாமி வேலை பார்த்துகிட்டு இருக்க முடியாது ... ஆளை விடு சாமி...” என்று எழ போனவளை

“ரோஹி டு வாட் ஐ சே ...” அதிகாரமாய் பிரியா ஆணையிட ,புருவம் சுருக்கி பார்த்தவள்,

“ஹேய் ... என்ன ஆர்டர்லாம் போடுற ... என்னால முடியாது ... பிரண்ட் ஆச்சே பீல் பண்றியேன்னு ஆறுதல் சொன்னா ... டூ மச்சா போற...” கோபத்துடன் பேசியவள் திரும்பி நடக்க

“உனக்கு இந்த வேலைல பெர்மனெண்டா இருக்கணும்னு நினைச்சா அந்த பொண்ண இங்க வர சொல்லு...” மிரட்டும் தோரணையில் பேசிய பிரியாவை கேலியாக பார்த்த ரோஹி ,

“அட மிரட்டல் பலமா இருக்கு ... இது என்ன உங்கப்பன் வீட்டு கம்பெனியா , நீ சொன்ன உடனே வேலையை விட்டு தூக்கிறதுக்கு ...” என்று நக்கலடித்தவளை அழுத்தமாக பார்த்த பிரியா பின் நிதானமாக,

“ஆமா ... நீ சொன்னாலும் சொல்லலைனாலும் இது எங்கப்பன் வீட்டு கம்பெனி தான் ... வேணும்னா மிஸ்டர் சந்தனப்பாண்டிக்கு போன் போட்டு தரவா ...” என்றவள் தன் தந்தைக்கு அழைத்து ஸ்பீக்கரில் போட்டு பேசவும், அவளுடைய தோழிகள் அனைவரும் திகைத்து போய் பார்த்திருந்தனர்.

தங்களை போல ஒருத்தி என்று நினைத்து இருந்தவர்களுக்கு அவள் தான் எஸ்.பி குரூப்ஸ்சின் ஒட்டுமொத்த வாரிசு என்ற உண்மை தெரியவும், அவர்களிடம் இதுவரை இருந்துவந்த இலகு தன்மை மறைந்து ஒருவித அசவுகரியம் தோன்றியது. அவர்களை சலிப்புடன் பார்த்த பிரியா

“மப்ச் ... இப்போ ஏன் என்ன ஏதோ ஏலியன பாக்கிற மாதிரி பாக்கிறீங்க ...நான் எப்பவும் உங்க ப்ரெண்ட் பிரியாதான் ... அப்புறம் முக்கியமான விஷயம் நான் தான் எம் டி பொண்ணுன்னு யார்கிட்டயும் சொல்லிடாதீங்க ...” என்றவள் அவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவர சிறிது நேரம் பேசினாள். பின் மெல்ல ரோஹியிடம்

“ரோஹி ப்ளீஸ் எனக்காக இத பண்ண மாட்டியா ...” என்று பாவம்போல கேட்க சங்கடத்தில் நெளிந்தவள்

“இல்ல பிரியா அவ வசதியான வாழ்க்கை வேணும்னு ஆசைப்படுவாதான் பட் கெட்ட பொண்ணு கிடையாது ... அவளை போய்ஈஈஈ...” என்று இழுத்த ரோஹியின் கரத்தை பற்றிய பிரியா ,

“இங்க பாரு ... என்ன நம்புறத்தானே , நான் அந்த பொண்ணுக்கு எந்த கெடுதலும் பண்ணலை ... ஜஸ்ட் கொஞ்ச நாளைக்கு நான் இருக்க வேண்டிய இடத்துல என்ன போல நடிச்சா போதும் ... கூடவே அவ நினைச்சு பார்க்க முடியாத வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாம் ... வேணும்னா அவளுக்கு மாச சம்பளம் கூட கொடுத்துடலாம் ரோஹி ... ஜஸ்ட் அந்த பொறுக்கி அவதான் எஸ். பி குரூப்ஸ் வாரிசுன்னு நினைச்சு ஏமாறனும்... இனி ஜென்மத்துக்கு அடுத்தவன் பணத்துல வசதியா வாழனும் நினைக்க முடியாத அளவுக்கு அடிபடனும் ...” என்று கண்களில் ஒருவித வெறியுடன் கூறியவளுக்கு சம்மதம் தெரிவித்த ரோஹி , அடுத்து பிரியாவை அழைத்திருந்தாள்.

சென்னை செல்லும் பேருந்திற்காக காத்திருந்த பிரியாவிடம் வாட்டர் பாட்டிலை நீட்டிய செல்வா ,

“பத்திரமா போயிடுவதானமா... வேணும்னா நம்ம கார்ல வந்து விட்டுட்டு வரவா...” என்று பத்தாவது முறையாக அக்கறையுடன் கேட்டவனை கண்டு எரிச்சல் அடைந்தவள்,

“எத்தன தடவ சொல்றது அம்மான்னு கூப்டு பேசாதீங்கன்னு ... என்ன பார்த்தா அவ்வளவு வயசானவளா தெரியுதா ...” என்று எரிந்து விழவும் , முகம் சுண்டிப்போக

“அது பாசத்துல கூப்பிடுறது ... உன்ன ரொம்ப பிடிக்கும் அதான் ...” என்று தயங்கி நிறுத்தியவனை முறைத்து பார்த்தவள் ,

“எனக்கு பிடிக்கல...” பட்டு கத்தரித்ததை போல பதில் கூற ,

“சரிம்மா ...சாரி ... சாரி ...இனி அப்படி கூப்பிடல ...இப்போ சொல்லு நம்ம கார்ல ட்ராப் பண்ணவா ” என்றவனை மீண்டு முறைத்த பிரியா ,

“என்னமோ ஆடி கார் வச்சுக்கிறத போல கார்லா கொண்டு போய் விடவா ... கார்லா கொண்டு போய் விடவான்னு கேட்டுகிட்டு இருக்கீங்க ... இந்த ஓட்ட அம்பாசிடர்ல போனா நடந்து போறவன் கூட மூஞ்சுல துப்பிட்டு போவான் ... என்ன அசிங்கப்படுத்த தான் கார்ல போலாம் கார்ல போலாம் ஏலம் விட்டுகிட்டு இருக்கீங்களா ...” மேலும் வார்த்தையால் செல்வாவை அசிங்கப்படுத்த , முகம் கறுக்க பார்த்தவன் , பின்

“வேணும்னா ...” என்று தொடங்கியவனை மதிக்காமல் சென்னை செல்லும் பேருந்து வரவும், அதில் ஏறிக்கொண்டு ஜன்னல் இருக்கையாய் பார்த்து உட்கார்ந்துக் கொண்டவளை பரிதவிப்புடன் பார்த்திருந்தான் செல்வா. அவள் அமர்ந்திருந்த பக்கம் சென்றவன் குரலை செருமி ,

“ஏன் பிரியா என்கிட்ட ஒழுங்கா பேசமாட்டுற ... என்ன ...என்ன ... பிடிக்கலையா...” என்று தயங்கி தயங்கி பேசியவனை அழுத்தமாக பார்த்த பிரியா ,

“நான் அப்படிதான் ...எனக்கு பேச தோணுனாதான் பேசுவேன் ... சும்மா மத்தவங்களுக்காக போலியா பேசவராது ...” என்று முகத்தில் அடித்ததை போல பேசியவள் பின்

“பிடிக்கலைனு சொன்ன கல்யாணத்தை நிறுத்திடுவீங்களா ... முடியாதுல ... இனிமே வழிஞ்சு வழிஞ்சு பேசாதீங்க ... இப்படி அசட்டு தனமா இருக்கிற ஆம்பளைங்களை எனக்கு பிடிக்காது ...” வார்த்தை என்ற ஆயுதம் கொண்டு செல்வாவை காயப்படுத்தியவளின் பேருந்து சென்னையை நோக்கி பயணிக்க தொடங்கியது .

கண்ணிலிருந்து பேருந்து மறையும் வரை அதை வெறித்து பார்த்த செல்வாவிற்கு ஒருமுறையாவது அவள் தன்னை திரும்பி பார்ப்பாள் என்ற நம்பிக்கையில் மண்ணை அள்ளிப் போட்டாள் பிரியா. அவள் உதாசீனத்தால் துடித்து போக தன்னைமீறி கன்னம் நனைத்த கண்ணீரை புறங்கையால் துடைத்தவனின் மனமோ சற்று முன்பு பிரியா கூறிய , ‘பிடிக்கலைன்னா கல்யாணத்த நிறுத்திடுவீங்களா’ என்பதிலயே உழன்று கொண்டிருந்தது. பின் மெல்ல தெளிந்தவன்,

“எனக்கு புரியுது பிரியா உனக்கு என்ன கட்டிக்க இஷ்டம் இல்லைன்னு ... கல்யாணத்துக்கு அப்புறம் கண்டிப்பா உன்ன என் அன்பால மாத்திடுவேன்... அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு...” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் சேகரை அழைத்து பிரியாவை பத்திரமாக பஸ் ஏற்றிவிட்டதை தெரிவித்தவனின் முகத்தில் பிரியாவை நினைத்து குறுநகை அரும்பியது.

வீட்டில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சேகர் செல்வா கூறியதை ஜெயந்தியிடம் கூறி பின் தனக்குள் சிரித்துக் கொள்ளவும் , என்னவென்று பார்த்த தன் மனைவியிடம் ,

“செல்வாவ நினைச்சுதான் சிரிப்பு வந்துச்சு ஜெயா ... நம்ம சின்ன குட்டி மேல கொள்ள பிரியம் வச்சிருக்காரு ... பிரியாவை பஸ் ஏத்திவிடுறேன் என்கிட்ட கேட்டப்போ ... அது சரிவராதுனு சொல்லிட்டேன் ... எப்பா என்னமா பேசி சம்மதிக்க வச்சுட்டாரு ... நமக்கு மகன் இல்லாதா குறையை போக்க கடவுள் கொடுத்த வரம்தான் செல்வா...” என்று கண்கலங்க பூரிப்புடன் கூறியவரை மனதில் எழுந்த கவலையுடன் பார்த்திருந்தார் ஜெயந்தி .

அவருக்குத்தான் தன் சின்ன மகளை பற்றியும் அவளின் ஆசைகளை பற்றியும் அறிந்தவராயிற்றே, எவ்வளவு முயன்றும் பிரியாவின் சென்னை பயணத்தை அவரால் தடுக்க முடியாமல் போகவும் , உள்ளே எழுந்த இனம் புரியாத பயத்தால் சட்ரென்று அங்கிருந்து எழுந்தவர் பூஜை அறைக்குள் புகுந்து கடவுளிடம் தன் பாரத்தை இறக்கி வைத்துக் கொண்டிருந்தார்.

பேருந்தில் பயணத்துக் கொண்டிருந்த பிரியாவிற்கு , இந்த சென்னை பயணம் தனக்கு கடவுள் அளித்த ஒரு வாய்ப்பாக கருதியவள் எதையாவது செய்து செல்வாவுடன் ஆன திருமணத்தை நிறுத்தியே ஆகவேண்டும் என்று முடிவெடுத்தவளுக்கு, செல்வாவை சுத்தமாக பிடிக்கவில்லை. தன் அழகின் மேல் அதீத கர்வம் கொண்ட பிரியாவிற்கு அவனின் கரிய தோற்றமும் கனிவான பேச்சும் அவனை தாழ்த்தி காட்ட , ‘உனக்கு நானா’ என்ற எண்ணம் ஓங்க ,அவன் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டாள்.

அன்று பரபரப்புடன் கிளம்பிக் கொண்டிருந்தான் சங்கர். மூன்றாம் முறையாக சட்டையை மாற்றி போட்டவனை கண்டு கடுப்பான பிரசன்னா

“டேய் இப்போ கிளம்பி வரியா ... இல்ல வண்டியை எடுத்துக்கிட்டு போகட்டுமா...” என்று சத்தம் போடவும் , தான் போட்டுக் கொண்டிருந்த சட்டையை இன் பண்ணியபடி ,

“ஏண்டா அழகா இருக்கேன்னு வயிறு எரியுதா ... இன்னைக்கு உங்க எம். டி பொண்ணு வருதுன்னு சொன்னல ... அது கண்ணுல படும்போது நீட்டா அழகா இருக்குணும்ல...” உற்சாகத்துடன் கூறியவன் பிரசன்னாவை அழைத்துக் கொண்டு அவன் அலுவலகத்திற்கு சென்றான்.

வழக்கம் போல தன் நண்பனை இறக்கிவிட்ட சங்கர் , வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பாமல் ஆர்வத்துடன் தன் கண்களை சுழல விட சிரித்த முகத்துடன் “ஹாய் சங்கர்” என்றபடி அவனை கடந்து சென்றாள் சண்முகபிரியா. எப்பவும் போல அவளை அலட்சியம் செய்தவனின் பார்வைக்கு அந்த பிரமாண்ட கட்டிடத்திற்குள் நுழைந்த லம்பார்கினியை கண்டு அதன் அழகில் மெய்மறந்து நின்றிருக்க , அதை அருகில் நின்றிருந்த பிரசன்னா கேலியாக பார்த்திருந்தான் ,

“என்னடா காருக்கே வாயை பிளந்துக்கிட்டு நிக்கிற ...அப்போ எங்க எம்.டி பொண்ண பார்த்தா கீழயே படுத்துடுவ போல...” என்று கிண்டல் அடிக்கவும் , அவனை திரும்பி முறைத்த சங்கர் ,

“ஆமா நீ இன்னும் கிளம்பலையா ...அப்புறம் உங்க எம்.டிய பார்த்தும் இந்த கேள்வியை கேட்கிற பார்த்தியா ...” என்று பதிலுக்கு நக்கல் அடித்தவனுக்கு ,

“ஏன் உனக்கு மட்டும்தான் பணக்கார பொண்ணா கரெக்ட் பண்ணனும் பட்டா எழுதி கொடுத்துருக்கா ... ஏன் நாங்களும் ஆசை பட கூடாதா ... ரெண்டு பேரும் ட்ரை பண்ணுவோம் யாருக்கு கிடைக்குதோ மத்தவங்க வாழ்த்திட்டு தங்கச்சியா ஏத்துக்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் ...” என்று சமத்துவோம் பேசியவனை கண்டு உள்ளுக்குள் திடுக்கிட்டாலும், வெளியே உதட்டை பிதுக்கி

“ஆல் தி பெஸ்ட் டா மச்சான் ...” என்று நக்கலாக பேசியவனின் பார்வை காரில் இருந்து இறங்கியவளை கண்டு கண்கள் வெளியே வந்து தெறித்து விழும் அளவிற்கு கண்கள் விரிய பார்த்திருந்தான்.

சங்கரின் அதிர்ந்த தோற்றத்தை கண்டு தன் பார்வையை திருப்பிய பிரசன்னாவின் கண்கள், உலக அழகிகளுக்கு எல்லாம் சவால் விடும் தோற்றத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தவளை கண்டு கண்கள் இரண்டும் கூச, ஒருமுறை கண்ணை மூடி திறந்தவனின் வாய் ஆ என்று தானாகவே பிளந்துக் கொண்டது மெல்ல தங்களை நோக்கி நடந்து வந்த கொண்டிருந்த கௌரிபிரியாவை கண்டு.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26140

கௌரிசங்கர் - 5b

காரிலிருந்து இறங்கியவளோ சிறகில்லாமல் வானில் பறந்துக் கொண்டிருந்தாள். பின்னே சுளையாக முற்பதாயிரம் பணத்துடன் சொகுசு வாழ்க்கை கிடைத்தால் கசக்கவா செய்யும். ஊரில் இருக்கும் போதே ரோகினி இதைப்பற்றி விளக்கும் போதே மறுப்பு கூறாமல் சம்மதித்திருந்தாள் பிரியா, அதற்கு காரணம் ஒன்று ரோகினியின் மேல் உள்ள நம்பிக்கையாலும் , கல்யாணத்திலிருந்து தப்பிப்பதற்காகவும். ஏற்கனவே தன்னை பற்றி உயர்வாய் நினைத்து இருப்பவளுக்கு , போலியான வசதியும் சேர ... செருக்குடன் வளையவர தொடங்கினாள்.

சங்கர் சத்தியமாக சந்தனபாண்டியனின் பெண் இவ்வளவு அழகாக இருப்பாள் என்று கனவில் கூட நினைத்துக் பார்க்கவில்லை. அழகில் குறைந்தவளை எதிர் பார்த்திருந்தவனுக்கு பேரழகில் ஒருத்தி கண்முன் நிற்கவும் ஸதம்பித்து நின்றவன் வேகமாக அவள் பார்வையிலிருந்து விலகி நின்றான். தன்னருகில் தனக்கு நிகரான அதிர்ச்சியில் நின்றிருந்த பிரசன்னாவை எரிச்சலோடு பார்த்தவன் பின்

“நான் கிளம்புறேன் டா ... ஈவினிங் பார்க்கலாம்...” என்றவனுக்கு பதில் கூறாமல் உள்ளே செல்லும் பிரியாவை வைத்த கண் எடுக்காமல் பார்த்திருக்கவும் அதிருப்தியில் தலையை இடமும் வலமுமாக ஆட்டிய சங்கர் எப்படி சந்தனப்பாண்டியனின் மகளின் கவனத்தை தன் மேல் திருப்புவது என்ற யோசனையில் அங்கிருந்து சென்றான்.

அன்றிரவு ஆழ்ந்த சிந்தனையில் இருந்த பிரசன்னாவை யோசனையுடன் பார்த்த சங்கர் ,

“என்னடா முகம் ரொம்ப தொங்கி போய் கிடக்கு ... என்ன மேட்டர் ...” என்றவனை வெற்றுப் பார்வை பார்த்தவன் ,

“ம்ப்ச் ... எங்க பாஸ் பொண்ணு ரொம்ப திமிரெடுத்தவளா இருக்கா ... இன்னைக்கு ஆபீஸ்ல எல்லார் முன்னாடியும் ரொம்ப அசிங்க படுத்திட்டாடா...” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் பேசியவனை புருவம் சுருக்கி பார்த்த சங்கர் ,

“என்னாச்சு ... ஆமா அந்த பொண்ணுகிட்ட பேசுனியா ... காலைலயே நான் கவனிச்சேன் உன் பார்வையே சரியில்ல ...” என்க , சற்று நேரம் அமைதியாக எதையோ யோசித்தவன் பின்

“அவ நமக்குலாம் செட் ஆகா மாட்டா ... நீ ஊருக்கு கிளம்புற வழிய பாரு ... என்னால இனிமே செலவு பண்ண முடியாது ...” என்று ஒட்டாத குரலில் பேசியவனை கண்கள் இடுங்க பார்த்த சங்கர் ,

“உனக்கு செட் ஆகா மாட்டான்னு சொல்லு ... நான் சொல்லவா இன்னைக்கு என்ன நடந்துருக்கும்னு ... உன்ன கண்ட்ரோல் பண்ண முடியாம அவகிட்ட பேசி அசிங்க பட்டிருக்க கரெக்ட்டா ...”என்று அன்று நடந்ததை சரியாக கூறவும் பதில் கூற முடியாமல் இருட்டை வெறித்தான் பிரசன்னா.

“அப்போ அதான் நடந்துருக்கு ...சரி விடு உன் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் ...பட் நான் முடிவு பண்ணிட்டேன் அவ எனக்குதான்னு ... கொஞ்சம் பொறுத்துக்கோ டா மச்சான் உன் பாஸ் பொண்ணு மட்டும் செட் ஆனா மொத்த சொத்துக்கும் நான்தான் அதிபதி ... இப்போ நீ வேலை பாக்கிற கம்பெனிய உன் பொருப்புல விடுறேன் என்ன சொல்லுற ... கொஞ்சம் மனசுவச்சு ஹெல்ப் பண்ணுடா ...” என்று கெஞ்சியவனை நக்கலாக பார்த்தவன் பதில் சொல்லாமல் கண்ணை மூடி தூங்கவும் ,

“ஆமா உங்க பாஸ் பொண்ணு பேரு என்ன” என்ற சங்கருக்கு ,

“பிரியா ... சண்முகபிரியா ...” என்று கசந்த குரலில் பிரசன்னா கூற ,

“பிரியாவா ... என்ன எங்க பார்த்தாலும் பிரியாவா இருக்கு ... சரி அதவிடு ... அந்த பிரியா பொண்ணு பத்திய டீடெயில்ஸ் சொல்லுடா ...” ஆர்வத்துடன் கேட்டவனை முறைத்து பார்த்த பிரசன்ன ,

“என்ன என்ன மாமா வேலை பார்க்க சொல்றியா...” என்று கடுப்படிக்க ,

“அட ஏன்டா கோப படுற ... புரோக்கர் சார்ஜா அந்த கம்பெனியை உன் பொறுப்புல விடுறேன் சொல்லிருக்கேன்ல ... கிடைக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணாம யூஸ் பண்ணிக்கணும் இல்ல ஒன்னும் இல்லமாலே வாழ்ந்து மறைஞ்சுடுவோம் ...” என்று தத்துவம் பேசியவனை கண்டு பிரசனாவால் முறைக்க மட்டுமே முடிந்தது . மேலும் பிரசன்னாவை தூங்க விடாமல் தோண்டி துருவிய சங்கர் அந்த வார ஞாயிற்றுகிழமைக்காக ஆவலுடன் காத்திருந்தான். அன்றிலிருந்து பிரசன்னாவை அவன் அலுவகத்தில் விடுவதையம் நிறுத்திக் கொண்டான்.

இங்கே பிரியாவின் நிலையோ படு கொண்டாட்டமாய் இருந்தது ... சுருங்க சொல்லப்போனால் வி.ஐ.பி படத்தில் நடித்த பிரபுதேவாவின் நிலையில் இருந்தாள் பிரியா. தினமும் விதவிதமான சாப்பாடு ,சொகுசு கார் பயணம் , குளிரூட்ட பட்ட அறையில் பஞ்சு மெத்தையில் உறக்கம்... இது நிரந்தரம் இல்லையென்றாலும் ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ பழகிக் கொண்டாள்...

அன்று ஞாயிற்றுகிழமை , இரவு ஏழு மணியளவில் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தான் சங்கர். பிரசன்னா இன்று பிரியா ஒரு பார்ட்டியில் கலந்துக் கொள்வதாக கூறவும், என்ன செய்தாவது அவளை சந்தித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தவன் அதற்கான ஏற்பாட்டை முன்னமே செய்திருந்தான். பிரசன்னாவையும் அழைத்துக் கொண்டு அந்த பிரமாண்ட ஹோட்டலுக்கு வந்தவன் பிரியாவின் வரவிற்காக காத்திருந்தான்.

பிரியாவின் லம்போகினி உள்ளே நுழையவும் இதற்காகவே காத்திருந்தார் போல , தான் ஏற்கனவே பெரும் தொகை கொடுத்து வாடகைக்கு எடுத்திருந்த ஆடி காரில் ஏறிக் கொண்டவன் அவள் கார் அருகில் தன் காரையும் நிறுத்தி ஸ்டைல்லா கீழே இறங்கியவன் யாரையும் திரும்பி பார்க்காமல் நெஞ்சை நிமிர்த்தி கூலரை கண்ணில் மாட்டியபடி தலையை கோதி கொண்டே நடந்து சென்றான்.

பல வித எதிர்பார்ப்புடன் இந்த கேளிக்கை விருந்திற்கு வந்திருந்த பிரியாவின் கவனத்தை ஈர்த்தான் சங்கர். காரிலிருந்து இறங்க போனவளின் அருகில் ஆடிக்கார் வந்து நிற்கவும், ஒருவித சுவாரஸ்யத்தோடு அதை நோக்கியவளின் பார்வையில் விழுந்தான் சங்கர். வாய் பிளந்து அவன் நடவடிக்கைகளை நோக்கியவளின் தொடையை கிள்ளினாள் ரோஹிணி.

“ஏய் பார்ட்டிக்கு வந்துட்டு , வாய்க்குள்ள ஈ போறது கூட தெரியமா அவன பார்த்துகிட்டு இருக்க ... முதல்ல காருல இருந்து இறங்குடி ...” என்று கடுப்படிக்கவும் , தொடையை தடவியபடி

“ம்ப்ச் ... அதுக்கு கிள்ளுவியா ... எரும ... பாருடி எவ்வளவு ஹாண்ட்ஸோம இருக்கான் ... பெரிய பணக்காரணா இருப்பான் போல ... அவன் பேரு என்னனு தெரியலையே ... உனக்கு ஆளு யாருன்னு தெரியுமா ...”ஆர்வத்துடன் தன்னிடம் கேட்டவளை முறைத்த ரோஹி ,

“பிரியா ... நீ சண்முகபிரியாவா நடிக்கத்தான் இங்க வந்திருக்க ஆள் பிடிக்க இல்ல ... அதுவும் இல்லாம உனக்கு செல்வா கூட கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு ... விபரீதமா எதுவும் நினைக்காமா ... கொடுத்த வேலையை மட்டும் பாரு...” என்று அறிவுரை வழங்க ,

“ம்ப்ச் ... போதும் நிறுத்து ரோஹி ... நான் ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது ... என்ன பண்ணனும் எனக்கு அட்வைஸ் பண்ணதா ...” என்று மூஞ்சில் அடித்ததை போல பேசியவள் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் காரிலிருந்து கீழே இறங்கினாள். கோபத்துடன் செல்பவளின் முதுகை வெறித்த ரோஹிணிக்கு சண்முகபிரியாவின் மீது எல்லையில்லா கோபம் உண்டாக , உண்மையை கூறமுடியாத தன் இயலாமையை நொந்த படி தானும் காரிலிருந்து கீழே இறங்கினாள்.

அந்த ஹோட்டலின் முகப்பிற்கு பிரியா நெருங்கவும் , அங்கே நின்றிருந்த ஊழியர் ஒருவர் ,

“கௌரி கிருஷ்ணா சார் ... உங்க கார் கீ கொடுத்தீங்கனா காரை அந்த பக்கம் நிறுத்தி வச்சுடுறேன் ...” என்று முன்னே சென்று கொண்டிருந்தவனிடம் கூறவும், அசால்டாய் திரும்பிய சங்கர் வசீகர புன்னகையை சிந்தியபடி தன் கையிலிருந்த கார் கீயை தூக்கி போட்டவன் திரும்பி பார்க்காமல் நடந்து உள்ளே சென்றான். அவன் நடவடிக்கைகளை கண்கள் மின்ன பார்த்திருந்த பிரியாவின் காதில் ,

“யாருடா இவன் ... பார்க்க பெரிய இடம் போல இருக்கான் ...” என்று ஒருவன் கேட்பது காதில் விழ ,

“பெரிய இடம்னா இல்ல ... ரொம்ப ரொம்ப பெரிய இடம் ... ஜி.கே குரூப்ஸ் கேள்வி பட்டுருக்கியா ... கோவைல நிறைய ஸ்பின்னிங் மில்ஸ் இருக்கு ... ஊட்டி கொடைக்கானல்ல ஏகப்பட்ட டீ எஸ்டேட் இருக்கு ... சென்னைல கூட புதுசா மால் கட்டிக்கிட்டு இருக்காங்க ...” என்று கார் சாவியை வாங்கியவன் கூறவும் ,முகம் புன்னகையில் விரிய... கண்கள் மின்ன இதையெல்லாம் கேட்டபடி உள்ளே சென்றாள் பிரியா.

இதை அனைத்தையும் அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பிரசன்னாவோ ,
‘கொடுத்த காசுக்கு மேலயே கூவுறான்...’ என்று நினைத்தபடி திரும்பி பார்த்தவன் அங்கே தன்னை முறைத்துக் கொண்டிருந்த ரோஹியை கண்டு திடுக்கிட்டு போனாலும் சமாளித்தவன் ,

“ஹேய் ரோஹி ... இங்க என்ன பண்ற ...” என்று ஒன்னும் தெரியாதை போல விசாரிக்க , கோபம் கொண்ட ரோஹி

“நீ என்ன வேலைக்காக வந்திருக்கியோ ... அதே வேலைக்குத்தான் நானும் வந்திருக்கேன் ...” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறியவள் அவனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து விலகி செல்ல ,

“யு மீன் மாமி வேலை...” என்று சீண்டியவனை , கண்கள் சிவக்க திரும்பி பார்த்தவள், கையில் அடிப்பதற்கு எதுவாது கிடைக்குமா என்று சுற்றியும் முற்றியும் பார்க்க அங்கிருந்து வேகமாக விலகி சென்றான் பிரசன்னா.

பிரியா சென்றிருந்தது தொழிலதிபர் ஒருவர் புதிய ப்ராஜெக்ட் கிடைத்ததற்காக கொடுக்கின்ற விருந்து. ஏற்கனவே சண்முகபிரியா இதை பற்றி கூறியதால் , எஸ்.பி குரூப்ஸ் சார்பாக கலந்துக் கொண்டாள் பிரியா. பார்ட்டி முழுவதும் அவள் கண்கள் நொடிக்கு ஒருதரம் வாசலை தொட்டு மீண்டது கௌரி கிருஷ்ணாவின் வரவை எதிர்பார்த்து. தன்னிடம் பேச முயன்ற ஒரு சிலரை கண்டு மென்புன்னகையுடன் தவிர்த்திருந்தாள் பிரியா. கௌரி கிருஷ்ணாவை பற்றி தெரியாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக தன்னிடம் பேச முயன்றவர்களுக்கு சம்மதம் சொல்லியிருப்பாளோ என்னவோ ... இப்பொழுது அவள் நினைவு முழுவதும் கௌரி கிருஷ்ணாவை எப்படி மீண்டும் சந்திப்பது என்றே உழன்று கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் கடந்த பின்னே ஏமாற்றத்துடன் விடை பெற்று கிளம்பியவள் , விருந்து ஒன்பதாவது மாடியில் நடந்ததால் அங்கிருந்து கீழே செல்வதற்காக லிபிட்டிற்காக காத்திருந்தாள். தன் தளத்தில் மின்தூக்கி வந்து நிற்கவும் ,அதன் உள்ளே சென்று கீழே செல்வதற்காக பட்டனை அழுத்த ... சில நொடிகளில் அதன் கதவுகள் மூட தொடங்கவும் , அதை முழுவதமாக மூட விடாமல் கதவின் நடுவே கை கொடுத்து தடுத்து உள்ளே நுழைந்தான் கௌரிகிருஷ்ணா என்ற கௌரிசங்கர்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26193

கௌரி - 6a

“ஷால் ஐ...” என்று வினவியவாறே மின்தூக்கியின் உள் நுழைந்தவனை கண்டு சந்தோஷத்தில் சில நொடிகள் உறைந்து நின்ற பிரியா, பின் சுதாரித்து மெல்ல தலையசைக்க அவளை கண்டு லேசாக புன்முறுவல் பூத்தவன் அங்கே ஒருத்தி இருப்பதாகவே கண்டுக் கொள்ளாமல் கைபேசியில் மூழ்கி போனான்.

அவனின் அலட்சியம் பிரியாவிற்கு சற்று ஏமாற்றத்தை தந்தாலும், அந்த திமிரை ரசித்தவளின் இதழ்கள் புன்னகை சிந்தின. அவனை எவ்வாறு நெருங்குவது என்று தெரியாமல் தவித்து போனவள், என்ன செய்து அவன் கவனத்தை தன்புறம் திருப்ப செய்யலாம் என்ற சிந்தனையில் மூழ்கி போனாள்.

சங்கரோ விட்டால் சந்தோஷத்தில் குத்தாட்டம் போடும் மனநிலையில் இருந்தான். வேண்டுமென்றே அலட்சியத்துடன் நடந்துக் கொண்டவனின் கண்கள் அடிக்கடி அவனையும் மீறி அவளை வட்டமிட்டது. மின்தூக்கியில் கண்ணை பறிக்கும் அளவிற்கு விளக்குகள் ஒளிர்ந்தாலும் அதையெல்லாம் பின்னுக்கு தள்ளி ஆயிரம் வாட்ஸ் பிரகாசத்துடன் ஜொலித்தவளை கண்டு சில நொடிகள் தன்னை மறந்து ரசிக்க தொடங்கினான் ,பின் தன்னை பார்க்காமல் ஏதோ சிந்தனையில் இருந்தவளைக் கண்டு மனம் சுணங்கியவன் , எப்படி தன்மீது கவனத்தை திருப்பலாம் என்று யோசிக்க தொடங்கினான்.

இவ்வாறு மற்றவர் அறியாமல் ஒருவரை ஒருவர் ரகசியமாக ரசித்துக் கொண்டிருக்க , கீழ் தளமும் வந்து சேர்ந்தது. இந்த வாய்ப்பை விட்டால் இன்று போல் கிடைப்பது அரிது என்று எண்ணியவர்களின் மூளை ஒளியை விட வேகமாக சிந்திக்க தொடங்கின. தாமாகவே சென்று பேசினால் மற்றவரின் பார்வையிலிருந்து கீழிறங்கி போய்விடுவோம என்று நினைத்தவர்கள் யோசனையோடு மின்தூக்கியிலிருந்து வெளியே வந்தனர்.

ஒருவித பதட்டத்துடன் நடந்து வந்த பிரியாவின் காலை அவள் கட்டியிருந்த சேலை இடறிவிட சிறிது தடுமாறியவளின் மூளையில் பளீச் என்று பல்ப் எரிய கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தவள், சில அடிகள் முன்னே நடந்துக் கொண்டிருந்த சங்கரின் மேல் நிலைதடுமாறி விழுவதை போல மோதவும், இதற்காகவே காத்திருந்தார் போல அவசரமாக அவள் கைகளை பற்றி தன்னுடன் சேர்த்து இறுக்கி கொண்டு ,

“ஆர் யு ஓகே ...” என்று கேட்டவனை கண்டு உள்ளுக்குள் எதையோ சாதித்ததை போல மகிழ்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாதவள்,

“யா...” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள். ஆனால் மனதிலோ ‘அய்யயோ இங்கிலீஷில பேசுறானே ஓவரா பேசி காரியத்தை கெடுத்துக்காமா கெத்த மெயிண்டைன் பண்ணுவோம்’ என்று புலம்பிக் கொண்டிருக்க, தான் கேட்ட கேள்விக்கு ஒத்தை வரியில் பதில் கூறியவளை கண்டு தன்னிடம் பேச விருப்பம் இல்லை போல என்று முடிவெடுத்தவனின் முகம் சோகத்தில் சுருங்கி போனது.


நொடியில் தன் முகவாட்டத்தை மாற்றியவன்,பிரியாவை கண்டு வசிய புன்னகை சிந்த, அதை கண்டவள் அதற்காகவே எதையாவது பேசவேண்டும் என உந்துதலில்,

“சாரி... ஐ ...மை... லெக்...” என்று திக்கி திணறி தொடங்கியவள், தான் பேச பேச சங்கரின் முகம் மாறுவதை காணவும்... எங்கே தனக்கு ஆங்கிலத்தில் பேச வராததை கண்டுக் கொண்டானா என்ற பயத்தில் முகம் சிவந்து போனது. சங்கருக்கோ அவள் ஆங்கிலத்தில் உரையாட தொடங்கவும், ‘அய்யோ... பீட்டர் உடுறாளே லண்டன்ல படிச்சுட்டு வந்திருக்கா , இவகிட்ட தத்தக்கு பிதக்குனு எதையாவது உளறி வச்சோம் ஈஸியா மாட்டிப்போம் ... சிரிச்சே மயக்க வேண்டியதுதான்’ என்று நினைத்தவன் அவள் முகம் சிவப்பதை கண்டு ,வெட்கத்தால் வந்த சிகப்பு என்று நினைத்து, தான் பற்றியிருந்த அவள் கரத்தை அவசரமாக விட்டான்.பின்

“சாரி ... ஐ...” என்று ஆரம்பிக்கவும் , ‘அய்யோ திரும்பவும் இங்கிலீஷா...’ என்று அரண்டு போன பிரியா, பரவாயில்லை என்னும் விதத்தில் கண்ணை மூடி திறந்து மென்னகை புரிய , கிடைத்த வாய்ப்பை விட மனம் இல்லாதவனாக ,

“ஐ அம் கௌரி...” என்று தன் கரத்தை நீட்ட ,சற்று தயங்கியவள் பின் பளீர் சிரிப்புடன் ,

“பிரியா...” என்று பதிலுக்கு தன்னை அறிமுகப் படுத்தியவள், அவன் கரத்தை தன் கரம் கொண்டு பற்றிக் கொண்டாள்.

கை குலுக்குவதை நிறுத்தாமல் “பிரியா...” என்று தலையை ஆட்டியபடி மீண்டும் சொல்லிக் கொண்டவனை தொடர்ந்து “கௌரி...” என்று சிறு சிரிப்புடன் பிரியாவும் கூற , மீண்டும் சில நொடிகள் கழித்து “கௌரி ... “ என்று தன்னை சுட்டிக் காட்டிய சங்கர் , பின் பிரியாவை நோக்கி “பிரியா...” என்றவன் மெல்ல “கௌரி பிரியா ...ம்ம்ம் நைஸ் நேம்...” என்று தனக்குள் சொல்லிக் கொள்வதை போல சொல்லிக் கொள்ளவும் , தன் பெயரில் இருவர் பெயரும் அடங்கியிருப்பதை கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்தவள் இது கடவுளாக போட்ட முடிச்சு என்று எண்ணி ஆனந்தம் கொண்டாள்.

நாகரிகம் கருதி மெல்ல தன் கரத்தை அவனிடமிருந்து விலகிக் கொண்ட பிரியாவை கண்டு மீண்டும் வசிய புன்னகை சிந்தியவன் , “அப்பு...” அப்புறம் என்ன என்று கேட்க நினைத்தவன் சற்று நிதானித்து போட்ட வேடத்திற்கு பொருத்தமாக, “தென்...” என்று கேட்கவும் ‘வாய தொறந்தாலே இங்கிலீஷ்தான் வருமா’ என்று நொந்தவள் பதிலுக்கு புன்னகை புரிந்தாள். பின் தன் கைகெடிகாரத்தை பார்த்து , “டைம்...ஐ...கோ...” என்று ஆரம்பித்து அடுத்து என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தவளை நோக்கி தன் வலக்கரத்தை முன்னே நீட்டி , “லேடீஸ் பர்ஸ்ட் ...” என்று நடக்குமாறு சைகை செய்து காப்பாற்றினான் சங்கர்.

அவன் அறியாமல் “உப்ஸ்...” என்று பெருமூச்சை விட்டவள் , பின் மயக்கும் புன்னகையை அவனிடம் சிந்தி , “ ஸ்யூர்...”என்றவள் ராணியின் தோரணையில் தலை நிமிர்ந்து நடந்து சென்றாள். இங்கே இருவருக்கும் ஆங்கிலத்தில் பேச வராது என்பதால் மற்றவர் பேசுவதை பதற்றத்துடன் கேட்டவர்கள் அதை பாதியில் இடையிட்டு நிறுத்த தொடங்கினர்.

தன் முன்னே நடந்து செல்பவளின் கம்பீரத்தை கண்டு வியந்து போனவன், அவளின் நடை உடைகளை ரசித்தபடி நடந்தவனை

“கௌரி கிருஷ்ணா சார் உங்க கார் கீ...” என்ற குரல் தடுக்க, கீழே இறங்குவதற்காக படியில் காலை வைக்க போன பிரியா குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தாள். சங்கரோ அசால்டாய் “ஒஹ் ... தேங்க்ஸ் ...” என்று அவரிடமிருந்து கார் சாவியை வாங்கியவன் திரும்பி பார்க்க ,அங்கே முகத்தில் குறுஞ்சிரிப்பு மலர தன்னை பார்த்துக் கொண்டிருந்த பிரியாவை கண்டு இரு கண்களை சிமிட்டி குறும்பு கூத்தாட பார்த்தவனை கண்டு வெட்கம் கொண்டவள் திரும்பி நடக்க முயல ,அப்பொழுதுதான் அவள் சமநிலையில் இல்லாததை கவனித்த சங்கரின் மனம் கடவுளிடம் “அவள் கால் இடறி விழ வேண்டும் ...” என்று அவசர வேண்டுதலை வைத்தது.

திரும்பி நடக்க முயன்ற பிரியாவிற்கு சங்கரின் வேண்டுதல் காதை எட்டியதோ என்னவோ , நிதானமாக திரும்பியவளின் கால் இடறிவிட, கீழே விழ போனவளின் இடையை பற்றி தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான் சங்கர்.
அவன் இறுக்கி அணைத்துக் கொண்டதும் கிடைத்த வாய்ப்பு நழுவவிட மனம் இல்லாத பிரியா, மழையில் நனைந்த கோழி குஞ்சியாய் அவனுள் ஒடுங்கிப் போனாள். சில நொடிகள் இருவரும் அணைப்பில் கட்டுண்டு கிடக்க, அவர்களின் மோனநிலையை கலைத்தது பிரியாவின் கைப்பேசி அழைப்பு. பதற்றத்துடன் அவனிடமிருந்து விலகி , “சாரி ...சாரி ...” என்றவள் மொபைலை பார்க்க ரோஹிணியிடம் இருந்துதான் அழைப்பு வந்திருந்தது. நிமிர்ந்து ரோஹி நின்றிருந்த இடத்தை பார்த்தவளுக்கு , தூரத்தில் இருந்தாலும் தன்னை அவள் முறைத்துக் கொண்டிருப்பது தெளிவாக தெரிய சங்கடத்துடன் சங்கரை நிமிர்ந்து பார்த்தவள் , பின் மனமே இல்லாமல் ,

“ஐ... மை ... கார் ... வெயிட்...” என்று மீண்டும் கோர்வையாக பேச தெரியாமல் திணறியவளுக்கு எங்கே உண்மையை கண்டு பிடித்து விடுவானோ என்ற பயத்தில் வேர்வை அரும்புகள் முகத்தில் பூத்தன. அவளுடைய பதற்றத்தை கீழே விழ போனதால் ஏற்பட்ட அதிர்ச்சியாக நினைத்துக் கொண்டவன் , தான் அணைத்த பின்னும் தன்னிடம் கோபத்தை காட்டாதவளை கண்டு சற்று தைரியம் பெற்றவனாக, அவள் கரத்தை பற்றி ,

“ஹேய் ... வொய் டென்ஷன் ... கம் கம் ...” என்றவன் பிரியாவை வழிநடத்தி அவள் கார் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான்.

பிரியாவும் சங்கரும் ஜோடியாக வருவதை பார்த்து இரண்டு 420யும் ஒன்னு சேர்ந்திடுச்சு போல என்று நினைத்துக் கொண்டாள் ரோஹிணி. படியில் கீழே இறங்கும் போது வேண்டும் என்றே பிரியா நிலை தடுமாறியுதும் , இதான் சாக்கு என்று சங்கர் அவள் இடுப்பை பற்றியதையும் கண்டு கொதித்து போனவளுக்கு , பிரியாவின் போக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. உண்மையை கூறி புரியவைக்க முடியாத தன் நிலையை நொந்துக் கொண்டவள் தூரத்தில் நின்றிருந்த பிரசன்னாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.

பிரியாவின் காரை நெருங்கியவர்கள் சில நொடிகள் அமைதியாக நிற்க, பின் தொண்டையை கனைத்த சங்கர் , “தென்...” என்று கேள்வியாய் நிறுத்தவும் , ‘இவன் என்ன ஆவுனா சீன் விடுறான்...இப்போ என்ன சொல்லி சமாளிக்கிறது...’ என்று நினைத்தவள் , பற்கள் மின்ன “வாட்...” என்று தோளை சுருக்கியபடி கேட்க , அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் விழித்த சங்கர் , தலையை ஒருபக்கமாக சாய்த்து ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி இதழ் பிரியாமல் சிரித்து சமாளிக்கவும் , பிரியாவும் தன்னை சுட்டிக் காட்டி பின் அருகிலிருந்த காரையும் காட்டி தான் செல்ல வேண்டும் என்று சைகையில் சொல்ல, பற்றியிருந்த அவள் கரத்தில் சிறு அழுத்ததை கொடுத்து விடுவித்தவன் , சட்ரென்று அவள் எதிர்பார்க்க வேளையில் பிரியாவை இழுத்து அணைத்து பின் அவள் காதில் “குட் நைட்...” என்று கிசுகிசுப்பான குரலில் கூறியவன் , அவள் பதில் கூறுவதற்கு முன் அங்கிருந்து அவசரமாக விலகி சென்றான்.

செல்லும் சங்கரை அதிர்ந்து போய் பார்த்திருந்த பிரியாவின் தோளை தட்டிய ரோஹி,

“டைம் ஆச்சு கிளம்பலாம்...” என்று இறுக்கமான குரலில் கூறவும் அவள் குரல் பேதத்தை புரிந்துக் கொள்ளாத பிரியா , பணக்கார கௌரி கிருஷ்ணா தன்னிடம் மயங்கிவிட்டதாக எண்ணியவள் கர்வ சிரிப்புடன் காரில் ஏறிக் கொண்டாள்.

அவர்கள் கார் கண்ணிலிருந்து மறையும் வரை மறைந்திருந்து பார்த்திருந்த சங்கர் , கார் காம்பௌண்டை தாண்டியதும் ,”உப்ஸ்” என்று மூச்சை இழுத்துவிட்டவனின் முகத்தில் எதையோ சாதித்ததை போன்ற மகிழ்ச்சி தோன்றியது. அவன் அருகில் வந்த பிரசன்னா ,

“என்னடா செம்ம பாஸ்டா இருக்க... அவள மடக்கிறது கஷ்டம் நினைச்சேன் ... அவ இடுப்ப பிடிச்சுட்டு வர ... கில்லாடிதாண்டா ...” என்று கண்ணை எட்டாத சிரிப்புடன் கூறியவனை கண்டு புன்னகை புரிந்த சங்கர் ,

“நான்தான் சொன்னேன்ல அதெல்லாம் தனி கலைன்னு” என்று பெருமை பொங்க பேசியவனின் அருகில் நெருங்கினார் அந்த ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியர் .

“தம்பி நீங்க சொன்னது போலவே அந்த பொண்ணு முன்னாடி ரிஸ்க் எடுத்து பேசி நடிச்சுட்டேன் ... பேசியதை விட மேல போட்டு கொடுப்பா ...” என்று தலையை சொறிந்தவரிடம் ,

“இரெண்டு வார்த்தை பேசுறதுக்கு நீ கேட்ட அமௌண்ட் ரொம்ப ஜாஸ்தினா இதுல மேல வேற போட்டு கொடுக்கணுமா... என்கிட்ட அவ்வளவு பணம்னா இல்லணா...” என்றவன் பேசிய பணத்தை கொடுத்துவிட்டு நிமிர , பிரசன்னாவின் கைபேசி அழைத்தது. அதை சலிப்போடு ஏற்றவன்

“இல்லிங்கணா கொஞ்சம் டிலே ஆகிடுச்சு ... இன்னும் பத்து நிமிசத்துல அங்க இருப்போம்ணா...” என்று பம்மியவனுக்கு , எதிர்முனையில் என்ன பதில் வந்தது , பதறியவனாக

“இல்லைனா ... தோ கிளம்பிட்டோம் அப்படி எதுவும் பண்ணிடாதீங்க ...” என்றவன் அவசரமாக தங்கள் வாடகை காரை நோக்கி போக, அவனை தொடர்ந்த சங்கர் ,

“என்னடா திடீர்னு டென்ஷன் ஆகிட்ட ... யாரு போன்ல “ என்றவனை கண்டுக் கொள்ளாமல் காரில் ஏறி அதை கிளப்பவும் , விடாமல் நச்சரித்த சங்கரை முறைத்து பார்த்த பிரசன்னா ,

“காரை வாடகைக்கு விட்டவன்தான் ... ஏற்கனவே சொல்லிருந்த நேரத்த விட அரைமணி நேரம் தாண்டிருச்சாம் ... மேல அஞ்சாயிரம் போட்டு கொடுக்க சொல்றான் இல்லைனா என் பைக் என் கைக்கு வராதாம்...” என்று எரிந்து விழுந்தவனை கண்டு எச்சில் முழுங்கிய சங்கர் ,

“என்னது மேல ஐயாயிரமா... அப்போ மொத்தம் பதினைந்து ஆயிரமா ...” என்று மலைத்து போனவன் , சற்று தயங்கியபடி ,

“டேய் மச்சான் என்கிட்ட அவ்வளவு பணம் இல்லடா ... கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா ...” என்றவனை தீப்பார்வை பார்த்த பிரசன்னா ,

“என் பைக் மாட்டிக்கிச்சு இல்லனா போடான்னு கண்டுக்காம விட்டுருப்பேன் ...” என்று பல்லை கடிக்க ,

“கோச்சிக்காதடா மச்சான் ... பிஸ்கோத்து ஆடி காருக்கு இவ்வளவு அலம்பல் விடுறான் ... கல்யாணம் மட்டும் ஆகட்டும் வருசலா பாரின் காரா வாங்கி அடுக்கிறேன் ... அப்புறம் எங்க லவ்க்கு ஹெல்ப் பண்ணதுக்கு எஸ்.பி குரூப்ஸ்ல இருக்கிற ஒரு கம்பெனிய உன் பேருக்கு எழுதி வச்சுடுறேன் என்ன சொல்ற...” என்று கண்கள் மின்ன பேசியவனை கொலை வெறியுடன் பிரசன்னா பார்க்க அவன் பார்வையை கண்டுக் கொள்ளாதவன் கனவுலோகத்தில் சஞ்சரிக்க தொடங்கினான்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌரி - 6b

காரில் சென்றுக் கொண்டிருந்த பிரியா திடீரென்று

“ரோஹி... அவனுக்கு என்ன புடிச்சு போச்சுன்னு நினைக்கிறேன் ... பார்த்தல கிளம்பும் போது எப்படி குட்நைட் சொல்லிட்டு போறான்...” என்று சிறு வெட்கத்துடன் கூற ,அவளை கண்டுக் கொள்ளாமல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ரோஹிணி. சில நொடிகள் அவள் பதிலுக்காக காத்திருந்தவள், அவள் முகத்தை பற்றி,

“என்ன ரோஹி எவ்வளவு சந்தோசமான நியூஸ் சொல்லிருக்கேன் ... கண்டுக்காம வர...” என்றவளின் கரத்தை தட்டிவிட்டவள்,

“வேணா வாயை புடுங்காத ... ஏதாவது அசிங்கமா கேட்டுட போறேன்...” அடக்கப் பட்ட கோபத்துடன் ரோஹி சீற, அதில் கோபம் கொண்ட பிரியா , அவள் கன்னத்தை அழுந்த பற்றி தன்புறம் திருப்பியவள்,

“அப்படி என்ன நீ அசிங்கமா கேட்கிற அளவுக்கு மானம் போற காரியத்தை பண்ணிருக்கேன் தெரிஞ்சுக்கலாமா...” நிதானமான குரலில் கேட்கவும் பொறுமையிழந்த ரோஹி,

“அவன் யாரடி உனக்கு ... எத்தனை நாள் பழக்கம் ... சர்வ சாதாரணமா வந்து கட்டிபுடிச்சுட்டு போறான் நீயும் அத ரசிச்சுகிட்டு நிக்கிற... பணத்துக்காக இவ்வளவு மோசமா இறங்கி போவியா...” விட்டால் அடித்து விடுபவளை போல பேசியவளை கண்டு தன்மானம் சீண்டப்பட ,

“அவனுக்கு என்ன பிடிச்சுருக்கு ... எனக்கும் அவனை பிடிச்சுருக்கு ... இதுல என்ன தப்பு இருக்கு ... அதோட மேல்மட்டத்துல கட்டிபுடிச்சு நலம் விசாரிக்கிறது தப்பு கிடையாது...” என்று திமிராய் பதிலளிக்க, நக்கலாக பார்த்த ரோஹி,

“பார்த்த முதல் பார்வையிலயே அவன பிடிச்சுருச்சா செம்ம காமெடி ... சரி உண்மையை சொல்லு அவன் தி கிரேட் கௌரி கிருஷ்ணாவா இல்லாம யாரோ ஒரு கௌரி சங்கரா இருந்தா இப்படித்தான் பார்த்த உடனே பத்திருக்குமோ...” என்ற ரோஹியை, கண்டு மீண்டும் புருவம் சுருக்கிய பிரியா, மெல்ல தலையை இடமும் வலமுமாக அசைத்தவள்,

“ம்ம்ம் ... கண்டிப்பா பத்திருக்காது ... என்னோட எதிர்பார்ப்புக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதா எவனை பார்த்தாலும்... அவன திரும்பி கூட பார்த்திருக்க மாட்டேன்... இவன் பாக்க ஹாண்ட்சமா இருக்கான் வசதியா இருக்கான் இவன போல ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன தப்பு இருக்கு ...” மீண்டும் தெனாவெட்டாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.

என்ன தப்பு என்று கேட்டவளை முகம் சுருக்கி பார்த்த ரோஹி அவள்புறம் நன்றாக திரும்பி அமர்ந்து நிதானமாய் ஆனால் அழுத்தமாக,

“ம்ம்ம் ... பிடிச்ச வாழ்க்கையை வாழ ஆசை படுறது கண்டிப்பா தப்பில்ல ... ஆனா நீ பண்றது சாதாரண தப்பு இல்ல ரொம்ப பெரிய தப்பு...” என்று கூறவும், எதுவோ புரிந்தது போல கண்கள் இடுங்க பார்த்தவளை கண்டு, கேலியாக உதடு சுழித்த ரோஹி,

“என்ன புரியலையா ... இல்ல புரியாத மாறி நடிக்கிறீயா ... இன்னும் இரண்டு மாசத்துல உங்க அக்கா கல்யாணம் ... அது முடிஞ்ச அடுத்த முகூர்த்தத்துல செல்வா கூட உனக்கு கல்யாணம் நடக்க போகுது ... இப்போ நீயே சொல்லு ... நீ பண்றது தப்பா இல்லையானு ...” என்றவளை தோளை குலுக்கிய படி பார்த்த பிரியா,

“தப்பா தெரில ... எனக்கு அந்த கரிசட்டிய கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல ... இது என் சம்மதம் இல்லாம அவங்க இஷ்டத்துக்கு ஏற்பாடு பண்ண கல்யாணம் ... அதுல இருந்து வெளில வர காத்துகிட்டு இருந்த எனக்கு லட்டு மாறி சான்ஸ் கிடைச்சா சும்மா விட்டுடுவேனா ... முடியாது நான் முடிவு பண்ணிட்டேன் எப்படியாவது கௌரிய கல்யாணம் பண்ணிக்கனும்னு...” என்று உறுதியாய் கூறியவளின் கன்னத்தை பதம் பார்க்க துடித்த கரத்தை கஷ்டப்பட்டு அடக்கிய ரோஹி, பின்,

“சரியான சுயலவாதி டி நீ ... உனக்கு புடிக்கலைனா அவங்க கிட்ட நேராவே சொல்லிருக்கலாமே ... எதுக்கு தேவையில்லாம எல்லார் மனசுல ஆசைய வளர்கிற ... பாவம் செல்வா உன்ன கல்யாணம் பண்ணிக்க போறேன் எவ்வளவு கனவு கண்டுக்கிட்டு இருப்பார் அவருக்கு துரோகம் பண்ண பாக்கிற ... ம்கூம் இதெல்லாம் சரிப்பட்டு வராது முதல்ல நீ ஊருக்கு கிளம்புற வழிய பாரு ... நான் சண்முகபிரியா கிட்ட பேசுறேன் ... நீ இங்க இருந்தீன்னா தேவையில்லாத வேலையெல்லாம் பார்ப்ப நீ கிளம்பு கிளம்பு ... இல்ல நான் அப்படித்தான் இருப்பேன்னு என்ன மீறி எதாவது பண்ண நினைச்ச உன்ன பத்தி உங்க அம்மாகிட்ட போட்டு கொடுத்துடுவேன் ... பார்த்துக்கோ...” என்று மிரட்டியவளை சில நொடிகள் அழுத்தமாக பார்த்த பிரியா பின் சத்தம் போட்டு சிரித்த படி

“எவ்வளவு நாளைக்கு தான் என் மேல அக்கறை இருக்கிற போல நடிக்க போற ... ம்ம்ம் ... கடைசியா சொன்ன பாரு எங்க அம்மாகிட்ட சொல்லிடுவேன்னு அதான் டி நீ ... பொறாமை பிடிச்சவ ... வசதியான வாழ்க்கை எனக்கு கிடைக்க போகுதுன்னு உனக்கு வயித்தெரிச்சல் அதான் என்ன அடக்கிட்டே இருக்கே ... ஏண்டி உனக்கு இந்த கேடுகெட்ட எண்ணம்...” என்று வார்த்தைகள் கொடுக்காய் கொட்ட , ஏற்கனவே அவள் நிலைக்கு தான் தான் காரணம் என்ற குற்றவுணர்ச்சியில் இருந்தவள் மேலும் துடித்து போனாள். கலங்கிய கண்களுடன், அவளை ஏறிட்டு பார்த்த ரோஹி

“நான் உன் நல்லதுக்குதான் சொல்றே...” என்று ஆரம்பித்தவளை,

“என் நல்லதை பத்தி நீ கவல பட வேணாம் ... எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு ... இனி என்கிட்ட பேசுற வேலை வச்சுக்காத ... அப்புறம் நான் அசிங்கமா கேட்டுடுவேன்...” என்று ஆத்திரத்துடன் கத்தியவள் முகத்தை திருப்பி கொள்ள, கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்த ரோஹியின் மனம் பிரியாவை நினைத்து பாரமாகி போனது.

சண்முகபிரியாவின் வீட்டில் கார் நின்றதும் கோபமாக இறங்கிய பிரியா, நேரே சென்று நின்றது ஷம்முவிடம் தான். தன் முன் கோபம் கொப்பளிக்க நின்றவளை புருவம் உயர்த்தி பார்த்தவளிடம்,

“இங்க பாருங்க ... நான் உங்கள போல நடிக்க வந்திருக்கேன் தான் இல்லன்னு சொல்லல ... என்ன எனக்காவே புடிச்ச ஒருத்தனுக்கு நான் யாருன்னு தெரியாமலே லவ் வந்தா அத ஒத்துக்க கூடாதுன்னு ஏதாவது ரூல்ஸ் இருக்கா ...” என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பேசியவளை புரியாமல் சண்முகபிரியா பார்க்க,

“இன்னைக்கு ... பார்ட்டில கௌரிகிருஷ்ணாவை பார்த்தேன் ... அவருக்கு என்ன பிடிச்சுருக்கு எனக்கும் அவரை பிடிச்சுருக்கு ... அவர் யாருன்னு எனக்கு தெரியும், அதேபோல நான் யாருன்னு அவருக்கும் தெரியாது ... இது தப்புன்னு ரோஹி சொல்றா ... இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க...” படபட என்று பொறிந்தவளை கண்டு முகம் சுருக்கி யோசித்த ஷம்மு,

“கௌரிகிருஷ்ணா ... அவரையா மீட் பண்ண ...” சற்று ஆர்வத்துடன் கேட்கவும் , பதறிப்போன பிரியா அவளை சந்தேகத்தோடு பார்த்து,

“அவர உங்களுக்கு தெரியுமா ...” உள்ளே போன குரலில் கேட்ட பிரியாவை கண்கள் சிரிக்க பார்த்த ஷம்மு,

“ம்ம்ம் தெரியும் பேமஸ் பேர்சொன் ... முக்காவாசி கோயம்புத்துர் அவங்க இடம்தான்...” என்றவள்

“என் பேர் யூஸ் பண்ணாம நீ என்ன பண்ணாலும் எனக்கு ஓகேதான் பட் நாளைக்கு ஏதாவது பிரச்சனை வந்தா...” என்று இழுத்தவளை அவசரமாக இடையிட்ட பிரியா,

“கண்டிப்பா உங்ககிட்ட வந்து நிக்க மாட்டேன் ... என் பிரச்சனையை நானே பாத்துக்கிறேன்...” அங்கே சோர்ந்து போய் நின்றிருந்த ரோஹியை முறைத்தபடி தன் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

அங்கே கலங்கி போய் நின்றிருந்த ரோஹிணியை அணைத்துக் கொண்ட சண்முகபிரியா,

“பிரீயா விடு ரோஹி ... உன் மூஞ்சை பார்த்தாலே தெரியுது உன்ன ஹர்ட் பண்ணிருக்கான்னு ... இவளாம் பட்டாதான் திருந்துவா... இனி அந்த பிரியா பொண்ணுக்காக பரிதாப படாத...” என்றவள் அங்கிருந்து விலக , அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் நின்றிருந்தாள் ரோஹிணி.

அறைக்குள் நுழைந்த பிரியா புன்சிரிப்புடன் கட்டிலில் படுத்தவளின் மனக்கண்ணில் கௌரி வந்து சிரிக்க அவனுடன் கனவு லோகத்தில் சஞ்சரிக்க தொடங்கினாள். அதேநேரம் மொட்டைமாடியில் படுத்திருந்த கௌரியும் பிரியாவை நினைத்தபடி கண் மூடி தூங்க தொடங்கினான்.
 
Status
Not open for further replies.
Top