All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் புத்தகங்கள் மற்றும் அமேசான்

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

லாக்டவுன் ஸ்பெஷல்லா எதாவது கதையை ரீரன் செய்ய சொல்லி நிறைய பேர் தொடர்ந்து கேட்கறீங்க..

இப்போதைக்கு எந்த கதையையும் ரீரன் செய்ய முடியாத சூழல்..

அதனால் உங்களுக்காக அமேசானில் இருக்கும் என் 2 கதைகளை பிரீ கொடுத்துள்ளேன்..

இன்று ஒரு நாள் மட்டும் (6 - 6 - 2021) மதியம் 1 மணி முதல் நாளை மதியம் 1 மணி வரை இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்..

"உன்னில் என்னை தேடுகிறேன்..!!" கதையின் லிங்க் இதோ👇

"காற்றோடு ரகசிய மொழிகள்..!!" கதையின் லிங்க் இதோ👇

விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழுங்கள்.. உங்கள் கருத்துக்களை அங்கேயே பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26661

ஹாய் டியர்ஸ்

ஒரு சந்தோஷமான விஷயத்தோட வந்திருக்கேன்💖💖

என் பத்தாவது புத்தகமாக இதுவரை ஆன்லைனில் வராத கதையான புத்தம் புது கதை "மௌனமே இசையாய்..!!" என்ற தலைப்பில் விரைவில் வெளிவர இருக்கிறது💝💝

தொடர்ந்து வாய்ப்பாளித்து வழி நடத்தும் ஸ்ரீ அக்காவுக்கும் என் புத்தகங்களை தொடர்ந்து பதிப்பிக்கும் ஸ்ரீகலா பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏🙏

இப்போ கதையில் இருந்து ஒரு குட்டி டீசர் பார்க்கலாமா💞💖💝

***********

தலைப்பு - மௌனமே இசையாய்

நாயகன் - சித்தார்த் அபிமன்யு
நாயகி - கீர்த்தனா

கடுகடுவென்று முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க மருந்துக்கும் புன்னகை இல்லாமல் அந்த இண்டர்வியூ அறையில் மேஜைக்கு பின்னால் ராஜ தோரணையோடு அமர்ந்திருந்தான் அவன்.

கடந்த ஒரு வருடமாகவே இப்படி தான் இருக்கிறான், எதிர்பாராமல் அவன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் தொடர்ச்சி அவன் வாழ்க்கையை மட்டும் இல்லை அவனையுமே புரட்டி போட்டு இருந்தது .

இதில் பக்கத்து அறையில் அமர்ந்து கொண்டு மற்றவர்கள் தேர்வு செய்து அனுப்பும் கேன்டிடேட்கள் வேறு இவன் எதிர்பார்த்த அளவு இல்லாததால், காலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கொதி நிலைக்கு சென்று கொண்டிருந்தவன் இனி தானே பார்த்து கொள்வதாக சொல்லி நேரடியாக தன்னிடம் அனுப்ப சொல்லி கட்டளையிட்டு போனை வைத்த சில நிமிடங்களில் அறை கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் அவள்.

அவள் உள்ளே நுழைந்த நொடி முதல் இவ்வளவு நேரம் இருந்த மனநிலை தலைகீழாக மாற ஏதோ ஒரு இதம் தன்னையறியாமல் தனக்குள் பரவுவதை உணர்ந்தவன், அவள் மேல் ஒரு கூரிய பார்வையை மட்டுமே செலுத்தி கொண்டு இருந்தான்.

அவளோ இவனின் இந்த பார்வையை நேருக்கு நேர் எதிர் கொள்ள முடியாமல் தயங்கி மெல்ல தலை நிமிர்வதும் குனிவதுமாக இருந்தாள். "யுவர் நேம்..." என இவள் கண்களையே பார்த்தபடி ஒரு சிறு எதிர்ப்பார்ப்போடு கேட்டவனின் மனதின் பரபரப்பு வெளியே தெரியாமல் அமர்ந்திருந்த தோரணையில் சிறு அசைவு கூட இல்லை. ஏதோ செதுக்கி வைத்த கிரேக்க சிற்பம் போன்று கால் மேல் கால் போட்டு அமர்ந்து வலதுகையை நாற்காலியின் கை பிடியில் ஊன்றியவாறே அவன் தாடையில் இரு விரல் பதித்து இருந்தான்.

அதற்கு பதில் அளிக்காமல் தன் கையில் இருந்த பைலை அவனிடம் நீட்டியவளை கண்டு பொங்கிய கோபத்தை தன் வழக்கத்திற்கு மாறாக கட்டுப்படுத்தி கொண்டு அடுத்தடுத்த கேள்விகளை அவன் கேட்க எதற்கும் அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை.

அதில் நரசிம்ம மூர்த்தியாக மாறியவன் அவள் கொடுத்த பைலை கதவை நோக்கி வீசி எரிந்து "அவுட்ட்ட்..." என கர்ஜித்தான். அதில் கலங்கிய கண்களோடு அவனை ஏறிட்டு பார்த்தவள் தன்னால் பேச இயலாது என்று மெல்ல சைகை செய்ய நம்ப முடியாமல் திகைத்து அவளையே இமைக்காமல் பார்த்திருந்தான் அவன்.

**************

அந்த அறையின் கதவு திறக்கும் ஒலியில் படுக்கையில் சாய்ந்து அமர்ந்து இருந்தவனின் முகத்தில் ஒரு புன்னகை தோன்ற, அதை தொடர்ந்து கேட்ட மெல்லிய கொலுசொலியில் ஆர்வமாக கதவு பக்கம் திரும்பினான் அவன்.

உள்ளே நுழைந்தது முதல் அவனையும் அவன் புன்னகையையும் பார்த்து கொண்டே வந்தவள், அந்த புன்னகை அவனின் கம்பீர முகத்திற்கு தனி வசீகரத்தை கொடுப்பதை தன்னை மறந்து ஒரு உரிமையோடு ரசித்திருந்தாள்.

"இப்படியே எவ்வளவு நேரம் என்னை சைட் அடிச்சாலும் எனக்கு ஓகே தான்.." என்றவனின் குரலில் கலைந்து அவனிடம் இப்படி மாட்டிக் கொண்டதை எண்ணி நாக்கை கடித்தவள் " என் புருஷன் நான் அப்படி தான் சைட் அடிப்பேன்... என்ன செய்வீங்க.." என கேலி செய்தபடியே டிரேவை பக்கத்தில் இருந்த மேஜையில் வைத்தாள்.

அவள் அமர்வதற்காக இடம் விட்டு நகர்ந்து அவன் அமர, அவன் அருகில் அமர்ந்து கையில் கொண்டு வந்திருந்த உணவை அவனுக்கு ஊட்டி முடித்தவள் கைகளை ஈரபடுத்தி கொண்டு வந்து அவனின் வாயை துடைத்துவிட்டு சற்று தள்ளி இருந்த துண்டை எடுத்து ஈரத்தை துடைக்க முயல அதற்குள் அவன் கைகள் அவளின் இடையில் சொருகியிருந்த அவளின் முந்தாணியை எடுத்து அதை செய்திருந்தது.

அவன் கைகள் உரிமையாக தன் இடையில் படிந்ததில் நாணத்தில் சிவந்த முகத்தை அவனுக்கு காட்டாமல் திரும்பிகொண்டவள், அறையில் இருந்து வெளியேற முயல அவளின் கைகளை பற்றி தன்னை நோக்கி அவன் இழுக்க, தன் மேல் வந்து விழுந்தவளை முதுகோடு இறுக அணைத்து கொண்டவன் "பொண்டாட்டியோட இந்த அழகான வெக்கத்தை பார்த்து ரசிக்க கூட எனக்கு கொடுப்பினை இல்லை பார்த்தியா..?!" என வருத்தப்பட, கண்ணீர் வழிய அவன் கருப்பு கண்ணாடி அணிந்த கண்களை பார்த்திருந்தாள் அவள்.

***********
பலருக்கு இந்த டீசர் எங்கேயோ பார்த்தது போல இருக்கா🤔🤔.. அதே தான் 2019ல டீசர் போட்ட கதையே தான் இது.. இப்போ தான் கதையா எழுத நேரம் வந்திருக்கு😁😁

விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்💖💖

நான் சென்ற முறை சொல்லி இருந்தது போல என் கதைக்கு தொடர் ஆதரவளித்த 3 பேர்களை தேர்ந்தெடுத்து இந்த புத்தகத்தை பரிசாக அளிக்கிறேன்💝💝💝

1. Priya Saravanan (என் முதல் கதை முதல் என்னோடே பயணித்து தொடர்ந்து அவரின் கருத்துக்களை பகிர்ந்து வருவதோடு.. அமேசானில் நான் பதிவிடும் கதைகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிபத்தோடு அங்கே பதியப்படும் கருத்துகளில் முதலாவது இவரருடையதாகவே இருக்கும்)

2. Kalai Karthi (தொடர்ந்து அத்தனை அத்தியாயங்களுக்கும் ஒன்று போலவே போஸ்ட் போட்டு குரூப்பில் ஆக்டிவாக இருப்பவர்)

3.pragadhya sree (தொடர்ந்து அத்தனை அத்தியாயங்களுக்கும் ஒன்று போலவே போஸ்ட் போட்டு குரூப்பில் ஆக்டிவாக இருப்பவர்)

மூவரும் உங்களின் முழு முகவரியை ஐபியில் சொல்லுங்க டியர்ஸ்💞💞

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
26912

ஹாய் பிரெண்ட்ஸ்

"மௌனமே இசையாய்..!!"
என் பத்தாவது புத்தகம் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது..

ஶ்ரீகலா பதிப்பகத்தின் புத்தம் புது வெளியிடுகள் தற்பொழுது விற்பனையில்...

நான்கு புத்தகங்களும் காம்போ ஆபரில் ரூ1,200, கூரியர் இலவசம், ஜூலை 31 வரை... தொடர்பு கொள்ள வேண்டிய அலைப்பேசி எண்கள் : +94777317478 & +91 97901 22588 (what’s app only)

மௌனமே இசையாய் லிங்க்

Combo link :

புதுப் புத்தகங்கள் :

*********
கதையில் இருந்து ஒரு குட்டி டீசர்..

இப்படி யோசனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அபியின் கண்கள் என்னவோ தன் முன் இருந்த திரையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. கீர்த்தி உள்ளே நுழைந்த நொடி முதல் இதோ இப்போது தன் அறையை நோக்கி வரும் இந்த நொடி வரை இமைக்கக் கூடத் தோன்றாமல் அவளை மட்டுமே அளவெடுத்துக் கொண்டிருந்தான் அபிமன்யு.

அவளின் ஒவ்வொரு செயலும் அசைவும் இவள் வேறு ஒருத்தி என ஒரு நொடி கூட அபிமன்யுவால் நினைக்க முடியாதவாறு இருந்தது. அதே நேரம் கிஷோரோடு தன் அறையை நோக்கி வருபவளை எதிர் கொள்ளத் தயாரானவன், கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அந்தக் காலடி சத்தத்தையும் கொலுசு ஒலியையும் கேட்க செவிகளைக் கூர்மையாக்கி காத்திருந்தான்.

சற்று நேரத்தில் மரியாதை நிமித்தம் தன் அறையின் கதவு லேசாகத் தட்டப்பட்டுத் திறக்கும் ஒலி கேட்கவும், அவனின் அத்தனை புலன்களும் விழித்துக் கொண்டன. ஆனால் அதன் பிறகு எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லை.

சட்டென விழிகளைத் திறந்தவன் தன் முன் நின்று கொண்டிருக்கும் கிஷோரையும் கீர்த்தியையும் பார்க்க... “நாங்க வேணும்னா அப்பறம் வரட்டுமா பாஸ்...” என கிஷோர் பணிவோடு கேட்க, வேண்டாம் என்பது போலத் தலையை அசைத்தவன், என்ன விஷயம் என்பது போல அவனைப் பார்த்தான்.

“எல்லாம் சொல்லிக் கொடுத்துட்டேன் பாஸ்..” என்றவனைக் கண்டு தலையசைத்தவன், “அவங்க சீட்டை காட்டிட்டுப் பைல்ஸ் பத்தின டீடைல்ஸ் சொல்லிடுங்க...” என்றவனின் பார்வை கீர்த்தியின் பாதத்தைத் தொட்டு மீண்டது.

உள்ளே நுழைந்த போது அபி அமர்ந்திருந்த விதத்தைக் கண்டு உடல்நலம் சரியில்லையோ என மனதிற்குள் பதறியவள், அடுத்து அவன் சாதாரண முகத்தோடும் குரலோடும் கிஷோரிடம் பேசியதை கண்டே நிம்மதி அடைந்து இருந்தவள், அவனின் பார்வை தன் பாதத்தைத் தொட்டு மீண்டதை கண்டு இதை எதிர்ப்பார்த்தே கொலுசை கழட்டி வைத்து விட்டு வந்திருந்ததை எண்ணி மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டாள் கீர்த்தி.

அந்தப் புன்னகை ஒரு கீற்றாக அவளின் இதழில் மின்னி பிறர் அறியும் முன் மறைந்தது. ஆனால் அந்தச் சில நொடிக்குள் அவளையே அளவெடுத்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் இருந்து அது தப்பவில்லை.

அதே நேரம் “வாங்க கீர்த்தி...” என்ற கிஷோரின் குரலில் வாசலை நோக்கி திரும்பியவள், “இந்தப் பக்கம் வாங்க...” என்ற அவனின் அழைப்பில் திரும்பி பார்க்க... அவன் கை காண்பித்த திசையில் பார்த்தவள், தீயை தொட்டது போலத் திகைத்து விழித்தாள்.

ஆம் கீர்த்திக்கு இருக்கை இதே அறையில் அபியின் எதிரில் அவனுக்கு இடது பக்கமாகக் கதவிற்கு நேர் எதிர் திசையில் அமைக்கப்பட்டு இருந்தது. தினமும் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அபியை காலையிலோ மாலையிலோ ஒரே ஒரு முறை பார்த்திருந்தால் போதும் என்று அவள் எண்ணி இருக்க... இது அவள் முற்றிலும் எதிர்பாராதது.

அவளின் நிலையைக் கண்டு சற்று முன் கீர்த்திப் புன்னகைத்தது போலவே தனக்குள்ளேயே புன்னகைத்து கொண்டவன் “நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் பேபி...’ என்று எண்ணிக் கொண்டான்.

*********

அந்த விடியற்காலை இளம் தென்றலை ரசித்தவாறு பின்கட்டுக்குச் செல்லும் வாசல் அருகில் நின்றிருந்த முரளியின் மேல் குளியல் அறையில் இருந்து வெளியில் வந்த துளசி இவன் அங்கு நிற்கக் கூடும் என எதிர்பாராததால் வேகமாக மோதி பின்னால் சரிய போக.. பின்னால் இருந்த சுவரின் உதவியோடு அப்படியே அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக் கொண்டு நின்றான் முரளி.

“மெதுவா.. பார்த்து.. என்ன அவசரம்..” என அக்கறையான குரலில் முரளி கூறவும் “நீங்க இங்க நிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலை.. சாரி..” என்று விளக்க முயன்றாள் துளசி. “சாரியா..! சாரி எதுக்கு..?! நியாயமா நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்.. சும்மா ஜில்லுன்னு இருக்கு..” என ரகசியம் பேசினான் முரளி.

அதில் நாணத்தில் சிவந்த முகத்தோடு முரளியிடம் இருந்து விலகி உள்ளே செல்ல முயன்ற துளசிக்கு அந்த வாய்ப்பை அவன் அளிக்கவே இல்லை. “என்ன இது பாட்டி பார்க்க போறாங்க, வழியை விடுங்க..” எனக் கோபமே இல்லாமல் சலித்துக் கொண்டு துளசி கூறவும் “அதெல்லாம் பார்க்க மாட்டாங்க.. அவங்களை நான் தூங்க சொல்லி இருக்கேன்..” என்றவாறு இன்னும் நெருக்கமாக அவளைத் தன் கைக்குள் கொண்டு வந்தான் முரளி.

“இது என்ன அரோமா..?” எனக் கேட்டவாறே துளசியின் முகத்தோடு தன் முகத்தை முரளி இழைய விடவும், அந்தச் சந்தோஷ அத்துமீறலை ஏற்க முடியாமல் விலக்க எண்ணி முரளியை நெட்டித் தள்ள முயன்று அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளி நிறுத்தியவள் மீண்டும் உள்ளே செல்ல முயன்றாள்.

ஆனால் அவளின் இந்தச் செயலை எதிர்பார்த்து இருந்தானோ என்னவோ சரியாக அவள் விலக முயன்ற போது அது வரை இலகுவாகப் பிடித்திருந்த பிடியில் அழுத்தம் கொடுத்து மீண்டும் தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்தான் முரளி.

“என்ன இது காலையிலேயே இப்படி அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்கீங்க.. வழிவிடுங்க நேரமாகுது..” என விலக துளசி எடுத்த முயற்சிகளெல்லாம் பலிக்காமல் போக.. “இது என்ன வாசம்னு சொல்ற வர நீ இங்கிருந்து நகரக் கூட முடியாது..” என்றவாறு தன் கை வளைவில் நின்று இருந்தவளின் மேல் அழுத்தத்தைக் கூட்டினான் முரளி.

“ஹ்ம்ம்.. இது உங்க பொண்டாட்டியோட வாசம்தான்..” என்றவாறே நாணமும் பொங்கி வந்த புன்னகையுமாகப் பதிலளித்த துளசி மீண்டும் விலக எத்தனிக்க.. “என் பொண்டாட்டி வாசம் எனக்கு நல்லாவே தெரியும்.. நான் கேக்குறது அதோடு கலந்து புதுசா ஒண்ணு இன்னைக்கு வருதே இது..” என்றவன் அந்த வாசத்தை ரசிப்பது போல மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுத்துச் சுவாசித்தான்.

இந்த கதையை படிக்க விரும்புபவர்கள்.. புத்தகம் வாங்கி படித்து மகிழுங்கள்

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்..

இதோ நீங்கள் கேட்ட பொறந்த டே டிரீட்💞💞

இன்று முதல் "உள்ளம் ஒன்றே என்னுயிரே..!!" கதையை அமேசானில் படிக்கலாம்..

வம்சி மாமா.. அவனுடைய பாப்புவை (சந்து பேபி) யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்..

விருப்பம் உள்ளவர்கள் படித்து மகிழுங்கள்😍😍

உங்களின் கருத்துக்களை அங்கேயே பகிர்ந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சி😘😘😘

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
27798

ஹாய்.. ஹாய்.. ஹாய்.. டியர்ஸ்..

ஒரு சந்தோஷமான விஷயத்தோடு உங்களை சந்திக்க வந்து இருக்கேன்💞💞

என் அடுத்த புத்தகமாக "இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்..!!" கதை இப்போது உங்கள் கைகளில் தவழ வந்து விட்டது💝💝💝

தொடர்ந்து என் புத்தகங்களை வெளியிடும் ஸ்ரீகலா பதிப்பகத்தாருக்கும் ஸ்ரீ அக்காவிற்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்😍😍😘😘

நம்ம வாசுதேவ் சக்ரவர்த்தி (தேவ்) மற்றும் நித்திலா (நிலா என்கிற ரேடியோ பெட்டியை) மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்..

அவர்களை புத்தக வடிவில் படிக்க விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
27845

ஹாய் டியர்ஸ்..

"இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" கதையை புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று ஆர்டர் செய்யலாம்..

விலை ₹ 305

அக்டோபர் 31 வரை இப்போது வந்துள்ள 4 புத்தகங்களையும் combo offer ல் வாங்குபவர்களுக்கு நான்கு புத்தகங்களும் சேர்த்து ₹1050ல் தள்ளுபடி விலையில் கிடைக்கும்.. மொத்தமாக வாங்க கீழே உள்ள லிங்கில் சென்று ஆர்டர் செய்யலாம்..

விருப்பம் உள்ளவர்கள் வாங்கி படித்து மகிழுங்கள்

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

அனைவருக்கும் ஹாப்பி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்💐💞

"மௌனமே இசையாய்..!!" கதையை இன்று முதல் கிண்டிலில் படிக்கலாம்..

இது நேரடி புத்தகமாக வந்த கதை.. இதுவரை ஆன்லைனில் பதிவிடாத ஒன்று..

*********
கதையில் இருந்து ஒரு குட்டி டீசர்..

இப்படி யோசனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அபியின் கண்கள் என்னவோ தன் முன் இருந்த திரையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. கீர்த்தி உள்ளே நுழைந்த நொடி முதல் இதோ இப்போது தன் அறையை நோக்கி வரும் இந்த நொடி வரை இமைக்கக் கூடத் தோன்றாமல் அவளை மட்டுமே அளவெடுத்துக் கொண்டிருந்தான் அபிமன்யு.

அவளின் ஒவ்வொரு செயலும் அசைவும் இவள் வேறு ஒருத்தி என ஒரு நொடி கூட அபிமன்யுவால் நினைக்க முடியாதவாறு இருந்தது. அதே நேரம் கிஷோரோடு தன் அறையை நோக்கி வருபவளை எதிர் கொள்ளத் தயாரானவன், கண்களை மூடி இருக்கையில் சாய்ந்து அந்தக் காலடி சத்தத்தையும் கொலுசு ஒலியையும் கேட்க செவிகளைக் கூர்மையாக்கி காத்திருந்தான்.

சற்று நேரத்தில் மரியாதை நிமித்தம் தன் அறையின் கதவு லேசாகத் தட்டப்பட்டுத் திறக்கும் ஒலி கேட்கவும், அவனின் அத்தனை புலன்களும் விழித்துக் கொண்டன. ஆனால் அதன் பிறகு எந்த ஒரு சத்தமும் கேட்கவில்லை.

சட்டென விழிகளைத் திறந்தவன் தன் முன் நின்று கொண்டிருக்கும் கிஷோரையும் கீர்த்தியையும் பார்க்க... “நாங்க வேணும்னா அப்பறம் வரட்டுமா பாஸ்...” என கிஷோர் பணிவோடு கேட்க, வேண்டாம் என்பது போலத் தலையை அசைத்தவன், என்ன விஷயம் என்பது போல அவனைப் பார்த்தான்.

“எல்லாம் சொல்லிக் கொடுத்துட்டேன் பாஸ்..” என்றவனைக் கண்டு தலையசைத்தவன், “அவங்க சீட்டை காட்டிட்டுப் பைல்ஸ் பத்தின டீடைல்ஸ் சொல்லிடுங்க...” என்றவனின் பார்வை கீர்த்தியின் பாதத்தைத் தொட்டு மீண்டது.

உள்ளே நுழைந்த போது அபி அமர்ந்திருந்த விதத்தைக் கண்டு உடல்நலம் சரியில்லையோ என மனதிற்குள் பதறியவள், அடுத்து அவன் சாதாரண முகத்தோடும் குரலோடும் கிஷோரிடம் பேசியதை கண்டே நிம்மதி அடைந்து இருந்தவள், அவனின் பார்வை தன் பாதத்தைத் தொட்டு மீண்டதை கண்டு இதை எதிர்ப்பார்த்தே கொலுசை கழட்டி வைத்து விட்டு வந்திருந்ததை எண்ணி மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டாள் கீர்த்தி.

அந்தப் புன்னகை ஒரு கீற்றாக அவளின் இதழில் மின்னி பிறர் அறியும் முன் மறைந்தது. ஆனால் அந்தச் சில நொடிக்குள் அவளையே அளவெடுத்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் இருந்து அது தப்பவில்லை.

அதே நேரம் “வாங்க கீர்த்தி...” என்ற கிஷோரின் குரலில் வாசலை நோக்கி திரும்பியவள், “இந்தப் பக்கம் வாங்க...” என்ற அவனின் அழைப்பில் திரும்பி பார்க்க... அவன் கை காண்பித்த திசையில் பார்த்தவள், தீயை தொட்டது போலத் திகைத்து விழித்தாள்.

ஆம் கீர்த்திக்கு இருக்கை இதே அறையில் அபியின் எதிரில் அவனுக்கு இடது பக்கமாகக் கதவிற்கு நேர் எதிர் திசையில் அமைக்கப்பட்டு இருந்தது. தினமும் எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அபியை காலையிலோ மாலையிலோ ஒரே ஒரு முறை பார்த்திருந்தால் போதும் என்று அவள் எண்ணி இருக்க... இது அவள் முற்றிலும் எதிர்பாராதது.

அவளின் நிலையைக் கண்டு சற்று முன் கீர்த்திப் புன்னகைத்தது போலவே தனக்குள்ளேயே புன்னகைத்து கொண்டவன் “நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் பேபி...’ என்று எண்ணிக் கொண்டான்.

*********

அந்த விடியற்காலை இளம் தென்றலை ரசித்தவாறு பின்கட்டுக்குச் செல்லும் வாசல் அருகில் நின்றிருந்த முரளியின் மேல் குளியல் அறையில் இருந்து வெளியில் வந்த துளசி இவன் அங்கு நிற்கக் கூடும் என எதிர்பாராததால் வேகமாக மோதி பின்னால் சரிய போக.. பின்னால் இருந்த சுவரின் உதவியோடு அப்படியே அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக் கொண்டு நின்றான் முரளி.

“மெதுவா.. பார்த்து.. என்ன அவசரம்..” என அக்கறையான குரலில் முரளி கூறவும் “நீங்க இங்க நிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலை.. சாரி..” என்று விளக்க முயன்றாள் துளசி. “சாரியா..! சாரி எதுக்கு..?! நியாயமா நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்.. சும்மா ஜில்லுன்னு இருக்கு..” என ரகசியம் பேசினான் முரளி.

அதில் நாணத்தில் சிவந்த முகத்தோடு முரளியிடம் இருந்து விலகி உள்ளே செல்ல முயன்ற துளசிக்கு அந்த வாய்ப்பை அவன் அளிக்கவே இல்லை. “என்ன இது பாட்டி பார்க்க போறாங்க, வழியை விடுங்க..” எனக் கோபமே இல்லாமல் சலித்துக் கொண்டு துளசி கூறவும் “அதெல்லாம் பார்க்க மாட்டாங்க.. அவங்களை நான் தூங்க சொல்லி இருக்கேன்..” என்றவாறு இன்னும் நெருக்கமாக அவளைத் தன் கைக்குள் கொண்டு வந்தான் முரளி.

“இது என்ன அரோமா..?” எனக் கேட்டவாறே துளசியின் முகத்தோடு தன் முகத்தை முரளி இழைய விடவும், அந்தச் சந்தோஷ அத்துமீறலை ஏற்க முடியாமல் விலக்க எண்ணி முரளியை நெட்டித் தள்ள முயன்று அவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளி நிறுத்தியவள் மீண்டும் உள்ளே செல்ல முயன்றாள்.

ஆனால் அவளின் இந்தச் செயலை எதிர்பார்த்து இருந்தானோ என்னவோ சரியாக அவள் விலக முயன்ற போது அது வரை இலகுவாகப் பிடித்திருந்த பிடியில் அழுத்தம் கொடுத்து மீண்டும் தன்னோடு சேர்த்து இழுத்து அணைத்தான் முரளி.

“என்ன இது காலையிலேயே இப்படி அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்கீங்க.. வழிவிடுங்க நேரமாகுது..” என விலக துளசி எடுத்த முயற்சிகளெல்லாம் பலிக்காமல் போக.. “இது என்ன வாசம்னு சொல்ற வர நீ இங்கிருந்து நகரக் கூட முடியாது..” என்றவாறு தன் கை வளைவில் நின்று இருந்தவளின் மேல் அழுத்தத்தைக் கூட்டினான் முரளி.

“ஹ்ம்ம்.. இது உங்க பொண்டாட்டியோட வாசம்தான்..” என்றவாறே நாணமும் பொங்கி வந்த புன்னகையுமாகப் பதிலளித்த துளசி மீண்டும் விலக எத்தனிக்க.. “என் பொண்டாட்டி வாசம் எனக்கு நல்லாவே தெரியும்.. நான் கேக்குறது அதோடு கலந்து புதுசா ஒண்ணு இன்னைக்கு வருதே இது..” என்றவன் அந்த வாசத்தை ரசிப்பது போல மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுத்துச் சுவாசித்தான்.

*********
கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை அங்கேயே பகிர்ந்தால் மிக்க மகிழ்ச்சி.. உங்கள் கருத்துக்களை கேட்க ஆவலாக உள்ளேன்..

இப்போதைக்கு இது ப்ரீ இல்லை டியர்ஸ்..

படிக்க விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கில் சென்று படிக்கலாம்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Last edited:

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
28090

ஹாய் பிரெண்ட்ஸ்

ஒரு சந்தோஷமான விஷயத்தோடு உங்களை சந்திக்க வந்து இருக்கேன்..

"மெல்ல உனதாகிறேன்..!!" இதுவரை ஆன்லைனில் வராத நேரடி புத்தகமாக சென்னை புத்தக கண்காட்சியில் இந்த வருடம் வெளி வர உள்ளது❤❤❤

இந்த புத்தகம் வெளி வர முக்கிய காரணமாக இருந்த ஸ்ரீ அக்காவிற்கு Srikala Tamil Novels முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்🙏🙏

கண் பிரச்சனை காரணமாக பாதி வரை எழுதி நிறுத்தி இருந்த கதையை நீண்ட ஓய்வுக்கு பின் எழுதி முடிக்க நீங்க மட்டும் அவகாசம் கொடுக்காமல் இருந்திருந்தால் கதையை முடித்து இருக்கவே முடியாது.. மிக்க நன்றி கா😍😍😘😘

அடுத்து உடல்நிலையின் காரணமாகவும் வேறு சில பிரச்சனைகளின் காரணமாகவும் தொடர்ந்து எழுத முடியாமல் சோர்ந்து போய் இருந்த நேரத்தில் உடன் நின்று தினமும் என்னை மிரட்டி திட்டி ஒவ்வொரு எபியாக எழுத வைத்த இருவர்.. நிஷா Nisha Selvakumar❤❤ மற்றும் ஜீவிதா Sreenitha Tamilnovels ❤❤ இவர்கள் மட்டும் தினமும் கேட்டு கொண்டே இல்லாமல் இருந்தால் அப்போதிருந்த மனநிலைக்கு கதையை முடித்து இருக்கவே மாட்டேன்.. அதே போல் வாய் விட்டு கேட்காமலே நம் தேவை உணர்ந்து உதவுவது தானே நட்பு.. அதையும் அழகாக எனக்காக செய்து இந்த புத்தகம் வெளி வருவதில் பெரும் பங்கு வகிக்கும் என் இனிய நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்😍😍😘😘

தொடர்ந்து என் கதையை புத்தகமாக பதிப்பித்து வரும் ஸ்ரீகலா பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்❤❤❤

முதல் முறையாக திருமணம் தவறாகி போனவர்கள் மறுமணத்தில் இணையும் கதைகளத்தை எடுத்துள்ளேன்.. வழக்கமாக என் கதைகளில் இருக்கும் டிவிஸ்ட் அண்ட் டேர்ன்ஸ் எதுவும் இல்லாத தெளிந்த நீரோடை போன்ற கதைக்களம் தான்.. ஆனால் அதை என் பாணியில் கொடுக்க முயன்று இருக்கிறேன்.. உங்களுக்கு இதுவும் பிடிக்குமென நம்புகிறேன்💜💜💜

*********

இப்போது கதையில் இருந்து ஒரு குட்டி டீ

தன் அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் காபி ஷாப்பில் மற்றவர் பார்வையில் படாமல் ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த சந்துவுக்கு எப்போது வீட்டுக்கு போவோம் என்று இருந்தது. உடனே கிளம்பி விட்டால் அர்வி கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டி இருக்குமே என்பதற்காகவே கன்னத்தில் கை வைத்தப்படி அமர்ந்திருந்தாள் சந்து.

இன்னும் அரைமணிநேரம் இங்கேயே அமர்ந்து இருந்து விட்டு வீட்டிற்குக் கிளம்ப எண்ணி இருந்தவளின் மனதில் வீட்டிற்குச் செல்லும் முன் என்னவெல்லாம் வாங்க வேண்டும்..? நாளைய சமையலுக்குத் தேவையானது எல்லாம் இருக்கிறதா..? பிரேமாவுக்கு மருந்து வாங்க வேண்டுமா..? என்பது போன்ற பல கவலைகள் ஓடிக் கொண்டிருக்க.. “ஆர் யூ மிஸ் சைந்தவி..?” என்றவாறே தன் குளிர் கண்ணாடியை கழற்றியவாறே அவள் முன் வந்து நின்றான் அஜய்.

அதில் பார்வையை உயர்த்தியவள் லேசான திகைப்போடும் பதட்டத்தோடும் ‘ஆம்’ எனத் தலையசைக்கவும், அவள் முன் இருந்த இருக்கையில் அமர்ந்தவன் “ஐ அம் அஜய் கிருஷ்ணா..” எனக் கூறி கையை நீட்ட.. ஒரு இயந்திர தனத்தோடு அஜய்யின் கையைப் பற்றிக் குலுக்கினாள் சந்து.

“சோ..” என அஜய் எதையோ பேச துவங்கவும், “நீங்.. நீங்க.. எப்படி.. இங்கே..?” எனத் தந்தி அடிக்கும் குரலில் சந்து பேச துவங்கி இருக்க.. அவளையே கேள்வியாகப் பார்த்தவன், “ஏன்.. என்னைப் பார்க்க தானே நீங்க இங்கே காத்துட்டு இருக்கீங்க.. இல்லை.. வேற..” என்று யோசனையாக நிறுத்தினான் அஜய்.

“இல்லையில்லை.. உங்களைப் பார்க்க தான்.. ஆனா நீங்க வரமாட்டீங்கன்னு நினைச்சேன்..” எனவும் வியப்பாகப் புருவத்தை உயர்த்தியவன் “ம்ம்.. இண்டரஸ்ட்டீங்..” என லேசான புன்னகையோடு சொன்னவாறே இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தான் அஜய்.

அவனின் செய்கையில் அதற்கு மேல் பேச்சு வராமல் சந்து தயங்கி நிறுத்தி அஜய்யின் முகம் பார்க்க.. “நான் வர மாட்டேன்னு நீங்க நினைக்க என்ன காரணம்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?” என்றவனின் பார்வை கூர்மையாக சந்துவின் முகத்தில் பதிந்திருந்தது.

அதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல் சந்து கையைப் பிசைந்தவாறு அமர்ந்திருப்பதைச் சில நொடிகள் இடையிடாமல் பார்த்துக் கொண்டிருந்தவன், “நான் வர மாட்டேன்னா.. இங்கே நீங்க வேற யாருக்காவது காத்துட்டு இருந்தீங்களா..? இல்லை.. நான் வர கூடாதுன்னு நினைச்சீங்களா..?” என நிறுத்தி நிதானமாகத் தன் கேள்வியைக் கூட கேட்டு முடிக்கவில்லை அதற்குள் “இல்லை யாருமே வர மாட்டாங்கன்னு தான் நினைச்சேன்..” என அவசரமாகச் சொல்லி இருந்தாள் சந்து.

அதில் அவனையுமறியாமல் ஒரு குறுநகை இதழ்களில் தோன்ற “ஒகே.. எனக்கு இந்தக் கல்யாணத்தில் சம்மதம்.. உங்களுக்கு ஓகேனா.. மேலே பேசலாம்.. நாளைக்கு மார்னிங் கால் செய்ங்க..” என்றவன் எழுந்து கொள்ள.. அதிர்வுக்கு மேல் அதிர்வை தாங்க முடியாமல் திகைத்த பார்வையோடு சந்து பதிலின்றி அப்படியே அஜய்யை பார்த்துக் கொண்டிருக்க.. “ஒகே பார்ப்போம்..” எனக் கையசைத்து விட்டுக் கிளம்பினான் அஜய்

**************************

சைந்தவி வேலையில் பிசியாக இருக்க.. குழந்தை அமர்ந்திருந்ததால் விலகி இருந்த சேலை இடைவெளியில் தெரிந்த வெண்ணிற இடையை வெறித்தவாறே சமையலறை வாயிலில் நின்றிருந்தான் கார்த்திக்.

அவளின் வேகமான வேலைக்கேற்ப அங்கங்கு விலகி இருந்த சேலையின் வழி தெரிந்த அவளின் அழகை எல்லாம் ஒரு மயக்கத்தோடு பார்த்தவாறே சத்தமில்லாமல் வந்து சைந்தவியைப் பின்னால் இருந்து அணைக்க முயன்றான் கார்த்திக்.

அந்த இறுதி நொடியில் எதுவோ தோன்ற சட்டெனத் திரும்பியவள் அங்கு நின்றிருந்த கார்த்திக்கை கண்டு சட்டெனப் பின்னால் நகர்ந்தாள் சந்து. அதில் தன் எண்ணம் ஈடேறாமல் போன கோபத்தோடு அவளைப் பார்த்தவன், “வர வர ரொம்ப அழகாகிட்டே போறே டி..” என்றான் ஒருவிதமாக இளித்துக் கொண்டே.

அதற்கு எந்தப் பதிலையும் சொல்லாமல் பார்வையைத் திருப்ப முயன்றவளுக்கு கார்த்திக்கின் இந்த விதமான பார்வை வெறுப்பைக் கொடுத்ததில் அங்கிருந்து வெளியில் செல்ல நினைக்க.. அவளின் எண்ணம் புரிந்தது போல் வழியை மறித்தது போல் வந்து நின்றான் கார்த்திக்.

அதில் கொஞ்சமும் பொறுமையற்ற பார்வையோடு நிமிர்ந்தவள் “இப்போ என்ன வேணும் உங்களுக்கு..?” என்றாள் எரிச்சலை உள்ளடக்கிய குரலில். “ஹ்ம்ம்.. வேண்டியது என்னன்னு சொன்னா கிடைக்குமா..?” என ஒரு மாதிரி இழுத்து கார்த்திக் நிறுத்தவும், அப்படி ஒரு கோபம் வந்த போதும் கூட வேறு வழியின்றி பல்லை கடித்துக் கொண்டு பொறுமை காத்தாள் சந்து.

“இன்னைக்கு என்ன சமையல் சந்தும்மா..” என்று அவள் மேல் உரசுவது போல் கார்த்திக் முன்னேறவும், அதில் வேகமாகப் பின்னால் சந்து நகர.. ஹாலில் இருந்து “அக்கா டிபன் ரெடியா..?” என்ற அரவிந்த்தின் குரல் கேட்கவும் சரியாக இருக்க.. “ச்சே” என்ற முணுமுணுப்போடு பல்லை கடித்துக் கொண்டு வெளியேறினான் கார்த்திக்.

அதில் திரும்பி சுவரில் சாய்ந்தவாறு கண்ணை மூடி ஒரு நிம்மதி பெருமூச்சை வெளியிட்டவள், “இதோ அஞ்சு நிமிஷம் அர்வி..” என்றவாறே சட்னியை அறைக்க முயல.. “இன்னும் ஆகலைனா பரவாயில்லை கா.. மெதுவாவே செய்.. நான் வெளியில் பார்த்துக்கறேன்..” என்றான்.

*********
படிக்க விருப்பம் உள்ளவர்கள் புத்தகம் வாங்கி படித்து மகிழுங்கள்❤❤

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்😍😍😍

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

"இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" கதையை இனி அமேசானில் படிக்கலாம்❤❤💜💜

பொங்கல் அன்றே பதிவேற்ற நினைத்திருந்தேன்.. உடல்நிலை ஒத்துழைக்கவில்லை.. இப்போது ஓரளவு சரியாகிவிட்டது.. நலம் விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகள்❤❤🙏🙏

இந்தியா லிங்க்

வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கான லிங்க்

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் அங்கு பதிந்துவிடுங்கள்... உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து காத்திருப்பேன்🙏🙏

நான் லிங்க் கொடுப்பதற்குள்ளாகவே படித்து விட்டு ரிவ்யூவும் பதிந்திருக்கும் இரண்டு செல்லங்களுக்கும் என் ஸ்பெஷல் தேங்க்ஸ்😍😍😘😘

இந்த கதை இப்போதைக்கு ப்ரீ இல்லை டியர்ஸ்..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர்ஸ்

அனைவருக்கும் ஹாப்பி யுகாதி💐💐❤❤

மாத இதழில் வெளிவந்த "நீயென தின்னுயிர் கண்ணம்மா..!!" கதையை இனி அமேசானிலும் படிக்கலாம்❤❤

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் அங்கேயே பகிர்ந்து கொள்ளுங்கள்💞💞 உங்கள் கருத்துக்களை அறிய ஆவலோடு காத்திருக்கிறேன்😍😍😘😘

இப்போதைக்கு ப்ரீ இல்லை டியர்ஸ்.. தரும் போது சொல்கிறேன்..

(பி.கு) லிங்க் கொடுப்பதற்கு முன்பே படித்து ரிவ்யூ கொடுத்துள்ள அந்த நல்ல உள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்😘😘

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top