All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிஶ்ரீயின் ‘வெண்ணிலவு துணையிருக்க...’ - கதை திரி

Status
Not open for further replies.

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg
எபி-11

வீட்டிற்கு வந்தவள் தாயிடம் ஒன்றும் பேசாமல், உணவும் உண்ணாமல் சென்று படுத்துக் கொண்டாள்.
சரஸ்வதியும் ஏதும் பேசவில்லை.
நிலாவிற்கு இன்றும் தூக்கம் வரவில்லை, மனவேதனையால் இல்லை, மகிழ்ச்சியால். இன்று நடந்ததை ஒவ்வொன்றாக யோசிக்கத் தொடங்கினாள். அவன் முள் போல் குத்தினாலும் அது சுகமான வலியாக இருந்தது. அதில் அவளுக்கு சில கேள்விகளும் எழுந்தது. என்றும் முறைத்துப் பார்ப்பவன், கண்டுகொள்ளாமல் செல்பவன் இன்று காட்டிய முகம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. தொடக்கத்தில் திட்டியவன் பின்பு கனிவாக நடந்து கொண்டான். அவன் வேண்டுமென்றா திட்டினான், நான் தப்பு பண்ணதாலத்தான் திட்டினான். அவன் கரெக்ட்தான் நான் தான் சரியில்லை. அவன் சொன்ன மாதிரி கொஞ்சம் பிராக்டிக்களா இருக்கனும்னு நினைக்கிறேன். அவன் எவ்வளவு கூலா இருந்தான். வெளியில் போகனும்னு சொன்னதும் பழயதை மனசில் வெச்சுக்காம கூட வந்தான், வேறு எதுவும் கேட்கவில்லை, அலட்டிக்கலை, அது இதுன்னு ஒளரலை. ஹய்யா, எவ்ளோ நல்லவன் நான் தான் சும்மா எல்லாத்தையும் குழப்பி. ச்ச நாளைக்கு போய் ஒரு பெரிய தேங்ஸ் சொல்லிடனும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் தன்னையும் அறியாமல் தூங்கிவிட்டாள்.

காலை வெயில் சுள்ளென்று முகத்தில் அடிக்கவும் விழித்தவள். வேக வேகமாக தயாராகி வேலைக்குச் சென்றாள். சரஸ்வதி கட்டி வைத்திருந்த மதிய உணவையும் எடுக்காமல் சென்றாள். சரஸ்வதியும் அது குறித்து கவலைப் படவில்லை. மகளுக்கு செவி கொடுத்தாள், தன் மனதை மாற்றி விடுவாள் என்றெண்ணியவர் திருமணத்திற்கு நாள் குறிக்க மீனாட்சியிடம் சொன்னார்.
ஆபிஸிற்கு வந்த நிலா அவ்வப்போது கேண்டீனுக்குச் சென்று ஆகாஷ் இருக்கிறானா என்று பார்த்தாள். நாள் முழுவதும் தேடியவள், பார்க்கிங் ஏரியாவில் அவன் ஓட்டும் காரைக் கண்டதும் அவன் எப்படியும் அங்கு வந்துதானே ஆக வேண்டும் என்று காத்திருந்தாள்.
ஒரு மணி நேரம் கழித்து அன்று நிலாவின் பாட்டு இனிமையாக இருக்கிறது என்ற அதே இளைஞன் ஆகாஷ் ஓட்டும் காரை எடுத்துச் சென்றான். அப்போ ஆகாஷ் இன்னைக்கு வரலையா? எப்படி தெரிந்து கொள்வது? யாரிடம் கேட்பது? ச்ச அவனுடைய போன் நம்பரைக் கூட கேட்கவில்லையே. சரி நாளை பார்க்கும் போது நம்பரை வாங்க வேண்டும்.
எதற்கு அவனுடைய நம்பர்? அப்படி என்ன பேசப் போகிறோம், இப்போ எதற்கு இந்த தேடல்? ஒரு நன்றி சொல்லனும் அவ்வளவு தானே இன்று இல்லையென்றால் நாளை அவ்வளவுதான். மறுபடியும் நீயே உன்னை குழப்பிக்காத நிலா, அவன் சொன்ன மாதிரி பிராக்டிகளா இரு. சரி இப்போ வீட்டுக்கு கிளம்புவோம் என்று தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.
அதன்பின் இரண்டு நாட்களுக் ஆகாஷை பார்க்கவில்லை. எங்கு சென்றிருப்பான்? வேலையை விட்டு சென்றுவிட்டானா? அவனை எதிர்பார்த்து எதிர்பார்த்து மனம் பாராமாகிக் கொண்டிருந்தது.
பகலை மொளனமாக கழிப்பவள் இரவில் புலம்புவதும் அழுவதுமாக நாட்கள் நகர்ந்தது. அவளுடைய கவலைகள், உணர்வுகள் அனைத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தாள். ஒரு ஞாயிறன்று நிலாவின் அறைக்கு வந்த சரஸ்வதி ‘நிலா அடுத்த ஞாயிறு உனக்கு கல்யாணம், நான் அன்னைக்கு சொன்னது தான் இன்றும் என்னை எதிர்த்து ஏதாவது செய்யனும் நினைத்த என்னை நீ பார்க்க முடியாது. காலை எட்டு மணிக்கு கல்யாணம், ஆறு மணிக்கு வண்டி வரும். ஆபிஸில் யாருக்கும் சொல்ல வேண்டாம், கல்யாணம் சிம்பிளா கோவிலில் வைத்து நடக்கும். சில நாட்களுக்குப் பிறகு ரிஷப்ஷன் சொந்தங்களையும் நண்பர்களையும் அழைத்து செய்வோம். உனக்கு வேற ஏதாவது விவரம் வேண்டுமா?’
நிலா தாயையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள். எப்படி மனிதர்கள் மாறிப்போகிறார்கள். தன்னைப் பெற்ற தாயே இப்படி எதிரியிடம் பேசுவது போல் நடந்து கொண்டால் எப்படி. ச்ச என்ன வாழ்க்கை? ஒருமுறை நடக்கும் திருமணம் அதை ஏன் இப்படி வற்புறுத்தி நடத்துறாங்க? என் மனதைப் பற்றி கவலையே இல்லையா? ஒருவேளை நான் உண்மையாகவே ஆகாஷை காதலித்திருந்தாள்…. அவ்வளவுதான் அவளின் மூளை வேறொன்றை யோசிக்கத் தொடங்கியது. ஆகாஷ், என்னாயிற்று அவனுக்கு? அன்று பஸ் ஸ்டாப்பில் பார்த்தது, அதன்பிறகு எங்கேயும் பார்க்க முடியவில்லை. ஒருவேளை வேலையை விட்டு சென்றுவிட்டானோ? அன்றுதான் கடைசி நாளோ அதுதான் அவனுக்கும் ஆறுதல் வேண்டியிருந்ததோ?

சிறிது நேரம் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தவர், மகள் ஏதும் பேசவில்லை என்றதும் அங்கிருந்து சென்றுவிட்டார். இயந்திரமாக வேலைக்குச் செல்வதும் வருவதுமாக இருந்தாள், திருமணம் ஞாயிறு என்பதால், அதற்கடுத்து வந்த திங்கள், செவ்வாய் மட்டும் விடுப்பு எடுத்திருந்தாள். அவளால் ஆகாஷைப் பார்க்க முடியவில்லை, ஒரு நன்றி சொல்லத்தான் முதலில் அவனை தேடினாள் ஆனால் அவனைப் பார்க்க இயலவில்லை என்றதும் அவளுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. கண்னைச் சுற்றி கருவலயம், சரியாக உண்ணாததால் வந்த உடல் மெலிவு என இளைத்திருந்தாள். சரஸ்வதிக்கு மகளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது, தான் தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு தோன்றத்தொடங்கியது. தன் அனுபவத்தை வைத்து மகளின் வாழ்க்கையை தீர்மானித்திருக்கக் கூடாதோ என்றெல்லாம் எண்ணத் தொடங்கினார். எதுவாக இருந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது எல்லாம் எல்லையை கடந்து விட்டது, அந்த கடவுள் பார்த்துப்பார் என்று சமாதானம் செய்து கொண்டார்.
திருமண நாளும் வந்தது, சனிக்கிழமையே சரஸ்வதி நிலாவின் துணிமனிகளை தயார் செய்து அவளிடம் கொடுத்து வைத்தார். ஞாயிறு காலை சரஸ்வதி கொடுத்த திருமண புடைவையை உடுத்தாமல் நிலா வேலைக்குச் சென்றபிறகு முதல் சம்பளத்தில் வாங்கியிருந்த புடவையை உடுத்தி ஐந்து மணிக்கெல்லாம் தயார் ஆகி ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள்.
சரஸ்வதி எதுவும் பேசவில்லை, எப்படியாவது திருமணம் நடந்தால் போதும் என்று நினைத்தவர். ஏழு மணிக்கெல்லாம் கோவிலில் வந்திறங்கினர். சரஸ்வதி என்றும் வரும் அதே கோவில்தான் என்பதால், உள்ளே நுழைந்ததும் ’வாம்மா நிலா’ என்று மீனாட்சியின் குரல் கேட்டு நிமிர்ந்தவள், புரியாமல் அவரைப் பார்த்தாள்.
நீங்க போங்க நான் நிலாவிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று சரஸ்வதியிடம் கூறினார். ‘நிலா, ஏம்மா இளைச்சுப்போய் என்னவோ போல் இருக்க. நான் தான் சொன்னேனே, இந்த கல்யாணத்தினால் உன் அம்மா தனிமரம் ஆகிடுவாங்கன்னு பயப்படாத, அதற்கு பதில் நிறைய சொந்தங்களைத் தரும். என்னை நம்பும்மா’
‘என்னப்பா? ஏதும் வேணுமா?’
மறுபுறம் பதில் இல்லை.
’சொல்லுப்பா’
‘மேடம், நான் அவங்க கூட கொஞ்சம் பேசனும்’
‘தம்பி’
‘பயப்படாதீங்க’
மீனாட்சி அங்கிருந்து நகர்ந்தார். நிலாவின் பின்புறம் இருந்தவன் அங்கிருந்தவாரே ’நான் சில விஷயங்களை கல்யாணத்திற்கு முன்பே உங்ககிட்ட சொல்லிடனும்னு நினைக்கிறேன், இது ரொம்ப லேட்னு எனக்கு தெரியும் ஆனாலும் வேற வழியில்லை இப்பதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது’
‘நான் ஒரு பெண்ணை விரும்புறேன், என் வீட்டில் ஜாதகம் அது இது என்று இந்த கல்யாணத்தில் கொண்டுவந்து நிறுத்திட்டாங்க. பலதும் என்னால் உங்ககிட்ட சொல்ல முடியாத நிலை ஆனால் நான் இப்ப சொன்னது மட்டும் உங்க வாழ்க்கைக்கு சம்பந்தப் பட்டதுன்னு எனக்கு தோணிச்சு. நமக்கு நடக்கப்போகிற கல்யாணத்தை சீரியஸா எடுத்துக்க வேண்டாம். ஜஸ்ட் கொஞ்ச நாள் பொருத்துகிட்டா எல்லாத்தையும் நான் சரி செய்திடுவேன். உங்களுக்கு எதாவது சொல்லனுமா?’ கேட்கனுமா?’
‘நிலாவிற்கு தலை சுற்றியது. தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்றே அவளுக்கு புரியவில்லை. திருமணத்தை சீரியஸாக எடுக்கக்கூடாதா? அம்மாவிற்கு இது தெரியுமா? அவரும் இதற்கு உடந்தையா? என் உணர்விற்கு இங்கு மதிப்பேயில்லையா? நான் பெண் பல தடைகள் எனக்கிருக்கலாம் ஆனால் ஆணிற்கு ஏன் இந்த திருமணத்தை தடுக்க முடியவில்லை, என்னைப் பார்த்தால் இளிச்சவாய் போல இருக்கிறதா? எல்லாருக்கு என் வாழ்க்கை விளையாட்டாக போய்விட்டதா?’ என்று யோசனையில் இருந்த நிலா. ‘தம்பி, நேரமாச்சு இரண்டு பேரும் வறீங்களா’ என்று மீனாட்சி வந்து அழைத்ததும் தந்நிலைக்கு வந்தவள். இனி தான் இதில் செய்ய ஏதும் இல்லை. இவர் சொல்வது போல் சிறிது காலம் பொறுத்துக் கொள்ளலாம், பின்பு யாருக்கும் தெரியாமல் எங்காவது சென்றுவிடலாம்.
‘ஆகாஷ், கடைசியா ஒருமுறை உங்களை பார்த்து பேசனும் போல் இருக்கு. அன்று ஒருநாள் ஒரே நாள் எனக்கு ஆறுதல் தந்து கூடவே இருந்தது போல் வாழ்க்கை முழுவதும் எனக்கு ஆறுதல் தரும் உறவாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
‘அம்மாடி, அழாதேமா. எல்லாம் சரியாயிடும்’ என்று நிலாவை அழைத்துக் கொண்டு சென்றார் மீனாட்சி. ஞாயிறு என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது, எண்ணி பத்து பேர்தான் கல்யாணத்திற்கு வந்திருந்தனர். நிலா குனிந்த தலை நிமிரவில்லை. ஐய்யர் படு குஷியாக இருந்தார், தானாக பார்த்து நடத்தி வைக்கும் முதல் கல்யாணம், கடவுளே நல்லபடியாக இந்த ஜோடி வாழ வேண்டும் என்று கடவுளிடம் கூடுதலாக வேண்டிக்கொண்டார்.
ஐய்யர் மந்திரங்களை கூறி இறைவனின் பாதத்தில் தாலியை வைத்து எடுத்து வந்து மாப்பிள்ளையின் கையில் கொடுத்து கெட்டச் சொன்னார். நிலாவின் கழுத்தில் தாலி ஏறியது, கண்களை இருக மூடித் திறந்தாள்.
’நிலா, மாலையை வாங்கு மாப்பிள்ளை கழுத்தில் போடு’ என்றதும் ஆகாஷ் ஆவலாக பெண்ணின் முகத்தைப் பார்த்தான். ஆம், அது நிலாதான் அவனுக்கு தெரிந்த அதே நிலா.
மாலையை வாங்கி மாப்பிள்ளையின் கழுத்தில் போடுவதற்காக நிமிர்ந்தவள், எதிரில் மாப்பிள்ளையாக ஆகாஷ் நிற்கவும். இருமுறை கண்களை மூடித்திறந்தாள். முகம் மாறவில்லை, தன்முன் நிற்பது ஆகாஷ் தான் பிரம்மையில்லை. இத்தனை நாட்களாக தான் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று காத்திருந்த ஆகாஷ். சரஸ்வதியை திரும்பி ஒருமுறை பார்த்தாள். சரஸ்வதி மகளின் திருமணத்தை பெருமையாக பார்த்துக் கொண்டிருக்கும் தாயைப் போன்று மனதில் பாரத்துடனும் கண்களில் கண்ணீருடனும் அமைதியாக ‘போடு’ என்பதைப் போன்று கண் அசைத்தார்.
‘மாலையைப் போடுமா’ என்று அய்யர் கூறவும்
அவள் ஆகாஷின் கழுத்தில் மாலையை இட்டாள். ஆகாஷும் நிலாவின் கழுத்தில் மாலையை அணிவித்தான்.
மாப்பிள்ளையும் பெண்ணும் மூணு முறை பிராகாரத்தை வலம் வந்திடுங்கோ என்றதும் இருவரும் செய்வதறியாது நின்றனர்.
’நிலாவின் கையை பிடித்துக் கொண்டு மூன்று முறை கோவிலை சுற்றி வாங்க’ என்று மீனாட்சி கூறினார்.
அசையாமல் நின்றிருந்த நிலாவின் கையை தானாக தேடி பிடித்துக் கொண்டு ஆகாஷ் வேகமாக நடந்தான். நிலாவினால் அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. மூச்சு வாங்கியது. இரண்டாவது முறை வந்ததும், ’என்னால முடியலை ஆகாஷ்’
அவளை வேகமாக இழுத்து தன் முன்னே நிறுத்தியவன் ‘எனக்கும்தான் முடியலை நிலா. உனக்கு கல்யாணம்னு நீ சொல்லவேயில்லை. உன் ஆசை நிறைவேறினால் போதும்னு நினைச்சிட்ட இல்ல?’
‘என் ஆசையா?’
‘மறுபடியும் நடிக்காத நிலா’
‘ஆகாஷ்’
‘ஸ்டாப் இட் நிலா, எதுவும் பேச வேண்டாம், நான் கொஞ்ச நேரம் முன்னாடி உன்கிட்ட சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன், இந்த கல்யாணத்தை நீ சீரியஸா எடுத்துக்க வேண்டாம். வா’ என்று மீண்டும் தரதரவென்று இழுத்துக் கொண்டு நடந்தான்.
மூன்றாவது முறை வலம் வரும்போது நிலாவிற்கு தலை சுற்றிவிட்டது, நிலாவின் கை நழுவுவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்கையில் வலக்கையால் தலையை பிடித்துக் கொண்டு சரிந்தவளை தக்க சமயத்தில் தாங்கிப் பிடித்தான்.
‘நிலா, நிலா என்னாச்சு நிலா?’ அவளிடம் எந்த அசைவும் இல்லாததை உணர்ந்தவன், அவளை கையில் ஏந்திக் கொண்டு அனைவரும் நின்றிருந்த இடத்திற்கு விரைந்தான். அங்கு நின்றிருந்த இளங்கோவிடம் காரை எடுக்கச் சொன்னான்.
‘அய்யோ நிலாவிற்கு என்னாயிற்று? என்று பதறிய சரஸ்வதியைத் தொடர்ந்து மீனாட்சியும் விரைந்தார்.
அவர்கள் என்னவென்று உணர்ந்து விரைவதற்கு முன்னர் ஆகாஷ் வண்டியுடன் பறந்துவிட்டான்.

மீனாட்சியின் கணவரும் அவர்களைத் தொடர்ந்து வாசலுக்கு வந்தவர், வாங்க நம்ம வண்டியில் போவோம். நான் இளங்கோவிற்கு அழைத்து எந்த ஹாஸ்பிட்டல்னு கேட்கிறேன்’ என்று காரை நோக்கி நடந்தார்.

’கர்ணா, நீ இங்கேயே இரு, நான் போயிட்டு தகவல் சொல்றேன். தங்கச்சி அவனை கூட்டிகிட்டு வீட்டுக்கு போமா’
‘சரி அண்ணா’
சரஸ்வதியுடன் காரில் ஏறிய மீனாட்சி மிகவும் பதட்டத்துடன் இருந்தார்.
‘டேய் இளங்கோ, எந்த ஹாஸ்பிட்டலுக்குப் போறீங்க?’
‘-’
‘சரி சரி, நாங்க வந்திடறோம்’
’நிலாமா, பயப்படாதீங்க, அடிக்கடி இப்படி நடக்குமா?’
‘இல்லைங்க, இன்று தான் முதல் தடவை’
‘நிலாவிற்கு உடம்பு சரியில்லையா?’
‘-’
‘சரி சரி விடுங்க, எல்லாம் சரியாயிடும். காலையில் சாப்பிடாமல் இருந்திருக்கும் பதட்டத்தில். எல்லா பெண்களும் அப்படித்தான், ஒரு விசேஷத்திற்கும் சாப்பிடறதே இல்லை. அதுதான்’
நிலா நிலா என்று இருமுறை மீண்டும் அழைத்தான், அவளிடம் அசைவேயில்லை. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கிருந்த நீரை எடுத்து முகத்தில் தெளித்தான், பயனில்லை.
ஹாஸ்பிட்டல் வந்ததும் விரைவாக அட்மிட் செய்து, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
‘எவ்ளோ நேரமாச்சு மயங்கி?’
‘ட்வெண்டி மினிட்ஸ் டாக்டர்’
‘ஓகே, ப்ரெஷர் லோவா இருக்கு, சாப்பிட்டாங்களா காலையில்?’
‘தெரியலை’
‘நீங்க அவங்களுக்கு என்ன ரிலேஷன்?’
‘அது வந்து… ஹஸ்பெண்ட்’
‘குட், வைஃப் சாப்பிட்டாங்களா இல்லையான்னு உங்களுக்கு தெரியாது’
அது வந்து..
ஓகே ரொம்ப வீக்கா தெரியறாங்க, பீபி லோ, ட்ரிப்ஸ் போடச் சொல்லியிருக்கேன், சில டெஸ்ட் எடுக்க எழுதியிருக்கேன். வில் வெயிட் அண்ட் சீ. இதுக்கு முன்னாடி இப்படி மயங்கியிருக்காங்களா? இல்லை வேற ஏதும் உடம்புக்கு பிரச்சினையிருக்கா?’
‘ரியலி சாரி டாக்டர், எனக்கு எதுவும் தெரியாது’
‘இவங்க உங்க வைஃப் தானே?’
‘ஆமாம்’
‘பராவாயில்லை அதாவது உங்களுக்கு தெரிந்திருக்கு’
‘-’
‘ஓகே வெயிட் பண்ணுங்க என்னன்னு பார்ப்போம்’
‘ஓகே டாக்டர், பயப்படுற மாதிரி எதுவும் இல்லையே?’
‘இப்படி ஒரு ஹஸ்பண்ட் அவங்களுக்கு கிடைத்திருக்கிறதை நினைத்தால்தான் எனக்கு பயமா இருக்கு மிஸ்டர், போங்க போய் அவங்க பக்கத்தில் உட்காருங்க, கண் விழித்தால் இன்பார்ம் பண்ணுங்க’
‘ஷ்யூர்’
வண்டியை நிறுத்திவிட்டு ஹாஸ்பிட்டல் பார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்தவன், நேரே நிலாவின் அறைக்கு வந்தவன்.
’ப்ரோ, டாக்டர் என்ன சொன்னாங்க?’
‘டெஸ்ட் ரிஸல்ட் வந்திட்டு சொல்லுவாங்க’
‘ப்ரோ, இவங்க அவங்கதானே?’
ஆம் என்பது போல் தலையை ஆட்டினான்.
‘யூ ஆர் லக்கி ப்ரோ, அவங்களுக்கு எல்லாம் தெரியுமா?’
இல்லை என்பது போல் தலையை ஆட்டினான்.
‘ஓ’
‘-’
‘சரி விடுங்க ப்ரோ, எல்லாம் சரியாயிடும்’
‘-’
‘அம்மா அப்பா வந்திருப்பாங்க, நான் அவங்களை கூட்டிகிட்டு வரேன்’
‘இளா, எதுவும் அவளுக்கு இப்ப தெரிய வேண்டாம்’
‘ஷ்யூர் ப்ரோ, நான் எதுவும் சொல்ல மாட்டேன் வித் அவுட் யுவர் பெர்மிஷன். டோண்ட் வொர்ரி’
பரப்பரப்பாக இருந்த மருத்துவமனையில் சரஸ்வதியும், மீனாட்சியும், ஜெயகிருஷ்ணனும் உள்ளே நுழைந்தனர். அவர்களை நிலாவின் அறைக்கு இளா அழைத்து வந்தான். அவர்கள் உள்ளே வந்ததும் ஆகாஷ் எழுந்து வெளியில் சென்றான். சிறிது நேரம் கழித்து ஜெகே என்கிற ஜெய கிருஷ்ணனும், இளாவும் வெளியில் வந்தனர்.

சரி, இளா எதுவும் இருந்தா கூப்பிடு, டாக்டர்கிட்ட பேசிட்டு ஆபிஸுக்கு கிளம்புறேன்.
சரிப்பா
மொளனமாக ஆகாஷைப் பார்த்துவிட்டு அவர் கிளம்பிச்சென்றார்.
‘அவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு போ இளா, நான் இங்கே இருக்கிறேன், நிலா கண் முழிச்சதும் அவளை கூட்டிகிட்டு நான் வீட்டுக்கு வரேன்.
சரி, ஏதும் வேணும்னா கூப்பிடுங்க ப்ரோ.
ஷூயர்
நான் போய் ரிபோர்ட்ஸ் ரெடியாயிடுச்சான்னு பார்த்திட்டு வரேன் ப்ரோ, டாக்டர் என்ன சொல்றார்னு கேட்டுட்டு கிளம்புன்னா கொஞ்சம் பெட்டரா இருக்கும்.
இளா கிளம்பியதும், ரூமிற்குள் செல்ல ஆகாஷ் முனைகையில் அங்கு சரஸ்வதி புலம்பிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
‘நான் தப்பு பண்ணீட்டேனோன்னு தோனுது மீனா, நிலா இப்போ கல்யாணம் வேண்டாம் கொஞ்ச நாள் கழியட்டும்னு சொன்னா, நான் தான் ஜாதகம் அது இதுன்னு என் பெண்ணை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திட்டேன்’
‘அண்ணி எல்லாம் சரியாயிடும், இது சாதாரண தலைசுற்றல் தான். இரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்தால் சரியாயிடும், நீங்க அழாதீங்க, இனிமேல் நிலா என் பொறுப்பு.’
’என்னமோ எனக்கு ஒன்னும் புரியலை மீனா, நான் செய்தது சரியா, தப்பான்னு’
’இதோ தம்பியே வந்திருச்சு, இவங்களை கொஞ்சம் வீட்டில் விட்ரு அகி, நான் நிலாகூட இங்கே இருக்கேன்.’
‘வேண்டாம், என் வைஃபை பார்த்துக்கு எனக்கு தெரியும், நீங்க அவங்களையும் கூப்பிட்டு கிளம்புங்க’
’அகி’
அதே நேரம் இளாவுடன் டாக்டரும் அங்கு வந்தார்.
’டாக்டரைக் கண்டது சரஸ்வதி, ஓடிச்சென்று ‘டாக்டர், நிலா இன்னும் கண்ணைத் திறக்கலை, தயவுசெய்து அவளுக்கு என்னன்னு சொல்லுங்க’
‘பதட்டப்படாதீங்க, அவங்க காலையில் ஏதும் சாப்பிட்டாங்களா?’
‘கடவுளே, என் பெண் எதை சாப்பிட்டா? தெரியலையே, டாக்டர் அவளை எப்படியாவது காப்பாத்துங்க, பாவி, இப்படி பண்ணுவான்னு நான் கனவிலும் நினைக்கலையே. எல்லாம் என்னாலதான்.’
டாக்டர் குழம்பிவிட்டார், காலையில் எதுவும் சாப்பிட்டாங்களான்னு கேட்டா, இந்த லேடி என்னென்னமோ பேசுதே. ஏதும் போலீஸ் கேஸாயிடுமோ? பெரிய இடம் வேற, ஜெகே சார் வேற ரெகமெண்ட் செய்திருக்குறார். என்ன செய்வது?
இளாதான் சரஸ்வதி அருகில் சென்று, ஆண்ட்டி காலையில் அண்ணி ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டாங்களா இல்லையான்னு டாக்டர் கேட்கிறார் என்று விளக்கினான்.
சரஸ்வதியின் மூளையில் இப்போது தான் தெளிந்தது, பயத்துடன் ஆகாஷைப் பார்த்தார், பின்பு டாக்டரைப் பார்த்து ‘இல்லை’ என்பது போல் தலையாட்டினார்.
குடும்பமே தெளிவில்லாமல் இருக்கு, அந்த பெண் வேற கண்ணை முழிச்சு என்ன உளரப்போகுதோ.
‘ஆகாஷ் சரஸ்வதியைத்தான் வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தான். அவர் உளரியதிலிருந்து நிலா திருமணத்தை நிறுத்த விஷம் குடித்திருக்கலாம் என்று ஊகிக்கும் அளவிற்கு எதுவோ நடந்திருக்கிறது. திருமணம் வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறாள். என்ன காரணமாக இருக்கும்?’
’பேஷண்ட் ரிப்போர்ட் எல்லாம் நார்மலாகத்தான் இருக்கு. பீபி லோ, கொஞ்சம் வீக்கா தெரியறாங்க, அவங்க கண் விழித்த பிறகுதான் பாக்கியை சொல்ல முடியும். இன்னும் ஒன் ஹார் வெயிட் பண்ணலாம்’ என்று நர்ஸிடம் சிலவற்றை சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
சரஸ்வதி சிறிது நேரம் மகளையே பார்த்துக்கொண்டிருந்தார், மீனாட்சியும் இளாவும் வற்புறுத்தி அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் சென்றபின் நிலாவின் அருகில் அமர்ந்தவன், அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்த நிலா, சுற்றும் முற்றும் பார்த்தாள். தலை பாரமாக இருந்தது, உடம்பெல்லாம் ஒரே வலியாக இருந்தது. கண் எதிரே ஆகாஷ் அமர்ந்திருந்த நிலையிலே உறங்கிக் கொண்டிருந்தான். அவளுக்கு காலையில் நடந்தது நினைவிற்கு வந்தது. விதியின் விளையாட்டை நினைத்து அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
ஏதோ தோன்ற கண்ணை விழித்த ஆகாஷ், நிலா விழித்திருப்பதைப் பார்த்துவிட்டு நர்ஸை அழைத்து பரிசோதனைச் செய்ய சொன்னான். டாக்டர் வந்து நிலாவிடம் சிறிது நேரம் தனியாக பேசினார். பின்பு சில மருந்துகளை குறித்துக் கொடுத்தார்.
ஆகாஷிடம் திரும்பியவர் ‘இதெல்லாம் சரியான டைம்ல சாப்பிடச் சொல்லுங்க, கொஞ்சம் அவங்களை கேர் பண்ணுங்க. ஹஸ்பெண்ட்னு சொன்னா மட்டும் போதாது அதுமாதிரி நடந்துக்கனும். அவங்களுக்கு மன அழுத்தம் இருக்கு, கொளண்சிலிங் எழுதியிருக்கேன், டாக்டர் கொஞ்ச நேரத்தில வந்திடுவாங்க, பேஷண்ட் கோஆப்பரேட் செய்தால் சீக்கிரம் சரியாயிடும், எதுவாக இருந்தாலும் இரண்டு பேரும் பேசி தீர்க்க பாருங்க, மன அழுத்தத்தை குறைவா இடை போடாதீங்க’
எல்லாவற்றிற்கும் சரியென்று தலையை அசைத்தவன் டாக்டர் சென்றதும், நிலாவின் அருகில் வந்தமர்ந்து ‘எப்படி இருக்கு, ஆர் யு ஓகே?’
‘-’
‘ஐ ஆம் சாரி’
‘-’
’சரி, பேசறதுக்கு இது சரியான நேரம் இல்லை. நான் போய் மெடிசின் வாங்கிட்டு வந்திடறேன்’
மாலை வரை மருத்துவமனையில் இருந்துவிட்டு மன நல மருத்துவரையும் சந்தித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்.

காரில் கண்ணை மூடி இருந்தவள், ‘நிலா, வீடு வந்தாச்சு’ என்றவுடன் புதிதாக இருந்த வீட்டைப் பார்த்து குழம்பினாள்.
‘என்ன நிலா?’
‘-’
‘இனிமேல் இதுதான் உன் வீடு’
’-’
அதே நேரம் அங்கு ஆரத்தியுடன் ஒரு பெண் வந்து நின்றார்.

‘இறங்கி வாடா நிலா’
நிலா இறங்கினாள், அகி நிலா கூட சேர்ந்து நில்லு என்று இருவருக்கும் ஆரத்தி எடுத்தார்.
ஆரத்தி எடுத்து முடிந்ததும் உள்ளே அழைத்துச் சென்று மாடியில் ஓர் அறையைக் காட்டி, ’இதுதான் உங்க ரூம், நீ போய் ரெஸ்ட் எடுடா, நான் சாப்பிட எதாவது எடுத்திட்டு வரேன்’ என்று அந்த பெண்மணி வெளியே சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து அவளுக்கு உணவு எடுத்து வந்தவர், அவளை உண்ண வைத்துவிட்டு மருந்துகளையும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் ஜன்னலின் வெளியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள், களைப்பு தோன்ற கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.
எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை, நடு இரவில் விழித்தவள் புதிதாக இருந்த அறையைப் பார்த்து பயந்துவிட்டாள். கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்தவள் காலை கீழே வைக்கும்போதுதான் கவனித்தாள் அந்த பெண்மணி படுத்திருந்தது. ஒவ்வொன்றாக மீண்டும் நினைவில் வந்தது. திருமணமானால் உறவுகள் கிடைக்குமாம், ஹு, தான் தற்போது தனியாக அனாதையாக இருப்பது இந்த திருமணத்தால்தான். என்னவெல்லாம் சொல்லிவிட்டான். சிலநேரம் பழையதையெல்லாம் நினைவுபடுத்தியவள் உறக்கம் வராமல் ஜன்னலின் அருகே சென்று நின்று கொண்டாள்.
‘என்னடா தூக்கம் வரலையா?’
‘-’
‘தூக்கம் வரலைனாலும் பரவாயில்லை, படுத்துக்கோடா, உனக்கு அசதியா இருக்கும்’
எதுவும் பேசாமல் வந்து படுத்துக்கொண்டாள்.

தொடரும்...
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg

எபி-12

’நிலா, எழுந்திரிடா. பல்லு தேச்சிட்டு இந்த பாலை குடி, மருந்து சாப்பிடறதுனால பசிக்கும் நான் டிபன் ரெடி செய்து எடுத்துவரேன்.’
கட்டிலில் எழுந்து அமர்ந்தவள், மீண்டும் குழம்பினாள்.
‘என்னடா, புது இடம் தூக்கம் வரலையா? போகப் போக சரியாயிடும். உனக்கு போர் அடிச்சா, எழுந்து வெளியே வா, கொஞ்ச நேரம் தோட்டத்தில் நடந்தா தெம்பா இருக்கும். நான் வேணா அகியை உள்ளே வரச்சொல்றேன்’
யார் அந்த அகி? என்று விழித்தாள்.
’என்னடா முழிக்கிற? அகியா…நம்ம ஆகாஷைத்தான் அகின்னு சொன்னேன். நாங்க ‘அகி’ன்னு கூப்பிடுவோம். நீ குளிச்சு ரெடியாயிட்டு வா, நேத்து நடந்த கலவரத்துல ஒழுங்கா பேச கூட முடியலை’
‘-’
‘என்னை உன் அம்மா மாதிரி நினைச்சுக்கோ, எது வேணும்னாலும் தயங்காம சொல்லு, சரியா’ என்று அவள் தலையை கோதிவிட்டு சென்றுவிட்டார்.
’அம்மா’.. அம்மா எப்படி இருக்காங்க? ஏன் என்னை அப்படியே விட்டுட்டு போயிட்டாங்க? அவங்களுக்கு என் மேல நிஜமாகவே பாசம் இல்லையா?’

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள், கதவு திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்தாள். ஆகாஷ் உள்ளே வந்தான் அங்குள்ள அலமாரியைத் திறந்து ‘இதில் உனக்கான துணிகள் இருக்கு, எது வேணும்னாலும் அம்மாகிட்ட சொல்லு தயங்க வேண்டாம்’
அங்கிருந்த ஜன்னல்களை திறந்து வைத்தவன், ’போர் அடிச்சா தோட்டத்தில் கொஞ்ச நேரம் நடந்திட்டுவா, முடிஞ்ச அளவு ரெஸ்ட் எடு’ என்று கூறிவிட்டு அவனுக்குத் தேவையான துணிகளை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
குளித்துவிட்டு முடியை துவட்டிக்கொண்டிருக்கையில் அந்த பெண்மணி வந்தார். ‘வாடா, சாப்பிடலாம்’ என்று அழைத்துக் கொண்டு சென்றார்.
அங்கு ஆகாஷும் வயதான ஒருவரும் அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர்.
‘உட்காருடா’ என்று ஆகாஷின் அருகில் நிலாவை அமர வைத்துவிட்டு, தட்டில் பலகாரங்களை வைத்தார். நிலா ஆகாஷையும், அவனருகில் அமர்ந்திருந்தவரையும் ஒருமுறை பார்த்தாள்.
‘சாப்பிடுமா’ என்றவர் நேத்து அறிமுகப்படுத்த முடியலை, நான் அகியோட அப்பா என்று ஆகாஷைப் பாவமாக பார்த்தார்.
‘அப்பா’ என்று அவர் தோள்களை ஆகாஷ் தொட்டான்.
அது அகியோட அம்மா என்று அந்த பெண்மணியை கை காட்டினார். அவர் புன்னகையுடன் நிலாவைப் பார்த்தார்.
”நீ வேலை செய்கிற கம்பெனியில்தான் நான் டிரைவரா வேலை செய்கிறேன், காலில் அடிபட்டதுனால கொஞ்ச நாளா லீவில் இருக்கேன். எனக்கு பதில் அகி அந்த வேலையை செய்றான்”
‘நிலாவும் ஆகாஷும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
தொடக்கத்திலிருந்தே நான் தான் சாரோட டிரைவரா இருக்கேன், வசதியா இருக்கட்டும் என்று அவர் வீட்டு காம்பொளண்டுக்கு உள்ளேயே எங்களுக்கும் வீடு வைத்து தந்திருக்கிறார்.
’நேரம் கிடைக்கும் போது நிலாவை கூட்டிகிட்டு நம்ம மீனாட்சி அம்மா வீட்டுக்கும் போயிட்டு வா அகி’ என்று ஆகாஷைப் பார்த்தார். ஆகாஷோ உண்ணுவதில் மும்முரமாக இருந்தான்.
‘அகி’
‘சரிப்பா பார்க்கலாம்’
’சாப்பிடுமா, நான் வேற பேசிக்கிட்டே இருக்கேன்’
இரண்டு நாட்கள் கழிந்தது, நிலா சாப்பிட மட்டும் வெளியில் வருபவள், மீதி நேரங்களை ரூமிற்குள்ளே கழித்தாள்.
மூன்றாவது நாள் அவளது மாமியார் அவளை வற்புறுத்தி தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார், மிகவும் அழகாக இருந்த தோட்டம் அவள் மனதிற்கு இதமாக இருந்தது. நடக்கும் போது அவர்களது திருமணம் முதல் இன்றைய தினம் வரை உள்ள கதைகள் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே வந்தார். அவர் கூறுவது அனைத்தையும் மொளனமாக கேட்டுக்கொண்டே நடந்தாள்.
ஒரே காம்பொளண்டிற்குள் மாளிகை போன்ற ஒரு வீடும், நான்கு சிறிய வீடுகளும் இருந்தன. அதற்கு நடுவில் பெரிய தோட்டம் இருந்தது. சிலர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்கள் இருவரையும் பார்த்து அவர்களுக்குள்ளாகவே ஏதோ பேசிக்கொண்டனர். வீடருகே வந்தவுடன் நிலாவின் கையை பிடித்தவர், நிலா நாங்க ஏதும் தவறு செய்திருந்தாள் மன்னிச்சிடுமா. எங்க அகி ரொம்ப நல்ல பையன், வெளியில் பார்க்கிற மாதிரி இருக்க மாட்டான் அதுவும் கொஞ்ச நாளா அவனுக்கு நேரமே சரியில்லை. எல்லாம் சரியாயிடும் நிலா, அவன் உன்கிட்ட ஏதும் கோபமா பேசுனா கொஞ்சம் பொறுத்துக்கோ நிலா. அவன் கிட்ட இருக்கிற ஒரே ஒரு கெட்ட பழக்கம்னா அது ‘கோபம்’தான் ஆனால் கோபப் பட்ட அடுத்த நொடி அதை மறந்திடுவான். போகப் போக நீயே புரிஞ்சிப்ப, மனசில் இருக்கிறதை ஒழுங்கா தெளிவா சொல்லத் தெரியாது அவனுக்கு, சின்ன வயசில் அடம் பிடிச்சு சாதிப்பான் வளர்ந்தப்பிறகு கோபத்தில் தான் நினைத்ததை சாதிப்பான்’. நான் ஏன் இதை சொல்றேன்னா நீங்க ரெண்டு பேரும் செரியா பேசி நான் பார்க்கலை. உங்களுக்குள்ள என்ன பிரச்சினைன்னு தெரியாது ஆனால் எதுவா இருந்தாலும் பேசி தீர்க்கக்கூடியதாகத்தான் இருக்கும். நீங்க ரெண்டு பேரும் படிச்சவங்க, எதுவானாலும் யோசித்து முடிவெடுங்க. அவசரத்தில் நடந்த கல்யாணம் ஆனால் இந்த உறவு வாழ்நாள் முழுதும் நிலைக்கனும்னு என்னுடைய ஆசை. உனக்கு என்ன பிரச்சினைனாலும் என்னை உன் அம்மாவா நினைச்சு சொல்லுமா, நான் என்னால் ஆன உதவியை செய்றேன்’
‘சரி அத்தை’
‘இப்பத்தான் எனக்கு நிம்மதி ஆச்சு நிலா, முதல் முறையா நீ பேசிட்ட, அதுவும் என்னை அத்தைன்னு சொல்லீட்ட’ என்று அவள் தலையை கோதினார்.
அதே சந்தோஷத்துடன் இருவரும் வீட்டிற்குள் சென்றனர். ஆகாஷின் அப்பாவிடம் நிலா தன்னை அத்தை என்று அழைத்தைக் கூறி நெகிழ்ந்தார். நிலாவிற்கு அதிசயமாக இருந்தது, ஒரு சின்ன விஷயத்திற்கு போய் இப்படி சந்தோஷப்படுகிறார். கல்யாணத்தை சீரியஸா எடுக்கலைன்னாலும் பரவாயில்லை, இந்த உறவும் அவர்களின் அன்பும் நிஜம். தன்னைக் கொண்டாடும் இந்த உறவு மிகவும் பிடித்திருந்தது.
அதே நினைவோடு தனது அறைக்கு சென்றவள் அங்கு ஆகாஷ் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து கதவருகே தேங்கி நின்றாள். சரியான அறைக்குத்தான் வந்திருக்கிறோமா என்று சுற்றும் முற்றும் பார்த்தாள், அது அவளின் அறைதான். என்ன செய்வது?’ என்று யோசனையோடு சமயலறைக்குச் சென்றாள். ”வந்திட்டியாடா, இந்த டீயை அகிக்கு குடுத்திட்டு வா உனக்கு பால் கலக்கி வைக்கிறேன்.”

பேசாமல் அதை கையில் வாங்கியவள், யோசனையோடு அவள் அறைக்குச் சென்றாள். கட்டிலின் அருகே சென்று நின்றவள் எப்படி எழுப்புவது என்று சிறிது நேரம் யோசித்தாள். அவன் அசைவது தெரிந்ததும் சற்று நகர்ந்து நின்றாள். சோம்பல் முறித்து எழுந்தவன் அங்கு நிலா நிற்பதைப் பார்த்துவிட்டு, ’வாக்கிங் முடிஞ்சுதா?’
‘ம்’
‘அம்மா எங்கே?’
‘சமயலறையில்’
‘சரி, நீ ரெஸ்ட் எடு’ என்று எழுந்து சென்றான்.
கதவருகே ஆகாஷ் சென்றதும்தான் அவனுக்கான டீ தன் கையில் இருப்பது நினைவிற்கு வந்தது.
‘ஆகாஷ்’
என்ன என்பது போல் திரும்பிப் பார்த்தவனிடம்.
‘டீ’
‘அம்மா போட்டிருப்பாங்க, நான் குடிச்சுக்கிறேன்’
‘அத்தை இதை குடுக்கச் சொன்னாங்க’ என்று கையிலிருக்கும் டம்ளரை நீட்டினாள்.
அவனுக்கு அதிசயமாக இருந்தது. ‘அத்தை’ ஹும் பெரிய முன்னேற்றம்தான்.
அவளருகே வந்தவன் அவள் கையிலிருந்த டம்ளரை வாங்கி வேகமாக குடித்துவிட்டு அவள் கையிலே டம்ளரை வைத்தான்.
’அம்மாகிட்ட சொல்லு இதுக்கு பேர் கோல்ட் டீ’ன்னு. சூடான டீயை இவ்வளவு சீக்கிரம் குடித்து முடித்து விட்டானே என்று அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் சொன்ன பிறகுதான் டீ ஆறிவிட்டது என்பதை உணர்ந்தாள்.
ஆமாம் இவ்வளவு நேரம் கழிந்து குடித்தால் ஆறாமல் என்ன ஆகும்? என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள்.
’பால் குடி நிலா’ என்று ரதி நிலாவிடம் நீட்டினாள்.
இரவு உணவு தயார் செய்வது, சமயலறையை சுத்தம் செய்வது என அவருக்கு உதவியாய் இருந்துவிட்டு இரவு உணவு முடிந்ததும் அறைக்கு வந்தாள் அங்கு ஆகாஷ் மடிக்கணிணியில் ஏதோ செய்து கொண்டிருப்பதைக் கண்டதும் சற்று தயங்கி நின்றாள்.
வாசலில் நிழல் ஆடுவதைக் கண்டதும் நிமிர்ந்தவன், ‘டென் மினிட்ஸ் நிலா, வேலை முடிந்துவிடும்’ என்றவன் மீண்டும் வேலையில் மூழ்கினான்.
பத்து நிமிடத்திற்கு எங்கு செல்வது என்று திரும்பியவள் அனைத்து விளக்குகளும் அனைக்கப் பட்டிருப்பதைக் கண்டதும் அங்கேயே நின்றுவிட்டாள்.
வேலையை முடித்து மடிக்கணிணியை அனைத்தவன், ‘என்ன அங்கேயே நின்னுட்ட உள்ளே வா, டைம் ஆச்சு படுத்துக்க என்று கதவருகே சென்று நின்றான்.
‘அத்தை இன்னும் வரலை அதுதான்’
‘அம்மா எதுக்கு’
‘அவங்க என்கூடத்தான் படுத்துப்பாங்க, அதுதான் வெயிட் பண்றேன்’ என்றவளை ஒரு மார்கமாகப் பார்த்தான்.
ஏன் இப்படி பார்க்கிறான்? என்று எண்ணியவள் மீண்டும் திரும்பிப் பார்த்தாள்.
‘அம்மா வரமாட்டாங்க, உள்ளே வா’
’சரி, நீங்க கிளம்புங்க. நான் கதவை பூட்டிக்கிறேன்’
‘’ஓகே நான் உள்ளே கிளம்பரேன், நீயே கதவை பூட்டிக்க” என்று சொல்லிவிட்டு கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.
’என்னது, இவன் என்கூட படுக்கறதா?’
‘ஆகாஷ், இது சரியில்லை. நீங்க வேற ரூமில் போய் படுத்துக்கோங்க?’
‘முடியாது, நீ வேணும்னா வேற ரூமில் போய் படுத்துக்கோ’
இவனை…..அய்யோ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா ஏதாவது யோசிச்சிருக்கலாம். இப்ப என்ன பண்றது?
‘நிலா, உடம்பையும் மனசையும் அலட்டிக்காமல் வந்து படு’
’டேய் உன்னாலத்தான் நான் இந்த நிலைமையில் இருக்கேன், இதுல கரிசனம் வேற’
அத்தை படுக்கிற பாய் எங்க இருக்கு என்று தேடிப் பார்த்தாள், கண்ணில் படவேயில்லை.
போர்வையை எடுத்து தரையில் விரித்து படுத்துக் கொண்டாள்.
கீழே படுத்ததினாள் உறக்கம் வராமல் விடியற் காலையிலேயே எழுந்து கொண்டாள்.
கட்டிலில் அவனைக் காணவில்லை, எனக்கு முன்னாடியே எழுந்திட்டானா?
குளித்து முடித்து சமயளறைக்குச் சென்றாள், அங்கு ரதி காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தார்.
என்ன அத்தை, இவ்வளவு சீக்கிரமா டிபன் ரெடி பண்ணீட்டிங்க.
அகி லீவு முடிஞ்சிடுச்சாம்மா, இன்னையில் இருந்து வேலைக்கு போனுமாம்.
‘ஓ!’ என்று திரும்பியவள். அச்சச்சோ, இன்னைக்கு நானும்தான் ஜாயின் பண்ணனும், மறந்துட்டேனே.
‘அத்தை, நானும் ரெண்டு நாள் தான் லீவு எடுத்திருந்தேன், இன்னைக்கு ஜாயின் பண்ணனும், மறந்துட்டேன்.
‘உனக்கு உடம்பு சரியாகட்டும் நிலா, அடுத்த வாரத்திலிருந்து வேலைக்குப் போயேன்’
‘இல்லை, அத்தை வீட்டில் இருந்தா போர் அடிக்கும்’
‘நில்லு நான் அகி கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடறேன்’
உடற்பயிற்சி முடிந்து அங்கு வந்த ஆகாஷிடம் ‘அகி, நிலாவும் இன்னைக்கு வேலைக்குப் போகனும்னு சொல்றா, அடுத்த வாரம் ஜாயின் பண்ண சொல்லுடா’
‘நிலா, உள்ளே வா கொஞ்சம் பேசனும்’ என்று தங்களது அறைக்குச் சென்றான்.
’ரூமுக்கு போடா, அவன் போய் நேரமாகுது’
எதுவும் பேசாமல் நிலா அறைக்குச் சென்றாள்
‘நிலா, இனிமேல் நீ வேலைக்குப் போக வேண்டாம்’
‘ஏன்’
‘காரணம் இப்ப சொல்ல முடியாது, ஆனால் போக வேண்டாம்’.
‘காரணம் எதுவானாலும் நான் வேலைக்குப் போவேன். கோவிலில் வைத்து நீங்க சொன்னது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு, இந்த கல்யாணத்தை நான் சீரியஸா எடுத்துக்க மாட்டேன். அப்படி பார்த்தா நம்ம ரெண்டு பேரும் அடுத்தவங்க விஷயத்தில் தலையிடாமல் இருக்கிறதுதான் பெட்டர்.’ எப்படியும் கொஞ்ச நாளில் அவங்க அவங்க வழியைப் பார்த்திட்டு போயிடுவோம், அப்ப புதுசா ஒரு வேலையை தேடிக்க முடியாது. சோ நான் இங்க இருக்கிற வரைக்கும், என்னோட விஷயத்தில் நீங்களோ, உங்க விஷயத்தில் நானோ தலையிட வேண்டாம்’
‘நிலா’
‘அப்புறம் ஒரு ரெக்வெஸ்ட், ஆபிஸில் கல்யாணத்தைப் பத்தி நான் ஏதும் சொல்லலை, ஒருவேளை ஆபிஸில் நாம சந்திக்க நேர்ந்தால் தெரிந்த மாதிரி எதுவும் காட்டிக்க வேண்டாம்.’
அவன் ஏதும் பேசாமல் அறையை விட்டு சென்றுவிட்டான்.
சிறிது நேரம் தரையில் அமர்ந்து அழுதவள், குளித்து முடித்து வேலைக்கு தயார் ஆகி சமயளறைக்குச் சென்றாள்.
‘என்ன நிலா, கிளம்பியாச்சா? சாப்பிட்டு போ. உனக்கு மட்டும் மத்தியத்துக்கு டேபிள் மேல எடுத்து வெச்சிருக்கேன். அகி வேண்டாம்னு சொல்லிட்டான்,’
‘ஆட்டோவிற்கு சொல்லியிருக்கான், நாளையிலிருந்து வண்டியில் போயிடலாம்’
அவள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது ஆட்டோ வந்து நின்றது. பள்ளிக்கு குழந்தையை அனுப்புவது போல் ரதி நிலாவை அனுப்பி வைத்தாள்.
எவ்வளவு நல்லவங்க, எல்லாவரையும் போல தனக்கும் உண்மையாக திருமணம் நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். நமக்கு குடுப்பினை இல்லை போல. யாரிடமும் திருமணத்தைப் பற்றி சொல்லாதது நல்லதா போச்சு என்று எண்ணினாள்.
கம்பெனிக்கு வந்திறங்கியவள், எப்போதும் போல் வேலையில் மூழ்கினாள்.
‘ஹே நிலா, வாட் எ சர்ப்ரைஸ், எப்போ கல்யாணம் ஆச்சு? என்று பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாலதி கேட்டவுடன் தூக்கி வாரிப்போட்டது.
‘வாட்?’
’என்ன நான் குடுக்க வேண்டிய அதிர்ச்சியை நீ தர. வகிட்டில் குங்குமம், கழுத்தில் புதிய மஞ்சல் கயிறு, கல்யாணம் ஆனவங்கதான் இதெல்லாம் வெச்சுப்பாங்க, உங்க வழக்கம் எப்படி?’
அச்சச்சோ, நாமளே காட்டி கொடுத்திட்டோமே.
‘அது வந்து’
‘என்ன மேன், லவ் மேரேஜா, வீட்டில் தெரிஞ்சு போச்சா?’
லவ் மேரேஜ், அது ஒன்னுதான் குறைச்சல் என்று மனதில் எண்ணியவள், பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
‘ஹே கூல் டியர், இதெல்லாம் இப்போ சகஜம், எனிவே கன்கிராட்ஸ். ஆனாலும் நம்பவே முடியலை இந்த பூனையும் பால் குடிக்குமான்னு’
‘தேங்க்ஸ்’
’கண்டிப்பா ட்ரீட் வேணும், நிலா’
‘ஷுயர்’
‘ஹஸ்பெண்ட் என்ன செய்கிறார்? எப்படி சந்திச்சீங்க?’
அவன் சொன்ன மாதிரி வேலைக்கு வராமலே இருந்திருக்கலாம். வேற எங்காவது வேலை தேடியிருக்கலாம், இப்போ ஒவ்வொருத்தரா கேட்க ஆரம்பிப்பாங்களே.
‘என்ன ட்ரீம்ஸா? சரி சரி மீதியை கேண்டினில் பேசலாம்’
அன்று முழுவதும் அனைவருக்கும் பதில் சொல்லியே நிலாவிற்கு நேரம் சென்றது. ஷீலாவைத் தவிர அவள் கூடுதலாக யாரிடமும் பேசியதில்லை என்பதால், யாரும் கூடுதலாக விவரங்களை கேட்கவில்லை. அவர்களைப் பொருத்தவரை, காதல் திருமணம் வீட்டாருக்கு தெரிந்ததால், சிம்பிளாக கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அடுத்து எல்லாரும் கேட்டது ‘ட்ரீட்’. அவ்வளவுதான் மற்றபடி யாருக்கும் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லை நேரமும் இல்லை.
தன் மனதை திறக்க வழி தெரியாமல் திண்டாடினாள்.
மாலை அதே ஆட்டோ அவளுக்காக காத்திருந்தது, அதில் ஏறி வீடு வந்து சேர்ந்தவளை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டார் ரதி.
நிலாவிற்கு ரதியின் அன்பே போதுமானதாக இருந்தது. தாயைப் போல பார்த்துக் கொண்டார்.
‘மாமா எங்கே அத்தை?’
‘அகி கூட ஹாஸ்பிட்டல் போயிருக்காருமா’
‘என்ன ஆச்சு அத்தை’
‘கால் கட்டு மாற்றத்தான், அவர் எழுந்து நடந்திட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும். எல்லா பிரச்சினைக்கும் ஒரு விடிவு காலம் வரும்’
‘என்ன பிரச்சினை அத்தை’
‘நீ டயர்டா இருப்ப, போய் துணி மாத்திட்டு வாடா, டீ கலந்து வைக்கிறேன்’
நிலா ஏதும் பேசாமல் அறைக்குச் சென்றாள்.
இரவு உணவை முடித்துவிட்டு அமர்ந்திருந்தவளை சென்று படுக்குமாறு வற்புறுத்தினார்.
‘அகி வந்தா நான் பார்த்துக்கிறேன் நிலா, நாளைக்கு வேலைக்குப் போகனும் நீ போய் படுத்துக்கோ. இவங்க ரெண்டு பேரும் வெளியே போனால் சீக்கிரமா வந்ததா சரித்திரமே இல்லை
அதுவும் சரிதான் என்று நினைத்தவள், அறைக்குச் சென்று தூங்கிவிட்டாள்.
நடு இரவில் ஏதேதோ கனவு வந்து பயந்தவள் ‘ஆகாஷ்’ என்ற அலறலுடன் விழித்தாள். அவளால் எழ முடியவில்லை, உடல் பாரமாக இருந்தது. என்னவென்று பார்த்தவள், பதறிவிட்டாள்.
இவன் இங்கே எப்படி? எவ்வளவு தைரியம்?
‘ஆகாஷ், ஆகாஷ் கையை எடுங்க’
அவன் அசைந்த பாடில்லை. ‘ஆகாஷ் என்று அவன் கண்ணத்தில் தட்டினாள்’
‘வாட் மேன்’ என்று தூக்கத்திலே பதிலளித்தவன் அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான்.
அதன்பிறகுதான் நிலாவிற்கு மூச்சே வந்தது. எவ்வளவு தைரியம், என்னோட பெர்மிஷன் இல்லாமல் என் பக்கத்தில் படுத்திருக்கிறான். நாளைக்கே இதுக்கு ஒரு முடிவெடுக்கனும், ஒன்னு நான் இல்லை அவன் இந்த ரூமில் இருக்கனும் என்று முடிவெடுத்தவள், தரையில் போர்வையை விரித்து படுத்துக் கொண்டாள்.
காலையில் கண் விழித்தவள், ஆகாஷைத் தேடினாள். அவன் நேரமே வேலைக்குச் சென்றுவிட்டான் என்று ரதி கூறினார். வேலைக்கு கிளம்பியவள் வாசலில் அவளது வண்டியைக் கண்டதும் சந்தோஷப்பட்டாள்.
‘செல்லக்குட்டி’ என்று அதை கட்டிக்கொண்டாள்.
மாமனார், மாமியாரிடம் சொல்லிவிட்டு தனது வண்டியில் வேலைக்குச் சென்றாள்.
மாலையில் வீடு திரும்பியவள் எப்போதும் போல் ரதிக்கு உதவி செய்து கொண்டிருந்தாள்.
‘நான் துணைக்கு வரனுமா நிலா?’
‘ஏன் அத்தை?’
‘ஓ தனியா படுத்துப்பியா? ஏதும் வேணும்னா சொல்லுடா நான் பக்கத்து ரூமில் தான் இருப்பேன்’
‘தனியாவா? ஓ சார் வேறு அறைக்கு மாறியாச்சா? என்ன சொல்லியிருப்பான், நம்மகிட்ட ஏதும் சொல்லலையே’ என்று யோசனையில் இருந்தாள்.
கவலை படாதே நிலா, ஒரு வாரம்தான். ஆகாஷ் வந்திடுவான். மாமாதான் போயிட்டு இருந்தார், இப்போ அகி போக வேண்டியதாயிடுச்சு. மதியம் வந்து துணி எடுத்திட்டு சொல்லிட்டு போனான், அண்ணா சொல்லிட்டா மறுபேச்சே இல்லை. அதுதான் அவனால போகாம இருக்க முடியலை.
;எந்த அண்ணா? அத்தை’
’ஜெகே அண்ணா’
‘ஓ! ஜெகே சாரா’
‘ஆமாம் டா, இளங்கோ போக வேண்டியது அவனுக்கு இங்க வேலை இருக்கிறதால அண்ணா போக வேண்டியதாயிருச்சு’
மீண்டும் முழித்தாள்.
‘இளங்கோ, உங்க கம்பெனி சீஈஓ’
‘ஓ’
’இன்றைக்கு ஒரு முடிவு எடுக்கலாம்னு நினைச்சா, ஆள் எஸ்கேப் ஆகிட்டானே’, சரி ஒன் வீக் அப்புறம் பேசிக்கலாம்.
அவன் ஒரு வாரம் இருக்கப்போவதில்லை என்ற நினைப்பே அவளை வாட்டியது. அவளின் தவிப்பு ரதிக்கு புரிந்தது. அவளின் மனதை மாற்ற எண்ணி, வேலையில் இருந்து வந்தவுடன் ரதி மருமகளை கோவில், தோட்டம் என்று அழைத்துச் சென்றார். வெளியில் சாதாரணமாக இருப்பதைப் போல் காட்டிக் கொள்பவள் அறைக்குள் வந்ததும் பித்து பிடித்தவள் போல் வானத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பாள். எவ்வளவு கொழுப்பு, போகிறேன்னு ஒரு வார்த்தை சொன்னானா பாரு, போய் இவ்வளவு நாள் ஆச்சு என்ன ஏதுன்னு கூப்பிட்டானா பாரு. ஒரு மனுஷியா கூட மதிக்கலை. இவர்களின் ஜன்னல் வழி பக்கத்து பங்களாவும் கண்ணுக்குத் தெரியும். இங்குள்ள பங்களாவிலிருந்து யாரோ அங்கு செய்கையில் பேசுவதும், அங்கிருந்து ஒரு பெண்மணி அதே போல் செய்கையில் பதில் அளிப்பதும் நிலாவின் கண்ணில் பட்டது.
அந்த வாரம் சனிக்கிழமையன்று சரஸ்வதி மகளைப் பார்க்க வந்திருந்தார்.
நிலா அவரிடம் சரியாக முகம் கொடுத்து பேசவில்லை, தன்னை மருத்துவமனையில் அநாதை போல் விட்டுவிட்டு சென்றவர்தானே. என் மனதை புரிந்து கொள்ள முயற்சி செய்யாதவரிடம் என்ன பேச வேண்டியிருக்கிறது. மகளின் செயலை கண்டு கொள்ளாதவர், ரதியிடம் மகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டுச் சென்றார். நிலாவிற்கு தெரியாது சரஸ்வதி தினமும் இரண்டுமுறை ரதியை அழைத்து நிலாவைப் பற்றி விசாரிப்பார் என்பது.
அன்றிரவு உணவு முடிந்து அறைக்குச் செல்ல நிலா முற்படுகையில் ‘அதி வந்தா என்னை கூப்பிடு நிலா, நான் சும்மாதான் படுத்திருப்பேன்’
இன்னைக்கு வரானா..’சரி அத்தை’ என்று சொல்லிவிட்டு அறைக்குச் சென்றாள்.
அவன் வருகிறான் என்றதும் அவளுள் ஏதோ மின்சாரம் பாய்ந்தது. உறக்கம் வராமல் ஜன்னலின் வழியே வானத்தைப் பார்த்தாள். நட்சத்திரங்கள் அலங்கரித்த அந்த வானம் இன்று மிகவும் அழகாகத் தெரிந்தது. மொட்டை மாடிக்குச் சென்று பார்க்கலாம் என்று படிகளில் ஏறினாள். மொட்டை மாடியிலிருந்து அந்த அகன்று விரிந்த பங்களாவும் அதைச் சேர்ந்த வீடுகளும் தோட்டமும் நன்றாகத் தெரிந்தது. எவ்வளவு ஆடம்பரம், படங்களில் தான் இத்தகைய கட்டிடங்களை நிலா பார்த்திருக்கிறாள். மாடியிலிருந்த திட்டில் அமர்ந்து வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தாள். எத்தனை நேரம் அங்கிருந்தாளோ, திடீரென்று கீழே வெளிச்சம் கூடியது போல் தோன்றவே எட்டி கீழே பார்த்தாள். பெரிய கேட்டிலிருந்து கார் ஒன்று இவர்கள் வீட்டை கடந்து சென்றது. ஒருவேளை ஆகாஷ் வந்து விட்டானோ, ஹ்ம்ம் வரட்டும் என்கிட்ட சொல்லாம போனதானே, வந்து வெளியிலேயே நில்லு. பத்து நிமிஷம் கழிச்சுதான் கதவை திறப்பேன் என்று அங்கேயே அமர்ந்திருந்தாள்.

பதினைந்து நிமிடம் கழிந்தும் எந்த சத்தமும் இல்லை ’என்ன ஆளைக் காணோம்’ என்று நினைக்கையில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. பத்து நிமிடம் இல்லை, பத்து நொடிக்குள் கீழே ஓடி வந்தவள் கதவைத் திறந்துவிட்டாள்.
அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் ‘மெதுவா வந்திருக்கலாம் இல்லை ஏன் இப்படி மூச்சு வாங்க ஓடி வந்த?’
‘என்ன ஓடி வந்தேனா..ச்ச’
‘அது ..வந்து’
‘ரிலாக்ஸ், எதுவும் பேச வேண்டாம். கமான் ஃப்ர்ஸ்ட் உட்காரு’
பேசாமல் சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். உள்ளே சென்று டம்ளரில் நீரை எடுத்து வந்து அவளுக்கு குடிக்க கொடுத்தான்.
அவள் கண்களில் கண்ணீர் தேங்கியிருந்தது, நிமிர்ந்து பார்க்காமல் அதை வாங்கி குடித்தவள் எழுந்து கதவைப் பூட்டி விட்டு மாடிக்குச் சென்றாள்.\
எதுவும் பேசாமல் அவள் பின்னே வந்தவன் குளியளறைக்குச் சென்று குளித்துவிட்டு உடை மாற்றி வந்தான். நிலா ஜன்னலின் வழியே அந்த வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அங்க யாராவது வடை சுடுறாங்களா? என்று அவள் பின்னாலிருந்து குரல் கேட்டதும் அவளது உடல் சிலிர்த்தது.
அவள் கண்களில் நீர் மட்டும் வழிந்து கொண்டேயிருந்தது. வேகமாக கண்களை துடைத்தவள், பேசாமல் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவளுக்கு வழி விட்டவன், அவள் என்ன செய்ய போகிறாள் என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கட்டிலில் அமர்ந்து கை விரல்களை மடக்குவதும் விரிப்பதுமாக இருந்தாள்.
அவள் முன் வந்து நின்றவன். ‘எனக்கு எதாவது தர ஐடியா இருக்கா இல்லையா?’
இவனுக்கு நான் என்ன தருவது என்று யோசித்தவள் ஏதோ தோன்ற முகம் சிவந்தாள்.

’நிலா’
அவனை நிமிர்ந்து பார்க்காமலே ‘ம்’ என்றாள்
‘பசிக்குது, எதாவது கிடைக்குமா?’
அச்சச்சோ, மறந்தே போயிட்டேன் என்று அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
‘ஏய் என்னாச்சு நிலா? உடம்பு சரியில்லையா? ஏன் கண்ணு சிவந்திருக்கு? ஜலதோஷமா?’
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘ஓகே ஓகே, டேக் ரெஸ்ட், நான் பார்த்துக்கிறேன்’ என்று கீழே சென்றுவிட்டான்.
அவன் சென்றதும் அவன் பின்னே ஓடிச் சென்றவள். அவன் அங்கு அடுப்பை பற்ற வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அவனருகே சென்று அவன் கையிலிருந்த தோசைக் கல்லை வாங்கி அடுப்பில் வைத்துவிட்டு ’சாரி, லேட் நைட் ஆனாதால நீங்க சாப்பிட்டு வந்திருப்பீங்கன்னு நினைச்சிட்டேன்’
’இட்ஸ் ஓகே, நான் பார்த்துக்கறேன். யு கோ அண்ட் டேக் ரெஸ்ட்’
‘எனக்கு உடம்புக்கு ஒன்னுமில்லை, சின்ன தலைவலிதான். தூங்குனா சரியாயிடும்’
பேசிக்கொண்டே மாவை கலக்கி ஊற்றினாள்.
”ஓகே, நீ தோசை சுடு, நான் டீ போடறேன். என் டீயை குடித்தால் தலைவலி பறந்திடும்”.
ஆமாம், தலைவலியே உன்னாலதான் என்று மனதில் நினைத்தவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘நிலா, தோசை தீயிது பார்’
’அச்சச்சோ’
தோசை எத்தனைமுறை ஊற்றியும் அவளால் முழுதாக சுட்டு எடுக்க முடியவில்லை.
அவன் அருகிலுள்ள திட்டில் அமர்ந்து இவளையேதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
மூன்று முறை முயற்சி செய்தும் வராததால், பாவமாக ஆகாஷைப் பார்த்தாள்.
‘என்ன என்பது போல் புருவத்தை உயர்த்தினான்’
‘கண்களால் தோசைக் கல்லை காட்டினாள். அவன் தோள்களை குலுக்கி இரண்டு கைகளையும் விரித்தான்’
‘ப்ளீஸ்’ என்பது போல் கண்களைச் சுருக்கி கெஞ்சினாள்.
சத்தம் வராமல் அழாகாக சிரித்தவன், அவளருகில் வந்து இடது கையால் அவள் தோளை வளைத்து பிடித்து வலது கை விரல்களை துப்பாக்கியைப் போல் மடித்து பிடித்து அவள் தலையின் வலப்புறமாக வைத்து காதருகே குனிந்தவன் ‘உண்மையை சொல்லு உனக்கு தோசை சுட வருமா? வராதா?’
சற்றும் எதிர்பாராத அவனின் இந்த செயலால் விக்கித்து நின்றவள் என்ன செய்வது என்று முழித்தாள்.
’கொலை பசியில் இருந்த எனக்கு ஒழுங்கா தோசை சுட்டுத்தர முடியாததால் உன்னை சுடலாம்னு இருக்கேன், எப்படி வசதி?’
‘சா..ரி..’
இப்போது அவளை தன் புறமாக திருப்பி நிறுத்தியவன். ‘கூல் நிலா, போகப்போக கத்துக்கலாம், அதுக்கு ஏன் இப்படி பதட்டப்படற. நீ பேசாம இங்கே உட்காரு என்று அவளை தூக்கி அவன் அமர்ந்திருந்த இடத்தில் இருத்தியவன், எதுவும் பேசாமல் தோசை ஊற்றினான். பின்னர் டீ போட்டு அவளுக்கு கொடுத்தான். இட்லி பொடியை எண்ணெய்யில் குழைத்து இரண்டு தோசையை அவளிடம் நீட்டினான்.
‘இல்லை நீங்க சாப்பிடுங்க’
‘உனக்கும் சேர்த்துதான் தோசை சுட்டேன், சாப்பிட்டு எப்படியிருக்குன்னு சொல்லு’
எதுவும் பேசாமல் சாப்பிட்டாள்.
இருவரும் உண்டு முடித்துவிட்டு, பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு அறைக்குச் சென்றனர்.
‘ஆகாஷ்’
‘நிலா’ என்று இருவரும் ஒரே சமயத்தில் அழைத்துக் கொண்டனர்.

‘சொல்லு நிலா’
‘இல்லை நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க’
‘சாரி, அம்மா நம்மை பார்த்துக்கிட்டு இருந்தாங்க கீழே, அதுதான் நான்…..உன்னை…. அப்படி நடந்துக்க வேண்டியிருந்தது’
நிலாவிற்கு தலை சுற்றுவது போல் இருந்தது. தன்னிடம் ஏன் சொல்லாமல் சென்றான், இவ்வளவு நாட்களாக ஏன் அவளை அழைத்து நலம் விசாரிக்கவில்லை என்றெல்லாம் கேட்க வேண்டும் என்று தான் நினைத்து ஆகாஷை அழைத்தாள். ஆனால் அன்னை பார்த்ததால்தான் அவ்வாறு நடக்க வேண்டியிருந்தது என்றதும் தன்னை யாரோ தாக்கியது போல் உணர்ந்தாள்.
அது உண்மையில்லையா? நடிப்பா? எனக்கு என்னாயிற்று, நான் எப்படி அது நடிப்பு என்பதை உணர மறந்தேன்.

“நீ சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு நிலா, என்னைப்போல ஒரு டிரைவரை ஒருநாளும் கல்யாணம் பண்ணிக்க விரும்பமாட்டன்னு. ஹாஸ்பிட்டல்ல உன் அம்மா நடந்துகிட்ட விதத்திலிருந்து உன் விருப்பம் இல்லாமல் நடந்த கல்யாணம்னு புரிஞ்சுகிட்டேன். என்னைப் போல் நீயும் இந்த சிக்கலில் மாட்டிகிட்டு முழிக்கிற. கவலைப்படாதே, கூடிய சீக்கிரம் இதற்கு ஒரு முடிவு கட்டுறேன். நீ என்ன சொல்ல வந்த?”
‘அது……வந்து…. தலைவலிக்குது..லைட் ஆப் செய்யவான்னு கேட்க வந்தேன்”
‘சாரி, மறந்திட்டேன்’
விளக்குகளை அணைத்துவிட்டு படுத்துக்கொண்டனர். தங்களுக்கு பிடித்தவர்கள்தான் வாழ்க்கை துணையாக அமைந்தனர், ஆனால் என்ன செய்வது? சூழ்நிலைகள் சிலநேரம் எதிரியாக அமைந்துவிடுகிறது.
காலையில் தாமதமாக எழுந்தவன் கீழே சென்று அமர்ந்து கொண்டான்.
‘எழுந்திட்டியா அகி, நேற்று எப்போ வந்த’
ப்பா உலக மகா நடிப்புடா. எல்லா அம்மாவும் இதில் மட்டும் ஒற்றுமையா இருப்பாங்க போல என்று மனதில் நினைத்துக் கொண்டவன்.
‘அப்பா எங்க மா?’
’அப்பாவும் நிலாவும் வாக்கிங் போயிருக்காங்க’
‘வாட்’
‘ஆமாம் ஆகாஷ், நிலா பழையது போல இல்லை, நீ இல்லாதப்போ அப்பாகிட்ட ஒட்டிகிட்டா, தினமும் காலையில் வாக்கிங் கூட்டிகிட்டு போறா, வாக்கிங் ஸ்டிக் வாங்கிட்டு வந்தா, முதல் நாள் கொஞ்சம் கஷ்டப்பட்டார், ஆனால் இப்போ கொஞ்சம் பரவாயில்லை. நம்ம தான் அவருக்கு முடியுமோ முடியாதோன்னு வீல் சேரில் வெளியில் கூட்டிகிட்டு போனோம்.’
‘ஆனால் அம்மா, அவர் வலியை வெளியில் சொல்லமாட்டார்.’
‘அகி, அவரைப் பற்றி எனக்குத் தெரியும். என்னிடம் எதையும் மறைக்க மாட்டார், நீ கவலைப் படாதே. அவர் சீக்கிரமா நடக்க தொடங்கிட்டார்னா இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கும்’
ரதி பேசி முடிப்பதற்கும் நிலா அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.
மாமனாரிடம் பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தவள், ஆகாஷைப் பார்த்ததும் சமயளறைக்குள் புகுந்து கொண்டாள்.
வேலைகளை முடித்து அறைக்குச் சென்றவள், ஆகாஷ் மடிக்கணிணியில் வேலை செய்வதைப் பார்த்துவிட்டு யோசனையாக சென்று துணிகளை மடிக்கத் தொடங்கினாள்.
‘உன்னால முடியாததை நீ செய்ய வேண்டாம் நிலா’ என்று மடிக்கணிணியைப் பார்த்துக் கொண்டே பேசினான்.
துணி மடிப்பதை நிறுத்திவிட்டு ஆகாஷைப் பார்த்தாள்.
பதில் ஏதும் வராததால் நிலாவை நிமிர்ந்து பார்த்தவன். அப்பாவை வாக்கிங் கூட்டிகிட்டு போகிறதைச் சொன்னேன். எப்படியும் சில நாளில் இதையெல்லாம் நிறுத்த வேண்டியிருக்கும். ‘டோண்ட் கிவ் தெம் ஃபால்ஸ் ஹோப்’
அவன் முன் வந்து நின்றவள் “நம்ம ரிலேஷன் வேணும்னா பொய்யா இருக்கலாம், ஆனால் என் அன்பு உண்மை. அத்தை மாமாகிட்ட நான் காட்டுற பாசம் உண்மை. அப்பாங்கற உறவு என் வாழ்க்கையில் இருந்தா லைப் எப்படியிருக்கும்னு இதுவரைக்கும் நான் அனுபவிச்சது இல்லை. ஆனால் அதை எனக்கு இப்ப உணர முடியது. அப்பா அம்மா நான் மட்டும் வாழ்ந்தால் எப்படியிருக்கும்னு இந்த ஒரு வாரம் நான் அனுபவித்தேன். தேங்ஸ் டீ யூ’ என்று அழுத்தமாக அவனை பார்த்துவிட்டு வெளியே சென்று விட்டாள்.
’என்ன சொல்ல நினைக்கிற, நான் வராமல் இருந்திருக்கலாம்னு சொல்றாளா, இல்லை’
கீழே சிரிப்பொலி கேட்டது. யார் வந்திருக்கா? எல்லாரும் ஏன் சிரிக்கிறாங்க?
கீழே சென்று பார்த்தான். தந்தையும் தாயும் எதிரெதிரே அமர்ந்து கேரம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். நிலா மாமனாருக்கு குறிப்புகளை கொடுத்துக் கொண்டிருந்தாள். ஆகாஷைக் கண்டது ரதி தன்னருகில் வந்து அமருமாறு செய்கை செய்தார்.
அவர் அருகில் வந்து அமர்ந்தவன், அவர் தோளில் சாய்ந்து கொண்டு உறங்குவது போல் பாவனை செய்தான்.
”டயர்டா இருக்கா அகி”
‘ம்’
‘போய் தூங்குப்பா, ஏன் எழுந்து வந்த?’
‘மடியில் படுத்துக்கவா?’ என்று தாயின் மடியில் படுத்துக் கொண்டான்.
”என்னடா, உனக்குத்தான் உன் பொண்டாட்டி இருக்காயில்ல, ஏன் என் பொண்டாட்டிய கஷ்டப்படுத்துற?’
‘ஏங்க வாயை வெச்சுகிட்டு சும்மாவே இருக்க மாட்டீங்களா?’
’விடுங்கம்மா, அவருக்கு ஏதோ வயித்தெரிச்சல்’ என்று கண்களை மூடிக்கொண்டான்.
ஒரு நாள் இவர்களையெல்லாம் பிரிந்து செல்ல வேண்டும் என்பதை நினைத்து நிலாவிற்கு சங்கடமாக இருந்தது. எதுவும் பேசாமல் சமயலறைக்குள் சென்று வேலை செய்வது போல் பாவனை செய்தாள். அவள் கண்களில் குளம் கட்டியது. தனக்கு மட்டும் ஏன் எல்லாரையும் போல் தாய் தந்தையோடு வாழும் யோகம் இல்லை. குறைந்தது திருமணத்திற்கு பிறகாவது அப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்று ஏங்கியவளுக்கு அது காணல் நீராக அமைந்தது. பெருமூச்சு விட்டுவிட்டு திரும்பியவள் அங்கு ஆகாஷ் நிற்பதைக் கண்டு ஒரு நிமிடம் பயந்துவிட்டாள்.
‘ஏன் என் முகத்தைப் பார்த்தா பயமா இருக்கா?’

----
‘இல்லை…இல்லை’
‘ஹ ஹ ஹா என்று அழகாக சிரித்தவனை கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருங்தாள்.
‘என்ன பார்வை பலமா இருக்கு?’
’ஏதாவது சொல்லனுமா உங்களுக்கு’
‘எக்ஸேக்ட்லி, வெளியில் எங்காவது போகலாமா?’
’டயர்டா இருக்குன்னு சொன்னீங்களே’
‘ஆமா, பட் வெளியே போயிட்டு வந்தா கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு தோணுது’
‘ஓகே போகலாம்’
’தேங்க்ஸ், ரெடியாயிட்டு வா’
‘இப்போவே வா’
‘ஆமாம்’
இருவரும் கிளம்பி பெற்றோரிடம் விடைபெற்றுச் சென்றனர்.
எங்கு செல்கிறோம் என்று நிலாவும் கேட்கவில்லை, ஆகாஷும் சொல்லவில்லை.
அன்று போல் அவளது ஸ்கூட்டியில்தான் சென்றனர். நிலாவிற்கு அன்று நடந்தது நினைவிற்கு வந்தது, அந்த நினைவுகள் தந்த சுகத்தில் கண்களை மூடி அமர்ந்திருந்தாள். திடீரென்று மிக அருகில் ஹாரண் சத்தம் கேட்கவும், வண்டி சற்று தடுமாறவும் பயத்தில் கண்களைத் திறந்தவள், பிடிப்பிற்காக ‘ஆகாஷ்’ என்று கத்திக் கொண்டு அவனை பின்னிலிருந்து அணைத்துக் கொண்டாள்.
வண்டியை ஓரமாக நிறுத்தியவன், அமர்ந்தவாரே திரும்பி நிலாவிடம் ‘ஆர் யு ஓகே?’ என்றான்.
கண்களை திறந்தவள் ‘ஐ ஆம் ஓகே, சாரி’ என்று அவன் மீதிருந்த தனது கைகளை எடுத்துக் கொண்டாள்.
வண்டியில் அமர்ந்து கொண்டே யாருக்கோ அழைத்தவன் ‘டேய், யாருன்னு கண்டுபிடிச்சியா இல்லையா?’
‘---’
‘ஹவ் லாங்?’
‘---’
‘முடியாதுன்னா சொல்லிடு’
’---’
‘டென் டேஸ், நோ மோர் எக்ஸ்டென்ஷன், ஐ வில் டெக்ஸ்ட் தெயர் வெகிக்கில் நம்பர்’
‘—’
யாருக்கோ குறுஞ்செய்தி கொடுத்துவிட்டு வண்டியை துவக்கினான், சிறிது நேர பயணத்திற்கு பிறகு அவர்கள் கோவலம் கடற்கரையை அடைந்தனர்.
அவன் யாரிடம் பேசினான், ஏதோ வில்லங்கம் போல் இருக்கிறதே. என்ன பிரச்சினை, ஒரே மர்மமாவே இருக்கு. அவன் கிட்ட கேட்கலாம்னா, அவன் சொல்லுவானா, இல்லை உன் வேலையை பார்த்திட்டு போன்னு சொல்லுவானா என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டே இருந்தவள் வண்டி நின்றதும் திருதிரு வென்று விழித்தாள். அந்த இடத்தைப் பார்த்ததும் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. திருமணத்திற்கு முன்பு ஒரே ஒரு நாள் அவனுடன் அங்கு வந்தது ஞாபகத்திற்கு வந்தது.
‘மேடம், வண்டியிலிருந்து இறங்க ஐடியா இருக்கா இல்லையா?’
‘சாரி’ என்று இறங்கினாள். அவன் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தான், அவன் பின்னே எதுவும் பேசாமல் அவளும் நடந்தாள்.
சிறிது நேரம் கடற்கரையில் நின்றவன், பின் மண்டபத்தில் சென்று அமர்ந்து கொண்டான். அவன் பின்னே சென்றவள் அன்று போல் எதிரே உள்ள தூணில் அமர்ந்து கொண்டாள். அவன் கண்களை மூடி அமர்ந்து கொண்டான், நிலாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தவள், சென்ற முறை அவனுடன் வந்த போது நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள். அன்றும் ஏதோ மனது சரியில்லை என்றுதான் வந்திருந்ததை போல் பேசினான். இன்றும் அது போல் ஏதாவது இருக்குமோ? என்று நினைத்தவள் என்னவென்று விசாரிக்கலாம் என்று எழுந்து அவனருகில் சென்று அமர்ந்தாள்.
‘சொல்லு நிலா’ என்று கண்களை மூடிக்கொண்டே கேட்டான்.
பாருடா, கண்ணைத் திறக்காமலேயே அய்யா கண்டு பிடிச்சிட்டாரே என்று மனதில் நினைத்துக்கொண்டாள்.
‘ஆகாஷ், ஏதும் பிரச்சினையா?’
‘ஏன் அப்படி கேட்கற?’
’இல்லை, லாஸ்ட் டைம்.. என்று சற்றென்று நிறுத்திக்கொண்டாள்’
‘சொல்லு’
‘ஒன்னுமில்லை, ஏதோ பிரச்சினைன்னு தோணிச்சு, அதான் கேட்டேன்’
‘நத்திங், வீட்டில் இருந்தா நடிக்கனும், இங்கே கொஞ்சம் பிரியா இருக்கலாம் அதான்’
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg
எபி-12

’ஏன் நடிக்கனும்?’

கண்களைத் திறந்தவன் அவளையே பார்த்தான். என்ன கேட்டேன் இவன் என்னை இப்படி பார்க்கிறான்.

‘ஷீலா மாதிரி பணக்காரனா பார்த்து கல்யாணம் செய்து லைஃப் செட்டில் ஆகணும் அது தானே உன்னுடைய ஆசை, குறிக்கோள், வாட்டெவர். யு ஆர் லக்கி நம்ம கல்யாணம் ரகசியமா நடந்தது சோ யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. கல்யாணம் செய்திட்டோம்னு ஒன்னா வாழனும்னு எந்த அவசியமும் இல்லை, யு கேன் லீவ் வென்னெவர் யு வாண்ட், நம்ம கல்யாணம் இன்னும் பதிவு செய்யவில்லை சோ சட்ட ரீதியாக எந்த பிராப்ளமும் வராது. காட் இட்’

’என்ன உளறீங்க’

அவன் எதுவும் பேசவில்லை கண்களை மூடிக்கொண்டான்.

இவன் என்ன நினைச்சுகிட்டு இருக்கான். எதுக்கு இப்போ ஷீலாவை குறிப்பிட்டான், ச்ச இவன் கிட்ட பேச வந்த என்னை முதலில் செறுப்பால் அடிக்கனும் என்று எழுந்தவளை ‘இங்கேயே உட்கார், இப்போ எங்கேயும் போக வேண்டாம்’

இவன் யார் என்னை போக வேண்டாம்னு சொல்றதுக்கு என்று நினைத்தவள். கடற்கரையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அவள் பின்னே வேகமாக சென்றவன் பின்னிலிருந்து அவள் கைகளை பிடித்து தன்னை நோக்கி இழுத்தான், இதை எதிர்பார்க்காதவள் சிறிது தடுமாறினாள்.

விழாமல் அவளை தாங்கிப்பிடித்தவன், அவளை நேராக நிறுத்திவிட்டு ‘சொன்னால் கேட்கமாட்டியா’

அவள் கண்களில் நீர் தேங்கியிருந்ததாள் தலை குனிந்தே நின்றாள்.

‘பதில் சொல்’

அவள் நிமிரவே இல்லை.

’என்னைப் பார் நிலா’ என்று அவள் முகத்தை நிமிர்த்தியவன். அவள் கண்களில் கண்ணீர் தேங்கியிருப்பதைப் பார்த்துவிட்டு பாக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்து அவள் கண்களை துடைத்துவிட்டான். காற்று அடிக்குது கண்ணில் மண் விழும்னுதான் போகாதேன்னு சொன்னேன். நான் சொன்னா நீ எங்க கேட்க போகிற, எதுக்கெடுத்தாலும் அவசரம், வா சன் செட் பார்க்கலாம்’ என்று கூறிவிட்டு அவன் கடலை நோக்கி நடந்தான். தோளில் இருந்த கைப்பையை எடுத்து அவனை நோக்கி வீசினாள், அது சரியாக அவன் புறமுதுகில் சென்று தாக்கியது.

‘காட்’ என்று திரும்பிப் பார்த்தான்.

நிலா அங்கு ஆக்ரோஷமாக நின்று கொண்டிருந்தாள். குனிந்து கைப்பையை எடுத்தவன் நிலாவின் முன் சென்று நின்று கொண்டான்.

அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் எதுவும் பேசாமல் கைப்பையை அவள் தோளில் போட்டு விட்டான். மீண்டும் அதை எடுத்து சரமாறியாக அவனை அடித்தாள்.

‘ஏய் நிலா வலிக்குது, ப்ளீஸ்எதுக்குன்னு சொல்லிட்டு அடி’ என்று அவன் அடிகளை தடுத்துக் கொண்டிருந்தான். நிலா நிறுத்தவே இல்லை, அவள் கையிலிருந்து கைப்பையை பிடுங்கி வாங்கியவன் ‘ஆர் யு மேட்?, ஏண்டி அடிக்கிற?’

அகாஷின் அருகில் சென்று அவன் சட்டையை கொத்தாக பிடித்தவள், ”என்னைப் பார்த்தா எல்லாருக்கும் எப்படி தெரியுது”

‘நிலா ரிலாக்ஸ்’

‘இல்லை சொல்லுங்க எனக்கு தெரியனும், என்னைப் பார்த்தா எப்படி தெரியுது”

‘-’

‘என் கண்ணை பார்த்தா மண் விழுந்த மாதிரியா இருக்கு, மண் விழுந்தா எப்படி இருக்கும்னு தெரியுமா?’ என்று கேட்டவள் சற்றும் யோசிக்காமல் சிறிது மண்ணை எடுத்து அவன் முகத்தில் எறிந்தாள்.

‘ஏய் நிலா, வாட் ஆர் யு டூயிங், ஷிட், திஸ் இஸ் டிஸ்கஸ்டிங்’ என்று கண்களை கசக்கியவாரே மண்டியிட்டு அமர்ந்து கொண்டான்.

அவன் அமர்ந்ததும் தன்நிலைக்கு வந்தவள், ‘ஆகாஷ், ஐ ஆம் ரியலி சாரி. ப்ளீஸ் மன்னிச்சிடுங்க’ என்று அவளும் அவன் எதிரே அமர்ந்து கொண்டாள்.

அவன் பார்க்க முடியாமல் கண்களை கசக்கிக் கொண்டிருந்தான். துப்பட்டாவை எடுத்து அவன் கண்களில் ஒப்பியவள், அவனால் பார்க்க முடிகிறதா என்று அவன் கண்களை திறப்பதற்கு முயற்ச்சித்தாள். அவன் கண்களைத் திறக்காமல் அப்படியே அமந்திருந்தான்.

‘எழுந்து வாங்க ஆகாஷ், முகத்தை கழுவலாம்’ என்று அவன் கைகளைப் பிடித்து இழுத்தாள். அவன் அசையவேயில்லை.

‘ப்ளீஸ்’

கண்களை திறக்காமல் அமர்ந்திருந்தவன், ”எதுக்கு என்னை அடித்த முதலில் அதைச் சொல்” என்று அவள் பிடியை விடாமல் பிடித்திருந்தான்.

‘நான் ஏதோ யோசிக்காமல் செய்திட்டேன், ப்ளீஸ் எழுந்து வாங்க மத்ததை பிறகு பேசிக்கலாம்’

‘இல்லை, நீ சொல்லாமல் நான் அசைவதாய் இல்லை’

‘ப்ளீஸ்’

‘முடியாது’

‘என் கண்ணில் மண் விழவில்லை’

‘ஐ நோ’

’நான் அழுதேன்’

‘ஐ நோ’

‘நீங்க மண் விழுந்ததுன்னு சொன்னதும் கோபம் வந்திருச்சு’

‘சோ’

‘ஐ ஆம் சாரி ஆகாஷ்’

‘எனக்கு கண் தெரியாமல் போனா நீ சந்தோஷப் படுவியா?’

‘ஆகாஷ்’

‘பதில் சொல்லு’

‘அப்படியெல்லாம் பேசாதீங்க ப்ளீஸ்’

‘இல்லை கண்ணுக்கே தெரியாமல் போனால் நீ சந்தோஷப் படுவியா?’

‘ஆகாஷ், நோ, மேலே எதுவும் பேசாதீங்க ப்ளீஸ்’ என்று அவனை கட்டிக் கொண்டாள்.

‘ஐ ஆம் ரியலி சாரி, இனி நான் இப்படி நடந்துக்க மாட்டேன். இது மாதிரி எதுவும் பேசாதீங்க ப்ளீஸ்’ என்று தேம்பி தேம்பி அழுதாள்.

அவன் எதுவும் பேசவில்லை. அழுது அழுது ஒரு கட்டத்தில் ஓய்ந்தவள். அவனிடம் எந்த அசைவும் இல்லை என்றதும், நிமிர்ந்து அவனைப் பார்த்தாள், நிலா தான் அவனை கட்டிப்பிடித்திருந்தாள் அவன் கைகள் இவளை அணைக்கவில்லை என்று உணர்ந்தவள். அவனை விட்டு விலகி அமர்ந்து கொண்டாள்.

‘சாரி, எழுந்து வாங்க’ என்று அவன் கைகளை பிடித்து எழுவதற்கு உதவி செய்தாள்.

அவன் எதுவும் பேசாமல் அவள் கைகளை பிடித்து எழுந்தான்.

‘ஐ ஆம் ஒகே’ என்று கண்களை திறந்தான். அவள் வாயடைத்துப் போய்விட்டாள். அவன் கண்கள் சாதாரணமாக இருந்தது. நிலா குனிந்து மண்ணை எடுத்ததும் தன் மேல் எறிவாள் அன்று ஊகித்தவன் கண்களை மூடிக்கொண்டான். கோபத்தில் இருந்த நிலாவும் அதை கவனிக்காமல் அவன் மேல் மண்ணை வீசினாள்.

‘எப்படி’

‘என்னஎப்படி’

‘நான்..வந்து..’

’நீ வந்து’

‘விளையாடாதீங்க ஆகாஷ், எப்படி’

அவள் எதிரே சென்று நின்று கொண்டவன், ‘ட்ரை ஒன்ஸ் எகெயின், ஐ வில் ஷோ’

அவள் பொய் கோபம் காட்டிக்கொண்டு அவனைக் கடந்து சென்றாள்.

அவள் பின்னே சென்று நிலாவை பின்னாலிலிருந்து அணைத்துக் கொண்டான்.

அவள் அசையாமல் நின்று கொண்டாள்.

‘என்னடி, மறுபடியும் செய்யச்சொன்னேன், நீ கேட்காத மாதிரி போற’

‘என்ன ‘டி’ யா?’

‘ஆமாம் ‘டி’’

‘சரி டா’ என்று அவன் கைகளை விலக்கியவள். எதுவும் பேசாமல் முன்னேறினாள்.

ஓடி அவள் முன்னே சென்று நின்றவன் ‘ஒன்ஸ் மோர்’

‘என்னது?’

”டா’ சொல்லு”

“முடியாது” என்று அவள் மேலும் நடந்தாள்

‘ப்ளீஸ் டி” என்று அவனும் அவளைப் பார்த்தவாரே நடந்தான்.

‘முடியாது டா” என்று அவனை தள்ளிவிட்டுவிட்டு ஓடினாள்.

அவள் பின்னே ஓடியவன் அவளை பின்னிலிருந்து கட்டிக்கொண்டான்.

”கையை எடுங்க ஆகாஷ் இது பப்ளிக் ப்ளேஸ்’

‘ஓ! பிரைவேட் ப்ளேஸ்னா ஓகே வா?’

அவள் கைப்பையை எடுத்து அடிக்க முயன்றாள், அதனை லாவகமாக பிடித்தவன் அதனை அவள் கையிலிருந்து பரித்து தனது தோளில் போட்டுக் கொண்டான்.

‘அது லேடீஸ் பேக்’

‘பேக் இல்லை ஆயுதம்னு சொல்லு, சும்மாவா பேக் விலையெல்லாம் கூடுது, மல்டி பர்பஸ் பேக்’

‘—’

‘ஸீ, எவ்ளோ அழகா இருக்கு’

‘எது’

‘சன்செட்’

‘’ஹும், ஸீன்னு சொன்னதும் கடலைத்தான் சொல்றீங்களோன்னு நினைத்தேன்’ என்று சூரியனைப் பார்த்தாள்.

அது அழகாக தூரத்தில் இவர்களைப் பிரிய மனமில்லாமல் கடலுக்கடியில் செல்வதைப் போல் உணர்ந்தாள் அன்றும் ஆகாஷை விட்டு பிரிய மனமில்லாமல் அவள் சென்றது அவளுக்கு நினைவிற்கு வந்தது. அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால் திரும்பி ஆகாஷைப் பார்த்தாள். அவன் நிலாவைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். ‘என்ன’ என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.

அன்று போல் அவளை தன்னை நோக்கி நிறுத்தியவன் ‘சன் அண்ட் மூன் இன் ஃப்ரண்ட் ஆப் மீ, குட் காம்பினேஷன்’

அவள் இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்.

‘அப்புறம்’

‘ஸ்கய் அண்ட் மூன், இஸ் த பெஸ்ட் காம்பினேஷன்’

அவளையே ஆழமாக பார்த்தவன் ‘எப்படி’ என்றான்.

’எப்பவும் சேர்ந்தே இருக்கும்’

‘இஸ் இட்?’

‘யெஸ்’

‘எப்படி?’

‘தெரியாது?’ என்று அவள் பாவமாக அவனைப் பார்த்தாள். ’இப்படியா’ என்று அவளை அணைத்துக்கொண்டான்.

அவள் எதுவும் பேசாமல் அவன் கைக்குள் அடக்கமாக புகுந்து கொண்டாள். அவள் மனது லேசானது, இப்படியே இருந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. சூழ்நிலைகள் சில நேரங்களில் நமக்கு சாதகமாகவும் மாறும். இருவரும் எத்தனை நேரம் அப்படியே நின்றார்களோ ஆகாஷின் அலைப்பேசி அலறவும் நிலா தன்நிலைக்கு வந்தாள். அவளை அணைத்தவாரே அழைப்பை ஏற்றவன் ‘வந்திடறோம் மா, சரி.. இல்லை எதுவாயிருந்தாலும் ஓகே’

‘அவளுக்கும் எதுவாயிருந்தாலும் ஓகே’

‘-’

‘என் கூடத்தான் இருக்கா’

‘-’

‘சரிம்மா, நான் ஒன்னும் சின்னக் குழந்தையில்லை’

’-’

‘ஓகே’ என்று அழைப்பை துண்டித்தான்.

நிலா நெளிந்து கொண்டே ஆகாஷைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘என்ன’ என்பது போல் புருவத்தை உயர்த்தினான்.

‘அத்தையா?’

ஆம் என்பது போல் தலை அசைத்தான்.

‘போலாமா?’

‘போகனுமா?’

அவன் நெஞ்சில் கையை வைத்து குத்தியவள் திரும்பி நடக்கத் தொடங்கினாள்.

‘நடந்தே போறதா ஐடியாவா?’

’இல்லை’

‘அப்புறம் எப்படி போவீங்க மேடம்?’

அவனிடம் திரும்பி நடந்தவள் அவன் கைகளை பிடித்து ‘இப்படித்தான்’ என்று அவனை இழுத்தாள்.

அவன் அசையவே இல்லை.

‘வாங்க ஆகாஷ், இருட்டிகிட்டு வருது’

‘-’

‘வரீங்களா, இல்லையா?’

‘கீ தந்தாத்தான் போக முடியும்’

’உங்க கிட்ட தான் இருக்கு நீங்க தானே வண்டியை பார்க் பண்ணீங்க’

‘என்னோட கீ’

‘என்ன உளறீங்க’

அவன் கண்ணத்தைக் காட்டி ”இங்க கீ தந்தால் தான் நகருவேன்”

அவளுக்கு வெட்கப்பட்டு குனிந்து கொண்டாள்.

‘ப்ளீஸ் லேட்டாகுது வாங்க’

‘முடியாது’

’எல்லாரும் பார்க்கிறாங்க, ப்ளீஸ்’



‘அப்போ யாரும் பார்க்கலைன்னா ஓகே வா?’

அவள் பதில் ஏதும் பேசாமல் காலால் மணலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

‘சொல்லு’

‘ம்’’ என்று குனிந்தவாரே பதிலளித்தாள்.

(தொடரும்)

”சரி வா போகலாம்’ என்று அவளது கை விரல்களுடன் தன் விரல்களையும் கோர்த்துக் கொண்டு இருவரும் வண்டி இருக்கும் இடம் வரை நடந்தனர்.

கோவலம் நிலாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. வரும் மனநிலையில் திரும்பி போகும் போது இருப்பதில்லை.

இருவரும் வீடு வந்து சேர்ந்தனர், கதவைத் திறந்த ரதி புலம்ப ஆரம்பித்தார்.

”ஏன் அகி இருட்டறதுக்குள்ள வீடு வந்து சேரனும்னு எத்தனை முறை சொல்றது. காலமே கெட்டு கிடக்கு, நீங்க வீடு வந்து சேர்ர வரைக்கும் என் உயிர் கையிலேயே இருக்காது”

‘அம்மா பசிக்குது, ப்ளீஸ் ஏதாவது தாங்க” என்று வாங்கி வந்த பழங்களை அவர் கைகளில் திணித்தான்.

“மன்னிச்சிடு அகி, போய் உட்கார் தோசை எடுத்து வரேன். நிலா நீயும் வந்து உட்காருடா” என்று அவன் தோளில் இருந்த கைப்பையை பார்த்தவர் “என்னடா இதை நீ போட்டிருக்க?” என்று சிரித்தார்.

“அதுக்கு பெரிய சரித்திரமே இருக்கு, சாப்பிட்டு சொல்றேன்” என்று அதனைக் கழட்டி நிலாவிடம் கொடுத்தான்.

நிலா ஆகாஷை இடித்தாள்.

”இவன் ஒருத்தன் எப்பவும் இப்படித்தான், நீயும் வந்து உட்காரு நிலா”

“இல்லை அத்தை நான் துணி மாத்திட்டு வந்துடறேன்” என்று அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

அவள் மாடி ஏறும் போது “நிலா, அந்த கீ பத்திரம்” என்று ”கீ” க்கு அழுத்தம் கொடுத்தான்.

எந்த கீ யை சொல்கிறான் என்று யோசித்தவள், ஞாபகம் வந்ததும் முகம் சிவந்துவிட்டது.

அறைக்கு வந்து கட்டிலில் அமர்ந்தவள் ‘இவனுக்கு விவஸ்தையே இல்லை, அத்தை முன்னாடி வெச்சு எப்படி பேசுறான் பாரு’ என்று நினைத்து தனக்குத்தானே சிரித்தவள் ஏதோ தோன்ற முகம் வாடி விட்டது. ஒருவேளை அத்தை முன்னாடி நடிக்கிறானோ, ச்ச எது உண்மை எது நடிப்புன்னு தெரியலையே என்று யோசித்தவாறு துணி மாற்றிக்கொண்டு கீழே இறங்கிச் சென்றாள்.



‘வந்து உட்காருடா” என்று ஆகாஷ் அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டார்.

அவள் அதில் அமராமல் எதிர்புறமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

ஆகாஷ் யோசனையாக நிலாவைப் பார்த்தான். அவள் ஏதும் பேசாமல் உண்ணத் தொடங்கினாள்.

ஏதோ சரியில்லை என்று உணர்ந்த ரதி நலம் விசாரித்தார். “ஏண்டா நிலா டயர்டா இருக்கா?” என்று அவள் தலையை கோதினார்.

”இல்லை அத்தை, லைட்டா தலைவலிக்குது”

அதைக்கேட்ட ஆகாஷின் முகம் தெளிந்தது. “அத்தை ஒரு கஷாயம் போட்டு தரேன், ஒரே டம்ளர் தான் குடிச்சுப் பார், தலைவலி குற்றாளம் தாண்டி போயிடும்” என்று கூறிவிட்டு சமையலறைக்குச் சென்றுவிட்டார்.

ஆகாஷ் உண்டுவிட்டு எதுவும் பேசாமல் எழுந்து அறைக்குச் சென்றுவிட்டான்.

உண்டுவிட்டு ரதிக்கு உதவ வந்த நிலாவை உறங்க அனுப்பிவிட்டு ரதி சமயலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

மனக் குழப்பத்தில் இருந்த நிலா எதுவும் பேசாமல் மாடி ஏறினாள் ஆகாஷைப் பார்க்க மனமில்லாததால் மாடிக்குச் சென்று ஆகாயத்தைப் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். கண்சிமிட்டிக் கொண்டிருந்த நட்சத்திரங்களும், பகுதி கடித்து துப்பிய நிலாவும் பரந்து விரிந்த வானில் அழகாகக் காட்சி அளித்தது. சிறிது நேரம் அங்கேயே நின்றவள், ரதி கஷாயம் தருவதாகச் சொன்னது நினைவிற்கு வந்தது. மாடியிலிருந்து நேரே கீழிறங்கிச் சென்றவள், ரதி கண்ணாடிக் கப்பில் கஷாயத்தை அடைத்து வைத்திருந்ததைப் பார்த்துவிட்டு “எவ்வளவு அன்பான மாமியார் எனக்கு கிடைத்திருக்காங்க” என்று நெகிழ்ந்துவிட்டாள். கஷாயத்தை மூக்கருகில் கொண்டு சென்றதும் அதன் வாசம் வித்தியாசமாக இருந்தது. எப்படித்தான் இதைக் குடிக்கிறார்களோ. அம்மா தர கஷாயமும் இதுவும் ரொம்ப வித்தியாசமா இருக்கு ”வுவ்வே” என்று அதனை மடக்கென்று குடித்துவிட்டாள்.

தொண்டையெல்லாம் எரிவது போல் இருந்தது. மேஜை மீது நீர் இல்லாததால் சமயலறைக்குச் சென்றாள் அங்கு ஆகாஷ் குளிர் சாதனப் பெட்டியைத் திறந்து ஏதோ செய்து கொண்டிருந்தான். இவன் இங்கு தான் இருக்கிறானா என்று நினைத்தவள் அவனை கண்டு கொள்ளாமல் நீர் எடுத்துக் குடித்தாள். இவள் உள்ளே நுழைந்ததும் இவ இங்க என்ன செய்கிறா என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் நிலா தண்ணீர் குடித்துவிட்டு வெளியேறும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். என்ன ஒன்னும் பேசாமல் போறா தலைவலி இன்னும் சரியாகலையா, ரூமிற்கும் வரவில்லை. நல்லாத்தானே இருந்தா. ம்ம் ரூமிற்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று ஐஸ் கட்டைகளை எடுத்துக் கொண்டு மேஜைக்கு வந்தான். அங்கு கப்பில் வைத்திருந்த முதுபானத்தைக் காணவில்லை. கப்பை எடுத்து மேலும் கீழும் பார்த்தான். அதற்குள் அப்பா குடித்துவிட்டு போயிட்டாரா, ஐஸ் போட்டு குடுக்கலாம்னு நினைச்சேன் அதற்குள் அவசரம் என்று சமயலறைக்குத் திரும்பியவன் மாடிப்படிகளின் அருகே ‘தொப்’ என்று சத்தம் கேட்டதும் திரும்பிப் பார்த்தான். நிலாதான் முதல் படியில் விழுந்திருந்தாள்.

“நிலா” என்று அவளருகே சென்றவன் “என்னாச்சு நிலா?” என்று அவளை எழுவதற்கு உதவினான்.

அவன் கைகளை தட்டி விட்டவள் எதுவும் பேசாமல் கம்பிகளைப் பிடித்து எழுந்து காலை முதல் படியில் வைக்காமல் தரையிலே மீண்டும் அழுத்தி வைத்தாள் மீண்டும் விழப்போனவளை ஆகாஷ் தாங்கி பிடித்துக் கொண்டான்.

”ஏய் நிலா, என்னாச்சு?’

‘_’

“கேட்கிறது காதில் விழுதா இல்லையா?”

எதுவும் பேசாமல் முதல் படியில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.


என்ன நடக்கிறது என்று புரியாமல் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் அருகில் அமர்ந்து “ஏய் நிலா என்னாச்சுடி, ஏதாவது சொன்னாத்தானே உதவ முடியும்”

கண்களில் நீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ஆகாஷ் எனக்கு என்னென்னமோ பண்ணுது, இன்னும் கொஞ்ச நேரத்தில் எனக்கு கண் காணாமல் போயிடும்னு நினைக்கிறேன். என்னை சுற்றி எல்லாமே சுத்துது, வாந்தி வர மாதிரி இருக்கு ஆனால் வர மாட்டேங்குது. அத்தை வைத்திருந்த கஷாயத்தைத்தான் குடிச்சேன், அதில் ஏதும் கலக்கிட்டாங்களா? உங்களுக்கெல்லாம் என்னை பிடிக்கலைன்னா பரவாயில்லை நான் எங்கேயாவது போயிடறேன், உங்களை தொந்திரவு செய்யமாட்டேன். என்னை விட்டா என் அம்மாவுக்கு வேற யாருமில்லை. என்னை எப்படியாவது காப்பாத்துங்க ப்ளீஸ்” என்று அவன் கைகளை பிடித்துக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ சொல்லி அழுதாள். அவனுக்கு புரிந்தது மேஜை மேல் வைத்திருந்த மதுவை இவள் தான் குடித்திருக்கிறாள், அவள் பேசும் போது அதன் அறிகுறியாக வாசமும் வந்தது.

“நிலா லிஸன், உனக்கு ஒன்னுமில்லை. நான் இருக்கேன்னில்ல பயப்படாத. கொஞ்சம் அழுவதை நிறுத்திரியா” என்று அவள் கண்ணீரை துடைத்துவிட்டான்.

அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“என்னாச்சு நிலா?, யாரை தேடுற? அம்மாவை கூப்பிடனுமா?”

“யாராவது இருந்தா நீங்க நடிப்பீங்க தானே, இப்போ யாராவது இருக்காங்களான்னு பார்த்தேன்”

நிலாவின் தலையில் குட்டியவன் “இந்த சின்ன தலையில் என்னவெல்லாம் யோசிக்கிற” என்று அவளை அணைத்துக் கொண்டான்.

இவர்களின் சத்தம் கேட்டு வெளியே வந்த ரதி “என்னாச்சு அகி, அழற சத்தம் கேட்டது” என்று இருவரையும் மாறி மாறி பார்த்தார்.

நிலா கண்களை மூடிக்கொண்டு ஏதோ புலம்பிக் கொண்டிருந்தாள், ஆகாஷ் என்ன சொல்வதென்று தெரியாமல் அவரைப் பார்த்தான்.

“நிலாவிற்கு என்னாச்சு அகி? ஏன் ஒரு மாதிரி இருக்கா?” என்று கேட்டவர் காய்ச்சல் அடிக்கிறதா என்று அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தார்,

”அம்மா குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்திட்டு வரீங்களா”

வேகமாகச்சென்று நீரை எடுத்து வந்தவர் ஆகாஷிடம் நீட்டினார். “என்னன்னு சொல்லு அகி”

“நிலா இந்த தண்ணியை குடி ப்ளீஸ்”

அவளுக்கும் அது தேவையாக இருக்க உடனே வாங்கி மடக்கென்று குடித்தாள். அவளின் முதுகை தடவி விட்டவன், ஒன்னுமில்லை நிலா கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும் என்று அவளுக்கு சமாதானம் சொன்னான்.

“அகி என்ன பிரச்சினைன்னு சொல்லுவியா மாட்டியா?”

“அது வந்து அம்மா….அப்பாவிற்கு குடிக்க மேஜை மேல வெச்சிருந்ததை நீங்க நிலாவிற்காக வைத்த கஷாயம்னு எடுத்து குடிச்சிருக்கா, அதுதான்” என்று தாயைப் பார்க்க முடியாமல் குனிந்து கொண்டான்.

“என்ன காரியம் பண்ணின அகி, எத்தனை முறை சொல்லியிருக்கேன் அவர் கேட்டார்னு அதை குடுக்காதேன்னு, இப்ப பார்த்தியா? நானும் ஒரு கிருக்கி அவளுக்கு கஷாயம் போட்டுத் தரேன்னு சொல்லிட்டு மறந்து போயி தூங்கிட்டேன்”

”விடுங்கம்மா கொஞ்ச நேரத்தில் சரியாயிடும், முதல் தடவை குடிச்சிருப்பா போல அதுதான் பயந்திட்டா”

“இரு அகி நான் மோர் கலக்கி எடுத்து வரேன்” என்று விரைவாக மோரை கொண்டுவந்து நிலாவிற்கு குடிக்கக் கொடுத்தார்.

அவரை நிமிர்ந்து பார்த்த நிலா “அத்தை என்னை கொன்னுடாதீங்க ப்ளீஸ்” என்று கையெடுத்து கும்பிட்டாள்.

ரதி விக்கித்துப் போனார் “என்னடா’” என்று ஆகாஷைப் பார்த்து கண்களில் கேட்டவர் கண்ணிலிருந்து நீர் கொட்டத் தொடங்கியது.

“அம்மா ப்ளீஸ், அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கா, எதையும் மனசில் போட்டு குழப்பிக்காதீங்க. நான் பார்த்துக்கிறேன் நீங்க உள்ளே போங்க” என்று மோர் டம்ளரை வாங்கி நிலாவை குடிக்க வைத்தான்.

ரதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் நிலாவைப் பாவமாக பார்த்துக் கொண்டிருந்தார், தன்னிடம் அவள் ஏன் அப்படிப் பேசினாள், தன் மகளைப் போலத்தானே பார்த்துக் கொண்டேன் என்று நினைத்தவர் புடவை முந்தானையை எடுத்து வாயைப் பொத்தி தேம்பித் தேம்பி அழுதார்.

“அம்மா, ப்ளீஸ் அவ தான் ஏதோ புலம்புறான்னா நீங்களுமா?”



“நிலா ரூமிற்கு போகலாம்” என்று எழுவதற்கு உதவி செய்தான். மெதுவாக எழுந்து நின்றவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவன் மீதே வாந்தி எடுத்தாள்.

“ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ஒன்னுமில்லை நிலா” என்று அவள் முதுகை தடவிக்கொடுத்தவனை வேதனையாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ரதி.

“அகி நான் பார்த்துக்கிறேன் நீ நிலாவைக் கொண்டு போய் ரெண்டு மக் தண்ணீரை தலையில் ஊற்று அவளுக்கு கொஞ்சம் தணியும், நான் வரணுமா அகி?”



“வேண்டாம் மா நான் பார்த்துக்கிறேன்”

”எதுன்னாலும் கூப்பிடு அகி, நான் முழிச்சுதான் இருப்பேன்”

“அம்மா, தயவு செய்து தூங்குங்க, நான் பார்த்துக்கிறேன், பயப்படாதீங்க” என்று கூறியவன் அவளை நகர்த்துவது சிரமமாக இருக்க, இது வேலைக்காகாது என்று கைகளில் ஏந்திக்கொண்டு படிகளில் ஏறினான்.

நேராக குளியலறைக்கு கொண்டு சென்றவன் குழாயைத் திறந்து அதன் அடியில் நிலாவை நிறுத்தினான்.

“நிலா, என்னைப் பார்” என்று அவள் கண்ணத்தில் தட்டினான் அவள் ஏதோ பினாத்திக்கொண்டே இருந்தாள்.

“நிலா, ஏண்டீ அப்படியெல்லாம் பேசுன?” என்று அவளை அணைத்துக் கொண்டு தானும் அந்த நீரில் நனைந்தான்.

அவளை சுத்தம் செய்தவன், டவளால் தலை துவட்டி விட்டுவிட்டு அவளை அழைத்து வந்து நாற்காலியில் அமர்ந்தினான்.

தானும் உடைமாற்றி, தனது பனியன் பேண்டையே அவளுக்கும் அணிவித்து கட்டிலில் கிடத்தினான். நிலா மட்டும் நிறுத்தாமல் அழுது கொண்டும் புலம்பிக் கொண்டும் இருந்தாள். நன்றாகத்தானே இருந்தாள், ஏன் அவளுக்கு இப்படி ஒரு எண்ணம் தன் மீதும் ரதி மீதும் என்று யோசித்தவனுக்கு காரணம் ஏதும் புரியவில்லை. எதுவும் வாயைத்திறந்து கேட்காமல் தானாகவே ஏதாவது கற்பனை செய்து கொள்வது என்று அவளை பாவமாக பார்த்தவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்து அவளை அணைத்துக் கொண்டு தூங்கிப் போனான்.

“அம்மா” என்று நிலாவின் அலறல் கேட்டதும் பதறி எழுந்தவன் “என்னாச்சு நிலா?” என்று அவளைப் பார்த்தான்.

வயிற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கும் நிலையிலேயே குனிந்திருந்தவள் “அம்மா பசிக்குது, வயிறு வலிக்குது” என்று புலம்பினாள்.



“வெயிட் பண்ணு நிலா, வந்திடறேன்” என்று கீழே சென்று வாங்கிவந்த பழங்களை எடுத்து வந்தான். அதை உண்டுவிட்டு படுத்துக் கொண்டாள்.

அதே போல் விடியற்காலை மூன்று மணிவரை அவ்வப்போது எழுந்தவள் பசிக்கிறது என்று பழங்களைத் தின்றுவிட்டு தூங்கினாள். ஆகாஷிற்குதான் அப்பாடி என்று இருந்தது. ஆண் நண்பர்கள் குடித்துவிட்டு செய்யும் அலும்புகளைப் பார்த்திருக்கிறான் ஆனால் பெண் குடித்தால் செய்யும் அட்டகாசத்தை அன்றுதான் பார்த்தான்.



தாமதமாக உறங்கியதால் காலை ஒன்பது மணிக்கு விழித்தவன் வேலைக்கு விடுப்பு சொல்லிவிட்டு குளித்து முடித்து கீழே சென்றான். கர்ணன் ஆகாஷைப் பாவமாக பார்த்தார். “என்னப்பா? அப்படி பார்க்கறீங்க” என்று அவர் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.

“என்னை மன்னிச்சிருப்பா” என்று அவர் வருத்தத்துடன் சொன்னார்.

“அப்பா ப்ளீஸ், அம்மா மாதிரி நீங்களும் ஆரம்பிக்காதீங்க” என்று சமயலறையைப் பார்த்தான். ரதி தேநீர் டம்ளருடன் வந்தார்.

“குடி அகி” என்று அவனிடம் டீயை நீட்டியவர் எதுவும் பேசாமல் சமயலறைக்குச் சென்றார்.

டீயை குடித்து முடித்துவிட்டு சமயலறைக்குச் சென்றவன் “அம்மா” என்று அவர் அருகில் சென்று அழைத்தான்.

“சொல்லு அகி” என்று அவன் முகத்தையே பார்க்காமல் பதிலளித்தவரை “அம்மா” என்று தன் புறம் திருப்பியவன் “என்னைப் பாருங்க, நேற்று அவள் சுயநினைவோடு எதுவும் பேசலை, அவ என்ன பேனினான்னு அவளுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவா, எல்லாத்தையும் மறந்திடுங்க மா எனக்காக ப்ளீஸ்”

“அகி” என்று அவனை அணைத்துக் கொண்டு புலம்பினார். ”நான் கனவில் கூட அப்படியெல்லாம் நினைக்கல அகி, நிலாவிற்கு ஏன் அப்படி தோணிச்சு, நான் அவளை என் பெண் மாதிரிதான் பார்த்துக்கிறேன்”

“அவள் ஏதோ குழப்பத்தில் இருக்கா, நான் பார்த்துக்கிறேன் மா, நீங்க அழாதீங்க ப்ளீஸ்”

“-”

“அம்மா, சூடா ஒரு டீ தாங்க என் குடிகார பெண்டாட்டியை எழுப்பனும், என் நிலைமையை பார்த்தீங்களா மா” என்று பாவமாக பார்த்தான்.

ரதிக்கு சிரிப்பு வந்தது “போ அகி, எல்லாம் இவரால் வந்தது’ என்று கணவனை முறைத்தாள்.

ரதியிடம் தேநீரை வாங்கியவன் இனி நிலா என்னவெல்லாம் செய்யப் போகிறாளோ என்று அறைக்குச் சென்றான்.

நிலா அழகுதான் ஆனால் தனது உடையில் இன்னும் அழகாகத் தெரிந்தாள். நிலாவின் அருகில் சென்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு “நிலா” எழுந்து இந்த டீயைக் குடி” என்று தலையைத் கோதியவாரு எழுப்பினான்.

“அம்மா, ப்ளீஸ். டென் மினிட்ஸ்” என்று மறுபுறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.

“நிலா மணி பத்தாயிடுச்சு, வேலைக்குப் போக வேண்டாமா?”

“அச்சச்சோ ஆபிஸிற்கு லேட் ஆயிடுச்சு” என்று அலறிஅடித்துக் கொண்டு எழுந்தவள் தன்முன் ஆகாஷ் டீயுடன் நிற்பதைக் கண்டு குழம்பினாள். கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தாள், அப்போதும் ஆகாஷ் தான் அங்கிருந்தான்.

காலைமடக்கி முட்டியில் தலையை கவிழ்த்தி தலையை பிடித்துக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்.

“வேலைக்கு லீவு சொல்லிட்டேன், பல் தேய்த்துவிட்டு டீயை குடி” என்று ஆகாஷ் சொன்னதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் ஏதும் பேசாமல் குளியலறைக்குள் சென்று புகுந்து கொண்டாள்.

சிறிது நேரம் கழித்து “ஆகாஷ்” என்று அலறினாள். என்னவென்று கதவருகே சென்றவனை கதவைத் திறந்து வெளியில் வந்த நிலா முறைத்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு”

தனது உடையைக் காட்டி “இது என்ன?”

“டீ ஷர்ட்”

“அது தெரியும், யாருடையது? இது எப்படி என் மேல வந்தது?”

”நீ டீயைக் குடி நான் சொல்றேன்” அவள் தோள்களைப் பிடித்து கட்டிலில் அமர்த்த முயற்சித்தவனின் கைகளை தட்டிவிட்டவள், அவளே சென்று அமர்ந்து கொண்டாள்.

டீயை அவளிடம் நீட்டியவன் “குடி” என்று அவளருகில் அமர்ந்தான்.

அவள் நகர்ந்து அமர்ந்து கொண்டாள், தலைவலி காரணமாக தேநீரை வேண்டாம் என்றும் சொல்ல முடியாமல் முழித்தவளின் கையில் டம்ளரைக் கொடுத்து குடிக்குமாறு கண்ணசைத்தான்.

அவள் ஏதும் பேசாமல் டீயைக் குடித்து முடித்தாள். அவள் கையிலிருந்து டம்ளரை வாங்கிக்கொண்டு கீழே செல்வதற்காக கதவருகே சென்றவனை வழிமறித்து நின்றவள்.

“எனக்கு பதில் சொல்லிட்டு போங்க, என்னை என்ன பண்ணீங்க?”

அவனுக்கு சிரிப்பு வந்தது செய்ததெல்லாம் அவள், கேட்கும் கேள்வியைப் பார் என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு அவளைப் பார்த்தான்.

“நீ குளிச்சு ரெடியாகு நிலா மற்றதை அப்புறம் பேசலாம்” என்று நகர முயன்றவனிடம்

“முடியாது, முதலில் என் கேள்விக்கு பதிலை சொல்லுங்க”

“சொல்லிட்டாப் போச்சு” என்று கையிலிருந்த டம்ளரை மேஜை மீது வைத்தவன். கதவை பூட்டிவிட்டு நிலாவை தூக்கிவந்து கட்டிலில் கிடத்தினான். அவன் கைகளில் திமிறியவளை அசைக்க முடியாதவாறு அணைத்துக்கொண்டு அவளைப் பார்த்தவாறு அவனும் படுத்துக்கொண்டான்.

”இப்போ கேளு என்ன உன் சந்தேகம்” என்று ஒரு கையை தன் தலைக்கு தாங்கு கொடுத்தவன் மறு கையால் அவளை அணைத்துக்கொண்டான்.

“என் மேலிருந்து கையை எடுங்க” என்று கைகளை எடுக்க முயன்றவளிடம் “முடியாது, உன் சந்தேகத்தை தீர்த்திட்டுதான் எடுப்பேன்” என்று அவனும் பிடிவாதமாக பதில் சொன்னான்.

அவள் ஏதும் பேசவில்லை. அவனையே இமைக்காமல் பார்த்தாள். அவளைப் பார்ப்பதற்கு பாவமாக இருந்தது.

“நிலா நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலை, ஆனால் நாங்க நினைக்காதது எல்லாம் நடந்தது”

அவனின் இந்த மர்மப் பேச்சில் கண்கள் தெறித்துவிடுவது போல் முழித்தாள்.

அவள் கண்களின் மீது முத்தம் வைத்தவன், நேற்று இரவு நடந்தவற்றை அவளிடம் கூறினான். அதை கேட்க கேட்க நிலாவிற்கு சங்கடமாக இருந்தது, அவன் மார்பில் ஒன்றிக்கொண்டவள் “ஐ ஆம் சாரி ஆகாஷ், ரியலி சாரி, அத்தை முகத்தை எப்படி பார்ப்பேன். அவங்க பெண் போல் என்னைப் பார்த்துக்கிட்டாங்க அவங்களைப் போய் எப்படி அப்படிச் சொன்னேன். ப்ளீஸ் எனக்காக அவங்ககிட்ட பேசுங்க ஆகாஷ்” என்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஆகாஷின் பார்வையில் வித்தியாசத்தை உணர்ந்தவள் அவனை விட்டு விலகி அமர்ந்து கொண்டாள்.

“சரி” என்று மல்லாந்து படுத்துக்கொண்டான்.

’எழுந்து கீழே வாங்க’ என்றவளிடம் “இப்படியேவா வருவ?” என்று கேட்டதும் தான் தன்னுடைய கோலம் நினைவிற்கு வந்தது.

அவள் குளித்து உடை மாற்றி வந்து ஆகாஷை எழுப்பினாள்.

“ஆகாஷ் எழுந்திரிங்க”

முடியாது என்று தலையசைத்தான்.

“ப்ளீஸ்”

“கீ தந்தால் தான் எழுந்திரிப்பேன்” என்று கண்களை மூடிக்கொண்டே பதிலளித்தான்.

“ஆகாஷ், ப்ளீஸ்”

அவன் எதுவும் பேசவில்லை.

அவனருகில் சென்றவள் அவனது நெற்றியில் முத்தமிட்டாள், அவளை வாரி அணைத்துக் கொண்டவன் பதிலுக்கு பல முத்தங்களை பரிசாக அவள் முகமெங்கும் கொடுத்தான்.

அவனது இதழ்கள் தந்த ஈரமுத்தத்தில் தன்னை மறந்து கண்களை மூடிக்கொண்டிருந்தவள் சிறிது நேரம் எந்த அசைவும் இல்லாததால் கண்களை திறந்த நிலா என்னவென்று உணரும் முன் அவளது இதழ்களை சிறையெடுத்தான். நீண்ட நேர யுத்தத்திற்கு பிறகு அவள் சுவாசிக்க திணருவதைக் கண்டவன் சிறிது இடைவேளை கொடுத்தவனை தள்ளிவிட்டுவிட்டு கட்டிலில் இருந்து குதித்து கதவைத் திறந்து கொண்டு கீழே ஓடினாள்.

அவனிடமிருந்து ஓடி கீழே வந்தவள் அங்கு ரதி உணவு மேஜை மீது காய்கறிகளை வெட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தவளுக்கு குற்ற உணர்வு தோன்றியது.

நிலாவைப் பார்த்ததும் எழுந்தவர் “வாடா, எழுந்திட்டியா. டீ குடிச்சியா? இட்லி எடுத்து வைக்கவா?” என்று பரிவுடன் கேட்டார்.

அவர் அருகில் சென்றவள் அவரை கட்டியணைத்துக்கொண்டு “என்னை மன்னிச்சிருங்க அத்தை என்று நிமிர்ந்தவள் நேற்று ஏதாவது நான் உளறியிருந்தா தயவுசெய்து மறந்திடுங்க” என்று அவர் காலில் விழுந்துவிட்டாள்

“நிலா, அப்படியெல்லாம் ஒன்னுமில்லை டா, அய்யோ நீ ஏன் காலில் எல்லாம் விழுற” என்று அவளை எழுப்பிவிட்டார். ”நாங்க தான் உன்னிடம் மன்னிப்பு கேட்கனும்” என்று அவள் கையை பிடித்துக் கொண்டார்.

”அச்சச்சோ அப்பா என்னால இதையெல்லாம் பார்க்க முடியலை” என்று படியிறங்கி வந்தவன் தந்தையின் அருகில் அமர்ந்து கொண்டான்.

“பார்க்க முடியாதுன்னா போடா” என்று மருமகளுக்கு இட்லியை தட்டில் வைத்து சாப்பிடக்கொடுத்தார்.

தந்தையும் மகனும் பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர். நிலா உண்டு முடித்துவிட்டு சமயலறையில் சென்று ரதிக்கு உதவி செய்து கொண்டிருந்தாள். கர்ணன் ஊன்றுகோளின் உதவியுடன் மெதுவாக எழுந்து வெளியில் சென்றார்.

“நிலா அந்த கீ யை பத்திரமா வெச்சிருக்கியா?” என்று கண்ணைச் சிமிட்டியவனை சமயலறையிலிருந்து முறைத்தாள்.

இவர்களின் பார்வை விளையாட்டை கவனித்த ரதி, “நிலா நானும் மாமாவும் கொஞ்சம் நடந்திட்டு காய்கறி வாங்கிட்டு வந்திடுறோம்” என்று வெளியில் சென்றார். ரதி சென்றதும் சமயலறைக்குச் சென்றவன் நிலாவைப் பின்னிலிருந்து அணைத்துக் கொண்டான்.

கையிலிருந்த கரண்டியை வைத்து அவனை அடித்தவள் “கையை எடுங்க?” என்றாள்.

”முடியாது”

“உதை வாங்கப் போறீங்க”

“அதையும் பார்க்கலாம்”

அவள் மெதுவாக அவன் புறம் திரும்பி அவன் காலை மிதித்தாள்.

“அய்யோ அம்மா” என்று வலியெடுப்பதைப் போல நடித்தான். அவள் சிரித்துக் கொண்டே திரும்பி நின்று வேலையை தொடர்ந்தாள்.

அதே சமயம் உள்ளே வந்த ரதி “என்னாச்சு அகி” என்று அவனிடம் விசாரித்தார்.

“அம்மா அடக்கமா ஒரு பெண்ணை எனக்கு கட்டி வைக்கச் சொன்னா, அடிக்கிற பெண்ணை கட்டி வெச்சுட்டீங்களே. ஒரு டீ கேட்டதுக்கு என் முட்டியை அடிச்சு பேத்துட்டா பாருங்க என்று நொண்டி நொண்டி நடந்தான்”

“போ அகி, உனக்கு எப்பவும் விளையாட்டுதான். நான் பணம் எடுக்காமல் போயிட்டேன் டா அதான் வந்தேன்” என்று தன்நிலை விளக்கம் அளித்தார்.

“அம்மா நீங்க இருங்க நான் அவர் கூட போறேன்”

“வேண்டாம் அகி”

’குடுங்கம்மா’ என்று ரதியிடம் இருந்த பையை வாங்கிக் கொண்டு சென்றான்.

அவன் சென்றதும் ரதியும் நிலாவும் பொதுவான விஷயங்களைப் பேசிக்கொண்டு சமையலை முடித்தனர். சிறிது நேரத்தில் கர்ணனும் ஆகாஷும் காய்கறிகளுடன் வீடு வந்து சேர்ந்தனர்.

(தொடரும்)
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg
எபி-13

மத்திய உணவை உண்டுவிட்டு நிலா அறைக்குச் சென்றாள், சிறிது நேரம் தொலைக்காட்சியில் செய்திகளை பார்த்துவிட்டு அறைக்குச் சென்ற ஆகாஷ் ஜன்னலின் அருகே நிலா எம்பி ஏதோ பார்க்க முயற்சிப்பதைக் கண்டு அவள் அருகில் சென்றவன் “அப்படி என்ன பார்க்கறீங்க மேடம்” என்றதும் திடுக்கிட்டு திரும்பியவள் என்ன சொல்வதென்று விழித்தாள்.

“என்ன? என்று கேட்டுக்கொண்டே அவனும் ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்தான் பின்பு நிலாவைப் பார்த்தான். அவள் ‘ஹிஹி’ என்று பல்லைக் காட்டினாள். அவன் ஏதும் பேசாமல் கட்டிலில் திரும்பிச் செல்கையில் ‘ஆகாஷ், தப்பா நினைக்காதீங்க. பலமுறை பார்த்திருக்கிறேன். அந்த பங்களா மாடியிலிருந்தும் இந்த பங்களா மாடியிலிருந்தும் அடிக்கடி செய்கைகள் வழி பேசிக்கிறாங்க. கார் ஏதாவது வந்தா ஓடி ஒளியிராங்க. ரெண்டு வீட்டுக்கும் ஏதாவது சண்டையா? அவங்க வீட்டு ஆண்களுக்கு தெரியாமல் லேடீஸ் மட்டும் பேசிக்கிறாங்களா? போனில் பேசலாமே, வெளியில் போய் பேசிக்கலாமே. ஏன் இப்படி தூரத்தில் இருந்து பேசிக்கனும்? என்று நிருத்தாமல் கேள்வி கேட்டவளை ரசனையாகப் பார்த்தான்.

’அச்சச்சோ இவன் கிட்ட பேசினாலே பிரச்சினை இதில் அடுத்தவங்க விஷயத்தை வேற கேட்டு வெச்சிட்டேனே’ என்று தன் மண்டையிலேயே அடித்துக் கொண்டாள்.

அவள் அருகில் வந்தவன் “எவ்ளோ நாள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள்?, இந்த அக்கரை என் மேல கூட நீ காட்டிலியே நிலா” என்று கையை விரித்தான்.

‘தேவைதான்’ என்று நினைத்துக் கொண்டாள்.

”சரி நீ கேட்கறையேன்னு சொல்றேன்’ என்று நெருங்கி வந்தவன், அவள் காதருகே குனிந்து ‘அடுத்தவங்க விஷயம் நமக்கெதுக்கு” என்று கூறிவிட்டு நகர்ந்து நின்றான்.

அவனின் பதிலில் ஏமாற்றம் அடைந்தவள். அவனின் கையில் சரமாரியாக அடித்தாள்.

அடித்துக்கொண்டிருந்தவளின் கையை அடிக்கவிடாமல் இருக்கமாகப் பிடித்தவன் “வர வர நீ ரொம்ப அராஜகம் பண்ற, அப்புறம் நானும் அதே வழியை கையில் எடுக்க வேண்டியிருக்கும்’ என்று கண்ணடித்தான்.

“கை வலிக்குது, முதலில் கையை விடுங்க’

“முடியாது” என்று அவளை தன்னுடன் சேர்த்து அணைத்தவன். “நீ எதுக்கு அடுத்தவங்க விஷயத்தையெல்லாம் யோசித்து உன் தலையை புண்ணாக்குற?” என்று அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

அவள் ஏதும் பேசவில்லை, அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அவளுக்கே தெரியவில்லை. ஆறுதலுக்காக ஜன்னலின் வெளியே வேடிக்கைப் பார்க்கத் தொடங்கியவளின் கண்ணில் இந்த காட்சி அடிக்கடி தட்டுப்பட்டது. அவளுக்கு பார்க்க பரிதாபமாகவும், ஆவலாகவும் இருந்தது. பணக்காரர்களிடையே சண்டை வரத்தானே செய்யும், ஆண்களுக்கிடையே தொழில் போட்டியாக இருக்கலாம் ஆனால் வீட்டில் இருக்கும் பெண்கள் என்ன செய்வார்கள் என்று தனக்குத்தானே யோசித்துக் கொண்டிருந்தவள் அதன் விடை அறிவதற்காக ஆகாஷிடம் வெளிப்படையாக கேட்டாள். இவன் சொல்வதும் சரிதான், அடுத்தவர் விஷயம் நமக்கெதுக்கு என்று நினைத்தவள் பெருமூச்சுவிட்டாள்.

“என்ன மூச்செல்லாம் பலமா இருக்கு?”

“ஒன்னுமில்லை, நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் அத்தைக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணப் போறேன்”

”அங்க யாரும் இல்லை, ரெண்டு பேரும் தூங்கறாங்க”

“ஓ” என்றவள் என்ன செய்வதென்று யோசித்தாள்.

“இப்போ என்ன செய்வதாய் உத்தேசம்?”

“ஏதாவது புக் படிக்க வேண்டியது தான்”

“ஓகே, போ. அதுக்கு முன்னாடி என்று கூறியவன் அவள் கண்ணத்தில் இதழ் பதித்துவிட்டு இப்போ போ” என்று அவள் தோளில் கையை வைத்து அவளை அங்கிருந்து நகர்த்தினான். அவளும் ஏதும் பேசாமல் மேஜை மீதிருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் பிரித்தாள். அவளை நகர்த்திவிட்டு ஜன்னல் வழியே ஆகாஷ் அந்த பங்களாவை பார்த்துக் கொண்டிருந்தான்.

புத்தகத்தை விரித்தவள் அதில் மனம் ஒன்றாததை உணர்ந்தாள். ‘ச்ச’ என்று நிமிர்ந்தவள் ஜன்னலின் அருகே ஆகாஷ் தன்னைப்போல் அந்த பங்களாவைப் பார்ப்பது போல் தோன்றவே, சத்தமிடாமல் அவன் பின்னே போய் நின்றாள். அடுத்த கனமே பின்னிலிருந்தவளை இழுத்து தனக்கு முன்னே கொண்டு வந்து இருவரும் ஜன்னலின் வெளியே பார்ப்பது போல் நிறுத்தினான்.

“நான் நிக்கிறேன் எப்படி தெரியும்” என்று இடது புறமாகச் சரிந்து அவனைப் பார்த்துக் கேட்டாள். அவள் தோளில் நாடியை வைத்தவன் “பூ எங்கிருக்கும்னு வண்டுக்குத் தெரியாதா, வாவ் பாரு எனக்குள்ளே ஒரு கவிஞன் இருந்திருக்கான். இத்தனை நாள் நான் உணரவேயில்லை” என்று தன் தலையால் அவள் தலையை இடித்தான்.

அவளை அணைத்திருந்த கையில் கிள்ளியவள் ‘சகிக்கலை’ என்றாள்.

“என்னையா இல்லை எனக்குள் இருக்கும் கவிஞனையா?”

தனக்கு ஆகாஷைப் பிடிக்காமல் இருக்குமா என்று மனதில் நினைத்தவள் பதில் ஏதும் சொல்லாமல் அவள் கிள்ளிய இடத்தை தடவிக்கொடுத்தாள்.

“ஐ ஆம் சாரி நிலா”

என்ன நான் சொல்ல வேண்டியதை இவன் சொல்றான் என்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளை தன்னை நோக்கி திருப்பியவன் ”ஐ ஆம் சாரி பார் எவரிதிங்” என்று அவளை இருக அணைத்துக்கொண்டான்.

“எதுக்கு மன்னிப்பு?”

“இன்னொரு நாள் சொல்றேன், என்ன நடந்தாலும் என் கூடவே இருப்பியா?”

“ஆகாஷ், தயவுசெய்து புரிகிற மாதிரி பேசுங்க. ஏற்கனவே என்னை சுற்றி என்ன நடக்குதுன்னே எனக்குப் புரியல இதில் நீங்க வேற மறைமுகமா பேசுனா எப்படி?”

“சொல்றேன், ஆனால் இப்போ இல்லை”

“ம்ப்ச்” என்று சலித்துக் கொண்டவள். அவனிடமிருந்து விலகி நின்றாள். அவன் ஏதோ சொல்லத்துடிப்பது தெரிந்தது, ஆனால் தயங்குகிறான் என்னவாக இருக்கும்.

“என்ன யோசனை பலமா இருக்கு”

“நான் கேட்க வேண்டியதை நீங்க கேட்கறீங்க”

“சரி சரி விடு. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்”

“இப்போ என்ன செய்துகிட்டிருக்கோம்”

“அறிவாளி” என்று அவள் கண்ணங்களைப் பிடித்து இழுத்தான்.

“ஸ்ஸ் ஆ வலிக்குது” என்று அவன் கைகளை தட்டி விட்டாள்.

“-”

“பேச்சை மாத்தாதீங்க”

“சரி விஷயத்திற்கு வரேன். நான் பிஸினெஸ் பண்ணலாம்னு இருக்கேன். உன்னுடைய உதவி வேணும். டீடெயில்ஸ் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கழித்து சொல்றேன்”

“என்ன பிஸினெஸ், ஏன் திடீர்னு?”

“எல்லாம் உனக்காகத்தான், எவ்வளவு நாள் டிரைவரா இருக்கிறது” என்று கூறிவிட்டு அவன் ஜன்னல் வழியே வெளியே பார்க்கத் தொடங்கினான்.

”எனக்காக தொழில் தொடங்குறானா? அதை என் முகம் பார்த்து சொல்லாமல் ஏன் வெளியே பார்க்கிறான். ஏன்? என்று யோசித்தவளுக்கு அன்று ஆகாஷின் கேள்விக்கு தான் கூறிய பதில். ’ஒரு டிரைவரை கல்யாணம் செய்ய மாட்டேன் என்றது, கடற்கரைக்குச் சென்ற போது தன் மனதைக் குறித்து ஆகாஷ் கூறியது என்று ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்ததும் அவளின் முகம் இருண்டது. இத்தனை நாட்கள் தன்னுடன் இருந்தும் தன்னை அவன் புரிந்து கொள்ளவே இல்லையே. ஒரு நாள் சிரிக்க வைத்தாள் மறுநாள் அழ வைக்கிறான்.



அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல்தான் நிலாவின் நிலை. ஆகாஷ் யதார்த்தமாகத் தான் சொன்னான். ஆனால் நிலாதான் பழையதை மனதில் வைத்துக்கொண்டு அவன் பேசுகிறான் என்று நினைத்துக்கொண்டாள். அவளுக்கு தலைவலிப்பது போல் தோன்றியது. எதுவும் பேசாமல் சென்று கட்டிலில் படுத்துக்கொண்டாள். தன்நிலையை முழுவதுமாக எடுத்துக்கூற முடியாததால் வருத்தப்பட்டு வெளியே பார்த்துக்கொண்டிருந்தவன். நிலா எதுவும் பேசாமல் சென்று படுத்துக்கொண்டதும் ‘என்னாச்சு இவளுக்கு ஒன்னும் சொல்லாமல் போய் படுத்துகிட்டா’ என்று சிறிது நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.



ஆகாஷிற்கு அலைபேசியில் அழைப்பு வரவும் அதனை எடுத்துக்கொண்டு அறைக்கு வெளியே சென்றான். உறங்காமல் கண்களை மூடிப் படுத்திருந்தவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. ஒருவேளை கடற்கரையில் கூறீயது போல் சிலநாட்களுக்குப் பிறகு பிரிந்து செல்ல வேண்டுமோ. திருமணத்தை இன்னும் பதிவு செய்யவில்லை, சொந்தங்களை அறிமுகப் படுத்தவில்லை. எந்த சொந்தமும் வந்ததாக இல்லை. அவன் மனதில் என்ன இருக்கிறது என்று எப்படி தெரிந்து கொள்வது? எதுவாக இருந்தாலும் இனி அவன் தன்னை நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பிறகுதான் தன் மனதில் ஆசையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள். தனக்குள்ளேயே அழுது கொண்டிருந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.



மாலை தேநீருடன் வந்து எழுப்பியவனிடம் முகம் குடுக்காமல் பேசினாள். அவனும் எதுவும் கண்டுகொள்ளவில்லை. இரவு உணவின் போதும் அவள் முகம் கொடுக்காமல் கடனே என்று வேலைகளை செய்து கொண்டிருந்தாள்.

வேலைகளை முடித்துவிட்டு அறைக்கு வந்தவள் ஆகாஷ் அங்கு இல்லாததால் நிம்மதியாக உணர்ந்தாள். அவனைப் பார்த்தால் தன் மனம் மாறிவிடும் என்று நினைத்தவள் அவன் முகத்தைப் பார்ப்பதை தவிர்த்தாள். அவன் வரும் முன்னர் உறங்க வேண்டும் என்று நினைத்து படுத்துக்கொண்டாள். அவளது கஷ்ட காலம் தூக்கம் வரெவேயில்லை, புரண்டு புரண்டு படுத்தாள் பலனில்லை. அவன் வரும் முன்னர் மாடிக்குச் சென்றுவிடலாம் அவன் உறங்கிய பிறகு அறைக்கு வரலாம் என்று மாடிக்குச் சென்றாள்.. அவள் எப்போதும் அமர்ந்து வானத்தைப் பார்க்கும் திட்டில் ஆகாஷ் அமர்ந்து கொண்டிருந்தான். இவன் இங்கதான் இருந்தானா, ‘ச்ச’ பேசாமல் ரூமிற்கே போகலாம் என்று திரும்புகையில் “தூக்கம் வரலையா?” என்ற குரல் கேட்டு நின்றுவிட்டாள்.

”வா வந்து உட்கார், ஸ்கை அண்ட் ஃபுல் மூன், இட்ஸ் ப்யூட்டிஃபுல்”



அவளுக்கும் பிடிக்கும் ஆனால் என்ன செய்வது அவன் அங்கு இருக்கிறானே என்று அங்கேயே தேங்கினாள்.

“சரி வா, ஒரு வாக்கிங் போயிட்டு வரலாம்” என்று பதிலை எதிர்பாராமல் நிலாவின் கையை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றான்.

இருவரும் வீட்டிற்கு வெளியே இருந்த சாலை போன்ற பகுதியில் நடக்கத் தொடங்கினர், நிலா வானத்தையே பார்த்துக்கொண்டு நடந்தாள். ஆகாஷ் அவள் கைகளை இருக்கமாக பிடித்திருந்தான். மெலிதாக வீசிய காற்று மனதிற்கு இதமாக இருந்தது. காம்பொண்டிற்குள்ளேயே தார் இட்ட சாலை வழி முழுவதும் இரண்டு பக்கமும் சிறிய தோட்டம், அங்கங்கே தெரு விளக்கு போன்ற அமைப்புகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

இங்கு வந்த பின்னர் இதுபோன்று அவள் இரவில் இறங்கி நடந்ததில்லை. வேலை முடிந்து வந்தவுடன் வீட்டிற்குள் நுழைபவள், பின்னர் காலைதான் வெளியே வருவாள்.. மாடியிலிருந்து பார்க்கும் போது பெரிதாக கவனித்ததில்லை. ஆகாயத்தையும் அதிலுள்ள நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டு அறைக்குச் சென்று விடுவாள்.

“என்ன மனசுக்கு இதமா இருக்கா?’

‘ம்’

“எப்போ தூக்கம் வரலைனாலும் இது மாதிரி ஒரு வாக்கிங் போயிட்டு படுத்தா தூக்கம் வரும், மனசில் அதையும் இதையும் போட்டு குழப்பிக்கொண்டு வீட்டிலேயே இருந்தா தூக்கம் வராது” என்று நடையை நிறுத்தினான். நிலாவும் எதுவும் பேசாமல் நின்றாள்.

“நிலா நான் சொல்வதை கவனமா கேட்டுக்கோ, மறுபடியும் சொல்ல மாட்டேன்’ என்றவனை ஆவலாகப் பார்த்தாள். அவன் தொடர்ந்து பேசினான் “இந்த ஜென்மத்தில் எனக்கு மனைவின்னு ஒருத்தி இருந்தா அது நீ தான் இதில் எந்த மாற்றமும் இல்லை இப்போதும் எப்போதும்” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.

அவனையே இரண்டு நிமிடம் பார்த்தவள் பதிலேதும் சொல்லாமல் வந்த வழியே திரும்பி நடக்கத் தொடங்கினாள். “புரிகிற மாதிரி என்னைக்காவது பேசியிருக்கானா, நானே குழம்பியிருக்கேன்,, வாக்கிங் போகலைன்னு யார் அழுதது. இந்த ஜென்மத்தில் நான் தான் அவன் மனைவியாம்’..இப்போதுதான் அவன் கூறியது அவளுக்குப் புரிந்தது. அப்படியே நின்றவள் திரும்பி ஆகாஷைப் பார்த்தாள். அவன் ‘வா’ என்பது போல் இரண்டு கைகளையும் அவளை நோக்கி நீட்டினான். அவள் ஓடிச்சென்று அவனை அணைத்துக் கொண்டாள்.

“ஏண்டி எதுவும் சொல்லாமல் போன?”

“நிலா எனக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு நேரடியா சொல்ல வேண்டியதுதானே”

”நீ ட்யூப் லைட்னு நான் மறந்தே போயிட்டேன்” என்று அவள் தலையில் குட்டினான்.

‘-”

”சரி வா போகலாம்”

“கொஞ்ச நேரம் கூட நடந்திட்டு வரலாமே, ப்ளீஸ்”

“நாளைக்கு வேலைக்கு போகிற ஐடியா இருக்கா இல்லையா”

“ஆனாலும்”

“ஒரு ஆனாலும் இல்லை, வா போகலாம்”

“அது என்ன எல்லாமே உங்க இஷ்டத்துக்கு பண்றது, எனக்கு கொஞ்ச நேரம் நடக்கனும், நடந்திட்டு தான் வருவேன்”

“சரி நடந்திட்டு வா’ என்று கூறிவிட்டு அவன் வீட்டை நோக்கி நடந்தான்.

அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவள் நடக்க வேண்டும் என்று நினைத்ததே அவனுடன் சேர்ந்து, அவள் தனியாக நடக்க வேண்டும் என்றால் அதற்கு பேசாமல் வீட்டிற்கே போகலாம். இப்போது என்ன செய்வது அவனிடம் முடியாது என்று சொல்லிவிட்டோம். ’ச்ச’ என்று திரும்பியவள் பறப்பதை போல் உணர்ந்தாள்.

ஆகாஷ்தான் அவளை கையில் ஏந்தியிருந்தான், இதனை சற்றும் எதிர்பார்க்காதவள் நம்பமுடியாமல் அவன் முகத்தையே பார்த்தாள்.

“என்னடி வரச்சொன்னா வர முடியாதா? உன்னை எப்படி தூங்க வைக்கிறதுன்னு எனக்குத் தெரியும்” என்று கூறிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.

“முதலில் என்னை கீழே விடுங்க யாராவது பார்க்கப் போறாங்க”

”என் பொண்டாட்டியை நான் தூக்குவேன், யார் என்ன சொல்றான்னு பார்க்கிறேன்’

“ஆகாஷ்”

“சத்தம் போடாம வா நிலா, இங்க யாரும் இல்லை, இது ஒன்னும் பொது வழி இல்லை”

அவள் எதுவும் பேசவில்லை. திரைப்படங்களின் தான் இப்படியெல்லாம் பார்த்திருக்கிறாள். இப்படியெல்லாம் நிஜத்தில் யார் செய்யப் போகிறார்கள் என்று அப்போதெல்லாம் நினைத்ததுண்டு. தன்னை ஒருவர் சுமப்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது அதுவும் யாரும் இல்லாத இந்த பாதையில் விண்ணிற்கும் மண்ணிற்கும் நடுவே நினைத்துப்பார்க்கவே சுகமாக இருந்தது.

கதவை திறப்பதற்காக அவளை கீழே இறக்கி விட்டான், கதவைத் திறந்ததும் அவனை இடித்துக் கொண்டு முன்னே சென்றவள் அங்கு விளக்குகள் இல்லாததைக் கண்டு ‘நல்லவேளை அத்தையும் மாமாவும் தூங்கிட்டாங்க’ என்று சமாதானம் அடைந்தாள். பின்பு திரும்பியும் பார்க்காமல் மாடிப்படிகளில் தாவி அறைக்குச் சென்றாள்.

கதவைப் பூட்டிவிட்டு அறைக்குச் சென்றவன் அங்கு நிலா போர்வையை தலைவலியே இழுத்து மூடிக்கொண்டு படுத்திருப்பதை பார்த்துவிட்டு சிரிப்பு வந்தது. விளக்கை அணைத்துவிட்டு அவளின் மறுபுறம் படுத்துக் கொண்டான். சிறிது நேரம் அசையாமல் படுத்திருந்தவள், புழுக்கமாக இருக்கவும் போர்வையை விளக்கி தனது வலப்புறம் அவன் உறங்கிவிட்டானா என்று எட்டிப் பார்த்தாள். அவனிடம் எந்த அசைவும் இல்லை.

‘அப்பாடா’ என்று திரும்பி படுத்துக்கொண்டாள்.

‘என்ன தப்பிச்சிட்டோம்னு நினைப்பா’ என்று அவளை தன் புறமாக திருப்பியவனை பார்க்க வெட்கப்பட்டவள் அவன் மார்பில் முகத்தை புதைத்துக்கொண்டாள்.

“என்னைப் பாரு நிலா” என்று அவள் முகத்தை நிமிர்த்தியவன் அவள் கண்கள் திறக்காததைக் கண்டு அதன் மேல் இதழ் பதித்தான். அவள் இன்னும் இருக்கமாக கண்களை மூடிக்கொண்டாள். அவளின் செயலைக் கண்டு அவனுக்கு சிரிப்பு வந்தது. அவள் முகமெங்கும் முத்திரையை பதித்தவனின் கரங்கள் அவள் மேனியெங்கும் ஊர்வலம் சென்றது. என்னவென்று சொல்ல முடியாத உணர்வலைகள் அவள் உடலெங்கும் பாய்ந்தது. அவனது கரங்கள் அத்து மீற “வேண்டாம் ஆகாஷ்” என்று உணர்ச்சிப் பெருக்கில் பேச முடியாமல் அவளிடமிருந்து வார்த்தைகள் வந்தது. அவன் காதுகளில் அது எட்டியதாக இல்லை. அவனது செயல்கள் எல்லை மீறத்தொடங்கியதும் அவளால் மறுக்க முடியாமல் அந்த ஆழ்கடலில் தன்னைத் தொலைத்தாள். அவளின் மறுப்பை கண்டுகொள்ளாது அவளின் மீது பரவிப் படர்ந்தவன் விடியும் தருவாயில் தான் அவளை விட்டு நகர்ந்தான். மெதுவாகக் கண்களைத் திறந்தவள் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் ஆகாஷைத் தான் பார்த்தாள். அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது.

அவனை எதிர்கொள்ள முடியாமல் மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள். அவளது நெற்றியில் முத்தமிட்டவன், ”நேற்று கண்ணை மூடியதற்குத்தான் இந்த தண்டனை” என்றதும் உடனே கண்களை திறந்தாள்.

“தட்ஸ் மை கேர்ள்” என்று அவள் மூக்கோடு தன் மூக்கை உரசினான்.

“தூங்கு” என்றுவிட்டு எழுந்தான்.

“நீங்க” என்றவளின் கண்ணத்தை தட்டியவன், டென் மினிட்ஸ் வந்திடறேன் என்று சென்றுவிட்டான்.

கடிகாரத்தைப் பார்த்தவள் மணி ஐந்தைத் தாண்டியிருந்தது. அச்சச்சோ வேலைக்குப் போகனுமே இவ்வளவு லேட் ஆயிடுச்சே. எல்லாம் இவனால் வந்தது என்று நினைக்கையில் மீண்டும் வெட்கம் வந்து தொலைத்தது. அவள் போர்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள்.

”நிலா, தூங்கிட்டியா” என்று போர்வையை இழுத்துப் பார்த்தவன் அங்கு அழகோவியம் போல் உறங்கிக் கொண்டிருந்த நிலாவின் அருகில் அமர்ந்து அவள் தலை கோதிக் கொடுத்தான். ‘எல்லாம் தெரிஞ்ச பிறகு கோவிச்சுக்குவியாடி.. இல்லை, விடமாட்டேன். என்னை விட்டு பிரிய விடமாட்டேன். கோவக்காரி என்ன அட்டகாசம் செய்யப்போறாளோ’ என்று நெற்றியில் முத்தமிட்டான்.



”நிலா, நிலா எழுந்து இந்த பாலைக்குடி” என்று அவள் கண்ணத்தைத் தட்டினான்.

“ப்ளீஸ் மா”

“அம்மாவா, என்ன இவ, தூங்குனா கல்யாணம் ஆனதை மறந்திடுவாளா? அன்னைக்கும் ‘அம்மா’ன்னு சொன்னா, இன்னைக்கும் அதைத்தான் சொல்றா”

“நிலா, எழுந்து பாலைக் குடிச்சிட்டு படு”

“ம்ப்ச்’ என்று திரும்பி படுத்துக்கொண்டாள்.

அவளை எழுப்பி பாலைக்கொடுத்து படுக்க வைப்பதற்குள் ஒரு வழியாகிவிட்டான். இருவருக்கும் விடுப்பு சொல்லிவிட்டு அவளருகே வந்து படுத்தவன் அவளை கட்டியணைத்துக் கொண்டு படுத்துவிட்டான்.

பசி உயிரை எடுக்க, கண் திறக்க முடியாமல் திறந்தவள் காற்று கூட நுழைய முடியாதவாறு தன்னை வளைத்திருக்கும் ஆகாஷின் கரங்களை தடவிக் கொண்டே ”ஆகாஷ், ஆகாஷ்” என்று அழைத்துப் பார்த்தாள். பின்பு அவனை உலுக்கினாள், எந்த அசைவும் இல்லை. அவன் காதருகே சென்றவள்.

“ஆகாஷ்” என்று கத்தினாள்.

“என்னடி” என்று கைகளை தளர்த்தியவன். காதைக் குடைந்து கொண்டே எழுந்து உட்கார்ந்தான்.

அவள் எழுந்து குளியறைக்குள் புகுந்து கொண்டாள். குளித்து முடித்துவிட்டு வெளியே வந்து மீண்டும் படுத்திருந்தவனை எழுப்பினாள்.

“ஆகாஷ் எழுந்து வாங்க மணி.. என்று கடிகாரத்தைப் பார்த்தவள் மணி ஒன்று என்று காட்டவே, கடவுளே இவ்வளவு நேரமா தூங்கியிருக்கோம். அச்சச்சோ வேலைக்கு வேற லீவு சொல்லலியே. அத்தை என்ன நினைப்பாங்க. எல்லாத்தையும் செய்திட்டு தூங்கிறது பாரு” என்று கோவத்தில் அவன் மீது ஓங்கி அடித்தாள்.

“ஆ.. வலிக்குது நிலா, இதெல்லாம் ரொம்ப அநியாயம். ஏண்டி அடிக்கிற”

“ஆகாஷ் டைம் பாருங்க”

கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தவன் மணி ஒன்று என்று காட்டவும். ’ஓ மை காட் இட்ஸ் ஒன், லன்ச் டைம்”

“எழுந்து வாங்க ஆகாஷ்”

“நான் ரெடியாயிட்டு வரேன், நீ போ’

“இல்லை நீங்களும் வாங்க ப்ளீஸ்”

”என்ன புதுசா நான் வந்தால்தான் போவேன்னு அடம் பிடிக்கிற”

“-”

“போ நிலா, போய் சாப்பிடு, நான் டென் மினிட்ஸில் வந்திடுறேன்” என்று குளியளறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்த போது நிலா அங்குதான் இருந்தாள். அவள் பாவமாக ஆகாஷைப் பார்த்தாள்.. அவளது தலையை தடவிக்கொடுத்தவன், அவங்களும் நம்ம வயசைத் தாண்டிதான் வந்திருக்காங்க. நீ ரொம்ப யோசிக்காத’ என்று சமாதானம் செய்துவிட்டு அவனும் தயார் ஆகி அவளுடன் கீழே வந்தான்.



இருவரும் கீழே வருவதைக் கண்ட ரதி “வா அகி, ரெண்டு பேரும் உட்காருங்க சாதம் எடுத்து வைக்கிறேன்” என்று சமயலறைக்குச் சென்றார். நிலா சங்கடமாக ஆகாஷைப் பார்த்தாள். அவன் கண்களால் ரதியிடம் செல்லுமாறு சொன்னான். நிலாவும் சமயலறைக்குச் சென்றாள்.

“அத்தை”

“என்னடா, அகி கூட நீயும் உட்காரு காலையிலியே சாப்பிடல, போய் உட்காருடா” என்று உணவை எடுத்துக்கொண்டு மேஜைக்கு வந்தார்.

நிலாவும் வந்து அமர்ந்தாள்.

“அப்பா எங்கம்மா”

“அவர் இன்னைக்கு நேரமே சாப்பிட்டு படுத்துக்கிட்டார் அகி”

“நீங்க சாப்பிட்டாச்சா”

“ஆச்சு அகி” என்று பரிமாறினார்.

இருவரும் உண்டு முடித்ததும் ஆகாஷ் வெளியில் சென்றுவிட்டான். நிலா ரதியுடன் ஊர்க்கதைகளைப் பேசிக்கொண்டு வீட்டு வேலைகளில் உதவினாள்.

மாலை விளக்கேற்றி விட்டு பூவை நிலாவின் தலையில் வைத்தவர் “இப்போ மாதிரி என்னைக்கும் அகியும் நீயும் நூறு வருஷம் சேர்ந்து வாழனும் நிலா” என்று திருஷ்டி கழித்தார்.

நிலாவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மீனாட்சி ஆண்டி சொன்ன மாதிரி திருமணம் தனக்கு நல்ல சொந்தங்களைத் தந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள். இரவு உணவிற்கு பிறகு ஆகாஷும் நிலாவும் நடப்பதற்குச் சென்றனர். பேசின் இடையில் ஆகாஷ் நிலாவிடம் சந்தேகம் கேட்டான்.

“ஏன் நிலா, தூங்கும் போது உனக்கு என்னை மறந்திடுமா?”

“என்ன உளறீங்க ஆகாஷ்”

”இல்லை நான் எழுப்பும் போதெல்லாம் “அம்மா” “அம்மா”ன்னு சொல்ற அதான் கேட்டேன்.

“அம்மா”….என்றதும்….. அம்மா எப்படி இருக்காங்களோ என்ற யோசனையில் ஆழ்ந்தாள். அவளின் நடை தேங்கியது.

‘என்னாச்சு?”

“_”

‘நிலா”

“ம், என்ன ஆகாஷ்”

“நத்திங், வா” என்று அவள் விரல்களுடன் விரல் கோர்த்து நடந்தான். அவள் ஏதோ யோசனையில் வருவதை கவனித்துக்கொண்டே வந்தான்.

தாயிற்கு அழைத்துப் பேசாலாமா வேண்டாமா என்று யோசனையுடன் இருந்தவள் வீடு வந்து சேர்ந்தது கூட தெரியாமல் அங்கேயே நின்று கொண்டாள்.

“என்ன நிலா யோசனை?”

“ஒ.. ஒன்னுமில்லை ஆகாஷ்” என்று கூறிவிட்டு நேரே அறைக்குச் சென்றவள் எதுவும் பேசாமல் படுத்துக்கொண்டாள்.

அவளுக்கு திருமணத்தைக் குறித்து சரஸ்வதி தன்னிடம் பிடிவாதமாக கூறியது. யாரென்றே தெரியாமல் திருமணத்திற்கு தான் தயாராகி வந்தது என்று ஒவ்வொன்றாக ஞாபகத்திற்கு வந்தது. அறைக்கு வந்து பார்த்தவன் நிலா சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு அவளருகில் அமர்ந்து தலைகோதிக் கொடுத்தான்.

“என்னாச்சுடா ஏன் என்னமோ மாதிரி இருக்க, உடம்புக்கு ஏதும் பண்ணுதா?” என்று விசாரித்தான்.

எதுவும் பேசாமல் எழுந்து அமர்ந்தவள் ஆகாஷை ஒரு நொடி பார்த்துவிட்டு இருக அணைத்துக்கொண்டாள். திருமணத்திற்கு முன்பு ஒருமுறையாவது ஆகாஷைப் பார்த்து விடவேண்டும் என்று எப்படி ஏங்கித் தவித்தாள். அன்று கோவிலில் ஆகாஷைத் தவிர வேறு யாராக இருந்தாலும் சரஸ்வதிக்காக கழுத்தை நீட்டியிருப்பாள். அப்படி அது வேறு ஒருவனாக இருந்திருந்தாள் இப்போது தன்னிலை என்னவாகியிருக்கும். யோசிக்கும் போதே உடல் நடுங்கியது மேலும் இருக்கமாக ஆகாஷைக் கட்டிக்கொண்டாள்.

“நிலா என்னாச்சுடா, வாய் திறந்து சொன்னாதான் ஏதாவது செய்ய முடியும், என்னைப் பார்” என்று அவளை தன்னிடமிருந்து பிரிக்கப் பார்த்தான் முடியவில்லை. தன் நெஞ்சில் ஈரம் பட்டவுடன் கோபப்பட்டவன் “நிலா முதலில் அழுவதை நிறுத்து” என்று வலுக்கட்டாயமாக தன்னிலிருந்து பிரித்தான்.

“ஏன் நிலா” என்றவனின் நெற்றியில் முத்தமிட்டவள் “ஐ லவ் யூ ஆகாஷ், ஐ லவ் யூ, ஐ காண்ட் லிவ் வித்தவுட் யூ” என்று மீண்டும் அவனை அணைத்துக்கொண்டாள்.

“என்னடி திடீர்னு” என்று அவள் தலையை வருடியவன் உச்சந்தலையில் முத்தமிட்டான்.

அவளுக்கு வேறொருவருடன் தன் வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. தன் மனதில் ஆகாஷின் மீதிருந்த காதல்தான் இத்தனை விரைவில் இந்த குடும்பத்துடனும் அவனுடனுமான இந்த வாழ்க்கையில் ஒன்றுவதற்கு உதவியது என்று உணர்ந்தாள். வேண்டாம் தனக்கு வேறெதுவும் வேண்டாம் என்று நினைத்துக் கொண்டவள் அவனை அணைத்தவாறே உறங்கிப் போனாள்.

நிலா உறங்கியதும் அவளைக் கிடத்தியவன், தானும் படுத்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தான். விரைவாக அனைத்தும் சரியாக வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டான். உறக்கம் வராமல் புரண்டு படுத்தவன் நிலாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு உறங்கிப்போனான்.

அவர்கள் வாழ்க்கையின் மிக இனிமையான நாட்களை வழக்கம்போல் வழக்கடித்துக் கொண்டே வாழ்ந்து கொண்டிருந்தனர். கர்ணனும் மெதுவாக ஊன்றுகோளின் உதவியில்லாமல் நடக்கத் தொடங்கினார். ஒன்றிரண்டு முறை மீனாட்சியின் வீட்டிற்கு நிலாவுடன் செல்லுமாறு ரதி கூறியும் ஆகாஷ் அதனை மறுத்துவிட்டான். சரஸ்வதியைப் பார்க்க ஆகாஷுடன் போகச் சொல்லி நிலாவிடம் கூறியவருக்கும் அதே பதில் தான். இரண்டு பேரும் இதில் மட்டும் ஒற்றுமையாக இருந்தனர்.

கர்ணனுக்கு கால் முழுவதுமாக குணமாகியிருந்தது. இடது காலில் மட்டும் சிறிது பிரச்சினையிருந்தது அது போகப் போக சரியாகிவிடும் என்று மருத்துவர் கூறியிருந்தார். ஞாயிறு மதியம் உணவு உண்டு முடித்துவிட்டு தனியாக அமர்ந்திருந்தவனிடம் வந்தவர் “அகி இனி கம்பெனி காரை நான் ஓட்டிக்கிறேன்பா, சார் கிட்ட நான் பேசறேன்” என்றவரை பாவமாக பார்த்தான்.

“ஏன்பா அப்படி பார்க்கிற”

“என்னாலதான உங்களுக்கெல்லாம் கஷ்டம்”

”என்னப்பா பேசுற, நீ எங்ககூட இருக்கிறதே எங்களுக்கு வரம் மாதிரி. இனிமேல் இப்படியெல்லாம் பேசாதே அகி” என்று நா தழதழக்க பேசிவிட்டு அறைக்குச் சென்றார்.

வேலைக்குச் செல்வது வீட்டிற்கு வந்தாள் வீட்டு வேலைகள் என்று தன்னை முழுமையாக குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொண்டாள் நிலா. “என்ன நிலா, ஒரே குஷியா இருக்கீங்க, என்ன விஷயம்” என்று கேட்பவர்களுக்கு புன்னகையை மட்டும் பதிலாக அளித்தாள். அவள் மிகவும் சந்தோஷமாக இருப்பது முகத்தில் பிரதிபலித்தது. அப்படியே நாட்கள் பறந்தது. கர்ணன் கம்பெனி காரை ஓட்டத் தொடங்கினார்.

“மாமாகிட்ட வேலைக்குப் போக வேண்டாம்னு சொல்லுங்க” என்றவளை பரிதாபமாகப் பார்த்தான்.

ரதியிடமும் கர்ணனிடமும் சொல்லிப் பார்த்தாள், இருவரும் மறுத்தனர்.

தொழில் தொடங்குவதாக கூறியிருந்தவன், ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி தொடங்கப் போவதாகவும் அதற்கு நிலாவின் உதவி வேண்டும் என்று கூறி அவளது ஓய்வு நாட்களில் சில வேலைகளை செய்ய வைத்தான். அவனது அறிவையும் திறமையையும் கண்டவள் அவனிடமே ஒருநாள் கேட்டாள் “எப்படிங்க இவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கீங்க. என்ன படிச்சிருக்கீங்க” என்றவளை ”தேவையான அளவு படிச்சிருக்கேன்” என்று தலையில் குட்டினான். எதையோ தன்னிடமிருந்து மறைக்கிறான். பலமுறை அவள் ஆகாஷைக் குறித்து அறிவதற்கு ரதியிடம் பேசிப்பார்த்தாள், அவரும் எதுவும் பிடி கொடுத்து பேசுவதில்லை.



இதற்கிடையில் அலுவலகத்தில் புதிய எம்டி வரப்போவதாகக் கூறி பேச்சுக்கள் வரத் தொடங்கியது. அதையையும் ஆகாஷிடமே புலம்பினாள் “புதுசா எம்டி வராங்களாம், ஜெகே சார் அப்போ ரிடயர்ட் ஆகிறாரா. உங்களுக்கு ஒன்னு தெரியுமா ஆண்டு விழாவின் போதே புதிய எம்டியை அறிமுகப் படுத்த இருந்தாங்களாம் ஏதோ பிரச்சினையாம், அதான் அது நடக்கலையாம். உங்களுக்கு தெரிந்திருக்குமே நீங்க தான் சார் கூடவே இருந்தீங்களே” என்று மார்பில் நாடியை ஊன்றி அவனைப் பார்த்துக்கொண்டு பேசியவளை மொளனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“சரி சரி அடுத்தவங்களைப் பற்றி நான் ஏதும் பேசமாட்டேன், கோவிச்சுக்காதீங்க” என்று அவளே பதிலையும் கூறிக்கொண்டாள்.

தினமும் இரவு உறங்கும் முன் அவள் ஏதாவது பேசிக்கொண்டிருப்பாள், அவன் பதில் ஏதும் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருப்பான்.

அன்றும் அப்படித்தான் தானாக பேசிக்கொண்டிருந்தவளின் வாயில் பேசாமல் இருக்குமாறு விரலை வைத்தவன் ”நிலா, நாளைக்கு நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“என்னது? கல்யாணமா? மறுபடியுமா?”

(தொடரும்)
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg
எபி-14

“யெஸ், நமக்கு இன்னும் சட்டப்படி கல்யாணமே ஆகலை”

ஆமாம், அவள் அதை மறந்தே போயிருந்தாள். அவள் எதுவும் சொல்லாமல் மொளனமாகப் பார்த்தாள்.

“சரி, மறுபடியும் யோசிக்காத, நாளைக்கு காலையில் ரெடியாயிரு. ரெண்டு பேரும் ரெஜிஸ்டர் ஆபிஸுக்குப் போய் கல்யாணத்தை ரெஜிச்டர் செய்துக்கலாம்”

“_”

“என்னென்ன எடுத்துக்கனும்னு சொல்றேன் காலையில் என்கிட்ட எடுத்துகொடுத்திடு”

“சரி, ஆனால் நாளைக்கு ஆபிஸிக்கு சீக்கிரம் போகனுமே, புது எம்டி ஜாயின் பண்றார். சோ ஒன்பது மணிக்கெல்லாம் ஆபிஸில் இருக்கச் சொன்னாங்க”

“உனக்கு நம்ம கல்யாணம் முக்கியமா ஆபிஸ் முக்கியமா?”

“என்ன ஆகாஷ் இப்படியெல்லாம் பேசுறீங்க. திடீர்னு நீங்க சொன்னீங்க சோ யதார்த்தமா நான் ஆபிஸ் விஷயத்தைச் சொன்னேன்”

“-”

“என்ன பண்றது சொல்யூஷன் சொல்லுவீங்கன்னு நான் சொன்னேன், அது தப்பா”

“எழுந்து போய் அலமாரியை திற நிலா”

அவள் ஏதும் பேசாமல் எழுந்து போய் அலமாரியைத் திறந்தாள். அங்கு புதிய புடவை வைக்கப்பட்டிருந்தது, நிலா ஆகாஷைத் திரும்பி பார்த்தாள்.

“நாளைக்கு அதை கட்டிக்கோ” என்றவன் அறையை விட்டு வெளியேறினான்.

இவன் என்னதான் மனசில் நினைச்சிட்டு இருக்கான். வேலைக்கு என்ன சொல்லுவது இப்போது வந்து சொன்னால் எப்படி. அடுத்து அவளது கவலை புடவைக்கு ஏற்ற ஜாக்கெட்டை தைக்கவில்லையே என்று. புடவை இருக்கு அதுக்கு ஜாக்கெட்டுக்கு என்ன பண்றதாம். ஆனால் இதையெல்லாம் அவனிடம் கேட்டால், பதில் ஏதும் வராது என்று அவளுக்குத் தெரியும். எல்லாம் அவனோட இஷ்டத்துக்கு நடக்கனும். ஆனால் அவளுக்குத் தெரியும் அவன் எதுவாக இருந்தாலும் யோசித்து, தேவையானதை மட்டும் தான் செய்வான், தன்னைப்போல் அப்படியா, இப்படியா என்றெல்லாம் யோசிக்க மாட்டான். தன்னிடம் அந்த பக்குவம் இல்லை என்று நினைத்துக்கொண்டாள். சரி, அவன் வழியிலியே போகலாம் என்று பலமுறை அவன் சொல்பேச்சு கேட்டு நடந்து கொள்வாள். இம்முறையும் அதே தான். புடவையை தடவிப் பார்த்தாள், அவளுக்கு பிடித்தது போல் மிகவும் அழகாக, ஆடம்பரம் இல்லாமல் சிறிய ஜரிகையுடன் இருந்தது.

அவனைத்தேடி மாடிக்குச் சென்றாள். அவன் அங்குதான் வானத்தைப் பார்த்துக்கொண்டு தரையில் படுத்திருந்தான். அவனருகில் சென்று அமர்ந்து கொண்டாள். அவள் அமர்ந்தவுடன் தனது வலது கையை தரையில் நீட்டினான். அவள் எதுவும் சொல்லாமல் அந்த கையின் மீது தலையை வைத்து அவனருகில் படுத்துக் கொண்டாள்.

“ஆகாஷ், கோவமா”

“எதுக்கு”

“எதுவும் பேசாம வந்துட்டீங்க” என்று அவன் முகத்தைப் பார்த்தாள்.

“புடவை புடிச்சிருக்கா?”

”ரொம்ப அழகா இருக்கு”

அவள்புறம் திரும்பியவன் “உன்னை மாதிரி” என்று அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.

“நீங்க இருக்கீங்களே” என்று அவன் கையில் கிள்ளி வைத்தாள்.

“இது தான் முதல் தடவையா நான் புடவை எடுத்தது. உனக்கு பிடிக்குமோ, பிடிக்காதோன்னு பயந்தேன்”

“புடவை எனக்கு பிடிச்ச மாதிரி இருந்தது ஆகாஷ், ஆனால் இதெல்லாம் கொஞ்சம் ஓவர்”

“எது ஓவர்”

“பிடிக்குமோ பிடிக்காதோன்னு பயந்தீங்கன்னு நீங்க சொன்னது”

‘ஹும், என்ன பண்றது… என் நிலைமை அப்படி”

“என்ன நிலைமையாம்” என்று அவனை இடித்தாள்.

“புடவை பிடிக்கலைன்னா என் பொண்டாட்டி வன்முறையை கையில் எடுத்துப்பா, அதனால் கொஞ்சம் பார்த்து நல்ல புடவையாய் எடுத்து போடுன்னு கடைக்காரன் கிட்ட சொன்னேன், அவனுக்கும் அதே அனுபவம் போல, சொன்னதும் புரிஞ்சுகிட்டான். அவன் என்னை பாவமா பார்த்திட்டு இருக்கிற நல்ல புடவையெல்லாம் எடுத்துப் போட்டான்” என்று தொடர்ந்து கொண்டிருந்தவனை வழக்கம் போல் அடிக்கத் தொடங்கினாள்.

“என்னடி, புடிச்சிருக்குன்னு சொல்லிட்டு இப்படி அடிக்கிற”

“எப்படியெல்லாம் அலந்து விடுறீங்க”

“சரி வா, தூங்கலாம், நாளைக்கு நேரமே எழுந்துக்கனும்”

“சரி” என்று இருவரும் எழுந்து அறைக்குச் சென்றனர்.

“அலாரம் வெச்சிருக்கேன், காலையில் எட்டு மணிக்கு ரெடியாயிடு”

“அப்போ ஒன்பது மணிக்கு நான் ரெடியா இருக்கனும் கரெக்ட் தானே” என்றவளை “கொன்னுடுவேன், எப்பவும் போல் லேட் பண்ணுன, அவ்வளவுதான்” என்று எச்சரிக்கை செய்தான்.

“சரி சரி” என்று சலித்துக்கொண்டே போய் படுத்துக் கொண்டாள்.

அவளருகில் வந்து படுத்தவன், “அம்மா அப்பாகிட்ட நான் சொல்லிக்கிறேன். எட்டு மணிக்கு ரெடியாயிரு. அது மட்டும்தான் உன் வேலை. ஓகே வா”

“ஓகே” என்று அவள் திரும்பி படுத்துக் கொண்டாள்.

அவனது கரங்கள் அவளை வளைத்துக் கொண்டது.

“எட்டு மணிக்கு ரெடியாகனும்னா, முதலில் கையை எடுங்க”

“என்ன ரிவென்ஞ்சா”

”ஆமாம்னு வெச்சுக்கோங்க”

“கோவக்காரி” என்று அவளை தன் புறம் திருப்பியவன். ”நான் ஒன்னு சொன்னா நீ கேட்பியா?”

”அதை மட்டும் தானே நான் செய்துகிட்டிருக்கேன்” என்று முறைத்தாள்.

”ப்பா, பார்வையில் அனல் அடிக்குது, தனிக்கனுமே” என்றவன் அவள் இதழ்களை சிறை எடுத்தான். சிறிது நேரம் கழித்து அவள் இதழ்களை விடுவித்தவன். “நான் சொல்றதை கவனமா கேளு நிலா, எதுவாக இருந்தாலும் பலமுறை யோசித்து செய்யனும். எடுத்தோம் கவுத்தோம்னு இருக்கக்கூடாது. எப்பவும் உனக்கு நான் இருப்பேங்கிறது ஞாபகத்தில் இருக்கனும். ஓகே வா, புரிஞ்சுதா”

அவன் கண்களை ஆழமாகப் பார்த்தவள் ”நீங்க சொல்றது எனக்கு புரியுது ஆனால் இதெல்லாம் ஏன் சம்மந்தமே இல்லாம இப்ப சொல்றீங்கன்னுதான் புரியிலை. எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொன்னால் நல்லா இருக்கும். நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா, உங்களை ஹர்ட் பண்ண மாதிரி எதாவது பேசிட்டேனா?” என்று கேட்டவளின் கண்களில் கண்ணீர் தேங்கியது.

“ஏய் நிலா, நான் பொதுவா சொன்னேன். அழாதேடி” என்று அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

அவளிடமிருந்து விசும்பல் சத்தம் கேட்டது.

“நிலா, ப்ளீஸ்”

“தெரியலை ஆகாஷ், ஏதோ மனசுக்கு பாரமா இருக்கு. என்னவோ சரியில்லைன்னு தோணுது”

“எல்லாம் சரியாத்தான் இருக்கு, பேசாம படுத்துத் தூங்கு நிலா காலையில் எழுந்துக்கனும்”

‘_”

“லவ் யூ நிலா, மை லவ் ஈஸ் ட்ரூ” என்று அவளைப் பார்த்தான்.

சிறிது எம்பி அவன் நெற்றியில் முத்தமிட்டவள். ”என்னை சொல்லீட்டு நீங்க குழப்பிக்காதீங்க என்று கூறிவிட்டு அவன் மார்பில் தலைவைத்து படுத்துக்கொண்டாள்.”

அவள் உச்சந்தலையில் முத்தம் வைத்தவன் அவளை இருக்கமாக கட்டியணைத்துக் கொண்டு உறங்கிப் போனான்.

அவன் கூறியதுபோல் காலை எட்டு மணிக்கு தயாராகி கீழே வந்தவளை திருஷ்டி கழித்தார் ரதி. ஆகாஷ் சொல்லியிருப்பான் அதுதான் ரதி தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

ஆகாஷைத் தேடியவள் ரதியிடமே அவனைக் கேட்டாள். “அத்தை அவர் எங்கே காணோம்”

”வந்திருவான் மா” என்று பாவமாக நிலாவைப் பார்த்தார்.

“ஏன் அத்தை அப்படி பார்க்கறீங்க”

“ஒன்னுமில்லை நிலா” என்று அவள் தலையை வருடியவர் “நீ என் மருமக இல்லைடா என் பொண்ணு, நான் உன்னை என் பொண்ணாத்தான் நினைச்சிருக்கேன்” என்று அவள் கைகளை இருக்கிப் பிடித்து பின்னர் விடுவித்தார்.

“அத்தை, ஏன் என்னமோ மாதிரி பேசுறீங்க. அவர் ஏதும் சொன்னாரா”

“ச்ச ச்ச அகி எதுவும் சொல்லலைடா, பொதுவாத்தான் சொன்னேன்”

பொதுவா பொதுவான்னு ஏன் எல்லாரும் என்னை குழப்புறாங்க. இல்லை நான் தேவையில்லாம் யோசித்து குழம்புறேனா.

‘ச்ச’ என்று தலையை உலுக்கியவள். முதலில் ரெஜிஸ்டர் ஆபிஸ் அப்புறம் வேலைக்கு மத்ததெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம். மேனேஜர் கிட்ட வேற பெர்மிஷன் சொல்லலை. போனமுறை லீவு எடுத்ததற்கு, அரை மணி நேரம் லெக்‌ஷர் கொடுத்தார், இதில் இவன் வேறு அடிக்கடி எனக்காக லீவு சொல்லுவான் அதுவேற அவருக்கு கடுப்பு. ‘இதென்ன ஸ்கூலா உனக்காக வீட்டில் இருக்கவங்க லீவு சொல்றதுக்கு’. நானா அவன் கிட்ட லீவு சொல்லச் சொல்றேன் அவனே எல்லாத்தையும் செய்துட்டுதான் என்கிட்டயே சொல்லுவான். மறுபடியும் பெர்மிஷன் சொன்னால் என்ன நடக்குமோ என்று நினைத்தவள் எதுவும் சொல்லாமல் நேரில் சென்று பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள். கல்யாணத்தன்னைக்கு சேர்ந்து ஒரு போட்டோ கூட எடுக்கலை, இன்னைக்காவது சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கனும். இந்த புடவை ரொம்ப சிம்பிளா இருக்கே, நல்லவேளை பொருத்தமா ஜாக்கெட் இருந்துச்சு. இல்லைன்னா ஆபிஸுக்கு துணி மாற்றிவிட்டு போக வேண்டியிருந்திருக்கும். அவனுக்கு இதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை. என்னை ரெடியாகச் சொல்லிட்டு அவன் எங்க போயிட்டான் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே வாயிலில் ஹாரன் சத்தம் கேட்டது.

எழுந்து சென்று பார்த்தாள், ஆகாஷ் தான் காரிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான். என்ன ஆளே மாறிட்டான். நம்ம ஆளு இவ்வளவு ஹேண்ட்சம்மா? ப்பா வேற லெவல். என்னை விட்டுட்டு அவன் மட்டும் போய் தலைமுடியெல்லாம் ஸ்டைல் பண்ணிகிட்டு வந்திருக்கான் பாரு. எல்லாம் கொடுமை, என்னைப் பத்தி யோசிச்சானா பாரு. இன்னைக்கு இருக்கு அவனுக்கு.. என்று அசையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முன் சொடக்கு போட்டு “என்ன பகல் கனவா?”

”ஆமாம் ஆமாம்”

”சரி வா போகலாம், ஹேண்ட் பேக்கை என் கையில் கொடு”

‘நம்ம அடிக்கப் போறோம்னு கண்டுபிடிச்சிட்டான், எனக்கு கைதான் ஆயுதம்னு அவனுக்கு இன்னும் தெரியலை’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தவள் எதுவும் பேசாமல் தோள் பையை அவனிடம் நீட்டினாள்.

‘அம்மா, கிளம்புறேன்’ என்று ரதியிடம் விடை பெற்றான்.

போய் வருவதாக தலையை அசைத்துக் கொண்டு அவன் பின்னே சென்றவள். அங்கிருந்த காரைப் பார்த்து ‘இது யாருடையது’ என்று கேட்டாள்.

“பேசாமல் வந்தா சீக்கிரம் ஆபிஸுக்குப் போகலாம், கேள்வி கேட்டா லேட் ஆகும், டிசைட்”

’இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை, மவனே இனி நீயா கேட்டாக்கூட நான் பேசமாட்டேன் போ’ என்று நினைத்துக் கொண்டாள்.

அவனும் எதுவும் பேசவில்லை. அடிக்கடி திரும்பி அவனைப் பார்த்துக் கொண்டாள். ‘ப்பா என்ன ஸ்டைலா இருக்கான், என்ன திடீர்னு இத்தனை புல்ட் அப். கல்யாணத்தன்று கூட சாதாரணமாகத் தானே இருந்தான்’. செரி, பேசத்தான் கூடாது பார்க்கவாவது செய்யலாம்’ என்று நினைத்து பெரு மூச்சுவிட்டவளின் புறம் திரும்பியவன் “இப்படிப் பார்த்தா என்னால வண்டி ஓட்ட முடியாது”

‘இது என்னடா வம்பா போச்சு, என்று மறுபுறம் திரும்பி வெளியே வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள். நானா வண்டி ஓட்டுறேன், லூசு லூசு’ என்று மனதில் நினைப்பதாக எண்ணி வெளியில் பேசிவிட்டு நாக்கை கடித்துக்கொண்டாள்.

அவனுக்கு சிரிப்பு வந்தது, மறுபுறம் திரும்பி சிரித்துக் கொண்டவன். அடிக்கடி அவளை பார்த்துக்கொண்டான். அவள் நல்ல பிள்ளையாக இவன்புறம் திரும்பி கூட பார்க்கவில்லை.

திருமணப் பதிவு அலுவலகம் வந்தவுடன் காரிலே இருக்குமாறு சொல்லிவிட்டு அவன் இறங்கிச் சென்றான். தூரத்தில் நின்று கொண்டு யாருக்கோ அலைப்பேசியில் பேசுவதும் இவளைப் பார்ப்பதுமாக இருந்தான். பத்து மணிவரை பொருமையாக இருந்தவள், பேசுனா லேட் ஆகும்னு சொன்னான், பேசலைன்னா வேலைக்கு போக முடியாது போல இருக்கே என்று வண்டியை விட்டு இறங்கினாள்.

அவளை நோக்கி வந்தவன் ‘டென் மினிட்ஸ், உள்ளே உட்காரு’ என்று கூறிவிட்டுச் சென்றான்.

‘ம்ப்ச்’ என்று மறுபடியும் உள்ளே ஏறி அமர்ந்தவள். என்னதான் நடக்கிறது என்று அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு கார் வந்து நின்றது அதிலிருந்து ஆகாஷைப் போலவே ஸ்டைலாக உடை அணிந்த ஒருவன் இறங்கி ஆகாஷுடன் கை குலுக்கினான். இவரை எங்கேயோ பார்த்திருக்கேனே, எங்க பார்த்திருக்கேன்? என்று யோசித்துக் கொண்டிருந்தாள். இருவரும் இவள் அமர்ந்திருந்த காரை நோக்கி ஏதோ பேசிக்கொண்டனர். பின்னர் இருவரும் உள்ளே சென்றனர் சிறிது நேரத்தில் வெளியில் வந்த ஆகாஷ் நிலாவிடம் வந்து கையெழுத்து இடுமாறு ஒரு காகிதத்தை நீட்டினான்.

‘சைன் பண்ணு நிலா” என்று பேனாவை நீட்டி இடத்தைக் காட்டினான்.

அவள் கையெழுத்து இடும்முன் “நிலா” என்று அவன் அழைக்கவும், எதுவும் பேசாமல் அவனைப் பார்த்தாள்.

‘ஐ லவ் யூ’ என்று அவள் கண்ணத்தில் முத்தமிட்டான்.

அவளுக்கு அழுகை வந்தது. எத்துனை சுலபமாக பேச வேண்டாம் என்று சொல்லிவிட்டான். இப்ப மட்டும் என்ன பாசம் பொங்குது. அவள் ஏதும் பேசாமல் அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் கையெழுத்திட்டாள். அவளிடமிருந்து பேனாவையும் பேப்பரையும் வாங்கியவன், அவள் கண்களை துடைத்துவிட்டு ‘ஐ ஆம் சாரி’ என்று அவள் பதிலுக்காக காத்திருக்காமல் பதிவாளர் அலுவலகத்தை நோக்கிச் சென்றான்.



“சாரி” எவனுக்கு வேணும். ’வீட்டுக்கு வரட்டும், பேசு பேசுன்னு கெஞ்சினாலும் பேச மாட்டேன்’ அவரா நானான்னு பார்த்திர வேண்டியதுதான்’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டாள். அவன் வருகினானா என்று அலுவலகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பத்து நிமிடங்களுக்குப் பிறகு ஆகாஷுடன் உள்ளே சென்ற அந்த இளைஞனும் பேசிக்கொண்டே வெளியில் வந்தனர். ஐந்து நிமிடம் பேசிய பிறகு அந்த இளைஞன் காரில் ஏறிச் சென்றான்.

நிலாவிற்கு ஒரு புறம் ஆகாஷ் பேச வேண்டாம் என்று சொன்னதில் வருத்தம். திருமணம் தான் சரியாக நடக்கவில்லை, குறைந்தது திருமணப் பதிவாவது மனநிறைவோடு நடக்கும் என்று நினைத்தால் அதுவும் இல்லை. இன்னும் தாமதித்தால், மேனேஜரிடம் பூஜை நிச்சியம். அவனுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. இன்றாவது ஒரு போட்டோ எடுக்கலாம் என்று நினைத்தால் அவன் மட்டும் ஸ்டைலாக இருக்கிறான், என்னைப் பார் என்று தன்னைத்தான் பார்த்துக் கொண்டாள். ’ச்ச அவனுக்கு நம்ம சரியான மேட்ச் இல்லியோ?’ என்று வருத்தப்பட்டாள். திருமணத்திற்கு பிறகு பலமுறை இந்த சிந்தனை அவளுக்கு தோன்றியிருக்கிறது. முதன் முதலில் அலுவலகத்தில் கார் நிருத்தும் இடத்தில் புகைத்துக் கொண்டு ஸ்டைலாக ஆகாஷ் நின்ற தோற்றம் நினைவிற்கு வந்தது. ஆகாஷை திட்டுவதற்காகத்தான் அன்று அவனை நெருங்கிச் சென்றாள் ஆனால் அவன் முகத்தை மிகவும் அருகில் பார்த்ததும் அவளுக்குள் ஒரு மின்னல் பாய்ந்தது. அவளுக்கே அந்த உணர்வு புதிதாக இருந்தது, தன்மீதே அவளுக்கு கோபம் வந்தது அதனுடன் ஆகாஷின் பதிலும் சேர்ந்து அவளது கோபத்தை அதிகப்படுத்தியது. என்ன செய்வது என்று புரியாமல் செக்யூரிட்டியிடம் முறையிடுவதற்காகச் சென்றவள், வழியில் விக்கியையும் ஷீலாவையும் சந்திக்க நேர்ந்தது. அதன் பின் ஆகாஷின் செயல் குறித்து விக்கி மேலிடத்தில் கூறியதை அறிந்தவளுக்கு வருத்தமாக இருந்தது. அன்று அவ்வாறு நடந்து கொண்டவன், தன் பிறந்தநாள் அன்று கவனிக்காமல் வண்டியின் முன் விழுந்தது, கேண்டீனில் தன்னை புடவையில் அழகாக இருப்பதாக ஆகாஷ் கூறியது என்று ஒவ்வொன்றாக நினைவிற்கு வந்தது. சரஸ்வதி திருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் ஆகாஷின் முகம் தான் நிலாவிற்கு நினைவிற்கு வந்தது. தனக்கே தெரியாமல் தன் மனதினுள் ஆகாஷை காதலித்திருக்கிறாள் என்று திருமணத்திற்கு முன்பு ஆகாஷை தேடியதிலிருந்து அவள் புரிந்து கொண்டாள். திருமணத்திற்கு பிறகு ஆகாஷை கூடுதலாக அறிய முடிந்ததும் அவன் மேல் இருந்த காதல் அதிகரித்தது. அவனது குடும்பம் அவளிடம் காட்டிய பாசமும் அரவணைப்பும் அவளை நெகிழ வைத்தது.

“என்ன பகல் கனவா” என்ற குரல் கேட்டதும், பழைய நினைவுகளிலிருந்து மீண்டாள்.

“இறங்கு நிலா ஒரு போட்டோ எடுத்துக்கலாம்”

அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள்.

“ஆபிஸ் போக வேண்டாமா?”

“-”

கார் கதவைத் திறந்து அவளை வெளியே இழுத்தவன், அவள் கையிலிருந்த மொபைலை எடுத்து ஒரு செல்பி எடுத்தான்.

அவள் கேமராவை பார்க்காமல் எங்கேயோ பார்த்தாள். அவள் முகத்தை தன் புறம் திருப்பியவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்து அதனை அப்படியே போட்டோ எடுத்துக் கொண்டான். அவனது முத்தத்தில் கரைந்தவள், எதுவும் பேசாமல் காரினுள் ஏறி அமர்ந்து கொண்டாள். அவளையே இரண்டு நிமிடம் பார்த்தவன் மறுபுறம் வந்தமர்ந்து காரைக் கிளப்பினான். அலுவலகம் வரும்வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கார் அலுவலக வளாகத்தில் நுழைந்ததும் புதிய எம்டி-க்கான வரவேற்பு அலங்காரங்கள் நிலாவின் கண்ணில் பட்டது.

‘அச்சச்சோ, இப்போ மேனேஜர் கிட்ட என்ன சொல்றது’ என்று உதறல் தொடங்கியது.

பார்க்கிங் ஏரியாவில் கார் நுழைந்தது, அவன் முதன் முதலில் நிலாவை சந்தித்த இடத்தில் காரை நிறுத்தினான். தன் தந்தையின் தீர்ப்பில் கோபம் கொண்டவன், என்ன செய்வது என்று மும்மரமாக யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு பெண் தன்னை நோக்கி வருவதைக் கண்டவன் அவளது அழகில் மயங்கினான் என்பது உண்மை. அவன் பல பெண்களைப் பார்த்திருக்கிறான், ஆனால் பார்த்ததும் மனதில் பதிந்து விடும் போன்ற அவளது முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று அவனுக்கு தோன்றியது. அதிலும் அவளது மூக்கில் மின்னிய மூக்குத்தி மிகவும் அழகாகவும் அவளுக்குப் பொருத்தமாகவும் இருந்தது. தன் அன்னைக்கு அடுத்து அவன் ஒரு பெண்ணின் மூக்கில் மூக்குத்தியைப் பார்த்தது அவளிடத்தில் தான். ஆனால் தன் அருகில் வந்து தன்னை அதட்டிய அவளிடம் அவனுக்கு கோபம் தான் வந்து தொலைத்தது. காரைக் கிளப்பி அவளைக் கடந்து செல்லுகையில் அவளையே தான் அவன் பார்த்திருந்தான். அடுத்தடுத்து நடந்த சந்திப்புகள் மோதலில் முடிந்ததும் எப்படி அனுகுவது என்று காத்திருந்தான். விழாவில் பாட வேண்டும் என்று சொன்னவள் பாட மறுத்ததும் தனது நண்பனான அந்த பாடகனிடம் முன்பே கூறியிருந்தது போல நிலாவை எப்படியோ மேடை ஏற்றிப் பாட வைத்தான். எதிர்பாராது நடந்த ஷீலாவின் திருமணம் அதனை நிலா விக்கியிடமும் தன்னிடமும் சொல்லாதது என்று ஒவ்வொன்றாக இடையில் நடந்து அவர்களுக்கிடையில் இடைவெளியைக் கூட்டியது. மேலும் ஒரு டிரைவரை கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன் என்று நிலா வாயிலிருந்து வந்த வார்த்தைகள் அவனை யோசிக்க வைத்தன. இவளும் மற்ற பெண்களைப் போல் தான் என்று நினைத்தவன் அதனை நம்ப தன் மனம் மறுப்பதையும் உணர்ந்தான். அவளை விட்டு ஒதுங்கிவிட நினைத்தவன் அவள் தன்னிடம் பேச முனைவதையும் கண்டுகொண்டான், ஆனால் ஏதோ ஒரு வெறுப்பு அவளிடம் நெருங்க விடாமல் செய்தது. அன்றும் அப்படித்தான் தன் திருமணத்தைக் குறித்து தாய் கூறியதைக் கேட்டவன் மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் தனிமையைத் தேடி கேண்டீனிற்குச் சென்றான். அங்கு நிலா டேபிளில் தலை கவிழ்த்தி படுத்திருப்பதைப் பார்த்து அவளுக்கு உடம்புக்கு சரியில்லை என்று நினைத்து அவள் எழும்வரை அவளருகிலேயே அமர்ந்திருந்தான். சிறிது நேரம் கழித்து எழுந்தவளின் முகம் உணர்த்திய சோகத்தில் அவளுக்கு ஆறுதல் அளிக்க எண்ணியவன் அவள் கேட்டதும் அவளை கடற்கரைக்கு அழைத்துச் சென்றான். அவளது அருகாமை அவனுக்கு பெரும் அவஸ்தையாக இருந்தது. மென்னவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவன் தவித்தான். பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவன் வாழ்நாள் முழுவதும் அவளுக்கு ஆறுதல் அளிக்க தன்னால் முடியாதே என்று நினைத்து வருத்தப்பட்டான். அன்னையின் வேண்டுகோளா இல்லை தன் மனமா என்று யோசித்தவன், நிலாவை மீண்டும் பார்க்க நேர்ந்தால் தன் மனம் மாறிவிடும் என்று திருமணத்திற்கு முன்பு அலுவலக வளாகத்தில் நிற்காமல் ஓடி ஒளிந்தான். திருமணத்தன்று காலைவரை தன் மனதை கட்டுப் படுத்தியவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதன்படி திருமணத்தன்று காலையில் தான் மணக்கப் போகும் பெண்ணிடம் தன் மனதில் இருப்பதைச் சொல்லி சிறிது காலம் பொருத்துக் கொண்டு உதவுமாறு கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தான். ஒன்று அவள் சம்மதிப்பாள் இல்லையென்றால் திருமணத்தை நிறுத்தக்கூடும் என்று கடைசி வாய்ப்பாக அதனைச் செய்தான். நிலாவிடம்தான் அதனைக் கூறுகிறோம் என்று தெரியாமலேயே கூறிச்சென்றவன், ‘நிலா’ என்ற பெயரைக் கேட்டதும் தன்னுடைய நிலா தானா என்று மணப்பெண்ணை பார்த்தவன் இன்ப அதிர்ச்சியடைந்தான். அதே சமயம் தன்னைத்தான் அவள் மணக்கப் போகிறாள் என்று அவளுக்கு முன்பே தெரிந்திருந்தால் ஏன் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் என்று அவனுக்கு கோபம் வந்தது. அனைத்தையும் தன் வசதிக்காக மறந்தவன், அவளைப் புண் படும்படி பேசிவிட்டான். அவள் மயங்கியதும் பதறியவன், எதுவும் யோசிக்காமல் அவளை மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினான். அங்கு நிலாவின் தாய் புலம்பியதைக் கண்டவன், ஒன்றை மட்டும் புரிந்து கொண்டான். நிலா ஏதாவது சாப்பிட்டு இருக்கக்கூடும் என்று அவளின் தாய் புலம்புகிறார் என்றால் விருப்பம் இல்லாமல் இந்த திருமணத்தை அவள் மேல் திணித்திருக்கக்கூடும். அப்படியென்றால் தன்னை ஏன் அவள் வேண்டாம் என்றாள் என்றெல்லாம் யோசித்தவன் பதில் கிடைக்காமல் குழம்பினான். எதுவாக இருந்தாலும் இந்த ஜென்மத்தில் தனக்கு நிலாதான் மனைவி எக்காரணம் கொண்டும் அவளை இழக்க அவன் விரும்பவில்லை. பழையதை மறந்தவன் புதிதாக ஒரு வாழ்க்கையை அவளுடன் வாழ்ந்தான். திருமணத்திற்கு பிறகு அவளை நன்கு புரிந்து கொண்டவன், தன் காதலை அவனது வழியில் அவளுக்கு உணர்த்தினான். அவளும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவனுடனும் அவனது குடும்பம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ரதி கர்ணனிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டாள்.

படார் என்று கார் கதவு மூடியதும் பழைய நினைவுகளிலிருந்து மீண்டவன், நிலா ஓட்டமும் நடையுமாக ஓடுவதைக் கண்டான்.

‘நிலா, வெயிட்’ என்று அவள் பின்னால் ஓடியவன் அவள் கையைப் பிடித்து கார் அருகில் அழைத்துச் சென்றான்.

“ஹேண்ட் பேக் வேண்டாமா?” என்று அவன் கேட்டதும்தான் அவளுக்கு அதன் ஞாபகமே வந்தது.

உள்ளிருந்து கைப்பையையும், ஒரு கவரையும் எடுத்தவன்.

“இந்தா இதில் சுடிதார் இருக்கு, போய் மாத்திட்டு இடத்திற்கு போ” என்று கவரை அவள் கையில் திணித்தவன். கைப்பையை தோளில் மாட்டி விட்டான்.

அவள் ஏதும் பேசாமல் மின் தூக்கியை நோக்கி நடந்தாள். அவனும் அவளுடன் மின் தூக்கியில் ஏறினான்.

“பேச மாட்டியா? கோபமா?” என்று அவன் கேட்டதும், கைப்பையை எடுத்து அவனை சரமாரியாக அடித்தாள்.

கைப்பையுடன் சேர்த்து அவளை அணைத்தவன் அவளது பட்டு கண்ணத்தில் இதழ் பதித்து தன்னிடமிருந்து அவளைப் பிரித்தவன், ”நான் எப்படி இருக்கிறேன்னு நீ சொல்லவேயில்லியே” என்று அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

(தொடரும்)
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg
எபி-15

அவள் ஏதோ சொல்ல வாய் திறக்கவும் மின் தூக்கியின் கதவு திறக்கவும் ஒன்றாக இருந்தது. தனது தளம் வந்ததும் அவனை நோக்கி பழிப்பு காட்டிவிட்டு வெளியில் வந்து நேரே பெண்கள் அறைக்குச் சென்று உடையை மாற்றிக் கொண்டாள். ’இப்படி பார்த்து பார்த்து செய்ய வேண்டியது ஆனால் அவனை பார்க்கக் கூடாதுன்னு கண்டிஷன் வேற’ என்று நினைத்து சிரித்துக் கொண்டாள்.

புடைவையை மடித்து கவரில் வைத்தவள், அடையாள அட்டையை கைப்பையிலிருந்து எடுக்கையில் ஏதோ பெட்டி கையில் தட்டுப் பட்டது. அதனை எடுத்துப் பார்த்தவள் இன்பமாக அதிர்ந்தாள். அதில் ‘டூ மை ஸ்வீட்டஸ்ட் மூன், வித் லவ் ஃப்ரம் யுவர் ஸ்கை” என்ற வாசகத்துடன் ஒரு பரிசு.

‘ராஸ்கல் இதுக்குத்தான் பையை வாங்குனானா’. அதில் என்ன இருக்கும் என்று ஆவலாக பிடித்துப் பார்த்தவள், அதிலிருந்த மூக்குத்தியைப் பார்த்ததும் ’அச்சோ சோ க்யூட்’ என்று அதற்கு முத்தம் வைத்தாள். இரவில் அவளை அனுகும் போதெல்லாம் அவளது மூக்குத்தியின் மீது முத்தம் வைத்திருக்கிறான், ’உனக்கு அழகே இந்த மூக்குத்தி’ தான் என்று பலமுறை சொல்லியிருக்கிறான். இப்போதே அவனைக் கண்டு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் இருவரும் இன்று வேலைக்கு தாமதித்து வந்திருக்கிறோம். அவன் எப்படியும் சமாளித்துக் கொள்வான் ஆனால் தன் நிலை ‘கடவுளே’ என்று நினைத்தவள் ஓட்டமும் நடையுமாக தனது இடத்திற்குச் சென்றாள். அனைவரும் அமைதியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அருகில் இருந்த பெண்ணிடம் “ஹேய் மேனேஜர் இல்லியா? என்று கேட்டுவிட்டு நிமிர்கையில் மேனேஜரே அவள் முன் வந்து நின்றார்.

“ப்ளீஸ் கம் டூ மை கேபின்” என்று சென்றுவிட்ட மேனேஜரின் பின் நிலாவும் சென்றாள். இன்னைக்கு மண்டகப்படி தான் என்று உள்ளே சென்றவளிடம் சில ப்ராஜெக்டுகளைக் குறித்து கேட்டு அறிந்து கொண்டவர், அவளது இடத்திற்குச் செல்லுமாறு’ கூறினார்.

‘அப்பாடி’ என்று வெளியில் வந்தவள், தனது இடத்திற்கு வந்து அமர்ந்ததும் ஆகாஷின் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

“ஐ லவ் யூ, தொளஸண்ட் கிஸ்ஸஸ் ஃபார் யூ’ என்று சற்றுமுன் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவனுக்கு அனுப்பினாள்.

”பத்தாது” என்று உடனே பதில் வந்தது.

“என்ன பத்தாது”

“கிஸ்’

“உதை”

“வேண்டாம்” என்று அலைப்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பு விளையாடிக் கொண்டிருந்தாள்.

“ஹேய் நிலா கம் லெட்ஸ் கோ” என்று அவளது குழுவைச் சேர்ந்த பானுமதி அழைத்ததும் திருதிருவென்று முழித்தாள்.

“எங்க”

”ஹ்ம்ம் மெயில் செக் பண்ணலையா?”

“இல்லை, என்ன விஷயம்”

”சரி ஏன் லேட் இன்னைக்கு? மேனேஜர் என்ன சொன்னார்? செம டோஸா?”

“லேட் ஆயிடுச்சு, ஆனால் மேனேஜர் எதுவும் சொல்லலை, அதுதான் அதிசயமா இருக்கு”

“ஈஸ் இட்?, இன்னைக்கு உனக்கு டைம் நல்லாயிருக்குன்னு நினைக்கிறேன்”

உண்மைதான் என்று நினைத்துக் கொண்டாள். ‘அய்யோ, ஆகாஷிற்கு பதில் அனுப்பவில்லையே’ என்று அலைப்பேசியை பார்த்தாள்.

“பிடிச்சிருக்கா’ என்று கேட்டிருந்தான்.

அலைப்பேசியைப் பார்த்து சிரித்துக் கொண்டவளை சொடக்கு போட்டு அழைத்த பானுமதியிடம் பல்லை காட்டினாள்.

”என்ன மேடம், நியூ சல்வார், ஹேப்பி மூட், என்ன விஷேஷம்?”

“ஒன்னுமில்லை, சும்மா தான்”

“எனிவே, சல்வார் உனக்கு பொருத்தமா அழகா இருக்கு”

குனிந்து தன்னை பார்த்துக் கொண்டாள். நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் ஆடம்பரம் இல்லாத ஆடை.

”சரி பார்த்தது போதும், எழுந்து வா”

“எங்க?”

“ஆடிட்டோரியத்திற்கு, புது எம்.டி யை வெல்கம் பண்ணனும்”

“ஆமாம், ஃபங்ஷன் இன்னும் முடியிலையா?”

“இல்லை டியர், டைம் சேஞ் பண்ணீட்டாங்க”

“ஓ, அதுதான் மேனேஜர் எதுவும் சொல்லலியா?”

“அதுவா இருக்க வாய்ப்பில்லை, ஆனால் என்னன்னு தெரியலை, மே பி ஹீ இஸ் இன் எ குட் மூட்”

“சரி ஃபைவ் மினிட்ஸ், மெயில் செக் பண்ணிட்டு வந்திடறேன்”

“ஷூயர்” பானுமதி அங்கேயே நின்று கொண்டாள்.

மின்னஞ்சலை சரி பார்த்தவள். ஆகாஷின் குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பினாள்.

“ரொம்ப புடிச்சிருக்கு, சோ க்யூட்” என்று அனுப்பிவிட்டு பானுமதியுடன் இணைந்து அரங்கத்திற்குச் சென்றாள்.

சுமார் ஐயாயிரம் நபர்கள் அமரும் அரங்கத்தில் நடுப்பகுதியில் இருவரும் ஓரமாக அமர்ந்து கொண்டார்கள். அனைவருக்கும் மேடையில் நடப்பது பார்ப்பதற்கு வசதியாக அங்காங்கே பெரிய தொலைக்காட்சிகளையும் திரைகளையும் பொருத்தியிருந்தார்கள். நிலாவிற்கு அங்கு சுற்றியும் என்ன நடக்கிறது என்பதில் நாட்டம் இல்லை. தொலைப்பேசியில் ஆகாஷிடமிருந்து ஏதேனும் பதில் வருகிறதா என்று பார்ப்பதும், பானுமதியின் பேச்சிற்கு செவி கொடுத்து கேட்பது போல் நடிப்பதுமாக இருந்தாள். இடையிடையே ஆகாஷ் எங்கேனும் தென்படுகிறானா என்றும் தேடினாள். விழா தொடங்கியது, கம்பெனியின் முக்கிய நபர்கள் கம்பெனி குறித்தும் அதன் வருங்கால வளர்ச்சி குறித்தும் மேடையில் பேசினர். அடுத்து கம்பெனியின் சி.ஈ.ஓ-வை திரையில் காண்பித்ததும், பானுமதி “ஹே நிலா, பாரு பாரு, ஆள் எப்படி அசத்தலா இருக்கிறார்” என்று தொலைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்த நிலாவை இடித்தாள்.

நிமிர்ந்து திரையில் பார்த்த நிலா, ‘அவ்ளோ அசத்தலா ஒன்னும் இல்லை’ என்று கூறிவிட்டு குணிந்து கொண்டாள்.

“இதுக்குத்தான் இந்த கல்யாணம் ஆன பீஸுங்ககூட இது மாதிரி ஃபங்ஷனுக்கு வரக்கூடாதுங்கறது, உண்மையே பேசாதுங்க. கணவனே கண்கண்ட தெய்வம்னு பாவ்லா பண்ணுங்க” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

“நீ சொன்னாலும் சொல்லாட்டினாலும் என் ஹஸ்பெண்ட் ஹேண்ட்சம் தான்” என்று அவளுக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்தாள்.

‘ஆமாம் ஆமாம், கல்யாணத்திற்கும் கூப்பிடலை, ஒரு ட்ரீட் தரலை. அட்லீஸ்ட் ஒரு போட்டோ, ஹூஹூம் அதையும் காட்டலை அப்புறம் நாங்க எப்படி சொல்றது”

நிலாவின் திருமணத்தை தற்போது அலுவலகத்தில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சரஸ்வதியும் கூறியிருந்தார், ஆகாஷும் கூறியிருந்தான். அவள் இருந்த மனநிலையில் அதற்கான காரணத்தையும் அவள் கேட்கவில்லை. ஏன் திருமணத்தை மறைக்க வேண்டும்?... என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே பானுமதி நிலாவை இடித்தாள்.

”என்ன ட்ரீம்ஸா, இது ரொம்ப ஓவர், கல்யாணம் ஆகாத என்னை பக்கத்தில் வெச்சுகிட்டு இப்படியெல்லாம் ட்ரீம்ஸுக்கு போகக்கூடாது”

நிலாவிற்கு சிரிப்புதான் வந்தது.

“சீக்கிரம் சீக்கிரம் உன் ஆளு போட்டோவை காட்டு, உன் ஆளா என் ஆளான்னு பாத்திரலாம்”

“உன் ஆளா?”

“அட நம்ம சிஈஓ தான்”

“என்ன சொல்ற பானு”

“மச்சி, கல்யாணம் ஆன பெண்களுக்கு ஒரே ஆள்தான் ஆனால் கல்யாணம் ஆகாத என்னைப் போல பெண்களுக்கு எல்லாருமே ஆள்தான்” என்று தான் ஏதோ பெரிய ஜோக்கை சொல்லிவிட்டதாக சிரித்துக் கொண்டாள்.

என்ன செய்யலாம் ஆகாஷின் போட்டோவை காட்டலாமா வேண்டாமா? அவனுக்கு தெரிந்தால் பிறகு அதற்கும் வாங்கி கெட்டிக்க வேண்டும். எப்படியும் ஒருநாள் எல்லாருக்கும் தெரியத்தான் போகிறது. அதுவும் இல்லாமல் ஒரு நிமிடம் பார்ப்பவளுக்கு ஆகாஷின் முகம் ஞாபகத்தில் இருக்கவா போகிறது, காட்டிவிடலாம் இவளா நானா என்று பார்த்து விடலாம் என்று முடிவெடுத்தவள் அன்று காலை ஆகாஷுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை காண்பித்தாள். அவளிடம் இருக்கும் ஒரே புகைப்படமும் அதுதான், இருவரும் அவ்வளவாக வெளியில் சென்றதில்லை, சென்றாலும் போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை. ஒன்றிரண்டு முறை எடுத்த போட்டோக்கள் அவனது அலைப்பேசியில் இருந்தன.

“சரி கொடு யாரு ஹேண்ட்சம்னு நான் சொல்றேன்” என்று அலைப்பேசியை வாங்கிக் கொண்டாள்.

அலைப்பேசியை வாங்கிய பானுமதி ”வாவ், ப்யூட்டியுள் க்ளிக், சைட் போஸில் யுவர் ஹஸ் ஈஸ் வெரி ஹேண்ட்சம், வேற பிக் இல்லியா? இந்த மாதிரி பிக் காண்பிச்சு என்னோட ஸ்டொமக் பர்னிங்கை வாங்கி கட்டிக்கிற” என்று நொடித்துக் கொண்டாள்.

அவளது பேச்சைக் கேட்டவள் மேலும் சிரித்தாள், பானுமதி திரையையும் அலைப்பேசியில் இருந்த போட்டோவையும் மாறி மாறி பார்த்தாள். அலைப்பேசி கையில் இல்லாததால் நிலாவும் திரையைப் பார்த்தாள், அந்த முகத்தை எங்கோ பார்த்த ஞாபகம், ‘எங்க பார்த்தேன்’ என்று யோசிக்கத் தொடங்கினாள். ஞாபகத்திற்கு வந்துவிட்டது ‘இவரை இன்னைக்கு காலையில் ரெஜிஸ்டர் ஆபிஸில் பார்த்தோமே, ஆகாஷுடன் நண்பர் போல பேசிக் கொண்டிருட்தாரே’.

“பானு, இவர் ஜேகே சாரோட பையனா?”

“இல்லையே, ஜேகே சாருக்கு ஒரே பையன் தான் அவர் தான் இன்னைக்கு புதிய எம்டியா பதவி ஏற்கிறார், ஏன் கேட்கிற”

“சும்மாதான்”

“ஆனால் சிஈஓ வும் ஜேகே சாரோட ரிலேடிவ் தான், அதான் இந்த சின்ன வயசிலே இந்த மாதிரி பொஷிசன் எல்லாம் குடுக்குறாங்க”

“ச்ச ச்ச அப்படியிருக்காது, இவ்வளவு பெரிய கம்பெனியை வழிநடத்தனும்னா அதற்கான திறமை வேணும் அந்த அடிப்படையில்தான் குடுத்திருப்பாங்க”

“அதுவும் சரிதான், ஜேகே சாரோட பையனும், இவரும் வெளிநாட்டில் படிச்சவங்களாம், சோ டேலண்டட்டாதான் இருப்பாங்க”

“ஓ உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்”

“ஹி ஹி ஹி, உன்னை மாதிரி ட்ரீம்ஸ்ல ட்யூட் பாட ஆள் இல்லாதனால, வெட்டியா இருக்கிற டைம்ல இந்த மாதிரி டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணிக்குவேன்” என்று பெருமையாக சொல்லி சிரித்தாள்.

“சிரிச்சது போதும், மொபலைக் கொடு” என்று அலைப்பேசியை வாங்கி ஆகாஷிடமிருந்து ஏதேனும் குறுஞ்செய்தி வந்திருக்கிறதா என்று பார்த்தாள். எதுவும் வராததால் ஏமாற்றம் அடைந்தவள், காலையிலிருந்து அவன் அனுப்பிய குறுஞ்செய்திகளை திரும்ப திரும்ப படிக்கத் தொடங்கினாள்.

சிஈஓவின் பேச்சு முடிந்து புதிய எம்டி யை அறிமுகப்படுத்த ஜெகே என்கிற ஜெய கிருஷ்ணன் எழுந்து வந்தார். பானுமதி மேடையில் கவனமாக இருக்க, நிலா அலைப்பேசியில் மூழ்கி இருந்தாள்.

“அனைவருக்கும் வணக்கம், அதிகமாக பேசி உங்கள் சமயத்தை வீணடிக்காமல் நமது கம்பெனியின் புதிய மேனேஜிங் டைரக்டரும் எனது அருமை மகனுமான ஆகாஷை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்” என்று ஆகாஷை நோக்கி கையை நீட்டினார்.

ஆகாஷ் எழுந்து அனைவருக்கும் கைகூப்பி வணக்கத்தை தெரிவித்தவன், தந்தையின் அருகில் சென்று நின்று கொண்டான்.

திரையில் ஆகாஷைக் கண்டதும் அனைவரும் கை தட்ட ஆரம்பித்தனர் என்றால் பானுமதி அதிர்ந்து நிலாவின் புறம் திரும்பினாள். நிலாவோ வேறொரு உலகில் மூழ்கியிருந்தாள்.

தந்தையிடமிருந்து மைக்கை வாங்கியவன் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்துவிட்டு ஆங்கிலத்தில் பேசத் தொடங்கினான். அனைவரும் அவனின் பேச்சில் ஆ என்று வாயைப் பிளந்து மேடையையும் திரையையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பானுமதி நிலாவின் புறம் திரும்பி “நிலா, நிலா” என்று இடித்தாள்.

நிலாவின் காதில் எட்டியதாக இல்லை.

“ஹேய் வெண்ணிலா!” என்று அவளது முழுப்பெயரையும் அழைத்து நிலாவை உலுக்கினாள்.

’வெண்ணிலா” என்ற தனது முழுப்பெயரைக் கேட்டவள், ஆகாஷிடமிருந்து பதிலேதும் வராததால் சலிப்புதட்டி அலைப்பேசியையே வெறித்துக் கொண்டிருந்தவள் அதே சலிப்புடன் “என்னாச்சு பானு” என்று தோழியைப் பார்த்தாள்.

“என்னாச்சா, ஸ்கிரீனைப் பாரு” என்று அங்கிருந்த திரையைக் கண்களால் காட்டினாள்.

அவள் காட்டிய திசையில் பார்த்தவள் திரையில் ஆகாஷைப் பார்த்ததும், இவன் எதுக்கு அங்க நிக்கிறான் என்று புரியாமல் பானுவைப் பார்த்தாள்.

“உன் ஹஸ்பெண்ட் தான் ஜெகே சாரோட பையன்னு ஏன் முன்னாடியே சொல்லலை நிலா”

“வாட்” என்று அதிர்ந்தவள் தன்னையுமறியாமல் இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள்.

”ஹேய் நிலா!” என்று அவளை இழுத்து இருக்கையில் அமர்த்தியவள்.

“பானு இப்போ என்ன சொன்ன? திரும்ப சொல்லு” என்று திரையைப் பார்த்துக் கொண்டே கேட்டாள்.

“அதில் தெரிவது உன் ஹஸ்பெண்ட் தானே”

“ஆமாம்”

“அவரைத் தான் தன் மகன் ஆகாஷ்” என்று ஜெகே சார் அறிமுகப் படுத்தினார்.

“நல்லா கேட்டியா”

“ஆமாம், சரியாகத்தான் கேட்டேன். ஏன் நிலா ஷாக் ஆகிற, உனக்குத் தெரியாதா? இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறியா?”

”-”

நீ என்கிட்டயிருந்து மறைச்சிட்டயேன்னு தான் நான் நினைச்சேன் ஆனால் உன் முகத்தைப் பார்த்தா நான் நினைத்தது போல் இல்லைன்னு தோணுது. என்னன்னு கொஞ்சம் விவரமா சொல்றியா” என்று நிலாவின் தோள் தொட்டாள் பானுமதி.

நிலாவிற்கு எதுவும் புரியவில்லை. திரையைப் பார்த்தாள். அது அவளுடைய ஆகாஷ் தான், காலையில் அவன் அணிந்திருந்த அதே உடை, அவள் இத்தனை நாள் ஆசையாக அருகில் பார்த்த அதே முகம். ஆகாஷ் ஜெகேயின் மகன்னா ரதியும் கர்ணனும். தான் கனவு கண்டு கொண்டு இருந்தோமா? தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழித்தாள்.

இவளையே பார்த்துக் கொண்டிருந்த பானு அவள் கைகளைப் பற்றி “எனக்கு தெரியக்கூடாத விஷயம்னா, இட்ஸ் ஓகே, எதுவும் சொல்ல வேண்டாம், ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்று பற்றியிருந்த கைகளுக்கு அழுத்தம் கொடுத்து அவளுக்கு ஆறுதல் கூறினாள்.

“பானு, எனக்கு தலைசுற்றுவது போல் இருக்கு, ப்ளீஸ் ஹெல்ப் மி டு கெட் அவுட் ஆப் ஹியர்” என்று திருவிழாவில் தொலைந்த குழந்தை உதவி கேட்பதைப் போல் பானுமதியின் கைகளைப் பற்றிக்கொண்டாள்.

“ஷூயர், ஆனால் கொஞ்சம் வெயிட் பண்றியா, நம்ம இப்போ எழுந்து நடந்தால் நம்ம பக்கம் எல்லாரோட கவனமும் திரும்பும். இப்போதைக்கு நீ என் தோளில் சாய்ந்து கொள். இவர் பேசி முடிந்ததும் உன்னை வெளியே கூட்டிகிட்டு போகிறேன். ஓகே வா” என்று அவளை தன் தோள் மீது சாய்த்துக் கொண்டாள்.

சாவி கொடுத்த பொம்மையைப் போல பானுமதியின் தோள் மீது சாய்ந்து கொண்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது. தன்முன் விரிந்த பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் திரையில் தெரிந்த ஆகாஷைப் பார்த்தாள். ஏன் தனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்கிறது. அவளுக்கு ஓ வென்று அழ வேண்டும் போல் இருந்தது. முதலில் எல்லாம் அவனது ஆங்கிலச் சொற்கள் வித்தியாசமாக இருப்பதை கவனித்திருக்கிறாள். ஆனால் நாளடைவில் அவன் கவனமாக தமிழில் பேசினான், ஒன்றிரண்டு சொற்கள் இடையில் பேசுவான் ஆனால் அதைக் குறித்து அவ்வளவாக நிலா கண்டு கொள்ளவில்லை. அதுவுமில்லாமல் முன்பு ஒருநாள் அவனே சொல்லியிருக்கிறான் எம்டியின் கார் டிரைவர் என்றால் இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டானென்று. அவனது ஆங்கிலத்தில் தனது உறையை முடித்துக் கொண்டு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான். அத்தையும் மாமாவும் எப்படி? ஏன் ஆகாஷ் தன் அடையாளத்தை மறைக்க வேண்டும்?

”நிலா, கமான் வெளியே போயிடலாம்”

நிலா எதுவும் பேசாமல் எழுந்து கொண்டாள்.

வெளியில் சென்றவர்கள் நேரே கேண்டீனுக்குச் சென்றனர். சூடான டீயை நிலாவிற்கு குடிக்கக் கொடுத்த பானு எதிர்புறமாக அமர்ந்து கொண்டாள்.

“டீ ஆரிடும், குடி நிலா”

“-”

“ஆர் யூ ஓகே? டாக்டர் கிட்ட போகனுமா?”

வேண்டாம் என்பது போல் தலையை ஆட்டினாள்.

“சரி வா, ரெஸ்டு எடுக்க நம்ம கம்பெனியில் லேடிஸுக்கு ரூம் இருக்கு அங்க கொஞ்ச நேரம் படுத்துக்கிறியா?”

“வேண்டாம் பானு, நான் வீட்டுக்கு போகனும்”

“தனியா எப்படி போவ நிலா? நான் கூட வரவா?”

“வேண்டாம், எனக்கு ஒரு ஆட்டோ பிடிச்சு தரமுடியுமா?”

“ஷ்யூர், ஆனால் உன்னை இந்த நிலைமையில் தனியா வீட்டுக்கு அனுப்ப எனக்கு விருப்பம் இல்லை நிலா”

”பயப்படாத எனக்கு ஒன்னுமில்லை, ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்”

“ஓகே, நான் ஒன்னு சொல்றேன் கேட்பியா”

பாவமாக நிலா பானுவைப் பார்த்தாள். நிலாவை பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது பானுவிற்கு.

நிலாவின் விரல்களைப் பிடித்தவள், ”எதுவாக இருந்தாலும் மனசு விட்டு பேசுனா சரியாயிடும் நிலா. இப்ப நீ குழப்பத்தில் இருக்க, நீயா எதாவது யோசித்து மேலும் குழப்பிக்காம என்ன ஏதுன்னு விசாரி. என்கிட்ட நீ எதையும் சொல்ல வேண்டாம் ஆனால் சம்பந்தப்பட்டவங்க கிட்ட பேசு. ப்ளீஸ்” என்று நிலாவின் பதிலுக்காக காத்திருந்தாள்.

விரக்தியாக பானுவைப் பார்த்த நிலா கசந்த முறுவலுடன் எழுந்து கொண்டாள்.

“நிலா” என்று அவள் தோள் பற்றி நிறுத்தியவள், தன் புறமாக நிலாவைத் திருப்பினாள். “உன் தனிப்பட்ட விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் ஆனால் எப்ப எந்த உதவினாலும் தயங்காம என்னைக் கூப்பிடு நிலா”

”தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு நிலா நடக்கத் தொடங்கினாள்.

அவள் பின்னே சென்ற பானு தனக்கு தெரிந்த ஆட்டோவை பேசி அலுவலகத்திற்கு வரவழைத்து நிலாவை அதில் ஏற்றிவிட்டாள். பலமுறை பத்திரமாக கொண்டு செல்ல டிரைவரிடம் கூறியவள். நிலாவிற்கும் பல ஆறுதல்களைக் கூறி ஆட்டோவில் ஏற்றிவிட்டாள்.

ஆட்டோவில் வீட்டிற்கு வந்திறங்கிய நிலாவை ஒரு வித பதட்டத்துடன் வரவேற்ற ரதியை ஏறிட்டு பார்க்காமல் நிலா அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக்கொண்டாள். அவள் பின்னே ஓடிவந்த ரதி ‘நிலா, நிலா” என்று பலமுறை அழைத்தார். அரை மணிநேரம் கழித்து கதவைத் திறந்தவளை கட்டியணைத்த ரதி ‘என்னை மன்னிச்சிடும்மா, எதுவும் சொல்ல முடியாத சூழல், எங்களை வெறுத்திடாதம்மா” என்று அழத் தொடங்கினார்.

நிலா எதுவும் பேசாமல் சிலையாக நின்றாள். எது உண்மை எது பொய் என்று தனக்கே தெரியாத போது யாரை மன்னிப்பது, யாரை வெறுப்பது. இப்படி அனைவரும் சேர்ந்து தன்னிடம் எதையெல்லாம் மறைத்தார்கள், இத்தனை நாள் வாழ்க்கை ஒரு நாடகமா? ஏன்? எதற்கு? என்று புரியாமல் விழித்தாள்.

நிலாவிடம் எந்த அசைவும் இல்லாததால், தன்னைத் தான் சமாதனம் செய்து கொண்டு நிமிர்ந்த ரதி. “நிலா, எதையும் யாரும் மறைக்க நினைக்கலை, சூழ்நிலை தான் இதற்கெல்லாம் காரணம். மற்றபடி நீ வாழ்ந்த வாழ்க்கை உண்மை, எதையும் நினைத்து குழப்பிக்காத நிலா” என்று நிலாவின் தலை கோதினார்.

அவள் எதுவும் பேசாமல் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.

“கதவைப் பூட்டாதே நிலா, சாப்பாடு எடுத்து வரேன்” என்று கீழே சென்றவர் வேகமாக கையில் உணவுத் தட்டுடன் நிலாவின் அறைக்கு வந்தார்.

“சாப்பிடு நிலா” என்று அவளை அமர்த்து ஊட்டிவிட்டார்.

திக் பிரம்மை பிடித்தது போல் அனைத்தையும் உண்டவள் இரண்டு நொடியில் அத்தனையும் வாந்தி எடுத்தாள்.

“அச்சச்சோ நிலா, என்னடா பண்ணுது?” என்று அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தவர், காய்ச்சல் ஏதும் இல்லாததால் சமாதானம் அடைந்தார்.

“நீ படுத்து ரெஸ்ட் எடு நிலா, நான் அகிக்கு போன் செய்திட்டு வரேன்” என்று கீழிறங்கிச் சென்றார்.

தன்னை எப்படி ஒரு முட்டாளாக நினைத்திருந்தால் அனைவரும் சேர்ந்து தன்னை ஏமாற்றியிருப்பார்கள். முதலில் இங்கிருந்து கிளம்ப வேண்டும், இவர்கள் கண்ணில் படாத தூரத்திற்குச் செல்ல வேண்டும். என் வாழ்க்கை எல்லாருக்கும் விளையாட்டாக போய்விட்டதா? பெற்ற தாய் முதல் கட்டிய கணவன் வரை தன்னை ஏமாற்றி விட்டார்களே. அவன் வருவதற்கு முன் இங்கிருந்து கிளம்ப வேண்டும். என்ன செய்வது? எங்கு செல்வது? படுத்திருந்தவள் எழுந்து சில துணிகளை எடுத்து பைக்குள் வைத்தாள், அத்தியாவசிய பொருட்களையும் அவளது சான்றிதழ்களையும் எடுத்துக் கொண்டாள். ரதி கீழே இருக்கிறார், எப்படிச் செல்வது? எப்படியும் இங்கிருந்து கிளம்பத்தான் வேண்டும், ரதியை சமாளித்து விடலாம் என்று பையை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள்.

அங்கு மீனாட்சியும் வந்திருந்தார், நிலாவைக் கண்டதும் எழுந்து அவளருகில் வந்தவர் நிலாவையும் கையிலிருந்த பையையும் பார்த்து அவளது எண்ணத்தை புரிந்து கொண்டார்.

“நிலா, எல்லாத்தையும் விவரமா சொல்றேன், காது கொடுத்து கேளுடா” என்று அவள் கைகளைப் பிடித்தார்.



“ஆண்ட்டி, நீங்களும் இவங்க கூட சேர்ந்து எல்லாத்தையும் மறைச்சுட்டீங்களே. ஏன் எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது, என்னை எல்லாரும் முட்டாளாக்கிட்டீங்களே”

”இல்லை நிலா, நீ நினைக்கிற மாதிரி இல்லை. தயவுசெய்து கொஞ்சம் பொருத்துக்கோ அகியே வந்து எல்லாத்தையும் சொல்லுவான்”

“எனக்கு யாரும் விளக்கம் தர வேண்டாம், என்னை என் வழிக்கு விட்டிடுங்க” என்று கை கூப்பிவிட்டு வாயிலை நோக்கி நடந்தாள். ரதியும் மீனாட்சியும் பதறியடித்துக் கொண்டு அவள் பின்னே சென்றனர்.

நிலா வீட்டை விட்டு வெளியில் இறங்கவும் ஆகாஷ் காரில் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.

காரில் இருந்து இறங்கி வந்த ஆகாஷ், நிலாவின் அருகில் வந்து அவள் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு அவள் கையைப் பிடித்து இழுக்காத குறையாக காரினுள் ஏற்றினான்.

“டேய் அகி, நில்லுடா”

“நான் பார்த்துக்கிறேன், நீங்க வண்டியில் ஏறுங்க”

மீனாட்சி எதுவும் சொல்லாமல் ரதியை நோக்கி தலையை ஆட்டிவிட்டு வண்டியில் ஏறிக்கொண்டார். கார் நேரே அந்த பெரிய பங்களாவை நோக்கிப் பாய்ந்தது. மாளிகைப் போன்ற வீட்டின் முன் காரை நிறுத்தியவன், அசையாமல் அமர்ந்திருந்த நிலாவிடம் “கீழே இறங்கு நிலா, எல்லாத்தையும் நான் சொல்றேன்” என்று அவளைப் பார்த்தான்.

மீனாட்சி எதுவும் பேசாமல் இறங்கி மருமகளுக்கு ஆரத்தி எடுக்க வீட்டினுள் வேகமாகச் சென்றார்.

“நிலா” என்று அவள் கைகளைப் பற்றியவனை எரித்து விடுவது போல் பார்த்தவள் கைகளை உதறினாள்.

கெஞ்சினால் வேலைக்காகாது என்று நினைத்தவன், கீழே இறங்கி மறுபுறம் வந்து கதவை திறந்து நிலாவை இறக்கினான். ஆரத்தியுடன் வாயிலில் வந்த மீனாட்சி ஆகாஷை நோக்கி “நிலாவோடு சேர்ந்து வந்து நில்லு அகி” என்று தன்னருகில் அழைத்தார். அங்கு வேலையாட்கள் அனைவரும் என்ன நடக்கிறது என்று வாயைப் பிளந்து கொண்டு மீனாட்சியின் பின் ஒவ்வொருவராக வந்து நின்றனர். நிலாவைத் தோளோடு சேர்த்து அழைத்து மீனாட்சியின் முன் நிறுத்தினான். நிலாவோ புழு நெளிவது போல் நெளிந்தாள். அவள் காதருகில் குனிந்தவன் “எல்லாரும் பார்க்கிறாங்க” என்று தோளில் அழுத்தம் கூட்டினான். அவள் நெளிவதை நிறுத்தினாள்.

ஆரத்தி எடுத்து கரைத்து வாயிலில் ஊற்றியவர் “வலது காலை எடுத்து வைத்து வாமா” என்று அழைத்தார்.

அவள் தோளிலிருந்து கீழிறங்கி கைவிரல்களைப் பிடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன்.

“மா, டென் மினிட்ஸ் நாங்க கீழே வந்திடுறோம். லன்ஞ் ரெடி பண்ணுங்க, பசிக்குது” என்று அவளை இழுக்காத குறையாக மாடியில் இருந்த தனது அறைக்கு அழைத்துச் சென்றான்.

வேண்டா வெறுப்பாக அவனுடன் சென்றவள் அறைக்குச் சென்று ஆகாஷ் கதவை தாழிட்டதும் கையை உதறினாள்.

“ஹேய் நிலா, எவ்வளவு வேணாலும் என்னை அடிச்சுக்கோ, பட் நான் சொல்றதை கொஞ்சம் கேளு”

“இத்தனை நாள் கேட்டதெல்லாம் போதும், இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை என் வழியில் விட்டிடுங்க” என்று கதவை திறந்தாள்.


(தொடரும்)
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg
எபி-16

அங்கு இவளையே பார்த்துக் கொண்டு கருப்பாக நல்ல தடியாக ஒரு நாய் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்து பயந்தவள் சற்று பின்னாடி நகர்ந்தாள். அவள் பின்னே வந்த ஆகாஷைக் கண்டதும் அந்த நாய் அவளைக் கடந்து ஆகாஷின் மீது தாவியது.

“அய்யோ ஆகாஷ்” என்று அவள் திரும்பிப் பார்க்கையில் அந்த நாய் ஆகாஷின் மீது தாவி அவனைக் கொஞ்சிக் கொண்டிருந்தது. அவனும் அதன் தலையை தடவிக் கொடுத்து முத்தம் வைத்துக் கொண்டிருந்தான்.

“ச்ச” என்று வெளியே இறங்கப் போனவளை கையைப் பிடித்து நிறுத்தியவன்.

”எதுவாக இருந்தாலும் வேலைக்காரர்கள் முன்னாடி காட்டிக்காதே, இட்ஸ் எ ரெக்வெஸ்ட்” என்று நாயிடம் செல்லுமாறு செய்கை செய்தான். பின்னர் நிலாவின் கையைப் பிடித்து கீழே இறங்கிச் சென்றான்.

அந்த நாய் சென்றுவிட்டதா, இல்லை அங்குதான் இருக்கிறதா என்று பயந்து பயந்து கீழே இறங்கினாள். அவள் உயரத்திற்கு குணிந்தவன் “சொன்னா கேட்களைன்னா ஜாக்கியை விட்டு உன்னை மிரட்டுவேன், சோ சொன்னபடி கேளு”

என்ன திமிர் இவனுக்கு, செய்யறதெல்லாம் செய்திட்டு என்று முறைத்தாள். அவன் வீடு ஒரு மாளிகை போன்று இருந்தது, மாடிப்படிகளில் இறங்கியவர்கள் நேரே உணவு மேஜைக்குச் சென்றனர். பன்னிரெண்டு பேர் அமரக்கூடிய உணவு மேஜையில் இவர்கள் இருவர் மட்டும் அமர்ந்திருக்க, வேலைக்காரர்கள் புதிதாக வந்த பெண்ணை பார்த்துக் கொண்டிருந்தனர்.

“கமலா, மசமசன்னு நிக்காமா சீக்கிரம் எல்லாத்தையும் கொண்டுவந்து வை” என்று கூறிக்கொண்டே மீனாட்சி அங்கு வந்தார். நிலாவைக் கண்டதும் சற்று தயங்கியவர் அவள் அருகே வந்து நிலாவின் கையைப் பிடித்தார். நிலா அவரை நோக்கி கசப்பான ஒரு புன்னகையை சிந்திவிட்டு குனிந்து கொண்டாள். அடுத்து ஆகாஷைப் பார்த்தார், அவன் திரும்பி வேலையாட்களைப் பார்த்ததும் அனைவரும் வெளியே சென்றனர். அவர்கள் சென்றதும் “கொஞ்சம் டைம் கொடுங்க, இப்போ புட் தாங்க” என்று அவரை சமாதானப் படுத்தினான்.

“சாரி அகி” என்று வேகமாக இருவருக்கும் பரிமாரினார். “நான் அத்தை வீட்ல சாப்பிட்டேன், கொஞ்சம் போதும்” என்று சிறிதளவு உணவை மட்டுமே வாங்கினாள்.

“அதான் அம்மா சொன்னாங்க, சாப்பிட்டதை எல்லாம் வாமிட் பண்ணிட்டேன்னு. லுக் நிலா, உனக்கு லோ பீபி இருக்கு. டைம்முக்கு சாப்பிடலைன்னா இப்படியெல்லாம்தான் நடக்கும்” என்று அக்கரையாய் கூறிவிட்டு உண்ணத்தொடங்கினான்.

அவன் சொன்னது உண்மைதான், இந்த வீட்டில் சாப்பிடக்கூடாது என்றுதான் நினைத்தாள், ஆனால் எப்போதும் இல்லாதுபோல் பசி உயிரை எடுத்தது, அதுதான் எதுவும் சொல்லாமல் அமர்ந்து கொண்டாள். அவன் மேல் கொலை வெறியாகத்தான் இருக்கிறாள் ஆனால் அவளுக்கு கோபத்தைக் கூட காட்ட முடியவில்லை. அவனை வெறுக்கவும் முடியவில்லை ஏற்கவும் முடியாமல் தவித்தாள். உணவு உண்டு முடித்துவிட்டு கை கழுவியவள் கையோடு உண்டதையும் வாந்தி எடுத்தாள். அதைக் கண்ட மீனாட்சி பதறியடித்து அவள் முதுகை தடவிக் கொடுத்தார். நிலாவின் அருகில் வந்த ஆகாஷ் “என்னாச்சு நிலா, எனிதிங் ராங்? டாக்டர் கிட்ட போகலாமா?”

அதற்கும் அவனை முறைத்தவள் எதுவும் சொல்லாமல் வாயிலை நோக்கி நடந்தாள். அவள் பின்னே சென்று அதைத் தடுத்த ஆகாஷையும் அவன் கையையும் மாறி மாறி பார்த்தாள். “என்ன நிலா” என்று அருகில் வந்த ஆகாஷின் மார்பின் மீது கை வைத்து அவனைதடுக்க நினைத்தவள் நிலைகுலைந்து அவன் மேல் சரிந்தாள்.

“அம்மா” என்று ஆகாஷ் அன்னையை அழைத்துவிட்டு, “நிலா, நிலா” என்று நிலாவின் கண்ணத்தைத் தட்டிப்பார்த்தான். எந்த அசைவும் இல்லை. அவளை கைகளில் ஏந்தியவன் வாசலுக்கு ஓடி அங்கு தயாராக இருந்த காரில் ஏறிக்கொண்டான். கார் சீறிப்பாய்ந்து மருத்துவமனையை அடைந்தது. விரைவாக அவளை அனுமதித்தவன், மருத்துவருக்காக காத்திருந்தான். இத்தனை நேரமாகியும் அவள் கண் விழிக்கவேயில்லை. அவளருகே அமர்ந்து நிலாவின் கைகளையே தடவிக் கொண்டிருந்தவன் மருத்தவர் வந்ததும் அங்கிருந்து நகர்ந்தான்.

‘என்ன மிஸ்டர் அடிக்கடி வைஃபுக்கு இப்படி ஆகுமா?”

“நோ”

“இன்னைக்காவது சாப்பிட்டாங்களா இல்லையான்னு தெரியுமா” என்று டாக்டர் அவனை நக்கலாகப் பார்க்கவும்தான் திருமணத்தன்று நிலாவை பரிசோதித்த மருத்துவர் என்று அவன் நினைவுக்கு வந்தது.

இருக்கிற நிலைமையில் இவர் நக்கல் வேற என்று கடுப்பாக பதிலளித்தான் ‘மத்தியம் லன்ஞ் இரண்டு முறை சாப்பிட்டாள், இரண்டு முறையும் வாந்தி எடுத்தா, இப்போ மயக்கமாயிட்டா”

“காலையில் எப்படி”

காலையில், ஓ மை காட், தெரியாதே. என்ன சொல்றது?

“தெரியாது டாக்டர், கேட்டு சொல்லவா?”

“தேவையில்லை. நான் போய் லேடி டாக்டரை அனுப்புறேன், கொஞ்சம் டீடெயில் செக்கப் வேண்டியிருக்கு, இதில் எழுதியிருக்க டெஸ்ட் எல்லாத்தையும் எடுத்திடுங்க. குளுக்கோள் போட சொல்றேன், கொஞ்சம் வீக்கா இருக்காங்க” என்று அங்குள்ள செவியலிரிடம் குறிப்புகளைக் கூறிச் சென்றார்.

தான் நிலாவை சரியாக கவனிக்கவில்லையா? என்ன செய்வது, இப்படி அடிக்கடி மயங்கினாள் அது சரியில்லையே. வேலைக்குப் போக வேண்டாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா. இனி கொஞ்சம் ஸ்டிரிக்டா இருந்தால்தான் சரி வரும் என்று மனதில் நினைத்துக்கொண்டான்.

பத்து நிமிடங்கள் கழித்து வயதான ஒரு பெண் மருத்துவர் வந்து நிலாவை பரிசோதிக்க வேண்டும் என்று ஆகாஷை வெளியில் நிற்குமாறு கூறினார். ஒரு சின்ன மயக்கத்திற்கு ஏன் இப்படி பயமுறுத்துகிறார்கள் என்று தாடையை தடவிக்கொண்டே வெளியில் சென்று அமர்ந்து கொண்டான். அவனது அலைப்பேசி அடித்துக் கொண்டே இருந்தது. அதை ஏற்கும் நிலையில் இல்லாததால் அதனை அனைத்து வைத்துவிட்டு தலையை கையில் தாங்கிக் கொண்டு அமர்ந்து கொண்டான். பத்து நிமிடங்களுக்குப் பிறகு மருத்துவர் வெளியில் வரவும் எழுந்து நின்றவனின் முகத்தில் தெரிந்த கலக்கத்தைக் கண்டவர் “பயப்படாதீங்க, எல்லாம் நல்ல விஷயம்தான்.. வாழ்த்துக்கள்! நீங்க அப்பா ஆகப்போறீங்க” என்று கை குலுக்குவதற்காக கையை நீட்டினார். இன்ப அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாமல் ஆகாஷ் அவரை கட்டியணைத்துக் கொண்டு “தேங்க்யூ வெரி மச் டாக்டர், தேங்க்யூ வெரி மச்” என்று நிறுத்தாமல் தன் நன்றியை தெரிவித்தான்.

“கூல் மேன், போய் உன் மனைவியை கட்டிப்பிடி’ என்று அவன் முதுகை தட்டிக்கொடுத்தார்.

அவரை விடுவித்தவன் “ஐ ஆம் சோ ஹேப்பி டாக்டர்” என்று அவர் கைகளை குலுக்கினான்.

“சந்தோஷம் எல்லாம் இருக்கட்டும், அவங்க கொஞ்சம் வீக்கா இருக்காங்க, கண் முழிச்சப்பிறகு சில டீடெய்ல்ஸ் கேட்க வேண்டியிருக்கு. இப்போதைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும். ஒரு பாட்டில் க்ளுக்கோஸ் முடிந்ததும் என்கிட்ட வந்து சொல்லுங்க நான் வந்து பார்க்கிறேன்”

“ஷூயர் டாக்டர்”

“அவங்களுக்கு ஏதும் மனவேதனை இல்லை அதிர்ச்சி ஏற்பட்டுதா? தப்பா நினைக்காதீங்க, இவ்வளவு நேரமா மயக்கத்தில் இருக்கனால கேட்கிறேன்” என்று ஆகாஷின் பதிலுக்காக அவனைப் பார்த்தார்.

“அது வந்து.. டாக்டர்..” என்று இழுத்தான்

“ஓகே, பெர்சனல்னா ஏதும் சொல்ல வேண்டாம், பட் மெடிக்கலி ஏதும் நான் தெரிய வேண்டியது இருந்தா தயங்காம சொல்லுங்க, இட்ஸ் வெரி இம்பார்டெண்ட் பார் ட்ரீட்மெண்ட். பெர்சனல் எதுவா இருந்தாலும் இனி அவங்க போக்கில் போய் கொஞ்சம் விட்டு பிடிங்க, இல்லைன்னா அது குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்தா அமையலாம்”

ஆகாஷின் முகம் வாடியதைக் கண்டவர் “உயிரை விட வேறெதுவும் நமக்கு முக்கியமில்லை, சோ எதுவா இருந்தாலும் விட்டு கொடுத்து போங்க” என்று அறிவுரை கூறிவிட்டுச் சென்றார்.

யோசனையுடன் நிலாவைச் சென்று பார்த்தவனுக்கு அவளை அள்ளி அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. நிலாவின் அருகில் சென்று அமர்ந்தவன் அவள் தலையை கோதிக் கொடுத்தான், பின் அவள் தளிர் விரல்களை தன் விரல்களோடு கோர்த்துக் கொண்டான்.

“என்னை மன்னிச்சிடு நிலா, எதுவும் வேணும்னு செய்யலை, உன்கிட்ட சொல்ல முடியாத சூழ்நிலை” என்று அவள் கையில் இதழ் பதித்தான்.

அவள் சிறிது அசைவதைக் கண்டவன் “நிலா, நிலா” என்று அவள் கண்ணத்தை தட்டினான். மெதுவாக கண் விழித்தவள் ஆகாஷைக் கண்டதும் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“நிலா, ப்ளீஸ் அழாதே. ஐ ஆம் ரியலி சாரி. ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோ” என்று அவள் கண்களை துடைத்துவிட்டான். அவள் தான் எங்கிருக்கிறோம் என்று அறையைப் பார்த்தாள். அவள் பார்வையில் பொருள் உணர்ந்தவன்.

“ஹேய் நிலா, தேங்க்யூ சோ மச், நம்ம இனிமேல் ரெண்டு பேர் இல்லை, மூன்று பேர்”

அவன் கூறியதன் அர்த்தம் புரியாமல் முழித்தாள்.

எழுந்து நிலாவின் நெற்றியில் இதழ் பதித்தவன், “நான் அப்பா ஆகப் போறேன், நீ அம்மா ஆகப்போற, ஹவ் நைஸ், என்னால நம்பவே முடியலை” என்று கூறி அவளின் வலது கையை தன் கைக்குள் பொத்திவைத்துக் கொண்டான். சற்றும் எதிர்பாராத இந்த செய்தியை கேட்ட நிலாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தன் மனம் என்ன நிலையில் இருக்கிறதென்றே உணரக்கூடிய நிலைமையில் இல்லாதவளுக்கு தான் கேட்ட செய்தி உண்மைதானா என்று நம்பவே முடியவில்லை. காலையில் நடந்ததெல்லாம் தன்னை உருக்குலைத்தது என்றால் தான் இப்போது கேட்ட செய்தி அவளால் நம்பவே முடியவில்லை. ஆகாஷின் அதே மனநிலைதான், அவளுக்கென்று ஒரு குடும்பம் திருமணத்திற்கு பிறகு கிடைக்கும் என்பதுவரை தான் இத்தனை நாள் அவள் யோசித்திருந்தாள் அதற்குமேல் அவள் நினைத்துப் பார்த்தது கூட இல்லை.

அவளது மனநிலையை உணர்ந்தவன் போல் அவள் கைக்கு அழுத்தம் கொடுத்தவன் “எல்லாம் நான் பார்த்துக்கிறேன், ரொம்ப யோசிக்காத, உனக்காக நான் இருக்கேன், யூ டேக் ரெஸ்ட் நவ்” என்று அவளுக்கு ஆறுதல் அளித்தான்.

அவள் மனது சிலிர்த்துக் கொண்டது, எனக்காக இவன் இருக்கிறானா? தேவையில்லை. இவனும் வேண்டாம் இவன் சொந்தமும் வேண்டாம். இனி எனக்கு என் குழந்தை போதும். எல்லாரும் சேர்ந்து என்னை முட்டாளாக்குனது போதும் என்று மனதில் நினைத்தவள் எழுவதற்கு முயற்சிக்கவும் மனதில் இருந்த வலிமை உடலில் இல்லாததால் தோய்ந்து போனாள்.

“சொல்வதை கேட்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டியா?” என்று அவளை அதட்டியவன், அவளை சாய்வாக படுக்கையில் படுக்க வைத்தான். “எனக்காகவும் உனக்காகவும் மட்டும் யோசிக்காத நிலா, இனிமேல் எது செய்வதாயிருந்தாலும் நம் குழந்தையையும் நினைத்துப் பாரு.” என்று அவளது வயிற்றின் மீது கை வைத்தான்.

அவனது செயலில் நெகிழ்ந்தவள், அவனை வெறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் தவித்தாள். அவளது முகம் அதனை பிரதிபளித்தது.

“நியாயமா நீ என் அப்பா மேலதான் கோபப்படனும், நாங்க எல்லாரும் சூழ்நிலையாலத்தான் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்ல முடியாம போனது மற்றபடி உன்னை ஏமாற்றனும்னு யாரும் நினைக்கலை..” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே திடு திடுவென யாரோ வருவது போல் சத்தம் கேட்டது.

“ப்ரோ, வாட் ஈஸ் திஸ். எத்தனை முறை ட்ரை பண்றது, மொபைல் எங்கே?” என்று இளங்கோ அறைக்குள் வந்தான். நிலாவைப் பார்த்து மெலிதாக புன்னகைத்தவன் ஆகாஷிடம் திரும்பி “அப்பாவும் அம்மாவும் ரொம்ப டென்ஷனா இருக்காங்க, ரதி ஆண்டி அதைவிட… உங்க டிரைவருக்கு போன் செய்தபோது தான் நீங்க இங்க இருப்பது தெரிந்தது. ஹாஸ்பிட்டல் வந்தா வீட்டில் விவரம் சொல்லனும்னு தோணாதா..?” என்று அதட்டிக் கொண்டிருந்தான்.

“என்னடா அதட்டல் எல்லாம் பலமா இருக்கு? நீ யாரை அதட்டுறன்னு தெரியுமா?” என்று தன் முப்பத்திரண்டு பல்லையும் காட்டினான்.

“ப்ரோ, நான் அதட்டலை திட்டுறேன் நியாயமா உங்களுக்கு கோபம் வரணும் ஆனால் நீங்க முப்பத்திரண்டு பல்லையும் காட்டுறீங்க, நீங்க நல்லாத்தானே இருக்கீங்க?”

“டேய் உதை வாங்கப்போற, என் பொண்ணு மட்டும் வெளியில் வரட்டும் அவ கையாலையே உன் தலையில் குட்டுறேன் பார்” என்று நிலாவைப் பார்த்தான். அவளுக்கு வெட்கம் வந்து தொலைத்தது, தலையை கவிழ்த்திக் கொண்டாள்.

ஆகாஷின் பதிலின் பொருள் உணர்ந்தவன் மகிழ்ச்சியில் “ரியலி? கங்கிராட்ஸ் ப்ரோ! வாழ்த்துக்கள்! அண்ணி” என்று ஆகாஷை அணைத்துக் கொண்டான்.

இளங்கோவைப் பார்த்து புன்னகைத்தவள் மீண்டும் தலை குனிந்து கொண்டாள்.

“அப்போ டபுள் ட்ரீட் தான், ஓகே நான் முதலில் வீட்டுக்கு கூப்பிட்டு சொல்லிடறேன்” என்று வெளியில் சென்றான்.

இளங்கோ சென்றதும் நிலாவின் அருகில் வந்தவன், “உனக்கு ஓகே வா நிலா?”

“என்ன?” என்பது போல் ஆகாஷைப் பார்த்தாள்.

“உன்னை மாதிரி ஒரு பொண்ணு?” என்று கண் சிமிட்டினான்.

அவளுக்கு கோபம் வந்தது, இவன் யாரு அதைச் சொல்ல என்று நினைத்தவளுக்கு ஆகாஷைப் போல் ஒரு குழந்தை தனக்கு வேண்டும் என்று தோன்றியது. அவனது கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் மொளனமாக விட்டத்தைப் பார்த்தாள்.

அனைவருக்கும் தகவல் சொல்லிவிட்டு உள்ளே வந்த இளங்கோ “ப்ரோ, ஏதாவது வாங்கி வரணுமா?” என்று நிலாவையும் ஆகாஷையும் பார்த்தான்.

“இல்லை நீ நிலா பக்கத்தில் இரு இளா, நான் டாக்டரை பார்த்திட்டு வந்திடறேன்” என்று நிலாவிடம் தலையை ஆட்டிவிட்டு சென்றான்.

இளங்கோவை இன்று காலையில்தான் திரையில் பார்த்தாள் நிலா, பானுமதி கூறியது போல் இவனும் அழகான ஆண் மகனாகத்தான் இருந்தான். நிலாவை நோக்கி புன்னகைத்தவன் சற்று தள்ளியிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

“ஆர் யு ஓகே அண்ணி?”

“ம்” என்று பதிலளித்தாள்.

நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் அண்ணி, ப்ரோவும் செம ஹேப்பின்னு நினைக்கிறேன் அவர் முகமெல்லாம் பல்லு பார்க்கவே சந்தோஷமா இருக்கு. உங்க கல்யாணத்துக்கு முன்னாடி நீங்கதான் கல்யாணப் பொண்ணுன்னு தெரியாம ப்ரோ புலம்பி தள்ளிட்டார். கல்யாணத்துக்கு வந்தவர் பொண்ணு முகத்தையே பார்க்கலை நீங்களும் குனிந்தே இருந்தீங்க, அய்யர் ‘நிலா’ன்னு பெயர் சொன்னதும் அவர் முகத்தை நீங்க பார்த்திருக்கனுமே ‘சான்ஸே இல்லை’. ப்ரோ எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன், ஜஸ்ட் அவரோட அந்த முகம் இப்ப ஞாபகத்திற்கு வந்துச்சு அதான் சொன்னேன். அவரோட சூழ்நிலை, தான் யாருன்னு அவரால சொல்ல முடியாம போச்சு, கல்யாணத்துக்குப் பிறகு பலமுறை புலம்பி இருக்கார். மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷன் கூட அவர் எம்.டி ஆனதுக்கப்புறம்னு தான் அங்கிள் சொல்லியிருந்தார் ஆனால் ப்ரோதான் ரெஜிஸ்ட்ரேஷன் நடந்தாதான் எம்டி பதவியை ஏத்துப்பேன் இல்லைன்னா முடியாதுன்னு அங்கிள் மாதிரியே பிடிவாதம் பிடித்தார். அங்கிள் மனுநீதி சோழன் மாதிரி தீர்ப்பு சொன்னதும் ஆண்ட்டி அதை ஏன்னு தட்டி கேட்காததால அவங்ககிட்ட கூட ப்ரோ சரியா பேசலை பார்க்கலை. அவருக்கு அவர் பேரெண்ட்ஸை ரொம்ப பிடிக்கும், அவர் இந்தியா வந்ததே ஜேகே அங்கிளை கொலை செய்ய சில சதி நடக்குதுன்னு கர்ணன் அங்கிள் சொன்னதாலத்தான், இல்லைன்னா ப்ரோ கொஞ்ச காலம் கழிந்துதான் வந்திருப்பார். எல்லாத்துலையும் ஒரு நல்லது போல் உங்களை அவர் சந்திச்சார், ஹீ இஸ் ரியலி லக்கி ஆண்ட் யூ டூ. என் ப்ரோங்கிறதால இல்லை அண்ணி, ஹீ இஸ் ரியலி எ குட் பெர்சன், நான் சொல்லி நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை இத்தனை நாள் கல்யாண வாழ்க்கையில் உங்களுக்கே அது புரிஞ்சிருக்கும்” என்று நிலாவின் முகத்தைப் பார்த்தான்.

“நிலா எதுவும் பேசாமல் அமைதியாக இளங்கோவைப் பார்த்தாள்”

”சாரி, முறையா என்னை அறிமுகப் படுத்த மறந்திட்டேன். என் பெயர் இளங்கோ, ஜேகே அங்கிளோட தங்கச்சி பையன், எங்க வீடு ஜேகே அங்கிள் வீட்டுக்கு பக்கத்து வீடுதான். ஆனால், ரெண்டு பேமலியும் பேசிக்க மாட்டாங்க. ஐ மீன், என் அப்பாவும் ஜேகே அங்கிளும் பேசிக்க மாட்டாங்க மத்தவங்க எல்லாம் பேசிக்குவோம். இட்ஸ் எ பிக் ஸ்டோரி, நான் பிறப்பதற்கு முன்னாடியே நடந்த சம்பவம். நான் உங்களை கார் பார்க்கிங்கில் பார்த்திருக்கேன் “உங்க வாய்ஸ் சூப்பரா இருந்ததுன்னு சொன்னேனே” ஞாபகம் இருக்கா? நீங்க யாருக்கோ வெயிட் பண்ணிகிட்டிருந்தீங்கன்னு நினைக்கிறேன். நிலாவிற்கு ஞாபகம் வந்தது, கம்பெனியின் ஆண்டு விழா முடிந்து ஆகாஷை சிறிது நாட்கள் பார்க்க முடியாமல் அவள் பார்க்கிங் ஏரியாவில் எப்போதும் அவன் ஓட்டி வரும் கார் அருகில் காத்திருந்திருந்தாள், அன்று வழக்கத்திற்கு மாறாக வேறொரு இளைஞன் அந்த காரை ஓட்டிச் சென்றான். அது இவனா?

“அண்ணா ஃபர்ஸ்ட் உங்களை கார் பார்க்கிங்கில் பார்த்ததா சொன்னார். அன்னைக்கு நீங்க அண்ணாவுக்காகவா காத்திருந்தீங்க?”

நிலா எதுவும் பேசவில்லை.

“சாரி, நீங்க டயர்டா இருப்பீங்க, நான் ஏதோ சந்தோஷத்தில் என்ன பேசுறதுன்னே தெரியாமல் பேசிகிட்டே இருக்கேன், யூ டேக் ரெஸ்ட்” என்று எழுந்து அறைக்கு வெளியில் சென்று நின்று கொண்டான்.

நிலாவிற்கு தலை வலிப்பது போல் இருந்தது, அமர்ந்த நிலையிலேயே கண்களை மூடிக்கொண்டாள். தன்னை பற்றி இளங்கோவிற்கு தெரிந்திருக்கிறது தனக்குத்தான் யாரைப் பற்றியும் தெரியவில்லை என்று நொந்து கொண்டாள்.

(தொடரும்)
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg
எபி -17

வெண்ணிலவு துணையிருக்க...

நிலாவிற்கு தலை வலிப்பது போல் இருந்தது, அமர்ந்த நிலையிலேயே கண்களை மூடிக்கொண்டாள். தன்னை பற்றி இளங்கோவிற்கு தெரிந்திருக்கிறது தனக்குத்தான் யாரைப் பற்றியும் தெரியவில்லை என்று நொந்து கொண்டாள். தன் மீது ஆகாஷிற்கு இருக்கும் காதலாவது உண்மையா? இல்லை அதுவும்… என்று அதற்கு மேல் யோசிக்க முடியாதவளுக்கு கண்ணீர் வழிந்தது, துடைத்துக் கொண்டாள் அழுது பிரயோஜனம் இல்லை, இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும் என்று கண்களைத் திறந்தாள். எதிரில் ஆகாஷ் வாடிய முகத்துடன் இவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான். ‘என்னாச்சு இவனுக்கு சோகமா இருக்கான், நல்லாத்தானே டாக்டரைப் பார்க்க போனான்’.

‘நிலா’

‘-’

”நான் ஒன்னு சொன்னா கொஞ்சம் கேட்பியா?”

“ப்ளீஸ், லீவ் மீ அலோன்” என்று கை எடுத்து கும்பிட்டாள்.

அவளின் மனநிலையை உணர்ந்து அவன் அமைதியானான். மருத்துவரின் அறிவுரைப்படி அன்று இரவு மருத்துவமனையிலேயே இருந்தனர். யாரும் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்று ஆகாஷ் கூறியதால் அனைவரும் இவர்களின் வரவிற்காக காத்திருந்தனர். மறுநாள் காலையில் மருத்துவர் பரிசோதித்துவிட்டு சில அறிவுரைகளைக் கூறி அனுப்பினார். வழி முழுவதும் எதுவும் பேசாது அமர்ந்திருந்தவள் கார் ஆகாஷின் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைந்ததும் திரும்பி ஆகாஷைப் பார்த்தாள்.

“என்ன” என்பது போல் பார்த்தான்.

“நான் உங்க வீட்டுக்கு வரலை, என்னை பழைய வீட்டிலேயே இறக்கி விடுங்க”

ஆகாஷ் எதுவும் பேசவில்லை. ரதி-கர்ணன் வீடு வந்ததும் அங்கு காரை நிறுத்தி மறுபுறம் வந்து நிலா இறங்குவதற்காக கார் கதவை திறந்து விட்டான்.

அவனை ஆழ்ந்த பார்வை பார்த்தவள் எதுவும் பேசாமல் இறங்கி வீட்டிற்குள் சென்றாள்.

கார் சத்தம் கேட்டு ஓடி வந்த ரதி நிலாவைக் கண்டதும் முகமெல்லாம் புன்னகையுடன் அவளை அழைக்க வாசலுக்கு வந்தார். அவரை கண்டு கொள்ளாதவள் நேரே தங்களது அறைக்குச் சென்றாள். அவள் பின்னே வந்த ஆகாஷ் ரதியை நோக்கி தான் பார்த்துக் கொள்கிறேன் என்பது போல் செய்கையில் உணர்த்திவிட்டு தங்களது அறைக்குச் சென்றான். நிலா தனது துணிகளை ஒரு பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

“நிலா, என்ன செய்யற”

“-”

“ப்ளீஸ், நீ என்ன முடிவெடுத்தாலும் நான் தடுக்க மாட்டேன். பட் எதுவா இருந்தாலும் ஒரு வாரம் ரெஸ்ட் எடுத்துகிட்டு அதுக்கப்புறம் யோசி. உன்னோட ஹெல்த் இப்போ சரியில்லை அதுவுமில்லாமல் இப்போ நீ ஒரு ஆள் இல்லை உனக்குள்ளே ஒரு ஜீவன் இருக்கு” என்று பேச்சை நிறுத்தினான்.

வேகமாக துணிகளை எடுத்து வைத்துக் கொண்டவளின் வேகம் குறைந்தது, யோசிக்கத் தொடங்கினாள். இவன் சொனதாக இருந்தது இனிமேல் என்று தனது வயிற்றை தொட்டுப் பார்த்தாள், சொல்லமுடியாத ஒரு புதுவித உணர்வு அவளை தாக்கியது, அப்படியே அருகில் இருந்த கட்டிலில் அமர்ந்தாள். தான் அவசரப்பட்டு ஏதேனும் செய்தால் அது குழந்தையை பாதித்துவிடும். யோசித்து ஒரு முடிவு எடுப்போம் என்று அமைதியாக இருந்தாள்.

தான் கூறியதை ஏற்றுக்கொண்டாள் என்று உணர்ந்தவன் மேலும் தொடர்ந்தான். “நிலா, நாங்க செய்தது தப்புன்னு சொல்லலை. ஆனால், அதற்கு பல காரணங்கள் இருக்கு, ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட் மீ ப்ளீஸ்’ என்று அவளை நெருங்க வந்தவனை வேண்டாம் என்பது போல் கையை நீட்டி தடுத்தாள். அதை எதிர்பார்த்தவன் எதுவும் பேசாமல் பின்நோக்கி நடந்தான்.

அதற்குள் கையில் பால் டம்ளருடன் அங்கு வந்த ரதி ’உள்ளே வரலாமா’ என்பதுபோல் ஆகாஷைப் பார்த்தார். ‘வருமாறு’ தலை அசைத்தவன் அங்கிருந்து நகர்ந்தான்.

“நிலா, கண்ணம்மா இந்த பாலை குடி டா” என்று ரதி நிலாவின் தலையை கோதினார்.

என்ன தோன்றியதோ நிலா அமர்ந்தவாரே அவரது வயிற்றை கட்டிக்கொண்டு அழத்தொடங்கினாள். என்னவோ ஏதோ என்று பயந்தவர் டம்ளரை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு அவளது முதுகை தடவிக்கொடுத்தார்.

“நிலா அழாதேடா அது உங்க ரெண்டு பேர்க்கும் நல்லதில்லை. கர்பிணி பெண்கள் அழக்கூடாது, நல்ல தைரியமா சந்தோஷமா இருக்கனும்”

“எப்படி அழாமல் இருக்கிறது சொல்லுங்க? எல்லாரும் என்னை ஏமாற்றியிருக்கீங்க. என்னை உங்க பொண்ணா நினைச்சிருந்தா இப்படி செய்திருப்பீங்களா?”

“நிலா அப்படியெல்லாம் சொல்லாதேடா”

இவர்களது பேச்சை கேட்டு அறையின் வாயிலில் வந்து நின்றவன் என்ன செய்வதென்று தெரியாமல் மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டு யோசனையோடு இவர்களைப் பார்த்தான்

“பின்னே எப்படி சொல்றது அத்தை? பின்னே நான் எப்படி சொல்றது?” என்று விசும்பினாள்.

“நிலா எனக்காக கொஞ்சம் அழாமல் இந்த பாலைக் குடி, மத்ததை அதுக்கப்புறம் பேசலாம்” என்று பாலை அவள் கையில் வைத்தார்.

நிலா தேம்பிக் கொண்டே அதனை குடித்து முடித்தாள். ஆகாஷிடம் ‘போகுமாறு’ கண் அசைத்தவர் நிலாவின் அருகில் அமர்ந்தார்.

ரதி கூறியவுடன் தயங்கியவாறு வெளியில் சென்றான். நிலாவின் கைகளை ஆறுதலாகப் பற்றியவர் அவளுக்கு கர்பிணிப் பெண்கள் கவனித்துக் கொள்ள வேண்டிய பொதுவான அறிவுரைகளைக் கூறியவர் அவளை ஓய்வெடுக்குமாறு கூறிவிட்டு கீழே இறங்கிச் சென்றார்.

ரதி கூறியவற்றை கவனமாக கேட்டுக்கொண்டாள். அனைத்தும் நிலாவிற்கு புதிய தகவல்களாக இருந்தது. இதுவரை கர்பம் குறித்தோ கர்பிணிப் பெண்கள் குறித்தோ அவ்வளவாக காது கொடுத்து கேட்காதவளுக்கு சற்று பதட்டமாகவும் பயமாகவும் இருந்தது. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு எங்காவது ஒரு பெண்கள் விடுதியில் சென்று தங்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள். ஆனால், குழந்தையை நினைத்துப் பார்க்குமாறு ஆகாஷ் கூறியதும் அவளுக்கு சற்று பயம் தோன்றியது, தனது செயலால் குழந்தைக்கு ஏதேனும் ஏற்பட்டுவிட்டால் தன்னால் அதை தாங்கிக் கொள்ள முடியாது என்று நினைத்தவள் சற்று நிதானமாக யோசித்துச் செயல்படலாம் என்று முடிவு செய்தாள்.

”தனது அன்னைக்கு விஷயம் தெரிந்திருக்குமா? தன்னைப் பார்க்க வருவாரா?” என்று நினைத்தவளுக்கு அவர் திருமணத்திற்கு முன்பு நடந்து கொண்டதும் சேர்ந்து ஞாபகத்திற்கு வரவே அந்த நினைப்பை கைவிட்டாள். அவருக்கு இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருக்குமா இல்லை அவருக்கும் ஆகாஷைக் குறித்து தெரியாமல்தான் இந்த திருமணத்தை ஏற்பாடு செய்தாரா? என்றெல்லாம் யோசித்தவள் தலை கனமாக தோன்றவே எழுந்து சென்று ஜன்னல் அருகில் நின்று கொண்டாள். அங்கு சென்று நின்றவளுக்கு ஆகாஷுடன் ஜன்னலின் அருகில் நின்று பேசியதெல்லாம் நினைவிற்கு வந்தது. முன்தினம் காலைவரை ஆகாஷைக் குறித்து நினைக்கும் போதெல்லாம் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது ஆனால் இன்றோ .. தோள்களை குலுக்கியவள் அவனைக் குறித்து நினைக்காமல் இருப்பதே மேல் இல்லையென்றால் தன்னுடைய கோபம் குறைந்துவிடும். அனைத்தும் சரியாகிவிட்டது என்று வாழ்க்கையை தொடங்கியவளுக்கு மீண்டும் தொடங்கிய இடத்திலேயே தான் வந்து நிற்பதை நினைக்கையில் வேதனை கூடியது. திருமணத்திற்கு தாய் வற்புறுத்தியது, திடீரென்று ஷீலா திருமணம் செய்து கொண்டது, நட்பாக பழகிய விக்கி பாராமுகம் காட்டியது என்று தான் தனித்து விடப்பட்டபோது துணையாக ஆகாஷ் வந்தான், சற்றும் எதிர்பாராமல் அவனே வாழ்க்கைத் துணையாகவும் கிடைத்தான். இனி வாழ்க்கையில் ஆகாஷின் துணை மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தவளுக்கு தனக்குத் தெரியாமல் இப்படி ஒரு இரகசியம் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்படித்தான் பல பெண்களும் ஏமாறுகிறார்களோ, இத்தனை நாட்கள் கூடவே இருந்தும் தனக்கு எதுவும் தெரியாமல் போனதே. எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கிறோம். இவர்களை வெறுக்கக்கூட முடியாத அளவிற்கு அவர்களை நேசிக்க வைத்துவிட்டார்களே. அறைக்கு வெளியே யாரோ வருவது போல் சத்தம் கேட்கவும் கண்களை துடைத்துக் கொண்டாள்.

மீனாட்சிதான் முகமெல்லாம் புன்னகையுடன் நிலாவை நோக்கி வந்தார், அவர் பின்னே ரதியும் வந்திருந்தார். நேரே நிலாவின் அருகில் வந்தவர் அவளுக்கு திருஷ்டி கழித்தார்.

“உடம்புக்கு எப்படி இருக்கு நிலா? ஆகாஷ் வரக்கூடாதுன்னு கண்டிப்பா சொன்னதால ஆஸ்பத்திரிக்கு வரமுடியிலைமா, அதுதான் நீ வந்ததும் ஓடி வந்தேன்”

“-”

“நிலா, வீட்டுக்கு வாமா எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். இந்த மாதிரி நிலைமையில் கவனமா இருக்கனும், நீ சின்ன பெண் வேற, ரதி உன்னை நல்லா பார்த்துக்குவா ஆனாலும் நீ அங்க இருந்தா எனக்கும் தம்பிக்கும் சந்தோஷமா இருக்கும்”

“-”

“நிலா, உன் மனசு எனக்கு புரியுது. ஆகாஷ் அப்பா ரொம்ப கோபக்காரர், அவர் சொன்னபடி கேட்கலைன்னா என்ன நடக்கும்னே சொல்ல முடியாது. நாங்கெல்லாம் அவருக்கு பயந்து கட்டுப்படலை நிலா, இந்த வயசில் கோவிச்சுகிட்டு அவரை விட்டுவிட்டு போனால் பாவம் மனுஷன் கஷ்டப்படுவார்னுதான் எதுவும் சொல்லாமல் அவர் சொல்றபடி கேட்டுகிட்டு இருக்கோம். அவர் நினைப்பு அவருக்கு பயந்து நாங்கெல்லாம் அவர் பேச்சை கேட்கிறோம்னு. அவருக்கு பயந்த காலமெல்லாம் உண்டு அது, நான் எனக்கே தெரியாமல் செய்த தவறால. அந்த கதையெல்லாம் சொல்ல இந்த ஜென்மம் போதாது. ஆனால் ஒன்னு நிலா, உன்கிட்ட சொல்லலைனாலும் கல்யாணத்திற்கு முன்னே அம்மாகிட்ட இதெல்லாம் சொன்னோம் ஏன்னா ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்கிற பெத்தவங்க தன் பெண் எப்படிப்பட்ட வீட்டில் வாழப் போகிறான்னு கூட தெரியாம இருக்கக்கூடாதுன்னு… என்று நிலாவைப் பார்த்தார்



நிலா விரக்தியாக மீனாட்சியைப் பார்த்தாள்.

“அப்படி பார்க்காத நிலா, உனக்கு எந்த கெடுதலும் நினைக்கலை. உன்னை என் மகளாகத்தான் நினைத்தேன், நீ என் பையனை கல்யாணம் செய்வதற்கு முன்பே உன்னை கோவிலில் வைத்து பார்த்த போதே ஏற்பட்ட நினைப்பு அது. ஏனோ உன்னை பார்த்த போதே எனக்கு பிடித்திருந்தது நிலா ஆனால் நீயே என் மருமகளாக வருவைன்னு நான் நினைத்து கூட பார்க்கலை. எல்லாத்தையும் கல்யாணத்திற்கு முன்னாடியே உன்கிட்ட சொல்லாதது பெரிய தப்புதான், எங்களை மன்னிச்சிடும்மா. ஆகாஷ் இதற்காக என்கூட சண்டை கூட போட்டான் நான் எந்த பெண்ணை கை காட்டினாலும் மணக்க சம்மதம் ஆனால் அனைத்து உண்மைகளையும் சொல்லித்தான் கல்யாணத்தை நடத்தனும்னு தீர்மானமா சொன்னான். ஒரு பக்கம் ஆகாஷோட அப்பா மறு பக்கம் ஆகாஷ், நான் என்ன செய்யறது நிலா? அவன் ஜாதகத்தில் ஆயுள் தோஷம் இருக்குது அதனால அதை நிவர்த்தி செய்யற மாதிரி பெண்ணோட ஜாதகம் கிடைக்க கால அவகாசம் குறைவா இருந்தது. அப்போதான் உன் ஜாதகம் கிடைத்தது, கல்யாணமும் நடந்தது. ஆகாஷ் கோவிலில் உன்கிட்ட பேசனும்னு சொன்னப்ப கூட நான் பயந்தேன்” என்று சில நொடிகள் அமைதியாக இருந்தார். பின் அவரே தொடர்ந்தார் “எந்த பெண்ணாக இருந்தாலும் இது மாதிரி உண்மையான நிலையை மறைத்து கல்யாணம் செய்தால் மனம் வெறுத்துதான் போவா, ஒரு பெண்ணா எனக்கு உன் மனசு புரியுது. ஆனால் எங்களை வெறுக்காதே நிலா” என்று அவளது கைகளைப் பிடித்தார்.



“நீ ஓய்வெடு நிலா, உன்னை கட்டாயப் படுத்தக்கூடாதுன்னு ஆகாஷ் சொல்லிட்டான். ஆனாலும் கொஞ்சம் பெரிய மனசு பண்ணி எங்களை மன்னிச்சு சந்தோஷமா எங்க ..இல்லை.. நம்ம வீட்டுக்கு வாமா” என்று அவளைப் பார்த்தார். நிலா எந்த பதிலும் கூறவில்லை.

மீனாட்சி எதுவும் பேசாமல் அங்கு நின்றிருந்த ரதியிடம் தலையை ஆட்டிவிட்டு கீழிறங்கிச் சென்றார்.

“நிலா” என்று அருகில் வந்த ரதி அவளை அழைத்து வந்து கட்டிலில் அமர்த்தினார். ”ஒரே நாளில் எல்லாத்தையும் சொன்னா உன்னால ஜீரணிக்க முடியாதுன்னு தெரியும் நிலா, ஆனாலும் வேறு வழியில்லை. நீ எந்த தப்பான முடிவையும் வாழ்க்கையில் எடுத்திறக்கூடாதுன்னு தான் நான் மறுபடியும் உன்கிட்ட பேச வந்தேன். ஆகாஷ் மீனா அக்காவோட பையனா இருந்தாலும் அவன் என்னையும் அம்மான்னுதான் கூப்பிடுவான். காதலிச்சு வீட்டை பகைச்சுகிட்டு வந்து கல்யாணம் செய்துகிட்ட எங்களுக்கு ஜேகே அண்ணாதான் தங்க வீடும் அவருக்கு ஒரு வேலையும் போட்டுத் தந்தார். எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலே போச்சு ஆகாஷை நாங்கள் எங்க பையனாத்தான் பார்த்தோம். அவனும் எங்களை அப்பா அம்மான்னுதான் கூப்பிட்டு வளர்ந்தான். அண்ணனை கூப்பிட்டு பேசுவதைவிட மாமாவைத்தான் கூப்பிட்டு அடிக்கடி இங்க நடப்பதை கேட்டு தெரிஞ்சுக்குவான். அண்ணனுக்கு தொழிலில் போட்டி அதிகம் அதேபோல எதிரிகளும் அதிகம். அவர் தொழில் வளர வளர எதிரிகள் எண்ணிக்கையும் வளர்ந்துகிட்டுதான் இருக்கு. பலமுறை அவருடன் காரில் போகும்போது கொலை முயற்சி நடத்திருக்கு ஆனால் கடவுளின் அருளால் எந்த அசம்பாவிதமும் நடந்ததில்லை. இதையெல்லாம் மாமா அகிகிட்ட சொல்லுவார். ஒரு கட்டத்தில், மாமாவிற்குமே அகி இங்கேயிருந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு அதான் அவனை புறப்பட்டு வரச்சொல்லி கெஞ்சினார்.

அண்ணிக்கு ஒன்றிரண்டு கொலை முயற்சிதான் தெரியும், எல்லாம் தெரிஞ்சா பயப்படுவாங்கன்னு நாங்க யாரும் அவங்ககிட்ட இதைபத்தி பேசமாட்டோம். அதான் அவங்க வாரவாரம் கோவிலுக்கு போயிடுவாங்க, அதை கூட வேண்டாம்னு பலமுறை அண்ணா தடுத்திருக்கார். அண்ணனுக்கு பயம் இல்லாமல் இல்லை, எங்க தன்னை குறிவைத்து தாக்குறவங்க அண்ணியையும் அகியையும் எதாவது செய்திடுவாங்களோன்னு வருத்தப்பட்டிருக்கிறார். அதுதான் அவர் அகியை வெளிநாட்டிலேயே இருக்கிறமாதிரி செய்தார். அண்ணாகிட்ட கேட்டா வரவேண்டாம்னு சொல்லிடுவார்னு, அகி தகவல் தராமல் திடீர்னு வந்திட்டான். அவன் வந்த அன்னைக்கே இவங்க மேல கொலை முயற்சி நடந்தது, அதில்தான் மாமாவிற்கு கால் அடிபட்டது. இதை தெரிஞ்சுகிட்ட அண்ணன் எப்பவும் போல அவர் தீர்பை சொல்லிட்டார். மாமா கால் குணமாகும்வரை தனக்கு டிரைவரா இருக்கனும் தன்னுடைய அடையாளத்தை யார்கிட்டயும் தெரியப்படுத்தக்கூடாதுன்னு. எங்க தன்னுடைய பையன்னு தெரிஞ்சா அகியை ஏதும் செய்திடுவாங்களோன்னு அண்ணாவுக்கு பயம் இருந்தது. இரகசியமா போலீஸ் உதவியால சில எதிரிகளை கண்டுபிடிச்சு கேஸில் உள்ள தள்ளிட்டாங்க, சிலரை எச்சரித்து விட்டுட்டாங்க. இதையெல்லாம் அகி வந்தப்புறம் அவனுடைய நண்பர்கள் உதவியாலதான் செய்தான். எங்கிருந்து விஷயங்கள் கசியிதுன்னே தெரியாது நிலா, இப்படியெல்லாம் சிக்கல் இருந்தது. மாமாவுக்கு அடிபட்டதும் அண்ணி பயந்திட்டாங்க, அகிக்கு ஏதாவது ஆகிடுமோன்னு அந்த பயத்தில் ஜாதகத்தை எடுத்திட்டு ஜோசியரை பார்த்தப்பத்தான் அவன் ஜாதகப்படி ஆயுள் தோஷம் இருக்கு, அதுக்கு பரிகாரமா மாங்கள்ய பாக்கியம் இருக்கிற பெண் ஜாதகத்தை சேர்கனும்னு சொன்னாங்க அதுவும் குறைந்த கால அவகாசம்தான் இருக்குன்னும் சொன்னாங்க. ஜேகே அண்ணாவோட பையனுக்கு வரன் பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சா எதிரிங்க யாராவது சதி செய்து அவங்க ஏற்பாடு செய்த பெண்கள் யாரையாவது வைத்து அகி வாழ்க்கையை கெடுத்துடுவாங்கன்னும் பயந்தாங்க. ஆனால், கடவுளா பார்த்து உன்னை காண்பிச்சார் நிலா. இல்லைன்னா அகி வாழ்க்கை என்னவாகியிருக்கும்னு தெரியாது. எங்க எல்லாருக்குமே உன்னை பார்க்கும் போது குற்ற உணர்ச்சி ஏற்படும், எல்லாம் தெரிந்தால் நீ எப்படி எடுத்துப்பையோன்னு.

மீனா அக்கா உன்னைப்பத்தி விசாரிக்காத நாளே இல்லை. தன் மகனுக்காக பார்ப்பதா, கணவருக்காக பார்ப்பதான்னு தெரியாமல் புலம்புவார். சரஸ்வதி அக்கா தினமும் கூப்பிடுவாங்க, நீ சாப்பிட்டியா, வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்திட்டியான்னு எப்பவும் உன்னை பத்தின நினைப்புதான். உன்கிட்ட முழுசா எல்லாத்தையும் சொல்லலையே தவிர நீ பார்த்தது, வாழ்ந்தது எல்லாமே உண்மையான வாழ்க்கைதான் நிலா. என்ன ஒன்னு, அகி யாருன்னு தெரிஞ்சு கல்யாணம் செய்திருந்தா பெரிய இடத்து மருமகளா வசதியோடு இருந்திருப்ப, அது தெரியாதனால வசதி குறைவான இந்த வீட்டில் இருக்க வேண்டியதாயிடுச்சு. அது மட்டுமில்லாமல்… என்று நிறுத்தினார்.

நிலா, மாமியாரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள், அவள் கேட்பதெல்லாமே ஏதோ திரைபடக் கதை போல் இருந்தது, தன் வாழ்க்கையில் நடந்ததாக தோன்றவில்லை.

“அகியோட மனைவியாத்தான் நீ இங்க வந்த, ஆனால் உன்னையும் நாங்க எங்களுக்கு பிறக்காது போன பெண் குழந்தையாத்தான் பார்த்தோம். சின்ன வயசில் அகியை வளர்த்தாலும் அவனுக்கென்று ஒரு வாழ்க்கை அமைந்ததும் அந்த பெண் எங்களை எப்படி ஏத்துக்குவாளோன்னு நாங்க பலமுறை யோசித்திருக்கோம். ஆனால், அந்த கவலையும் நீ மருமகளா வந்ததோட பறந்து போச்சு. அகி மாதிரிதான் நீயும் எங்ககிட்ட பாசத்தை காட்டின, இனி ஜென்மத்துக்கும் எங்களுக்கு குழந்தை இல்லைங்கிற மனக்குறை இருக்காது. எங்க பையனா அகியும் பெண்ணா நீயும் இருக்கிற சந்தோஷத்திலேயே நாங்க வாழ்ந்திடுவோம். உங்க குழந்தையை வளர்க்கிற பாக்கியத்தையும் நீங்க எங்களுக்கு தரணும். தருவியா நிலா?” என்று அவள் பதிலுக்காக காத்திருந்தார்.


நிலாவின் மனமோ ஆகாஷ் தாயிடம் கூறியதிலேயே நின்றது. யாரைக் கை காட்டியிருந்தாலும் திருமணம் செய்திருப்பான் அவனுடைய ஜாதகம் காரணமாக. என் இடத்தில் வேறு பெண் இருந்திருந்தாலும் இதே அன்பைத்தான் காட்டியிருப்பான். ‘ச்ச’ நான் அவனை அவனுக்காக நேசித்த மாதிரி என்னை அவன் நேசிக்கவில்லை. அவன் ஜாதகத்திற்காக ஆண்டி சொன்னாங்கன்னு என்னை கல்யாணம் செய்து வாழ்ந்திருக்கிறான். முன் தினம் இளங்கோ ஆகாஷைக் குறித்து சொன்னதையெல்லாம் வசதியாக மறந்திருந்தாள்.

(தொடரும்)
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpgEpi-23.png
எபி-18

தன் எதிரே அமர்ந்திருந்த ரதிக்கு என்ன பதில் சொல்வது? அவர் ஏதும் தனக்கு கெடுதல் செய்யவில்லைதான் மாறாக தாய் தந்தையுடன் வாழ்ந்தால் எப்படியிருக்கும் வாழ்க்கை என்பதை தான் அனுபவிக்க காரணமாக இருந்தவர். அவர் கூறியது போல் தன்னை அவர்களது பெண் போலத்தான் பார்த்துக் கொண்டார் அதில் எந்த குறையும் அவர் வைக்கவில்லை. அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, எதுவும் சொல்லாமல் அவர் மடி மீது தலைசாய்த்து படுத்துக் கொண்டாள். அவர்களுடன் சேர்ந்து வாழவும் முடியாமல் பிரிந்து செல்லவும் முடியாமல் தவித்தாள். சிறிது நேரம் அவள் தலையை ஆறுதலாகத் தடவியவர் அவளை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு கீழே சென்றார். சமயத்திற்கு உணவு, பழங்கள் என்று ஒவ்வொன்றாக அவள் அறைக்கே கொண்டுவந்து கொடுத்தார். இரண்டு நாட்கள் கழித்து அவளை பார்ப்பதற்கு கர்ணன் அவளது அறைக்கே வந்தார். அவரைக் கண்டதும் எழுந்து நின்றவள் அவர் அமர்வதற்காக நாற்காழியை எடுத்துப் போட்டாள்.

“உடம்புக்கு எப்பிடி இருக்கு நிலா?”

“_”

“எதுவானாலும் குரல் கொடு மா, ரதி ஓடி வருவா. உன்னை தொந்திரவு செய்ய வேண்டாம்னுதான் ஒதுங்கி இருந்தேன். உன்னை கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு அகியும் சொல்லியிருந்தான், ஆனால் உன்னைப் பார்த்து மன்னிப்பு கேட்கலைன்னா நிம்மதியா இருக்க முடியாதுமா, அதான்” என்று நிலாவைப் பார்த்தார்.

“மாமா, நீங்க என் அப்பா மாதிரி, தயவு செய்து இப்படியெல்லாம் பேசாதீங்க”

“இல்லை நிலா, எங்க சூழ்நிலை உன்கிட்ட அகியைப் பத்தியும் அவன் குடும்பத்தை பத்தியும் சொல்ல முடியலை. இப்பத்தான் எல்லாம் ஒருவிதமா ஒதுங்கியிருக்கு. கூடவே இருக்கிற எதிரியை இப்பத்தான் தெரிஞ்சுகிட்டோம், இனி கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாயிடும். அதற்கு பிறகு சார் சொன்னமாதிரி இந்த ஊர் உலகத்திற்கு உங்க கல்யாணத்தை தெரிவிச்சு பார்ட்டி குடுக்கனும். நீ நினைக்கிற மாதிரி அண்ணா வாழ்க்கை சுமுகமானது இல்லைமா, பல போட்டிகள், பல எதிரிகள்னு கஷ்டமானது. நீங்க யாரும் அதில் பாதிப்படையக் கூடாதுன்னுதான் அவர் யோசித்தார். அகியை இந்தியா வரவிடாம தடுத்திருந்ததே அண்ணாதான், அவனுக்கும் அங்கேயே பிடித்து போயிருந்தது. அண்ணன் தனியா கஷ்டப்படறது பார்க்க முடியாம அகியை இந்தியா வரச்சொன்னேன். அகி இந்தியா வந்ததும் அண்ணனுக்கு தெரியாம அவனை கூப்பிட ஏர்போர்ட் போயிருந்தேன். வழியில் வண்டி ரிப்பேர் ஆயிருந்ததால சமயத்திற்கு ஏர்போர்ட் போக முடியலை. தம்பி வேறோரு கார் பிடிச்சு வீட்டுக்கு வந்திடுச்சு, ஆனால் நான் திரும்பி வர வழியில் அண்ணாவிற்கு வேண்டாதவங்க எப்பவும் போல அவர் வண்டியில் இருக்கிறார்னு நினைச்சு ஆக்சஸிடண்ட் பண்ண முயற்சி பண்ணுனாங்க நான் சுதாகரிச்சு வண்டியை திருப்பிட்டேன், வழியில் இருந்த டிவைடர் மேல வண்டி வேகமா மோதிடுச்சு. ஏர் பேக் இருந்தனால எனக்கு பாதிப்பு ஏதும் பெரிசா ஏற்படலை, ஆனால் வண்டி மோதிய வேகத்தில் முன் பாகம் அமுங்கி காலில் அடிபட்டுடிச்சு. அண்ணாவிற்கு சரியான கோபம், அவர்கிட்ட சொல்லாம அகி இந்தியா வந்தது, முன்னமே அவருக்குத் தெரியும் இப்படியெல்லாம் நடக்கும்னு அதான் அகியை இந்தியா வரவிடாம தடுத்திருந்தார்னு ஹாஸ்பிட்டலில் அவர் என்னை பார்க்க வந்தபோது புலம்பவும்தான் நான் செய்த தப்பு எனக்கு புரிஞ்சிது நிலா. அவர்னாலதான் எனக்கு இப்படியாகிடுச்சுன்னு ரொம்ப குற்ற உணர்ச்சியில் புலம்பினார். ஆனால் நடந்ததையெல்லாம் மாத்தவா முடியும். அன்னைக்கே அண்ணா தீர்மானமா சொன்னார், அகி யாருன்னு வெளியில் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு அதனாலத்தான் அவர் அகியை கூடவே இருக்க மாதிரியும் அதே சமயம் அவன் யாருன்னு வெளியில் யாருக்கும் தெரியாத மாதிரியும் இருக்கட்டுமுன்னு எனக்கு சரியாகும்வரை டிரைவரா இருக்கச் சொன்னார். கொஞ்ச நாள் கழித்து எப்படியாவது அகியை இந்தியாவிலிருந்து அனுப்பனும்னுதான் நினைத்திருந்தார். ஆனால் அவசரமா கல்யாணம் செய்ய வேண்டி வரும்னு அவர் நினைக்கலை ஏன் நாங்க யாருமே நினைக்கலை. அண்ணிக்கு எதுவுமே முழுசா தெரியாது, அகி கல்யாண விஷயத்தில் மட்டும் அண்ணா தலையிடக்கூடாதுன்னு அண்ணி எப்பவுமே சொல்லுவாங்க அதனால கல்யாணத்திற்கு மட்டும் எந்த தடையும் சொல்லலை. என் மருமக எப்படி இருக்கான்னு அடிக்கடி ரதிகிட்ட பேசும் போது கேட்பார். எல்லாருமா ஒன்னா சந்தோஷமா அந்த வீட்டில் வாழனும்னு அவருக்கும் ஆசை நிலா. அவர் ரொம்ப சாதாரண நிலையிலிருந்து உயர்ந்தவர், குடும்பமா சந்தோஷமா இருந்தவர் சொந்த தங்கச்சி கல்யாண விஷயத்தில் அவரே தெரியாம செய்த ஒரு தவறுக்காக அவர் தங்கச்சிகூட சரியா முகம் கொடுத்து பேச முடியாமல் தவிக்கிறார். அந்த குற்ற உணர்ச்சியே அவருக்கு இன்னும் மாறலை, இப்போ உன்கிட்ட எப்படி எல்லாத்தையும் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியாம முழிக்கிறார். இப்போ தாத்தா ஆகிட்டார்னு சந்தோஷத்தில் துள்ளறார், நீ அகியோடு சேர்ந்து வாழ்ந்தால் இத்தனை நாள் அவர் இழந்திருந்த குடும்பச்சூழல் மீண்டும் அவருக்கு கிடைக்கும்னு நம்புறார். நான் சொல்றது உனக்கு புரியுதாமா?” என்று அவளை பாவமாகப் பார்த்தார்.

கடந்த சில நாட்களாக ஒவ்வொருத்தரிடமிருந்து இது போன்று அவரவர் தரப்பு ஞாயங்களைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவரவர் பார்வையில் அவர்கள் செய்தது சரிதான். ஆனால் தன்னுடைய மனநிலையைக் குறித்து கேட்கவோ புரிந்து கொள்ளவோ யாரும் முயற்சிக்கவில்லை.

நிலா ஏதும் பேசாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்ததால் அவரே தொடர்ந்தார். நான் சுருக்கமா சொல்றது இதுதான் மா “எங்களை மன்னிச்சிடு, பழயதை எல்லாம் மறந்திட்டு நீயும் அகியும் ஒன்னா நூறு வருஷம் வாழனும், அதுதான் எங்க எல்லாரோட ஆசையும்.” என்று எழுந்து கை கூப்பினார்.

“மாமா”

”நாங்க செய்தது சரின்னு சொல்லலை, ஆனால் உனக்கு எந்த கெடுதலும் பண்ணலை மா, தயவுசெய்து எங்களை மன்னிச்சிடும்மா, உடம்பை நல்லா பார்த்துக்கமா, எது நடந்தாலும் உனக்கு அம்மா அப்பாவா நாங்க துணையிருப்போம் நிலா” என்று அவள் தலையை வருடிவிட்டு இறங்கிச் சென்றார்.

நிலாவிற்கு கண்கள் நிறைந்திருந்தது, ஆகாஷைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது. ஏன் தன்னிடம் எதையும் சொல்லவில்லை என்று கேட்டு சண்டை போட வேண்டும் போல் இருந்தது. தன்னிடம் அவன் கடைசிவரை சொல்லவேயில்லையே, குறைந்தது பதவி ஏற்கப்போகும் அன்றாவது அனைத்தையும் சொல்லியிருந்திருக்கலாம் என்று நினைக்கையில் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் போய்விடும். இதற்கிடையில் தன்னை ஜாதகத்திற்காகத்தான் கல்யாணம் செய்து கொண்டான் என்று ரதி கூறியதிலிருந்து மனதிற்குள் ஒரு நெருடல். பேசாமல் தாயுடன் போய் தங்கி விடலாமா என்று தோன்றும். ஆனால் ஏதோ ஒன்று அந்த வீட்டை விட்டுச்செல்ல முடியாமல் தடுத்தது. அது ரதியின் பாசமா? இல்லை ஆகாஷுடன் வாழ்ந்த நினைவுகள் நிறைந்திருந்ததினாலா என்று தெரியவில்லை. தாயிடம் மீண்டும் செல்ல மழுமனதாக அவளுக்குத் தோன்றவில்லை. எப்படி தன்னை இப்படி ஒரு கல்யாணத்தில் ஈடுபடுத்த முடிந்தது? தன்னிடம் எதையும் கூறாமல் நான் ஒருவரை காதலிக்கிறேன் என்று சொல்லியும் அதற்கு செவி கொடுக்காமல் அவரது பிடிவாதத்திற்காக.. ச்ச என்று சலித்துக் கொண்டாள். முதலில் அனைவரின் கண்ணில் படாமல் எங்காவது சென்று விடவேண்டும் என்றுதான் நினைத்திருந்தாள் ஒருவேளை இங்கிருந்து சென்றுவிட்டால் ஆகாஷைப் பார்க்க முடியாமலேயே போய்விடுமோ? தனியாக தன்னால் கர்ப காலத்தை எதிர்கொள்ள முடியுமோ என்றெல்லாம் யோசித்தவள் அங்கிருந்து செல்ல சற்று தயங்கினாள். இப்போதும் அவளுக்கு தலை சுற்றலும், வாந்தியும் குறைந்ததாக இல்லை. அடிக்கடி வயிற்றை புரட்டிக்கொண்டு வரும். இவள் வாந்தி எடுக்கும் சத்தம் கேட்கும் போதெல்லாம் ரதி ஓடி வந்து விடுவார், இரவில் அவளுக்கு துணையாக படுத்துக் கொள்வார்.

அன்று ரதியின் வீட்டில் விட்டுவிட்டுச் சென்றவன் அதன் பிறகு தன்னை ஒரு முறை கூட பார்க்க வரவில்லை. இவள் தான் திருமணப் பதிவன்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டாள். அவன் எளிதாக தன்னை மறந்து விட்டான், தன்னால் அவ்வளவு எளிதாக மறக்க முடியவில்லையே என்று வருந்தினாள். பலவித எண்ணங்கள், மனக் குழப்பங்கள் தன்னை தாக்கும் போது பேசாமல் சென்று படுத்துக் கொள்வாள்.

மேலும் இரண்டு நாட்கள் கடந்தது, காலையில் ஆகாஷிற்கு ஏதோ விபத்து ஏற்பட்டது போல் கனவு கண்டவள் ’ஆகாஷ்’ என்று அலறிக்கொண்டு எழுந்தாள். அலைப்பேசியை எடுத்து அவனது எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவனுக்கு ஒன்றும் ஆகியிருக்காது தான் ஏதேதோ யோசித்துக் கொண்டு உறங்கியதால் இப்படிப்பட்ட கனவுகள் வந்திருக்கும் என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு குளித்துவிட்டு தனியாக அறையில் இருக்க ஒருமாதிரி தோன்றவே கீழே இறங்கி வந்தாள்.

“ஏண்டா வந்த, நீ எழுந்த சத்தம் கேட்டது அதுதான் நானே டிபன் எடுத்து வரலாம்னு வந்திட்டிருந்தேன்” என்று கையில் தட்டுடன் நிலாவை நோக்கி வந்தார். அவரை நோக்கி புன்னகைத்துவிட்டு உணவு மேஜைக்கு வந்தவள் அங்கு சரஸ்வதி அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு கேள்வியாக ரதியைப் பார்த்தாள்.

“அம்மா உன்னை பார்க்கனும்னு வந்திருக்காங்க நிலா” என்று பதிலளிக்க சற்று தடுமாறினார்.
 

Kavisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
WhatsApp Image 2020-11-20 at 11.40.45 PM.jpg
எபி-19
வெண்ணிலவு துணையிருக்க...

நிலா தன்னிடம் பேசுவாளோ மாட்டாளோன்னு என்று சரஸ்வதி அவளையே பார்த்தார். அவள் பதில் ஏதும் பேசாமல் மேஜை மீது அமர்ந்து ரதி வைத்த இட்டலியை உண்ணத்தொடங்கினாள். உண்டு முடித்து எழுந்தவள் கை கழுவும் போது வழக்கம்போல் அனைத்தையும் வாந்தி எடுத்தாள். சரஸ்வதி ஓடிச் சென்று அவளது முதுகை தடவிக் கொடுத்தார், அவரின் கையை தட்டிவிட்டவள் வாயைக் கழுவிக்கொண்டு மாடிக்குச் சென்றாள். சரஸ்வதிக்கு துக்கம் தாங்க முடியவில்லை, தனக்கென்று இருப்பது ஒரே மகள் அவளும் இன்று தன்னிடம் பேசுவாள், நாளை பேசுவாள் என்று காத்திருந்து வெறுத்துப் போய்விட்டார். மகள் தாயான செய்தி கேட்டு வர இருந்தவரை தற்போது வரவேண்டாம் என்று மீனாட்சியும் ரதியும் கூறிவிட்டனர். என்ன ஆனாலும் இன்று அவளிடம் ஞாயத்தைக் கேட்டு விட வேண்டும் என்று முடிவு செய்துதான் வீட்டிலிருந்து கிளம்பியிருந்தார். அது மட்டுமில்லாமல் மகளை சில நாட்கள் தனது வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தார். ஆனால் அவள் விருந்தாளியைப் பார்ப்பது போல் கூட தன்னைப் பார்க்கவில்லை என்றதும் விசும்பத் தொடங்கினார். அவரின் மனநிலையை உணர்ந்த ரதி “நீங்க மேல ரூமுக்கு போய் நிலாகிட்ட பேசிகிட்டு இருங்க, நான் வந்துடறேன்” என்று பையை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றார்.



ரதி சென்றதும் வேகமாக மாடி ஏறி நிலாவின் அறைக்குச் சென்றவர் அங்கு ஜன்னலின் அருகில் நின்று கொண்டிருந்த நிலாவிடம் வேகமாகச் சென்றார். சரஸ்வதியைக் கண்டதும் எதுவும் பேசாமல் கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“என்னடி மனசில நினைச்சுக்கிட்டிருக்க? என்கூட பேசினா உன் கொளவுரவம் இறங்கிடுமோ?”

“-”

“என்ன தப்பு செய்தேன்? எல்லா பெத்தவங்களும் அவங்க பிள்ளைகள் நல்லா இருக்கனும்னு தானே நினைப்பாங்க, அதைத்தான் நானும் செய்தேன்”

“எப்படி நல்லாயிருக்கனும்னு? எதை வெச்சு இந்த கல்யாணத்தைச் செய்தால் நான் நல்லா இருப்பேன்னு நினைச்சீங்க?”

”உன் அளவிற்கு எனக்கு அறிவு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனுபவம் இருக்கு நிலா, இன்னைக்கு நீயும் நானும் எந்த சொந்தமும் இல்லாமல் தனி மரமா இருக்கக் காரணம் இந்த பாழாப் போன காதல் தான். உன்கிட்ட இதுவரைக்கும் சொன்னதில்லை எதுவும் உனக்குத் தெரிய வேண்டாம்னு நினைச்சேன் ஆனால் என்னுடைய மனசை புரிஞ்சுக்கனும்னா எல்லாத்தையும் உன்கிட்ட சொல்றதை விட வேற வழியில்லை. என் பொண்ணு இந்த பாழாப் போன கடந்த காலத்தை தெரிஞ்சுக்க வேண்டாம்னு நினைச்சேன் ஆனால் என்னை சொல்ல வெச்சுட்டியே நிலா”

“உன்னை மாதிரி நானும் ஒருத்தரை மனதார காதலிச்சேன், ஒரு வருஷம் இரண்டு வருஷம் இல்லை கிட்டத்தட்ட ஐந்து வருஷம். நானும் அவரும் கல்யாணம் செய்யாமலேயே கணவன் மனைவியா வாழ்ந்தோம் அதற்கு கிடைத்த பரிசுதான் நீ. ஆனால் நீ பிறந்ததோ வளர்ந்ததோ உன்னோட அப்பாவுக்குத் தெரியாது. நான் கற்பமா இருக்கிற விஷயத்தை அவருக்குத் தெரிவிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன் ஆனால் அதற்குள் அவர் வேற கல்யாணம் செய்துகிட்டார்னு கேள்விப்பட்டேன். நான் கர்பமா இருப்பது தெரிந்ததும் என்னைப் பெத்தவங்களும் கூடப் பிறந்தவங்களும் தலை முழுகிட்டாங்க. அவங்களை குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை, மகளுக்கு நல்ல இடத்தில் வரண் பார்த்துக் கிட்டிருந்த பெத்தவங்களுக்கு மகள் கல்யாணம் செய்யாமலேயே கர்பமாக இருக்கான்னு தெரிஞ்சா என்ன செய்வாங்களோ அதைத் தான் அவங்களும் செய்தாங்க. என் விதியை நானே தான் வகுத்தேன். கொஞ்சம் பொருமையா இருந்திருந்தால் இதையெல்லாம் தவிர்த்திருக்கிலாம் ஆனால் என்ன செய்வது” என்று தன் விதியை நொந்து கொண்டார்.

“சொந்தங்கள் எதுவும் இல்லாமல் வயிற்றில் உன்னையும் சுமந்து கொண்டு நான் தனிமரமா தவிச்ச தவிப்பு உனக்குச் சொன்னால் புரியாது. இழந்த உறவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியோடு உன்னை பெற்றெடுத்து, வளர்த்து ஆளாக்கின எனக்குத் தெரியாதா நிலா உனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு. இத்தனை வருஷம் உனக்குப் பார்த்து பார்த்து செய்த எனக்குத் தெரியாதா? சொல்லு? உனக்கு கெட்டதைப் பண்ணனும் நினைச்சிருந்தா கற்பமாக இருப்பதைத் தெரிந்ததும் தற்கொலை செய்திருந்திருக்கலாமே. நான் செய்த தப்புக்கு ஒன்றுமே தெரியாத நீ பலியாடாகக் கூடாதுன்னுதான் பார்த்து பார்த்து வளர்த்தேன். என்னைப் போல நீயும் காதல்னு வந்து நிப்பன்னு நான் கனவிலும் நினைக்கலை. நீ காதலிக்கிறன்னு தெரிஞ்சதும் நான் எப்படி ஆடிப்போயிட்டேன் தெரியுமா? என் நிலமை உனக்கும் வரக்கூடாதுன்னுதான் நான் கடவுளை வேண்டினேன். ஒரு அம்மாவா நினைச்சுப்பார், எந்த வேலையும் கேவலம் இல்லைன்னு எனக்கும் தெரியும் ஆனால் இது வரைக்கும் கஷ்டப்பட்டதெல்லாம் போதும் கல்யாணத்திற்கு பிறகாவது நீ சந்தோஷமா கஷ்டமில்லாமல் இருக்கனும்னுதான் நினைச்சேன். மனக் கஷ்டமோ பணக் கஷ்டமோ எதையும் நான் உன்கிட்ட சொன்னதில்லை. அது எதுவும் உன்னை பாதிக்கக்கூடாதுன்னு தீர்மாணமா இருந்தேன். கடவுளா பார்த்து மீனாட்சியை என்னிடம் அனுப்பினாங்க, கல்யாணப்பேச்சு வந்தப்ப நீ அவங்க கம்பெனியில்தான் வேலை செய்றேன்னு எங்களுக்குத் தெரிய வந்தது. எனக்கு பயமாகத்தான் இருந்தது, உன்கிட்ட பேசும் போது நீ ஏதாவது காதல் அது இதுன்னு உளரிடுவியோன்னு. அதனால நானும் அவங்க கிட்ட ஆகாஷ் தம்பியைப் பற்றி இப்ப சொல்ல வேண்டாம் கேட்டுக்கிட்டேன், அவங்களுக்கும் அதே முடிவு தான். உன் காதல் விஷயத்தை அப்போ நான் யார் கிட்டயும் சொல்லலை, கல்யாணத்தை தாமதித்தால் நீ எதாவது விபரீதமா முடிவு எடுத்திடுவன்னுதான் பயந்தேன். ஜாதகம் காரணமாக கல்யாணம் சீக்கிரம் நடக்கணும்னு அதுவும் பத்து பேர் முன்ன வெச்சு கோவிலில் தாலி கட்டணும்னு சொன்னப்ப, எனக்கும் அது சரின்னுதான் பட்டுச்சு நானும் சம்மதிச்சேன். எல்லாரும் பணம் இருப்பதைப் போல் காட்டி கல்யாணம் பன்ணுவாங்க, இங்க அவங்க பணம் இல்லாத சாதாரணப் பையனா ஆகாஷை உனக்கு கல்யாணம் செய்து வெச்சாங்க. பொய்யில் இரண்டு வகை உண்டு நிலா, நல்லதுக்கா பொய் சொல்வது, கெடுதலுக்காக பொய் சொல்வது. எனக்கு இது முதல் ரகமாகத்தான் தோணிச்சு. ஆகாஷைப் பற்றி கல்யாணத்திற்கு முன்னமே மீனாட்சி என்கிட்ட சொன்னாங்க, ஜேகே க்ரூப்ஸ் நிறைய கிளைகள் இருக்கிறதால நீயும் ஆகாஷும் ஒரே கிளையில் இருக்கக்கூடாதுன்னு நான் கடவுளை வேண்டினேன் ஏன் தெரியுமா? நீயும் உங்க கம்பெனி டிரைவரை காதலிப்பதாய் சொன்ன ஆகாஷும் டிரைவரா இருப்பதா மீனாட்சி சொன்னாங்க. ஒருவேளை நீங்க ரெண்டு பேரும் ஒரே கிளையில் இருந்து உன்னுடைய காதல் விவகாரம் தம்பிக்கு அரசல் புரசலா தெரிய வந்தால் நான் என்ன செய்வேன்னு பயந்தேன். எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகமா முடிஞ்சுது. ஆனால் உன்னை வசதி குறைந்த இடத்தில் மட்டும் நிச்சயமா கட்டிக்கொடுக்க சம்மதிச்சிருக்க மாட்டேன். வாழ்க்கையில் எல்லாக் கஷ்டத்தையும் அனுபவித்தவங்களுக்கு ஜாதகத்தில் எல்லாம் நம்பிக்கை இருக்காது அதேதான் எனக்கும், நான் எந்த பாவமும் செய்யலை அதனால என் பொண்ணுக்கு எந்த கெடுதலும் வராதுன்னு நம்பித்தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதிச்சேன். இப்ப சொல்லு நிலா, நான் செய்தது தப்பா? நான் உனக்கு துரோகம் செய்தேனா?”

”-”

“நான் பாட்டி ஆயிட்டேன்னு கேள்வி பட்டதும் எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா”

“அப்பா”

“நிலா, நம்மோட கடந்த காலம் கடந்தாகவே இருக்கட்டும், அதைப் பற்றி கேட்காதே. என் மனசை உனக்குப் புரிய வைக்கத்தான் இப்பக்கூட நான் சொன்னேன் இல்லைன்னா இது எல்லாமே என்னோடு மண்ணொடு மண்ணாகியிருக்கும்”

”-”

“உன்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய் கொஞ்ச நாள் வெச்சு கவனிக்கலாம்னுதான் நினைச்சு வந்தேன்” என்று அவள் முகத்தைப் பார்த்தார்

“உன்னை பெற்றதோ, வளர்த்ததோ உனக்குப் பெரிசா தெரியாது. உனக்கு அதுக்கான பக்குவம் வரும் போது நீயா புரிஞ்சிப்ப. உன் கண்ணுக்கு இப்ப நான் எப்படி தெரிவேன்னு என்னால் ஊகிக்க முடியுது. முடிந்ததை என்னால் மாற்ற முடியாது நிலா. இப்பவும் நான் சொல்றேன் இதை விட நல்ல பையனோ, குடும்பமோ உனக்கு கிடைக்காது. அப்புறம் உன் இஷ்டம். என் மேல இருக்கிற வெறுப்பு இன்னும் குறையலைன்னா என்னை மன்னிச்சிடு நிலா, நான் இப்போ கிளம்புறேன் உனக்கா என்னைக்கு என்னை மன்னிக்கனும்னு தோணுதோ அன்னைக்கு என்னை மன்னிச்சிடு” என்று குரல் உடைந்தார்.

நிலாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை, புரிந்தது ஆனால் புரியவில்லை என்ற கணக்காக நின்றிருந்தாள். தன் தந்தை உயிரோடு எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார் என்ற செய்தியை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் கூடுதல் விவரத்தை சரஸ்வதி சொல்வதாக இல்லை. தங்களை ஏன் அநாதையாக விட்டுச்சென்றார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. யோசனையோடு நின்றிருந்த நிலா தாய் சென்றதை உணரவில்லை. தடால் என்று ஏதோ சத்தம் கேட்டதும் ஓடிச்சென்று பார்த்தாள் அங்கு சரஸ்வதி தரையில் விழுந்து கிடந்தார்.

“அம்மா” என்று ஓடிச்சென்று பார்த்தாள். அவர் சுயநினைவின்றி கிடந்தார்.

“அத்தை” என்று கத்திக்கொண்டு வீட்டிற்கு வெளியில் சென்றாள். அப்போதுதான் ரதியும் மீனாட்சியும் பேசிக்கொண்டு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

நிலா பதட்டத்துடன் வெளியில் வந்ததைப் பார்த்த ரதி அவளை நோக்கி வேகமாக வந்தார்.

“என்னாச்சு நிலா”

“அத்தை அம்மா மாடி” என்று பேச்சு வராமல் பதறினாள்.

“நிலா, பதட்டப்படாத, அது உனக்கும் குழந்தைக்கும் நல்லதில்லை. என்னாச்சு நிதானமா சொல்லுமா” என்று பேசிக் கொண்டே வந்தவர் மாடிப்படிக் கீழே விழுந்து கிடந்த சரஸ்வதியை நோக்கி விரைந்தார். நிலைமை உணர்ந்த மீனாட்சி வெளியில் ஓடிச்சென்று காவலாளியை உதவிக்கு அழைத்து வந்தார். உடனே காரை வரவழைத்து சரஸ்வதியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

நிலா வழி முழுவதும் “அம்மா” என்ற வார்த்தையைத் தவிர வேறெதுவும் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள். அவளைத் தேற்றும் வழி தெரியாமல் மீனாட்சியும் ரதியும் விழித்தனர்.

மருத்துவமனையில் அனுமதித்து சில நிமிடத்திலேயே ஜேகேவும் கர்ணனும் அங்கு வந்து சேர்ந்தனர். மருத்துவர் பரிசோதித்துவிட்டு இரத்த அழுத்தம் அதிகரித்ததால் மயக்கமாகி இருப்பதாகவும், தலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறியவுடன் தான் நிலா சற்று சமாதானம் அடைந்தாள்.

இந்த நிலையில் தங்களுடன் தந்தை இருந்திருந்தால் தோள் சாய்ந்து அழுதிருக்கலாம். தோள் சாய ஆகாஷும் இல்லை, தந்தையும் இல்லை என்று நினைத்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. அவளை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருவதற்குள் அனைவரும் ஒரு வழி ஆகிவிட்டனர். மறுநாளே சரஸ்வதியும் வீட்டிற்கு வந்துவிட்டார். அன்னையை தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய நிலாவை ரதியுடன் சரஸ்வதி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

“நான் பார்த்துக்கிறேன் அத்தை, நீங்க மாமாவோடு இருங்க” என்று நிலா கூறியும் ரதி மறுத்தார்.

“உன்னைப் பார்த்துக்கவே ஒரு ஆள் வேணும் இதில் நீ எப்படி அம்மாவை பார்த்துப்ப நிலா, நீ என்ன சொன்னாலும் நான் உன்னை தனியா அனுப்ப மாட்டேன்” என்று அவளோடு கிளம்பிச்சென்றார்.

நிலா தனக்காக வந்திருப்பதை அறிந்த சரஸ்வதி மிகவும் சந்தோஷப் பட்டார். ரதி ஒரு சகோதரியைப் போல் சரஸ்வதியையும் தாயைப் போல நிலாவையும் பார்த்துக் கொண்டார். இது போன்ற சொந்தம் தன் மகளுக்கு கிடைத்தது அவளுடைய பாக்கியம் என்று நெகிழ்ந்தார் சரஸ்வதி. இதற்கிடையில் ஒரு நாள் தன்னை மன்னிக்குமாறு அன்னையிடம் வேண்டியவள், அவருடன் பழையது போல் இல்லையென்றாளும் சாதாரணமாக பேசி வந்தாள். அவளுக்கு ஒரே ஒரு வருத்தம்தான் எல்லாரைப் போல் தனக்கும் தந்தை இருக்கிறார் என்று தெரிந்தும் அவரைப் பற்றிய எந்த விவரத்தையும் அறிய முடியவில்லையே, அதைக் குறித்து மேலும் கேட்டு தாயைப் புண்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்தாள். இந்த சில நாட்கள் ஆகாஷைப் பார்க்காமல் தான் படும் கஷ்டம் எப்பேர் பட்டதோ அதே தான் அன்னையும் வாழ்க்கையில் அனுபவித்துள்ளார். அன்னை சொல்வது போல் என்னிடம் உண்மை நிலையை மறைத்ததைத் தவிர வேறு எந்த தவறும் தன்னைச் சுற்றி உள்ளவர்கள் செய்ததாக அவளுக்குத் தோன்றவில்லை. எது எப்படியோ தான் காதலித்தது ஆகாஷைத்தான் அவனையே திருமணம் செய்து கொண்டாகிவிட்டது. இப்பேர்பட்ட நல்ல வாழ்க்கையை வீண் கோபம் கொண்டு தானே கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தாள். காதல் என்றால் அனைத்தும் அடங்கியது தானே அதில் மன்னிப்பு, விருப்பு, வெறுப்பு என்று எல்லாமே அடங்கும். அவன் சொல்லியிருந்தாலும் சொல்லாமல் போயிருந்தாலும் தன் மனம் மாறியிருக்காது, அன்று மணப்பையனாக ஆகாஷ் இல்லாமல் போயிருந்தால் தானும் தான் மனதில் ஒருவனும் வாழ்வில் வேறொருவனுடனும் வாழ்ந்திருக்க வேண்டியிருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையை கர்பணை செய்து பார்க்கக்கூட அவளால் இயலவில்லை. ஆகாஷைப் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் ஆனால் அவன்………………….. எப்படி அவனால் தன்னைப் பார்க்காமல் இத்தனை நாட்கள் இருக்க முடிகிறது. முதலில் அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அதன் பிறகு என்ன செய்வதென்னு யோசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள்.



இத்தனை நடந்தும் ஆகாஷ் மட்டும் வரவேயில்லை என்று வருத்தப்பட்டாள். தன்னை மறந்து விட்டானோ? இல்லை வெறுத்து விட்டானோ? தாயைப் போல அவன் நிலையில் இருந்து தான் யோசிக்கவில்லையோ என்று தனக்குள்ளேயே குழம்பினாள். யாரிடம் கேட்பது, யாரும் அவனைப் பற்றி பேசுவதுமில்லை. ஒருவேளை அவன் இந்தியா விட்டுச் சென்று விட்டானோ? ஏன் அவனைப் பற்றி யாரும் தன்னிடம் எதுவும் பேசவில்லை. தாங்கள் இருவரும் பிரிந்திருப்பது அறிந்தும் ஒன்று சேர்க்க யாரும் முயற்சிக்கவில்லை என்றெல்லாம் எண்ணியவள் வீட்டிலேயே இருந்தால் தனக்குப் பைத்தியம் பிடித்துவிடும் என்று கோவிலுக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றாள்.

முன்பெல்லாம் கோவிலுக்குச் செல்லுமாறு சொன்னால் கூட போகாதவள் தானாகவே கோவிலுக்குச் செல்வதைக் கண்டு சரஸ்வதியும் வியந்தார். நிலாவுக்குத் துணையாக செல்வதாகக் கூறிய ரதியிடம் தனக்கு சிறிது தனிமை வேண்டும் என்று கூறி தடுத்தாள். அதே நேரம் சரஸ்வதியைக் காண மீனாட்சியும் வந்திருந்தார். நிலாவை அவர் வந்த காரில் கோவிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு சரஸ்வதியிடமும் ரதியிடமும் அன்று நடந்தவற்றை பேசிக் கொண்டிருந்தார்.

“அண்ணி, அண்ணா செய்தது மண்ணிக்க முடியாததுதான். அவர் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். எல்லாமே விதின்னுதான் சொல்லனும். அப்பாவுக்கு கடன் கொடுத்தவங்க எல்லாம் வாசலில் வந்து நின்னு வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லிக்கிட்டிருந்ததை தாங்க முடியாமல் அண்ணா பலநாள் ஊருக்குப் போகாம இங்கேயே சுத்தி கிட்டிருந்தார். அம்மா மட்டும் இருக்கும் வீட்டில் யாரும் அநாவசியமா வந்து பேசுவதில்லை ஆனால் அண்ணா இருக்கான்னு தெரிஞ்சா எல்லாரும் வந்திருவாங்க. ஊரிலேயே வேலைக்குப் போகலாமுன்னு பார்த்தா ஜமீன் பரம்பரைன்னு எல்லாரும் வேலைக்கு சேர்த்துக்க யோசிச்சாங்க. இப்படியே காலம் போய்கிட்டிருந்தது. அகிக்கு ஐந்து வயசு இருக்கும் போது அம்மாவும் போயிட்டாங்க அதற்குப்பிறகு அண்ணா ஊரில் இருந்த வீட்டை வித்து கொஞ்சம் கடனை அடைச்சார், பாக்கி கடனுக்கு முழிச்சுகிட்டிருந்தப்போ அகி அப்பாதான் அவர் தங்கையை கட்டிகிட்டா கடனை தீர்ப்பதா சொன்னார். அண்ணா உங்களை காதலிப்பது தெரியாமல் நானும் அவர்கிட்ட இதைச் சொன்னேன். முதலில் மறுத்தவர் பின்னர் கடன் காரங்க போலீஸ் வரைக்கும் போனதும் வேற வழியில்லாமல் கல்யாணத்திற்கு சம்மதித்தார். ஆனால் கல்யாணம் ஆகி ‘அண்..’ என்று நிறுத்தியவர் சங்கடமாக சரஸ்வதியைப் பார்த்தார்”

சரஸ்வதி மொளனமாக மீனாட்சியைப் பார்த்தார்.



“கல்யாணம் ஆனதும் அண்ணா மொத்தமா மாறிட்டார், ஏதோ பரி கொடுத்தவர் போலயே சுற்றிகிட்டிருந்தார். அப்பாவைப் போல குடிக்கத் தொடங்கினார். ஒரு நாள் அவர் குடிச்சிட்டு வந்து புலம்பிய போதுதான் தெரிந்தது அவர் உங்களை காதலித்ததும் பணத்திற்காக கல்யாணம் செய்து கொண்டதும். இதைக் கேட்ட அகி அப்பா மனசு உடைஞ்சிட்டார். தானே தன் தங்கைக்கு இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்து விட்டோமேன்னு. இதை முன்னாடியே சொல்லாததால் அண்ணனிடம் சண்டைக்குப் போனார். ஆனால் அகி அத்தை அண்ணாவுக்காக வாதாடினாங்க. தப்பெல்லாம் அகி அப்பா மேலதான்னு சொல்லிட்டாங்க. அண்ணா மனசில் என்ன இருக்குன்னு தெரியாம அவர் சூழ்நிலையை பயன்படுத்தி தன்னை சந்தையில் ஆடு மாடுகளை விற்பது போல் விலைபேசி விற்றுவிட்டதாக சொல்லி புலம்பினாங்க. அன்றோடு எங்க உறவு முறிந்தது. அகி அத்தை அண்ணாவைக் கூட்டிகிட்டு தனியா குடி போனாங்க அதற்குப் பிறகு போக்கு வரவு இல்லை. எங்க வீட்டு பக்கத்திலேயே குடி வந்தாங்க, அவங்க அண்ணாவிற்காக வாதாடினதைப் பார்த்து அண்ணாவும் மனசு மாறி அவங்களை ஏத்துகிட்டாங்க. அகி அப்பாவுக்கு இணையா அண்ணாவும் சம்பாதித்தான். ஆண்கள் பேசிக்கலைனாலும் நாங்க பெசிப்போம். அதற்குப்பிறகு ஒருமுறை ஊரில் இருக்கும் குலதெய்வம் கோவிலுக்கு போயிருந்தப்போ நான் உங்களைப் பத்தி விசாரிச்சேன் அப்போதான் நீங்க கர்பமாக இருந்தது அதனால் வீட்டில் இருந்து உங்களை ஒதுக்கியதையும் கேள்வி பட்டேன் ஆனால் அண்ணாகிட்ட எதுவும் சொல்லலை அன்னையிலிருந்து மானசீகமா கோடிமுறை உங்ககிட்ட மன்னிப்பு கேட்டிருக்கேன். எல்லாம் விதின்னு சுலபமா சொல்லிடலாம் ஆனால் நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீங்கன்னு என்னால் புரிஞ்சிக்க முடியும்”

“-” ‘அண்ணி என்ற வார்த்தையை சொல்லாமல் அகி அத்தை என்று மீனாட்சி கூறியதை நினைத்து சரஸ்வதிக்கு பாவமாக இருந்தது, இதில் யாரும் குற்றவாலி இல்லை, தான் மட்டும் பாதிக்கப்படவில்லை தங்களால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எதையும் மாற்ற இயலாது என்று பெருமூச்சு விட்டார்”

“அண்ணி அதற்கு பிராயசித்தமா நிலாவிற்கு எந்த குறையும் இல்லாமல் நான் பார்த்துக்கிறேன். நீங்க எதைப் பத்தியும் கவலைப் படாதீங்க” என்று மன்னிப்பில் தொடங்கி ஆறுதலில் முடித்தார்.

“நீங்க சொன்னமாதிரி நிலா அப்பா பத்தியும் நான் எதுவும் பேச மாட்டேன், இது என்மேல் சத்தியம்” என்று அவருக்கு சத்தியம் செய்தார்.

சரஸ்வதி எதுவும் பேசவில்லை ‘எல்லாம் விதி’ முடிந்ததை நினைத்து என்ன பிரயோஜனம்.

சூழ்நிலையை மாற்ற எண்ணியவர் ஆகாஷைப் பற்றி பேச்சு எடுத்தார்.

“அகிக்கு குணமாகி வீடு வந்ததும் நிலாவை நான் வந்து கூட்டிகிட்டு போறேன் அது வரைக்கும் அவ இங்கேயே இருக்கட்டும். உங்களுக்குத் துணையா ரதி இருப்பா”

“தம்பியை எப்ப வீட்டுக்கு அனுப்புவாங்க?”

”இன்னும் ரெண்டு நாளில்”

“தம்பியும் நிலாவும் சந்தோஷமா இருக்காங்கன்னு கொஞ்சம் நிம்மதியா இருந்தேன். ஏதாவது ஒன்னு மாத்தி ஒன்னு வந்து சந்தோஷத்தைக் கெடுக்குது. நிலா உண்டாயிருக்கான்னு கேட்ட அடுத்த நாளே தம்பிக்கு ஆக்ஸிடண்டுன்னு செய்தி வருது, பாவம் அவள் கேட்டா மனசு ஒடிஞ்சு போயிடுவா”

“வேண்டாம் அண்ணி எக்காரணம் கொண்டும் நிலாவிற்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம், அகிக்கு நினைவு வந்ததும் அவன் சொன்ன முதல் விஷயமே எக்காரணம் கொண்டும் தனக்கு அடிபட்டதை நிலாவிற்குத் தெரியப் படுத்த வேண்டாமுன்னு, அவள் பதறினாள் அது குழந்தையையும் பாதிக்கும்னு சொன்னான். பெரிய அடி இல்லாததினால் சீக்கிரம் அவனே வீட்டுக்கு வந்து அவளிடம் பேசறேன் சொன்னான்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே வாசலில் சத்தம் கேட்டது.

மூவரும் என்னவென்று ஓடிச்சென்று பார்த்தனர், அர்ச்சனைத் தட்டைக் கீழே போட்டவள் பித்து பிடித்தவள் போல் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.

“அய்யோ! நிலா என்னாச்சுமா” என்று சரஸ்வதி பதறியடித்து நிலாவின் அருகில் ஓடினார்.

“எனக்கு ஆகாஷைப் பார்க்கனும், இப்பவே என்னை கூட்டிகிட்டு போங்க. உங்க காலில் விழறேன். ப்ளீஸ்” என்று அவர் காலைப் பிடித்தாள்.

“நிலா, பதட்டப்படாதே டா, நீ நினைக்கிற மாதிரி அகிக்கு ஒன்னும் இல்லை”

“ப்ளீஸ், உங்களை எல்லாரையும் நான் கையெடுத்துக் கேட்டுக்கிறேன் எனக்கு அவரை உடனே பார்க்கனும்”

மூன்று பேரும் என்ன செய்வதென்று விழித்தனர். தாங்கள் பேசியதை நிலா கேட்க நேரிடும் என்று அவர்கள் நினைக்கவேயில்லை. வேறு வழியில்லாமல் அவளையும் அழைத்துக் கொண்டு மூவரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

ஆகாஷ் இருக்கும் அறைக்கு வெளியே இளங்கோ இவர்களுக்காக காத்திருந்தான். இளங்கோ ஏதோ சொல்வதற்குள் அவனைக் கடந்து வேகமாக அறைக்கு உள்ளே விரைந்தாள். ஆகாஷ் படுக்கையில் சாய்வாக அமர்ந்து அலைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தான். யாரோ உள்ளே வரும் சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் இன்பமாக அதிர்ந்தான்.

“ஹேய் நிலா” என்று அழைத்தவனை ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள்.

”நிலா, அழாதே ப்ளீஸ். என்னைப்பார் நான் நல்லாத்தான் இருக்கேன்”

அவள் கேட்பதாக இல்லை அழுது கொண்டே இருந்தாள், அவளைத் தன்னிடம் இருந்து பிரித்து எடுக்கவே முடியவில்லை.

“நிலா, அழறதுன்னா கொஞ்சம் எழுந்து உட்கார்ந்து அழு ப்ளீஸ். தோள் வலிக்குது.. அம்மா..” என்று பொய்யாக கத்தினான்.

அவனுக்கு உண்மையாக வலிக்கிறது என்று பதறி எழுந்தவள் அவன் முகத்தில் தெரிந்த கேலி கலந்த புன்னகையில் உண்மையை உணர்ந்தாள். எப்பவும் போல் அவனை சரமாரியாக அடித்தவள் அவன் மார்பின் மீது தலை சாய்த்து படுத்துக் கொண்டாள்.

“யாருடி உன்னை இங்கெல்லாம் வரச் சொன்னது? இரண்டு நாள் கழிந்து நானே வந்து பார்த்திருப்பேன் என்று அவள் தலையை வருடிவிட்டான்”

“என்னை மன்னிச்சிருங்க ஆகாஷ்”

“சரி மன்னிச்சிட்டேன், எழுந்து வீட்டுக்கு போ” என்று அவளை எழுப்ப முயற்சி செய்தான்.

“முடியாது”

“இப்போ டாக்டர் வந்து பார்த்தா, நீ தான் நோயாளின்னு நினைப்பார். எப்படி இருக்க பார். கொஞ்சமாவது கவலை இருக்கா? எத்தனை முறை சொல்லியிருக்கேன் இப்போ நீ மட்டும் இல்லை உனக்குள்ள ஒரு உயிர் இருக்குன்னு. சாப்பிடறையா இல்லையா?”

“-”

“அம்மா என்ன செய்துகிட்டிருக்காங்க, உன்னை கவனிக்க யாருமே இல்லையா?”

“எனக்கு அவங்க யார் கவனிப்பும் வேண்டாம்”

”ம்க்கும்….என்று இளங்கோ உள்ளே வந்தான்.

அவன் குரல் கேட்டு கட்டிலில் இருந்து இறங்கியவள் படுக்கைக்கு மறுபுறம் வைத்திருந்த பழங்களைக் கொண்டு பழச்சாரை பிழிந்தாள்.

“சாரி ப்ரோ, சாரி அண்ணி.. அம்மா உள்ளே வரலாமான்னு கேட்கிறாங்க”

சரி என்பது போல் ஆகாஷ் தலை அசைத்தான்.

ரதியும், மீனாட்சியும், சரஸ்வதியும் உள்ளே வந்தனர். மீனாட்சி மகனின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே கண்களை துடைத்துக் கொண்டார்.

‘அம்மா’, என்று அவரின் கைகளை பிடித்து சமாதானம் கூறினான்.

”எனக்கு ஒன்னும் இல்லை, இதுக்குத்தான் உங்க யாரையும் நான் பார்க்க அனுமதிக்கலை. ப்ளீஸ்”

“சாரி ஆகாஷ்” என்று கண்களை தொடைத்துக்கொண்டார்.

”மூணு பேர் இருந்தும் என் பொண்டாட்டியை இப்படி எலும்பும் தோலும் ஆக்கியிருக்கீங்க” என்று குற்றப் பத்திரிக்கை வாசித்தான்.

“அவ ஒழுங்காத்தான் சாப்பிடற, உன் புள்ளைதான் எல்லாத்தையும் வெளியில் தள்ளுது, தலை நிறைய முடி இருக்கும் போல அது தான் நிலா வாந்தி எடுத்துகிட்டே இருக்கா” என்று ரதி நிலாவைப் பார்த்தார். நிலா மொளனமாக பழச்சாற்றை எடுத்துக் கொண்டிருந்தாள்.

சூழ்நிலை சற்று சகஜமாக மாறியதும், மூவரும் பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்பினர். நிலா அவர்களுடன் செல்ல மறுத்தாள். தன்னுடனே இருக்கட்டும் தான் பார்த்துக் கொள்வதாக ஆகாஷ் கூறியதும் வேறு வழியில்லாமல் நிலாவை மருத்துவமனையிலேயே விட்டு விட்டுச் சென்றனர்.

“ஏதாவது தேவை இருந்தால் கூப்பிடுங்க ப்ரோ” என்று இளங்கோ வெளியில் சென்றான்.

நிலா மொளனமாக நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

“நிலா, ஜூஸ் எங்க?” என்று அங்கிருந்த டேபிளில் பழச்சாறு இருக்கிறதா என்று பார்த்தான்.

“இங்க” என்று வயிற்றைக் காட்டினாள்.

“அடிப்பாவி, அடிபட்டு கிடக்கிற எனக்குத் தராம நீ குடிச்சிட்டியா?”

“அழுது அழுது செம பசி, உங்களுக்கு ஒன்னும் இல்லைன்னு சொன்னீங்களே. அதான் நான் குடிச்சிட்டேன்” என்று பேசிக்கொண்டே அடைத்து வைத்திருந்த பழச்சாறை எடுத்து அவனுக்குக் கொடுத்தான்.

அதை வாங்கி அவளை அருகில் அமர்த்தியவன் “நீ குடிச்சியா?” என்று கேட்டான்.

“ம், குடிச்சிட்டேன்” என்று அவன் தலையைக் கோதிக் கொடுத்தான்.

“பயந்திட்டியா?”

’ஆம்’ என்பது போல் தலையை அசைத்தாள்.

“டோண்ட் வொரி, எதுவும் பெரிசா இல்லை” என்று பேசிக்கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.

இரண்டு பேர் உள்ளே நுழைந்தனர்.

“ஹேய் அகி, இப்போ எப்படி இருக்க?” என்று கை குலுக்கினான் அதில் ஒருவன்.

“ஐ ஆம் குட் டா” என்று பதிலுக்கு கை குலுக்கியவன் நிலாவைச் சுட்டிக்காட்டி “ஷீ இஸ் மை வைப், வெண்ணிலா” என்று அறிமுகப் படுத்தினான்.

“ஹெல்லோ” என்று சொல்லிவிட்டு “ஷால் வீ” என்று அவனிடம் கேட்டனர்.


“நோ ப்ராப்ளம், யூ மே ப்ரோசீட்” என்று நிலாவை நோக்கினான்.

என்ன என்று புரியாமல் நிலா வந்தவர்களையும் ஆகாஷையும் மாறி மாறி பார்த்தாள்.

“நத்திங் மிஸஸ் ஆகாஷ், வீ ஆர் ப்ரெண்ட்ஸ், ஜஸ்ட் எ ஸ்மால் இன்வெஸ்டிகேஷன் எபவுட் தி ஆக்ஸ்டெண்ட்” என்று விளக்கம் அளித்தனர்.

நிலா பதட்டமாக ஆகாஷைப் பார்த்தாள். அமைதியாக இருக்குமாறு அவளுக்கு கண்ணை மூடி காட்டியவன் அவர்கள் கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கினான். விசாரணை முடிந்து அவர்கள் வெளியேறியதும் ஆகாஷிடம் சென்றவள்.

“என்ன நடக்குது ஆகாஷ்?”

“ஒன்னுமில்லை நிலா, வந்திட்டு போனது என்னோட ப்ரெண்ட்ஸ், போலீஸ் டிபார்ட்மெண்டில் இருக்காங்க. இப்போ எனக்கு நடந்த விபத்தைப் பற்றி விசாரிக்கிறாங்க. லாஸ்ட் ஒன் எனிமியை மிஸ் பண்ணிகிட்டே இருந்தோம், ஃபைனலா புடிச்சிட்டாங்க. ஆனால் பழைய இன்ஸிடெண்ட்ஸ்ல எதாவது இவங்க பங்களிப்பு இருக்கான்னு கண்டுபிடிக்கத்தான் இந்த விசாரணை.”

“ஒன்னும் புரியலை, ஏதோ சினிமா கதை கேட்ட மாதிரி இருக்கு” என்று அவனருகில் சென்று அமர்ந்து கொண்டாள்.



“போகப் போக புரிஞ்சுக்குவ, உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியலை. நமக்கு கல்யாணம் ஆகி முதன் முதலில் அந்த கடற்கரைக்கு போகும்போது கூட ஆக்ஸிடெண்ட் பண்ண ட்ரை பண்ணாங்க”

“ஓ” என்று யோசனையில் ஆழ்ந்தாள்.

“ரொம்ப யோசிக்காத”

“ம்ப்ச், பேசாம நீங்க இந்தியா விட்டு போயிடுங்களேன்”

“போயிட்டு?”

“_”

“நிலா, வாழ்க்கையில எதிரிங்க இருந்திட்டேதான் இருப்பாங்க. ஓடி ஒளிய நாம என்ன கோழையா?”

“டயலாக் பேச நல்லாத்தான் இருக்கும், இங்க பயந்து பயந்து சாகறது யாரு”

“ஹேய், அதான் சொன்னேனே, எல்லாருக்கும் செக் வெச்சாச்சு, யாரும் இனி நம்ம பக்கம் தலை வெச்சு கூட படுக்க மாட்டாங்க. இப்பத்தான் நிம்மதியா இருக்கு, அப்பா என்னை இந்தியா வர வேண்டாம்னு தடுத்ததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கும்னு எனக்குத் தெரியாது. ஏதோ அவருக்கு ஈகோ அப்பிடி இப்படின்னு நான் நினைச்சிட்டிருந்தேன். மனுஷன் என்னெல்லாம் சவால் விட்டார் தெரியுமா?” என்று அவளைப் பார்த்தான்.

நிலா யோசனையிலேயே இருந்தாள். பேச்சை மாற்ற விரும்பியவன்.

“சரி உன்னோட கோபம் எல்லாம் போயிடுச்சா?”

“-”

“நான் கூட மாசக் கணக்கில் நீ பேச மாட்ட, ஜாலியா இருக்கலாம்னு நினைச்சேன்”

“ஜாலியாவா என்று எழுந்தவள் அவன் கையைக் கிள்ளி வைத்தாள்”

அவள் மனநிலை மாறியதை எண்ணி நிம்மதி அடைந்தவன். “நிலா, இன்னைக்கு மட்டும் தான் இங்க ஸ்டே பண்ண உனக்கு பெர்மிஷன், நாளைக்கு ஒழுங்கா வீட்டுக்கு போயிடனும். என்ன புரிந்ததா?”

’முடியாது’ என்பது போல் தலையை அசைத்தாள்.

“நீ இல்லாம என்னாலையும் தான் இருக்க முடியாது டி ஆனால் பாரு, இது ஹாஸ்பிட்டல் டூரிஸ்ட் ப்ளேஸ் இல்லை. ஸோ ப்ளீஸ்”

“-”

“உனக்காக இல்லாட்டியும் குழந்தைக்காக ப்ளீஸ் கொஞ்சம் கன்ஸிடர் பண்ணு”

‘குழந்தை என்றதும் சற்று யோசித்தாள்’ பின் ‘சரி’ என்று தலையசைத்தாள்.

“குட் கேர்ள். அவ்வளவு கோபமா? மூக்குத்தியை கூட போட்டுக்கவில்லை?”

“-”

“யாருடி அந்த டிரைவர்? கல்யாணத்திற்கு முன்னாடி நீ அவனை காதலிச்சியாம்?”

அவன் கேள்வியில் அதிர்ந்தவள். என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.

“சொல்லு, எதுவா இருந்தாலும் இங்கேயே பேசி தீர்த்துப்போம்” என்று தீவிரமான முக பாவனையுடன் அவளைப் பார்த்தான்.

அவன் தீவிரமாக முகத்தை வைத்திருப்பதைப் பார்த்து சிறிது அச்சம் கொண்டாள். இப்போது போய் அது நீதான் என்று சொன்னாள் நம்புவானா மாட்டானா என்று யோசித்தாள்.

“ஏய் நிலா, கூல் நான் சும்மா விளையாடினேன்” என்று அவள் விரல்களை தன் கைக்குள் வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.

“உன் ஹெல்த் ரொம்ப வீக்கா இருக்குன்னு டாக்டர் சொன்னதுனாலத்தான் நீ கேட்டியேன்னு ரதி அம்மா வீட்டில் விட்டுவிட்டு வந்தேன். நீ கோபப்படுவன்னு நினைச்சேன் ஆனால் என்னை விட்டு பிரிந்து போகிற அளவுக்கு கோபப்படுவன்னு நான் நினைக்கலை. உன்னை கொஞ்சம் பக்குவமா பாத்துக்கச் சொல்லி டாக்டர் அட்வைஸ் பண்ணாங்க, ஸோ உன் இஷ்டத்துக்கே நடக்கட்டும்னு நான் விட்டுட்டேன். வீட்டிலையும் எல்லார்கிட்டயும் சொல்லியிருந்தேன். பட் நிலா, எனக்கு அங்கதான் சந்தேகம் வந்துச்சு. நீ உண்மையா என்னை விரும்புனியா இல்லையான்னு. ஏன்னா கல்யாணத்தன்று உன் அம்மா ஹாஸ்பிட்டலில் புலம்புனதை வைத்து உனக்கு இஷ்டமில்லாமல் இந்த கல்யாணம் நடந்திருக்குன்னு புரிஞ்சுகிட்டேன், ஸோ உன்னை விட்டு விலகிடலாம்னு என் மூலை யோசிச்சாலும் மனசு அதுக்கு சம்மதிக்கலை. ஒன் வீக் உன்னை விட்டுவிட்டு அப்பா கூட வெளியூறு போனப்ப தான் எனக்கு என் மனசே புரிஞ்சது. நீயில்லாமல் எனக்கு லைப் இல்லைன்னு. அதேசமயம் நம்மளை சுத்தி இருக்கிற எதிரிகளை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணனும்னு நினைச்சேன் அதனால அதைப்பத்தி உன்கிட்ட பேச எனக்கு டைம் கிடைக்கில. பாஸ்ட் இஸ் பாஸ்ட்னு லைஃப் ஸ்டார்ட் பண்ணலாம்னுதான் உன்னை நெருங்கினேன். நீ என்னை ஏத்துகிட்டா லவ் பேர்ட்ஸ் இல்லைன்னா தேவதாஸ்னு முடிவு பண்ணேன். ஆனால் நீ என்னை ஏத்துகிட்ட. அதேசமயம் உன் செயல்கள் எனக்கு குழப்பமாத் தான் இருந்தது. சில நேரம் நெருங்கி வர, சில நேரம் விலகிப் போன. எது நிஜம் எது பொய்னு எனக்குப் புரியலை. என்னை விட்டு பிரியனும்னு நீ நினைச்சதே என்னை யோசிக்க வைத்தது, உன் மனநிலையை புரியாம நான் அவசரப் பட்டுட்டேனோன்னு வேதனைப் பட்டேன். நீ இருந்த மன நிலையில் உன்கிட்ட கேட்க முடியலை அதான் உன்னை ரதி அம்மா வீட்டில் விட்டுவிட்டு உன் வீட்டுக்குப் போனேன். அப்பத்தான் அத்தை சொன்னாங்க, கல்யாணத்திற்கு முன்னாடி நீ ஒரு டிரைவரை காதலிச்சிட்டிருந்தன்னும் உன்னோட விருப்பம் இல்லாம இந்த கல்யாணத்திற்கு உன்னை சம்மதிக்க வைச்சாங்கன்னும்” என்று நிறுத்தினான்.

அவளிடம் எந்த பதிலும் இல்லாததால் அவனே தொடர்ந்தான். “உனக்கும் அத்தைக்கும் நடந்த மனஸ்தாபங்களைச் சொல்லி அழுதாங்க. ஆனால் அவங்களுக்குத் தெரியாது நீ காதலிச்ச டிரைவர் நான் தான்னு, நான் எதையும் சொல்லலை உன் கிட்ட கேட்டு தெளிவு படுத்திகிட்டு அவங்ககிட்ட சொல்லலாம்னு விட்டுட்டேன்”

அவன் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே நிலா எதுவும் பேசாமல் எழுந்து ஜன்னலின் அருகில் சென்று நின்று கொண்டாள்.

ஏதோ சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவள் அங்கு ஆகாஷ் எழுவதற்கு முயற்சி செய்து விழப்போனதைக் கண்டாள். அவனது இடது காலில் கட்டு போடப் பட்டிருந்தது. அவள் ஓடிச்சென்று அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவன் சுதாகரித்துக் கொண்டு கட்டிலைப் பிடித்து அமர்ந்து கொண்டான். நிலாவின் கண்கள் நிறைந்திருந்தது.
 
Status
Not open for further replies.
Top