All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “கௌரிசங்கர்” - கதைதிரி

Status
Not open for further replies.

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29072

கௌரி - 13

சென்னையில் இருந்து வந்த இரு தினங்கள் பிரியாவின் நினைப்பில் சுற்றியவன் பின் , ‘ச்ச அவளுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு … அவளையே நினைச்சு உன் லைப்ப விட்டுடாத கௌரி்…’என்று நினைத்து மனதை வேறு விஷயத்தில் திருப்பினான்.

இந்நிலையில் தான் ரகுவின் திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு வந்திருக்க , அதை பெண் வீட்டாரிடம் சேர்ப்பிக்கும் பொறுப்பை கௌரியிடம் கொடுத்திருந்தனர். ஏற்கனவே தன் அண்ணனின் நிச்சயத்தில் கலந்துக் கொள்ளாமல் சென்னை சென்றுவிட்டதால் , மறுப்பு சொல்லாமல் பத்திரிகையை தூக்கிக் கொண்டு அதுதான் பிரியாவின் வீடு என்று தெரியாமல் அங்கே சென்றான் கௌரி.

முதல் தடவையாக பார்க்கின்ற மாப்பிளையின் தம்பியை சிறப்பாக வரவேற்று உபசரித்தனர் பிரியாவின் பெற்றோர். சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பியவனை

"தம்பி பின்பக்கம் தான் கொள்ளை இருக்கு பாத்ரூம் போகணும்னா போய்க்கோங்க ..." என்று சேகர் கூறவும் அவரை நன்றியுடன் பார்த்தவன் பின்புறம் செல்ல , அங்கே கிணற்று தண்டில் ஏதோ சிந்தனையில் உட்கார்ந்திருந்த பிரியாவை கண்டு ஷாக்கடித்தது போல நின்றுவிட்டான்.

இனி என்றுமே பார்க்க போவதில்லை என்று நினைத்திருந்தவள் தன் கண்முன்னே இருக்கவும் , ஒரு நொடி கண்ணை மூடி திறந்தவனின் நெஞ்சில் அவளின் கசங்கிய தோற்றம் பசக் என்று ஒட்டிக்கொள்ள, அசையாமல் அவளையே பார்த்திருக்க, உள்ளுணர்வு உந்துதலால் மெல்ல அவனை நோக்கி திரும்பியவளை கண்டு சற்றென்று உள்ளே மறைந்தும் கொண்டான்.

தன் வீட்டிற்கு செல்லும் வழி நெடுகிலும் சுய அலசலில் மூழ்கி போனான் கௌரி. யாரோ ஒரு பிரியாவாக இருந்திருந்தால் என்றுமே தங்கள் இருவர் பாதைகளும் இணையப் போவதில்லை ,ஆனால் பிரியாவோ அண்ணன் மச்சினிச்சி, வருங்காலத்தில் இருவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்திக்க நேரிடும் அப்பொழுது ஒருவரை ஒருவர் சந்திக்காமல் தவிர்ப்பது இயலாத காரியம் என்று நினைத்தவனுக்கு தாங்கள் முத்தமிட்டு கொண்டது நினைவுக்கு வர தலையில் ஓங்கி அடித்துக் கொண்டான்.

‘ச்ச இப்படி ஆகும்னு நினைக்கலையே … எப்படி ஒன்னுமே நடக்காத போல அவ முகத்தில முழிக்க முடியும்’ என்று புலம்பியவன், ‘பிரியாவா … இல்ல வசதியான வாழ்க்கையா… எது உனக்கு வேணும் கௌரி’ என்று தன்னையே கேள்விக் கேட்டுக் கொண்டவனுக்கு எது தனக்கு முக்கியம் என்று தெரியாத மனநிலையில் சுற்றிக் கொண்டிருந்தான்.

இன்று தங்களை அழைக்க வந்த செல்வாவை காணும்வரை குழப்பமான மனநிலையில் இருந்தவனுக்கு, செல்வா கூறிய சில விஷயங்களை கேட்டதும் புரிந்து போனது பிரியாவிற்கு இந்த திருமணத்தில் விரும்பமில்லை என்று . ஏனோ மீண்டும் இன்று அவளை கண்ட நொடி மனம் பந்தயக் குதிரை போல வேகமெடுத்து துடிக்க அப்பொழுதே முடிவுகட்டிவிட்டான் பிரியா தனக்குதான் என்று.

தன் நண்பர்களைக் கொண்டு பிரியாவை இங்கு வரவைத்தவன் , தண்டபாணி சேகர் ஜெயா ரகு காயத்ரியையும் இங்கு வரவைத்திருந்தான். அவர்கள் உள்ளே நுழையும் சத்தம் கேட்டபின்தான் பிரியாவை இழுத்தும் இதழனைத்தான்.

கட்டுக்கோப்பான சேகருக்கு அங்கே கண்ட காட்சியில் உலகமே ஆடி போக அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுவிட்டார். தண்டபாணிக்கோ மகனின் செய்கையில் வெட்கி தலைகுனிந்துக் கொள்ள , சுதாரித்த ரகு “கௌரிஈஈ …” என்று அதிர்ந்து கத்தவும் , அந்த நொடிதான் அவர்கள் வந்தது தெரிந்ததை போல பதறியெழுந்த கௌரியை பதற்றத்துடன் நெருங்கினார் தண்டபாணி. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை கை நீட்டி அடிக்க முடியாமல் தடுமாறியவர்

“டேய் பாவி … என்னடா இதெல்லாம் …” என்று அவன் கையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டபடி குரல் நடுங்க கேட்கவும் , இந்த தடுமாற்றம் எதுவுமில்லாமல் எனக்கு அப்பவே தெரியும் இதான் நடக்கும் என்ற ரீதியில் நடந்த சம்பவத்தால் அசிங்கப்பட்டு தலை நிமிராமல் தடுமாறிக் கொண்டிருந்த பிரியாவை வெளுத்து வாங்கினார் ஜெயந்தி.

“தெரியும்டி … என்னைக்கு இருந்தாலும் குடும்ப மானத்த வாங்குவேன்னு தெரியும் … உன்ன பொறந்த அன்னைக்கே கழுத்த திருகி போட்டிருந்தா இந்த அசிங்கம் வந்திருக்காது … நீயெல்லாம் பொண்ணாடி …மானங்கெட்ட நாயே … ” என்று அவள் கன்னத்தில் மாறி மாறி அறைந்து படி கதறியவரிடம் இருந்து பிரியாவை இழுத்த காயத்ரியை கண்டது அவர் கோபம் முழுவதும் அவளிடம் திரும்பியது.

“எல்லாம் உன்னாலதான் … சொல்ல சொல்ல மீறி அவளுக்கு சப்போர்ட் பண்ணியே பார்த்தியா எங்க கொண்டுவந்து நிறுத்திருக்கானு … குடும்ப மானமே போய்டுச்சு, இப்போ நான் என்ன பண்ண போறன் …மாப்பிள்ள வீட்டுல என்ன பொண்ணு வளர்த்திருக்கனு என் மூஞ்சுலதான் துப்பிட்டு போவாங்க…” என்று ஆத்திரத்தில் மேலும் பேச கூடாததை எல்லாம் பேச கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையை இழந்த பிரியாவிற்கு தன்னிடம் நடந்ததை கேட்டறியாமல் தானாகவே முடிவு கட்டிய தன் அன்னையை கண்டு கோபம் வர, இங்கே நடந்த செயலுக்கு மறுப்பு சொல்லாமல் தன் வாயை மூடி அமைதி காத்தாள்.

அவள் நினைத்திருந்தாள் கௌரியை கையை காட்டிவிட்டு ஈஸியாக இதிலிருந்து விலகியிருக்கலாம் , ஆனால் ஜெயாவின் குற்றசாட்டு அவளின் கோபத்தை கிளறிவிட தன் சம்மதத்தோடு தான் நடந்தது என்று தன் அமைதியின் மூலம் அவர்களுக்கு பதில் கொடுத்தாள் . அதே சமையம் தனக்கு விருப்பமில்லாத கல்யாணத்திலிருந்து வெளியேறும் வாய்ப்பாக இதை எண்ணியவள் இந்த நிகழ்வை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைத்தவளுக்கு நன்கு புரிந்தது இது எல்லாம் கௌரியின் திட்டமே என்று.

அன்று தான் செருப்பால் அடித்ததற்கு இன்று பழி வாங்குகிறான் என்று புரிய , எதுவரை அவன் செல்கிறான் என்று பார்க்க எண்ணியவளுக்கு கௌரியை சமாளிப்பது ஒரு பொருட்டாகவே படவில்லை. அவள் அமைதியைக் கண்டு மேலும் கடுப்பான ஜெயா

“வாய திறந்து சொல்லுடி … செல்வா தம்பிக்கு நாங்க என்ன பதில் சொல்றது … இப்படி குடும்ப மானத்த சந்தி சிரிக்க வச்சிட்டியே … வாய திறடி …”என்று கோபத்துடன் கத்த, பிரியாவோ ‘ம்ம்ம் … என்ன கேட்டா அந்த கருவாயன மாப்பிளையா பார்த்த … இப்போ மட்டும் எதுக்கு என்கிட்ட கேட்கிற நீயே எதையாவது சொல்லிக்கோ …’ என்று மனதில் ஜெயந்தியின் புலம்பலுக்கு சந்தோஷத்துடன் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

இதற்கு மேலும் வாயை மூடிக் கொண்டு நின்றால் நன்றாக இருக்காது என்று நினைத்த தண்டபாணி ,

“கௌரி … உன்கிட்ட இருந்து இத எதிர்பார்கல … நீ மட்டும் அசிங்க பட்டிருந்தா கண்டுக்காம போயிருப்பேன் … ஆனா ஒரு பொண்ணு லைப்பும் அடங்கியிருக்கு … இங்க நடந்ததுக்கு என்ன சொல்ல போற …” என்று பொறுமையாக விசாரித்தவரை கண்டு முகம் சிடுசிடுக்க ஜெயந்தி நின்றிருக்க ,’என்ன இவரு இவ்வளவு ஸ்லோவா இருக்காரு … இந்தாளோட பிளட் தான் அந்த பிராடு பயலுக்கும் ஓடுது போல … அதான் அவனும் மந்தமா இருக்கான் …’ என்று மனதில் தண்டபாணியை அர்ஜித்து கொண்டிருந்தாள் பிரியா.

ஒருமுறை அங்கே கூடியிருந்தவர்களை ஒரு பார்வை பார்த்தவன் பின் தன் தந்தையிடம் ,

“அது … நானும் ப்ரிக்குட்டியும் லவ் பண்றோம்ப்பா … சென்னைல தான் ரெண்டு பேரும் சந்திச்சுக்கிட்டோம் … எனக்கு பிடிச்சு போய் லவ் சொன்னேன் , அவங்க வீட்டுல வேற மாப்பிள்ளை பார்த்ததால கொஞ்சம் தயங்கினா … இப்போ அண்ணன் கல்யாணத்துக்கு அவங்க வீட்டுக்கு போய்வரவும் ப்ரிக்குட்டிக்கும் என்மேல லவ் வந்திடுச்சு …” என்றவன் பின் ,

“எங்களை எப்படியாவது சேர்த்து வச்சுடுங்க பா … பிரிச்சுடாதீங்க … அவங்க வீட்டுல பேசி எனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்க சொல்லுங்க பா …” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்ச , உள்ளுக்குள் அதிர்ந்து போனார் தண்டபாணி . தங்களிடம் சென்னையில் நடந்ததாக அவன் கூறிய கதை என்ன இன்று கூறுவது என்ன என்று குழம்பி போனவருக்கு மகனின் வார்த்தையில் சுத்தமாக நம்பிக்கையில்லை.

“விளையாடாத கௌரி … இது உங்க வாழ்க்க சம்பந்தம் பட்ட விஷயம் … உன் விளையாட்டு தனத்தால வாழ்க்கைய கெடுத்துக்காத…” நீ கூறுவதை நம்பவில்லை என்னும் விதமாக பேச , அதுவரை பேரதிர்ச்சியில் நின்றிருந்த சேகருக்கு ஒருவேளை இது கௌரியின் செயலாக இருந்திருந்தால் என்ற சந்தேகம் தோன்ற

“நீ சொல்லுடா இந்த தம்பிதானே உன்ன வலுக்கட்டாயமா பிடிச்சு இழுத்துச்சு … நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்கன்னு சொல்றது பொய்தானே … உண்மையை மறைக்காமா அப்பாகிட்ட தைரியமா சொல்லுடா , நான் பார்த்துகிறேன் …” என்று தன் மகளிடம் கனிவாக பேசியவரைக் கண்டு உள்ளுக்கு துடித்து போனாள் பிரியா.
தன் மகளை சந்தேகிக்காமல் கனிவாய் பேசியவரை கண்டு அடிவாங்கியதை போல துடித்து போனவள், ஆம் என்று கூறி அவரிடம் தஞ்சம் அடைந்து விடலாமா என்று ஒருநொடி தடுமாறியவள், சட்ரென்று சுதாரித்து பதில் பேசாமல் தலை குனிந்து நிற்கவும்,

“அப்பா கேட்கிறீங்களா , வாயை திறந்து பதில் சொல்லுடி … அமைதியா இருந்து ஏன் எங்கள உயிரோட கொள்ளுற…” என்று ஜெயந்தி தன் பங்குக்கு ஒப்பாரி வைக்க , பொறுமையிழந்த சேகர்

“அமைதியா இருந்தா என்ன அர்த்தம் பிரியா…” சற்று அழுத்தத்துடன் கேட்கவும், தலை நிமிர்ந்து ஒருநொடி அவரை பார்த்தவள் தலைகுனிந்தபடி இறங்கிப் போன குரலில்

“கௌரி சொன்னது எதுவும் பொய் இல்லப்பா…” என்று கூற , தன் உயிர் தன்னை விட்டு இந்த நொடியே போகாதா என்றளவுக்கு மனதில் அடிவாங்கியவர், இறுகி போன முகத்துடன்

“அப்போ செல்வா …”என்று குரல் கமற கேட்டவர் பின்,

“கொஞ்சம் கூட எங்கள நினைச்சு பார்க்கல … உனக்கு நடந்த நிச்சயத்திற்கும் மதிப்பு தரல அப்படித்தான…” என்றவருக்கு வார்த்தை கோர்வையாக வராமல் தொண்டையடைக்க , பதில் கூறாமல் தலை குனிந்து நின்றவளின் அருகில் சென்ற சேகர் ,

“அப்போ செல்வாக்கு என்ன பதில் சொல்ல போற … நிச்சயம் ஆகி இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்னு முடிவு பண்ண பிறகு …வேற ஒருத்தன் கூட காதல் சொல்றது எவ்வளவு கேவலம் … அசிங்கமா இருக்குமா … மாப்பிள வீட்டுல என்ன பதில் சொல்ல போற … சொல்லு பிரியா …” என்று ஆத்திரத்துடன் பேசியவருக்கு பதிலளிக்காமல் தலை குனிந்து நின்றவளின் கன்னத்தை பிடித்து முகத்தை நிமிர்த்தியவர் ,

“ வாய திறக்காம இருந்தா என்ன அர்த்தம் … பதில் சொல்லு … செல்வாக்கிட்ட என்ன குறை கண்ட … நல்ல குணமான பையன் உன்ன கடைசி வரைக்கும் கண் கலங்காம காப்பாத்துற திறன் அவர்கிட்ட இருக்கு , அவரை போய் … ச்ச என் பொண்ணுன்னு சொல்லிக்கவே அசிங்கமா இருக்கு …” என்று அருவருப்புடன் பேசியவரை கண்டவளுக்கு கோபம் வர

“என்ன குறையா …” என்று பதிலுக்கு அழுத்தமாய் கேட்டவள் ,

“எனக்கு என்ன குறைப்பா … ஊமையா , செவிடா … இல்ல கைகால் விளங்காத பொண்ணா … அப்புறம் எப்படிப்பா உங்களுக்கு அந்த செல்வாவ மாப்பிள்ளையா பார்க்க தோணிச்சு…” என்றவளை “வாய மூடுடி …” என்று அதட்டினார் ஜெயா.

“தொட்டா ஒட்டிக்கிற கருப்பு …அவருக்கு வேணா வெள்ளையா இருக்கிற பொண்ண பார்த்து கல்யாணம் பண்றது வாழ்நாள் லட்சியமா இருக்கலாம் … அதுக்கு நான் பலியாக முடியுமா … நாளைக்கே கல்யாணம் முடிஞ்சு ரோட்டுல ஜோடியா நடந்து போனா பாக்கிறவன் என்னதான் பா கேவலமா பேசுவான் …”

“சரி விடுங்க அப்படியே சகிச்சுட்டு வாழ்ந்தாலும் , நாளைக்கு பொறக்க போற குழந்தை அவர போல கருங்கருங் கருப்பா பொறந்தா … அந்த குழந்தையோட மனசு என்ன பாடுபடும் நினைசீங்களா … உங்களுக்கு பொண்ண பொறந்த பாவத்துக்கு நான் வேணா கஷ்டப்படலாம் … என் குழந்தை எதுக்கு கஷ்டப்படணும் … உங்களை போல கையாலாகாதா அம்மா நானில்ல …” என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் காயத்ரி.

பிரியா பேசிய பேச்சை கேட்டு கௌரியே திகைத்து போய் நின்றிருக்க , மற்றவர்களின் நிலையை சொல்லவும் வேண்டுமா. அதுவும் மாப்பிள்ளை வீட்டினரின் முன் தன்னை மகள் அசிங்கபடுத்தவும் யாரையும் தலை நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்ற தந்தையை கண்டுதான் கோபம் கொண்டு பிரியாவின் கன்னத்தில் காயத்ரி அறைந்தது .

கௌரியோ ‘ஆப்ப வாலண்டையரா நாமளே சொருகிகிட்டோமோ …’ என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்க , அங்கே கூடியிருந்தவர்களை விலக்கி கொண்டு முன்னே வந்தான் செல்வா.

தூங்காமல் முழித்திருந்தவனின் பார்வையில் பதட்டத்துடன் சேகர் செல்வது பட , ஏதோ பிரச்சனை என்று நினைத்தவன் தன் தந்தையை அழைத்துக் கொண்டு அங்கே வர நாராசமாய் கௌரியின் வார்த்தைகள் அவர்கள் காதில் விழ , கொதித்து போன வேலு திமிறிக் கொண்டு அவர்களை நெருங்க நினைக்க அவரை தடுத்திருந்தான் செல்வா.

ஆனால் பிரியாவின் பேச்சு தன்மானத்தை சீண்ட , பொறுக்க முடியாமல் அவள் முன் சென்று நின்றவன், இறுகிய முகத்துடன் இரண்டு கைகளையும் கூப்பி,

“உங்களுக்கும் உங்க குழந்தைக்கும் அந்த கஷ்டமே வேணாம்ங்க … ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கணும்னு நினைக்கிறது முட்டாள் தனம் … உஙகள கஷ்டப்படுத்தியத்துக்கு மன்னிச்சுடுங்க …” என்று மன்னிப்பு வேண்டியவனின் இருகைகளையும் அவசரமாக பற்றிக் கொண்டார் சேகர்.

“தம்பி என்ன மன்னிச்சுடுங்க … உங்களுக்கு பெரிய தலைகுனிவ கொடுத்துட்டேன் … என் பொண்ணு உங்களுக்கு வேணாம் … உங்க மனசுக்கு நல்ல பொண்ணு கண்டிப்பா அமையும் தம்பி…” என்று கையை பிடித்து கொண்டு மன்னிப்பை வேண்ட , அவர் கையை விலகிவிட்டபடி

“உங்க மேல எனக்கு வருத்தம் இல்லைங்க …” என்றவன் அடுத்த நொடி அங்கே நிற்க பிடிக்காதவனாக தன் தந்தையை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

அவர்கள் சென்றபின் நேராக தண்டபாணி முன்பும் ரகு முன்பும் நின்ற சேகர் , அவர்களை பார்த்தும் கைகூப்பியவர் ,

“இங்க நடந்த சம்பவத்துக்கு உங்க எல்லார் கிட்டையும் மன்னிப்பு கேட்டுக்கிறேன் … ஒரு பான சோற்றுக்கு ஒரு சோறு பதம் சொல்லுவாங்க … அப்படி நினைச்சு என் பொண்ணு காயத்ரிய தப்பா நினைச்சிடாதிங்க … என் பொண்ணு கண்ட கழிசடை போல இல்ல பொறுப்பான பொண்ணு … நீங்க இங்க நடந்த பிரச்சனையை மனசுல வச்சு என் பொண்ணு கல்யாணத்த தயவு செஞ்சு நிறுத்திடாதீங்க …” என்று தொண்டையடைக்க பேசியவரின் கையை இறுக பற்றிய தண்டபாணி ,

“ச்ச ச்ச என்ன இப்படி பேசுறீங்க … அப்படி பார்த்தா உங்க பக்கம் மட்டும் தப்பு இல்ல எங்க பக்கமும் இருக்கு … மொதல்ல ரகு கல்யாணம் நடக்கட்டும் … மத்தத அப்புறமா பேசலாம் …” என்று ஆறுதல் கூற ,

“மாமா கவலபடாதிங்க இந்த ஜென்மத்துல காயத்ரிதான் எனக்கு … யாரோ பண்ண தப்புக்கு ஏன் காயத்ரிய வேணாம் சொல்லுவேன் நினைக்கிறீங்க…” என்று ரகுவும் தன்மையாக பேச, கசந்த முறுவலை சிந்திய சேகர் ,

“என் பொண்ணு கயாத்ரி கல்யாணத்த மட்டும் பேசதான் எனக்கு உரிமை இருக்கு … மத்தவங்கள பத்தி என்கிட்ட பேச ஒன்னும்மில்ல விருப்பமும் இல்ல …அப்புறம் சம்பந்தி உங்ககிட்ட நாலு பொண்ணுனு சொல்லிருப்பேன் … மன்னிச்சுடுங்க அதுல என் கடைசி பொண்ணு மூனு மாசத்துக்கு முன்னாடியே இறந்து போய்டுச்சு …” என்று துக்கத்துடன் பேசியவரை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போய் பார்த்திருக்க

“என்ன பேசுறீங்க … தப்பு பண்ணாலும் அவங்க நம்ம புள்ளைங்க இல்லையா … சட்டுனு வார்த்தையை விடாதிங்க … நாமதான் கூட இருந்து அவங்கள நல்வழி படுத்தனும்…” என்று தண்டபாணி கூறிக் கொண்டிருக்கும் போதே, கோபத்துடன் யாரையும் மதிக்காமல் அங்கிருந்து வேகமாக வெளியேறினாள் பிரியா.

தப்பு செய்துவிட்டு தங்களை மதிக்காமல் வெளியேறியவளின் செய்கையை கண்டு ,

‘சுத்தம் கொஞ்சம் கூட மரியாதை தெரியாது போல … இதையா புடிச்சுருக்குனு சொல்றான் …” என்ற தண்டபாணி தன் மகனை சந்தேகத்தோடு பார்க்க, ரகுவோ ‘இது உனக்கு தேவையா …’ என்ற ரீதியில் தம்பியை பார்த்திருக்க ,ஆப்பசைத்த குரங்கின் நிலையில் இருந்தான் கௌரி.

தன் தங்கையின் செய்கையில் மிகவும் அடிபட்ட காயத்ரி மெல்ல கௌரியை நெருங்கி ,

“உண்மையிலயே நீங்க பிரியாவ லவ் பண்றீங்களா … இல்ல சென்னை வந்திருந்தபோ உங்கள ஏதோ ஒரு வகைல அசிங்கப்படுத்தி அதுக்கு பழி வாங்கிறீங்களா … ஏன்னா பிரியாவ பத்தி எனக்கு நல்லா தெரியும் … என்ன உங்க அம்மா ஸ்தானத்துல வச்சு பதில் சொல்லுங்க ப்ளீஸ் …” என்று கண்களில் கண்ணீர் திரண்டிருக்க கெஞ்சியவளின் புத்திசாலித்தனத்தை உள்ளுக்குள் மெச்சியப்படி

“ஐயோ அண்ணி இதுல போய் விளையாடுவனா …அதுவும் உங்க தங்கச்சி போல ஒரு கேரக்டர யாராவது விளையாட்டுக்கு கூட ஏமாத்த முடியுமா … நான் பொய் சொல்லல அண்ணி” என்றவன் தன் மொபைலில் பிரியாவும் இவனும் சேர்ந்திருந்த சில படங்களை காட்டி ,

“பாருங்க … இத பார்த்த பின்னையும் பொய் சொல்றேன் நம்புறீங்களா …” என்றவன் அங்கிருந்தவர்களிடமும்
படத்தை காட்டி ,

“ஒரு விஷயம் சொல்லணும் … அத கேட்டா நீங்கலாம் எப்படி எடுத்துப்பீங்கனு தெரில …” என்று தயங்கியவன்,

“ ஆக்சுவலா நானும் ப்ரிக்குட்டியும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண ரெஜிஸ்டர் ஆபீஸ் வரைக்கும் போய்ட்டோம் … சில இஸ்ஸுஸ் கடைசி நிமிசத்துல கேன்சல் பண்ண வேண்டியதா போச்சு …” என்றதும் வாழ்க்கையே வெறுத்தவராக அங்கிருந்து நொந்து போய் வெளியேறினார் சேகர்.

மீண்டும் தன் புலம்பலை ஜெயா ஆரம்பிக்க , தண்டபாணிக்கு எதுவோ புரிவது போல இருந்தாலும் தன் மகன் பேச்சில் நம்பிக்கை இல்லாதவராக குழம்பி போய் நின்றிருக்க , அவரை நெருங்கிய காயத்ரி கையெடுத்து கும்பிட்டப்படி,

“மாமா … என்ன தப்பா எடுத்துக்காதீங்க … எங்க கல்யாணத்தோட சேர்த்து இவங்க கல்யாணத்தையும் நடத்திடுங்க ப்ளீஸ் … அவ மாறி போனதுக்கு நானும் ஒரு காரணமோனு மனசு துடிக்குது … ப்ளீஸ் மாமா…” என்று கெஞ்சியவளைபாவமாக ஆறுதல் படுத்தியபடி ,

“அது பண்ணலாமா … ஆனா திடீர்னு நடந்தா சொந்தகாரங்க தப்பா பேசுவாங்க … முதல்ல உங்க கல்யாணத்த முடிச்சுடுவோம் … அப்புறமா ஒரு நல்ல நாள் பார்த்து இவங்க கல்யாணத்த நடத்திக்கலாம் …” என்றவரை கண்ணீருடன் பார்த்தவள் ,

“அப்போ எங்க கல்யாணத்தையும் தள்ளிவைங்க மாமா … அவ கல்யாணம் நடக்காம நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் …” என்று திடமாய் பேசியவளை கண்டு ரகு அதிர்ந்து போய் பார்க்க , அதற்குள் பதறி ஓடிவந்த ஜெயா காயுவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தபடி ,

“ஏண்டி ஏன் … அக்காவும் தங்கச்சியும் எங்கள உயிரோட குழிதோண்டி புதைக்க முடிவு பண்ணிடீங்களா …” என்று கதறியவரிடமிருந்து காயத்ரியை பிடித்து இழுத்து தன்னருகில் நிறுத்திக் கொண்ட ரகு,

“என்ன பழக்கம் அத்த இது … ஆவூன்னா கையை நீட்டிட்டு போறீங்க … காயு சொன்னதுல என்ன தப்பிருக்கு … கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்கதானே இதுக்கு எல்லாம் காரணம் இவதானு குத்தம் சொன்னீங்க … அதுக்காகத்தான் எங்க அப்பாகிட்ட கெஞ்சிகிட்டு இருக்கா …” என்று கடிந்துக் கொண்டவனை கண்ணீருடன் கைகூப்பிய காயு ,

“என்ன மன்னிச்சுடுங்க உங்ககிட்ட கேட்காம நானே முடிவு எடுத்துட்டேன் … என்ன தப்பா எடுத்துக்காதீங்க …” என்று கண்ணீர் விட்டு அழுதவளை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்ல நினைத்த மனதை அங்கிருப்பவர்களை நினைத்து அடக்கிக் கொண்டவன் ,

“என்ன நீ எதுக்கு எடுத்தாலும் கும்பிடு போடுற … நீ எது பண்ணாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்னு இத்தனை நாளுல தெரிஞ்சுகிட்டேன் காயு … அப்புறம் நமக்குள்ள என்ன மன்னிப்பெல்லாம் கேட்கிட்டு …” என்று புன்சிரிப்புடன் அவளை தேத்தியவன் , பின் தன் தந்தையிடம்

“ப்பா … நீங்க எதுக்கு தயங்குறீங்கன்னு புரியுது … அம்மா என்ன சொல்வாங்கன்னுதானே … அத அவங்க செல்ல புள்ளகிட்ட விட்டுடுவோம் …” என்றவன் கௌரியிடம் திரும்பி ,

“நாளைக்கு குறித்த முகூர்த்தத்துல எங்க கல்யாணம் நடக்கணும்னா , அது உன்கைல தான் இருக்கு …” என்றவன் ,

“காயு எது நடந்தாலும் நான் உன்கூட இருப்பேன் …” காயுவிடம் உறுதியளித்தபின் அங்கிருந்து செல்ல, வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்டுக்கிட்டோமோ என்ற ரீதியில் நின்றிருந்த கௌரியை , அவன் நண்பர்கள் பார்த்த பார்வையும் அதையே சொல்லிற்று.

அதன்பின் திருமண மண்டபமே அல்லல் படுமளவிற்கு ஆடி தீர்த்துவிட்டார் வளர்மதி. அவரை ஓரளவிற்கு சமாளிக்க முடிந்த கௌரியால் பிரியாவை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியாமல் திணற , கடைசியில் காயத்ரியின் கண்ணீர் ஜெயிக்க , சுற்றத்தாரின் முணுமுப்புகளுடன் , வளரின் கோப பார்வையில் பொசுங்கியும் , சேகர் ஜெயாவின் மனதை சாகடித்து பிரியாவின் கழுத்தில் மூன்று முடிச்சுட்டு தன் வாழ்க்கை துணைவியாக ஏற்றுக் கொண்டான் கௌரி.
 
Last edited:

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29100

கௌரி - 14

இரு ஜோடி மணமக்களும் தனி தனி காரில் மாப்பிளை வீட்டில் வந்திறங்க , திடீர் ஜோடியான கௌரி தம்பதியை காண அந்த தெருவே கூடியிருந்தது. சிரித்தபடி காரிலிருந்து இறங்கியவன் அங்கே குழுமி இருந்தவர்களை பார்த்து ஹாய் என்று அசால்டாய் கையசைத்தவனிடம் ,

“என்னப்பா கௌரி இப்படி பண்ணிட்ட … முன்னமே சொல்லிருந்தா உங்க அப்பா என்ன வேணாமுன்னா சொல்லிருக்க போறார்…” என்று சற்று வயதில் பெரியவர் ஆதங்கத்துடன் கேட்க ,

“உங்க கல்யாணம் எப்படி நடந்துச்சு பெரிப்பா …” என்று பதில் கேள்வி கேட்டவனிடம் ,

“ஏன் எல்லா கல்யாணமும் போல பத்திரிகை அடிச்சு சொந்தத்து முன்ன தாலி கட்டி நடந்துச்சு …” என்று ஏன் கேட்கிறான் என்று புரியாமல் பதிலளித்தவரை பார்த்து புன்னகைத்தவன் ,

“ம்ம்ம் … பாருங்க குறிப்பிட்டு சொல்லுற அளவுக்கு எதுவுமே இல்ல … ஆனா என் கல்யாணத்தை பத்தி ஊரே கூடி பேசியிருக்கும், எவ்வளவு வருஷம் ஆனாலும் எங்கள பாக்கும் போதெல்லாம் எங்க கல்யாணம் உங்க மனச விட்டு போகாது …யாருக்காவது எடுத்துக்காட்டனும்னா எங்கள தான் சொல்லுவாங்க … இப்படி எல்லார் மனசுலையும் ஆழமா பதியிற போல கல்யாணம் பண்ணிருக்கேன் … என்ன பார்த்து இப்படி பண்ணிட்டணு கேள்வி வேற கேட்கிறீங்க…” என்று நீண்ட விளக்கம் கொடுத்தவனை

‘உன் கல்யாணம் மக்கள் மனசுல பதிய எங்க கல்யாணம்தான் கிடைச்சுதா …’ என்ற ரீதியில் ரகு முறைத்து பார்க்க , அவனிடம் கேள்வி கேட்டவரோ ‘இவன பத்தி தெரிஞ்சும் கேள்வி கேட்டேன் பாரு என்ன சொல்லணும்…’ என்று நொந்துக் கொண்டவர் ,

“எல்லாத்தலையும் விளையாட்டு … ம்ம்ம் … கல்யாணம் எப்படி வேணா நடந்திருக்கட்டும் … நீயும் மருமகளும் சண்ட சச்சரவு இல்லாம ஒத்துமையா குடும்பம் நடத்தணும்…” முதன் முதலில் கிடைத்த வாழ்த்தில் முகம் கொள்ள சிரிப்புடன் அவரை அணைத்துக் கொண்டான் கௌரி.

அதற்குள் ரகு காயத்ரிக்கு ஆலம் சுற்றப்பட்டு வீட்டிற்குள் அழைத்து செல்ல , அவர்களை தொடர்ந்து உள்ளே நுழைய போன பிரியாவின் கையை வேகமாக ஓடிவந்து பிடித்துக் கொண்ட கௌரி ,

“இருடா ப்ரிக்குட்டி … நமக்கும் ஆலம் சுத்துவாங்க …” என்றவனின் பிடியிலிருந்து தன் கையை உருவிக் கொண்டவளின் நெஞ்சம் தகதக என்று எரிந்துக் கொண்டிருந்தது. தன் அன்னை தந்தையின் பேச்சையே கேட்காதவள் இவன் பேச்சையா கேட்க போகிறாள் , அவனை அலட்சியப் படுத்திவிட்டு உள்ளே நுழைய போனவளின் கையை இறுக பற்றியவன் ,

“அம்மோவ் … சீக்கிரம் ஆரத்தி எடுத்துட்டு வாமா…என் பொண்டாட்டிக்கு கால் வலிக்குதாம் …” எதுவும் நடவாததை போல தன் அன்னையை அழைத்தவனைக் கண்டு ‘கொஞ்சமாவது அடங்குறானா பாரு … கோபத்துல இருக்கிறவள இன்னும் சீண்டிவிடுறானே …’ என்று மனதில் நினைத்த தண்டபாணி ,

“அம்மாடி விஜி …” என்று தன் மகளை அழைத்தவர் , அவள் வந்ததும்

“ தம்பிய ஆர்த்தி எடுத்து உள்ள கூட்டிட்டு போ …” என்றவரை முறைத்தவள்

“இதுக்குதான் கூப்டிங்களா…தானா கல்யாணம் பண்ணவங்களுக்கு தானவே உள்ள வர தெரியும் …” என்று கடுப்புடன் கூறியவள் திரும்பி நடக்க ,

“ஹலோ ஹலோ சிஸ்டர் … வொய் ஆங்கிரி …தான நடந்தாலும் ரகு போல எல்லார் முன்னையும் தாலி கட்டிதான் நடந்துச்சு … அவனுக்கு சுத்துனது போல எங்களையும் ஆர்த்தி எடுத்து உள்ள கூப்பிடு …” என்று சிறு நக்கலுடன் பதிலளிக்க ,

“அவனுக்கு பண்ணது போலையா … நான் ஆர்த்தி சுத்துனதுக்கு இரெண்டாயிரம் பணம் கொடுத்தான் … நீ கொடுப்பியா...” என்று கேலி பேச

“அவ்வளவுதான இரு ரகுகிட்ட வாங்கி தரேன் … எனக்கு கொடுக்காம எங்க போய்ட போறான் …” என்றவன் ,

“ரகு …ரகு …” என்று உள்ளே குரல் கொடுக்க ,

“ம்ம்க்கும் … ரெண்டாயிரத்துக்கே அவன்கிட்ட கையை நீட்டுற … இந்த லட்சணத்துல உன்ன நம்பி வேற உன் பொண்டாட்டி தையிரியமா கழுத்த நீட்டியிருக்கு … சுத்தம் …” என்று குத்தி பேசியவளை அதட்டிய தண்டு ,

“அம்மாடி காயத்ரி … நீயும் கௌரிக்கு அண்ணிதான் …உன் தங்கச்சி வாழ்க்கை நல்லாயிருக்கணும்னு உன்னவிட அதிகமா யாரு வாழ்த்த போறா … போ போய் ஆராத்தி எடு…”என்றவர் தன் மூத்த மருமகளையும் அழைத்து,

“சுமதி நீயும் போ …சேர்ந்து ஆலம் சுத்தி அவங்களை உள்ள கூட்டுக்கோ …” என்கவும், மகிழ்ச்சியுடன் தம்பதியருக்கு ஆலம் சுற்றி இருவர் நெற்றியுலும் திலகமிட்ட காயுவை கௌரி புன்னகையுடன் பார்க்க , கண்களால் பொசுக்கி கொண்டிருந்தாள் பிரியா.

தன் தங்கையின் கோபத்தை கண்டதும் காலையில் நடந்ததை நினைத்து பார்த்தாள் காயு. திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்று அடம்பிடித்தவளிடம் ,

“இப்போ முடிவா என்னதான் சொல்ற பிரியா … நீதானே எல்லார் முன்னாடியும் கௌரிய லவ் பண்றேன் சொன்ன … இப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன் சொன்னா என்ன அர்த்தம் …” தொய்ந்து போன குரலில் காயத்ரி கேட்க ,

“இப்போலாம் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது … நான் என் பியூச்சர பார்க்க வேணாமா , திரும்ப சென்னைக்கு போறதா இருக்கேன் … அதான் உன் அப்பா தெளிவா சொல்லிட்டாரே அவரோட கடைசி பொண்ணு செத்து போச்சுன்னு …போய் உன் கல்யாணத்த என்ஜோய் பண்ற வேலையை பாரு …” என்று அலட்சியமாய் பேசியவளை யோசனையோடு பார்த்த காயு ,

“ஓகே உன் விருப்பப்படி நடக்கட்டும் … நானும் என் கல்யாணத்த நிறுத்திடுறேன் … என்னாலதான் நீ குட்டி செவுறா நிக்கிறேன்னு அம்மா சொல்றாங்க , உன்ன அம்போன்னு விட்டுட்டு என்னால மட்டும் சந்தோசமா கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ முடியுமா …” என்று அழுத்தமாய் பேச ஏற்கனவே தன் மேல் கோபமாக இருக்கின்ற பெற்றோருக்கு இந்த விஷயம் தெரிந்தால் என்று எரிச்சலடைந்த பிரியா ,

“இங்கபாரு சும்மா பூச்சாண்டி காட்டி எமோஷனல் ப்ளாக் மெயில் பண்ணாத … நான் அந்த கௌரியை உண்மையாவே லவ் பண்ணல … என்கிட்ட செருப்படி வாங்கியவன் அவன் , இப்போ என்ன பழிவாங்கதான் கல்யாண பண்ண நினைக்கிறான் , அவனை போய் கல்யாணம் பண்ண சொல்ற … அதுக்கு பேசாம என்ன புடிச்சு பாழ்கிணத்துல தள்ளி விட்டுட்டு…” என்று கோபத்துடன் கத்தியவள் சென்னையில் நடந்ததை கூற , இடிந்து போய் உட்கார்ந்துவிட்டாள் காயத்ரி.

அவளிடம் எதுவும் பேசாத காயு நேராக சென்று தன் பெற்றோரிடம் திருமணத்தை நிறுத்தும்படி கூற , கொதித்து போனார் ஜெயா. சேகரோ நெஞ்சை பிடித்துக் கொண்டு ஓய்ந்து போய் நாற்காலியில் உட்கார , அவளை பின் தொடர்ந்து வந்த பிரியா ஆத்திரத்துடன் அவள் கையை பற்றி வெளியே இழுத்து வந்தவள் ,

“இப்போ என்ன கல்யாணம்தான பண்ணனும் … பண்ணிக்கிறேன் , ஆனா கல்யாணம் முடிஞ்ச பிறகு என்ன நீ கட்டு படுத்த முடியாது … நான் பாட்டுக்கு வீட்ட விட்டு போய்கிட்டே இருப்பேன் புரியுதா …” என்று முகம் சிவந்து போய் கத்த ,

“ம்ம்ம் …சரி உன்ன எதையும் பண்ண சொல்லி போர்ஸ் பண்ண மாட்டேன் … பட் கல்யாணம் முடிஞ்ச கையேடு வீட்ட விட்டு போறதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் … எனக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் அந்த வீட்டுல தான் இருப்பேன் சத்தியம் பண்ணிக் கொடு … உனக்காக நிறைய பண்ணிருக்கேன் எனக்காக இத கூட செய்ய மாட்டியா …” என்று கையை ஏந்தியபடி கண்ணீருடன் கேட்டவளை ஒருநொடி ஆழ்ந்து பார்த்தவள் ,

“ம்ம்ம் சரி … சத்தியம் பண்றேன் குழந்தை பிறக்கிற வரைக்கும்தான் , அந்த வீட்டுல என்ன நடந்தாலும் அங்க இருப்பேன் அப்புறம் என் வேலையை பார்த்துகிட்டு போய்கிட்டே இருப்பேன் , சரியா …” என்று கையில் அடித்து சத்தியம் பண்ணியவளை இழுத்து அணைத்துக் கொண்டாள் காயத்ரி.

காலையில் நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தவளை பூஜை ரூமில் விளக்கேற்ற சொல்ல, விளக்கேற்றி வேண்டிக் கொண்டு வந்தவளை தொடர்ந்து பிரியாவின் கையில் தீப்பெட்டியை கொடுத்து பூஜை அறைக்குள் அழைத்து சென்றார் கௌரியின் பெரியம்மா .

“சாமி விளக்கேத்திட்டு கும்ட்டு வா …” என்றவர் வெளியேறி விட , வேண்டா வெறுப்பாய் வத்திக்குச்சியை உரசி விளக்கு அருகில் கொண்டு செல்ல , அவளின் போதாத காலம் விளக்கருகில் சென்றதும் நின்றுவிட , கடுப்பானவள் மீண்டும் முயற்ச்சி செய்ய மீண்டும் அணைந்து போனது. இப்படியே பல குச்சிகளை வீணாக்கியவளுக்கு பதட்டம் தொற்றிக் கொள்ள மேலும் சில குச்சிகளை வீணாக்கினாள். அதற்குள்

“ஏன்டா கௌரி … உன் பொண்டாட்டிய விளக்கேத்த சொல்லி பத்து நிமிஷம் ஆகுது இன்னும் வெளில வரல … ஒருவேளை விளக்க புதுசாவே செய்யுதோ …” என்று கிண்டலடிக்க, என்னவானது என்று எட்டி பார்த்த கௌரிக்கு பிரியா விளக்கேற்ற முடியாமல் தடுமாறுவது நன்றாக புரியவும் அவசரமாக பூஜை அறைக்குள் நுழைந்தான்.

“என்ன ப்ரிக்குட்டி விளக்கேத்த தெரிலனா மாமன கூட்டிருக்க வேண்டியதுதான … பாரு எவ்வளவு குச்சி வேஸ்ட் …” என்றவன் அவள் கையிலிருந்த வத்தி குச்சியை வாங்கி பற்றவைத்து விளக்கருகில் எடுத்து சென்று திரியை பற்றவைக்க , பற்றிக் கொள்வதற்கு முன்னே தீபம் அணைந்து போக டென்ஷன் ஆனான் கௌரி.

மீண்டும் மீண்டும் முயற்சித்து பல குச்சிகளை வீணாக்கியவனின் உடல் வேர்வையில் தொப்பலாக நனைந்திருக்க ,

“இன்னுமா விளக்கேத்திட்டு இருக்காங்க , சுதா என்னனு போய் பாரு …” என்ற பெரியம்மாவின் குரல் கேட்கவும் , உதட்டை கடித்து அதி தீவிரத்துடன் குச்சியை பற்ற வைத்த கௌரி அதை விளக்கு அருகில் கொண்டு செல்ல , காற்றில் ஆடி அணைய தொடங்கிய தீயை கண்ட பிரியா தன் இரு கைகளை குவித்து கௌரியின் கையை அணைத்தபடி தீபம் அணையாமல் பார்த்துக் கொள்ள , வெற்றிகரமாக விளக்கை ஏற்றினான் கௌரி.

நீண்ட போராட்டத்திற்கு பின் தீபம் சுடர்விட்டு எரிவதை கண்டு இருவர் முகத்திலும் புன்னகை அரும்பியது. பிடித்தமில்லாத திருமணம் ஆனாலும் இருவரும் சேர்ந்து முயன்றால் வாழ்க்கையில் சந்தோசத்தை கொண்டு வரலாம் என்று இந்த சம்பவம் அறிவுறுத்த , அதை உணர்ந்துக் கொள்ளதான் இருவருக்கும் போதிய பக்குவம் இல்லை.

“ஹப்பாடா …” என்று சிரித்தபடி நிமிர்ந்தவன் பிரியாவை பார்க்க , வெற்றிக்களிப்புடன் நிமிர்ந்தவளின் முகம் கௌரியை கண்ட நொடி சிரிப்பை தொலைத்து கோபத்தை தத்தெடுத்தது.

விருட்டென்று கையை விலக்கி கொண்டவள் கோபத்துடன் அங்கிருந்து வெளியேற , சிறு சிரிப்புடன் தலையசைத்தபடி அவளை தொடர்ந்து சென்றான் கௌரி.

இவர்கள் இருவரும் ஜோடியாக வெளியே வருவதை பார்த்த விஜி நேரே தன் அன்னையிடம் சென்று ,

“ம்மா … அந்த கௌரி பய பொண்டாட்டி காலுல விழுந்து கிடக்கிறான் …அஞ்சு நிமிஷம் கூட அவள விட்டு பிரிஞ்சு இருக்க மாட்டுறான் … பாக்கவே பத்திகிட்டு வருது …” என்று ஏற்கனவே கோபத்தில் இருந்தவரின் கோபத்தை தூண்டுவது போல பேசி மேலும் அவர்கள் மேல் இருந்த வெறுப்பை பன்மடங்காக பெருக்கும் வேலையில் ஈடுபட்டாள்.

அணைத்து சடங்கையும் காயத்ரி ரகுவிற்கு முறையாக செய்தவர்கள் , கௌரிப்ரியாவை கண்டு கொள்ளாமல் விட , தானாக முன்வந்து சில சடங்குகளை அவர்களுக்கு செய்தாள் காயத்ரி. ஒருகட்டத்திற்கு மேல் பிரியாவிற்கு கோபமும் வெறுப்பும் வர

“நான் ரெஸ்ட் எடுக்கணும் …” என்று அக்காவின் காதில் முணுமுணுத்தவளை பார்க்க பாவமாக இருக்க, அங்கிருந்த ஒற்றை அறையில் படுத்துக் கொண்டிருந்த ரகுவை தட்டி எழுப்பினாள் காயத்ரி. தாலி கட்டியபின் கிடைத்த முதல் தனிமை , ரகுவின் ஆசையை கிளறிவிட சட்ரென்று அவள் கையை பிடித்து இழுத்து தன் மேல் போட்டுக் இறுக்கி கொள்ள , படபடக்கும் இதயத்துடன் வெட்கம் பாதி ஆசை பாதி என்று அவன் அணைப்பில் சில நொடிகள் ஒன்றியவள் பின் ,

“விடுங்க வெளில எல்லாரும் இருக்காங்க … என்னங்க பிரியா கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுக்கணும் சொல்றா … நீங்க கொஞ்சம் வெளில இருக்கீங்களா …” என்று சிறு தயக்கத்துடன் கேட்க , அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தவன் பின் மெல்ல தலையசைத்து முடியாது என்று மறுக்க , சற்றென்று காயத்ரியின் கண்கள் கலங்கின.

மெல்ல அவன் பிடியிலிருந்து எழுந்தவள் , உள்ளே போன குரலில்

“என …எனக்கு வெளில வேல இருக்கு போகட்டா…” அவனிடம் சம்மதம் கேட்டு நின்றவளை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன் , ம்ம்ம் என்று தலையாட்ட , தொங்கி போன முகத்துடன் வெளியே செல்ல முயன்றவளின் கைகளை பிடித்து மீண்டும் இழுத்தவன் ,

“என்ன காயு ரூம விட்டுக்கொடுக்க சொல்லி கெஞ்சுவ , அத சாக்கா வச்சு சிலதை லஞ்சமா வாங்கிக்கலாம் நினைச்சா ,பதி சொல்ல தட்டாத மனைவியா இருக்கியே …” என்று அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டபடி பேச , அந்த முதல் ஒற்றை முத்தத்துக்கே சொக்கி போனாள் காயு. கண்ணை மூடி அதை அனுபவித்தவளின் இதழை மெல்ல தன் இதழ் கொண்டு வருடியவன் ,

“சீக்கிரம் ரூமவிட்டு போய்டுவோம் இல்லனா , பர்ஸ்ட் நைட்க்கு பதில் பர்ஸ்ட் பகல் நடந்திடும் … உனக்கு ஓகேனா சொல்லு …” என்று கண் சிமிட்டி குறும்பாய் சிரிக்க , செவ்வானமாய் சிவந்து போனாள் காயு.

ரகு வெளியேறியதும் அறைக்குள் புகுந்துக் கொண்ட பிரியாவை கண்டு அங்கிருந்தவர்கள் அதிருப்தியில் முகம் சுழிக்க ,

“அத்த திடீர்னு நடந்த கல்யாணத்தால அதிர்ச்சில இருக்கா … நான்தான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க சொன்னேன் …” என்ற காயுவை ,

“திடீர்னு நடந்த கல்யாணமா … இத எங்கள நம்ப வேற சொல்ற … நல்லா பிளான் போட்டு ஒத்த செலவு இல்லாம , ஒரே கல்யாண செலவுல ரெண்டு கல்யாணம் பண்ணிட்டு , திடீர்னு நடந்த கல்யாணமாம்ல …” என்று விஜி ஏறிக் கொண்டு வர முகம் கறுக்க பதில் பேசமுடியாமல் தலை குனிந்து நின்றாள் காயு. ஆனால் காயுவின் அக்கா ராதாவிற்கு தங்கள் குடும்பத்தை கேவலமாக பேசுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் , எதிர்த்து பேச போனவளை கண்களால் கெஞ்சி தடுத்த காயுவை கொலைவெறியுடன் பார்த்தவள் ,

“இங்கபாரு அப்பா அம்மாவ அசிங்கமா பேசுறத நீ வீனா வாய மூடிட்டு கேட்டுகிட்டு இரு … ஆனா எனக்கு அந்த தலையழுத்து இல்ல …” என்று சீரியவளிடம்

“ப்ளீஸ் ராதா … அவங்க ஒன்னும் நடக்காதத சொல்லலையே …” என்றவளை ராதா முறைக்க ,

“தப்பா எடுத்துக்காத அவங்க சொன்னது போல ஒரே செலவுல ரெண்டு கல்யாணம் நடந்துச்சுல … அந்த கோபம் இருக்கத்தானே செய்யும் , அந்த நேரத்துல பிரியா கௌரி ரூம்க்கு போனது தப்புதானே…” என்று விளக்கம் கொடுக்க , ராதாவின் ஆத்திரம் முழுதும் பிரியாவிடம் திரும்பியது.

“எல்லாம் அவளால வந்தது … முதல்ல போய் எழுப்பிவிடு … வீட்டுக்கு வந்த முதல் நாளே ரூம்குள்ள போய் அடைஞ்சுக்கிட்டா பேசத்தான் செய்வாங்க … போ போய் எழுப்பிவிடு …” என்றவளுக்கு

“பாவம் ராது அவ கொஞ்சம் நேரம் தூங்கட்டும் …” என்று சப்போர்ட் பேசியவளை பார்த்து தலையில் அடித்துக் கொண்ட ராதா ,

“உனக்கு எல்லாம் பட்டாதான் புத்திவரும் …” என்றுவிட்டு பேசாமல் போய் உட்கார்ந்துக் கொள்ள , எதிர்காலத்தை நினைத்து அய்யோ என்றிருந்தது காயத்ரிக்கு.

நேரம் ஆகா ஆகா ரகுவின் கண்கள் காயத்ரியை வட்டமிடுவதை கண்ட பெரியம்மா ,

“டேய் தம்பி கொஞ்சம் நேரம் போய் ரெஸ்ட் எடுடா … அம்மாடி நீயும் போடா …” என்று காயத்ரியிடம் ரகுவை அறைக்கு அழைத்து செல்ல பணிக்க , அவனுக்கும் சிறிது நேரம் படுத்து எழுந்தால் போதும் என்றிருக்க அறைக்கு செல்ல முயன்றவனை கண்களால் ஜாடை காட்டி தடுத்து நிறுத்தினாள் காயத்ரி.

ஆசையுடன் எழுந்தவன் அவளை முறைத்தபடி அமர , கண்களால் கெஞ்சினாள் காயத்ரி. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கௌரி ,

“டேய் ரகு உன்ன நினைச்சாலும் பாவமாதான் இருக்கு … உனக்கு பர்ஸ்ட் நைட் நடக்கணும்னா , உடனடியா மாடி மேல எனக்கொரு குட்டி ரூம் ரெடி பண்ணி கொடு … இல்ல மவனே இப்போதைக்கு அது நடக்காது , பார்த்துக்க …”என்று பயம்காட்ட யோசனையில் ஆழ்ந்த ரகு அடுத்த காரியமாக தகரத்தை கொண்டு சிறிய அறையை ஒருமணி நேரத்தில் தயார் செய்திருந்தான்.

பகலும் போய் இரவும் வர காயத்ரியை இரவில் நடக்கும் சடங்கிற்கு தயார் செய்ய , சீண்டுவார் இன்றி அறையில் சுருண்டுக் கடந்தாள் பிரியா. காயத்ரியாலும் இவர்களை மீறி பிரியாவிடம் செல்ல முடியாமல் போக தவித்து போனாள்.

அவர்கள் இருவரும் அறைக்கு செல்லும் வரை அந்த அறையிலிருந்து வராமல் இருந்தவள் , லேசாக கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்த காயத்ரியின் கோலத்தை கண்டே புரிந்துக் கொண்டவள் வெளியேற , என்ன பேசுவது என்று புரியாமல் கலக்கத்துடன் நின்ற காயுவை ஆறுதலாக அணைத்துக் கொண்ட ரகு ,

“காயு … இன்னைக்கு நம்மளோட ஸ்பெஷல் டே … அத மத்தவங்களுக்காக ஸ்பாயில் பண்றத , நான் விரும்பல …” தன் தங்கையை மத்தவங்கள என்று கூறியது வருத்தமாக இருந்தாலும் , அவன் கூற்றில் உள்ள உண்மை புரிய தெளிந்தவள் அவனை பார்த்து அழகாக புன்னகைத்தாள்.

வெளியே வந்த பிரியாவை கண்ட பெரியம்மா ,

“அடடா … சின்ன மருமகளை மறந்துட்டோம் பாரு … ஏய் விஜி வா வந்து உன் தம்பி பொண்டாட்டிய அலங்கரிச்சு விடு …” என்று கட்டளையிட , முறைத்துக் கொண்டு வராமல் முணுமுணுத்துக் கொண்டிருந்த விஜியை கண்டு

“ வளரு , இவதான் சின்ன புள்ள விவரம் பத்தாது , ஏன் உன் பையன் கூட பேசாம காலம் முழுசா இருந்திடுவியா , இதெல்லாம் நம்ம சந்ததியை பெருக்கிற சடங்கு , வா வந்து உன் மருமகள கூட்டிட்டு போ…” என்றவருக்கு பதில் சொல்லாமல் படுத்திருக்க , சுதாவை அழைத்த பெரியம்மா ,

“இந்த வீட்டு பொம்பளைங்களுக்கு பிடிவாதம் ஜாஸ்தி , நீயாவது நான் சொல்றபடி கேளு … இந்த பாப்பாவை கூட்டிட்டு போய் அலங்கரிச்சு சாமி கும்பிடவிட்டு மேல அனுப்பிவிடு …” அதிகாரத்துடன் உத்தரவிட , மறுத்து பேசாமல் பிரியாவை அழைத்துக் கொண்டு சென்றாள் சுதா.

அவசரமாக குளித்து முடித்து பின் முகத்தில் சிறு ஒப்பனை செய்து சாமியை கும்பிட்டபின் கையில் பால் சொம்பை வாங்கும் வரை வாயை திறந்து ஒரு வார்த்தை பேசாமல் யாருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் அமைதி காத்தாள் பிரியா.

மாடிக்கு செல்லும் வழியை காட்டிவிட்டு தன் கடமை முடிந்ததென சுதா விலகி கொள்ள , கொதிக்கும் இதயத்தோடு மாடிப்படி ஏறியவள் , மாடியில் இருந்த தகரத்தால் ஆனா சிறு அறையை கண்டதும் ஓஹ் என்று கத்தி அழ வேண்டும் போல இருக்க , கஷ்டப்பட்டு அடக்கி கொண்டாள். தான் கண்ட கனவு என்ன தன்னுடைய ஆசைகள் என்ன , கடைசியில் ரோட்டோரத்தில் வசிப்பவரை போல சிறு தகர கொட்டாயா தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றத்தில் நெஞ்சு வெடித்துவிடும் அளவிற்கு வலித்தது.

இன்னும் ஒரு வருடத்திற்கு பல்லை கடித்து சகித்து கொள்ள வேண்டும் என்று நினைத்தவள் மெல்ல அறைக்குள் நுழைய , பின்னாலிருந்து கதவை சாற்றிய கௌரி ,

“வெல்லம் டு அவர் பேலஸ் ப்ரிக்குட்டி …” என்று சிரிப்புடன் வரவேற்றவன் ,

“அப்புறம் ப்ரிக்குட்டி மாமாவோட பழி வாங்கும் படலம் எப்பூடி … பாரு நீ ஒரு நாலு அஞ்சு பேர் முன்னாடிதான் என்ன செருப்பால அடிச்ச … ஆனா உன்ன வாழ்க்கை பூரா என் காலடில கிடக்கிறத நினைச்சு நினைச்சு அழுறது போல செஞ்சுட்டேனா …” என்று கையை ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தவனை நோக்கி பறந்து வந்தது பால் நிறைந்த சொம்பு .
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29114

கௌரி - 15

இரவு பதினோரு மணியளவில் ரகு காயுவை தவிர மொத்த குடும்பமும் மேலே தான் குழுமியிருந்தனர். பிரியா மாடிக்கு சென்ற சில நொடிகளில் மேலிருந்து கேட்ட சத்தம் போக போக பயங்கரமாக கேட்கவும் கூடிவிட்டனர் கௌரியின் அறை முன்னே.

“கௌரி கௌரி …” என்று அவன் அறைக்கதவை தட்டினார் அக்காவின் கணவர். சில தட்டல்களுக்கு பிறகே மெல்ல தலையை நீட்டியவன் அங்கே நின்ற மொத்த குடும்பத்தையும் கண்டு அவசரமாக வெளியே வந்தவன் அறைக்கதவை மூடிக் கொள்ள , அவன் தோற்றத்தை ஆராய தொடங்கினர் அவன் குடும்பத்தார்.

தலை கலைந்து , முகத்தில் வேர்வை அரும்புகள் பூத்திருக்க கசங்கிய பனியனுடன் ஏதோ போரில் கலந்துக் கொண்டவன் தோற்றத்தில் நின்றவனை கண்ட மாமா ,

“என்னடா கௌரி இது …” என்று அவன் கோலத்தை சுட்டிக் காட்டி கேட்க, முகத்தில் வெட்கத்தின் சாயலை கொண்டு வந்தவன்

“என்ன மாமா …” என்று புரியாது போல கேட்டவனை

“ஏன் இவர் கேட்டது உனக்கு புரியலையா … தெலுங்கிலய கேட்டாரு …” எகிறிக் கொண்டு வந்த விஜியை கண்ட கௌரி ,

“அட அக்கா நீயும் இங்கதான் இருக்கியா … கொஞ்சம் தள்ளு ,யார்யாரெல்லாம் வந்திருக்கீங்கனு பாத்துக்குறேன் …” என்று எக்கி பார்த்தபடி பேசியவன் தன் அன்னையை கண்டதும் ,

“மீஈஈ இங்கதான் இருக்கியா … கொஞ்சம் இருமா என் பிரிக்குட்டிய கூப்பிடுறேன் … கல்யாணம் ஆனதுல இருந்து உன் காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கல எங்கள ஆசிர்வாதம் பண்ணினா எங்க வாழ்க்கை ஜெகஜோதியா இருக்கும் … என்ன இருந்தாலும் என்ன பெத்தவ இல்லையா …” என்றவன் ,

“தாயிற் சிறந்த கோவிலும் இல்லை …” என்று பாடியபடி ஓர் அடி எடுத்து வைக்க, உன்னை வாழ்த்துவதா துரோகி என்ற பார்வை பார்த்தவர் அங்கிருந்து கீழே இறங்கி போக.

“ஹாங் ஒரு டிக்கெட் அவுட்...” என்று வாய்விட்டு கூறியவன் ,

“ஏன் டாடி அன்னைக்கு உனக்கும் அம்மாக்கும் நடுவுல படுத்துட்டேன்னு இப்போ பழி வாங்க வந்திருக்கியா … முக்கியமான வேலையில இருக்கும் போது நடுவுல டிஸ்டர்ப் பண்றியே இது பெரிய மனுஷன் பண்ற வேலையா …” என்று குற்றம் சாட்டவும் ,

“ச்சைக் … அப்பாகிட்ட பேசுற மாதிரியா பேசுற … விவஸ்தை இல்லாதா ஜென்மம் …” என்றவருக்கு ,

“ உன் புள்ள உன்ன போல விவஸ்தை கெட்டவனாதான் இருப்பான்... பின்ன மகன் பர்ஸ்ட் நைட்ல என்ன நடக்குதுன்னு எட்டி பாக்குற … விவஸ்தை உள்ள மனுஷன் யாரவது இத செய்வாங்கள …” என்று சீண்ட ,

“ச்சீ ச்சீ … இதெல்லாம் எங்க உருப்புட போகுது … இங்க வந்த என்ன …” என்று தன்னையே நொந்தபடி கீழே இறங்கியவரை நக்கலாக பார்த்தவன் தன்னையே முறைத்துக் கொண்டிருந்த சரசமாவை பார்த்து கண்ணாடிக்க அவரும் வாயில் வந்த நல்ல நல்ல வார்த்தைகளை திட்டிவிட்டு சென்றார்.

“என்ன எல்லாரையும் அசிங்கமா பேசி விரட்டி விட்டுட்டா யாரும் கேட்க மாட்டாங்கன்னு நினைச்சியா … எதுக்கு அவ்வளவு சத்தம் வந்துச்சு , உள்ள என்ன நடக்குது … எங்க உன் பொண்டாட்டி …” என்று அடுக்கடுக்காய் விஜி கேள்விகளை கேட்க ,

“ஓஹோ … என்ன நடக்கும்னு தெரியாமத்தான் ரெண்டு பெத்து போட்டியா …” என்று ஆரம்பித்தவனை இடைமறித்த மாமா ,

“நீ கீழ போ …” என்று தன் மனைவியை விரட்ட ,

“என்ன நீங்க அவன் வேணும்னு பேசுறான் அதுக்கு பயந்துகிட்டு கீழை போ சொல்றீங்க …” போகாமல் மறுப்பு தெரிவித்த மனைவியை அதட்டி அனுப்பியவர் ,

“எப்பா ராசா யு கன்டினியோ …போனா போகுது காப்பாத்துவோம்னு நல்ல எண்ணத்துல வந்தா அசிங்கமா பேசி தொறத்தி விடுறியா … நீ பேசினத கேட்டு பதட்டத்துல சரியா கவனிக்காமா தெரிச்சு ஓடிட்டாங்க … காலைல வெளில வரும்போது தலைல அடி பட்டத மறைச்சுட்டு வா … இல்லனா நீ பொண்டாட்டிகிட்ட அடிவாங்கினது எல்லாருக்கும் தெரிஞ்சிடும் …” என்று நக்கலாக பேசியவர் அங்கிருந்து போக,

காயம் பட்ட நெற்றியை தடவிக் கொடுக்க , சிறு எரிச்சல் உண்டாகவும் , ‘ராட்சஷி …’ என்று முணுமுணுத்துக் கொண்டே கதவை சாற்றி திரும்பி பார்க்க , அந்த அழகான ராட்சஷி சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தபடி அவனை உக்கிரமாய் முறைத்துக் கொண்டிருந்தாள்.

அவளை சீண்டி பார்க்க ஆசைப்பட்டு வார்த்தைகளை விட்ட அடுத்த நொடி தன்னை நோக்கி பறந்து வந்த சொம்பை கண்டு அதிர்ந்து போனவன் கடைசி நிமிசத்தில் சுதாரிக்க , அவன் நெற்றியை உரசிவிட்டு மினி பாலாபிஷேகம் நடத்திவிட்டு தகர சுவற்றில் மோதி நங் என்று கீழே விழுந்தது.

அடுத்தது என்ன என்று அவன் சுதாரிப்பதற்குள் அவன் போட்டிருந்த சட்டையை இழுத்து பிடித்து கிழித்தவள் , ருத்ரதாண்டவமே ஆடி தீர்த்து விட்டாள். அவளிடமிருந்து விழுந்த அடிகளிலிருந்து தப்பிப்பதற்கே போதும் போதும் என்று இருக்கையில் திடீரென்று கதவு தட்டப்படவும் , அவள் கைகள் இரண்டையும் இறுக்கி பிடித்துக் பின்னால் மடக்கி கொண்டு அவளை அணைத்துக் கொண்டவன் , அவள் காதில் கிசுகிசுப்பாக

“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் … தெரியாம சொல்லிட்டேன் … வேணா இப்படி வச்சுக்கலாம் , என்ன பழிவாங்க நானே உனக்கு ஒரு சான்ஸ் கொடுத்ததா வச்சுக்கலாம் … கதவ யாரோ தட்டுறாங்க , திறக்கப்போறேன் அவங்க போற வரைக்கும் கொஞ்சம் அமைதியா இரு ப்ரிக்குட்டி… நாமெல்லாம் துப்பினா துடைச்சிக்கிற சங்கம்ல , நமக்கு கோபம் வரலாமா…” என்று கெஞ்சியவன் பயந்துக் கொண்டேதான் கதவை திறந்தான். அங்கே மொத்த குடும்பமும் ஆராய்ச்சி பார்வையுடன் நிற்க , இவர்களை கோக்குமாக்காக பேசித்தான் அனுப்ப முடியும் என்று நினைத்து அதை செயல்படுத்தி வெற்றியும் கண்டான்.
முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தவளை கண்டு,

‘ராட்சஷி … யாருடா அது பொண்ணுங்கள பூ போன்றவள், மெல்லிய தென்றலெனு உருட்டுனது … ச்ச எவ்வளவு தடவ புருஷன் காரன் பொண்டாட்டி கிட்ட பூரி கட்டையால அடி வாங்கினதா வர ஜோக்க நினைச்சு சிரிச்சுருப்பேன் … இப்போதான் புரியுது எவனோ உண்மையிலயே அடி வாங்கியவன்தான் அத எழுதிருப்பானு …’ என்று நொந்துக் கொண்டவன் , அவளை மீண்டும் சீண்டாமல் ஒரு ஓரமாய் படுத்துக் கொள்ள , பிரியவும் உட்கார்ந்த இடத்திலே சுருண்டுக் கொண்டாள்.

நடுவில் கௌரிக்கு முழிப்பு தட்ட ,மெல்ல கண் விழித்தவனுக்கு குளிரில் சுருண்டு கடந்த பிரியாவை காண பாவமாக இருக்க , கீழே சிதறிக் கிடந்த துணிகளில் ஒரு கைலியை எடுத்து உதறியவனின் மூக்கை துளைத்தது துவைக்காத கைலியின் நாற்றம் , அதை பிரியாவின் அருகில் எடுத்து சென்று

“ச்சைக் இந்த கப்படிக்குது … சரி தூக்கத்துல என்ன தெரிய போகுது , காலைல சீக்கிரமா எழுந்து எடுத்துட வேண்டியதுதான் …” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் அதை பிரியா மேல் போர்த்திவிட்டு , அலங்கோலமாய் கிடந்த அவன் துணிகளை எல்லாம் எடுத்து ஒரு மூலையில் போட்டுவிட்டு தானும் கட்டியிருந்த வேஷ்டியை கொண்டு தனக்கும் போர்த்திக் கொண்டு தூங்கி போனான்.

அவனிடமிருந்து வந்த மெல்லிய குறட்டை ஒலியில் கண்ணை திறந்தவளுக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு அழுகை பீறிட்டு வர , ‘இன்னும் கொஞ்ச காலம்தான் … இன்னும் கொஞ்ச காலம்தான் …’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவள் அவன் போர்த்தியிருந்த கைலியை முகத்தை சுழித்துக் கொண்டே விரல் நுனியால் விலக்கி தூர எறிந்தவள் தன் புடவையைக் கொண்டே போர்த்திக் கொண்டாள்.

மறுநாள் விடிந்ததும் காலை உணவை உண்டபின் புதுமண ஜோடிகள் மறுவீட்டு விருந்துக்கு பெண் வீட்டிற்கு வாடகை அம்பாசிடர் காரில் போய் இறங்கினர். வந்ததும் வராதமாய், ராதா மாப்பிள்ளை வீட்டில் பிரியா நடந்துக் கொண்ட முறையை தன் அன்னையிடம் குற்றப்பத்திரிகை வாசிக்க , ஏற்கனவே அவள் மேல் வெறுப்பில் இருந்தவருக்கு இன்னும் தூபம் போட்டது போல ஆகா , தனியாக பிரியாவிடம் பேசும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.

தோட்டத்தில் உள்ள கிணற்றடியில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த பிரியாவிற்கு இந்த உலகத்தில் தான் மட்டும் தனியாக விடப்பட்ட உணர்வு. நேற்று வரை தன் வீடாக உரிமையுடன் வலம் வந்த இடம் இன்று சேகர் ஜெயாவின் புறக்கணிப்பால் உரிமையில்லாத இடமாக தோன்ற , எதிலும் கலந்துக் கொள்ளாமல் தனிமையே தேடி வந்துவிட்டாள். பிரியாவை தனியாக கண்ட ஜெயா ,

“எழுந்துரு டி …” என்று அவள் கையை வலிக்க பற்றி எழுப்பியவர் ,

“உன் உடம்புல என் ரத்தம்தான் ஓடுதான்னு சந்தேகமா இருக்கு …”

“நீதான் சொந்தம் வேணா பெத்த அம்மா அப்பா வேணாம்னு எங்க மூஞ்சுல கரிய பூசின … சரி பெத்து தொலைச்ச கடமைக்கு பொறுத்துகிட்டா , இப்போ என் பொண்ணு வாழ்க்கைல விளையாட பாக்கிறியா …”

“நாங்கதான் நீ செத்துட்டன நினைச்சு தலை முழுகிட்டோம்ல … உனக்கும் எங்களுக்கும் எந்த உறவும் இல்லைனு ஆனா புறம் எப்டி டி என் பொண்ண தொந்தரவு பண்ணலாம் …” என்று வார்த்தையால் குத்தி கிழித்தவரை வெறுமையான முகத்தோடு கேட்டுக் கொண்டிருந்தவளை கண்டு மேலும் கோபம் வர

“உனக்கு இவ்வளவுதான் மரியாத … என் பொண்ணு வாழ்க்கைல உன்னால பிரச்சனை வந்துச்சு உன்ன எதுவும் பண்ண மாட்டன் … நடுரோட்ல எல்லாரும் வேடிக்க பார்க்க ஒட்டு துணியில்லாம என் மேல மண்ணெண்ணெய ஒத்திக்கிட் பத்தவச்சுப்பேன் … இது சத்தியம் டி … உன்ன பெத்துக்கு எனக்கு நானே கொடுத்துகிற தண்டன …” என்று ஒட்டுமொத்த வெறுப்பை உமிழ்ந்தவர் , பின்

“நான் உன்ன உன் அப்பனுக்குத்தான் பெத்தது உண்மைனா , இனி இந்த வாசப்படி மிதிக்காத மரியாதை கெட்டுடும் …” வெறுப்புடன் கூறியவர் திரும்பியும் பார்க்காமல் வீட்டிற்குள் சென்றார்.

கூடத்தில் டீவி ஓடிக் கொண்டிருக்க , ஆண்கள் மூவரும் ஆளுக்கொரு திசையில் உட்கார்ந்துக் கொண்டு டீவியை வெறித்துக் கொண்டிருந்தனர் . ஒரே நாளில் முகம் களையிழந்து நோயாளி போல காட்சியளித்த சேகரை கண்டு ரகு கௌரி இருவருக்கும் பாவமாக இருக்க , மெல்ல பேச்சு கொடுத்தான் ரகு. நடுநடுவே கௌரியும் சேகரிடம் ஏதோ கேட்க பதிலளிக்காமல் சிறு தலையசைப்பை மட்டும் கொடுத்தவரை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல் அமைதியானான் கௌரி.

மதிய விருந்து தயாரானவுடன் , ரகுவை சாப்பிட அழைத்தார் ஜெயா. கை கழுவ எழுந்த ரகு சங்கடத்துடன் தம்பியை பார்க்க , எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் சிரித்த முகத்துடன் எழுந்தவன் ரகுவுடன் சேர்ந்து கை கழுவ செல்ல சிறு சங்கடத்துடன் பார்த்திருந்தார் சேகர்.

பெரிய இலையில் கறிசோறும் மீன் வறுவலும் நண்டு இறாலும் பரிமாறியிருக்க , கையை தேய்த்துக் கொண்ட கௌரி ,

“அத்த எல்லாமே நீங்க சமைச்சதா …வாசனையே மூக்க துளைக்குது , இன்னைக்கு ஒரு புடி புடிச்சுட வேண்டியதுதான் …” என்று ஜெயந்தியிடம் பேசியவனை கண்டுக் கொள்ளாமல் சமையலறைக்குள் புகுந்துக் கொள்ள , கடுப்பானான் ரகு. அவன் தொடையை தட்டி சாப்பிடு என்று கண்களால் சைகை காட்டியவன் ஒரு வாய் சோற்றை வாய்க்குள் தள்ளி ரசித்து சாப்பிட , பரிமாற வந்த காயத்ரியை

“நீயும் உட்கார்ந்து சாப்பிடு …” என்று தடுத்த ஜெயா அவளுக்கும் ஒரு இலையை போட ,

“அம்மா பிரியா எங்கம்மா …”காயத்ரியும் ,

“அண்ணி ப்ரிக்குட்டியும் சாப்பிட கூப்பிடுங்க …” என்று கௌரியும் ஒரே நேரத்தில் கூற , முகம் கடுகடுக்க நின்றிருந்தார் ஜெயா.அதற்குள் வீடு முழுவதும் தேடி பார்த்த ராதா ,பிரியாவை காணோம் என்று வந்து நிற்க , அடுத்த வாய் எடுத்து சென்ற சோற்று உருண்டையை இலையில் போட்ட கௌரி ,

“நல்லா பார்த்தீங்களா கா …” என்று ராதாவிடம் கேட்டபடி எழ கூட சேர்ந்து எழ போன ரகுவை தடுத்து ,

“அவங்க உனக்காக ஏற்பாடு பண்ண விருந்துடா … கல்யாணத்துலதான் எங்களால சந்தோஷமில்லாம போச்சு … அட்லீஸ்ட் இதுலையாவது அந்த சந்தோசத்த கொடு …” என்றவன் கையை கழுவிக் கொண்டு பிரியாவை தேடித் கிளம்பினான்.

இரண்டு மணி நேரத்திற்கு மேல் பிரியாவை தேடி அலைந்து சோர்ந்து போனான் கௌரி. இதற்க்கு நடுவில் அழைத்து பேசிய ரகுவிடம் பிரியாவை பார்த்து விட்டதாக பொய் சொல்லி வைத்தவன் நாயாய் பேயாய் அலைந்து , ஒருவேளை ஊருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாண்டிற்கு சென்றிருந்தால் என்று நினைத்தவன் கடலூர் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றான்.

ஒவ்வொரு பிளாட்பார்மாக தேடி சென்றவனின் மொத்த சக்தியும் வடிந்து போக , சோர்வுடன் கண்களை அலையவிட்டவனின் பார்வையில் தன்னையே முறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த பிரியா பட , இடுப்பில் கையை குற்றி தலைகுனிந்து சில நொடிகள் வேகமாக மூச்சை விட்டவன் பின் கண்ணை இறுக்கி மூடி தலையை குலுக்கி வெயிலால் ஏற்பட்ட மயக்கத்தை விரட்டியவன் மெல்ல அடி மேல் அடி வைத்து அவளை நோக்கி நடந்து சென்றான்.

தன்னை ஒவ்வொரு பிளாட்பார்மாக தேடியளைந்த கௌரியை முன்னமே கண்டுக் கொண்டாள் பிரியா. இந்த உலகத்தில் தனக்கென்று யாருமில்லை என்று நினைத்தவளுக்கு அந்த தேடல் இதமாக இருக்க , வைத்த கண் எடுக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதுவும் தன்னைக் கண்டதும் தலைசாய்த்து வேக மூச்சுகளை விட்டவனை கண்டவளுக்கு அவன் தனக்காக துடித்திருப்பது புரிய , தனலாய் கொதித்து கொண்டிருந்த மனதில் கூடை ஐஸ் கட்டியை கொட்டியதை போல இருக்க, தனக்காக துடிக்கவும் ஒரு ஜீவன் இருப்பதை கண்டு உள்ளுக்குள் குதூகலித்தவளின் மனசாட்சி , இவனால் தானே எல்லாம் என்று எடுத்துரைக்க , இளக தொடங்கிய மனதை இறுக்கி கொண்டவள் அவன் அருகில் வந்ததும் , அவர்கள் ஊருக்கு செல்லும் பேருந்து நிற்க விருட்டென்று அதில் ஏறிக் கொண்டாள்.

அவள் பின்னையே ஏறியவன் தன்னை வெயிலில் அலையவிட்டவளின் மேல் கோபம் கொண்டு கடுப்புடன் அவள் அருகில் சென்று உட்கார, கோபம் கொண்ட மனது அவளை சீண்டிப் பார்க்க தூண்டியது . உர்ரென்று அருகில் உட்கார்ந்திருந்தவளின் முகத்தை அடிக்கடி பார்த்தவன் ,

“அழுவுரியா ப்ரிக்குட்டி …” என்று அவள் முகத்தை குனிந்து பார்த்து கேட்க, அவனை சீண்டாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தவளின் முகத்தை மீண்டும் உற்று பார்த்தவன்

“அச்சச்சோ … கண்ணு கலங்கியிருக்கு … உண்மையிலயே அழுறியா ப்ரிக்குட்டி…” என்று சும்மா உட்கார்ந்திருப்பவளை அழுகிறாயா என்று கேட்டு கேட்டு கடுப்பின் உட்சத்திற்கு கூட்டி சென்றவனை பொறுமையிழந்து ,

‘எதற்கு …’ என்று கேள்வியுடன் பார்த்தவளை கண்டு பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டவன்

“ம்ப்ச் பென்ஸ் கார்ல போக ஆசப்பட்ட புள்ளய டவுன் பஸ்ல போக வச்சுடுச்சே இந்த விதி … அத நினைச்சு அழுகிறியா ப்ரிக்குட்டி …” என்று போலியாய் வருத்தப்பட்டு அவளை சீண்டிவிட , அதை புரிந்துக் கொண்டவளின் முகம் ஜுவாலையாக சிவந்து போக, ‘இது விதி செஞ்ச சதியில்லடா … நீ பண்ண சதி உன்ன … நேத்து வாங்கினது பத்தலையா … இருடி இனிமே என் பக்கமே வராதபடி பண்றேன் …’ என்று மனதில் கருவியவள், செயினில் மாட்டியிருந்த பெரிய சைஸ் பின்னை கழட்டி , அருகில் உட்கார்ந்திருந்தவனின் தொடையில் கண்ணிமைக்கும் நொடியில் ஓங்கி அழுத்தி குத்திவிடவும் , ‘ஆஆஆஆஅ …’ என்று
அலறியவன் வலியில் துடித்தவனின் வேட்டியில், இரவில் வானில் எட்டி பார்க்கும் நட்சத்திரங்களை போல வெள்ளை வேட்டியில் சிவப்பு புள்ளிகள் அங்கொன்று இங்கொன்றுமாய் எட்டி பார்க்க தொடங்கின.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29134

கௌரி - 16

கௌரி பிரியாவின் திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருக்கும் , இன்னும் வேலைக்கு போகாமல் ஒரே ஷாட்டில் பணக்காரனாய் ஆகா வேண்டும் என்ற லட்சியத்தில் ஊரை சுற்றிக் கொண்டிருந்தான் கௌரி. கணவனுக்கு தப்பாத மனைவி என்று பெயரெடுத்திருந்தாள் பிரியா , அவளும் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல் எந்த வீட்டு வேலையும் செய்யாமல் தங்கள் அறையில் அடைந்துக் கிடந்தவள் சாப்பிட குளிக்க மட்டுமே கீழே இறங்கினாள்.

கௌரிக்கு அறிவுரை வழங்கி மூக்குஅறுபட்ட தண்டபாணிக்கு , ‘இவன்தான் வெட்டியா ஊர சுத்துறான் இந்த பொன்னாவது அவனுக்கு எடுத்து சொல்லி வேலைக்கு அனுப்பலாம் …’ என்று நினைத்தவருக்கு ப்ரியாவின் போக்கும் பிடிக்கவில்லை.

வளர்மதியும் கௌரியின் மேல் உள்ள கோபத்தால் பிரியாவிடம் எதுவும் சொல்லாமல் தள்ளி நிறுத்தியவர், மீறி வேலை கொடுக்க நினைத்தாலும் தாமாகவே முன்வந்து அந்த வேலைகளை சேர்த்து செய்துவிட்டு போவாள் காயத்ரி .

இதில் அதிகம் பிழியப்பட்டது காயு மட்டுமே , திருமணம் முடிந்த கையோடு விடுப்பில் இருந்தவளுக்கு வீட்டு வேலை செய்வது ஒரு பொருட்டாகவே இல்லை .ஆனால் வேலையில் சேர்ந்த நாளிலிருந்து நிக்க கூட முடியாமல் காலில் பம்பரம் கட்டிக் கொண்டு சுழன்றாள்.

இரவில் நல்ல மனைவியாய் நடந்துக் கொள்பவள் பகலில் நல்ல மருமகளாகவும் நடந்துக் கொண்டு பள்ளிக்கும் சென்றும் வந்தாள். அதுவும் பள்ளிக்கு கிளம்பும் அவசரத்திலும் , தெரு குழாயில் வரும் குடிநீரை குடத்தில் பிடித்து வைத்துவிட்ட பின்புதான் கிளம்புவாள்.

இப்படி அணைத்து வேலையும் இழுத்துப்போட்டு செய்ததால் முகத்தில் சோர்வுடன் களைப்பில் நடமாடியவளை இரவில் தானும் படுத்தியெடுப்பதாக நினைத்த ரகுவிற்கு, அக்காவிற்கு உதவாமல் ரூமிலயே அடைந்து கிடக்கும் பிரியா மேல் கோபம் வந்தாலும், காயுவின் தங்கை பாசம் அறிந்ததால் எதுவும் கேட்காமல் அமைதி காத்தான்.

பிரியாவின் நினைப்போ , ‘இவன்தான பிளான் பண்ணி கல்யாணம் பண்ணான் … இன்னும் குழந்தை பிறக்கிற வரைக்கும்தான் இங்க இருக்க போறோம் அதுவரைக்கு புடிக்காத ஹாஸ்டல்ல புடிக்காத ரூம் மேட் கூட இருக்கிறதா நினைச்சு பல்ல கடிச்சுக்கிட்டு நாட்கள கடத்திடனும் …’ என்று அலட்டிக் கொள்ளாமல் நாட்களை கடத்தியவளின் நினைப்ப உடைக்க வந்து சேர்ந்தாள் விஜி.

ரகுவின் திருமணத்திற்காக லீவில் ஊருக்கு வந்திருந்த விஜயின் கணவர் மீண்டும் துபாய் சென்றுவிட , இரண்டு பெண் குழந்தைகளை பெற்றதால் எந்நேரமும் வசைபாடிக் கொண்டிருக்கும் மாமியாரின் வாயிலிருந்து தப்பிப்பதற்காக அடிக்கடி அம்மா வீட்டிற்கு விஜயம் செய்பவள் இன்றும் வந்திருக்க , ரெண்டு நாட்கள் அங்கே நடப்பதை பொறுமையாக கவனிக்க தொடங்கினாள்.

காலை விடிந்தும் இன்னும் எழாமல் தூங்கி கொண்டிருந்த பிரியாவை கண்டு யோசனையான கௌரி மெல்ல அவள் அருகில் சென்று பார்க்க , தொடாமலே உடம்பு சூடு அனலாய் அவனை தாக்கவும் , நெற்றியில் கை வைத்து பார்க்க நெருப்பாய் கொதித்து. நல்லாதானே இருந்தா திடீர்னு என்னாச்சு என்ற யோசனையோடு ,

“ப்ரிக்குட்டி … ப்ரிக்குட்டி …” என்று அவள் தோளை அசைத்து எழுப்ப , மெல்ல கண்ணை திருந்து பார்த்தவள் தன்னருகில் இருந்த முகத்தை கண்டதும் தோளை பற்றியிருந்த அவன் கையை தட்டிவிட்டு போர்வையால் முகத்தை மூடிக் கொண்டாள். முகத்தை மூடியிருந்த போர்வையை விலக்க முயன்று தோற்று போனவன் ,

“இரு அண்ணிய கூட்டிட்டு வரேன் …” என்று கீழே இறங்கி போனவன் காயத்ரியிடம் விஷயம் சொல்ல ,பதறி மேலே வந்து பார்த்தவள் ஹாஸ்பிடலுக்கு வர மறுத்த பிரியாவை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றாள்.

சரியாக பூசப்படாத மொட்டை மாடி தரையில் படுத்ததால் உண்டான சூடு என்று மருத்துவர் கூறவும், ரகுவிடம் பேசி கௌரியின் அறைக்கு சின்ன ஸ்டீல் கட்டிலுக்கு ஏற்பாடு செய்திருந்தாள் காயத்ரி. இது எதற்கும் கௌரியும் அலட்டிக் கொள்ளவில்லை , பிரியவும் வேண்டாம் என்று மறுப்பு சொல்லாமல் அமைதியாய் வாங்கி கொண்டாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஜிக்கு பத்திக் கொண்டு வர பிரியாவை தாக்க சரியான தருணத்திற்காக காத்திருந்தாள். மறுநாள் தண்ணி புடிக்க கிளம்பிய காயத்ரியிடமிருந்து குடத்தை பிடுங்கிக் கொண்ட விஜி

“உன்ன பார்த்தாலும் சோர்வாதான் இருக்கு … வீட்டுல வெட்டியதான் இருக்கேன் … தண்ணி புடிச்சு வைக்கிறேன் நீ கிளம்பு …” என்று அன்பொழுக பேச அதீத சோர்வில் இருந்தவள் சிறு மறுப்பிற்கு பின் விரைவாகவே பள்ளிக்கு கிளம்பி சென்றாள்.

வழக்கம் போல காலை டிபன் சாப்பிட கீழே இறங்கி வந்த பிரியா நேராக சமையலறைக்குள் சென்று இட்லி இருந்த பாத்திரத்தை திறந்து பார்க்க , வெறுமையான பாத்திரமே காட்சியளிக்க , சுற்றியும் பார்த்தவளுக்கு அடுப்பில் இட்லி வெந்துக் கொண்டிருப்பது கண்ணில் பட தட்டைக் தூக்கி கொண்டு இட்லி பானை அருகில் சென்றாள்.

அதுவரை பிரியாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த விஜி , அவள் இட்லி பானையை திறக்கவும் ,

“அத எடுக்காத பசங்களுக்கு ஊத்தி வச்சுருக்கேன் …” என்று முகத்தில் அடித்தபடி பேச , ஏற்கனவே நேற்றிரவு மாத்திரை எடுத்துக் கொண்டதால் விழித்தவுடன் நல்ல பசி எடுக்கவும் அவசரமா குளித்துவிட்டு சாப்பிட வந்துவிட்டாள். விஜியின் திமிரான பேச்சு கோபத்தை கொடுக்க ,

“எனக்கு பசிக்குது … நீங்க வேற ஊத்திக்குங்க …”என்றவாறே தட்டில் இட்லியை அடுக்க , தன் பேச்சை மதிக்காமல் மறுத்து பேசுபவளை கண்டு ஆத்திரம் அதிகம் வர

“பசங்க பசி தாங்க மாட்டாங்க … நீ ஒரு வேள இட்லி சாப்பிடலானா செத்து போய்ட மாட்ட …” என்றபடி அவள் கையிலிருந்த இட்லி தட்டை பிடுங்க வர , ஏற்கனவே கல்யாணத்தின் போது தங்கள் குடும்பத்தை மட்டம் தட்டி பேசியவளின் மீது கோபத்தில் இருந்த பிரியா , அவளை பிடித்து தள்ளியபடி

“உங்க அதிகாரத்த எல்லாம் உங்க வீட்டுல வச்சுகோங்க … அம்மா வீட்டுக்கு வந்தா ரெண்டு நாள் தங்கினோமா போட்டத தின்னோமானு வால சுருட்டிக்கிட்டு இருந்துக்கோங்க இல்ல அசிங்கப்பட்டு போவீங்க …” என்று கோபத்தில் வார்த்தைகளை விட , அவளிடமிருந்து நேரடி தாக்குதலை எதிர்பார்க்காத விஜி திகைத்து போய் நிற்க , தன் கண் முன்னே தன் மகளை அசிங்கப்படுத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வளர் ,

“வாய மூடு … யார் வீட்டுல இருந்துகிட்டு யார பேசுற … அவ இந்த வீட்டு பொண்ணு , என் பொண்ண வால சுருட்டிக்கிட்டு இருக்க சொல்ல , உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் …” என்று ஆத்திரத்துடன் பேசியவரை கண்டுக் கொள்ளாமல் ஒருவில்லை இட்லியை பிய்த்து சட்னியில் முக்கி விழுங்கியவள் , அலட்சியமாய்

“பின்ன என் வீட்டுல இருந்துகிட்டு என்ன சாப்பிட விடாம பண்ண அவங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும் …” பதிலளிக்க ,

“என்னது உன் வீடா … ஏன் உன் அப்பன் கல்யாணத்துக்கு சீதனமா கொடுத்த வீட …” என்றவருக்கு

“அப்போ உங்கப்பா சீதனமா கொடுத்த வீடா இது … இல்லல … உங்களுக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை எனக்கும் இருக்கு … உங்க புள்ள மாமாக்கு பொறந்திருந்தா …” என்று எகத்தாளத்துடன் பேச , “ஏய் …” என்று அறைய கையை ஓங்கி கொண்டு வந்த வளர் , கடைசி நிமிஷத்தில் சுதாரித்து ,
கையை கீழே இறக்கியவர் கண்கள் பளபளக்க ,

“ஆமாண்டி இந்த வீட்டுல எனக்கு இருக்கிற உரிமை உனக்கும் இருக்குத்தான் … உன்ன வீட்ட விட்டு போன்னு சொல்ல என்னால முடியாதுதான் …” என்றவரை அது என்று மிதப்புடன் பார்த்தவள் , அடுத்த வாய் இட்லியை உள்ளே தள்ளி மெல்ல ,

“இப்போ உள்ள தள்ளுறியே அந்த இட்லி என் நடு பையன் காசுல சுட்டது … இதோ போட்டுக்கிட்டு நிக்கிறியே நைட்டி அதுவும் என் நடு பையன் காசுல வாங்கினது … மூணு வேல தவறாம கொட்டிக்கிறியே அதுவும் என் நடு புள்ள காசு … ரிட்டையர் ஆனாலும் என் புருஷன் பென்ஷன் பணத்துலதான் நான் இருக்கேன் … உன் அக்காவும் அவ புருஷன் சம்பாத்தியத்துல தான் சாப்டுகிட்டு இருக்கா … ஆனா நீ …” என்று நிறுத்தியவர் ,

“எந்த உரிமைல ரகு வாங்கி கொடுத்த கட்டில்ல படுக்க முடியுது … உனக்கு புருஷன் ரகுவா இல்ல கௌரியா …” என்று வார்த்தையில் விஷத்தை தடவி வீச , உள்ளுக்குள் துடித்து போனவள் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் திமிராய் பார்த்து ,

“அதேதான் நானும் கேட்கிறேன் , அடுத்தவன் காசுல தன் பொண்டாட்டி வாங்கி தின்னுட்டு இருக்காளேன்னு கூச்சமே இல்லாம மல மாடு போல ஊர் சுத்துறானே உங்க அருமை பையன் … அவனுக்கு கொஞ்சம் கூட மானம் ரோசம் சூடு சொரணை எதுவும் இல்லையா … நல்லா வளத்து விட்டுருக்கீங்க அத்த மானங்கெட்ட பையன …” என்று ஏகத்துக்கு நக்கலாக பேசியவளை கண்டு அவமானத்தில் முகம் சிவக்க நின்றிருந்தவரிடம்,

“எப்படி என்ன எங்க அம்மா ஒழுங்கா வளக்காம விட்டாங்களோ … அப்படிதான் நீங்க உங்க பையன சரியா வளர்களை … என்னால நாளைக்கே சேல்ஸ் கேர்ள்லா கூட வேலைல சேர முடியும் , அப்படி சேர்ந்தா உங்க மொத்த குடும்பத்துக்கும்தான் அசிங்கம் …என்ன பண்றது புருஷன் சரியில்லாத பொண்டாட்டி அடுத்தவன நம்பித்தான் இருக்கணும் … அப்படிதான் நானும் இருக்கேன் இனியும் இருப்பேன் உங்க புள்ள மாறுற வரைக்கும் …” என்று திமிராய் பதிலளித்தவள் இட்லியை சாப்பிட்டுக் கொண்டே படியேறி மேலே செல்ல , எரிமலையாய் கொதித்தெழுந்தார் வளர்மதி.

‘என்ன திமிர் ,சிறு பெண் தன்னை அண்டி வாழ்பவள் … வயதிற்கு மரியாதை தராமல் என்னையே குற்றவாளியாக நிறுத்துவதா …’ கொதித்துக் கொண்டிருந்தவரை , பலவற்றை கூறி மேலும் தூண்டிவிட்டாள் விஜி.

மறுநாளிலிருந்து வளரின் இன்னொரு முகத்தை கண்டனர் காயுவும் பிரியாவும். பிரியாவிடம் தன்னுடைய பருப்பு வேகவில்லை என்றதும் காயுவிடமும் எரிந்து விழுந்து தன் கோபத்தை காட்டிக் கொண்டிருந்தார். எதற்கெடுத்தாலும் குத்தல் பேச்சும் , எதை செய்தாலும் குற்றம் சொல்வதுமாய் இருக்கவும் நிம்மதியின்றி இருந்தவளுக்கு உடல் உபாதையும் சேர்ந்து கொண்டு மன உளைச்சலை கொடுத்தது.

இந்த ஒரு வாரமாய் தன் அக்காவை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள் பிரியா. என்னேரமும் சோர்வுடன் சிறு ஓய்வு கிடைத்தாலும் படுக்கையில் சுருண்டுக் கொள்வதை கண்டவளுக்கு எதுவோ புரிவது போல இன்னும் அதை பற்றி அறியாத அவளிடம் சென்று எப்படி கேட்பது என்ற தயக்கத்துடன் இருந்தவளின் பார்வையில் குடத்தை தூக்கிக் கொண்டு தண்ணீர் பிடிக்க சென்ற காயு பட அவள் பின்னேயே சென்றவள் , அவளிடமிருந்து குடத்தை வாங்கி,

“நீ போ … நான் புடிச்சுட்டு வரேன் …” என்றவளை ஆச்சிரியதுடன் பார்த்த காயு ,

“ச்ச இதெல்லாம் ஒரு வேலையா … கொடு நான் புடிச்சு வச்சுட்டு போறேன் …” என்று பதிலுக்கு குடத்தை பிடுங்க வர ,

“ம்ப்ச் விடு … முதல டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிட்டு வா … அவர் தூக்கலாம் சொன்னா தூக்கு …” என்று கூறவும் புரியாமல் பார்த்தவளின் முகம் எதையோ நினைத்து சற்றென்று குங்குமமாய் சிவந்து சந்தோசத்தை வெளிப்படுத்த , தன் கரத்தால் வயிற்றை தடவி பார்த்தவளின் கண்களில் தன் சிசுவை பற்றிய கனவு அப்பட்டமாய் மின்னியது.

குடத்தை தூக்கிக் கொண்டு குழாயடி அருகில் சென்றவளை அங்கிருந்த பெண்கள் குறுகுறுவென்று பார்த்து தங்களுக்குள் பேசிக் கொள்ள அங்கே நிற்க முடியாமல் அவஸ்தையாக நெளிந்தாள் பிரியா. அவளுக்கு நன்கு தெரியும் விஜிதான் இவளை பற்றி இல்லாதா பொல்லாததை சொல்லி பெயரை கெடுத்திருக்கின்றாள் என்று.

இந்த ஒருவாரமாய் வளரிடம் திமிராய் பேசிவிட்டு வந்தாலும் அவளால் ஒருபிடி சோறை கூட நிம்மதியாக திங்க முடியாமல் அவர் கூறிய ரகு புருஷனா கௌரி புருஷனா என்ற கேள்வி நெஞ்சை அறுத்துக் கொண்டிருக்க , அன்று நடந்த பிரச்சனையை யார்கிட்டையும் சொல்ல முடியாமல் தனக்குள்ளே புழுங்கி கொண்டவள், மூன்று வேளை உணவு எடுப்பதை தவிர்த்துவிட்டு காலையில் மட்டும் மீந்து போன பழைய சாதத்தை தண்ணீர் விட்டு திங்க , தெரிந்தாலும் கண்டுக் கொள்ளாமல் கடந்தார் வளர்.

இதுவரை தண்ணீர் குடத்தை தூக்கி பழக்க படாதா பிரியாவினாள் , வழிய வழிய தண்ணீர் நிறைந்த குடத்தை தூக்கிக் கொண்டு நடக்க சிரமப்பட, தாய் தந்தையின் அருமை கண் முன் வந்து போனது. இடுப்பில் நிற்காத குடத்தை வயிற்றோடு இறுக்கி அணைத்துக் கொண்டு வந்தவளின் நைட்டி முழுவதும் தண்ணீரால் நனைந்திருக்க, கண்ணை கரித்துக் கொண்டு வந்ததை சமாளித்து, மூன்று குடம் தண்ணீரை பிடித்து வருவதற்குள் பாதி ஜீவனை இழந்திருந்தாள் பிரியா.

ஏற்கனவே ஒருவேளை மட்டும் உணவு உண்டிருக்க மொத்த சக்தியும் வடிந்ததை போல தன் அறையில் பாயில் சுருண்டுக் கொண்டாள். நல்ல உறக்கத்தில் இருந்த கௌரிக்கு பிரியாவிடமிருந்து தொடர்ந்து முனகல் சத்தம் கேட்கவும் , அவளருகில் சென்று பார்க்க உடல் வலியில் தன்னை மீறி தூக்கத்தில் உளறிக் கொண்டிருந்தவளை கண்டதும் நெற்றியில் கை வைத்து பார்த்தவனுக்கு ஜுரம் இல்லையென்று தெரிந்ததும் நிம்மதி அடைந்தவன் ,

“ப்ரிக்குட்டி … ப்ரிக்குட்டி …” என்று தோளை அசைத்து எழுப்ப , நல்ல அசதியில் தூங்கி கொண்டிருந்தவளை பல முறை எழுப்பி பார்த்தும் , “ம்ம்ம் …ம்ம்ம் …” என்ற முனகலை தவிர கண் திறக்காமல் தூங்கி கொண்டிருந்தவளை கண்டதும் , என்ன செய்வது என்று புரியாமல் முழித்த கௌரி , அவள் அருகிலயே படுத்துக்கொண்டான்.

காலையில் நெஞ்சை அழுத்தும் பாரத்தில் கண் விழித்த கௌரியின் கண்களுக்கு தன் மீது கால் கையை போட்டபடி இறுக்கி அணைத்துக் தூங்கி கொண்டிருந்த பிரியா பட ,இதயம் பந்தய குதிரையை விட வேகமாக ஓட தொடங்கியது.

காலை வேளை ஆண்களில் உணர்ச்சிகள் உட்சத்தில் இருக்கும் நேரம் , கௌரியும் அதற்கு விதிவிலக்கு இல்லை , தன்னை இறுக்கி கொண்டு படுத்திருந்தவளை கண்டதும் அவன் உணர்வுகள் தாறுமாறாய் ஓட , பெரும்பாடு பட்டு தன்னை அடக்கி கொண்டவனுக்கு தெரியும் தப்பி தவறி அவளை எழுப்பிவிட்டால் சேதாரம் தனக்குத்தான் என்று.

முதல் முறையாக வேண்டாத சிந்தனைகள் கற்பனையாய் மனதில் படம் போல ஓடிக் கொண்டிருக்க , கண்ணை இறுக்கி மூடி அமைதியாக படுத்திருந்தவனின் உடல்மொழியில் மெல்ல துயில் கலைந்த பிரியா , தான் படுத்திருந்த கோலத்தை கண்டு பதறிப்போய் அவசரமாக எழுந்துக் கொண்டவள், வெளியே செல்லும் முன் அவன் காலை அழுந்த மிதித்து விட்டே சென்றாள்.

வலியில் துடித்தவன் அவள் சென்றுவிட்டதை உறுதி செய்தபின் மெல்ல கண் திறந்து பார்க்க கதவருகில் நின்றுக் கொண்டு தன்னையே முறைத்துக் கொண்டிருந்தவளை கண்டு , “குட் மார்னிங் ப்ரிக்குட்டி …ஈஈஈ”என்று இளித்தபடி பார்க்க , நின்ற இடத்திலிருந்தே ஒருவிரல் நீட்டி எச்சரித்த பிரியா இனி நெருங்கினாள் என்று கையால் சைகை செய்தவள் பின் ,தன் காலை தூக்கி ஓங்கி மிதிப்பதை போல மிதித்து நசுக்குவத்தை போல செய்ய, அவள் எதை பற்றி குறிப்பிடுகிறாள் என்று புரிய தன் உடலை குறுக்கி கொண்ட கௌரி ,

“நோ ப்ரிக்குட்டி மீ பாவம் … இன்னும் ஒரு தடவ கூட கஜமுஜா பண்ணதில்ல … அதுக்குள்ள மெயின் பாயிண்ட்ட ஆப் பண்ண பாக்கிறியே …” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு பேசியவனை முறைத்துக் கொண்டே கீழே இறங்கியவளில் உதடுகளில் குறுபுன்னகை.

அவள் சென்றது அவசரமாக வெளியே வந்து எட்டி பார்த்தவனின் பார்வையில் இடுப்பை பிடித்துக் கொண்டு கீழே இறங்கியவளை கண்டதும் ,

“என்ன ப்ரிக்குட்டி மாமன் ஒண்ணுமே பண்ணல , அதுக்குள்ள இடுப்ப பிடிச்சுக்கிட்டு நடக்கிற … பக்கத்துல படுத்ததுக்கே அவ்வளவு எபக்ட்டா …” என்று தனக்குள் பேசிக் கொண்டவனை நினைத்து அவனுக்கே ஆச்சிரியமாக இருந்தது .

‘என்னாச்சுடா கௌரி … பேட் பேட் திங்கிங் … பேட் பேட் டாக்கிங்கா இருக்கு …’ என்று நினைத்துக் கொண்டவன் சிரித்தபடி கீழே இறங்கி சென்றான்.

சிக்கன் எடுப்பதற்காக தன்னுடைய டிவிஎஸ் பிப்டியில் கடைக்கு சென்றவனின் எதிரே குடத்தை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு பிரியா நடந்து வர , அவசரமாக வண்டியை ஓரங்கட்டியவன் , அவளிடமிருந்த குடத்தை தன் கைக்கு இடம்மாற்றியவன் , வீட்டு வாசப்படி வரை கொண்டு வந்து அவள் இடுப்பில் வைத்து ,

“ம்ம்ம் … இப்போ போ …” என்றுவிட்டு அங்கேயே நிற்க மீண்டும் காலி குடத்துடன் வெளியே வந்தவளிடமிருந்து குடத்தை வாங்கியவன்,

“இங்கயே இரு ப்ரிக்குட்டி … நான் புடிச்சுட்டு வந்து தரேன்…” என்று திரும்பி சென்றவனை வைத்த கண்மாறாமல் பார்த்திருந்தாள் பிரியா. மூன்று குடங்களிலும் தண்ணீர் பிடித்து கொடுத்த பின்தான் அங்கிருந்து கிளம்பினான் கௌரி.

இதையெல்லாம் உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த விஜியின் வயிற்றில் யாரோ நெறுப்பை பற்ற வைத்ததை போல தகதக என்று எரிய, கோபமூச்சுகளை விட்டபடி பிரியாவையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டிற்குள் நுழைந்த பிரியாவிற்கு தன்னை யாரோ விடாமல் பார்ப்பது போல இருக்க திரும்பி பார்த்தவளை கண்களால் பொசுக்கி கொண்டிருந்த விஜி பட, அலட்சியத்தோடு பார்த்தவள் நக்கல் சிரிப்பை உதிர்த்து விட்டு செல்ல கொதித்து போனாள் விஜி.

‘அவன் உன் காலுல விழுந்து கிடக்கிற திமிர்லதானே ஆடிக்கிட்டு இருக்கு … இருடீ உன்ன அசிங்க படுத்தி அவன் கையாலே கழுத்த பிடிச்சு தள்ள வைக்கல என் பேரு விஜயலக்ஷ்மி இல்ல …’என்று உள்ளுக்குள் சபதமும் எடுத்துக் கொண்டாள்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29161

கௌரி - 17

அன்று நடந்த சண்டையிலிருந்து வளர் பிரியாவிடம் ஜாடையாக பேசுவதை கூட நிறுத்தியிருக்க , விஜியால் அப்படியிருக்க முடியாததால் எந்நேரமும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு சுற்றி திரிந்தவளுக்கு பிரியாவை எந்த விதத்திலாவது பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்தாள்.

தினமும் காலையில் பழைய சோறை உண்பவள் இரவில் படுக்க போவதற்கு முன் பால் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தாள் பிரியா. அவர்களுக்குள் நடந்த பிரிச்சனையை யாரிடமும் கூற விருப்பம் இல்லாததால் , அவளை பற்றி காயுவிற்கும் கௌரிக்கும் தெரியாமலே போனது.

அன்றும் வழக்கம் போல் இரவில் பாலை காய்ச்சி சூடு ஆறுவதற்காக திறந்து வைத்துவிட்டு குளிக்க சென்றாள் பிரியா. தண்ணீர் குடிப்பதற்க்காக சமையலறைக்குள் வந்த விஜி , தண்ணீர் பிடித்து குடிக்கும் வேளையில் மேல் சுவற்றில் இரு பல்லிகள் சண்டையிட்டு கொள்வதை கண்டு , சாப்பாடு பொருளில் விழுந்து விட போகிறது என்ற பயத்தில் அதை துரத்தி விட நினைக்கையில் பல்லி ஒன்று மேலிருந்து மேடையில் பிரியா வைத்து சென்ற பால் பாத்திரத்தில் விழுந்தது.

“அச்சோ ..” என்று பதறியபடி ஓடி சென்று பார்த்த விஜிக்கு , தலை துண்டிக்கப்பட்டு பாலில் மிதந்திருந்த பல்லியை கண்டதும் அது குடிப்பதற்கு ஏதுவானது இல்லை என்று நினைத்தவள், பாலை கீழே ஊற்ற குண்டானை தூக்கியவளுக்கு இது பிரியா குடிப்பதற்காக வைத்திருந்த பால் என்று ஞாபகத்தில் வர மீண்டும் பழைய இடத்தில் வைத்தாள்.

ஒருநொடி கண்ணை மூடி யோசனையான விஜி , யாரவது வருகிறார்களா என்று அவசரமாக திரும்பி பார்த்து , யாரும் இல்லையென்று உறுதி செய்தபின் , பதற்றத்துடன் பக்கத்திலிருந்த சிறு கரண்டியை கொண்டு பல்லியை முழுதும் அகற்றியவள் கீழே சிந்திய பாலை நடுங்கும் விரலால் துடைத்து விட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்.

தூங்க போவதற்கு முன் வழக்கம் போல பாலை டம்ளரில் ஊற்றிக் கொண்டு மேலே சென்றாள் பிரியா. அவள் மேலே உள்ள தன் அறைக்கு செல்லும் வரை ஒருவித படபடப்போடு இருந்த விஜி பயத்தில் வேர்வையில் குளித்திருந்தாள்.

வழக்கம் போல கௌரி அறைக்குள் வருவதற்கு முன்பே தூங்க சென்றாள் பிரியா , பதினொரு மணி வாக்கில் அறைக்குள் வந்த கௌரி தானும் ஒருபக்கமாய் படுக்க , சிறிது நேரத்திலையே அசவுகரியத்துடன் எழுந்து உட்கார்ந்த பிரியா ஓக்களித்து வாந்தி எடுக்க, சட்ரென்று தானும் எழுந்துக் கொண்ட கௌரியும்

“என்னாச்சு ப்ரிக்குட்டி …” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே மீண்டும் குடம் குடமாய் வாந்தி எடுத்தவளின் முகம் வேர்வையில் குளித்திருக்க , மெல்ல மெல்ல கண்களும் சொருக தொடங்கின.
இதை கண்டதும் பதறி போன கௌரி

“ப்ரிக்குட்டி … ப்ரிக்குட்டி …” என்று அவள் தோள்களை பற்றி உலுக்கவும் , கண்ணை திறப்பதற்கு கஷ்டப்பட்டவளின் தலை ஒரு இடத்தில் நிற்காமல் சுற்றிக் கொண்டிருக்க , பயந்து போன கௌரி, மெல்ல அவளை படுக்கையில் சாய்த்து படுக்க வைத்து

“இருடா … நான் அண்ணி ரகுவ அழைச்சுட்டு வரேன் …” என்று பதற்றத்துடன் எழ போனவனின் கையை இறுக பிடித்துக் கொண்டவள் ,மிகவும் சிரமப்பட்டு ,

“ஏ …ஏ …ன …க்கு … பு … பு …சன் … நி … யா … ரகுவா …” என்று தட்டு தடுமாறி சிரமப்பட்டு பேசியவளின் கலங்கிய கண்களில் சோர்வை மீறி வலி தெரிய , ஷாக் அடித்ததை போல நின்றுவிட்டான் கௌரி.

அவன் அறிந்த வரை ப்ரியா எதற்கும் அலட்டிக் கொள்ளாதவள் , தன் சந்தோசம் மட்டுமே பெரிதாக நினைப்பவள் , அப்படி பட்டவளிடமிருந்து வந்த வார்த்தைகளை கேட்டதும் , தனக்கு தெரியாமல் ஏதோ ஒன்று இந்த வீட்டில் பெரிதாக நடந்திருக்கிறது என்று நினைத்தவனுக்கு ஏனோ அவளின் பேச்சை மீறி சென்று அண்ணனிடம் நிற்க விருப்பம் இல்லாததால் ,

“அண்ணன கூப்பிட போல …நீ வா ப்ரிக்குட்டி நாம ஹாஸ்பிடல் போலாம் …” என்று மென்மையாய் பேசியவன் அவளை அணைத்தபடி தூக்கி நிறுத்த , மீண்டும் வயிற்றை பிடித்துக் கொண்டு வாந்தியெடுத்தவளுக்கு வாந்தியுடன் சேர்ந்து ரத்தமும் வர பயந்தே போய்விட்டான் கௌரி.

இனி தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷம் ஆபத்து என்று உணர்ந்தவன் அவளை கைகளில் அள்ளிக் கொள்ள அந்த சோர்விலும் அவனிடமிருந்து திமிறி கீழே இறங்க பார்த்தவளை கண்டு ,

“ப்ளீஸ்ஸ்ஸ்ஸ் …” என்று உடைந்து போன குரலில் கெஞ்சவும் அந்த ஒற்றை வார்த்தையில் அவன் தோள் சாய்ந்தவளின் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் சொட்டு சொட்டாய் இறங்கியது. வேகமாக கதவருகில் சென்றவன் , மீண்டும் திரும்பி வந்து கீழே கிடந்த அவனின் அழுக்கு கைலியை எடுத்துக் கொண்டு மாடி படிகளில் வேகமாக இறங்கினான்.

மாடிக்கு செல்லும் படி வீட்டின் வெளிப்புறம் இருக்க , யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் தன்னுடைய டிவிஎஸ்சை ஸ்டார்ட் செய்து, பின்புறம் பிரியா உட்கார செய்து சோர்ந்து போய் சரிந்தவளை கைலியுடன் சேர்த்துக் தன்னுடன் கட்டிக் கொண்டவன் வண்டியை பறக்கவிட்டான் கடலூர் அரசு ஆஸ்பித்திரியை நோக்கி.

பிரியாவின் வாயில் டியூபை விட்டு நீரை ஊற்றி விஷத்தை எடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டிருந்தார் டூட்டி நர்ஸ் .கூடவே ,

“ஏன்மா பாக்க படிச்ச பொண்ணா இருக்க … என்னத்த சாப்டன்னு கூட தெரியாதா …நல்லா வாய திற …” என்று திட்டிக் கொண்டே வாயை பிளந்து டியூபை சொறுகவும் துடித்துவிட்டான் கௌரி.

“சிஸ்டர் சிஸ்டர் … டியூட்டி டாக்டர் இல்லிங்களா …” என்றவனை திரும்பி பார்த்து முறைத்தவர் ,

“ஏன் டியூட்டி டாக்டர் வந்தாதான் சார் டிரீட்மெண்ட்கு விடுவீங்களோ … டியூட்டி டாக்டர்லாம் பிஸி … உன் பொண்டாட்டிய டாக்டர் தான் பாக்கணுமா வேற எங்கையாவது போய் காட்டு …” என்ற சுள்ளென்று விழுந்தவரை கண்டு ,

“கோச்சிக்காதீங்க சிஸ்டர் … நீங்க டியூப்ப சொருகிறத பார்த்தா எனக்கே சொருகிற பீல் வருது சிஸ்டர் … கொஞ்சம் பாத்து பொறுமையா வலிக்காம பண்ணுங்க சிஸ்டர் …” என்று பாவமாய் கூறியவனை திரும்பி பார்க்காமல் ,

“நீ முதல்ல இங்கிருந்து கிளம்பு … உன் தொன தொணப்ப தாங்க முடியாமத்தான் , இந்த புள்ள விஷம் சாப்டுருக்கும் போல …” முனகி கொண்டே வேலையை பார்க்க அதன்பின் வாயை திறக்காமல் வலியில் பிரியா படும் அவஸ்தையை கண்டு கலங்கி போனான்.

வயிற்றில் இருந்ததை முழுவதும் எடுத்த பிறகு ட்ரிப்ஸ் ஏத்தி ஜெனரல் வார்டில் பிரியாவை போட்டுவிட்டு போக , அவள் படுக்கையில் சோர்ந்து போய் உட்கார்ந்தான் கௌரி. கண்ணை மூடி ஜீவனே இல்லாமல் வாடிய கொடி போல இருந்தவளை காண காண அவன் நெஞ்சம் குற்ற உணர்ச்சியில் காரி துப்பியது.

முதன் முதலாக சென்னையில் கண்ட பிரியாவின் தோற்றம் கண் முன்னே வந்து போக , ‘செல்வாவ கட்டியிருந்தாலும் நல்லாயிருந்திருப்பா , இல்ல அவங்க அப்பா வீட்டுல இருந்திருந்தாலும் நல்லா இருந்திருப்பா , தேவையே இல்லாம அவ வாழ்க்கைல புகுந்து இங்க கொண்டு வந்திருக்கியே …’ என்று நினைத்தவன் சுற்றியும் பார்வையை சுழல விட்டான்.

கொஞ்சம் கூட சுத்தமே இல்லாத தரை , துருப்பிடித்த கட்டில் , அழுக்கான படுக்கை விரிப்பு , பல கறைகள் ஓடிய சுவர் , நாற்றமடித்துக் கொண்டு போதிய காத்து வசதியில்லாத இடத்தை பார்த்தவனுக்கு , இங்கையா என் ப்ரிக்குட்டி இருக்கனும் என்ற என்று நினைத்திருந்தவனின் சிந்தனையை களைத்தாள், தன் உடலை சுருக்கி வயிற்றை பிடித்துக் கொண்டு துடித்து கொண்டிருந்த பிரியா.

பதறி போய் அவள் அருகில் சென்றவன்,

“என்னடா ஆச்சு … ப்ரிக்குட்டி …”என்று வலியில் துடிப்பவளை தன் மடி மீது போட்டுக் கொண்டு பரிதவிக்க , அருகிலிருந்த பெரியவர் ஒருவர் ,

“தம்பி … சீக்கிரம் போய் டியூட்டி நர்ச கூட்டிட்டு வாப்பா … புள்ள வலியால துடிக்குது பாரு …” என்கவும் , வேகமாக நர்ஸை அழைக்க சென்றவனுக்கு என்ன செய்வது என்று புரியாத நிலை.

மீண்டும் தூக்கத்தை கெடுத்தவனை திட்டிக் கொண்டே வந்த நர்ஸை கூட கண்டுக் கொள்ளும் மனநிலையில் அவனில்லை. பிரியா துடிப்பதை கண்ட நர்ஸ் அவசரமாக டாக்டரை அழைத்து வர , பரிசோதித்தவர் குடல் புண்ணாகியிருப்பதாகவும் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்று கூறி பிரியாவை பரிசோதிக்க அழைத்து செல்ல முடுக்கிவிட்ட பொம்மை போல அவள் பின்னையே சென்றான்.

கவர்மெண்ட் ஹாஸ்பிடலாக இருந்தாலும் ஸ்கேன் மற்றும் மற்றைய பரிசோதனைக்கு என்று அவனிடமிருந்து சில நூறை எதிர்பார்க்க ,திணறி போனான் கௌரி. கையிலிருப்பதோ வெறும் நூறு ரூபாய் , என்ன செய்வது ஏது செய்வது என்று புரியாமல் தவித்தவனுக்கு பிரியாவின் பேச்சை மீறி வீட்டில் சென்று உதவி கேட்கவும் மனம் வரவில்லை. நேரமும் அதிகாலை ரெண்டு மணி , இந்த நேரத்தில் யாரிடம் சென்று கேட்பது என்று புரியாமல் மனம் பதற ஹாஸ்பிடல் வளாகத்தில் நடைபயின்றவனின் காதில் ,

“அவசரமா திருச்சி போகணும்பா … கார் இருக்கு டிரைவர்தான் கிடைக்கல …” என்று வயதான பெரியவரின் குரல் காதில் விழ, அது தனக்காக கடவுள் காட்டிய வழியாக நினைத்தவன் நேராக அவர் முன் சென்று நின்றான்.
தன் முன் நின்றவனை கேள்வியோடு பார்த்தவரை கையெடுத்து கும்பிட்டவன் ,

“ஐயா … என் பேரு சங்கர் … நான் நல்லா கார் ஓட்டுவேன் , நான் வேணா உங்கள திருச்சில ட்ராப் பண்ணவா … உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுத்தா போதும் …” என்று அவர் ஒதுக்க கொள்ள வேண்டுமே என்ற தவிப்புடன் பேசியவனை ஆராச்சியோடு பார்த்தவர் ,

“பரவால்ல தம்பி … உங்களுக்கு ஏன் சிரமம் … நாங்க தெரிஞ்ச பையன வர சொல்லிருக்கோம் …” என்று கத்தரித்து பேச, வாழ்க்கையில் வாழ்ந்தால் முதலாளியாக தான் வாழ்வேன் என்று சபதம் கொண்டவன் ,முதல் முறையாக வேலை கேட்டு கெஞ்சி பேசினான்.

“சிரமம்னா இல்லைங்கய்யா … சொல்லப்போனா எனக்கு நீங்க செய்யுற உதவியாதான் இருக்கும்... என் ப்ரிக்குட்டி …” என்றவனால் மேலே பேச முடியாமல் தொண்டையை அடைக்க , இருமி சரி செய்தவன் ,

“ம்ம்க்கும் … என் வொய்ப்ப இங்கதான் அட்மிட் பண்ணிருக்கேன் … சில டெஸ்ட் எடுக்க கைல பணமில்ல … நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்ணா நல்லாயிருக்கும் …” என்று கமறிரிய குரலில் பேசியவனை சந்தேகத்தோடு பார்த்தார் அந்த பெரியவர்.

நல்ல சிவந்த நிறத்தோடு , கலைந்த கேசமும் பதற்றத்தில் வேர்வை அரும்பிய முகமாய் இருந்தவனை சட்ரென்று நம்ப முடியாமல் பார்த்திருக்க ,

“நீங்க வேணா என் கூட வந்து என் ப்ரிக்குட்டிய பார்த்துட்டு சொன்னாப் போதும்…”என்று தவிப்புடன் கூற , என்ன நினைத்தாறோ அவனுடன் சென்று பிரியாவை பார்க்க செல்ல,வழியில் வந்த நர்ஸ்

”பணம் கட்டியாச்சா …” என்றவருக்கு

“இன்னும் இல்ல …” என்று பதிலளிக்க ,

“அந்த பொண்ணு வலியால துடிச்சுக்கிட்டு இருக்கு இன்னும் பணம் கட்டாம அலட்சியம் பண்ணிகிட்டு இருக்க … போ போய் சீக்கிரம் ரெடி பண்ணி கட்டு …” என்று விரட்ட, வேகமாக தலையாட்டியவன் அந்த பெரியவரை பிரியாவிடம் அழைத்து சென்றான். அவளை கண்டதும் பொய் கூறவில்லை என்று புரிய, அவனின் பணத் தேவையை உணர்ந்தவர்,

“நீ வண்டி ஓட்டட்டு வந்தா யாரு இந்த பொண்ண பார்த்துப்பாங்க…” என்று அவனுக்கு சம்மதமும் கூறி அக்கரையுடன் கேட்க, சட்ரென்று கண்கள் கலங்கிவிட்டான் கௌரி.

“நர்ஸ்கிட்ட சொன்னா பார்த்துப்பாங்க … நாம கிளம்பளாமாயா …” என்று ஆர்வத்துடன் கேட்டவனிடன் ரெண்டு ஐந்நூரு ரூபாய் நோட்டை நீட்டியவர் ,

“பணம் கட்டிட்டு வாப்பா … நான் கார்கிட்ட வெய்ட் பண்றேன்…” என்கவும் வார்த்தை வராமல் தலையசைத்து பணத்தை வாங்கியவன், இவர்களின் அரவம் கேட்டு கண் விழித்த பிரியாவின் அருகில் சென்றவன்,

“ப்ரிக்குட்டி … சார திருச்சி வரைக்கும் விட்டுட்டு வந்துடுறேன் … நீ தனியா இருந்துப்பியா …” என்று இழுத்தவனுக்கு லேசாக தலையசைப்பை பதிலாக கொடுத்தவளுக்கு அவர்கள் பேசியது அனைத்தும் காதில் விழுந்திருக்க , மெல்ல கௌரியை பார்த்து இதழ் பிரிக்காமல் புன்னகை புரிய , மேலும் அவளிடம் ஒன்றியவன் முகம் முழுதும் புன்னகையை பூசியிருக்க, அவள் கைகளில் பணத்தை தினித்து

“என்னோட முதல் சம்பளம்…” என்று மெல்லிய குரலில் கூற,

“கங்ராட்ஸ் … நீ கண்டிப்பா பெரிய இடத்துக்கு வருவ …” என்று கஷ்டப்பட்டு வார்த்தைகளை உதிர்தவளை கண்டு பெரிதாக சிரித்தவன் சிறு தலையசைப்புடன் விடைபெற, அவன் மனமோ, ‘கண்டிப்பா பெரிய ஆளா வருவேன் ப்ரிக்குட்டி … உன் ஆசைப்படி உன்ன வாழ வைப்பேன்…’ என்று மனதுக்குள் சபதம் எடுத்தான்.

கௌரி பணம் கட்டியபின் சில பரிசோதனைகள் பண்ணி பார்த்ததில் அல்சர் என்று தெரியவர , மேலும் ஏற்கனவே புண்ணான வயிற்றில் குழாய் விட்டதால் அதிக சேதமடைந்திருப்பதால், பிரியாவை கண்காணிப்பில் வைத்திருந்தனர். இது அவளுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்பதால் பெரிதும் அலட்டிக் கொள்ளாதவளின் எண்ணம் முழுவதும் கௌரியை சுற்றியே இருந்தது.

இன்று அவன் தனக்காக பதறிக் கொண்டு துடித்தத்தை கண்ணால் பார்த்தவளுக்கு அவனை எந்த வகையில் சேர்ப்பது என்ற குழப்பமே மேலோங்கியிருந்தது. சில நேரம் தன்னை சீண்டி வாங்கிக் கட்டிக் கொள்பவன் , பல நேரங்களில் அவளை தாங்கு தாங்கென்று தாங்கினான். இன்றுவரை குழாயில் தண்ணீர் பிடித்து கொடுப்பதும் அவனே. தன்னை பழி வாங்கவே திருமணம் செய்துக் கொண்டான் என்று நினைப்பை பல நேரங்களில் பொய்யாக்கி கொண்டிருந்தான் கௌரி சங்கர்.

மாத்திரையின் வீரியத்தில் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றவள் , கண் முழித்து பார்க்கும் பொழுது காலருகில் சாய்ந்து உட்கார்ந்திருந்த கௌரி கண்ணில் பட்டான். அவள் கண் விழித்து பார்க்கும் வேளையில் அவனும் அவளை பார்த்துக் கொண்டிருக்க

“எப்படியிருக்க ப்ரிக்குட்டி…” என்று சோர்ந்து போன குரலில் கேட்கவும் , பதில் சொல்லாமல் களைப்புற்றிருந்த அவன் தோற்றத்தை ஆராய்ந்தவள், சற்று நகர்ந்து இடம் கொடுத்து எழுந்து உட்கார்ந்தவள் கண்களால் படுக்க அழைக்க , இருந்த களைப்பில் மறுபேச்சு பேசாமல் அந்த சிறிய இடத்தில் உடலை குறுக்கி படுத்தவன் மிகுந்த களைப்பில் உறைங்கிவிட அவனை வைத்த கண்வாங்கமால் பார்த்துக் கொண்டிருந்தவளின் கை அனிச்சம் செயல் போல தலையை வருடிக் கொடுத்திருக்க,

‘ஆடி காரல போக ஆசப் பட்ட உன்ன கார் ட்ரைவரா நான்தான் மாத்திட்டேனா … கொஞ்சநாள் கௌரி , உன்ன விட்டு சீக்கிரம் போய்டுறேன் … நீ நினைச்சத போல பணக்கார பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ’ என்று ரகசியமாய் தனக்குள் பேசிக் கொண்டாள்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29201

கௌரி - 18

திருமணம் முடிந்து இன்றுதான் தனியாக பேருந்தில் பயணிக்கிறாள் பிரியா. கடந்த ரெண்டு மாதங்களாய் மருந்து மாத்திரையில் நாட்கள் கழிய , காரமில்லாத சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்து வெறிபிடித்து இருந்தவளுக்கு இந்த பயணம் சற்று இதமாகவே இருந்தது.

சற்று முன்தான் கௌரி போனில் அழைத்து , நல்லதாக புடவை கட்டிக் கொண்டு சற்று தொலைவில் இருக்கும் அய்யனார் கோவிலுக்கு வர சொல்லவும் , போக கூடாது என்ற முடிவில் இருந்தவளுக்கு , இவ்வளவு நாள் தன் முகம் பார்த்து ஒவ்வொன்றாய் பார்த்து பார்த்து செய்தது நினைவில் வர மறுயோசனையின்றி கிளம்பிவிட்டாள்.

வழி நெடுகிலும் கடந்த இரண்டு மாதங்களாய் அவன் நடந்துக் கொண்டதை நினைத்து பார்த்தவளின் உதடுகளில் குறுநகை அரும்பியது. இறங்க வேண்டிய நிறுத்தம் வரவும் பேருந்திலிருந்து இறங்கி எங்கே செல்வது என்று சுற்றியும் பார்த்தவளின் முன் பளீர் புன்னகையுடன் தோன்றினான் கௌரி.

கடந்த சில நாட்களாய் முளைத்த புதிய பழக்கமான கண்கள் மின்ன தன்னை ரசிப்பதை , இன்றும் தொடர பொய்யாக முறைத்தவளை கண்டு ,

“அழகா இருக்க ப்ரிக்குட்டி …” என்று வழிந்தவனை கடுப்புடன் பார்த்தவள் ,

‘நான் அழகுன்னு எனக்கு ஏற்கனவே தெரியும் …இத சொல்லத்தான் இங்க வர சொன்னியா…’ என்று பார்வையால் பதிலளித்தவளை கண்டு, மீண்டும் வழிந்தவன்,

“உனக்கு அது தெரியும்னு எனக்கு தெரியும் ப்ரிக்குட்டி … எதுக்கு கூப்டேன் சொல்லமாட்டேன் … சர்ப்ரைஸ் …நீயே தெரிஞ்சுப்ப …” என்று பீடிகை போட்டவன் முன்னே நடக்க , அவனை முறைத்துக் கொண்டே அவனை பின் தொடர்ந்தாள். கோவில் அருகில் வந்ததும்

“உள்ள போய் சாமி கும்பிடு … ஒரு வேல இருக்கு வந்துடுறேன் …” என்றவன் மின்னல் வேகத்தில் மறைந்து போக , இதற்கா என்னை வர சொன்னாய் என்ற கடுப்புடன் கடவுள் மேலிருந்த கோபத்தில் சாமியை தரிசிக்காமல் பிரகாரத்தை சுற்றி வந்தவளை ,

“வாங்க மேடம் வாங்க …” என்று கையில் இலையோடு ஆர்பாட்டமாய் வரவேற்றான் கௌரி. பந்தி பரிமாறுபவன் போல காட்சியளித்தவனை கண்டு புருவம் சுருக்கி பார்த்தவளின் கண்களுக்கு அங்கே கிடா விருந்து நடந்துக் கொண்டிருப்பது தெரிய, கேள்வியாய் பார்த்தவளை நெருங்கிய நடுத்தர வயதுடையவர் ,

“என்ன கௌரி … இல போடாம பார்த்துகிட்டு இருக்க … அவங்க எவ்வளவு நேரம்தான் நின்னுட்டு இருப்பாங்க …” என்று கடிந்தவர் , பிரியாவை பந்தியில் அமர வைத்தபின் தான் அங்கிருந்து சென்றார். அவள் முன் தலைவாழையிலையை போட்டவன் , யாரும் அறியாதவாறு

“கூச்ச படாம எவ்வளவு வேணுமோ சாப்பிடு ப்ரிக்குட்டி … நேத்து நீ கேட்ட ஆசையை நிறைவேத்திட்டேன் பார்த்தியா … இப்போ என்கூட பேசலாம்ல ப்ரிக்குட்டி …” என்று பாவமாய் கெஞ்சியவனை முடிந்த மட்டும் முறைத்தாள் பிரியா.

அவளுக்கு வந்த கோபத்தில் பந்தியிலிருந்து எழுந்து சென்று விடலாமா என்று கூட தோன்றியது , நினைத்ததை செய்ய முயன்றவளின் முன் பிரியாணி குண்டாவுடன் தோன்றிய கௌரி அவசரமாக, லெக் பீஸ்வுடனான சிக்கன் பிரியாணியை பிரியாவின் இலையில் அள்ளி வைக்கவும் , பிரியாணியை கண்டதும் அவள் உறுதியை மீறி நாவில் எச்சில் சுரக்க சிறு சபலத்துடன் பிரியாணியை பார்த்திருந்தவளின் இலையில் கோழி வருவலையும் வைக்கவும் தன் கோபத்தை விடுத்து பிரியாணியிடம் சரண்டர் ஆனவள் கை நிறைய பிரியாணியை அள்ளி வாயில் திணிக்க , சற்று தள்ளி நின்றியிருந்த கௌரி கண்களில் கனிவோடு அவளை பார்த்திருந்தான்.

அன்று அந்த பெரியவரை இறக்கிவிட்ட பின் நேராக மருத்துவமனைக்கு வந்தவனிடம் பிரியாவின் உடல்நிலையை பற்றி கூறிய அந்த நர்ஸ்,

“பெருசா பொண்டாட்டிக்கு வலிக்கும்னு துடிச்ச … அந்த பொண்ணு ஒழுங்கா சாப்டுச்சுனா கூட கவனிக்காம இருந்திருக்க … சாப்பிடாம அல்சர் வந்தது கூடவா உனக்கு தெரியாது …” என்று கேள்வி கேட்டு திணறடிக்க எதற்கும் பதில் சொல்ல முடியா நிலையில் இருந்தான் கௌரி.

அவள் சரியாக சாப்பிடவில்லை என்றதை கேட்டதும் , என் புருஷன் நீயா ரகுவா என்று காலையில் பிரியா கேட்ட கேள்வி நினைவில் வர தன் குடும்பத்தாரை நினைத்து மனம் பாரமாகி போனது. காலையிலிருந்து விடாமல் போனில் அழைத்தவர்களின் அழைப்பை ஏற்காமல் தவிர்த்தவனிடம்,

“இன்னைக்கு ஒருநாள் இங்க இருக்க சொல்லிருக்கார் டாக்டர் … இன்னைக்கும் அட்மிசன் போடவா இல்ல வீட்டுக்கு அழைச்சுட்டு போறியா …” என்ற நர்சுக்கு , இருப்பதாக தலையாட்டிவிட்டு அட்மிஷன் வாங்கி கொண்டுதான் பிரியாவை காண சென்றான்.

கட்டிலில் கண்ணை மூடி துயில் கொண்டிருந்தவளை கண்ட நொடி, மனதில் வார்த்தையால் சொல்லமுடியாத உணர்வுகள் தாக்க ,அப்படியே அவள் காலடியில் உட்கார்ந்தவனின் சிந்தனை முழுதும் தன் குடும்பத்தாரை பற்றியே.

மனமோ அவர்கள் செய்தது தவறு என்று எடுத்துரைக்க , அறிவோ அவர்களை விடுத்து இவனை குற்றம் சாட்டியது. வளருக்கு பிடிக்காத திருமணம் , தன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர் , அந்த நம்பிக்கையை கெடுத்ததால் உண்டான கோபம் குற்றம் கண்டுபிடித்து இப்படித்தான் பேச தூண்டும், ஆனால் நீ நல்ல கணவனாய் இருந்திருந்தால் இந்த துன்பம் பிரியாவிற்கு நேர்ந்திருக்காது என்று எடுத்துரைக்க ,அடுத்த நொடி தன் தந்தையை அழைத்து நடந்ததை கூறி போனை அணைத்து பாக்கெட்டில் போட , சத்தத்தில் கண் முழித்து பார்த்தாள் பிரியா.

அவனின் அசதியை கண்டவள் அவனை படுக்க அழைக்க , மனம் பாரமாகி போனதால் மறுவார்த்தை பேசாமல் படுத்து தூங்கி போனான். அதன்பின் பிரியாவை காண வந்த தன் ரத்த பந்தத்திடம் ‘ஏன் ஒருவாய் சோறு கூட போட முடியாத நிலையிலா என் மனைவி போய்விட்டாள் …’ என்று கேட்க துடித்த நாவை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டான்.

‘எங்கள கூப்பிட கூட உனக்கு தோணலை இல்ல …’ என்று குற்றம் சாட்டியவர்களிடம் உங்களால் தான் இந்த நிலை என்று வாய் திறந்து கூறாமல் அவர்களின் கோபத்தை அமைதியாக வாங்கி கொண்டவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியா.

இன்றுவரை வாய் திறந்து தன் அன்னையை எதிர்த்து ஒரு கேள்வி கேட்காதவன், தன் செய்கையின் மூலம் அவர்கள் செய்தது தவறு என்று உணர்த்தினான். எப்பொழுதும் போல அவன் மட்டும் வீட்டில் உண்ண , பிரியாவிற்கு தனக்கு தெரிந்த அளவில் ரசம் தயிர் பருப்பு போன்ற உணவுகளை சமைத்து தட்டில் போட்டும் கொடுப்பது கௌரியின் பழக்கமானது. இவை அனைத்தும் குடும்பத்தார் பார்த்திருக்க நடப்பவை , அதில் வெகுண்டெழுந்த வளர்

“பொட்டச்சி காலாட்டிட்டு உட்கார்ந்திருக்க நீ சமைப்பதா …” என்று ஒரு ஆட்டம் ஆடி முடிக்க , எதையும் சட்டை செய்யாமல்,

“உங்க சமையல் ப்ரிக்குட்டிக்கு ஒத்துக்கலமா … வயிறு புண்ணா போய் அல்சர் வந்துருச்சு …” என்றவனுக்கு

“அதுக்கு நீதான் சமைக்கணுமா … நிறைமாசமா இருக்கும்போதும் உங்க பாட்டிய கூட விடாம நான்தான் சமைச்சேன் … வயித்துல தானே புண்ணு கைல இல்லல …அப்படியே சமைக்க முடியாதுன்னா காயத்ரி சமைச்சு தரும் … சமையல் கட்டு பக்கம் வர வேல வச்சுக்காத … ஆம்பள ஆம்பளையாதான் இருக்கனும் … பொட்ட பய போல பொண்டாட்டிக்கு சமைச்சு போட்டு துணி துவைச்சு கொடுத்துக்கிட்டு இருக்காதா …” என்று கடுமையாக பேசியவரை கண்டு சத்தம் போட்டு சிரித்தவன் ,

“ம்மா … மிஸ்டர் தண்டு நீ புள்ள பெக்குற வரைக்கும் வேலை வாங்கிருந்தா அவர போய் மொத்துமா … ஒய் மீ … அப்புறம் மீ நான் உன் புருஷன பார்த்து வளர்ந்தவன் , அவர் எப்படி நீ கிழிச்ச கோட்ட தாண்ட மாட்டாரோ அப்படிதான் மா நானும் … என் பொண்டாட்டி சொன்ன பேச்ச தட்டுனதா சரித்திரமே இல்லமா … ஏன்னா எனக்குள்ள ஓடுறது மிஸ்டர் தண்டுவோட பிளட் …” என்று நக்கலடித்து சென்றவனை முறைக்கத்தான் முடிந்தது வளரால்.

கொண்டவன் துணையிருக்க கண்டவரின் கருத்தெதற்கு என்ற பழமொழிக்கு ஏற்ப இதையெல்லாம் மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்த பிரியாவிற்கு கௌரியின் செய்கை கர்வத்தை கொடுக்கவும் , இதுவரை தன்னை சுற்றி போட்டிருந்த இறுக்கம் என்ற வேலியை விட்டு மெல்ல மெல்ல கௌரியை நெருங்கி கொண்டிருந்தாள்.

அவசர தேவைக்கு டிரைவர் தேவை என்றால் கௌரியை தொடர்பு கொண்டால் போதும் அளவிற்கு அங்கே பெயர் எடுத்திருக்க , சவாரி சென்று வந்த பணம் முழுவதையும் பிரியாவிடம் கொடுக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தான்.

பிரியாவும் பிகு பண்ணாமல் வாங்கி கொண்டவள் சிறிது பணம் சேர்ந்தபின் முதல் வேலையாக காயத்ரியிடம் இதுவரை போட்டிருந்த துணிகளுக்கா என்று ஒரு தொகையை கொடுக்க பலமாக அடிவாங்கி போனாள் காயத்ரி.

எவ்வளவு எடுத்து கூறியும் வாங்க மறுத்த தங்கை மீது மனத்தாங்கல் இருந்தாலும் பிரியாவின் இந்த நிலைக்கு மாமியாரும் நாத்தனாரும் தான் காரணம் என்று அரசல் புரசலாக தெரிய வந்ததால் , எதுவும் பேசாமல் மனதை திடப்படுத்திக் கொண்டாள்.

முன்பு போல இல்லாமல் , தன்னை மதித்து பேசவில்லை என்றாலும் பிரியாவை சீண்டுவதை வழக்கமாக்கி கொண்டவன் நேற்று இரவு உணவு உண்டபின் மொட்டை மாடியில் நின்று நிலவை ரசித்தவளை தானும் ரசித்து பார்த்தவனுக்கு அந்த ஏகாந்த இரவில் அவளை சீண்ட வேண்டும் என்று ஆசை பிறக்க மெல்ல அவளருகில் சென்று நின்றுக் கொண்டான்.

தன்னருகில் நின்றவனை உணர்ந்தாலும் திரும்பி பார்க்காமல் வானத்து நிலவை ரசித்துக் கொண்டிருந்தவளை மேலும் நெருங்கியவன் ,

“செம்ம அழகுல …” கள்ள சிரிப்புடன் அவளை பார்த்து கூறியவனை அறிந்துக் கொண்டவள் , திரும்பி பார்த்து முறைத்தபடி அங்கிருந்து நகர பார்க்க , அவள் கைகளை பற்றி நிறுத்தியவன் ,

“அழக ரசிக்கணும் ப்ரிக்குட்டி … இல்லனா இவ்வளவு அழகா படைச்ச கடவுள அவமதிக்கிற போல ஆகிடும்
…” என்று வெண்ணிற பற்கள் தெரிய சிரித்தவனை மேலும் முறைக்க , கண்களில் மோகத்தீ கொழுந்துவிட்டு எரிய அவளை பார்த்தவன்

“என்ன ப்ரிக்குட்டி … இப்போல்லாம் மாமனை கண்டு மூக்க பொத்துறதும் இல்ல ,வாந்தி எடுக்கிறதும் இல்ல … மாமனோட வாசம் புடிச்சு போச்சோ …” என்று சீண்டியவனிடமிருந்து கைகளை விலக்கி கொள்ள போராடியவளை கண்டு குறுநகை புரிந்தவன் ,

“ம்ம்கூம் … உன்ன விடுறதாயில்ல … ஏன் சும்மா கூட என்கிட்ட பேச மாட்டுற … உனக்கு என்னதான் வேணும் ப்ரிக்குட்டி … உன் மனசுல இருக்கிறத வாய திறந்து சொன்னாத்தானே எனக்கும் தெரியும் …” என்று தன்னை மதிக்காமல் விலகி செல்ல முயன்றவளை கண்டு ஆதங்கத்தில் கேட்டவனிடமிருந்து கையை வேகமாக உதறி பிரித்தெடுத்தவள் , சற்று தள்ளி நின்று அவன் பிடித்திருந்த இடத்தை வருடியபடி பார்த்தவளுக்கு, ‘பண்றதை எல்லாம் பண்ணிட்டு , பாவமா முகத்த வச்சுக்கிட்டு பேசுன்னு சொன்ன பேசிடனுமா …’என்ற கோபம் வர,

“ஓஹ் … மனசுல இருக்கிறத சொன்னா , உடனே நிறைவேத்திட்டு தான் அடுத்த வேலைக்கு போவியா …” என்று நக்கலாய் கேட்டவள் , தன்னையே பாவமாய் பார்த்திருந்தவன் மேல் சிறிதும் கருணை காட்டாமல் ,

“ஓகே … பெருசாலாம் கேட்கல … உன்னால முடிஞ்சா நாளைக்கு எனக்கு கறி விருந்து போடு … அப்போ பேசுறேன் …” என்று அவன் மேலிருந்த கோபத்தில் எதையோ பேசிவிட்டு சென்றவளை தான் இன்று யாரென்றே தெரியாதவரின் விருந்து சாப்பாட்டில் உட்காரவைத்திருந்தான்.

தன்னிடம் விருந்து கொடுக்கும் அளவிற்கு பணமில்லை என்பதை அறிந்துக் கொண்டே வேண்டுமென்றே சீண்டி செல்கிறாள் என்று புரிய , என்ன பண்ணலாம் என்று யோசித்தவனின் புத்தியில் உதித்ததுதான் இந்த விருந்து சாப்பாடு.

முதல் வேளையாக தன் நண்பர்களை அழைத்து பேசியவன் அருகில் எந்த கோவிலிலாவது கிடா விருந்து நடக்கிறதா என்று கேட்டு அறிந்தவன் தானும் சும்மாயில்லாமல் வண்டியை எடுத்துக் கொண்டு அலைய , அவனின் நல்ல நேரம் சற்று தொலைவில் உள்ள கோவிலில் கிடா விருந்து நடந்துக் கொண்டிருக்க , அவர்களிடம் சென்று தானே வலிய அறிமுகப்படுத்திக் கொண்டவன் உணவு பரிமாறவும் உதவி புரிந்தான்.

பிரியா சாப்பிட சாப்பிட அள்ளி அள்ளி வைத்தவனை முறைத்துக் கொண்டே ஒரு கட்டு கட்டியவளுக்கு நீண்ட வருடத்திற்கு பிறகு இல்லையில்லை முதல் தடவையாக வயிறார கறி சோறை உண்ட திருப்தி.

கையை கழுவிய பின் நடக்க முடியாமல் கோவிலை சுற்றி வந்தவளின் பார்வையில் ஒரு பெண் கௌரியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டு யோசனையுடன் நடந்தவள் அவள் அருகில் சென்று ,

“ஆள் செம்மையா இருக்கான்ல … என்ன சைட் அடிக்கிறீங்களா …” என்று குறுநகையுடன் கேட்கவும், திடீரென்று கேட்ட குரலில் பதறி போன அந்த பெண் , சற்றென்று எழுந்து விட , பேலன்ஸ் தவறி கீழே விழ போனவளை தாவி பிடித்த பிரியாவை பார்த்து ,

“சாரி … நீங்க திடீர்னு பேசவும் பயந்துட்டேன் … லெப்ட் கால்ல அடி பட்டுருக்கு ஸ்டிக் இல்லாம நடக்க முடியாது …” தன் குறையை நினைத்து தாழ்வு மனப்பான்மையோடு பேச , மென்னகை புரிந்த பிரியா

“ நான் பிரியா … நீங்க …” என்று இழுக்க , சற்று தயங்கி பின் சிறு புன்னகையுடன்

“ஹாய் நான் அருணா … அருணா மில் ஓனரோட பொண்ணு …” என்று தன்னை அறிமுகம்படுத்தியவளை கண்டு சிறு அதிர்ச்சியுடன் பார்த்தவள்,

“சக்கரை ஆலை அருணா ஓனரோட பொண்ணா நீங்க …” சற்று ஆச்சிரியத்துடன் கேட்க , மெல்ல சிரித்த அருணா ,

“அதே அருணா ஓனர் பொண்ணுதான் … ஏன் சக்கர ஆல பொண்ணுக்கிட்டலாம் பேச மாட்டிங்களா …” என்று கேட்டவளுக்கு அவசரமாக மறுத்த பிரியா ,

“ச்ச ச்ச … அப்படிலாம் இல்ல … ப்ரெண்ட்ஸ் …” என்று கையை நீட்ட , நீட்டிய கையை பற்றிய அருணா சிரித்தபடி

“ப்ரெண்ட்ஸ் …” என்று கூறவும் ,

“நாமதான் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமே … நமக்குள்ள என்ன சீக்ரெட் …” என்றவள் தொலைவில் யாரிடமோ சிரித்து பேசிக் கொண்டிருந்த கௌரியை காட்டி ,

“அழகா இருக்கான்ல … நான் பாக்கும் போது சைட் தானே அடிச்சுகிட்டு இருந்தீங்க …” என்ற பிரியாவிற்கு வெட்க சிரிப்பை உதிர்த்தவள் , ம்ம்ம் என்று தலையை ஆட்ட , சில நொடிகள் கௌரியை பார்த்திருந்த பிரியா பின் ஒரு முடிவு எடுத்தவளாக ,

“உங்க வீட்டுல டிரைவர் வேல காலியா இருந்தா தினமும் சைட் அடிக்கலாம் … சைட் மட்டும் இல்லாம , கடலையும் போடலாம் … அதையும் தாண்டி கூட போகலாம் பழகி பார்த்து பிடிச்சிருந்தா …” என்று கண்கள் மின்ன பேசிய பிரியாவை சந்தேகத்தோடு பார்த்த அருணாவை கண்டு பளீரென்று சிரித்தவள் ,

“அவன் எங்க அத்த பையன் தான் … ரொம்ப ரொம்ப நல்லவன் … என்ன வேலையில்லாம சும்மா சுத்திகிட்டு இருக்கான் …உங்ககிட்ட எதாவது வேலையிருந்தா …” என்றவள் தன் மொபைல் நம்பரை கூறி இதுக்கு கால் பண்ணு , “பை வரேன் …” என்று விடைக் கொடுத்த பிரியாவிற்கு , அருணாவின் வாய் மட்டும் பதிலளிக்க , கண்களோ ஆசையோடு கௌரியை வருடியது.

அதே நேரம் அருணாவிடம் சிரித்து பேசிக் கொண்டிருந்த பிரியாவை கண்களால் கற்பழித்துக் கொண்டிருந்தான் தினேஷ். அருணாவின் பெரியப்பா மகன். அருணாவின் குடும்பம் அந்த வட்டாரத்திலே வசதியான பெயர் பெற்ற குடும்பம். தன்னருகில் நின்றிருந்த நண்பனிடம் பிரியாவை சுட்டிக் காட்டி ,

“யாருடா அது … பாக்க பாக்க ரெண்டு புல் அடிச்ச போதை தரா … ப்ப்பா தூரத்துல இருந்து பார்க்கிறப்பவே அவ ஸ்ட்ரக்ச்சர் தூக்கலா இருக்கே , பக்கத்துல பார்த்தா …” என்றவனின் கண்களில் அவள் மீதிருந்த வெறி அப்பட்டமாக தெரிய ,

“நானும் இன்னைக்குத்தான் மச்சான் புதுசா பாக்கிறேன் … ஆனா கோவிலுக்குள்ளே வரும் போது ..” என்றவன் கௌரியை சுட்டிக் காட்டி , “இவன் கூடத்தான் வந்தா … இவனும் அவ சாப்பிடுற இடத்தையே சுத்தி சுத்தி வந்தான் மச்சான்… ஒருவேளை அவனுக்கு தெரிஞ்சவா இருக்கும் …” என்று தனக்கு தெரிந்ததை கூற , கோவிலை விட்டு வெளியேறிய பிரியாவின் கண்கள் அங்கே ஓரமாக நிறுத்தியிருந்த ப்ளூ கலர் ஆடி காரை ஏக்கத்துடன் சில நொடிகள் அதன் அழகை பருகிவிட்டே செல்ல , தினேஷின் இதழ்கள் வெற்றி சிரிப்பில் வளைந்தது.

“தெரிஞ்சவ இல்ல டா … அவ அவன் பொண்டாட்டிதான் … பொண்டாட்டிக்கு நல்ல சோறு போடமுடியாம பிச்சகார பய இங்க கூட்டிட்டு வந்துருக்கான் … அதுவும் நல்லதுதான் … இல்லனா இந்த பேரழகி கண்ணுல படாமலே போயிருப்பா … இவள மடக்கிறது ரொம்ப சுலபம்னு பட்சி சொல்லுது மச்சான் …” என்றபடி கண்ணை மூடி கற்பனையில் மிதந்துக் கொண்டிருந்தான்.

கோவிலை விட்டு வெளியேறிய சில நொடிகளில் பேருந்து வரவும் அதில் ஏறி உட்கார்ந்தவளின் அருகில் பெரிய பெரிய மூச்சுகளை விட்டபடி நெருங்கி உட்கார்ந்தான் கௌரி. தன்னை முறைத்து பார்த்தவளின் வலக்கையை பற்றி மூக்கில் வைத்து மோப்பம் பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டவன் ,

“நல்லா சாப்டியா ப்ரிக்குட்டி …” என்று மீண்டும் கையை மோர்ந்து பார்த்து ,

“பிச்சைக்கார பயலுவோ … ஒரு வாய் கறி சோறு போடாம நூறுரூபா காச கொடுத்து துரத்தி விட்டுட்டானுவோ … பரதேசிங்க …” என்று வாய்க்கு வந்த படி திட்டியவனை ,

‘யாரு அவனுக பிச்சகார பயலுவளா … ஓசி சோறு திங்க அழைச்சுட்டு போன நீதாண்டா பரதேசி நாயி …’ என்று மனதில் திட்டியவள் அவனை முறைத்து பார்க்க,

“ஏன் முறைக்க மாட்ட … ஒரு குண்டான் பிரியாணில பாதி உள்ள தள்ளிட்டு தெம்பா உட்கார்ந்துகிட்டு இருக்கல … அந்த திமிர்ல தான் மொறைச்சுக்கிட்டு வர … ச்ச வாசனையே செம்மையா இருந்துச்சு … ஒருபுடி புடிக்கலாம் நினைச்சுகிட்டு இருந்தேன் காச கொடுத்து அனுப்பிட்டானுவ பரதேசி பயலுவ … நாளைக்கு சிக்கன் எடுத்துக் கொடுத்து வளர் கையாள சமைச்சு சாப்டாதான் மனசு சாந்தப்படும்” என்று புலம்பியவனை அட சோத்துக்கு செத்த பயலே என்று பார்வை பார்த்தவளின் கையை மீண்டும் மூக்கில் வைத்து மோர்ந்தபடி

“என்ன ப்ரிக்குட்டி இவ்வளவு கேவலமா லுக் விடுற … நாமெல்லாம் சோறுதான் முக்கியம் சங்கத்த சேர்ந்தவங்கதானே … அதுவும் பிரியாணிக்காக உயிர மயிறுனு நினைக்கிற ஆளுங்க … பாரு உனக்கு யாருனு தெரியாத இடத்துல சாப்பிட உட்கார சொன்னப்ப எவ்வளவு கோபம் வந்திச்சு … எழுந்து போகலாம் கூடத்தானே நினைச்ச … ஆனா பிரியாணியை கண்ணுல காட்டின அடுத்த நொடி மானம் மரியாதையா தொடைச்சு எறிஞ்சுட்டு ஒரு கட்டு கட்டினியே … அப்போதான் ஒரு உண்மை தெரிஞ்சுது …” என்று நிறுத்தியவனை கொலைவெறியோடு பார்த்தவளை கண்டு சிரித்தவன் ,

“அது என்னனா ஒரு பிரியாணி பொட்டலத்தை கண்ணுல காட்டினா உன்ன ஈஸியா மடக்கிடலாம்ன்னு உண்மை தெரிஞ்சு போச்சு ப்ரிக்குட்டி …” என்று ஒற்றை கண்ணையடிக்க ,

“பரதேசி பரதேசி கறி விருந்து போட சொன்ன என்ன , ஓசி சோறு திங்க வச்சதுமில்லாம கிண்டலா பண்ற …” என்று கூறியவள் பஸ்சில் பயணம் செய்பவரை பொருட்படுத்தாமல் , அவன் முதுகிலும் கையிலும் ஓங்கி ஓங்கி குத்த , மனம்நிறைந்த சிரிப்புடன் அதை வாங்கி கொண்டவனின் கண்களும் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்து சிரித்தன .
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29213

கௌரி - 19

கோவிலுக்கு சென்று வந்ததிலிருந்து இருவரும் மனதளவில் நெருங்கியிருக்க , முன்பு போல இல்லாமல் கௌரியிடம் சற்று சகஜமாக பேச தொடங்கினாள் பிரியா. இதனிடையே வளரிடம் சிக்கன் பிரியாணி செய்ய சொல்லிக் கேட்டிருந்த கௌரிக்கு , கருவுற்றிருந்த காயத்ரியை காரணம் காட்டி

“சிக்கன் சூடு … அப்பாகும் சிக்கன் ஒத்துக்க மாட்டுது … விஜி வேற வர … அவ மாமியா மீன் சமைக்கவே விட மாட்டுறாளாம் … மீன் குழம்புன்னா இன்னும் ரெண்டு வாய் நல்லா சாப்பிடுவா …உனக்கு பிரியாணி சாப்புடுனும்னா ஹோட்டல்ல போய் சாப்பிடு …”என்றவர் அவனை அழைத்துக் கொண்டே மீன் மார்க்கெட்டுக்கு சென்றார்.

இதெயெல்லாம் மௌனமாய் பார்த்துக் கொண்டிருந்த பிரியா, மதியம் சாப்பிட கூடத்தில் உட்கார்ந்த கௌரியின் அருகில் சென்று நிற்க , அதிசயமாய் எல்லார் முன்னும் தன்னருகில் வந்து நின்றவளை கேள்வியுடன் பார்த்த கௌரி ,

“என்ன ப்ரிக்குட்டி …” என்ற நொடி , தன் பிள்ளைக்கு சாதம் ஊட்டிக் கொண்டிருந்த விஜியின் முகம் கடுகடுப்பதை ஒர கண்ணால் பார்த்த பிரியாவிற்கு சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தாலும் தன்னை கட்டுப்படுத்தியபடி, கண்களால் கௌரியை வெளியே வர சைகை செய்தவள் பதில் கூறாமல் வெளியேற ,சாப்பிட உட்கார்ந்தவன் “இரும்மா வந்துடுறேன் …” என்று அவள் பின்னே சென்றான்.

சாப்பிட உட்கார்ந்த பிள்ளை அவள் கண்ணசைவில் அடிமையை போல அவள் பின்னே ஓடவும் கொதித்து போனார் வளர். அதற்கு ஏற்றார் போல ,

“ம்ம்ம் … நமக்கெல்லாம் இந்த சாமர்த்தியம் வராதும்மா … கால்ல விழுந்து கிடக்கிறான் …” என்று ஏற்றிவிட , விஜியின் பேச்சு காயத்ரிக்கு சங்கடத்தை கொடுத்தாலும் , தன் தங்கையின் கண்ணசைவில் ஓடி சென்ற கௌரி மேல் மரியாதை உண்டாக புன்சிரிப்புடன் உணவு பரிமாறியவளை கண்டு விஜி உள்ளுக்குள் கருவிக் கொண்டிருந்தாள்.

டிவிஎஸ் 50யை ஓட்டிக் கொண்டிருந்தவன் பத்தாவது தடவையாக , ‘எங்கே போகிறோம் …’ என்று கேட்டு களைத்து போனான். வீட்டிலிருந்து கிளம்பி அரைமணி நேரம் ஆகியும் எங்கே செல்கிறோம் என்று கூறாமல் அமைதியாக வந்தவளை கண்ணாடி வழியே பார்த்தவன் ,

“அடேய் ப்ரிக்குட்டி … உனக்கு என்ன பனி பொழியுறதா நினைப்பா … மிஸ்டர் சன் வேற மண்டைல இருக்கிற தண்ணிய ஒரு சொட்டு கூட விடாம உறிஞ்சுக்கிட்டு இருக்கார் டா … மாமா மேல கொஞ்சம் கருணை வச்சு எங்க போறோம்னு சொல்லு ப்ரிக்குட்டி …” என்று கெஞ்சியவனை கண்டு பிரியாவிற்கு சிரிப்பு வர , மேலும் அவனை நெருங்கி உட்கார, தொப்பலாக நனைந்திருந்தவனின் வேர்வை மெல்ல அவளிடம் இடம்பெயன்றது.

அவளின் உடல் தன்னுடலுடன் உரசவும் அந்த வெட்கையிலும் மழை சாரலில் நனைந்தது போல சிலிர்த்து அடங்கினான் கௌரி. அந்த தீண்டல் பல கற்பனைகளை அவனுள் தோற்றுவிக்க , தன்னை கட்டுப்படுத்த முடியாமல் திணறி போனவன் வண்டியின் வேகத்தை கூட்டியிருந்தான்.

கந்தவிலாஸ் என்ற பெயர் பலகையை தாங்கி நின்ற ஹோட்டலில் முன் வண்டியை நிறுத்திய கௌரி ,

‘அட பாவி ப்ரிக்குட்டி … பிரியாணி திங்கவா இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்த … பிரியாணி காசாவிட பெட்ரோலுக்கு நிறைய ஆகிடும் போலயே …’ என்று மனதில் நொந்தவன் பிரியாவை பரிதாபமாக பார்க்க , அவளோ அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் கல்லாவில் உட்கார்ந்து இருந்தவரிடம் எதையோ பேசிட்டு நல்ல இருக்கையாக பார்த்து உட்காரவும் வேற வழியில்லாமல் தன் விதியை நொந்துக் கொண்டே அவளருகில் சென்றான்.

கையிலிருந்த மெனு கார்டில் பார்வையை பதித்திருந்தவளிடம் ,

“ப்ரிக்குட்டி … வெறும் 200ரூபா தான் இருக்கு … மெனு கார்டலாம் பாக்க அவசியமேயில்லை … வெறும் பிரியாணியை மட்டும் சாப்ட்டு கிளம்பிடலாம் …” என்று ரகசிய குரலில் பேச , அருகில் வந்த சர்வரிடம் ,

“அண்ணே … நல்ல பெரிய தலைவாழையிலையா போடுங்கணே …” என்ற பிரியாவை அதிர்ச்சியுடன் பார்த்த கௌரி ,

“அய்யோ ப்ரிக்குட்டி இப்போ எதுக்கு தலைவாழை இல … மாமாகிட்ட வெறும் 200ரூபாதான் இருக்கு … உனக்கே தெரியும் இந்த வாரம் பெருசா எந்த சவாரியும் வரல … காசில்லடா ப்ரிக்குட்டி … உனக்கு மட்டும் பிரியாணி ஆர்டர் பண்ணிக்க …எனக்கு வீட்டுல மீனு குழம்பு இருக்கு …” என்றவனின் பேச்சை சுத்தமாக மதிக்காதவள் ,

“அண்ணே … மெனு கார்ட்ல மாப்பிள்ளை விருந்துனு இருக்கே … அதுல என்னன ஐட்டம் இருக்கும்ன …” என்றவளுக்கு

“அதுல சிக்கன் மட்டன்ல இருக்கிற எல்லா ஐட்டமும் வரும் … கூடவே காட மீன் நண்டு எற முட்டையும் வரும்மா … கொஞ்சம் சிக்கன் மட்டன் பிரியாணி … வைட் ரைஸ் …” என்று பட்டியலை அடுக்கிக் கொண்டு போக , அவசரமாக இடைமறித்த கௌரி,

“அண்ணே … ஒரு பிளேட் சிக்கன் பிரியாணி மட்டும் போதும் ணா …” என்றவனை திரும்பி பார்த்து முறைத்த பிரியா

“நீங்க எல்லாத்தையும் எடுத்துட்டு வாங்கணா … கூடவே தனியா சிக்கன் பிரியாணியும் …” என்றவளை டென்ஷனோடு பார்த்தவன் , சர்வர் அங்கிருந்து நகர்ந்ததும் ,

“டேய் காசில்லைன்னு சொல்றேன் மீறி ஆர்டர் பண்ணிருக்க … இதுவேற தெரியாத ஊரா இருக்க… இங்க இருக்கனுவோ எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கானுவோ …” முகத்தில் பதட்டம் தெரிய பேசியவனை திரும்பி பார்த்தவள்

“நாமெல்லாம் சோறுன்னு வந்துட்டா … உயிர மயிரா நினைக்கிற ஆளுங்க … துப்புனா துடைச்சிட்டு போற ஆளு நீங்க … நீங்க இப்படி பேசலாமா கோப்பால் … கைல காசு இல்லைனு தெரியும் … அதான் தூரமாயிருக்கிற ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன் … சாப்ட்டு நைஸ்சா எஸ் ஆகிடனும் சரியா…” என்று நக்கலடித்தவளை பாவமாக பார்த்தவன் முன் சிக்கன் 65 , சிக்கன் வறுவல் ரத்த பொரியல் என்று விதவிதமான உணவுகளை பரிமாற தொடங்க , நாக்கில் எச்சில் ஊற பார்த்தவன்,

“ஆஹா … அன்னைக்கு நான் பேசினத்துக்கு பழி வாங்கிறியா ப்ரிக்குட்டி … ஓகே நீ பழைய பார்ம்க்கு வந்துட்டேனு தெரியுது … சரி முதல்ல நீ சாப்பிட்டு இங்கிருந்து எஸ்கேப் ஆகிடு … முடிஞ்சளவுக்கு சமாளிக்க பாக்கிறேன் … என்ன மிஞ்சி மிஞ்சி போன கட்டிவச்சு கொஞ்சம் நேரம் அடிப்பான் … அவ்வளவுதானே … நமக்கு சோறுதான் முக்கியம் … வா வா இன்னைக்கு ஒருபிடி பிடிச்சுடலாம் …” என்றவன் இலையில் வைத்ததை ஆசையோடு பார்த்தவன் அதிலிருந்ததை ஒரு புடி புடிக்க தொடங்கினான்.

ஒரே இலையில் தன்னருகில் நெருங்கி உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றாள் என்ற உணர்வே இல்லாமல் மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்ற பயத்தில் இலையில் இருந்ததை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான் கௌரி. ஆனால் பிரியாவோ எந்தவித டென்ஷனும் இல்லாமல் நிதானமாக ரசித்து ரசித்து உண்டவள் நடுநடுவே கெரியையும் ரசிக்க தவறவில்லை.

அள்ளி தின்னாமல் கொஞ்சம் கொஞ்சமாக கொறித்துக் கொண்டிருந்தவளை கண்டு

“ என்ன ப்ரிக்குட்டி … சாப்பிடாம பூச்சு புடிச்சுகிட்டு இருக்க … சும்மா அள்ளி வாயில தினி …”என்றவனை பார்க்காமல் பிரியாணியில் கிடந்த முந்திரியை பொறுக்கி தின்னவள் ,

“ம்ம்கூம் எனக்கு பசிக்கல … நீதானே கிளம்புறதுக்கு முன்னாடி ரசம் சாதம் போட்டு கொடுத்த …” என்றவளை அதிர்ச்சியாய் பார்த்தவன்

“அடப்பாவி ப்ரிக்குட்டி … உண்மையிலயே என்ன பழிவாங்க தான் கூட்டிட்டு வந்தியா … உன்ன …” என்று பல்லை கடித்தவனை கண்டு லேசாக சிரித்தவள்,

“எஸ் … கறி விருந்து கேட்ட எனக்கு ஓசில விருந்து வச்சல … இப்போ என் டர்ன் … ரெண்டு வாரமா உங்க அம்மாகிட்ட பிரியாணி கேட்டுகிட்டு இருந்தல , அதான் உன் ஆசையை நிறைவேத்த திருட்டு விருந்து … அதுவும் மாப்பிள்ளை விருந்து … மாமியார் வீட்டுக்கு போறதும் போகாததும் உன் சாமர்த்தியத்தை பொறுத்தது …”என்று ரெண்டு கண்ணையும் சிமிட்டி பேசியவளை கண்டு கௌரி சொக்கி போனானோ இல்லையோ , இவர்கள் ஹோட்டலுக்குள் வந்ததிலிருந்து வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த தினேஷ் கிறங்கி போனான். ரெண்டு வாரமாய் இவளை பற்றி நினைக்காமல் இருந்தவனின் உணர்ச்சிகளை தன்னையறியாமல் தூண்டிவிட்டு கொண்டிருந்தாள் பிரியா.

தன்னிடம் சகஜமாய் சிரித்து கேலி பேசிய பிரியாவை கண்டு அகமகிழ்ந்து போன கௌரிக்கு தனக்காக தான் இந்த விருந்து என்று புரிய மனம் பெருமிதத்தில் விம்மியது. கேலியும் சிரிப்புமாக முழு இலையையும் காலி செய்தபின்,

“ப்ரிக்குட்டி … நீ போய் கை கழுவிட்டு சத்தம் போடாம வண்டிய எடுத்துட்டு கிளம்பிடு … நானும் நைஸ்சா வந்திடுறேன் …” என்றவன் அவள் கை கழுவி வெளியேறும் வரை காத்திருந்தவன் கை கழுவ எழுந்திருக்க ,

“என்னங்க … சர்வர் அண்ணா பில் கொடுத்ததும் கட்டிட்டு வாங்க … பக்கத்து கடை வரைக்கும் போய்ட்டு வரேன் …” என்று வேண்டுமென்றே சத்தம் போட்டு கத்தி சென்றவளை கொலைவெறியுடன் பார்த்த கௌரி , தன்னையே குறுகுறுயென்று பார்த்த சர்வரை நோக்கி தன் மொத்த பற்களையும் காட்டியவன் எப்படி சமாளிப்பது என்ற யோசனையோடு கை கழுவ சென்றவனின் உடல் பயத்தில் தொப்பலாக நனைந்திருந்தது.

சரி எப்படியாவது சமாளிப்போம் என்ற முடிவோடு ,

“ண்ணா … எவ்வளவு ணா ஆச்சு …” என்று தொண்டையை செருமிக் கொண்டு கேட்டவனுக்கு ,

“875ப்பா …” என்க ,

“ண்ணா … என்கிட்ட கேஷ் கம்மியாத்தான் இருக்கு … கார்டு யூஸ் பண்ணலாமா …” குரல் பிசிறி ஒலிக்க , புரியாமல் பார்த்த சர்வரை கண்டு அசட்டு சிரிப்பை உதித்தவன் ,

“கைல 200ரூபா தான் இருக்கு ணா … பக்கத்துல எடிம் இல்ல … அதான் கார்டு பேமெண்ட் பண்ணலாமா …” என்று தயங்கி இழுக்க

“ஏன் தம்பி காசு நிறைய வச்சுருக்கீங்களா … ஏற்கனவே காசு கட்டினத்துக்கு திரும்ப கட்ட துடிக்கிறீங்க …” என்று கிண்டலடித்தவரை புரியாமல் பார்த்திருந்த கௌரியை வண்டியின் ஹாரனை கொண்டு அழைத்த ப்ரியா , சிறு சிரிப்புடன் கண்களால் அழைக்க , விட்டால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து வெளியே வந்தவன் தன்னை கண்டு சிரித்துக் கொண்டிருந்த பிரியாவை முறைத்து ,

“இன்னும் கொஞ்சம் நேரம் அங்க இருந்தேனா , கண்டிப்பா பயத்துல அந்த இடத்த நாறடிச்சுருப்பேன் , செம்மையா வைத்த கலக்கிடுச்சு ப்ரிக்குட்டி இப்படியா பயம் காட்டுவ …” என்று அவள் தலையை மெல்ல தட்டி சிறு எரிச்சலுடன் கூற ,

“ங்ங்… இனிமே ஓசி சோறு சாப்பிட கூட்டிட்டு போவ …” என்றவளை கையெடுத்து கும்பிட்டவன் ,

“ஜென்மத்துக்கும் அந்த தப்ப பண்ண மாட்டேன் … முதல்ல இங்கிருந்து கிளம்பலாம் … இந்த இடத்த பார்த்தாலே பீதியாகுது …” என்றவனை திமிராய் பார்த்தவள் ,

“அது …” என்று கெத்து காட்டியவள் வண்டியை கிளப்ப , பிகு பண்ணாமல் அவள் பின்னே ஏறி உட்கார்ந்தவன் அவளை நெருக்கி உட்கார்ந்து அவள் இடுப்பை சுற்றி கரத்தால் கட்டிக் கொள்ளவும் , சற்று தடுமாறி போனவள் அவசரமாக அவன் கரத்தை பிரிக்க முயல ,

“சும்மாயிரு ப்ரிக்குட்டி … இன்னும் படபடப்பு அடங்கல … எங்கையாவது தலைசுத்தி விழுந்துட போறேன் …” என்று மீண்டும் அவளை இறுக்கி கொள்ள , அவஸ்தையில் நெளிந்த பிரியா அவனை திட்டியபடி வண்டியை எடுத்தாள்.

சற்று தொலைவில் தன் ஆடியில் சாய்ந்து நின்றபடி போன் பேசிக் கொண்டிருந்த தினேஷின் கண்கள் பிரியாவை மட்டுமே வட்டமடித்துக் கொண்டிருந்தது. அவளின் சிரிப்பு… முறைப்பு, செல்ல கொஞ்சல் என்று அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தவனின் கண்களுக்கு சிக்கென்று சுடிதாரில் வந்திருந்த பிரியா விருந்தானாள்.

அவனை கடந்து சென்ற பிரியாவின் கண்களும் ஆசையோடு அங்கே நின்றிருந்த ஆடியை வருடி பின் தினேஷிடம் நிற்க, கண்ணக்குழி தெரிய இதழ் பிரித்து மயக்கும் புன்னகையை பிரியாவை நோக்கி செலுத்த பதிலுக்கு புன்னகை புரிந்தவளை , ஈஸியாக மடக்கிவிடும் நினைப்பில் கண்கள் மின்ன அவர்களை வெறித்திருந்தவன் அதற்கான வேலையை அப்பொழுதே தொடங்கினான்.

“அப்புறம் ப்ரிமுட்டி மாமாக்கு பிரியாணி சாப்பிடணும்னு இருந்த ஆசையை நிறைவேத்திடீங்க … அப்படியே இன்னொரு ஆசையும் ரொம்ப நாளா நிறைவேறாம இருக்கு … அதையும் நிறைவேத்திட்டா … மாமா உங்களுக்கு அடிமை சாசனம் எழுதி தந்துறேன் …” என்றவனை கண்ணாடி வழியே பார்த்தவள் என்னவென்று கண்களால் கேட்க , அவள் தோளில் தன் தாவங்கட்டையை பதித்து நெறுங்கி உட்கார்ந்தவன்,

“அதுவந்து ப்ரிக்குட்டி … ஒருநல்ல பிகர் கூட சேர்ந்து படம் பாக்கணும்னு ரொம்பநாள் ஏக்கம் … அதையும் நிறைவேத்தி வச்சா ரொம்ப சந்தோஷப்படுவேன் …” என்று குறும்புடன் பேசியவனை , ‘யாரு நீ பொண்ணுங்க கூட ஆசப்பட்ட … அத நான் நம்பனும்…’ என்ற ரீதியில் பார்த்தவள் அவனின் அந்த ஆசையும் நிறைவேத்தினாள்.

சினிமாவிற்கு சென்றுவிட்டு இரவு உணவையும் வெளியில் முடித்துவிட்டு வீடு திரும்ப இரவு பத்து மணி போல் ஆகா , அவர்கள் வரும்வரை தூங்காமல் விழித்திருந்தனர் வளரும் விஜியும் . தன் அன்னையை கண்ட கௌரி மேலே செல்லாமல் அவரிடம் சென்றவன் ,

“இன்னுமா தூங்காம இருக்க … உலக அதிசயமா இருக்கே …” என்று போலியாக ஆச்சிரியப்பட்டவனை முறைத்த வளர் ,

“மதியானம் சாப்பிடாம கூட எங்க கிளம்பி போன … சாதம் வடிச்சு வீணா போச்சு … வெளில போறேன் தெரியும்ல … முன்னாடியே சொல்றதுக்கு என்னவாம் …” என்று எரிந்து விழுந்தவரின் அருகில் படுத்துக் கொண்டவன் ,

“போ மீ வரவர உனக்கு ஏன் மேல பாசமே இல்லாம போச்சு … எப்ப பாரு திட்டிகிட்டே இருக்க …” என்று செல்லம் கொஞ்சியவனுக்கு ,

“ஆமா நீ பண்ண வேலைக்கு தூக்கி வச்சுக்கிட்டா சுத்துவாங்க … ஏண்டா உன் புத்தி இப்படி போச்சு … ஒழுங்கா சமைக்க தெரியாது நாலு வார்த்தை பேசி கூட பாக்கல , சிரிப்புன்னா என்னனு கேட்கிற சிடுமூஞ்சு … அந்த திமிர் புடிச்சவகிட்ட என்ன இருக்குனு அவ கால்ல விழுந்து கிடக்கிற … “ என்று தன் மன ஆதங்கத்தை கொட்ட , கண்ணை மூடி மெல்லிய சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தவன் ,

“இவ்வளவு குறையிருந்தும் புடிச்சுருக்குனா ,அதுக்கு பேருதான் மா லவ் ,பியார் காதல் …” என்று வசனம் பேசியவனை கண்டு கடுப்பான வளர் அருகிலிருந்த துடைப்பத்தை கையில் எடுக்க அங்கிருந்து சிரித்தபடி குளிப்பதற்காக பாத்ரூம்க்குள் நுழைந்துக் கொண்டான்.

கௌரி மேலே வருவதற்குள் குளித்து முடித்து நைட்டிக்கு மாறியிருந்த பிரியா வெளியே வாங்கி வந்திருந்த ஜாதிமல்லியை பின்னந்தலையில் வைக்கும் வேளையில் அறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் கௌரி. தன் கண்முன்னே இந்திரலோகத்து சுந்தரி போல நின்றிருந்தவளை கண்டதும் உடலின் புது ரத்தம் பாய தொடங்க , உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி தவித்துக் போனான்.

மெல்ல எச்சிலை கூட்டி விழுங்கியவன் முடுக்கிவிட்ட பொம்மை போல அவள் அருகில் சென்று பூ வைப்பதற்கு உதவி செய்ய , கௌரியின் திடீர் ஸ்பரிசத்தில் சற்றென்று திரும்பி பார்த்த பிரியாவை பார்த்திருந்தவனின் கண்களில் அப்பட்டமாக மோகம் கொப்பளித்து கொண்டிருந்தது.

இன்று முழுவதும் இருவரும் சுற்றி திரிந்தது வேறு ஒருவித கிளர்ச்சியை கொடுக்க ,அவனின் பார்வை வீச்சில் கட்டுண்டு மௌனியாக நின்றவளை மேலும் நெருங்கியவன் , அவளின் இரு கன்னங்களையும் பொக்கிஷத்தை தாங்குவது போல கையில் ஏந்தியவன் ,

“ப்ரிக்குட்டி …” என்று கிரக்கத்துடன் அழைத்தபடி தன் உதடுகளால் அவள் இதழ்களை மெல்ல உரச, உடம்பில் மின்சாரம் தாக்கியதை போல அதிர்வலைகளை உணர்ந்தவளின் உதடுகள் மெல்ல விரிந்து அவனின் இதழ்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க , நீண்டநாள் காத்திருந்தவனின் கைகளில் கிடைத்த பிரியாணியை விட மனமில்லாதவன் போல கிடைத்த வாய்ப்பை கப்பென்று பிடித்துக் கொண்டவன் தன் இதழ் கொண்டு அவளின் இதழை மூடினான்.

அவன் இதழ்கள் தீண்டிய அடுத்த நொடி ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்துக் கொண்டு இதழ் யுத்தத்தில் திளைத்திருக்க , மது அருந்தாமலே போதையில் மிதந்துக் கொண்டிருந்தவன் நிதானத்தை இழந்து தன் கரம் கொண்டு அவளின் வரிவடிவத்தை அறிய முயல , அதில் மெல்ல தெளிய தொடங்கிய பிரியாவிற்கு தான் செய்துக் கொண்டிருக்கும் காரியம் புலப்பட , தன் மொத்த பலத்தையும் திரட்டி அவன் நெஞ்சில் கை வைத்து தன்னிடமிருந்து பிரித்து தள்ளிவிட்டாள்.

தள்ளிவிட்ட வேகத்தில் இன்னும் மோகம் கலையாததால் சற்று தடுமாறி பின் சமாளித்து நின்றவனை முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டிருந்தாள் பிரியா .

“சாரி …” என்ற ஒற்ற வார்த்தையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறியவன் மொட்டைமாடி கைப்பிடி சுவரில் உட்கார்ந்து தன்னை நிலைப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தான் .

கடல் அலை போல அவனுடைய உணர்வுகள் பேயாட்டம் போட , அவனின் ஒவ்வொரு அனுவும் பிரியா வேண்டும் வேண்டும் என்று ஆர்ப்பரிக்க , தலையை இருகையாலும் பற்றி கண்ணை இறுக மூடி தன்னை நிதானத்துக்கு திருப்பி கொண்டிருந்தவன், பின்

‘அவசரபட்டுட்டியே கௌரி …கைய ஒழுங்கா வச்சுக்கிட்டு இருக்க மாட்டியா … கிஸ்ஸோட நின்னுருக்கலாம் … இப்போ எப்படி ப்ரிகுட்டி முகத்துல முழிக்கிறது…’ என்று தன் தலையை கையால் குற்றியபடி புலம்பிக் கொண்டிருந்தவனை , இருட்டிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பிரியாவின் முகத்தில் மென்னகை குடிக்கொள்ள, அதே மோனமான மனநிலையோடு படுக்க சென்றாள்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29256

கௌரி - 20

இன்றோடு கௌரி வேலைக்கு சேர்ந்து ரெண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அருணாவின் தந்தை அருணாச்சலத்தின் கார் டிரைவராக தினேஷின் தில்லுமுல்லால் கிடைத்த வேலை. பெயரளவில் தான் டிரைவர் மற்றபடி அருணாச்சலத்திற்கு ஆல் இன் ஆல் அழகுராஜா கௌரிதான். அவனின் சுறுசுறுப்பிலும் வேலை திறனிலும் பெரிதாக கவர்ந்து போனவர் , எல்லா வேலைக்கும் அவனை முன்னிறுத்தினார்.

முதலில் பிரியாவிற்கு அவன் அருணாவின் தந்தையிடம் தான் வேலை செய்கிறான் என்று தெரியாமல் இருக்க , பேச்சுவாக்கில் எங்கே வேலை செய்கிறான் என்று தெரிந்துக் கொண்டவள் , அருணாதான் இந்த வேலையை ஏற்படுத்தி இருப்பாள் என்று நம்பினாள். அன்றிலிருந்து கௌரியிடமிருந்து மெல்ல மெல்ல ஒதுங்கிக் கொண்டவள் , பலவித குழப்பத்தில் இருந்தாள்.

இன்று அருணா சக்கரை ஆலையின் வைரவிழா , அதற்கு பெரும்பாடு பட்டு கெஞ்சி கூத்தாடி பிரியாவை அந்த விழாவிற்கு அழைத்து வந்திருந்தான் கௌரி. அவளிற்கு அருணாவின் மனநிலையை தெரிய வேண்டியதால் அவனுடன் கிளம்பிவிட்டாள்.

விழா அரங்கம் பிரமாண்டத்தை பார்த்து வியந்தவளை ஒரு இருக்கையில் அமர வைத்த கௌரி,

“ப்ரிக்குட்டி … தனியா கொஞ்ச நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா … நான் போய் எதாவது வேலையிருக்கானு கேட்டுட்டு வந்திடுறேன் …” என்றவன் அவள் பதிலுக்கு கூட காத்திராமல் மேடையில் நின்றிருந்த அருணாச்சலத்திடம் சென்றான். அதன்பின் காலில் பம்பரம் கட்டியதை போல அங்கேயும் இங்கேயும் பிஸியாக சுற்றிக் கொண்டிருந்தவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை யாரோ நீண்ட நேரம் பார்ப்பது போல இருக்கு மெல்ல திரும்பி பார்த்தவளை முறைத்துக் கொண்டிருந்தாள் அருணா.

‘ம்ம்க்கும் உண்ம தெரிஞ்சுடுச்சு போல … எப்படியாவது பேசி அவ மனசுல இருக்கிறத தெரிஞ்சுக்கணும் …’ என்று மனதில் நினைத்தவள் மெல்ல அவளை நெருங்க , பிரியா வருவதை தெரிந்துக் கொண்டவள் அவளிடம் பேச பிடிக்காதவள் போல விலகி செல்ல , விடாமல் தொடர்ந்து சென்று அவளிடம் வலிய பேசினாள் பிரியா .

“ஹாய் அருணா … என்ன கண்டுக்காம போறீங்க …” சிரித்தபடி பேச,

“சாரி … எங்க வீட்டுல துஷ்டன கண்டா விலகி இருக்க சொல்லிருக்காங்க … அதான் கண்டுக்காம போறேன்…” என்று முகத்தில் அடித்ததை போல பேசியவள் விலகி செல்ல முயல, அவள் பேச்சு மனதில் வலியை கொடுத்தாலும் ,வெளியே சிரித்தபடி அவள் கைகளை பற்றியவள் ,

“ஓகே … அன்னைக்கு அத்த பையன் பொய் சொல்லிட்டேன் சாரி … அதுக்கு ஒரு ரீசன் இருக்கு … இப்போ இங்க என்னால சொல்ல முடியாது …” என்று நிறுத்தியவள் பின்

“இன்னும் உங்களுக்கு கௌரி கிடைக்கணும் ஆசை இருந்தா , நாளைக்கு பெருமாள் கோவில்கிட்ட வந்துடுங்க … நான் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பேன் …” என்று உதட்டை இழுத்து சிரித்தவள் அவள் பதிலுக்கு காத்திராமல் அங்கிருந்து வெளியேற , குழம்பி போய் அருணா நின்றிருக்க , மறைந்து நின்று இவர்கள் பேசுவதை கேட்டிருந்த தினேஷ் யோசனையானான்.

பிரியாவிற்கு அதற்கு மேல் அங்கே இருக்க பிடிக்காததால் வீட்டிற்கு செல்வதற்காக கௌரிக்கு அழைக்க , காலை அட்டென்ட் செய்தவன் இதோ இதோ என்று இழுத்தடிக்கவும் , பொறுமையிழந்தவள் தான் மட்டும் பஸ்சில் செல்வதாக மெசேஜ் அனுப்ப பதறியடித்து ஓடிவந்தான் கௌரி.

“பாதில விட்டுட்டு வர முடியாதுடா ப்ரிக்குட்டி … கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுடா … கிளம்பிடலாம் …” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே , மண்டபத்தை விட்டு வெளியேறி சென்றவளின் கையை பிடித்து

“ஒரு ஹாப் அன் அவர் வீட்டுக்கு கிளம்பிடலாம் … ப்ளீஸ் ப்ரிக்குட்டி …” என்று கெஞ்ச அப்பொழுதான் கௌரியை பார்ப்பதாக காட்டிக் கொண்ட தினேஷ் ,

“என்ன கௌரி பங்ஷன் நடந்துகிட்டு இருக்கு … இங்க நிக்கிற … நீ இல்லாம சித்தப்பாக்கு ஒன்னும் ஓடாதே …” என்கவும்,

“தோ போகணும் … தினேஷ் இவங்கதான் என் வொய்ப் பிரியா … ப்ரிக்குட்டி … இவர் தினேஷ் அருணாச்சலம் சாரோட அண்ணன் பையன் …” என்று அறிமுகம்படுத்த , பதிவிசாய் கைகூப்பி “வணக்கம் …” என்று மென்புன்னகையுடன் அறிமுகமாக ,பதிலுக்கு சிறு சிரிப்புடன் தலையசைத்து அவன் வணக்கத்தை ஏற்றாள் பிரியா.

“சரி நான் கிளம்புறேன் …” என்று பொதுவாய் கூறி விடைபெற்றவளை கண்டு செய்வதறியாது கௌரி நின்றிருக்க,

“அட தனியாவ போவீங்க... என்ன கௌரி பார்த்துகிட்டு நிக்கிற ,போய் வீட்டுல ட்ராப் பண்ணிட்டு வா … இங்க நான் பார்த்துகிறேன் …” என்று நல்ல பிள்ளையாய் பேச ,

“அது …” என்று ஆரம்பித்தவனை தடுத்தது தினேஷின் போன். அதை உயிர்ப்பித்து ,

“சாரி சாரி வந்துகிட்டே இருக்கேன் … அங்கேயே நில்லுங்க … வந்துடுறேன் …” என்ற தினேஷ் , கௌரியிடம் ,

“சாரி கௌரி … அப்பாவோட ப்ரெண்ட் மதுரைல இருந்து வரார் … பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கார் … நான் அழைக்க போகணும் …”என்று சிறு சங்கடத்துடன் கூற ,யோசனையோடு பார்த்த கௌரி பின் சிறு தயக்கத்திற்கு பின்,

“தினேஷ் நீங்க போற வழில … என் வொய்ப்ப வீட்டுல இறக்கி விட முடியுமா …” என்கவும் , உள்ளுக்குள் குதூகலித்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாத தினேஷ் ,

“அட இதுக்கு ஏன்பா தயங்கிற … வீட்ல விடுனா விட போறேன் … போலங்களா …” என்று பிரியாவிடம் கேட்க, சற்று தயங்கியவள் ,

“பரவால்ல … நான் பஸ்லே போய்க்கிறேன் … உங்களுக்கு எதுக்கு சிரமம் …” என்றவளை ,வலுக்கட்டாயமாக தினேஷுடன் அனுப்பி வைத்தான் கௌரி.
காரில் இளையராஜாவின் மனதை மயக்கும் மெல்லிசை ஒலிக்க , மிதமான வேகத்தில் சென்ற சொகுசு பயணத்தை கண் மூடி ரசித்து வந்தாள் பிரியா . அவளின் வாழ்நாள் லட்சியமே இதேபோன்ற சொகுசான காரில் பயணிப்பது தானே. தன் வாழ்க்கை பாதை மாறியதை நினைத்து பார்த்தவளின் நெஞ்சம் ஏமாற்றத்தில் கொதிக்க , அந்த வலியை முகமும் பிரதிபலித்தது.

வண்டி ஓட்டியபடி ஓரக்கண்ணால் பார்த்தவனுக்கு பிரியாவின் மனநிலை அப்பட்டமாக புரிய தனக்குள் சிரித்துக் கொண்டான். வீடு வரைக்கும் எதுவும் பேசாமல் நல்லவன் வேஷம் கட்டியவன் , அவளை இறக்கிவிட்டபின் சிறு தலையசைப்புடன் விடைபெற்று செல்ல , போகும் காரையே ஏக்கத்தோடு பார்த்திருந்தாள் பிரியா.

மறுநாள் பிரியாவை சந்திக்க வேண்டுமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திய அருணா , கௌரியின் மேலிருந்த ஆசையால் அவளை பார்ப்பதற்காக கிளம்ப அந்த நேரத்தில் அங்கே வந்திருந்தான் தினேஷ்.

“ என்னடா பாப்பா வெளில எங்கையாவது போறியா …” என்று தெரியாததை போல கேட்க ,

“ஆமாண்ணா … பெருமாள் கோவிலுக்கு கிளம்பிட்டு இருக்கேன்…” என்றவளுக்கு,

“எப்படிடா போக போற … இப்போதான் டிரைவர் கார் எடுத்துட்டு போனார் … வா நான் உன்ன ட்ராப் பண்ணுறேன் …” என்றவன் மேலே யோசிக்க விடாமல் அவளை காரை நோக்கி இழுத்துக் சென்றான்.

அருணாவிடம் என்ன பேச வேண்டும் என்று மனதில் உறுபோட்டபடி நடைபயின்ற பிரியாவின் அருகில் காரை கொண்டு நிறுத்தினான் தினேஷ். காரிலிருந்து இறங்கியவன் சிறு சிரிப்புடன் ,

“ஹாய் … கௌரியும் கூட வந்திருக்கான…” என்று கேட்டபடி தன் தங்கை இறங்க உதவிபுரிய, பதிலுக்கு முகத்தில் தோன்றிய முறுவலுடன் இல்லை என்று பதில் கூறியவளை நெருங்கிய அருணா ,

“ண்ணா … நாங்க கொஞ்சம் கோவில சுத்திட்டு வரோம் … நீ வெயிட் பண்றியா … இல்ல வேல இருக்கா …” என்ற தங்கையிடம் ,

“ஒண்ணுமில்லடா … டேக் யுவர் ஓன் டைம் …” புன்னகையுடன் கூறியவனிடம் சிறு தலையசைப்புடன் அருணாவுடன் சென்றாள் பிரியா. காரை விட்டு சிறிது தூரம் சென்றவர்களை அழைத்த தினேஷ் ,

“எப்பவும் கைல பாக் வச்சுக்கோடா … ஏதாவது எமெர்ஜென்சினா யாராவது வருவாங்கனு முழிச்சுகிட்டு இருப்பியா …” என்றவன் அவளுடைய ஹாண்ட் பாகை கொடுத்துவிட்டு செல்ல , இருவரும் கோவிலை நோக்கி சென்றனர்.

சில நொடிகள் மௌனமாய் நடக்க , மெல்ல பேச்சை ஆரம்பித்தாள் பிரியா.

“தேங்க்ஸ் … என் மேல கோபமிருந்தாலும் கோவிலுக்கு வந்ததுக்கு …” என்றவளை திரும்பியும் பார்க்காமல் முகம் இறுக நடந்தவளின் கையை பற்றிய பிரியா ,

“சாரி அருணா … அன்னைக்கு நான் பொய் சொன்னது தப்புதான் … உன்னோட பார்வை கௌரிய ஆர்வத்தோடு பார்த்துச்சா … அதான் , அதுவும் கௌரிகாகத்தான் …”என்று நிறுத்த , இன்னும் என்ன பைத்தியக்காரிய நினைச்சுகிட்டு இருக்கியா என்ற ரீதியில் முகம் திருப்பி பார்த்தவளிடம் இனி மறைத்து ஒரு ப்ரோஜனமும் இல்லையென்று உணர்ந்த பிரியா தன் மனதை திடப்படுத்திக் கொண்டு நடந்ததை கூற தொடங்கினாள்.

“நானும் கௌரியும் சென்னைல தான் மீட் பண்ணோம் …” என்று தொடங்கியவள் முழு கதையும் சொல்லிமுடித்தபின் ,

“ரெண்டு பேருக்கும் விருப்பமில்லாத கல்யாணம்தான் இது … ஆக்சவாலா கௌரி என்ன பழி வாங்கத்தான் கல்யாணம் பண்ணது …” என்று தட்டுத்தடுமாறி கூறி முடிக்க, எதுவும் பேசாமல் அமைதியாக பார்த்தவளை கண்டு தொண்டையை செறுமிய பிரியா ,

“நான் சொன்னத நம்பலையா …” என்று உள்ளே போன குரலில் கேட்க , இல்லையென்று தலையாட்டிய அருணாவை குளம் கட்டிய கண்களோடு பார்த்த பிரியா ,

“நான் எதையும் பொய்யா சொல்லல … இட்டு கட்டியும் சொல்லல …” கமறிய குரலில் பேசியவளை அழுத்தமாக பார்த்த அருணா பின் மூச்சை இழுத்து விட்டபடி ,

“ஓகே நீ சொன்னது ஒருபுறம் இருக்கட்டும் … நீ ஏன் கௌரிய என் கூட சேர்த்து விட துடிக்கிற … உனக்குத்தான் அவன பிடிக்காதுல … அப்புறம் ஏன் அவன் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு வசதியா வாழனும் நினைக்கிற …” என்று நிறுத்தியவள் பின் நிதானமாக ,

“லவ் பண்றியா …” என்றவளை அதிர்ந்து போய் பார்த்த பிரியாவிடம் மீண்டும் ,

“அவன லவ் பண்றியா …” என்று அழுத்தமாக கேட்க , உள்ளுக்குள் தன் உணர்வுகளை மறைக்க பெரிதும் போராடியவள் , கலங்கிய கண்களோடு ,இல்லை என்பதாய் தலையாட்டவும் , நக்கலாக சிரித்த அருணா

“அப்படியா … அப்போ எதுக்கு உன் கண் கலங்கியிருக்கு … எனக்கு வேணா காலு ஊனமா இருக்கலாம் அதுக்காக மண்டைல ஒண்ணுமில்லன்னு நினைச்சுட்டியா …” என்றவள்

“என்ன உன் புருஷன் கூட என்ன பழக விட்டு என்கிட்ட இருக்கிற சொத்த புடுங்கலாம்னு நினைக்கிறியா …” என்று ஆவேசமாக கேட்டு பின்

“எப்படி எப்படி இவ்வளவு நாள் ரெண்டு பேரும் ஒன்னா இருந்தும் ஒன்னும் நடக்கலையா … அத என்ன நம்ப சொல்ற … என்ன பார்த்தா எப்படி தெரியுது கேனச்சி போலவா …” என்று நக்கலடித்தவள் ,

“இங்கபாரு எனக்கு கௌரிய பிடிச்சுருக்கு தான் , ஏன் எங்க அப்பாக்கும் பிடிச்சுருக்கு … அவனுக்கு மட்டும் கல்யாணமாகாம இருந்திருந்தா கண்டிப்பா அவனத்தான் கல்யாணம் பண்ணிருப்பேன் … அதான் இல்லன்னு ஆகி போச்சுல இனி இத பத்தி பேசாத …” என்று கோபத்தில் சீறியவள் ,

“கொஞ்சம் விட்டா தலைல மிளகா அறைச்சுடுவ போல …” என்று ஆத்திரத்தில் கத்த , முகத்தை அழுத்தி துடைத்த பிரியா ,

“இங்க பாரு நடந்தத அப்படியே உன்கிட்ட சொல்லிட்டேன் , அத நம்புறதும் நம்பாததும் உன்னிஷ்டம் … அப்புறம் இன்னொரு விஷயம் நான் கௌரி வீட்டுல இருக்க போறதே எங்க அக்காவுக்கு குழந்தை பிறக்கிற வரைக்கும் தான் … இப்போ இருக்கிறது நிரந்தரம் இல்லைனு தெரிஞ்ச பிறகு கௌரி கூட குடும்பம் நடத்தி என் வாழ்க்கையை கெடுத்துகிற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாளில்லை … இன்னும் நான் வெர்ஜின் தான் , அத உனக்கு ப்ரூப் பண்ணனும் அவசியமில்ல புரியுதா …” என்று திமிராய் பேசியவள் ,

“அப்புறம் கேட்டல்ல இத ஏன் அவனுக்கு பன்றேன்னு … ஏன்னா என்ன போலவே அவனோட ஆசைகள் நிறைவேறாம போனதால அவன் மேல சின்னதா ஒரு சாப்ட் கார்னர் … அவ்வளவுதான் … இதுக்கு மேல பேச ஒண்ணுமில்ல …” என்றவள் அமைதியாக நின்றிருந்த அருணாவிடம் ,

“சரி போலாமா … உங்கண்ணா வெயிட் பண்ணிட்டு இருப்பார் … நா மட்டும் தனியா போனா சந்தேகப்பட போறார் … வா போலாம் …” என்று அவளை அழைத்துக் கொண்டு காரை நோக்கி செல்ல,இவ்வளவு நேரம் இவர்கள் பேசியதை ப்ளூ டூத் மூலம் கேட்டுக் கொண்டிருந்த தினேஷ் , ‘அந்த பிச்சைக்கார பயலுக்கு என் தங்கச்சி ரெண்டாவதா போகணுமா … என்ன ஒரு திமிர் … இருடி முதல்ல உன்ன அடக்கிட்டு உன் திமிர அடக்கிறேன் …’ என்று உள்ளுக்குள் வன்மமாய் கருவியவன் தன்னை நோக்கி வந்தவர்களை பார்த்து முகம் மலர சிரித்தான்.

அருணாவிடம் ஹாண்ட் பாகை கொடுக்கும் போதே அதற்குள் தன்னுடைய மற்றொரு போனை ஆன் செய்து போட்டிருந்தான். அருணாவிற்கு கௌரி மேல் ஆசை என்று அறிந்த அடுத்தநொடி தன் மாமன் மகனை இங்கே அழைத்திருந்தான். அதேபோல் இவர்கள் இருவரும் கார் அருகில் வர சரியாக அங்கே வந்து சேர்ந்த மாமன் மகன் அருணாவை மட்டும் பேசி தன்னுடன் அழைத்து செல்ல , தன்னிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிய பிரியாவை அவசரமாக தடுத்தான் தினேஷ்.

“ஹலோ இருங்க … உங்க வீட்டுல ட்ராப் பண்ணுறேன் …” என்றவனை சிறு சிரிப்போடு பார்த்தவள் ,

“இல்லைங்க பரவால்ல … உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் … நான் பஸ்ல போய்ப்பேன் …” என்றவளுக்கு ,

“அட இதுல என்னங்க சிரமம் இருக்க போகுது … நானா தூக்கிட்டு போக போறேன் ,கார் தானே சும்மா பிகு பண்ணாம வாங்க …” என்று சிரித்தவனை ஏறிட்டு பார்த்தவளுக்கு அவனின் எண்ணம் புரிபட தனக்குள் சிரித்துக் கொண்டவள் , மறுபேச்சு பேசாமல் காரில் ஏறிக் கொண்டாள்.

அன்று போல் இல்லாமல் இன்று பிரியாவிடம் மெல்ல பேச்சு கொடுத்து வந்தவனின் பேச்சு முழுவதும் பணத்தை சுற்றியே வர , அவளுக்கு அவனை பற்றி புரிந்தும் புரியாத நிலை.

காரிலிருந்து இறங்கியவளை வாசற்படியில் உட்கார்ந்து பக்கத்து வீட்டு பெண்மணியோடு பேசிக் கொண்டிருந்த வளர் யோசனையோடு பார்க்கவும் , வேண்டுமென்றே தினேஷை வீட்டிற்குள் அழைத்த பிரியா மாடியேறி தன்னறைக்குள் செல்ல , வந்த வாய்ப்பை தவறவிடாதவனாக புன்சிரிப்புடன் அவளை பின் தொடர்ந்து மாடியேறினான்.

இதை பார்த்துக் கொண்டிருந்த வளரின் முகம் போன போக்கை கண்ட பக்கத்து வீட்டு பெண்மணி,

“யாருக்கா இது … உன்ன கூட கண்டுக்காம மேல ஏறி போறான் …” என்று ஒருமாதிரியாக கேட்க , வளரின் உள்ளம் கொதித்து கொண்டிருந்தது. பத்து நிமிடங்கள் கழித்து வெளியேறியவனை கீழே வந்து வழியனுப்பிவிட்டு மேலே சென்ற பிரியாவிடம்,

“இது என்ன புது பழக்கம் … தெரியாத ஆள உன் ரூம்க்கு அழைச்சுட்டு போறது … கீழ ஹால்ல உட்கார்ந்து பேசறதுதானே …” என்ற வளருக்கு ,

“அவர் ஒன்னும் தெரியாதவர் இல்ல , நல்லா தெரிஞ்சவர்தான் …” என்ற பதிலுடன் மேலே ஏறி சென்றவளை பல்லை கடித்து பார்த்த வளருக்கு கௌரியின் மேல் கோபம் திரும்பியது .

அன்றிரவு வீட்டிற்கு வந்த கௌரியிடம் வளர் புலம்பி தள்ள , எதையும் காதில் வாங்கி கொள்ளாதவன் திருப்தியாக சாப்பிட்டபின் ,

“மீ இப்போ நிம்மதியா தூங்குவயில்ல … போ போய் தூங்கு …” என்று கிண்டலடித்து சென்றவனை பல்லை கடித்து பார்த்தவர் ,

“டேய் மானங்கெட்டவனே ஒரேடியா கால்ல விழுந்து கிடக்காத , ஏறி மிதிச்சுட்டு போய்ட போறா … நான் சொல்றத அலட்சியம் பண்ணிட்டு போற … ஒருநாள் இல்ல ஒருநாள் நல்லா அனுபவிப்ப …”கோபத்தை காட்டியவரிடம் டாட்டா கட்டியவன் சிரித்து கொண்டே மேலேறி தன்னறைக்கு சென்றான்.

அறைக்குள் நுழைய , அங்கே தூங்கி கொண்டிருந்த பிரியாவை கண்டவனுக்கு உணர்ச்சி பெருக்கெடுத்து ஓட , அவளை ஒட்டி படுத்தவன் ஒரு காலை எடுத்து அவள் மேல் போடவும், கண்ணை திறந்து முறைத்து பார்த்தவள் தன்மீதிருந்த காலை தள்ளிவிட , மயக்கும் சிரிப்புடன் மூச்சு காற்று மேலே படுமளவிற்கு அவளை நெருங்கியவன் ,
உதடுகளை குவித்து முத்தம் தருவது போல நெருங்க , அவன் முகத்தை கைகளால் நெட்டி தள்ளியவள் ,

“இந்த வேலைலாம் என்கிட்ட வச்சுகாத…” என்று கோபத்துடன் சொன்னவள் திரும்பி படுக்க , முகத்தில் புன்னகை தவழ , அவள் முதுகோடு ஒட்டி படுத்தவன் ,

“உன்கிட்ட வச்சுக்காம , வேற யார்கிட்ட வச்சுக்கவாம் … கல்யாணம் ஆகி ஒன் இயர் ஆகா போகுதுடா ப்ரிக்குட்டி … மாமா பாவமெல்ல … கொஞ்சம் கருணை காட்ட கூடாதா …பாரு நம்ம கூட கல்யாணம் ஆனா அண்ணனும் அண்ணியும் இன்னும் கொஞ்சநாள்ல அவங்க குழந்தையை கொஞ்ச போறாங்க … நாம எப்போ ப்ரிக்குட்டி அம்மா அப்பா விளையாட்டு விளையாடுறது … எப்போ நம்ம குழந்தையை கொஞ்சுறது …” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்து ஆசையோடு பேச,

சில நொடிகள் அமைதியாக படுத்திருந்தவள் , பின் திரும்பி நிமிர்ந்து படுக்கவும் , அவள் நெற்றியில் மென் முத்தத்தை பதித்து ஆசையோடு பார்த்திருந்தவன்,

“சொல்லுடா ப்ரிக்குட்டி … அப்பா அம்மா விளையாட்டு விளையாடுலாமா …” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்க , பதில் பேசாமல் அவனையே பார்த்திருந்தவளின் முகத்தை விரல்களால் வருடியபடி ,

“எனக்கு நம்ம குழந்தையை சீக்கிரம் பாக்கணும் போல இருக்கு … நம்ம ரெண்டு பேரோட கலர்ல உன்ன போல திமிரா என்ன போல அறிவா பேரழகோடு பிறக்கிற நம்ம பிள்ள வளர்ந்தா கண்டிப்பா பல பேர் தூக்கத்த கெடுக்கும்ல …” என்று கனவுலோகத்தில் சஞ்சரித்தவன் அதே கிரகத்தோடு அவள் முகம் முழுதும் முத்தமழை பொழிந்தவன் கடைசியில் இதழில் இளைப்பாற ,

“ஆடி கார்ல போக ஆசைப்பட்ட நீ அதுல டிரைவரா போகவாது வாய்ப்பு கிடைச்சதுனு மனச திடப்படுத்திக்கலாம் … பட் என்னால அப்படி பொய்யா சமாதானம் படுத்திக் முடியாது …” என்றவளை தலை நிமிர்த்தி பார்த்த கௌரி ,

“என்ன ப்ரிக்குட்டி இந்த நேரத்துல ரொம்ப சீரியசா பேசிகிட்டு இருக்கீங்க …” என்றவன் தன் இதழினால் அவள் இதழ்களை மெல்ல வருட , அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள் ,

“தள்ளி போ கிட்ட வராத … நீ வாங்கிற பதினைந்தாயிரத்துக்கு எல்லாம் புள்ள பெத்து கொடுக்க முடியாது …” முகத்தில் அடித்ததை போல பேசியவளின் மேல் படர்ந்தவன் ,

“அப்போ எவ்வளவு வாங்கினா புள்ள பெத்து தருவ ப்ரிக்குட்டி …” என்று சரசமாய் கேட்க , மீண்டும் அவனை தன் மேலிருந்து கீழே தள்ளிவிட்டவள் ,

“என் புள்ள நடந்தோ பஸ்லயோ ஸ்கூலுக்கு போக கூடாது …” என்றவளுக்கு ,

“அதுக்கென்ன … லோன் போட்டு குட்டிய கார் வாங்கிட்டா போச்சு …” என்று அவள் இதழில் மென் முத்தம் பதிக்க , புறங்கையால் துடைத்துக் கொண்டவள் ,

“லோன் யாரு உங்கப்பாவ கட்டுவாரு…” சுள்ளென்று கேட்டவளின் உதட்டை நறுக்கென்று கடிக்க, வலியில் “ஸ்ஸ்ஸ்” என்று சத்தம் எழுப்பியவள் கடித்தவனின் கன்னத்தில் பற்றென்று ஒரு அடி வைக்க , அடித்த கையை பற்றி சிறு சிறு முத்தங்களை வைத்தவனிடமிருந்து கையை உருவிக் கொண்டவள் ,

“உண்மையை சொன்னா கடிப்பியா … வலிக்குது …” என்று அவன் வலிக்க செய்ததில் கண்கலங்க கேட்டவளின் காயம்பட்ட உதட்டை தன் இதழ்களால் மெல்ல மெல்ல ஒத்தி எடுத்தவன் ,

“சாரிடா ப்ரிக்குட்டி … நீ பேச தெரியாம பேசினல நானும் கிஸ் பண்ண தெரியாம கடிச்சுட்டேன்டா … அப்புறம் ப்ரிக்குட்டி நான் வாங்கின கடன நான் தானே கட்டணும் எதுக்கு நடுவுல தேவையில்லாம எங்க அப்பாவ இழுக்கிற …” என்று உதட்டு காயத்திற்கு மருந்திட்டவாறே பேச,

“இங்கபாரு நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல … வாங்கிற காச வட்டி கட்டி வாய்க்கும் வயதுக்கும் பத்தும் பத்தாம இருக்கிற வாழ்க்கை எனக்கு வேணாம் … நான் அனுபவிக்காதத எல்லாம் என் புள்ளைங்களுக்கு கிடைக்கணும் … இன்டர்நேஷனல் ஸ்கூல் , வெளில போய் வர கார் , நினைச்ச நேரம் நினைச்சத வாங்கி சாப்பிடணும் … பீச் பார்க் இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கு … உன்னால இதெல்லாம் கொடுக்க முடியுமா … சொல்லு …” என்று ஆவேசமாய் கேட்டவளை சில நொடிகள் ஊன்றி பார்த்தவன் பின் வழக்கமான மயக்கும் புன்னகையை முகத்தில் தவழவிட்டு ,

“அடடா ப்ரிக்குட்டி இன்னும் கனவு காண்றதா விடலையா …” என்று கேலி பேசியவன் பின் ,

“முடியும் … கண்டிப்பா முடியும் … நீ என் கூடவே இருந்தா … இது எல்லாத்தையும் நடத்தி காட்டுவேன் …”என்று அவள் உதட்டில் அழுந்த முத்தமிட்டபடி கூற , அவனையே வெறித்து பார்த்தவளின் கண்கள் கலங்க ,

“இல்ல நீ பொய் சொல்ற … உன்னால இது எதையும் பண்ண முடியாது … அப்படி முடியும்னு நம்பிக்கை இருந்திருந்தா நீ ஏன் சென்னைக்கு வரணும் … நீ சென்னைக்கு எதுக்கு வந்தன்னு மறந்துட்டியா …” உதடு துடிக்க பேசியவளின் இதழ்களை விரல்களால் நிமிண்டியபடி ,

“அப்போ அறியா வயசு … ஏதோ குருட்டு தைரியத்துல வந்துட்டேன் … இப்போ வாலிப வயசு எதையும் உனக்காக செய்யுற தைரியம் இருக்கு …” என்றவன் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விலகி படுத்தவன் ,

“எதையும் நினைக்காம நிம்மதியா தூங்குடா ப்ரிக்குட்டி … நீ கேட்டது எல்லாத்தையும் நிறைவேத்துவேன் … அப்படி என்னால முடிலனா கூட ரெண்டாவதா பணக்கார பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி உன் ஆசையை கண்டிப்பா நிறைவேத்துவேன்…” என்று கிண்டலாக பேசியபடி தூங்க செல்ல , தூங்காமல் அவனை பார்த்தவாறே முழித்திருந்தவள் , தன் மனதோடு நடத்திய நீண்ட போராட்டத்திற்கு பின் ஒரு முடிவு எடுத்தவளாக தூங்க சென்றாள்.

அவள் அசைந்ததில் தூக்கம் கலைந்த கௌரி தன்னருகில் படுத்திருந்த பிரியாவை தன் கைவளைவில் கொண்டு வந்தவன் அவள் நெற்றியில் மென்முத்தம் பதித்து ,

“தூங்குடா … நீ ஆசைப்பட்டத நடத்திக் காட்டுவேன் …” என்று தூக்கக்கலகத்தில் முனகியபடி தூங்க செல்ல , குளம் கட்டிய கண்களோடு உதடுகள் துடிக்க ஊமையாய் உள்ளுக்குள் கதறியவளின் கதறல் அவனை சென்றடைந்ததோ , மெல்ல கண் திறந்து பார்த்தவன் அவள் கண்களில் முத்தமிட்டு ,

“ப்ரோமிஸ் …” என்றபடி இறுக அணைத்து தூங்கி போனான்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29310

கௌரி - 21

பிரியவும் அருணாவும் அடிக்கடி சந்தித்து கொண்டனர் விருப்பப்பட்டு இல்லை தினேஷின் வற்புறுத்தலால். எங்கையாவது செல்லவேண்டும் என்றால் உடனே பிரியாவை அழை துணைக்கு என்ற ரீதியில் பேசி அவள் செல்லும் இடமெல்லாம் பிரியாவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டான். தன் அண்ணனின் உள்நோக்கம் புரியாத அருணா , தன் மேலுள்ள பாசத்தால் என்று நம்பி விருப்பமில்லாமல் அழைக்க , பிரியாவோ தினேஷின் மன ஓட்டத்தை புரிந்து தன் காரியம் ஆகவேண்டி விருப்பமில்லாமல் சென்றாள்.

அடிக்கடி தினேஷுடன் காரில் வந்து இறங்குபவளை கண்டு வளர் மட்டுமில்லை கௌரியை தவிர்த்து மொத்த குடும்பத்திற்கும் அதிருப்தியை கொடுக்க, இது தவறு என்று எடுத்துக் கூறிய தண்டபாணியையும் மதிக்காமல் சென்றவளிடமிருந்து அவரும் ஒதுங்கி கொள்ள , தயங்கி தயங்கி பேசிய காயத்ரியையும் முகத்தில் அடித்ததை போல பேசி அனுப்பினாள் பிரியா.

இதையெல்லம் கண்டு கொதித்து போன வளர் , கர்ப்பமாய் இருக்கும் காயுவை பாரக்க வரும் ஜெயந்தியிடம் புலம்பித்தள்ள , ஏற்கனவே அவள் மேல் கோபத்திலிருந்தவர் சுத்தமாய் வெறுத்து போனார். பிரியாவும் தன்னை சுற்றியிருப்பவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் தன் இஷ்டத்திற்கு நடந்தவளின் மனதில் கௌரியை தவிர வேற எவரையும் தன் சொந்தமாக நினைக்கவில்லை.

வழக்கம் போல தன்னிடமிருந்து ஒதுங்க நினைத்த பிரியாவிடம் குறும்புடனான சில சில்மிஷன்கள் செய்து அவளிடம் திட்டு வாங்கிய பின்னே தூங்க செல்வான் கௌரி. அவள் விலகுவதமாய் அவன் நெருங்குவதமாய் கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருந்தவர்களின் ஆட்டமும் காயத்ரியின் வளைகாப்பு நடந்த சில தினங்களில் முடிவுக்கு வந்தது.

காயத்ரிக்கு ஒன்பதாவது மாதம் வளைகாப்பு விட்டபின் ஜெயந்தி அவளை வீட்டிற்கு அழைத்து செல்ல , விசேஷத்திற்கு வந்த விஜி அங்கேயே தங்கிகிட்டாள். பிரியாவின் நடவடிக்கைகளை ஊன்றி கவனித்தவள் வளரை ஏற்றி விட்டதுமில்லாமல் , பிரியாவை நிரந்தரமாக வீட்டை விட்டு அனுப்பும் முயற்சியிலும் இறங்கினாள்.

பல நாட்கள் வெளியே சுற்றிவிட்டு இரவு தினேஷுடன் வீட்டிற்கு வரும் பிரியா, சில சமையம் அவனையும் தன் அறைக்குள் அழைத்து செல்ல, அக்கம்பக்கத்தினரின் வாய்க்கு அவளாகி போனாள். தினேஷிற்கு தன் மீது ஒரு கண் இருப்பதை நன்கு உணர்ந்தே அவனுடன் சுற்றினாள் பிரியா. அவனின் பேச்சு முழுதும் எப்படி அவளை கவரலாம் என்ற ரீதியில் இருக்க , அவனை பகைத்துக் கொள்ள முடியாமல் அவன் இழுத்த இழுப்பிற்கு செல்ல, கௌரியின் காதில் இது எல்லாம் அரசல் புரசலாக விழுந்தாலும் இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன் எப்பொழுதும் போல இருக்கவும் , உச்சானி கொம்பில் தூக்கி வைத்தது போல ஆனது பிரியாவிற்கு.

யார் என்ன சொன்னாலும் எனக்கு என்ன கவலை என் கணவன் அதை நம்பவில்லை என்ற நினைப்பில் இருந்தவள் , காயத்ரி குழந்தை பெற்று இங்கே வரும் முன்னே இங்கிருந்து சென்றுவிட வேண்டும் அதுதான் கௌரிக்கு நல்லது என்று நினைத்து அதற்கான வாய்ப்புக்காகவும் காத்திருந்தாள்.

அன்று பிரியாவின் பிறந்தநாள், முதல்நாள் இரவுதான் அவளுக்கே தன்னுடைய பிறந்தநாள் பற்றி ஞாபகம் வந்தது. ஒவ்வொரு பிறந்தநாள் இரவும் பன்னிரண்டு மணியளவில் தன்னை எழுப்பி முத்தம் பதித்து வாழ்த்து கூறும் தன் பெற்றோரையும் காயத்திரையும் நினைத்து பார்த்தவளுக்கு தன்னையும் அறியாமல் கண்கள் கலங்க ஏக்கத்துடன் படுத்திருக்க, மணி பன்னிரண்டை நெருங்கி தாண்டியும் அவர்களின் அழைப்புக்கு காத்திருந்து ஏமாந்து போனவளுக்கு துக்கத்தில் தொண்டையடைத்தது.

தன் மீது கடலளவு வெறுப்பு இருப்பது தெரிந்தாலும், ஏதோ ஒரு நப்பாசையில் தன்னை அழைப்பார்கள் என்று காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்ச , வேதனைக் கொண்டவளின் நெஞ்சம் அடுத்து கௌரியின் வாழ்த்திற்காக காத்திருந்தது. கௌரிக்கு தான் என்றால் உயிர் என்று அறிந்தவள் , தன்னுடைய பிறந்த நாளை எப்படியாவது அறிந்துக் கொண்டு தன்னை வாழ்த்துவான் என்று காத்திருக்க , அதற்கு எல்லாம் வாய்ப்பில்லை என்பதை போல அவள் அருகில் அமைதியாக உறங்கி கொண்டிருந்தான் கௌரி.

பொங்கி கொண்டு வந்த அழுகையை கஷ்டப்பட்டு அடக்கியவள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தூங்கி போனாள்.

காலையில் கண்விழித்த கௌரி தன்னருகில் இன்னும் தூங்கி கொண்டிருந்த பிரியாவை யோசனையோடு பார்க்க, எப்பொழுதும் அவன் எழுவதற்குள் எழுந்து விடுபவள் இன்று உறங்கி கொண்டிருக்கவும் , மெல்ல அவளை அணைத்து தன்புறம் திருப்பியவன், அவள் கழுத்தை தொட்டு பார்த்து உடல் சூடு இல்லாமல் நன்றாக இருப்பதை உறுதி செய்தபின் ,

“ப்ரிக்குட்டி … ப்ரிக்குட்டி …” என்று மெல்ல அசைத்து எழுப்ப , ம்ம்ம் ம்ம்ம் என்ற சிணுங்கலுடன் திருப்பி படுத்தவளை யோசனையோடு பார்த்துக் கொண்டே குளிப்பதற்காக கீழே இறங்கி சென்றான்.

அவன் கதவை சாற்றிவிட்டு சென்ற அடுத்தநொடி கண்ணை திறந்து பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட , உதடுகள் துடிக்க கதவை வெறித்தவளுக்கு உலகையே வெறுத்த நிலை.

கௌரி எப்படியும் கண் முழித்ததும் வாழ்த்து சொல்வான் என்று எதிர்பார்ப்பில் தான் முழிப்பு வந்த பின்னும் தூங்குவது போல நடிக்க , அவனோ கண்டுக் கொள்ளாமல் செல்லவும் , தன்னை பற்றி நினைக்க யாரும் இல்லை என்று நினைத்தவள் , பெற்றோருக்கு வேண்டாத மகள் , திருமணம் முடிந்தபின் தங்கையின் நினைப்பை மறந்த அக்கா , வேண்டாத மருமகள், இதுவரை தன் ஒரே சொந்தமாக எண்ணிய கணவன் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை தெரிந்துக் கொள்ளாமல் அவன் பாட்டிற்கு செல்லவும், தனக்காக யாரும் இல்லை என்ற நினைப்பே உயிர்வரை சென்று தாக்க துடித்து போனாள்.

காலை உணவை சாப்பிட்டுவிட்டு எட்டரை மணி வாக்கில் அறைக்குள் நுழைந்த கௌரி இன்னும் தூங்கி கொண்டிருந்த பிரியாவின் அருகில் சென்று மீண்டும் ஒருமுறை உடல்சூட்டை பரிசோதித்தபின் ,

“ப்ரிக்குட்டி … ப்ரிக்குட்டி …” என்று எழுப்ப மெல்ல கண்ணை திறந்து பார்த்தவளிடம் ,

“என்னடா பண்ணுது … இவ்வளவு நேரம் தூங்கிட்டு இருக்க … தல வலிக்குதா …” என்று அக்கறையாய் கேட்க , இல்லையென்று தலையசைத்தவள் மீண்டும் கண்ணை மூட போகவும் அவசரமாக குறிக்கிட்டவன் ,

“சரிடா எனக்கு டைம் ஆச்சு … நான் கிளம்புறேன் … உனக்கு தோச ஊத்த டைம் இல்ல … ஆயா கடைல ஆப்பம்தான் இருந்துச்சு வாங்கிட்டு வந்திருக்கேன் … சாப்ட்டு தூங்கு …” என்று அவள் கன்னத்தில் முத்தம் பதித்து வெளியேற , கண்களில் பொங்கிய கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் அவன் சென்ற திசையை இலக்கின்றி வெறித்தாள்.

எப்பொழுதும் காலையில் வேலைக்கு செல்லுமுன் பிரியாவிற்கு தோசை ஊற்றி கொடுத்துவிட்டு செல்வதுதான் வழக்கம். சில சமையங்களில் பக்கத்து தெருவில் ரோட்டோரத்தில் இட்லி கடை வைத்திருக்கும் பாட்டியிடம் வாங்கி கொடுப்பதும் வழக்கம். ஆனால் இன்று தன் பிறந்தநாள் அதுவுமாக அவன் கையால் சமைக்காமல் பாட்டியிடம் வாங்கி கொடுக்கவும் கோபத்தில் அதை ,சீண்டாமல் ஒதுக்கி தள்ளியவள் மதிய உணவையும் எடுத்துக் கொள்ளவில்லை.

மூன்று மணியளவில் அவளை அழைத்த தினேஷ் ,

“பிரியா … ரெடியா இருக்கீங்களா … வீட்டுக்கு வரலாமா …” என்று கேட்க , தன் நிலையில் இல்லாதவள் , எதற்கு என்று யோசிக்காமல் ,

“இல்ல … எனக்கு தலைவலிக்குது வெளில வர முடியாது …” என்று காலை கட் செய்ய யோசனையில் மூழ்கி போனான் தினேஷ். அடுத்த இரண்டு மணி நேரத்தில் அவள் அறையில் கையில் சில தங்க நகைகளை ஏந்தியபடி நின்றிருந்தான் தினேஷ். தன் முன் திடீரென்று தோன்றியவனை கண்டு அதிர்ந்து போய் பார்த்தவளை நோக்கி புன்னகையை வீசியவன் ,

“ என்ன … கண்ண உருட்டி உருட்டி பாக்கிற பிரியா … பார்த்து பார்த்து உன்னோட விழி வீச்சுல உயிர விட்டுட போறேன் …” என்று ஒருமையில் தாவி நெருக்கத்தை கூட்டி பேசியவனை கண்டுக் கொள்ளும் மனநிலையில் இல்லாதவள் , சலிப்புடன் ,

“என்னது இது …” என்று விருப்பமே இல்லாமல் கேட்க,

“ஹேய் … என்ன மறந்துட்டியா … அடுத்த வாரம் அருணா கூட ஒரு கல்யாணத்துக்கு சேலம் வரைக்கும் வரேன் சொல்லிருந்தியே … சுத்தம் … உன்ன நம்பி அவ வேற நகையெல்லாம் எடுத்துட்டா … அதுல எது நல்லாயிருக்குனு கேட்டுட்டு போகத்தான் வந்தேன் … நீ என்னனா … கப்பல் கவுந்து பீலிங்க்ல இருக்க …” என்று அவளை ஆராய்ந்தபடி கூற , சலிப்புடன் பார்த்தவள் ,

“ம்ம்ப்ச் … எனக்கு தல வலிக்குது … எதையும் யோசிக்கிற நிலைமைல இல்ல... ப்ளீஸ் நீங்களே இதுல எதாவது ஒன்ன செலக்ட் பண்ணி அவகிட்ட கொடுத்துடுங்க ப்ளீஸ் …” என்று முகம் சுருக்கி கூறியவளின் அழகில் ஈர்க்கப்பட்டவன் ,

“பீவர் இருக்கா …” என்றவாறே அவள் கழுத்தை தொட்டு பார்க்க, அவன் தன் கழுத்தை தொட்டு பார்த்ததை உணராமல் “மப்ச்” என்று அவன் கையை தட்டிவிட, அவளிடமிருந்து எந்த வித எதிர்ப்பும் இல்லையென்று உணர்ந்தவன் தைரியம் வர பெற்றவனாக ,

“இல்ல நீ நார்மலா இல்ல … எழுத்துரு … என் கூட கார்ல ஒரு ரவுண்டு வா … மைண்ட் பிரீ ஆகும் …” என்று உரிமையுடன் அவள் கை பிடித்து இழுத்து தூக்க,

“உன்னவிட வேல முக்கியமுன்னு உன்ன கவனிக்காம வேலைக்கு கிளம்பிட்டான கௌரி … வீட்டுக்கு போய் இருக்கு அவனுக்கு …” என்று போலியாய் கோபப்படுவது போல பேசியவனின் விரல்கள் பிடித்திருந்த அவளின் கையை மெல்ல வருட தொடங்கின. கௌரியின் பெயரை கேட்ட நொடி துக்கத்தில் அவளின் கண்களில் முளுக் என்று கண்ணீர் குளம் கட்டிவிட , தினேஷின் முகம் கோபத்தில் இறுகியது.

திடீரென்று என்னவானது இவளுக்கு என்று நினைத்தவன் , அவளின் பிரச்சனையின் ஆழத்தை கண்டுவிடும் நோக்கில் , தன்னோடு கொண்டு வந்திருந்த நகைகளிலிருந்து ஆரத்தை மட்டும் தனியாக எடுத்து , அவளின் கழுத்தில் வைத்து பார்த்து ,

“நல்லாயிருக்குல … இதையே அருணாவுக்கு எடுத்துடலாம் …” என்று அவள் முகத்தை பார்க்க , ஒளியிழந்த முகத்தோடு அந்த ஆரத்தை பார்க்காமல் “ம்ம்ம்” என்று தலையாட்ட பிரச்சனை பெரியது என்று நம்பினான் தினேஷ்.

அவன் அறிந்தவரை பிரியாவிற்கு விலை அதிகமுள்ள பொருட்டுகளின் மேல் தனி மோகமுண்டு என்று தெரியும் , அதை ஆசையோடும் ஏக்கத்தோடும் பார்ப்பதை பல சமையங்களில் அவனே பார்த்திருக்கிறான். இன்று வைர கற்கள் பதிக்கப்பட்ட ஆரத்தை அவள் கழுத்தில் வைத்தும் கண்டுக்கொள்ளாமல் தன் கவலையில் உழன்றுக் கொண்டிருந்தவளை கண்டதும் ஏனோ பதற்றம் அவனுள் தொற்றிக் கொண்டது.

திருமணம் ஆகியும் இன்னும் கை படாத ரோஜா தான் பிரியா என்று அருணாவுடன் அவள் பேசியதிலிருந்து அறிந்துக் கொண்டவனுக்கு , எப்படியாவது அவளை மடக்கி சுகிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பழகியவன் நாளடைவில் அவள் மேல் உண்மையாகவே காதல் வயப்பட்டான்.

எதற்கும் அஞ்சாமல் யாருக்கும் பதில் கூறும் நிலையில் தன்னை வைத்திருக்காமல் நான் இப்படித்தான் என்ற திமிரோடு சுற்றியவள் மற்ற பெண்களிடமிருந்து வித்தியாசப்பட , காமம் கொண்டு பார்க்க தொடங்கியவனின் பார்வை காதலாக மாறிப்போனது. அவனுக்குமே தன்னுடைய மனமாற்றத்தை நினைத்து அதிர்ச்சியே , என்ன இருந்தாலும் அவளை விட கூடாது என்ற முடிவிற்கு வந்திருந்தவன் , அவளை தன்னோடு வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல துணிந்தான்.

மீண்டும் அவள் கை பற்றி

“வா கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம் …” என்று இழுக்க , அவனிடமிருந்து தன் கையை உருவிக் கொண்டவள் ,

“இல்ல … நான் வரல … எனக்கு ரெஸ்ட் எடுக்கணும் போல இருக்கு …” என்று நிறுத்த ,

“அப்போ என்ன வெளில போன்னு சொல்றியா …” என்று சிறு சிரிப்புடன் கேட்டவனை அழுத்தமாக பார்த்திருக்க ,

“ஓகே … என்னனு தெரில ரொம்ப டென்ஸடா இருக்க … நாளைக்கு வரேன் …” என்று விடைபெற்று செல்ல , இவ்வளவு நேரமாக இவர்கள் பேசியதை முல்லை கொடி மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த விஜியின் முகம் பிரியாவின் மேலிருந்த வஞ்சத்தில் சிவந்து போனது.

அன்று முழுவதும் கௌரிக்கு வேலையில் மனம் லயிக்கவில்லை. திடீரென்று என்ன ஆனது என்று பிரியாவை சுற்றியே அவன் சிந்தனைகள் இருக்க, அருணாச்சலத்தை அழைத்துக் கொண்டு சென்னை வரை சென்றவனுக்கு எப்பொழுது அவளை பாப்போம் என்று இருந்தது. நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அவரை இறக்கிவிட்டவன் பிரியாவிற்கு அழைக்க , அழைப்பு எடுக்க படாமலே நின்று போனது.

அப்பொழுது அந்த வழியாக சண்டையிட்டுக் கொண்டே ஒரு காதல் ஜோடி அவனை கடந்து போக , காதுகளில் “என் பர்த்டே கூட மறந்து போரளவுக்கு உனக்கு எது முக்கியமா போச்சு …போ என்கூட பேசாதா …” என்று அந்த பெண் முறுக்கி கொள்ள, “சாரி சாரி டி … டென்ஷன்ல மறந்துட்டேன் … உன் காலுல வேணா விழுறேன் … பேசாம இருக்காதடி …” என்று அவளின் காதலன் கெஞ்சி கொண்டு பின்னல் ஓட , அவர்களின் செல்ல சண்டையை ரசித்து சிரித்து பார்த்தவனின் புத்தியில் பல்ப் எறியவும் ,

“அய்யோ ப்ரிக்குட்டிக்கு இந்த மந்த பர்த்டே இருக்கே … எப்போன்னு தெரியலையே … முடிஞ்சுடுச்சா இல்ல இனிதானா …” என்று புலம்பியவன் , அவசரமாக அவளின் செர்டிபிகேட்டை மெயிலில் தேடி எடுத்து பார்க்க , இன்றுதான் பிறந்தநாள் என்று அறிந்ததும் அதிர்ந்து போனான்.

அவள் வாடிய முகத்திற்கான காரணம் புடிப்படவும் , அதற்கு மேல் அவனால் அங்கே இருக்க முடியாமல் பரிதவித்து போனவன் அருணாசலத்தின் வரவிற்காக காத்திருந்தான். அவர் காரில் ஏறிய அடுத்த நொடி கார் அவன் கைகளில் பறக்க , விரைவாகவே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அப்பொழுதே மணி பத்தரையை தொட்டிருக்க , அவசரமாக கிளம்பியவனை ,

“இருப்பா கௌரி … இங்கையே சாப்ட்டு போய்டலாம் …” என்று வற்புறுத்திய அருணாச்சலத்திடம் ,

“பரவால்ல சார் … இன்னைக்கு என் வொய்ப் பர்த்டே காலைல இருந்து ஒரு விஷ் கூட பண்ணல … நான் வீட்டுக்கு கிளம்புறேன் …” என்று கிளம்பியவனை கண்டு, பிரியாவின் வருத்தத்திற்கு காரணம் இதுதான என்று தினேஷ் கொதித்து போக, இவன் மனதில் பிரியாதான் இருக்கின்றாளா என்று உள்ளுக்குள் கலங்கி போனாள் அருணா.

கௌரி வீட்டிற்கு வந்து சேரும் போது மணி பதினொன்றை தொட்டிருந்தது . ரெண்டு ரெண்டு படியாக தாவி தாவி மாடியேறியவன் , தன்னிடமிருந்த சாவியால் கதவை திறந்துக் கொண்டு உள்ளே செல்ல , காலையில் எப்படி விட்டு சென்றானோ அதே நிலையில் படுத்திருந்தவளை கண்டதும் வேதனையுடன் அவளை நெருங்கியவனின் பார்வையில் காலையில் வாங்கி வந்த ஆப்பம் பட , அவள் இன்னும் எந்த உணவும் எடுத்துக் கொள்ளவில்லை என்று புரியவும் துடித்து போனான்.

மெல்ல அவளை நெருங்கியவன் அவள் காலருகில் காலை மடக்கி உட்கார்ந்தவன் , அவளின் வலக்காலை பற்றி பாதத்தில் முத்தம் ஒன்று வைக்க , உன் காலடியில் சரணடைந்தேன் பார் என்பது போல இருந்தது அவன் செய்கை. அந்த முத்தத்தில் முதலில் சிலிர்த்து பின் இறுகி போனாள் பெண்ணவள். அவளின் இறுக்கத்தை உணர்ந்தாலும் , சில நாட்களாய் மனதில் எதையோ வைத்து மருகி விலகி சென்றவளை இன்று என்ன நடந்தாலும் விடுவதாகயில்லை என்று முடிவெடுத்தவன், அவள் அருகில் சரிந்து படுத்துக் கொண்டு சில நொடிகள் அவளையே பார்த்துக் கொண்டிருக்க , மூடிய விழிகளில் கருவிழிகள் அசைவதை கண்டு தனக்குள் சிரித்துக் கொண்டவன் , மெல்ல இதழ்களால் காதை உரசியபடி ,

“ஹாப்பி பர்த்டே ப்ரிக்குட்டி …” என்று கிசுகிசுப்பான குரலில் கூற , மூடிய விழிகளிலிருந்து கண்ணீர் துளிகள் எட்டி பார்த்தது. அதை தன் உதடுகளில் ஏந்தியவன் , அவள் கன்னத்தில் தன் இதழ் கொண்டு கவிதை எழுதியபடி மீண்டும் கிசுகிசுப்பான குரலில் ,

“ஹாப்பி பர்த்டே ப்ரிக்குட்டி …” என்று கூற , அப்பொழுதும் கண்ணை திறவாமல் வீம்புடன் படுத்திருந்தவளின் மூக்கின் அருகில் சுட சுட பிரியாணி பொட்டலத்தை கொண்டு சென்றான் கௌரி.

பிரியாணி மேல் அவளிற்கு இருந்த மோகத்தை அறிந்தே வீட்டிற்கு வரும் வழியில் இரவு கடையில் பிரியாணியை கையோடு வாங்கி கொண்டுதான் வந்திருந்தான். கோபத்துடன் படுத்திருந்தவளின் நாசியை சுட சுட பிரியாணியின் மனம் தீண்ட , காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்தவளின் பசி வேறு வயிற்றை கிள்ளியது. நாவில் அவளை மீறி எச்சில் சுரக்க, நேற்றிலிருந்து வாழ்த்தை எதிர்பார்த்து ஏமாந்து தனக்கு யாருமில்லை என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு , அவனின் வாழ்த்து காட்டில் தொலைந்தவன் கையில் கிடைத்த தீப்பந்தம் போல ஒளியை கொடுக்கவும் கூடவே பசியும் பூதகரமாக விஸ்வரூபம் எடுக்க, தன் கோபத்தை ஒதுக்கி வைத்து மெல்ல கண்ணை திறந்து பார்த்து எதிரே மயக்கும் புன்னகையுடன் சிரித்துக் கொண்டிருந்தவனை முறைத்து பார்த்தாள்.

காலையிலிருந்து குளிக்காமல் ஏற்று போட்டிருந்த நைட்டியுடன் தலை களைந்து பார்க்கவே அழுக்காக தெரிந்தவள் , கௌரியின் கண்களுக்கு மட்டும் கலைந்த அழகோவியம் போலவே காட்சியளித்தாள். பிரியாணியை கண்டதும் கண் திறந்தவளை கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவன், மெல்ல பொட்டலத்தை பிரித்தபடி ,

“என்ன கோபமா இருந்தாலும் சாப்பாட்டுல காட்ட கூடாதுடா ப்ரிக்குட்டி … நீ பட்டினியா கிடந்து என்ன லாபம் சொல்லு … என்கிட்ட கோச்சுக்கிட்டு தானே சாப்பிடல … ஆனா இன்னைக்கு நான் புல் கட்டு கட்டினேன் தெரியுமா … நீ சாப்பிடாம இருக்கிறது வீட்டுக்கு வந்த பின்ன தான் தெரிஞ்சுச்சு … இப்போ சொல்லு இதால என்ன சாதிச்ச நீ … இதுக்கு நல்லா சாப்ட்டு நான் வீட்டுக்கு வந்த பின்ன , ஏண்டா நாயே என் பொறந்த நாளுக்கு விஷ் பண்ணலனு … தோ மூலைல இருக்கிற துடைப்பத்த எடுத்து விளாசி இருந்தன , ஜென்மத்துக்கும் மறந்திருக்க மாட்டேன் ப்ரிக்குட்டி … போ ப்ரிக்குட்டி உனக்கு விவரமே பத்தல …” என்று உபதேஷம் செய்தபடி முழு பாக்கெட்டையும் பிரித்து அவள் முன் வைக்க , கண்களால் எரித்தவள் , அவனிடமிருந்து பிரியாணியை வெடுக்கென்று பிடுங்கி திரும்பி அமர்ந்து உன்ன தொடங்கினாள்.

பசி அடங்கும் வரை அவசரஅவசரமாக உண்டவள் , பின் நிதானமாய் ரசித்து உன்ன தொடங்கினாள். பிரியாணியில் கிடந்த லெக் பீஸை ஆசையாக கையில் எடுத்து ஒரு கடி கடித்து கண்ணை மூடி ரசித்து தின்றவளின் தோள் வளைவில் உஷ்ணமான ஈரத்தை உணர்ந்தாள். கண்ணை திறந்து அதை பார்க்கும் அளவிற்கு கூட பொறுமையில்லாதவள் , கைகளால் அந்த இடத்தை வருடியபடி லெக் பீஸை ஆசையாக மற்றொரு கடி கடிக்க , அவள் கழுத்திலும் அதேபோல ஆசை கடி விழவும் மெல்ல மெல்ல அவளின் உள்ளுணர்வு விழித்துக் கொள்ள , திடீரென்று உள்ளுக்குள் எழுந்த சிலிர்ப்பை மறைத்துக் கொண்டு தலை திருப்பி பார்த்தவளின் இதழ்களை ஆவேசமாக பற்றிக் கொண்டான் கௌரி.

அவள் மேனியில் அத்துமீறி விளையாடிய அவன் விரல்கள் புரிந்த ஜாலத்தில் சொக்கி போனவளின் கண்கள் தாமாகவே மூடிக் கொள்ள , அவள் கையிலிருந்த லெக் பீசும் நழுவி கீழே விழுந்தது . உணர்ச்சி என்னும் சூறைக்காற்றில் சிக்கிக் கொண்டவளின் கைகள் பற்றுதலுக்காக அவனையே இறுக்கி பிடிக்க , வேரறுந்த மரமாய் கீழே சரிந்தவர்கள் முடிவில் ஈருடல் ஓருயிராயினர்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29365

கௌரி - 22 a

கௌரியும் பிரியாவும் மற்றவர் அணைப்பில் சுகமாய் உறங்கிவிட , தூங்காமல் தவித்த இரு உள்ளங்கள் தினேஷும் விஜியும் ஆகும். கௌரி தன் அறைக்கு சென்ற அடுத்த நொடி மாடியேறிவிட்டாள் விஜி. அங்கே நடப்பதை உளவு பார்க்க வந்தவளுக்கு , அறையிலிருந்து கேட்ட சத்தத்தை வைத்தே என்ன நடந்திருக்கும் என்று யூகித்தவளுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்தது.

வீட்டிற்கு ஆண் வரிசை பெறாமல் ,இரு பெண் பிள்ளையை பெற்றதால் மாமியாரின் கொடுமைக்கு ஆளான விஜி சுதந்திரமாக நடமாட முடியாமல் அடங்கியிருபவள் , அம்மா வீட்டில் அதற்கு நேர்மாறாய் தன் அதிகாரத்தை காட்டி வீட்டு மருமகள்களின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினாள்.

ஏனோ பிரியாவை கண்ட நொடி பிடிக்காமல் போக மேலும் தன் ஜம்பம் அவளிடம் எடுபடாமல் போகவும், அவள் சந்தோசத்தை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். அதுவும் நடுவில் வந்துவிட்டு போன கணவனால் மீண்டும் கருவுற்றவளுக்கு வயிற்றில் வளர்வது பெண் பிள்ளை என்று தெரிந்த நொடியிலிருந்து மன உளைச்சலுக்கு ஆளானவள் தன் ஒட்டு மொத்த இயலாமையும் பிரியா மேல் திருப்பியிருந்தாள்.

அதேபோல் தினேஷும் கௌரி வீட்டிற்கு கிளம்பிய நொடியிலிருந்து அனலில் வாட்டிய புழுவை போல துடித்து போனான். பிரியாவின் கோப முகமும் , கௌரியின் அவசரமும் எதுவோ நடக்கப்போவதை உணர்த்த , வீட்டிலிருக்க முடியாமல் அவர்களை காண கிளம்பிவிட்டான்.

விஜியை போல மறைவிலிருந்து அங்கே நடப்பதை கேட்டவனுக்கு , தன் கைப்பொருள் கைவிட்டு போன வலி. அதில் உண்டான விரக்தியில் கண்மண் தெரியாத ஆத்திரம் வர செய்ய கூடாதா செயலை செய்ய துணிந்தான்.

மறுநாள் அதிகாலையிலேயே முழிப்பு தட்டிவிட கண்விழித்த பிரியாவிற்கு தான் இருந்த கோலம் இரவு நடந்ததை நினைவு படுத்த , கன்னங்கள் செம்மையுற வெட்கம் கொண்டவள் கண்ணை மூடி அந்த சுகத்தில் லயத்திருந்தாள். கௌரியுடன் தன் வாழ்க்கையை எந்த சூழலிலும் இணைத்துக் கொள்ள விரும்பாதவள் , நேற்று மனதளவில் கலங்கி போயிருந்ததால் தன் கட்டுப்பாட்டை இழந்து அவனின் ஆசைக்கு தன்னையே கொடுத்திருந்தாள்.

நேற்றுவரை அவனை விட்டு விலக நினைத்தவளுக்கு , இரவு தன் அடிமையாய் மாறிப்போய் தன்னை அர்ச்சித்தவனை விட்டு விலக ஏனோ மனம் நெருடவும் , கண்ணை மூடி சுய அலசலில் ஈடுபட்டவளுக்கு அவனை விட்டு விலகியிருப்பது இயலாத காரியம் என்று எடுத்துரைக்க வாழ்க்கை போகும் பாதையில் வாழ்ந்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தாள். தன்னருகில் உறங்கி கொண்டிருந்தவனை பார்த்து , இவன் ஒருவனே என் சொந்தம் என்று பார்வை பார்த்தவள் பின் வெட்க சிரிப்புடன் குளிப்பதற்காக கீழே இறங்கி சென்றாள்.

தலைகுளித்து ஈரம் சொட்ட சொட்ட புடவையில் வெளியே வந்தவளை , இரவு முழுவதும் அவர்களின் வீட்டருகில் காரை நிறுத்தி காத்திருந்த தினேஷிற்கு அப்பொழுதே கட்டிக் கொள்ள வேண்டும் என்று வெறியேற, காரியம் ஆகவேண்டி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான். மணி 6 நெருங்கி கொண்டிருக்க, நேற்று சரியாக சாப்பிடாததால் வயிற்றை பிரட்டவும் டீ போடுவதற்காக சமையலறைக்குள் நுழைந்தாள் பிரியா.

இதுவரை தானாக சமையலறை பக்கம் கூட ஒதுங்காதவள் , நேற்று நடந்த சம்பவத்தால் இதுதான் தன்னுடைய வாழ்க்கை என்ற நினைப்பில் டீ போடுவதற்க்காக பாலை காச்சினாள். உதட்டில் தழுவிய சிறு புன்னகையுடன் கனவுலோகத்தில் லயத்திருந்தவளின் அருகில்

“பிரியா …” என்று குரல் கேட்க திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தவளை கண்டு உதடுகள் விரிய புன்னகைத்துக் கொண்டிருந்தான் தினேஷ். அந்த நேரத்தில் அவனை இங்கே எதிர்பார்க்காததால் அதிர்ந்து போன பிரியா,

“என்ன … இந்த நேரத்துல …இங்க … ” சிறு தடுமாற்றத்துடன் கேட்க ,

“ஏன் நான் வர கூடாதா …” என்று எதிர்கேள்வி கேட்டவன் பின் கையை பிசைந்தபடி ,

“ அடடா … ப்ரிக்குட்டி முதல் தடவையா தயங்கி தயங்கி பேசுறாங்களே … என்ன விஷயமா இருக்கும் …”என்று நக்கலாக பேச , நிமிர்ந்து நின்று நேராக பார்த்தவள்,

“என்ன தினேஷ் … பேச்சலாம் ஒரு மாதிரி இருக்கு … நீங்க தாராளமா வீட்டுக்கு வரலாம் யாரு வேணான்னு சொன்னா … இப்படி திருட்டு தனமா வர வேணாம் தான் சொல்றேன் …” என்று அழுத்தமாய் பேசியவளுக்கு தினேஷின் வருகையில் ஏதோ வில்லங்கம் இருப்பதாக தோன்றியது.

“அட உன் பெட் ரூம் வரைக்கும் வந்திருக்கேன் … அதெல்லாம் தப்பா தெரியலையா … கிட்சனுக்கு வர்றததுதான் பிரச்சனையா ப்ரிக்குட்டி …” குழைந்து குழைந்து பேசியவனை தீ பார்வை பார்த்தவள் ,

“முதல்ல பெற சொல்லி கூப்பிடுங்க... இந்த செல்லமா ப்ரிக்குட்டி ,மோர்குட்டினு கூப்பிடுற வேலை வேணாம் …” என்று காட்டமாக பேச ,

சத்தம் போட்டு சிரித்தவன் ,

“ஏன் அந்த டிரைவர் பய கூப்டாதான் இனிக்குமா … நான் கூப்டா கசக்குதா …” என்று வீம்பு பேசியவனை நீயும் அவனும் ஒண்ணா என்ற பார்வை பார்த்தவளின் , கையை ஆவேசமாக பற்றியவன் ,

“என்னடி … கேவலமா பாக்கிற … சொல்லு அந்த பிச்சகார பய கூப்டா மட்டும் இனிக்குதா … சொல்லுடி …” என்று உலுக்கவும் , அவன் பிடியிலிருந்து திமிறி விடுபட்டவள் ,

“பொறுக்கி ராஸ்கல் …செருப்படி வாங்கிறதுக்குள்ள மரியாதையா வெளில போடா …” என்று வாசலை நோக்கி கையை நீட்டி கோபத்துடன் சீற ,

“ஏன் உன்கிட்ட செருப்படி வாங்கினாதான் என் கூட படுப்பியா … அந்த பொட்ட பய வேணா செருப்படி வாங்கிட்டு உன்ன கல்யாணம் பண்ணிருக்கலாம் … ஆனா நான் ஆம்பள டி … மீசவச்ச ஆம்பள …” என்றவனை நோக்கி கையை சுழட்டியவளின் கையை இறுக பற்றிக் கொண்டவன்

“என்னடி பெருசா பத்தினி வேஷம் போடுற … இவ்வளவு நாலு என்கிட்ட பல்ல காட்டிட்டு தானே நின்ன … ஏன் நான் எதுக்காக உன் கூட பழகுறேன் தெரியாதா … தெரிஞ்சுதானே பழகின … இப்போ ரொம்ப சிலுத்துகிற …” என்று சீரியவன் , அவள் சுதாரிக்கும் முன் ஆவேசமாக இறுக்கி அணைத்துக் கொண்டான்.

தினேஷின் திடீர் தாக்குதலில் அதிர்ந்து போன பிரியா , அவனிடமிருந்து விடுபட போராடியவளின் கைகள் இரண்டையும் பின் புறமாக மடக்கி பிடித்தவன் , அவளை அசிங்கப்படுத்தும் நோக்கில் அவள் இதழ்களை நோக்கி குனிய , இதற்காகவே காத்திருந்தார் போல

“அடப்பாவி … என் தம்பிக்கு இப்படி ஒரு துரோகம் பண்ணிட்டியே டே … உன்ன சுத்தி சுத்தி வந்தவனுக்கு துரோகம் பண்ண மனசு எப்படி வந்துச்சு … அய்யோ அம்மா அப்பா … சீக்கிரம் வாங்க இந்த கேடுகெட்டவ என்ன பண்ணிருக்கானு பாருங்க …” என்று கத்தினாள் விஜி.

தினேஷ் வீட்டிற்குள் நுழைந்ததிலிருந்து இங்கு நடப்பதை மறைந்து நின்று பார்த்தவளுக்கு , பிரியாவை பழிவாங்க சந்தர்ப்பம் கிட்டவும் தன் வேலையை காட்ட தொடங்கினாள்.
 
Status
Not open for further replies.
Top