All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"காதலே! நீயின்றி நானா!!" - கதை திரி

Status
Not open for further replies.

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய கதைளுள் இரண்டாவது கதை...

முதல் அத்தியாயத்துடன் விரைவில் வருகிறேன்...

நாயகி - லாவண்யபாரிஜாதம்
நாயகன் - த்ருஷில் அக்கி

Sai-pallavi5.jpgHarshvardhan Rane profile family, biodata, wiki Age, Affairs, Wife, Height, Weight, Biography,...jpg
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் #01

sai-pallavi-3.jpg

“ப்பா.. இப்போ எதுக்கு அவசரமா.. இல்லப்பா கொஞ்ச நாள் போகட்டுமே.. ஒரு வருஷம் டைம் தருவேன்னு சொன்னதெல்லாம் பொய்யா..”

“ப்பாஆஆ... ப்ச்.. ம்ம்மாஆஆ… நீயாச்சும் சொல்லேன்.. இப்போ என்னால சத்தியம்மா முடியாதும்மா… நீயாவது புரிஞ்சிக்கோமா.. ப்ச்.. இப்போ எதுக்கு சும்மா சும்மா திட்டுற.. ச்சே..”

“இதோ பாரு.. உன் அவசரதுக்கெல்லாம் லீவு கிடைக்காது.. அதெல்லாம் சொட்டதல கேக்கமாட்டான்ம்மா.. என் உசுர வாங்கிற.. சரி.. வச்சுதொல.. வந்து சொல்றேன்.. அதான் வந்து சொல்றேன்னு சொல்றேன்ல.. ம்ப்ச்.. ம்மா போனை வை.. நான் அப்பறமா பேசறேன் சரி.. சரி..”

ஒருவழியாக தாயை சமாதானப்படுத்தி போனை வைத்தவளுக்கு சுவத்தில் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது...

நீண்ட மூச்சை வெளியேற்றியவள் வாஷ்ரூம் சென்று முகத்தை அழும்பி டிஷுவினால் துடைத்துக்கொண்டு தன் கேபினுக்குள் நுழைந்தாள்.

பெங்களூரில் புகழ்பெற்ற சாப்ட்வேர் நிறுவனத்தில், ஐந்திலக்க சம்பளம் வாங்கும் இருபத்துநான்கு வயது இளம் யுவதி லாவண்யா..

சாதாரண ஜீன்ஸ் டாப்பில், இடுப்புவரை வளர்ந்த கூந்தலை சிறு கிளிப்பினுள் அடக்கியிருந்தாள்.. சராசரியை காட்டிலும் குள்ளம் என்பதால், குச்சி போல் நீண்ட ஹீல்ஸ் போட்டு உயரமாக காட்டிக்கொள்வாள்.

ஒப்பனையற்ற முகத்தில், கன்னத்து பருக்களும் தனி அழகே என்று அடையாளங்காட்டும் வதனம்..

அவள் டீமில் அவளுட்பட ப்ரீத்தி, முகுந்த், நவீன் என நான்கு பேர்.. ஒவ்வொருவருக்கும் தனித்தனி கேபின்கள் என்பதால், மற்றவர்களுக்கு காட்டாமல் இலகுவாக தன் முகத்தை மறைக்க முடிந்தது அவளால்..

கிட்டத்தட்ட ஒருவாரமாக இதே கதைதான்.. கேட்டுக்கேட்டு காது புளித்துப்போனது தான் மிச்சம்..

விரும்பினால் செய்வாள், வற்புறுத்தினால் பிடிவாதம் பிடிப்பாள்.. இதுதான் அவளின் குணம்.. அது தெரிந்ததால் யாரும் எதையும் அவள் மேல் திணிப்பது கிடையாது.. அதற்கான சந்தர்ப்பமும் அவர்களுக்கு வந்ததில்லை.. இன்றோ அனைத்தும் தலை கீழ்..

யோசிக்கிறேன் என்றாள்.. வற்புறுத்தவும் யோசனைக்கு தடா போட்டு, ஒரேடியாக மறுத்துவிட்டாள்.. அதை கேட்பதற்குத்தான் யாருமில்லை..

அவளும் ஆயிரம் தடவை மறுதலித்து கூறியும், அவள் பேச்சை காது கொடுத்து கேட்பதற்கு யாருமில்லை என்ற எரிச்சல் மிகுதியில் வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் போக தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டாள்.

திருமணம்.. இப்போதைக்கு அவளுக்கிருக்கும் ஒரே பிரச்சினை அது தான்…

என்ன செய்து அதை நிறுத்தலாம்.. என்ற யோசனை மட்டுமே மனமெங்கும்… பெற்றோரிடம் ஆயிரம் தடவைக்கு மேலும் கூறிப்பார்த்தும் அவர்கள் தன் பேச்சுக்கு செவிசாய்க்கவில்லை என்பதால், பேசுவதையே நிறுத்திக் கொண்டாள்.

பேசினால் அவளுக்கும் வீண் எரிச்சல்.. அவர்களுக்கும் மனச்சங்கடம் என்று சாமர்த்தியமாக பேசுவதை நிறுத்த, விடுவார்களா செந்தமிழ் கண்ணனும் மிசஸ் ராதா கண்ணனும்… அது வேறு யாருமில்லை அவளை பத்து மாதம் வயிற்றில் சுமந்த தாயும்.. நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் தகப்பனும் தான்..

தேனியில் பாரம்பார்யமான குடும்பம்தான் அவளுடையது... ஏக்கர் கணக்கில் விவசாய பூமி.. தோப்புதுறவு என்று ஊர்ப்பட்ட சொத்துக்கள்.. போதாதற்கு R.K மோட்டார்ஸ் என்று பெரிய அளவில் கார் கேர் அண்ட் செர்விஸ்யும் அமோகமாக பணத்தை வாரியிறைத்துக் கொண்டிருந்தது…

ஊர் முழுக்க சொந்தக்காரர்களும் சாதிசனமும் இருக்க எதிலும் குறைச்சலில்லாத வாழ்வு… வெளியூருக்கு சென்று வேலைபார்க்க முயன்றவளை அன்னை ராதா தடுத்தும் செந்தமிழ் கண்ணன் தான் மனைவியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அந்தளவுக்கு பாசமும் தான் கண்டிப்பு காட்டுபவரும் தான்.

இப்போது அவர்களே குறிப்பாய் தந்தையே தன் பேச்சினை கேட்கவில்லை என்றதும் அக்காவிற்கும் அழைத்து தன்னிலையை விளக்க முயன்றாள்.

கிருத்திகா அதற்கும் மேலே போய் அவளை கன்வீன்ஸ் செய்வதிலே குறியாய் இருக்க.. ‘பேசாம நீயே கட்டிக்கோ..’ என்று வாய் வரை வந்த வார்த்தையை, அவளுக்கு திருமணமாகி மூன்று வயதில் குழந்தையும் இருக்கும் ஒரே காரணத்தினால் வாய்க்குள்ளே அடக்கிக்கொண்டு இணைப்பை துண்டித்து விட்டாள்..

இவள்தான் கேட்க மறுக்கிறாள் என்று, இரண்டு வருட இடைவெளியில் பிறந்த அர்ஜுனுக்கு அழைத்தால் சுத்தம்…

“போட்டோ பார்த்தேன்.. மாப்பிள்ளை ஹிந்திப்பட நடிகன் மாதிரி இருக்கார்.. நீ பிடிக்கல சொல்றதுக்கு எந்த காரணமும் இல்லை..” பட்டென்று சொல்லிவிட்டு, “இதுக்கு மேலே எங்கிட்ட இதுபத்தி பேசுறதுக்கு போன் பண்ணாதே..” கட் அண்ட் ரைட்யாக சொல்லிவிட்டான்.

தம்பி தான்.. தேவையென்றால் அண்ணனாகவும் மாறிவிடுவான்…

தன்மானச் சிங்கம், அதற்குப் பிறகும் வெட்கம்கெட்டு பேசுமா என்ன?.

ஒரேடியாக எல்லாரிடமும் பேசுவதையே நிறுத்தி விட்டாள்.

இருந்தும் பெற்றோர் அவளை அப்பிடியே விட்டுவிடவில்லை..

அவர்கள் அழைப்பதும் இவள் கட் பண்ணுவதும் தொடர்கதையாகிக் கொண்டிருக்க, அவளின் டீம்மேட் மற்றும் நெருங்கிய தோழி ப்ரீத்தி தான் அதற்கு முடிவு கட்டினாள்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்பிடி தப்பிக்கலாம்னு நினைக்கிற. அவங்க போன் பண்ணினா பேசி உன் நிலையை எடுத்து சொல்லப்பாரு..” அதட்டிய அதட்டலில் தான் இன்று அழைப்பை ஏற்றிருந்தாள்.

இருந்தும் அவள் பேசவே வாய்ப்பு கொடுக்காமல் அவர்கள் பாட்டுக்கு பேசிக்கொண்டே போகவும் திட்டிவிட்டு துண்டித்து விட்டாள்..

‘ஒரு மாதத்துக்கு லீவுக்கு ஊருக்கு வரட்டாம்..’ இது அவளுக்கு முற்றிலும் புதுச்செய்தி… ஏன், எதற்கு என்று கேட்டும் பதிலில்லை..

இப்போது புது ப்ராஜெக்ட் கிடைத்திருந்ததால் அனைவரும் வேலையில் மும்முரமாய் ஈடுப்பட்டிருக்க, இந்த சூழ்நிலையில் லீவ் கேட்டு.. அதுவும் அந்த சொட்டதலகிட்ட… இதெல்லாம் நடக்கிற காரியமா(?).. நொந்து நூடில்ஸ் ஆகிவிட்டாள் லாவண்யா.

“என்னாச்சு லயா… வீட்ல பேசிட்டியா…”

தனக்குள் உழன்றவள் ப்ரீத்தியின் உலுக்கலில் சுயம் திரும்பி உதட்டை பிதுக்கினாள்.

“இனி காலில் விழுந்தாலும் எந்த யூஸும் இல்ல.. இந்த வாரம் வீட்டுக்கு வேற வர சொல்லியிருக்காங்க.. அதுவும் ஒரு மாசம் லீவ்ல.. எனக்கென்னமோ எனக்கெதிரா சதி திட்டம் தீட்டிருக்காங்கன்னு தான் தோணுது.. ஆனா என்னன்னு தான் தெரியல…”

தாடையை தடவியபடி கூறிய லாவண்யாவின் பாவனையில், ப்ரீத்தி விழுந்து விழுந்து சிரிக்க.. அவளை முறைத்தவள்,

“என் நிலமை உனக்கு சிரிப்பா இருக்கா…” கண்களை உருட்டி இதழை சுழித்தவளை புன்சிரிப்புடன் பார்த்தவள்,

“நம்ம பெத்தவங்க அவ்வளவு மோசமானவங்க கிடையாது.. தம்பொண்ணுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.. நீ ரொம்ப யோசிச்சு குழம்பறேன்னு தான் எனக்கு தோணுது.. நீ பேசமா லீவ் போட்டு வீட்டுக்கு போய்த்தான் பாரேன்…”

அட்வைஸ் கூறியவளை கடுப்பாய் பார்த்தவள், “நீ சொல்லாட்டி எங்களுக்கு தெரியாது பாரு.. பெரிய அட்வைஸ்மன்னினு நினைப்பு… நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குமாம்…”

“நான் என்னவோ ஊருக்கு போகமாட்டேன்னு சொன்னமாதிரி ரொம்பத்தான் பில்டப்பு பண்ற… நானே அந்த சொட்டதல கிட்ட எப்பிடிடா லீவு வாங்கலாம்னு தீவிரமா யோசிக்கிறேன்… நீ வேற.. போடி.. போய் வேலையப்பாரு என் வாயை பார்க்காம…”

அவள் தன்னை பார்த்து கேலியாய் சிரித்தற்கு பதிலடி கொடுத்த திருப்தியில் அதட்டல் விட, “உங்கிட்ட சொன்னேன் பாரு…” திட்டிக்கொண்டே தன்னிடத்தில் அமர்ந்து கணனிக்குள் தலையை புகுத்தவள், லாவண்யாவை முறைக்கவும் தவறவில்லை…

அதையெல்லாம் கண்டு கொள்வாளா(?)… ஆறுதல் கூறவந்த தோழியை பாதியிலே கழட்டிவிட்டு, அந்த சொட்டதலகிட்ட எப்பிடி லீவு வாங்கலாம் என்ற அதிமுக்கிய யோசனைக்கு சென்றுவிட்டாள்..

லஞ்ச் டைம்யில் டீம்மேட் முகுந்த் அழைக்கும் வரைக்கும் ஆழ்ந்த யோசனையில் இருந்தவள், அவன் அழைப்பில் தான் நடப்புக்கு வந்தாள்..

கான்டீனில் அமர்ந்து வாய் மொக்கினாலும், எதை உண்டாலென்று கேட்டால் அவளுக்கு விடை சொல்லத் தெரியுமா என்பது சந்தேகமே…

ஒட்டிப்பிறந்த ரெட்டையாய் அவளோடு திரியும் ப்ரீத்தியும், அவள் நையாண்டியில் அருகில் வராமல் முறைத்துக்கொண்டே செல்ல... அதையெல்லாம் கவனியாமல், தைர்யத்தை வரவழைத்துக்கொண்டு மேனேஜர் ராமச்சந்திரனின் அறைக்கதவை தட்டினாள்.

“எஸ்..” உள்ளிருந்து அனுமதி வரவும், வேண்டாத கடவுளில்லை…

முப்பத்தைந்து நாற்பதுக்குள் இருந்தார் ராமச்சந்திரன்... இந்த வயதிலே இலேசாக வழுக்கை விழ ஆரம்பித்திருந்தது.. லேசான தொந்தி, சோடாபுட்டி கண்ணாடி என மேனேஜர் போஸ்டுக்கான பத்துப் பொருத்தமும் பக்காவாக இருந்தது.. என்ன ஒன்று ஐடி பீல்ட்க்கு பொருத்தமற்றவராக இருந்தார்

வயதுப்பையன் இருக்கவேண்டிய இடத்தில் இந்த சொட்டத்தல அய்யகோ என்ன கொடுமையடா மனது கழுவிக் கழுவி ஊற்ற முகத்தில் எதையும் காட்டாமல் நுழைந்தாள்

“வேலை நேரத்தில் எதுக்கு வந்தீங்க மிஸ் லாவண்யா…”

குரலில் லேசாக கடுமை பரவியிருந்ததோ…

‘எண்ணிப்பார்த்து ஆராய்ச்சி செய்யவா வந்திருக்க.. வந்த வேலைய சட்டுப்புட்டுன்னு முடிச்சிட்டு போறதவிட்டு…’ மனசாட்சி ஆஜரானதில் தன் எண்ணவோட்டத்திற்கு ப்ரேக் போட்டு தடைவிதித்து விட்டாள்.

“அது.. சார்.. வந்து.. சார்..” எப்படி ஆரம்பிப்பதென தெரியாமல் அவள் இழுக்க,

“அதான் வந்திட்டீங்களே சொல்லுங்க…” அவள் இழுவைக்கெல்லாம் முற்றிப்புள்ளி வைத்தவர், சொல்ல வந்ததை சொல்லுங்க எனும் பாவனையில் பார்த்து வைத்தார்.

‘என்னத்தச் சொல்ல நொள்ளக் கண்ணா சாரி.. சாரி.. ராமச்சந்திரா… சொன்னா மட்டும் இந்தா பிடி லீவு ஊருக்கு போய் பஞ்சியும் சொஜ்ஜியும் திண்ணு நல்லா சீரட்டிட்டு வான்னா சொல்லப்போற… இன்னும் நாலு நாளைக்கு பச்சத் தண்ணிய வாயில் வைக்க முடியாதளவுக்கு அட்வைஸ் பண்ணியே கொல்லப்போற… எல்லாம் என் விதி என்னத்த சொல்ல…’

“மிஸ் லாவண்யா சொல்ல வந்தத சொல்லுங்க. இல்லன்னா போய் வேலையை கவனிங்க…” இம்முறை எரிச்சல் தெறித்தது உண்மையே..

மனசாட்சியையும் கண்டுகொள்ளாமல் ஆராய்ச்சி செய்து கண்டுகொண்டாள்.

“சார்.. என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. உசுர இப்பவோ அப்போவோன்னு இழுத்துக்கு கிடக்காம்… என்கையால பாலுத்தி நாத்தான் கட்ட வேகுமுன்னு ஒரே ஒப்பாரி சார்… அதான் ஊருக்கு போக லீவு கேக்கலாம்னு…” இழுத்து நிறுத்தினாள்.

ஆறு வருடங்களுக்கு முன்பே மண்டையை போட்டு சட்டமிட்ட பிரேமுக்குள் புன்னகையுடன் அடங்கிய இல்லாத பாட்டியை இருப்பதாக கூறி லீவு கேட்கும் ஒரே ஆள் இவளாகத்தான் இருப்பாள்.

“போன மாசம் கூட பாட்டிக்கு உடம்பு சரியில்லன்னு லீவு கேட்டிங்களே…”

‘அது பக்கத்து டீம் நான்சி கூட ஷாப்பிங் போக சொன்ன பொய்யி…’

“இல்ல சார்… அது அம்மா வழி பாட்டி… இது அப்பா வழி பாட்டி…”

“அப்படியா… அப்போ டூ வீக்ஸ் முன்னாடி பாட்டி ஊருக்கு வந்திருக்காங்க நாந்தான் கவனிக்கம்னு லீவு கேட்டிங்களே…”

‘அடேய் சொட்டதல உன் நியாபகத்தில தீய வைக்க…’

“அது… அது சார்… எங்க பாட்டியோட தங்கச்சி… தங்கச்சி சார்… சின்ன.. சின்னப்பாட்டி சார்…” என வலுக்கட்டாயமாக உதட்டை இழுத்துப்பிடித்து சிரித்து வைத்தாள்.

“ஆமா உங்களுக்கு மொத்தம் எத்தன பாட்டிங்க…”

‘இது உனக்கு தேவையா.. சொட்டதல சொறிஞ்சு விட்டுடுவேன் பார்த்துக்கோ…’

“அது சார்… எனக்கு ஊர்ல தெருக்கு தெரு பாட்டிங்க இருக்காங்க சார்… சொந்தக்காரங்க ஜாஸ்தி பாருங்க…” அம்சமாய் சிரிக்க, அவருக்கோ கடுப்பாய் வந்தது.

‘வேலை நேரத்தில எப்போபாரு லீவு லீவுன்னு என் உயிரை எடுக்கிறதுக்காகவே இந்த பொண்ணு வந்திருக்குமோ.. உண்மை சொல்லுதா பொய் சொல்லுதான்னே கண்டுபிடிக்க முடியலையே…’ தனக்குள் எண்ணியபடி அவள் முகம் பார்க்க, சடாரென்று முகபாவத்தை மாற்றிக்கொண்டு சோகமாய் நின்றாள் லாவண்யா.

‘உலக மகா நடிப்புடா சாமி..’ மனசாட்சியே அவள் நடிப்பை பார்த்து வியந்து தான் போனது.

‘பின்னே நான் யாரு.. என் ரேஞ் என்ன.. உலக அழகி ஐஸுக்கே ஆப்படிக்கிறவ இந்த லாவண்யா.. இதெல்லாம் சர்வசாதாரணம்…’ உள்ளே சிரிப்பும் கவுண்டரும் ஜோராக நடைபெற முகமோ சோகத்தில் குளித்திருந்தது.

‘இந்த நடிப்புக்காகவே உன்ன லீவு கொடுக்க வைக்கிறேன் பாரேன்.. இல்லன்னா என்பேர மாத்திக்கிறேன்..’ சபதமே எடுத்துக்கொண்டாள்.

வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு, “எனக்கு நல்லா தெரியும் சார் நீங்க லீவு கொடுப்பீங்கன்னு… அதுமட்டுமில்லாம இப்போ எதுக்கு தயங்கிறிங்கனும் புரியுது… புது ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு இந்த நேரத்தில் இந்த திறமையான பொண்ணு லீவு போடுதே… அப்பிடின்னு தானே சார் யோசிக்கிறிங்க… நீங்க கவலைய விடுங்க சார்… என் உயிர்த்தோழி ப்ரீத்தி.. என் பாட்டிக்கு உடம்பு சரியில்லாம நான் ஊருக்கு போவேங்கற ஒரே காரணத்துக்காக… அவளே என் வேலையையும் சேர்த்து செய்றேன்னு சொல்றா சார்…” மீண்டும் வராத கண்ணீரை சுண்டி விட்டவள், இதற்கு மேல் உங்கள் இஷ்டம் என்பதுபோல் பார்க்க, சற்றும் தாமதியாமல் ப்ரீத்தியை தன் அறைக்கு வரும்படி அழைத்தார் ராமச்சந்திரன்…

மேனேஜர் அழைக்கவுமே அவளுக்கு பொறி தட்டியது... இந்த லயா இப்போத்தானே இவரு ரூமுக்கு போச்சு.. ஆக என்னைய சிக்க வச்சுட்டா கழுத… என்னத்த சொல்லி தொலைச்சதோ தெரிலயே.. மனதுக்குள் படபடப்பாக இருக்க, முகத்தை கைகளால் அழுந்த துடைத்துக்கொண்டு, கதவை தட்டி அனுமதி வேண்டி உள்ளே நுழைந்தாள் ப்ரீத்தி…

‘என்ன சொன்னாலோ ஏது சொன்னாலோ… இந்தாளு வேற குறுகுறுன்னு பார்க்குதே…’ தயங்கித் தயங்கித்தான் உள்ளே நுழைந்து பார்வையாலே லயாவை பஸ்பமாக்கியவள், சாந்த சொருபியாக நின்றுகொண்டாள்.

“மிஸ் ப்ரீத்தி இவங்க சொல்றதெல்லாம் உண்மையா…”

‘என்னத்த சொன்னாள்னு தெரிஞ்சாலாவது ஆமா.. இல்லன்னு சொல்லலாம்… இது எதுவும் தெரியாம என்னத்தச் சொல்லி…’ திருதிருவென விழித்தவள் எதற்கும் இருக்கட்டுமென, “ஆ.. ஆமா.. ஆமா சார்…” என்றாள், விழியால் முறைத்தபடி இதழ்களில் சிரிப்பை தேக்கிக்கொண்டு.

அவளைப் பார்த்த லாவண்யாவிற்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வர கொடுப்புக்குள் அடக்கிக்கொண்டு, சோகப்பதுமையென நின்றாள்..

“ஆர் யு சுயர்…” அவர் சந்தேகமாகக் கேட்க, ‘ஐயோ.. ஐயோ.. கடவுளே என்னைய காப்பாத்துப்பா…’ வேண்டிக்கொண்டே,

“யா சார்…” எனவும், “அப்போ சரி.. மிஸ் லாவண்யா உங்களுக்கு எத்தனை நாள் லீவ் வேண்டும்னு சொன்னீங்கன்னா நான் மேலிடத்தில் சொல்ல வசதியா இருக்கும்…” என்றவர் ப்ரீத்தியின் புறம் திரும்பி,

“சோ நீங்களே இவங்க ப்ராஜெக்ட்யையும் சேர்த்து பார்த்திடுங்க…” என்றவர் லயாவின் விடுப்பு நாட்களை கேட்டு மேலிடத்தில் தகவல் தெரிவிக்க, இருவரும் அறையை விட்டு வெளியே வந்தனர்.

லயா லீவு கிடைத்த சந்தோஷத்தில் வெளியே வர, ப்ரீத்தி ‘என்னாது இவ வேலையையும் நானே பார்க்கனுமா..’ பேரதிர்ச்சியுடன் பிரஞ்சையற்று தன்னிடத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

திட்டியனுப்பிய தோழியை சமாதனப்படுத்தாமல் அவளையே கோர்த்து விடும் விசித்திரப்பிறவியான லாவண்யபாரிஜாதம்… முகத்தில் சிரிப்பு மின்ன தன்னிடத்தில் அமர்ந்து கொண்டவள்.. ப்ரீத்தியை கடுப்பேற்ற ஆசையுந்த, ஐ போனில் உதட்டை குவித்து செல்பி எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டாள்.


தொடரும்....


முதல் அத்தியாயத்தை பதிந்து விட்டேன்.. உங்கள் கருத்துக்களை கூறுங்கள் பிரெண்ட்ஸ்....
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் #02

Sai-Pallavi-pics-from-fidaa10.jpg

“ஐ ஃபால் இன் லவ் வித் யு மேக்னா…”

“ஏய்! கேவலமா நினைக்காத.. உண்மையிலே…”

“உன்னை பார்த்தவுடனே ஒரு பௌன்டிங் ஹார்ட் பீட்…”

“இளையராஜா பேக்ரௌன்ட் ஸ்கோர்… வெள்ள டிரஸ் போட்ட பொண்ணுங்க…”

“இந்த.. கோட் பாதர் புக் படிச்சிருக்கியா.. அதில வர அந்த தண்டர்போல்ட்…”

“எங்க அப்பாக்கு எங்க அம்மாவ பார்த்தோடன ஆனமாதிரி… எல்லாம் ஒரே செகண்ட்ல…”

“ஐயம் இன் லவ் வித் யு மேக்னா…”

ஒரே செகண்ட்… ஜஸ்ட் ஒன் செக்…”

“ஆஹ்.. நோ.. நோ.. நோ..”

“பீபிள் ஆர் ஸ்லீபிங்…”

“என் இனிய பொன் நிலாவே……”

சூர்யா கிட்டார் மீட்ட.. மேக்னா கண்ணோரச் சிரிப்புடன் பார்த்திருக்க, கூடவே நம்மவளும் விழி மூடாமல் பார்த்திருந்தாள்.

கயல் போன்ற நயனங்கள் ரசனையில் மிதக்க.. காதல் காட்சியை பார்த்திருந்த பேதையின் உள்ளமும் காதல் போதையில் திளைத்திருந்தது..

‘மேக்னாக்கு சூர்யா ரூட்டு விர்றான்.. இந்த லாவண்யாக்கு தான் எவனும் ரூட்டு விடமாட்டேங்கறான்..’ ஆயாசப் பெருமூச்சு மார்புக்கூட்டை உந்தித்தள்ளி வெளியேறியது.

“இதெல்லாம் சரியில்லடி சொல்லிட்டேன்…”

“நீ சொன்னா நான் கேட்டுபேனா… நான் இப்பிடித்தாண்டி சூர்யாவை சைட் அடிப்பேன்… நீ என்ன வேணா சொல்லிக்கோ…” விட்டதை தொடார்ந்தாள் லாவண்யா, தலையில் அடித்துக் கொண்டாள் ப்ரீத்தி.

‘இவ இருக்காளே இவ.. நான் என்ன சொல்றேன் இது என்ன சொல்லுது.. பிசாசு.. இவளெல்லாம் பிரெண்டா கிடைக்கலன்னு எவ அழுதா…’ கடவுளிடம் முறைப்புடன் கேள்வியெழுப்பியவள், தோழியின் புறமாக பார்வையை திருப்ப.. அவளோ ரயில்வே ஸ்டேஷனில் இருந்த ஸ்க்ரீனில் அதிஷ்டவசமாக தமிழில் ஓடிக்கொண்டிருந்த ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘காதல் படம் பார்க்கிற ஆசைல என்னைக்கும் போல என்னைய கழட்டி விட்டிட.. நீ எனக்கு பண்ற அட்டூழியதுக்கெல்லாம் சேர்த்து இப்போ கொடுக்கிறேன்டி சாபம்…’

‘உனக்கு இந்த ஜென்மத்தில காதலே வராதுடி.. அப்பிடியே ஜஸ்டு மிஸ்டா வந்தாலும் நீ காதலிக்கறவன் உன்னைய கடைசி வரைக்கும் காதலிக்காம ஆட்டம் காட்டல்ல.. என் ஊரையே மாத்திக்கிறேன்…’ (வழக்கமா பேரை மாத்துவேன்னு சொல்லுவாங்க நாம கொஞ்சம் வித்தியாசமா இருப்போமே..)

‘என் இனிய பொன் நிலாவே..’ லயாவின் இதழ்கள் சூர்யாவுடன் சேர்ந்து ஹம் செய்ய, கையை கிட்டார் போல் ஏந்திக்கொண்டு கண்மூடி ரசித்து மெல்ட்டானவளின் பாவனையில் பலரும் விசித்திரமாய் பார்த்துச்செல்ல அதையெல்லாம் கவனித்தாளா நம்மவள்(?)…

அவள் தான் முகமறியா தன் நவீன மன்னவன்பால் ஈர்க்கப்பட்டு, அவன் கைவளைக்குள்ளேயே தஞ்சமாகிய நிலையை கனாவில் கண்டு கட்டுண்டிருக்க.. அவள் நிலையை பார்த்து தலையில் அடித்துக்கொண்டாள் ப்ரீத்தி.

‘மானத்த வாங்குது கழுத..’ கடுகடுப்புடன் எண்ணிக்கொண்டு அவளை உலுக்க, தன்னிலைக்கு திரும்பியவள் ப்ரீத்தியை உறுத்து விழித்தாள்.

“எனக்கு தெரியின்டி… நீ இப்பிடித்தான் பண்ணுவேன்னு எனக்கு நல்லாவே தெரியுமடி பொறாம பிடிச்சவளே.. மூஞ்சப்பாரு மூஞ்ச.. உனக்கெல்லாம் எவனும் ரூட்டு விடமாட்டான்ங்கற ஒரே காரணத்துக்காக என் கனவை கலைக்கிறியா.. இதுக்காகவே சொல்றேன் நல்லா கேட்டுக்கோ…”

“உனக்கும் உன் சொத்த (அத்தை) பையன்.. அதான்டி மூஞ்சிலயே மூக்கு மட்டுந்தான் இருக்கிற மாதிரி கொட மொளகா சைஸ்ல இருக்குமே அவன்தான்… அவனுக்கு உனக்கும் கண்ணாலம் நடக்கல… என்ன நடக்கல.. நடக்கும் பார்த்துக்கிட்டே இரு…” சாபமிட்டவள், ‘ட்ரீம் பாய்.. ட்ரீம் பாய்.. வெயர் ஆர் யு மை டியர்..’ முகமறியா காதலனை நாடி ஓடிச்சென்று டூயட் ஆடத்துவங்கியிருந்தாள்.

ப்ரீத்தி பேயறைந்த முகத்துடன் லயாவை திரும்பிப் பார்த்தவளுக்கு மட்டும் நெற்றிக்கண் இருந்திருந்தாள், லாவண்யா அங்கேயே பஸ்பமாகியிருப்பாள்.

‘சண்டாளி உன் வாயில நல்ல வார்த்தையே வராதா.. போயும் போயும் அவன்கூட என்னை ஜோடி சேர்த்துவிடுற.. இதுக்காகவே உனக்கு கொடுத்த சாபத்தை வாபஸ் வாங்க மாட்டேன்டி…’ முறுக்கிக்கொண்டவள், பெங்களூரிலிருந்து மதுரை செல்லும் ஒன்பதுமணி ரெயின் புறப்படத் தயாராகவே, மீண்டும் தோழியை உலுக்கினாள்.

“லயா… லாவி… அடியே லாவண்யபரிஜாதம்… ரெயின் கிளம்பப்போகுதுடி… உன் மீதிக் கனவெல்லாம் ஏறினதுகப்றம் கன்டினியூ பண்ணு… எழுந்திருடி…” இருகைகளாலும் அவள் தலையை பிடித்து ஒரு ஆட்டு ஆட்ட,

“என்னை விடுடி கொலைகாரப்பாவி…” கூவிக்கொண்டே எழுந்து நின்றவளின் சத்தத்தில், பிளாட்பார்மில் அங்குமிங்கும் நடமாடிய பலரும் அவளை சந்தேகமாய் பார்க்க.. மீண்டுமொருமுறை தலையில் அடித்துக்கொண்டாள் ப்ரீத்தி.

‘முன்னையாச்சும் அரைலூஸுன்னு நினைச்சிருப்பாங்க.. இப்போ முழுப் பைத்தியம்னு கன்பர்ம்மே பண்ணிருப்பாங்க… இவளும் கால்,கையை வச்சுக்கிட்டு சும்மா இருந்தா தேவலாம்.. கழுத மானத்த வாங்குறதிலேயே குறியா இருக்கா…’ மனம் ஏகத்துக்கும் வைது கொண்டிருக்க,

“எதுக்குடி இப்போ பேய் மாதிரி கத்தி கூப்பாடு போற…”

“எல்லாத்துக்கும் காரணம் நீயொருத்தி தான்… எதுக்கு என் தலையை பிடிச்சு அந்த ஆட்டு ஆட்டின.. கீழ விழுந்து தொலஞ்சிருந்தாதான் உனக்கெல்லாம் புத்தி வரும்… கழுத வயசாகிடிச்சு.. ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளர…” அவள் ஆட்டிய ஆட்டில் மூளை எசகுபிசகாக சுழன்று விட்டதோ என்னவோ.. ஆடு ஆடுயென ஆடித்தீர்த்து விட்டாள் லாவண்யா.

‘இவளோட ஒரே தொல்லையா போய்டிச்சு.. சை..’ தலையை பிடித்தவள், “யம்மா பரதேவதை.. உன் அயித்தை ஏழு மணிக்கெல்லாம் ஸ்டேஷன் வந்து காத்துக்கிருப்பாங்க… நீ இப்போ போனாத்தான் வீட்டுக்கு போக முடியும்… தயவு செஞ்சு ஏறிடும்மா…” பாவமாய் மொழிய, தோழியை குறுகுறுவென பார்த்தவள் இதழை சுழித்து தோளில் துணிப்பையை மாட்டிக்கொண்டு விரைந்தாள்..

பின்னாலே வந்த ப்ரீத்தி, அவள் பர்ஸ்ட் க்ளாஸ் கம்பாட்மென்ட்யினுள் நுழையும் முன் கரம் பற்றி தடுக்க சோகத்துடன் திரும்பினாள் லாவண்யா.

சற்று முன்னர் இருந்த எரிச்சல்.. கேலி.. கோபம்.. முறைப்பு.. சிடுசிடுப்பு யாவும் அகன்று தோழியை பிரியும் சோகம் அப்பியிருந்தது இருவர் வதனத்திலும்…

“மிஸ் யூ டி.. சீக்கிரம் வந்திடு.. உன் மொக்க ஜோக்ஸ் கேக்காம என்னால சரியா வேலையே பார்க்க முடியாது…” என்று ப்ரீத்தியும், “நானும் மிஸ் யூ டி.. அதுக்காக என் நினைப்பில் வேலையில கோட்ட விட்டிடாம.. என்னோட ப்ராஜெக்ட் வொர்க்கையும் சேர்த்து ஒழுங்கா செஞ்சு முடி.. இல்ல வந்து உன்னை செஞ்சிடுவேன்…” என்று லாவண்யாவும் கூற இருவர் முகத்திலும் சோகம் மறைந்து புன்னகை அரும்பியது..

கிட்டத்தட்ட இருவருமே ஒன்று போல் தான்… முதன்முதலில் இவர்கள் சந்திதுக்கொண்டதே வேலைக்கு சேர்ந்த புதிதில்தான்… தன்னையும் சுற்றியுல்லோரையும் கலகலப்பாக வைத்திருக்கும் லாவண்யா, தன்னைப்போல இருந்த ப்ரீத்தியுடன் இலகுவில் ஒட்டிக்கொள்ள.. அவர்கள் நட்பும் வேகமாய் வளர்ந்திருந்தது…

கேலி, கிண்டல், சீண்டல், நக்கல், நையாண்டி, கோபம், மனஸ்தாபம்.. எல்லாமே குறைந்தது ஒரு நாட்களுக்குள்ளேயே வந்த வேகத்தில் பறந்தோடியும் விடும்… இரண்டு வருடத்திற்குள் இத்தனை பிணைப்பு வருவதற்கும் அதுவுமொரு காரணம்… மற்றவர் மனம் புரிந்து தழைந்து செல்லும் அற்புதமான தோழிகள்…

“ஊருக்கு போனதும் போன் பண்ணு… பாய்…”, லயாவை மென்மையாக கட்டிப்பிடித்து கன்னத்தை எச்சில் படுத்த,

“ஐயே! எத்தனவாட்டி சொல்லியிருக்கேன்.. கன்னத்த எச்சி பண்ணாதேன்னு.. சரியான இம்சைடி நீ…” செல்லமாய் சிணுங்கவும் பளிப்புக்காட்டிய ப்ரீத்தி, “நீ என் பிரெண்டுடி.. இப்பிடித்தான் எச்சி பண்ணுவேன்…” கண்சிமிட்டி கிளுக்கி சிரித்தாள்.

செல்லக் கோபத்துடன் பல்லை நறநறத்து முறைத்த லாவண்யா, ரெயின் நகரத்தொடங்கியதையும் பொருட்படுத்தாமல்.. சிரித்துக்கொண்டிருந்த ப்ரீத்தியின் முதுகில் ஒரு போடுபோட்டு “கொன்னுடுவேன் கொன்னு..” என்றவள், பின் வேண்டுமென்றே குரலில் சில்மிஷம் நிரம்பி வழியக் கூறினாள்.

“இது பப்ளிக் பிளேஸ் காது பங்காரம்.. என் லவர்க்கு மட்டுந்தேன்.. ” கண்சிமிட்டி கலகலத்துச் சிரித்தவள் செல்லமாய் விரல் நீட்டி எச்சரித்தாள்.

புசுபுசுவென்று மூச்சிழுத்து விட்ட ப்ரீத்தி, “அது எப்புடிடி ரெண்டு வருஷமா உன்கூட குப்பை கொட்டுற என்னை கிஸ் பண்ணக்கூடாதுன்னு சொல்லுவ.. அதுவும் யாருக்காக.. இல்லாத லவர்க்காக… இதெல்லாம் சரியில்ல லயா சொல்லிட்டேன்…” ‘இல்லாத லவர்’ என்பதை அழுத்தங்கூட்டி உச்சரித்தவள் அப்போதுதான் நினைவு வந்தவளாட்டம்,

“அச்சோ!! உன்னோட ஒரே ரோதனையா போச்சு… பேச்சை டைவர்ட் பண்ணிட்டு ஹாயா நிக்குது கழுதை…” முன்பாதியை சத்தமாகவும் பின் பாதியை தனக்குள் சொல்லிக்கொண்டவள், “ரெயின் போகுதுடி… லூஸு மாதிரி டைலாக் விடாம ஏறித்தொலை.. போ.. போ…” உச்சஸ்தானியில் கத்தினாள்.

காதை குடைந்து விட்டுக்கொண்ட லாவண்யா, “அதுக்கு ஏன்டி இந்தக் கத்து கத்துற… இந்த லாவண்யாவை என்னன்னு நினச்ச.. பறக்குற ப்ளைட்லயே பாய்ஞ்சு ஏறவ.. இந்த ட்ரைன்ல ஏறிடமாட்டேனா… நீ ஹாஸ்டல் போனதும் எனக்கு போன் பண்ணு மறந்திடாத…”

பதிலுக்கு தானும் கூவிக்கொண்டே, இடது கைச்சந்தில் தொங்கிக்கிடந்த தோள்பையை சரிபார்த்தவள், உடலை தழுவியிருந்த நீலநிறத்து தாவணியை இடதுகரத்தால் அழுந்தப்பற்றி, வேகமெடுக்கத் துவங்கிய ரெயின் கம்பியை வலது கரத்தால் பற்றி தாவியேற முயன்றாள்.

ப்ரீத்தி தலையில் கையை வைத்து பதட்டத்தோடு பார்த்திருக்க, லாவண்யாவும் அவளுக்கு குறைவில்லாத பதட்டத்தோடு, ஏறுவோமா மாட்டோமா என்ற பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள்.

‘நான் மட்டும் இந்த ட்ரைனை மிஸ் பண்ணேன்.. மிசஸ் ராதா கண்ணன் என்னைய வெரட்டி வெரட்டி விளாசுமே..’ வென காலங்கடந்து தன் மடத்தனத்தை நொந்துகொண்டாள்.

அங்கிங்கு நின்ற சிலரும் கூட இவர்களின் கூத்தை வேடிக்கை பார்த்து அவள் ரெயினில் ஏறுவாளா மாட்டாளா என்று சுவாரஸ்யமாக பார்த்துச்செல்ல.. எவரும் எதிர்பாராதவிதமாக பெண்ணவள் கொடியிடையில் வலுவான தன் கரம்பொதித்து, அவள் ஏறுவதற்கு வழிவகை செய்தான், ஆறடியை தொட்ட ஆஜானுபாகுவான ஒருத்தன்.

இத்தனை நெருக்கத்தில் அதுவும் அந்நிய ஆடவன் கரம்பட்டதும் வெற்றிடை சிலிர்த்தெழ.. கோழிக்குண்டு விழிகள் தெறித்துவிடும் போல் அகல விரிய, அதிர்ச்சியில் உறைந்திருந்தாள் லாவண்யா.

அதையெல்லாம் பொருட்படுத்தாதவன் பெண்ணவள் இடையழுத்தி ஒற்றைக்கையை கம்பியில் ஊன்றி கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளே இழுத்துக்கொண்டதில், பரந்துபட்ட அவன் மார்பில் பெண்மை இலக்கணங்கள் ஆழப்புதைய அவனுடலோடு ஒன்றியவள், முதல்கட்ட அதிர்ச்சி விலகி அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.

ஆறடியில் கட்டுமஸ்தான உடலுடன் கம்பீரமும் கலந்து உரோமானிய சிற்பமும் தோற்றுப்போகும் வண்ணம் அம்சமாய் இருந்தான் த்ருஷில் அக்கி.

முடிச்சிட்ட புருவங்கள் சுருங்கி விரியும் அழகும், எதிரில் உள்ளவர்களின் மனதை ஊடுருவிப்பாயும் ஆழ்ந்த கூர்விழிகளும், கல்வெட்டுபோல் செதுக்கிய சீரான நாசியும், அழுந்த மூடிக்கொண்ட அதரங்களும்.. கூடுதல் கவர்ச்சியாய் அளவான மீசையும்.. கன்னக்கதுப்பு, தாடை ஊடே பயணித்து கழுத்துவரை அரும்பியிருந்த தாடியும் ஆணழகனாகவே காட்டியது..

சாம்பல்நிறத்து கேசுவல் டிஷர்ட்டின் மேல், பட்டன்கள் முழுதும் திறந்தபடியாக நீலநிறத்து முழுக்கைச் சட்டையை முழங்கை வரைக்கும் உயர்த்தி, கருப்புநிற கால்சட்டை அணிந்து, கண்களை மறைக்கும் வகையில் குளிர்கண்ணாடியும் போட்டிருந்தவனின், கட்டான உடலில் திண்ணிய புஜங்கள் மற்றும் பரந்துவிரிந்த மார்பும் அவனின் ஆடையைத் தாண்டி அப்பட்டமாய் வெளிப்பட்டு கூடுதல் அழகு சேர்த்ததில்.. பாதி நேரத்தை உடற்பயிற்சியிலே கழித்திடுவான் என்பதை சொல்லாமல் சொல்வது போன்றிருந்தது…

‘ஆத்தாடி எம்புட்டு அழகு..’ மனசாட்சி வாயைப் பிளந்தது.

காந்த விழிகளின் சொந்தக்காரி, அவன் பிம்பத்தை அங்குலம் அங்குலமாக ஸ்கேன் செய்து இதயத்தில் ஸ்டோர் செய்ததில்.. ஆடவன் முகம் பச்சக்கென்று அவள் இதயவரையில் ஒட்டிக்கொண்டது.

அவ்வளவு நேரமும் அவனை ஆராய்ந்து கொண்டிருந்தவள், அக்கணம் தன்னிலே உணர்ந்தாள். தான் இன்னமும் அவன் பிடியில் கட்டுண்டிருப்பதை…

தாய்ப்பறவையின் சிறகுக்கடியில் ஒண்டிக்கொள்ளும் கோழிக்குஞ்சினைப் போல், லாவண்யாவின் மேனி முழுதும் அவன் பரந்துவிரிந்த உறுதியான மார்பினில் அழுந்தப் புதைந்திருக்க.. ஆடவன் வலுவான கரங்களும் தம்போக்கில் ஆக்டோபஸ்ஸாய் அவளுடலை தன்னுள்ளே அடக்கியிருந்தது.

மூச்சுத்திணற.. தொண்டை வறண்டுபோக.. மார்பகங்கள் இனம்புரியாத உணர்வுதன்னில் வேகமாக ஏறியிறங்கி விளையாட.. நிற்கவும் முடியாமல் தோய்ந்தவள், பற்றுகோடாய் ஆடவன் சட்டை காலரை இருகைகளாலும் அழுந்தப்பிடித்ததில் மெல்லியாள் தளிர்விரல்கள் பட்டும்படாமலும் அவன் மார்பு முடிகளை தொட்டுமீண்டது.

சில்லென்ற அவள் விரல்கள் தீண்டிச்சென்ற இடங்களெல்லாம் தீப்பற்றி எரிவது கண்டு, இடுங்கிய கூர்விழிகளை அழுந்தமூடிக் கொண்டவன்.. சில நிமிடங்களில் இயல்பிற்கு திரும்பி மெல்லிடையாளை தள்ளி நிறுத்தினான்.

சில கணங்கள்தான் என்றாலும் அவனுடல் சூடு தன் மேனியை ஆழமாய்ப் பதம்பார்த்ததில் தன்னிலை குன்றி, அவனை வெறித்துப் பார்த்தவள்.. வேறு எங்கிலும் பார்வையை திருப்பினாளில்லை.

‘லயா குட்டி.. லாவி பேபி.. கியூட்டி லாவண்யபாரிஜாதம்.. உன் ஆளு இவந்தான் கண்ணு.. உட்டுடாத பிக்ஸ் பண்ணிக்கோ..’ உள்ளுக்குள் கூக்குரல்.

பட்டென்று மறுபுறத்தே திரும்பி நின்றுகொண்டவளுக்கு, இதயம் வேகவேகமாய் ஏறியிறங்க, மனமெங்கும் ஒரே எண்ணமே ஊர்வலம் நடாத்தியது.

“உன்னை பார்த்தவுடனே ஒரு பௌன்டிங் ஹார்ட் பீட்… இளையராஜா பேக்ரௌன்ட் ஸ்கோர்… வெள்ள டிரஸ் போட்ட பொண்ணுங்க… இந்த.. கோட் பாதர் புக் படிச்சிருக்கியா.. அதில வர அந்த தண்டர்போல்ட்… எல்லாம் ஒரே செகண்ட்ல… ஐயம் இன் லவ் வித் யு…”

சூர்யாவின் காதல் வசனங்கள் தேவையான இடத்தில் எடிட் செய்யப்பட்டு, மனதோரம் ராகமிசைக்க.. உடலின் மொத்த ரத்தமும் வதனத்தில் குடிபெயர்ந்ததில் குப்பென்று முகம் சிவக்க.. இருகைகளாலும் வாயை மூடி நாக்கை கடித்துக் கொண்டவளுக்குள் ரயிலோடும் ஓசை.

நெஞ்சுக்குள்ளே படபடவென்று வந்தது.. வைரத் துகள்களாய் வேர்வை அரும்புகள் முகமெங்கிலும் பூக்கோலம் போட, விரிந்தும் விரியாமலும் செப்பிதழ்கள் காந்தச் சிரிப்பினில் நெளிந்தது.

‘அடியே லாவண்யா நீ அதிர்ஷ்டக்காரிடி புள்ள..’ பொறாமையில் வெந்த உள்ளம் சன்னமாக முனுமுனுத்தது.

முத்துப்பற்கள் பளிச்சிட தனக்குள்ளே மலர்ந்தவள்.. முகம் மறைத்த கார்குழற்கூந்தல் இடுக்கால், அடிக்கண் வழியாக அவனை நோட்டமிட்டாள்.

பார்க்கப்பார்க்க தெவிட்டாத அவன் அழகையும், கம்பீரத்தையும் தன்னை மறந்து பார்த்திருந்த பெண்ணவளுக்குள் பல்லாயிரக்கணக்கான பட்டாம்பூச்சிகள் ஒரேநேரத்தில் சிறகடித்துப் பறப்பது போன்றதொரு மாயை.

‘ஏய்! புள்ள லாவண்யா.. எத்தனை கதைல இந்த சீன் வந்திருக்கு... வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கறதுன்னா என்ன அர்த்தம்… புரியலையா?... நீ காதல்ல விழுந்துப்புட்டேன்னு அர்த்தம்டியோய்…’ ஏத்தி விட்டது மனசாட்சி.

ஏற்கனவே சிவந்திருந்த கன்னக்கதுப்புகள் மேலும் சிவந்து போக.. நாடிநரம்பெல்லாம் இனம்புரியாத உணர்வொன்று சிலீரென்று தாக்கிச்சென்றது.

ஆண்மையின் முழுப்பரிமாணத்தில் நின்ற ஆடவன்மீது தனக்கு தோன்றிய எண்ணங்களை கண்டு, வெட்கத்துடன் சஞ்சலமும் கலக்க உள்ளூர எழுந்த படபடப்புடன் நெற்றியை வருடிக்கொடுத்தவள்.. அவனின் கணைப்புச் சத்தத்தில் சட்டென்று தலை நிமிர்த்தி அவன் முகம் பார்த்தாள். இமைகள் பட்பட்டென்று ஒன்றையொன்று முத்தமிட்டுக் கொண்டது

‘பார்க்காத என்ன பார்க்காத
கொத்தும் பார்வையால என்ன பார்க்காத..’
மனசாட்சியின் பேக்ரவுண்ட் மியூசிக்.


பெண்ணவள் செய்கை அவனுள் சிரிப்பை வரவழைத்ததுவோ என்னவோ.. இதழ்கடையோரம் இளஞ்சிரிப்பில் துடிக்க அடக்க முடியாமல் இதழ் பிரித்து அழகாய் சிரித்தவன், அவள் பால்நிலவு வதனம் கூர்ந்து, தன் கணீர் குரலில் “ஓய்!! எவ்வளவு நேரம் இங்கயே நிற்கபோறதா இருக்க…” சாதாரணமாக கேட்கவும் தான் அவளுமே உணர்ந்தாள்.

‘அடியே லாவண்யா நீ தேனி பொண்ணுங்கறது கரெக்ட்டாத் தான்டி இருக்குது… இப்பிடியாடி பட்டிக்காட்டான் பைவ் ஸ்டார் ஹோட்டல்ல பார்த்த கணக்கா வாயப்பொழந்துக்கு நிற்ப… அறிவுகெட்ட கூமுட்டை…’

தான் இன்னமும் வாயில் அருகேயே நிற்பதை உணர்ந்தவள், ஒற்றைக்கண்ணை சுருக்கி கடையோரப் பற்களை நெரித்து ‘ஷ்ஷ்ஷ்’ என்று ஓசையெழுப்பியவள், மானசீகமாக தலையை தட்டிக்கொண்டு ஏற்கனவே ரிசேர்வ் செய்த இடம்நோக்கி படபடப்புடன் நகர்ந்தாள்.

கூடவே அவனும்.. பெண்ணவள் ஜன்னலோரமாய் அமர்ந்திருக்க, அவளுக்கு எதிரே அவனும் அமர்ந்து கொண்டான்.

வேகமெடுத்த ரெயில்.. பர்ஸ்ட் க்ளாஸ் ஏசி கூபேயில் இருவரைத்தவிர எவருமில்லை…

ஆண்களுடன் பழக்கமில்லாதவளில்லை, அவள் டீமிலே இருவர் இருக்க, அவர்களுடனெல்லாம் சகஜமாய் பழகுவாள் தான்.. அலுவலகத்தில் கூட இலகுவில் அனைவருடனும் ஒட்டிக்கொண்டவள், இருந்தும் இவன் அருகாமையில் பேதையவள் நெஞ்சம் இயல்பையும் தொலைத்து தட்டுத்தடுமாறித்தான் போனது.

கிட்டத்தட்ட பதினொரு மணிநேரப் பயணத்தை இவனுடன் தனிமையில் கழிக்கபோகிறோம் என்ற எண்ணமே அவளுள் கிளுகிளுப்பையும் கூடவே உதறலையும் ஏற்படுத்த.. எம்பிக்குதிக்க முயன்ற இதயத்தை கடினப்பட்டு அடக்கிக்கொண்டு, ஜன்னல் கம்பியினில் தலை சாய்த்து இருளில் பார்வை பொதித்தாள்.

கருமைபடிந்த ஆகாயச் சுவற்றில் நிழலோவியமாய் கடந்து சென்ற தூரத்து மின்விளக்கொளிகளும்.. மரங்களின் அசைவுகளும்.. ஏசியை அனைத்து ஜன்னலோரத்து கண்ணாடியை இறக்கியதில் மேனியில் வருடிக்கொண்டு சென்ற கூதல் தென்றலின் ஸ்பரிசமும்.. பிறைவடிவில் ஒளிவீசிய பால்நிலவின் அழகும் என அந்தப் பயணம் அத்துனை அற்புதமாக இருக்க.. சஞ்சலம் மட்டுப்பட்டு தன்னையும் மறந்து கண்மூடி ரசிக்கலானாள் பெண்ணவள்.

தொடரும்...

இரண்டாம் அத்தியாயம் பதிந்துவிட்டேன்... உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... முதல் பகுதிக்கு வழங்கிய ஆதரவை கண்டு மெய் சிலிர்த்து விட்டேன்... தொடர்ந்து இதே ஆதரவைக் கொடுங்கள்.... நன்றி...

"காதலே! நீயின்றி நானா!!" - கருத்து திரி
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் #03

97765ae33c7c917b89162d0682320955.jpg

“ஹாய் மாலினி.. அயம் கிருஷ்ணன்…”

“நான் இத சொல்லியே ஆகணும்…”

“நீ அவ்வளவு அழகு..”

“ஆஹ்..”

“இங்க எவனும் இவ்ளோ அழகோ ஒரு..”

‘ப்ச்.. ம்ஹா..’ “இவ்வளவு அழக பார்த்திருக்க மாட்டாங்க.. அயம் இன் லவ் வித் யு…”

“முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக… நெஞ்சமும் புண்ணானதே…
இத்தனை நாளாக… உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ…
நாட்களும் வீணானதே…”


நரேஷ் ஐயரின் குரலோடு சேர்த்து, தன் கணீர் குரலும் ஒன்றெனக் கலக்க ரசித்துப் பாடிக் கொண்டிருந்தான் யுவன்.

தனி உலகில், கனவுக் கற்பனைகளின் மடியில்…

அவன் பாடிக்கொண்டே ஆட, கூடவே வதனம் மறைத்த மெல்லிய துணி காற்றில் அசைந்தாடி அவள் வரிவடிவை எடுத்துக்காட்ட.. அழகோவியமாய் ஓர் பெண்.

பரபரப்புற்றது அவன் உள்ளம், பெண்ணவளின் வதனம் பார்த்திட…

எதிர்பார்ப்பில் இவன் அருகினில் நெருங்க… அவளோ நாணத்தில் இவனின் ஒவ்வொரு எட்டுக்கும் பின்னெட்டு வைத்துக் கொண்டிருந்தாள்.

தாரகையின் முகங்கான முயன்று ஏமாற்றம் தழுவியவன், விடாக்கண்டனாக மீண்டும் முயற்சித்தான்.

பரவசம் தன்னிலே முகம் முழுதும் பூத்திட, கனாவினில் கட்டுண்டவனையும் குலைப்பதே நோக்கம் என்பதுபோல் உச்சஸ்தாயியில் ஓர் குரல்… அகோரமாய் அவன் செவிகளில் விழுந்து சிந்தை கலைத்தது.

“டேஏஏஏய்ய்ய்… மச்சி ட்ரைன் கிளம்புதுடா இன்னும் என்ன பண்ற… சீக்கிரம் வா…”

இசையுடன் கனவில் மூழ்கித் திளைத்து, சுற்றி நடப்பவை ஏதும் அறிந்திடாது தனியுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவன்… அக்கணம் தன்னிலே, திடீரென கூச்சலிட்ட குரலினில் சுயம் திரும்பி தலையுலுக்கி நிமிர்ந்தவன், மெதுமெதுவாக வேகமெடுக்கத் துவங்கிய ட்ரைனைக் கண்டதும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்து தலையில் கொட்டிக்கொண்டவனாக.. அருகிலே அநாதரவாய் வீற்றிருந்த தோள்பையை தோளில் சுமந்துகொண்டவன் ட்ரைனைப் பிடிக்க ஓட்டமெடுத்தான்.

‘எப்போ பாரு மூஞ்சி ஒழுங்காவே தெரியாத பொண்ணுங்க கூட டூயட் ஆட வேண்டியது.. அப்பறம் வடை போச்சேன்ற ரீதியில் பீல் பண்ண வேண்டியது..’ எப்போதும் போலாக மனசாட்சி புலம்பலைத் துவங்கியது.

‘நான் சொல்றத நல்லா கேட்டுக்கோ… இந்தவாட்டியாவது யாராவது ஒரு பொண்ண பார்த்து கரெக்ட் பண்ணிடு.. இல்ல காலம்பூரா கன்னிப்பையந்தேன்…’ ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டது யுவனின் மனசாட்சி.

அதில் அவனும் சற்றுக் கடுப்பானானோ..,

‘நானே அந்த இஞ்சி இடுப்பழகி முகம் பார்க்காம போனதில் கடுப்பில் கெடக்கேன்.. நீ வேற ஏத்தி விடாத… கொல காண்டுல இருக்கேன் கொல்லாம விடமாட்டேன் பார்த்துக்கோ… பல்லை நறநறத்து மிரட்டினான் யுவன்.

‘பார்ரா ஒரு பொண்ண கூட ஒழுங்கா கரெக்ட் பண்ணத்தெரியாத நீ.. என்னைய கொல்லப் போறியாக்கும்… சும்மா காமெடி பண்ணாதடா.. சீக்கிரம் ட்ரைனை பிடி அப்பறமா மிஸ் பண்ணிட்டேன்னு ஒப்பாரி வைக்கப்போற…’ கிண்டலாய் உரைத்த மனசாட்சி, அவன் பல்லைக் கடித்து கோபத்தை அடக்கவுமே.. சமத்தாய் உள்ளே சென்று விட்டது.

‘டேய் யுவா உனக்கு வந்த சோதனையை பாரேன்.. இதுக்காவது யாராச்சும் ஒரு பொண்ண ரூட்டு விட்டே ஆவணும்டா யுவா…’ உறுதிமொழி எடுத்துக் கொண்டான் அவன்.

கூச்சலிட்ட குரலுக்குச் சொந்தக்காரனான அவன் நண்பன் பிரபு, “டேய் இது பஸ் இல்லடா.. ஸ்லோமோஷனில் ஓடிவந்து ஏறத்துக்கு.. சீக்கிரம் வாடா…” மீண்டும் ஒருதடவை தொண்டை கிழியக் கத்தினான்.

அதில் சுதாரித்தவன், வேகமெடுத்த ரெயின் கம்பியை பற்றி தாவியேற முயல.. பாலில் தேனை முக்கியெடுத்தாற்போன்ற தளிர் விரல்கள் கொண்ட, கண்ணாடி வளையல்கள் அணிந்த, பெண் கரமொன்று அவன் புறமாய் நீண்டது.

ஆச்சரியத்தில் விழிகள் இரண்டும் தெறித்து விடும்போல விரிந்திட.. அதரங்களில் ஆர்வப் புன்னகை தவழ்ந்திட.. கைகளில் இருந்த பார்வை இன்ச் இன்சாக முகத்தின் புறமாய்ப் பாய்ந்தது.

‘முகமா அது!.. அம்மாடியோய்!! அழகுக்கெல்லாம் அழகு…’ அவன் மனம் கூக்குரலிட்டது.

‘இது பெண்ணா.. இல்லை தேவதையா..’ ஆச்சரியத்தில் அவன் விழிகள் பூவாய் மலர்ந்தது.

‘டேய் யுவா… இத்தனை நாளா நீ தேடிக்கிட்டு இருந்த பொண்ணு.. உன்னோட டாவு இவதான்டா.. என்னவொரு அழகு… விட்டுடாத கப்புன்னு புடிச்சிக்கோ..’

‘என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே..’


வழமைக்கு மாறாய், பட்பட்டென்று அடித்துக்கொண்டது அவனிருதயம்.

பார்வை அவள் வதனத்தில் நிலைத்திட.. நினைவுகள் மந்தமாகிட.. மீண்டுமாக கனவுலகுக்குள் நுழைந்திடவும் முயன்றவனை, இம்முறையும் கலைத்தது ஓர் குரல்.

அகோரக் குரலல்ல.. சுழன்றடிக்கும் தென்றலையும் வசியப்படுத்திடும், தேனினும் இனிமை கலந்த குரலது.

செவியுள் நுழைந்து துடித்துக்கொண்டிருந்த இருதயத்தையும், ஒருகணத்தில் அமைதிப்படுத்திய குரலது… சொக்கிப் போய் நின்றான் யுவன்.

“ஹெல்லோ மிஸ்டர்.. உங்களைத்தான்.. வாங்க என் கையை கெட்டியா பிடிச்சிக்கோங்க.. கமான்..” மான்விழி நயனங்கள் சுற்றிச்சுழன்ற பாவனை தான் எத்தனை. தலைகுப்புற விழுந்தான் யுவா.

பட்டாம்பூச்சி கண் சிமிட்டல்கள்… அதரங்கள் பிளந்து அழகுகாட்டிய வெண்முத்து மூரல்கள்… மஞ்சளும் குங்குமம் கலந்திட்ட சிவந்த தளிர்கொடியெனும் மேனி…

வெண்ணிற சுடியில் தேவலோகத்து கன்னிகையென, அவள் அபரிதமான அழகு.. உள்ளத்தை கொய்திட, இதழ்கள் புன்னகையில் உறைந்திட, கனவில் மிதப்பவன் போல் மந்தகாச நிலையில் இருந்தவன் நிலையறிந்து.. சிவந்த அதரங்களைச் சுழித்துக் கொண்டாள் அவ்வழகுப் பதுமை.

“டேய் மச்சி.. என்னடா பராக்கு பார்க்கிற.. சீக்கிரம் ஏறுடா..” வேகமெடுக்கத் துவங்கிய ட்ரெயினில் கதவோரம் நின்று மறுபடியும் கூச்சலிட்டான் பிரபு.

தலையுலுக்கி சுயம் மீண்டு, நீண்டிருந்த மென்தளிர் விரல்களில் வன்மையான தன் கரம் பதிக்க.. இதழ் சுழித்து நின்றவள் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு, தன்னருகே நின்றிருந்த தோழியின் உதவியோடு.. முழுமுயற்சியின் பலனாக அவனை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

மென்மையான பெண்மையின் லாவண்யங்கள் அவன் மாரோடு உரசி மீண்டதில், மூர்ச்சையாகிப் போனான் காதல் நோய் தாக்கபெற்ற யுவன்.

இன்னும் இன்னும் அவள் அருகாமை.. அவள் வாசம்.. நுதமான ஸ்பரிசம் வேண்டும் போல், உள்ளே பேயாட்டம் போட்டது அவன் மனம்.

ஈர்ப்பா? காதலா? என்று பிரித்தறியவும் முடியாத உணர்வது..

முழுவதுமாக மயங்கிப்போனவன், பெண்ணவள் மீது தனக்கு தோன்றியது காதலா அல்லது வெறும் இனக்கவர்ச்சியா என்பதை அறிவதே தலையாயக் கடமை போல், ‘கடவுளே இது என்னன்னு கண்டுபிடிக்க வரைக்கும் போட்டுதூக்கமும் வந்திடக்கூடாது…’ வேண்டிக்கொண்டான்.

‘கிட்டத்தட்ட பதினோரு மணிநேரப் பயணம்… அதுக்குள்ள கண்டுபிடிச்சிற மாட்டேன்… யுவனா கொக்கா…’ இப்போதுதான் கொஞ்சமாக அரும்பிக் கொண்டிருந்த மீசையை ஸ்டைலாக முறுக்கிக்கொண்டான்.

அவன் செயல்கள் யாவற்றையும் கண்ணாரக்கண்டு கழித்த அவள் இதழ்களில் முட்டிக்கொண்டு வந்தது அடக்கமாட்டாத சிரிப்பு… சுற்றியுல்லோரைக் கண்டு உள்ளேயே அடக்கிக்கொண்டவள், ‘சரியான ஜொள்ளு பார்ட்டி..’ முனு முனுத்தபடி கையோடு தோழியை இழுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

“டி.. மது அவனைப் பாரேன்.. எவ்வளவு அழகு..” செண்பா சிலாகிக்க, பதிலுக்கு சுட்டெரிக்கும் பார்வை பார்த்தாள் மது.

‘இவகிட்ட சொல்றதுக்கு பேயாம இருந்திருக்கலாம்..’ நொந்து கொண்டவள் தன் சீட்டில் அமர, பின்னாலே வந்த மது தன் இடத்தில் அமரவும்.. விரிந்த புன்னகையோடு வந்த யுவன் அவளுக்கு எதிர்த்து சீட்டில் நண்பர்கள் வம்பளந்து கொண்டிருக்கவும் அவர்களோடு அமர்ந்தான்.

படிப்பை முடித்து வேலைதேடிக் கொண்டிருக்கும் பலலட்சம் வேலையில்லாப் பட்டதாரிகளுள் ஒருவனே அவன். கூடவே அவன் நண்பர்கள் மூவர்.

கல்லூரிக்கால அட்டகாசங்கள், குறும்புகள் ஏதும் குறையாமல் வலம்வரும் இளங்காளைகள்.

பஞ்சமில்லாச் சிரிப்பு, அளவில்லா சுதந்திரம், கவலையற்ற வாழ்க்கை, அதில் படிந்தே இராத சோகம்… வாழ்க்கை என்றால் இப்படித்தான் இருக்கும் என்று ஒரு வட்டமிட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பருவம்.

பெற்றோர்கள் ஆசைக்கேற்ப கல்லூரியில், கெத்தாய் சுற்றிக்கொண்டு படித்ததென்னவோ எஞ்சினியரிங்க். ஆனால் ஆர்வம் முழுசும் மனம் வருடும் இசையினிலே.

கல்லூரியில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அவர்களின் லோக்கல் பாய்ஸ் இசைகுழுவுடன் தான் நிகழ்ச்சியே ஆரம்பிக்கும். பெற்றோர்களிடம் மறைக்கவும் இல்லை, அவர்கள் பேச்சை கேட்கவும் இல்லை. இத்தனை காலமாக உங்கள் ஆசைப்படி வாழ்ந்து விட்டோம் இனியாவது நாங்கள் விரும்புவதை செய்கிறோம்.. என்ற உறுதியுடன் படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கும் இசைக்கலைஞர்கள்.

சில நாட்களுக்கு முன்பு வரை கூட, ஏனோதானோவென பல நிறுவனங்களினதும் படிகளை தேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இன்றோ அதிர்ஷ்டவசமாக கிடைத்த ‘பெங்களூர் மியூசிக் கான்சர்ட்’ நிகழ்ச்சியில் தங்களை அறிமுகப்படுத்தி, கல்லூரிக்குள் முடிந்திட இருந்த தங்கள் கனவை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியிருந்தனர்.

பலநாள் கனவு நிறைவேறியதன் பலனாக, அனைவர் முகத்தினிலும் உல்லாச அறைகூவல்கள்.

அவர்களின் ‘லோக்கல் பாய்ஸ்’ டீம் மேட்ஸ் அனைவரும் நிகழ்ச்சி முடிந்த பொழுதினிலே வேறு வேலைகள் காரணமாக அப்போதே சென்னை புறப்பட்டிருக்க, நால்வர் குழு நண்பர்கள்.. அன்று முழுதும் ஊரைச் சுற்றி இதோ இப்போது தான், பெங்களூர் டு மதுரை ட்ரைனை பிடிக்க வந்திருந்தனர்.

நாளை காலை மதுரை போய் சேர்ந்ததும் நண்பர்களில் ஒருவனான தேவின் வீட்டில் காலையுணவை முடித்துக்கொண்டு, மீதி மூவரும் அன்று மதியமே சென்னை கிளம்புவதாக ஏற்பாடு.

நண்பர்களுடன் உரையாடும் பாவனையில் இருந்தாலும், பார்வை முழுதும் அவள் மீதே…

‘ஒத்த பார்வையில் என்ன ஏன்டி நீ
படம் போட்டுக்காட்டுற
கொத்து சாவியா நெஞ்சத்தூக்கியே
இடுப்போரம் மாட்டுற
மொத்த ஆசையும் ஒரு சேர ஒன்ன கேட்குதே பரிமாற
புத்தி மாறுதே பொழுதெல்லாம் மலையேற..’


காதல் கொண்ட யுவனுக்குள், யுவன்சங்கர் ராஜாவின் பிஜிஎம்.

வாலிபப் பருவமன்றோ.. உற்சாகத்தை வெளிப்படுத்தும் முகமாக பாட்டாகவே பாடிக்கொண்டான்.

கலக்கல் பிரபு.. சாமியார் தேவ்.. அமைதிப்பேர்வழி ஷஹிர்.. மூவரின் பார்வையும் யுவன் மீதுதான் கோலோச்சியிருந்தது.

மனம் வருடிச்சென்ற பாடலோசையில், ரெயிலும் மயக்கம் கொண்டதுவோ.. சீரான லயத்துடன் மிதவேகத்தை கூட்டியது.

பேரறியா பல மனிதர்கள்.. புற்றீசல்களாய் திரண்டு சலசலத்த ஓசைகள் யாவும் காற்றில் கரைந்து மயமாகிட, திடீர் அமைதி சூழ்ந்த அந்த இரண்டாம் வகுப்புப்பெட்டியில்.. அவன் குரலையும் தவிர்த்து, கிளுக்கென்ற நகைப்பொலி.

அனைவர் பார்வையும் ஓசையெழுப்பிய இடம் நோக்கி நகரவே, அங்கு அன்னையின் தோளில் வாகாய் சாய்ந்திருந்தாள் வாண்டுப்பெண். கர்ப்பவதியான அன்னை யமுனாவுக்கு துணையாக ஊருக்கு சென்று கொண்டிருக்கும் ஐந்து வயதே நிரம்பிய ஓவியா.

அங்ஙனம் குழந்தை அழகில் கவரப்பட்ட மது, தனக்கு எதிரிலிருந்த அவள் கன்னம் கிள்ளி, “சோ ஸ்வீட்..” கொஞ்சினாள்.

யுவனின் நிலையை சொல்லவும் வேண்டுமோ?.. தன்னையே கொஞ்சிக்கொண்டது போல் சொக்கிப்போய் கன்னத்தை தடவிக்கொண்டான்.

கடைக்கண்ணால் அவன் முகம் பார்த்த மது, உதட்டை சுழித்து ‘பொறுக்கி..’ ‘பொறுக்கி..’ அர்ச்சித்தாள்.

உதட்டசைவிலே கண்டுகொண்டாலும் கணக்கில் கொள்ளாது, கன்னத்தில் கை குத்தி அவளைப் பார்த்தான், அவள் பார்க்கும் நேரம் தனக்கு நேரேயிருந்த ஓவியாவின் முகம் பார்த்தான்.. இவர்கள் கூத்தையெல்லாம் வேடிக்கை பார்த்திருந்தனர் அவன் நண்பர்கள்.

“பாப்பா பேர் என்ன…” அவளில் நிலைத்திட்ட பார்வையோடு, சிறியவளிடம் உரையாடினான் யுவன்.

“இத்தோ பாருங்க அங்கிள்.. நான் ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது…” முகத்தை சுழித்தாள் ஓவியா.

“தொப்பி.. தொப்பி.. செம பல்புடா மச்சி...” பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை யுவாக்கு பயந்து மறைத்துக்கொண்டு, தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர் அவன் நண்பர்கள்.

மதுவும் சிரிப்பை அடக்கி கையிலிருந்த புத்தகத்துள் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

யமுனாவுக்கும் சிரிப்பு வந்தது போலும் மகளை கண்டிக்கும் பார்வையொன்று பார்த்தாள். ஓவி அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

‘அசிங்கப்பட்டான் யுவன்..’ மனசாட்சி காறித்துப்பியது.

அசால்டாய் துடைத்து விட்டவன், “சரி நீங்க பெரிய பொண்ணு தான் நான் ஒத்துக்கிறேன்.. இப்போ சொல்லுங்க உங்க பேரை..” விடாகண்டனாகத் தொடர்ந்தான்.

மேலும் கீழும் அளவெடுப்பது போல் அவனை பார்த்தவள், “அதை எதுக்கு நான் உங்ககிட்ட சொல்லனும்.. யாருன்னே தெரியாதவங்க கிட்டயெல்லாம் பேசக்கூடாதுன்னு டாடி சொல்லியிருக்காரு..” சிடுசிடுத்தாள் குட்டி வாண்டு.

“உனக்கு இது தேவையாடா.. தேவையா.. ஒரு சின்ன பொண்ணுகிட்ட அசிங்கப்பட்டு நிற்கிறியே.. நீயெல்லாம்…” சுட்டுவிரலை தன்புறமாய் நீட்டி தனக்கு தானே சொல்லிக்கொண்டவனைக் கண்டு அங்கிருந்தோர் அத்தனை பேரும் தங்களை மறந்து கொல்லென்று சிரித்தனர். அதில் அவன் டாவும் அடக்கம்.

அதுவே வெற்றிக்கனியை சுவைத்தது போல் மமதையை கொடுக்க, ‘சபாஷ்.’ போட்டுக்கொண்டான் யுவன்.

தொடரும்....

பிரெண்ட்ஸ் முந்தைய பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள் பல... இப்போதிலிருந்து கதை வேறு பாதையில் செல்லவாரம்பிக்கும்... இதற்குமேல் எதையும் இப்போதைக்கு சொல்ல மாட்டேன்... கதையோட்டத்தில் நீங்களே புரிந்துகொள்ளுங்கள்... இப்போ இவங்களை உங்களுக்கு பிடிச்சிருக்கா சொல்லுங்க.... நன்றி...

"காதலே! நீயின்றி நானா!!" - கருத்து திரி
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்... கொஞ்சம் உடம்பு சரியில்ல... அதனால நேரம் செலவழித்து எழுத முடியல... கூடிய சீக்கிரம் அடுத்த பதிவுகளோட வரேன்....

அன்புடன்

ஜூஹி.
 

Joohi Banu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் #03

Sai-pallavi5.jpg

கூதல் காற்று சிலுசிலுவென்று வீச தூக்கத்தில் சொக்கியது லயாவின் விழிகள்.. கடந்து சென்ற தூரத்து மின்விளக்குகளின் ஒளி முதல் போஸ்ட் கம்பங்களின் எண்ணிக்கை வரை அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்தவளின் வாய்ப்பூட்டு இதோ அதோவென திறக்கத் தயாராகியது.

அவளும் எத்தனை நேரம்தான் மௌனச்சாமியார் கணக்காய் வாயை மூடிக்கொண்டே இருப்பது?..

‘ஐயோ லயா குட்டி.. போயும் போயும் உனக்கு இப்பிடி ஒரு நிலைமை வரும்னு நான் நினச்சிக்கூட பார்க்கலையே.. பாவம்டி நீ’

மனசாட்சி வேறு அவள் மௌனவிரதம் பார்த்து கைகொட்டிச் சிரிக்க.. நொந்தே போனாள் அவள்.

போனால் போகட்டுமென்று சாப்பிடாமல் கூட இருந்திடுவாள்.. ஆனால் வாயை மூடிக்கொண்டு இருப்பதென்பது அவளால் முடியவே முடியாத ஒன்று.

தன் முன்னால் அமர்ந்து புத்தக பூச்சியாய் ஏதோவொரு வாயில் நுழையாத புத்தகத்தினுள் தலையை நுழைத்துக் கொண்டிருந்தவன் முன்பு மானம் போய்விடக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அமைதியாய் இருப்பது போல காட்டிக்கொண்டவளும் அதற்கு மேல் முடியாமல் தொண்டையை செருமிக் கொண்டாள்.

அதற்கும் தலை நிமிர்த்தி பாரத்தானில்லை அவன். அதை பார்த்தவளுக்கு பல்லை கடிக்க வேண்டும் போல் ஆத்திரம்.

‘சூப்பர் பிகர் இல்லன்னாலும் சுமார் பிகராவாச்சும் இருக்கேன்.. இவன் என்னடான்னா என்னைய திரும்பிக் கூட பார்க்க மாட்டேங்கறான்’

‘இது மட்டும் என் வருங்கால சந்ததிகளுக்கு தெரிஞ்சது வரலாற்றுல இந்த லயா பேரே நாறிப்போய்டுமே’

‘விடக்கூடாது லயா.. எப்பிடியாச்சும் அவனை உன்னையே பார்க்க வச்சே ஆவணும்.. அதோட கூட சேர்த்து ஒத்த வார்த்தையும் போனஸா பேச வச்சே ஆவணும் அஆ’

தனக்குள் சபதமே எடுத்துக் கொண்டாள்.

வீராப்பாய் சபதம் எடுத்துக் கொண்டாளே தவிர என்ன செய்து அவனை தன்னை பார்க்க வைக்கலாம் எனபது புரியாமல் தலையை சொறிந்து கொண்டவளுக்கு சுத்தமாய் ஒரு ஐடியா கூட ஸ்டாக்கில் இல்லை.

‘டி லயா.. ஏதாச்சும் ஒன்ன சீக்கிரமா யோசிச்சு எக்சிகியூட் பண்ணிடு.. இல்ல உன் மனசாட்சியே உன்னைய பார்த்து காறித்துப்புற மாதிரி ஆயிடும்..’

‘சை.. நேரங்கெட்ட நேரத்தில எல்லாம் ஐடியாவா வந்து குமியும்.. தேவைப்பட்ட நேரத்தில ஒன்னு கூட வராம சொதப்புது’

தனக்குள் புலம்பியவள் குரல் அவனையும் எட்டியதோ அத்தனை நேரமாக முகத்தை மறைத்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி அருகே வைத்தவன் கம்பீரமாய் கால்மேல் கால் போட்டு மார்புக்கு குறுக்காய் கைகளைக் கட்டிக்கொண்டு சீட்டில் நன்றாக சாய்ந்தமர்ந்தவன் “சரி சொல்லு.. நான் உன்கூட என்ன பேசனும்னு விரும்புற..”

தனக்குள் உழன்றவள் காதில் விழுந்த கம்பீரமான குரலில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், இத்தனை நேரமாய் யாரை தன்னை பார்க்க வைக்க முயற்சி எடுத்தாளோ அவனே வலியப் பேசவும் அதிர்ச்சியில் விழியும் மூட மறந்து.. அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள்.

‘இவன் சொல்றத பார்த்தா நம்மள கவனிச்சிக்கிட்டே இருந்திருப்பானோ.. அடி ஆத்தி’ மானசீகமாய் வாயைப் பிளந்தாள் லயா.

“நீயே சொன்னமாதிரி சூப்பர் பிகர் இல்லனாலும் சுமராவாச்சும் இருக்க ஒத்துக்கிறேன்.. அப்புறம் என்ன.. ஆ.. இவ்ளோ நேரமா உன்னைத்தான் நோட் பண்ணிட்டு இருந்தேன்.. சொல்லு என்கூட என்ன பேசணும்..”

“உன்னை பார்த்தாலே தெரிது.. ரொம்ப நேரம்லாம் உன்னால வாயை மூடிட்டு இருக்க முடியாதுன்னு..”

அவன் பாட்டுக்கு பேசிக்கொண்டே செல்ல.. இவளோ மின்சாரம் தாக்கியது போல் கிடுகிடுவென நடுங்கிக் கொண்டிருந்தாள்.

‘அடியே லயா.. உன் மனசுக்குள்ள நினச்ச எல்லாத்தையும் புட்டு புட்டு வைக்கானே.. ஒருவேள மந்திரவாதியா இருப்பானோ’

“ஹெல்லோ.. அந்தளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்ல.. சும்மா நீ பாட்டுக்கு யாருக்கிட்டயாச்சும் சொல்லிடாத.. அப்புறம் எனக்காக கியூல காத்திருக்க ஆரம்பிச்சுருவாங்க..”

‘என்ன?.. என்ன சொல்றான்.. எனகிட்டத்தான் சொல்றானான்னும் புரியலே.. தலையே வெடிச்சிடும் போல இருக்கே.. அப்படியே எனகிட்டதான்னு வச்சுக்கிட்டாலும் நான் யாருக்கிட்ட என்னத்த சொல்லிடுவேன்னு மூச்சு விடாம இவ்ளோ வசனம் பேசுறான்’

‘அடியே லாவண்யபாரிஜாதம்.. அவன் எங்கடி மூச்சு விடாம பேசுறான்.. இப்போ நீ தான் நான்ஸ்டாப்பா மைன்ட் வாய்ஸ்ல பேசிக்கிட்டே இருக்க’ உண்மையை உரக்கக்கூறியது அவள் உள்ளம்.

‘இது வேற காலநேரம் பாராம ஆஜராகிகிட்டு.. சை..’ அதையும் திட்டியவள் ‘பேயாம கம்முன்னு இருந்துக்கோ.. இல்ல செஞ்சுடுவேன்’

அதற்கெல்லாம் அடங்கி விட்டால் அதன் பேர் என்னாகும்?..

‘நீ சொன்னா நான் கேட்டுப்பேனா.. ம்ஹூம்.. யாருகிட்ட?.. சரியான கோப்பிகெட் அதான்மா ஈயடிச்சான் காப்பிம்பாங்களே அதச்சொன்னேன்.. நீ தனுஷ் டயலாக் சொன்னேன்னா நான் அவன் பையன் காலி டயலாக்காச்சும் சொல்ல மாட்டேன்.. இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.. இனியொரு வார்த்த என்னைய திட்டின உரிச்சிடுவேன்’

‘ப்பூ.. தேவையாடி உனக்கு’ மனசாட்சி வேறு ஆப்போஸிட் கட்சிக்கு மாறி லயாவையே கலாய்த்தது.

அதிலே முழி பிதுங்கி ‘ஷப்பாஹ்.. கொசுத்தொல்ல தாங்கமிடில’ நிலைமையில் இருந்தவள் அடுத்து அவன் கூறிய வார்த்தையில் ‘சோதனை மேல் சோதனை போதுமேடா சாமி’ ரேஞ்சுக்கு ஆகிவிட்டாள்.

“நான் எதுக்கு சொன்னேனா.. நீ ஏதோ மந்திரவாதி ரேஞ்சுக்கு என்னை நினைச்சிட்டியா அதான்.. அந்தளவுக்கெல்லாம் நான் வொர்த் கிடையாதுன்னு சொன்னேன்..”

அவன் கூறியதை கேட்டு மயங்கும் நிலைக்கே சென்று விட்டாள் லயா.

இதுக்கு அப்புறமும் மைன்ட் வாய்ஸ்ல பேசினேன் என்னைய நானே செருப்பால அடிச்சிக்க வேண்டியதுதான்’

“சார்.. சார் ப்ளீஸ்.. சார் நான் எதோ தெரியாம ஏதேதோ நினைச்சிக்கிட்டேன்.. என்னைய மன்னிச்சிபுடுங்க.. இனிமே மைன்ட் வாய்ஸ்ல பேசவே மாட்டேன்.. செத்துப்போன என் ஆயா சத்தியமா..”

அவன் திசைக்கே பெரிய கும்புடு போட்டவள் ஜன்னல் புறமாக பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“ஹா.. ஹா” அவள் பாவனையில் ஆர்ப்பாட்டாமாய் சிரித்துக்கொண்டவன் அழகில் சொக்கிப் போனது லயாவின் கயல்விழிகள்.

‘ஆத்தி! எம்புட்டு அழகு’ மனசுக்குள் நினைத்தவள் மறுகணமே அவன் தன்னை குறுகுறுவென பார்ப்பதையும் கவனியாது வாயில் போட்டுகொண்டாள்.

‘சும்மாவே என் ஆயாக்கு என்மேல காண்டு.. இதுல அது மேல சத்தியமும் பண்ணிட்டு மீறினேன் ஊருக்கு போனதும் பேயா வந்து என் ராத்தூக்கத்த கெடுத்துப்புடும்’ மனதுள்ளே நினைக்கப் பயந்து சத்தமாகவே முனகிக் கொண்டாள் லயா.

பாம்புக் காது கொண்ட அவன் செவியிலும் அவள் வார்த்தைகள் தெள்ளத்தெளிவாய் விழ மீண்டும்மோர் சிரிப்பலை அவனில்.

“நீ எப்போவும் இப்படித்தானா..”

திடுமென மீண்டும் அவன் பேச ஆரம்பிக்கவும் குழப்பமாய் அவன் ஏறிட்டாள் லயா.

‘நான்தான் எதுவும் பேசலைய பின்ன எத கேக்கான்’

“ரொம்ப யோசிக்காத.. ஐ தின்க் உன் பிரெண்ட்.. ஸ்டேஷன்ல வச்சி பேசிட்டு இருந்தியே.. அதபத்தி கேக்குறேன்..” சாதாரணமாய் அவன் கேட்கவும் தான் ‘அய்யோ.. அப்போ நாங்க ரெண்டு பேரும் பேசிய எல்லாத்தையும் கேட்டிருப்பானோ.. அயோ.. அய்யோ.. லூசு லயா என்னெல்லாம் பேசினியோ.. ஞாபகத்துக்கு கூட வரமாட்டேன்குதே’ தலையை சொறிந்தாள்.

“நீ பேசின எல்லாத்தையும் கேக்கல..” என்றவன் தொண்டையை செருமி “இது பப்ளிக் பிளேஸ் காது பங்காரம்.. என் லவர்க்கு மட்டுந்தேன்..” அவளைப்போலவே சொல்லிக்காட்ட ‘மானமே போச்சு’ தலையில் கைவைத்தவள் அசட்டு சிரிப்புடன் அவனைப் பார்த்தாள்.

“சார்.. அது சும்மா.. லுல்லலாய்க்கு.. நீங்க சீரியஸா எடுத்துக்காதீங்க..” முதல் தடவையாக அவள் ஒருவனிடம் கெஞ்சினாள்.

எப்போதும் அவள் தான் மற்றவர்களை பிரட்டி எடுப்பாள் இன்று அவளையே ஒருத்தன் யோசிக்கக்கூட முடியாதவளுக்கு போட்டுத்தாக்கிக் கொண்டிருந்தான்.

“அப்பிடியா நான் என்னவோ நீ சீரியஸா சொன்னேன்னு நினச்சிட்டேன்..” தோளை உலுக்கியவன் “ம்ம் அப்புறம்..” என்க, “அப்புறம்னா என்னது சார்..” அறியாப்பிள்ளை போல கண்களை விரிக்க, அவன் பதில் கூறும் முன்..

“இவன பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டு பெத்த இந்த வயித்த பெரடைய கொண்டே அடிச்சிக்கனும்..”

“என்ன பெரிய பத்து மாசம் கஷ்டப்பட்ட.. ஹாஆ.. உள்ள ஒரே இருட்டு! ஒரு லைட்டு கிடையாது! ஓர் பேனு கிடையாது! ஒரு ஏசி கிடையாது! பிரண்டு படுக்க ஒரு பெட்டு கிடையாது! பேச்சுத்துணைக்கு ஒரு ஆளு கிடையாது! தவிச்சு வாய்க்கு தண்ணி தர ஒரு நாதியில்ல! சரி நம்மளா போய் குடிச்சு தொலையலாம்னு பார்த்தா ஒரு செம்பு கிடையாது! கண்ண கட்டி காட்டுகுள்ள விட்டமாதிரி வடக்கும் தெரியாம கிழக்கும் தெரியாம சிறைச்சாலைல கிடந்திருக்கேன் நானு! அதும் எப்பிடி கிடந்தேன் அப்படியே பத்தும் மாசம் குரங்கு மாதிரி குத்த வச்சே உக்கார்ந்திருந்தேன்!

லயாவின் மானத்தை வாங்குவதற்கென்றே சப்தமெழுப்பியது அவள் செல்போன்.

சுவத்திலே முட்டிக்கொள்ளலாம் போல் முகத்தை வைத்திருந்தவள் தன் முன்னே இருந்தவனைப் பார்த்து கேவலமாய் ஒரு சிரிப்பை உதிர்த்து “அம்மா..” உள்ளே அழுதுகொண்டே வார்த்தையை கடித்து துப்பியவள் தோள் பையுள் கை விட்டு மொபைலை தேடினாள்.

அவசரத்துக்கு அதுவும் கைக்கு கிடைக்கவில்லை. மேக்கப் செட் முதல் பல்லுக்குத்த தேவையான டூத்பிக் வரை அனைத்தும் அதனுள்ளே நிரம்பி வழிய அதில் எங்கு சென்று அவளின் செல்போனை கண்டு பிடிப்பதாம்!

அதற்குள் இரண்டு மூன்று வாட்டி ராதா கண்ணன் அழைத்து விட்டார்.

இன்னமும் தாமதமாகியது செல்போன் வழியாகவே உருட்டுக்கட்டையுடன் வந்தாலும் வந்துவிடும் அபாயம் உள்ளதால்.. பேகில் இருந்த அனைத்தையும் சீட்டில் கடைபரப்பியவள் ஏதோவொரு மூலையில் சிக்குண்டு கீழே விழுந்த செல்போனை பதட்டத்துடன் ஆன் செய்து காதில் வைத்தாள்.

மறுமுனையில் இருந்த ராதா, மகள் அழைப்பை எடுக்காததில் பயந்துபோய் இருந்தவர் மீண்டும்மீண்டும் அழைத்து ஒருவழியாய் அவள் அன்செர் பண்ணியது குய்யோமுய்யோன்னு கத்த.. காதை குடைந்தவள்,

“ம்மாஆஆ.. இப்போ எதுக்கு இந்த கத்து கத்துற.. நான் ஊருக்குத்தான் வந்துட்டு இருக்கேன்.. நீ பேசாம போனை வச்சிடு.. நானே ஊருபட்ட கடுப்பில கிடக்கேன்.. நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போன பாதி வழில இறங்கி, நடந்தே பெங்களூரு போய் சேர்ந்திடுவேன் பார்த்துக்கோ..” கடிந்து இணைப்பை துண்டித்தவள் அப்போதுதான் நினைவு வந்தவளாக ப்ரீத்திக்கு அழைத்தாள்.

முதல் ரின்கிலே அவள் எடுக்கவும் அவள் பத்திரமாக ஹாஸ்டல் போய் சேர்ந்துவிட்டாளா என்பதை விசாரித்தவள் அடுத்து அவள் வாயிலிருந்து வரப்போகும் கேள்வியை முன்பே யூகித்தவளாட்டம் “நான் அப்புறம் பேசுறேன்..” என்று அழைப்பை துண்டித்து முதல் வேலையாக செல்போனை ஸ்விட்ச்ஆப் செய்தாள்.

‘நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உன்னைக் கேட்கும். நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும்’

‘தளபதி விஜய் சொன்னது தான் சொன்னாரு.. நான் பண்ணதெல்லாம் ஒட்டுமொத்தமா அதுவும் இன்னைக்குன்னு பார்த்து எல்லாமே என்னைய எழும்பவிடாம போட்டுத்தாக்குது.. இதெல்லாம் சரியில்ல சொல்லிட்டேன்’

குசுகுசுவென அவள் பேசியதெல்லாம் அவன் காதில் ஒரு வார்த்தை விடாமல் கேட்டுத்தொலைக்க அவளைப் பார்த்து இதழ் பிரித்து சிரித்தவன் “நான் கேட்டதுக்கு இன்னம் பதில் வரல..” எடுத்துக் கொடுத்தான்.

எல்லாரும் எங்கிட்ட இருந்து எப்பிடிடா தப்பிக்கலாம்னு யோசிப்பாங்க.. ஆனா நான் இன்னிக்கு இவன் கிட்ட இருந்து எப்பிடிடா எஸ்ஸாகலாம்னு யோசிக்கேன்.. காலக்கொடுமை கதிரவா’ மனதுக்குள்ளே புலம்ப பயந்து வாய்விட்டே புலம்பினாள்.

ஒரு மார்க்கமாய் அவளைப் பார்த்தவன் அவள் முகத்தை விட்டும் பார்வை திருப்பினானில்லை.

“ரெயிலு பயணம் ராத்திரி காத்து
ரம்மியமான ரகசிய நினப்பு
அட எல்லாம் ஒரு சுகம்தான்
அடி காதல் தனி சுகம்தான்!”


‘ரெயிலோடு செல்லும் ராத்திரி பயணம்.. கூடவே மனங்கவர்ந்த நாயகன்.. இதத்தானே நான் உன்கிட்ட எதிர்பார்த்தேன் கடவுளே.. ஆனா நீ என்னைய வச்சு நல்லா செஞ்சிட்ட’

பாவம் லயா.. அவள் எதிர்பார்த்து வந்த பயணம் என்பதோ வேறு ஆனால் இனறையப் பயணமோ தலைகீழ்.

பெருத்த சோகம் அப்பிக்கொண்டது அவள் வதனத்தில்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஒன்றும் எதற்கு என்பதற்கிணங்க கடவுளும் அவளைப் பார்த்து விஷமமாய் சிரித்துக் கொண்டார்.

தனக்குள்ளே உழன்று கொண்டிருந்தவள் சொடக்கொலியில் நிமிர அவன் தான். அவள்முன்னே அமர்ந்திருந்த அவனேதான்.

“என்ன சார்..” அப்பாவியாக கேட்டாள் லயா.

“உன்னை பத்தி சொல்லேன்..” சுவாரஸ்யமாகக் கேட்டான் அவன்.

“என்னைய பத்தி தெரிஞ்சு என்ன சார் பண்ணப்போறீங்க..” சலிப்பாய் கூறியவள் “இருந்தாலும் நீங்க இம்புட்டு தூரம் கேக்கும்போது சொல்லாமலும் இருக்க முடில.. அந்த ஒரு காரணதுக்காகவாச்சும் சொல்றேன் சார்..”

“என் பேரு லாவண்யா சார்.. என் ஊரு தேனி சார்.. அப்பறம் என் அப்பா பேரு செந்தமிழ் கண்ணன் சார்.. என் அம்மா பேரு சார் ராதா கண்ணனுங்கோ.. அப்புறம் எனக்கு ஒரு அக்காவும் தம்பியுங்க.. அக்கா கிருத்திகா சென்னையில வாக்கப்பட்டு மூனு வயசில குழந்தையும் இருக்குங்க.. அடுத்து அர்ஜுனு எந்தம்பி.. படிச்சு முடிச்சு வேலை தேடிக்கின்னு இருக்கான்..”

“இதுதான் சார் என் ஹிஸ்ட்ரி.. அப்புறம் சார் உங்களைப்பத்தி ஒன்னுத்தையும் சொல்லக் காணோமே..” போட்டுவாங்க முயற்சித்தாள்.

பசைபோட்டு ஒட்டினாற்போல அவளைப்பற்றிய அனைத்தையும் கறந்தவன் அவளின் கேள்வி காதிலே விழாதவனாட்டம் “நைஸ் நேம் லாவ்..” மெல்ல முணுமுணுத்துக் கொண்டான்.

தொடரும்...

"காதலே! நீயின்றி நானா!!" - கருத்து திரி
 
Status
Not open for further replies.
Top