All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “கௌரிசங்கர்” - கதைதிரி

Status
Not open for further replies.

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌரி - 31

அன்றிரவு வீட்டிற்கு வந்தவன் காரை நிறுத்திவிட்டு மாடி படி ஏறும்போதே , ‘இன்னைக்கு என்ன டாஸ்க் வச்சுருப்பாளோ தெரியலையே ’ என்று மனதில் புலம்பியவன் கதவை திறந்து உள்ளே செல்ல , நேற்று போல இன்றும் அதே சோபாவில் அமர்ந்திருந்தவளை கண்டு திடுக்கிட்டு போனான். ஆனால் முன்றைய இரவை போல் அவனை கவரும் வகையில் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தவளை கண்டு திடம் பெற்றவன் அவள் அருகில் சென்று உட்கார்ந்து ,

“இன்னும் சாப்பிடலையாடா …” என்று கேட்டான். அமைதியாக அவனை பார்த்தவள் பின் மெல்ல ,

“எனக்கு பசிக்குது , தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடணும் போல இருக்கு …” என்று வாய் திறந்து கூற ,
நேற்று நடந்த பிரச்சனையால் முகம் கொடுத்து கூட பேசாதவள் விரும்பியதை கேட்கவும் சந்தோசப்பட்டவன்,

“குளிச்சுட்டு வர வரைக்கும் பசி தாங்குமா …” என்றவனுக்கு சம்மதமாக தலையசைத்தவளிடம் ,

“டூ மினிட்ஸ் …” என்று சிரித்த முகத்துடன் கூறியவன் மின்னல் வேகத்தில் குளித்துவிட்டு கிட்சேன்க்குள் நுழைய , அவனை தொடர்ந்து சமையலறைக்குள் நுழைந்தவளை கண்டு ,

“நீ போடா , நான் சுட்டு எடுத்துட்டு வரேன் …” என்று அக்கறையாய் கூறியவனை மதிக்காமல் , அவன் அருகில் நின்று அவன் செய்வதை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

அவசரவசரமாக தேங்காயை துருவி சட்னி அரைத்து தோசைகளை சுட்டவனை பார்த்திருந்தவளின் உதடுகளில் மெல்லிய புன்னகை. தாயை போல அன்பு காட்டி பசிக்கின்ற நேரம் உணவளித்து , தந்தையை போல அரவணைத்து செல்லும் கணவன் கிடைத்தும் அவனுடன் பயணிக்க முடியாத எதிர்காலத்தை நினைத்து தன் விதியை நொந்தவளுக்கு வாய்விட்டு அழ வேண்டும் போல இருந்தது. எங்கே அங்கேயே நின்றாள் தன்னையும் மீறி அவனிடம் தன்னை வெளிப்படுத்தி விடுவோமா என்ற அச்சத்தில் , கூடத்திற்கு செல்ல முயன்றவளின் அசைவை வைத்தே ,

“தட்ட எடுத்துட்டு போடா , சுட சுட சாப்ட்டா நல்லாயிருக்கும் …” திரும்பி பார்க்காமல் பேசியவனுக்கு பதில் கூறாமல் அமைதியாக நிற்க , தட்டையும் எடுக்காமல் பதிலும் வரமால் போக என்ன என்று திரும்பி பார்த்தவனுக்கு , கண்களில் ஏக்கத்துடன் நின்றிருந்தவளை கண்டு மனதில் சுருக்கென்று வலியெடுத்தது.

“ஊட்டி விடவாடா …” மனம் பொறுக்காமல் கேட்டவனுக்கு பதிலாக வாயை திறந்து காட்டியவளை கண்டு புன்னகை முகத்தில் மலர , ஆசையாக அவளுக்கு தோசையை ஊட்ட தொடங்கினான்.

பசி அடங்கம் வரை சாப்பிட்டவளுக்கு தண்ணீர் பிடித்து கொடுத்தவன் ,

“நீ போய் ஹால்ல உட்காரு … எனக்கு தோச சுட்டு எடுத்துட்டு வரேன் …” என்றவனுக்கு , தன்கையால் தோசை சுட்டு கொடுக்க வேண்டும் என்ற ஆசை வரவும் , அவன் கையிலிருந்த கரண்டியை பிடுங்கியவள் தானே தோசை சுட தொடங்கினாள்.

அவள் செய்கையில் இனிமையாக அதிர்ந்து போனான் கௌரி. இதுவரை சாப்பாட்டை கூட அவள் பரிமாறியதில்லை, இன்று அவளே தோசை ஊத்தி கொடுக்கவும் மறுப்பு ஏதும் சொல்லாமல் சமையல்கட்டு மேடையில் ஏறி உட்கார்ந்துக் கொண்டான்.

நான்கு தோசைகளை சுட்டவள் , தானே அவனுக்கு ஊட்டிவிட கண்கள் கூட கலங்கிவிட்டது கௌரிக்கு. பிரியா மேல் உயிரையே வைத்திருப்பவன் , அவளின் சேவகனாய் மாறிப்போய் அவள் இட்ட வேலைகளை தலைகீழாக நின்றுக் கூட செய்து முடிப்பவன், அவளின் குணம் அறிந்து இன்றுவரை அவளிடமிருந்து எதையும் எதிர்பார்த்ததில்லை. அவனை போல பாசத்தை வெளிப்படையாக காட்ட தெரியாது , அவள் பேச்சாலும் செய்கையாலும் கூட அதை உணர்த்தியது கிடையாது ஆனாலும் அவனுக்கு நன்கு தெரியும் தான் தான் அவளின் உலகம் என்று.

அமைதியாக இரவு உணவை முடித்துக் பின் தூங்குவதற்காக அவன் அறைக்குள் நுழைய போன கௌரியிடம்,

“கொஞ்சம் பேசணும் …” என்று மொட்டையாய் அழைக்க , சில நொடி புருவம் சுருக்கி பார்த்தவன் , சிறு சிரிப்புடன் சோபாவில் சென்று உட்கார்ந்துக் கொண்டான். அவன் அருகில் சென்று உட்கார்ந்தவள் பேசாமல் , கோர்த்திருந்த தன் கைகளையே பார்த்திருக்க , மெல்ல அவள் விரல்களை பிரித்து நீவிவிட்டவன் ,

“ம்… சொல்லு என்ன பேசணும் …” விரல்களுக்கு சொடுக்கு எடுத்தபடி கேட்க , தன் விரல்களை பற்றியிருந்த அவன் கையை இறுக்கி பிடித்தபடி ,

“நான் என்ன சொன்னாலும் கேட்பியா …” மெல்ல ஆரம்பிக்க , சற்றும் தாமதிக்காமல் ம்ம்ம் என்றபடி தலையை ஆட்டியவனை கண்டு லேசாக கண்கள் கலங்கவும் , கண்ணை சிமிட்டி விழிநீரை மறைத்தவள் ,

“அப்போ தாலி காட்டாம ஒண்ணா இருக்கலாம் கூப்ட்டா கூட வருவியா …” என்றவளுக்கு , தலையசைத்து ம்ம்ம் என்று ஒற்றை வார்த்தையாக பதிலளிக்க ,

“நேத்து வரைக்கும் முடியாதுனு சொன்ன அப்புறம் என்ன … பயந்துட்டியா … கையை குத்திகிட்டத பார்த்து …” என்று முகம் சுருக்கி கேட்க , நேற்று குற்றிய இடங்களில் மென் முத்தம் பதித்தவன் ,

“ஆமா … பயந்துட்டேன் … தாலி கட்டினாலும் கட்டாடியும் நீ மட்டும்தான் என் வொய்ப் …உன்ன கஷ்டப்படுத்திதான் நான் நினைச்சதை செய்யணும்னா , அது எனக்கு தேவையில்லடா … நீ முக்கியமா நம்ம புள்ள பொறப்பு முக்கியமானு கேட்டா , நீ தான் …” என்று பேசிக் கொண்டிருந்தவனின் வாயை தன் விரல் கொண்டு மூடியவள் பேசாதே என்று தலையாட்டியபடி அவன் மடியில் உட்கார , அவளை தன்னோடு இறுக்கி கொண்டான் கௌரி.

சில நொடிகள் அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்திருந்தவள் , மெல்ல நிமிர்ந்து அவன் கண்களை பார்த்தவாறே அவன் வலக்கையை எடுத்து தன் தலை மீது வைத்தவள் ,

“என் மேல நம்பிக்கை இருந்தா … உனக்கு நான் கெடுதல் பண்ண மாட்டேன் நினைச்சா … என் தலையில அடிச்சு ப்ராமிஸ் பண்ணு … கண்ணன் டாக்டர் பொண்ணு வெண்ணிலாவ கல்யாணம் பண்ணிக்கிறேன் … ப்ராமிஸ் பண்ணு …” என்றவளுக்கு , பதில் கூறாமல் அழுத்தமாக உட்கார்ந்திருந்தவனின் தொண்டை குழி கோபத்தில் ஏறி இறங்கியது.

“நான் எப்போயெல்லாம் உன் மேல நம்பிக்கை வைக்கிறோனோ அப்போல்லாம் என்ன அசிங்க படுத்திடுற…” கண்கள் கலங்க கேட்டவளை வெறித்து பார்த்தவனின் உதடுகள் கோபத்தில் துடித்தது. எங்கே அவளை வருந்தும்படி வார்த்தைகளை விட்டுவிடுவோமோ என்று பயந்து போனவன் , அவளை தன் மடியிலிருந்து கீழே இறக்கி சோபாவில் உட்கார வைத்தவன் , வேகமாக அங்கிருந்து வெளியேற பார்க்க , சற்றென்று அவன் கைகளை பற்றினாள் பிரியா.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ …” என்று பிடிவாதம் பிடித்தவளை அடிப்பட்ட பார்வை பார்த்தவன்,

“வேற யாரையோ கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா , ஏழு வருஷம் காத்துகிட்டு இருந்திருக்க மாட்டேன் , வீட்ட விட்டு போன கையோடு அருணா கூட ஜோடி சேர்க்க மாமி வேலை பார்த்துட்டு போனியே அப்பவே அவள கல்யாணம் பண்ணிருப்பேன் …” என்று கோபத்தில் கழுத்து நரம்பு புடைக்க பேசினான்.

“யாரு வேணாம்னு சொன்னா … பண்ணியிருக்க வேண்டியதுதானே .. இப்போ குத்தி காட்டி பேசுற …” வேண்டுமென்றே வம்பிழுக்க , அவள் பேச்சில் கோபம் வந்தாலும் , அதை காட்டாமல் பொறுமையை இழுத்து பிடித்தவன்,

“ இதுக்கு பதில் கண்டிப்பா சொல்லியே ஆகணுமா …” என்று பெருமூச்சை விட்டவன் ,

“சரி கேட்டுக்கோ … இந்த ஜென்மத்துல நீ மட்டும் தான் என் பொண்டாட்டி , அது சேர்ந்து வாழ்ந்தாலும் சரி இல்ல பிரிஞ்சு இருந்தாலும் சரி … உன்ன தவிர வேற யாரையும் நினைச்சு கூட பார்க்க பிடிக்கல … இது உனக்கும் நல்லா தெரியும் தெரிஞ்சும் வேணும்னு கேட்கிற …”என்று அழுத்தமாக கேட்டவன்,

“இங்கபாரு உனக்கு வேணா நான் வேண்டாதவனா இருக்கலாம் … நான் இல்லாம கூட நீ உன் மீதி வாழ்க்கையை சந்தோசமா வாழ்ந்திடலாம் … பட் எனக்கு அப்படியில்ல எனக்கு எல்லாமே நீதான் … நீயில்லாத நாள்ல உயிரோடு நடமாடிட்டு இருந்தேனே தவிர உயிர்ப்போடு இல்ல … அதுவும் இந்த மூனு வருசமா உன்ன தினமும் தூரத்துல இருந்து பார்த்து ரசிச்சு சிரிச்சு மயங்கினு , எனக்குள்ள செத்துப்போன பல உணர்வுகள மீண்டும் உயிரோடு கொண்டு வந்தேன் … அதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது , அத அனுபவிச்சா தான் புரியும் … உனக்கு என் கூட சேர்ந்து இருக்க பிடிக்கலைன்னா கூட பரவால்லை நான் தனியாவே இருந்துப்பேன் , தயவு செஞ்சு இந்த பொண்ண கட்டிக்கோ அந்த பொண்ண கட்டிக்கோனு உன் உணர்வுகளோடு விளையாடாத …” என்று கோபத்துடன் பேசியவன் மீண்டும் அறைக்குள் செல்வதற்காக திரும்ப ,

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ …” என்று நிறுத்தி நிதானமாய் பேசியவளை கண்டு கோபம் மண்டைக்கு ஏற , ஆவேசத்துடன் அவளை நெருங்கியவன் ,

“என்னதான் உனக்கு பிரச்சனை , இவ்வளவு நேரம் சொன்னது உன் காதுல விழலையா …” என்று கடுப்புடன் கேட்க ,

“நல்லாவே கேட்டுச்சு … ஏதோ ஜென்மம் ஜென்மமா துரத்தி துரத்தி லவ் பண்ணதுபோல உருட்டிக்கிட்டு இருக்க … என்ன பணக்காரின்னு நினைச்சு கரெக்ட் பண்ண பார்த்த பிராடு பயத்தானே … என்னமோ கண்டதும் காதல் ரேஞ்சுக்கு பேசிகிட்டு இருக்க …” என்று நக்கலடித்தவளை கண்டு கோபத்திற்கு பதில் சிரிப்புதான் வந்தது கௌரிக்கு. பிரியாவை தோளோடு சேர்த்து அணைத்தவன் ,

“ஆமா நான் ப்ராடுக்கார பயத்தான் … இந்த ப்ராடுக்கார பயலையே கால்ல விழ வைச்ச கேடி பொண்ணு நீதான் … ப்ராடுக்காரனுக்கு ஏத்த கேடி கணக்கு சரியா இருக்கா … போ போய் தூங்கு … தத்தகா பித்தக்கான்னு எதையாவது உளறிக்கிட்டு இருக்காதா …” என்றவன் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு தூங்க சென்றான்.

மறுநாள் சோம்பலுடன் எழுந்த கௌரி மணியை பார்க்க , ஏழு என்று காட்டவும் அவசர அவசரமாக எழுந்து பல் துலக்கிவிட்டு சமையலை கவனிக்க சமையலறைக்குள் புகுந்துக் கொண்டான். மணி எட்டை தாண்டியும் இன்னும் தூங்கி கொண்டிருந்த பிரியாவை எழுப்பும் பொருட்டு அவள் அறையில் கை வைத்தவனுக்கு ஈஸியாக கதவு திறந்துக் கொள்ளவும் , உள்ளே எட்டி பார்த்தவன் கண்களுக்கு வெறும் படுக்கையே காட்சியளித்தது. அவசரமாக பாத்ரூம்குள் சென்று பார்க்க அங்கேயும் அவள் இல்லாமல் போக தலையில் கைவைத்து கட்டிலில் அமர்ந்துவிட்டான் கௌரி.

தான் சம்மதிக்கவில்லை என்றதும் வீட்டைவிட்டு சென்றவளை நினைத்து மனம் பாரமாகி போக , உட்கார்ந்திருந்தால் வேளைக்கு ஆகாது என்று நினைத்தவன் காரை எடுத்துக் கொண்டு பிரியாவை தேடி அலைந்தான். ஒருவேளை வேலைக்கு சென்றிருப்பாளோ என்று நினைத்து மருத்துவமனை சென்று பார்த்தவனுக்கு , இன்று அவள் வேலைக்கு வரவில்லை கீதா கூறவும் லேசாக அதிர தொடங்கினான் கௌரி.

அதுவரை அவளை எப்படியாவது கண்டு பிடித்து விடலாம் என்று நினைத்தவனுக்கு , இப்பொழுது எங்கே சென்று தேடுவது என்ற குழப்பம் , கீதாதான் ‘அவள் எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை , மறைந்திருந்து உங்களை கவனிக்கிறாள் ‘ என்று தைரியமூட்ட , மீண்டும் தன் தேடலை தொடங்கினான் கௌரி. நடுவே வீட்டிற்கும் சென்று அவள் இருக்கின்றாளா என்று பார்த்தவன் , அவள் போகும் இடங்களை எல்லாம் தேடி சென்றான்.

இரவு ஒன்பது மணியளவில் அசதியுடன் வீட்டிற்கு வந்தவன் சோர்வு மிகுதியில் சோபாவில் விழ , அவன் கை பேசி அழைத்து. யார் என்று பார்க்காமலே அதை அட்டெண்ட் செய்து ஸ்பீக்கரில் போட,

“பிரியா வந்துட்டாளா கௌரி …” என்ற கீதாவின் குரலுக்கு மௌனத்தையே பதிலாக கொடுத்தவனை கண்டு வேதனை கொண்டவள் ,

“கௌரி ,..” என்று சந்தேகத்துடன் அழைக்க ,

“ம்ம்ம் … லைன்ல தான் இருக்கேன் … அவ வந்திருந்தா உங்களுக்கு சொல்லாம விட்டுருப்பேனா …” என்றவன் குரலே சொல்லியது அவன் தேடலின் அளவை.

“ச்சை … சரியான அழுத்தக்காரி … நானும் தெரிஞ்ச இடத்துக்கு எல்லாம் போய் பார்த்துட்டேன் … எங்கையும் இல்ல … எனக்கு அவ கண்டிப்பா உன் கண் முன்னாடி இருந்துதான் உங்கள நோட்டம் விடுறான்னு தோணுது … கல்நெஞ்சுக்காரி … அவளுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க …” என்று புலம்பியவளை கண்டு , அவன் இதழ்களில் புன்னகை அரும்பியது.

“சாப்டீங்களா …” என்று மனம் பொறுக்காமல் கேட்டவளுக்கு , ம்ம்ம் என்று பதில் சொல்லியதில் இருந்தே அவன் சாப்பிடவில்லை என்று அறிந்த கீதாவிற்கு பிரியாவின் மேல் கொலைவெறியே வந்தது. மேலும் சில நொடிகள் பேசியபின் கீதா வைத்துவிட ,

‘எங்கடா போன ப்ரிக்குட்டி …’ என்று புலம்பியவன் சோர்வுடன் கண்ணை மூட , திடீரென்று கண்ணை திறந்து பால்கனி கதவை பார்த்தவனின் புருவம் யோசனையில் சுருங்க , மெல்ல எழுந்து சென்று பூட்டப்படாத கதவை திறந்துக் எட்டி பார்த்தவனின் பார்வையை பார்வையால் கவ்விக் கொண்டாள் பிரியா.
பால்கனியில் இருந்த சேரில் தன்னை குறுக்கி கொண்டு உட்கார்ந்திருந்தவளை கண்டு எந்த மாதிரி உணர்கிறோம் என்றே தெரியவில்லை கௌரிக்கு. காலையிலிருந்து ஒருபிடி சோறு கூட வாயில் வைக்காமல் நாயாய் பேயாய் அலைந்தவனுக்கு அவளை மீண்டும் பார்த்ததும் சந்தோசம் என்றாலும் , வீட்டிற்குள்ளையே இருந்துக் கொண்டு தன்னை அலைக்கழித்தவளை கண்டு கோபம் வர , நேராக அவளருகில் சென்றவன் காலை மடக்கி மண்டியிட்டு அமர்ந்தவன் , அவள் மடிமீது தலைசாய்த்து ,

“ஏண்டா இப்படி பண்ண … காலையிலிருந்து உன்ன காணம்னு அலைச்சுருக்கேன் , கொஞ்சம் கூட உன் மனசு இரங்கலையா …” மனம் பொறுக்காமல் குமறியவனின் தலையை வருடிவிட்டவள் ,

“இதுக்கே இப்படி பீல் பண்ற , நீ மட்டும் நான் சொன்னதுக்கு ஒதுக்கலைனா கண்டிப்பா இந்த உலகத்தை விட்டே போய்டுவேன் … இத உன்ன பயமுறுத்தவோ , இல்ல விளையாட்டுக்கோ சொல்லல சீரியஸ்சா சொல்றேன் … நான் சொன்ன கண்டிப்பா செய்வேன்னு உனக்கு தெரியும் … என்ன யாராலையும் கட்டுப்படுத்த முடியாதுனு உனக்கு தெரியும் … நான் எங்கையாவது ஒரு மூலைல உயிரோட இருக்கணும்னு நினைச்சா , வெண்ணிலாவ கல்யாணம் பண்ணிக்கோ … இல்ல நான் …” என்றவளின் வாயை தன் இதழ் கொண்டு அடைத்தவன் , பின் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளும் அவள் இதழ்களை வெறித்தனமாக தண்டிக்க தொடங்கினான்.

அவள் மூச்சுக்கு திணறவும் தன் இதழை பிரித்தெடுத்தவன் , அவள் முகம் பார்க்காமல் ,

“கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் …” என்று இறுகிய குரலில் கூற , மெல்ல அவன் கையை பற்றி தன் தலையில் வைத்தவளை கண்டு முறைத்தவனை கண்களால் கெஞ்ச , பெருமூச்சை விட்டபடி ,

“ம்ம் … கல்யாணம் பண்ணிக்கிறேன் …” என்று சத்தியம் பண்ண , மென்னகை புரிந்தவளை சில நொடிகள் வெறித்து பார்த்தவன் பின் அதிருப்தியில் தன் தலையை அசைத்தபடி கீழேயிருந்து எழுந்து அங்கிருந்து வெளியேற , கதவருகில் சென்றவனை ,

“பசிக்குது காலைல இருந்து எதுவும் சாப்பிடல …” என்ற பிரியாவின் குரல் தடுக்க , அசையாமல் அதே இடத்தில் நின்றவன் மெல்ல திரும்பி பார்க்க ,

“கருவாட்டு குழம்பு சாப்பிடணும் போல இருக்கு … சமைக்கிறியா …” என்று பாவமாய் கேட்டவளை முறைத்து பார்த்தவனிடம் ,

“எனக்காக உயிர கூட கொடுப்பேன் சொன்ன … செத்த மீன சமைச்சு தரமாட்டியா …” என்று அப்பாவியாய் கேட்டவளின் ஆசையை நிறைவேற்ற சென்றவனை நினைத்து முகம் புன்னகையில் மலர தன் இழப்பை நினைத்து கண்களோ கண்ணீரை சொரிந்தது.
 
Status
Not open for further replies.
Top